Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 120

டெல்லி ஜி 20 உச்சி மாநாடு: பெருமிதம் கொள்வதற்கு ஒன்றுமில்லை!

சுழற்சி முறையில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது.  “ஒரே குடும்பம் – ஒரே உலகம் – ஒரே எதிர்காலம்” என்ற தலைப்பில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட ஜி 20 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நாடுகளின்  தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் டெல்லி பிரகடனம் என அழைக்கப்படுகிறது. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன், அனைவரும் ஒருமனதாக இப்பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதுதான் இம்மாநாட்டின் வெற்றி என்று பேசப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியத் தலைமை, அதாவது பிரதமர் மோடிதான் என்று  ‘நடுநிலை’ என்று சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் கூட எழுதின.

இந்த  ஒன்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில் மோடியின் வளர்ச்சி முகமூடி கிழிந்து மக்களிடம் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்,  பாசிச மோடி கும்பலின் ஊழல் ஒழிப்பு அரிதாரத்தை சி.ஏ.ஜி. அறிக்கை கலைத்த நிலையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்துமதவெறி மட்டுமே ஒரே வழி என பாசிஸ்ட்டுகள் வெளிப்படையாக இந்து மதவெறியைக் கிளப்பி மணிப்பூரும், அரியானாவும்  எரிந்து கொண்டிருக்கும் சூழலில், இவை குறித்து விவாதிக்கவோ, மக்களிடம் அம்பலப்படுத்தவோ துப்பற்ற ஊடகங்கள், மோடியை உலகத் தலைவராக முன்னிறுத்துகின்றன. பாசிச மோடியை 2014-ல் இந்தியாவின்  ‘வளர்ச்சி’ நாயகன் என்று ஊதிப் பெருக்கியது போல், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக, மோடியை உலகத் தலைவராக சித்தரிக்கின்றன ஊடகங்கள்.


படிக்க: ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு: கார்ப்பரேட் கொள்ளைக்கான ஏற்பாடு!


அமெரிக்க அதிபர் ஜோ பைடனை விட இந்திய பிரதமர் மோடியே மாநாட்டில் ஆதிக்கம் செலுத்தினார்; இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகளை சர்வதேச நாடுகள் பாராட்டின; இந்தியத் தலைமையை உலகம் ஏற்றுக் கொள்கிறது என்றெல்லாம் முட்டுக் கொடுத்தன ஊடகங்கள். இந்த டெல்லி பிரகடனத்தை ஜி 20 நாடுகள் ஏற்றுக் கொண்டதன் மூலம் ஒரு வரலாற்று  நிகழ்வு நடந்துவிட்டதாக பெருமை பீற்றிக் கொள்கிறார் மோடி.

பீற்றிக் கொள்ளப்படும் சாதனைகள்:

இம்மாநாட்டின் சாதனைகளாக, குறிப்பாக மோடியின் சாதனைகளாக சிலவற்றைக் குறிப்பிடுகின்றனர். உக்ரைன் போர் விவகாரத்தில், அமெரிக்கா- ஐரோப்பிய யூனியன் ஒரு பக்கமும் ரஷ்யா – சீனா ஒரு பக்கமும் நின்று விவாதித்திருக்கின்றன. இதில் ஒரு முடிவு எட்டப்படாத நிலையில், இந்நாடுகளிடையே பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒருமித்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற மாநாட்டில் இப்படியான ஒருமித்த முடிவு எட்டப்படவில்லையாம். தற்போது ஒருமித்த முடிவு எட்டப்பட்டதே இந்தியாவின் பெரும் சாதனையாகக் கொண்டாடப்படுகிறது.

உக்ரைன்  போர் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில், ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மீண்டும் வலியுறுத்துகிறோம். உக்ரைன் போரில் ஈடுபட்டிருக்கும் நாடுகள், ஐ.நா. சபையின் விதிகளின்படி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இது போருக்கான காலம் கிடையாது. எந்தவொரு சூழ்நிலையிலும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று இந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைன் போரால் சர்வதேச அளவில் உணவு தானியங்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைத்து அங்கு நிரந்தர அமைதி திரும்ப வேண்டும். இவ்வாறு டெல்லி பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த டெல்லி பிரகடனம் புதியது ஒன்றும் கிடையாது. ரஷ்ய -உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்தே இந்தியாவின் நிலைப்பாடு என்பது இருதரப்பையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதாகவே இருக்கிறது. போருக்கான காலம் கிடையாது என்பது ஏற்கெனவே உக்ரைன் விவகாரத்தில் மோடி கூறியதுதான்.  மேலும், ஐ.நா.வில் நடைபெற்ற உக்ரைன் போர் குறித்த தீர்மானத்தில் கூட ரஷ்யாவுக்கு எதிராக இதுவரை இந்தியா வாக்களிக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்த சாதனையாக, 55 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஆப்பிரிக்க யூனியனை ஜி 20 நாடுகள் அமைப்பில் நிரந்தர உறுப்பினராக சேர்த்துக் கொண்டதை குறிப்பிடப்படுகிறது. சமீப காலமாகவே, தங்களை ஜி 20 நாடுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆப்பிரிக்க யூனியன் கோரிக்கை வைத்து வருகிறது. குறிப்பாக, ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள நைஜர் நாட்டில் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம், அங்கு பிரான்சின் ஆதிக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. 1960-களிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் நைஜரை வரன்முறையின்றி சுரண்டின. தற்போது, ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்குப் பதிலாக ரஷ்ய ஏகாதிபத்தியம் நைஜரை சுரண்ட அடித்தளம் போடப்பட்டிருக்கிறது.  இந்தச் சூழலில்,  அதாவது அமெரிக்க மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் பிடி ஆப்பிரிக்காவில் சரிந்து வரும் நிலையில், அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஏற்பாடாகவே ஜி 20 நாடுகள் அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டுள்ளது. மோடி அல்ல, வேறு யார் தலைவராக இருந்தாலும், இந்த இணைப்பு ஏற்பட்டிருக்கும் என்பதே எதார்த்த நிலைமை.


