Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 296

சாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா ?

1

துரை மாவட்டம் பாலமேடு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவர் சரவணகுமார். இவர் அலங்காநல்லூர் அருகிலுள்ள மறவப்பட்டியைச் சேர்ந்தவர். சரவணக்குமார் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர். கடந்த 11-ம் தேதி மாலை 5 மணிக்கு பள்ளி விட்டதும் சரவணகுமாரின் புத்தக பையை சக மாணவரான மகேஷ்வரன் எடுத்து மறைத்து வைத்துள்ளார். புத்தகப் பையைத் தேடிய சரவணன், மகேஸ்வரனிடம் ஏன் என் பையை மறைத்து வைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து சரவணக்குமாரின் சாதிப்பெயரை சொல்லி அசிங்கமாகத் திட்டிய மகேஸ்வரன், “நீயெல்லாம் என்னைப் பார்த்து பேச வந்துட்டியா” என்று கூறியபடியே திடீரென்று பென்சில் டப்பாவிலிருந்து பிளேடை எடுத்து சரவணக்குமாரின் முதுகில் கிழித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதனால் வலி தாங்க முடியாமல் சரவணக்குமார் கத்தியுள்ளார். அக்கம் பக்கத்தினர் சரவணக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணக்குமாரின் தந்தை செருப்புத் தைக்கும் தொழிலாளி. தனது மகன் சரவணக்குமாருக்கு இது போல் அவமானங்கள் நேர்வது புதிதில்லை என பத்திரிகைகளில் தெரிவித்துள்ளார். உடன் படிக்கும் மாணவர்கள் சரவணக்குமாரை சாதிப்பெயரைச் சொல்லி இழிவாக பேசுவது, நடத்துவது என்பது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனால் அடிக்கடி தன்னிடம் வந்து ”அப்பா நாம் என்ன கீழ் சாதியா? கூட படிக்கும் மாணவர்கள் கேலி பேசுறாங்க. எனக்கு வெக்கமாக இருக்குப்பா. வேற பள்ளியில் சேருப்பா” எனக் கேட்டுள்ளார். ஆனால், எங்கு சேர்த்தாலும் இதே நிலைமை தான் என்பதை விளக்கி, இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்றும், கல்விதான் நம்மைக் காப்பாற்றும் என்றும் அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லி வந்துள்ளார்.

பல நாட்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போதெல்லாம் சரவணக்குமாரின் புத்தகங்களையோ பேனாவையோ சக மாணவர்கள் பறித்திருப்பார்கள். சில நாட்கள், ”உனக்கெல்லாம் சைக்கிளாடா?” என்று டயரை பிளேடால் கிழித்து பஞ்சராக்கி விடுவார்கள். ஆனால், இதையெல்லாம் பள்ளிக்கு போய் புகார் கொடுக்க வேண்டாம் எனத் தன் தந்தையைத் தடுத்துள்ளார் சரவணன். ஏனெனில், புகார் செய்யப் போனால் இன்னும் தன்னை மோசமாக நடத்தி விடுவார்கள் என அஞ்சியுள்ளார். ஆனால், இந்த முறை தன் மகனின் உயிருக்கே ஆபத்து வந்துள்ள நிலையில் போலீசாரிடம் புகாரளித்துள்ளார் சரவணனின் தந்தை. எனினும், இதுவரை போலீசார் தரப்பில் உருப்படியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் இல்லை.

♦♦♦

தென்மாவட்ட பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகளில் மாணவர்கள் அமரும் மேசைகள் ஒவ்வொன்றும் சாதிவாரியாக பிரிந்து கிடக்கும். மாணவப் பருவத்திலேயே நஞ்சாக ஊட்டப்படும் சாதி வெறியால் அவர்கள் சாதிவாரியான தனித் தனிக் குழுக்களாக பிரிந்து கிடப்பார்கள். தங்கள் சாதியை அடையாளப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு மாணவரும் கைகளில் குறிப்பிட்ட வண்ணங்களில் அடையாளக் கயிறு கட்டிக் கொள்வார்கள்.

இவையெல்லாம் பழைய / தெரிந்த செய்திகள்தாம். ஆனால், இந்த சாதிவெறி அணைந்து விடாமல் பாதுகாப்பது யார்?

இந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி கல்வித் துறை  இயக்குனர் மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். அந்தச் சுற்றறிக்கையில், பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் சாதியைக் குறிக்கும் வகையில் கயிறுகளை அணிந்து வருவதாகவும் 2018-ம் ஆண்டைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் இதனைப் பார்த்து அரசுக்குத் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக தலைமைக் கல்வி அதிகாரிகள் இம்மாதிரிப் பள்ளிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தகுத்த உத்தரவை இடுவதன் மூலம் இந்த நடவடிக்கையைத் தடுக்க வேண்டுமென அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

உடனே கொதித்தெழுந்த பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, “கையில் கயிறு கட்டுவது. நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமத சின்னங்களை தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில், பதறியடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இப்படி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்று கூறினார். மேலும், சுற்றறிக்கை அரசின் கவனத்திற்கு வராத காரணத்தால் தமிழக பள்ளிகளில் முன்பு என்ன நடைமுறைகள் இருந்ததோ அந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் என அறிவித்தார். அமைச்சர் பாரதிய ஜனதாவிடம் சரணடைந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் மேலும் சில நாட்கள் கழித்து பத்திரிகையாளர்களிடம் இதைக் குறித்து பேசிய செங்கோட்டையன், தமிழக பள்ளிகளில் சாதிப் பிரச்சினையே இல்லை எனவும், இருந்தால் காட்டுங்கள் எனவும் கூறினார்.

ஆனால் உண்மை அதுவல்ல.

தென்மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் உள்ளிட்ட கயிறுகளை தங்கள் சாதிக்கு ஏற்றபடி அணிந்து பள்ளிக்கூடங்களுக்கு வருகின்றனர். இதன் மூலம் தங்கள் சாதியைச் சேர்ந்த மாணவர்களை அடையாளம் கண்டு, விளையாட்டு வகுப்புகளிலும் பள்ளிக்கூடங்களுக்கு வெளியிலும் சாதி அடிப்படையில் அணி திரள்கிறார்கள். விளையாட்டுகளில் எழும் சிறு மோதல்கள்கூட, சாதி அடிப்படையிலான பெரிய மோதல்களாக மாறுகின்றன.

“தென் மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரி பள்ளி மாணவர்கள் மோதிக்கொள்ளும் விவகாரங்களில் 60 – 65 வழக்குகள் பதிவாகின்றன” என்கிறார் மதுரை எவிடன்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர். சாதியை அடையாளம் காட்ட கயிறு அணியும் பழக்கம் அரசு பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் பரவி வருகின்றது.

நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் கைகளில் இருந்து கயிறுகளை அறுத்தெறிவதை மதத்திற்கு எதிரான நடவடிக்கை எனப் பார்க்காத இந்துத்துவ குரங்குகள், சாதிக் கயிறுகளை நீக்கச் சொல்வதை மட்டும் இந்து மதத்திற்கு எதிரானது என பொங்குகின்றன. இதிலிருந்தே இந்து மதம் என்பதன் வேர் சாதிதான் என்பதை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.

♦♦♦

டிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் “அசுரன்” திரைப்படத்திலும் இவ்வாறான காட்சி ஒன்று உண்டு. கல்வியின் முக்கியத்துவத்தை தலித்திய செயல்பாட்டாளர்களும், இயக்கங்களும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. இந்தக் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. காலம் காலமாக, நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வியை தலித்துகள் அடைந்தே தீர வேண்டியுள்ளது.

சரவணக்குமாரின் தந்தை நக்கீரன் பேட்டியில் தன் மகனுக்கு இவ்வாறாக அறிவுறை சொன்னதாக குறிப்பிடுகிறார்,  “கல்வி தான் முக்கியம், அது தான் நம்மைக் காப்பாற்றும். எதையும் பொருட்படுத்தாமல் நன்றாக படித்து முன்னேற வேண்டும்”.

படிக்க:
சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?
கிராமத்து பள்ளிகளில் சாதி வளர்க்கும் சண்முகங்கள்

அவரது வார்த்தைகளில் உள்ள “எதையும் பொருட்படுத்தாமல்” என்பது எந்தளவுக்கு வலி நிறைந்த அனுபவமாக இருக்கும் என்பதையே சரவணக்குமாரின் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சாதி வெறி நமக்கு உணர்த்துகின்றது. தலித்துகள் கல்வி பெற வேண்டும் என்பதற்கு முதல் நிபந்தனை அவர்கள் நிம்மதியாக கல்வி பெறுவதற்கும் படிப்பதற்கும் உண்டான சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறுவதற்கு தடையாக இருக்கும் எவரும் தண்டிக்கப்பட வேண்டும். சரவணக்குமாரின் மேல் சாதிய வன்கொடுமையை நிகழ்த்திய சக மாணவர்களும், இதற்கு இத்தனை நாட்களாக துணை போன பள்ளி நிர்வாகத்தினரும் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும்.

சட்டப்படியிலான இந்த நடவடிக்கைகள் முறையாக நடந்தேறுவதை உத்திரவாதப்படுத்துவதுடன், இனிமேலும் ஒரு சரவணக்குமாரின் மேல் இதே போன்ற கொடுமைகள் நிகழ்த்தப்படுவதைத் தடுப்பதும் நம் எல்லோரின் கடமை.

சாக்கியன்

நன்றி : நக்கீரன்

கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !

கீழடி – தமிழர் நகர நாகரிகத்தின் தாய் மடி ! 

மிழர்களின் நகர நாகரிகத்தின் தாய்மடி எனப் புகழப்படும் கீழடியில் நடைபெற்று வருகின்ற 5-ம் கட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சியை 10-10-2019 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று பார்வையிட்டோம். அகழ்வாராய்ச்சிக்காகத் தோண்டப்பட்ட குழிகளில் தமிழர்களின் நகர நாகரிகத்தின் பல்வேறு சான்றுகள் படிந்து கிடப்பதைக் கண்டு வியந்தோம் . கீழடி மதுரையிலிருந்து 15 கி.மீ.தென் கிழக்காக சிவகங்கை – மதுரை மாவட்ட எல்லையில் வைகை நதியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் தெற்கில் உள்ளது.

கீழடியில் தொல்லியல் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட 110 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாலும் கிடைத்துள்ள தொல்பொருட்கள் பற்றிய ஆய்வின் முடிவுகள்   இந்திய வரலாற்றையே மாற்றியமைக்கும்  வல்லமை கொண்டதாக இருக்கிறது என்பது தொல்லியல் அறிஞர்கள்  பலரின் கருத்து. இந்த ஆய்வு 110 ஏக்கர் நிலத்திலும் நிறைவடையும் போது உலக வரலாற்றில் தமிழர் நாகரிகத்தின் தொன்மை என்பது ரோம், ஏதன்ஸ், சுமேரியன் நாகரிகங்களுக்கு இணையாக இருக்கும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

இதுவரையிலும் சங்ககால இலக்கியங்களையே நமது வரலாற்றுக்கும் தொன்மைக்கும் சான்றுகளாகப் பகர்ந்து வந்தோம். வேறு எந்த தொல்லியல், கல்வெட்டுச் சான்றுகளும்  போதுமான அளவிற்குக் கண்டறியப்படாமல்  இருந்த நிலையில் கீழடியில் கிடைத்துள்ள தொல்பொருள் சான்றுகள் சங்க கால  நகர நாகரிகத்தை உறுதி செய்தது மட்டுமல்ல அதன் காலத்தை 2600 ஆண்டுகள் பழமையானது என்று நிர்ணயம் செய்து தமிழர்களுக்குப்  பெருமை சேர்த்திருக்கிறது.

இது  தொடர்பாக கீழடி தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணியின் அதிகாரி ஆசைத்தம்பி அவர்களைச் சந்தித்தபோது அவர் எங்களுடன் பல்வேறு கருத்துக்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார். அடுத்ததாக 6-ம் கட்ட அகழ்வுப் பணிகளை ஜனவரி 2020-ல் அருகிலுள்ள கொந்தகையில் மேற்கொள்ள இருப்பதாகவும்   அது கீழடியில் வாழ்ந்த மக்களின் இடுகாடாக இருந்திருக்கலாம் என்பதால்   அங்கே மனித எலும்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிறைந்து இருப்பதாகவும் அவர்  கூறினார். அத்துடன் கீழடி ,கொந்தகையோடு மதுரை மாவட்டத்தில், அகரம், மணலூர் பகுதிகளிலும், நெல்லை ஆதிச்சநல்லூர், இராம நாதபுரம் மாவட்டம் அழகன்குளம், திருவள்ளூர்  பட்டறை பரம்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் தமிழ்நாடு  தொல்லியல்  துறை ஆய்வை மேற்கொள்ள இருப்பதாகவும் இதில் இதுவரை எந்த அரசியல் தலையீடும் இல்லை என்று நம்பிக்கையோடு கூறினார்.

அவரது நம்பிக்கை மகிழ்வைத் தந்தாலும், ஆரியத்தை உயர்த்தி தமிழர் நாகரிகத்தின் தொன்மையை எப்போதுமே இருட்டடிப்பு செய்யும் ஒரு கூட்டத்தாரின் அரசியல் சதிக்கு இரையாகிவிடக் கூடாதே என்ற அச்சம் நமக்கு இருக்கிறது. ஏனெனில் கீழடியின் முதல்  மூன்று கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட மத்திய தொல்லியல் துறை அதை முறைப்படி செய்யாமல்  அகழாய்வுகளை  இழுத்து மூடியதையும் 3-ம் கட்ட ஆய்வறிக்கை இதுவரை வெளியிடப்படாமல் இருப்பதையும்  கீழடியில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆய்வை மேற்கொண்ட கீழடியின் தள நாயகன் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடியில் இருந்து அஸ்ஸாமுக்கு மாற்றியதையும்  மறந்து விட முடியாது.

கீழடியில் 1,2,4,5 ஆகிய கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட  பல்வேறு பொருட்களை  வகைப்படுத்தி, Royal Testing, Chemical Testing, Carbon Dating-க்கு உலகின் தலைசிறந்த ஆய்வுக்கூடங்களான அமெரிக்காவில் புளோரிடா – பீட்டா, இத்தாலி, இந்தியாவில் புனே – டெக்கான் யுனிவர்சிட்டி, பெங்களூரு – இக்பால் யுனிவர்சிட்டி ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் அதன் பின்னரும், சிலர் உலகமே ஏற்றுக் கொண்ட  கார்பன் டேட்டிங் ஆய்வு முறையை ஏற்றுக் கொள்ளமுடியாது, அது நம்பகத்தன்மை அற்றது; Carban Dating முடிவை வைத்து காலத்தை முடிவு செய்ய முடியாது என்று வாதிடுகின்றனர்.

உலகம் முழுவதும் காலத்தின் தொன்மையைக் கணக்கிடுவதற்கு கரிம வேதியல் ஆய்வுமுறையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவே அறிஞர்களாலும் அறிவியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதை ஏற்க மறுப்பதன் மூலம் அவர்கள் தங்கள் அறியாமையை வெளிப்படுத்தியதாகவே அவர் குறிப்பிட்டார்.

கார்பன் டேட்டிங் ஆய்வு முறையால் காலத்தை துல்லியமாக கணிக்க முடியாது என்றால் இதுவரையிலும் சொல்லப்பட்டு வந்த எகிப்து, ரோம், சுமேரிய, சிந்து ஹரப்பா  நாகரிகங்களின் காலம் அனைத்தும் தவறு என்ற முடிவுக்குத் தான் வர முடியும். கீழடி நாகரிகத்தின் சான்றுகளை கேள்விக்கு உட்படுத்தும் அந்தக் கூட்டம் ரிக் வேத காலத்தை 3000 ஆண்டுகள் முற்பட்டது  என்பதற்கு எந்த  தொல்லியல் சான்றுகளை உலகின் பார்வைக்கு வைத்தனர்?

கீழடியை  விட்டு நகரும் முன் இந்த அகழ்வாராய்வுக்கு நிலம் தந்துதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினோம். நிலம் தந்தவர்களில் பலரும் பல்வேறு ஊர்களில் இருந்ததால்  தற்போது நடந்து முடிந்துள்ள 5-ம் கட்ட அகழாய்வுக்கு இடம் கொடுத்துள்ள மாரியம்மாள் அவர்களை மட்டுமே சந்திக்க முடிந்தது. 2 ஏக்கர் நிலத்தை ஆய்வுக்கு கொடுத்ததைப் பெருமையாகவே கருதினார்.

அவரைப் பாராட்டி சால்வை போர்த்தியபோது அவர் அடைந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளவிட முடியாததாக இருந்தது. அதுபோலவே அங்கே பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் மகிழ்ச்சியாகவும் மக்கள் கேட்கிற கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டும் இருந்தனர். இதுவரை இந்தியாவில் நடைபெற்றுள்ள அகழாய்வுகள் எதற்கும் இல்லாத சிறப்பு கீழடிக்குக் கிடைத்துள்ளது. தமிழர் நகர நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்ற தகவல் ஊடகங்கள் வாயிலாகப் பரவியதை அடுத்து இலட்சக்கணக்கான மக்கள் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளன்று 20 ஆயிரம் பேர்வரை வந்துள்ளனர்.

அடுத்தகட்ட அகழாய்வுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என்றால் நாங்கள் நிதி தருகிறோம் என்று பலரும் கூறிச் சென்றுள்ளதாக அங்கே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆய்வு மாணவர் ராஜா தெரிவித்தார். ஒருவேளை அடுத்தகட்ட அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்தால் அதை எதிர்த்துப் போராடவேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர். எனவே இந்த அகழாய்வு இப்போது மக்கள் இயக்கம் போல மாறியுள்ளது.

தொல்லியல் அகழாய்வு என்பது மக்கள் ஆர்வத்தைத் தூண்டுகிற ஒரு செயல் அல்ல. அங்கே பல்வேறு நீள அகல ஆழங்களில் தோண்டப்பட்டுள்ள குழிகளைப் பார்க்கும் போது 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது நம்ப முடியாத  புதிர்போலத்தான் தோன்றுகிறது. ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று ஆய்வாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் போது தான் ஆர்வம் பிறக்கிறது.

ஏற்கனவே முதல் கட்டமாகச் செய்து முடித்துள்ள கள ஆய்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற இடத்தில் குழி தோண்டப்படுகிறது. அது மேடான பகுதியாக இருக்கின்றது. மேட்டிலிருந்து நிலம் இருபுறமும் சரிந்து செல்கிறது. குறிப்பிட்ட ஆழத்தில் மண் தன் மண்ணாகக் (virgin Soil) காணப்படுகிறது. அதற்குக் கீழே மனிதர்கள் வாழ முடிந்திராத நிலை. மேல் மட்டத்திலிருந்து கீழ் நோக்கி மண், பல அடுக்குகளாக பல நிறங்களில் காணப்படுகிறது.

ஒவ்வொரு அடுக்கும் (வைகை) நதியின் போக்கில் பல நூற்றாண்டு மாற்றங்களைத் தாங்கி நிற்கிறது. அந்த அடுக்கு அப்பகுதியில் எங்கே தோண்டினாலும் ஒரே மாதிரியாகவும் அதில் கண்டெடுக்கப்படுகிற பொருட்கள் பரிசோதனையில் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கிறது. ஆழம் கீழே செல்லச் செல்ல கிடைக்கும் பொருட்களின் காலமும் தொன்மையாகிறது. கீழடியில் நிலம் ஏழு, எட்டு அடுக்குகளாகக் காணப்படுகிறது.

படிக்க:
சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் !
கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்

கீழடியில் இதுவரை கடவுள், சாதி, மத, அடையாளங்களைக் குறிக்கும் எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்பது தமிழர்கள்  பண்டை காலத்தில் சமத்துவ சமுதாயமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்கிற பெருமிதத்தைப் பறைசாற்றுகிறது. எனவே சதி செய்து கோவில் கடையிலிருந்து பொம்மை வாங்கி வந்து இடையே சாமி சிலைகளைப் புகுத்த வழியேதுமில்லை என்று தெரிய வருகிறது. கீழடி தமிழர் நகர நாகரிகத்தின் தாய்மடி. ஆரிய, சமஸ்கிருத, பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !


தகவல்:
மக்கள் உரிமைப் பதுகாப்பு மையம்,
மதுரை.

நூல் அறிமுகம் : தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி

ந்தியா மற்றும் இலங்கையின் பின்னணியில் தேசிய உருவாக்கம் குறித்து மார்க்சியப் பார்வையில் வெளிவரும் இன்னொரு நால் இது. நூலாசிரியர் தோழர் சபா நாவலன் செவ்வியல் மார்க்சியப் பார்வையில் ஊறியவர். ‘சமர்’ இதழின் ஆசிரியர் குழுவில் ஒரு கட்டம் வரை பணியாற்றியவர். மிகவும் சரளமான நடையில், கோட்பாட்டு நூற்களுக்கே உரித்தான மேற்கோள் திணிப்புகள் எல்லாம் இன்றி இதை அவர் எழுதியுள்ளார். ஒரு வரலாற்று நூலைப் படிக்கும் சுவையோடு வாசகர்கள் இதை ஈடுபாட்டுடன் வாசிக்க இயலும்.

மார்க்சியப் பார்வையில் நின்று எழுதப்பட்ட இதர நூற்களிலிருந்து இது வேறுபடும் புள்ளி தேச உருவாக்கத்தில் ஏகாதிபத்தியம் ‘திட்டமிட்டு உருவாக்கிய பிறழ்வுகளைச் சுட்டிக் காட்டுவதில் அடங்கியுள்ளது. முதலாளிய வளர்ச்சியுடன் கூடிய சீரான சந்தைப் பரவல் தேசிய இன உருவாக்கங்களில் முடியும் என்கிற மார்க்சியக் கருத்தாக்கத்தை உறுதிபட ஏற்கும் நாவலன் அத்தகைய வளர்ச்சி காலனிய ஆதிக்கத்தின் விளைவாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தடைபட்டுப் போனதன் விளைவே இன்றைய சிக்கல்கள் என நம்புகிறார். பிரான்சு முதலான ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டு அவர் இதை விளக்குகிறார். நாவலனின் கருத்துப்படி முறையான சந்தை வளர்ச்சி மட்டும் இலங்கையில் உருவாகியிருந்தால் இன்று அங்கே தேசிய முரண்கள் இருந்திருக்காது என்பது மட்டுமல்ல, இலங்கை முழுவதும் ஒரே மொழி பேசுகிற ஒரே தேசிய இனமாகவும் கூட இருந்திருக்கும்!

மொழி மற்றும் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலுக்கு வந்து ஆரிய –  திராவிட முரண்களைப் பொருத்தமட்டில் அது ஐரோப்பியர்கள் திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு சதி. அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஓரங்கம். அதற்கு இங்கே இருந்த மக்கள் பலியாகிப் போனார்கள். வரலாற்றறிஞர்கள் இன்று ஆரிய இனப் படையெடுப்பு என்கிற கருத்தை ஏற்பதில்லை என்பது உண்மையே. ஆனால் ஆரியம், திராவிடம் என்கிற இரு வேறுபட்ட மொழிக் குடும்பங்கள் இங்கே இருந்ததையோ, ஆரியமொழி பேசியோர் பல நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய ஆசியா வழியாக இங்கே குடியேறியதையோ மறுப்பதில்லை. ஆரிய திராவிட என்கிற கருத்தாக்கம் பிரிட்டிஷார் வருகைக்கு முன்னதாகவும் கூட இங்கே இருக்கத்தான் செய்தது. ஆதிசங்கரர் (8-ம் நூற்றாண்டு.) திருஞான சம்பந்தரைத் ‘திராவிட சிசு எனக் கூறுவது ஒரு சான்று.

தவிரவும் இங்கிருந்த பார்ப்பன ஆதிக்கத்தையும், அதற்கெதிராக கனன்றிருந்த எதிர்ப்பையும் நாம் புறக்கணித்துவிட இயலாது. ஆரியப்படை எடுப்பு என்கிற கருத்தாக்கத்தை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர்களான ஜோதிபா பூலே, பெரியார் ஈ.வெ.ரா. போன்றோர் இந்த வகையில் ஒரு ஆக்கப்பூர்வமான அரசியலுக்குப் பயன்படுத்தியவர்களாகவும் விளங்கினர்.

தேசிய இன உருவாக்கத்தில் இன்றளவும் மிகப்பெரிய தடையாக இருப்பது இங்குள்ள சாதி உணர்வு. மதம் குறித்து போதிய கவனம் செலுத்தும் இந்நூல் இந்த சாதியத் தடைகளைக் கணக்கில் கொள்ளாதது ஒரு குறை. புலம் பெயர் சூழலில் ‘தலித்தியம்’ குறித்து விவாதம் இன்று வீச்சுடன் மேலெழுந்துள்ள சூழலில் இதன் அவசியம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இன்று உருவாகியுள்ள தேசியத்தை வரையறுத்தவர்கள் எல்லோரும் ஆதிக்க சாதிகளை, குறிப்பாக வெள்ளாளச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்ததென்பது ஏற்படுத்திய சாதக பாதகங்களும் ஆராயத்தக்கது.

… உலகம் மிகப்பெரிய அளவில் மாற்றமடைந்து வருகிறது. தரகு முதலாளிகள், தேசிய முதலாளிகள், பெரு முதலாளிகள் முதலான வரையறைகளை எல்லாம் நாம் மீண்டும் துவக்கித் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. வெளிநாட்டு நேரடி மூலதனம் இந்தியா போன்ற நாடுகளில் குவிந்து கொண்டுள்ள சூழலில் இங்கு உருவாகும் பெரு முதலாளிகள் தமது மூலதனத்தை வெளிநாடுகளில் முடக்கும் காலம் இது. சபா நாவலன் சொல்வது போல ஏகாதிபத்தியத்தின் பங்காளர்களாக மாறும் நிலை கவனமாக ஆராயப்பட வேண்டியது. இந்த வகையில் தேசிய உருவாக்கத்தில் ஏகாதிபத்தியத்தின் பங்கு குறித்த இந்நூல் தமிழ்ச்சூழலுக்குப் பயனுடைய ஒரு பங்களிப் அமையும் என்பது உறுதி. (நூலின் முன்னுரையில் அ. மார்க்ஸ்)

தேசம் அல்லது தேசியவாதம் தொடர்பான விவாதங்கள் சந்தைப் பொருளாதார உருவாக்கத்தின் பிற்பட்ட காலப்பகுதியிலிருந்து இன்று வரைக்கும் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரந்து கிடக்கும் சமூகவியலாளர்களையும் தத்துவவியலாளர்களையும் அரசியலாளர்களையும் ஆட்கொண்ட முக்கிய கருப்பொருளாகத் திகழ்கின்றது. விஞ்ஞானபூர்வமான சமூகவியலின் தோற்றத்திற்குப் பிறகு பல்தேசிய இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை அணுகுவதில் ஏற்பட்ட முக்கிய மாறுதலானது தேசம் அல்லது தேசிய உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது.

படிக்க:
குஜராத் : காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் ?
சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை

சந்தைப் பொருளாதார உருவாக்கத்தோடு உருவான தேசியம் தொடர்பான கருத்தானது சரியாகப் புரிந்துகொள்ளப்படாமையாலும் தேசியப் பிரச்சினைகளைச் சரியாகக் கையாளாமையாலும் அது தொடர்பான விஞ்ஞானபூர்வமான ஆய்வு நிராகரிக்கப்பட்டமையாலும் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் பலியிடப்படுகின்றன. நியாயமான தேசியப் போராட்டங்களை சமூக விரோதிகளும் பாசிஸ்டுகளும் தமது கைகளில் எடுத்துக்கொண்டு தமது தேசியவாத முகமூடியைக் காட்டி மக்களைப் பலியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

… பல மூன்றாம் உலக நாடுகளில் ஒரு பகுதி பிணக்காடாகவும் மறுபகுதி உள்ளூர் மற்றும் சர்வதேசிய மாஃபியாக்களின் பணக் காடாகவும் மாறிவருகின்றது. ஆயுத வியாபாரிகளிலிருந்து அரசு உட்பட அரசுசாரா உதவி நிறுவனங்கள் (NGO) வரை இந்த மாஃபியாக்களின் அங்கங்களாக மாறிவருகின்றன.

உள்ளூர் மத்தியதர வர்க்க ஜனநாயகவாதிகளும் முற்போக்காளர்களும் அரச அமைப்புகளாலும் NGO-க்களாலும் சர்வதேச பண உதவி அமைப்புகளாலும் சேவை என்ற பெயரில் உயர்ந்த சம்பளத்துடன் உள்வாங்கப்பட்டு சிந்திக்கவிடாமல் தடுக்கப்படுகின்றனர். சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் சர்வதேச அமைப்புக்களால் விலை கொடுத்து வாங்கப்படுகிறார்கள் அல்லது சவரம் செய்யப்பட்டு தெருவில் வீசப்படுகிறார்கள். மிஞ்சியவர்கள் வளர்ச்சியடைந்த அந்நிய நாடுகளுக்கு அடிமை வேலை செய்வதற்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இலங்கை போன்ற நாடுகளின் தலைமைப் பொறுப்பு தெருச் சண்டியர்களின் கைகளில் ஒப்படைக்கப்படுகின்றது. இவர்கள்தான் அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றும் நெறியாளர்கள். இவர்களுக்கான எதிர்ப்பு இல்லாத நிலையிலும் எதிர்ப்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த இளைஞர்களும் அறிவுஜீவிகளும் இல்லாமல் போனதாலும் இன்று அப்பாவி மக்கள் அநாதைப் பிணங்களாக அழிக்கப்படுகிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தேசியவாதம் தொடர்பான இந்தக் கட்டுரை பயனுள்ளதாக அமையும் என்று நான் நம்புகின்றேன். (நூலாசிரியரின் உரையிலிருந்து)

நூல் : தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி
ஆசிரியர் : சபா நாவலன்

வெளியீடு : International Tamil Magazine,
P O Box 35806,
London, E11 3JX, UK,
Tel / Fax : 0044 208 279 0354
www.thesamnet.net
jeyabalan.thesam@ntlworld.com

விற்பனை உரிமை :
எதிர் வெளியீடு,
305, காவல் நிலையச் சாலை,
பொள்ளாச்சி – 642 001.
தொலைபேசி எண் : 04259 – 226012.

பக்கங்கள்: 104
விலை: ரூ 45.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் !

திருச்சி காஜாபேட்டை பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் “டெங்கு கொசுவை ஒழிப்போம்!”, “காய்ச்சல் வராமல் மக்களை காப்போம்!” – என்ற முழக்கத்தின் கீழ் விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த அக்-13 ஞாயிறு அன்று நடைபெற்றது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் அவதியுற்றுவருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கையில் காய்ச்சல் அறிகுறியோடு சிகிச்சைக்கு வந்தவண்ணம் உள்ளனர். டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் மக்கள் பலர் மடிந்துள்ளனர்.

டெங்கு கொசுவால் ஏற்படும் இத்தகைய உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், பொது சுகாதாரத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்வதற்கு உருப்படியான நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத அடிமை எடப்பாடி அரசு, டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மூடிமறைப்பதற்குத்தான் அதிகம் மெனக்கெடுகிறது.

இந்நிலையில்தான், திருச்சியிலுள்ள காஜாபேட்டை பகுதியில் டெங்கு பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் பிரச்சார இயக்கத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் மேற்கொண்டனர்.

திருச்சி காஜாப்பேட்டை பகுதி, வயிற்றுப்பிழைப்புக்காக நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுத் திரும்பும் தினக்கூலிகள் நெருக்கமாக வசிக்கும் பகுதி. குறுக்கும் நெடுக்குமாக ஓடும் திறந்தவெளி சாக்கடைகளும்; முறையாக வாராத நிலையில் சாலையில் சரிந்துகிடக்கும் குப்பைத்தொட்டிகளும் நிறைந்த பகுதி. இவைபோன்ற கொசு உற்பத்திக்கு உகந்த சூழல் காரணமாக சாதாரண நாட்களிலேயே கொசுக்களின் படையெடுப்பிலிருந்து மக்கள் தப்பிப்பதே கடினம்.

