இலங்கையின் நடுக்கும் குளிரில்,
நடுநிசியின்
பசி தின்னும் பொழுதில்,
எம் வயிற்றின் பசிக்காகவும்,
உம் நாக்கின் ருசிக்காகவும்,
மீன் கவ்விய வாடையுடன்,
கரையோரம் வலைகளைப் பின்னி
பழகிய கரங்கள் இப்போது,
வலியின் சொற்களை,
இரத்தம் கவ்விய கொடுமையின் வாடையுடன்,
சிறைக் கம்பிகளுக்குள் இருந்து
பின்னி அனுப்பும்
தமிழ் மீனவனின் கண்ணீர்த் தூது இது!
பெருங்கடலின் கர்ஜிக்கும் அலைகளில்
மிதக்கும் கச்சத்தீவு எல்லைக் கோட்டில்
சுருக்குக் கயிற்றில் தொங்கியபடி
நூறு நூறு மீனவர்கள்,
பிணங்களாய்!
எல்லையை அச்சுறுத்தும்
பயங்கரக் குறியீடாய்!
அலையின் ஓசை
அவ்வப்போது அழுகையின்...
காசாவின் துயரத்தை உலகின் மனசாட்சியில் பதிய வைத்த போது, இஸ்ரேலால் கொல்லப்பட்ட 270 பத்திரிக்கையாளர்களின் தியாகத்தால் சுடர்விடும் ஒளிக்கீற்றுகள்!
யார் அவர்கள்?
நகரங்களின் அழகில் அடித்துச் செல்லப்பட்டு
காலத்தின் போக்கில் கரை ஒதுங்கியவர்கள்!
நகர்ப்புற வாழ்க்கையின் விளிம்புகளில் பாடப்படும்
யாரையும் அவ்வளவு எளிதில் தொந்தரவு செய்துவிடாத
ஓர் அமைதியான நாதியற்ற பாடல்!
மங்கலான விடியல் பொழுதுகளில்,
நகரங்கள் உறங்கிக் கொண்டிருக்கையில்
முதலாளித்துவத்தின் விருந்துகளில்
சிந்திய கழிவுகளைத் துடைப்பவர்கள்!
நவீனமயத்தின் கண்களில் அகப்பட்டுவிடாமல்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மலக்குழிகளின் மனித இணைப்புகள்!
ஒப்பந்ததாரர்களின் இலாபத்திற்கு இதமளிக்க
எவ்வித பாதுகாப்புமின்றி எரியூட்டப்படுபவர்கள்!
முதலாளித்துவச் சுரண்டலின் இழைகளில்
மிக்க கவனமாக இறுக்கி...
மரணப் படுக்கையில் இந்தியா!
நலமில்லை;
நலமறிய
ஆவலுமில்லை;
ஏனெனில்,
உங்கள் நிலையும்
நிச்சயம்
நாறிக் கொண்டு
தான் இருக்குமென
தெரியும்;
எனினும்,
என்னைக் காப்பாற்றுமாறு
கண்ணீர் மல்க
எழுதிக் கொள்வது!
ஓட்டும் நோட்டும்
இரட்டைக்கிளவி ஆகின
சனநாயகம் மாண்டது;
சாதியும் மதமும்
சகாக்கள் ஆகின
சமத்துவம் மாய்ந்தது;
இனவெறியும்
மொழிவெறியும்
இணக்கம் ஆகின
சகோதரத்துவம்
இறந்துபோனது!
நாடாளுமன்றம்
நாடகக்
கொட்டகையானது;
நாடு, சுடுகாடானது;
நடைப் பிணமாக உள்ளேன்,
காவி நெடியில்
மூச்சு முட்டி
பிணமாவதற்குள்
காப்பாற்ற முயலுங்கள்.
இப்படிக்கு
இந்தியா!
ஜிப்ஸி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இதோ வருகிறார்கள்!
காசா | கவிதை
https://youtu.be/yD-d0I_SwjA
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மீண்டும் அழைக்கிறது காசா!
இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது காசாவில்!
குண்டு பிளந்த கட்டடங்கள்
எலும்புக் குவியல்கள்
இரத்தக் கவிச்சி வீசும்
மண்ணைத் தவிர..
ஆயினும்..
அவர்கள் வருகிறார்கள்
பாட்டுப்பாடி!
மேளம் தட்டி!
இறுதியாக நாம் மீண்டும் வந்தோம்
(Finally we return)
இதுவே இன்றைய காசாவின்
நம்பிக்கை குரல்!
விடுதலையின் ராகம் புரியாதவர்கள்
இடிபாடுகளின் சத்தங்களையே
இன்னும் கேட்கிறார்கள்!
உயிருக்குப் பயந்தவர்களே
பாசிசத்தின் துப்பாக்கி முனைக்கு அஞ்சுகிறார்கள்!
