8-வது அல்லது 9-வது வகுப்பில் இருந்தேன். எந்த வகுப்பு என நினைவில் இல்லையெனினும், அது மதிய வேளை, தமிழ் பாடத்திற்கான நேரம் என்பது மட்டும் நினைவில் உள்ளது. அன்று தமிழ் ஆசிரியை எதுகை மோனை பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். கவிதைகளில் அவற்றின் பயன்பாட்டினைப் பற்றி பேசும் போது, எனக்குள் “நாமளும் ஒரு கவிதை எழுதினா என்ன” என சட்டென ஒரு எண்ணம். அன்று வீட்டுக்கு திரும்பிய உடன், ஒன்று எழுதவும் செய்தேன். அந்த ‘கவிதை’ இன்றும் எப்படி நினைவில் உள்ளது என்பது புரியாத புதிர்.
எழுதி முடித்த உடன், அப்படி ஒரு அளவு கடந்த மகிழ்ச்சி! அப்பொழுது எனக்கு தெரிந்ததெல்லாம், ‘கவிதை என்பது ஒரே மாதிரியாக ஒலிக்கும் சொற்களில் முடியும் நான்கு வரி கொண்ட சொற்றொடர்’. அந்த விதத்தில், ‘நாமும் ஒன்று எழுதி விட்டோம்’ என்ற களிப்பு.
அம்மா அப்பாவிடம் காட்டி மகிழ்ந்தாலும், மிஸ் இடம் காட்டுவது ஒன்று மட்டுமே என் குறிக்கோளாக இருந்தது.
பொழுதும் விடிந்தது…பள்ளியினுள் நுழைந்த உடன், தமிழ் ஆசிரியையை பார்க்க விரைந்தேன். என் எழுத்துக்களை படித்த படியே, அவரின் முக பாவனை சற்றே மாறியது.
“பிடிக்கலையோ…இல்ல இதெல்லாம் ஒரு கவிதையானு நினைக்கறாங்களோ”, என்று கேள்விகள் சரமாரியாக மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்க, “தொடர்ந்து தமிழ் படிப்பல்ல அனு; இதுமாதிரி நெறைய எழுது; எழுத எழுத புது புது சொற்கள் பயன்படுத்துவ…ஆனா எழுதறத கைவிடாத”, என்றார், ஒரு சோகமும் ஏக்கமும் கலந்த குரலில்.
எனக்கு அதற்கான பொருள் விளங்கவில்லை, பதினொன்றாம் வகுப்பு வரும் வரையில்.
பதினொன்றாம் வகுப்பில் என் இரண்டாம் மொழியை (second language) மாற்றிக்கொள்ள எல்லாப் பக்கத்தில் இருந்தும் அறிவுரைகளும், கட்டளைகளும் வந்த வண்ணம் இருந்தன.
“இல்ல…10 வருஷம் படிச்ச ஒரு மொழிய படிக்கறது ஈசி….இதுவே சமஸ்கிருதம் இல்ல பிரெஞ்ச்னா, அதுக்குன்னு தனியா மெனக்கெடனும். அந்த நேரத்துல இயற்பியல் இல்ல வேதியலில் கவனம் செலுத்தலாம்”, என்ற காரணத்தை கூறியபடி அனைவரின் வாயையும் அடைத்தேன்.
மொழி, கலாச்சாரம், சமூகம்
“பிரெஞ்ச் எடுத்தவன் எல்லாம் அப்ப முட்டாளா….அவன் மத்த பாடத்துல எல்லாம் நல்ல மார்க் வாங்கல”, என்ற பள்ளி முதல்வரின் யதார்த்தமான கேள்விக்கும், “எனக்கு அந்த ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்ல”, என கூறி மீண்டும் வாயடைப்பு. இதனால் அவரின் பார்வையில் ‘கெட்ட பொண்ணு ‘ ஆனதுடன், தமிழ் எடுத்த ஒரே காரணத்திற்காக அந்த வருடத்தின் ‘சிறந்த மாணவி’ பரிசையும் தவறவிட்டேன்.
பன்னிரெண்டாவது முடித்தேன்; ‘ நல்மதிப்பெண்கள் வாரி வழங்கும் மொழிகள்’ உதவியின்றி நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன்; பொறியியல் கல்லூரியிலும் இடம் பிடித்தேன்.
அன்று அனுபவசாலிகளை எதிர்க்க, அசாதாரணமான துணிச்சலை கொடுத்தது தமிழ் மொழியின் எளிமையும், “அத படிக்கறது ஒன்னும் கஷ்டமே இல்ல’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை எனக்குள் விதைத்த என் தமிழ் ஆசிரியை கிருஷ்ணவேணி அவர்களும் தான்.
வியக்கத்தக்க விஷயம் என்னவெனில், என் தாய் மொழியை காதலிக்க வைத்த தமிழ் ஆசிரியையின் தாய் மொழி தெலுங்கு.
பள்ளிக்காலத்தில், திருக்குறள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவேன், 10 மார்க் கேள்விகளுக்கு ‘200 சொற்களில் விடையளி அல்லது மனப்பாடப் பகுதியை அடிபிறளாமல் எழுது’ என்ற போதெல்லாம், மனப்பாடப் பகுதியையே விரும்பி எழுதினேன்.
அதற்கு காரணம், தமிழ் மொழி மீது இருந்த காதலாக மட்டும் இருந்திருக்க முடியாது. அது நிச்சயம் எனக்கு பிடித்த தமிழ் ஆசிரியைக்கு பிடிக்கவேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சிகளே!
இன்று திருமணமாகி இங்கு ஆஸ்திரேலியாவில் குடி உரிமை. புதிய இடம், புதிய மக்களுடன் தொடர்பு, மக்களுடன் பேசிப்பழக புதிய மொழி எனப் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. என் கணவன், சில நண்பர்கள் வழி பகுத்தறிவு சிந்தனைகளுக்கு அறிமுகம் கிடைத்தது. சாதியம், தலித் மக்களின் வாழ்க்கை அவலம், கடவுள் மறுப்பு பற்றிய மேடை பேச்சுகள் கணினியில் நிறைய கேட்க ஆரம்பித்தேன்.
ஆ ராஜா என்றவுடன் அனைவருக்கும் 2ஜி அலைக்கற்றை ஊழல் நினைவுக்கு வருவது போல், எனக்கு நினைவுக்கு வருவதெல்லாம், அவரின் சாதியம் பற்றிய ஒரு மேடைப் பேச்சும், அதனால் எனக்கு நிகழ்ந்த பல மனமாற்றங்களும். வினவு, கீற்று போன்ற வலைச்சரங்களும், ‘புதுமைப்பித்தன் கதைகள்’ போன்ற புத்தகங்களும் படிக்க ஆரம்பித்தேன்.
“பொண்ணுங்க ஹேப்பியாதான இருக்கோம்…பெண் விடுதலை, பெண்ணடிமை எல்லாம் தேவையில்லாத வெட்டிப்பேச்சு”,
“ஒரு சூப்பர் பவர் இல்லேனா எப்படி…யாருக்கு என்ன கெடைக்கணும்னு அவன் decide பண்றான்”,
“பிராமின்ஸ் நல்ல மார்க் எடுக்கறாங்கனா, அது அவங்க ஜீன்கள்ள இருக்கு”,
“குளோபலைசேஷன் மட்டும் இல்லேனா, சைனீஸ் உணவு, வெஸ்டர்ன் உடை எல்லாம்…நமக்கு ஒரு கனவாவே இருந்திருக்கும்”,
போன்ற ஆபத்தான, அபத்தமான பல விஷ(ய)ங்கள், தவிடுபொடி ஆனது. சமூகம் பற்றிய என் பார்வையை பகிர்ந்துக்கொள்ள ஒரு வலைச்சரம் ஆரம்பிக்கும் ஆர்வத்தையும் தூண்டியது; பிதற்றல் பிறந்தது.
தாய் மொழி ஆனபோதிலும், அம்மொழியை விரும்பிப் படிக்கவும், அதை தொடர்ந்து படிக்கவும், எழுதவும், உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கவும் வழிவகுத்த என் தமிழ் ஆசிரியை கிருஷ்ணவேணி அவர்களுக்கு என் நன்றிகள். 15 வருடங்கள் பக்கம் ஆகி விட்டது. அடுத்த முறை இந்தியா வரும் போது, நிச்சயம் அவர்களை சந்திக்க வேண்டும்.
என் தமிழ் ஆசிரியை பற்றிய ஒரு பதிவு எழுத ஒரு சில முறை தோன்றிய போதிலும், வினவு தளத்தின் இந்த புது முயற்சியே அது நிறைவேற வழிவகுத்தது. நன்றி வினவு!
யாருக்குத் தெரியும்….இது மாதிரியே பல தமிழ் ஆசிரியர்கள் இருந்தால், “we speak only English”, என பெருமையாய் மார்தட்டிக்கொள்ளும் தமிழர்கள், சிறிது யோசிக்க வாய்ப்புகளுண்டு.
பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அந்த ராமச்சந்திர மூர்த்தி பிள்ளை வரம் தருகிறாராம். வசூலாகாத கடனெல்லாம் வசூலாகிறதாம், தீராத நோய்கள் தீர்கிறதாம். இவ்வாறாக வெளிவந்த பத்திரிகை செய்தியைக் கண்டதும் பத்தோடு ஒன்று என்று கடந்து செல்ல முடியவில்லை. நேரில் சென்று ’அற்புதங்களைப்’ பார்த்து விடுவது என்று தீமானித்தோம்.
பாசிஸ்ட்டு எம்.ஜி.ராமச்சந்திர மூர்த்திக்கு பக்தர்கள் கட்டிய கோயில்.
திருநின்றவூரிலிருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் இடது புறமாக 5 கிமீ தொலைவில் இருக்கும் கிராமம் நத்தமேடு. படு குக்கிராமமான இந்த ஊருக்கு ஒழுங்கான சாலை வசதி கூட கிடையாது. பகுதி அளவிற்கு விவசாயத்தைச் சார்ந்திருக்கும் மக்கள். நாங்கள் சென்ற போது கோவிலில் மந்திரங்கள் ஒலிக்க பூஜைகள் நடந்து கொண்டிருந்தது.
“ஓம் ஆயிரத்தில் ஒருவனே போற்றி! ஓம் இதய தெய்வமே போற்றி ! ஓம் இரட்டை இலை தந்தவா போற்றி, இதயக்கனியே நமக” – பூணூல் அணிந்த பார்ப்பனர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்த மந்திரங்கள் தான் இவை. குழம்பி விட்டீர்களா?
இது அயோத்தி ராமச்சந்திர மூர்த்தியின் கோயிலல்ல; நமது அண்ணாயிஸ்டு மற்றும் பாசிஸ்ட்டு எம்.ஜி.ராமச்சந்திர மூர்த்தியின் கோயில். கோயிலுக்கும் அதில் குடிகொண்டிருக்கும் ஆண்டவனுக்கும் ஓனரான கலைவாணனிடம் பேசினோம்,
“இந்த கோவிலை எங்கள் சொந்த பணத்தில் கட்டி பராமரித்து வருகிறோம். நான் ஆரம்பத்தில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் எல்லாம் கிடையாது. மற்ற ஹீரோ படங்களை விட இறைவன் படங்களை அதிகமா பார்ப்பேன். இறைவன் சி.எம் ஆக இருக்கும்போது கூட எனக்கு அவ்வளவா பிடிக்காது. ஆனா அவர் செத்த பின்னாடி தான் அவரைப் பற்றி பல விசயங்கள் கேள்விப்பட்டேன். அவர் ஏழைகளுக்கு நிறைய செய்திருக்கிறாராம். அதே மாதிரி சிகரெட் தண்ணி அடிக்க மாட்டாராம். இறைவன் நடிச்ச படங்கள்ல கூட அப்படி தவறாக நடிக்காமல் இருப்பதை ஒரு கொள்கையாக வச்சிருந்தாராம். மத்ததை விடுங்க சார், இந்த ஒரு காரணத்துக்காகவே இறைவனுக்கு கோவில் கட்டலாம் தானே. நான் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் ஸ்டிக்கர் வாங்கி மக்களுக்கு கொடுத்துக்கிட்டு தான் இருந்தேன். என் மனைவி தான் இப்படி செலவு செய்யிறதுக்கு பேசாம ஒரு கோயில் கட்டலாம் என்று ஐடியா குடுத்தாங்க”.
கலைவாணனின் ’வெற்றிக் கதைக்குப்’ பின்னே அவரது மனைவி இருந்திருக்கிறார். தனது நகைகளைக் கழட்டிக் கொடுத்து உதவியிருக்கிறார். சேர்த்த சொற்ப காசில் இறைவன் வாழ்ந்த புனித தலமான சென்னை நகரத்துக்குள் இடம் கிடைக்கவில்லை அதற்காக அவரது அவதார ஸ்தலமான இலங்கையின் கண்டிக்கா போக முடியும்? எனவே சென்னைக்கு வெளியே இடம் பிடித்து கோயிலைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். இதன்றி கலைவாணனின் பூர்வாஸ்ரமம் குறித்து விசாரித்து தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த கோவிலை வைத்து பிசினெசை பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்ற இலட்சிய தாகத்தை பார்க்கும் போது ஏதோ கிரைம் ரிகார்டு இறந்த காலத்தில் இருந்தாலும் இருக்கலாம்.
”மூணு வருசத்துக்கு முன்னே இதை கட்ட ஆரம்பிச்சோம். எட்டு மாசத்தில் திருப்பணி முடிஞ்சது. ஆகஸ்டு 15 சுதந்திர தினம் அன்று விடுமுறை என்பதால் அன்றைக்கு கும்பாபிசேகம் நடத்தினோம். இதயக்கனி, உரிமைக்குரல் பத்திரிகைகளுக்கு செய்தி சொல்லியிருந்தோம். பத்திரிகைகளில் செய்தியும் வந்தது. அதைக் கேள்விப்பட்டு நிறைய பக்தர்கள் வந்தார்கள்.
கும்பாபிசேகத்துக்கு அப்புறம் ஒரு மண்டலம் விரதம் இருந்து மண்டலபிசேக விழா சரியாக அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடந்த்து. அன்று இறைவனை மாட்டு வண்டியில் எழுந்தருளச்செய்து முதல் தடவையா கிராமத்தில் ஊர்வலமா கொண்டு போனோம்.
சாமி ஊர்வலம்னாக்க மக்கள் தேங்காய் பழம் உடைச்சி மாலை போட்டு வணங்குவாங்க. நம்ம இறைவன் நடிகராச்சே கேவலமா பேசிட்டா என்னா பன்றதுன்னு யோசிச்சோம். சரி, நாமளே ஆள் செட் பண்ணி தேங்காய் பழம் வாங்கி மூணு வீட்டுக்கு ஒரு தபா நாமே தேங்காய் உடைச்சிடலாம்னு முடிவு பண்ணி ஒரு சாக்கு நிறைய தேங்காயோடு போனோம்”
ஆனால், மக்கள் இவர்களை ஏமாற்றவில்லை. இறைவனின் திருவீதி உலாவைக் கேள்விப்பட்டு அவர்களே தேங்காய்ப் பழங்களோடு தயாராக நின்றார்களாம். கலைவாணனிடம் அற்புதங்கள் பற்றிக் கேட்டோம்.
“எனக்கு அதெல்லாம் சரியா தெரியாதுங்க. ஆனா இங்க வர்றவங்க ஏதோ நடக்குதுன்னு சொல்லிக்கறாங்க” என்று பட்டும் படாமல் பேசிக் கொண்டிருந்த போது அவரது மனைவி அவசரமாக குறுக்கிட்டார்.
கோயிலை ஆகம விதிப்படி அமைக்கவும், இறைவனின் திருவுருவச் சிலையின் மேல் யாகங்கள் நடத்தி ’சக்தியை ஏற்றவும்’ செய்தது பார்ப்பன புரோகிதர்கள் தான்.
“சார், நான் சொல்றேன் சார். எங்களுக்கே பாருங்க, ஒருத்தன் 17 லச்சம் கடன் வாங்கிட்டு இப்போ அப்போன்னு இழுத்துட்டு இருந்தான். கோயில் கட்டினதுக்கு அப்புறம் வட்டி 4 லச்சத்தையும் சேர்த்து 21 லச்சமா கொடுத்துட்டான். போன வருசம் ஒருத்தரு குழந்தையில்லேன்னு வந்தாருங்க, இப்ப குழந்தை பிறந்துட்டுதுன்னு கேள்விப் பட்டோம்”
கலைவாணன் இதுவரை அடைந்த வெற்றிகளுக்கு மட்டுமல்ல, இதற்கு மேலும் பல உயரங்களை அடையும் வரை அவரது மனைவி ஓயப்போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. எனினும் நெடுஞ்சாலை மைல்கல்லில் புடவை சார்த்தியிருந்தால் கூட கண்டதும் குப்புற விழுந்து வணங்கத் தயாராக இருக்கும் ‘இந்துக்களின்’ ஆன்மீக வறட்சியின் ஆழத்தைத் தான் நம்மால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இந்தக் கதைகள் மேலும் ஒரு சுற்று சுற்றி வரும் போது எம்.ஜி.ஆர் சிவனின் நெற்றிக் கண்ணில் தோன்றிய தீப்பொறி ஒன்றிற்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த அவதாரம் என்ற ’நம்பிக்கை’ தோன்றியிருக்கக் கூடும். பல லட்சம் வருடங்கள் முன்னால் ராமனால் குமித்து வைக்கப்பட்டதாக டுபாக்கூர் விடப்பட்ட மணல் திட்டுக்களைக் கைவைப்பதற்கே ’இந்துக்களின் மத உணர்வுகளுக்கு’ அஞ்சி மத்திய அரசு தயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அவதாரக் கதைகளுக்கு எந்தளவுக்கு மதிப்பு இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
கோயிலில் ஒரு பார்ப்பனரை அர்ச்சகராக அமர்த்தியிருக்கிறார்கள். அவர் மொத்தம் 12 கோயில்களில் பூசை செய்து கொண்டிருக்கிறாராம். அந்தப் பன்னிரண்டில் இதுவும் ஒன்று. மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வேத மந்திரங்களை சுதி பிசகாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தது அவர் தான்.
மேலும் கோயிலை ஆகம விதிப்படி அமைக்கவும், இறைவனின் திருவுருவச் சிலையின் மேல் யாகங்கள் நடத்தி ’சக்தியை ஏற்றவும்’ செய்தது பார்ப்பன புரோகிதர்கள் தான். ஏற்கனவே இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாலும், அதில் பலரது பெயர்கள் இந்து மத அறிஞர்களுக்கே மறந்து போயிருப்பதாலும், அந்தப் பட்டியலில் புதிதாய் ஒரு பெயரைச் சேர்ப்பதில் சிக்கல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.
“இதயக்கனியே நமக” என்று எழுதி தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் ஒரு ஒப்புறவை ஏற்படுத்தவும், “ஆயிரத்தில் ஒருவனே போற்றி” என்று அக்மார்க் தமிழை கருவறைக்குள் புகுத்தவும் பார்ப்பன புரோகிதர்களுக்கு சொற்ப சம்பளமே வழங்கப்பட்டுள்ளது. காசு கொடுத்தால் வரிசையை மீறி சிறப்பு தரிசனமாக சாமியின் அப்பாயின்மெண்டையே சீக்கிரத்தில் வாங்கித்தரும் வல்லமையைக் கொண்டிருக்கும் அவாள்களுக்கு இதெல்லாம் சாதாரண சமாச்சாரங்கள் என்பது கலைவாணன் சொல்லாமலே நமக்கு விளங்கியது.
வருடாந்திரம் இறைவனுக்கு விரதமிருந்து மாலை போடுவதோடு ஜனவரி 12-ம் தேதியன்று விரதமிருந்து பாதையாத்திரையும் மேற்கொள்கிறார்கள் பக்தர்கள். ஜனவரி 12-ம் தேதியின் சிறப்பு என்ன? அந்த தேதியில் தான் எம்.ஆர்.ராதா இறைவனை துப்பாக்கியால் சுட்டாராம். எனவே தங்கள் இறைவனின் இரண்டாவது பிறப்பை மறு அவதாரமாக கருதி அந்த நாளையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்களாம். பெரியாரின் போர்வாளாக விளங்கிய எம்.ஆர்.ராதா செய்த வேலையை ஒழுங்காகச் செய்யாமல் விட்டாரே என்று இப்போது தோன்றுகிறது.
” சார், இப்பயும் இறைவனோட பக்தர்கள் நெறிய பேரு இருக்காங்க சார். இறைவனோட படம் செகண்டு ரிலீசா போட்டாங்கன்னா அலகு குத்தினு போறது, கட்டவுட்டு வக்கிறதுன்னு துட்டை வேஷ்ட் பன்றாங்க சார். அதுக்கு பதிலா கோயிலுக்கு கொண்டாந்து குடுத்தாங்கன்னா கோயிலாச்சும் வளரும் சார். இதையும் மறக்காம எழுதிக்கங்க சார்” கலைவாணனின் மனைவி அக்கறையோடு சொன்னார்.
ஆனால், அவர் அங்கலாய்த்துக் கொள்வது போல் நாட்டில் ஆன்மீகத்தின் நிலைமை அத்தனை மோசமாக இல்லை. கோயிலைக் கட்ட செலவான எட்டு லட்ச ரூபாயில் இரண்டு லட்சத்தை இறைவனின் பக்தர்கள் தங்கள் கைக்காசில் இருந்து கொடுத்துள்ளனர். அதோடு பயபக்தியோடு அவ்வப்போது பாதயாத்திரை செல்வதாகட்டும், விரதமிருந்து மாலை போட்டுக் கொள்வதாகட்டும், இறைவனின் பக்தர்கள் பக்தியில் குறை வைப்பதில்லை. மாலை போட்ட சமயத்தில் அடக்கமான சாமியாக இருப்பதும் மாலையை அவிழ்த்துப் போட்ட பின் அடங்காமல் ஆடுவதும் இந்துத்துவ ஆன்மீகத்தின் இரண்டு உச்சங்கள் என்பதைப் புரிந்து கொள்ளுமளவிற்கு நமக்குத்தான் ஞானமில்லை.
மற்றபடி இந்தக் கோயிலை அ.தி.மு.க அரசு ஏன் இன்னமும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்று இவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். நமக்கு அதில் ஆச்சர்யமில்லை. புரட்சித் தலைவியின் வடிவில் அ.தி.மு.கவினர் ஏற்கனவே ஒரு வாழும் தெய்வத்தைக் கட்டிக் கொண்டு மாரடிக்கும் நிலையில் இன்னுமொரு தெய்வத்தையும் குனிந்து வணங்க வேண்டுமென்றால் அவர்களின் முதுகெலும்பை அறுவை சிகிச்சை செய்து அகற்றினால் ஒழிய சாத்தியமில்லை.
அந்த வகையில் கலைவாணன் ஒரு தவறு செய்து விட்டார். எம்ஜிஆரை விடுத்து ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டியிருந்தால அவரே கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கல்லா செழித்திருக்கும். அதிமுக கட்டவுட்டகளில் பிள்ளையார் சுழி போல தம்மாத்துண்டு எம்ஜிஆர் படமும், யானை பிளிறல் போல பிரம்மாண்டமான ஜெயாவும் இடம் பிடித்திருப்பதை பார்த்துக் கூட யார் அதிக சக்தி வாய்ந்த ‘தெய்வம்’ என்று அவருக்கு தெரியவில்லை.
கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு பாசிஸ்ட்டாக நடந்து கொண்ட எம்ஜிஆர் எனும் அற்பங்களுக்கெல்லாம் தமிழகத்தில் ஒரு கோவிலும், பூஜையும் நடக்கிறது என்றால் இங்கே பார்ப்பனிய இந்து மதத்தின் அருகதையை விளங்கிக் கொள்ளலாம். நடிகர்கள், தலைவர்களை அவர்களது இரசிகர்கள் ஆண்டவனாக போற்றி துதிக்கும் பிளக்ஸ் பேனர்களை பார்த்து இரத்தம் கொதிக்கும் இந்துமத வெறியர்கள், உப்பு போட்டு தின்பவர்களாக இருந்தால் இந்த எம்ஜிஆர் கோவிலை எதிர்க்க முடியுமா?
21-ம் நூற்றாண்டில் மதம், கடவுள் நம்பிக்கைகள், சடங்குகள் எல்லாம் எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இந்த எம்ஜிஆர் கோவிலே சாட்சி.
கடந்த 30.01.2014 அன்று நடந்து முடிந்த SRF மணலி தொழிற்சங்க தேர்தலில் பிழைப்புவாத வக்கீல் பிரகாஷை வீழ்த்தி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அபார வெற்றியடைந்துள்ளது. புஜதொமு சார்பாக போட்டியிட்ட அனைத்து நிர்வாகிகளும் வெற்றி பெற்றுள்ளனர். சுமார் 500 பேர் வேலை செய்யும் இந்நிறுவனத்தில், தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பு.ஜ.தொ.மு தலைமை தாங்கி வருகிறது.
ஏற்கனவே பல வருடமாக இயங்கி வரும் குசேலர் தலைமையிலான ”நலமன்றம்” அணியும், வக்கீல் பிரகாஷ் தலைமையிலான ”ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டணி” (ULF) என்று அவர்கள் சொல்லிக்கொள்ளும் அணியும் (ULF என்று தான் துவங்கிய அமைப்பை பிரகாஷ் பயன்படுத்தி வருவது தவறு என T.V.பரமசிவம் வழக்கு தொடுத்துள்ளார்) புஜதொமுவுக்கு எதிராக ”ஜனநாயகத் தொழிலாளர் கூட்டணி” என்ற பெயரில் கூட்டணி அமைத்துக் கொண்டு இயங்கிய போதும் அதை எதிர்கொண்டு இந்த வெற்றியை ஈட்டியுள்ளோம்.
குசேலர் ஒரு துரோகி என்று பிரகாஷ் அணியினரும், பிரகாஷ் ஒரு துரோகி என்று நலமன்றமும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். ஆனால் கடந்த 2012 தொழிற்சங்கத் தேர்தலில் அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு பதவி சுகத்துக்காக நலமன்றம் அணியினர் சென்று வக்கீல் பிரகாஷிடம் தஞ்சம் புகுந்தனர். ”கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்பது போல் கடந்த தேர்தலில் செல்லாத ஓட்டு போட்டு மதில் மேல் பூனை நிலையில் இருந்தனர்.