பொது சுகாதாரத்தை முறையாக பராமரிக்காத மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக ஏற்கெனவே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்த போதிலும், டெங்கு பாதிப்பிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மக்கள் அதிகாரம் அமைப்பின் பிரச்சாரம் அமைந்திருந்தது.

காஜாப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, இருபதுக்கும் மேற்பட்ட தெருக்களில் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. வயதான மூதாட்டி, சிறுவர், சிறுமிகளிடமும் விளக்கமாக எடுத்துரைத்தனர். மேலும் திறந்தவெளி சாக்கடை கால்வாய் மீது பிளீச்சிங் பவுடர் போட்டனர்.

படிக்க:
திருச்சி காஜாபேட்டை : மக்களின் முற்றுகைப் போராட்ட அறிவிப்புக்கு அடிபணிந்தது மாநகராட்சி !
திருச்சி : கஞ்சா வியாபாரிகளுடன் கை கோர்த்த காஜா பேட்டை போலீசு !

பொது சுகாதாரத்தை முறையாகப் பராமரிக்காத மாநகராட்சி நிர்வாகத்தின் மீதான தங்களின் கோபத்தை தோழர்களிடம் வெளிப்படுத்தினர், அப்பகுதி மக்கள். அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதாகட்டும், சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரிப்பதாகட்டும் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதன் மூலம்தான் தீர்வை எட்டமுடியும் என்பதை வலியுறுத்தினர், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள்.


தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி, 9445775157.

இசை நடனம் பொம்மலாட்டம் கலை வழி கல்விப் பயணம் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 08

கலைப் பாடம்

டுத்தபடியாக எனது பாடத் திட்டத்தில் கலைப் பாடத்தின் உள்ளடக்கமும் இதை எப்படி நடத்த வேண்டும் என்பதும் எழுதப்பட்டுள்ளன. இப்பாடத்தை நான் மாதத்தில் 2-3 முறை நடத்துகிறேன். நுண் கலை, இசை, நடனம், ஒப்பனை, பொம்மலாட்டம், தாள இசை, இசை நாடகங்களை அமைத்தல், பாடங்களுக்குப் பின் படித்தல், உழைப்பு ஆகிய பாடங்களுக்கு முன் அல்லது இவற்றின் சாரத்தை செழுமைப்படுத்தும் வகையில் கலைப் பாடங்களை நடத்துகிறேன். கலை, மக்களின் வாழ்வில், நம் ஒவ்வொருவரின் வாழ்வில் இதன் முக்கியத்துவம் பற்றிய பொதுவான கருத்தை இப்பாடங்களில் தர முயலுகிறேன். எனது ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கிட்டக்கூடிய கலைப் படைப்புகளில் ஆசிரியரின் உணர்வுகள், உறவுகள், சிந்தனையைப் “படிக்கும்” திறமையை அவர்களிடம் வளர்க்கவும், தமது சிந்தனைகள், இன்ப துன்பங்களின் எதிரொலியைக் காண அவர்களுக்குச் சொல்லித் தரவும் இப்பாடங்கள் எனக்கு உதவுகின்றன.

சின்னஞ்சிறு பள்ளி மாணவர்களின் வாய்ப்புகள் கலையின் உச்சியிலிருந்து இப்படித் தள்ளியிருப்பதைப் போன்ற ஒரு உணர்வைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வரும் ஒரு பெரிய மரத்தின் கீழ் விளையாடும் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள். குழந்தைகள் ஒரு வேளை மர உச்சிக்கு ஏற விரும்பினாலும் அவர்களால் முடியாது. ஆனால் கிளைகளில் ஏறி விளையாட அவர்களால் முடியும். இவ்வாறாக இவர்கள் இந்த மரத்தின் கீழ் (இதைக் கலையுடன் ஒப்பிடலாம்) வளருகின்றனர். அவர்கள் மரக் கிளைகள் வரை, அதாவது கலையின் தனிப்பட்ட பிரிவுகள் வரை எட்டிப் பிடிக்கின்றனர். இதை இவர்கள் அருகிலிருந்தும் தொலைவிலிருந்தும் பார்த்து யோசிக்கின்றனர், படிப்படியாக – ஆனால் இளம் வயதிலேயே – கலையின் பன்முகத் தன்மையின் முழுமையை அறியத் துவங்குகின்றனர், மரத்தின் மீதேறி உச்சியிலிருந்து உலகைப் பார்த்து, மக்களின் வாழ்வையும் தம் வாழ்வையும் அறியக் கற்றுக் கொள்ள சக்தியைத் திரட்டுகின்றனர்.

எனது பாடத் திட்டத்தின்படி இன்றைய கலைப் பாடத்தில் குழந்தைகளுக்குப் பின்வருமாறு சொல்வேன்: “சவ்ராசவ் எனும் ஓவியர் வரைந்த ‘ரூக் பறவைகள் பறந்து வந்தன’ எனும் ஓவிய மாதிரியை உங்களுக்கு காட்டுவேன், பின் லாடோ அசாதியானியின் ‘வசந்தம்’ எனும் கவிதையைப் படிப்பேன், பின் இசையமைப்பாளர் செர்கேய் ரஹ்மானினவின் ‘வசந்தம் நடைபோடுகிறது’ எனும் இசை நாடகத்தைச் சேர்ந்து கேட்போம். வசந்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மூன்று படைப்புகளிலும் ஒரு ஓவியர், ஒரு கவிஞர், ஒரு இசையமைப்பாளர் ஆக மூவர் ஒரே உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் தம் படைப்புகளில் எந்த மன நிலையை வெளிப்படுத்த விரும்பினார்கள், இவர்கள் என்ன சொல்ல விரும்பினார்கள் என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும்.”

முதலில் ஓவிய மாதிரியைக் காட்டுவேன், கவிதையைப் படிப்பேன், பின் வகுப்பில் இசை ஒலிக்கும். குழந்தைகள் தம் உணர்வுகளில் ஆழமாக மூழ்கவும், இதன் மூலம் படைப்பாளர்களின் உணர்வுகளில் மூழ்கவும் உதவும் பொருட்டு, அவர்களுக்கு ஓவியத்தை இன்னுமொரு முறை காட்டுவேன், கவிதையைப் படிப்பேன், இசையை ஒலிக்கச் செய்வேன். பின் ஓவியர், கவிஞர், இசையமைப்பாளர் பற்றி பேசுவேன். முந்தைய கலைப் பாடங்களில் குழந்தைகள் பல்வேறு ஓவிய மாதிரிகளையும் படங்களையும் பார்த்தனர், இசையைக் கேட்டனர், கவிதைகளைப் படித்தனர். “இவற்றின் ஆசிரியர்கள் தம் படைப்புகளில் எந்த மனநிலையைப் பிரதிபலித்துள்ளனர்? இவர்கள் சொல்ல விரும்பியது என்ன?” என்ற என் கேள்விக்குப் பின்வரும் பதில்கள் கிடைத்தன:

“’அழகாயிருக்கிறது, இல்லையா!’ என்கிறார் ஓவியர்.”

“இசையமைப்பாளர் தனக்கு மிகவும் சோகமாயிருப்பதாகக் கூறுவதைப் போல் உள்ளது. நான் இந்த இசையைக் கேட்ட போது எனக்கும் சோகமேற்பட்டது.”

“’எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்!’ என்கிறார் கவிஞர்.”

படிக்க:
சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் !
மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் !

“ஓவியர் அனேகமாக அன்பானவராக இருந்திருக்க வேண்டும். அவருடைய படங்கள் என்னிடம் சோகத்தை ஏற்படுத்துகின்றன.”

இதற்கு மேல் என் வகுப்புக் குழந்தைகள் இதுவரை செல்லவில்லை.

நீண்ட இடைவேளை

நாங்கள் கீழிறங்கி முற்றத்திற்குச் செல்வோம், சுவரில் இலக்கை மாட்டிவிட்டு, பத்தடி தள்ளி நின்று வில்லிலிருந்து அம்பெய்ய ஆரம்பிப்போம். ஒவ்வொருவரும் எப்படி இலக்கில் படுகின்றனர் என்ற விவரங்களைப் போட்டி அட்டவணையில் எழுதுவோம்; ஐந்து நாட்களாக நடக்கும் இப்போட்டி அடுத்த வாரம் முடிவடையும். சிறுவர்கள் மத்தியில் சாஷா முன்னணியில் இருக்கிறான், அவனுக்கு அடுத்த படியாக தாத்தோ, நான் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் இருக்கிறேன். சிறுமிகள் மத்தியில் எலேனா, ஏக்கா, மாக்தா ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

உழைப்புப் பாடம்

இப்பாடவேளையின் போது பள்ளிக்கு அருகில் உள்ள நர்சரிப் பள்ளியிலிருந்து சிறு குழந்தைகளைக் கவனித்து கொள்ளும் பெண்மணி எழுதிய கடிதத்தைப் படித்துக் காட்டுவேன். கெட்டியான காகிதத்திலிருந்து 40 சிறு பெட்டிகளைச் செய்து தருமாறு இவர் கடிதத்தில் என் வகுப்புச் சிறுவர் சிறுமியரைக் கேட்டிருக்கின்றார்; இப்பெட்டிகளில் எண்ணுவதற்காகச் சிறு கற்களைப் போட்டு வைக்கலாம். அவர் எப்படிப்பட்ட சிறு பெட்டி செய்ய வேண்டுமென காட்டுவதற்காக ஒரு மாதிரி பெட்டியையும் அனுப்பியிருக்கின்றார். குழந்தைகள் இந்த வேண்டுகோளை மகிழ்ச்சியோடு நிறைவேற்றுவார்களென நம்புகிறேன். அவர்கள் பின்வருமாறு சொல்லும்படி நான் பேச்சு கொடுப்பேன்:

“இந்த மாதிரிப் பெட்டியை விட அழகான பெட்டிகளைச் செய்வோம்!”

“வரைதல் பாடத்தில் கற்றுக் கொண்டபடி இவற்றைச் சுற்றி அலங்கரிப்போம்!”

“ஒவ்வொருவரும் தலா 2-3 பெட்டிகளைச் செய்யட்டும். அப்போது தான் அழகான 40 பெட்டிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.”

பின்னர் இவற்றை எப்படிச் செய்வதென நான் சொல்லித் தருவேன். நானும் எப்படிச் செய்கிறேன் என்று வாய் விட்டு சொல்லியபடியே குழந்தைகளோடு சேர்ந்து பெட்டியைச் செய்வேன், அது எப்படியுள்ளது என்று மதிப்பிடும் படி குழந்தைகளிடம் சொல்வேன். 35 நிமிடப் பாடவேளையின் போது இவ்வேலையை முடிக்க முடியாது. எனவே இதை வீட்டில் தொடருமாறு குழந்தைகளிடம் சொல்வேன். “மூன்று நாட்கள் கழித்து இவற்றை நர்சரிப் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென” அவர்களிடம் கூறுவேன்.

பாடங்களுக்குப் பின்

பின்னர் கூடுதல் பள்ளி நேரம் துவங்கும். இந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பெண்மணிகளும் குழந்தைகளோடு பல விதமான வேலைகளில் ஈடுபடப் போகும் பெற்றோர்களும் சேர்ந்து முடிவு செய்கின்றனர். குழந்தை வளர்ப்பு பற்றி நாங்கள் கூட்டாக வகுத்த திட்டத்தின் பொது லட்சியங்களும் கோட்பாடுகளும் தான் இங்கும் அடிப்படையில் உள்ளன. ஒவ்வொரு வார இறுதியிலும் நாங்கள் சந்தித்து ஒவ்வொருவரும் செய்து வரும் காரியத்தை ஒத்திசைவிக்கின்றோம். இன்று இசை நாடக ஒத்திகை, பூங்காவில் உலாவுதல், புத்தகம் படித்தல், கார்டூன் படம் பார்த்தல் முதலியன எங்கள் திட்டத்தில் உள்ளன.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை

யூப்ரடிஸ் ஆற்றின் கிழக்குப் பகுதியில் நுழைந்த துருக்கிய படைகள், வடகிழக்கு சிரியாவில் தரைப்படை நடவடிக்கைகளை தொடங்கின என்று துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

சிரியாவில் குர்திஷ் போராளிகளுக்கு எதிரான தாக்குதலின் இரண்டாம் நாளில், தன் படைகள் குறிப்பிட்ட இலக்குகளை கைப்பற்றியுள்ளன என்று துருக்கி அறிவித்துள்ளது, இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொண்டதும், எட்டு ஆண்டு கால மோதலானது ஒரு ஆபத்தான புதிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

யூப்ரடீஸ் நதியின் கிழக்கே துருக்கியின் சிறப்புப் படைகள் வடகிழக்கு சிரியாவிற்குள் முன்னேறியுள்ளது என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

அங்கு வசிக்கும் மக்கள் தல் அபியத்துக்கு தப்பியோடி வருகின்றனர்.
அவர்களில் சிலர் டி.பி.ஏ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இன்னும் நகருக்குள் இருக்கும் குடிமக்களை வெளியேற விடாமல் குர்திஷ் போராளிகள்
தடுத்துவைத்துள்ளனர் என்றனர்.

துருக்கியின் தாக்குதலுக்கு இலக்கான பல்லாயிரக்கணக்கான மக்கள் “பெரும் ஆபத்தில்” உள்ளனர் என சர்வதேச செஞ்சிலுவைக் குழு எச்சரித்துள்ளது.

சிரியா நிலவரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் குழு வியாழக்கிழமை கூடுகிறது.

வடகிழக்கு எல்லைப்புற நகரங்கள் மீது துருக்கியர்களின் குண்டுவீச்சுத் தாக்குதலை அடுத்து, சிரிய, அரபு மற்றும் குர்திஸ் குடிமக்கள் சிரியாவின் வடமேற்கு ஹஸகாஹ் மாகாணத்தில் உள்ள டால் டம்ஹர் என்ற நகரத்திற்கு வந்துள்ளனர்.

சிரிய, அரேபிய, குர்திஷ் குடிமக்கள் துருக்கிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிரியாவின் வடகிழக்கு நகரமான ரஸ் – அல் – ஐயின் மீது துருக்கியக் குண்டுவீச்சிற்கு இடையே தப்பியோடுகிறார்கள்.

சிரியாவின் ரஸ் – அல் – அய்ன் கிராமப்புறங்களில் உள்ள டெல் அரகம் கிராமத்தில் இருந்து புகை கிளம்பியது.

துருக்கி எல்லையில், துருக்கி ஆதரவு பெற்ற சிரிய எதிர்த்தரப்பாளர்கள், சிரியாவின் சாலிஜுஃபா மகாணத்தில் உள்ள அக்காகேளிலிருந்து, டால் அபேட் என்ற இடத்தை நோக்கி விரைகின்றனர்.

படிக்க:
HSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் !
வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா

துருக்கி எல்லையில், சிரியா பகுதியில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தங்கள் வீட்டை தாக்கியதையடுத்து சாலிஜுஃபா மகாணத்தின், அக்காகேளிலுள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறும் குடிமக்கள்.

கடந்த வியாழனன்று ரஸ் – அல் – அய்ன் என்ற இடத்தில் துருக்கியப் படைகள் தங்கள் இலக்குகளை தாக்கியழித்தனர். இதற்கு எஸ்.டி.எஃப். போராட்டப் படையினரும் பதிலடி கொடுத்தனர் என்று அந்தப் பகுதியை சேர்ந்தவர் தெரிவிக்கிறார்.

துருக்கியின் ஆதரவு பெற்ற சிரிய எதிர்ப்பு போராளிகள், சிரியாவின் அல் அகடேல் என்னும்  நகரத்தில் இருந்து, துருக்கியின் சாலிஜுஃபா மாகாணத்தில் உள்ள அக்கோலே பகுதியை நோக்கி செல்லும் போது, ஒரு நபர் கையசைக்கிறார்.

சிரியாவின் ஹஸகாஹ் மாகாணத்தில் உள்ள, வடகிழக்கு நகரமான ரஸ் அல் – ஐயினில், துருக்கிய குண்டுவீச்சிற்கு இடையே ஒரு சிரிய பெண்மணி தன்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடுகிறார்.

