Wednesday, July 23, 2025
முகப்பு பதிவு பக்கம் 211

கம்போடியா : நாட்டு மக்களின் நிலங்களை அபகரித்து சுற்றுச்சூழலை நாசம் செய்யும் அரசு

‘வேறு எந்த நாடு தனது மக்களுக்கு இதைச் செய்யும்?’ கம்போடிய நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச நீதியை நாடுகிறார்கள்.

“தீடிரென அரசுத்தரப்பிலிருந்து வந்தவர்கள் நாங்கள் ஒரு சமூகமாக வாழும் அந்த இடத்தை சுற்றி வளைத்துக் கொண்டு எங்களிடம் நீங்கள் எல்லோரும் இந்த இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கொண்டிருக்கீறீர்கள்” என்றதில் இருந்து ஆரம்பித்தது எல்லாப் பிரச்சனைகளும்” என்கிறார் 2020 ஜீனில் சாயி கிம்சுரூர்.

“நாங்கள் இங்கே 1995-லிருந்து குடியிருந்து வருகிறோம். ஆனால், திரும்பவும் ஆறுமாதம் கழித்து வந்தவர்கள் எனது ஏரியை தூர்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது “இது எங்கள் நிலம்” என அரசு தரப்பிலிருந்து வந்தவர்கள் அறிவித்தார்கள். அந்தப் பகுதியிலிருந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

படிக்க :
♦ கம்போடியா : மேற்குலகிற்கு நாங்கள் என்ன செருப்பா ?
♦ பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !

அந்த சமயத்தில் அந்த ஏரியில் மீனும் முதலையும் வளர்த்து வந்தார் கிம்சுரூர் பியோங் சாம்ரோங். இது ஒரு சிறிய சமூகமாக குடும்பங்கள் வாழுமிடம். ஃபனாம் பேன் பகுதியின் புறப் பகுதியில் வடமேற்கே இருக்கிறது. ஒரே கூரையின் கீழ் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். அவரது மூன்று ஏரிகளில் இரண்டு ஏரிகளை தூர்க்கும் வரை அவரது குடும்பம் வாழ்ந்து வந்ததே இந்த நீராதார வணிகத்தினால்தான் என்கிறார். இந்த நிலம் உண்மையில் அரசு-பொது நிலம் என்று கூறி, அதிகாரிகள் கோருகிறார்கள், ஒரு பூங்காவைக் கட்ட வேண்டும் என்று கூறப்படுகிறது.

“அவர்கள் எனக்குச் சொந்தமான இடத்தில் என்னை கேட்காமலே சாலை போட்டனர். அவையெல்லாம் எனது ரத்தத்தை வியர்வையாக்கி நான் உழைத்து சம்பாதித்த எனக்கு சொந்தமான சொத்துக்கள். வேறு எந்த நாடு தனது மக்களுக்கு இது மாதிரியான கொடுமைகளை செய்யும்?” என்கிறார் கிம்சுரூர்.

“முனிசிபல் துறையிலுள்ள நில நிர்வாகம் அமைத்து தந்துள்ள அதிகாரத்துவ நிர்வாக செயல்முறைகளை கடந்துப் போவதற்குள் தனது நிலத்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தை இழந்துள்ளதாகவும் அதேசமயம் தனக்காக வாதிட ஒரு வழக்கறிஞரை வைத்துக் கொள்ளவும் முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்” என்று மார்ச் 2021-ல் கிம்சருர் உறுதி செய்கிறார்.

“அரசு இழப்பீடு தருவதாக சென்ற ஆண்டிலிருந்து (2020) உறுதியளித்திருந்தது. ஆனால் இதுவரை எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. அந்த நிலம் பல பத்தாண்டுகள் என்னுடையதாக இருந்தது. இழப்பீடு எப்போது வரும்?” என்று ஆற்றாமையுடன் கேட்கிறார்.

2020 ஜூன் மாதம் அவரது அனுமதியின்றி அழிக்கப்பட்ட அவரது நிலத்தை டச் சோயுன் பார்க்கிறார்.

ஜீலை 2020-ல் டச்சோயுன் மக்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் புல்டோசர்கள் தங்கள் பகுதிக்கு வந்துவிடும் என்ற பயத்தில்தான் எழுந்திருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்னதாக அந்த புல்டோசர்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் போலீசு அதிகாரிகள் ஆகியோருடன் வந்தன. தன்னிடம் வடக்கு பேனம்பென்-னின் அருகேயிருக்கும் போயங் சௌக் என்ற குக்கிராமத்தில் அங்கிருக்கும் பெயர் தெரியாத ஒரு சொத்து மேம்பாட்டாளரது நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப் பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

“அந்த சமயத்தில் புல்டோசர்கள் ஆறு வீடுகளின் குறுக்காகக் கிழித்து இடித்துக் கொண்டிருந்தன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வீட்டு சொந்தக்காரருக்கு மாரடைப்பு வந்து விட்டது.” என மக்களின் பரிதாப நிலைகளை சோயுன் விவரித்தார்.

“கடந்த மாதம் (ஜீன்-2020) சிட்டி ஹாலுக்கு நான் சமர்பித்த புகார் மனு பற்றி இதுவரை எனக்கு எந்த பதிலும் வரவில்லை. ஆனால், புல்டோசர்கள் திரும்ப வந்துவிட்டால் என்ன நடக்குமோ எனப் பயத்துடன் வாழ்க்கையை ஓட்டுகிறோம்” என்று ஜீலை மாதம் அவர் தெரிவித்தார். “எங்களது சமூகம் ஒற்றுமையாக இருக்கிறது. எங்களது வீடுகளை அவர்கள் அபகரிக்காமல் தடுக்க நாங்கள் ஒன்றாக தயாராகிக் கொண்டிருக்கிறோம் பார்ப்போம்” என்று மேலும் தெரிவித்தார்.

“ஆனால், இப்போது போயுங் சௌக் கிலுள்ள 22 குடும்பங்களும் பதைபதைப்புடன் முடிவை எதிர்நோக்கிய வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மார்ச் 2021 நிலவரப்படி இவர்களது வழக்கில் எவ்வித முன்னேற்றமில்லாமல் இருக்கிறது. அதோடு, அதிகாரிகள் இவர்கள் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் முரட்டுத் தனமாக இருப்பதோடு காலி செய்தால் இழப்பீடு வழங்கப்படும் என பசப்பிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் சோயுன்.

“இப்போதைய நிலவரப்படி பிரச்னையில்லாமல் வாழ்வதாக நினைக்கிறோம். முதலில் வீட்டைப் பிளந்து நாசப்படுத்திய நிகழ்வு நடந்து ஒன்பது மாதங்களாகிவிட்டது. என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. ஆனால், இங்கிருந்து வெளியேற எங்களுக்கு விருப்பமில்லை” மார்ச் 2021-ல் அவர் சொன்னார்.

சர்வதேச நீதிக்கான சாத்தியம்

கம்போடியாவில் கிம்சருர் சோயுன் ஆகியோரதுப்போன்ற சோகங்களேப் பொதுவாக எல்லோரிடமும் நிலவுகிறது. சர்வதேச மனித உரிமைகள் கழகம் (FIDH) கூறுவது படி 2014-ல் 77,000 மக்கள் இந்த நிலஅபகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 4 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் மக்களிடமிருந்து பிடுங்கியெடுக்கப் பட்டுள்ளதாகவும் அதில், பேனம் பென் பகுதியில் மட்டும் 1,45,000 ஹெக்டேர் நிலங்கள் பறித்தெடுக்கப் பட்டுள்ளன என்றும் தெரிய வருகிறது.

நன்கு ஆவணப்படுத்தப்பட்ட அரசியல்மயமாக்கப்பட்ட கம்போடியாவின் நீதித்துறை நீதி வழங்குவதில் ஏமாற்றத்தையே தருகிறது. நில சம்பந்தமானப் பிரச்னைகள் அடிக்கடி வந்தாலும் நீதிமன்றம் மிக அரிதாகவே விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

FIDH, along with Global Witness and Climate Counsel உலகளாவிய சாட்சி மற்றும் காலநிலை ஆலோசகருடன் ஒரு திறந்த கடிதத்தை மார்ச் 16 அன்று சர்வதேச கிரிமினல் நீதிமன்ற (ஐசிசி) தற்போதைய வழக்கறிஞர் படாவ் பென்சௌடாவுக்கு அனுப்பியுள்ளனர். அதில் கம்போடியாவின் நில அபகரிப்புகள் பற்றி முதல் கட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

கம்போடியாவின் இப்போதைய நிலைமை ஐ.சி.சி-க்கு மனித இனம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற தனிப்பெரும் பயங்கரத்தை (கால நிலை மற்றும் சுற்றுச்சூழல் அவசரநிலை) சந்திக்கின்ற ஒருங்கிணைந்த சந்தர்ப்பத்தை தந்திருக்கிறது” என எழுதுகின்றனர்.

மேலும், ”நிலப் பறிப்பு என்பது அங்கிருக்கும் குடியிருப்புவாசிகளைப் பலவந்தமாக மிரட்டி வெளியேற்றுவது பற்றி மட்டுமல்ல அல்லது அவர்களை அடித்தல், கொலை செய்தல் அல்லது நிலப் பாதுகாப்புப் போராளிகளை சட்டவிரோதமாக சிறையிலடைப்பது என்பதோடு முடிவதல்ல” என்று அதில் எழுதுகின்றனர்.

FIDH, Global Witness and Climate Counsel (உலகளாவிய சாட்சி மற்றும் காலநிலை ஆலோசகர்) அக்டோபர் 2014-ல் தனது நடைமுறைகளைத் துவங்கியது. அதன் முதல் தகவல் தொடர்பை ஐ.சி.சி வழக்கறிஞருக்கு அனுப்பிய போது – தொடர்ந்து ஜீலை 2015-ல் இரண்டாவது தகவலை அனுப்பியபோதும் – அது பற்றிய நடவடிக்கை என்னவோ மிக மோசமாக மெதுவாகவே நடந்தது. FIDH சமீபத்தியக் கடித்ததில் பென்சௌடாவின் பதவிக்காலம் முடிவதற்குள்ளாக அதாவது, ஜீன் 15, 2021-க்குள் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

“வழக்கறிஞருக்காக நாம் ஒரு முடிவை எடுக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது” என்ற ஆன்ட்ரியா ஜியோர் ஜெட்டா FIDH-ன் ஆசியப் பகுதிக்கான இயக்குநர்.

“இந்த வழக்கு அவரது கவனத்துக்கு பல ஆண்டுகளாகவேக் கொண்டு செல்லப் படுகிறது. எனவே, அவரது முடிவு ஏற்கனவே கொடுக்கப் பட்டிருக்க வேண்டியது – முடிவு என்பது இதுதான் என தெரியாவிட்டாலும் அதிக பட்சமாக ஒரு வழி அல்லது மற்றொன்று என்றுதான் தரப்படும் என நாங்கள் நம்புகிறோம்” என ஒரு தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்தார்.

“நாம் இது சம்பந்தமாக ஐ.சி.சி வழக்கறிஞர் அலுவலகத்தின் கருத்தை அறிய முயன்றோம். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை. டிசம்பர் 2020 தகவல்படி முதற்கட்ட விசாரணை பற்றிய நடவடிக்கைகளில் பென்சௌடா அலுவலகம் இந்த ஆணட்டில் கம்போடியாவின் நிலப் பறிப்புக் குற்றங்கள் உட்பட மேற்கொண்டு விசாரணை தேவைப் படுகிறவை பற்றி தனது ஆலோசனையைத் தெரிவிக்கும்” என அறிவித்திருக்கிறார்கள்.

உண்மையில், பிப்ரவரி 17-ல் சர்வதேச மற்றும் ஐரோப்பிய விவகாரங்களுக்கான நிறுவனத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் பென்சௌடா தனது முதன்மை உரையில் கம்போடியா விவகாரத்தில் தனதுப் பணிக்காலம் முடிவடையும் முன் அதாவது ஜீன் 15 2021-க்குள் ஒரு முடிவு எட்டப்படும் என்பதை மறுபடியும் உறுதி செய்தார்.

“நாங்கள் தற்போது கம்போடியாவின் நிலப் பறிப்புப் பிரச்னை குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். வெகுவிரைவில், அதற்கானப் பதிலை தருவோம்” என்று தனது உரையினிடையே குறிப்பிட்டார்

சோயனின் வீட்டையும் அங்கு இருந்த மரங்களையும் அழித்துவிட்டார்கள்

கம்போடியாவில் நிலப் பறிப்புப் பிரச்னையில் நீதிகேட்டு போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு எச்சரிக்கையான நம்பிக்கை ஐ.சி.சி செப்டம்பர் 15, 2016-ல் ஒரு கொள்கை அறிக்கையை வெளியிட்டதன் மூலம் ஏதோ ஒரு வகையில் புதுப்பிக்கப்பட்டது. வழக்குகளை தேர்ந்தெடுப்பதிலும் அதை வரிசைப் படுத்துவதிலும் தங்களது நடைமுறையை விரிவாக்கியிருப்பதை அந்த கொள்கை அறிக்கை விவரித்திருந்தது.

ஆதாரங்களை சட்டவிரோதமாகச் சுரண்டுவது அல்லது எங்களது அலுவலகம் ரோம் சட்டகுற்றங்கள் பற்றி விசாரிக்கக் குறிப்பானக் கவனத்தை தரும். அவை, எதனால் எதன் விளைவாக செய்யப்பட்டன, மற்ற செயல்பாடுகளில் சுற்றுப்புறச்சூழலை அழித்தல் இயற்கை சட்டவிரோதமாக நில உரிமையைப் பறித்தல் போன்றவற்றை விசாரிக்க குறிப்பானப் பரிசீலனைகளை தரும் என்று அந்த கொள்கை அறிக்கை குறிப்பிட்டது.

“அதனால்தான் நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம்” என்கிறார் ஜியார் ஜெட்டா. மேலும், அவர் “ஏனென்றால் அவர்களது கொள்கை அறிக்கை எந்த மாதிரியான நிலைமைகளை பரிசீலிக்க வேண்டுமென  விவரிக்கிறதோ, அவற்றுக்குள் எங்களது பிரச்சனையும் வருகிறது” என்கிறார்.

இவ்வாறு கூறப்பட்டால் ஜியார் ஜெட்டா விரைவாக சுட்டிக் காட்டுவது ஐ.சி.சி தனது அடிப்படை நோக்கங்களை விரிவுபடுத்தவில்லை வழக்கறிஞர் அலுவலக தரப்பில் இன்னமும் ரோம் சட்டத்தின் கீழுள்ளக் குற்றங்களைப் புலன் விசாரணை செய்வதில்தான் முழுதும் ஈடுபட முடிகிறது. மாறாக, தற்போது பட்டியலிடப்பட்ட குற்றங்கள் சுற்றுச்சூழல் சீரழிவு, இயற்கை வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவது அல்லது சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு பங்களித்த வழக்குகளுக்கு நீதிமன்றம் முன்னுரிமை அளிக்க முடியும்.

ஐ.சி.சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மத்தியில், வழக்கறிஞர் அலுவலகத்திற்கு மட்டுமே தகவல் தொடர்புகளை சமர்ப்பிப்பது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் மற்றும் கம்போடியா முழுவதும் நில அபகரிப்பில் ஈடுபடுவோரின் நடத்தையை மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது; ஆனால், ஜியர் ஜெட்டா கவனித்தபடி இது அப்படி இல்லை நடந்தது இதற்கு எதிரானது.

அரசு இந்த தகவல்களை அனுமதிக்கவில்லை இதனைப் புறக்கணிப்பதாகத் தெரிகிறது. அரசியல் உறுதி இருக்கவில்லை என்ற செய்தியை மறுபடி உறுதிபடுத்தியது. குறிப்பாக, இந்த பிரச்சனையின் மீது கவனம் செலுத்துமளவு நீதித்துறை சுதந்திரமில்லாதிருந்தது.

இந்த நிகழ்வுகள் குறித்தும் ஐ.சி.சி-யால் பரிசீலிக்கப்படும் நிலப் பறிப்பு விசாரணை குறித்தும் கருத்துக் கேட்கத் தொடர்புக் கொண்ட போது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நேத் பீகாட்ரா, பதில் சொல்வதற்கு உரிய நபர் தான் அல்ல என்று மறுத்துவிட்டார். நில மேலாண்மை அமைச்சகத்தின் செங்லாட்டை தொடர்புக் கொள்ள முடியவில்லை. அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் கூட இது பற்றி பொதுவெளியில் பேச மறுக்கின்றன.

அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் ஃபேசிபான் ஐ.சி.சி-யின் முன்னேற்றம் குறித்து அரசு என்ன நினைக்கிறது என்று பேச மறுத்த்தைப் போல, கம்போடியன் மக்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் சாக் எய்சான், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோய்குயான்க் மற்றும் அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளர் ஏக்தா ஆகியோரும் ஏற்கனவே மறுத்திருந்தனர்.

எனவே, பிரதம மந்திரி ஹன் செனின் நிர்வாகத்தில் உள்ள எவரும் குறிப்பாக நில அபகரிப்பில் ஈடுபடுவதை இலக்காகக் கொள்வதில் அக்கறைக் கொண்டுள்ளார்களா என்பதை தெரிந்துக் கொள்ள முடியாத நிலையில், ஆனால் ஜியர் ஜெட்டா குறிப்பிட்டது போல, சர்வதேச தடைகளின் எதிர்பார்ப்பில் அரசாங்கம் முன்னதாகச் சற்று முன்னேறியது.

இங்கே நாங்கள் பொருளாதார தடைகளைப் பற்றி பேசவில்லை குற்றவியல் பொறுப்பு கூறலைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறோம் சர்வதேச சமூகம் தனிநபர்களை குறிவைத்து செயல்படும் போது அரசு அதற்கு எதிர்வினை ஆற்றுகிறது. சில அலுவலர்களும் உயர் அதிகாரிகளும் தங்கள் வியாபாரத்தை மறைக்கிறார்கள் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

வரலாற்று சிக்கல்களும் தீர்வுகளின் பற்றாக்குறையும்

கம்போடியாவில் இனப் படுகொலைக்குப் பிறகு கேமர்ருஜ் பகுதியில் நில உரிமைகள் அழிக்கப்பட்டன. நில உரிமை என்பது நீண்ட காலமாக ஒரு உணர்வு பூர்வமான சமுகப் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த நடவடிக்கை நீண்ட காலமாக நீடித்த நில உரிமைகளை 1980-ல் ரத்து செய்வதில் முடிந்தது. ஆனால் 1990-ன் பெரும்பகுதி கம்போடியாவை சூறையாடியக் கசப்பானப் போர் நடந்த போது நிலங்களுக்குத் தரப்பட்ட சலுகைகளின் மதிப்புத் தெளிவாகியது.

கம்போடியாவில் ஐக்கிய நாடுகளின் இடைக்கால அதிகார சபையை அடுத்து, பல்வேறு அரசியல் பிரிவுகள் மேலாதிக்கத்திற்கான ஏலங்களுக்கு நிதியளிக்க முயன்றதால், 1991 மற்றும் 1997-க்கு இடையில், அரசாங்கம் சுமார் 7 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை வன சலுகைகளாக ஒதுக்கியது.

கிம்சருர் சோயுன் போன்றோர்கள் 1995-லிருந்தே பேனம் பென் பகுதியின் புறப்பகுதியில் வந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். 1999 வரை நில மேலாண்மை அமைச்சகம் இருந்ததில்லை. கம்போடியா நில சட்டம் 1992-ன் பதிப்பு, அதன் 2001 சட்டத் திருத்தம், அதன் 2001 திருத்தம் வரை பலவீனமான – எந்தவொரு அமலாக்கத்தாலும் பாதிக்கப்பட்டது.

ஆனால், 1995-ஆம் ஆண்டில் நில நன்கொடைகளை வழங்க சர்வதேச நன்கொடையாளர்களின் ஆதரவைக் கோரியப் போதிலும், 2001-ஆம் ஆண்டில் உலக வங்கி கம்போடியாவின் நிலப்பரப்பில் 80 சதிவீதம் அரசின் சொத்தாகக் கருதப்பட்டதாகவும், நிலப் பட்டாக்களுக்கான 4 மில்லியன் விண்ணப்பங்களில் 6,00,000 மட்டுமே செயல்படுத்தப்பட்டதாகவும் மதிப்பிட்டுள்ளது.

2010-ல் ஐ.நா மூலதன மேம்பாட்டு நிதி கம்போடியாவின் 30 சதவீத நிலங்கள் ஒரு சதவீத மக்களிடம் குவிந்திருந்ததாகக் கண்டுபிடித்தது. 2001-ல் சட்டதிருத்தம்தான் இதற்கு முக்கியமான காரணம். அதுதான் அரசு-பொது நிலங்களை எளிதாக அரசு-தனியார் நிலங்களாக மாற்றிக் கொள்ள வழிவகைகளை ஏற்படுத்தியிருந்தது. ஓரு சில பிரிவுகள் சரியாக இருந்தாலே நிலங்களை விற்பதற்கு அனுமதியளித்தது.

“இப்போது பலவந்தமாக வெளியேற்றலும் நிலப் பறிப்புகளும் விரிவான அளவில் பிரச்சனைகளாக உருவெடுத்ததால், அதன் விளைவாக சர்வதேச கவனத்தை ஈர்த்த்தாலும் அரசாங்கம் நிலச் சலுகைகள் விசயத்தில் தனது வழிமுறைகளை மாற்றிக் கொள்ள நிர்பந்தப் படுத்தப்பட்டது” என்கிறார் உள்ளூர் நில உரிமைகளுக்கான என்ஜிஓ ஈக்விடபிள் கம்போடியா வின் இயக்குநர் ஏங்க் வுதி.

2020 செப்டம்பரில் நில மேலாண்மை அமைச்சகத்தின் முன் நடைபெற்ற நில அபகரிப்புக்கு எதிரானப் போராட்டம்.

“மிக அதிகமான அரசு-பொது நிலங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவது. அதோடு, ஆறுகள் ஏரிகள் ஈரநிலங்கள் எல்லாம் தூர்ந்துப்போக வைப்பதையெல்லாம் பார்க்கும்போது நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது” என்கிறார். இந்த மாதிரியான தனியாருக்கு தாரை வார்க்கும் நிகழ்வுகள் நகர்புறங்கள் மட்டுமின்றி நாடு முழுக்க குறிப்பாக கடலோரப் பகுதிகளில் நடந்துக் கொண்டிருக்கிறது என்கிறார் கூடுதலாக.

செப் 22, 2020-ல் மூன்று பகுதிகளை சேர்ந்த 400 கம்போடிய மக்கள் பேனம் பென் நில மேலாண்மை அமைச்சகத்தின் வெளியே தீர்க்கப்படாத நிலப் பிரச்னைகளை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரும்பாலானப் பிரச்சனைகள் அரசு மக்களிடம் நிலங்களை திரும்ப ஒப்படைக்கும்படி உத்திரவிட்டதை அடுத்து ஏற்பட்டவை.

“நிலப் பறிப்பு என்பது நில சலுகைகளாக அரசாங்கத்தால் நியாயப்படுத்தப் படுகிறது. வீட்டு வசதி மேம்பாடு அல்லது உள்கட்டமைப்பு திட்டங்கள், ஆனால் மக்களுக்கு இதைப் பற்றிய எந்த புரிதலும் இருப்பதில்லை குறிப்பிடப்பட வேண்டியது கட்டுமானம் ஏதாவது தொடங்கும் போதோ அல்லது இடிக்கப்படும் போதோதான் மக்களுக்கு தெரிய வரும்” என்கிறார் வுதி.

இந்த வழக்குகளில் நீதி கிடைப்பது என்பது அரிதானது அல்லது மிக மெதுவானது. 2010-ல் ஒட்டார் மேன்செய் ஹோகாங் காம்போங் ஸ்பெயு மற்றும் ப்ரே விஹியர் பகுதிகளில் சர்க்கரை தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டதை ஒட்டி எழுந்த நிலப் பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

“”ஒட்டார் மின்சேய் பகுதியில் பாதிக்கப்பட்ட 700 குடும்பங்களில் பாதிக்கு சற்று மேலானவர்கள் 2 ஹெக்டர் ப்ளாட் நிலம் இழப்பீடாக பெற்றனர். ஹோகான் பகுதியில் 1000 குடும்பங்களுக்கு 1.5 ஹெக்டர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு நிகழ்வுகளிலுமே இடம் மாற்றி தந்தது மற்றும் இழப்பீட்டு தொகுப்புகள் அந்த சமூகத்தின் தேவையை ஈடுசெய்வதாக இல்லை என்பதுதான் உண்மை” என்கிறார் வுதி.

வுதி மேலும் சொல்வது காம்போங்க் ஸ்பியு மற்றும் ப்ரிய விகியர் ஆகிய பகுதிகளில் உள்ள தங்கள் நிலங்களை மிகப்பெரிய செல்வந்தரும் சி.பி.பி செனட்டருமான லி யுங்-க்கு தொடர்புடைய சர்க்கரை ஆலைகளுக்காக இழந்த 2130 குடும்பங்களுக்கு இந்த இழப்பீடுகள் கூட கிடைக்கவில்லை.

ரத்னகிரி பகுதியில் வியாட்நாமிய மிகப்பெரிய ரப்பர் கம்பெனி HAGL அங்கு இருக்கக் கூடிய 2000 உள்நாட்டு பழங்குடியினரின் புனித நிலங்களை சட்டவிரோதமாக பறித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

பூர்வீக சமூகங்கள் நிலப் பறிப்பு மூலமாக எதிர்மறையாக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வூதி மேலும் சொல்கிறார் நிலங்கள் எப்போதுமே அவர்களது ஆன்மிக நம்பிக்கை மற்றும் வாழ்க்கைக்கான ஆதாரங்களின் மையமாக உள்ளது. மேலும், கேமர் பாதிக்கப்பட்டவர்களை விடக் குறைவாக நீதி வழங்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பெரிய பிரச்னைகள் மேலும் நீடித்து போகக் காரணம் போதுமான இழப்பீடு கிடைக்காததுதான். பல ஆண்டுகளுக்கு முன்னால் தங்கள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹோகான் பகுதியிலிருந்த மக்கள் தங்கள் நிலங்களில் சிறிதளவை திரும்பப் பெற்றனர். ஆனால், நிலத்தை திரும்பப் பெற்றதே அவர்களது வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்கவில்லை. அவர்கள் எப்போதும் மிகப்பெரியக் கடனில் சிக்கி தவித்து வந்தனர். அதனால், எந்தவித நிதி ஆதாரமும் இல்லாமல் தங்களது வணிகத்தை மீட்டெடுக்க முடியாமல் தவித்தனர். இதனால், தங்களது நிலங்களையாரிடம் பறிக்கொடுத்து மீட்டெடுத்தார்களோ அதே ஆட்களிடம் விற்கும் நிலைக்கு சென்றனர்.

