நேற்று (21.10.2023) மக்கள் கலை இலக்கிய கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் அவர்களின் தலைமையில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக காசா பகுதியில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த குற்றவாளிகளான இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரின் உருவபொம்மைகள் தூக்கிலிடப்பட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பாலஸ்தீனத்தின் மீது இசுரேல் அரசு தொடுத்திருப்பது சாதாரண போர் நடவடிக்கை அல்ல; ஹமாஸ் இயக்கத்தை அழித்தொழிப்பது என்ற பெயரில் பாலஸ்தீனர்களின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இன அழிப்புப் போர். உலக பயங்கரவாதி அமெரிக்காவின் ஆதரவுடன் அதன் மத்திய கிழக்கு பிராந்திய ரவுடியான இசுரேல், எவ்வித சர்வதேச போர்விதிகளையும் பின்பற்றாமல் காசா முனையை முற்றுகையிட்டிருக்கிறது. எலும்புகள் வரை சென்று துளைக்கும் பாஸ்பரஸ் குண்டுகளை ஏவி மக்களையும் குழந்தைகளையும் கொத்துக் கொத்தாக கொன்றுகுவிக்கின்றன, இசுரேல் படைகள். மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் என அனைத்தின் மீதும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மேற்குலக ஏகாதிபத்திய அரசுகள் ஓரணியில் நின்று பாலஸ்தீன மக்கள் மீதான இந்த இன அழிப்புப் போருக்கு துணை நின்றாலும், அந்நாடுகளின் உழைக்கும் மக்களோ பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வீதியை நிரப்புகிறார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஓரணியில் அணிவகுத்து நிற்கிறார்கள். துருக்கி, ஜோர்டன், லெபனான் போன்ற நாடுகளில் அமெரிக்க, இசுரேல் தூதரகங்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. குறிப்பாக காசாவின் அல் அஹில் அராப் மருத்துவமனையின் மீதான தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் இசுரேலுக்கு எதிரான உலக மக்களின் போராட்டங்கள் வலுத்துவருகின்றன.
Thousands of people in Muslim-majority countries and beyond held demonstrations in solidarity with Palestinians.
இந்தச் சூழ்நிலையில், ஹமாஸின் போர் நடவடிக்கையை யூத மக்களுக்கு எதிரான பயங்கரவாதப் போராகக் காட்டி யூதவெறியூட்டிவருகிறது இசுரேல் அரசு. இசுரேல் நாட்டின் தொலைக்காட்சிகள் அனைத்தும் ஹமாஸ் படைகளால் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினரை நேரலை செய்துவருகின்றன. அவர்கள் கதறியழுவதைக் காட்டி, தனது பயங்கரவாத போரை நியாயப்படுத்தி வருகிறது, இசுரேல். இசுலாமியர்களுக்கு எதிராக யூதவெறியோடு கூட்டுச் சேர்ந்துள்ள பல்வேறு நாடுகளில் உள்ள ஊடகங்களும் தனது நாட்டு மக்களிடையே இசுரேலின் போர் நடவடிக்கையை நியாயப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தினமலர், தினத்தந்தி உள்ளிட்ட சங்கி ஊடகங்கள் இந்தச் சேவையை சிறப்பாகச் செய்துவருகின்றன.
சமூக ஊடகங்களில் ஹமாஸ் அமைப்பினர் யூத குழந்தைகளின் தலையை வெட்டிக் கொல்வதாகவும், பிணையக் கைதிகளை கொன்று எரிப்பதாகவும் காணொளிகள் பரவுகின்றன. இவை அனைத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் பழைய காணொளிகளாகும். ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இவை போலியாக சித்தரித்துப் பரப்பப்படுகின்றன. நமது நாட்டின் சங்க பரிவார ஐ.டி. விங்-கள் முதல் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வரை இந்த போலிச் செய்திகளை வாந்தியெடுத்து இசுரேலுக்கு முட்டுக் கொடுத்து வருகின்றனர்.
மின்சாரம், குடிநீர், எரிவாயு, உணவுப் பொருட்கள் போன்றவற்றை காசா பிராந்தியத்திற்குள் செல்ல முடியாமல் துண்டித்துவிட்டது, இசுரேல். இதன்மூலம் பாலஸ்தீனர்கள் மீது இராணுவம் மட்டுமல்லாமல் ஒரு உயிரியல் யுத்தத்தையும் தொடுத்துவருகிறது. தெற்கே எகிப்து நாட்டை ஒட்டியிருக்கக் கூடிய ரஃபா எல்லைப் பகுதியை தவிர பாலஸ்தீனர்கள் அகதிகளாக வெளியேறுவதற்கான அனைத்து பகுதிகளையும் இசுரேல் முற்றுகையிட்டுள்ளது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு இணங்க, ரஃபா எல்லைப் பகுதியை திறந்து பாலஸ்தீனர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறது எகிப்து.
இசுரேலின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடி மடிவது என்ற வாய்ப்பைத் தவிர, பாலஸ்தீன மக்களுக்கு வேறு வாய்ப்புகள் விட்டுவைக்கப்படவில்லை. ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும் காசா பகுதிக்குள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தையும் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்துசெய்திருக்கிறது, அமெரிக்கா. இசுரேலின் மேலாதிக்க தாக்குதலுக்கு உதவ அமெரிக்காவின் போர் கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஆயுத உதவிகள் குவிகின்றன. சுருக்கமாக, ஏகாதிபத்திய போர்வெறியர்களால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறது, காசா.
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு, “ஹமாஸ் நடத்துவது பயங்கரவாதப் போர்; இசுரேல் நடத்துவது பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற ஏகாதிபத்தியங்களின் அயோக்கியத்தனமான பிரச்சாரங்களை நம்பிக் கொண்டு உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் அமைதியாயிருக்கவில்லை. குறிப்பாக, எந்த யூதவெறியை தமக்கு கவசமாக கொண்டு இந்தப் போரை இசுரேல் நியாயப்படுத்துகிறதோ, அந்த யூத மக்களே இசுரேலின் அநீதியான போருக்கு எதிராக திரண்டு எழத் தொடங்கியிருக்கிறார்கள்.
அக்டோபர் 16-ஆம் தேதி, அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான யூத மக்கள், “யூதர்கள் சொல்கிறோம் காசா மீதான போரை நிறுத்து!” என்று முழங்கியுள்ளார்கள். “காசாவை வாழவிடு!”, “காசா மக்களை கொல்வதை நிறுத்து!” போன்ற முழக்கங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுந்துள்ளன. இது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு செருப்படியாக அமைந்துள்ளது. இசுரேலுக்கு தமது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்து, நாடாளுமன்ற அவையில் உள்ள பெரும்பான்மையான அமெரிக்க பிரதிநிதிகளும் இப்போருக்கு எண்ணெய் வார்த்துக் கொண்டிருக்கும்போது, அதே வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு அமெரிக்க நாடாளுமன்ற அவையை எச்சரிக்கை வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள், செயல்பாட்டாளர்கள்.
Protesters storm Capitol Hill demand Gaza ceasefire
Hundreds of Jewish-American peace protesters stormed Capitol Hill to demand the Congress push for a ceasefire and bring to an end Israel's military campaign on the besieged Gaza Strip.#SolidarityWithPalestinepic.twitter.com/T0iT2kIK0e
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா, இசுரேலுக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இராணுவ உதவிகளை அளித்துவருவதாகவும், இந்த இராணுவ உதவிகள் இசுரேலால் பாலஸ்தீனர்களின் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்காகவும், அம்மக்களை படுகொலை செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த நிதியை உடனடியாக அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளில் முதன்மையானதாக இருக்கிறது.
அமெரிக்காவில் மட்டுமின்றி, இசுரேல் நாட்டிலும் காசா மீது தொடுக்கப்பட்டிருக்கும் அநீதியான போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி பேரணியொன்று நடைபெற்றுள்ளது. அக்டோபர் 18-ஆம் தேதி ஹைஃபா நகரில் போரை எதிர்த்து நடைபெற்ற இந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் ஆறு பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
“காசாவுடன் போர் வேண்டாம் என்றோ, காசாவுக்கு ஆதரவாகவோ யாரேனும் பேசினால் அவர்களை காசாவுக்கு பேருந்தி ஏற்றி அனுப்பிவிடுகிறேன்” என்று கொக்கரித்துள்ளான், இசுரேல் போலிசுப் படைத் தலைவன் கொபி ஷப்தாய்.
Israel Police: Anti-war protesters will be sent to Gaza
மேலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக (அதாவது பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக) கருத்துப் பரப்பியதாக இசுரேலிய அரசால் இதுவரை 63 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பேரணி நடைபெற்றதாக கூறப்படும் அதே புதன்கிழமை (அக்டோபர் 18) அன்று, இசுரேல் நாடாளுமன்ற உறுப்பினரான ஒஃபெர் காசிஃப் (Ofer Cassif) நாடாளுமன்ற அவையின் நெறிமுறைக் குழுவால் 45 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரபு-யூத கம்யூனிஸ்டு ஹடாஷ் கட்சியைச் சேர்ந்த இவர் நெதன்யாகு அரசாங்கம் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பு தொடுத்த தாக்குதலை, “ஹிட்லர் யூதர்களை இனப்படுகொலை செய்வதற்கான இறுதிநாளை குறித்ததைப் போல, பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்” என்று பேசியதுதான் இடைநீக்கத்திற்கான காரணம்.
இவ்வாறு போருக்கு எதிராக கருத்து தெரிவிப்பதையும் மக்களின் எதிர்ப்புகளையும் நசுக்குவதற்காகவே இசுரேலில் போர்க்கால அரசாங்கம் (State of war) அறிவிக்கப்பட்டிருக்கிறது. “அனைத்து வகைப்பட்ட மக்களும் வந்து எங்களை சோதிப்பதை அனுமதிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. இசுரேலில் போர்கால அரசாங்கம் அமலில் உள்ளது” என்று தெரிவித்துள்ளான் பேரணிக்கு எதிராக கொந்தளித்த போலிசுப் படைத் தலைவன் ஷப்தாய்.
போருக்கு எதிரான ஒரு சிறு எதிர்ப்பு அல்லது கருத்துக்கள் கூட இசுரேல் அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஏற்கெனவே, பாசிஸ்டு நெதன்யாகு கொண்டுவந்த நீதித்துறை சீர்த்திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல மாதங்களாக வீதியை நிரப்பியிருந்தார்கள், இசுரேல் மக்கள். இந்நிலையில் ஹமாஸ் இசுரேல் மீது தொடுத்திருக்கும் போரை தமக்கு சாதமாகப் பயன்படுத்தி யூதவெறியை கிளப்பிவிடலாம்; இதன்மூலம் தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதோடு, காசாவை அழித்தொழிப்பதற்கான தார்மீக ரீதியான ஆதரவையும் பெற்றுவிடலாம் என்று கருதியிருந்தார், நெதன்யாகு. இதுபோன்ற போர் எதிர்ப்புக் கருத்துகள் தனது கனவின் மீது கல்லெறிந்துவிடுமோ என்று இப்போது நெதன்யாகு அஞ்சுகிறார். யூத இனவெறியையே தனது கவசமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு பாதுகாத்துக் கொள்கிறார்.
