வேண்டாம் தனியார்மயம்!: நூறு நாட்களைக் கடந்து தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
தூய்மைப் பணியாளர்கள் மீதான அக்கறையிலிருந்து வெளியிடப்பட்டது போன்ற பிம்பத்தை மூன்று வேளை உணவு உள்ளிட்ட அறிவிப்புகள் ஏற்படுத்தினாலும், போராட்டத்தை மட்டுப்படுத்துவதும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதுமே அவற்றின் உண்மை நோக்கமாகும்.
கோவை அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
இருப்பிட மருத்துவ அதிகாரி சரவண பிரியா, பணிச் சுமையை அதிகப்படுத்துவது, விடுமுறை எடுத்தால் பணி நீக்கம் செய்து விடுவதாக மிரட்டுவது, போலீசில் புகார் அளித்து கைது செய்துவிடுவேன் என்று அச்சுறுத்துவது தூய்மைப் பணியாளர்களிடம் அடாவடித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் தொடர் போராட்டமும் கார்ப்பரேட்மயமாகும் மருத்துவக் கட்டமைப்பும்!
நவம்பர் 14-ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் வி.வி.டி. சிக்னல் அருகே ஊதிய உயர்வுக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியதுடன் தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அன்று டங்ஸ்டன், இன்று கல்லாங்காடு சிப்காட் – மக்கள் போராட்டமே வெல்லும்!
தங்கள் வாழ்வாதாரத்தையும் இயற்கை சுற்றுச்சூழலையும் பண்பாட்டு அடையாளங்களையும் அழிக்கும் கல்லாங்காடு சிப்காட் திட்டத்தை அனுமதியோம் என்று மக்கள் உறுதியுடன் போராடி வருகின்றனர்.
கொடூரர்களும் தனவந்தர்களும் இந்துராஷ்டிரத்தின் அங்கங்கள்!
ஊடகங்கள் பாபுபாய் ஜிராவாலாவின் மனிதநேயத்தையும் தாராள மனப்பான்மையையும் புகழ்ந்து மட்டுமே பேசியிருக்கின்றன. அவை மறுப்பதற்கில்லை. ஆனால், வங்கி நிர்வாகிகளின் மோசடிகள் குறித்தும், அதன் விளைவாக 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்த துயரங்கள் குறித்தும் பேச மறுத்திருக்கின்றன.
தொங்கலில் விடப்பட்ட தொழிலாளர் உரிமைகள்!
மனுஸ்ருதி, பண்டைய சாஸ்திரங்கள் அடிப்படையில் தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும் என்று அரசின் கொள்கை கூறுகிறது. பண்டைய சாஸ்திரங்களில் சம்பளம் என்ற சொல்லே இல்லை. தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம், போன்ற சொற்களே இல்லாமல் தொழிலாளர் துறை ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது.
நிச்சயமற்றதாக மாறும் ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை!
அமேசான் நிறுவனத்தில் உலகளவில் 15.5 இலட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கார்ப்பரேட் அலுவலகங்களில் பணியாற்றி வருகின்ற 3,50,000 ஊழியர்களில் 14,000 பேரை அக்டோபர் 28 அன்று அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
யார் தோற்றார்கள், நக்சல்பாரிகளா? — எனில், யார் வென்றார்கள்? | ஹிமான்ஷு குமார்
அரசின் கொள்ளையை எதிர்த்துச் சவாலாக நின்ற ஒரு சக்திவாய்ந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டால், அதன் இயற்கையான விளைவானது அதிகரித்த கொள்ளையும், அடக்குமுறையும், துன்பமும்தான்.
தூத்துக்குடியை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் தி.மு.க. அரசு!
தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியில் தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட ‘வளர்ச்சி’த் திட்டங்களால் இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தி.மு.க. அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால், அவை மிகைப்படுத்தப்பட்ட, உண்மைக்கு மாறான பிரச்சாரங்களே ஆகும்.
ஜி.எஸ்.டி. 2.0: இந்துராஷ்டிர வரிக் கொள்ளையில் மாற்றமில்லை!
மோடி அரசின் ஜி.எஸ்.டி. 2.0-வினால் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் எந்த ஆதாயமும் அடையப் போவதில்லை. அம்மக்கள் மீதான வரிச் சுரண்டல் வழக்கம் போலத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ம.பி-யில் இருமல் மருந்தால் 20 குழந்தைகள் பலி: இறப்பல்ல, படுகொலை!
மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழந்திருப்பது அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தனியார் நிறுவனங்களின் லாப வெறியாலும் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.
தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 3
நாக்பூர், இண்டூர், சண்டிகர், நவி மும்பை, பாஞ்சுகால், தானே, மைசூரு ஆகிய பெருநகரங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஜி.பி.எஸ். இணைக்கப்பட்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களால் அதனைக் கழற்றி வைத்துவிட்டு வேலை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், அவர்கள் வேலை பறிக்கப்படும் என்ற அச்சத்தினால், இந்த டிஜிட்டல் அடக்குமுறையை சகித்துக் கொண்டிருக்கின்றனர்.
தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 2
2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நாடு முழுவதும் சுமார் 377 பேர் சாக்கடை மற்றும் மலக்குழிகளில் ஆபத்தான முறையில் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டதன் மூலம் மரணமடைந்துள்ளதாக அரசு தரப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை நிலவரங்கள் இதனைவிடப் பல மடங்கு இருக்கும்.
தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 1
நோய்த்தொற்றுகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், பொருளாதார நெருக்கடியினாலும் போதிய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளாமல் ஒரு கட்டத்தில் உயிருக்கே அச்சுறுத்தலான நிலையில் தூய்மைப் பணியாளர்கள் கைவிடப்படுகின்றனர்.
மகாராஷ்டிரா தொழிலாளர் சட்டத் திருத்தங்கள்: தொழிலாளர் உரிமைகள் மீதான பேரிடி
கடை மற்றும் பிற நிறுவனங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் 9 மணி நேர வேலை என்பது 12 மணி நேரம் என்று ஆக்கப்படுகிறது. 5 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்பதை மாற்றி 6 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்று மாற்றியமைக்கப்படுகிறது.























