Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 122

அரசும் – ஆளும் வர்க்கமும் கூட்டுக்கொள்ளை நடத்துவதற்கான மாநாடே ஜி20 | தோழர் ஆ.கா.சிவா

அரசும் – ஆளும் வர்க்கமும் கூட்டுக்கொள்ளை நடத்துவதற்கான மாநாடே ஜி20 | தோழர் ஆ.கா.சிவா

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இந்தியா – பாரதம் : பாசிஸ்டுகளின் தோல்வி பயம்!

பாசிச மோடியின் அரசு, Group of 20 (G20) உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட இரவு உணவு அழைப்பிதழில் இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என மாற்றியுள்ளது.

செப்டம்பர் 9-10 ஆகிய தேதிகளில் தலைநகர் புதுதில்லியில் ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் 5 அன்று G20 மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் திரௌபதி முர்மு “இந்திய ஜனாதிபதி” என்பதற்கு பதிலாக “பாரதத்தின் ஜனாதிபதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாசிச மோடி தலைமையிலான பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார கும்பல் பாரதம் என்று இந்தியாவின் பெயரை மாற்றி எழுதி இருப்பதை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றன.

படிக்க : BNYS மருத்துவ படிப்பு என்ற பெயரில் மோசடி | புமாஇமு புகார் மனு

இந்தியா என்ற பெயர் பிரிட்டிஷ் காலனிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அது “அடிமைத்தனத்தின் சின்னம்” என்றும் மோடி அரசும் சங்கிகளும் வாதிடுகின்றனர். 1947-இல் நாடு போலி சுதந்திரம் பெறும் வரை சுமார் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பிரிடிஷ் காலனிய மற்றும் முகலாய ஆட்சியை தொடர்பு படுத்தும் பெயர்களை அழிக்க ஆர்.எஸ்.எஸ்-பாஜக நீண்டகாலம் முயற்சித்து வருகிறது. அரசியலமைப்பு ரீதியாக மதச்சார்பற்ற இந்தியா என்று கூறப்படும் நிலையை மாற்றி ஓர் (இந்து) மதம் சார்ந்த அரசாக உருவாக்கும் இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலை கொண்டதுதான் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசு.

இந்தியா என்ற பெயரை வைத்துக்கொண்டு மோடி அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி இந்திய தேசப்பெருமிதம் காட்ட முற்பட்டது. ஆனால் மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தோல்வி அடைந்துவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஒருபக்கம் இந்தியா என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தோல்வி மற்றொருபக்கம் எதிர்கட்சிகளின் கூட்டணியின் பெயர் இந்தியா என இருப்பதால், இந்திய தேசியவெறியை தூண்டுவதிலும் தோல்வி. இந்த தோல்வி பயத்தில் இருந்துதான் இந்தியா – பாரதமாக உருமாறவிருக்கிறது.

படிக்க : தொடை நடுங்கும் பாசிஸ்டுகளின் கூச்சல்கள்!

வெள்ளையர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்த கோழைகளுக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்திய விடுதலை போராட்ட உணர்வை எண்ணிப் பார்க்க கூட அருகதை கிடையாது.

இந்துராஷ்டிரம் கட்டியமைப்பதில் சிதைவு – நாடாளுமன்ற தேர்தல் நெருக்கடி ஆகியவற்றின் பயத்தில் இருந்தே, காலை நக்கியவர்களும் காவடித்தூக்கியவர்களும் காலனியாதிக்கத்திற்கு எதிரானவர்கள் என்று காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள்.

நிர்மல்
புமாஇமு முகநூலிலிருந்து…

disclaimer

BNYS மோசடி: நீட் எழுதாமல் டாக்டராகும் வித்தை! | புமாஇமு புகார் மனு | வீடியோ

BNYS மோசடி: நீட் எழுதாமல் டாக்டராகும் வித்தை! | புமாஇமு புகார் மனு

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தொடை நடுங்கும் பாசிஸ்டுகளின் கூச்சல்கள்!

தொடை நடுங்கும் பாசிஸ்டுகளின் கூச்சல்கள்!

“இந்தியா” என்ற பெயர்  ஆங்கிலேயர்கள் கொடுத்தது  இந்தியாவை “பாரத்” என அழைப்பதே சரியானது என்று விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளனர் பாசிஸ்டுகள்.

காவிகளின் ஆட்டு மூளைக்கு ஒன்பது ஆண்டுகள் வராத ஞானம் எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு “இந்தியா” எனப் பெயரிட்டதும் வந்துவிட்டது போல.

“இந்தியாவை இனி பாரத் என  அழைப்போம்” என்ற  மோகன் பகவத்தின் ஊளையை தொடர்ந்து  ஒட்டுமொத்த சங்கிகூட்டமும் “காலனியாதிக்க மீட்பு” ஊளையிடுகிறது.

தோல்வி பயத்தில் தொடை நடுங்கும் பாசிஸ்டுகளின் கூச்சல்கள் இது!

பாசிஸ்டுகளே! இதுவரை அரசியல் பேசாதவர்கள் கூட “நீ என்ன பெயர் மாற்றினாலும் நான் இந்தியனே” என்று உங்களுக்கெதிராக வினையாற்றுகின்றனர்.

எந்த தேசபக்தியை குத்தகை எடுத்துக்கொண்டு  இத்தனை ஆண்டுகள் தேசவெறியை கிளப்பிவிட்டு விளையாடினீர்களோ அதே தேசபக்தியே தற்போது உங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது!

புதிய ஜனநாயகம்
06.09.23

disclaimer

300 ஆசிரியர்களின் உழைப்பை சுரண்டிய நீம் பவுண்டேசன்! | வீடியோ

300 ஆசிரியர்களின் உழைப்பை சுரண்டிய நீம் பவுண்டேசன்!

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டம்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

G20 மாநாடு: ஏழ்மையையும் வறுமையையும் திரைச்சீலைகளால் மறைக்க முடியாது!

ரும் செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் G20 மாநாடு நடக்கவிருப்பதால், இந்திய நகரங்களை ‘அழகு படுத்தும்’ பணி மும்முரமாக நடந்து வருகிறது. ‘அழகு படுத்துதல்’ என்றால், இந்திய நகரங்களில் வாழும் எளிய மக்களின் ஏழ்மையையும் வறுமையையும், இரண்டு நாட்கள் சுற்றுலாவிற்கு வருகை தரும் ‘உலக தலைவர்களின்’ கண்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வது தான்.

அதன் பொருட்டு, புது தில்லியில் வாழும் நகர்ப்புற ஏழைகளின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டும், தெருவோர வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டும் வருகிறது. இதுவரை இரவு நேரங்களில் வெளிச்சமே காணாத தெருக்கள், தெருவிளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. டெல்லி நகரத்தின் சுவர்கள் வண்ண ஓவியங்களால் நிறைந்திருக்கிறது. இதற்காக, 120 மில்லியன் டாலர் வரை செலவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை நூற்றுக்கணக்கான வீடுகளும், கடைகளும் கணிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து வேறு இடத்திற்கு குடிபெயர்நதுள்ளனர். டெல்லியில், நகர்ப்புற ஏழைகளின் குடியிருப்பு பகுதிகளில் வாழும் பலருக்கு, வீடுகள் இடிக்கப்படுவதற்கு சில காலம் முன்பு தான் நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்.

படிக்க : சந்திரயான்-3: போலி தேசப்பெருமித போதை!

ஏழை மக்கள் வாழும் வீடுகளை ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பு’ என்று பொய் சொல்லி இடித்துள்ளனர் அதிகார வர்க்க கையாட்கள். மக்கள் சிலர் தாங்கள் இங்கே 100 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம் என்பதற்கு சான்றாக ஆவணங்களை காட்டியும், அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வீடுகளை இடித்துள்ளனர் அதிகார வர்க்க கையாட்கள்.

இதேபோல் மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களிலும் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. “Concerned Citizens Collective” என்ற அமைப்பு, G20 மாநாட்டு பணிக்களுக்காக இதுவரை மூன்று லட்சம் வீடுகள் இடிக்கப்படுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

ஏழை மக்களின் வாழ்விடத்தின் இடிபாடுகளின் மீது பூங்காக்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக செலவு செய்யப்படும் அந்த 120 பில்லியன் டாலர் பணமும் மோடியின் சொத்தோ, அல்லது பாஜகவின் கட்சி நிதியோ அல்ல. மக்களின் வரிப்பணமாகும். இந்திய மக்களின் வரிப் பணத்தைக் கொண்டே நகர்ப்புற ஏழைகளின் குடியிருப்புகளையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இவர்கள் எத்தனை பெரிய அயோக்கியர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்றே, 2020 ஆம் ஆண்டில் ட்ரம்ப் வருகையின் போது, சாலையோரத்தில் ஏழைகள் வாழ்வதை மறைக்கும்வண்ணம் குஜராத் மாநிலத்தில் சுவர் எழுப்பப்பட்டது. 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்தியாவில் நடைபெற்ற போது இதுபோல் நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது.

பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் எளிய மக்களுக்கு எதிராகவே உள்ளது என்பதையும் அவர்கள் விசுவாசம் கார்ப்பரேட்களுக்கு மட்டும் தான் என்பதையும் இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி டெல்லியில் 47,000 மக்கள் வீடற்றவர்களாக இருந்தனர் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் இது நிச்சயமாக குறை மதிப்பீடு தான். உண்மையில் 1,50,000 மக்கள் வீடற்றவர்களாக இருப்பார்கள் என்று சமூக செயல்பாட்டாளர்கள் சொல்கிறார்கள். இந்த எண்ணிக்கை கூட 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைதான்.

“உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் நிலை” என்ற அறிக்கை, இந்தியாவில் 74% மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க வழியில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.

படிக்க : உ.பி: தொடரும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள்!

BRICS கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளில் (தற்போது புதிதாக இணைந்த 6 நாடுகளையும் சேர்த்து) இந்தியாவில்தான் உணவுப் பொருட்களின் விலை மலிவானது. இந்தியாவில் வாழும் ஒரு மனிதன் ஒரு நாளுக்கு 3 டாலர்கள் இருந்தால் மூன்று வேளை ஆரோக்கியமான உணவு சாப்பிட முடியும்.

இது மற்ற BRICS கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளைவிட மிகக் குறைந்தது ஆகும். ஆனால் அதை வாங்கக்கூட வக்கற்ற நிலையில் இந்திய மக்கள் உள்ளனர். ஏனெனில், பல ஆண்டுகளாக இந்திய மக்களின் வருமானம் தேக்க நிலையில்தான் உள்ளது. தற்போது, பணவீக்கம் அதிகரித்து வருவதால், மக்களின் உண்மையான ஊதியம் குறைந்து கொண்டே போகிறது. இதற்கெல்லாம், மோடி கும்பலின் கார்ப்பரேட் சார்பு பொருளாதார பயங்கரவாதம் தான் காரணம்.

