நவம்பர் 30-ல் வீசிய ஒக்கிப் புயல் குமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வை சூறையாடியிருக்கிறது. முன்னரே வானிலை எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. கேட்டால் இது எதிர்பார்க்காத புயல் என்கிறார், வானிலை ஆய்வு மைய இயக்குனர்.
ஒருக்கால் முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தாலும் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கவோ, புயலிலிருநது மீட்கவோ இந்திய அரசு, தமிழக அரசு நிறுவனங்களிடம் எந்த ஏற்பாடும், அக்கறையும் இல்லை. புயல் கடந்த பின்னரும் மீட்புப் பணியில் அரசுகள் முனைப்புடன் செயல்படவில்லை. புயல் வீசிய நாட்களில் குமரி கடலோரம் முழுவதும் மீனவ மக்கள் தங்களது சொந்தங்களை காப்பாற்றுமாறு கதறினர்.
ஊடகங்களில் சில விவாதங்கள் நடைபெற்றன. மத்திய மாநில அமைச்சர்கள் கடனே என்று குமரி சென்றனர். இருபது நாள் கழித்து வந்த மோடியும் கடற்கரைக்குச் செல்லாமல் புகைப்படக் கண்காட்சியை மட்டும் பார்த்து விட்டு சில கோடிகளை நிவாரணமாக அறிவித்து விட்டு சென்று விட்டார்.
விளைவு, 500-க்கும் மேற்பட்ட மீனவர்களை இன்னமும் காணவில்லை. 150க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர். டிசம்பர் 25 கிறிஸ்மசுக்கு பிறகு இந்த எண்ணிக்கை சரியாக உறுதி செய்யப்படும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் கிறிஸ்மஸ் அன்று குமரி மீனவர்கள் எங்கே இருந்தாலும் ஊர் திரும்பியே ஆக வேண்டும் என்ற மரபும், யதார்த்தமும் அங்கே இருக்கிறது. எப்படியிருப்பினும் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் அங்கே இல்லை
இந்த பேரழிவிற்குக் காரணம் என்ன? குமரிக்கடலில் திடீரென ஏற்பட்ட புயலா? அரசுக் கட்டமைப்பின் பாராமுகமா? மக்களை துச்சமாக எண்ணும் மத்திய மாநில அரசாங்கங்களின் போக்கா? மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்டும் சாகர் மாலா திட்டமா?
பதில் சொல்லுகிறது ”கண்ணீர்க் கடல்” ஆவணப்படம்!
டிசம்பர் முதல் இரண்டு வாரங்களில் வினவு செய்தியாளர்கள் குமரி கடற்கரை கிராமங்களுக்கு நேரில் சென்றனர். அதே நாட்களில் இங்கே ஆர்.கே.நகர் தேர்தலை ஒட்டி காசி மேடு மீனவர்களையும் சந்தித்தனர்.
இந்த ஆவணப்படம் ஒக்கி புயலோடு தமிழக மீனவர்களின் வாழ்வாதார போராட்டத்தை தீவிரமாக எடுத்து வைக்கிறது. இந்தப் படத்தைப் பாருங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்!
நவம்பர் 30-ல் வீசியஒக்கிப் புயல் குமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வை சூறையாடியிருக்கிறது. முன்னரே வானிலை எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. கேட்டால் இது எதிர்பார்க்காத புயல் என்கிறார், வானிலை ஆய்வு மைய இயக்குனர். தன்னார்வ வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் ஒரு நாள் முன்பே எச்சரிக்கை கொடுத்தார். ஏன்?
ஒருக்கால் முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தாலும் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கவோ, புயலிலிருநது மீட்கவோ இந்திய அரசு, தமிழக அரசு நிறுவனங்களிடம் எந்த ஏற்பாடும், அக்கறையும் இல்லை. புயல் கடந்த பின்னரும் மீட்புப் பணியில் அரசுகள் முனைப்புடன் செயல்படவில்லை. புயல் வீசிய நாட்களில் குமரி கடலோரம் முழுவதும் மீனவ மக்கள் தங்களது சொந்தங்களை காப்பாற்றுமாறு கதறினர். ஊடகங்களில் சில விவாதங்கள் நடைபெற்றன. மத்திய மாநில அமைச்சர்கள் கடனே என்று குமரி சென்றனர். இருபது நாள் கழித்து வந்த மோடியும் கடற்கரைக்குச் செல்லாமல் புகைப்படக் கண்காட்சியை மட்டும் பார்த்து விட்டு சில கோடிகளை நிவாரணமாக அறிவித்து விட்டு சென்று விட்டார்.
விளைவு, 500-க்கும் மேற்பட்ட மீனவர்களை இன்னமும் காணவில்லை. 150க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர். டிசம்பர் 25 கிறிஸ்மசுக்கு பிறகு இந்த எண்ணிக்கை சரியாக உறுதி செய்யப்படும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் கிறிஸ்மஸ் அன்று குமரி மீனவர்கள் எங்கே இருந்தாலும் ஊர் திரும்பியே ஆக வேண்டும் என்ற மரபும், யதார்த்தமும் அங்கே இருக்கிறது. எப்படியிருப்பினும் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் அங்கே இல்லை!
இந்த பேரழிவிற்குக் காரணம் என்ன? குமரிக்கடலில் திடீரென ஏற்பட்ட புயலா? அரசுக் கட்டமைப்பின் பாராமுகமா? மக்களை துச்சமாக எண்ணும் மத்திய மாநில அரசாங்கங்களின் போக்கா? மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்டும் சாகர் மாலா திட்டமா?
இந்தப் பேரிடரையும், குமரி மீனவ மக்களின் துயரையும் இந்தக் கலந்துரையாடல் எடுத்து வைக்கிறது. குமரிக்கு நேரில் சென்ற பத்திரிகையாளர்கள் மூவர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். குமரி மாவட்ட மீனவர்கள் சார்பில் இரு மீனவ இளைஞர்கள் கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர். அவர்களின் ஒருவர் மீனவர்களே நேரில் சென்று மீட்ட அணியில் பங்கேற்றவர்.
இந்தக் கூட்டத்தில் குமரிக்கு நேரில் சென்று மக்களை சந்தித்த வினவு செய்தியாளர்களின் நேர்காணலை அடிப்படையாக வைத்து “கண்ணீர்க் கடல்” எனும் திரைச்சித்திரம் திரையிடப்படுகிறது. அனைவரும் வருக!
நாள்: 25.12.2017 திங்கட் கிழமை
நேரம்: மாலை 3 மணி முதல் 6 மணி வரை
இடம்:ஆர்.கே.வி வெள்ளித்திரை பிரிவியூ தியேட்டர், சின்னத்திரை நிறுவனம் (RKV Film and Television Institute),
எண். 317-G, டாக்டர். என்.எஸ்.கே. சாலை, விஜயா கார்டன், வடபழனி, சென்னை-26 (சென்னை வடபழனி பேருந்து நிலையம் எதிரில்)
நேரம்:மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை
நிகழ்ச்சி நிரல்:
3.00 மணிக்கு அறிமுக உரை மற்றும்
ஒக்கிப் புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி
3.20 மணிக்கு ”கண்ணீர்க் கடல்” – திரைச்சித்திரம் திரையிடல்
4.45 மணிக்கு மீனவர் நேருரை மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்துரையாடல்
பங்கேற்பாளர்கள்:
திரு ஆர்.கே. ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் திரு அருள் எழிலன், பத்திரிகையாளர் திரு பாரதி தம்பி, பத்திரிகையாளர் தோழர் மருதையன், பொதுச்செயலர், ம.க.இ.க, மீனவ இளைஞர்கள், குமரி மாவட்டம்
நிகழ்ச்சி ஏற்பாடு : வினவு தொடர்புக்கு: 97100 82506 , 99411 75876
கார்ல் மார்க்சின் மூலதனம் : மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு !
கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு, ரசிய சோசலிசப் புரட்சியின் 100-ம் ஆண்டு சிறப்புக் கூட்டத்தில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகு, ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட கட்டுரை வடிவம்!
தோழர்களே, இரண்டு நிகழ்வுகளை இணைத்து நாம் கொண்டாடுகிறோம். நாம் இணைக்கிற நிகழ்வுகள் என்பதைக் காட்டிலும் வரலாற்றில் இந்த நிகழ்வுகள் எவ்வாறு இணைந்திருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை அறிவியல் துறையில் டார்வினுடைய நூல் வெளிவந்ததைக் குறிப்பிட்ட மார்க்ஸ், அந்தத் துறையில் அது ஒரு புரட்சி என்றார்.
சமூக அறிவியல் துறையில் மார்க்சின் மூலதனம் என்பது ஒரு திருப்பம். சமூக அறிவியலுக்கு அடிப்படை மாற்றத்தைக் கொடுத்தது. அதே போல் அரசியல் வரலாற்றில், உலக வரலாற்றில் ஒரு திருப்பு முனையைக்கொடுத்த புரட்சி என்றால் அது நவம்பர் புரட்சி தான்.
அண்டத்தின் பிறப்பு எனப்படுவது குறித்து ஒரு கருத்து அண்டவியல் துறையிலே உண்டு. பிக் பேங் (மாவெடிப்பு) கொள்கை என்று சொல்வார்கள். மனிதகுல வரலாற்றில் ஒரு நூலாகக் கண்ட மாவெடிப்பு மூலதனம், அரசியல் புரட்சியாகக் கண்ட மாவெடிப்பு நவம்பர் புரட்சி. அது சோசலிசப் புரட்சிகளின் தொடக்கம் மட்டுமல்ல; அடிமைத் தனத்தில் உழன்றுகொண்டிருந்தநாடுகளில் விடுதலைக்கு வித்திட்ட புரட்சி அது.
மூலதனம் என்கின்ற அந்த நூலில் மார்க்ஸ் வகுத்துக் கொடுத்தபொருளியல் கொள்கை, அதற்கு அடிப்படையாக இருந்த மெய்யியல் அரசியல் இவற்றையெல்லாம் இந்த நாட்டின் எல்லைகளைத் தாண்டிக் கண்டங்களின் அளவில் கொண்டு சேர்த்த புரட்சி இந்த நவம்பர் புரட்சி.
முதன் முதலாக ஜெர்மானியப் பதிப்பிற்காக, மார்க்ஸ் மூலதனத்தை இலண்டனில் வாழ்ந்து கொண்டு எழுதினார். ஆனால், ஆங்கிலத்தில் எழுதாமல், தன் தாய்மொழியான ஜெர்மனில் எழுதினார். மார்க்ஸ் மறைந்ததற்குப் பிறகு எங்கெல்ஸ் செய்த மகத்தான காரியம் இரண்டாம் பாகத்திற்காக ஈராண்டு காலம், மூன்றாம் பாகத்திற்காக ஒன்பது ஆண்டு காலம் என அந்த வயோதிகப் பருவத்தில் கண் பார்வை மங்கியிருந்த போது, நோயுற்ற நிலையில், இறுதியாகப் புற்று நோய் தாக்கிய நிலையில் பதினோரு ஆண்டு காலம் அந்த மூலதனத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை வெளியிடுவதற்காகவே எங்கெல்ஸ் செலவிட்டார். அது மட்டுமல்ல, அதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பு உட்பட வேறு மொழிகளில் வந்த ஒவ்வொரு மொழிபெயர்ப்பையும் திருத்துவது எங்கெல்சின் வேலையாக இருந்தது.
பாலுக்குள் மறைந்திருக்கிற நெய்யைப் போல், பூவுக்குள் மறைந்திருக்கிற விதையைப் போல், மார்க்ஸ் என்று சொல்லும் போதெல்லாம் அதற்குள் எங்கெல்சும் இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இதற்கடுத்து நாம் மூலதனம் படைப்பிற்காக நினைவு கொள்ள வேண்டிய ஒரு நபர் இருப்பாரென்றால், அது ஜென்னி மார்க்ஸ். அவர் பிரபுத்துவ குலத்திலே பிறந்தவர், அவருடைய சகோதரர் பிற்காலத்திலே பிரஷ்ய நாட்டினுடைய அமைச்சரவையிலே உள்துறை அமைச்சராகின்ற அளவுக்கு ஒரு பெரிய குடும்பம்.
மார்க்சுக்கும் ஜென்னிக்கும் பிறந்த குழந்தைகள் ஏழு. பசியால், பட்டினியால் நோயுற்றதால், மருத்துவத்திற்கு வழியில்லாததால் 7 பேரில் 4 பேர் இறந்து போனார்கள்.
மார்க்சியம் என்ற விரிந்தகன்றமைந்த கருத்துக்குள்ளே மார்க்சிய மெய்யியல், மார்க்சியப் பொருளியல், மார்க்சிய அரசியல் ஆகியவை அடங்குகின்றன. இப்போது எல்லாவற்றுக்குப் பிறகும் ஒரு இயம் என்று போட்டுவிடுகின்றார்கள். அப்படிப் போட முடியாது. மார்க்சியம் என்றால் என்ன என்கிற போது, லெனின் பதில் சொல்கிறார், மார்க்ஸ் கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு ஒழுங்கமைப்பு இது என்கிறார்.
மார்க்ஸ் இரண்டு கண்டுபிடிப்புகளைச் செய்தார். மனித சமூகத்தின் வளர்ச்சி விதியை அவர் கண்டுபிடித்தார்.
மனிதர்கள் தங்கள் தேவைகளுக்காகப் புதியவற்றைப் படைக்க வேண்டியுள்ளது. அப்படிப் புதியவற்றைப் படைக்கிறபோது, அந்தத் தேவை பெருகுகிறபோது, அவர்கள் அதை உற்பத்தி செய்யும்போது பொருட்களை மட்டும் உற்பத்தி செய்யவில்லை, தங்களுக்கிடையிலான புதிய உறவுகளை உற்பத்தி செய்கிறார்கள். இந்த உறவுகள் ஒரு கட்டத்தில் மேற்கொண்டு உற்பத்தி ஆற்றல்களின் வளர்ச்சிக்குத் தடையாகி விடுகிற போது, உறவுகளை மாற்றி அமைக்க வேண்டி வருகிறது. சமூக வளர்ச்சிக்கெல்லாம் மூல காரணமாக இருப்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும், அதையொட்டி உற்பத்தி உறவுகளின் மாற்றமும் தான் என்ற விதியைக் கண்டுபிடித்தவர் கார்ல் மார்க்ஸ்.
இது ஒரு சாதனை, மூலதனம் முன்னுரையின் முதல் பாகத்தில் மார்க்ஸ் சொல்வார், “முதலாளித்துவம் நிறைய போர்வைகளைப் போர்த்திக் கொண்டு வருகிறது. ஜனநாயகப் போர்வை, பாராளுமன்றப் போர்வை இப்படி என்னென்ன வழிகள்இருக்கின்றதோ, அத்தனைக்குள்ளும் தன்னை ஒளித்துக் கொண்டு வருகிறது. இந்தப் போர்வைகளையெல்லாம் நீக்கி, முதலாளித்துவத்தை அம்மணமாக்கிக் காட்டுகிற வேலைதான் இந்த நூலை எழுதுவதில் எனக்கிருக்கின்ற நோக்கம்” என்று அவர் சொல்லுவார். மூலதனம் அதைத்தான் செய்கிறது.
ஒரு உடற்கூறியல் ஆராய்ச்சியாளன் உடற்கூறுகளைப் பற்றி ஆய்வு செய்யவேண்டுமென்றால், முதலில் அவன் தன் எதிரே உள்ள உடலைப் பார்க்க வேண்டும். தலை, வாய், கண், மூக்கு, தோல், கை, கால் என்று தான் அவன் ஆராய்ச்சி தொடங்கும். வெளியில் உள்ள தோற்றப்பாடுகள், புலப்பாடுகளைத் தாண்டி, இறுதியாக இருக்கிற சாரம், ஒவ்வொரு உடலிலும் இருக்கின்ற உயிரணுவில் போய் முடியும். இதுவே ஆய்வு செய்கிற முறை.
ஆனால், இந்த முடிவை அவன் மாணவனுக்குக் கற்றுத்தருகிறபோது, அறிவியல் உலகத்தின் முன்னால் படைக்கிற போது எங்கிருந்து ஆரம்பிப்பான்? உயிரணுவிலிருந்து ஆரம்பித்து உடல் முழுவதையும் விளக்குவான். அதேபோல, இந்தச் சமூகத்தின் உயிரணு என்பது சரக்கு. இந்த உயிரணுவைக் கடைசியாகத் தான் விளக்கமுடியும், ஆனால், மார்க்ஸ் சரக்கு என்பதிலிருந்துதான் மூலதனம் நூலையே ஆரம்பிக்கின்றார்.
ஒவ்வொரு சரக்குக்கும் பயன்பாடு இருக்கிறது. ஒவ்வொரு பயன்மதிப்புள்ள சரக்கையும் சந்தையிலே போய்க் கொடுத்து வாங்குகிறோம். எனவே, அதற்கு மாற்று மதிப்பு இருக்கிறது. ஏதோ ஒருகட்டத்தில் இந்த சரக்கு உற்பத்தி என்பது, பணத்தின் அளவைக் கூட்டக்கூடிய ஒன்றாக மாறுகிறது. பணம், சரக்கு, கூடுதல் பணமாக ஆகிறது. எங்கே இந்த மர்மத்தைக் கண்டுபிடியுங்கள் என்று அவர் அறைகூவுகிறார்.
இந்த ஆய்வில் அவர் முடிவுக்கு வருகிறார். சந்தைக்கு எத்தனையோ சரக்குகள் வருகின்றன. சட்டை வருகின்றது, பேனா வருகின்றது, கட்டிடம் வருகிறது, கல் வருகிறது, இவையெல்லாம் அவற்றின் மதிப்புக்கேற்ப விற்கப்படுவதாகவும் வாங்கப்படுவதாகவும் நாம் அனுமானம் செய்து கொள்ளலாம். ஆனால், அதே சந்தைக்கு ஒரு புதிய சரக்கு வருகிறது. இது ஒரு அதிசயமான சரக்கு, அற்புதமான சரக்கு. அதற்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. சட்டைக்குள்ளே அடங்கியிருக்கிற மொத்த மனித உழைப்பு சட்டையின் மதிப்பைத் தீர்மானிக்கிறது, புத்தகத்திற்குள்ளே அடங்கியிருக்கிற மொத்த மனித உழைப்பு, புத்தகத்தினுடைய மதிப்பைத் தீர்மானிக்கிறது, இவையனைத்தும் தனிப்பட்ட ஒருவரின் உழைப்பல்ல; மாறாக, சமூக உழைப்பு; சமூக அளவிலான சராசரி உழைப்பு.
கார்ல் மாக்ஸின் மனைவி ஜென்னி மார்க்ஸ்.
ஒரு தொழிலாளி தன்னுடைய உழைப்புச் சக்தியைச் சந்தையிலே விற்க வருகிறான். அப்படி விற்க வரும்போது அந்த உழைப்புச் சக்தி என்ற சரக்கையும் வாங்குகிறார்கள். இந்த உழைப்புச் சக்தியை ஆலை முதலாளி வாங்கி நுகர்கிறான். நுகர்கிறான் என்றால், அவனுடைய ஆலையில் எந்திரங்கள் மீது, கரியின் மீது, மூலப் பொருட்களின் மீது அவற்றைப் பயன்படுத்துகிறான். இப்படிப் பிரயோகிக்கும்போது ஒரு அதிசய விளைவு ஏற்படுகின்றது. அது என்னவென்றால், இந்த ஒரு சரக்கு மட்டும் தன் மதிப்புக்கு மேல் கூடுதல் மதிப்பைத் தோற்றுவிக்கிறது.
அவனுடைய 4 மணி நேர உழைப்பு அவன் உழைப்புச் சக்தியின் மதிப்பை நிறைவு செய்துவிடுகிறது. எஞ்சிய 4 மணி நேர உழைப்பு ஒரு உபரி மதிப்பை உண்டாக்கித் தருகிறது. அந்த உபரி மதிப்பு யாருக்குக் கிடைக்கிறது; எந்தமுதலாளியின் கையில் எந்திரங்கள், கச்சாப் பொருள், கட்டிடம் உள்ளிட்ட இதர பொருட்கள் இருக்கிறதோ, அவனுடைய கைகளில் உபரி மதிப்பு சேருகிறது. இதுதான் உபரி மதிப்பு, இதுதான் சுரண்டல் என்று அவர்முடித்து விடுகிறார். இப்படி உபரிமதிப்பைப் படைக்கிற பணம் மூலதனமாகிறது. மூலதனம் உபரிமதிப்பைப் படைக்கிறது, உபரிமதிப்பு மூலதனத்தைத் தோற்றுவிக்கிறது.
ஒவ்வொரு சரக்கிலும், சமூக அளவில் தேவைப்படுகிற அந்த சராசரி உழைப்பு மதிப்பைத் தீர்மானிக்கிறது. இது எங்கு போய் ஈடேற்றம் பெறுகிறது? ஒருவன் பகவத் கீதை விற்கிறான், இன்னொருவன் பட்டைச் சாராயம்விற்கிறான். பட்டைச் சாராயத்திலும், பகவத் கீதையிலும் சரிசமமான உழைப்பு பங்கிடப்படுகிறது. இந்த உறவு யாருக்கும் யாருக்குமான உறவு? பகவத் கீதையை அச்சிட்டவனுக்கும், பட்டைச் சாராயம் காய்ச்சியவனுக்குமானஉறவு. இந்த உறவு நமக்கு எப்படித் தெரிகிறது? பட்டைச் சாராயத்திற்கும், பகவத் கீதைக்குமான உறவாக நமக்குத் தெரிகிறது. இதைச் சரக்குகளின் மாய்மாலம் என்று மார்க்ஸ் சொல்கிறார்.
இது மனிதர்களுக்கிடையிலான உறவைப் பொருட்களுக்கிடையிலான உறவாகக் காட்டுகிறது. தெருவில் ஒருவர் விளக்குமாறு விற்றுக்கொண்டு போகிறார். ஏய், விளக்குமாறு இங்கே வா என்று நாம் கூப்பிடுகிறோம். ஏனென்றால்,விற்கப்படும் பொருள் அதுதான். அப்படி அந்த விளக்குமாற்றினுடைய மதிப்பில் அடங்கிய ஆள் உருவமாக அந்த நபர் இருக்கிறார்.
உற்பத்தியும் உழைப்பும் சமூகமயமாக்கப்பட்டுவிட்டது. ஆனால், உபரி மதிப்பு முதலாளிகளால் களவாடப்படுகிறது.
ஆனால், ஒரு அம்பானியை, ஏய்! ஃபோன் இங்கே வா என்று அழைக்க முடிவதில்லை. அங்கே அந்த நிறுவனத்தின் பெயராக அது வந்து விடுகிறது. ஏனெனில், அதில் சமூக அளவிலான உழைப்பு நிறைந்திருக்கிறது. இப்படி வருகிற போது, சரக்காக விற்கப்படுகிற உழைப்புச் சக்தி யாரிடமிருக்கிறது? தொழிலாளியிடமிருக்கிறது.
