வினவு செய்திப் பிரிவு
மணிப்பூரில் தொடரும் வன்முறை!
மணிப்பூரில் தொடர்ந்து கலவரத்தை தூண்டிவரும் காவி பயங்கரவாதிகளையும் அதற்குத் துணை நிற்கும் கார்ப்பரேட் பயங்கரவாதிகளையும் மணிப்பூர் மாநிலத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட்டால் மட்டுமே இரு இன மக்களிடையிலான கலவரத்தையும் தடுக்க முடியும், மணிப்பூர் மாநிலத்தின் கனிம வளங்களையும் பாதுகாக்க முடியும்.
பரந்தூர் விமான நிலையம்: கார்ப்பரேட் சேவைக்காக சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் திமுக அரசு!
“மீண்டும் எமது நிலத்தைக் கையகப்படுத்துவது குறித்து ஏதேனும் அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டால் நாங்கள் அனைவரும் தற்கொலைச் செய்துகொள்வோம். அதற்கு மாவட்ட நிர்வாகமும், திமுக அரசுமே பொறுப்பு என்று ஏகனா புரம் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
“அபராஜிதா” மசோதா: பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கவா? தப்பிக்கவைக்கவா?
அரசியல்வாதிகளையும் மாஃபியா கும்பல்களையும் காப்பாற்ற உள்ளூர் ரவுடிகளை என்கவுண்டர் செய்வதை போல சஞ்சய் ராய் போன்ற அம்புகளுக்கு மரண தண்டனை கொடுத்துவிட்டு உண்மை குற்றவாளிகளை காப்பாற்றுவதே மம்தா அரசு கொண்டுவந்துள்ள இப்புதிய மசோதாவின் உண்மையான நோக்கம்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் பறிமுதல்: மாணவர்களை சீரழிப்பது யார்?
கார்ப்பரேட்மயத்தின் விளைவாக உருவான எஸ்.ஆர்.எம். போன்ற கார்ப்பரேட் பல்கலைக்கழகங்கள் நடுத்தரவர்க்க பெற்றோர்களை குறிவைத்துக் கொள்ளையடிக்கும் கேந்திரத்தை உருவாக்கியுள்ளார்கள் என்றால், அதன் அருகில் கஞ்சா போதைக் கும்பல் அவர்களுக்கான சாம்ராஜ்யத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கும் பா.ஜ.க கும்பல்!
துப்பாக்கி முனையில் மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டி, “இது குறித்து வெளியே சொன்னால் உன்னைக் கொன்றுவிடுவோம்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
திருப்பூர்: தள்ளுவண்டி உணவகத்தைச் சூறையாடிய இந்து முன்னணி வழிபறி கும்பல்!
இந்து முன்னணி அமைப்பு வழக்கம் போல, கடையைச் சூறையாடியவர் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று ஓடி ஒளிந்து கொண்டுள்ளது. இன்னொருபுறம் ராசுக்குட்டி தி.மு.க-வை சேர்ந்தவன் என்ற பொய் பிரச்சரத்திலும் ஈடுபட்டு வருகிறது.
கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்கள் போராட்டம்!
மருத்துவத்துறை கிரிமினல்மயமாவதற்கு எதிராக குரலெழுப்ப வேண்டியுள்ளது. பெண்கள் பாலியல் மீது வன்கொடுமைகள் நடப்பதற்கு முக்கிய காரணமாக உள்ள போதைப்பொருள், ஆபாச திரைப்படங்கள் போன்றவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
இந்தியாவில் அதிகரித்துவரும் மாணவர்கள் தற்கொலைகள்
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் நாட்டின் தற்கொலைகள் சராசரியைவிட மாணவர்களின் தற்கொலைகள் பெருகிவருவது அச்சமூட்டும் வகையில் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 6,654-லிருந்து 13,044 வரை உயர்ந்துள்ளது.
மீள்பதிவு | வ.உ.சி : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் 150-வது பிறந்தநாள் | மின்னிதழ்
நாட்டின் கேந்திரமான கட்டமைப்புகளை பன்னாட்டு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து, நாட்டை மறுகாலனி ஆதிக்கத்திற்கு கொண்டு செல்லத் துடிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதுதான் வ.உ.சி-க்கு நாம் செய்யும் கைமாறு
ஹரியானா: பசுவின் பெயரில் நடக்கும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முதல்வர் சைனி
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, "கிராம மக்கள் பசுக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இது போன்ற விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியவந்தால், அவர்களை யாரால் தடுக்க முடியும்?" என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
“புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெறு” | மதுரை அரங்கக்கூட்டம் | செய்தி – புகைப்படம்
நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் உழைக்கும் மக்களுக்கான தண்டனைகளை அதிகப்படுத்துகிறது. போலீசிற்கு அதிக அதிகாரம் வழங்குகிறது. காலனிய கால சட்டங்களை நீக்குவதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
லடாக்கில் புதிய மாவட்டங்கள்: மக்களை ஏமாற்ற முடியாது
தங்கள் அடிப்படை கோரிக்கைகளுக்கு முரணான இருக்கும் அனைத்து நபர்கள், கட்சிகள், இயக்கங்களையும் லடாக் மக்கள் புறக்கணிக்கிறார்கள்.
ஜெர்மனி தேர்தலும் பாசிஸ்டுகளின் வளர்ச்சியும்
"1949க்கு பிறகு ஒரு வெளிப்படையான தீவிர வலதுசாரி கட்சி மாநிலத் தேர்தல்களில் பலமான சக்தியாக இருப்பது இதுவே முதல்முறையாகும். இது பெரும்பாலான மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது" என்று கிரீன்ஸ் கட்சியின் தலைவர் ஓமிட் தெரிவித்தார்.
உ.பி: அடுத்தடுத்து வெளியாகும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்
கோட்வாலி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுமியை, அதே பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றும் பங்கஜ் மற்றும் அமித் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா: பசு மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி காவிக் குண்டர்கள் வன்முறை
"நாங்கள் பஜ்ரங் தள்ளுக்கு ஒரே ஒரு ஃபோன் போட்டால் வந்து உன்னைத் துண்டு துண்டாக வெட்டிப் போடுவார்கள். நாங்கள் போய் உன் மகளைக் கூட்டு வன்புணர்வு செய்து விடுவோம்!" என்றெல்லாம் மிரட்டி உள்ளது காவிக் கும்பல்.















