Sunday, May 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 346

மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களை மாற்றலும் திரித்தலும் தகுமா ?

மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களை மாற்றலும் திரித்தலும் தகுமா ?

– ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்

“பவுத்தத்தின் திறன்சார்ந்த வாழ்வில் வணக்கங்கள், சடங்குகள், தவம் அல்லது பக்தியின் மூலம் ஆதீத ஆற்றல்களைப் பெறுதல், வருவதுரைத்தல் ஆகியவற்றுக்கும் இடமில்லை.” (அ. மார்க்ஸ், புத்தம் சரணம் நூலில்.)

ஆறாம்வகுப்பில் ‘பசிப்பிணி போக்கிய பாவை’ (பக்.24) என்ற நாடகமொன்று மணிமேகலைக் காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மணிமேகலை – தீவதிலகை, மணிமேகலை – ஆதிரை, மணிமேகலை – சோழ மன்னர் – சிறைக்காவலர் என மூன்று காட்சிகள் இதிலுண்டு.

“தீவதிலகை: நம் எதிரில் பூக்கள் நிறைந்து விளங்கும் இந்தப் பொய்கையைப் பார். இதற்கு கோமுகி என்று பெயர். ‘கோ’ என்றால் பசு. முகி என்றால் முகம். பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப் பெற்றது”, (பக்.24)

“மணிமேகலை: வாழ்க்கைக்கு அறம் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது. எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே என் வேண்டுகோள் மன்னா!”, (பக்.27)

நவீன இலக்கியத்திலிருந்து கவிதைகள், சிறுகதைகள், செவ்விகள் போன்றவற்றைப் பாடநூலில் பயன்படுத்தும் போது அவை தணிக்கைக்கு உள்ளாகின்றன. தணிக்கை வாரியம் திரைப்படங்களை வெட்டுவதைப் போன்று படைப்புகளின் சில பகுதிகள் மற்றும் சொற்கள் வெட்டப்படுகின்றன. இதற்கு அந்த ஆசிரியரிடம் (தற்காலப் படைப்பாளி எனில்) அனுமதி பெறுகிறார்களா என்பதும் தெரியவில்லை. இன்னொரு பக்கம் செவ்வியல் இலக்கியங்களையும் திரித்து எழுதுவது சரியா என்பதை ஆசிரியர்களும் பேராசிரியர் பெருமக்களும் உணரவேண்டும். ஏன், எதற்காக இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்கிற விளக்கத்தை இவர்கள் அளிக்க வேண்டும். நாம் தொடர்ந்து வலியுறுத்துவது போல் ‘கிள்ளுக்கீரை’ மனநிலை மொழியை வளப்படுத்தாது; மாறாக மொழிக்கு எதிரானது.

நமது தமிழாசிரியர்கள் மற்றும் தமிழ்ப் பேராசிரியர்கள் பெருமக்கள் பலரும் நவீன இலக்கியத்தில் ஈடுபாடு இல்லாதவர்களாக இருக்கின்றனர். இதுபோக செவ்வியல் இலக்கியத்தை திரிக்கும் போக்கையும் கைவிடமாட்டார்கள் போலிருக்கிறது. ‘குமுதம்’ எனும் இதழை அனைவரும் அறிந்திருப்பர். அந்த நிறுவனம் சுமார் 15 ஆண்டுகளாக ‘தீராநதி’ என்னும் இலக்கிய இதழொன்றை நடத்தி வருவது இவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? மாத இதழான இதை யாரும் வாசித்திருப்பார்களா என்றும் தெரியவில்லை. சிற்றிதழ்கள் இவர்கள் கண்ணுக்குப் படப்போவதேயில்லை. குமுதம் தீராநதி, விகடன் தடம் போன்ற பெரிய நிறுவனங்களின் இதழைக் கூட இவர்கள் கண்ணில் படுவதில்லை என்றால் எப்படி?

‘தீராநதி’ மாத இதழில் ‘நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்’ எனும் தலைப்பில் பேரா. அ. மார்க்ஸ் ‘மணிமேகலை’ பற்றித் தொடர் எழுதிவருகிறார். இவர் தமிழ்ப் பேராசிரியரோ, தமிழாசிரியரோ அல்ல; எழுத்தாளர், மனித உரிமைப் போராளி, சமூக ஆர்வலர், பணிநிறைவு இயற்பியல் பேராசிரியர்.

“சர் கோட்ஃப்ரே லூஷிங்டன் (1885 – 1895 காலகட்டத்தில் இங்கிலாந்து உள்துறைச் செயலாளர்) என்ன இருந்தாலும் ஒரு அதிகாரி. அவரது அறத் தன்னிலைக்கும் அதிகார இருப்பிற்கும் உள்ள முரணை அவரே உணர்ந்து கொள்வதுதான் அவரது மேன்மை எனலாம். சிறைக்கைதிகள் இன்றைய சிறைச்சாலைகளின் ஊடாகக் கழிக்கும் தண்டனை வாழ்வின் மூலம் திருந்துதவற்கு வாய்ப்பே இல்லை என்பதைச் சரியாகவே அடையாளம் காணும் அவர் இந்தச் சிறை அமைப்பில் அது சாத்தியமில்லை எனப் பெருமூச்சு விடுகிறார். அதிகாரி, அவரால் வேறென்ன செய்ய முடியும்?

ஆனால், நம் தமிழிலக்கியத்தில் வேறெங்கும் காணக்கிடைக்காத ஒரு அற்புதம் நிகழ்கிறது. முற்றிலும் நாயகனே இல்லாத, ஒரு நாயகியை மட்டுமே தலைவியாய்க் கொண்டு இயங்கும் மகா காவியமான மணிமேகலையில் காவிய நாயகியான அன்னை மணிமேகலை முற்றிலும் புதுமையாய் ஒரு தீர்வைச் சொல்லுகிறாள். அவள் அதிகாரி அல்லள். குடும்பச் சிறையில் அகப்பட்ட ஒரு சாதாரண மானுடப் பெண்ணும் அல்லள். அவள் புத்த நெறியை ஏற்ற ஒரு துறவி. எனவே அவளால் அதைச் சொல்ல முடிகிறது.

அவளுக்கு புத்தபிரான் அருளால் யாருக்கும் வாய்க்காத ஒரு பெரும்பேறு வாய்க்கிறது. அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி ஒன்று அவளுக்கு அளிக்கப்படுகிறது. அதன் மூலம் மானுடரின் மிகப் பெரிய பிணியாகிய பசிப்பிணியை அகற்றும் பெரும்பேறுக்கு உரியவளாகிறாள் அந்த இளம் பிராயத்தில் அன்னை மணிமேகலை. சிங்கள மொழியில் ‘பசி’க்கு இணையான சொல் ‘படகினி’. அதன் பொருள் வயிற்றிலே தீ. அந்தத் தீயை அணைப்பதைத் தவிர பெரும்பேறு வேறு என்னவாக இருக்க முடியும்?

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியின் ஊடாக வீதிதோறும் அலைந்து பசித்தோர்க்கு அவள் உணவளித்து வரும் அந்தச் செய்தி சோழ மன்னருக்குத் தெரிவிக்கப்படுகிறது. அழைத்து வரச் சொல்கிறார். மன்னனுக்கும் மாதவி மகளுக்கும் இப்படி அமைகிறது உரையாடல்:

“மிக்க தவமுடையாய்! நீ யார்? கையிலேந்திய பாத்திரம் எங்கே கிடைத்தது?”

“அரசே! நெடுங்காலம் வாழ்வாயாக; யான் விஞ்சை மகள். இந்நகரில் வேற்று வடிவங் கொண்டு திரிந்தேன். இது பிச்சைப் பாத்திரம்; இதனை அம்பலத்தேயுள்ள தெய்வமொன்று எனக்கு அருளியது; இது தெய்வத்தன்மையோடு கூடியது. யானைப் பசியென்னும் தீராப்பசியைத் தீர்த்தொழித்தது; பசியால் மெலிந்தவர்களுக்கு மிருதஞ்சீவினியாக உள்ளது”.

“மிக்க தவமுடையாய்! நான் செய்ய வேண்டியது என்ன?”

“சிறைச்சாலையை அறச்சாலையாகச் செய்ய வேண்டும்”.

அன்னையின் வாக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிறைச்சாலை அழிக்கப்பட்டது. அது அறவோர்கள் தங்கும், அறச் செயல்களுக்கான இல்லமாக ஆக்கப்பட்டது”, (சிறைக்கோட்டமும் அறக்கோட்டமும்: பவுத்தம் சொல்வதென்ன? – அ.மார்க்ஸ், ‘தீராநதி’ பிப்.2017)

படிக்க:
மோடியின் மிஷன் சக்தி : சர்வதேச ஊடகங்களின் பார்வையில்…
இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு !

பாடநூலைப் படிக்கும்போது அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. நமது குழந்தைகள் என்ன பாவம் செய்தனர்? என்பதே நம்முன் எழும் கேள்வி. புது விளக்கங்களும் தாங்கள் விரும்பும் அறத்தை மணிமேகலை வழியே சொல்ல வைக்கும் அநீதியும் நிகழ்கிறது. முன்னதாக மணிமேகலைக் காப்பியத்தில் என்னதான் சொல்லப்படுகிறது என்பதைப் பார்த்து விடுவோம்.

“யான்செயற் பாலதென் இளங்கொடிக்கு? என்று
வேந்தன் கூற, மெல்லியல் உரைக்கும் –
“சிறையோர் கோட்டம் சீத்து, அருள் நெஞ்சத்து
அறவோர்க் காக்கும் அதுவா ழியர்” என,
அருஞ்சிறை விட்டாங்கு ஆயிழை உரைத்த
பெருந்தவர் தம்மாற் பெரும்பொருள் எய்தக்
கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க் காக்கினன், அரசாள் வேந்தென்” (பக்.193, மணிமேகலை மூலமும் உரையும் – புலியூர் கேசிகன், வெளியீடு: சாரதா பதிப்பகம்)

“இளங்கொடிக்கு யான் செய்யக்கூடியது என்ன?” என்று வேந்தன் அருளோடு வினவினான்.

மெல்லியலான அவள், “சிறைச்சாலையினை அழித்துவிட்டு அருள் உள்ளங்கொண்ட அறவோர்களுக்கு உரிய அறக்கோட்டமாக அமைத்தருள்க. அதுவே எனக்காகச் செய்யக்கூடியது. நீ வாழ்க!” என்றனள்.

அரிய சிறையிலுள்ளாரை விடுவித்துவிட்டு, அவ்விடத்திலே, ஆயிழையாள் உரைத்த பெருந்தவம் உடையோரால் பெரிதான ஞானச் செல்வத்தைப் புகார் நகரம் அடையுமாறு, கறைப்பட்ட மாக்கள் இல்லாது, அறவோர் வாழும் இடமாக அமையுமாறு, அரசாளும் வேந்தனும் செய்வித் தருளினான் என்க. (பெரும்பொருள் – ஞானச் செல்வம் மக்களிடத்தே அறவுணர்வு பெருகவேண்டும். அறவுணர்வு பெருகிய நாட்டிலே சிறைக்கூடமும் வேண்டிய தன்றாகும் என்பது உணர்க)”. (பக். 193&194, மேலே குறிப்பிட்ட நூல்)

மணிமேகலையின் கோரிக்கையை ஏற்று மன்னன் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுகிறான் என்பதே மணிமேகலைக் காப்பியம் சொல்வது. இவர்கள் இந்த நாடகத்தில் அதை ஒரு கூர்நோக்கு இல்லமாக மாற்றுகிறார்கள். இவர்களுக்குத் தேவையான அறங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று மணிமேகலை கேட்டாளாம்! என்ன விந்தை இது! பசிப்பிணி போக்குதல், பல்லுயிர் ஓம்புதல் என்கிற பவுத்த அறங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது. மனிதனுக்கு மட்டுமல்ல பிற உயிர்களையும் பேணுவது. பெற்றோர்கள், உறவினர்களைப் பேணுதல் என்று திரிப்பது மோசமானது. ‘பெரியோரை மதித்தல்’ என்பதன் மறுதலை சிறியோரை மதிக்காதிருத்தல் அல்லது இகழ்தல் என்பதே. இதற்கு அனைத்து உயிர்களையும் மதிக்கும் பவுத்தம் போன்ற அவைதீக மரபுகளில் இடமில்லை.

அக்கால மன்னராட்சிகளில் கடுந்தண்டனைகள் அளிக்கப்பட்டதும் மரண தண்டனைகள் உடனே நிறைவேற்றப்பட்டதும் சராசரி நிகழ்வுகள். முதல் முறையாக அசோகர் காலத்தில்தான் மரண தண்டனைக் கைதிகளுக்கு கருணை காட்டும் நடைமுறைகளும் தம்ம மகா மாத்திரர்கள் மூலம் சிறைக்கைதிகளுக்கு விடுதலையளிப்பதும் வழக்கத்திற்கு வந்தன. இவை பவுத்தத்தின் பாதிப்பால் நிகழ்ந்தது என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மேலும், சிறையிருப்போர் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் கீழ்க்கண்ட ‘மணிமேகலை’ வரிகள் உணர்த்தும்.

“அதிர்கழல் வேந்தன் அடிபிழைத் தோரை
ஒறுக்கும் தண்டத் துறுசிறைக் கோட்டம்
விருப்போடும் புகுந்து வெய்துயிர்த்துப் புலம்பி
ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை
வாங்கு கையகம் வருந்தநின்று ஊட்டலும்” (பக்.185, மேலே குறிப்பிட்ட நூல்)

“ஒலி முழக்கம் செய்கின்ற வீரக்கழலணிந்த சோழ அரசன், தன்னுடைய திருவடி பணியாதோரை ஒறுக்கும் தண்டனையாக அடைத்து வைத்துள்ள சிறைக்கோட்டம்” என்றே சாத்தனார் குறிப்பிடுவதும் இங்கு கவனிக்கத்தக்கது. சிறையில் இருப்போர் அனைவரும் அறநெறி பிறழ்ந்தவர்களும் அல்லர்.

