உலகிலேயே ஒரே நாள் அதிக எண்ணிக்கையாக 3,14,835 பேர்களுக்கு கொரோணா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆக்சிஜன் இல்லை. வெண்டிலேட்டர் இல்லை. தடுப்பு மருந்து இல்லை. குவியும் பிணங்களை எரிக்க தலைநகரில் இடமில்லை. மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் கையறு நிலையில் தவிக்கின்றனர். நோயாளிகளை மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் மேலும் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தற்போது படுக்கைகளும் இல்லை ஆக்ஸிஜனும் இல்லை மற்றது அனைத்தும் அடுத்தது தான்” என்று அசோகா பல்கலைக்கழகத்தின் நோய் தொற்றியல் நிபுணரும் திரிவேதி ஸ்கூல் ஆஃப் பயோசயின்சஸின் இயக்குநருமான ஷாஹித் ஜமீல் கூருகிறார். ஒட்டுமொத்த கட்டமைப்பும் நொறுங்கி வருகிறது என்கிறார்.
தலைநகர் மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இல்லை. வெளிமாநிலங்களில் இருந்த வந்த ஆக்சிஜனும் நிறுத்தப் பட்டிருக்கிறது. தலைநகருக்கான ஆக்சிஜனை யார் தடுத்தாலும் தூக்கிலிடுவோம் என்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். தலைநகருக்கே இதுதான் கதி.
உச்சநீதிமன்றமும் இதனை அவசர நிலையாக கருதுவதாக கூறி ஆக்சிஜன், தடுப்பு மருந்துக்கான தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்க நடுவண் அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை கடுமையாக தாக்கி வரும் நிலையிலும் ஏப்ரல் மாதம் வரையில் இந்திய அரசு வெளிநாடுகளுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் ஏற்றுமதி செய்திருக்கிறது. அதுவும் கொரோனாவுக்கு முந்தைய ஆண்டில் (2019-20) 4,500 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்த நிலையில், 2020-21ல் இரண்டு மடங்காக 9,300 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்திருக்கிறது. இதெல்லாம் மாண்புமிகு உயர் – உச்ச நீதியரசர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை போலும்.
சீனாவையும், பாகிஸ்தானையும் எதிரிகள் என்று நரம்புகள் முறுக்கேறி இந்துத்துவவாதிகள் தேசபக்தி பாடம் எடுத்த நிலையில் இன்று இவ்விறு நாடுகளும் இந்தியாவிற்கு பக்க பலமாக இருப்போம் என்றும் விரைவில் இந்தியாவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன. #standwithindia என்று டுவிட்டரில் ட்ரெண்டாக்கியிருக்கிறார்கள் பாகிஸ்தான் மக்கள். ஆனால், எஜமானனான அமெரிக்காவோ தனக்கு பின்தான் தானம் என்று இந்தியாவிற்கு பெப்பே காட்டியிருக்கிறது.
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல தடுப்பு மருந்திற்கான விலையை தடுப்பு மருந்து நிறுவனங்கள் தாருமாறாக ஏற்றி இளவு வீட்டிலும் இலாபம் பார்க்கின்றன. ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்தின் விலையாக மாநில அரசுகளுக்கு ரூ.600, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 என பாரத் பையோடெக் நிறுவனம் விலை நிர்ணயம் செய்திருக்கிறது. அதுவே, சீரம் நிறுவனம், கோவிசீல்டு மருந்திற்கு மாநில அரசுகளுக்கு ரூ.600, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 என விலை நிர்ணயித்திருக்கிறது.
அரசு நிறுவனங்கள் இந்த மருந்துகளை தயாரிப்பதிலிருந்து முட்டுக் கட்டைப் போட்டிருக்கும் மோடி அரசாங்கம், கோரோனாவிற்கான மருந்து தயாரித்துக் கொள்ளையடிக்க இந்த இரு நிறுவனங்களையும் ஏகபோகமாக்கியிருக்கிறது.
முதல் அலையினால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் பல பாடம் கற்றுக் கொண்டு இரண்டாம் அலையின்போது தத்தமது மக்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்க, இந்து இராஜ்ஜியத்தின் கனவு அரசரோ கங்கா மாதாவின் அருளினால் கும்பமேளாவில் கொரோனா வராது என்று கூறுகிறார். இது கொரோனாவை விட கொடிதாக இருக்கிறது. மேலும் உ.பி-யில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், எதிராகப் பேசுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் இந்து ராஜ்ஜியத்தின் இளவல் ஆதித்யநாத் எச்சரித்திருக்கிறார். இதுதான் இன்றைய இந்து ராஜ்ஜியத்தின் எதார்த்த நிலைமை.
மும்பையில் கொரோணா தொற்றிருப்பதாக கூறப்படும் நோயாளி ஒருவரை கவனிக்கும் சுகாதார ஊழியர்கள்.மும்பையில் உள்ள கொரோனா நோய்த்தொற்று மீட்பு மையத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐ.சி.யூ) மாற்றப்படுவதற்காக காத்திருக்கும் நோயாளியைச் சுற்றி சுகாதார ஊழியர்கள்.கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்த கோவிட் -19 நோயாளி ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் துயரத்திலிருக்கின்றனர்.கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கோவிட் -19 நோயாளி ஒருவர்.மும்பையில் உள்ள கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மீட்பு மையத்தில் உள்ள மருத்துவ விரைவு ஊர்தியில் நோயாளி ஒருவருக்கு சுகாதார ஊழியர்கள் உதவுகிறார்கள்.புதுதில்லியில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு கிராம கோவிட் -19 பராமரிப்பு மையத்தில் ஆக்ஸிஜன் உருளைகளை இறக்கிச்செல்லும் தொழிலாளர்கள்.புது தில்லி ஜில்மில்லில் (Jhilmil) உள்ள இ.எஸ்.ஐ.சி (இந்திரா காந்தி) மருத்துவமனையின் கோவிட்-19 நெருக்கடி பராமரிப்பு வார்டு.புது தில்லியின் இ.எஸ்.ஐ.சி (இந்திரா காந்தி) மருத்துவமனையில் மருத்துவ நிபுணர் ஒருவர் ஆக்ஸிஜன் உருளைகளை வரிசைப்படுத்துகிறார்.அகமதாபாத் கோவிட்-19 மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கக மருத்துவ விரைவு ஊர்தி ஒன்றில் காத்திருக்கும் நோயாளியின் ஆக்ஸிஜன் அளவை ஆக்சிமீட்டரை கொண்டு சரிபார்க்கும் துணை மருத்துவர்.அகமதாபாத்தில் கோவிட்-19 மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக மூச்சியக்க சிக்கலுள்ள நோயாளியொருவர் காரில் காத்திருக்கிறார்.புதுடெல்லிக்கு வெளியே நொய்டாவில் கோவிட்-19 காரணமாக இறந்த ஒருவரின் உடல் எரியூட்ட வைக்கப்பட்டுள்ளது. பின்னனியில் எரிந்து கொண்டிருக்கும் உடல்கள்.
டாக்டர் ஜலீல் பார்க்கர், இந்தியாவின் தலைசிறந்த நுரையீரல் நிபுணர்களில் ஒருவர், முகத்தில் கடுமையான சோர்வு தெரிகிறது. மும்பை மாநகரத்தின் லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளைக் கவனித்தபடி தொலைக்காட்சிகளிலும் தோன்றிக் கோரமான கோவிட்-19 இரண்டாம் அலை எப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்களை தினமும் விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.
கடந்த ஆண்டில் அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டு ஏறத்தாழ இறப்பின் விளிம்பு வரை சென்று வந்தார்; இப்போது அமைதியிழந்தவராக நாம் அறிந்திராத பல உண்மைகளை போட்டு உடைக்கிறார்.
“நம்முடைய சுகாதாரத்துறை முற்றிலுமாக செயல் இழந்து விட்டது; நாம் நமது சொந்த தேசத்தின் மக்களைக் கைகழுவி விட்டோம்; நம்முடைய மருத்துவ உள்கட்டுமான அமைப்பு மிக மோசமான நிலையில் இருக்கும் போது, மருத்துவர்களால் என்ன செய்ய முடியும்? படுக்கைகளும், ஆக்சிஜன் சிலிண்டர்களும் இல்லாத போது மருத்துவர்கள் என்ன செய்ய முடியும்?”
நேற்று (ஏப்ரல் 23), இந்தியாவில் ஒரே நாளில் 3,32,730 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் இதுவரை பதிவான மிகப்பெரிய ஒருநாள் தொற்று இதுதான். நேற்று முன்தினத்தின் அளவை நாமே நேற்று முறியடித்திருக்கிறோம் என்பதுதான் கொடுமை.
பெருந்தொற்றுக் காலம் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை, 1 கோடியே 60 இலட்சம் பேர் நோய்த் தொற்றை அடைந்திருக்கிறார்கள். 1 இலட்சத்து 86 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாதான் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளான நாடக இருக்கிறது. அன்றாட தொற்றின் அளவும், மரணங்களின் அளவும் அமெரிக்காவை விஞ்சும் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் 2,000 இந்தியர்கள் கொரோனாவால் இறந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது குறைத்து மதிப்பிடப்படுகிற ஒன்று என்றும், இந்தியாவின் ஒருநாள் மரணம் 10,000-த்தை தாண்டிக் கொண்டிருப்பதாகப் பெயர் சொல்ல விரும்பாத சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
எனது வாழ்க்கையில் நான்கு மிக நெருக்கமான மனிதர்களை நான் இழந்திருக்கிறேன்; ஒரு தூரத்து உறவினர், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் மற்றும் எனது நெருங்கிய நண்பர்கள் இருவர். அவர்கள் இருவருமே 30 முப்பது வயதுகளில் மத்தியில் இருப்பவர்கள்.
இறப்பு மிக சாதாரணமாக நிகழ்கிறது. வெள்ளிக்கிழமை டெல்லியின் கங்காராம் மருத்துவமனை ஒரு அவசர செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் இன்னும் இரண்டு மணி நேரத்துக்கான ஆக்சிஜன் மட்டுமே எங்களிடம் இருக்கிறது; ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்கனவே 25 பேர் இறந்து விட்டார்கள் என்று அச்சமூட்டும் அறிவிப்பாக அது இருக்கிறது. தங்கள் உறவினர்களுக்காக ஆக்சிஜன் சிலிண்டர்களைத் திருடும் காணொளிக் காட்சிகள் மேலும் அச்சமூட்டுவதாக இருக்கிறது.
BBC-யின் செய்தித் தொகுப்பொன்றில் வரும் காட்சியில் பெண்ணொருவர் இறந்து கொண்டிருக்கும் தனது தம்பியை சுயநினைவுக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறார், “பாலாஜி, நீ ஏன் விழித்துக் கொள்ளக் கூடாது?” என்று தனது தம்பியைத் தட்டி எழுப்ப முயற்சி செய்தபடி அழுகிறார்.
மஹாராஷ்டிராவில் ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் குழாய்களில் தடை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 25 பேர் இறந்து விட்டார்கள். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தவர்கள். பல்வேறு மருத்துவமனைகள் தங்கள் மாநில உயர்நீதிமன்றங்களில் எங்களுக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று முறையீடு செய்திருக்கின்றன. கடவுளின் கரங்கள் எங்கே என்றால் அவை இந்தியாவின் மருத்துவமனைகளில்தான் இப்போது இருக்கிறது.
இத்தகைய ஒரு கொடிய சூழல் நிலவும் போது, இந்தியாவின் மற்றொரு பக்கம் கொரோனா பெருந்தொற்று குறித்த எந்த அச்சமும் இல்லாமல், விழிப்புணர்வும் இல்லாமல் “மோடியின் தட்டு தட்டி, விளக்கேற்றி கோரானவை விரட்டும்” மூடத்தளைக்குள் சிக்குண்டு சீரழிகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் கும்பமேளா என்கிற பெயரில் கங்கை ஆற்றில் மூழ்கித் திளைக்கிறார்கள்.
குறிப்பிட்ட சில நூறு இஸ்லாமிய மனிதர்கள் கடந்த ஆண்டில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு வந்தபோது மோடியின் தேசபக்த ஊடகங்களும், அவரைப் பின்பற்றும் மடையர்களும் அவர்களைக் குற்றவாளிகளாக்கி ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள்.
மார்ச் 11-ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து குளியல் போட்டு வருகிற இந்த பக்தர்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மெல்ல மெல்ல இவர்கள் வீடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மூலமாகப் பரவ இருக்கும் இந்தப் பெருந்தொற்று மிகப்பெரிய சோகங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
மார்ச் மாதத்தில் ஏறத்தாழ கொரோனாவின் இரண்டாம் அலை துவங்கி இருந்தபோது, உத்தரகாண்ட் மாநிலத்தை ஆளும் பாரதீய ஜனதாக கட்சியின் தலைவர்கள் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்திருந்தார்கள்; கும்பமேளா குளியல் இடம் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக அவர்கள் மக்களுக்கு அறிவித்தார்கள்.
இதைவிடக் கொடுமை மார்ச் 20-ஆம் நாள், உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஒருபடி மேலேசென்று “யாராலும் கோவிட்-19ன் பெயரால் எங்களைத் தடுத்து விட முடியாது. நாங்கள் நம்புகிற கடவுள் கிருமிகளிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுவார்” என்று கொக்கரித்தார். ஏப்ரல் மாதத்தின் மத்தியப் பகுதி வரையில் இந்து ராஜ்யத்தின் தலைவரான நரேந்திர மோடி ஒரு துரும்பையும் அசைக்காமல் தேர்தல் நாடகங்களில் மும்முரமாய் இருந்தார்.
பிறகு திடீரென விழித்து பன்னாட்டு சமூகத்துக்கு அஞ்சி “மத விழாக்களில் கலந்துக் கொள்வதை நாம் ஒரு அடையாளமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் பெருந்தொற்றை எதிர்க்க முடியும்” என்று திருவாய் மலர்ந்தார். இப்படி ஒரு பிரதமர் இருக்கும் நாட்டில் கும்பமேளாக்கள் அப்பாவி இந்தியர்களின் உயிரைக் குடிக்கும் ஒரு மரணக் குழியாக இருக்கும் என்பதில் என்ன பெரிய வியப்பு இருக்க முடியும்.
மார்ச் 2020 துவங்கி இந்தியாவின் கோவிட்-19 குறித்து நான் தொடர்ந்து கவனித்தும், பேசியும் வருகிறேன். ஆனால், இந்த இரண்டாம் அலையின் தீவிரம் என்பது மிகப்பெரிய அச்சத்தை உருவாக்குகிறது. சுகாதாரத்துறைப் பணியாளர்கள் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். மும்பை மாநகராட்சி மருத்துவமனைக்கு நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றபோது அங்கே மாடிப்படிகளில் அமர்ந்திருந்த ஒரு செவிலியரைப் பார்த்தேன்.
அவர் தனக்குக் குமட்டிக் கொண்டு வருவதாக என்னிடம் கூறினார். இங்கிருக்கும் கழிவறைகள் மிகுந்த அசுத்தமாக உள்ளது. ஒவ்வொரு 20 கோவிட் நோயாளிகளுக்கும் ஒரு கழிவறைதான் இருக்கிறது. நானே பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இப்போதுதான் குணமடைந்து வருகிறேன். மூன்றுமுறை நான் அளித்த விடுப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. இப்போது நான் ராஜினாமா செய்ய விரும்புகிறேன்.
ஆனால், என் குடும்பம் என்னை நம்பி இருக்கிறது. மருத்துவப் பணியாளர்களை நாங்கள் மலர் கொண்டு ஆராதிக்கிறோம் என்று விமானங்களை வைத்து மோடியின் அரசு வித்தை காட்டியது. ஆனால், மருத்துவப் பணியாளர்களின் உண்மையான நிலை இதுதான், நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறோம்.
இரண்டாம் அலையில் நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மிகுந்த துயரத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள். scroll.in என்கிற ஒரு செய்தி நிறுவனம் அதிர்ச்சி தரக்கூடிய உண்மை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அக்டோபர் 2020 வரை, உலகைக் காக்கும் வல்லமை பொருந்திய இந்துக்களைக் காக்கும் மாமன்னர் மோடி அரசு கண்களை மூடிக் கொண்டு ஏகாந்தத்தில் இருந்தது.
