Sunday, May 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 297

தந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21

ந்தை பெரியாரின் தேவை இன்று தமிழகத்துக்கு கட்டாயம் அவசியப்படுகிறது. அந்த வகையில் அவரைப் பற்றிய சில முக்கியமான விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதனை நிறைவேற்றும் வகையில் இந்த வினாடி வினா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சியுங்கள்.

(வினாடி வினா பகுதி, கேள்விகளுக்குக் கீழே உள்ளது. தவறாமல் பங்கெடுக்கவும்)

  1. பெரியார் பிறந்த ஆண்டு எது?
  2. 1921-ம் ஆண்டில் பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது ஈரோட்டில் தலைமை தாங்கிய போராட்டம் எது?
  3. கேரளாவில் ஈழவர், தீயர், புலையர் முதலானோர்க்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க, வைக்கம் ஊரில் உள்ள மகாதேவர் கோவில் முன்பாக நடந்த போராட்டத்தில் பெரியார் தனது துணைவியார், தங்கையாருடன் கலந்து கொண்டு ஒரு மாத தண்டனை பெற்றார். தடையை மீறி நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு 4 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார். இந்தப் போராட்டம் நடந்த ஆண்டு எது?
  4. வ.வே.சு அய்யர் நடத்திய “பாலபாரதி தமிழ்க் குருகுலம் பரத்துவாஜ ஆசிரமத்தில்” பார்ப்பனப் பிள்ளைகளுக்கு உப்புமாவும், மற்றவர்களுக்கு பழைய சோறும் இருவருக்கும் தனிப்பந்தியும், தனி தண்ணீர் பானைகளும் வைத்திருந்தார். இதை பெரியார் எதிர்த்து காங்கிரசு சார்பில் அளிக்கப்பட்டு வந்த நிதியை நிறுத்துவதற்கு போராடினார். இந்த ஆசிரமம் எந்த ஊரில் இருந்தது?
  5. ஈரோட்டில் 2.5.1925 அன்று பெரியார் துவக்கிய வார இதழின் பெயர் என்ன?
  6. 1925-ம் ஆண்டு பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி “இனி காங்கிரசை ஒழிப்பதே எனது வேலை” என்று முழங்கியதற்கு காரணம் என்ன?
  7. 1927-ம் ஆண்டில் பெரியார் செய்தவற்றில் முக்கியமானவை என்னென்ன?
  8. 1928-ம் ஆண்டில் எந்தப் போராட்டத்திற்காக பெரியார் சிறை வைக்கப்பட்டார்?
  9. முக்கியத்துவம் வாய்ந்த முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டினை பெரியார் 1929-ம் ஆண்டில் நடத்தினார். டபிள்யூ.பி.ஏ. சவுந்திர பாண்டியன் இம்மாநாட்டுக்குத் தலைமையேற்றார். முக்கியத்துவம் வாய்ந்த 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாடு எந்த ஊரில் நடந்தது?
  10. 1930-ம் ஆண்டில் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின் போது பெரியார் ஆதரித்த மசோதா எது?
  11. சோவியத் யூனியனை பெரியார் சுற்றிப் பார்த்த ஆண்டு எது?
  12. 1944-ல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்ட சங்கத்தின் பெயர் என்ன?
  13. பெரியார் மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டதை எதிர்த்து அண்ணா பிரிந்து சென்று தி.மு.க. துவங்கிய ஆண்டு எது?
  14. 1956-ம் ஆண்டில் எந்தக் கடவுளின் படத்தை கொளுத்துமாறு பெரியார் அறைகூவல் விடுத்தார்?
  15. 1957-ம் ஆண்டில் பெரியார் அறிவித்த போராட்டம் எது?
  16. பெரியார் இறந்த ஆண்டு எது?

நீங்கள் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் இந்த வினாடி வினாவில் பங்கேற்கச் செய்யுங்கள் !

 

கேள்வி பதில் : நடிகர் சூர்யா – இந்தியாவில் இராணுவ ஆட்சி – உண்மையான தலைவர் யார் ?

கேள்வி: //நடிகர் சூர்யா திடீர் என்று கல்வி கொள்கை பற்றி பேச காரணம் என்ன? இவ்வளவு நாள் இல்லாம, இப்போதைய அரசு தான் இதுக்கு காரணமா?

இதனால் நடிகர் சூர்யா படத்துக்கு தமிழக அரசு மூலம் பிரச்சனை வருமா?//

– விஜயகுமார்

ன்புள்ள விஜயகுமார்,

‘அம்மா’ ஆட்சி, அடிமைகள் ஆட்சியான பிறகு கமலஹாசனுக்கே துணிச்சல் வந்திருக்கும் காலத்தில் சூர்யாவும் பேசுகிறார். அவரது ‘அகரம்’ அறக்கட்டளை கல்வி உதவிகள் சிலவற்றை செய்கிறது. புதிய கல்விக் கொள்கையின் தீமைகளை அவரது பார்வை, அனுபவத்தில் இருந்து பேசுகிறார்.

“புதிய தலைமுறை” சூர்யா நமக்கு முன்மாதிரியா?

உடனே அதிமுக அடிமை அமைச்சர்கள் சூர்யாவை குறிவைத்து தாக்குகிறார்கள். பாஜக-வின் தயவில் பாசிச ஆட்சி படரந்து வரும் காலத்தில் இத்தகைய எதிர்ப்புக் குரல்கள் எழுவதை நாம் வரவேற்க வேண்டும். இதனால் சூர்யா படத்திற்கு தமிழக அரசு சார்பில் பெரிய பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. ஏற்கெனவே பாஜக-வின் விளம்பரத்தால் மெர்சல் ஓடிய கதை அவர்களுக்கும் தெரிந்திருக்கும்.

 

♦ ♦ ♦

கேள்வி: //நீங்கள் இவ்வளவு சொன்னீர்கள் சரி, அப்போ தமிழ்நாட்டிற்கு யாரு தான் சரியான ஆளு?

எனக்கு தெரிந்த அளவிற்கு தமிழ்நாட்டில் சரியான ஆளு யாருநா அது சீமான் மட்டும் தான், மற்றவர்கள் எல்லாம் பணத்தாசை பிடித்தவர்கள்.

அப்போது தமிழ்நாட்டிற்கு சரியான முதல்வர் யார் என்று நீங்கள் கூறுங்கள்?//

– கு. செல்வராஜ்

ன்புள்ள செல்வராஜ்,

தமிழகத்தை முதலமைச்சர்தான் முற்றிலுமாக ஆள்கிறார் என்று நாம் சிந்தையில் பழகியிருக்கிறோம். இன்றைய தேதியில் முதலமைச்சரால் என்ன செய்ய முடியும்? மின் கட்டண உயர்வை தீர்மானிப்பது யார்? மின்சார ஒழுங்குமுறை ஆணையம். பெட்ரோல் டீசல் விலை உயர்வை தீர்மானிப்பது யார்? அதுவும் எண்ணையை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள். தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை அந்நிறுவனங்களே தீர்மானிக்கிறார்கள். கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கட்டணத்தை அந்தந்த மருத்துவமனை நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. மறைமுக வரியை மத்திய அரசு முதன்மையாக தீர்மானிக்கிறது. மக்கள் அதை எண்ணிறந்த வழிகளில் செலுத்துகிறார்கள்.

பொதுத்துறை வங்கிகள் யாருக்கு கடன் கொடுக்கும்? அதை முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள். ஆம்னி பேருந்து கட்டணத்தை அந்த நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காவல்துறைக்கு அதிகம் ஆட்களை எடுப்பதை மட்டுமே தமிழக அரசு செய்ய முடியும். அந்தக் காவல்துறையும் வேதாந்தா போன்ற முதலாளிகளுக்கு ஆதரவாக போராடும் மக்களைச் சுட்டுக் கொல்லும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் முதலமைச்சர் என்பவர் மேற்கண்ட செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு அவ்வப்போது சாலையில் ஊர்வல பந்தா மட்டுமே போக முடியும்.

இதற்கு மேல் தமிழக பட்ஜெட்டில் இருக்கும் நிதிப் பற்றாக்குறையோடு கடன் வாங்கி சில நலத்திட்டங்களை அமல்படுத்தலாம். கடன் வாங்கினால் அதற்கு ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை உலக வங்கியும், ஆசிய வங்கியும், இதர வெளிநாட்டு வங்கிகளும் போடும். எனவே பண ஆசை பிடித்தவரா ஒரு முதல்வர் என்ற பிரச்சினையை விட இங்கே பணத்தை கட்டுப்படுத்தும் அதிகாரமே முதலமைச்சருக்கு கிடையாது. சாலை ஒப்பந்தங்கள், இதர கட்டுமானங்களில் ஆளும் கட்சிகள் அடிக்கும் கொள்ளைகளை வைத்து நீங்கள் யோசிக்கிறீர்கள். அது உண்மைதான். இந்த அமைப்பு முறை ஆளும் கட்சிக்கு நிறைய ஊழல் செய்ய வாய்ப்பளிக்கிறது. அப்படி ஊழல் செய்யாமல் இருப்பவர்களே ஆனாலும் மக்களுக்கு அதிகாரத்தோடு நல்ல நடவடிக்கைகளை செய்வதற்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதும் முக்கியமானது. பரிசீலித்து பாருங்கள்!

எனவே யார் நல்ல முதல்வர் என்று ஆய்வதை விட இந்த அமைப்பு முறை மக்களுக்கானதாக இல்லை. அதை எப்படி மாற்றுவது என்பதே நம் முன் உள்ள கேள்வி!

படிக்க :
♦ கேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்
♦ கேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா ?

♦ ♦ ♦

கேள்வி: //புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பட்டியலின வெளியேற்ற கோரிக்கையை வைத்து போராடுவதை தவறு என தெரிந்திருந்தும் ஏன் சமூக அக்கறை கொண்ட அமைப்புகள் டாக்டர் கிருஷ்ணசாமியை கண்டிக்கவில்லை?//

– நிலா

ன்புள்ள நிலா,

இந்த கோரிக்கையில் நமது சாதி ‘முன்னேறிய’ சாதிப் பட்டியலில் இணைந்து தாழ்த்தப்பட்டோர் என்ற இழிநிலைமை மறைந்து விடும் என்று பள்ளர் இன மக்களில் சிலர் கருத்துரீதியாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு வகையில் இது பார்ப்பனியமயமாக்கத்தோடு தொடர்புடையது. தன்னை ‘கீழ்’ சாதி என்று நடத்தும் கொடுமைகளை எதிர்த்து சமர் புரிவதற்கு பதில் தன்னை ‘மேல்’சாதியாக மாற்றிவிடுவதையே பார்ப்பனியமயமாக்கம் என்கிறோம்.

அவ்வகையில் இது சாதி உணர்வை பெருமைப்படுத்தும் கருத்தாகவும் இருக்கிறது. அதனால்தான் நீங்கள் குறிப்பிடும் சமூக அக்கறை கொண்ட அமைப்புகள் டாக்டர் கிருஷ்ணசாமியை நேரடியாக கண்டிப்பதற்கு அஞ்சுகின்றன. அமைப்புகள் மட்டுமல்ல பள்ளர் இன மக்களே கூட அப்படி கண்டிப்பதற்கு பயப்படும் நிலைதான் இருக்கிறது.

♦ ♦ ♦

கேள்வி: //2019 பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் இழுபறிக்கு காரணம்?//

– டி. கண்ணன்

ன்புள்ள கண்ணன்,

சந்தேகமில்லாமல் சாதிய உணர்வுதான். இந்த தேர்தலில் திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை வென்றிருக்கிறார். இந்த இழுபறிக்கு காரணம் திருமாவளவன் வெற்றிபெறக்கூடாது என்று பா.ம.க வரிந்து கட்டி வேலை செய்தது.

3 மாவட்டங்களில் பரந்திருக்கும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, குன்னம், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி இருக்கின்றன. இவை பெரும்பாலும் வன்னிய மக்களின் செல்வாக்கு கொண்ட தொகுதிகள்தான்.

எனினும் பல கிராமங்களில் சாதிய உணர்வை கடந்து வன்னிய மக்கள் திருமாவளவனுக்கு வாக்களித்திருந்தனர். அதனால்தான் அதிமுக – பாமக கூட்டணியின் சாதிய பலத்தினை தாண்டி மயிரிழையில் திருமாவளவன் வெற்றி பெற்றார். எனவே இதில் நல்லது கெட்டது இரண்டும் இருக்கிறது.

படிக்க :
♦ புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் ! நெல்லை CCCE அரங்கக் கூட்டம் !
♦ வங்கி இணைப்பு – ஏர்போர்ட் தனியார்மயம் – உலகெங்கும் தொழிலாளர் போராட்டங்கள் !

♦ ♦ ♦

கேள்வி: //இந்தியாவில் இராணுவ ஆட்சி வரப் போகிறது என்று நக்கீரன் பத்திரிக்கையில் கூறுகிறார்கள். இராணுவ ஆட்சி வந்தால் மக்கள் எந்த மாதிரியான பிரச்சனையை சந்திக்க நேரிடும்?//

– திரு அன்பு

ன்புள்ள திரு அன்பு,

இந்தியாவில் அப்படி இராணுவ ஆட்சி வருவதற்கான சாத்தியமில்லை. அதே நேரம் இங்கிருக்கும் ‘ஜனநாயக’ ஆட்சியே ‘இராணுவ’ ஆட்சி போன்று சர்வ அதிகாரத்துடன் செயல்படுகிறது.

குஜராத் கலவரம் மற்றும் இந்துமதவெறியர்கள் குற்றம் சாட்டப்பட்ட குண்டு வெடிப்பு வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம்களை கும்பல் கொலை செய்த குற்றவாளிகள் குற்றப் பத்திரிகையிலேயே சேர்க்கப்படுவதில்லை. நீதித்துறை, கல்வி, வரலாறு அனைத்தும் காவி மயமாகி வருகிறது. மோடியை விமரிசிக்கும் அறிவுஜீவிகள் சிறைகளில் முடக்கப்படுகிறார்கள். இது போக காஷ்மீரும் சில வடகிழக்கு மாநிலங்களும் நீண்ட காலமாக இராணுவ ஆட்சியில்தான் வாழ்ந்து வருகின்றன.

Aryans

ஒருவேளை கற்பனையாக இராணுவ ஆட்சி இங்கு வந்தால் என்ன நடக்கும்? அரசியல் சட்டம் அளித்திருக்கும் அடிப்படை உரிமைகள் அதாவது பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் வைக்கும் உரிமை, குடியுரிமை, இதர உரிமைகள் எதுவும் இருக்காது. அல்லது இராணுவம் முடிவு செய்யும். இன்றைக்கு காஷ்மீரில் இருக்கும் நிலைமை இந்தியா முழுவதற்கும் வந்து விடும். குறைந்த பட்சம் போராட்டம் நடக்கும் மாநிலங்களில் அப்படி முடக்கி விடுவார்கள்.

யாரையும் எப்போதும் கைது செய்யலாம். பிணை மறுக்கப்படும். எங்கேயும் எப்போதும் எதையும் சோதித்தறியலாம். நீதி என்பது ஒருவழிப்பாதையாக ஆளும் அரசின் நலன்களுக்காக மட்டும் இருக்கும். இராணுவம் செய்யும் கொலைகள், அட்டூழியங்களை கேள்வி கேட்க முடியாது. இவையெல்லாம் உலகில் இராணுவ சர்வாதிகாரம் நடந்த நாடுகளில் பரவலாக பார்க்க முடியும்.

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் இக்காலத்தில் முன்னேறிய நாடுகளில் கூட கடும் சட்டங்களை இயற்றி அதிகாரப்பூர்வமாகவே அதிக அதிகாரத்தை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. எனவே நேரடி இராணுவ ஆட்சியும் சரி, மறைமுக இராணுவ ஆட்சியும் சரி தன்மையில் பெரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை.

♦ ♦ ♦

கேள்வி: //உண்மையான தலைவர் யார் தான் இப்போது தமிழ் நாட்டில் ?//

– அசபு லிங்கம்

ன்புள்ள லிங்கம்,

மீம்களை வைத்துப் பார்த்தால் வடிவேலுதான் பெரும் தலைவர்! அரசியல் விமர்சனங்களை மீம்கள் வழியாக போட்டுத் தாக்கும் தமிழக இளைஞர்களுக்கு வடிவேலு கை கொடுக்கிறார். மற்றபடி இந்தியாவிலேயே அதிகம் போராட்டம் நடக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதால் இங்கே மக்கள்தான் தலைவர்களாக இருக்கிறார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமாக இருக்கட்டும், தஞ்சை மீத்தேன் எதிர்ப்பு போராட்டமாக இருக்கட்டும், எட்டு வழிச்சாலையாக இருக்கட்டும், போக்குவரத்து தொழிலாளர் போராட்டமாக இருக்கட்டும் அனைத்திலும் மக்களே முன்னணியாக இருக்கின்றனர்.

இந்தப் போராட்டங்களை வாக்கு வங்கி அரசியலில் உள்ள கட்சிகள் நடத்தவில்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் எவரும் இப்படி ஒரு போராட்டத்தை கட்டியெழுப்பி தொடர்ச்சியாக போராடுவதில்லை. போராடும் மக்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, போராட்டத்தின் தீவிரத்தை தணிப்பது என்பதைத் தாண்டி அவர்கள் போவதில்லை. எனவே போராட்டம்தான் உண்மையான தலைவர்களை உருவாக்கும் என்ற விதிப்படி இன்றைக்கு தமிழகத்தில் தலைவர்கள் என யாரைச் சொல்ல முடியும்?

♦ ♦ ♦

கேள்வி: //இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாதத்தை விட இந்து மதவெறி தீவிர விளைவை ஏற்படுத்தும் என்பது உண்மையா? (அதாவது நாட்டையும் மக்களையும் துண்டாடுவது)//

– ஜெயபால்

ண்மைதான். முஸ்லீம் தீவிரவாதமே இந்துமதவெறியின் எதிர் விளைவுதான். இந்துமதவெறி என்பது பெரும்பான்மை மக்களின் பெயரில் செயல்படுவதால் அது அரசு, அரசாங்கம், நீதித்துறை, ஊடகம், என அனைத்து அதிகார பீடங்களின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவை பெற்றிருக்கிறது. மோடி பிரதமராகவும், குஜராத் 2002 முசுலீம் மக்கள் இனப்படுகொலைக்கு காரணம் அவர்தான் என்று உத்திரவு போட்ட முன்னாள் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பதும் சமீத்திய சான்று. இன்னும் மாட்டுக்கறியின் பெயரில் படுகொலை செய்யப்பட்ட பெஹ்லூகான், அக்லக் வழக்குகளில் குற்றவாளிகள் பகிரங்கமாக விடுதலை செய்யப்படுவதும், அவர்கள் பொது இடத்தில் வரவேற்கப்படுவதும் இப்படி பல சம்பவங்கள் இருக்கின்றன.

இந்த நாட்டில் ஜனநாயகம் முறையாக வேலை செய்யவில்லை, இந்துமதவெறிக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்ற நிலைமையே சில முசுலீம் இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் தள்ளிவிடுகிறது. அப்படி முறையாக ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரத்தினர் தண்டிக்கப்பட்டிருந்தால் எந்த முசுலீம் இளைஞன் தீவிரவாதம் பக்கம் போகப் போகிறார்?

இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர் அருள் எழிலன் பகிர்ந்திருந்த செய்தியை பொருத்தம் கருதி இங்கே இணைக்கிறோம்.

நமது இந்தியாவின் நாயகர்கள்!

2002 இருண்ட காவி இருள் இஸ்லாமிய மக்களை குஜராத்தில் வேட்டையாடிய நாட்கள் அவை. துடிக்க துடிக்க பல்லாயிரம் இஸ்லாமியர்கள் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என வேட்டையாடப்பட்ட அந்நாளில் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அந்த புகைப்படங்கள். காப்பாற்றக் கோரி ரத்தக்காயங்களுடன் கெஞ்சும் குத்புதீன் அன்சாரி..

காவி ரிப்பனுடன் கொலைவாளோடு வெறிக்கூச்சலிடும் அசோக் மோச்சி. குஜராத் கலவரம் இந்தியாவின் மாடலாக அரசியல் அரங்கில் மாற்றப்பட்டது. அதன் வடிவத்தை மாற்றி பல இடங்களிலும் பரிசோதனை செய்து அவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்க, அசோக் மோச்சி என்னும் செருப்பு தைக்கும் தொழிலாளியை அரசியல் படுத்தினார்கள் கம்யூனிஸ்டுகள்.

2014–ம் ஆண்டு கேரளாவில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் அசோக் மோச்சியும், குத்புதீன் அன்சாரியும் ஒரே மேடையில் ஏறினார்கள். காவி பயங்கரவாதிகளின் அரசியலை புரிந்து கொண்ட அசோக் மோச்சி அந்நாட்களில் தான் நடந்து கொண்டமைக்காக மன்னிப்புக் கேட்டார். அதுவரை தான் வாழ்ந்த வாழ்வை மற்றி சமூக நல்லிணக்கத்திற்கானதாக மாற்றினார்.

அகமதாபாத்தில் அசோக் மோச்சியின் ‘ஏக்தா சப்பல் கர்’ என்ற செருப்புக்கடையை குத்புதீன் அன்சாரி திறந்து வைத்துள்ளார்.