‘கோமுகி’ப் பொய்கை பற்றிச் சொல்லப்படும் விளக்கம் சரியானதுதானா? ‘கோ’ என்பதற்கு அரசன் என்றும் பொருள் உண்டே! பசுவின் முகத்தில் பொய்கை இருக்கிறது என்பதைவிட, இப்பொய்கைக்கு நீர் வரும் தூம்பு (Drain Pipe) பசு வடிவத்தில் இருக்கிறது என்று சொல்வது கொஞ்சமாவது பொருத்தமுடையதாக இருக்கும். பசு முக வடிவிலான நீர் விழும் தூம்பு என்பது பொருத்தம். இதைப்போல ஆனைத்தூம்பும் உண்டு. இன்றும் கோயில்களில் விலங்குகளின் வடிவத்தில் நீர் வெளியேறும் தூம்புகளை அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.

“ஈங்கி கப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது
மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழிநீர் இலஞ்சி,
இருதிள வேனிலில்; எரிகதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்,
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலை னோடு பொருந்தித் தோன்றும்
ஆபுத் திரன்கை அமுத சுரபியெனும்
மாபெரும் பாத்திரம், மடக்கொடி கேளாய்!”, (பக்.110, மேலே குறிப்பிட்ட நூல்)

“தீவதிலகை: இப்பொய்கைக்கு வேறு ஒரு சிறப்பும் உண்டு. வைகாசித் திங்கள் முழு நிலவு நாளில் இப்பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும்”. (பக்.25) என்று வெறுமனே சொல்லப்படுகிறதே! இங்கு ஏன் இவர்களது ‘பாஷ்யம்’ இல்லாமற்போனது? இளவேனில் வைகாசித் திங்கள் முழுநிலவில் ‘அமுதசுரபி’ தோன்றக் காரணமென்ன? அதுதான் புத்தர் பெருமான் பிறந்த நாளன்றோ! அதைச் சொல்வதற்குக்கூட உங்களுக்கு அறிவு வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது? இல்லாததை ஏற்றிக் கூறுவதும் இருப்பதை விட்டுவிடுவதும் அறமாகுமா?

சுரம் என்பதற்கு இசைக்குறிப்பு, ஏழிசை, இசைவகை, பாலை, காய்ச்சல், கள், எரிந்துபோன காடு, உப்பு, வழி, உயிரெழுத்து, குரல், நகத்தின் அடி என பல பொருள்கள் உண்டு. ஆங்கிலத்தில் burnt forest, desert, musical note, fever, salt, toddy என்றெல்லாம் பொருள் சொல்லப்படுகிறது.

இங்கு ‘சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை’ (பக்.16) என்று சொல்லப்படுகிறது. ‘சுரம்’ என்பது இங்கு பாலை என்னும் பொருளில் கையாளப்படுவதாகவேத் தோன்றுகிறது. வறண்ட நிலம், மணல் சார்ந்த நிலம் என்பதைவிட நாநிலங்களும் தம் இயல்பில் திரிவது என்பதே சரியாக இருக்கும். எனவே கீழ்க்கண்ட நூல் விளக்கம் இதற்கும் பொருந்தும் எனக் கருதுகிறேன்.

எனது ‘கல்வி அறம்’ நூல் கட்டுரையிலிருந்து (பாரதி புத்தகாலயம் – புக் ஃபார் சில்ரன் வெளியீடு) இது குறித்துச் சொல்லப்பட்ட சிறு குறிப்பை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

மணலும் மணல் சார்ந்த பகுதி பாலை.

“குறிஞ்சியும் முல்லையும் தன் இயல்பில் திரிவது பாலை, என்றுதான் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதை இவ்வாறு எளிமைப்படுத்துவது பொருத்தமாக இருக்காது. தொல்காப்பியர், திருவள்ளுவர் போன்றவர்கள் சொல்லியிருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. உலகின் வெப்ப மற்றும் குளிர் பாலைகள் உள்ளன. ரஷ்யாவில் அமுதார்யா, சிர்தார்யா ஆகிய இரு நதிகளால் உருவான ஏரல் கடல் (ஏரி) வறண்டு போயுள்ளது. அண்டார்ட்டிகாவின் பெரும்பகுதி பாலைவனமே. பாலையாதல் (Desertification) இன்றுள்ள மிக முக்கிய சூழலியப் பிரச்சினை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நாநிலங்களும் பாலையாகும் வாய்ப்புண்டு”. (பக்.122&123, கல்வி அறம், பாரதி புத்தகாலயம் – புக் ஃபார் சில்ரன் வெளியீடு, டிச. 2018)

கடலூர் மாவட்டத்தினைக் கண்டுபிடிக்க 10 குறிப்புகள் உள்ளன. அவற்றில் “இந்தியாவில் அதிகளவு பழுப்பு நிலக்கரி கிடைக்கும் சுரங்கம் உடைய ஊரைக் கொண்ட மாவட்டம்”. “சுரபுன்னைக் காடுகளுடன் கூடிய ஏரி இம்மாவட்டத்தின் அழகான சுற்றுலாத்தலம் ஆகும். (பக்.23)

பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் திறந்த வெளிச் சுரங்கமாக உள்ளதால் இதை வேறு பெயரிட்டு அழைப்பது பொருத்தம். ‘அகழி’ எனலாம் என்று பழைய ‘தினமணி’யில் ஐராவதம் மகாதேவன் கருத்துரைத்திருந்தார். ‘சுரபுன்னைக் காடுகள்’ நல்ல சொல்லாக்கந்தான், இருப்பினும் சதுப்புநிலக் காடுகள், மாங்குரோவ் காடுகள் என்று ஒவ்வொரு பாடங்களிலும் வெவ்வேறுச் சொற்களால் அழைப்பதில் மாணவர்களுக்கு ஏற்படும் குழப்பத்தைத் தெளிவுபடுத்தும் வழிகள் நமது பாடத்திட்டத்திலும் கல்வியமைப்பிலும் இல்லாதது பெருங்குறையாகும். இங்கு ‘சுரம்’ என்பது உப்பு மற்றும் அப்பகுதிகளில் உள்ள மரத்தைக் குறிக்கும் பொருளில் வருகிறது.

‘தங்கைக்கு’ – மு.வரதராசன், ‘தம்பிக்கு’ – அறிஞர் அண்ணா ஆகிய நூல்கள் குறிப்பிட்ட ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. ‘பெரியார் சிந்தனைகள்’ ஆனைமுத்து அவர்களால் தொகுக்கப்பட்ட பெரியாரின் 20 நூற்தொகுப்புகளைக் குறிக்கும். இதை ‘பெரியார் சிந்தனைகள் – ஆனைமுத்து’, (பக்.46) என்று எழுதுவது பொருத்தமானதா?

பத்தியைப் படித்து வினா எழுதுதலில் வ.உ.சிதம்பரனார் பற்றிய பத்தியொன்றுள்ளது. அதில் ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்று குறிப்பிடப்படுகிறது. (பக்.15) ‘Swadeshi Steam Navigation Company’ (1906) என்று பதிவு செய்யப்பட்ட கம்பெனியை மொழிபெயர்ப்பது சாத்தியமா? Coral Mill ஐ பவள ஆலை என்றும் Sun TV சூரியத் தொலைக்காட்சி என்றும் மொழிபெயர்ப்பது சரியல்ல.

“இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு”, (பக்.11) என்ற தலைப்பில் ஏன் ‘தமிழர்கள்’ என்கிற பன்மையடையாளம் இல்லை. முத்துராமலிங்கனாரின் பங்கை மட்டும் உயர்த்திப் பிடிக்கும் மா.சு. அண்ணாமலையின் கட்டுரையைவிட நேதாஜியை, இந்திய தேசிய இராணுவத்தை நடுநிலையுடன் அணுகும் வேறு கட்டுரைகளை வெளியிட்டிருக்கலாம்.

கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதா, வேண்டாமா என்பதில் தெளிந்த சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாமல் ஓரிடத்தில் ஏற்பதும் பிறிதோரிடத்தில் மறுப்பதும் பாடநூல்களின் பொதுப்புத்தியாக உள்ளது. இதைப் படிக்கும், எழுதும் குழந்தைகளுக்கு ஏற்படும் தடுமாற்றங்கள் மற்றும் குழப்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டாமா?

“தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம், என்றார் பாரதியார்”, (பக்.24) என்ற வரிகளில் ‘ஜெகத்தினை’ ‘செகத்தினை’ என்று எழுதுபவர்கள் ஆசிய ஜோதி (பக்.42), ஜீவஜோதி, ஜீவன் ஜோதி (பக்.45), புஷ்பாஞ்சலி, ஹிதேந்திரன் (பக்.52), கைலாஷ் சத்யார்த்தி (பக்.48) என்ற சொற்களில் ஏன் கிரந்தத்தைக் காண்பதில்லை? தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன் (பக்.03) என்றும் எஸ்.ராமகிருஷ்ணன் (பக்.31) எழுதலாமா? Khalil Gibran என்பதை கலீல் கிப்ரான் (பக்.23) என்பதா கலீல் ஜிப்ரன் என்பதா? கிப்ரன்/ஜிப்ரன் என்று நீட்டாமல் சொல்லத் தோன்றுகிறது. கிரந்த வெறுப்பில் செசல்ஸ் (ஷெஷல்ஸ்) என்று எழுதுகிறார்கள். ஆனால் ஜானகி, நேதாஜி, ஜான்சிராணி என்று எழுதும்போது வேறு விதிகள் கடைபிடிக்கப்படுகின்றனவா?

இன்று 90% க்கு மேற்பட்டத் தமிழ்க்குழந்தைகள் பெயர்களில் இந்த கிரந்த எழுத்துகள் இல்லாமல் இல்லை. அவற்றை என்ன செய்வது? வருகைப் பதிவேட்டில் இம்மாதிரி மாற்றி எழுத முடியுமா? தமிழ்ப் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு என்பது போல திட்டங்களைப் பரிந்துரைக்கலாமா? (அதிலுள்ள அரசியல் மற்றும் குளறுபடிகள் வேறு கதை.) தமிழ் எழுத்துகளில் பெயரிடுதல், தனித்தமிழ் பெயரிடுதல் என்று ஒரு வகை உண்டு. தனித்தமிழை வலியுறுத்தும் தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசியர்களும் கிரந்த எழுத்துடன் பெயரிடுவது பற்றி மவுனம் சாதிக்கின்றனர். ஷேக்ஸ்பியரை ‘செகப்பிரியர்’ என்றும் ஜோதியை ‘சோதி’ என்றும் மாற்றினால் தமிழ் வளர்திடுமா, சிறந்திடுமா?

படிக்க:
ஆளுமை என்ற தமிழ்ச் சொல்லை உருவாக்கியது யார் !
உனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா

ஓரிடத்தில் உறுப்புத்தானம் (பக்.50), மற்றோரிடத்தில் உறுப்புதானம் (பக்.52). ஏன் வல்லினம் மிகுவதில்லை. தானம் தமிழா? ‘உறுப்புக்கொடை’ என்று சொல்லக்கூடாதா? புதின ஆசிரியர் (பக்.23), நாவல்கள் (பக்.31) என்று சொல்லாமல் வழக்கிலுள்ள ‘நாவல்’ என்பதைப் பயன்படுத்தினால் என்ன? ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கவா முடியும்? ‘கலைச்சொல் அறிவோம்’ பகுதியில் ‘கட்டிலாக் கவிதை’ – Free verse (பக்.68) என்றுள்ளது. இது நன்றாகவா இருக்கிறது? ‘புதுக்கவிதை’ என்றே சொன்னாலென்ன?

‘மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்’ என்ற வகையிலும் இதே சிக்கல்தான்! இலங்கைத் தீவு, இலட்சத்தீவு, இராஜாஜி (பக்.05), இராமநாதபுரம் (பக்.09), உரோம நாட்டுச் சிந்தனையாளர்கள் (பக்.51), இராணுவம், இராஜாமணி என்று ஒருபுறம் எழுதுவதும் மறுபுறம் இலட்சுமி, லோகநாதன் என்று எழுதுவதும் தொடர்கிறதே! ஏதேனும் ஒரு ஒழுங்கு வேண்டாமா?

(இன்னும் வரும்…)

நன்றி : முகநூலில் சிவகுருநாதன் முனியப்பன்

Resist Corporate Saffron Fascism ! Trichy Conference | video

This is an edited video of the conference organised by Makkal Athikaram. We were in the forefront of the Thoothukudi anti sterlite struggle and the militant mass protests against the govt run liquor network. On both these issues  the political parties of Tamilnadu  were compelled to stand in support of the struggles.

This conference,  which was conducted, defying many odds created by the police and the RSS. had attracted thousands of people, and has also made a significant impact on the mainstream  political parties.  Spread this video to all democratic forces and help build a solidarity against fascist danger.

– Makkal Athikaram

பேராசிரியர் சாய்பாபா …!

பேராசிரியர் சாய்பாபா … டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர். கார்ப்பரேட் நலன்களுக்காக பலியிடப்படும் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக இடைவிடாமல் குரல் கொடுத்தவர். பசுமை வேட்டை என்ற பெயரில் மத்திய இந்தியாவின் பழங்குடிகள் மீது நடத்தப்பட்ட இரக்கற்ற போரை கண்டித்ததில் முதன்மையானவர். சல்வா ஜூடும் என்ற அரச கூலிப்படையை அம்பலப்படுத்தி எழுதியவர். போலியோ தாக்குதலால் 90 சதவிகித உடல் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருபவர்.

பேராசிரியர் சாய்பாபா.