இனவெறி, மதவெறி, நிறவெறி, சாதிவெறி போன்றவை பிறிதொரு மக்கள் பிரிவினரை எதிரிகளாகக் காட்டி தன் சொந்த மக்களுக்கு எதிரான ஆளும் வர்க்கங்களின் சுரண்டலை மூடிமறைக்கவே பயன்படுகின்றன. ஆளும் வர்க்கங்கள் மிக வசதியாக பதுங்கிக்கொள்ளும் இந்த ஆமை ஓட்டை உடைத்தெறியும் வகையிலான போராட்டங்களில்தான் உழைக்கும் மக்களின் விடுதலை பொதிந்திருக்கிறது. ஜியார்ஜ் பிளாயிடுக்கு எதிரான அமெரிக்க உழைக்கும் மக்களின் எழுச்சியில் வெள்ளையினத்தவர் மிகப்பெரும்பான்மையினராக கலந்துகொண்டதைப் போல, யூத இனவெறியூட்டி பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்புப் போரை நியாயப்படுத்துவதற்கு எதிரான போராட்டங்களில் யூத உழைக்கும் மக்கள் அதிக அளவில் பங்கெடுக்கும்போது, வல்லரசுகளின் மேலாதிக்க முதுகெலுப்பு நொறுக்கப்படும். அத்தகைய போராட்டங்கள் முகிழ்த்தெழுவதை ஆதரிப்பதும் வளர்த்தெடுப்பதும் உலகெங்கிலும் உள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
இரத்த வெறிபிடித்த இஸ்ரேலே காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! சென்னையில் தெருமுனை பிரச்சாரம்
இரத்த வெறிபிடித்த இஸ்ரேலே காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! என்ற முழக்கத்தை முன்வைத்து சென்னை சைதாப்பேட்டையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் உழைக்கும் மக்களிடையே தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
எங்களின் உடல் முழுவதும்
குருதி வழிந்தோடுகிறது
மீண்டுமொரு ஏவுகனை தாக்குதலை சந்தித்ததால்
அதிர்ச்சியில் உடல் நடுங்குகின்றது
எங்களின் பிஞ்சு குரல்களில்
கொடூரமான வலி உள்ளது
இருப்பினும், எங்கள் குரல்கள்
உங்களுக்கு கேட்கும் என நம்புகிறோம்.
எங்கள் மீதான
இஸ்ரேலின் இன அழிப்புக்கு
கப்பல்களில் ஆயுதங்கள் வந்திறங்குகின்றன
கடல்வழி, வான்வழி, தரைவழி என
விதவிதமாய் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன
எங்கள் இனத்தை அழிக்க ஏதுவாய்
பள்ளி பருவத்தை தாண்டாத
எங்களை குறிவைத்து ஏவுகனைகள் பாய்கின்றன
இந்த முறையாவது
இவர்களை வீழ்த்திவிட மாட்டோமா என
பாசிஸ்ட்டுகள் கூச்சலிடுகின்றனர்.
ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!
உங்கள் துப்பாக்கிக்களின் தோட்டாக்கள் எங்கள் நெஞ்சை துளையிடலாம்
உங்களின் பாஸ்பரஸ் குண்டுகள்
எங்கள் உடலை ஊனமாக்கலாம்
உங்கள் பீரங்கி குண்டுகள்
எங்கள் உயிரை பலியிடலாம்
ஆனால், இவற்றில் எதுவுமே எங்கள் குரலை ஒடுக்கிவிடாது!
எத்தனை ஏகாதிபத்தியங்கள் உங்களுக்கு ஆயுத உதவி செய்தாலும் சரி,
உங்களின் பெரிய பீரங்கிகள் மீது கல்லெறியும்
எங்களின் சிறிய விரல்களில் மோதி
நீங்கள் ஏவிய ஏவுகனைகள் எல்லாம் தோற்று நிற்கின்றன.
நான் சட்டக் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடன் படித்த மாணவி ஒருவர் வசூல் செய்து கொண்டிருந்தார். என்னவென்று அருகில் நான் சென்று பார்க்கும் போது தான், ஆதிபராசக்தி மன்றத்திற்கு பில் புக்கில் பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று வசூல் செய்தது தெரிந்தது. இப்படி பல்லாயிரக்கணக்கான பெண்கள் மூலம் பணம் சேர்த்த ஆதிபராசக்தி மன்றம் இன்றைக்கு மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி.
***
மதத்தில் புரட்சி செய்த மகான் என்று அடைமொழியோடு பங்காரு அடிகளாருக்கு பலரும் கண்ணீர் மழை சொரிந்தபடி அஞ்சலி குறிப்புகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி எழுதுபவர்களில் பலரும் ஆன்மீகவாதிகளாக மட்டும் இல்லை; மாறாக கடவுள் மறுப்பாளர்களும்’ கூட அவருக்காக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பங்காரு அடிகளார் மேற்கொண்ட கடவுள் வியாபாரத்துக்காகவும் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களின் கொள்ளைக்காகவும் தனது ரவுடி தனத்தின் மூலம் மேல்மருவத்தூர் மற்றும் மேல்மருவத்தூர் சுற்றியுள்ள பகுதியில் நிலங்களை வளைத்து போட்டதற்காகவும் மிகச் சிறந்த அரசியல் தரகராக இருந்ததற்காகவும் இறுதி வரை பாஜகவின் நம்பகமான கூட்டாளியாக இருந்ததற்காகவும் தமிழ்நாடு அரசு உள்ளூர் விடுமுறையை அறிவித்ததுடன் பங்காரு அடிகளாரருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற இயற்பெயரைக் கொண்ட பங்காரு அடிகளார் பள்ளி ஆசிரியராக இருந்தார். ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்கு செல்லும் உரிமை மறுக்கப்பட்டிருந்த காலத்தில் இவர் நவீன கடவுளாக தன்னை உருவாக்கினார். எல்லா சாமியார்களும் நான் கடவுளின் பிறவி என்று சொல்லுகின்ற காலத்தில், நான்தான் அம்மா நான்தான் பராசக்தி என்று எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார்.