தொழிலாளிகள் வாழ்நிலைமைகள் குறித்தோ, தொழிலாளி வர்க்கத்தின் கடமைகள் குறித்தோ எந்த அக்கறையுமில்லாமல் “நீ ஒரு வருடம் பொதுச்செயலாளர் பதவியை அனுபவித்துக் கொள், நான் ஒரு வருடம் அனுபவித்துக் கொள்கிறேன்” என ஒப்பந்தம் போட்டுக்கொண்டு பதவி சுகத்துக்காக எத்தகைய கீழ்த்தரமான செயலையும் செய்யத் துணியும் இந்த பிழைப்புவாதிகளை தொழிலாளிகள் மத்தியில் தனிமைப்படுத்தி வெற்றி கண்டுள்ளது புஜதொமு..
ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையில் நாம் இனிமேல் நிரந்தரம் செய்யப்படும் தொழிலாளிகளுக்காகவும், இப்போதுள்ள தொழிலாளிகளுக்காகவும், ஒப்பந்த காலத்தில் பணி ஓய்வு பெற்று சென்ற தொழிலாளிகளுக்காகவும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டு பேசியது,
என்ன பேசினோமோ அதை எழுத்துபூர்வமாக தொழிலாளிகளுக்கு தெரிவித்தது,
இதுவரை SRF தொழிற்சங்க வாலாற்றிலேயே இல்லாத வகையில் பொதுக்குழுவைக் கூட்டி அதில் ஒப்பந்த பேச்சுவார்த்தையின் சாராம்சத்தை விளக்கியது,
அதில் எழும் கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்தது
போன்ற ஜனநாயகப்பூர்வமான வெளிப்படையான செயல்பாடுகளினால் தொழிலாளிகள் புஜதொமுவின் மீது நம்பிக்கை கொண்டு நம்மை ஆதரித்தனர். குறிப்பாக தங்களுடைய 30 வருட கால அனுபவத்தில் இது போன்றதொரு வெளிப்படையான நேர்மையான தலைமையை தாங்கள் பார்த்ததேயில்லை என்று மூத்த தொழிலாளிகள் நம்மை வாழ்த்தியுள்ளனர்.
நம்முடைய இந்த செயல்பாடானது எதிரணியினரை கலக்கமுறச் செய்துள்ளது. என்ன செய்வதென தெரியாமல், நம்மை எப்படி கையாள்வது என்று புரியாமல் இருந்த போது தான் அவர்களின் பிழைப்புவாத புத்தி வேலை செய்ததுள்ளது.
மூத்த தொழிலாளிகளை நிறுத்தி தேர்தலை எதிர்கொண்டால் தோல்வி உறுதி என்று புரிந்து கொண்டனர். ஏற்கனவே நவ-7 நத்தம் காலனி ஆதிக்க சாதி வெறி தாக்குதலை கண்டித்து புதிய ஜனநாயகம் பத்திரிகையில் எழுதியதால் நம் மீது அதிருப்தியில் இருந்த தொழிலாளிகளின் மத்தியில் உள்ள சாதிய கண்ணோட்டத்தை வளர்க்க ஆதிக்க சாதியை சேர்ந்த இளந்தொழிலாளியை முன்னிருத்தி சாதி அடிப்படையில் தொழிலாளர்களை பிளவுபடுத்தி ஓட்டு பெற்றுள்ளனர்.
தன்னுடைய கொள்கையைச் சொல்லி ஓட்டுக் கேட்க துப்பில்லாமல் “நாம் ஒரே பகுதியிலிருந்து வருகிறோம், நாம் ஒரே வழித்தடத்தில் ஆலைக்கு வருகிறோம், நாம் ஒரே துறையில் பணிபுரிகிறோம் என்று தொழிலாளிகளை பிளவுபடுத்தும் வேலையை செய்து ஓட்டு கேட்டுள்ளனர்.
மறுபுறம் மதுவிற்கு அடிமையாகி உள்ள தொழிலாளிகளை இனங்கண்டு அவர்களை கவனிப்பதற்காகவே தனிக் குழுவை உருவாக்கி அவர்களுக்கு தன் சொந்த செலவில் மது வாங்கி கொடுத்து ஓட்டு கேட்டுள்ளனர். தன் லாப வேட்டைக்காக தொழிலாளிகளின் உயிரையும் கொல்லத் துணியும் முதலாளிகளைப் போல தங்களின் பதவி சுகத்துக்காக தொழிலாளிகளின் பலவீனத்தை பயன்படுத்தி தொழிலாளி வர்க்கத்தையே சீரழிக்கும் இப்பிழைப்புவாதிகளை தொழிலாளிகளிடமிருந்து தனிமைப்படுத்தும் வேலையை புஜதொமு தொடர்ந்து செய்து வருகிறது.
”தொழிற்சங்கமென்பது தொழிலாளிகளின் பயிற்சிப் பள்ளி” என்று ஆசான் லெனின் கூறியதற்கேற்ப சங்க செயல்பாடுகள் அனைத்தையும் தொழிலாளிகளுக்கு விளக்கி அவர்களுக்கு கற்றுக் கொடுத்து தொழிலாளிகளின் அரசியல் உணர்வு மட்டத்தை உயர்த்தும் வேலையை செய்து வரும் புஜதொமு இக்கிளையில் மட்டுமின்றி மணலி பகுதியிலுள்ள அனைத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
பிழைப்புவாதிகளும், திரிபுவாதிகளும் எத்தனை கவர்ச்சியான கதை சொல்லி தொழிலாளிகளை ஏய்த்து வந்தாலும், ஒரு புரட்சிகரத் தொழிற்சங்கத்தின் ஜனநாயகப்பூர்வமான வெளிப்படையான செயல்பாடானது அனைத்தையும் தூக்கி எறிந்து தொழிலாளிகளை போராட்ட பாதைக்கு அணிதிரட்டுமென்பது SRF மணலி தொழிற்சங்கத் தேர்தல் இன்னுமொரு சான்று.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் வைர வளம் இருப்பதை பன்னாட்டு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. தாங்கள் மேற்கொண்ட வான்வெளி சர்வேயில், வைர வளம் நிறைந்திருப்பது தெரிய வந்ததையடுத்து ரியோ டிண்டோ மற்றும் பி.எச்.பி. பில்லிடன் ஆகிய நிறுவனங்கள் அங்கு பூர்வாங்க ஆய்வு நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன; மேலும், “மாவோயிஸ்டுகளின் தலைமையில் போராடும் பழங்குடிமக்களின் எதிர்ப்பை எவ்வளவு காலத்துக்குள் அடக்குவீர்கள்” என சத்தீஸ்கர் அரசை கேட்டுக் கொண்டுள்ளன.
“மாவோயிஸ்டுகளின் தலைமையில் போராடும் பழங்குடிமக்களின் எதிர்ப்பை எவ்வளவு காலத்துக்குள் அடக்குவீர்கள்”
தற்போது பஸ்தாரில் வைர வளம் இருப்பதை கண்டறிந்து சுரங்கம் அமைக்க விண்ணப்பித்திருக்கும் ரியோ டின்டோ என்ற நிறுவனம ஒரு கொலைகார நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளில் மக்கள் போராடி வருகிறார்கள். மொசாம்பிக்கில் சுரங்கம் அமைப்பதற்காக அங்குள்ள பழங்குடி மக்களை வெளியேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வருவதற்கு எதிராக மொசாம்பிக்கின் பழங்குடிமக்கள் போராடி வருகிறார்கள். “நான் வெளியேற மாட்டேன். அவர்கள் என்னை கொலை செய்யக் கூடும். ஆனாலும் நான் இந்த நிலத்தை விட்டு வெளியேற மாட்டேன்”, என்று கூறி போராடுகிறார் மொசாம்பிக்கில் பழங்குடி இன ராணி, சோரியா மகஜோ.
இந்தோனேசியாவின் மேற்கு பபூவா பகுதியில் செயல்படும் கிராபெர்க் சுரங்கம் அந்த பகுதியையே சுடுகாடாக்கியுள்ளது. இந்த சுரங்கம் ஃபிபோர்-மெக்மோரெ காப்பர் கோல்ட் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இதில் 40 சதவீத பங்குகளை ரியோ டிண்டோ வைத்துள்ளது. இந்த சுரங்கம் எப்படி சுற்றுச் சூழலை அழித்தது என்பதையும், அவர்களது மனித உரிமை மீறல்களையும், தொழிலாளர் மீதான அடக்குமுறைகளையும் மறைக்க பல மில்லியன் டாலர்களை இந்தோனேசிய இராணுவ அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் வழங்கி இருப்பதையும் நியூயார்க் டைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் 1965-களில் ஆட்சியை கைப்பற்றி கம்யூனிஸ்ட் உறுப்பினர்களை வேட்டையாடிக் கொன்ற அமெரிக்க ஆதரவு பாசிசஆட்சியாளர் சுகார்தோவிற்கு நெருக்கமான இந்நிறுவனம் 1967 முதல் அங்கு செயல்பட ஆரம்பித்தது. இந்நிறுவனம் 90 களின் மத்தியில் விரிவாக்கப்பட்டு முழுவீச்சில் உற்பத்தியை ஆரம்பித்தது. பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவதைத் தொடர்ந்து 1996 மார்ச்சில் போராட்டம் உச்சமடைந்தது, மக்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு சூறையாடினர். மூன்று நாட்கள் உற்பத்தி நடக்காமல் தடுக்கப்பட்டது.
பபூவாவில் 100 கோடி டன் சுரங்கக் கழிவுகளால் சாக்கடையாக்கப்பட்ட ஆற்று வடிநிலப்பகுதி (2000-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்)
பழங்குடிமக்கள் தனக்கு எதிராக திருப்புவதை அறிந்த இந்நிறுவனம் இந்தோனேசியாவின் இராணுவம் மற்றும் உளவுத் துறையோடு இணைந்து வேலை செய்ய ஆரம்பித்தது. அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சிக்கு 3.5 கோடி டாலர் பணம் கொடுக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் 70 லேண்டு ரோவர் மற்றும் லேண்டு குருசர்ஸ் வாகனங்கள் இராணுவ கமாண்டர்களுக்கு வழங்கப்பட்டன. 1998-ல் சுகர்தோ ஆட்சி அகற்றப்பட்ட பிறகும் ஏதும் மாறிவிடவில்லை. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்திப்படி 1998-க்கும் 2004-க்கும் இடப்பட்ட காலத்தில் மட்டுமே 2 கோடி டாலர் போலீசு ஜெனரல்கள், கர்னல்கள், கேப்டன்கள், சில இராணுவ யூனிட்டுகளுக்கே கூட வழங்கப்பட்டிருக்கிறது. சில கமாண்டர்கள் ஒவ்வொருவருக்கும் 1.5 லட்சம் டாலர் கொடுக்கப்பட்டது..
சி.ஐ.ஏ உளவாளிகளையும், முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரிகளையும் பணிக்கு அமர்த்தியது இந்நிறுவனம். போராடும் மக்கள் கொலை, சித்திரவதை, பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனங்கள் மக்களை காட்டிக் கொடுத்தனர்.
போராட்டம் வன்முறையாக செல்வதால் போராட்டத்தில் இருந்து பின்வாங்குமாறு தன்னார்வ நிறுவனங்கள் தங்கள் சுற்றுச்சூழல் குழுக்களுக்கு உத்தரவிட்ட மின்னஞ்சல் பறிமாற்றங்கள் வெளியாகியுள்ளன. நமது நாட்டிலும் ஆளும் வர்க்கங்கள் கோரி வரும் ‘கொள்கை முடிவு எடுக்க உறுதியான தலைமை’யும், வளர்த்து வரும் தொண்டு நிறுவனங்களும் எதற்காக என்பதற்கான வகைமாதிரி இது.
அந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. பழங்குடிமக்கள் உணவுக்காக நம்பியிருக்கும் சாக்கோ மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. பழங்குடிகளின் வசிப்பிடமான கிராகி மலை இப்போது அனேகமாக காணமல் போய் விட்டது. அங்கிருக்கும் ஆறுகள் இரசாயன கழிவுகளின் சாக்கடையாக மாற்றப்பட்டுள்ளன. சுமார் 90 சதுர மைல் பரப்புள்ள சதுப்புநிலம் முழுவதும் சுரங்கக் கழிவுகளால் நிரம்பியுள்ளது.
2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரியோ டிண்டோ பங்குதாரர் கூட்டம் நடக்கும் இடத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் நாடு கடத்தப்பட்ட பபூவாவைச் சேர்ந்த பென்னி வென்டா.
“நீங்கள் இந்த நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டால் தாக்கப்படுவீர்கள். பிரிவினைவாதி என்று முத்திரை குத்தப்படுவீர்கள். இந்த சுரங்கங்கள் எங்கள் நிலத்தையும், காடுகளையும், மலைகளையும், எங்கள் வாழ்வியலையும் அழித்து வருகின்றது. இது எங்கள் மக்கள் மீதான் இன அழிப்பு நடவடிக்கை, அப்படிதான் இவைகளை பார்க்கிறேன்” , என்கிறார் இந்தோனேசியால் ரியோ டின்டொவுக்கு எதிராகவும், மேற்கு பபூவா விடுதலைக்கு போராடி வரும் பென்னி வென்டா.
இதே போன்று மங்கோலியாவின் ஒயூ டோல்கய், அலாஸ்காவின் பீபிள் சுரங்கம், மற்றும் அமெரிக்காவின் அரிசோனா, மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் செயல்படும் இந்நிறுவனம் மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது.
வைர வளம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் பஸ்தார் பகுதியிலும் ஏற்கனவே இதுபோன்ற சூழ்நிலையே நிலவி வருகிறது. இங்கு இரும்பு சுரங்கம் அமைப்பத்ற்கு டாடா மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களுக்கு 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சத்தீஸ்கர் பாஜக அரசு அனுமதியளித்தது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். அடுத்த இரண்டு மாதங்களில் சுரங்க நிறுவனங்களின் பணபலம் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசின் ஆயுத பயிற்சியுடன் சல்வா ஜூடும் என்கிற கூலிப்படை ஏற்படுத்தப்பட்டது. ஜூன் 2005-ல் மகேந்திரகர்மா சல்வா ஜூடும் தொடங்கப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டான். இது மக்களை காடுகளில் இருந்து விரட்டி சாலையோர கேம்ப்களில் போலீஸ் கண்காணிப்பில் இருத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. குடிசைகளை கொளுத்துவது, எதிர்ப்பவர்களை கொலை செய்வது, கொள்ளையைடிப்பது, பழங்குடிகளின் வயல்களை நாசப்படுத்துவது, பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவது என பயங்கரத்தை அரச ஆதரவுடன் கட்டவிழ்த்துவிட்டது. இது 1,50,000 பழங்குடிமக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அடித்து விரட்டியுள்ளது.
யார் மாவோயிஸ்டுகள் என்பதற்கு சத்தீஸ்கர் முதல்வர் ரமண்சிங் புது விளக்கம் அளித்தார். பழங்குடிகள் காடுகளை விட்டு வெளியேறி தாங்கள் அமைத்திருக்கும் முள்வேலி முகாமுக்குள் வந்துவிட வேண்டும், அப்படி வராதவர்கள் அனைவரும் மாவோயிஸ்டுகள் என சத்தீஸ்கர் அரசு அறிவித்தது.
“பஸ்தார் எங்களுக்குச் சொந்தம், முதலாளிகளுக்கு அல்ல” முதலாளிகளின் லாப வெறிக்கு எதிராக போராடும் கூடூர் கிராம மக்கள் (கோப்புப் படம்).
கனிம வளத்தை கொள்ளையிடும் தனியார் முதலாளிகளுக்காக மக்களை கொன்று குவிக்க அல்லது அகதியாக அடித்து விரட்ட பல இலட்சம் துணை ராணுவப்படைகள் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டன. போர்க்குணமிக்க பாரம்பரியம் கொண்ட பழங்குடி மக்களோ, அரசுக்கு அடிபணியாமல் மாவோயிஸ்டுகளின் தலைமையில், தங்கள் வாழ்வாதாரமான காடுகளையும், தங்கள் கடவுளான மலைகளையும், ஆறுகளையும் காப்பாற்றுவதற்கான போரில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த பின்னணியில் தான், அந்த பகுதியில் வைரக் குவியல்கள் இருப்பதை கொலைகார ரியோ- டின்டோ நிறுவனம் கண்டுபிடித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. சுரங்கம் அமைப்பதற்கு முன்தேவையான ஆய்வுகளை நடத்த விண்ணப்பித்திருந்த ரியோ டின்டோ மற்றும் பி.எச்.பி. பில்லிடன் ஆகிய நிறுவனங்களுக்கு சத்தீஸ்கர் அரசு தற்காலிகமாக அனுமதி மறுத்துள்ளது. பஸ்தார் பகுதியில் தங்களால் போதுமான பாதுகாப்பு அளிக்க முடியாது என தெரிவித்து, வேறு பகுதியை ஒதுக்கித்தர முன்வந்துள்ளது. மாவோயிஸ்டுகளூக்கு எதிரான ஆப்பரேசனை எவ்வளவு காலத்துக்குள் முடித்துத் தருவீர்கள் என்று சத்தீஸ்கர் அரசிடன் ஆலோசனை நடத்திய பிறகு அதுவரை வேறு இடத்திற்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொள்ள சம்மதித்திருக்கின்றன இந்த நிறுவனங்கள.
இதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் கோர்பா குன்றில் சுரங்கம் அமைக்க அனுமதியளித்துள்ளது அரசு. “நாங்கள் பஸ்தார் பகுதியில் தான் பூர்வாங்க ஆய்வுக்கான அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தோம். ஆனால் அரசு வேறு பகுதியில் ஆய்வு மேற்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளது. கோர்பா பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கான் விண்ணப்பத்தை அங்கீகரித்து மத்திய அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது” என்கிறார் ரியோ டின்டோ வின் இந்திய நிர்வாக் இயக்குநர் நிக் சேனாபதி.
வைர வளம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முதலாளிகளின் லாப வெறியை மேலும் மூர்க்கமாக்கி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எப்படியாவது எதிர்ப்புகளை நசுக்கி தங்கள் லாபத்தை பெருக்கி கொள்ள துடிக்கின்றது ஆளும் வர்க்கம். துணை ராணுவம், விமானப்படை என அனைத்தையும் இறக்கிவிட்டு ஒரு மனிதப் பேரழிவை நிகழ்த்தியாவது தான் விரும்பியதை சாதிக்க ஏற்கனவே ஆளும் வர்க்கம் துடிக்கின்றது. இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காக இலங்கையில் ஏற்கனவே ஒரு இனப்படுகொலை நிகழ்த்திய இந்திய ஆளும் வர்க்கமும்,. பழங்குடிகளை கொல்வதில் முன்அனுபவம் உள்ள ரியோ-டின்டோ நிறுவனமும் கைகோர்த்துள்ளன. டாடா, ஜின்டால் ஒப்பந்ததிற்கு பின்னர் சல்வா ஜூடும் ஆரம்பிக்கப்பட்டது போல ரியோ டின்டோ ஒப்பந்தத்திற்கு பின் அடுத்த கூலிப்படை ஆரம்பிக்கப்படக் கூடும். அப்படி ஆரம்பிப்பதற்கு உச்சநீதிமன்ற உத்தரவு தடையாக இருந்தால் ராணுவம், சி.ஆர்.பி.எஃப் போன்ற சட்டபூர்வமான கூலிப்படைக்குக்கு ஆள் எடுப்பு நடைபெறும். இரண்டுக்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை.
நடப்பது மறுகாலனியாக்கத்திற்கு எதிரான சுதந்திர போராட்டம். இந்த போராட்டத்தில் பஸ்தார் பழங்குடிமக்களை ஆதரிப்பது நமது கடமையாகும்.
‘மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது நல சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்’ – இப்படி ஒரு செய்தி அனைத்து நாளிதழ்களிலும் வெளியானது. இதைப் பார்த்தவுடன் சரி , இந்த கூட்டத்திற்கு கண்டிப்பாக போய் என்னதான் நடக்கிறது என்பதை பார்த்து வரவேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்தோம். இந்த நிலையில் புமாஇமுவின் அலுவலக முகவரிக்கு மாநகராட்சியின் சார்பில் மேற்கண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு நம்மை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், “உங்கள் சங்கம் சார்பில் 5 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. வெற்றிலைப்பாக்கு வைத்து கூப்பிட்டும் போகாமலா இருப்பது?
‘மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது நல சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்’ (2011-ம் ஆண்டு மேயராக பதவி ஏற்கும் சைதை துரைசாமி).
ஒய்.எம்.சி,ஏ. மைதானம் உள்ளே நுழைந்த உடன் மாநகராட்சி வாகனங்கள், போலீசு வாகனங்கள் என பலவும் நிரம்பி வழிந்தன. வாசலிலேயே மாநகராட்சி அதிகாரிகள் “ சார் ப்ளீஸ், இப்படி போங்க, சார் அந்த கட்ல திரும்புங்க” என்றார்கள். அலுவலகத்திற்கு சென்றால் மரியாதையை கிராம் கணக்கில் கொடுக்கும் இவர்கள் இங்கு கிலோ கணக்கில் வாரிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
உள்விளையாட்டரங்கத்தில் மேயர் பேசிக்கொண்டிருந்தார். வெளியில் 5 டேபிள்கள் வரிசையாய் போடப்பட்டு ஒவ்வொன்றும் ஒரு மண்டலம் என அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. பொது நல சங்கத்தினை சேர்ந்தவர்கள் ,தங்கள் பெயரை பதிவு செய்து ஒரு தாளில் கொடுக்க வேண்டும், அவர்கள் அதை வாங்கி வைத்துக்கொண்டு செயலலிதாவின் மூஞ்சியை படமாகப் போட்ட மாநகராட்சின் ஈராண்டு சாதனை என்ற ஆண்டு மலரை கையில் கொடுத்தார்கள். அதைப்படித்து விட்டு ஆகா , அம்மா சூப்பரா பண்ணியிருக்காங்கோ, பாருங்கோ என்று வீட்டிற்கு செல்லலாம், இல்லையெனில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் என பெயரிடப்பட்ட பெட்டிகளில் தங்கள் மனுவைப் போடுங்கள் என்று மரியாதையாக அதிகாரிகள் கூறினர்.
என்னவோ இன்னைக்கே எல்லாக்குறைகளையும் தீர்த்துவிடப்போவது போல பீலா விட்டுவிட்டு இப்போது பொட்டியில் குறையைப்போடுங்கள் என்கிறார்கள். சரி, வந்தாயிற்று, கொண்டு வந்த மனுக்களை பெட்டியில் போடுவோம், எனப் போட்டுவிட்டு மேயர் என்னவோ பேசிக்கொண்டு இருக்கிறாரே என்று அரங்கத்தினுள் நுழைந்தோம்
மேடையில் அம்மாவினால் சமூகத்திற்கு ஏற்பட்ட நன்மைகளையும், ஸ்டாலின், மா.சுவினால் சமூகத்திற்கு ஏற்பட்ட தீமைகளையும் விலாவாரியாக 1 மணி நேரமாக மேயர் பேசிக்கொண்டிருக்க, துணைமேயர், அனைத்து அதிகாரிகள் என கொலுவில் அனைவரும் பொம்மைகளாய் வீற்றிருந்தனர். எப்படியும் ஆயிரம் பேர் இருப்பார்கள், மண்டலங்கள் வாரியாக பொது நல சங்கப்பிரதிநிதிகள் உட்காருவதற்கு தோதாக பெயர்ப்பலகைகள் மாட்டப்பட்டிருந்தன. நமது தோழர்கள், பகுதி இளைஞர்கள் என 35 பேர் அரங்கத்திற்குள் நுழைந்தோம். அக்கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் பொது நலச் சங்கப்பிரதி நிதிகளாம், பார்ப்பனர்கள், மேட்டுக்குடிகள், முன்னாள் அதிகாரிகள் என இவர்கள்தான் 99% பேர் இருந்தனர். பொது நலச்சங்கம் என்றால் ஏதோ பொது மக்களுக்கான சங்கம் என்றும் அதில் பொதுமக்களின் பிரதிநிதிகள் இருப்பார்கள் என்றால் அப்படி இல்லை. தீட்சிதர்கள் தங்களை பொது தீட்சிதர்கள் என்று அழைத்துக் கொள்வதைப் போல மேட்டுக்குடிகளின் நலச் சங்கங்கள் தற்போது பொது நலச்சங்கங்களாகி இருந்தன. உழைக்கும் மக்களின் சார்பில் சென்ற நாங்கள்அரங்கத்தின் கடைசியில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தோம். உழைக்கும் மக்கள் பொருளாதாரப்படி நிலையில் கடைசியில் இருப்பது போல அவர்களுக்கான அமைப்பு என்பதால் நாம் கடைசியில் இருந்தோம்.
“இது சுத்தமான கை , கறைபடியாத கை எல்லாமே அம்மாவின் ஆசியோடு நல்லா நடக்கிறது” – சைதை துரைசாமி
அரங்கத்தில் இருந்தவர்களிடம் கையை உயர்த்திக்காட்டி “இது சுத்தமான கை , கறைபடியாத கை எல்லாமே அம்மாவின் ஆசியோடு நல்லா நடக்கிறது, ஸ்டாலினும் மா.சுப்பிரமணியனும் எவ்வளவோ அயோக்கியத்தனத்தை செய்து விட்டார்கள். பொது இடத்தை அபகரித்து விட்டார்கள் . அதை மக்களுக்காக மீட்டெடுத்துக் கொண்டிருப்பது சென்னை மாநகராட்சிதான். எந்த வார்டிலும் ஒரு சிறு குறை கிடையாது , இப்போது இந்தக் கூட்டம் எதற்கு என்றால் , மாநகராட்சிப் பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு பொது நலச்சங்கங்கள்தான் உதவ வேண்டும். உங்கள் கோரிக்கை மனுக்களை வெளியே உள்ள பெட்டியில் போடுங்கள், ஏதோ “ தண்ணீர், தண்ணீர்” படம் மாதிரி மனுக்களை குப்பைத் தொட்டியில் போட மாட்டோம், ஒரு வாரத்தில் உங்களை அழைத்து விசாரித்து எல்லாவற்றையும் உடனே சரி செய்வோம்.”
