Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 102

எண்ணூர் எண்ணெய் கசிவு – பாதிக்கப்படும் 6 கிராமங்கள் | தோழர் அமிர்தா

எண்ணூர் எண்ணெய் கசிவு – பாதிக்கப்படும் 6 கிராமங்கள் | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



குண்டு வைத்து விளையாடும் பா.ஜ.க யாசகம் கேட்கும் தி.மு.க? | தோழர் அமிர்தா

குண்டு வைத்து விளையாடும் பா.ஜ.க யாசகம் கேட்கும் தி.மு.க? | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அரசு மருத்துவர்களின் உயிரைப் பறிக்கும் தனியார்மயம்!

ந்திய அளவில் மிகச் சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது” என்ற புகழுக்கு பின்னால் ஈவு இரக்கமற்ற முறையில் சுரண்டப்படும் மருத்துவப் பணியாளர்கள் வாழ்க்கை இருக்கிறது என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை. இந்த புகழை திரும்பத் திரும்ப பாடும் நபர்கள் அதிக பணிச்சுமை காரணமாக உடலளவிலும் மனதளவிலும் மோசமான விளைவுகளை அனுபவிக்கும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்களை பற்றி மறந்தும் பேசுவதில்லை.

கடந்த டிசம்பர் 10, 11 ஆகிய இரண்டு நாட்களில் சென்னையில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்த மருது பாண்டியன், சோலைச்சாமி ஆகிய இரண்டு மருத்துவர்கள் அதிக பணிச்சுமை காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். அவர்கள் இருவரும் 24 மணிநேரத்திற்கும் அதிகமாக பணி செய்துள்ளனர். இதில், மருத்துவர். மருது பாண்டியன் 30 வயதான இளைஞர். அவரது மனைவி 3 மாத கர்ப்பிணி.

இந்த இளம் வயது மரணத்திற்கான காரணம் என்ன?

அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருத்துவர்களை பணியில் அமர்த்தாமல், 24 மணிநேர, 36 மணிநேர பணிச்சுமைக்கு மருத்துவர்களை உட்படுத்துவது தான் காரணம். ஆனால், இது இந்த இரண்டு மருத்துவர்கள் விஷயத்தில் மட்டுமே நடந்த தனிப்பட்ட சம்பவம் அல்ல. நாடு முழுவதும் இளம் மருத்துவர்களும் முதுநிலை மருத்துவ மாணவர்களும் அதிக வேலைச்சுமை காரணமாக மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, 10,000 நபர்களுக்கு வெறும் 9 மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள். இந்திய மருத்துவ கட்டமைப்பின் இயல்பே இந்த இளம் மருத்துவர்களையும் மருத்துவ மாணவர்களும் மிகையாக சுரண்டல் செய்வதன் மூலம் மருத்துவத்திற்கான நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பது தான்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக இருக்கலாம். ஆனால் நாம் யதார்த்த உண்மையை ஒப்பீட்டு முறையில் காணமுடியாது. ஒரு பொருள் அதன் உள்ளார்ந்த இயல்பிலே என்னவாக இருக்கிறது என்று பார்ப்பதுதான் இயங்கியல் பூர்வமான பார்வையாகும். அதுதான் சரியான அணுகுமுறையும் கூட.


படிக்க: திருச்சி பெல் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களின் அவலநிலை!


நிதி ஆயோக் மற்றும் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிடும் “குறிப்பிட்ட ஆண்டிற்கான சுகாதார குறியீட்டில்” கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

ஆனால், மாநிலத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாநகரத்தில் இருக்கும் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை  வரை அனைத்திலும் மருத்துவர்கள் பற்றாக்குறை என்பது பொதுவானதாக இருக்கிறது. பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 மருத்துவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் ஒரு மருத்துவர் தான் இருக்கிறார். அவர் இடைவேளை ஏதுமில்லாமல் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால் மட்டுமே குறித்த நேரத்திற்குள் பணியை முடிக்க முடியும்.

மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 1,800 மருத்துவ காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இது ஒட்டுமொத்த அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 சதவீதமாகும். ஆனால் கொரோனா தொற்றுக்குப் பிறகு ஒவ்வொரு  ஆண்டும் அரசு மருத்துவமனைகளை நாடி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து  இருக்கிறது.  அரசு மருத்துவ கல்லூரிகளில் 1000 பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதற்கான பணி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டால் மட்டுமே கீழ்நிலை பணிகளையும் நிரப்ப முடியும். ஆனால் எந்த அரசும் இதற்கான தீர்வை நோக்கி நகர்வதில்லை.

சென்னை உயர்நீதிமன்றமும் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணி உயர்வுக்கான கலந்தாய்வை இடைக்கால தடை உத்தரவால் நிறுத்திவைத்துள்ளது. நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டும், அதற்காக தயார் செய்யவேண்டும், மாணவர்கள் திறன்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த நெருக்கடியை சமாளிக்கவே அரசு மருத்துவமனைகள் முதுநிலை மருத்துவ மாணவர்களை பெரிதும் சார்ந்துள்ளது. இந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஒரு வாரத்திற்கு 80 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.


படிக்க: பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்: பாராமுகம் காட்டும் ‘விடியல்’ அரசு!


இப்படி அதிகமான‌ பணிச்சுமைகளுக்கு இடையில் வேலைசெய்யும் மருத்துவர்களுக்கு போதுமான ஊதியமும் வழங்கப்படுவதில்லை. 2009 திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நான்காம் பட்டை ஊதிய உயர்வுக்கான அரசாணையை கடந்த 14 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளார்கள். இதனால் ஒவ்வொரு மருத்துவருக்கும் மாதம் 40,000 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த அரசாணையை நடைமுறைக்கு கொண்டு வந்து மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த ஆண்டிற்கு 300 கோடி ரூபாய் தமிழக அரசிற்கு தேவைப்படும்.

இந்த மருத்துவர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது, ஊதியத்தை உயர்த்துவது,  செவிலியர்கள் போன்ற பிற மருத்துவ பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது போன்ற விஷயங்களை இன்றைக்கு உள்ள எந்த மாநில அரசாலும் செய்யமுடியாது. ஏனெனில் இப்படி சிறுகச் சிறுக மருத்துவ கட்டமைப்பை தரமிழக்கச் செய்துதான் மருத்துவத்தை தனியார்மயமாக்க முடியும். அப்படி தனியார்மயமாக்குவது தான் இந்தியாவில் உள்ள மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் கொள்கை முடிவு.

2025-ஆம் ஆண்டிற்குள் இந்திய மருத்துவ சந்தையின் மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சந்தையை குறிவைத்து தான் மருத்துவ வியாபார நிறுவனங்களும், காப்பீட்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தையை இந்த படிப்படியான தனியார்மயத்தின் மூலமாகத்தான் அடைய முடியும்.

பொது மருத்துவக் கட்டமைப்பு நசிந்து வருவதற்கு அரசின் தனியார்மய கொள்கை முடிவுதான் காரணம் என்பது தெளிவு. ஆனால் இந்த நசிந்து வரும் மருத்துவக் கட்டமைப்பால் பொது மக்கள் பாதிக்கப்படுவது போலவே அரசு மருத்துவ பணியாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு செவிலியர்களின் சமீபத்திய போராட்டங்களே சாட்சியாகும்.

ஆனால் அரசு மருத்துவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் போராட்டங்கள் குறித்து நேர்மறையான பார்வை மக்களிடம் இல்லை. “லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு இன்னும் எதற்காக போராடுகிறார்கள்” என்ற கேள்விதான் அரசு மருத்துவர்கள் ஆசிரியர்கள் ஆகியோரின் போராட்டங்கள் குறித்த மக்கள் கருத்தாக உள்ளது.

இதை ஏன் நாம் வலியுறுத்தி சொல்கிறோம்? வெகுமக்களிடம் இருந்து மருத்துவர்களின் போராட்டம் எவ்வளவு அந்நியப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதற்காகத் தான். மருத்துவம் பொது சுகாதாரம் என்பது மக்களையும் மருத்துவப் பணியாளர்களையும் உள்ளடக்கிய ஒன்று. மருத்துவம் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் போது மக்கள் பாதிக்கப்படுவது போலவே மருத்துவப் பணியாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது ஒன்றுதான். மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, மருத்துவர்கள் முதுநிலை மருத்துவ மாணவர்கள் அதிக பணிச்சுமைகளுக்கு இடையில் பணிபுரிவது, அதனால் ஏற்படும் உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சினைகள், மருத்துவத்துறையில் ஒப்பந்தமயம் புகுத்தப்படுதல் ஆகிய அனைத்தும் அரசின் தனியார்மய கொள்கை முடிவு என்னும் மூலத்தில் தான் வேர்கொண்டுள்ளது. அதனால் இதனை எதிர்த்துப் போராடும் மருத்துவ பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளின் நியாயத்தை மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

செய்தி ஆதாரம்: தி நியூஸ் மினிட்


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நாடாளுமன்றத்தில் ‘பாதுகாப்பு அத்துமீறல்’: எதிர்க்கட்சிகளின் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ அரசியலின் அபாயம்!

டந்த டிசம்பர் 13-அம் தேதியன்று நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் விவாதத்தின்போது, பார்வையாளர்கள் அரங்கிலிருந்து குதித்த இரண்டு இளைஞர்கள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகை குண்டுகளை நாடாளுமன்றத்திற்குள் வீசி “சர்வாதிகார ஆட்சி ஒழிக”, “பாரத் மாதா கி ஜெய்”, “ஜெய் பீம்” என்று முழக்கமிட்டவாறே எம்.பி-க்களின் மேசைகளில் ஏறி சபாநாயகர் நாற்காலியை நோக்கி ஓடினர். ஒரு பெண் உட்பட இரண்டு இளைஞர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்று புகைகுண்டுகளை வீசி சர்வாதிகார ஆட்சி, மணிப்பூர் கலவரம், வேலையின்மைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதனையடுத்து, நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து முழக்கமிட்டு போராடிய சாகர் சர்மா, மனோரஞ்சன் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே முழக்கமிட்ட நீலம் ஆசாத், அமோல் ஷிண்டே ஆகியோர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு தங்க இடமளித்த விக்கி சர்மா என்பவரும் அவரது மனைவியும் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்பட்டுவந்த மேற்குவங்கத்தை சேர்ந்த லலித் ஜா என்ற இளைஞர் நேற்று டெல்லி போலீசிடம் சரணடைந்துள்ளார்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் பேசுபொருளானது. நாடாளுமன்றத்திற்கு உள்ளே முழக்கமிட்ட இரண்டு இளைஞர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கியது பா.ஜ.க-வை சேர்ந்த எம்.பி. என்பதனால் இந்த சம்பவத்தை பகிரங்கமாக எதிர்க்கட்சிகளுக்கு எதிராக திருப்ப முடியாமல் அடக்கி வாசித்து வந்தது பா.ஜ.க. “நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல்”, “நாடாளுமன்ற தாக்குதல்”, “நாடாளுமன்ற மாண்பு சீர்குலைந்துவிட்டது” என எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கூச்சலிட்டன.

ஆனால், ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் கைதான அனைவரும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்கள். நிலையான வேலையற்றவர்கள். நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தியவர்களில் மூவர் பட்டதாரி இளைஞர்கள். வேலையின்மையால் பாதிக்கப்பட்டவர்கள். வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த இவர்கள், சமூக வலைதளங்களில் பகத்சிங் சமூக ஊடக பக்கத்தின் மூலமாக அறிமுகமாகி இணைந்தவர்கள். பகத் சிங், சேகுவேரா, அம்பேத்கர் போன்றவர்களின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர்கள்.


படிக்க: நாடாளுமன்றத்தில் நுழைந்த ‘தீவிரவாதிகள்’ யார்? | தோழர் மருது


நாடாளுமன்றத்திற்கு வெளியே முழக்கமெழுப்பிய நீலம் ஆசாத் போலீசால் கைது செய்யப்படும்போது, “என் பெயர் நீலம். இந்த இந்திய அரசு எங்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்கிறது. எங்களின் உரிமைகளுக்காகப் பேச முடியவில்லை, காவல்துறை லத்தி சார்ஜ் செய்து எங்களை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வைத்து சித்திரவதை செய்கிறது. எங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க எங்களுக்கு எந்த ஊடகமும் இல்லை. நாங்கள் எந்த சங்கம் அல்லது குழுக்களை சேர்ந்தவர்களும் இல்லை. நாங்கள் சாதாரண மக்கள், நாங்கள் மாணவர்கள், நாங்கள் வேலையில்லாதவர்கள்” என்றே முழங்கினார்.

42 வயதான நீலம் ஆசாத், நெட் தேர்வில் தேர்ச்சி, பி.ஏ., எம்.ஏ., பி.எட்., எம்.எட்., சி.டி.இ.டி., எம்.பில். ஆகிய பட்டங்களை பெற்றிருந்தபோதும் இந்த நாட்டில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. வேலையின்மையின் அவலம் குறித்து குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் பேசுவதை வழக்கமாக கொண்ட நீலம், மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் ஆகிய போராட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார்.

இவருடன் சேர்ந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே முழக்கம் எழுப்பிய 25 வயதான மாகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஷிண்டே, இந்திய ராணுவம் அல்லது போலீசு துறையில் சேர வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். இவர்கள் இருவருமே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.