எல்லோரும் கருவறையில் சென்று கடவுளை வழிபடுவதற்கான உரிமையை கொடுத்தார். குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்திலும் கருவறையில் சென்று கடவுளை வழிபடலாம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். இதன் காரணமாக பெண்கள் சாரை சாரையாக இவரது கோயிலுக்கு வந்தனர். முதலாளித்துவம் பெண்களுக்கு உரிமையை ஏன் கொடுத்தது? தனது கட்டற்ற சுரண்டலுக்காகத்தான். அப்படி பெண்களுக்கு வழிபடும் உரிமையை ஒருபுறம் கொடுத்து இன்னொரு புறம் அவர்களிடமிருந்து பணத்தை கத்தை கத்தையாக பிடுங்கினார் பங்காரு.
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ஆதிபராசக்தி மன்றங்களை உருவாக்கி, அதன் மூலம் பல நூற்றுக்கணக்கான கோடி மதிப்பிலான நிலங்களை அபகரித்தார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 7000 மன்றங்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்றால் அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய நிலங்களின் மதிப்பு அளவிட முடியாததாகும். சுமார் பத்து நாடுகளில் இவரது ஆதிபராசக்தி மன்றங்கள் இருக்கின்றன. அதன் மூலமாக எவ்வளவு பணம் வருகிறது? புழங்குகிறது என்பதெல்லாம் அறியாத ஒன்றாகும்.
தமிழ்ப்படம் ஒன்றில் கவுண்டமணி சாமியாராக வருவார். தொடக்கத்தில் சைக்கிளில் வரும் அவர் பிற்காலத்தில் படிப்படியாக வளர்ந்து காரில் வரக்கூடிய அளவுக்கு மாறி இருப்பார். அப்படி தன்னுடைய வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டவர் தான் பங்காரு அடிகளார். அதன் காரணமாக அனைத்து அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றக் கூடிய ஆற்றலையும் பெற்றிருந்தார்.
பங்காரு அடிகளார்
மேல்மருவத்தூரை நெருங்குவதற்கு சில கிலோ மீட்டர் முன்பிருந்தே கடைகள் அனைத்தும் பங்காரு அடிகளாரின் பெயரிலேயே இருக்கும். அங்கு இருக்கக்கூடிய நிலங்கள் அனைத்துமே பங்காரு அடிகளாரின் கட்டுப்பாட்டிலேயே விற்பனையும் செய்யப்படும். குறுநில மன்னனைபோல வாழ்ந்து வந்த பங்காரு அடிகளார், அவரை எதிர்த்து கேள்வி கேட்ட பலரையும் இல்லாமலும் செய்திருக்கிறார். பற்று இல்லாத வாழ்க்கை வேண்டும் என்று சொன்ன பங்காருவுக்கு குடும்பம் குழந்தைகளும் உண்டு, சேர்த்த சொத்துகளோ பல்லாயிரம் கோடி. பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மகனான செந்தில்குமாரை அடுத்த பட்டத்து இளவரசனாக அறிவித்துவிட்டுப் போனார். தன்னுடைய இறுதி காலத்தை அறிந்த பங்காரு, இருக்கும்போதே கோயிலுக்கு அருகிலே தன்னுடைய கல்லறையை கட்டி வைத்து, எப்படி இனி பணம் பறிக்க வேண்டும் என்ற வித்தையை தன்னுடைய வாரிசுகளுக்கு தெளிவாக கற்றுக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.
கடவுளை வைத்து மேற்கொள்ளப்படும் பழைய முறையிலான வியாபாரம், ஒரு கட்டத்தில் போர் அடித்துப்போக, அடுத்து கல்வியை வைத்து தன்னுடைய கடவுள் வியாபாரத்தை மேலும் பெருக்கினார். 90-களுக்கு பிறகு உருவான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தை கனகச்சிதமாக பிடித்துக் கொண்டு கடவுள், கல்வி, ரியல் எஸ்டேட் என அனைத்து துறைகளிலும் கோலோச்சினார். தனது வியாபாரம் அனைத்துக்கும் ஆதிபராசக்தியே மூலதனம்.
கணக்கில் அடங்காத பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், கடைகள் எனத் தொடங்கியதில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொட்டியது. அதற்காக ஏழை எளிய மக்களின் நிலத்தை கடவுள் பெயரைச் சொல்லியும் மிரட்டியும் பறித்தார். சுய உதவி குழுக்களுக்கு முன்னோடியாக அன்றைக்கே பெண்களுக்கு குழுவை உருவாக்கி அதன் மூலம் தனக்கான அரசியல் லாபத்தை பெற்றார். ஒவ்வொரு தேர்தலின்போதும் முக்கியமான அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் பலரும் அவர் ஆசிக்காக காத்திருந்தார்கள்.
ஒரு கட்டத்தில், அவரது அறக்கட்டளை மூலமாக, மேல்மருவத்தூர் பகுதியில் ஏராளமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கடைகள் தொடங்கப்பட்டன. 2019-இல் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
மேல்மருவத்தூர் கோயில் இருந்த பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராக அவரது மனைவியே தொடர்ச்சியாக நீடித்து வந்தார். இடையில் சில ஆண்டுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த போதும் தங்களுக்கான நபர்களையே வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்தார்.
மழை வருவதற்காக யாகம் செய்கிறோம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அரசு நிர்வாகத்தோடு கூட்டுச் சேர்ந்து மூடநம்பிக்கைகளை வளர்த்தார். அவருடைய மன்றத்தினர் எப்போது யாகம் செய்தாலும் அடுத்த சில வாரங்களில் மழை பெய்து விடும் ஏனென்றால், மழைக்காலத் தொடக்கத்தில் மட்டுமே அவரது யாகம் ஏற்பாடு செய்யப்படும்.