படிக்க: அரசும் – ஆளும் வர்க்கமும் கூட்டுக்கொள்ளை நடத்துவதற்கான மாநாடே ஜி20 | தோழர் ஆ.கா.சிவா


அதுமட்டுமின்றி, தெற்காசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீன ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் விருப்பம். ஒன் பெல்ட் ஒன் ரோடு என்ற பட்டுப்பாதைத் திட்டத்தை சீனா முன்னெடுத்திருக்கிறது. இதற்கு எதிராக ஒரு வணிக வழித்தடத்தை உருவாக்க அமெரிக்கா நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் விருப்பத்தைத்தான் டெல்லி பிரகனடத்தில் மோடி நிறைவேற்றியிருக்கிறார். இந்தியாவிலிருந்து  மத்தியக் கிழக்கு நாடுகள் வழியாக ஜரோப்பாவுடன் வணிக்கத் தொடர்பை ஏற்படுத்த கப்பல் மற்றும் ரயில் போக்குவரத்துத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா,  இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய யூனியன்  இணைந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தெற்காசியா மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதியில், சீன ஆதிக்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்காகத்தான் சர்வதேச குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடகங்கள் மோடியைப் பாராட்டுகின்றன, புகழ்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், தெற்காசியா மற்றும் மத்தியக் கிழக்கில் சரிந்து வரும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு முட்டுக்கொடுத்ததும், தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிறந்த அடிமை என்று மோடி நிரூபித்துக் கொண்டதும் தான் இந்த டெல்லி உச்சி மாநாட்டின் சிறப்பு. இந்த அடிமைத்தனத்தை எண்ணி மானமுள்ள, நாட்டுப்பற்றுள்ள எவரும் பெருமை அடித்துக் கொள்ள முடியுமா?

ஒரே குடும்பம் ஒரே உலகம் ஒரே எதிர்காலம்!

ஜி 20 மாநாட்டில் “வசுவதவ குடும்பம்” என்ற அடிப்படையில் இந்தியா முழக்கம் வைத்ததும்,  மனித குலம் எப்போதும் நலம், வளம், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற இந்தியப் பாரம்பரியத்தை பறைசாற்றுவதாக அம்முழக்கம் இருந்ததாக பத்திரிக்கைகள் மெச்சுகின்றன. இந்திய தண்டனைச் சட்டத்தின் பெயர்களை இந்தி – சமஸ்கிருதமயமாக்கிய கையோடு ஜி 20 மாநாட்டிலும் இந்தியைத் திணித்திருக்கிறது பாசிச மோடி அரசு. மோடியின் பெயருக்குப் பக்கத்தில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றியிருக்கிறது. சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியில் பாரத் என்று மாற்றியிருப்பதானது இந்திய நாட்டை இந்துராஷ்டிரமாக்குவது என்பதற்கான முன்னோட்டம் என்று சர்வதேசத்திற்கு அறிவித்ததாகவே கருத வேண்டியிருக்கிறது. இது குறித்து இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும், எந்த ஊடகங்களும் பெரிதாக வாய் திறக்கவில்லை.

ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே பண்பாடு என்ற வகையில் இந்தியாவை இந்துராஷ்டிரமாக்குவதன் அடுத்தகட்ட நடவடிக்கைதான் பாரத் மண்டபத்தில் நடந்த ஜி 20 மாநாடு மற்றும் அதில் வைக்கப்பட்ட முழக்கங்கள் என்று பார்க்க வேண்டியுள்ளது.

கதைக்குதவாத ஜி 20:

பொருளாதார ஏற்றத்தாழ்வை, சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்திய காலகட்டத்தில், அதுவும்  ஏகாதிபத்தியங்கள்  (ரஷ்யா – சீனா x அமெரிக்கா – ஐரோப்பிய யூனியன் ) தங்களுக்குள் மேலாதிக்கத்திற்கான போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழலில், அனைத்து நாடுகளும்  ஒரே குடும்பமாக, ஒரே உலகமாக ஒன்றிணைந்து ஒட்டுமொத்த மனித குலத்திற்காக பணியாற்றுவது என்று பேசுவதே உலக மக்களின் காதில் பூ சுற்றுவதாகும். அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ தங்களது லாபத்தில் ஒரு துளியைக் கூட விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.  இலங்கையிலும், ஆப்கானிஸ்தானிலும் என்ன நடந்தது? அந்நாடுகளில் இந்தக் கருணை மாகான்களின் யோக்கியதை என்ன?

