எங்க மண்ணு.. எங்க ஊரு.. மீத்தேன் எடுக்க நீ யாரு ? – பாடல் வீடியோ
”நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு ஊரைத் தியாகம் செய்யலாம்” என்கிறார் தமிழக பாஜக -வின் முன்னாள் தலைவர் இல.கணேசன். ”விவசாயத்தை அழிக்கும் காவிப் பரிவாரமே வெளியேறு !” என போர்க்குரலாக ஒலிக்கிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ”எங்க மண்ணு.. எங்க ஊரு.. மீத்தேன் எடுக்க நீ யாரு?” பாடல். இதனைப் பாருங்கள், பகிருங்கள்!
குட்கா ஊழல் : ஜார்ஜ், டி.கே. ராஜேந்திரனுக்கு குண்டாஸ் எப்போது ?
சென்னையில் கஞ்சா, மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் தடுக்க தீவிர வேட்டையில் களத்தில் இறங்கியுள்ளார்களாம். இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்களா ?.
பராகுவே அரசைப் பணிய வைத்த சிறு விவசாயிகள்!
பயிர்கடன்களை இரத்து செய்யக்கோரி சிறு விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி போராட்டத்தில் குதித்தனர் விவசாயிகள். விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டத்தால் அரசாங்கம் வேறு வழியின்றி இப்போது இறங்கி வந்துள்ளது.
ஆவணப்படம் : விபச்சாரத்திற்கு விற்கப்படும் கென்யக் குழந்தைகள்
தானே ஒரு குழந்தை மனநிலையில் இருக்கும் போது, தன் கையில் ஒரு கைக்குழந்தையுடன் அவர்கள் இருக்கும் காட்சி நம்மை உறைய வைக்கிறது.
விவசாயிகளை ஒழிக்க மோடிக்கு யோசனை சொல்லும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை
இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். இதைத் தடுப்பதுதான் இந்தியாவைத் தேவையில்லாமல் வறுமையில் வைத்திருப்பதாக் குமறுகிறார்கள், ஆளும் வர்க்க அறிவாளிகள்.
எங்க மண்ணு எங்க ஊரு மீத்தேன் எடுக்க நீ யாரு – டீசர்
வளர்ச்சிக்காக ஒரு ஊரைத் தியாகம் செய்யுங்கள் என்கிறது பாஜக கும்பல் நமது மண்ணை, நமது ஊரை ஏன் விட வேண்டும்? அந்த விவசாயிகளின் போர்க்குரலாய் ஒலிக்கிறது இப்பாடல். இப்பாடலின் முன்னோட்டம்...
நம்முடைய கனவு ஏன் சிதைக்கப்பட்டது ? சிறையிலிருந்து ஒரு கடிதம் !
நாமெல்லாம் எளிய மனிதர்கள், எளிய மனிதர்களுக்காக எளிய வழிகளில் உழைக்கிறவர்கள். நம்முடைய நம்பிக்கை, அன்பு, கனவு ஆகியவற்றைப் பார்த்து இந்த அசுரத்தனமான அரசு ஏன் பயம் கொள்கிறது?
நீட் தேர்வு : மற்றுமொரு வியாபம் ஊழல் !
தேர்வெழுத வரும் மாணவர்கள், வெறுமனே கணினிகளின் முன் அமர்ந்திருக்க வேறு ஒரு இடத்தில் இருந்து அக்கணினிகளின் திரையை இயக்கி (Remote Access) ஏஜெண்டுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வேறு நபர்கள் தேர்வை எழுதியுள்ளனர்.
மோடியின் ஆட்சியில் இந்தியா கலவரங்களில் நம்பர் 1 நாடு
இனவாத, வன்முறைகள் மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 41% உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2014- ம் ஆண்டு நடைபெற்ற இனவாத, வகுப்புவாத வன்முறைகளின் மொத்த எண்ணிக்கை 336. ஆனால் அதுவே கடந்த 2016 -ம் ஆண்டில் 475-ஆக உயர்ந்திருக்கிறது.
இனி வந்தே மாதரம் பாடாதவன் தேச விரோதி !
சென்னை உயர்நீதிமன்றம் ஒருபுறத்தில் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புகளை வழங்கித் தள்ளிக் கொண்டிருக்க மற்றொரு புறத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்த வழக்குகளில் எல்லாம் மக்கள் விரோதத் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் வழங்கி வருகிறது.
ஏழைகளுக்கு எதற்கு எட்டாவது வரை படிப்பு ! – கவிதா சொர்ணவல்லி
பத்து வயதிலயே அந்தக் குழந்தையை "நீ படிப்பதற்கு லாயக்கில்லாதவன்" என்று மன ரீதியாக சிதைப்பது. படிப்பை பாதியில் நிறுத்தினால் கூட பிழைத்துக் கொள்ளும் நம்முடைய குழந்தைகள், இது போன்ற மனரீதியான சிதைவுகளை எப்படிக் கடப்பார்கள் ?
தொடரும் ஆப்கன் அவலம் – அப்பாவிகளை படுகொலை செய்யும் அமெரிக்கா
அமெரிக்க விமானப்படை வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி 2017 -ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் அமெரிக்க-ஆப்கன் போர் விமானங்கள் 1634 குண்டுகளை வீசியிருக்கின்றன.
மாட்டுக்கறித் தடையால் ஆதாயம் யாருக்கு ? – மனலி சக்ரவர்த்தி
பால்மாடு வளர்ப்பு அளிக்கின்ற வருவாய் இல்லையானால், ஆகப்பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்று விட்டு கிராமத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர, வேறு வழியில்லை.
குண்டாஸ்.. குண்டாஸ்.. ஸ்டுடண்டுக்கு குண்டாஸ்.. புதிய பாடல்
மாணவர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் அடக்குமுறையால் ஒடுக்கிவிடலாம் என கனவு காணும் தமிழக அரசை ஏளனம் செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புதிய பாடல்.
என்னவெல்லாம் செய்வார் ராம்நாத் கோவிந்த் ?
சீக்கிரம் வைஃபை பாஸ்வேர்டை மாற்றி விட வேண்டும். இல்லையென்றான் பிரனாப் ஓசியில் நெட்ப்ளிக்சில் படம் பார்க்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து கொண்டிருப்பார்.
