வட மாவட்டங்களில் மார்க்சிய லெனினிய குழுக்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வந்த காலத்தில் அப்பகுதியில் உள்ள மக்களிடத்தில் சிவப்பு உடைக்கு பதிலாக செவ்வாடை, சங்கத்திற்கு பதிலாக ஆதிபராசக்தி மன்றம், உரிமைகளுக்கான போராட்டம் என்பதற்கு பதிலாக மன்றங்களில் பூஜை, புரட்சி ஓங்குக என்பதற்கு பதிலாக ஓம் சக்தி ஆதிபராசக்தியே என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் உச்சரிக்க வைத்து அவர்களின் பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான, வர்க்க உணர்வை மழுங்கடித்தார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மகிமை தொடர்பாக சில திரைப்படங்களும் வந்திருக்கின்றன. பகுத்தறிவு மறுப்பு, அறிவியல் மறுப்பு, மருத்துவ அறிவு மறுப்பு ஆகிவற்றை அத்திரைப்படங்கள் பிரச்சாரம் செய்தன. இப்படிப்பட்ட இப்படிப்பட்ட ’சமூக சேவை’யை செய்ததால்தான் என்னவோ மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதை செய்கிறது.
பங்காருவின் கல்வி நிறுவனங்களில் – கல்லூரிகள், பள்ளிகள் ஆகிவற்றில் – மிக அதிகமான அளவு நன்கொடை, சேர்க்கை கட்டணம், உணவுக் கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவை பெறப்பட்டன. இதை எதிர்த்து கேள்வி கேட்கும் மாணவர்களை செவ்வாடை பக்தர்கள் – ஸ்பெஷலாக – தனியே கவனிப்பார்கள்.
2010-ஆம் ஆண்டு இவரது கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையின்போது பங்காரு அடிகளாரின் வீட்டை சோதனை செய்த அதிகாரிகள் – அவரது படுக்கை அறை உள்பட – அவரின் வீட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்பது கோடி ரூபாய் பணத்தை மீட்டனர். அவரது கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் கணக்கு காட்டப்படாத கோடிக்கணக்கான ரூபாய் பணம் மீட்கப்பட்டது.
அதேபோல, அவரது அறக்கட்டளையின் கீழ் செயல்பட்ட மருத்துவக் கல்லூரியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளை மீறியதாக மத்திய புலனாய்வுத் துறை ஜூலை 2010-இல் வழக்கு ஒன்றையும் பதிவு செய்தது. தனது பல் மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக ஐம்பது லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்து வசமாக சிக்கினார் பங்காரு. வழக்கம்போல அந்த பல் மருத்துவக் கல்லூரியின் தாளாளரான பங்காருவின் மனைவி தப்பித்துக்கொள்ள மற்ற நிர்வாகிகள் மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது என்பதை உயர் நீதிமன்றம் நிரூபித்து எச்சரிக்கை விடுத்தது.
தான் செய்த தில்லுமுல்லுகள் ஒவ்வொரு முறை அம்பலப்படும்போதும் “ஓம் சக்தி ஆதிபராசக்தி” என்ற முழக்கமே அவரை காப்பாற்றியது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்க பெருமூச்சு மதம் என்பர். அந்த ஏக்கப் பெரு மூச்சினை மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆக்கி பல்லாயிரக்கணக்கான கோடிகள் சொத்து சேர்த்தவர்தான் இந்த பங்காரு.
தன்னுடைய அதிகாரத்தை தக்கவைப்பதற்காகவும் தன்னுடைய தில்லு முல்லு முறைகேடுகளில் இருந்து தப்பிப்பதற்காகவும் அனைத்து அரசியல் கட்சிகளோடும் கூட்டணி வைத்துக் கொண்டார். அவருடைய செல்வாக்கு வேண்டும் என்பதற்காக -ஆதரவு வேண்டும் என்பதற்காக- அவருடைய மண்டபத்துக்கு போகாத சாதிய – இனவாத – சந்தர்ப்பவாத தேர்தல் கட்சியே இல்லை என்று கூறலாம். தன்னால் தீர்மானிக்கப்படும் நபருக்கு மட்டுமே மேல்மருவத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் ஓட்டுகள்(வாக்குகள்) விழும் என்ற நிலைமையை தனது ரவுடித்தனத்தின் மூலம் உருவாக்கி இருந்தார். இந்தப் பின்னணியில்தான் தி.மு.க முதல் பல்வேறு சோ கால்டு (so called) சுயமரியாதைக் கட்சிகளும் அஞ்சலி செலுத்துவதைக் காண முடியும்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தை ஒரு மடமாக கூட சங்கராச்சாரி மதிக்கவில்லை. எனினும் சங்கராச்சாரி கைதின்போது ஓடோடிச் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தார் பங்காரு. பங்காருவை தங்கள் வலையில் விழ வைக்க வேண்டும் என்பதற்காக 2019-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்தது பாசிச பாஜக அரசு. அதை மிகுந்த பெருமையோடு வாங்கிக் கொண்டார் பங்காரு.
தீண்டாமை இல்லை என்று கூறிய பங்காரு, கல்லா கட்ட வேண்டும் என்பதற்காக பெண்களை கருவறையில் அனுமதித்த பங்காரு சங்கராச்சாரிக்கு ஆதரவு கொடுத்ததன் மூலம் பாசிச கட்சிகளோடு ஐக்கியமாகிக் கொண்டார் என்பதுதான் உண்மை. இந்த பின்னணியில்தான் பங்காரு இறந்ததற்கு மோடி, எச்.ராஜா முதல் அனைவரும் மாங்கு மாங்கு என்று அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடியும்.