இலங்கையில், மக்கள் வாழ வழியின்றி போராடிக் கொண்டிருந்த போதும், தங்கள் லாபத்தைக் குறைத்துக் கொள்ள முடியாது என தனியார்மயத்தைத் தீவிரமாக அமல்படுத்தச் சொன்னவைதான் அமெரிக்க ஏகாதிபத்தியமும், சர்வதேச நிதியமும். காலம் காலமாக தன்னுடைய ஏகாதிபத்திய நலனுக்கு ஆப்கானிஸ்தானை அடிநிலமாகப் பயன்படுத்தியதோடு, அந்நாட்டு மக்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருக்கும் போதும் தாலிபான்களைக் காரணம் காட்டி அந்நாட்டுக்கு நிதி தராமல் முடக்கி வைத்திருக்கிறது அமெரிக்கா. கொள்ளை லாபத்திற்காக உலகைச் சூறையாடும் இந்தப் பிணந்தின்னிகள் தான் மனித குலம் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று சொல்கிறார்கள்.

மேலும், ஜி 20 என்பதே நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்புதான். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகள்,  தங்களுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்கிற நிகழ்வாகத்தான் நடத்துகின்றன; டெல்லி ஜி 20 யும் அவ்வாறுதான் நடந்திருக்கிறது. இத்தாலியின் அதிபர் மெலோனி சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இந்தியா விண்வெளித் தொழில்நுட்பத்தில் ஜப்பானுடன்  கூட்டு வைப்பதற்கான ஒப்பந்தங்கள் நிறைவேறியிருக்கின்றன. மற்றபடி, இந்த மாநாட்டில் தீர்மானித்தது போல், ஊழல் ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, பெண்கள் மேம்பாடு, எரிசக்தி ஒத்துழைப்பு, வறுமை ஒழிப்பு, பருவ நிலை மாற்ற ஒத்துழைப்பு ஆகிய அனைத்திலும் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவார்களா? 1999 முதல் நடைபெற்று வரும் ஜி 20 மாநாடுகளால்  எந்தப் பிரச்சினையாவது இதுவரை முடிவுக்கு வந்திருக்கிறதா என்றால் எதுவும் இல்லை. பருவ நிலை மாற்றத்திற்காக நடத்தப்படும் COP உச்சி மாநாட்டினாலும் கூட இதுவரை பெரிதாக எதுவும் மாற்றம் நடந்ததில்லை என்பதே வரலாறு.

பேசப் படவேண்டியது ஜி20யா? அல்லது 420 யா?

ஜி 20 மாநாட்டின்  இந்த உண்மைத் தன்மையைப் பற்றி எழுதாத ஊடகங்கள், ஜி 20 மாநாடு மோடியால்தான் வெற்றி பெற்றது, மோடி தலைமைதான் என்று நடுப்பக்கக் கட்டுரைகள் எழுதி பாசிச கும்பலுக்கு சொம்படிக்கின்றன. அதுமட்டுமின்றி, ஆட்சிக்கு வந்ததிலிருந்து டாம்பீகமாக மோடி அரசு அறிவித்த திட்டங்களில் நடைபெற்ற ஊழலை வெளிக்கொண்டு வந்திருக்கிறது சி.ஏ.ஜி அறிக்கை. ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க கும்பலால் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருப்பதையோ, அம்மக்கள் வாழ்வாதாரம் இழந்து அகதிகளாக்கப்பட்டிருப்பதையோ இந்த ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை. மோடியின் இந்த  420 வேலைகளை அம்பலப்படுத்தாத ஊடகங்கள்தான் மோடியைக் கொண்டாடுகின்றன. இந்தியா கூட்டணியோ வெறும் 14 ஊடகவியலாளர்களைத் தான் புறக்கணித்திருக்கிறது. இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டிய ஊடகங்களின் பட்டியல் நிறைய இருக்கிறது என்பதையே ஜி 20 புகழ் கட்டுரைகள் காட்டுகின்றன.


வாகை சூடி



கொலைகார வேதாந்தாவும் பாசிச பா.ஜ.க-வும் கூட்டு – அம்பலப்படுத்திய ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை

ண்மையில் கட்டமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கைத் திட்டம் (OCCRP) என்ற உலகளாவிய புலனாய்வு பத்திரிகையாளர்கள் நிறுவனம் ஒன்று வேதாந்தா நிறுவனத்திற்கும் பா.ஜ.க-விற்கும் உள்ள தொடர்பு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மோடி அரசுக்கும் கொலைகார கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தாவிற்கும் இடையிலான கள்ளகூட்டை அம்பலப்படுத்தியுள்ளது.

ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2022-ஆம் ஆண்டின் முற்பகுதியில், பொது மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமலேயே சுரங்க நிறுவனங்கள் உற்பத்தியை 50% வரை அதிகரித்துக்கொள்ள அனுமதியளிக்கும் விதத்தில் விதிமுறைகளை தளர்த்தியது. 2021-ஆம் ஆண்டு கோவிட் -19 தொற்றால் நாடு முடங்கியிருந்தபோது, வேதாந்தா குழுமம் விதிமுறைகளைத் தளர்த்துவதற்கான லாபியிங் (lobbying) செய்ததாக ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை கூறுகிறது. லாபியிங் (lobbying) என்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசாங்க பிரதிநிதிகளை ஊழல்படுத்தி தாங்கள் விரும்பியதை சட்டரீதியாக நிறைவேற்றிக்கொள்வதாகும்.

