Saturday, May 24, 2025
முகப்பு பதிவு பக்கம் 339

என் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் !

1
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 01-அ

பள்ளி உன்னுடையது…

ன்னும் ஒரு மணிநேரம் கழித்துதான் வகுப்புகள் ஆரம்பமாகும். பரிசோதனை ரீதியான தயாரிப்பு வகுப்பின் கதவருகே நான் இரண்டு பெற்றோர்களையும் ஐந்து குழந்தைகளையும் கண்டேன். வகுப்பறையின் கதவு திறந்திருந்த போதிலும் அறையினுள் யாரும் இல்லாததால் அவர்கள் உள்ளே நுழையத் துணியவில்லை. என் நினைவில் மூன்று புகைப்படங்கள் பளிச்சிடுகின்றன.

”வணக்கம்!” என்று அனைவரையும் பார்த்து நான் சொல்கிறேன். ”ஏன் நீங்கள் இவ்வளவு சீக்கிரம் வந்தீர்கள்?”

குழந்தைகள் பேசாமல் நிற்கின்றனர். நான்தான் அவர்களின் முதல் ஆசிரியர் என்று அவர்களுக்கு இன்னமும் தெரியாது.

”உன் பெயர் கீகா, இல்லையா?” சிறுவனுக்கு வியப்பு. ”ஆமாம்… உங்களுக்கு எப்படித் தெரியும்?”

”வணக்கம், கீகா!” அச்சிறுவன் நீட்டிய சிறு கையை இறுகப் பற்றிக் குலுக்குகிறேன்.

”நீ மாரிக்கா!.. இல்லையா, வணக்கம்!”

அவளது சிறு கையை மென்மையாகப் பற்றுகிறேன். அது மென்மையானது, மெல்லியது. சின்னஞ்சிறு பெண்ணாக காட்சி தருகிறாள். அவளுக்கு வயதென்ன?

“வணக்கம், ஏல்லா!” என்று மூன்றாவது சிறுமியைப் பார்த்துக் கூறுகிறேன். புகைப்படத்திலிருந்ததைப் போன்றே இவள் குண்டாக இருக்கிறாள். ஏல்லா புன்முறுவல் பூத்தபடியே தன் குண்டு கரத்தை நீட்டுகிறாள்.

”உங்களுக்குத் தெரியுமா, என் மகள் மிகவும் புத்திசாலி… அவளுக்குப் படிக்கத் தெரியும், நூறு வரை எண்ணத் தெரியும், பல கவிதைகள் தெரியும். இவள் நன்கு வளர்ச்சியடைந்தவள்… இசை பயிலுகிறாள்…. நல்ல திறமையானவள், உங்கள் வகுப்பிற்கு ஏற்றவள். இவளைக் கொண்டு எவ்வளவு பரிசோதனை வேண்டுமானாலும் செய்யுங்கள், எல்லாவற்றையும் தாங்கிக் கொள்வாள்…”

”உங்களை எனக்கு நினைவில் இல்லையே” என்று எஞ்சியிருந்த ஒரு சிறுவனையும் சிறுமியையும் பார்த்துக் கூறுகிறேன்.

”குழந்தையைப் பரிசோதனை வகுப்பில் சேர்த்துக்கொள்ளக் கோரும் விண்ணப்பத்தை எங்களால் உரிய நேரத்தில் தர இயலவில்லை. எனவே ஆசிரியருக்காகக் காத்திருக்கின்றோம்!”

நான் என்ன செய்வது? சட்டப்படி வகுப்பில் 25 பேர்கள் மட்டுமே இருக்க வேண்டும். என்னிடமோ ஏற்கெனவே 36 பேர்கள் உள்ளனர்.

”பள்ளியில் உள்ள கல்விப் பிரிவின் தலைமை அதிகாரியை சென்று பாருங்களேன்.”

பெற்றோர்கள் வருத்தப்பட்டனர்.

”நாங்கள் அவரை ஏற்கெனவே சந்தித்து விட்டோம். உங்கள் வகுப்பில் சேருவது நீங்களே தீர்மானிக்க வேண்டிய விசயம் என்றார்.”

சங்கடத்துடன் விளக்கத் துவங்குகிறேன்.

”தயவுசெய்து நான் சொல்வதை சரிவரப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் கண்டிப்பாக இச்சிறுமியையும் சிறுவனையும் சேர்த்துக் கொள்வோம். ஆனால் வகுப்பில் இடம் இல்லையே என்ன செய்ய!”

”ஓரிருவர் கூடவோ குறைவாகவோ இருந்தால் என்ன?”

”இல்லையில்லை, இது எங்களுக்கு ஒரு பெரிய விசயம்.”

”நீங்கள் யார்?” சிறுவனின் தாயார் கேட்கிறார்.

”நான்… நான் இந்த வகுப்பின் ஆசிரியர்.”

இரண்டு தாயார்களும் வியப்படைந்தனர். சிறுமியின் தாயார் வற்புறுத்துகிறார்:


”உங்களுக்குத் தெரியுமா, என் மகள் மிகவும் புத்திசாலி… அவளுக்குப் படிக்கத் தெரியும், நூறு வரை எண்ணத் தெரியும், பல கவிதைகள் தெரியும். இவள் நன்கு வளர்ச்சியடைந்தவள்… இசை பயிலுகிறாள்…. நல்ல திறமையானவள், உங்கள் வகுப்பிற்கு ஏற்றவள். இவளைக் கொண்டு எவ்வளவு பரிசோதனை வேண்டுமானாலும் செய்யுங்கள், எல்லாவற்றையும் தாங்கிக் கொள்வாள்…”

இந்த அம்மாவிற்கு நான் என்ன சொல்வது என்று யாராவது ஆலோசனை சொல்லுங்களேன்! குழந்தைக்கு நூறு வரை எண்ணத் தெரிந்ததும், ஒரு சில கவிதைகளை குழந்தை மனப்பாடம் செய்ததும், நன்கு படிக்கத் தெரிந்ததும் அவன் திறமையானவன், மேதை என்று ஏன் பல தாய்மார்கள் எண்ணுகின்றனர்?

நிச்சயமாக, மேதா விலாசம் மிக்க குழந்தைகள் இருக்கின்றனர், உங்கள் குழந்தை எல்லோரையும் போல் சாதாரணமானவனா, அல்லது திறமைமிக்கவனா, மேதாவிலாசமுள்ளவனா என்று கேட்டால் பெரும்பாலான தாய்மார்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி ”என் குழந்தை திறமைமிக்கவன், மேதை!” என்றுதான் பதில் சொல்வார்களென என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஒருவேளை இந்த அழகிய சிறுமி பிறப்பிலேயே அசாதாரணத் திறமையுடன் பிறந்திருக்கலாம், நம் நாட்களில் இத்தகைய குழந்தைகள் மேன்மேலும் அதிகரித்து வருகின்றனர். நான் விஷயத்தின் இன்னொரு அம்சத்தை அவருக்கு விளக்க முற்படுகிறேன்:

”விசேச திறமைகளையுடைய குழந்தைகளை நாங்கள் சேர்த்துக் கொள்வதில்லை! மற்ற தயாரிப்பு வகுப்புகளைப் போன்றே இவ்வகுப்பில் உள்ளவர்களும் சாதாரணமானவர்கள். ஆனால் வகுப்பில் இடமில்லையே…”

அத்தாய் தொடருகிறார்:

”அமைச்சகத்தின் சிபாரிசை வேண்டுமானால் கொண்டு வருகிறேன்…. ஒரு விதிவிலக்காக…”

வகுப்பு ஆரம்பிக்கும் நேரத்தில் மனநிலையை மோசமாக்கிக் கொள்ளாமலிருக்கப் பொறுமையாக இருக்க வேண்டும். எவ்வித சிபாரிசுகளும் தேவையில்லை என்றும் தலைமை அதிகாரியைச் சந்தித்து குழந்தைகளை வேறு வகுப்பில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்குமாறும் இரண்டு தாய்மார்களுக்கும் விளக்குகிறேன்.

தீமா தன் தாயின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட மறுக்கிறான். விக்டரும் அம்மா இல்லாமல் வகுப்பறையினுள் நுழைய மறுத்து விடுகிறான். சரி, அம்மாக்களும் வகுப்பறையினுள்ளேயே உட்கார்ந்திருக்கட்டும்.

தாய்மார்கள் இருவரும் ஒப்புக் கொள்ளவில்லை: என் வகுப்பில்தான் அவர்களின் குழந்தைகளை சேர்க்க வேண்டுமாம். நினைத்ததைச் சாதிக்க வேண்டுமென்ற உறுதியோடு அவர்கள் கிளம்பிச் செல்லுகின்றனர். குழந்தைகளுக்கு நான் பார்வையாலேயே விடை தருகிறேன். சிறுவன் என் மீது வைத்த பார்வையை அகற்றவேயில்லை. அவன் கண்களில் நீர் ததும்புகிறது. அவன் திடீரெனக் கையை உதறிக் கொண்டு என்னை நோக்கி ஓடி வருகிறான், என் முழங்காலைப் பிடித்துக் கொண்டு கேவியபடியே கூறுகிறான்:

”மாமா, என்னைத் துரத்தாதீர்கள்… நான் ஒழுங்காகப் படிப்பேன்…”

நான் சிறுவனைத் தூக்குகிறேன். ”அழாதே, நீ ஆண் பிள்ளையல்லவா!” என்றேன். அவன் அழுகையை நிறுத்தவில்லை. ”பள்ளிக்கூடம் உன்னுடையது, நான் எப்படி உன்னை பள்ளியிலிருந்து விரட்ட முடியும்!… சரி, வா வகுப்பிற்குப் போகலாம்!…”

தனக்கே உரித்தான திறந்த மனதுடன், நெஞ்சார சிறுவன் ஆசிரியரின் மனதைத் தொடும்படி கூறும் வார்த்தைகள் எந்த ஒரு சிபாரிசையும்விட வலிமையானவை.

நான் அந்த ஐவரையும் வகுப்பில் சேர்த்துக் கொள்கிறேன், வகுப்பறையை அவர்களுக்குச் சுற்றிக் காண்பிக்கிறேன், பூச்செடிகளுக்குத் தண்ணீர் விடவும் ஜன்னல்களைத் திறக்கவும் அவர்கள் எனக்கு உதவுகின்றனர். தனித்தனியாகவும் பெற்றோர்களுடனும் வரும் மற்ற குழந்தைகளும் படிப்படியாக இவ்வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

”தாத்தோ, வணக்கம்!”

தாத்தோவிற்கு ஒரே வியப்பு.

”மாயா, வணக்கம்!”

மாயாவிற்கு ஆச்சரியம்.

”கோத்தே, வணக்கம்!”

கோத்தேவிற்கும் வியப்புத் தாளவில்லை.

”நீக்கா, வணக்கம்!”

நீக்காவிற்கு என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

”எனக்கு உன் பெயர் மறந்து விட்டது, ஞாபகப்படுத்து.”

”கியோர்கி!”

”கியோர்கி, வணக்கம்!…”

அனைவரின் கரங்களையும் பற்றிக் குலுக்குகிறேன், கண் பார்வையிலேயே அவர்களின் உயரங்களைக் கணித்து அதற்கேற்றபடி உட்கார வைக்கிறேன்.

தீமாவைக் கூட்டி வந்தார்கள். இச்சிறுவன் சற்றே மனச் சோர்வானவன்.

”தீமா, வணக்கம்!” என்று கூறியபடியே கையை நீட்டுகிறேன்.

படிக்க:
மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை
நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்!

அவன் கரத்தை நீட்டவில்லை. தன் கணவன் வெளி நாட்டில் வேலை செய்ததாகவும் அங்கு இரண்டு வருடங்கள் வாழ்ந்ததாயும், குழந்தைகள், முன் பின் அறிமுகமில்லாதவர்களுடன் சிறுவனுக்குப் பழக்கமில்லை என்றும், அவனுக்கு நண்பர்கள் மிகக் குறைவாகவே இருந்ததாயும் தாய் விளக்குகிறாள்.

தீமா தன் தாயின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட மறுக்கிறான். விக்டரும் அம்மா இல்லாமல் வகுப்பறையினுள் நுழைய மறுத்து விடுகிறான். சரி, அம்மாக்களும் வகுப்பறையினுள்ளேயே உட்கார்ந்திருக்கட்டும்.

அதிகாரத் தோரணையுடைய ஒரு பெண்மணி திடீரென அறையினுள் நுழைந்து தன் மகனை என் வகுப்பிற்கு மாற்றப் போவதாக அறிவிக்கிறாள். இது இயலாது என்று நான் விளக்க முற்படுகிறேன்.

”ஆனால், இப்போதுதான் நீங்கள் இரண்டு குழந்தைகளை இவ்வகுப்பில் சேர்த்தீர்களே!” என்று அவள் கோபத்தோடு கூறுகிறாள்.

வகுப்பில் இடமில்லை என்பதைக் காட்டி அமைதியாக, சன்னமான குரலில் நான் தரும் விளக்கங்களில் திருப்தியடையாத அப்பெண்மணி அமைச்சகத்தில் முறையீடு செய்யப் போவதாகச் சொல்லிவிட்டு வெளியேறுகிறாள்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

பொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் | திருச்சி ஆர்ப்பாட்டம் !

பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதிவெறியர்களையும், வெறியூட்டி தூண்டி விட்ட பா.ம.க தலைமையையும் கைது செய்!

சாதி-மத வெறிக் கருத்துகளைப் பரப்பி, கலவரங்களைத் தூண்டிவிடும் அமைப்புகளைத் தடை செய்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்   : 25.04.2019 வியாழன்,
நேரம் :
மாலை 5.30 மணி,
இடம்  : 
குறத்தெரு, உறையூர், திருச்சி.

தலைமை:

தோழர் ஞா. ராஜா,
ஒருங்கிணைப்பாளர், திருச்சி.

சிறப்புரை: 

தோழர் காளியப்பன்,
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.

மற்றும் பிற அரசியல் கட்சியினர், ஜனநாயக சக்திகள் உரையாற்றுகின்றனர்.

தமிழக அரசே!

  • பானைக்கு வாக்களித்த தலித் மக்களை பாதுகாக்கத் தவறிய தேர்தல் ஆணைய அதிகாரிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்!
  • பாதிக்கப்பட்ட பொன்பரப்பி தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கு!

தமிழக மக்களே!

  • ஆளை மாற்றும் தேர்தலால் அகன்று விடாது சாதி வெறி!
  • அரசுக் கட்டமைப்பை மாற்றுவதொன்றே சாதி வெறியை வீழ்த்தும் வழி!

பொன்பரப்பி வன்கொடுமைக் குற்றத்துக்கு மருத்துவர் ராமதாசே முழுப்பொறுப்பு !

பொன்பரப்பி தாக்குதல் என்பது பா.ம.க-வின் சாதிவெறி அரசியலும், பா.ஜ.க-வின் இந்து மதவெறி அரசியலும் கூட்டுச் சேர்ந்து தலித் மக்களுக்கு எதிராக நடத்தியிருக்கும் வன்முறை. இது காட்டுமிராண்டித்தனத்திற்கும் நாகரீக சமூகத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம்.

நமது சமூகத்தின் மீது உண்மையிலேயே அதிகாரம் செலுத்துபவை சாதி-மதவெறி அமைப்புகள்தானே தவிர, இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி அல்ல, இது ஜனநாயகமும் அல்ல என்பதையே இந்த சாதிவெறித் தாக்குதல் தெளிவாக நிரூபிக்கிறது. தேர்தல் ஆணையம், காவல்துறை உள்ளிட்ட யாரும் இந்த தாக்குதலைத் தடுக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை . இவர்கள் அனைவருமே சாதிவெறியர்களுக்கு ஆதரவாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது நாம் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை.

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் வி.சி.க தலைவர் திருமாவளவனை ஆதரிக்கக் கூடாது என பிள்ளை, வன்னியர், செட்டியார், பார்ப்பனர், நாயுடு என பிற ஆதிக்க சாதியினர் அனைவர் மத்தியிலும் பிரச்சாரம் நடந்திருக்கிறது. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, சாதி உணர்வை மனதில் வைத்து பானை சின்னத்தை புறக்கணித்து அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு தீண்டாமை வெறியைத் தூண்டியிருக்கின்றனர். இந்த தேர்தல் ஜனநாயகத்தின் யோக்கியதை இதுதான்.

சிதம்பரம் நகரத்திலேயே நடைபெற்ற இந்த பிரச்சாரத்துக்கும், பொன்பரப்பி கிராமத்தில் பா.ம.க.-வினர் கையில் ஆயுங்களுடன் இந்து முன்னணி உடன் சேர்ந்து கொண்டு நடத்தியிருக்கும் தாக்குதலுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. இது வெறும் பொருட்சேதம் குறித்த பிரச்சினை அல்ல, ஜனநாயகம் என்பது பெயரளவில் கூட இருக்கக் கூடாது என்பதுதான் இந்த தாக்குதல் மூலம் சாதி-மத வெறியர்கள் நமக்குக் கூறும் செய்தி. அனைத்து மக்களும் அமைதியாக வாழமுடியாமல் சாதி மத வெறி கருத்துக்களை விதைத்து அதன் மூலம் பாசிச அதிகாரத்தை அரசிலும் சமூகத்திலும் வேரூன்ற செய்வதுதான் இத்தகைய தாக்குதல்களின் நோக்கம்.

