சனாதனம் மலக்குழி | தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
![]()

தூத்துக்குடியில் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தற்போது வரை 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நீம் பவுண்டேசன் என்கிற நிறுவனம் ஆசிரியர்களாக நியமித்துள்ளது. கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கு கற்றலை மேம்படுத்துவதற்குப் பயிற்சியளிப்பதாகக் கூறி பெண் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்குப் பணி நியமனம் வழங்கியுள்ளது அந்த நிறுவனம்.
ஆசிரியர்களிடம் நீம் பவுண்டேசனில் உறுப்பினராக சேருவதற்கும், சிறப்பு பயிற்சி எடுப்பதற்கும் ரூ. 50,000 கட்டினால், மாதம் ரூ. 15,000 சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் சேர்ந்துள்ளனர். அதில் சிலருக்கு மட்டும் நவம்பர் மாதமும், டிசம்பர் மாதமும் சம்பளம் கொடுத்துள்ளார்கள். அதன் பின்னர் ஜனவரி மாதத்திலிருந்து இன்றுவரை 8 மாதமாக யாருக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று பின்னர் தான் அவர்களுக்குத் தெரிந்தது.
இதனையடுத்து ஜூலை மாதம் மாவட்ட கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் புகார் மனு கொடுத்தனர். அப்போது “நீங்கள் படித்து என்ன பிரயோஜனம்? நாங்கள் இதுபோன்று பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் என்று விளம்பரம் பண்ணுகிறோம்; அதை படிக்க மாட்டீர்களா?” என்று பாதிக்கப்பட்டவர்களை நோக்கி எதிர் கேள்வி கேட்டுள்ளனர்.
அதன் பிறகு நீம் பவுண்டேசன் நிறுவனர் லூயிஸ் ராஜ்குமாரை அலுவலகத்திலேயே வைத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முற்றுகையிட்டு உள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணம் கொடுப்பதாக செய்தியாளர் முன்னிலையில் பத்திரத்தில் எழுதிக் கொடுத்துள்ளார் நிறுவனர் லூயிஸ் ராஜ்குமார்.
படிக்க: அசாம் பலதார மணம் தடை மசோதா: பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியே!
ஆனால் ஆகஸ்ட் 31-ஆம் தேதியிலிருந்து நீம் பவுண்டேசன் நிறுவனர் தலைமறைவானார். அதன் பிறகு 04.09.2023 அன்று மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் புகார் கடிதம் கொடுத்து முறையிட்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர், மோசடி வழக்கில் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ”மாவட்ட கல்வி நிர்வாகிகளுக்கும் பங்கு உள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியபோது, மாவட்ட ஆட்சியரோ, ”அதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களோ, ”எங்களிடம் ஆதாரம் இல்லை. ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் தான் நடக்கும். அது மட்டுமல்லாமல் பள்ளிக் கல்வி துறையின் குழந்தைகள் இடைநிற்றலை தடுக்கும் பணிக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஓட்டப்பிடாரம் வட்டாரக் கல்வி அலுவலர்கள், சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் களப் பணியாளர்கள், அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள் இப்படி எண்ணற்றோர் நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்துள்ளனர்” என்று கூறியபோது, மாவட்ட ஆட்சியரோ, ”நானும் மாவட்ட நீதிபதியும் கூட… உங்களிடம் மாவட்ட கல்வி நிர்வாகம் சார்பாக வேலை கொடுக்கப்பட்டது என்று எழுத்துப்பூர்வ ஆதாரம் இருக்கிறதா? அப்படி இருந்தால் நான் மாவட்ட கல்வி நிர்வாகம் மேல் நடவடிக்கை எடுக்கிறேன். இல்லையென்றால் இப்போதைக்கு மோசடி வழக்கில் தனியார் நிறுவனத்தின் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்” என்று கூறினார்.
இதைக் கேட்ட ஆசிரியர்களோ நம்பிக்கை இழந்து அங்கிருந்து வெளியேறினர். அடுத்ததாக மாவட்ட கல்வி நிர்வாகத்திடம் சென்று கேட்டபோது ”எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று சொல்லிவிட்டார்கள்.
படிக்க: உலகையே உலுக்கும் மொராக்கோ நிலநடுக்கம் | படக்கட்டுரை
ஒரு பக்கம் குறைந்தபட்ச கூலி, சாதிப் பாகுபாடு, பணி நிரந்தரம் கிடையாது, 12 மணி நேர வேலை ஆகியவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு தனியார் பள்ளிக்கூடத்தில் வேலை செய்து வந்தவர்களும், வேலை தேடிக் கொண்டிருந்தவர்களும் இதை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதி தங்கள் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்குப் பணம் வாங்கியும் ரூ.50,000-ஐ திரட்டி கொடுத்துள்ளனர்.
தினமும் வேலைக்குச் செல்வதற்கு பெட்ரொலுக்கும், பேருந்துக்கும், கையில் பணம் இல்லாமல் நண்பர்களிடமும், உறவினர்களிடமும், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பணம் வாங்கியும், வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் தவித்தும் கிட்டத்தட்ட 250 நாளுக்கும் மேலாக மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாகியுள்ளனர்.
ஆசிரியர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்?