இப்படி ஏழ்மையும் வறுமையும் பசியும் பிணியும் தான் இந்தியாவின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை எத்தனை கோடி செலவு செய்தும் திரைச்சீலைகளால் மறைக்க முடியாது. நகரத்தின் சுவர்களில் பாசிச கும்பல் தீட்டிய ஓவியங்களை துருத்திக் கொண்டு தெரிகிறது இந்தியாவின் யதார்த்தமான வறுமை.

சீனிச்சாமி

சந்திரயான்-3: போலி தேசப்பெருமித போதை!

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்பது இந்தியாவின் வெற்றியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடியோ, “இன்று நிலவு, நாளை சூரியன்” என்றும் “புதிய இந்தியாவின் வெற்றிப் பெருமிதம்” என்றும் பெருமை பொங்கக் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். கும்பலும் இதனைப் பெருமை பொங்க தேசத்தின் வெற்றி எனக் கூறுகிறது. சந்திரயான் திட்டத்திற்காக சங்கப் பரிவாரக் கும்பல் காசியில் யாகங்களை நடத்தின. வடநாட்டின் கோவில்கள், மசூதிகளில் பூசைகளும் தொழுகைகளும் நடத்தப்பட்டன.

இந்தியாவில் சந்திரயான் ஏவப்பட்ட அன்றைய நாளில் பிறந்த பல குழந்தைகளுக்கு “சந்திரயான்” எனப் பெயரிட்டு பெருமை கொண்டுள்ளனர் பெற்றோர்கள். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைமை குழுவில் தமிழர்கள் பங்காற்றியிருப்பதை தமிழ்நாட்டு மக்களும் மலையாளிகள் பங்காற்றியிருப்பதை கேரள மக்களும் மற்றும் பிற மாநிலத்தில் இருப்பவர்கள் வெவ்வேறு வகையிலும் இந்த தேசப்பெருமிதத்தில் தங்களுக்கும் பங்கிருப்பதாகப் பெருமை பட்டுக்கொள்கின்றனர்.

மேற்கத்திய நாடுகளின் முதன்மை ஊடகங்களான நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜெர்னல், வாசிங்டன்போஸ்ட், தி கார்டியன், ஃபைனான்சியல் டைம்ஸ் உள்ளிட்ட பல பத்திரிகைகள் இந்நிகழ்வைப் பாராட்டி எழுதியுள்ளன. அதுமட்டுமல்ல, பாகிஸ்தானின் டான் பத்திரிகையும் பாராட்டியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் பல அதிபர்கள் சந்திரயான்-3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதைப் பாராட்டிப் பேசியுள்ளனர்.

படிக்க : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்ட சொன்ன பாசிஸ்ட் சாமியாரின் கொட்டத்தை அடக்குவோம்!

நிலவின் தென்பகுதிக்கு விண்கலத்தை அனுப்புவது என்பது இதுவரை ஏகாதிபத்திய நாடுகளான ரசியா, சீனா போன்ற பலநாடுகள் முயற்சி செய்து தோல்வியடைந்த விசயமாகும். ஆகையால், நிலவின் தென்பகுதிக்குச் செல்வது என்பது ஒரு சவாலாகவே கருதப்பட்டது. அந்த வகையிலும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற வகையிலும் சந்திரயான்-3 நிலவின் தென்பகுதிக்கு செலுத்தப்பட்டிருப்பதானது பெருமை கொள்ளும் விசயமாக பார்க்கப்படுகிறது.

அணு ஆயுதங்களைக் கொண்டிருந்தால் அணு வல்லரசு (Nuclear Power) என்பது போல சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலமும், நிலவின் தென் துருவத்தை முதலில் அடைந்த நாடு என்றும் நிலவில் கால்பதிக்கும் நான்காவது நாடு என்ற வகையிலும் இந்தியா விண்வெளி வல்லரசு (Space Power) என்று கொண்டாடப்படுகிறது.

சென்ற மே மாதம் சீனா, நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பி சாதனைப் புரிந்தது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் மனிதர்களைக் குடியேற்றப் போவதாக அது அறிவித்துள்ளது. இச்சூழலில், நிலவின் தென்பகுதியை தொட்டதானது சீனாவிற்கு போட்டியாக இந்தியா முன்னேறியுள்ளதாகக் கருதப்படுகிறது.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, சொந்த நாட்டின் அறிஞர்கள், சொந்தத் தொழில்நுட்பம், இதுவரை பல நாடுகள் முயற்சித்தும் முடியாத நடவடிக்கை போன்ற காரணங்களால் சந்திரயான்-3 நினைத்து பெருமை கொள்ளும் பலருக்கும், இத்திட்டத்தின் பின்னணி குறித்த பல உண்மைகள் தெரியாது. அவ்வாறு தெரிந்தால் இந்த விண்வெளி வளர்ச்சி என்பது நாம் பெருமை கொள்ளத்தக்கதல்ல என்றும் நம்மை ஏதோ ஒருவகையில் சுரண்டுவதையும் ஒடுக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருப்பது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

***

குறிப்பாக, சந்திரயான்-3 எந்த நோக்கத்திற்காக ஏவப்பட்டது? நிலவில் தென்பகுதியில் உறைந்த பனி இருக்கிறதா, ஆக்ஸிஜனை உருவாக்க முடியுமா, மனிதர்களை குடியேற்ற முடியுமா, அங்கு கிடைக்கும் தனிம வகைகள் போன்றவற்றை ஆராய்வதற்காக ஏவப்பட்டுள்ளது.

தற்போது நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போனுக்கு சிறிதளவு தேவைப்படும் அரியவகை தனிமங்கள், எரிப்பொருளாக உபயோகிக்கப்படும் ஹீலியம் உள்ளிட்ட தனிமங்கள் நிலவில் அபரிவிதமாக இருக்கின்றன. இவற்றை பூமிக்கு எடுத்துவருவது எப்படி என்பதும் ஆராயப்பட்டு வருகிறது.

மேலும், ஏகாதிபத்திய, முதலாளித்துவ நிறுவனங்கள் உலகைப் பங்கீடு செய்து மனித வளத்தையும் இயற்கை வளத்தையும் கொள்ளையடிப்பதைப் போல செவ்வாய், சந்திரன் உள்ளிட்ட விண்கோள்களையும் ஆக்கிரமித்து சூறையாடுவதும் விண்வெளி சுற்றுலா என்று ஊர்சுற்றும் தேவையை ஈடேற்றுவதும் எதிர்கால இலக்குகளாகும். இவற்றிற்கெல்லாம் உதவும் வகையில்தான் சந்திரயான் விண்கலம் ஏவப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா சொந்தத் தொழில்நுட்பத்தாலும் சொந்த அறிஞர்களின் முயற்சியாலும் இந்த விண்வெளி சாதனையை நடத்தியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த விண்வெளி ஆராய்ச்சியின் வெற்றி யாருக்கு பயன்படப்போகிறது என்பதுதான் நமது கேள்வி.

சந்திரயான்-3: மோடியின் தேசவிரோதத் திட்டத்தின் ஒரு அங்கம்!

பாசிச பா.ஜ.க. இந்தியாவின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்த்ததைப் போல, ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை அந்நிய மற்றும் உள்நாட்டுக் கம்பெனிகளுக்கு தாரைவார்க்க பல்வேறு சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. விண்வெளி நடவடிக்கைகள் மசோதா 2017, நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.ஐ.எல்) 2019, தேசிய புவியியல் கொள்கை 2022, இந்திய விண்வெளிக் கொள்கை 2023 போன்றவை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்குள் கொண்டுவருவதற்கான சட்டத் திருத்தங்களாகும்.

இதனை, மார்ச் 2023-இல் இஸ்ரோ வெளியிட்ட “விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்பை மேம்படுத்தல்” என்ற அறிக்கையானது முன்னேற்றம் என்று பெருமையாகத் தெரிவிக்கிறது. வழக்கம் போல விண்வெளி ஆராய்ச்சியில் கார்ப்பரேட்டுகளை நுழைப்பதன்மூலம் செலவினங்கள் குறையும் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் ஐ.டி. துறைக்குப் பிறகு விண்வெளித் துறையில் கால்பதிப்பதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் இந்த நடவடிக்கைக்கு நியாயம் கற்பிக்கிறது இந்த அறிக்கை.

தற்போது மோடி அரசின் இந்த நடவடிக்கைகளின் மூலம் இஸ்ரோவின் உள்கட்டமைப்பு மற்றும் மற்ற வசதிகளை கார்ப்பரேட் கம்பெனிகள் பயன்படுத்திக்கொள்ள திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய விஞ்ஞானிகளாலும், உழைக்கும் மக்களின் வரிப்பணத்தாலும் இத்துணை ஆண்டுகாலம் உருவாக்கப்பட்ட இஸ்ரோவின் கட்டமைப்புகளை அப்படியே தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் தேசவிரோத செயலைத்தான் பா.ஜ.க செய்துவருகிறது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது தனிப்பட்ட முயற்சியில் விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்த தேசவிரோத செயலைத்தான் மோடி கும்பல் கொஞ்சமும் வெட்கமின்றி தேசப்பெருமிதம் என்று ஆர்ப்பரித்து வருகிறது.

இதுமட்டுமல்ல, சந்திரயான்-3 தயாரிப்புப் பணியில் முக்கிய பங்கு வகித்த ராஞ்சியில் உள்ள பொதுத்துறை கனரக பொறியியல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 17 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய 1,000 கோடி ரூபாயை நிறுத்தி, விண்வெளி ஆராய்ச்சிக்காக கொடுக்கப்படும் தொகையையும் 32 சதவிகிதம் குறைத்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை திட்டமிட்டு நஷ்டமடைய செய்து அதை அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் அதே உத்தியைத்தான் இஸ்ரோவிற்கும் கடைப்பிடிக்கிறது பா.ஜ.க. அரசு.

இதனோடு நாட்டின் பல பகுதிகளில் செயல்படும் ஒன்றிய அரசின் தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களின் (National Skill Training Institutes) மூலமாக பயிற்சியளிக்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் மட்டும் 4,000 பேருக்கு இவ்வாறு பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இங்கு பயிற்சி பெறுபவர்கள், இயல்பாகவே விண்வெளித் துறையில் மூலதனமிடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் சேவை செய்வார்கள். இஸ்ரோவின் வேலைவாய்ப்பைவிட கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலைவாய்ப்புதான் அதிகரிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் 250-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன. இதில் 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் இதுவரையில் கையெழுத்தாகியுள்ளன. இதற்கு முன்னதாகவே, உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுத்தல், உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தல் போன்றவற்றில் பல கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக புதிய செயலிகள் (ஆப்கள்), வரைபடங்கள் ஆகியவற்றிலும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், கடந்த 2022 நவம்பரில் இஸ்ரோவின் உதவியுடன் “விக்ரம்-எஸ்” என்ற ராக்கெட்டை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) என்ற கார்ப்பரேட் நிறுவனம் ஏவியுள்ளது. இதைப் போலவே துருவா ஸ்பேஸ் (Dhruva Space) நிறுவனம் தைபோல்ட்-1, தைபோல்ட்-2 ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மாஸ் (Agnikul Cosmos), பெங்களூருவைச் சேர்ந்த பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் (Bellatrix’s Aerospace), நாக்பூரைச் சேர்ந்த எக்னாமிக் எக்ஸ்போலிசிவ் (Economic Explosives), எல் அண்டு டி (Larsen & Toubro), டேட்டா பேட்டன்ஸ் (Data Patterns) போன்ற பல கார்ப்பரேட் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் இதில் குதித்துள்ளன.