ஒவ்வொரு திட்ட விரிவாக்கமும் தங்கள் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து உள்ளூர் மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு கருத்துக் கேட்பு கூட்டங்கள் வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது. பல நேரங்களில் கருத்துக் கேட்பு கூட்டங்கள் கண்துடைப்புக்காகவே நடத்தப்படுகிறது என்பதே எதார்த்தம். ஆனால், அதைக்கூட கார்ப்பரேட்கள் தடையாகக் கருதுகிறார்கள்.


படிக்க: சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு 2022 : 180 நாடுகளில் இந்தியா கடைசி இடம் !


சுற்றுச்சூழல் அமைச்சகம் 2020-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாட்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) சட்டத்தில் ஒரு திருத்தத்தை மேற்கொண்டது. அத்திருத்தம் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு திட்டங்களுக்கு கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்துவதிலிருந்து விலக்கு அளித்தது. இந்த திருத்தம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் உள்ள வல்லுநர்கள் ஆராய்ந்து அனுமதி அளிப்பதற்கு பதிலாக மாநில அதிகாரிகளே அனுமதியளிக்கும் நிலையை ஏற்படுத்தியது. அண்மையில், வனப்பாதுகாப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் காட்டுப் பகுதிகளை நில அதிர்வு கணக்கெடுப்புக்காக (seismic surveys) ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதி வழங்கியது.

கட்டுப்பாடுகள் ஏன் நீக்கப்பட்டன?

சுரங்க நிறுவனமான வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதிய கடிதத்தில், ”சுரங்க நிறுவனங்கள் புதிய சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறாமல் உற்பத்தியை 50% வரை அதிகரிக்க அனுமதிப்பதன் மூலம் இந்தியாவின் விரைவான பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் உத்வேகம் சேர்க்க முடியும்” என்று கூறியிருந்ததாக ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை கூறுகிறது. புதிய சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறாமல் சுரங்கத் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரித்துக் கொள்வதற்குத் தடையாக உள்ள விதிமுறைகளை அகற்ற அந்நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே அரசை வலியுறுத்தி வருகின்றன.

சுரங்கத் தொழிலுக்கான சுற்றுச்சூழல் விதிமுறைகளை தளர்த்துவதில் மட்டும் வேதாந்தா நிறுவனம் வெற்றிகரமாக லாபியிங் செய்யவில்லை. அந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான கெய்ர்ன் ஆயில் அண்ட் கேஸ் நிறுவனமும் (Cairn Oil & Gas), எண்ணெய் ஆய்வு திட்டங்களுக்கான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுவதை ரத்து செய்ய லாபி செய்துள்ளது. சுரங்கத் தொழிலுக்குச் செய்ததைப் போலவே, பொதுமக்களைக் கலந்தாலோசிக்காமல் எண்ணெய் ஆய்வு திட்டங்களுக்குச் சாதகமாக சட்டம் திருத்தப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர், ராஜஸ்தானின் வடக்கு பாலைவனங்களில் கெய்ர்ன் நிறுவனத்தின் ஆறு எண்ணெய் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கூறுவது என்ன?

அரசு பொதுமக்களைக் கலந்தாலோசிக்காமல் இந்த மாற்றங்களைச் செய்துள்ளதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கூறுகின்றனர். சுற்றுச்சூழல் அமைச்சகம், அலுவலகங்களுக்கு இடையிலான தகவல்தொடர்புக்கு அலுவலக குறிப்பை (office memo) பயன்படுத்தும். அப்படி ஒரு அலுவலக குறிப்பைத் தனது வலைத்தளத்தில் வெளியிட்டு சுரங்க விதிமுறைகளை மாற்றியுள்ளது. எந்தவொரு பொது விவாதமும் இல்லாமல் முக்கியமான விதிமுறைகளை இவ்வாறு மாற்றியமைப்பதானது சட்டத்திற்கு எதிரானது என்று சிந்தனைக் குழாம் ஒன்று தனது ஆய்வில் கூறியுள்ளது.

வேதாந்தாவின் லாபியிங் ஏன் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது?

வேதாந்தா பா.ஜ.க-வுக்கு ஒரு முக்கியமான நன்கொடையாளராக இருந்ததாக ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை கூறுகிறது. வேதாந்தாவின் துணை நிறுவனத்துடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்கள், 2016 மற்றும் 2020-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பா.ஜ.க-வுக்கு ரூ. 43.5 கோடி நிதி வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க தாக்கல் செய்துள்ள பங்களிப்பு அறிக்கை (contribution reports) கூறுகிறது. இதில், பத்ரம் ஜன்ஹித் ஷாலிகா (Bhadram Janhit Shalika) என்ற ஒரு அறக்கட்டளை மட்டும் 2016-2017 முதல் 2021-2022 வரையிலான நிதியாண்டுகளில் பா.ஜ.க-வின் நன்கொடையாளர்களில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. வேதாந்தா நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் நன்கொடைகளை வழங்கியுள்ளதால் இந்தத் தொகை இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும்.

பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் இலக்குகள் என்ன?

பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றும் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இதன் காரணமாக, சுரங்கள் போன்ற கனரக தொழில்களை ஒழுங்குபடுத்துவது என்பது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் உலகளாவிய ’முயற்சி’க்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவ்வாறு ஒழுங்குபடுத்தி சேதத்தின் அளவைக் குறைப்பதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) ஒரு முக்கிய கருவி என்று கூறப்படுகிறது. ஈ.ஐ.ஏ-வை மதிக்காமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட்டாலும் அது ஒரு தடையாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் பாசிச பா.ஜ.க-வுடன் கூட்டுவைத்துக் கொண்டு சுற்றுச்சூழல் சட்டங்களையும் விதிகளையும் நீர்த்துப்போகச் செய்கிறார்கள்.


கார்மேகக்குழலி

செய்தி ஆதாரம்: தி இந்து



பெரியார் 145 – சூளுரை | சனாதனம் ஒழிப்போம்!

பெரியார் 145 – சூளுரை | சனாதனம் ஒழிப்போம்!



பிள்ளையார் அரசியல்! | தோழர் செல்வம்

பிள்ளையார் அரசியல்! | தோழர் செல்வம்

பாருங்கள்! பகிருங்கள்!!



தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் காவி குண்டர்களின் அட்டூழியம்!

மக்கள் அதிகாரம் தோழர்களின்
கருத்துரிமையை மறுக்கும்
பா.ஜ.க, இந்து முன்னணி காவி குண்டர்கள்!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!

மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, “வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்!”, “கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்” என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரங்கள், அரங்கக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் வாசல் கடைவீதிகளில் 15-09-23 மதியம் மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக பிரசுரம் கொடுக்கப்பட்டு பொது மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதனை கண்ட சங்கி ஒருவன் மறைந்திருந்து தோழர்கள் அனைவரையும் புகைப்படம் எடுத்துச் சென்றான். அவ்வேளையில் சொல்லிவைத்தாற் போல் போலீஸ் வாகனம் வந்தது. பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நம் தோழர்களை அழைத்த காவல் ஆய்வாளர் யார் நீங்கள்? நீங்கள் இங்கு என்ன பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? பிரச்சாரம் செய்ய யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது என்று விசாரித்தார். இங்கு இது போன்ற எந்த பிரச்சாரமும் செய்யக்கூடாது என்று பேசிக் கொண்டிருந்த வேளையில், தோழர்களை சுற்றி வளைத்த 15-க்கும் மேற்பட்ட காவி குண்டர்கள் போலீசின் முன்னிலையிலேயே தோழர்களின் பையை பிடித்திழுத்தது, தோழர்களின் கையிலிருந்த பிரசுரங்களை பிடுங்கி கிழித்து போட்டதோடு, ஆபாச வார்த்தைகளால் திட்டி தோழரை தாக்கி ரௌடித்தனத்தில் ஈடுபட்டனர்.


படிக்க: சுரேஷ் சவாங்கே வெறுப்பு பேச்சு – காவி குண்டர்கள் வன்முறை வெறியாட்டம்!


இவர்களிடமிருந்து தோழர்களை மீட்டு நெல்லை டவுன் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு வந்த 30-க்கும் மேற்பட்ட காவி குண்டர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிந்தால்தான் நாங்கள் செல்வோம். இல்லையென்றால் இங்கேயே தங்கி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போலீசை மிரட்டினர்.

அப்போது அங்கு வந்த பாஜகவின் முன்னாள் எஸ்சி/ எஸ்டி பிரிவு மாவட்ட செயலாளர் என்று அறியப்பட்ட முருகதாஸ் என்கிற சங்கியின் தலைமையில் ஒன்றுதிரண்டு, உங்களுடைய உயர் அதிகாரியை உடனே வர சொல்லுங்கள். இல்லையென்றால் கமலாலயத்திற்கும், அண்ணாமலைக்கும் போன் செய்ய வேண்டி வரும் என்று ஆய்வாளரையே மிரட்டினார்கள். எங்களது புகாருக்கு சி.எஸ்.ஆர் போட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் நாங்கள் ஸ்டேசனை முற்றுகையிடுவோம் என்று கூறி பிரச்சனையில் ஈடுபட்டார்கள். இந்த சங்கி கும்பலின் மிரட்டலுக்கும், கட்டளைக்கும் போலீஸ் பணிந்தது. கருத்துரிமை அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் தோழர்களை தடுக்கும் போலீசு, அராஜகம் செய்யும் காவி குண்டர்களை கைது செய்யாமல் அவர்கள் சொல்படி பணிந்து போகிறது.

மேலும் அங்கிருந்த போலீஸ் ஒருவர், வேண்டாம் பிஜேபி என்று ஏன் பிரச்சாரம் செய்கிறீர்கள், உங்கள் தரப்பை மட்டும் சொல்ல வேண்டியதுதானே என்று ‘ஜனநாயகம்’ பேசினார். இந்த போலியான ஜனநாயக அமைப்பை பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்திற்கு வந்த ஆர்எஸ்எஸ் – பிஜேபி பாசிச கும்பலுக்கு, துளியளவும் ஜனநாயகம் இல்லாத, ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் போலீஸ்துறையை தனக்கு கீழே அடிமையாக கொண்டு வருவது ஒன்றும் அவ்வளவு ஒன்றும் சிரமமான காரியம் அல்ல.


