Tuesday, May 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 737

சந்தி சிரிக்கும் சி.பி.எம்.இன் கொலை புராணம்!

5

கொலைகார-கேளரா-சிபிஎம்உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் கட்சி என்று வாய்ச்சவடால் அடித்துவரும் சி.பி.எம். கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; கொலைகாரக் கட்சி. கேரளத்தில் சி.பி.எம். கட்சியிலிருந்து பிரிந்து சென்று “புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை நடத்திவந்த டி.பி. சந்திரசேகரனை கடந்த மே மாதத்தில் கொடூரமாக வெட்டிக் கொன்ற சி.பி.எம். கட்சியின் கொலைவெறியாட்டம், இந்த உண்மையை மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது.

இப்படுகொலையும், “அரசியல் கொலைகளை நாங்கள் திட்டமிட்டு நடத்தி வந்துள்ளோம்” என்று பொதுக்கூட்டத்திலேயே  இடுக்கி மாவட்ட சி.பி.எம். செயலாளரான எம்.எம். மணி திமிராகப் பேசியிருப்பதும், சந்திரசேகரன் படுகொலையையொட்டி சி.பி.எம். கட்சியின் அச்சுதானந்தன் கோஷ்டியும் பினாரயி விஜயன் கோஷ்டியும் வெளிப்படையாகவே மோதிக்கொண்டிருப்பதும், அரசியல் எதிரிகளைத் திட்டமிட்டு கொலை செய்வதை சி.பி.எம். கட்சி வாடிக்கையாகக் கொண்டிருப்பதை கேரளம் மட்டும் மட்டுமின்றி, நாடு முழுவதும் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது.

கேரளத்தில் கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்கள் சி.பி.எம். கட்சியின் முக்கிய ஓட்டு வங்கியாகும். நான்காண்டுகளுக்கு முன்பு கண்ணூர் மாவட்டம், வடகரா அருகிலுள்ள ஒஞ்சியத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறி “புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி” என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். ஒஞ்சியம் வட்டாரத்தில் அவரும் அவரது கட்சியும் மக்களிடம் கணிசமான ஆதரவையும் பெற்று வந்தது. சந்திரசேகரனுக்கு சி.பி.எம். கட்சியின் கொலைகார முகம் தெரியும். அவரது கட்சி காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பதால், சி.பி.எம். கட்சி நடத்தி வந்துள்ள கொலைகளைப் பற்றி அவர் வெளிப்படுத்தி விடுவார் என்று கருதி, பலமுறை அவரைக் கொல்ல முயற்சித்து வந்த சி.பி.எம். கட்சியின் கொலைக்கும்பல், கடந்த  மே 4-ஆம் தேதியன்று அவரைச் சுற்றிவளைத்து வெட்டிக் கொன்றுள்ளது.

படுகொலை நடந்த அடுத்த நாளில்,  சி.பி.எம். கட்சியின் கொன்னூத்துப் பரம்பு கிளைச் செயலாளர் மனோஜன் மற்றும் அவரது கூட்டாளி ஷனோஜும், அதைத் தொடர்ந்து கையிலே சி.பி.எம். கட்சிச் சின்னத்தைப் பச்சை குத்திக் கொண்டுள்ள சஜித் என்பவனும் இப்படுகொலைக்கான ஏற்பாடுகளைச் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜூன் 7 அன்று மகாராஷ்டிரா  கோவா எல்லைப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் தலைமறைவாக இருந்த டி.கே. ரஜீஷ் என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் மூலமாக, பிற கொலைகாரர்களைப் பற்றி அறிந்து,  ஜூன் 14 அன்று கண்ணூர் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதியில் பதுங்கியிருந்த இதர கொலைகாரர்களைச் சுற்றிவளைத்து போலீசு கைது செய்துள்ளது.

சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த டி.கே. ரஜீஷ் என்பவன் மும்பையிலுள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்வதாகக் காட்டிக் கொண்டு,  கட்சி அழைக்கும் போதெல்லாம் கேரளாவுக்கு வந்து அரசியல் எதிரிகளைக் கொலை செய்துவிட்டு தப்பிச் செல்வதைத் தொழிலாகக் கொண்டவன். ரஜீஷைப் பற்றியும் இவனது கொலைகார கும்பலைப் பற்றியும் அவ்வப்போது “கொட்டேஷன் கேங்க்” என்று ஊடகங்களில் செய்திகள் வந்த போதிலும், இவனைப் பற்றிய வேறு எந்தத் தகவலோ, புகைப்படமோ வராத அளவுக்கு அவனும் சி.பி.எம். கட்சியும் இரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளனர்.

ரஜீஷும் அவனது கூட்டாளிகளான கொடி சுனி, கிர்மானி மனோஜ், ஷஃபி, சஜித் ஆகியோரும்தான் சந்திரசேகரனை வெட்டிக் கொன்றவர்கள் என்று இப்போது நிரூபணமாகியுள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் சி.பி.எம். கட்சியின் பானூர் ஏரியா கமிட்டி உறுப்பினரான குஞ்சானந்தன் என்பவர்தான் சந்திரசேகரனைக் கொலை செய்வதற்கான சதித்திட்டத்தை வகுத்துக் கொடுத்தவர்  என்றும், அவரது வீட்டில்தான் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்றும் கொலைகாரர்கள் சாட்சியமளித்துள்ளனர்.  தலைமறைவாக இருந்த குஞ்சானந்தன் இப்போது கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.

கொலைகார-கேளரா-சிபிஎம்

தமது செல்வாக்கிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த கட்சி ஊழியர்களை அரசு எந்திரத்தில் அமர்த்துவதன் மூலம் அந்தப் பகுதியை ‘கட்சிக் கிராமமாக’ மாற்றுவது என்ற உத்தியுடன் கேரள சி.பி.எம். கட்சி நீண்டகாலமாகச் செயல்பட்டு வருகிறது. கண்ணூர் மாவட்டத்தில் சி.பி.எம். கட்சியின் கட்டுப்பாட்டில்  கட்டப்பஞ்சாயத்தில் பல ‘கட்சிக் கிராமங்கள்’ உள்ளன.  இக்கிராமங்களில் கொலைகாரர்களைப் பாதுகாப்பாகத் தங்கவைத்து, கெடுபிடிகள் குறைந்த பின்னர் சி.பி.எம். கட்சி அவர்களைத் தப்ப வைக்கிறது. ஒருவேளை போலீசு புலன்விசாரணையில் சி.பி.எம். கட்சியினர்தான் இக்கொலையைச் செய்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் கசியத் தொடங்கி விட்டால், “கொட்டேஷன் கேங்க்” என்றழைக்கப்படும் இத்தொழில்முறை கொலைகாரர்களுக்குப் பதிலாக, தமது கட்சி ஊழியர் ஒருவரை முன்னிறுத்தி,  இவர்தான் கொலை செய்தார் என்று போலீசுக்குத் தெரிவித்துச் சரணடைய வைப்பது, அவர் சிறையிலிருக்கும் காலத்தில் அவரது குடும்பத்தைப் பராமரிப்பது, பின்னர் நீதிமன்றத்தில் போதிய ஆதாரம் இல்லை என்று வாதிட்டு, அந்த ஊழியரை விடுவிக்க ஏற்பாடு செய்வது  என நீதித்துறை, அதிகார வர்க்கம், போலீசு ஆகியவற்றின் துணையோடு சி.பி.எம். கட்சி இச்சதிகளையும் கொலைகளையும் திட்டமிட்டு நடத்தி வந்துள்ளது.

சந்திரசேகரனைக் கொன்றொழித்த பின்னர், கண்ணூர் மாவட்டத்திலுள்ள ‘கட்சிக் கிராமங்’களில் தங்க வைக்கப்பட்டிருந்த இக்கொலைகாரர்களைத் தேடி அடுத்தடுத்து போலீசு சோதனை நடத்தியதால், வெவ்வேறு கட்சிக் கிராமங்களில் மாறிமாறி அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ரஜீஷ் கோவாவுக்குத் தப்பிச் சென்ற பின்னர், கண்ணூர் மாவட்டம்  குழுக்குண்ணு பஞ்சாயத்திலுள்ள முடக்கோழி பெரிங்கான மலையிலுள்ள இரிட்டி எனும் ஊருக்கு அருகே, மக்கள் நடமாட்டம் இல்லாத  எளிதில் சென்றடைய முடியாத காடும் மலையும் சூழ்ந்த ஒரு தோட்டத்தில் மற்ற கொலைகாரர்கள் 15 நாட்களாகத் தங்கியிருந்துள்ளனர். போலீசார் மரம் வெட்டும் கூலிகளாகவும், லாரிகளில் செங்கல் அடுக்கும் கூலிகளாகவும் வேடமிட்டுக் கொண்டு மலைக்குச் சென்று, கொலைகாரர்களையும் சி.பி.எம். ஊழியர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர்.

“கண்ணூர் மாவட்டத்தில் கட்சி கிராமங்கள் உள்ளதாகக் கூறுவது கடைந்தெடுத்த பொய். காங்கிரசும் ஊடகங்களும் திட்டமிட்டு அவதூறு செய்கின்றன” என்று சீறினார், சி.பி.எம். கட்சியின் முன்னாள் தொழிற்துறை அமைச்சரான எலாமரம் கரீம். ஆனால்,  எம்.ஜி.எஸ். நாராயணன் எனும் பிரபல வரலாற்றியலாளர், “நான் கண்ணூர் மாவட்டத்தில் பல ‘கட்சிக் கிராமங்’களுக்குச் சென்றுள்ளேன். அங்கே கட்சி அனுமதி இல்லாமல் எந்த நல்லது கெட்டதும் நடக்க முடியாது.  இப்போது தொலைத்தொடர்பு வளர்ச்சியின் காரணமாக இத்தகைய கிராமங்களில் கட்சி தனது கட்டுப்பாட்டை ஓரளவுக்குக் குறைத்துள்ளது” என்று வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளார்.

கொலைகார-கேளரா-சிபிஎம்1997 முதல் 2008 வரையிலான காலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் 56 பேர் சி.பி.எம். கொலைக்கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கண்ணூர் மாவட்டத்திலுள்ள பன்னூரில் பள்ளி ஆசிரியராகவும் காங்கிரசு யுவமோர்ச்சா தலைவராகவும் இருந்த கே.டி.ஜெயகிருஷ்ணன், பள்ளி மாணவர்கள் முன்னிலையில் விரட்டிவிரட்டி 1999-இல் சி.பி.எம். கொலைக்கும்பலால் கொல்லப்பட்டார்.  சி.பி.எம். கட்சியிலிருந்து விலகி என்.டி.எப். கட்சியில் சேர்ந்த  மொகம்மது பாசல் என்ற முக்கிய பிரமுகர்,  கடந்த 2006 அக்டோபர் 22 அன்று கொல்லப்பட்டார். இக்கொலையின் முக்கிய சதிகாரர்களான கண்ணூர் சி.பி.எம். மாவட்டக் கமிட்டி உறுப்பினரான கராயி ராஜன் மற்றும் திருவாங்காடு கமிட்டி உறுப்பினரான சந்திரசேகரன் எனுமிருவர் உள்ளிட்டு எட்டு பேரை மையப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரியில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் ஊழியரான 22 வயதான அப்துல் சுக்கூர் சி.பி.எம். கொலைகாரர்களால் நட்டநடு வீதியில் வெட்டிக் கொல்லப்பட்டார். கேரளத்தில் சி.பி.எம். கட்சியின் செல்வாக்குள்ள பகுதிகளில் குத்தகைதாரர், தேயிலைமிளகு ஏலதாரர், வாடகை  சந்தா வசூலிப்பவர் முதலான தொழில்களை நடத்தும் எதிர்த்தரப்பினர், சி.பி.எம். கட்சிக்கு முறைப்படி கப்பம் கட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதை மீறுவோரும் தகராறு செய்வோரும் அரசியல் எதிரிகளாகப் பட்டியலிடப்பட்டு சி.பி.எம். கொலைக்கும்பலால் படுகொலை செய்யப்படுகின்றனர்.

சந்திரசேகரன் படுகொலைக்குப் பின்னர், தொடுபுழாவில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய இடுக்கி மாவட்ட சி.பி.எம். செயலாளரான எம்.எம். மணி, “ஆம்! நாங்கள் எங்கள் எதிரிகளைக் கொன்றொழித்தோம். ஒவ்வொரு முறையும் கட்சியின் எதிரிகளைப் பற்றி நாங்கள் பட்டியல் தயாரித்து அதன்படி கொன்றொழிப்போம். இன்னும் பலரைக் கொலை செய்வோம். அரசியல் எதிரிகளைக் கொல்வது சி.பி.எம். கட்சியின் வரலாறு. ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டர்; ஒருவர் அடித்தே கொல்லப்பட்டார்; ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது” என்று 1983லிருந்து 13 காங்கிரசு ஊழியர்களைக் கொன்றதைப் பற்றி ஆணவத்தோடு சுயதம்பட்டம் அடித்துப் பேசியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக சி.பி.எம். கட்சியில் முக்கிய தலைவராக உள்ள இவர், பினாரயி விஜயன் கோஷ்டியின் முக்கியப் புள்ளியாவார்.

மணியின் திமிர்த்தனமான வாக்குமூலம் ஊடகங்களில் அம்பலமானதும், அவர் உணர்ச்சி வேகத்தில் இப்படித் தவறாகப் பேசிவிட்டார் என்று சி.பி.எம். கட்சி பூசிமெழுகியது. ஆனால், அவர் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை வீடியோவாக இணையத்தில் வெளிவந்து அவர் ஆணவத்தோடு பேசியிருப்பதை நிரூபித்ததும்,  வேறுவழியின்றி கட்சித் தலைமை அவரைப் பொறுப்பிலிருந்து இப்போது நீக்கியுள்ளது.

கூரப்பாச்சல் ஏரியா கமிட்டி உறுப்பினராக இருந்த கொடிச்சாலி குஞ்சு என்பவர், பத்தாண்டுகளுக்கு முன்பு சி.பி.எம். கட்சியிலிருந்து விலகி, இப்போது காங்கிரசு ஆதரவாளராக உள்ளார். இடுக்கி மாவட்டத்தில் சி.பி.எம். கொலைக் கும்பலால் 1983 ஜனவரி 16 அன்று காங்கிரசு தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி.யின் மண்டலத் தலைவரான முல்லஞ்செரா மத்தாயி வெட்டிக் கொல்லப்பட்ட பின்னர், கொலைக்கும்பலைத் தப்பிக்கச் செய்துவிட்டு, அன்று  தன்னைக் கொலைகாரனாக அறிவித்து சி.பி.எம்.கட்சி சரணடையவைத்த கதையை, இப்போது அவர்  பகிரங்க வாக்குமூலமாக அளித்துள்ளார். இவரைப் போலவே மேலும் 3 முன்னாள் சி.பி.எம் ஊழியர்கள் அளித்துள்ள வாக்குமூலங்கள் ஊடகங்களில் வெளிவந்து, சி.பி.எம். கட்சியின் கொலைகளும் சதிகளும் கேரளம் முழுவதும் நாறுகிறது.

கொலைகார-கேளரா-சிபிஎம்பினாரயி விஜயன்தான் தனது கணவரின் கொலைக்குக் காரணம் என்று கொல்லப்பட்ட சந்திரசேகரனின் மனைவி குற்றம் சாட்டியதால், கட்சிக்குத் துரோகமிழைத்த சந்திரசேகரனின் மரணத்துக்கு யாரும் அஞ்சலி செலுத்தச் செல்லக் கூடாது என்று சி.பி.எம். கட்சி விதித்த கட்டுப்பாட்டை மீறி, முன்னாள் சி.பி.எம். முதல்வரும் தற்போதைய கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அச்சுதானந்தன், சந்திரசேகரனுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இத்தனை காலமும் சி.பி.எம். கட்சியின் படுகொலை அரசியலை எதிர்த்து வாய்திறக்காத அவர், இப்போது மாநிலச் செயலாளரான பினாரயி விஜயனின் தூண்டுதலாலேயே இப்படுகொலை நடந்துள்ளது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, விஜயன் கோஷ்டியைத் தனிமைப்படுத்த முயற்சித்தார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த விஜயன் கோஷ்டி,  அச்சுதானந்தனைக்  கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநிலக்  கமிட்டியை அவசரமாகக் கூட்டி விவாதித்து, கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டத்திலும் முறையிட்டது. அச்சுதானந்தனோ,  “தற்போதைய சூழலில் பினாரயி விஜயன் தலைமையிலுள்ள மாநிலக் கமிட்டியை  முற்றாகக் கலைத்து மறுஒழுங்கமைப்பு செய்யாவிடில், நான் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்க இயலாது” என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழுவுக்குக் கடிதம் எழுதி, அதைப் பகிரங்கப்படுத்தி விஜயன் கோஷ்டிக்கும் கட்சித் தலைமைக்கும் ஆப்பு வைத்துள்ளார்.

அச்சுதானந்தன் இப்படி உட்கட்சி விவகாரங்களைப் பகிரங்கப்படுத்துவதை விமர்சித்த சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு, இப்போதைய சூழலில் அச்சுதானந்தன் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அது கேரளத்தில் கட்சியை மக்களிடமிருந்து மேலும் தனிமைப்படுத்திவிடும் என்பதாலும், கட்சி நடத்திவந்துள்ள படுகொலைகளைப் பற்றி அச்சுதானந்தன் அம்பலப்படுத்தி விடுவார் என்பதாலும் எந்த முடிவும் எடுக்காமல், அச்சுதானந்தனும் பினாரயி விஜயனும் வெளிப்படையாக சாடிக் கொள்வதை நிறுத்த வேண்டும் என்றும் உபதேசித்துள்ளது. படுகொலை அரசியல் அம்பலமாகி, கோஷ்டிச் சண்டை மூர்க்கமாகி சி.பி.எம். கட்சியே கேரளத்தில் ஏறத்தாழ பிளவுபட்டு, முடங்கி, செல்வாக்கிழந்து நிற்கிறது.

கேரளம் மற்றும் மே.வங்கத்தில் மூத்த சி.பி.எம். தலைவர்களைத் தவிர, பிழைப்புவாதத்தில் வளர்ந்து வந்துள்ள புதிய தலைமுறையினரான உள்ளூர் தாதாக்கள்தான் தலைமைக்கு வரமுடியும் என்ற நிலைக்கு சி.பி.எம். கட்சி சீரழிந்து போயுள்ளது. அதிகாரத்தில் இல்லாத பிற மாநிலங்களில் ஓட்டுக்கும் சீட்டுக்கும் மாறிமாறி ஆளும் கட்சிகளுடன் கூட்டணி சேர்வதாக அதன் பிழைப்புவாதம் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது அரசாங்க சலுகைகளையும் சன்மானங்களையும் பொறுக்கித்தின்று வளர்ந்த பிழைப்புவாதமும், ஆட்சி மாறும்போது அதை இழப்பதால் ஏற்படும் ஆத்திரமும் புதிய தலைமுறை சி.பி.எம். உள்ளூர் தலைவர்களை வன்முறைக் கும்பலாக வளர்த்துவிட்டுள்ளது. தமது செல்வாக்குள்ள பகுதிகளில் வழக்கமான வசூல், கப்பம் முதலானவற்றை எதிர்த்தரப்பினருக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது என்கிற அவர்களது பிழைப்புவாத வெறி, வன்முறைத் தாக்குதலாகவும் படுகொலைகளாகவும் வளர்ந்துள்ளது.

இத்தகைய வன்முறைகள்  படுகொலைகள் மூலமும் ஆட்சியதிகாரத்தின் மூலமும்தான் சி.பி.எம். கட்சி இம்மாநிலங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து தேர்தல் வெற்றியைச் சாதித்துள்ள உண்மையும், 1967இல் நக்சல்பாரி எழுச்சியை ஒடுக்கியது முதல் சிங்கூர் நந்திகிராம் போராட்டங்களை ஒடுக்கியது வரையிலான அதன் கொலைவெறியாட்டமும் நாடெங்கும் நாறிப்போயுள்ளது.