மாவோயிஸ்ட் சார்புள்ள ’புரட்சிகர ஜனநாயக முன்னணி’ என்ற அமைப்புடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்ததாகக்கூறி UAPA உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 2014-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார் சாய்பாபா. ஓராண்டு சிறைக்குப் பிறகு 2015 ஜூலை மாதத்தில் பிணை வழங்கினாலும், அதே ஆண்டு டிசம்பரில் மறுபடியும் கைது செய்தனர். ஐந்து மாதங்கள் கழித்து 2016 ஏப்ரலில் பிணை கிடைத்தது. ஆனால், 2017 மார்ச் மாதத்தில் வழக்கில் தீர்ப்பளித்த கச்சிரோலி செசன்ஸ் நீதிமன்றம் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதில் இருந்து இப்போதுவரை அவர் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

90 சதவிகித உடல் இயங்காத நிலையில் சிறுநீரக பிரச்னை, முதுகுத்தண்டு பிரச்னை என பல தீவிர உடல்நலக் கோளாறுகளுக்கு ஆட்பட்டிருக்கிறார் சாய்பாபா. இதயக்கோளாறு உள்ளது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் தாங்கவியலாத வலியில் துடிக்கிறார். ‘’பல நேரங்களில் சிறைக்குள் அவர் மயங்கி விழுந்துகிடக்கிறார். ஆனால், அவருக்கு உயிர் காப்பதற்கு உரிய போதுமான சிகிச்சை வழங்கப்படவில்லை” என்கிறார் சாய்பாபாவின் மனைவி வசந்தகுமாரி. சாய்பாபாவுக்கு பிணை கேட்ட இவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

நமது பொதுக் கட்டடங்களே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த உகந்ததாக இல்லை. தண்டிப்பதற்காகவே கட்டப்படும் சிறைகள் எப்படி இருக்கும்? சிறையின் கழிப்பறையை பயன்படுத்துவதற்காக தன், கை, கால்களை பயன்படுத்தி தவழ்ந்து செல்ல வேண்டியிருப்பதால் சாய்பாபாவின் ஒரு கால் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டதாக குறிப்பிடுகிறது Newslaundry இணையதளம்.

சாய்பாபா கைது செய்யப்பட்டதற்கு முந்தைய ஆண்டுகளில், அதே ’பசுமை வேட்டை’ நடவடிக்கைகளை விமர்சித்தமைக்காக, ‘மாவோயிஸ்ட் தொடர்பு’ குற்றச்சாட்டில் மருத்துவர் பினாயக் சென் கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு இவருக்கு பிணை கிடைத்தது.

அதே பசுமை வேட்டை நடவடிக்கைகளை கண்டித்தமைக்காக, அதே ‘மாவோயிஸ்ட் தொடர்பு’ குற்றத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் அருண் ஃபெரைரா கைது செய்யப்பட்டார். ஐந்து ஆண்டுகள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், கடைசியில் நிரபராதி என்று சொல்லி விடுவிக்கப்பட்டார்.

மராட்டிய பேஷ்வா படைகளை, ஆங்கிலேயர்களுடன் இணைந்து தலித் படைவீரர்கள் வெற்றிகொண்ட இடம், மகாராஷ்டிரா மாநிலம் பீமா கொரேகான். இவ்விடத்தில் அம்பேத்கர் சென்று அஞ்சலி செலுத்தியதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இங்கு 2017-ம் ஆண்டு எல்கார் பரிசத் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவோயிஸ்ட் சார்புடையவர்களால் நடத்துப்பட்டுள்ளதாக கூறி, அதன் ஏற்பாட்டாளர்களையும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையும் UAPA சட்டப்பிரிவில் கைது செய்தது காவல்துறை. இதில் ஒருவர் சாய்பாபாவுக்காக வழக்காடிய வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங். ரோனா வில்சன், சுதிர் தவாலே, மகேஷ் ராவத், சோமா சென் ஆகியவர்கள் மற்ற நான்கு பேர். இவர்கள் ஐந்து பேரும் பல்வேறு மக்கள் நல உரிமைகளுக்காக செயல்பட்டு வருவோர்.

இந்த ஐந்து பேரின் கைதை எதிர்த்த, கண்டித்த புகழ்பெற்ற வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவிஞர் வரவரராவ், வெர்னன் கல்சால்வெஸ், கௌதம் நவ்லக்கா, அருண் ஃபெரைரா (ஏற்கெனவே 5 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு நிரபராதி என விடுவிக்கப்பட்டவர்) ஆகிய ஐந்து பேரை 2018 ஆகஸ்ட்டில் கைது செய்தது புனே காவல்துறை. தற்போது வரை இவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஐந்து பேரின் கைதைக் கண்டித்த பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இருக்கிறார்.

படிக்க:
இந்திய அரசு பயங்கரவாதம் : பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை !
பேராசிரியர் சாய்பாபா கைது – அரச பயங்கரவாதம்

2015-ல், பேராசிரியர் சாய்பாபாவின் கைதை கண்டித்து அருந்ததி ராய் அவுட்லுக்கில் எழுதிய ஒரு கட்டுரைக்காக criminal contempt நோட்டீஸ் அனுப்பியது மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, துப்புரவு பணியாளர்கள் சூழ்ந்த குடியிருப்பில் வளர்ந்த பேராசிரியர் சாய்பாபாவின் முனைவர் பட்டத்துக்கான தலைப்பு : Elite bias in English writing in India

மேலும் விவரங்களுக்கு : livelaw , newslaundry

நன்றி : முகநூலில் பாரதி தம்பி


இதையும் பாருங்க …

மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! சென்னை மக்கள் கருத்து

தாமரை வந்தா வரட்டுமே…! அது லஷ்மி கடாட்சம் என்கிறார் பாஜக ஆதரவாளர் ஒருவர். அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பாஜக மற்றும் மோடி மீது கடும் வெறுப்பில் இருக்கிறார்கள். சென்னை கோயம்பேடு காய்கனி சந்தையில் மக்கள் தெரிவித்த கருத்துக்கள்…

பாருங்கள்!

நண்பர்களுக்கு பரவலாக பகிருங்கள்!

நேர்காணல்:

சாட்டிலைட்களை அழித்து சோதித்தால் விண்வெளி குப்பையாகும் !

ந்தியா டுடே இதழில் இராணுவம், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களைக் கவனித்துவருபவர் சந்தீப் உன்னிதன். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் வி.கே. சரஸ்வத்தை சந்தீப் உன்னிதன் ஒரு பேட்டி எடுத்திருந்தார். அந்தப் பேட்டி 2012-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி இந்தியா டுடே இதழில் வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியிலிருந்து:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் வி.கே. சரஸ்வத்.

கேள்வி : செயற்கைக் கோள்களை விண்வெளியிலேயே அழிக்கும் சக்தி DRDOவுக்கு உள்ளதா?

வி.கே.எஸ். : இந்தியாவில் சாட்டிலைட் எதிர்ப்பு அமைப்பிற்கான எல்லா பாகங்களும் இந்தியாவிடம் தயாராக உள்ளன. விண்வெளியை ஆயுதமயமாக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால், எல்லாம் தயாராக இருக்க வேண்டுமென விரும்புகிறோம். இவையெல்லாம் தேவைப்படும் நேரம் வரலாம். ஆகவே, ஒரு சாட்டிலைட் எதிர்ப்பு அமைப்பிற்கான எல்லாம் தயாராக இருக்கிறது. சிறிய மாறுதல்களைச் செய்ய வேண்டும். ஆனால், அதனை எலக்ட்ரானிக்கலாக செய்துவிடலாம்.

ஆனால், ஒரு சாட்டிலைட்டை மோதி, நொறுக்கி சோதனை செய்து பார்க்க மாட்டோம். ஏனென்றால், விண்வெளியில் துகள்கள் உருவாகி, பிற சாட்டிலைட்களைச் சேதப்படுத்தும்.

கேள்வி : இந்த சாட்டிலைட் எதிர்ப்புத் திறனை எப்படி உருவாக்கினீர்கள்?

வி.கே.எஸ். : சாட்டிலைட்களைக் குறுக்கிட சில அடிப்படையான அம்சங்கள் தேவை. முதலாவதாக, விண்வெளியில் சுற்றும் சாட்டிலைட்டின் பாதையைக் கணிக்கும் திறன். பிறகு, அவற்றை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி, அவற்றை அழிக்கும் திறன் வேண்டும். நம்மிடம் Long Range Tracking Radar (LRTR) இருக்கிறது. அதை 600 கி.மீ. தாண்டிச் சென்று தாக்கும் கண்டம் தாண்டும் ஏவுகணைகளில் பயன்படுத்துகிறோம். அதன் திறனை 1400 கி.மீ-ஆக உயர்த்தினால், சாட்டிலைட்களை கணிக்க முடியும்.

உண்மையில், சாட்டிலைட்களைத் தாக்குவதைவிட, கண்டம்தாண்டும் ஏவுகணைகளைத் தாக்குவதுதான் கடினம். சாட்டிலைட்டுகள், அவற்றுக்கென வகுக்கப்பட்ட பாதையில்தான் செல்கின்றன.

கண்டம் தாண்டும் ஏவுகணையைப் பொருத்தவரை ஒரு சதுர மீட்டரில் 0.1 அளவுள்ள ஏவுகணையை, கண்டுபிடித்து மறிக்கிறோம். சாட்டிலைட் அதைப் போல பத்து மடங்கு பெரிது. ஒரு மீட்டர் அளவுக்கு இருக்கும்.

படிக்க:
இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு !
கோயம்பேட்ல மலராத தாமரை கோட்டையில எப்டி மலரும் | காணொளி

கண்டம் தாண்டும் ஏவுகணைக்காகத் தயாரிக்கப்பட்ட தொலைத் தொடர்பு அமைப்பும் நம்மிடம் இருக்கிறது. அக்னி – 5க்காக தயாரிக்கப்பட்ட முதல் ஸ்டேஜ் பூஸ்டர், ஒரு ஏவுகணையை 600 கி.மீ. ஏவும் திறனுடையது. கண்டம் தாண்டும் ஏவுகணையை மோதி அழிக்கும் வாகனமும் (kill vehicle) நம்மிடம் உள்ளது.

சாட்டிலைட்டைத் தாக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளதாக சரஸ்வத் 2012-ல் சொல்கிறார். ஏன் அதனைச் சோதித்துப் பார்க்கவில்லையென்றும் சொல்கிறார். அவரது விரிவான பேட்டிக்கான இணைப்பு சுட்டி. india today

நன்றி : முகநூலில் Muralidharan Kasi Viswanathan

பேஸ்புக் மூலம் வாக்காளர்களுக்கு பரிசளிக்கும் பாஜக !

”மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, வாக்காளர்களின் தீர்மானங்களை தமக்குச் சாதகமாக மாற்ற எந்தவிதமான வற்புறுத்தல்களையும் வேட்பாளர்கள் செய்யக் கூடாது. அதே போல் வாக்காளர்கள் வற்புறுத்தப்படுகின்றனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும்” என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி. அவர் காகிதத்தில் எழுதப்பட்ட சட்டங்களைக் குறிப்பிடுகிறார். தேர்தல் காய்ச்சலில் நடுக்கம் கண்டிருக்கும் பாரதிய ஜனதாவிற்கு இச்சமயத்தில் சட்டங்களோ விதிமுறைகளோ முக்கியமல்ல – வெற்றி பெற வேண்டும். எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ளது அக்கட்சி.

முகநூலின் வாராந்திர ”ஆட் லைப்ரரி” அறிக்கையின் படி, மார்ச் 17 துவங்கி 23-ம் தேதி வரையிலான வாரத்தில் ”எனது முதல் வாக்கு மோடிக்கே” (‘My First Vote For Modi’) என்கிற மோடி ஆதரவு முகநூல் பக்கம் மட்டும் தேர்தல் விளம்பரங்களுக்காக 46.6 இலட்ச ரூபாய் செலவிட்டுள்ளது. குறிப்பிட்ட வாரத்தில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களுக்காக மட்டும் சுமார் 1.1 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த கணக்கு முதல் இருபது முகநூல் பக்கங்களின் செலவினங்களைக் குறித்தது மாத்திரமே. இந்தப் பட்டியலில் உள்ள முகநூல் பக்கங்கள் பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சி சார்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத் கி மன்கி பாத் ( ‘Bharat Ke Mann Ki Baat’ ), இந்தியன் பொலிடிக்கல் ஆக்‌ஷன் கமிட்டி (‘Indian Political Action Committee’), நேஷன் வித் நமோ (‘Nation with NaMo’) உள்ளிட்ட வெவ்வேறு பெயர்களில் துவங்கப்பட்டுள்ள முகநூல் பக்கங்கள், பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக விளம்பரங்களை வெளியிட்டு வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு வாரகாலத்தில் பாரதிய ஜனதா ஆதரவு முகநூல் பக்கங்கள் 67 இலட்ச ரூபாயும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் முகநூல் பக்கங்கள் 24 இலட்சமும், பிஜூ ஜனதா தள் ஆதரவு முகநூல் பக்கங்கள் 10.5 இலட்ச ரூபாயும், காங்கிரசு ஆதரவு பக்கங்கள் 8 இலட்ச ரூபாயும் செலவழித்துள்ளன.

முகநூலின் விளம்பர நூலகத்தின் மின்தரவுகளை ஆய்வு செய்து பார்த்த ஆல்ட் நியூஸ் இணையதளம், பாரதிய ஜனதா ஆதரவுப் பக்கங்கள் தேர்தலுக்கு மூன்று மாதங்கள் முன்பிருந்தே பிரச்சார வேலைகளைத் துவக்கி விட்டதை சுட்டிக்காட்டுகின்றது. குறிப்பாக வாக்காளர்களுக்கு “கவர்ச்சியான இலவசங்களை” அளிக்கவுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளது “எனது முதல் வாக்கு மோடிக்கே” எனும் தளம். இலட்சிணைகள், லேப்டாப் பேக்குகள், டீ-சர்ட்டுகள், கைப்பேசிக்கான கவர்கள், தொப்பி உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை தரவுள்ளதாக இந்த இணையப் பக்கம் வாக்குறுதியளித்துள்ளது. ”மோடிக்கே உங்கள் முதல் வாக்கு என்பதை உறுதி கூறுங்கள்; ஆச்சர்யமான பரிசுகளை வெல்லுங்கள்” என்கிறது அந்தப் பக்கத்தின் விளம்பர வாசகம்.

பாரதிய ஜனதாவை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பிற முகநூல் பக்கங்களும் இதே போன்ற பரிசுப் பொருட்களை வழங்கப் போவதாக விளம்பரங்கள் வெளியிட்டு வருவதை ஆல்ட் நியூஸ் செய்துள்ள ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது. மேலும், பரிசுப் பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் ஏற்கனவே நமோ செயலியில் (Namo App for Smart Phones) விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து இந்த முகநூல் பக்கங்கள் அனைத்தும் தங்களது முகவரியில் பாரதிய ஜனதாவின் தலைமை அலுவலகத்தையே குறிப்பிட்டுள்ளன.