பாலஸ்தீனத்தின் வீரமிகு மக்கள் மீண்டும் நுழைகிறார்கள் காசாவிற்குள்!
தழுவிக் கொள்ளக் காத்திருக்கிறது
தாய் நிலம்!
இடிபாடுகளுக்கிடையில்
இன்னும் மிச்சமிருக்கிறது...
இதோ வருகிறார்கள்!
இதோ வருகிறார்கள்
பாசிச இருளைக்கிழிக்கும்
நம்பிக்கை ஒளியேந்தி
வருகிறார்கள்
எழுபதாயிரம் டன்கள்
வெடிமருந்தைச்
சுமந்து
தாய்
தந்தை
மனைவி
கணவன்
குழந்தை
என மொத்த குடும்பங்களையும்
இழந்து வருகிறார்கள்
தங்கள் குழந்தைகளைப் புதைத்த இடங்களைக் காண கண்ணீரோடு வருகிறார்கள்
தகர்க்கப்பட்ட
தங்கள் வீடுகளைக்காண
படித்த பள்ளிகளைக்காண
ஓடி விளையாடிய
திடல்களைக்காண
ஓடோடி வருகிறார்கள்
இழப்புகளின் வேதனை அவர்கள் நெஞ்சில் தீராத வடுக்களாக மின்னுகின்றன
இருந்த போதும்
தன் தாய் மண்ணைக் காண ஆவலாக வருகிறார்கள்
காணாமல் போன பிள்ளை
தாயின் திசையறிந்து
வருவது போல
துள்ளிக்குதித்து வருகிறார்கள்
அவர்களுக்குத் தெரியும் இது நிரந்தரமல்ல...
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்…
என்று ‘அறம்’ பாடியவருக்கு
துணை பாடியவர்களே..
இதோ…
ஊருக்கே சோறு போடும் விவசாயி பட்டினிப் போராட்டம் நடத்துகிறான்!
என்ன செய்யப் போகிறீர்கள்?
எல்லையில் நிற்கும் இராணுவத்தாரே
உம் எல்லைக்குள் நடக்கிறது
ஓர் வீரம் செறிந்த போராட்டம்
தேசம் காக்க…
இப்போது சொல்லுங்கள்..
எது தேசம் என்று?
தன் பசி
தாய் அறிவாள் என
கண் அயரும் உன் பிள்ளை!
உன் பசியும் சேர்த்துணர்ந்த விவசாயி.. அவர் கண்ணில் இன்று
உறக்கமில்லை தாயே!
நீ என்ன...
தீர்க்கப்படவேண்டிய வழக்கு!
விளகாத இருளை கிழிக்க
வீடுதோறும் ஊடுருவும் சிமிளி விளக்கின் ஒளி
இருள்படிந்த வாழ்வை அகற்றுவதில்லை
கிழக்கே தோன்றும் கதிரவனாய்
கிராமம்தோறும் தோன்றி
விடியலை மீட்டியது
விவசாயிகளின் குழந்தையாய்
கீழத்தஞ்சையில் தவழ்ந்த செங்கொடி!
தன் துடிப்பை நிறுத்தி
துக்கத்தினை வெளிப்படுத்தி
தொலைதூரம் வரை துவண்டே கிடந்தது
தோழர்களே,
அந்த துயர நாள் உங்களுக்குத் தெரியுமா?
கைப்பேசியில் கதைப்பேசி
ஊர்கடக்கும் காரியமல்ல
சொல்லில் சுருக்கிட முடியாத
வரலாற்று சுவடு அது
தன்மீது தினிக்கும்
ஆண்டையின் உத்தரவை முடிக்க
கண் சொருகும் நாளிகை நெருங்கிடும்
உறை...
பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர்
சகித்துக் கொள்ள முடியவில்லை
உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை!
தாங்கிக் கொள்ள முடியவில்லை
உங்கள் (அ)ஹிம்சைகளை!
காந்தியிடம் ஆரம்பித்தது
ராகுல் காந்தியிடமும் தொடர்கிறது…
துரோகத்தால் நாறுகிறது
உங்கள் கைகளிலுள்ள
ரோஜாப்பூ!
துவண்டு கிடக்கிறது
உங்கள் கரங்களில் தேசியக் கொடி!
கொடியினை கம்பத்திலேயே விட்டுவிடுங்கள்..
ரோஜாக்களை செடியிலேயே
மலர விடுங்கள்..
பாசிசத்தின் பாதங்களில்
அவைகளை சமர்ப்பிக்காதீர்கள்!
நரமாமிசம் சுவைக்கும்
பற்களுக்கிடையில்
என்ன தேடுகிறீர்கள்
கருணையா..?
பாசிஸ்டுகளே
முகமூடிகளை கழற்றியபின்
அவர்களுக்கு ஜனநாயக சாம்பல்
பூசாதீர்கள்!