கூலித் தொழிலாளி ஒரு முனையில் இருக்கிறான், எந்த உற்பத்திச் சாதனங்களும் அவனுக்குச் சொந்தமில்லை, ஒரு நட்டு, கருவி, போல்டு என எதுவுமே அவனுக்குச் சொந்தமில்லை. இன்னொரு பக்கம் இந்தக் கருவிகள், உற்பத்திச் சாதனங்கள் எல்லாவற்றையும் தன் கையில் தனி உடைமையாக வைத்திருக்கின்ற முதலாளி. இந்த இரண்டு பேருக்கும் இடையிலான அந்த உறவு இருக்கிறதே, அந்த உறவுக்குப் பெயர் தான் மூலதனம்.
மூலதனம் என்றால் கரியில்லை, மூலதனம் என்றால் எந்திரமில்லை, மூலதனம் என்றால் வங்கியிருப்பில்லை. மூலதனம் என்பதின் வடிவங்கள் இவையனைத்துமே. ஆனால், மூலதனம் என்பதின் சாரம் இந்த உறவு தான். மூலதனம் உற்பத்தியாகிறதென்றால், இந்த உறவு உற்பத்தியாகிறது என்பது பொருள்.
முதலாளித்துவத்தினுடைய ஆதி மூலதனத் திரட்டல் என்பது என்னவென்றால், இந்த உறவைப் புதிதாக உண்டுபண்ணுவது. இந்த உறவை உண்டுபண்ணுவது அவ்வளவு எளிதில்லை. நிலத்திலிருந்து விவசாயியைப் பிரிக்கவேண்டும், பட்டறைத் தொழிலிருந்து பட்டறை அதிபரைப் பிரிக்க வேண்டும், கைவினைஞனைக் கைத்தொழிலிடமிருந்து பிரிக்க வேண்டும், மொத்தத்தில் அவர்களை ஒன்றுமற்ற ஓட்டாண்டியாக மாற்ற வேண்டும்.
இந்திய துணைக்கண்டத்தில் பிரித்தானிய ஆட்சியின் பஞ்சமும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலும், அமெரிக்காவில் ‘கோல்டு ரஷ்’ என்ற பெயரில் செவ்விந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இந்த மூலதனத் திரட்டலினுடைய சாரம்தான்.
இப்போது மூலதனம் பல வடிவங்கள் எடுத்துவிட்டது. இது தேச எல்லைகளை உடைத்துக்கொண்டு பரவுவது பற்றி 1847 -ஆம் ஆண்டு காலக்கட்டத்திலேயே கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்ஸ் எழுதினார். முதலாளித்துவ பெருமலையை உடைப்பதற்கு மார்க்சும் எங்கெல்சும் வார்த்த சிற்றுளி கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை.
ஜெய்பூர் நகர விரிவாக்கத் திட்டத்திற்காகத் தமது நிலங்கள் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதை எதிர்த்து ராஜஸ்தான் விவசாயிகள் நடத்திய போராட்டம்.
இன்று சொல்கின்றார்களே, உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்பதான போக்குகள், எல்லாவற்றையும் சரக்குகளாக மாற்றுகிறது. அதாவது கல்வி சரக்கு, கலைகள் சரக்கு என எல்லாவற்றையுமே சரக்குகளாக மாற்றுவது என எல்லா ஒப்பந்தங்களும் நடக்கின்றன. இது முதலாளித்துவ சமூகத்தினுடைய வளர்ச்சி விதி. இந்த விதியை எவனொருவனும் மாற்றி எழுத முடியாது.
எப்படிப் பணம் மூலதனமாகிறது, எப்படி மூலதனம் உபரி மதிப்பைப் படைக்கிறது என்பதை முதலில் கோட்பாட்டளவில், பின்னர் நடைமுறைச் சான்றுகளோடு எடுத்துரைக்கிற நூல்தான் மார்க்சின் மூலதனம். படிக்க முடியாது என்றோ, முடிக்க முடியாது என்றோ கவலைப்படவேண்டாம், முயற்சி எடுத்துப் படிக்க வேண்டும்.
லெனின் அந்த நூலைப் படித்தார். அவர் படித்ததோடு நிற்கவில்லை, அந்த நூல் வரையறுத்துக் கொடுக்கிற விதிகளை, முதலாளித்துவ வளர்ச்சியினுடைய பொருளாதார இயக்க விதிகளைத் தன்னுடைய நாட்டில் எப்படிப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆய்வில் அவர் ஈடுபட்டார்.
ரஷ்ய முதலாளித்துவ வளர்ச்சி விதியை அவர் ஆய்வு செய்து கண்டுபிடித்த காரணத்தினால்தான், ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தை, புரட்சி என்ற ஒரு புள்ளியிலே அவரால் முடிக்க முடிந்தது. நமக்கும் அப்படி ஒரு தேவை இருக்கிறது.
இது அறிவியல் நூல், நம்மைச் சூழ்ந்திருக்கிற சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கு, அந்தச் சமூகத்தை மாற்றியமைப்பதற்கான ஒரு அறிவியல் ஆயுதம் இந்த நூல். 27 வயதில் ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகளில் மார்க்ஸ்எழுதினார். அறிவியல் அறிஞர்கள், மெய்யியல் அறிஞர்கள் இந்த உலகைப் புரிந்து கொள்ள முயல்கிறார்கள். ஆனால், எங்களுக்கு முக்கியம் இந்த உலகை மாற்றுவது தான். இது நடக்க வேண்டுமென்றால் நாம் உழைக்கவேண்டும். மார்க்சும், எங்கெல்சும் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆற்றிய பணி என்பது தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே அறியும்படி செய்ததும், உணரும்படி செய்ததும் தான். இதில் ஒரு வார்த்தைகூட வீணாக எழுதவில்லை. அவர்களுடைய பணியின் சாரம் கனவுகளின் இடத்தில் அறிவியலை வைத்தார்கள்.
நான் இந்த மேடையிலிருந்து அறைகூவலாகச் சொல்கிறேன், மூலதனத்தின் அறிவியல் முடிவுகளை, மார்க்சியத்தின் அறிவியல் முடிவுகளை வேறு ஒரு தளத்திலே நின்று யாரும் கேள்வி கேட்கத் துணிந்தால், நானும்விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். எதையுமே படிக்காமல், யாரையுமே படிக்க விடாமல், மார்க்ஸ் போய்விட்டார், லெனின் போய்விட்டார், புரட்சி எப்படி நடக்கும் என்று பேசிக்கொண்டும், புலம்பிக்கொண்டும்இருப்பவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், நின் வழியே நீ செல் என்று மார்க்ஸ் நமக்கு அறிவுறுத்தினார்.
நாம் கோழைகளல்ல, தடுமாறுகிறவர்களல்ல, தெளிவானவர்கள் என்றால் மார்க்சியம் என்கிற அறிவியலை, அதைச் சாறு பிழிந்து கொடுக்கிற மூலதனத்தை, அதை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டியிருக்கிற நவம்பர் புரட்சியை, மூலதனம் எப்படி இயங்குகிறது, முதலாளித்துவ அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதைக் கற்பிக்கிற அந்தப் பாடத்தைக் கற்போம், உள்வாங்குவோம், மற்றவர்களுக்குக் கற்பிப்போம், மாற்றத்தைக்கொண்டுவருவோம்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இட்லரின் நாஜிப் படைகளைத் தோற்கடித்த பிறகு, செஞ்சேனை படை வீரர் செங்கொடியை ஜெர்மன் நாடாளுமன்றக் (ரெய்ச்ஸ்டாக்) கட்டிடத்தில் ஏற்றும் வரலாற்று நிகழ்வு. (கோப்புப் படம்)
கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு நிறைவு, நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா சிறப்புக் கூட்டம் நவம்பர் 19, 2017 அன்று சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து மும்பையிலிருந்து வெளிவரும் “ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி” இதழின் வெளியீட்டாளர் தோழர் ரஜனி எக்ஸ். தேசாய் அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம்.
அக்டோபர் புரட்சியை நினைவு கூர்வதற்காகக் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தின் அமைப்பாளர்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
20 -ஆம் நூற்றாண்டை அக்டோபர் புரட்சியைப் போலத் தீர்மானகரமாக மாற்றியமைத்த நிகழ்வு வேறெதுவும் இல்லை என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. உலகின் ஆக மிகப் பெரிய மக்கள் தொகையின் வாழ்க்கையினை நேரடியாக மாற்றிய அசாதாரண சீனப் புரட்சிகூட, அதன் போல்ஷ்விக் முன்னோடி இல்லாமல் சாத்தியமாகியிருக்க முடியாது. இருப்பினும், பின்னர் நேர்ந்த பின்னடைவுகளுக்குப் பிறகு, மார்க்ஸ் 19 -ஆம் நூற்றாண்டின் தத்துவ மேதையாக மட்டும் பல அறிஞர்களால் பார்க்கப்படுவது போல, அக்டோபர் புரட்சி 20 -ஆம் நூற்றாண்டு நிகழ்வாக மட்டும் கருதப்படுகிறது. ஆகையால்தான் நாம் காலத்தால் அழியவொண்ணாத சில உண்மைகளைத் திரும்பவும் வலியுறுத்த வேண்டிய அவசரம் எழுந்திருக்கிறது.
“ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி” இதழின் வெளியீட்டாளர் தோழர் ரஜனி எக்ஸ். தேசாய்
முதலில், அக்டோபர் புரட்சியில்தான் மனித வரலாற்றில் முதன்முதலில் மக்கள் வெறுமனே காலத்தின் போக்கில் அனிச்சையாக எதிர்வினையாற்றாமல், ஒரு திட்டவட்டமான செயல்திட்டத்தின்படிச் செயல்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினர். மக்கள் தங்கள் சொந்த தலைவிதியைத் தாங்களே மாற்றிக் கொள்வதன் அறிவியல் கோட்பாடுகளைப் புரிந்து கொண்டால், அவர்கள் அவ்வாறு செய்து காட்ட முடியும் என்பதுதான் இந்த புரட்சியின் முக்கியத்துவமாகும். தங்கள் தலைவிதியை அவர்களின் மனம் போன போக்கிற்கு மாற்றிக் கொள்ள முடியாது என்பது உண்மைதான். அவர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் மிகக் குறுகிய வரம்புகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் தான். முன்னால் பிப்ரவரி புரட்சி நடக்காமல் அக்டோபர் புரட்சி நடைபெற்றிருக்காது தான். பிப்ரவரி புரட்சியும் அதற்கு முன்னால் நிகழ்ந்த எதேச்சதிகார நாடுகளுக்கிடையிலான போர் உட்பட, பல மாற்றங்களால் தூண்டப்பட்டது தான்.
நவம்பர் புரட்சிக்கு முன்பாக, 1917, ஜூனில், அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே என்ற அரசியல் முழக்கத்தின் கீழ் பெத்ரோகிரேடு நகரில் நடந்த ஆர்ப்பாட்ட பேரணி. (கோப்புப் படம்)
பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு கூட போல்ஷ்விக்குகள் தங்கள் விருப்பப்படி புரட்சியை துவங்கவில்லை. மக்கள் களத்தில் இறங்கத் தயாரான பிறகு தான், எதிரி குழப்பத்தில் இருந்த போதுதான், அவர்கள் எழுச்சியைத் துவக்கினார்கள். அக்டோபர் புரட்சி மிகத் துல்லியமாகவும், வலிமிகுந்ததுமான தயாரிப்புகளாலே சாத்தியமாயிற்று. திட்டமிடல் செயலளவில் மட்டுமல்ல, அமைப்பளவிலும், கோட்பாட்டளவிலும் செய்யப்பட்டது. பிறகு வந்த காலத்தில், லெனினிசக் கட்சி என்று அறியப்பட்ட கட்சியால் இந்தத் திட்டமிடல் செய்யப்பட்டது. (இந்தப் பரபரப்பான சூழலில்தான் 1917 -இல் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம், அரசும் புரட்சியும் என்ற இரண்டு கோட்பாட்டு நூல்களை லெனின் வெளியிட்டார். அரசும் புரட்சியும் என்ற நூல் அவர் தேடப்படுபவராக அறிவிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த காலக்கட்டத்தில் ஜூலை மாதம் எழுதப்பட்டது. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்ற நூல், வரப் போகும் புரட்சியின் சமூகப் பொருளாதார அடிப்படையை வரையறுத்தது; அரசும் புரட்சியும், புரட்சியின் அரசியல் நோக்கத்தை விளக்கியது.)
மக்கள் தங்கள் சொந்த முயற்சியால் வரலாற்றை மாற்றியமைக்க முடியும் என்ற இந்த உண்மை மனித வரலாற்றை அக்டோபர் புரட்சிக்கு முன், அக்டோபர் புரட்சிக்குப் பின் என்று இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. சில பத்தாண்டுகளுக்குப் பிறகு, கட்சியின் உலக கண்ணோட்டம் மற்றும் பாதையில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகப் புரட்சி பின்னடைவுக்குள்ளானது என்பது அதன் வரலாற்று முக்கியத்துவத்தை எந்த வழியிலும் குறைத்துவிடவில்லை. வரலாற்றை உணர்வுபூர்வமாக படைக்கின்ற ஆற்றல் தங்களுக்கு இருக்கிறது என்பதை மக்களால் இனி மறக்கவியலாது. மக்களின் இந்த ஆற்றல் குறித்துத்தான் சுரண்டும் வர்க்கங்கள் அஞ்சுகின்றன. அதனால்தான் இக்கோட்பாடுகளை மக்களிடம் பரப்புபவர்களை அழித்துவிட அவர்கள் எத்தனிக்கிறார்கள்.
இரண்டாவதாக, உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டுகின்ற ஒரு சமூக அமைப்பை உருவாக்குவதற்காக அல்லாமல், உழைப்புச் சுரண்டல் என்பதே இல்லாத ஒரு சமூகத்தைப் படைக்கும் பொருட்டு, ஒரு வர்க்கம் அன்றைய ஆளும் வர்க்கத்தை அகற்றி, தானே ஆளும் வர்க்கமாக மாற்றிக் கொண்டதென்பது வரலாற்றில் அதுதான் முதன் முறை. மழலைப் பருவம் தொடங்கிப் பிஞ்சு உள்ளங்களிலேயே திணிக்கப்பட்டிருந்த மரபு சார்ந்த கருத்துகள் எதையும் இந்தப் புதிய சமூகத்தால் பயன்படுத்திக் கொண்டிருக்க இயலாது.
இளம் சோவியத் அரசை வீழ்த்தும் நோக்கில் நடந்த ஏகாதிபத்திய படையெடுப்பின்போது, பெத்ரோகிரேடு நகரை ஆக்கிரமித்த் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சு, ஜப்பானிய இராணுவத் துருப்புகள். (கோப்புப் படம்)
முதலாளித்துவத்தைப் போன்று தன்னெழுச்சியாகத் தம்மைத்தாமே மறுஉற்பத்தி செய்து கொள்ளும் சக்திகளையும் இந்தப் புதிய சமூகம் நம்பியிருக்க முடியாது. வெகு மக்களின் உணர்வுபூர்வமான செயல்பாடுகளை மட்டுமே அது நம்பியிருக்க முடியும். எனவே, வரலாற்றில் நடைபெற்றுள்ள வேறெந்த ஆட்சி மாற்றத்தை விடவும் இந்த மாற்றம் மிக மிகக் கடுமையானதாகத் தான் இருந்திருக்க முடியும். இவ்வளவையும் எதிர்கொண்டு அது சாதித்த முன்னேற்றம் என்பது நிச்சயமாக அசாத்தியமானது.
மூன்றாவதாக, இந்தக் கடினமான பணி நடந்தது ஏகாதிபத்திய நாடுகளிலேயே தொழில் துறையில் மிகவும் பின் தங்கிய நாடு. உழைப்பாளர்களில் ஐந்தில் நான்கு பங்கினர் விவசாயிகளாக இருந்த நாடு. அந்தக் காலக்கட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த புரட்சிகரத் தன்மையற்ற மிதவாத மார்க்சியவாதிகள், முதலில் ரசியா முதலாளித்துவ வழியில் போதிய வளர்ச்சி பெற்ற பின்னர்தான் பாட்டாளி வர்க்க ஆட்சி என்பதை நோக்கி முறையாக நகரமுடியும் என்று தொழிலாளி வர்க்கத்துக்குப் போதித்தார்கள். அன்றைய காலத்தின் முன்னனி மார்க்சியவாதியான கார்ல் கவுட்ஸ்கி, “போல்ஷ்விக் புரட்சியானது பாட்டாளிகளின் மிக உயர்ந்த இலக்குகளுக்கும் நாட்டின் மிகத் தாழ்வான வளர்ச்சி நிலைக்கும் இடையேயான பாரிய வேறுபாட்டை மிகவும் தீவிரமானதாக ஆக்கி விடும்” என்று அறிவித்தார்.
ஆரம்பத்தில், போல்ஷ்விக்குகள்கூடத் தங்கள் புரட்சியைத் தொடர்ந்து ஐரோப்பாவின் தொழிற்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் புரட்சிகள் வெடிக்கும் என்று எண்ணினார்கள். விரைவில் அத்தகைய மாற்றங்களை எதிர் நோக்கி கம்யூனிச அகிலம் என்ற அமைப்பையும் உருவாக்கினார்கள். ஐரோப்பாவில் சில நம்பிக்கையளிக்கும் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால், அவை புரட்சிகளில் முடியவில்லை. ஆகையால், சோவியத் யூனியனின் பாட்டாளிகள் மீண்டும் முதலாளித்துவத்திற்குத் திரும்புவது அல்லது தனியொரு நாட்டில் சோசலிசத்தைப் படைப்பது என்ற இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யவேண்டிய இக்கட்டுக்கு ஆளானார்கள். மறுபடியும் மக்கள் தங்களது தலைவிதியைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள முடியுமா, முடியாதா என்ற கேள்வியாகவே அது மாறியது. போல்ஷ்விக் தலைமையின் கீழ் மாபெரும் தியாகங்கள் பலவற்றின் ஊடாக, அதிசயிக்கத்தக்க வேகத்தில் தொழில் துறையில் முன்னேறிய ஒரு சோசலிச நாட்டை அவர்கள் படைத்தார்கள்
அக்டோபர் புரட்சியானது, பின்தங்கிய ஒடுக்கப்பட்ட நாடுகளின் மக்கள், காலனிய, அரைக்காலனிய ஆட்சியாளர்கள் தங்கள் நாடுகளை ‘வளர்த்து விடுவார்கள்’ எனக் காத்திராமல், தங்கள் விதியைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளுமாறு விடப்பட்ட ஒரு அறைகூவலாக அமைந்தது. 1917 -க்கு பிறகு, சில ஆண்டுகளிலேயே சீனா, இந்தியா, ஈராக், இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஒரு பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கிளர்ந்து எழுந்தது. உண்மையிலேயே, மூன்றாம் நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளின் மக்கள் அக்டோபர் புரட்சிக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறார்கள்.
நான்காவதாக, அக்டோபர் புரட்சியானது, தங்களது சொந்த அதிகார உறுப்புகளான சோவியத்துகள் என்ற மக்கள் மன்றங்களின் மூலம், நேரடியாக ஆட்சியதிகாரத்தில் பங்குபெற்று, தங்களைப் பாதிக்கும் உண்மையான, பொருளாயத விவகாரங்கள் அனைத்தின் மீதும் முடிவெடுக்கும் அதிகாரத்தை மக்களே பெற்றிருந்த முதல் அரசை உருவாக்கியது.
சோவியத் மக்கள் தங்கள் அரசுக்கு தாங்களே சொந்தக்காரர்களாக இருந்தார்கள் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ளாதவரை, எப்படி அந்த இளம் அரசு ஐந்து ஏகாதிபத்திய இராணுவங்களின் படையெடுப்பையும், உள்நாட்டு எதிர்புரட்சிப் படைகளின் தாக்குதலையும் மீறிப் பிழைத்தெழுந்தது என்பதையும், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஐரோப்பிய அரசுகளை ஒன்றன் பின் ஒன்றாக வீழ்த்த முடிந்த இட்லரின் படைகளை சோவியத் மக்களால் எப்படி முறியடிக்க முடிந்தது என்பதையும் புரிந்து கொள்ளவியலாது.
(இந்த ஏகாதிபத்திய படையெடுப்புகளை மனதில் கொள்ளாமல் சோவியத் யூனியனின் சாதனைகளை மதிப்பிடுவது சாத்தியமில்லை. இத்தகைய முதல் படையெடுப்பின் இறுதியில், அதாவது 1921 -இல், நாட்டின் தொழில்துறை உற்பத்தி போருக்கு முந்தைய ஆண்டுகளைவிட 80 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தது. அடுத்த சில ஆண்டுகள் போருக்கு முந்தைய உற்பத்தி நிலையை மீட்டெடுக்கும் முயற்சியிலேயே கழிந்தன.
இட்லரின் நாஜிப் படைகளைத் தோற்கடித்த பிறகு, செஞ்சேனை படை வீரர் செங்கொடியை ஜெர்மன் நாடாளுமன்றக் (ரெய்ச்ஸ்டாக்) கட்டிடத்தில் ஏற்றும் வரலாற்று நிகழ்வு. (கோப்புப் படம்)
அதன் பின்னர்தான் திட்டமிட்ட, வேகமான வளர்ச்சி நிகழ்ந்தது. ஆனால், போர் மூளும் என்ற அச்சுறுத்தலும், அதன் பொருட்டு சில வகை கனரகத் தொழில்களை அவரசமாகத் தொடங்குவதற்கான தேவையும் அமைதி நிலவிய குறுகிய காலப்பகுதியிலும் தொடர்ந்தது. 1937 வாக்கில் நாஜி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல் கவிந்தது. மத்திய திட்டப் பொறுப்பாளர்கள் மீண்டும் போருக்கு தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பரவலாக தெரிந்தது போல ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் பாசிசத்தைத் தோற்கடிப்பதில் முதன்மைப் பங்காற்றியது. இந்தப் போரில், உலகிலேயே மிகப் பெரிய பொருளாதாரப் பேரழிவையும் மனித உயிர் இழப்புகளையும் சந்தித்தது. இதற்காகவும் உலக மக்கள் சோவியத் மக்களுக்கு என்றென்றும் கடன் பட்டிருக்கிறார்கள்.)
எந்த வகையில் பார்த்தாலும், அக்டோபர் புரட்சி என்பது 20 -ஆம் நூற்றாண்டிற்கு மட்டுமானது அல்ல. தனது எதிர்காலத்தைத் தானே உருவாக்கிக் கொள்ள விரும்பும் வேட்கை மனித இனமாகிய நம்மிடம் இருக்கும் காலம் வரை அது நம்முடன் இருக்கும். அதனைச் சாதிப்பதற்கான அறிவை அது நமக்கு வழங்கும். அதன் நேர்மறை மற்றும் எதிர்மறை அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை. மாவோ கலாச்சாரப் புரட்சியின் போது முயற்சித்ததைப் போல, நாமும் அதை முன்னோக்கி எடுத்துச் செல்லமுடியும். ஆனால், இந்த எல்லா முயற்சிகளும், 21 -ஆம் நூற்றாண்டில் தொடரும் முயற்சிகள் உள்ளிட்ட அனைத்தும், அக்டோபர் புரட்சியின் வாரிசுகளே!
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
“திசை திரும்புகிறதா குமரி மீனவர்கள் போராட்டம்?” – இது டிசம்பர் 15-ம் தேதி தமிழ் இந்து நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு செய்தியின் தலைப்பு. போராட்டம் திசை திரும்புவதை ஆராய்வது அல்ல… திசை திருப்ப வேண்டும் என்பதே இந்த செய்தியின் நோக்கம்.
குழித்துறை ரயில் மறியல் ஊர்வலத்தில் வந்த பாதிரியார்கள்! இதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை!
ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி தென்முனை கடலோரத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மீனவர் போராட்டங்களை கத்தோலிக்க பாதிரியார்கள் கட்டுப்படுத்துகிறாரக்ள்; வழிநடத்துகிறார்கள் என்பது இந்த செய்தியின் சாரம்சம். ஆம்… பாதிரியார்களின் தலைமையில்தான் குழித்துறை ரயில் மறியல் நடந்தது. அவர்கள்தான் முன்னே நின்றார்கள். கடலோர மீனவ கிராமங்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் நிறைந்தவை. ஆகவே இந்த ஒக்கி புயல் பாதிப்புகளின்போதும் சர்ச் முன்னிற்கிறது. முன் நிற்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியுமில்லை. இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்துவதற்கு எந்த ஆராய்ச்சியும் தேவை இல்லை.
ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்னமும் கரை திரும்பாத நிலையில், மீட்க வராத அரசுக்கு எதிராக பெரும் கொதிப்பு கடற்கரையோரம் முழுக்க பரவியுள்ளது. இது செயல்வடிவம் பெற்று பெரும் போராட்டங்களாக வெடிக்காமல் மெழுகுவர்த்தி ஊர்வலங்களாக அடங்குவதற்கு காரணம் பாதிரிமார்கள். இதன் பொருட்டு தமிழ் இந்துவும், அந்தக் கட்டுரையாளரின் மூளையில் இருக்கும் சமஸ்கிருத இந்துவும் நியாயமாக பாதிரிமார்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
ஆனால் தமிழ் இந்துவோ இந்த பாதிரியார்களின் மத அடையாளத்தை மட்டும் பூதாகரப்படுத்தி, ஒக்கி புயலின் பாதிப்புகள், மீனவர்களின் துன்பங்களை இரண்டாம்பட்சமாக்கி குளிர்காய பார்க்கிறது. ‘போராட்டத்தை பாதிரியார்கள் தூண்டிவிடுகிறார்கள்’ என்பது பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். குழுவினர் முதல் நாளில் இருந்து பரப்பி வரும் வதந்தி. அந்த வதந்தியை அப்படியே வாந்தி எடுத்து அதை ஒரு செய்தி என்று அரை பக்கத்துக்கு அனைத்துப் பதிப்புகளிலும் (ஆல் எடிசன்) எழுதுகிறது தமிழ் இந்து.
காவி ரவுடி அர்ஜுன் சம்பத்தின் அய்யர் ரவுடி வெர்சனான பால கவுதமனை சமூக ஆர்வலராக்கிய தமிழ் தி இந்து!
இது எதன் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது என்பது முக்கியமானது. ‘புயல் நிவாரண மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு எந்திரத்தை முடக்கவும், மீனவ சமுதாயத்துக்குத் துரோகம் இழைக்கும் முயற்சியும் போராட்டத்தின் பின்னணியில் இருந்ததாக’ சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு வலம் வந்ததாம். என்னே ஒரு இதழியல் தர்மம்?
‘புயல் நிவாரண பணிகளில் அரசு எதையும் புடுங்கவில்லை. மக்களை அனாதைகளைப் போல கைவிட்டுவிட்டது. நடுக்கடலில் மீனவர்கள் சாகிறார்கள்’ என்பதுதான் குற்றச்சாட்டே. இவர்கள் அப்படியே மொத்தமாக திருப்பிப் போடுகிறார்கள். ’சமூக ஊடகங்களில் வலம் வரும் குற்றச்சாட்டு’ என்று கூறி, கிறிஸ்தவ பாதிரிகள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் பால கவுதமன் என்பவர். இப்படியொரு குற்றச்சாட்டை நாம் தமிழ் சமூக ஊடகங்களில் காணவில்லை. ஒருவேளை “ஸமூஹ” ஊடகங்களில் வந்திருக்கலாம்.
இந்த பால கவுதமனை, ’சென்னையில் வசிக்கும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்’ என்று அறிமுகப்படுத்துகிறது தமிழ் இந்து. பால கவுதமன் ஓர் அறிவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர். நாகர்கோயிலை சொந்த ஊராக கொண்ட இவரை தந்தி டி.வி.யும், இன்னபிற தொலைக்காட்சிகளும் அவ்வப்போது ‘சமூக ஆர்வலர்’ என்றும், சில நேரங்களில் பா.ஜ.க. ஆதரவாளர் என்றும் விவாதங்களில் பயன்படுத்துவார்கள். தமிழ் இந்து இவரை, ‘சமூகவியல் ஆராய்ச்சியாளர்’ என்று கௌவரப்படுத்தி இருக்கிறது. இவர் செய்யும் ஆராய்ச்சிகளை தமிழ் ஆர்.எஸ்.எஸ். தளமானwww.tamilhindu.com -வில் கட்டுரைகளாக படிக்கலாம். அது மட்டுமல்ல… 2013-ம் ஆண்டு இவருக்கு ‘இந்து தர்ம சேவா ரத்னா’ என்று விருது வழங்கி கௌரவித்திருக்கிறார் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன்.
கொலை கார சங்கராச்சாரியின் கையால் விருது வாங்கும் பால கவுதமன்!
பால.கௌதமனுக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கும்போது எதற்கு அவரை ‘சமூகவியல் ஆராய்ச்சியாளர்’ என்று அறிமுகப்படுத்துகிறது தமிழ் இந்து? அப்போதுதானே… இதை பொதுவான கருத்தாக கட்டமைக்க முடியும்? அப்படி இந்த ஆய்வாளர் என்ன அரிய கருத்தை சொல்லியிருக்கிறார்?
’’மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக வந்து, மீனவப் பிரதிநிதிகளை சந்தித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். கேரள கடல் பகுதியில் இருந்து இந்திய கடற்படையினர் மீனவர்களை வேகமாக மீட்கத் தொடங்கினர். ஆனால், 5 நாட்களுக்குப் பின்னர் மீனவர் பிரச்சினையை திசைதிருப்ப சூழ்ச்சி நடந்தது. இதில் சின்னத்துறை பாதிரியார் ஷபின், பூத்துறை பாதிரியார் ஆன்றோ ஜோரிஷ் ஆகியோர் தீவிரம் காட்டினர்.’’ என்று போகிறது பால கவுதமனின் ‘கருத்து’.
இந்திய கடற்படையினர் எவ்வளவு வேகமாக மீட்டனர், எத்தனை பேரை மீட்டனர் என்று தமிழ் இந்து நிருபரும் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. நிர்மலா சீத்தாராமன் எவ்வளவு தெனாவட்டாக பேசினார் என்பது குறித்து தமிழ் இந்துவுக்கு கவலையும் இல்லை.
’’முதல்வர் பழனிசாமி குமரி மாவட்டம் வந்தார். மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.’’ என்று பால.கௌதமன் சொல்வதாக எழுதியுள்ளது தமிழ் இந்து. ஆனால் எடப்பாடி பாதிக்கப்பட்ட ஒரு மீனவ கிராமத்துக்குக் கூட வரவில்லை; மீனவர்களை சந்திக்கவில்லை. அது மட்டுமல்ல… எடப்பாடி வந்து சென்ற பிறகும் போராட்டங்கள் வெகு தீவிரமாக அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றன.
வெளிநாட்டு இந்துமதவெறி என்ஆர்ஐக்களிடம் பணம் சுருட்ட பால கவுதமன் நடத்தும் வேத ஆராய்ச்சி மையம்
உண்மைக்கு முற்றிலும் மாறான, வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை பொய்களையும் அவதூறுகளையும் உள்ளடக்கிய ஒரு ஆர்.எஸ்.எஸ். வெறியனை சமூகவியல் ஆராய்ச்சியாளன் என்று அறிமுகப்படுத்தும் உள்நோக்கம் கொண்ட இந்த செய்தியை தமிழ் இந்து ஆசிரியர் குழு தற்செயலாக வெளியிட்டது என்றோ, ‘சிக்கலின் மறுபக்கம்’ என்ற அளவில் இதுவும் ஒரு செய்தியாக வெளியிடப்பட்டது என்றோ சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது. இது பத்திரிகை அறத்துக்கு புறம்பானது மட்டுமல்ல… பொய் செய்தியை வெளியிட்டு பகையுணர்ச்சியை வளர்க்கும் அபாயகரமான நடவடிக்கை.
Vedic science research centre என்பது பால கௌதமன் இயக்குனராக உள்ள, இந்து மதவெறியை பரப்பும் ஒரு நிறுவனம். இதன் இணையதளத்தில் தமிழ் இந்துவில் வெளியான செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் முகப்புப் படமாக வைத்துள்ளனர். இன்னும் பல இந்துத்துவ குழுமங்களில் மிகுந்த உற்சாகத்துடன் இந்த செய்தி பகிரப்பட்டு வருகிறது. ஆகவே தமிழ் இந்துவின் நோக்கம் நிறைவேறிவிட்டது.
‘நாங்க தினத்தந்தி போல ‘கற்பழிப்பு’ செய்திகளை வழங்குவதில்லை’ என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறது தமிழ் இந்து. மூளைக்குள் நிகழ்த்தப்படும் இந்த ரேப் “கற்பழிப்பு” வகையில் வராதோ?
__________
பின்குறிப்பு:
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தையும் திருச்சபை தூண்டிவிடும் கிறித்தவர்களின் போராட்டமாகவே சித்தரித்தனர் சங்கபரிவாரத்தினர். அப்போராட்டத்தில் இடிந்தகரை மீனவர்கள் மட்டுமல்ல, கூடங்குளம் இந்து நாடார்களும் பங்கேற்றார்கள். இந்த ஹிந்துக்களுக்கு ஆதரவாகப் போராடுவதற்கு சங்கராச்சாரி போயிருக்கலாமே. அல்லது கிறித்தவ பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்படும் ஹிந்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக தர்ம சன்சாத் பார்ட்டிகளையோ பாபா ராம்தேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்ஜி போன்ற ஜி க்களையோ அனுப்பி வைக்கலாமே!
தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சரி, காங்கிரசு கட்சியின் இந்துத்துவ எதிர்ப்பு பேச்சுகளில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சரி, ஒரு சிறிய ஏமாற்றம். “குஜராத்தில் மோடி தோற்றிருக்க கூடாதா?” என்ற அங்கலாய்ப்பு.
பாஜக எப்படி வென்றது என்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளன :
முதலாவது பதில் – ஓட்டுப்பதிவு எந்திர மோசடி. 2002 -இல் தேர்தல் வெற்றிக்காக ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொலை செய்யக் கூசாத கொடியவர்களும், பொய் வீடியோ, பொய் புகைப்படம், பொய் செய்தி ஆகியவற்றை பரப்புவதில் கைதேர்ந்தவர்களுமான காவி கிரிமினல்கள், இத்தகைய தில்லுமுல்லுகளை செய்யமாட்டார்கள் என்று கருத இடமேயில்லை. இருப்பினும், மிசின் தான் பிரச்சினையா, மற்றப்படி குஜராத் மக்கள் இந்துத்துவத்தின் பிடியிலிருந்து மீண்டுவிட்டார்களா, என்பதுதான் நாம் விடை காண வேண்டிய கேள்வி.
காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கின்றன. அதன் முன்னேற்றம் என்பது, இந்துத்துவ அரசியலிடம் சரணடைந்து பெற்ற முன்னேற்றம் என்பதை பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். ராகுல் காந்தி கோயில் கோயிலாகப் போனார் என்பது மட்டுமல்ல, மதச்சார்பின்மை என்ற சொல்லையோ, முஸ்லிம்கள் என்ற சொல்லையோ குஜராத்தில் அவர் தவறிக்கூட உச்சரிக்கவில்லை. அது “இந்து பெரும்பான்மையின் மனதை புண்படுத்தி விடும்” என்பது காங்கிரசின் அச்சம். இந்திராவும், ராஜீவும் பயன்படுத்திய மிதவாத இந்துத்துவம் என்ற துருப்புச் சீட்டுதான் இது.
தோல்வி பீதிக்கு ஆளான மோடி, “பாகிஸ்தான் – ஔரங்கசீப்” என்று வெறிக்கூச்சலை கிளப்பிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் “பாபு பஜ்ரங்கி, பிரவிண் தொகாடியா போன்ற படேல் சாதியினரை மோடி பலி கொடுத்துவிட்டாரென்றும் அவர்கள்தான் ஒரிஜினல் இந்துத்துவவாதிகள் என்றும்” ஹர்திக் படேல் பேசிக் கொண்டிருந்தார்.
“பாஜக இந்துத்துவக் கட்சி என்று எல்லோருக்கும் தெரியும். ஒரிஜினல் நாங்கள் இருக்கும்போது, குஜராத் மக்கள் டூப்ளிகேட்டுக்கு எப்படி ஓட்டுப்போடுவார்கள்?” என்று சொல்லி ராகுலின் கோயில் யாத்திரையை கிண்டல் செய்தார் அருண் ஜேட்லி.
ஒருவேளை காங்கிரசு வெற்றி பெற்றிருந்தால் அந்த வெற்றியின் “தன்மை” எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு சோற்றுப்பதம்.
***
ஆங்கில இந்து நாளேட்டின் 19.12.2017 தேதியிட்ட இதழின் நடுப்பக்கத்தில், குஜராத்தை பாஜக வெற்றி கொண்டது எப்படி என்ற தலைப்பில் சிரேயஸ் சர்தேசாய், சஞ்சய் குமார் ஆகியோர் எழுதியிருக்கும் கட்டுரையில் கூறப்பட்டுள்ள சில விசயங்கள் கவனிக்கத்தக்கவை. லோக்நிதி, சி.எஸ்.டி.எஸ் ஆகிய அமைப்புகளின் சார்பில் அவர்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளில் சேகரித்த விவரங்களை அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்கள்.
“ஐந்தில் இரண்டு வாக்காளர்கள் யாருக்கு ஓட்டுப்போடுவது என்பதை கடைசி வாரத்தில்தான் முடிவு செய்தார்கள். அவர்களில் 53% பாஜகவுக்கும், 38% காங்கிரசுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். இந்த கடைசி நாட்களில்தான் மதவெறியைத் தூண்டுகின்ற சங்கேத மொழியிலான பிரச்சாரம் மோடியால் முடுக்கி விடப்பட்டது” என்று கட்டுரையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது மட்டுமல்ல, எந்த தொகுதிகளில் முஸ்லிம் மக்கள்தொகை குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் இந்துக்களின் வாக்கு மேலதிகமாக காங்கிரசுக்கு விழுந்திருக்கிறது என்றும், முஸ்லீம்களின் மக்கள்தொகை சற்று அதிகமாக உள்ள இடங்களில் இந்து வாக்குகள் பாஜக -வுக்கு சென்றிருக்கின்றன என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தங்களது வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கின்ற பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, வேலைவாய்ப்பின்மை போன்ற பல பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றைப் புறந்தள்ளும் அளவுக்கு, இந்து சமூகத்தின் கணிசமான பிரிவினர் மதவெறிக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதற்கு இது சான்று.
திருச்சியிலிருந்து ஒரு நண்பர் சொன்னார். குஜராத் தேர்தல் முடிவுகளைப் பார்த்து ஆத்திரமடைந்த காந்தி மார்க்கெட் சிறுவியாபாரிகள், “என்னய்யா குஜராத் மக்கள் இவனுங்களுக்கு அறிவு சொரணை இருக்கா?” என்று கொந்தளித்தார்களாம். 2002 -இல் ஒரு மிகப்பெரிய இனப்படுகொலையை நேரடியாக கண்ணால் பார்த்த பின்னரும் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல், இதே குஜராத் மக்கள் இந்துத்துவ கொலைகாரர்களுக்கு வாக்களித்தபோது, இப்படியொரு கேள்வி இவர்களிடமிருந்து வரவில்லை. 2014 -இல் அந்தப் படுகொலையின் நாயகன் பிரதமரானபோதும் இந்தக் கேள்வி வரவில்லை. பண மதிப்பழிப்பு – ஜி.எஸ்.டி. -க்கு பிறகுதான் இந்த தேசத்தின் சொரணையற்ற நிலை குறித்து நம் வியாபாரிகளுக்கு உறைக்கிறது என்பதை அவர்களுக்கு நாம் உரைக்க வேண்டியுள்ளது.
இந்த வியாபாரிகளுக்கான பதிலை டிசம்பர் 6 -ம் தேதியன்றே பத்திரிகையாளர் ராணா அயூப், (குஜராத் ஃபைல்ஸ் நூலின் ஆசிரியர்} கூறிவிட்டார். ஜி.எஸ்.டி. -க்கு எதிராக சூரத்தில் தர்ணா போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வைர வியாபாரி ஒருவரிடம், “உங்களுடைய இந்தக் கோபம் வர இருக்கும் தேர்தலில் மோடிக்கு எதிராக பிரதிபலிக்குமா?” என்று கேட்டாராம். அதற்கு அந்த வியாபாரி சொன்னாராம். “இது வேறு, அது வேறு. நான் சொத்தை வித்தாவது மோடியை ஜெயிக்க வைப்பேன்” என்றாராம்.
குஜராத் தேர்தல் முடிவு பற்றி ஜிக்னேஷ் மேவானி கூறியிருக்கும் கருத்தும் (தமிழ் தி இந்து, 19.12.2017) நம் கவனத்துக்குரியது. “குஜராத்திகள் பாஜக மீது வைத்திருப்பது பாசமல்ல, பயம். தோல்வியடைந்தால் பாஜக -வினரே மதக்கலவரத்தை ஏற்படுத்துவார்கள். அதன் காரணமாகவே வணிகர்களும் நடுத்தர மக்களும் பாஜக -வுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள்” என்கிறார் ஜிக்னேஷ் மேவானி.
பாசமும் இருக்கிறது பயமும் இருக்கிறது என்பதுதான் உண்மை. தமது உடனடி வர்க்க நலன்கள் (வேலை வாய்ப்பு முதல் வணிகம் வரை) பாதிக்கப்பட்டாலும், அவற்றையும் மீறி மோடியை ஆதரிக்கும் அளவுக்கு இந்துத்துவ பாசம் இருக்கிறது. அதாவது, தானாடாவிட்டாலும் தசையாடும் என்று கூறுமளவுக்கு அந்தப் பாசம் குஜராத்தில் கணிசமான மக்கட் பிரிவினரிடம் இயல்பாகியிருக்கிறது.
அதேபோல பயமும் இருக்கிறது. ஜிக்னேஷ் மேவானி குறிப்பிடும் அந்தப் பயத்தை பெரும்பான்மை சமூகத்திடம் ஏற்படுத்துவதுதான் பாசிஸ்டுகளின் நோக்கம். கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கவுரி லங்கேஷ் முதலானோரின் கொலையில் தொடங்கி நீதிபதி லோயாவின் மர்ம மரணம் வரையிலான அனைத்தின் நோக்கமும் இதுதான்.
***
இந்துத்துவ பாசிசத்தின் மீதான இந்தப் பாசத்திலிருந்து சித்தாந்த ரீதியாகவும், அவர்கள் மீதான பயத்திலிருந்து நடைமுறை ரீதியாகவும் மக்களை விடுவிக்கின்ற சாத்தியம் தேர்தல் அரசியலில் இருக்கிறதா?
இந்தக் கேள்விக்கு பல முற்போக்காளர்களிடம் தயாரான பதில் இருக்கிறது. “தேர்தல் அரசியலுக்கு அப்பால் என்று பேசுவதெல்லாம் உடனடியாக ஆகக்கூடிய காரியங்கள் அல்ல. அதெல்லாம் வெறும் வாய் வீச்சு. நடைமுறையில் ஆகக்கூடியது தேர்தலில் பாஜக -வை தோற்கடிக்க வேலை செய்வது ஒன்றுதான்”
இந்தப் பதிலை நமது சமீபத்திய அனுபவத்துடன் சேர்த்துப் பரிசீலித்துப் பார்ப்போம். 2014 மோடியின் வெற்றிக்குப் பிறகு, கேஜ்ரிவால் டில்லியில் பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானதாக கொண்டாடப்பட்டது.
அரசியல் கட்சிகள் அரசு எந்திரம் உள்ளிட்ட இந்த அரசமைப்பின் தோல்வி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை மையப்படுத்தி, “ஜனாதன சர்க்கார்” என்ற அரசியலற்ற என்.ஜி.ஓ. முழக்கத்தை முன்வைத்த கேஜ்ரிவால், தவறியும் இந்துத்துவ எதிர்ப்பு பேசவில்லை. நல்லிணக்கம் பேசுகின்ற இந்துவாகவே தன்னை முன்நிறுத்திக் கொண்டது மட்டுமல்ல, ஜாட் சாதிவெறியர்களின் காப் பஞ்சாயத்தை நமது பண்பாட்டின் அங்கம் என்று கூறி சொறிந்து விடும் வகையிலும், காஷ்மீர் விவகாரத்தில் பாஜக -வை வழிமொழியும் வகையிலும் இருந்தது அவருடைய அரசியல்.
தேர்தல் அரசியலில் இந்துத்துவ எதிர்ப்புக்கு கிடைத்த அடுத்த நம்பிக்கை நட்சத்திரம், லாலு – நிதீஷ் கூட்டணி. சாதிய பிழைப்புவாதிகள், சாதி வெறியர்கள், ஊழல் பேர்வழிகள், நிரூபிக்கப்பட்ட அரசியல் சந்தர்ப்பவாதிகள் ஆகியோரெல்லாம் சேர்ந்து அமைக்கும் கூட்டணி என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், “இப்போதைக்கு இதுதான் சாத்தியம்” என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டு, இந்துத்துவத்தை வீழ்த்துவதற்கான மாபெரும் முன்மாதிரி என்று இந்தக் கூட்டணியைக் கொண்டாடினார்கள் பல முற்போக்காளர்கள். எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த பலூனில் நிதீஷ் ஊசியைக் குத்தினார்.
“ராகுல் அகிலேஷ் ஆகியோர் மாயாவதியுடன் இணைந்து கூட்டணி அமைத்திருந்தால் உ.பி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வை வீழ்த்தியிருக்க முடியும்” என்று, வாக்குப்பதிவு குறித்த புள்ளி விவரங்களைக் கையில் வைத்துக்கொண்டு, தேர்தலுக்குப் பின் அங்கலாய்த்துக் கொண்டார்கள் பல முற்போக்காளர்கள்.
“நடைமுறையில் ஆகக்கூடிய ஒரே வழி” என்று பெரிதும் நம்பப்படும் தேர்தல் அரசியலில், இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் என்று நம்பப்படும் கட்சிகளின் உண்மையான நிலை இதுதான்.
காங்கிரசும் பாஜக -வும் ஒன்றல்ல, சமாஜ்வாதியும் பாஜக -வும் ஒன்றல்ல அதேபோல ஆம் ஆத்மியும் பாஜக -வும் ஒன்றல்ல என்பதென்னவோ உண்மைதான். ஆனால், “இந்துத்துவவாதிகள் அல்லர்” எனப்படுவோரெல்லாம் “இந்துத்துவ எதிர்ப்பாளர்”களாகி விடுவார்களா? அவ்வாறு நாம் கற்பிதம் செய்து கொள்வது இந்துத்துவ பாசிசத்தை எதிர்ப்பதற்கு உதவுமா, ஊறு விளைவிக்குமா என்பதே கேள்வி.
இது “ஓட்டுப்போடுவதா, தேர்தலைப் புறக்கணிப்பதா” என்ற கேள்வியல்ல, இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்க தேர்தல் அரசியல் பயன்படுமா? என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை எதார்த்தமாக நம் கண் முன்னே இருக்கும் உண்மை விவரங்களிலிருந்து பரிசீலிக்க வேண்டும்.
***
இந்துத்துவ பாசிசம் என்பது “முஸ்லிம் எதிர்ப்பு அல்லது பன்முகத்தன்மை எதிர்ப்பு” என்று மட்டுமே பொதுப்புத்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சாதிய, இன, மொழி ஒடுக்குமுறைகள் அடங்கிய பார்ப்பனிய உள்ளடக்கமும் தரகு முதலாளித்துவ, ஏகாதிபத்திய சார்பு உள்ளடக்கமும் பிரிக்கவொண்ணாத வகையில் பிணைந்திருப்பதுதான் இந்துத்துவ பாசிசத்தின் அரசியல்.
மோடியின் பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் பிற நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களில் பெரும்பான்மையினர் இந்துக்கள்தான். இப்படி விவசாயிகள், பழங்குடிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், சுய தொழில் செய்வோர் என இந்த நாட்டின் ஆகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களை சூறையாடுகின்ற மோடியின் “வளர்ச்சிப் பாதை”க்கான (விகாஸ்) சித்தாந்த நியாயம் பார்ப்பனியத்தில் இருக்கிறது.
பெயரளவிலான ஜனநாயகத்தைக் கூட சகித்துக் கொள்ளவியலாது என்கின்ற புள்ளியில், “வர்க்கச் சுரண்டலும், ஏற்றத்தாழ்வும் தவிர்க்கவியலாத விதிகள்” என்று தலையெழுத்தைப் போல சகித்துக் கொள்ளச் சொல்கின்ற புள்ளியில், புதிய தாராளவாதமும் பார்ப்பனியமும் ஒன்று கலக்கின்றன.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்துத்துவம் என்ற சொல்லையே உச்சரிக்காமல் “விகாஸ் விகாஸ்” என்று முழங்கிய மோடி, 2017 குஜராத் தேர்தலில் விகாஸ் பற்றியோ, குஜராத் மாடல் பற்றியோ மூச்சு விடாமல், இந்துத்துவம் பேசிவிட்டு, இப்போது தேர்தலில் வெற்றி பெற்றவுடன் இது “என்னுடைய சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி” என்கிறார்.
“இந்துத்துவம் – விகாஸ்” ஆகிய இரண்டையும் பிரித்துக் கையாள்வது எப்போதுமே மோடிக்குத்தான் சாதகமாக இருந்து வருகிறது. ஆனால் மோடியை எதிர்ப்பதற்கு தேர்தல் கட்சிகளை சார்ந்திருப்பவர்களும்கூட இரண்டையும் பிரித்தே கையாள்கிறார்கள். அவ்வாறு பிரித்துக் கையாளாவிட்டால் ராகுலை முன்னிறுத்தி மோடியை எதிர்ப்பது அவர்களுக்கு சாத்தியமற்றதாகிவிடும்.
இந்துத்துவ எதிர்ப்பை தேர்தல் அரசியலின் வரம்புக்கு உட்படுத்தும்போது தோன்றும் முரண்பாடு இது ஒன்று மட்டுமல்ல.
அரசியல் கட்சிகள் கொள்கையற்ற பிழைப்புவாதிகள் ஆகியிருப்பதைப் போலவே, நீதித்துறை, போலீசு, அதிகார வர்க்கம், ஊடகங்கள் ஆகியவை உள்ளிட்ட ஒட்டு மொத்தக் கட்டமைவும் தானே வகுத்துக் கொண்ட விதிகளுக்கு கட்டுப்பட மறுப்பவையாக மாறிவிட்டன. உச்ச நீதிமன்றம் தொடங்கி கீழமை நீதிமன்றங்கள் வரையில் சந்தி சிரிக்கும் ஊழல், முறைகேடான தீர்ப்புகள், அதிகார வர்க்கம் போலீசின் கிரிமினல் நடவடிக்கைகள் ஆகியவை, ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் பார்ப்பன பாசிசம் தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கின்றன. அரசமைப்பின் இந்த உறுப்புகள் இந்துத்துவ சார்பாக மாறும் போக்கையும் துரிதப்படுத்தியிருக்கின்றன.
இவையெதுவும் சிக்கலான கோட்பாட்டு விவகாரங்கள் அல்ல. தன்னைப் பேச அனுமதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தை விட்டு வெளியறுகிறார் பிரசாந்த் பூஷண். வழக்கறிஞர் தொழிலை விட்டு விலகுகிறார் ராஜீவ் தவான். குஜராத் படுகொலைகளின் நாயகர்களான காக்கி உடைக் கிரிமினல்கள் பதவி உயர்வு பெறுகிறார்கள். பிரபல ஊடகவியலாளர்கள் நேரடியாக மிரட்டப்படுகிறார்கள். ஊடகங்கள் அடாவடியாக இந்துத்துவப் பொய்களை கடை விரிக்கின்றன. அதிகார வர்க்கத்தின் கேந்திரமான பதவிகளில் சங்க பரிவாரத்தினர் அமர்த்தப்படுகிறார்கள். தேர்தல் ஆணையமும், சிபிஐ-யும், வருமானவரித்துறையும், வருவாய் புலனாய்வுத்துறையும் நேரடியாக பாபு பஜ்ரங்கியைப் போலவும், வன்சாராவைப் போலவும் செயல்படுகின்றன.
“எந்த நிறுவனத்தையும் நம்ப முடியவில்லை” என்று கையறு நிலையில் நின்று தேர்தல் கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள். “இந்துத்துவ பாசிசத்தின் மீதான பயம்” என்பது ஜிக்னேஷ் மேவானி கூறுவதைப் போல மக்களிடம் மட்டும் நிலவவில்லை. மக்களைக் காட்டிலும் அந்தப் பயம் தேர்தல் கட்சிகளைத்தான் அதிகமாகப் பிடித்தாட்டுகிறது.
***
“புலிக்குப் பயந்தவர்கள் என்மீது படுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறும் நிலையில் இருக்கும் தேர்தல் கட்சிகள், புலியிடமிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடுமா?
அக்லக், பெஹ்லு கான் கொலைகளுக்கு எதிராக இந்த தேர்தல் கட்சிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? லவ் ஜிகாத் என்று பொய்க்குற்றம் சாட்டி அப்ரசூல் என்ற முஸ்லீமைக் கொன்ற கொலைகாரனுக்கு ஆதரவாக ஒரு கூட்டம் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் காலித்தனம் செய்கிறது. நீதிமன்றக் கூரையின்மீது காவிக்கொடி ஏற்றுகிறது. எந்தக் கட்சி இதனை எதிர்த்து மோதியது?
இந்துத்துவத்துக்கும் மறுகாலனியாக்கத்துக்கும் ஏற்ப இந்த அரசமைப்பு தன்னைத் தகவமைத்துக் கொண்டு வருகிறது. இந்த அரசமைப்பின் வரம்புக்குள் நின்று இவற்றுக்கு எதிராக கருத்து கூறுவதற்கான வாய்ப்புகளே கூட குறைந்து கொண்டு வருவதையே எல்லா நிகழ்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.
யார் களத்தில் நேருக்கு நேர் நின்று இந்துத்துவ பாசிஸ்டுகளை எதிர்கொள்கிறார்களோ அவர்கள்தான் இந்த பாசிசத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும்.
யார் களத்தில் நேருக்கு நேர் நின்று இந்துத்துவ பாசிஸ்டுகளை எதிர்கொள்கிறார்களோ அவர்கள்தான் இந்த பாசிசத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும். இந்துத்துவ பாசிச நடவடிக்கைகளாக இருக்கட்டும், புதிய தாராளவாதக் கொள்கைகளின் தாக்குதல்களாக இருக்கட்டும் அவற்றை எதிர்த்து சமரசமில்லாமல் களத்தில் நின்று போராடுபவர்கள் கட்சி சார்பற்ற தன்னார்வலர்களும் மக்களும்தான். நெடுவாசல், கதிராமங்கலம், குமரி முதல் நாடெங்கும் நாம் காணும் உண்மை இது. இத்தகைய போராட்டங்களுக்கு வருகை புரிந்து வாழ்த்துரை வழங்கும் வேலையை மட்டுமே தேர்தல் கட்சிகள் செய்து வருகின்றன. அது அவர்களுடைய வரம்பு.
தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் கைக்கூலி என்று நூறு முறை அறிக்கை விடுவார்கள். நூற்று ஒன்றாவது முறையும் ஆணையத்திடம் முறையிடுவார்கள். பின்னர் மீண்டும் புலம்புவார்கள். ஏனென்றால் அவர்களுடைய நலன் அதில் இருக்கிறது. ஆகப்பெரும்பான்மையான கட்சிகள் இந்துத்துவ எதிர்ப்பு என்ற கொள்கை அடிப்படையில் கட்டப்பட்டவை அல்ல. சாதி, பிழைப்பு, பதவி என்பவைதான் அவர்கள் நோக்கம். எனவே, இந்த அரசமைப்பு விதிக்கின்ற எல்லைக்கு உட்பட்டுத்தான் செயல்பட வேண்டும் என்ற வரம்பு அவர்களுக்கு இருக்கிறது.
அத்தகைய வரம்பு எதுவும் மக்களுக்கு இல்லை. இந்த வரம்புக்குள் நின்றால் வாழவே முடியாது என்ற நிலையை நோக்கி மக்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். எனவேதான் தன்னியல்பாக அவர்கள் பல இடங்களில் வரம்புகளை மீறுகிறார்கள்.
***
ஓக்கி புயலால் தாக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள், காணாமல் போன தங்கள் சொந்தங்களை மீட்டுத்தருமாறு கெஞ்சினார்கள், கதறினார்கள், போராடினார்கள் – பயனில்லை. எடப்பாடி அரசுக்கும், மோடி அரசுக்கும், கடற்படைக்கும், கடலோர காவல் படைக்கும் அது குறித்த அக்கறை கடுகளவும் இல்லை.
சில நாட்களுக்கு முன் விசைப்படகுகளில் குமரி மாவட்டத்திலிருந்து புறப்பட்ட மீனவர்கள் லட்சத்தீவுக்கு அருகே, புயலில் பழுதாகி நின்று கொண்டிருந்த ஒரு படகில் தவித்துக் கொண்டிருந்த மீனவர்களை நேற்று மீட்டிருக்கிறார்கள். இன்னும் எங்கெல்லாம் மீனவர்கள் இருக்கக் கூடுமோ அங்கெல்லாம் தேடியும் வருகிறார்கள்.
இந்த அரசிடம் முறையிட்டுப் பயனில்லை என்ற கருத்துக்கு ஒரு சில நாட்கள் முன்னரே வந்திருந்தால் ஒருவேளை அவர்கள் மேலும் சிலரை மீட்டிருக்க முடியும்.
விமானமும், ஹெலிகாப்டரும், கப்பல்களும் இந்த மீனவர்களின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவையாக இருந்திருந்தால் மேலும் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்.
“மீனவர்களின் அதிகாரத்தின் கீழ் கப்பல்களா, அதெல்லாம் சாத்தியமா?” என்று மீனவர்களே கூட எண்ணக் கூடும். கப்பல்படை பயன்படாது என்று மீனவர்கள் பிரகடனம் செய்து விட்டார்கள். நடைமுறையில் தங்களைத் தாங்களே மீட்டுக் கொண்டுவிட்டார்கள். எதை அவர்களே சாத்தியமாக்கிவிட்டார்களோ, அதுவே ஒரு கருதுகோள் என்ற வகையில் சாத்தியமற்றதாகத் தெரிகிறது.
‘தேர்தல் அரசியலுக்கு வெளியே இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்க முடியுமா?’ என்ற ஐயமும் இதைப் போன்றதுதான்.
“Be Realistic, Demand the Impossible!” என்பது 1968 இல் நிகழ்ந்த பிரெஞ்சுக் கிளர்ச்சியில் மாணவர்கள், தொழிலாளர்கள் எழுப்பிய முழக்கம்.
ஆம். “சாத்தியமற்றது” என்பது ஒரு மதிப்பீடு மட்டுமே. “உண்மை” என்பது உங்களுடைய அல்லது என்னுடைய “மதிப்பீடு” அல்ல – அது உண்மை!
திருப்பூர் : GST…. கதறும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் !!!
ஒரு காலத்தில் தமிழகக் கிராமங்களில் வேலையிழந்து பிழைப்புத்தேடி நகரங்களை நோக்கி வருபவர்களின் முதல் தேர்வாக இருந்தது திருப்பூர் நகரம். தமிழகம் மட்டுமல்ல பல அண்டை மாநில மக்ககளையும் அரவணைத்து வாழ்வளித்து வந்த திருப்பூரின் ஆயத்த ஆடைத் தொழிலானது, இன்று மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய நாசகாரக் கொள்கைகளால் ‘யானை புகுந்த வெண்கலக் கடையைப் போல’ சின்னா பின்னமாகிக் கிடக்கிறது!
ஆயத்த ஆடை உற்பத்தி என்பது விவசாயி உற்பத்தி செய்யும் பருத்தியில் தொடங்கி பஞ்சாலை, நூல்மில், பின்னலாடை, சலவை, சாயமேற்றுதல், பிரிண்டிங், கம்பேக்டிங் ஆகியவற்றைக் கடந்து பின்; கட்டிங், பிரிண்டிங், எம்ப்ராய்டிங், தையல், பட்டன், செக்கிங், அயர்ன், பேக்கிங் என்று பல கட்டங்களின் வழியாக முழுமையடைகிறது. இதன் ஒவ்வொரு தொழில் பிரிவிலும் நூற்றுக்கணக்கான பெரு நிறுவனங்களும், சுமார் 6000 சிறு நிறுவனங்களும் திருப்பூரில் இயங்கி வருகின்றன. இதுதவிர இவற்றின் துணைத் தொழில்களாக உள்ள போக்குவரத்து, மெக்கானிக், வயரிங், சில்லறை வர்த்தகம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாக திருப்பூர் ஆயத்த ஆடை தொழில் விளங்கி வருகிறது.
மேற்கண்ட தொழில் பிரிவுகள் அனைத்தையும் சொந்தமாகக் கொண்டுள்ளதோடு, நேரடியாக அந்நிய நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று ஆடை உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்கள், இதில் ஒரு சில தொழில் பிரிவுகளை மட்டுமே சொந்தமாகக் கொண்டு இயங்கும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள், மேற்கண்ட இருவகை நிறுவனங்களிடமும் மற்றும் அந்நிய நிறுவனங்களின் ஏஜென்டுகளிடமும் குறைந்த லாபத்திற்கு ஆர்டர் எடுத்து ஆடை உற்பத்தி செய்து கொடுக்கும் சிறு நிறுவனங்கள், 5, 10 மிசின்களை வைத்துக் கொண்டு தையல் வேலை மட்டுமே செய்பவர்கள் மற்றும் உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தியாளர்கள் என மொத்தம் ஐந்து பிரிவுகளாக ஆயத்த ஆடை உற்பத்தி நடைபெற்று வருகிறது.
சிறு நிறுவனங்களின் அவல நிலைமை:
எண்ணிக்கை அளவிலும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் சிறு நிறுவனங்களே அதிக பங்கு வகிக்கின்றன. பெரு நிறுவனங்களிடம் ஆர்டர் பெறும் இந்நிறுவனங்கள் அதற்கான நூலை தனது சொந்தப் பொறுப்பில் வாங்கி, அதனை நிட்டிங், வாஷிங், சாயமேற்றுவது, பிரிண்டிங், பிளீச்சிங், ஆகியவற்றுக்காக தனிச் சிறப்பாக இயங்கும் சிறு நிறுவனங்களிடம் ஜாப் ஒர்க்காகக் கொடுத்து முடிக்கின்றனர். இதற்கான கட்டணத்தை ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உடனே பெற்றுக் கொள்வதில்லை. பரஸ்பர புரிதலின் அடிப்படையில் 30 நாள் கடனாக செய்து தருகின்றனர்.
பின்னர் கட்டிங், தையல், அயர்ன், பேக்கிங் வேலைகளை முடித்துக் கொடுக்கும் சிறு நிறுவனங்கள் இதற்கான கூலியைப் பெரு நிறுவனங்களிடமிருந்து வாங்கிய பிறகுதான் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு கடனை அடைக்கின்றனர். ஒரு வேளை இப்பணம் கிடைப்பதில் தாமதமானாலோ அல்லது வங்கியில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டாலோ வார வட்டிக்கு கடன் பெற்று இக்கடனை அடைத்தாக வேண்டும். மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இவ்வாறுதான் பலநூறு சிறு நிறுவனங்கள் போண்டியாகிப் போனது!
ஏற்கனவே 30% லாபத்தில் ஆர்டர் கொடுத்துவந்த பெரு நிறுவனங்கள் தற்போது தொழில் போட்டியின் காரணமாக தற்போது 20 சதமாக குறைத்து விட்டன. இந்நிலையில் கட்டிட வாடகை, மின்கட்டணம், வார இறுதியில் கொடுக்க வேண்டிய கூலியாள் சம்பளம் என எப்போதும் நெருப்பின் மீது நிற்கும் நிலையில்தான் சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு சாவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு விட்ட இச்சிறு நிறுவனங்களை, சவக்குழிக்குள் தள்ளி இறுதிச்சடங்கு நடத்துவதற்கு மோடி அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் ஜி.எஸ்.டி.!
என்ன சொல்கிறது ஜி.எஸ்.டி?
ஜி.எஸ்.டி. என்பது சரக்கு மற்றும் சேவை வரி என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், ஒரு பொருளின் உற்பத்தி நிலையிலிருந்து இறுதியாக நுகர்வோரைச் சென்றடையும் வரையுள்ள வர்த்தக சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியிலும் வரி விதிப்பதுதான் ஜி.எஸ்.டி-யின் வரி விதிப்பு முறை!
ஒரு ஆயத்த ஆடை, பஞ்சு கொள்முதலில் தொடங்கி இறுதியாக பேக்கிங் செய்யப்படுவது வரை சுமார் 10 நிலைகளைக் கடந்து உருவாகிறது. இதன்படி ஒவ்வொரு நிலையிலும் 5, 12, 18, 24 சதவீத வரி விதிக்கிறது ஜி.எஸ்.டி. இதற்கு முன் ‘வாட்’ வரியின்போது விலக்களிக்கப்பட்ட நிட்டிங், வாஷிங், காம்பேக்டிங், துணி ஆகியவற்றுக்கும் கூட ஜி.எஸ்.டி.யில் 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. தையல் நூல், அட்டைப்பெட்டி, கம்டேப், பட்டன், லேபில், ஹேங்கர் ஆகியவற்றுக்கு ‘வாட்’ வரியைவிட 3 மடங்கு அதிகமாக ஜி.எஸ்.டி.யில் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் வரிவிதிப்பினால் கச்சாப் பொருள்களின் விலை உயர்வு, அதற்கான கூடுதல் முதலீடு செய்ய வேண்டிய நெருக்கடி என்பதைத் தாண்டி, இதன் வரி விதிப்பு நடைமுறைகளும் சிறு நிறுவனங்களை கடும் நெருக்கடிக்குத் தள்ளுவதாக உள்ளது.
ஜி.எஸ்.டி.யின் நடைமுறையும், சிறு நிறுவனங்களின் அழிவும்
மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் கொள்முதல் விவரங்களையும், அடுத்த 10 நாட்களில் விற்பனை விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். 30-ம் தேதிக்குள் இவற்றுக்கான வரிகளையும் முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும். இதில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரித்தொகை ஏழு நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் (input tax recovery) வரவு வைக்கப்படும் என்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில்! இதனால் உள்ளீட்டு வரி வரவு வைக்கப்படும் வரை கொள்முதல் மற்றும் விற்பனை ரசீதுகளை பாதுகாப்பதுடன், தன்னிடம் வர்த்தகம் செய்பவர் வரி செலுத்திவிட்டாரா என்பதையும் கண்காணிக்க வேண்டியதுள்ளது. மேலும் இதற்காகவே கூடுதல் பணியாளர்களை நியமிப்பது, ஆடிட்டருக்கு மாதக் கட்டணமும் செலுத்துவது ஆகிய செலவுகளும் சிறு நிறுவனங்களின் தலையில் கூடுதல் சுமையாக ஏற்றிவிடப்படுகிறது.
ஆண்டுக்கு 20 லட்சம் வரை வர்த்தகம் செய்பவர்கள் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டியதில்லை என்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில். ஆனால் ஜி.எஸ்.டி. பதிவு எண் இல்லாதவர்களிடம் வர்த்தகம் செய்தால் உள்ளீட்டு வரியை திரும்ப பெற முடியாது என்பதால் இத்தகைய சிறு நிறுவனங்களை பெரு நிறுவனங்கள் புறக்கணித்து விடுகின்றன. எனவே வேறு வழியின்றி எல்லா சிறு நிறுவனங்களும் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இல்லாவிட்டால் தொழிலில் நீடிக்க முடியாது.