பெருந்தொற்று துவங்கி 8 மாதங்கள் வரை ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த எந்த சுய உணர்வும் இல்லாமல் வாயால் வடை சுட்டுக் கொண்டே இருந்தார்கள் பாரதீய ஜனதாவின் மக்கள் விரோதத் தலைவர்கள். அக்டோபரில்தான், அதுவும் வெறும் 150 மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வேண்டும் என்று 2.7 கோடி டெண்டர் கோரி இருந்தார்கள். ஹரியானா, மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில்தான் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் யாகம் செய்வது, பசு மூத்திரம் குடிப்பது என்று குரங்காட்டிகளின் தலைவராக யோகி ஆதித்யநாத் போன்ற பாரதீய ஜனதாவின் தலைவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மாநிலங்களுக்கு இடையே ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான சண்டை துவங்கி இருக்கிறது; ஹரியானாவின் அமைச்சர் திரு. அனில் விஜ், டெல்லி அரசு ஆக்சிஜன் கொண்டு வருகிற வாகனங்களைக் கடத்துவதாகவும், ஆகவே ஆக்சிஜன் கொண்டு வரும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் Economic Times செய்தித்தாளுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.
உத்திரப் பிரதேசத்தில் இடுகாடுகளைப் பெரிய டின் ஷீட்டுகளைக் கொண்டு மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சாமியார் யோகி ஆதித்யநாத். 12-வது அவதாரமான பிரதமர் மோடியின் குஜராத்தில் ஓய்வின்றி இரவு பகலாக இடுகாடுகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கிறது. உண்மையான மரண எண்ணிக்கைகளை மறைக்கும் வேலைகளில் அமைச்சர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.
குஜராத் உயர்நீதிமன்றம் உண்மையான கோவிட்-19 நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கையைத் தருமாறு அரசைக் கேட்டிருக்கிறது. ஏனைய மாநிலங்களில் நடக்கும் போலியான எண்ணிக்கைக் கணக்குகளும் நெஞ்சைப் பதற வைப்பதாக இருக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் ஒருநாளில் எரியூட்டப்பட்ட பிணங்களின் எண்ணிக்கை 97-ஆக இருக்கிறபோது, அரசு வெறும் 3 என்று கணக்குக் காட்டுகிறது என்று “டைம்ஸ் நௌ” செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
மிகப்பெரிய அவலம் நடந்து கொண்டிருக்கும் போது ஒன்றுமே நிகழாததைப் போல அரசுகள் நாடகமாடுகின்றன. பிரதமர் ஏதுமறியாதவரைப் போல “நாம் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவோம், இது புதிய இந்தியா” என்று தேர்தல் மேடைகளில் புளுகிக் கொண்டு திரிகிறார்.
இந்த வாரத்தில் உலகிலேயே மிக அதிகமான கொரானா தோற்று இந்தியாவில் நிகழ்ந்திருக்கும் சூழலில், ஆளும் இந்துத்துவ அரசானது ட்விட்டரில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறது. அதில் உள்துறை அமைச்சரும், பிரதமரும் கூடிக்குலாவியபடி தேர்தல் ஊர்வலங்களில் கலந்து கொள்கிறார்கள். உள்துறை அமைச்சர் முறைப்படி அவசர காலமாகக் கருதி தலைநகரில் இருந்தபடி பல்வேறு மாநிலங்களின் தேவைகளைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், அவரோ பல லட்சக்கணக்கான தொண்டர்களை ஓரிடத்தில் கூட்டி தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாகி இருக்கிறார். இறுதியாக மீண்டும் பன்னாட்டு அழுத்தங்களுக்கு அஞ்சி நடுங்கி பிரதமர் கடைசி தேர்தல் கூட்டங்களை மட்டும் ரத்து செய்வதாக அறிவித்தார். அடிப்படையான அறிவும் இல்லாத, மக்களைப் பற்றிய எந்த சிந்தனைகளும் இல்லாத ஒரு மூடரின் கீழாக இந்த இக்கட்டான சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறது இந்தியா.
ஆனால், மூட பக்தர்களோ இன்னும் திருந்திய பாடில்லை, “பாகிஸ்தான் தான் கிருமியைப் பரப்பியது; சீனாதான் கிருமியைப் பரப்பியது” என்று கிளப்பியபடி மோடியை புகழ்ந்து நாடு முழுவதும் ராஜஸ்தானியர்களும், குஜராத்திகளும் பாட்டுப் பாடுகிறார்கள். ஆனால், பாகிஸ்தானும், அதன் மக்களும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மருத்துவ நிபுணர்களும், உலக நாடுகளின் மருத்துவ அமைப்புகளும் பல்வேறு எச்சரிக்கைகளைக் கொடுத்துக் கொண்டிருந்த போது, இந்தியாவின் பிரதமர் சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்வதில் மும்முரமாய் இருந்தார். மக்களின் மீது எந்த அக்கறையும் இல்லாத சென் நிலைக்கு அவர் மாறி இருந்தார்.
அவரது சகாக்களும் பக்தர்களும் கோவிட்-19க்கு எதிராக ஒரு சூப்பர் மேனைப் போல அவரை சித்தரித்தார்கள். இந்தியாவில் கொரோனா சோதனைகள் கூட நிறுத்தப்பட்டு விட்டது. உழைக்கும் மக்களின் பணத்தைச் சுரண்டிக் கொழுக்கும் பணக்கார அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தினர் கடந்தமுறை தட்டுகளை அடித்தும் உடைத்தும் மோடியின் வைரசுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
விளக்கேற்றி கொரானாவை ஓட்டினார்கள்; “பாக் கொரோனா பாக்” (ஓடு கொரோனா ஓடு) என்று புத்தி பேதலித்தவர்களைப் போல அவர்கள் வீதிகளில் அலைந்தார்கள். ஆனால், ஏழை கூலித் தொழிலாளிகளோ தங்கள் வேலைகளை இழந்து உணவுக்கும் வழியின்றி வாழ்ந்த நகரங்களில் இருந்து வெளியேறி நடந்தார்கள். அதனால் அவரை தங்களிடம் வேலை பார்த்த அந்த கூலித் தொழிலாளிகள் மீது இந்து ராஜ்யத்தின் நீதிமான்கள் யாருக்கும் கருணைப் பிறக்கவில்லை. 12-வது அவதாரமான கடவுள் மோடிக்கும் கூட இந்த ஏழைத் தொழிலாளிகள் மீது சிறிதளவும் கருணை தோன்றவில்லை.
இவர்கள்தான் கடவுள் மோடியை இந்த தேசத்தின் பிரதமராகத் தேர்தெடுக்க வாக்களித்தவர்கள். இப்போதும் அவர்கள் மோடி தங்களைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறார்கள். அவரது உண்மையான கோர முகத்தை அறியாதவர்களாக!
எல்லாவற்றையும் தாண்டி இந்த தேசத்தின் 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு நான் வேலைக்காரன் என்று சுயவிளம்பரம் செய்து கொண்ட மோடி, இந்த அவசர காலத்தை ஒரு தேர்ந்த குற்றவாளியைப் போல கைகழுவி விட்டார். அவருக்கு அம்பானியையும், அதானியையும் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முன்னேற வைக்கக் கூடிய மிக முக்கியமானப் பணி இருக்கிறது.
இந்தியாவின் விற்பனையை துரிதப்படுத்தும் நிர்மலா சீதாராமன் கையில் மிக நீண்ட பட்டியலோடு பிரதமரின் கண்ணசைவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளும் இல்லை. “Make in India” என்று போலிக்குரல் எழுப்பியபடி அலைந்த இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த கோரமுகம் கொண்ட நரேந்திர மோடி, இந்திய அரசின் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களை ஏன் ஊக்குவிக்கவில்லை?
இந்திய மருத்துவக் கவுன்சிலின் தற்காப்பு நடவடிக்கைகளை ஏன் துரிதப்படுத்தவில்லை என்கிற இந்தக் கேள்விக்கும் பிரதமரும் பதில் சொல்ல மாட்டார், பக்தர்களும் பதில் சொல்ல மாட்டார்கள். மேற்கு வங்கத்தில் பிரதமர் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திலேயே மாநில பாரதீய ஜனதாக கட்சித் தலைவர் “கோவிட் வந்தால் நாம் பசு மூத்திரத்தை குடிக்க வேண்டும்” என்று வெட்கமே இல்லாமல் பேசினார். இதைக் கேட்டுக் கொண்டு மண்டையை மண்டையை ஆட்டினார் பிரதமர். இப்படி ஒரு முட்டாள் பிரதமரை இந்தியா இதுவரை சந்திக்கவே இல்லை.
உலகம் முழுவதும் பல நாடுகளின் தலைவர்கள் கொரோனா காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திப்பதிலும், இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும், ஊடகங்களை சந்தித்து என்ன மாதிரியான மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப் படுகிறது, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று வெளிப்படையாகப் பேசும் போது, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் மோசடியான பிரதமர் இதுவரை ஒருமுறைக் கூட ஊடகங்களை சந்திக்கவில்லை.
உலகெங்கும் நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு நேரடியாகப் பணத்தை நிவாரணமாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது குரூர மனமும், மூடத்தனமும் கொண்ட ஒரு பிரதமர் இதுவரை இந்த தேசத்தின் ஏழை உழைக்கும் மக்களுக்கும் கூட நேரடியான எந்த உதவிகளையும் செய்யவில்லை என்பதுதான் முகத்தில் அறைகிற உண்மை.
இந்தியா முழுவது கொரோனாவில் சாதாரண உழைக்கும் மக்கள் மருத்துவம் கிடைக்காமல் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, இந்து ராஷ்டிர கனவில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மக்கள் நலனை பற்றி அக்கறை அதுக்கு கிடையாது. முதலாளிகள் பணம் சம்பாதிக்க கொரோனாவையும் பயன்படுத்துகிறது. எனவே, கொரோனா பெரும்தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவது என்பது அதன் எண்ணத்தில் துளியும் இருக்க வாய்ப்பு இல்லை.
***
இந்து ராஷ்டிரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையமும் கொரோனா சிகிச்சையும்
கொரோனா வந்து மக்கள் இறப்பதை விட அவர்களுக்கான மருத்துவ வசதிகள், ஆக்சிஜன், படுக்கை வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தராமல் இறப்பதே அதிகமாக இருக்கிறது. இந்த இந்து ராஷ்டிர பாஜக அரசு கொரோனாவை விட மிகவும் கொடிய தொற்று. இதை அழிக்காமல் இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை.
கொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர்!
கொரோனா தடுப்பூசிகள் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டையும் தனியார் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அரசே தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்கலாம். ஆனால், தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்கான மோடி அரசு தடுப்பூசி தயாரிக்கும் பொருப்பை ஏற்கவில்லை.
இதனால், தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை இலாபம் அடிக்கின்றனர். இந்திய அரசுக்கு தரும் தடுப்பூசியின் கட்டணத்தையும் அதிகரித்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டு வெளி சந்தையில் அதிக விலைக்கு மக்கள் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவர்.
கொரோனா தடுப்பு மருந்தை தனியார் கொள்ளையடிக்க திறந்துவிட்டு இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர்
கொரோனா தீவிரமாக பரவிவரும் சூழலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக வடமாநிலங்களில் இறப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே நான் இலவசமாக ஆக்சிஜன் தயாரித்து தருகிறேன் என்று கூறுகிறது வேந்தாந்த நிறுவனம். தூத்துக்குடியின் சுற்றுச் சூழலை அழித்தது ஸ்டெர்லைட் ஆலை. பல்வேறு மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தியது, விவசாயத்தை அழித்தது, நிலத்தடி நீரை நாசமாக்கியது ஸ்டெர்லைட் ஆலை. 13 உயிர்களை போலீசின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலி கொடுத்து கடும் போராட்டத்தின் விளைவாகத்தான் இந்த நாசகார ஸ்டெர்லைட் மூடயிருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.
ஆனால், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தருகிறேன் என்று தன்னை உத்தமர் போல் காட்டிக் கொள்கிறது வேதாந்தா. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கிறது மத்திய அரசு – உச்சநீதிமன்றம். அதற்கு துணைப்போகும் விதமாக கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது தமிழக அரசு. இந்நிலையில் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை எக்காரணத்தை கொண்டும் திறக்க வேண்டாம் என உறுதியாக இருக்கிறார்கள்.
ஆக்சிஜன் உற்பத்தியின் பெயரில் ஸ்டெர்லைட்டை திறக்க ஏற்பாடு
சேத்துப்பட்டு வாழ் உழைக்கும் மக்கள் மத்தியில் தோழர்களின் கம்பீரமான முழக்கங்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
“ஜாரின் கொடூர ஆட்சியையும், ஏகாதிபத்தியத்தையும் ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் இதர வர்க்கங்களை அணித்திரட்டி புரட்சியை நடத்தி உழைக்கும் மக்களுக்கான ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டியவர்தான் தோழர் லெனின்.
நமது நாட்டில் காவி பாசிச கும்பல், கார்ப்பரேட் நலனுக்காக மக்களின் வளங்களை சூரையாடுகிறார்கள். மக்கள் மீது வரிகளையும் போட்டு ஈவிரக்கமின்றி சுரண்டுகிறார்கள். இலவச தரமான கல்வி இல்லை, மருத்துவம் இல்லை, வேலை இல்லை, சுகாதாரம் இல்லை, வீடு இல்லை, மக்கள் பசி – பட்டினியால் சாகிறார்கள். இத்தனை “இல்லை”களையும் தீர்ப்பதற்கான வழியைத்தான் தோழர் லெனின் காட்டுகிறார்.
சொந்த நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டிய கொரோனா தடுப்பு மருந்தினை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து சொந்த நாட்டு மக்களை சாகடிக்கிறது மோடி அரசு.” மோடி அரசின் இந்த அயோக்கியத்தனத்தையும், பாசிச நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தி தோழர்கள் உரையாற்றினார்கள்.
This slideshow requires JavaScript.
இந்நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அமிர்தா தலைமை தாங்கி உரையாற்றினார். ஆசான் லெனின் பிறந்த நாளை மக்கள் அதிகாரம் சேத்துப்பட்டு பகுதி தோழர் வாசு வாழ்த்துரை வழங்கினார். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் “இன்றைய காலக் கட்டத்தில் ஏன் லெனின் தேவை?” என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஆசான் லெனினின் உருவப் படத்திற்கு தோழர்களும் பகுதி மக்களும் மலர்தூவி மறியாதை செய்தனர். சுற்றியிருந்த உழைக்கும் மக்களுக்கும், ஆட்டோ தொழிலாளர்களுக்கும், தோழர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரம், சென்னை.
***
திருவள்ளூர்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக தோழர் லெனின் சிந்தனைகளை உயர்த்திப் பிடிப்போம் என்ற தலைப்பில் ஆலைவாயில் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ச.மகேஷ்குமார் தலைமை வைகித்தார். சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் ப.விஜயக்குமார் சங்கத்தின் கொடியேற்றி ஆசான் லெனின் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார்.
This slideshow requires JavaScript.
சிறப்புரையில், ”கொரோனா பெருந்தொற்று முதல் அனைத்து பெருந்தொற்றுக்கும், பேரழிவிற்கும் காரணம் முதலாளித்துவ பெருந்தொற்று. இந்த முதலாளித்துவ பெருந்தொற்றை வீழ்த்தாமல் மக்களுக்கு விடிவில்லை என்பதையும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் காவி – கார்ப்பரேட் பாசிச அரசையும் தோழர் லெனின் வழியில் வீழ்த்தாமல் விடப்போவதில்லை வாருங்கள் தோழர்களே” என்று பேசினார்.
சங்கத்தின் தொழிலாளர்கள் திரளாக கலந்துக் கொண்டு முழக்கமிட்டனர். இறுதியாக சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர் சேதுராமன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
***
தருமபுரி
ஏப்ரல் 22 : பாட்டாளி வர்க்க தோழர் லெனின் 151-வது பிறந்த நாளில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் சத்தியநாதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
This slideshow requires JavaScript.