இசுலாமிய, கிறுஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் இந்துக்களிடம் மதவெறியைத் தூண்டி அதை தனது அரசியல் ஆதாயத்துக்காக பாரதிய ஜனதா கட்சி எப்படி பயன்படுத்திக் கொள்கிறதோ, அதே சூத்திரத்தை பயன்படுத்தி தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலின் மூலம் சாதிவெறியைத் தூண்டி பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் ஆதாயமடைகிறது. தேசியக் கட்சியான மதவெறி பாஜகவும், மாநிலக் கட்சியான சாதிவெறி பாமகவும் இணையும் புள்ளி இதுவே! இந்த அடிப்படையில்தான் அந்த கூட்டணி அமைந்துள்ளது. தேர்தல் அரசியலுக்கு அப்பாற்றப்பட்ட இயற்கைக் கூட்டணி அது!

தீண்டாமை என்பது தலித் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினை அல்ல, சாதி இந்து சமூகம் இழைக்கின்ற குற்றச்செயல். இதில் தேர்தல் கட்சிகளும், பெரும்பான்மை சமூகத்தினரும் அமைதியாக இருப்பதும், பா.ம.க. இந்து முன்னணியைக் கண்டிக்காமல் இருப்பதும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கேடாக முடியும்.

இது பொன்பரப்பி தலித் மக்களின் பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை!

கொலை மிரட்டல் விடுத்து, கும்பலாக நமது வீட்டை அடித்து நொறுக்கினால், நாம் என்ன நீதியை அரசிடம், சமூகத்திடம் கோருவோமோ அந்த நீதி பொன்பரப்பி மக்களுக்கு கிடைப்பதற்கு நாம் அனைவரும் போராட வேண்டும்!


தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி மண்டலம்,
திருச்சி – 94454 75157 .
மணப்பாறை – 98431 30911.
கரூர் – 97913 01097.

அந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி

அந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிடுறோம். இன்னைக்குதான் முஸ்லீம்னு பிரிக்கிறாங்க !

சென்னை குமணன்சாவடியிலிருந்து மாங்காடு செல்லும் வழியில் உள்ள ஆதம்பாய் பீஃப் பிரியாணிக்கடையின் வாடிக்கையாளர் ஒருவரிடம், பாஜக ஆட்சிக்கு வந்து மாட்டுக்கறிக்கு தடை விதித்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டோம்.

தான் மாட்டுக்கறி சாப்பிடத் தொடங்கிய வரலாறையும், மாட்டுக்கறியின் மகத்துவத்தையும், இன்று பாஜகவால் திட்டமிட்டு புகுத்தப்படும் மதவாதம் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் ஓட்டுநர் சங்கர்.

பாருங்கள் ! பகிருங்கள் !

 

சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி

மார்க்ஸ் பிறந்தார் – 28 – இறுதி பகுதி
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

முடிவுரை

வருடைய பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்; அவருடைய பணியும் நிலைத்திருக்கும்! – பிரெடெரிக் எங்கெல்ஸ்(1)

ஜென்னி மார்க்ஸ் மரணமடைந்து ஒரு வருடத்துக்குப் பிறகு, 1883 மார்ச் 14-ம் தேதியன்று கார்ல் மார்க்ஸ் இறந்த பொழுது “மனிதகுலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை”(2) என்று எங்கெல்ஸ் எழுதினார்.

மார்க்சின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருடைய இலட்சியம், அவருடைய கருத்துக்கள் மனிதகுலத்துக்குப் பெரு நிதியாகும். அதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூற இயலாது.

லண்டனில் உள்ள காரல் மார்க்சின் நினைவிடம்.

மனிதகுலக் கலாச்சாரத்தின் மொத்த வரலாற்றிலுமே மார்க்சியத்துடன் எந்த அளவிலாவது ஒப்பிடக் கூடிய ஒரு நிகழ்வு ஏற்பட்டதில்லை. அது வரையிலும் தத்துவஞானிகள் உருவாக்கிய தத்துவங்கள் ஒரு சிறு குழுவின் உடைமையாக மட்டுமே இருந்தன. அத்தத்துவங்கள் யதார்த்தத்தின் தனித்தனியான அம்சங்களை விளக்கின, அல்லது உலகத்தைக் கருத்தியலாக எடுத்துக்காட்டின.

அவர்கள் தமது உறுதியான நம்பிக்கைகளுக்கு ஏற்ப இதுவரையிலும் உலகத்திலிருந்த எல்லாவற்றையும் விளக்க முற்பட்டார்கள். தாங்கள் கூறுவதே முடிந்த முடிவு, மற்றவர்கள் இவற்றை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். இத்தத்துவ ஞானிகளின் ஊகங்கள் எத்தகைய சாயலைக் கொண்டிருந்தாலும் வரலாற்று உணர்வின்மையும் வறட்டுக் கோட்பாட்டுவாத அணுகுமுறையும் அவை அனைத்துக்கும் பொதுவான குறைபாடுகளாகும்.

இச்சிந்தனையாளர்களின் தத்துவங்கள் யதார்த்தத்தின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இயக்கவியல் விதிகளுக்கு ஏற்ப வாழ்க்கை தடுக்க முடியாதபடி முன்னேறிக் கொண்டிருந்த பொழுது உலகத்தை வெல்லப் போகின்றன என்று எதிர்பார்த்த கோட்பாடுகள், தோன்றிய உடனே காலாவதியாகிவிட்டன.

“தத்துவம் என் நண்பரே நரை கண்டது, வாழ்க்கை எனும் கற்பகத்தரு பசுமையானது!” (கேதே ஃபாவுஸ்டு)

இது கேதேயின் மணிமொழி. யதார்த்தத்தின் மெய்விவரங்களை, யதார்த்தத்தின் தற்காலிக நிகழ்வின் ஏதாவதொரு அம்சத்தைப் பிரதிபலிக்காமல் யதார்த்தத்தின் மெய்யான வளர்ச்சியை, அதன் நிரந்தரமான, தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் பிரதிபலிக்கின்ற தத்துவம் தோன்றிய பொழுது இந்த மணிமொழி தன்னுடைய உறுதியான தன்மையை இழந்தது.

படிக்க:
மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
♦ மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !

கண்களை மூடியிருந்த துணிகள் அகற்றப்பட்டன, வறட்டுக் கோட்பாட்டுச் சிந்தனையின் தப்பெண்ணங்கள் கைவிடப்பட்டன. முதன்முறையாக உலகம், விசும்பிலும் காலத்திலும் அதன் நிரந்தரமான வளர்ச்சியின் பல்தொகுதி மற்றும் முரண்பாடுகள் அனைத்துடனும் துல்லியமாக அப்படியே பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. இத்தத்துவத்தின்படி இயற்கையின் வளர்ச்சியின் ஆக உயர்ந்த கட்டமாக மனித சமூகம் தோன்றுகிறது, திட்டவட்டமான, அறியப்படக் கூடிய இயற்கை – வரலாற்று விதிகளின் அடிப்படையில் அது முன்னேற்றமடைகிறது.

யதார்த்தத்தை அறிகின்ற முறையியலின் நோக்கிலிருந்து மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாக வரையறுப்பதென்றால் அதன் முரணில்லாத வறட்டுச் சூத்திரவாத எதிர்ப்பையும் முரணில்லாத வரலாற்றுணர்வையுமே குறிப்பிட வேண்டும்.

மார்க்சியத்தின் இந்தச் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் மார்க்சும் எங்கெல்சும் இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றைப் பற்றித் தங்களுடைய கருத்துக்களின் அமைப்பை முழுமையாக விளக்குகின்ற நூல்களை, “மார்க்சியத்தைப் பற்றிய வினாவிடை” நூல்களை எழுதவில்லையே என்று வியப்படைகிறார்கள். அவர்களில் சிலர் இத்தகைய “வினாவிடை நூல்களை” எழுதுவதற்கு முயற்சியும் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சியின் பலன் கொச்சையான மார்க்சியமே.

ஏனென்றால் மார்க்சியம் என்பது எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்கெனவே தயாரித்த பதில்களைத் தருகின்ற தத்துவமல்ல, பிரபஞ்சத்தைப் பற்றிய தத்துவ ரீதியான மாதிரிப்படிவமல்ல, “கட்டாயமான” வரலாற்றுத் திட்டமல்ல. நிரந்தரமான வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் உட்படுகின்ற ஒன்றை அறிகின்ற முறையே மார்க்சியம். அது சமூக உறவுகளைப் புரட்சிகரமாகத் திருத்தியமைக்கும் செயல்திட்டம், அத்தகைய சீரமைப்புப் போராட்டத்துக்கு அது ஆயுதம்.

மார்க்சுக்கு முன்பே கூட மனிதனுடைய அறிவு பல இயற்கை நிகழ்வுகளையும் விதிகளையும் விஞ்ஞானரீதியாக விளக்கியிருக்கிறது; ஆனால் சமூக உறவுகளின் துறையில் கடந்தகாலச் சிந்தனையாளர்கள் இருட்டில் அலைந்து கொண்டிருந்தார்கள். எல்லாச் சமூக நிகழ்வுகளையும் முற்றும் விளக்கிக் கூற முடியும் என்ற பொய்யான கோரிக்கைகளை மார்க்சியம் நிராகரித்தது. ஆனால் அவற்றை ஆராய்வதற்கு நம்பகமான, சரியான வழியைக் காட்டியது.

ஆகவே சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சி முதன்முறையாக முற்றிலும் விஞ்ஞான அடிப்படையில் அமைக்கப்பட்டது. மனிதகுலத்தின் வரலாற்றில் புரட்சிகரமான கொந்தளிப்புக்கள் ஏராளமாக இருந்திருக்கின்றன; ஆனால் மார்க்சுக்கு முன்பு உண்மையிலேயே புரட்சிகரமான உலகக் கண்ணோட்டம் என்பது கிடையாது. இப்பொழுது பெருந்திரளான மக்களின் புரட்சிகரமான இயக்கமும் புரட்சிகரமான சிந்தனையும் ஒன்றாகச் சேர்ந்தன. மார்க்சியம் வரலாற்றின் “உந்துவிசையாக” மாறி, அதனை வேகப்படுத்தியது.

மார்க்சியக் கருத்துக்கள் பரவிய வேகத்தைப் பற்றி வியப்படையாதிருக்க இயலாது. கம்யூனிஸ்டு அறிக்கை வெளியிடப்பட்ட காலத்தில் ‘கம்யூனிஸ்டு சங்கத்தில்’ சில டஜன் உறுப்பினர்கள் இருந்தார்கள். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் முதல் வெகுஜன, போர்க்குணமிக்க அமைப்பாகிய சர்வதேசத் தொழிலாளர் சங்கம் 1864-ல் நிறுவப்பட்டது. கம்யூனிசம் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச இயக்கமாக மாறத் தொடங்கியது. 1871-ல் பிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நடத்திய புரட்சிகரமான போராட்டத்தின் மூலம் கம்யூனிசக் கருத்துக்களை அமுலாக்குகின்ற முதல் வீரமிக்க முயற்சியைச் செய்தது. அது ஏற்படுத்திய பாரிஸ் கம்யூன் மூன்று மாத காலம் நீடித்தது.

முதலாவது அகிலத்தின் குழந்தையான பாரிஸ் கம்யூனின் அனுபவத்தைப் பொதுமைப்படுத்திய மார்க்ஸ் அதை ஒரு புதிய ரகத்தைச் சேர்ந்த அரசாக, பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக, உழைப்பின் பொருளாதார விடுதலை தொடங்கக் கூடிய ஒரே அரசியல் வடிவமாகக் கண்டார். உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவது பாட்டாளி வர்க்க அரசின் கடமை என்று மார்க்ஸ் வலியுறுத்தினார். கம்யூன் அதிகாரவர்க்க உணர்ச்சியை வேரோடு அகற்றுவதை, எல்லா அரசு ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளையும் பெருந்திரளான மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதை, கம்யூன் தன்னுடைய நடவடிக்கைகளுக்குப் பெருந்திரளான உழைக்கும் மக்களை ஆதாரமாகக் கொள்வதை மார்க்ஸ் வரவேற்றார்.

மார்க்சும் எங்கெல்சும் தங்களுடைய வாழ்க்கையின் இறுதியில் உலகப் புரட்சிகர இயக்கத்தின் கேந்திரமாக மாறிக் கொண்டிருந்த ருஷ்யாவை நோக்கி மென்மேலும் அதிகமான கவனத்தைச் செலுத்தினார்கள் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். மார்க்சின் மூலதனம் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட நாடு ருஷ்யா. பாட்டாளி வர்க்கம் வெற்றியடைந்த முதல் நாடும் ருஷ்யாவே.

ஐரோப்பிய வரலாற்றில் புதிய திருப்புமுனை ருஷ்யாவில் நடைபெறுகின்ற சம்பவங்களுடன் இணைந்திருக்கும் என்று மார்க்ஸ் ஸோர்கேக்கு எழுதினார். “ருஷ்யாவிலுள்ள நிலைமைகளைப் பற்றி அதிகாரபூர்வமல்லாத மற்றும் அதிகாரபூர்வமான ஆவணங்களை (இவை வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடியவை, பீட்டர்ஸ்பர்கிலிருக்கும் நண்பர்கள் மூலம் இவை எனக்குக் கிடைத்தன) நான் ஆராய்ந்திருப்பதன் அடிப்படையில் ருஷ்யா ஒரு மாபெரும் கொந்தளிப்பின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது, அதற்குரிய எல்லாக் கூறுகளும் தயாரிக்கப்பட்டுவிட்டன எனக் குறிப்பிடுவேன்”(3) என்று மார்க்ஸ் எழுதினார்.

ருஷ்ய சமூகத்தின் அதிகாரபூர்வமான பகுதிகள் அனைத்தும் பொருளாதார மற்றும் அறிவுரீதியாக முற்றிலும் நசிவு நிலையில் இருக்கின்றன என்று எழுதிய மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்: “இதுகாறும் எதிர்ப்புரட்சியின் உடைக்கப்படாத அரணாகவும் சேமப்படையாகவும் இருந்து வந்திருக்கும் கிழக்கில் இம்முறை புரட்சி தொடங்குகிறது.”(4)

ருஷ்யப் புரட்சியைப் பார்க்கின்றவரை தான் உயிரோடிருக்க இயலும் என்று மார்க்ஸ் நம்பினார். பாட்டாளி வர்க்க வெற்றிகள் ஏற்படப் போகின்ற தருணத்தையும் அவை எவ்வளவு அண்மையில் இருக்கின்றன என்பதைப் பற்றியும் மதிப்பிடுங்கால் மார்க்சும் எங்கெல்சும் சற்றுத் தவறு செய்திருக்கலாம். ஆனால் இத்தவறுகள் புரட்சியைத் “துரிதப்படுத்த வேண்டும்” என்ற எண்ணத்தினால் ஏற்படவில்லை. அத்தகைய பிளான்கிவாத அணுகுமுறை அவர்களுக்கு முற்றிலும் அந்நியமாகும். “இத்தகைய தவறுகள், புரட்சிகரச் சிந்தனை மேதைகள் செய்த தவறுகள்…. அதிகாரபூர்வமான மிதவாதத்தின் அலுத்துப்போன அறிவைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிக மேன்மையானவை, மகத்தானவை, வரலாற்று ரீதியில் அதிகமான பயனுள்ளவை, உண்மையானவை”(5) என்று லெனின் முற்றிலும் சரியாக மதிப்பிட்டார்.

விளதிமிர் இலியிச் லெனின் (உலியானவ்) சிறுவயது புகைப்படம்.

மார்க்ஸ் மரணமடைந்த வருடத்தில் நெடுந்தொலைவுக்கு அப்பால், ஸிம்பீர்ஸ்க் என்ற ருஷ்ய நகரத்தில் விளாதிமிர் உலியானவ் என்ற பதின்மூன்று வயதுப் பள்ளி மாணவன் ஏற்கெனவே புரட்சிகர ஜனநாயக நூல்களைப் படிக்கத் தொடங்கியிருந்தான். அவன் பதினைந்தாம் வயதில் மார்க்சின் மூலதனத்தைப் படித்து முடித்தான். அவன் சீக்கிரத்தில் ருஷ்யாவில் மார்க்சியத்தை எழுச்சியுடன் பரப்புவோனாகவும் புரட்சிகரத் தொழிலாளர் கட்சியின் அமைப்பாளனாகவும் மாறினான்.