இந்த தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் இந்தியப் பொதுத்துறையான விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் அதன் பல்வேறு பிரிவுகளையும் ஆக்கிரமிப்பதானது, இவர்களைப் பின் தொடர்ந்து பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் நுழைவதற்கான பாதையை செப்பனிட்டுக் கொடுக்கும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

“சந்திரயான்கள்” அனைத்தும் கார்ப்பரேட்டுக்களுக்கே!

ஜி20 நாடுகளின் ஒரு அங்கமாக 2020-ஆம் ஆண்டு முதல் “விண்வெளி பொருளாதாரத் தலைவர்கள் கூட்டம்” (Space Economy Leaders Meeting) நடத்தப்பட்டு வருகிறது. அதன் நான்காவது கூட்டம் கடந்த ஜூலை 6-7 ஆகிய இரு தேதிகளில் பெங்களூருவில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பகாசுர பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்று விண்வெளித்துறையில் மூலதனமிடுவது குறித்து விவாதித்தனர். அதன் ஒரு பகுதியாகவே இந்தியாவின் விண்வெளித் துறையில் மூலதனமிடுவதும் அடங்கியுள்ளது.

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் இறங்கிய நிகழ்வையொட்டி பிரதமர் மோடி, “இந்தியாவின் இந்த வெற்றி என்பது இந்தியாவிற்கு மட்டும் உரியதல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் உரியது, இந்தியாவைத் தொடர்ந்து பலநாடுகள் நிலவிற்குச் செல்லும் திட்டத்திற்கு உதவக்கூடியது” என்று குறிப்பிட்டதன் உண்மையான பொருள், அன்னிய பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் இந்திய விண்வெளித்துறையை ஆக்கிரமிப்பதாகும்.

படிக்க : “ஒரே நாடு, ஒரே தேர்தல்”: பூச்சாண்டி காட்டும் பாசிஸ்டுகள்!

சென்ற ஜூன் மாதம், அவசர அவசரமாக பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை மேற்கொண்டார். அந்தப் பயணத்தைப் பற்றி வெள்ளை மாளிகை அதிகாரிகளோ, “இச்சந்திப்பின் மூலமாக ஒரு திறந்த, வெளிப்படையான, வளமான, பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பாதுகாக்கின்ற வகையில் இருநாடுகளுக்கிடையில் விண்வெளி, பாதுகாப்பு, தூய்மையான ஆற்றல் மற்றும் போர்த்தந்திர தொழில்நுட்பங்கள் ஆகியவை பகிர்ந்து கொள்ளப்படும்” என்று தெரிவித்ததில் இந்த சந்திரயான்-3 திட்டமும் அடங்கியுள்ளது. இவைமட்டுமல்ல 2026-ஆம் ஆண்டு சந்திரயான்-4 ஏவப்படுவதற்கான திட்டமும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானதே.

மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து, நமது நாட்டு விஞ்ஞானிகளின் உழைப்பால் உருவாக்கி ஏவப்படும் சந்திராயன்-3 போன்ற விண்கலங்களும், செயற்கைக்கோள்களும் ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காகவும் இந்திய தரகு முதலாளிகளின் விண்வெளி உற்பத்தி கருவிகளை ஏழை நாடுகளில் திணிப்பதற்காகவுமே பயன்படுத்தப்படுகிறது. இதில் உழைக்கும் மக்களாகிய நாம் பெருமைகொள்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

மாறாக, மணிப்பூரில் நடந்த இனப்படுகொலை, ஹரியானா கலவரம், நீட் படுகொலை, சி.ஏ.ஜி அறிக்கையால் வெளியான மோடியின் மெகா ஊழல் போன்ற பல அரசியல் பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காகவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக சாதனை நாயகனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் பொருட்டும் ‘சந்திரயான்-3 வெற்றியை’ தேசப்பெருமிதமாக காட்டிவருகிறது பாசிச மோடி அரசு. இந்த போலி தேசப்பெருமித போதையை எதிர்க்கட்சியினரும் அறிவியல் அறிஞர்களும் அம்பலப்படுத்தாமல் கார்ப்பரேட் வர்க்கத்திற்கு சேவை செய்கின்றனர்.

மகேஷ்
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2023

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்ட சொன்ன பாசிஸ்ட் சாமியாரின் கொட்டத்தை அடக்குவோம்!

06.09.2023

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்த
இந்து மதவெறி பாசிஸ்ட் சாமியாரின் கொட்டத்தை அடக்குவோம்!

பார்ப்பன – வேத எதிர்ப்பு மரபை உயர்த்திப்பிடிப்போம்!
ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!

மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநாட்டில் தமிழ்நாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “சனாதனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்” என்று பேசியதை திட்டமிட்டு திரித்து நாடு முழுவதும் பொய் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்கள் ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிஸ்டுகள்.

அயோத்தியைச் சேர்ந்த பரமஹன்ஸ் ஆச்சாரியா என்ற கொலைகாரப் பொறுக்கி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளான்.

படிக்க : சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு: மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சனாதான தர்மமும் இந்து மதமும் ஒழித்துக் கட்டப்பட வேண்டியதே என்பதை அண்ணல் அம்பேத்கரும் பெரியாரும் பல்வேறு இடங்களில் எழுதியும் போராடியும் நிலைநாட்டியிருக்கிறார்கள். மனிதனை பிறவியின் அடிப்படையில் இழிவுபடுத்துகின்ற, அந்த இழிவினைப் புனிதப்படுத்துகின்ற எந்த ஒரு கொள்கையும் ஒழித்துக்கட்டப்பட வேண்டியதுதான்.

கருவறைத் தீண்டாமைக்கு காரணமாக இருக்கின்ற, தமிழை நீச மொழி என்று சொல்கின்ற, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு சாதியின் பெயராலும் வர்ணத்தின் பெயராலும் அடக்கி ஒடுக்குகின்ற ஒரு கொள்கையை எதிர்த்துப் பேசினால் தலைக்கு விலை வைப்பார்கள் என்றால் இந்து மதவெறி பாசிஸ்டுகள் எவ்வளவு திமிர் தெனாவட்டிலும் இருக்கிறார்கள்?

பல ஆண்டுகளுக்கு முன்பு “ராமன் என்ன இன்ஜினியரா?” என்று கேட்ட கருணாநிதியின் தலைக்கு விலை வைத்தான் வேதாந்தி என்ற சாமியார். தக்க பாடம் புகட்டி அவனின் வாலை ஒட்ட நறுக்கியது தமிழ்நாடு.

புத்தர், சித்தர்கள் தொடங்கி பூலே, அய்யன் காளி, நாராயண குரு, வைகுண்டர், பெரியார், அம்பேத்கர் வரையிலானவர்கள் பார்ப்பன – வேத மரபை எதிர்த்தார்கள். குறிப்பாக தமிழ்நாட்டின் பண்பாடு என்பது பார்ப்பன எதிர்ப்பு சமத்துவ நெறி மரபாகும்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற பேசினால் அதை திரித்தும் புரட்டியும் காட்டுவது இனியும் பலிக்காது. இந்த கேடுகெட்ட செயலை மேற்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

படிக்க : கார்ப்பரேட் ஃபாக்ஸ்கானுக்கு ஒரு நீதி! குல்பி ஐஸ் விற்ற கண்ணனுக்கு ஒரு நீதி!

மேலும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழ்நாட்டின் பண்பாட்டை தான் தமிழ்நாடும் தமிழ் மக்களும் எப்போதும் உயர்த்தி பிடிப்பார்கள்.

சனாதன – வேத – பார்ப்பன பண்பாட்டை நடைமுறைப்படுத்தும் அமைப்பாக இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிச கும்பலை ஒழித்து கட்டுவதை நோக்கி முன்னேறுவதே நம்முடைய முக்கியமான கடமையாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
9962366321

“ஒரே நாடு, ஒரே தேர்தல்”: பூச்சாண்டி காட்டும் பாசிஸ்டுகள்!

0

டந்த ஆகஸ்ட் 31 அன்று, “செப்டம்பர் 18 முதல் 22 வரை ஐந்து நாட்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும்” என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, “ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறையை அமல்படுத்தத்தான் நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது என்று செய்திகள் பரவத் தொடங்கின. இதனையடுத்து ஒட்டுமொத்த கவனமும் பாசிச பாஜக அரசின் பக்கம் திரும்பி விட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், செப்டம்பர் 1 அன்று, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” விவகாரத்தை ஆய்வு செய்ய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. எட்டு நபர்களைக் கொண்ட அக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்கள் செப்டம்பர் 2 அன்று வெளியிடப்பட்டன. காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் பெயரும் அதில் இடம் பெற்றிருந்தது. “இக்குழு அமைக்கப்பட்டதே ஒரு கண்துடைப்பு” என்று கூறி அவர் அதில் இணைய மறுத்துவிட்டார்.

ஊடகங்கள் அனைத்திலும், சமூக ஊடகங்கள் உட்பட, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது விவாதப் பொருளாக மாறிவிட்டது. தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய ஆங்கில நாளிதழ்கள், “ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறையை கொண்டு வர வேண்டும்; ஆனால் அனைவரிடமும் ஆலோசித்த பின்னர் கொண்டு வர வேண்டும் என்று தலையங்கங்கள் எழுதத் தொடங்கி விட்டன. எதிர்க்கட்சிகளின் ”இந்தியா கூட்டணி” குறித்தான செய்திகள் மங்கி விட்டன.

முன்னதாக, ”இந்தியா கூட்டணி” கூடிய போது பா.ஜ.க-வும் லெட்டர் பேட் அமைப்புகளையும் உள்ளடக்கிய என்.டி.யே (NDA) கூட்டணியைக் கூட்டி கவனத்தை தன்பக்கம் ஈர்க்க முயன்றது. இந்தியா கூட்டணி மீண்டும் ஆகஸ்ட் 31 அன்று கூடியபோது, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு எதிர்க்கட்சிகளுக்கு “ஒரே நாடு, ஒரே தேர்தல்” பூச்சாண்டி காட்டுகிறது.