துருக்கி – சிரிய எல்லை அருகேயுள்ள அக்கோலே என்ற இடத்தில், துப்பாக்கி ஏந்திய துருக்கி படையினர் பாதுகாப்பிற்கு நிற்கின்றனர்.

வடகிழக்கு சிரியாவில் உள்ள ரஸ் அல் – ஐயினில், துருக்கிப் படைகள் நடத்திய தாக்குதலால், சிதறியோடும் சிரியர்கள்.


தமிழாக்கம் : மூர்த்தி
நன்றி :aljazeera


படிக்க:
வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்
சிரிய அகதிகள் : அமெரிக்காவே குற்றவாளி !

கருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் !

  • கருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள்!
  • ஆயிரங்கால் மண்டப திருமணம் – கின்னசு நாட்டியாஞ்சலி
    கணக்கில்லா வசூல் வேட்டை தீட்சிதர்கள் மீது சி.பி.ஐ ரெய்டு நடக்குமா?
  • தில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு!

ஆர்ப்பாட்டம்

நாள்: 14-10-2019
திங்கள் காலை 10 மணி,
காந்தி சிலை, சிதம்பரம்.

ன்பார்ந்த பெரியோர்களே!

சிதம்பரம் நடராசர் கோவிலில், தீட்சிதப் பார்ப்பனர்களின் பித்தலாட்டம் என்பது நூற்றாண்டு கால வரலாறு உடையது. கடந்த 11-9-2018 அன்று நடைபெற்ற ஆடம்பர திருமணத்திற்காக கையூட்டாக தங்கம், பட்டு புடவை, பட்டு வேஷ்டி மற்றும் பல கோடிகள் தீட்சிதர்களிடம் கைமாறி உள்ளது என சிதம்பரம் மக்கள் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறார்கள். காவல் துறையிடமும், அரசிடமும் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல தரப்பினர் புகார் மனு அளித்து வருகின்றனர். இதுவரை தீட்சிதர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

பொற்கூரைமீது ஏறி

கோவிலில் திருட்டுத்தனமாக வெளியூர் ஆட்களை தங்கவைத்து ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் ஐந்து நட்சத்திர விடுதி போல ஆடம்பர ஏற்பாடு செய்துள்ளனர். பொற்கூரை மீது ஏறி வேலை ஆட்கள் அலங்கரித்துள்ள புகைப்படத்தை பார்க்கும்போது பக்தர்களின் நெஞ்சம் பதறுகிறது. திருமண வீட்டார் தந்த பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வந்த பிற பக்தர்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளி தீட்சிதர்களே நீதிபதிகளாக :

நடராசர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது என பத்திரிகை அடித்துதான் சிவகாசி தொழிலதிபர்கள் வீட்டுத் திருமணம் நடைபெற்றுள்ளது. கவனக்குறைவாக நடந்துவிட்டது என ஆயிரம்கால் பித்தலாட்டம் செய்கின்றனர். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்று தோற்று போனதால் பட்டு தீட்சிதர் என்பவரை இரண்டு மாதம் சஸ்பெண்ட் செய்து ஆயிரத்து ஒரு ரூபாய் அபராதம் விதித்து தீட்சிதர்களே தீர்ப்பளித்துள்ளார்கள். குற்றவாளியும் தீட்சிதர்கள், விசாரணை அதிகாரியும் நீதிபதியும் தீட்சிதர்களே, என்ன கேலிகூத்து? அரசுக்கு கொஞ்சம்கூட சொரணை வரவில்லை. சினிமா கொட்டகைக்கு உள்ள கட்டுப்பாடு கண்காணிப்பு சிதம்பரம் நடராசர் கோவில் மீது அரசுக்கு இல்லை.

மெகாவசூல் கின்னசு நாட்டியாஞ்சலி

ஏற்கனவே நடராசர் கோவில் உள்ளே தீட்சிதர்கள் பீர், பிராந்தி, சிக்கன், மட்டன் அருந்தினார்கள். பெண்கள் சகவாசம், மர்ம மரணங்கள், சாமி நகை களவு, கோவில் சொத்தை முறைகேடாக விற்றது, கோவில் வருமானத்தை யாருக்கும் கணக்கு காட்டாமல் தங்களுக்குள் பிரித்து கொள்வது,  வெளியூர் பக்தர்களிடம் பணம் பறிப்பது. பணம் தரமுடியாத பக்தர்களை அவமானப்படுத்துவது என்ற பல குற்றச்சாட்டுக்கள் இன்னும் முடிவு காணாமல் உள்ளது. கோவில் உள்ளே பல ஆண்டுகள் நடந்து வந்த நாட்டியாஞ்சலி விழாவை, தீட்சிதர்கள் தங்கள் ஏகபோகத்தை நிறுவுவதற்காகவும் மெகா வசூல் செய்யவும் தடை செய்து தாங்களே நடத்தி வருகின்றனர்.

கோவில் வருமானம் – தீட்சிதர்களின் அண்ட புளுகு

சிதம்பரம் கோவிலின் ஆண்டு வருமானம் வெறும் ரூ. 30,000 மட்டுமே. கையிருப்பு வெறும் ரூ. 199 மட்டுமே என நா கூசாமல் தீட்சிதர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணையில் புளுகினார்கள். இதே கோவிலில் அரசு  உண்டியல்கள் வைத்ததில் வசூலான தொகை சுமார் இரண்டு கோடி ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை தீட்சிதர்களிடமே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திருப்பிக் கொடுத்தனர். நடராசர் கோவிலில் பிரசாத கடை மட்டும் ஆண்டுக்கு 35 இலட்சத்திற்கு  ஏலம் போனது.  இன்று உண்டியல்கள் இல்லை, பிரசாதக் கடை ஏலம் இல்லை. வருகின்ற வருமானம் எவ்வளவு? என்பதை தமிழக அரசு மக்களுக்கு சொல்ல வேண்டும். இனியும் தீட்சிதர்கள் வசம் கோவில் நிர்வாகம் இருக்கக் கூடாது. சிதம்பரம் கோவிலை நிர்வகிக்கும் அருகதையை தீட்சிதர்கள் இழந்து பல காலம் ஆகிவிட்டது.

சிதம்பரம் கோவிலில் கட்டண விபரங்கள் அறிவிப்பு பலகையாக :

இனி சிதம்பரம் நடராசர் கோவிலில் தீட்சிதர்களால் வசூலிக்கப்படும் கட்டண விபரங்கள் வெளிப்படையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். அனைத்திற்கும் இனி தீட்சிதர்களிடம் பக்தர்கள் ரசீது கேட்க வேண்டும். சிதம்பரம் நடராசர் கோவில் எந்த விதிமுறைகளின்படி எப்படி நிர்வாகம் செய்யப்படுகிறது? இந்து சமய அறநிலையத் துறையின் கண்காணிப்பு கட்டுப்பாடு என்ன என்பதை வாதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தீட்சிதப் பெண்கள், குழந்தைகளின் தனி நபர் சுதந்திரம் :

சிதம்பர நடராசர் கோவிலில் எத்தனை தீட்சிதர்கள் என்னென்ன பணிகள் செய்கிறார்கள். எந்த வேலைக்கு எந்த தீட்சிதர் பொறுப்பானவர்? இத்தகைய பணிகளுக்கு யாருக்கு எவ்வளவு சம்பளம் எடுத்துக் கொள்கிறார்கள். கோவிலின் மொத்த பணத்தையும் தீட்சிதர்கள் தங்களுக்குள் சமமாக பிரித்து கொள்கிறார்களா? அல்லது ஏமாளி தீட்சிதர்கள் இருக்கிறார்களா? கோவிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு அதன் வரவு செலவு கணக்கை தமிழக அரசு தணிக்கை செய்கிறதா? என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தீட்சிதர் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள்? தாங்கள் விரும்பியவரை திருமணம் செய்ய, விரும்பிய , படிப்பை படிக்க அவர்களுக்கு தனி நபர் சுதந்திரம் உண்டா? அல்லது சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கி மிரட்டப்படுகிறார்களா?. இவ்வாறான கேள்விகளுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.

சிதம்பரம் கோவில் நிலங்களை பராமரிக்கும் கோவில் தாசில்தார் கோவில் நிலத்திலிருந்து வரும் வருமானத்தின் மூலம் நடராசர் கோவிலின் மின்சார கட்டணத்தை இன்றுவரை செலுத்தி வருகிறார். தற்போது நடந்த ஆடம்பர திருமணத்தால் ஏற்படும் மின் செலவை யார் கட்டுவார்கள்.?

சிவனடியார் ஆறுமுகசாமி :

சிற்றம்பல மேடையில் அனைவரும் தேவாரம் பாடி வழிபட வேண்டும். தில்லைக் கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை பெரும் மக்கள் திரள் போராட்டத்தில் சிவனடியார் ஆறுமுகசாமி மூலம் வெற்றி அடைந்தோம். மறைந்த முதல்வர் ஜெயாவை சந்தித்து கெஞ்சியும், அரசியல் தரகன் சு.சாமியை வழக்கில் உள்ளே நுழைத்தும், உச்சநீதிமன்ற வழக்கில் தீட்சிதர்கள் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பற்ற இருமாப்பில் இருக்கிறார்கள்.

2008-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்டுவதற்கு சிவனடியார் ஆறுமுகசாமி தில்லை கோயிலில் அழைத்துச் செல்லப்படுகிறார். (கோப்புப் படம்)

அப்போதைய நமது மக்கள் போராட்டங்களுக்கு எதிராக பிராமணர் சங்கம், பா.ஜ.க விசுவ இந்து பரிசத், இந்து முன்னணி, ஆகிய அமைப்புகளை தங்களுக்கு ஆதரவாக களத்தில் இறக்கினர். இவ்வாறு அதிகாரத்திலும் அரசியலிலும் தீட்சிதர்களின் செல்வாக்குதான் இன்று வரை சிதம்பரம் கோவில் மீட்கப்படாமல் இருக்கிறது. கிரிமினல் ஊழல் மயமாக மாறி மக்களுக்கு விரோதமாக அனைத்திலும் செயல்படும் இன்றைய அரசு கட்டமைப்பு தீட்சிதர்களின் ஊழல் முறைகேட்டை,  கூட்டுக் கொள்ளையை தானாக தட்டி கேட்காது. மக்கள் போராடினால் மட்டுமே எதுவும் நடக்கும்.

சிதம்பரம் நகர மக்களே, பக்தர்களே ,

தீட்சிதர்களை கேள்வி கேளுங்கள், தில்லைக்கோவில் பொதுமக்கள் சொத்து நாம்தான் கண்காணிக்க வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சிற்றம்பல மேடையில் தமிழ் உரிமைக்காகவும், கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் தங்களின் ஆதரவுடன் நாங்கள் நடத்திய இடைவிடாத போராட்டம் தாங்கள் அறிந்ததே 14-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துகொள்ளுங்கள். நிதி உதவி செய்யுங்கள்.

பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டம், நம்மோடு தொடங்கவுமில்லை, நம்முடன் முடியப்போவதும் இல்லை. சிதம்பரம் கோவில் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து கோவில்களையும் அர்ச்சக பார்ப்பனர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

படிக்க:
தில்லைக் கோயில் தீர்ப்பு: பார்ப்பன “காப்” பஞ்சாயத்து!
தில்லை கோயில் உரிமைக்காக நடந்த போராட்ட விவரங்கள் !

தில்லை நடராசர் கோவிலை கையகப்படுத்த தனிச்சட்டம் இயற்று!
கோவில் மூலம் ஆண்டுதோறும் முறைகேடாக பல லட்சம் வசூல் செய்து வரும் தீட்சிதர்களின் சொத்துக்கள் மீது விசாரணை நடந்தது!
சிதம்பரம் நடராசர் கோவில் வருமானம் வரவு செலவு மீது விசாரணை நடத்து!
நடராசர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தை ஐந்து நட்சத்திர விடுதியாக்கி ஆடம்பர திருமணம் நடத்திய தொழிலதிபர்கள் மற்றும் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடு!

ஒருங்கிணைப்பு:
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 98423 96929, 98423 42583, 93600 61121.

தமிழ் பண்பாட்டில் மோடி ! உலக மகா நடிப்புடா சாமி … ! கருத்துப்படம்

உலக மகா நடிப்புடா சாமி …!

  • கீழடியை இருட்டடிப்பு செய்த மோடி!
  • இந்தியைத் திணித்த மோடி!
  • நீட் : அனிதாக்களைக் கொன்ற மோடி!
  • விவசாயிகளை அவமானப்படுத்திய மோடி!
  • ஒக்கி – கஜா புயல் : சாவை எட்டிப் பார்க்காத மோடி!
  • ஹைட்ரோ கார்பன் : விவசாயத்தை நாசமாக்கிய மோடி!

கருத்துப் படம் : வேலன்


தமிழ் பண்பாட்டில் மோடி!
ஒன்னுமில்லீங்கோ… மக்களோட மக்களா ஒன்றிடுவாராம்!

கருத்துப் படம் : வேலன்

படிக்க:
டிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் !
சொந்த ஊரிலேயே வீதியில் வசிக்கும் தலித்துகள் ! இந்திய அவலம்

அட ! பயல்கள் எரிகுண்டால் தாக்குகிறார்கள் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 1

1943-ம் ஆண்டு கோடைகாலம். வெக்கை மிகுந்த பகல். முன்னேறிச் சென்ற சோவியத் சேனை டிவிஷன்களின் வண்டிகளால் தடம் பட்டிருந்த போர்முனைப் பாதையில், பண்படுத்தப்படாமல் சிவப்புக் களைச் செடிகள் செழித்து மண்டியிருந்த விசாலமான வயலின் ஊடாக முனைமுகத்தை நோக்கி விரைந்தது ஒரு பழைய லாரி. நொடிகளில் அது அசைந்தாடி எகிறிக் குதித்தது, அதன் மரச்சட்டங்கள் பொருந்திய அற்றலைந்த பின் பகுதி கடகடத்தது. அடிபட்டு, புழுதி படிந்திருந்த அதன் விளிம்பில் வெள்ளைக் கோடுகளும் “போர்க்களத் தபால்” என்ற குறிப்பும் அரிதாகவே கண்ணுக்குப் புலப்பட்டன. அது கிளப்பிய சாம்பல் நிறப் புழுதிப் படலம் பிரமாண்டமான வால் போல, இறுக்கம் நிறைந்த அசைவற்ற காற்றில் மெதுவாக மிதந்தவாறு அதன் பின்னே நீண்டது.

கடிதங்கள் அடங்கிய கோணிப் பைகள் செம்மச் செம்ம நிறைந்திருந்த அதன் பின்பகுதியில் புதிய செய்தித்தாள் கட்டுகளின் மேல் சாமான்களுடன் அசைந்தாடியவாறு உட்கார்ந்திருந்தார்கள் இரண்டு படைவீரர்கள். கோடைகால உடுப்புக்களும் நீல ரிப்பன்கள் சுற்றிய தொப்பிகளும் அணிந்திருந்தார்கள் அவர்கள். அவர்களில் இளையவன் விமானப்படை சீனியர் சார்ஜென்ட் என்பது அவனுடைய புத்தம் புதிய, கசங்காத பதவிச் சின்னங்களிலிருந்து தெரிந்தது. ஒடிசலான வடிவமைந்த மேனியும் வெண்முடியும் கொண்டவன் அவன். அவனுடைய முகம் பெண்ணினது போன்ற மென்மை உள்ளதாக இருந்தது. அதன் வெண் தோல் வழியே இரத்தம் ஒளிர்வது போலத் தோன்றியது. பார்வைக்கு அவனைப் பத்தொன்பது வயதுக்கு மதிப்பிடலாம். அவன் பற்களின் இடுக்குவழியே துப்பினான், கரகரத்த குரலில் வசவு மொழிகள் பகர்ந்தான், விரல் பருமன் சிகரெட் சுருட்டினான், எதுவுமே தனக்கு ஒரு பொருட்டில்லை போலப் பாவனை செய்தான் – இவ்வாறு அனுபவம் முதிர்ந்த படை வீரனாகத் தோற்றமளிக்க எல்லா வகையிலும் முயன்றான். ஆயினும் இப்போது தான் முதல் தடவையாக அவன் முனை முகத்துக்குப் போகிறான் என்பதும் தெளிவாகப் புலப்பட்டன.