புரட்சி பேசும் சி.பி.எம். கட்சி தனது வர்க்க அடித்தளத்தை மாற்றிக் கொண்டு முதலாளித்துவப் பிழைப்புவாதக்  கட்சியாக, பயங்கரவாதக் கொலைகார கட்சியாக வேகமாகப் பரிணாம வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. சி.பி.எம். கட்சியும் ஆட்சியும் உழைக்கும் மக்களின் நலனுக்கானது என்று இன்னமும் யாராவது நம்பிக் கொண்டிருந்தால், கேரளத்தில் நடந்துள்ள கொலைவெறியாட்டங்களே அவர்களது மூட நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும்.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 ________________________________________________

 ________________________________________________

 ________________________________________________

 ________________________________________________

 ________________________________________________

கேரள அரசின் இனவெறிக்கு எதிராக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள்!

10

கேரள-இனவெறி-அரசு-2முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுக்காகப் போடப்பட்ட துளைகளை அடைக்கவிடாமல் அடாவடித்தனம் செய்யும் கேரள அரசை எதிர்த்தும், அணையை உடைக்கச்  சதிகளைச் செய்யும் கேரள போலீசை வெளியேற்றி, அணையைத் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரியும், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்காமல் கேரள அரசின் இனவெறி அரசியலுக்குத் துணைபோகும் மைய அரசை எதிர்த்தும், 15.6.2012 அன்று உசிலை பேருந்து நிலையம் அருகே தேனி சாலையில் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு  ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.  அணைப் பாதுகாப்புக் குழு பொருளாளர் சந்திரபோஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை வட்டார ஆட்டோ ஓட்டுநர் சங்கம், டூவீலர் மெக்கானிக் சங்கம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், ம.க.இ.க. ஆகிய அமைப்புகளும் பங்கேற்றன.

நீதிபதி ஆனந்த் குழுவின் தீர்ப்பை ஏற்க மறுக்கும் கேரள காங்கிரசு முதல்வர் உம்மன் சாண்டியின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து, ஓட்டுக்கட்சிகளின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி, விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கி, தமிழகத்தின் நியாயவுரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்காவிடில், முல்லைப் பெரியாறு அணையைக் கைப்பற்றும் போராட்டமாகத் தமிழகம் கிளர்ந்தெழும் என்று பிரகடனப்படுத்துவதாக அமைந்தது. பல்வேறு கிராமங்களிலிருந்து விவசாயிகள் உணர்வோடு திரண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

கேரள-இனவெறி-அரசு-1தமிழகத்தின்  கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் அடிப்படையாக உள்ள பவானி மற்றும் சிறுவாணி ஆறுகளில் கேரள எல்லைப் பகுதியில் 1978இல் அணை கட்ட முயற்சித்து தமிழக மக்களின் கடும் எதிர்ப்பால் அத்திட்டங்களைக் கைவிட்ட கேரள அரசு, இப்போது மீண்டும் அவற்றைச் செயல்படுத்த முயற்சித்து வருகிறது. முல்லைப் பெரியாறு நீரில் கேரள அரசின் இனவெறி  துரோகம் அம்பலப்பட்டுள்ளதால், தமிழகத்தைப் பழிவாங்கும் நோக்கத்தோடு இதனைச் செயல்படுத்த முயற்சிக்கிறது. இது மட்டுமின்றி, தமிழக எல்லைப் பகுதிகளில் இரகசியமாக மருத்துவமனைக் கழிவுகளையும் இறைச்சிக் கழிவுகளையும் கொட்டித் தமிழகத்தைக் குப்பை மேடாக்கி வருகிறது.

கேரள அரசின் அடாவடித்தனத்தையும் இனவெறியையும் எதிர்த்து 23.6.2012 அன்று செஞ்சிலுவைக் கட்டிடம் அருகே  மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கோவை மாவட்டத் தலைவர் ராஜன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரியார் திராவிடக் கழகம், பு.ஜ.தொ.மு; ம.க இ.க; ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும், திரளான வழக்குரைஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்றுப் போராட அறைகூவினர்.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா?

35

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 18

”நாடு முழுவதிலும் எங்கெல்லாம் ஒரு மசூதி அல்லது ஒரு முசுலீம் பேட்டை இருக்கின்றதோ, அந்தப் பகுதியை உண்மையில் தமக்கே சொந்தமான சுதந்திரமான பிரதேசமாக முசுலீம்கள் கருதுகின்றனர். ஹிந்துக்களின் ஊர்வலம் இசைக் கருவிகளுடனும் பாட்டுக்களுடனும் அவ்வழியே சென்றால், அவர்கள் தமது மத உணர்ச்சிகள் புண்படுத்தப்பட்டதாகச் கடுங்கோபம் கொள்கின்றனர். இனிய இசையைக் கேட்டுப் புண்படும் அளவிற்கு, அவர்களுடைய சமய உணர்ச்சி தொட்டால் சிணுங்கியாக இருக்குமானால் தமது மசூதிகளைக் காடுகளுக்கு மாற்றி அமைத்துக் கொண்டு அங்கு மௌனமாகத் தொழுகை நடத்தக் கூடாதா? சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெள்ளையடித்து, அதனைத் தொழுகைத் தலம் என்று அறிவித்துவிட்டு, அங்கு இசை பாடப்படுவது தமது தொழுகையைக் கலைப்பதாகும் எனக் கூப்பாடு போடுவானேன்?”

ஆர்.எஸ்.எஸ்.-இன் இரண்டாவது தலைவர் கோல்வால்கர், ‘ஞானகங்கைஇரண்டாம் பாகம்பக்.170.

மசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம். மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சினை இல்லாமல் நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே – இல்லாத ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.

முதலில் மசூதிகள் பிரபலமான, பரபரப்பான தெருக்களிலும், சந்தைகளிலும், வணிக முக்கியத்துவம் மிகுந்த இடங்களில் இருப்பது உண்மைதான். காரணம், அவ்வட்டாரத்தில் கணிசமான முசுலீம்கள் வாழ்வதும், அதிலும் வணிகர்களாக இருப்பதும், தமது வேலை நேரத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்து போக வசதியாக இருக்கவும்தான் அப்படி கட்டப்படுகின்றன. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

அதேசமயம் மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள். ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூறின்றிச் செல்லுகின்றன. மசூதி அருகே பொதுக் கூட்டங்கள் நடப்பதும், பாங்கு ஓதும் நேரம் ஓரிரு நிமிடம் அமைதி காப்பதும் தமிழகத்தில் இயல்பான காட்சிகள்தான். இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை. 1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான் இக்கலவரங்கள் ஆரம்பித்தன. சரியாகத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நடத்துவது, ”துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு” போன்ற ‘இனிய இசை மொழிகளை’க் கூவுவது இவற்றினால்தான் தகராறுகள் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.

பம்பாய், ஹைதராபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன. தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. எனவே மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை முழுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும். பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன – இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.

மசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள். கேவலம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து தேரை இழுக்க முடியாது என் கண்டதேவியில் சில ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தேர் இந்த மரமண்டைகளின் யோக்கியதைக்குச் சமீபத்திய சான்று.

______________________________________

தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

மேட்டுக்’குடி’மகன்கள் தாகம் தீர்க்க 24 மணி நேரமும் ‘சரக்கு’!

11
24-மணி-நேர-பார்

24-மணி-நேர-பார்

சென்னை, திருச்சி நகரங்களில் இருக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளின் பார்களில் 24 மணி நேரமும் மது பரிமாறப்படலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் பன்னாட்டு விமான நிலையங்கள் இருப்பதால் இந்த சிறப்பு சலுகை தரப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

பன்னாட்டு விமான நிலையங்கள் இல்லாத மதுரை, கோயம்புத்தூர் நகரங்களில் இரண்டு மடங்கு சிறப்புக் கட்டணம் செலுத்தும் ஐந்து நட்சத்திர விடுதிகள் 24 மணி நேரமும் கடை விரிக்கலாம். மற்ற ஓட்டல் பார்களிலும் கிளப்புகளிலும் மது பரிமாறும் நேரம் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை என்று இருந்தது நள்ளிரவு 12 மணி வரை என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டுக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இரவு, பகல் 24 மணி நேரமும் பன்னாட்டு விமானங்களில் வந்து சேர்ந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறை எடுக்கிறார்கள். நள்ளிரவில் வரும் விருந்தினர்கள் மது அருந்த முடியாத நிலை இருந்தது. அவர்களுக்கு விடுதியின் மற்ற வசதிகள் எல்லா நேரமும் கிடைத்தாலும் மது பரிமாறப்படுவது மட்டும் இரவு 11 மணி வரை தான் அனுமதிக்கப்பட்டு வந்தது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் ஓட்டல் தொழில் பாதிப்பதாகவும் நட்சத்திர ஓட்டல்கள் தரப்பில் முறையிட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுளது” இவ்வாறு ‘விருந்தினர்களை’ உபசரிப்பதில் தமிழினின் தொல் பெருமையை அரசு பேணுகிறது.

இந்த ஆணையை ஓட்டல் துறையினர் பொதுவாக வரவேற்றாலும், பார்களுக்கான கட்டண உயர்வு தங்களை அதிகம் பாதிப்பதாக ஐந்து நட்சத்திர விடுதிகள் அல்லாத விடுதி முதலாளிகள் புலம்பியுள்ளனர். ‘ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு கட்டணம் இரண்டு மடங்காக்கப்பட்டு பார் செயல்படும் நேரமும் இரண்டு மடங்காகியிருக்கிறது. மற்றவர்களுக்கு கட்டணம் ஒன்றரை மடங்காக்கப்பட்டு பார் செயல்படும் நேரம் ஒரு மணி நேரம் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று இழைக்கப்பட்ட அநியாயத்தை சுட்டிக் காட்டி கொதிக்கிறார்கள்.

வரி வருமானத்தை பெருக்குவதுதான் அரசின் நோக்கம் என்று நாம் இதை நினைத்து விடக் கூடாது. “கூடுதல் வருமானத்துக்காக இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை, இரவு நேரங்களில் நகரங்களுக்கு வந்து சேரும் பன்னாட்டு பயணிகளுக்கு தரமான மது கிடைக்கச் செய்வதுதான் அரசின் நோக்கம்” என்று ஒரு அதிகாரி தெளிவுபடுத்தியிருக்கிறார்.

“அதிதி தேவ பவோ – விருந்தினர் போற்றுதும் விருந்தினர் போற்றுதும்’ என்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலனில் அரசு நிர்வாகம் வைத்திருக்கும் அக்கடறை மெய் சிலிர்க்க வைக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் 24 மணி நேரமும் விழிப்பாக இருந்து இரவெல்லாம் கண் விழித்து பெற வேண்டிய சேவைகள் பல இருக்கின்றன. 20 லிட்டர் தண்ணீருக்கு 25 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை கொடுத்து வாங்க முடியாத பெரும்பான்மை உழைக்கும் மக்கள், கார்ப்பரேஷன் தண்ணீர் வரும் குழாய்களுக்கு முன்பு தண்ணீர் குடங்களுடன் காத்திருந்து எந்த நேரமானாலும் பிடித்துக் கொள்ள வேண்டும். அங்கு இந்த 24/7 சேவை இல்லை.

மின்சார சேவை கூட தமிழ் நாட்டு மக்களுக்கு 24/7 கிடைப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, ஒரு நாளைக்கு சில மணி நேரம் விடுமுறை விட்டுதான் மின்சாரம் வழங்குகிறார்கள். அதனால் என்ன, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 24 மணி நேரமும் மது பரிமாற ஏற்பாடு செய்து விட்டார்கள் என்ற பெருமைதான் முக்கியமானது.

நாட்டின் குடிமக்களுக்கு உயிர் வாழும் உரிமை, வேலை செய்யும் உரிமை இவற்றை வழங்க வேண்டிய பொறுப்புடைய அரசு, மேட்டுக் குடியினரின் வாழ்க்கையில் இருக்கும் சின்னச் சின்ன எரிச்சல்களை நீக்குவதில்தான் முனைப்பாக இருக்கிறது. வெளிநாட்டுக் காரர்களுக்காக, எதையும் செய்யத் தயாராக இருப்பது ஐரோப்பியர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வர ஆரம்பித்த போதே இருந்து வரும் அடிமைத்தன இயல்புதான்.

வெளிநாட்டு நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும், புதிய தொழிற்சாலைகளிலும் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் போது, அங்கு வேலை பார்க்க வரும் வெளிநாட்டவருக்கு எந்த குறையும் ஏற்பட்டு விடக் கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாட்டு உணவகங்கள், மது அருந்தும் பார்கள், இரவு விடுதிகள், இதர கேளிக்கை மையங்கள் அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தனியாக டீல் போட்டுக் கொண்டு அவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். வெளி நாட்டவர் வசிப்பதற்காக சிறப்பு குடியிருப்புகள் கட்டுகிறார்கள்.

இது வெளிநாட்டவருக்கு மட்டுமின்றி உள்ளூர் மேட்டுக் குடி மக்களுக்கும் பலனளிக்கும். “இரவில் வெகு நேரம் வேலை செய்யும் வாடிக்கையாளர்கள் இப்போது குடிப்பதற்கு வசதி ஏற்பட்டுள்ளது. கூடுதல் ஒரு மணி நேரம் கிடைப்பதால் மதுவை ஒரே மடக்கில் விழுங்கி விடாமல் நிதானமாக குடித்து விட்டு போகலாம்” என்று ஒரு ஓட்டல் உரிமையாளர் சொல்கிறார். அடுத்த கட்டமாக டாஸ்மாக் எலைட் பார்களுக்கும் இந்த நேர நீட்டிப்பு வழங்கப்பட்டு விடலாம்.

ஐந்து நட்சத்திர விடுதிகளில் உள்ளூர் பிரபுக்களும், அவர்களின் வாரிசுகளும், வெளிநாட்டு கனவான்களும் இரவெல்லாம் குடித்து கும்மாளமிடலாம். கும்மாளம் முடிந்ததும்  இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்களில் ஏறி தமது வேலி போட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு (Gated Community) போய் விடலாம். அழுக்கான உழைக்கும் மக்களை எதிர் கொள்ளாமலேயே தமது புனித வாழ்க்கையை பராமரித்துக் கொள்ளலாம்.

இதுதான் ஆளும் வர்க்கத்துக்கு துணை போகும் இன்றைய ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் சாதிக்கப் போகும் உலகம். அது மன்மோகன் சிங்காக இருந்தாலும் சரி, நரேந்திர மோடி, ஜெயலலிதா, கருணாநிதியாக இருந்தாலும் சரி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் இருக்கும் பணக்கார மேட்டுக்குடி வர்க்கத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்த உதவி புரிவதுதான் அவர்களின் சேவை.

_________________________________

– செழியன்.

_________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அகிலேஷ் யாதவின் ஆடம்பர கார் திட்டம்: மேட்டுக்குடியின் ‘கருணை’ அரசியல்!

9
அகிலேஷ்-யாதவ்
அகிலேஷ் யாதவ்

ஜூலை 3-ம் தேதி உத்தர பிரதேசத்தின் முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ், மாநிலத்தின் சட்ட மன்ற உறுப்பினர்கள் 20 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள கார்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சட்டசபையில் அறிவித்தார். அதற்கு சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.  இதன் மூலம் அவரது கட்சியின் முக்கியமான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக சொன்னார்.

ஊடகங்களில் பெருத்த எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அடுத்த நாளே அந்த உத்தரவை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார். நாம் கவனிக்க வேண்டியது இத்தகைய திட்டத்தை அறிவிப்பதற்கான அரசியல் பின்னணியும் சூழலும்தான்.

மனித வள மேம்பாட்டு குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவின் 35 மாநிலங்களில்  உத்தர பிரதேசம்  34வது இடத்தில் இருக்கிறது (புனிதர் நிதீஷ் குமார் ஆளும் பீகார்தான் அந்த கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது). உலக நாடுகளின் வரிசையில் ஒப்பிட்டால் உத்தர பிரதேசம் கானா, காங்கோ, லாவோஸ், கென்யா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை விட பின் தங்கியிருக்கிறது.

அந்த மாநிலத்தில் குழந்தைப் பேறின் போது இறக்கும் பெண்களின் வீதம் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக (தமிழ் நாட்டை விட 3 மடங்கு, சீனாவை விட சுமார் 8 மடங்கு) இருக்கிறது. வசிக்கும் மக்களில் 30% (சுமார் ஆறு கோடி) பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. மாநிலத்தின் புண்டல்கண்ட் பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 20 கோடி பேரில் 8 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கிறார்கள். மாநில தலைநகரான லக்னோவில் 8 மணி நேரமும், பிற நகரங்களில் 10 மணி நேரம் வரையிலும், கிராமப் புறங்களில் 18-19 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு செய்யப்படுகிறது.

இத்தகைய கடுமையான வாழ்க்கைப் போராட்டத்தை எதிர் கொண்டிருக்கும் மக்களுடைய பணத்திலிருந்துதான் அவர்களின் ‘பிரதிநிதி’களான சட்ட மன்ற உறுப்பினர்கள் 20 லட்சம் ரூபாய் வரை கார் வாங்க செலவிடலாம் என்று திட்டமிடப்பட்டது.  அனைத்து உறுப்பினர்களும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தால் சுமார் ரூ 80 கோடி மக்கள் வரிப்பணம் ஆடம்பர கார்களை வாங்குவதில் செலவிடப்பட்டிருக்கும். இந்தப் பணத்தைக் கொண்டு 400 புதிய பேருந்துகள் வாங்கலாம், 260 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கலாம், 250 மருத்துவமனைகளுக்குத் தேவையான பரிசோதனை கருவிகளை கொடுக்கலாம், 4000 மாணவர்களுக்கு மாதம் ரூ 2000 வீதம் கல்வி உதவித் தொகை அளிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ், அவரது தந்தை முலாயம்சிங் யாதவ்(ஆரம்பத்தில் மட்டும்) போன்று, கட்சி அரசியலில் கீழ் மட்டத்தில் இருந்து வளர்ந்து, தொண்டர்களோடு கலந்து பழகி, சாதாரண மக்களோடு உறவாடி முதலமைச்சர் ஆனவர் இல்லை. அவரது கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களில் 62% பேர் (224 பேரில் 140 பேர்) கோடீஸ்வரர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பற்றி எந்த விதமான அக்கறையும் அறிவும் இருப்பதில்லை.

குளிரூட்டப்பட்ட அறைகளிலும், சொகுசு கார்களிலும், மடிக்கணினியிலும் உலகம் அடங்கியிருக்கிறது என்று கற்பனையில் மிதக்கும் இவர்கள்தான் 20 லட்ச ரூபாய் கார்களை வாங்க அரசு பணத்தை செலவழிக்க ஒப்புதல் அளிக்கிறார்கள். அத்தகைய கார்களில் போவதற்கான சாலைகள் கூட உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் இல்லை. இருக்கும் சாலைகளில் 49% மட்டுமே தார் போடப்பட்டவை, சுமார் 37% போக்குவரத்துக்கு முறையான சாலைகளே கிடையாது. எம்எல்ஏக்கள் கார்களில் போனால் பெரும் பகுதி தொகுதி மக்களை போய்ச் சேரக் கூட முடியாது. வார இறுதியில் தில்லிக்குப் போய் பார்ட்டி நடத்துவதற்கு வேண்டுமானால் கார்களை பயன்படுத்தலாம்.

உத்தர பிரதேசத்தின் சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் ரூ 26,000. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சராசரி குடிமகன் 80 ஆண்டுகளுக்கு உழைத்தால்தான் 20 லட்சம் ரூபாயை சம்பாதிக்க முடியும்.

மக்கள் பிரநிதிகள் என்ற பெயரில் ஆட்சியில் இருக்கும் ஆளும் வர்க்க கும்பல்கள் மக்களை மேலும் மேலும் சுரண்டி கொழுப்பதில்தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது உத்தர பிரதேசத்திற்கு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் பொருந்தும்.