“சரி, அடுத்து ஒவ்வொரு மண்டலத்திற்குமான பொது நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் 5 பேர்கள் மட்டும் தங்கள் கோரிக்கைகளை கூறலாம், அது மனுவில் இல்லாததாக இருக்க வேண்டும்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்புறம் நீங்கள் பேசும் போது நான் குறுக்கில் பேசுவேன், அது சரியாகத்தான் இருக்கும்”.
ஆகா என்ன ஒரு சனநாயகவாதி! இவர் எப்படி மாநகராட்சி கூட்டத்தை நடத்துவார் பாருங்கள்.
மேயர் கூறியதும் ஆங்காங்கு சிறு சலசலப்புகள் ஏற்பட்டன. தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
“5 பேர்தான் அனுமதியாம், அப்ப நாம் எதுக்கு வந்தோம்?” கடைசி வரிசையில் இருந்த நாம் முன்னேறி வந்தோம், நம்மைப்போல பலரும் மைக்கின் அருகில் செல்ல, மேயர் மீண்டும் கூறினார் .
“யார்? யார் ? பேச வேண்டும் என்பதை அதிகாரிகள் குறித்துக் கொடுத்து விட்டார்கள், வேறு யாரும் பேச முடியாது”.
மண்டல ஆணையரிடம் சென்றால் அவரோ “ உங்க பெயரை கொடுக்கவில்லை” என்றார்.
அதற்குள் “எல்லோரும் போய் சீட்ல உக்காருங்க, யாருக்கு தரணுமோ அவங்களுக்கு வயர்லெஸ் மைக் வரும்” – இது மேயர்.
அதற்குள் ஒரு பணக்கார மேட்டுக்குடி பெண்மணிமேடையில் ஏறி “ சார், மேயர் சார் அண்ட் ஹானரபிள் ஆபீசர்ஸ், குட் ஈவ்னிங் சார், ஐயம் கம்மிங் ப்ரம், விஜிபி கோல்டன் பீச் நியர், உத்தண்டி வெல் பேர் அசோசியேசன், எங்களுக்கு சூப்பரா ரோட் போட்டு குடுத்தீங்க, லைட் இருக்கு, எல்லாமே இருக்கு சார், தேங்க்யூ வெரிமச் சார், தேங்க்யூ சார் ”.
எழும்பூர் சந்தோஷ் நகரில் உரிமைகளுக்காக போராடிய புமாஇமு (கோப்புப் படம்).
அதற்கு மேயரோ ”உங்க பிரச்சினைய சொல்லுறீங்களா? மனுவில எழுதி போட்டு விட்டீங்களா?” “ எல்லாமே மனுவில இருக்கு சார்” என்று அவர் கிளம்ப, உண்மையில் இந்த அம்மா அவர்கள் பகுதி பிரச்சினையை எந்த ‘அழகில்’எழுதியிருக்கும் என்பதை நினைத்தால் பகீர் என்று தோன்றியது.
ஒரு பார்ப்பனர் எழுந்து பேசினார் “ அம்மா ஆட்சியில எல்லாமே நல்லா இருக்கு , பக்கிங்ஹாம் கேனல் வெரி வொர்ஸ்ட், டஸ்ட், அதை கிளீன் செஞ்சு, அகெய்ன் போட் விடணும்”
சரி இங்கேயே நின்று கொண்டிருந்தால் எதுவும் பேச முடியாது. 3 குழுவாகப் பிரிந்து வயர்லெஸ் மைக் எங்கு உள்ளதோ அங்கு சென்றோம். ஒரு மைக்கை சுற்றி எனக்கு உனக்கு என்று முணுமுணுத்தபடியே சிறு கூட்டம் நின்றது. இதற்கிடையில் முன்வரிசையில் ஒரு பார்ப்பன பெண் அவ்வப்போது சார் வாட்டர் இல்லை, அது இல்லை, இது இல்லை என்று பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் தற்போது இருக்கிறது மைக். “சா ர் கு ஈ வ்னி ங் சார், எ ங்க ளு க்கு நி றை ய செ ய் து இ ருக் கீங் க…….” வாய்ஸ் பிரேக் ஆனது. சரியாக கேட்கவில்லை. புமாஇமுவின் தோழர் சாரதி அந்த மைக்கை பிடுங்கினார்.
“5 பேர்தான் பேசணும்னா எதுக்கு எங்க எல்லாரையும் வரச் சொன்னீங்க? எல்லாம் வேலை வெட்டி இல்லாம இருக்கோமா என்ன?”
“எல்லோரையும் பேச வைத்தால் டைமாகும், உங்க குறை என்ன சொல்லுங்க – இது மேயர்.
“நாங்க 143 வது வட்டம், மாதா கோயில் நகர் நொளம்பூர். எங்க பகுதியிலே ஆயிரக்கணக்கான மக்கள் இருக்காங்க, இளைஞர்களுக்கான விளையாட்டுத்திடல் இல்லை, உடற்பயிற்சிக்கூடம் இல்லை, ஏன் பொதுக்கழிவறை இல்லை. நேத்து சக்குபாய்ன்னு ஒரு அம்மா பாத்ரூம் போகும் போது பாம்புகடிச்சு செத்துப்போயிட்டாங்க” என்று வெடித்தார் தோழர் சாரதி.
நாம் பேசிக்கொண்டு இருக்கும் போது துணைமேயர் பெஞ்சமின் , மேயரிடம் ஏதோ சொல்ல “உங்க பகுதி எல்லாம் விரிவாக்கப்பட்ட பகுதி, பாதாளசாக்கடை அமைக்காமல் எதுவும் செய்ய முடியாது, ரோடு போட்டு இருக்கோமா? லைட் போட்டமா அதை மட்டும் பேசு, அவ்வளவுதான், மைக்கை அங்க குடு” என்றார் மேயர்.
இதற்கிடையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், கைத்தடிகள் ஓடிவர தோழரிடமிருந்து மைக் பிடுங்கி இன்னொரு மேட்டுக்குடி ஆசாமியிடம் தரப்பட்டது. அவர் “புரட்சித்தலைவி…… வாழ்……” என்று பேசிக்கொண்டு இருந்தார்.
பத்திரிகைகள், உளவுத்துறையினர் நம்மை சூழ்ந்து என்ன பிரச்சினை என்று கேட்க ஆரம்பித்தனர்.
“மாதா கோயில் நகர், நொளம்பூர் பகுதியில் சக்குபாய் என்ற 55 வயது பெண், நேற்று மாலை சிறு நீர் கழிக்கச்சென்ற போது பாம்பு கடித்து இறந்தார். இதைப்பற்றி பேசக்கூடாது என்கிறார் மேயர், இந்த ஆலோசனைக்கூட்டம் ஒரு ஏமாற்று” என்று கூறிவிட்டு புறப்பட்டோம்.
வாசலில் அதிகாரிகள் “ சார் மனுவை எழுதி பொட்டியில போட்டுட்டீங்களா? தேங்க்யூ வெரிமச் சார் ” பேசிக்கொண்டு இருந்தார்கள்.
தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற என்ன ஒரு நாடகம்? பொது நலச் சங்கங்கள் என்ற பெயரில் உள்ளவர்களில் தங்களுக்கு வேண்டியவர்களைப் பொறுக்கி எடுத்து புரோக்கர் வேலை பார்க்க வைப்பது, அதை அச்சு பிசகாமல் தொழில் முறைப்படி செய்வது – மேயர் சைதை துரைசாமி அவர்களே நீங்கள் தரகு வேலையில் கொடி கட்டிப் பறக்கிறீர்கள் ! விரைவில் மக்கள் அணிசேரும் போது உங்கள் கொடி தரையில் வீழ்த்தப்படும்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் –
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை
அறிவிப்பு
மாநகராட்சி பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்தக் கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு புமாஇமு போராட்டம் (கோப்புப் படம்).
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் கடந்த 12-ம் தேதி மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வலியுறுத்தியும் சடையன் குப்பத்தில் மேற்தளம் இடிந்து விழுந்ததற்கு காரணமான சென்னை மாநகராட்சியை கண்டித்தும் முற்றுகைப்போராட்டம் நடத்தப்பட்டதையும் அதன் பிறகு கல்வித்துறை அதிகாரிகளுடன் புமாஇமு ஆய்வு நடத்த வேண்டும் என்று பேச்சு வார்த்தையில் உடன்பாடானதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
10 கல்வி மண்டலத்தில் உள்ள 58 பள்ளிகளுக்கும் நேரடியாகச் சென்று எமது தோழர்கள் ஆய்வினை மேற்கொண்டனர். இது தொடர்பான ஆய்வறிக்கையை தற்போது தயார் செய்து கொண்டு இருக்கிறோம். சில நாட்களில் அந்த ஆய்வறிக்கையை வெளியிட உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழமையுடன்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை
9445112675
நாஞ்சில் சம்பத்துக்கு இனோவா கார்… பண்ருட்டியாருக்கு அண்ணா அவார்ட்…! அம்மா… தாயே… வருங்காலமே… பாரதமே… வெங்காயமே… வெள்ளைப்பூண்டே… என்று குட்டிச்சுவரைக்கூட விட்டுவைக்காத பிளக்ஸ் பேனர்கள்… அம்மா புராணம் பாடும் குத்தாட்டங்கள்… பொதுக்கூட்டங்கள்… என களை கட்டியிருக்கிறது, நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரமும் அம்மாவின் பிரதமர் கனவிற்கான அச்சாரமும்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் ‘பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் அம்மா மட்டுமே’ என்றொரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ‘சென்னை எக்ஸ்பிரஸ் இனி செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆக மாறும்’ என்று ‘அம்மையாரும்’ தன் பங்குக்கு திரியை கொளுத்திப் போட, ர.ர.க்கள் பண்ணும் அலப்பறையைத் தாங்க முடியாமல் தகிக்கிறது தமிழகம்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கான மூன்று நாள் மாநாட்டில் கூட, “அம்மா.. உங்களால், எங்க வீட்டுக்கு மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், கறவை மாடுகள் எல்லாம் கிடைச்சுது. செலவே இல்லாமல் எங்களுக்கு கல்வியைக் கொடுத்திருக்கீங்க. நீங்கள் எப்ப பிரதமர் ஆகப் போறீங்கன்னு ஆவலாகக் காத்திருக்கிறோம்” என்று பள்ளி மாணவர்கள் அம்மாவிற்காக உருகுவதைப் போல குறும்படத்தை தயார் செய்து படம் ஓட்டியிருக்கிறார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர். அரசு அதிகாரியான மாவட்டத்தின் ஆட்சியரே, ‘அம்மா படம்’ ஓட்டும் பொழுது, அ.தி.மு.க.வின் தொண்டர்கள் சளைத்தவர்களா என்ன? திரும்பிய பக்கமெல்லாம் திக்குமுக்காட வைக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
அந்த வரிசையில், “ஜெயலலிதா பிரதமராக சபதமேற்கும் மாணவ சமுதாயத்தின் லட்சிய முழக்கம்” என்ற தலைப்பில் கோவைப்புதூர் மைதானத்தில் அ.தி.மு.க.வினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுள்ள கூட்டத்தில் “ஈழத்தமிழர் இன்னல் தீர, இந்தியா வல்லரசாக, தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் மீட்டெடுக்க… அம்மா பிரதமராக வேண்டு”மென்று பிஞ்சு பிள்ளைகளை அம்மா புராணம் பாட வைத்திருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். அம்மா ஆதரவு ஏடுகளே இவற்றையெல்லாம் பொறுக்க மாட்டாமல் பொரிந்து தள்ளுகின்றன.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் த.கணேசன்.
பெற்றோர்களுக்கு தெரிவிக்காமலும், பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமலும் பள்ளி மாணவர்களை ஆளும் கட்சியின் அரசியல் கூட்டத்துக்கு ‘அழைத்து’ சென்றது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் த.கணேசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
கேள்வி :
கோவைப்புதூர் மைதானத்தில் அ.தி.மு.க.வினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்குப் பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளது பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?
பதில்:
முதலில், அவர்கள் அழைத்து வரப்படவில்லை. “வினா-விடை வங்கி வழங்குகிறோம்”என்று கயிறு திரித்து சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பள்ளிகளிலிருந்து 10- மற்றும் 12-வது வகுப்பு மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து வந்திருக்கின்றனர். இழுத்து வந்தனர் என்பது கூட நாகரீகமாகத் தோன்றுகிறது. சட்டவிரோதமாகக் கடத்தி சென்றனர் என்றுதான் கூற வேண்டும். அடுத்து, நான் மட்டும் இதைக்கூறவில்லை, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களின் புகாரும் இதுதான்.
“தேர்வுக்குத் தயார் ஆவதற்கான புத்தகத்தை வழக்குவதாக்கூறி, பள்ளி மாணவர்களை அரசியல் கூட்டத்துக்கு அழைத்து சென்றுள்ளது சரியல்ல. மதியம் 2.30 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள், இரவு 8.30 மணிவரை திரும்பவில்லை. இதனால் நாங்கள் பதறிப்போனோம். பள்ளியை முற்றுகையிட்டோம். மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசினோம். ஆனால், அவர்களுக்குக் கூட தகவல் தெரியவில்லை. இப்படி எந்த அனுமதியும் இன்றி மாணவர்களை அழைத்துச்செல்வது விதிமுறை மீறல். வாக்களிக்கும் வயதை எட்டாத பள்ளி மாணவர்களை அரசியல் கூட்டத்துக்கு, அதிகாரத்தின் காரணமாக கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது முறையல்ல. மாணவர்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் ஆதாயத்தை அடைய முயற்சித்துள்ளனர்.” என்று தனது ஆதங்கத்தை 22.01.2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் கொட்டியுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் பெற்றோர் வேல்முருகன்.
இந்த ஒரு சம்பவம்தான் என்றில்லை. இதற்கு முன்னரும் இதே போல், சென்னை வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழுவிற்கு வருகை தந்த ஜெயாவை வரவேற்க மதுரவாயல் பகுதியில் பள்ளி மாணவிகள் கையில் லேப்டாப்-ஐ கொடுத்து நடுரோட்டில் கால் கடுக்க நிற்க வைத்திருந்தனர். இதை நாங்கள் அப்போதே அம்பலப்படுத்தியிருந்தோம். தற்பொழுது, கோவையில் அம்மாவின் கூட்டத்திற்கு பள்ளி மாணவர்களை இழுத்துச் சென்றுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த மாணவர் கடத்தலில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும், துணைபோன அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீதும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
கேள்வி:
பள்ளி மாணவர்களை அரசியல் கட்சிக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றது அ.தி.மு.க.காரர்கள் தானே? இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தையும், போலீசு அதிகாரிகளையும் நீங்கள் ஏன் குறை கூறுகிறீர்கள்?
பதில்:
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவர்களது ஒத்துழைப்பின்றி மாணவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சாத்தியமேயில்லை என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறோம்.
’பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, சமூக விரோதிகள் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்துவிடுகிறார்கள்’ என்று கதைகட்டி கண்காணிப்புக் கேமராவை அரசுப் பள்ளிகளில் வைத்து மாணவர்களை வேவு பார்க்கும் போலீசாருக்கு, இந்த அ.தி.மு.க குண்டர்கள் மாணவர்களை கடத்திய செய்தி தெரியாத மர்மம் என்ன? கண்காணிப்புக் கேமரா வைத்திருப்பது யாரைக் கண்காணிக்க? ஜனநாயக உரிமைக்காக மாணவர்கள் போராடக் கூடாது, மாணவர் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதற்காகத்தான் கண்காணிப்புக் கேமராக்கள் பள்ளிகளில் பொருத்தப்பட்டிருக்கின்றன என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது, இந்த சம்பவம்.
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராடிய புமாஇமு (கோப்புப் படம்)
தமது கல்வி உரிமைக்காக மாணவர்கள் போராடினால் – உன் படிப்பை மட்டும் நீ பார் – என்று உபதேசிக்கும் போலீசு-அதிகார வர்க்க கும்பல், ஓட்டுக்கட்சி நிகழ்ச்சிகளுக்கு பள்ளிக்கூடத்திலிருந்து மாணவர்கள் கடத்தி செல்லப்படுவது குறித்து என்ன சொல்கிறது?
இங்கே ஒரு சம்பவத்தை நிச்சயம் பகிர்ந்து கொண்டாக வேண்டும். சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்கக்கோரி, 26.07.2011 அன்று திருச்சியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் பள்ளிக் கிளைகள் சார்பில் திருச்சி-மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து நடத்தியது. இப்போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டதை கண்டு ஆத்திரமுற்ற போலீசு, பள்ளி மாணவர்களை கடத்தி வந்து நாங்கள் போராட்டம் நடத்தியதாக வதந்தியைப் பரப்பியது. பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் எவருமே தமது பிள்ளைகளை நாங்கள் கடத்திவிட்டதாக புகார் அளிக்காத போதும், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரை மிரட்டி பொய்ப்புகாரை எழுதி வாங்கிக்கொண்டு, எமது அமைப்பின் முன்னணியாளர்கள் மீது கடத்தல் வழக்கைப் பதிவு செய்து சிறையிலடைத்தது ஜெயாவின் போலீசு.
கோவைப் புதூர் பகுதியில், மாணவர்களிடம் பொய் சொல்லி உண்மையில் கடத்தி இருப்பது அ.தி.மு.க குண்டர்கள்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாணவர் கடத்தலில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும், துணைபோன அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீதும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? இதனை என்னவென்று சொல்வது?
கேள்வி:
இலவச பஸ்பாஸ், இலவச லேப்டாப் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் பலன் பெற்ற மாணவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
பதில்:
’’இலவச பஸ்பாஸ் கொடுத்தார். இலவச லேப்டாப் கொடுத்தார்’’ என்று பட்டியல் வாசிக்கிறார்கள் 45 டிகிரியில் வளைந்திருக்கும் அம்மாவின் விசுவாசிகள். அவர்கள் சொல்லாமல் விடுபட்டதை நான் சொல்கிறேன். பஸ்பாஸ் இலவசமாக கொடுத்தார், ஆனால் மாணவர்களை இலவசமாக பேருந்தில் ஏற்றக்கூடாது என்று போக்குவரத்து தொழிலாளிகளுக்கு ரகசிய உத்தரவும் போட்டார். (கிராமப்பகுதிகளில் பேருந்தில் பள்ளி மாணவர்களை ஏற்றுவதில்லை என்ற செய்தி தினம் பத்திரிக்கைகளில் வருகிறது). லேப்டாப் இலவசமாக கொடுத்தார், இலவசக் கல்விக்கு குழிபறித்தார். இலவசக் கல்வியில் ஒரு அங்கம்தான் மாணவர்கள் வீடுகளில் இருந்து பள்ளிக்கு சென்று வருவதற்கான ஏற்பாடும். அனைத்துப் பிள்ளைகளும் சாதி, மத, சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்றி படிக்கும் பொதுப்பள்ளி முறையும், மாணவர்கள் வசிக்கும் பகுதியிலேயே உள்ள பள்ளிகளில் படிக்கும் (அந்தந்த வட்டாரப் பள்ளிகள்) அருகமைப்பள்ளி முறையும் அமுல்படுத்தப்பட்டால், பள்ளி மாணவர்கள் நீண்ட தொலைவு சென்று படிக்க வேண்டிய அவசியமும் இல்லை, அதற்கு இவர்கள் பஸ்பாஸ் இலவசமாக கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. இத்தகைய இலவசக் கல்வியும், பொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறையும்தான் மாணவர்களுக்கு அவசியமானது, மாணவ சமுதாயத்திற்கு செய்யும் நன்மையும் இதுதான்.
சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்கக் கோரி போராடும் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் (கோப்புப் படம்).
இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை, 1964 லில் இருந்து மூத்தக் கல்வியாளர் எஸ்.எஸ் ராஜகோபாலன் போன்றவர்கள் வலியுறுத்தும் உண்மையும் இதுதான். மாணவர் நலனுக்காக சிந்திப்பவர் என்றால் இதைத்தானே செய்ய வேண்டும். ஏன் ஜெயலலிதா செய்யவில்லை? இது முதலாளிகள் நலனுக்கு எதிரானது. அந்த வகையில் ஜெ வுக்கும் எதிரானது. லேப்டாப், சைக்கிள் கொடுப்பது கொடுப்பது முதலாளிகளின் லாபத்துக்கு நல்லது, அது ஜெ வுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போன்ற நல்லது. ஒன்று இலவசங்களைக் காட்டி ’கல்வித்தாயாகி’ ஓட்டுப் பொறுக்கலாம், மற்றொன்று லேப்டாப் போன்றவைகள் மூலம் சீரழிவுகளைப் பரப்பி மாணவர்களின் போர்க்குணத்தைப் மழுங்கடித்து அடிமையாக்கலாம். நான் சொல்வதில் நீங்கள் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. பள்ளிக்கூடங்கள் அருகில் சாராயக் கடைகளை திறந்து, படிக்கச் செல்லும் மாணவர்களை குடிக்க வைத்து அழகு பார்ப்பதில் ஜெ வுக்கு நிகர் ஜெ தான்.
மிகமுக்கியமாக, பார்ப்பன பாசிசத் திமிரோடு சமச்சீர் பாடத்திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தவர்தான் ஜெயலலிதா. இவ்வழக்கில் தமக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாமல், பள்ளிக்கூடங்கள் திறந்து மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் சமச்சீர் கல்வி முறையில் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை வழங்க மறுத்து வக்கிரமாக நடந்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சமச்சீர் பாடப்புத்தகங்களில் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட வள்ளுவரின் படம் அச்சிடப்பட்டது என்ற அற்ப காரணத்துக்காக, அந்த வள்ளுவரின் முகத்தை வெள்ளைக் காகிதம் கொண்டு மறைக்க சொன்னவர் ஜெயலலிதா. குரங்கு கையில் கிடைத்த பூ மாலைப் போல, பாசிச ஜெயவின் கையில் சிக்கி சின்னாப்பின்னமானது சமச்சீர்க்கல்வி பாடத்திட்டம். சமச்சீர்க்கல்வி பாடத்திட்டத்தை எதிர்த்தது மட்டுமின்றி, அரசுப்பள்ளிகளில் ஆங்கில வகுப்புகளைத் திணித்து தமிழ்வழிக் கல்விக்கு குழி பறித்தவர் இந்த ஜெயலலிதா. திட்டமிட்டே அரசுப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டைப் படிப்படியாகக் குறைத்து, போதிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், அரசுப்பள்ளிகளை சீரழித்து, தனியார் பள்ளிகளின் அநியாயமான கட்டணக்கொள்ளைக்கு ஆதரவாக சட்டப்பூர்வமாகவே ஜே போட்டவர் இந்த ஜெயலலிதா. மாணவர் சமூகத்தின் ஜென்மப்பகை இந்த ஜெயலலிதா, என்பதற்கு இன்னும் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவர்கள் மாணவர்களின் நலன் பற்றி பேசுவதற்கு எந்த யோக்கியதையும் இல்லை! இவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு எந்த உரிமையுமில்லை!
இனோவா காரையும், அவார்டையும் வாங்க அ.தி.மு.க. அடிமைகள் வேண்டுமானால் அம்மா புராணம் பாடிவிட்டு போகட்டும். அது அவர்கள் பாடு! தங்களின் பதவி சுகத்துக்காக, அம்மாவுக்கு வரவேற்பு என்ற பெயரில் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் பள்ளி மாணவர்களை ரோட்டில் நிற்க வைத்தும், அம்மா வாழ்க என்று கூவ இவர்களின் கூட்டங்களுக்கு இழுத்துச் செல்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
கேள்வி :
மாணவர்கள் அரசியலிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டுமென்று கூற வருகிறீர்களா?
பதில் :
நாங்கள் எப்பொழுதும் அப்படிச் சொன்னதில்லை. அது எங்கள் கொள்கையும் இல்லை. மாணவர்களுக்கு அரசியல் வேண்டும். நாட்டின் எதிர்கால சமுதாயத்தை வழிநடத்தப் போகிறவர்களுக்கு, எதிர்காலத் தலைவர்களான மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும். இந்த நாட்டின் தலை எழுத்தை தீர்மானிப்பது அரசியல் எனும் பொழுது அதிலிருந்து மாணவர்களை எப்படி விலக்கி வைக்க முடியும்?
ஓட்டுக்கட்சியினர்தான் மேடைக்கு மேடை மாணவர்களுக்கு அரசியல் கூடாது என்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களை பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கம் செய்ய உத்தரவிடுகிறார்கள். தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களை போலீசை ஏவி அடக்கி ஒடுக்குகிறார்கள். ஆனால், அம்மா புகழ் பாடுவதற்காக பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வது, வேகாத வெயில் கால்கடுக்க நிற்க வைப்பது, தேர்தல் காலங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய, ஓட்டுப் பொறுக்க தெருத் தெருவாக பிரச்சாரம் செய்ய, பொதுக்கூட்டங்களில் கூத்தாட என்று பிழைப்புவாத, கேடுகெட்ட, அழுகி நாறிக்கொண்டிருக்கும் பாராளுமன்ற ஓட்டுக்கட்சி அரசியலில் ஈடுபடுத்துகிறார்கள். மாணவர்களுக்கு அரசியல் கூடாது என்று சொல்லிக்கொண்டே தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக மாணவர் சமுதாயத்தையே சீரழிக்கிறார்கள். உண்மையில் இந்த ஓட்டுக்கட்சி அரசியல் மாணவர்களுக்கு கூடாதுதான்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கு ராஜீவ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி போராடும் புமாஇமு (கோப்புப் படம்)
மாணவர்களுக்கு அரசியல் வேண்டும் என்கிறீர்கள், அப்புறம் வேண்டாமென்கிறீர்கள் புரியவில்லையே என்று நீங்கள் கேட்கலாம். நாங்கள் சொல்லும் அரசியல் இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்களின் தலையெழுத்தை தீர்மானிப்பதற்கான அரசியல். பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுக்கும் நிலபிரபுத்துவம், தரகு முதலாளித்துவ, ஏகாதிபத்தியங்களுக்காக இங்கு நடக்கும் ஆட்சியதிகாரத்தை தூக்கியெறிவதற்கான அரசியல் மாணவர்களுக்கு வேண்டும். லஞ்ச, ஊழல், முதலாளிகளின் சுரண்டல்,சமூக விரோத நடவடிக்கைகள் இல்லாத, அனைவருக்கும் கல்வி இலவசமாக கிடைக்கும் சமூகமாற்றத்திற்கான, ஒரு புதிய சமூகத்திற்கான புரட்சிகர அரசியல் மாணவர்களுக்கு வேண்டும்.