பள்ளிக்கல்வித் துறையில் தற்காலிக பணிகளோ, அரசின் திட்டங்களோ, அரசு-தனியார் கூட்டு நிறுவனம் (Public Private Partnership) வழியே செய்யப்படுகிறது. பெரும்பாலும் தனியார் நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் தான் இத்திட்டங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால்தான், தனியார் தன்னார்வ நிறுவனங்கள் ஆசிரியர்களை சுலபமாக ஏமாற்றுகின்றன.
அரசு நிர்வாகமும் இது போன்ற மோசடிகளுக்கு உடந்தையாக இருக்கிறது. மாவட்ட கல்வி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குத் (ஆட்சியர்) தெரியாமல் ஒரு தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் கூடங்களில் பணி நியமனம் செய்ய முடியுமா என்பதே இங்கு நாம் எழுப்பும் கேள்வி.
பிள்ளைகளைக் கல்வி எனும் கடலுக்குள் அழைத்துச் செல்வதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என்று சொல்ல வைக்கும் அரசும், மாவட்ட கல்வி நிர்வாகமும் கல்வியையும், கல்வி நிறுவனங்களையும் இடைவிடாது தனியார்மயமாக்குவதையே உயிர் மூச்சாகச் செய்து வருகின்றன. இதில் ஆசிரியர்களின் வாழ்க்கை மட்டுமல்ல, குழந்தைகளின் எதிர்காலமும் அடங்கியுள்ளது. எந்த அரசாக இருந்தாலும் அது கார்ப்பரேட் மாடல் அரசாகவே செயல்படுகிறது! இந்த அரசுகள் கல்வியையும் பாதுகாக்காது; பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் துணை நிற்காது.
எனவே, மக்கள் தான் கல்வியைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் துணை நிற்கவும் வேண்டும். தனியார்மயமாக்கலை எதிர்த்துப் போராட வேண்டும். அதன் வழியாகத்தான் நம் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்க முடியும்.
![]()
கள ஆய்வு
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
93853 53605

சமீபத்தில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் செங்காந்தள் (Gloriosa superba) என்னும் தாவரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் வேதிப்பொருள் இருப்பதாகக் கண்டறிந்து அதற்கு காப்புரிமம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கு (tuber) பகுதியில் இருக்கும் கொல்கிசின் (Colchicine) எனப்படும் வேதியியல் மூலக்கூறு புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 31 அன்று மத்திய அரசு இதற்கு காப்புரிமம் வழங்கியுள்ளது. இது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இதுபோன்ற உயிர் காக்கும் மருந்துகளின் காப்புரிமம் கார்பரேட்களிடம் விற்கப்படும் போது, மருந்துகளின் விலையை கார்பரேட்டுகள் தங்கள் லாபவெறிக்கு ஏற்றவாறு உயர்த்தி கொள்ளையடிக்கவே வழிவகுக்கும். இதனால் பாதிக்கப்படப் போவது பொருளாதாரத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்களே. இவ்வளவு அறிவியல் முன்னேற்றம் அடைந்த பின்னரும் காசு இல்லாதவர்கள் நோயினால் இறந்து போகும் அவலம் இருக்கும் சமூகம் எவ்வாறு முன்னேறிய சமூகமாக இருக்க முடியும்?
தற்போது, கோவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபடித்த புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டு மூலக்கூறு போன்ற பல மருந்துகளின் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக மக்களின் பாரம்பரிய மருத்துவம் இருந்திருக்கிறது. இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற மருத்துவ முறைகளில் இந்த செங்காந்தள் செடி பல்வேறு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது. அதன் அடிப்பையிலேயே இந்த தாவரத்தில் கொல்கிசின் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, புற்றுநோய்க்கான மருந்துகளாக Vinblastine, Vincristine, Taxol, இருமலுக்கான மருந்தான வாசலின், வலிநிவாரணியான Morphine, மலேரியாவுக்கான Quinine போன்ற நூற்றுக்கணக்கான மருந்துகள் பாரம்பரிய மருத்துவத்தின் பங்களிப்பினால் கண்டறியப்பட்டவை.
சீன பாரம்பரிய மருத்துவத்தை அடிப்படையாக வைத்து மலேரியா நோயாளிகளை சாவில் இருந்து பாதுகாக்கும் அருமருந்தான ”Artemisinin” என்னும் மருந்து ”Artemisia annua” என்னும் தாவரத்தில் இருந்து கண்டறியப்பட்டதாகும். ஆனால் இப்படி உயிர்காக்கும் மருந்துகளை நவீன மருத்துவத்திற்கு அறிமுகம் செய்த பாரம்பரிய மருத்துவத்தின் நிலை இந்த நாட்டில் என்னவாக இருக்கிறது? குறிப்பாக, தமிழர்கள் வாழ்வியலோடு கலந்திருக்கும் சித்த மருத்துவத்தின் நிலை தமிழகத்தில் என்னவாக இருக்கிறது?
படிக்க: மருத்துவ துறையில் வேத மரபுகளைத் திணிக்கும் மோடி அரசு!
சித்த மருத்துவத்தில் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டால் பல மருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர முடியும். மக்களின் பாரம்பரிய மருத்துவ அறிவை நவீன அறிவியலின் துணைகொண்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும்.