________________________________________________

– அப்துல்

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஸ்பெக்ட்ரம் “சாதனையை” முறியடித்த 10 இலட்சம் கோடி நிலக்கரி ஊழல்!

11

நிலக்கரி-ஊழல்

சமீபகாலமாக ஒரு ஊழல் விவகாரம் அம்பலமாகி வெடித்தெழும் போது அது முந்தைய ஊழல் சாதனையை விஞ்சுவதாக இருக்கிறது. உலகமயமாக்க புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட1992-ம் ஆண்டிலிருந்து 2009 நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டுமே சுமார் 73 லட்சம் கோடி மதிப்புக்கு ஊழல்கள் நடந்திருப்பதாக அவுட்லுக் இதழ் ஒரு கணக்கைச் சொல்கிறது. அதன் பின் தான் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த 1.67 லட்சம் கோடி ஊழல் அம்பலமானது.

இந்த இருபதாண்டுகளில் நடந்த அத்தனை ஊழல்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையிலான ஊழல் ஒன்றை பற்றி ஊடகங்களில் கசிந்த மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் (CAG) வரைவறிக்கை சமீபத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது. இதை ஊழல்களின் மகாராணி என்றே ஊடகங்கள் பிரமிப்புடன் குறிப்பிடுகின்றன. சுமார் பத்து லட்சம் கோடி அளவுக்கான இதன் பிரம்மாண்டம் நம்மை ஒரு கணம் மலைக்கச் செய்கிறது.

2004 – 2009 கால கட்டத்தில் மத்திய அரசு 100 தனியார் நிறுவனங்களுக்கும் ஒருசில அரசுத்துறை நிறுவனங்களுக்கும் நிலக்கரித் தொகுதியை (Coal Blocks) ஒதுக்கீடு செய்ததில் தான் 10.7 லட்சம் கோடி அளவு நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் வரைவறிக்கை அறிவிக்கிறது. இதைப் பற்றிய ஒரு சுருக்கமான பின்னணியைப் பார்ப்பதற்கு முன், மத்திய நிலக்கரித் துறையின் அமைச்சராக இந்த காலகட்டத்தில் இருந்த நல்லவர் வேறு யாருமல்ல ஊடகங்களாலும், எதிர்கட்சிகளாலும்,  – ஏன் அண்ணாஹசாரேவாலுமே – யோக்கியர் என்று வருணிக்கப்படும் பிரதமர் மன்மோகன் சிங் தான் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

இந்தியாவில் நிலக்கரி தனியாருக்குத் திறந்து விடப்பட்டது!

இந்தியாவில், பீகார், ஜார்கண்ட், ஒரிசா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தான் கணிசமான அளவுக்கு நிலக்கரி இருப்பு உள்ளது. உருக்காலைகளுக்கும் சிமெண்டு தொழிற்சாலைகளும் மூலப்பொருளாகப் பயன்படும் நிலக்கரியைத் தான் அனல் மின்சார உற்பத்திக்காகவும் இந்தியா பிரதானமாக சார்ந்துள்ளது. இந்தியாவில் முறைப்படுத்தப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி 1770களில் நிறுவியது.

1900 ஆண்டுவாக்கில் சுமார் 18 மில்லியன் டன்களாக இருந்த நிலக்கரி உற்பத்தி, பின்னர் 1946 காலகட்டத்தில் 30 மில்லியன் டன்களாக உயர்ந்தது.  2011-2012 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த நிலக்கரித் தேவை சுமார் 731.10 மில்லியன் டன்களாக இருக்கும் என்று மத்திய திட்டக் கமிஷன் கணித்துள்ளது. இது வரை கண்டறியப்பட்டுள்ள நிலக்கரி இருப்பு சுமார் 33 பில்லியன் டன்களாகும். அடுத்த இருபதாண்டுகளில் சுமார் 50 பில்லியன் டன் நிலக்கரியைக் கண்டறிய மத்தியரசு இலக்கு வைத்துள்ளது.

1947 அதிகார மாற்றத்திற்கும் பின் நிலகரிச் சுரங்கங்கள் பெரும்பாலும் தனியாரிடமே இருந்தன. 70களில் இஸ்ரேல் நடத்திய யோக் கிப்பூர் யுத்தத்தைத் தொடர்ந்து எண்ணைச் சந்தை பெருமளவில் வீழ்ச்சி காண்கிறது. பல்வேறு உலக நாடுகளின் பங்குச் சந்தை வீழ்ச்சியடைகிறது. ஏறக்குறைய இதே காலகட்டத்தில் துவங்கிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்கா ப்ரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுகிறது. அதன் படி, தங்கத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்த டாலரின் மதிப்பு சுயேச்சையாக மதிப்பிடப்பட்டது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் ஸ்டெர்லிங்கை கட்டுப்பாடுகளற்று அச்சடிக்கத் துவங்குகிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் நாணயமதிப்பு சரிந்து பணவீக்கம் உருவாகிறது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்யுமளவிலான மூலதன பலத்தை தனியார் மூலதனம் இழந்திருந்தது.

இந்தப் பின்னணியிலும், இந்தியாவில் அப்போது ஆளும் வர்க்கத்தை எதிர்த்த புரட்சிகர அமைப்புகளின் எழுச்சியை சமாளிக்கவும், இந்திராவின் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் சார்பு நிலையின் காரணமாகவும் வங்கி, விமானப் போக்குவரத்து, சுரங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு தனியார் துறைகளை அரசுடமையாக்குகிறது.  இந்தப் பின்னணியில் தான் நிலக்கரிச் சுரங்கங்கள் 1972-ல் துவங்கி 75ம் வருடத்துக்குள் படிப்படியாக அரசுடமையானது.

மீண்டும் தொண்ணூறுகளின் துவக்கத்தில் சோவியத் முகாம் வீழ்ச்சியடைந்திருந்த காலத்தில் சர்வதேச அளவில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களும் பன்னாட்டுக் கம்பெனிகளும் ஒரு வளர்ச்சி நிலையில் இருந்தனர். பல்வேறு நாடுகளில் தங்களது மூலதனம் தடையற நுழைவதற்கு ஏதுவாக புதிய பொருளாதாரக் கொள்கைகளைத் திணித்தனர். இந்தியாவில் தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளின் துவக்கம் எண்பதுகளின் மத்தியில் இந்திராவின் காலத்திலேயே துவங்கி விட்டாலும், தொண்ணூறுகளின் துவக்கத்தில் தான் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள்.

உலகளாவிய வலைப்பின்னலை ஏற்படுத்தியிருந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களின் உற்பத்தி வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் மூன்றாம் உலகநாடுகளில் இருந்து இயற்கை வளங்கள் ஏராளமான அளவு ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவை எழுகிறது. அதற்கு வழி செய்யும் வகையிலேயே புதிய பொருளாதாரக் கொள்கைகளான தனியார்மயம் தாராளமயம் உலகமயம் போன்றவற்றை வலியுறுத்திய காட் ஒப்பந்தத்தின் ஷரத்துகள் அமைந்திருந்தன. இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் அதுவரை அரசுடமையாக்கப்பட்டிருந்த பல்வேறு பொதுத்துறைகளின் விதிகள் தளர்த்தப்பட்டு தனியார் மூலதனம் நுழைவதற்கு வழியேற்படுத்தப்பட்டது.

நிலக்கரிச் சுரங்க தேசியமயமாக்கல் சட்டம் 1972-73-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்படுகிறது. அதன் பின் சுமார் இருபதாண்டுகளுக்கு அச்சட்டத்தில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. ஜூலை 1992-ம் ஆண்டு நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்படுகிறது. இக்கமிட்டியின் வேலை என்னவென்றால், தனியார்களுக்கு நிலக்கரிச் சுரங்க உரிமையை தாரைவார்ப்பது எப்படி என்று அரசுக்கு வழிகாட்டுவது தான். இக்கமிட்டி, 143 நிலக்கரித் தொகுப்புகளை (coal blocks) இதற்காக அடையாளம் கண்டது.

அதைத் தொடர்ந்து தேசிய நிலக்கரி தேசியமயமாக்கல் சட்டத்தில் ஜூன் மாதம் 1993-ம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி, சக்தி உற்பத்தி ( மின்சாரம்) மற்றும் நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்ட பிற தொழில்களில் ஈடுபடும் தனியார் கம்பெனிகள் நிலக்கரியை வெட்டியெடுக்கலாம் என்பது சேர்க்கப்படுகிறது. பின்னர் 1996-ம் ஆண்டு மீண்டும் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு சிமெண்டு கம்பெனிகளும் நிலக்கரியை வெட்டியெடுத்துக் கொள்ள வகைசெய்யப்படுகிறது. இப்படி படிப்படியான சட்ட திருத்தங்கள் மூலம் நாட்டின் அரியவகை இயற்கை வளமான நிலக்கரி தனியார்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது.

93-ல் துவங்கி 2010 காலகட்டம் வரை சுமார் ஐந்து முறை சுரங்கச் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 2006-ம் ஆண்டு நிலக்கரிச் சுரங்கத்தில் நூறு சதவீதம் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க வகை செய்யும் சட்ட திருத்தமும் நிறைவேற்றப்பட்டு விட்டது.

நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்படும் முறை

1993-க்கு முன் நிலக்கரித் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கு தெளிவான கொள்கை ஏதும் அரசிடம் இல்லை. மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான இந்திய நிலக்கரி நிறுவனமும் (Coal India Limited – CIL ) மற்றும் சிங்கரேனி நிலக்கரிச் சுரங்க நிறுனமும் (Singareni Collieries Company Limited – SCCL) நிலக்கரி ஒதுக்கீட்டை செய்து வந்தன. பொதுவாக அனல் மின் நிலையங்கள் போன்ற அரசுத் துறை நிறுவனங்களுக்கு மாநில அரசின் பரிந்துரைக் கடித்தத்தின் அடிப்படையிலும், உற்பத்தித் தேவையின் அடிப்படையிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை நிலக்கரி அமைச்சகச் செயலாளரைத் தலைவராகவும் வேறு தொடர்புடைய அமைச்சகங்களை உறுப்பினர்களாகவும் கொண்ட நிலக்கரி ஒதுக்கீட்டுக் கண்காணிப்புக் கமிட்டி ஒன்றே கட்டுப்படுத்தியது.

மாறிவரும் பொருளாதாரச் சூழலில் பல்வேறு தனியார் நிறுவனங்களும் நிலக்கரி ஒதுக்கிட்டுக்காக விண்ணப்பிக்கத் துவங்கிய பின், நிலக்கரி ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும்  என்பதை 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி நிலக்கரித் துறைச் செயலாளர் முன் நடந்த கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்படுகிறது. அதனடிப்படையில், நிலக்கரித் துறை அமைச்சருக்கு ஜூலை 16-ம் தேதி ஒரு குறிப்பு அனுப்பப்படுகிறது. அதில், இந்திய நிலக்கரி நிறுவனம் சப்ளை செய்யும் நிலக்கரியின் விலைக்கும் நிலக்கரித் தொகுப்புகளுக்கான உரிமத்தை எடுத்த நிறுவனங்கள் சப்ளை செய்யும் நிலக்கரியின் விலைக்கும் பெரும் வேறுபாடுகள் இருப்பதாகவும், இதன் காரணமாக உரிமங்கள் எடுத்த நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2004-ம் வருடம் ஜூன் மாதம் நடந்த கூட்டத்திலேயே நிலக்கரித் தொகுப்புகளை ஒதுக்கீடு செய்ய போட்டி ஏல முறையைப் (Competitive bidding) பின்பற்ற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பழைய கண்காணிப்புக் கமிட்டியின் மூலம் ஒதுக்கீடு செய்யும் முறையையே மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் இன்று வரை பின்பற்றி வந்துள்ளது. இதற்கு பிரதமர் அலுவகத்திலிருந்தும் ஒப்புதல் கடிதம் கிடைத்திருக்கிறது.

போட்டி ஏல முறை பின்பற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்ட நாள்  (28/06/2006) வரை சுமார் 39 தொகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதே 2006-லிருந்து 2009 வரை சுமார் 145 நிலக்கரித் தொகுதிகள் அதே பழைய முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது இந்த விவகாரம் வெடித்திருப்பதைத் தொடர்ந்து விளக்கமளித்துள்ள பிரதமர் அலுவலகம், மக்களுக்கு குறைவான விலையில் நிலக்கரியைக் கொண்டு, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் (இரும்பு, சிமென்ட், மின்சாரம், etc) கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நிலக்கரியை அடிமாட்டு விலைக்கு விற்றுள்ளோம் என்று சொல்லியிருக்கிறது. இந்த வாதத்தில் அடிப்படையிலேயே தவறு இருக்கிறது என்பதைப் பார்க்கும் முன், இதே வாதத்தைத் தான் ஆ.ராசா வார்த்தை தப்பாமல் சொன்னார் என்பதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

93-ம் ஆண்டுக்கு முன், நிலக்கரியைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் தான் சுரங்க உரிமை வழங்கப்பட்டது – ஆனால், அதன் பின்னர் செய்யப்பட்ட பல்வேறு சட்டதிருத்தங்களைத் தொடர்ந்து தற்போது வெறும் சுரங்கத் தொழில் மட்டுமே செய்யும் நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிமெண்டு, இரும்பு மற்றும் மின்சார உற்பத்தியில் எந்த சம்பந்தமும் இல்லாத வெறும் சுரங்க நிறுவனங்களுக்குக் கூட உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பொருள் என்ன? அதாவது, அரசாங்கத்திடமிருந்து நிலக்கரித் தொகுப்புகளை அடிமாட்டு விலைக்கு வாங்கும் தனியார் நிறுவனங்கள், வெட்டியெடுக்கப் பட்ட நிலக்கரியை வெளிச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபமடிக்கின்றன என்பதே.

இன்னொரு புறம், அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் சுரங்கத் தொகுப்பிலிருந்து வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியைக் கொண்டு மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களும் குறைந்த விலைக்கு மின்சாரத்தை விற்பதில்லை. யூனிட் ஒன்றுக்கு சுமார் 17 ரூபாய்கள் வரை அரசிடமிருந்தும் மக்களிடமிருந்தும் கறந்து விடுகிறார்கள்.

மேலும் தனது விளக்கத்தில், அரசாங்கம் நிலக்கரியை லாபமீட்டும் வகையினமாகக் கருதவில்லை என்பதால், அதிலிருந்து லாபம் சம்பாதிப்பது என்கிற கேள்வியே எழவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீண்டும் அதே ஆ.ராசாவின் குரல் ஒலிக்கிறதல்லவா? இந்த வார்த்தைகளின் பொருள்  என்னவென்றால், இந்த நாட்டின் இயற்கை வளங்களையும்  கனிம வளங்களையும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் கூறுகட்டிப் படையல் வைப்பது மட்டும் தான் எங்கள் வேலை, இதில் லாப நட்டக் கணக்குப் பார்ப்பது எங்கள் வேலையில்லை என்பது தான்.

போட்டி ஏல ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்துவதில் உண்டான தாமதம் பற்றி குறிப்பிடும் பிரதமர் அலுவலகம், இதற்கான சட்ட திருத்தத்தை இறுதி செய்வதற்கான வேலைகள் நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. தனியார் மூலதனத்தை உள்ளே நுழைக்க வேண்டிய தேவை இருந்த போது மட்டும் அறக்கப் பறக்க சட்ட திருத்தம் கொண்டு வந்த அரசு, அதை ஒரு முறைப்படுத்த வேண்டும் எனும் போது அதற்கான சட்ட திருத்தத்தைக் கொண்டு வர ஏழாண்டுகளாக இழுத்தடிக்கிறது.

இது ஒருபுறமிருக்க, போட்டி ஏல முறையை அறிமுகப்படுத்த புதிதாக எந்த சட்ட திருத்தமும் தேவையில்லையென்றும், நிலக்கரி ஒதுக்கீடு என்பது நிர்வாக சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், ஒரு நிர்வாக ரீதியிலான வழிகாட்டுதல் விதிமுறையே கூட போதுமானது என்றும் சட்டத் துறை 2004 – 2006 காலகட்டத்தில் நிலக்கரி அமைச்சகத்தோடு நடந்த பல்வேறு கடிதப் போக்குவரத்துகளில் தெளிவுபடுத்தியிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், பிரதமர் வழிகாட்டிய பழைய கண்காணிப்புக் கமிட்டி வழிமுறையிலான ஒதுக்கீடு என்பது அப்பட்டமான ஊழல் என்பது தான்.

இந்த வகையில் அரசுக்கு  ஏற்பட்டுள்ள  இழப்பு 10.67 லட்சம் கோடிகள். இதில், டாடா பவர், ரிலையன்ஸ், ஜின்டால் ஸ்டீல் & பவர், பூஷன் ஸ்டீல் & பவர், அனில் அகர்வால் குழுமம், பிர்லா குழுமம் உள்ளிட்ட 100 தனியார் நிறுவனங்கள் தேட்டை போட்டது மட்டும் சுமார் 4.79 லட்சம் கோடிகள்.

கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை ஊடகங்களில் கசிந்ததைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதாக் கட்சி, இந்தத் திருட்டுத்தனத்தில் அக்கட்சித் தலைவர் நிதின் கட்காரியின் மகனுக்கும் தொடர்பு உண்டு என்கிற ரகசியத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பின் இப்போது அடக்கி வாசிக்கிறது. சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா அரசு செய்த நிலக்கரி ஒதுக்கீட்டில் கட்காரியின் மகனும் பெருமளவுக்கு ஆதாயம் அடைந்துள்ளார் என்பதால், 1.67 லட்சம் கோடி 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் எழுப்பிய சவுண்டை விட 10 லட்சம் கோடி நிலக்கரி ஊழலுக்கு குறைவான அளவில் தான் பா.ஜ.க சவுண்டு விடுகிறது.

2ஜி ஊழலுக்கு பாராளுமன்றத்தை முடக்கும் அளவுக்கு கூச்சலிட்ட போலி கம்யூனிஸ்டு கட்சிகளும், இவ்விவகாரத்தைப் பற்றி பம்மிய குரலிலேயே பேசி வருகின்றன. ஆங்கில ஊடகங்களில் நடந்த விவாதங்களில் தலைகாட்டிய அண்ணா குழுவைச் சேர்ந்த கோமாளிகளோ, “என்னயிருந்தாலும் பிரதமர் யோக்கியமானவரு தான்; அவரு ஊழல் செய்ய மாட்டாரு தான்; லஞ்சம் வாங்க மாட்டாரு தான்… ஆனாலும் ஏதோ தப்பு நடந்து போச்சே” என்கிற ரீதியில் தான் கருத்துத் தெரிவிக்கின்றனர். மேலும் வலுவான சட்டங்களின் மூலம் இது போன்ற ஊழல்களைக் கட்டுப்படுத்தி விட முடியும் என்றும் சொல்கிறார்கள் – ஏறக்குறைய முதலாளித்துவ ஊடகங்களின் கருத்தும் கூட இது தான்.

ஆனால், இங்கே தனியாருக்கு கனிம வளங்களைத் திறந்து விட்டதும், இதுவரை அவர்கள் கொள்ளையிட்டதும் தெளிவாக சட்டப்பூர்வமாகத் தான் நடந்திருக்கிறது. 2ஜி விவகாரத்தை ஆ.ராசா செய்ததை போல் இந்தக் கொள்ளையைத் திட்டமிட்டதில் பிரதமர் நிர்வாகத் தவறுகள் ஏதும் விடவில்லை என்பது தான் இவர்கள் பம்முவதற்குக் காரணம். அனைத்தும் சட்டப்பூர்வமாகவே நடந்திருக்கிறது. சுரங்கங்களைத் தனியாருக்கு விட்டதும் சட்டப்பூர்வமாகத் தான், விலைகளை நிர்ணயித்ததும் சட்டப்பூர்வமாகத்தான், உரிமம் எடுத்தவர்கள் வெளியே நிலக்கரியை விற்றதும் சட்டப்பூர்வமாகத்தான். CAG சொல்வதெல்லாம், வாங்கியதிலும் விற்றதிலும் இருக்கும் மலையளவிலான விலை வேறுபாடுகளையும், அதனடிப்படையில் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதியிழப்பையும் தான்.