மார்க்சியக் கருத்துக்களைப் படைப்புத் தன்மையுடன் வளர்ப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஒரு புதிய சகாப்தம், அதே சமயத்தில் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையிலும் கம்யூனிஸ்டு அறிக்கையில் எடுத்துக் கூறப்பட்ட புதிய உலகத்தை நிர்மாணிப்பதிலும் புதிய சகாப்தம் விளதிமிர் இலியிச் லெனின் (உலியானவ்) பெயருடன் இணைந்திருக்கிறது.

19-ம் நூற்றாண்டு விஞ்ஞானக் கம்யூனிசத்தின் தத்துவம் பிறந்த நூற்றாண்டு என்றால் 20-ம் நூற்றாண்டு ஒரு புதிய சமூகத்தின், “பரிபூரணமான மனிதாபிமானம் என்ற கம்யூனிச சமூகத்தை” நிர்மாணித்துக் கொண்டிருக்கும் நாடுகளின் குடும்பம் பிறந்த நூற்றாண்டாகும்.

நமது யுகத்தில் சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல. சோவியத் யூனியனைச் சுற்றித் திரண்டிருக்கின்ற பல நாடுகளில் சோஷலிசம் யதார்த்தமாகிவிட்டது. அங்கே ஒரு புதிய சமூகம் உருவாக்கப்பட்டது. அந்தச் சமூகத்தில் சுரண்டலும் சமூக ஏற்றத்தாழ்வும் மனிதனுடைய தகுதியைக் குறைக்கின்ற எல்லா வடிவங்களும் ஒழிக்கப்பட்டுவிட்டன. அங்கே நெருக்கடிகள் இல்லாத பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது, உழைக்கும் மக்களின் பொருளாயத சுபிட்சம் தொடர்ச்சியாக முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது, அதனைத் தொடர்ந்து அவர்களுடைய கலாச்சார நிலையும் ஆன்மிக வளமும் அதிகரிக்கின்றன. அங்கே விஞ்ஞான, மார்க்சிய-லெனினிய உலகக் கண்ணோட்டத்தை வழிகாட்டியாகக் கொண்ட உழைக்கும் மக்கள் சமூக நிகழ்வுப் போக்குகள் அனைத்தையும் தாமே இயக்குகிறார்கள். தனிமனிதனுடைய சர்வாம்ச, வரம்பற்ற வளர்ச்சியே, “முன்பே முடிவு செய்யப்பட்ட மட்டங்களுக்குச் சம்பந்தமில்லாமல் அனைத்து மனித சக்திகளின்”(6) வளர்ச்சியே அந்தச் சமூகத்தின் குறிக்கோளாக இருக்கிறது.

சோஷலிச நாடுகளின் வளர்ச்சி, பலத்தின் முன்னேற்றம், அவை பின்பற்றுகின்ற சமாதானம் மற்றும் பதட்டத்தணிவுக் கொள்கைகளின் ஆக்கபூர்வமான விளைவு மனிதகுலத்தின் சமூக முன்னேற்றத்தின், உலகப் புரட்சிகர நிகழ்வுப் போக்கின் முக்கியமான போக்காக இருக்கின்றன. ஏகாதிபத்தியம், ஏகபோகங்கள், காலனியாதிக்க எச்சமிச்சங்கள் ஆகியவற்றை எதிர்த்து சமாதானம், தேசிய சுதந்திரம் மற்றும் சோஷலிசத்துக்காக நடைபெறும் போராட்டத்தில் எல்லா நாடுகளிலும் உழைக்கும் மக்கள் மென்மேலும் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்போராட்டத்தில் அவர்களுடைய பாதையில் ஒளி பாய்ச்சுவது மார்க்சிய-லெனினியத் தத்துவமே. முதலாளிவர்க்க சித்தாந்திகள் மார்க்சியத்தை “மறுப்பதற்கும்” “அழிப்பதற்கும்” தங்கள் முழுச் சக்தியையும் தொடர்ந்து செலவிடுகிறார்கள். அவர்கள் மார்க்சியத்துக்குப் பதிலாக இன்றைய அற்பவாதிகள் விரும்புகின்ற வேறு தத்துவங்களை நிறுவுவதற்கு முயற்சி செய்கிறார்கள்; விஞ்ஞான சோஷலிசத்துக்குப் பதிலாக மார்க்சும் எங்கெல்சும் தம் காலத்தில் கூர்மையாகக் கிண்டல் செய்த “மிதவாத சோஷலிசத்தை” நிறுவப் பாடுபடுகிறார்கள்.

இம்முயற்சிகள் அனைத்தும் வீணாகி வருவதை நாம் பார்க்க முடியும். மார்க்ஸ் சுட்டிக்காட்டிய திசையில் வரலாறு தடுக்க முடியாதபடி முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலகக் கம்யூனிஸ்டு இயக்கம் மென்மேலும் வலிமையடைந்து கொண்டிருக்கிறது.

நம் காலத்தில் சமூக மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகமான வேகத்தோடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாபெரும் முக்கியத்துவத்தைக் கொண்ட புதிய அரசியல் சம்பவங்களும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் நடைபெறுவதைப் பற்றிப் படிக்கிறோம். சமூக முன்னேற்றத்துடன் இணைந்து மார்க்சியத் தத்துவமும் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அது புதிய உண்மைகளைப் பொதுமைப்படுத்தி உலகத்துக்குப் புதிய வானங்களைக் காட்டுகிறது. தத்துவஞானமும் சமூக ஆராய்ச்சியும் தங்களுடைய சாதனைகளைப் பற்றித் திருப்தி கொண்டு வெகுஜன எளிமையை நோக்கமாகக் கொண்டால் அவை வறட்டுச் சூத்திரவாத, கோட்பாட்டுவாதப் படுகுழியில் விழுந்து விடும்.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
♦ கம்யூனிசம் வெல்லும்

மார்க்சிய-லெனினியம் வாழ்க்கையை விட்டு விலகுவதில்லை, குறுங்குழுவாதக் கோட்பாட்டின் வரையரைக்குள் தன்னை அடைத்துக் கொள்வதில்லை. மனிதகுலத்தின் மொத்தக் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பொதுமைப்படுத்தி விமர்சன ரீதியில் புத்தாக்கம் செய்வதை அடிப்படையாக கொண்ட மார்க்சியம் மனிதகுல மேதைகளின் மகத்தான சாதனைகளைத் தன்வயமாக்கிக் கொண்டு மேலும் வளர்ச்சி அடைகிறது.

மார்க்சின் துணிவு மிக்க, படைப்பாற்றலுடைய, புதியனவற்றைத் தேடுகின்ற சிந்தனை இன்றைய உலகத்தில் வாழ்கிறது, தொடர்ந்து போராடுகிறது. அது விஞ்ஞானி, தத்துவஞானி, அரசியல்வாதி ஆகியோரது பணியில் பங்கெடுக்கிறது. வாழ்க்கையிலும் சமூகப் போராட்டத்திலும் ஒவ்வொரு நபரும் தனக்குரிய இடத்தைப் பெறுவதற்கு அது உதவி செய்கிறது. அது சமூகத்திலிருந்து எல்லாவிதமான கசடுகளையும் அகற்றுவதற்கு, மனித குலத்தினருக்கு துன்பங்களையும் யுத்தங்களையும் வறுமையையும் பசியையும் அநீதியையும் ஒழிப்பதற்கு உதவி செய்கிறது.

இந்த பூமியில் மனிதனுடைய மாபெரும் தகுதிகளுக்கேற்ற சிறப்பான வாழ்க்கையை அமைப்பதற்கு அது உதவி செய்கிறது.

குறிப்புகள்:

(1) Karl Marx and friedrick Engles, SelectedWorks in 3 volumes, Vol. 3, Moscow,1976, p. 163.
(2) Marx, Engles, Selected correspondence, p. 340.
(3) Marx, Engles, Selected correspondence, p. 289
(4) Ibid.
(5) V. I. Lenin, Collected Works, Vol.12, p. 378.
(6) Karl Marx, Grundrisse der Kritik der Politischen Okonomie, Dietz Verlag, Berlin, 1953, s. 387.

– முற்றும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986-ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய 27 பாகங்களை படிக்க:

மார்க்ஸ் பிறந்தார் – வரலாற்றுத் தொடர்

பி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா ! மோடி அரசின் சதிகள் !

மைய அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சென்ற மார்ச் மாதம் 16-ம் தேதி வரை சம்பளம் தரப்படவில்லை என்று நாளிதழ்களில் வந்த செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும்.

இது மட்டுமின்றி 54,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வில் அனுப்பப்படுவார்கள் என்றும் செய்தி வெளியாகியிருக்கிறது. “விருப்ப ஓய்வில் போய்விடுவதே நல்லது” என்ற கருத்தை ஊழியர்களிடம் உருவாக்குவதற்காகத்தான் சம்பளம் திட்டமிட்டே தாமதப்படுத்தப்பட்டிருக்கும் என்ற ஐயம் இப்போது எழுகிறது.

மேலும், பி.எஸ்.என்.எல்-ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மூன்று மாதங்களாகக் கூலி வழங்கப்படவில்லை. மின்கட்டணம் செலுத்தப்படாததால், மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுப் பல கிராமப்புற தொலைபேசி நிலையங்களின் கோபுரங்கள் (டவர்கள்) இயங்கவில்லை. இவையனைத்தும் பி.எஸ்.என்.எல்.  மூடப்படுவதற்கான அறிகுறிகள்.

வர்தா புயலில் சென்னை மாநகரின் அத்தனை செல்பேசி சேவைகளும் செயலிழந்தபோது பி.எஸ்.என்.எல். மட்டுமே வேலை செய்தது. பழுதான செல்பேசி கோபுரங்களைச் செப்பனிட்டு, முறையான சேவையை விரைந்து மீட்டதும் பி.எஸ்.என்.எல்.தான். காரணம், அந்த ஊழியர்களது உழைப்பு என்பது ஒரு பகுதி உண்மை. முதன்மையான காரணம் என்ன? இலாப நோக்கில் செயல்படும் கார்ப்பரேசனாக மாற்றப்பட்ட போதிலும்கூட, இலாப நோக்கம் கருதாமல் ஒரு அத்தியாவசிய சேவை என்ற அடிப்படையில் மக்களுக்கு விரைந்து சேவையை சீர்செய்து அளிக்க வேண்டும் என்று பி.எஸ்.என்.எல். கருதியது. ஏனெனில், பி.எஸ்.என்.எல். பொதுத்துறை நிறுவனம்.

தனியார் செல்பேசி நிறுவனங்கள் எதுவும் அவ்வாறு கருதவில்லை. புயலில் பழுதான உபகரணங்களைக் காட்டிக் காப்பீட்டு நிறுவனங்களிடம் காசு வாங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனரேயன்றி, பழுதை நீக்க அவர்கள் முயற்சிக்கவில்லை. வாடிக்கையாளர் நலன், அத்தியாவசிய சேவை என எதுவாக இருந்தாலும், அவை அனைத்தைக் காட்டிலும் முதன்மையானது கம்பெனியின் இலாபம் என்பதே அவர்களது அணுகுமுறை.

54,000 ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பும் மோடி அரசின் முடிவை எதிர்த்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் – தொழிலாளர்கள் தலைநகர் டெல்லியில் கூடி நடத்திய ஆர்ப்பாட்டம்.

தனியார் சேவைக்கும் பொதுத்துறை சேவைக்கும் இடையிலான இந்த வேறுபாட்டை ஒவ்வொரு புயல் வெள்ளத்தின் போதும் பார்க்கலாம். தொலைபேசித்துறை மட்டுமல்ல, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட எல்லா அத்தியாவசிய துறைகள் விசயத்திலும் இந்த வேறுபாட்டை நாம் காணலாம்.

ஆகவே, பி.எஸ்.என்.எல். மூடப்படுவது என்பதை அதில் பணிபுரியும் 1,76,000 ஊழியர்களின் பிரச்சனை என்று யாராவது இன்னமும் கருதிக் கொண்டிருந்தால், விழித்துக் கொள்ளுங்கள், இது மக்களின் தகவல் தொடர்பு குறித்த பிரச்சினை.

*****

பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏன் நட்டத்தில் நடக்கிறது? “மற்ற தனியார் செல்பேசி நிறுவனங்களைக் காட்டிலும் இங்கே ஊழியர் எண்ணிக்கை அதிகம். அதுதான் நட்டத்துக்கு முதல் காரணம்” என்று அரசு கூறுகின்றது. “பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை ஒரேயடியாக இழுத்து மூடிவிட்டால் என்ன?” என்பது குறித்து கருத்துக் கூறுமாறு அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மைக் கல்விக் கழகத்திடம் ஒரு வருடத்திற்கு முன்பே – ஏப்ரல் 2018 – இல் கேட்டிருக்கிறது மோடி அரசு.

படிக்க:
ஜியோவுக்காக மூடுவிழா காணவிருக்கிறது பி.எஸ்.என்.எல். ! மோடி அரசின் சாதனை தொடர்கிறது !
♦ “குழந்தைகளின் உணவுக்குகூட பணம் இல்லை” : பி.எஸ்.என்.எல் ஊழியர்களை கதறச் செய்த மோடி அரசு !

பி.எஸ்.என்.எல். நட்டத்திற்குக் காரணம் ஊழியர்களின் எண்ணிக்கைதான் என்று சித்தரிப்பது உண்மைக்குப் புறம்பானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கம்பம் நட்டு, கம்பி இழுத்து, பூமிக்கு அடியில் கம்பிவடம் பதித்து, நாடு முழுவதும் மைக்ரோ வேவ் கோபுரங்கள் அமைத்துத் தொலைபேசி வலைப்பின்னலை தமது உழைப்பின் மூலம் உருவாக்கியவர்கள் தொழிலாளர்கள். கிரகாம் பெல்லின் தொலைபேசி முதல் இன்றைய செல்பேசி வரைத் தகவல் தொழில்நுட்பம் கடந்து வந்திருக்கும் பாதை நெடியது. பி.எஸ்.என்.எல். – இன் நவீன காப்பர் மற்றும் கண்ணாடி இழை கேபிள் வலைப் பின்னல் போன்றவையெல்லாம் மூன்றரை இலட்சம் ஊழியர்களின் கால் நூற்றாண்டு உழைப்பில் உருவானவையாகும்.

இவை அனைத்தையும் உருவாக்கிய ஊழியர்களை இப்போது தேவையற்றவர்கள் என்று கூறும் கண்ணோட்டம், வயது முதிர்ந்த பெற்றோரைச் சுமை என்று வீட்டைவிட்டுத் துரத்தும் சுயநல, அயோக்கியத்தனத்துக்கு நிகரானது.

*****

கவல் தொழில்நுட்பத் துறையில் அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சியின் சமீபத்திய கட்டத்தில் வந்தவைதான் செல்பேசிகள். இந்த செல்பேசி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானவுடன், அந்தச் சேவையை அரசுத்துறையே அளித்திருக்க முடியும் என்ற போதிலும், பி.எஸ்.என்.எல். அதில் நுழைவதற்கு வாஜ்பாயி அரசு தடை விதித்தது. செல்பேசி கோபுரங்களைக்கூடத் தனியார் நிறுவனங்கள் தம் சொந்த செலவில் அமைத்துக் கொள்ளவில்லை. பி.எஸ்.என்.எல்.-இன் வலைப்பின்னலையும் மைக்ரோவேவ் டவர்களையும் தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு வாடகைக்குக் கொடுக்குமாறு அரசு கட்டாயப்படுத்திக் கொடுக்க வைத்தது.

பிரதமர் நரேந்திர மோடி ஜியோவின் விளம்பர மாடலா? மோடியின் படம் அச்சிடப்பட்ட ஜியோ நிறுவனத்தின் விளம்பரம்.

அலைக்கற்றையை அரசாங்கம் வழங்கியது; கோபுரங்கள், அரசு தொலைபேசி நிறுவனத்துக்குச் சொந்தமானவை; மூலதனம், அரசுத்துறை வங்கிகளிடம் கடனாகக் கிடைத்தது. இதுதான் தனியார் தொழில்முனைவோர் இந்தத் “துறையை உருவாக்கிய” கதை. “இதற்குப் பதிலாக அரசே இந்தச் சேவையை நடத்தியிருக்கலாமே” என்ற கேள்விக்கு ஒரே பதில் – தனியார்மயம் – தாராளமயம் என்ற கொள்கை. இல்லை, கொள்ளை!

தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின்படி அரசுத்துறைகள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பதால், அரசு தொலைபேசித்துறையின் சந்தையைத் திட்டமிட்டுப் பிடுங்கித் தனியாருக்கு தரப்பட்டது. தனியார் நிறுவனங்கள் இந்த தொழிலுக்குப் புதியவர்கள் என்ற காரணத்தினால், ஏகபோகமாக இருந்த அரசு தொலைபேசித்துறையின் கை-கால்கள் அரசாலேயே கட்டிப்போடப்பட்டன. அதன் பின்னர் தனியார் முதலாளிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.