நாடாளுமன்றத்திற்கு உள்ளே முழக்கமிட்ட இளைஞர்களில் ஒருவரான உத்திரபிரதேசத்தை சேர்ந்த சாகர் ஷர்மா ஒரு ரிக்‌ஷா ஓட்டுநர். வீட்டிலிருந்து டெல்லிக்கு கிளம்பும்போது “நான் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லிக்கு போகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்துள்ளார்.

மற்றொரு இளைஞரான கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மனோரஞ்சன் ஒரு பொறியியல் பட்டதாரி. பா.ஜ.க. ஆதரவு குடும்பத்தைச் சேர்ந்த இவர்தான் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான அனுமதி சீட்டை பெற்றுள்ளார். ஒரு காலத்தில் மோடியின் ரசிகராக இருந்த இவரைப் பற்றி இவரது தந்தை பேசும்போது, மனோரஞ்சன் நூல்கள் படிப்பதிலும் சமூகசேவையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்கிறார்.

இது தான் இவர்களின் அடையாளம். ஒன்பதரை ஆண்டுகால மோடி ஆட்சி, அதற்கு முந்தைய ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டு குரல்வளை நசுக்கப்பட்ட இளைஞர்கள் இவர்கள். தாங்கள் பேசவிரும்பும் வேலையின்மை, பணவீக்கம், மணிப்பூர் கலவரம், மோடியின் பாசிச ஆட்சி போன்ற பிரச்சினைகளை பேசுவதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்ட பின்னர் வேறுவழியின்றி நாடாளுமன்றத்தை தங்களுக்கான போராட்டக்களமாக மாற்றியுள்ளனர். பகத்சிங்கால் ஈர்க்கப்பட்ட இவர்கள் அவரின் வழியில், யாரும் காயப்படாத வகையில் நாடாளுமன்றத்திற்குள் வண்ணப் புகைகுண்டுகளை வீசி கேளாத செவிகளை கேட்கவைக்க விரும்பியுள்ளனர்.


படிக்க: எதிர்கட்சிகளே, ஒத்த முடிவுக்கு வாருங்கள்!


இந்த முயற்சிதான் தற்போது தீவிரவாத செயலை போல சித்தரிக்கப்படுகின்றது. ஒருபக்கம் சங்கி கூட்டம் இதனை எதிர்க்கட்சிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நக்சலைட்டுகளுக்கும் எதிராக திருப்பும் முயற்சியை செய்ய தொடங்கியுள்ளது. ஆனால் மற்றொருபுறம் எதிர்க்கட்சிகள், இளைஞர்களின் இச்செயலை மோடியின் பாசிச பேயாட்சியின் வெளிப்பாடாக மக்களுக்கு எடுத்துக்காட்டி பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தாமல், பாதுகாப்பு அத்துமீறலாகவும் இளைஞர்களை தீவிரவாதிகளை போலவும் சித்தரிப்பது என்பது அப்பட்டமான மக்கள் விரோத போக்கு.

இதனை எதிர்க்கட்சிகள் ஏதோ அறியாமையில் செய்யவில்லை. நேற்று நடந்த இச்சம்பவத்தை மோடி அரசுக்கு எதிரான உத்தியாக கையாள வேண்டும் என்ற உணர்விலிருந்துதான் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளன. அதிலிருந்துதான் இந்த சம்பவம் நடந்த உடனேயே எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கண்டனம் தெரிவித்தது, எதிர்க்கட்சி தலைவர்கள் இச்சம்பத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவிவிலக வேண்டும் என்று  நெருக்கடி கொடுத்தது, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பாக குடியரசு தலைவரை சந்திப்பதாக முடிவு செய்தது, நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டது ஆகியவற்றை செய்தன எதிர்க்கட்சிகள்.

எதிர்க்கட்சிகள் செய்வதை போல இந்த விடயத்தை மோடி அரசுக்கு எதிரான ஆயுதமாக கையிலெடுக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. அதனை செய்ய வேண்டும் என்கிறோம். ஆனால், மோடி அரசுக்கு எதிரான ஆயுதமாக எதனை கையிலெடுத்திருக்க வேண்டும் என்பதே இங்கு விவாதத்திற்குரியது.

பார்வையாளர்கள் அரங்கிலிருந்து நாடாளுமன்ற அவைக்குள் குதித்த இரண்டு இளைஞர்களையும் பிடித்து எம்.பி-க்கள் தாக்கும்போது அந்த இளைஞர்கள், “எங்களை தாக்காதீர்கள், நாங்கள் இங்கு போராட்டம் நடத்தவே வந்துள்ளோம்” என்று எடுத்துரைத்தனர். மேலும் அவர்கள் எழுப்பிய “சர்வாதிகார ஆட்சி ஒழிக” என்ற முழக்கம் என்பது நேரடியாக மோடி அரசுக்கு எதிரானது. ஆனால், இது தெரிந்தும் எதிர்க்கட்சி எம்.பி-க்களால் “ஆம், சர்வாதிகாரம் கூடாது” என்று அவர்களுடன் இணைந்து முழக்கம் எழுப்ப முடியவில்லை.

இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட பிறகும், எந்த இடத்திலும் எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சியின் அவலமே இளைஞர்களை இவ்வாறு மாற்றியுள்ளது, நாட்டில் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது, பாசிச கும்பலுக்கு எதிராக மக்கள் கொதித்து போயுள்ளனர், பாசிஸ்டுகளின் காலம் முடிய போகிறது என்ற வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை.

உண்மையில், இந்தவகை பிரச்சாரங்கள்தான் பாசிஸ்களுக்கு உண்மையான நெருக்கடியை தருவதாக அமையும். தங்களின் பாசிச ஆட்சியால் ஆத்திரம் கொண்ட இளைஞர்கள் நால்வர் நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தங்களை தேடிவந்து எச்சரித்திருக்கின்றனர் என்பதுதான் பாசிஸ்டுகளின் தூக்கத்தை கலைக்கின்ற விடயம். ஆனால், அதனை கைவிட்டுவிட்டு முழுக்க முழுக்க போலி ஜனநாயக புதைசேற்றுக்குள்ளிருந்து கருத்துகளை தெரிவிக்கின்றன, எதிர்க்கட்சிகள்.

இது ஏதோ “எதிர்க்கட்சிகள் ‘தீவிரவாதிகளுக்கு’ ஆதரவு அளிக்கின்றன” என்று பாசிச கும்பல் திசைதிருப்பிவிடுமோ என்ற அச்சத்தினால் எதிர்க்கட்சிகள் இளைஞர்களுக்கு ஆதரவு அளிக்காமல் இல்லை. இயல்பிலேயே, எதிர்க்கட்சிகளின் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியல் என்பது மக்கள் விரோதமானதாகவே உள்ளது.

