Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 850

ஈழம்: எதிரி – துரோகிகளுக்கெதிரான கருத்துப்படங்களின் போர் !

ஈழத் தமிழ் மக்களை அகதிகளாய் துரத்தி முல்லைத்தீவில் அடைத்திருக்கும் சிங்கள இனவெறி இராணுவம் இதுவரை எவ்வளவு தமிழ் மக்களை கொன்றிருக்கிறது என்பதற்கு கணக்கில்லை. என்றாலும் உயிரைப் பறிகொடுத்தும், படுகாயமுற்றும் இருக்கும் மக்களின் விவரங்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு தெரிய வருகின்றன. ஆனால் இந்த இனப்படுகொலைப் போரை நடத்தும் சிங்கள இராணுவ வீரர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற கணக்கு மட்டும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஓரிரு ஆயிரம் வீரர்கள் இறந்திருப்பார்கள் என்றும், பலநூறுபேர் பணியை விட்டு ஓடி வந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தனை இழப்பிருந்தும் சிங்கள இராணுவம் எப்படி தொடர்ந்து முன்னேறுகிறது என்பதற்கு முக்கியமான காரணம் இந்திய அரசு செய்து வரும உதவிதான். இதை உதவி என்பதை விட போரை வழிநடத்துவதே இந்தியாதான் என்றால் கூட மிகையில்லை. நவீன ஆயுதங்கள், வீரர்கள், வழிகாட்டும் தளபதிகள் என்று இந்தியா செய்து வரும் உதவியை சிங்களப்பத்திரிகைகளும், சிங்கள அரசியல்வாதிகளும் ஒத்துக் கொள்வதை 29.03.09 தேதியிட்ட ஜூனியர் விகடன் வெளியிட்டிருக்கிறது.

சமீபத்தில் இந்திய அரசால் அனுப்பப்பட்ட இராணுவ மருத்துவக் குழு கூட போரில் காயமுற்ற இந்திய வீரர்களுக்கு சிகிச்சை அளிப்தற்குத்தான் என்ற செய்தியும் இப்போது வெளிவந்திருக்கிறது. போரில் காயமுறும் இந்த வீரர்களை தமிழ் மருத்துவர்களை வைத்து சிகிச்சை கொடுத்தால் விசயம் அம்பலமாகிவிடும் என்பதால் இந்த ஏற்பாடு. மேலும் இந்தியாவில் தேர்தல் முடித்து விடுவதற்குள் புலிகளை முடித்து விடவேண்டுமென இந்தியா விரும்புவதாகவும், அதனால் இன்னும் பல நூறு வீர ர்களையும், போபார்ஸ் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும், போர்க்கப்பல்களையும் உடனடியாக அனுப்பப் போவதாகவும் தெரிகிறது. இது நடைபெறும் பட்சத்தில் முல்லைத்தீவில் இருக்கும் மக்களில் பாதிப்பேர் கொல்லப்படுவது உறுதி.

இந்தியாவின் உதவியை வைத்துத்தான் சிங்கள ராணுவம் பலரைப் பலிகொடுத்தும் களத்தில் நிற்க முடிகிறது. இதுநாள் வரை தமிழ்நாட்டின் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் அனைவரும் நொடிக்கொரு தடவை ஈழத்தின் துயரை பேசி நாடகமாடி வந்தார்கள். தற்போது அனைவரும் கூட்டணி, தொகுதிப்பங்கீடு, என  பொறுக்கித்தின்ன போய்விட்டதால் எல்லாக் கூட்டணிகளிலும் ஈழத்திற்கு எதிரான துரோகிகளும், எதிரிகளும், சந்தர்ப்பவாதிகளும் நிறைந்திருக்கின்றனர். இதனால் எந்த கூட்டணியும் எதிரிக் கூட்டணியைப் பற்றி ஈழப்பிரச்சினைக்காக புகார் தெரிவிக்க இயலாது.

ஈழத்திற்காக போராடிய வழக்குரைஞர்களை தடியடியாலும், மாணவர்களுக்கு பலநாட்கள் விடுமுறை விட்டும் ஒடுக்கியிருக்கிறது அரசு.

இந்நிலையில் ஈழத்திற்காக இன்றும் குரல் கொடுப்பதும், மக்களிடம் பிரச்சாரம் செய்வதுமான வேலைகள் ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகள்தான் செய்து வருகின்றன. அதனுடைய அங்கமாக 25.03.09 அன்று சென்னையில் நடந்த ம.க.இ.க பொதுக்கூட்டத்தில் தோழர் முகிலன் வரைந்த கருத்தப்பட கண்காட்சி பலநூறு மக்களை ஈர்த்தது. அந்தக் கருத்துப்படங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். இந்த ஒவியங்கள் புகைப்படங்களாக எடுத்து எமக்குதவிய நண்பர் முத்துக்குமாருக்கு எங்கள் நன்றி.

இந்த ஒவியங்களை முடிந்த அளவு எல்லோரிடத்திலும் சேர்ப்பதற்கு முயலுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் கூச்சலின் நடுவில் ஈழத்திற்கான தமிழகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்புவதற்கு நமது போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.

(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

eelam_oviyam_011

eelam_oviyam_002

eelam_oviyam_003

eelam_oviyam_004

eelam_oviyam_005

eelam_oviyam_006

eelam_oviyam_007

eelam_oviyam_008

eelam_oviyam_009

eelam_oviyam_010

eelam_oviyam_0011

eelam_oviyam_012

eelam_oviyam_013

eelam_oviyam_014

eelam_oviyam_015

eelam_oviyam_016

eelam_oviyam_0171

 

சென்னையில் வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரித்து ம.க.இ.க பொதுக்கூட்டம்!

வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம் !
போலீசு இராச்சியத்தை முறியடிப்போம் !!

 

பிரச்சினைதான் முடிந்து விட்டதே. வழக்குரைஞர்கள் நீதிமன்றம் திரும்பி விட்டார்களே, பின்னர் ஏன் இந்தப் பொதுக்கூட்டம்?