இப்படி ஏகபோகமாக இருந்த அரசுத்துறைக்கும் புதிதாக வந்த தனியார் துறைக்கும் இடையிலான “நடுவர்” என்ற பெயரில்தான் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைக்கப்பட்டது. அரசுத்துறையை ஒழித்துக் கட்டுவதுதான் இந்த ஒழுங்குமுறை ஆணையங்கள் அனைத்துக்கும் இடப்பட்ட பணி. அந்த வேலையை டிராய் செவ்வனே செய்தது.

நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் உலகச்சந்தையில் கிடைத்த போதிலும், தனியார் நிறுவனங்கள் வாங்கும் தொழில்நுட்பங்களை வாங்க பி.எஸ்.என்.எல்.-க்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. மொத்த செல்பேசி சந்தையையும் தனியார் முதலாளிகள் கைப்பற்றும் வரை, 2ஜி, 3ஜி தொழில்நுட்பங்களை பி.எஸ்.என்.எல். பயன்படுத்துவதை டிராய் தடுத்தது.

“4ஜி வாடிக்கையாளர்கள் 35 கோடிப் பேர் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் குறைந்தபட்சம் 3.5 கோடி சந்தாதாரர்களை எங்களால் ஈர்க்க முடியும்.  4ஜி பயன்படுத்த அனுமதி தாருங்கள்” என்று பி.எஸ்.என்.எல்., அரசிடம் வேண்டுகோள் வைத்தும் பயனில்லை. இதற்காகத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்தன. ஆனால் “தனியார் மூலம் மக்களுக்கு 4ஜி சேவை போதுமான அளவு கிடைத்துவிட்டதால், இனி பி.எஸ்.என்.எல்.-க்கு 4ஜி தொழில்நுட்பத்தை அனுமதிக்கத் தேவையில்லை” என நிதி ஆயோக் தடுத்துவிட்டது. நாளை தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 5ஜி தொழில்நுட்பத்துக்கு மாறும்போது, 4ஜி தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல்.-இன் தலையில் கட்டப்படும் என்று நம்பலாம்.

உலகில் இருக்கின்ற காலாவதியான தொழில்நுட்பங்களையெல்லாம் வாங்குமாறு அரசால் கட்டாயப்படுத்தப்பட்டதன் விளைவாக, பி.எஸ்.என்.எல்.-க்குப் பொருட்செலவு ஏற்பட்டது மட்டுமல்ல, சேவைத்தரம் குறைந்து வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்லுமாறு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

புறக்கணிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களுக்கு தனியார் நிறுவனங்கள் சேவை அளிப்பதில்லை.  பி.எஸ்.என்.எல். தான் இப்போதும் சேவைஅளிக்கிறது. வெள்ளம் , புயல்,  நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களிலும் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NDMA) தகவல் தொடர்பை மீட்கும் பொறுப்பை பி.எஸ்.என்.எல். -இடம்தான் ஒப்படைத்து வருகிறது.

42.11 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட வோடோபோனிடமோ, 34.18 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட ஏர் டெல்லிடமோ, இன்று அனைவரையும் மிக வேகமாகப் புறம்தள்ளி மொத்தச் சந்தையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோவிடமோ இந்தப் பணிகளை அரசு கொடுப்பதில்லை. 11.38 கோடி சந்தாதாரர்களுடன் தள்ளாடிக் கொண்டி ருக்கும் பி.எஸ்.என்.எல்.- இன் தலையில்தான் இலாபமற்ற சேவைகள் அனைத்தும் கட்டப்படுகின்றன.

இப்படியாக 100% தொலைபேசி சேவையை அளித்து வந்த பி.எஸ்.என்.எல்., சுமார் இருபதே ஆண்டுகளுக்குள் அடிமாட்டின் நிலைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. “அடிமாட்டுக்கு அனுப்பி விட்டால் என்ன?” என்று கேட்கிறது “கோ ரட்சக்” மோடியின் அரசு. அடிமாட்டை வாங்குவதற்குத் தனியார் முதலாளிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஏனென்றால், தொலைபேசித்துறை மற்றும் பி.எஸ்.என்.எல்.-இன் வசம் பல இலட்சம் கோடி மதிப்புள்ள நகர்ப்புற நிலங்கள், கட்டிடங்கள் உள்ளன. நாடு முழுவதும் பரவியிருக்கும் கோபுரங்கள் உள்ளன. இந்தக் கோபுரங்களை பி.எஸ்.என்.எல். இடமிருந்து பிரித்து “டவர் கார்ப்பரேசன்” என்று தனியொரு நிறுவனத்தை உருவாக்கி அதனிடம் ஒப்படைத்து விட்டால், பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகளில் 51 விழுக்காட்டை மட்டும் கைப்பற்றி விட்டால், மொத்த நிறுவனத்தையும் அப்படியே விழுங்கி விடலாம் என்பது தனியார் நிறுவனங்களின் ஆசை.

இப்படித்தான் நல்ல இலாபத்தில் இயங்கிவந்த வெளிநாடுகளுக்கான தொலைபேசி சேவையைப் பிரித்து, “விதேஷ் சஞ்சார் நிகாம்” என்ற அமைப்பை உருவாக்கி, அதனை டாடாவிடம் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்தது வாஜ்பாயி அரசு. இப்படித் தொலைபேசித்துறையைக் கசாப்பு போட்டு விற்பதைத் தொடங்கி வைத்தவர் வாஜ்பாயி என்றால், அதனை முடித்து வைக்கும் பொறுப்பை மோடி ஏற்றிருக்கிறார்.

*****

னியார்மய நடவடிக்கைகள் பிற துறைகளை ஒப்பிடும்போது, மிக வேகமாக அமல்படுத்தப்பட்டது, தொலைத்தொடர்பு துறையில்தான். இந்த நிலையிலும் பி.எஸ்.என்.எல்.,  11.38 கோடி சந்தாதாரர்களைத் தக்கவைத்து, தொலைத்தொடர்பு சந்தையின் மொத்த வருவாயில் 6 சதவீதத்தை ஈட்டிவருகிறது. சேவையிலும் வருவாயிலும் இந்தியாவிலேயே கேரள பி.எஸ்.என்.எல். முதல் இடத்தில் உள்ளது.

4ஜி தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல்.-க்குத் தரப்படவில்லை என்றாலும், அதற்கு இணையான தரத்தில் செல்போன் சேவையும்,  வை மாக்ஸ் டேட்டா சேவையும் கேரள பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. அங்கே தனியார் நிறுவனங்களால் கேரள பி.எஸ்.என்.எல்-க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மற்ற மாநிலங்களிலெல்லாம் சம்பள பாக்கி வைக்கப்பட்ட போதும், கேரளத்தில் மட்டும் உரிய தேதியில் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்கப்பட்டு விட்டது. கேரள மக்களின் பொதுத்துறை மீதான நம்பிக்கையும்,  பி.எஸ்.என்.எல்.- ஐப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வும் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியார்மயப்படுத்தும் சதிகளை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் – லுதியானா நகரில் நடந்த ஊழியர்களின் ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

“2017-18-இல் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில்  மார்ஷல் ஆன்டனி லியோ என்ற பொது மேலாளரின் பதவிக் காலத்தில், 90 ஆயிரம் தரை வழித்தட இணைப்புகள் அதிகரித்திருக்கின்றன. அது மட்டுமல்ல, 27 இலட்சம் புதிய செல்போன் இணைப்புகளுடன் தமிழகம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. பஞ்சாப் இரண்டாம் இடத்தில் உள்ளது” என்கின்றன சங்கங்கள்.

பி.எஸ்.என்.எல். அழியும் நிலையில் கடைசி இடத்தில் இருக்கும் மாநிலம் மோடியின் குஜராத். தொலைபேசித்துறை மட்டுமல்ல, அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகிய அனைத்திலும் கடைசி இடத்தில் இருப்பது இந்துத்துவத்தின் சோதனைச்சாலையான குஜராத்தான்.

மற்ற எல்லாத் துறைகளிலும் நடப்பதைப் போலவே, பொதுத்துறை அதிகாரிகள்தான் பொதுத்துறையை அழிப்பதற்கு கோடரிக் காம்புகளாகத் தனியார் முதலாளிகளுக்குப் பயன்பட்டிருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு தரம் கெட்ட கருவிகளைக் கொள்முதல் செய்து அரசு சேவையைச் சீர்குலைப்பது, பணி ஓய்வு பெற்ற பின் தனியார் நிறுவனத்தின் உயர் பதவியில் அமர்ந்து கொண்டு அரசுத்துறையை அழிக்க அவர்களுக்கு ஆலோசனை கூறுவது என இவர்களுடைய குற்றப்பட்டியல் மிக நீளமானது.

மாறாக, பி.எஸ்.என்.எல். காவு கொடுக்கப்படுவதை எதிர்த்த அதிகாரிகள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். மத்திய தொலைத் தொடர்புத்துறை செயலராக இருந்த ஜே.எஸ்.தீபக் 2017-இல் திடீரென்று அந்தப் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டது இதற்கொரு சான்று.

டேட்டாவுக்காக என்று பெறப்பட்ட அலைக்கற்றை உரிமத்தைக் குரல் அழைப்புகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம், சந்தையில் திடீரென்று ஒரு விலை வீழ்ச்சியை ஏற்படுத்தி மொத்த வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் இழுப்பதற்கு அம்பானி முயற்சி செய்ததும், அம்பானியின் ஜியோ விளம்பரத் தூதராகவே மோடி செயல்பட்டதும் நாம் அறிந்த கதை. இந்த முறைகேட்டை டிராய் ஆதரித்தது.

“அம்பானிக்கு ஆதரவாக டிராய் எடுத்திருக்கும் முடிவின் விளைவாக, மற்ற தனியார் தொலைபேசி நிறுவனங்கள் நட்டத்துக்குத் தள்ளப்பட்டு, அவர்களுக்குப் பல்லாயிரம் கோடி கடன் கொடுத்திருக்கும் பொதுத்துறை வங்கிகள்தான் அந்த நட்டத்தைச் சுமக்க வேண்டியிருக்கும்” என்று டிராயைக் கண்டித்துக் கடிதம் எழுதினார் தீபக்.

படிக்க:
வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக !
♦ கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !

அதேபோல, ஜியோவுக்கு ஒத்துழைக்கவில்லை என்று காரணம் கூறி மற்ற எல்லா நிறுவனங்களுக்கும் தண்டத்தொகை விதித்தது டிராய். இது ஒருதலைப்பட்சமானது என்றும் இத்தகைய அதிகாரமே டிராய்க்கு கிடையாது என்றும் ஆட்சே பித்தார் தீபக். விளைவு, அவர் பணி நிமித்தம் ஐரோப்பா சென்றிருந்த நிலையில், அந்தப் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார்.

பி.எஸ்.என்.எல். இன்று எதிர்நோக்கும் அழிவு என்பது அதன் அழிவு மட்டுமல்ல. இந்தியாவின் மொத்தத் தகவல் தொழில்நுட்பச் சந்தையும் அம்பானியின் ஏகபோகமாக மாறவிருப்பதற்குக் கூறப்படும் கட்டியம். இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் பற்றிய மொத்தத் தரவுகளையும் அம்பானி என்ற ஒரு முதலாளியின் தனிச்சொத்தாக மாற்றவிருக்கிறது மோடியின் இந்து ராஷ்டிரம்.

இன்று பி.எஸ்.என்.எல்.-ன் சந்தை சுருக்கப்பட்டுவிட்டது. ஊழியர் எண்ணிக்கையும் 3.5 இலட்சத்திலிருந்து 1.7 இலட்சமாக குறைந்து, இப்போது அதிலும் 54,000 பேர் விருப்ப ஓய்வில் அனுப்பப்படவிருக்கின்றனர்.

அரசுத் துறையாக இருந்த தொலைபேசித்துறையை “கார்ப்பரேசன்” ஆக்கியபோது, “தனியார்மயம் தவிர்க்கவியலாதது. ஊழியர்களின் வேலையையும் ஊதிய உயர்வையும் போனசையும் பாதுகாத்துக் கொள்வதை மட்டும்தான் நாம் செய்ய முடியும்” என்ற கருத்தைத் தொழிற்சங்கத் தலைமைகள் பிரச்சாரம் செய்தன. ஊழியர்களும் அதற்குப் பலியானார்கள்.

“அரசுத்துறைகள் ஒழிந்து தனியார் துறை வந்தால், அரசு ஊழியர்களின் ஆணவமும் மெத்தனமும் ஒழிந்து, மக்களுக்குத் தரமான சேவை கிடைக்கும்” என்று பிரச்சாரம் செய்தது ஆளும் வர்க்கம். மக்களும் அதற்குப் பலியானார்கள்.

இன்று பல இலட்சம்  கோடி மதிப்புள்ள பொதுமக்களின் சொத்தான தொலைபேசித்துறையும், ஊழியர்களின் வேலையும், அவர்களுடைய எதிர்கால ஓய்வூதியமும், மக்களுடைய அடிப்படைத் தேவையான தொலைபேசி சேவையும் பலிபீடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

கையில் வெட்டரிவாளோடு நிற்கிறது பூசாரியான மோடி அரசு. பலி கொள்ளவிருக்கும் கடவுள் எதுவென்று சொல்லவும் வேண்டுமா?

வீரையன்

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

சிவபெருமானின் சாதி என்ன ? | பொ . வேல்சாமி

1

சிவபெருமானின் சாதி “முதலியாரா”.. ? ஆம் “முதலியார்”தான் என்கிறது திருக்கோவையாருக்கான பழைய உரை.

நண்பர்களே….

ஏசுநாதர் ஒரு யூதர் என்பது யாவரும் அறிந்தது. சிவபெருமான் முதலியார் என்பதை நாம் அறிவோமா? மாணிக்கவாசகர் எழுதிய திருக்கோவையாருக்கு இரண்டு உரைகள் உள்ளன. ஒன்று “பேராசிரியர்” எழுதியது. மற்றொன்று ஆசிரியர் பெயர் தெரியாதது. எனவே அதனை பழைய உரை என்பார்கள். அந்த பழைய உரையில் 6 இடங்களில் சிவபெருமான் முதலியார் என்று குறிக்கப்படுகின்றார். இந்த பழைய உரை சுமார் 500, 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குறிப்பு:
தருமபுரம் ஆதினம் வெளியிட்டுள்ள பன்னிரு திருமறை தொகுதிகளில் எட்டாம் திருமறையான திருவாசகமும் திருக்கோவையாரும் இரண்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருக்கோவையாரில் பேராசிரியர் உரையும் பழைய உரையும் அச்சிடப்பட்டுள்ளதாக முதல் பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நூலின் எந்த இடத்திலும் இந்த பழைய உரை அச்சிடப்படவில்லை. எனவே அந்த நூலை கையில் வைத்துள்ள நண்பர்கள் இந்த பகுதிகள் இடம்பெறவில்லை என்று நினைக்க வேண்டாம். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள நூலில் இந்தப் பகுதிகள் உள்ளன. அந்நூலின் இணைப்பையும் உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் …

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

பொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை ! கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் !

ரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18-4-2019 அன்று திட்டமிட்டு பாமக, இந்து முன்னணி காலிகளால் சாதிக் கலவரம் நடத்தப்பட்டது.

இக்கலவரத்தை தலைமை தாங்கியவர்கள் இந்து முன்னணி மற்றும் பா.ம.க-வைச் சேர்ந்த வன்னிய சாதிவெறியர்களான  இராஜசேகர், பழனிவேல், சுப்ரமணியன், சொக்கன், பழனிச்சாமி, மதி, சத்தியசீலன், குமார், பாஸ்கர், வெற்றி, சரவணன்… ஆகியோருடன் உள்ளுர் மற்றும் வெளியூரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சாதிவெறியர்கள் பொன்பரப்பி காலணி பகுதியை தாக்கியுள்ளனர்.

தாக்குவதற்கு இரும்புக் கம்பிகள், பெரிய சவுக்கு மர உருட்டுக் கட்டைகள், கருங்கல், ஜல்லி என தயாரிப்புகளுடன் வந்துள்ளனர். இக்கும்பல் வெறி கொண்டு தாக்கியதில் 20 -க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 13 -பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், 2 -பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக்கலவரத்தை முன்னின்று நடத்தியது இந்து மதவெறி, ஆதிக்கசாதி வெறியர்கள் மட்டுமல்ல இவர்களைப் பாதுகாக்கும் போலீசும்தான். இவர்களால்தான் திட்டமிட்டு சாதிக் கலவரம் நடத்தபட்டுள்ளது.

பொன்பரப்பி கிராமம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது. இங்கு R.S.S., B.J.P -யின் இந்து மதவெறி பாசிசத்தை எதிர்கொண்டு களத்தில் நிற்கும் விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுவது இந்து முன்னணிகாரர்களுக்கு பொறுக்கவில்லை. தனது வெறியைத் தீர்க்க சாதியை முன்னிறுத்தி வன்னியர்களைத் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

படிக்க:
பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !

வாக்குசாவடியில் 1:00 மணிக்கு தொடங்கிய கலவரம் 3:00 மணிவரை நீண்டுள்ளது அதனால், பொன்பரப்பி காலனிபகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த அச்சத்தோடு அலறிஅடித்து கொண்டு ஓடியுள்ளனர் 100 -க்கும் மேற்பட்ட இந்து முன்னணி காலிகள், அவர்களை விடாது தெருக்களில் விரட்டி விரட்டி கற்களைக் கொண்டும், கட்டையாலும் தாக்கியதில் பலபேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் மக்களைச் சென்று பார்த்து விசாரித்தபோது இதற்குமுன் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை என்றும்,  “கடந்த காலங்களில் வன்னியர் பகுதி இளைஞர்களுக்கும் எங்கள் பகுதி இளைஞர்களுக்கும் கூட சச்சரவுகள் எல்லாம் வந்திருக்கிறது. ஆனால் இப்படி பெரிய பாதிப்பு இருக்காது, ஊருக்கு வெளியில் வைத்து பேசித் தீர்த்துக் கொள்வோம்.” என்றும் கூறுகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆனால் இச்சம்பவம் அப்படி நடக்கவில்லை. பாமக, இந்து முன்னணியைச் சேர்ந்த குண்டர்கள் திட்டமிட்டு ஊருக்குள் புகுந்து, கொலைவெறியோடு தாக்கியிருக்கின்றனர். கலவரக்காரர்கள் கொண்டுவந்த பெட்ரோல் மற்றும் குண்டுகளைக் கொண்டு அப்பகுதி மக்களின் வாகனங்களை எரித்துள்ளனர். வீட்டிற்குள் குண்டுகளை வீசியுள்ளனர்.

“பறத்தேவிடியா பசங்களா உங்களுக்கு என்னடா… இவ்வளவு திமிராடா? எங்களுக்கு எதிரா பானைக்கு ஓட்டு போடுவிங்களாடா ?” என்று மரக் கட்டையாலும் இரும்பு கம்பியாலும் தாக்கினார்கள்.

பானை சின்னம் வரையப்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். பா.ம.க, அதிமுக, இந்துமுன்னணி ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த குண்டர்கள் சேர்ந்துதான் இக்கலவரத்தை நிகழ்தியுள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் காவல்துறைக்கு தகவல்கொடுத்தும், மிகவும் அலட்சியமாக 2½ மணிநேரத்திற்குப் பின்னர்தான் கலவரம் நடந்த இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர்.

இதிலிருந்து இக்கலவரம் போலீசின் துணையோடுதான் நடந்துள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. இவர்கள் சொல்லக்கூடிய துணை ராணுவம், போலீசு, தேர்தல் ஆணையம் இவை எல்லாம் எங்கே போனது? தேர்தல், ஜனநாயகம் என்ற பெயரில் இந்த அரசு எதற்காக இருக்கிறது ? மக்களைப் பாதுகாக்கவா? காவிகுண்டர்களுக்கு காவல் நிற்கவா ?

செய்தி :
மக்கள் அதிகாரம்,
விருத்தாசலம் வட்டம், கடலூர் மண்டலம்.
தொடர்புக்கு : 97912 86994

அவன் தள்ளாடினான் … நிமிடத்திற்கு ஒரு தரம் விழுந்தான் …

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 7

… ஆனால் காலை ஆன பிறகு அலெக்ஸேய் எவ்வளவோ கூர்ந்து கவனித்துங்கூட போர் அரவங்கள் அவன் காதில் படவே இல்லை. துப்பாக்கி சுடுவதோ, பீரங்கிக் குண்டுகள் வெடிப்பதோ கூட அவனுக்குக் கேட்கவில்லை.

மரங்களிலிலிருந்து வெண் புகை உமிழும் தாரைகளாகப் பொழிந்தது வெண்பனி. வெயில் படும்போது கண்ணைக் குத்தும் படி பளிச்சிட்டது அது. சிற்சில இடங்களில் வெண்பனி மீது லேசாகச் சட்டென ஒலித்தவாறு விழுந்தன உருகிய பனியின் கனத்த துளிகள். வசந்தம்! அன்று காலை தான் அது அவ்வளவு தீர்மானதாகவும் விடாப்பிடியாகவும் தன் வருகையை முதன் முதலாக அறிவித்துக் கொண்டது.

பதனிட்ட இறைச்சியின் அற்ப மிச்சங்களை, மணம் வீசும் கொழுப்பு படிந்த சில இறைச்சி நார்களை காலையிலேயே தின்பது என்று அலெக்ஸேய் தீர்மானித்தான். இல்லாவிட்டால் தன்னால் எழுந்து நிற்க முடியாது என்று அவனுக்குப்பட்டது. டப்பாவின் கூர் விளிம்புகளில் பட்டு கையின் சில இடங்களைக் கீறிக் கொண்டு விரலால் டப்பாவைத் துப்புரவாக வழித்து நக்கினான். அப்புறமும் கொழுப்பு எஞ்சியிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. டப்பாவில் வெண்பனியை நிறைத்தான், அணைந்து கொண்டிருந்த நெருப்பின் வெளிர் சாம்பலைத் திரட்டி அகற்றினான், தணல் மீது டப்பாவை வைத்தான். பின்னர் சிறிது இறைச்சி மணம் வீசிய அந்த சுடுநீரைச் சிறுசிறு மடக்குகளாக இன்பத்துடன் பருகினான். டப்பாவில் தேநீர் காய்ச்சலாம் என்று தீர்மானித்து அதைப் பைக்குள் வைத்துக் கொண்டான். சூடான தேநீர் பருகலாம்! இது உவப்பான கண்டுபிடிப்பு. மீண்டும் வழி நடக்க தொடங்கியபோது இது அவனுக்கு ஓரளவு உற்சாகம் ஊட்டியது.

டப்பாவின் கூர் விளிம்புகளில் பட்டு கையின் சில இடங்களைக் கீறிக் கொண்டு விரலால் டப்பாவைத் துப்புரவாக வழித்து நக்கினான். அப்புறமும் கொழுப்பு எஞ்சியிருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

ஆனால், இப்போது பெருத்த ஏமாற்றம் அவனுக்காக காத்திருந்தது. இரவில் அடித்த சூறைக் காற்று பாதையை ஒரேயடியாக அழித்துவிட்டிருந்தது. சாய்வான, முடிகூம்பிய வெண்பனிக் குவியல்களால் அது வழியைத் தடுத்திருந்தது. ஒரே நிறத்தில் பளிச்சிட்ட வெண்ணீலம் கண்களைக் குத்தியது. மென்தூவி போன்ற, இன்னும் படிந்து இறுகாத வெண்பனியில் கால்கள் ஆழப்புதைந்தன. அவற்றை சிரமத்துடனேயே வெளியில் எடுக்க வேண்டியிருந்தது. வெண்பனியில் புதைந்த ஊன்று கோல்களும் நன்றாக உதவவில்லை.

நடுப்பகலில் மரங்களின் அடியில் நிழல்கள் கறுத்தன. மர முடிகளின் வழியே காட்டுப் பாதையை எட்டிப்பார்த்தது சூரியன். காலை முதல் அந்த நேரம் வரை அலெக்ஸேய் சுமார் ஆயிரத்தைந்நூறு அடிகள் மட்டுமே நடந்திருந்தான். இதற்குள் அவன் அரே அடியாகக் களைத்துப் போனான். மேலே ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதற்கும் அவன் தன் சித்த உறுதிக்கு வெகுவாக முறுக்கேற்ற வேண்டியிருந்தது. அவன் தள்ளாடினான். கால்களுக்கு அடியிலிருந்து தரை வழுகிச் சென்றது. நிமிடத்திற்கு ஒரு தரம் அவன் விழுந்தான். நெறுநெறுக்கும் வெண்பனியில் நெற்றியை அழுத்தியவாறு வெண்பனிக் குவியலின் உச்சியில் கணநேரம் கிடந்தான், பின்பு எழுந்து இன்னும் சில அடிகள் முன்சென்றான். தூக்கம் அடக்க மாட்டாமல் விழிகளைக் கப்பியது. படுத்து மறதியில் ஆழவேண்டும், ஒரு தசையைக் கூட அசைக்காமல் கிடக்க வேண்டும் என்ற ஆசை மனத்தை ஈர்த்தது. வருவது வரட்டும்! குளிரில் விறைத்துப் போய் இடமும் வலமுமாகத் தள்ளாடியவாறு அவன் நின்றுவிட்டான். பிறகு உதட்டை வலிக்கும்படிக் கடித்து, தன்னைச் சுதாரித்துக் கொண்டு கால்களைக் கஷ்டத்துடன் இழுத்து இழுத்துப்போட்டு மறுபடி சில அடிகள் முன்னேறினான்.

படிக்க:
மாட்டுக்கறி மக்கள் உணவு ! மோடி பருப்பு இங்கே வேகாது ! வீடியோ
இலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் !

மேற்கொண்டு தன்னால் முடியாது, எந்தச் சக்தியும் தன்னை இடத்தை விட்டு நகர்த்த முடியாது, என்பது அவன் உணர்வில் பட்டது. ஏக்கத்துடன் சுற்றும் முற்றும் கண்ணோட்டினான். அருகே பாதையோரத்தில் சுருட்டையான இளம் பைன் மரக்கன்று நின்றது. கடைசி முயற்சி செய்து நடந்து அதை நெருங்கி அதன் மேல் விழுந்தான். இரு கவர்களைப் பிரிந்த அதன் உச்சியில் கவட்டின் மோவாயை அழுத்திக் கொண்டான். அடிபட்ட கால்கள் மேல் சார்ந்த சுமை ஓரளவு குறைந்தது, இதமாக இருந்தது. சுருள் வில்கள் போன்ற கிளைகள் மேல் சாய்ந்தவாறு அமைதியை அனுபவித்தான். இன்னும் வசதியாகப் படுக்கும் விருப்பத்துடன் மோவாயை பைன் மரத்தின் கவட்டில் சாத்தி, கால்களை ஒவ்வொன்றாக இழுத்துக் கொண்டான். உடலின் சுமையைத் தாங்கவில்லை ஆதலால் அவை வெண்பனிக் குவியலிலிருந்து சுளுவாக விடுபட்டுவிட்டன. அப்போது அலெக்ஸேயிக்கு மறுபடியும் ஒரு யோசனை தோன்றியது.

அதுதான் சரி! ஆமாம், அதுதான் சரி, இந்த சிறு மரக் கன்றை வெட்டி, உச்சியில் கலர்ப்பு உள்ள நீண்ட தடி தயாரிக்கலாம். தடியை முன்னே வீசி ஊன்றி, அதன் கவட்டில் மேவாயை அழுத்தி உடல் சுமையை அதன் மேல் சாத்தலாம். பின்பு, இதோ இப்போது பைன் மரக் கன்றின் அருகே செய்தது போலக் கால்களை முன்னே நகர்த்தி வைக்கலாம். முன்னேற்றம் மெதுவாயிருக்குமா? ஆமாம், மெதுவாகத்தான் இருக்கும். ஆனால் இவ்வளவு களைப்பு உண்டாகாது. வெண்பனிக் குவியல்கள் படிந்து கெட்டிப்படும் வரை காத்திராமல் தொடர்ந்து வழி நடக்கலாம்.

உடனேயே அவன் முழந்தாள் படியிட்டு அமர்ந்து, கட்டாரியால் மரக்கன்றை வெட்டி, கிளைகளைச் செதுக்கி எறிந்துவிட்டு, கவட்டில் கைக்குட்டையையும் பட்டித்துணியையும் சுற்றிக் கட்டினான். அக்கணமே முன் செல்ல முயன்று பார்த்தான். தடியை முன்னே தள்ளி ஊன்றினான், மோவாயாலும் கைகளாலும் அதை ஆதாரமாகப் பற்றி அழுத்திக் கொண்டு ஓர் அடி, இரண்டு அடி முன்னேறினான். மறுபடி தடியை முன்னே ஊன்றினான், மோவாயாலும் கைகளாலும் அதை ஆதாரமாக அழுத்திக்கொண்டு ஓர் அடி, இரண்டு அடி முன்னேறினான். மறுபடி அதை ஆதாரமாகப் பற்றி அழுத்திக்கொண்டு ஓரிரு அடிகள் நடந்தான். அடிகளை எண்ணுவதும் தனது முன்னேற்றத்திற்குப் புதிய அளவுமானத்தைத் திட்டம் செய்வதுமாக மேலே சென்றான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

வேலூரில் தோழர் லெனின் 150-வது பிறந்த நாள் விழா !

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் வேலூரில் தோழர் லெனினின் 150-வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம், மீன் மார்க்கெட் கிளை மற்றும் அண்ணா கலையரங்கம் கிளைகளில் சங்கக்கொடி ஏற்றி பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் குறித்து உரை நிகழ்த்தப்பட்டது.

மீன் மார்க்கெட் கிளையில், தோழர் விஜயா தலைமையில் நடைபெற்ற விழாவில் தோழர் கவிதா சங்கக் கொடி ஏற்றினார். ம.க.இ.க தோழர் அகிலன் மற்றும் கிளைச் சங்கத் துணைத் தலைவர் தோழர் சுப்பிரமணி ஆகியோர் உரையாற்றினர். துணைச் செயலாளர் தோழர் சேட்டு நன்றி கூறினார்.

அண்ணா கலையரங்கம் கிளையில், கிளைச் சங்கத் தலைவர் தோழர் E. சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற விழாவில் கிளைச் சங்கத் துணைத் தலைவர் தோழர் பழனி சங்கக் கொடி ஏற்றினார். தோழர் வில்சன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் சரவணன் ஆகியோர் உரையாற்றினர். துணைத் தலைவர் தோழர் G. சுப்பிரமணி நன்றி கூறினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
வேலூர் மாவட்டம்.

மாட்டுக்கறி மக்கள் உணவு ! மோடி பருப்பு இங்கே வேகாது ! வீடியோ

சென்னை குன்றத்தூர் அருகே இருக்கும் பட்டூர் கிராமம் மாட்டுக்கறி கடைகளுக்கு பெயர் பெற்றது. அன்றாடம் நூற்றுக்கணக்கான மக்களும், பிரியாணி கடை வைத்து நடத்தும் வியாபாரிகளும் இங்கே வந்து கறி வாங்கிச் செல்கின்றனர். சுற்று வட்டார மக்களிடையே பட்டூர் மாட்டுக்கறி மிகவும் புகழ் வாய்ந்தது. எலும்பு இல்லாமல் ஒரு கிலோ ரூ. 250-க்கும், எலும்போடு ரூ. 240-க்கும் விற்கப்படுகிறது. சென்னை நகரில் மாட்டுக்கறி ஒரு கிலோ ரூ. 300-க்கு விற்கப்படுகிறது.

பட்டூரில் “ஏ 1 ஃபீப் ஸ்டால்” என்ற பெயரில் மாட்டுக்கறி கடை வைத்து நடத்தும் நண்பர் ஜாகீர் உசேனை சந்தித்தோம். மோடி அரசு ஏற்கெனவே மாட்டுக்கறிக்கு தடை கொண்டு வந்தது போல மீண்டும் கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள்?, சைவ உணவு சாப்பிடும் மோடி வாட்டசாட்டமாய் இருக்கும் போது கறி சாப்பிடும் நீங்கள் ஏன் ஒரு சொங்கி போல இருக்கிறீர்கள்?,  மாட்டுக்கறியை ஏன் விற்கிறீர்கள்?, ப்ளூகிராஸ் பிரச்சினைகள்.. என பல கேள்விகளுக்கு ஒரு தொழிலாளிக்கே உரிய நிதானத்தோடும் உறுதியோடும் பதிலளிக்கிறார் உசேன். பாருங்கள்! பகிருங்கள்!

குடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை ! இதுதான் குஜராத் மாடல் வளர்ச்சி !

0

‘வளர்ச்சி’க்கு ’உதாரணமான’ குஜராத்தில் மின்சாரம், சாலை, தண்ணீர் வசதியில்லாமல் தவிக்கும் மக்கள் !

குஜராத் சமீபமாக வரலாறு காணாத அளவுக்கு வறட்சியை சந்தித்து வருகிறது. 2018-ம் ஆண்டு பெய்த தென் மேற்கு பருவ மழையின் அளவு சராசரி அளவில் வெறும் 76% மட்டுமே அம்மாநிலம் பெற்றிருக்கிறது.

ஊடக கவனத்துக்கு அப்பால், குஜராத்தின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மின்சாரம், சாலை வசதிகளற்ற கட்ச் பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து விரிவாக பதிவு செய்திருக்கிறது தி வயர் இணையதளம். வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக காட்டப்படும் குஜராத் மாடலின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது இந்தக் கட்டுரை.