படிக்க: ‘கிருத்துவர்களையும், முஸ்லிம்களையும் எப்போது கொல்வீர்கள்’ – வெறுப்பு விஷத்தை கக்கும் காவி குண்டர்கள்!


இதற்கு ஒருபடி மேலே போய், மதுரையில் சுப்பிரமணியபுரம் போலீசு, தோழர்கள் எழுதிய சுவரெழுத்தில் வேண்டாம் பிஜேபி என்பதை மட்டும் அழித்து தனது சங்கி விசுவாசத்தை காட்டியது.

காவி பாசிஸ்டுகளால் மக்கள் அடித்தளத்தை பெறமுடியாத தமிழ் மண்ணிலேயே கருத்துரிமையின் அடிப்படையில் பிரசுரம் கொடுப்பதை தடுப்பது, அடிப்பது, போலீசை மிரட்டுவது என்று அராஜகம் செய்யும் இந்த இந்துத்துவ பொறுக்கிகள் மணிப்பூர் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கலவரத்தை எவ்வாறு திட்டமிட்டு நடத்துகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

தாங்கள் ஆளுகின்ற மாநிலங்களில் நேரடியாக பாசிசத்தை பிரயோகிக்கும் சங்கிக் கூட்டம், எதிர்க் கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் அராஜகத்தின் வழியாக இணையாட்சி நடத்துகிறது. அந்த வழியில் தமிழ்நாட்டை சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறது பாசிசப் படை. அதற்கு உதாரணம் தோழர்கள் மீதான இந்த தாக்குதல்கள்.

நடந்த சம்பவத்தை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த சங்கிக் கூட்டத்தையே வேரடி மண்ணோடு களைய வேண்டியது புரட்சிகர, ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்கள் ஆகியவர்களின் கடமை!


மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.


நேரலை – தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாள் சூளுரை! | தெருமுனைக் கூட்டம்

தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாள் சூளுரை! | மதுரையில் தெருமுனைக்கூட்டம்

பகுதி 1

பகுதி 2



எதற்கு வாழ்த்துகிறீர்கள்?

தற்கு வாழ்த்துகிறீர்கள்?

உலகம் அறிந்த தலைவர்
நாடு போற்றும் பிரதமர்
G20-இன் நாயகன்
சந்திரயான்-3 விட்ட சாதனையாளன்
தாடி வளர்க்கும் சன்னியாசி
‘பாரத’ பிரதமர் மோடிக்கு
இன்று பிறந்தநாளாம்!

காவி கும்பலும்
கார்ப்பரேட் களவாணிகளும்
போட்டி போட்டுக்கொண்டு
வாழ்த்து சொல்கின்றனர்!
எதற்காக இந்த வாழ்த்துக்கள் எல்லாம்?

பாரத தாயின் புகழ் பாடி
மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி
வேடிக்கை பார்த்ததற்கா?

ஏழைகளை ஒட்டச்சுரண்டி
இந்திய நாட்டை
அம்பானி-அதானி கார்ப்பரேட்களிடம்
அடகு வைத்ததற்கா?

“மனிதர்கள் மிருகமானால்”
என்ற படத்தை
குஜராத் கலவரத்தில்
நேரலையில் காட்டியதற்கா?

பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டிய மக்களை
பார்ப்பனியம் பழக வைத்து
அடிமையாக்குவதற்கா?

எங்கள் நண்பர்களான
முஸ்லிம், கிறித்துவர்களை
எதிரியாக சித்தரித்து
வெறுப்பு அரசியல் செய்வதற்கா?

ஏழைகளின் வங்கிக்கணக்கில்
15 லட்சம் போடுவதாக கதையளந்துவிட்டு
7.5 லட்சம் கோடி ரூபாயை சுருட்டியதற்கா?

இந்தியாவை பாரதமாகவும்
மனிதர்களை மதவெறி மிருகங்களாகவும்
மாற்றி பாசிச சர்வாதிகாரத்தை நிறுவத்துடிக்கும் உனக்கெதிராய்
அணித்திரள வேண்டிய நேரம் வந்துவிட்டது!

இனியும் பொறுமை காத்தால்
நாங்கள் 2000 ஆண்டுகளுக்கு
பின்னோக்கி சென்று விடுவோம்!

இந்து என்ற ஒற்றை வார்த்தையை வைத்து
தேசப்பெருமிதம் என்ற  போதையை  வைத்து
சாதிவெறி, இனவெறி பிளவை வைத்து மட்டும்
9 ஆண்டுக்கால ஆட்சி நடத்திய ஜி,
இன்னொரு ஆண்டு
பிரதமராக பிறந்தநாள் கொண்டாடினால்
இது இந்தியாவாக இருக்காது!
இந்துராஷ்டிரமாகத்தான் இருக்கும்!


கர்ணன்



ஒரு மனைவியை திருமணம் செய்தால் சனாதனம்.. அடேய்! | தோழர் மருது

ஒரு மனைவியை திருமணம் செய்தால் சனாதனம்.. அடேய்!



இந்தியாவின் அவலங்கள் – கலகக்குரல்காரர்கள் | சிவப்பு அலை

இந்தியாவின் அவலங்கள் – கலகக்குரல்காரர்கள் | சிவப்பு அலை



IPC, CrPC, IEA சட்ட வரைவு மசோதாக்கள் – பாசிசத்தை சட்டபூர்வமாக்குகிறார்கள்! – வழக்கறிஞர் சேல்.முருகன்

IPC, CrPC, IEA சட்ட வரைவு மசோதாக்கள்
– பாசிசத்தை சட்டபூர்வமாக்குகிறார்கள்!