பாசிஸ்டுகளால் இந்தியாவின் உழைக்கும் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களை, அவர்களின் கோரிக்கைகளை கைவிட்டுவிட்டு, பரந்துபட்ட உழைக்கும் மக்களின் பா.ஜ.க – பாசிச எதிர்ப்பை எவ்வாறு தங்களது வாக்குவங்கியாக மாற்றிக்கொள்வது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலின் உள்ளடக்கமாக உள்ளது. அது இச்சம்பவத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.


தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நாடாளுமன்றத்தில் நுழைந்த ‘தீவிரவாதிகள்’ யார்? | தோழர் மருது

நாடாளுமன்றத்தில் நுழைந்த ‘தீவிரவாதிகள்’ யார்? | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அண்ணாமலை நாடகம் அம்பலம் | ஸ்ரீரங்கம் கோவில் சண்டை | தோழர் மருது

அண்ணாமலை நாடகம் அம்பலம் | ஸ்ரீரங்கம் கோவில் சண்டை | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



2015 Vs 2023 அதிமுக செய்த தவறை திமுகவும் செய்தது! | தோழர் மருது

2015 Vs 2023 அதிமுக செய்த தவறை திமுகவும் செய்தது! | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து வழக்கு: பாசிஸ்டுகளுக்கு பக்கபலமாக நிற்கும் உச்சநீதிமன்றம்!

0

ம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் டிசம்பர் 11 அன்று தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமானது தான் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

பாசிச மோடி அரசு இரண்டாம் முறையாக பதவியேற்ற பின்பு, 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5, 6 தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு குடியரசுத் தலைவர் உத்தரவுகளின் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதில் ஜம்மு காஷ்மீர் மட்டும் சட்டப்பேரவையைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டது.

ஆகஸ்ட் 5, 2019 முதல் ஜம்மு காஷ்மீரில் தொலைதொடர்பு மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான போலீசும் இராணுவமும் குவிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரே திறந்தவெளி சிறைச்சாலையாக பாசிச மோடி அரசால் மாற்றப்பட்டது.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஜனவரி 2020-இல், 2G இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது. ஆனால், 4G இணைய சேவையோ பிப்ரவரி 2021-இல் தான் வழங்கப்பட்டது. இன்று வரை மக்கள் போலீசு – இராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் தான் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே, சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமையைப் பறித்த பாசிச மோடி அரசின் இந்நடவடிக்கை குறித்து தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.

பிரபல சங்கியான ரிபப்ளிக் டி.வி-யின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி போன்றவர்களின் ‘உரிமைகள்’ தொடர்பானது என்றால் உச்சநீதிமன்றம் விரைந்து விடுமுறை நாளன்று கூட விசாரித்து ‘நீதி’ வழங்கியிருக்கும். ஆனால், இங்கு பாதிக்கப்பட்டிருப்பதோ காவி பாசிச கும்பலால் வெறுக்கப்படும் (காஷ்மீரைச் சேர்ந்த) முஸ்லீம்கள் தானே! அதனால் தான், மாட்சிமை பொருந்திய உச்சநீதிமன்றம் விசாரித்து முடிக்க கால அவகாசம் எடுத்துக் கொண்டது.


படிக்க: காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !


இறுதியாக, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமையையும் உணர்வையும் கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளாமல் “இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டது செல்லும்” என்று 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு டிசம்பர் 11, 2023 அன்று ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

“சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது. அது ஒரு இடைக்கால செயல்முறையை முடிக்க உருவாக்கப்பட்டது. மாநிலத்தில் நிலவும் போர் சூழல் காரணமாக அது ஒரு தற்காலிக ஏற்பாடாகும். எனவே தான், அது அரசியலமைப்பின் 21-வது பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இணைவதில் கையெழுத்திட்ட பிறகு ஜம்மு காஷ்மீருக்கு உள் இறையாண்மை (internal sovereignty) இல்லை என்று நாங்கள் கருதுகிறோம்” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும், மக்கள் விரோதமான இந்தத் தீர்ப்பில் மூன்று முக்கியமான அம்சங்கள் உள்ளன.

  1. முதல் அம்சம்: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது குறித்து
    ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றம் அப்போதைய ஆளுநர் சத்தியபால் மாலிக்-ஆல் நவம்பர் 21, 2018 அன்று கலைக்கப்பட்டது. எதிரெதிர் துருவங்களில் இருந்த என்.சி. (National Conference – NC) மற்றும் பி.டி.பி. (Peoples Democratic Party – PDP) ஆகிய கட்சிகள் பா.ஜ.க-விற்கு எதிராக இணைந்து, ஆட்சியமைக்க உரிமை கோரியதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை தடாலடியாகக் கலைப்பதாக ஆளுநர் அறிவித்தார்.

    சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்படுவதற்கான தொடக்கப் புள்ளியே இதுதான். இதற்குப் பின்னர் தான், குடியரசுத் தலைவர் ஆட்சி ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டு சட்டப்பிரிவு 370-ஐ இரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

    ஆனால், மனுதாரர்கள் யாரும் தங்கள் மனுக்களில் இது குறித்து எதுவும் கோராததாலும், அக்டோபர் 31, 2019 அன்றோடு குடியரசுத் தலைவர் ஆட்சி ஜம்மு காஷ்மீரில் முடிவடைந்து விட்டதாலும் இது குறித்து எதுவும் கூறப்போவதில்லை என்று உச்சநீதிமன்றம் அயோக்கியத்தனமாகக் கூறியுள்ளது.

    பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாபர் மசூதிக்குச் சொந்தக்காரர்களான இஸ்லாமியர்கள் ஒரு போதும் மாற்று இடம் கோரவில்லை. ஆனால், தன்னை ’நியாயவான்’ என்று காட்டிக் கொள்ள, அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி, இஸ்லாமியர்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

    தற்போது, சட்டப்பிரிவு 370 இரத்து வழக்கில் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றம் ஆளுநரால் அராஜகமான முறையில் கலைக்கப்பட்டது குறித்து மனுதாரர்கள் எதுவும் கோரவில்லை என்றால் என்ன. அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி நீதி வழங்கலாம் அல்லவா? பாவம்! உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த மறந்துவிட்டது போலும்!

  2. இரண்டாவது அம்சம்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது சட்டப்பிரிவு 370-ஐ இரத்து செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது குறித்து
    குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது தற்காலிகமானது. அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 356-இன்படி அதிகபட்சமாக தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க முடியும்; அதுவும் 6 மாதத்திற்கு ஒருமுறை நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று மட்டுமே.