*****

ட்ச் பகுதியின் தொலைதூரத்தில் உள்ள கடுமையான நிலப்பகுதியான தோர்டோ-வை, ‘அசாதாரண வளர்ச்சி’ என்பதற்கு ‘மாதிரி கிராமமாக’ அந்த கிராம மக்கள் காட்டிக் கொள்கிறார்கள். கட்ச் பகுதியின் பிரசித்தி மிக்க வெள்ளை பாலைவனத்தில் வருடம்தோறும் நடக்கும் ‘ரான் உத்சவ்’ என்ற நான்கு மாத குளிர்கால விழாவைக் கொண்டாடுவதால் இப்பெருமையைப் பெற்றதாக இந்த கிராமம் கூறுகிறது.

முதல்முறை குஜராத்தின் முதலமைச்சராக பதவி ஏற்ற நரேந்திர மோடி, 2005-ம் ஆண்டின் போது இந்தத் திருவிழாவை அறிமுகப்படுத்தினார். இப்போது ஆண்டுதோறும் இரண்டு லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த விழாவில் கலந்துகொள்ள வருகிறார்கள். இந்த விழாவுக்கான எண்ணம், வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தியது அனைத்தையும் செய்தது தானேதான் என மோடி கூறுகிறார்.

பாலைவனத்தின் நடுவே போடப்படும் ஆடம்பர கொட்டகைகளில் தண்ணீர், குளிர்சாதன வசதி மற்றும் வெப்பமூட்டிகளும் கார்ப்பெட்டுகள் விரிக்கப்பட்ட தரைப்பகுதியும் துணி மாற்றும் அறைகளும் தனிப்பட்ட உணவு உண்ணும் பகுதிகளும், ‘ஆடம்பர’ கழிப்பறைகளும் செய்து தரப்படுகின்றன.

உணவுகளும் பானங்களையும் கோர்ட்யார்டு மெரியாட் என்ற பிரபல நட்சத்திர விடுதி செய்து தருகிறது. தோர்டோவில் உள்ள இந்தக் கொட்டகை நகரத்தில் பாரா கிளைடிங், ஏடிவி பைக் ரைடிங், நீச்சல் குளம், ஸ்பா, வில் வித்தை போன்ற மற்ற வசதிகளோடு, சில நேரம் மழை நடனம் ஆடவும் வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது.

இந்த தோர்டோவிலிருந்து மண் பாதையின் வழியாக நடந்து 15 கி.மீ. தள்ளி வந்தால் ஆயிரம் பேர் வசிக்கும் இரண்டு குக்கிராமங்கள் வருகின்றன. பாலைவனக் கொட்டகை வாழ்க்கையிலிருந்து மிகவும் வித்தியாசப்படுகிறது இவர்களுடைய வாழ்க்கை. ஏப்ரல் 23-ம் தேதி வாக்களிக்கப்போகும் இவர்கள், மின்சாரத்துக்காகவும் சாலைக்காகவும் தண்ணீருக்காகவும் வாக்களிக்க இருக்கிறார்கள்.

படிக்க:
வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !
♦ நேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் !

பூஜ் பகுதியின் வடக்குப் பிராந்தியமான பானியின் பிதாரா வந்த் மற்றும் நானா பிதாரா என்ற இந்த கிராமங்களில் மேற்கண்ட எந்த வசதியும் இல்லை. அருகில் இருக்கும் சாலையை அடைய அவர்கள் 10 கி.மீ. பயணித்தாக வேண்டும். 7 கி.மீ. நடந்து தங்களுடைய மொபைல் போன்களுக்கு இந்த ஊர்வாசிகள் சார்ஜ் ஏற்றிக்கொண்டு வருகிறார்கள். தண்ணீருக்காக அரசு விநியோகிக்கும் டேங்கரை நம்பியிருக்கிறார்கள். அதுவும் வராத நாட்களில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் குழி பறித்து அதில் சேகரிக்கப்பட்டிருக்கும் தண்ணீரை பயன்படுத்துகிறார்கள்.

தண்ணீருக்காக ஆங்காங்கே தோண்டப்பட்டிருக்கும் குழிகள்.

“நிலநடுக்கம் வந்த பிறகு தோர்டோ முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. பூஜ்-ல் இல்லாத வசதிகள்கூட அங்கே உள்ளன. ஆனால், எங்கள் கிராமத்தில் எதுவும் இல்லை” என்கிறார் அப்துல் கரீம். தண்ணீருக்காக ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டுள்ள, அந்த இடத்துக்கு நடந்து செல்லும் அவர், “இதோ இங்கிருந்துதான் நாங்கள் குடிக்க தண்ணீர் எடுக்கிறோம்” என கைக்காட்டுகிறார்.

கட்ச் பகுதியில் உள்ள மேய்ச்சல் சமூகமான மால்தாரிக்கள், தண்ணீரை சேமிக்க பாரம்பரியமாக ‘விர்தா’ எனப்படும் இந்த முறையை ஆயிரம் ஆண்டுகாலமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்தக் குழிகளில் மழைக்காலங்களில் சேரும் தண்ணீர், நிலத்தடியில் உள்ள உப்பு நீருக்கு மேலே ஒரு படலமாக சேகரமாகிறது. ஆரம்பத்தில் சுவையாக இருந்த இந்த நீர், நாளடைவில் பருவ மாற்றம் காரணமாக குறைந்துபோனதோடு, கருப்பு நிறமாகவும் மாறிவிட்டது.

அப்பகுதி கிராம மக்கள் பருகும் குடிநீர்.

“இப்போது இந்த தண்ணீர் உப்பு கரிக்கிறது. ஏனெனில் இந்த வருடம் மழை குறைவாகவே பெய்தது” என்கிறார் கரீம். கடந்த முப்பது ஆண்டுகளில் காணாத வறட்சியை குஜராத் சந்தித்து வருகிறது என்பதும், கட்ச் பகுதிதான் அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. முப்பது ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவில் 26% மட்டுமே மழையளவு பதிவாகியிருக்கிறது இந்தப் பகுதியில்.

“பிப்ரவரி மாதம் கொஞ்சமாக மழை பெய்தது. அதனால்தான் சிறிதளவாவது நல்ல தண்ணீர் இங்கே உள்ளது” என்கிற கரீம், தனது 6 வயது மகனின் துணையுடன் தண்ணீர் சேகரிப்பதாக சொல்கிறார். இந்தத் தண்ணீர் பார்ப்பதற்கு பச்சை கலந்த கருப்பு நிறமாகவும் சுவையில் கரிப்பாகவும் உள்ளது.

இந்தப் பகுதிக்கு குடிநீர் குழாய் வசதி செய்து தரப்படாத நிலையில், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை விநியோகிக்கிறது அரசு. ஆனால், அந்த விநியோகமும் முறையாக செய்யப்படுவதில்லை.

“ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு ஒருமுறைதான் டாங்கர் லாரிகள் வரும். சில நேரங்கள் இன்னும் தாமதமாகும். சில நேரங்களில் சாலை வசதி இல்லாததால் டேங்கர் சிக்கிக்கொள்ளும்.” என்கிறார் பிதாரா வந்த் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான முகமது காசிம். கட்ச் பகுதியின் துணை ஆட்சியரான நியாஸ் பதான் இதை மறுக்கிறார். “தண்ணீர் தேவை என்று கேட்டால் அதே நாளில் டேங்கர் லாரிகளை அனுப்பி வைக்கிறோம்” என்கிறார் இவர்.

பாலைவனத்திலிருந்து இந்த குக்கிராமங்களுக்குச் செல்லும் பாதைகள், வாகன இயக்கத்தின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. குறுகி, சமதளமற்ற, உப்பு சதுப்பு நிலத்தின் தாக்கம் காரணமாக வழுக்கும் தன்மையுடன் உள்ளன, இந்தப் பாதைகள்.

“இத்தகைய நிலப்பரப்பில் செல்லக்கூடிய ‘பொலிரோ’ போன்ற வாகனங்களில் மட்டுமே பயணிக்க முடியும்” என்கிறார் காசிம். துணை ஆட்சியரோ கட்சின் பெரும்பாலான கிராமங்கள் இணைக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அனைத்து கிராமங்களும் சாலைகளால் இணைக்கப்பட்டுவிடும் என்றும் கூறுகிறார்.

மக்கள் பயன்பாட்டிற்காக உள்ள ஒரே வாகனம் பொலிரோ மட்டும்தான்.

இந்த இரண்டு கிராமங்களிலும் தலா ஒரு பொலிரோ உள்ளது. இவற்றை அனைவரும் பகிர்ந்துகொள்கிறார்கள். “இங்கிருந்து அருகே உள்ள கிராமங்களுக்கு பாலை எடுத்துச் சென்று விற்க இந்த வாகனத்தைத்தான் பயன்படுத்துகிறோம்” என்கிறார் காசிம்.

சுமார் 50 கி.மீ. தொலைவில் அருகில் இருக்கும் காவ்டா மற்றும் தயாபர் கிராமங்களைக்காட்டிலும் மிகவும் அருகில் இருக்கும் தார்டோவின் மக்கள் தொகை 500 மட்டுமே.

படிக்க:
மோடியின் பெருமைமிகு குஜராத் சிங்கங்களை வைரஸ் மட்டுமா அழித்தது ?
♦ சந்தி சிரிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சி !

கோதுமை-கம்பு மாவு அரைக்கவும், செல்போன்களை சார்ஜ் ஏற்றவுமே தங்களுக்கு மின்சாரம் அவசியமாகத் தேவை என்கிறார் காசிம். ஆனால், துணை ஆட்சியர் கட்ச் பகுதிகளுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும், சிலர் வீடுகளுக்கு இணைப்புக் கொடுக்க விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார். ”மின்சாரம் வந்திருப்பதற்கான அறிகுறிகள் எதையுமே காணோம்” என தெரிவித்தபோது, “மீண்டும் உறுதிபடுத்திக்கொண்டு தெரிவிக்கிறேன்; சரி செய்கிறேன்” என்கிறார்.

முகமது காசீம் மற்றும் உமேஷ்

2001-ம் ஆண்டு நடந்த நிலநடுக்கத்தில் பிதாரா கிராமத்தில் இருந்த தங்களுடைய வீடுகள் அழிக்கப்பட்ட நிலையில், இந்த இரண்டு குடியிருப்பு பகுதிகள் உண்டாக்கப்பட்டதாக கூறுகிறார் காசிம்.

கட்ச் பகுதியில் இதுபோன்ற குடியிருப்புகள் உருவாவது வழக்கமானதுதான் என்கிறார் பங்கஜ் ஜோஷி என்ற தன்னார்வலர். நாடோடிகளால் இதுபோன்ற குடியிருப்புகள் அவ்வப்போது உருவாவதால் அவர்களை கண்காணிப்பது கடினமாக உள்ளதாக கட்ச் மாவட்ட ஆட்சியர் ரம்யா மோகன் தெரிவிக்கிறார்.

ஆசியாவின் மிகச்சிறந்த புல்வெளிப் பிரதேசமாக 2500 சதுர கிலோமீட்டர்களில் பரந்து விரிந்திருந்த பூஜ்-ன் வடக்குப் பகுதியான பன்னி, இப்போது சீரழிவைக் கண்டு வருகிறது. இந்தப் பகுதியில் மட்டும் 110 புதிய குடியிருப்புகள் உள்ளன என்கிறார் ஒரு மூத்த அரசு அதிகாரி. இதில் உள்ளடங்கிய பகுதிகளாக பிதாரா வந்தும், நானா பிதாராவும் உள்ளன. இந்தக் குடியிருப்புகள் குறித்த முழுமையான புள்ளிவிவரங்கள் எதுவும் கிடைக்க பெறாதநிலையில், சில குடியிருப்புகளில் தண்ணீர், சாலை, மின்சார வசதிகள் எதுவும் இல்லை என்பதை நிர்வாகம் ஒப்புக்கொள்கிறது.

ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, கட்சில் உள்ள 918 வருவாய் கிராமங்களில் 11 கிராமங்களில் மின்சாரம் இல்லை. 49 கிராமங்களில் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் குறைவாகவே மின்சாரம் கிடைக்கிறது. 50% குறைவான வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் வசதி உள்ளது. 57 கிராமங்கள் மட்டுமே அனைத்து பருவநிலைக்கும் தாங்கும் சாலை வசதிகளைக் கொண்டுள்ளன என்கிறது அந்த அறிக்கை.

இது வருவாய் கிராமங்களுக்கான அறிக்கையே தவிர, குக்கிராமங்களுக்கான நிலவரம் அல்ல.

பிதாரா வந்த் மற்றும் நானா பிதாராவாசிகள் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் இந்த நிலைமை மாறும் என நம்புகிறார்கள்.

சாஜன் உசைன்

1996-ம் ஆண்டு முதல் பாஜக இந்தத் தொகுதியை கைப்பற்றி வருகிறது. தற்போதைய எம்பி ஆன வினோத் சவ்டா, காங்கிரஸ் வேட்பாளரைவிட இரண்டரை லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், ஒருமுறைகூட இவரைப் பார்த்ததில்லை என்கிறார் சாஜன் உசைன். “அவரை விடுங்கள். தற்போது பிரதமராக உள்ளாரே… நரேந்திர மோடி, அவர் 12 ஆண்டு காலம் குஜராத் முதலமைச்சராக இருந்தார். தன்னுடைய இதயத்தில் கட்ச் -க்கு சிறப்பான இடம் உள்ளதாக சொல்லிக்கொண்ட இவர், எங்களுக்கு என்ன செய்தார்?” என கேள்வி எழுப்புகிறார்.

“இப்போதும்கூட மோடி டோர்தோ-வுக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது வருகிறார். ஆனால், ரான் உத்சவு-க்கு மட்டுமே செல்கிறார். ஏன் அவர் இங்கே வருவதில்லை? இங்கே சாலை இல்லை; மின்சாரம் இல்லை; தண்ணீர் இல்லை. டோர்தோவில் அனைத்தும் உள்ளது” என சிரிக்கிறார் அப்துல் கரீம்.

“இந்த அடிப்படை வசதிகளை செய்துதருவது யாருடைய வேலை? இது மோடியின் வேலை இல்லையா? அவருடைய வேலையை அவர் செய்யவில்லை என்றால், ஏன் அவருக்கு வாக்களிக்க வேண்டும்” என வினவுகிறார் காசிம்.


கட்டுரையாளர் : கபீர் அகர்வால்
தமிழாக்கம் : அனிதா
நன்றி : தி வயர் 

வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக !

0

தேர்தலில் வெல்வதற்காக எந்த எல்லைக்கும் செல்ல துணிந்துள்ளது இந்துத்துவக் கும்பல். ஒருபக்கம் தனது ‘கூட்டணிக் கட்சியான’ தேர்தல் கமிஷனின் துணை கொண்டு தேர்தல் தேதியை தன் விருப்பத்திற்கு அறிவிக்கச் செய்த பாஜக, தனக்கு வாக்களிக்காத பிரிவு மக்களின் வாக்குரிமையை திட்டமிட்டே பறித்துள்ளது. வடகிழக்கில் பல்லாயிரக்கணக்கான மக்களின் குடியுரிமையையே பறித்த பாஜக, கன்னியாகுமரி தொகுதியில் தனது கூட்டாளியின் துணையோடு ஏறத்தாழ ஒரு லட்சம் மீனவர்களின் வாக்குரிமையைப் பறித்துள்ளது.

ஒருபுறம் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் மேல் தனது இணைய மற்றும் ஊடக கூலிப் பட்டாளங்களை ஏவி விட்டு அவர்கள் மீது அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் பாஜக, தனது வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் தாகூரை களமிறக்கி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள பிரக்யா சிங் தாகூரை அறியாதவர்கள் இருக்க முடியாது.

2008-ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் எனக் கைது செய்யப்பட்டு தற்போது உடல்நிலையைக் காரணம் காட்டி வெளி வந்துள்ளவர் பிரக்யா சிங். மாலேகானில் மசூதி ஒன்றின் அருகில் இந்துத்துவக் கும்பல் வைத்த குண்டு, வெடித்ததில் ஆறு பேர் பலியாகி பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரக்யா சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆர்.எஸ்.எஸ்-உடன் நெருங்கிய தொடர்புடைய அபினவ் பாரத் என்கிற இந்துத்துவ பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்திய மற்றொரு கொடூரத் தாக்குதல், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பாகும். அதில் 68 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங்கின் மீதான வழக்கு, மோடி அதிகாரத்திற்கு வந்தபின் திட்டமிட்டே நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை, நடந்த குற்றத்தில் பிரக்யா சிங்கிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்து அவர் மீதான வழக்கை முடித்து விடக் கோரியது. முக்கியமான சாட்சிகள் திடீரென பிறழ் சாட்சிகளாகினர். எனினும், குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் பிரக்யா சிங்கின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது  உள்ளிட்ட சந்தர்ப்ப சாட்சியங்கள் அவருக்கு எதிராக இருப்பதால் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க மறுத்துவிட்டது விசாரணை நீதிமன்றம்.