மக்கள் அதிகாரம் அமைப்பின் பென்னாகரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா உரையாற்றினார். இறுதியாக மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்
செல் : 6384569228.
***
விருதை
பாசிசத்தை வீழுத்துவோம் சோசலிசத்தை படைப்போம் என்பதை விளக்கி கடலூர் மண்டலம் விருத்தாச்சலம் வட்டாரம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வட்டார செயலாளர் தோழர் அசோக்குமார் தலைமையில் விஜயமாநகரத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
This slideshow requires JavaScript.
பாசிசத்தின் அபாயத்தைப் பற்றி மக்களிடையே விளக்கிப் பேசி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் வட்டார மற்றும் கிளை தோழர்கள் கலந்து கொண்டனர்.
***
உளுத்தூர்பேட்டை
மக்கள் விழாவாக லெனின் பிறந்த நாள்! ; காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க அறைகூவல்! என்ற தலைப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள பாலி என்ற கிராமத்தில் லெனின் பிறந்தநாள் நிகழ்ச்சி மக்கள் அதிகாரம் தோழர்களால் நடத்தப்பட்டது.
This slideshow requires JavaScript.
***
நெல்லை
மக்கள் அதிகாரம் திருநெல்வேலி மாவட்ட தோழர் அன்பு, லெனின் பிறந்த நாளையொட்டி உரை வீடியோவை வெளியிட்டுள்ளார்.
***
மதுரை
மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் தோழர் குருசாமி அவர்கள் ”காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணைவோம்!! தோழர் லெனின் 151 வது பிறந்த நாளில் சூளுரைப்போம்!” என்ற தலைப்பில் உரை வீடியோ வெளியிட்டுள்ளார்.
புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே! தியாகிகள் நம்மை வழிநடத்தட்டும்! தூத்துக்குடி மக்களுக்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும்!
ஸ்டெர்லைட் நச்சுக் காற்றினால் தினம் தினம் செத்து மடிவதை தடுப்பதற்காக, “ஸ்டெர்லைட்டை மூடுவோம்!” என்று போராடிய துத்துக்குடி மக்களைத் காக்கை, குருவிகள் போல தமிழக அரசால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 15 பேர் தியாகிகளாகி நம் முன்னே நியாயம் கேட்டு நிற்கிறார்கள். ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதற்கெதிராக, மத்திய அரசு, அதிகார வர்க்கத்தின் சதித் திட்டங்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
ஆனால், ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக மேலாளரைப் போல உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டுள்ளது, மத்திய அரசு. இது புறவாசல் வழியாக ஆலையைத் திறக்கும் சதித்திட்டமே. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை முறியடிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
“ஸ்டெர்லைட்டை திறக்க மாட்டோம்” என்று சொன்ன எடப்பாடி அரசு, “ஸ்டெர்லைட்டை திறக்கலாமா” எனக் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது. மாநில அரசின் இந்த நடவடிக்கை என்பது, மோடி அரசின் எடுபிடியாகவே எடப்பாடி அரசு செயல்படுகிறது என்பதையும், மீண்டும் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான வேதாந்தாவின் முயற்சிகளுக்கு ஏவலாக, துரோகத்தனமாக எடப்பாடி அரசு செயல்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்தச் சூழலில் இன்று காலை கருத்துக் கேட்புக் கூட்டத்தில், ஸ்டெர்லைட்டை எதிர்க்கும் மக்களை அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டியுள்ளது தமிழக அரசு. வழக்கம் போல ஸ்டெர்லைட்டின் குண்டர் படையைக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக தீர்மானிக்க திட்டமிட்டிருந்தது. இதனை எதிர்த்து மக்கள் கேள்விக் கேட்கத் தொடங்கிய பின்னர், கல்வீச்சு, கலவரங்களில் இறங்கியுள்ளது ஸ்டெர்லைட் ஆதரவு குண்டர் படை. ஸ்டெர்லைட்டின் கூலிப்படை இப்படி கலவரத்தில் ஈடுபட்டதை வேடிக்கைப் பார்த்தது தமிழக அரசின் போலீசு.
தூத்துக்குடி மக்களை கொன்று பலரை முடமாக்கி, சொத்துக்களை சூறையாடி, நூற்றுக்கணக்கானவர்களை சிறையிலடைத்து – சித்தரவதை செய்ததுதான் இந்த எடப்பாடி அரசு. ஸ்டெர்லைட்டை திறக்க மோடி அரசு எடுக்கும் பல்வேறு சதித்தனங்களை மறைமுகமாக ஆதரவு கொடுப்பதுதான் இந்த தமிழக அரசு. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியதில் இருந்து இன்றுவரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு அனுமதி அளிக்காமல் போராளிகளை உளவு பார்த்து மிரட்டி வருகிறது இந்த கேடுகெட்ட தமிழக அரசு.
இந்த தமிழக அரசிடம் போய் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் தயாரியுங்கள் என்று கோரிக்கை வைத்து நச்சுப் பிரச்சாரம் செய்கின்றனர் சிலர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்று ஒருபுறம் பேசிக் கொண்டே, வேதாந்தாவிற்கு ஆதரவாக செயல்படும் எடப்பாடி அரசின் துரோகத்திற்கும் இந்தக் கோரிக்கைக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
கொரோனா நோய்தொற்றால் மக்கள் கொத்துக் கொத்தாக சாகும் இந்த தருணத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதித்தால் என்ன தவறு என்று சிலர் கேட்கிறார்கள். ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட்டைத் திறப்பது ஒன்றுதான் தீர்வா, வேறுவழியே இல்லையா என்ற கேள்வியை நாம் அவர்களிடம் எழுப்ப வேண்டும்.
45 மெட்ரிக்டன் ஆக்சிஜன் வாயுவை தமிழக அரசுக்கே தெரியாமல், ஆந்திராவிற்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. மிகையாக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நாடுகளில் நமது நாடும் ஒன்று. நமது நாட்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த ஆலைகளை எல்லாம் அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து மக்களுக்கு வினியோகம் செய்யலாம்.
மேலும், ஸ்டெர்லைட் என்பது ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனமல்ல, தாமிரம் தயாரிக்கும் நச்சு ஆலை. சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு எல்லாம் எதிராக நடத்தப்படும் ஆலை. இன்றுவரை, அரசின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாத கொலைகார ஆலை. இந்த ஆலையைத் திறந்த பின்னர், ஆக்சிஜன் உற்பத்தி மட்டும்தான் நடக்கும் என்று சொன்னால், தூத்துக்குடியில் இருக்கும் விலங்குகள் கூட நம்பாது.
ஆகையால், கார்ப்பரேட்டுகள் ஆக்சிஜன் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நிலைமைக்கு முடிவு கட்டாமல், ஸ்டெர்லைட்டைத் திறக்கப் போவதாக சொல்வது என்பது பட்டவர்த்தனமான துரோகம்.
ஸ்டெர்லைட்டைத் திறந்துதான் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற நிலைமையும் இல்லை.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் பலர் இறந்து கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு கொரானா முதலாவது அலைக்குப் பின்னர், ஓராண்டில் மத்திய மாநில அரசுகள் கற்றுக்கொண்டது என்ன, நடைமுறைப்படுத்தியது என்ன?
இவற்றையெல்லாம் கேள்விக்குட்படுத்தாமல், ஆக்சிஜன் பற்றாக்குறை, அதனால், வேதாந்தாவிற்கு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கலாம் என்று கூறுவது என்பது வேதாந்தா கம்பெனிக்காக மக்களை பலி கொடுக்க மத்திய மாநில அரசுகள் தயாராக இருப்பதையே உணர்த்துகின்றன.
ஸ்டெர்லைட்டை திறப்பதற்கு பல்வேறு வகைகளில் மேற்கொள்ளப்படும் நச்சுப் பிரச்சாரங்களைப் புறம்தள்ளி கொரோனா வந்து செத்தாலும், ஆக்சிஜன் இல்லாமல் பாதிக்கப்பட்டாலும் சரி, ஸ்டெர்லைட்டின் மூலமாக கிடைக்கும் ஆக்சிஜன் தேவையில்லை என்று தூத்துக்குடி மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆக்சிஜன் பற்றாக்குறையை சாக்காக வைத்துக்கொண்டு மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்கும் முயற்சிகளுக்கு எதிராக தூத்துக்குடியே போர்க்களமாகி இருக்கிறது.
“லட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் !” என்று முழங்கியது மட்டுமின்றி நடைமுறையில் செய்தும் காட்டிய தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 வயது ஸ்னோலின் வாயில் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்படி கொல்லப்பட்டவர்களின் பிணத்தை வைத்துக்கொண்டு மக்களை பணியவைக்கும் வகையில் அரசு பேரம் பேசிய போது கூட, ஸ்டெர்லைட்டை மூடாமல் தியாகிகளின் உடலை வாங்க மாட்டோம் என்று உறுதியாக இருந்தார்கள்; நூற்றுக்கணக்கானோர் போலீசால் அடித்து நொறுக்கப்பட்டனர், பலர் தங்களது சொத்துக்களை இழந்தனர்; இருப்பினும், உறுதியாக நின்று ஸ்டெர்லைட்டை மூடினார்கள் தூத்துக்குடி மக்கள்.
ஆகையால், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவா! ஸ்டெர்லைட்டைத் திறக்கும் சதித்திட்டங்களைக் கைவிடு! என்று வீதியில் இறங்கிப் போராடுவது இன்றைய அவசர அவசியக் கடமையாகும். ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக்கூடாது என்று போராடி வரும் வீரஞ்செறிந்த தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்!
தோழமையுடன், தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
முதல் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் அது! பிளக்கானோவ், காவுத்ஸ்கி உள்ளிட்ட ‘மாபெரும்’ தலைவர்களை உள்ளடக்கிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் பெரும்பான்மையினர் தங்களது “தந்தையர் நாட்டை” போரில் ஆதரிப்பது என முடிவெடுத்தனர். போர் உருவாக்கியிருந்த பேய்த்தனமான தேசிய வெறியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமயம் அது.
முதல் உலகப் போரை, ஏகாதிபத்தியங்கள் காலனிகளை தங்களுக்குள் மறுபங்கீடு செய்ய நடத்தும் ஆக்கிரமிப்புப் போர் என்று கூறி, பரந்துபட்ட மக்களுக்கு போர் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை முன் வைத்து ஒரு உள்நாட்டுப் போராக இதை உருவாக்கி புரட்சி செய்ய வேண்டும் என்றார் லெனின்.
ஏகாதிபத்தியங்களின் காலடியில் மண்டியிட்டு கிட்டத்தட்ட தம்மையே அவர்களிடம் அர்ப்பணித்த இரண்டாம் அகிலத் தலைவர்களை கடுமையாகச் சாடினார் லெனின். இந்தப் போராட்டத்தை நடத்தும்போது, மொத்த அகிலத்திலும் லெனின் சிறுபான்மையானவர் தான்.
ஆனாலும், “கோட்பாட்டு அடிப்படியிலான ஒரு கொள்கை மட்டுமே சரியானதொரு கொள்கையாக இருக்க முடியும்” என கோட்பாட்டை உயர்த்திப் பிடித்து அதற்காக உறுதியாக நின்று போராடினார். இரண்டாம் உலகப் போரை ரசியாவில் உள்நாட்டுப் போராக மாற்றியதில் வெற்றி பெற்றார். அதன் விளைவுதான் ரசிய சோசலிசப் புரட்சி.
நிகழ்வுகளை கூர்நோக்கி, அவற்றின் அடிநாதத்தைப் புரிந்து கொண்டு, பொது நீரோட்டம் உருவாக்கும் மாயைகளை எல்லாம் களைந்துவிட்டு, அரசு – ஆளும் வர்க்கம் ஆகியவற்றின் நகர்வுகளை பாட்டாளி வர்க்கப் பார்வை கொண்டு பரிசீலித்ததன் வெளிப்பாடுதான் புரட்சி குறித்த தோழர் லெனினின் பார்வை.
அரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டை மறந்து காவுத்ஸ்கி, பிளக்கானோவ் போன்ற பிரபலங்கள் தேசிய வெறிக்கு ஆட்பட்ட போது, லெனின் தேசிய வெறியை அம்பலப்படுத்தி புறந்தள்ளினார். அதற்கான அடிப்படை, மார்க்சிய கோட்பாட்டில் அவர் கொண்ட பற்றுறுதியில் வீற்றிருக்கிறது. அதுதான் லெனினை ஒரு சிறந்த சித்தாந்தவாதியாக நிலைநிறுத்தியது.
லெனினின் தீர்க்கமான விசாலமானக் கோட்பாட்டு அறிவு என்பது, அவரிடம் இயல்பிலேயே குடிகொண்டிருந்த தர்க்க ரீதியான கற்றலில் இருந்து கிடைத்ததுதான். லெனின் மார்க்சியத்தை தர்க்க ரீதியில் பயின்றார்.
அப்படிப் பயின்றதால் கிடைக்கப் பெற்ற கோட்பாட்டு உறுதிதான் லெனினை சிறந்த தர்க்க ஆற்றல் கொண்டவராக உருவாக்கியது. லெனினின் விவாதங்கள் குறித்து தோழர் ஸ்டாலின் குறிப்பிடுகையில், “லெனினின் வாதங்கள், எளிமையாகவும், தெளிவாகவும் இருக்கும். அவரது தர்க்க ஆற்றல் கேட்பவர்களை இறுகப் பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. அவரது வாதங்கள் கேட்பவர்களைப் பற்றிப் படர்ந்து அவர்களை சுற்றி இறுக வளைத்துக் கொள்ளும். அவருடன் வாதிப்பவர்களுக்கு இரண்டே வாய்ப்புகள்தான். ஒன்று அவர்கள் லெனினிடம் சரணடந்தாக வேண்டும் அல்லது அவர் முன் அப்பட்டமாக தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்”, என்று கூறுகிறார்.
கோட்பாட்டில் அவருக்கு இருக்கும் மேதாவிலாசமும் பற்றுறுதியும், வெற்றி பெறும் போது மமதை கொள்வதில் இருந்தும், தோல்வியடையும் போது புலம்பி அழுவதில் இருந்தும் அவரைக் காத்தது.
விவாதங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போவது பெரும்பான்மை ஆதரவு பெறுவதுதான். சரியான கோட்பாடு, எல்லா சமயங்களிலும் பெரும்பான்மையின் ஆதரவைப் பெற்றுவிடுவதில்லை. பல சமயங்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற முடியாமல் போகலாம்.
நமது கோட்பாடு சரியாக இருக்கையில், அது பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற முடியாமல் போகும்போது, துவள்வதற்கு அங்கு எதுவும் இல்லை. மாறாக, சரியான கோட்பாட்டை பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளும் வகையில் நின்று போராடுவதற்கு உத்வேகத்தைத் தான் அந்தத் தோல்வி நமக்குத் தர வேண்டும் என்பார் லெனின்.
தோல்வியைக் கண்டு அஞ்சி புலம்புபவர்களிடம், “தோழர்களே, புலம்பாதீர்கள். நாம் வெற்றி பெற்றே தீருவோம். ஏனெனில், நம்முடைய நிலைப்பாடு சரியானது” என்று கடுமையாகச் சொல்வார் லெனின்.
அதே போல வெற்றியின் மமதையில் பேசும் தோழர்களிடமும் கடுமை காட்டியிருக்கிறார் லெனின்.
“வெற்றி மயக்கம் கொண்டு மமதை அடையக் கூடாது என்பது முதல் விசயம். வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்பது இரண்டாவது விசயம். எதிரி தோற்கடிக்கப்பட்டுள்ளானே தவிர, எந்தவிதத்திலும் ஒழிந்துவிடவில்லை; எதிரிக்கு மரண அடி கொடுக்க வேண்டும் என்பது மூன்றாவது விசயம்” என்று குறிப்பிடுகிறார் லெனின்.
கோட்பாட்டில் உறுதியாக நிற்பதும், வெற்றி தோல்விகளினூடாக சஞ்சலமின்றி பயணிப்பதும் மட்டும் புரட்சியை நோக்கி இட்டுச் சென்றுவிடுமா? வாய்ப்பே இல்லை.