இந்த விளம்பரங்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தண்டனைக்குரியவை. வாக்காளர்களுக்கு பணமோ பரிசுப் பொருட்களோ கொடுத்து வாக்கு சேகரிப்பதைத் தடுக்க வேண்டிய கடமை தேர்தல் கமிசனுக்கு உண்டு. எனில், இந்த நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? இந்த செலவினங்களை பாரதிய ஜனதாவின் தேர்தல் செலவுகளில் சேர்க்கப்பட்டுள்ளதா? என்பன போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய தேர்தல் ஆணையமோ இதுவரை கள்ள மவுனமே சாதித்து வருகின்றது.

தமிழகத்தைப் பொருத்தவரை, நமக்கு இதெல்லாம் புதிதில்லை. வாக்குகளுக்கு பணம் கொடுக்க ஓட்டுக் கட்சிகள் கண்டுபிடித்துள்ள “விஞ்ஞானப்பூர்வமான” வழிகள் அனைத்தையும் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சென்ற சட்டமன்றத் தேர்தலின் போதும், அதற்குப் பின் புரட்சித் தலைவி ஆட்சியில் இருந்த போது நடந்த இடைத் தேர்தல்களின் போதும், போலீசாரே குறிப்பிட்ட பகுதிக்குள் பிற கட்சிகள் நுழைவதைத் தடுத்து விளக்குப் பிடித்துக் கொண்டிருக்க, ஆளும் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்தது குறித்த செய்திகள் ஏராளம் வெளியாகியுள்ளன. அம்மாவின் வழியில் சொந்தக் கம்பெனி நடத்தி வரும் டிடிவி தினகரன் இருபது ரூபாய் டோக்கனை வைத்து ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகளைக் களவாடிய சாமர்த்தியத்தையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், பணப்பட்டுவாடாவை ”டிஜிட்டல்” மயமாக்கியிருக்கும் பாரதிய ஜனதா, அம்மாவின் தேர்தல் உத்திகளை ஒரு புதிய தளத்திற்கே உயர்த்தியுள்ளது. இதை ஏன் தேர்தல் கமிஷன் கண்டு கொள்ள மறுக்கிறது என சிலர் அங்கலாய்க்கின்றனர். இப்படி அங்கலாய்ப்பதாக இருந்தால் மோடி சார்பு தீர்ப்புகளை உதிர்க்கும் நீதிமன்றங்கள், அசீமானந்தாவை அவிழ்த்து விட்ட தேசிய புலனாய்வு முகமை, மிரட்டலுக்கான கருவிகளாய் உருமாறி இருக்கும் சி.பி.ஐ., வருமான வரித்துறை, சி.ஏ.ஜி உள்ளிட்ட மத்திய அமைப்புகள் என நமது அங்கலாய்ப்பிற்கு ஏராளமான துறைகள் வரிசை கட்டி நிற்கின்றன.

படிக்க:
ஃபேஸ்புக் பாதுகாப்பு : ஒரு முறை பயிரை மேய்ந்து விட்ட வேலி மறுமுறை மேயாதா ?
உங்கள் சிந்தனையை வடிவமைக்கும் விளம்பரங்கள்

கடந்த ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் துளியளவாவது மரியாதையைக் காப்பாற்றி வைத்திருந்த அரசு உறுப்புகள் அனைத்தும் இன்று நிர்வாணமாய் நின்று கொண்டிருக்கின்றன. அதற்கு மேலும் ஒரு உதாரணமாய் மாறியுள்ளது தேர்தல் கமிஷன். ஜனநாயகத்தின் ஆகக் கடைசியான நம்பிக்கையாக லிபரல் அறிவுஜீவிகளால் நம்பப்படும் தேர்தல் அமைப்புமுறையும் சீரழிந்து விட்டது அம்பலமாகி வருகின்றது. இனிமேலும் இந்துத்துவவாதிகளை தேர்தலின் மூலம் மட்டுமே வீழ்த்தி விடமுடியும் என கருதுகிறீர்களா?

சாக்கியன்

கோயம்பேட்ல மலராத தாமரை கோட்டையில எப்டி மலரும் | காணொளி

மோடி நாட்டையே அடமானம் வைத்து விட்டதாக ஆவேசப்படுகிறார் நாகராஜ். சென்னை கோயம்பேட்டில் சிறு காய்கறி வியாபாரியாக இருக்கும் அவர் மோடி ஆட்சியில் தொழிலாளிகளும் மக்களும் பட்ட துன்பத்தை கோபத்துடன் விவரிக்கிறார். எடப்பாடி அரசு எட்டு வழிச்சாலை இன்னபிற திட்டங்கள் மூலம் கொள்ளையடித்ததையும் பட்டியல் போடுகிறார்.

மொத்தத்தில், தாமரை மலரவே மலராது என்கிறார் நாகராஜ்.

அவரது முழு காணொளியைக் காண…

பாருங்கள்… பகிருங்கள்…!


இதையும் பாருங்க …

மிகிங்கோ தீவு : கென்யா – உகாண்டா நாடுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் மீனவர்கள் | படக்கட்டுரை

ரு கால்பந்து மைதானத்தின் பாதி அளவுக்கும் குறைவான பரப்பளவு கொண்ட இந்த மிகிங்கோ தீவில் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். கென்யா, உகாண்டா ஆகிய இரு நாடுகளும் இந்தத் தீவுக்குச் சொந்தம் கொண்டாடி வருவதால் எப்போதும் போர் நிலவுவதைப் போன்ற ஒரு பதட்டத்துடன் இருக்கிறது இந்தத் தீவு.

பாறைகளால் சூழப்பட்ட அந்தக் குட்டித்தீவில் பாறைகளே தெரியாத அளவுக்கு மிக மிக நெருக்கமாக தகரக் கொட்டகைகளை அமைத்திருக்கின்றனர். அடிப்படை வசதிகள் எதுவுமற்ற இந்தத் தீவில் மதுக்கடைகள், விபச்சார விடுதி, சூதாட்டம் என சகலமும் நடந்து வருகிறது. இந்தத் தீவுக்கு உரிமை கொண்டாடி உகாண்டாவும், கென்யாவும் ஒரு குட்டிப்போரையே நடத்திக்கொண்டிருக்கின்றன.

ஏரியின் நடுப்புறம் சிறிய அளவில் வெளியே தெரிந்து கொண்டிருந்த பாறைகள், 1990-களின் தொடக்கத்தில் மேலும் மேலும் நீர் உள்வாங்கியதன் காரணமாக பெரிய அளவில் வெளிப்பட்டு, மக்கள் குடியேறும் நிலைக்கு வந்துவிட்டது என்கிறார் ஐ.எஸ்.எஸ் ஆப்ரிக்கா நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகச் செயல்பட்டுவரும் இமானுவேல் சியாங்கனி.

அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுவதாலும், நீர்த் தாவரங்களின் பெருக்கத்தினாலும் இப்பகுதியில் மீன்பிடித்தொழில் நலிந்துவருகிறது. எனினும் ஏரியின் ஆழ்பகுதியில் கிடைக்கும் நைல் பெர்ச் என்ற மீன்களுக்கான சந்தைத்தேவை அதிகரித்திருப்பதால் மிகிங்கோ தீவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

2004-ம் ஆண்டு உகாண்டா அரசு இந்தத் தீவுக்கு ஆயுதமேந்திய காவலாளிகளையும், கடற்படை வீரர்களையும் அனுப்பி, மீனவர்களைக் கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றுவதாகக் கூறி வரி வசூலில் ஈடுபட்டது.

அதே சமயம் கென்ய நாட்டு மீனவர்களோ தாங்கள் உகாண்டா நாட்டு அதிகாரிகளால் சித்திரவதைக்குள்ளாகிறோம் என்று புகாரளித்தனர். இதைத் தொடர்ந்து கென்ய நாடும் தன் பங்கிற்கு ஆயுதமேந்திய காவலாளிகளை இத்தீவுக்கு அனுப்பியிருக்கிறது.

இத்தீவில் மனிதர்கள் குடியேற்றம் அதிகரிக்க அதிகரிக்க கென்யாவும், உகாண்டாவும் 2016-ம் ஆண்டு ஒரு குழுவை ஏற்படுத்தி தங்கள் நாட்டு எல்லைகளை 1920-ம் ஆண்டுமுதல் கிடைத்த வரைபடங்களின் மூலம் வரையறுக்க முயற்சித்தன. இறுதியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இரு நாடுகளும் சேர்ந்து இந்தத் தீவை நிர்வகித்து வந்தாலும் இரு நாட்டு மீனவர்களுக்குள் அவ்வப்போது பிரச்சினைகள் எழுவது வழக்கமாகிவிட்டது.

இந்தத் தீவு யாருக்குச் சொந்தமானது என்று இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; இத்தீவுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்கிறார் உகாண்டா மீனவர் எடிசன் ஊமா.

இங்கு கிடைக்கும் நைல் பெர்ச் மீன்களுக்கு ஐரோப்பிய, ஆசிய சந்தைகளில் கடும் கிராக்கி நிலவுவதால் கடந்த 5 வருடத்திற்குள் இதன் விலை 50 சதவீதம் எகிறியுள்ளது என்கிறார் கென்ய மீனவர் கென்னடி ஊச்சிங்.

நன்னீரால் சூழப்பட்ட மிகிங்கோ தீவு.

கென்யா நாட்டுக்குச் சொந்தமான உசிங்கோ தீவில் கென்யக் கொடி பறக்கிறது. இது மிகிங்கோ தீவை எதிர்நோக்கி அமைந்துள்ளது. கென்யக் கொடியை மிகிங்கோ தீவில் பறக்கவிடும் முயற்சிக்கு உகாண்டாவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் அம்முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன.

மிகிங்கோ தீவில் மீன்பிடிப் படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி. கென்ய எல்லையிலிருந்து 2 மணி நேர பயணத்திலும், உகாண்டா எல்லையிலிருந்து 12 மணி நேர பயணத்திலும் இத்தீவை அடையலாம். கென்யா இத்தீவிற்கு உரிமை கோருவதும் இதே காரணத்திற்காகத்தான்.

நைல் பெர்ச் மீன்கள் ஐரோப்பாவிற்கு நூறு ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் ஆசிய சந்தையிலும் தேவை அதிகரித்துள்ளது.

37 வயதான கென்ய மீனவர் கென்னடி ஊச்சிங் வெறும் கையோடு திரும்பி வருகிறார். உகாண்டா கடற்படையினர் தங்கள் நாட்டு எல்லையில் கென்னடி அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி 300 கிலோ எடையுடைய நைல் பெர்ச் மீன்கள் மட்டுமன்றி, வலை மற்றும் எரிபொருளையும்  பிடுங்கிக் கொண்டுவிட்டனர் என்கிறார்.

மிகிங்கோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடிக்கும் கென்ய மீனவர்கள் தாங்கள் உகாண்டா கடற்படையினரால் பல்வேறு வகையில் அவமதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஆழமற்ற பகுதிகள் கென்ய பகுதியிலும், ஆழம் நிறைந்த இடங்கள் உகாண்டா பகுதியில் இருப்பதே இதற்கு பிரதான காரணம்.

மீனவர்கள் வாடகை படகுகளை நம்பியிருக்கவேண்டிய சூழல்தான் நிலவுகிறது. 80 சதவிகித மீன்கள் படகின் சொந்தக்காரருக்கும் 20 சதவிகித மீன்கள் மீனவர்களுக்கும் சொந்தமாகிறது என்கிறார் உகாண்டா மீனவர் எடிசம் ஊமா.

ஆப்ரிக்காவின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரியில் மற்ற மீன்வளங்கள் எண்ணிக்கையில் குறைந்துவிட்டாலும், நைல் பெர்ச் மீன் வகைகள் ஆழம் நிறைந்த பகுதிகளில் நிறைய கிடைக்கின்றன.

கென்ய மீனவர்கள் வார இறுதியில் தங்கள் வீடுகளுக்குச் சென்று வரும் நிலையில், உகாண்டா மீனவர்களோ வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் செல்ல முடிகிறது.

திறந்தவெளியில் ஜரூராக நடைபெறும் சூதாட்டங்கள்.

சில பெண்கள் தங்களின் கணவன்மார்களுடன் இங்கேயே தங்கி உணவகங்களில் வேலை பார்த்தும் வருகின்றனர்.

35 வயதான கென்ய எலக்ட்ரீசியன் டேனியல் ஒபாதா. கடந்த இரு வருடங்களாக முடிதிருத்தும் நிலையம் மற்றும் அலைபேசி மின்னேற்ற நிலையம் அமைத்துள்ளார். கென்ய, உகாண்டா, தான்சானியா நாட்டு மக்கள்தான் தனது வாடிக்கையாளர்கள் என்றும், கென்யா நாட்டில் சம்பாதித்ததை விட மிகிங்கோ தீவில் கூடுதலாகச் சம்பாதிப்பதாகவும் கூறுகிறார்.

32 வயதான உகாண்டா மீனவர் எடிசன் ஊமா. கடந்த 5 வருடங்களாக இத்தீவில் வசித்து வருகிறார். குழந்தைகள், மனைவியை ஊரில் தங்கவைத்துவிட்டு வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ அவர்களைப் பார்க்கச் செல்கிறார். உகாண்டாவில் வேறு வேலைகள் எதுவும் கிடைக்காததால் இங்கே மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளார். உகாண்டா கடற்படையினர் தன்னைப் பாதுகாப்பதற்காக சில மீன்களை அவர்களுக்கு இலஞ்சமாகக் கொடுக்கிறார்.

மிகிங்கோ தீவில் முதலுதவி அளிக்கும் செவிலியர் ஒருவர். சிறிய அளவிலான பிரச்சினைகளுக்கு இங்கேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயின் தன்மை பெரிதானால் கென்யாவுக்குத்தான் செல்ல வேண்டும்.

நைல் பெர்ச் மீன்களுக்கான சந்தைத் தேவை அதிகரித்துள்ளதால் இத்தீவில் அசாதாரண சூழல் நிலவுகிறது. கென்யா இதை சர்வதேச அரங்கில் எடுத்துச்சென்று தங்களின் மீன் பிடி உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்கின்றனர் உள்ளூர் அரசியல் தலைவர்கள்.