மாணவர்கள் அரசியல் போராட்டங்களில் ஈடுபடாமல் எதுவுமே கிடைப்பதில்லை. சமச்சீர் பாடபுத்தகம் வழங்கும் விவகாரத்தில், பள்ளிகள் திறந்து மூன்று மாதங்களை கடந்த பின்னரும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாததை கண்டித்தும் உடனடியாகப் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்து எமது புமாஇமு சார்பில் தமிழகமெங்கும் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்துப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பின்புதான் சமச்சீர் பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.
அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்து! தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கு என்ற முழக்கத்தின் கீழ் தமிழகமெங்கும் தொடர் போராட்டங்களை நடத்திவரும் எமது அமைப்பு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நடத்திய ரிப்பன் கட்டிடம் முற்றுகைப் போராட்டத்தையடுத்து, மாநகராட்சிப் பள்ளிகளில் எமது அமைப்பின் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். பள்ளி கல்லூரி மாணவர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி இது. ஆக, மாணவர்களை அரசியலில் பிரிக்க முடியாது என்பதுதான் உலக வரலாறு. அதுதான் எங்கள் கருத்தும்.
வேறு கிராமத்து பையனை காதலித்த ‘குற்றத்திற்காக’ 23 வயதான பழங்குடியினப் பெண்ணை கிராமத்தினர் யார் வேண்டுமானாலும் வன்புணர்ச்சி செய்யலாம் என்று உத்தரவு போட்டு 13 பேரை விட்டு குதற வைத்தது மேற்கு வங்க “காப் பஞ்சாயத்து”. இது பழங்குடிச் சமூக காட்டுமிராண்டிகளின் பொறுக்கித் தனம் என்பதை நாடே ஒத்துக் கொள்கிறது. ஆனால், பெண்களுக்கு உரிய மதிப்பளிக்கப்படும் தமிழகத்தில் இவ்வாறெல்லாம் நடக்கவே முடியாது, இங்கு ஜனநாயகம் தழைத்தோங்கியுள்ளது, என்று யாராவது நம்பியிருந்தால் இந்த கட்டுரையைப் படித்த பின் அவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி வடக்கு அம்மாப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த அனிஷ் பாத்திமா என்ற பெண் கோவை அரசு சட்டக்கல்லுரியில் இரண்டாம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார். கோவை பகுதியில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி அமைப்பிலும் செயல்பட்டு வருகிறார். இவரது அண்ணன் அலாவுதீனும் பு.மா.இ.மு தோழர்தான். சென்ற ஆண்டு வரை அதே கோவை அரசு சட்டக் கல்லூரியில் படித்து விட்டு தற்போது புதுக்கோட்டையில் வழக்கறிஞராகப் பணி புரிகிறார்.
பொங்கல் மற்றும் தேர்வு விடுமுறைக்கு தமது சொந்த ஊருக்கு வந்த தோழர் பாத்திமா, 27-1-2014 அன்று தமது சொந்த ஊரில் இருந்து கோவைக்கு வழக்கம் போல் தனியார் பேருந்தில் செல்வதற்காக அருகில் உள்ள மீமிசல் செல்லத் தயாரானார். மணமேல்குடியில் இருந்து கோவைக்கு நேரிடையாக பேருந்து இல்லை என்பதால் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீமிசல் வந்து தனியார் பேருந்தில் கோவைக்கு செல்வது வழக்கம். லக்கேஜ்-ம் இருந்ததால் பஸ் ஏற்றி விடுவதற்காக, அவருடன் தோழர் முத்துகிருஷ்ணன் என்பவரை அவர்கள் குடும்பத்தார் ஏற்பாடு செய்து மீமிசலுக்கு அனுப்பி வைத்தனர்.
இரவு சுமார் 7.30 மணிக்கு இருவரும் மீமிசலில் உள்ள தனியார் பேருந்து அலுவலகம் வந்தனர். இதனை தமிழ்நாடு முசுலீம் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த சில இசுலாமிய இளைஞர்கள் நோட்டமிட்டனர். ஒரு இசுலாமியப் பெண் ‘இந்து’ பையனுடன் இருப்பதை கண்டு பிடித்த மதவெறியர்களின் கோணல் புத்தி தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது. அந்த தனியார் பேருந்து இரவு 8.00 மணிக்குதான் புறப்படும். நோட்டமிட்ட கோணல் புத்தி இந்த இடைவெளி நேரத்தைப் பயன்படுத்தி மேலும் சிலரை சேர்த்துக் கொண்டது.
இந்தக் கும்பல் அந்த தனியார் பேருந்தின் அலுவலகத்திற்கு ஒருவரை அனுப்பி கோவைக்கு டிக்கெட் இருக்கிறதா? யார், யார் செல்கிறார்கள் என பயணிகள் போல் நோட்டமிட்டு விசாரித்தது. இவர்கள் விசாரித்து முடித்த சில நிமிடங்களிலேயே கோவை செல்லும் பேருந்து அங்கு வந்தது. பேருந்துக்காக நின்ற பயணிகளுடன் தோழர் பாத்திமாவும் பேருந்தில் ஏறி தனது லக்கேஜ்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்தார். தோழர் முத்துகிருஷ்ணனும் அவருக்கு உதவியாக இருந்துள்ளார்.
அப்போது பேருந்தில் ஐந்து நபர் கொண்ட தமுமுக கும்பல் திமுதிமுவென ஏறியது. அதில் ஒருவன் தோழர் பாத்திமாவை நோக்கி “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறினான். அறிமுகம் இல்லாத நபர்கள் என்பதால் பதில் எதுவும் பேசாமல் லக்கேஜை ஒழுங்குபடுத்தும் வேலையை செய்தார் பாத்திமா.
உடனே அவர்கள், “உன் பெயர் என்ன? இவன் பெயர் என்ன?” என்று கேட்டு மிரட்டினர்.
“நீங்கள் யார்? உங்ககிட்டே என் பெயரை ஏன் சொல்ல வேண்டும்?” என்று கேட்டார் தோழர் பாத்திமா.
உடனே ஆத்திரம் அடைந்த அக்கும்பல், “என்னடி தேவடியா, நீ இந்தப் பயலோட ஓடிப் போறது எங்களுக்குத் தெரியாதுன்னு நெனைச்சிட்டியா? உன்னுடைய பிளான் எல்லாம் தெரியும். மரியாதையா உன் வீட்டு அட்ரசக் கொடு” என்று இசுலாமிய தாலிபான் போலிசாகி மிரட்டினர்.
தோழர் பாத்திமா, “மரியாதையாக பேசு” என்று எதிர்த்துக் கேட்கவே அந்த கும்பலுக்கு ஆத்திரம் தலைக்கேறி கத்த ஆரம்பித்தது. இதற்கிடையில் நேரமும் ஆகி விடவே பஸ் டிரைவர் பஸ்ஸை எடுக்க முயன்றார். ஆனால் அக்கும்பல் பஸ்ஸை எடுக்க விடாமல் டிரைவரை தடுத்தது.
பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட தோழர் முத்துகிருஷ்ணன் அக்கும்பலிடம், “இவங்க என் பிரண்டோட தங்கச்சி. கோவை சட்டக் கல்லுரியில் படிக்கிறாங்க. பேருந்து ஏற்றிவிட அவர்கள் குடும்பத்தினர்தான் என்னை அனுப்பி வைத்தனர்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் அண்ணன் வழக்கறிஞராக வெளியூரில் இருப்பதாலும், இவருடைய தாய் தந்தையர் வயதானவராகளாக இருப்பதாலும் தான் வந்துள்ளதாக விளக்கியுள்ளார்.
“நீ சொல்ற பொய்யை நாங்க நம்பணுமாடா” என்று கூறி தோழரின் நியாயமான தன்னிலை விளக்கத்தையும் நிராகரித்து விட்டது மதவெறி போதை கும்பல். பிரச்சனை செய்து பேருந்தையும் எடுக்க விடாத நிலையில் புதுக்கோட்டையில் இருக்கும் பாத்திமாவின் அண்ணன் அலாவுதீனின் போன் நம்பரை கொடுத்து பேசச் சொன்னார்கள்.
அப்போது, பேருந்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்களும், “இப்பெண் ஒரு வருடத்திற்கு மேலாக இப்பேருந்தில்தான் வருகிறார், நீங்கள் அந்த பெண்ணின் அண்ணனுக்கு போன் செய்து கேட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறி தகராறு செய்த கும்பலை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர். தோழர் முத்துகிருஷ்ணனும் கீழே இறங்கிவிட்டார்.
அக்கும்பல் அவர் அண்ணனுக்கு போன் செய்து, “உன் தங்கை பெயர் என்ன? ஒரு காஃபிர் பயலோடு ஓட முயற்சி பண்ணுது” என்று கூறியுள்ளனர்.
ஏற்கனவே முத்துகிருஷ்ணனுடன் சென்றதை அறிந்திருந்த அலாவுதீன், “அவர் எங்களுக்கு தெரிந்தவர்தான், நாங்கள்தான் அனுப்பிவைத்தோம், இதில் தலையிட உங்களுக்கு உரிமையில்லை” என்று கூறியுள்ளார்.
உடனே அந்த நபர், “போடா கூட்டிக் கொடுக்கிற பயலே” என்றும் இன்னும் பலவாறும் திட்டி போனை தூண்டித்து விட்டார்.
இந்த இடைவெளியில் பேருந்து புறப்பட்டு விட்டது. பேருந்து புறப்பட்டதை பார்த்த முத்துகிருஷ்ணன் இனி பிரச்சனை வர வாய்ப்பில்லை என்று கருதி மணமேல்குடிக்கு பஸ் ஏறிவிட்டார். ஆனால் வெறிகொண்ட இக்கும்பல் மேலும் சில இளைஞர்களை திரட்டிக்கொண்டு பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் சென்று தோழர் பாத்திமா சென்ற பேருந்தை காட்டுக் கூச்சலுடன் துரத்தினர். கொஞ்ச தூரம் சென்றிருந்த பேருந்தை வழிமறித்து தடுத்து பேருந்தின் முன்புறம் குறுக்கும் மறுக்குமாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி பேருந்தை செல்ல விடாமல் தடுத்து விட்டனர்.
உடனே வாகனங்களில் இருந்து இறங்கிய 25-க்கும் மேற்பட்ட காட்டுமிராண்டி கும்பல்,“அந்த தேவடியாள தப்பிக்க விட மாட்டோம்” என்று கத்திக் கொண்டு பேருந்துக்குள் ஏறி, “உன் காலேஜ் ஐடியை காண்பி, நீ உத்தமியான்னு பாக்குறோம்” என்று கூறினர். “இந்த தேவடியா இஸ்லாத்தை கெடுக்க வந்தவள் இவளையெல்லாம் கொல்லணும், படிக்கிற திமிருல விபச்சாரம் பண்ணுரா” என்று பலவாறாக வெறிக் கூச்சலிட்டனர்.
ஆனால், தோழர் பாத்திமாவோ தைரியமாக, “உன்னிடம் ஐடி (அடையாள அட்டை) காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, போலீசை வரச்சொல் அவர்களிடம் காண்பிக்கிறேன்” என்று கூறினார்.
ஒரு பெண் தைரியமாக எதிர்ப்பதை சகிக்க முடியாத அக்கும்பலில் ஒருவன், “என்னடி பொட்ட தேவடியா ஆம்பளைய எதித்து பேசுற, அவள கன்னம் பழுக்குற மாதிரி அடிடா” என்று கத்தினான்.
தாக்குதலுக்கு அக்கும்பல் முயற்சிக்கும் போதும், “ அடித்துப் பாருடா ” என்று தைரியமாக பாத்திமா எதிர்த்தவுடன் சற்று பின்வாங்கிய கும்பல், “அவளை கீழே இறக்குடா” என்று கத்தியதுடன் நிர்ப்பந்தித்து பேருந்தை விட்டு இறக்கியது. தோழரின் லக்கேஜ்கள் அக்கும்பலால் பேருந்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டன. இப்படி தூக்கி வீசியவன் அக்கும்பலால் பாத்திமாவை வேவுபார்க்க முன்கூட்டியே பேருந்தில் ஏற்றி விடப்பட்டவன். அக்கும்பலில் பலர் மதபோதை மட்டுமின்றி குடிபோதையிலும் இருந்தனர்.
தோழர் பஸ்ஸைவிட்டு இறங்கியவுடன் அக்கும்பல் பஸ்ஸை புறப்படச் சொல்லி டிரைவரை மிரட்டியதால் பஸ் புறப்பட்டது. அப்பேருந்து புறப்படும் வரை அனைத்து இதர வாகனங்களும் தேங்கி நின்றன. பேருந்தை நிறுத்திய கும்பல் இட்ட கூச்சல் காரணமாக பொதுமக்கள் 150-க்கு மேற்பட்டோர் கூடி விட்டனர்.
“நைட்டுல தனியா போறியே நீயெல்லாம் நல்ல பொம்பளையா” என்று இறக்கி விட்ட திமிருடன்கேட்ட அந்த இசுலாமியம மதவெறிக் கும்பலிடம், “பொம்பளை என்பதால் தடுத்து நிறுத்துறீங்களே, ஆம்பளைங்க நீங்க இரவிலோ அல்லது யாராவது ஒரு பெண்ணுடனோ வரும் போது உங்களை நான் கேட்டால் பதில் சொல்லுவீங்களா? ஆம்பளைக்கு ஒரு நியாயம் பொம்பளைக்கு ஒரு நியாயமா?” என்று பதிலுக்கு பதில் பேசவே, “நீ படிக்கிற திமிர்லதான இப்படி பேசுற, இனி நீ எப்படி படிக்கிறன்னு நாங்க பாக்குறோம்” என்று மிரட்டினர்.
அதற்கும் “கொஞ்சம் நேரம் இரு; போலீசு வரும் நீங்கல்லாம் அங்க போய் படிப்பிங்க” என்று பதிலடி கொடுக்க அக்கும்பல், “சட்டம் படிக்கிற தைரியத்துல பேசுறீயா, எல்லா சட்ட மயிரும் எங்களுக்கும் தெரியும்.” என்று கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர்.
குடித்துவிட்டு மதவெறியுடன் குதறும் மிருகங்களுடன் ஒரு இளம் பெண் சாலையில் நின்ற படி, தைரியமாக விவாதிப்பதைப் பார்த்த பொதுமக்கள் வியந்தனர். சிக்கலை சமாளிக்க அக்கும்பலிலேயே இருந்த சிலர் சமதானப் புறாவாக மாறி, “ஒரு பொண்ணு அதுவும் முஸ்லீம் பொண்ணு இப்படியெல்லாம் ஆம்பளைக்கு சமமாக பேசக் கூடாது” என்று கூறி, “நீ ரோட்டில் நிற்காதே, அருகில் உள்ள வீட்டுக்கு வா, அங்கே வைத்து பேசிக் கொள்ளலாம்” என்று கூறினர். இஸ்லாமிய பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தையும் தெரிவித்தனர்.
“பஸ்ஸை மறித்து நடு ரோட்டில் என்னை இறக்கும் போது உங்களுக்கு பெண் என்று தெரியலையா” என்று தோழர் கேட்டவுடன் “அது இல்லம்மா… ஒரு பொண்ணு… காலேஜ் போறதுக்கு… எதுக்கு இரவு நேரத்துல… தனியா…” என்று இழுத்துள்ளனர்.
“ஏன் பொம்பளைனா இரவு நேரத்துல பயணம் செய்யக் கூடாதா? அப்படி போனா விபச்சாரியாகவோ, ஓடிப் போறவளாகவோதான் இருக்கணுமா? முஸ்லீம் பொண்ணுன்னா ஆண்களுக்கு அடிமையாத்தான் இருக்கணுமா?” என்று தோழர் பாத்திமா கேட்டார்.
இதனை சகித்துக்கொள்ள முடியாத அக்கும்பல், “நீ ஓடிப்போனா இஸ்லாத்துக்கு அவமானம். நீ எப்படி ஒரு காஃபீர் பையனோட வரலாம்” என்று கேட்டு கூச்சல் போட்டனர்.
மேலும், “உன் அண்ணன், என் தங்கச்சிய யார் கூடவும் அனுப்புவோம். அதக் கேட்க நீ யாருடா என்று கேட்கிறான். இதை இஸ்லாம் ஆண்கள் கேட்டுகிட்டு இருக்கணுமாடி? நீ யாரு கூட வேண்டுமானாலும் பேசுவ, அதப்பாத்துக்கிட்டு சும்மா இருக்கணுமாடி” என்று கேட்டு அடிக்கப் பாய்ந்தனர்.
அதற்கும் தோழர், “என் தனி உரிமையில் தலையிட நீங்கள் யார்?” என்று கேட்க
“இருடி, நீ சட்டம் படிக்கிற திமிர்ல பேசுறியா! உன் ஊர்ல இருந்து நாலு பேர வரச்சொல்லி உன் லட்சணத்த சொல்லுறோம்” என்று பலவாறாக நாக்கூசும் வார்த்தைகளைப் பேசி அவமானப்படுத்த முயன்றனர்.
பஸ்ஸை விட்டு இறக்கியதில் இருந்து பாத்திமாவை முப்பது நிமிடத்திற்கு மேலாக மதவெறியுடன் துன்புறுத்தினர். ஜனநாயக உணர்வு – அதுவும் பெண்ணுக்கு – இருக்கவே கூடாது என்ற கீழ்த்தரமான மதவெறி கோபத்துடன் ஆடிய அந்த கும்பலை எதிர்த்து தன்னந்தனியாக, “பொம்பளையால என்ன செய்ய முடியும்னுதானே அராஜகம் பண்ணுறீங்க? பொம்பளைனா யாருன்னு காட்டுறேன்” என்று பாத்திமா சொன்னதும், “ஏ போடி தேவடியா, எல்லா போலிசும் எங்களுக்கு தெரியும், எல்லா சட்ட மசுறும் எங்களுக்கு தெரியும். சும்மா உதார் விடாதே” என்று திமிராகப் பேசினர்.
இந்நிலையில் தோழர் அலாவுதீன் மற்றும் அவரது மூத்த வழக்கறிஞர் தோழர் ராமலிங்கம் (மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட அமைப்பாளர்) ஆகியோரின் நெருக்குதல் காரணமாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டார்கள். போலீசு மதவெறி கும்பலிடம் இருந்து தோழர் பாத்திமாவை மீட்டு விவரத்தை கேட்டுக் கொண்டு இருக்கும் போதே மதபோதையேறிய ‘வீரம் செறிந்த’ கும்பல் செத்த மாட்டிலிருந்து உண்ணி இறங்குவதைப் போல நழுவிக் கொண்டு இருந்தனர். போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்க முயலுவதை அறிந்தவுடன் இசுலாமைக் காக்க வந்த கும்பல் ஓடி ஒளிந்த விதம், வடிவேலு பாணி நகைச்சுவையை மிஞ்சுவதாக இருந்தது. எல்லா சாதி மதவெறியர்களும் இப்படித்தான் சவுண்டு விட்டு விட்டு யாராவது தட்டிக்கேட்டால் தலை புரண்டு ஓடிவிடுவார்கள்.
“நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போலிசிடம் தோழர்கள் உறுதி காட்டியதை அறிந்த த.மு.மு.க. மற்றும் ஜமாத் நிர்வாகிகள் அனிஷ் பாத்திமாவை அணுகி, “நடந்த சம்பவம் துயரமானது, இஸ்லாத்தை காப்பதற்காக அவ்வாறு செய்து விட்டனர். ஒரு பெண், போலீஸ் ஸ்டேசனில் இருந்தால் நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள். உன் வாழ்க்கை பாதிக்கும். நீ வீட்டுக்குப்போ காலையில் பேசிக் கொள்ளலாம்” என்று சமாதானம் பேசினர். இதுதான் பணிந்தால் அடிப்பது, எதிர்த்தால் கெஞ்சுவது எனும் ஆதிக்கப் பண்பு.
“நான் தவறு செய்யவில்லை; உங்களுடைய ஆட்கள்தான் தவறு செய்துள்ளார்கள்; நான் ஏன் பயப்பட வேண்டும். எனக்கு இதில் அவமானம் என்ன?” என்று கேட்டு வஞ்சகப்பேச்சுக்கு உடன் பட மறுத்து புகார் கொடுக்க தயாரானார்.
இரண்டுக்கும் மேற்பட்ட ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய புள்ளிகள் உள்ளிட்டு சுமார் 50 – க்கும் மேற்பட்டவர்கள் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் விதத்தில் தோழருடன் சமாதானம் பேசினார்கள். “பல இந்து ஆண்கள் இசுலாமிய பெண்களை ஏமாற்றி லவ் பண்ணி திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். இதற்கெதிராகத்தான் ‘லவ் ஜிகாத்’ அவசியப்படுகிறது. அதனால்தான் இஸ்லாமிய அமைப்பில் உள்ளவர்கள் உன்னைப் போன்ற இளம் பெண்களை விசாரிக்க வேண்டி வருகிறது. எனவே இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு சமுதாயத்திற்காக விட்டுக் கொடு” என்றும் “வழக்கு கொடுத்தால் உனக்குதான் அசிங்கமாக முடியும்” என்றும் பலவாறாக பேசினர்.
ஆனால், தோழர் பாத்திமா எல்லாவற்றையும் நிராகரித்து விட்டு, போலீஸ் ஸ்டேசன் அருகில் இருந்த மெடிக்கலில் உட்கார்ந்து நடந்த சம்பவம் தொடர்பாக புகார் எழுத ஆரம்பித்த போது சமாதானம் பேச வந்தவர்கள் ஆத்திரம் அடைந்து, மெடிக்கல்காரரிடம் போய் “அந்தப் பெண்ணை வெளியே அனுப்பு. உனது கடையில் அவளுக்கு இடம் அளிக்க கூடாது, வெளியே அனுப்பு, மெடிக்கலை பூட்டு” என்று கூச்சல் போட்டனர்.
மெடிக்கல்காரரோ, “நீங்கள் யார் என் மெடிக்கலை பூட்டச் சொல்லுவதற்கு? அந்தப் பெண் என் நண்பரின் தங்கை. இங்கு இருந்துதான் புகார் மனு எழுதுவார். உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்” என்று மதவெறி கும்பலை எதிர்த்து நின்றார்.
ஆனாலும், நண்பரின் கடைக்கு பிரச்சினை வேண்டாம் என்று கருதிய தோழர் பாத்திமா போலீசு ஸ்டேசனுக்கு சென்று போலீசாரிடமே பேப்பர் வாங்கி புகார் எழுதிக் கொடுத்தார். போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டதை அறிந்தவுடன் சண்டமாருதம் செய்தவர்களும் சமரசம் பேச வந்தவர்களும் தங்களையும் போலீசு விசாரிக்கலாம் என்று கருதி இடத்தை காலி செய்து ஓடினர். போலிஸ் ஸ்டேசனுக்கு வந்த டி.எஸ்.பி இரவு 10.00 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் தனது வண்டியிலேயே மணமேல்குடிக்கு அழைத்துச் சென்று பாத்திமாவை பாதுகாப்பாக வீட்டில் விட்டுச் சென்றார்.
அடுத்த நாள் 28-1-2014 காலையில் தோழர்களுடன் மீமிசல் சென்று நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தப்பட்டது. அப்போது தமுமுக நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் தோழர்களிடம் சமரசம் பேசினார்கள்.
அதாவது, ‘பெண்ணை விசாரித்தது சரி, விசாரித்த முறை சரியல்ல. விசாரித்தவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். அதனால் மன்னியுங்கள்’ என்று கூறினார்கள்.
“ஒருவரைப் பற்றி விசாரிக்க உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?” என்று தோழர்கள் கேட்டதற்கு
“சமுதாய நன்மைக்குதான் விசாரிக்குறோம். இந்த விசாரணையை எதிர்ப்பவர்கள் சமுதாயத் துரோகிகள்” என்று கூறினர்.
இதைக் கேட்டவுடன், “ஜெயலலிதா பாபர் மசுதியை இடிக்க கரசேவைக்கு ஆள் அனுப்பியவர், கருணாநிதியோ பிஜேபியை தமிழ்நாட்டுக்குள் அறிமுகம் செய்தவர். அவர்களிடம் மாறி மாறி கூட்டணி வைக்கிறீர்களே, நீங்கள்தான் சமுதாயத் துரோகிகள்” என்று தோழர்கள் பதிலிறுத்தனர்.
அதன்பின், “காஃபீருடன் ஒரு பெண்ணை அனுப்புவது தவறு” என்று பேசினர். அதற்கும் தோழர்கள், “குஜராத் பிரச்சனையை வெளியை கொண்டு வந்தவர்கள் காஃபீர்கள்தான், தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் ஜனநாயகத்துடன் பேசுவதற்கு காரணமே பெரியார் என்ற காஃபீர்தான்” என்று பதில் கூறி இவர்களின் கட்டப் பஞ்சாயத்தை ஏற்க மறுத்தனர். அத்துடன் பெண்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதியவும் நிர்ப்பந்தித்தனர்.
இதற்கிடையே கோயமுத்தூர் அரசு சட்டக்கல்லுரி மாணவர்கள் மேற்படி மதவெறி சம்பவத்தை அறிந்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர். மாணவர்களின் நிர்ப்பந்தத்தால் கல்லூரி முதல்வர் காவல் துறையைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை விவரங்களை விசாரித்தார். எஃப்.ஐ.ஆர் போடுவதற்கு போலீசும் தயாராகிக் கொண்டு இருந்தது.
எனவே, ‘எந்தப் பெண்ணையும் விசாரிக்கவும் தண்டிக்கவும் தமக்கு மத ரீதியில் உரிமை உண்டெ’ன முழங்கியவர்கள், தற்போது மேலும் இறங்கி வந்தனர். “நடந்தது மொத்தமும் தவறுதான். இனி எந்த பெண்ணின் தனி உரிமையிலும் தலையிட மாட்டோம்” எனப் பேசினர். தவறு செய்த இளைஞர்களின் எதிர்காலம் கருதி எப்படியாவது வழக்கு இல்லாமல் சமரசமாக முடித்துக் கொள்ள மன்றாடினர்.