மேலும், உள்ளீட்டு வரியை 7 நாட்களுக்குள் வரவு வைத்து விடுவோம் என்ற தனது வாக்குறுதியை அரசே காற்றில் பறக்க விட்டுவிட்டது. ஜி.எஸ்.டி. அறிமுகமாகி ஆறு மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் முதல் மாதம் செலுத்திய உள்ளீட்டு வரியே இதுநாள் வரை வரவு வைக்கப்படவில்லை. எப்போது வரும் என்ற உத்தரவாதமும் இல்லை. இதனால் பொருளை விற்பவர்கள் முன்கூட்டியே உள்ளீட்டு வரியையும் பிடித்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு அடுக்கடுக்கான சிக்கல்களை உருவாக்குவதன் மூலம் “நீ பிழைத்திருக்க வேண்டுமானால் எனக்கு வரி கட்டு. இல்லாவிட்டால் ஒழிந்து போ” என்று சிறு நிறுவனங்களை மிரட்டுகிறது மத்திய அரசின் ஜி.எஸ்.டி!
ஜி.எஸ்.டி.யின் விளைவுகள்
மேற்கண்ட பல்வேறு நெருக்கடிகளால் திருப்பூர் ஆயத்த ஆடை தொழிலே கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி-க்கு முன்பு ஆர்டர் கொடுத்த பெரு நிறுவனங்களும், ஏஜென்டுகளும் புதிய வரிச்சுமையை ஏற்க மறுத்து பழைய விலையிலேயே உற்பத்தி செய்து தருமாறு கோருகின்றன. முடியாத நிலையில் ஆர்டரை ரத்துசெய்து விடுகின்றன. மறுபுறமோ புதிய ஆர்டர்களில் வழக்கமான அளவுக்கும் குறைவான லாபமே கிடைப்பதால் நடைமுறை செலவுகளுக்கே ஈடுகொடுக்க முடியாமல் தொழிலையே கைவிட்டு ஓடும் நிலைக்கு சிறு நிறுவனங்கள் ஆளாகியுள்ளன.
இதற்கு முன்பு தொழில் போட்டியின் காரணமாக லாபம் குறைவாக கிடைத்தாலும், மத்திய அரசு தரும் ஏற்றுமதிக்கான ஊக்குவிப்புத் தொகையால்(duty draw back) ஓரளவு இழப்பை ஈடுகட்ட முடிந்தது. முன்பு 7% ஆக இருந்த இத்தொகையையும் ஜி.எஸ்.டி-க்குப் பின் 2% ஆக குறைத்து விட்டது மோடி அரசு.
மாதத்தில் பாதிநாள் வேலை இல்லை. வேலை இருந்தாலும் உரிய சம்பளம் கொடுக்க முடிவதில்லை. இதனால் திருப்பூரில் 60% சிறுதொழில் நிறுவனங்கள் முடங்கி விட்டது. ஜி.எஸ்.டி. -க்குப்பின் அக்டோபரில் மட்டும் 1400கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி சரிந்துவிட்டது. திருப்பூரின் வர்த்தக நிறுவனங்களுக்காகவே காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை இயங்கிவந்த வங்கிகள் எல்லாம் காலை 10 முதல் மாலை 4 மணி வரை என்ற வழக்கமான முறைக்குத் திரும்பி விட்டன. இவ்வாறு ‘டாலர் சிட்டி’யான திருப்பூர் இன்று ‘டல்’ சிட்டியாகி விட்டது! ஆனால் மோடி கும்பலோ, “ஜி.எஸ்.டி. -யால் விலைவாசி குறையும்” ‘ஏற்றுமதி பெருகும்” என்று மக்களை மோசடி செய்து வருகிறது!
கார்ப்பரேட் சேவைக்கே ஜி.எஸ்.டி!
1984 -க்கு முன்பு வெறும் 4 கோடியாக இருந்த திருப்பூரின் ஏற்றுமதியை இன்று 25,000 கோடியாக உயர்ந்து நிற்பதற்கு ஆணிவேராக செயல்பட்ட தொழிலாளர்களும், அவர்களுக்கு வேலைவாய்ப்பளித்த சிறு நிறுவனங்களும் இன்று நெருக்கடியில் சிக்கி மூச்சுத்திணறிக் கொண்டிருப்பது திடீரென ஜி.எஸ்.டி.யால் மட்டும் உருவானதல்ல. மத்திய ஆட்சியாளர்களின் தொடர் நடவடிக்கைகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை!
1984 வரை எளிய வரிவிதிப்பு, நேரடி பணப் பரிமாற்றம் என ஆயத்த ஆடை உற்பத்தி சுமூகமாகவே இருந்து வந்தது. உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்திற்குப் பின் ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு முக்கியத்துவம் என்று திசை மாற்றி இழுத்துச் சென்றது மத்திய அரசு. ஆலைகளை நவீனப்படுத்துவதற்கு கடனுதவி, இறக்குமதி செய்யப்படும் கருவிகளுக்கு வரிச்சலுகை கொடுத்து ஊக்கப்படுத்தியது மத்திய அரசு! இவ்வாறு உள்நாட்டு சந்தைக்கான உற்பத்தியில் இருந்தவர்களை, கார்ப்பரேட் திமிங்கலங்களின் பிடியிலுள்ள உலகச் சந்தையோடு திருப்பூர் ஆயத்த ஆடைத்தொழிலை கோர்த்துவிட்டது மத்திய அரசு.
இதன் பிறகு 2007 -ல் கொண்டுவரப்பட்ட ‘வாட்’ வரிவிதிப்பு மூலம் அதுவரை இருந்த நேரடிப் பணபரிமாற்றத்தை வங்கிப் பரிமாற்றத்திற்குள் கொண்டு வந்தார்கள். அடுத்து மோடியின் ‘பணமதிப்பிழப்பு’ நடவடிக்கையோ வங்கிப் பரிமாற்றத்திற்கு மாறுவதைக் கட்டாயமாக்கி விட்டது. இதன் தொடர்ச்சியாகவே ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டிருக்கிறது. இவ்வாறு படிப்படியாக திட்டமிட்டு, சுற்றி வளைத்து, தான் விரித்த வலைக்குள் இரையை வீழ்த்தும் திறமையான வேட்டைக்காரனைப் போல மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
வலையில் விழுந்த இரையை கார்ப்பரேட்டுகளுக்கு விருந்தாக்குவதுதான் மோடி அரசின் நோக்கம். வேலையிழந்த தொழிலாளர்களும், சிறு நிறுவனங்களும் பெரும் நிறுவனங்களின் அற்பக் கூலிக்கு வேலை செய்யும் கொத்தடிமைகளாக மாறி விடுங்கள் என்கிறார் மோடி.
ஏன் மாற வேண்டும்? ஆயத்த ஆடை தொழிலில் நமக்குப் போட்டியாக உள்ள பங்களாதேஷ் நம்மை விடக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து வருகிறார்கள். நாம் பங்களாதேஷை விட மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்தால்தான் சர்வதேச ஆயத்த ஆடை வர்த்தகத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அப்போதுதான் அவர்கள் இந்தியாவுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். நம் நாட்டின் அந்நிய செலாவணி அதிகரிக்கும். நாடு வல்லரசாக முடியும், எனவே கொத்தடிமைகளாக மாறி நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள், என்கிறார் மோடி!
ஆயத்த ஆடைத் தொழில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து தொழில்களையும், இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் நலனுக்காக தாரை வார்ப்பதையே மோடி அரசு தீவிரக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இதற்கேற்ப ஏற்கனவே உள்ள சட்ட விதிமுறைகளை, வரி விதிப்பு முறைகளை ஒழித்துக் கட்டிவிட்டு கார்ப்பரேட் நலனுக்கு சாதகமான வகையில் மறு கட்டமைப்பு செய்து வருகிறது மோடி அரசு! அதன் ஒரு கண்ணிதான் ஜி.எஸ்.டி. என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
ஜி.எஸ்.டி எதிர்ப்பு என ஒற்றைக் கோரிக்கையோடு நின்றுவிடாமல், ஒட்டுமொத்த மக்கள் நலனுக்கு எதிராக மாறிவரும் அரசுக் கட்டமைப்புக்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும்!
தகவல் : மக்கள் அதிகாரம், திருப்பூர். தொடர்புக்கு : 99658 86810.
சாதிய – மத எதிர்ப்பில்,
மண் என்றால்
அது தமிழ்நாடு
பெண் என்றால்
அது கவுசல்யா
தந்தை என்றால்
அது பெரியார்!
கவுசல்யா…
பெண்ணின் பெருமை
மட்டுமல்ல
இந்த மண்ணின் பெருமை,
ஆயிரம் அடக்குமுறைகள்
அழுத்தினாலும்
சாதிய வேலிகள் தடுத்தாலும்
சமுதாயம்
முன்னோக்கி வளர்ந்தே தீரும்
என்ற வரலாற்றின் உண்மை.
படம் : நன்றி – இது வேற தமிழ்நாடு முகநூல் பக்கம்
தனிப்பட்ட
காதலுக்காக மட்டுமன்றி
தான் வாழும் சமூகத்தின்
கொடுமைகளுக்கு
எதிராகத் துடிக்கும்
அவள் இதயம்.
என்ன ஒரு திண்மை!
சாதிவெறியைப் பார்த்து
சொந்த தந்தையையும்
வெறுத்தாள்.
சமத்துவத்தை நேசிக்கும்
சுயமரியாதை
உணர்வைப் பார்த்து
பெரியாரை தந்தையாய்
நினைத்தாள்.
இவளல்லவோ பெண்!
நேசித்த காதலனை
கண் எதிரே
வெட்டி வெறியாடிய போதும்
நிலைகுலைந்த
தனக்காக மட்டும்
கதறவில்லை
அந்தக்காதல்.
வெறுக்கத்தக்க சாதிவெறியை
கட்டி அழும்
சமூகத்தின் குரூரத்தை
பேசுகிறது அவள் குரல்.
கவுசல்யா,
யாரையும்
பாவப்பட கூப்பிடவில்லை,
சாதிவெறி ஆணவத்திற்கு எதிராக
கோவப்பட கூப்பிடுகிறாள்…
விலங்குகள் கூட
விளங்கிக் கொள்ளும்
சக அன்பை,
மனிதர்களுக்கு மறுக்கும்
கயமைத்தனம் தான் சாதி.
கவுசல்யா போல்
சுயசாதிக்கு எதிரான
கலகம்தான் நீதி!
வெட்டியவர்கள்
சமூகத்தின் கண்களுக்கு
தழும்பாக,
வெட்டுப்பட்டவளோ
சமூக நீதியின் பிழம்பாக,
சங்கர்
வெட்டவெட்ட துளிர்க்கிறான்
கவுசல்யாவிடம்,
பெரியார் மொழியில்
நகைக்கிறான்
சாதிய மனம்
இருந்தாலும்
அழுகிடும் பிணம்
சங்கர் இறந்தாலும்
கவுசல்யாவின்
கருத்தில் பரவிடும்
சமூக நறுமணம்.
ஒரு ஆணை
விரும்பியதைவிட
சங்கர் எனும்
தாழ்த்தப்பட்டவரை
காதலித்தது தான்
சாதிய மனநிலைக்கு
கடுங்குற்றம்.
சங்கரின் மீதான காதல்
சமூகத்தின் மீதான காதலாக
விரிவதைப்பார்த்து
ஆணாதிக்கத்தின் வக்கிரங்கள்
வசவுகளில் வாழ்கிறது.
உண்மையில்
‘வாழா வெட்டி’யானது
கவுசல்யா அல்ல,
வக்கிரம் பிடித்த சாதிவெறி.
கெட்ட வார்த்தை சாதிக்காரர்களே
தாங்கள் கெட்டழிவது திண்னம்!
பல கவுசல்யாக்களை உருவாக்கும்
பெரியார் மண்ணில்
பலிக்காது உங்கள் எண்ணம்!
கவுசல்யாவின்
தனிப்பட்ட காதல் பிரச்சனை என்று
யாரும் ஒதுங்கிட முடியுமா?
சாதியின் காதலர்கள்
வெறியோடு
எகிறி வரும் போது,
காதலுக்காக
உருகுபவர்கள்,
காதலுக்காக
படம் எடுப்பவர்கள்,
காதலுக்காக
தத்துவம் பேசுபவர்கள்,
சுடப்பட்ட காவலர்க்கு
வீரவணக்கம் செலுத்தும்
விசித்திர காதல் தளபதிகள்
யாருமே
வெட்டப்பட்ட
கவுசல்யா பக்கம்
காணவில்லையே ஏன்?
சாதிவெறி
அரிவாளோடு சுத்தும்
கூலிப்படை என்று
நாம் நினைத்தால்
அது அறியாமை.
சாதிவெறியர்கள்…
சினிமாவாக
இலக்கியாமாக, எழுத்தாக
பேஸ்புக்காக, டிவிட்டராக
நம்மை சுற்றி திரிகிறார்கள்.
சமூகத்தின் காதலர்களே
நாம்
கவுசல்யாக்களாக
உருவெடுப்போம்
சாதிவெறிக்கு எதிராக
பெரியாரின் தடியை
முன்னேடுப்போம்!
பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிடுவது, வேலைவாய்ப்பை உருவாக்குவது எனும் அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் கோடி ரூபாய் மறுமுதலீடு செய்வது, ஏழு இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளை அமைப்பது ஆகிய இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது, மோடி அரசு.
“பொதுத்துறை வங்கிகளுக்கு அளிக்கப்படும் மறுமுதலீடால், அவை தொழில்களுக்குக் கடன் கொடுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் தடைகளும் குறைந்து, தொழில் முனைவோரின் தேவைக்கேற்ப வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். மார்ச் 2022 -க்குள் 83,777 கி.மீ. தொலைவிற்குச் சாலை அமைக்கும் பாரத்மாலா திட்டத்தின் கீழ் 14.2 கோடி மனித உழைப்பு நாட்கள் உருவாக்கப்படும்” என இந்தத் திட்டங்களால் அடுத்த இரண்டொரு ஆண்டுகளில் ஏற்படவுள்ள பலன்கள் குறித்துக் கவர்ச்சிகரமான வாதங்களும் புள்ளிவிவரங்களும் எடுத்து வீசப்படுகின்றன.
இந்த ஆரூடமெல்லாம் பலிக்குமா, பலிக்காதா என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த இரண்டு அறிவிப்புகளும் பா.ஜ.க. அரசு தோல்வியடைந்துவிட்டதை எடுத்துக்காட்டும் ஒப்புதல் வாக்குமூலங்கள் என்றே கூறலாம். பொருளாதாரத் தேக்கமும், வேலைவாய்ப்பின்மையும், பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பும் மோடியின் டவுசரைக் கழட்டி, ‘வளர்ச்சி’, ‘அச்சே தின்’ குறித்த அவரது வாய்வீச்சுகளையெல்லாம் அம்மணமாக்கவிட்ட நிலையில், இந்த இரண்டு அறிவிப்புகள் வெளிவந்திருப்பது தற்செயலான பொருளாதார நடவடிக்கையல்ல.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் தோல்வியிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆளுங்கட்சிகள் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு கவர்ச்சித் திட்டங்களை அவிழ்த்துவிடுவார்களே, அதைத்தான் மோடி அரசும் செய்திருக்கிறது. வேறுபாடு என்னவென்றால், இந்த இரண்டு திட்டங்களும் மக்களின் பெயரால் கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் பரிமாறப்படும் கறி விருந்தாகும்.
குஜராத் மாநிலத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு 200 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்திருக்கும் மோடி அரசு, 2019 -இல் வரவுள்ள பொதுத் தேர்தலை மனதில்கொண்டு, 9 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான இந்த இரண்டு கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
மக்களின் வாக்குகளைக் கவரக்கூடிய கவர்ச்சித் திட்டங்களை ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ அறிவிக்கும்போது நிதிப் பற்றாக்குறை என மூக்கைச் சிந்தும் மேட்டுக்குடி அறிஞர் பெருமக்கள், கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் பாக்கெட்டை நிரப்பக்கூடிய இந்தத் திட்டங்களைக் கைதட்டி வரவேற்று, தங்களின் அறிவு நாணயத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் இந்தியாவில் முதலீடு செய்யும் தரத்தை மூடிஸ் நிறுவனம் உயர்த்தியிருப்பதையும், உலக நாடுகளின் முதலீட்டு வரிசையில் இந்தியா முப்பது இடங்கள் முன்னேறியிருப்பதையும் தனது ஆட்சியின் சாதனையாகப் பீற்றிக் கொண்டார், மோடி. ஆனால், நடப்பது என்ன?
“தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய இன்னும் சில காலம் பிடிக்கும். அதுவரை மைய, மாநில அரசுகளும், பொதுத்துறை நிறுவனங்களும்தான் முதலீட்டுச் செலவுகளைச் செய்ய வேண்டும்” என்கிறார் எல். அண்ட் டி. நிறுவன அதிபர் எஸ்.என்.சுப்பிரமணியன். அதற்கேற்ப பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான மக்களின் வரிப்பணம்தான் இந்த இரண்டு திட்டங்களிலும் முதலீடாகக் கொட்டப்படுகிறது. தனியார்மயம் – உலகமயம் என்பதே மக்களின் வரிப்பணத்தை, பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்குப் படையல் இடும் நடவடிக்கைதான் என்பது இந்த இரண்டு அறிவிப்புகளின் வழியே மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.
வாஜ்பாயி, தனது ஆட்சியில் நாட்டைக் குறுக்கும் நெடுக்குமாக இணைக்கும் தங்க நாற்கரண சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தினார். அந்தத் திட்டத்தால் வளர்ச்சியடைந்தது யார்? நான்கு தட விரைவுச் சாலைகளை அமைப்பதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகளிடமிருந்து அவர்களின் நிலங்கள் பறித்தெடுக்கப்பட்ட அதேசமயத்தில், சிமெண்ட், இரும்பாலை முதலாளிகளும், எல்.அண்ட் டி. போன்ற கட்டுமான நிறுவனங்களும் கொள்ளை இலாபம் ஈட்டின. கட்டணமின்றி நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி வந்த பொதுமக்களின் மீது டோல்கேட் கட்டணக் கொள்ளை திணிக்கப்பட்டது. மோடியின் பாரத்மாலா திட்டம் இந்த வழிப்பறிக் கொள்ளையை மேலும் விரிவுபடுத்துவதைத் தாண்டி, வேறு எந்த வளர்ச்சியையும் கொண்டுவரப் போவதில்லை.
2.11 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வங்கி மறுமுதலீட்டுத் திட்டமோ, விஜய் மல்லையா, அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள் வைத்துள்ள வங்கிக் கடன் பாக்கியை மறைமுகமாகத் தள்ளுபடி செய்யும் சதியாகும். மேலும், 58,000 கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் தந்திரமும் இதில் அடங்கியிருக்கிறது.
***
மோடியின் ஆட்சியில் தொழில் வளர்ச்சியைவிட, வாராக் கடன்தான் மலையளவு வளர்ந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் வங்கிகளின் வாராக் கடன் 4.55 இலட்சம் கோடி ரூபாய் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடுகிறது, இந்து நாளிதழ். சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில், இந்திய வங்கிகளின் மொத்த வாராக் கடன் 11.5 இலட்சம் கோடி ரூபாய் என மதிப்பிட்டிருக்கிறது. வாராக் கடன்களோடு தவணை முறை மாற்றியமைக்கப்பட்ட கடன்களையும் சேர்த்தால் வங்கிகளின் வாராக் கடன் 15 இலட்சம் கோடி ரூபாயாகும் என்கிறார், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளத்தின் தலைவர் சி.எச்.வெங்கடாச்சலம்.
பொதுத்துறை வங்கிகள் விவசாயம், சிறுதொழில்கள், தனிநபர்கள் எனப் பலவிதமான கடன்களை அளித்திருந்தாலும், வாராக் கடனில் பெரும் பகுதி அம்பானி, அதானி உள்ளிட்ட இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் ஏப்பம் விட்டுள்ள கடன்களாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் குழு அளித்திருக்கும் அறிக்கை, வங்கிகளின் மொத்த வாராக் கடனில் 25 சதவீதத்தை 12 நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. தனது மொத்த வாராக் கடனில் வெறும் 11 சதவீதம் மட்டும்தான் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் திரும்பச் செலுத்தாத தொகையாகும் எனக் குறிப்பிடுகிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.
டிராக்டர் கடன் தவணையைக் கட்டத் தவறிய திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் வங்கி ஏவிவிட்ட குண்டர்களால் தாக்கப்பட்டு இறந்துபோனார். கடன் தள்ளுபடி கேட்டுப் போராடிய ம.பி. விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகள் உதாசீனப்படுத்தப்பட்டனர். ஆனால், தரகு முதலாளி விசயத்திலோ மோடி அரசு பெருந்தன்மையோடும் கருணையோடும் நடந்து வருகிறது.
விஜய் மல்லையாவை இலண்டனுக்கு வழியனுப்பி வைத்தது மட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெரு நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த 1,88,287 கோடி ரூபாய் பெறுமான கடன்களைக் கமுக்கமாகத் தள்ளுபடி செய்திருக்கிறது, மோடி அரசு. பொதுத்துறை வங்கிகள் 2016 – 17 நிதியாண்டில் ஈட்டிய 1,58,982 கோடி ரூபாய் இலாபத்தை வாராக் கடன்களுக்கு ஈடுகட்டுமாறு செய்ததால், அவை அந்த ஆண்டில் 11,388 கோடி ரூபாய் நட்டமடைந்தன.
வாராக் கடன்களால் நட்டத்திலும் திவாலாகும் அபாயத்திலும் சிக்கியிருக்கும் பொதுத்துறை வங்கிகளை மீட்பது என்ற பெயரில் இப்பொழுது 2.11 இலட்சம் கோடி ரூபாயை மொய்யாக எழுதத் துணிந்திருக்கிறது, மோடி அரசு.
காங்கிரசு அரசு அலைக்கற்றையையும் நிலக்கரிச் சுரங்கங்களையும் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு வாரிக் கொடுத்தது ஊழல் என்றால், மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் வாராக் கடன்களை, பொது மக்களின் சேமிப்பைக் கொண்டு ஈடு செய்துவருவதை என்னவென்பது? சட்டவிரோதமாக நடக்கும் முறைகேடுகள் மட்டும்தான் ஊழல் என்ற சமூகத்தின் பொதுப்புத்தியைப் பயன்படுத்திக்கொண்டுதான் மோடி தன்னைப் பரிசுத்தவானாகக் காட்டிவருகிறார். அந்தப் பொதுப்புத்தியை உதறிவிட்டுப் பார்த்தால், மோடி அரசு கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு சட்டபூர்வமாக அளித்துவரும் ஒவ்வொரு சலுகையும் மெகா ஊழல்தான்.
***
பா.ஜ.க. ஆட்சியில் கார்ப்பரேட் கடன்காரர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்தச் சலுகைகளைவிட, வாராக் கடன்கள் குறித்து சங்கப் பரிவாரங்கள் கொண்டிருக்கும் அணுகுமுறைதான் மிக ஆபத்தானது. ஆர்.எஸ்.எஸ்.இன் பொருளாதாரப் புலியான துக்ளக் குருமூர்த்தி, “கடன்களைக் கட்டத் தவறும் நிறுவனங்களுக்கு மேலும் மேலும் தவணைகள் கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கு நெருக்கடி தரக் கூடாது. இதுதான் நமது பாரத நடைமுறை. இதற்கு மாறாக, ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் தவணை தவறிய கடன்களை நட்டக் கணக்கில் சேர்த்ததன் விளைவுதான் வங்கிகளின் வாராக் கடன்” என வாதிடுகிறார்.
இதுதான் ஆடிட்டர் புத்தி என்பது. இந்த வாதத்தின் மூலம் தானொரு கார்ப்பரேட் முதலாளிகளின் தரகன் எனக் காட்டிக்கொண்டிருக்கிறார், குருமூர்த்தி.
வாங்கிய கடனை ஒழுங்காகக் கட்டு என்றுதான் கூறினார் ரகுராம் ராஜன். அவர் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆன பிறகுதான், தேவ இரகசியம் போல அமுக்கி வைக்கப்பட்டிருந்த வாராக் கடன் தொகை வெளியே வந்தது. அனில் அம்பானி, எஸ்ஸார், லான்கோ இன்ஃப்ராடெக் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது சொத்தை விற்று வங்கிக் கடனைக் கட்ட வேண்டிய நிர்பந்தம் உருவானது. இப்படி நெருக்குதல் கொடுத்ததன் காரணமாகத்தான், பா.ஜ.க. யோக்கியசிகாமணிகள் அவருக்கு நெருக்குதல் கொடுத்து, பதவி விலகிச் செல்லுமாறு செய்தனர்.
வாராக் கடன் குறித்த பிரச்சினையில் ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசிற்கும் இடையே இப்பொழுதுகூடப் பனிப்போர் நடந்து வருவதாகக் கூசாமல் புளுகி வருகிறார், குருமூர்த்தி. உண்மையில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிலுவையில் உள்ள வாராக் கடன்களில் ஒரு பைசாவைக்கூட மோடி அரசு வசூலிக்கவில்லை. வாராக் கடன்களை வசூலிப்பதற்காகவே புதிய திவால் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக மோடி அரசு கூறிவந்தாலும், அந்தச் சட்டத்தின் கீழ் இதுவரை எந்தவொரு நிறுவனத்தின் சொத்தும் ஏலத்தில் விடப்படவில்லை.
எந்த நிறுவனம் வங்கிக் கடனைச் செலுத்தத் தவறியிருக்கிறதோ, அந்த நிறுவனமும் ஏலத்தில் கலந்துகொண்டு தனது சொத்துக்களைத் தானே ஏலத்தில் எடுக்கலாம் என்ற சலுகையைத் தமது அரசு நீக்கிவிட்டதாகப் பீற்றிவருகிறார், மோடி. அதனாலென்ன, கடனைச் செலுத்த தவறிய நிறுவனங்கள் தமது பினாமிகளின் மூலம் ஏலத்தில் கலந்துகொள்ள முடியுமே. இந்தச் சட்டம், திருத்தம் எல்லாம் மோடியின் இன்னொரு மோசடி தவிர வேறல்ல.
வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள எஸ்ஸார் ஸ்டீல், பூஷன் ஸ்டீல், லான்கோ இன்ஃப்ராடெக் உள்ளிட்ட 12 நிறுவனங்களை இப்புதிய திவால் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் சொத்துக்களை டிசம்பர் இறுதிக்குள் ஏலத்தில் விட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. ஆனால், நவம்பர் மாத இறுதி வரையிலும் இவ்விசயத்தில் ஒரு துரும்புகூட நகரவில்லை. இப்புதிய திவால் சட்டமும் சோளக் காட்டு பொம்மைதான் என்பது இதன் வழியாக அம்பலமாகியிருக்கிறது. ஆனாலும், இப்படியான சோளக் காட்டு பொம்மை சட்டம்கூட இந்தியாவிற்குப் பொருந்தாது என வாதிடுகிறார், குருமூர்த்தி.
ஏல முறையில் காணப்படும் இந்தத் தாமதத்தைக் காட்டி, வாராக் கடன் மொத்தத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டியதில்லை, அதில் குறிப்பிட்ட அளவிற்குத் தள்ளுபடி செய்யும் சலுகையை நிறுவனங்களுக்கு வழங்கலாம் எனத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ஆலோசனையைப் பொருளாதார நிபுணர்களும் அதிகார வர்க்கமும் முன்வைத்திருக்கிறது.
இந்தச் சலுகைக்கு ஆளும் வர்க்கம் சூட்டியிருக்கும் பெயர் ஹேர்கட். சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில், நான்கு இலட்சம் கோடி ரூபாய் வரை கடன் வைத்திருக்கும் 50 நிறுவனங்களுக்கு 60 சதவீத ஹேர்கட் – 2.4 இலட்சம் கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசிற்குப் பரிந்துரைக்கிறது. மோடி அரசு 2.11 இலட்சத்தை வங்கிகளுக்குக் கொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் எள் என்று சொன்னவுடன் எண்ணெயாக நிற்கிறார், மோடி. இந்த அடிவருடித்தனத்திற்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர் செயல் திறமை!
-திப்பு
***************************
பெட்டிச் செய்தி : இனி கோவணம்கூடத் தப்பாது!
வங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு – 2017 என்றொரு மசோதாவை கடந்த ஆகஸ்டு மாதத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்திருக்கிறது, மோடி அரசு. இம்மசோதா, வங்கிகளில் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி, அப்பணத்தை வங்கியின் மூலதனமாக மாற்றிக் கொள்வதற்கு வங்கி நிர்வாகங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இதற்கு வாடிக்கையாளர்களின் சம்மதத்தைப் பெற வேண்டிய அவசியம் கிடையாது. வாடிக்கையாளர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்ளப்படும் தொகைக்கு ஈடாக வங்கியின் பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் தரப்படும் என அறிவிக்கிறது இச்சட்டம். அவல் கொடுத்தவனுக்கு உமியைக் காட்டும் மோசடி இது.
வாராக் கடனால் தள்ளாடிக் கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாக்கவே இந்தச் சட்டம் என வக்கணை பேசுகிறது, மோடி அரசு. வங்கிப் பணத்தைக் கொள்ளையடித்த விஜய் மல்லையா, அம்பானி, அதானிக்களின் சொத்துக்களைக் கைப்பற்ற மறுக்கும் மோடி அரசு, மக்களின் சேமிப்பைக் கொள்ளையடிக்கத் துணிகிறது.
பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்கு அடுத்து மக்கள் தலையில் இறங்கியிருக்கும் அடுத்த இடி இந்தச் சட்டம்.
ஒவ்வொரு கொள்ளைத் திட்டத்தை அறிவிக்கும்போதும், புதிய இந்தியா பிறக்கப் போவதாக அடித்துவிடுகிறார், மோடி. பழைய இந்தியாவில் மக்களிடம் மிஞ்சியிருந்த கோவணம்கூட மோடியின் புதிய இந்தியாவில் இருக்காது போலும்!
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பிரான்சு அதிபர் ஃபிரான்கோயிஸ் ஹாலண்டே இடையே ரபேல் பேர ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது தொடர்பாக பாரீஸ் நகரில் நடந்த பேச்சுவார்த்தை.(கோப்புப் படம்)
714-ஐ விட 1611 அதிகமென்பதை ஐந்தாம் வகுப்பு மாணவன்கூடச் சொல்லிவிடுவான். ஆனால், இது ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வரும் கணக்கல்ல. ரபேல் போர் விமான பேரம் தொடர்பான கணக்கு. அதனால் 1611 குறைவானது எனப் பாரதப் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டு பா.ஜ.க.வைச் சேர்ந்த அனைவரும் சாதிக்கிறார்கள்.
மன்மோகன் சிங் ஆட்சியின் இறுதியாண்டுகளில் பிரெஞ்சு நிறுவனமான தஸ்ஸால்டிடம் இருந்து 90,000 கோடி ரூபாய் மதிப்பில் 126 மத்திய ரக பல்நோக்குப் போர் விமானங்கள் (MMRCA – Medium Multi-Role Combat Aircraft) வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் பொதுத்துறை இராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு விமானத் தொழில்நுட்பங்களை மாற்றித் தருவது, 108 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு கிடைக்கும் மொத்த வருவாயில் 50 சதவீதத்தை இந்தியாவில் முதலீடு செய்வது ஆகிய விதிகள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தன.
ரபேல் போர்விமானங்களை வாங்குவது தொடர்பாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிராண்டு அதிபர் ஃபிரான்கோயிஸ் ஹாலண்டே இடையே நடந்த பேச்சுவார்த்தை.(கோப்புப் படம்)
பிரான்சு நாட்டைத் தவிர, பிற நாட்டு விமானப் படைகள் ரஃபேல் விமானங்களைச் சீந்தாத காரணத்தால், தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வரப்பிரசாதமாக அமைந்தது. இதன் காரணமாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் உள்ளிட்டுப் பல்வேறு தரப்பிலிருந்து இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக விமரிசனங்கள் எழுந்தன.
நியாயமாகப் பார்த்தால், பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த பிறகு இந்த ஒப்பந்தத்தைக் கைகழுவியிருக்க வேண்டும். ஆனால் மோடி, 2012-இல் 126 விமானங்களை வாங்க காங்கிரசு அரசு செய்திருந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டு, 36 விமானங்களை வாங்குவதற்கு ஒரு புதிய ஒப்பந்தத்தைப் பேசி முடித்தார். பழைய ஒப்பந்தத்தின்படி 126 விமானங்களின் விலை 90 ஆயிரம் கோடி ரூபாய். இதன்படி ஒரு விமானத்தின் விலை 714 கோடி ரூபாய். மோடியின் புதிய ஒப்பந்தத்தின்படி 36 விமானங்களுக்கான விலை 58 ஆயிரம் கோடி, ஒரு விமானத்தின் விலை 1611 கோடி ரூபாய்.
சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு 2ஜி அலைக்கற்றைகளை விற்றது காங்கிரசு கூட்டணி அரசு. சந்தை விலையைவிடக் கூடுதல் விலைக்குப் போர் விமானங்களை வாங்குகிறது மோடி அரசு. முன்னது ஊழல் என்றால், பின்னது..? அப்படி யாரும் விமரிசிக்கக் கூடாதென்ற முன்னெச்சரிக்கையோடு, “இந்தப் பேரத்தைக் கேள்விக்குள்ளாக்குவது, நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குவதற்கு ஒப்பானது” என ஒரே போடாகப் போட்டுவிட்டார், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். மாமிக்கு வாய்த்த இந்த வாய்த்திறமை, ஆ.ராசாவுக்கு இல்லாமல் போய்விட்டது.
விலை போகாத சரக்கை அதிக விலை கொடுத்து வாங்கியதோடு மட்டும் இந்தப் புதிய பேரம் நின்றுவிடவில்லை. பழைய ஒப்பந்தப்படி, பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்சுடன் இணைந்து 108 விமானங்களைத் தயாரிக்கவும், அந்நிறுவனத்துக்கு தொழில்நுட்பங்களை மாற்றிக் கொடுக்கவும் இசைந்திருந்த தஸ்ஸால்ட், இப்பொழுது, தனது தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்களுக்கு மாற்றித் தர முடியாதென்றும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரிக்கும் விமானங்களில் கோளாறுகளோ, விபத்துக்களோ ஏற்பட்டால், அதற்குத் தஸ்ஸால்ட் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளாது என்றும் புதுப்புது நிபந்தனைகளை விதித்து வருகிறது.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பிரான்சு அதிபர் ஃபிரான்கோயிஸ் ஹாலண்டே இடையே ரபேல் பேர ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது தொடர்பாக பாரீஸ் நகரில் நடந்த பேச்சுவார்த்தை.(கோப்புப் படம்)
இந்த ஒப்பந்தம் வியாபாரமின்றிக் காத்துவாங்கி வரும் தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு மட்டுமின்றி, உள்ளூர் தரகு முதலாளிகளுக்கும் அடித்திருக்கும் பம்பர் பரிசாகும். காங்கிரசு ஆட்சியில் தஸ்ஸால்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தானவுடனேயே, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், அனில் அம்பானியின் அனில் திருபாய் அம்பானி குழுமமும் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டன.
நரேந்திர மோடி காங்கிரசு அரசு போட்ட ஒப்பந்தத்தைக் கைவிட்டாலும், அம்பானிகளைக் கைவிடவில்லை. தஸ்ஸால்டுடன் புதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிப்பதற்கு மோடி பாரீஸ் சென்றபோது, அம்பானியையும் கையோடு அழைத்துச் சென்றார். இப்புதிய ஒப்பந்தப்படி, அம்பானியின் நிறுவனங்களுக்கு 22,000 கோடி ரூபாய் பெறுமான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஆர்டர்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அம்பானிகளுக்கு, மோடி படைத்திருக்கும் கறி விருந்து இது.
அரசுத் துறை கொள்முதல்களில் வழக்கமாக பின்பற்றப்படும் டெண்டர் விதிமுறைகளின் படி, விற்பனைக்கான உத்தேச கோரிக்கையின் (Request for Proposal – RFP) அடிப்படையில் விலை, விற்பனைப் பொருளின் இறுதிக் கட்டமைப்பு (configuration), பொருட்களின் எண்ணிக்கை, அளவு ஆகியவற்றை ஒப்பந்தம் கையெழுத்தான பின் மாற்றக்கூடாது. இவற்றுள் ஏதாவது ஒன்றை மாற்றினாலும், புதிதாக டெண்டர் விடவேண்டும். இந்த விதியைக் கடாசிவிட்டு புதிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறார், மோடி. தஸ்ஸால்ட் நிறுவனமோ முந்தைய ஒப்பந்தத்தில் தான் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை நிறைவேற்ற மறுத்துவருகிறது.
அலைக்கற்றை விற்பனையில் ஏல நடைமுறையை மீறினார் என்பது ஆ.ராசாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. யோக்கியர் மோடி டெண்டர் விதிமுறைகளை மீறி, தஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்துப் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். அம்பிகளுக்கு அது ஊழலாம், இது தேசத் தொண்டாம்!
***
தஸ்ஸால்ட் நிறுவனத்தோடு கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அம்பானி சகோதரர்கள்.
இந்திய இராணுவத்திற்கு 126 விமானங்கள் வாங்குவதற்குக் கையெழுத்தான ஒப்பந்தத்தை மோடி கைவிட்டதற்குக் காரணம் சுவாரசியமானது. அம்பானிகளின் நிறுவனங்கள் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்திருப்பதைப் போல, டாடா குழுமம் எப்.16 இரக போர் விமானங்களைத் தயாரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்டின் நிறுவனத்துடனும், அதானி குழுமம் கிரிப்பென் ரக போர் விமானங்களைத் தயாரிக்கும் இன்னொரு அமெரிக்க நிறுவனமான சாப் உடனும் கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளன. தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் 126-க்குப் பதிலாக 36 போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கும் மோடி அரசு, மீதி விமானங்களை டாடாவும் அதானியும் கூட்டுச் சேர்ந்துள்ள அமெரிக்க நிறுவனங்களிலிருந்து வாங்கும் முடிவை எடுத்திருக்கிறது. அவ்விரு நிறுவனங்களுக்குப் புதிய போர் விமானங்களை வாங்குவதற்கான தகவல் கோரும் ஆவணங்களை (RFI – Request for Information) அனுப்பி வைத்துள்ளது இந்திய அரசு.
ஆக, விமானப் படைக்குத் தேவையான 126 விமானங்களை பிரான்சு மற்றும் அமெரிக்க கம்பெனிகளுக்கும்; அம்பானி, அதானி மற்றும் டாடா குழுமங்களுக்கும் பங்கு வைத்திருக்கிறார் மோடி. வேறு தரகு முதலாளிகள் யாரேனும் தேசப் பாதுகாப்பில் தங்களுடைய பங்களிப்பைச் செலுத்த விரும்புவார்களாயின், அவர்களுக்குரிய பங்கையும் வழங்குவதன் மூலம் தனது ஜனநாயக மாண்பினை அவர் நிரூபிப்பார்.
2ஜி அலைக்கற்றையைத் தனக்கு வேண்டப்பட்ட உப்புமா கம்பெனிகளுக்கு ஆ.ராசா தூக்கிக் கொடுத்தார் என்பது அவ்வழக்கில் ஒரு குற்றச்சாட்டு. 126 போர் விமானங்களை வாங்குவதற்கு காங்கிரசு அரசு சர்வதேச டெண்டர் கோரியபோது, அதில் கலந்துகொண்ட மேற்படி இரு அமெரிக்க நிறுவனங்களும் தகுதியற்றவை என நிராகரிக்கப்பட்டன. அப்படி நிராகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மோடி அரசு போர் விமானங்களை வாங்க முயற்சிக்கிறது. பனை மரத்தடியின் கீழ் உட்கார்ந்துகொண்டு மோடி பாலைத்தான் அருந்துகிறார் என நம்புவோமாக!
***
ரபேல் பேரத்தில் நடந்துள்ள முறைகேடுகள், விலை உயர்வு ஆகியவற்றை நியாயப்படுத்த மோடி பக்தர்கள் அடுக்கும் வாதங்களனைத்தும் எருமை ஏரோப்பிளேன் ஓட்டிய ரகத்தைச் சேர்ந்தவை. இந்தியாவுக்கு தொழிநுட்பங்களை மாற்றித் தர தஸ்ஸால்ட் மறுப்பதைப் பற்றிக் கேட்டால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளத் தகுதியற்றது என்று தஸ்ஸால்ட் முடிவு செய்தால் நாம் என்ன செய்ய முடியும் என்கிறார்கள். விமானத் தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த அப்பொதுத்துறை நிறுவனத்தைப் புறக்கணித்து விட்டு, எந்த முன்னனுபவமும் இல்லாத அம்பானியோடு மட்டும் எதனடிப்படையில் தஸ்ஸால்ட் ஒப்பந்தம் மேற்கொண்டது என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
பழைய ஒப்பந்தப்படி நமக்குக் கிடைக்கவிருந்த விமானங்கள் அடிப்படை மாடல்கள் எனவும், தற்போது வாங்க முடிவு செய்துள்ள விமானங்களில் கூடுதல் ஆயுதங்கள் பொருத்தும் வசதியிருப்பதால், விலை அதிகம் என்கிறார்கள். துப்பாக்கியைவிடத் தோட்டாக்களுக்கு அதிக விலை என்கிற மோசடியான தர்க்கத்துக்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். விமானத்தில் பொருத்தப்படவுள்ள மெட்டியார் இரக ஏவுகணையின் சந்தை விலையே 12.6 கோடிதான். அதே போல் H.D.M.S. எனப்படும் ஹெல்மெட்டில் பொருத்தப்படும் வழிகாட்டும் அமைப்பின் விலை 2.4 கோடி. இவ்வாறு தனித்தனியே விமானத்தில் பொருத்தப்பட உள்ளதாகச் சொல்லப்படும் ஆயுதங்களின் சந்தை விலையைக் கூட்டினால், ஒரு விமானத்திற்கு 60 கோடி அதிகரிக்கலாம். ஆனால், தற்போது ஊதிப் பெருக்கப்பட்டுள்ள விலையோ 100 சதவீதத்துக்கும் அதிகம்
அமெரிக்க நிறுவனங்களோடு கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ள அதானி(இடது) மற்றும் ரத்தன் டாடா
அடுத்து, மோடி வாங்கவுள்ள விமானம் இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படுவதால் விலை அதிகமாவதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள். ஆனால், 2012ம் ஆண்டின் டெண்டர் கோரும் ஆவணங்களிலேயே விமானங்கள் இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்கிற விதி உள்ளது. அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுதான் 126 விமானங்களுக்கான பழைய விலையை தஸ்ஸால்ட் நிர்ணயித்தது. மேலும், விமான ஓட்டிகளுக்கான பயிற்சி, பயிற்சிக் கையேடு, விமானத்திற்கான தர உத்திரவாதம் என அனைத்துமே பழைய டெண்டர் ஆவணங்களில் நிபந்தனையாகச் சேர்க்கப்பட்டு, அவற்றையும் கணக்கில்கொண்டுதான் தஸ்ஸால்ட் நிறுவனம் விலையை நிர்ணயித்தது.
ராஜீவ் காந்தி ஆட்சியின்போது போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கி வாங்கியதில் நடந்த ஊழலை நியாயப்படுத்துவதற்கு, அந்தப் பீரங்கிதான் கார்கில் போரில் பாகிஸ்தான் படைகளைத் தோற்கடிக்கப் பயன்பட்டது என்றொரு வாதம் இப்பொழுது காங்கிரசு அடிவருடிகளால் முன்வைக்கப்படுகிறது. மோடி, தனது ஆட்சியில் சந்தி சிரிக்கும் இந்த போர் விமான பேர ஊழலை நியாயப்படுத்த, ஓர் அதிரடிப் போரை நடத்தவும்கூடும். ஊழல், முறைகேடுகளை நியாயப்படுத்த தேசபக்தியைவிட வேறு சிறந்த கவசம் எதுவும் கிடையாது என்பதைப் பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
காஞ்சு போன நதிகளெல்லாம் வற்றாத கங்கையைப் பார்த்து ஆறுதலடையும். அந்த கங்கையே காஞ்சுபோனா.. என்றொரு வசனம் தங்கப்பதக்கம் திரைப்பாடலின் நடுவே வரும். உச்சநீதி மன்றத்தில் நவம்பர் 10 -ஆம் தேதியன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அரங்கேற்றிய காட்சிகளைக் கண்டு பல முன்னாள் நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களும் தெரிவித்த கருத்துகள் இந்தப் பாடல் வரிகளுக்கு இணையானவை.
லல்லு பிரசாத் யாதவ் மீதோ ஆ.ராசா மீதோ ஊழல் வழக்கு என்றால், அதனை விசாரித்து உச்சநீதி மன்றம் தண்டிக்கலாம், அல்லது விடுவிக்கலாம். உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி மீதே ஊழல் குற்றச்சாட்டு என்றால், அதனை யாரிடம் முறையிடுவது? அந்த வழக்கை யார் விசாரித்துத் தீர்ப்புச் சொல்வது?
***
ஊழல் குற்றச்சாட்டுக்குரிய வழக்கு, உ.பி. மாநிலத்தில் மருத்துவக் கல்லூரியொன்றுக்கு அனுமதி வழங்குவது தொடர்பானது. உ.பி. -யைச் சேர்ந்த பிரசாத் கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பு புதியதொரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு 2015 -இல் மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பித்தது. கல்லூரியைப் பார்வையிட்ட பின், அது கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரியைப் போன்ற ஒரு டுபாக்கூர் கல்லூரி என்பதால், அனுமதி மறுத்தது மருத்துவக் கவுன்சில். உடனே மேற்படி பிரசாத் அறக்கட்டளை லோதா கமிட்டியிடம் முறையிட்டது. அடுத்த ஆண்டுக்குள் எல்லா குறைபாடுகளையும் சரி செய்வதாக உத்திரவாதமளித்து அனுமதியும் பெற்றது.
அடுத்த ஆண்டில் கல்லூரியைச் சோதனை செய்த மருத்துவக் கவுன்சில், மருத்துவமனையில் நோயாளி இல்லை, கல்லூரியிலும் மாணவர்கள் இல்லை என்பன உள்ளிட்ட பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, அடுத்த இரண்டாண்டுகளுக்கு மாணவர் சேர்க்கைக்குத் தடை விதித்தது. இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது பிரசாத் அறக்கட்டளை.
தீபக் மிஸ்ரா, கன்வில்கார், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு அறக்கட்டளைக்கு அநீதி எதுவும் இழைக்கப்படாமல் தவிர்க்கும்பொருட்டு இன்னொருமுறை முடிவைப் பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது. அறக்கட்டளை நிர்வாகத்திடம் இன்னொரு விசாரணை நடத்தி, இன்னொரு முறை பரிசீலித்த சுகாதார அமைச்சகம், மீண்டும் பழைய முடிவையே உச்சநீதி மன்றத்தில் வலியுறுத்தியது. அப்பவும் தீபக் மிஸ்ரா விடுவதாக இல்லை. கல்லூரியை மீண்டும் ஒருமுறை நேரில் சென்று சோதனையிடுமாறு செப். 18 அன்று மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது. தகுதியற்றவை என்று அனுமதி மறுக்கப்பட்ட மேலும் 6 மருத்துவக் கல்லூரிகளுக்குச் சாதகமாக ஆகஸ்டு மாத இறுதியில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது இந்த அமர்வு.
பிரசாத் அறக்கட்டளைக்கு ஆதரவாக செப். 18 அன்று தீபக் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்த மறுநாளே, சி.பி.ஐ. ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஓய்வு பெற்ற ஒரிசா உயர்நீதி மன்ற நீதிபதி குத்தூஸி உள்ளிடடோர் டில்லியைச் சேர்ந்த விஸ்வநாத் அகர்வாலா என்ற நீதிமன்றத் தரகன் மூலம் பிரசாத் கல்வி அறக்கட்டளைக்குச் சாதகமான தீர்ப்பை உச்சநீதி மன்றத்தில் வாங்குவதற்கு முயன்றனர் என்பது குற்றச்சாட்டு. குத்தூஸி, ஹவாலா புரோக்கர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கையில் நீதிபதிகளின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், இவர்களுடன் பெயர் தெரியாத பொது ஊழியர்கள் சிலர் என்று கூறுகிறது சி.பி.ஐ. -இன் முதல் தகவல் அறிக்கை.
இதுவரை இந்த வழக்கில் நடந்துள்ள விசயங்களைப் படித்த வாசகர்கள் யார் அந்தப் பொது ஊழியர்களாக இருக்கக்கூடும் என்பதை எளிதில் ஊகிக்க முடியும். ஆனால், தலைமை நீதிபதிக்கோ, மற்ற நீதிபதிகளுக்கோ எதிராக அசைக்க முடியாத ஆதாரமே இருந்தால்கூட, அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய சி.பி.ஐ. -க்கு மட்டுமின்றி யாருக்கும் அதிகாரம் கிடையாது என்பதுதான் தற்போது சட்டத்தின் நிலை. தலைமை நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டு வந்துவிட்டபோது அதற்குச் சட்ட வழிமுறைப்படி உள்ள தீர்வு என்ன என்பதுதான் அடுத்து எழும் கேள்வி.
சி.ஜே.ஏ.ஆர். Campaign for judicial accountability and reform என்ற அமைப்பின் மூலம் நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் உச்சநீதி மன்ற வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண், காமினி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் நீதிபதி சிக்ரி மற்றும் நீதிபதி செல்லமேஸ்வர் ஆகியோரது தலைமையிலான அமர்வுகளில் தனித்தனியே இரு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களின் சாரம் இதுதான்.
பிரச்சினைக்குரிய இவ்வழக்கில் நீதிபதிகள் மீது குற்றம் இருக்காது என்றே நம்புகிறோம். எவ்வாறாயினும், இந்த வழக்கை சி.பி.ஐ. தொடரந்து விசாரிப்பதன் மூலம் ஒட்டு மொத்த நீதித்துறையையும் அச்சுறுத்துவதற்கு இதனை அரசு பயன்படுத்தும். எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ. -இடமிருந்து விடுவித்து, ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அந்தக் குழுவை, தீபக் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகளைத் தவிர்த்து, எஞ்சியுள்ள நீதிபதிகளில் மூத்தவர்களான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு கண்காணிக்க வேண்டும்.
ஒரு வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் நிர்வாக அதிகாரம் தலைமை நீதிபதிக்கு உரியது என்ற போதிலும், இந்த பிரச்சனையில் தலைமை நீதிபதியே குற்றம் சாட்டப்பட்டவராக இருப்பதால், தன் வழக்கை விசாரிக்கின்ற நீதிபதிகள் யார் என்பதை அவர் தீர்மானிப்பதோ, அந்த அமர்வில் ஒரு நீதிபதியாக அவரும் இருப்பதோ தவறானது. யாரொருவரும் தனக்கு எதிரான வழக்கில் தானே நீதிபதியாக இருக்க முடியாது என்பது மிகவும் அடிப்படையான இயற்கை நீதிக் கோட்பாடு. எனவே, வழக்கை 5 நீதிபதிகள் அமர்வுக்கு விடவேண்டும் என்று கோரினர்.
இது மிகவும் கவலைக்குரிய விசயம்தான் என்று கூறிய நீதிபதி செல்லமேஸ்வர், தீபக் மிஸ்ராவையும் உள்ளிட்ட 5 மூத்த நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நவ, 13 அன்று இது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும், சி.பி.ஐ. தன் வசமுள்ள ஆவணங்கள் அனைத்தையும் இந்த அமர்விடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நவ, 9 ஆம் தேதியன்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை முடக்கும் நோக்கத்துடன் மேற்படி வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்டார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. அதில் இரண்டு நீதிபதிகள் விலகிக் கொள்ளவே, மீதமுள்ள 5 நீதிபதிகள் முன் விசாரணை தொடங்கியது. இந்த 5 பேரில் 3 பேர் தனியார் கல்லூரிக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தவர்கள். பணியில் உள்ள நீதிபதிகளில் மூத்தவர்களைக் கொண்டு இந்த அமர்வு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வேறு இரண்டு நீதிபதிகள் ஒரு தீர்ப்பினை வழங்கியிருக்கும்போது, அதனை மீளாய்வுக்கு உட்படுத்துவது என்றால், அப்படி உட்படுத்தும் அமர்வில் அந்த இரு நீதிபதிகளும் இருக்க வேண்டும் என்பது விதி. அதுவும் மீறப்பட்டது.
விசாரணை தொடங்கியது. மனுதாரராகிய பிரசாந்த் பூஷணைப் பேசவிடாமல், செட்டப் செய்து அழைத்து வரப்பட்ட ஒரு வழக்கறிஞர் கூட்டம் ஊளையிட்டது. நீதிமன்றம் அவமதிக்கப்பட்டு விட்டதாகவும் பிரசாந்த் பூஷணின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பேசினர்.
முதல் தகவல் அறிக்கை உங்களைக் குறிப்பிடுவதால், நீங்கள் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று தீபக் மிஸ்ராவிடம் கூறினார் பிரசாந்த் பூஷண். என் பெயர் எப்.ஐ.ஆரில் இல்லை. உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பேன் என்றார் தீபக் மிஸ்ரா. ஒரு நீதிபதி மீது யாரும் எப்.ஐ.ஆர். போட முடியாது எனும்போது, அப்படி எப்.ஐ.ஆர். போட்டிருந்தால், அதுவே நீதிமன்ற அவமதிப்பு குற்றம் என்றார் இன்னொரு நீதிபதி அருண் மிஸ்ரா.
அப்படியானால் என் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுங்கள் என்றார் பிரசாந்த் பூஷண். அதற்குரிய அருகதைகூட உங்களுக்குக் கிடையாது என்றார் தீபக் மிஸ்ரா. கூட்டம் ஊளையிட்டது. மனுதாரராகிய என்னைப் பேசவிடாமலேயே வழக்கை நடத்துகிறீர்கள். உங்கள் விருப்பம் போலத் தீர்ப்பு எழுதிக்கொள்ளுங்கள். நான் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுகிறேன் என்று கூறி, வெளியேறினார் பிரசாந்த் பூஷண்.
எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பதைத் தலைமை நீதிபதியைத் தவிர வேறு யாரும் முடிவு செய்ய முடியாது என்று கூறி, இவ்வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட வேறு ஒரு அமர்வை நியமித்தார் தலைமை நீதிபதி. அத்தோடு நிற்காமல், சி.பி.ஐ. விசாரித்துவரும் வழக்கில் தங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று விசாரணை தொடங்கு முன்னரே அதன் மீது தீர்ப்பும் வழங்கி விட்டார்.
தீபக் மிஸ்ராவால் நியமிக்கப்பட்ட அந்த 3 நீதிபதிகள் அமர்வு, சி.ஜே.ஏ.ஆர். அமைப்புக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சொன்னாலே தண்டிப்போம் என்று மிரட்டுவதற்காகவே இந்த உத்தரவு என்று இதனை விமரிசித்திருக்கிறார் பிரசாந்த் பூஷண்.
தீபக் மிஸ்ரா மீதான ஊழல் வழக்கு என்பது புதியதல்ல. அவர் மீது நிலமோசடிக் குற்றச்சாட்டு இருக்கிறது. சென்ற ஆண்டு தற்கொலை செய்து கொண்ட அருணாசல பிரதேச முதல்வர் கலிகோ புல், அன்றைய தலைமை நீதிபதி கேஹர், தீபக் மிஸ்ரா ஆகியோர் 49 கோடி ரூபாய் கொடுத்தால், சாதகமாகத் தீர்ப்பு வழங்குவதாகப் பேரம் பேசினர் என்று தனது தற்கொலைக் கடிதத்திலேயே எழுதியிருக்கிறார். அதற்கு முந்தைய தலைமை நீதிபதி தத்து மீது ஜெ. வுக்குப் பிணை வழங்கிய ஊழல், கர்நாடகத்தில் அவரது முறைகேடான சொத்துகள் குறித்து கட்ஜு எழுப்பிய குற்றச்சாட்டுகள் ஆகியவை உள்ளன. கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
நீதிபதிகள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று கேட்ட குற்றத்துக்கே 25 லட்சம் அபராதம் விதிக்கப்படும்போது, அமித் ஷா வழக்கில் விசாரணை நடத்திய லோயாவுக்கு மரணம் விதிக்கப்பட்டதில் வியப்பில்லை. மோடிக்கு எதிராகத் தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதிக்கு மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலும் ஆச்சரியமில்லை.
இதுதான் நீதித்துறையின் யோக்கியதை. இந்த நீதிமன்றம் சோரபுதின் வழக்கு விசாரணை விவரத்தையும் ஆதித்யநாத் வழக்கு விவரத்தையும் வெளியிடக்கூடாது என்று ஊடகங்களுக்குத் தடை விதிப்பதில் வியப்பிருக்கிறதா? அல்லது செவிலியர் போராட்டம், போக்குவரத்து ஊழியர் போராட்டம், அரசு ஊழியர் போராட்டம் உள்ளிட்ட தொழிற்சங்க போராட்டங்களுக்குத் தடைவிதிப்பதிலும், மிரட்டுவதிலும் வியப்பிருக்கிறதா? வாயிற்புறம் வழியே நுழைந்து மக்களை ஒடுக்குகிறது மோடி அரசு. நீதிமன்றத்துக்கு கொல்லைப்புற வழி.
சமீபத்தில் நடைபெற்ற தேசிய சட்ட தினக் கூட்டத்தில் பேசிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அணுகுண்டுப் பொத்தானை அழுத்தும் அதிகாரத்தைப் பெற்றிருக்கும் பிரதமருக்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் இருக்கக்கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.
நீதிபதிகளை அணுகுண்டுக்கு ஒப்பிட்டுப் பேசிய நகைச்சுவையை விஞ்சியது தீபக் மிஸ்ராவின் பதிலில் பொதிந்திருந்த நகைச்சுவை. குடிமக்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதற்காகத்தான் நீதித்துறை சுதந்திரத்தை வலியுறுத்துவதாக அடக்கமாகப் பதிலளித்தார் மிஸ்ரா. பிரசாத் அறக்கட்டளைக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய குடிமக்களின் சுதந்திரம் குறித்து அவர் சொல்லியிருக்கக்கூடும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. இரண்டு வேட்பாளர்களைக் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. ஒருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு.நாகராஜன். மற்றொருவர், அ.தி.மு.க. என்ற பெயரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் பி டீமைச் சேர்ந்த மதுசூதனன்.
மதுசூதனன் பா.ஜ.க.வின் ஆசிபெற்ற வேட்பாளர் மட்டுமல்ல, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆசிபெற்ற வேட்பாளரும்கூட. இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கிய கையோடு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு நாளும் குறித்த அதனின் வேகத்தைக் கொண்டே இதனை யாரும் புரிந்துகொள்ளலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் ஆணைய அதிகாரிகள் அ.தி.மு.க.வின் பூத் ஏஜெண்டுகளைப் போலத்தான் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு படிவங்களில், அ.தி.மு.க.வின் பொதுச் செயலர் ஜெயா வைத்ததாகக் கூறப்படும் கைநாட்டை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திலிருந்து வந்த கட்டளைப்படி, எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டோம் என ஒப்புதல் வாக்குமூலமே அளித்திருக்கிறார், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.
ஏப்ரலில் நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்ததற்கு பணப் பட்டுவாடாவா காரணம்? அதுவொரு சாக்கு, அவ்வளவே. அத்தேர்தலில் பா.ஜ.க.வின் ஆசிபெற்ற மிக்சர் பன்னீர் அணி வெற்றிபெற முடியாது என்று தெரிந்தவுடன், அத்தேர்தலை ரத்து செய்வதற்கு டெல்லி சுல்தான் மோடிக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. அதையொட்டி சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அந்த ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணப்பட்டுவாடா விவகாரத்தைக் காரணமாக வைத்து அத்தேர்தலை ரத்து செய்தது, தேர்தல் ஆணையம். அந்த விவகாரத்தில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தால் குற்றஞ்சுமத்தப்பட்ட விஜய பாஸ்கர், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் இப்பொழுது மோடியின் பாதாரவிந்தங்களில் சரணடைந்து, அவரது அனுக்கிரஹத்தைப் பெற்றுவிட்டதால், அந்த வழக்கைத் தேர்தல் ஆணையமும் அமலாக்கத் துறையும் மறந்தேவிட்டன.
ஆர்.கே. நகர் தொகுதியில் இன்னும் 5,000 போலி வாக்காளர்களை நீக்காமல் இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் மீது தி.மு.க. தொடுத்துள்ள வழக்கும், நடிகர் விஷாலின் வேட்பு மனுவைப் பின்னிரவு நேரத்தில் தள்ளுபடி செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் சதியும் அ.தி.மு.க. மதுசூதனனை ஜெயிக்க வைக்க மத்திய பா.ஜ.க. அரசும் தேர்தல் ஆணையமும் எந்த எல்லை வரையும் செல்லக்கூடும் என்பதை எடுத்துக்காட்டிவிட்டன.
இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கி தீர்ப்பளித்துள்ள தேர்தல் ஆணையம், அத்தீர்ப்பில் அந்த அணிக்கு 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. தமிழகத்தைச் சட்டவிரோதமான முறையில் ஒரு சிறுபான்மை அரசு ஆண்டு வருவதை ஒப்புக்கொண்டுள்ள வாக்குமூலம் இது. இந்தச் சட்டவிரோத ஆட்சியை எப்படியாவது காப்பாற்றிக் கரை சேர்ப்பதற்கு துக்ளக் குருமூர்த்தியின் தலைமையிலான தமிழகப் பார்ப்பனக் கும்பலும், மோடி அரசும் பலவிதமான முறைகேடுகளையும் அதிகார அத்துமீறல்களையும் நடத்தி வருகிறார்கள்.
தமிழகச் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திட அடாவடித்தனமாக மறுத்துவருகிறார், கவர்னர். இதோடு தொடர்புடைய மூன்று வழக்குகளை விசாரித்துவரும் சென்னை உயர்நீதி மன்றம் வாய்தாவுக்கு மேல் வாய்தா கொடுத்தே எடப்பாடி அரசைக் காப்பாற்றி வருகிறது. தினகரன் பக்கமுள்ள எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி பக்கம் இழுத்துவிடும் நோக்கத்தோடு, சசிகலா குடும்பத்தினர் மீது ரெய்டு நடவடிக்கைகள் அடுத்தடுத்து ஏவப்படுகின்றன.
ஜெயாவின் பினாமிதான் சசி குடும்பம் என்ற உண்மை சொத்துக்குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகளின் வழியே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தியோ, “மன்னார்குடியின் சொத்துக்குவிப்புக்கு ஜெயலலிதா உடந்தை என்கிற அடிப்படையில்தான் நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்குத் தண்டனை கொடுத்தார். ஜெயலலிதா தன் பெயரில் தனக்குச் சொத்து சேர்த்தார் என்பதற்காக அல்ல” எனக் கூசாமல் புளுகி வருகிறார். (துக்ளக், 22.11.2017) இந்தப் புரட்டின் மூலம் கொள்ளைக்காரி ஜெயாவை அப்பாவியாகக் காட்டிவிட முயலுகிறார், அவர்.
இது மட்டுமா, ஜெயாவின் கலெக்சன் ஏஜெண்டுகளாகக் காலந்தள்ளிய பன்னீரையும், எடப்பாடியையும் உத்தமர்களாகக் காட்டும் நோக்கில், “எடப்பாடியும் ஓ.பி.எஸ்-ம் முயன்று அ.தி.மு.க. அரசில் நடக்கும் ஊழலைப் பெருமளவு குறைத்தால்தான் சின்னத்தால் அ.தி.மு.க.வுக்குப் பலன் கிடைக்கும்” என்றும் உபதேசம் செய்கிறார். (துக்ளக், 06.12.2017)
ஜெயா உயிரோடு இருந்த காலத்திலேயே அ.தி.மு.க.வின் ஐவரணி என அழைக்கப்பட்ட பன்னீர், எடப்பாடி உள்ளிட்ட கும்பல் மட்டும் ஏறத்தாழ 30,000 கோடி ரூபாய் வரை கொள்ளையடித்திருக்கக்கூடும் என அப்பொழுதே செய்திகள் வெளியாகின. ஐவரணியில் ஒருவராக இருந்த வைத்திலிங்கம், பன்னீரின் கூட்டாளி சேகர் ரெட்டி, சேகர் ரெட்டியின் கூட்டாளி முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகனராவ், ஐவரணியின் பினாமியாகச் செயல்பட்ட கரூர் அன்புநாதன் உள்ளிட்டுப் பலரின் வீடுகளில் ரெய்டுகள் நடத்தப்பட்டன.
இவை அனைத்திற்கும் மேலாக, எடப்பாடியின் அரசே, தலைக்கு இத்துணை கோடி என கூவத்தூர் ரிசார்டில் பேரம் பேசப்பட்டு உருவாக்கப்பட்ட அரசுதான். முதலமைச்சரான எடப்பாடி மீதே பணப் பட்டுவாடா குற்றத்தைச் சுமத்தியிருக்கிறது, வருமான வரித்துறை. இதுதான் கடைசி ஆட்டம் என்பதால் முடிந்தவரை கொள்ளையிடுவது என்பதைக் கொள்கையாகவே கொண்டு செயல்படுகிறது, இந்த அரசு. புதிதாக 70 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு, எடப்பாடி அரசு எந்த அளவிற்குத் தமிழகத்தை மொட்டையடிக்கும் வெறியோடு செயல்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
திட்டத்தில் ஊழல் என்பது போய் ஊழலுக்காகவே திட்டம் என்பதை நிலைநாட்டியவர் ஜெயா. அம்மா வழியில் செல்வதாகக் கூறிவரும் எடப்பாடி அரசு அதில் புதிய வரலாறையே படைத்துவருகிறது. 1,000 கோடி ரூபாய் தார் ஊழல், 400 கோடி ரூபாய் குடிமராமத்து ஊழல், 39 கோடி ரூபாய் குட்கா ஊழல், 350 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சி சாலை மேம்பாட்டு ஊழல், வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல், சத்துணவுப் பணியாளர், சிறப்பு மருத்துவர்கள் நியமனத்தில் நடந்துள்ள முறைகேடுகள், நெடுஞ்சாலை துறையில் அயல்பணி ஒப்படைப்பில் நடந்துள்ள ஊழல் எனத் தினந்தோறும் ஒரு ஊழல் அம்பலமாகி, வெட்க மானம் ஏதுமற்ற ஒரு பிடுங்கித்தின்னி கும்பலிடம் தமிழகம் சிக்கியிருப்பது தெரிய வருகிறது.
எடப்பாடி-பன்னீர் கொள்ளையர்களிடம் தமிழகத்தை அவுட் சோர்ஸ் செய்திருக்கிறது, மத்திய பா.ஜ.க. அரசு. சசிகலா இல்லாத அ.தி.மு.க.தான் நாட்டுக்கும் தமிழகத்துக்கும் நல்லது என இந்த அசிங்கத்திற்குக் கூச்சமேயின்றிப் பட்டுக்குஞ்சம் கட்டுகிறார், குருமூர்த்தி.
எம்.ஜி.ஆர்., அவருக்குப் பின் ஜெயாவின் வழியாகத் திராவிட அரசியலை வீழ்த்தித் தமிழகத்தை மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முயன்றுவந்த தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல், தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை அருமையானதொரு வாய்ப்பாகக் கருதுகிறது. எடப்பாடி-பன்னீர் கும்பலைத் தமது கைக்குள் வைத்துக் கொள்வதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் மறைமுக ஆட்சியை நடத்துவது மட்டுமின்றி, அ.தி.மு.க.வின் முதுகில் சவாரி செய்வதன் மூலம் பா.ஜ.க.விற்குத் தமிழகத்தில் ஒரு அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வது என்ற இரட்டை நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ள முயன்று வருகிறது, அக்கும்பல்.