தற்போது காங்கிரசின் சார்பில் போபால் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள திக்விஜய் சிங்குக்கு எதிராக பிரக்யா சிங்கை களமிறக்கியுள்ளது பாஜக. திக்விஜய் சிங் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஓட்டு அரசியலின் அரங்கில் கட்சிகளின் சார்பில் கிரிமினல்கள் வேட்பாளர்களாவதோ, ஓட்டரசியல் கட்சிகளே முழுக்க கிரிமினல்மயமாகி வருவதோ புதிய போக்கு அல்ல. பாரதிய ஜனதா ஓட்டரசியல் கிரிமினல் கலாச்சாரத்தை பயங்கரவாதத்திற்கு வளர்த்துள்ளது.

படிக்க:
பாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் !
♦ மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”

பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம் தன்னை பயங்கரவாதத்திற்கு எதிரானவராக முன்னிறுத்திக் கொண்டு பேசி வரும் நிலையில், அவரது கட்சியே ஒரு பயங்கரவாதிக்கு சீட்டு கொடுத்திருப்பதைக் கண்டு வட இந்திய பத்திரிகைகள் திகைத்துப் போய் எழுதி வருகின்றன. இந்துத்துவக் கும்பலைப் பொறுத்தவரை “இந்து குண்டு” என்பது அக்காரவடிசல் போன்ற ‘நம்மாத்துப் பலகாரம்’. அதே நேரம் நீங்கள் மாட்டிறைச்சி உண்பவராக இருந்து, உங்கள் வீட்டின் குளிர் சாதனப் பெட்டியில் அதை சேமித்து வைத்தீர்கள் என்றால் நீங்கள்தான் பயங்கரவாதி; அந்த  மாட்டுக்கறிதான் பேரழிவை உண்டாக்கும் ஆயுதம். இது நாக்பூரில் எழுதப்பட்ட இருபத்தோராம் நூற்றாண்டின் மனு நீதி.

ஒருவேளை நம் ஆல்பர்பஸ் சேஷூ மாமாக்கள் “குற்றம் இன்னும் ருசுபிக்கப் படலியோன்னோ. ருசுப்பிச்சாத்தானே குற்றவாளி?” என்று நமக்குப் பாடம் எடுக்க வருவார்கள். ஆனால், எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு இதே ஊபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களுக்கு ஏதாவது ஒரு கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் இதே வாய்கள் என்ன பேசும் என்பது நமக்குத் தெரியும். ‘லெட்டர் டூ எடிட்டரில்’ துவங்கி தினமலர் முகப்பு செய்தி வரை களமிறங்கி குடுமி அவிழக் கூத்தாடியிருப்பார்கள்.

எனினும், சம்ஜௌதாவில் வெடித்ததும், ஹைதராபாத்தில் வெடித்ததும், மாலேகானில் வெடித்ததும் “இந்து குண்டு” என்பதால் அதை பாசத்தோடு அள்ளி அணைத்து கோவணத்தில் முடிந்து வைத்துக் கொண்டுள்ளனர். அவாள்களின் தெரிவு செய்யும் சுதந்திரத்தில் நாம் தலையிடுவதற்கில்லை. என்றாலும், தேர்தல் அரசியல் மற்றும் இந்திய ஜனநாயகம் என்கிற புழுத்து நாறும் பிணத்தின் யோக்கியதையை பாரதிய ஜனதாவைத் தவிற இந்தளவுக்கு துல்லியமாக மக்களுக்கு எடுத்துரைக்கும் ஆற்றல் அதன் சகபாடி காங்கிரசுக்கே இல்லை என்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

பிரக்யா சிங்கை களமிறக்கி இருப்பதன் மூலம் பாஜக நமக்கு ஏராளமான செய்திகளைச் சொல்லியுள்ளது. அவற்றில் பிரதானமானது, இந்துத்துவ கும்பல் நிகழ்த்தும் பயங்கரவாதச் செயல்கள்  “காவி ஜிகாத்” எனும் புனித காரியம். அதில் ஈடுபடுபவர்களுக்கு இறந்த பின் சொர்க்கத்தில் எவையெல்லாம் கிடைக்கப் போகிறதோ இல்லையோ; வாழும் காலத்தில் எம்.பி அல்லது எம்.எல்.ஏ சீட்டு கிடைக்கும். இரண்டாவதாக, வாஜ்பாயில் துவங்கி அத்வானி, மோடி, யோகி ஆதித்யநாத், பிரக்யா சிங் என அவர்களிடம் உள்ள தலைவர்களின் வரிசை நாம் கவனத்தில் கொள்ளத் தக்கது. வரிசையில் வரும் ஒவ்வொருவரும் தனக்கு முந்தையவர்களை விட எத்தர்களாக இருப்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, இப்படிப் பச்சையாக ஒரு பயங்கரவாதியை வேட்பாளராக அறிவித்த பின்னும் அது அரசியல் அரங்கில் கண்டனத்திற்குரிய ஒன்றாக கருதப்படாமல் இருப்பதும், ஊடகங்கள் மௌனமாக இருப்பதும், “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்கிற பாணியில் பொதுபுத்தி பக்குவப்படுத்தப்பட்டிருப்பதும் நம் கவனத்திற்குரியது. இந்திய சமூகத்தின் மனசாட்சிக்குள் இந்துத்துவம் ஊடுருவத் துவங்கி இருப்பதன் ஆரம்ப அறிகுறி இதுதான். இந்து பாசிசத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் போதாமையை இது சுட்டிக் காட்டுகிறது.

இனியும் ஒரு தேர்தலின் மூலம் மட்டுமே இந்து பாசிசத்தை முறியடித்து விட முடியும் என்றா கருதுகிறீர்கள்?


– சாக்கியன்
செய்தி ஆதாரம் : தி வயர்

நமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அதிகம் !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 11


காட்சி : 16

இடம் : ஆஸ்ரமம்
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு, கேசவப்பட்டர், பாலச்சந்தரர்.

(காகப்பட்டர் சுவடியைப் பிரித்துப் பார்த்து விட்டுப் பிறகு)

காகப்பட்டர் : டே ரங்கு! இங்கே வாடா!

ரங்கு : ஸ்வாமி கூப்பிட்டேளா?

காகப்பட்டர் : ஆமாண்டா முன்பு உனக்கு ஒரு பைத்தியக்காரச் சந்தேகம் மனதை குடைஞ்சிண்டிருந்துதே.

ரங்கு : அதுவா ஸ்வாமி? தங்களுடைய வியாக்யானத்தைக் கேட்ட பிறகு சந்தேகம் பஞ்சு பஞ்சாய்ப் பறந்தே போச்சு.

காகப்பட்டர் : போய்விட்டதல்லவா? அப்படிப்பட்ட மேன்மையான, மகிமையான வாழ்வு நம்முடையது என்பதைத் தெரிந்து கொள்ளாதவா நம்ம குலத்திலே அத்தி பூத்தது போலத் தான். உன் போல மண்டுகள் அதிகம் கிடையாதுடா.

ரங்கு : ஸ்வாமி! அடிக்கடி மண்டூ, மண்டூண்ணு என்னைச் சொல்லி …

காகப்பட்டர் : கேலி செய்கிறேனேன்னு கோபமா? பைத்தியக்காரா! உன் மேலே உள்ள அபாரமான ஆசையினாலே அது போலச் சொல்றேண்டா. வேறொண்ணுமில்லே. அது சரி! நம்ம சாஸ்திராதிகளைப் படிக்கிறியே, அது புரியறதோ நோக்கு.

ரங்கு : என்ன ஸ்வாமி இது? சாட்சாத் காகப் பட்டருடைய பிரதம சீடனாக இருக்கேன். என்னைப் போய் சாஸ்திரம் புரியறதான்னு கேட்கறதுன்னா..

காகப்பட்டர் : மத்தவா கேட்டா சொல்லுடா இதை இப்ப கேட்கறது நானல்லவோ. சாஸ்திராதிகள் புரியறதோ?

ரங்கு : ஆஹா ! நன்னா புரியறது. மத்தவாளுக்குப் புரியவைக்கவும் முடியறது.

காகப்பட்டர் : சம்சயங்கள் ஏற்பட்டால் விளக்க முடியுமோ?

ரங்கு : ஏதோ எனக்குத் தெரிந்த அளவிலே…

காகப்பட்டர் : சரி பதி பக்தியின்னா அதற்கு என்னடா பொருள் ?

ரங்கு : தன்னுடைய பதியிடம் பக்திப் பூர்வமாக நடந்து கொள்வது என்று பொருள்.

காகப்பட்டர் : அதுதானே?

ரங்கு : ஆமாம் ஸ்வாமி! அதுதான்! ஏதேனும் விசேஷமான பொருள் உண்டோ ஒரு சமயம் ?

காகப்பட்டர் : பதிபக்தி தன்னுடைய புருஷனிடம் மாறாத குறையாத பக்தியுடன் நடந்து கொள்வதுதான். இதோ பார். துரோபதைக்குப் பதிகள் ஐவர். பதிபக்தி தத்துவத்தின்படி துரோபதை ஐவருக்கும் கட்டுப்பட்டு – பய பக்தியுடன் விஸ்வாசதோடு நடந்து கொள்ள வேண்டும் அல்லவா !

ரங்கு : ஆமாம்

சதுப்பு நிலத்திலே நடந்து செல்பவனுக்குக் காலிலே திடம் இல்லாவிட்டால் என்ன ஆகும். அது போலத்தான். நமது சாஸ்திர புராணாதிகளிலே உள்ள சம்சயங்களைப் போக்க நமக்குத் தெரியாவிட்டால் நமது பாடும் ….

காகப்பட்டர் : இப்படி ஒரு சம்பவம் நேரிட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசித்துப்பார். தர்மன் தன்னோடு தேவாலயம் வரும்படி அழைக்கிறான்; அர்ச்சுனனோ ஆரணங்கே! ஆடிப்பாடி மகிழலாம் வா , நந்தவனத்துக்கு என்று அழைக்கிறான்; பீமனோ அருமையான காய்கறிகளைக் கொண்டு வந்து எதிரே கொட்டி விட்டு, பதிசொல் கடவாத பாவாய்! உடனே சமைத்துப்போடு , அகோரமான பசி எனக்கு என்று வற்புறுத்துகிறான். நகுலன் நாட்டியம் பார்க்கக் கூப்பிடுகிறான். சகாதேவன் சொக்கட்டான் ஆடக் கூப்பிடுகிறான் என்று வைத்துக் கொள். துரோபதை பதிபக்தியைக் காப்பாற்றியாக வேண்டும். பதிகளோ ஐவர் . என்னடா செய்வது?

ரங்கு : சிக்கலாக இருக்கே ஸ்வாமி !

காகப்பட்டர் : என்னடா செய்யலாம். ஒரு புருஷனை மணந்து கொண்ட நிலையிலே உத்தமிகள் மொத்தக் கஷ்டப்படுவதைப் பார்க்கிறோம். துரோபதைக்கோ..

ரங்கு : ஐவர் கணவர். அவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியம் செய்யச் சொல்லி தேவியை அழைக்கிறா.

காகப்பட்டர் : இதிலே துரோபதை பாரபட்சம் காட்டக் கூடாது.

ரங்கு : ஆமாம் பதி பக்தி கெட்டுவிடும்.

காகப்பட்டர் : தன் பர்த்தாவிலே யாருடைய பேச்சையும் தட்டி நடக்கக் கூடாது.

ரங்கு : ஆமாம் கஷ்டமாய் இருக்கே ஸ்வாமி?

காகப்பட்டர் : என்னடா இது! இவ்வளவு காலத்திற்குப் பிறகு, இந்தச் சம்பவத்தைக் காதாலே நீ கேட்கற போதே கலக்கமடையறே. அந்தப் புண்ணியவதி இப்படிப்பட்ட சிக்கல்களை எவ்வளவோ வாழ்க்கையில் கண்டிருப்பா? எல்லாவற்றையும் சமாளித்தாக வேண்டும்.

ரங்கு : ஆமாம் எப்படி முடிந்தது?

காகப்பட்டர் : நீயே யோசித்துச் சொல் புத்தி தீட்சண்யம் இருக்க வேணுமடா. ரங்கு! சதுப்பு நிலத்திலே நடந்து செல்பவனுக்குக் காலிலே திடம் இல்லாவிட்டால் என்ன ஆகும். அது போலத்தான். நமது சாஸ்திர புராணாதிகளிலே உள்ள சம்சயங்களைப் போக்க நமக்குத் தெரியாவிட்டால் நமது பாடும் ….

படிக்க:
நேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் !
பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !

ரங்கு : ஆமாம் ஸ்வாமி! திண்டாட்டமாத்தான் இருக்கும்.

காகப்பட்டர் : எவனாவது ஒரு விதண்டாவாதி, நான் கேட்ட இதே கேள்வியை உன்னைக் கேட்கிறான் என்று வைத்துக் கொள்.

ரங்கு : கேட்பா ஸ்வாமி கேட்பா. இப்பவே பலபேர் கேட்டுண்டுதான் இருக்கா.

காகப்பட்டர் : நீ என்ன பதில் சொல்வே?

ரங்கு : நானா?

காகப்பட்டர் : ஆமாம்? பதில் சொல்லாது ஊமையாகி விடுவாயோ?
உன்னை யார் பிறகு மதிப்பா ?

ரங்கு : குருதேவா! நமது புராண சாஸ்திரங்களை நிறைய கரைத்துக் குடித்தவன் என்று கர்வம் கொண்டிருந்தேன். நிஜமாச் சொல்றேன்….. என்னாலே நீங்க கேட்ட சம்சயத்துக்குச் சமாதானம் கூறச் சக்தியில்லே .

காகப்பட்டர் : ஐவருக்கும் பத்தினி பதிபக்தியும் தவறக் கூடாது.

ரங்கு : ஆமாம்! பழச் சாறும் பருக வேணும்; பழமும் கெடக்கூடாது என்பது போல சிக்கலாக இருக்கே.

காகப்பட்டர் : பைத்தியக்காரா இப்படிப்பட்ட சிக்கலான சமயத்திலே துரோபதை ‘ஏ’ கண்ணா உன்னையன்றி வேறு கதி ஏது. என் கற்பும் கெடலாகாது; ஐவருக்கும் மனம் கோணலாகாது என் செய்வேன் என்று பஜித்தாள். அந்த சமயத்திலே கோபால கிருஷ்ணன் குழலை ராதையின் கிரகத்திலே வைத்து விட்டு , ருக்மணியின் இல்லம் வந்திருக்க, ருக்மணி, நாதா தங்களுடைய மதுரமான குழலைக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்துகிற சமயம் பரந்தாமன் சிரித்தார். சிரித்துவிட்டு, கீழே கிடந்த மலரை எடுத்து ஐந்து பாகமாக்கி ஆகாயத்திலே வீசினார். உடனே ஐயனின் அற்புதத்தை என்னென்பது? தருமருடன் தேவாலயம் செல்ல துரோபதை அர்சுனனுடன் நந்தவனத்தில் துரோபதை. பீமனுடன் சமையலறையில் துரோபதை. சகாதேவனுடன் துரோபதை. இவ்விதமாக ஐந்து பேருடனும் ஏக காலத்திலே துரோபதை சென்ற அற்புதம் நிகழ்ந்தது.

ரங்கு : ஆஹா, அருமை அருமை குருதேவர்.

காகப்பட்டர் : பதிபக்தியும் நிலைத்தது; சிக்கலும் தீர்ந்தது அல்லவா?

ரங்கு : ஆமாம்

காகப்பட்டர் : எப்படி ?

ரங்கு : கண்ணன் அருள்!

காகப்பட்டர் : புத்திக்கூர்மை வேண்டுமடா புத்தி தீட்சண்யம் வேண்டும். நமது புராணதிகளிலே ஏதேனும் சந்தேகம் எவனுக்கேனும் பிறந்தால், உடனே புத்தி தீட்சண்யத்தை உபயோகித்து, இப்போது நான் சொன்னது போல ஒரு விளக்கக் கதை கட்ட வேண்டும். உடனே தயங்காமல்.

ரங்கு : ஸ்வாமி! இது தாங்கள் கட்டிய கதைதானா?

காகப்பட்டர் : ஆமாம்! கட்டப்படாதோ? என்னடா இது? வியாசர் பாரதம் செய்தார். நான் துரோபதம் எனும் புதிய காவியத்தைச் செய்து காட்டினேன். தவறோ?

ரங்கு : தவறோ, சரியோ ஸ்வாமி. பிரமாதமா இருக்கு வியாக்யானம். விசித்திரமானதா இருக்கு..

காகப்பட்டர் : நமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அனந்தம். அவைகளிலே ஏதேனும் எவருக்கேனும் சந்தேகங்கள் ஏற்பட்டு பழிச்சு பேசினா, ரங்கு! அவாளிடம் வீணான விவாதம் பேசிண்டிருக்கப்படாது. ஆண்டவனுடைய லீலைகள், விசித்திரம் அனந்தம். சாமான்யாளாகிய நம்மால் அவைகளின் முழு உண்மையை, ரகசியத்தின் மகிமையைத் தெரிந்துக் கொள்வது முடியாத காரியம் என்று சொன்னால்
தீர்ந்தது.

ரங்கு : ஆமாம்! புண்ணிய ஏடுகளைச் சந்தேகிப்பது பாபம் என்பதிலே பாமரனுக்கு நம்பிக்கை இருக்கிற வரையிலே . ..

காகப்பட்டர் : நமது யோகத்துக்கு ஈடாக வேறெதுவும் இராது !

ரங்கு : ஸ்வாமி! யாரோ வரா. நம்மவா போலயிருக்கு. யாரா இருக்கும்?

(கேசவப்பட்டர், பாலச்சந்திரப் பட்டர் வருதல், காகப்பட்டரிடம் ஒலையைத் தர, அதைப் படித்தான பிறகு…)

காகப்பட்டர் : மராட்டிய மண்டலத்து மறையோர்களே! மட்டற்ற மகிழ்ச்சி உமது தூதால் எனக்கு உண்டாகிறது.

கேசவப்பட்டர் : நாங்கள் வந்திருக்கும் காரியத்தைப் பற்றியல்ல ஸ்வாமி நாங்கள் மகிழ்வது; எப்படியோ ஒன்று, தங்களைத் தரிசிக்கும் பாக்யம் கிடைத்ததே, தன்யாளானோமே என்பதைப் பற்றியே பரம சந்தோஷம் எங்களுக்கு.

பாலச்சந்திரப் பட்டர் : ஆரியகுலத் தலைவரின் ஆஸ்ரமத்தைக் கண்டு தரிசிக்கும் பாக்யம் கிடைக்கவில்லையே என்று ஆயாசப்படும் ஆரிய சோதராள் மராட்டிய மண்டலத்திலே அனந்தம்.

காகப்பட்டர் : அப்படியா? மெத்த சந்தோஷம்.

கேசவப்பட்டர் : ஸ்வாமி! எங்கு பார்த்தாலும் அகாரியாளுடைய செல்வாக்கே பரவிண்டு இருக்கும் இந்தச் சமயத்திலே, அகாரியாளுடைய ராஜ்யங்களே தலை தூக்கிண்டு ஆடும் இந்தக் காலத்திலே, புனிதமான கங்கைக் கரையிலே, கைலாயமோ, வைகுந்தமோ என்று யாவரும் வியந்து கூறத்தக்க வகையிலே இந்த மகோன்னதமான ஆஸ்ரமத்தை அமைத்துண்டு ஆரிய தர்மத்தை அழியாது பாதுகாத்து வரும் தங்களைக் கலியுக பிரம்மா என்றே நாங்களெல்லாம் கொண்டாடுகிறோம்.

காகப்பட்டர் : நமக்குள்ளாகவோ இவ்வளவு புகழ்ந்து கொள்வது? நாம் ஒரே குலம், ஒரே சதை, ஒரே ரத்தம்.

கேசவப்பட்டர் : அப்படி சொல்லிவிடலாமோ? ஆரிய குலம்தான் நாங்களும், இன்னும் அநேகர். ஆனால் என்ன கெதியில் இருக்கிறோம் மராட்டிய மண்டலத்திலே? எமக்கு மதிப்பு உண்டோ ! மார் தட்றா ! மராட்டிய ராஜ்யம் ஸ்தாபித்தாளாம். அவாளுடைய வீரத்தால்தான் விடுதலை கிடைத்ததாம்.

பாலச்சந்திரப் பட்டர் : விதண்டாவாதிகள் நமது சாஸ்திரத்தைக் கேலி செய்றா.

காகப்பட்டர் : அப்படியா அவ்வளவு மூடுபனியா அங்கு? அஞ்ச வேண்டாம், அங்குள்ள அஞ்ஞானத்தைப் போக்குவோம். மேலும் கேசவப்பட்டரே தாங்கள் கொண்டு வந்துள்ளது ஓலை அழைப்பு அல்லவா? ரங்கு நம்மை அழைக்கிறார்கள், மராட்டிய மண்டலத்துக்கு வந்து போகும்படி.

ரங்கு : நம்மையா ஸ்வாமி உபன்யாசங்க புரியவா?

மராட்டிய மண்டலத்துக்கு சிவாஜி மகுடாபிஷேகம் செய்து கொள்வது பாப காரியம். நான் அதற்குச் சம்மதிக்க முடியாது. வரமுடியாது என்று கூறிவிடும்.

காகப்பட்டர் : அசடே அதற்கல்ல. மராட்டிய மண்டல மாவீரன் சிவாஜி மகுடாபிஷேகம் செய்து கொள்ள வேணுமாம். அதனை நடத்திக் கொடுக்கும்படி நம்மை அழைக்கிறாளடா.

ரங்கு : நம்மை காசியிலிருந்து மராட்டியத்துக்கு! தங்கள் கீர்த்தி, குருஜீ அவ்வளவு தூரம் பரவி இருக்கிறதா?

கேசவப்பட்டர் : கொஞ்சம் தீர்க்கமாக யோசிக்கணும். இது விஷயமா ஆனந்தப்படுறதும் பெருமையா நினைக்கிறதும் மட்டும் போதாது.

காகப்பட்டர் : டே, ரங்கு பேசாம இருடா… பெரியவா சூட்சமம் இல்லாம பேசமாட்டா.

கேசவப்பட்டர் : மராட்டியத்துக்கு இப்ப உங்களை அழைக்கிறதிலே ஒரு சூட்சமம் இருக்கத்தான் செய்கிறது. சிவாஜி மாவீரன் சந்தேகமில்லே. இருந்தாலும் நாமோ வில் வீரன் ஸ்ரீராமச்சந்திரன் காலம் முதற்கொண்டே ஏன், அதற்கு முன்னாலே இருந்தே கெளரவிக்கப்பட்ட குலம்.

காகப்பட்டர் : ஆமாம் அதிலே என்ன சந்தேகம். யுகயுகமாக நிலைத்து நிற்கும் உண்மையல்லவோ அது!

கேசவப்பட்டர் : அப்படித்தான் ஐதீகம். ஆமாம், மராட்டியத்திலே எமக்கு இப்போ மதிப்பு கிடையாது.

காகப்பட்டர் : அப்படியா?

கேசவப்பட்டர் : ஆமாம் சில பேர் நாம் ஆதிக்கம் செலுத்துவது கூடாதுங்கறா! ஏன் என்றால் யுத்தத்திலே சேர முடியாதவான்னு கேலியும் பேசறா.

காகப்பட்டர் : அப்படிப்பட்ட அஞ்ஞானிகளும் அங்கே இருந்திண்டிருக்காளோ?

ரங்கு : தாங்கள் போனால் சூரியனைக் கண்ட பனி போல் அஞ்ஞானிகள் இருக்குமிடம் தெரியாம போயிடுவா.

கேசவப்பட்டர் : மராட்டிய வீரர்களிலே ஒரு தந்திரசாலி தான் எங்களைத் தூது அனுப்பியவன். பெயர் சிட்னீஸ். காயஸ்தகுலம் அவன். எப்படியாவது காகப்பட்டரை வரவழைக்க வேண்டுமென்று திட்டம் போட்டவன்.

காகப்பட்டர் : ஏன்?

கேசவப்பட்டர் : சிவாஜியின் பட்டாபிஷேகம் தாங்கள் வராவிட்டால் நடைபெறாதே.

காகப்பட்டர் : எதிர்ப்போ ?

கேசவப்பட்டர் : ஆமாம்.

காகப்பட்டர் : பக்கத்து அரசனோ ?

கேசவப்பட்டர் : இல்லை, உள் நாட்டிலே நாங்கள்தான் எதிர்த்தோம். சிவாஜி சூத்திரன். அவன் எப்படி க்ஷத்திரிய தர்மப்படி ஜொலிக்க ஆசைப்படலாம்? சாஸ்திரம் சம்மதிக்குமோ? வேத விதிப்படியா? என்றெல்லாம் எதிர்த்தோம்.

காகப்பட்டர் : ஓகோ! இந்த ஓலையிலே அது பற்றி ஒன்றையும் காணோமே?

கேசவப்பட்டர் : எப்படி இருக்கும்? நாங்கள் தான் எதிர்த்தோம். எங்களையே தூது அனுப்பிவிட்டான். அந்த தந்திரசாலி. தங்கள் சம்மதம் கிடைத்து விட்டால் எங்கள் எதிர்ப்புகளை மட்டம் தட்டிவிடலாம் என்ற நினைப்பு.

காகப்பட்டர் : அப்படிப்பட்ட ஆசாமியா? ரங்கு கொண்டுவா ஏடு.

ரங்கு : ஸ்வாமி நாம் போயி நம்மளவாளுக்கு வேண்டிய சகாயம் செய்து… .. .

படிக்க:
ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !
நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !

காகப்பட்டர் : மண்டு மராட்டியத்துக்கு நாம ஏண்டா போகணும்? கேசவப்பட்ரே! விஷயம் விளங்கிவிட்டது. மராட்டிய மண்டலத்துக்கு சிவாஜி மகுடாபிஷேகம் செய்து கொள்வது பாப காரியம். நான் அதற்குச் சம்மதிக்க முடியாது. வரமுடியாது என்று கூறிவிடும்.

கேசவப்பட்டர் : ஓலையே அது போலத் தீட்டினால் …

காகப்பட்டர் : ஆகா! தருகிறேன். கொண்டு போய் வீசும், அவன் முகத்திலே! நமது ஆசியும் ஆதரவும் இல்லாமல் என்ன செய்ய முடியும்.

கேசவப்பட்டர் : அதுமட்டுமில்லை. ஸ்வாமி காகப்பட்டரே, ”முடியாது, பட்டாபிஷேகம் பாப காரியம்” என்று சொல்லி விட்டார் என்பது தெரிந்தால்..

காகப்பட்டர் : பிறகு அவன் பட்டம் சூட்டிக் கொள்ள முடியவே முடியாது.

கேசவப்பட்டர் : பரத கண்டமே அவனைப் பாபி என்று சபிக்கும்.

காகப்பட்டர் : படட்டும்…. ஆரியர்களை அலட்சியப்படுத்தும் அஞ்ஞானிகள் தெரிந்து கொள்ளட்டும் நமது ஆதிபத்தியத்தை! ஒலை தயாரானதும் நீர் புறப்படலாம். இதற்குள் டேய், ரங்கு அவாளுக்குப் பாலும், பழமும் கொடு, சிரமப்பரிகாரம் செய்து கொள்ளட்டும்.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

தோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை !

0

டலூர், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக கடந்த 22.04.2019 அன்று, உலக பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களின் 150 -வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கார்ப்பரேட் – காவி கும்பலுக்கு எதிராகவும், லெனின் பாதையில் புதிய ஜனநாயக புரட்சிக்கு அணிதிரள்வோம் என முழக்கங்களும் எழுப்பப்பட்டது.

லெனின் அவர்களின் சாதனைகளை விரிவாகப் பேசியும், இந்திய அரசின் தோல்வியையும், தேர்தல் ஆணையம் மோடி – அமித்ஷா கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதையும், மீண்டும் கார்ப்பரேட் – காவி கும்பல் மோடி பிஜேபி பாசிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்த துடிப்பதையும் விலக்கி தோழர் வெங்கடேஸ்வரன் உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

புமாஇமு மாவட்ட செயலாளர் தோழர் மா.மணியரசன் அவர்களும் இந்திய அரசு வரி என்ற பெயரில் மக்களை ஒட்டச் சுரண்டுவதையும், சிறுபான்மை இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களைத் தாக்குவதையும், இந்த அரசு கட்டமைப்பு முழுவதும் கார்ப்பரேட் – காவிகளுக்காகவும் செயல்படுவதை விளக்கி உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் மாணவர்கள், பெண்கள் உழைக்கும் மக்கள் கலந்துகொண்டனர். அருகாமையில் இருந்த உழைக்கும் மக்களுக்கும், வணிகர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர்.

தோழர் லெனின் 150வது பிறந்தநாள் நிகழ்வு – புஜதொமு திருவள்ளூர் !

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனினின் 150-வது பிறந்த நாளை உயர்த்திப் பிடிக்கும் வகையில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக 22.04.2019 அன்று காலை 6 மணி முதல் மாவட்ட கிளை/இணைப்புச் சங்க ஆலை வாயில்களில் ஆசான் லெனின் படம் வைத்து ஆலைவாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

கும்மிடிப்பூண்டி SRF, மெட்ராஸ் ஹைட்ராலிக் ஹோஸ், கோவிந்தராஜ் முதலியார் அண்டு சன்ஸ் ஆகிய ஆலைகளின் வாயில்களில் மாவட்ட செயலாளர் தோழர் விகேந்தர், ஆசான் லெனின் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

லைட்விண்ட் ஸ்ரீராம் ஆலை வாயிலில் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் ராஜேஷ் கொடியேற்றி உரையாற்றினார்.

கெமின் ஆலைவாயிலில் மாவட்ட துணைத்தலைவர் தோழர் அரிநாதன் உரையாற்றினார்.

படிக்க:
வீழா திமிர் எங்கள் விளாதிமிர் ! | துரை சண்முகம்
♦ தமிழகமெங்கும் தோழர் லெனின் பிறந்த நாள் விழா !

ஓரன் ஹைட்ரோ கார்பன் ஆலை வாயிலில் மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி சுதேஷ்குமார் படம் திறந்து உரையாற்றினார்.

ஹெரென்க்னெக்ஸ்ட் இந்தியா பிரைவேட் லிட், ஆலை வாயிலில் மாநில துணைத்தலைவர் தோழர் இரா. சதீஷ் கொடியேற்றி உரையாற்றினார்.

மணலி SRF ஆலை வாயிலில் அந்தக் கிளையின் இணைச்செயலாளர் தோழர் வெங்கடேசன் தலைமையில் ஆசான் லெனின் படம் வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மேலும் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பந்தல் அமைத்து மாவட்ட செயலர் தோழர் விகேந்தர் தலைமையில் லெனின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் கலந்துகொண்டு ஆசானின் உருவப்படத்தை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றினார் . இறுதியாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் மக்கள் மத்தியில்;

  • வளர்ச்சி என்ற பெயரில் தரகு முதலாளிகள் – ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக நாட்டை சூறையாடுவதை முறியடிப்போம் !
  • சாதி – மத – இன வேறுபாடுகளைக் களைவோம், வர்க்கமாய் ஒன்றிணைவோம்!
  • ஆசான் லெனின் காட்டிய வழியில் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம் !
  • முதலாளிகளின் லாப வெறிக்காக கட்டவிழ்த்து விடப்படும் பாசிச அடக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் திரள்வோம் !
    – ஆகிய முழக்கங்களை விளக்கும் விதமாக உரை நிகழ்த்தப்பட்டது.

*****

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக இணைப்பு சங்கமான டி.ஐ மெட்டல் பார்மிங் ஆலையில் காலை 7.30 மணி அளவில் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 150 வது பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆசான் லெனின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. கூட்டத்தை டி.ஐ. மெட்டல் பார்மிங் சங்கத்தின் தலைவர் தோழர் மகேஷ் குமார் தலைமையேற்று நடத்தினார்.

சிறப்புரை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில பொருளாளர், சங்கத்தின் சிறப்பு தலைவருமான தோழர் பா.விஜயகுமார் உரையாற்றினார். இதில் இன்று தொழிலாளி வர்க்கம் சந்திக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் மேலும் இன்றைய சமூகத்தில் நடக்கும் பல்வேறு அடக்குமுறைகள் இவற்றை விளக்கினார்.

மேலும் லெனின் ரஷ்யாவில் பாட்டாளிகள் தலைமையில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சோஷலிச சமூகத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். அதேபோல் நாம் இங்கு ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கி புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம், என்பதை விளக்கினார்.

இறுதியாக சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் கனகராஜ் நன்றி உரையாற்றினார். கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் பகுதி மக்களையும் தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து, தோழர் லெனின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் தோழர் லெனின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும் தொழிலாளர்கள் அவர்களுடைய அனுபவத்திலிருந்து தோழர் லெனின் இன்று ஏன் நமக்கு அவசியம் என்பதை உரையாற்றினார்கள். திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தலைவர் தோழர் மா.சரவணன் அவர்கள் உரையாற்றும்பொழுது இன்றைய சமூக கட்டமைப்புகள் முழுவதும் தோற்றுப் போய் மக்களை ஆள அருகதை இழந்து போய் இருக்கின்றது. இதை மாற்ற வேண்டும் என்றால் நாம் மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதன் மூலம் தான் நமக்கு விடிவு என்பதை விளக்கி பேசினார். கூட்டத்தில் பகுதிவாழ் உழைக்கும் மக்களும் தொழிலாளர்களும் 30 பேர் வரை கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,
தொடர்புக்கு : 94444 61480