பங்காரு இப்போது இறந்து விட்டாலும் கூட அவருடைய மகனும் அடுத்த பட்டத்து அரசருமான கோ.பா.செந்தில் இருக்கிறார். அவரை வழி நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது. ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளோடு ஒத்து போகக் கூடிய ஒரு கட்சியை உருவாக்கி அதற்கு தலைவராகவும் இருக்கக்கூடிய செந்தில்குமார் விரைவில் எம்.எல்.ஏ. கூட ஆகலாம். செந்தில்குமாருக்கு எந்த பாதிப்பு வந்தாலும் காப்பாற்றக்கூடிய ஒரே முழக்கம் ஓம் சக்தி ஆதிபராசக்தி.
ஏசி சண்முகம், ஜெகத்ரட்சகன், ஜேப்பியார், பச்சமுத்து என யாரும் கண்டறியாத புதிய வழியை கண்டறிந்து தன்னையும் தன் சொத்துகளையும் காப்பாற்றிக் கொண்ட பங்காருவின் பெயரை யாரும் எளிதில் மறக்க முடியாது. இப்படிப்பட்ட நபருக்கு அரசு மரியாதை செய்யும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சந்தர்ப்பவாதத்தையும் யாரும் மறுக்க முடியாது.
“நாரி ஷக்தி வந்தன் அதினியம்” (பெண் சக்திக்கு வணக்கம்) என்று பெயரிடப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் பெருவாரியான (ஓவைசியின் இரண்டு மக்களவை உறுப்பினர்களைத் தவிர) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டம் என எல்லா இடங்களிலும் மகளிர் இட ஒதுக்கீட்டை பற்றிதான் பேசுகிறார், மோடி. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதை வைத்து எதிர்க்கட்சிகளை விமர்சித்தும் மோடியை பாராட்டியும் ஆரவாரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள், காவிகள்.
“காங்கிரசும் இந்தியா கூட்டணி கட்சிகளும் கட்டாயத்தின் பேரிலே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு வாக்களித்திருப்பதாகவும், மத்தியில் ஆட்சி புரியும் வாய்ப்பை அவர்களுக்கு அளித்தீர்கள் என்றால் மீண்டும் மசோதாவை கிடப்பில் போட்டுவிடுவார்கள்” என்றும் காங்கிரசையும் இந்தியா கூட்டணிக் கட்சிகளையும் இழிவுப்படுத்தி போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார், மோடி.
மறுபுறம், மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த முடியாத வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியும், தற்போது மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதற்கான காரணம் மோடி – அமித்ஷா கும்பலின் “தோல்விபயம்”, “தேர்தல் துருப்புச் சீட்டு” ஆகியவை தான் என்று விமர்சித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தான் அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மசோதாவில், “…அரசமைப்பு (128-வது திருத்தம்) சட்டம் 2023-க்கு பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் புள்ளிவிவரங்களுக்குப் பிறகு, எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரும்” என்று குறிப்பிட்டுள்ளது, மோடி அரசு.
மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் குரலெழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமித்ஷா, “எந்த இடங்களை ஒதுக்குவது என்பதை யார் முடிவு செய்வார்கள்? அதை நாங்கள் (அரசாங்கம்) செய்ய வேண்டுமா? மகளிருக்கு, வயநாடு தொகுதி ஒதுக்கப்பட்டாலோ அல்லது ஒவைசியின் ஹைதராபாத் ஒதுக்கப்பட்டாலோ, அரசியல் உள்நோக்கத்துடன் இது நடந்ததாக நீங்கள் புகார் கூறுவீர்கள். எனவே, இப்பணியை தொகுதி மறுவரையறை ஆணையத்திடம் ஒப்படைப்பதே சரியாக இருக்கும்” என திமிர்த்தனமாக பேசினார்.
மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தினால் எதிர்க்கட்சிகளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இருக்காது. மோடியின் பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்கான பிரச்சாரங்களை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள முடியும். இருப்பினும், மோடி அரசு ஏன் அதனை செய்ய மறுக்கிறது?
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்தினால் வருகின்ற மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் மகளிருக்கான தொகுதிகளை புதியதாக ஒதுக்கவேண்டிய நிலைமை ஏற்படும். சான்றாக, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், மக்களவை தேர்தலில் 181 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இத்தொகுதிகள் மொத்த தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு என்பதால் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
எந்தெந்தத் தொகுதிகளை மகளிருக்கான தொகுதிகள் என்று ஒதுக்கீடு செய்தால், பெரும்பான்மையான தொகுதிகளில் தங்களால் வெற்றி பெற முடியும் என்ற முடிவுக்கு மோடி-அமித்ஷா கும்பல் இன்னும் வரவில்லை. எனவே, மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தினால் அது தமக்கே எதிராகத் திரும்பிவிடும் என இக்கும்பல் அஞ்சுகிறது.
தொகுதி மறுவரையறைக்கு பிறகு, மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் மோடி – அமித்ஷா கும்பலுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனென்றால், தொகுதி மறுவரையறையே பெரும்பான்மையாக மகளிருக்காக ஒதுக்கப்படும் தொகுதிகளில் பா.ஜ.க. கும்பல் வெற்றி பெறும் வகையில் தான் செய்யப்படும். அண்மையில், அசாம் மாநிலத்தில் மோடி அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம் பெரும்பான்மையான தொகுதிகளில் பா.ஜ.க கும்பல் வெற்றி பெறும் வகையில் தொகுதிகளை மறுவரையறை செய்துள்ளதே அதற்கு சான்றாகும்.
தற்போது, நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகள் தங்களுக்கு சாதகமான வகையில் மறுவரையறை செய்யப்பட்டு இருந்தால், மகளிர் இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்தி இருக்கும் மோடி- அமித்ஷா கும்பல். அதற்கு வாய்ப்பில்லை என்பதால்தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியும் அதனை அமல்படுத்தாமல் உள்ளது.
