ஆளை மாற்றாதே! அதிகாரத்தை மாற்று !! விருதை பொதுக்கூட்டம்
விருத்தாசலத்தில் 31 வார்டிலும் மக்கள் அதிகார கிளை இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வார்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அதை தீர்மானிக்கும். மக்கள் அதிகாரம் என்பது நாம் உருவாக்கவில்லை. உருவாக்கியது இந்த அரசு கட்டமைப்புதான்
மக்கள் அதிகாரம் : கதறும் மீனவ குடும்பங்கள் ! வஞ்சிக்கும் அரசு !!
பழவேற்காடு தொடங்கி குமரி மாவட்ட நீரோடி வரை உள்ள கடற்கரை கிராம மீனவர்கள், மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் மக்கள் விரோத இந்த அரசை பணிய வைக்க முடியும்.
பார்ப்பனிய கொட்டத்தை அடக்கிய பீமா கோரேகான் போரின் 200-ம் ஆண்டு !
பார்ப்பன பேஷ்வாக்களுக்கு எதிரான தங்களது வீரஞ்செறிந்த போரினால் ஆங்கிலேயர்களுக்கு மகர் வீரர்கள் வெற்றியைத் தேடித் தந்தனர். இதற்கு நன்றிக் கடனாகத் தான் போரில் இறந்த மகர் சமூக வீரர்களுக்கு நினைவுச் சின்னமாக வெற்றித்தூணை எழுப்பி அவர்களை வெள்ளையர்கள் பெருமைப்படுத்தினார்கள்.
நன்னிலம் : காவல் துறை ONGC கூட்டு சதியை முறியடித்த மக்கள் அதிகாரம் !
மக்களை அச்சுறுத்த 10 மக்கள் அதிகார தோழர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பொய் வழக்கு போட்டது. பொதுக்கூட்டம் நடத்த மறுப்பு தெரிவித்தது. அத்துமீறும் போலீசின் அடாவடிதனத்தை உடைக்கவும், மக்களுக்கு போலீசு மீதுள்ள அச்சத்தை போக்கவும் 28.12.2017 அன்று காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம் : செவிலியர் போராட்டத்திற்கு தடை !
போராட்டத்தை கைவிட்டால் தான் உங்கள் தரப்பு வாதங்களை கேட்க முடியும் என்றும், “ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டுச் செல்லாம். ஆனால் போராட்டம் நடத்தக் கூடாது” என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.
குடிநீர் இல்லை கழிப்பறை இல்லை ! போராடும் செவிலியர்களை ஒடுக்கும் அரசு !
மெரினா போராட்டம் போல முடிவு தெரியும் வரை இங்கிருந்து கலைய மாட்டோம் என்று போராடும் அந்த செவிலியர்களுக்கு உணவு கொடுக்கவோ, கழிப்பறை ஏற்பாடுகளை செய்து தரவோ, போராட்டத்திற்கு ஆதரவு தரவோ அங்கு யாருமில்லை.
சபரிமலை பெயரில் மக்கள் அதிகாரத்தின் கூட்டத்தை மறுக்கும் விருதை போலீசு !
ம.க.இ.க கோவன் வருகிறார் என கியூ பிரிவு போலீசார் சொல்கிறார்கள் எனவே அனுமதி தர முடியாது என மாவட்ட காவல் துறை வெளிப்படையாகவே மறுக்கிறது.
போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடும் ஒப்பந்த செவிலியர்கள் !
நோயாளிகளுக்கு முறையான மருத்துவம் செய்ய முடியவில்லை என்பதே எங்களுக்கு மன வேதனையளிக்கிறது. 16 மணி நேரம் சில சமயங்களில் 24 மணி நேரம் கூட உழைக்கின்றோம். “மக்களுக்காக உழைப்பதில் எங்களுக்கு பெருமை தான். ஆனால் எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த அரசாங்கம் உணரவில்லை”
இன்றைய அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன ? நவம்பர் 30 நெல்லை பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம் - புரட்சிகர கலைநிகழ்ச்சி, நாள் : 30.11.2017, வியாழக்கிழமை - மாலை 5 மணி. இடம் : சிதுபூந்துறை, சாலைத்தெரு, திருநெல்வேலி ஜங்ஷன்.
கடனைக் கட்டாதே ! கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டு ! கரூர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஒரு குடும்பமே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான அரசை கண்டித்து போஸ்டர் ஒட்டியதற்காக கரூர் பகுதி தோழர் பாக்கியராஜ் மீது வழக்கு போட்டு சிறையில் தள்ளியது போலீசு.
புரட்சியின் தருணங்கள் – திரைச் சித்திரம் !
சோசலிசத்தினால் ஒரு நாட்டில் எத்தகைய சாதனைகளை சாதிக்க முடியும் என்பதையும், சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு விழாவை உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையும் கண் முன்னே காட்டுகிறது இந்தத் திரைச் சித்திரம்.
மதயானையை வீழ்த்திய சிற்றெறும்பு !
அவர்கள் முன்பு இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று, தமது வயல்களை, தோட்டங்களை போஸ்கோவிடம் பறிகொடுத்துவிட்டு, அகதிகளாக வெளியேறுவது. இல்லையென்றால், உயிருக்குத் துணிந்து போஸ்கோவை எதிர்த்து நிற்பது. அவர்கள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்கள்.
வாய்க்காலை தூர்வார துப்பற்ற அரசு! களத்தில் மக்கள் அதிகாரம் !
நாத்துபறி, உழவு, நடவு என விவசாயிகளுக்கு தலைக்கு மேல் வேலைகள் இருந்தாலும் ”மழைகாலத்தில் தண்ணீரை சேமிக்காவிட்டால் இன்று உழவுக்கு நீர் இல்லாமல் போகும். நாளை குடிக்கவே தண்ணீர் கிடைக்காது" என்ற அபாயத்தை உணர்ந்து சீர் செய்ய வந்ததாக ஒரு விவசாயி கூறினார்.
விவசாயிகளின் இரத்தம் குடிக்கும் பாரத ஸ்டேட் வங்கி !
விவசாயிகளுக்கு எதிரியே இந்த அரசு தான். அய்யாக்கண்ணு சொல்வது போல் அரசை நம்பினால் அம்மணமாக தான் நிற்க வேண்டும் என்று அவர் தலைமையில் டெல்லியில் நடத்திய போராட்டமே சாட்சி என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.
மழைநீரை அகற்ற அரசாங்கத்தை செயல்பட வைத்த மக்கள் அதிகாரம் !
அரசின் அணுகுமுறை சென்னைக்கு விடிவுகாலத்தை கொடுக்காது என்பது மட்டுமல்ல சிறு மழைக்கு கூட அல்லாடும் நிலைக்கு வந்துவிட்டதன் காரணமும் இந்த அரசுதான் என்பது தெள்ளத்தெளிவாகிறது.
























