நீதிபதி லோயா பிரேதப்பரிசோதனை அறிக்கையில் உள்ள ஓட்டைகள் !
உதாரணமாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரேதத்தின் விரைப்புத்தன்மை குறித்த பதிவில், லேசான விரைப்புத்தன்மை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உடல்விவர அறிக்கையில் பிரேதத்தின் விரைப்புத்தன்மை அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் 2000 நோயாளிகள் 2 மருத்துவர்கள் !
வேதாரண்யம் தலைமை மருத்துவமனையில் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இரு மருத்துவர்களே உள்ளனர். ஆகவே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும், நோயாளிகளாக வரும் ஏழை எளிய உழைக்கும் மக்களை திருவாரூர், நாகை என அலைய செய்து சிகிச்சை செய்ய மறுப்பது ஆகியவற்றை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது
திருச்சி : போலீசின் ரவுடித்தனத்திற்கு எதிராக போராட்டம் !
பொது மக்கள், பெண்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலை, தனது செல்போனில் படம் பிடித்த இளைஞரை மிக கடுமையாக இடுப்பு மீது ஏறி மிதித்துள்ளனர்.
வினவு குறுஞ்செய்திகள் : நிக்கோலஸ் – நீரவ் – பாஜக – மோடி !
19.02.2018 அன்று வினவு முகநூல் பக்கத்தில் வெளிவந்த குறுஞ்செய்திகளின் தொகுப்பு !
மோஷி மோஷி மேட்டுக்குடி உணவகத்தின் இலாபவெறிக்கு 3 தொழிலாளிகள் பலி !
28 வயதான மாரி மற்றும் 36 வயதான முருகேசன் இருவரும் கழிவுநீர் தொட்டிற்குள்ளே இறங்கும்போது இருவரும் அடுத்தடுத்து மயக்கம் அடைந்து தொட்டிற்குள்ளேயே விழுகின்றனர். இதனை பார்க்கும் ரவி (எலக்ட்ரிசியன்) என்பவர் தொழிலாளர்களை காப்பாற்ற போய் அவரும் பலியாகின்றார்.
காவிரி : முதுகில் குத்திய மோடி அரசைக் கண்டித்து முற்றுகை போராட்டங்கள் !
"காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமைக்கு நெஞ்சில் குத்தியது உச்சநீதி மன்றம்! முதுகில் குத்தியது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி யின் மோடி அரசு! "
உயர்கல்வித் துறை சீரழிவிற்கு யார் காரணம் ? மதுரையில் ஆர்ப்பாட்டம்
உயர்கல்வித்துறையின் இந்த சீரழிவிற்குக் காரணம் எது? கல்வி தனியார் மயம் ஆக்கப்பட்டு, வியாபாரம் ஆனதுதான். தனியார் வசம் கல்வியை ஒப்படைப்பதுதான் மத்திய மாநில அரசுகளின் நோக்கம்.
கிருஷ்ணகிரி : வனத்துறையினரின் அலட்சியத்தால் மூன்று விவசாயிகள் பலி !
"எங்களுக்கு நினைவிருக்கும் வரையில் யானை மிதித்து இறந்தவர்கள் என்பது இந்த பகுதியில் இல்லை" என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு யானை மிதித்து இறப்பதும், அடுத்தடுத்து மூன்று பேர் இறந்தது என்பதும் இதுவே முதல் முறை என்கின்றனர்.
காவிரிக்காகப் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய் !
காவிரி உரிமைக்காக தமிழகம் தழுவிய அளவில் 17-2-18 அன்று மக்கள் அதிகாரத் தோழர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதுரையில் போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையலடைத்து மோடிக்கு தனது விசுவாசத்தை எடப்பாடி அரசு காட்டியுள்ளது.
காவிரிக்காக போராடிய மதுரை தோழர்கள் 20 பேர் சிறையில் அடைப்பு !
போலீசு வெறி கொண்டு அடித்ததில் காயமடைந்த தோழர்களுக்கு மருத்துவ வசதி செய்து தராமல் இழுத்தடித்ததைக் கண்டித்து, மதிய உணவை மறுத்து ஒத்துழைக்க மறுத்தனர் தோழர்கள்
காவரி : தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை ! படங்கள்
காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.
காவிரி : மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம் ! ஆர்ப்பாட்டங்கள்
கர்நாடகத்தின் தேவையை, பெங்களூர் நகரின் குடிநீர்த்தேவையை அங்கீகரித்து அவர்களுக்கு பரிவு காட்டிய உச்சநீதிமன்றம் தமிழக மக்கள் அத்தகைய பரிவுக்கு தகுதியற்றவர்கள் எனக்கருதுகிறது போலும்.
காவிரி : முதுகில் குத்திய உச்சநீதிமன்றம் ! மீண்டும் தொடங்குவோம் டில்லிக்கட்டு !
ஜல்லிக்கட்டில் உச்சிகுடுமி மன்றத்தை பணியவைத்தது மேல் முறையீடு அல்ல என்பதை தமிழக மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். காவிரியில் நியாயம் பெற செய்யவேண்டியது மேல்முறையீடு அல்ல, டில்லிக்கட்டைத் மீண்டும் தொடங்குவது தான் !
காதலர் தினத்துக்கு எதிராக காவி பயங்கரவாதிகள் !
தமிழகத்தில் வானரக் கூட்டம், நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம் செய்து வைப்பதாக நூதனமாக 'போராடுகிறார்கள்'. இன்னும் அத்துமீறி பல இடங்களில் கையில் தாலியுடன் கலச்சாரக் காவலர்களாக வலம்வரும் அளவு தைரியம் பெற்றுள்ளனர்.
11,000 கோடி ரூபாய் கொள்ளையன் நீரவ் மோடியை டாவோசில் சந்தித்த பிரதமர் மோடி
“மோடி என்கிற பெயர் கொண்ட எல்லோரும் கொள்ளைக்காரர்கள் அல்ல, ஆனால், கொள்ளைக்காரர்கள் எல்லாம் மோடிகளாகவே இருக்கிறார்கள்”
