CAG அறிக்கையின் படி இழப்பு இருக்கிறது – சரி – ஆனால், எங்கே ஊழல் இருக்கிறது?

முதலில் ஒரு நாட்டின் புவிப்பரப்பின் கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் என்பது அந்த நாட்டு மக்களுக்குச் சொந்தமானது. இந்த இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் – அல்லது அதன் மூலம் பயனடைவதில்  – மக்களுக்கே முன்னுரிமை இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் நிலக்கரியை வெட்டியெடுப்பதிலும், அதைக் கொண்டு செய்யப்படும் பொருளுற்பத்தியும் லாபத்தைப் பிரதான நோக்கமாகக் கொள்ளாமல் சேவையைப் பிரதான நோக்கமாகக் கொண்ட பொதுத்துறை நிறுவனங்களிடம் விட்டிருந்தால் இடைத்தரகர்கள் பயனடைவது என்கிற கேள்வியே எழுந்திருக்காது.

ஆக, ஊழலின் அடிப்படையென்பது, பொதுச் சொத்தை விரல்விட்டு எண்ணக் கூடிய சில தனியார் முதலாளிகளுக்குத் கேள்விமுறையின்றித் திறந்து விட்டதில் தான் துவங்குகிறது. ஊழல் ஒழிப்பு என்பதைப் பற்றிப் பேசும் போது இதைப் புறக்கணித்து விட்டு வெறும் சட்டங்களையும் விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும் பற்றி மட்டுமே பேசுவதில் அர்த்தமில்லை. ஆனால், இதைத் தான் அண்ணா ஹசாரே துவங்கி ஆளும் வர்க்க ஊடகங்கள் வரை செய்கிறார்கள். இந்தக் கோமாளிக் கூத்துகளின் நேயர்களான அப்பாவி நடுத்தர வர்க்கத்தினரும் இதற்குத் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஊழல் ஒழிப்புப் போராட்டங்கள் என்பது எப்படியிருக்க வேண்டுமென்பதற்கான துலக்கமான உதாரண புருஷர்களாய் தண்டாகாரன்யப் பழங்குடிகள் நம் கண்முன்னே சாட்சிகளாய் நிற்கிறார்கள். வளங்களைத் திருடித் தின்ன வரும் ஏகாதிபத்திய மூலதனத்தையும் உள்நாட்டுத் தரகு மூலதனத்தையும் உள்ளே நுழைய விடாது தலையால் தண்ணீர் குடிக்க வைக்கிறார்கள். மறுகாலனியாக்கத்தை எதிர்க்கும் இது போன்ற போர்குணமிக்கப் போராட்டங்களின் மூலம் தான் ஊழலையும் தேசத்தின் வளங்கள் கொள்ளை போவதையும் தடுக்க முடியும்.

________________________________________________________________

– தமிழரசன்
_________________________________________________________________

புதிய ஜனநாயகம் – ஜூலை 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

4

புதிய-ஜனநாயகம்-ஜூலை-2012

புதிய ஜனநாயகம் ஜூலை 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1. ”அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை அரசே வழங்கப் போராட    மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மாணவர்களின்     கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் இணைந்து நடத்திய பேரணி மற்றும் மாநாடு.

2. பிரணாப் முகர்ஜி – அரசுத் தலைவராகிறார், ஒரு பார்ப்பன அரசியல் நரி!

3. பீரங்கி ராஜீவ்….. கேம்ஸ் கல்மாடி…. டான்சி ராணி…. சுரங்கம் ரெட்டி… கரி சிங்தி கல்லுளிமங்கன்!

4. ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்!  
தாழ்த்தப்பட்டோர் செருப்பு அணிவதைத் தடைசெய்வது தொடங்கி, கலப்பு மணம் புரிந்து கொண்ட தம்பதியினரைக் கௌரவக் கொலை செய்வது வரை தீண்டாமையும் சாதி ஆதிக்க வெறியும் தமிழகத்தில் கோலோச்சி வருகின்றன!

5. ரூபாய் மதிப்புச் சரிவு, பெட்ரோல் விலை உயர்வு: மறுகாலனியாக்கத்தின் கோரவிளைவு!

6. சந்தி சிரிக்கும் சி.பி.எம்.-இன் கொலை புராணம்!
தொழில்முறை கொலைகார கிரிமினல் கும்பலாக கேரளாவில் சி.பி.எம். கட்சி சீரழிந்துவிட்டது.

7. முல்லைப்பெரியாறுசிறுவாணி: – கேரள அரசின் இனவெறிக்கு எதிராக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள்!

8. புதை மணலில் சிக்கியது இந்தியப் பொருளாதாரம்!                             
பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, தனியார்மயத்தை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அபாயகரமான திசையில் நாட்டைத் தள்ளுகிறது மன்மோகன் சிங் கும்பல்.

9. அரசு பயங்கரவாதத்தின் அரணாக உச்சநீதிமன்றம்!                          
இந்திய இராணுவச் சிப்பாய்கள் காஷ்மீர் – சட்டிசிங்புராவில் நடத்திய படுகொலையை விசாரிக்கும் பொறுப்பை இராணுவத்திடமே தள்ளிவிட்டுள்ளது, உச்ச நீதிமன்றம்.

10. ஜலீல் அந்த்ராபி படுகொலையும் இந்திய அரசின் கள்ளத்தனமும்

11. கல்விக் கட்டணக் கொள்ளைக்குப் பாதுகாப்பு! தட்டிக் கேட்பவர்கள் மீது அடக்குமுறை!!  -பார்ப்பன ஜெயா அரசின் அட்டூழியம்.

12. ஜெயா ஆட்சி: ஓராண்டில் நூராண்டு வேதனை!
மணல் கொள்ளை, மின்சாரம்-பேருந்துக் கட்டணக் கொள்ளை, கல்விக் கட்டணக் கொள்ளை, வரிக் கொள்ளை எனத் தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது, பார்ப்பன ஜெயா ஆட்சி.

13. கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்….பாகம் – 3
வெளிநாட்டு வங்கிகளில் முதலாளிகள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற காங்கிரசும் பா.ஜ.க-வும் கனவிலும் விரும்பவில்லை.

14. டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவோம்!” – -பெண்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டம்.

15. தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்.   பாகம- 3

16. பாம்புக்கடிக்கு மருந்தில்லை!                                                  
-அரசு மருத்துவனையின் அலட்சியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

17. அகதியாய் வாழ்வதைவிட, மரணமே மேல்!” – –ஈழத் தமிழ் அகதிகளின் கதறல்.

புதிய ஜனநாயகம் ஜூலை 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

போராட்டம் – சிறை! ஒரு பெண் தோழரின் அனுபவம்!!

53

காலை 11 மணியளவில் DPI அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம். காலை 10.30 மணி வரை ஆர்ப்பாட்ட இடத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை. ஆனால், போலிஸ்காரனுக்க மட்டும் படு உஷாராக இருப்பது தெரிந்தது. எப்படி?

நான் 10.30 மணிக்கு DPIஅலுவலகம் முன்பு சென்று தோழர்கள் இருக்கீறார்களா? என்று சுற்றம் முற்றும் பார்த்தேன். யரோ என்னை மெதுவாக அழைப்பது காதில் விழுந்த்து. அவரிடம் சென்றேன். எங்க போறீங்கனு யாரவது கேட்டால், +1 புத்தகம் வாங்க போறோமுனு சொல்லனுமுனு முடிவு செய்து உள்ளே சென்றோம்.

வெளியில் எந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் தொடங்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆகையால், அலுவலகம் முன் இருந்த பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து கொண்டோம். ஒரு போலிஸ்காரர் அருகில் வந்து, ” மேடம் எங்க போகணும்” என்றார். எங்களில் ஒருவர் 17E பஸ்சுக்கு போகணும்னு சமாளித்தோம்.

நாங்கள் சொன்ன பஸ்சும் வந்தது. அந்த போலிஸ்காரர், எங்களிடம் வந்து,”மேடம் நீங்க சொன்ன பஸ் வந்து விட்டது. ஏறுங்கள்” என்றார். அதற்கு நாங்கள்,” இது டீலக்ஸ் பஸ், சாதாரண பஸ்ல தான் போகணும்” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து விட்டோம். இல்லையென்றால், டிக்கட் எடுத்து அவரே எங்களை பஸ்சில் ஏற்றி விட்டுவிடுவார் என்ற பயத்தில்தான்!!!

நாங்கள் இருந்த இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் தான் அதிரும்படியான முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டதால், 150 பேரே, 1000 பேருக்கு சமமாக முழக்கம் இட்டோம்.

அரசுடமையாக்கு, அரசுடமையாக்கு!
தனியார் பள்ளிகள், கல்லூரிகளை

அரசுடமையாக்கு, அரசுடமையாக்கு!

பெண்-தோழர்-சிறை-அனுபவம்உடனே, வந்துவிட்டனர். போலிஸ்காரர்கள் . கலைந்து விடக் கோரி சுற்றி நின்று சமாதானம் பேசினர். அவர்கள் பேச்சுக்கு மயங்க ஆட்கள் கிடையாது. அது தெரிந்தவுடன்,  குண்டுகட்டாக பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் வேனில் ஏற்ற எத்தனித்தனர். குறிப்பாக, போலிஸ்காரர்களின் பயமே அங்கு வெளிப்பட்டது. அதில் ஒரு போலிஸ்காரன்,” எவ்வளவோ, கட்சிகாரனுங்க ஆர்ப்பாட்டம் பண்றானுக, எல்லாம் வெள்ளயும் சள்ளயுமா ஒதுங்கி நிப்பானுங்க, இவனுங்க எங்க இருந்து தான் வரானுங்கனே தெரியமாட்டேங்குது” என்று தலையில் கை வைத்து புலம்பியது தெரிந்தது. கடைசியில்,பெண்களிடமும் வந்து, ”நீங்களாவது வந்து ஏறுங்க” என்றவுடன், நாங்கள் எங்கள் தலைமையிடம் சென்று சொல்லுங்கள் என்றோம். ”இதுங்க, அவனுகளுக்கு மேலே இருக்கு” என்று உறுமினார்.

உணர்வுபூர்வமாக போரடிய தோழர்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர் ஆகிய எங்களை, ”பொம்பளையா இவளுங்க, தேவிடியா முண்டைகள் மயிரப்பிடித்து ஏத்து” என்று வலுக்காட்டாயமாக இழுத்து, குழந்தைகளின் கழுத்தை மடக்கி, வண்டியில் தள்ளினர்.

ஆனால், எதிர்பார்த்தபடி எளிதில் அடக்கி ஏற்ற முடியவில்லை, அதனால், பகிரங்கமாக அடிக்க முடியாமல், பெண்களை மிகவும் கீழ்த்தரமாக, நயவஞ்சகமாக, கேவலமான முறையில் அசிங்கப்படுத்தினர். பெண் போலிஸை விட்டு, துணிகளை உருவி, முடியினை இழுந்து, குழந்தைகளை பிடுங்கி ஒருவரை நான்கு பேர் இழுப்பது, என வெறி செயல்களை கட்டவிழ்த்து விட்டனர். இதனால், வெளி காயம் ஆகாமல், உள் காயம், கை தூக்க முடியாத வலி,”உடம்பெல்லாம் வலி, எங்க வலின்னு சொல்ல முடியல ” அதிர்ச்சியில் ஒரு தோழருக்கு மாதவிலக்கு வந்தது. அதை கண்டு உறைந்து போனோம்.

இந்த கொடுமைகள் நடுவே, தோழர்கள் எந்த தொய்வும் இன்றி புதிய முழக்கங்களுடன் போரட்டத்தை மேற்கொண்டு எடுத்து சென்றனர். போலிசு குதித்தது.

பெண்-தோழர்-சிறை-அனுபவம்‘ஏய், என்ன பார்த்துக் கொண்டு இருக்கிற, அவங்கள இழுத்து தூக்கி ஏத்து” என்று பெண் போலிசை முறைத்தனர்.

இதற்கு, பதில் தாக்குதல் எங்களுக்கு தெரியும். ஆனால், அமைப்பு கட்டுப்பாடு கருதி கவனத்துடன் செயல்பட்டோம். பதிலடி எதுவும் தராமல், இழுத்த, இழுப்புக்கு செல்லாததே, அவர்களால் தாங்க முடியவில்லையே.

அதன் நடுவிலும், அவர்களின் நயவஞ்சகமாக வேலையை அரங்கேற்றினர். எங்களை இழுப்பது மாதிரி திடீரென விடுவது, இதில், நாங்கள் மாறி, மாறி விழுந்தோம். எழுந்து நிற்கவே முடியாமல், தவித்தோம்.

முழக்கத்தின் மத்தியில், ”கத்துங்க, கத்துங்க வேற வேலை என்ன இருக்குது” என்று நக்கலடித்தனர். போலிஸ் ரவுடிகள் மப்டியில் எங்கள் வளையத்தின் உள்ளே நுழைந்து எங்களை பின்னாலிருந்து தள்ளினர்.

ஆனாலும், பு.மா.இ.மு வின் சங்கிலி மிகவும் வலிமையானதாக இருந்தது அவர்களால், எளிதில் நெருங்க முடியவில்லை. போரட்ட நேரம் அதிகரித்ததற்கு இதுவும் முக்கிய காரணம்.

அனைத்தையும், பொது மக்களும், பார்த்துக் கொண்டே தான் இருந்தார்கள். குழந்தைகள், பெண்களை தள்ளும் போது கவலை அடைந்தனர். பத்திரிகைகாரர்கள் உட்பட. ஒருவழியாக தள்ளிவிட்டார்கள் வண்டியில்.

அவர்களுக்கு தலைவலியும் இங்கிருந்து தான் தொடங்கியது. ஒரு மண்டபத்தில் வைத்தார்கள். மண்டபத்தில் தோழர்கள் சோர்வுடன் காணப்பட்டனர். குழந்தைகள் அழுதனர். குழந்தைகளுக்கு பிஸ்கட், பால் போராடிப் பெற்றோம்.

பெண்-தோழர்-சிறை-அனுபவம்புமாஇமு தோழர்கள் சிறிது நேரத்தில் அங்கேயே நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். மாலையில் வழக்குரைஞர்கள், பேசினர். அனைவரையும் ரிமெண்ட் செய்து இருக்கிறார்கள் என்று கூறினார்கள். ஜெயிலுக்கு போறோம் என்பது பெண்கள் சிலருக்கு கொஞ்சம் கவலையாகதான் இருந்தது. காரணம், வீட்டு சூழ்நிலையே தவிர பயமில்லை.

அனைவரையும் பிரித்து, சரி பார்த்து, போலிசு வண்டியில் ஏற்றினார்கள்.அப்போது, தோழர். கணேசன் பெண்களுக்கு சிறையில் நடக்கும் விசயங்களை தெளிவாக கூறினார். எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று முக்கியமாக நான்கு விசயங்களை கூறினார்.

சைதாப்பேட்டைக் கோர்ட்டுக்கு வண்டி சென்றது.

தொடர்ந்த முழக்கங்கள், பாடல்களுடன் வண்டி சென்றது. இதனை, வெளியில் உள்ளவர்கள் கவனித்து கேட்டனர். அது மட்டுமன்றி, தங்களுக்கு கேட்கவில்லை சத்தமாக சொல்லுங்கள் என்றனர்.

கோர்ட்டும் வந்தது. ஜட்ஜ் ‘அம்மா’ வீட்டின் முன் ஆஜாரானோம். அவங்க கேட்ட கேள்விக்கு காலையில நடந்தத அப்படியே சொன்னோம்.

நைட்டியில் இருந்த ‘அம்மா’ கம்முனு கேட்டுக்குனு திண்டு பூனை மாதிரி உட்கார்ந்திருந்தது. ஒன்றும் சொல்லவில்லை. வழக்குரைஞர்கள் தான் பேசிக்கொண்டே இருந்தார்கள். இதற்கே இரவு 10 மணி ஆகிவிட்டதால், அனைவரும் பாத்ரூம் போக வேண்டிய நிர்பந்தம். இதை கூறினோம். ”இங்க போக முடியாது கோட்ரசு” என்றார்கள். நாங்கள் விடுவதாக இல்லை. அப்ப வண்டியிலேயே, போகலாமா? குழந்தைகளுக்கு அடக்க முடியாது.என்றதும், அங்கேயே, பாத்ரூமுக்கு கூட்டிக் கொண்டு சென்றார்கள். ‘பலத்த பாதுகாப்புடன்’.

பெண்-தோழர்-சிறை-அனுபவம்நாங்க போய்ட்டு வந்தபிறகு, போலிஸ்களும், ” நல்ல வேளை நீங்க கேட்டதால, நாங்களும் போய்கிட்டோம்.” என்றதும், சிரிப்புதான் வந்தது. போகும் வழியில் இரவு உணவு வாங்கி தர வலியுறுத்தினோம். வாங்கிக் கொடுத்தார்கள். பிரித்து உண்ண ஆரம்பிக்கும் போது தான் தெரிந்தது. குழந்தைகளை கணக்கில் எடுக்கவில்லை என்பது. கேட்டால், அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை. உடனே, அனைவரும் பிரித்ததை, அப்படியே போட்டுவிட்டோம். இதையெல்லாம், பார்த்துவிட்டு, எதுவும், பதில் கூறாமல், போலிசு சாப்பிட்டனர். உடனே, தோழர்கள் முழக்கம் இட்டனர். அரண்டு விட்டார்கள். சாலையில் அனைவரும் கவனித்தனர்.

போலிசு, ”எப்படித்தான் இதுங்களை எடுத்துக் கொண்டு, உள்ளே தள்ளுவோமோ?” என்று பேசிக்கொண்டு உணவு மற்றும் தண்ணீர் வாங்கிக் கொடுத்தனர்.

புழல் சிறை, பெரிய கதவு, அதற்கு பின்னும் இரண்டு இரும்பு ஜன்னல் கதவு, அதன் பின் இருட்டில் தெரியும் பெரிய, பெரிய மதில்கள், மற்றும் மதில் மேல் இருக்கும் கம்பிகள் என்று பார்க்கும் போது கொஞ்சம், பயமாக இருந்தது.  அதை மறக்கடித்தது, தோழர்களின் பேச்சு. ”உஷா தோழர் அடிக்கடி சொல்லுவாங்க, பெண்கள் விடுதலை முன்னணினா கம்பீரமா இருக்கனும்னு, இப்ப தான் புரிந்தது”

”என்னனு”

”கம்பிரம், கம்பிரம்ன்னா கம்பியின் பின்புறம்”. என்பது.

பெண்-தோழர்-சிறை-அனுபவம்சோதனை மேல் சோதனை, எந்தன முறை சோதனை? குறைந்தது 15 தடவை. கூப்பிட்டு, பேரை சரி பார்ப்பது, குழந்தைகளை எண்ணுவது, மேல் இருந்து கீழ் வரை தடவி நடு இரவு 1.30 மணி வரை சோதனை. மூன்று இரும்பு கேட்டை தாண்டி, பல சோதனைகளை தாண்டி, உள்ளே அவர்கள் வாக்கி டாக்கியில் ஒருவரை அழைத்து, உள்ளே, “A” பிரிவுக்கு அழைத்து செல்ல சொன்னார்கள்.

வண்டியிலேயே, தலைமையை ஏற்படுத்தினார்கள் தோழர்கள். அதன்படி அமைப்பாக அனைவரும் செயல்பட்டோம். அதிகாலை மணி 2.30 மணி என்பதால், அனைவரும், சோர்ந்த நிலையில் படுத்துவிட்டோம். இரண்டு அறைகளில் வைத்து பூட்டி விட்டார்கள்.

தனி சிறை கொடுத்ததன் காரணம் புரிந்தது!! மற்ற கைதிகளையும், தோழர்களாக மாற்றிவிடுவோம் என்று பயந்தனர் என்று தெரிந்தது. காலை, தட்டும், குவளையும் கொடுத்தார்கள். நாங்கள் படிப்பதற்க்கு நாளிதழ்கள் கேட்டோம். தருவதாக சொல்லிவிட்டு, மாயமானர்கள்.