படிக்க: ஒரே நாடு ஒரே தேர்தல்: பாசிஸ்டுகளுக்கு எதிராக “மாற்றுத் திட்டம்” வேண்டும்


“ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறையை அமல்படுத்துவது என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதை செப்டம்பர் 18 அன்று துவங்க இருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் கொண்டு வரப் போகிறார்களா என்பதைத்தான் தற்போது நாம் ஆராய வேண்டியுள்ளது.

முதலில் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறையை அமல்படுத்த என்னென்ன சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைப் பார்ப்போம். பிறகு அதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வோம்.

“ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறை கொண்டுவரப்பட வேண்டுமானால், குறைந்தபட்சம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இல் திருத்தங்களை மேற்கொள்வது பாசிச பா.ஜ.க அரசுக்கு எளிதானது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட டெல்லி சேவைகள் சட்டத்திருத்த மசோதாவைப் போல், இச்சட்டத்தையும் திருத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி விடலாம். ஏனெனில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தைத் திருத்த சாதாரண பெரும்பான்மை (Simple Majority) போதுமானது. அதாவது பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். அதை பாசிச பா.ஜ.க அரசால் இரு அவைகளிலும் பெற்று விட முடியும்.

ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாசிச பாஜக அரசால் அவ்வாறு திருத்த முடியாது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்திற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறைந்தது ஐந்து சரத்துகளிலாவது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்; அதாவது, சரத்துகள் 83, 85, 172, 174, 356 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற திருத்தங்களை மேற்கொள்ள, சரத்து 368-இன்படி, சிறப்பு பெரும்பான்மை (Special Majority) தேவைப்படும். அதாவது நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்; மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதால் 50 சதவிகிதத்திற்கும் மேற்ப்பட்ட மாநில சட்டமன்றங்களின் ஆதரவும் தேவைப்படும்.

பாசிச பா.ஜ.க அரசால் அடிவருடிகள் சிலரின் ஆதரவைப் பெற்று மக்களவையில் சிறப்பு பெரும்பான்மையை பெற்றுவிட முடியும். ஆனால் மாநிலங்களவையில் சிறப்பு பெரும்பான்மையை பெற முடியுமா என்பதைத் தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 80-இன்படி மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் வரை (தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 238, நியமிக்கப்பட்டவர்கள் 12) இருக்கலாம். தற்போதைய நிலவரப்படி, மாநிலங்களவையின் மொத்த பலம் என்பது 245-ஆக (தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 233, நியமிக்கப்பட்டவர்கள் 12) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 7 இருக்கைகள் காலியாக இருப்பதால், மாநிலங்களவையின் தற்போதைய பலம் என்பது 238-ஆக உள்ளது.

சுருக்கமாக கூற வேண்டுமெனில், மாநிலங்களவையில் பாசிச பா.ஜ.க அரசு சிறப்பு பெரும்பான்மை பெற வேண்டுமெனில் 159 வாக்குகளைப் (238-இல் மூன்றில் இரண்டு பங்கு) பெற வேண்டும். ஆனால், அதற்கான சாத்தியம் தற்போது இல்லை என்பதே எதார்த்த நிலை.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் மொத்த மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 97-ஆக உள்ளது (சுயேச்சை எம்.பி-யான கபில் சிபிலையும் சேர்த்து). சிவசேனா கட்சியின் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் உத்தவ் தாக்கரே பக்கம் உள்ளதால் அவர்களையும் இந்தியா கூட்டணியின் கணக்கில் சேர்த்துள்ளோம்.

இந்த 97 உறுப்பினர்களைத் தவிர, மீதமுள்ள அனைத்து உறுப்பினர்களும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களித்தால் கூட அதிகபட்சமாக 141 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே அவர்களால் பெற முடியும். இதில் தெலுங்கானாவின் சந்திரசேகர ராவ், ஒடிசாவின் நவீன் பட்நாயக், ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி போன்றவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் பா.ஜ.க-வை ஆதரிக்கவில்லை என்றால் 141 என்ற இந்த எண்ணிக்கையும் சரியும்.

கடந்த ஆகஸ்ட் 7 அன்று, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் அதிகாரத்தை குறுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட டெல்லி சேவைகள் சட்டத்திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு மாநிலங்களவையில் நடத்தப்பட்டது. அதில் அம்மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும் எதிராக 102 வாக்குகளும் பதிவாகின. பா.ஜ.க-வால் சாதாரண பெரும்பான்மையை பெற்று அம்மசோதாவை நிறைவேற்ற முடிந்தது.

ஆனால் நாம் இங்கு கூற வருவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளத் தேவையான சிறப்பு பெரும்பான்மையான 159 என்பதை பா.ஜ.க-வால் பெறமுடியாது என்பதைத்தான். ஏனெனில், 102 உறுப்பினர்கள் பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதுதான் சமீபத்திய நிலவரம்.


படிக்க: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது !


மேலும், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது குறித்து பேட்டியளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க தற்சமயம் ஒரு குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் பொதுத் தளங்களில் வைத்து விவாதிக்கப்படும். அது நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்படும். இதில் பதட்டப்படுவதற்கு ஏதுமில்லை” என்று கூறினார்.

ஒரு பா.ஜ.க அமைச்சர் பேசியதை வைத்து மட்டும் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” தற்போது கொண்டுவரப்பட மாட்டாது என்று நாம் கூறவில்லை. பாசிச பா.ஜ.க தற்போது கையாண்டுள்ள வழிமுறையை வைத்துத் தான் இதைக் கூறுகிறோம். பாசிஸ்டுகளின் வழிமுறை எப்படி இருக்கும் என்பதற்கு காஷ்மீர் துண்டாடப்பட்டது தான் சான்று.

2019-ஆம் ஆண்டில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, மாநிலங்களவையில் கூடியிருந்த எதிர்க்கட்சியினர் யாருக்கும் அப்படி ஒரு நிகழ்வு நடக்கப் போவதே தெரியாது. குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நிகழ்ச்சி நிரல் குறித்து அறிவிக்க வேண்டும் என்பது அவையின் விதி. ஆனால், அவை கூடிய பின்புதான் காஷ்மீர் துண்டாடப்படப் போகிறது என்பது நிகழ்ச்சி நிரலில் உள்ளதென்பதே கூடியுள்ள உறுப்பினர்களுக்குத் தெரியவந்தது. அப்போது மாநிலங்களவைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவின் அனுமதியைப் பெற்று காஷ்மீரை துண்டாடுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னரே அறிவிக்காவிட்டாலும் கூட, அவைத்தலைவர் அனுமதித்தால் எந்த ஒரு மசோதாவையும் தாக்கல் செய்யலாம் என்பதுவும் அவையின் விதிதான். காஷ்மீரை துண்டாடுவது குறித்து படித்து விவாதிக்க ஒன்றரை மணிநேரம் மட்டுமே வழங்கப்பட்டது. என்னவொரு ஜனநாயகம்!

மாநிலங்களவையில் போதுமான எண்ணிக்கையை பெறுவது கடினம் என்ற நிலையில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய பாசிச பா.ஜ.க அரசு கையாண்ட வழிமுறை இதுதான். பாசிஸ்டுகளுக்கே உரித்தான வழிமுறை இது!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தேவையான சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் மேற்கொள்வதற்கான வலிமையை மட்டும் பாசிச பா.ஜ.க அரசு பெற்றிருந்தால், இந்நேரம் அதை அமல்படுத்தி இருக்கும். காஷ்மீரை துண்டாட கையாண்ட அதே வழி முறையைத் தற்போதும் கையாண்டு எதிர்க்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பார்களே தவிர, உயர்நிலைக்குழு அமைத்திருக்க மாட்டார்கள்.

“ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்று தற்போது விவாதத்தை கிளப்பி விட்டிருப்பது முழுக்க முழுக்க எதிர்க்கட்சியினருக்கு பூச்சாண்டி காட்டுவதற்குத்தான். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவி பயங்கரவாத கும்பலின் நிகழ்ச்சி நிரலில் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டம் உள்ளது. ஆனால், நடைமுறைப்படுத்த முயற்சி செய்தால் மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. மேலும், அத்திட்டத்தைத் தற்போது நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியமும் இல்லை என்பதுவும் அவர்களுக்குத் தெரியும்.


பொம்மி

ஒரே நாடு ஒரே தேர்தல்: பாசிஸ்டுகளுக்கு எதிராக “மாற்றுத் திட்டம்” வேண்டும்

ரே நாடு ஒரே தேர்தல்” இதுதான் தற்போது அரசியலில் விவாத பொருளாக உள்ளது. மோடி அரசால் திட்டமிட்டு விவாதப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது என்று சொல்வதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செப்டம்பர் 18 முதல் 22-ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என திடீரென அறிவித்தார். அதே சூட்டுடன் செப்டம்பர் 1-ஆம் தேதி  “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற திட்டத்தை பற்றி ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைப்பதாக மோடி அரசு அறிவித்தது.

சென்ற முறை ஜூலை மாதம் எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி கூட்டம் நடத்தியபோது பா.ஜ.க அதற்கு எதிராக டெல்லியில் தனது தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடத்தியது. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு பிறகு பா.ஜ.க இப்படி ஒரு கூட்டணியில் உள்ளது என்பதே அப்போதுதான் அனைவருக்கும் நினைவிற்கு வந்தது. ஊடகங்களும் இதைப் பேசுபொருளாக்கியது.

தற்போது இந்த மாதமும் “இந்தியா” கூட்டணி கூட்டம் நடத்தும் போது “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது அனைவரின் கவனமும் இதில் குவிக்கப்பட்டு விவாதப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

இதைப் போலவே 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க ஆதித்யா எல்1, ஜி 20 மாநாடு, மோடியின் பிறந்தநாள், ராமர் கோவில் திறப்பு என மோடி கும்பலின் நிகழ்ச்சி நிரல் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை பாசிச கும்பல் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்துள்ளது.


படிக்க: ஒரே நாடு,  ஒரே தேர்தல்! மோடி – அமித்ஷா பாசிச கும்பல்  நாட்டு மக்கள் மீது தொடுத்திருக்கும் போரை எதிர்கொள்வோம்!


அதற்காக இந்த திட்டத்தை நாம் குறை மதிப்பீடு செய்கிறோம் என்று அர்த்தமில்லை. இந்த “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் கண்டிப்பாக நிலவுகின்ற போலி ஜனநாயக கட்டமைப்பை முடிவுக்கு கொண்டு வந்து முழுமையான பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ஏற்பாடாகும்.