நன்கு வளர்ந்த நைல் பெர்ச் மீன்களின் விலை கடந்த 5 வருடத்திற்குள் 50 சதவிகிதம் உயர்ந்து விட்டது என்கிறார் கென்ய மீனவர் கென்னடி ஊச்சிங்.

கட்டுரையாளர்கள்: Andrea Dijkstra & Jeroen Van Loon
தமிழாக்கம்: வரதன்
நன்றி: aljazeera


இதையும் பாருங்க :
அக்கா வீட்டு வாசலில் தாமரை மலர்ந்தே தீரும் | கோவன் பாடல் டீசர்

நூல் அறிமுகம் : கல்வி – சந்தைக்கான சரக்கல்ல

ந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) வரைவு இந்திய உயர்கல்வி ஆணைய (பல்கலைக்கழக மானியக்குழு சட்டம், 1956 திரும்பப் பெறுதல்) சட்டம்-2018 ஜீன் 28, 2018 அன்று தனது (MHRD) வலைதளத்தில் வெளியிட்டு அதன் மீது reformofugc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்தது. (பின்னர் ஜூலை 20, 2018 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது).

இதை படித்தவுடன் “எனது நாடி நரம்பெல்லாம் நடுங்குகிறது” என தனது அதிர்ச்சியை தெரிவித்தார் இந்தியாவின் மிக முக்கிய கல்வியாளர்களில் ஒருவரான பேராசிரியர் அனில் சத்கோபால்,

இந்திய அரசமைப்புச்சட்டத்தின் படி என் கடமைகளை செய்வேன் என உறுதி ஏற்று பொறுப்பு வகிக்கும் இந்திய அரசின் அமைச்சர்களும், ஆட்சிப்பணி அதிகாரிகளும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, அதிலும், அரசமைப்புச் சட்டத்தின் மாற்ற இயலாத அடிப்படைத் தன்மை என உச்சநீதி மன்றத்தால் அறிவிக்கப்பட்ட கூட்டாட்சித் தத்துவத்தையே மாற்றிடும் படியான வரைவு மசோதாவை தயார் செய்து, இந்திய மொழிகளில் எதிலும் இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டு, குறுகிய காலத்தில் கருத்துக் கேட்பார்கள் என யாராவது கற்பனை செய்து பார்க்க முடியுமா?

அதுதான் “வரைவு இந்திய உயர்கல்வி ஆணைய (பல்கலைக்கழக மானியக்குழு சட்டம், 1956 திரும்பப் பெறுதல்) சட்டம்-2018”.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை காத்திடவும், உயர்கல்வி முழுமையாக சந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுவிடாமல் தடுத்திடவும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது. அதன் ஒரு பகுதி தான் இந்த வெளியீடு.

… மக்களால், மக்களுக்காக, மக்களின் ஆட்சியே மக்களாட்சி, அத்தகைய மக்களாட்சியை கொண்ட இந்தியாவில் மக்கள் முன் இந்த மசோதா குறித்த செய்தியை முன் வைக்கின்றோம். இறையாண்மைக் கொண்ட இந்திய மக்கள் தீர்மானிக்கட்டும். (நூலிலிருந்து பக்.3)

இந்த முன் வரைவுச் சட்டம் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இந்திய மொழிகள் எதிலும் வெளியிடப்படவில்லை. வங்காளம், குஜராத்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் இதர இந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இந்த முன்வரைவுச் சட்டத்தைப் படித்துக் கருத்துச் சொல்வது சாத்தியமற்றதாகும். இதன் தாக்கங்கள் மிக ஆழமானதாக இருக்கும் என்ற நிலையில் பிரச்சனையை முழுமையாக புரிந்து கொள்ளாமல் ஒருவர் கருத்துச் சொல்ல வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 வது பிரிவுக்கு எதிரானதாகும். (நூலிலிருந்து பக்.5-6)

கல்வி என்பது வரலாற்றுப் பூர்வமாக ஒரு சமூகப் பண்பாட்டு செயல்முறையாகும். அது சமுதாயத்தின் மிகப் பரந்த கூட்டு நலன்களின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் படைப் பாக்கத்திறனையும் மனித ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. சமுதாயத்தை ஒரே நிலையில் அப்படியே வைத்திருக்காமல் குடியரசுத் தன்மை , சுதந்திரம், சமத்துவம், நீதி, மானுட மாண்பு, பன்முகத்தன்மை, சமூக நல்லிணக்கம், சமூக அமைதி ஆகிய நாகரிக சமுதாய இலட்சியங்களை நிறைவேற்று வதற்கான சமூக மறு கட்டமைப்பு, சமூக மாற்றத்திற்கான பங்கினை ஆற்றுகிறது கல்வி.

படிக்க:
பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?
கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !

இதற்கு நேர் மாறாக, இந்த முன்வரைவுச் சட்டம், சந்தைத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட ‘தகுதி மட்டுமே’ என்ற ஒரு கருத்தாக்கம் பற்றித்தான் பேசுகிறது. ‘தகுதி’ என்றால் என்ன என்று வரையறுக்காமலே அதைப் பற்றிப் பேசுகிறது. இத்தகைய அணுகுமுறை சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள வர்க்கங்களின் விடுதலைக்கு உதவாது. இப்படிப்பட்ட ‘சந்தைத் தேவை இலக்கு’ சமுதாயத்தின் மேல்தட்டினர் மட்டுமே உயர் கல்விக்களத்தை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொள்வதற்குத்தான் உதவும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன் இந்த நிலைமைதான் இருந்தது. இந்த முன் வரைவுச்சட்டம் நம்மை இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு இட்டுச் சென்றுவிடும். பாகுபாடுகளை மேலும் விரிவுபடுத்தவே இந்தச் முன்வரைவுச் சட்டம் உதவும். கல்வியை ‘உலக வர்த்தக அமைப்பு’ ராஜ்யத்தின் கீழ் கொண்டுசெல்லும் பாதைதான் இந்த சட்ட முன் வரைவு.

… அரசுப் பல்கலைக்கழகத்தையும் தனியார் பல்கலைக்கழகத்தையும் இந்த முன்வரைவுச்சட்டம் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. இது உட்டோ – காட்ஸ் வற்புறுத்தும் கோட்பாடாகும். சம ஆடுகளம் வேண்டும் என உட்டோ – காட்ஸ் வற்புறுத்துகிறது. இந்த முன்வரைவுச் சட்டம் அதனை சாத்தியமாக்குகிறது. இந்த முன் வரைவுச் சட்டம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லை. மாறாக, உட்டோ நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக உள்ளது.

கேலிச்சித்திரம் : ஓவியர் முகிலன்.

உட்டோ மாநாடுகளில் நடந்த பேச்சுவார்த்தை விவரங்களை – குறிப்பாக கல்வித்துறை சம்பந்தமான விவரங்களை – அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். யாரையோ திருப்திப்படுத்துவதற்காக இச்சட்டம் கொண்டு வரப்படவில்லை என்றால், ஒரு அறுபதாண்டுகால சட்டப்பூர்வ நிறுவன அமைப்பை, அனைத்து அரசுக் கல்வி நிறுவனங்களுக்கும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கும் போதுமான நிதி ஒதுக்கீடு கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பை, அதன் மூலம் கல்வி ஒரு சமூகப் பொருளாக இருப்பதை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பைக் கலைத்து விட வேண்டும் என்பதில் இவ்வளவு அவசரம் காட்டப்படுவது எதற்கு என்ற கேள்வி எழுகிறது.

ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில் அதற்கான ‘மசோதா’ ஒன்று தாக்கல் செய்யப்படும். எந்தவொரு மசோதாவும் அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் சட்டமாக மாறும். மசோதாவாக தாக்கல் செய்யப்படும் முன்பு அது “வரைவு மசோதா” என்றே அழைக்கப்படும். வியப்பளிக்கும் வகையில் இந்த ஆவணம் ‘முன் வரைவு சட்டம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த முன்வரைவுச் சட்டத்தின் பிரிவு 19 துணைப்பிரிவு (1) ல், பிரிவு 20-ல் துணைப்பிரிவு (7) பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பிரிவு 20-ல் இருப்பதோ 5 துணைப் பிரிவுகள்தான். எவ்வளவு அவசர கதியில் இந்தப் பிரச்சனை கையாளப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்கு இது ஒரு சான்றாகும். (நூலிலிருந்து பக்.11-12)

நூல்:கல்வி : சந்தைக்கான சரக்கல்ல
தொகுப்பு: பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி: 044 – 24332424, 24332924.
மின்னஞ்சல்:thamizhbooks@gmail.com
இணையம்:thamizhbooks.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: udumalai

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

சென்னை : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் | நிகழ்ச்சி நிரல்

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில்!
திருச்சி மாநாட்டு அறைகூவல் விளக்கப் பொதுக்கூட்டம் –  கலைநிகழ்ச்சி!

30.3.2019 சனி, மாலை 5 மணி
முத்துரங்கன் சாலை, தி.நகர், சென்னை.

தலைமை:

தோழர் புவன்,
சென்னை பகுதி ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

சிறப்புரை:

தோழர் ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

தோழர் மருதையன்,
மாநில செயலாளர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்.

தோழர் தியாகு,
ஆசிரியர், உரிமைத் தமிழ் தேசம்.

தோழர் சி. மகேந்திரன்,
தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

தோழர் பிரின்ஸ் என்னெரசு பெரியார்,
மாநில செயலாளர்,
திராவிடர் மாணவர் கழகம்.

அனைவரும் வாரீர்!

தொழில்நுட்பப் பிரச்சினைகள் இல்லாத பட்சத்தில் வினவு இணையதளம், முகநூல் பக்கம் மற்றும் யூ-டியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பபடும்.


மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு: 99623 66321.

பகத்சிங் வழியில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் : பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம்

0

பகத்சிங் நினைவு நாளை கடைபிடித்த கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் !

கடலூர் :

டலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக பகத்சிங் நினைவு நாள் கூட்டம் கடந்த 23-03-2019 அன்று நடத்தப்பட்டது. பகத்சிங் ,சுகதேவ், ராஜகுரு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தியாகிகளின் நினைவுகூரும்விதமாக உரையாற்றினார்கள்.


தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர் – 97888 08110.

புதுச்சேரி :

காதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23 அன்று புதுச்சேரியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் அரசியல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ”நெருங்குகிறது கார்ப்பரேட் – காவி பாசிசம் : எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ் வில்லியனூர் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் நவீன், பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர் செல்லக்கண்ணு, பு.மா.இ.மு. கடலூர் மாவட்ட செயலர் தோழர் மணியரசன், உள்ளிட்டோர் உரையாற்றினர்.

படிக்க:
பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?
நூல் அறிமுகம் : பகத்சிங் சிறைக் குறிப்புகள்

பகத்சிங் உள்ளிட்ட தியாகிகளின் அர்ப்பணிப்பு உணர்வை அரசியல் உணர்வை முன்னுதாரணமாகக் கொண்டு நெருங்கிவரும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை எதிர்த்து நிற்க வேண்டுமென்ற அறைகூவலோடு ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.


தகவல்:
பு.மா.இ.மு.,
புதுச்சேரி.

மோடியைக் காப்பாற்றும் பெரும்பான்மை ஊடகங்கள் !

ணமதிப்பு நீக்கம் குறித்த மறை-புலனாய்வு செய்தி ஒன்றை கடந்த செவ்வாய்கிழமை (26-03-2019) காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.  மோடியின் சர்வாதிகாரத்தனமான பணமதிப்பழிப்பு அறிவிப்பால், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் நிலைகுலைந்து, வங்கிகளின் முன் வரிசையில் நின்ற நிலையில், பாஜகவினர் பழைய ரூபாய் நோட்டுக்களை அக்கட்சியின் தலைவர்களிடம் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றதை வீடியோ ஆதாரமாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள காந்திநகர் பாஜக அலுவலகத்தில் ரூ. 5 கோடி பழைய நோட்டுக்களை மாற்ற அக்கட்சியைச் சேர்ந்தவர் ஒருவர் கொண்டு செல்வதும்,  நகருக்கு வெளியே உள்ள பாஜக பிரமுகர்களின் பண்ணை வீடுகளில் நோட்டுக்களை மாற்றித்தரும் ‘சேவை’யை இவர்கள் செய்ததையும் இந்த ஆதாரம் வெளிப்படுத்தியுள்ளது.

https://youtu.be/wL2lCr6k3qc

‘மேலிடத்தின் ஆசிர்வாதம்’ தங்களுக்கு இருப்பதால் தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்கின்றனர் ரூபாய் மாற்று ‘சேவை’ செய்யும் பாஜக-வினர். ரூ. 25 கோடி அளவுக்கு புதிய நோட்டுக்களை தங்களால் பெற்றுத்தர முடியும் என்கிறார்கள். கருப்புப் பணத்தை ஒழிக்க வந்த ‘காவலாளி’ கும்பலே, பகல் கொள்ளையை தலைமையேற்று நடத்தியிருப்பது இந்த மறை-புலனாய்வில் ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

நாட்டு மக்கள் வரிசையில் நின்று லத்தி அடி வாங்கியும், நெஞ்சுவலியால் செத்து மடிந்தும் கொண்டிருக்க ‘கொள்ளை காவலாளி’ கும்பல், கருப்புப் பண முதலைகளுக்கு எளிதாக ரூபாய் நோட்டுக்களை சப்ளை செய்துள்ளது.

படிக்க:
பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?
அக்கா வீட்டு வாசலில் தாமரை மலர்ந்தே தீரும் | கோவன் பாடல் டீசர் | காணொளி !

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இந்த மறை-புலனாய்வு செய்தியை வெளியிட்ட தினத்தில் மேலும் இரண்டு செய்திகளும்கூட முக்கியத்துவம் பெற்றன. ஒன்று நடிகை ஜெயப்பிரதா பாஜகவில் சேர்ந்தது, ராம்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்தது. மற்றொன்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பணமதிப்பு நீக்கத்தின் மூலம் மோடி அரசு வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தியதாகவும், வேலைவாய்ப்பின்மை அறிக்கையை வெளியிடாமல் இருப்பதாகவும் கண்டித்து பேசியிருந்தார்.