நிலப் பறிப்பாளர்கள் – சுற்றுச்சூழலை கெடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

ஐ.சி.சி-க்கு அனுப்பப்பட்ட தகவல் தொடர்பில் ஒரு செய்திக் கொண்டு வரப்படாமலேயே இருந்தது. அது கம்போடியாவில் நிலப் பறிப்பு மற்றும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகளுக்கும் சுற்றுச்சூழலை சீரழித்தல் ஆகியவற்றுக்கும் உள்ளுர உண்மையானத் தொடர்பு இருக்கிறது என்பதுதான்.

2016 கொள்கை அறிக்கை மற்றும் சமீபத்தில் டிசம்பர் 2020-ல் ஐ.சி.சி விளக்குவதாக உறுதியளித்திருந்த பிரச்சனை இதுதான் சர்வதேச வழக்கறிஞர் பிலிப்பி சாண்ட்ஸ் மற்றும் ப்ளாரன்ஸ் மும்பா கம்போடியாவின் நீதிமன்றங்களில் சிறப்பு சாம்பர்களில் நீதிபதியாக இருப்பவர் இருவரும் சர்வதேசக் குற்றங்களின் வரிசையில் சுற்றுச்சுழல் மாசுப்படுத்துவர்களை இனப்படுகொலை மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் கொடுமைகள் செய்பவர்களாக பொருள்வருமாறு வரைவறிக்கை தயாரிப்பதாக அறிக்கை விட்டுள்ளனர். அவர்களது விளக்கங்கள் இந்த ஆண்டே வரும் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் அப்போது சுற்றுச்சூழலை அழிக்கும் கொடியவர்களை சர்வதேச நீதியின் முன்னால் நிறுத்த முடியும். தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்.

புனோம் சாம்கோஸ் வனவிலங்கு சரணாலயத்திற்குள் சமீபத்திய காடழிப்பு.

தொழில்துறை முன்னேற்றம் என்ற நடவடிக்கை கலாச்சார இனப் படுகொலை மற்றும் சுற்றுச்சூழல் அழித்தல் ஆகிய நிலைமைகளை உருவாக்கும் நிபந்தனை என்கிறார் கர்டினி வொர்க் தேசிய சென்க்சி பல்கலைக் கழகத்தில் மனித இனங்களை பற்றி ஆராயும் அறிவுத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணிப்புரிபவர். கொடுமைகாரர்கள் மக்களை அல்லது சுற்றுச்சுழலை கொலை செய்ய வேண்டுமென்று வெளிப்படையான நோக்கத்துடன் செய்வதில்லை. குறைந்தபட்சம் அவர்கள் செய்வதை நிரூபிப்பது கடினம். ஆனால், தங்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே எதையும் செய்கிறார்கள்.

மார்ச் 12-ல் கெமர் படிப்புகளுக்கான மையம் நடத்திய ஒரு இணையவழிக் கருத்தரங்கத்தில் வொர்க் கூறுகிறார் “2000-ம் ஆண்டில் தீடிரெனப் பொழியப்பட்ட நில சலுகைகள் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் அழிய காரணமாயிற்று”. ஒரு கம்போடியன் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார். அது “கேமர்ருஜ் தலைவர் போல்பாட் மக்களை கொன்றார். தற்போதைய முன்னேற்றங்களோ – நில சலுகைகளுடன் தொடர்புடைய பெரும்பாலான பணிகள் –  மிச்சம் மீதி இருக்கும் எல்லாவற்றையும் கொல்கிறது.”

“தற்போது ஐ.சி.சி-யில் ஏற்பட்டு வரும் புதிய மாற்றங்கள் சில மாறுபாடுகளை கொண்டுவரக் கூடிய சாத்தியக் கூறுகளைத் தெரிவிக்கின்றன. நமக்கு தேவை தற்போது நடைமுறையிலிருக்கும் நிலைமைகளில் மாற்றம் புதிய சட்டம் அல்ல.” என்கிறார் அவர்.

தங்களுக்குள்ளேயே நெருக்கமான தொடர்பும் அதேவிதமாக அரசாங்கத்துடனும் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டப் பொருளாதார நிலச் சலுகைகள் வொர்க்-ன் கவனத்துக்குரியப் பகுதியாக இருக்கும் ப்ரேலாங் வனவிலங்கு சரணாலாயத்தில் பரவலாகப் பதியப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.

ப்ரேலங் என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருக்கும் தங்களது நிறுவனங்களான திங்க் பையோடெக் கின் சேர்மனும் ஆங்கர் ப்ளைவுட் போர்டில் இருப்பவருமான சூ-சங்லு சட்டவிரோத இணைப்பில் தங்கள் நிறுவனங்கள் இருப்பதாக சொல்வதை ஒத்துக்கொள்ளவில்லை. அதேசமயம், கம்போடியாவிலோ சர்வதேச ரீதியிலோ சட்டநடவடிக்கைக்கான வாய்ப்புகளுக்குப் பயப்படவில்லை என்றும் கூறுகிறார்.

திங்க் பயோடெக்கின் மர சலுகையின் உள்ளே முதன்முதலில் பெரிய காடுகளை காடழிப்பதைக் காட்டுகின்றன, இது இரை லாங் வனவிலங்கு சரணாலயத்தை கைவிடுகிறது.

“என்னை ஏன் நிறுத்த வேண்டும்? காற்றில் மாசு ஏற்படுத்துமளவு எல்லாவற்றையும் எரிப்பவன் நான் அல்ல” என்கிறார் லூ. மேலும், சொல்கிறார் “காடுகளைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு. நாங்கள் வியாபாரிகள். சட்டவிரோதப் பதிவுகளை நிறுத்த இங்கே நாங்கள் இல்லை” என்கிறார்.

2009-ல் கம்போடியாவில் தனது ஆராய்ச்சியை கம்போடியா முழுவதும் நிலச் சலுகைகளின் விளைவாக ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை அவற்றின் பல வடிவங்களில் உள்ளடக்கியது துவங்கினார். வொர்க் புர்சாட் காம்போங், சனாங் காம்போங் ஸ்பெ மற்றும் ஸ்டங் ட்ரங்க் பகுதிகள் உள்ளிட்டு ஒவ்வொரு பகுதியிலும் பொருளாதார நிலச் சலுகைகளுக்குப் பின்னால் நிலம் உரிமைப் பறிக்கப்படுவது மற்றும் சுற்றுச்சூழல் அழிவுத் தொடர்ந்து உள்ளன.

“1990-களின் முந்தைய வனச்சலுகைகளை விட இவை மிகவும் கொடூரமானவை” என்று அவர் கூறினார், மேலும், கம்போடியாவில் 2012-ஆம் ஆண்டில் வழங்கப்படுவதை நிறுத்தும் வரை பொருளாதார நில சலுகைகள் கம்போடியாவில் 2 மில்லியன் ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்களை எடுத்துக் கொண்டன.

சர்வதேச வளர்ச்சி கம்போடியாவில் தோல்வியுற்றதா?

பொருளாதார நிலச் சலுகைகள், சமூக நிலச் சலுகைகளுக்கு வழிவகுத்தது. இது உலக வங்கியால் முயற்சியெடுத்து அறிமுகப்படுத்தப்பட்டது. கம்போடியாவில் வளர்ந்து வரும் நிலமற்றோரின் மக்கள் தொகையைக் கணக்கிலெடுத்து அவர்களுக்கு நில அனுபோக காலத்தை உறுதி செய்ய வடிவமைக்கப்பட்டது. ஆனால், உரிமம் பெற்றவர்களின் செயற்பாட்டாளர்கள் ஏறக்குறைய நிலபட்டாக்களுக்கு சம்பந்தமான எல்லா நல்ல நோக்கங்களுடையத் திட்டங்கள் முறைதவறியதென எச்சரித்தனர்.

உள்ளூர் நில உரிமையாளர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்ததிலிருந்து அவர்களது கருத்தாக நில அபகரிப்புகளைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட சமூகத்தினருக்கு முறையான இழப்பீடு வழிமுறைகளுக்குப் பதிலாக சமூக நிலச் சலுகைகள் பயன்படுத்தபடுவதில்லை என்பது மட்டுமல்ல ராணுவ அலுவலர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கும் சேர்ந்து நிலங்கள் வழங்கப்படுவதன் மூலம் இது தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது எனப் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜீன் (2020) உலக வங்கி 93 மில்லியன் டாலரை கம்போடியா நில அனுபோகக் காலதிட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்கென  அறிவித்தது. இந்த முறைமையில் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தப் போதிலும், நில அபகரிப்பு மற்றும் அது ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலக வங்கி உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

“உலக வங்கி எந்த அளவிற்கும் தருமசிந்தனையுள்ளதல்ல என்பதில் வியக்க ஒன்றுமில்லை” என்று வொர்க் தனது இமெயிலில் எழுதுகிறார். கம்போடியா தீவிர பிடுங்குவோராக இருந்தாலும் தொடர்ந்து உலக வங்கியிடமிருந்து நிதிப் பெற்றுக் கொண்டிருப்பதற்கு காரணம் வங்கிகளின் முன்னுரிமை யாருக்கானது என்பதற்கான அடையாளம் ஆகும்.

கம்போடியாவில் இருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் LASED திட்டங்கள் மூலம் நிலம் அளிக்கப்பட்டது தொடர்பாக இவ்வளவு மோசமானப் பிரச்னைகள் இருப்பதை அறிந்திருக்கவில்லை என்கிறார்கள். LASED-1, LASED-2 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறியதால்தான் மூன்றாவது LASED-3வது திட்டத்திற்கு நிதி அதிகரிக்கப்பட்டு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.

SLC நிகழ்வுகளில் நீண்டகாலமாக இணைந்து வேலை செய்ததன் காரணமாக விவரித்தபடி உலக வங்கி எப்போதுமே ஏழை வீட்டுக்காரர்களுக்கு நிலம் சென்று சேருவதற்குப் பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருப்பதாக ஒரு இமெயிலில் எழுதியுள்ளார். நிலப் பாதுகாப்பு ஒரு மதிப்புமிக்கப் பாதுகாப்பு வலைபின்னலை COVID-19  பயமுறுத்தும் காலகட்டத்தில் சாதித்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.

முதன்மை வனத்தின் பகுதிகள் சமீபத்தில் பீபிமெக்ஸ் சலுகைக்கு வெளியே மற்றொரு பகுதியில் எரிக்கப்பட்டன. யு.எஸ். விண்வெளி நிறுவனமான நாசாவின் தரவுகளின்படி, சலுகையில் தீ செயல்பாடு தொடங்கியது.

முதல் இரண்டு தவணை LASED திட்டங்களுக்கு இதுவரை 39.86 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இது 2008-லிருந்து செயல்படுகிறது. LASED-3 2021 முதல் 2026 வரை திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு செலவாகும் தொகையாக மொத்தம் 146.8 மில்லியன் டாலர்கள் என திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், இதுவரை 3,362 நிலப் பட்டாக்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் கையகபடுத்தப்பட்ட ஒவ்வொரு நிலப் பட்டாவிற்கும் உலக வங்கி செலவழித்த தொகை 12,000 டாலர்கள்.

மார்ச் 12 அன்று, உலக வங்கி சுற்றுச்சூழல் கணக்கியல் கட்டமைப்பிலிருந்து கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. இது ஒரு டாலர் மதிப்பை சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் அவற்றைப் பாதுகாக்க உதவும் முயற்சியில் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கம்போடியா அரசாங்கம் உலக வங்கியிடம் கம்போடியா வனப் பிரதேசங்களில் 65 சதவீதத்தைப் பாதுகாக்கும் முடிவுக்கு ஆதரவாகப் பொருளாதாரத் தரவுகளைக் கோரியதாகக் கூறப்படுகிறது. அந்த ஆய்வு வனப்பாதுகாப்பு மூலம் கிடைக்கும் லாபம் என்பது கரி தயாரிப்புக்காக மரங்களை வெட்டுவதைப் போல 5 மடங்கு அதிகமானது  அல்லது விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வனச் சுற்றுச்சூழல் அமைப்புகள் வனப் பராமரிப்பதற்கான செலவை விட 20 மடங்கு அதிக லாபம் பெறும் என்றும் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது

ஆனால், விமர்சனங்கள் உலக வங்கியின் நோக்கங்கள் குறித்து திருப்தியடையவில்லை மற்றும் கம்போடியாவின் பாதுகாப்புத் தொடர்பான உறவில் மாற்றத்தைத் தூண்டும் ஐ.சி.சி.யின் திறனைக் கூட சந்தேகிக்கிறது.

“நேர்மையாக, அவர்கள் (உலக வங்கி) சுற்றுச்சூழல் மதிப்பை அங்கீகரிப்பது பற்றிப் பேசுகிறார்கள், உண்மையில் சுற்றுச்சூழல் அமைப்புகளை மதிப்பிடுவதற்கு தேவையானதைச் செய்யவில்லை என்பது பயமுறுத்துகிறது என்கிறார் வொர்க். மாற்றம் மற்றும் மதிப்பு குறித்து நிறையப் பேசுகிறார்கள் ஆனால் களத்தில் செயல்பாடுகளில் மிகக் குறைவான மாற்றங்களைத்தான் பார்க்க முடிகிறது. மதிப்பு என்பது பொருளாதாரம் மட்டும்தான். எங்களது கூட்டுத்துவ வாழ்க்கை ஆதரவு அமைப்புகளுக்கு எந்த உள்ளார்ந்த மதிப்பும் இல்லை என்றுதான் தெரிகிறது.

படிக்க :
♦ கம்போடியா – விரட்டப்படும் விவசாயிகள்
♦ கம்போடியா : 4 தொழிலாளிகள் சுட்டுக் கொலை !

அபிவிருத்தி பங்குதாரர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், செயற்பாட்டாளர்கள் அல்லது வலுவான சாத்தியமான ஐ.சி.சி வழக்குப் போன்ற எந்தவொரு ஆத்திரமூட்டலுக்கும் இதுவரை அரசாங்கம் தங்கள் பதிலை மாற்றவில்லை என்று அவர் மேலும் கூறினார். ஆனால், ஐ.சி.சி சில அரசாங்க அதிகாரிகளை “கொஞ்சம் வியர்த்துக் கொள்ளக் கூடும்” என்றுக் கூறினார்.

“முழு உலக முன்னேற்றத்திற்கானத் திட்டம் தனக்கு தானேக் காட்ட வேண்டியது அதிகம் என நான் நம்பவில்லை” என்று அவர் கூறினார். ஆனால் “இது எல்லாமே கம்போடியாவில் தெளிவாகத் தெரிகிறது நமது உலகளாவியப் பொருளாதார அமைப்பில் எல்லாமே தவறு என்பதற்கான எடுத்துக்காட்டாக ஒளிவீசி நிற்கிறது.”


தமிழாக்கம் : மணிவேல்
செய்தி ஆதாரம் : news.mongabay.com

 

கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ

கொரோனா முதல் அலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். தற்போது இரண்டாம் அலையில் வடமாநிலங்கள் முழுவது மருத்துவமனைகளில் இடமில்லாம், ஆக்சிஜன் இல்லாமல், தடுப்பூசிகள் இல்லாமல், இறந்தவர்களை இடுகாட்டில் எறிக்கமுடியாமல் மிகபெரும் அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை அரசே தயாரிக்காமல், தனியார் நிறுவனங்கள் இலாபமிட்ட வைத்துக்கொண்டிருக்கிறது.

மேலும் ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் ஸ்டெர்லைட்டை திறக்க முயற்சிக்கும் அரசை  தோழர் அமிர்தா இந்த காணொளியில் அம்பலப்படுத்துகிறார்.

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

000

பாகம் 1 : தூத்துக்குடியில் நடைபெற்ற லட்சம் மக்கள் கூடுவோம் ஸ்டெர்லைட்டை மூடுவோம் என்ற 100 நாள் போராட்டத்தில் போலீசின் கொலை செயல்களை பற்றி கலந்தில் இருந்து பார்த்த தோழர் குருசாமி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை பற்றியும், அதன் பின் தூத்துக்குடி மக்களுக்கு நிகழ்ந்த சொல்லவொன்னா துயரங்கள் பற்றியும் இந்த காணொளியில் விளக்குகிறார்.

000

பாகம் 2 : ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நாடகத்தை அறங்கேற்றி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கும் வேதாந்தம். அதற்கு துணைப்போகும் மத்திய-மாநில அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றத்தை தோழர் மருது மற்றும் தோழர் குருராமி ஆகியோர் இந்த காணொளியில் அம்பலப்படுத்துகிறார்கள்.

000

பாகம் 3 : அரசியல் கட்சிகளை நம்புங்கள், தேர்தலில் ஓட்டுப்போட்டால் பிரச்சனை தீரும் என்று சொன்னவர்கள் தற்போது ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்களாம் என ஓட்டுக்கட்சிகள் கூறியதை அடுத்து தங்கள் கருத்துக்களை வேறுவிதமாக மாற்றும் பச்சோந்தி தனங்களை தோழர் மருது மற்றும் தோழர் குருராமி ஆகியோர் இந்த காணொளியில் அம்பலப்படுத்துகிறார்கள்.


மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்

ஜியோ பேபி இயக்கிய “தி கிரேட் இந்தியன் கிச்சன்” எனும் மலையாள மொழி திரைப்படம் பெரும்பாலான மக்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது. குடும்ப அமைப்பில் பெண்களின் நிலையை மையக் கருத்தாக கொண்டு இந்தியாவில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. மேம்பட்ட எதார்த்த திரைமொழியைப் பயன்படுத்தி நுட்பமான ஆணாதிக்கக் கூறுகளை வெளிக்கொணர்ந்த விதத்தில் இத்திரைப்படம் வேறுபடுகிறது.

மிக முக்கியமாக, கதையமைப்பு காட்சிப் படிமங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அப்படிமங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் நமது சமூக அமைப்பில், குறிப்பாக குடும்ப அமைப்பில் பல அடுக்குகளாகப் படர்ந்திருக்கும் பெண் சார்ந்த மதிப்பீடுகளை நன்கு புரிந்து கொள்ள முடியும். ஒரு சரியான புரிதலின்றி அடுக்களையில் பெண்கள் படும் துயரம் என்றளவில் ஒரு தட்டையான வாசிப்பை தவிர்க்க வேண்டும்.

படிக்க :
♦ சைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் !
♦ திரை விமர்சனம் : அறம் ஒரு வரம்தான் ஆனாலும்….

மாறாக, பரந்த வாசிப்பும் நுண் அரசியல் பார்வையும் கொண்டு அக்கறையுள்ள பார்வையாளராக இத்திரைப்படத்தைப் பார்த்தால் ஒவ்வொரு படிமத்தையும் பெண்ணிய அரசியல் சார்ந்த விவாதங்களின் அடிப்படையில் வாசிக்க உந்துதல் ஏற்படும். அத்தகைய பார்வையாளரின் வாசிப்பை பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

000

திரைப்படத்தின் தொடக்கத்திலே நடனமும் சமையலும் மாறி மாறி வரும் காட்சிகள் முன்னுரை போல் செயல்படுகின்றன. தனது லட்சியத்தை விடுத்து திருமண வாழ்வில் சிக்கித் தவிக்கும் பெண்ணின் கதை என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திருமண முறையில் உள்ள அடிப்படை முரணைப் பிரதிபலிக்கும் வண்ணம் பெண் பார்க்கும் நிகழ்வின்போது சூரஜ், நிமிஷா  பேசிக் கொள்ளும் காட்சி வருகிறது.

இக்காட்சியில் ஒருவரையொருவர் அறிந்ததில்லை என்பதை ஒப்புக் கொண்டாலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர். மாப்பிள்ளை பாரம்பரியமானக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது பெண் வீட்டார் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நம் நாட்டில் திருமணம் என்பது தனி நபர் விருப்பம் சார்ந்த ஒன்றாக என்றுமே இருந்ததில்லை. மாறாக மணமக்களின் வீட்டார் தீர்மானிக்கும் விதமாக இருந்து வருகிறது.

சூரஜ், நிமிஷாவிற்கு திருமணம் நடைபெறுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்திருமணத்தைக் கொண்டாடித் தீர்க்கின்றனர். பல சடங்குகளும் இடம்பெறுகின்றன. பொதுவாக திருமணத்திற்கு வருகைப் புரிபவர்கள் நல்ல ஆடை அணிந்து, ஒப்பனை செய்து கொண்டு, தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசி மகிழ்வார்கள்.

மொத்தத்தில், அவர்களுக்கு தங்களின் கொண்டாட்டமே முக்கியம். திருமணமுறைப் பற்றியோ தம்பதிகளின் இல்லற வாழ்க்கை பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை. செய்யப்படும் சடங்குகளும் போலியான உணர்வுகளை வெளிப்படுத்தவே பயன்படுகின்றன. திருமணம் முடிந்து தம்பதிகள் வீட்டிற்கு வந்ததும் வாசலில் நிற்கும் வாகனங்கள் அனைத்தும் புறப்படும் காட்சியை இரண்டு விதமாகப் புரிந்துக் கொள்ளலாம்: திருமணக் கொண்டாட்டம் முடிந்து தம்பதிகள் சாதாரண வாழ்க்கைக்குள் நுழைகிறார்கள் என்பதையும் இனி அவர்களின் இல்லற வாழ்க்கையில் எந்தவிதமான தலையீடும் இருக்காது என்பதையும் குறிக்கும் விதமாக அக்காட்சி அமைகிறது.

திருமணத்தன்று இரவு சூரஜும், நிமிஷாவும் அவர்களது அறையில் முதன்முதலாக பேசிக் கொள்கின்றனர். அப்பொழுது சூரஜ் நிமிஷாவிடம் தனது வீட்டை, தனது பெற்றோரை பிடித்திருக்கிறதா என்று கேட்கிறான். அவன் தனது மனைவியின் சௌகரியத்தை விசாரிப்பதாக எண்ணி இக்கேள்வியை சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை.

எதிர்கேள்வி கேட்கவோ அல்லது எதிர்மறையாக பேசவோ நிமிஷாவிற்கும் அனுமதியில்லை. மேலும், மனைவி தனது கணவரின் குடும்பத்தை தன் குடும்பமாக நினைத்து அவர்களின் பழக்கவழக்கங்களை எந்த கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என இக்காட்சி உணர்த்துகிறது.

திருமணமான மறுநாள் நிமிஷா குளித்து விட்டு மகிழ்வுடன் அடுக்களையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சூரஜ் தனது மனைவியிடம் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறான். நிமிஷாவின் மகிழ்ச்சியையும் அடுக்களையில் இருவரின் நெருக்கத்தையும் பின்வரும் காட்சிகளில் நம்மால் காண முடியாது. இதற்குக் காரணம் என்னவென்றால் திருமணமான புதிதில் பெண்கள் மகழ்ச்சி பொங்க அடுக்களையில் வேலை செய்வதும் கணவன் மனைவியிடம் அடுக்களை வரை சென்று நெருக்கமாக உரையாடுவதும் தற்காலிகமானவை தான்.

மறுபுறம், நிமிஷாவின் மாமியார் தனது கணவருக்கு டூத் பிரஷ் எடுத்து கொடுப்பதிலிருந்து விதவிதமாக சமைத்து கொடுப்பது வரை மிகப் பக்குவமாகப் பார்த்துக் கொள்கிறார். அவர் வேலை செய்யும் விதத்தை கடமை உணர்ச்சியின் வெளிப்பாடாகப் பார்ப்பதை விட சலிப்பின் உச்சம் என்று தான் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவர் தனது கருவுற்றிருக்கும் மகள் வெளிநாட்டிற்குக் கூப்பிடும் போது பலவித சமையல் பொருட்களையும், பாத்திரங்களையும் எடுத்துச் செல்கிறார். பொதுவாக இதை அம்மாவின் பொறுப்பு, நாட்டின் பாரம்பரியம் என புகழ்வார்கள். ஆனால், அனைத்து திறமைகளும் மழுங்கடிக்கப்பட்டு சமையல் செய்ய மட்டுமே பழகிய இயந்திராமாகத் தான் அவர் காட்சியளிக்கிறார்.

உடல் நலம், ஒய்வு, ஆன்மீகம் ஆகிய அனைத்தும் பெண்களுக்கு மறுக்கப்படுவதை அடுத்தடுத்து வரும் காட்சிகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அடுக்களையில் நிமிஷா தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் அதே வேளையில் அவரது கணவர் வெள்ளை உடை அணிந்துக் காற்றோட்டமான இடத்தில் யோகா செய்து கொண்டும் அவரது மாமனார் செய்தித்தாள் வாசித்துக் கொண்டும் இருக்கின்றனர்.

அடுக்களையும் படுக்கையறையும் மட்டுமே நிமிஷாவின் ஒரே வெளியாக மாறி மேற்கூறப்பட்ட சௌகரியங்கள் அனைத்தும் அவளுக்கு மறுக்கப்படுகிறது. சூரஜ் சமூகவியல் படித்திருந்தாலும் தனது மனைவி என்னென்ன வேலைகள் செய்கிறாள், அடுக்களையில் அவளது நிலைமையென்ன, அவளது மனநிலையென்ன என்பவைப் பற்றி எந்தவொரு அக்கறையும் இல்லை. மாறாக எவ்வித கஷ்டமுமின்றி தான் அவளைப் பார்த்துக் கொள்வதாக கருதுகிறார்.

ஒரு காட்சியில் நிமிஷா தான் அழுக்காக இருப்பதாக சொல்லிய பிறகும் அவளை சூரஜ் முத்தமிடுகிறார். அம்முத்தத்தோடு மட்டுமே நிறுத்திக் கொள்ளும் சூரஜ் தினம் தினம் சாப்பிட்ட எச்சங்களை எடுக்கும் போதும், பாத்திரங்களைக் கழுவும் போதும், பாத்திரம் கழுவும் தொட்டியில் கழிவு நீரை அகற்றும் போதும் தனது மனைவி அருவருப்பாக உணர்வதை கவனத்தில் கொள்ளவில்லை.