அவனுடன் பயணம் செய்த சீனியர் லெப்டினன்டோ, போர்முனை அனுபவம் மிக்கவன் என்பதைத் தவறின்றி ஊகிக்க முடிந்தது. முதல் பார்வைக்கு அவன் வயது இருபதுக்கு மேல், இருபத்து நான்குக்கு உள்ளாகவே இருக்கும் என்று தோன்றியது. ஆனால், வெயிலிலும் காற்றிலும் அடிபட்டிருந்த அவன் முகத்தையும், கண்களின் அருகிலும் நெற்றியிலும் வாயின் பக்கங்களிலும் நுண்ணிய இழைகளாக விழுந்திருந்த சுருக்கங்களையும், சிந்தனையில் ஆழ்ந்த, களைத்த கருவிழிகளையும், உற்றுக் கவனித்த பின் அவனது வயதில் இன்னும் பத்து ஆண்டுகளைக் கூட்டலாம் போலிருந்தது. அவன் பார்வை எதிலும் – நிலைக்காமல் சுற்றிலும் வழுகிச் சென்றது.

செய்தித்தாள் கட்டுக்களைப் பரப்பி வசதியாகச் சாய்ந்து – உட்கார இடம் செய்து கொண்டு சீனியர் லெப்டினன்ட் உறங்கிவழிந்தான். பொற் கூட்டெழுத்துச் சின்னம் பொறித்த விந்தையான கனத்த கருங்காலி கைத்தடி மீது மோவாயை அழுத்தியவாறு கண்ணயர்வதும், எப்போதாவது இந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டவன் போல மகிழ்ச்சியுடன் சுற்றிலும் கண்ணோட்டுவதும், வெதுவெதுப்பான நறிய காற்றை ஆர்வத்துடன் மூச்சிழுத்து நெஞ்சில் நிறைத்துக் கொள்வதுமாக இருந்தான் அவன். பாதையிலிருந்து எங்கேயோ ஒரு புறத்தில் தொலைவில் அரிதாகவே தென்பட்ட இரண்டு மங்கிய புள்ளிகளை அவன் திடீரென்று கண்ணுற்றான். கவனமாக உற்று – நோக்கிய பின் அவை விமானங்கள் என்பது தெரிந்தது. ஒன்றையொன்று துரத்தி விளையாடுவது போல, அவசரமின்றிக் காற்றில் நீந்தின அவை. அப்போது சீனியர் லெப்டினன்ட் சுறுசுறுப்பு அடைந்து அந்த மங்கிய புள்ளிகளிலிருந்து பார்வையை அகற்றாமலே, காரோட்டி அறை முகட்டை உள்ளங்கையால் தடதடவென்று தட்டினான்.

“பகை விமானங்கள்! லாரியை ஒருபுறம் திருப்பி ஒதுக்கு!” என்று கத்தினான்.

அவன் எழுந்து நின்று, பழக்கமான பார்வையால் அந்த இடத்தைச் சீர்தூக்கிப் பார்த்து ஓர் ஓடையின் களிமண் கரைச்சரிவைக் டிரைவருக்குக் கையால் காட்டினான். பல்வகைக் காட்டு மலர்ச் செடிகள் அங்கே பூத்து மண்டியிருந்தன.

படிக்க:
உழைக்கும்போதே இந்த உசுரு போகணும் | ஒரு உழைப்பாளி காதல் ஜோடி !
ஜம்மு காஷ்மீர் : இரும்புத்திரையை கிழிக்கும் இளைஞர் !

இளையவன் அசட்டைத் தோன்ற முறுவலித்தான். விமானங்கள் ஒரு தீங்கும் செய்யாமல் எங்கோ தொலைவில் கரணமடித்துக் கொண்டிருந்தன. ஏக்கந்ததும்ப வெறிச்சோடிக் கிடந்த வயல்களுக்கு மேலே பிரமாண்டமான வால் போலப் புழுதிப் படலத்தைக் கிளப்பியபடி சென்ற தன்னந்தனி லாரி மேல் அவற்றுக்கு எவ்வித அக்கறையும் இல்லை போலத் தோன்றியது. ஆனால் அவன் எதிர்த்து எதுவும் சொல்வதற்குள் காரோட்டி லாரியை பாதையிலிருந்து திருப்பிவிட்டான். பின்பகுதி தடால் தடால் என்று தூக்கிப்போட, லாரி ஓடைக் கரைக்கு விரைந்தது.

சீனியர் லெப்டினன்ட் அக்கணமே லாரியிலிருந்து இறங்கி, புல்லில் உட்கார்ந்து பாதையைக் கூர்ந்து நோக்கலானானன்.

“அட நீங்கள் என்ன இப்படி… ” என்று அவனைக் கேலியுடன் பார்த்தவாறு சொல்லத் தொடங்கினான் இளையவன்.

அதற்குள் சீனியர் லெப்டினன்ட் புல்லில் விழுந்து, “படு!” என வெறிக் கூச்சலிட்டான்.

நொடிப் போதில் விமான எஞ்சின்களின் இறுக்கம் நிறைந்த முழக்கம் கேட்டது. இரண்டு பிரமாண்டமான நிழல்கள் காற்று அதிர்ந்து நடுங்க, விந்தையாகத் தடதடத்தவாறு அவர்களது தலைகளுக்கு நேர் மேலாக விரைந்தன. இளையவனுக்கு இதுவும் பெருத்த அச்சந்தருவதாகப்படவில்லை. சாதாரண விமானங்கள், ஒரு வேளை நம்மவை போலும் என்று நினைத்தான் அவன். சுற்றுமுற்றும் பார்வை செலுத்தியவன், பாதையின் அருகே குப்புறக் கிடந்த துருப்பிடித்த லாரி ஒன்று புகைந்து மளமள வென்று மூண்டு எரிவதைக் கண்டான்.

குண்டால் தகர்க்கப்பட்ட எரிந்து கொண்டிருந்த லாரியை நோட்டமிட்டு, “அட பயல்கள், எரிகுண்டால் தாக்குகிறார்கள். லாரிகளை வேட்டையாடக் கிளம்பியிருக்கிறார்கள்” என்று வறட்டுப் புன்னகை செய்தான்.

“வேட்டை விமானங்கள்” என்று புல்லில் செளகரியமாக நீட்டிப்படுத்தபடி அமைதியாகக் கூறினான் சீனியர் லெப்டினன்ட். “நாம் காத்திருக்க வேண்டியிருக்கும். அவை இதோ திரும்பும். தாழப் பறந்து பாதையைக் கண்காணிக்கின்றன. லாரியை இன்னும் அப்பால் கொண்டுபோ, தம்பீ. அதோ அந்த பிர்ச் மரம் வரையிலாவது.”

ஜெர்மானிய விமானிகள் தங்கள் திட்டத்தை அப்போதுதான் அவனுக்குத் தெரிவித்தது போல அவ்வளவு நிச்சயத்துடனும் அலட்சியமாகவும் இவ்வாறு சொன்னான் சீனியர் லெப்டினன்ட். சார்ஜென்ட் மிகவும் கூச்சப்பட்டானாயினும் அசட்டையாகக் கூறினான்:

“நாம் மேலே போவதே நல்லது. நேரத்தை வீணாக்குவது எதற்காக? தூக்கில் மடிய விதிக்கப்பட்டவன் மூழ்கிச் சாக மாட்டான் என்று ருஷ்யப் பழமொழி உண்டே”

நிம்மதியாகப் புல்லைக் கடித்துக் கொண்டிருந்த சீனியர் லெப்டினன்ட், கோபத் தோற்றம் காட்டிய கரு விழிகளில் அரிதாகவே புலப்பட்ட நேயம் ததும்பும் கேலிப் புன்னகையுடன் இளையவனை ஏறிட்டுப் பார்த்தான்.

“கேள், நண்பா. இந்த மட்டிப் பழமொழியை, நேரம் கடந்து விடுவதற்குள் மறந்துவிடு. இதையும் கேள், சீனியர் சார்ஜன்ட். போர்முனையில் மேலதிகாரிகள் சொற்படி நடக்க வேண்டும் என்பது சட்டம். ‘படு’ என்று அவர்கள் உத்தரவிட்டால் படுக்க வேண்டியது தான்.”

இப்படி சொல்லிவிட்டு அவன் புளியாரைக் கீரையின் சாறு நிரம்பிய தண்டைப் புல்லில் கண்டெடுத்து அதன் நார்த்தோலை நகங்களால் உரித்து அகற்றிவிட்டு, அதைக் கறுக்குக் கறுகெனக் கடித்துச் சுவைத்துத் தின்னலானான். மறுபடி விமான எஞ்சின்களின் கடகடப்பு கேட்டது. இறக்கைகள் இடமும் வலமுமாக முறையே சாய, பாதைக்கு மேலே தாழப் பறந்து சென்றன சற்றுமுன் வந்த அதே விமானங்கள். அவற்றின் இறக்கைகளது மஞ்சட் பழுப்பு வண்ணப்பூச்சும், வெண்கறுப்புச் சிலுவைகளும், கிட்ட இருந்த விமானத்தின் உடலில் தீட்டப்பட்டிருந்த இஸ்பேட்டு ஆஸின் சித்திரமும் துலக்கமாகத் தெரியும் படி அவ்வளவுதாழ்வாக பறந்தன அவை. சீனியர் லெப்டினன்ட் இன்னும் சில புளியாரைத் தண்டுகளைச் சோம்பலுடன் கிள்ளி எடுத்துக் கொண்டு கடிகாரத்தைப் பார்த்தான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

தில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு ! PRPC ஆர்ப்பாட்டம்

தில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு !

ஆர்ப்பாட்டம்

நாள் : 14.10.2019 திங்கள், காலை 10 மணி.
இடம் : காந்தி சிலை, சிதம்பரம்.

  • கருப்புப் பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் !
  • ஆயிரங்கால் மண்டப திருமணம் – கின்னசு நாட்டியாஞ்சலி கணக்கில்லா வசூல் வேட்டை!
  • தீட்சிதர்கள் மீது சி.பி.ஐ ரெய்டு நடக்குமா ?

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
கடலூர் மாவட்டம்.
விருதை : 9360061121.
சிதம்பரம் : 9842341583.
கடலூர் : 9842396929.

டிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் !

11

மோடியின் மாமல்லபுர வருகையை தொடர்ந்து ஊடகங்கள் அனைத்தும் ஜால்ரா அடித்துவரும் நேரத்தில், தமிழக மக்கள் வழக்கம் போல #GoBackModi ஹேஸ்டேக்கை டிரண்ட் செய்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இங்கே…

***

கப்பார் :

1.25 கோடி இந்தியர்கள் காஷ்மீரில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 10 லட்சம் இந்தியர்கள் அஸ்ஸாமில் தங்களது குடியுரிமையை இழந்துள்ளனர். “நான்தான் பாசிசம்” என்று சொல்லிக் கொண்டே பாசிசம் என்றும் வருவதில்லை. அதன் குறியீடுகளை நாம்தான் புரிந்து கொள்ளவேண்டும்,
#GoBackModi #回到莫迪

அடுத்த முதல்வர் NTK :

தொடங்கட்டும் மீண்டும் தொல்குடிபந்தம். தொன்மையான இனத்தின் பிரதிநிதியாக சீன அதிபர் இன்னொரு தொன்மையான தமிழர் நிலத்திற்கு வருகை தருகிறார். வாருங்கள் சீசின்பிங் வாருங்கள். (Please Share) #வாருங்கள்சீசின்பிங் #泰米尔欢迎吉平 #TamilsWelcomeXiJinping #ஓடிப்போமோடி #GoBackModi

காயத்ரி அருண்பிரசாத் :

மோடியைப் புறக்கணிக்கும் இடத்தை சீனா உள்நோக்கத்தோடு தேர்ந்தெடுத்திருக்கிறதோ ?
#GoBackModi

தமிழ் ராட்சசி :

#GoBackModi வெளிநாடான சீனா தமிழை விரும்புகிறது. சீனாவின் முக்கியமான இரண்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கு கவுரவம் வழங்கியுள்ளது. நூற்றுக்கணக்கான சீனர்கள் தமிழ் கற்று வருகின்றனர். அதே சமயம் மோடியின் கீழ் ஹிந்தியா, தென்னிந்தியாவின் மீது இந்தியைத் திணிக்க எத்தனிக்கிறது. சீனா தமிழகத்தை விரும்புகிறது. ஆகையால்தான் சீனர்கள் தமிழகத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.

ஜெர்ரி சுந்தர் :

கிபி 1281-ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துக்கள் சீனாவின் குவான்சௌ கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதனை அங்கீகரித்திருக்கும் சீனாவை நாங்கள் மதிக்கிறோம். எங்கள் மீது இந்தியைத் திணிக்கும் மோடியை நாங்கள் உதைத்து அனுப்புகிறோம். #GoBackModi

சுந்தர்ராஜன் :

கிமு 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழகத்தின் நகர நாகரிகத்தை வெளிக் கொண்டுவந்த கீழடி நாகரீகத்தை மூடி மறைக்க முயலும் மோடி அரசின் தலைவரை தமிழகத்தின் கலாச்சார நகரான மகாபலிபுரத்திற்கு வரவேற்க முடியாது. #gobackmodi

வில்லவன் :

சங்கிஸ் நவ் : இவன் சும்மா இருந்திருந்தாக்கூட ரெண்டாயிரம் போஸ்ட் கம்மியா இருந்திருக்கும்.. ஹோமகுண்ட வாயன் சும்மா இருந்தவனை எல்லாம் கிளப்பி விட்டுட்டானே. நம்ம கூட்டிக்கிட்டு வர்றது எல்லாமே உள்ளதையும் குட்டிச்சுவராக்குற கேசாத்தான் இருக்கு. #GoBackModi

பிரதாப் :

ஒரே நாடு .. ஒரே ட்ரெண்டிங் = #GoBackModi

ஷைனி மிராகுலா :

பாசிசத்திற்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள். #GoBackModi. எனக் கூறுங்கள் !

காண்டிராக்டர் நவீன் :

மோடியேதிரும்பிப்போ #回到莫迪 #GoBackModi
தமிழகம் ஏற்கெனவே மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்டது. தமிழ், ஆங்கிலம், சைனிஸ்

தாஜ் மீடியா :

இது புலிகளின் மண் ! #gobackmodi #泰米尔纳德邦欢迎习近平

அயாஸ் ஷைல் :

#GoBackModi முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தால் மோடி தமிழகத்தில் இருக்கிறார் என்று பொருள்

ஜோக்கர் :

சை ஜின்பிங் – மோடி – இருவருக்குமான தமிழகத்தின் வரவேற்பு
#TN_welcomes_XiJinping #回到莫迪 #gobackmodi

சுரேஷ் :

#GoBackModi மோடி எப்போது தமிழகத்திற்கு வந்தாலும் !

சுந்தர் ஜெர்ரி :

ஏன் #GoBackModi ?

  • சிறுபான்மையினர் மீது குறிவைத்து தாக்குதல்
  • பொருளாதாரக் கொள்கைகள்
  • தேசிய குடிமக்கள் பதிவேடு
  • இந்தி திணிப்பு
  • நீட்
  • வேலைவாய்ப்பின்மை
  • விவசாயிகளை முதுகில் குத்தியது
  • ரஃபேல் ஒப்பந்தம்
  • நீதித்துறை, ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. உள்ளிட்ட நிறுவனங்களை பலவீனப்படுத்தியது
  • காஷ்மீர்…. (இன்னும் பல)

தந்திரன் :

இந்தியாவின் ஒவ்வொரு குழந்தையும் கூட சொல்கிறன #GoBackModi

கெளதம் :

#GoBackModi நாளை இதுதான் தமிழகத்தில் நடக்கப் போகிறது. பசங்களா ! தயாராகிக்குங்க !

#泰米尔纳德邦欢迎习近平 #TN_welcomes_XiJinping #回到莫迪 #GoBackModi

நகர்ப்புற சைக்கிளிஸ்ட் :

எனது இந்திக்கார நண்பனுக்கு #GoBackModi என ட்ரெண்டிங் செய்ய பாடமெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

சந்தோஷ் குமார் :

ஒவ்வொரு முறை மோடி தமிழகத்திற்கு வருகிறார் எனத் தெரிந்ததும் தமிழக மக்கள் #泰米尔纳德邦欢迎习近平 #回到莫迪 #GoBackModi என முழங்க ஆரம்பிக்கின்ற்னர்.