ஆனால் சித்த மருத்துவத்துறை பார்ப்பனியத்தாலும் கார்பரேட்டுகளாலும் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது. டெங்கு, சிக்குன்குனியா நோய்த்தொற்றுக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட “நிலவேம்புக் குடிநீர்” மற்றும் கொரோனா நோய்த்தொற்றின் போது பயன்படுத்தப்பட்ட “கபசுரக்குடிநீர்” போன்ற மருந்துகள் மக்களின் நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தும் அருமருந்தாக இருந்தது. இது சித்த மருத்துவத்தின் தரத்திற்கான நடப்புகாலச் சான்றுகளாகும். ஆனால், சித்த மருத்துவத்தில் புதிய ஆராய்ச்சிகளை செய்வது, புதிய மருந்துகளை கண்டு பிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருதெல்லாம் கானல் நீராகவே உள்ளது. ஏனெனில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 60 ஆண்டுகளாக இயங்கிவரும் பாரம்பரிய மிக்க சித்தா கல்லூரி, உயர்ந்த ஆய்வுகளுக்கான வசதி மட்டுமல்ல குறைந்தபட்ச அடிப்படை வசதி கூட இல்லாமல் இயங்கிவரும் நிலையில் எப்படி புதிய மருந்துகள் பற்றிய ஆராய்ச்சி பற்றிச் சிந்திக்க முடியும்?
இந்த பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி தற்காலிகமாகவே இங்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் வெறும் 4 ஏக்கர் நிலத்தில் போதுமான இடவசதி, கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் 60 ஆண்டுகளாக இயங்கிவருகிறது.
போதுமான பேராசிரியர்கள் இல்லாத நிலை, பழமையான விரிசல் விழுந்த கட்டிடங்களின் மேற்கூரை அவ்வப்போது பெயர்ந்து விழுவது, மாணவிகளுக்கான பாதுகாப்பற்ற விடுதி வசதி, அதிக கட்டணம் வசூலிப்பது, போதுமான கழிப்பறை வசதி இல்லாத நிலை, மாணவர்களுக்கான விடுதி வசதி இல்லாதது, குடிப்பதற்கும் மற்றத் தேவைகளுக்கும் போதுமான தண்ணீர் வசதி இல்லாதது போன்ற மாணவர்களின் மிக அடிப்படையான பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாமல் உள்ளது. இவற்றையெல்லாம் சரி செய்யச் சொல்லி வெவ்வேறு காலகட்டங்களில் மாணவர்கள் நிறைய போராட்டங்களை நடத்திய பின்னரும், இந்த பிரச்சினைகளையும் கல்லூரி நிர்வாகம் வெறும் ‘patch work’ மட்டும் செய்து மாணவர்களை ஏமாற்றி வருகிறது.
இதனால், சி.சி.ஐ.எம்-ஆல் (Central Council of Indian Medicine) குறிப்பிடப்பட்ட கட்டமைப்பு தகுதிகளை பூர்த்தி செய்யாததால் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்குத் தடை விதிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக அனுமதி பெற்று மாணவர் சேர்கையை நடத்தி வருகிறது. சமீபத்தில் என்.சி.ஐ.எஸ்.எம் (National Commission for Indian System of Medicine) வெளியிட்ட விதிகளின்படி எந்த விதிக்கும் பொருந்தாமல் தகுதியற்ற கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.
படிக்க: மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து! | பு.மா.இ.மு கண்டனம்
பரந்து விரிந்த மூலிகை தோட்டங்கள், நவீன ஆய்வகங்கள், விலங்குகளிடம் மருந்துகளைப் பரிசோதிப்பதற்கான ஆய்வகங்கள், பாதுகாப்பான விடுதி வசதி, அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை, மாணவர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றைக் கொண்டுவந்தால் மட்டுமே அந்த கல்லூரியின் மாணவர்கள் சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்குவதோடு மக்களுக்கும் பயனுள்ள கண்டுபிடிப்புகளைச் செய்வார்கள்.
ஆனால் இந்த வசதிகளை ஏற்படுத்த போதுமான இடவசதி பாளையங்கோட்டையில் கிடையாது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை 2016-ஆம் ஆண்டில் வழங்கிய உத்தரவில் இக்கல்லூரியை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தி, செட்டிகுளத்தில் பயன்பாடின்றி இருந்த மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான இடத்தில் புதிய கல்லூரியை கட்டிக்கொள்ளுமாறு கூறியிருந்தது. ஆனால் அரசோ, கல்லூரி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சுமார் 7 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
சித்த மருத்துவத்துறையைச் சேர்ந்த பல்வேறு பேராசிரியர்கள், ஆர்வலர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், அரசியல் இயக்கங்களின் நீண்ட போராட்டங்களின் பலனாக தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் மேம்பாட்டிற்காக ₹40 கோடியை ஒதுக்கியது. ஆனால் கல்லூரி நிர்வாகம் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட இடத்திற்கு கல்லூரியை மாற்றாமல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் இழுத்தடித்து வருகிறது. இதனால், சித்த மருத்துவ கல்லூரியின் மேம்பாட்டிற்காக அரசு ஒதுக்கிய நிதியை திரும்ப ஒப்படைக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மக்களின் பாரம்பரிய மருத்துவ அறிவு, சமூகத்தின் அடிப்படை சுகாதாரம், நோய்த் தடுப்பு, விரிவான மருத்துவ சேவைகள், மருத்துவப் படிப்பு போன்றவை எல்லாம் ஒன்றோடொன்று பிணைந்தது. மருத்துவர்களின் நலன், மருத்துவத் துறையின் முன்னேற்றும், மக்கள் நலன் இவையெல்லாம் வெவ்வேறு அல்ல. ஆனால், அரசு மக்களின் பாரம்பரிய மருத்துவத்தைக் கைவிடும் போது, அவை பழமைவாத சக்திகளால் நாசம் செய்யப்படுவது மட்டுமன்றி வெகுமக்களின் உயிர்காக்கும் மருத்துவ சேவைகள் லாபவெறி பிடித்த கார்ப்பரேட்களிடம் சென்றுவிடும் அபாயமும் உருவாகிறது. எனவே, மக்களும் மாணவர்களும் களப் போராட்டங்களின் மூலம் சித்த மருத்துவத்திற்கான தடைகளை உடைத்தெறிந்து அதை அனைத்து மக்களுக்கானதாக மாற்ற வேண்டும்.
![]()
சித்தன்

குறையும் கற்றல்திறன்! நடைமுறைப்படுத்தப்படும் NEP! | ஆசிரியர் உமா மகேஷ்வரி
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை தடை செய்ய வேண்டும்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி, அசாம் மாநிலத்தில் பலதார மணத்தைத் தடை செய்யும் மசோதாவின் மீது மக்கள் தங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாக மாத இறுதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தது, ஆளும் அசாம் மாநில பா.ஜ.க. அரசு.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி பலதார மணத்தை தடை செய்யும் மசோதாவிற்கு ‘பலமான மக்கள் ஆதரவு’ கிடைத்துள்ளது என்று அறிவித்தார், அம்மாநில முதலமைச்சரான ஹிமந்தா பிஸ்வா சர்மா. மசோதாவின் மீது பெறப்பட்ட பொதுமக்கள் கருத்து குறித்து X-இல் கருத்து தெரிவித்த அவர், “எங்கள் பொது அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில் மொத்தம் 149 பரிந்துரைகளைப் பெற்றுள்ளோம். இவற்றில், 146 பரிந்துரைகள் மசோதாவுக்கு ஆதரவாக உள்ளன. இது வலுவான பொது ஆதரவைக் குறிக்கிறது” என்று தெரிவித்திருந்தார். மேலும், 45 நாட்களுக்குள் இம்மசோதாவின் இறுதி வரைவைத் தயாரிக்கும் பணியை அசாம் அரசு மேற்கொள்ளும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
கடந்த மே மாதமே அசாம் அரசு, இம்மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கையின் சட்டபூர்வத் தன்மை குறித்து ஆராய நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது. கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரூமி புகான் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில், அசாமின் அட்வகேட் ஜெனரல் தேபாஜித் சைகியா, அசாம் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நலின் கோஹ்லி மற்றும் கவுகாத்தி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நெகிபுர் ஜமான் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில், “பலதார மணம் தொடர்பான சட்டங்களை உருவாக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு” என்று குழு ஒருமனதாகக் கூறியதாக கடந்த மாதம் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியிருந்தார். மேலும், 2023-ஆம் ஆண்டு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய அசாம் அரசு முயற்சிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆளும் அசாம் பா.ஜ.க அரசின் சுயரூபத்தைப் பற்றியும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தாவின் பாசிச தன்மையை பற்றியும் அறியாதவர்களுக்கு அசாம் அரசின் இந்நடவடிக்கை முற்போக்கானதாகவோ பெண்ணுரிமை சார்ந்த திட்டமாகவோ தோன்றலாம். ஆனால், இது அசாம் மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்களை ஒடுக்குவதற்கான ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசின் அடுத்தக்கட்ட பாசிச திட்டமாகும்.
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை பொறுத்தவரையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினருக்கும் ஒரே குற்றவியல் சட்டமே பின்பற்றப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு மதத்தினருக்கும் சிவில் சட்டம் வேறுபடும். அந்தவகையில், இந்துக்களின் சிவில் சட்டத்தின்படி ஏற்கனவே ஒரு மனைவி இருக்கும்போது ஒருவரால் இன்னொரு மணம் செய்துகொள்ள முடியாது. மனைவியை முறையாக விவாகரத்து செய்துகொண்ட பிறகே இன்னொருவரை மணக்க முடியும். ஆனால், இஸ்லாமியர்களின் சிவில் சட்டப்படி ஒருவர் மனைவியின் விருப்பத்துடன் நான்கு பேர் வரை மணந்துகொள்ள முடியும். இதனை, குறிவைத்தே தற்போது அசாம் பா.ஜ.க அரசு பலதார மணத்தைத் தடைசெய்யும் மசோதாவை நிறைவேற்றத் துடிக்கிறது.
