மாருதி சுசுகி தொழிலாளர்களின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை!
மாருதி தொழிலாளர்களை கைது செய்தது, சித்திரவதை செய்தது வேலை நீக்கம் செய்தது இவற்றை எதிர்த்து தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர் 400 பேர் செப்டம்பர் 2-ம் தேதி கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இந்து ஞான மரபிடம் அடிபணிந்த மெக்டொனால்ட்ஸ்!
இந்தியர்களை பார்த்து ஒரு அமெரிக்க நிறுவனம் நடுங்கி பணிந்து விட்ட இந்தப் புரட்சியை எதற்கு சமர்ப்பணம் செய்வது? இந்து தத்துவ ஞான மரபிற்கா அல்லது இந்தியா நடுத்தர வர்க்கத்தின் டாம்பீக கலாச்சாரத்துக்கா?
சிறையில் ரெட்டி பிரதர்ஸுக்கு ராஜ உபச்சாரம்!
2004 வரை வருமான வரி கட்டுமளவு கூட வருமானம் இல்லாத பெல்லாரி மாவட்டத்து ரெட்டிகள் பழைய வகை திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் அல்ல. மதுரை மாவட்ட கிரானைட் மோசடியின் பெரிய வடிவம்தான் ரெட்டி சகோதரர்கள்.
நாட்டை விற்க ‘நன்கொடை’ வாங்கும் காங்கிரஸ்-பா.ஜ.க
தூத்துக்குடி, சத்திஸ்கர், ஒரிசா, கோவா என இந்தியாவை வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 28 கோடி நன்கொடையாக கொடுத்திருக்கிறது.
பி.டி உணவுப் பொருள்: தடுப்பார் யாருமில்லை!
நுகர்வோர் பாதுகாப்பு என்பது பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்திற்கான பாதுகாப்பு. மக்கள் நலனுக்காக வெளியிடப்படும் ஆய்வுகள், ஆதாரங்கள் இனி செல்லாது!
தண்ணீர் திருடர்கள்!
தமிழகத்தின் 17 க்கும் மேற்பட்ட இடங்களில் கோகோ கோலாவும், பெப்சியும் போட்டி போட்டு தண்ணீரை உறிஞ்ச அரசு அனுமதி கொடுத்துள்ளது. வாய்ப்புள்ள இடங்களில் ஆற்றையே அள்ளிக் கொடுத்துள்ளது.
வீரஞ்செறிந்த சிலி மாணவர் போராட்டம்! வீடியோ !!
“கல்விக் கட்டணத்தை ஒழி”, “அரசு பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கு” என அரசின் கல்வி கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் நடத்திய மாணவர்கள் மீது போலிஸ் கண்ணீர் புகை வீச்சு நடத்தி தண்ணீர் பீரங்கிகளால் தாக்கியது.
மயிரை கொடுத்துவிட்டு உயிரை எடுக்கும் கார்ப்பரேட்டுகள்!
இந்த ஆண்டுக்கான ‘கொடுப்பதன் இன்பம்’ கொண்டாட்ட வாரத்தில் கார்ப்பரேட்டுகள் முக்கிய ‘பங்களிக்கப்’ போகிறார்களாம்
அரசு மருத்துவமனை:எலிகளைக் காட்டித் தப்பிக்கும் திமிங்கலங்கள்!
சமீபத்தில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நண்பருக்காக போயிருந்தோம். காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்துவைத்துக் கொண்டிருந்தபோது மருத்துவமனை ஊழியரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
“கோல்கேட்”: நிலக்கரித் திருட்டில் பா.ஜ.கவின் பங்கு!
நிலக்கரி ஊழலில் சகலருக்கும் பங்கிருக்கிறது என்பதே உண்மை. இதை மறைக்கத்தான் சர்வ கட்சிகளும் பாராளுமன்றத்தில் நடக்கும் கூச்சல் பஜனையில் ஊக்கத்தோடு பங்கேற்கிறார்கள்.
பென்னகரத்தில் மண்ணெண்ணை வாங்க பெங்களூருலிருந்தா வர முடியும்?
தருமபுரி மாவட்டத்திலுள்ள மக்களில் பலரும் அருகிலுள்ள பெங்களூருக்கு கூலி வேலைகளுக்குச் செல்வதை பயன்படுத்தி ரேசன் கடைகளை சிறிது சிறிதாக மூடுவதற்கான வேலைகளை துவங்கியுள்ளது உணவு வழங்கல் துறை.
‘கோல்கேட்’: உப்புமா கம்பெனிகளும் உலகமகா யோக்கியர் மன்மோகன் சிங்கும்!
சிமெண்டு, இரும்பு மற்றும் மின்சார உற்பத்திக்கு நிலக்கரி மிக அவசியமான மூலப்பொருள் இதை ஒதுக்கீடு செய்வதில் தாமதிப்பது தேச வளர்ச்சிக்கே எதிரானது என்கிறார் கபில் சிபல், இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
கடவுளுக்கும் ‘கட்டிங்’ கொடுத்த சாராய மல்லையா!
80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கதவுகளை கர்நாடக சுப்ரமணியர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் சாராய மல்லையா . இது போதையில் வந்த பக்தியா, நிதானத்தில் தோன்றிய உத்தியா என்றெல்லாம் ஆராயக்கூடாது.
மோசடின்னா ஈமு மட்டுமல்ல, ரீபோக் ஷூ கம்பெனியும்தான்!
விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமான ரீபோக் இந்தியா அதன் உரிமதாரர்களின் (கடைக்காரர்கள்) பணத்தை மோசடி செய்ய முயற்சிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளிகள் கொலைகாரர்களென்றால் நரேந்திர மோடி காந்தியா?
தொழிலாளர்களை ஒரு சாவுக்காக சாடும் ஒசாமு சுஸுகிக்கு 2000 க்கும் மேற்பட்ட முசுலீம்களை கொன்ற இந்துமத வெறியர்களின் தலைவன் மோடியை சந்திப்பது முரண்பாடாகத் தெரியவில்லை.









