நிலக்கரி ஊழல்-பாராளுமன்ற அமளி: யாரும் யோக்கியனில்லை!
அதே காட்சி. அதே வசனங்கள். அதே பாத்திரங்கள். அதே சவடால்கள். வரலாறு ஒரு முறை நடந்தால் பரவாயில்லை, திரும்பத் திரும்ப நடந்தால்?
“விலைவாசி உயர்வு மகிழ்ச்சி” – மத்திய அமைச்சர் அறிவும் எதிர்ப்பவர்களின் அறமும்!
பருப்பு, ஆட்டா, அரிசி, காய்கறி விலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைத்து வருகிறது. எனவே விலை உயர்வால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா
ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!
பேரழிவு ஏப்படுத்தும் இரசாயன ஆயுதங்களைத் தயாரித்துக் குவிக்கும் டௌ கெமிக்கல்ஸிடமிருந்து நன்கொடை பெற சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தயங்கவில்லை
டைம் – மன்மோகன்:சிரிப்பு சீனுகளுக்கிடையில ஒரு அழுகை சீனு!
'நாம இவ்வளவு செஞ்சும் அமெரிக்காகாரனுக்கு நன்னி இல்லையே'ன்னு மன்மோகன் சிங் கொமைஞ்சுகிட்டுருக்காரு, சிதம்பரம் மாரி ஆளுங்க 'நமக்கும் நாளக்கி இதே கதிதானோ'ன்னு மூக்கை உறிஞ்சுறானுங்க.
புதைமணலில் சிக்கியது இந்தியப் பொருளாதாரம்!
வீழ்ச்சிக்குப் பொறுப்பேற்று பதில் சொல்லும் யோக்கியதை இல்லாத மன்மோகன் சிங் கும்பல், ஐரோப்பிய வீழ்ச்சிதான்காரணம் என்று கூறி, ஐரோப்பாவுக்கு வேட்டி கட்டிவிடுவதற்காக நமது வேட்டியை உருவுகிறது
நிலக்கரித் திருடன் மன்மோகன் சிங்!
ஸ்பெக்ட்ரம் ஊழல், வரலாறு காணாத ஊழல் என்று சித்தரிக்கப்பட்டது. மன்மோகன் சிங்கின் நிலக்கரி ஊழலின் பரிமாணத்தை சொல்வதற்கோ உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை.
கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -3
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 32 முதல் 35 இலட்சம் கோடி ரூபாய் வரை கணக்கில் வராத கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது, மொத்தப் பொருளாதாரத்தில் பாதி கறுப்புப் பொருளாதாரமாகிவிட்டது
குடியரசுத் தலைவராகிறார் ஒரு பார்ப்பன அரசியல் நரி!
பிரணாப் முகர்ஜி ஒரு பழம் பெருச்சாளி. “பக்கா” அரசியல்வாதி; எல்லா ஓட்டுக் கட்சிகளிலும் தனது கூட்டாளிகளைக் கொண்டிருக்கும் பார்ப்பனிய நரி. அந்நியநாட்டு அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமான ‘உறவு’ கொண்டிருப்பவர். தொழிற்கழக முதலைகளின் விசுவாசி.
“அகதியாய் வாழ்வதைவிட, மரணமே மேல்!” ஈழத் தமிழ் அகதிகளின் கதறல்!
ஈழத்திற்குப் போக முடியாது, தமிழ்நாட்டில் கௌரவமாக வாழ முடியாது, தப்பிச் செல்லவும் முடியாது என சுற்றி வளைக்கப்பட்டு, மரணத்தை மட்டுமே சாத்தியமான விடுதலையெனக் கருதிக் காத்திருக்கும் இந்தத் துயர நிலையை என்னவென்று அழைப்பது?
சந்தி சிரிக்கும் சி.பி.எம்.இன் கொலை புராணம்!
உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் கட்சி என்று வாய்ச்சவடால் அடித்துவரும் சி.பி.எம். கட்சி இப்போது தொழில்முறை கொலைகார கிரிமினல் கும்பலாக சீரழிந்துவிட்டது.
கேரள அரசின் இனவெறிக்கு எதிராக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள்!
கேரள அரசின் அடாவடித்தனத்தையும் இனவெறியையும் எதிர்த்து பல்வேறு கிராமங்களிலிருந்து விவசாயிகள் உணர்வோடு திரண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஸ்பெக்ட்ரம் “சாதனையை” முறியடித்த 10 இலட்சம் கோடி நிலக்கரி ஊழல்!
சமீப காலங்களில் நடந்த அத்தனை ஊழல்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையிலான ஊழல் ஒன்றை பற்றி கசிந்திருக்கிறது. பத்து லட்சம் கோடி அளவுக்கான இதன் பிரம்மாண்டம் ஒரு கணம் மலைக்கச் செய்கிறது.
இந்தியாவை ஆள்வது யார்?
இந்திய அரசியலில் பன்னாட்டு நிறுவனங்களின் தலையீடு உள்ளது என்ற சந்தேகத்திற்கு போதுமான ஆதாரம் உள்ளது
கறுப்புப் பணம்:அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ! பாகம் -2
கறுப்புப் பணம் என்பது கட்டுக்கட்டாக சுவிஸ் வங்கியில் பூட்டி வைக்கப்பட்டிருப்பதைப் போலவும், அதை மீட்டுக் கொண்டு வந்து, ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கட்டைப் பிரித்துக் கொடுத்து வறுமையை ஒழித்து விடலாம் என்பது போல ஒரு சித்திரம் தீட்டப்படுகிறது
அண்ணா ஹசாரே ஆட்டம் குளோசானது ஏன்?
இதோ, ஒருவருடம் ஓடி விட்டது. இப்போது என்னவானார் அண்ணா ஹசாரே? அவரது கோரிக்கைகள் என்னவானது? அவருக்குக் கூடிய கூட்டம் என்ன செய்து கொண்டிருக்கிறது? ஊழலுக்கு எதிரான இந்தியா என்னவானது?