000

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பா.ஜ.க-வின் நீண்ட நாள் திட்டமாகும். அத்வானி அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. 2014-இல் மோடி பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க-வால் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

1967-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 47 முறை வெவ்வேறு காரணங்களுக்காக மாநில அரசுகள் கலைக்கப்பட்டிருக்கிறது. அதிகாரங்கள் பெரும்பாலும் மையத்திலேயே குவிக்கப்பட்டிருப்பதால்,  மாநில அளவிலான மக்களின் கோரிக்கைகள் முன்னுக்கு வரும்போதெல்லாம் மைய அரசு மாநில அரசுகளை ஒடுக்கி வந்துள்ளது. இந்தியாவில் சொல்லிக்கொள்ளப்படும் “கூட்டாட்சி” (Federalism) என்பதன் யோக்கியதை இதுதான். இதை  கார்ப்பரேட்களின் கொள்ளைக்காவும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் இந்துத்துவ கனவிற்காகவும் சுத்தமாக ஒழித்துக் கட்டத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர பாசிச கும்பல் எத்தனிக்கிறது.

மேலும், ஒரே நேரத்தில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்கள் நடப்பது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் சூழ்ச்சியாகும். சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சியின் வெற்றி/ தோல்வியை தீர்மானிப்பது, பிராந்திய அளவிலான மக்களின் பிரச்சினைகளின் மீது அந்த கட்சிகளின் நிலைப்பாடுகளை பொறுத்தே அமைகிறது. உதாரணமாக, 2016 சட்டமன்ற தேர்தலின் போது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பொது விருப்பமாக இருந்தது. அதனால் அனைத்து கட்சிகளும் டாஸ்மாக் கடைகளை மூடுவது பற்றி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தது. ஆனால், ஒரே நேரத்தில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் போது, மக்கள் தேசிய அளவிலான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தள்ளப்படுவார்கள். இதனால், 2019 நாடாளுமன்ற தேர்தலில் மோடி புல்வாமா தாக்குதலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது போன்ற வாய்ப்புகள் ஏற்படும்.

இந்த “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தால், அரசுக்கு செலவினங்கள் குறையும் என்றும் ஊழல் குறைந்து மிகத் திறமையான நிர்வாகம் ஏற்படும் என்றும் காவி கும்பல் கதையளக்கிறது. ஆனால் காவிகளின் யோக்கியதை நாடறிந்தது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி தருவதில் நடக்கும் ஊழலை தடுக்கப்போவதாக சொல்லி மோடி அரசாங்கம் 2017-ஆம் ஆண்டு “தேர்தல் நிதி பத்திரம்” என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதன்மூலம், அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்கள் தங்களது பெயரை குறிப்பிடாமலே நிதி அளிக்க வகை செய்யப்பட்டது. அதன்பிறகு நடந்தது என்ன? 2018 முதல் 2022 வரை உள்ள நான்கு ஆண்டுகளில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக வழங்கப்பட்ட மொத்த நிதியான 9,208 கோடியில் 5,270 கோடி நிதி பாஜகவிற்கும் மட்டுமே சென்றிருக்கிறது. இது  தேர்தல் பத்திரங்கள் மூலமாக வழங்கப்பட்ட நிதியில் 57 சதவிகிதமாகும். மொத்த நிதியில் பாதிக்கும் மேல் பாஜக என்ற ஒரு கட்சிக்கு மட்டுமே சென்றிருக்கிறது.

மேலும், தேர்தலுக்காக அரசு செலவு செய்யும் தொகையைவிட அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளே அதிகமாகும். 2014 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மட்டுமே 30,000 கோடி வரை செலவு செய்திருக்கின்றன. இதுவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு. இன்றைய நிலவரம் எப்படி இருக்கும் என்ற நாமே கற்பனை செய்து கொள்ளலாம். தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக, ஊழலை சட்டப்பூர்வமாக்கி உள்ளது. பண பலத்தின் மூலமாக பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கொள்ளைப்புற வழியாக ஆட்சியை பிடிக்கும் ஊழல்போக்கில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது பாஜக. அப்படிப்பட்ட பாஜக தான் தேர்தல் செலவினங்கள் பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ஆடு நனைவது பற்றி ஓநாய் கவலைப்பட்ட கதை!

மிகையாக ஒன்று குவிக்கப்பட்ட அதிகாரங்களின் மூலமாக மாநில அரசுகளை கலைக்கும் அடாவடி போக்கு, கோடி கோடியாக பணம் இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது என்ற நிலையில் இந்திய தேர்தல் சனநாயகத்தின் அவலநிலை வெட்டவெளிச்சமாக தெரிகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளூர் நகராட்சி தேர்தலில் கூட “தான்  தேர்தலுக்காக 5 கோடி வரை செலவு செய்ததாகவும், அதனால் கூட்டணி கட்சிகளுக்கு பதவியை விட்டுத்தர முடியாது என்றும்” ஒருவர் கூறியது நமக்கு நினைவிருக்கிறது. நகராட்சிக்கே 5 கோடி என்றால் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு எவ்வளவு செலவாகும்? அதே சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெற்றால், இயல்பாகவே அதிக பணமுள்ள கட்சிதான் வெற்றி சாத்தியமிருக்கிறது. அந்த கட்சி பாஜக தான் என்பது சொல்லாமலே விளங்கும்.


படிக்க: ஒரே நாடு, ஒரே தேர்தல் – ரிமோட் வாக்களிப்பு இந்து ராஷ்டிரத்துக்கான அடுத்த நகர்வில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள்!


பாசிச நோக்கங்களுக்காக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் கொண்டு வரும் இந்த ” ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் என்பது, தற்போது எஞ்சியிருக்கும் சில மாநில உரிமைகளை பறிக்கவும், மாநில பிராந்திய கட்சிகளை ஒழித்துக்கட்டி, மக்களை  அடிமைப்படுத்தி மாநிலங்களை “இந்து ராஷ்டிரத்தின்” உரிமைகளற்ற சமஸ்தானங்களாக மாற்றும் நீண்டகால திட்டமாகும். இத்தகைய பயங்கரவாத திட்டத்தை பாசிச கும்பல் வைத்திருப்பது அபாயகரமான ஒன்றுதான்.

ஆனால் தற்போது இதை பாசிஸ்டுகளால் கொண்டு வர முடியாது என்பதே எதார்த்தமாக உள்ளது. மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத போதும், களத்தில் இது பாசிஸ்டுகளுக்கு எதிராக  திரும்பும் என்ற நிலை உள்ளப்போதும் எதிர்க் கட்சியுகளையும் மக்களையும் தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என்பதால் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பாசிச கும்பல்.

ஒவ்வொருமுறையும் மோடி கும்பல் உருவாக்கும் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்றுதான் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் உழன்று கொண்டிருக்கின்றன. அதைத்தான் பாசிச கும்பலும் விரும்புகிறது. ஊடகங்கள் மோடியை எந்தளவிற்கு விமர்சிக்க வேண்டும் என்பதை மோடியே தீர்மானிப்பது போல எதிர்க் கட்சிகள், ஜனநாயக, பாசிச எதிர்ப்பு சக்திகள் மோடியின் எந்த நடவடிக்கை விமர்சிக்க வேண்டும் என்பதையும் மோடிதான் தீர்மானிப்பார் என்பதுதான் நிலையாக உள்ளது.

காவி கும்பல் உருவாக்கும் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று விவாதிக்காமல் பாசிச கும்பலின் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தி அதற்கு எதிராக ஒரு மாற்று திட்டத்தை முன்வைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளும் ஜனநாயக சக்திகளும் செயல்பட வேண்டியுள்ளது.


சீனிச்சாமி

கார்ப்பரேட் ஃபாக்ஸ்கானுக்கு ஒரு நீதி! குல்பி ஐஸ் விற்ற கண்ணனுக்கு ஒரு நீதி!

கார்ப்பரேட் ஃபாக்ஸ்கானுக்கு ஒரு நீதி!
குல்பி ஐஸ் விற்ற கண்ணனுக்கு ஒரு நீதி!
எங்கே இருக்கிறது சமூக நீதி?

திருபெரும்புதூர் சிறுநகரத்தின் இடது புறம் பரந்து விரிந்து இருக்கும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால், இரண்டு அல்லது மூன்று கீ.மீ துரத்தில் சுங்குவார்சத்திரம் வந்தடையும். இங்கு, பல சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) மற்றும் ஹைடெக் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இதற்குள் அமெரிக்காவின் டெல் கம்பெனி, ஜப்பானின் சாம்சங் ஆகிய நிறுவனங்களோடு தைவானின் ஃபாக்ஸ்கான் நிறுவனமும் செயல்படுகிறது.

சிட்கோ மற்றும் சிப்காட் போன்ற கம்பெனிகளிலாவது தொழிலாளர்கள் தங்களுக்கான பெயரளவிலான தொழிற்சங்கத்தையேனும் அமைத்துக்கொள்ள முடியும். ஆனால், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் செயல்படும் மேற்சொன்ன  நிறுவனங்களில் மூச்சுகூட விடமுடியாது. இதைப் படிப்பதற்கு மிகையாகச் சொல்வது போல் தோன்றலாம். ஆனால், இது தான் உண்மை.

சான்றாக அண்மையில் ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸில் (FIH) பணிபுரியும் தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் ஃபாக்ஸ்கான் விடுதியின் உணவகத்தில் கொடுத்த தரமற்ற உணவை உண்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிகழ்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் நாள் (17.08.2023) நடந்தது. ஆனால், பேசுபொருளாகவில்லை. குறைந்தபட்சம் குறிப்பிட்ட அளவிலான ஊடகங்கள் கூட இதைப்பற்றி செய்தி வெளியிடவில்லை.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் உரிய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பான உணவு இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. தரமான உணவுப் பொருட்களை வாங்காமல் தனது லாப நோக்கத்திற்காக, தொழிலாளர்களின் உடல் நலனிற்கு எதிராக செயல்படும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் இது போன்ற அவலங்கள் புதிதல்ல; வாடிக்கையாக நடப்பதுதான்.


படிக்க: ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் அடக்குமுறையை முறியடிப்போம் | புஜதொமு


கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகள் விழுந்த உணவை சாப்பிட்டதால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலர் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டுவந்தனர். இந்த அநீதிக்கு எதிராக அன்றைக்கு 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போர்க்குணத்துடன் போராடினார்கள்.‌ அன்றைக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் போராடும் தொழிலாளர்களை சூழ்ந்துகொண்டு அச்சுறுத்தினார்கள். இதனையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், தரமற்ற உணவைக் கொடுத்த கேன்டீன் உரிமையாளர் மற்றும் ஃபாக்ஸ்கான் நிர்வாக அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. மாறாக நியாயத்திற்காகப் போராடிய சி.ஐ.டி.யூ காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் முத்துக்குமார் உள்ளிட்ட முன்னணி தொழிலாளர்கள் பலரை கைதுசெய்து சிறையில் அடைத்தது சமூக நீதி பேசும் தி.மு.க. அரசு.