தனி நபர்கள் மட்டுமே நமது இலக்கல்ல என்பதாலும் மதவெறியர்களை, அத்தகைய சிந்தனைப் போக்கை தவறென உணரச் செய்யும் வாய்ப்பாக பயன்படுத்த முடியும் என்பதாலும் தோழர்கள் பரிசீலித்து பிரச்சனைக்கு தலைமை தாங்கிய ஐந்து பேரும் (மற்றவர்கள் அடையாளம் தெரியததால் தப்பித்து விட்டனர்.)
மதத்தின் பெயரால் தாங்கள் இழைத்த கொடுமைக்காக பொதுமக்கள் முன்னிலையில் தோழர் அனிஷ்பாத்திமாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
மத உரிமை என்ற பெயரில் இனி யாருடைய தனி உரிமையிலும் தலையிடமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.இவற்றையே கடிதமாகவும் கொடுக்க வேண்டும்.
என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகளை தமுமுக நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஏற்றுக் கொண்டனர்.
சம்பவம் தொடங்கிய அதே கடைவீதியில், பேருந்து அலுவலகத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 200 பேர் கூடினர். ஆனால், இந்த நேரத்தில் இந்துத்துவ மதவெறி ஓநாய்கள் இந்த சமரசத்தை தடுத்து கலவரமாக்க முயன்றனர்.
“முசுலிம் கடைகளில் இந்துப் பெண்கள் வேலை செய்கின்றனர். அவர்களின் வண்டிகளில் ஏற்றிச் செல்கின்றனர். இசுலாமிய பெண் மட்டும் இந்துப் பையனுடன் போகக் கூடாதா? இனி இந்துப் பெண்களும் இசுலாமிய கடைகளுக்கு வேலைக்கு போகக் கூடாது” என்பதாக அலப்பரை செய்தனர். மதவெறி நஞ்சைக் கக்கினர்.
இசுலாமிய மதவெறியை எதிர்க்கும் போராட்டத்தில் நைசாக நுழைந்து குளிர் காய நினைத்த இந்துமதவெறிஅமைப்புகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதால் அந்த இடத்தை தவிர்த்து மாற்றிடத்தில் மன்னிப்பு கேட்க வைத்தோம்.
அரை மனதாக சமாதானத்திற்கு ஒத்துக்கொண்ட தோழர் பாத்திமாவிடம் அப்போது, த.மு.மு.க நிர்வாகி ஒருவர், “உன் ஆசை தீர இவனுங்கள செருப்பால கூட அடிம்மா” என்று கூறினார். இவர்களை மன்னிக்கும் மனநிலை முழுமையாக இல்லாத போதும், நாகரீகம் கருதி அவர் அதைச் செய்யவில்லை.
மன்னிப்புக் கடிதம்
[படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்]
இந்த நாகரீகத்தை – பெருந்தன்மையை பாத்திமாக்கள் பராமரிப்பதா வேண்டாமா என்பது இசுலாமிய இளைஞர்களின் பொறுப்பிலேயே விடப்பட்டுள்ளது.
இத்தனை ஆண்களின் வெறிக்கூச்சலைக் கண்டும் கலங்காத பாத்திமாவை மிகவும் பாதித்தது சம்பவ இடத்திற்கு வந்த இசுலாமிய பெண்களின் பேச்சுதான். அங்கு குடிசையிலிருந்த இந்துப் பெண்கள் இந்தக் கொடுமை கண்டு கொதித்துப் போய், “பொம்பளைங்க படிக்கிறது தப்பாம்மா? நீ உறுதியா இரு!” என்று தைரியமூட்டிய நிலையில் அங்கு வந்த இசுலாமிய பெண்களோ, “இவளெல்லாம் பொம்பளையா? திமிராப் பேசுறா” என்று பேசியுள்ளனர். என்ன செய்வது, பெண்களேயானாலும் அவர்களிடம் இருப்பது மதக்கருத்து என்பதும் அது ஜனநாயக உணர்வுக்கு எதிரானது என்பதும்தானே கொடுமை!
இசுலாமிய மதவெறியர்களின் நடவடிக்கை இந்து மதவெறியை வளர்க்கவே உதவுகிறது என்பது இச்சம்பவத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்து மதவெறியை எதிர்க்க விரும்பும் எந்த ஒரு இசுலாமிய ஆணும், பெண்ணும் தன் சொந்த மதத்தில் உள்ள தாலிபான்களின் காட்டுமிராண்டித் தனத்தை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதே கற்க வேண்டிய பாடமாகும்.
இச் சம்பவம் கடற்கரை பகுதி முழுவதும் மிகவும் பரப்பரப்பாக பேசப்படுகிறது. இஸ்லாத்தையும் அதன் பெண்ணடிமைத் தனத்தையும் காக்க வந்த ஆண்களின் ‘வீரம்’, ஜனநாயக உணர்வும் கம்யூனிச சிந்தனையும் கொண்ட பெண்ணின் போராட்டத்தின் முன் மண்டியிட்டது. இப் போராட்டம் இசுலாமிய பெண்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.
ஒரு இசுலாமிய பெண் யாருடன் பைக்கில் போக வேண்டும் என்பதில் தொடங்கி யாரைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்பது வரை அவளுடைய சகல செயல்பாடுகளும் தமது ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்று இசுலாமிய மதவாதிகள் நம்புவதோடு அதை வெறியுடன் வன்முறையின் துணை கொண்டு அமல்படுத்தவும் செய்கிறார்கள். இப்படித்தான் இசுலாமிய மக்களை பொது நீரோட்டத்திலிருந்து பிரித்து தனிமைப்படுத்தி அவர்கள் மீது இந்துமதவெறியர்கள் தாக்குதல் நடத்துவதற்கு உதவி செய்கிறார்கள். எனவே இசுலாமிய மக்களுக்கு இசுலாமிய மதவாதிகள் ஒருபோதும் பிரதிநிதிகளாகவோ, காப்பாளர்களாகவோ இருக்க முடியாது என்பதுடன் அவர்களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியும் விடுகிறார்கள்.
எனவே தமுமுக, தவ்ஹீத் ஜமாஅத் முதலான இசுலாமிய மதவாத அமைப்புகள் இத்தகைய தாலிபான் காட்டுமிராண்டித்தனங்களை நிறுத்த வேண்டும். இல்லையேல் அதே இசுலாமிய மக்களை வைத்து உங்களது நாட்டாமைத்தனத்தை முறியடிப்போம். அதற்கு தோழர் பாத்திமாவின் போராட்டம் ஒரு தொடக்கம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே சாதி, மத மறுப்பு திருமணங்கள் எமது புரட்சிகர அமைப்புகளில் பகிரங்கமாக நடக்கின்றன. வருங்காலத்திலும் நடத்துவோம்.
இந்துமதவெறியர்களால் தாக்குதலுக்கும், தனிமைப்படுத்தலுக்கும் எதிராக சமரசமற்ற முறையில் போராடும் புரட்சிகர அமைப்புகள் என்ற வகையிலும், இசுலாமிய மக்களை வேறு மத உழைக்கும் மக்களுடன் இணைத்து எல்லா மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் போராடுகிறோம் என்ற வகையிலும் இசுலாமிய மக்களின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள்தான், உங்களைப் போன்ற மதவெறியர்கள் அல்ல.
ஜனநாயக உணர்வு கொண்ட இசுலாமிய ஆண்களே, பெண்களே மதவாத அமைப்புகளிலிருந்து வெளியேறுங்கள்!
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி போன்ற நக்சல்பாரி அமைப்புகளில் அணிதிரளுங்கள்!!
கம்யூனிசமே வெல்லும்!
தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
கோவை.
பின் குறிப்பு:
லவ் ஜிகாத் என்பது இந்து மதவெறி அமைப்புக்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொய்ப் பிரச்சாரம் என்பதுதான் உண்மை. அதாவது இந்து பெண்களை திட்டமிட்டு காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்து கொள்வதை இசுலாமிய தீவிரவாதிகள் சதி போல செய்கிறார்கள் என்றே ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அவதூறு பரப்பி வருகிறது. இந்த கட்டுரையில் லவ் ஜிகாத் எனும் வார்த்தையை பேசிய தமுமுகவைச் சேர்ந்தவர் இந்த பின்னணி, பொருள் தெரியாமல் கூட பேசியிருக்கலாம். ஆனால் இவர்களும் முசுலீம் பெண்களை இந்து மதவெறி அமைப்புகளின் தூண்டுதலால் இந்து ஆண்கள் திட்டமிட்டு காதலித்து திருமணம் செய்கிறார்கள், அதை தடுக்க வேண்டும் என்ற பொருளிலேயே பேசுகிறார்கள், நியாயப்படுத்துகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் இசுலமிய அடிப்படைவாத அமைப்புக்கள் இரண்டுமே தத்தமது பெண்களை வேற்று மத ஆண்களிடமிருந்து காக்க வேண்டும் என்பதையே சாராம்சத்தில் பேசுகிறார்கள். எனவே ஆர்.எஸ்.எஸ் கூறும் லவ் ஜிகாத் எனும் அவதூறை எதிர்க்கும் நாம் மறுபுறம் இசுலாமிய மதவெறியர்கள் இசுலாமிய பெண்களை இந்து அல்லது வேற்று மத ஆண்களிடமிருந்து காப்பாற்றுவதாக செய்யும் அடாவடித்தனத்தையும் கண்டிக்க வேண்டும்.
மத்திய அரசிற்குச் சொந்தமான தேசிய பஞ்சாலைக் கழகத்திற்கும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையே டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்டபடி
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனே அமுல் படுத்த வேண்டும்;
கடந்த ஓராண்டாக தொழிலாளருக்கு வழங்கப்படாமல் இருக்கின்ற அரியர்சை உடனே வழங்க வேண்டும்.
வேலை ஒப்பந்த காலத்தை மூன்றாண்டுக்கானதாக கால நிர்ணயம் செய்ய வேண்டும்
ஆகிய மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் தேசிய பஞ்சாலைக் கழக நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக் கோரியும் கடந்த 23/01/2014 அன்று தொடங்கிய பஞ்சாலைத் தொழிலாளர்களது வேலை நிறுத்தமானது நிர்வாகத்தின் வீம்பினால் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தேசிய பஞ்சாலைக் கழகத்திற்கு தமிழகத்தில் மட்டும் ஏழு ஆலைகள் உள்ளன. அதில் ஐந்து கோவையிலும் ஒன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலிலும் மற்றொன்று இராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடியிலும் இயங்கி வருகிறது.
ஒரு தனியார் ஆலைக்கு நிகரான தொழிலாளர் விரோதப் போக்குடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் என்.டி.சி நிர்வாகம், இம்முறை தொழிலாளர்களிடம் வசமாகச் சிக்கிக்கொண்டது. ஒவ்வொரு ஆலைக்கும் ஒவ்வொருவிதமான நடைமுறைகளை தங்களது விருப்பம் போல நடைமுறைப்படுத்திக் கொள்வது, ஒரு அரசு நிர்வாகமாக இருந்துகொண்டு தொழிலாளர் நலச் சட்டங்களை வம்படியாக மீறுவது என ஆளில்லாக் காட்டில் ஆலவட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. தொழிலாளர் மீதான குறைந்த பட்ச அக்கறை கூட காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருப்பது என்.டி.சி ஆலையில் நிலவும் மோசமான ஒடுக்குமுறைச் சூழ்நிலையாகும்.
கோவைப்பகுதியில் நிர்வாகமானது சற்று அடக்கி வாசித்தாலும் காளையார்கோவிலிலும் கமுதக்குடியிலும் ஆட்டம் போடுகிறது. தாங்கள் போராடிப்பெற்ற உரிமைகள் என்னென்ன என்பதைக்கூட தொழிலாளர் அறிந்து வைத்திருக்கவில்லை. பிழைப்புவாதத்தில் பிழைப்பு நடத்தும் போலித் தொழிற்சங்கங்களும் இவற்றை தொழிலாளர்க்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. இருக்கும் உரிமைகள் என்னென்னவென்றே அறியாதபோது இழக்கும் உரிமைகள் பற்றி அறிந்திருக்க முடியுமா?
ஆனால், கடந்த நான்காண்டிற்கு முன்பிலிருந்து நிலைமைகள் மாறத் தொடங்கியிருக்கிறது. புஜதொமுவின் தோற்றத்திற்குப் பிறகு கோரிக்கைகள் அதன் உச்சகட்டம் நோக்கிப் பாயத் தொடங்கியுள்ளது. அதுபோலவே தொழிலாளிகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியிலும் அதன் செயல்பாடுகள் நம்பிக்கை தரத் தொடங்கியுள்ளன.
இப்போதைய போராட்டம் கூட இதற்கு முன்னர் நடைபெற்ற போராட்டங்களைப் போலல்லாது சங்க வித்தியாசம் பாராமல் அனைத்துத் தொழிலாளரும் தன்னுணர்வோடு போராட்டத்தைத் துவக்கினர். சில பிசிறுகள் இருந்தாலும் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து இப்போராட்டத்தை நடத்த வேண்டும் என ஆரம்பம் முதலேயே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனியின் இணைப்புச் சங்கமான கோவை மண்டலப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கமானது தொடர்ந்து முயற்சித்து வந்தது.
இன்னும் பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டிருக்கிறது. வேலை நிறுத்தத்தைக் கைவிட்டால்தான் ஏதேனும் பிச்சையாகத் தரப்படும் என நிர்வாகம் வீம்புகாட்டி வருகின்றது. வேலைநிறுத்தத்தால் நாளொன்றுக்கு ஒருகோடி ரூபாய்களுக்கும் மேலாக உற்பத்தி இழப்பு நடைபெறுவதாக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. ஆனால் இந்த வேலை நிறுத்தத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பள இழப்பு நாளொன்றுக்கு பத்து லட்சம் ரூபாய்களுக்கும் மேல் என்பதை திமிர் கொண்ட நிர்வாகம் உணரவில்லை. அது இன்னும் பழைய நம்பியார் காலத்து வில்லன் போலவே நடந்துகொண்டிருக்கிறது.
இதற்கிடையில் காளையார் கோவில் காளீஸ்வரா மில் “பி” யூனிட்டிற்கு குறுக்கு வழியில் பொதுமேலாளராக வந்திருக்கும் சிவராம்ராஜ் வேலைநிறுத்தத்தை உடைப்பதற்காக வெளியூரிலிருந்த தனியார் ஆலைத் தொழிலாளர்களை ரகசியமாக நள்ளிரவில் அழைத்துவந்து மில்லை இயக்கினார். செய்தி கேள்விப்பட்ட தொழிலாளர் ஆலையின் முன் திரண்டனர். நிர்வாகத்தைக் கண்டித்தனர். வேலைக்கு வந்த தொழிலாளர்களிடம் நிலைமையை எடுத்துக் கோரினர். அதன் பின்னர் ஆலையை இயக்க சிவராம்ராஜால் முடியவில்லை. போராட்ட நிலைமையை விளக்கியும் பொதுமேலாளரைக் கண்டித்தும் காளையார் கோவில் ஆலையின் முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதென புஜதொமு முடிவு செய்து அனைத்துச் சங்கத் தொழிலாளரிடமும் ஆதரவு கோரியது. இதை ஏற்றுக் கொண்ட தொழிலாளர் அனைவரும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் 30/01/2014 அன்று காளையார்கோவில் மில்லின் முன்னால் நடைபெற்றது.
புஜதொமுவின் தோழர் சரவணன் தலைமையேற்றார். அடுத்துப் பேசிய ஆலைத்தொழிலாளி புஜதொமு தோழர் மருதுபாண்டியன் “இதுவரை ஒரு சி.எல்.ஆர் தொழிலாளியைக்கூட நிரந்தரம் செய்யாத அக்கறை காட்டாத பொதுமேலாளர் சிவராம்ராஜ் ஆலையைத் திறப்பதில் மட்டும் இவ்வளவு அக்கறை காட்டுவது ஏன்?” எனக் கேள்வியெழுப்பினார்.
அதன் பின்னர், கோவை மண்டலப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தோழர் பழனிச்சாமி உரையாற்றினார். அதன்பிறகு பேசிய தோழர் குருசாமி மயில்வாகனன், சமூகத்தின் அடிப்படை இயங்குசக்தியான தொழிலாளர் வர்க்கத்தை நாட்டின் ஆளும் வர்க்கமாக உயர்த்துவதுதான் புஜதொமுவின் பணி என்றார். அதன்பிறகு பேசிய தோழர் நாகராசன், தனியார்மய, தாராளமய, உலமயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்ட பிறகு இந்தியாவில் தாங்கள் போராடிப்பெற்ற உரிமைகளைத் தொழிலாளி வர்க்கம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதையும், இதனால் அது மேலும் மேலும் துயரங்களை அனுபவித்து வருவதையும் விளக்கியதோடு தொழிலாளர் வர்க்கம் ஒரே சங்கமாக வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைத்தார். அதன்பிறகு பேசிய கோவை மண்டலப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தோழர் ஜெகன்னாதன் நடைபெற்றுவரும் போராட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் நிர்வாகத்தின் திமிரான போக்குகள் பற்றியும், எடுத்துக்கூறி தொழிலாளர்களை பல சங்கங்களாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளதை வைத்து இனி ஏமாற்ற முடியாது, அவர்கள் ஒரே சங்கமாக இணையும் காலம் வந்துவிட்டது என்றார். தொழிலாளர் உரத்தகுரலில் இடியென முழக்கிய முழக்கங்களோடு இறுதியாக புஜதொமு தோழர் தங்கவேலு நன்றிகூற ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.
இன்னும் தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளுக்காக பல போராட்டங்களை நடத்த வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற தொழிலாளருக்கு தேவையானது ஒன்றே ஒன்றுதான். அது போலிகளை விலக்கி அசலை அணுக வேண்டிய கண்ணோட்டம். அதன் கட்டாயத்தை விரைவில் தொழிலாளர் உணர்வர். அப்படி உணர்ந்ததும் நாட்டின் நிலைமை நிச்சயம் தலைகீழாய் மாறும். மாறியே தீரும்.
பழனிச்சாமி, கோ.ம.ப.தொ சங்கம்
தொழிற்சங்கத் தொழிலாளர்கள்
ஆர்ப்பாட்டம்
ஆலையின் முகப்பு
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
சுவரொட்டி
தொழிலாளரின் முழக்கம்
தோழர் குருசாமி மயில்வாகனன்
தோழர் சரவணன், பு.ஜ.தொ.மு
தோழர் நாகராசன்
தோழர் மருதுபாண்டியன்
தோழர் ஜெகன்னாதன்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
செய்தியாளர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி-தமிழ்நாடு.
சிதம்பரம் நடராசர் கோவிலில் நமது முப்பாட்டன் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து, தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை அகற்றுவோம்!
தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவ போராடுவோம்!
மக்கள் சொத்தான தில்லைக்கோவிலை மீட்க சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற நிர்பந்திப்போம்!
மாநாடு-பேரணி-பொதுக்கூட்டம்-கலைநிகழ்ச்சி
நாள் : 16-2-14 ஞாயிற்றுக் கிழமை நேரம் : காலை 10.00 மணி முதல் இடம் : சிதம்பரம்.
நமது முப்பாட்டன் நந்தனாரை இழிவுபடுத்தி வேள்வித் தீ முட்டி கொன்றொழித்த பார்ப்பனர்கள் தீண்டாமைச் சுவரையும் எழுப்பி அவரது ஆளுயர சிலையையும் அகற்றி தனது பார்ப்பன சனாதன ஆதிக்கத்தை இன்று வரை நிலைநாட்டி வருகின்றனர்.
“தில்லை நடராஜர் கோவில் நிர்வாகத்தை தீட்சிதர்களே தொடர வேண்டும்” என்று உச்சிக்குடுமி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. “சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச்சோறு உண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதி” என்பது நந்தனார் காலத்தில் மட்டுமல்ல. 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.
“1951-ல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தீட்சிதர்கள் மடாதிபதி போன்றவர்கள் என்று சொல்லியுள்ளதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் அந்த தீர்ப்பு சரியா? தவறா? என்று ஆராய விரும்பவில்லை” என்பது தான் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அடிப்படை. சிதம்பரம் கோயில் மடம் அல்ல. தீட்சிதர்கள் கோவிலில் மணியாட்டும் அர்ச்சகர்கள் மட்டுமே. ஆனால் தீட்சிதர்கள் சார்பில் பா.ஜ.க. சு.சாமி வாதிட பார்ப்பன ஜெயா அரசு ஆதரவு அளிக்க, பார்ப்பன நீதிபதிகள் அக மகிழ்வுடன் வழங்கிய அயோக்கியத்தனமான தீர்ப்பு இது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றும் புனிதமானதும், இறுதியானதும் அல்ல. உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படும் பெரும்பான்மை தீர்ப்புகள் ஊழல் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் நலன் சார்ந்த, தொழிலாளர்கள், விவசாயிகள், கல்வி உரிமைகள், இயற்கை வளங்கள் ஆகியவற்றுக்கு எதிராக தனியார்மயக் கொள்கையை ஆதரித்து பல தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். பாதிக்கப்படும் மக்கள் எதிர்த்துப் போராடாமல் எப்படி இவற்றை ஏற்க முடியும்?
பக்தர்கள் நடராசனை பார்க்க தீட்சிதர்கள் கேட்கும் காசை கொடுக்க முடியாத போது, தீட்சிதர்கள், “சுப்ரீம் கோர்ட் சொல்லிடுச்சு, வெளியே போ” என மக்களை அவமானப் படுத்துகிறார்கள். காசுக்காக மட்டுமல்ல நந்தனார் தொடங்கி வள்ளலார், வாரியார் வரை தனது பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு தயங்கியதில்லை. இத்தகைய கொடுமைகளையும் தமிழ் மொழியை இழிவுபடுத்துவதும், சாதி தீண்டாமையை கடைபிடிப்பதும், ஒழிக்கப்பட வேண்டுமென்றால் நடராசர் கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இத்தகைய நீதியை நிலைநிறுத்த மக்கள் மன்றத்தில் இறங்கி நாம் போராட வேண்டும்.
தில்லைக் கோவிலில் உண்டியல் வைத்த பிறகு அதன் வருமானம் மூன்று ஆண்டுகளில் 1.5 கோடி ரூபாய். கிலோ கணக்கிலான தங்கம், வெள்ளி தனி கணக்கு ! ஆனால் முன்பு தீட்சிதர்கள் ஆண்டுக்கு வெறும் 199 ரூபாய் இருப்பு என பொய் கணக்கு காண்பித்தார்கள். வருமானத்தில் உள்ள மோசடி மட்டுமல்ல? கோவில் சொத்தையே மோசடியாக விற்று பணம் பார்த்த தீட்சிதர்களிடம், 40 ஏக்கரில் அமைந்த தில்லை கோவில் சாவியையும், ஆருத்ரா தரிசனம் ஆனி திருமஞ்சனம் என்று பக்தி பெருக்குடன் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களின் உரிமையையும், எத்தகைய படுபாதக செயலையும் செய்யத் தயங்காத சதிகாரர்கள் கையில் கோவிலை கொடுத்துள்ள இழி செயலை அனுமதிக்க முடியாது.
வரலாற்றில் சமயக்குரவர்கள் நால்வருக்குப் பிறகு தில்லை நடராசர் கோவில் சிற்றம்பல மேடையில் 2008-ல் சூத்திரர் என்று இழிவுப்படுததப்படும் சிவனடியார் ஆறுமுகசாமி மூலம் தேவாரம் பாடி தமிழ் உரிமையை நிலை நாட்டினோம். தில்லை கோவில் நிர்வாக அதிகாரி நியமனத்திற்கு தடை பெற்று, தீட்சிதர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் பல ஆண்டுகளாக உறங்க வைத்த வழக்கை, மனித உரிமை பாதுகாப்பு மையம் மூலம் விசாரணைக்கு கொண்டு வந்து மக்கள் ஆதரவுடன் புரட்சிகர அமைப்புகளின் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்று 2009-ல் அரசு கட்டுப்பாட்டில் வந்ததுடன் முதல் முறையாக உண்டியல் வைக்கப்பட்டது.
மறுபுறம் தீட்சிதர்கள் தனது வரம்பற்ற கொள்ளைக்கு தடையாக அறநிலையத்துறை இருப்பதால் உச்சநீதிமன்றம் சென்றனர். அன்றைய எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவை நேரில் சென்று பார்த்தனர். அதன் கைமாறாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞரை வைத்து “தில்லைக் கோவில் மக்கள் சொத்து, தீட்சிதர் தனி சொத்து அல்ல” என வாதிடாமல் ஜெயா அரசு தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்தது. மேலும் தீட்சித பார்ப்பனர்களுக்கு ஆதரவாக ஆரம்பம் முதலே பா.ஜ.க. சு.சாமி, இந்து முன்னணி இராம.கோபாலன், இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத், வி.எச்.பி.அசோக் சிங்கால், வேதாந்தம், பிராமணர் சங்கத்தலைவர் நாராயணன், சங்கராச்சாரி ஆகியோர் களத்தில் நேரடியாக அறிக்கை விடுவதும், கூட்டம் நடத்துவதும், பேட்டி கொடுப்பதும் கோவிலுக்கு சென்று ஆதரவு தெரிவிப்பதும் அன்றாட நிகழ்வுகளாக நடந்தேறியது.
இந்த பார்ப்பன சதித்திட்டங்களை சு.சாமி, ஜெயா கூட்டுச்சதி என உச்சநீதிமன்றத்தில் வழக்கு இறுதி விசாரணை ஆரம்பிக்கும் போதே தமிழக அரசைக் கண்டித்து ம.க.இ.க உள்ளிட்ட எமது அமைப்புகள் தமிழகம் முழவதும் பல வடிவங்களில் போராட்டங்களை நடத்தின, தோழர்கள் சிறை சென்றனர். உச்சநீதிமன்ற வழக்கில் மூத்த வழக்கறிஞர் வைத்து வாதிட வேண்டும் எனக்கோரி சிவனடியார் ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி உயிர் துறப்பேன் என மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களுடன் தீட்சிதர்கள், ஜெயா அரசின் சதி திட்டத்தை கேள்விக் குள்ளாக்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
எதிர்பார்த்ததுபோலவே தீட்சிதர்களின் மனம் குளிர 6114 அன்று டெல்லி உச்சி குடுமி மன்றம் தீட்சிதர்களே கோவிலை நிர்வாகம் செய்யலாம் என மக்கள் நலன்களுக்கு விரோதமாக தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பு பற்றி தீட்சிதர்கள், “நடராசன் எங்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசு” என பார்ப்பனக் கொழுப்புடன் திருவாய் மலர்ந்துள்ளனர்.