 

ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் குறிப்பிடத்தக்கது வழக்குரைஞர் போராட்டம். இந்தக் கோரிக்கையை முன்வைத்து சனவரி 30 அன்று துவங்கிய நீதிமன்றப் புறக்கணிப்பு பிப்ரவரி 17 வரை தொடர்ந்த்து. போராட்டத்தில் சோனியா, மன்மோகன், பிரணாப் முகர்ஜி உருவப்பொம்மைகள் எரிந்தன. எதிர்த்த காங்கிரசுக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். படகிலேறி முல்லைத்தீவுக்குப் பயணம் புறப்பட்டார்கள் தூத்துக்குடி வழக்குரைஞர்கள். தமிழகத்தின் மற்றெல்லாப் பிரிவினரின் போராட்டங்களுக்கும் வழக்குரைஞர்களின் போராட்டம் உத்வேகம் கூட்டியது. கருணாநிதி அரசுக்கும் காங்கிரசுக்கும் இது ஆத்திரம் ஊட்டியது.

பிப் 17 – சுப்பிரமணிய சாமி அய்கோர்ட்டுக்குள் நுழைந்தார்.

பார்ப்பன வெறியன், தமிழ் மக்கள் விரோதி, சி.ஐ.ஏ உளவாளி எனப் பன்முகம் கொண்ட அந்த அரசியல் தரகனின் முகத்தில் அழுகிய முட்டை வீசப்பட்டது. நீதிமன்றத்தின் புனிதம் கெட்டது, அரசியல் சட்டத்தின் ஆட்சி குலைந்தது என்ற கூக்குரல்கள் எழுந்தன.

பிப் 19 – வழக்குரைஞர்கள் மீது போலீசின் திட்டமிட்ட தாக்குதல். 60 வழக்குரைஞர்களுக்கு மண்டை, கை கால்கள் உடைந்தன. தடுக்க வந்த நீதிபதிகளுக்கும் அடி. 5 மணி நேரம் தொடர்ந்து நடந்த போலீசின் கோரதாண்டவத்தில் நீதிமன்ற வளாகமோ நொறுக்கப்பட்டது. தொலைக்காட்சிக் காமெராக்களின் கண் முன்னே நடத்தப்பட்ட இந்த வன்முறை வெறியாட்டத்திற்காக ஒரு போலீசுக்காரன் மீது கூட வழக்கு இல்லை. அரசும் ஊடகங்களும் போலீசின் பக்கம் உறுதியாக நின்றன. ஈழப்பிரச்சினையில் கருணாநிதியை எதிர்த்து சண்டமாருதம் செய்த கட்சிகள் யாரும வழக்குரைஞர்களுக்காகப் போராடவில்லை.

பிப்ரவரி 20 முதல் ஒரு மாத காலம் நீதிமன்றங்களைப் புறக்கணித்தனர் தமிழகம் முழுவதுமுள்ள வழக்குரைஞர்கள்.

ஈழத்தின் இராணுவக் கொடுங்கோன்மைக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தமிழகத்தின் போலீசு கொடுங்கோன்மையை உலகுக்கு அறிவித்தது.

அரசியல் சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் மேலாண்மை, வழக்குரைஞர்களின் ஜனநாயக உரிமைகள், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகள் அனைத்தும் காற்றில் பறந்தன. சட்டம் ஒழுங்கு என்ற இரு சொற்கள் மட்டுமே அனைத்தையும் தீர்மானித்தன. இந்த இரு சொற்களின் பொருளையோ போலீசு தீர்மானித்த்து.

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையின் மீது சிங்கள இராணுவம் போர் தொடுத்துள்ளது போல,

இங்கே

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் ஜனநாயக உரிமைகளின் மீது போலீசு போர் தொடுத்துள்ளது.

அங்கே துப்பாக்கி, இங்கே தடிக்கம்பு.

இந்தப் போராட்டத்தில் துவக்கம் முதலே வழக்குரைஞர்களுக்கு ஆதரவாகவும் போலீசு இராச்சியத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்து வரும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்பினர் இந்தக் “குற்றத்துக்காகவே” கைது செய்யப்பட்டனர். போலீசால் தாக்கப்பட்டனர்.

இந்தப் பொதுக்கூட்டத்துக்கும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது. நெடிய போராட்டத்துக்குப்பின், நாளை (மார்ச் 25) பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

பிரச்சினைதான் முடிந்து விட்டதே. வழக்குரைஞர்கள் நீதிமன்றம் திரும்பி விட்டார்களே, பின்னர் ஏன் இந்தப் பொதுக்கூட்டம்?

ஏனென்றால், பிரச்சினை முடியவில்லை. வழக்குரைஞர்களின் புறக்கணிப்புப் போராட்டம் மட்டும்தான் முடிந்திருக்கிறது. இதைச் சொல்வதற்குத்தான் பொதுக்கூட்டம்.

புரியும்படி வேறு ஒரு கோணத்திலும் சொல்ல்லாம். புலிகளை தோற்கடித்து விட்டால், ஈழத் தமிழர் பிரச்சினை முடிந்து விடும் என்கிறார் ராஜபக்சே. ஒப்புக் கொள்ள முடியுமா? முடியாதல்லவா?

இதுவும் அப்படித்தான். பொதுக்கூட்டத்துக்கு வாருங்கள்!

பொதுக்கூட்டம்

எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்

செனைனை

 

25 மார்ச், புதன்கிழமை, மாலை 6 மணி

 

தலைமை:

தோழர் முகுந்தன்,

தலைவர், பு.ஜ.தொ.மு

உரையாற்றுவோர்:

வழக்குரைஞர் ராஜு,

ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

வழக்குரைஞர் சங்கர சுப்பு,

தலைவர், இந்திய மக்கள் வழக்குரைஞர்கள் கழகம்

வழக்குரைஞர் திருமலைராசன்,

முன்னாள் தலைவர், தமிழ்நாடு புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு

தோழர் மருதையன்,

பொதுச்செயலர், ம.க.இ.க

கலைநிகழ்ச்சி: ம.க.இ.க கலைக்குழு.