கோபிநாத் :

இந்த மோடிஜியைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள் #GoBackModi

பாலாஜி :

#泰米尔纳德邦欢迎习近平 #回到莫迪 #GoBackModi – நான் காத்திருக்கிறேன்.

ஷஹ்ரன் :

ப்ரோ, இது ரொம்ப போயிருச்சே !
#回到莫迪 #GoBackModi

அகமதுதீன் :

பாசிஸ்ட்டுகள் தமிழகத்திற்குள் நுழையும்போது…. #GoBackModi

அகதி ரமீஸ் ராஜா :

ஒருவேளை @narendramodi நீங்களே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், எங்களிடமிருந்து நீங்கள்,
#GobackModi #回到莫迪 #GoBackSadistModi என்பதைத்தான் பெற்றிருக்க முடியும்.

சகாவே :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு – ரூ. 71
வெங்காய விலை – ரூ. 80
தக்காளி விலை – ரூ. 80
பெட்ரோல் விலை – ரூ. 80
எடுடா இரண்டு லெமன… #GoBackModi

தோகா டாக்கீஸ் :

நண்பர்களே.. ம்ம்.. ஆரம்பியுங்கள்…
#GoBackModi #WelcomeXiJinping

அதிமுக ஃபெயில் :

கண்டிப்பாக பார்க்க வேண்டியது : தமிகத்தில் மோடி – டிவிட்டரில்
#GoBackModi விளக்கப்பட்டது.

அலர்ட் ஆறுமுகம்:

சீனமொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன் #gobackmodi

சாய் பிரசாத் :

வெட்கங்கெட்ட தமிழக அரசு அப்பாவி ஆத்மாக்களின் உடல் மீது பேனர்களைக் கட்டிக் கொண்டிருக்கிறது. #GoBackModi

பாரதிதாசன் :

#gobackmodi #返回莫迪 – இதோட அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. கூகுளில் தேடிப்பார்த்தேன். நான் ஷாக்காகிட்டேன்

கரிகாலன் அரிமா :

தமிழ் மீம் தேசம் : #GoBackModi

Sofia | சோபியா

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியில் சுட்டுக் கொல்லப்படாமல் இருந்திருந்தால், இந்த வாரம் ஸ்னோலினுக்கு வயது 19 ஆகியிருக்கும்.
#Sterlite #GoBackModi #返回莫迪 #ThoothukudiMassacre #SterliteProtest

போஸ்கோ

நாங்கள் அனிதாவை இன்னும் மறக்கவில்லை… #GoBackModi


தொகுப்பு :  நந்தன்

வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா

0
bjp-linguistic-agenda

சில நாட்களுக்கு முன் கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் வேலியில் விரிவுரையாற்றினேன். உலகின் தகவல் தொழில்நுட்ப மையமான சிலிக்கான் பள்ளத்தாக்கு சமீப காலங்களில் ஆப்பிள், கூகிள் மற்றும் பல முன்னோடி முயற்சிகளின் தளமாகவும் இணைய புரட்சியைத் தூண்டிய மின்னணு துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய இடமாகவும் அது உள்ளது.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஐ.டி முதல் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் வரை பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களில் வட இந்தியர்களைவிட தென்னிந்தியர்கள் அதிகமாக உள்ளனர். எந்தவொரு பெரிய தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனங்களிலும் இந்தி-பசு வளையத்தைச் சேர்ந்த இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு. அமெரிக்காவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் உள்ள இரண்டு உயர் அதிகாரிகளான சத்யா நதெல்லா மற்றும் சுந்தர் பிச்சை ஆகிய இருவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஏன்? இதற்கு இந்தி காரணம் அல்ல, ஆங்கிலம்தான் காரணம்!

காஞ்சா அய்லய்யா

தென்னிந்தியர்கள் தங்கள் பிராந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது கன்னடம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதைத் தவிர, அதிக முக்கியத்துவத்துடன் ஆங்கிலம் கற்றனர். பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு திராவிட கழக இயக்கத்தின் காரணமாக, இந்தியை முற்றிலுமாகத் தவிர்ப்பதன் மூலம் பள்ளி கல்வி மட்டத்தில் இரண்டு மொழிகளை மட்டுமே கற்க வேண்டும் என்ற இயக்கம் தமிழகத்தால் வழிநடத்தப்பட்டது.

அதிக எண்ணிக்கையிலான கிறித்துவ ஆங்கில பள்ளிகள் இருப்பதன் காரணமாக, இந்தியை மறுப்பதன் மூலம் ஆங்கில வழி கல்வியை மேம்படுத்தி கேரளா தனக்கென ஒரு மாதிரியை உருவாக்கிக் கொண்டது. தெலுங்கு மாநிலங்களும் கர்நாடகாவும் தமிழ்நாடு மற்றும் கேரள மாதிரி பள்ளிகளால் தாக்கம் கண்டன. இந்தியாவின் முதல் தலித் தலைவர் கே. ஆர். நாராயணன், இந்தியாவின் முதல் தலித் தலைமை நீதிபதி கே. ஜி. பாலகிருஷ்ணன் ஆகியோர் கேரளத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தானாக அந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஆனால் இத்தகைய உயர் பதவிகளுக்கு வருவதற்கு முன் தங்களுக்கென்று ஒரு பெயரை அவர்கள் உருவாக்கியிருந்தனர். ஏன்? இந்தி காரணம் அல்ல, ஆங்கிலமே காரணம்.

படிக்க:
நூல் அறிமுகம் : இதிகாசங்களின் தன்மைகள்
சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் !

தற்போது ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டாய தெலுங்கு பாடத்துடன் ஆங்கில வழி கற்பித்தலை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதைச் செய்ய எந்த வடமாநில முதலமைச்சரும் துணிய மாட்டார். குஜராத்தில் மிக மோசமான நிலையில் ஆங்கில வழி கல்வி உள்ளது. எந்தவொரு வட இந்திய மாநிலத்தையும்விட, இந்தி – பசு வளைய மாநிலங்களைவிட கல்வி மேம்பாட்டு முறைகள் தென்னிந்தியாவில் மிக உயரிய நிலையில் உள்ளன.

LANGUAGES-INDIAகூடுதலாக, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் ஆங்கில வழிக் கல்வி காரணமாக சில சிறந்த கல்வி நிறுவனங்களில் நுழையும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மேலும் சில தசாப்தங்களில், ஆரம்ப கல்வி ஆங்கில வழியில் தொடர்ந்தால் பல துறைகளில் அவர்கள் வழிநடத்தும் நிலைக்கு வருவார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக இந்த வளர்ச்சியை விரும்பத்தகாததாகப் பார்க்கிறது. இந்தியை திணிக்கும் அவர்களுடைய எந்த முயற்சியும் வடகிழக்கில் வரவேற்கப்படாது.

எப்படியிருப்பினும், அமித் ஷாவும் பாஜகவும் கடிகாரத்தை திருப்பி தென்னிந்தியாவிலும் வடகிழக்கிலும் இந்தியை திணித்து ஆங்கிலத்தை வெளியேற்ற திட்டமிடுகிறார்கள். இதன் மூலம் முழு இந்தியாவையும் இந்தி-பசு வளைய மாநிலங்களின் கல்வி நிலைக்கும் தரத்துக்கு கீழிறக்க முடியும். அதன்பிறகு பாஜகவின் இந்தி-இந்துராஷ்டிரத்தை நிறுவும் இலக்கு நிறைவேறும்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் நீண்டகால நிகழ்ச்சி நிரலாக உள்ள இந்தி திணிப்பு தொடர்பாக அவர்கள் மறுப்பதை நான் சந்தேகிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 22 அன்று ஹூஸ்டனில் அமித் ஷாவின் சமீபத்திய கருத்துக்கள் குறித்த அச்சங்களை மட்டுப்படுத்த முயற்சித்த போதிலும், பிரதமர் ஒரு வெளிநாட்டில் உரையாற்றுவதற்குப் பதிலாக இந்தியாவில் இதை தெளிவுபடுத்தியிருக்க முடியும்.

இந்து – இந்தி – இந்துஸ்தான் என்ற தேசத்தை உருவாக்குவதும், மெதுவாக இந்தியாவின் பெயரை மாற்றுவதும் பாஜகவின் நீண்டகால குறிக்கோளாகும். அரசியலமைப்பின் முன்னுரையில் உள்ள பாரத் – இந்துஸ்தானுக்கு நன்கு அறியப்பட்டதாகும்.

இந்த முழு திட்டத்திலும், பாகிஸ்தான் ஒரு முன்மாதிரியாகவும் மதசார்பற்ற, பின்தங்கிய முஸ்லீம் நாடுகளுடனான போட்டியிடும் திசையிலும் அவர்கள் செல்கிறார்கள். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடனான உலகளாவிய போட்டி மனப்பான்மையுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்ட சீனா அல்லது தென்னாப்பிரிக்காவுடன் இந்தப் போட்டியிடவில்லை. அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் தென்னிந்தியாவில் இருப்பதைப் போன்ற ஆர்வம் காட்டுகிறார்கள்.

நவீனமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலுக்கு பிந்தைய கட்டத்திலும் மொழி ஒரு முக்கிய இணைப்பாக உள்ளது. முன்னாள் பிரெஞ்சு காலனிகளாக இருந்த ஆப்பிரிக்காவில் தங்கள் சொந்த மொழிகளில் கல்வியை ஊக்குவிக்க வலியுறுத்தவில்லை, மெதுவாக அவர்கள் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றன. ஆங்கில மொழி தொடர்பு மற்றும் தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சியுடன் உலகளாவிய ஒருங்கிணைப்பால் அவர்களின் பொருளாதார வளர்ச்சி இப்போது வேகமாக உள்ளது.

படிக்க:
குழந்தைகளுக்கு தாய்மொழியை பயிற்றுவிப்பது எப்படி ?
♦ 1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு மொழியியல் மற்றும் கலச்சார துறைகளின் உலகளாவிய திசையைப் பற்றி எந்தவிதமான தீவிர புரிதலும் இல்லை. பாஜக, ஆர்.எஸ்.எஸ். வணங்கும் இஸ்ரேலும்கூட ஹூப்ரு தவிர, ஆங்கில கல்வியை ஊக்குவிக்கிறது, இது ஒரு பொதுவான கலாச்சார மாற்றமாகும்.

இந்தியாவில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு நிதியளிக்கும் அனைத்து தொழிற்துறை வர்க்கமும் இந்தியில் கவனம் செலுத்துகிறது. மொழியியல் மற்றும் கலாச்சார வர்க்க வேறுபாடுகள் வட இந்தியாவைவிட, தென்னிந்தியாவில் உயரிய இடத்தில் உள்ளன. தெற்கில், அனைத்து பிரிவினரும் தங்கள் பிராந்திய மொழிகளுடன் ஆங்கிலம் கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். எனவே, மொழியியல் மற்றும் கலாச்சார இடைவெளி குறுகி வருகிறது. வட இந்தியாவில் அது பரந்து வருகிறது. பொருளாதார மற்றும் கலாச்சார வளங்களின் வறுமை அப்பட்டமாகத் தெரிகிறது.

வட இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் குழந்தைகளுக்காக உலகளாவிய தரமான ஆங்கில வழி பள்ளிகளை நடத்தி வரும் முன்னணி தொழிற் நிறுவனங்களை இந்தி வழி கல்விக்கு மாறுங்கள் என அமித் ஷா அல்லது ஆர்.எஸ்.எஸ் கட்டாயப்படுத்த முடியுமா? வடக்கு மற்றும் தெற்கில் உள்ள தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளை இந்தி வழிப் பள்ளிகளுக்கு அனுப்புமாறு அமித் ஷா வற்புறுத்த முடியுமா? தென்னிந்தியா மற்றும் வடகிழக்கில் இந்தியை சரியாக யாரிடம் திணிக்க ஷா விரும்புகிறார்? எனவே, இந்தத் திட்டம் அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமங்களில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தெளிவாகிறது.

இந்துத்துவ சக்திகளால் முன்வைக்கப்படும் உணர்வுபூர்வமான மொழி பிரச்சாரம் குறித்து தலித்துகள், ஓபிசிக்கள் மற்றும் மேல்தட்டு சூத்திரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களின் குழந்தைகள் இப்போதுதான் நவீன நாகரிக மற்றும் உலகமயமாக்கப்பட்ட கலாச்சாரங்களை எட்டிப் பிடித்திருக்கிறார்கள். இந்துத்துவ கற்பனைகளான ஒரு தேசம், ஒரு மொழி மற்றும் ஒரு கலாச்சாரத்தை தாங்கிச் செல்ல அவர்கள் தங்களை அனுமதித்தால், அவர்கள் இடைக்காலக் கட்டத்தின் வறுமை, அறியாமை மற்றும் சமத்துவமின்மைக்குத் திரும்பிச் செல்வார்கள்.

இந்தி – பசு வளையத்தைச் சேர்ந்த மாநிலங்களுடன் தென்னிந்திய மக்களின் அறிவியல் மனப்பான்மையை ஒப்பிடும்போது, தென்னிந்தியாவில் மூடநம்பிக்கை, அறியாமை மற்றும் சுரண்டல் இல்லாதது அறிவியல் சிந்தனை சிறந்த பங்காற்றியிருப்பதை ஆதாரமாகக் காட்டுகிறது.

தென்னிந்தியாவில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சமத்துவத்திற்கான அறிவுநிலைகள் மற்றும் வலியுறுத்தல்கள் மிக அதிகம். ஒரு குழந்தை உலகளாவிய தகவல்தொடர்பு மொழியைக் கற்கும்போது, அந்தக் குழந்தையின் சொற்களஞ்சியம் வளமாக இருக்கும். ஒரு சிறு குழு அல்லது ஒரு சிறு பிராந்தியத்தில் பேசப்படும் ஒரு மொழியைப் பேசும் குழந்தையைவிட சிறந்த நம்பிக்கையும் அறிவும் இந்தக் குழந்தைகளுக்கு இருக்கும்.

சமூக மற்றும் இயற்கை அறிவியல் ஆய்வை பலவீனப்படுத்துவதன் மூலம் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் -ம். ஏற்கனவே பல்கலைக்கழகங்களுக்கு நிறைய சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. புராண அறிவியல் மற்றும் புராண நூல்கள் அறிவியல் அறிவை வளர்க்கும் என அவர்கள் நம்புவது நகைப்புக்குரியது. அவர்கள் போலி அறிவியலாளர்களை டி.என்.ஏ. மற்றும் தொல்பொருள் அறிவியல் நிபுணர்கள் என அறிவிப்பதும் மனித இடப்பெயர்வு குறித்த அனைத்து உலகளாவிய அறிஞர்களின் கோட்பாடுகளையும் தவறானவை என அறிவிக்கவும் செய்கிறார்கள். அறிவியல் உலகம் இவை அனைத்தையும் கேலிக்கூத்தாகவே பார்க்கின்றன. இப்போது அவர்களின் அரசியல்வாதிகள் மற்ற அனைத்து மொழிகளையும் விட்டுவிட்டு இந்தியை கட்டாயம் கற்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். அப்போதுதான் அகண்ட பாரதம் தங்கம் மற்றும் வெள்ளி விளையும் நிலமாக மாறும் என்கிறார்கள்.

அனைத்து தென்னிந்தியர்களும் நல்ல விதமாக, அமித் ஷாவின் அபத்தமான இந்தி – இந்து – இந்துஸ்தான் கோட்பாட்டுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க, தமிழகத்தின் இரு மொழி சூத்திரத்தை நாம் எடுத்துக்கொண்டு, நமது அறிவியல் மனப்பான்மையை வலுப்படுத்த வேண்டும். இதனால் சீனா போன்ற வேகமாக வளர்ந்துவரும் நாடுகளால் இந்தியா மீண்டும் காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படுவது தடுக்கப்படும்.


கட்டுரையாளர் : எழுத்தாளர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளர் காஞ்சா அய்லய்யா.
தமிழாக்கம் :
கலைமதி
நன்றி: கவுண்ட்டர் கரண்ட்ஸ் 

நூல் அறிமுகம் : இதிகாசங்களின் தன்மைகள்

திகாசங்கள் என்பன இராமாயணமும், பாரதமுமாகும். இவை இரண்டும் ஆரிய நூல்கள்.