அன்றைக்கு, “இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது” என  மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தது கார்ப்பரேட் நிறுவனமான ஃபாக்ஸ்கானை பாதுகாக்கத்தானே ஒழிய தொழிலாளர்களின் நலனை உத்தரவாதம் செய்வதற்காக அல்ல என்பது இப்போது உறுதியாகுகிறது. தொழிலாளர் ஆணையர், இணை ஆணையர் இதர அதிகார வர்க்க அரசின் உறுப்புகள், தொழிற்சாலைகள் ஆய்வாளர் என அனைவருமே “முதலாளிகளைக் காப்பது தான் அரசின் கொள்கை” என்ற கொள்கை அடிப்படையில் இயங்குகின்றனர். பிறகு எதற்காக  “தொழிலாளர் துறை” எனப் பெயரிட வேண்டும் என்று தோன்றலாம். இது போன்ற பெயரிலான துறைகள்தான் தொழிலாளர்களை ஏமாற்ற ஏதுவாக உள்ளது என்பதால் அரசு  மேற்படி பெயரை வைத்துக்கொள்கிறது.

இதனை இன்னொரு சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மால் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் தரமற்ற உணவை உண்டதன் காரணமாக வாந்தி, மயக்கமடைந்த இரண்டே நாட்களில், விழுப்புரம் அருகே குல்பி  ஐஸ் வாங்கி சாப்பிட்ட 85 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


படிக்க: ஃபாக்ஸ்கான் பயங்கரவாதம் – நேரடி ரிப்போர்ட்


உடனடியாக மாவட்ட ஆட்சியர்  மற்றும் வருவாய் கோட்ட அதிகாரி (RDO) மூலம்  விசாரணை ‌மேற்கொள்ளப்பட்டு ஐஸ் விற்பனை செய்த கண்ணன் என்பவரை காவல்துறை கைது செய்கிறது. கூலி வேலைக்கு  ஒப்பான  ஐஸ்  வியாபாரியைக் கைது செய்து பிரச்சினையைக் கண்டறியும் அரசு-அதிகார வர்க்கம், ஃபாக்ஸ்கான் விவகாரத்தில் மட்டும் தனது அதிகாரத்தின் சிறு அதிர்வைக் கூட காட்ட மறுப்பது ஏன்?

கார்ப்பரேட்டுகளின் மூலதன ஆதிக்கத்திற்கு எல்லா அதிகாரமும் கட்டுப்பட வேண்டும் என்பதுதான் எழுதப்படாத சட்டம். இந்த மூலதன விதி “அநீதியை” அடிப்படையாகக் கொண்டிருப்பதை  மூடி மறைக்கத்தான் தொழில்  வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்று வாய்ப்பந்தல் போட்டு தொழிலாளர்களை ஏமாற்றுகின்றனர்,

சமூக நீதி அல்லது தேசிய நீதி என எந்த நீதி என்றாலும் கார்ப்பரேட் முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டலை எதிர்க்காமல் இருப்பதோடு அந்த எதிர்ப்பு உணர்வு  தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கும்  வராது  பார்த்துக் கொள்ள அரசு  உத்தரவாதம் அளித்துள்ளதை தொழிலாளி வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும். அரசு-முதலாளி வர்க்கத்தின் கள்ளக்கூட்டை உழைக்கும் வர்க்கம் அரசியல் சித்தாந்த ரீதியில் உணரும் அந்த தருணத்தில் அரசின் நயவஞ்சக வாக்குறுதி, மூலதனத்தின்  ஆதிக்க விதி என எதுவும் எடுபடாது. மார்க்சியத்தின்  புரட்சிகர போராட்ட விதி ஒன்றே  தொழிலாளி வர்க்கத்தைக் கட்டிக்காத்து விடுதலைக்கான வழி காட்டும்.


ஆ.கா.சிவா

சந்திரயான் -3 கொண்டாட்டமும் தேசபக்தியும்

ந்த ஏகபோக முதலாளித்துவ சமுதாயத்தில் வல்லரசு நாடுகள் என்று அழைக்கப்படுகின்ற ஏகாதிபத்திய நாடுகள் உலகமக்களை வெறியுடன் சுரண்டி வருகின்றன. ஏற்கனவே, நிலவையும் செவ்வாய் கிரகத்தையும் ஏகாதிபத்திய நிதி ஆதிக்கக் கும்பல்கள் ஆக்கிரமித்து தத்தமது பிராந்தியங்களை உருவாக்கி வருகின்றன. நிலவில் சுரங்கங்கள் அமைத்தல், செவ்வாயில் குடியிருப்புகளை அமைத்தல், விண்வெளியில் நடைபாதை அமைத்தல், பிற நட்சத்திரங்களுக்கு செல்வதற்கான நட்சத்திரக் கப்பல்களை உருவாக்குதல் போன்ற தங்களின் ஏகாதிபத்திய போட்டாபோட்டியை விண்வெளியிலும் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் நிலவில் தங்களின் மேலாதிக்கத்தை நிறுவும் வகையில் ஏற்கெனவே தரையிரங்கிவிட்டன. கனிமங்களைச் சுரண்டுவதற்கான வழிவகைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. உதாரணமாக சீனா 2013-இல் முதன்முதலாக நிலவில் கால் பதித்ததிலிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி 2030-ஆம் ஆண்டுக்குள் சாங் (Chang’e) 6, 7 மற்றும் 8 என்ற திட்டத்தின்படி நிலவில் கிடைக்கும் கனிமவளங்களை கொண்டு மறுபயன்பாட்டின் மூலம் நீண்டகால மனித வாழ்விடத்தை உருவாக்குவதே இதன் உச்சபட்ச திட்டமாகும். ரஷ்யா ஏவிய “லூனா-25” தோல்வியடைந்த நிலையில் அடுத்தகட்டமாக லூனா-26, 27 மற்றும் 28 ஆகிய செயற்கைக்கோள்களை 2030 ஆம் ஆண்டிற்குள் நிலவிற்கு அனுப்பி மனித வாழ்விடத்தை உருவாக்குவதே அதன் திட்டமாகும்.

இதன் தொடர்ச்சியாகவே இந்தியாவும் தன்னை இந்த போட்டியில் ஈடுப்படுத்திக்கொண்டு சந்திராயன் – 3ஐ நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி நிலவின் தென் துருவத்தில்  கால் பதித்த முதல் நாடானது. இதை இந்திய நாடே தேசபக்தியில் கொண்டாடியது. NASA போன்ற ஒற்றையாதிக்க நிறுவனங்கள் கூட ISRO-வையும்  இந்தியாவையும்  வாழ்த்தின. முதலாளித்துவ ஊடகங்கள், “சந்திரயான்-3 நிலவை முத்தமிட்ட தருணம்”  என்று தலையங்கம் வெளியிட்டு குதூகலித்தன. சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் பெரிய திரையில் சந்திராயன்-3 நிலவில் தரையிறங்குவதை நேரலையாக  பார்த்து வெடி வெடித்து கொண்டாடி தேசபக்தியை வெளிப்படுத்தினர். சந்திரயான் -3 ஏவப்படுவதை சுமார் 85,000 மக்கள் நேரலையில் பார்த்தனர். மொத்தம் 7.5 கோடி மக்கள் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

சந்திரயான் – 3 நிலவில் தரையிறங்கியிருப்பதை ஒரு அறிவியல் முன்னேற்றமாக பார்க்கலாமே தவிர அதை ஒரு ரசிகர் மனோபாவத்துடன் கொண்டாடவேண்டிய அவசியம் இல்லை. நிலவின் தென் துருவத்தை கண்டு மகிழ்ந்த நாம் இந்தியத் தொழிலாளர்களின் நிலையைக் கண்டதுண்டா? நாம் பார்க்கக்கூடாது என்பதற்கு தான் இந்த தேசபக்தி முகமூடி!


படிக்க: சந்திராயன் 3 ஏவப்பட்டதற்கு பின் இருக்கும் அரசியல் என்ன? | தோழர் சிவா


ஜூன் 14 அன்று சந்திரயான் -3 விண்வெளியில் ஏவப்பட்டது. இதே காலகட்டத்தில் தான் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வெறிபிடித்த மிருகங்களால் தெருவில்  இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த கொடூரம் அரங்கேறியபோது, ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக பாசிச  மோடி சந்திரயானை பார்த்து முத்தமிட்டு தேசபக்தியில் உச்சிமுகர்ந்தார்.

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டதாக கொண்டாடும் நாம், இன்னும் மனித மலத்தை மனிதனே வெறும் கையில் அள்ளும் அவலம் தொடர்ந்து கொண்டிருப்பதை அனுமதித்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தைகளை தூக்க வக்கற்று இருக்கிறோம். தற்போது எழும் கேள்வி சந்திரயான் -3 யாருக்குப் பலன் என்பதுதான். சாமானிய மக்களுக்குப் பயன்படவில்லையெனில் அதில் கொண்டாடுவதற்கு ஏதுமில்லை. ஆனால், இதனையெல்லாம் மூடிமறைக்கவே ஆளும் வர்க்கம் தேசபக்தியைக் கற்பிக்கிறது.

உதாரணமாக மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துசென்ற வீடியோ வெளியாகி நாடே கொந்தளித்த போது அதை திசை திருப்பும் விதமாக கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் ராமர் கோவில் கட்டிடத்தின் புகைப்படத்தை வெளியிட்டது இந்த சங்கி கும்பல். மேலும், இன்றுவரை மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஹரியானாவில் சங்கப் பரிவாரக் கும்பல் திட்டமிட்டு  அரசின் துணையோடு மதக் கலவரத்தை தூண்டி நடத்தி வருகிறது.

கடந்த மூன்று வாரத்துக்கு முன்பு நெல்லை நாங்குநேரியில் 17 வயதான சின்னதுரை எனும் மாணவனை அதே பள்ளியில் படிக்கும் ஆதிக்கச் சாதிவெறி பிடித்த மாணவர்கள் காழ்ப்புணர்ச்சியால் வீடு புகுந்து சரமாரியாக வெட்டினர். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டது. தடுக்க வந்த சின்னதுரையின் தங்கையையும் சரமாரியாக வெட்டினர்.  இதனை நேரில் கண்ட சின்னதுரையின் தாத்தா அதிர்ச்சியில் அதே இடத்தில் உயிரிழந்தார்.

இந்தாண்டு மட்டும் ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரத்தில் நீட், ஜே.ஈ.ஈ (JEE) தேர்வு பயிற்சிபெறும் மாணவர்கள் 22 பேர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் அதனை தடுக்கும் வகையில் கோட்டா மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் மின்விசிறிகளில் ஸ்ப்ரிங் பொறுத்த உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் கோவத்தை மடைமாற்றும் இந்நடவடிக்கை நம்மை ஆத்திரமடையச் செய்யும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மட்டும் இதுவரை 22 மாணவர்கள் ’தற்கொலை’ செய்து  கொண்டனர். அண்மையில் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று நீட் தேர்வில் அரசு மருத்துவக் கல்லூரியில் போதிய மதிப்பெண் எடுக்க முடியாததால் ஜெகதீசன் எனும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணம் படைத்தவர்களுக்குத்தான் மருத்துவம் என்பதை ஜெகதீசன் நண்பர் ஃபயாஸ்தீன் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தினார்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க கிரிமினல் பிரவேஷ் சுக்லா பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த கொடூரத்தின் சூடு தணிவதற்குள், அங்கு தாழ்த்தப்பட்ட தொழிலாளர் கையில் இருந்த கிரீஸ், ஆதிக்க சாதி வெறி பிடித்த தொழிலாளரின் கையில் பட்டதால் தாழ்த்தப்பட்ட தொழிலாளர் முகத்தில் மலத்தை பூசிய கொடூரமும் அரங்கேறியது. கொடூரத்தின் உச்சகட்டமாக 17 வயதே நிரம்பிய தாழ்த்தப்பட்ட சிறுவனின் ஆசனவாயில் சிரஞ்சியில் மிளகாய்த் தூள் ஏற்றி உள்ளன ஆதிக்க சாதி வெறி பிடித்த மிருகங்கள்; சாதிவெறி அடங்காமல் சிறுநீரையும் குடிக்க வைத்துள்ளனர்.

இந்த கொடூரங்களுக்கெல்லாம் இந்த தேசப்பற்றாளர்கள் பதில் கூற வேண்டும் அல்லவா? நாம் எதிர்பார்க்கும் நீதி எல்லாம் இந்துராஷ்டிரத்தின் மனுதர்மத்தில் எழுதப்படவில்லை! நாம் எதிர்பார்க்கும் நீதியை இந்த ’தேச பக்தர்கள்’ வழங்கவில்லை என்றால் அவர்கள் கூறும் தேசப் பெருமிதத்தை ஏன் நாம் உச்சி முகர வேண்டும்!


படிக்க: ஏன் சந்திராயன் 3 தேச பெருமிதமாக காட்டப்படுகிறது? | தோழர் ரவி


இந்திய உழைக்கும் மக்கள் மீது பாசிஸ்டுகள் கட்டற்ற தாக்குதலை தொடுத்துள்ளனர். இனி இந்த கொடூரங்களை சகித்துக் கொண்டு இவர்கள் கூப்பாடு போடும் தேச பெருமிதத்திற்கு இசைந்தால் நம் முகத்திலும் நாளை மனித மலத்தையும் மூத்திரத்தையும் வாரி இறைப்பார்கள். ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பல்களின் நலனுக்கு தான் சந்திராயன் 3 உதவும் என்று நாம் கூறுகிறோம். அதற்கு எதற்கு தேச பெருமிதம் என்று கேட்டால், நீங்கள் எல்லாம் அறிவியலுக்கும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் எதிரானவர்கள் என்று நம்மைப் பார்த்து ஏசுகிறார்கள், ‘தேசப்பற்றாளர்கள்’.

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இஸ்ரோ(‌ISRO) இப்பொழுது முழுவதுமாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது பாசிச மோடி அரசு. விண்வெளி நடவடிக்கைகள் மசோதாவுக்கான (Space Activities Bill, 2017) வரைவு உருவாக்கப்பட்டுள்ளது; 2019-ஆம் ஆண்டில் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (New Space India Limited) என்ற பொதுத்துறை நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய புவியியல் கொள்கை 2022 (National Geospatial Policy 2022), இந்திய விண்வெளிக் கொள்கை 2023 (Indian Space Policy 2023) போன்ற கொள்கைகள் மூலம் இந்திய விண்வெளி துறையை லாபவெறி பிடித்த கார்ப்பரேட் கும்பல்களிடம் ஆத்ம நிர்பார் பாரத் என்ற பெயரில் அடகு வைக்கும் வேலையை செய்து வருகிறார் ‘தேசப் பிதாமகன்’ நரேந்திர மோடி.

ராக்கெட் ஏவுதளங்களை (Rocket Launching Facility) தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், செயற்கைக்கோளை உருவாக்கும் குழுக்களில் (Satellite Designing and Fabricating Committee) தனியார் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகளும் மேலாளர்களும் இடம்பெறலாம், செயற்கைக்கோள் பூமிக்கு அனுப்பும் தகவல்களையும் பூமியில் இருந்து செயற்கைக்கோளுக்கு அனுப்பும் தகவல்களையும் (Satellite communications) கண்காணிக்கும் Ground Station-யையும்   தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் அதில் வரும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என ஒட்டு மொத்த இந்திய விண்வெளித் துறையையும் தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு முற்றும் முழுதாக தாரைவார்க்கும் விதமாக சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது பாசிச மோடி அரசு. இதன் வெளிப்பாடுதான் சந்திரயான் 3 உருவாக காரணமாக இருந்த ராஞ்சி கனரக பொறியியல் நிறுவனத்தின்  மூவாயிரதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு 17 மாதங்களாக ஊதியம் வழங்காதது. இதை நாம் எப்படி தேசபெருமிதமாக கொண்டாடமுடியும்?

பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான ஆட்சி அதிகாரத்தில்தான், பாட்டாளி  வர்க்க சர்வாதிகாரத்தில்தான் அறிவியலும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் மக்களுக்கானதாக இருக்கும். அப்போது மட்டுமே அறிவியலுக்கு உயிர் ஊட்ட முடியும்.


அசுரன்

தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டம்: புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியே!

டந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த தி.மு.க அரசு, ஆட்சியை பிடிப்பதற்கு முன்னர் மோடி அரசு கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி வருகிறது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு ஒன்றை அமைத்தது.

ஆனால் தேசிய கல்விக் கொள்கையின் “நகல்” அறிக்கையை மாநில கல்விக் கொள்கை என்ற பெயரில் தி.மு.க அமல்படுத்த முயல்கிறது என்பதை அம்பலப்படுத்தி அக்குழுவிலிருந்து வெளியேறினார், குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஜகவர் நேசன். இதன் மூலம் தேசிய கல்விக் கொள்கையை திமுக மறைமுகமாக அமல்படுத்தி வருகிறது என்பது மீண்டும் அம்பலப்பட்டு போனது.

இந்நிலையில், தி.மு.க-வின் கார்ப்பரேட் சேவையின் தொடர்ச்சியாக, சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தன்னாட்சி கல்லூரிகளிலும் “பொதுபாடத்திட்டம்” என்ற ஒற்றை பாடத்திட்டத்தை இந்த கல்வியாண்டிலிருந்தே அமல்படுத்த வேண்டும் என்பதே அந்த அறிக்கையின் சாரம்.

இத்திட்டத்தின்படி அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் “ஒரே கல்வி” திட்டம் திணிக்கப்படுகிறது! தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டே அதனை நகல் எடுத்து பொது பாடத்திட்டம் என்று பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அதிகாரத்தை நசுக்கும் நாசகரத் திட்டத்தை அமல்படுத்துகிறது திமுக அரசு.


படிக்க: NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE


ஒவ்வொரு  பல்கலைக்கழகமும் தன்னாட்சி அதிகாரம் கொண்டு ஒவ்வொரு வட்டாரத்தின் தன்மை, சமூக அமைப்பு, கலாச்சாரம் போன்றவற்றை கல்வியில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனியாக சட்டம் இயற்றி வெவ்வேறு பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தி.மு.க அமல்படுத்தியுள்ள இந்த பொது பாடத்திட்டம், “ஒற்றைக் கல்விமுறை” என்பதை நுழைத்து பல்வேறு பகுதிகளில் இருக்கும் தனிச்சிறப்பான கல்வி முறையை அழிக்கப்பார்க்கிறது.

உதாரணமாக, கடலோர மாவட்டங்களில் கடல்சார் மற்றும் மீன்வளம் சார்ந்த படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் கைவினை மற்றும் கலை சார்ந்த படிப்புகள் இருக்கின்றன. இதன் மூலம் அங்கு படிக்கும் மாணவர்கள் தங்களின் பாரம்பரியத்தை வரித்துக்கொள்கிறார்கள். இப்படி ஒவ்வொரு புவியியல் அமைப்புக்கும் ஏற்றவாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகள் தங்களுக்கான பாடத் திட்டத்தை தாங்களே தயாரித்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

அகில இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் வே.ரவி பேசுகையில், “நான் பெரியார் பல்கலைக்கழக தாவரவியல் பாடத்திட்டக்குழு தலைவர். எனது தலைமையில் 12 பேராசிரியர்கள் கொண்ட குழுதான் இதுநாள் வரை எங்களுக்கான பாடத்தைத் தயாரித்தது. நாங்கள் ஆய்வுசெய்தவரை பொதுப் பாடத்திட்டம் காலாவதியானதாகவே இருக்கிறது. சமீபத்திய முன்னேற்றங்கள் எதுவும் அதில் இல்லை. குறிப்பாக செய்முறைப் பாடங்களுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கல்லூரிகள் தொடங்கிவிட்டன. ஆனால் பல இடங்களில் புதிய பாடங்கள் நடத்தப்படவே இல்லை. பழைய பாடங்களையே நடத்துகிறார்கள். எங்களுக்கும் புதிய பாடங்களை எப்படி நடத்துவது என்று புரியவில்லை. இந்தப் பாடத்திட்ட வடிவமைப்பு அப்படியே புதிய கல்விக்கொள்கையை ஒத்திருக்கிறது. மாணவர்களை அறிவு-சார்ந்தவர்களாக உருவாக்காமல் திறன்-சார்ந்தவர்களாக மாற்றி நிறுவனங்களுக்கான தொழிலாளர்களாக ஆக்குவதுதான் பொதுப்பாடத் திட்டத்தின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது” என்று கூறுகிறார்.

‘மூட்டா’ அமைப்பின் பொதுச் செயலாளரான நாகராஜன், “மாநில உயர்கல்வி மன்றம், பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு முன்வைக்கும் காரணங்கள் மொன்னையாக உள்ளன. ஒன்று ஈக்குவலன்ஸ் (சமநிலை) பிரச்சினை. இன்னொன்று, வெர்ட்டிகல் மொபிலிட்டி. இந்த வாதம் அடிப்படையிலேயே தவறு” என்கிறார்.


படிக்க: சிற்பி திட்டம்-வானவில் மன்றம்: கல்வித்துறையில் கார்ப்பரேட்-ஐ நுழைக்கும் திராவிட மாடல் அரசு!