    இவ்வழக்கில், குடியரசுத் தலைவர் ஆட்சியில் மாநிலம் இருந்தபோது சட்டப்பிரிவு 370-ஐ இரத்து செய்வதற்கான திருத்தத்தை செய்தது தவறு என்று மனுதாரர்கள் வாதிட்டனர். ஆனால், அம்மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றம் இல்லாதபோது மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையையும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

  3. மூன்றாவது அம்சம்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையே ஒட்டுமொத்தமாக ஒன்றியப் பிரதேசமாக மாற்றியது குறித்து
    அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 3-இன்படி மத்திய அரசுக்கு ஒரு மாநிலத்தின் பெயர், பகுதி, எல்லைகளை மாற்றியமைக்க அதிகாரம் உள்ளது. மேலும், ஒரு மாநிலத்தின் எந்தவொரு பகுதியையும் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றும் அதிகாரமும் உள்ளது.

    ஆனால், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஒட்டுமொத்த மாநிலத்தையே யூனியன் பிரதேசமாக மாற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா என்ற கேள்வி எழுந்தது.

    அதற்கு, உச்சநீதிமன்றம் “லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிக்கையின்படி, விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு அளிக்க வேண்டும்” என்றொரு மழுப்பலான பதிலைக் கூறி பாசிஸ்டுகளின் பாசிச தாக்குதல்களுக்கு களத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த மாநிலத்தையே யூனியன் பிரதேசமாக மாற்றுவது சரியா தவறா என்பதற்குள் செல்லவில்லை.

    பாசிச கும்பல் கால்பதிக்க முடியாத எந்தவொரு மாநிலத்தையும் ஒட்டுமொத்தமாக யூனியன் பிரதேசமாக மாற்றிவிட்டு, மாநில அந்தஸ்தை பின்னாளில் வழங்கவிருப்பதாக நீதிமன்றத்தில் கூறிக்கொள்ளலாம்! இப்படியொரு பேரபாயத்திற்குதான் இத்தீர்ப்பு வழிவகை செய்துள்ளது.

உயர்சாதியைச் சேர்ந்த அரியவகை ‘ஏழை’களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு, பாபர் மசூதி இடிப்பு வழக்கு, பீமா கோரேகான் பொய் வழக்கு, ரபேல் விமான ஊழல் வழக்கு, ஆதார் வழக்கு, பெகாசஸ் உளவு செயலி வழக்கு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை வழக்கு ஆகியவற்றில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் பாசிச கும்பலுக்கு சாதகமாகவே வழங்கப்பட்டன. அவ்வரிசையில், தற்போது சட்டப்பிரிவு 370 இரத்து வழக்கின் தீர்ப்பும் இணைந்து கொள்கிறது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பா.ஜ.க. முதலமைச்சர்கள் நியமனம்: சாதி + ஆர்.எஸ்.எஸ். பின்னணி

டந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று ‘பசு வளைய’ மாநிலங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க., ஒரு வார இழுபறிக்கு பிறகு தற்போது அம்மாநில முதலமைச்சர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

ஐந்து மாநில தேர்தல்களில் தெலுங்கானாவில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியும் மிசோரமில் வெற்றிபெற்ற சோரம் மக்கள் இயக்கம் என்ற மாநில கட்சியும் கடந்த டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளிலேயே தங்கள் கட்சியின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துவிட்டன. ஆனால், பா.ஜ.க-வோ தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும் தங்கள் கட்சியின் முதலமைச்சர்களின் பெயர்களைக் கூட அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது.

ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போதே பா.ஜ.க-வால் ஒரு மாநிலத்தில் கூட முதலமைச்சர் வேட்பாளர்களை முன்னிறுத்த முடியவில்லை. இதே நிலை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் தொடர்ந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகியும் யார் முதலமைச்சர்களாக நியமிக்கப்படுவர் என்பது கட்சிக்குள்ளும் தெரிவிக்கப்படாமலேயே இருந்தது. ஒரு வாரமாக அந்தந்த மாநிலங்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக ஒவ்வொரு மாநிலத்திலும் முதலமைச்சர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10-ஆம் தேதி சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தியோ சாயும், 11-ஆம் தேதி மத்தியப்பிரதேச முதலமைச்சராக மோகன் யாதவும், 12-ஆம் தேதி ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் சர்மாவும் அறிவிக்கபட்டனர்.


படிக்க: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் தோல்வி முகமும்! எதிர்க்கட்சிகளின் கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும்!


இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில், இந்த மூன்று மாநில முதல்வர்கள் நியமனங்களிலும் பாசிச கும்பல் ஒரு பொதுவான வழிமுறையினை கையாண்டுள்ளது.

மூன்று மாநிலங்களை பொறுத்தவரையிலும் பா.ஜ.க. கட்சியினரே எதிர்பார்க்காத, பிரபலமில்லாத தலைவர்கள்தான் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு மாநிலங்களிலும் இரண்டு துணை முதல்வர்களையும் சபாநாயகரையும் நியமித்துள்ளது, பா.ஜ.க. இந்த நியமனங்களில் சாதி ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

பழங்குடி இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த விஷ்ணு தியோ சாய் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கரின் ஓ.பி.சி. பிரிவில் மிகப்பெரிய சாதியாகக் கருதப்படும் சாஹு சமூகத்தைச் சேர்ந்த அருண் சாவோவும் பிராமண சாதியை சேர்ந்த விஜய் சர்மாவும் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உயர்சாதியாக கருதப்படும் ராஜ்புத் சாதியைச் சேர்ந்த ராமன் சிங் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 52 சதவிகித ஓ.பி.சி. மக்களை கொண்ட மத்தியப்பிரதேசத்தில், ஓ.பி.சி. பிரிவின் யாதவ் சாதியை சேர்ந்த மோகன் யாதவ் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். தலித் சாதியை சேர்ந்த ஜகதீஷ் தேவ்தாவும் பிராமண சாதியை சேர்ந்த ராஜேந்திர சுக்லாவும் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில், பிராமண சாதியைச் சேர்ந்த பஜன்லால் சர்மா முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெய்ப்பூரின் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த தியா குமாரி மற்றும் பட்டியல் சாதியைச் சேர்ந்த பிரேம்சந்த் பைர்வா ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிந்தி சாதியை சார்ந்த வாசுதேவ் தேவ்னானி ராஜஸ்தான் சட்டசபை சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.


படிக்க: ஐந்து மாநிலத் தேர்தல்: ஓரங்கட்டப்பட்ட பழங்குடியின மக்கள் பிரச்சனை!