இதோ அகமதாபாத்தில் அசோக் மோச்சியின் ‘ஏக்தா சப்பல் கர்’ என்ற செருப்புக்கடையை குத்புதீன் அன்சாரி திறந்து வைத்துள்ளார். இருவருக்குமிடையில் ஆழ்ந்த நட்பை அன்பை பரஸ்பரம் மரியாதையை உருவாக்கியுள்ளது இந்த காலம். “இந்து வர்ணாசிரம அமைப்புதான் என்னை செருப்பு தைக்கும் நிலைக்கு உள்ளாக்கியது. இந்து வர்ண அமைப்பு எங்களை முன்னேற அனுமதிக்காது. அதனால் நடக்கும் அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்கிறார் அசோக் மோச்சி.

காலமும் மனித மனமும் எத்தனை உன்னதமானது அன்பை விடமதங்களும் சாதியும் எதுவும் இல்லை என்பதை அசோக் மோச்சி நிரூபித்திருக்கிறார். நாம் விரும்பும் இந்தியா இதுதானே?

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

உசாரய்யா உசாரு ! டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா

mosquito

லகின் கொடூர உயிர்க்கொல்லி பிராணி ஒன்று கூறு என்று கேட்டால் நீங்கள் எதைக்கூறுவீர்கள்?

  • புலி
  • சிங்கம்
  • முதலை
  • காட்டு எருமை
  • நீலத்திமிங்கலம்
    – இதில் எதாவது ஒன்று என்று நீங்கள் கருதினால் அது தவறு.

உலகின் மிகக்கொடூரமான உயிர்கொல்லும் பிராணி – கொசு தான்.

எதிரிகளை அடிக்கும் போது ஹீரோ உச்சரிக்கும் வார்த்தை :

“எனக்கு கொசுமாதிரிடா நீ”

“உன்ன கொசு அடிக்கிற மாதிரி அடிச்சுருவேன்” என்பார்.

ஆனால் இந்த அற்பக்கொசுவால் உயிர் இழக்கும் மனிதர்கள் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிற்கு நான்கு லட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் பேர்.

Most-Dangerous-Animals-in-the-worldசிங்கத்திடம் சிக்கி உயிர் விடும் மனிதர்கள் வருடத்திற்கு 250 பேர் மட்டுமே. புலியிடம் சிக்கி உயிரிழப்பவர்கள் 85 பேர் மட்டுமே.

ஆகவே, உலக வரலாற்றில் மனிதனுக்கு ஆகப்பெரும் அச்சுறுத்தலாக உயிர்க்கொல்லியாக உருவெடுத்து நிற்பது இந்த “கொசு” எனும் உயிரினம் தான்.

நம்ம தமிழ்நாட்டுல கொசுவால் பரப்பப்படும் நோய்கள் ஐந்து

1. மலேரியா.
2. டெங்கி(கு).
3. ஜப்பானிய மூளைக்காய்ச்சல்.
4. சிக்கன்குனியா.
5. யானைக்கால் வியாதி.

முதல் வியாதியான மலேரியா பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பு வரை கூட கெட்ட ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த நோயை உண்டாக்கும் ப்லாஸ்மோடியம் வைவாக்ஸ் எனும் நுண்ணியிரியை கொல்லும் மருந்துகளை நாம் கண்டறிந்ததால் அதன் கொட்டம் அடங்கியிருக்கிறது.

ஆனால் இன்னும் இந்த நோய் சென்னை பெருநகரம் மற்றும் ராமநாதபுரத்தில் பரவலாக காணப்படுகிறது. அனாபிலஸ் வகை கொசுவின் பெண்ணினம் கடிப்பதால் இந்த நோய் பரவுகிறது. எனக்குக்கூட ஒரு முறை இந்த நோய் வந்து சென்றிருக்கிறது. க்ளோரோகுயின் மாத்திரை தான் என்னைக்காப்பாற்றியது.

படிக்க:
அறிவியல் கட்டுரை : உலகில் மிக ஆபத்தான உயிரினம் !
♦ காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் !

அடுத்த நோய் டெங்கு இதைப்பற்றி கூறவும் வேண்டுமா?

ஏடிஸ் எனும் புலிக்கொசு (கால்களில் புலி போன்று வரிகள் இருப்பதால் இந்த காரணப்பெயர்) பரப்பும் நோய் இது. இந்த நோய்க்கான காரணி ஒரு வைரஸ். இந்த நோயின் முற்றிய நிலை டெங்கு ரத்தக் கசிவு நோயாக மாறி உயிரைப் பறிக்கும்.

2017-ம் வருடம் மழைக்காலத்தில் டெங்கு தமிழ்நாடு முழுவதும் வந்து படாதபாடு படுத்தியது. இந்த கொசு நல்ல நீரில் மட்டுமே உயிர் வாழும். ஆகவே நம் வீட்டைச்சுற்றி நல்ல நீர் சிறிது அளவு கூட தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிரட்டை, ப்ளாஸ்டிக் பாட்டில், டயர்கள் போன்றவை இந்த கொசுக்களின் உற்பத்தி ஆலைகள்.

அடுத்த நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல்.

உத்தரபிரதேசத்தில் நிறைய குழந்தைகள் இறக்கக்காரணமாய் இருந்த அதே நோய் தான். இந்த நோயை பரப்புவது க்யூலக்ஸ் எனும் கொசு இனம். தமிழகத்தில் இந்த நோய் பரப்பும் கொசு பின்வரும் மாவட்டங்களில் பரவலாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது

அந்த மாவட்டங்கள் பின்வருமாறு :

1. பெரம்பலூர்
2. விழுப்புரம்
3. கடலூர்
4. திருவண்ணாமலை
5. விருதுநகர்
6. திருச்சி
7. தஞ்சாவூர்
8. மதுரை
9. புதுக்கோட்டை
10. கரூர்
11. திருவள்ளூர்
12. திருவாரூர்

இந்த மாவட்டங்கள் அனைத்திலும் குழந்தைகளுக்கு தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஒன்பது மாதம் மற்றும் ஒன்றரை வயதில் மூளைக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது.

mosquito-types-and-their-diseases-1
கொசுவின் வகைகள் மற்றும் அவற்றால் பரவும் நோய்கள்.

அடுத்த நோய் யானைக்கால் நோய்.

இந்த நோய் பரப்பும் கிருமி தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

அந்த மாவட்டங்கள் பின்வருமாறு :

1. காஞ்சிபுரம்
2. திருவள்ளூர்
3. வேலூர்
4. கடலூர்
5. திருவாரூர்
6. கன்னியாகுமரி
7. நாகை
8. விழுப்புரம்
9. திருச்சி
10. பெரம்பலூர்
11. புதுக்கோட்டை
12. திருவண்ணாமலை
13. தஞ்சாவூர்
14. அரியலூர்

இந்த நோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படும் மாத்திரை நம்மிடம் இருக்கிறது அதற்குப்பெயர் “Di Ethyl Carbamazine” சுருக்கமாக DEC என்று அழைக்கப்படும்.

ஒரே மாத்திரை தான் கிருமி குளோஸ். இந்த மாத்திரையை நோய் பரவும் மாவட்டங்கள், கிராமங்களில் ஒருமுறை அனைவருக்கும் உண்ணக்கொடுப்பார்கள்.
இந்த மாத்திரையால் தான் இப்போது யானைக்கால் வியாதி அரிதிலும் அரிதாகிவிட்டது

படிக்க:
அன்புள்ள கர்ப்பிணித் தாய்மார்களே | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
♦ ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை

கடைசி வியாதி “சிக்கன் குனியா”

சிக்கன் சாப்பிடுவதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடுமையான மூட்டு வலியை உருவாக்கும் இந்த நோயை; 2006 -ல் தமிழகம் முழுவதும் வந்த சிக்கன் குனியாவை யாராலும் எளிதில் மறக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

இதுவும் டெங்குவும் ஒரே வகையான ஏடிஸ் கொசுவால் பரப்பப்படுபவை. மேற்சொன்ன நோய்கள் அனைத்தும் கொசுவால் பரப்பப்படும் நோய்கள்.

***

மிழகத்தில் கொசு கடிக்காமல் யாரேனும் இருக்கிறீர்களா? கொசு கடி வாங்குபவர்கள் அனைவரும் அலர்ட்டாக இருக்க வேண்டும்.

மலேரியா வந்தால் கடும் குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல் வரும். சென்னை அல்லது ராம்நாடு சென்று வந்தீர்களா? கவனம் தேவை.

டெங்குவில் முதல் மூன்று நாள் கடும் காய்ச்சல் இருக்கும் அடுத்த மூன்று நாட்கள் உடல் குளிர்ந்து விடும். பகலில் கொசு கடிக்கிறதா? உசாரய்யா உசார்.

வயல்வெளிகள் / மலை காடுகள் போன்றவற்றில் தான் அதிகம் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரப்பும் க்யூலக்ஸ் இருக்கும்.

எது எப்படியோ காய்ச்சல் / உடல் வலி / அசதி என்று வந்தால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருந்தகங்களில் நேரடியாக மருந்து வாங்கி உண்பது தவறு.

கொசுக்கடி வாங்காமல் இருக்க வீடு முழுவதும் ஜன்னல்களில் வலை அடிக்கலாம். குழந்தைகளை முழு ஆடை போட்டு மூடி வைக்கலாம். வலைக்குள் குழந்தைகளை உறங்க வைக்கலாம். கொசுக்கடியை முடிந்த வரை தவிர்ப்பதன் மூலம் இந்த நோய்களை தவிர்க்க முடியும்.

டெங்கு நோய் பரவாமல் இருக்க நம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியேவும் நன்னீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசு தனது நோய் தடுப்புத்துறை மூலம் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

கொசுக்களை ஒழிப்போம் !
ஆரோக்கியமாக வாழ்வோம் !!

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் ! நெல்லை CCCE அரங்கக் கூட்டம் !

புதிய கல்வி வரைவு அறிக்கையை நிராகரிப்போம் !

அரங்கக் கூட்டம்

நாள்: 15.09.2019 நேரம்: காலை 10.00 மணி
இடம்: அபிநயா மஹால், ஆர்யாஸ் ஹோட்டல், மதுரை ரோடு – திருநெல்வேலி.

தலைமை:

பேரா. அமலநாதன்,
ஒருங்கிணைப்பாளர், CCCE – திருநெல்வேலி

முன்னிலை:

பேரா. சோமசுந்தரம்,
ஒருங்கிணைப்பு குழு, CCCE – திருநெல்வேலி

சிறப்புரை:

  • “பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுக்கும் புதிய கல்விக்கொள்கை” மருத்துவர் எழிலன், சென்னை
  • “பார்ப்பனியப் பிடியில் கல்விக்கொள்கை” வழக்கறிஞர் ப.செந்தில்குமார், செயலாளர், திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம்.
  • “கல்விக்கான சட்ட உரிமையை மறுக்கும் கல்விக் கொள்கை” வழக்கறிஞர் சி.மைக்கேல் ஜெரால்டு, நாகர்கோவில்.
  • “பள்ளி கல்வியை முடமாக்கும் புதிய கல்விக்கொள்கை” திரு.சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு, ஈரோடு.

நண்பர்களே! வணக்கம்.

ந்தியாவில் இப்போது இருக்கின்ற கல்விமுறை சரியானது தானா?…. இல்லை எனில் இந்த கல்விமுறை மாற்றப்பட வேண்டுமா?…. ஆம்.

அதைத் தானே மத்திய அரசு புதிய தேசியக் கல்வி கொள்கை – 2019 வரைவு அறிக்கையாக்கியிருக்கிறது! அல்ல.

அல்ல என்றால்?

புதிதாக வருவது இருப்பதை விட மோசமானது! இந்தியாவில் பெரும்பான்மை மக்களை முட்டாள்களாக்கும் மோசடித்திட்டம்!

எப்படி?

  • கள நிலவரங்களை ஆராயவில்லை.
  • மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்கவில்லை.
  • மாநிலங்களிடையே காணப்படும் மொழி, பண்பாடு, கலாச்சாரம், அறவியல், பொருளியல் சார்ந்த விசயங்களைக் கண்டு கொள்ளவில்லை.
  • ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களைப் போதிப்பதையே கல்விக் கொள்கையாக்குகிறது.
  • பள்ளி முதல் கல்லூரி, பல்கலைக்கழகம் வரை இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணித்து அரசியலமைப்பின் 8 -வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளைப் புறக்கணிக்கிறது.
  • CII, FICCI, NASCOM போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் சங்கப் பரிந்துரைகளை அப்படியே வழிமொழிகிறது.
  • 3,5,8-ம் வகுப்புகளில் தேசிய அளவிலான பொதுத்தேர்வு என்று சாமானியர்களை வடிகட்டி வெறியேற்றுகிறது.
  • வெளியேறியவர்களைக் குலக்கல்விக்குள் வஞ்சகமாகத் தள்ளுகிறது.
  • பி.ஏ / பி.எஸ்.சி போன்ற இளநிலை பட்ட வகுப்புகளுக்கும் தேசிய அளவிலான தகுதித்தேர்வு என வடிகட்டல் தொடங்குகிறது.
  • அம்பானி, அதானி, டாட்டா, பில்கேட்ஸ் வகையறாக்கள் கல்விக்கடை தொடங்கி கொள்ளை அடிக்க முன்னுரிமையளிக்கிறது.

மொத்தத்தில் அரசு கல்வியைக் கை கழுவுகிறது. குடிமக்களுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்கிறது. ஆனால் கல்விக் கொள்கைகளுக்கான அதிகாரத்தை மாநிலங்களிடமிருந்து பறித்து, பிரதமர் தலைமையிலான தேசிய கல்வி ஆணையத்தின் பிடியில் ஒப்படைத்து விடுகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே ரேசன் அட்டை என்பது போல கல்வியிலும் மொழி பண்பாட்டுப் பன்மைகளை மறுக்கிறது, ஒடுக்குகிறது. பெரும்பான்மையான சாமன்ய மக்களை கல்வியிலிருந்து வெளியேற்றுகிறது, இந்த வரைவு அறிக்கை மீது கருத்துச் சொல்லலாம் என்று சுற்றுக்கு விட்டுவிட்டு, அதன் உள் நோக்கத்தை அம்பலப்படுத்துகிறவர்களை தேசத் துரோகிகள் என்று ஆளும் கட்சியினர் ஆள்காட்டி வேலைசெய்கிறார்கள்.

இந்த அடக்குமுறையே ஜனநாயகப் போர்வையில் வரும் சர்வாதிகார கருத்துத் திணிப்பு என்பதை தெளிவாகக் காட்டவில்லையா? எனவே இந்த புதிய கல்வி கொள்கையை முற்றாக நிராகரித்து பெரும்பான்மை மக்கள் நலனுக்கான கல்விக் கொள்கையை நாம் தான் உருவாக்க வேண்டும். அதற்கு மாணவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் மக்களுடன் இணைந்து போராட வேண்டும். விளக்கமும் தெளிவும் பெற நீங்கள் அவசியம் கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கிறோம்.

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு – திருநெல்வேலி
(Coordination Committee for Common Education – CCCE – Tirunelveli)
தொடர்ப்புக்கு : 94892 35387

வங்கி இணைப்பு – ஏர்போர்ட் தனியார்மயம் – உலகெங்கும் தொழிலாளர் போராட்டங்கள் !

0

டந்த வாரம் உலகெங்கும் நிகழ்ந்த தொழிலாளர் தொடர்பான செய்திகளின் தொகுப்பு இது…

♠ ♠ ♠ 

மூத்தூட் நிதிநிறுவன ஊழியர்கள் போராட்டம் :

கஸ்டு 20 முதல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முத்தூட் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் வங்கி சாரா மற்றும் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் கூட்டமைப்பு (Non-Banking and Private Finance Employees Association -NPFEA) முன்நின்று நடத்திய இந்தப் போராட்டத்தில் 220 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். போராட்டம் காரணமாக 611 நிதி நிறுவன கிளைகளில் 300 கிளைகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

Muthoot-Fincorpஊதிய உயர்வு, முறையாக படிகள் வழங்கப்படாதது, ஊக்கத்தொகை முறையாக வழங்காதது உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிட்டும் நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட NPFEA சங்கத்தை முத்தூட் நிறுவனம் அங்கீகரிக்காததும் போராட்டத்துக்கான காரணம் என போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

“ரூ. 2000 கோடி லாபமீட்டும் ஒரு நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு கவுரவமான ஊதியம் வழங்கவில்லை என்பதை கற்பனை செய்து பாருங்கள்” என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோலிதா. திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கிளையில் மேலாளராக பணியாற்றுகிறார் இவர்.

மாநிலத்தில் ஆட்சியில் உள்ள சிபிஎம்-ன் ஊழியர் சங்கமான சி.ஐ.டி.யூ தூண்டுதலின் பேரில் அரசியல் நோக்கத்துக்காக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக சிலரால் குற்றம்சாட்டப்பட்டாலும், அதை ஊழியர்கள் மறுக்கின்றனர். தாங்களாகவே போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் அதன்பின்னே சிஐடியூ, தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்தை முடக்கும்வகையில் அனைத்து கிளைகளையும் மூடிவிடப்போவதாக முத்தூட் நிதி நிறுவனம் மிரட்டி வருகிறது.

படிக்க:
ஓட ஓட விரட்டியது கிராமம் ! ஓடு… ஓடு… என்று துரத்துகிறது நகரம் !
♦ தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !

♠ ♠ ♠ 

அதானி குழுமத்துக்கு விமான நிலையங்களை தாரைவார்க்கும் முடிவை எதிர்த்து விமானநிலைய ஊழியர்கள் போராட முடிவு:

ந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவரிடம் ஆறு விமான நிலையங்களை அதானி குழுமத்துக்கு அளிக்கும் முடிவு குறித்து விமான நிலைய ஊழியர்கள், விமான நிலைய அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டது.

Adaniலக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குவாஹாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களை பராமரித்து இயக்கும் பொறுப்பை ஏலத்தின் மூலம் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் வென்றது. அரசு மற்றும் தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் இந்நிறுவனம் விமான நிலையங்களை நிர்வகிக்கும்.

விமான நிலைய ஆணையருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இத்தகைய அவசர முடிவு எடுக்கப்படுவதற்கு முன் தங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் இந்த முடிவு தன்னிச்சையானது, ஒருதலைப்பட்சமானது என்று விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்களின் எதிர்காலமும் விமான சேவையை பெறும் பயனாளர்களும் விமான நிலையங்கள் தனியார்மயமாவதால் பாதிக்கப்படுவார்கள் என கவலை தெரிவித்துள்ள அவர்கள், தங்களுடைய கவலைகளை கருத்தில் கொள்ளவில்லை என்றால் இந்த மாதம் கருப்புப் பட்டைகள் அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் மேலும் 20-25 விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவில் இருப்பதாக விமான நிலைய ஆணையத்தின் முன்னாள் தலைவர் குருபிரசாத் மொகாபத்ரா கூறுகிறார். இது மேலும் ஊழியர்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

♠ ♠ ♠ 

வங்கிகள் இணைப்புக்கு எதிராக வங்கி தொழிற்சங்கங்கள் தேசிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டம்

10 லட்சத்துக்கு அதிகமான வங்கி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படும் வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம், 10 அரசு வங்கிகளை 4 பெரிய வங்கிகளுடன் இணைக்கும் முடிவை எதிர்த்து பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இன் தொழிலாளர் பிரிவான பாரதிய மஸ்தூர் சங்கமும் இவர்களுக்கு ஆதரவளித்துள்ளது.

“கடுமையான வேலைநிறுத்தம் இருக்கும். அரசாங்கத்துடன் பெரிய அளவிலான மோதலில் ஈடுபட இருக்கிறோம்” என்கிறார் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம்.

Bank Employees
வங்கி இணைப்பை கண்டித்து கொல்கத்தாவில் நடைபெற்ற வங்கி ஊழியர்கள் போராட்டம்.

“செயல்படாத சொத்துக்களை (NPAs) மறைக்கவே 10 அரசு வங்கிகளின் இணைப்பு உதவும். இதனால் பெரிய இருப்பு நிலைகளை உருவாக்க மட்டுமே முடியும். செயல்படாத சொத்துக்களை மீட்டெடுப்பது என்கிற முக்கிய பிரச்சினையை திசை திருப்பும் வேலையன்றி வேறில்லை. வங்கிகள் இணைப்பு மூலம் இருப்பு நிலைகளை தீர்க்கவோ அல்லது சுத்தம் செய்யவோ முடியாது என்பது பொது அறிவுள்ளவர்களுக்கும் தெரியும்” என்கிறார் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு.

“மோடி அரசாங்கம் இப்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கும்போது, வங்கிகள் இணைப்பின் நன்மைகளை உணர பல ஆண்டுகள் ஆகும்” என ஆண்டி முகர்ஜி எழுதியுள்ளார்.

♠ ♠ ♠ 

பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்ட புனே ஐடி துறை ஊழியர்கள்:

புனேயில் உள்ள தொழிலாளர் ஆணைய அதிகாரியிடம் பல மாதங்களாக ஊதியம் தரப்படாதது குறித்து ஐடி ஊழியர்கள் புகார் தெரிவித்து வருவதாக நியூஸ் க்ளிக் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“புனே போன்ற மெட்ரோ நகரங்களில் ஊதியம் இல்லாமல் வாழ்வது மன உளைச்சலைத் தருவதோடு, சவாலானதும்கூட” என ஐடி ஊழியர்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.

படிக்க:
பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !
♦ காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் !

முன்னணி தகவல் தொழிற்நுட்ப பயிற்சி நிறுவனமான SEED இன்போடெக் தனது ஊழியர்களுக்கு சம்பள நிலுவை வைத்துள்ளதாக பல ஊழியர்கள், தொழிலாளர் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்த நிலையில் ஐடி ஊழியர்கள் மன்றம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் பொருளாதார மந்த நிலை காரணமாக ஒரு வருட காலமாக ஊதியத்தை அளிக்க முடியவில்லை என கூறியுள்ளது.