ஏனெனில், இஸ்லாமியர்களின் சிவில் சட்டத்தை ரத்து செய்து பொது சிவில் சட்டத்தை நிறுவ வேண்டும் என்பது பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் நெடுநாள் திட்டமாகும். இதன் ஒரு பகுதியாக, பா.ஜ.க ஆட்சியில் உள்ள பல மாநிலங்களில் அனைத்து மதத்தினருக்கும் ‘பொதுவான’ சில தனிப்பட்ட சட்டங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது அசாமில் பலதார மணம் தடை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், லவ் ஜிகாத், நில ஜிகாத், வெள்ள ஜிகாத் என்று அசாமில் இஸ்லாமியர்களைக் கொடூரமாக ஒடுக்கிவரும் பாசிச ஹிமந்தா சர்மா அரசு, இந்த நரித்தனமான திட்டத்திற்கு ‘இஸ்லாமியப் பெண்களின் மேம்பாடு’ என்ற அரிதாரம் பூசுகிறது. 2017-ஆம் ஆண்டு முத்தலாக் சட்டத்தை ரத்து செய்தபோதும் மோடி அரசு இதே கதையைத்தான் கூறியது. ஆனால், இவர்களின் இஸ்லாமிய பெண்கள் மீதான அக்கறையின் லட்சணத்தை எடுத்துக்காட்ட பில்கிஸ் பானுவின் வாழ்க்கை ஒன்று போதும்.
எனவே, பொது சிவில் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் அனைத்து புரட்சிகர – ஜனநாயக சக்திகளும் அசாம் பா.ஜ.க அரசின் பலதார மணம் தடை சட்டத்தையும் அம்பலப்படுத்தி அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
![]()
சோபியா

வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் – ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு புதிய பாடல்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மனதை உலுக்கும் மொராக்கோ நிலநடுக்கம்
பலி எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியது.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 2000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று அதிகாலை 3.14 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. மலைகளில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு மீட்புப்படையினர் செல்வதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத நிலநடுக்கத்தை இந்த துயரக்காட்சிகள் நமக்கு காட்டுகின்றன.










நன்றி: அல்ஜசீரா
வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் – இரட்டை ஆட்சிமுறையை எப்படி ஒழிப்பது?
தோழர் வெற்றிவேல்செழியன்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமிக்கிறார்கள்! | தோழர் செந்தில்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்துவதே நம் வேலைத்திட்டம்! | தோழர் திருமுருகன் காந்தி
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
எங்கள் வலிகள் உங்களுக்கு புரியலையா?
ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின் புதிய பாடல்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!
சுற்றி வளைக்குது பாசிசப்படை : வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!
2024 நாடாளுமன்றத் தேர்தல்:
வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்!
நாள் செப்-9; இடம்: சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்.
பாகம் – 1
பாகம் – 2
பாகம் – 3
ம.க.இ.க – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்
ஊழலில் உலக சாதனை படைக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி!
சுரண்டலில் கொழுக்கிறது அம்பானி – அதானி கார்ப்பரேட்கள்!
♦ ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; மோடி-அமித்ஷா ஆட்சியில் கடந்த 2016-ஆம் ஆண்டு அமலான ஜி.எஸ்.டி. (GST) வரி மூலம் வசூலான சுமார் 50 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை என்ன ஆனது?
♦ கச்சா எண்ணெய் விலை சர்வதேச அரங்கில் படுபாதாள அளவிற்கு குறைந்த நிலையிலும் வரிகளை உயர்த்தி பெட்ரோல்-டீசல் விலையுயர்வு மூலம் அடித்த கொள்ளை 30 லட்சம் கோடி எங்கே போனது?
♦ மொத்த விலைவாசி உயர்வின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடித்த கொள்ளையை கணக்கிடப்போவது யார்?
படிக்க : அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!
♦ கடந்த பத்து ஆண்டுகளில் கார்ப்பரேட்களுக்கு கடன் தள்ளுபடி 15 லட்சம் கோடி, இதனால் பொதுத்துறை வங்கிகளின் லாபம் மாயமானதைக் கேட்கப்போவது யார்?
♦ வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாதது, ATM பயன்பாட்டுக்கு கட்டணம், SMS அனுப்ப கட்டணம் எனப் பொதுமக்களிடம் அடித்த கொள்ளை 35 ஆயிரம் கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம்!
♦ அறிவிப்பில்லாமல் ரயில்வே-வில் கட்டண உயர்வு, முதியோர் பயண கட்டண சலுகை பறிப்பு, தரம் குறைந்த கொள்முதல் என மக்களிடம் பிடுங்கும் பல்லாயிரம் கோடி எங்கே செல்கிறது?
♦ கார்ப்பரேட்களுக்கு 30 முதல் 22 சதவிகிதம் வரை வரிகுறைப்பு மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வருவாய் இழப்பு சுமார் 8 லட்சம் கோடி!
♦ தனியார்மயம் என்ற பெயரில் கல்வி, மருத்துவம் போன்ற சேவைத் துறைகளிலும், BSNL, வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறைகளிலும் கனிம வள சூறையாடல் மூலமும் கொள்ளை அடிக்கப்பட்டது பல லட்சம் கோடி!
♦ நாடாளுமன்றத்தில் அமளிதுமளி செய்து மக்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டு செய்யப்பட்ட நூற்றுகணக்கான சட்ட திருத்தங்கள் பற்றி பேசப்போவது யார்?
♦ மோடியின் ஆட்சியில் அதானி உலக பணக்காரர் வரிசையில் 312-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்குத் தாவியது எப்படி? கடைசி இரண்டு ஆண்டுகளில் மட்டும் 18 லட்சம் கோடி ரூபாய் பங்குச்சந்தையில் பரிவர்த்தனை எப்படி? இந்த விசயத்தில் அமலாக்கத்துறை ரெய்டு செல்லாதது ஏன்?