மேலும், நியமிக்கப்பட்டுள்ள இந்த மூன்று முதலமைச்சர்களும் ஆர்.எஸ்.எஸ். உடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்-இல் இணைந்து செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைன் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த 58 வயதான மோகன் யாதவ், 19 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-இல் இணைந்து அதன் பிறகு ஏ.பி.வி.பி-இன் மாநில செயலாளராகவும் தேசிய செயலாளராகவும் செயல்பட்டவர். மேலும், கடந்த சிவராஜ் சிங் சௌகான் ஆட்சியில் அம்மாநில உயர்கல்வி அமைச்சராக இருந்தபோது உயர்கல்வியை காவிமயப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். தீவிர இந்துத்துவ மற்றும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்பவர்.

ராஜஸ்தான் மாநில முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள லால் ஷர்மாவும் பள்ளி பருவத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ்-இன் ஏ.பி.வி.பி. அமைப்பிலும் அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ்-இன் இளைஞர் அமைப்பிலும் தீவிரமாக செயல்பட்டவர். பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ். பேரணிகள் மற்றும் கலவரங்களில் ஈடுபட்டு போலீசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்.

சத்தீஸ்கர் முதல்வரான விஷ்ணு தியோ சாய் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பழங்குடியின அமைப்பான “வனவாசி கல்யான ஆசிரம்” அமைப்புடன் மிகவும் நெருக்கமானவர். பா.ஜ.க-வின் சித்தாந்த வழிகாட்டியாகக் கருதப்படுபவர்.

அந்தவகையில் மூன்று மாநிலங்களிலும் திட்டமிட்டு சாதி-மத முனைவாக்கத்தை மேற்கொள்வதற்கு ஏற்ப அப்பட்டமான இந்துத்துவவாதிகளை முதல்வர்களாக நியமித்துள்ளது காவி கும்பல். ஆனால், இம்முதல்வர்கள் நியமனம் என்பது மூன்று ‘பசு வளைய’ மாநிலங்களுக்கான தனித்த திட்டமல்ல.

இம்மூன்று மாநிலங்களும் கணிசமான எண்ணிக்கையில் நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. எனவே, இம்மூன்று மாநிலங்களிலும் கவனம் செலுத்தி வேலை செய்வதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் பா.ஜ.க-வால் பெற முடியும்.

பெரும்பாலும் அனைத்து சாதிகளிலும் முதல்வர்கள் மற்றும் சபாநாயகர்களை நிறுத்தியுள்ளதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குவங்கியை குறிவைத்துள்ளது, பா.ஜ.க. சான்றாக, மத்தியப்பிரதேச முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மோகன் யாதவை 2024 நாடாளுமன்ற தேர்தலில் முன்னிறுத்துவதன் மூலம், “இந்தியா கூட்டணி”யில் உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மற்றும் பீகாரின் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தல் ஆகிய கட்சிகளின் யாதவ் சாதி வாக்குவங்கியை கவர முடியும் என திட்டமிடுகிறது பா.ஜ.க. மேலும், ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கையிலெடுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு அரசியல் மூலம் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க., இந்நியமனங்கள் மூலம் அந்த அரசியலை எதிர்கொள்ள முயற்சிக்கிறது.

மேலும், நடந்துமுடிந்த ஐந்து மாநில தேர்தலை தோல்வி முகத்தில் எதிர்கொண்ட பாசிச கும்பல் பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் மீறி இம்மாநிலங்களில் தனிபெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதற்கு அடித்தளத்தில் ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்டுவந்த இந்துத்துவ முனைவாக்கம்தான் முக்கிய காரணியாக அமைந்தது. எனவே, வருங்காலங்களில் இம்முதல்வர்களை வைத்து இம்மாநிலங்களிலும் சாதிமுனைவாக்க, இந்துமுனைவாக்க, இந்துமதவெறி, இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களையும் பாசிச கும்பல் தீவிரமாக முன்னெடுக்கும்.


தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஆதிக்கச் சாதிவெறியாட்டங்கள்: தமிழ்நாட்டைச் சுற்றிவளைக்கும் ஆர்.எஸ்.எஸ்!

டந்த நவம்பர் மாதம் 20-ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் நவீன்குமார் மற்றும் மெக்கானிக் கிருபாகரன் ஆகிய இருவரும், தங்களைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக கவுண்டர் சாதியைச் சேர்ந்த வெறியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

“ஏண்டா சக்கிலி தாயோலி எங்கள் ஊரில் படுத்ததும் இல்லாம எங்கள எதிர்த்து பேசுவியா” எனக் கத்திக்கொண்டே பிளாஸ்டிக் பைப்பில் இரும்புக் கம்பியை நுழைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்; மயக்கம் வரும் வரை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மயங்கிய நிலையில் குடிக்கத் தண்ணீர் கேட்ட இரண்டு இளைஞர்களின் வாயிலும் “இந்தாட சக்கிலி நாயே” என்று சிறுநீர் கழித்துள்ளனர், ஆதிக்க சாதிவெறி தலைக்கேறிய கவுண்டர் சாதிவெறியர்கள்.

ஆதிக்க சாதிவெறியர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி, கவுண்டர் சாதி சங்கங்கள், தி.மு.க., காங்கிரஸ், கொங்கு பேரவை போன்ற கட்சிகளைச் சேர்ந்த கவுண்டர் சாதிவெறி நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோரைத் திரட்டி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் தாக்குதல்கள் மூலம் தென் தமிழ்நாட்டு மக்களிடையே சாதிமுனைவாக்கத்தை தீவிரப்படுத்தி தனக்கான அடித்தளத்தை உருவாக்கிக்கொள்ள விழையும் பா.ஜ.க. கும்பல், தற்போது இந்த உத்தியைத் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.


படிக்க: கோபிசெட்டிபாளையம் – அருந்ததியர் இளைஞர்கள் மீது சாதிவெறித் தாக்குதல் | தோழர் மருது


இதன் காரணமாக தற்போது தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் நலனுக்காகத் தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர், பறையர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் பலிகடாவாக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் போது, தேவேந்திர குல வேளாளர், பறையர் பிரிவைச் சேர்ந்த சாதிச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டங்களை கட்டியமைக்காமல் கண்டனங்களைத் தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொள்கின்றன. மற்ற இரு பிரிவைச் சேர்ந்தவர்கள் தாக்குதலுக்குள்ளாகும் போதும் இதே நிலைமைதான்.

மறுபுறம், ஆதிக்கச் சாதி சங்கங்கள், கட்சிகளில் ஊடுருவி அவற்றைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பல், தற்போது தாழ்த்தப்பட்ட சாதி சங்கங்கள், கட்சிகளிலும் ஊடுருவி வருகிறது. ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி போன்றோர் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர். இவற்றின் மூலமாக, தாழ்த்தப்பட்ட மக்களையும் சாதிரீதியாகப் பிரித்து தனக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ளப் பாசிச கும்பல் எத்தனித்து வருகிறது.