– வழக்கறிஞர் சேல்.முருகன்

பாருங்கள் பகிருங்கள்!



கப்பலூர் டேல்கேட்-ஐ அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கப்பலூர் டேல்கேட்-ஐ அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு!

பாருங்கள்! பகிருங்கள்!!



IPC, CrPC, IEA சட்ட வரைவு மசோதாக்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் பேரணி!

த்திய அரசு மூன்று சட்டங்களை திருத்தி, இந்தியில் பெயர் மாற்றி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதை திரும்ப பெற வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம், நீதி மன்றங்களில் வழக்குகளை இ-பைலிங் முறையில் மட்டுமே தக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு நடைமுறைபடுத்தி வருவதை கண்டித்தும், இ-பைலிங் முறையுடன் நேரடியாக வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை இரண்டு ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு (ஜாக்) சார்பாக 15-09-2023 அன்று கவர்னர் மாளிகை நோக்கி பேரணி செல்ல அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜாக் அமைப்பின் பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களில் இருந்து வழக்கறிஞர்கள் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி செல்வதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் முன்பு கூடி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் பிரதிநிதிகள் பேசும்போது மத்திய அரசும், ஆளும் பாஜக கட்சியும் தங்கள் மொழி ஆதிக்கத்தை மூன்று சட்ட திருத்தங்கள் மூலமாக அமல்படுத்த நினைக்கின்றனர், தமிழக வழக்கறிஞர்கள் ஒருபோதும் இந்தி மொழி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்று  தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்,

சட்ட திருத்தம் உடனே நிறுத்தி வைக்கப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை நோக்கி தமிழக வழக்கறிஞர்கள் நகர்வோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இ-பைலிங் முறை நடைமுறை சாத்தியமற்றது, இ-பைலிங் முறை சாத்தியமாக கீழமை நீதிமன்றங்களில் போதிய கட்டமைப்பு வசதிகள் இதுவரையிலும் ஏற்படுத்தப்படவில்லை, முறையான இணையதள வசதிகள் இல்லை, இணையதளத்தை கையாளக்கூடிய புலமைபெற்ற ஊழியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை, ஏற்கனவே நீதிமன்றத்தில் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்த நிலையில் இதை எதையுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் இ-பைலிங்முறையை கால அவகாசமின்றி தீவிரமாக நடைமுறைப்படுத்துவது பொதுமக்களை நேரடியாக பாதிப்படையச் செய்யும்.

ஒரு அவசர வழக்கை உடனடியாக தாக்கல் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது, இ-பைலிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு உரிய அலுவலக கட்டமைப்பை ஏற்படுத்த இயலாத பொருளாதார  வசதியற்ற அடித்தட்டு நிலையிலிருந்து வழக்கறிஞர் தொழிலில் நுழையக்கூடிய வழக்கறிஞர்களும், இளம் வழக்கறிஞர்களும் இந்த தொழிலை விட்டு வெளியேறுவதற்கான நிலையை ஏற்படுத்தி விடும்.

மேலும் வயது முதிர்ந்த மூத்த நடுத்தர வழக்கறிஞர்களுக்கும் இந்த இணையதளத்தை கையாண்டு இ ஃபைலிங் முறையில் வழக்கு தாக்கல் செய்வது  அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, இவை எதையுமே கண்டுகொள்ளாமல் உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தான்தோன்றித்தனமாக அராஜகமாக ஜனநாயகமற்ற முறையில் வழக்கறிஞர்கள் மீது திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் கார்பரேட் மயத்தை மையப்படுத்தி வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கமும் இதில் அடங்கியுள்ளது,

மேலும் வழக்குகளை தாக்கல் செய்வதற்கான செலவும் பொதுமக்களுக்கு அதிகமாகும், எனவே இதை உடனே நிறுத்தி வைக்க வேண்டும்.

மேலும் உச்சநீதிமன்றம் இ-பைலிங் முறை நடைமுறைப்படுத்தியிருப்பது மட்டுமல்ல, மத்திய அரசு மூன்று சட்டங்களையும் இந்தியில் பெயர் மாற்றி பாராளமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதும் தான்தோன்றித்தனமாக நடைபெற்றுள்ளது.

வழக்கறிஞர் சங்கங்கள், துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் யாரிடமும் எந்த கருத்துமே கேட்காமல் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தாங்கள் நினைத்ததை அமல்படுத்தியே தீர வேண்டும் என்ற சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வது ஜனநாயகத்திற்கு ஏற்படுவதில்லை என்பதை ஆழமாக பதிவு செய்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக பார் கவுன்சில், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவை தங்களுக்குள் ஒரு கள்ள கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு வழக்கறிஞர்களையும், வழக்கறிஞர் சங்கங்களையும், போராடுகின்ற வழக்கறிஞர்களையும் அச்சுறுத்தி ஒடுக்கும் நோக்கத்தில் சட்டத்துக்கு மாறாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு  நீதிபதிகளை எதிர்த்துப் பேசினால், கைநீட்டி பேசினால் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நீதிபதிகளுக்கு உண்டு என்று முன்னாள்  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்த போது தமிழக வழக்கறிஞர்கள் ஜாக் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சுமார் மூன்று மாத காலங்கள் தொடர்ந்து போராடி அந்த சட்ட திருத்தத்தை முறியடித்தனர்.