மகளிர்இட ஒதுக்கீடு – பாசிஸ்டுகளின்துருப்புச்சீட்டு!
மகளிர் இட ஒதுக்கீடு மூலம் தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக பெண்களின் வாக்குவங்கியைப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர, பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்ற சிந்தனையெல்லாம் பா.ஜ.க. கும்பலுக்கு துளியும் கிடையாது. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மகளிருக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டாலும் இட ஒதுக்கீட்டின் மூலம் பா.ஜ.க. கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள், எந்த உரிமைகளுமற்ற அதிகாரமற்ற ‘தலையாட்டி பொம்மைகளாகத்’ தான் இருக்க முடியும்.
பெண்ணடிமைத்தனத்தையும் பெண்கள் மீதான ஆணாதிக்கத்தையும், ஒடுக்குமுறையையும் கோட்பாடுகளாக கொண்ட பார்ப்பனிய சித்தாந்தத்தின் வழி நடக்கும் பா.ஜ.க. கும்பலிடம் இதைத்தவிர வேறெதையும் நாம் எதிர்பார்க்க முடியாது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காமல் இழிவுப்படுத்தியதுதான் பெண்களை இக்கும்பல் நடத்தும் வழிமுறையாகும். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தின் இன்னொரு சாட்சியமாகும்.
கர்நாடக தேர்தல் தோல்வி, மணிப்பூர் கலவரம், சி.ஏ.ஜி அறிக்கை போன்றவற்றால் சரிந்துவரும் மோடியின் பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்கு, 27 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மோடி அரசு தூசி தட்டி எடுத்துள்ளது. அவசர அவசரமாக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டி, என்ன நிகழ்ச்சிநிரலுக்காக நாடாளுமன்றம் கூட்டப்பட்டது என்றே சொல்லாமல், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மட்டும் நிறைவேற்றியுள்ளது.
வருகின்ற ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஓட்டு வாங்குவதற்காக மேற்கொள்ளும் சந்திரயான் -3, ஜி20 மாநாடு வரிசையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் ஒரு துருப்புச் சீட்டாகத்தான் பார்க்கிறது, மோடி-அமித்ஷா கும்பல்!
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக குறிவைக்கின்ற தொகுதிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ் பேரணியின் பின்னணி குறித்தும் மக்கள் அதிகாரம் செய்தி தொடர்பாளர் மருது அவர்களின் விரிவான நேர்காணல்..
நேற்று (17.10.2023) காசா பகுதியில் உள்ள அல்-அஹ்லி அல்-அரபி (al-Ahli al-Arabi) மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளிதாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது யூத இனவெறி பயங்கரவாத இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனியர்கள் மீது நடத்தியுள்ள படுகொலையாகும்.
Video caught the second a strike hit Gaza's al-Ahli Baptist hospital and killed hundreds. Authorities in the assaulted domain are blaming Israel for the strike ⤵️ pic.twitter.com/FsujVYoKfk
இத்தாக்குதலை எதிர்த்து சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.
Protests erupt in cities across the Middle East following an attack on Al-Ahli Baptist Hospital in Gaza City that killed over 500 people ⤵️ pic.twitter.com/HVoHTJzcGc
கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில், பாகிஸ்தான் அணியின் வீரர்களை நோக்கி “ஜெய் ஸ்ரீராம்” என்ற மதவாத கோஷம் எழுப்பட்டது. “இது இந்த விளையாட்டின் கண்ணியத்தை சிதைக்கிறது, இது ஸ்போர்ட்பேர்சன்ஷிப் (Sportspersonship) என்ற விழுமியத்திற்கு எதிரானது” , ” சர்வதேச அளவில் நாட்டின் மாண்பை சிதைக்கிறது” என்று இதனை கண்டித்த கருத்து தெரிவித்தனர். “ஜெய் ஶ்ரீ ராம்” கோஷம் எழுப்பப்பட்டதற்கு எதிராக ட்விட்டரில் #sorry pakistan என்ற ஹாஷ்டெக் டிரெண்ட் செய்யப்பட்டது. பெரும்பாலானோர் இந்த காட்டுமிராண்டி செயலைக் கண்டித்து வருகின்றனர்.
இந்நேரத்தில், ஒரு விளையாட்டு அரங்கத்தில் “ஜெய் ஶ்ரீ ராம்” என்ற மதவாத கோஷம் எழுப்பப்பட்ட பிண்ணனியை நாம் பரீசிலித்து பார்க்க வேண்டியுள்ளது. விளையாட்டு அரங்கத்தில் “மதவாத கோஷம்” எழுப்பப்பட்டது என்பது இந்த நாட்டில் மாதவாத பாசிசம் ஆட்சி செய்கிறது, அது நாட்டின் எல்லா நிறுவனங்களையும் விழுங்கிக்கொண்டு வருவதன் வெளிப்பாடு மட்டுமே. வெளிப்பாட்டு வடிவம் மட்டுமே பிரச்சினையின் முழுப்பரிமாணம் அல்ல. வைரஸ் தொற்று ஏற்பாட்டால் உயர்ந்த வெப்பநிலையில் காய்ச்சல் அடிப்பது ஒரு அறிகுறி மட்டுமே. ஆனால் வைரஸ் தொற்றின் பிரதான இயல்பு உடலின் முக்கிய உறுப்புகளை தாக்குவதுதான். அதுபோல்தான், விளையாட்டு அரங்கத்தில் மதவாத கோஷம் எழுப்பப்பட்டது வெறும் வெளிப்பாடுதான். உண்மையில், இந்த நிகழ்வு நமக்கு சொல்வது என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. என்ற பாசிச கும்பல் இந்த நாட்டு மக்களின் அனைத்து ஜனநாயக வெளிகளையும் நெரித்து வருகிறது என்பதுதான்.