மற்றுமொரு காட்சியில் நிமிஷாவும் சூரஜும் ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள். சூரஜ் டேபிள் மேனர்ஸ் காரணமாக சாப்பிட்ட எச்சங்களை ஒரு தட்டில் ஒதுக்கி வைக்கிறார். இதைப் பார்த்ததும் ‘ஏன் வீட்டில் இந்த டேபிள் மேனர்ஸ் இல்லை’ என நிமிஷா சூரஜிடம் கேலியாகக் கேட்கிறார். ‘என் வீடு, என் சௌகரியம்’ என சூரஜ் கோபமாகப் பதில் கூறுகிறார். அப்படியொரு கேள்வியை ஏற்றுக் கொள்ள முடியாத சூரஜ் அக்கேள்வியைக் கேட்டதே தவறு என்றும் அதற்காக நிமிஷாவை மன்னிப்பும் கேட்க வைக்கிறார்.

இக்காட்சியின் மூலம் அழுக்கை அகற்றி வீட்டை சுத்தமாக வைப்பது மனைவியினது கடமையே என்ற செய்தியும் கடத்தப்படுகிறது. அடுக்களையில் பாத்திரம் கழுவும் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேறும் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சீர் செய்ய வேண்டும் என்று நிமிஷா சூரஜிடம் கூறுகிறார். அப்போது ஹோட்டலில் நடைப்பெற்ற உரையாடலை மனதில் வைத்துக் கொண்டு கழிவைப் பற்றியே அவளுக்கு எப்போதும் கவலை இருப்பதாக நக்கலாகக் கூறிவிட்டு சூரஜ் நகர்கிறார்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவு நீங்க வேண்டும் என்று ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், வீட்டிற்குள்ளிருக்கும் அனைத்து விதமான கழிவுகளையும் தங்கள் கைகளால் அகற்றும் பெண்களின் நிலைப் பற்றியும் நாம் கவனிக்க வேண்டும்.

ஒரு கட்டத்தில் நிமிஷாவிற்கு திருமண வாழ்க்கையில் சலிப்பு ஏற்படவே நடன ஆசிரியராக வேலைப் பார்க்கலாம் என முடிவு செய்கிறார். தனது கணவரிடமும் மாமனாரிடமும் அம்முடிவை சொன்னதும் அவர்கள் இருவரும் அதிர்ந்துப் போகின்றனர். நிமிஷாவின் மாமனார் தங்களது குடும்பத்தில் பெண்கள் வேலைக்கு செல்லும் பழக்கமில்லை என்றும் சாப்பிட்டு முடித்து எழுந்து செல்லும் போது அவள் சமைத்த கடலை ருசியாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.

இக்காட்சியின் மூலம் அவளிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட சமையல் திறன் ஏற்கனவே செம்மையாக இருக்கும் பொழுது வேலைக்குப் போக நிர்பந்தமில்லை என்று அவர் குறிப்பிடுவது போல் புரிந்துக் கொள்ளலாம். மறுபுறமோ அவளது கணவன் பதட்டம் ஏதுமின்றி வேலையைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறுகிறான். இக்காட்சியில் சூரஜ் நிதானமாகப் பேசுவதை நல்ல விதம் என்று கருத முடியாது. ஏனென்றால் அவனது பதில் நாட்களைக் கடத்தி நிமிஷாவே அந்த எண்ணத்தை மறக்கும்படி செய்கின்ற முயற்சியே.

இவையனைத்தையும் மீறி வேலைக்குச் செல்ல முற்படும் பொழுது அவள் இருமுனைத் தாக்குதலை சந்திக்கிறாள். ஒன்று, அவள் வீட்டில் செய்யும் வேலைகள் அனைத்தையுமே மிகப் பெரும் சேவையாகக் கருத வேண்டும் என்றும் அவளே வீட்டின் ஐஸ்வர்யம் என்றும் அவளது மாமனார் கூறுகிறார்.

இக்கருத்தையொட்டி பல கேள்விகள் எழும்புகின்றன: நிமிஷாவின் அச்சேவையால் பயன்பெறுபவர்கள் யார்? அவள் பெரும் சேவை செய்கிறாள் என்று வைத்துக் கொண்டாலும் அது ஏன் அவளதுப் பொறுப்பாக மட்டுமே இருக்கிறது? எப்பொழுதும் அழுக்காகவும், கழிவுகளுடன் போராடிக் கொண்டிருக்கும் நிமிஷா திடீரென்று வீட்டின் ஐஸ்வர்யமாக ஆக முடியுமா? அவளின் உடல்நிலைப் பற்றி கவலைப்படுவது யார்? மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தேட முற்பட்டால் ஆணாதிக்கத்தின் வேர்கள் நன்கு புலப்படும்.

இரண்டாவது தாக்குதல் கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அதை அப்படியே பின்பற்றும் நாகரிகம் கூடத் தெரியாதவளாய் நிமிஷா இருப்பதாக சூரஜ் சுட்டிக் காட்டுகிறார். பெண்களும் ஆண்களைப் போல் அறிவு, திறமை, அனுபவ ஞானம் கொண்டவர்கள் என்பதையும் அவர்களால் சமூக வளர்ச்சிக்கு ஆண்களுக்கு நிகராகப் பங்களிக்க முடியும் என்பதையும் ஒத்துக் கொள்ளாததே சூரஜ் போன்றோரின் இத்தவறானப் புரிதலுக்கு காரணம்.

ஏற்கனவே உளவியல் நெருக்கடியில் இருக்கும் நிமிஷாவிற்கு தாம்பத்திய வாழ்க்கையிலும் பெருத்த ஏமாற்றமே. தனதுக் கணவனோடு கொள்ளும் உடலுறவு மிகவும் இயந்திரத்தனமாக இருக்கிறது. தனது கணவனின் காம இச்சையைத் தீர்க்க மட்டுமே பயன்படும் ஒரு கருவியாக இருப்பதை அறிகிறாள். ஒரு சமயம் உடலுறவு வைத்துக் கொள்வதற்கு முன்பு இருவரும் முன்னின்பத்தில் (foreplay) ஈடுபடலாமா என்று சூரஜிடம் நிமிஷா தயக்கத்தோடு கேட்கிறாள். இதைக் கேட்டதும் சூரஜ் உனக்கு முன்னின்பம் பற்றியெல்லாம் தெரியுமா எனக் கேலியாகக் கூறிவிட்டு அவளது உடல் தன்னை ஈர்க்கவில்லை என முகத்தில் அறைந்தது போல் பதில் தருகிறான்.

சூரஜால் இந்த ஒரு அடிப்படை எதிர்பார்ப்பைக் கூடப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. செக்ஸ் என்பது முற்றிலும் ஆண்களுக்கானது என்ற எண்ணம் கொண்ட சூரஜ் அவளது எதிர்பார்ப்பு தனது ஆண்மையைச் சோதிப்பதாக நினைக்கிறான். மேலும், தனது இயலாமையை மறைக்கப் பழியை நிமிஷாவின் உடல் மீது போடுகிறான். படுக்கறையிலும் தனித்து விடப்பட்டவளாகவே உணர்கிறாள்.

சூரஜும் அவனது தந்தையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டதும் நிமிஷா அந்நியப்படுத்தப்படுகிறாள். அதே நேரத்தில் மாதவிடாய் ஏற்பட்டு முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப் படுகிறாள். இதன் காரணமாய் அவ்விருவரையும் கவனிக்க பெண் உறவினர் ஒருவர் வருகிறார். அவர் நிமிஷாவின் மாமியாரை விட ஒரு படி மேலே சென்று அன்றாட வீட்டு வேலைகளை சலனமின்றி செய்து முடிக்கிறார்.

வழக்கமாக மாதவிடாய் ஏற்படும் நாட்களில் அடுக்களையிலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிமிஷா இம்முறை சபரிமலைக்கு மாலைப் போட்டுள்ள சாமிகளின் கண்ணிலே படக் கூடாது என்று தனி அறையில் அடைத்து வைக்கப்படுகிறாள். வீட்டிற்குள் அவளுக்கான வெளி சுருக்கப் படுகிறது. மாதவிடாயை அறிவியல் பூர்வமாக அணுகாமல் அதையேக் காரணமாகக் காட்டி பெண்ணினத்தைப் புறக்கணிப்பது மாபெரும் குற்றமாகும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கை அசுத்தம், தீட்டு எனக் கூறி பெண் உடலின் இயல்பான தன்மைக்குத் தவறானக் கோணம் கற்பிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வீட்டிற்குள்ளே பல மதில் சுவர்கள் கட்டப்பட்டு பெண்ணின் இயக்கம் கட்டுப்படுத்தப் படுகிறது என்பதும் தெளிவாகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதால் அவர்கள் பிறக்கும் போதேத் தீட்டுப்பட்டவர்கள் என்ற கருத்துப் பரவலாக நம்பப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கபடாததற்கும் இதுவே காரணம். பெண்களை கோவிலுக்குள் அனுமதித்தால் சாமிக்கு தீட்டு என்று கூறுவது கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கடவுளின் மீது கட்டமைத்திருக்கும் மதிப்பீடுகளைப் பொய்யாக்குகிறது.

இவ்விவாதத்தை முன்னெடுக்கும் பொருட்டு நமக்கு கிடைக்கும் ஒரே பதில்: ஒருவரின் மதநம்பிக்கை மீது சட்டமோ அரசாங்கமோ அதிகாரம் செலுத்தக் கூடாது என்பதே. இத்திரைப்படம் நேரடியாக இச்சிக்கலைப் பேசவில்லை என்றாலும் மாதவிடாய் பற்றிய தவறானப் புரிதல்களைக் கேள்விக்குட்படுத்துகிறது.

வீட்டிற்குள் தனக்கான வெளி இல்லாததாலும் தன் பிரச்சனையை பகிர்ந்துக் கொள்ள யாரும் இல்லாததாலும் சபரிமலை பிரச்சனைப் பற்றிய சமூக ஆர்வலர் ஒருவரின் காணொளியை தனது முகநூல் பக்கத்தில் நிமிஷா பகிர்கிறாள். இது அவளது குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து சூரஜின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில முக்கிய ஆட்கள் அவரையும் அவரது தந்தையையும் சந்திக்க வருகின்றனர்.

தங்களின் சாதிக்கென்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது என்றும் அது சீர்குலையாமல் இருக்க அந்த பிரச்சனைக்குரிய காணொளியை நீக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சூரஜும் நிமிஷாவிடம் சென்று அக்காணொளியை நீக்க சொல்கிறான். இதில் கவனிக்க வேண்டிய விஷயமென்னவென்றால், அவன் அவளது அறைக்கு வெளியில் நின்று அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் பேசுகிறான்.

ஏற்கனவே பல்வேறு வழிகளில் அடக்குமுறைக்கு உள்ளான நிமிஷா இம்முறை எதிர்மறையாகப் பதில் கூறுகிறாள். சொல்வதைக் கேட்டால் தான் இந்த வீட்டில் இருக்க முடியும் என்று கூறிவிட்டு சூரஜ் சென்றதும் அவளது உள்ளம் மிகவும் புண்படுகிறது.

பல முனைகளிலிருந்து தாக்குதலை சந்தித்த நிமிஷா கோபத்தின் உச்சத்தில் இருக்கிறாள். சபரிமலைக்கு மாலை போட்ட சாமிகள் வீட்டிற்கு வந்து பூஜைகளைத் தொடங்குகிறார்கள். அப்போது சொல்லப்படும் மந்திரங்களும் செய்யப்படும் சடங்குகளும் நிமிஷாவின் கோபத்திற்கு பின்புலமாக செயல்படுவது கூடுதல் சிறப்பு. உணர்ச்சி குழம்பாக இருந்தாலும் தனது எதிர்ப்பை தெளிவாக திட்டமிடுகிறாள்.

கடைசி வரை சூரஜ் கண்டுக் கொள்ளாத கழிவு நீரைத் தனது ஆயுதமாக மாற்றுகிறாள். முதலில், சூரஜும் அவரது தந்தையும் தேநீர் கேட்கும் போது கழிவு நீரை டம்ளரில் ஊற்றி கொடுக்கிறாள். இரண்டாவதாக, கழிவு நீரை குடித்த பிறகு சூரஜ் தன்னை தாக்க வரும் போது அதே கழிவு நீரை அவன் மேலே ஊற்றிவிடுகிறாள்.

தினமும் அடுக்களையில் வேலை செய்வதால் ஏற்பட்ட சலிப்பு, தனது கனவு வேலையில் சேர அனுமதி மறுக்கப்பட்டது, கழிவுகளை அகற்றியதால் அருவருப்பான உணர்வு, இயந்திரமயமாக்கப்பட்ட தாம்பத்திய வாழ்க்கை, மாதவிடாய் காலங்களில் தனது வீட்டுக்குள்ளே சிறைக் கைதியாய் வாழும் சூழல், சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட எதிர்ப்பு என்று அனைத்து விதத்திலும் நிமிஷாவின் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சி இறுதிக் காட்சியில் வெளிப்படுகிறது.

கதையாடலில் எதார்த்தத்தை மீறி நிமிஷாவிற்கு ஒரு தற்காலிகமான சுதந்திரம் அளிக்கப்படுகிறது. இக்காட்சியைப் பார்க்கும் பார்வையாளர்களும் இந்த தற்காலிக சுதந்திரத்தில் கிடைத்த திருப்தியைக் கொண்டாடிவிட்டு திருமண அமைப்பிலிருந்து வெளியேறிய பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல் இருந்துவிடக் கூடாது.

ஒரு சராசரி பார்வையாளர் நிமிஷாவின் அம்மாவை போன்று வீட்டிற்குள் நடக்கும் சாதாரணப் பிரச்சனைகளுக்காக ஒரு பெண் குடும்பத்தை விட்டு வெளியேறுவதற்கான அவசியம் இல்லை என்றே கூறுவார். பொதுவாகவே நமது சமூகம் பெண்களை உடலளவில் துன்புறுத்துதலை மட்டுமே வன்முறை எனக் கருதுகிறது.

இக்கதையில் வரும் சூரஜ் என்பவர் ஒரு நல்ல கணவர் என்ற சட்டகத்தில் மிக அருமையாகப் பொருந்திக் கொள்வார்: பாரம்பரியமானக் குடும்பத்தைச் சேர்ந்தவர், நல்லதொரு பணியிலுள்ளவர், குறிப்பாக குடிப்பழக்கம் இல்லாதவர், மனைவியை உடலளவில் துன்புறுத்தாதவர். ஆனால், சூரஜும் அவரது தந்தையும் மறைமுகமாக நிமிஷாவிற்கு தரும் ஒவ்வொரு நெருக்கடியும் வன்முறையே.

இத்திரைப்படத்தில் ஒவ்வொரு படிமமும் இந்த நெருக்கடியைத் துல்லியமாக காட்சிப் படுத்துகிறது. இந்நெருக்கடியை சற்றும் பொருட்படுத்தாமல் சில ஆண்கள் தாங்களே அனைத்து வீட்டு வேலைகளை செய்வதாகவும், வேறு சில ஆண்கள் நிமிஷாவைப் போன்ற பொறுப்பான பெண்கள் இன்றளவில் இல்லவே இல்லை எனவும் மற்றும் சிலர் வீட்டு வேலைகளை தங்களின் மனைவியோடுப் பகிர்ந்து செய்வதாகவும் கூறலாம்.

மேற்கூறப்பட்ட மூன்று சாராரின் கருத்துகளுமே ஏற்றுக் கொள்ளதக்கது. எனினும், பொது சமூகத்தின் ஒத்த மனப்பான்மை அல்ல. எனவே, இக்கருத்துகளைக் கொண்டு ஆணாதிக்கத்தின் ஆழத்தை ஆராய்வது சரியான அணுகுமுறையாக இருக்காது. உண்மையில் நம் சமூகத்தில் ஆணாதிக்கத்தால் கட்டமைக்கப்பட்ட சில கற்பிதங்களையும் தப்பெண்ணங்களையும் கேள்விக்குட்படுத்த வேண்டும்.

படிக்க :
♦ தி கிரேட் இந்தியன் கிச்சன் || ஆணாதிக்கமும் மதமும் இங்கு தோலுரிக்கப்படும்

♦ NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி Hangover-ல் ஒரு அரசியல் படம் !

எடுத்துக்காட்டாக, சமையல் வேலை பெண்களுக்கு மட்டும் ஆனது; அதை எளிதில் செய்து முடித்துவிடலாம்; இவ்வேலைகள் மட்டுமே பெண்ணின் தன்மையை வரையறுக்கக் கூடியது; ஆணும் பெண்ணும் பகிர்ந்து வேலை செய்வது கட்டாயம் கிடையாது; பெண் வேலைக்கு செல்வதற்கு அனுமதி அளிப்பது ஆணின் பெருந்தன்மை; உடலுறவு அனுபவத்தைப் பற்றி பெண் பேசவே கூடாது; பெண்ணை உடலளவில் துன்புறுத்தினால் மட்டுமே அது வன்முறை; பெண்ணின் இருத்தல் ஆணை மையமாகக் கொண்டே கட்டமைக்கப்படுகிறது.

மேலே கூறப்பட்டுள்ள இக்கற்பிதங்கள் அனைத்தும் ஆணாதிக்கத்தின் வேர் போன்றவை. இவற்றைத் தொடர்ச்சியாகக் கேள்விக்குட்படுத்துவது தான் பெண்ணின் உண்மையான சுதந்திரத்தை நோக்கி நகருவதற்கு நாம் எடுத்து வைக்கும் முதல் படி.


விஜயகணேஷ்

கோவிட் – 19 தடுப்பு மருந்துகளின் அரசியல், பொருளாதாரம் || ஜயதி கோஷ் || கணியன்

தடுப்பு மருந்துகளைக் கைப்பற்றுவது, பெருமளவில் மருந்தை உற்பத்தி செய்வதற்காக காப்புரிமையை தளர்த்துவதற்கான கோரிக்கையை ஏற்க மறுப்பது, தமது அரசின் ராஜீய விவகாரங்களுக்காக தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது முதலானவைகள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து விரைவாக ஏழை நாடுகளைப் பாதுகாக்காது என்பது உறுதி. இதன் விளைவாக, பணக்கார நாடுகளில் கூட இந்த பெருந்தொற்றை ஒழிப்பது மிக நீண்ட காலமாகும்.

கோவிட் – 19 தடுப்பு மருந்துகளின் அரசியல், பொருளாதாரம்

கோவிட்–19 பெருந்தொற்றானது பல வழிகளிலும் வழக்கத்திற்கு மாறானதாக உள்ளது. பணக்கார நாடுகளிலுள்ள (குறிப்பாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) மக்களிடையே இந்த கொரோனா தொற்றுப் பாதிப்பானது மிகப் பெருமளவில் சரிசமமற்றிருந்தது; இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் எடுக்கும் கொள்கை ரீதியிலான எதிர்வினைகளின் பிரம்மாண்டம்; உலகளாவிய அளவிலான விரைவான மற்றும் அவசரமான எதிர்வினைகள் என பல வழிகளிலும் வழக்கத்திற்கு மாறானதாக இருக்கிறது.

படிக்க :
♦ ‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு

♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

பணக்கார நாடுகள் இந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் காட்டிய அதீத ஆர்வமானது தனிப்பட்ட நாடுகளின் எதிர்வினையை வடிவமைத்தது மட்டுமின்றி உலக அளவிலானக் கொள்கையையும் வடிவமைத்தது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதற்கான மருந்துக் கம்பனிகளின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக மிகப்பெருமளவில் மானியங்களை வாரி வழங்கியதன் மூலமும், முன்கூட்டியே தடுப்பூசி மருந்து கொள்முதலுக்கான ஒப்பந்தங்கள் போடுவதன் மூலமும் மற்றும் இன்னபிற வழிகளிலும் தடுப்பூசி மருந்துகளைத் தயாரிப்பதற்கு மிகப்பெரும் அழுத்தத்தை தந்தன.

இதனால் அதிவிரைவிலேயே பலமுனை கோவிட்–19 தடுப்பூசி மருந்துகளை பலரும் உருவாக்கியது மட்டுமின்றி அவற்றில் பல மருந்துகளுக்கு இன்னும் மிக அதிவிரைவான தரப்படுத்தல் ஒப்புதல் வழங்கப்பட்டன. வழமையாகவே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கவும், ஒப்புதல் பெற்று தயாரிக்கவும் பல ஆண்டுகள் ஆகும். ஏனெனில் பல கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கும், எந்த வகையிலாவது பக்கவிளைவுகள் உள்ளதா எனவும் சோதித்தறிய பல ஆண்டுகள் ஆகும்.

ஆனால் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் சில கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பு மருந்துக் கம்பனிகளுக்கு அத்தியாவசிமான மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே பயன்பாட்டுக்கான ஒப்புதலை அந்த அரசுகள் வழங்கியுள்ளன. இன்னும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கூட ஒழுங்குபடுத்தும் நடைமுறைகள் முடுக்கிவிடப்பட்டு, அதாவது முழுமையான தரவுகள் மற்றும் பக்கவிளைவுகள் குறித்து பரிசோதிக்காமலேயே அவற்றைப் புறந்தள்ளிதான் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

இப்படி அதிஅவசரக் கொள்கைகளைப் பின்பற்றி கோவிட்-19 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றை உற்பத்தி செய்வதிலும் மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதிலும் உலக நாடுகளிடையே தீவிரமான சமத்துவமின்மை நிலவுவது அம்பலமாகியுள்ளது. முக்கியமாக, 1) பணக்கார நாடுகள் தடுப்பூசியை அப்பட்டமாக பிடுங்கிக் கொள்ளுகின்றன. 2) முன்னேறிய நாடுகளின் காப்புரிமைப் பாதுகாப்பு கொள்கைகளின் காரணமாகப் பரவலாக அதிகரித்த அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுவதுத் தடுக்கப்படுகிறது. 3) இந்த தடுப்பூசி விநியோகம் மூலம் தேசியவாதமும் மற்றும் ராஜதந்திர ரீதியிலான மென் அதிகாரமும் (Soft Power) வளர்க்கப்படுகிறது.

மிகப்பெரிய தடுப்பூசி கொள்ளை (அ) பிடுங்குதல் !

இப்பெருந்தொற்றிலிருந்து கடந்து வரவேண்டுமெனில் உலகம் முழுவதிலுமிருந்து இது கடந்து வரப்பட்டால்தான் முடிவுக்குவரும் என்பது வெளிப்படையானது. உலக மக்களிடையே தடுப்பூசிப் போடுவதில் உள்ள தாமதம் காரணமாக கொரோனா வைரஸ் மாற்றமடைவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இது, பணக்கார நாடுகள் தங்கள் பைகளில் தடுப்பூசிகளை நிரப்பி வைத்துக் கொண்டாலும் இப்பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கான திறனைக் குறைக்கும்.

போதுமான அளவில் தடுப்பூசிப் போடாததன் காரணமாக தொற்று நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்ற அச்சத்தின் விளைவாகப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். இதன் மறுவிளைவாக உலகப் பொருளாதாரம் மீட்சியடைவது மேலும் தடைபடும், தாமதமாகும். இந்த பாதிப்புகள் மிகப்பெரும் அளவிலானது. உலக மக்கள் அனைவருக்குமான தடுப்பூசிப் போடும் செலவு முழுவதையும் பணக்கார நாடுகள் தாமே ஏற்றுக் கொண்டால் கூட அந்தப் பணக்கார நாடுகள் இதன் மூலம் பலனடையும் வாய்ப்புகளே மிக அதிகம்.

‘ஒவ்வொரு நாடும் தனக்காக’ என்ற அணுகுமுறையானது பகுத்தறிவற்றது மட்டுமின்றி மிகப்பெரும் பின்னடைவுக்கும் இட்டுச் செல்லக் கூடியது. ஆனால் இதுதான் தற்போது அச்சு அசலாக நடந்து கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மூன்று முக்கிய தடுப்பூசிகளுக்கு [பிசெர்-பயோNடெக் (Pfizer-BioNTech), மாடெர்னா (Moderna), அஸ்ட்ராசெனெகா (AstraZeneca) என்ற 3 மருந்து கம்பெனிகளின் மருந்துகள்] ஒப்புதல் அளித்தவுடனேயே பணக்கார நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு தடுப்பூசி மருந்துகளை வாங்கிக் குவித்தன. இதன் விளைவாக 2021 பிப்ரவரி முடிவில் கோவிட்-19 தடுப்பூசி மருந்தானது உலகின் வளர்ந்த நாடுகளில் மிக அதிகளவு குவிந்தன. (ஆங்கில கட்டுரையில் படம் உள்ளது. படம்-1).

படம் 1

இது நடந்திருக்கக் கூடாது. இந்த கோவிட்-19 உலகளவில் தடுப்பூசி பெறும் வசதி (COVAX-கோவாக்ஸ்) என்ற அமைப்பானது உலக சுகாதாரக் கழக (WHO) தலைமையின் கீழ் இயங்குகிறது. பெருந்தொற்றுக்கு எதிராகத் தயாராவது மற்றும் கண்டுபிடிப்புக்கான கூட்டமைப்பு மற்றும் கவி (Gavi) போன்ற அமைப்புகள் இப்படி நடப்பதைத் தடுப்பதற்கு என்றே குறிப்பாக உருவாக்கப்பட்டவை. அதாவது, பணக்கார நாடுகள் தடுப்பூசியைக் கைப்பற்றுவதைத் தடுக்கவும், உலகின் ஏழை மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதற்குமாக ஏற்படுத்தப்பட்டவை.

கோவிட்-19க்கான தடுப்பூசியை உருவாக்குவதை விரைவுபடுத்துவது, அனைத்து நாடுகளுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்துவது மற்றும் பகிர்ந்து கொடுப்பதில் வெளிப்படையாகவும் அதிக அபாயத்திற்கு இலக்காகும் மக்களுக்குக் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டும் கோவாக்ஸ் செயல்படுகிறது. 2021 துவக்கத்திலேயே 190 நாடுகள் இதில் சேர்ந்தன. பிப்ரவரியில் அமெரிக்காவும் (முன்னால் ஜனாதிபதி டிரம்ப் இதில் சேராமல் தடுத்து வைத்திருந்தார்) இதில் சேர்ந்தது. உயர் வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் தங்களுக்கான தடுப்பூசி மருந்தை கட்டணம் செலுத்தியும், 92 குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கட்டணம் இன்றியும் பெற்றுக் கொள்ளலாம்.