♦ நாடு முழுவதும் பல லட்சம் கோடிக்கு நடக்கும் போதைப்பொருள். கடத்தலையும் கிரிமினல் கும்பலையும் தேசிய புலனாய்வு முகமை (NIA) சுற்றி வளைக்காதது ஏன்?
♦ மோடி அரசின் 9 ஆண்டு பட்ஜெட்டின் வரவு-செலவு, திட்டங்களை ஆய்வு செய்தால் சில நூறு லட்சம் கோடிகள் கார்ப்பரேட்டுகளுக்கு சென்றுள்ளது என்பதை அறிய முடியும்!
♦ உலக மக்கள் தொகையில் 142.8 கோடியுடன் முதலிடம் பிடித்த இந்தியாவில் பட்டினியிலும் முதலிடம் பிடித்து, துடித்துக்கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 22 கோடி!
படிக்க : மோடியின் கிரீஸ் பயணம்: எல்லாம் அதானிக்காக!
♦ படித்த இளைஞர்கள் சுரண்டல், ஊழலில் உலக சாதனை படைக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிஸ்டுகளை கேள்விக்குள்ளாக்கி பொதுமக்களுக்குப் புரிய வைத்தால் தான் இந்த மண்ணில் இனி வாழ முடியும்!
♦ முதலாளித்துவ சுரண்டலை உள்ளடக்கிய நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை லஞ்சம், ஊழல், சொத்துக்குவிப்பு, கடத்தல், பொதுச்சொத்து சூறையாடல், கலவரம் என அனைத்து கேடுகளையும் உள்ளடக்கியது!
♦ ஊழலில் உடைபடும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-மோடி பிம்பத்துடன் சேர்த்து கார்ப்பரேட் கொள்ளைகளை உள்ளடக்கிய பிரிட்டன் முதலாளிகள் வகுத்தளித்த போலி ஜனநாயக நாடாளுமன்ற ஆட்சிமுறையையும் அம்பலப்படுத்துவோம்!
இனியன்
பீமா கோரேகான் வழக்கு ஐந்து ஆண்டுகள் நிறைவு:
உறுதியான பாசிச எதிர்ப்பு மட்டுமே
மக்கள் போராளிகளின் விடுதலைக்கான ஆயுதம்!
“பீமா கோரேகான்” என்பது வரலாற்றில் இதற்கு முன் பார்ப்பனிய சாதி ஆதிக்கத்திற்கு எதிராக அறியப்பட்ட பெயர். ஆனால் தற்போது அது பாசிச எதிர்ப்பின் அடையாளமாக மாறிவிட்டது. நமது உறுதியான பாசிச எதிர்ப்பு போராட்டத்தினால் மட்டும்தான் பீமா கோரேகான் போன்ற பொய் வழக்குகளால் சிறையில் அடைக்கப்பட்டு சித்தரவதையை அனுபவித்து வரும் சமூக செயற்பாட்டளார்கள், அறிவுஜீவிகள், அப்பாவி பொது மக்களை விடுதலை செய்ய முடியும்.
ஜூன் 6, 2018 அன்று பீமா கோரேகான் வழக்கின் முதல் கைது நடந்தது. இந்த வழக்கில் சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள், தொழிற்சங்க தலைவர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கைதுசெய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் இந்த வழக்கில் கைதுச் செய்யப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை, விசாரணைகள் நடத்தப்படவில்லை, கைதானவர்களுக்கு பிணையும் தரப்படுவதில்லை, ஆனால் சிறைத்தண்டனையையும் சித்தரவதையையும் மட்டும் அனுபவித்து வருகிறார்கள்.
வழக்கின் வரலாற்றுப் பின்னணி:
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பீமா என்கிற ஆற்றின் கரையில் அமைந்த சிற்றூரின் பெயர்தான் கோரேகான். இங்கு ஜனவரி 1, 1818-ஆம் ஆண்டு ஆங்கிலேய மகர் படைக்கும் சித்பவன் பார்ப்பனர்களான பேஷ்வா படைக்கும் இடையே போர் நடந்தது. இந்தப் போரில் சில நூறு வீரர்களை கொண்டிருந்த ஆங்கிலேயே மகர் படைப் பிரிவு ஆயிரக்கணக்கான வீரர்களை கொண்டிருந்த பேஷ்வா படையை வெற்றிக் கொண்டது. பார்ப்பனிய சாதி ஆதிக்கத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திய வீரப் போரின் நினைவு சின்னமாக இந்த இடத்தில் பீமா கோரேகான் வெற்றித்தூண் நிறுவப்பட்டது. இந்த வெற்றி நாளை ஆண்டுத்தோறும் மக்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள்.