மேற்கண்ட மூன்று செய்திகளையும் தேசிய ஊடகங்கள் எப்படி கையாண்டன? எந்த செய்தி இந்த ஊடகங்களில் அதிக கவனம் பெற்றது?

ஆங்கில தேசிய ஊடகங்கள் :

டைம்ஸ் நவ் :

நடிகரா தொண்டரா என்ற ஹேஸ் டேக்கைப் பயன்படுத்திய இந்த தொலைக்காட்சி, சினிமா நட்சத்திரங்களின் அரசியல் பிரவேசம் குறித்து விவாதித்தது. ‘ஹாட் சீட்’ என்ற நிகழ்ச்சியில் அதன் தொகுப்பாளர் நாவிகா குமார், சமாஜ்வாதி கட்சியிலிருந்து பாஜக வரை ஜெயபிரதா நான்கைந்து கட்சிகளுக்கு தாவியது குறித்து கேள்வி எழுப்பினார். “நான் ஏன் இப்படி செய்கிறேன் என்பதை மக்கள் அறிவார்கள். சமாஜ்வாதி கட்சியிலிருந்து நானாக வெளியேறவில்லை; மாறாக, தூக்கியடிக்கப்பட்டேன்” என தனது கட்சித் தாவலுக்கு மாபெரும் கொள்கை விளக்கத்தை அளித்தார் ஜெயபிரதா.

இன்னபிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்குப் பிறகு, அமர்சிங் காவலாளி ஆனதால், பாஜகவுக்கு ஜெயபிரதா இலவசமாக பெற்றதா? என்ற கேள்வியைக் கேட்டார் நாவிகா.

அதற்கு ஜெயபிரதா அளித்த பதில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கக்கூடியது: “மோடிக்காகத்தான் நான் பாஜகவில் இணைந்தேன். பெண்களின் மரியாதையைக் காக்க பணியாற்றியவர் மோடி, அதனால்தான் இந்தக் கட்சியில் இணைந்தேன்”.

என்டீடிவி 24*7 :

‘ரியாலிட்டி செக்’ என்ற நிகழ்ச்சியில் அதன் தொகுப்பாளர் நிதி ரஸ்தான், ‘தேர்தல் பத்திரங்கள் – வெளிப்படைத் தன்மையானவையா? வெளிப்படைத் தன்மை அற்றவையா?’ என்பது குறித்து விவாதித்தார்.  ‘அரசியல் நிதிதிரட்டலில் வெளிப்படைத்தன்மை’, ‘பணமும் அரசியலும் முதன்மையான ஓட்டைகள்’ என்பன போன்ற துணைத் தலைப்புகளில் இந்த விவாதம் நடந்தது.

பாஜகவின் சார்பில் பேசியவர், வெளிப்படைத்தன்மையுடனேயே தேர்தல் நிதி வாங்கப்படுவதாகக் கூறினார்.  ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பைச் சேர்ந்த ஜகதீப் சொக்கார், “சில தகவல்களை அரசே கட்டுப்படுத்துகிறது எனில், அங்கே வெளிப்படைத்தன்மையே இருக்காது” என்றார். இந்த அமைப்பு வெளியிட்ட, அரசியல் கட்சிகளின் 50% நிதிதிரட்டல் தெரியாத நபர்களிடமிருந்து பெறப்பட்டது என்ற தகவலையும் இந்தத் தொலைக்காட்சி சொன்னது.

பணமதிப்பழிப்பு தொடர்பான மறைபுலனாய்வு நடவடிக்கை ஊடகங்களால் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் அதிகரித்து வரும் பாபுலிசம் குறித்த கேள்வியை முன்வைத்தார் நிதி ரஸ்தான். கோட்பாட்டாளர்களால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது என்ற ராஜன், அரசியல்வாதிகள் வைக்கும் சில தீர்வுகள் அற்புதங்களை நிகழ்த்தும் என்றார்.

மேற்கொண்டு பேசிய அவர்,  “உதாரணம் சொல்கிறேன்… மதிய உணவுத் திட்டம், தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனால் கொண்டுவரப்பட்டது.  முதன்மையாக இந்தத் திட்டம் குழந்தைகள் அதிகமாக படிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால், இந்தத் திட்டத்தால் அதிக குழந்தைகள் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர், இதனால் கல்வியின் தரம் மேம்பட்டது”.

இந்தியா டுடே :

ராஜ்தீப் சர்தேசாயின் நிகழ்ச்சியில் ராஜன் தோன்றினார். காங்கிரஸ் அறிவித்த ஏழை வீடுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 72,000 நிதியுதவி அளிக்கு ‘நியாய’ வாக்குறுதி குறித்து அவர்கள் விவாதித்தனர். ராஜன் அளித்த பதில்களின் சாராம்சத்தை  ‘காங்கிரசின் வாக்குறுதி சாத்தியமானதா?’ ‘மக்கள் செல்வாக்குள்ள திட்டங்கள் விளையாடுகின்றன’,  ’இந்தியாவின் பங்கீட்டு பொருளாதார பொறி’ போன்ற தலைப்புகளுடன் வெளியிட்டார்கள்.

ரிபப்ளிக் டிவி :

அன்றைய நாளில் நடிகையின் பாஜக பிரவேசம் முதல் முன்னாள் ஆளுநரின் பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு வரை பல விசயங்களை ஊடகங்களில் விவாதித்திருந்தாலும், பாஜகவின் ஊடக அடியாளான அர்னாப் கோஸ்வாமி விவாதித்த தலைப்பு: ‘அயோத்தி குறித்து காங்கிரசின் நிலைப்பாடு என்ன?’, ‘காங்கிரஸின் ராம் அரசியல்’  என்ற தலைப்பிட்டு விவாதித்ததோடு, காங்கிரசின் ராம பக்தி பொய் என்ற ஹேஸ் டேக்கையும் டிரெண்ட் செய்தது இந்த தொலைக்காட்சி.

இந்த விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சசி தரூர், மணி சங்கர் அய்யர், போன்றோர் மதம் குறித்து, ராமர் குறித்தும் சொன்ன கருத்துக்களை எடுத்து ஒளிபரப்பினார்கள்.

தரூரின் படத்தின் கீழே அவர் சொன்னதாக, “இந்துக்கள் பிளவுபட்டவர்கள் என்கிறார்’ என்றும் மணி சங்கர் அய்யர், ‘ராமர் அங்குதான் பிறந்தார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டவர் என்றும் போட்டார்கள்.

விவாதத்தை நடத்திய அர்னாப், ‘இதுதான் மக்களை காயப்படுத்துகிறது. இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறும் நீங்கள், ராமர் மீது நம்பிக்கை வைக்கவில்லை’ என தனது தீர்ப்பை எழுதி முடித்தார்.

இந்தி தொலைக்காட்சிகள் :

ஏபீபி நியூஸ் :

இந்தத் தொலைக்காட்சியும் ஜெயபிரதாவின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள், அவர் சிக்கிய சர்ச்சைகள் குறித்து விலாவாரியாக விவாதித்தது.

ஆஜ் தக் :

பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் வகுக்கும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதித்தது இந்தத் தொலைக்காட்சி. இரண்டு வாரங்களில் பாஜகவை விமர்சிக்க பல்வேறு பிரச்சினைகளை காங்கிரஸ் கையிலெடுத்ததாகக் கூறியது அந்தத் தொலைக்காட்சி.  ரபேல் ஒப்பந்த முறைகேட்டை குறிப்பிட்டு, காவலாளிதான் திருடன் என முன்னெடுத்தது, புல்வாமா தாக்குதலில் நுண்ணறிவு பிரிவின் தோல்வி, பால்கோட் தாக்குதல் குறித்த நம்பகத்தன்மை என பாஜகவை குறிவைத்து காங்கிரஸ் பல பிரச்சினைகளை எழுப்பியதையும் சுட்டிக்காட்டியது. மோடி ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கும்போதும், ராகுல் பிரச்சினைகளை மாற்றிக்கொண்டே இருந்தார் என்பதையும் தொலைக்காட்சி சொன்னது.

ஜீ நியூஸ் :

தொலைக்காட்சி ஊடகங்களில் குஜராத் படுகொலைகள் நடந்த காலத்திலிருந்தே மோடியின் ‘சொம்பாக’ விளங்கும் ஜீ நியூஸ் தொலைக்காட்சியில்  அதன் ஆசிரியர் சுதிர் சவுத்ரி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் பேட்டி எடுத்தார்.

காங்கிரசின் ‘நியாய்’ திட்டம் ஆட்டத்தை மாற்றுமா? என்கிற தலைப்பில் அந்தப் பேட்டி ஒளிபரப்பப்பட்டது.  ஏழைகளை ஏமாற்றுவதற்காகத்தான்  குறைந்தபட்ச வருவாய் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றார் அருண் ஜெட்லி.  மோடி அரசின் வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமலாக்க, டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தை தவிர மற்ற மாநில அரசுகள் ஒத்துழைக்கின்றன என்றார்.

பாஜகவின் மூத்த கரசேவகர்களான முரளி மனோகர் ஜோஷி, அத்வானிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜேட்லி, “பாஜகவில் கட்சிக்குத்தான் வாய்ப்பே தவிர, தனிநபர்களுக்கு அல்ல” என்றார்.

இறுதியாக பாஜக மீண்டும்  ஆட்சிக்கு வரும் என்றவர், “அரசின் முகம் நேர்மையானது, அது மற்றவர்களை நேர்மையானவர்களாக மாற்றுகிறது. அதுபோல, தேச பாதுகாப்பில் தீவிரமாக உள்ளது” என்று கூறி முடித்தார்.

என்டீடிவி இந்தியா :

‘பிரைம் டைம்’ நிகழ்ச்சியில் ராவிஸ் குமார், உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் கைவிடப்பட்ட கால்நடைகளால் விவசாயிகள் எத்தகைய பிரச்சினையை சந்தித்து வருகிறார்கள் என்பதைக் காட்டினார்.  தங்களுடைய வயல்களைப் பாதுகாக்க வேலியிடுவதற்காக இலட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியுள்ளதாக அவர்கள் வருத்தப்பட்டனர். வேலிபோட பயன்படும் இரும்பின் விலை 50% அதிகரித்துவிட்டதாகவும் அவர்கள்  தெரிவித்தனர்.  யூரியா உள்ளிட்ட விவசாய இடுபொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஜெயபிரதா குறித்து சிறு செய்தி தொகுப்பும், சத்ருகன் சின்ஹா காங்கிரசில் இணையவிருக்கும் செய்தியையும் இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.


கட்டுரையாளர் : கௌரவ் விவேக் பட்நாகர்
தமிழாக்கம் : கலைமதி
நன்றி : த வயர்

பொள்ளாச்சி : பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?

பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியைக் கேட்டு தமிழகமே அண்மையில் அதிர்ந்து போனது. தமிழக அரசு எந்த தீவிரமும் காட்டாத நிலையில் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். சமூக பிரச்சனைகளுக்கு மக்கள் எதிர்வினையாற்றுகிறார்கள் என்ற விதத்தில் இதனை ஒரு ஆரோக்கியமான சூழலாகப் பார்க்கலாம்.

ஆனால், மக்களின் கருத்துக்களை சற்று உள்ளூர ஆராய்ந்தோமேயானால் இதில் இருக்கும் ஆபத்து புரியும். இச்சம்பவத்தையொட்டி மக்களால் அதிகமாகப் பகிரப்பட்ட கருத்துகளை இரண்டு விதமாகப் பார்க்கிறேன். ஒன்று, பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டதும் சுட வேண்டும் அல்லது சட்டப்படி மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள். இரண்டாவதாக, பெண்கள் ஆண்களோடு பழகும் போது கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்ற அறிவுரை.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தண்டிக்கக்கோரி, உடுமலை ஜிவிஜி கல்லூரி மாணவிகள் நடத்திய போராட்டம்.

முதலாவது வேண்டுகோளின் மூலம் மக்களின் கோபம், இயலாமை, வெறி ஆகியவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இரண்டாவது வகை பெண்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மேலும், இறுக்கமாக்கும் தன்மையுடையது. என்னை பொருத்தவரை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு பார்வைகளுமே எந்த விதத்திலும் பெண்கள் மீதான வன்முறையைக் குறைக்க உதவி புரியாது. உண்மையில் நாம் பெண்கள் நலனில் அக்கறை கொண்டிருப்போமேயானால் அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை தனி நபர் சார்ந்த பிரச்சனையாக மட்டும் அணுகுவதை விடுத்து அதனை சமூக அரசியல் தளத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாய் கருத வேண்டும்.

முதலில், பாலியல் வன்முறைக்கு அதிகப்படியாக பெண்கள் இரையாகிறார்கள் எனக்கூறி அவர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கத் துடிக்கும் போக்கினால் ஏற்படும் விளைவுகளை ஆராய்வோம். என்ன உடை அணிய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், யாருடன் பழக வேண்டும் எனத் தொடங்கி யாரைத் திருமணம் செய்ய வேண்டும், எப்பொழுது உடலுறவு கொள்ள வேண்டும், எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து இறுதி வரை பெண்கள் மீது ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இக்கட்டுப்பாடுகள் குறித்து எதிர்வினையாற்றும் போது இவ்வனைத்துமே பெண்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படுகிறது என வாதிடப்படும். ஒரு பெண்ணை தனியாக அனுப்ப ஏன் அவளது தந்தை தயங்குகிறார் அல்லது பயப்படுகிறார்? தனது மகள் உடல் ரீதியாக துன்புறுத்தப்படலாம் என்ற காரணத்தினாலா அல்லது அவளின் மீதான அளவுக்கதிகமான பாசமா? இவை இரண்டுமே ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். இக்காரணங்களையும் மீறி தந்தையின் பயத்திற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது.