மக்கள் கலை இலக்கிய கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

மேலும் விவரங்களுக்கு : வினவு (91) 97100 82506

புரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் !

போலி-கம்யூனிஸ்டுகள்


நாங்கசேகுவேராவைச் சொன்னாலும்
ஜெயலலிதா பின்னால் நின்னாலும்
இலக்கு ஒண்ணுதான் தோழர்.

முதலாளித்துவப் போதையில்
மூழ்கிக் கிடக்கும் மக்களை
அந்தப் பாதையிலேயே போய்தான்
அப்படியே புடிக்கணும் !

தோழர் …. மக்கள் இன்னும் தயாராய் இல்லை
அப்புறம் பாருங்க….. நேரா புரட்சிதான் !

அது வரைக்கும் ?

போயசு தோட்டம்தான் !

கேட்டவர் அதிர்ச்சியடைய
‘டோட்டலாய்’ விளக்கினார் தோழர் :

யாருடைய காலில் விழுந்தாலும் – சி.பி.எம்.
தன் கொள்கையை மட்டும் இழக்காது.

மக்கள் விரோதிகள் எவரும் இனி
மார்க்சிஸ்டுகளை விலக்கி விட்டு
அரசியல் நடத்த முடியாது !

அந்தப் புரட்சித் தலைவியே தடுத்தாலும்
‘அம்மா’ சபதம் முடிக்காமல் ‘பொலிட்பீரோ’ அடங்காது.

அப்புறம் எப்போது புரட்சி?

அது இருக்கட்டும் தோழரே,
சி.பி.எம். வரலாற்று ஸ்டேட்டஜியே வேற:

அன்று நேருவை அடையாளம் கண்டோம்
அவரிடம் சோசலிச வாடையை வளர்த்தோம்.

காங்கிரசுக்கு உள்ளே இருந்தே
முற்போக்கு சக்திகளை மோப்பம் பிடித்தோம்.
அப்படியே படிப்படியாய்
தனிக்கடையை விரிச்சோம்.

அப்புறமா … கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம்னு
ஆட்சியைப் பிடிச்சோம்.

அடுத்தது புரட்சி ?

பின்னே ஆயுதம், வன்முறை இல்லாமல்
அனைவருமே சமமாகி சோசலிசம் படைக்க
நம்ம நம்பூதிரிபாடு ஆட்சியிலதான்
நாட்டிலேயே முதன்முதலா
லாட்டரி சீட்டு அடிச்சோம் !

அல்லாவை வென்றெடுத்து
மத நல்லிணக்கம் நிலைநாட்ட
முசுலீம் லீக் கூட்டணி முடிச்சோம்

இந்துக்களிடமும் வர்க்கத்தீயை மூட்டிவிட
சபரிமலையில் மகரஜோதி பிடிச்சோம் !

காசு சேர்த்து நிலத்தை வாங்கி
பண்ணையார்கள் ஆதிக்கம் ஒழிச்சோம்

போர்க்குணத்துடன் போலீசை பயிற்றுவித்து
போய்…. நக்சல்பாரிகளைக் கடிச்சோம் …

இப்படி …. கச்சிதமா கம்யூனிசத்தை முடிச்சோம் !

சரி புரட்சி எப்போது ?

அட ! டாடாவையே வென்றெடுத்தோம்
நந்திகிராமத்தில் நம்ம கட்டுப்பாட்டில் நுழைச்சோம் !

பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் காக்க
விவசாயிகள் மண்டையை உடைச்சோம்.

பெண்களென்னும் பேதம் பார்க்காமல்
புடவையை பிடித்து கிழிச்சோம்.

வர்க்கப் பகைமையை ஒழிக்கத்தான்
சிங்கூர் நந்திகிராமில்
விவசாயி, தொழிலாளி வர்க்கத்தையே ஒழிச்சோம் !

இதுவா புரட்சி !

இது மட்டுமா ! சாதி ஆதிக்கத்தை ஒழிக்க
உத்தபுரம் சுவரை நாங்கதான் இடிச்சோம்.
சிறுதாவூர் தலித் நில பிரச்சனைக்கும்
நாங்கதான் கொடி பிடிச்சோம்
இப்ப, செயல்தந்திர அரசியல்படி
அம்மா தோட்டத்திலேயே அந்தப் பிரச்சனையை புதைச்சோம்.

போர் என்றால் நாலுபேர்
சாகத்தான் செய்வார்கள் என்று
இழவெடுத்த புரட்சித்தலைவி – இப்போது
போர்நிறுத்தம் வேண்டுமென்று
உண்ணாவிரதம் இருந்தது கண்டு
உண்டியலுக்கு வெளியே காணிக்கையாய் கிடந்தோம் !

”ஊரை அடித்து உலையில் போட்ட பானையோ ! – இன்னும்
யாரை மிதிக்கக் காத்திருக்கும் யானையோ” என்று

அம்பிகையைப் பார்த்தவுடன் அந்தக்கால நினைவு வந்தபோதும்,
பாதம் பணிந்த ஓ. பன்னீரும், பஜனை குழுவோரும்
பசியெடுத்த அம்மாவின் பக்கத்தில் நில்லாமல்
ஒரு காதம் விலகி வேண்டி நின்ற போதும்.

ஈழத்தமிழருக்காய் ஈரம் கசிந்து
ஓதம் காத்த அந்தச் சுவரோரம்
அஞ்சாமல் ஒதுங்கிய எங்கள் போர்த்தந்திரம் சும்மாவா ?

இதிலென்ன புரட்சி ?

சமரச சுத்த சன்மார்க்க சபை கலைந்து – எங்கள்
சமரச சித்தாந்த சன்னதியின் தீக்கதிரில் நாக்குழறி
எச்சு ஊறி எங்கள் எச்சூரி பின்னால் திரளுகையில்
என்ன ஒரு கேள்வி இது !
எத்தனை முறைதான் ஓதுவது !