மதவாதம் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மக்கள் பிரிவினர்களிடமும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதற்காகவே அவர்கள் பல்வேறு நிறுவன கட்டமைப்புகளை உருவாக்கி வளர்த்துள்ளார்கள்.
கும்பல் வன்கொலை, பசுக்குண்டர் படை, லவ் ஜிகாத் குண்டர் படை, சாதிய வன்கொலை போன்ற வெவ்வேறு வடிவங்களில் மாதவாதம் அரங்கேற்றப்படுகிறது. மேலும், இவையெல்லாம் குறிப்பிட்ட நோக்கத்தை சாதித்துக் கொள்ள நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறையாக (Organized Violence) நிகழ்த்தப்படுகிறது.
இரண்டு மதக் குழுவினருக்கு இடையில் நிகழும் சிறு தகராறுகளுக்கும், ஒரு மதவாத சித்தாந்தம் கொண்ட நிறுவனத்தால் மேலிருந்து ஒழுங்கமைக்கப்பட்டு நிகழ்த்தப்படும் கலவரங்களுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. தெளிவாகச் சொன்னால், இந்தியா முழுவதும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் விசயத்தில் தகராறுகள் நடந்துள்ளது. ஆனால் அவை காலப்போக்கில் சுவடே தெரியாமல் மறைத்து போயிவிட்ட சிறு பிரச்சினைகள்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. என்ற பாசிச அமைப்பால் திட்டமிட்டு நடத்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு என்பது அரசியல் ஆதாயத்திற்காக மேலிருந்து கட்டமைக்கப்பட்ட கலவரம். சமீபத்திய மணிப்பூர் கலவரமும் அதேபோல் கட்டமைக்கப்பட்ட கலவரம்தான். இந்த கலவரங்கள் எல்லாம் நிறுவன ரீதியான ஒழுங்கமைக்கப்பட்டவைகள். அதனால்தான் இதையெல்லாம் நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறை என்று சமூகவியலாளர்கள் சொல்கிறார்கள்.
இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள்தொகை மற்றும் சந்தையை உடைய நாட்டின் அரசியல் அதிகாரத்தை இதுபோன்ற கலவரங்களால் கைப்பற்றவும் தக்கவைத்துக்கொள்ளவும் முடியும் என்றால் இங்கே நிறுவனமயப்படுத்தப்பட்ட கலவரங்களுக்கு எத்தகைய பரிமாணம் இருக்கிறது என்பதை நாம் பரிசீலித்து பார்க்க வேண்டும்.
நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறைகள் மூலம் முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினரை எப்போதும் அச்சத்திலே வைத்திருக்க முடியும். பெரும் கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டு “ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷமிடுவது, பாகிஸ்தான் வீரர்களை மட்டுமல்ல இந்திய அணியில் உள்ள சக வீரர்களான முகமது சிராஜ், முகமது ஷமி போன்றவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கியிருக்கும்.
இப்போது அகமதாபாத் அரங்கத்தில் நடைபெற்ற போட்டியின் பொழுது மதவாத கோஷம் எழுப்பப்பட்டது கூட தன்னிச்சையான மந்தை மனநிலையில் இருந்து அல்ல. இந்த நிகழ்வு வெகுவாக நிறுவன ரீதியாக கட்டமைக்கப்பட்ட ஒன்று. உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை தயாரிக்கும் பொழுது இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை வலிந்து தேதி மாற்றம் செய்து அகமதாபாத் அரங்கத்தில் வைத்தது, தொடக்கப் போட்டிக்கு விழா நடத்தாமல் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆடும் 12-ஆவது லீக் போட்டியில் விழா ஏற்பாடு செய்தது, பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு கடைசி வரை விசா வழங்காமல் இழுத்தடித்தது, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கிடைக்காமல் செய்யப்பட்டது போன்ற ஏராளமான ஏற்பாடுகளை பாசிச பா.ஜ.க. அதன் நிறுவன பலத்தை பயன்படுத்திதான் செய்துள்ளது.
எனவே, இந்த பாசிச பேயாட்சிக்கு எதிராக குறைந்தபட்ச மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு கூட்டமைப்பில் நாம் அனைவரும் ஐக்கியப்பட வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க. கும்பலின் பாசிச தாக்குதல்கள் அரசியல், சமூகம், கலாச்சாரம், குடும்பம் என அனைத்து அரங்கங்களிலும் அதிகரித்து வருகிறது. எல்லா மட்டங்களிலும் சீரழிவுகளும், அடக்குமுறைகளும் அதிகரித்து வருகிறது. அதனை முறியடிக்க நிறுவன அமைப்பு ரீதியாக திரள்வோம்.
அக்டோபர்– 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.20
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
♦ தலையங்கம்: சனாதனம் ஒழிப்போம்!
ஓட்டம் பிடித்த பார்ப்பன கும்பல்
தமிழ்நாடு மாடலை தேசியமயமாக்குவோம்!
♦ அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி முறிவு:
சுயமரியாதைத் தூண்டுதலா, எலும்புத் துண்டுக்கான சீற்றமா?
♦ நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்: சிலந்திவலைகள் எச்சரிக்கை!
♦ பத்திரிகையாளர்களை அடாவடித்தனமாக பணிநீக்கம் செய்யும் விகடன் குழுமம்
♦ இந்துராஷ்டிர தர்பார்!
♦ பி.எம். விஸ்வகர்மா: பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான சதித்திட்டம்!
♦ மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு: சரிந்துவரும் மோடியின் பிம்பத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான துருப்புச் சீட்டு!
♦ மணிப்பூர்: ஐந்து மாதங்களாகியும் அணையாத நெருப்பு!
♦ செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஹாலிவுட் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் போராட்டம் வெற்றி!
♦ அமெரிக்க வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!