லெனின் மக்களின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தார். அவர் ஒருபோதும் மக்களின் புரட்சிகர எழுச்சியையும், கிளர்ச்சியையும் அவை எவ்வளவு பெரிய தோல்விகளைத் தந்திருந்தாலும் சாடியதில்லை.
“ … மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், அவர்களது செயல்பாடுகளைப் புரிந்தறிய முயலுங்கள், மக்களது போராட்டங்களின் நடைமுறை அனுபவத்தை கவனமாக கற்றாய்வு செய்யுங்கள் என்பதே லெனினுடைய இடையறாத ஆணையாக இருந்தது.
மக்கள் திரளினரின் படைப்பாற்றலில் நம்பிக்கை – தன்னெழுச்சியான போராட்டப் போக்கைப் புரிந்து கொள்ளவும், அதன் இயக்கத்தை பாட்டாளி வரக்கப் புரட்சிப் பாதையில் செலுத்தவும் லெனினுக்கு உதவிய அவரது செயற்பாடுகளின் சிறப்பம்சம் இதுவே.” என்று லெனின் மக்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை குறித்து குறிப்பிடுகிறார் தோழர் ஸ்டாலின்.
ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தை எதிர்த்து நடத்தப்படவிருக்கும் புரட்சியைத் துவக்குவது என்பது சாதாரண விசயமல்ல. சிறிய தவறும் கூட மிகப்பெரிய பேரழிவையும் பின்னடைவையும் ஏற்படுத்தும் அபாயம் மிக்கது. மேற்கூறிய தோழர் லெனினின் பண்புகள் தான் அவரை புரட்சியின் தலைவராக உயர்த்தியது. ஒரு புரட்சியைச் சாதிக்கச் செய்தது.
லெனின் ரசியாவில் சாதித்த புரட்சியை, இந்தியாவில் சாதிக்க அணிதிரள்வோம் !
வினவு
உதவிய நூல் லெனின் : ஒரு மலைக் கழுகு – தோழர் ஸ்டாலின் உரை
மாபெரும் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களது 151-வது பிறந்தநாளில் (22, ஏப்ரல் 2021) தொழிலாளி வர்க்கத்தின் இணையக் குரலாக “புதிய தொழிலாளி” என்கிற இணையப் பக்கத்தை அறிமுகம் செய்து, துவக்கி வைப்பதில் உற்சாகம் அடைகிறோம்.
செப்.2014 முதல் 2019 வரை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தனிச் சுற்று இதழாக வெளிவந்த “புதிய தொழிலாளி” மாத இதழ் பல்வேறு காரணங்களால் நின்றுபோனது. பிப்-மார்ச் 2020-ல் கலைப்புவாதிகளால் அமைப்பு சீர்குலைக்கபட்ட காரணத்தினாலும், கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு இன்று வரை அமலில் இருக்கும் பலகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளாலும் இதழை அச்சிட்டு, தொழிலாளர்களிடம் கொண்டு செல்வது சாத்தியம் இல்லாமல்போனது.
காவி – கார்ப்பரேட் பாசிசம் தொழிலாளி வர்க்கத்தையும், ஏனைய உழைக்கும் மக்களையும் கார்ப்பரேட் இலாபவெறிக்குப் பலியிட்டு வருகின்ற சூழலில் “புதிய தொழிலாளி” தனது போர்க்குரலை மீண்டும் ஒலிக்கத் துவங்கியுள்ளது.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சீர்குலைவுவாதிகளிடமிருந்து பாதுகாக்க மாநில அளவில் ஒருங்கிணைப்புக் குழு கட்டப்பட்டிருப்பதை 16.4.2021 தேதியிட்ட பத்திரிகை செய்திமூலமாக அறிவித்திருந்தோம். பு.ஜ.தொ.மு-வின் பொதுச் செயலாளராக இருந்த சுப.தங்கராசுவின் பாட்டாளி வர்க்க விரோதப் போக்குகளால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு செப்.2020-ல் நீக்கப்பட்டார். அவரை கண்காணிக்கத் தவறியதற்காக அன்றைய ஒட்டுமொத்த மாநிலக் குழுவும் நீக்கப்பட்டு, அடுத்து வருகின்ற 4 ஆண்டுகளுக்கு பு.ஜ.தொ.மு-வின் எந்த மட்டத்திலும் பொறுப்புக்கு வர தடை விதிக்கப்பட்டது.
இந்த பின்னணியில், புதிய மாநில நிர்வாகக் குழுவை தேர்வு செய்யும் மாநில மாநாட்டை நடத்தப் பொறுபளிக்கப்பட்ட 3 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவில் இருந்த 2 பேர், திட்டமிட்ட வகையில் மாநிலக் குழுவை தமது தரப்பினர் கைப்பற்றும் வகையில் பல்வேறு தகிடுதத்தங்களை செய்தனர். தேர்தல் குழுவின் பெரும்பான்மை என்கிற பெயரில் எந்த மரபு மீறலையும் செய்யத் துணிந்தனர்.
இனியும் இதை அனுமதிக்கக் கூடாது என்று களமிறங்கிய மாவட்டக் குழுக்கள், முன்னணியாளர்கள் ஆகியோரைக் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டது. புரட்சிகர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு-வை சீர்குலைவுவாதிகளிடமிருந்து பாதுகாத்து, குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய மாநிலத் தலைமை ஒன்றை உருவாக்குவதே ஒருங்கிணைப்புக்குழுவின் முதன்மையான பணி. அதனை மேற்கொள்ளவும், தொழிலாளி வர்க்கத்தை வர்க்க உணர்வூட்டி அமைப்பாக்கவும் இந்த இணையக் குரல் முன்னணி பாத்திரமாற்றும் என நம்புகிறோம்.
புரட்சிகர வாழ்த்துக்களுடன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
தமிழ்நாடு.
செல்பேசி : 80563 86294
இணைய தளம் : புதிய தொழிலாளி
இந்தியாவில் கொரோனா தீவிரம் மிகவும் அதிகமாக உள்ளது. உத்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பிணங்களை எரிக்ககூட நீண்ட வரிசை நிற்கிறது.
தமிழகத்தில் பகலில் திறந்துவிட்டு இரவில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் கும்பமேளாவில் கூட்டம் கூட அனுமதித்துக் கொண்டும், தேர்தல் கூட்டங்களை அனுமதித்துக் கொண்டும் மற்றொரு பக்கத்தில் சமூக இடைவெளி பற்றியும் ஊரடங்கு பற்றியும் வகுப்பெடுக்கிறார் மோடி.
மோடி கும்பலின் இந்த கொரோனா ஊரடங்கிற்கு பின்னால் இருக்கும் நோக்கங்களை அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்
அண்மையில் ஒரு போலீஸ் அதிகாரி பட்டப் பகலில் எல்லோரும் பார்த்திருக்க நடுத்தெருவில் வைத்து ஒருவர் மீது ஏறி மிதித்து தாக்குதல் நடத்தினார். அதற்காக, இலங்கை போலீசாரை மிகவும் வன்மையாகக் கண்டித்து பல எதிர்ப்புகள் கிளம்பிக் கொண்டிருக்கும் அதே வேளையில், அந்த சூடு ஆறும் முன்பே கொழும்பு, மருதானை போலீசாரால் மற்றுமொருவர் குரூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற சுகாதார சேவையின் ஆர்ப்பாட்ட நிகழ்வை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சுயாதீன ஊடகவியலாளரான மலிக அபேகோன் இவ்வாறு போலீசாரால் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தொழிற்சங்க சேவையாளர்களும், சட்டத்தரணியும் (வழக்கறிஞர்) மலிகவை சந்திக்க மருதானை போலீசுக்கு சென்ற போதிலும் அவர்களுக்கு அவரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.
பின்னர் சட்டத்தரணியால் எழுத்து மூலமான விண்ணப்பம் விடுக்கப்பட்டு வெகு நேரத்திற்குப் பின்னரே அவரைச் சந்திக்க முடிந்திருக்கிறது. அவரைக் கொண்டு செல்லும் போது ஜீப்பினுள் வைத்தும், காவலரணில் வைத்தும், போலீஸ் நிலைய அதிபரின் அறைக்குள் வைத்தும் தொடர்ச்சியாக அவர் மீது பல தடவைகள் போலீசால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் (Frontline Socialist Party) செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்திருக்கிறார்.
போலீஸ் தடுத்து வைத்திருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மலிக அபேகோனை கடந்த எட்டாம் தேதி மாளிகாகந்த நீதிமன்றத்தில் விசாரணைக்காக கொண்டு வந்த போலீஸ், அங்கு போலி தகவல்களை உள்ளடக்கிய மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அவ்வேளையிலும் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்த மலிக நீதிமன்ற வளாகத்தில் விழுந்து விட்டார். அதன் பிறகே அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணை மீண்டும் 12-ஆம் தேதிக்கு ஒத்திப் போடப்பட்டது.
“ராஜபக்சே அரசாங்கமானது எப்போதும் கேமராவுக்கும், பேனாவிற்கும், இணையத்துக்கும் பயப்படும் அரசாங்கம். காரணம், 2015-ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த அனைத்து விடயங்களும் இப்போதும் எமக்கு நினைவிருக்கிறது. அமைதியான ஆர்ப்பாட்டமொன்றைத் தடுத்து நிறுத்த நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொள்வது அக்காலத்தில் அதற்கு மிகவும் இலகுவானக் காரியமாக இருந்தது.
அவ்வாறே அமைதியான ஆர்ப்பாட்ட நிகழ்வுகளின் போது, அது செய்து வந்த காரியமான குண்டர்களை அனுப்பி மிரட்டுவதை எம்மால் இன்னும் மறந்துவிட முடியாது. குறிப்பாக, சிவில் போலீஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி தம்மை எதிர்ப்பவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது ராஜபக்சே ஆட்சியில் மிகவும் பரவலாக நடைபெற்றது. அது வடக்கு – கிழக்கிலும் கூட நடைபெற்றது.
மலிக அபேகோன்
எமக்கு இந்த நிகழ்வை வைத்துப் பார்க்கும்போது, ஊடகவியலாளர் ஒருவர் கையில் கேமராவை வைத்திருப்பதுவும் கூட அவரை மிகவும் பயங்கரமான நிலைமைக்கு இட்டுச் செல்லும் நிலைமை மீண்டும் உருவாகியிருப்பதை, இது தெளிவுபடுத்துகிறது. இங்கு போலீசை மாத்திரம் குற்றம் சொல்ல முடியாது. இது, போலீசைப் போலவே இந்த ஆட்சியின் செயற்பாடுகளிலும் உள்ள வன்முறைகளையே எடுத்துக் காட்டுகிறது.
ஆட்சி முறையானது ஜனநாயக எதிர்ப்புடன் செயற்படுமானால் இவ்வாறு மோசமான விடயங்கள் நடைபெறுவதை தடுக்க முடியாது. ஆட்சியாளர்கள் ‘சட்டம் என்றால் தாம்தான்’ என்று கூறியவாறு மார்தட்டிக் கொண்டு செயற்படுகையில் இந்த மோசமான நிலைமை மேலும் மேலும் அதல பாதாளத்துக்குச் சென்றுவிடும்.
இது எமக்குத் தெளிவாகத் தென்படும் இடம் போலீஸ் நிலையம். ஆகவே இந்த போலீஸ் வன்முறை ஆனது, புரையோடிப் போயிருக்கும் புண்ணின் மேலே தென்படும் நாற்றமடிக்கும் சீழ் மாத்திரம்தான்” என்று ஒரு ஊடக செயற்பாட்டாளர் இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டிருக்கிறார்.
எவ்வாறாயினும், இலங்கை போலீஸ் எனும் போது உடனே நினைவுக்கு வருவது சித்திரவதைதான். இலங்கை போலீஸ் என்றால் சித்திரவதை என்று குறிப்பிட்டால் அது கூட பிழையில்லை. இதை கடந்த பல வருடங்களாகத் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம். குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை சித்திரவதைக்கு உட்படுத்தாமல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ள போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாத நிலைமைதான் இப்போது வரைக்கும் இலங்கை போலீசிடம் காணப்படுகிறது.
அடுத்ததாக, எந்தவொரு பயங்கரமான குற்றச் செயலையும் பகிரங்கமாக செய்பவர் ஒருவர் அரசியலுடனும், அரசியல்வாதிகளுடனும் சம்பந்தப் பட்டிருப்பாரேயானால் அவர் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நிலைமை இலங்கைக்குள் காணப்படுகிறது. அவ்வாறே குறிப்பாக, பாதுகாப்புப் பிரிவு, சிறைச்சாலை, போலீஸ் நிலையம் போன்ற இடங்களில் நிகழ்ந்த பெரும்பாலான குற்றச் செயல்கள் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
இவ்வாறான நிலைமையில் ‘சட்டத்தைக் காப்பதற்காக இருக்கிறோம்’ என்று தம்மைத்தாமே கூறிக் கொள்ளும் போலீசாரால், இவ்வாறு ஆட்கள் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுதல் என்பது ‘குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்கப்படாதிருக்கும் கலாச்சாரம்’ எனும் மோசமான நிலைமையின் நீட்சியாகும்.
போலீசை மாத்திரம் சுட்டிக் காட்டி அவர்கள் மீது குற்றம் சாட்டி நிறுத்திக் கொள்வது அல்லாமல், நாட்டை ஆள்பவர்களால் மேற்கொள்ளப்படும் ‘ஜனநாயக எதிர்ப்பு’ செயற்பாட்டுக்கு எதிராக ஒன்றிணைந்த மக்களால், ஒருமித்தத் தளத்தில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான செயற்பாடுகளால் மாத்திரமே இந்த மோசமான நிலைமையை மாற்ற முடியும்.
முதலாளித்துவத்தின் அழுகல் நிலைதான் ஏகாதிபத்தியம் என்றார் லெனின். ஏகாதிபத்தியத்தின் புல்லுருவித் தன்மையையும், நிதியாதிக்கக் கும்பல்களின் ஆதிக்கத்தைப் பற்றியும் விரிவாக விளக்கியிருக்கிறார் லெனின். நிதியாதிக்கக் கும்பல் தனது கட்டற்ற சூறையாடலால் உலகளாவிய பொருளாதார – கட்டமைப்பு நெருக்கடியை உருவாக்கியது. நெருக்கடி எனும் புதை சேற்றில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ள நிதியாதிக்கக் கும்பல் மேற்கொள்ளும் ஆகப் பிற்போக்கான அவதாரமே பாசிசம் !! பாசிசக் கும்பலை வெற்றி கொள்ள தோழர் லெனினின் பிறந்தநாளில் உறுதியேற்போம் !!
ஆடை என்பதை நாம் நம் கலாச்சாரத்துடன் இணைத்துப் பார்ப்பது போல் ஆடையை ஒரு நபரின் நடத்தையுடன் பார்ப்பது தவறு. ஆடை மனித பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். தேவை மற்றும் சூழ்நிலைகேற்ப மாறிவரும் தன்மையுடையது. சமீபத்தில் உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வர் திரட் சிங் ராவத் பெண்கள் அணியும் உடை குறித்துப் பேசி சர்ச்சையில் சிக்கினார்.
பெண்கள் ஜீன்ஸ் அணிவது அடுத்த தலைமுறைக்கு மிக மோசமான வழிகாட்டுதல் என்ற அவரின் ட்வீட் சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாக ஆன உடனே, “நான் ஜீன்ஸ் அணிவது பற்றி பேசவில்லை. நான் கிழிந்த ஜீன்ஸ் பயன்படுத்தும் பெண்களை தான் குற்றம் சாட்டுகிறேன்” என்றார்.