“தில்லைக் கோவில் மட்டுமல்ல! தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். இந்து மதவாதிகளிடம் கோவில்களை ஒப்படைக்க வேண்டும்” என சு.சாமி உள்ளிட்ட மதவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். கோவிலில் தமிழ் மொழித் தீண்டாமையை, சாதித் தீண்டாமையை, கருவறைத் தீண்டாமையை பாதுகாக்கும் இத்தகைய பார்ப்பன மதவாதிகள், எல்லோரும் இந்துக்கள், அனைவரும் சமம் என பித்தலாட்டம் செய்வதுடன் பார்ப்பன தீட்சிதர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.
உலகிற்கே உழைத்து சோறு போடும் பொருட்களை உற்பத்தி செய்யும், இருப்பிடத்தை கட்டிக் கொடுக்கும் பெரும்பான்மை மக்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தி தீண்டாமைக் கொடுமை நடத்திய பார்ப்பனக் கும்பல் இன்று பயங்கரவாதிகளாக உருவெடுத்து குண்டு வைப்பது, கொடூர முறையில் கொலை புரிவது, வம்சத்தையே கூண்டோடு கருவருப்பது என்று பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது.
இந்த பார்ப்பன கும்பல் நீதித்துறை, அரசு அதிகார துறை, கல்வித்துறை உள்ளிட்டு அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி கொண்டு வரலாற்று புரட்டுகளையும் அறிவியலுக்கு புறம்பான புராண இதிகாச கட்டுக்கதைகளையும் பரப்பி மக்களை அறியாமை இருட்டில் அழுத்தி வைத்துள்ளது.
உச்சிக்குடுமி மன்றத்தின் பார்ப்பன நீதிமான்களின் துணையுடன் இந்து அறநிலையத்துறையை வெளியேற்றி தனது கொள்ளைக் கூடாரமாக மாற்றிக் கொண்டு, உண்டு கொழுக்கவும், தினவெடுத்து திரியவும் வெறியுடன் கிளம்பியுள்ளது தீட்சிதர் பார்ப்பன கும்பல். பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட சங்க பரிவாரம் முதல் உள்ளூர் ஏமாந்த சோனகிரி ஆலயப்பாதுகாப்பு குழு வரை இதற்கு உறுதுணையாக நின்று கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு நடராசர் கோவில் சொத்துக்களை சூறையாடுகின்றனர். இது தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களுக்கும் விரிவுபடுத்தும் முயற்சிதான் தில்லைக் கோவில்.
தமிழ் மொழியின் தமிழ் இனத்தின் தமிழர்களின் மீது இனப்பகைமை கொண்டுள்ள பார்ப்பன தீட்சித கும்பல் தற்போது கிடைத்துள்ள தற்காலிக வெற்றிக்களிப்பில் அறிவிழந்து மூடர்கூடமாக மாறி குதியாட்டம் போடுகின்றனர். இந்த அழுகுணி ஆட்டத்தை, சுயமரியாதை உள்ள, தன்மானம் மிக்க, பகுத்தறிவு கொண்ட தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
உழைப்பாளிகள் உதிரம் கொடுத்து உயிரை துறந்து கட்டிய சிதம்பரம் நடராசர் கோவில் தொன்மையான வரலாற்று சின்னம். 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிச்சாவரம் ஜமீனிடம் இருந்து கோவில் சாவியை வாங்கி மணி ஆட்டி வந்த தீட்சிதர்கள், இன்று கேட்டுக் கேள்வி இன்றி ஆண்டு அனுபவிக்கலாம் என்றால், அதை நீதிமன்றமும் ஆமாம் என தீர்ப்பு சொல்லும் என்றால், இது தமிழர்களுக்கு விடப்பட்ட சவால் இல்லையா?
பகுத்தறிவுள்ள, சுயமரியாதையுள்ள பக்தர்களே!
பார்ப்பன கெடுங்கோன்மைக்கு எதிராக ஆன்மிக அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவோம்.
கடவுளை வழிபட பார்ப்பானின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்து போக வேண்டிய அவசியமில்லை.
பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக போராட தில்லைக்கு அணிதிரள்வீர்!
இவண்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
கடலுர்ர்-விழுப்புரம்-புதுச்சேரி
ஒருங்கிணைப்பு
மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு. தொடர்பு 99650 97801, 97917 76709, 9597789801
டாடா இன்னபிற கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மைய அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் என்று பர்கா தத்தும், நீரா ராடியாவும் ‘ஆத்மார்த்த’மாக உரையாடுவதைப் பார்க்கும் தமிழக ஊடக ஆசாமிகளுக்கும் அந்த ஆசை வராமலா இருக்கும்? இதனால் அதிமுக அமைச்சரவையில் யார் இடம் பெற வேண்டும் என்று இவர்கள் முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். ‘அம்மா’வை சும்மா என்று எழுதினாலே சுளுக்கும், வழக்கும் உறுதி என்பதால் இவர்கள் பார்க்கும் தரகு வேலையில் கூட ஒரு எச்சரிக்கை உணர்வும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதாவது அடிமைத்தனம் கண்டிப்பாக இருக்கும்.
திருமாவேலனின் இலட்சிய பத்திரிகையாளர் தரகு வேலை பார்க்கும் பர்கா தத்
ஜூனியர் விகடனின் வெளியீட்டாளரும், ஆசிரியருமான ப.திருமாவேலன் தமிழ்நாட்டின் பர்கா தத்தாக படியேறுவதற்கு ஒரு தரம் தாழ்ந்த வேலையில் இறங்கியிருக்கிறார். தமிழகத்தில் இந்துமதவெறி பாசிஸ்ட்டுகளான பாஜகவை ஆளாக்குவதற்கு காவி போதையில் திளைக்கும் கண்றாவி காந்தியவாதி தமிழருவி மணியன் மாமா வேலை பார்த்து வருவது அனைவரும் அறிந்ததே. இதில் மீடியா பார்ட்டனர்களாக தினமலர், தினமணி, புதிய தலைமுறை, துக்ளக், குமுதம் இன்னபிற ஊடகங்கள் தீவிரமாக கதை எழுதி வருகின்றன. எனினும் மோடி பிரதமர் ஆக முடியவில்லை என்றால் ஜெயா பிரதமராக பாஜக உதவவேண்டும் என்ற நிபந்தனையுடன் சோ போன்றவர்கள் பாஜகவை ஆதரிப்பது போன்று மற்ற பத்திரிகைகளும் அதிமுகவையும் விட்டுக் கொடுக்காமல் செய்திகளை படைத்து வருகின்றன.
இதில் மோடிக்கு பக்க மேளம் வாசிக்கும் கார்ப்பரேட் தமிழ் ஊடங்களையெல்லாம் விஞ்சும் தலைமைப் பார்ட்டனராக ஜூவியின் திருமாவேலன் அல்லும் பகலும் பொய்யும் புனைவுமாக பாடுபாட்டு வருகிறார். மோடிதான் அடுத்த பிரதமர் என்று பாஜக கும்பல், கார்ப்பரேட் மற்றும் ஊடக, இணைய விளம்பர நிறுவனங்களோடு கிளப்பி விட்ட புகையின் போதே திருமாவேலனும் ஜூவியை அதற்கு கச்சிதமாக பயன்படுத்தி வருகிறார். முத்தாய்ப்பாக “எந்தக் கூட்டணி ஜெயிக்கும்…. அடுத்த பிரதமர் யார்? ஜூ.வி மெகா சர்வே ரிசல்ட்” என்ற தலைப்பில் 19.01.14 தேதியிட்ட இதழில் ஒரு அட்டைப்பட செட்டப் கட்டுரை வந்திருக்கிறது.
இந்த ‘மெகா’ சர்வேக்காக ஜூ.வியின் 90-க்கும் மேற்பட்ட நிருபர் படை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி சுழன்று 9,174 பேர்களை சந்தித்து தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை ‘துல்லியமாக’ கண்டு பிடித்திருக்கிறதாம். ஒரு நிருபர் தலா 100 பேர்களை சந்தித்து, விரும்பிய பதில்களை வரவழைப்பதற்காகவென்றே திருமாவேலனால் தயாரிக்கப்பட்டிருக்கும் கேள்விகளை கேட்டு, பின்பு உதவி ஆசிரியர்களால் தொகுத்து இறுதியில் ஜூவியின் ஆசிரியர் மேஜையில் திருத்தம் போட்டு சிம்பிளாக அச்சடித்து விட்டார்கள். ஒரு பொய்யை உண்மையென காட்ட வழக்கமாக செய்யப்படும் தகிடுதத்தங்களையும், ஜிகினா வேலைகளையும் செய்யாமலேயேக் கூட மிகுந்த அலட்சியத்துடன் இந்த சர்வே நம் முன் வைக்கப்படுகிறது. படிப்பவன் நம்புவான் என்று அவனது அறிவு குறித்த எகத்தாளமான நம்பிக்கை இவர்களுக்கு.
அட்டைப்பட செட்டப் கட்டுரை
இந்த சர்வேயில் எட்டு கேள்விகளுக்கான பதில்களை சதவீதக் கணக்கிலும், வரைபடமாகவும் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் முத்தாய்ப்பான கேள்வி “நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள்?”.
அதற்கு ஜூவியின் செட்டப் தயாரிப்பு படி பாஜக கூட்டணி 40.88% சதவீதமும், அதிமுக கூட்டணி 22.70%, திமுக கூட்டணி 21.77%, காங்கிரஸ் கூட்டணி 10.21%, பாமக கூட்டணி 4.44%மும் பெற்றிருக்கிறதாம். அதாவது வரும் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி சுமார் 16 தொகுதிகளில் வெற்றி பெறும் வண்ணம் முதலிடத்தில் இருக்கிறதாம். தமிழகத்தில் இரண்டு அல்லது இரண்டே கால் சதவீத வாக்கு வங்கி கூட இல்லாத காவிக் கூடாரம், மதிமுக, பச்சமுத்து, கொங்கு வேளாளக் கட்சி போன்ற அனாமதேயங்களோடு சேர்ந்து இத்தகைய பெரு வெற்றி பெருமாம். ஒரு வேளை தேமுதிக, பாமக வந்தால் கூட இந்த கூட்டணிக்கு ஓரிரண்டு தொகுதிகளில் டெபாசிட் கிடைக்கலாமே ஒழிய வேறு ஒன்றும் கிடைத்து விடாது.
‘இல்லை இது உண்மை’ என்றால் அதற்குரிய அறிவியல்பூர்வமான முறையில் சர்வே நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்திய அளவில் ஆங்கில கார்ப்பரேட் ஊடகங்கள் நடத்தும் கருத்து கணிப்பு கூட பாதிக்கு பாதி தவறாகவே நடந்திருக்கிறது. இருப்பினும் அந்த சர்வேக்கள் மிகுந்த தொழில்முறையில் நடப்பதாகவாவது கூறிக் கொள்கிறார்கள். தேர்தல் முடிவுகள் குறித்த வரலாறு, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் பிரச்சினைகள், தேசிய நலன்கள், சாதி, மதம், மொழி இன்னபிற காரணங்கள், வயது, பாலினம், நகரம், கிராமம்,தொழில், வர்க்கம் போன்ற பிரிவுகள், கூட்டணி யதார்த்தங்கள், இன்ன பிறவற்றையெல்லாம் தொகுத்து யாரை, எங்கே, எப்போது சந்தித்து கணிப்பு நடத்த வேண்டும் என்பதிலிருந்து முடிவுகளில் தவறுகளுக்கான வாய்ப்பு எத்தனை சதவீதம் என்பது வரை சொல்லி விடுகிறார்கள். இதற்கு மேலும், சம்பந்தப்பட்ட ஊடகங்களின் கட்சி சார்பு, கார்ப்பரேட் நலனும் இதைத் தீர்மானிக்கும் என்பதோடு பல முடிவுகள் தவறாகவும் இருந்திருக்கின்றன.
இந்த இலட்சணத்தில் திருமாவேலனது சர்வே தரத்தை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். இதை ஆம் ஆத்மியின் யோகேந்திர யாதவ் போன்ற தொழில்முறை தேர்தல் ஆய்வாளர்களிடம் காட்டினால் காறித் துப்புவார்கள். இப்படி ஒரு அபாண்டத்தை, அயோக்கியத்தனத்தை துணிந்து செய்ய வேண்டுமென்றால் ஜூவிக்கு ஒரு நோக்கம் இருந்தே ஆக வேண்டும். அது மோடி மற்றும் மோடியோடு கூட்டணி சேரும், சேர்ந்தே ஆக வேண்டிய கட்சிகளின் நலனோடு இணைந்திருக்கிறது.
பிப் – 5, 2014 தேதியிட்ட இந்தியா டுடேவிலும் அடுத்த தேர்தல் குறித்து ஒரு சர்வேயை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணி 103 இடங்களிலும், பாஜக 212, இதர கட்சிகள் 228 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக 29 இடங்கள், திமுக 5, காங்கிரஸ் 0, பிற கட்சிகள் 5 என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதில் பிற கட்சிகள் என்பதில் போலிக் கம்யூனிஸ்டுகள் தொடங்கி பாஜக கூட்டணி வரை பலர் இருக்கின்றனர்.
ஜூனியர் விகடன் ஆசிரியர் திருமாவேலன் – பாஜக கூட்டணி வெற்றிக்காக பொய்யும் புரட்டுமாக வேலை செய்கிறார்
இந்தியா டுடே போன்ற இந்திய பத்திரிக்கைகளுக்கு, தங்களின் கணிப்பை சரியாகக் கொடுத்தாக வேண்டிய சந்தை நிர்ப்பந்தம் இருக்கிறது. அவர்களது தொலைக்காட்சிகளிலும் இந்தக் கணிப்பை வெளியிடுவார்கள். அதனால் அவர்களுடைய கணிப்பின் எதிர்பார்ப்பும் எடை போடப்படுவதும் அதிகம். ஆக தில்லிக்காரன் கூட இங்கே பாஜக கூட்டணி பெறு வெற்றி பெறும் என்பதை மறுக்கும்போது அண்ணாசாலை அம்பி பத்திரிகை இப்படி பொய்யாக பொளந்து கட்ட வேண்டிய தேவை என்ன? இவ்வளவிற்கும் இந்திய அளவில் காங் கூட்டணியை விட பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்று இந்தியா டுடே கணித்திருக்கிறது. அது அவர்களின் விருப்பமாக கூட இருக்கலாம் என்றாலும், தமிழக நிலவரத்தை அவர்கள் சாதகமாக காட்ட முடியாத அளவு யதார்த்தம் வேறாக இருக்கிறது என்பதே உண்மை. பொய் கூறுவதைக் கூட பொருத்தமாக சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே ஜூவி ஆசிரியரின் நம்பிக்கை.
இந்த சர்வேக்கு ஜூவி தயாரித்திருக்கும் கேள்விகள் கூட திருமாவேலனது எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. திமுக – தேமுதிக கூட்டணி அமைந்தால் எனும் கேள்விக்கு பதில்களாக பலமான கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி, மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று வைத்தவர்கள், தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் பிஜேபி அணியில் சேர்ந்தால் எனும் கேள்விக்கு பதில்களாக, முரண்பாடாக இருக்கும், பலமான அணியாக இருக்கும், இது காங்கிரஸ் எதிர்ப்பு அணி என்று வைத்திருக்கிறார்கள். ஏன் திமுகவிற்கு வைத்த பதில்களை இங்கே வைக்கவில்லை? திமுகவிற்கு சந்தர்ப்பவாதம், பாஜகவிற்கு முரண்பாடு என்று யோசிப்பதற்கு ஒரு நோக்கம் இல்லாமல் சாத்தியமில்லை.
மேலும் விஜயகாந்த் எப்படியாவது பாஜக அணிக்கு வரவேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்று கேள்விகளை வைத்திருக்கிறார்கள். மூன்றாவது கேள்வியான “விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் இடம்பெற வேண்டும்?” என்பதற்கு, பாஜகவுடன் சேர வேண்டும் என்று 26.59% பேரும், திமுகவுடன் சேர வேண்டும் என 20.91% பேரும், தனித்துப் போட்டியிட வேண்டும் என 33.14% பேரும் சொல்லியிருக்கிறார்களாம். இதன்படி விஜயகாந்த் பாஜக கூட்டணியோடு சேர்ந்து போட்டியிடுவதே சாலச்சிறந்தது என்று சுட்டிக் காட்டுகிறார்களாம். இந்த சர்வேயைப் பார்த்து சாலிகிராமம் கேப்டன் மனசு மாற வேண்டும், சீக்கிரம் பாஜக கூட்டணியில் துண்டை போட வேண்டும் என்று அண்ணா சாலை எடிட்டர் சர்வேயைக் காட்டி வற்புறுத்துகிறார்.
பாஜக கூட்டணியில் தொகுதி உடன்பாடு, சண்டை என்று எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்று தொகுதிகளின் எண்ணிக்கையோடு அதற்குரிய நியாயத்தையும் இட்டுக் கட்டி எழுதியிருந்தார்கள்.
26.1.14 தேதியிட்ட ஜுவியில் பிஜேபி கூட்டணி கணக்கு என்ற அட்டைப் படமே வெளியாகியிருந்தது. அதில் தேமுதிக – 11 இடங்கள், பாஜக -10, மதிமுக – 9, பாமக – 9 இடங்கள் என்று போட்டிருந்தார்கள். சரி, உள்ளே ஏதாவது பயங்கரமான ஆய்வு கட்டுரை வந்திருக்கும் என்று பார்த்தால் கடைசி பக்கத்தில் தமிழக இதழ்களில் அரசியலை கிசுகிசுவாக மாற்றிய அற்பம் கழுகாரின் அந்தப்புரத்தில்தான் இதை சொருகியிருந்தார்கள். அதாவது பாஜக கூட்டணியில் தொகுதி உடன்பாடு, சண்டை என்று எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்று தொகுதிகளின் எண்ணிக்கையோடு அதற்குரிய நியாயத்தையும் இட்டுக்கட்டி எழுதியிருந்தார்கள். நீரா ராடியா – பர்கா தத் வழியில் திருமாவேலன் எவ்வளவு தொலை நோக்கோடு சிந்திக்கிறார் பாருங்கள்.
கூட்டணியில் அதிக இடத்தில் போட்டியிடும் கட்சி என்பது விஜயகாந்த விருப்பமாம். அந்த வகையில் அவருக்கு 11 ஓகே, பாஜக இரட்டை இலக்கத்தில் போட்டியிட விரும்புவதால் அவர்களுக்கு 10, கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை விட தமக்கு மிகவும் குறைவாக இருக்கக் கூடாது என்று கருதும் வைகோவின் நம்பிக்கையை வீணடிக்காமல் அவருக்கு 9, பிறகு பாமக தற்போதே பத்து தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்திருப்பதால் அதற்கு பழுதில்லாமல் 9 என்று முடிவாகியிருக்கிறதாம். இதில் பாமகவிற்கு பாஜக கூட்டணி விருப்பமில்லை என்றாலும் அன்புமணி வலியுறுத்துகிறாராம். இல்லையேல் அவர் போட்டியிடுவது இல்லை என்னுமளவு அந்த போராட்டம் நடக்கிறதாம்.
விஜயகாந்த் மலேசியா சென்று எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை எழுதும் ஜூவி இதனால் திமுகவினர் நிம்மதி அடைய முடியாது என்பதாக செய்திகளை நெய்து போடுகிறது. மலேசியாவில் மமகவினர் பார்த்து பேசினாலும் அவர் திமுக கூட்டணிக்கு வருவதாக எந்த உத்திரவாதமும் அளிக்கவில்லையாம். எல்லாம் விழுப்புரம் மாநாட்டில் அறிவிப்பதாக மழுப்பினாராம். இப்படி பாஜக கூட்டணி சிக்கலில்லாமல் அமைய வேண்டும் என்று இதழுக்கு இதழ் தினுசு தினுசாக போட்டுத் தாக்குகிறார் திருமாவேலன்.
எது எப்படியோ அவர் விரும்பியபடி விஜயகாந்த் இன்னமும் பிடிகொடுக்கவில்லை என்பதால் 2.2.14 தேதியிட்ட ஜூவியில் “விஜயகாந்த் செல்வாக்கு பெரும் சரிவு” ஜூவி சர்வே ஷாக் ரிசல்ட் எனும் அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள். அதில் ஒட்டு மொத்தமாக விஜயகாந்த் செல்வாக்கு இழந்து வருகிறார் என்பதாகவும் அதே நேரம் அவருக்கு ஓட்டு போடுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பதாகவும் பெரும்பாலானோர் தெரிவித்தனராம். இதுவும் ஜூவி நிருபர் படை 8,721 பேர்களை சந்தித்து எடுத்த சர்வேயாம்.
விஜயகாந்திற்கு செல்வாக்கு குறைகிறது என்பது குச்சி ஐஸ் சாப்பிடும் குழந்தைக்கு கூட தெரியும். ஜூவியின் நோக்கம் அதுவல்ல!
விஜயகாந்திற்கு செல்வாக்கு குறைகிறது என்பது குச்சி ஐஸ் சாப்பிடும் குழந்தைக்கு கூட தெரியும். ஆனால் திருமாவேலனது நோக்கம் என்ன? “கேப்டன் உங்களது செல்வாக்கு சரிந்து வருகிறது, உடனே பாஜக கூட்டணியில் வந்து சேருங்கள், இல்லையேல் உங்கள் எதிர்காலம் பணால்” என்று மிரட்டிப் பார்க்கிறது ஜுவி. நாளையே அவர் பாஜக கூட்டணியில் சேர்ந்தால் அவரது சரிந்த செல்வாக்கு ஜூவியால் சைக்கிள் சுற்றும் நேரத்தில் பிரம்மாண்டமாய் எழும். எல்லாம் கணினி தட்டச்சுப் பலகையில் உள்ள வார்த்தைகள் தானே. தேவைப்படும் போது மாற்றி மாற்றி எழுதமுடியாமல் இருப்பதற்கு இது ஒன்றும் கல்வெட்டல்ல அல்லவா!
தமிழக நிலவரத்தின்படி யதார்த்தமாக யோசித்துப் பார்த்தால் விஜயகாந்த் விரும்பினாலும் இனி அதிமுக கூடாரத்தில் நுழைய முடியாது. காங்கிரஸ், பாஜக இரண்டு கூட்டணியில் சேர்ந்தால் புது தில்லியில் தேமுதிக வாங்கிய வாக்குகளை விட கொஞ்சம் அதிகம் பெறலாம். இறுதியாக திமுக கூட்டணியில் சேர்ந்தால் மட்டுமே ஓரிரு தொகுதிகளில் வெற்றியோ இல்லை கொஞ்சம் மரியாதையையோ அதாவது டெபாசிட்டையோ காப்பாற்றிக் கொள்ளலாம்.அதைத்தாண்டி அவருக்கு வேறு போக்கிடம் ஏதுமில்லை. எனினும் தனது பேரத்தை அதிகப்படுத்த அவர் நாட்களை கடத்துகிறார். வைஸ் கேப்டன் பிரேமலதாவும் அதற்கேற்றபடி திமிராக பேசுகிறார். இதெல்லாம் விஜயகாந்திற்கு தெரியாத ஒன்றல்ல என்றாலும் தமிழருவி மணியனும், திருமாவேலனும் அவரது மனதை ஊடக பலத்தால் மாற்ற முடியும் என்று தவமிருக்கிறார்கள்.
திருமாவேலனது மனங்கவர்ந்த அரசியல் தலைவர் வைகோவிற்கு இந்த தேர்தலில் ஏதாவது போக்கிடம் கிடைக்காதா என்ற சிக்கல் உள்ளது. இந்திய ராஜபக்சேவான மோடியின் தமிழக அடியாளாக 2002-லும் இப்போதும் கர்ஜிக்கிற இந்த கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியை ஒரு முன்மாதிரித் தலைவனாக இதயத்தில் போற்றுவதற்கு நிச்சயம் கொலவெறி மனது வேண்டும். அது திருமாவேலனுக்கு நிறையவே இருக்கிறது. ஒருவேளை இந்தக் கூட்டணியே வைகோவை கடைத்தேற்றுவதற்காக திருமாவேலன் செய்யும் முயற்சியோ என்று சிலருக்கு தோன்றலாம். ஜூனியர் விகடனை திறந்தாலே வாரம் ஒருமுறை வைகோ போட்டோவை போட்டு ஏதோ ஒரு அற்பமான விசயம் நேர்மறை செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. யாருமே சீந்தாத இந்த புரட்சிப் புயலுக்கு வலிந்து அடைக்கலம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
ஈழப் பிரச்சனையில் போலி கம்யூனிஸ்டுகள் எந்தப் பக்கம் என்று தொடர் எழுதிய திருமாவேலன், இந்து மத வெறி மோடி பக்கம் போனது குறித்து யார் எழுதுவது?
இப்படி கடந்த ஆறு மாதங்களாக பச்சையாக பாஜகவிற்கும், மோடிக்கும் சொம்படிக்கும் திருமாவேலனது நோக்கம் என்ன? இதனால் என்ன ஆதாயம்? 21-ம் நூற்றாண்டு நிலவரப்படி கார்ப்பரேட் ஊழல் என்பது சிவப்பு சூட்கேசில் பறிமாறப்படும் பச்சைப் பணம் அல்ல. இத்தகைய நேரடி பொருளாதார ஆதாயங்களை விடுத்து அதிகாரம், செல்வாக்கு, பதவி போன்றவையும், எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாகவே ஆதாயம் கிடைக்கும் வசதிகளும்தான் இப்போதைய ட்ரெண்ட். இவை எதுவும் யாருக்கு, எதற்கு, எப்போது என்று நமக்கு உடனடியாக தெரியப் போவதல்ல. 2ஜி, நிலக்கரி ஊழல்களில் கூட ஊழல் என்பது கொள்கை முடிவு, சந்தை போட்டி என்று நியாயப்படுத்தப்படும் காலத்தில் நீரா ராடியாக்களை பொறி வைத்து பிடிப்பது கடினம்.
ஒரு ஏஜென்சி, ராஜ்ய சபா உறுப்பினர், பதவி மாற்றம், அதிகாரத் தரகு என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவேளை இல்லாமலும் இருக்கலாம். ஏனெனில் நீரா ராடியாக்கள் தமது சதுரங்க ஆட்டத்தின் விளைவுகளில் இருந்தே பலனை எதிர்பார்ப்பதால் அது முன்கூட்டியே ஒப்பந்தம் ஆகியிருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல.