இந்த வெற்றி நாளின் 200-ஆம் ஆண்டையொட்டி பல்வேறு தலித் மற்றும் இடதுசாரி சமூக செயற்பாட்டாளர்களால் புனே அருகே “எல்கர் பரிஷத்” என்ற (எல்கர் என்றால் உரத்த அறிவிப்பு அல்லது உரத்த அழைப்பு என்று பொருள்) மாநாடு டிசம்பர் 1, 2017 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர். 250-க்கும் மேற்பட்ட தலித் மற்றும் இடதுசாரி அமைப்புகள் கலந்துக் கொண்டன. பீமா கோரேகான் போரில் ஒடுக்கப்பட்ட மக்கள் பார்ப்பன சாதி ஒடுக்குமுறையை ஏவிய பேஷ்வாக்களுக்கு எதிராக போராடியது போல தற்போது நமது நாட்டில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசின் பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று மாநாட்டில் அறைக்கூவல் விடுக்கப்பட்டது.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத காவிக்கும்பல் ஜனவரி 1, 2018 அன்று பீமா கோரேகான் போரின் நினைவு நாளை கொண்டாட வந்த மக்கள் மீது கொடூரமான தாக்குதலை தொடுத்தது. கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவிக் குண்டர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். சிறுவர்கள், பெண்கள் என அனைவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த கலவரம்தான் பீமா கோரேகான் வழக்கின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
இந்த கலவரத்திற்கு எல்கர் பரிஷத் மாநாடு நடத்தியதுதான் காரணம், இந்த மாநாடு மாவோயிஸ்ட் நிதி உதவியால் நடத்தப்பட்டது எனக் கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) போலிசு கைது நடவடிக்கையை ஆரம்பித்தது. பிறகு “பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து சதி செய்துள்ளார்கள்” என புதிய திரைக்கதையை போலிசு உருவாக்கியது. இதை கார்ப்பரேட் ஊடகங்கள் ஊதி பெரிதாக்கின. மோடி அரசின் ஏவல் படையான என்.ஐ.ஏ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த பிறகு எல்கர் பரிஷத் மாநாட்டிற்கு துளியும் சம்மந்தமில்லாத சமூக செயற்பாட்டாளர்கள், அறிவு ஜீவிகளை கூட இந்த வழக்கின் பெயரால் வேட்டையாட ஆரம்பித்தது.
படிக்க : பீமா கொரேகான் வழக்கு : புனே போலீசு செய்த சைபர் கிரைம் அம்பலமானது !
ஐந்து ஆண்டுகளாக வதைக்கப்பட்டுவரும் செயற்பாட்டளார்கள்:
மோடி அரசு இவர்களை கைது செய்ததே சட்ட விரோதமாகத்தான். கைது செய்யப்பட்டதில் இருந்து பிணை தராமலும் சித்தரவதை செய்துவருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறையில் உள்ள மோசமான சுகாதார நிலைமைகளின் காரணமாக பேராசிரியர் ஹனி பாபுக்கு கொடிய கண் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டது. நோய் பரவி கண்பார்வை இழக்கும் தருவாயில் இருந்த போதிலும் பாபுவுக்கு பிணை மறுக்கப்பட்டது. 84 வயதான பாதிரியார் ஸ்டான்சுவாமி, நடுக்குவாத நோயால் (நரம்புத் தளர்ச்சி) பாதிக்கப்பட்டிருந்தார். கைநடுக்கத்தால் தண்ணீர்க் குவளையைக் கூட கையில் எடுத்து குடிக்க முடியாத நிலையில், அவர் தமக்கு குடிப்பதற்கு உறிஞ்சு குழாய் (சிப்பர்) வேண்டுமென்று கோரியிருந்தார். அதைக் கூட கொடுக்காமல் மறுத்தது சிறை நிர்வாகம். இறுதி வரை அவருக்கு பிணை தராமல் மருத்துவ உதவிகளும் வழங்காமல் சிறையிலேயே அவரை படுகொலை செய்தது மோடி அரசு.
இதுவரை 16 பேரில் சுதா பரத்வாஜ், வரவர ராவ், ஆனந்த தெல்தும்டே ஆகிய மூன்று பேருக்கு மட்டும்தான் பிணை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இரண்டரை ஆண்டுகள் தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக கிடைத்தது. மற்ற 12 பேருக்கும் இன்னும் பிணை தரப்படவில்லை, பிணை மனு மீது விசாரணை கூட நடத்தப்படுவதில்லை. சிறையில் புத்தகம் படிப்பதற்கு தேவையான கண்ணாடி, கொசுவலை உட்பட மிகமிக அடிப்படையான தேவைகளை கூட அவர்கள் போராடிதான் பெற்று வருகின்றனர். கைதானவர்கள் குடும்பத்திடம் பேசும்போது கூட, ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் உரையாட வேண்டும் (குடும்பத்தினருக்கு புரியவில்லை என்றாலும்). இப்படியாக பல்வேறு வகையில் மனரீதியாக, உடல்ரீதியாக அவர்களை சித்தரவதை செய்து செயலிழக்க வைப்பதே பாசிச மோடி அரசின் நோக்கம். ஊபா போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டதே இதற்காகதான்.
மோடி அரசின் அயோக்கியத்தனமான சதி:
மோடி அரசு கைதானவர்கள் மீது சுமத்தியிருக்கும் எந்த குற்றத்திற்கும் அவர்களிடம் ஆதாரம் இல்லை. ஆனால் இந்த வழக்கு அரசால் உருவாக்கப்பட்ட ஒரு புனைவு என்பதை அம்பலப்படுத்த போதுமான ஆதாரங்கள் உள்ளன. கடந்த பிப்ரவரி 2021-இல், ரோனா வில்சன், வரவர ராவ் மற்றும் ஹனி பாபு ஆகியோருக்கு சொந்தமான மின்னனு சாதனங்களை புனே போலிசுத்துறை ஹேக் செய்து போலியான ஆதாரங்களை உள்நுழைத்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சைபர் செக்யூரிட்டி நிறுவனம் நிரூபித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் பாதிரியார் ஸ்டான் சுவாமியை கைது செய்ய ஆதரமாக காட்டப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் அனைத்தும் அவரது கணினியின் ஹார்டு டிரைவில் ஹேக் செய்து பொருத்தியுள்ளார்கள் என்பதும் அம்பலமாகியுள்ளது.