இதே போன்று ராஜஸ்தானில் பல இடங்களில் பெண்கள் ஜீன்ஸ் போடுவது கலாச்சார கேடு என்பது போன்று ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சமூக நிலையில் பிற்படுத்தப்பட்ட ஆண்கள் ஜீன்ஸ், ‘கூலிங் கிளாஸ்’ போட்டுக் கொண்டு இடைநிலை சாதியில் உள்ள பெண்களைக் கவர்ந்து நாடகக் காதல் செய்கின்றனர் என்று சாதிய தலைவர் ஒருவர் (இராமதாஸ்) பேசியிருக்கிறார். இது போன்று நிறைய தருணங்களில் ஆடையுடன் பெண்களின் நடத்தை ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. இது ஒரு வகையான ஆண் ஆதிக்க மனவோட்டத்தின் வெளிப்பாடு.
சமூகம் நாகரிக வளர்ச்சியை நோக்கி செல்லும்போதே சில நடத்தை விதிமுறைகளின் மூலம் பெண்கள் உற்பத்தியிலிருந்து விலக்கப்பட்டு, வரலாறு நெடுகிலும் ஆண்களால் ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர். பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்தந்தப் பொறுப்புகளை சுமக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளது.
இது எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும். இதற்கு அந்த சமூகத்தின் சுழலும் சந்தர்ப்பமும் பொருத்து பெண்களின் சக்தி மற்றும் கட்டுப்பாடு தனிப்பட்ட தேர்வாககிறது. சுய வெளிப்பாடு மற்றும் அடையாளத்தை நிலைநாட்டுவதன் பின்னணியில் ஆடையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்படி பல சர்ச்சையிலிருந்தே ஜீன்ஸின் வரலாறு விரிகிறது.
ஜீன்ஸ் பற்றிய வரலாறு இன்றைய இளைஞர்களிடமிருந்து துவங்கவில்லை. இதனைக் கடந்து போராளிகள், பழமைவாதிகள், நவீனவாதிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என பலர் மத்தியிலும் பயணித்த நீண்ட பயணம் அது. உலகளாவிய ஜீன்ஸின் இந்த பயணம் மிகவும் நீண்டது.
இதில் நுகர்வோர், தொழிலாளர்கள், பணம் படைத்த முதலாளிகள் என அனைவரும் அடங்குவர். உற்பத்தி மேலை நாடுகளிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடிபெயர்ந்துள்ளதற்குக் காரணமாக ஒருபுறம் இந்தியாவின் மலிவான உழைப்புச் சந்தையும், தண்ணீர் வளமும் இருக்கையில், மறுபுறத்தில் ஜீன்ஸ் தேவையும், உற்பத்தியும் அதிகரித்துள்ளதற்கு மற்றொரு காரணம் சமகால நுகர்வோரின் தேவையே.
ஜீன்லின் வரலாறு
இதன் வரலாற்றை சற்றே புரட்டினோமெனில் அது, மத்திய காலகட்டங்களில் வடக்கு இத்தாலியில் உருவான ஐரோப்பிய பருத்தி ஆடை நிறுவனத்தில் இருந்து துவங்குகிறது. பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பின் பருத்தி ஆடை லுகுரியா பகுதியில் மிகவும் பிரபலமானது. அதன் கனமான மற்றும் கரடுமுரடான ஆடைகளுக்கு இந்தப் பகுதி பெயர்போனது.
தரம் குறைவான பருத்தி இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆடைகள் டெனிம்கள் எனப்பட்டன. பின் கைத்தறி மற்றும் பருத்தியிலிருந்து நெய்யப்பட்ட குறுக்காக (Diagonal pattern) வடிவமைக்கப்பட்ட ஆடை ‘ஜீன்ஸ்’ என்று அழைக்கப்பட்டது. ஜெனோவா துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டதே இந்த ஆடைக்கு “ஜீன்ஸ்” என்ற பெயர் வர காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இது நவீன டெனிமிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கலாம். ஆனால், அது முற்றிலும் பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட குறுக்கு விட்ட (diagonal) வடிவத்திலான இழைகளால் பிணைக்கப்பட்டது. ஜீன்ஸ் என்ற சொல் ஜெனோவா துறைமுகத்தில் இருந்து வந்ததைப் போல, டெனிம் என்ற சொல் ‘செர்ஜ் டி நைம்ஸ்’ என்பதிலிருந்து வந்தது. இது பிரான்சின் நைம்ஸில் தயாரிக்கப்பட்ட மற்றொரு குறுக்காக வடிவமைக்கப்பட்ட ஆடை என்று பொருள்
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜீன்ஸ் அதிகளவில் பருத்தியில் இருந்து தயாரிக்கப்பட்டது. பின் தொழில்துறைப் புரட்சியின் போது, லங்காஷயரின் ஆலைகள் ஜீன்ஸ் துணியின் மறுபிரவேசத்தையும் மற்றொரு வகையையும் அறிமுகப்படுத்தியது. அவற்றில் பெரும்பாலானவை இண்டிகோ நீலத்தில் சாயம் பூசப்பட்டன.
தொழில்துறைப் புரட்சி, இந்தியாவுடன் ஆழமானத் தொடர்பைக் கொண்டிருந்தது. சாயமிடுதல், பருத்தி ஆடைத் துறை ஆகியவற்றில் ஆழமான அறிவு, இந்திய கைவினைஞர்களிடம் இருந்து பெறப்பட்டது.
எல்லோராலும் விரும்பும் இந்த ஆடை, கடினமான வேலை செய்பவர்கள் உடுத்தும் ஆடையாக இருந்து வந்துள்ளது. இது அனைவருக்குமான உடையாக அமெரிக்காவில் தான் உருவெடுத்தது. 1873-ம் ஆண்டு தொழிலதிபரான டேவிஸ் மற்றும் லெவிஸ் இணைந்து ஆடையில் சில மாறுதல்களை சேர்ந்து தொழிலாளர் வர்க்கம் பயன்படுத்தக் கூடிய முழுமையான ஆடையாக அறிமுகப் படுத்தினர். டேவிஸ் மற்றும் லெவிஸ் இணைந்து அதற்கானக் காப்புரிமைகளைப் பெற்றனர். பின் இருவரும் இணைந்து சான் ப்ரன்சிஸ்கோவில் உற்பத்தி மற்றும் விற்பனைக் கடைகளை துவங்கினர்.
அடுத்த பத்தாண்டுகளில் ஜீன்ஸை, ‘நாகரிக’ மற்றும் உயர்குடி மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். பன்னிரெண்டாம் நுற்றாண்டுக்கு பின்னால் டெனிம் ஒரு எதிர்மறையான பயணத்தைத் தொடக்கியது. அமெரிக்க இளைஞர்களுக்குக் கவர்ச்சி, கிளர்ச்சியின் காற்று, புரட்சி ஆகியவற்றுக்கான குறிப்பை உடையில் அளித்தது. டெனிம் கலாச்சாரம் விரைவில் உலக அளவில் பெருவரவேற்பு பெற்றது. மேற்கத்தியக் கலாச்சாரத்தால் இந்தியாவிலும் இந்த அலை இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.
தொழிலாளர்கள் முதல் நவ நாகரீகம் வரை
தொழிலார்கள் பயன்படுத்தும் நீல நிற ஜீன்ஸ் காலப்போக்கில் நவ நாகரிக ஆடையாக மாறியது. ஆனாலும், அதன் தொடக்கம் என்னவோ அமெரிக்க தொழிலாளர்களிடம் இருந்துதான். தற்போது, ஜீன்ஸ் நாம் தினசரி பயன்பாட்டில் தவிர்க்க முடியாத ஆடையை மாறியுள்ளது. இதற்குச் சான்றாக, சமீபத்தில் கொரோனா காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் நடைப் பயணமாக சென்ற பலரும் ஜீன்ஸ் உடுத்தி இருந்தனர் என்கின்றது ஒரு ஆய்வு.
எப்படியோ ஜீன்ஸ் எல்லோருக்குமான ஆடையாக மாறியது. இப்படி உலகளாவிய சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது ஜீன்ஸ். கொரோனா பெரும்தொற்றுக்கு முன்னர் உலகிலேயே அதிகமான உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுவது இந்தியாவில்தான். இங்கு உற்பத்தி பெருகுவதற்கு, மலிவான விலையில் கிடைக்கும் பருத்தி, குறைவான தொழிலாளர் கூலி, நீர்வளம் என அனைத்தும் காரணமாகும்.
ஜீன்ஸ் இன்று பெருநகர சாலைகளை ஆக்கிரமிப்பதற்குப் பின்னால், தொழிலாளர் சுரண்டல், குறைவான ஊதியம் ஆகியவை இருப்பது பெரும்பாலானோரின் கண்களுக்குப் புலப்படுவது இல்லை. அதையெல்லாம் கடந்த ஜீன்ஸ் உற்பத்தியில் உண்டாகும் கழிவுகள் சுற்றுச் சுழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்க ஆகும் செலவை விட அதிலிருந்து வெளிபடும் கழிவுகள்தான் நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன.
இந்தியாவில் அதன் தாக்கம்
வேதிப் பொருட்கள் மற்றும் அதிக நீர் எடுக்கும் தன்மை கொண்ட பருத்தி சாகுபடி ஆகியவை டெனிம் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் பருத்தி சாகுபடி மிகப்பெரிய பகுதியில் நடக்கிறது. ஆனால், இங்கு உற்பத்தியாகும் பருத்தி வேறு எங்கும் இருப்பதை விட, கிலோ இழைக்கு அதிக தண்ணீரை எடுத்துக் கொள்ளும் தன்மையுடன் இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
டெனிம் உற்பத்தியின் போது, செயற்கை இண்டிகோ மற்றும் சல்பர் சாயங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் உண்டாகும் நச்சுக் கழிவுகள் நீர் நிலைகளில் வெளியேற்றப் படுகின்றன. டெனிம் உற்பத்தியும் மற்ற பருத்தி துணிகளை விட அதிக சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகிறது.
ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 11,000 லிட்டர் தண்ணீர் செலவு செய்யபடுகிறது. இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் தினசரி குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது. இது ஒரு பருத்தி சட்டை தயாரிக்கப் பயன்படும் நீரை போன்று நான்கு மடங்கு அதிகம். மேலும், சுற்றுச்சூழல் விதிமுறைகளை அமல்படுத்தாத நிலையில், உற்பத்தி மையங்களுக்கு அருகில் வாழும் மக்கள் உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசுபாடுகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
உற்பத்திச் சங்கிலியுடன் இணைந்த, ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலாளர்கள், குறைந்த ஊதியம், நீண்ட வேலை நேரம், சுரண்டல் மற்றும் கடுமையான நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இப்படியான இன்னல்களுக்கு இடையே உற்பத்தி செய்யப்படும் ஜீன்ஸ்-ஐ ஆயத்த ஆடை நிறுவனங்களில் தையல் செய்யும் ஆடைத் தொழிலாளி பெரும்பாலும் ஒரு ஏழை இளம் பெண்ணாகவே இருக்கும்.
நாம் தேர்ந்தெடுக்கும் ஆடை அணிவதற்கான நமது சுதந்திரத்தை வலியுறுத்தும், இவ்வேளையில் நம்முடைய ஆடைகளைத் தயாரிப்பவர்களையும் நினைவில் கொள்வோம். ஆடை அவரவர் விருப்பம்.. அவரவர் சுதந்திரம் ! அது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அதன் உற்பத்தியின் பின்னிருக்கும் மக்களின் வாழ்வும் இந்த உலகின் சுற்றுச் சூழலும் முக்கியம் !
சிந்துஜா மூலக் கட்டுரை: நீதா தேஷ்பாண்டே
நன்றி : TheWire
இந்தியாவின் மாடல் மாநிலமான குஜராத் மாநிலத்தின் மக்கள் தங்களது அரசாங்கம் 25,000 ரெம்டெசிவர் வைரஸ் தடுப்பு மருந்து குப்பிகளை உ.பி-க்கு அனுப்பியது குறித்த செய்தியை கடந்த வியாழன் (15.04-2021) அன்று செய்தித்தாளில் படித்ததும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
குஜராத் மாநிலத்தில் கொரோனா நெருக்கடி அந்த அரசாங்கத்தால் மிக மோசமான முறையில் குறைத்துக் காட்டப்படுவதை, கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர் ரெம்டெசிவிர் மருந்தைப் பெற 8 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் சுட்டிக் காட்டுகிறது.
உதாரணமாக, வியாழன் (15-04-2021) அன்று இரவு, குஜராத்தில் 8,112 பேருக்கு கொரோனா தொற்றுக் கண்டறியப்பட்டது. இது வரையிலான தினசரி அளவில் இது உச்சபட்சமாக இருந்தது. இதன் மூலம் குஜராத்தின் நடப்பு கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 44,298 ஆனது. அந்த 24 மணி நேரத்தில் 81 பேர் கொரோனாவால் இறந்ததாக மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், அதே காலகட்டத்தில் குஜராத்தின் அண்டை மாநிலமான மராட்டியத்தில் புதிதாக 61,695 பேருக்கு கொரோனா தொற்று மற்றும் 349 கொரோனா மரணங்கள் நிகழ்ந்தது.
புதன் (14-04-2021) அன்று அஹமதாபாத் மருத்துவக் கழகம், மருத்துவமனைகளைத் தவிர மற்ற துறைகளுக்கு ஆக்சிஜன் உருளைகளைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு ஒரு கடிதம் எழுதியது. இந்த கடிதமானது கொரோனா நோயாளிகளுக்கு முறையாக மருத்துவம் பார்க்க மருந்துகள், ஊசிகள், ஆக்சிஜன் உருளைகள் போன்றவை கிடைக்காமல் மருத்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
ஆனால், குஜராத் அரசு தொடந்து இந்த நெருக்கடியை குறைத்துக் காட்டுகிறது. குஜராத் மக்கள், மருத்துவமனைகளில் போதுமானப் படுக்கைகள் இல்லாமல், போதிய ஆம்புலன்ஸ் இல்லாமல், எரியூட்டும் இடங்கள் நிரம்பி வழியும் நிலைமை இருக்கையில், இதனை புறக்கணித்துவிட்டு, மருத்துவமனைப் படுக்கைகள் முறையாகக் கிடைக்கின்றன என்ற தனது கூற்றுக்கு ஆதரவளிக்கும் விதமாக விவரங்களை மட்டும் குஜராத அரசு கொடுக்கிறது.
அனேக மக்களுக்கு, இந்த பெருந்தொற்றின் இரண்டாம் அலைக்கு குஜராத் அரசு கொடுக்கும் முக்கியத்துவம் குழப்பமானதாகவே தெரிகிறது. ஒரு புறம், முகக் கவச விதிமுறையை மீறிதாக ரூ.1000 அபராதம் விதிக்கிறது. மறுபுறம், மாநிலத்தின் ஆளும் கட்சியான பா.ஜ.க எதிர் வரும் மோர்வா ஹடஃப் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்காக கடந்த புதன்கிழமை நடந்தப் பிரமாண்டமான இரு சக்கர வாகன பேரணியில் யாரும் முகக் கவசம் அணியவில்லை.
“எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ, அங்கெல்லாம் பி.ஜே.பி-க்கு கொரோனா கிடையாது’’ என்று தி வயர் இணைய தளத்திடம் கூறுகிறார் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாரத் சோலங்கி.
குற்றமும்கொரோனாவைரசும் :
கடந்த 96 மணி நேரத்தில் (ஏப்ரல் 16-க்கு முன்) பெருந்தொற்றை மேற்கண்டவாறு கையாளுவதைச் சுற்றி நிகழும் இந்தக் குழப்பமானநிலை, மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுத்துள்ளது. இதுவரை குறைந்தபட்சம் 4 புகார்கள் இது தொடர்பாக போலீசுக்கு வந்துள்ளன.
அகமதாபாத்தில், ஒரு அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடலை அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து பிணவறைக்கு கொண்டுசென்ற நேரத்தில், இறந்தவரின் உடலிலிருந்து ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள தங்க வளையலை திருடியதற்காக ஒப்பந்த ஊழியர் ஒருவரை போலீசு கைது செய்துள்ளது. குஜராத்தின் இருவேறு இடங்களில் நடந்த இருவேறு வழக்குகளில் ரெம்டெசிவர் மருந்துக் குப்பி ஒன்றை ரூ.12,000-க்கு விற்றுக் கொண்டிருந்த இரு கள்ளச் சந்தைகாரர்களை போலீசு கைது செய்துள்ளது.