பெரிய அளவில் பொருளாதார மந்த நிலை ஐடி நிறுவனங்களை பாதித்துள்ளதாகவும் சிறிய, நடுத்தர அளவிலான ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பை செய்துவருவதாகவும் நியூஸ் க்ளிக் வெளியிட்ட செய்தி கூறுகிறது.

♠ ♠ ♠ 

சர்வதேச செய்திகள் : பெண் வேளாண் தொழிலாளர்களை பாதுகாக்க பாகிஸ்தானின் புதிய சட்டம்

சிந்து பெண் வேளாண் தொழிலாளர் சட்டம் 2019 சிந்து மாகாண அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பேரவையில் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பெண் வேளாண் தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாடு, மீறல்களை நிறுத்த இது முக்கியமான நகர்த்தலாக இருக்கும் என மனித உரிமை கண்காணிப்பகம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

Pakistan Working womenபெண் வேளாண் தொழிலாளர்கள் சங்கமாக திரள்வதற்கு பாகிஸ்தான் அளித்திருக்கும் முதல் அங்கீகாராம் இது. இந்த சட்டத்தின்படி, “ஒரு பெண் தொழிலாளி கோரினால் எழுத்துப்பூர்வமாக வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பெற முடியும். மேலும் இந்த புதிய சட்டம் கூட்டு பேரம் பேசுதல், குழந்தைகள் நலன், சமூக மேம்பாடு, பொருளாதார லாபம் மற்றும் பொதுவிநியோக பொருட்கள் மற்றும் சேவையை பெறுதல் உள்ளிட்ட சமூக நல உரிமைகளை உள்ளடக்கியது” என பாகிஸ்தான் ஊடகமான டான் எழுதியுள்ளது.

♠ ♠ ♠ 

வங்கதேசத்தில் ஈத் விடுமுறையிலிருந்து திரும்பிய 700 ஆடை தொழிலாளர்கள் பணிநீக்கம்:

கஸ்டு 18-ம் தேதி ஈத் விடுமுறையை முடித்து பணிக்குத் திரும்பிய 700 தொழிலாளர்களை பணிவாய்ப்பு குறைந்துள்ளதாகக் கூறி பணிநீக்கம் செய்துள்ளது எஸ்.எஃப் டெனிம் அப்பாரல் என்ற நிறுவனம். சமீப ஆண்டுகளில் வங்க தேச ஆடை தொழிற்சாலைகளில் நடந்த பெரிய அளவிலான பணிநீக்கம் இதுவென இண்டஸ்ரியல் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்தின் ஆடை தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்தப் பணிநீக்கத்தை நியாயப்படுத்தி, கடந்த ஆறு மாதங்களாக போதிய ஆர்டர்கள் இல்லாத காரணத்தால் இந்தத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

– அனிதா

தொழிலாளர் தொடர்பான மேலதிக செய்திகளை வாசிக்க :

♦ The Life of Labour: Bank Unions Protest Against Merger, Airport Workers Threaten Strike

ஓட ஓட விரட்டியது கிராமம் ! ஓடு… ஓடு… என்று துரத்துகிறது நகரம் !

சென்னை என்றாலே ஞாபகத்திற்கு வருவது, வாகன இறைச்சலும், மக்கள் நெருக்கமும்தான். அந்தச் சுவடே தெரியாமல் இங்கே சில தெருக்கள். ஆம், மேட்டுக்குடி பார்ப்பனர்கள் வசிக்கும் மேற்கு மாம்பலம். ஒன்றிரண்டு இருசக்கர வாகனங்கள் சத்தமில்லாமல் நம்மை கடந்து செல்கின்றன. நடைபாதையில் சில கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சாலையின் எதிர்முனையில் “வளையல், பொட்டு, சீப்பு” என்று ஒரு குரல். குரல் வந்த திசையை நோக்கினோம். மிகப்பெரிய ஃபேன்சி ஸ்டோரையே தள்ளுவண்டியில் கோபுரமாக அடுக்கி, தெருவோர மரத்தடியில் நிறுத்தி வைத்திருந்தார் அந்த வியாபாரி.

அவரை நெருங்கினோம். அந்த மாலைப் பொழுதின் மங்கிய ஒளியைப் போல, அவரது முகம் இருள் கவ்வியிருந்தது. கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது, இருந்தாலும் பேசிப் பார்ப்போம்.

“என்ன இது? கிராமப்புறங்களில் புறநகர்ப்பகுதியில் வியாபாரம் செய்தவர்கள் எல்லாம் இங்கு வந்துவிட்டீர்கள்?”

மாலைப்பொழுதைக் கடந்தும், தண்டல் கட்டும் காசுகூட இன்னும் வியாபாரமாகலையே… காத்துக்கொண்டிருக்கும் வியாபாரி.

“ஆமா, அங்கே வியாபாரம் இல்ல, இங்கே வந்தா இங்கேயும் வியாபாரம் கண்ண கட்டுது. இதுல வேற நேத்து மழ. கட போட முடியல. இன்னைக்கு இதுவரைக்கும் பெருசா வியாபாரம் இல்ல. முழு பொழுதும் போயிருச்சு. இனி வந்தவரைக்கும் தள்ளிட்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான்” என்றார்.

தூரத்திலிருந்து மாமி ஒருவர் வேகவேகமாக நடந்து வந்தார். “ஆயில் பெயிண்ட்ல மெட்டல் வளையல் சொன்னேனே எடுத்து வந்தீயா? கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, கொளுன்னு ஊரெல்லாம் ஒரே விசேசம். பரபரன்னு ஓடணும். எங்கே அந்த வளையல காட்டு” என்றார்.

படிக்க:
காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் !
♦ கேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்

“இது ஸ்பெஷல் வளையல் வெல அதிகம், வழக்கமா கொறைக்கிறமாதிரி இதயும் கொறைக்காதிங்க மாமி” என்று பல வண்ணங்களில் வளையல்களைக் காட்டினார். அதைத் திருப்பித் திருப்பி பல தடவை பார்த்துப் பொறுக்கி கனிசமானவற்றை எடுத்துக்கொண்டு, “சொல்லிக்கொடு” என்றார்.

“அம்மா… ஒன்றரை டஜன் எடுத்திருக்கீங்க. நல்லது எல்லாத்தயும் பொருக்கிட்டீங்க. 250 ரூபாய் கொடுங்க, கொறைக்காதீங்க… குறைவாத்தான் சொல்லியிருக்கேன்” என்றார்.

“ஊகூம்… 100 ரூபாதான், இல்லாட்டி நீயே வச்சிக்கோ” என்றார்.

அவர் 200 என்று கெஞ்ச, கடைசியா 160 ரூபாய்க்குப் பேசி, அதிலும் பத்து ரூபாய் சில்லறை இல்லையென்று கூறி 150ஐ கொடுத்துவிட்டு எடுத்த வளையலோடு நடையைக் கட்டினார் மாமி.

250 ரூபா விக்க வேண்டியது. 200-வது கொடுங்க என்று கெஞ்சினேன். கடைசியா 160க்கு பேசி முடித்து, அதிலும் பத்து ரூபாய் சில்லறை இல்லையென்று 150ஐ திணித்துச் சென்றார் அந்த மாமி.

வண்டிக்காரர் சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் நம்மைப் பார்த்தார். நாம் பதிலுக்கு அவரைப் பார்த்தோம். “இதுதான் என் பொழப்பு, பாத்தீங்க இல்ல” என்றார் சோகமாக.

“கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்ப வேண்டியதுதானே, விலை குறைவா கொடுத்தால் திரும்பவும் அதுமாதிரிதானே கேட்பார்கள்” என்றோம்.

படிக்க:
கிருஷ்ணரும் சில பிய்ந்துபோன செருப்புகளும் !
♦ அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி

“வெறுங்கையோட போனா, தண்டல்காரனுக்கு யார் பதில் சொல்றது. நேத்தே மழையில வியாபாரம் இல்ல, பணம் கொடுக்கல. இன்னைக்கும் இல்லேன்னா கெட்ட கெட்ட வார்த்தையால திட்டுவான். ஒடம்பே கூசிடும். நாம என்ன பஜார்லயா கடை போட்டு வியாபாரம் பண்றோம்? இன்னைக்கு இல்லேன்னா நாளைக்கு வித்துக்கலாமுன்னு நெனக்க முடியுமா?” என்றார்.

“உங்களுக்கு சொந்த ஊர் எது? இங்கே எப்படி வந்தீங்க” என்றதும், கசப்பும் வெறுப்பும் கலந்த கடந்த காலத்தை, விருப்பமின்றி நினைவுகூர்ந்தார்.

“செங்கல்பட்டுக்கு அடுத்த மதுராந்தகம் சொந்த ஊரு. அங்கிருந்து இங்கே வந்து பல வேலைகள் செஞ்சேன். எந்த வேலயும் செட்டாகல. கடைசியில இதுல காலத்த ஓட்டுறேன். இரண்டு ரூபாயிலேருந்து 60 ரூபா வரைக்கும் பல ஐட்டங்களா வாங்கிப் போட்டிருக்கேன். முன்னெல்லாம் சரக்குக்கு பத்தாயிரம் ரூபா வச்சா வெல்லம். தள்ள முடியாதளவு வண்டி நெறஞ்சிரும். இப்போ முப்பதாயிரம் வச்சாலும் பத்தல. வண்டி காலியா தெரியுது. வண்டி காலியா இருந்தா பக்கத்துல யாரும் வரமாட்டாங்க. பாக்க வந்தாத்தானே என்ன வச்சிருக்கேன்னு விசாரிப்பாங்க, பிறகு ஏதாவது வாங்குவாங்க.

நூற்றுக்கணக்கானப் பொருட்கள். இவ்வளவையும் வாங்கிப் போட்டால்தான், பார்க்கவாவது வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள்.

சரக்கு ஒன்னும் பெருசா இல்லீங்க. கொழந்தைங்க விளையாட்டு ஐட்டம், வீட்டுப் பொம்பளைங்களுக்குத் தேவையான குளியல், கிச்சன், மேக்கப் பொருட்கள், அப்புறம் டப்பி, ஜக்கு, கத்தி, ஸ்பூன், பேண்டு, பொட்டுன்னு பலத பாத்து பாத்து வாங்கிப் போட்டாத்தான் ஏதாவது விக்கும்.

ஒரு நாளைக்கு 3000 ரூபா வித்தாத்தான் 700, 800 கிடைக்கும். எங்கே விக்குது! விக்கிறதே எழுநுறு என்னுறுதான், அதுல எங்கே நிக்கும். எங்கே வியாபாரம் ஆகும், எங்கே ஈ ஓட்டுமுன்னு சொல்ல முடியல. அந்த ரகசியம் தெரிஞ்சா ஏன் ரோடு ரோடா அலையப்போறேன். இந்த அலைச்சல்கூட கடைசி வரைக்கும் முடியாது. எங்க முதுகும் காலும் வலுவா இருக்குற வரைக்கும்தான் ஓட முடியும். எப்ப ஒடம்பு சொல்ற பேச்சு கேக்க முடியாம ஒக்காந்துருவோமுன்னு பயமா இருக்குது. ஒழைக்கும்போதே நம்ம பொழப்பு நாய் பொழப்பு. இதுவும் முடியலன்னா என்ன பண்றது.

ரோட்ல நிழலப் பாத்து வண்டி நிறுத்துனா கூட, இங்கே நிறுத்தாதே, வாசலத் தாண்டி தூரமா போன்னு சொல்லி தொரத்துறாங்க. வசதி இருந்தா கடைய போட்டு உக்கார மாட்டேனா” என்று முணகிக் கொண்டே நகர்ந்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

யோத்தியா மண்டபம் அருகில் தள்ளுவண்டியில் பொம்மை கடை போட்டிருந்த முருகனிடம் பேச்சு கொடுத்தோம்.

“திண்டிவனம் பக்கத்துல மரக்கானம்தான் சொந்த ஊரு. எனக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. சவுக்கு போட்டு பெரிய நட்டம். இப்பல்லாம் விவசாயம் செஞ்சு கட்டுப்படியாகமாட்டேங்குது. அதனால சிட்டி பக்கம் வந்துட்டேன். இந்தக் கடை மூலம், வீட்டு வாடகை, பசங்க படிப்பு, செலவுன்னு ஏதோ ஓடுது.

முருகன்

காலையில 8 மணிக்கு வண்டியில சரக்கப் போட்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன்னா இரவு 8 மணிக்குத்தான் வீடு திரும்புவேன். நாள் முழுக்க வண்டிய வெயிட்டு கொடுத்துத் தள்ளித் தள்ளி கால் நரம்பு சுத்திகிட்டு வின்னு வின்னுன்னு வலிக்குது. என்ன செய்யிறது; வீட்டுல பசங்கள பாக்கணும்… இப்படியே காலம் ஓடுது” என்று சொல்லிக்கொண்டே பொம்மையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனையும் அவனது தந்தையையும் நோக்கி நகர்ந்தார், முருகன்.

ஆசைப்பட்ட பொம்மை விலை அதிகம் என்பதால், கிடைத்ததை தனதாக்கிக்கொண்டு மகிழும் சிறுவன்.

***

கிராமங்களிலிருந்து துரத்தப்பட்ட இந்த விவசாயிகள் நகரங்களில் நடைபாதை வியாபாரிகளாகவோ, தள்ளுவண்டிகளைக் கொண்டோ பிழைப்பை நகர்த்த வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பொழுதையும் ஒரு போராட்டமாகவே கழிக்கிறார்கள். பொதுவாக கிராமங்களை நினைவுகூரும்போது, பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளுக்கும் அல்லியும் தாமரையும் பூத்துக்குலுங்கும் குளங்களுக்கும் அழைத்துச் செல்வார்கள் நமது தமிழ்க் கவிகள்.

ஆனால், இந்த நடைபாதை வியாபாரிகளுக்கோ, கடந்த காலம் மிகக் கசப்பாக இருக்கிறது. அதை நினைவுகூர்ந்து சொல்லவரும் ஒன்றிரண்டு வார்த்தைகள்கூட தொண்டைக்குழிக்குள்ளேயே மரணித்துப் போகிறது. அவர்களது கிராமத்து வாழ்க்கையைப் போலவே, நகர்ப்புறத்து நிகழ்காலமும் எதிர்காலமும் இருண்டே காணப்படுகிறது.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

கால்கள் இல்லாமலே கட்டாயம் விமானம் ஓட்டியே தீருவேன் !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 05-அ

லெக்ஸேய்க்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆயினும் குதூகலப் புன்னகையுடன் உற்சாக அடி வைத்து ஹாலுக்குள் நுழைந்தான். குழுவினர் ஒரு பெரிய மேஜையின் அருகே அமர்ந்திருந்தார்கள். நடுவில் மாமிசமலை போல வீற்றிருந்தார் முதல் வரிசை இராணுவ மருத்துவர் மிரொவோல்ஸ்க்கிய். ஒரு பக்கத்தில் சிறு மேஜையின் பின்னே உட்கார்ந்திருந்தாள் ஸீனா. மேஜை மீது விமானிகளின் சொந்த விவரங்கள் அடங்கிய காகித அடுக்குக்கள் வைத்திருந்தன.

“நல்லது தம்பீ, சட்டையைக் கழற்றும்” என்று கண்களைச் சுருக்கிக் கொண்டு கூறினார் மருத்துவர்.

மெரேஸ்யெவ் அவ்வளவு உடற்பயிற்சி செய்ததும் வெயிலில் காய்ந்ததும் வீண்போகவில்லை. அவருடைய கட்டுக்குட்டான, முறுக்கேறிய வலிய உடலை வியந்து நோக்கினார் மருத்துவர். பழுப்புத் தோலுக்கு அடியில் ஒவ்வொரு தசையும் துலக்கமாத் தெரிந்தது.

மெரேஸ்யெவ் எல்லாச் சோதனைகளிலும் சுளுவாகத் தேறிவிட்டான். திட்ட அளவுக்கு ஒன்றரை மடங்கு வலுவுடன் கைகளை முட்டி பிடித்து இறுக்கினான். அளவைக் காட்டும் அம்பு கடைசி எல்லைக் கோட்டைத் தொடும்வரையில் மூச்சை வெளியிட்டான். அவனது இரத்த அழுத்தம் திட்ட அளவுப்படி இருந்தது. நரம்புகள் சிறந்த நிலையில் இருந்தன. முடிவில் வலிமை அளவிடு கருவியின் கைப்பிடியை அவன் அழுத்திய விசையில் கருவி பழுதாகிவிட்டது.

மருத்துவர் நாற்காலில் சாய்ந்துகொண்டு “சீனியர் லெப்டினன்ட் அ. பெ. மெரேஸ்யெவின் சொந்த விவகாரங்களின்” மூலையில் முடிவை எழுதப் பேனாவைப் பிடித்தவாறு, “விமானியா?” என்று கேட்டார்.

“ஆம்.”

“சண்டை விமானமோட்டியா?”

“ஆம்.”

“நல்லது, சண்டை போடப் புறப்படுங்கள். அங்கே இப்போது உங்களைப் போன்றவர்கள் எவ்வளவு தேவை, தெரியுமா?…. ஆமாம், நீங்கள் மருத்துவமனையில் எதற்குச் சிகிச்சை செய்து கொண்டிருந்தீர்கள்?”

எல்லாம் இதோ தகர்ந்து விழுந்துவிடப் போகிறது என்று உணர்ந்த அலெக்ஸேயின் முகம் வாடியது. ஆனால் மருத்துவர் அவனுடைய சொந்த விவரப் புத்தகத்தைப் படித்துவிட்டார். நல்லியல்பு ததும்பிய அவரது முகம் வியப்பால் நீண்டது.

“கால்கள் வெட்டி அகற்றப்பட்டனவா? இதென்ன அபத்தம்? தவறாக எழுதிவிட்டார்களா, என்ன? ஊம், என்ன பேசாதிருக்கிறீர்கள்?”

“இல்லை, தவறாக எழுதவில்லை“ என்று தணிந்த குரலில் மிக மெதுவாக, தூக்குமேடைப் படிகளில் ஏறுபவன் போல, உரைத்தான் அலெக்ஸேய்.

வலிய உடற்கட்டும் சிறந்த வளர்ச்சியும் கொண்ட அந்தத் துடியான வாலிபனை விஷயம் என்ன என்று விளங்காமல் நிலைக்குத்திட்டு நோக்கினார்கள் மருத்துவரும் தேர்வுக்குழுவினர் அனைவரும்.

“காற்சட்டை விளிம்பை மடித்துவிடுங்கள்!” என்று பொறுமையிழந்து உத்தரவிட்டார் மருத்துவர்.

அலெக்ஸேய் வெளிறிப் போய், காற்சட்டையைச் சிறிது மேலே தூக்கிவிட்டுக் கொண்டு, தோல் பொய்க்கால்கள் வெளித் தெரிய, குனிந்த தலை நிமிராமல், கைகளைத் தொங்கவிட்டவாறு மேஜைக்கு எதிரே அப்படியே நின்றான்.

“அப்படியானால், அருமைத் தம்பீ, எங்களை ஏன் போட்டு வதைக்கிறீர்கள்? இவ்வளவு நேரத்தைப் பறித்துக் கொண்டு வீட்டீர்களே. கால்கள் இல்லாமலே விமானப்படைக்குத் திரும்ப நினைக்கின்றீர்களா என்ன?” என முடிவில் கூறினார் மருத்துவர்.

“நான் நினைக்கவில்லை. கட்டாயம் திரும்புவேன்” என்று தணித்த குரலில் சொன்னான் அலெக்ஸேய். அவனுடைய ஜிப்ஸிக் கண்கள் பிடிவாத அறைகூவல் விடுபவை போலச் சுடர் வீசின.

“உங்களுக்கு மூளை புரண்டு விட்டதா? கால்கள் இல்லாமலா?”

“ஆமாம், கால்கள் இல்லாமலேதான் – கட்டாயம் விமானம் ஓட்டியே தீருவேன்” என்று பிடிவாதம் இன்றி மிக நிதானமாக விடையிறுத்தான் அலெக்ஸேய். பழைய மோஸ்தர் விமானிக் கோட்டுப் பையில் கையை விட்டு ஒழுங்காக மடிக்கப்பட்ட பத்திரிக்கைத் துணுக்கை அதிலிருந்து எடுத்தான். “பாருங்கள். இவர் ஒரு கால் இல்லாமல் விமானம் ஓட்டினாரே. நான் ஏன் இரண்டு கால்களும் இல்லாமல் ஓட்ட கூடாது?” என்றான்.

பத்திரிக்கைக் குறிப்பைப் படித்துவிட்டு மருத்துவர் அலெக்ஸேயை வியப்புடனும் மரியாதையுடனும் பார்த்தார்.

“ஆனால் இதற்கு அசுரப் பயிற்சி செய்ய வேண்டுமே. இவர் பத்து, ஆண்டுகள் பயிற்சி செய்தாராம், பார்த்தீர்களா? நிஜக்கால்கள் போன்றே பொய்க்கால்களைப் பயன்படுத்தப் பழக வேண்டும்” என்று கனிவுடன் சொன்னார்.

அப்போது அலெக்ஸேய்க்கு எதிர்பாராத விதத்தில் ஆதரவு கிடைத்தது. ஸீனா தன் மேஜை அருகே இருந்து தாவி முன்னே வந்து, பிராத்தனை செய்பவள் போன்று கைகளை மார்பில் வைத்துக் கொண்டு கன்னப் பொருத்துக்களில் வியர்வை துளிக்கும் அளவுக்கும் கன்றிச் சிவந்தாள்.