அதன் பின்னர்  பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழகம் பார் கவுன்சில், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தங்களுடைய  கள்ளக் கூட்டணியின் மூலமாக வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் தமிழக வழக்கறிஞர்கள் பெருந் திரளாக சுமார் 1700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சென்னையில் அச்சமின்றி ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

தமிழக பார் கவுன்சிலின் அராஜகமான போக்கை கண்டித்து ஜாக் பொதுக்குழுவிலே தீர்மானம் ஏற்றியதற்காக ஜாக் தலைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை பார்க்கவுன்சிலால் அறிவிக்கப்பட்டு அதன் விசாரணை நிலுவையில்  இருந்து கொண்டிருக்க கூடிய நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கும், இ-பைலிங் முறைக்கும் எதிராக ஜாக் பொதுக்குழுவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் தமிழக வழக்கறிஞர்கள் அணி திரண்டு போராட்டம் நடத்தி இருப்பது தமிழக வழக்கறிஞர் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையும் எழுச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

வினவு களச்செய்தியாளர்

தமிழ்நாட்டில் தொடரும் சாதியத் தீண்டாமை கொடுமைகள்: நாளைய தலைமுறையை நாமே பலி கொடுக்கப் போகிறோமா? 

தூத்துக்குடி மாவட்டம் சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

அப்பள்ளியில் ஆகஸ்ட் 25 ஆம் தேதியிலிருந்து செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தில் சமையலராக பணியாற்றி வரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முனியசெல்வி சமைத்ததால் ஒன்பது மாணவ மாணவியர்கள் உணவை சாப்பிட மறுத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து தீண்டாமை கொடுமை நடந்த பள்ளிக்கு சென்று மானவர்களுடன் அமர்ந்து உணவருந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இப்பிரச்சினைக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“நாம சாப்பிட்டோம் என்றால் ஊரை விட்டு தள்ளிவைத்து விடுவார்கள் டா, நாம சாப்பிடக் கூடாது டா” என்று மாணவர்கள் பேசிக் கொண்டதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வேதனையுடன் தெரிவித்திருந்தார், சமையலரான முனியசெல்வி. பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் சாதி என்னும் நஞ்சை பெற்றோர்களே ஊட்டியுள்ளனர்‌ என்பதே கவனிக்கப்பட வேண்டியது.


படிக்க: கார்ப்பரேட்களால் விழுங்கப்படும் பாரம்பரிய மருத்துவம்!


இதேபோல் திருப்பூர் மாவட்டம் காளிங்கராயன்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கரூர் மாவட்டம் பொருந்தலூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி ஆகியவற்றிலும் சாதியத் தீண்டாமை கொடுமைகள் அரங்கேறியுள்ளது.

நாங்குநேரியில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் தன்னுடன் படிக்கும் சக மாணவனைச் சாதிவெறியால் வெட்டிய கொடூர சம்பவம் கடந்த மாதம் அரங்கேறியது.

அது பள்ளி மாணவர்களிடையே எவ்வளவு ஆழமாக சாதி வேரூன்றி வருகிறது என்பதை அம்பலப்படுத்தியது.

சமூகத்தில் சாதி என்னும் நஞ்சை தொடர்ந்து விதைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களும், தமிழ்நாட்டில் சாதி வெறி சங்கங்களில் ஊடுருவி சாதி கட்டமைப்பை வளர்த்தெடுத்து வரும் பார்ப்பனிய சித்தாந்தம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் சங்கத்தையும் உடனடியாக தடை செய்யவில்லை என்றால் நாளைய தலைமுறையை நாமே சாதிவெறிக்கு பலி கொடுத்ததாக அமைந்துவிடும்.

புதிய ஜனநாயகம்
14.09.23

disclaimer

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2023 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

செப்டம்பர் – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

♦ தலையங்கம் : கோழைகளின் வீராவேசம்!
♦ சந்திரயான்-3 : போலி தேசப்பெருமித போதை!
♦ தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள்!
♦ “ஊழல் நாயகன்” மோடி!
♦ ஒருவிரல் புரட்சியா, மக்கள் எழுச்சியா”? பாசிசத்தை எதிர்கொள்ள, “சாத்தியமான மாற்று” எது?
♦ அசாம் தொகுதிகள் மறுவரையறை: வாக்குவங்கியை காவிமயமாக்கும் புதிய மாடல்!
♦ இந்திய தண்டனைச் சட்டம்: இனி இந்துராஷ்டிர தண்டனைச் சட்டம்!
♦ கார்ப்பரேட் அதானியின் கோரப்பிடியில் காட்டுப்பள்ளி!
♦ நைஜர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு: ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டி!
♦ பொதுப் பாடத்திட்டம்: தி.மு.க. அரசின் மற்றொரு கார்ப்பரேட் சேவை!

நாளிதழ்களின் நாடகங்கள் | தோழர் மருது | தோழர் புவன்

நாளிதழ்களின் நாடகங்கள் | தி இந்து | தினமணி | தினமலர் | தோழர் மருது | தோழர் புவன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!