ரெம்டெசிவர் மருந்துக் குப்பி ஒன்றின் அரசு விலை ரூ.800 அல்லது ஆய்வகத்தில் இருந்து நேரடியாகப் பெற்றால் ரூ.690 மட்டுமே. அந்த கள்ளச் சந்தை பேர்வழிகள் வெளிப்படையாக போலீசிடம் இதுவரை தாங்கள் 50 குப்பிகளை விற்றுள்ளதாக தெரிவித்தனர். ஆனால், அவர்கள் இன்னும் பல மருந்துக் குப்பிகளை விற்றிருக்கக் கூடும் என்று போலீசு நம்புகிறது.
இன்னொரு கள்ளச் சந்தை சம்பவத்தில், 18 டோஸ் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளுடன் இரண்டு நபர்களை வல்சாத் என்ற இடத்தில் குஜராத் சிறப்பு போலீசுக் குழு கைது செய்தது. அவர்கள் அம்மருந்துக் குப்பி ஒன்றை ரூ.25,000 வீதம் விற்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இதற்கிடையில் ராஜ்கோட்டில் ஒரு நோயாளிக்கு ரெம்டெசிவர் கொடுப்பதற்கு ரூ.45,000 வாங்கிக் கொண்டு அதன் பிறகும் கூட அம்மருந்தை அந்த நோயாளிக்குப் போடாமல் இருந்ததற்காக ஒரு மருத்துவமனை ஊழியரின் பெயரும் நகராட்சி வார்டு ஒன்றின் பா.ஜ.க தலைவர் ஒருவரின் பெயரும் போலீசிடம் உள்ள புகார் கடிதத்தில் இடம்பெற்றிருந்தது. ராஜ்கோட் நகரம் முதலமைச்சர் விஜய் ரூபானியின் சட்டமன்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவர் இந்திரனில் ராஜ்யகுரு “இது எந்த விழுமியத்தையும் கடைபிடிக்காத மோசமானக் காலகட்டம்” என்கிறார். இவர் ராஜ்கோட் தொகுதியில் விஜய் ரூபானியை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ராஜ்யகுரு தொலைபேசியில் பேசுகையில், “குஜராத் பரோபகாரத்திற்கு பெயர் போன மாநிலம். இன்று அந்த பிம்பம் பாழாகிக் கொண்டிருக்கிறது.
நோயாளிகள் மிக மோசமான நிலையில் உள்ளனர். உறவினர்கள் ரெம்டெசிவிரும், டோசிலிஜூனப்பையும் வெளியே வாங்கி வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். ஆனால், உறவினர்கள் உடனில்லாத அனேக நோயாளிகள் ராஜ்கோட் நோயாளியை போன்று அதே மாதிரியான வழியில், மோசடியான மருத்துமனைகளாலும் மருத்துவர்களாலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுதான் மிக மிக கவலைக்குரிய விசயம்.’’ என்று கூறினார்.
ராஜ்யகுரு தி வயர் இணையதளத்திடம் பேசிய பின்னர், அவர் கோவிட்19 சிகிச்சைக்காக ராஜ்கோட் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.
வேறுசில வடிவங்களிலான கொரோனா ஊழல்களும் கூட நடைபெற்று வருகிறது. இந்த வாரம், 3,000-கும் மேற்பட்ட RT-PCR சோதனைகள் மேற்கொண்டிருந்த அகமதாபாத்தின் கொடசார் அருகில் உள்ள ஒரு சோதனையகம், அங்கே கொரோனாவுக்கு சோதனை எடுத்துக் கொண்டவர்களின் புகாரின் பேரில் அகமதாபாத் மாநகராட்சி கழகத்தால் சோதனையிடப்பட்டது.
அச்சோதனையின் மூலம் அந்த சோதனையகத்தில் ரேபிட் ஆன்டிஜன் சோதனை செய்வதற்கான எவ்வித கருவிகளோ கிட்டுகளோ இல்லை என்று கண்டறியப்பட்டது. ஆனால், அந்த சோதனையகங்கள் மக்களை முட்டாளாக்கி பொய்யான அறிக்கைகளைக் கொடுத்து வந்துள்ளதுத் தெரிய வந்துள்ளது.
குஜராத்திலிருந்து வந்து சேர்ந்த ரெம்டெசிவிர் மருந்தை லக்னோ ஏர்போர்ட்டில் இருந்து எடுத்துச் செல்லும் காட்சி
மக்கள் கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் வாங்க தங்களது நகைகளையும் வீட்டையும் விற்றுக் கொண்டிருந்ததாக செய்திகள் வந்து கொண்டிருந்த நேரத்தில், குஜராத் அரசு 25,000 ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளை உத்திரப் பிரதேசத்திற்கு அனுப்பியதாக வந்த செய்திப் பேரபாயத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
இந்த செய்தி அறிக்கையை ஆதாரமற்றது, கற்பனையானது என்று குஜராத் அரசு மறுத்தாலும், லக்னோவில் செயல்படும் பாரத் சமாச்சர் என்ற செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர், பிரஜேஷ் மிஸ்ரா குஜராத்திலிருந்து 25,000 ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள் உ.பி அரசு கடந்த புதன்கிழமை அன்று தருவித்துள்ளதால் உ.பி மக்களுக்கு ரெம்டெசிவர் பற்றாக்குறை ஏற்படாது என்று கூறினார்.
எனினும், குஜராத் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அந்த ரெம்டெசிவர் மருந்து உற்பத்தி கம்பெனியின் செய்தி தொடர்பாளரும் தி வயர் இணையதளத்திடம் இது குறித்து பேச கிடைக்கவில்லை.
இதற்கிடையில் புதன்கிழமை (14-03-2021) அன்று, கிட்டத்தட்ட எல்லா உயர் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஒன்று கூடி மாநில அரசு கொரோனா நெருக்கடிக்கு மாநில அரசு சார்பாக பதில் கொடுக்கும் முகமாக ஒரு அறிக்கையை கொடுத்தனர். வியாழன் அன்று அந்த அறிக்கை உயர்நீதி மன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இது ஒரு வாரத்திற்கு முன்பு, கொரோனாவை கையாள்வதில் கவலையும் அதிருப்தியும் தெரிவித்திருந்த உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு பதில் கொடுப்பதன் ஒரு பகுதியாக அமைந்தது. உயர்நீதிமன்ற வாதத்தின் போது குஜராத் அரசு வழக்கறிஞர் கமல் திரிவேதி ஏப்ரல் 12, 2021 வரை 53 சதவீதப் படுக்கை வசதி மட்டுமே உள்ளது என்று அறிக்கை சமர்பித்தார்.
கிரிக்கெட்விளையாட்டு முக்கிய காரணி
ஆச்சரியப்பட வைக்கும் வகையில் குஜராத்தில் திடீர் கோவிட்-19 உயர்வுக்கு காரணமாக நம்பப் படுவது என்னவென்றால் கடந்த மாதம் நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் நடந்த இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் விளையாட்டு போட்டிதான். கிட்டத்தட்ட 75,000 பேர் கலந்து கொண்டதில் அனேகமாகப் பெரும்பாலானோர் முகக்கவசமின்றிக் காணப்பட்டனர். அகமதாபாத் IIM–ல் மட்டுமே 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. காந்தி நகரில் உள்ள IIT-யில் 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பாரத் சோலங்கி, இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவின் கொள்ளைக்காகவே குஜராத் அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். ஜெய் ஷா, பார்வையாளர்களைக் கொண்டு விளையாட்டை நடத்த ஆர்வமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
“குஜராத் அரசு முதுகெலும்பு அற்றது. அது கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யுங்கள் என்று ஜெய் ஷாவிடம் சொல்லாது” என்று சொலங்கி தி வயர் இணையதளத்திடம் கூறினார். “இரு விளையாட்டுப் போட்டிகளுக்கு பிறகு, பெரிய அளவிலான மக்களின் கூக்குரலுக்குப் பின்னர்தான் விளையாட்டு நிகழ்ச்சியை ஸ்டேடியத்திலிருந்து பார்க்கப் பார்வையாளர்கள் தடைசெய்யப்பட்டது நிகழ்ந்தது.”
பெரும்பாலான ஆங்கில ஊடகங்கள் கூடவோ குறையவோ கோவிட்-19 குறித்து அரசின் கருத்துடன் ஒத்துபோகிறது. அதே நேரத்தில் குஜராத்தி மொழியில் வெளிவரும் பத்திரிகை குஜராத் அரசு கோவிட்-19 இரண்டாம் அலையை கையாளுவது குறித்து உண்மையை வெளிக்கொண்டு வருகிறது.
திவ்ய பாஸ்கர் என்ற தினசரி பத்திரிகையின் ஆசிரியர் தேவேந்திர பட்நகர், குஜராத் மாநில பாஜக செயலர் சி.ஆர் பாட்டில்-ன் தொலைப்பேசி எண்ணைப் பிரசுரித்து அவரிடம் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள் குறித்து தொடர்பு கொண்டு கேட்குமாறு கேட்டுக் கொண்ட போது நல்ல வரவேற்பைப் பெற்றது.
ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளைப் பெற மக்கள் இரவு பகலாக கால்கடுக்க வரிசையில் நின்று கொண்டிருக்கும் அதே நேரத்தில் சி.ஆர்.பாட்டில் 5000 ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளை பெற்று அவற்றை நவ்சரியில் உள்ள பி.ஜே.பி அலுவலகத்திலிருந்து வினியோகம் செய்தார் என்ற செய்தி ஏப்ரல் 12 அன்று பிரசுரிக்கப்பட்டது.
ஆனால், பி.ஜே.பி குஜராத்தில் பெருந்தொற்று பாதிப்பில் பாகுபாடுக் கட்டுகிறது, பெருந்தொற்றை வைத்து அரசியல் செய்கிறது என்று விமர்சனம் வந்த ஒருநாளுக்கு பிறகு பாட்டிலினுடைய ‘முன்முயற்சி’ கைவிடப்பட வேண்டியதாகிவிட்டது. அவை ரெம்டெசிவர் மருந்து தகுதியான மருந்தாளுனர்களால் மட்டுமே மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரை உள்ளது என்ற உண்மை நிலையிலிருந்து எடுத்தாளப்பட்டது.
அகமதாபாத்தின் சைடஸ் கடிலா நிறுவனம் என்பது இந்தியாவில் மிகப் பெரிய அளவில் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளைத் தயாரிக்கக் கூடிய நிறுவனங்களில் ஒன்று. ஆனால், கடந்த ஆறு மாதங்களில் இந்திய அரசு ரெம்டெசிவர் மருந்தை உற்பத்தி செய்யக் கூடிய சிப்லா, சைடஸ் கடிலா, ஹெடெரோ, டாக்டர் ரெட்டி மற்றும் பல நிறுவனங்கள் என எல்லா உற்பத்தியாளர்களுக்கும் அந்த மருந்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய, பார்மா கம்பெனிகளுக்கும் அமெரிக்காவின் கிலீட் அறிவியல் நிறுவனத்துக்கும் இடையிலான தன்னார்வ உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட ரெம்டெசிவிர் மருந்து டோஸ்கள் சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கக் கூற்றுப்படி, இந்தியா ஒரு மாதத்தில் 38.80 லட்சம் ரெம்டெசிவர் மருந்து யூனிட்டுகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. பெருந்தொற்று தீவிரமாகிற இச்சூழலில் மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
குஜராத்தில் காங்கிரசும் பி.ஜே.பி-யும் கொரோனா காலத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிவரும் நிலையில் அம்மாநிலத்தின் மக்கள் துயர நிலையில் உள்ளனர். வியாழன் அன்று, தினேஷ் பட்டேல் (அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்தியாவிலே மிகப்பெரிய பொது மருத்துவமனையான அகமதாபாத்தின் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட இருந்தபோது, அவரது குடும்பத்தினர் அவரை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகு மருத்துவமனை வாயிலுக்கு முன்பு ஒன்றரை மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கக் காத்திருந்த 35 ஆம்புலன்ஸ்களில் ஒரு ஆம்புலன்சில் பட்டேல் இருந்தார்.
“மக்கள் ஆம்புலன்சுகளில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும்” என்கிறார், மருத்துவர் ஜே.வி மோடி. “ஆனால், முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் மக்களை எங்களால் அனுமதிக்க முடியாது” என்கிறார் அவர்.
இதற்கிடையில் அகமதாபாத் மற்றும் சூரத்தில் இடுகாடுகளும், எரியூட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. அங்கும் காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்கும் நிலை கண்கூடாக இருக்கையில், குஜராத் அரசோ கடந்த வியாழன் அன்று சூரத் மற்றும் அகமதாபாத்தில் 24 மரணங்கள் மட்டும்தான் நிகழ்ந்துள்ளது என்று அறிவித்துள்ளது.
பிரபலமான குஜராத் பத்திரிகையான சித்திரலேகா என்ற சூரத் பதிப்பின் வாரப் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஃபாய்சல் பகிலி, “சூரத் நிர்வாகம் பெருகிவரும் கொரோனாப் பரவலைத் தடுக்க தயாராக இல்லை என்றும் மேலும் இதை எதிர்கொள்ள எவ்வித செயல்திட்டமும் இன்னும் வகுக்கப்படவில்லை என்றும் தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், சுடுகாட்டில் கடுமையான வேலைப்பளுவில் பணியாற்றும் ஊழியர்கள் எரியூட்டுவதற்கு இதுவரை வழக்கமாக பயன்படுத்தி வந்த நெய்யிற்குப் பதிலாக பிணங்களை வேகமாக எரியூட்ட இப்போது மண்ணெண்ணையை பயன்படுத்துகின்றனர்” என்றார்.
சுனித் கமி என்ற சூரத்வாசி, “தன் மாமா கோவிட்டால் இறந்தபோது, சுடுகாட்டில் 12 மணி நேரம் காத்திருப்புப் பட்டியலில் இருக்க வேண்டியிருந்தது” என்றார். “ஆகவே, நாங்கள் அருகாமை நகரமான பர்டோலிக்கு உடலை இறுதி சடங்கிற்காக கொண்டு வந்தோம்” என்றார் சுனித் கமி.
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும் தற்போது வழக்கறிஞருமான ராகுல் ஷர்மா தி வயர் இணையதளத்திடம், “பெருந்தொற்றின் இந்த இரண்டாவது அலை பாதிப்புக் குறித்து குஜராத் அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதாகத் தெரிகிறது” என்றார். “குஜராத் அரசு சோதனை செய்யும் வசதிகள், உயிர் காக்கும் கட்டுமானம் ஆகியவற்றில் தனது திறனைக் கட்டி வளர்ப்பது பற்றி கவலைக் கொள்ளவில்லை” என்றார். “பொன்னான நேரத்தை வீண்டித்து விட்டது” என்றார்.
அகமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த மருத்துவர் தி வயர் இணையதளத்திடம், திடீர் கொரோனா அதிகரிப்புக் குறித்து சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்குத் தான் கொண்டு சென்றதாகவும், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறினார். “குஜராத் உள்ளாட்சி தேர்தல் அந்த நேரத்தில் நடந்து வந்ததால் அதுவரை சுகாதாரத் துறையை அமைதி காக்குமாறு அரசு கூறியிருக்கலாம்” என்றார்.
மேலும் “எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை, எந்த ஏற்பாடும் செய்யவில்லை. தன்னை விளம்பரபடுத்துவதிலே அரசு கவனம் செலுத்தியது. இந்த நோய் அதிகரிப்பு என்பது தவறான நிர்வாகம், அராஜகம் ஆகியவற்றின் விளைவு என்றார். மேலும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை முழுமையாகத் தவிர்த்திருக்க வேண்டும்” என்றார்.
அகமதாபாத்வாசியான ஹரிதா தேவ், இது குறித்து தி வயரிடம் பேசுகையில், ஆம்புலன்ஸ்கள் கிடைக்கவே இல்லை என்று கூறினார். ஏப்ரல் 13 அன்று, மிக மோசமான நிலையில் உள்ள 58 வயதுடைய பக்கத்து வீட்டு நோயாளிக்காக ஆம்புலன்சை அழைத்தார் அவர்.