நம் சமூகத்தில் பெண்ணின் உடல் சார்ந்தே புனிதம், தூய்மை போன்ற கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானால் அப்பெண்ணின் புனிதம் கெட்டு விடும், அவளது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும், குடும்ப கௌரவம் சீர்குலைந்து விடும் என்பன போன்ற தப்பெண்ணங்கள் கட்டமைக்கப்பட்டு அப்பெண் மேலும் மனரீதியாக துன்புறுத்துப்படுவாள். பாலியல் வன்முறையை விட அவள் குடும்பம், சுற்றத்தார் உருவாக்கும் நெருக்கடி ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை யாராவது அன்பு என்று கூற முடியுமா? பாலியல் வன்புணர்வு செய்பவன் மட்டும்தான் குற்றவாளியா? அப்படியென்றால், அவனால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் அவளின் குடும்பத்தினரை என்னவென்று சொல்வது?

இம்மாதிரியாக பெண் உடல் மீது கருத்தியல் ரீதியாக கட்டுப்பாடுகளை உருவாக்குவதால் அவளுக்கு ஏற்படும் பாதிப்புகளின் தீவிரம் குறித்து புரிந்து கொள்ள ஒரு வரலாற்று நிகழ்வை இங்கே நினைவுகூர்கிறேன். இந்தியா -பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் வரலாறு காணாத அளவில் இடப்பெயர்ச்சி நடைபெற்றது. இலட்சக்கணக்கான மக்கள் எல்லைகளைக் கடந்து பயணம் செய்தார்கள். கற்பனைக்கெட்டாத அளவிற்கு வன்முறையும் அரங்கேற்றப்பட்டது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற பாரபட்சம் பாராமல் அனைவரும் கொடூரமான விதத்தில் கொலை செய்யப்பட்டனர். குறிப்பாக பெண்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். இந்துப் பெண்களை முஸ்லீம் ஆண்களும், முஸ்லீம் பெண்களை இந்து ஆண்களும் கடத்திச் சென்றார்கள்.

இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர விரும்பிய இந்திய மற்றும் பாகிஸ்தானிய அரசாங்கங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, கடத்திச் செல்லப்பட்ட இந்துப் பெண்களை இந்தியாவிற்கு பாகிஸ்தான் அனுப்பிவிட வேண்டும். அதே போல் இந்தியாவும் முஸ்லீம் பெண்களை பாகிஸ்தானிற்கு அனுப்பிவிட வேண்டும். இந்திய அரசின் நோக்கம் என்னவாக இருந்தது? பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆவலா? இந்தியாவின் நடவடிக்கையை உற்றுக் கவனித்த அரசியல் விமர்சகர்கள் இந்த ஒப்பந்தம் நல்ல நோக்கத்தோடு கையெழுத்தாகவில்லை எனக் கருதினார்கள்.

படிக்க:
நிலாவுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லயே | டிவிட்டர் லந்து !
மிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு : தற்செயலா ? சூழ்ச்சியா ?

அக்கருத்தின்படி இந்திய தலைவர்கள் இந்துப் பெண்களை மட்டும் காப்பாற்ற எண்ணினார்கள். அவர்கள் இந்து மத அடையாளத்துக்கு எந்தவித களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என உறுதியாக இருந்தார்கள். அரசின் நிலைப்பாடுதான் இவ்வாறாக இருந்ததென்றால், பாதிக்கப்பட்ட இந்துப் பெண்களின் குடும்பத்தினர் நடந்து கொண்ட விதம் மிகவும் வருந்தத்தக்கது. பாகிஸ்தானில் இருந்து திரும்பி வந்த பெண்களை ஏற்றுக் கொள்ளாமல் அப்பெண்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதே சிறந்தது என குடும்பத்தினர் கூறினர். ஒருபுறம் அரசு இந்து மத பெண்களின் புனிதம் கெட்டுவிடக் கூடாது என்று முனைப்பு காட்டியது. மறுபுறம் பெண்களின் குடும்பத்தினர் தங்களின் கௌரவம் கேள்விக்குறியாகி விட்டது என எண்ணினர்.

இரு தரப்பும் ஒரு சாதாரண பெண்ணின் உணர்வுகளை, வலியை புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்கள். அதன் விளைவாக நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர். சதை, இரத்தம், உணர்வு என அனைத்தும் கலந்து உயிர்ப்புடன் இருக்கும் பெண்ணின் உடலை அரசியல் அமைப்போ குடும்ப அமைப்போ புரிந்து கொள்ளாமல் பெண் உடல் மீது கட்டப்பட்டுள்ள அடையாளங்களைக் காப்பாற்ற ஆர்வம் கொள்கின்றன.

பொதுவாக குடும்ப அமைப்பு பெண்களுக்கு நிபந்தனையற்ற அன்பையும், பாதுகாப்பையும் தர வல்லது என பரவலாக நம்பப்படுகிறது. இத்தருணத்தில் குடும்ப அமைப்பின் அடித்தளத்தில் மறைந்து செயல்படும் அரசியலை வெளி கொண்டு வருவது அவசியம். அந்த அமைப்பின் அடிப்படையான ஆண் – பெண் உறவு அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது என கூறப்படுகிறது. சமூகம், அரசியல் சார்ந்த பொதுப்படையான பிரச்சனைகள் ஆண் – பெண் உறவை பாதிக்காது என்பதும் பரவலான கருத்தாகும். குறிப்பாக, பாலியல் உறவு முறை கூட தன்னிச்சையாக செயல்படும் ஆற்றல் கொண்டதுதான் என நவீன உளவியல் ஆராய்ச்சி வாதிடுகிறது.

இதிலிருந்து விலகி, டேவிட் ஹால்பிரின் என்ற எழுத்தாளர் செக்ஸ் தன்னிச்சையான ஒரு வெளியில் செயல்படுவதில்லை என ஆணித்தரமாக கூறுகிறார். இக்கருத்தை விரிவாக புரிய வைக்க ஏதன்ஸ் நகரில் பாலியல் உறவு பண்டைய காலத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த விதத்தை பின்வருமாறு விளக்குகிறார். ஏதன்ஸ் நகரில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்று ஆவணங்களில் பாலியல் உறவை ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் சமரச உணர்வு நிறைந்த ஒன்றாக சித்தரிக்கவில்லை. மாறாக, ஏதன்ஸ் மக்களைப் பொருத்தவரை, செக்ஸ் என்பது சமூகத்தில் ஆதிக்க வர்க்கத்தினர் விளிம்பு நிலை மக்களின் மீது நடத்தப்படும் செயல்.

ஒரு ஏதினியனின் பாலியல் உறவு அவனது சமூக அந்தஸ்தைப் பொருத்து நிர்ணயமாகிறது. வாலிப பருவம் எய்திய ஆணே அதிகாரம் பெற்றவனாகிறான். அவன் தன்னை விட சமூகத்தில் தாழ் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் (வயது வரம்பில்லை), விடலைப் பருவ பையன்கள், வெளிநாட்டினர் மற்றும் அடிமைகள் ஆகிய அனைவரிடமும் பாலியல் உறவு கொள்ளலாம். பண்டைய கால ஏதன்ஸில் பொது வாழ்க்கையை ஒழுங்குப்படுத்தும் கொள்கைகளே செக்ஸ் வாழ்க்கையையும் நெறிப்படுத்தியது. ஏதன்ஸ் நகரில் பல நூற்றாண்டுக்கு முன் வழக்கில் இருந்த நடைமுறை என்று இதனை விலக்கி பார்க்க வேண்டாம்.

படிக்க:
மோடி எடப்பாடியை காட்டுக்கு அனுப்புவோம் – பொளந்து கட்டும் சென்னை மக்கள் | காணொளி
பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?

அந்த நகரில் எவ்வாறு ஏணிப்படி சமூக அமைப்பு பாலியல் உறவுகளை பாதித்ததோ அதே போல் நம் சமூகத்தில் தற்கால குடும்ப அமைப்பில் பண்பாடு மற்றும் அரசியல் சார்ந்த கருத்தாக்கங்கள் பிரதிபலிக்கின்றன. இல்லறம் அமைத்தல் பெண்ணின் கடமை என்று வகுக்கப்பட்டுள்ளது. சிறு வயதிலிருந்தே பெண் பிள்ளைகளின் அம்மாக்கள் அவர்களுக்கு கோலம் போடுவது, வீட்டை சுத்தப்படுத்துவது, சமைப்பது என அனைத்தையும் கற்றுக் கொடுப்பார்கள்.

திருமணத்திற்கு பிறகு பெண் தனது கணவனுக்கும் அவனது வீட்டாருக்கும் ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும். கணவனின் பாலியல் இச்சையை திருப்திபடுத்த வேண்டும், குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும், அவர்களை பராமரிக்க வேண்டும் என அனைத்துப் பொறுப்புகளும் பெண்ணுக்கு வழங்கப்படும். குழந்தை பெற்று கொடுக்க இயலாத பெண்ணை என்னென்ன இழி சொற்கள் மூலம் பலவீனப்படுத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதோடு விட்டுவிடுகிறார்களா என்ன? அந்தப் பெண்ணின் உடல் மீது மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அனைத்து அத்துமீறல்களும், வன்முறைகளும் நடத்தப்படுகிறது. பாலியல் வன்புணர்வை விட இது எந்த விதத்தில் குறைவு?

கேலிச்சித்திரம் : முகிலன்.

ஒரு சிலர் இந்த சூழல் மாறிவிட்டதாகவும் பெண்கள் கல்வி பெற்று முன்னேறி விட்டதாகவும் வாதிடுவார்கள். இது முற்றிலும் மறுக்க முடியாத உண்மையே. இருந்தாலும் கல்வியறிவோ, வேலைவாய்ப்போ பெண்களை முற்றிலும் விடுவிக்கவில்லை. இன்றும் கூட இல்லறம் அமைத்தல் அவள் பொறுப்பாகவே பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு கொடுக்கப்படும் கல்வி அவர்களது குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதற்கும் சற்று பொருளாதார வளர்ச்சிக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் பெற்ற கல்வி பெரும்பாலும் அவர்களது அறிவு வளர்ச்சிக்குப் பயன்படக் கூடியதாக அமைவதில்லை. மேலும், அவர்களை சமூக மற்றும் குடும்ப அமைப்புகளின் இறுக்கத்தில் இருந்து விடுபட வழிவகை செய்வதில்லை. அனைத்து விதத்திலும் நிறைவான இல்லறத்தை ஒரு பெண் அமைத்தாலும் அச்செயலுக்கு சமூகத்தில் சிறப்பான அந்தஸ்து தரப்படுவதில்லை. இச்சூழலில் இன்பமான குடும்ப அமைப்பை எவ்வாறு உருவாக்குவது? ஆண் -பெண் உறவு சமூகத்தில் ஊறிப்போன ஏற்றத்தாழ்வுகள், பிரிவினைகள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டுள்ளது என்பது புலனாகிறது.

மேலே விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளோடு சாதி அமைப்பும் சேரும் போது, இந்திய சமூகத்தில் பெண்கள் வார்த்தைகளால் விவரிக்க இயலாத கொடுமைகளை அனுபவிக்க நேரிடுகிறது. சாதி அமைப்புக்கும் பெண்பாற் பண்பிற்கும் கண்டிப்பாக ஒர் இணைப்பு உண்டு. சாதி இந்துக்கள் அதிகார வர்க்கத்தினராக உருவெடுக்க ஆரம்பித்த காலம் முதல் சாதிக் கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் நடைபெறுகின்றன. அவர்களின் சாதி அடையாளங்களை காத்துக் கொள்ளவும், அதிகாரத்தை நிலைநிறுத்தவும் ஆணாதிக்க, பார்ப்பனிய கருத்தாக்கங்களை வலுப்படுத்தியுள்ளார்கள். இதன் விளைவாக, பெண்கள் புனிதமான குடும்ப அமைப்பின் மையம் என்று நம்பப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் இந்த அணுகுமுறை பரவலாக தென்படுகிறது.

அதீத அன்பு காட்டி சமூக இயல்பை முற்றிலும் மறைத்து பெண்களை வளர்த்து பின் அதே சாதி ஆணுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்கள். திருமணம் மூலம் அவர்களின் சாதித் தூய்மையும், முக்கியமாக, அதிகாரமும் நிலை நாட்டப்படுவதாக எண்ணுகிறார்கள். நவீன காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் தலித் மக்கள் பொருளாதாரத்தில் சற்று நல்ல நிலையில் உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அவர்களின் ஆடை அணியும் விதம் மாறியுள்ளது, அவர்களுக்கான வெளி விரிவடைந்துள்ளது மற்றும் ஆதிக்க சாதிப் பெண்களிடம் பழகும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !

அதனால், ஒரு தலித் வாலிப ஆண், ஆதிக்க சாதி பெண்ணை காதலிப்பது என்பது இயல்பான ஒன்று. ஆனால், ஆதிக்க சாதியினர் அவ்வாறு இயல்பாக எடுத்துக்கொள்வதில்லை. ஆண் – பெண் காதல் உறவை சாதிக் கண்ணாடி மூலம் பார்த்து அதனை தலித் மக்களின் திட்டமிட்ட சதி என்று ஆதிக்க சாதியினர் வாதிடுகின்றனர். இவை அனைத்தையும் மீறி ஒரு ஆதிக்க சாதிப் பெண் ஒரு தலித் வாலிபனை திருமணம் செய்தால் யாராவது ஒருவரை கொலை செய்து விடுவர். இதில் எங்கே இருக்கிறது பெண்ணின் பாதுகாப்பு? தலித் பெண்ணின் நிலை இதைவிட பரிதாபமாக இருக்கிறது. அவளுக்கு எந்த வித புனிதமும் கிடையாது.