“முதல் வரிசை இராணுவ மருத்துவத் தோழர் அவர்களே. இவர் எப்படி நடனம் ஆடுகிறார் என்று பாருங்கள். ஊனம் இல்லாதவர்களை விட மேலாக ஆடுகிறார். மெய்யாகவே சொல்லுகிறேன்” என்று குழறலுடன் மொழிந்தாள்.

“நடனம் ஆடுகிறாரா? எப்படி? இது எப்படி முடியும்?” என்று மருத்துவர் தோள்களைக் குலுக்கினார். தேர்வுக் குழுவினரின் பக்கம் நல்லியல்புடன் கண்ணோட்டினார்.

ஸீனா குறித்துக் காட்டிய கருத்தை மகிழ்வுடன் பயன்படுத்திக் கொண்டான் அலெக்ஸேய்.

“நீங்கள் சாதகமாவோ பாதகமாவோ எதுவும் எழுதாதீர்கள். இன்று மாலை எங்கள் நடனக் கூடத்துக்கு வாருங்கள். என்னால் விமானம் ஓட்ட முடியும் என்பதைக் கண்டுகொள்வீர்கள்” என்றான்.

தேர்வுக் குழு உறுப்பினர்கள் எதைப் பற்றியோ ஆர்வம் பொங்கச் சர்ச்சை செய்வதைக் கதவுப் பக்கம் போகும் பொழுது கண்ணாடியில் கண்டான் அலெக்ஸேய்.

மதிய சாப்பாட்டுக்கு முன் ஸீனா பூங்காவின் வெறுமை மூலையில் அலெக்ஸேயைத் தேடிப்பிடித்தாள். அவன் போன பிறகு வெகு நேரம் வரை தேர்வுக் குழுவினர் அவனைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததாகவும், “மெரேஸ்யெவ் அசாதரணமான இளைஞன். ஒருவேளை உண்மையாகவே அவன் விமானம் ஓட்டக்கூடும், யார் கண்டது? ருஷ்ய மனிதன் எதுவும் செய்யத் திறன் உள்ளவன்!” என்று மருத்துவர் சொன்னதாகவும் தெரிவித்தாள். மருத்துவர் சொன்னதை மறுத்து, விமானப் பறப்பின் வரலாறு இத்தகைய உதாரணங்களை அறியாது என்று தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர் கூறினாராம். விமானப் பறப்பின் வரலாறு எத்தனையோ விஷயங்களை அறியாது என்றும் இந்த யுத்தத்தில் சோவியத் மக்கள் அதற்கு எத்தனையோ விஷயங்கள் கற்பித்திருக்கிறார்கள் என்றும் அவருக்குப் பதில் சொன்னாராம் மருத்துவர்.

தெரிந்தெடுக்கப்பட்ட தொண்டர்களை (ஆரோக்கிய நிலையத்தில் இத்தகையவர்கள் இருநூறு பேர் வரை இருந்தார்கள்) போரிடும் சைனியத்திற்கு அனுப்புவதற்கு முந்திய மாலை, விரிவான நிகழ்ச்சித் திட்டத்துடன் நடனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலெல்லாம் வியர்த்துக் கொட்ட, களைப்பில்லாமல் நடனமாடினார்கள் விமானிகள். தனது செம்பொன் கூந்தல் துணைவியுடன் குதூகலமாகவும் லாவகமாகவும் துடியாகவும் அவர்களுக்கிடையே நடனமாடினான் அலெக்ஸேய். அருமையான ஜோடி!

இராணுவ மருத்துவர் மிரொவோல்ஸ்க்கிய் குளிர்ந்த பீர்க் குவளையும் கையுமாகத் திறந்த ஜன்னல் அருகே உட்கார்ந்து மெரேஸ்யெவையும் அவனுடைய தழல்முடித் துணைவியையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மருத்துவர், அதிலும் இராணுவ மருத்துவர். நிஜக்கால்களிலிருந்து பொய்க்கால்கள் எப்படி வேறுபடுகின்றன என்பதை கணக்கற்ற உதாரணங்கள் வாயிலாக அவர் தெரிந்து கொண்டிருந்தார்.

கட்டுவாய்ந்த மேனியும் பழுப்பேறிய நிறமும் கொண்ட இந்த லெப்டினன்ட் சிறுகூடான, ஒயிலுள்ள ஆட்டத் துணைவியோடு அழகுற இணைந்தாடுவதை இப்போது காண்கையில் இதெல்லாம் சிக்கலான ஏதோ ஏமாற்று என்ற எண்ணத்தை அவரால் விடவே முடியவில்லை. கடைசியில், கைதட்டி ஆர்வாரித்த வட்டத்துக்கு நடுவே மகிழ்ச்சிக் கூக்குரலுடன் உள்ளங்கைகளால் தொடைகளிலும் கன்னங்களிலும் தட்டிக் கொண்டு மிடுக்காக ருஷ்ய நடனம் ஆடிமுடித்து விட்டு அலெக்ஸேய் வியர்த்து விறுவிறுக்க, களிபொங்க ஆட்களை விலக்கிக் கொண்டு மிரொவோல்ஸ்க்கியிடம் சென்றான். அப்போது அவர் மரியாதையாக அவன் கையைப் பற்றிக் குலுக்கினார். மெரேஸ்யெவ் ஒன்றும் பேசவில்லை. ஆனால் மருத்துவரை ஒரே பார்வையாக நோக்கிக் கொண்டிருந்த அவனுடைய விழிகள், விடையை வேண்டின, கோரின.

“உங்களை நேரே படைப்பிரிவுக்கு அனுப்ப எனக்கு உரிமை கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் என் முடிவை உங்களுக்கு நான் தருகிறேன். தக்க பயிற்சி அளிக்கப் பட்டால் நீங்கள் விமானம் ஓட்டுவீர்கள் என்ற எங்கள் கருத்தை நான் எழுதுகிறேன். சுருக்கமாக எந்த நிலையிலும் என் வாக்கு உங்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என எண்ணிக் கொள்ளுங்கள்” என்றார் மருத்துவர்.

படிக்க:
சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !
பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?

அனுபவம் முதிர்ந்த இராணுவ மருத்துவரான ஆரோக்கிய நிலையத்தின் இயக்குநருடன் கைகோத்துக் கொண்டு ஹாலிலிருந்து வெளியேறினார் மிரொவோல்ஸ்க்கிய். இருவரும் பரவசமடைந்திருந்தார்கள், ஒரே குழப்பம் அடைந்திருந்தார்கள். சோவியத் மனிதன் ஒரு விஷயத்தை அடைய உண்மையாகவே விரும்பிவிட்டால் எதையும் செய்ய வல்லவன் என்பது பற்றி உறங்குவதற்கு முன் சிகரெட்களைப் புகைத்தவாறு வெகு நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்..

கீழே இன்னும் இசை முழங்கிக் கொண்டிருந்தது, ஆடுவோரின் நிழல்கள் ஜன்னல் வெளிச்சத்தின் நீள் சதுரங்களில் தரைமீது இயங்கிக் கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் அலெக்ஸேய் மெரேஸ்யெவ் மேலே இறுகத் தாளிட்ட குளிப்பறையில் உதட்டை இரத்தம் வரும்படி கடித்துக் கொண்டு, குளிர் நீரில் கால்களைத் தொங்கவிட்டபடி உட்கார்ந்திருந்தான். வலி பொறுக்க மாட்டாமல் அநேகமாக உணர்வு இழக்கும் நிலையில் இருந்தான். பொய்க்கால்களின் ஆவேச இயக்கம் காரணமாக உண்டாகியிருந்த நீலம் பாரித்த இரத்தக் காய்ப்புகளையும் அகன்ற புண்களையும் தண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தான் அவன்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் !

0
1-Kashmir-srinagar-central-jail

ஸ்ரீநகர் மத்திய சிறைச்சாலை வாயிலை இமைக்காமல் பார்த்தபடியே இருக்கிறார் முக்லி பேகம். காவலர் தரும் தகவலுக்காக காத்திருக்கிறார் அவர்.

“காலையிலிருந்து நான் எங்கேயும் நகரவில்லை. என்னுடைய எண்ணை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் அழைக்கலாம்” என்கிற பேகத்தின் காத்திருப்பாளர் எண் 46.

கடந்த இரண்டு வாரங்களில் மூன்று முறை முயற்சித்தும் சிறையில் உள்ள தன்னுடைய மகன் முகமது ரஃபி சோபியை காண அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த 69 வயது பெண்ணுக்கு இப்போதுதான் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

“அவனைப் பார்க்க நான் உயிரை விட்டுக்கொண்டிருக்கிறேன், அவன் முகத்தை ஒரு முறை தொட்டுப்பார்க்க வேண்டும்” என்கிறார் மெல்லிய குரலில் அவர். “காவலர்கள் அவனை சித்ரவதை செய்திருப்பார்களோ என கவலையாக உள்ளது”.

Kashmir jail ஆகஸ்டு 21-ம் தேதி நள்ளிரவில் ஜம்மு & காஷ்மீர் போலீசால் 39 வயதான சோபி கைது செய்யப்பட்டார். இரண்டு நாட்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தபின், மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டதாக சொல்கிறார் பேகம்.

“அவன் எந்த குற்றமும் செய்யவில்லை. அவன் அப்பாவி என்பதை அல்லா அறிவார்” என பேகம் தொடர்ந்து கூறியபடியே இருந்தார். “பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்ததாக போலீசு தேடிக்கொண்டிருந்த உறவுக்காரர் ஒருவர் கிடைக்கவில்லை என்பதால் இவனை கைது செய்து கொண்டுவந்துவிட்டார்கள்.” என்கிறார் அவர்.

கட்டட வேலை பார்த்து வந்த சோபிக்கு திருமணமாகி நான்கு வயதில் ஒரு பெண்ணும் எட்டு மாதமான ஒரு மகனும் உள்ளனர். அவருடைய உறவுக்கார சிறுவன் 11 வகுப்பு படிக்கிறார். இவர்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து 10 கி.மீ. தள்ளியிருக்கும் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார் அவன்.

ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் அந்த சிறுவன், இவர்களுடைய வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறான்.

“அவன் எங்கள் வீட்டை விட்டு போன பிறகு, அவனைப் பற்றி எந்த செய்தியும் இல்லை” என்கிற பேகம், “ஒரு நபருக்கு பதிலாக இன்னொரு நபரை எப்படி கைது செய்யலாம்? மற்ற அனைத்து இடங்களிலும் இப்படித்தான் அனைத்து கைதுகளும் நடந்தனவையா?” என கேட்கிறார்.

படிக்க:
கேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்
♦ காஷ்மீர் போராட்டம் : மருத்துவமனையிலும் மோப்பம் பிடிக்கும் அரசுப் படைகள் !

ஆகஸ்டு 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, பாதுகாப்புப் படையினர் 3,500-க்கும் அதிகமானவர்களை கைது செய்துள்ளனர். சமீப ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் நடந்த ஒடுக்குமுறையாக ஆகஸ்டுக்கு பிறகான ஒடுக்குமுறை அரங்கேற்றப்பட்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர்கள், கிளர்ச்சியாளர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லெறிவதில் ஈடுபட்ட இளைஞர்களை மட்டும் பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதாக போலீசு கூறுகிறது. இந்தச் சட்டத்தின்படி விசாரணை இல்லாமல் ஒரு நபரை ஆறுமாதங்கள் சிறையில் வைத்திருக்க முடியும்.

Mugli-Begum
சிறைச்சாலை வாயிலை இமைக்காமல் பார்த்தபடியே இருக்கிறார் முக்லி பேகம்.

அரசாங்கத்தின் கைது குறித்து சர்வதேச அளவில் விமர்சனங்கள் வந்தபோதும், அது தனது நடவடிக்கைகளை நிறுத்துவதாக இல்லை. கைதானவர்களை காஷ்மீருக்கு வெளியே ஆக்ரா, டெல்லி, உ.பி. உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சிறைக்கும் அது அனுப்பியது.

அதுபோல, தன்னுடைய மகனையும் வேறு சிறைக்கு அனுப்பியிருக்கலாம் என பயம் கொள்கிறார் பேகம்.

“என் மகனைப் போலவே தவறாக கைது செய்யப்பட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களின் மகனை சில நாட்கள் இந்த சிறையில் வைத்திருந்துவிட்டு, வேறு சிறைக்கு மாற்றிவிட்டார்கள்” என்கிறார் அவர். காஷ்மீர் ஊடகங்களும்கூட பலர் காஷ்மீருக்கு வெளியே உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தபோதும், அதுகுறித்து அதிகாரிகள் பேச மறுக்கின்றனர்.

“என்னுடைய சகோதரன் உடைந்து போயிருக்கிறான்”

ஆகஸ்டு 5-ம் தேதிக்குப் பிறகு கைதான தங்களுடைய உறவினரைப் பார்ப்பதற்காக உயர் பாதுகாப்பில் இருக்கும் சிறைச்சாலை முன் பெற்றோரும் உறவினர்களும் வரிசையில் நிற்கிறார்கள். காலை 10 மணிக்கு தொடங்கும் சந்திப்பு நேரம் 2 மணியளவில் முடிந்துவிடுகிறது.

சிறைக் கைதிகளைப் பார்க்க தொடர்புடையவர்களின் உறவினர்கள் ஆதார் அட்டையை கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 17-ம் தேதி கைதான தனது சகோதரர் சாகித் மன்சூரைக் காண தனது தங்கையுடன் வந்திருக்கிறார் இக்ரா.

ஸ்ரீநகரின் கன்யார் பகுதியைச் சேர்ந்த 19 வயதான மன்சூர், பள்ளியிலிருந்து இடை நின்றவர். கார் சர்வீஸ் செண்டரில் பணியாற்றிக்கொண்டிருந்ததாகவும் இக்ரா கூறுகிறார். நள்ளிரவு ரோந்தின்போது கல்லெறிந்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டதாக கூறுகிறார் அவர்.

படிக்க:
பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !
♦ காஷ்மீர், நர்மதா : ஜனநாயகத்தை நொறுக்குவதற்கான சோதனைச் சாலைகள் !

மூன்றாவது முறையாக மன்சூரை சந்திப்பதாக அவர்கள் கூறினர், “கடந்த முறை அப்பாவுடன் பேசும் போது, அவன் உடைந்து போய் அழுதிருக்கிறான். தன்னை இங்கிருந்து அழைத்துச் செல்லும்படி கெஞ்சியிருக்கிறான். வழக்கறிஞர்கள் இப்போது எதுவும் தங்களால் செய்ய முடியாது என சொல்லிவிட்டார்கள். பிணைக்கு மனு செய்வதற்குக்கூட இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்” என்கிறார் தன் குழந்தையை சுமந்துகொண்டிருக்கும் இக்ரா.

“வேலைகள் பறிபோய்விட்டன”

கதிதர்வாசா பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை அருகே மூன்று கடைகள் திறந்திருக்கின்றன. தங்கள் உறவினர்களைப் பார்க்க வருபவர்கள் அங்கே உணவுகளை வாங்கிச் செல்கின்றனர். இன்னமும் காஷ்மீரின் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இக்பால் அகமது தெலியும் அவருடைய குடும்பமும் ஆனந்த்நாக்கின் தூரு சாகாபாத்திலிருந்து அதிகாலை 5 மணிக்கு கிளம்பி, சிறையில் இருக்கும் 12-ம் வகுப்பு மாணவரான முதாசிர் அகமத்-ஐ காண ஸ்ரீநகருக்கு வந்துள்ளனர்.

srinagar-jail
சிறைக்குள் அடைபட்டு கிடக்கும் உறவினரை பார்க்கச் செல்லும் குடும்பத்தினர்.

அகமதை காண இரண்டு சகோதரர்களும் அவருடை தந்தையும் சிறைக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களுக்காக சிறையின் வெளிப்பகுதியில் காத்திருந்தார் தெலி.

“என்னுடைய சகோதரன் ஆகஸ்டு 2-ம் தேதி கைது செய்யப்பட்டான். ஆகஸ்டு 14-ம் தேதிதான் பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தில் அவன் கைது செய்யப்பட்டிருப்பது தெரியும்” என்கிறார் தெலி.

அரசாங்கத்துக்கு எதிராக போராட வருமாறு தனது கிராமத்தினரை திரட்டியதே அகமதுவின் கைதுக்குக் காரணமாக போலீசு கூறியுள்ளது. ஆனால், அவருடைய குடும்பம் இதை மறுத்து வருகிறது.

நள்ளிரவு ரோந்தின்போதுதான் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். “அந்த இரவில் நான்கு சிறுவர்கள் அந்தப் பகுதியிலிருந்து கைதான நிலையில், மூவர் விடுவிக்கப்பட்டனர். என்னுடைய சகோதரன் மட்டும்தான் இங்கே மாற்றப்பட்டான்”என்கிறார் தெலி.

நவம்பரில் வரவிருக்கும் 12-ம் வகுப்பு தேர்வுக்கு படிக்க முடியாத நிலையில் அகமத் இருப்பதாக அவருடைய குடும்பம் கவலை கொள்கிறது.

“அவன் பத்தாம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அவனுக்கு மருத்துவம் படிக்க விருப்பம். இந்தக் கைது அவனுடைய கனவை களைத்துவிட்டது. இப்போது இங்கிருந்து வெளிமாநில சிறைக்கு மாற்றப்படக்கூடாது என்பதற்காக வேண்டிக் கொள்கிறோம்” என்கிறது அவருடைய குடும்பம்.

கடந்த 36 நாட்களில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிற விவரத்தை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் சொல்ல மறுத்து வருகிறது. இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து பேசியுள்ள ஜம்மு காஷ்மீர் போலீசு கூடுதல் இயக்குனர் முனீர் கான், இளைஞர்களுக்கு போதிய ஆலோசனை அளித்த பிறகு விடுவிக்கப்படுவதாக கூறினார்.

ஆனால், கல்லெறிவதிலும் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் ஈடுபடும் இளைஞர்கள் பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வெளியூர் சிறைக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காஷ்மீரை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிவிட்ட மோடி – அமித் ஷாவின் அரசாங்கம், அங்குள்ள இளைஞர்களின் கனவுகளை நசுக்கி தூக்கி எறிந்துகொண்டுள்ளது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இதைச் செய்யும் எனப் பார்க்கத் தானே போகிறோம் !


கட்டுரையாளர் : Mudasir Ahmad
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: தி வயர்.

கேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்

கேள்வி : //காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் ஏன் ரெளத்திரமாகிறது? எதனடிப்படையில் அது இந்தியாவை கண்டிக்கிறது?//

– சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்திற்கு எதிராக இந்தியா மட்டுமல்ல, பாகிஸ்தானும் நடந்து கொள்கிறது. தனது ஆதரவு மதவாதக் குழுக்களை ஏவி விட்டு காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது. மேலும் பாகிஸ்தான் அரசியலில் மக்கள் நலப் பிரச்சினைகள் பின்னுக்கு தள்ளுவதற்கு காஷ்மீரும் ஒரு கேடயமாக பயன்படுகிறது. அதற்காகவும் இந்தியாவின் நடவடிக்கைகளை அவ்வப்போது பாகிஸ்தான் கண்டிக்கிறது.

காஷ்மீர் மக்களின் போராட்டம்: "இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம்,"
காஷ்மீர் மக்களின் போராட்டம்: “இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம்,”

அதே போன்று இந்தியாவும் அதாவது பாஜக அரசாங்கமும் இதர மாநிலங்களில் காஷ்மீரைக் காட்டி சாதனையாக கூறிக் கொள்கிறது. உண்மையில் காஷ்மீர் மக்களோ இந்திய அரசை எதிர்த்து அடக்குமுறைகளை மீறி போராடிக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் மதச்சார்பற்ற முறையில் இருந்ததை மதரீதியாக மாற்றியதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் பங்குண்டு.

அதற்காகவே ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற மதச்சார்பற்ற அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கி தீவிரவாதக் குழுக்களை களத்தில் இறக்கினார்கள். காஷ்மீர் மக்களோ இரண்டு நாடுகளிலிருந்து வரும் ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

♦ ♦ ♦

கேள்வி : //திராவிட ஆட்சியின் 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் பாலாற்றில், காவிரியில் 1 தடுப்பணை கூட கட்டாதது ஏன்?//

– பழனிச்சாமி

ன்புள்ள பழனிச்சாமி,

இன்றிருப்பது போல தமிழகத்தின் நீர் வறட்சியும், காவேரிப் பிரச்சினையும் 1960-களில் இல்லை. இடைப்பட்ட காலத்தில் கர்நாடகா, தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் விவசாய சாகுபடி நிலங்கள் அதிகரித்து, நீரின் தேவையும் அதிகரித்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்த பிறகும் அதை இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் அமல்படுத்தாமல் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது.

தற்போது பருவ மழையின் தயவால் மேட்டூர் அணை நிரம்புகிறதே அன்றி வேறல்ல! இதற்கு தடுப்பணை கட்டாமல் போனது பிரச்சினை அல்ல. மாறாக தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட உச்சநீதிமன்றமும், மத்திய பாஜக அரசும் செயல்படவில்லை என்பதே முதன்மையான பிரச்சினை. இதற்கு மேல் இருக்கும் அணைகளையும், நீர்ப்பாசன திட்டங்களையும் தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் முறையாக பரமாரிக்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். கூடவே அரசாங்கங்கள் அமல்படுத்தி வரும் உலகமயக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது.

படிக்க :
♦ பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !
♦ கேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா ?