கொவாக்ஸ் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி மருந்தை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக அந்நாடுகளின் மக்கள் தொகையில் 3% பேருக்கு, நோய்த் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகக் கூடிய முன்களப் பணியாளர்களுக்கு, அதாவது சுகாதாரம் மற்றும் சமூக சேவைப் பணியாளர்களுக்கு வழங்குதல். பிறகு ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகையில் 20% பேருக்கு, அதாவது நோய் தாக்குதல் அபாயம் உள்ள வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு வழங்குதல்.

இரண்டாவது கட்டமாக நோய் பரவல் வேகம், பிற நோய் தொற்றுக் காரணிகளால் (அம்மை போன்ற நோய்கள்) நோய் பரவுதல் மற்றும் அந்த நாட்டின் சுகாதார கட்டமைப்பு எவ்வளவு பலவீனமானதாக உள்ளது ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்குதல். இறுதியாக அனைவருக்கும் என செயல்படுத்தப்பட உள்ளது.

மருந்து உற்பத்தியிலான கட்டுப்பாடுகளைக் கணக்கில் கொண்டால் இது ஒரு சிறப்பான முறையாகும். ஆனால், இம்முறையில் எதிர்பார்த்த நிதியான 680 கோடி டாலரில் 400 கோடி டாலர் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி மருந்தை வினியோகிக்க முடியவில்லை. ஏனெனில் கோவாக்ஸ்-ன் உறுப்பு நாடுகள் தனியே மருந்துக் கம்பனிகளிடம் நேரடியாக தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அனுமதிப்பதால், செல்வந்த நாடுகள் சம்பந்தப்பட்ட மருந்துக் கம்பனிகளிடம் கோவாக்ஸ்-க்கு வெளியே ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.

இதனால் தரக்கட்டுப்பாட்டு முறை மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட முதல் மூன்று மருந்துகள் ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரே மாதத்திற்குள் உலக மக்கள் தொகையில் 14 சதிவீதம் மட்டுமே உள்ள முன்னேறிய செல்வந்த நாடுகளின் வசம் 2021-ஆம் ஆண்டில் உற்பத்தியாகும் மொத்த தடுப்பு மருந்துகளில் 85 சதவீதம் தடுப்பு மருந்துகள் சென்றன. (கோஷ் 2020).

இவற்றில் பெரும்பாலானவை ஒழுங்குமுறை ஒப்புதல் வழங்குவதற்கு முன்பாகவே கொள்முதல் ஒப்பந்தம் போடப்பட்டவை. கோவிட்-19 தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்ட 48 நிறுவனங்களில் 13 நிறுவனங்களின் 750 கோடி தடுப்பு மருந்துகள் (Doses) பெரும்பாலும் பணக்கார நாடுகளால் நவம்பர் 2020-க்குள்ளாகவே வாங்கப்பட்டன. சில நிகழ்வுகளில் மருத்துவப் பரிசோதனைகள் முடிவடைவதற்கு முன்பே இவ்வாறு ஒப்பந்தங்கள் மூலம் வாங்கப்பட்டுவிட்டன. (ஆச்சாரியா & ரெட்டி 2021)

கடந்த 2020-ஆம் ஆண்டு 44 ஒப்பந்தங்கள், இந்த ஆண்டில் 2021-ல் இதுவரை 12 இருதரப்பு ஒப்பந்தங்கள் அரசாங்கங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களிடையேப் போடப்பட்டுள்ளன. தமது நாட்டு மக்கள் தொகையை விட கனடா பத்து மடங்கும், அமெரிக்கா நான்கு மடங்கும் கூடுதலான தடுப்பூசி மருந்துகளை வாங்கிக் குவித்துள்ளன. கோவாக்ஸ்-சிடம் குறைவான விலையில் விற்பதை விட அதிகவிலை கொடுத்து, வளர்ந்த செல்வந்த நாடுகள் வாங்க தயாராக இருப்பதால் மருந்து நிறுவனங்கள் இந்த நாடுகளுக்கு மருந்துகளை விற்கின்றன. மேலும் ஒப்பந்தங்களின் அடிப்படை அம்சங்களான விலை உள்ளிட்டவற்றை மருந்து நிறுவனங்கள் மறைமுகமாக வைத்துள்ளன.

இவ்வாறு செல்வந்த நாடுகள் தடுப்பு மருந்துகளைக் கொள்ளையடிப்பதால் உலகின் பெரும்பாலான நாடுகள் பாதுகாப்பான, முறையான ஒப்புதல் வழங்கப்பட்ட தடுப்பூசியைப் 2022-ஆம் ஆண்டுதான் பெற முடியும் அல்லது சில நேரங்களில் 2024 வரை கூடக் காத்திருக்க நேரலாம். உலக சுகாதார நிறுவன தலைவரின் அறிக்கைப்படி, 2021 ஜனவரி மத்தியில் செல்வந்த நாடுகளில் 390 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன. ஒரு ஏழை நாட்டில் மொத்தத்தில் 25 பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மேலும் 170 பரம ஏழை நாடுகளில் ஒருவருக்குக் கூட தடுப்பூசிப் போடப்படவில்லை. அவர் மேலும் கூறுகிறார்: “நான் கூறுவது முரட்டுத்தனமாயிருக்கலாம் – உலகம் சமூகத்திலான மதிப்பு, நெறிபிறழ்வினது பேரழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்த தவறின் விலையானது உலகின் ஏழைநாட்டு மக்களின் வாழ்வும் வாழ்வாதாரத்தின் அழிவாக இருக்கும்”. (ஐ.நா.செய்திகள், ஜனவரி 2021).

நியாயப்படுத்த முடியாத அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு !

மிகமோசமான, சமனற்ற தடுப்பூசி மருந்து விநியோகத்திற்கான முக்கியமான காரணம் போதுமான அளவு உற்பத்தி நடக்காததுதான். எனினும் இந்த பற்றாக்குறை முற்றிலும் தேவையற்றது மட்டுமின்றி, எளிதாகவும், விரைவாகவும் தீர்க்கப்படக் கூடியதே. குறைந்த அளவிலான ஒப்புதல் அளிக்கப்பட்ட மருந்து உற்பத்திக்கு முக்கிய காரணமே மருந்துக் கம்பனிகளிடம் உள்ள காப்புரிமைதான்.

இந்த காப்புரிமை மருந்துக் கம்பனிகளுக்கு உற்பத்தியில் ஏகபோகத்தை வழங்குகின்றன. அந்த மருந்துக் கம்பனிகளிடம் உள்ள உற்பத்தித் திறன் மற்றும் மிகவும் ஒரு சிலருக்கு அந்த கம்பனிகள் வழங்கும் உற்பத்திக்கான அனுமதி ஆகியவையே பெருமளவிலான மருந்து உற்பத்திக்கான தடைகளாக உள்ளன.

காப்புரிமை பொதுவாகப் புதிய கண்டுபிடுப்புக்கான அத்தியாவசியமான பண வெகுமதியாக பார்க்கப்படுகிறது. இது இல்லையென்றால் தொழில்நுட்ப மாற்றங்கள் நடக்காது அல்லது மிகவும் வரம்புக்குட்பட்டு இருக்கும் என்ற கருத்து உள்ளது. பெரிய மருந்து நிறுவனங்கள் (உலக வர்த்தகக் கழகம் (WTO) மற்றும் அதைத் தொடர்ந்து வணிக மற்றும் பொருளாதார கூட்டுகளுக்கான ஒப்பந்தங்களில் இந்த பெரிய மருந்து நிறுவனங்கள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி ’லாபி’(lobby) செய்து இந்த அறிவுசார் சொத்துரிமையை முன் தள்ளிச் சேர்த்தன) புதிய மருந்துகள் கண்டுபிடிப்பதற்கு மிக அதிகளவு செலவு பிடிப்பதாலும் சில சமயங்களில் ஆண்டுக் கணக்கில் ஆய்வு செய்து கண்டுப் பிடிக்கப்பட்ட மருந்துகள் வெற்றிப் பெறாமல் போவதாலும் இப்படிப்பட்ட ஊக்கத் தொகையான காப்புரிமை தேவை என வாதாடுகின்றன.

படிக்க :
♦ அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

♦ கோவிட்-19 நோயாளிகளை கைவிட்ட அரசு : ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது எப்படி?

ஆயினும், கோவிட்-19 தடுப்பூசி மருந்து தயாரிப்புக்காக அரசாங்கங்களிடமிருந்து மிகப்பெருமளவிலான மானியத் தொகைகளை மருந்துக் கம்பனிகள் பெற்றுள்ளன. பெருமளவில் இந்தத் தொகையானது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான மருந்துக் கம்பனிகளின் செலவுகளை முற்றிலும் ஈடுசெய்துள்ளன என்பதே உண்மை. அமெரிக்காவில் மட்டும் ஆறு பெரிய மருந்துக் கம்பனிகள் கோவிட்-19 மருந்து தயாரிப்பதற்காக 1200 கோடி டாலர் நிதியை மானியமாகப் பெற்றுள்ளன. (MSF 2021). பிற செல்வந்த நாடுகளின் அரசாங்கங்களும் இதேபோல மானியங்களை வாரி வழங்கியுள்ளன.

தனியார் மருந்துக் கம்பனிகள் முந்தையப் பொது ஆராய்ச்சிலிருந்து (Scientific American 2020) பலனடைந்தது மட்டுமின்றி, தன்னார்வலர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் மூலம் மாதிரி சோதனைகளுக்கான செலவினங்களும் குறைந்து ஆதாயம் அடைந்துள்ளன. இவ்வாறு முன்னணி நிறுவனங்கள் அவர்களின் முதலீட்டை ஏற்கனவே பெற்றுவிட்டன. சில நிறுவனங்கள் அதற்கும் மேலாகவே ஆதாயம் அடைந்துவிட்டன. இனி விற்பதெல்லாமேக் கூடுதலான லாபம்தான். (Super Profits).

உதாரணமாக, ஃபைசர் (Pfizer) நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து நேரடியான மானியம் எதுவும் பெறாவிட்டாலும் பத்து கோடி (Doses) டோஸ் மருந்துகளுக்கு முன்கூட்டியே 195 கோடி டாலர் பணம் பெற்றுள்ளது. (Industry Week 2020). மேலும், இது தொழில் நுட்பத்துக்காக பியோஎன்டெக் நிறுவனத்தைச் சார்ந்துள்ளது. இந்த பியோஎன்டெக் நிறுவனம் தனது ஆராய்ச்சிக்காக ஜெர்மன் அரசாங்கத்திடமிருந்து 44.5 கோடி டாலரைப் பெற்றுள்ளது. (Bloomberg 2020). ஃபைசர் (Pfizer) நிறுவனம் இந்த தடுப்பு மருந்து தயாரிக்க 310 கோடி டாலர் செலவு (பி.பி.சி 2020) செய்து, 2021-க்குள் 1500 கோடி டாலர் விற்பனைக்கு உத்தேசித்துள்ளது. (Quartz 2020). மாடர்னா (Moderna) நிறுவனம் தடுப்பு மருந்து உருவாக்கத் தேவையான 250 கோடி டாலரை அமெரிக்க அரசாங்கமே ஏற்றுள்ளது. (USA Today 2020). சமீபத்தில் ஒப்புதல் பெற்ற ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து மானியங்களும், பத்து கோடி தடுப்பூசி டோஸ்களுக்கான முன்ஆணையும் (pre-orders) பெற்றுள்ளது. (ஜான்சன் & ஜான்சன் 2020).

அஸ்ட்ரா ஸெனகா (Astra Zeneca) தடுப்பு மருந்தானது வளரும் நாடுகளில் பயன்படுத்தப் படுகிறது. (குறிப்பிட்ட அளவு இந்த தடுப்பு மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கிறது). இத்தடுப்பு மருந்தானது முற்றிலும் பொது மக்களின் பங்களிப்பின் அடிப்படையில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது. துவக்கத்தில் அசலான விநியோக திட்டப்படி வெளிப்படையான அனுமதி அடிப்படையில், எந்த ஒரு தயாரிப்பாளரும் இந்த மருந்தை தயாரிப்பதற்கு இலவசமாக அனுமதிக்கப்படும் என்றே இருந்தது.

இருப்பினும், பில் கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனம் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக ஆக்ஸ் ஃபோர்டுக்கு 75 கோடி டாலர் நன்கொடை தந்தபின் இந்த அசல் திட்டம் முற்றிலுமாக மாறிப்போனது. தனது திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி பல்கலைக் கழகத்தைப் பணிய வைத்து, ஒப்பந்தமும் போட்டுவிட்டது. இந்த ஒப்பந்தப்படி, ”அஸ்ட்ரா ஸெனிகா நிறுவனத்துடனான பிரத்யேக ஒப்பந்தப்படி, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டுமே மருந்து தயாரிக்கும் முழுஉரிமை உள்ளது மற்றும் குறைந்த விலைக்கான எந்த உத்தரவாதமுமில்லை” என்பதை சேர்த்து புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. (Jav Hancock 2020).

ஆக்ஸ்ஃபோர்டும் அஸ்ட்ராஸெனெகாவும் இணைந்து தடுப்பு மருந்து விற்பனையில் லாபம் பார்க்க மாட்டோம் என வாக்குறுதியளித்தாலும் அதன் ஒப்பந்த விவரங்கள் தெளிவாகவோ வெளிப்படையாகவோ இல்லை. இந்த பெருந்தொற்றுக் காலத்தில் ஆக்ஸ் ஃபோர்டு ராயல்டி எதையும் பெறாவிட்டாலும் காப்புரிமை காரணமாக தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆதாயம் அடைந்துள்ளது.

அதேநேரம், அஸ்ட்ராஸெனெகா வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பிய தடுப்பு மருந்துகளுக்கு வெவ்வேறு விலைகளை நிர்ணயித்துள்ளது. சில ஏழை நாடுகள் அதிகப்படியான விலை கொடுத்துள்ளன. ஐரோப்பிய கூட்டமைப்பு ஒரு டோஸ் மருந்துக்கு 3.5 டாலர் விலை கொடுக்க, ஏழை நாடான பங்களாதேஷ் 4 டாலர் விலை கொடுத்து வாங்கியுள்ளது. தென்ஆப்பிரிக்காவோ 5.25 டாலர் கொடுத்து வாங்கியுள்ளது. (Politico.2021). (விலை அதிகமுள்ள தடுப்பு மருந்தை சீரம் இன்ஸ்டிடியுட் ஆஃப் இந்தியா நிறுவனம் கொடுத்துள்ளது).

இந்த விலையிலான வேறுபாடு அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்துடன் மட்டும்  நின்றுபோய்விடவில்லை. ஏனெனில் தடுப்பு மருந்துக்கான போட்டி, ஒப்பந்த பேரம் ஆகியவற்றின் அடிப்படையில் தடுப்பு மருந்திற்கான விலை மார்ச் 1-ஆம் தேதிய விவரப்படி 2.19 டாலர் முதல் 44 டாலர் வரை வேறுபடுகிறது. (UNICEF, Covid Dashboard).

2020 அக்டோபரில் உலக வர்த்தக கழகத்தில் (WTO) இந்தியாவும் தென்ஆப்ரிக்காவும் கொண்டு வந்த முன்மொழிவை ஏற்றிருந்தால் இவ்வாறு உற்பத்தியில் உள்ள கட்டுப்பாடு காரணமாக எழக்கூடிய தடுப்பு மருந்துப் பற்றாக்குறை, கொள்ளை, அதிக விலை, வேறுபட்ட விலை மற்றும் உலகின் பெரும்பாலான மக்களுக்கு போதுமான அளவில் கிடைக்காமை போன்றவற்றை சரி செய்திருக்கலாம். இம்முன்மொழிவானது கோவிட்-19 தொடர்பானப் பொருட்களுக்குக் காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமையிலிருந்து விலக்கு கோரியிருந்தது. (MSF, November 2020).

இதன் பொருள் என்னவென்றால், உலக வர்த்தகக் கழகத்தில் உள்ள உறுப்பு நாடுகளுக்கிடையே இந்த பெருந்தொற்று காலம் முழுதும் கோவிட்-19 நோய்த் தொற்றோடு தொடர்புடைய மருந்துகள், தடுப்பூசிகள், நோய் கண்டறியும் உபகரணங்கள், மற்றும் பிற தொழில்நுட்பங்கள், மாஸ்க் மற்றும் வெண்டிலேட்டர்கள் உட்பட அனைத்தின் மீதான காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை வழங்குவதிலிருந்து தடுத்திருக்கலாம். மேலும் இந்நாடுகளுக்கிடையே ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம், உற்பத்தி, அதை அதிகரிப்பது, மற்றும் கோவிட்-19 கருவிகள் வழங்குவது  ஆகியவற்றில் எளிதாக கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்திருக்கலாம்.

பெரும்பாலான வளரும் நாடுகள் இதனை ஆதரித்தாலும், வளர்ந்த நாடுகள் உலக வர்த்தக கழகத்தின் ’டிரிப்ஸ்’ (TRIPS) கவுன்சிலில் தொடர்ச்சியாக முட்டுக்கட்டைப் போட்டன. (Prabhalaet al 2020). இது ஆச்சரியப்படத்தக்கது. ஏனெனில் காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமைகள் ரத்து செய்யப்பட்டிருந்தால் தடுப்பூசி மருந்துகள் அதிகப்படியாகவும் விரைவாகவும் கிடைத்து வளர்ச்சியடைந்த நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாயிருந்திருக்கும். அதிகளவு தடுப்பூசி உற்பத்தியானது மருந்து உற்பத்திச் செலவைக் குறைத்து, உலக மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் குறைவான விலையில் மருந்து கிடைக்கச் செய்திருக்கும்.

உலக வர்த்தகக் கழகத்தின் டிரிப்ஸ் (TRIPS) கவுன்சிலில் ஐந்து முறையும் இந்த முன்மொழிவு தடுக்கப்பட்டதற்கு பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் பேரம் பேசி, தில்லு முல்லு செய்கின்ற மோசடி செயலே (லாபி) காரணம். (குறிப்பாக பில்கேட்ஸ் இந்த முன்மொழிவை ஆதரிக்க மறுத்தார்). (Mail & Guardian 2021).

படம் 2

(ஆங்கில மூல கட்டுரையில் உலக வரைபடம்-2 வடக்கு, தெற்கு பிளவைக் காட்டுகிறது). படம் 2 உலக வர்த்தகக் கழகத்திலான இந்த முன்மொழிவுக்கு உலக நாடுகள் எப்படி வினையாற்றி வடக்கு – தெற்கு என இரண்டாக பிளவுண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. மிகப்பெரும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் தாயகமான செல்வந்த நாடுகள் இந்த முன்மொழிவைத் தடுத்தன. இந்த நாடுகள் ஏற்கனவே தமது தேவைக்கும் கூடுதலான கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளைக் கொண்டுள்ளன. (இம்மருந்துகளை தமது நாட்டுக்குள்ளேயே விரைந்து விநியோகிப்பதில் வெற்றிப் பெறாதப் பெரும்பாலான இந்நாடுகள் இந்த தடுப்பூசிகளை அடுக்கி வைத்து அழகு பார்க்கின்றன என்பது வேறு விசயம்).

சிலர் இந்த முன்மொழிவே தேவையில்லாதது என வாதாடுகின்றனர். ஏனெனில் உலக வர்த்தகக் கழகத்தின் ’டிரிப்ஸ்’ குறித்தான ஒப்பந்தத்தில் கட்டாய உரிமம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது என்கின்றனர். ‘டிரிப்ஸ்’ மற்றும் பொதுச் சுகாதாரம் பற்றிய 2001 டோஹா பிரகடனத்திலேயே பொதுச் சுகாதார அவசரக் காலங்களில் காப்புரிமைப் பெற்றவரிடமிருந்து ஒப்புதல் பெறாமலேயே மூன்றாம் நபருக்குக் காப்புரிமைப் பெற்ற பொருளை உற்பத்தி செய்ய உரிமம் வழங்கும் அதிகாரம் அரசாங்கங்களுக்கு உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது (பார்க்க WTO FAQs) எனவும், இது காப்புரிமை பெற்றவரின் பிரத்யேக உரிமையை மீற அரசாங்கங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது எனவும், இதனால் முற்றுரிமையைத் தடுத்து உற்பத்தியை செய்யவும் மற்றும் அதிக விலை நிர்ணயிப்பதை தடுக்கவும் வழிவகை செய்கிறது எனவும் கூறுகின்றனர்.

கட்டாய உரிமம் அளிப்பதற்கான நிபந்தனையான பொதுச் சுகாதார நெருக்கடியை இப்பெருந்தொற்றுக் கொண்டிருந்தது. சிலி, இஸ்ரேல் போன்ற நாடுகள் அத்தகையக் கட்டாய உரிமத்தை இப்பெருந்தொற்று உருவானப் போதே வழங்கி தீர்மானம் இயற்றின. இருப்பினும் தடுப்பு மருந்துக் கண்டுபிடிப்பாளர் அதற்கான தொழில் நுட்பத்தை உரிமம் பெற்ற உற்பத்தியாளரிடம் வழங்க வேண்டியக் கட்டாயமில்லாததால் வளரும் நாடுகள் கட்டாய உரிமம் வழங்கினாலும் அதை நடைமுறைப்படுத்துவது கடினமாகும்.

காப்புரிமை பெற்றவர் அதற்கான தொழில் நுட்பத்தை உரிமம் பெற்ற உற்பத்தியாளரிடம் வழங்கினால் மட்டுமே மேற்படி கட்டாய உரிமம் முறையை செயல்படுத்தப்பட முடியும். கோவிட்-19 தடுப்பூசியைப் பொறுத்தவரை, பெரிய மருந்து நிறுவனங்கள் செல்வந்த நாடுகளுக்கு, இந்த நாடுகள் குறந்த அளவு உற்பத்தியாகும் தடுப்பூசி மருந்துகளைப் பெறுவதில் போட்டி போடுகின்றன, விநியோகம் செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைகின்றன. மறுபுறம், குறைவான சந்தை அல்லது மானிய விலையில் தர வேண்டிய நாடுகளைப் பற்றி கவலைப்படவே இல்லை. உலக அளவிலான காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமையை இரத்து செய்திருந்தால் நிலைமை மாறியிருந்திருக்கும்.

எனவே, அத்தியாவசியமான பொதுச் சுகாதாரத்தைப் பொறுத்தவரை அறிவுசார் சொத்துரிமை தற்காலிகமாக இரத்து செய்யப்பட வேண்டும் அல்லது திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என உலகலாவிய ஓர் இயக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும். பெரும்பாலான தடுப்பு மருந்துகள் எவ்வளவு காலம் நோயைத் தடுக்கின்ற ஆற்றல் கொண்டிருக்கும் என்பது பற்றிய விவரங்கள் ஏதும் இல்லை என்பதால் இந்த தற்காலிகத் தடைக் காலம் நீட்டிக்கப்பட வேண்டிய தேவை இருக்கலாம். இந்த தடைக் காலங்கள் தடுப்பூசிகளுக்கு மட்டும் என்றில்லாமல் பரிசோதனைகள், மருத்துவம், மற்றும் பெருந்தொற்று சம்பந்தமானப் பொருட்களுக்கும் சில ஆண்டுகளுக்கு தேவையாக உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தால் ஆதரவளிக்கப்பட்ட, கோஸ்டாரிகா நாட்டால் முன்மொழியப்பட்ட மற்றொரு வழிமுறை “தன்னார்வமாக பொதுப் பயன்பாட்டிற்கு ஒன்றிணைவது” (Voluntary pooling) ஆகும். இதன்படி கோவிட்-19 தொழில்நுட்பத்தைப் பெற ஒன்றிணைவது (Covid-19 Technology Acess pool(CTAP)) என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. இது அனைத்து நாடுகளுக்கும் சோதனைகள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கான உரிமைகளின் தொகுப்பை உருவாக்குகிறது, நியாயமான மற்றும் எளிமையான விதிமுறைகளில் இலவசமாக அனுமதி பெறுவது அல்லது உரிமம் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆனால், இதுவரை 40 வளரும் நாடுகள் மட்டுமே இதில் இணைந்துள்ளன. வளர்ந்த நாடுகள் எதுவும் இதில் இணையவில்லை. சர்வதேச ஆதரவு இல்லாததால், சி.டி.ஏ.பி உண்மையில் இதுவரை பயனுள்ளதாக இல்லை – ஆனால் அது எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்கதாக மாறலாம், தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய்க்கு அப்பால் எதிர்காலத்தில் சுகாதார அவசரநிலைகளுக்கு நீட்டிக்கப்படலாம்.

ஒழுங்குமுறை ஒப்புதலும் பொதுமக்களின் நம்பிக்கையும் !

மற்ற இடங்களில் உருவாக்கப்படும் மற்ற தடுப்பூசி மருந்துகளும் இப்பெருந்தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் தற்போதைய தடுப்பூசிகள் பற்றாக்குறையைக் குறைக்கவும் சாத்தியம் உள்ளது. ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி மற்றும் சீனாவில் உருவாக்கப்பட்ட சினோவாக் மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா, கியூபா மற்றும் பிற இடங்களில் மற்ற தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன.

தேவையான சோதனைகள் மற்றும் பிற செயல்முறைகள் இல்லாமல் போதுமான சோதனை மற்றும் அவசர ஒழுங்குமுறை ஒப்புதல் பற்றி சிலருக்கு கவலைகள் உள்ளன. ஆனால், இந்த தடுப்பூசி மருந்துகள், மருத்துவ சோதனைகள் மூலம் பாதுகாப்பானதாக மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என சான்றளிக்கப்படும் போது கூட, அம்மருந்துகள் உலகலாவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மேலும் தடைகள் உள்ளன.

உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் செயல்முறைப் பணக்கார நாடுகளில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு ஆதரவாக பெரிதும் சாய்ந்திருப்பதாக பெரும்பாலும் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் தரக் கட்டுப்பாட்டிற்காக நம்பும் “கடுமையான ஒழுங்குமுறை அதிகாரிகளின்” பட்டியலைக் கொண்டுள்ளது. அவை ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானில் உள்ள வளர்ந்த நாடுகளில் இருந்து மட்டுமே உள்ளன.