எனவே, ஆர்.எஸ்.எஸ்-இன் இந்த சதித்திட்டத்தை முறியடிக்க, பா.ஜ.க-வின் இந்துமதவெறி பாசிசத்திற்கு எதிராகப் போராடும் அனைத்துப் பிரிவு மக்களும் ஆதிக்கச் சாதிவெறியர்களால் தலித் மக்கள் மீது தொடுக்கப்படும் சாதியத் தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டியுள்ளது.


தலையங்கம்,
புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



எண்ணூர் மக்களுக்கு நேர்ந்துவரும் கொடூரம்! | எண்ணெய் கழிவைக் கலக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

கண்ணீரில் குளிக்க வைத்தான்! | சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவைக் கலக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



காவிகளின் பிடியில் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம்! தமிழக அரசே வேடிக்கை பார்க்காதே!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயரில் மட்டும் தான் பெரியார் இருக்கிறார்; நிர்வாகமோ தங்களது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை சங்கப் பரிவார கும்பல்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன. பல்கலைக்கழகப் பணியாளருக்கான இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாதது, அரசியல் பேசக்கூடாது என்றும் பட்டமளிப்பின் போது கருப்பு நிற உடை அணியக்கூடாது என்றும் சுற்றறிக்கை அனுப்பியது, முதுகலை வினாத்தாளில் எது தாழ்ந்த சாதி என்று வினா கேட்டது, பல்கலைக்கழக வளாகங்களில் சங்கப் பரிவாரத்தினரைக் கொண்டு  ‘ஆய்வு’க் கூட்டங்கள் நடத்துவது என தொடர்ந்து காவி மயமாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

இதன் நீட்சியாக, “மெக்காலே: பழமைவாதக் கல்வியின் பகைவன்”, “பெரியாரின் போர்க்களங்கள்” ஆகிய நூல்களை வெளியிட்ட இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் இரா. சுப்ரமணி அவர்களுக்கு குறிப்பாணை அனுப்பியிருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். அந்தக் குறிப்பாணையில், பல்கலைக்கழகத்தின் முன் அனுமதி பெறாமல் நூல்கள் வெளியிட்டதற்காக விளக்கம் கேட்டிருக்கிறது. அரசு பணி செய்யக் கூடிய ஒருவர் கல்வி, அறிவியல், இலக்கியம், பண்பாடு தொடர்பாக பேசுவதற்கோ, எழுதுவதற்கோ அனுமதி பெறத் தேவையில்லை என்பதுதான் விதி. இந்த விதிக்கு முரணாக, சட்ட விரோதமாக பல்கலைக்கழக நிர்வாகம்தான் பேராசிரியருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியிருக்கிறது.

இப்பேராசிரியர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும், பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த அக்டோபர் மாதத்தில், இப்பேராசிரியர் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கபட்டது சங்கப்பரிவார கும்பலுக்கு எரிச்சலூட்டியிருக்கிறது என்பதை இந்த பழிவாங்கும் நடவடிக்கை நிரூபிக்கிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மெக்காலே என்ற நூலின் விரிவாக்கப்பட்ட மறுபதிப்பு,  ”மெக்காலே: பழமைவாதக் கல்வியின் பகைவன்” என்ற பெயரில் இவ்வாண்டு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பெரியாரின் போராட்டங்களைத் தொகுத்து, ”பெரியாரின் போர்க்களங்கள்” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இவ்விரு நூல்கள் மட்டுமின்றி மேலும் ஏழு நூல்களையும் எழுதியுள்ளார்.


படிக்க: பெரியார் பல்கலை: கருஞ்சட்டைக்கு விதித்த தடை நீக்கம்! இது தமிழ்நாடு! ஆர்.என்.ரவியே வெளியேறு! | பு.மா.இ.மு


தந்தை பெரியாரின் போராட்டங்களை நூலாக ஆவணப்படுத்தியதும், சாதியின் பெயரால் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கல்வியுரிமையை மறுத்த பார்ப்பனிய குலக் கல்விக்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட மெக்காலே கல்வி முறையை வரலாற்று ஆவணங்களிலிருந்து தொகுத்து எழுதியதுமே காவி கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரியாரின் கொள்கைகளை நடைமுறையில் உயர்த்திப்பிடிப்பவராக இருந்து, பல்கலைக்கழக நிர்வாகத்தின் சமூகநீதிக்கு எதிரான செயல்பாடுகளை கண்டிப்பதில் முன்நிற்பவராக இருக்கிறார் பேராசிரியர் முனைவர் இரா. சுப்ரமணி. இக்காரணங்களால்தான், இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெறி கொண்டு அலைகிறது காவிக் கும்பல்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த செயலை, பேராசிரியருக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாக மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. தமிழ்நாட்டை குஜராத் போலவோ, உ.பி போலவோ அணுக முடியாது என்று அனுபவத்தால் உணர்ந்திருக்கின்றனர் காவி பாசிஸ்ட்டுகள். எனவே பாசிச உளவாளியான ஆளுநரின் துணைகொண்டு, தங்களது சித்தாந்தத்திற்கு ஆதரவானவர்களை துணைவேந்தர்களாக நியமிப்பது, பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, பல்கலைக்கழக வளாகத்தில் முற்போக்கு செயல்பாடுகளை முடக்குவது என்ற செயல் உத்தியின் ஒரு அங்கமே இது. கடந்த 2019 ஆம் ஆண்டு, சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்து, பகவத் கீதையை பாடத்திட்டத்தில் நுழைக்க முயற்சித்ததை இத்தருணத்தில் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.


படிக்க: டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்


இந்தியா முழுவதும்  உள்ள பல்கலைக்கழகங்களில் முற்போக்கு, ஜனநாயகம், மனிதாபிமானம், உண்மை வரலாறு பேசக்கூடிய பேராசிரியர்கள், மாணவர்களை பழிவாங்குவது என்ற வகையில் வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது காவிக் கும்பல். பெரியார் படம் வைத்ததற்காக ஜே.என்.யு-வில் பயிலும் தமிழக மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதும், பாலஸ்தீனம் குறித்து மாணவர்களிடம் உரையாடியதற்காக பேராசிரியர் ஒருவரை ஹரியானாவில் உள்ள ஜிண்டால் பல்கலைக்கழக நிர்வாகம் வருத்தம் தெரிவிக்கக் கூறியதும் அண்மைச் சான்றுகளாகும்.