♦ ♦ ♦

கேள்வி : //பிள்ளையாரின் பிறப்பு பற்றி அவ்வப்பொழுது சில திராவிட இயக்கங்கள் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு உண்மை நிலையை உரைக்கின்றன. அது பற்றி வினவின் கருத்து என்ன ?//

– சீனி. மோகன்

ன்புள்ள சீனி.மோகன்,

பிள்ளையாரின் பிறப்பு குறித்து தந்தை பெரியார் சிவபுராணம், கந்தபுராணத்தை ஆதாரமாக்கி எழுதிய கட்டுரையை இணைப்பில் படிக்கலாம்.

பிள்ளையார் வரலாறு – தந்தை பெரியார்

இந்துக் கடவுள்களில் பாப்புலராக இருக்கும் பிள்ளையாரின் பக்தர்கள் இந்த பிறப்பு கதைகள் தெரிந்துதான் பக்தர்களாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதே போன்று இந்தக் கதைகளை படித்தாலும் அவர்கள் பிள்ளையார் வழிபாட்டை நிறுத்திவிடப் போவதில்லை என்பதும் உண்மைதான்.

ஆய்வாளர் தொ.பரமசிவனது கருத்துப்படி கி.பி ஆறாம் நூற்றாண்டிலேயே வணிகரகள் மூலம் பிள்ளையார் தமிழகத்திற்கு அறிமுகமாகிவிட்டார். அப்போது அவர் பூணூல், வாகனம், ஆயுதம் இன்றி சாதாப் பிள்ளையாராக இருந்தார். பிறகு அவர் பார்ப்பனிய பிள்ளையாராகி இன்று இந்துமுன்னணி பங்கில் 1980-களுக்குப் பிறகு கலவரம் ஏற்படுத்தும் பிள்ளையாராக மாறி விட்டார்.

நூல் அறிமுகம் : பிள்ளையார் அரசியல்

கடவுள் வழிபாடு, நம்பிக்கைகளை அம்லப்படுத்துவதன் மூலம் பக்தர்கள் மனம் புண்படுத்தப்படும். இதன் மூலம் இந்துமதவெறியர்கள் இந்துக்களை திரட்டுவார்கள் என்றொரு கருத்து இருக்கிறது.

ganesh-chaturthi

அப்படியானால் தமிழகத்தில் தந்தை பெரியாருக்கு மரியாதையே இருந்திருக்க கூடாது. மாறாக அவர் இன்றளவும் மதிக்கப்படுகிறார். அதே நேரம் இன்று பிள்ளையார் குறித்த பிறப்பு கதைகளை விட இந்து முன்னணி நடத்தும் பிள்ளையார் ஊர்வலங்கள் ஏற்படும் வன்முறை குறித்து மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இந்த வருடம் (2019) திரூப்பூரில் ஒரு பனியன் கம்பெனி ஒரு இந்து முன்னணிக் குழுவிற்கு பணம் கொடுத்துவிட்டு தங்களுக்கு கொடுக்கவில்லை என மற்றொரு இந்து முன்னணிக் குழு அந்தப் பனியன் கம்பெனியை தாக்கியிருக்கிறது. பிள்ளையார் சாதாரண பக்தர்களின் கடவுளாக இருந்து விட்டு போகட்டும். ஆனால் இந்துமதவெறியர்களின் கையில் அவர் கலவரத்திற்கான கடவுளாக இருப்பதுதான் பிரச்சினை. இதை பிள்ளையார் தீர்க்கமாட்டார். நாம்தான் தீர்க்க வேண்டும்.

♦ ♦ ♦

கேள்வி : //நாம் தமிழர் கட்சி பற்றி எதிர்மறை பதில்கள் அர்த்தமற்றது. எந்த கட்சி நேர்மையா வென்றது? உண்மையா நிர்வாகம் செய்யுது? அடுத்த தலைமுறை நல்லா வாழ ஒழுக்கததை கடத்துர கட்சிதான் எது? பதில் சொல்ல வேண்டும்.//

– மாதவன்

ன்புள்ள மாதவன்,

அரசு, அரசாங்கம் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. அரசு என்பது நாடாளுமன்றம் – சட்டமன்றம், அதிகார வர்க்கம், போலீசு இராணுவம், நீதித்துறை – சிறை போன்ற உறுப்புகளுடன் செயல்படுகிறது. இதில் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற மக்களால் ‘தெரிவு’ செய்யப்படும் உறுப்பையே அரசாங்கம் என்று அழைக்கிறோம். இந்த இலக்கணப்படி அரசாங்கம் என்பது அதிகாரம் குறைந்த உறுப்பு ஆகும். கட்சிகள் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்து அரசாங்கம் அமைக்கின்றனர்.

ஆனால் அரசின் மற்ற உறுப்புகள் அனைத்தும் நிலையாக இருக்கின்றன. இதனால்தான் சட்டமன்றம் கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தும்போது மாநிலங்களில் அரசுகள் வழக்கம் போலவே செயல்படுகின்றன. அப்போது தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் இல்லை.

அரசாங்கத்தால் சட்டத்தை இயற்ற மட்டும் முடியும். அரசின் அதிகார வர்க்கம்தான் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் படைத்தது. எனவே நாம் தமிழர் என்று மட்டுமல்ல மற்ற கட்சிகளும் அரசாங்கத்தை கைப்பற்றுவது – வெல்வதை மட்டுமே பேச முடியும். சீமான் முதல்வரானால் ஒரு கலெக்டரையோ, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரையோ நியமனம் செய்ய முடியாது. அவர்களது தயவு இன்றி ஆட்சியும் செய்ய முடியாது. எனவே நிர்வாகம், ஊழல், அதிகார முறைகேடு அனைத்தும் அரசு எனும் ஒட்டுமொத்த அமைப்பில் இருக்கும் போது நீங்கள் ஒரு கட்சியாக அரசாங்கத்தை மட்டும் மாற்றி என்ன பயன்? ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டால் அதை மாவட்ட கலெக்டர் அமல்படுத்தியே தீரவேண்டும். அப்போது சீமானோ மற்றவர்களோ முதல்வர்களாக இருந்தால் அதை வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும்.

உலகமய காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரமும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்திற்கு வராமலேயே பல ஒப்பந்தங்கள் அமலுக்கு வருகின்றன. மாநில அரசாங்கங்களோ தமது அதிகாரத்தை மத்திய அரசிடம் இழந்து வருகின்றன. அதானிக்கும், அம்பானிக்கும் இந்த அரசு எந்திரம் சுறுசுறுப்பாக வேலை செய்யும் போது நாம் இந்த அரசு அமைப்பை எப்படி மாற்றுவது என்று யோசிப்பதே சரியானது. யோசித்துப் பாருங்கள்! நன்றி

 

♦ ♦ ♦

கேள்வி : //1. பா.ஜ.க தலைமையிலான அரசு தற்போது பாசிசத்தை விரைவாக அமுல்படுத்தி வருவதை அறியமுடிகிறது. இதனை எதிர்கொள்ள நாடு தழுவிய அளவில் அமைப்பு ரீதியாக திரண்ட தொழிலாளர்கள் போராட்டமோ, விவசாயிகள் போராட்டமோ நடைபெறுவதாக தெரியவில்லை. எப்படி பாசிசத்தினை எதிர்கொள்வது? பலமில்லாத இச்சூழ்நிலையின் விளைவாக ஹிட்லரின் வழியில் நாட்டின் போக்கு மாறிவிட்டால் கம்யூனிச இயக்கங்களால் என்ன செய்ய முடியும்?

2. தமிழகத்தில் இருந்து தான் பெரும்பாலும் பாசிசத்திற்கு எதிரான அமைப்பு ரீதியான குரல்கள் எழுகின்றன. இச்சூழ்நிலையில் களத்தில் செயல்படும் மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம், பூவுலகின் நண்பர்கள், த.பெ.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பிற ஜனநாயக அமைப்புகள் இணைந்து கூட்டாக செயல்பட்டால் ஒரு வலுவான பாசிச எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமே, அதற்காக இந்த இயக்கங்கள் ஒண்றினைவதில் ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?//

– சுரேஷ்

ன்புள்ள சுரேஷ்,

பொருளாதார ரீதியான நெருக்கடி நாட்டினை கவ்விக் கொண்டிருக்கும் போது பாஜக அரசாங்கத்தின் பாசிசப் போக்கு ஒவ்வொரு துறையிலும் வந்து கொண்டிருக்கிறது. இதை காஷ்மீர் விவகாரத்திலேயே பார்த்தோம். பாஜக-வை எதிர்ப்போரை எந்த வகையிலாவது முடக்குவதை திட்டமிட்டே மத்திய அரசு செய்கிறது. இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் தொழிலாளர் அமைப்புகள், ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்புகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். அப்படி இணையவில்லை என்றால் பாசிசத்தின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற இங்கு யாருமே எஞ்சியிருக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் ஒத்த கருத்துள்ள அமைப்புக்களை மக்கள் அதிகாரம் திரட்டி வருவதாகவே நம்புகிறோம். அது அரசியல் ரீதியில் பலமுள்ள குரலாக மாற வேண்டும். மக்கள் அதிகாரம் ஒன்றிணைக்கும் போராட்டங்களில் மாற்று அமைப்புகள், கட்சிகளைச் சார்ந்தோர் அவ்வப்போது பங்கேற்கின்றனர். தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த ஒற்றுமை வளரும் போதே அந்தக் குரலுக்கு வலு அதிகரிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி.

♦ ♦ ♦

கேள்வி : //சீமான் பற்றிய உங்கள் பார்வை சிரிப்பை வரவைக்கிறது. ஆதிக்க சாதிதான் தமிழன் என்று குறிப்பிட்டு இதுவரை பேசியது இல்லை ஆதி தமிழனே பறையன் தான்டா என்று பல முறை பேசியுள்ளார், அப்பறம் சீமான் பதவியில் அமர்ந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியும் முடியாது சொல்ல முடியாது.

ஏன்னா நம்மளுடைய நாடு ஜனநாயக நாடு அதிகாரத்துடன் சரியான முறையில் காய் நகர்த்தினால் எதுவுமே சாத்தியமே, வேறு எந்த கட்சிக்கு வாக்கு செலுத்துவது அனைத்து கட்சியையும் விமர்சனம் சொல்லுறிங்க அப்ப யாருக்கு வாக்கு செலுத்துவது உங்கள் பார்வையில் ? (குறிப்பு : நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் அல்ல . I’m Communist (SFI)). பதிலுக்காக காத்திருக்கிறேன்.//

– கணேஷ்குமார்

ன்புள்ள கணேஷ்குமார்,

தமிழகத்தின் மண் வளம், கனிம வளம், நீர் வளம், காட்டு வளம், மலை வளம், கால்நடை வளம், விவசாய வளம் அனைத்தையும் நான் ஆட்சிக்கு வந்தால் காப்பாற்றுவேன் என்று சீமான் கூறுகிறார். அவர் ஆட்சிக்கு வருவதாகவே வைத்துக் கொள்வோம். இவ்வளங்களை அவர் எப்படிக் காப்பாற்றுவார்? அதற்கு அவரிடம் என்ன அதிகாரம் இருக்கிறது? தாதுமணல் கொள்ளையராக வைகுண்டராசனை சிறையில் அடைப்பாரா? உண்மையில் வைகுண்டராசன் காலில் தம்பதி சகிதமாக காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவர் அவர்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்திரவு போட்டால்

Seeman poster

சீமான் மாநில முதல்வர் என்ற முறையில் அதை அமல்படுத்த வேண்டும். முடியாது என்றால் பதவி விலக வேண்டும். அதானிக்கு கொடுக்கப்பட்ட மீத்தேன் உரிமையை அவரால் ரத்து செய்ய முடியாது. மீறினால் அவரது அரசாங்கம் நீக்கப்படும். இல்லையேல் அவரே பதவி விலக வேண்டும். இப்படி நிர்வாக ரீதியாக அவர் தமிழகத்தின் எந்த வளத்தையும் காப்பாற்ற முடியாது போவதால் சாதிக்கொரு தலைவரை தெரிவு செய்து அவர்களது பிறந்த இறந்த தினத்தன்று பிரம்மாண்டமாக சுவரொட்டி போட்டு வீரத்தமிழன், மறத் தமிழன், என்று அடைமொழியுடன் விளம்பரம் செய்கிறது

நாம் தமிழர் கட்சி. சீமான் சாதிகளிக்கிடையில் நல்லுறவு பேண நினைக்கிறார். பறையர் இன மக்களை ஆதித் தமிழர்கள் என்றால் தேவர் ஜெயந்தி அன்று தேவர் இன மக்களை வீரத் தமிழர் என்பார். சாதிகள் என்பதே உயர்வு தாழ்வு கற்பித்து அசமத்துவத்தை பேணும் அமைப்பு எனும் போது சாதிகளுக்கிடையில் நல்லுறவு வருவது எங்கனம்? ஆதிக்க சாதி மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது அடக்கப்படும் சாதி மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பது எப்படி? அதற்கு நாம் தமிழரிடம் என்ன திட்டம் உள்ளது? வாக்கு வங்கி அரசியல் படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆதிக்க சாதி மக்களை வைத்துத்தான் அரசியல் செய்ய முடியும் என்றால் அதற்கு நாம் தமிழரும் விதி விலக்கு அல்ல.

நாம் தமிழர் என்று அல்ல எல்லா வாக்கு வங்கி கட்சிகளுக்கும் மேற்கண்ட சிக்கல் பொருந்தும். அதனால்தான் நாம் வாக்கு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த அமைப்பு முறையை மாற்றுவது குறித்து யோசிக்க வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் அது அங்குள்ள மக்கள் அணிதிரண்டு ஒற்றுமையுடன் போராடுவதால் மட்டுமே சாத்தியம். வேறு எதுவும், எதையும் செய்து விடமுடியாது. சட்டமும், நீதிமன்றமும், பாராளுமன்றமும் மக்கள் ஒன்று திரண்டு போராடும் போது மட்டுமே பின்வாங்கும். இதை ஜல்லிக்கட்டிலிருந்து, தூத்துக்குடி வரை பார்த்து விட்டோம். இப்படி கொஞ்சம் அசைபோட்டு பாருங்கள். நன்றி

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

 

கேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா ?

maanila-suyaatchi_Murasoli-Maran

கேள்வி : //பண்பாட்டு மற்றும் அரசியல் தளங்களின் மீட்டெடுப்பில் திராவிடர் இயக்கத்தார் காட்டும் அக்கறையை, இந்திய பொருளாதார கட்டமைப்பை விளக்கும் வகையான விழிப்புணர்வு தளங்களில் ஏற்படுத்த மறந்துவிட்டனவோ?//

– பிரபாகரன்

முரசொலி மாறன் எழுதிய “மாநில சுயாட்சி” (1974-ம் ஆண்டில் வெளியானது) நூலின் முன்னுரையில் அவர் தி.மு.கவின் இலட்சியங்களாக நான்கைக் குறிப்பிடுகிறார்.

  • இந்தி ஆதிக்க ஒழிப்பு
  • தமிழ் மொழி – தமிழ் இன – தமிழ் மரபின் மேம்பாடு
  • தமிழ்நாட்டின் உரிமைகள்; அதன் நியாயமான பங்கு
  • சுரண்டல் ஒழிப்பு
    – ஆகியவைதான் அந்த இலட்சியங்கள்

1962-இல் சீனப் படையெடுப்பையொட்டி இந்திய ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து, தி.மு.க. பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டு விட்டதைக் குறிப்பிடுகிறார் மாறன். மேற்கண்ட இலட்சியங்களை நிறைவேற்றவே பிரிவினை கோரிக்கையை வைத்திருந்ததாகவும் அதன் பிறகு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அடைய வேண்டிய இலட்சியங்களாக அவை மாற்றப்பட்டது என்கிறார் அவர்.

அவற்றில் முதல் மூன்று இலட்சியங்கள் மொழி, பண்பாடு, மாநில சுயாட்சி என்ற வகைப்பாட்டில் வருகிறது. நான்காவது பொருளியல் துறையில் வருகிறது. தி.மு.க. முதல் மூன்றுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை நான்காவதில் ஏன் கொடுக்கவில்லை என்பது உங்கள் கேள்வி!

Murasoli Maran
கருணாநிதி – முரசொலி மாறன்

ஆனால் முதல் மூன்றிலுமே தி.மு.க. தனது இலட்சியத்தை அடைந்து விடவில்லை. இன்றும் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, அதிகார வர்க்க, நீதிமன்ற மொழியாக இல்லை. கல்வியிலும் அது பயிற்று மொழியாக அனைத்து துறைகளிலும் இல்லை. காங்கிரசு ஆட்சி துவங்கி இன்றைக்கு மோடி ஆட்சி வரை இருந்த கொஞ்ச நஞ்ச மாநில உரிமைகள் கூட பறிபோய்விட்டன. நீட் தேர்வு திணிப்பு, தபால் துறை இந்தி தேர்வு ஆகியவை சமீபத்திய சான்றுகள்.

பொருளாதார தளத்தில் தி.மு.க.வும் சரி பொதுவில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்று இட ஒதுக்கீடு, சமூக நலத்திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. மதிய உணவு, இலவசக் கல்வி, வேலை வாய்ப்பு, பொது மருத்துவம், தாலிக்கு தங்கம், ஒரு ரூபாய் அரிசி, திருமணப் பெண்களுக்கு நிதி, லேப்டாப், சைக்கிள், டிவி என்று தமிழகம் மற்ற மாநிலங்களை விட வாழ்க்கைத் தர வரிசையில் முன்னுக்கிருப்பது உண்மைதான். ஆனால் இவை மட்டும்தான் பொருளியல் தளமா? இன்று கல்வி தனியார் மயமாகிவிட்டது. மருத்துவமும் கார்ப்பரேட் மயமாகிவிட்டது. இரண்டிலும் செல்ல முடியாத மிக வறியவர்கள்தான் அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு, அரசு மருத்துவமனைகளில் வைத்தியம் பார்க்கிறார்கள்.

படிக்க :
♦ அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி
♦ கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?

இந்தி பேசும் மாநிலங்களை விட இங்கே நிலமற்ற விவசாயிகளின் விகிதம் அதிகம். அதே போன்று தொழிற்துறையில் நிரந்தரத் தொழிலாளர்களை விட ஒப்பந்த தொழிலாளர்களே அதிகம் பணி செய்கின்றனர். இடையில் நடுத்த வர்க்கம் அதிகரித்திருக்கிறது. நகரமயமாக்கம் அதிகரித்திருக்கிறது. நகரத்தில் ஈட்டப்படும் பணத்தை வைத்து விவசாயம் கிராமத்தில் உயிர் பிழைத்திருக்கிறது.

இந்த சூழலை உருவாக்கிய உலகமயம், தாராளமயம், தனியார் மயத்தை தி.மு.க.வும் சரி, அதிமுகவும் சரி அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இரு கட்சிகளைச் சேர்ந்த சிலர் தரகு முதலாளிகளாக இருக்கின்றனர். தனியார் உயர் கல்வி நிறுவனங்களை நடத்துகின்றனர்.

எனவே பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழி உணர்வு என்று ஆரம்பத்தில் திராவிட இயக்கத்தின் இலட்சியங்கள் இருந்தாலும் காலம் செல்லச் செல்ல அவை நீர்த்துப் போய்விட்டன. அதே போன்று 1969-க்கு முந்தைய கம்யூனிச இயக்க வரலாற்றில் மேற்கண்ட பார்ப்பனிய – சாதிய சமூகத்தின் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டன. ஒன்றுபட்ட கம்யூனிசக் கட்சியும், அதிலிருந்து பிரிந்த மார்க்சியக் கம்யூனிசக் கட்சியும் வர்க்கப் போராட்டம், உழைக்கும் மக்களிடம் வேலை செய்தல் என்று பேசினவே அன்றி இந்தியாவில் இருக்கும் இந்தி ஆதிக்கம், பார்ப்பனிய ஆதிக்கம், தேசிய இன ஒடுக்குமுறை குறித்து ஆய்வோ, திட்டமோ, விழிப்புணர்வோ கொண்டிருக்கவில்லை. அவர்களது வர்க்க அமைப்புகளும் பெயரளவு போராட்டங்களை நடத்துவதைத் தாண்டி புரட்சிக்கான திட்டத்தை கொண்டிருக்கவில்லை. 1969-ம் ஆண்டில் பிரிந்த மார்க்சிய லெனினிய இயக்கம்தான் பின்னாட்களில் இந்தத் தவறுகளை திருத்திக் கொண்டது.

எனவே இலட்சியம் என்ற வகையில் பார்த்தால் திராவிட இயக்கம் பொருளியல் துறையை புறக்கணித்தது, ஒன்றுபட்ட பொதுவுடமை இயக்கம் பண்பாட்டு துறையை புறக்கணித்தது. இந்த புறக்கணிப்பிற்கு இந்த இயக்கங்களுக்கு தலைமை வகித்த சிறு முதலாளி – நடுத்தர வர்க்க தலைமையும் ஒரு காரணம்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

மகாராட்டிரம் : 483 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் !

0

காராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தாட்கான் (Dhadgaon) கிராம மருத்துவமனையின் ஒரே மருத்துவரான சந்தோஷ் பர்மர் கடந்த திங்கள்கிழமை மட்டும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், கால்-கை வலிப்பு நோயாளி மற்றும் கருக்கலைப்பு செய்த ஒரு பெண் உட்பட 483 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். மேலும் அவர் ஐந்து பிரசவம் பார்த்துள்ளதுடன் பாம்பு கடியால் இறந்த இரண்டு சிறுவர்களின் உடல்களுக்கு பிரேத பரிசோதனையும் தனிநபராக செய்துள்ளார்.

Dr Santosh Parmar
மருத்துவர் சந்தோஷ் பர்மர்.

மகாராஷ்டிராவின் வடக்கு பழங்குடி மாவட்டமான நந்தர்பாரில் (Nandurbar) அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள எட்டு இடங்களில் ஏழு மருத்துவருக்கான இடங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன. மகளிர் மருத்துவத்தில் எம்.டி பட்டம் பெற்ற ஒரே மருத்துவர் 7/24 மணி நேரமும் பணி புரிகிறார்.

மலைப்பாங்கான நிலப்பரப்பில் பரவியிருக்கும் 150 கிராமங்களுக்கு (அவற்றில் சில 30 கிலோமீட்டருக்கும் அப்பால் உள்ளன), சேவை செய்வதற்காக தட்கான் கிராமப்புற மருத்துவமனை அமைந்திருக்கிறது. மருத்துவமனையில் உள்ள 10 செவிலியர்களின் உதவியால் ஒரு மாதத்திற்கு 160 குழந்தை பிறப்புகளை பர்மர் பதிவு செய்கிறார்.

ஒவ்வொரு நாளும் காய்ச்சல், அரிவாள் செல் சோகை, பாம்பு கடி மற்றும் சளியால் பாதிக்கப்படும் சுமார் 350 முதல் 400 நோயாளிகள், 30 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனைக்கு வருகிறார்கள். மருத்துவர்களின் பற்றாக்குறையானது நோயாளிகளை வரிசையில் நிற்கவும், சில நேரங்களில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக, தங்கள் முறைக்கு காத்திருக்கவும் அவர்களை கட்டாயப்படுத்தியுள்ளது.

படிக்க:
பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ?
♦ மக்கள் மருத்துவர் கோட்னிஸ் நூற்றாண்டு விழா

இந்த ஆண்டு தொடக்கத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் காலியிடங்களை (10,568 பதவிகள்) நிரப்புவதற்காக ஆட்சேர்க்கும் நடவடிக்கையை மாநில அரசு தொடங்கியது. பழங்குடி பகுதிகளில் உள்ள சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையானது மருத்துவர்களின் மாத ஊதியத்தை 2 முதல் 3 இலட்சம் வரை உயர்த்த அறிவிப்பு வெளியிட மாநில அரசை நிர்பந்தித்தது.

மகளிர் மருத்துவர்கள், குழந்தை மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் தொடக்கத்தில் இதில் ஆர்வம் காட்டினர். “ஆனால் இறுதியில் அந்த ஆர்வம் போய்விட்டது” என்று நந்தூர்பார் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் இரகுநாத் போயே கூறுகிறார்.

ஜூலை 28 முதல், மருத்துவர்கள் பலர் வேலையை விட்டு நின்று விட்ட பின்னர், தட்கான் மருத்துவமனையை பர்மர் தனியாக சமாளித்துக் கொண்டிருக்கிறார். காலை 8.30 மணிக்கு அவர் அனைத்து வார்டுகளிலும் செல்வதிலிருந்து அவரது நாள் தொடங்குகிறது: மகப்பேறுக்கு பிறகு தங்கக் கூடிய வார்டில் 10 பேர் இருக்கின்றனர். அவசர மருத்துவப் பிரிவில் இரண்டு பேர், பொது வார்டில் மூன்று பேர் மற்றும் திங்கள்கிழமை காலை பிரசவம் செய்ய வேண்டிய இரு கர்ப்பிணிகள் உள்ளனர். காலை 9.30 மணியளவில், அவர் வெளி நோயாளி பிரிவிற்கு செல்கிறார். அங்கு பாம்பு போல நீண்ட ஒரு குறுகிய வரிசையில் நோயாளிகள் மருத்துவமனை வாயிலிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

Queues at Hospitals
அரசு மருத்துவமனைகளில் காத்திருப்பு என்பது இந்தியாவில் அனைவருக்கும் தெரிந்த இரகசியம் தான் (மாதிரிப் படம்)

பாம்புக் கடியால் இறந்துபோன இரண்டு சிறார்களின் உடல்களை மருத்துவர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு நூற்றுக்கணக்கானவர்கள் அவரை சந்திக்க காத்திருந்தனர். பின்னர் கைப்பேசியில் மருத்துவரை அழைத்து பிரேத பரிசோதனைகள் செய்வதற்காக பிற்பகல் வரை காத்திருந்தாக சேத்தன் சல்வே கூறினார்.

பர்மார், ஏறத்தாழ பிற்பகல் மூன்று மணி அளவில் 483 நோயாளிகளை சந்தித்து ஆலோசனை கூறியிருந்தார். அதில் மூன்று நபர்களுக்கு உள்நோயாளிப் பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டும். “சமாளிக்க முடியாத அளவிற்கு கூட்டம் வந்தால், இராஷ்டிரிய பால் ஸ்வஸ்திய காரியக்ரத்தை (Rashtriya Bal Swasthya Karyakram ) சேர்ந்த மருத்துவர்களை நான் உதவிக்கு அழைக்க வேண்டும்” என்று பர்மார் கூறினார். அதே நேரத்தில் அந்த மருத்துவர்கள் அவர்களது அன்றாட பணியையும் கைவிட வேண்டியிருக்கும்.

மாலை நேரத்தில், பர்மர் ஊட்டச்சத்து குறைப்பாடுள்ள குழந்தைகளை கவனிக்கும் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையத்திற்கு செல்கிறார். திங்கட்கிழமை இரவு, அவரது வேலை முடிந்துவிடவில்லை. முதல் நெருக்கடி அழைப்பு நள்ளிரவில் வந்தது – ஒரு பெண் பாம்புக் கடியின் காரணமாக மூச்சு விட முடியாமல் ஆபத்தான நிலையில் இருந்தார். இரண்டு மணி நேரம் கழித்து, மூக்கில் அடைப்பட்ட ஒரு பொருளுடன் ஒரு குழந்தை கொண்டு வரப்பட்டது. அதை அறுவை சிகிச்சை மூலமே அகற்ற வேண்டியிருந்தது. அதிகாலை 4 மணிக்கு கருச்சிதைவினால் ஏற்பட்ட கடுமையான குருதிக்கசிவுடன் ஒரு பெண் வந்திருந்தார்.

படிக்க:
ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை
♦ மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைந்தார் ! நேரடி ரிப்போர்ட்

“எங்களது கண் முன்னால் ஒரு நோயாளி இறப்பதை பார்ப்பது கொடுமையானது. ஒவ்வொருவரையும் காப்பற்ற நான் முயற்சி செய்ய வேண்டும். ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் நாங்கள்தான் பொறுப்பு” என்று அவர் கூறினார். அப்போது அவர் தொடர்ச்சியாக 50 மணி நேரம் பணியில் இருந்தார்.

இது போன்ற தொலைவான பழங்குடி பகுதிகளில் பணிப்புரிவதற்கு மருத்துவர்கள் விரும்புவதில்லை. “நாங்கள் தற்காலிகமான மருத்துவர்களை அமர்த்தி இருந்தோம். ஆனால் ஒரு மாததிற்கு முன்பு நிரந்தரமான மருத்துவர்களுக்காக அரசாங்கம் விளம்பரம் கொடுத்தது. எங்களது மருத்துவமனையில் பணிப்புரியும் யாரும் அதற்கு விண்ணப்பிக்கவில்லை” என்று போயே கூறினார். விரைவில் நந்தூர்பார் மாவட்ட நிர்வாகம் தற்காலிக மருத்துவர்களுக்காக விளம்பரம் கொடுக்க இருக்கிறது.

doctor-service-in-rural-india-1
தொலைவான பழங்குடி பகுதிகளில் பணிப்புரிவதற்கு மருத்துவர்கள் விரும்புவதில்லை.

அம்மருத்துவமனையில் மகளிர் பிரிவில் வெறும் 10 படுக்கை வசதியே உள்ளது. பெண்களுக்கான 60 படுக்கை வசதியும் குழந்தைகள் மருத்துவமனையும் கட்டுவதற்கான திட்டம் இன்னும் காலதாமதமாகி கொண்டே இருக்கிறது. மகப்பேறுக்கு பின்பு மூன்று நாட்கள் மருத்துவமனையில் பெண்கள் இருக்க வேண்டும். ஆனால் படுக்கை வசதி பற்றாக்குறையால் மற்ற கர்ப்பிணிகளுக்கு இடம் கொடுப்பதற்காக அவர்கள் உடனடியாக மருத்துவமனையை காலி செய்ய வேண்டும்.

உடனடியாக மருத்துவர்களை நியமிக்க பல கடிதங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எழுதப்பட்டுள்ளன. மயக்க மருந்து நிபுணர் இல்லாமல் சிசேரியன் செய்வது கடும் சிக்கலாகிவிடும்.

குழந்தை மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவசர சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளை இரண்டு மணி நேர பயணத் தொலைவில் உள்ள நந்தூர்பார் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார். மேலும் இம்மருத்துவமனையில் நிரந்தர மருத்துவ கண்காணிப்பாளர், தொற்றுநோயல்லாத பிற நோய்களுக்கான மருத்துவர் அல்லது தேசிய சுகாதார திட்ட (National Health Mission) மருத்துவரோ யாரும் இல்லை.

மருத்துவமனை பொது சிகிச்சை நிபுணரிடம் பேசிய ஒரு வாரத்தில் ஒரு மருத்துவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர் இன்னும் பணிக்கு வரவில்லை. மேலும் மயக்க மருத்துவ நிபுணர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் இன்னும் விடுப்பிலேயே உள்ளதாக அவர் கூறினார்.

இந்த மறுகாலனியாக்கச் சூழலில், மருத்துவத் தொழிலின் அடிப்படையே சேவை என்பதிலிருந்து இலாபநோக்கம் என்பதாக மாற்றப்பட்டுவிட்டது. பணமிருப்பவனுக்குத் தான் மருத்துவப் படிப்பு என்பதை நீட் தேர்வுகள் உறுதிசெய்கின்றன. கோடிக்கணக்கில் பணம் கொட்டிப் படித்து வந்த மருத்துவர்கள், ஏழை மக்கள் மிகுதியாக வாழும் கிராமப்புறங்களிலும் பழங்குடி கிராமங்களிலும் பணியாற்ற முன்வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?


சுகுமார்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி

Forest-fire

மேசான் காடானது சுமார் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது; மூன்று மில்லியன் தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் வீடாக உள்ளது. அமேசான் காடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 13 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில், பத்து லட்சம் மக்கள் பூர்வீகக்குடி மைந்தர்கள்; இங்கு சராசரியாக 200 மொழிகள் பேசப்படுகின்றன.

Amazon Tribesஇந்த பூமியில் மனிதர்களால் வெளியேற்றப்படும் கார்பன்-டை-ஆக்ஸைட் (CO2) வாயுவில் 5 சதவிகிதத்தை இந்த காடுகள் ஒளிச்சேர்க்கை (photosynthesis) சுழற்சிக்காக தன்னகத்தே இழுத்துக்கொண்டு ஆக்ஸிஜன் வாயுவை வெளியேற்றுகிறது. இதனால்தான் இந்தக் காடுகள், பூமியின் நுரையீரலாக மற்றும் காற்று குளிரூட்டிகளாகவும் (Air Conditioner) செயல்படுகின்றன. அதுமட்டுமன்றி உலக வெப்பமயமாக்குதலையும் (Global Warming) கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

எவ்வாறு புயல், வெள்ளம், பூகம்பம் என இயற்கை சீற்றம் ஏற்படுகிறதோ, அதேபோல் காட்டுத்தீயும் இயற்கையின் ஒரு அங்கம்தான். கோடை காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்போது மரங்கள் ஒன்றோடொன்று மோதும்போதும், இடி-மின்னல்களாலும் காட்டுத்தீ ஏற்படுகிறது. ஆய்வுகளின்படி, 94 சதவிகித காட்டுத் தீயானது, மனிதர்களின் கேடுகளால் மட்டுமே உருவாகிறது.

காட்டுத்தீ ஒருவிதத்தில் நல்லதும் கூட; ஏனெனில் காய்ந்த இலைகள், சருகுகள், மரங்கள் எரிந்து மண்ணில் புதைந்து கால்சியம், பொட்டாசியம், மக்னிசீயம் போன்ற கனிமங்களை மண்ணில் அதிகப்படுத்துகிறது. வடஅமெரிக்கக் கண்டத்தில், ஆண்டுக்கு 1,00,000 ஏக்கர் நிலம் காட்டுத் தீயால் அழிகிறது. காட்டுத் தீயானது ஒருவகையில் காட்டின் வளர்ச்சியை புதுப்பிக்கப் பயன்படுகிறது.

படிக்க :
♦ அமேசான் : பற்றியெரியும் பூமிப்பந்தின் நுரையீரல் !
♦ பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !

பிரேசிலின் INPE நிறுவனம் (National Institute for Space Research) பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் மட்டும், இந்த ஆண்டு (2019) ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 72,843 தீ கொழுந்துவிட்டு எரியும் இடங்களை (Fire Hotspot) கண்டுபிடித்துள்ளனர். அமேசான் காட்டுத் தீயினால் எழும்பிய புகையானது 3000 கிலோ மீட்டர் கடந்து சென்றுள்ளது. உலகின் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களிடம், அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீ பற்றிய தகவல்கள் 2013-ம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி மற்ற ஆண்டுகளைவிட, 2019-ம் ஆண்டு மட்டும் காட்டுத்தீயானாது 85% அதிகமாக உள்ளது.

Amazon Forest Fireஅமேசான் காட்டுத்தீ இதுவரை 200 மில்லியன் டன்கள் (Tonnes) கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவை வெளியேற்றியுள்ளது. இது கடந்த வருடம் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் வெளியேற்றப்பட்ட கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவின் அளவைவிட மூன்று மடங்கு அதிகமாகும். நாசா (NASA)-வின் ஆய்வின்படி, கடந்த வருடம் ஜூலை மாதத்தை விட, 2019-ம் வருடம் ஜூலை மாதம் காட்டுத்தீயானது 90 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் கருத்தின்படி இந்த காட்டுத்தீக்கு முக்கிய காரணம் காடழிப்பு (Deforestation) தான். கிளைமேட் வாட்ச் (Climate Watch) என்கிற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவன கணக்குப்படி, 2000-ம் முதல் 2009-ம் ஆண்டு வரை 320 லட்சம் ஏக்கர் பரப்பளவு அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடங்களை விட, இந்த வருடம்தான் அதிக காடழிப்பு நடந்துள்ளது என்று INPE நிறுவனமும் தகவல் வெளியிட்டுள்ளது.

நாசா(NASA)-வால் இந்த வருடம் மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் எவ்வாறு காடழிப்பு அதிகமான அளவில் ஏற்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. (Bio-Sphere Sciences Laboratory, NASA). சட்டவிரோதமான காடழிப்புகள் தான் இந்த காட்டுத்தீக்கு மிகமுக்கியக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 2019-ம் ஆண்டுக்கு பிறகு கனரக வாகனங்களை (Bulldozer, Trucker) கொண்டு மரங்கள் மிகப்பெரிய அளவில் அழிக்கப்பட்டுள்ளன.

படிக்க :
♦ கேள்வி பதில் : டாலர் மட்டும் உலகம் முழுவதும் இருப்பது ஏன் ? 
♦ ஜய் பொல்சானரோ : அமேசான் பழங்குடிகளை அழிக்க வந்த பிரேசிலின் மோடி

பிரேசிலின் முந்தைய ஆட்சி (2009 – 2012) காலங்களில், சட்டவிரோத காடழிப்பு, தீவைத்தல் ஆகிவற்றிற்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு காடழிப்பு 75 சதவிகிதம் குறைக்கப்பட்டிருந்தது. பிரேசிலின் வலதுசாரிக் கொள்கைகொண்ட ஜனாதிபதியான ஜய் போல்சானரோ, தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, நாட்டின் பெருளாதாரத்தை உயர்த்துவதற்கு அமேசான் காடுகளின் வளங்கள் பயன்படுத்தப்படும் என்றார். போல்சனாரோ பதவியேற்றபின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக சட்டவிரோத காடழிப்பு அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டது.

Amazon Forest Fire Data
அமேசான் காட்டுதீ குறித்த புள்ளி விவரம் (2018 மற்றும் 2019)

சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை நிறுத்தப்பட்டன. மரங்களை வெட்டுதல், காட்டை அழித்தல், விவசாயம் முடிந்தபிறகு நிலத்தை தீவைத்தல் முறை (Slash and Burn method) என போல்சனாரோ பதவி ஏற்ற பிறகு பல கேடுகள் அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டன. மாட்டிறைச்சி ஏற்றுமதிக்காகவும், விவசாயத்திற்காகவும், மரம் வெட்டும் தொழில்களுக்காகவும் அமேசான் காடுகள் இந்த 2019-ம் ஆண்டு கடந்த ஒன்பது மாதங்களில் 20% அழிக்கப்பட்டுள்ளன.

INPE நிறுவன இயக்குனர், முக்கிய தகவல்களை வெளியிட்டதால் போல்சனாரோ அவரை இயக்குனர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார். நூறு நிபுணர்களை கொண்ட பிரேசிலின் National Enviornment Council குழுவை கலைத்துவிட்டு, ஜனாபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து நிபுணர்கள் கொண்ட குழுவாக மாற்றியமைத்தார். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வேண்டுமென்றே அமேசான் பற்றி பொய்யான தகவல்களை பரபரப்புகின்றன என்கிறார் போல்சனாரோ. உலக வெப்பமயமாகுதல் பற்றி சிறு கவலையும் கொள்ளாதவர்.

2010-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் போதும் கூட 60,000 தீ கொழுந்துவிட்டு எரியும் (Fire Hotspot) இடங்கள் பிரேசிலில் கண்டறியப்பட்டன. ஆனால், இந்த வருடம் 2019-ல் கடந்த எட்டு மாதங்களுக்குள் 72,843 கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2010-ம் ஆண்டை ஒப்பிடும் போது, இந்த வருடம் மிதமான வெப்பம் தான் வீசியது. இந்த வருட காட்டுத்தீக்களால் இதுவரை 2000 லட்சம் டன்கள் கார்பன்-டை-ஆக்ஸைட்(CO2) வாயு வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் 5000 லட்சம் டன்கள் வெளியேற்றப்பட்டிருக்கும்.

Jair-Bolsonaro
பிரேசில் ஜனாதிபதி ஜய் போல்சானரோ.

சட்டவிரோத காடழிப்பு ஒன்றே அமேசான் காட்டுத்தீக்கு காரணம் என உறுதியாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த வருடத்திற்குள் காட்டுத்தீயானது இன்னமும் பலமடங்கு பெருகும் என்பதால், இந்த மழைக்காடானது (Rain Forest) பாலைவனமாக மாறும் அபாயம் உருவாகியுள்ளது. சட்டவிரோத காடழிப்பும், உலக வெப்பமயமாக்குதலும் அமேசான் மழைக்காடுகளை மூன்றில் இரண்டு பங்கை பாலைவனமாக்கும். அமேசான் காடுகளில் ஏற்படும் பருவகால மாறுதல்கள் பிரேசில் மட்டுமின்றி தென்அமெரிக்க, வடஅமெரிக்க மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கும் கடுமையான பாதிப்புகளை மிக விரைவில் ஏற்படுத்தும்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காடுகளை இந்தியாவின் அமேசான் காடுகள் என்றால் மிகையில்லை. மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதுமாக பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என மாதவ் காட்கில் அறிக்கை கூறியது. ஆனால், அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, உல்லாச விடுதிகள்(Resorts), மிகப்பெரிய வணிக வளாகங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களும் மேற்குத் தெடர்ச்சி மலைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. அதனால்தான், வருடாவருடம் கேரளாவில் பெருவெள்ளத்தினால் மிகப்பெரிய சேதம் ஏற்படுகிறது. அதே, மேற்குத் தெடர்ச்சி மலையில்தான் நியூட்ரினோ திட்டத்திற்கு மலையை குடைந்து மிகப்பெரிய ஆராய்ச்சி மையம் கட்ட முனைகிறார்கள்.

இயற்கையை நாம் அழித்தால், இயற்கை நம்மை மட்டுமில்லாது, நம் சந்ததினரையும் நிச்சயம் அழிக்கும். இயற்கையோடு இசைந்து வாழப் பழகுவோம்!
இயற்கையைக் காத்து, நமையும், நம் சந்ததினரையும் காப்போம்!

Dr.சேதுபதி ஆறுமுகம், Phd (Geology)
சுற்றுச் சூழல் ஆர்வலர்.

disclaimer

ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை

Hepatitis-B-Amitabh-Bachchan

வரைத் தெரியாத இந்தியர்கள் இருக்க முடியாது. Big “B” என்று அழைக்கப்படும் இவர் தனது வலைப்பூவில் எழுதியுள்ள அனுபவக் கட்டுரை நம் பார்வையை ஈர்த்தது.

அவர் கூறியிருப்பதாவது “எனது கல்லீரல் 75 சதவிகிதம் செயலற்று விட்டது. மீதம் உள்ள 25 சதவிகிதத்தில் நான் இயங்கி வருகிறேன்.” அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும் செய்தியாக இருக்கிறது.

அவருக்கு இறைவன் பூரண உடல் நலத்தை தருவானாக…

அவருக்கு கல்லீரல் சுருக்க நோயான CIRRHOSIS வந்துள்ளது. அவர் மதுவை ஒரு முறை கூட தீண்டாத ஒரு சில நடிகர்களுள் ஒருவர். பொதுவாக ஒரு பொது அபிப்ராயம் இங்கு நிலவுகிறது. மது அருந்துவோருக்குத்தான் கல்லீரல் நோய் வரும் என்பது தான் அது.

உண்மையில் அதுவொரு மூடநம்பிக்கையே. மதுவை அறவே சுவைக்காத பலருக்கும் கல்லீரல் நோய் வரலாம். அதற்கான காரணங்கள் :

  • ஹெபாடைடிஸ் பி எனும் வைரஸ் கிருமித் தொற்று
  • NASH எனும் Non Alcoholic Steato Heptosis.

இந்த நோய்(NASH) மது அருந்தாதவர்கள் ஆனால் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அதிகம் உண்பர்வகளுக்கு வரும் நோயாகும். இதை ultra sound abdomen and pelvis ஸ்கேனில் “Fatty liver” என்று குறிப்பிடுவார்கள்.

இந்த Fatty liver நோயில் படிநிலைகள் உண்டு, கிரேடு 1,2,3 என நோய் முற்றும். இதன் கடைசி நிலை சிரோசிஸ் எனும் கல்லீரல் அழற்சி நோய் தான்.

எனது தந்தையும் இந்த வகை மது அருந்தாதவர்களுக்கு வரும் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார். அமிதாப் பச்சனுக்கு இந்த நோய் வந்ததர்க்கு காரணமாக இருப்பது “ஹெபாடைட்டிஸ் பி” நோய்த்தொற்று.

அவர் 1982-ம் ஆண்டு “கூலி” எனும் படப்படிப்பில் இருக்கும் போது பயஙகரமான விபத்து ஏற்பட்டு அவரது மண்ணீரலில் (spleen) பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
அதில் அபாயகரமான அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது (Near fatal situation) அவரைக்காப்பாற்ற பல யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது.

CIRRHOSIS-Liver
கல்லீரல் சுருக்க நோயான CIRRHOSIS

அப்படி ஏற்றப்பட்ட ஒரு யூனிட் ரத்தத்தில் “ஹெபாடைடிஸ் பி” வைரசும் சேர்ந்து வந்து விட்டது. கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் தான் அவர் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

இது எதைக்காட்டுகிறது என்றால் அமிதாப் போன்ற உச்ச நிலை நடிகர்கள் கூட தங்களுக்கு வருடம் ஒருமுறை ஹெல்த் செக் அப் செய்து கொள்வதில்லை. அல்லது அவர் செய்த ஹெல்த் செக் அப்களில் “ஹெபாடைடிஸ் பி” குறித்த பரிசோதனை இடம்பெற வில்லை என்று தெரிகிறது.

ஹெபாடைடிஸ் பி வைரஸை பொருத்த வரை ஒன்னு சுனாமி போல சீறிப்பாய்ந்து கல்லீரலை ஆறு மாதம் முதல் ஒரு வருடத்துக்குள் புசித்து ஏப்பம் விட்டு விடும். அல்லது கும்பகர்ணத்துயில் கொண்டு பல ஆண்டுகள் கழித்து எழுந்து சோம்பேறித்தனமாக தனது வேலையை செய்து கொண்டிருக்கும்.

பின்னாள் சொன்ன கும்பகர்ண வெரைட்டியாக அமைந்து விட்டால், அவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள். அமிதாப்பும் அந்த வகையில் தான் வருகிறார். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் (1982 முதல் 2012 வரை) தூங்கி விட்டு இப்போது எழுந்து பிரச்சனை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

படிக்க:
மூளை செயலிழப்பு : மந்திரம் தீர்வு தருமா | மத்திய அரசு ஆய்வு !
♦ குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உண்டாக்குவது எப்படி ?

நவீன மருத்துவம் இந்த வைரஸை எப்படி அணுகுகிறது?

கல்லீரல் ரத்தப்பரிசோதனையில் யாருக்கேனும் பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு கட்டாயமாக Viral markers எனும் இந்த ஹெபாடைடிஸ் வைரஸ் தொற்று இருக்கிறதா ? என்று பார்க்கப்படுகிறது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து பார்த்து எந்த நிலையில் பிரச்சனை இருக்கிறது என்று கண்டறியப்படுகிறது.

Hepatitis B என்று அறியப்பட்டுவிட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. அதற்குப்பிறகு தான் உண்மையான வாழ்க்கை இருக்கிறது. இதற்கு அமிதாப்பச்சனே உதாரணம்.

Hepatitis B வைரஸின் அளவை குறைக்க நம்மிடம் வைரஸ் கொல்லி மாற்று மருந்து இருக்கிறது. அதை குடல் மற்றும் கல்லீரல் நோய் சிறப்பு மருத்துவர்கள் தருவார்கள்.

இந்த நோய் எப்படி பரவுகிறது?

  • ரத்தம் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட விசயங்களை பகிர்ந்து கொள்வதால் பரவும்.
  • பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவும்.
  • தாயிடம் இருந்து சேய்க்கு பரவும்.

தற்போது ஏற்றப்படும் ரத்தம் அனைத்தும் ஹெபாடைடிஸ் வைரஸ்கள் இருக்கின்றனவா? என்று கட்டாயம் சோதித்த பின் ஏற்றப்படுகின்றன.

Hepatitis B
ஹெபாடைடிஸ் வைரஸ்

ஹெபாடைடிஸ் பி தொற்று இருப்பவர்கள் ஆணுறை / பெண்ணுறை அணிந்து பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடலாம். ஹெபாடைடிஸ் பி-க்கு எதிரான தடுப்பூசி குழந்தை பிறந்தவுடனே போடப்படுகிறது.

அதற்குப்பிறகு 45 நாட்கள், 75 நாட்கள் , 105 நாட்கள் போடப்படும் பெண்ட்டாவேலண்ட் தடுப்பூசியில் ஹெபாடைட்டிஸ் பி-க்கு எதிரான தடுப்பு மருந்து இருக்கிறது. ஒருவேளை உங்களுக்கு இந்த நான்கு ஊசிகளும் போடப்பட்டிருக்கவில்லை என்றால் கவலை வேண்டாம்..

இதே தடுப்பூசியை முதல் நாள் (0 day); ஒரு மாதம் கழித்து (30th day);
பிறகு ஆறாவது மாதம் ( 6th month) என்று போட்டுக்கொண்டால் இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பு சக்தியை நம்மால் பெற முடியும். இந்த தடுப்பூசி விலை குறைந்த எளிய தடுப்பு முறையாகும். இதை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

ஹெபாடைடிஸ் பி வைரஸ் தொற்றால் ஏற்பட்ட கல்லீரல் நோய்க்கு முறையான நவீன மருத்துவ சிகிச்சை எடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

கல்லீரல் இடியைக்கூட தாங்கும் ஒரு உறுப்பு.
நம் உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு
அதன் நலனை பாதுகாப்பது நமது பொறுப்பு.

நன்றி அமிதாப்.
உங்களால் ஒரு விழிப்புணர்வு கட்டுரை பிறந்தது.

பின் குறிப்பு : எனது தந்தை கடந்த 2016-ம் ஆண்டு முதல் பேலியோ எனும் மாவுச்சத்தை குறைத்து கொழுப்பை கூட்டி உண்ணும் உணவு முறை + கல்லீரல் சிறப்பு நிபுணரின் ஊக்கம் மற்றும் மருந்துகளால் கல்லீரல் இயக்கத்தை இறைவன் கருணையால் முறையாகப் பேணி வருகிறார்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

குன்றத்தூரில் குழிகளுக்கு கொண்டாட்டம் | படக் கட்டுரை

1-porur-kundrathur-road-Slider

க்கள் தங்கள் குறைகளைக் கூற அதிகாரிகளுக்காகக் காத்திருந்த நிலைமை மாறி, அதிகாரிகள் நேரிடையாக மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிவார்கள் என்று தினத்தந்தி போன்ற ஜால்ரா நாளிதழ்களும் ஊடகங்களும் செய்திகளைக் கக்க ஆரம்பித்தன.

குறைகளைச் சொல்ல முடியாத தமிழகத்தின் இரத்தச் சாட்சியாக சென்னை போரூர் – குன்றத்தூர் முக்கியச் சாலை இருக்கிறது.

porur kundrathur road
போரூர் சிக்னல் அருகே.

ஆம், குண்டும் குழியுமாகவும், எந்நேரமும் கடும் போக்குவரத்து நெரிசலுடனும் காணப்படும் போரூர் – குன்றத்தூர் சாலை, கிட்டத்தட்ட 2 வருடங்களாகவே இப்படித்தான் இருக்கிறது. மழை பெய்தால் எந்த இடத்தில் குழி உள்ளது, எந்த இடம் சமதளமானது என்று கண்டுபிடிக்க முடியாது. அந்தச் சாலையில் வழக்கமாகச் செல்பவர்களே தடுமாறி விழுந்துதான் எழுந்திரிப்பார்கள். அவ்வப்போது செல்வோரின் நிலைமை பரிதாபத்துக்குரியது. சரி, மழை ஓய்ந்து ரோடு காய்ந்ததே என்று எண்ணினால், புழுதி கண்களை மறைக்கும்; மூச்சைத் திணறச் செய்யும்.

என்ன நடக்கிறது இங்கே?

பகுதிவாழ் மக்களிடமும், சாலையில் பயணிப்போரிடமும் கேட்டால், “ஏதோ திடீர்னு வர்றாங்க இரவோடு இரவா குழியத் தோண்டி, காலையில மண்ண போட்டு மூடிட்டுப் போயிடுறாங்க” என்கிறார்கள். சிலர், மெட்ரோ வாட்டருக்காகத் தோண்டியிருக்கிறார்கள் என்றும்; இன்னும் சிலர் இ.பி காரங்கதான் என்றும் வேறு சிலர் கேபிள் டிவிக்காரங்கதான் என்றும் கூறுகிறார்கள்.

porur kundrathur road
பெரும்பாலான கடைகள் மூடியே கிடக்கின்றன; அல்லது, பகலில் இரண்டு மூன்று மணிநேரம் மட்டுமே திறந்திருக்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டுக்கு ரூ.396 கோடியில் மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்குவதற்கான ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக கோயம்பேட்டிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்குத் தேவையான இராட்சச குழாய்கள் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை. உதாரணமாக மதனந்தபுரம் நாராயணா பள்ளி அருகே சாலையில் தோண்டப்பட்ட குழியை மேலாக மண்ணைப் போட்டு மூடியுள்ளது தெரியாமல் சென்ற வேன் அந்தக் குழியில் மாட்டிக்கொண்டது. மேலும், கர்ப்பிணிகள், வயதானோர், பள்ளிச் சிறுவர்கள், வியாபாரிகள் என அனைவரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அதிமுக எடப்பாடி ஆட்சியின் அலங்கோலத்தை அந்தப் பகுதி மக்களும் அந்தச் சாலையில் செல்லும் பயணிகளும் சொல்வதைக் கேளுங்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

ராஜன், மளிகைக் கடைக்காரர்

15 வருடமா மளிகைக்கடை நடத்துறேன். 9 மாதமா முன்பக்கமா தெறந்து வச்சு வியாபாரம் பண்ண முடியல. இந்த ரோடு சீர்கெட்டுப் போயி தூசு கருமேகம் மாதிரி கௌம்புது. சாலையே கொள்ளாத அளவு எந்த நேரமும் வாகனம் நெரிசல் உள்ள பகுதி இது. இங்கே வசிக்சிறவங்க முழுசா மூச்சு விட்டு பல மாதங்களாயிருச்சி. இருமுனா, தும்முனா கரி மாதிரி தூசு வருது. நெலம கொடுமையாயிருக்குது. பல குழந்தைங்க டாக்டரே கதியா கெடக்குது. எல்லோரும் நோயாளி மாதிரி ஆயிட்டோம்.

வியாபாரம் சுத்தமா இல்ல. இந்தப் பக்கமே யாரும் வர்றதில்லை; அப்புறம் எங்கே கடைக்கு பொருள் வாங்க வர்றது? வர்ற ஒன்னு ரெண்டு பேரும் பழைய பொருளையே வச்சிகிட்டிருக்கியான்னு கேக்குறாங்க. அவ்வளவும் தூசி. பொருளெல்லாம் அரை நாள்ல தூசி படிஞ்சி போயிடுது. எவ்வளவுதான் தொடைக்கிறது. இதனால வியாபாரத்துல நஷ்டம். கட வாடகை கொடுக்க முடியல. தண்டல் கட்ட முடியல. எங்க வேதனைய யாருகிட்டே சொல்றதுன்னே புரியல.

thirumalai & rajan
திருமலை, இருசக்கர வாகனம் பழுது பார்ப்பவர், கொளப்பாக்கம் மற்றும் ராஜன், மளிகைக் கடைக்காரர் (வலது).

திருமலை, இருசக்கர வாகனம் பழுது பார்ப்பவர், கொளப்பாக்கம்

இந்த மெயின் ரோட்டை ஏன் இப்படி பொளந்தாங்கன்னு தெரியல. கேட்டா மெட்ரோ வாட்டர் காரங்கதான் காரணம், அவன் வேலய முடிக்கல, டெண்டர் படியல, பணம் வரலன்னு ஏதேதோ சொல்றாங்க. இன்னொரு பக்கம் இ.பி காரங்க ஒத்துழைக்கல, நாங்க என்ன பண்றதுன்னு மெட்ரோகாரங்க சொல்றாங்க. ஒங்க ஆட்டத்த எங்க தலமேல ஏன்டா ஆடுறீங்கன்னு கேட்டா, இங்கே வேல செய்ய வர்றவங்க, சொல்றத நாங்க செய்யிறோங்கிறாங்க. கடைசியில எங்க தொழில்தான் மண் மூடி போயிடும் போல. வேல செய்யிறவங்களுக்கு சம்பளம் கொடுக்க முடியல. வேலைக்கு பாக்குற ரெண்டு பேரும் வரல. கடைய இழுத்து மூடிடலாமுன்னு தோணுது. ஆனால், எதிர்காலத்த நெனச்சா பயம் தட்டுது. போற உயிரு கடையிலேயே போகட்டுமுன்னு உக்காந்திருக்கேன்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : ஜாதி ஒழிய வேண்டும் – ஏன் ?
♦ சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !

***

கணேஷ், டீ – கடைக்காரர்

ganesh tea shop
கணேஷ், டீக்கடை உரிமையாளர்

சொன்னா நம்ப மாட்டீங்க, ஏறக்குறைய ஒரு வருஷமாகப் போகுது, இந்த ரோடு மண் ரோடாகி. அப்பயிருந்த வியாபாரம் இல்ல. இதுவரைக்கும் எனக்கு 1 லட்சம் ரூபாய் நஷ்டம். மாஸ்டர் கூலி, கரண்ட் பில், வாட்டர் கேன், கடை வாடகை எதயும் சமாளிக்க முடியல. தண்டல், தண்டலுன்னு தண்டல் வாங்கியே பொழப்பு போகுது. அவனும் கைய விரிச்சு எப்ப சண்டைக்கு வருவான்னே தெரியல. போட்ட போண்டா, பஜ்ஜிய சுத்தமா கொஞ்ச நேரம் வைக்க முடியல. வாயில வக்கிறவன் மண்ணு மண்ணுன்னு காறித் துப்புறான். அரைகுறையா பஜ்ஜி தின்னவங்கிட்டே பணம் கேக்குறதுக்கே பயமா இருக்கு. ஏன்டா மண்ண கொடுத்துட்டு பணம் கேக்குறன்னு முறைக்கிறாங்க.

***

சுந்தர், பிஸ்கட் போடுபவர்

sundar
சுந்தர்

தினமும் இன்னொரு வண்டி மேல விழுந்து எழுந்துதான் இங்கே வர்றேன். இந்த லட்சணத்துல லோடு வண்டிங்க போனா இன்னும் சுத்தம். ரோடு பிளாக் ஆயிடும். அன்னைக்கு எம் பொழப்பு நாறிடும். எல்லா பக்கமும் வண்டிங்க அடைச்சிகிட்டு நிக்கும். சைக்கிள் டயரு கூட போக வழி இருக்காது. மூனு கடைக்கு சரக்குப் போட மூனு மணி நேரமாகும். அதுக்கப்புறம் எங்கே நாலு கடை ஏறி எறங்குறது. ஒரு நாளைக்கு 50 கடை ஏறி இறங்குனாதான் 500 ரூபாயாவது கெடக்கும். இந்த சீர்கெட்ட ரோட்டால பலநாளா வியாபாரம் இல்லாமத்தான் போறேன். சரக்குத் தேங்கிருச்சின்னா கெட்டுப் போகுது. என்ன பண்றது வேற தொழிலும் எனக்குத் தெரியாது.

***

ஜேம்ஸ், எலக்ட்ரானிக் கடைக்காரர்

james
ஜேம்ஸ்

இந்த ரோட்டுனால கௌம்புற புழுதியினால இங்கே சுத்தியிருக்குற ஆஸ்பிட்டலுங்களுக்குத்தான் கொள்ள லாபம். ரோட்டுல போறவங்களுக்கும் தினமும் விபத்து நடக்குது. வீட்டுல இருக்குறவங்களுக்கும் தூசினால உடம்பு கெட்டுப் போகுது. இருமல், சளி, இழுப்புன்னு ஆயிரதெட்டு நோய் வருது. குறைகாலத்துக்கு எப்படி உயிர் வாழப் போறோமுன்னு தெரியல.

***

பாபு, ஆட்டோ டிரைவர்

babu
பாபு

சார், நாங்க ஆட்டோ ஓட்டல, படகு ஓட்டுறோம். கடல் அலையில போற மாதிரி ரோட்டுல போறோம். பின் சீட்டுல உக்கார்றவங்க ரெண்டே குலுங்கள்ல முன் சீட்டுக்கு வந்துருவாங்க. உசாரா ஸ்டேரிங்க புடிக்கலன்னா, வெளியிலதான் போயி விழணும். ரெண்டு கிலோ மீட்டர் போறதுக்கு அரை மணி நேரமாகுது. ஆட்டோவில ஏர்றவங்க திடீர்னு நாங்க நடந்தே போறோமுன்னு எறங்கிடுவாங்க. ஆட்டோவில நாளாவது கியர் போட்டே பல மாசங்களாகுது, முழுக்க ரெண்டாவது கியர்லதான் போறோம். பெட்ரோல் டபுளா குடிக்குது. ஆட்டோ பார்ட்ஸ் அடிவாங்குது. இப்ப வருமானம் பாதியாயிடுச்சு; செலவு டபுளாயிடுச்சு. ஏண்டா வண்டிய ஓட்டுறோமுன்னு இருக்குது. வீட்டுல பசியோடவாவது படுத்துத் தூங்கலாம். ஆட்டோவுக்கு ஏன் வீண் செலவுன்னு பல டிரைவருங்க ஆட்டோவை எடுக்குறதில்ல.

படிக்க:
♦ முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை
♦ மழையில் கரையும் தார் சாலை ! | பாகலூர் பகுதி மக்கள் போராட்டம்

***

ஜெயபாலன், ஓலா டிரைவர்

jayabalan
ஜெயபாலன்

நான் விக்னேஷ்வரா நகர்லதான் இருக்கேன். இருந்தாலும் இந்தப் பக்கம் சவாரி வந்தா நான் எடுக்கிறதே இல்ல. இந்த இடமே இப்படி சுடுகாடா மாறுனதுக்குக் காரணம் அதிமுக கட்சிதான். கமிசன் கமிசன் கமிசன். அது பாதாளம் வரைக்கும் போயிருச்சு. கடைசில அந்தக் கமிசன் பள்ளத்துல ஜனங்கள பொதச்சிடுவாங்க போலிருக்கு. இப்போ இதுதான் நடக்குது.

இந்த ரோட்ட ஏன் நோண்டுனாங்க, இதுவரைக்கு ஏன் மூடலன்னு யாருக்கும் எதுவும் தெரியாது. எவனும் சொல்ல மாட்டேங்கிறான். மெட்ரோ வாட்டருங்கிறான். இபி-ங்கிறான். டிரைனேஜ்ங்கிறான். கேபிள் பொதைக்கிறோமுங்கிறான். என்ன பொதைக்கப் போறாய்ங்கன்னு யாருக்கும் தெரியல. கடைசில ஜனங்கதான் அதுல உழுந்து வார்றாங்க. இப்ப ஒரு செய்தி வருது. யாருக்கும் தெரியாது இங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் கார் ஃபேக்டரிக்கு தண்ணி போகப் போகுதுன்னு சொல்றாங்க.

ராத்திரி 11 மணியானா 20 வண்டி ஜேசிபி, டிப்பருன்னு வருது. 500 அடி நீளத்துக்கு தோண்டுறாங்க. 5 அடி ஆழத்துல, 3 அடி அகலத்துல பைப் பொதைக்கிறாங்க. காலையில பாத்தா திடீர்னு பள்ளம் மேடு. போறவங்க வர்றவங்க, அதில விழுந்து வார்றாங்க. மழை பேஞ்சா இன்னும் கொடுமை. எங்கே பள்ளம், எங்கே மோடுன்னு தெரியாது. வண்டியில போறவங்க கொழந்த குட்டியோட கீழே விழுறாங்க. இங்கிருக்கிறவங்க இவங்களோட நிலமையே இப்படியிருக்க, எடப்பாடியோ கோட்டு சூட்டு போட்டு லண்டன் போயிட்டாரு. நாய் படாத பாடு நாமதான். அவங்களுக்கு ஓட்டுப் போட்டோம். இப்போ ரோடு கூட இல்லாது சாகுறோம்.

***

மேலே நாம் பார்த்தது, அடிப்படை வசதிகளைத் தீர்க்க எடப்பாடி அரசு எப்படியெல்லாம் ‘முனைப்பு’ காட்டுகிறது என்பதற்கு மொத்தத் தமிழகத்தின் ஒரு சிறு துளி. இந்த இலட்சணத்தில் வேலூர் மாவட்டத்தில் “முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு” திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

அதையும் நம்பினார்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல் நத்தம் கிராம மக்கள். மனுக்களைப் பட்டியலிட்டு மண்டல தாசில்தாரை பார்க்கச் சென்றார்கள். அலுவலக வளாகத்தில் அதிகாரிகளைக் காணவில்லை, மேய்ந்து கொண்டிருந்த மாடுகளின் வாயில் மனுக்களைத் திணித்து தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டார்கள்.

ஆறுகளின் மார்பறுத்து மணல் கறந்த எடப்பாடி கும்பல், நம்மைப் பார்த்து கேட்கிறது, ‘ஜனங்களே உங்கள் குறைகளை எங்களிடம் தெரிவியுங்கள், ஒரே மாதத்தில் நிவர்த்தி செய்கிறேன்’ என்று. நமது குறையை சரி செய்வோம், மனுக்களை நீட்டியல்ல; சுட்டு விரலை நீட்டுவோம். அது சுட்டிக் காட்டும் குற்றவாளிகள் யார் என்று.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

டாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34

0
mandeville-the-Fable-of-the-bees-political-economy-Slider

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 34

டாக்டர் மான்டெவில்லின் புதிர்கள்

அ.அனிக்கின்

ண்டனில் டிஃபோ வழக்கமாகப் போகின்ற அதே சிற்றுண்டி விடுதிகளுக்கும் புத்தகக் கடைகளுக்கும் இன்னொரு கவர்ச்சிகரமான நபர் வருவதுண்டு. அவர் பெயர் டாக்டர் பெர்னார்டு மான்டெவில். அவர் வைத்தியம் செய்யாத மருத்துவர், ஏழைகள் வசிக்கும் பகுதியில் குடியிருந்தவர், நண்பர்களோடு ஆனந்தமாகப் பொழுதுபோக்குவதில் ஆசை கொண்டவர். மற்றவர்கள் விரும்ப முடியாத புகழ் அவருக்குக் கிடைத்திருந்தது. மது பானங்களின் உபயோகத்தை ஆதரித்துப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதற்காக மதுத் தயாரிப்பவர்கள் அவருக்கு வாடிக்கையாகப் பணம் கொடுத்து வந்தார்கள், முக்கியமாக அந்தப் பணத்தைக் கொண்டுதான் அவர் உயிர் வாழ்ந்தாரென்று சொல்லப்பட்டது .

பெர்னார்டு மான்டெவில் ஹாலந்து நாட்டில் 1670-ம் வருடத்தில் பிறந்தார். 1691-ம் வருடத்தில் லெய்டென் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துச் சிறிது காலத்துக்குப் பிறகு அவர் இங்கிலாந்துக்குப் போனார். அவர் திருமணம் செய்து கொண்டார், அங்கேயே லண்டனில் தங்கினார், இங்கிலாந்துக் குடியுரிமையைப் பெற்றார்; அவருடைய வாழ்க்கையைப் பற்றி அதிகமான விவரங்கள் தெரியவில்லை. 1733-ம் வருடத்தில் அங்கேயே மரண மடைந்தார்.

அவர் தத்துவஞானி, எழுத்தாளர் என்ற வகையில் அடைந்த புகழுக்கு ஒரு புத்தகமே காரணமாக இருக்கிறது. 1705-ம் வருடத்தில் முணுமுணுக்கும் தேன்கூடு அல்லது நேர்மையாக மாறிய போக்கிரிகள் என்ற தலைப்புள்ள சிறு கவிதை நூலை ஆசிரியர் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டார். கவிதை சாதாரணமாகவே இருந்தது; அந்த நூல் அதிகமான கவனத்தைப் பெறவில்லை. 1714-ம் வருடத்தில் அந்தக் கவிதையோடு நீண்ட கட்டுரையையும் சேர்த்து வெளியிட்டார். அந்தப் புத்தகத்துக்கு தேனீக்களின் கதை அல்லது தனிப்பட்ட தீயொழுக்கம் – பொதுஜன அனுகூலம் என்ற தலைப்பைக் கொடுத்திருந்தார். இந்தத் தலைப்பில் தான் அந்தப் புத்தகம் பிரபலமாயிற்று.

Bernard_Mandeville
டாக்டர் பெர்னார்டு மான்டெவில்

ஆனால் இந்தப் பதிப்பும் கூட அதிகமான கவனத்தைப் பெறவில்லை என்று தோன்றுகிறது. 1723-ம் வருடத்தில் தேனீக்களின் கதையின் புதிய பதிப்பை சமூகத்தின் இயல்பைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி என்ற ஆர்ப்பாட்டமான துணைத் தலைப்போடு வெளியிட்டார். இதுவரை மான்டெவில் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த விளைவு இப்பொழுது ஏற்பட்டது. மிடில் செக்ஸ் பிராந்தியத்தின் நீதிபதி அந்தப் புத்தகம் ‘சமுதாயத்துக்குக் கேடானது’ என்று கருத்துத் தெரிவித்தார்; பத்திரிகைகளில் இப்புத்தகத்தைப் பற்றி வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்களில் மான்டெவில் உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்டார். அவருடைய வாழ்நாளிலேயே அந்தப் புத்தகத்துக்கு ஐந்து பதிப்புக்கள் வெளியிடப்பட்டன. 1729-ம் வருடத்தில் தேனீக்களின் கதையின் இரண்டாம் பகுதியை வெளியிட்டார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்த பொழுது இரண்டு நூற்றாண்டுக் காலம் இலக்கியத்தில் மான்டெவிலைப் பற்றி வெளிவந்திருக்கும் குறிப்புகளின் நீண்ட பட்டியலையும் இணைத்து வெளியிட்டது. அவரைப் பற்றி மார்க்ஸ், ஆடம் ஸ்மித், வால்டேர், மெக்காலே, மால்தஸ், கெய்ன்ஸ் ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.

ஆங்கில அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியில், குறிப்பாக ஸ்மித், மால்தஸ் ஆகியோர் மீது (இருவருமே அவரை நயமில்லாதவர், நன்மையில் நம்பிக்கையற்றவர் என்று சொல்லி ஒதுக்கியது வேடிக்கையானதே) மாபெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தார். இந்தத் தாக்கம் முக்கியமான இனங்களைப் பற்றிய (மதிப்பு, மூலதனம், லாபம், இதரவை) விளக்கத்தில் ஏற்படவில்லை, ஆனால் மூலச் சிறப்புடைய மரபுக்கு ஆதாரமாக இருந்த அடிப்படையான தத்துவஞான அணுகுமுறையில் இந்தத் தாக்கம் அதிகமாக இருந்தது.

படிக்க:
கேள்வி பதில் : டாலர் மட்டும் உலகம் முழுவதும் இருப்பது ஏன் ? 
♦ சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !

”தனிப்பட்ட தீயொழுக்கம் பொதுஜன அனுகூலம்” என்ற சொற்றொடரில் மான்டெவிலின் முக்கியமான புதிர் அடங்கியிருந்தது. இதில் “தீயொழுக்கம்” என்பதற்குப் பதில் ஸ்மித்தின் பிரபலமான “சுயலாபம்” என்ற சொல்லை உபயோகித்துப் பாருங்கள். முதலாளித்துவ சமுதாயத்தைப் பற்றிய ஸ்மித்தின் முக்கியமான கருத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தனி நபரும் தன்னுடைய சுயலாபத்தை அறிவோடு தேட அனுமதிக்கப்பட்டால், மொத்த சமூகமும் தழைத்துச் செழிப்பதை அது ஊக்குவிக்கும், அதன் செல்வத்தைப் பெருக்கும். அறநெறிச் சிந்தனைகளின் தத்துவம் என்ற புத்தகத்தில் ஸ்மித் மான்டெவிலைப் பின்வருமாறு குறை கூறினார்: தேனீக்களின் கதையின் ஆசிரியர் எல்லா விதமான தன் முனைப்பான முயற்சிகளையும் செயல்களையும் ”தீயொழுக்கம்’ என்று கூறுவது மட்டும் தவறானதாகும். உதாரணமாக, சுயலாபத்தைத் தீயொழுக்கம் என்று கூற முடியாது.

ஆனால் பொருளாதார விஞ்ஞானத்தின் வரலாற்றுக்கு மான்டெவிலின் முக்கியத்துவம் இதனோடு நின்றுவிடவில்லை. அவருடைய அங்கதக் கவிதையில் அவர் முதலாளித்துவ சமூகத்தைக் கடித்து விடுவது போல விமரிசனம் செய்தார்; அதன் அடிப்படையான தீயொழுக்கங்களில் சிலவற்றை முதலில் கண்டுபிடித்தவர்களில் அவரும் ஒருவர். இது தான் அவருடைய “ஒழுக்கஞ்சாராத் தன்மை” என்று சொல்லப் படுவதாகும். மார்க்ஸ் அவரை “நேர்மையும் தெளிவான சிந்தனையும் கொண்ட மனிதர்”(1)  என்று கூறுகிறார்.

தேன்கூடு என்பது மனித சமூகம்; அதை மான்டெவில் காலத்திய முதலாளித்துவ இங்கிலாந்து என்றும் சொல்லலாம். அவருடைய கற்பனைக் கதையின் முதற்பகுதியில் இங்கிலாந்தைப் பற்றி ஏளனம் செய்து எழுதியிருப்பது ஸ்விப்ட் போன்ற மாபெரும் எழுத்தாளரை நினைவுபடுத்துகிறது. அந்த சமூகம் அதிலுள்ள தீயொழுக்கங்கள், குறைகள், குற்றங்கள் முதலியவற்றின் காரணத்தினால் தான் இருக்க முடிகிறது. தழைத்துச் செழிக்க முடிகிறது என்பது அவருடைய கற்பனைக் கதையின் மூலக் கருத்தாகும். இந்த சமூகம் “செழிப்போடு” இருப்பதற்குக் காரணம் கோடிக்கணக்கான மக்கள். அவர்கள்

….. அரிவாளும் மண்வெட்டியும்
தூக்கிப் பாடுபடுமாறு
ஆயுள்வரை விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவற்றோடு இன்னும் பல் வகையான
கடின உழைப்பும் அவர்கள்
செய்தே தீர வேண்டும்.
கடைகெட்டவர்கள் தினமும்
வியர்வை வழியப் பாடுபட்டு
ஒரு வேளை உணவுக்காக
உடலையும் பலத்தையும்
அழித்துச் சாகிறார்கள்….(2)  

பணக்காரர்கள் சுகத்தையும் வசதிகளையும் விரும்புவதால், நாகரிகம் ஒப்பனை, கற்பனை, வீண் பெருமை முதலியவற்றுக்காகப் பல விதமான பொருள்களையும் வாங்குவதில் வீணாகப் பணத்தைச் செலவழிப்பதால் அவர்கள் இவ்விதம் பாடுபட வேண்டியிருக்கிறது. இந்த சமூகத்துக்குப் பேராசையுள்ள வக்கீல்கள், போலி மருத்துவர்கள், சோம்பேறித்தனமும் முட்டாள்தனமும் கொண்ட மதகுருக்கள், போர்த் தினவு கொண்ட தளபதிகள், குற்றவாளிகளும் கூட அவசியமானவர்கள். ஏன்? அவர்களுடைய நடவடிக்கைகள் பல விதமான பொருள்களையும் சேவைகளையும் – அவசியமாக்குகின்றன; அதனால் உழைப்பு ஆர்வமும் புதியனவற்றைக் கண்டுபிடிக்கும் திறமையும் செயலூக்கமும் முன்னேற்றமடைகின்றன.

mandeville-the-Fable-of-the-bees
டாக்டர் பெர்னார்டு மான்டெவில் நூலின் முகப்பு.

எனவே இந்த சமூகத்தில் ”இன்பம் கோடி ஏழைகளுக்கு வேலை தந்தது; இன்னொரு கோடிக்கு கர்வம் வேலை தந்தது; அங்கே பொறாமையும் பெருமையும் தொழில் அமைச்சர்கள்; உணவு, சாமான்கள், உடைகளில் நிலைத்த மடமையும் நிலையில்லாமையும் அவர்கள் பெற்ற குழந்தைகள்; வினோதமான ஏளனத்துக்கு உரிய தீயொழுக்கம் வர்த்தகத்தை இயக்கும் சக்கரம் ஆயிற்று.”(3)

(இங்கே ஒரு உதாரணத்தை நினைவுபடுத்தாமலிருக்க முடியவில்லை. அமெரிக்காவில் மோட்டார் கம்பெனிகள் வருடந்தோறும் புதுரகமான கார்களை உற்பத்தி செய்கின்றன. அதற்குத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் எந்தக் காரணமும் கிடையாது. கார்களை வைத்திருப்பவர்களிடமுள்ள வீண் பெருமையைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் எந்த விதத்திலாவது விற்பனையை அதிகரிப்பதற்காகவும் இப்படிச் செய்கிறார்கள். மான்டெவில் கூறுவது உண்மை, மக்களுடைய “நிலையற்ற தன்மையாலும்” மற்ற பலவீனங்களாலுமே எங்களுடைய தொழில் அமோகமாக முன்னேறியுள்ளது, இந்த பலவீனங்களை நாங்கள் வேண்டுமென்றே ஊக்குவிக்கிறோம் என்று இந்தக் கம்பெனிகளின் இயக்குநர்கள் ஒத்துக் கொள்வது சாத்தியமே.)

ஆனால் தேன் கூட்டில் தீயொழுக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று தேனீக்கள் முணுமுணுக்கின்றன. அவர்களுடைய புகார்களைக் கேட்டு அலுத்துப் போன ஜூபிடர் கடவுள் திடீரென்று தீயொழுக்கத்தை அகற்றிவிடுகிறார், தேனீக்களிடம் நற்பண்புகளை ஏற்படுத்துகிறார். ஆடம்பரச் செலவு போய் சிக்கனம் வருகிறது. இன்பம் மறைகிறது; சாதாரணமான இயற்கைத் தேவை களைத் தவிர வேறு விதமான நுகர்வு நின்றுவிடுகிறது. அடுத்தவர்களைச் சுரண்டி வாழ்கின்ற தொழில்கள் ஒழிக்கப்படுகின்றன. குறுகிய இன வெறி, பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் ஆசை ஆகியவற்றிலிருந்து விடு விக்கப்பட்டபிறகு ”அவர்களுடைய துருப்புகள் வெளிநாடுகளில் இல்லை; யுத்தங்களால் கிடைக்கும் அந்நியர்கள் பாராட்டையும் போலியான பெருமையையும் பார்த்துச் சிரிக்கிறார்கள்.” (4) 

சுருக்கமாகச் சொல்வதென்றால் மனித சமூகத்தின் வழக்கமான, ஆரோக்கியமான கோட்பாடுகள் அங்கே நிலவுகின்றன. ஆனால், என்ன பயங்கரம்! இது தான் அந்த சமூகத்தைச் சீர்குலைக்கிறது, அழிவை ஏற்படுத்துகிறது. மான்டெவில் இதைக் கவிதையில் வர்ணிக்கிறார்:

அழகான தேன் கூட்டைப் பாருங்கள்; அங்கே
நேர்மை இருப்பின் வர்த்தகம் அழிந்து போகும்.
வருடந்தோறும் அதிகமாகப் பணத்தை விரயமாக்கிய
வசதிகள் மறைந்தன; அவற்றைச் செய்து
பிழைத்த எண்ணற்ற ஏழைகளும் தவித்தார்கள்;
எங்கே போவார்கள்; என் செய்வார்கள்?
அத்தனை தொழில்களிலும் முன்பே நெருக்கடி;
கட்டிடத் தொழில் அநேகமாக அழிந்தது;
திறமை மிக்க கைவினைஞர்களுக்கு வேலையில்லை; அதுபோல
ஓவியர்களைப் புகழ்வதற்கு ஒருவருமில்லை ; பிரபலமான
கட்டிடக்கலைஞர்கள் சிற்பிகள் அனைவருக்கும் வேலை
யில்லை.
அவர்கள் உயிர் பிழைக்கவும் வழியில்லை.(5)

படிக்க:
ஜார்க்கண்ட் : தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கில் 11 பேரை விடுவித்த போலீசு !
♦ கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?

சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு பொருளாதார நெருக்கடி ஆரம்பமாகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது; கிட்டங்கிகளில் சரக்குகள் குவிந்து கிடக்கின்றன; விலைகள் குறைகின்றன; வருமானம் குறைகிறது; கட்டிட வேலைகள் நிறுத்தப்படுகின்றன. எப்படிப்பட்ட சமூகம் பார்த்தீர்களா? பிறரைச் சுரண்டி வாழ்பவர்களும் யுத்த வெறியர்களும் வீண் செலவு செய்பவர்களும் போக்கிரிகளும் அந்த சமூகத்தில் வளப்பெருக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

நற்பண்புகளான சமாதான ஆர்வம், நேர்மை, சிக்கனம், நிதானம் ஆகியவை பொருளாதார நாசத்தை உண்டாக்குகின்றன! – மான்டெவில் தன்னுடைய கருத்துக்களை விசித்திரமான முரணுரையின் வடிவத்தில் வெளியிட்டார் (அவருடைய கற்பனைக் கதையின் பின்னர் வருகின்ற உரைநடைப் பகுதியில் அவற்றை அதிகமான நிதானத்தோடு வெளியிட்டார்). இந்தக் கருத்துக்கள் இனி வரப்போகின்ற நூற்றாண்டுகளில் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் வெளிச்சத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சுவாரசியமானவையாகும். அதிக முக்கியமான இரண்டு விவரங்களை மட்டும் இங்கே குறிப்பிடுவோம்.

mandeville-the-Fable-of-the-bees-political-economy-Sliderஎல்லா வர்க்கங்களும் வகுப்பினரும் (நிலவுடைமையாளர்கள், மதகுருக்கள், அதிகாரிகள் ஆகியோர்) உற்பத்திக்கு உதவி செய்பவர்கள், பொருளாதார ரீதியாக அவசியமானவர்கள் என்ற கருத்தை மால்தசும் அவரைப் பின்பற்றியவர்களும் எடுத்துக் கொண்டனர். உபரி மதிப்புத் தத்துவங்கள் என்ற புத்தகத்தில் அடங்கியுள்ள சிறு பிரசுரத்தில் மார்க்ஸ் இந்தக் கருத்தை எதிர்ப்பதற்கு மான்டெவிலின் கருத்துக்களையும் அவருடைய நடையையும் கூடப் பயன்படுத்துகிறார்.

அவர் பின்வருமாறு எழுதுகிறார் : “… சாத்தியமான ஒவ்வொரு வகைத் தொழிலுமே உற்பத்திக்கு உதவக் கூடியது என்பதை மான்டெவில் முன்பே காட்டினார். முதலாளித்துவ சமூகத்துக்கு ஆதரவாக வாதம்புரிகின்ற மழுப்பல் வாதிகளைக் காட்டிலும் மான்டெவில் அதிகமான நேர்மையும் முடிவில்லாத துணிச்சலும் கொண்டவர்.”(6)

அளவுக்கு மீறிய சிக்கனம் ஆபத்தை ஏற்படுத்தும்; உற்பத்திக்குப் பயன்படாத செலவு, எந்த வடிவத்திலுள்ள ஊதாரித்தனமும் தேவையையும் வேலை வாய்ப்பையும் உருவாக்குகின்றபடியால் அது நன்மை தருவது அவசியமானதும் கூட என்ற கருத்து நம் காலத்தில் கெய்ன்சினால் புத்துயிர் கொடுக்கப்பட்டு ஒரு கட்டளை விதியாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் மான்டெவிலைத் (மால்தசையும் சேர்த்து) தன்னுடைய முன்னறிவிப்பாளர் என்று கருதினார்.

19-ம் நூற்றாண்டின் இறுதிக்கு வருகின்ற பொழுது முதலாளித்துவ அமைப்பில் எத்தகைய தீமையையும் பார்க்க மறுத்த முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், மான்டெவில் ஒரு போலியான கெட்டிக்காரர், சூழ்ச்சியான வாதத் திறமை உடையவர் என்று கருதியது . ஆடம் ஸ்மித் சிக்கனத்தை தனிப்பட்ட வகையிலும் பொதுமுறையிலும் மிகப் பெரிய நற்பண்பாக உயர்த்தியதைக் குறை சொல்ல வேண்டும் என்று அவர்களில் ஒரு வருக்குக்கூடத் தோன்றவில்லை. 1929-33-ம் வருடங்களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியே முக்கியமான முதலாளித்துவப் பொருள்ளியலாளர்களை மான்டெவில் காட்டிய வழியில் சிந்திக்குமாறு செய்தது. மக்கள் சேமிக்க ஆரம்பித்தால் அவர்கள் பண்டங்களை வாங்க மாட்டார்கள்; அப்படியானால் “பயனுள்ள தேவை” குறைந்துவிடும்; மக்கள் தங்களுடைய பணத்தை எந்த நோக்கத்துக்காவது எவ்வழியிலாவது செலவழிக்குமாறு செய்ய வேண்டும்.

டாக்டர் மான்டெவிலின் முரணுரைகளுக்கு வயது இருநூற்றைம்பதாகிறது; ஆனால் அவர் தம்முடைய விமர்சனக் கண்ணோடு ஆராய்ந்த சமூகத்தைப் போலவே, அந்த முரணுரைகளும் இன்னும் உயிரோடிருக்கின்றன.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)  K. Marx, Capital, Vol. 1, Moscow, 1972, p. 577.
(2) B. Mandeville, The Fable of the Bees. Or, Private Vices, Public Benefits. With an Essay on Charity and Charity-Schools. And a Search into the Nature of Society, 5th edition, London, 1728, p. 3.
(3) B. Mandeville, op. cit., p. 10.
(4) Ibid., p. 18.
(5) Ibid., pp. 18-19.
(6) K. Marx, Theories of Surplus-Value, Part I, Moscow, 1969, p. 388.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983