இக்கதைகளுக்கு ஆரியப் பார்ப்பனர்கள், தெய்வத் தன்மையை ஏற்றிப் பல காரணங்களால் தமிழ்நாட்டில் புகுத்தி, அறியா மக்களிடையே அவற்றில் நம்பிக்கை உண்டாக்கித் தங்கள் உயர்வுக்கும் வாழ்வுக்கும் வழிகோலிக்கொண்டு அவற்றை நிலைநிறுத்தி வருகிறார்கள்.

உலகத்திலேயே ஒப்பற்ற அறிஞராக, உலக மக்களுக்கே நாகரிகத்தைப் பரவச் செய்த பெரியோர்களாக இருந்த தமிழ் மக்கள், காலமாற்றத்தால் நாளடைவில் அறியாமையில் மூழ்கி, இப்படிப்பட்ட கதைகளை நம்பி, தமது உண்மைப் பெருமையை மறந்து, இவ்விதிகாசங்கள் தம்மைச் சேர்ந்த நூல்களெனக் கொண்டு மயங்கித் தவிக்கின்றனர்.

இதனாலேயே தோழர் ஈ.வெ. இராமசாமிப் பெரியாரவர்களுடைய வேண்டுதலுக்கு இசைந்து இராமாயண ஆராய்ச்சியைக் ‘குடி அரசு’ இதழில் வெளியிட்டோம். அது முடிந்தவுடன் பாரத ஆராய்ச்சியும் ஓரளவு வெளிவந்து நின்றது. இராமாயண ஆராய்ச்சியை ஏழு காண்டங்களாக அச்சிட்டுப் பெரியார் இராமசாமி அவர்கள் வெளியிட்டு உலகுக்கே அழியாத பேருதவியைச் செய்திருக்கிறார்கள். (நூலிலிருந்து பக்.1)

இதிகாசங்கள் என்று தலைப்பிட்டு இச்சிறு நூல் எழுதுவதன் நோக்கம், இராமாயண, பாரதங்களின் சிறுமையைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டுவதேயாகும். இதனால் விளையும் பயன் யாதெனில், இதிகாசங்களைப் பற்றிய தமிழ் மக்களின் தவறான எண்ணங்கள் மாறி, “இதிகாசங்களைப் படிப்பதனால் சகோதரத் துரோகமும், விபச்சாரத்தனமும் வளரும்” என்ற உண்மையை ஒருவாறு உணரச் செய்யும் என்பதோடு மற்றும் இவற்றைப் படிப்பதனால் தமிழ் மக்கள் தன்மானமற்று ஆரியக் கூட்டில் வீழ்ந்து அல்லல்படுவதிலிருந்து விடுபடுவார்கள் என்பனவேயாகும். ஆதலால் தமிழ் மக்கள் அனைவரும் இதனை ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கி, உண்மை உணர்ந்து பயன்பெறுவார்களாக. (நூலிலிருந்து பக்.2)

இராமாயணம் என்பது, இராமன் என்ற ஆரிய அரசனின் மகன், இராவணேசுவரன் என்ற தமிழ் மன்னனைக் கொன்ற வரலாறு ஆகும்.

இராவணன் காட்டிலிருந்த சீதையைத் தூக்கித் தன் மடிமீது வைத்துச் சென்று, இலங்கையில் சிறைவைத்து இருந்தான்.

இராவணன் அப்படிச் செய்வதற்குக் காரணம் என்ன? என்று பார்த்தால், இராவணனுடைய தங்கையாகிய சூர்ப்பநகை என்பவளை, இராமனுடைய ஏவலால் அவனது தம்பி இலக்குவன் மூக்கு, முலை, முடி ஆகியவற்றை அறுத்து, அவமானம் செய்துவிட்டான். இதற்குக் காரணம் என்னவென்றால், “சூர்ப்பநகை இராமனையும் இலக்குவனையும் தன்னை மணந்து கொள்ள வேண்டுமென்று கேட்டாள். அதனாலேயே இலக்குவன் அவளை அவமானம் செய்தான் ” என் ஆரிய வால்மீகியே தம் இராமாயணத்தில் எழுதி இருக்கிறார்.

தன்னை மணம் செய்துகொள்ள வேண்டுமென்று கேட்ட ஒரு பெண்ணை இப்படி அவமானம் செய்வது எவ்வளவு கொடுமை? எந்த நாட்டிலாவது இப்படிப்பட்ட காரியம் நடந்ததாக யாராவது சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட கொடுஞ்செயலைப் பெரிதாக எழுதாமல், “இராவணன் சீதையைச் சிறை வைத்திருந்தான்” என்பதை மாத்திரம் ஒரு மாபெரிய கொடுஞ்செயலாகக் கூறி, இராவணன் மேல் மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படிச் செய்திருக்கின்றனர்.

படிக்க:
ரூ. 76,600 கோடி : இரகசியமாக கடன் தள்ளுபடி செய்த SBI
“பூமராங் ஆனது இராமபாணம்!” – அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்தும்டே

இராவணன் சீதையை மூக்கு, முலையை அறுத்து அவமானம் செய்தானா? அல்லது பலவந்தமாவது செய்தானா? இல்லவே இல்லை. மற்றென்ன செய்தான் எனில், தன் கூடப்பிறந்த தங்கையை அலங்கோலஞ் செய்து, அவளுடைய வாழ்க்கையையே கெடுத்த பாவியாகிய இராமனின் மனைவியைத் தூக்கிச் சென்றான். அதுவும் எப்படித் தூக்கிச் சென்றான் எனில், “தூக்கித் தன் மடிமீது வைத்துக்கொண்டு சென்றான்.” இது வால்மீகி முனிவரே சொல்லுவதாகும். –

ஆனால், கம்பர் போன்ற சிலர், “முன் இராவணனால் பலவந்தப்படுத்தப்பட்ட ஒரு பெண், வேறு பெண்களைத் தொட்டால் அவன் மண்டை வெடித்துப் போகுமென சபித்தாள்” என்ற பொய்க் கதையை வால்மீகி முனிவருடைய மூலக்கதைக்கு மாறாக எழுதி, அதனால் “இராவணன் சீதையைக் குடிசையோடு தூக்கிச் சென்றான்” என்று பொய்க்கதை புனைந்தனர். (நூலிலிருந்து பக்.3-4)

… இராமனது ராஜ்யம் வருணாசிரம ராஜ்யமாகவே இருந்திருக்கிறதுடன், அவன் ராஜ்யத்தில் பிராமணர்களுக்கே அதிக ஆதிக்கம் இருந்திருக்கிறது. ஒரு “சூத்திர அரசன்” தவம் செய்ததற்காக (சூத்திரர் தவம் செய்ய அருகதை அற்றவர்கள் என்று) கொல்லப்பட்டிருக்கிறான். அதுவும் கடவுள் அவதாரம் என்று சொல்லப்படும் இராமனாகிய அரசன் கையாலேயே கொல்லப்பட்டிருக்கிறான்.

… இராமன், அவன் மனைவி ஆகிய எல்லோருமே மாமிசத்தையும், மதுவையும் ஏராளமாக உண்டவர்களாகவேயிருக்கிறார்கள். இராமனும், இலக்குவனும் அகால மரணத்தையே அடைந்திருக்கிறார்கள். மற்றும் இதுபோன்ற அநேக சேதிகளை இராமாயண ஆராய்ச்சியில் காணலாம். (நூலிலிருந்து பக்.8)

… பாரதம் என்பது பஞ்சபாண்டவருக்கும் துரியோதனாதியருக்கும் நடந்த போரைப் பற்றிய வரலாறு. திருதராட்டிரன் என்பவனும், அவனுக்குத் தம்பி முறையாகிய பாண்டுவும் நாடாண்டு வந்தனர். திருதராட்டிரனுடைய பிள்ளைகள் துரியோதனன் முதலிய நூறு பேர். தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற அய்ந்து பேரும் பாண்டுவின் மனைவியருக்குப் பிறந்த பிள்ளைகள். திருதராட்டிரனே அரசன். அதனால் அவனுடைய மூத்த பிள்ளையாகிய துரியோதனனே அரசனாக உரியவன். தருமன் முதலியோர்  தங்களுக்கும் நாட்டில் பங்கு உண்டு என்று கெடுவழக்காடி கிருட்டினனுடைய துணையைக் கொண்டு துரியோதனாதியருடன் சண்டைபோட்டுக் கொன்று அரசாட்சியை அடைந்தனர். இதுவே பாரதப் போரின் உண்மை . இதனால் பஞ்ச பாண்டவர்களே வம்பர்கள் என்று விளங்குகின்றதல்லவா?

பாரதக் கதையின் அடிதொட்டு முடிவுவரை எங்கு நோக்கினும் விபச்சாரமே தாண்டவமாடுகின்றது. … வேதங்களையெல்லாம் வகுத்தமையால் வேதவியாசன் என்ற பெயரைப் பெற்ற அந்த வியாசனுக்கு இவ்விரண்டு பெண்களைக் கூடியும் காமவேதனை தீராமல் அம்பாலிகையின் தாதியையும் கூடி, விதுரன் என்பவனையும் பெற்றான்! நான்கு வேதங்களையும் வகுத்தமையோடு வியாசன் பாரதக் கதையையும் எழுதினான். அதனால் பாரதம் அய்ந்தாம் வேதம் என்று புகழப்படுகிறது. காமக்கலையும் அய்ந்தாம் வேதமென்றே கூறப்படுகிறது. காமக்கலைக்கும் விபச்சாரத்துக்கும் நிலைக்களமானதால்தான் பாரதம் அய்ந்தாம் வேதமெனப்படுகிறது போலும். ஆரிய முனிவனாகிய வேதவியாசனே விபச்சாரத்துக்கு நிலைக்களமானவனாகி நடந்துகாட்டியதோடு, அதையே கதையாகவும் எழுதிவிட்டான். என்னே இவன் துணிச்சல்! இத்தகைய இழிவான கதைகளையும் தமிழ் மக்கள் தம்முடையவை என எண்ணி ஏமாந்து படித்து மகிழ்கின்றனரே; ஆரிய சூழ்ச்சியின் வல்லமைதான் என்னே? (நூலிலிருந்து பக்.10)

நூல் : இதிகாசங்களின் தன்மைகள்
ஆசிரியர் : பண்டிதர் இ.மு.சு.

வெளியீடு : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 9626657609 | 7639818254

பக்கங்கள்: 32
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : dravidianbookhouse | periyarbooks.in

குழந்தைகளுக்கு தாய்மொழியை பயிற்றுவிப்பது எப்படி ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 07

தாய் மொழிப் பாடம்

பாட நோக்கம்: படிப்பது, பேசுவதன் அடிப்படையில் புதியவற்றை அறியும் ஆர்வத்தை மேற்கொண்டு வளர்த்தல்; நன்மை, தீமை பற்றிய கருத்துகளை உருவாக்குதல்.

பாடத்தின் உள்ளடக்கம்: நான் குழந்தைகளுக்கு ஏற்கெனவே படித்துக் காட்டிய தனித்தனி கவிதைகள், கதைகளிலிருந்து சிறு சிறு பகுதிகள் (”இது எதிலிருந்து என்று கண்டு பிடியுங்கள்!”); தனித்தனியான இரண்டு வாக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள் (“இந்த வாக்கியங்களைக் கண்டுபிடியுங்கள்!”); மாற்றியமைக்கப்பட்ட நாலடிப் பாடல் வரிகள் (“இந்த நாலடிப் பாடலை எப்படி வாசிப்பது?”); பழமொழிகள், முதுமொழிகள் (“இவை உங்களுக்குப் பிடித்துள்ளனவா?”); வாக்கியத்தில் விட்டுப் போன வார்த்தையைக் கண்டு பிடிக்கும் பயிற்சி (“இங்கே என்ன வார்த்தையை எழுதலாம்?”).

பாட அமைப்பு:

  1. பாட வேலைகளை முன்வைத்தல். (காரிய ரீதியான வேகம், கருத்தாழத்தோடு, நட்பு ரீதியான தொனி.) நேரம் 3 நிமிடங்கள்..

“பாருங்கள், உங்களுக்காக எதையெல்லாம் தயாரித்துள்ளேன்!”

இரண்டு கரும்பலகைகளின் திரைகளையும் அகற்றுகிறேன்.

“இந்த இடங்கள் எதிலிருந்து எடுக்கப்பட்டன என்று யோசித்துச் சொல்லுங்கள்!..”

”இங்கே நான் வேண்டுமென்றே இரண்டு வாக்கியங்களின் வார்த்தைகளையும் நாலடிப் பாடல் வரிகளையும் கலந்துள்ளேன். இவற்றைப் பிரித்துச் சொல்ல முடியுமா?”

“இந்த வாக்கியத்தில் இரண்டாவது வார்த்தையைக் ’காணோம்’. நீங்கள் அதைக் கண்டு பிடித்து உரிய இடத்தில் வைக்க வேண்டும்.”

“இதோ நான் இங்கு வார்த்தைகளை எழுதியிருக்கிறேன். தப்பு இருக்கிறதா பாருங்கள்! சரிபார்க்க வேண்டும்!”

“இதோ இங்கே (கரும்பலகையின் திரையைத் திறந்து விட்டு உடனே மூடுகிறேன்) என் ரகசியம் உள்ளது. இதைப் பற்றிப் பின்னால் சொல்வேன்.”

“உங்கள் ஒவ்வொருவரின் டெஸ்கிலும் பழமொழிகள், முதுமொழிகள் எழுதப்பட்ட சிறு அட்டை உள்ளது. இவற்றை என்ன செய்வதென்று உங்களுக்குத் தெரியும்.”

“இது தவிர, இதோ இம் மாதிரியான தாள்களை உங்களுக்காகத் தயாரித்துள்ளேன். ஒவ்வொன்றிலும் இரண்டு கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுங்கள், பின்னால் அதை மனப்பாடம் செய்யலாம். இன்னொரு தாளில் உங்களுக்குப் பிடித்தமான வேலை உள்ளது – வார்த்தைகளையும் படங்களையும் இணைக்க வேண்டும். இரண்டு தாள்களையும் வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்.”

“சரி, எதிலிருந்து துவங்குவோம்?”

குழந்தைகள் தமக்கு விருப்பமானதை முதலில் எடுக்கின்றனர்.

  1. தனிப்பட்ட பகுதிகளிலிருந்து உரிய கவிதை, கதையைக் கண்டுபிடித்தல். (சாதாரண வேகம், கவர்ச்சிகரமாக.) நேரம் 3 நிமிடங்கள்.

“முன்னர் நான் உங்களுக்குக் கதைகள், கவிதைகளைப் படித்துக் காட்டியிருக்கிறேன். இப்பகுதிகள் எவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை என்று யோசித்துச் சொல்ல முடியுமா?”

கரும்பலகையில் மூன்று வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. குழந்தைகள் அவற்றைப் படிக்க வாய்ப்பளிக்கிறேன்.

அவை எந்தக் கதை, கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என்று அவர்களால் கண்டுபிடிக்க இயலாவிடில் ஒரு சில கதை, கவிதைகளின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு உதவுகிறேன்.

III. தனித்தனியாகப் பிரித்து எழுதப்பட்டுள்ள சொற்களிலிருந்து வாக்கியங்களை உருவாக்குதல், நாலடிப் பாடலின் மாறிய வரிகளைச் சரியாக வைத்தல். (உற்சாகமாக, விரைவான வேகம், கவர்ச்சிகரமாக.) நேரம் 5 நிமிடங்கள்.

கரும்பலகையின் ஒரு பகுதியைத் திறக்கிறேன். அங்கு இரண்டு வெவ்வேறான வாக்கியங்களின் சொற்கள் கலந்து எழுதப்பட்டுள்ளன: குதிரை, சமைத்தாள், அம்மா, வேகமாக, சாப்பாடு, ஓடியது, நல்ல.

“இங்கே இரண்டு வெவ்வேறான வாக்கியங்களின் சொற்கள் கலந்துள்ளன என்று விளக்கி, இவற்றிலிருந்து அந்த வாக்கியங்களை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியுமா?” என்று கேட்கிறேன்.