பாசிசம் நெஞ்சில் குத்துகின்ற காயங்களுக்கு குறைவானதல்ல..
நீங்கள் முதுகில் குத்தும் ரணங்கள்!
அதானி பற்றி...
காசாவில் இருந்து!
எங்களின் கண்ணீரெல்லாம்
கார்மேகமாகி இருந்தால்,
காணாமல் போயிருக்கும் இசுரேல்
கடலுக்குள்…
இதோ,
காசாவெங்கும்
ஆயிரமாயிரம் பிஞ்சுகளின்
பிணக் கடல்…
குண்டுவீச்சுகளில்
சிதைபவை
எங்கள் சிறுவர்களின்
சிரங்களும் கரங்களும் தான்,
சிறகடிக்க விரும்பும்
விடுதலைக் கனவுகள் அல்ல...
சிரசில்லா சிறார்களின்
சிதைந்த உடல்களைச்
சிலுவையாய்ச் சுமக்கிறோம்;
ஈரமில்லா வெறியர்களின்
கொட்டம் அடக்கிட,
மீண்டும் உயிர்த்தெழ
வேண்டியே விதைக்கிறோம்...
உரிமை மட்டுமா
இல்லை என்றார்கள்,
ஒருவேளை உணவும் கூடத்தான்...
பாலுக்கு ஏங்கும்
பிள்ளை கண்டு,
வடித்த கண்ணீர்
வற்றியது கடந்த காலம்;
இது,
பாலூட்டும் அன்னைகளின்
மார்புகளே வற்றும் காலம்!
இனி கொடுப்பதற்கும்
எடுப்பதற்கும் மிஞ்சியிருப்பது
எங்கள் ரத்தமே!
ஆனாலும்,
வற்றாது எஞ்சியிருக்கிறது,
விடுதலை வேட்கை!
ரத்தம் வடியினும்
மண்ணில்...
நெருக்கடிகளே தலைவர்களை உருவாக்கும்; நெருக்கடிகளே ஊசலாட்டவாதிகளை
ஓடவும் வைக்கும்.
நீங்கள் இன்னும்
எங்கள் கட்டை விரலைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் தலையை வெட்டிக் கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் வாயில் மலத்தைத் திணித்துக் கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் குடிதண்ணீரில் மலம் கலந்து கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் மீது மூத்திரம் பெய்து கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்களை வன்புணர்ந்து கொண்டே தான்...
நீங்கள் "சிகரம் தொட்டதாக" கொண்டாடுகிற "டாடாவின் சிகரம்" உழைப்பால் எட்டியது இல்லை... இந்திய பழங்குடி, உழைக்கும் மக்களின் பிணக்குவியலின் மூலம் அடையப்பட்டது...
வான வேடிக்கையும் பிக் பாக்கெட்டும்
விதவிதமாய்
பறக்கின்றன
சுகோய்
ரபேல்
பன்னாட்டு விமானங்கள்
இந்திய மானத்தை
காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றன
கல்லா கட்ட முடிவெடுத்துவிட்டால் கார்ப்பரேட்டுகளுக்கு மானமென்ன
வெட்கம் என்ன?
வித விதமாய்
சுழல்கின்றன
வண்ணங்களை
அள்ளித் தெளிக்கின்றன
பல்லாயிரம் போலீஸ் பாதுகாப்பு
சிறு கடைகள்
மீன் கடைகள்
மீனவர்கள்
வியாபாரிகள்
புறக்கணிப்பு
உழைக்கும் மக்களைப் புறக்கணித்து
யாருக்கு
வான வேடிக்கை ?
நம்முடைய
வேதனைகளும் சோதனைகளும் தான்
அவர்களுக்கு
வான வேடிக்கை
ஒக்கி புயலில்
தத்தளித்த மீனவர்களை
காப்பாற்றாத விமானப்படைகளும்
துப்பாக்கிச் சூட்டிலிருந்து
காப்பாற்றாத
கடற்படைகளும்
மண்ணை
நீரை
வான்வெளியை
நஞ்சாக்கிய
வேதாந்தா -
கார்ப்பரேட்டிடமிருந்து
மக்களைக் காப்பாற்றாத ராணுவமும் போலீசும்
குட்டிக்கரணம்
போட்டுக்
கொண்டிருக்கின்றன
மாணவர்கள்
மீனவர்கள்
பெண்கள்
சிறு தொழில்
வியாபாரிகள்
அனைரையும்
புதைகுழியில்
தள்ளிவிட்டு
வான வேடிக்கைகளை
பார்க்கச் சொல்கிறார்கள்
காஷ்மீரின்
ஆசிபா முதல்
கதுவா...

























