ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!
சத்தீஸ்கரின் காடுகளிலும் மலைகளிலும் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காகவே பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து பாசிச இராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.
மணிப்பூர்: மோடி அரசை கண்டித்து குக்கி பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் போராட்டம்
மக்களை பிளவுப்படுத்தி கலவரங்களை உண்டு பண்ணி இன அழிப்பை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச கும்பலுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்காமல் அவர்களுக்கு ரோசாப்பூ கொடுத்து பாசிஸ்டுகளுக்கு ஜனநாயக அரிதாரம் பூசுவது இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிர்க்கட்சிகள் இழைக்கும் அப்பட்டமான துரோகமாகும்.
பழங்குடிகள், சுற்றுச்சூழலை காவு கொடுக்கும் ‘கிரேட் நிகோபார் திட்டம்’
166 சதுர கி.மீ. பரப்பில் ரூ.92 ஆயிரம் கோடி மதிப்பில் துறைமுகம், பன்னாட்டு விமான நிலையம், அனல் மின்நிலையம், நகரியம் (Township) முதலானவற்றைக் கட்டமைக்கும் இந்தத் திட்டத்தால், அந்தமானில் வசிக்கும் பழங்குடியினருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனப் பலரும் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளனர்.
ஒடிசா: கிறிஸ்தவர்களின் பிணங்களையும் வேட்டையாடும் காவி கும்பல்
சரவன் கோண்ட் என்ற கிறிஸ்தவ இளைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்பு இந்துமத வெறியர்களால் தோண்டியெடுக்கப்பட்டு, வீசியெறியப்பட்டது. அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை, அவரது உடலை மதவெறி குண்டர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை.