தமிழக பாஜக சார்பில் தமிழிசை, பொன் இராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி. இராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். மோடியின் இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த வேட்பாளர்கள் அனைவரும் பல்வேறு தருணங்களில் தமிழக மக்களால் வெறுக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆண்டாள் விவகாரத்தின் போது நயினார் நாகேந்திரன், “இந்துக்களை இழிவுபடுத்துபவர்களை கொலை செய்ய வேண்டும்” என்ற அளவுக்கு பேசினார். கொடுத்த காசுக்கு மேல் கூவும் இந்த முன்னாள் அதிமுக அடிமையை விட்டு விடுவோம். மற்ற நால்வரையும் எடுத்துக் கொள்வோம்.
பொன் இராதாகிருஷ்ணன் அப்பட்டமாக ஒரு பண்ணையார் போல நடந்து கொள்வார். அதுவும் அவர் அமைச்சராக உலா வந்த இந்த வருடங்களில் முகத்தை டைட்டாக வைத்து விட்டு அப்பாவி மக்களை விரட்டும் போலீசு அதிகாரி போல பேசுவார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை ஒழிக்க இவர் ஆடிய சதிராட்டங்கள் பல.
அதே தூத்துக்குடியில் சோபியா எனும் இளம்பெண்ணை கைது செய்யச் சொல்லி ஆட்டம் போட்டவர் தமிழிசை. சிலர் கருதுவது போல இவர் ‘சூத்திரர்’ என்பதால் பாஜகவில் ஓரங்கட்டப்படுவதில்லை. அப்படிப் பார்த்தால் மோடி கூட பார்ப்பனரல்லாதோர் பிரிவில்தான் வருகிறார். பார்ப்பனியத்தை பின்பற்றுபவர்களில், சங்கிகளில் வெள்ளை, கருப்பு என்ற பேதமில்லை. அனைத்தும் காவிதான்.
சி.பி.இராதாகிருஷ்ணனைப் பொறுத்த வரை தொலைக்காட்சி விவாதங்களில் பேசுவதே அந்த சானலின் முதலாளி போல உரிமையுடன் பேசுவார், அதட்டுவார், மிரட்டுவார். எச். ராஜா பற்றி தனியாகச் சொல்லத் தேவையில்லை. தமிழக இணைய வாசிகளால் எச்ச என்று அழைக்கப்படும் அளவுக்கு அவர் மீதான வெறுப்பு இங்கே அதிகம்.
எனில் இன்றைய கேள்வி: தமிழக மக்களால் அதிகம் வெறுக்கப்படும் பாஜக வேட்பாளர் யார்?
♠ பொன். இராதாகிருஷ்ணன்
♠ சி.பி.இராதாகிருஷ்ணன்
♠ தமிழிசை
♠ எச். ராஜா
(இரண்டு பதில்களை தெரிவு செய்யலாம்)
பின் குறிப்பு : வெற்றி பெறும் வேட்பாளருக்கு தேர்தல் முடியும் முன் பரிசுகள், விருதுகள் வழங்கப்படும்.
வாக்களியுங்கள், வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள், ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்!
டிவிட்டரில் வாக்களிக்க
தமிழக மக்களால் அதிகம் வெறுக்கப்படும் பாஜக வேட்பாளர் யார்?
பொன். இராதாகிருஷ்ணன் சி.பி.இராதாகிருஷ்ணன் தமிழிசை எச். ராஜா
“மலர்ந்தே தீரும்… தாமரை மலர்ந்தே தீரும்” பாடல் டீசர். திருச்சியில் மக்கள் அதிகாரம் நடத்திய “கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில்” மாநாட்டில் தோழர் கோவன் தலைமையில் ம.க.இ.க கலைக்குழுவினர் பாடிய பாடல் முறையான இசை, ஸ்டூடியோ ரிக்கார்டிங்கோடு வீடியோவாக தயாராகி வருகிறது.
வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா , ஐக்கிய அமீரகம், ஓமன், ஏமன், கத்தார் போன்ற நாடுகளுக்கு நமது நாட்டில் இருந்து பணி நிமித்தம், வியாபார நிமித்தம் சென்று வாழும் சகோதர சகோதரிகளுக்கானது இந்த பதிவு.
உலகில் வேறு இனக்குழுக்களுக்கு நீரிழிவு / உடல் பருமன் / ரத்த கொதிப்பு / இதய நோய் போன்றவை வரும் வாய்ப்பை விடவும் நமக்கு அதாவது இந்தியாவைச் சேர்ந்த அதிலும் தென்னிந்தியாவைச் சேர்ந்த கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளம் , தமிழ்நாடு மற்றும் இலங்கை நாடு ஆகியவை அடங்கிய நமக்கு மிக மிக அதிகம் என்பதை நாம் உணர வேண்டும்.
அதற்கு பிரத்யேக காரணம் :
1. நமது மாவுச்சத்து அதிகம் உண்ணும் வாழ்க்கை முறை.
2. உடல் உழைப்பு குறைந்தது.
3. நமது ஜீன்கள்
இதில் நமது நிலப்பரப்பை விட்டு நமக்கு பழக்கம் இல்லாத பாலைவன பூமியில் பணி நிமித்தம் செல்கிறோம். அங்கு சென்று பணம் சம்பாதித்து வருகிறோமோ இல்லையோ… நீரிழிவு / இதய நோய் / ரத்த அழுத்தம் / சிறுநீரக நோய் என்று எதையாவது தாயகத்துக்கு கொண்டு வருகிறோம்.
ஏன் ?
பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் நமதூர் மக்களில் மூன்றில் ஒருவருக்காவது நீரிழிவு / ரத்த அழுத்தம் இருக்கிறது. இது தமிழகத்தில் நிலவும் நீரிழிவு சதவிகிதத்தை விட அதிகம், காரணம்.
அங்கு நாம் உட்கொள்ளும் அதிக மாவுச்சத்து உணவு முறை தான். எளிதாக கிடைக்கிறது என்று வரைமுறையின்றி உண்ணப்படும் குப்பூஸ் ரொட்டி. மலிவாக கிடைக்கும் குளிர்பானங்கள். பர்கர்கள்.. பீட்சாக்கள்.. செயற்கை இனிப்பு கலந்த உணவுகள்.. என்று குடும்பங்களை விட்டு தனியே சுதந்திரமாக வாழும் ஆண்மகன்கள் தங்கள் நா விரும்பியதை ருசிக்கின்றனர்.
அதனால் உடலுக்கு கேடா? நல்லதா ? என்று ஒரு நொடி உணர்ந்தால் நமக்கு ஒவ்வாத பொருட்களை உண்பதில் இருந்தும் தவிர்த்துக்கொள்ளலாம். இன்னும் பலர் சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாவதைக் காண முடியும்.
தனிமை தரும் துயரை மறக்க அவ்வாறு செய்கின்றனர். ஆனால் எந்த சாக்கு போக்கு கூறியும் புகை போன்ற பழக்கங்களை நியயாப்படுத்திட முடியாது. வளைகுடா நாடுகளில் நான் பிரச்சனையாக உணர்வது மிக எளிதாக குறைவான விலையில் கிடைக்கும் குளிர்பானங்கள்தான்.
குளிர்பானங்களை தண்ணீர் போல பருகுவதை பார்த்திருக்கிறேன். இப்போது நமது மக்களிடையே சிறிது அது குறித்த விழிப்புணர்வு வந்திருப்பது மகிழ்ச்சி. கண் கெட்ட பிறகு மோனாலிசா ஓவியத்தை ரசித்த கதையாய் பலருக்கும் தங்களுக்கு நீரிழிவு வந்த பின்னே இந்த அறிவு கிடைத்திருக்கிறது.
இருப்பினும் அதுவும் நன்மைக்கே. வளைகுடா நாடுகளுக்கு தினந்தோறும் அணி அணியாய் இங்கிருந்து இளைஞர் படை வேலைக்கு செல்கிறது. அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். கண்ணில் கண்டதையெல்லாம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று இல்லை. உங்கள் உடலுக்கு அது சரி வருமா வராதா என்று பார்த்து உண்ண வேண்டும்.
‘காமன் மேன்’ உணவு முறையில் இருப்பவர்கள் பின்வரும் உணவு அட்டவணையை பயன்படுத்தலாம்
காலை
இனிப்பு இல்லாத சுலைமானி டீ
காலை உணவு
4 முட்டைகள்
காலை ஸ்நாக்ஸ்
வெள்ளரிக்காய் (200 கிராம்) + ஒரு சுலைமானி டீ
மதிய உணவு
100 கிராம் சமைக்கப்பட்ட சாதம் + 100 கிராம் கீரை/ காய்கறிகள்
மாலை சிற்றுண்டி
ஒரு ஆப்பிள் / இரண்டு ஆரஞ்சு அல்லது 40 பாதாம் பருப்பு + ஒரு பால் டீ 150மில்லி ( சீனி / சர்க்கரை இல்லாமல்)
இரவு உணவு 2 தோசை / 3 இட்லி / 4 இடியாப்பம்
குறிப்பு : மதியம் மற்றும் இரவு உணவோடு 150 கிராம் கறி / மீன் போன்ற அசைவ உணவுகளை எடுக்கலாம். தாகம் எடுக்கும் போது உப்பு கலந்த எலுமிச்சை சாறு பருகலாம். தினமும் 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும்
❌ இனிப்பு முடிந்தவரை தவிர்ப்பது நல்லது .
சீனி சர்க்கரை கேடு தரும் ❌ புகை/மது தவிர்க்க வேண்டும் ❌ எண்ணெயில் பொறித்த உணவுகள் தவிர்க்க வேண்டும் ❌fried chicken தவிர்க்க வேண்டும் ❌குளிர்பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும் ❌கோதுமை / மைதா முடிந்தவரை தவிர்த்தல் நலம் ❌முடிந்தவரை ரீபைண்டு எண்ணெய் தவிர்க்கலாம். நெய் / நல்லெண்ணெய் / தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.
இந்த மேற்சொன்ன உணவு முறை இக்கால இளைஞர்களுக்கு நீரிழிவு வரும் வாய்ப்பை மட்டுப்படுத்தும். ( உறுதியாக நீரிழிவு வராது என்று சத்தியம் செய்து கூற இயலாது. ஆனாலும் நீரிழிவு வரும் வாய்ப்பை குறைக்கும்)
இத்துடன் தினமும் ஒரு மணிநேரம் நடை பயிற்சி செய்தால் நன்மைகள் கூடும்.
வேலையே தினமும் நடப்பது என்பவர்கள் தனியாக நடக்கத் தேவையில்லை.
குடும்ப வறுமை, திருமணக்கடன், பிள்ளைகளின் படிப்பு, ஆசைக்கு ஒரு வீடு
என்று தங்களது குடும்பம் செழிக்க வளைகுடா நாடுகளுக்கு சென்று தனிமையில் உழைக்கும் நம் மக்கள் திரும்பி வரும் போது நோயுடன் வருவது வருந்தத்தக்கது.
நம்மால் முடிந்த அளவு தொற்றா நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்ள இயலும். மனமிருந்தால் மார்க்கமுண்டு….
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை – என்ற செய்தி உண்மையா … ?
நண்பர்களே….
பொ.வேல்சாமிகடந்த இரண்டு மூன்று தினங்களாக முகநூலில் சிலர் பதற்றத்துடனும் கோபத்துடனும் ஒரு செய்தியை உலவ விட்டு இருந்தனர். அந்தச் செய்தி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகளை சமஸ்கிருத கல்வெட்டுகளாக மாற்றி தேவநாகரி எழுத்தில் பொறித்து வருகிறார்கள் என்பதாகும். உண்மையில் அப்படியான நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு எந்தவிதமான வாய்ப்பும் இந்திய தொல்லியல் சட்டத்தின்படி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட பல பழமையான கல்வெட்டுகள் தஞ்சை பெரிய கோவிலில் பதியப்பட்டுள்ளன. இந்த தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் அனைத்தையும் புலவர் ராசு அய்யா அவர்களைப் பதிப்பாசிரியாகக் கொண்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள “தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள்” என்ற நூலை படங்களாகக் கொடுத்துள்ளார். நண்பர்கள் அந்த நூலை தரவிறக்கம் செய்து ஆய்வு செய்வதற்கு வசதியாக அந்நூலின் இணைப்பை இதில் கொடுத்துள்ளேன்.
1 of 8
தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் தஞ்சை பெரிய கோவிலில் எப்படி எழுதப்பட்டிருக்க முடியும் என்று பலருக்கும் சந்தேகம் எழுவது இயல்புதான். அதற்கு பெரிய கோவிலின் வரலாற்றை சற்று கவனமாகப் பார்த்தால் விடை எளிதில் கிடைத்துவிடும். தஞ்சை பெரிய கோவிலில் இராசராசன் காலத்திலிருந்து சோழர்களின் கல்வெட்டுகளும் அடுத்து வந்த காலங்களில் நாயக்கர்களின் கல்வெட்டுகளும் தமிழில் எழுதப்பட்டுள்ளன. மராட்டிய காலத்திலும் பல கல்வெட்டுகள் புதிதாகப் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுகளின் மொழி மராத்தி. எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் தேகநாகரி என்பது குறிப்பிடத்தக்கது.
சரபோஜி மன்னர் காலத்தில் மராட்டியர் வரலாற்றை முழுமையாக எழுதிய கல்வெட்டுகள் தேவநாகரி எழுத்தில் தஞ்சை பெரிய கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளை தமிழ்மொழியில் மொழிபெயர்த்தும் மூல மொழியிலும் சரஸ்வதி மகால் நூலகம் “போன்ஸ்லே வம்ச சரித்திரம்” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
…அந்த அடர் காட்டில், மனிதனின் அடித்தடத்தையே காணாமல் மூன்றாவது நாள் கழிக்கையில் அலெக்ஸேய் இன்பகரமான ஒரு பொருளைக் கண்டெடுத்தான்.
சூரியனின் முதல் கிரகங்கள் தோன்றியதுமே அவன் விழித்துக்கொண்டான். குளிராலும் உள்ளார்ந்த காய்ச்சலாலும் அவன் உடல் நடுங்கிற்று. விமானி உடையின் பையில் அவன் கைக்கு ஏதோ தட்டுப்பட்டது. அது சிகரெட் பற்ற வைக்கும் கொளுவி. துப்பாக்கி தோட்டாவால் மெக்கானின் யூரா ஒரு நினைவுச் சின்னமாக அவனுக்கு செய்து கொடுத்தது. என்ன காரணத்தாலோ அலெக்ஸேய் அதைப் பற்றி அடியோடு மறந்திருந்தான். நெருப்பு மூட்டலாம், மூட்டவேண்டும் என்பதும் அவனுக்கு நினைவில்லை.
இப்போதுதான் எதன் அடியில் படுத்திருந்தானோ அந்த பிர் மரத்திலிருந்து பாசி பிடித்த சில உலர்ந்த சுள்ளிகளை ஒடித்து அவற்றை ஊசியிலைகளால் மூடி நெருப்பு மூட்டினான். மங்கிய நீலப்புகைக்கு அடியிலிருந்து மஞ்சள் தீ நாக்குகள் பளிச்சென்று மண்டியெழுந்தன. கீல் நிறைந்த உலர்ந்த கட்டை விரைவாக, குதூகலமாகத் தீப்பற்றிக் கொண்டது. தழல் ஊசியிலைகள் மீது படர்ந்தது. காற்று வீசி அதை மூண்டெரியச் செய்தது. முனகல்களும் சீழ்க்கைகளுமாகக் மும்முரமாய் எரிந்தது நெருப்பு.
நெருப்பு சடசடத்துச் சீறி, வறண்ட, இதமான வெப்பத்தைப் பரப்பியது. அலெக்ஸேய்க்கு அப்பாடா என்றிருந்தது. உடுப்பின் ‘ஜிப்பை’ நெகிழ்த்தினான், உள் சட்டைப் பையிலிருந்து கசங்கிய சில கடிதங்களை எடுத்தான். எல்லாம் ஒரே ஆளால் பிரையாசையுடன் எழுதப்பட்டிருந்தன. ஒன்றிலிருந்து அலெக்ஸேய் ஒரு நிழல் படத்தை எடுத்தான். பலவண்ணப் பூக்கள் தீட்டிய கவுன் அணிந்த ஒடிசலான இளம் பெண்ணின் படம் அது. புல் மீது மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் அவள். அலெக்ஸேய் படத்தை நெடுநேரம் பார்த்துக் கொண்டிந்தான். அப்புறம் அதை ஸெல்லோபேன் காகிதத்தில் வைத்துச் சுற்றினான், கடிதத்துக்குள் செறுகினான். கடிதத்தைச் சிந்தனையுடன் சற்று நேரம் கையில் பிடித்துவிட்டு மறுபடி பைக்குள் வைத்துக் கொண்டான்.
“பரவாயில்லை, பரவாயில்லை, எல்லாம் நலமாகவே முடியும்” என்று அந்தப் பெண்ணிடமும் இல்லாமல் தனக்குத் தானேயும் இல்லாமல் சொன்னான். யோசனையில் ஆழ்ந்தவனாக “பரவாயில்லை…” என்று திரும்பக் கூறினான்.
அலெக்ஸேய் பெருமூச்செறிந்து, அணையும் தருவாயிலிருந்த நெருப்பிடம் விடை பெற்றுக்கொண்டு, மீண்டும் வழி நடக்கலாயினான். பனிக்கட்டியால் மூடப்பட்ட வெண்பனியில் ஊன்றுகோல்கள் சரக் சரக்கென்று நெறுநெறுக்க, உதடுகளைக் கடித்தவாறு நடந்தான். சில வேளைகளில் அவன் உணர்விழந்தான்.
இப்பொழுது பழக்கமான அங்க அசைவுகளுடன் பூட்சுகளைக் கழற்றினான், லேஞ்சித் துண்டுகளைச் சுற்று பிரித்தான், கால்களைக் கூர்ந்து நோக்கினான். அவை முன்னிலும் அதிகமாக வீங்கியிருந்தன. பாதங்கள் ரப்பரால் ஆனவை போலவும் அவற்றில் காற்று அடைக்கப்பட்டிருந்தது போலவும் தோன்றியது. அவற்றின் நிறம் முந்திய நாளைக் காட்டிலும் அதிகமாகக் கறுத்திருந்தது.
அலெக்ஸேய் பெருமூச்செறிந்து, அணையும் தருவாயிலிருந்த நெருப்பிடம் விடை பெற்றுக்கொண்டு, மீண்டும் வழி நடக்கலாயினான். பனிக்கட்டியால் மூடப்பட்ட வெண்பனியில் ஊன்றுகோல்கள் சரக் சரக்கென்று நெறுநெறுக்க, உதடுகளைக் கடித்தவாறு நடந்தான். சில வேளைகளில் அவன் உணர்விழந்தான்.
மாலைக் கருக்கல் வரை அவன் ஐந்து தொலைவுகளை கஷ்டத்துடன் கடந்தான். தரையில் கிடந்த பிரம்மாண்டமான, பாதி உளுத்த பிர்ச் மரக் கட்டையைச் சுற்றிலும் ஊசியிலைகளையும் சுள்ளிகளையும் குவித்து இரவில் பெரிய நெருப்பு மூட்டினான். கட்டை ஒளியின்றி வெம்மையாக கணகணத்துக் கொண்டிருந்த வரையில் வெண்பனியில் நீண்டு படுத்து உறங்கினான் அலெக்ஸேய். உயிரூட்டும் வெப்பத்தை முதலில் ஒரு விலாவிலும் பிறகு மறு விலாவிலுமாக உணர்ந்தான். இயல்பூக்கத்தால் தூண்டப்பட்டுப் புரண்டு கொடுத்தான். அவ்வப்போது விழித்துக்கொண்டு, சோம்பலாகத் தழல் விட்டுச் சீறியவாறு அணையும் தறுவாயிலிருந்த கட்டை மேல் சுள்ளிகளை அள்ளிப் போட்டான்.
நெருப்பு, விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு அளித்தது. பாசிஸ்டுகளைப் பற்றியோ, இத்தகைய இரவில் அஞ்சவே தேவையில்லை. பனிப்புயல் வீசுகையில் அடர்காட்டுக்கு உள்ளே வர அவர்கள் துணியமாட்டார்கள்.
நள்ளிரவில் பனிப்புயல் வீசத் தொடங்கிற்று. அலெக்ஸேயின் தலைக்கு மேலே பைன் மரங்கள் அசைந்தாடின. கலவரத்துடன் இரைந்தன, முனகின, கிரீச்சிட்டன. முள்ளாய்க் குத்தும் வெண்பனிப் படலங்கள் தரைமீது சாரி சாரியாகப் பாய்ந்தன. படபடத்துப் பொறி சிந்திய தழலுக்கு மேலே நர்த்தனம் ஆடிற்று சரசரக்கும் இருள். ஆனால் வெண்பனிச் சூறாவளி அலெக்ஸேய்க்குக் கலவரம் ஊட்டவில்லை. நெருப்பு வெப்பத்தின் காப்பில் அவன் இனிமையாக, ஆர்வத்துடன் உறங்கினான்.
நெருப்பு, விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு அளித்தது. பாசிஸ்டுகளைப் பற்றியோ, இத்தகைய இரவில் அஞ்சவே தேவையில்லை. பனிப்புயல் வீசுகையில் அடர்காட்டுக்கு உள்ளே வர அவர்கள் துணியமாட்டார்கள். இருந்தாலும், களைத்துச் சோர்ந்த உடல் புகை வெப்பத்தில் இளைப்பாறிய அதே சமயத்தில், விலங்குகளுக்குரிய எச்சரிக்கைக்கு அதற்குள் பழக்கப்பட்டுவிட்ட காதுகள் ஒவ்வோர் ஒலியையும் உற்றுக் கேட்டன. காலையாகும் முன் சூறாவளி அடங்கிவிட்டது. சந்தடியற்ற தரைக்கு மேலே இருளில் கவிந்திருந்தது அடர்ந்த வெளிர் மூடுபனி. அந்த வேளையில், பைன் மரமுடிகளின் ரீங்காரத்துக்கும் விழும் வெண்பனியின் சரசரப்புக்கும் அப்பால் அலெக்ஸேயின் காதுகளுக்கு, தொலைவிலிருந்து வந்த போர் ஓசைகள் கேட்பது போலப் பிரமை உண்டாயிற்று. வெடியதிர்ச்சிகளும், மெஷின்கள் குண்டு வெடி வரிசைகளும் துப்பாக்கி வெடிகளும் அவன் காதுக்கு எட்டின.
“போர்முனை நெருங்கிவிட்டதா என்ன? இவ்வளவு விரைவிலா?”
தேர்தல் விதிமுறை என்ற பெயரில் மக்கள் பிரச்சினைக்கு காது கொடுத்து தீர்க்க முன்வராத அரசு, சாராய விற்பனையை அதிகரிக்கும் வேலையை மட்டும் சரியாக பார்த்து வருகிறது. கிராமம் கிராமமாக இலட்சக்கணக்கில் டாஸ்மாக் சாராய பாட்டில்களை வாங்கி குவித்து வருகின்றனர் சாராய வியாபாரிகளும் ஒட்டுக் கட்சி பிரமுகர்களும். ”தேர்தலை நேர்மையாக நடத்துகிறோம்” என்று வாய்கிழிய பேசும் தேர்தல் ஆணையம் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள கரியம்பட்டி கிராமத்தில் இலட்சக் கணக்கான ரூபாய்க்கு சாராய பாட்டில்கள் பதுக்கி வைத்துள்ளனர் சாராய வியாபாரிகள். இதனை பிடித்தால் இலட்ச கணக்கான ரூபாய் வருமானம் பார்க்கலாம் என்று ஊரில் சோதனை போட்டனர். தருமபுரி மது ஒழிப்பு போலீசார், சாராய பாட்டில் பதுக்கி வைத்துள்ள நபர்கள் யார் என்று தெரிந்தும், அவர்கள் வீட்டை சோதனை செய்யாமல் சாராயத்தை எதிர்த்துப் போராடி வரும் மக்கள் அதிகாரம் தோழர் சரவணனின் உறவினர் வீட்டில் சாராய பாட்டில்களை தேடிவதாகக் கூறி பூட்டை உடைத்துள்ளனர்.
மக்களால் சிறைபிடிக்கப்பட்ட போலீசார்.
தகவல் கிடைத்து வீட்டிற்கு வந்த சரவணன், போலீசாரை பார்த்து ”ஏன் எங்க வீட்டை உடைத்தீர்கள்” என கேட்டுள்ளார். முறையாக பதில் சொல்லாத போலீசாரை பார்த்து, ”பதில் சொல்லாமல் செல்ல விடமாட்டேன்” என்று கிராமத்திற்கு வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார். ”நீங்களே சாராயம் விற்பவர்களை கைது செய்வதில்லை. நீங்களே அவர்களிடம் மாமுல் வாங்க வருகிறீர்கள். தற்போது நடவடிக்கை எடுப்பதாக நடிக்கிறீர்கள்” என அம்பலப்படுத்திய போது போனில் யாரிடமோ பேசுவது போல் இன்ஸ்பெக்டர் முத்து செல்வன் போனை காதில் வைத்து கொண்டார். மக்கள் அங்கு கூடி போலீசைக் கண்டித்தனர். அதில் ஒரு போலீசு மட்டும் மன்னிப்பு கேட்டார். மற்றவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் திருதிருவென விழித்தனர். கேள்விக்கு பதிலே சொல்ல முடியாமல் அமைதியாக ஒரிடத்தில் அமர்ந்து கொண்டனர்.
மக்கள் பெருமளவில் கூடிய பின் போலீசார், ”நாங்கள் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டனர். ”பூட்டை உடைத்ததற்கு தண்டம் கட்டி விட்டு செல்லுங்கள்” என்றார் தோழர். உடனே ஆளை விட்டால் போதுமடா சாமி என்று நினைத்த போலீசு ரூ.500 எடுத்து நீட்டினர். அதற்கு அந்த பூட்டின் விலையான ரூ.100-ஐ மட்டும் பெற்று கொண்டு போலீசாரை மக்கள் எச்சரித்து விடுவித்தனர்.
தகவல்: மக்கள் அதிகாரம், பென்னாகரம். தொடர்புக்கு – 97901 38614.
பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் மிகக் கடினமாக இருந்தது எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சில பாடத் தேர்வுகள் கடினமாகவும் சில பாடத் தேர்வுகள் எளிதாகவும் இருந்ததாக மாணவர்கள் குறை கூறுவதும், செய்திகள் வெளிவருவது வழமையான ஒன்றுதான். ஆனால், நிகழாண்டிற்கான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு குறித்து வந்திருக்கும் செய்தி, அத்தகைய வழமையான ஒன்று அல்ல. கணிதத் தேர்வு ஆசிரியர்களே வெறுத்துப்போய் வேதனைப்படும் அளவிற்கு கணிதத் தேர்வு வினாத்தாள் கடினமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
“மாணவர்கள் தேர்ச்சி பெற உதவும் 5 மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட 9 கேள்விகளுள் ஒரேயொரு கேள்விக்கு மட்டும்தான் சராசரி மாணவர்களால் விடையளிக்க முடியும். மீதமுள்ள எட்டு கேள்விகளும் கடினம், மிகக் கடினம் என்ற வகையைச் சேர்ந்தவை” எனக் கணித ஆசிரியர்கள் இத்தேர்வின் பயங்கரத் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளனர்.
“வினாத்தாள் தயாரித்தவர்கள் தங்களது திறமையை வினா வடிவில், அதுவும் மாணவர்களிடம் காட்டியுள்ளனர்” எனக் கணித ஆசிரியர்கள் வெளிப்படையாகவே குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
100 மதிப்பெண் எடுக்கக்கூடிய திறமையான மாணவர்கள்கூட இந்தத் தேர்வில் 75 மதிப்பெண்கள் வரைதான் பெறமுடியும் எனும்போது, சராசரி மற்றும் அதற்குக் கீழிருக்கும் மாணவர்களின் நிலைமை நிச்சயம் பரிதாபத்துக்குரியதுதான்.
சராசரி என முத்திரை குத்தப்படும் மாணவர்களைப் பயமுறுத்துவது ஆங்கிலம் மற்றும் கணிதத் தேர்வுகள்தான். இந்நிலையில் கடினமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வினாத்தாள் அம்மாணவர்களை நிச்சயம் மனச்சோர்வுக்குள்ளாக்கி, அடுத்த இரண்டு தேர்வுகளை அவர்கள் எதிர்கொள்வதிலும்கூடப் பாதிப்புகளை ஏற்படுத்தவே செய்யும்.
“பெயிலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இவ்வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருக்கிறது” என சென்னையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியின் கணித ஆசிரியை, ஒன்பதாவது வகுப்பைச் சேர்ந்த தனது மாணவர்களிடம் கூறித் தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருக்கிறார். இக்குற்றச்சாட்டு நிச்சயமாக அபாண்டமானதோ, மிகைப்படுத்தப்பட்டதோ அல்ல.
நீட் தேர்வு அனிதா என்ற இளம் மாணவியைப் பலி வாங்கியது. இந்தக் கணிதத் தேர்வு எத்தனை இளம் மாணவர்களின் உயிரைக் குடிக்கக் காத்திருக்கிறதோ?
சடலமாக பூங்குழலி.
கள்ளக்குறிச்சிக்கு அருகிலுள்ள சின்னசேலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி பூங்குழலி, கணிதத் தேர்வு முடிந்த அன்றே, அப்பள்ளியின் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுவிட்டாள். அம்மாணவியின் அகால மரணத்திற்கு இந்தக் கடினமான தேர்வு காரணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
நீட் தேர்வு தமிழகத்தில் திணிக்கப்பட்ட பிறகு, பாடப் புத்தகங்களைக் கனமாகவும், வினாத்தாட்களை கடினமாகவும் வைப்பதன் மூலம்தான் மாணவர்களின் திறமையைப் பரிசோதிக்க முடியும். தகுதியான மாணவர்களை உருவாக்க முடியும் என்ற கருத்தைத் தமிழகக் கல்வித்துறையே பரப்பி வருகிறது.
பத்தாம் வகுப்பு கணித வினாத்தாள் மிகக் கடினமாகத் தயாரிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, ஒன்றாம் வகுப்பு தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் உள்ள பாடத் திட்டத்தை சி.பி.எஸ்.இ.க்கு இணையாக மாற்றுவது என்ற பெயரில் பாடப் புத்தகத்தின் எடையைக் கூட்டியிருப்பதையும் இந்தப் பின்னணியில் வைத்துத்தான் பார்க்க வேண்டும்.
பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் அனைவரும், அவ்வளவு ஏன், கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் பயிலும் மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வு எழுதுவதில்லை எனும்போது, ஒன்றாம் வகுப்பு தொடங்கியே மாணவர்கள் சி.பி.எஸ்.இ.க்கு இணையான பாடத்திட்டம் என்ற சிலுவையை ஏன் சுமக்க வேண்டும்?
பள்ளிக்குப் போவதும், கற்பதும் இனிமையாக இருக்க வேண்டும் என சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்கள் வலியுறுத்தி வரும் வேளையில், கல்வி கற்பதைப் பெரும் சுமையாக, மன அழுத்தமாக மாற்றிவருகிறது, இந்திய அரசு.
சூத்திரர்களுக்கும், நான்கு வருணத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட தீண்டத்தகாதவர்களுக்கும் கல்வி கற்கும் உரிமையை, வாய்ப்புகளை மறுத்ததன் மூலம் பார்ப்பனர்களை அறிவாளிகளாகத் தூக்கி நிறுத்தியது, மனு நீதி. அந்த மத்தியகால நீதியை, இன்றைய ஜனநாயக யுகத்தில் கடைபிடிக்க வழியில்லை. அதனால்தான், ஏழைகளுக்கும், சூத்திர, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அடிப்படை கல்வி தொடங்கி உயர்கல்வி வரையிலான உரிமைகளை மறுக்க புதிய கருவிகளை, உத்திகளை உருவாக்கி வருகிறது, பார்ப்பன – பனியா ஆளுங்கும்பல்.
(மாதிரிப் படம்)
கல்வி உரிமைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட ஒன்றாம் வகுப்பு தொடங்கி எட்டாம் வகுப்பு வரையில் எந்தவொரு மாணவனையும் பெயிலாக்கக்கூடாது என்ற விதி கைவிடப்பட்டிருப்பது, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவது, அத்தேர்வுகளில் தேர்ச்சியடையாத மாணவர்களைத் தொழிற்கல்விக்கு அனுப்பிவைப்பது, மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் நீட் தேர்வை, பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட பிற உயர்கல்வியிலும் புகுத்துவது, ஐந்தரை ஆண்டுகள் மருத்துவம் படித்து முடித்த மாணவர்கள் தமது பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது, நீட்டைப் போலவே மைய அரசால் நடத்தப்படும் எக்ஸிட் எனப்படும் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவப் பட்டத்தைப் பெற முடியும் என்ற புதிய தேர்ச்சி முறையை அறிமுகப்படுத்த முயலவுது ஆகிய இவையனைத்தும் கல்வித்துறையில் புகுத்தப்படும் புதிய மனுநீதிகளாகும்.
இத்தகைய புதிய புதிய தேர்வுகளின் மூலம் தகுதியும் திறமையும் கொண்ட மாணவ சமுதாயத்தை உருவாக்கப் போவதாக ஆளுங்கும்பல் கூறுவது வடிகட்டிய பொய். மாறாக, இது மாணவர்களை வடிகட்டுவதற்கான ஏற்பாடு. அனிதாவைப் போல திறமையிருந்தும் பணமில்லாத ஏழை மாணவர்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைக் குடும்பங்கள் மற்றும் உதிரித் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை வடிகட்டி, ஒதுக்கி, அவர்களைத் திறமையற்றவர்கள் என முத்திரை குத்துவதற்கான ஏற்பாடுகள்தான் இப்புதிய தேர்வு முறை.
மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு, குழந்தைத் தொழிலாளர்களாகப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான், எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற முறை கொண்டுவரப்பட்டது. இப்பொழுது, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுத் திணிக்கப்படுவதன் நோக்கமே, அத்தேர்வுகளில் தேர்ச்சியடையாத மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே கைவிட நிர்பந்திப்பதுதான். அவர்களைக் குழந்தைத் தொழிலாளர்களாக உழைப்புச் சந்தையில் தள்ளுவதுதான். தேர்ச்சியடையாத மாணவர்களுக்குத் தொழிற்கல்வி வழங்கப்படும் என்ற அறிவிப்பு குழந்தைத் தொழிலாளர் முறையை மூடிமறைக்கும் தந்திரம், தேன் தடவிய விஷம் தவிர வேறல்ல.
அனைவருக்கும் தரமான, இலவசக் கல்வி அளிக்க மறுக்கும் அரசு, தனது பொறுப்பற்ற கிரிமனல்தனத்தை மூடிமறைத்துக்கொள்ள, உனக்குத் தகுதியில்லை, திறமையில்லை என மாணவ சமுதாயத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது.
தமிழகத்திலிருந்து மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சத்துக்கும் குறையாத மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் படிப்பிற்கு ஏற்ற தகுதியான வேலை கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் கேட்டால், அவர்களுக்குத் தகுதியில்லை எனத் தொழில் அதிபர்கள் குற்றஞ்சுமத்துகிறார்கள்.
அப்படி அவர்கள் திறமையற்றவர்களாக வெளியே வருவதற்கு யார் காரணம்? பொறியியல் கல்லூரிகள் என்ற பெயரில் வசூல்வேட்டையை மட்டுமே நடத்திவரும் கல்லூரி அதிபர்கள், அக்கல்லூரிகள் இயங்குவதற்கு அனுமதி கொடுத்திருக்கும் ஏ.ஐ.சி.இ.டி., பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு அமைப்பகள், காலாவதியாகிப் போன பாடத் திட்டங்கள் ஆகியவைதான். கல்லூரி அதிபர்கள் – அதிகார வர்க்கம் என்ற இந்தக் கூட்டணியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற மறுக்கும் தொழில் அதிபர்கள் – நிபுணர்கள் கூட்டம், அப்பாவி மாணவர்களைத் திறமையற்றவர்களாக, தகுதியற்றவர்களாகக் குற்றஞ்சுமத்தி, அவர்களை ஒதுக்கிவைக்கிறது.
(மாதிரிப் படம்)
ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கல்வி கற்பதிலிருந்து சூத்திரர்களும், பஞ்சமர்களும் பார்ப்பனியத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து சமூக நீதிக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள்தான் அப்பார்ப்பனிய மேலாதிக்கத்தை வீழ்த்தியது. அச்சமூக நீதிப் போராட்டங்கள் தற்சமயம் வீரியம் இழந்து நிற்கும் நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் கல்வியில், வேலைவாய்ப்புகளில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள பார்ப்பன – மேல்சாதி சக்திகள் முயன்றுவருகின்றன.
இம்முயற்சியைத் தோற்கடிப்பதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் மீண்டும் சமூக நீதி கோரிப் போராடுவதைத் தவிர வேறுவழியில்லை. ஆயின், இப்புதிய சமூக நீதிப் போராட்டம் நீட் உள்ளிட்ட பார்ப்பன – பனியா சூழ்ச்சிகளுக்கு எதிராக மட்டுமின்றி, கல்வியை முற்றிலுமாகவே தனியார்மயமாக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் நடத்தப்பட வேண்டும்.
கல்வியைப் பார்ப்பன சமஸ்கிருதமயமாக்காதே, கல்வியைத் தனியார்மயமாக்காதே, ஆரம்பக் கல்வி தொடங்கி ஆராய்ச்சி கல்வி வரையிலும் தரமான, தாய்மொழிக் கல்வியை இலவசமாக வழங்கு என்பவைதான் இன்றைய காலத்தின் கோரிக்கைகளாகும்.
மக்களவை தேர்தல் நெருங்க இருக்கிற நிலையில், மோடி தலைமையிலான பாஜக அரசு பதட்டத்தில் உள்ளது. எதையாவது செய்து மீண்டும் பதவியில் அமர்ந்துவிட வேண்டுமென மோடி-பாஜக கும்பல் துடித்துக் கொண்டிருக்கிறது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகான தேசபக்தி முழக்கங்கள் புஸ்வானமாகிவிட்ட நிலையில், புதன்கிழமை காலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
“இன்று 11.45 லிருந்து 12 மணிக்குள் முக்கிய அறிவுப்பு ஒன்றை அறிவிக்கப்போகிறேன். அனைவரும் தொலைக்காட்சி/சமூக வலைதளங்கள்/வானொலி வாயிலாக கட்டாயம் அறிந்து கொள்ளவும்” என்ற அந்தப் பதிவைப் பார்த்து, நாடே பதட்டத்தில் உறைந்தது. ‘பதட்டம்’ என்கிற வார்த்தையை பிரயோகிக்க தயங்கிய வெகுஜென ஊடகங்கள் ‘நாடே ஆர்வமாக’ உள்ளதாக பயந்துபடியே பிரேக்கிங் நியூஸ் போட்டார்கள்.
மக்களின் பதட்டத்தை ரசித்த ‘சாடிஸ்ட்’ மோடி நண்பகல் 12.10 வாக்கில் ‘முக்கிய’ அறிவிப்பை வெளியிட்டார். எதிரிகளின் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி என்பதைத்தான் மோடி ‘முக்கிய’ செய்தியாக சொன்னார். பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதை அறிவித்த வாஜ்பாயி, பணமதிப்பு நீக்கத்தை அறிவித்த மோடி என இந்தியாவை ஆண்ட பாசிச பாஜகவினரைத் தவிர வேறு எந்த பிரதமரும் இத்தகைய ‘முக்கிய’ அறிவிப்புகளை செய்து மக்களை பதட்டமடைய வைக்கவில்லை. பாசிசத்தின் சிறப்பே அதுதானே?!
மோடியின் ‘முக்கிய’ அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் மக்கள் எதிர்வினையாற்றத் தொடங்கிவிட்டார்கள். ஐந்தாண்டுகால மோடி ஆட்சியின் மிகப் பெரும் இழிசாதனைகள் பலவற்றை நினைவுபடுத்தி மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.
“இது வான்வெளி தொடர்பானது நண்பர்களே, உங்களுடைய பணம் பத்திரமாகிவிட்டது, போய் வேலைப் பாருங்கள்” என்கிறார் பத்திரிகையாளர் சகரிகா கோஷ்.
Phewwww! Its a space thingy. Your money's safe, folks, go back to work 🤣
“அவென்சர்ஸ் முன்னெடுப்பில் மோடியும் மூழ்கிப்போயிருக்கிறார். எனவே, கருந்துளைகள் திறந்துகொண்டு அதிலிருந்து தனோசும் அவருடைய இராணுவமும் தாக்கினால், இந்தியா அதை எதிர்கொள்வதில் முக்கிய பங்காற்றும்” என்கிறார் ஸ்காட்சி.
So India will play an important role when the wormhole opens and Thanos and his army attack us. Modiji is the latest addition to the Avengers Initiative. 👏👏👏
பிரதமர் மோடியின் அறிவிப்பை கேலி செய்யும் மக்கள் மிகவும் மோசமானவர்கள். வரிசையில் நிற்க வைக்கப்படவில்லையே என்பதற்காக அவருக்கு நன்றி அல்லவா சொல்லியிருக்க வேண்டும்? என்கிறார் ஆதித்ய மேனன்
People poking fun at #PMAddressToNation are just mean. They should be grateful that they aren't being made to stand in a line
“மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நான் DRDO சாதனை குறித்து மகிழ்கிறேன். நாம் இப்போது கையால் மலம் அள்ளும் முறையை தொழிற்நுட்பத்தின் உதவியுடன் ஒழிப்பது குறித்து விவாதிக்கலாமா? மன்னிக்கவும், சொல்ல மறந்துவிட்டேன், மலக்குழி மரணங்களில் குஜராத் மாநிலம்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. உண்மையில் இது சாதனைதான்” என்கிறார் அரசியல் செயல்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி.
Dear PM, I'm happy for DRDO's achievement in space. Now can we discuss about a technology to eradicate manual scavenging? Oh sorry, I forgot that Gujarat stands second in sewer deaths. Achievement indeed. #MissionShaktihttps://t.co/IBBaekXwrz
“விண்வெளியில் ராக்கெட்டை சுட்டுவீழ்த்தும் தொழிற்நுட்பம் கொண்ட நாட்டில் 350 கிலோ வெடிகுண்டு வண்டியை கன்டுபிடிக்க முடியவில்லை” என்கிறார் இவர்.
விண்வெளியில் ராக்கெட்டை சுட்டுவீழ்த்தும் தொழிற்நுட்பம் கொண்ட நாட்டில் 350 கிலோ வெடிகுண்டு வண்டியை கன்டுபிடிக்க முடியவில்லை 😏#MissionShaktipic.twitter.com/nNAgTil8v8
“அறிவிப்பு என்று சொன்னதும் வங்கி, ஏ.டி.எம். நோக்கி ஓடுகிறார்கள். ஜனநாயகவாதிகள் அஞ்சுகிறார்கள். எப்படியும் கேடுகெட்ட செய்தியைத்தான் சொல்லப்போகிறார் என்பதைத்தவிர யாரும் எதுவும் நினைக்கவில்லை. மக்களிடம் எவ்வளவு அவநம்பிக்கை, கெடு உணர்வு.! மோடி என்றால் இனி தமிழில் பீதி என்று அர்த்தம்”
அறிவிப்பு என்று சொன்னதும் வங்கி, ஏ.டி.எம். நோக்கி ஓடுகிறார்கள். ஜனநாயகவாதிகள் அஞ்சுகிறார்கள். எப்படியும் கேடுகெட்ட செய்தியைத்தான் சொல்லப்போகிறார் என்பதைத்தவிர யாரும் எதுவும் நினைக்கவில்லை. மக்களிடம் எவ்வளவு அவநம்பிக்கை, கெடு உணர்வு.!
சென்னையில் உள்ள ஒரு பிரதான ரயில்நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தேன். அப்போது 5 பதின்வயது சிறுவர்கள் (வயது 15-17க்குள் இருக்கும்) கிரிக்கெட் பயிற்சியை முடித்து விட்டு விளையாட்டு உபகரணங்களுடன் பயிற்சி சீருடையில் தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டே வந்தனர். அவர்களில் 2 பேர் நான் அமர்ந்திருந்த இருக்கையிலும், 3 பேர் வேறு இருக்கையிலும் அமர்ந்தனர்.
எனது அருகில் அமர்ந்த இருவரும் அன்றைய தினம் நடைபெற்ற பயிற்சியைப் பற்றியும், வேறு இருக்கையில் அமர்ந்திருந்த அந்த 3 பேரில் ஒருவனைப் பற்றியும் தங்களுக்குள் பேசத் தொடங்கினர்.
“அவன் நல்லா பெர்ஃபார்ம் பண்ணிட்டு வரான்டா.. டாப் ஆர்டர்ல உனக்கு ரொம்ப டஃப் கொடுப்பான்டா. அந்த பசங்கள எல்லாம் வளர விடக்கூடாது… பாத்துக்க மச்சி”
“அவனுக்கெல்லாம் நான் பயப்படலடா… ‘கோச்’சும், ‘கிளப்’பும் நமக்குதான் சப்போர்ட். கிளப் மேட்சஸ்ல ‘வின்’ பண்றதுக்கு மட்டும்தான் இவனுங்கள எல்லாம் கோச் வெச்சிருக்காரு… நம்ம கூட விளையாட அவனுங்களுக்கு தகுதியே கிடையாது”
அவர்களின் உரையாடல் நிறைவடைவதற்கு முன்பே ரயில் வந்தது. இந்த உரையாடலை நடத்தியவர்களின் மொழி, தோற்றம், உடல் மொழி அனைத்தும் பார்ப்பனர்களை நினைவுபடுத்தியது. அவர்களில் ஓரிருவர் ’உயர்’ சாதிகளாகவும் இருக்கலாம். உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, இந்த சிறு வயதிலேயே இப்படி ஒரு சாதி வன்மத்துடன் உள்ளார்களே… இவர்கள் வளர்ந்தால் எப்படி இருக்கும்? எனத் தோன்றியது.
அந்த சிறுவர்கள் அதே பாணியில் இருபிரிவுகளாக வெவ்வேறு இருக்கைகளில் அமர்ந்தனர். நான் இம்முறை அந்த 3 சிறுவர்களுக்கு அருகில் சென்று அமர்ந்தேன். ஏதோ தனிப்பட்ட விசயங்களை பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் திடீரென தனது போனை எடுத்து பேசத் தொடங்கினான்.
“மச்சி.. இன்னைக்கு செம ஆட்டம்டா… வச்சிப் பிரிச்சு எடுத்துட்டேன்.. அவனவன் மூஞ்சில அல்லு இல்ல…” எனத் தொடங்கி, அன்றைய ஆட்டத்தின் சிறப்பை சத்தமாக கத்திப் பேசினான்.
வேறு இருக்கையில் அமர்ந்த அந்த இரு சிறுவர்களும் இவன் பேச்சை முகம் சுழித்தவாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.
“அவனுங்க எல்லாம் ஒரு ஆளாடா; கிரிக்கெட்டே விளையாட தெரியாம நல்ல பேட், கிட்ஸ் (Kits) மட்டும் எடுத்துட்டு வந்து சீன் போடுறாங்க..”
“அவனுங்கள பத்தி நீ ஏன்டா திங்க் பண்றே?”
“மச்சி… எனக்கும் ரஞ்சி, டிஎன்பிஎல், ஐபிஎல், இந்தியன் டீம்ல ஆடணும்னு ஆசைதான். என்னதான் நமக்கு திறமை இருந்தாலும் நம்மால அதெல்லாம் முடியாது.. அவனுங்களுக்கு திறமையே இல்லன்னாலும் சான்ஸ் கிடைக்கும்… நம்ம கிளப்ல விளையாடி அடுத்த லெவலுக்கு போன எல்லாரும் அவங்க ‘ஆளுங்க’ தான்.”
“டேய் … நம்ம கோச் நம்ம அடுத்த லெவலுக்கு கொண்டு போறேன்னு சொன்னாரே டா…”
மாதிரிப் படம்
“அடப் போடா… கோச் நமக்கு ஒரு மாதிரியும், அவங்க ஆளுங்களுக்கு வேற மாதிரியும் ட்ரைன் பண்றான்… நம்மலாம் இந்த மாதிரி அவனுங்கள கலாய்ச்சி சந்தோசப்பட்டுக்கிட்டாதான் உண்டு”
“வெள்ளந்தியா இருக்கியேடா… நடந்தால் பார்ப்போம், அந்தாள அதிகம் நம்பாத… அவ்வளவுதான் சொல்வேன்… பாத்துக்கோ…”
விரக்தியோடு சொல்லி சிரித்தனர் அச்சிறுவர்கள்.
நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது… ரயிலிலிருந்து இறங்கி ரயில் நிலைய படிக்கட்டுகளில் ஏறினேன். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். மனிதர்களுக்குள் ஏற்ற இறக்கங்கள் இருந்தால் மனிதம் மரித்துப்போகும்.
அந்த இரு சிறுவர்கள் மீதும் எனக்கு கோபம் வரவில்லை; இந்த இளம் வயதில் சாதிய நஞ்சை அவர்களுள் விதைத்த அவர்களின் பெற்றோர்கள், சமூகம், கல்விமுறை, சாதி வெறியை கண்டிக்காத ஆசிரியர்கள், திறமையை மதிக்காமல் சாதி அடிப்படையில் வாய்ப்பு கொடுக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ போன்றவற்றின் மீதுதான் கோபம் வருகிறது.
ஒவ்வொரு பயணமும் நமக்குப் பல்வேறு அனுபவங்களை கற்றுத் தருகிறது. இன்றைய அனுபவம் என்றும் மறக்க முடியாதது.
வீட்டு நிர்வாகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். வருகிற வருமானத்தில் பெரும்பகுதியை அவருடைய மேக்அப் செலவுக்கு, வாசலில் வைரம் பொதித்த பெயர் பலகை வைப்பதற்கு, உல்லாச பயணங்களுக்கு, தன்னுடைய ஆடை ஆபரணங்களுக்கு செலவு செய்கிறார். இன்னொரு பக்கம் வீட்டின் மற்ற உறுப்பினர்கள் எல்லாம் சோத்துக்கே வழியில்லாமல் திண்டாடுகிறார்கள்.
உடல்நலமில்லாமல் கிடக்கும் ஒருவருக்கு அவசரசிகிச்சைக்குக் கூட பணமில்லாமல் தவிக்கிறார்கள். மருத்துவத்துக்கு பணம் கேட்டால் பாக்கெட்டை விரித்து இருந்தால் தரமாட்டேனா என்கிறார் நிர்வாகி. ஆனால், இன்னொரு பக்கம் இந்த நிர்வாகி கலர் கலராக பல ஆயிரங்களுக்கு சொக்காய் வாங்கி மாட்டிக்கொண்டு திரிந்தால் குடும்பத்தினருக்கு கடுப்பாகும்தானே…
கடந்து ஐந்தாண்டுகால மோடி ஆட்சி அப்படித்தான் இருந்தது.
இந்த அரசு கடந்து ஐந்தாண்டுகளில் செய்த விளம்பர செலவு மட்டுமே 4800+ கோடிகள். பிரதமர் உலகம் சுற்றிப்பார்க்க ஆன செலவுகள் மட்டுமே 2000+ கோடிகள். இதில் அவருடைய பர்சனல் விமான பராமரிப்பு செலவு 1088 கோடி.
(இவை எல்லாம் ஆர்டிஐ போட்டு வாங்கப்பட்ட தகவல்கள்)
இப்படி உலகம் சுற்றியதால் கடந்த ஐந்தாண்டுகளில் மூன்றில் ஒருநாள் அவர் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். இப்படி இருந்ததால் என்ன பிரயோஜனம். நாட்டுக்கு அந்நிய முதலீடுகள் வந்து குவிந்தனவா… நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருந்ததா… இல்லை. சொல்லப்போனால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்த ஐந்தாண்டுகளில் ஆளைவிட்றா என சுவர் ஏறி குதித்து தப்பித்துதான் சென்றிருக்கிறார்கள்.
விவசாயிகலின் வாழ்வை அழிக்க போடும் திட்டம் புல்லட் ரயில்
அடுத்து மும்பை தொடங்கி அகமதாபாத் வரை ஓடுகிற புல்லட் ரயில் ப்ராஜெக்ட். நாட்டில் அவன் அவனுக்கு சோத்துக்கே வழியில்லை என்னும் போது வெறும் 500 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணிக்க எதுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடியில் புல்லட் ரயில். அப்படியே இந்த புல்லட் ரயில் ஓட ஆரம்பித்தாலும் யாருக்காக ஓடும்… ஏழை ஜனங்களுக்காகவா… இல்லை எலைட் ஜனங்களுக்காகவா?
இப்படித்தான் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களுக்காக மக்கள் பணத்தை வாரி இரைத்திருக்கிறது இந்த அரசு…
மோடி என்கிற ஒருவருடைய பிழை என்று ஐந்தாண்டுகால மத்திய அரசின் ஆட்சியை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு முட்டாள் அரசனை முன்னால் நிறுத்திக்கொண்டு திரைமறைவில் வியாபாரிகளும் சாமியார்களும் கார்ப்பரேட் திருடர்களும் கூத்தடித்திருக்கிறார்கள்.
பொய் பரப்புரைகளால் ஆட்சியை பிடித்தவர்களின் ஐந்தாண்டுகால ஆட்சி இந்தியாவை சிதைத்திருக்கிறது. இப்போதும் அவர்களுடைய பொய்கள் தீரவில்லை. இன்னும் அதிக வீரியத்தோடு இன்னும் கூட மோசமாக பொய்களை விற்று மீண்டும் அரியாசனத்தில் அமரும் முனைப்பில் இருக்கிறார்கள் பாஜகவினரும் அவர்களுடைய அயோக்கித்தனமான கூட்டாளிகளும்.
நாம் உண்மைகளை பேச வேண்டியிருக்கிறது.
நிறைய உண்மைகளை… இன்னும் சத்தமாக பேசுவோம் …
பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் : பாகம் – 2
Lynching… இப்படி ஒரு சொல்லை கடந்த ஐந்தாண்டுகளாகத்தான் நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம். இது அமெரிக்காவில் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த சொல்தான்… கறுப்பினத்தவர்களை அச்சுறுத்த வெள்ளை மேலாதிக்க எண்ணங்கொண்டவர்கள் கூட்டு சேர்ந்து பண்ணுகிற கொலைகளை இப்படி குறிப்பிடுகிறார்கள். அதை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை பாஜகவையே சாரும்.
அங்கே கறுப்பின மக்கள் என்றால் இங்கே இஸ்லாமியர்களை, தலித்துகளை அச்சுறுத்த பசு பாதுகாவலர்கள் எனும் இந்து அடிப்படைவாதிகள் பண்ணுகிற கூட்டுக்கொலைகளை லின்ச்சிங் என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இப்படியொரு சொல்லை நமக்கு அறிமுகப்படுத்தியதோடல்லாமல் மாதந்தோறும் யாரையாவது போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தவர்களுக்கு துணையாக நின்ற பெருமைமிகு ஆட்சிதான் பாஜகவின் ஆட்சி.
சும்மா சொல்லவில்லை… கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த இவ்வகை கும்பல் தாக்குதல்களுக்கென்றே ஒரு மேப் போட்டு வைத்திருக்கிறார்கள் இங்கேவிபரங்களோடு பார்க்கலாம். மொத்தம் நடந்த 300-க்கும் அதிகமான தாக்குதல்களில் 90 பேர் செத்துப்போயிருக்கிறார்கள். அத்தனை பேரின் படங்களும் விபரமும் இருக்கின்றன. ஒவ்வொரு முகத்தையும் பார்க்கும் போது பதற்றம் வருகிறது. இதில் எந்த அம்பானியும் அதானியும் இல்லை. எல்லோருமே சாதாரண விவசாயிகள், கூலிவேலை செய்கிறவர்கள். சில இந்துக்களும் கூட இருக்கிறார்கள்… ஆனால் தலித்துகள்!
ஆனால் இந்தக்கொலைகளுக்கெல்லாம் பாஜக தரப்பிலிருந்து என்னமாதிரியான எதிர்வினைகள் வந்திருக்கின்றன என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. `இதையெல்லாம் தவிர்க்கமுடியாது, கொலையெல்லாம் நடக்கவில்லை, பசுக்களை கடத்துகிறார்கள், செத்துப்போனவர்கள் திருடர்கள், தானாகவே நோயால் இறந்துபோய்விட்டார்கள்’ என விதவிதமான பொறுப்பற்ற பதில்களையே முன்னணி பாஜக தலைவர் கொடுத்தார்கள்.
பிரதமர் மோடி கூட எத்தனையோ கொலைகள் நடந்த பிறகு 2017ன் இறுதியில்தான் மயலிறகால் வருடுவது போல ”மக்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்ள கூடாது. சட்டத்திடம்தான் ஒப்படைக்கவேண்டும்” என்றார். அதற்கு மேல் அவருக்கு இதை கண்டிக்கவோ தடுக்கவோ எந்த ஆர்வமும் இருக்கவில்லை. கடந்த டிசம்பரில் இந்த கும்பல் கொலைகாரர்களை தட்டிக்கேட்ட ஒரு காவலரையே போட்டுத்தள்ளியதெல்லாம் நடந்தது. பசுபாதுகாப்பின் பேரால் நடந்த அத்தனை கொலைகளையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டும், அதை திரைமறைவில் தூண்டிக்கொண்டும்தான் இருந்திருக்கிறது.
ஒருகட்சிக்கு ஏன் வாக்களிக்கிறோம். இவரால் நாம் பாதுகாப்பாக இருப்போம், நிம்மதியாக சாலைகளில் நடமாட முடியும். நம் வீட்டிற்குள் யாரும் புகுந்து அடிக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கையில்தான்… ஆனால் அந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசே வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு எரிபொருள் தந்து உதவிக்கொண்டிருந்தால் என்னாகும்.
“இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சி அப்படித்தான் நடந்திருக்கிறது” என்று ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பின் செயலாளர் மிசேல் சமீபத்தில் பேசியிருந்தார். மிகமோசமான அளவில் வன்முறைகள் நிகழ்ந்திருப்பதையும் அவை முறையாக விசாரணைக்கும் கூட உட்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த ஐந்தாண்டுகளில் மனித உரிமைகள் மீறல்கள் நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றன. எத்தனை எத்தனை படுகொலைகள் மதத்தின் பேரால், உணவில் பேரால், நம்பிக்கைகளின் பேரால், சாதியின் பேரால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களும் தலித்துகளும் பெருமளவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ஏராளமானோர் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அரசே கொடுக்கிற எண்ணிக்கையின் அடிப்படையில் கடந்த ஐந்தாண்டுகளில் இவ்வகை சாதி ரீதியிலான, மத ரீதிலியான குற்றச்செயல்களின் எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரித்திருக்கின்றன என்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வழக்குகள் இவ்வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாதவை எத்தனையோ… 2017ஆம் ஆண்டில் மட்டுமே இந்தியா முழுக்க 822 மதம் சார்ந்த மோதல்கள் நடந்திருக்கின்றன. இதில் இறந்து போனவர்கள் எண்ணிக்கை 111. கௌரி லங்கேஷ் மாதிரியான எண்ணற்ற எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் அரசை விமர்சித்து எழுதியதற்காக்க கொல்லபட்டிருக்கிறார்கள். உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு போலி என்கவுண்டர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்திருக்கிறது. 1038 என்கவுண்டர்களை நடத்தியிருக்கிறார் யோகி.
தன்னை சௌகிதார் என்றும் காவலன் என்றும் பீத்துக்கொண்டால் மட்டும் போதாது. அதானிக்கும் அம்பானிக்கும் மட்டுமல்ல அப்பாவிகளுக்கும் சௌகிதார்கள் பாதுகாப்பை உறுதிசெய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. இனி எப்போதும் செய்யவும்மாட்டார்கள். அதனால்தான் பாஜகவை விரட்டவேண்டியிருக்கிறது.
லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின் | பாகம் – 4
லியோ டால்ஸ்டாயும் அவரது சகாப்தமும் !
வி.இ.லெனின்
டால்ஸ்டாய் சார்ந்திருந்ததும், அவர் தமது அற்புத இலக்கிய நூல்களிலும் போதனைகளிலும் மிகவும் தெளிவாகப் பிரதிபலித்ததுமான சகாப்தம் 1261-க்குப் பிறகு துவங்கி 1905 வரை நீடித்தது. உண்மையில், டால்ஸ்டாய் தமது இலக்கிய வாழ்க்கையினை இதற்கு முன்னரே துவங்கினார். அது பின்னால்தான் முடிவுற்றது. எனினும் டால்ஸ்டாயின் நூல்கள், டால்ஸ்டாயிசம் இவற்றின் தனிச்சிறப்பு அம்சங்கள் அனைத்தும் எழுச்சியுற்ற மாறுதல் தன்மையுடைய இந்தக் காலகட்டத்தில்தான் அவர் ஒரு கலைஞர் என்ற முறையிலும் சிந்தனையாளர் என்ற முறையிலும் முழுமையான முதிர்ச்சியடைந்தார் என்பதைக் காட்டுகின்றன.
அன்னா கரினினா நவீனத்தில் வரும் லெவின் என்னும் பாத்திரத்தின் மூலம், டால்ஸ்டாய் இந்த அரை நூற்றாண்டில் ஏற்பட்ட ரஷ்ய வரலாற்றின் திருப்பத்தின் இயல்பைத் தெளிவாக வெளியிட்டுள்ளார்.
“அறுவடை, தொழிலாளர்களைக் கூலிக்கமர்த்தல், இத்தியாதி பற்றிய பேச்சினை மிகவும் தாழ்ந்த ஒன்றாகக் கருதும் வழக்கம் இருந்ததை லெவின் அறிவார்.” இது இப்போது லெவினுக்கு ஒரே முக்கிய விஷயமாகத் தோன்றியது. “இது அடிமைச் சமுதாயத்தில் முக்கியமல்லாததாக இருக்கலாம், இங்கிலாந்தில் முக்கியமற்றதாக இருக்கலாம். இரண்டின் கீழும் நிலைமைகள் திட்டவட்டமானது. ஆனால், இங்கு இன்று எல்லாம் தலைகீழாகப் புரண்டு போய், மீண்டும் உருவாகி வருகிற பொழுதில் இந்த நிலைமைகள் எவ்வாறு உருவாகும் என்பது மட்டுமே ரஷ்யாவிலுள்ள முக்கிய பிரச்சினை” என்றார் லெவின். (தொகுப்பு நூல்கள் பாகம் 10, பக்.137)
“இங்கு ரஷ்யாவில் யாவும் தலைகீழாகப் புரட்டப்பட்டிருக்கிறது.”, ”இப்போதுதான் உருவாகி வருகிறது ” 1861-1905 காலகட்டத்தினை இதைவிடப் பொருத்தமாகச் சிறப்பித்துக் காட்டுவது என்பதைக் கற்பனை செய்வதே கடினம். “தலைகீழாகப் புரட்டப் பட்டது” என்ன என்பது ஒவ்வொரு ரஷ்யனுக்கும் பழக்கமானது. குறைந்தபட்சம் நன்றாகத் தெரிந்த ஒன்று. இது அடிமை அமைப்பும் அதோடு சேர்ந்த “பழைய ஏற்பாடும்” முழுமையாக இருப்பது. “தற்போது உருவாகி வருவது” என்ன என்பது மக்கள் தொகையின் விரிவான பகுதிகளுக்கு முற்றிலும் தெரியாதது, அந்நியமானது, விளக்கமற்றது . ஒரு போலி வடிவத்தில் இங்கிலாந்தில் “இப்போதுதான் உருவாகி வருகிற” இந்த பூர்ஷுவா அமைப்பினை டால்ஸ்டாய் கருவில் கண்டார். உண்மையில் இது வெறும் போலி. ஏனெனில் இந்த “இங்கிலாந்தில்” காணப்பெறும் சமூக அமைப்பின் அம்சங்களையோ, இந்த அமைப்புக்கும் முதலாளித்துவத்தின் ஆதிக்கத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றியோ, பணம் வகிக்கும் பாத்திரம், பண்டமாற்றின் எழுச்சி வளர்ச்சி பற்றி ஆராய்வது என்று முயற்சியைக் கோட்பாட்டளவில் அவர் நிராகரிக்கிறார். நரோத்னி (55) க்குகளைப் போன்று அவர் பார்க்க மறுக்கிறார். “ரஷ்யாவில் உருவாகி வருவது“ பூர்ஷூவா அமைப்பே தவிர வேறன்று என்று பாராது கண்ணை மூடிக் கொண்டு அந்த எண்ணத்தையே விலக்கிவிட்டார்.
“ஒரே முக்கிய“ பிரச்சினை இல்லாவிடினும், 1861-1905 திட்டத்தில் (நமது காலத்திலும் கூட) ரஷ்யாவிலான அனைத்து சமூக அரசியல் செயல்பாடுகளின் உடனடிக் கடமைகள் என்ற கருத்தோட்டத்திலிருந்து பார்க்கும்போது முக்கியமாக இருக்கிற பிரச்சினை இந்த அமைப்பு “எவ்வித உருவம்“ எடுக்கும் என்பதே. இந்தப் பூர்ஷூவா அமைப்பு “இங்கிலாந்து”, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் இத்தியாதி நாடுகளில் மிகவும் வேறு வேறான வடிவங்களை எடுத்துள்ளது. ஆனால், பிரச்சினையை இவ்வாறு திட்டவட்டமாயும் ஸ்தூலமாயும் வரலாற்று ரீதியிலும் விளக்குவது என்பது டால்ஸ்டாய்க்கு முற்றிலும் புறம்பான ஒன்று. அவர் ஸ்தூலமற்ற முறையில் வாதிடுகிறார். சீலத்தின் அழியாத கோட்பாட்டின் நிலைகளை, சமயத்தின் அறியாத உண்மைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார். இந்தக் கருத்தோட்டத்தை அடையத் தவறுவது, பழைய அமைப்பின் சித்தாந்தப் பிரதிபலிப்பே (தலைகீழாகப் புரட்டப்பட்டது) நிலப்பிரபுத்துவ அமைப்பின் கீழ்த்திசை மக்களின் வாழ்க்கை முறையின் சித்தாந்தப் பிரதிபலிப்பேயாகும்.
லூசர்னே (1857-ல் எழுதப்பட்டது) என்ற நூலில் டால்ஸ்டாய் நாகரிகத்தை ஒரு வரப்பிரசாதம் என்று கருதுவது ஒரு “கற்பனைக் கருத்து ” “அது மனித இயல்பின் உள்ளார்ந்து கிடக்கும் நன்மை புரிதல் என்ற ஆதிகால இன்பகரத் தேவையினை அழிக்கும்” என்று கூறுகிறார். தவறாத வழிகாட்டி ஒன்றே ஒன்று தான், ” நம்மைப் பரிணமித்துக் கொண்டிருக்கும் உலக உணர்வு” என்கிறார் டால்ஸ்டாய். (தொகுப்பு நூல் II, பக்.125)
நமது காலத்தின் அடிமைத்தனம் (1900-ல் எழுதியது) என்ற நூலில் டால்ஸ்டாய் இந்த உலக உணர்வுக்கு மிகுந்த ஆர்வத்தோடு வேண்டுகோள் விடுக்கிறார். அரசியல் பொருளாதாரம் “ஒரு போலி விஞ்ஞானம்”, ஏனெனில் அது மிகவும் “தனிச் சிறப்புடைய நிலைமைகளைக் கொண்ட இங்கிலாந்தை” ஒரு மாதிரியாக ஏற்கின்றது. உலகம் முற்றிலுமுள்ள வரலாறு முழுவதிலுமுள்ள மக்கள் நிலைமையினை மாதிரியாகக் கொள்ளவில்லை என்று கூறுகின்றார்.
“முன்னேற்றமும் கல்வி பற்றிய வரையறுப்பும்”, (1862) என்ற நூலில் இந்த முழு உலகம் எப்படி இருக்கும் என்பது நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. “கீழ்த்திசை என்று அறியப்படுவதை” குறிப்பிட்டு, ”முன்னேற்றம் என்பது மனித குலத்தின் பொது விதி” என்ற வரலாற்றாசிரியர் கருத்தை டால்ஸ்டாய் எதிர்க்கிறார். ”மனித முன்னேற்றம் என்ற ஒரு பொது விதி கிடையாது. இதைக் கீழ்த்திசை மக்களின் அமைதி நிரூபிக்கின்றது ” என்கிறார் டால்ஸ்டாய்.
டால்ஸ்டாயிசம் அதன் உண்மையான வரலாற்று உள்ளடக்கத்தில் ஒரு கீழ்த்திசை ஆரிய அமைப்பின் சித்தாந்தமாகும். எனவே, துறவு, தீமையை எதிர்க்காமை, தோல்வி மனப்பான்மையின் ஆழ்ந்த குறிப்புகள், “எல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் பெளதீகரீதியில் ஒன்றுமில்லை (“வாழ்க்கையின் பொருள்” பக்.52) “ஆன்மாவில் நம்பிக்கை எல்லாவற்றின் துவக்கத்தில் நம்பிக்கை, மனிதன் இந்தத் துவக்கத்துடனான தனது உறவில் வெறும் “உழைப்பாளியாக… தனது சொந்த ஆத்மாவினைக் காத்துக் கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவனாக இருக்கிறான்.
”கிரீட்சர் சொனாட்டா” என்னும் நூலிலும் டால்ஸ்டாய் இந்தச் சித்தாந்தத்திற்கு உண்மையாக நடந்து கொள்கிறார். அவர் கூறுகின்றார்: “மகளிர் விடுதலை என்பது கல்லூரிகளில் இல்லை; பார்லிமெண்டுகளில் இல்லை; ஆனால், படுக்கை அறைகளில் இருக்கிறது.” 1862-ல் எழுதிய கட்டுரை ஒன்றில் அவர் பல்கலைக் கழகங்கள் “எரிச்சல்படுகிற ஊட்டமிழந்த மிதவாதிகளை” மட்டுமே பயிற்றுவிக்கின்றன, அவர்களால் மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடையாது.” மக்கள் முன்னால் சுற்றுச் சார்பிலிருந்து பயனற்ற முறையில் பிரிக்கப்பெற்று வாழ்க்கையில் எவ்வித இடத்தையும் பெறுவதில்லை,” என்று பலபடக் கூறுகின்றார். (IV பக் 136-137).
பழைய அமைப்பு தலைகீழாகப் புரட்டப் பெற்றுள்ள சகாப்தத்தில் தோல்வி மனப்பான்மை, எதிர்த்துப் போராடாமை, “உணர்வு”க்கு வேண்டுகோள் என்ற சித்தாந்தம் தவிர்க்க முடியாததாக உள்ளது . இந்தப் பழைய அமைப்பின் கீழ் வளர்க்கப்பெற்ற வெகுஜனங்கள் தமது தாய்ப்பாலுடன் கூடவே, இந்த அமைப்பின் கோட்பாடுகள், வழக்கங்கள், மரபுகள், நம்பிக்கைகளைத் தன்வயப்படுத்தியிருந்தார்கள். எத்தகைய புதிய அமைப்பு “உருவாகி வருகிறது” என்னென்ன சமூக சக்திகள் “உருவாகி வருகின்றன” என்பனவற்றையும் இந்தச் சகாப்தத்தின் எழுச்சியின் தனி இயல்புகளான மிகவும் கடுமையான அளவிடற்கரிய துன்ப துயரங்களிலிருந்து விடுதலையைக் கொண்டு வரும் ஆற்றல் உடைய சக்திகள் யாவை, அவை எப்படி, செயல்படும் என்பதையும் பார்ப்பதில்லை; பார்க்க முடியாது.
1862-1904 காலகட்டம் ரஷ்யாவில் அத்தகைய எழுச்சிகளைக் கண்ட கட்டமாகும். இந்தக் கட்டத்தில் அனைவரின் கண் முன்னும் பழைய அமைப்பு இனி என்றுமே மீள முடியாத வகையில் சரிந்தழிந்தது. புதிய அமைப்பு இப்போதுதான் உருவாகி வரத் தொடங்கியது. 1905-ல்தான் பல்வேறு துறைகளில் விரிவான நாடு தழுவிய அளவில் வெகுஜனப் பொதுப் போராட்டமாக இந்தப் புதிய அமைப்பினை உருவாக்கும் சமுதாயச் சக்திகள் முதன் முதலாக வெளிப்பட்டன.
1905-ல் ரஷ்யாவில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து அந்தக் “கீழ்த்திசை”‘யிலேயே 1862-ல் டால்ஸ்டாய் குறிப்பிட்ட அமைதியின் பிரகாரம் பல நாடுகளின் அதே போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1905-ம் ஆண்டு “கீழ்த்திசை” அமைதியின் முடிவின் துவக்கத்தைக் குறித்தது. குறிப்பாக இந்தக் காரணத்துடனே அவ்வாண்டு டால்ஸ்டாயிசத்தின் வரலாற்று முடிவினை, டால்ஸ்டாய் போதனைகளைப் பிறப்பித்த சகாப்தத்தின் முடிவினைக் குறித்தது. இவை ஏதோ தனிப்பட்ட நபரின் மனம்போன போக்கு, பற்று வெறி என்ற நிலையில் அன்றி, ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில் லட்சோப லட்சம் மக்கள் எதார்த்தத்தில் வாழ்வு நடத்திய நிலைமைகளின் சித்தாந்தம் என்ற வகையில் இது தவிர்க்க முடியாததாகக் காட்சியளித்தது.
டால்ஸ்டாயின் சித்தாந்தம் நிச்சயமாயும் கற்பனாவாதமாகும். அதன் உள்ளடக்கம் பிற்போக்கானது என்பதை மிகவும் துல்லியமாயும் ஆழ்ந்த பொருளிலும் காணலாம். ஆனால் இந்தச் சித்தாந்தம் சோஷலிசத் தன்மைக் கொண்டதல்ல என்றோ, முன்னேற்றமடைந்த வர்க்கங்களுக்கு விழிப்பூட்டுவதற்கான பயனுள்ள கருத்துகளை அளிக்கும் ஆற்றலுடைய விமர்சனக் கூறுகளை உள்ளடக்கியிருக்கவில்லை என்றோ பொருளல்ல.
பல்வேறு வகையான சோஷலிசம் இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறை நிலவும் எல்லா நாடுகளிலும் பூர்ஷுவா வர்க்கத்தை அகற்றி அதனிடத்தில் வரவிருக்கும் வர்க்கத்தின் சித்தாந்தத்தை வெளிப்படுத்தும் சோஷலிசம் உள்ளது. நிலப் பிரபுத்துவ சோஷலிசம் பிந்திய வடிவிலான சோஷலிசத்திற்கு உதாரணம். இந்த சோஷலிசத்தின் தன்மை நெடு நாள்களுக்கு முன்னால் அறுபதாண்டுகளுக்கு முன்பாகவே மார்க்சினால், இதர வடிவிலான சோஷலிசத்தை (56) மதிப்பீடு செய்த அதே சமயத்தில் மதிப்பீடு செய்யப்பட்டது.
மேலும், டால்ஸ்டாயின் கற்பனைவாத சித்தாந்தத்தில் உள்ளார்ந்து கிடக்கும் விமர்சனக் கூறுகளும் பல கற்பன அமைப்புகளில் உள்ளார்ந்து கிடக்கும் விமர்சனக் கூறுகள் போலவே காணக் கிடக்கின்றன, கற்பனா சோஷலிசத்திலுள்ள விமர்சனக் கூறுகளின் மதிப்பு “வரலாற்று வளர்ச்சிக்கு எதிரான உறவுகளைக் கொண்டிருக்கின்றது” என்ற மார்க்சின் அறிவார்ந்த கருத்தை நாம் மறந்து விடக்கூடாது. புதிய ரஷ்யாவை உருவாக்கி, இன்றைய சமூகத் தீமைகளிலிருந்து விடுதலை கொண்டு வரும் சமுதாய சக்திகளின் செயல்பாடுகள் மேலதிகமாக வளர்ச்சியடைந்து திட்டவட்டமான தன்மையினைப் பெறும் அளவுக்கு “விமரிசனரீதி – கற்பனா சோஷலிசம் அனைத்து நடைமுறை மதிப்பினையும், தத்துவார்த்த நியாயத்தையும் இழந்துவிடும்” (57)
கால் நாற்றாண்டுக்கு முன்பாக, டால்ஸ்டாய் சித்தாந்தத்தின் விமரிசனக் கூறுகள், பிற்போக்கு கற்பனை அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும் மக்கள் தொகையின் சில பகுதிகளுக்குச் சில சமயங்களில் நடைமுறை பயனுடையனவாக விளங்கின. இது கடந்த பத்தாண்டில் நடந்திருக்க முடியாது. காரணம் வரலாற்று வளர்ச்சி 1880 -ஐ ஒட்டிய ஆண்டுகளுக்கும் கடந்த நூற்றாண்டின் இறுதியாண்டுகளுக்கும் இடையே கணிசமான முன்னேற்றத்தினை அடைந்திருந்தது. நமது காலத்தில் மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சித் தொடர்கள் நமது காலத்தில் கீழ்த்திசை அமைதிக்கு முடிவுகட்டிவிட்டன. வெக்கிகளின் (குறுகிய வர்க்க சுயநல வர்க்கப் பிற்போக்காளர்) உணர்வுபூர்வமான பிற்போக்குக் கருத்துகள் மிதவாத பூர்ஷ்வாக்களிடையில் மிகப்பெருமளவில் பரவின.
ஏறத்தாழ மார்க்சியவாதிகளானவர்களில் ஒரு பகுதியினரைக் கூட இந்தக் கருத்துகள் பீடித்தன. ஒரு குலைவுப் போக்கினை (58)ச் சிருஷ்டித்தன. இந்த நிலையில் டால்ஸ்டாயின் சித்தாந்தத்தை லட்சியவாதமாகச் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் அவரது “எதிர்த்துப் போராடாமை” கோட்பாட்டினை நியாயப்படுத்தல் மன்னித்தல் செய்வதும், ஆன்மிக சக்திக்கு வேண்டுகோள் விடுத்தலும், “ஒழுக்கமுறை சுய நிறைவு”க்கான அவரது “வேண்டுகோள்களும்” “அவரது மனச்சாட்சி”, உலக “அன்பு” என்ற கோட்பாடும், துறவறம் அமைதிவாதம் போன்றவற்றைப் பற்றிய அவரது பிரச்சாரமும் நமது காலத்தில் மிகவும் நேரடியான மிகவும் ஆழமான பாதகத்தை விளைக்கும்.
– லெனின், (ஜனவரி 22, 1911-ல் எழுதியது)(ஸ்வெஸ்தா, நெ.6, ஜனவரி 22, 1911, ஒப்பம் : வி.இ. லெனின்) (தொகுப்பு நூல்கள், பாகம் 17, பக்கம் 49-53)
அடிக்குறிப்புகள்:
55: நரோத்னிக்குகள் – நரோதிசத்தின் ஆதரவாளர்கள்; 19-ம் நாற்றாண்டின் எழுபதாம் ஆண்டுகளில் ரஷ்யாவில் தோன்றிய ஓர் அரசியல் போக்கு. அவர்களுடைய உலகக் கண்ணோட்டத்தில் பிரதான அம்சங்கள் புரட்சிகர இயக்கத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தை மறுப்பதும், சிறு உடைமையாளர்களும் விவசாயிகளும் சோஷலிசப் புரட்சியை நடத்த முடியும் என்பதும் ஆகும். சமுதாயத்தின் மெய்யான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிராததாலும், வெறும் நேர்த்தியான சொற்கள், கற்பனைகள், உன்னதமான எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததாலும், நரோத்நிக்குகளின் சோஷலிசம் கற்பனைவாதமாயிருந்தது.
எண்பதாம் ஆண்டுகளிலும், தொண்ணூறாம் ஆண்டுகளிலும் நரோத்னிக்குகள் ஜாரிசத்துடன் சமரசம் செய்து கொள்வதற்குத் தயாராய் இருந்தனர். குலக்குகளின் நலன்களைப் பிரதிபலித்து மார்க்சியத்திற்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்தி வந்தனர்.
56: கே. மார்க்ஸ், எப். எங்கல்சின் கம்யூனிஸ்டு அறிக்கை அத்தியாயம் III பற்றிய குறிப்பு இது.
57: கே. மார்க்ஸ், எப். எங்கல்சின் கம்யூனிஸ்டு அறிக்கை (மார்க்ஸ், எங்கல்சின் தொகுப்பு நூல்கள், பாகம்.1, மாஸ்கோ, 1962, பக்.63ஐப் பார்க்கவும்)
58: குலைவு வாதம் – 1905-07 புரட்சியின் தோல்விக்குப் பிறகு மென்ஷிவிக் – சமூக ஜனநாயகவாதிகளிடையே தோன்றிய ஒரு சந்தர்ப்பவாத போக்கு அதன் ஆதரவாளர்கள் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர சட்டவிரோதக் கட்சியின் கலைப்பையும் அதற்குப் பதிலாக ஜார் உத்தவின் பேரில் சட்ட பூர்வமாகச் செயல்படும் சந்தர்ப்பவாதக் கட்சி நிறுவப்படுவதையும் கோரினர். புரட்சியின் லட்சியத்தைக் காட்டிக் கொடுத்த குலைவு வாதிகளை லெனினும், இதர போல்ஷிவிக்குகளும் இடைவிடாது அம்பலப்படுத்தினர். இந்தக் குலைவு வாதிகள் தொழிலாளிகளின் ”ஆதரவைப் பெறத் தவறினர். இவர்கள் 1911 ஜனவரியில் ர.ச.இ.தொ. கட்சியின் பிராக் மாநாட்டில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
நூல்: கலை, இலக்கியம் பற்றி – வி.இ.லெனின் தமிழாக்கம்: கே.ராமநாதன் ஆங்கில மூல நூல் – முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ 1974-ம் ஆண்டு – தமிழாக்க நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.
இதன் முந்தைய பாகத்திற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :
பாராளுமன்றத் தேர்தலில் தாமரை மலர்ந்தே தீருமென்று தமிழிசை முதல் எச். ராஜா வரை கூவி வருகின்றனர். இது குறித்து சென்னை மக்களிடம் கேட்டோம். நாம் கேட்ட கேள்வி ஒன்றுதான் … தாமரை மலருமா மலராதா, ஏன்? பொங்கித் தீர்த்தார்கள் மக்கள்.
என்ன செஞ்சாரு மோடி?
திங்கிற இட்லிக்கும் வரி போட்டவருதானே மோடி?
அவரு போட்ட டிரஸ்ஸையே சில இலட்ச ரூபாய்க்கு ஏலம் விட்டவர்தானே மோடி?
(செப்டம்பர் 5, 2018 அன்று வெளியான இந்தக் கட்டுரையை தவறுதலாக இன்று (மார்ச் 26, 2019) மீண்டும் வெளியிட்டு விட்டோம். சிரமத்திற்கு வருந்துகிறோம். இனி இத்தகைய தவறுகள் நிகழாதவாறு கவனமாக இருக்கிறோம் – வினவு)
‘பாசிச பாஜக ஒழிக’ என முழக்கமிட்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்டார், ஆய்வு மாணவர் சோபியா. அவர் எழுப்பிய முழக்கத்தை இப்போது முழு இந்தியாவும் சமூக ஊடகங்களில் எழுப்பிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ‘மோடியை கொல்ல சதி’ என்கிற பெயரில் கைதான செயல்பாட்டாளர்கள் குறித்த ஆங்கில ஊடக செய்தி ஒன்றில், பெரும்பாலான பின்னூட்டங்கள் மோடி தன்னுடைய கையாலாகாத்தனத்தை மறைக்கத்தான் இந்த ‘கொலைப்பழி’ நாடகத்தை போடுகிறார் என்பதை சுட்டுவதாக இருந்தன. மோடிக்கு எதிராக உருவாகிவரும் மனநிலை காரணமாக ‘பாசிச பாஜக வரும் தேர்தலில் ஒழிந்துபோகும்’என்கிறார் ஜேம்ஸ் மேனர் என்கிற லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் .
…………………………………………..
ஓர் ஆண்டுக்கு முன் பாஜக, வரப்போகிற தேர்தலில் தன் ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும் என நம்பியது. ஆனால், சமீபத்திய கருத்து கணிப்புகள், பாஜக தேய்ந்து வருவதை சொல்கின்றன. மக்களவையில் தனி பெரும்பான்மையுள்ள கட்சி, இப்போது தள்ளாட்டத்தை சந்திக்கிறது. பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தாலும் அவர்கள் பிரதமரை மாற்றச் சொல்லி கோரிக்கை வைக்கக்கூடும்.
உச்சபட்ச வேலைவாய்ப்பின்மை
லோக்நீதி என்ற அமைப்பு மே மாதம் வெளியிட்ட கருத்து கணிப்பில் 22% தலித்துகள் பாஜகவை ஆதரித்திருந்தனர். கடந்த ஜனவரி வெளியான முடிவைக் காட்டிலும் இது 8% குறைந்திருந்தது. இதுபோல பழங்குடியினரின் ஆதரவும் குறைந்திருந்தது. விவசாயிகளின் ஆதரவு ஒரே வருடத்தில் 49% சதவீதத்திலிருந்து 29% சதவீதமாக குறைந்திருப்பது தெரிந்தது.
மேலும் சில சரிவுகள்…
♣ 61 % பேர் இந்த அரசு விலைவாசியை நிர்வகிப்பதில் கோட்டைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
♣ 55% பேர் ஊழலை ஒழிக்க இந்த அரசு போதிய முயற்சிகள் எடுக்கவில்லை என்கிறார்கள்.
♣ 61% பேர் இந்த அரசே ஊழல் அரசுதான் என்கிறார்கள்.
♣ 64% பேர் பாஜக ஆட்சியில் வளர்ச்சி எதிர்மறையாக உள்ளதாக சொல்கிறார்கள்.
♣ 57% பேர் 2014 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சொன்ன வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன் என்ற வாக்குறுதி காற்றோடு கலந்துவிட்டதாக கருதுகிறார்கள்.
♣ 47% பேர் இந்த அரசின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்கிறார்கள். முந்தைய கணிப்பில் 27% பேர் மட்டுமே இப்படி சொல்லியிருந்தார்கள்.
♣ 38% பேர், 2014-ல் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு வாக்களித்தவர்கள், வரப்போகிற தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
மாநிலத்துக்கு மாநிலம் பாஜகவின் வளர்ச்சியை கணக்கில் எடுத்தால், இதே போன்ற முடிவுக்கு வரமுடியும். பாஜகவுக்கு சாதகமான மாநிலங்களிலிருந்து இதைத் தொடங்கலாம். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வென்றது. ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்-ஐ குறைத்து மதிப்பிட முடியாது, ஆனாலும், பாஜக 10-லிருந்து 15 இடங்களை வெல்ல வாய்ப்புண்டு.
வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு சாதகமான சூழல் உள்ளது. அசாமில் 14 இடங்களில் 7 இடங்களை வென்றது. இது மேலும் அதிகரிக்கலாம் என்றாலும் கருத்து கணிப்பு பின்னடைவு உள்ளதைக் காட்டுகிறது. சிறு மாநிலங்களில் 10-க்கு 1 இடத்தில் வென்றது பாஜக. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு. மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களை மட்டுமே பெற்ற பாஜக, வரவிருக்கிற தேர்தலில் கூடுதல் இடங்கள் கிடைக்கலாம்.
இவற்றை ஒட்டுமொத்தமாக சேர்த்தால் வெறும் 87 எம்.பி.க்கள் மட்டுமே கிடைப்பார்கள். 326 இடங்களை ஒப்பிடும்போது இது மிக மிக குறைவு. பாஜக சில அல்லது பல இடங்களை இழக்கலாம்.
டெல்லியில் ஏழுக்கு ஏழு இடங்களை பெற்றது, அதில் இழப்பு ஏற்படலாம். ஹரியானா (10 இடங்களில் முந்தைய தேர்தலில் பெற்றது 7), சத்தீஸ்கர் (11-10), குஜராத் (26-26), ஹிமாச்சல் பிரதேசம் (4-4). மொத்தமுள்ள 63 இடங்களில் பல இடங்களை பாஜக இழக்கும்.
ரஃபேல் புகழ் மோடி
பீகாரில் கடந்த தேர்தலில் 40 இடங்களில் 22-ல் வென்றது. அதில் 9 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்குப் போனது. ஜார்க்கண்ட் (14-12), கர்நாடகா (28-17). இந்த மாநிலங்களிலும் பாஜகவுக்கு இழப்பு ஏற்படலாம். குறிப்பாக, பீகாரில் இழப்பு அதிகமாகவே இருக்கும். காங்கிரசுக்கும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்குமான கூட்டணி குறைந்தபட்சம் தேர்தல் முடியும் வரை நீடிக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இந்தக் கூட்டணி கணிசமான இடங்களைப் பெற வாய்ப்புண்டு. மகாராஷ்டிரத்தில் சிவசேனையுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், 47 இடங்களில் 23 இடங்களைப் பெற்ற கணக்கு வெகுவாக குறையக்கூடும். அப்படியே கூட்டணி அமைந்துவிட்டாலும், இவர்களை எதிர்த்து போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களைப் பொறுத்தே இவர்களது வெற்றி பெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த மாநிலங்களில் மொத்தம் 129 இடங்கள் உள்ளன.
சமாஜ்வாதி கட்சிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டால், உத்திரபிரதேசத்தில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்படும். இதில் காங்கிரசும் ராஷ்ட்ரிய லோக் தளமும் இணைந்தால், கடந்த தேர்தலில் பாஜக வென்ற 71 தொகுதிகளில் பல தொகுதிகளை இழக்கும்.
இறுதியாக, பாஜகவுக்கு மிக மிக சாதகமான இரண்டு மாநிலங்களில் அது கடுமையான பின்னடைவை சந்திக்கும் என கருத்து கணிப்பு அறிவிக்கிறது. மத்திய பிரதேசத்தில் கடந்த முறை 29 இடங்களில் 27 தொகுதிகளை வென்றது. அங்கே தற்போது காங்கிரசுக்கு சாதகமான அலை வீசிக்கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் கடந்த முறை மொத்தமுள்ள 25 தொகுதிகளையும் வென்றது. ராஜஸ்தானில் பாஜக முதல்வராக முதல்முறை வசுந்தரா ராஜே சிந்தியா தேர்வு செய்யப்பட்டபோது என்னென்ன குளறுபடி செய்து ஆட்சியை இழந்தாரோ அதுபோன்ற சூழல் இப்போதும் நிலவுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் மாநில ஆட்சியை கைப்பற்றுவதோடு, கணிசமான மக்களவை தொகுதிகளையும் பெறும். பாஜக பெற்ற 52 இடங்களில் கணிசமானதை இழக்கும்.
தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மொத்தமுள்ள 102 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாஜக நான்கு இடங்களை மட்டுமே வென்றது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த பாஜக 2 இடங்களில் வென்றது. 2019-ல் இந்த எண்ணிக்கை சற்று கூடும் என எதிர்ப்பார்க்கலாம்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், 87 இடங்கள் புதிதாக கிடைத்தாலும், முன்பு கிடைத்த 326 தொகுதிகளின் எண்ணிகையில் பெரும் சரிவு இருக்கும்.
ஆட்சியமைக்கப் போதுமான 272 தொகுதிகளை பாஜக பெறுவதுகூட முடியாத நிலைமைதான் என தெளிவாகத் தெரிகிறது. ஆனால், கூட்டணி ஆட்சியமைக்க போதுமான இடங்கள் நிச்சயம் கிடைக்கும். ஆனால் மோடியின் மீது ஆழ்ந்த விரக்தியில் இருக்கும் கூட்டணி கட்சியினரிடம் கடுமையான பேரத்தை பாஜக நடத்த வேண்டியிருக்கும். 200-க்கு மேற்பட்ட இடங்களை பாஜக பெற்றால், கூட்டணி கட்சியினர் மோடியை மாற்றச் சொல்வார்கள். ஆர்.எஸ்.எஸ். அதற்கு தயாராகவே இருக்கும். 200-க்கும் கீழே எண்ணிக்கை குறைந்தால் கூட்டணி ஆட்சியமைவதும் கடினம்தான்.
இது மாறக்கூடிய நிலைமைதான். அமித் ஷாவின் தந்திரங்கள் பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தக்கூடியதுதான். குஜராத், உத்திரபிரதேசத்துக்கு வெளியே ஏராளமான வகுப்புவாதத்தைத் தூண்டும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. எதிர்பாராத நிகழ்வுகள் பாஜகவுக்கும் உதவலாம். ஊடகங்களை வலைத்துப்போடுவதன் மூலம் ‘மோடி பிம்பம்’ இன்னமும் வசீகரிப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பாஜகவின் முழக்கமான எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதுதான் உண்மையான ஆபத்தில் உள்ளது.
கட்டுரையாளர் :ஜேம்ஸ் மேனர் நன்றி :தி வயர் தமிழாக்கம்: கலைமதி
எலக்சன் பாதுகாப்புக்காக ஆந்திராவில் ஒரு காலேஜில் தங்கியிருக்கிறோம் …
சம்பவம் 1
ஹோலி அன்று Gate ல் நின்றிருந்தேன்.. மூன்று கல்லூரி மாணவிகள் வந்தனர் ஹேப்பி ஹோலி என கை நீட்டினர். நம்ம பொண்ணுங்க கலாச்சாரத்தில் திளைத்ததாச்சே என நான் ஆச்சர்யத்தோடு கை குலுக்கிக்கொண்டேன்.பக்கத்தில் இருந்த வண்ணப்பொடிகளை நெற்றியில் வைக்கவோ கன்னத்தில் தடவவோ கூச்சப்பட்டு கைகளில் கொடுத்தேன். அவர்கள் அனாயசமாக என்னோட கன்னத்தில் தடவிவிட்டு மீண்டும் ஹேப்பி ஹோலி என மிக மகிழ்ச்சியாக விளையாடி சென்றனர்.
சம்பவம் 2
காலேஜோடு சிறிய ஸ்கூலும் உண்டு… சின்னப்பசங்க அவனவன் நோட்டை எடுத்துட்டு ஓடி வந்து நீட்டறாங்க.. என்னடானு பார்த்தா ஆட்டோக்ராப் வேணுமாம்… எனக்கு முன்னாடியே பல ஆட்டோக்ராப்கள்.. வெறும் கையெழுத்து மட்டும் இட்டிருந்தனர். Fight for rights என கையெழுத்திட்டேன். அடுத்தடுத்த யாரெல்லாம் யூனிபார்ம்களில் தெரிகிறார்களோ அவர்களிடத்தில் சார் சார் (கவனிக்கவும் … அங்கிள் என அழைக்கல) என ஆட்டோக்ராப் வேட்டை தொடர்ந்தது.