மேலும் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரிக்க மாகராஷ்டிர மாநில அரசால் அமைக்கப்பட்ட இரு நபர் தலைமையிலான நீதி விசாரணை ஆணையத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த மூத்த போலிசு அதிகாரி கணேஷ் என்பவர் எல்கர் பரிஷத் நிகழ்வுக்கும் நடந்த வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார். இது புனே போலிசு மற்றும் என்.ஐ.ஏ உருவாக்கிய கதையை ஒட்டுமொத்தமாக திரைக்கிழிக்கும் விதமாக இருந்தது. ஆனால் இதைப்பற்றி யாருமே வாய்திறக்கவில்லை.
இந்த கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டார்கள் என சம்பாஜி பிண்டே மற்றும் மிலிந்த் எக்போட் ஆகிய இரண்டு காவி பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் தற்போது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கலவரத்திற்கு சற்றும் சம்மந்தமில்லாத 16 பேர் சிறையில் உள்ளனர்.
கைதானவர்களை ஒன்றிணைப்பது பாசிச எதிர்ப்பு மட்டுமே:
84 வயதான ஸ்டான்சுவாமி கடந்த 40 ஆண்டுகளாக ஜார்கண்ட் காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தவர். சுதா பரத்வாஜ் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வழக்கறிஞராக வேலை செய்து வந்தவர். கெளதம் நாவ்லாகா தனது எழுத்துக்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர். கவிஞர் வரவர ராவ் இந்தியாவின் ஓரங்கட்டப்பட்ட பெரும்பான்மை மக்களுக்காக எழுதி வந்தவர். வெர்னான் கோன்சால்வ்ஸ் பீமா கோரேகான் வழக்கில் முதல்கட்டமாக கைது செய்யப்பட்டவர்களுக்காக போராடி வந்தவர். இப்படியாக ஒவ்வொருவரும் தலித், இஸ்லாமியர்கள், பழங்குடிகள் போன்ற ஒடுக்கப்படும் மக்களுக்காகவும், கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வந்தவர்கள்.
மோடி அரசு கூறுவது போல சதி செய்வதற்காக இவர்கள் ஒன்றிணையவில்லை. மாறாக பா.ஜ.க-வின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்ததில்தான் இவர்கள் ஒன்றிணைகிறார்கள்.
கூலிக்கார அறிவுஜீவிகளாக ஆளும்வர்க்கத்தின் நாயாக வேலைப் பார்க்காமல் உழைக்கும் மக்களுக்காக உறுதியாக இவர்கள் போராடுவதை பார்த்து தொடைநடுங்கிப் போய் அவர்களை ஒடுக்க நினைக்கிறது பாசிச மோடி அரசு. இவர்கள் மீது அரசு செலுத்தும் பயங்கரவாதத்தை பார்த்து நாளை யாரும் மோடியின் பாசிசத்திற்கு எதிராக கேள்வி எழுப்ப, போராட வரமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் திட்டம்.
படிக்க : பீமா கோரேகான் வழக்கு: தலோஜா சிறையில் ஒடுக்கப்படும் கவுதம் நவ்லகா!
ஆனால், பாசிஸ்டுகளின் சதித்திட்டம் என்றைக்கும் வெற்றிப்பெறாது. ஏனெனில் யாரை ஒடுக்க நினைத்து சிறையில் அடைத்தார்களோ அவர்கள் இன்னும் ஓய்ந்து விடவில்லை. தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிறையில் நடக்கும் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பல உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஸ்டான் சுவாமி மரணத்திற்கு அரசுதான் காரணம் எனக் கூறி சிறையிலேயே போராட்டங்களை நடத்தினர். வெளியே வந்துள்ள சுதா பரத்வாஜ் சிறையில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.
இத்தகைய உறுதியான பாசிச எதிர்ப்பாளர்கள் தற்போதைய காலக்கட்டத்தில் நமக்கு அதிகம் தேவைப்படுகிறார்கள். அதனால்தான் மோடி அரசு திட்டமிட்டு அவர்களை சிறை வைத்துள்ளது. இவர்கள் மட்டுமல்ல பீமா கோரேகான் போன்று பல பொய் வழக்குகளில் எண்ணற்ற செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் அப்பாவி பொதுமக்கள் சிறையில் வதைப்பட்டு வருகிறார்கள். சாய்பாபா, உமர் காலித் போன்றோர்கள் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களின் விடுதலைக்கான ஒரே வழி உறுதியான பாசிச எதிர்ப்பு மட்டுமே! மோடியின் பாசிச அரசுக்கு எதிராகவும், ஊபா போன்ற கொடுஞ்சட்டங்களுக்கு எதிராகவும் இவர்களைப் போலவே நாமும் உறுதியாக போராட வேண்டும்!
![]()
அகதா