சவுக்கடியும், சாணிப்பாலும் கொடுத்து
கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்டு கட்சியை
ஒழிக்கப் பார்த்தான் காங்கிரசு ! கடைசியில் என்னாச்சு ?
நம்ம துணையில்லாமல்
அவனால் நாடாள முடிந்ததா ?

நள்ளிரவில் எழுப்பி விட்டு
நம் அரசு ஊழியர் வர்க்கத்தை
சிறையில் தள்ளினாளே ஜெயலலிதா
இப்போது என்ன ஆச்சு ?

வலது, இடதாக தா. பாண்டியனையும், வரதராசனையும்
ஜெயலலிதா வளைத்துப் பிடிப்பதைப் பார்த்து
தோட்டத்து சசிகலாவே வாட்டத்தில் பொருமுகிறாள்.

நாம இல்லாமல்
யாராவது இனி அரசியல் நடத்த முடியுமா ?

போதும் … எப்போதுதான் புரட்சி ?

வந்தது கோபம் தோழருக்கு :

அட ! என்னங்க
இவ்வளவு தூரம் விவரம் சொல்கிறேன்
இன்னும் விளங்காமல்
எங்களிடம் வந்து புரட்சி, புரட்சின்னா…. ?
சுத்த புரியாத ஆளா நீங்கள் !?

________________________________________

– துரை. சண்முகம்

ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம்!

22

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 5

map_of_africa_ivory-coastஆபிரிக்கக் கண்டம் பல “அதிரடிச்” செய்திகளுக்குப் புகழ் பெற்றது. அங்கே ஏதோ ஓரு நாட்டில் திடீரெனச் சதிப்புரட்சி நடக்கும், திடீரென ஆட்சி கவிளும், திடீர் திடீரெனக் கிளர்ச்சியாளர்கள் நவீன ஆயுதங்களுடன் தோன்றுவார்கள். மேற்கு ஆபிரிக்காவில் ஒருகாலத்தில் யானைத்தந்தம், தங்கம் ஏற்றுமதி செய்ததால் “ஐவரி கோஸ்ட்” என நாமம் சூட்டப்பட்ட நாட்டிலும் திடீர் கிளர்ச்சியாளர்கள் தோன்றியதால், இன்நாடும் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. வழமைபோல், இத்தடவையும் சர்வதேசப் பார்வை பாரபட்சம் நிறைந்ததாகவேயுள்ளது. உதாரணமாகக் கூறினால், இன்னொரு மேற்காபிரிக்க நாடான நைஜீரியாவில் எண்ணைவளப்பிராந்தியத்தில் வாழும் மக்களின் எழச்சி பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்கள் “ஷெல்” எண்ணை அலுவலகங்களை முற்றுகையிட்டு கீழ் மட்ட அதிகாரிகளைப் பணயம் வைத்ததை எந்தவொரு செய்தி நிறுவனமும் தெரிவிக்கவில்லை.  இந்தப் பிரச்சினை பல வருடங்களாக தொடர்கின்றது.

அப்படியிருக்கையில் ஐவரி கோஸ்டின் திடீர்க்கிளர்சியாளரின் கலகம் பற்றிய செய்திகள் சர்வதேசத் தொடர்பூடகங்களில் முக்கியத்துவம் பெறுவதைப்பற்றிச் சந்தேகப்படாமல் இருக்க முடியாது. மேலும், எமக்குச் சொல்லப்பட்டது போல சாதாரண “சிப்பாய்களின் கலகமாக” மட்டுமிருப்பின், அவர்களின் இராணுவ, அரசியல் பின்ணணி என்ன ? கிளர்ச்சியாளருக்கு ஆதரவளித்த எதிர்க் கட்சித் தலைவர் ஏன் பிரஞ்சுத் தூதுவராலயத்தில் சரணடையவேண்டும் ?

ஐவரி கோஸ்ட் குடியரசு 40 வருடங்களாக சர்வாதிகரிகளினால் ஆளப்பட்டு வந்தாலும், நிலையான அரசு மற்றும் பொருளாதார வளர்ச்சியைக்கண்ட நாடு. மரப்பலகை, கொக்கோ, கோப்பி போன்றவற்றின் ஏற்றுமதி வருமானம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திவிட, அயல் நாட்டவர்கள் இங்கு வேலை தேடிவந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால் உலகம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. நீண்ட காலத்திற்கு பின்பு நடந்த பொதுத்தேர்தலில் ஜனநாயக பூர்வமாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி லோரன்ட் குபாக்போ பதவியேற்ற பின்னர்தான் பிரச்சினைகள் ஆரம்பமாகின.

ic_gbagbo_motta_eng_195முன்னாள் பிரஞ்சுக்காலனியான ஐவரி கோஸ்ட் சுதந்திரமடைந்த பின்னரும் பிரான்சுடனான வர்த்தகத்தொடர்புகள் வழக்கம் போல தொடர்ந்தன. நவகாலனித்துவக் கொள்கைகளின்படி கொக்கோ, கோப்பி போன்றவற்றை பதனிடப்படாத மூலப்பொருட்களாகவே ஐவரி கோஸ்ட் ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. இதற்கென்று தனியான அமைச்சு கூட இயங்கியது. புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் “இந்த மூலப்பொருள் ஏற்றுமதிக்கான அமைச்சின்” தேவைபற்றிக் கேள்வியெழுப்பியுள்ளார். மூலப்பொருட்களை முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை நிறுவவேண்டுமெனவும் கூறியுள்ளார். இவற்றைவிட பிரான்ஸை “தாய்நாடாக” ப் பார்க்கும் அரசியலிலிருந்து விலகி உள்நாட்டுப் பொருளாதார கட்டுமானங்களைச் சீர்திருத்தும் சமுகப் பொருளாதாரத் திட்டங்களை வகுத்திருந்தார்.

ஆபிரிக்காவில் காலனித்துவப் பொருளாதார நலன்களைக் கொண்டிருந்ததை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்ளும் பிரான்ஸ் ஐவரி கோஸ்டில் நடக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தயாராகவில்லை. புதிய ஜனாதிபதி குபாக்கோ எல்லாவற்றிற்கும் பிரான்ஸிலேயே தங்கியிருக்காமல் சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளுடன் நட்புறவுகளை வளர்த்தமையானது, பாரிஸில் எச்சரிக்கைச் சமிக்கையாக எடுக்கப்பட்டது. “ஆபிரிக்கத் தலைவர்களுக்கு ஜனநாயகம் என்பது ஆடம்பரமானது” எனக்கூறிய பிரான்ஸ் மாஜி ஜனாதிபதி ஷிராக்கின் பேச்சில் வெறுப்புத் தெரிந்தது.

27bca_cote_divoire_2004_110322471058610464ஐவரி கோஸ்ட்டின் ஜனாதிபதி பதவி விலகி புதிய தேர்தல்கள் நடாத்தப்படவேண்டுமென்பது கிளர்ச்சியாளர்களின் கோரிக்கை. பிரான்ஸினது விருப்பமும் அதுதான். போர் நெருக்கடியால் ஆட்சி கவிழும் நிலையில், எதிர்க்கட்சித்தலைவரும் தமது நெருங்கிய நண்பருமான உவாத்தராவை வேண்டிய பணம் செலவழித்து ஆட்சிபீடம் ஏற்ற விரும்பியது பிரான்ஸ். தலைநகர் அபிஜானில் சண்டை நெருங்கியவுடனேயே உவாத்தரா ஓடிப்போய் பிரஞ்சுத் தூதுவராலயத்தில் சரணடைந்த மர்மமும் இதுதான்.

புதிதாக ஆரம்பித்துள்ள உள்நாட்டு யுத்தம் நாட்டை இன-மத ரீதியாகப்பிரித்துள்ளதுடன், வெளிநாட்டவர் 1365538778_27c02d97ddமீதான வெறுப்பையும் தூண்டிவிட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த செனூபோ, பம்பரா, மலின்கே இனமக்கள் அயல்நாடுகளான பூர்க்கினா ஃபாசோ, மாலி, கிணி ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாக வாழ்வதுடன் இஸ்லாமிய மதத்தையும் சேர்ந்தவர்கள். உத்தியோக பூர்வ அறிக்கைகளின்படி ஐவரி கோஸ்ட்டின் மொத்தச் சனத்தொகையில் முஸ்லிம்கள் 20 வீதமானவர்கள். தெற்கு மாகாணங்களில் வாழும் குறு, பவுலே (முன்னாள் சர்வாதிகாரியின் இனம்) இனங்களில் 20 வீதமானோர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள். பிரான்சுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் சர்வாதிகாரி புவாஞி தான் பிறந்த இடத்தில் கோடிக்கணக்கான டொலர்கள் செலவிட்டு மிகப்பிரமாண்டமான (வத்திக்கான் சென்ட் பீட்டர்ஸ் பாணியில்) கத்தோலிக்கத் தேவாலயத்தைக்கட்டிப் பெருமை தேடிக்கொண்டவர். அச்சு அசலாக வாத்திக்கானில் உள்ளத்தைப் போல காட்சியளிக்கும் அந்த தேவாலயத்தின், கோபுரத்தின் உயரத்தை குறைத்துக் கட்டும் படி பாப்பரசர் உத்தரவிட்டாராம்.

இன்றைய ஐவரி கோஸ்ட் பிரச்சினையில் வந்தேறுகுடிகளின் பங்கும் முக்கியமாகக் கருதப்படுகின்றது. காலனித்துவக் காலத்திலேயே பிரஞ்சுக்காரர் தமது பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் வேலைக்கமர்த்த அயல்நாடுகளிலிருந்த (பூர்க்கினா ஃபாசோ, மாலி) பெருமளவு கூலித்தொழிலாளர்களை வருவித்தனர். சுதந்திரமடைந்த பின்பும் இவர்களின் குடியேற்றம் தொடர்ந்தது. இதிலே பூர்க்கினாபே என அழைக்கப்படும் பூர்க்கினா ஃபாசோ குடியேறிகளைத் தம்மைவிடத் தாழ்ந்தவர்களாக ஐவரியர்கள் (மரபு வழி ஐவரி கோஸ்ட் பிரஜைகள்) கருதுவது வழக்கம். எதிர்க்கட்சித்தலைவர் உவாத்தரா உணமையில் பூர்க்கினா ஃபாசோவைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சைக்கும் உள்ளானவர். பூர்க்கினாபேக்கள் வாழும் வட மாகாணங்களில்தான் இவரது கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தமை கவனிக்கத்தக்கது. கிளர்ச்சியாளர்கள் வடக்கு மாகாணங்களையே தமது கட்டுப்பாட்டில் விட்டிருந்ததால், அவர்களும் பூர்க்கினாபேக்கள்தான் என பரவலாக நம்பப்பட்டது.  மரபுவழி ஐவரிகோஸ்ட் பிரஜைகளின் மூதாதையர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாலி, பூர்க்கினா ஃபாசோ போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் என்பது உதிரிச்செய்தி.

thomas_sankaraபூர்க்கினா ஃபாசோவை முன்பு ஆட்சிசெய்த, பலராலும் மதிக்கப்பட்ட சோஷலிஸ ஜனாதிபதி தோமஸ் சங்கரா படுகொலைசெய்யப்பட்டபின் ஆட்சியைப்பிடித்த தற்போதைய ஜனாதிபதி கம்பாரே தீவிர மேற்குலகச் சார்பாளர். அங்கேயிருந்துதான் கிளர்ச்சியாளருக்கான ஆயுதத் தளபாடங்கள் அனுப்பப்படுவதாக நம்பப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட சந்தேகங்கள் எல்லாம் ஒன்றுகூடி இப்போது நடப்பது சிப்பாய்க்கலகமல்ல, ஒரு அந்நிய நாட்டுப் ( பூர்க்கினா ஃபாசோ) படையெடுப்பு என உள்ளூர் மக்களைச் சொல்ல வைத்துள்ளது. சர்வதேசச் செய்தி ஸ்தாபனங்கள் கூறியபடி “நீண்டகாலத்திட்டங்களுடன் நிறுவனமயமாகிய” கிளர்ச்சியாளரின் பிரதிநிதி “தமது இயக்கம் பற்றித் தெளிவுபடுத்த” பாரிஸிற்குச் சென்றிருந்தார். இதேவேளை பிரான்ஸில் தங்கியிருந்த முன்னாள் சர்வாதிகாரி புவாஞியின் வாரிசும் (உண்மையிலேயே புவாஞியின் வைப்பாட்டி மகன் என்று கதை அடிபடுகின்றது) உலக வங்கியில் பதவி வகித்த பொருளாதார நிபுணருமான கோனன்பெடி திடீரென நாடு திரும்பியுள்ளார்.

கேனன் பெடி ஒரு வலதுசாரி அரசியற் தலைவரென்பதும், முன்பு இவரின் ஆட்சிக்காலத்தில், நிறவாத தென்னாபிரிக்காவுடன் கூட இவர் உறவுகளை மேற்கொண்டிருந்தார் என்பதும், தெரிந்தவிடயங்களே. பிரான்ஸைப் பொறுத்தவரை தம்மோடு ஒத்துழைக்கும் வலதுசாரிக்கட்சிகளின் தலைவர்களான கேனன் பெடி அல்லது உவாத்தராவை பதவியில் அமர்த்த எத்தனித்தது.  ஆபிரிக்காவில் பிரான்ஸின் மறைமுகமான அரசியல்-இராணுவத் தலையீடுகள் ஒன்றும் புதியவையல்ல. சுதந்திரம் வந்த பின்பும் அபிட்ஜான் நகரில் நிரந்தரமாக இருக்கும் பிரஞ்சு இராணுவ முகாமும், உயரதிகாரிகளாகவும் வர்த்தகர்களாகவும் நிரந்தரமாகத் தங்கிவிட்ட பிரஞ்சுக்காரரும் இந்நாட்டில் இன்னமும் நடப்பது நவ-காலனித்துவ ஆட்சி என்பதைத் தெளிவு படுத்தும். இதற்குத் தடையாக உள்ளூர் மக்களின் நலன்பேணவரும் அப்பாவி அரசியல்வாதிகளான தற்போதைய இடதுசாரி ஜனாதிபதி குபாக்போ போன்றவர்களை வெளியேற்ற எந்த வழிமுறையையும் பின்பற்ற காலனித்துவ வாதிகள் தயாராயுள்ளனர். அதை அவர்கள் நேரடியாகச் செய்யாமல் உள்நாட்டு எதிரிகளை வைத்து செய்துமுடிப்பது தான் நடக்கும் கதை.

_44489082_nestle_afp_203bசுவிட்சர்லாந்தில் இருந்து ஏற்றுமதியாகும் நெஸ்லே சொக்லேட்களை சுவைப்பவர்கள் பலருக்கு, அதன் மூலப்பொருளான கொக்கோ அந்நாட்டில் உற்பத்தியாவதில்லை என்பதும், ஐவரி கோஸ்டில் இருந்து இறக்குமதியாகின்றது என்பதும் தெரியாது.  ஐவரி கோஸ்ட்டின் 1.4 பில்லியன் டாலர் பெறுமதியான கொக்கோ தொழிற்துறை, வருடத்திற்கு 4 வீதம் வளர்ந்து வருகின்றது. ஆனால் லாபத்தில் பெரும்பகுதி சுவிட்சர்லாந்திற்கு செல்கின்றது.செல்வந்த நாடுகளின் குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லெட்டின் உற்பத்தியில், ஐவரி கோஸ்ட்டின் ஏழைக் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படும் வேடிக்கையான உலகமிது. எந்த வித இயற்கைவளமும் இல்லாத ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்காவில் இருந்து தருவித்த வளங்களை வைத்து தான், உலக சந்தையை தமது விற்பனைப் பண்டங்களால் நிரப்பி வருகின்றன. உண்மையில் ஐரோப்பா தான் ஆப்பிரிக்காவில் தங்கி cocoa_gal_01இருக்கின்றது. ஆப்பிரிக்காவில் வாங்கப்படும் மலிவு விலை மூலப் பொருளுக்கும், சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த முடிவுப் பொருளுக்கும் இடையில் கிடைக்கும் நிகர லாபம் தான் ஐரோப்பாவில் செல்வத்தை குவித்து வருகின்றது.  ஆப்பிரிக்கா மட்டும் இல்லையென்றால், ஐரோப்பியர்கள் வறுமையில் வாட வேண்டி இருக்கும். இதனால் மூலப்பொருளின் விலையை முடிந்த அளவு மிகக் குறைவாக வைத்திருப்பது ஐரோப்பாவிற்கு நன்மை பயக்கும். அதற்காக இராணுவத் தலையீட்டை செய்யவும் தயங்க மாட்டார்கள்.

லைபீரியாவிலும், சியாரா லியோனிலும் வைரக் கற்களுக்காக, கொங்கோவில் கணிப்பொறி ”சிப்”களுக்காக… இந்த வரிசையில் சாக்லெட்டுக்காக ஐவரி கோஸ்ட்.  இப்படியே போனால், மீனுக்கும், மரக்கறிக்கும், பழங்களுக்குமாக எந்த நாட்டின் மீது படையெடுப்பார்களோ தெரியாது.  ஏனென்றால் ஐரோப்பிய சந்தைகளை நிரப்பும் உணவுப் பொருட்களின் பெரும்பகுதி ஆப்பிரிக்காவில் இருந்து தான் வருகின்றது.  நாளாந்தம் ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் உணவை விழுங்கும் ஐரோப்பியர்கள், அங்கே பட்டினியால் வருந்தும் மக்களுக்கு உதவி செய்கிறார்களாம்.

– தொடரும் –

உண்மை உண்மை ஒன்றே உண்மை லத்திக் கம்பு ஒன்றே உண்மை!

போலீசின் காட்டாட்சிக்கு எதிரான வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம் ! கருத்துப்படங்கள், முழக்கங்கள் !

-பிப்ரவரி 19, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீசின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து இன்று சென்னையில் வழக்கறிஞர்கள் பேரணி நடைபெறுகிறது. இதற்கு தமிழ்நாடு முழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கில் வக்கீல்கள் வருகிறார்கள் என்பதால் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு பஞ்சுமிட்டாய் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. பேருக்கு இரண்டு போலீசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருக்கும் நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தங்களைத் தாக்கிய போலீசு மீது புகார் கொடுத்தும் இன்று வரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவாகவில்லை என்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத்திற்காக  போர்க்குணத்துடன் போராடிய வழக்கறிஞர்களை ஒடுக்கவேண்டும் என்பதற்காகவே அந்த தடியடி அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இதற்கு நேரடியாக நடவடிக்கை எடுக்காமல் நீதிபதிகள் போலிசுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார்கள். இந்தப் பிண்ணனியை விளக்கும் இந்தப் பிரசுரம் மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு முதலான புரட்சிகர அமைப்புக்கள் வெளியிட்டிருக்கின்றன. தேவை கருதி இங்கே பதிவு செய்கிறோம்.

குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !

தமிழக மக்களது சமூக அறிவுத் தரத்தை குமுதம் பத்திரிகை நிர்ணயிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. தற்போது இந்தப் பணியினை தமிழ் சேனல்கள் செய்து வருகிறது என்றாலும் இவையும் குமுதத்தின் பாணியினையே பின்பற்றி செயல்படுகின்றன. அரசியலோ, சமூக அக்கறையோ எதுவாக இருந்தாலும் ஒரு மலிவான கிசு கிசு ஆர்வம் போல மாற்றித தரும் குமுதம் மக்களின் நேர்மறை மதிப்பீடுகளை அழிக்கும் ஒரு வைரஸ். அதைப் பற்றி ஆய்வு செய்யும் புதிய கலாச்சாரக் கட்டுரையை இங்கே பதிவு செய்கிறோம். இந்தக் கட்டுரை வெளிவந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது,  வாசகர்கள்  எண்ணிக்கை, விலை, பக்கங்கள், விற்பனை விவரம்….. முதலியன இன்று மாறியிருக்கிறது, ஆனால் குமுதம் வழங்கும் சிட்டுக்குருவி லேகியத்தில் எந்த மாற்றமும் இல்லை.

தேர்தல் 2009 – சி.பி.ஐ.க்கு மாமியும், சி.பி.எம்.க்கு சாமியும் !

26

Subramanian Swamy expressed gratitude to the CPI (M), for condemning the incident of some miscreants throwing eggs at him in the Madras High court last month. Dr. Swamy in a letter to the state secretary N.Varadarajan said: please be assured that this support of your party will be remembered by me and reciprocated.

The Hindu, March 11, 2009

பெரியவர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் மறைவுக்குப் பிறகு அவருடைய இடத்தை நிரப்புவதற்குப் பொருத்தமான ஆள் இல்லையே என்று தவித்துக் கொண்டிருந்தார்கள் மார்க்சிஸ்டுகள். எச்சூரி எவ்வளவோ முயன்று பார்க்கிறார். இருந்தாலும் சுர்ஜித் அளவுக்கு அவருக்கு திறமை போதாது. அடுத்த தொங்குநிலைப் பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கான தேர்தல் நெருங்கி வருகிறது. மார்க்சிஸ்டு கட்சியின் எம்.பி நாற்காலிகள் கரைந்து விடும் என்பதும் தெளிவாகத் தெரிந்து விட்டது. இந்த நிலையில் கிடைக்கிற எம்.பி சீட்டுகளை வைத்துக் கொண்டு டெல்லியில் பேரம் பேசி முடிப்பதற்கும், ஒரு மூன்றாவது அணியை செட் அப் செய்வதற்கும் திறமை வாய்ந்த ஒரு தோழர் இல்லாமல் இருப்பது எப்பேர்ப்பட்ட இழப்பு! அந்த இழப்பை ஈடு செய்ய இதோ, சாமி வரம் தந்துவிட்டார்.

ஈழம்: மருது , முகிலன் ஓவியங்கள் !

27

பிரபல ஓவியரான மருது வினவு தளத்திற்காக பிரத்யேகமாக வரைந்த ஓவியத்தை இங்கே பதிவு செய்கிறோம். அவர் புதிய கலாச்சாரம், மற்றும் ம.க.இ.க அரசியல் இயக்கங்களுக்காக பல ஓவியங்களை வரைந்திருக்கிறார். இந்த ஓவியத்திற்கு அவர் கொடுத்த தலைப்பு ஈழமும் இந்திய தமிழக அரசியல்வாதிகளும். ஓவியர் மருதின் தூரிகையில் தீட்டப்படும் ஓவியங்கள்  வினவில் தொடர்ந்து இடம்பெறும்.

eelam_marudhu

ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழரும் ஓவியருமான முகிலன் ஈழம் குறித்து பல ஓவியர்கள் வரைந்த கூட்டு நிகழ்வில் அவர் தீட்டிய ஓவியத்தை இங்கு பதிவு செய்கிறோம். இந்தப் படத்திற்கு விளக்கம் தேவையில்லை. வினவில் அவரது ஓவியங்களை தொடர்ந்து பதிவு செய்வோம்.

eelam_mukilan

 

ஜெயலலிதா: ஈழத்தின் வில்லி நாயகியா? கருத்துப்படம் !

42

jayalalitha-big

(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும் ஈழத்திற்கு தனி மவுசு ! பேசுவதற்கும், நடிப்பதற்கும், உணர்ச்சிகளை அள்ளி வீசுவதற்கும் வேறு எதுவும் இல்லையென்பதால் ஓட்டுக் கட்சிகள் எடுத்திருக்கும் ஆயுதம் ஈழப்போராட்டம்.

ஈழம்: போலீசு இராச்சியமாகிறது தமிழகம்! கருத்துப்படம், முழக்கங்கள்!

highcourt-01

(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

நீதிபதிகளை இவ்வாறு சித்தரிப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகிவிடுமோ? ஆகலாம். “நீதிபதியை அடிப்பது அவமதிப்பில்லை. அடித்ததை சொன்னால் அவமதிப்பா?” என்று கேட்கிறீர்களா – அது அப்படித்தான். சாக்கடைப் பிரச்சினை, குப்பைத் தொட்டிப் பிரச்சினைகளை suo moto வாக (யாரும் மனுச்செய்யாதபோதிலும தானே முன்வந்து) எடுத்துக் கொண்டு நீதி வழங்குபவர்கள் நீதியரசர்கள்.

தமிழக போலீசை காக்க ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் !

உயர்நீதிமன்ற போலீசு தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தந்துள்ள இடைக்கால அறிக்கை, வழக்குரைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. “இதுதாண்டா போலீசு” பார்வையில் எழுதப்பட்டிருக்கும் இந்த அறிக்கையை ஆராய்வதுடன், இனி இப்போராட்டம் செல்லவேண்டிய திசையையும் சுட்டிக்காட்டி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இன்று வழக்குரைஞர்கள் மத்தியில் விநியோகித்துக் கொண்டிருக்கும் துண்டறிக்கையை இங்கே தருகிறோம்.

மார்ச் 10 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இப்பிரச்சினை தொடர்பாக ம.க.இ.க நடத்தவிருக்கும் பொதுக்கூட்டத்தின் துண்டறிக்கையையும் வெளியிடுகிறோம். இக்கூட்டத்துக்கு போலீசு அனுமதி மறுத்த்தால் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தடியடிபட்ட உயர்நீதிமன்றம கருத்துரிமையை வழங்குமா? 9ம் தேதி தெரியும்.

ஈழம்: சோனியாவிடம் பா.ம.க பம்முவது ஏன்? கருத்துப்படம் !!

24

pmk-ramadas1

(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

ஈழத்தமிழ் மக்களைத் தாலியறுக்கும் இலங்கை அரசின் மயான வேலைக்கு எல்லா உதவிகளையும் செய்து வரும் இந்திய அரசின் துரோகத்தை நியாயப்படுத்துவதற்கு மயிலை மாங்கொல்லையில் காங்கிரசு கயவாளிகளின் பொதுக்கூட்டம் நடந்ததும் அதில் ப.சிதம்பரம் ஊளையிட்டதும் நீங்கள் அறிந்ததே. இந்தக்கூட்டத்தில் புலிகள் ஆயுதங்களை கீழேபோட்டுவிட்டு சரணடைய வேண்டும் அப்படி சரணடைந்தால் இலங்கை அரசுடன் பேச்சு வாரத்தைக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்யும் எனப்பேசிய ப.சிதம்பரம் இந்தக்கூட்டத்தில் பா.ம.க ராமதாசுக்கு மறைமுகமாக மிரட்டலும் விடுத்தார்.

ஈழம்: போலீசின் அடுத்த குறி மாணவர்கள்!

உயர்நீதி மன்றத்தில் புகுந்து வழக்குரைஞர்கள் மீதும் நீதிபதிகள் மீதும் ஒரு கொலைவெறித் தாக்குதலை நடத்திய சென்னை போலீசு, அடுத்ததாக மாணவர்கள் மேல் பாய்ந்திருக்கிறது. 3.3.09 அன்று காலை 9.30 மணி அளவில் சென்னை மாநிலக்கல்லூரியில் புகுந்து தடியடி நடத்தி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 5மாணவர்களை கல்லூரி வாசலிலேயே கைது செய்து, அவர்களைக் கொடூரமாகத் தாக்கி, பல குற்றப்பிரிவுகளில் பொய் வழக்கும் போட்டு, சிறையில் தள்ளியிருக்கிறது.

போஸ் கொடுக்கிறான் போலீசு இ.பி.கோவை நம்புறவன் லூசு !

 

policelawer

வழக்குரைஞர் நண்பா !
கெட்ட வார்த்தைகளின் மீதேறி

கல்லால் அடித்தார் கமிஷனர்
சட்டசபைலிருந்தபடி
சொல்லால் அடிக்கிறார் நிதியமைச்சர்.

நீதிமன்றத்தால் தேடப்படும் போலீசு குற்றவாளிகள் ! படங்கள் !!

26

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீசின் பேயாட்டத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஸ்ரீகிருஷ்ணா எனும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்திருக்கிறது. அதேசமயம் வழக்குரைஞர்களும் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் கூறியிருந்தது.ஆனால் உயர்நீதிமன்றங்களின் எல்லா வழக்கறிஞர் சங்கங்களும் தடியடிக்கு காரணமான போலீசு அதிகாரிகளை வேலைநீக்கம் செய்யும்வரை நீதிமன்ற புறக்கணிப்பு செய்வாதக உச்சநீதிமன்றத்தின் வேண்டுகோளை நிராகரித்திருக்கிறார்கள். தற்போது தொடர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள். அந்த உண்ணாவிரதத்தில் காட்சிக்கு வைத்திருந்த புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம். மேலும் தமிழகம் தழுவிய அளவில் வழக்குறைஞர் போரட்டமும் தொடர்கிறது. ஈழத்திற்காகவும், சு.சாமியைக் கண்டித்தும், போலீசின் தாக்குதலை எதிர்த்தும் இந்தப் போராட்டங்கள் தொடர்கின்றன.

படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்