“108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டபோது, தற்போதைய சூழ்நிலை காரணமாக எந்த ஆம்புலன்சும் இல்லை. உங்கள் கோரிக்கையைப் பதிவு செய்கிறோம். கூடிய விரைவில் அழைக்கிறோம் என்று கூறினர். மூன்று மணி நேரத்திற்கு பின்னர், இன்னும் ஆம்புலன்ஸ் தேவையில்தான் இருக்கிறீர்களா என்று கேட்டு ஒரு அழைப்பு வந்தது” என்றார், தேவ்.
மெஹல் நரேந்திரபாய் என்ற மற்றொரு அகமதாபாத் வாசி ஒரு ஆம்புலன்சிற்காக ஏப்ரல் 14 அன்று காத்திருந்தார். “நாங்கள் மாலை 3.30-க்கு ஆம்புலன்சை அழைத்தோம். ஆனால் மறுநாள் அதிகாலை 1.00 மணிக்குதான் எங்களை அழைத்தனர். இதற்கு இடைபட்ட நேரத்தில் நாங்கள் நகரத்தில் உள்ள 50 முதல் 60 மருத்துவமனைகளுக்கு தொடர்பு கொண்டு ஒரு எமர்ஜென்சி கேஸை எடுத்துக் கொள்வீர்களா என்று கேட்டோம். ஆனால், படுக்கைகள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டனர்’’ என்றார்.
ஏப்ரல் 13 அன்று, ஆல்ட் நீயூசின் இணை நிறுவனர் பிராத்னிக் சின்கா, “ஆம்புலன்சுகள் ஒவ்வொரு 10-15 நிமிடத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டை மிக வேகமாகக் கடந்து கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் இரண்டு சைரன் சத்தங்களுக்கு இடையிலான காலகட்டம் 5 நிமிடத்திற்கும் குறைவாக இருக்கிறது. இவை அகமதாபாத்தின் நிலை எவ்வாறு மோசமாக இருக்கிறது என்று அச்சுறுத்துகிறது’’ என்று தனது ட்விட்டில் தெரிவித்தார்.
சந்தேஷ் என்ற பிரபலமான குஜராத் தினசரியை சேர்ந்த இம்தியாஸ் உச்சைன்வாலா, ரோனக் ஷா ஆகிய இரு செய்தியாளர்களும் கோவிட்-19 நெருக்கடி குறித்து ஆய்வு செய்யும் முகமாக ஏப்ரல் 11 அன்று இரவு அகமதாபாத்தில் உள்ள ஒரு அரசு மருத்தவமனைக்கு சென்றிருந்தபோது அங்கு 63 பிணங்கள் பிணவறையிலிருந்து எடுத்து சென்றதை பார்த்தனர்.
“நாங்கள் பிணங்களை எண்ணினோம். அந்த ஒரு மருத்துவனையிலிருந்து மட்டுமே மொத்தம் 63 பிணங்கள்’’ என்று அந்த இரு நிருபர்களும் தி வயர் இணையதளத்திடம் கூறினர். “எரியூட்டும் இடம் குறித்து இரவு ஆய்வுக்கு சென்றிருந்த எங்கள் மற்ற நிருபர்கள் அந்த மருத்துவமனையிலிருந்து வந்த அந்த 63 பிணங்களும் அரசின் கோவிட் வழிமுறைப்படி எரியூட்டப்பட்டதாக எங்களிடம் தெரிவித்தனர்.
இதைபோல் மற்ற மருத்துவமனையிலிருந்தும் கொண்டுவந்து பிணங்களை எரித்தனர். ஆனால், அகமதாபாத்தில் கோவிட் மரணங்கள் பற்றி ஏப்ரல் 12 அன்று அறிவிக்கப்பட்டபோது, 20 பேர் இறந்ததாக அதிகாரப் பூர்வமாகத் தெரிவிக்கபட்டது. அரசின் இந்தக் கணக்கு அபத்தமானது.’’
காங்கிரஸ் தலைவர் சோலங்கி, குஜராத் அரசு கொரோனா குறித்த அனைத்து விவரங்களைக் குறைத்துக்காட்டி கொடுக்கப்படும் அறிக்கைகள் இப்போது அம்பலபட்டுவிட்டது என்று தி வயரிடம் கூறினார்.
சென்ற ஆண்டு கொரோனா தொற்று பாதித்து அகமதாபாத் ஷ்ரேய் மருத்துவமனையில் தன் மனைவியை சேர்த்திருந்தார் வழக்கறிஞர் சுஹல் திர்மிஜி. அந்த மருத்துவமனையில் ஏற்பட்ட துயர தீ விபத்தில் தன் மனைவியைப் பறிகொடுத்த அந்த வழக்கறிஞர் குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது கடுஞ்சீற்றத்தில் உள்ளார்.
“புதிய விமானங்களை வாங்குவதற்குப் பதிலாக அல்லது தமது பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்கான ஆலோசகர்களை அமர்த்திக் கொள்வதற்குப் பதிலாக தேவையான எண்ணிக்கையில் வெண்டிலேட்டர்கள், ஊசிகள், பிராணவாயு உருளைகள் வாங்க கவனம் செலுத்த வேண்டும்’’ என்று அவர் தி வயர் இணையதளத்திடம் கூறினார். “மேலும் அவர்கள் மருத்துவமனையில் உள்ள வென்டிலேட்டர்களின் ஆற்றல் பயன்பாட்டை சோதிக்க மின் பொறியாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும். வெண்டிலேட்டரில் ஏற்பட்ட தீ தான் என் மனைவியின் உயிரைப் பறித்தது” என்று கூறினார்.
வைரலாகசென்றஅரசியல்
இந்த சூழ்நிலையில் கூட, குஜராத் மக்கள் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டுவதில்லை. அவர் பிறந்த நகரம் அகமதாபாத். அவர் இந்தியப் பிரதமராகுவதற்கு முன்பு குஜராத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.
உண்மையிலேயே, மோடி இப்போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பதுதான் இப்போது பாடப்படும் பல்லவி.
ஒரு டோஸ் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிக்காக 9 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரனய் தாக்கர், “மோடி இருந்திருந்தால் எல்லாம் கிடைத்திருக்கும். இப்பிரச்சினைகள் எல்லாம் 48 மணி நேரத்தில் தீர்வு கண்டிருக்கும். நான் கடவுள் கிருஷ்ணன் மீது நம்பிக்கை வைத்திருப்பது போல் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளேன்” என்று தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார்.
தனது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ள பிரிதிபென் பட் என்ற பெண்மணி இந்த சூழ்நிலை ஏற்பட்டதற்கு மோடியின் தவறு காரணமல்ல என்கிறார். “உண்மையிலேயே, மோடி முதலமைச்சராக இருந்திருந்தால் கொரோனா குஜராத்தை நெருங்கியிருக்காது’’ என்கிறார்.
ஆனால், சில மக்கள் இந்த நம்பிக்கையுடன் ஒத்துப் போகவில்லை. காந்தியை பற்றி படிக்கும் மாணவரான பிரவின் மக்வானாவை பொறுத்தவரை, குஜராத் அரசு இந்த கொரோனா பாதிப்பு சூழ்நிலையை, குஜராத் மாடலில் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என்று எளிதாகக் குறைத்துக் காட்டுகிறது. (பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முன்னுதாரணமிக்க மாநிலம். இந்த குஜராத் மாடலை மற்ற எல்லா மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்) “குஜராத் மாடல் கட்டுக்கதை அம்பலமாகிக் கொண்டிருப்பதை மோடியால் தடுக்க முடியாது” என்றார், மக்வானா.
குஜராத் அரசு உயர் நீதிமன்றத்தில் வியாழன் (15.04.2021) பதில் அளிப்பதற்குத் தயாராக, புதன்கிழமை அன்றே நடமாடும் ஆர்.டி-பி.சி.ஆர் (Drive in RT-PCR) சோதனை மையம், 900 படுக்கைகள் கொண்ட டி.ஆர்.டி.ஓ.மருத்துவனை கோவிட் நோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு, கூடுதலான பிராண வாயு சப்ளை, மேலும் கள்ளச் சந்தையை கண்காணிக்க ஒரு அவசர சிறப்புக் குழு என மற்ற சில திட்டங்களுடன் ரெம்டெசிவர் மருந்து குறித்த நிலைப்பாட்டையும் திட்டமிட்டது.
உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம், குஜராத் போலீசு, பல்வேறு நகராட்சி அலுவலகத்தின் ஊழல் தடுப்பு துறைகள் ஆகியவை இந்த கண்காணிப்பை நல்ல முறையில் செயல்படுத்தப் பொறுப்பேற்கும்.
பிரபல அகமதாபாத் மருத்துவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ-வுமான மருத்தவர் ஜிடுபாய் பட்டேல், அரசாங்கத்தின் இத்திட்டங்கள் குறித்து கிண்டலடித்துள்ளார். “இன்னும் படுக்கைகள் நிரப்பப்படாமல் உள்ளது, குஜராத் சூழல் கட்டுக்குள் உள்ளது. ஊடகங்களால் சூழல் கைமீறியதாக பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்று அரசாங்கம் சொல்கிறது, அப்படி என்றால் 900 படுக்கைகள் கொண்ட டி.ஆர்.டி.ஓ.மருத்துவமனையை இரண்டு வாரத்தில் அகமதாபாத்தில் அமைக்க மத்திய அரசிடம் ஏன் விஜய் ரூபானி கேட்டிருக்கிறார்?” என்று கேட்கிறார் மருத்துவர் பட்டேல்.
இது ஒரு அரசியல் கேள்வி, ஆனால் சரியான கேள்வி. குஜராத்தில் வாழ்வின் எல்லா அம்சங்களையும் அரசியல் ஆளுமை செய்வதாகத் தெரிகிறது. இவற்றை அரசின் மிக மோசமான நிர்வாகக் கோளாறு என்று விமர்சிக்கும் காங்கிஸ் கட்சி, குஜராத் அரசின் திட்டங்கள் எல்லாம் மேலோட்டமானவைதான் என்று சொல்கிறது.
பி.ஜே.பி-யின் எதிர் கட்சிகள் குஜராத் மாடல் என்பதே மோசடியானது என்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கூற்றை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 11 அன்று, சுயட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஸ் மேவானி, கொரோனா சூழ்நிலையை குறைத்துக்காட்டி நிர்வாக கோளாறு செய்து அனேக மக்களை மரணத்திற்கு தள்ளும் உங்களை குஜராத் ஒருபோதும் மன்னிக்காது என்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு ட்வீட் செய்துள்ளார்.
இதற்கிடையில், அப்பட்டமான மிக மோசமான நிர்வாக சீர்கேட்டால் குஜராத் தொடர்ந்து துன்புறுகிறது.
தி வயர் இணையதளம், குஜராத் சுகாதாரத்துறை அமைச்சரையும், செயலரையும் தொடர்பு கொள்ள முயற்சித்தது. ஆனால், அவர்களிடமிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை.
கட்டுரையாளர் : தீபல் திரிவேதி தமிழாக்கம் : முத்துக்குமார் நன்றி : The Wire
“தடுப்பூசி போட்டதால்தான் விவேக் போயிட்டாரு” என்பது இன்றைய சூடான விஷயம், சிலர் பரப்பும் விஷமம். அவருக்கு ஏற்கெனவே இதயத்தில் பிரச்சினை இருந்திருக்கலாம். தடுப்பூசிக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை எல்லாம் நம்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை.
அவர்களைப் பொறுத்தவரை, தடுப்பூசி வேண்டாம், அதற்கு இன்னொரு சாக்கு இது. (நொண்டிச்சாக்கு என்று எழுதியிருந்தேன். அந்தச் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று நண்பர் பாலபாரதி சொன்னதால் திருத்தியிருக்கிறேன்.)
“கோவிட் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட் தொற்று ஏற்படுகிறதே…?” என்பதும் இப்போது புதிதாக எழுந்துள்ள கேள்வி. இந்தக் கேள்வியில் இரண்டு வகை.
அறிவியல் ரீதியாக அறிந்துக் கொள்வதற்காகக் கேட்பது ஒருவகை.
பாத்தியா… தடுப்பூசி எல்லாம் வேலைக்காகாதுன்னு சொன்னா கேட்டியா… அதுக்குதான் உணவே மருந்து, மருந்தே உணவுன்னு சொல்றோம் என்கிற கோஷ்டிகள் / கபசுர நீர் போதும், கோமியத்தைவிட சிறந்தது என்ன இருக்கு என்கிற கோஷ்டிகள்.
இந்த இரண்டாவது கோஷ்டி அரைவேக்காடுகள் தடுப்பு மருந்துகள் போட்டுக் கொள்ளாமலும் இருக்கக் கூடும் அல்லது வெளியே வீறாப்பு பேசிவிட்டு மறைமுகமாகப் போட்டுக் கொள்ளவும் கூடும். அப்படிப் போடாவிட்டால், கோவிட் தொற்றுக்கு ஆளாகி மற்றவர்களுக்கும் பரப்புவார்கள். ஆனாலும், மக்கள்திரள் நோயெதிர்ப்பு சக்தி ஏற்பட்ட பிறகு தடுப்பூசி போடப்படாவிட்டாலும் பாதிப்புக்கு உள்ளாகாமல் தப்பித்து விடுவார்கள், பாத்தியா எனக்கு எதுவும் ஆகலே என்று சொல்லித் திரிவார்கள். இவர்களுக்கு என்ன விளக்கம் சொல்லியும் பயனில்லை.
உண்மையிலேயே வேக்சின் குறித்து அறிய விரும்புவோருக்கு எனக்குத் தெரிந்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் மருத்துவனோ, மருத்துவத் துறை சார்ந்தவனோ அல்ல. ஆர்வத்தாலும் தொழில் ரீதியாகவும் விஷயங்களைக் கற்றுக் கொள்பவன். சுமார் ஒரு மாதத்துக்கு முன்னால் மொழியாக்க வேலை ஒன்று அமெரிக்காவில் இருந்து எனக்கு வந்தது.
இன்று இங்கே என்ன கேள்வி எழுப்பப்படுகிறதோ அதே கேள்வி அங்கே அப்போதே எழும்பி விட்டது போலிருக்கிறது. அதனால், அந்தக் கேள்விகளுக்கான பதில்களை (தமிழிலும்) அளித்து மக்களுக்குப் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்கள். அந்த மொழியாக்கத்தில் இருந்தும், இதர தகவல்களில் இருந்தும் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.
1. Whole virus vaccine என்பது வைரசைக் கொண்டே தயாரிக்கப்படுவது.
2. Nucleic acid vaccine என்பது வைரசின் மரபணுவின் (டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ) கூறுகளைக் கொண்டு தயாரிக்கப்படுவது.
3. Protein subunit vaccine என்பது, வைரசின் புரதத்திலிருந்து பிரித்தெடுத்த புரோட்டீன்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது.
4. Viral vector-based vaccine என்பது, திருத்தப்பட்ட வைரஸைக் கொண்டு தயாரிக்கப்படுவது.
இப்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்புட்னிக் வி ஆகிய இரண்டும் வைரல் வெக்டார் வேக்சின்கள். அதாவது, வேறொரு வைரசின் திருத்தப்பட்ட வடிவத்தைக் கொண்டு தயாரிக்கப்படுவது. கோவிஷீல்ட், சிம்பன்சி குரங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட அடினோவைரஸைப் பலவீனப்படுத்தி, கொரோனா வைரஸ் போலவே தோற்றமளிக்குமாறு தயாரிக்கப்பட்டது.
ஸ்புட்னிக் வி, நுரையீரல் சார்ந்த நோய்களை உருவாக்கும் மனித வைரஸ்களிலிருந்து உருவாக்கப்பட்டது. கோவாக்சின் முதல் வகையைச் சேர்ந்தது – கொல்லப்பட்ட கொரோனா வைரசிலிருந்து தயாரிக்கப்படுவது. (அமெரிக்காவில் போடப்படும் Pfizer மற்றும் Moderna வாக்சின்கள் மரபணுக் கூறுகளைக் கொண்டு (mRNA வாக்சின்) தயாரிக்கப்படுபவை.)