இவற்றைவிட தமிழகத்தில் ஏதுமற்று கிடந்த பாஜகவிற்கு ஒரு கூட்டணி அமைத்து அங்கீகரிக்கப்பட்ட வாழ்வு கிடைப்பதற்கு பணியாற்றி வரலாறு படைத்திருக்கிறேன் என்பதற்காக கூட திருமாவேலன் ஆசைப்படலாம். அப்படி தப்பித் தவறி பாஜக கூட்டணி ஒரு சில தொகுதிகளை வென்று மத்தியிலும் ஆட்சி அமைத்தால் அவரது ஆளுமை எப்படியெல்லாம் பொங்கி வழியும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
சரி, இதெல்லாம் விகடன் நிர்வாகம், முதலாளிகளுக்கு தெரியாதா, அவர்களுடைய நிலை என்ன என்ற கேள்வி எழலாம். முதலாளிகளைப் பொறுத்தவரை மோடி வெற்றி பெறுவார் என்பதற்காக தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் என்று பொய் சொல்வதெல்லாம் பிரச்சினை அல்ல. அந்த பொய்யினால் ஒரு முதலாளி என்ற முறையில் அவர்கள் அடையும் நிலை, ஆதாயம் என்ன என்பதுதான் முக்கியம். மத்தியிலே ஆட்சியை பிடிக்கப் போகும் ஒரு குதிரையில் செலவே இல்லாமல் மூலதனமிடுவது ஒன்றும் குறையல்லவே?
நாளை தேர்தல் முடிந்து பாஜக கூட்டணி தமிழகத்தில் மண்ணைக் கவ்வியிருந்தாலும் அதை நியாயப்படுத்தி தட்டச்சு விரல்கள் எழுத முடியாதா என்ன? இல்லை ஜூவி வாங்கும் வாசகர்கள்தான் செருப்பை எடுத்துக் கொண்டு அண்ணா சாலைக்கு கிளம்பி விடப் போகிறார்களா? ஆனால் ஓரிரு இலட்சம் விற்கும் ஜூவியை வைத்து ஐந்து கோடி தமிழக மக்களின் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கலாம் என்று திருமாவேலன் நினைக்கிறாரே, உண்மையில் இதே ஜூவி இலட்சக்கணக்கிலோ, கோடிக்கணக்கிலோ விற்பனை ஆனால் இவர் நூறு ஜெயலலிதா, ஆயிரம் மோடிகளுக்கு சமமாக இருப்பார் என்பது மட்டும் உண்மை.
பாஜகவையோ, வைகோவையோ தனிப்பட்ட முறையில் திருமாவேலன் ஆதரிப்பது அவரது ஜனநாயக உரிமை. அதை அநீதியான ஆதரவு என்று நாம் விமரிசிக்கலாம். ஆனால் ஒரு பத்திரிகையை அவரது தனிப்பட்ட விருப்பத்திற்காக பொய்யும், புனைவும் கலந்து பயன்படுத்துவது, இது வெறுமனே தனிப்பட்ட உரிமை என்பதைத் தாண்டி ஒரு சதித்திட்டம் என்ற எல்லையில் நுழைந்து விடுகிறது. முதலாளித்துவ ஊடகங்களுக்கென்று சொல்லிக் கொள்ளப்படும் நடுநிலைமை, செய்திகளை கருத்து சார்பு இன்றி வெளியிடுவது போன்ற மாய்மாலங்கள் கூட ஜூவிக்கு இல்லை. திருமாவேலன் அப்பட்டமாக தனது ஆசிரியர் பதவியை முறைகேடாக பயன்படுத்துகிறார்.
இசுலாமிய மக்களை நரவேட்டையாடிய மோடி எனும் கொலைகார பாசிஸ்ட்டை நெஞ்சில் ஏந்தி, பொய்யுரைத்து, மக்களை மாற்ற நினைப்பதிலிருந்து ஒன்று தெரிகிறது, ஈழத்திற்காக திருமாவேலன் எனும் இந்த ஆசிரியர் உகுத்ததெல்லாம் முதலைக் கண்ணீர் என்று.
தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று முத்திரை வாக்கியத்துடன் வெளிவரும் ஜூவி எனும் இதழும் அதன் ஆசிரியரும் மோடிக்காக செய்யும் இந்த அயோக்கியத்தனத்தை தமிழக மக்கள் காறி உமிழ வேண்டும்.
ஈழம் பற்றியும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ம.க.இ.க.வினர் எழுதியவற்றில் இருந்து ஓரிரு மேற்கொள்களை எடுத்துக்காட்டி அவற்றைத் திரித்து, அவற்றில் இல்லாத தமது சொந்த வியாக்கியானங்கள் கொடுத்து, சமரன் குழு ம.க.இ.க.வினர் மீது அவதூறும் செய்கின்றனர். இதையும், விடுதலைப் புலிகளைப் பற்றி சமரன் குழு முன்பு எழுதி, ‘ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்’ என்ற பெயரில் சமரன் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள நூலில் மீண்டும் பதிப்பித்துள்ள கருத்துக்களையே எடுத்துக்காட்டி அவர்களின் பித்தலாட்டங்களையும் பு.ஜ. 2013, அக்டோபர், டிசம்பர் இதழ்களில் நாம் அம்பலப்படுத்தியிருந்தோம். ம.க.இ.க. வினரின் நிலைப்பாடுகள் மீதான விமர்சனங்கள் என்ற பெயரில் இதே பாணியிலான பித்தலாட்டங்களைத்தான் அந்நூலில் அவர்கள் அடுக்கியுள்ளனர் என்பதற்கு மேலும் சில சான்றுகளை இங்கே பார்க்கலாம்.
“தரகு முதலாளித்துவ மற்றும் திருத்தல்வாதிகளின் அணிவரிசையில் புரட்சி பேசும் புதிய ஜனநாயகம் மற்றும் ம.க.இ.க. குழுவினர் இராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக அணி வகுத்துள்ளனர்” (பக்.14) என்கிறது, சமரன் குழு. எவ்வளவு மோசமான அறிவு நாணயமற்றவர்களாக இருந்தால் இப்படியொரு பொய்யைச் சொல்லுவார்கள்! ம.க.இ.க.வை அறிந்த யாரும் இப்படி ஓர் அபாண்டத்தை நம்புவார்களா? பின்வரும் மேற்கோள் ஒன்றை இந்த அபாண்டத்திற்கு ஆதாரமாக அந்நூலில் அக்குழு காட்டுகிறது.
சிங்கள இனவெறி பாசிச இராஜபக்சே அரசால் 2009-ஆம் ஆண்டில் கடத்திச் செல்லப்பட்ட லலித் குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் மற்றும் ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலகர்கள், வன்னி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் உள்ளிட்ட அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி 2011-ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினத்தன்று (டிசம்பர் 10) கொழும்புவில் புதிய ஜனநாயகக் கட்சி, நவ சமசமாஜ கட்சி ஆகியன ஒருங்கிணைத்து நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
“அதாவது, ஈழம், புதிய சூழ்நிலை, புதிய பாதை என்று கூறித் தனி ஈழம் சாத்தியமில்லை என்றும் அக்கோரிக்கையைக் கைவிடவேண்டும் என்றும் பு.ஜ. மற்றும் ம.க.இ.க. குழுவினர் கூறுகின்றனர்.” (பக்.14.)
மீண்டும் அதே பாணியிலான பித்தலாட்டம்! இங்கே எடுத்துக்காட்டியிருக்கும் மேற்கோளுக்குத் தமிழறிந்த, அறிவுநேர்மையுள்ளவர்கள் யாரும் சமரன் குழு கூறும் பொருளை ஏற்பார்களா? அக்குழு காட்டியுள்ள மேற்கோளில் உண்மையில் மூன்று கருத்துக்களைத்தான் நாம் சொல்கிறோம் :
இன்றைய யதார்த்த நிலையில் ஈழப் பிரச்சினைக்கு உடனடியான, தற்காலிகத் தீர்வு எதுவும் கிடையாது; எல்லாவற்றையும் அரிச்சுவடியிலிருந்து தொடங்கி அமைப்பையும் இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது.
இனவாத நோக்கில் உலகின் பிற்போக்கு, பாசிச அரசுகளின் தயவை நம்பக்கூடாது.
சிறியவையானாலும் இராஜபக்சேக்களின் பாசிசத்திற்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகள், உலகின் முற்போக்கு, புரட்சிகர சக்திகளின் வர்க்க ஒற்றுமையைக் கட்டிப் போராடுவதுதான் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு.
இப்படிச் சொல்லுவது எப்படி இராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக அணிவகுப்பதாகும் என்று சமரன் குழுவும் அதன் சீடர்களும் நேர்மையாக விளக்கட்டும். “இராஜபக்சேக்களின் பாசிசத்திற்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகள் உட்பட” என்பது தவிர மேற்கண்ட எமது கருத்துக்களில், ஈழப் பிரச்சினைக்கான தீர்வில் சமரன் குழு எங்கே மாறுபடுகிறது? வேறு ஏதோ தீர்வு தன்னிடம் இருப்பதாக இன்னொரு பித்தலாட்டமும் செய்கிறது.
சிங்கள உழைக்கும் மக்களுடன், பாட்டாளிகளுடன் வர்க்க ஒற்றுமையைக் கட்டவேண்டும் என்று சமரன் குழுவே பலமுறை வலியுறுத்துவதை இதே நூலிலிருந்து நாம் காட்டமுடியும் என்றாலும் “இராஜபக்சேக்களின் பாசிசத்திற்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகள்” என்று கிடையாது என்று வேறு புளுகுகிறார்கள்.
“இராணுவ ஆட்சியை உடனடியாக நிறுத்து! கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக் கழக மாணவர்களை விடுதலை செய்! கைதுகளையும் கடத்தல்களையும் நிறுத்து! நில ஆக்கிரமிப்பை நிறுத்து!” எனும் முழக்கங்களுடன் யாழ்ப்பாணத்தில் சம உரிமை இயக்கத்தின் சார்பில் ஜனவரி 2013-ல் நடத்தப்பட்ட நீண்ட பதாகையில் கையெழுத்திடும் இயக்கம். (நன்றி: போராட்டம் இதழ், பிப்ரவரி 2013)
“இராஜபக்சேவின் இராணுவப் பாசிசத்திற்கு எதிராகச் சிங்களப் பகுதியில் ஒரு அமைப்பும் போராட முன்வராத ஒரு சூழலில், ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்துப் போராட அங்கே ஒரு அமைப்பும் முன்வராத ஒரு சூழலில், இரு இனமக்களும் ஒன்று சேர்ந்து வர்க்கப் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறுவது தமிழீழக் கோரிக்கையைக் கைவிடச் செய்வதற்கான தந்திரமின்றி வேறென்ன?” (பக்.15).
“அவர்கள் (ம.க.இ.க.,வினர்) இன்று மட்டுமல்ல, கடந்த 30 ஆண்டு காலமாகவே உதட்டில் ஈழத்தை உச்சரிப்பதும் உண்மையில் ஈழக் கோரிக்கைக்குக் குழி பறிக்கும் வேலையைத்தான் செய்து வருகின்றனர். தமிழீழத்தை ஆதரிப்பதுபோல் பேசுவது, மறுபுறம் இலங்கை அரசின் பாசிசப் போக்கையும் புலிகளின் பாசிசப் போக்கையும் சமப்படுத்திப் பேசினர். இறுதியில் புலிகளின் பாசிசப் போக்கை எதிர்த்துப் போராடுவதையே முதன்மைப் பணியாகக் கொண்டனர். இவ்வாறு ஈழப் போராட்டத்துக்குத் துரோகம் இழைத்து வந்தனர். அதையேதான் இன்றைய சூழலிலும் அவர்கள் தொடர்கின்றனர்.” (பக்.14.)
இப்படிப் புளுகுவதன் மூலம் புலிகள்தான் தமிழீழம், புலிகளின் பாசிசத்தை எதிர்ப்பது தமிழீத்தையே எதிர்ப்பதாகும் என்றும் ஈழத்துக்கு மேலாகப் புலி விசுவாசத்தைத்தான் காட்டுகின்றனர்.
“30 ஆண்டுகாலமாகவே” என்று அவர்கள் சொல்வது 1983 ஆம் ஆண்டிலிருந்து நாம் இப்படிச் செய்வதாகிறது. புலிகளின் பாசிசத்தை எதிப்பதாலேயே இந்த 30 ஆண்டு காலமாக, ம.க.இ.க.வினர் தமிழீழத்துக்குத் துரோகமிழைப்பதாகவும் ஈழக் கோரிக்கைக்குக் குழி பறிக்கும் வேலையைச் செய்வதாகவும், சமரன் குழு குற்றஞ்சாட்டுகின்றது.
ஈழத் தமிழ் அகதிகள் கொடுத்த ஆதாரபூர்வ செய்திகளின் அடிப்படையில் “ஈழத்து எம்.ஜி.ஆர். பிரபாகரனின் பொய்கள், சதிகள், கொலைகள்” என்ற கட்டுரையை 1987 ஜனவரியில் புதிய ஜனநாயகம் வெளியிட்டது. அப்போதிருந்துதான் புலிகளின் பாசிசத்தை பு.ஜ.குழு மற்றும் ம.க.இ.க.வினர் எதிர்க்கத் தொடங்கினர். அதுவரை புலிகளை பாசிஸ்டுகளாக வரையறுக்கவோ, எதிர்க்கவோ கிடையாது. அதன் பிறகும், 1987-இல் ஈழ ஆக்கிரமிப்பை இந்தியா தொடங்கியதிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறும் வரையிலான காலகட்டத்தில் புலிகளை ஆதரிக்கவே செய்தோம். அதன் பிறகு முள்ளிவாய்க்கால் போர் முடியும்வரை புலிகள் தம் பாசிசத்தை முழுவீச்சில் கடைப்பிடித்ததால் எதிர்த்தோம். அதேசமயம், புலிகளுக்கு எதிரான ஈழத் துரோகிகள் மற்றும் எதிரிகளின் தடை, தாக்குதல்களை எதிர்த்தே வந்துள்ளோம். ராஜீவ் உட்பட ஈழ எதிரிகளுக்கும் ஈழத் துரோகிகளுக்கும் எதிரான புலிகளின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளின் அரசியல் நியாயத்தை உயர்த்திப் பிடித்து வந்துள்ளோம். ஆனால், அவை பற்றி புலிகள், புலி விசுவாசிகள் – தமிழினவாதிகள்கூட மௌனம் சாதிக்கவே செய்தனர்.
பயங்கரவாத இராஜபக்சே கும்பலின் புதிய குற்றவியல் சட்டத் திருத்ததை எதிர்த்து 22.1.2013 அன்று கொழும்பு புதுக்கோட்டையில் ஈழத் தமிழர்களையும் சிங்களர்களையும் அணிதிரட்டி இடதுசாரி கட்சிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம். (ந்ன்றி: போராட்டம் இதழ், பிப்ரவரி 2013).
புலிகளை அரசியல்ரீதியில் விமர்சித்ததற்காக ம.க.இ.க.வினரை சமரன் குழு அவதூறு செய்கிறது. ஆனால், புலிகள் இலங்கை, இந்திய அரசுகளுடன் சமரசம் செய்வார்கள் என்றும் அதற்கான வேர்கள் இருப்பதாக ஐயப்படுவதாகவும் சமரன் குழு எழுதியதில்லையா? புலிகள், ‘இலங்கை பாசிச ஆட்சிக்கு மாறாக, ஒரு இராணுவ அதிகார வர்க்க ஆட்சி முறையைச் செயல்படுத்தினர்; ஒரு படையின் ஆட்சி அல்லது அனைத்து அதிகாரத்தையும் தனது ஏகபோகமாக்கிக் கொள்வது என்ற பாசிசக் கொள்கையைப் பின்பற்றினர்; புலிகளின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்ப்பதற்கு ஆயுதம் ஏந்தும் உரிமை இருக்க வேண்டும்; புலிகளுக்கு அமெரிக்கா மீதிருந்த மாயையும், இந்திய அரசின் மீதான குருட்டு நம்பிக்கையும், கஸ்பர் சாமியார் போன்ற துரோகிகளை நம்பியதும்தான் விடுதலைப் போரில் தோல்விக்கும் தலைமையின் அழிவிற்கும் காரணம் என்று இப்போதும் சமரன் குழு எழுதவில்லையா? சமரன் குழுவின் கண்ணோட்டப்படி புலிகள் பற்றிய அக்குழுவின் இவ்வாறான அணுகுமுறையை வைத்து ஈழப் போராட்டத்துக்கு அவர்கள் துரோகம் இழைத்து வந்தனர் என்றும் ஈழக் கோரிக்கைக்குக் குழிபறிக்கும் வேலையைத்தான் செய்து வருகின்றனர் என்றும் ஏன் கருதக்கூடாது?
இந்த ‘30 ஆண்டு காலமாகவே’ பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய ஈழத் தன்னுரிமைக் கோரிக்கையை ம.க.இ.க.வினர் ஏற்றுப் போராடாத காலம் என்று எதையாவது இவர்களால் காட்ட முடியுமா? ஈழத் தன்னுரிமைக் கோரிக்கை என்பது தனி ஈழம் அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியது இல்லையா? புலிகளே தனி ஈழக் கோரிக்கையைக் கைவிடுவதாவும் அதற்கு மாறாக சுயாட்சியை ஏற்பதாகவும் கூறியபோது, அதை ம.க.இ.க.வினர் எதிர்க்கவில்லையா? இப்படிச் செய்வதைத்தான் புலிகளின் “பேரம், பேரம்” என்று பு.ஜ. கூறுவதாக, சமரன் குழுவினர் அவதூறு செய்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் கொடூரம் நடந்தவுடனேயே இராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக்கி “நூரம்பர்க்” வழியிலான விசாரணையும் தண்டனையும் வழங்கக் கோரிப் போராடியவர்கள், ம.க.இ.க.வினர். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு இரண்டாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் வந்தது, அதை ஆதரிக்கக் கோரி நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, அதை நீர்த்துபோகும் தீர்மானத்துடன் இந்தியா ஆதரித்தது. அடுத்த ஆண்டு நீர்த்துப்போன அத்தீர்மானம் வந்தபோதுதான் தமிழ்நாட்டில் பொது மாணவர் எழுச்சி ஏற்பட்டது. அதன்பிறகு மட்டுமே, அதை அறுவடை செய்து கொள்ள விழித்துக்கொண்ட சமரன் குழு, ஈழ மக்கள் மீதான தனது அக்கறையற்ற மெத்தனத்தை ஈடுகட்ட ம.க.இ.க.வினர் மீது அவதூறுகளை அள்ளிவீசுகின்றது.
“இராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்காக ஐ.நா. அவை மூலம் தண்டிக்க வேண்டும் என்று போராடும் மாணவர்களை எள்ளிநகையாடும் ம.க.இ.க.வினர், ‘நூரம்பர்க்’ போன்ற விசாரணை மன்றம் தேவை எனப் புரட்சி வேடம் போடும் ம.க.இ.க.வினர், இராஜபக்சேவைத் தண்டித்தால் ஈழத் தமிழர்களுக்கு இன்னல் அதிகரிக்கும் என்று பயமுறுத்துகின்றனர்.” (பக்.14).
மனித உரிமை நாளன்று, இராஜபக்சே கும்பலின் அரசு பயங்கரவாதத்தையும், கடத்தல்களையும், மனித உரிமை மீறல்களையும் எதிர்த்து ஈழத்தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து 10.12.2013 அன்று இத்தாலி நாட்டில் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்தியக்கம்.
ம.க.இ.க.வினர் மீதான இந்த அவதூறுக்கு சமரன் குழு பின்வரும் ஆதாரத்தை முன்வைக்கிறது: “அப்படி ஒரு நடவடிக்கை வந்தால் இராஜபக்சேவைப் போன்ற ஒரு நரித்தனமான பாசிஸ்டு அதை எப்படி எதிர்கொள்வான் என்பதை நாம் பார்க்கவேண்டும். அதை இலங்கையின் இறையாண்மை மீதான தாக்குதலாக இராஜபக்சே சித்தரிக்கப் போகிறார். அதையொட்டி மீண்டும் தேசவெறியும், இனவெறியும் தூண்டப்படும். ஏற்கெனவே இலங்கையின் இறையாண்மையில் இந்தியா அல்லது அமெரிக்கா தலையிடுகிறது என்ற கோணத்திலேதான் அங்கேயிருக்கிற சிங்கள இனவெறியர்கள் அதை எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்’ என்று ம.க.இ.க. வினர் எழுதுகிறார்கள்.”
“அதாவது இராஜபக்சேவைத் தண்டிப்பதுகூடத் தமிழர்களுக்கு ஆபத்து என்று அவர்கள் வாதிடுகின்றனர். இதைவிட இராஜபக்சேவுக்கு ஆதரவாக யாராவது பேசமுடியுமா?” (பக்.14,15.) என்று சமரன் குழு கேட்கிறது.
மீண்டும் ஒரு மேற்கோள் பித்தலாட்டம்! “இராஜபக்சேவைத் தண்டித்தால் ஈழத் தமிழர்களுக்கு இன்னல் அதிகரிக்கும்” என்றோ, “இராஜபக்சேவைத் தண்டிப்பதுகூடத் தமிழர்களுக்கு ஆபத்து” என்றோ பொருள் கொள்ளும் விதமான அடிப்படை ஏதாவது இந்த மேற்கோளில் இருக்கிறதா? சமரன் குழுவின் கோணல் புத்திக்கு மட்டும்தான் அப்படியான பொருள் கொள்ளத் தோன்றும். “இராஜபக்சேவைப் போன்ற ஒரு நரித்தனமான பாசிஸ்டு அதை எப்படி எதிர்கொள்வான்” என்பதை விளக்கி, இவ்வாறு எதிரியின் சிங்களப் பேரினவாத வெறியூட்டும் சதியை எதிர்கொள்ள, இராஜபக்சேக்களின் பாசிசத்திற்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகளை வென்றெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி “போர்க் குற்றங்களுக்காக இராஜபக்சேவைத் தண்டிப்பது எப்படி?” என்று தலைப்பிட்டு எழுதியதிலிருந்து ஒரு பகுதியை திரித்துப் பொருள் கூறுகிறது, சமரன் குழு.
இந்தப் பித்தலாட்டத்தை முன்வைத்து சமரன் குழு மாணவர்களுக்கு ஒரு அறைகூவல் விடுக்கிறது: “இவ்வாறு பு.ஜ.குழு மற்றும் ம.க.இ.க.வினர் உருவாக்கியுள்ள ஈழத் தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர்கள் கூட்டமைப்பும் தமிழீழத்துக்குத் துரோகம் செய்வதை மாணவர்கள் புரிந்துகொண்டு புறந்தள்ள வேண்டும். அவர்கள் இராஜபக்சேவுக்கும் இந்திய அரசுக்கும் துணைபோகும் சந்தர்ப்பவாதத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்.” (பக்.15)
இந்த அறைகூவலைப் புரிந்து கொண்டு மாணவர்கள் புறந்தள்ளுகிறார்கள், பு.ஜ.குழு மற்றும் ம.க.இ.க.வினரை அல்ல; சமரன் குழுவைப் புறந்தள்ளத் தேடுகிறார்கள். ஆனால், அவர்களைத்தான் எங்கேயும் எப்போதும் களத்தில் காணவில்லை.
(தொடரும்)
_____________________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014
_____________________________________________
காங்கிரஸ் ரூ 500 கோடி, பாஜக ரூ 400 கோடி, மாநிலக் கட்சிகள் ரூ 1,000 கோடி மொத்தம் ரூ 2,000 கோடி. இதற்கு டாப் அப் ஆக மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை ரூ 180 கோடி.
கிரிமினல் பாஜக இப்போதைய கிரிமினல் காங்கிரசு கட்சியின் மோசடியை கண்டிக்க முடியாது
இதெல்லாம் என்ன? கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதையோ விற்கும் விலையா என்று கேட்காதீர்கள். இவை அந்தந்த கட்சிகள் மே மாதம் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முந்தைய விளம்பரங்களுக்கு செலவிட இருக்கும் தொகைகள். அதாவது, தேர்தல் திருவிழா தொடங்கப் போகிறதாம்.
இவற்றில் அரசு செலவழிக்கும் ரூ 180 கோடியிலான விளம்பரங்களை பிப்ரவரி மாதத்துக்குள் முடித்து விட வேண்டுமாம், ஏனென்றால் அதற்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கான காலம் ஆரம்பித்து விடுமாம். நன்னடத்தை விதிகளின்படி அரசு பணத்தை ஆளும் கட்சியின் விளம்பரத்துக்கு செலவழிக்கக் கூடாதாம். எனவே, நன்னடத்தை விதிகள் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்பு வரை துர்நடத்தைகள் அனைத்தையும் செய்து முடித்து விட வேண்டும்.
பிரதான எதிர்க்கட்சியான பாஜக ஆட்சியில் இருக்கும் போது 2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று ஒளியில் கண் கூசி மக்கள் பார்க்காமல் இருந்து விட்டால் என்ன ஆவது என்று டார்ச் அடித்துக் காட்ட அரசு பணத்தை ரூ 150 கோடி செலவிட்டு விளம்பரங்கள் செய்திருக்கிறது. எனவே அப்பேற்பட்ட கிரிமினல் பாஜக இப்போதைய கிரிமினல் காங்கிரசு கட்சியின் மோசடியை கண்டிக்க முடியாதுதான்.
காங்கிரசின் சார்பில் இந்தத் தொகையை செலவழித்துக் கொண்டிருப்பது மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சகம். அமைச்சர் மனீஷ் திவாரி, “இந்தத் தொகை பாஜக 2004-ல் செலவழித்ததை விட ரூ 30 கோடிதான் அதிகம். பண வீக்கத்தை கணக்கில் எடுத்தால் அதிகரிக்கவே இல்லை” என்று சொல்லி விடலாம் என்று சோடி போட்டு காட்டுகிறார். “நானும் திருடன், நீயும் திருடன், நான் எடுப்பதை நீ கண்டுக்காதே, நான் அடிக்கிறதை நீ கண்டுக்காதே” என்ற விளையாட்டுதான் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஆள விரும்பும் கட்சி என்று பல தரப்புக்குள்ளும் நடக்கும் நாடகம்.