சாப்பாட்டுக்காக காத்திருந்தோம். சாப்பாடு வந்தது. அரிசி கஞ்சி. தொட்டுக்கொள்ள வேர்கடலை துவையல். ஆசையாக வாங்கி சாப்பிட தொடங்கினால், கஞ்சியில் உப்பு அதிகம், கற்கள், நெல்லு, என அனைத்தும் இருந்தது. ரேஷன் அரிசி தான். சாப்பிட முடியாத அளவு நாற்றம்.

பிறகு, 4 குழுக்களாக பிரித்து, பாடல், நாடகம் போடலாம் என்றனர் தோழர்கள். சிறிது நேரத்தில், இரண்டு தோழர்களுக்கு கைகளை தூக்க முடியாத வலி. குழந்தை தோழர் செயல் இனிக்கு காய்ச்சல். மற்றொருவருக்கு, பேதி.  நான்கு பேரையும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் .

பெண்-தோழர்-சிறை-அனுபவம்ஆனால், அங்கு டாக்டர் இல்லை. இரண்டு மணி நேரத்திற்க்கு பிறகு, வழக்கமான வெள்ளை மாத்திரைகளை கொடுத்தனுப்பினர். தோழர்கள்  சோர்வுற்றனர். மறுபடியும், அடையாள சோதனைகள். முடிவடையாத சோதனைகள்.

மதியம் திரும்பவும் வேகாத சோறு. பார்வையாளர் நேரத்தில், வெளி தோழர்களை, சிறை தோழர்கள் சந்தித்தோம். செவ்வணக்கத்துடன், வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டோம். மாலை, சுற்றுபுறத்தை தூய்மை செய்தோம். உடனேயே, மீண்டும் உள்ளே அடைத்துப் பூட்டியது போலிசு.

மாலை 6 மணிக்கு சிலருக்கு பெயில் வந்ததாக சொல்லி, மீண்டும் சோதனைக்கு அழைத்தது போலிசு. மீண்டும் சோதனை 3 மணி நேரம் நீடித்தது. உடல் அங்கங்கள் அனைத்தும் அடையாளப்படுத்தப்பட்டது. கை விரல்கள், கரு விழிகள், முகம் தனியாக பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. இனி நாங்கள் எங்கிருந்தாலும், எங்கள் விவரம் அவர்கள் விரல் நுனியில்.

நக்சல்பாரி அமைப்பின் அரசியல், அவர்களின் கண்ணில் பீதியாக வழிந்தது. தோழர்கள் ஒவ்வொரு நடவடிக்கையிலும் காட்டிய உறுதி அவர்களை மிரள வைத்தது. ஒரு வழியாக இரவு 9 மணிக்கு வெளியில் அனுப்பினர். வாயிலில், அமைப்புத் தோழர்கள் காத்திருந்தனர். உற்சாகமாக வரவேற்றனர். உடனே, சிறை வாயில் கூட்டத்தை துவக்கினர். போரட்டத்தின் அனுபவங்கள், அதன் வீச்சு இதன் தொடர்ச்சி என்று பல்வேறு அம்சங்களை விளக்கி அடுத்த கட்ட போரட்டத்துக்கு உறுதி ஏற்றனர். தோழர்கள் செவ்வணக்கத்துடன் பிரிந்தோம்.

(தற்போது பெண் தோழர்கள் மட்டும் பிணையில் வெளியே வந்திருக்கிறார்கள். ஆண் தோழர்களுக்கு இன்னும் பிணை கிடைக்கவில்லை. கிடைத்தாலும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளுடன் இருக்குமென்று தோழர்கள் கூறுகிறார்கள். பார்ப்போம்- வினவு)

_____________________________________

– வீரலட்சுமி
_________________________________

வின்சென்ட் செல்வக்குமார்: அல்லேலுயாவில் ஒரு நித்தியானந்தா!

178
மோகன்-சி-லாசரஸ்
மோகன் சி லாசரஸ்

 “ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து எங்களை எகிப்து தேசத்திற்குச் செல்லும்படிக்கு ஆவியினால் வழிநடத்தினார்.  அங்கே சென்ற நாங்கள் செங்கடலின் ஆழத்தில் மறைந்து வாழும் 7 தலையும் 10 கொம்புகளும் கொண்ட மிருகத்தைக் கட்டி ஜெபிக்கும் படிக்கு எங்களை எகிப்துக்கு கொண்டு வந்ததாக ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து சொன்னார்”

“ஆவிக்குரிய உலகத்திற்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். அங்கே ஐநூறு மைல் நீளமும் ஐநூறு மைல் அகலமும் கொண்ட ஒரு பெரிய மைதானம் இருந்தது. அனேக பரிசுத்தவான்கள் கண்களில் கண்ணீரோடும் முகத்தில் அச்சத்தோடும் அந்த மைதானத்தைச் சுற்றி நின்றனர். அந்த மைதானத்தின் நடுவே தங்கமாக ஜொலிக்கும் புத்தகம் ஒன்று இருந்தது. அது மிகப் பெரிதாக இருந்தது திடீரென்று ஒரு எக்காளச் சத்தம் கேட்டது. “திறவட்டும்” என்கிற சப்தம் வெளிப்பட்டது. இரண்டு பெரிய தேவ தூதர்கள் தங்களது ரெக்கைகளை விரித்துப் பறந்து வந்து அந்த புத்தகத்தைத் திறந்தனர். பிரியத்துக்குரிய பிள்ளைகளே… அது தான் உங்கள் பாவக் கணக்குப் புத்தகம். சீக்கிரமே வருவேன் என்று சொன்ன தேவன் இதோ வந்து கொண்டேயிருக்கிறார். அவரைச் சந்திக்க நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா?”

வின்சென்ட்-செல்வகுமார்
”தீர்க்கதரிசி” வின்சென்ட் செல்வகுமார்

நண்பர்களே… குழம்பிப் போகாதீர்கள். நீங்கள் வினவு தளத்தினுள் தான் இருக்கிறீர்கள். இன்னும் இந்த சாத்தானின் தளத்தை ‘தேவ’ பிள்ளைகள் யாரும் ஹாக் செய்து விடவில்லை. மேலே விவரிக்கப்பட்டுள்ள அம்புலிமாமா கதைகள் எல்லாம் ‘தீர்க்கதரிசி’ என்று தமிழகக் கிருத்துவ வட்டாரத்தில் கொண்டாடப்படும் வின்சென்ட் செல்வகுமாரால் சொல்லப்பட்டவைகள் தான்.

‘தீர்க்கதரிசி’ வின்சென்ட் செல்வகுமாரும், இன்னொரு ‘தீர்க்கதரிசி’ சாது சுந்தர் செல்வராஜ் என்பவரும் இணைந்து ஏஞ்சல் டி.வி என்று ஒரு அல்லேலுயா அக்கப்போர் சேனலை நடத்தி வருகிறார்கள். இந்த தொலைக்காட்சியில் இருபத்து நான்கு மணிநேரமும் மேலே சொல்லப்பட்டிருப்பதைப் போன்ற “பரஞ்சோதியும் பாயும் நாகமும்” பாணி தீர்க்கதரிசனங்களை அவ்விருவருமாக சேர்ந்து அவிழ்த்து ஆராதனை செய்து வருகிறார்கள்.

இவர்களது ‘தீர்க்கதரிசனங்கள்’ பெந்தெகோஸ்தெ வட்டாரங்களில் மிகவும் பிரபலம். ஊரில், உலகில் எங்கே நிலநடுக்கமோ, பஸ் விபத்தோ, வெள்ளமோ, கொள்ளை நோயோ எது நடந்தாலும் சரி – அதை விடுங்கள், விலைவாசி உயர்வு பெட்ரோல் விலை உயர்வைக் கூட தேவனின் இரண்டாம் வருகைக்கான அறிகுறிகள் தான் என்பதாக ‘தீர்க்கதரிசனங்கள்’ உரைப்பார்கள். அது மட்டுமல்ல, யாருடைய வாழ்வில் எப்போது ‘ஆவி’ குறுக்கிடும், அது என்ன விதமான ‘தரிசனங்களையும்’ ‘அபிஷேகங்களையும்’ அள்ளித்தரும் என்பது பற்றிய கன்சல்டேசனும் உண்டு.

இப்படி ஊர் உலகத்துக்கே குறி சொல்லும் தீர்க்கதரிசன வரத்தை வின்சென்ட் செல்வகுமாருக்கு அளித்த ‘ஆண்டவர்’ அவரைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை யாரிடம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அதைத் தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருங்கள் – அதற்கு முன் மேற்படி அம்புலிமாமா பற்றி நக்கீரனின் சமீபத்திய அட்டைப்படக் கட்டுரையின் விவரங்களைப் பார்த்து விடுவோம்.

வின்சென்ட் செல்வராஜ் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். மேலே விவரிக்கப்பட்டுள்ள அம்புலிமாமாக் கதைகளை உற்பத்தி செய்யும் பாக்டரி ஒன்றை ராமநாதபுரம் அண்ணா நகரில் நடத்தி வருகிறார். அதன் பெயர் ‘தீர்க்கதரிசன மையம்’. முதலில் பத்து குடும்பங்களை சேர்த்துக் கொண்டு ஒரு ஜெப ஆலமாகத் தான் இந்த தீர்க்கதரிசன தொழிற்சாலை துவங்கப்பட்டது. காலப் போக்கில் ஆயிரக்கணக்கான கிருஸ்தவர்கள் வின்சென்டின் கதைகளால் ஈர்க்கப்பட்டு வரத் துவங்கியுள்ளனர். காசும் குவியத் துவங்கியுள்ளது.

வாயில் வந்ததையெல்லாம் உளற ஒரு மேடை; அந்த உளறல்களைக் கேட்க ஒரு கூட்டம்; கேட்டு விட்டு கை நிறைய காசு கொடுக்க சில நூறு முட்டாள்கள் என்று ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறார். கடந்த சில வருடங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துள்ளார். போதுமான அளவுக்கு நண்டு கொழுத்து விட்ட பின் ஊர்மேயத் துவங்கியிருக்கிறது.

சாது-சுந்தர்-செல்வராஜ்
சாது சுந்தர் செல்வராஜ்

அஸ்தரோத்தின் (விபச்சாரம் தொடர்பாக பைபிளில் வரும் பாத்திரம்)  ஆவி என்பது விபச்சாரத்துக்குரியது என்றும், அதை அழிக்கும் வரலாற்றுக் கடமையை தேவன் தன்னிடம் தந்திருக்கிறார் என்றும், இதற்காகவே தன்னை கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணாக மாற்றி வருவதாகவும் நெருங்கியவர்களிடம் சொல்லி வந்திருக்கிறார். அவசரப்பட்டு சிரித்து விடாதீர்கள் நண்பர்களே – காமெடியே இனிமேல் தான் ஆரம்பம். பெண்ணாக மாறி வரும் தனது உடலில் ஆண்டவர் கர்ப்பப் பையையும் உருவாக்கி வருவதாக அடித்து விட்டுள்ளார்.

பெண் குழந்தைகள் வைத்துள்ள விசுவாசிகளிடம் இந்தக் கதையைச் சொல்லி, அவர்கள் வீட்டிலிருந்து பெண் பிள்ளைகள் அணியும் துவைக்காத உடைகளை வாங்கியிருக்கிறார். அவற்றைத் தனிமையில் இருக்கும் போது அணிந்து கொண்டு அலைந்திருக்கிறார். பெண்களை மடியில் அமர வைத்துக் கொள்வது, மேலே கைபோடுவது போன்ற சில்லறை வக்கிரங்களையும் அரங்கேற்றியிருக்கிறார். இந்தக் கூத்துக்களை ‘ஆண்டவராகிய யேசுக் கிருஸ்துவின் பெயரால்’ இராமநாதபுரம் விசுவாசிகள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் பெண்களோடு பாலியல் ரீதியில் பொறுக்கித் தனமாக நடந்திருப்பதும், அதிலும் சின்னப் பிள்ளைகளிடமும் கூட அத்துமீறியிருப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகத் துவங்கியிருக்கிறது. பல பெண்களிடம் தான் ஆணில்லை பெண் என்று சொல்லியே உறவு வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமாக இருந்த பத்து குடும்பங்கள் விலகத் துவங்கியிருக்கிறார்கள் – இதில் அவரது நெருக்கமான உறவினர்கள் குடும்பங்களும் அடக்கம். உச்சகட்டமாக, தேவ லீலைகளின் கவுச்சி நாத்தம் தாங்காமல் அவரது வளர்ப்பு மகனாக சொல்லப்படும் ஜாய்ஸ்டனே விலகியிருக்கிறார்.

விலகியவர்கள் வின்சென்டின் நெருங்கிய கூட்டாளிகளான சாது சுந்தர் செல்வராஜிடமும், மோகன் சி லாசரஸிடமும் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஒரு மொள்ளமாரியின் இதயத்தை இன்னொரு மொள்ளமாரியால் தானே புரிந்து கொள்ள முடியும்? மோகன் சி லாசரஸ் இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கியுள்ளார். மட்டுமின்றி, கடந்த சில வருடங்களாகவே இந்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் எழுந்து வந்த நிலையில், மோகன் சி லாசரஸ் இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து வெளிப்படையாகவே வின்சென்டோடு கூட்டணி வைத்து கொண்டு தனது பங்குக்கு அம்புலிமாமாவின் சுவிசேஷத்தை ஏஞ்சல் டீ.வியில் அளிக்கத் துவங்கியிருக்கிறார்.

டி.ஜி.எஸ் தினகரின் சீடரான மோகன் சி லாசரஸ், தனது குருவைப் போலவே கூசாமல் கட்டுக்கதைகளைத் தொடர்ந்து சொல்லும் திறன் கொண்டவர். உதாரணமாக, சமீபத்தில் அவர் விருதுநகரில் நடத்திய ஜெபக் கூட்டமொன்றில் “பெட்ரோல் விலை உயர்கிறது, அரிசி விலை உயர்கிறது, பருப்பு விலை உயர்கிறது; இதையெல்லாம் தாங்கிக் கொள்ளும் பலனைத் தாருங்கள் ஆண்டவரே” என்று மேடை போட்டு ‘ஜெபிக்கிறார்’ அதையும் அங்கே வந்திருக்கும் தேவ ஆட்டுக்குட்டிகள் எந்தக் கேள்வியுமின்றி கேட்டுக் கொண்டு மார்பில் அடித்து ஜெபிக்கிறார்கள்.  ஆனால், மோகனுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அவரிடம் சரியான ஊடகம் இல்லை.

தற்போது தனது நாலுமாவடி ‘இயேசு விடுவிக்கிறார்’ கம்பெனியை விரிவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கும் மோகனுக்கு வின்சென்டிடம் இருக்கும் ஏஞ்சல் டி.வி ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. இதற்கு பிரதியுபகாரமாக வின்சென்டின் மேல் எழும் புகார்களை மறைக்க இவரும் அவருக்குத் துணை போயிருக்கிறார்.  இன்னொரு தீர்க்கதரிசியான சாது சுந்தர் செல்வராஜ் வின்சென்டின் நேரடிக் கூட்டாளி.

மோகன்-சி-லாசரஸ்
மோகன் சி லாசரஸ்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேன்சி ட்ரஸ் போட்டிக்கு வருவது போல் யேசு கிருஸ்துவைப் போல் வேடமிட்டு தோற்றமளிக்கும் சுந்தர், வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் ஜீன்ஸிலும் டீசர்ட்டிலும் தான் கலக்குவாராம். இப்படித்தான் நித்தியானந்தாவும் அமெரிக்காவில் அலைந்ததாக அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருக்கின்றனர். ஏஞ்சல் டி.வியில் காம்பயரிங் செய்ய வரும் பெண்கள் மேல் கைபோடுவது போன்ற சில்லறை வக்கிரங்களில் துவங்கி முழு பொறுக்கித்தனங்களையும் செய்யக் கூடியவர் தான் சாது சுந்தர் செல்வராஜ். இதில், இவர் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் குடியுரிமை வைத்திருக்கும் சர்வதேச பிரசிங்கியார்.

வின்சென்டின் வளர்ப்பு மகன் ஜாய்ஸ்டன், வின்சென்டிடம் இருந்து விலகிய போது ஏஞ்சல் டி.வியில் தீர்க்கதரிசனம் உரைத்த சாது, ‘ 2011-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தக்காளியைப் பிழிஞ்சா எப்படி சிதறி கிடக்குமோ அந்த மாதிரி நீ உடல் சிதறி செத்துப் போவாய்’ என்று ஆண்டவரின் ‘விருப்பத்தை’ பகிரங்கமான தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார். இன்றுவரை ஆண்டவரின் விருப்பத்தை மீறி நல்ல ஆரோக்கியமாக வாழும் ஜாய்ஸ்டன், மேற்படி விசயத்தையும் நக்கீரன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அம்பலமாக்கியுள்ளார்.

எல்லா பிக்பாக்கெட்டுகளும் சொல்லி வைத்தது போல ஒரே டெக்னிக்கை பயன்படுத்துவது சாமியார்கள் மடாதிபதிகள் உள்ளிட்ட எல்லா மத ஆன்மீக குருக்களுக்கும் பொருந்தும். ஏறக்குறைய நித்தியானந்தா பயன்படுத்திய அதே டெக்னிக்கைத் தான் வின்சென்ட் செல்வக்குமாரும் பயன்படுத்தியிருக்கிறார். நித்தியின் ஆன்மீக செக்ஸ் காண்டிராக்ட் ஷரத்துகளின் படி, செக்ஸின் மூலமும் ஆன்மீக உச்சத்தை அடைய முடியுமாம். இதற்காக நித்தியைக் கிருஷ்ணனாகவும் பக்தைகள் தங்களை ராதையாகவும் பாவித்துக் கொண்டு ஆன்மீக ஆராய்ச்சியில் மூழ்க வேண்டியிருக்குமாம்.

தனது விசுவாசி ராஜ்குமார் என்பவரின் மனைவியின் மேல் தீர்க்கதரிசன வரம் இறங்கியிருப்பதாக ஒரு ஜெபக்கூட்டத்தில் அறிவித்திருக்கிறார் வின்சென்ட். பின்னர் தனியே அந்தப் பெண்ணை அழைத்த வின்சென்ட், மேற்படி தீர்க்க தரிசன வரம் முழுமையடைய வேண்டுமானால் தன்னோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார். அந்தப் பெண்ணோ எதிரே இருப்பது தேவ ஆட்டுக்குட்டியல்ல – ஓநாய் என்பதைப் புரிந்து கொண்டு அங்கேயிருந்து தப்பிச் சென்று தனது கணவர் ராஜ்குமாரிடம் சொல்லி அழுதிருக்கிறார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ராஜ்குமார் போலீசுக்குப் போயிருக்கிறார். சென்னையின் பாரம்பரிய பார்ப்பனக் குடும்பத்து பெண்ணான ஆர்த்தியும் இப்படித்தான் நித்தியானந்தாவிடம் ஏமாந்திருக்கிறார்.

அடுத்து என்ன நடந்திருக்கும் என்று தனியே சொல்ல வேண்டுமா நண்பர்களே? நீங்கள் நினைத்த அதே தான். போலீசு வழக்கம் போல் காசு வாங்கிக் கொண்டு பஞ்சாயத்துப் பேசி ராஜ்குமாரை மிரட்டி விரட்டியடித்து விட்டது.

லோக்கல் ரவுடியாக இருந்தாலும் சரி – ஆன்மீகக் கேடியாக இருந்தாலும் சரி; முதலில் ஓடிவந்து கிரிமினல்களை காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் காக்கி கும்பல் தானே!