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் AdV26 என்ற வேக்சினுக்கும் விரைவில் இந்திய அரசு அங்கீகாரம் அளிக்கும் எனக் கூறப்படுகிறது. இதுவும் சேர்ந்தால், கோவிஷீல்ட், ஸ்புட்னிக், AdV26 ஆகிய மூன்று வைரல் வெக்டர் வேக்சின்களாக இந்தியாவில் தரப்படும்.
000
கோவிட் வேக்சின்கள் எவ்வாறு செயல்படுகின்றன?
எளிமையாகச் சொல்வதானால் – கொரோனா வைரஸைப் போன்ற வலுவற்ற வைரசைக் கொண்டவைதான் வேக்சின்கள். (வைரத்தை வைரத்தால் அறுப்பது என்பார்களே, அதுபோல, கிட்டத்தட்ட எல்லா நோய்களுக்கான வேக்சின்களும் அந்தந்த நோய்க் கிருமியைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.) இவை உடலில் நுழைந்ததும், உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி விழித்துக் கொண்டு இவற்றை எதிர்த்துப் போராடி அழிக்கின்றது.
ஒருமுறை அப்படி ஆகிவிட்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியில் உள்ள மெமரி செல்கள் இந்த வைரசை நினைவில் வைத்துக் கொள்கின்றன. அடுத்து எப்போது இந்த வைரஸ் தாக்கினாலும் உடனே எதிர்வினை காட்டி, வைரஸை எதிர்த்துப் போராடி அழிக்கும்.
இப்போது சாமானியர்களின் கேள்விகளுக்கு வருவோம்.
000
வேக்சின் போடப்பட்டவர்களுக்கு கோவிட் வருமா? ஏன் வருகிறது? அப்படியானால் வேக்சின் வேலை செய்யவில்லையா?
கோவிட் மட்டுமல்ல, எந்தவொரு தடுப்பு மருந்தும் உடனடி பலனைத் தராது. கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் தரப்பட்ட பிறகு, உடலில் நோயெதிர்ப்பு சக்தி உருவாக சில வாரங்கள் ஆகும். இரண்டாவது டோசும் தரப்பட்ட பிறகே முழுமையான தடுப்புத் திறன் கிடைக்கும். (இரண்டாவது டோசும் தரப்பட்ட பிறகு இரண்டு வாரங்கள் கழித்தேப் பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார்கள். இதை விண்டோ பீரியட் என்கிறார்கள்.
ஒருவருக்கு ஏற்கெனவே தொற்று ஏற்பட்டிருந்து, வேக்சின் போடும்போது தெரியாமல் இருந்திருந்தால், அதன்பிறகு பரிசோதனை செய்யும்போது பாசிடிவ் காட்டும் சாத்தியங்கள் உண்டு. தடுப்பூசியின் காரணமாக கோவிட் ஏற்படுவதில்லை. முழுமையானப் பாதுகாப்புக் கிடைக்கும் வரை தொற்றுக் கண்டறியப்பட வாய்ப்பு உண்டு.
தடுப்பூசிகள் நோய்களைத்தான் தடுக்கும், தொற்றினைத் தடுக்காது. அதாவது, தொற்றுக்கு ஆளானாலும் நோயின் தீவிரம் ஏற்படாமல், உயிருக்கு ஆபத்தில்லாமல் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
000
பக்க விளைவுகள் இல்லை என்றால் மருந்து வேலை செய்யவில்லை என்று அர்த்தமா?
நீங்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஏதேனுமொரு மருந்துக்கான பக்க விளைவுகளைத் தேடிப் படித்துப் பாருங்கள். அதன் பக்க விளைவுகளின் பட்டியலைப் படித்தால், அந்த மருந்தையே சாப்பிட மாட்டீர்கள்!. உதாரணமாக, மீதமுள்ள என் ஆயுள் முழுமைக்கும் தினமும் ஒரு மருந்தை இரண்டு வேளை எடுத்தாக வேண்டும்.
Mesahenz அல்லது mesalmine போன்ற அந்த மருந்தின் பக்க விளைவுகள் — Flatulence, Headache, Itching, Diarrhea, Nausea, Stomach pain/epigastric pain, Dizziness, Joint pain, Muscle pain, Vomiting. (வாயு பிரிதல், தலைவலி, அரிப்பு, வயிற்றுப் போக்கு, குமட்டல், வயிற்று வலி, தலைசுற்றல், மூட்டுவலி, தசை வலி, வாந்தி)! இந்தப் பக்க விளைவுகளுக்கா நான் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் பதிவு எழுத முடியுமா!
ஒரு மருந்தின் பக்க விளைவுகள் எனப் பட்டியல் இடப்படும் எல்லாம் எல்லாருக்கும் ஏற்படும் என்பதில்லை. கோவிட் வேக்சின் பொறுத்தவரை, ஊசி போட்ட இடத்தில் வலி அல்லது வீக்கமும், சிவத்தல், அரிப்பு, காய்ச்சல், குளிர் காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி போன்றவை பக்க விளைவுகளாக இருக்கலாம்.
இவை எல்லாம் ஏற்பட்டால்தான் நல்லது என்று நினைத்துவிட வேண்டாம். சிலருக்கு எல்லா பக்க விளைவுகளும் இருக்கலாம், சிலருக்கு எந்தப் பக்க விளைவும் இல்லாமலும் இருக்கலாம். பக்க விளைவுக்கும் மருந்து வேலை செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
000
வேக்சின்கள் எந்த அளவுக்கு பாதுகாப்புத் தரும்?
பல்வேறு நோய்களுக்கு உருவாக்கப்பட்ட பல தடுப்பு மருந்துகள் பல்வேறு அளவில் பலன் தந்துள்ளன. சில தடுப்பு மருந்துகள், சில நோய்களை முற்றிலும் ஒழித்து விட்டன (உதாரணம், சின்னம்மை, போலியோ போன்றவை). இந்தியாவில் கோவிட் வேக்சினைப் பொறுத்தவரை, இரண்டு டோஸ்களும் போட்டால் — கோவிஷீல்ட் திறன் 90% என மதிப்பிடப்பட்டுள்ளது.
கோவாக்சின் பொறுத்தவரை, மத்திய அரசின் அவசரகால நடவடிக்கைகளின் காரணமாக, முழு பரிசோதனை முடியாமலே அங்கீகரிக்கப்பட்டது. இப்போது மூன்றாம் கட்டப் பரிசோதனையின் இடைக்கால அறிக்கை வந்துவிட்டது. இதன் திறன் 81% எனக் கூறப்படுகிறது
ஸ்புட்னிக் வி வேக்சின் திறன் 92% என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Pfizer மற்றும் Moderna வாக்சின்களின் திறன் 94% என மதிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியானால், எல்லாருக்குமே பயன் கிடைக்காதா என்று கேட்டால், ஒருவர் விடாமல் மக்கள் அனைவருக்குமே தடுப்பூசி போட்டாக வேண்டும் என்பதில்லை. போதுமான அளவுக்கு மக்கள் COVID-19-ல் இருந்து பாதுகாக்கப்பட்டு விட்டால், பிறகு மக்கள் திரளிடையே நோய் எளிதாகப் பரவ இயலாது.
இதுதான் “மக்கள் திரள் நோயெதிர்ப்பு சக்தி” (Herd immunity) என அழைக்கப்படுகிறது; இது ஏற்பட்டுவிட்டால், மருத்துவமனைகளின் மீது பாரம் குறையும், இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, யு.எஸ்.இல் மக்கள் திரள் நோயெதிர்ப்பு சக்தி ஏற்பட வேண்டுமானால், குறைந்தது 70% பேருக்கு வாக்சின் போடப்பட வேண்டும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
000
இப்போது இந்தியாவில் டபுள்-ம்யூடன்ட் (பிறழ்வுற்ற வைரஸ்) வைரஸ்கள் பரவி வருகிறதாமே? இப்போது போடப்படும் வேக்சின், புதிய வகை வைரசுக்கு எதிராகவும் வேலை செய்யுமா?
இந்தியாவில் மட்டுமல்ல, எட்டு நாடுகளில் பிறழ்வுற்ற வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரட்டைப் பிறழ்வு வைரஸ் எனப்படும் வைரசும் கூட 15 வகைகள் உள்ளன என்கிறார்கள். கொரோனா வைரசைப் பொறுத்தவரை இன்னும் பல வகை பிறழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன, இன்னும் ஏற்பட்டிருக்கலாம், இன்னும் கண்டறியப்படாமலும் இருக்கலாம். இந்தியாவில் கோவிட் திடீரென அதிகரிப்பதற்கு இந்த பிறழ்வுற்ற வைரஸ்தான் காரணம் என்று கருத இடமிருக்கிறது. அறிவியலார் இதை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலே கண்ட கேள்விக்கானப் பதிலைக் கண்டறிய முனைந்திருக்கிறார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி என்பது சிக்கலான ஒரு விஷயம். நமது உடல் பல்வேறு வகையான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. பல்வேறு ஆன்டிபாடிகள் வைரசின் பல்வேறு பாகங்களைத் தாக்குகின்றன. எனவே, கோவிட் வேக்சின் வேலை செய்யுமா என்பது, கொரோனா வைரசின் ஸ்பைக் புரோட்டீன் மீது ஆன்டிபாடிகள் எந்த அளவுக்கு தாக்குதல் நடத்துகின்றன என்பதைப் பொறுத்து இருக்கிறது.
அதற்காக, இப்போதைய வேக்சின் புதிய பிறழ்வுற்ற வைரசிடமிருந்துப் பாதுகாப்புத் தராது என்றும் சொல்லிவிட முடியாது. எல்லா வேக்சின்களும் கொரோனா வைரசிலிருந்தே தயாரிக்கப்படுவதில்லை. முதலில் குறிப்பிட்டதுபோல, கொரோனா வைரஸ் என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறதோ அதேபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்திய இதர வைரஸ்களையும் கலந்தே இந்த வேக்சின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, பிறழ்வுற்ற வைரசிலிருந்தும் இவை பாதுகாக்கும் என்று நம்பலாம்.
நம்மிடம் இருப்பது இப்போதைக்கு இந்த வேக்சின்தான். கண்டவர்களும் பரப்பும் வதந்திகளை நம்பி தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் விட்டால், இன்னும் பரவல் அதிகரிக்கவே செய்யும். இன்னும் பல்லாயிரம் பேர் இறக்க நேரிடும். எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வயது / வாய்ப்பு உள்ளவர்கள் அவசியம் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுங்கள்.
000
தடுப்பூசி போட்டதால் மாரடைப்பு போன்ற பாதிப்புகள் நேர்கிறதா?
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் இதுபோல சிலர் கிளப்பி விட்டதால்தான் தடுப்பூசி விழிப்புணர்வுக்காக ஆரம்பத்தில் குறிப்பிட்ட மொழியாக்க வேலை எனக்கு வந்தது. தடுப்பூசியால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது, நோயெதிர்ப்பு சக்தி பாதிக்கிறது போன்ற வதந்திகள் அங்கே சுற்றுகின்றன.
கொரோனா வைரசால் பல்வேறு சிக்கல்கள் வரலாம். நுரையீரலை, சுவாச மண்டலத்தைத் தாக்குவது தவிர, மற்ற சில நோய்கள் உள்ளவர்களும் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.
வைரஸ்தான் பிரச்சினைகளை ஏற்படுத்துமே தவிர, வைரசுக்கு எதிரான வேக்சின் பிரச்சினைகளை ஏற்படுத்தாது. ஏனென்றால், வேக்சினின் வேலை வைரசை அடையாளம் கண்டு தாக்குவதற்கான ஆன்டிபாடிகளை உருவாக்கச் செய்வதுதான். ஏற்கெனவே பார்த்தது போல சில வேக்சின்கள் வைரசின் ஸ்பைக் புரோட்டீனைத் தாக்கும். வேறு சில, மரபணு அமைப்பைத் தாக்கும்.
தடுப்பூசி போட்டதால் மாரடைப்பு வந்து விட்டது, தடுப்பூசி போட்டதால் கோவிட் வந்து விட்டது போன்ற பதிவுகளைக் கண்டால் கண்டித்துத் திருத்துங்கள், நீக்கச் சொல்லுங்கள். அவை மேலும் பரவாமல் தடுத்து நிறுத்துங்கள்.
000
தடுப்பூசி போட்டுக் கொண்டாயிற்று. பிறகு எதற்கு மாஸ்கும், இடைவெளியும்?
தடுப்பூசி போட்டுக் கொண்டது உங்களைப் பாதுகாத்துக் கொள்ள. மாஸ்க் அணிவது உங்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க. வாக்சின் போடப்பட்ட மக்களும் அறிகுறிகள் இல்லாமலே தொற்றுக்கு ஆளாகியிருக்கவும் கூடும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் தொற்றுக்கு ஆளாகக் கூடும் என்பதை மேலே பார்த்தீர்கள் அல்லவா? எனவே, மாஸ்க் அணிவதும் இடைவெளி பராமரிப்பதும் உங்களிடமிருந்து மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக.
ஒரு வாதத்துக்காக, இப்போதைய வாக்சின் புதிய வகை வைரஸ்களுக்கு வேலை செய்யாது என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் நமக்கு பாதுகாப்புதான் என்ன? இதற்கான தீர்வினை அறிவியலார் கண்டறியும் வரை மாஸ்க் அணிவதும், கூட்டங்களைத் தவிர்ப்பதும், இடைவெளி பராமரிப்பதும், சானிடைஸ் செய்வதும்தான்.
000
எச்சரிக்கை
மருத்துவமனைகள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு இடம் கிடைக்க அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கோவிட் டெஸ்ட் எடுக்கவும் டிமாண்ட் கடுமையாக அதிகரித்து வருகிறது. சில லேப்களில், இன்று புக் செய்தால் அடுத்த வாரம்தாம் டெஸ்ட் எடுக்க வருவார்கள். (தில்லியில் அரசு நடத்தி வந்த சில பரிசோதனை மையங்களை மூடிவிட்டது.)
கோவிட் பாசிடிவ் எனக் கண்டறியப்பட்ட தமிழக நண்பர் ஒருவர், தான் தனியாக இருப்பதால் மருத்துவமனைக்குச் சென்று தங்கி விடலாம் என்று சத்தர்பூர் சென்றிருக்கிறார். அங்கே மருத்துவமனைக்கான அடையாளமே இல்லை. இந்தியாவிலேயே மிகப்பெரிய கோவிட் சிறப்பு மருத்துவமனை என்று படம் காட்டப்பட்ட சில தற்காலிக மருத்துவமனைகள் பிரிக்கப்பட்டுவிட்டன. குஜராத் நிலைமை பற்றியெல்லாம் சொல்லவே வேண்டாம்.
இன்னும் சில நாட்களில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு வரப்போகிறது. இரண்டாவது டோஸ் போட வேண்டியவர்களுக்காவது தட்டாமல் கிடைக்குமா என்ற கேள்வி பிரம்மாண்டமாக நிற்கிறது.
கொரோனாவாவது மயிராவது, எல்லாம் மாஃபியா, இல்லுமினாட்டி சதி, தடுப்பு மருந்துகளே தேவையில்லை, இயற்கை மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது என்னும் வாட்ஸ்அப் வாயர்களின் உளறல்களை நம்பிக் கொண்டு இருந்தீர்கள் என்றால், உங்கள் சுற்றத்தாரையும் பிள்ளைகளையும் அபாயத்தில் தள்ளுகிறீர்கள் என்றுதான் பொருள்.
பி.கு. – தடுப்பூசி போட்ட பிறகு விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தடுப்பூசியால்தான் ஏற்பட்டதா என்பதை மருத்துவ ஆய்வுகள்தான் காட்டும். அதற்குள், வதந்திகளைப் பரப்பக் கூடாது.
பக்க விளைவுகளைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். சிலருக்கு தீவிரமான சில பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆனால் அவை மிக மிக அரிது. மிகச் சிலருக்கு மிக அரிதாக ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு பலகோடிப் பேருக்கு ஏற்படக் கூடிய பயனைப் புறக்கணித்துவிடக் கூடாது.