ஆதிக்க சாதி ஆண்கள் தலித் பெண்களிடம் தண்ணீர் குடிக்கத் தயங்கலாம், அவர்கள் கொடுக்கும் உணவை உண்ண மறுக்கலாம்; பொது வெளியில் அவள் உடலை தொட தயங்கலாம்; ஆனால், அவளை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவது எந்தவிதத்திலும் அவனின் சாதித் தூய்மையை களங்கப்படுத்தாது என்ற எண்ணம் மனதில் பதிந்துள்ளது. ஆதிக்க வர்க்கத்தினர் / சாதியினர் தலித் பெண்கள் மீது நடத்திய கொடுமைகளின் சாட்சியாகத் தான் மக்கள் பெண் தெய்வங்கள் நிற்கிறார்கள். பெண் தெய்வ வழிபாட்டை பெண் வழி சமூகத்தின் நீட்சியாக பார்ப்பதை விடுத்து சாதி இழிவின் சின்னமாகக் கருத வேண்டும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்திய சமூகத்தில் ஒரு பெண் அவளுக்கென்று கல்வி, வேலை, துணை போன்ற அடிப்படையானவற்றை கூட தன்னிச்சையாக தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. இதற்கு காரணமான நம் சமூகம், பண்பாடு, அரசியல் தளங்களில் காலம் காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்க, பார்ப்பனிய கருத்தாக்கங்களை கேள்விக்குட்படுத்த வேண்டும். குறிப்பாக, இந்திய பண்பாட்டின் சிறப்பம்சமாக சித்தரிக்கப்படும் குடும்ப அமைப்பு என்ற சட்டகத்திற்குள் பெண்களை வரையறுப்பதை முதலில் கைவிட வேண்டும். இதை விடுத்து, ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் போது மட்டும் எதிர்வினையாற்றுவது சிறு துளி அளவிலும் பெண்கள் விடுதலை பெற பங்களிக்காது என்பது உறுதி.

விஜய் அமந்தா.


இதையும் பாருங்க …

பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?

0

கத்சிங் மற்றும் அவரது தோழர்கள் 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி லாகூர் மத்திய சிறையில் ஆங்கிலேயே அரசினால் தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். அதற்கு அடுத்து மார்ச் 24-ம் தேதி அவர்களது தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் முழு கடை அடைப்பை நடத்த முயன்றனர். தொடர்ந்து இந்து மற்றும் இசுலாமிய கும்பல்களால் நடந்த வன்முறை மற்றும் பதில் வன்முறையால் 400 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் கான்பூரே சூறையாடப்பட்டது.

அதற்கடுத்த ஆறு நாட்கள் மார்ச் 30 வரை இரு மத வழிப்பாட்டு தலங்கள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. 400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அந்த வன்முறையில்தான் ஐக்கிய மாகாண காங்கிரசு அமைப்பின் (United Province Congress Committee) தலைவரும் பகத்சிங்கின் நண்பரும் தீரமிக்க விடுதலை போராட்ட வீரருமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி (Ganesh Shankar Vidyarthi) தன்னுடைய இன்னுயிரை இழந்தார். மார்ச் 25-ம் தேதி வன்முறையினால் பற்றிக்கொண்ட நெருப்பிலிருந்து அப்பாவி இந்து மற்றும் முஸ்லீம் மக்களை காப்பாற்றும் முயற்சியின் போது அந்த துயரம் நடந்தேறியது.

கான்பூர் கலவரம் குறித்த சித்திரம் (கோப்புப் படம்).

படுகொலைக்கு சில நாட்களுக்கு முன்பு காந்தி – இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான 1931, மார்ச் 5-க்கு பிறகு சிறையிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். பகத்சிங் மற்றும் தோழர்களது விடுதலை குறித்து அவ்வொப்பந்தம் எதுவும் பேசவில்லை. ஆனால், நாடு முழுவதும் வலுவாக வீசிய பகத்சிங் அலையின் காரணமாக அவரை விடுதலை செய்யக்கோரி இர்வினிடம் காந்தி வேண்டியதாகவும் ஆனால், அது வெற்றி பெறவில்லை என்றும் நேரு தன் வரலாறில் எழுதியுள்ளார்.

காந்தி மற்றும் இர்வினிடையே உடன்படிக்கை நடந்து கொண்டிருந்த சமயத்தில் பகத்சிங் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களை பற்றி ஒப்பந்தத்தில் என்ன இருந்தது என்று பகத்சிங்கின் ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசுக் கழக (Hindustan Socialist Republican Association) ஆயுதப்படை தலைவரான சந்திர சேகர் ஆசாத் கேள்வி எழுப்பினார். ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்னரே அலகாபாத்தில் உள்ள அல்பிரட் பூங்காவில் பிப்ரவரி 27, 1931-ல் ஆசாத் கொல்லப்பட்டார்.

போலீசு மற்றும் நீதிமன்றங்களின் மூலம் கலவர வன்முறையில் ஈடுப்பட்டவர்களை வெள்ளையர்கள் விடுதலை செய்ததில் வியப்பேதுமில்லை. வன்முறை கலாச்சாரம் இந்தியாவின் கொள்ளை நோய் என்றும் இந்தியாவிற்கு அமைதியை வழங்க ஆங்கிலேயே அரசு கண்டிப்பாக தேவை என்ற காலனிய கற்பிதத்திற்கு இது வலு சேர்த்தது.

இங்கே நமக்கு இன்றியமையாத கேள்வி ஒன்று வருகிறது. பகத்சிங் ஒரு வெளிப்படையான நாத்திகவாதி, புரட்சியாளர் மற்றும் மதச்சார்பற்றவர் எனில் அவருக்கு அஞ்சலி செலுத்த இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களது குரல்வளைகளை ஏன் பிடித்துக் கொள்ள வேண்டும். பகத்சிங்கை தூக்கிலிட அழைத்து செல்லும் போது சிறைக்காவலரான சரத் சிங் கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்குமாறு பகத்சிங்கிடம் கிசுகிசுத்தார். அதற்கு புன்னகையுடன் பதிலளித்த பகத்சிங், “என்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் நான் கடவுளை வழிபட்டதில்லை. இப்போது கடவுளிடம் நான் மன்னிப்பு கேட்பேனானால், ‘இதோ பார்… சாவு நெருங்குவதால் மன்னிப்புக் கேட்கிறான் இந்தக் கோழை’ என்று அவர் கூறுவார்” என்றார் பகத் சிங்.

கான்பூரில் இந்து மற்றும் இசுலாமிய மதவாத அமைப்புகளால் 1920-களின் முடிவில் தொடங்கப்பட்ட மறுமலர்ச்சி நடவடிக்கைகள் வளரத் தொடங்கியதுதான் வகுப்புவாத வன்முறைகளுக்கு காரணம் என்று “சமூக பிணைப்புகள், மத உறவுகள் : இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கான்பூரின் ஜவுளி தொழிலாளர்கள் (Bonds of community, ties of religion: Kanpur textile workers in the early twentieth century)” என்ற ஒரு ஆய்வு கட்டுரையில் சித்ரா ஜோஷி இதற்கு பதிலளிக்கிறார்.

கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் தலை.

கான்பூரில் தாய்மதத்திற்கு திரும்பும் சுத்தி (shuddhi) இயக்கத்தை ஆரிய சமாஜம் பெரும் ஆர்வத்துடன் தொடங்கியது. அதில் ஆர்வமற்றவர்கள் கதா மண்டலை (Katha Mandal)  உருவாக்கினர். அது தற்காப்பு பயிற்சிகள் மற்றும் மதமாற்ற நடவடிக்கைகள் செய்ய முற்பட்டது. போட்டியாக முஸ்லீம்களும் டப்லை-உல்-இஸ்லாம் (Tabligh-ul-Islam) என்ற அமைப்பைத் தொடங்கினர். வெறுமனே மதம் தொடர்பான கூட்டங்களுக்கு பதிலாக ஒருவரையொருவர் வெறுப்புணர்ச்சியூட்டவே இவை பயன்பட்டன.

காங்கிரசில் இருந்த பல்வேறு உள்ளூர் தலைவர்கள் ஆரிய சமாஜம் மற்றும் இந்து மகாசபாவின் நடவடிக்கைகளில் பங்கேற்றது காங்கிரசு இந்துக்களுக்கு ஆதரவான அமைப்பு என்ற எண்ணத்தை முஸ்லீம்களிடம் ஏற்படுத்தியது. காங்கிரசில் உண்மையிலேயே மிகச்சிறுபான்மையினர் தான் மதச்சார்பற்றவர்களாக இருந்தார்கள் என்று வன்முறை குறித்த காங்கிரசு கமிட்டியின் அறிக்கையில் சேர்க்கப்பட்ட ஜபருல் முல்க்கின் (Zafarul Mulk) மாற்றுக்கருத்து அம்பலப்படுத்துகிறது.

வெள்ளையர்களின் பிரித்தாளும் கொள்கையின் விளைவாக வாக்காளர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. விதிவிலக்காக இங்கு அனைத்து சமூகத்தினரின் ஒருமனதான ஆதரவை பெற்றவர் கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி மட்டுமே.

கான்பூர் வன்முறைக்கான காரணங்களை ஆய்வு செய்யும் போது ஒரு உண்மை தெரிய வருகிறது. தலைவர்களாக இருந்தவர்கள் மதச்சார்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பிற மதத்தினரிடையே அவருக்கு இருக்கும் மதசார்பற்ற நன்மதிப்பு சீர்கெடுகிறது. கான்பூரில் கணேஷ் வித்யார்த்தியின் பழைய நடவடிக்கைகளாலும் அவருடைய கொள்கை மற்றும் பகத்சிங்கிடம் அவருக்கு உள்ள தொடர்பினாலும் அவரது மதச்சார்பற்ற தன்மையை யாரும் சந்தேகிக்கவில்லை.

படிக்க:
நூல் அறிமுகம் : பகத்சிங் சிறைக் குறிப்புகள்
பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்

இந்நிலையில் இங்கே ஒரு கேள்வி எழுவது காலத்தேவையாக இருக்கிறது. விடுதலையடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னரும் இந்தியா ஏன் இன்னும் பிளவுபட்டு கிடக்கிறது? யாருக்குமே மகிழ்ச்சியில்லை. பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என இருவருமே மனநிறைவற்று வாழ்கின்றனர்.

அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தலைவர்கள் கடைபிடிக்கும் ‘ஒருவிதமான’ மதச்சார்பின்மை, பெருந்திரளான மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இதில் மாற்றம் தேவைப்படுகிறது என்பதுதான் அதன் பொருள். நாட்டில் 97 விழுக்காடு மக்கள் மத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கும் நிலையில் அவர்களில் சிலர் (தலைவர்கள்) அதை பொதுவெளியில் வெளிக்காட்டும் சூழலில் தத்துவத்திலும் நடைமுறையிலும் கட்டுக்கோப்பான மதச்சார்பின்மை ஒன்று இங்கே தேவைப்படுகிறது.

பொதுமக்கள் குறிப்பாக தலைவர்களின் மத அடையாளங்களை தனிப்பட்ட நம்பிக்கை என்ற அளவிற்கு குறுக்குவதன் மூலம் உருவாக்கப்படும் மதச்சார்பின்மை மற்றும் ஒன்றுபட்ட இந்தியா என்ற கட்டமைப்புதான் பகத்சிங் மற்றும் கணேஷ் வித்யார்த்தி இருவருக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

கட்டுரையாளர் : Avinash Mohananey
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : thewire

நீங்கள் அதிகம் வெறுக்கும் பாஜக வேட்பாளர் யார் ? கருத்துக் கணிப்பு

4

மிழக பாஜக சார்பில் தமிழிசை, பொன் இராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி. இராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். மோடியின் இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த வேட்பாளர்கள் அனைவரும் பல்வேறு தருணங்களில் தமிழக மக்களால் வெறுக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆண்டாள் விவகாரத்தின் போது நயினார் நாகேந்திரன், “இந்துக்களை இழிவுபடுத்துபவர்களை கொலை செய்ய வேண்டும்” என்ற அளவுக்கு பேசினார். கொடுத்த காசுக்கு மேல் கூவும் இந்த முன்னாள் அதிமுக அடிமையை விட்டு விடுவோம். மற்ற நால்வரையும் எடுத்துக் கொள்வோம்.

பொன் இராதாகிருஷ்ணன் அப்பட்டமாக ஒரு பண்ணையார் போல நடந்து கொள்வார். அதுவும் அவர் அமைச்சராக உலா வந்த இந்த வருடங்களில் முகத்தை டைட்டாக வைத்து விட்டு அப்பாவி மக்களை விரட்டும் போலீசு அதிகாரி போல பேசுவார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை ஒழிக்க இவர் ஆடிய சதிராட்டங்கள் பல.

அதே தூத்துக்குடியில் சோபியா எனும் இளம்பெண்ணை கைது செய்யச் சொல்லி ஆட்டம் போட்டவர் தமிழிசை. சிலர் கருதுவது போல இவர் ‘சூத்திரர்’ என்பதால் பாஜகவில் ஓரங்கட்டப்படுவதில்லை. அப்படிப் பார்த்தால் மோடி கூட பார்ப்பனரல்லாதோர் பிரிவில்தான் வருகிறார். பார்ப்பனியத்தை பின்பற்றுபவர்களில், சங்கிகளில் வெள்ளை, கருப்பு என்ற பேதமில்லை. அனைத்தும் காவிதான்.

சி.பி.இராதாகிருஷ்ணனைப் பொறுத்த வரை தொலைக்காட்சி விவாதங்களில் பேசுவதே அந்த சானலின் முதலாளி போல உரிமையுடன் பேசுவார், அதட்டுவார், மிரட்டுவார். எச். ராஜா பற்றி தனியாகச் சொல்லத் தேவையில்லை. தமிழக இணைய வாசிகளால் எச்ச என்று அழைக்கப்படும் அளவுக்கு அவர் மீதான வெறுப்பு இங்கே அதிகம்.

எனில் இன்றைய கேள்வி:
தமிழக மக்களால் அதிகம் வெறுக்கப்படும் பாஜக வேட்பாளர் யார்?

♠ பொன். இராதாகிருஷ்ணன்
♠ சி.பி.இராதாகிருஷ்ணன்
♠ தமிழிசை
♠ எச். ராஜா

(இரண்டு பதில்களை தெரிவு செய்யலாம்)

பின் குறிப்பு : வெற்றி பெறும் வேட்பாளருக்கு தேர்தல் முடியும் முன் பரிசுகள், விருதுகள் வழங்கப்படும்.

வாக்களியுங்கள், வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள், ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்!

டிவிட்டரில் வாக்களிக்க

வினவு யூ-டியூப் சேனல் :

வாக்களிக்க…


இதையும் பாருங்க …

அக்கா வீட்டு வாசலில் தாமரை மலர்ந்தே தீரும் | பாடல் டீசர் | Kovan | Official Teaser

மோடி எடப்பாடியை காட்டுக்கு அனுப்புவோம் :