இதில் நக்கீரனுக்குப் பேட்டியளித்துள்ள கிறிஸ்தவ உரிமை இயக்கத்தின் தலைவர் ரெவ்ரன்ட் பாஸ்டர் சாம் ஜேசுதாஸ் சொன்னது தான் மொத்த கதையின் அவல நகைச்சுவை. வின்சென்டின் லீலா வினோதங்களை தாங்களும் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டதாகச் சொன்ன ஜேசுதாஸ், “எந்தக் கடவுளுமே நேரில் வந்து தண்டிக்காது, இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வின்சென்ட் செல்வக்குமாரை தண்டிக்க என் இயேசு தான் நக்கீரன் மூலம் வந்திருக்கிறார்” என்று சுவிசேஷம் அருளியிருக்கிறார். அந்தப்படிக்கு சங்கம் வளர்த்த மதுரையின் நக்கீரனார், இறையனாரை மட்டுமல்ல, ஏசு புரோக்கர்களையும் கேள்வி கேட்டவர் என்று இனி வரலாற்றில் பதிந்து கொள்ளலாம்.

சாம் ஜேசுதாஸின் வார்த்தைகளை விட சிறந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வேறு எவராலும் கொடுத்து விடமுடியாது. இரண்டாயிரம் வருடங்களாக ‘ இதோ இயேசு வருகிறார், நாளை வருவார், வெளக்கு வச்சதும் ரவைக்கு வந்துடுவார்.. நடுவுல பஸ்ஸு பஞ்சராயி லேட்டாகுது, ஆனாலும் மாட்டு வண்டி பிடிச்சாவது வந்து சேருவார்’ என்பதையே வார்த்தை மாற்றி வார்த்தை மாற்றிச் சொல்லி கம்பெனியை ஓட்டிக் கொண்டிருக்கும் கிருஸ்தவத்தின் உண்மையான யோக்கியதை இது தான்.

இந்தக் கேடி கிரிமினல்களை இல்லாத ஆண்டவனால் ஒருநாளும் தண்டிக்க முடியாது. தங்கள் வாழ்வை நெருக்கும் சமூகப் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க இந்தக் கயவர்களை நாடும் மக்களின் லௌகீக அறியாமை விலகும் போது ஆன்மீக ஒளியின் பீஸ் பிடுங்கப்பட்டு விடும்.  நித்தியானந்தா துகிலுரிந்த போது மட்டும் கிருஷ்ணனா காப்பாற்ற ஓடிவந்தார்? மக்களிடம் அம்பலப்பட்டு அவர்களே காறித் துப்பிய பின் தானே ஆன்மீக பீடத்திலிருந்து ஒரு காமெடிப் பீஸாக கீழிறங்கியிருக்கிறார்.

மக்கள் தங்கள் மேல் மூடத்தனமான பக்தியும் முட்டாள்தனமான நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள் என்பதும், தங்கள் வாயிலிருந்து வழியும் உளறல்களையெல்லாம் தத்துவங்களாகவும் தீர்க்கதரிசனங்களாகவும் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நிலையும் தான் இந்த அயோக்கியர்களின் மூலதனம். அளவற்ற பணமும் அந்த பணம் தரும் அதிகார வர்க்க பரிச்சையமும், அந்த அதிகாரத் திமிர் தரும் மமதையும் தான் இவர்களை திமிரோடு தவறு செய்யத் தூண்டுகிறது.

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, உங்களில் எவருக்காவது கொஞ்சமும் சூடு சொரணை மிச்சமீதியிருந்தால் அடுத்த முறை உங்கள் பகுதியில் வின்சென்ட் செல்வகுமார், மோகன் சி லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ் மற்றும் இது போன்ற கார்ப்பரேட் பாஸ்டர்கள்  மேடை போட்டு குருடர்களையும் செவிடர்களையும் குணமாக்குகிறோம் என்று வந்தால் செருப்பைக் கழட்டி அடிப்பீர்களா?

அப்படிச் செய்தால் அந்தச் செயலின் நியாயத்தை அந்திக் காலத்தில் தேவன் அங்கீகரிக்கிறாரோ இல்லையோ உங்கள் குடும்பத்தின் பெண் பிள்ளைகளாவது அங்கீகரிப்பார்கள்.

______________________________________

– சாத்தான் லூசிஃபர்

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

__________________________________________

__________________________________________

சந்தை நிலவரம்: நீதிபதி ரேட் 10 கோடி!

11
ஜனார்தன-ரெட்டி
சுஷ்மா சுவராஜுடன் ரெட்டி சகோதரர்கள்

லஞ்சம் பெற்றுக் கொண்டு பிணை வழங்கிய விவகாரத்தில் ஹைதராபாத் சி.பி.ஐ நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி பட்டாபிராம ராவ் கையும் களவுமாகப் பிடிபட்டு பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். கருநாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.கவின் ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி சட்டவிரோதமான முறையில் இரும்புத் தாதுக்களை தோண்டியெடுத்ததாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.

ஜனார்த்தன ரெட்டியுடன் அவரது கொள்ளைக்கு உடந்தையாக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான ராஜகோபால் மற்றும் சிரீலட்சுமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சன்ச்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்க நீதிபதியை இடைத்தரகர்கள் மூலம் அணுகிய ரெட்டி சகோதரர்கள், பத்து கோடி ரூபாய்களை லஞ்சமாகப் பேசிமுடித்து முன் பணமாக மூன்று கோடி ரூபாய்களை நீதிபதிக்கு வழங்கியிருக்கிறார்கள்.

கடந்த மே 11-ம் தேதி பிணை கோரிக்கை விசாரணைக்கு வந்த போது, நீதிபதி பட்டாபிராம ராவ், ஜனார்த்தன ரெட்டிக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கான சொந்த ஜாமீனை ஏற்றுக் கொண்டு பிணை வழங்கியிருக்கிறார். மே 11-ம் தேதியன்று நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது முன்கூட்டியே தயாராக ஐந்து லட்ச ரூபாயுடன் ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் சோமசேகர ரெட்டி ஐந்து லட்ச ரூபாய் ரொக்கத்துடன் தயாராக காத்திருந்துள்ளார். அதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த சி.பி.ஐ, பிணை வழங்கப்பட்டதன் பின்னணியை விசாரித்துப் பார்த்த போது தான், லஞ்ச விவகாரம் அம்பலமாகியிருக்கிறது.

தற்போது நீதிபதி பட்டாபிராம ராவ் உடன் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மகன், ஓய்வு பெற்ற செசன்ஸ் கோர்ட் நீதிபதி சலபதிராவ் மற்றும் அவரது மகன் பாலாஜி, யாதகிரி ராவ் என்கிற ரவுடி மற்றும் வழக்கறிஞர் ஒருவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ஜனார்தன-ரெட்டி
ஜனார்தன ரெட்டி

“நாட்ல எது நடந்தாலும் அது சட்டப்படி நடக்கனும்; நீதிமன்றங்கள் என்ன சொல்கிறதோ அதை அரசியல்வாதிகளும் பிறரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று தான் இன்று வரை நீதித்துறையின் புனித வட்டத்திற்கு  சீரியல் செட் மாட்டிக் கொண்டிருந்த கார்ப்பரேட் ஊடகங்கள் சொல்லி வந்தன. ஆனால் இன்றோ, “ பாவிகளின் பாவங்களைக் கழுவும் கங்கையே பாவப்பட்டு விட்டதே…” காமெடி நடிகர் செந்தில் கணக்காக இழுத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு நீதிபதியே இப்படிச் செய்து விட்டால் மக்களுக்கு வேறு போக்கிடம் ஏது என்று ஆங்கில ஊடகங்கள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கின்றன.

என்னவோ இத்தனை நாட்களும் இந்திய நீதித் துறை யோக்கியமாக இருந்தது போலவும் இந்தச் சம்பவத்தின் மூலம் கறை படிந்து விட்டது போலவும் புலம்பும் இந்த ஊடகங்கள் அழுகி நாறும் நீதித் துறையை ஜாக்கி வைத்துத் தூக்கி நிறுத்த முடியுமா என்று பார்க்கின்றன. ஆனால், நீதித் துறையின் யோக்கியதை என்னவென்பது இதற்கு முன்பே பல்வேறு வழக்குகளில் சந்தி சிரித்துள்ள சம்பவங்கள் நம் கண் முன்னேயே உள்ளன. அது அன்றைய பாபர் மசூதி வழக்கிலாகட்டும்,  நேற்று வெளியான பதனி டோலா படுகொலை வழக்கிலாகட்டும் – எண்ணற்ற வழக்குகளில் நீதி மன்றங்களின் அயோக்கியத் தனங்கள் இதற்கு முன்பும் இரத்த சாட்சியமாய் அம்பலமாகியே இருக்கின்றது.

கொல்கத்தா உயர்நீதி மன்றத்தின் நீதிபதியாய் இருந்த சௌமித்ரா சென் என்பவர், பொருளாதார வழக்குகளில் நீதி மன்றத்தால் பிணைத் தொகையாக பிடித்தம் செய்து வைக்கப்பட்ட பணத்தைக் கையாடல் செய்தது, உத்திர பிரதேச மாநிலம் காஜியாபாத் நகரத்தின் அரசுக் கருவூலத்தில்  இருந்த தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரும் அலகபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் சிலரும் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்து, பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் பதினைந்து லட்சம் லஞ்சமாகப் பெற்றது என்று நீதித் துறையில் புரையோடிப் போயிருக்கும் லஞ்ச ஊழல்கள் பல்வேறு சந்தர்பங்களில் வெளிப்பட்டிருக்கின்றது.

ஆனாலும், நீதிமன்றத்தின் மாண்பு – யோக்கியதை – புனிதம் என்றெல்லாம் சரடு சுத்தி அந்தப் புனித வட்டத்தின் ஒளி மங்கி விடாமல் பார்த்துக் கொள்வதில் ஆளும் வர்க்கத்தின் நலன்கள் அடங்கியிருக்கிறது. கேள்விகளுக்கப்பாற்பட்ட மத நம்பிக்கையைப் போல் நீதித் துறையின் மேல் மக்களுக்கு இருக்கும் பக்தி மயக்கம் குறையாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் தான் அநீதிகளுக்கு எதிரான மக்களின் ஆத்திரத்திற்கு உத்திரவாதமான வடிகால் ஒன்றை ஆளும் வர்க்கத்தால் பராமரிக்க முடிகிறது.

எனினும், அவ்வப்போது இவ்வாறு வெளியாகும் ஊழல்களை எப்படிப் புரிந்து கொள்வது? இந்த வழக்கையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஜனார்த்தன ரெட்டியின் ஓபுலாபுரம் மைனிங் கம்பெனி என்கிற நிறுவனம் பல ஆண்டுகளாக பெல்லாரி மாவட்டத்தின் இரும்புத் தாதுக்களை எந்தக் கேள்வி முறையுமின்றி கொள்ளையடித்து வந்துள்ளது. கருநாடக மாநில பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கியப் பிரமுகரான இவர், அம்மாநில ஆளும் பா.ஜ.க மந்திரி சபையில் மந்திரியாக இருந்தவரும் கூட. இவரது சகோதரர்களும் பாரதிய ஜனதா கட்சியில் எம்.எல்.ஏக்களாக இருக்கின்றனர்.

பட்டாபிராம்-ராவ்
பட்டாபிராம் ராவ்

இந்நிலையில், இரும்புத் தாதுக்களைக் கொள்ளையிட்டுப் பங்கு பிரித்துக் கொள்வதில் ரெட்டிகளுக்கும் பெல்லாரி இரும்புத் தாது ப்ரைவேட் லிமிடெட் (BIOP – Bellary Iron ore Pvt Ltd) எனும் நிறுவனத்துக்கும் ஏற்கனவே தொழில்  போட்டி இருந்துள்ளது. பெல்லாரி மாவட்டத்தில் தோண்டப்படும் இரும்புத் தாதுக்களை அதிகளவில் கொள்முதல் செய்வது ஜிண்டால் எனும் இந்தியத் தரகுக் கார்ப்பரேட் கம்பெனி. இவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளும், அந்த முரண்பாட்டினை காங்கிரசு பயன்படுத்திக் கொள்ள விரும்பியதும்தான் ஜனார்த்தன் ரெட்டி மேலான வழக்குகளை சி.பி.ஐ இத்தனை தீவிரமாக விசாரிக்கக் காரணம்.

குஜராத் படுகொலை வழக்கோ, புருலியாவில் ஆயுதங்கள் தரையிறக்கப்பட்ட வழக்கோ, இன்னும் எண்ணற்ற ஊழல் வழக்குகளில் மத்திய குற்றப் புலனாய்வுத் துறையான சி.பி.ஐ எந்த லட்சணத்தில் விசாரணை நடத்தியது என்பதையும், எத்தனை வழக்குகளில் குற்றவாளிகளைத் தப்ப விட்டுள்ளது எனபதும் யாருக்கும் தெரியாத ரகசியங்களல்ல.  முதலாளிகளுக்கு இடையிலான முரண்பாடுகளினால் அவ்வப்போது வெளியாகும் ஊழல்களில், அந்தந்த சமயத்தில் யாருடைய கை ஓங்கியிருக்கிறதோ என்று காங்கிரசு அல்லது பா.ஜ.க மத்திய அரசு சார்பாக விசாரணையை நடத்துவது தான் சி.பி.ஐயின் யோக்கியதை.

எம்.பி, எம்.எல்.ஏக்கள், மந்திரிகள், ஐ.ஏ.எஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட எண்ணற்றோரின் மேல் எத்தனையோ ஊழல் முறைகேடு வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது. ஆனால் அவையத்தனையையும் ‘சட்டபூர்வமாகவே’ முறியடித்து விட்டுதான் அவர்கள் தங்கள் சேவையைத் தொடர்ந்து வருகிறார்கள். வழக்குகளுக்காக நீதிமன்றத்தை நாடும் சாதாரண மக்களை இழுத்தடிக்கும் அதே நீதிமன்றமும் புலனாய்வு அமைப்புகளும் தான் ஆளும் வர்க்கத்தின் பாதந்தாங்கிகளாக இருக்கின்றன. இந்த உண்மையை மறைக்கத் தான் அவ்வப்போது எதேச்சையாக வெளியாகும் ஊழல் முறைகேடுகளின் மேல் எடுக்கப்படும் கண்துடைப்பு நடவடிக்கைகள் பயன்படுகின்றன.

நீதிமன்றங்களும் போலீசு சிறைச்சாலைகள் உள்ளிட்ட இன்னபிற அரசு இயந்திரங்களின் உண்மை முகத்தை மக்கள் புரிந்து கொள்வதோடு தமக்கான நீதியை இந்த சட்டகத்துக்கு வெளியேதான் போராடிப் பெற வேண்டும் என்று உணர்ந்து கொள்ளும் போது தான் உண்மையான நீதியை நாம் பெற முடியும்.

இறுதியாக இந்த ரெட்டி சகோதரர்களின் கொள்ளைப் பணத்தை வைத்துத்தான் கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றியது பாரதிய ஜனதா கட்சி. தென்னிந்தியாவின் முதல் இந்து அரசு என்று போற்றப்பட்ட இந்த அரசின் யோக்கியதையை எடியூரப்பாவும், அவரை முன்னிறுத்திய ரெட்டி சகோதரர்களும் பறைசாற்றுகின்றனர். ரெட்டி காருவுக்கு மாளிகை இருக்கிறது, ஹெலிகாப்டர் இருக்கிறது என்பது போல நீதிமன்றத்தையும் அவர் ஒரு பத்து கோடி ரூபாய்க்கு முடித்திருக்கிறார். இத்தகைய தளபதிகளைக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தால் காங்கிரசு அரசு செய்யும் பித்தலாட்டங்களை இரண்டு மடங்கு வேகத்தில் செய்யும்.

சாதாரண ஏழை மக்கள் பிணைக்காகவும், அந்த பிணைக்கான குறைந்த பட்ச உத்திரவாதத் தொகை, ரேசன் கார்டுக்காகவும் நாட்கணக்கில் அலையும் போது ஒரு முதலாளி மட்டும் எப்படி பணத்தை வீசி பிணையை மட்டுமல்ல, நீதிபதியையே விலைக்கு வாங்க முடிகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதல் கோபமாக, நடவடிக்கையாக எழும்வரை ரெட்டி காருக்களின் இந்த பணநாயக ஆட்சிதான் கோலேச்சும். அந்தக் கோலை மக்கள் என்று முறிப்பார்கள்?

____________________________________________________________

– தமிழரசன்

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

விருத்தாசலம்: தஷ்ணாமூர்த்தியைக் கொன்ற தனியார் பள்ளி!

12

விருத்தாசலம்-விடிஐ-கொலை

‘‘உள்ளுரில் இருந்து கொண்டே என்னை ஜெயிலில் தள்ளிட்டீங்க இல்ல” என்று தனது உறவினர் நண்பரிடம் பேசிய பேச்சுதான் தூக்கில் தொங்கிய தஷ்ணாமூர்த்தியின் கடைசி குரல் . . .

விருத்தாசலம் ஊரின் எல்லையில் ஆளரவம் இல்லாத பொட்டல் காட்டில் விருத்தகீரிஸ்வரர் எஜுகேஷனல் டிரஸ்ட் சுருக்கமாக வி.இ.டி என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி நடத்தப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் பங்குதாரராக இருந்து நடத்தப்படும் சிறப்பு உடையது இந்தப் பள்ளி. மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் இவர்கள்தான் வகுப்பு எடுக்கிறார்கள்.

27-6-12 அதிகாலை 4 மணிக்கு தஷ்ணாமூர்த்தி என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் மின்விசிறியில் வகுப்பு அறையி்ல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். சக மாணவர்கள் பார்த்து தகவல் சொல்லி பள்ளி நிர்வாகம் அரசு மருத்துவ மனையின் பிணவறையில் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். வருடத்திற்கு 80,000 ரூபாய் பணம் கட்டினேன் என் புள்ளய சாகக் கொடுக்கவா? என மாணவனின் பெற்றோர் கதறிய காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியது.

பெற்றோர்களிடமும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் தற்கொலை பற்றி விசாரித்த போது பள்ளி கூடத்தின் நெருக்குதல்தான் காரணம், இரண்டு நாளாகவே தஷ்ணாமூர்த்தி சரியாக சாப்பிடவில்லை, சரியாக படிக்கவில்லை என்று தெரிந்தது. பெற்றோரை வரச்சொல்லி டி.சி. வாங்கி செல் என பள்ளி நிர்வாகம் தஷ்ணாமூர்த்தியை துன்புறுத்தியதாக சொல்லுகிறார்கள். அதிகாலைமுதல் இரவு வரை படிக்க சொல்வதும் எந்த வசதியும் அற்ற அறையில் சிறைச்சாலையாக வகுப்பறையிலேயே மாணவர்களை அடைத்து வைப்பதும் போன்ற மன உளைச்சல்தான் தற்கொலைக்குத் தூண்டியுள்ளது.

தனியார்மயக்கல்வியின் கொடுமைக்கு 18 வயதுவரை பாசத்துடன் சீராட்டி வளர்த்த ஒரே மகனை பலிகொடுத்த தாயின் பெண்களின் கதறலை நம்மால் பார்க்கமுடியவில்லை. இரத்தம் கொதிக்கிறது.

உள்ளுரில் வசதியாக சுதந்திரமாக மகிழ்ச்சியாக நண்பர்களோடு பெற்றோர்களோடு வாழ்ந்த மாணவன் அதே ஊரில் 2 கி.மீ தூரத்தில் விடுதியில் தங்கி படிக்கும் கொடுமை, மார்க் எடுக்கும் இயந்திரத்தை உருவாக்க மாணவனின் விருப்பத்திற்கு மாறாக அதிகாலை முதல் இரவு வரை தனியார்பள்ளி முதலாளிகள், ஆசிரியர்கள், விடுதி காப்பாளர், என அனைவரும் தொடுத்த  துன்புறுத்தல்தான்  மரணத்திற்கு காரணம். தெரிந்தோ தெரியாமலோ பெற்றோர்கள் சம்மதத்துடன் தஷ்ணாமூர்த்தியின் தற்கொலை நடந்துள்ளது என்பதை அன்று பள்ளிக்கு வந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.

வி.இ.டி.பள்ளி முதலாளிகள் மிகுந்த செல்வாக்கு உடையவர்கள். பள்ளி தாளாளர் அ.தி.மு.க ஒன்றிய பெருந்தலைவர். பங்குதாரர்களோ அரசு மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள். இறந்த மாணவன் தஷ்ணாமூர்த்தியின் பெரிய தந்தை பா.ம.க முன்னால் நகர்மன்ற தலைவர். தந்தையோ நகராட்சியில் பெரும் ஒப்பந்ததாரர். மருத்துவமனையில் தாயாரும் உறவினர்களும் கதறி அழுது கொண்டிருந்தனர். ஆனால் பள்ளியில் எந்த சலனமுமில்லை. விடுதி மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அரியருக்காக 10-ம் வகுப்பு மாணவர்கள் அதே பள்ளியில் தேர்வு எழுத காத்திருந்து எழுதி சென்றனர். அனைத்து கட்சிகாரர்களும் வந்திருந்தனர். அமைதியாக இருந்தனர். மனித உரிமை பாதுகாப்பு மையமும் பெற்றோர் சங்கமும்,” தஷ்ணாமூர்த்தியின் மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகிகளை கைது செய், அனுமதியின்றி நடத்தப்படும் பள்ளி விடுதியை இழுத்துமூடு” என முழக்கமிட்டவுடன் காவல் துறை ஆய்வாளர் சீராளன் பாய்ந்து வந்து.” பள்ளி கேட்டுக்கு வெளியே செல்லுங்கள், வளாகத்தின் உள்ளே சத்தம் போட கூடாது” என சட்டம் பேசினார்.

அதோடு சுற்றி நின்ற பெற்றோர்களை அப்புறப்படுத்த முயன்றார். “கல்வி துறையிடம் கோரிக்கை வைத்து போராடுகிறோம், உரிய அதிகாரிகள் வரும் வரை உள்ளிருப்பு போராட்டம் நடக்கும் தடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை, சட்டம் ஒழுங்கை மட்டும் கவனியுங்கள்” என பலர் முன்னிலையில் பேசியதும் போலீசு ஒதுங்கியது.மேலும் “கல்வி துறையே காவல் துறையே பள்ளி முதலாளிக்கு துணை போகாதே, பதில் சொல் பதில் சொல் தஷ்ணா மூர்த்தியின் மரணத்திற்கு பதில் சொல்!” என்ற கோபமான முழக்கம் போலீசாரை விரட்டியதோடு ஒதுங்கிய பெற்றோர்களை ஒருங்கிணைத்தது.

அரசு பள்ளியில் சம்பளம் வாங்கி தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய் என்ற முழக்கத்தால் ஒதுங்கி மறைவாக நின்றிருந்த பங்குதார ஆசிரியர்கள் ஓடிவிட்டனர். உறுதியான மக்களின் போராட்டம் மாலை 4-00 மணி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வரும் வரை நீடித்தது. சந்தேக மரணம் என வழக்கு போடாமல் தற்கொலைக்கு தூண்டியதாக விடுதி வார்டன் மற்றும் பள்ளி தாளாளர் முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராடிய பெற்றோர்களை சி.இ.ஓ. அறைக்கு பேச அழைத்ததை மறுத்து போராடும் இடத்திற்கு வரவழைத்து பேசினோம். ஏற்கனவே பெற்றோர் சங்கம் மூலம் கடந்த ஆண்டு விடுதி பற்றி புகார் அனுப்பினோம். நடவடிக்கை எடுத்திருந்தால் தஷ்ணாமூர்த்தியை காப்பாற்றியிருக்கலாம். விடுதியை மூட உத்திரவிட்டால் மட்டுமே இங்கிருந்து கலைவோம் என அறிவிக்கவே பள்ளிக்கு மட்டுமே இயக்குனர் அலுவலகம் அங்கீகாரம் தருகிறார்கள். விடுதிக்கு அனுமதி யாரும் கொடுப்பதில்லை அதனால் மூடுவதும் சாத்தியமில்லை.யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்று எனக்கு தெரியாது என்றார். இங்கு நடக்கும் தவறுகளை இயக்குநருக்கு பரிந்துரைகளாக அனுப்புவோம் அந்த அதிகாரம் மட்டுமே எனக்கு உள்ளது என்றார்.

இப்படி ஒருமாணவனை அநியாயமாக இழந்துள்ளோம். இரவு வரை வகுப்பு நடத்தி மாணவனை கொன்று விட்டார்கள். காரணமான பள்ளி விடுதி மீது என்ன நடவடிக்கை எடுக்கபோகீறிர்கள், எதற்காக வந்தீர்கள் என பெற்றோர்களும் சங்க நிர்வாகிகளும் கோபமாக கேள்வி கேட்டனா். அதன் பிறகு மனித உரிமை பாது காப்பு மைய வழக்கறிஞர்கள் சட்டம் பேச வேண்டாம், மக்கள் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் மனசாட்சி உள்ள மனிதனாக கல்வி துறை அதிகாரியாக  மாணவர்கள் தங்கும் விடுதி அறையை பாருங்கள், உரிய நடவடிக்கை எடுங்கள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கைகளை கட்டி போட்டுள்ளதை நாங்கள் அறிவோம் என்றனர்.

வகுப்பறைதான் இரவில் படுக்கும் அறை. ஒரு அறைக்கு 50 மாணவர்கள் வரை தங்க வைக்க படுகின்றனர். பெட்டி பாய் அங்கேயே வைத்துக்கொள்ள வேண்டும். கழிப்பறையோ நாலாந்தர சினிமா கொட்டகையைவிட மோசம். கடந்த ஆண்டு பல மாணவர்களுக்கு சொறி சிரங்கு தொற்று நோயால் பாதிக்கபட்டனர். மாணவர்கள் சாப்பிடும் இடமோ சிமெண்ட் மூட்டை அடுக்கிய குடோனில்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்காடு. கட்டிடங்களே இல்லை.படிப்பு என்று மாணவர்களை இடைவிடாது காலைமுதல் இரவு வரை துன்புறுத்துகின்றனர்.

அதிகாலை 4-00மணி முதல் இரவு 10-00 மணி வரை மாணவர்களுக்கு படிப்பு படிப்பு. . .பள்ளியின் தேர்ச்சி 100 சதம் ஆக்கி விளம்பரபடுத்தி முட்டாள் பெற்றோர்களை ஏமாற்றி போட்ட பணத்தை சீக்கிரம் எடுக்க வேண்டும். இதற்கு மாணவர்களை எந்த அளவிற்கு கொடுமை படுத்த முடியுமோ? அந்தளவிற்கு செய்யலாம். 9-ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்து விட்டது என்பதற்காக இந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்கள் பலருக்கு கட்டாய டி.சி.கொடுத்துளனர். அவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். இவர்கள் கல்வி திறமையின் லட்சணம் இதுதான்.

உள்ளுர் மாணவனாக இருந்தாலும் கண்டிப்பாக விடுதியில் சேர்க்க வேண்டும்.கேட்கும் பணத்தை கொட்டி அழவேண்டும்.எதிர்த்து கேள்வி கேட்டால் டி.சி. வாங்கி செல்லுங்கள் என அதிகாரம் தூள் பறக்கும். கடந்த ஆண்டு ஒரு மாணவன் சரியாக படிக்க வில்லை என்பதற்காக அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பகுதி நேரமாக இப்பள்ளிக்கு வந்து பாடம் எடுத்தார். அப்போது ஒரு மாணவனை மொட்டை அடித்து துரத்தி விட்டார். அந்த பெற்றோர் இன்று நடந்த முற்றுகை போராட்டத்தில் ஆத்திரம் பொங்க பேசினார். சிறிது நேரத்தில் போலீசார் அவரை அழைத்து சென்று விட்டனர். விடுதி பற்றி பல புகார்களை மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் உரிய கல்வி துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு விடுதியின் கொடுமை தாளாமல் 7 ம் வகுப்பு மாணவன் அதிகாலை வெளியே வந்த போது சமூக விரோதிகளால் கடத்தப்பட்டு திருச்சியில் மீட்கபட்டான். அடிப்படை வசதியற்ற பாதுகாப்பு அற்ற வி.இ.டி பள்ளி விடுதியை மூடு என பெற்றோர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். காவல் துறையுடன் போராடி புகார்மனு மீது வழக்கு பதிவு செய்தோம். இது போன்ற கொடுமைகளை விவரங்களை முழுமையாக சி.இ.ஓ க்கு விளக்கிய பிறகு பள்ளி முழுவதும் அதிகாரிகளும் பெற்றோர் சங்க நிர்வாகிகளும் சுற்றி பார்த்தனா்.

கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன் என சி.இ.ஓ. உறுதியளித்தார். ஆனால் இப்போதே உத்திரவிடுங்கள், பத்திரிக்கையாளரிடம் அறிவியுங்கள் என வற்புறுத்தியதும் மாலை 5.30 மணிக்கு மேல் அனைத்து மாணவர்களும் இப்பள்ளி வளாகத்தை விட்டு சென்று விட உத்திரவிடுகிறேன். 24 மணிநேரத்திற்குள் வகுப்பறையில் இயங்கும் விடுதியை காலி செய்ய வேண்டும் எனவும் உத்திரவிடுகிறேன். விடுதியை தொடர்ந்து நடத்த கூடாது என உத்திரவிடுகிறேன். பள்ளியில் நடை பெற்ற முறைகேடுகள் தொடர்பாக இயக்குநர் மூலம் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கிறேன் என்று பத்திரிக்கையாளர்கள் முன்பாக அறிவிக்க வைத்தோம்.

பிறகு மாலை இறந்த மாணவனுக்கு வீட்டுக்கு சென்றோம் உறவினர்களும் ஊர்காரா்களும் உள்ள நெகிழ்ச்சியோடு மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் மற்றும் பெற்றோர் சங்க நிர்வாகிகள் கையை பிடித்து கொண்டனர். நீங்கள் இல்லையென்றால் ஒன்றும் நடந்திருக்காது எந்த போராட்டமானாலும் கூப்பிடுங்கள் வருகிறோம் என உறுதியளித்தனர்.

படங்களை பார்க்க அதன் மீது அழுத்தவும்

___________________________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

___________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

மின்வெட்டு– மின்கட்டண உயர்வு–பெட்ரோல் விலை உயர்வு ஏன்? பொதுக்கூட்டம்!

3

மின்வெட்டு –  மின்கட்டண உயர்வு –

பெட்ரோல் விலை உயர்வு ஏன்?

கோவன்பொதுக்கூட்டம்

இடம்:
அண்ணா கலையரங்கம் அருகில்,

வேலூர்

நாள்: 02.07.2012,

திங்கள் மாலை 6.00 மணி

தலைமை:

தோழர் த.இராவணன்

சிறப்புரை:

தோழர் காளியப்பன்,  ம.க.இ.க
மாநில இணைச் செயலாளர்,

மகஇக மையக்
கலைக் குழுவின்

புரட்சிகர கலை நிகழ்ச்சி

நடைபெறும்.

அனைவரும் வருக!

 ___________________________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்

படம்- கோ.மணிவர்மா

 ___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

தென் மாவட்டங்களில் டெங்கு! அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!

4

தமிழ்நாடு முழுவதும் நிலவும் மோசமான சுகாதார சீர்கேடுகளே டெங்கு பரவலுக்கு முக்கிய காரணம் !

அரசின் அலட்சியப் போக்கே உயிர் பலிகளுக்கு அடிப்படைக் காரணம் !

மனித உரிமை பாதுகாப்பு மையம் உண்மை கண்டறியும் குழு ஆய்வு முடிவுகள் !

டெங்கு காய்ச்சல் தமிழ் நாட்டை வலம் வந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக 75 பேர் வரை உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சூழ்நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு, 7 பேர் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்தது. அக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பல்வேறு தகவல்களைத் திரட்டி வந்துள்ளனர். அதனடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

உண்மையறியும் குழு உறுப்பினர்கள் :-

  1. க.சிவராசபூபதி, வழக்கறிஞர், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர். ம.உ.பா.மையம்.
  2. தங்கபாண்டி, வழக்கறிஞர், ம.உ.பா.மையம்,துத்துக்குடி
  3. ஜெயந்தி, வழக்கறிஞர், ம.உ.பா.மையம், நாகர்கோவில்
  4. ராமர், ஆதிக்க சாதி எதிர்ப்பு கூட்டமைப்பு
  5. அப்துல் ஜப்பார், வழக்கறிஞர், திருநெல்வேலி
  6. கேபால், ம.உ.பா.மையம், நெல்லை
  7. ராஜபாண்டி, ம.உ.பா.மையம், துத்துக்குடி

கடந்த 26.5.12 அன்று நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகில் உள்ள மருதம்புத்துர்,லட்சுமியூர், ராஜபாண்டி, சுந்தரபாண்டியபுரம் ஆகிய டெங்கு அதிகம் பாதித்த ஊர்களில் நேரில் ஆய்வு செய்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு :-

மருதம்புத்துரைச் சேர்ந்த சுரேஷ்-பிச்சம்மா ஆகியோரின் மகன் விஷ்ணுவயது ஒன்றே முக்கால். காய்ச்சல் வந்தவுடன் குழந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு போகப்பட்டது. அங்கே முதலுதவி கொடுத்து பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 3 வது நாள் இறந்தது.

விஷ்ணுவின் தாத்தா கூறியதாவது :- காய்சல் வந்த 2வது நாள் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றோம். காய்சல் இல்லை என்று கூறினார்கள். மீண்டும் காய்சல் வந்தது. தென்காசி அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். டெங்கு என்று கூறி நெல்லை G.H. கொண்டு போகச் சொன்னார்கள். தென்காசியில் 4 மணி நேரம் காத்திருந்தோம். பின்னர் தான் மருத்துவர் வந்தார். சரியாக கவனிக்க வில்லை.

பென்சா-வயது மூன்று, 3 நாட்கள் காய்ச்சல். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை. அங்கே சாதாரண காய்ச்சல் என்று சொல்லி விட்டனர். ஆரம்ப சுகாதார நிலையத்துக் கொண்டு வந்த போதும் சாதாரண காய்ச்சல் என்று கூறி விட்டனர். நாடி பிடித்துக் கூடப் பார்க்கவில்லை. 3வது நாள் சிறுமி இறந்து விட்டாள்.

டிக்சன்-10 மாதம். பெற்றோர் சபில்தேவ்-ராதா. ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனை திராவிடமணியில் சேர்க்கப்பட்டது. Vomino என்ற மருந்து கொடுத்ததில் குழந்தை 11 மணிநேரம் துங்கியதாக பெற்றோர் தெரிவித்தனர். குழந்தை ஆரோக்யமாக உள்ளதாக கூறியுள்ளனர். அரசு நடத்திய டெங்கு சிறப்பு முகாமில் காட்டிய போது டெங்கு இல்லை என்று கூறிவிட்டனர். 2 நாட்களில் குழந்தை இறந்துவிட்டது.

அபர்சிகா-11 மாதக் குழந்தை. இளையராஜா-மகேஸ்வரி தம்பதியரின் மகள். கடுமையான காய்ச்சலின் காரணமாக இழுப்பு வந்துள்ளது. பின்னர் மூக்கின் வழியாக ரத்தம் வந்து குழந்தை இறந்து விட்டது.

லட்சுமியூரைச் சேர்ந்த 4 மாதக் குழந்தை கிருத்திகா தேவி. இதயத்தில் ஓட்டை இருந்ததாக திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. நெல்லை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பயனின்றி குழந்தை இறந்து விட்டது. இறப்புச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர்கள் மறுநாள் வீடு தேடி வந்து அந்தச் சான்றிதழை திரும்பப் பெற்றுச் சென்று விட்டனர். சான்றிதழை ஜெராக்ஸ் நகல் கூட எடுக்க விடவில்லை. எதனால் அந்தச் சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டது. அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

ராஜபாண்டியைச் சேர்ந்த உஷா நந்தினி என்ற 10 வயது சிறுமியும், சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சீலா என்ற 18 வயது பெண்ணும் டெங்கு அறிகுறிகளுடன் இறந்துள்ளனர்.

கடையநல்லுரில் ஆண்டுதோறும் டெங்கு :-

டெங்கு-காய்ச்சல்-அறிகுறிகள்தமிழ்நாட்டில் டெங்கினால் அதிகபட்சம் 40 பேர் கடையநல்லுரில் தான் இறந்து உள்ளனர். கடையநல்லுர் மற்றும் தட்டான்குளம், சுந்தரபாண்டியபுரம் பகுதிகளில் கடந்த 29.5.12 அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடையநல்லுரைச் சேர்ந்த துராப்ஷா என்பவர் எங்களிடம் கூறியதாவது :- கடையநல்லுரில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் மர்மக்காய்ச்சல் வருவது வழக்கம். பல ஆண்டுகளாக இது இருந்து வருகிறது. இதில் 30,40 பேர் வரை உயிர் இழப்பது வாடிக்கை. இந்த ஆண்டு இந்தக் காய்ச்சல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதால் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றார்.

கடையநல்லுரின் சுகாதார நிலைமை படுமோசம். ஊரின் நடுவே வாய்க்கால் ஒன்று குறுக்கு வெட்டக ஓடுகிறது. இது பாசனக் கால்வாய் என்று சொல்லப்படுகிறது. ஆனால் கால்வாயின் இருபுறமும் உள்ள வீடுகளிலிருந்து மனிதக் கழிவுகள் முழுவதுமாக இதில்தான் திறந்துவிடப்பட்டுள்ளது. இதே வாய்க்கால் கரையில்தான் அரசு மருத்துவமனை, பிண அறை, ஆடு அறுக்கும் வதைக்கூடம் (Slaughter House) அனைத்தும் உள்ளன. எனவே சுகாதாரக் கேடு பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

கடையநல்லுருக்கு குடிநீர் தரும் ஆழ்குழாய்க் கிணறும் இங்கே தான் உள்ளது. நீரேற்று நிலையத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. அதில் கோடிக் கணக்கில் கொசுக்கள் வாசம் செய்கின்றன. ஆற்றிலிருந்து எடுக்கப்படுகின்ற நீரோடு போர் தண்ணீரும் சேர்த்து குடிநீராக வழங்கப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். கடையநல்லுர், புளியங்குடி, தென்காசி போன்ற ஊர்கள் சுகாதார சீர்கேடு நிறைந்தும், பன்றிகளின் சொர்க்கமாகவும் திகழ்வது பலமுறை ஊடகங்களால் அம்பலமாகியுள்ளது. எனவே கடையநல்லுர் எல்லாவித தொற்று நோய்களுக்கும் இருப்பிடமாக விளங்குவதில் வியப்பேதும் இல்லை தான்.

கடையநல்லுரில் குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் டெங்குவினால் உயிர் இழந்து உள்ளனர். டெங்குவினால் இறந்த N.செய்யது மசூது என்பவரது உறவினர் ஜபருல்லா கூறும் போது, “வந்திருப்பது டெங்கு காய்ச்சல் என்று கூறவே இல்லை. குணமாகி விடும் என்று நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். போதுமான சிகிச்சை அளிக்கவில்லை. அதுபற்றிய விவரமும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. கடைசியில் நோயாளி இறந்து விட்டார். இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று ஜபருல்லா கூறினார்.

கடையநல்லுரின் சுகாதார சீர்கேடு மிகவும் பிரபலம். அதனால் தான் டெங்கி-னால் உயிரிழப்பு அங்கே அதிகம். இவ்வளவு பாதிப்புக்குப்பின், திடீரென்று 50 சுகாதாரப் பணியாளர்களை நிர்வகாகம் இறக்கி விட்டுள்ளது. அவர்கள் சாக்கடையை சுத்தம் செய்யவும், குப்பைகளை அள்ளவும், மருந்து தெளிக்கவும் வந்த போது பொதுமக்கள் அவர்களைத் தடுத்து விரட்டி விட்டுள்ளனர். “இதுவரை இந்தப் பக்கமே வராதவர்கள் இன்று மட்டும் திடீரென்று வந்து என்ன செய்யப் போகிறீர்கள். எங்களுடைய சுகாதாரத்தை நாங்களே பார்த்துக் கொள்வோம் போங்கள்” என்று சொல்லி தடுத்துள்ளனர். அந்தளவுக்கு சுகாதாரப் பணிகள் அங்கு நின்று போயிருந்திருக்கிறது.