மேலும், “இந்தச் சமநிலைப் பிரச்சினையை பல்கலைக்கழகங்களே தங்களுக்குள் முடிவு செய்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இது தெரியாமல் உயர்கல்வி மன்றம் குழப்புகிறது. ஒரு மாணவன் ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறான். சில நேரங்களில் இரண்டாமாண்டில் அவன் வேறொரு கல்லூரியில் சேர நேரிடும். இதைத்தான் ‘வெர்ட்டிகல் மொபிலிட்டி’ என்பார்கள். வேறு வேறு பாடத்திட்டங்கள் இருந்தால் இதுமாதிரியான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். பொதுப் பாடத்திட்டம் இருந்தால் சிக்கல் வராது என்கிறார்கள். அதுவும் தவறு. பொதுப் பாடத்திட்டங்களை கல்லூரிகள் தங்கள் விருப்பத்துக்கேற்றவாறு வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். ஒரு கல்லூரியில் ஒரு பாடம் முதலாமாண்டில் இருந்தால் இன்னொரு கல்லூரியில் மூன்றாமாண்டில் இருக்கும். வெர்ட்டிகல் மொபிலிட்டி பிரச்சினைக்கு பாடத்திட்டம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அடிப்படைக் கட்டுமானங்களை ஒரேமாதிரி வைத்தால் போதும்…” என்று கூறுகிறார்.

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் 800-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களோடு முதலில் இருப்பது தமிழ்நாடு தான். 2022 தேசிய தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டின் 32 நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தன்னாட்சி நிறுவனங்களே. சான்றாக, சென்னை மாநிலக் கல்லூரி அதில் 3-வது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிலவரம் இப்படி இருக்க உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உயர் கல்வித்துறையை மேம்படுத்தத்தான் இந்தத் திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக கூறுவது பெரிய சதித்திட்டமாகும்.

நாங்கள் பா.ஜ.க-விற்கு நேர் எதிரானவர்கள் என்று கூறிக்கொண்டு பா.ஜ.க-வின் பல அஜெண்டாக்களை நிறைவேற்றி வருகிறது தி.மு.க. ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையின் திட்டங்களை எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் என்று வெவ்வேறு பெயர்களில் நுழைத்து மாணவர்களுக்கு இந்துத்துவ கொள்கைகளை  கற்றுத்தர வழிவகை செய்துள்ளது திமுக அரசு. தற்போது, பொது பாடத்திட்டம் என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையின் அம்சத்தை பல்கலைக்கழகங்களில் கொண்டு வந்து அவற்றின் பன்முகத் தன்மையை அழிக்கத் துடிதுடிக்கிறது திமுக.

இத்திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஒரு அடிமை கூட்டமாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறது திமுக அரசு. முதலாளித்துவ கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க-விற்கு எந்த அளவிலும் தி.மு.க சளைத்தது இல்லை என்பதையே இந்நடவடிக்கை சுட்டிக்காட்டுகிறது.


இராவணன்

எந்த ஆயுதமேந்த…….. | கவிதை

ந்த ஆயுதமேந்த……..

ஈரெட்டு இட்லிகளை
எடுக்க முடியும்
ஒரு அவியலில்..

வேகும் நேரத்தில்
விருப்பமான ஓர் முழு பாடலையும்
பாடிட முடியும் என்னால்..

புத்துணர்ச்சி தரும் புரட்சி பாடலாகவும் இருக்கலாம்
அல்லது
என் மீதான கழிவிரக்கத்தினைச்
சொல்லும் சோகப்பாடலாகவும் இருக்கலாம்…

அடுக்களைவிட்டு வெளியே போய்
முகங்கழுவி புத்துணர்ச்சி பெறுவதற்கான சிறிய அளவிலான நேரமும் கிடைக்கும்..

அதனாலேயே
இட்லி எனக்கு பிடித்தமானதாக இருக்கலாம்

அதற்காக
இட்லி அவித்து கொண்டே இருக்க முடியாது
காலம் முழுவதும்…

தோசை சுடுவதென்பது வரமுமல்ல
வட்ட தோசையாய் வராவிடில்
குறைசொல்ல வரும் குடும்பமே..

திருப்பிப் போடும் முன்போ
திருப்பிப் போட்ட பின்போ கருகிவிடக் கூடாது
அப்படி கருகினால்
அடுக்களைப் பக்கமே எட்டிப் பார்க்காத எருமை
என்னை அறையலாம்..

குடும்பமே கோவில்
கணவனே தெய்வம் என்பதால்
ஆக்கவும் அழிக்கவும்
அடிக்கடி அடிக்கவும்
அவனுக்கே அதிகாரம் அதிகமாய்..

ஐவர் இருக்கும் வீட்டில்
ஐந்து வித தோசை
நெய் தோசை சாதா தோசை
பேப்பர் ரோஸ்ட் முட்டை தோசை
பொடி தோசையென
அனைத்தும்
சுட்டு முடிக்கும்முன்
சூடும் வாங்க வேண்டும்
தோசைக்கல்லில்..

கையை மடக்கியபடியே
கை வலியை பொறுத்தபடியே
கால்கடுக்க நின்று
உங்களால் எத்தனை தோசையை சுட்டுவிட முடியும்…

நீண்ட நேரத்திற்கு மட்டுமல்லாது
நீ..ண்ட காலத்திற்கு அடுக்களையிலேயே நிற்க வைத்திருக்கும் வலி என்னவென்று
எங்களுக்குத்தான் தெரியும்..

பூத்தொழுகும் வியர்வையையும்
புதைக்கப்பட்ட கனவினையும்
புழுக்கமான உடம்பையும் பிசைந்து
எண்ணெய்ப்பிசுக்கான
அடுப்படிச் சுவற்றில் ஓவியமாக தீட்டியுள்ளதை
பார்த்தும்
பார்க்காதுபோல் இருக்கும்
உங்களிடம்
கேட்க ஒரு கேள்வி இருக்கிறது

இட்லியா தோசையா என்ற கேள்வியில்லை

நாங்கள் விடுதலை பெற
எந்த ஆயுதத்தை எடுக்க
என்பது மட்டும் தான் அந்த கேள்வி….!


ஏகலைவன்

ஒரே நாடு,  ஒரே தேர்தல்! மோடி – அமித்ஷா பாசிச கும்பல்  நாட்டு மக்கள் மீது தொடுத்திருக்கும் போரை எதிர்கொள்வோம்!

02.09.2023

ஒரே நாடு,  ஒரே தேர்தல்!

மோடி – அமித்ஷா பாசிச கும்பல்  நாட்டு மக்கள் மீது தொடுத்திருக்கும்
போரை எதிர்கொள்வோம்!

பத்திரிகை செய்தி

ரே நாடு , ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இம்மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்ட மசோதா தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

செலவினங்களை குறைப்பது, வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்துவது, ஒன்றிய அரசுக்கு இருக்கக்கூடிய நிர்வாக மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளை சரி செய்வது என ஒப்புக்கு சப்பில்லாத பல்வேறு சால்ஜாப்புகளையே மோடியின் ஊடகங்கள் பிரச்சாரங்களாக தொடங்கிவிட்டன.

நரேந்திர மோடி உலகம் சுற்றுவதற்கு பல ஆயிரக்கணக்கான கோடிகள், இராணுவத்துக்கு பல லட்சம் கோடிகள், சமீபத்திய சிஏஜி அறிக்கையில் அம்பலமான பல லட்சம் கோடிகள் என ஊழலும் ஊதாரித்தனங்களும்  மேற்கொண்டு  நாறிப் போய் இருக்கிறது பாசிச மோடி அரசு. இப்படிப்பட்ட யோக்கியவான்கள் தான்  செலவினங்கள் அதிகமாகிறது, ஆகவே ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்கிறார்கள்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது   பல்வேறு தேசிய இனங்கள் வாழக்கூடிய இந்த நாட்டின், தேசிய இனங்களின் அனைத்து வகையான உரிமைகளையும் பறித்து இந்துராஷ்டிரத்தின் சமஸ்தானங்களாக மாற்றக்கூடிய பாசிச நடவடிக்கை. இந்த பாசிச நடவடிக்கையை  நிறைவேற்றுவதற்கு கேடுகெட்ட பாசிச  அணுகுமுறையை  பாசிச மோடி  – அமித்ஷா கும்பல் முன்னெடுத்திருக்கிறது.


படிக்க: ஒரே நாடு, ஒரே தேர்தல் – ரிமோட் வாக்களிப்பு இந்து ராஷ்டிரத்துக்கான அடுத்த நகர்வில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள்!


ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாமா வேண்டாமா என்பது தொடர்பாக எந்த மாநிலத்திடமும் கருத்து கேட்கவில்லை. பெரும்பான்மை மக்கள் பங்கு பெறக்கூடிய தேர்தல் தொடர்பாக இந்த நாட்டின் மக்களிடத்திலும் கருத்து கேட்கவில்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு,  அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் சிறப்பாக நடத்தப்படும் தேர்தல், என்றெல்லாம் பெருமையாக பீற்றிக் கொண்ட ஜனநாயகத்தையும் ஆழ குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள் மோடி அமித்ஷா – பாசிச கும்பல்.

மொத்த நாட்டையும் அதானி அம்பானி பாசிஸ்ட்டுகளுக்கு விற்பதற்கு மாநில உரிமைகள் தடையாக இருக்கின்றன என்பதை உண்மை. மாநிலத் தேர்தல்களை ஒழித்துக் கட்டுவதன் மூலம் மாநில தேர்தல் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதே இதன் உண்மையாக நோக்கமாக இருக்கிறது.

பாசிச கும்பல் தனக்கு ஏற்றபடி மொத்த நாட்டையும்  மாற்றிக் கொண்டிருக்கிற இந்தச் சூழலில் தான் தேர்தலையும் மாற்றுகிறது.

இந்த கேடுகெட்டத் தேர்தல் அமைப்பிற்குள் நாம் சாதிக்க முடியும்  என்பதே மூடநம்பிக்கை. இதை மண்டும் மீண்டும் மோடி, அமித்ஷா பாசிச கும்பல் நமக்கு உணர்த்துகிறது.

ஆர் .எஸ் எஸ் –  பாஜக பாசிச கும்பல் தோற்றுக் கொண்டிருப்பதன் அடையாளம் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட பாசிச நடவடிக்கைகள்.


படிக்க: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது !


அச்சப்படுவதற்கு ஏதுமில்லை, இந்த நாட்டின் மக்கள் மீது வெளிப்படையான போரை அறிவித்திருக்கிறது மோடி –  அமித்ஷா பாசிச கும்பல்.

எதிரிகள் நம் மீது போரை அறிவித்திருக்கும் போது நாம் பதுங்குவதற்கும் மறைவதற்கும் இடம் ஏதும் இல்லை.  ஆர் .எஸ் .எஸ்- பாஜக; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக என்று உரத்து முழங்குவோம்! நம் முழக்கத்தின் அதிர்வுகளில் பாசிச கோட்டைகள் தூள் தூளாக நொறுங்கட்டும்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசுக்கு குறைவான எதுவும் ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி  -அதானி பாசிசத்துக்கு மாற்று இல்லை !

வேண்டாம் பாஜக!  வேண்டும் ஜனநாயகம்!

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை.
9962366321