எனவே,  ‘சமூக நீதி’ பேசும் திராவிட மாடல் அரசு, இந்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் கடந்த கால ஊழல் முறைகேடுகள், காவிமயமாக்க நடவடிக்கைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்து வருவதை இனியும் தொடருமானால் பல்கலைக்கழகத்தின் பெயரில்கூட பெரியாரை விட்டுவைக்கமாட்டார்கள் காவி பாசிஸ்ட்டுகள்.


வாகைசூடி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

டிசம்பர் – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – ஆதிக்கச் சாதிவெறியாட்டங்கள் : தமிழ்நாட்டைச் சுற்றிவளைக்கும் ஆர்.எஸ்.எஸ்!
  • காங்கிரஸ் தோல்வி: பாசிஸ்டுகளின் வழியில் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலின் விளைவு!
  • இந்துத்துவ பாசிசத்தின் இருமுனைக் கத்தி: பலிகடாவாக்கப்படும் ‘தேவேந்திர குல வேளாளர்கள்’!
  • ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் தோல்வி முகமும்!
    எதிர்க்கட்சிகளின் கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும்!
  • பு.ஜ.உடன் ஓர் உரையாடல்..
  • விவசாயிகள் மீது குண்டாஸ் : தி.மு.க. அரசின் துரோக நடவடிக்கை!
  • நேற்று ராகுல் காந்தி!
    இன்று மஹுவா மொய்த்ரா! நாளை?
  • தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி!
  • வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வெல்லட்டும்!
  • விரட்டியடிக்கப்படும் அனகாப்புத்தூர் மக்கள்: தி.மு.க. அரசின் அராஜகம்!

அறிவிப்பு – இதழ் விலையேற்றம் தொடர்பாக

புதிய ஜனநாயகம் இதழ் கடனில்தான் தொடர்ந்து இயங்கி வருகிறது. 2021-இன் தொடக்கத்தில் நிறுத்தப்பட்ட புதிய ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவருகிறோம். பல முகவர்கள் சீர்குலைவுவாதிகள் பின்னால் சென்றுவிட்டதால், விற்பனை வட்டம் சுருங்கிவிட்டது. புதிய ஆசியர்கள்தான் இந்தப் பணியை மேற்கொண்டு செய்து வருகிறோம். இதனால், இதழ் அச்சாக்கச் செலவுகள் அதிகரிப்பு, விற்பனை படிகளின் எண்ணிக்கை குறைவு போன்றவை இதழின் செலவினங்கள் அதிகரிக்கக் காரணமாக இருக்கின்றன.

இதேகாலத்தில், விளம்பரங்களைப் போட்டு, பெருவீத அளவில் அச்சிடப்பட்டு வெளிவரும் நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற இதழ்கள்கூட ரூ.25 விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. காகித விலையேற்றம், போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு ஆகியன நீடித்துவரும் நிலையில், புதிய ஜனநாயகமோ நீண்ட காலமாக ரூ.20 என்ற விலையிலேயே கொடுத்து வருகிறோம்.

ஆகையால், இதழ் விலையை அதிகரிப்பது அவசியமானதாக உள்ளது. அந்த வகையில், 2024 ஜனவரி முதல் ரூ.30 விலையில் இதழைக் கொண்டுவருவது என முடிவு செய்துள்ளோம். இதன்படி, ஆண்டுச் சந்தா ரூ.360 ரூபாயாக இருக்கும். விற்பனைப் பிரதிகளுக்கான கழிவு, வழக்கம் போல ரூ.3-ஆக இருக்கும்.

கடன் நெருக்கடியில் இருந்து சற்று மீள்வதற்குத்தான் இந்த விலையேற்ற முயற்சியை மேற்கொள்கிறோம். இதழ் விலையுயர்வைக் காரணம் காட்டி வாசகர்கள் சந்தாக்களையும் விற்பனைப் படிகளையும் குறைத்துவிட்டால், இந்த விலையுயர்வு பலனளிக்காமல் போய்விடும். ஆகையால், தொடர்ந்து சந்தாக்களை அதிகப்படுத்துமாறும் இதழ் விற்பனையை விரிவுப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஆண்டின் மத்தியில், ஆண்டு சந்தா செலுத்திய வாசகர்களுக்கு 2023 டிசம்பர் வரையில் ரூ.20 என்ற விலையிலும், 2024 ஜனவரி முதல் ரூ.30 என்ற விலையிலும் இதழ் அனுப்பப்படும். அந்தவகையில், தற்போது செலுத்தியிருக்கும் சந்தா தொகையான ரூ.240-லிருந்து கணக்கிட்டு இதழ்வழங்கப்படும். ஆகையால், ஆண்டின் மத்தியில் சந்தா தொகை செலுத்தியவர்களுக்கு ஓரிரண்டு மாதங்கள் முன்னதாகவே சந்தா முடிவடைந்துவிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆண்டு சந்தா புதுப்பித்தல் தொடர்பாக:

இந்த மாதத்திலிருந்தே 2024-ஆம் ஆண்டுக்கான சந்தா சேகரிப்புப் பணியைத் தொடங்குகிறோம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் தாங்கள் செலுத்தும் ஓராண்டு சந்தா தொகையை ரூ.360 என செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதனை நேரடியாக புதிய ஜனநாயக அலுவலக எண்ணிற்குத் தொடர்பு கொண்டும், பகுதியில் தங்களைச் சந்திக்கவரும் முகவர்கள் மூலமாகவும் செலுத்தலாம்.

அஞ்சல் சந்தாக்களுக்கு இதழை முறையாக அனுப்பி வருகிறோம். சில பகுதிகளில் தொடர்ந்து இதழ் வந்து சேர்வதில்லை என்று புகார்கள் வருகின்றன. இதற்கு அந்தந்த பகுதியில் இருக்கும் அஞ்சல் நிலையங்களைத் தொடர்பு கொண்டு ஒருமுறை இத்தவறை சுட்டிக்காட்டினால், அதன் பின்னர் முறையாக இதழை வினியோகம் செய்துவிடுவார்கள்.

இவ்வாறு சிக்கல் இருக்கும் பகுதிகளில் வாசகர்கள் மேற்கண்ட வகையில் முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆகையால், சந்தா புதுப்பிப்பதை எக்காரணம் கொண்டும் நிறுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வேளச்சேரி: 60 அடி பள்ளத்தில் தத்தளிக்க விடப்பட்ட தொழிலாளர்கள்!

வேளச்சேரி: 60 அடி பள்ளத்தில் தத்தளிக்க விடப்பட்ட தொழிலாளர்கள்!

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மிக்ஜாம் புயல் வெள்ளம்! மாணவர்களின் அர்பணிப்பு! அரசே குற்றவாளி!

மிக்ஜாம் புயல் வெள்ளம்! மாணவர்களின் அர்பணிப்பு! அரசே குற்றவாளி!

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube