பாலா கைதை கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் !
கார்டூனிஸ்ட் பாலா மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சார்பில் தமிழகத்தின் பல இடங்களில் நவம்பர் 6,7 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
ஓபசமுத்திரம் கிராம மக்களின் இறால் பண்ணை அழிப்பு போராட்டம் !
இனி அரசு அதிகாரிகளை நம்பி பயனில்லை என உணர்ந்த கிராம மக்கள் கடந்த 29.10.2017 அன்று கிராம கூட்டத்தை கூட்டி இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு, பண்ணையை அகற்றுவதற்கு ஒரு வாரம் கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
விருதாச்சலம்: பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யவைத்த மக்கள் அதிகாரம் !
”உடனடியாக பேருந்துநிலையத்தில் உள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும், இல்லையென்றால் சுத்தம் செய்யும் வரை போராட்டம் தொடரும்” என தோழர்களும் பொதுமக்களும் உறுதியாக கூறினர்.
நீரில் மூழ்கிய பள்ளிக்கரணை: தூங்கி வழியும் மாநகராட்சி – களத்தில் இறங்கிய மக்கள் அதிகாரம் !
நீர் வழிதடங்கள் அனைத்தும். முதலாளிகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வெளியேற வாய்ப்பு இல்லாமல் மக்கள் தத்தளித்துவருகின்றனர். இது பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில் மட்டுமல்ல, சென்னையின் பல இடங்களிலும் பார்த்தாலே தெரியும் உண்மையாகும்.
கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்ததைக் கண்டித்து தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!
கந்துவட்டி கொடுமைக்கு இசக்கிமுத்துவை பலி வாங்கிய இந்த அரசை கண்டித்து கார்ட்டூன் வரைந்த பாலா அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 06.11.2017 (இன்று) தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாலாவை விடுதலை செய்! கலெக்டரை கைது செய்! மக்கள் அதிகாரம் – பத்திரிகைச் செய்தி !
. கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராக இசக்கிமுத்து பற்ற வைத்த தீ இன்று தமிழகம் முழுவதும் பரவுகிறது. எடப்பாடி அதிமுக அடிமை அரசிற்கு சுதந்திரம், ஜனநாயகம், மானம், சுயமரியாதை என எதுவும் கிடையாது. ஆனால் ’மானம் போச்சு’ என்றுதான் வழக்கு பதிவு செய்யபட்டிருக்கிறது.
டெங்கு : செயலிழந்த எடப்பாடி அரசும் மாநகராட்சியுமே குற்றவாளிகள் !
கடந்த 3 ஆண்டு மோடி ஆட்சியிலும் அவரது கைப்புள்ளைகள் EPS – OPS ஆட்சியிலும் டாலர் சிட்டியான திருப்பூர் தொழில் வளர்ச்சி இன்றி காலிக் கூடாரங்களாக மாறி வருகிறது, குப்பைகளின் வளர்ச்சியினால் திருப்பூரில் நோயளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருகிறது.
இன்றைய அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு என்ன ? விழுப்புரம் பொதுக்கூட்டம் !
“வெறிநாய் கும்பலிடம் ஒரு ஆடு தனியாக மாட்டிக்கொண்டால் அதன் கதி என்னவோ? காம வெறிப் பிடித்த மிருகங்களிடம் ஒரு பெண் தனியாக மாட்டினால் அவள் கதி என்னவோ?” அப்படி இந்த அரசிடம் மக்கள் சிக்கி அவர்களுடைய வாழ்க்கை சின்னாபின்னமாக, கந்தல் கந்தலாக சீரழிந்து கொண்டிருக்கிறது.
ஒக்கேனக்கல் : பேருந்து கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்ட மக்கள் அதிகாரம் !
ஞாயிற்றுகிழமை என்பதாலே சுற்றுலா பயணிகள் சாதாரண உழைக்கும் மக்களையும் , பட்டபகலில் சிறப்பு பேருந்து என்று காய்லாங்கடை பஸ்ஸுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து திருட்டை பகிரங்கமாக நடத்துகின்றனர், போக்குவரத்து துறை அதிகாரிகள்.
அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! தஞ்சை பொதுக்கூட்டம் !
மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க, அ.தி.மு.க கும்பல்கள் அரங்கேற்றி வரும் மக்கள் விரோதக் கொள்கைகளையும் அராஜகங்களையும் அம்பலப்படுத்தி, தற்போது நிலவும் அரசுக்கட்டமைப்பில் மக்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்க முடியாது என்பதை வலியுறுத்தி தஞ்சையில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! – சென்னை எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டம்
கல்வி கொடுப்பேன், மருத்துவம் கொடுப்பேன், சுகாதாரம் கொடுப்பேன், பேச்சுரிமை, சங்கம் சேரும் உரிமை, வியாபாரம் செய்யும் உரிமை எல்லாம் தருவேன் என்று ஏற்று கொண்டு, இந்த அரசு எல்லாவற்றையும் பறிக்கிறது. மேலும் மேலும் வரி விதித்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது.
அராஜகங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை ! தருமபுரி பொதுக்கூட்டம் !
எல்லா பிரச்சினையும் தீர்க்க கரம் கோர்ப்போம், வீதிக்கு வருவோம் தோற்றுப்போன கட்டமைப்பு இது என அம்பலப்படுத்துவோம். மக்கள் அதிகாரம் படைப்போம்.
கந்து வட்டி முதல் டெங்கு வரை தீர்வு என்ன? ஓசூர் போராட்டம்
கந்துவட்டிக் கொள்ளையை ஒழிக்க, சிறு தொழில் - விவசாயத்தை மீட்க, அனைவருக்கும் வேலை அளிக்க, கல்வி - சுகாதாரத்தை உத்திரவாதப்படுத்த மக்கள் அதிகாரத்தை நிறுவுவது ஒன்றே தீர்வு! ஊரெங்கும் மக்கள் கமிட்டி அமைப்போம்! மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்!
டெங்கு : செயலிழந்த அரசை தட்டிக் கேட்போம் – திருப்பூர் ஆர்ப்பாட்டம் !
தலைமை மருத்துவர் எங்கே என்றால் எல்லோரும் கலெக்டர் பின்னால் சென்றுவிட்டார் என்றார்கள், கலெக்டர் எங்கே என்றால் மோடியின் அல்லக்கை OPS - EPS ன் - அமைச்சர்கள், MLA , MP களுக்கு பின்னால் கசாயம் கொடுத்துக் கொண்டுள்ளனர் என்பதே பதிலாக உள்ளது.
கந்துவட்டி படுகொலையைக் கண்டித்தால் சிறை ! கரூர் போலீசின் அராஜகம்
கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் பிருத்திவிராஜ் மற்றும் மாவட்ட காவல் துறையினர் மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதும், தொடர்ந்து பொய் வழக்கு போடுவதும் வாடிக்கையாக உள்ளது.
