உலகின் மற்ற பகுதிகளுக்கு, தடுப்பூசி (மற்றும் பிற மருந்து) தயாரிப்பு நிறுவனங்கள் ‘முன்தகுதி’ மூலம் செல்ல வேண்டும் – மிகவும் சிக்கலான மற்றும் நீண்ட செயல்முறை. இது மற்ற நாடுகளில் இருந்து தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு எடுக்கும் நேரத்தைப் பெரிதும் நீண்டதாக ஆக்குகிறது.

உதாரணமாக, உலக சுகாதார நிறுவனம் 2020 இறுதியில் ஃபைசர்-பியோஎன்டெக் தடுப்பூசியை அங்கீகரித்தது. இவற்றின் பயன்பாடு இரண்டு மாதங்களுக்கும் குறைவானது. ஏனென்றால், உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பிய மருந்துகள் முகமையுடன் (EMA) ஒத்துழைக்கிறது. இருப்பினும், ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கு முன்பே, ஒப்புதலுக்காக விண்ணப்பித்திருந்த ரஷ்ய (ஸ்புட்னிக்) மற்றும் சீன (சினோவாக் மற்றும் சினோபார்ம்) தடுப்பூசிகள் இன்னும் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. (பிரபாலா மற்றும் லிங், 2021). இந்த மூன்று நிறுவனங்களும் ஒவ்வொன்றும் 2021-ல் நூறு கோடி தடுப்பூசிகள் வரை உற்பத்தி செய்ய முடியும். மேலும் வளரும் நாடுகளில் உள்ள உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்வதற்கும் இந்நிறுவனங்கள் அனுமதி வழங்கியுள்ளன.

இந்த பெருந்தொற்று காலத்தில், வளர்ந்த நாடுகள் உட்பட உலகெங்கிலும் வழக்கமான ஒழுங்குமுறை தரக் கட்டுப்பாடுகள் பெரிதும் தளர்த்தப்பட்டுள்ளன. கோவிட்-19 தடுப்பூசி மருந்து எதுவும் வெளிப்படைத் தன்மையுடன் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படவில்லை. மற்ற நாடுகளில் ஒழுங்குமுறை தரக் கட்டுப்பாடுகள் கடுமை குறைவானதாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கருதினாலும், அனைத்து தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களும் சமமான நிலையில் நடத்தப்படுவதை உறுதிசெய்ய பல்வேறு தேசிய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் அது இன்னும் வேலை செய்ய முடியும்.

ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை மறுக்கும் உலகளாவிய பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் அத்தகைய தடுப்பூசிகள் சில இணக்கமான தரங்களைப் பூர்த்தி செய்யும்போது உலகளாவிய விநியோகத்தை செயல்படுத்த ஒரு செயலூக்கமான அணுகுமுறையை எடுக்க வேண்டும்.

இது செய்யப்பட்டால், கோவிட்-19 தடுப்பூசிகள் மீதான பெரிய மருந்து நிறுவனங்களின் கொடூரப்பிடியை மீறுவது சாத்தியமாகலாம். இப்பெரிய தனியார் மருந்து நிறுவனங்கள் ஒரு சுகாதார நெருக்கடி மற்றும் பரந்தப் பொருளாதாரத் துயரத்தின் மத்தியில் இலாப வெறியுடன் செயல்படுகின்றன. சில நாடுகள் ஏற்கனவே மற்ற தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை உள்நாட்டுப் பயன்பாட்டிற்காக அங்கீகரித்துள்ளன மற்றும் இந்த அணுகல் மூலம் பயனடைந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, பிப்ரவரி 2021-இன் பிற்பகுதியில் சிலி, சீனாவின் சினோவாக் தடுப்பூசியை இறக்குமதி செய்து, அதன் மக்கள் தொகையில் 17 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட முடிந்தது. இந்த தடுப்பூசியே பொலிவியா, பிரேசில், இந்தோனேசியா மற்றும் துருக்கியிலும் பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், ஈராக், செர்பியா, மொராக்கோ, ஹங்கேரி மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் பல நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளது.

கோவிட்-19 தடுப்பூசிகளை வெற்றிகரமாக உற்பத்தி செய்து விநியோகித்ததற்கான முக்கிய எடுத்துக்காட்டாக இந்தியா இருந்திருக்க வேண்டும். இது பல முக்கிய தடுப்பூசி நிறுவனங்களைக் கொண்டுள்ளது, பல்வேறு தடுப்பூசிகளைப் பயன்படுத்திய நீண்ட மற்றும் வெற்றிகரமான வரலாற்றைக் கொண்டுள்ளது, சமீபகாலம் வரை, தடுப்பூசிகள் மீது அதிக அளவிலான பொது நம்பிக்கை இருந்தது.

துரதிருஷ்டவசமாக, தேவையான மருத்துவ சோதனைகள் முடிக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை (பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின்) முதலில் ஊக்குவிக்கவும் பின்னர் தள்ளவும் அரசாங்கம் மேற்கொண்ட உற்சாகமான முயற்சிகள் எதிர்மறையாகப் போனது. இது இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பொது மக்களின் நம்பிக்கையைக் குறைத்துவிட்டது. இந்தியாவில் மக்கள் – சுகாதார ஊழியர்கள் உட்பட – கொவாக்சின் தடுப்பூசி போட மறுப்பதாக பல அறிக்கைகள் வந்துள்ளன.

இது துரதிருஷ்டவசமானது, ஒருமுறை நம்பிக்கை இழந்தவுடன், அதை சரிசெய்யவும், மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெறவும் நீண்டகாலம் ஆகும். இப்போதும் எதிர்காலத்திலும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் ஆற்றலில் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. 17 வளர்ந்த நாடுகளில் 19,000 பேரிடம் சமீபத்தில் நடத்தப்பட்ட யூகோவ் கருத்துக் கணிப்பில், ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள்,  மிகக் கீழான இடத்தைப் பிடித்துள்ளன. இந்தியா அதன் முந்தைய தடுப்பு மருந்து விநியோகம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால் மிகவும் பின்தங்கியுள்ளது முக்கிய பிரச்சினையாகும்.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு

♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

நியாயமாகச் சொல்வதானால், வளர்ந்த நாடுகள் உட்பட பெரும்பாலான நாடுகள் தடுப்பூசி விநியோகத்தில் மோசமான செயல்திறனைக் காட்டியுள்ளன. செல்வந்த நாடுகள் உலகளாவிய விநியோகத்தின் தேவையான பங்குகளில் பலமடங்குகளைப் பெற முயன்றுள்ளன. ஒட்டுமொத்தமாக, தடுப்பூசிகளின் உள்நாட்டு விநியோகம் பெரும்பாலும் உலகளாவிய விநியோகத்தைப் பிரதிபலிக்கிறது: சமமற்றது, அநீதியானது மற்றும் திறமையற்றது.

இந்த அணுகுமுறையானது இப்பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதில் காலதாமதத்தையும் மற்றும் வரவிருக்கும் இன்னும் பெரிய சவால்களை எதிர்கொள்வதில் மனித குலத்தின் திறன் பற்றியும் உலகளாவிய ஒத்துழைப்பைப் பெறுவதில் உள்ள அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.


கட்டுரையாளர் : ஜயதி கோஷ்
(ஜே.என்.யூ.-வில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர்)
தமிழாக்கம் : கணியன்
நன்றி : The India Forum

சுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா

சுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும்

அன்பு மகனே…!

அரசியல் சூது நிறைந்த இந்த தேசத்தில்,
உனது எதிர்காலம் குறித்த அச்சம் தான்
இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டுகிறது !

உன்னுள்ளிருக்கும்
அன்பையும், அறத்தையும்
காவு கேட்கின்ற காலமாக இருக்கிறது,
இந்தக் காலம்.

என் போன்ற தந்தைகளெல்லாம்,
தன் மக்களை
தற்கொலைக்குத் தப்பிய உயிராகப் பார்ப்பது
எத்தனை வன்கொடுமை !

இப்போதுதான்
நீ உறுதியான நம்பிக்கையுடனும், தெளிவுடனும்
இருக்க வேண்டும் மகனே !

அவர்கள் என் நிகழ்காலத்தையும்
உன் எதிர்காலத்தையும்
நசுக்கும் வன்மத்துடன்
காய் நகர்த்துகிறார்கள்.

இந்த சதுரங்க ஆட்டத்தில்
எண்ணிக்கையில் நமக்கு பலம் அதிகம்.

ஆனால் மகனே !
ஒற்றுமையிலும், அதிகாரத்திலும்
அவர்களது கை ஓங்கி நிற்கிறது.

ஆட்டத்தின் விதிமுறைகள்
நமக்கு மட்டும் தான் !
அவர்கள்
எத்தனைக் கட்டம் வேண்டுமானாலும்
தாண்டி வருவார்கள்.
நம்மை வீழ்த்துதல் மட்டுமே
அவர்களது நோக்கம் !

இங்கே வெற்றி கொள்தலை விட
நம்மை தக்க வைத்துக் கொள்தலே முக்கியம்.

உயிர் ஆயுதம் என்ற சொல்லை
சற்று ஒதுக்கி வை மகனே !
உனது தூக்குக் கயிற்றை
உன் கையில் கொடுத்திருக்கிறார்களே !
அதுதான் அவர்களது சூழ்ச்சி.
நீ அதை பயன்படுத்தினால்
அவர்களுக்குத்தான் வெற்றி !

உன் மரணத்தால்
அவர்களை வெற்றி கொள்ளச் செய்யாதே !
அதிகாரம் என்பது சுற்றப்பட்ட பம்பரக் கயிறு !
ஆட்சி என்பது சுழல்கின்ற பம்பரம் !
சுழலும் ஆட்சிப் பம்பரம்
ஓர் நாள் வீழ்ந்தே தீரும் !

காலமெலாம் சுழல்வதற்கு
இது சனாதனம் அல்ல
ஜனநாயகம் !

சோர்ந்து போகாதே மகனே !
சற்று பொறு
ஒன்றுபடு !

நாம் இணைந்து நின்றால்
நம் மூச்சுக்காற்றில்
அணைந்து விடக் கூடியதுதான்
அவர்களது அதிகார வெளிச்சம்..!

இது தமிழ் நிலம்
நாம் தமிழ் இனம்..
இது தவிர்த்து நம்மில்
எந்த பேதமுமில்லை..
சாதியாகவோ மதமாகவோ
யாரையும் விலக்கி வைக்காதே மகனே !

குறிப்பாக
சங்கிகளென யாரையும் இகழாதே விலக்காதே !
அவர்கள்
தங்கள் கழுத்திற்கு வரும் குறு வாளை
அணிகலன் என எண்ணி மகிழும் அப்பாவிகள் !
தனக்காக கண்ணீர் சிந்தும்
முதலைகளை
நம்பும் ஆடுகள் !

நீ எதை இழக்கிறாயோ?
அதைத்தான்
அவர்களும் இழக்கிறார்கள்
உனக்கு என்ன துரோகம் இழைக்கப்படுகிறதோ?
அதே துரோகம் தான்
அவர்களுக்கும் இழைக்கப்படுகிறது.

கடவுள் என்கிற
ஒரு மந்திரச் சொல்லை உபயோகித்து
அவர்களை மயக்கி வைத்திருக்கிறார்கள்.

ஜிடிபி குறைகிறதா?
ஒரு கடவுளை சுழற்றிப் போடு..
கல்வியைக் களவாட வேண்டுமா?
மற்றொரு கடவுளை சுழற்றிப் போடு.
எதற்கும் சிக்கவில்லையென்றால்
தேசபக்தியைத் திருப்பிப் போடு.

அவர்களது ஆட்டத்தில்
கடவுளும் தேசபக்தியும்
ஒரு பகடைக் காய் !

நமக்குத்தான்
விநாயகன், முருகன் ,
ராமர், யேசு, அல்லா….
அவர்களுக்கு கார்ப்பரேட்தான் கடவுள்.

நம் வளங்களைக்
கொள்ளை கொள்தல்தான் நோக்கம்.
நமது பண்பாடுகளையும்
பழக்க வழக்கங்களையும்
அரித்தெடுக்க போடப்பட்டிருக்கிறது.
அவர்களது மடிவலை..!

கடவுளைத் திருடுவதிலிருந்து
காய்கறிகளை மலடாக்குவதுவரை
யாவற்றையும் கவனத்துடன் செய்கிறார்கள்..!

இப்போது
கல்வியை நோக்கி நீண்டிருக்கிறது
அவர்களது ஆயுதம்.
தகுதிப்படுத்துகிறோம் என
சொம்படிப்பார்கள் மகனே
நம்பி விடாதே…!

நாம் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல..!
ஆழத்தோண்டி தேடி எடுக்கும்
நம் பண்டைய வரலாற்றில்
திமிறித்திமிறி மேலெழுகிறது
நமது அறிவும், நாகரீகமும்,கட்டுமானமும்…!

அங்கு
அவர்களது கடவுளர் இல்லை.
இந்தத் தரவொன்று போதும் மகனே…!
பிறப்பில் இழிவில்லை
நாம் எவனுக்கும் அடிமையில்லை…
பதட்டம் கொள்ளாதே
பசப்பு வார்த்தைகளில்
ஒருபோதும் மயங்காதே…

எதிரிகளின் இலக்குகளை
கவனத்தில் கொள்..
அதை
அருகிருக்கும் சகோதரனை உணரச் செய்.

ஒன்றுபடுதலும்
உறுதி கொள்ளலும் தான்
இப்போதையத் தேவை.

அந்த விற்பனைச் சந்தை
துவங்கி விட்டது.
வியாபாரமும்
நடந்து கொண்டிருக்கிறது.
நாம் வேடிக்கை பார்க்கும்

மனிதர்களாக இருக்கிறோம்.

திரைப்பட இயக்குனர் தாமிரா

நம்மில் அந்த வியாபாரத்திற்கு
முட்டுக் கொடுக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
முற்று முதலாக விற்றுத் தீர்ந்தபின்..

அதை மீட்டெடுக்கும் போர்
உன் கைவசப்படலாம்..

நீ
சுழியத்திலிருந்து துவங்க நேரலாம்.
எதற்கும் கவலை கொள்ளாதே மகனே..

சுழியத்திலிருந்து துவங்கி வென்றெடுக்கலாம்.
உலகிற்கே சுழியத்தை கற்றுத் தந்தவர்கள் நாம்.
அச்சம் கொள்ளாதே…!

இந்தப் போருக்கு வேர் எது என கண்டுணர்..
மூலம் அறி
அதை வேரோடு அழி
இத்தனைக்கும் காரணம்
ஒரு நூலிழைத் தவறுதான்..
சில நூற்றாண்டுகளாய் தொடர்கிறது….

அறுத்தெறிவது அத்தனை கடினமில்லை
அத்தனை எளிதுமில்ல…..
இனி யாவும் உன்கையில்
தலைமுறைத்தவறை
சீர் செய்யும் பொறுப்பு
உன்னிடம் இருக்கிறது..

உறுதியாய் நின்று போராடு..
உயிர் தொலைக்காமல் களமாடு….!

தாமிரா
(தன் மகனுக்கு எழுதிய கடிதம்)
நன்றி :
பாரதி கவிதாஞ்சன் முகநூல் பதிவிலிருந்து

disclaimer

‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு

மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதம் அளவிற்குச் சுருங்கிப் போன வருடத்தில், புலம் பெயர் தொழிலாளர்கள் தமது கிராமங்களுக்கு மீண்டும் திரும்பக் கூடிய கெடுவாய்ப்பை நாம் எதிர்பார்த்திருக்கும் நிலையில், விவசாயிகள் செவிமடுக்கப்படாமல் டெல்லி வாயிலில் காத்திருக்கும் நிலையில் இந்தியக் கோடீசுவரர்கள் சாதனை படைக்கும் செல்வ வளத்தை அடைந்துள்ளனர்.

– பி.சாய்நாத்

***

ஃபோர்பஸ் இதழ் 2021-இல் வெளியிட்டுள்ள பட்டியலை நம்பினோம் எனில், (கோடீசுவரர்கள் மற்றும் அவர்களது செல்வ வளம் குறித்து அறிய ஃபோர்பஸ் இதழ்தான் அதிக நம்பிக்கைக்கு உரியது) இந்தியக் கோடீசுவரர்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு மாதங்களில் 102-லிருந்து 140-ஆகப் பெருத்திருக்கிறது. அவர்களது செல்வத்தின் கூட்டு மதிப்பு கடந்த ஆண்டில் ரூ.59,600 கோடி அமெரிக்க டாலர்களாக, கிட்டத்தட்ட இருமடங்காகியிருக்கிறது எனக் கூறுகிறது, அவ்விதழ்.

படிக்க :
♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

♦ கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு

இதன் பொருள் என்னவெனில், இந்த 140 தனிநபர்களின் அல்லது மக்கள் தொகையில் 0.000014 சதவீதமே உள்ள இவர்களின் திரண்ட (சொத்து) மதிப்பு, நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான ரூ.2,62,000 கோடி அமெரிக்க டாலர்களில் 22.7 சதவீதத்திற்குச் (அல்லது ஐந்தில் ஒரு பங்கிற்கும் கூடுதலானது) சமமாகும்; வழமையாக அவர்கள் செய்கிறபடி, (இந்த 140 பேர் தவிர) மற்ற அனைவரும் சேர்ந்தது தான் “மொத்த” என்பதாகும். 

பெரிய இந்திய தினசரிகளுள் அநேகமானவை, ஃபோர்பஸின் இந்த அறிவிப்பை, தவறான வழியில் குவிக்கப்பட்ட செல்வம் குறித்துக் குறிசொல்லும் சாமியாடி மிகவும் வெளிப்படையாக, நாணயமாகக் குறிப்பிட்டதையெல்லாம் தவிர்த்து விட்டு, இத்தகைய சாதனைகளை அங்கீகரிப்பதற்கென்றே அவைகள் சேமித்து வைத்திருக்கும் மொழியில் வெளியிட்டுள்ளன.

“இந்தியாவெங்கும் மற்றொரு கோவிட்-19 அலை வீசிக் கொண்டிருப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.2 கோடியைத் தாண்டிவிட்டது. ஆனாலும், நாட்டின் பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொடும் வகையில் இந்த பெருந்தொற்றுப் பீதியை ஒதுக்கித் தள்ளியிருக்கிறது. பங்குச் சந்தைக் குறியீட்டுஎண் கடந்த ஆண்டை விட 75 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இந்தியக் கோடீசுவரர்களின் மொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 102-லிருந்து 140-ஆக உயர்ந்திருப்பதோடு, அவர்களது செல்வத்தின் கூட்டு மதிப்பு ரூ.59,600 கோடி அமெரிக்க டாலர்களாக, ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது” என இந்த நாடு குறித்த தனது செய்தி அறிக்கையின் முதல் பத்தியிலேயே குறிப்பிட்டிருக்கிறது ஃபோர்பஸ்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதம் சுருங்கிப் போன அதேவருடத்தில் இந்தச் செல்வாக்குமிக்க 140 பெருந்தனவந்தர்களின் சொத்து மதிப்பு வாயைப் பிளக்கும் அளவிற்கு 90.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தீவிர கவனத்துடன் கணக்கிட வேண்டிய அளவில் பெரும் எண்ணிக்கையிலும், சிதறுண்டும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் ஒருமுறை அலை அலையாக நகரங்களிலிருந்து தமது கிராமங்களை நோக்கித் திரும்பத் தொடங்கியிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தச் சாதனைச் செய்தி வெளிவருகிறது.

இதன் விளைவாகத் தோன்றவுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எந்தவொரு நன்மையும் செய்யப் போவதில்லை. ஆயினும் கருணைமிக்க வகையில், நமது கோடீசுவரர்களையும் அதிகம் பாதிக்கப் போவதில்லை. அது குறித்த ஃபோர்பஸின் உறுதிமொழி நம்மிடம் உள்ளது.

மேலும், கோடீசுவரர்களின் செல்வ வளம் கோவிட்-19-னின் தர்க்க நியாயத்திற்குத் தலைகீழ் விகிதத்தில் செயல்படுவதாகத் தெரிகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக (செல்வ வளம்) குவிகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு எவ்விதமானத் தீவிரப் பரவலின் தாக்கம் குறைகிறது.

“மிக உச்சத்தில் செல்வச் செழிப்பு ஆட்சி செலுத்துகிறது” எனக் கூறுகிறது, ஃபோர்பஸ்.

“மூன்று மிகப் பெரும் இந்தியக் கோடீசுவரர்கள் மட்டும் கிட்டத்தட்ட ரூ.10,000 கோடி அமெரிக்க டாலர்களுக்குச் சற்று அதிகமான சொத்தைத் தமக்குள் சேர்த்துக் கொண்டுள்ளனர்.” அந்த மூன்று கோடீசுவரர்களின் சொத்து மதிப்பானது – ரூ.15,350 கோடி அமெரிக்க டாலர்கள் – 140 கோடீசுவரர்களின் மொத்தச் சொத்து மதிப்பில் 25 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

உச்சத்திலுள்ள முதல் இரண்டு பேரின், அம்பானி (ரூ.8,450 கோடி அமெரிக்க டாலர்கள்) மற்றும் அதானி (ரூ.5,050 கோடி அமெரிக்க டாலர்கள்) ஆகியோரின் சொத்து மதிப்பானது பஞ்சாப் (ரூ.8,550 கோடி அமெரிக்க டாலர்கள்) அல்லது அரியானா (ரூ.10,100 கோடி அமெரிக்க டாலர்கள்) மாநிலங்களின் மாநில மொத்த உற்பத்தி மதிப்பைவிட மிக அதிகமாகும்.

இந்தப் பெருந்தொற்று வருடத்தில், அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் ரூ.4,770 கோடி அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ ரூ.3,57,000 இலட்சம் கோடி ரூபாய்) அதிகரித்திருக்கிறது. அதாவது, அவரது சொத்து மதிப்பு ஒவ்வொரு விநாடியும் சராசரியாக ரூ.1,13,000 என அதிகரித்திருக்கிறது. இந்த அதிகரிப்பு, ஆறு பஞ்சாப் விவசாயக் குடும்பங்களின் (சராசரியாக 5.24 நபர்களைக் கொண்ட குடும்பம்) மொத்த மாத வருவாயை விட (ஒரு குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ.18,059) அதிகமாகும்.

அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் பஞ்சாப் மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்பிற்கு ஏறத்தாழ சமமாக உள்ளது. மேலும், இது மூன்று விவசாயச் சீர்த்திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய நிலை. அவை நடைமுறைக்கு வந்தால், இது மேலும் வீங்கவே செய்யும். இதனிடையே, ஒரு பஞ்சாப் விவசாயியின் தனிநபர் ஆண்டு வருமானம் வெறும் ரூ.3,450 தான் (தேசிய மாதிரி ஆய்வின் 70 ஆவது சுற்று) என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அநேக தினசரிகளும் பி.டி.ஐ., அறிக்கையைத்தான் அப்படியே (அல்லது சற்று மாற்றி) வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையோ, ஃபோர்பஸ் இதழ் செய்ததைப் போல, எந்தவொரு இடத்திலும் ஒப்புமைப்படுத்தியோ அல்லது தொடர்புபடுத்தியோ தயாரிக்கப்படவில்லை. பி.டி.ஐ. அறிக்கையில் கோவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் அல்லது பெருந்தொற்று ஆகிய சொற்கள் இடம்பெறவே இல்லை.

இந்த அறிக்கை மட்டுமல்ல, வேறு எந்தவொரு அறிக்கையும், “பத்து இந்தியக் கோடீசுவரர்களுள் இரண்டு பேர் தமது செல்வ வளத்தை மருத்துவத் தொழிலில் இருந்துதான் (உலகெங்கிலும் பெருந்தொற்றைப் பயன்படுத்தி வளர்ச்சியடையும் துறை இதுதான்) பெறுகிறார்கள்” என ஃபோர்பஸ் இதழ் அழுத்திக் குறிப்பிட்டிருப்பதைப் போலக் குறிப்பிடவே இல்லை. 

மருத்துவத் துறை என்ற சொல் பி.டி.ஐ., அறிக்கை அல்லது அநேகமாக வேறெந்த அறிக்கையிலும் இடம் பெறவில்லை. எனினும், 140 இந்தியக் கோடீசுவரர்களுள் 24 பேரை மருத்துவத் துறையில் வைத்துக் குறிப்பிடுகிறது, ஃபோர்பஸ் இதழ்.

ஃபோர்பஸ் இதழ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய மருத்துவத் துறை சார்ந்த 24 கோடீசுவரர்களுள், முதல் பத்து பேர் பெருந்தொற்று வருடத்தில் மட்டும் ரூ.2,490 கோடி அமெரிக்க டாலர்களை தமது சொத்தில் (நாளொன்றுக்குச் சராசரியாக ரூ.500 கோடி ரூபாய்) கூடுதலாகச் சேர்த்ததையடுத்து, அவர்களது மொத்தச் சொத்து மதிப்பு 75 சதவீதம் அதிகரித்து ரூ.5,830 கோடி அமெரிக்க டாலர்களை (ரூ.4,30,000 கோடி) எட்டியது.

கோவிட்-19 பாரபட்சமற்றது எனக் கதைக்கப்பட்டதையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நமது “இந்தியாவில் தயாரிப்போம் – எங்காவது குவித்து வைப்போம்” கோடீசுவரர்கள் (மற்றைய உலகக் கோடீசுவரர்களுக்கு இணையாக) ஃபோர்பஸின் சிகரத்தில் இருக்கிறார்கள், அதன் உச்சியிலிருந்து வெறும் இரண்டு இடங்கள் தள்ளி. 140-க்குப் பின்னும் ஆட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் அடுத்த இடத்தில் உலகிலேயே அதிகக் கோடீசுவரர்களைக் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. கோடீசுவரர்களின் நாடாகத் தம்மைக் காட்டிக் கொண்ட ஜெர்மனியும், ரசியாவும் இந்தப் பட்டியலில் நம்மைப் பின்னுக்குத் தள்ளியகாலம் ஒன்றிருந்தது. ஆனால், இந்த வருட பட்டியலில் அவைகளின் இடம் எதுவெனக் காட்டப்பட்டிருக்கிறது.

இந்தியக் கோடீசுவரர்களின் சொத்தின் கூட்டு மதிப்பான ரூ.59,600 கோடி அமெரிக்க டாலர்கள் என்பது ஏறத்தாழ ரூ.44,50,000 கோடிக்குச் சமமாகும். இது 75 ரஃபேல் போர் விமான ஒப்பந்தங்களின் மதிப்பிற்குச் சற்றுக் கூடுதலாகும். இந்தியாவில் செல்வ வரி கிடையாது. அப்படியான வரி இருந்து, அதிகம் உறுத்தாத வகையில் 10 சதவீத வரி விதித்தோம் எனில், ரூ.4,45,000 கோடி வரி வருமானம் ஈட்ட முடியும்.

இதனைக் கொண்டு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் (2021-22) மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.73,000 கோடி என்ற அதே அளவில், தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். அவ்வாறு நடைமுறைப் படுத்தும் போது, ரூ.1,680 கோடி மனித உழைப்பு நாட்களை அடுத்த ஆறு ஆண்டுகளுக்குக் கிராமப்புறங்களில் உருவாக்கவும் முடியும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் மாநகரங்களையும் நகர்ப்புறங்களையும் விட்டு வெளியேறும் இரண்டாவது அலை எழுந்துள்ள நிலையில் – அவர்களது இத்துயரம் ஒரு சமூகம் என்ற வகையில் அவர்கள் நம்மை நம்பவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது – மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மேற்சொன்னதைவிட அதிகப்படியான வேலைநாட்கள் நமக்குத் தேவைப்படுகிறது.

இந்த அதிசயத்தக்க 140 கோடீசுவரர்களும், தமது நண்பர்களிடமிருந்து சிறு சிறு உதவிகளையும் பெற்று வந்தனர். கடந்த இரு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கண் மண் தெரியாத வேகத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பிரம்மாண்ட வரிக் குறைப்பு, ஆகஸ்டு 2019-லிருந்து இன்னும் வேகமெடுக்கும்படி முடுக்கிவிடப்பட்டது.

விவசாய விளைப் பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையில் கூடுதலாக ஒரு பைசாகூட விவசாயிகளுக்காகச் சலுகை காட்டப்படவில்லை. தொழிலாளர்களை 12 மணி நேரம் வேலை செய்ய வைப்பதற்கு வகை செய்யும் அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. (சில மாநிலங்களில் இந்தக் கூடுதல் நான்கு மணி நேர உழைப்புக்குக் கூடுதல் கூலி கொடுப்பதும் மறுக்கப்பட்டது.) மேலும், முன்பைவிட அதிகமாக இயற்கை வளங்களும், பொதுச் சொத்தும் கார்ப்பரேட் பெருந்தனவந்தர்களுக்குக் கையளிக்கப்பட்டது – இவை அனைத்துமே பெருந்தொற்றுக் காலத்தில் நடந்தன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்பெருந்தொற்றுக் காலத்தில்தான், உணவுப் பொருள் சேமிப்பு ஒரு கட்டத்தில் ரூ.10.4 கோடி டன்னாக உயர்ந்தது. ஆனால், மக்களுக்கு இலவசமாகக் கிடைத்ததோ, 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு மட்டுமே – அதுவும் ஆறு மாதங்களுக்கு. இந்த இலவசமும் கூட, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருபவர்களுக்கு மட்டும்தான்; அச்சட்டமோ தேவையுள்ள பெரும்பாலோரை ஒதுக்கி வைத்திருக்கிறது. கடந்த பல பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு பல பத்து இலட்சக்கணக்கான இந்தியர்கள் பட்டினி கிடக்க நேர்ந்த வருடத்தில்தான் இவையெல்லாம் நடந்தன.

ஃபோபர்ஸ் குறிப்பிடும் இந்தத் திடீர் சொத்துக் குவிப்புப் பாய்ச்சல் உலகெங்கும் நடந்து வருகிறது. “கடந்த ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு 17 மணி நேரத்திற்கும் ஒரு புதிய கோடீசுவரர் உருவாகியிருக்கிறார். மொத்தத்தில், உலகப் பெரும் கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு  முந்தைய ஆண்டை விட 5 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் அதிகரித்திருக்கிறது.” இந்த 5 இலட்சம் கோடி அமெரிக்க டாலரில் இந்தியப் பெரும் கோடீசுவரர்களின் பங்கு கிட்டத்தட்ட 12 சதவீதமாகும். இது,  நமது நாட்டில் அனைத்துத் துறைகளிலும் ஏற்றத் தாழ்வு எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, மிகத் துரிதமாக வளர்ந்து வரும் வேளையில் நடந்திருக்கிறது.

வறுமையும் பெருந்துயரமும் அதிகரிக்கும் போதுதான், அதன் மீது சவாரி செய்த படியே செல்வக் குவிப்பும் அதிகரிக்கிறது. மேலும், இது பெருந்தொற்று பற்றிய விடயம் மட்டுமல்ல. பேரிடர்கள் வளமான வியாபாரமாகும். பலரின் துயரத்திலிருந்து பணத்தை ஈட்டுவது எப்பொழுதுமே நடைபெறுகிறது. ஃபோர்பஸ் நம்புவுதைப் போலன்றி, நமது ஆட்கள் பெருந்தொற்றுப் பீதியைக் கண்டு ஒதுங்கிப் போய்விடவில்லை.

அவர்கள் ஓங்கி அடித்த அந்த அலையில் மிகச் சிறப்பாகப் பயணித்துள்ளனர். உலகெங்கும் நிலவி வரும் பெருந்தொற்று பெருக்கத்தை அனுபவித்துக் கொண்டிருப்பது மருத்துவத் துறையாகும் என்ற ஃபோர்பஸின் கூற்று சரியானதுதான். எனினும், திடீர் பேரழிவுகளைப் பொருத்து மற்ற துறைகளிலும் இத்தகைய வளர்ச்சியும் குவிப்பும் நிகழக் கூடும்.

டிசம்பர் 2004-இல் சுனாமி பேரழிவு ஏற்பட்ட ஒரே வாரத்திற்குள்ளாக, உலகெங்கிலும், குறிப்பாக, சுனாமியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலும் கூட பங்குச் சந்தை வளர்ச்சியைக் காண முடிந்தது. பல இலட்சக்கணக்கான வீடுகளும், படகுகளும், ஏழைகளின் அனைத்து விதமான சொத்துக்களும் அழிக்கப்பட்டிருந்தன.

சுனாமிக்கு இலட்சம் உயிர்களுக்கும் மேலாகப் பலி கொடுத்த இந்தோனேஷியாவில், ஜகர்தா பங்குச் சந்தை குறியீடு, அதனின் முந்தைய சாதனைகளை முறியடித்து, அதுவரையில்லாத உச்சத்தைத் தொட்டது. நமது பங்குச் சந்தைக் குறியீடும் அது போலவே. அச்சமயத்தில், மறுகட்டுமானத்திற்கான டாலர்கள், ரூபாய்கள் குறித்த முன்னுணர்வுதான் கட்டுமானம் மற்றும் அதோடு தொடர்புடைய துறைகளின் பிரம்மாண்ட வளர்ச்சியை இயக்கியது.

இச்சமயத்தில், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் (குறிப்பாக, மென்பொருள் சேவைத் துறை) உள்ளிட்டவைதான் நன்றாகச் செயல்பட்டன. ஃபோர்பஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியாவைச் சேர்ந்த முதல் பத்து தொழில் நுட்ட ஜாம்பவான்கள், பன்னிரெண்டே மாதங்களில் தமது சொத்து மதிப்பில் கூடுதலாக ரூ.2,280 கோடி அமெரிக்க டாலர்களைச் (நாளொன்றுக்குச் சராசரியாக ரூ.460 கோடி ரூபாய்) சேர்த்துக் கொண்டதையடுத்து, அவர்களது ஒருங்கிணைந்த மொத்த சொத்து மதிப்பு ரூ.5,240 கோடி அமெரிக்க டாலர்களை (ரூ.3,90,000 கோடி) எட்டியது. இது 77 சதவீத உயர்வாகும்.

மேலும், இணையவழிக் கல்விச் சேவையும் – பெரும்பாலும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த பல இலட்சக்கணக்கான மாணவர்கள், எவ்விதக் கல்வி வாய்ப்பும் இன்றி ஒதுக்கப்பட்ட நிலையில் –  சிலருக்குப் பலன்களை அளித்தது. பைஜு ரவீந்தரன், தனது சொத்து மதிப்பை 39 சதவீதம் அதிகரித்து, ரூ.250 கோடி அமெரிக்க டாலர் (ரூ.18,700 கோடி) பெறுமான சொத்தை அடைந்தார்.

படிக்க :
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

♦ ஆக்சிஜன் கேட்டால் தேசிய பாதுகாப்பு சட்டமாம் – இந்துராஷ்டிர இளவல் ஆதித்யநாத் எச்சரிக்கை !

நாம் உலகின் பிற நாடுகளுக்கு அவர்களது இடத்தைக் காட்டிவிட்டோம் எனக் கூறுவது நாணயமாக இருக்கும் என நான் கருதுகிறேன். ஐ.நா மனித வளர்ச்சி குறியீட்டுப் பட்டியலில் நமது இடமும் காட்டப்பட்டுவிட்டது. 189 நாடுகள் உள்ள பட்டியலில் 131-வது இடம் நம்முடையது. எல் சல்வடார், தாஜிக்கிஸ்தான், குவாதிமாலா, நிகரகுவா, புடான், நமீபியா, கபோ வெர்தே ஆகிய நாடுகள் எல்லாம் நமக்கு முன் உள்ளன.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, நம்மை இடித்துக் கீழே தள்ளிய சர்வதேச சதி குறித்த உயர்மட்ட விசாரணைக் குழுவின் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும் என நான் அனுமானிக்கிறேன். இந்தப் பத்தியைக் கவனித்து வரவும்.


தமிழாக்கம் : ஆர்.ஆர்.டி.
நன்றி : தி வயர் (15.04.2021) மற்றும் People’s Archive of Rural India

கோவிட்-19 நோயாளிகளை கைவிட்ட அரசு : ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது எப்படி?

0

வினய் ஸ்ரீவத்சவாவின் ஆக்சிஜன் அளவானது அபாயகரமான அளவை எட்டியிருந்த நிலையில்,  லக்னோவின் எந்த மருத்துவமனையும் தன்னுடைய தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை என ஏப்ரல் 16 அன்று இரவு 8 மணி அளவில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 94-க்கும் கீழே சென்றால் ஆபத்து நிலை என கொள்ளப்படும். ஸ்ரீவத்சவா தன்னுடைய ஆக்சிஜன் அளவு 32 என சொன்னார்.

65 வயதான நிறுவனம் சாரா பத்திரிகையாளரான ஸ்ரீவத்சாவின் பதிவு ட்விட்டரில் வைரலான பின், உத்தரப்பிரதேச முதலமைச்சரின் ஊடக ஆலோசகர், அடுத்த நாள் மதியம் மேலதிக தகவல் வேண்டும் எனக் கேட்டார். அப்போது ஸ்ரீவத்சவாவின் ஆக்சிஜன் அளவு 31-ஆக குறைந்தது.

படிக்க :
♦ கொரோனாவில் அம்பலமாகும் மோடியின் குஜராத் மாடல்  !!

♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

அதே நாளில் மாலை 4.20 அளவில் அவருடைய மகன் ஹர்ஷித் ஸ்ரீவத்சவா தன்னுடைய தந்தை இறந்துவிட்டார் என ட்விட்டரில் பதிவு செய்து, ஆம்புலன்சுக்கு காத்திருப்பதாக தெரிவித்தார். “நாங்கள் எதையும் பெறவில்லை. நான் அனைத்து எண்களுக்கும் அழைத்து ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டேன். ஆனால், எவரும் பதிலளிக்கவில்லை” என்கிறார் அவர்.

அவர்களுடைய வீட்டிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனையான சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவமனை ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைக்காக காத்திருக்கிறது. மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்திக்காக மருத்துவமனைகளிலேயே நிறுவப்பட 8 மாத கால கோவிட் பெருந்தொற்றுக்குப் பின் கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு 150 மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலை அமைக்க டெண்டர் கோரியிருந்தது. அதில் மேற்கண்ட மருத்துவமனையும் ஒன்று.

ஆனால், ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் ஆக்சிஜன் ஆலை நிறுவப்படவில்லை. சரியான நேரத்தில் நிறுவப்பட்டிருந்தால் லக்னோ வாசியான ஸ்ரீவத்சவா போன்றோர் கோவிட்-19னில் இருந்து பிழைந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். 3 மில்லியன் மக்கள் வாழும் இந்த நகரத்தில் தற்போது 44,485 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

“என் தந்தையை காப்பாற்றியிருக்கலாம்” என்கிறார் ஹர்சித். அவர் இன்னமும் தனது தந்தையின் கோவிட்-19 அறிக்கைக்காக காத்திருக்கிறார். “இது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் தவறு” என்கிறார் அவர்.

1,200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குஜராத்தின் நவ்சாரியில் மற்றொரு மாவட்ட மருத்துவமனையில், ஆக்சிஜன் ஆலை நிறுவப்படாதக் காரணத்தால் ஆக்சிஜன் தேவைப்படும் கோவிட்-19 நோயாளிகளைக் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சேர்க்க மறுத்து வருகிறது.

“இங்கு முழுமையாக ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது” என்கிறார் 175 படுக்கைகள் கொண்ட மாவட்ட பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அவினாஷ் துபே.  அரசின் கணக்குப்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஆக உள்ள நிலையில், கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் 5 கோவிட் 19 நோயாளிகள் உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் ஆலை மட்டும் சரியான நேரத்தில் நிறுவப்பட்டிருந்தால், குஜராத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட சூரத்திலிருந்தும் கூட நோயாளிகளை அனுமதித்திருக்கலாம். தற்போது அருகில் உள்ள மருத்துவமனைகள் துபே-ஐ அழைத்தால் “இங்கே அனுப்ப வேண்டாம்” என சொல்வதாக தெரிவிக்கிறார்.

000

ரூ.200 கோடி மதிப்பிலான டெண்டரை கோர 8 மாதங்கள் !

2020, மார்ச் 20-ஆம் தேதி அன்று இந்தியா, கொரோனா வைரஸ் பெருந்தொற்றை, பேரழிவு என அறிவித்தது.  பத்து நாட்கள் கழித்து, கோடிக்கணக்கான மக்கள் உலகின் மிக மோசமான பொது முடக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அப்போது அரசாங்கம், நாட்டின் சுகாதாரத் திறனை விரிவாக்க நேரம் தேவை எனக் கூறிக் கொண்டது.

பெருந்தொற்றின் தொடக்கத்திலேயே, வைரசுக்கு எதிரானப் போரில் ஆக்சிஜன் என்பது மிக முக்கியமான பொருள் என தெளிவாகத் தெரிந்தது. ஆனபோதும், நரேந்திர மோடியின் அரசாங்கத்துக்கு ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் அமைப்பதற்கான ஏலத்துக்கு அழைக்க 8 மாதங்கள் தேவைப்பட்டது.

அக்டோபர் 21-ஆம் தேதி அன்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனமான மத்திய மருத்துவ சேவைகள் சொசைட்டி, நாடு முழுவதும் 150 மாவட்ட மருத்துவமனைகளில் பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் (Pressure Swing Adsorption – PSA) ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ ஏலதாரர்களுக்கு அழைப்பு விடுத்தது.

PSA தொழில்நுட்பம் வளிமண்டலத்தில் உள்ள ஒரு கலவையிலிருந்து வாயுக்களைப் பிரித்து, குழாய் வழியாக செறிவூட்டப்பட்ட ஆக்சிஜனை மருத்துவமனைப் படுக்கைகளுக்கு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மற்ற மூலங்களிலிருந்து அழுத்தப்பட்ட திரவ ஆக்சிஜனை மருத்துவமனைகள் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த டெண்டர் செயல்முறைத் தொடங்கப்படாததற்கானக் காரணம் நிதிப் பற்றாக்குறை எனத் தெரிகிறது. 162 ஆலைகள் நிறுவ (12 ஆலைகள் பின்னர் சேர்க்கப்பட்டவை) வெறும் ரூ.201.58 கோடி போதுமானது. இந்த பணம் பி.எம்.கேர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது. 2020, மார்ச் 27-ஆம் தேதி அன்று உருவாக்கப்பட்ட பி.எம்.கேர் நான்கு நாட்களில் ரூ.3,000 கோடியை நன்கொடையாகப் பெற்றது.

இப்போது, கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில், பிஎம்-கேர் நிதியிலிருந்து மேலும் 100 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்படும் என மோடி அரசு கடந்த வாரம் ஓர் அறிக்கையில் கூறியது. 2020-ஆம் ஆண்டில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட 162 ஆக்சிஜன் ஆலைகளின் நிலை குறித்து, அவை அனைத்தும் “100 சதவீதம் முழுமையடைந்த ஆலைகளாக விரைவாக முடிப்பதற்காக உன்னிப்பாகப் பரிசீலிக்கப் படுகின்றன” எனக் கூறியது அந்த அறிக்கை.

ஸ்காரல் இணையதளம் மேற்கொண்ட விசாரணையில், ஏன் தாமதமாகிறது என்பதற்கான விடையாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளது. 14 மாநிலங்களில் உள்ள 60 மருத்துவமனைகளை அவர்கள் அழைத்துப் பேசிய நிலையில், ஆக்சிஜன் ஆலைகள் வரும் என எதிர் பார்ப்பது தெரிந்தது. நிறுவப்பட்ட 11 யூனிட்டுகளில் 5 மட்டும் செயல்படும் நிலையில் உள்ளன.

162 ஆக்சிஜன் ஆலைகளில் 33 நிறுவப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல், 2021 இறுதிக்குள் 59 நிறுவப்படும் எனவும் மே மாதத்துக்குள் 80 நிறுவப்படும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் அறிவிப்பின்படி பார்த்தால் 172 ஆலைகள் வருகிறது. இந்தக் கணக்கையும் கூட அமைச்சகம் சரியாக தெரிவிக்கவில்லை என்கிறது ஸ்க்ரால் இணையதளம்.

இந்தியாவில் தற்போது இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்கள் அனைத்து தொழில்துறை ஆக்சிஜன் உற்பத்தியையும் மருத்துவ நோக்கங்களுக்காகத் திருப்பி விடுகின்றன. 50,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்யப்போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதிய ஆக்சிஜன் ஆலைகள் மாதத்திற்கு 4,500 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்.  தற்போது இரண்டாவது அலையில் காணப்படும் தேவையைப் பூர்த்தி செய்ய இது போதுமானதாக இல்லை, ஆனால் ஒவ்வொரு கூடுதல் திறனும் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

“கோவிட்-19  இல்லாவிட்டாலும், ஆக்சிஜன் ஆலைகள் அங்கு இருக்க வேண்டும்”  என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவான தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் முன்னாள் இயக்குனர் டி.சுந்தரராமன் கூறுகிறார்.

அவரைப் போன்ற பொது சுகாதார வல்லுநர்கள், பெருந்தொற்று இந்தியா தனது சுகாதார அமைப்புகளில் வெளிப்படையான இடைவெளிகளை நிரப்புவதற்கான ஒரு வாய்ப்பு என வாதிட்டனர். அவற்றில் ஒன்று லட்சக்கணக்கான மக்களுக்குப் பயன்படும் மாவட்ட மருத்துவமனைகளில் குழாய் பதிக்கப்பட்ட ஆக்சிஜன் இல்லாதது.

“ஆக்சிஜன் இல்லாததால் துன்பத்துக்கு பின் துன்பம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்கிறார் சுந்தரராமன். ஆக்சிஜன் இல்லாததால் பாம்பு கடித்தல், மூளையழற்சி (encephalitis), சாலை விபத்துக்கள் போன்ற இறப்புகளும் இதில் அடங்கும்.

மருத்துவமனையிலேயே நிறுவப்பட்ட ஆலைகள் மூலம் குழாய் ஆக்சிஜன் கிடைத்திருந்தால் இதுபோன்ற லட்சக்கணக்கான இறப்புகளைத் தவிர்க்க முடியும், இது சமீபத்திய ஏலங்களில் காட்டப்பட்டுள்ளபடி, ஒரு சிறிய செலவில் வந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு வெறும் ரூ.200 கோடி மட்டுமே செலவு பிடிக்கும்!

ஆனால், இப்போது கோவிட்-19னும் இந்த மரண பட்டியலில் சேர்க்கிறது.

000

மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் வர்த்தகக் கட்டணங்களால் அதிகரிக்கும் தாமதங்கள்

ஒரு பெருந்தொற்றின் போது உள்கட்டமைப்பு போர்க்காலத்தில் அதிகரிக்கப்படும்போது ஆக்சிஜன் ஆலைகளை நிறுவுவதில் ஏற்படும் தாமதம் சொல்ல வருவது என்ன ?

அசாம், பீகார், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களில் உள்ள மருத்துவமனை அதிகாரிகளுடன் பேசியபோது, தாமதங்களுக்கு ஒப்பந்தங்களை வென்ற நிறுவனங்களே காரணம் என பெரும்பாலான அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதிய ஆக்சிஜன் ஆலைகளுக்கான டெண்டர் ஆவணத்தில், மருத்துவமனையில் உள்ள மொத்தப் படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் ஆலையின் திறன் ஆகியவற்றுடன் மாவட்ட மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில், 14 மாவட்டங்களில் மாறுபட்ட திறன் கொண்ட அதிக எண்ணிக்கையிலான ஆலைகள் உத்தரப்பிரதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 10 மாவட்டங்களில் மராட்டியத்துக்கு ஆலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டெல்லிக்கு நிமிடத்திற்கு 7,700 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எட்டு ஆலைகள் ஒதுக்கப்பட்டன.

உத்தம் ஏர் ப்ராடக்ட்ஸ், ஏரோக்ஸ் டெக்னாலஜிஸ் மற்றும் ஆப்ஸ்டெம் டெக்னாலஜிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களிடம் இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில், 14 மருத்துவமனைகளில் ஒன்று கூட ஆக்சிஜன் ஆலை செயல்படுவதாக தெரிவிக்கவில்லை.

ஒப்பந்த நிறுவனங்கள், பல காரணங்களைக் காட்டி ஆலைகள் நிறுவதை தாமதித்து வருகின்றன. நிறுவனங்களை கண்காணித்துப் பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க அரசாங்க தரப்பில் எந்தவித அழுத்தமும் தரப்படவில்லை என்பது ஸ்க்ரால் இணையதளத்தில் விசாரணையில் தெரிய வருகிறது. வெறுமனே கண் துடைப்புக்காக ஏலம் விட்டு, ஒப்பந்தங்கள் தரப்பட்டுள்ளன என்பதும் தெரிய வருகிறது.

000

பற்றாக்குறை மரண சுழலுக்கு வழி வகுக்கிறது

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் இரண்டாவது அலை மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என கூறுகிறார்கள். ஏனெனில், வைரஸின் புதிய வகைகள் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தியதால் அல்ல (இது குறித்து இன்னும் தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை) ஆனால், அதிக அளவு நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் நோயாளிகளுக்கு கடினமாக இருக்கும். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் கூட ஆக்சிஜன் இல்லாமல் செல்ல வேண்டியிருக்கும்.

மருத்துவ ஆக்சிஜனின் பற்றாக்குறை, குஜராத்தில் உள்ள மருத்துவர்களை “யாருக்கு முக்கியத்துவம் தருவது போன்ற சூழ்நிலைக்கு” கட்டாயப் படுத்தியதாகக் கூறுகிறார்கள். அதாவது எந்த நோயாளிக்கு ஆக்சிஜன் தருவது என முடிவெடுக்க வேண்டிய நிலையை அவர்கள் கூறுகிறார்கள்.  அனைவருக்கும் ஆக்சிஜன் தேவை, ஆனால் சிலருக்கு மட்டுமே அதை வழங்க முடியும்.

குஜராத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள CU ஷா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டாக்டர் ரூபம் குப்தா கூறுகையில், “கடந்த ஆண்டு தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை. ஆனால், இந்த ஆண்டு அலை திடீரென உயர்ந்துள்ளது, எனவே இந்த நேரத்தில் அப்போதைய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய முடிகிறது” என்கிறார்.

இந்த மருத்துவமனையில் 700 படுக்கைகள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 200 கோவிட்-19 நோயாளிகள் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட அனைவருக்கும் ஆக்சிஜன் தேவை என குப்தா கூறினார். 100 ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்ட இரண்டு டிராலிகள்தான் இந்த மருத்துவமனையை காத்திருக்கிறது. ஒரு நோயாளிக்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால், மற்ற நோயாளிகளுக்கு ஆக்சிஜன் போதாமை ஏற்படும். இவற்றை ஈடுகட்டித்தான் நோயாளிகளை காக்க வேண்டியுள்ளது என்கிறார் மருத்துவர்.

000

வெற்று சிலிண்டர்களில் இயங்கும் மருத்துவமனைகள்

அதிக எண்ணிக்கையிலான சிக்கலான நோயாளிகளைக் கொண்ட பெரிய மருத்துவமனைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் போதுமானதாக இல்லை என்றாலும், அதிக தேவை உள்ள காலங்களில் அவை ஒரு பயனுள்ள கருவியாக இருக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, நாடு முழுவதும் வணிக ஆக்சிஜனின் கடுமையானப் பற்றாக்குறை இருக்கும் போது ஆக்சிஜன் ஆலைகளின் தேவை முக்கியத்துவம் பெறுகிறது.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, குஜராத், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்து உற்பத்தியாளர்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகிப்பாளர்களிடம் பேசிய போது, கடந்த ஆண்டு கோவிட்-19 முதல் அலைகளின் போது இருந்ததை விட இரண்டாவது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர்.

பலர் தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் தயாரிப்பதை நிறுத்தி விட்டு, மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள போதும், தட்டுப்பாடு அதிகமாகவே உள்ளது. அதிக அளவு தேவையும் உள்ளதாக தனியார் ஆலை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். கடந்த 15 நாட்களில் வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதாக குஜராத்தின் சூரத் நகரத்தில் உள்ள விநியோகிப்பாளர் ஒருவர் கூறுகிறார்.

உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களில் ஆக்சிஜன் நொடிப் பொழுதில் விற்று தீர்ந்து விடுவதாக ஒரு உற்பத்தியாளர் கூறுகிறார். “ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நோயாளி இருந்தால், நிலைமை எப்படி இருக்கும்? தேவை அந்த அளவுக்கு உள்ளது” என்கிறார் அவர்.

படிக்க :
♦ அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

எந்தவித தணிக்கைக்கும் உட்படாமல் தனிப்பட்ட வகையில் பெருந்தொற்றின் போது உருவாக்கப்பட்டு இயக்கப்படும் பி.எம்.கேர் நிதியில் பல்லாயிரம் கோடி ரூபாய் குவிந்துள்ளது. அதில் ரூ.200 கோடி என்பது வெறும் துளி மட்டுமே. ஓராண்டு காலத்தில் மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட அரசாக இருந்திருந்தால், ஆக்சிஜன் ஆலைகளை நிறுவி மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதி திரட்டுவதில் காட்டியிருந்த ஆர்வத்தில் ஒரு பகுதியைக் காட்டியிருந்தால் கூட குஜராத், மராட்டியம், உத்தரப்பிரதேசத்தில் மரண ஓலங்களின் எண்ணிக்கை குறைத்திருக்க முடியும். ஆனால், மதத்தின் பெயரால் ஆட்சி நடத்தும் இந்துத்துவ பாசிச அரசு பிணங்கள் எரிவதைக் கண்டு குதூகலித்துக் கொண்டிருக்கிறது.


கட்டுரை : விஜய்தா லால்வானி & அருணாப் சாய்கா
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : அனிதா
நன்றி : Scroll.in

அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

லகிலேயே ஒரே நாள் அதிக எண்ணிக்கையாக 3,14,835 பேர்களுக்கு கொரோணா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆக்சிஜன் இல்லை. வெண்டிலேட்டர் இல்லை. தடுப்பு மருந்து இல்லை.  குவியும் பிணங்களை எரிக்க தலைநகரில் இடமில்லை. மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் கையறு நிலையில் தவிக்கின்றனர். நோயாளிகளை மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் மேலும் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“தற்போது படுக்கைகளும் இல்லை ஆக்ஸிஜனும் இல்லை மற்றது அனைத்தும் அடுத்தது தான்” என்று அசோகா பல்கலைக்கழகத்தின் நோய் தொற்றியல் நிபுணரும் திரிவேதி ஸ்கூல் ஆஃப் பயோசயின்சஸின் இயக்குநருமான ஷாஹித் ஜமீல் கூருகிறார். ஒட்டுமொத்த கட்டமைப்பும் நொறுங்கி வருகிறது என்கிறார்.

படிக்க :
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

♦ கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு

தலைநகர் மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இல்லை. வெளிமாநிலங்களில் இருந்த வந்த ஆக்சிஜனும் நிறுத்தப் பட்டிருக்கிறது.  தலைநகருக்கான ஆக்சிஜனை யார் தடுத்தாலும்  தூக்கிலிடுவோம் என்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். தலைநகருக்கே இதுதான் கதி.

உச்சநீதிமன்றமும் இதனை அவசர நிலையாக கருதுவதாக கூறி ஆக்சிஜன், தடுப்பு மருந்துக்கான தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்க நடுவண் அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை கடுமையாக தாக்கி வரும் நிலையிலும் ஏப்ரல் மாதம் வரையில் இந்திய அரசு வெளிநாடுகளுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் ஏற்றுமதி செய்திருக்கிறது. அதுவும் கொரோனாவுக்கு முந்தைய ஆண்டில் (2019-20) 4,500 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்த நிலையில், 2020-21ல் இரண்டு மடங்காக 9,300 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்திருக்கிறது. இதெல்லாம் மாண்புமிகு உயர் – உச்ச நீதியரசர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை போலும்.

சீனாவையும், பாகிஸ்தானையும் எதிரிகள் என்று நரம்புகள் முறுக்கேறி இந்துத்துவவாதிகள் தேசபக்தி பாடம் எடுத்த நிலையில் இன்று இவ்விறு நாடுகளும் இந்தியாவிற்கு பக்க பலமாக இருப்போம் என்றும் விரைவில் இந்தியாவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன. #standwithindia என்று டுவிட்டரில் ட்ரெண்டாக்கியிருக்கிறார்கள் பாகிஸ்தான் மக்கள். ஆனால், எஜமானனான அமெரிக்காவோ தனக்கு பின்தான் தானம் என்று இந்தியாவிற்கு பெப்பே காட்டியிருக்கிறது.

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல தடுப்பு மருந்திற்கான விலையை தடுப்பு மருந்து நிறுவனங்கள் தாருமாறாக ஏற்றி இளவு வீட்டிலும் இலாபம் பார்க்கின்றன. ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்தின் விலையாக மாநில அரசுகளுக்கு ரூ.600, தனியார் மருத்துவமனைகளுக்கு  ரூ.1200 என பாரத் பையோடெக் நிறுவனம் விலை நிர்ணயம் செய்திருக்கிறது.  அதுவே, சீரம் நிறுவனம், கோவிசீல்டு மருந்திற்கு மாநில அரசுகளுக்கு ரூ.600, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 என விலை நிர்ணயித்திருக்கிறது.

அரசு நிறுவனங்கள் இந்த மருந்துகளை தயாரிப்பதிலிருந்து முட்டுக் கட்டைப் போட்டிருக்கும் மோடி அரசாங்கம், கோரோனாவிற்கான மருந்து தயாரித்துக் கொள்ளையடிக்க இந்த இரு நிறுவனங்களையும் ஏகபோகமாக்கியிருக்கிறது.

முதல் அலையினால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் பல பாடம் கற்றுக் கொண்டு இரண்டாம் அலையின்போது தத்தமது மக்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்க, இந்து இராஜ்ஜியத்தின் கனவு அரசரோ கங்கா மாதாவின் அருளினால் கும்பமேளாவில் கொரோனா வராது என்று கூறுகிறார். இது கொரோனாவை விட கொடிதாக இருக்கிறது. மேலும் உ.பி-யில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், எதிராகப் பேசுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் இந்து ராஜ்ஜியத்தின் இளவல் ஆதித்யநாத் எச்சரித்திருக்கிறார். இதுதான் இன்றைய இந்து ராஜ்ஜியத்தின் எதார்த்த நிலைமை.

மும்பையில் கொரோணா தொற்றிருப்பதாக கூறப்படும் நோயாளி ஒருவரை கவனிக்கும் சுகாதார ஊழியர்கள்.
மும்பையில் உள்ள கொரோனா நோய்த்தொற்று மீட்பு மையத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐ.சி.யூ) மாற்றப்படுவதற்காக காத்திருக்கும் நோயாளியைச் சுற்றி சுகாதார ஊழியர்கள்.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்த கோவிட் -19 நோயாளி ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் துயரத்திலிருக்கின்றனர்.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கோவிட் -19 நோயாளி ஒருவர்.
மும்பையில் உள்ள கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மீட்பு மையத்தில்  உள்ள மருத்துவ விரைவு ஊர்தியில் நோயாளி ஒருவருக்கு சுகாதார ஊழியர்கள் உதவுகிறார்கள்.
புதுதில்லியில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு கிராம கோவிட் -19 பராமரிப்பு மையத்தில் ஆக்ஸிஜன் உருளைகளை இறக்கிச்செல்லும் தொழிலாளர்கள்.
புது தில்லி ஜில்மில்லில் (Jhilmil) உள்ள இ.எஸ்.ஐ.சி (இந்திரா காந்தி) மருத்துவமனையின் கோவிட்-19 நெருக்கடி பராமரிப்பு வார்டு.
புது தில்லியின் இ.எஸ்.ஐ.சி (இந்திரா காந்தி) மருத்துவமனையில் மருத்துவ நிபுணர் ஒருவர் ஆக்ஸிஜன் உருளைகளை வரிசைப்படுத்துகிறார்.
அகமதாபாத் கோவிட்-19 மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கக ​​மருத்துவ விரைவு ஊர்தி ஒன்றில் காத்திருக்கும் நோயாளியின் ஆக்ஸிஜன் அளவை ஆக்சிமீட்டரை கொண்டு சரிபார்க்கும் துணை மருத்துவர்.
அகமதாபாத்தில் கோவிட்-19 மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக மூச்சியக்க சிக்கலுள்ள நோயாளியொருவர் காரில் காத்திருக்கிறார்.
புதுடெல்லிக்கு வெளியே நொய்டாவில் கோவிட்-19 காரணமாக இறந்த ஒருவரின் உடல் எரியூட்ட வைக்கப்பட்டுள்ளது.  பின்னனியில் எரிந்து கொண்டிருக்கும் உடல்கள்.


தமிழாக்கம் : ஆறுமுகம்
நன்றி : Aljazeera

 

கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

டாக்டர் ஜலீல் பார்க்கர், இந்தியாவின் தலைசிறந்த நுரையீரல் நிபுணர்களில் ஒருவர், முகத்தில் கடுமையான சோர்வு தெரிகிறது. மும்பை மாநகரத்தின் லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளைக் கவனித்தபடி தொலைக்காட்சிகளிலும் தோன்றிக் கோரமான கோவிட்-19 இரண்டாம் அலை எப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்களை தினமும் விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.

கடந்த ஆண்டில் அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டு ஏறத்தாழ இறப்பின் விளிம்பு வரை சென்று வந்தார்; இப்போது அமைதியிழந்தவராக நாம் அறிந்திராத பல உண்மைகளை போட்டு உடைக்கிறார்.

“நம்முடைய சுகாதாரத்துறை முற்றிலுமாக செயல் இழந்து விட்டது; நாம் நமது சொந்த தேசத்தின் மக்களைக் கைகழுவி விட்டோம்; நம்முடைய மருத்துவ உள்கட்டுமான அமைப்பு மிக மோசமான நிலையில் இருக்கும் போது, மருத்துவர்களால் என்ன செய்ய முடியும்? படுக்கைகளும், ஆக்சிஜன் சிலிண்டர்களும் இல்லாத போது மருத்துவர்கள் என்ன செய்ய முடியும்?”

படிக்க :
♦ கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு

♦ கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு

நேற்று (ஏப்ரல் 23), இந்தியாவில் ஒரே நாளில் 3,32,730 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் இதுவரை பதிவான மிகப்பெரிய ஒருநாள் தொற்று இதுதான். நேற்று முன்தினத்தின் அளவை நாமே நேற்று முறியடித்திருக்கிறோம் என்பதுதான் கொடுமை.

பெருந்தொற்றுக் காலம் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை, 1 கோடியே 60 இலட்சம் பேர் நோய்த் தொற்றை அடைந்திருக்கிறார்கள். 1 இலட்சத்து 86 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாதான் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளான நாடக இருக்கிறது. அன்றாட தொற்றின் அளவும், மரணங்களின் அளவும் அமெரிக்காவை விஞ்சும் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் 2,000 இந்தியர்கள் கொரோனாவால் இறந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது குறைத்து மதிப்பிடப்படுகிற ஒன்று என்றும், இந்தியாவின் ஒருநாள் மரணம் 10,000-த்தை தாண்டிக் கொண்டிருப்பதாகப் பெயர் சொல்ல விரும்பாத சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

எனது வாழ்க்கையில் நான்கு மிக நெருக்கமான மனிதர்களை நான் இழந்திருக்கிறேன்; ஒரு தூரத்து உறவினர், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் மற்றும் எனது நெருங்கிய நண்பர்கள் இருவர். அவர்கள் இருவருமே 30 முப்பது வயதுகளில் மத்தியில் இருப்பவர்கள்.

இறப்பு மிக சாதாரணமாக நிகழ்கிறது. வெள்ளிக்கிழமை டெல்லியின் கங்காராம் மருத்துவமனை ஒரு அவசர செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் இன்னும் இரண்டு மணி நேரத்துக்கான ஆக்சிஜன் மட்டுமே எங்களிடம் இருக்கிறது; ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்கனவே 25 பேர் இறந்து விட்டார்கள் என்று அச்சமூட்டும் அறிவிப்பாக அது இருக்கிறது. தங்கள் உறவினர்களுக்காக ஆக்சிஜன் சிலிண்டர்களைத் திருடும் காணொளிக்  காட்சிகள் மேலும் அச்சமூட்டுவதாக இருக்கிறது.

BBC-யின் செய்தித் தொகுப்பொன்றில் வரும் காட்சியில் பெண்ணொருவர் இறந்து கொண்டிருக்கும் தனது தம்பியை சுயநினைவுக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறார், “பாலாஜி, நீ ஏன் விழித்துக் கொள்ளக் கூடாது?” என்று தனது தம்பியைத் தட்டி எழுப்ப முயற்சி செய்தபடி அழுகிறார்.

மஹாராஷ்டிராவில் ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் குழாய்களில் தடை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 25 பேர் இறந்து விட்டார்கள். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தவர்கள். பல்வேறு மருத்துவமனைகள் தங்கள் மாநில உயர்நீதிமன்றங்களில் எங்களுக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று முறையீடு செய்திருக்கின்றன. கடவுளின் கரங்கள் எங்கே என்றால் அவை இந்தியாவின் மருத்துவமனைகளில்தான் இப்போது இருக்கிறது.

இத்தகைய ஒரு கொடிய சூழல் நிலவும் போது, இந்தியாவின் மற்றொரு பக்கம் கொரோனா பெருந்தொற்று குறித்த எந்த அச்சமும் இல்லாமல், விழிப்புணர்வும் இல்லாமல் “மோடியின் தட்டு தட்டி, விளக்கேற்றி கோரானவை விரட்டும்” மூடத்தளைக்குள் சிக்குண்டு சீரழிகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் கும்பமேளா என்கிற பெயரில் கங்கை ஆற்றில் மூழ்கித் திளைக்கிறார்கள்.

குறிப்பிட்ட சில நூறு இஸ்லாமிய மனிதர்கள் கடந்த ஆண்டில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு வந்தபோது மோடியின் தேசபக்த ஊடகங்களும், அவரைப் பின்பற்றும் மடையர்களும் அவர்களைக் குற்றவாளிகளாக்கி ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள்.

மார்ச் 11-ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து குளியல் போட்டு வருகிற இந்த பக்தர்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மெல்ல மெல்ல இவர்கள் வீடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மூலமாகப் பரவ இருக்கும் இந்தப் பெருந்தொற்று மிகப்பெரிய சோகங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

மார்ச் மாதத்தில் ஏறத்தாழ கொரோனாவின் இரண்டாம் அலை துவங்கி இருந்தபோது, உத்தரகாண்ட் மாநிலத்தை ஆளும் பாரதீய ஜனதாக கட்சியின் தலைவர்கள் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்திருந்தார்கள்; கும்பமேளா குளியல் இடம் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக அவர்கள் மக்களுக்கு அறிவித்தார்கள்.

இதைவிடக் கொடுமை மார்ச் 20-ஆம் நாள், உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஒருபடி மேலேசென்று “யாராலும் கோவிட்-19ன் பெயரால் எங்களைத் தடுத்து விட முடியாது. நாங்கள் நம்புகிற கடவுள் கிருமிகளிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுவார்” என்று கொக்கரித்தார். ஏப்ரல் மாதத்தின் மத்தியப் பகுதி வரையில் இந்து ராஜ்யத்தின் தலைவரான நரேந்திர மோடி ஒரு துரும்பையும் அசைக்காமல் தேர்தல் நாடகங்களில் மும்முரமாய் இருந்தார்.

பிறகு திடீரென விழித்து பன்னாட்டு சமூகத்துக்கு அஞ்சி “மத விழாக்களில் கலந்துக் கொள்வதை நாம் ஒரு அடையாளமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் பெருந்தொற்றை எதிர்க்க முடியும்” என்று திருவாய் மலர்ந்தார். இப்படி ஒரு பிரதமர் இருக்கும் நாட்டில் கும்பமேளாக்கள் அப்பாவி இந்தியர்களின் உயிரைக் குடிக்கும் ஒரு மரணக் குழியாக இருக்கும் என்பதில் என்ன பெரிய வியப்பு இருக்க முடியும்.

மார்ச் 2020 துவங்கி இந்தியாவின் கோவிட்-19 குறித்து நான் தொடர்ந்து கவனித்தும், பேசியும் வருகிறேன். ஆனால், இந்த இரண்டாம் அலையின் தீவிரம் என்பது மிகப்பெரிய அச்சத்தை உருவாக்குகிறது. சுகாதாரத்துறைப் பணியாளர்கள் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். மும்பை மாநகராட்சி மருத்துவமனைக்கு நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றபோது அங்கே மாடிப்படிகளில் அமர்ந்திருந்த ஒரு செவிலியரைப் பார்த்தேன்.

அவர் தனக்குக் குமட்டிக் கொண்டு வருவதாக என்னிடம் கூறினார். இங்கிருக்கும் கழிவறைகள் மிகுந்த அசுத்தமாக உள்ளது. ஒவ்வொரு 20 கோவிட் நோயாளிகளுக்கும் ஒரு கழிவறைதான் இருக்கிறது. நானே பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இப்போதுதான் குணமடைந்து வருகிறேன். மூன்றுமுறை நான் அளித்த விடுப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. இப்போது நான் ராஜினாமா செய்ய விரும்புகிறேன்.

ஆனால், என் குடும்பம் என்னை நம்பி இருக்கிறது. மருத்துவப் பணியாளர்களை நாங்கள் மலர் கொண்டு ஆராதிக்கிறோம் என்று விமானங்களை வைத்து மோடியின் அரசு வித்தை காட்டியது. ஆனால், மருத்துவப் பணியாளர்களின் உண்மையான நிலை இதுதான், நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறோம்.

இரண்டாம் அலையில் நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மிகுந்த துயரத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள். scroll.in என்கிற ஒரு செய்தி நிறுவனம் அதிர்ச்சி தரக்கூடிய உண்மை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அக்டோபர் 2020 வரை, உலகைக் காக்கும் வல்லமை பொருந்திய இந்துக்களைக் காக்கும் மாமன்னர் மோடி அரசு கண்களை மூடிக் கொண்டு ஏகாந்தத்தில் இருந்தது.

பெருந்தொற்று துவங்கி 8 மாதங்கள் வரை ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த எந்த சுய உணர்வும் இல்லாமல் வாயால் வடை சுட்டுக் கொண்டே இருந்தார்கள் பாரதீய ஜனதாவின் மக்கள் விரோதத் தலைவர்கள். அக்டோபரில்தான், அதுவும் வெறும் 150 மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வேண்டும் என்று 2.7 கோடி டெண்டர் கோரி இருந்தார்கள். ஹரியானா, மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில்தான் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் யாகம் செய்வது, பசு மூத்திரம் குடிப்பது என்று குரங்காட்டிகளின் தலைவராக யோகி ஆதித்யநாத் போன்ற பாரதீய ஜனதாவின் தலைவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாநிலங்களுக்கு இடையே ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான சண்டை துவங்கி இருக்கிறது; ஹரியானாவின் அமைச்சர் திரு. அனில் விஜ், டெல்லி அரசு ஆக்சிஜன் கொண்டு வருகிற வாகனங்களைக் கடத்துவதாகவும், ஆகவே ஆக்சிஜன் கொண்டு வரும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் Economic Times செய்தித்தாளுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.

உத்திரப் பிரதேசத்தில் இடுகாடுகளைப் பெரிய டின் ஷீட்டுகளைக் கொண்டு மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சாமியார் யோகி ஆதித்யநாத். 12-வது அவதாரமான பிரதமர் மோடியின் குஜராத்தில் ஓய்வின்றி இரவு பகலாக இடுகாடுகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கிறது. உண்மையான மரண எண்ணிக்கைகளை மறைக்கும் வேலைகளில் அமைச்சர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

குஜராத் உயர்நீதிமன்றம் உண்மையான கோவிட்-19 நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கையைத் தருமாறு அரசைக் கேட்டிருக்கிறது. ஏனைய மாநிலங்களில் நடக்கும் போலியான எண்ணிக்கைக் கணக்குகளும் நெஞ்சைப் பதற வைப்பதாக இருக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் ஒருநாளில் எரியூட்டப்பட்ட பிணங்களின் எண்ணிக்கை 97-ஆக இருக்கிறபோது, அரசு வெறும் 3 என்று கணக்குக் காட்டுகிறது என்று “டைம்ஸ் நௌ” செய்தித்தாள் குறிப்பிடுகிறது.

மிகப்பெரிய அவலம் நடந்து கொண்டிருக்கும் போது ஒன்றுமே நிகழாததைப் போல அரசுகள் நாடகமாடுகின்றன. பிரதமர் ஏதுமறியாதவரைப் போல “நாம் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவோம், இது புதிய இந்தியா” என்று தேர்தல் மேடைகளில் புளுகிக் கொண்டு திரிகிறார்.

இந்த வாரத்தில் உலகிலேயே மிக அதிகமான கொரானா தோற்று இந்தியாவில் நிகழ்ந்திருக்கும் சூழலில், ஆளும் இந்துத்துவ அரசானது ட்விட்டரில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறது. அதில் உள்துறை அமைச்சரும், பிரதமரும் கூடிக்குலாவியபடி தேர்தல் ஊர்வலங்களில் கலந்து கொள்கிறார்கள். உள்துறை அமைச்சர் முறைப்படி அவசர காலமாகக் கருதி தலைநகரில் இருந்தபடி பல்வேறு மாநிலங்களின் தேவைகளைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், அவரோ பல லட்சக்கணக்கான தொண்டர்களை ஓரிடத்தில் கூட்டி தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாகி இருக்கிறார். இறுதியாக மீண்டும் பன்னாட்டு அழுத்தங்களுக்கு அஞ்சி நடுங்கி பிரதமர் கடைசி தேர்தல் கூட்டங்களை மட்டும் ரத்து செய்வதாக அறிவித்தார். அடிப்படையான அறிவும் இல்லாத, மக்களைப் பற்றிய எந்த சிந்தனைகளும் இல்லாத ஒரு மூடரின் கீழாக இந்த இக்கட்டான சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறது இந்தியா.

ஆனால், மூட பக்தர்களோ இன்னும் திருந்திய பாடில்லை, “பாகிஸ்தான் தான் கிருமியைப் பரப்பியது; சீனாதான் கிருமியைப் பரப்பியது” என்று கிளப்பியபடி மோடியை புகழ்ந்து நாடு முழுவதும் ராஜஸ்தானியர்களும், குஜராத்திகளும் பாட்டுப் பாடுகிறார்கள். ஆனால், பாகிஸ்தானும், அதன் மக்களும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மருத்துவ நிபுணர்களும், உலக நாடுகளின் மருத்துவ அமைப்புகளும் பல்வேறு எச்சரிக்கைகளைக் கொடுத்துக் கொண்டிருந்த போது, இந்தியாவின் பிரதமர் சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்வதில் மும்முரமாய் இருந்தார். மக்களின் மீது எந்த அக்கறையும் இல்லாத சென் நிலைக்கு அவர் மாறி இருந்தார்.

அவரது சகாக்களும் பக்தர்களும் கோவிட்-19க்கு எதிராக ஒரு சூப்பர் மேனைப் போல அவரை சித்தரித்தார்கள். இந்தியாவில் கொரோனா சோதனைகள் கூட நிறுத்தப்பட்டு விட்டது. உழைக்கும் மக்களின் பணத்தைச் சுரண்டிக் கொழுக்கும் பணக்கார அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தினர் கடந்தமுறை தட்டுகளை அடித்தும் உடைத்தும் மோடியின் வைரசுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

விளக்கேற்றி கொரானாவை ஓட்டினார்கள்; “பாக் கொரோனா பாக்” (ஓடு கொரோனா ஓடு) என்று புத்தி பேதலித்தவர்களைப் போல அவர்கள் வீதிகளில் அலைந்தார்கள். ஆனால், ஏழை கூலித் தொழிலாளிகளோ தங்கள் வேலைகளை இழந்து உணவுக்கும் வழியின்றி வாழ்ந்த நகரங்களில் இருந்து வெளியேறி நடந்தார்கள். அதனால் அவரை தங்களிடம் வேலை பார்த்த அந்த கூலித் தொழிலாளிகள் மீது இந்து ராஜ்யத்தின் நீதிமான்கள் யாருக்கும் கருணைப் பிறக்கவில்லை. 12-வது அவதாரமான கடவுள் மோடிக்கும் கூட இந்த ஏழைத் தொழிலாளிகள் மீது சிறிதளவும் கருணை தோன்றவில்லை.

இவர்கள்தான் கடவுள் மோடியை இந்த தேசத்தின் பிரதமராகத் தேர்தெடுக்க வாக்களித்தவர்கள். இப்போதும் அவர்கள் மோடி தங்களைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறார்கள். அவரது உண்மையான கோர முகத்தை அறியாதவர்களாக!

எல்லாவற்றையும் தாண்டி இந்த தேசத்தின் 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு நான் வேலைக்காரன் என்று சுயவிளம்பரம் செய்து கொண்ட மோடி, இந்த அவசர காலத்தை ஒரு தேர்ந்த குற்றவாளியைப் போல கைகழுவி விட்டார். அவருக்கு அம்பானியையும், அதானியையும் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முன்னேற வைக்கக் கூடிய மிக முக்கியமானப் பணி இருக்கிறது.

இந்தியாவின் விற்பனையை துரிதப்படுத்தும் நிர்மலா சீதாராமன் கையில் மிக நீண்ட பட்டியலோடு பிரதமரின் கண்ணசைவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளும் இல்லை. “Make in India” என்று போலிக்குரல் எழுப்பியபடி அலைந்த இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த கோரமுகம் கொண்ட நரேந்திர மோடி, இந்திய அரசின் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களை ஏன் ஊக்குவிக்கவில்லை?

இந்திய மருத்துவக் கவுன்சிலின் தற்காப்பு நடவடிக்கைகளை ஏன் துரிதப்படுத்தவில்லை என்கிற இந்தக் கேள்விக்கும் பிரதமரும் பதில் சொல்ல மாட்டார், பக்தர்களும் பதில் சொல்ல மாட்டார்கள். மேற்கு வங்கத்தில் பிரதமர் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திலேயே மாநில பாரதீய ஜனதாக கட்சித் தலைவர் “கோவிட் வந்தால் நாம் பசு மூத்திரத்தை குடிக்க வேண்டும்” என்று வெட்கமே இல்லாமல் பேசினார். இதைக் கேட்டுக் கொண்டு மண்டையை மண்டையை ஆட்டினார் பிரதமர். இப்படி ஒரு முட்டாள் பிரதமரை இந்தியா இதுவரை சந்திக்கவே இல்லை.

படிக்க :
♦ கொரோனா பீதி : பார்ப்பன பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்கு இசுலாமிய மக்கள் !

♦ குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !

உலகம் முழுவதும் பல நாடுகளின் தலைவர்கள் கொரோனா காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திப்பதிலும், இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும், ஊடகங்களை சந்தித்து என்ன மாதிரியான மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப் படுகிறது, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று வெளிப்படையாகப் பேசும் போது, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் மோசடியான பிரதமர் இதுவரை ஒருமுறைக் கூட ஊடகங்களை சந்திக்கவில்லை.

உலகெங்கும் நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு நேரடியாகப் பணத்தை நிவாரணமாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது குரூர மனமும், மூடத்தனமும் கொண்ட ஒரு பிரதமர் இதுவரை இந்த தேசத்தின் ஏழை உழைக்கும் மக்களுக்கும் கூட நேரடியான எந்த உதவிகளையும் செய்யவில்லை என்பதுதான் முகத்தில் அறைகிற உண்மை.

கட்டுரையாளர் : Rana Ayyub (Time.com)
தமிழில் : கை.அறிவழகன் (முகநூலில் இருந்து)

disclaimer

இந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்

ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் இந்து ராஷ்டிரம்

இந்தியா முழுவது கொரோனாவில் சாதாரண உழைக்கும் மக்கள் மருத்துவம் கிடைக்காமல் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, இந்து ராஷ்டிர கனவில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மக்கள் நலனை பற்றி அக்கறை அதுக்கு கிடையாது. முதலாளிகள் பணம் சம்பாதிக்க கொரோனாவையும் பயன்படுத்துகிறது. எனவே, கொரோனா பெரும்தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவது என்பது அதன் எண்ணத்தில் துளியும் இருக்க வாய்ப்பு இல்லை.

***

இந்து ராஷ்டிரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையமும் கொரோனா சிகிச்சையும்

கொரோனா வந்து மக்கள் இறப்பதை விட அவர்களுக்கான மருத்துவ வசதிகள், ஆக்சிஜன், படுக்கை வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தராமல் இறப்பதே அதிகமாக இருக்கிறது. இந்த இந்து ராஷ்டிர பாஜக அரசு கொரோனாவை விட மிகவும் கொடிய தொற்று. இதை அழிக்காமல் இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை.


கருத்துப்படம் : மு.துரை

கொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்

கொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர்!

கொரோனா தடுப்பூசிகள் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டையும் தனியார் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அரசே தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்கலாம். ஆனால், தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்கான மோடி அரசு தடுப்பூசி தயாரிக்கும் பொருப்பை ஏற்கவில்லை.

இதனால், தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை இலாபம் அடிக்கின்றனர். இந்திய அரசுக்கு தரும் தடுப்பூசியின் கட்டணத்தையும் அதிகரித்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டு வெளி சந்தையில் அதிக விலைக்கு மக்கள் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவர்.

கொரோனா தடுப்பு மருந்தை தனியார் கொள்ளையடிக்க திறந்துவிட்டு இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர்


கருத்துப்படம் : மு.துரை

வேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்

வேண்டாம் ஸ்டெர்லைட்

கொரோனா தீவிரமாக பரவிவரும் சூழலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக வடமாநிலங்களில் இறப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே நான் இலவசமாக ஆக்சிஜன் தயாரித்து தருகிறேன் என்று கூறுகிறது வேந்தாந்த நிறுவனம். தூத்துக்குடியின் சுற்றுச் சூழலை அழித்தது ஸ்டெர்லைட் ஆலை. பல்வேறு மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தியது, விவசாயத்தை அழித்தது, நிலத்தடி நீரை நாசமாக்கியது ஸ்டெர்லைட் ஆலை. 13 உயிர்களை போலீசின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலி கொடுத்து கடும் போராட்டத்தின் விளைவாகத்தான் இந்த நாசகார ஸ்டெர்லைட் மூடயிருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.

ஆனால், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தருகிறேன் என்று தன்னை உத்தமர் போல் காட்டிக் கொள்கிறது வேதாந்தா. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கிறது மத்திய அரசு – உச்சநீதிமன்றம். அதற்கு துணைப்போகும் விதமாக கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது தமிழக அரசு. இந்நிலையில் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை எக்காரணத்தை கொண்டும் திறக்க வேண்டாம் என உறுதியாக இருக்கிறார்கள்.

ஆக்சிஜன் உற்பத்தியின் பெயரில் ஸ்டெர்லைட்டை திறக்க ஏற்பாடு

கொரோனா வந்தா நாங்கதான் அழிவோம்;
வேதாந்தா வந்தா எங்க தலைமுறையே அழிஞ்சிடும்…!


கருத்துப்படம் : மு.துரை

தமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா !

தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா !

சென்னை

சேத்துப்பட்டு வாழ் உழைக்கும் மக்கள் மத்தியில் தோழர்களின் கம்பீரமான முழக்கங்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

“ஜாரின் கொடூர ஆட்சியையும், ஏகாதிபத்தியத்தையும் ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் இதர வர்க்கங்களை அணித்திரட்டி புரட்சியை நடத்தி உழைக்கும் மக்களுக்கான ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டியவர்தான் தோழர் லெனின்.

நமது நாட்டில் காவி பாசிச கும்பல், கார்ப்பரேட் நலனுக்காக மக்களின் வளங்களை சூரையாடுகிறார்கள். மக்கள் மீது வரிகளையும் போட்டு ஈவிரக்கமின்றி சுரண்டுகிறார்கள். இலவச தரமான கல்வி இல்லை, மருத்துவம் இல்லை, வேலை இல்லை, சுகாதாரம் இல்லை, வீடு இல்லை, மக்கள் பசி – பட்டினியால் சாகிறார்கள்.  இத்தனை “இல்லை”களையும் தீர்ப்பதற்கான வழியைத்தான் தோழர் லெனின் காட்டுகிறார்.

சொந்த நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டிய கொரோனா தடுப்பு மருந்தினை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து சொந்த நாட்டு மக்களை சாகடிக்கிறது மோடி அரசு.” மோடி அரசின் இந்த அயோக்கியத்தனத்தையும், பாசிச நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தி தோழர்கள் உரையாற்றினார்கள்.

This slideshow requires JavaScript.

இந்நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அமிர்தா தலைமை தாங்கி உரையாற்றினார். ஆசான் லெனின் பிறந்த நாளை மக்கள் அதிகாரம் சேத்துப்பட்டு பகுதி தோழர் வாசு வாழ்த்துரை வழங்கினார். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் “இன்றைய காலக் கட்டத்தில் ஏன் லெனின் தேவை?” என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஆசான் லெனினின் உருவப் படத்திற்கு தோழர்களும் பகுதி மக்களும் மலர்தூவி மறியாதை செய்தனர். சுற்றியிருந்த உழைக்கும் மக்களுக்கும், ஆட்டோ தொழிலாளர்களுக்கும், தோழர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரம், சென்னை.

***

திருவள்ளூர்

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக தோழர் லெனின் சிந்தனைகளை உயர்த்திப் பிடிப்போம் என்ற தலைப்பில் ஆலைவாயில் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ச.மகேஷ்குமார் தலைமை வைகித்தார். சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் ப.விஜயக்குமார் சங்கத்தின் கொடியேற்றி ஆசான் லெனின் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

சிறப்புரையில், ”கொரோனா பெருந்தொற்று முதல் அனைத்து பெருந்தொற்றுக்கும், பேரழிவிற்கும் காரணம் முதலாளித்துவ பெருந்தொற்று. இந்த முதலாளித்துவ பெருந்தொற்றை வீழ்த்தாமல் மக்களுக்கு விடிவில்லை என்பதையும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் காவி – கார்ப்பரேட் பாசிச அரசையும் தோழர் லெனின் வழியில் வீழ்த்தாமல் விடப்போவதில்லை வாருங்கள் தோழர்களே” என்று பேசினார்.

சங்கத்தின் தொழிலாளர்கள் திரளாக கலந்துக் கொண்டு முழக்கமிட்டனர். இறுதியாக சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர் சேதுராமன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

***

தருமபுரி

ஏப்ரல் 22 : பாட்டாளி வர்க்க தோழர் லெனின் 151-வது பிறந்த நாளில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் சத்தியநாதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

மக்கள் அதிகாரம் அமைப்பின் பென்னாகரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா உரையாற்றினார். இறுதியாக மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்
செல் : 6384569228.

***

விருதை

பாசிசத்தை வீழுத்துவோம் சோசலிசத்தை படைப்போம் என்பதை விளக்கி கடலூர் மண்டலம் விருத்தாச்சலம் வட்டாரம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வட்டார செயலாளர் தோழர் அசோக்குமார் தலைமையில் விஜயமாநகரத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

பாசிசத்தின் அபாயத்தைப் பற்றி மக்களிடையே விளக்கிப் பேசி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் வட்டார மற்றும் கிளை தோழர்கள் கலந்து கொண்டனர்.

***

உளுத்தூர்பேட்டை

மக்கள் விழாவாக லெனின் பிறந்த நாள்! ; காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க அறைகூவல்! என்ற தலைப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள பாலி என்ற கிராமத்தில் லெனின் பிறந்தநாள் நிகழ்ச்சி மக்கள் அதிகாரம் தோழர்களால் நடத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

***

நெல்லை

மக்கள் அதிகாரம் திருநெல்வேலி மாவட்ட தோழர் அன்பு, லெனின் பிறந்த நாளையொட்டி உரை வீடியோவை வெளியிட்டுள்ளார்.

***

மதுரை

மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் தோழர் குருசாமி அவர்கள் ”காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணைவோம்!! தோழர் லெனின் 151 வது பிறந்த நாளில் சூளுரைப்போம்!” என்ற தலைப்பில் உரை வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொகுப்பு : வினவு செய்தியாளர்

புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்

PP Letter head

பத்திரிக்கைச் செய்தி !

23.04.2021

புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே !
தியாகிகள் நம்மை வழிநடத்தட்டும் !
தூத்துக்குடி மக்களுக்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும் !

ஸ்டெர்லைட் நச்சுக் காற்றினால் தினம் தினம் செத்து மடிவதை தடுப்பதற்காக, “ஸ்டெர்லைட்டை மூடுவோம்!” என்று போராடிய துத்துக்குடி மக்களைத் காக்கை, குருவிகள் போல தமிழக அரசால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 15 பேர் தியாகிகளாகி நம் முன்னே நியாயம் கேட்டு நிற்கிறார்கள். ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதற்கெதிராக, மத்திய அரசு, அதிகார வர்க்கத்தின் சதித் திட்டங்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

ஆனால், ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக மேலாளரைப் போல உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டுள்ளது, மத்திய அரசு. இது புறவாசல் வழியாக ஆலையைத் திறக்கும் சதித்திட்டமே. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை முறியடிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.

படிக்க :
♦ உச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு !

♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

“ஸ்டெர்லைட்டை திறக்க மாட்டோம்” என்று சொன்ன எடப்பாடி அரசு, “ஸ்டெர்லைட்டை திறக்கலாமா” எனக் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது. மாநில அரசின் இந்த நடவடிக்கை என்பது, மோடி அரசின் எடுபிடியாகவே எடப்பாடி அரசு செயல்படுகிறது என்பதையும், மீண்டும் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான வேதாந்தாவின் முயற்சிகளுக்கு ஏவலாக, துரோகத்தனமாக எடப்பாடி அரசு செயல்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்தச் சூழலில் இன்று காலை கருத்துக் கேட்புக் கூட்டத்தில், ஸ்டெர்லைட்டை எதிர்க்கும் மக்களை அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டியுள்ளது தமிழக அரசு. வழக்கம் போல ஸ்டெர்லைட்டின் குண்டர் படையைக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக தீர்மானிக்க திட்டமிட்டிருந்தது. இதனை எதிர்த்து மக்கள் கேள்விக் கேட்கத் தொடங்கிய பின்னர், கல்வீச்சு, கலவரங்களில் இறங்கியுள்ளது ஸ்டெர்லைட் ஆதரவு குண்டர் படை. ஸ்டெர்லைட்டின் கூலிப்படை இப்படி கலவரத்தில் ஈடுபட்டதை வேடிக்கைப் பார்த்தது தமிழக அரசின் போலீசு.

தூத்துக்குடி மக்களை கொன்று பலரை முடமாக்கி, சொத்துக்களை சூறையாடி, நூற்றுக்கணக்கானவர்களை சிறையிலடைத்து – சித்தரவதை செய்ததுதான் இந்த எடப்பாடி அரசு. ஸ்டெர்லைட்டை திறக்க மோடி அரசு எடுக்கும் பல்வேறு சதித்தனங்களை மறைமுகமாக ஆதரவு கொடுப்பதுதான் இந்த தமிழக அரசு. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியதில் இருந்து இன்றுவரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு அனுமதி அளிக்காமல் போராளிகளை உளவு பார்த்து மிரட்டி வருகிறது இந்த கேடுகெட்ட தமிழக அரசு.

இந்த தமிழக அரசிடம் போய் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் தயாரியுங்கள் என்று கோரிக்கை வைத்து நச்சுப் பிரச்சாரம் செய்கின்றனர் சிலர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்று ஒருபுறம் பேசிக் கொண்டே, வேதாந்தாவிற்கு ஆதரவாக செயல்படும் எடப்பாடி அரசின் துரோகத்திற்கும் இந்தக் கோரிக்கைக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

கொரோனா நோய்தொற்றால் மக்கள் கொத்துக் கொத்தாக சாகும் இந்த தருணத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதித்தால் என்ன தவறு என்று சிலர் கேட்கிறார்கள். ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட்டைத் திறப்பது ஒன்றுதான் தீர்வா, வேறுவழியே இல்லையா என்ற கேள்வியை நாம் அவர்களிடம் எழுப்ப வேண்டும்.

45 மெட்ரிக்டன் ஆக்சிஜன் வாயுவை தமிழக அரசுக்கே தெரியாமல், ஆந்திராவிற்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. மிகையாக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நாடுகளில் நமது நாடும் ஒன்று. நமது நாட்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த ஆலைகளை எல்லாம் அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து மக்களுக்கு வினியோகம் செய்யலாம்.

மேலும், ஸ்டெர்லைட் என்பது ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனமல்ல, தாமிரம் தயாரிக்கும் நச்சு ஆலை. சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு எல்லாம் எதிராக நடத்தப்படும் ஆலை. இன்றுவரை, அரசின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாத கொலைகார ஆலை. இந்த ஆலையைத் திறந்த பின்னர், ஆக்சிஜன் உற்பத்தி மட்டும்தான் நடக்கும் என்று சொன்னால், தூத்துக்குடியில் இருக்கும் விலங்குகள் கூட நம்பாது.

ஆகையால், கார்ப்பரேட்டுகள் ஆக்சிஜன் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நிலைமைக்கு முடிவு கட்டாமல், ஸ்டெர்லைட்டைத் திறக்கப் போவதாக சொல்வது என்பது பட்டவர்த்தனமான துரோகம்.

ஸ்டெர்லைட்டைத் திறந்துதான் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற நிலைமையும் இல்லை.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் பலர் இறந்து கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு கொரானா முதலாவது அலைக்குப் பின்னர், ஓராண்டில் மத்திய மாநில அரசுகள் கற்றுக்கொண்டது என்ன, நடைமுறைப்படுத்தியது என்ன?

இவற்றையெல்லாம் கேள்விக்குட்படுத்தாமல், ஆக்சிஜன் பற்றாக்குறை, அதனால், வேதாந்தாவிற்கு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கலாம் என்று கூறுவது என்பது வேதாந்தா கம்பெனிக்காக மக்களை பலி கொடுக்க மத்திய மாநில அரசுகள் தயாராக இருப்பதையே உணர்த்துகின்றன.

ஸ்டெர்லைட்டை திறப்பதற்கு பல்வேறு வகைகளில் மேற்கொள்ளப்படும் நச்சுப் பிரச்சாரங்களைப் புறம்தள்ளி கொரோனா வந்து செத்தாலும், ஆக்சிஜன் இல்லாமல் பாதிக்கப்பட்டாலும் சரி, ஸ்டெர்லைட்டின் மூலமாக கிடைக்கும் ஆக்சிஜன் தேவையில்லை என்று தூத்துக்குடி மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆக்சிஜன் பற்றாக்குறையை சாக்காக வைத்துக்கொண்டு மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்கும் முயற்சிகளுக்கு எதிராக தூத்துக்குடியே போர்க்களமாகி இருக்கிறது.

படிக்க :
♦ ஒக்கி புயல் : மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதான பொய் வழக்கு ரத்து !

♦ தேர்தல்தான் ஜனநாயகம் என்ற மூடநம்பிக்கை எதற்கு? || மக்கள் அதிகாரம்

“லட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் !” என்று முழங்கியது மட்டுமின்றி நடைமுறையில் செய்தும் காட்டிய தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 வயது ஸ்னோலின் வாயில் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்படி கொல்லப்பட்டவர்களின் பிணத்தை வைத்துக்கொண்டு மக்களை பணியவைக்கும் வகையில் அரசு பேரம் பேசிய போது கூட, ஸ்டெர்லைட்டை மூடாமல் தியாகிகளின் உடலை வாங்க மாட்டோம் என்று உறுதியாக இருந்தார்கள்; நூற்றுக்கணக்கானோர் போலீசால் அடித்து நொறுக்கப்பட்டனர், பலர் தங்களது சொத்துக்களை இழந்தனர்; இருப்பினும், உறுதியாக நின்று ஸ்டெர்லைட்டை மூடினார்கள் தூத்துக்குடி மக்கள்.

ஆகையால், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவா! ஸ்டெர்லைட்டைத் திறக்கும் சதித்திட்டங்களைக் கைவிடு! என்று வீதியில் இறங்கிப் போராடுவது இன்றைய அவசர அவசியக் கடமையாகும். ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக்கூடாது என்று போராடி வரும் வீரஞ்செறிந்த தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்!

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

லெனினால் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது ?

0

முதல் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் அது! பிளக்கானோவ், காவுத்ஸ்கி உள்ளிட்ட ‘மாபெரும்’ தலைவர்களை உள்ளடக்கிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் பெரும்பான்மையினர் தங்களது “தந்தையர் நாட்டை” போரில் ஆதரிப்பது என முடிவெடுத்தனர். போர் உருவாக்கியிருந்த பேய்த்தனமான தேசிய வெறியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமயம் அது.

முதல் உலகப் போரை, ஏகாதிபத்தியங்கள் காலனிகளை தங்களுக்குள் மறுபங்கீடு செய்ய நடத்தும் ஆக்கிரமிப்புப் போர் என்று கூறி, பரந்துபட்ட மக்களுக்கு போர் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை முன் வைத்து ஒரு உள்நாட்டுப் போராக இதை உருவாக்கி புரட்சி செய்ய வேண்டும் என்றார் லெனின்.

ஏகாதிபத்தியங்களின் காலடியில் மண்டியிட்டு கிட்டத்தட்ட தம்மையே அவர்களிடம் அர்ப்பணித்த இரண்டாம் அகிலத் தலைவர்களை கடுமையாகச் சாடினார் லெனின். இந்தப் போராட்டத்தை நடத்தும்போது, மொத்த அகிலத்திலும் லெனின் சிறுபான்மையானவர் தான்.

படிக்க :
♦ ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்
♦ தோழர் லெனின் 151-வது பிறந்த தினம் || கருத்துப்படம்

ஆனாலும், “கோட்பாட்டு அடிப்படியிலான ஒரு கொள்கை மட்டுமே சரியானதொரு கொள்கையாக இருக்க முடியும்” என கோட்பாட்டை உயர்த்திப் பிடித்து அதற்காக உறுதியாக நின்று போராடினார். இரண்டாம் உலகப் போரை ரசியாவில் உள்நாட்டுப் போராக மாற்றியதில் வெற்றி பெற்றார். அதன் விளைவுதான் ரசிய சோசலிசப் புரட்சி.

நிகழ்வுகளை கூர்நோக்கி, அவற்றின் அடிநாதத்தைப் புரிந்து கொண்டு, பொது நீரோட்டம் உருவாக்கும் மாயைகளை எல்லாம் களைந்துவிட்டு, அரசு – ஆளும் வர்க்கம் ஆகியவற்றின் நகர்வுகளை பாட்டாளி வர்க்கப் பார்வை கொண்டு பரிசீலித்ததன் வெளிப்பாடுதான் புரட்சி குறித்த தோழர் லெனினின் பார்வை.

அரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டை மறந்து காவுத்ஸ்கி, பிளக்கானோவ் போன்ற பிரபலங்கள் தேசிய வெறிக்கு ஆட்பட்ட போது, லெனின் தேசிய வெறியை அம்பலப்படுத்தி புறந்தள்ளினார். அதற்கான அடிப்படை, மார்க்சிய கோட்பாட்டில் அவர் கொண்ட பற்றுறுதியில் வீற்றிருக்கிறது. அதுதான் லெனினை ஒரு சிறந்த சித்தாந்தவாதியாக நிலைநிறுத்தியது.

லெனினின் தீர்க்கமான விசாலமானக் கோட்பாட்டு அறிவு என்பது, அவரிடம் இயல்பிலேயே குடிகொண்டிருந்த தர்க்க ரீதியான கற்றலில் இருந்து கிடைத்ததுதான். லெனின் மார்க்சியத்தை தர்க்க ரீதியில் பயின்றார்.

அப்படிப் பயின்றதால் கிடைக்கப் பெற்ற கோட்பாட்டு உறுதிதான் லெனினை சிறந்த தர்க்க ஆற்றல் கொண்டவராக உருவாக்கியது. லெனினின் விவாதங்கள் குறித்து தோழர் ஸ்டாலின் குறிப்பிடுகையில், “லெனினின் வாதங்கள், எளிமையாகவும், தெளிவாகவும் இருக்கும். அவரது தர்க்க ஆற்றல் கேட்பவர்களை இறுகப் பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. அவரது வாதங்கள் கேட்பவர்களைப் பற்றிப் படர்ந்து அவர்களை சுற்றி இறுக வளைத்துக் கொள்ளும். அவருடன் வாதிப்பவர்களுக்கு இரண்டே வாய்ப்புகள்தான். ஒன்று அவர்கள் லெனினிடம் சரணடந்தாக வேண்டும் அல்லது அவர் முன் அப்பட்டமாக தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்”, என்று கூறுகிறார்.

கோட்பாட்டில் அவருக்கு இருக்கும் மேதாவிலாசமும் பற்றுறுதியும், வெற்றி பெறும் போது மமதை கொள்வதில் இருந்தும், தோல்வியடையும் போது புலம்பி அழுவதில் இருந்தும் அவரைக் காத்தது.

விவாதங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போவது பெரும்பான்மை ஆதரவு பெறுவதுதான். சரியான கோட்பாடு, எல்லா சமயங்களிலும் பெரும்பான்மையின் ஆதரவைப் பெற்றுவிடுவதில்லை. பல சமயங்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற முடியாமல் போகலாம்.

நமது கோட்பாடு சரியாக இருக்கையில், அது பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற முடியாமல் போகும்போது, துவள்வதற்கு அங்கு எதுவும் இல்லை. மாறாக, சரியான கோட்பாட்டை பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளும் வகையில் நின்று போராடுவதற்கு உத்வேகத்தைத் தான் அந்தத் தோல்வி நமக்குத் தர வேண்டும் என்பார் லெனின்.

தோல்வியைக் கண்டு அஞ்சி புலம்புபவர்களிடம், “தோழர்களே, புலம்பாதீர்கள். நாம் வெற்றி பெற்றே தீருவோம். ஏனெனில், நம்முடைய நிலைப்பாடு சரியானது” என்று கடுமையாகச் சொல்வார் லெனின்.

அதே போல வெற்றியின் மமதையில் பேசும் தோழர்களிடமும் கடுமை காட்டியிருக்கிறார் லெனின்.

வெற்றி மயக்கம் கொண்டு மமதை அடையக் கூடாது என்பது முதல் விசயம். வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்பது இரண்டாவது விசயம். எதிரி தோற்கடிக்கப்பட்டுள்ளானே தவிர, எந்தவிதத்திலும் ஒழிந்துவிடவில்லை; எதிரிக்கு மரண அடி கொடுக்க வேண்டும் என்பது மூன்றாவது விசயம்” என்று குறிப்பிடுகிறார் லெனின்.

கோட்பாட்டில் உறுதியாக நிற்பதும், வெற்றி தோல்விகளினூடாக சஞ்சலமின்றி பயணிப்பதும் மட்டும் புரட்சியை நோக்கி இட்டுச் சென்றுவிடுமா? வாய்ப்பே இல்லை.

படிக்க :
♦ புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்

♦ லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !

லெனின் மக்களின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தார். அவர் ஒருபோதும் மக்களின் புரட்சிகர எழுச்சியையும், கிளர்ச்சியையும் அவை எவ்வளவு பெரிய தோல்விகளைத் தந்திருந்தாலும் சாடியதில்லை.

“ … மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், அவர்களது செயல்பாடுகளைப் புரிந்தறிய முயலுங்கள், மக்களது போராட்டங்களின் நடைமுறை அனுபவத்தை கவனமாக கற்றாய்வு செய்யுங்கள் என்பதே லெனினுடைய இடையறாத ஆணையாக இருந்தது.

மக்கள் திரளினரின் படைப்பாற்றலில் நம்பிக்கை தன்னெழுச்சியான போராட்டப் போக்கைப் புரிந்து கொள்ளவும், அதன் இயக்கத்தை பாட்டாளி வரக்கப் புரட்சிப் பாதையில் செலுத்தவும் லெனினுக்கு உதவிய அவரது செயற்பாடுகளின் சிறப்பம்சம் இதுவே.” என்று லெனின் மக்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை குறித்து குறிப்பிடுகிறார் தோழர் ஸ்டாலின்.

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தை எதிர்த்து நடத்தப்படவிருக்கும் புரட்சியைத் துவக்குவது என்பது சாதாரண விசயமல்ல. சிறிய தவறும் கூட மிகப்பெரிய பேரழிவையும் பின்னடைவையும் ஏற்படுத்தும் அபாயம் மிக்கது. மேற்கூறிய தோழர் லெனினின் பண்புகள் தான் அவரை புரட்சியின் தலைவராக உயர்த்தியது. ஒரு புரட்சியைச் சாதிக்கச் செய்தது.

லெனின் ரசியாவில் சாதித்த புரட்சியை, இந்தியாவில் சாதிக்க அணிதிரள்வோம் !

வினவு

உதவிய நூல் 
லெனின் : ஒரு மலைக் கழுகு – தோழர் ஸ்டாலின் உரை