அறிகுறிகள் என்ன ?

டெங்கு பாதித்தவருக்கு 105 டிகிரி வரை காய்சல். கடுமையான தலைவலி, தலையில் அதிக சூடு, கருப்பு நிறத்தில் வாந்தி, வயிற்றுப் போக்கு, தோலில் தடிப்பு, காய்ச்சல் முற்றிய நிலையில் வலிப்பு, மூட்டுக்களில் வலி, உடல் துளைகளின் வழியாக ரத்தப்போக்கு, சீறுநீர்த் தடை போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு இருப்பதால் உடலின் நீர்ச்சத்து விரைவாக குறைந்து விடும் (De hydration) ஆபத்து உருவாகிறது. அபாய கட்டத்தை நெருங்கும் போது மூக்கு இதர உடல் துளைகள் வழியாக ரத்தக் கசிவு ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது. டெங்கு வைரஸ் ரத்தத்தில் அதிவிரைவில் பெருகுகிறது. இந்த வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டுக்களை (Platelets) அழித்து விடுகிறது. இதன் காரணமாக ரத்தம் அதன் தன்மை மாறி துளைகளின் வழியாக வெளியேறுகிறது. மேலும் ரத்தம் உறைகிற தன்மையும் குறைந்து விடுகிறது.

முதல் உதவி :-

 “பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்சலுக்கு உரிய சிலவகைமருந்துகளைக் கொடுத்து விட்டு நீர்ச்சத்து குறைந்து விடாமலிருக்க பழரசங்கள், துய்மையான குடிநீர், இளநீர் ஆகியவற்றைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரையும் உப்பும் கலந்த கரைசலையும் கொடுக்கலாம் என்று மருத்துவர் மனோகரன் தெரிவித்தார். ரத்தத்தின் மூலப் பொருட்களுள் ஒன்றாகிய பிளேட்லெட்ஸ் வெகுவேகமாக குறைவதால் ரத்தத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட பிளேட்லெட்டை தனியே உடலில் ஏற்ற வேண்டும். பிளேட்லெட் கிடைக்காத போது ரத்தத்தையே ஏற்றலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப் பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றல் குன்றிவிடுவதால் அவருக்கு வேறு வகையான தொற்றோ அல்லது பாதிப்போ ஏற்பட்டால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிர்சேதம் ஏற்படலாம் என்றும் தெரிவித்தனர்.

டெங்குக்கு மருந்து இல்லை :

மருத்துவ அறிவியல் வானளாவ உயர்ந்திருக்கிற இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் டெங்கு காய்சலுக்கு மருந்து இல்லை என்று சொல்கிறார்கள் அலோபதி மருத்துவர்கள். “சில தற்காப்பு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க முடியும், பாதிக்கப்பட்டவரை உடனிருந்து நன்கு கவனிப்பதன் மூலம் காப்பாற்ற முடியும்” என்கிறார் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை முதல்வர் மனோகரன்.

நெல்லை, துத்துக்குடி மாவட்டங்களில் டெங்கினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகின்றனர். அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் தான். அங்கு நேரில் சென்று பார்த்தபோது பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறையால் நோயாளிகள் தரையில் பாய் விரித்து படுக்க வைக்கப்பட்டுள்ளனர். போதிய கவனிப்பு இல்லை. குழந்தைகள் அதிகம் என்பதால் உடன் வருவோரின் கூட்டமும் சேர்ந்து பெருங் கூட்டமாக உள்ளது. நோயாளிகளுக்கு குடிக்க வெந்நீர் போடும் வசதி கூட இல்லை. போதிய மருத்துவர்களோ, பணியாளர்களோ, செவிலியர்களோ இல்லை. டெங்கு பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சை பற்றிய விவரம் கேட்டால் மருத்துவக்கல்லுரி முதல்வர் கூட அதற்குப் பதில் சொல்ல மறுக்கிறார். சுகாதாரத்துறை இயக்குநரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

இப்போது மாவட்ட மருத்துவ அதிகாரி மீரான் மைதீன் பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார். இந்த அதிகாரி பரிசோதனைக் கூடத்தில் டெங்கு வைரஸ் கண்டறியப்பட்டத்தை கண்டித்து ஊழியர்களை கடுமையாகத் திட்டியுள்ளார். ஊழியர் தவறாக சோதனை மேற்கொண்டு தப்பான முடிவினைத் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர் கண்டறிந்தது உண்மைதான் என்று ஆதராப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதன் விளைவாகத்தான் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே மருத்துவ அதிகாரி மீரான் மைதீன் அத்தியாவசியமான எந்த நடவடிக்கையையும் தானும் செய்யமாட்டார். பிறரையும் செய்யவிடமாட்டார் என்று மருத்துவ வட்டாரத்தில் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட உண்மையை பரிசீலித்து உடனடி நடவடிக்கையில் இறங்கியிருந்தால் டெங்கு இந்த அளவுக்குப் பரவ விடாமல் தடுத்திருக்கலாம் என்பது பலரும் கூறும் பொதுக் கருத்தாகும். இதனை ஏற்று அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மீரான் மைதீன் மட்டுமல்ல அரசு எந்திரத்தின் ஒவ்வொரு துறையிலும் பல அதிகாரிகள் இவ்வாறு தான் உள்ளனர். தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற தன்மை. அரசும் சிக்கியவர்களைப் பழிவாங்கி விட்டு பின்னர் பிரச்சினையைக் கிடப்பில் போட்டுவிடுவது வாடிக்கை.

தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை :

டெங்கு பாதித்த நபர்கள் ஆரம்பத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் அங்கு தரமான சிகிச்சை தரப்படவில்லை. மருத்துவ மனை சுத்தம் சுகாதாரமாக இல்லை. இதனால் தனியார் மருத்துவமனைக்கு மக்கள் போக ஆரம்பித்து விட்டனர். ஆலங்குளம் திராவிட மணி மருத்துவமனை, நெல்லை சுதர்சன், முத்தமிழ் மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் இறப்புகள் ஏற்பட்டுள்ளன, அநியாய கட்டணம் வசூலிக்கின்றனர் என்ற போதிலும் தனியார் மருத்துவமனைகளை வேறு வழியின்றி மக்கள் நாடிச் சென்றுள்ளனர்.

வழக்கம் போல தனியார் மருத்துவமனைகள் பழச்சாறும், இளநீரும், சாதாரண மருந்து மாத்திரைகளையும் கொடுத்து ரூ 30 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள், பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதால் மக்கள் கட்டாயமாக தனியாருக்குத் தள்ளப்படுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை டெங்குவினால் இறந்தவர்களில் 90 விழுக்காடு பரம ஏழை மக்களே என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு நேரடியாக ரத்தம் ஏற்றுகின்றனர். ஆனால் தனியாரில் பிளேட்லெட்ஸ் ஏற்றப்படுகிறது. ரத்தம் ஏற்றுவதை விட பிளேட்லெட் ஏற்றுவதே சிறந்த பலனளிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அரசின் தடுப்பு நடவடிக்கை என்ன ?

டெங்கு பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் நீர்நிலைகளில், சாக்கடைகளில் மருந்து தெளிப்பது, குடி தண்ணீரில் குளோரின் கலப்பது, கிராமப்புறங்களில் டெங்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது, நகர்ப்புறங்களில், சுவரொட்டி, துண்டறிக்கை, ஆட்டோ பிரச்சாரம் செய்வது, அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு இவை தவிர வேறு சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

குடிதண்ணீரை மூடிவையுங்கள், காய்ச்சி குடியுங்கள், சிரட்டை, டயர், தேங்காய் மட்டை, நெற்று போன்ற சிறிய கொள்ளளவில் தேங்கும் நல்ல தண்ணீரில் இருந்து தான் டெங்கு கொசு உருவாகிறது. எனவே அவற்றைக் கண்டறிந்து அப்புறப்படுத்துங்கள், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள் என்று அரசு பிரச்சாரம் செய்கிறது. இத்துடன் கடமை முடிந்துவிட்டதாக அரசு கருதுகிறது. வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடித்து வருவதாகவும் அரசு சுகாதாரத்துறை ஊடகங்கள் மூலம் தெரிவிக்கிறது. இது, டெங்கு வருவதற் கான சுற்றுச்சூழல் மக்களால் தான் ஏற்படுவது போன்ற கருத்தை உருவாக்கு கின்றது. ஆனால் உண்மை நிலவரம் அவ்வாறு இல்லை. குப்பைகளை அகற்றுவது, கழிவு நீர் வெளியேற்றும் வசதி, கழிப்பறை வசதி-இவைகள் மிக மோசமான நிலையில் உள்ளன.

உண்மையான காரணங்கள் என்ன ?

நல்ல தண்ணீரில் தான் டெங்கு வைரஸ் உருவாகின்றது என்று சொல்லப் படுவது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. டெங்குவை ஆர்போ வைரஸ்கள் பரப்புகின்றன. மனிதர்களிடமும், கொசுக்களிடமும் மட்டுமே இந்த வைரஸ் குடியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவாது. டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட மனிதர்களைக் கடிக்கும் கொசுக்கள் மூலம் பிறருக்கும் வைரஸ் பரவும். எனவே டெங்கு பரவுதலுக்கு மோசமான சுகாதார சீர்கேடு தான் காரணம். அதிலிருந்து தான் மானாவாரியாக கொசுக்கள் உற்பத்தியாகின்றன. கொசு உற்பத்தியைக் கட்டுப் படுத்தவில்லையானால் நோய் பரவலையும் கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை. ஆனால் தண்ணீரைக் காய்ச்சி குடியுங்கள் என்று அரசு பிரச்சாரம் செய்கிறது. குடிநீருக்கும் டெங்குக்கும் சம்பந்தமே இல்லை.

அரசு தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பொது சுகாதார பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைத்து வருகிறது. எனவே தனியார் முதலாளிகள் லாப நோக்கத்தோடு மட்டுமே செயல்படுபவர்கள், அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்ற வாறு அவர்களது வேலை நடைபெறுகிறது. எனவே எல்லா நிலைகளிலும் சுகாதாரம் பராமரிப்பின்றி நோயுற்றிருக்கிறது கண்கூடு. இதில் கொசு, கிருமிகள், வைரஸ் பரவல் & ஒழிப்பும் அடங்கும்.

மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொறுப்பையும் அரசு கை விடுகிறது. தண்ணீர் லாபத்துக்கென்று மாறிவிட்டது. டெங்கு பாதித்தவருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 4 லிட்டர் சுகாதாரமான (மினரல் வாட்டர்) குடிநீர் தரவேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் மருத்துவ மனைகளில் குடிநீர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது, கட்டணக் கழிப்பறை அனுமதிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் குடிக்க சுடுதண்ணீர் வசதி கூட இல்லை.

அரசு மருத்துவமனைகளுக்கு அன்றாடம் கட்டுக்கடங்காத கூட்டம் வருகிறது. டெங்கு தொற்று போன்ற நேரங்களில் சொல்லவே தேவை இல்லை. இந்தக் கூட்டத்திற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. மருத்துவர்கள், பணியாளர்கள், கருவிகள் இல்லை. கவனிப்பும் இல்லை. அரசு மருத்துவ மனையில் கழிவு நீர் வெளியேற்றம், கழிப்பறை வசதி மிக மோசமாக இருப்பதால் பொது மருத்துவமனைகளுக்குச் செல்ல அஞ்சுவதாக மக்கள் கூறுகின்றனர்.

சோதனைக்கூட வசதி இல்லை. ரத்தத்தில் பிளேட்லெட் அளவைக் கண்டறியும் சோதனைக்கு தனியார் சோதனைக் கூடங்களில் ரூ1500/- கட்டணம். இரண்டு மூன்று முறை சோதனை செய்யும் நிலை ஏற்பட்டால் செலவு கூடுதலாகும். இந்த வசதி அரசு மருத்துவமனையில் குறைவாக உள்ளது. பிளேட்லெட் எண்ணிக்கை 3 லட்சம் இருக்க வேண்டியது 10 ஆயிரத்திற்கும் கீழே வந்துவிட்டால் இறப்பு நிச்சயம் எனும் போது ஏழை நோயாளியின் நிலை பரிதாபத்துக்குரியது.

டெங்கு பாதிப்பு முதலில் பாளை அரசு மருத்துவமனை பரிசோதனைக் கூடத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர்கள் அதை அலட்சியப்படுத்தி சோதனை முடிவு தவறு என்று ஊழியர்களைக் கடிந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவர்கள் டெங்கு பற்றிய விவரங்களை உள்ளமுக்குவதற்கு செய்த முயற்சிகளே பல இடங்களில் வெளிப்பட்டுள்ளது. ஏனெனில் காய்ச்சலில் இறந்த யாருக்கும் அவர்கள் இறப்பு சான்று தரவே இல்லை. தந்ததையும் பறித்துக் கொண்டனர்.

இது போன்ற, மக்களின் சுகாதாரம் தொடர்பான தனிச்சிறப்பான நிலைமைகள் தோன்றும் போது அதை எதார்த்தமாக திறந்த மனதுடன் பரிசீலித்து தீர்க்கும் நடவடிக்கைகளில் இறங்கும் தன்மை நமது அரசுக்கும் அரசு எந்திரத்துக்கும் இல்லை என்பது எமது ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது. இலவசங்களைக் கொடுத்து நலத்திட்டங்கள் என்று கூறும் அரசு, மக்களின் உடல்நலம் தொடர்பான திட்டங்களை அலட்சியப்படுத்துகிறது.

______________________________________________________________

மனித உரிமை பாதுகாப்பு மையம் தமிழ்நாடு
குமரி, துத்துக்குடி மாவட்டங்கள்.

_______________________________________________________

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

15

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

பு.மா.இ.மு தோழர்கள் மீது நடத்திய போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

தனியார் பள்ளிகள், கல்லூரிகளை அரசுடைமையாக்கு! அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கு! போன்ற முழக்கங்களை முன்வைத்து 28.06.2012 காலை டிபிஐ யை முற்றுகையிட்ட 250க்கும் மேற்பட்ட பு.மா.இ.மு தோழர்களை போலீசு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி கைது செய்து சிறையிலடைத்துள்ளது.

சிறுவர்கள், குழந்தைகள் என்றும் பாராது, போலீசார் நடத்திய கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும், பு.மா.இ.முவின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இல்லையேல், எமது போராட்டம் வகுப்புகளைப் புறக்கணிப்பது என்பதோடு மட்டுமல்லாது, வீதியிலும் இறங்கிப் போராடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இது போன்று திருச்சி ஈ.வே.ரா கல்லூரியிலும் மாணவர்கள் போலிசு தாக்குதலைக் கண்டித்து வகுப்புக்களைப் புறக்கணித்து போராடி வருகின்றனர். விழுப்புரத்தில் பு.மா.இ.மு தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்னும் பல இடங்களில் மாணவர்கள் இந்த தாக்குதலைக் கண்டித்து போராடி வருகின்றனர்.

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

_________________________________________________________

– புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை

___________________________________________________

பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை!

20

பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை

அய்.ஏ.எஸ்.சும், ஐ.பி.எஸ்.சும்
அதிகார வர்க்கமும் , அமைச்சர்களும்
பயணப்பட்டு,
அவமானப்பட்ட கல்லூரிச் சாலையே!

இனி நீ பெருமைப்படலாம்
கல்வி தனியார்மயத்திற்கெதிராக போராடிய
பு.மா.இ.மு. தோழர்களின்
போராட்டப் பாதங்களை முத்தமிட்டதால்!

தமிழகமே! தலை நிமிரலாம்
ஜெயாவின் போலிஸ் வெறியை
நடுரோட்டில் நடுங்காமல் சந்தித்த
பு.மா.இ.மு. வின் போர்க்குணத்தால்,
அடிக்கும்போதும், இழுக்கும்போதும்
துடிக்கும் உதடுகள் பொழிந்த முழக்கம்
தமிழக வானில்.. தனியார்மயத்திற்கெதிராக
திரும்பத் திரும்ப எதிரொலிக்கும்..

முற்றுகை சட்டவிரோதமாம்
தன் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு
தங்கமோதிரம் அணிவித்து தம்பட்டமடிக்க
வீணாய் பிறந்த விஜய்
எழும்பூர் மருத்துவமனையை முற்றுகையிட்டபோது
எங்கே போனது உனது சட்டம் – ஒழுங்கு!

பிறந்த குழந்தைக்கு
தாய்ப்பால் கொடுக்கவும் முடியாமல்,
மருத்துவமனையே அல்லோகலப்பட்டு
அற்பன் வருகைக்கு முறம் பிடித்து
திறம் காட்டிய போலீசே,
பொதுமக்கள் நலனுக்காக போராடிய
மாணவர்கள் மீது கைவைக்க
உனக்கேதும் சட்டம் பேச யோக்கியதை உண்டா?

சமூகத்தின் பொதுச்சொத்தான கல்வியை
சுயநல வெறியோடு சேதப்படுத்தி சில்லரை பார்க்கும்
தனியார் பள்ளிகளை தட்டி வைக்க துப்பில்லை,
அனைவருக்கும் இலவசக்கல்வியை அரசே வழங்கிட
போராடியோர் மீது
பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாய் பொய்வழக்கு!

அரசு அங்கீகாரமே இன்றி
அனுமதிக்கப்பட்ட கட்டணத்தையும் தாண்டி
கொள்ளையடிக்கும் சட்டவிரோத தனியார் கல்வி கொள்ளையர்களுடன்
கூடிக்கொண்டு
சமூகவிரோதிக்களுக்கெதிராய் போராடுவோர் மீது
சட்டவிரோதமாகக் கூடியதாக தாக்குதல்!

தனியார் மயத்தின் கூலிப்படையே,
களமாடிய எம் பெண்களின்
இடுப்பிலிருக்கும் கைக்குழந்தைகள் கூட
உன் உடுப்பிலிருக்கும் கைக்கூலித்தனத்தை
வெறுப்புடன் பார்த்ததும்,
வீறிட்டழுது கண்டனம் செய்ததும்
நீ… போட்டுக் கொள்ளும் பொய்வழக்குக்கு
போதுமான சட்டவிரோதங்கள்தான்… இதையும் சேர்த்துக் கொள்!

பேச விடாமல் வாயைப் பொத்தி…
எழுத விடாமல் கையை முறுக்கி…
நடக்க விடாமல் பாடை தூக்கி…
வாழ விடாமல் உழைக்கும் வர்க்கமடக்கி…
கல்வியின் மீது தனியார்மயத்தின் தாக்குதல்,
திணிப்பு எப்படியோ!
அப்படி தோழர்களை வேனில் திணித்த காட்சியின் வழியே..
வெளிச்சம் போட்டுக் காட்டியது ஜெ அரசு
தனியார்மயத் திணிப்பை.
மக்களுக்காக எம் தோழர்கள் வாங்கிய அடிகள்
மறுகாலனியத்தை தகர்க்க
தமிழக அரசியல் வானில் காத்திருக்கும் இடிகள்!

மறுகாலனியாக்க மாமி ஜெயாவின்
தனியார்மய மிருக வெறிக்கு
ஒரு போதும் அடங்காது எம் தலைமுறையின் உரிமைக்குரல்

ஜெயா அரசு யார் பக்கம்…
போலீசும் அதிகார வர்க்கமும் யார் பக்கம்…
போராடும் பு.மா.இ.மு. யார் பக்கம்!
மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
கொளுத்தியெடுக்கும் கொடிய கோடையின் நடுவே
இடியுடன் மழையாய் இறங்கிய தோழர்களே..
போய் வாருங்கள்…
பத்மா சேஷாத்ரி பள்ளியை விட
புழல் சிறை ஒன்றும் அவ்வளவு மோசமானதில்லை
நிறைய கற்றுக் கொண்டு திரும்ப வாருங்கள்,
நிச்சயம் இறுதியில்
நீங்களே வெல்வீர் தோழர்களே!

_______________________________________________________

துரை. சண்முகம்   

செய்தி – டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!!

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________