குழந்தைகள் தம் விடைகளைச் சொன்னதும் நான் கரும்பலகையில் எழுதியிருந்ததைத் திறந்து காட்டுகிறேன்: “குதிரை வேகமாக ஓடியது. அம்மா நல்ல சாப்பாடு சமைத்தாள்”.

பின், உறுதியோடு, சவாலாகச் சொல்கிறேன்: “இதோ இப்போது இங்கு என்ன எழுதியுள்ளது பாருங்கள்! இங்கே ஒரு குழந்தைப் பாட்டின் வரிகள் மாறியுள்ளன. இதை ஒழுங்கான முறையில் விரைவாக உங்களால் மாற்றியமைக்க முடியுமா?”

இப்படிச் சொல்லியபடியே கரும்பலகையின் திரையை விலக்குகிறேன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

நீ ஓய்ந்திருக்கலாகாது, பாப்பா!

ஒரு குழந்தையை வையலாகாது, பாப்பா!

ஓடி விளையாடு, பாப்பா!

கூடி விளையாடு, பாப்பா!

குழந்தைகள் தம் விடைகளைச் சொல்கின்றனர். பின் நான் கரும்பலகையைத் திறந்து சரியான விடையைக் காட்டுகிறேன்:

ஓடி விளையாடு, பாப்பா!

நீ ஓய்ந்திருக்கலாகாது, பாப்பா!

கூடி விளையாடு, பாப்பா!

ஒரு குழந்தையை வையலாகாது, பாப்பா!

  1. பழமொழிகள், முதுமொழிகள் அடங்கிய சிறு அட்டைகளுடனான வேலை. (மிதமான வேகம், கருத்தாழத்தோடு, நம்பிக்கையோடு.) நேரம் 3 நிமிடங்கள்.

“உங்களுக்குப் பிரபல வார்த்தைகளும் முதுமொழிகளும் பிடித்துள்ளதைப் பார்க்க மகிழ்ச்சி. எனவே, நான் உங்களுக்காகப் புதிய மூதுரைகளைக் கண்டுபிடித்து சிறு அட்டைகளில் எழுதியிருக்கிறேன். இவை உங்கள் டெஸ்குகளின் மீது உள்ளன. இவை உங்களுக்குப் பிடிக்கும், உங்கள் நினைவில் நிலைத்திருக்குமென நம்புகிறேன்.”

சிறு அட்டைகளில் எழுதப்பட்டுள்ள மூதுரைகளை வாய் விட்டுப் படிக்கும் படி ஒரு சில குழந்தைகளிடம் சொல்கிறேன்:

உழைப்பின்றி ஊதியமில்லை.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

உண்மை வெல்லும்.

ஆபத்தில் உதவுபவன் நண்பன்.

இவை உங்களுக்குப் பிடித்துள்ளனவா?.. இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று படியுங்கள். இவை உங்களுக்குக் கண்டிப்பாகப் பயன்படும்.”

  1. வாக்கியத்தில் விட்டுப் போன வார்த்தைகளைப் பூர்த்தி செய்தல். (விரைவான வேகம், அன்பான தொனி.) நேரம் 4 நிமிடங்கள்.

வார்த்தை விடப்பட்ட வாக்கியம் கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள இடத்தைத் திறந்து காட்டுகிறேன்:

சூரியன்           உதித்தது.

“இந்த வெற்றிடத்தில் எந்த வார்த்தையை நிரப்பலாம் என்று சொல்லுங்கள்.”

குழந்தைகள் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் கரும்பலகையில் எழுதுகிறேன். பின்வருமாறு இது இருக்கலாம்:

சூரியன்           உதித்தது.

மினு மினுப்பாக

செந்நிறமாக

பழுப்பு நிறத்தில்

பெரிதாக

சந்தோஷமாக

ஆரஞ்சு வண்ணத்தில்

புன்சிரிப்போடு

பிரகாசமாக, அழகாக என்று நான் என் விடைகளை சேர்த்துக் கொள்கிறேன்.

“சரி, இப்போது இவற்றில் எது வாக்கியத்தில் நன்கு பொருந்தி வரும்?”

குழந்தைகள் தம் முடிவை நிரூபிக்க உதவுகிறேன்.

  1. வார்த்தைகளில் உள்ள தவறுகளைத் திருத்துதல்.

(நம்பிக்கையளிக்கும் தொனி.) நேரம் 1 நிமிடம்.

எழுத்துப் பிழைகளுடன் வார்த்தைகள் கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள இடத்தைத் திறந்து காட்டுகிறேன்.

“இதற்கு இப்போது நேரம் செலுத்த வேண்டாம். இதை இப்படியே விட்டு வைக்கிறேன். யாருக்கு விருப்பமோ அவர்கள் இடைவேளையின் போது இதில் ஈடுபடலாம். இப்போது மிக சுவாரசியமானது நம்மை எதிர்நோக்கியுள்ளது.”

VII. வீட்டிற்குத் தர வேண்டிய பொருட்கள்: தாமாகவே தேர்ந்தெடுக்க வசந்தத்தைப் பற்றிய கவிதைகள், வார்த்தைகளையும் படங்களையும் இணைக்கும் பயிற்சி அடங்கிய தாள்கள். (காரிய ரீதியான வேகம், நட்புத் தொனி.) நேரம் எஞ்சிய நிமிடங்கள்.

படிக்க:
புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ
தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா பெண் சிசுக்கொலை ?

“இந்த பாக்கெட்டுகளில் கவிதைகளும், இணைக்க வேண்டிய படங்களும் வார்த்தைகளும் அடங்கிய தாள்கள் உள்ளன. பயிற்சியை நீங்கள் ஓய்வு நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். கவிதைகளை நாளைக்குள் படித்து, இவற்றில் உங்களுக்கு எது மிகவும் பிடித்துள்ளது என்று சொல்லுங்கள்.”

VIII. பாடத்தை முடித்து வைத்தல். (அன்பாக, மகிழ்ச்சிகரமான தொனி.) –

“நமது பாடவேளை முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனக்கு மகிழ்ச்சி, நீங்கள் புத்திசாலியானவர்களாக, கவனமுள்ளவர்களாக, விடா முயற்சியுள்ளவர்களாக இருந்தீர்கள்! புதியவற்றை அறியும் ஆர்வமுள்ளவர்களாக நீங்கள் இருப்பதற்கு நன்றி! நீங்கள் வெகு வேகமாக முன்னேறுகின்றீர்கள், எனவே, அனேகமாக நான் உங்களுக்கு சிக்கலான வேலைகளைத் தயார்படுத்த வேண்டும்.”

“இப்போது எழுந்திருங்கள் பார்க்கலாம்!… சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!… ஓய்வெடுங்கள்!…”

இரண்டாவது பத்து நிமிட இடைவேளை

குழந்தைகள் பூந்தொட்டிகளுக்கு நீர் ஊற்றுகின்றனர், மீன்தொட்டியைக் கவனித்து சரிசெய்கின்றனர், தாழ்வாரத்தில் விளையாடுகின்றனர், தம் விருப்பப்படி கரும்பலகையில் உள்ள சொற்களில் தப்பைக் கண்டுபிடித்துத் திருத்துகின்றனர், வார்த்தைகளை சரியான படங்களுடன் இணைக்கும் பயிற்சியைச் செய்கின்றனர்.

குழந்தைகள் செய்யும் காரியங்களிலும் பொழுது போக்குகளிலும் நானும் கலந்து கொள்கிறேன், அவர்கள் செய்யும் விஷயங்கள் மீது அக்கறை காட்டுகிறேன், அவர்களுடன் பேசுகிறேன். சாதாரண வேகம், பிரதான தொனி.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

அமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை

0

ரோப்பிய முதலாளித்துவம் தனது பிறப்பிலேயே எப்படி சுரண்டலை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதை கார்ல் மார்க்ஸ் விளக்கியிருப்பார். அடிமை வர்த்தகம், காலனியச் சுரண்டல் என நவீன சமூகத்தின் கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை அன்றைய ஐரோப்பிய முதலாளிகள் கட்டவிழ்த்துவிட்டு தமது மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டனர். ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கருப்பு மனிதர்களை விலங்குகளைப் போல் பொறிவைத்துப் பிடித்து கூட்டம் கூட்டமாக கூண்டுகளில் அடைத்து அமெரிக்காவுக்கு ”ஏற்றுமதி” செய்தனர் அன்றைய ஐரோப்பிய முதலாளிகள்.

வேட்டையில் சிக்கும் மனிதர்கள் தங்கள் குடும்பங்களில் இருந்தும், உறவுகளில் இருந்தும் பிய்த்தெறியப்பட்டு விலங்குகளைப் போல் நடத்தப்பட்டு பெரும் கப்பல்களில் அடைத்து ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். பசிபிக் பெருங்கடலைக் கடப்பதற்குள் கூண்டுகளில் அடைபட்ட மனிதர்களில் பலர் இறந்தும் போயுள்ளனர். சுமார் 400 ஆண்டுகள் நடந்த அடிமை வியாபாரத்தில் இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறத்தாழ 20 கோடி. அலெக்ஸ் ஹேலி எழுதிய “ஏழு தலைமுறைகள்” நூலின் துவக்கத்தில் ஆப்பிரிக்கர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுங்கோன்மைகளின் ஒரு குறுக்கு வெட்டுச் சித்திரம் காணக்கிடைக்கிறது.

முதலாளித்துவத்தின் கொடுங்கோன்மைகளை குறித்துப் பேசும் போதெல்லாம் அதன் பண்டித சிரோமனிகள்  ஆஜராகி, ”அதெல்லாம் அந்தக்காலம். இப்போது முதலாளித்துவம் சைவமாகி விட்டது. எவ்வளவோ நாகரீகம் வளர்ந்து விட்டது. நீங்கள் ஸ்கேண்டிநேவிய நாடுகளைப் பார்த்ததில்லையோ?” எனப் பாடம் எடுப்பதைப் பார்த்திருப்போம். இது உண்மைதானா? முதலாளித்துவம் ”முதிர்ச்சியடைந்து திருந்திவிட்டதா”? கொத்தடிமைத்தனம் ஒழிந்து விட்டதா? இல்லை என்பதே பதில்.

கூலி உழைப்புதான் (அதாவது ஊதியத்திற்கு வாங்கப்பட்ட மனித உழைப்பு) முதலாளித்துவத்தின் பிரதான சுரண்டலாக இப்போது நிலவுகின்றது – என்றாலும், எங்கெல்லாம் தனக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிமை உழைப்பை உறிஞ்சிக் கொள்ள முதலாளித்துவம் தயங்குவதில்லை. சர்வதேச தொழிலாளர் அமைப்பு கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் அந்த ஆண்டில் உலகெங்கிலும் சுமார் 2.5 கோடி கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

உலகெங்கும் இருக்கும் கொத்தடிமைத் தொழிலாளர்களில் சுமார் 24 இலட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர் என்கிறது அதே அறிக்கை. இந்த எண்ணிக்கையில் உலகெங்கிலும் மாபியா கும்பல்களால் கடத்தப்பட்டு கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், அமெரிக்காவில் உள்ள சுமார் 20 இலட்சம் சிறைக்கைதிகளை அந்நாட்டின் 13-வது அரசியல் சாசனத் திருத்தம் ”அடிமைகளாக” வகைப்படுத்தியுள்ளது – இந்த எண்ணிக்கையும் மேற்படி அறிக்கையின் கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

படிக்க:
பாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் !
சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் !

குறிப்பாக 2010-ம் ஆண்டில் இருந்து கொத்தடிமைத் தொழிலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அமெரிக்காவில் கொத்தடிமைத் தொழிலாளர்களை அதிகளவில் பயன்படுத்துவது அந்நாட்டு பாதுகாப்புத் துறை.

சவுதியைச் சேர்ந்த தைமிமி குழுமம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் பெறுமானமுள்ள ஏராளமான ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட்டுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களுக்கு உணவு சப்ளை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களை வென்றுள்ள தைமிமி குழுமம், கொத்தடிமைத் தொழிலாளிகளை பணியில் ஈடுபடுத்தியிருப்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலமாகியுள்ளது. 2011-ம் ஆண்டு பரவலாக ஊடகங்களில் இப்பிரச்சினை வெடித்ததைத் தொடர்ந்து தைமிமி குழுமத்தின் மீது 11 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து ஏழைகளை கவர்ந்திழுக்கும் தைமிமி குழுமம், அவர்களிடம் ஓட்டல் வேலை என பொய் சொல்லி ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கி போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாதம் ஆயிரம் டாலர் சம்பளம் என வாய் வார்த்தையாய் சொல்லி விட்டு, ஒப்பந்தத்தில் 400 டாலரே எழுதப்பட்டிருக்கும் – இதே போல், ஒப்பந்தங்களில் மாற்றி எழுதப்பட்ட விசயங்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அத்தொழிலாளிகள் படிப்பறிவு பெற்றவர்கள் இல்லை.

வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து ஏமாற்றி பிடித்து வரப்படும் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு  ஆபத்தான இடங்களில் பணிக்கமர்த்தியுள்ளது தைமிமி குழுமம். தகிக்கும் பாலைவன வெப்பத்தில் சிறிய தகரக் கொட்டகைகளுக்குள் ஆறேழு தொழிலாளர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளது. மேலும், தொழிலாளர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் பிடுங்கி வைத்துக் கொள்ளும். அயல் நாட்டுத் தொழிலாளர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இருக்க வேண்டும் என்பது அமெரிக்க பாதுகாப்புத் துறையில் உள்ள விதி – இது மீறப்பட்டுள்ளது என்பதில் இருந்தே உயரதிகாரிகளின் ஆசியின்றி கொத்தடிமை முறை நிலவுவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்க இராணுவ முகாம்களில் பணியாற்றும் கொத்தடிமைகள்.

இதே போல் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் காண்டிராக்ட் நிறுவனமான டைன்கார்ப் எனும் மற்றொரு நிறுவனம், போஸ்னியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் வைத்து விபச்சார விடுதியே நடத்தியது 1999-ம் ஆண்டு அம்பலமாகி நாறியது. டைன்கார்ப் நிறுவனம் இந்த குற்றங்களுக்காக உரிய தண்டனை பெறவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அந்நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய அதன் முன்னாள் ஊழியரோ கொலை மிரட்டல்களுக்கு அஞ்சி போலீசுக் காவலில் முடங்கிக் கிடக்கிறார். இதே நிறுவனத்திற்கு மீண்டும் ஆப்கானில் இராணுவ ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. மீண்டும் 2009-ம் ஆண்டு ஆப்கானிய சிறார்களைக் கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபத்தியது அம்பலமானது.

இது ஏதோ ஒரு சில காண்டிராக்ட் நிறுவனங்களின் பிரச்சினை அல்ல. அமெரிக்க இராணுவம் வெளியிடும் டெண்டர்களை வெல்வதற்கான போட்டியில் குறைந்த தொகையை குறிப்பிடுகின்றன. இவ்வாறு வெல்லப்படும் ஒப்பந்தங்களில் இருந்து இலாபம் ஈட்ட ஒரே வழி தொழிலாளர்களுக்கான ஊதியத்தைக் குறைப்பது. அதற்கு ஒரே உத்திரவாதமான வழி கொத்தடிமை முறை. அனைத்தும் சட்டப்பூர்வமாகவே நடந்தேறுகின்றது. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஒரு குறிப்பிட்ட கூலி என்பது நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக யார் குறைந்த கூலிக்கு செய்ய முன் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்த வேலைக்கான ஒப்பந்தத்தைக் கொடுக்கின்றனர். இதன்மூலம் மறைமுகமாக தெரிந்தே கொத்தடிமை முறை நிலவுவதற்கான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றனர்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அடிமை முறை ஒழிந்து போகவில்லை. அது நம் பார்வையில் படாமல் சட்டப்பூர்வமான முறைகளைப் பயன்படுத்தி மிகச் செழிப்பாக வளர்ந்துள்ளது. முதலாளித்துவத்தின் லாபவெறி அதற்கு தண்ணீர் ஊற்றி உரமிட்டுக் கொண்டுள்ளது.


சாக்கியன்

செய்தி ஆதாரம் :
The US Military and the Slave Trade