சம்பவம் 3
இரண்டு டீச்சர்கள் என்னோடு பேசினார்கள். அவர்களுக்கு தமிழ் லேது.. நமக்கு தெலுங்கு தெரியாது. இருந்தாலும் பேசினோம். ஒரு நாள் ஒருவர் ரசமும்… இன்னொருவர் சாம்பாரும் வீட்டிலிருந்து எடுத்து வந்து சிறப்பித்தனர். ரியல் ஹீரோஸ் என்றனர்.
சம்பவம் 4
வெளியில் மார்க்கெட் செல்லும்போது துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்போடுதான் போகிறோம் இங்கு. ( உபயம் நக்சல் ஆபத்து) அப்படியான நிலையில் ரூ500 மதிப்புள்ள டி ஷர்ட்டை பட்டாளம் என்பதால் ரூ 300-க்கு தந்த கடைக்காரர் விரும்பியது எங்களுடன் ஒரு செல்பி மட்டுமே.
இப்படி பல சம்பவங்களை அடுக்கலாம். பட்டாளத்தை காணாத மக்கள் அனைவரும் இப்படித்தான் வரவேற்கிறார்கள். இயல்பாக ராணுவம் மேலிருக்கும் ஊட்டப்பட்டிருக்கும் பொதுப்புத்தியில் இவ்வாறு நடந்து கொள்ளும் மக்கள் என்றேனும் ஏன் காஷ்மீரில் மணிப்பூரில் கல்லெறிகிறார்கள் என சிந்திப்பார்களா ? அங்கேயெல்லாம் துப்பாக்கி எடுக்கும் பட்டாளம் இங்கு ஏன் அமைதியாக இருக்கிறது என சிந்திக்கலாமே என புத்திசாலிகள் கேட்கலாம். இங்கே ஒரு ஸ்டெர்லைட்டோ, கூடங்குளமோ அல்லது மக்களுக்கு எதிராக ஒன்றை வைத்து மக்கள் அதனை அறவழியில் எதிர்க்கும்போதே பாருங்களேன் பட்டாளத்து நிலைமையை…
ஆட்டோகிராப் கேட்ட குழந்தைகளுக்கு பெல்லட்கள் பரிசளிக்கப்பட்டிருக்கும். செல்பி கேட்டவர் காணாமல் போனவராகியிருப்பார்… பெண்கள் அருகில் கூட வந்திருக்க வாய்ப்பில்லை. நிலைமை தலைகீழாகியிருக்கும். இதுதான் காஷ்மீரில் நிகழ்கிறது. இதுதான் வடகிழக்கில் நிகழ்கிறது. இதுதான் சட்டீஸ்கரில் நிகழ்கிறது. தலைகீழாக்குவது யார் என்ற புரிதல் பட்டாளாத்தானுக்கு புரிந்தால் பணி செய்வதே பாவமாகிவிடும். மக்களுக்கு புரிந்தால் அரசுக்கு தலைவலியாகும்.
ஈழத்தில் இந்திய அமைதிப்படை இறங்கிய போது கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது? பொதுமக்கள் அவர்களை கல்லடித்து வரவேற்கவில்லையே? மாலையிட்டு வரவேற்கப்பட்டவர்கள் வரவேற்றவர்களை பாலியல் வன்கொடுமை செய்தும் கொல்லப்பட்டும் கொடூரமாக முடிவுரை நிகழ்ந்ததும் எங்கனம் ?
காஷ்மீர் கொடூரங்கள் ...
1 of 13
இதோ – தங்களது உரிமைகளை வென்றிடுக்க கையில் சிக்கியதை எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ள காஷ்மீரின் வீரமகள்
இந்திய இராணுவத்தின் அதிகாரத் திமிருக்கு தமது தாய் மண்ணின் கற்களால் பதில் சொல்கிறார்கள் இந்தப் பள்ளி மாணவிகள் !!
காஷ்மீர்: காணாமல் போன எங்கள் பிள்ளைகள் இறந்துவிட்டனரா? உயிருடன் உள்ளனரா? பரிதவிப்பில் பெற்றோர்கள்.
ஆக இருபக்கமும் சூழல் அன்பையும் அடிதடியையும் தந்து கொண்டிருக்கிறது.. சூழலை அரசு உருவாக்குகிறது. அரசினை கார்ப்பரேட்கள் நடத்துகின்றனர். இந்த சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கும் பட்டாளத்தானுக்கும் அரசியல் புரிந்து விட்டால் போதும். ஊடகங்கள் அதனை ஊக்குவிப்பதில்லை. எட்டு மணி நேர பொழுதுபோக்குக்கு உழைத்த தலைவர்கள் இன்றிருந்தால் அதில் நான்கு மணி நேரம் அரசியலுக்கு என கேட்டிருப்பர்.
மனதில் தோன்றியவற்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போது கூட பக்கத்து கிராமத்தில் நடந்து வந்தோம். ஊரில் உள்ள குழந்தைகள் ஓடி ஓடி வந்து கை குலுக்கின்றனர். அவர்கள் மீது பெல்லட்கள் பாயும் சூழல் எதுவும் வரும் முன்பே இந்த ஊரை விட்டு கிளம்பிட அல்லாடிக்கொண்டிருக்கிறது மனது. இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ?
ஹைதராபாத் நிஜாமின் ஆளுகைக்குட்பட்ட தெலுங்கானா பகுதியில் நிலவிய கோரமான கொத்தடிமைத்தனத்தை எதிர்த்து, அனைத்து உழைப்பாளி மக்களும், கைவினைஞர்களும் நிலப்பிரபுக்களுக்கு இலவச உழைப்பைத் தரவேண்டுமென்று அடிமை நிலையில் வைக்கப்பட்டதை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகள் ஆயுதமேந்தி தலைமை தாங்கிப் போராடி பல இலட்சக்கணக்கான மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து சுதந்திர மனிதர்களாகப் பிரகடனம் செய்த எழுச்சியே தெலுங்கானா ஆயுத எழுச்சி.
இப்போராட்டத்தின் வீரஞ்செறிந்த நிகழ்வுகளை, புரியப்பட்ட அற்புதத் தியாகங்களை, அதன் சாதனைகளை இந்நூல் சுருக்கமாக விவரிக்கிறது.
வீரஞ்செறிந்த இந்த ஆயுதப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாக தலைமை தாங்கி வழிநடத்திய தோழர் பி. சுந்தரைய்யா இந்நூலைத் தன் அனுபவங்களின் வாயிலாக விவரித்திருக்கிறார். ஒரு காலகட்டத்து மக்கள் போராட்டத்துக்கான ஆவணம் இது. (நூலின் அறிமுகப் பகுதியிலிருந்து)
… சரித்திரப் பிரசித்தி பெற்ற தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியானது இதர வேறெந்த விஷயத்தையும்விட, விவசாயப் புரட்சி என்ற பிரச்சனையை முன்னுக்குத்தள்ளியது. காலஞ்சென்ற வினோபா பாவேயின் பூதான இயக்கம் என்றழைக்கப்பட்ட இயக்கமும், இந்தியா முழுவதிலும் பல மாநில சட்டமன்றங்களில் கொண்டுவரப்பட்ட விவசாயச் சட்டங்களும், இந்த தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியின் கொழுந்துவிட்டெரியும் நெருப்பை அணைப்பதற்காகச் செய்யப்பட்ட ஒருவகை முயற்சியேயாகும்.
இந்தப் புகழ்மிகு தெலுங்கானா போராட்டமானது இந்தியா முழுவதிலுமிருந்த நூற்றுக்கணக்கான மன்னராட்சி மாநிலங்களின் செயல்பாட்டுக்கு மரண அடியைக் கொடுத்ததோடு, இந்திய ஒன்றியத்தில் மொழிவழி அடிப்படையில் மாநிலங்களை மாற்றியமைப்பதற்கு வழிவகுத்தது. (நூலிலிருந்து பக்.9 – 10)
இந்த வீரஞ்செறிந்த விவசாயிகள் எழுச்சியின் ஒட்டுமொத்த விபரத்தை சுருக்கமாகக் கூறுவோம். இது போர்க்குணமிக்க தெலுங்கானா விவசாயிகளிடமிருந்தும் இந்த வெகுஜன விவசாயிகள் எழுச்சிக்கு தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் விசாலாந்திரா மாநிலக்கிளையிடமிருந்தும் பெரும் தியாகங்களைப் பெற்றது. கம்யூனிஸ்ட்களும் விவசாயப் போராளிகளும் 4 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் ஊழியர்களும், மக்கள் போராளிகளும் 3 முதல் 4 வருட காலம் வரையில் பாதுகாப்பு முகாம்களிலும், சிறைகளிலும் அடைக்கப்பட்டனர்; 50 ஆயிரம் பேர் அவ்வப்பொழுது போலீஸ், இராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். சித்ரவதை செய்யப்பட்டனர். தொடர்ந்து வாரக் கணக்கில், மாதக் கணக்கில் பயமுறுத்தப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான கிராமங்களிலிருந்த பல இலட்சக்கணக்கான மக்கள் போலீஸ், இராணுவ சோதனை வேட்டைகளுக்கும் கொடூரமான தடியடி தாக்குதலுக்கும் ஆட்படுத்தப்பட்டனர். இத்தகைய இராணுவ, போலீஸ் வேட்டைகளின் பொழுது இலட்சக்கணக்கான ரூபாய்கள் பெறுமானமுள்ள சொத்துக்களை மக்கள் இழந்தனர்; இவைகள், ஒன்று கொள்ளையடிக்கப்பட்டன. அல்லது அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்; அவர்கள் அனைத்து வித அவமானங்களுக்கும், இழிவுகளுக்கும் ஆளாயினர்.
ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், ஆரம்பத்தில் நிஜாம் மற்றும் அவனுடைய ஆயுதமேந்திய ரசாக்கர் குண்டர்களின் தாக்குதலுக்கும், அதைத் தொடர்ந்து மத்திய அரசாங்கம், ஹைதராபாத் மாநில அரசாங்கம் ஆகியவைகளின் போலீஸ், இராணுவ வன்முறை வெறியாட்டத்திற்கும் முழு ஐந்து வருட காலத்திற்கும் இந்தப் பிராந்தியம் முழுவதும் இலக்காயிருந்தது. போலீஸ் நடவடிக்கைகளுக்குப் பின்னர், இந்த இயக்கத்தை வன்முறை மூலம் ஒடுக்குவதற்காகவும், சிதறிப்போன நிலப்பிரபுத்துவ ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்காகவும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் கொண்ட பலமான இராணுவப் படை அனுப்பப்பட்டது. அதிகாரபூர்வமற்ற சில மதிப்பீடுகளின்படி 1947-48-ம் ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற, யுத்தத்தில் இந்திய அரசாங்கம் செலவிட்ட அளவுக்கு பணம், செல்வாதாரங்களை அன்று ஹைதராபாத்தில் இந்திய அரசாங்கம் செலவிட்டது.
தெலுங்கானா விவசாயிகள் எழுச்சி...
1 of 21
உண்மையில், விவசாயிகள் எழுச்சியின் பெருமைமிகு சாதனைகள், ஆதாயங்கள் என்ற பூரிப்புக்கு சாதனைகள் ஆகிய இதனுடைய மறுபுறத்தைக் காணவில்லையென்றால் இந்த சித்திரம் முழுமையடையாது. இந்தப் போராட்ட காலத்தில் 16 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவிற்குள் 3 ஆயிரம் கிராமங்களிலிருந்த விவசாய மக்கள் சுமாராக 30 இலட்சம் பேர் (பெரும்பாலும் நலகொண்டா, வாரங்கல், கம்மம் ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள) போராடும் கிராமப் பஞ்சாயத்துக்கள் என்ற அடிப்படையில் கிராம இராஜ்யத்தை உருவாக்குவதில் வெற்றியடைந்தனர்.
இத்தகைய கிராமங்களிலிருந்த வெறுக்கப்பட்ட நிலப்பிரபுக்கள் கிராமப்புறப் பகுதிகளில் நிஜாம் எதேச்சதிகாரத்தின் கிராமப்புறத் தூண்களாக இருந்தவர்கள் தங்களுடைய கோட்டைகள் போன்ற வீடுகளிலிருந்தும், நிலங்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டனர்; அவர்களுடைய நிலங்கள் விவசாய மக்களால் கைப்பற்றிக் கொள்ளப்பட்டன. மக்கள் கமிட்டிகளின் வழிகாட்டுதல்களின்கீழ் பத்து இலட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடையே மறு வினியோகம் செய்யப்பட்டன. அனைத்து நில வெளியேற்றங்களும் தடுக்கப்பட்டது; கட்டாய உழைப்புச் சேவை என்பது ஒழிக்கப்பட்டது. கொள்ளை இலாப, அதீத கந்துவட்டி வீதங்கள் என்பது மிகப்பெருமளவு குறைக்கப்பட்டது அல்லது ஒட்டுமொத்தமாக தடுத்து நிறுத்தப்பட்டது. விவசாயத் தொழிலாளிகளின் தினசரிக் கூலி என்பது அதிரிக்கப்பட்டது என்பதுடன் குறைந்தபட்ச கூலி என்பது அமலாக்கப்பட்டது. (நூலிலிருந்து பக். 16 – 17)
நூல்:தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951) ஆசிரியர்: பி. சுந்தரைய்யா தமிழில்: என். ராமகிருஷ்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. தொலைபேசி: 044 – 24332424, 24332924. மின்னஞ்சல்:thamizhbooks@gmail.com இணையம்:thamizhbooks.com
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
இதையும் பாருங்க…
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ’வசந்தத்தின் இடி முழக்கம்’ பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பாடல் !