இந்தக் கூட்டணி தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டுள்ள சவால். இந்தக் கும்பலை ஆர்.கே. நகர் தொகுதியிலிருந்து மட்டுமல்ல, தமிழகத்திலிருந்தே விரட்டியடிப்பதன் மூலம்தான் தமிழகத்தில் நடந்துவரும் அரசியல் அட்டூழியங்களுக்கும் அராஜகங்களுக்கும் முடிவு கட்ட முடியும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. இரண்டு வேட்பாளர்களைக் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. ஒருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு.நாகராஜன். மற்றொருவர், அ.தி.மு.க. என்ற பெயரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் பி டீமைச் சேர்ந்த மதுசூதனன்.
2. மீனவர் துயரம்: உறங்காதே தமிழகமே, போராடு!
நடுக்கடலில் தத்தளிக்கும் தம் சொந்தங்களை மீட்பதற்கு இவர்களிடம் மன்றாட வேண்டியிருந்த போதிலும், இந்தக் கும்பல் வெளியிடும் நிவாரணங்கள் மற்றும் வாக்குறுதிகளின் பொய்மையை மீனவ மக்கள் அம்பலப்படுத்துகிறார்கள். உண்மை விவரங்கள் அதனினும் கூடுதலாக இவர்களை அம்பலப்படுத்துகின்றன.
3. நீதித்துறை நாட்டாமை: எதிர்த்து நில்!
ஊழல், அதிகார முறைகேடுகள், அண்டிப்பிழைக்கும் கைக்கூலித்தனத்தால் அழுகி நாறும் நீதித்துறைக்கு, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களைக் கேள்வி கேட்கும் தகுதி கிடையாது.
4. ராஜீவுக்கு போஃபர்ஸ்! மோடிக்கு ரபேல்!!
ஒண்ணுக்கு இரண்டாக விலை கொடுத்து ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது, மோடி அரசு.
5. பணிந்தால் பதவி! மறுத்தால் மரணம்!!
சோராபுதீன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமித் ஷா விடுவிக்கப்பட்டதன் பின்னே நடந்துள்ள சதிகளை, அவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் அம்பலப்படுத்துகிறது.
6. வங்கி மறுமுதலீடு: தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி!
வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த மறுக்கும் தரகு முதலாளிகளின் சட்டையைப் பிடிப்பதற்குப் பதிலாக, அரசு கஜானாவைச் சூறையாடுகிறார், மோடி.
7. இன்றைய தொழிலாளர்களின் நிலைமை 18, 19-ஆம் நூற்றாண்டிலே இருந்த நிலைமைதான். இதற்கு மாற்று சோசலிசமே!
– தோழர் எஸ்.பாலன், வழக்கறிஞர், பெங்களூரு உயர்நீதி மன்றம்
8. கார்ல் மார்க்சின் மூலதனம்: மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு!
– தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
9. மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம்! சகோதரர்களாக வாழக் கற்றுக் கொடுக்கிறது சோசலிசம்!!
– தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க.
10. அக்டோபர் புரட்சி: உலகின் விடிவெள்ளி!
– மும்பையிலிருந்து வெளிவரும் “ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி” இதழின் வெளியீட்டாளர் தோழர் ரஜனி எக்ஸ். தேசாய் அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளையின்
– 14 வது ஆண்டுவிழா கருத்தரங்கம் !
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளையின் 14 வது ஆண்டு விழா கருத்தரங்கம், 2017 டிசம்பர் 9 அன்று மாலை 5.00 மணியளவில் மதுரை கோ.புதூர் டி.நொபிலி அரங்கத்தில் நடந்தது.
கருத்தரங்கத்திற்குத் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலைவர் பேரா அ.சீனிவாசன் தலைமையேற்று உரையாற்றினார். “ இந்திய அரசியல் சட்டம் நமக்குப் பேச்சுரிமை, எழுத்துரிமை எனப் பல அடிப்படை உரிமைகளை வழங்கியிருந்தாலும் ஒரு பேனர் வைக்க அனுமதி கிடைப்பதில்லை. அரசியல் சட்டம் வழங்கியுள்ள எந்த அடிப்படைச் சட்டத்தையும் இந்திய அரசு குறிப்பாக மோடி அரசு மதிப்பதே இல்லை.
இது மக்களுக்கான அரசு இல்லை. கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கின்ற அரசாகவே இருக்கிறது. பல்வேறு மொழிகள் , பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்ற இந்தியாவில் ஒற்றைக் கலாச்சாரமும், ஒற்றை மொழியும், ஒற்றை மதமும் எப்படி சாத்தியமாகும்? இதனால் முஸ்லிம்கள், கிருத்தவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கும், துன்பங்களுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மாநில உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. தமிழ் நீதிமன்ற மொழியாக இல்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜஸ்தானி மொழியும், பீகார், உ.பி.யில் இந்தி நீதிமன்ற மொழியாக இருக்கும்போது செம்மொழியாகியத் தமிழுக்கு நீதிமன்றத்தில் இடமில்லை. பல போராட்டங்கள் நடத்தியும் விடிவு பிறக்கவில்லை. தமிழர்களின் உரிமைகளுக்காக லட்சக்கணக்கான மக்களைத் திரட்டிப் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை”, என்று முடித்தார் பேரா. அ. சீனிவாசன்.
கருத்தரங்கில் தொடக்க உரையாற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே .வாஞ்சிநாதன் பேசிய போது, “ஒக்கி புயலால் தமிழகத்து மீனவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். 10 நாட்கள் ஆகியும் காணாமல் போன ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை தெரியவில்லை. உலகின் பலம் பொருந்திய கடற்படை விமானப்படை நம்மிடம் இருக்கிறது. உயர் தொழில் நுட்பம் இருக்கிறது. ஆனாலும் மீனவர்களை காப்பாற்ற இந்த அரசுக்கு வக்கில்லை. நம் கண்ணெதிரே அவர்கள் துடிதுடித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் இ .பி.எஸ்-ஸும் போகவில்லை. பிரதமர் மோடியும் போகவில்லை. எதுவும் பேசவும் இல்லை.
எத்தனையோ வழக்குகளைத் தாமாகவே முன்வந்து எடுக்கின்ற நீதிமன்றங்கள் இந்த அநீதியைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. கடமை தவறிய எந்த அதிகாரியையும் தட்டிக் கேட்க முடியவில்லை. இந்தக் கட்டமைப்பு எல்லாம் எதற்கு இருக்கிறது. இந்தியாவில் சாதி அமைப்பு இருக்கிறது. இதைத் தீர்க்க அரசியல் அமைப்புச்சட்டமும் இருக்கிறது. அதைப் புனிதம் போல் பேசுகின்றனர். ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் சாதியத்தை அது தீர்த்து விட்டதா? தீர்க்கமுடியுமா?
சாதிய ஏற்றத்தாழ்வுகளும் மத ஒடுக்குமுறைகளும் தொடரத்தானே செய்கிறது. இந்திய அரசியல் சட்டம் என்பது சாதியத்தை, பார்ப்பனியத்தை, மதத்தைப் பாதுகாக்கவே செய்கிறது. அதனால்தான் டாக்டர்.அம்பேத்கர் “நான் ஒரு குதிரையைப் போல் பயன்படுத்தப்பட்டேன். அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன்”என்று கூறினார்.
கருத்துரிமைகள் இங்கே நசுக்கப்படுகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. மணிப்பூரில் இந்திய சிறப்புக்காவல் படை 1500 -க்கும் அதிகமான மக்களை சுட்டுக் கொன்றுள்ளது. உச்ச நீதிமன்றமும் இந்த மனித உரிமை மீறல்களைக் கண்டுகொள்வதில்லை. 90 சதம் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான பேராசிரியர் சாயிபாபாவை எந்தவிதமான உறுதியான சாட்சியும் இல்லாமலேயே மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி சிறையில் அடைத்தனர். பிணை மறுக்கப்படுகிறது. ஒருமிருகத்தைப் போல கேவலமாக நடத்தப்படுகிறார்.
அதே வேளையில் பல குண்டு வெடிப்புகளில் பலரையும் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அசீமானந்தா விடுதலை செய்யப்படுகிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் வழக்கில் மனுதர்மத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. பல தீர்ப்புகள் மதக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே சொல்லப்படுகிறது. எனவே மாற்று ஓன்று தேவைப்படுகிறது”, என்றார்.
“நொறுக்கப்படும் மனித உரிமைகள் பறிக்கப்படும் ஊடக சுதந்திரம்” என்ற தலைப்பில் ஊடகவியலாளர் திரு.இரகுமான் ஆற்றிய உரை ;
“ஊடகங்களுக்கு 24 மணி நேரமும் செய்திகளை ஒளிபரப்ப செய்திகள் தேவைப்படுகிறது. ஆனால் செய்தி பற்றாக்குறையாகவே இருக்கிறது. காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு, தமிழக மீனவர்கள் இலங்கை படைகளால் கைது என்று ஒருநாள் தொடங்கும்போதே மனித உரிமை மீறலோடே தொடங்குகிறது.
யாரையாவது சுட்டு கொன்றுவிட்டு அவரை தீவிரவாதி என்று முத்திரை குத்துகிறது அரசு. ஆனால் ராணுவத்தில் ஆண்டுதோறும் 1500 பேருக்கும் அதிகமானோர் மாண்டு போகின்றனர். அதில் தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. மன அழுத்தத்தால் மரணம் அடைந்தவர்களும் உண்டு. எல்லாவற்றிக்கும் மேலாக சுட்டு கொல்லப்பட்டவர்களும் உண்டு. மிகப் பெரிய மனித உரிமை மீறல்கள் அங்கேயும் நடக்கிறது. கன்னியாகுமரியில் காணாமல் போன 1000 மீனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், நடுக்கடலில் சிக்கியவர்களை மீட்கவும் அரசோடு போராடவேண்டியுள்ளது.
காஷ்மீரில் ஒருவரை ஜீப்பில் கட்டி ராணுவமே அவரை மனிதக்கேடயமாக்கியது, டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய ஒரு பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அடித்த போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இந்திய சிறைகளில் 50 சதவீதத்துக்கும் மேலான கைதிகள் விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகள் வாடுகின்றனர். ஆண்டுக்கணக்கில் வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன. ஆனால் பாலியல் கொலை செய்தவன் 90 நாட்களில் வெளியே வந்து விடுகிறான். எல்லாத் துறைகளிலும் மனித உரிமைமீறல் நடக்கிறது. காவல்துறையில் மிக அதிகமாக நடக்கிறது. காவல்துறையை சீர்திருத்துவது, நவீனமயப்படுத்துவது என்று அரசு பேசினாலும் நவீனமயப்படுத்தும் வேலையை மட்டுமே செய்கிறார்கள். சீர்திருத்துவது இல்லை.
காவல் துறை மனித உரிமைகளை மீறவேண்டும் என்றே விரும்புகிறது. மாட்டுக்கறி வைத்திருந்தால் 10 ஆண்டு சிறை என்று சட்டம் இயற்றும் அரசு, கஞ்சா பயிரிடவும், சாராயம் விற்கவும் அனுமதிக்கிறது. இந்த நிலையில் மக்கள் உரிமை என்று பேசுவதில் என்ன பொருள் இருக்கமுடியும். அரசியல் சட்டம் மனித உரிமைகளை வழங்குவதாகக் கூறினாலும் உண்மை அப்படி இல்லை. அது ஒரு தற்காலிக தீர்வாக இருக்கலாம். முதலாளி தொழிலாளி சமூக உறவுகளின் துணை விளைவு தான் மனித உரிமை. எனவே உண்மையான தீர்வு என்பது சமுதாய மாற்றத்தில் தான் இருக்கிறது.
ஊடக சுதந்திரம் என்பது இங்கே கிடையாது. அது வர்த்தக உறவுக்கு உட்பட்டதாகவும், வணிகநோக்கம் உடையதாகவும இருக்கிறது. அது சொல்லும் ஒவ்வொரு செய்தியிலும் வர்த்தகம் தான் இருக்கிறது. வர்க்கநலன்களை மீறியதாக அது இருக்க முடியாது. சமுதாய உறவுகளின் விளைவுகளில் ஊடகமும் ஓன்று தான். எனவே ஊடக சுதந்திரம் என்ற ஒன்று இல்லாத போது இதில் பறிப்பதற்கு என்ன இருக்கிறது. உண்மையில் ஊடகங்கள் பேசமுடியாததை வினவு போன்ற இணைய தளங்களும், சமூக வலைத்தளங்கள் தான் பேசுகின்றன. சமூகத்தை தோலுரித்து அவைகளே காட்டுகின்றன. எனவேதான் அதைக் கட்டுப்படுத்தவும் அதன் சுதந்திரத்தைப் பறிக்கவும் புதிய சட்டங்களை அரசு கொண்டுவர முனைப்போடு செயல்படுகிறது. அதை முறியடிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.” எனப் பேசினார்.
நசுக்கப்படும் கருத்துரிமை நிலைகுலையும் நீதித் துறை – நமது கடமை என்ன ? என்ற தலைப்பில் திரு.அரிபரந்தாமன்,நீதிபதி [ஓய்வு ] சென்னை உயர்நீதி மன்றம் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்.
இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழுவில் இருந்தவர்கள் எவரும் அனைத்து மக்களும் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் இல்லை. படித்தவர்கள், சொத்துடைய வர்க்கங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவே இருந்தனர். அம்பேத்கர் எல்லோராலும் அறியப்பட்டவராக இருந்தார். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சமூகம், பொருளாதாரத் துறைகளில் சமத்துவத்தைப் பேசியது. ஆனால் நடைமுறை வேறாக இருக்கிறது.
40 சதம் இடங்கள் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ளது. உச்ச நீதிமன்றம் நீதிபதிகளைப் பரிந்துரை செய்து பல மாதங்கள் ஆகியும் மத்திய அரசு நியமனம் செய்யவில்லை. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தாக்குர் இத்தகைய நிலை தொடர்வதைக் குறிப்பிட்டுப் பிரதமர் மோடி முன்னிலையில் பொது மேடையிலேயே அழுதார். ஆனால் அதற்குப் பின்பும் கூட அதை ஆதரித்து மிகப்பெரிய எழுச்சியை வழக்கறிஞர்களோ, மக்களோ நடத்தவில்லை என்பது தான் வருத்தம். நீதித் துறையில் மிகப்பெரிய தாக்குதல் என்பதே நியமன மறுப்பு தான் .
மற்ற துறைகளை விட நீதித் துறையில் தான் ஊழல் குறைவு என்று நம்புகிறேன். 40 வருடங்களுக்கு முன்னால் மாவட்ட நீதிபதிகள் மத்தியில் கூட ஊழல் இல்லை. ஆனால் இன்று தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல்வாதிகள் என்று சாந்திபூஷண் புகார் கொடுத்து 7 வருடங்கள் ஆகியும் வழக்கு இல்லை. ஊழலே இல்லாத நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று சொல்லமாட்டேன் என்று தலைமை நீதிபதி வர்மா கூறும் நிலையில் தான் இன்று நீதித்துறை இருக்கிறது. நீதித்துறையில் 20 சதம் பேர் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள்.
நாம் பலவற்றுக்கும் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறோம். ஆனால் சி.பி.ஐ.மதிப்பு குறைந்து பல காலமாகிவிட்டது. ஜெ., லல்லு மீது வழக்குப் போடும் சி.பி.ஐ. மத்திய அமைச்சர்கள் மீதும், நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுத்தது உண்டா? சுதந்திரமான அமைப்பு என்று சொல்லப்பட்ட சி.பி.ஐ , வருமானவரி துறை, தேர்தல் ஆணையம் இன்று சுதந்திரமானதாக இல்லை. இரட்டை இலை தீர்ப்பு வந்த மறு நாளே, ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்படுவதும் குஜராத், இமாச்சலப்பிரதேஷ் தேர்தல் தேதியை மத்திய அரசின் விருப்பம் அறிந்து அறிவிப்பதும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இல்லை என்பதையே புலப்படுத்துகிறது.
நீதித் துறையின் மீது அரசு பல வழிகளில் தாக்குதல் தொடுக்கிறது. “பொது நல வழக்கு என்ற பெயரில் நீதித் துறை ஆட்சி செய்ய முயற்சிக்கிறது” என்று தலைமை நீதிபதிக்கு முன்பே சட்ட அமைச்சரும் பொது நல வழக்குப் போடுவதில் உச்சநீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும் என்று பிரதம மந்திரி மோடி பேசுவதும் நீதித்துறையின் மீது அரசு தொடுக்கும் மற்றொரு தாக்குதலே ஆகும். நீதித் துறையில் தலையிடாதே என்று தலைமை நீதிபதி கூறமுடியாமல் மக்கள் உரிமைகளுக்காக நிற்கிறோம் என்றே அவரால் கூறமுடிகிறது. வேண்டாத நீதிபதிகள் தூக்கி எறியப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கோபால் சுப்பிரமணியம், லோயா, திப்சே என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.
கருத்துரிமையின் ஒரு பகுதி தான் ஊடக உரிமை, பேசும் உரிமை. ஆனால் இங்கே லஞ்சம் பற்றி பேசுவதற்கு, கூட்டம் போடுவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. மெழுகுவர்த்தி ஏந்தி ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினால், துண்டறிக்கை கொடுத்தால், மீத்தேனை எதிர்த்தால் குண்டர் சட்டம் பாய்கிறது. தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுகிறது. அவசர காலகட்டத்தில் பாதிக்கப்பட்டதைப் போலவே இப்பொழுதும் பாதிக்கப்படுகிறது. கவுரி லங்கேஷ் கருத்து சுதந்திரத்துக்காகப் போராடியதனால் கொல்லப்பட்ட போதும் மோடி கருத்துக் கூறவில்லை.
லவ் ஜிகாத் என்ற பெயரில் முஸ்லீம் ஒருவரை உயிரோடு எரித்து அதை வீடியோ எடுத்து பரப்பினர். எல்லோருக்கும் இது தான் கதி என்று இதன் மூலம் அறிவித்தனர். அக்லக் மாட்டுக் கறிக்காகக் கொலை செய்யப்பட்டபோது மோடி கண்டிக்கவில்லை, வருந்துகிறேன் என்றார். ஊனாவில் தலித் மக்கள் தாக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து எனக்கு வலிக்கிறது என்றார். இன்றைய சூழலில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகள் எல்லாம் பறிபோய்க்கொண்டிருக்கிறது. அரசு ஊழியர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என்று யார் போராடினாலும் அவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. எனவே நாம் எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒன்றிணைந்து அடக்குமுறைக்கு எதிராகப் போராடவேண்டும். வேறு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை
கிளைச் செயலாளர் திரு.லயனல் அந்தோணிராஜ் நன்றி உரையுடன் கருத்தரங்கம் நிறைவு பெற்றது.
கருத்தரங்கம் தொடங்குவதற்கு முன்னதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நெல் ஜெயராமன் தயாரித்த “மீத்தேன் அகதிகள்” என்ற 30 நிமிடக் குறும்படம் திரையிடப்பட்டது. மீத்தேன் திட்டத்தின் நாசகர விளைவுகளைப் பற்றி குறும்படம் சிறப்பாக விளக்கியது. கருத்தரங்கின் இறுதியில் கானல் நீர் குறும்படம் திரையிடப்பட்டது. கேரள மாநிலம் பிளாச்சிமடா கிராமத்திலிருந்து கோகோ-கோலா ஆலையை விரட்டியடித்த போராட்டங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. ஆலையை மூடவில்லை என்றால் அதை அடித்து நொறுக்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்று ஓர் இளம் பெண் கூறுவது உழைக்கும் மக்களின் உறுதியை எடுத்துக்காட்டியது.
கருத்தரங்கில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், தோழமை அமைப்பினர், பெண்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், இசுலாமியர்கள், ம.உ.பா மையத்தின் திருச்சி, கடலூர், தூத்துக்குடி கிளையைச் சார்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் புதிய இளைஞர்கள் பலர் என 350 பேர் கலந்து கொண்டனர்.
தகவல்: மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை, தொடர்புக்கு:94434 71003
1. இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் எது?
(பல நாடுகள் தங்களது பெயரில் இப்படி குடியரசு, சோசலிசம் போன்ற வார்த்தைகளை கொண்டிருந்தாலும் உண்மையில் அவைகளுக்கு எந்த பொருளுமில்லை.)
2. பிரிட்டிஷ் ஆட்சியின் போது சிலோன் என்ற அழைக்கப்பட்ட இலங்கை எப்போதிருந்து அதை துறந்தது?
(கி.பி 1505-ம் ஆண்டில் வந்த போர்ச்சுகீசியர்கள்தான் செல்லோ என்று இலங்கையை அழைத்தார்கள். இந்த வார்த்தையின் ஆங்கில மொழியாக்கமே சிலோன்.)
3. சங்க இலக்கியத்தில் இலங்கை எவ்வாறு அழைக்கப்பட்டது?
4. 1953 –ம் ஆண்டில் மக்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தினால் போது பிரதமர் டட்லி சேனனாயகே பதவி விலகியதற்கு காரணம் என்ன?
5. 1959-ம் ஆண்டில் பிரதமராக இருந்த பண்டாரநாயகே யாரால் கொல்லப்பட்டார்?
6. 2004 சுனாமியால் இலங்கையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை என்ன?
7. 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் இலங்கை அரசால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
(இந்த எண்ணிக்கை ஐ.நா நியமித்த நிபுணர் குழுவின் மதிப்பீடு)
8. இலங்கையின் பெரிய நதியான மகாவேலியின் நீளம் எவ்வளவு?
9. இலங்கையின் தேசிய விளையாட்டு எது?
10. இலங்கையில் எத்தனை மாகாணங்கள் (நிர்வாக அடிப்படையில்) உள்ளன?
11. கிழக்கு மாகாணத்தின் தலைநகர் எது?
12. இலங்கையில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் எவ்வளவு?
13. ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமியலான கியூபா நாட்டை இலங்கை அங்கீரித்த ஆண்டு எது?
(அதே ஆண்டில் சே குவேராவின் இலங்கை வருகைக்கு பிறகே அந்தநாடு கியூபாவை அங்கீகரித்தது.)
14. 1964-ம் ஆண்டு சிரிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தமும், 1974 சிரிமாவோ – காந்தி ஒப்பந்தமும் என்ன பிரச்சினைக்காக போடப்பட்டது?
15. எந்த ஆண்டில் கச்சத்தீவு இலங்கையிடம் கொடுக்கப்பட்டது?
16. ரிசர்வ் படைகளையும் சேர்த்து இலங்கையின் முப்படை எண்ணிக்கை எவ்வளவு
17. எந்த நாட்டோடு இலங்கை அதிக வர்த்தக உறவைக் கொண்டிருக்கிறது?
18. இலங்கையில் சிங்கள – தமிழ் மக்களின் மக்கள் தொகை விகிதம் – கீழ்க்கண்டவற்றில் எது சரி?
19. ஐ.நா சபையின் மனித உரிமை கவுன்சிலால் பதிவு செய்யப்பட்ட – இலங்கை பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காணாமல் போனோரின் எண்ணிக்கை எவ்வளவு?