இப்போது “பாரத் நிர்மாண்” ஆகி வருவதை கண்ணிருந்தும் பார்க்காமல் முரண்டு பிடிக்கும் மக்களின் கழுத்தைப் பிடித்து, நிர்மாணுக்கான பிரமாணங்களை கண்ணுக்கு முன் திணிப்பதற்கு இந்த ரூ 180 கோடியை செலவிடவிருக்கிறது ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி.
இந்த செலவுகளுக்கான திட்டமிடல் 2013 மே மாதம் முதல் தொடங்கி விட்டது. அதாவது, 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் விளம்பரச் செலவாக ரூ 630 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் பாதியை (சுமார் ரூ 310 கோடி) மார்ச் 2014-க்கு முன்பு செலவழித்து விட வேண்டும் என்று ஆளும் கும்பல் திட்டமிட்டிருக்கிறது.
கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் பேக்கு இளைஞனை இவர்கள் எல்லோரும் சேர்ந்து, இந்தியா ஜெயித்துதான் கொண்டிருக்கிறது என்று ஏற்றுக் கொள்ள வைத்து விடுகிறார்கள்.
பாரத் நிர்மாண் விளம்பரங்கள் மே 2013-ல் முதல் கட்டத்தையும், ஆகஸ்ட் 2013-ல் இரண்டாவது கட்டத்தையும் நிறைவு செய்தன. ஆகஸ்ட் வரை 22 விளம்பரங்கள் இந்தி, வங்காளம், மராட்டியம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடகம், வெளிப்புற தட்டிகள் என்று அவிழ்த்து விடப்பட்ட இந்த விளம்பரங்களிலிருந்து யாரும் தப்பித்திருக்க முடியாது.
மைல் கற்கள் என்ற விளம்பரத்தில், இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள், கணினியை அறிமுகம் செய்த காங்கிரஸ், பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்த காங்கிரஸ், பக்ரா நங்கல் அணை கட்டிய காங்கிரஸ், வங்கிகளை தேசியமயமாக்கிய காங்கிரஸ் என்று கருத்து கந்தசாமிகளாக கருத்து சொல்வதாக ஒரு விளம்பரம். கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் பேக்கு இளைஞனை இவர்கள் எல்லோரும் சேர்ந்து, இந்தியா ஜெயித்துதான் கொண்டிருக்கிறது என்று ஏற்றுக் கொள்ள வைத்து விடுகிறார்கள்.
கணினியை அறிமுகம் செய்து 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய சமூகத்தை கதறக் கதற 21-ம் நூற்றாண்டுக்குள் திணித்த ராஜீவின் காங்கிரஸ், பசுமைப் புரட்சியின் மூலம் இந்திய விவசாயத்துக்கு ஈமச் சடங்குகளை ஆரம்பித்து வைத்த இந்திராவின் காங்கிரஸ், பக்ரா நங்கல் அணை கட்டியது முதல் பழங்குடி மக்களை புழு பூச்சிகளை போல அழித்துக் கொண்டிருக்கும் நேருவின் காங்கிரஸ், வங்கிகள் மூலம் இந்திய முதலாளிகளுக்கு மக்கள் பணத்தை படி அளந்து கொண்டிருக்கும் மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் என்று விளக்கவுரைகளை நாமே சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
இந்த 22 விளம்பரங்களை தயாரிப்பதற்கு பரிநீதா என்ற இந்தி திரைப்பட இயக்குனர் பிரதீப் சர்க்காரும் பாடல்கள் எழுதுவதற்கு ஜாவேத் அக்தரும் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். மீலோன் ஹம் ஆ கயே, மிலோன் ஹமே ஜானா ஹை (நிறைய சாதிச்சிட்டோம், ஆனா இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கு) என்ற விளம்பர வாசகத்தை ஜாவேத் அக்தர் உருவாக்கியிருக்கிறார். இந்த வாசகத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமெரிக்க எஜமானைப் பார்த்துக் கூறுவது போலவும் எடுத்துக் கொள்ளலாம்.
ராகுல் காந்தி – “நான் இல்லை நாம்” யாரைப் பார்த்து சொல்கிறார்? அமெரிக்க எஜமானைப் பார்த்து.
2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டீசல் விலை உயர்வுக்கான காரணங்களையும், சில்லறை வணிகம், விமானப் போக்குவரத்து, தகவல் ஒளிபரப்பு ஆகிய துறைகளில் அன்னிய முதலீடு ஏன் தேவை என்றும் ரூ 100 கோடி செலவில் விளம்பரம் கொடுத்திருந்ததையும் இதனுடன் சேர்த்து பார்க்க வேண்டும்.
தேர்தலுக்கு முந்தைய இப்போதைய கட்டத்தில் முதல் 15 நாட்களில் ரூ 35 கோடி செலவழிப்பார்களாம். அந்த விளம்பரங்களுக்கு பொதுமக்களிடம் எத்தகைய எதிர்வினை ஏற்படுகிறது என்பதை மதிப்பிட்டு, வேண்டிய திருத்தங்கள் செய்து பிப்ரவரிக்கு முன் மொத்தம் ரூ 180 கோடியையும் செலவு செய்து விடுவார்களாம்.
இந்த விளம்பரங்களில் காங்கிரஸ் தலைமையிலான அரசு வழங்கிய அரசியல் ஸ்திரத்தன்மை, சமூக ஒற்றுமை மற்றும் 2007-க்கும் 2012-க்கும் இடையே ஆண்டுக்கு 8.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை சாதித்தது இவற்றை சுட்டிக் காட்டுவார்களாம்.
“ஒன்பது ஆண்டுகளில் ஒரு மௌனமான புரட்சி நடந்திருக்கிறது. அதில் நாங்கள் பலவற்றை சாதித்திருக்கிறோம். ஆனால், அரசியல் ஏற்றத் தாழ்வுகளால், அரசியல் விவாதங்களின் கூர்மைக்கு மத்தியில் அது போன்ற சாதனைகள் கூட்டு மனசாட்சியிலிருந்து போய் விட்டிருக்கின்றன. எனவே மாற்று விவரிப்பு ஒன்றை ஏற்படுத்துவது தேவையாக இருக்கிறது” என்று திவாரி கூறியிருக்கிறார். அதாவது, தேனும், பாலும் தெருவில் ஓட விட்டதை உணர முடியாத மர மண்டைகளான மக்களுக்கு அரசு அதை எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் போகிறதாம்.
இது வரை பார்த்தது அரசு செலவழிக்கப் போகும் பணக் கணக்கு. கட்சிகள் தாங்கள் ‘கஷ்டப்பட்டு’ சம்பாதித்த பணத்தை செலவழிப்பது பிப்ரவரிக்குப் பிறகு சூடு பிடித்து மே மாதம் வரை தொடரும். அதாவது சுமார் 3 மாத காலத்தில் காங்கிரஸ், பாஜக மற்றும் பல்வேறு மாநிலக் கட்சிகள் ரூ 2,000 கோடி மதிப்பிலான விளம்பரங்களை கடை விரிக்கப் போகின்றன.
பாரத் நிர்மாண் – சிவராஜ் சித்த வைத்தியர் விளம்பரங்கள்.
சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் ஏமாந்தவன் காசை செலவழித்து தொலைக்காட்சியில் இளைஞர்களை அதட்டி தொழில் செய்வதைப் போல, நாடு முழுவதும் கட்சிக் கிளைகள், கோடிக்கணக்கான கட்சி உறுப்பினர்கள், மக்களுக்கு சேவை என்று பம்மாத்து காட்டும் இந்தக் கட்சிகள் தம்மைப் பற்றி தொலைக்காட்சியிலும், நாளிதழ்களிலும் விளம்பரப்படுத்தி கல்லா கட்டப் போகின்றன.
சிவராஜ் வைத்தியரின் செலவு உள்ளிட்டு 3 மாத காலத்தில் இந்தியாவின் விளம்பர சந்தையில் புரளும் பணத்தின் மதிப்பு சுமார் ரூ 65,000 கோடி. இந்தச் சந்தையில் சுமார் 3.5%-ஐ பிடித்து அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் தயாரிக்கும் நிறுவனங்கள், விளம்பரம் வினியோகிக்கும் நிறுவனங்கள், தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், பத்திரிகைகள் இவற்றின் மீது தம் செல்வாக்கை செலுத்தவிருக்கின்றன.
இப்படித்தான் அரசும், ஓட்டுக் கட்சிகளும், ஊடகங்களும் தூண்களாக நின்று இந்திய ஜனநாயகத்தை பரஸ்பரம் ஆதாயம் கொடுக்கும் கறவைப் பசுவாக பராமரிக்கின்றன.
இந்த செழிப்பான பிசினசை பிடிப்பதற்கு முன்னணி விளம்பர நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. தம்மிடம் பொறுப்பை ஒப்படைக்கக் கோரும் விற்பனை வாதங்களை பெரிய விளம்பர நிறுவனங்கள் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளிடமுமே வைத்திருக்கின்றன.
பாடலாசிரியரும் விளம்பரத் துறை நிபுணருமான பிரசூன் ஜோஷியின் மென்கேன் வேர்ல்ட் குழுமம் ரூ 400 கோடி மதிப்பிலான பாஜக கணக்கை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கான்டிராக்ட் அட்வர்டைசிங் என்ற நிறுவனமும் பாஜகவை பிடிக்கும் போட்டியில் உள்ளது. விளம்பரங்களை போடுவதற்கான பணியை தனியாக பிரித்து லோட்ஸ்டார் மற்றும் டபிள்யூபிபி-ன் குரூப் எம், சாம் பல்சாராவின் மேடிசன் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படவுள்ளன.
காங்கிரஸ் தனது ரூ 500 கோடி ஒப்பந்தத்தை டென்ட்சு & டேப்ரூட்டு என்ற நிறுவனத்துக்கும், செய்தித் தொடர்பு பணிகளை ஜெனிசிஸ் பர்சன்-மார்ஸ்டெல்லருக்கும், வெளிப்புற விளம்பரங்களின் பொறுப்பை ஜேடபிள்யூடி-க்கும் கொடுத்துள்ளது.
அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் ரூ 100 கோடி விளம்பரத் திட்டத்தை பெர்செப்ட்/எச் என்ற நிறுவனம் கையாளவிருக்கிறது.
இந்தியத் தேர்தல்களில் கார்ப்பரேட் நன்கொடைகள்/ஊழல்கள் மூலம் திரட்டிய பணத்தை பயன்படுத்தி, கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாக விளம்பரம் செய்து, கார்ப்பரேட் நலன்களுக்கான அரசாங்கத்தை பிடிக்க கட்சிகள் போட்டி போடுகின்றன. அந்த வகையில் ஆரம்பத்தில் நாம் பார்த்தது கட்சிகளை வாங்குவதற்கு முதலாளிகள் செலவழித்த தொகைகள்தான் என்று தெளிவாகிறது.
இந்தத் தேர்தல்கள் இந்திய மக்களை அவமானப்படுத்தும் சடங்குகளாகப் படவில்லையா உங்களுக்கு?
இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. பசுமையான அந்த நினைவுகள் இன்றும் நீங்காது நிறைந்திருக்கின்றன. உசிலம்பட்டி வட்டாரத்தில் அமைந்திருக்கும், அமைதியான கிராமங்களில் அதுவும் ஒன்று. முன்னூறு முதல் முன்னூற்றைம்பது வீடுகள் வரை இருக்கலாம். நகரப்பேருந்துகள் நுழைந்திராத கிராமம். மூச்சுக்காற்று வெளியேற போதுமான இடைவெளி விட்டு, பொதிமூட்டைகளென பயணிகளைத் திணித்துக்கொண்டு தவழ்ந்து செல்லும் ஷேர் ஆட்டோக்கள். அங்கிருந்து உசிலை செல்ல, நகரப் பேருந்து என்றால் மூன்று ரூபாய் கட்டணம் இருக்கலாம். ஷேர் ஆட்டோவில் செல்ல பத்து ரூபாய்.
முல்லைப் பெரியாற்றை பாதுகாக்கும் போராட்டத்தில் மக்கள்.
இப்போது, இது அவர்களுடைய அத்தியாவசிய செலவினங்களில் ஒன்றாக்கப்பட்டிருக்கிறது. இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, அவ்வழி செல்லும் நகரப் பேருந்துகளின் மணிநேரக் கணக்கு வைத்து, அதற்கேற்ப கிளம்பிச் சென்றாக வேண்டுமென்ற நிர்ப்பந்தமில்லை என்பதால், இத்தகைய சாகச பயணங்கள் சலிப்பைத் தருவதில்லை போல!
நாங்கள் சென்ற காலத்தில் இரு திருமண நிகழ்வுகள், ஒரு நிச்சயதார்த்தம், ஒரு இழவு என ஒட்டு மொத்த கிராமமே மகிழ்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியிருக்கிறது. இன்பத்தையும் துக்கத்தையும் சமமாய்ப் பங்கிட்டு சீமைச் சரக்கிட்டு தளும்பிய பெருசுகள். காதை கிழிக்கும் சினிமாப் பாடல்கள்.
நாங்கள் எங்கள் நட்பு குழாமாகச் சென்றது, அந்த கிராமத்தின் அமைதியை ரசிப்பதற்காக அல்ல; ஓர் அரசியல் பிரச்சாரத்திற்காக. தமிழகமே பற்றி எரிந்து கொண்டிருந்த முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலைத் தொடர்ந்து, “முல்லைப் பெரியாறு அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத் தடை போடு!” என்ற முழக்கத்தின் கீழ், “முல்லைப்பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு” என்ற அமைப்பின் கீழ் அந்த விவசாயிகளை அணிதிரட்டுவதற்காக! பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் முல்லைப்பெரியாற்று நீரை நம்பியிருக்கும் தென் தமிழக கிராமப்புறங்களில் களப்பணியாற்றிக் கொண்டிருந்தனர், தமிழகமெங்கிலும் வந்திருந்த புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள். மகஇக, புமாஇமு, புஜதொமு, பெவிமு என்ற அமைப்புகளின் தோழர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு வேலை செய்தோம்.
நாங்கள் சென்ற கிராமத்தில்விவசாயிகள் விடுதலை முன்னணி என்ற தோழமை அமைப்பின் பெயர் மட்டுமே எங்களுக்கு பரிச்சயம். குறுக்கும் நெடுக்குமாய் நீண்டும், முட்டுச் சந்துகளும் நிறைந்த எமக்கு பரிச்சயமற்ற இக்கிராமத்தின் தெருக்களில் எம்மை வழிநடத்திச் சென்றது, வி.வி.மு.வின் ஆதரவாளர் ஒருவரது மகன் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் மற்றும் வி.வி.மு.வின் மற்றுமோர் ஆதரவாளரான நாகராஜ்.
நாகராஜுக்கு வயது 35 இருக்கலாம். அப்பள்ளிச் சிறுவனின் கரம் பற்றிக் கொண்டு, அவ்வப்போது அவனிடம் ஏதோ விசாரித்துக் கொண்டும் குறுக்கும் நெடுக்குமாய் சீரற்று கிடந்த தெருக்களில் ஊடாடி, வீட்டிலுள்ளோர் பெரியோர்களது பெயரை விளித்து உரிமையுடன் அவர்களை வெளியே அழைத்து, “முல்லைப்பெரியாறு பிரச்சினை தொடர்பாக நம்ம தோழர்கள் பேச வந்துருக்காங்க, என்னென்னு கேளுங்க” என அவரது ஆளுமை கிராமத்துடன் இரண்டறக் கலந்திருந்தது.” அடுத்து மாயன் வீட்டுக்கு போ, அவன் வீட்டில யாரும் இல்லியா?” இவ்வாறு மொத்த கிராமத்து உறுப்பினர்களது பெயரும் சரளமாய் வந்து விழுகிறது, நாகராஜ் வார்த்தைகளில்.
முல்லைப்பெரியாற்றுச் சிக்கலின் சுருக்கமான பின்னணியையும், கேரள ஒட்டுக் கட்சிகளின் அடாவடித்தனத்தையும், இப்பிரச்சினையில் பொதிந்துள்ள தண்ணீர் தனியார்மயமாக்கம் உள்ளிட்ட மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் நீட்டிப்பை முன்னிலைப்படுத்தியும்; சந்தர்ப்பவாத, இரட்டைநிலையெடுக்கும் தமிழக ஓட்டுக்கட்சிகளைப் புறந்தள்ளி புரட்சிகர அமைப்பில் விவசாயிகள் அணிதிரள வேண்டிய அவசியத்தையும் வீடுவீடாகச் சென்று விளக்கினோம்.
“முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டும்; நாம் அமைப்பாக திரளவேண்டும்” என்ற மைய பிரச்சாரத்துக்கு ” சரிதான் தம்பி ஆகட்டும் கட்டாயம் செய்யலாம்.” என்பதாகவே மக்களின் மறுமொழி அமைந்திருந்தது. ஆதரவு வார்த்தைகள் ஒன்றுதான் எனினும், சிலரது உடல் மொழி உணர்த்தின, இவை செயலுக்கு வராத வாயசைவு வார்த்தைகள் தான் என்று. விவசாயிகளின் வர்க்கத்தன்மை, முல்லைப்பெரியாற்று நீருக்கும் அந்த விவசாயிக்கும் உள்ள தொடர்பை பொறுத்து அவர்களது ஆதரவு நிலை ஏற்ற இறக்கங்களுடன் மாறுபட்டிருந்தது.
இவை எவற்றையும் பொருட்படுத்தாமல், வெயிலின் களைப்போ, ஊரைச் சுற்றி வந்த அலுப்போ வெளிக்காட்டிக் கொள்ளாமல், எம்மையும் சோர்வுக்குள்ளாக்காமல் உற்சாக ஊக்கியாய் கடைசிவரை உடன் வந்தார் நாகராஜ். அப்போது, குறுகிய சந்து ஒன்றில் உயரம் குறைந்திருந்த தாழ்வாரத்தின் தகடு ஒன்று நாகராஜின் நெற்றிப் பொட்டை பதம் பார்த்திருந்தது.
“பொதுப்பிரச்சினைக்காக பிரச்சாரம் செய்கிறோம். விவசாயிகளை சந்தித்து உரையாடுகிறோம். நமது பிரச்சினைக்காக வெளியூரிலிருந்தெல்லாம் தோழர்கள் வந்திருக்கிறார்கள்” என்ற பேருற்சாகம் அவரது உள்ளமெங்கும் நிரம்பி வழிந்ததால், தகடு கிழித்த வலியை உணர மறுத்தது அவரது உடல். வியர்வையை துடைத்தெறிவது போல, “அது ஒன்றுமில்லை தோழர்…” என்று விரலால் விசிறியெறிந்தார், நெற்றிப் பொட்டில் வழிந்த இரத்தத்தை.
இப்படி கிராமத்தின் சந்து பொந்துகளையும், இன்ப துன்பங்களையும், ஆண்கள் பெண்கள் அனைவரையும் அறிந்திருந்த நாகராஜுக்கு பார்வை தெரியாது. உடன் வந்த மாணவனை சாரதியாக வைத்துக் கொண்டே முழு கிராமத்திற்கும் எங்களை அழைத்துச் சென்றார். அவரது அக உலகில் அந்த கிராமம் வேறு எவரையும் விட அவருக்கு பளிச்செனத் தெரிந்தது உண்மை. புலனறிவில் ஒன்று குறைந்தால் கூட நடைமுறை சோர்வுடன் படுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அதனால்தான் அந்த முழு கிராமத்திற்கும் நாகராஜ் ஒரு பட்டத்து இளவரசனைப் போல கொண்டாடப்படுகிறார்.
முல்லைப்பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழுவின் சார்பில் நடைபெறும் போராட்ட செய்திகளை படிக்கும் பொழுதெல்லாம், எம்மை கடந்து செல்கின்றன நோய்த்தாக்குதல் ஒன்றுக்கு தம் இருவிழிப் பார்வையையும் பறிகொடுத்த அந்த உணர்வுமிக்க வி.வி.மு.வின் ஆதரவாளன் நாகராஜனைப் பற்றிய நினைவுகள்!
தில்லி மாநிலத்தின் ஆட்சியில் அமர்ந்து ஒரு மாதம் கூட முடியவில்லை; ஆம் ஆத்மி கட்சி கலகலத்துப் போயுள்ளது. ஜனவரி 26 அன்று அந்தக் கட்சியைச் சேர்ந்த வினோத் பின்னி என்பவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் ஆம் ஆத்மி கட்சி சார்பாக தில்லி சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர் என்பது குறிபபிடத்தக்கது.
வினோத் பின்னியின் அறச்சீற்றம்
கடந்த ஜனவரி 16-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த வினோத் பின்னி, ஆம் ஆத்மி கட்சி மக்களை ஏமாற்றி விட்டதாக பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இலவசமாக 700 லிட்டர்கள் தண்ணீர் வழங்குவது குறித்து கூறும் போது, “700 லிட்டர்களுக்கு மேல் பயன்படுத்துவோர் முழு அளவு தண்ணீருக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தேர்தல் அறிக்கையில் சொல்லப்படவில்லை” என்றார். இதே விதமான குற்றச்சாட்டை மின்சார குறைப்பு தொடர்பான அரசு நடவடிக்கைகளின் மேலும் வைத்தவர், கேஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுவதாகவும், ஜன்லோக்பால் அமைப்பை உருவாக்குவது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இவரது இந்த ’அறச்சீற்றம்’ பத்திரிகைகளில் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பு தான், அமைச்சரவை அமைப்பது குறித்தும் யார் யார் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்கள் என்பது குறித்தும் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் விவாதக் கூட்டம் ஒன்றிலிருந்து பாதியிலேயே ஆத்திரத்தோடு அவர் வெளியேறிய செய்தியும் வெளியானது. மேலும், தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பதால் வினோத் பின்னி கட்சியின் மேல் அதிருப்தியுற்று இருக்கிறார் என்கிற செய்திகளும் வெளியானது.
வினோத் பின்னி தன்னை அமைச்சராக்கும் படி கோரியதாகவும், அது மறுக்கப்படவே லோக் சபைத் தேர்தலில் எம்.பி சீட் கொடுக்கும் படி வலியுறுத்தியதாகவும், அந்தக் கோரிக்கையும் மறுக்கப்படவே கட்சி விரோத நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் இந்தக் காரணங்களுக்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார் என்றும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஜனவரி 26-ம் தேதியன்று ஊடகங்களுக்கு சுருக்கமான அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது ஒருபக்கமிருக்க, ஆம் ஆத்மி கட்சியின் சோம்னாத் பாரதி என்கிற அமைச்சர் ஒருவர், கடந்த 17-ம் தேதி தனது ஆதரவாளர்கள் கும்பலுடன் தில்லியின் கீர்க்கி எக்ஸ்டென்ஷன் என்கிற பகுதியில் இரவு ’ரோந்து’ சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் வசித்து வந்த ஆப்ரிக்க பெண்கள் சிலரை சுற்றி வளைக்கும் சோம்நாத் பாரதி தலைமையிலான கும்பல், அவர்கள் தில்லியில் தங்கி விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் போதைப் பொருட்களை புழக்கத்தில் விடுவதாகவும் கூச்சலிட்டுள்ளனர்.
அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை வரவழைக்கும் பாரதி, அப்பெண்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். மேலும் அப்பெண்களிடம் போதை மருந்து சோதனைக்காக அவர்களின் சிறுநீர் மாதிரிகள் தேவை என்று சொல்லி பொதுவிடத்திலேயே அதை எடுத்துக் கொடுக்குமாறு மிரட்டியிருக்கிறார். போலீசாரோ இது போல் திடீர்க் கைது நடவடிக்கைகள் சாத்தியமில்லை என்றும் அது விதிகளுக்குப் புறம்பானது என்றும் சொல்லி மறுத்துள்ளனர்.
சோம்நாத் பாரதியின் அராஜகம்
ஆப்ரிக்கப் பெண்களை இவ்வாறு கும்பலோடு சென்று மிரட்டிய இந்தச் சம்பவத்திற்கு எதிராக பெண்கள் அமைப்புகள் தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள். பாரதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பெண்கள் அமைப்புகள் கோரிவருகின்றன. ஆம் ஆத்மியை அதுவரை தாலாட்டி வந்த முதலாளித்துவ ஊடகங்கள் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கண்டிக்கத் துவங்குகின்றன.
தனது அமைச்சரின் அராஜக நடவடிக்கைகள் பொதுமக்களால் காறி உமிழப்படும் அளவுக்கு அம்பலமாகிய பின்னர் கேஜ்ரிவால் மொத்தக் கதையையும் திசை திருப்பும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் ஒன்றை அறிவிக்கிறார். தில்லி மாநில காவல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருப்பதாகவும், அதை உடனடியாக மாநில அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்றும் கோரிக்கை வைத்து தர்ணாவில் ஈடுபடுகிறார். மேலும், ஜனவரி 17-ம் தேதி சோம்நாத் பாரதியிடம் ஆப்ரிக்க பெண்களை கைது செய்ய மறுத்த காவல் துறை அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் கோருகிறார்.
ஓரிரு நாட்கள் நடந்த தர்ணா ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னும் மத்திய காங்கிரசு அரசு அசைந்து கொடுக்க மறுக்கிறது. இதற்கிடையே முதலாளித்துவ ஊடகங்களோ இந்தப் போராட்டங்களால் சாதாரண மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்று கண்ணீர்க் கதைகளை அவிழ்த்து விட்டு தாமும் முதலைக் கண்ணீர் வடிக்கத் துவங்கின.
கோரிக்கை நிறைவேறும் வழியும் இல்லாமல், தனது ’புகழும்’ ஊடகங்களால் காயப்படுவதை உணர்ந்த கேஜ்ரிவால், முதலில் சொன்ன ‘அதிகாரிகள் நீக்கப்பட வேண்டும்’ என்கிற கோரிக்கையை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டே வருகிறார். ‘தற்காலிக நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ஆரம்பித்து, ‘பணி மாறுதல் செய்ய வேண்டும்’ என்று இறங்கி வந்து ‘கட்டாய விடுப்பில் அனுப்பப் படவேண்டும்’ என்று கடைசியாக சுருதி குறைந்தார்.
கேஜ்ரிவால் கோப்பை வாங்கிய நாச்சியப்பன் பாத்திரக்கடை
இறங்கி இறங்கி அதற்கு மேல் பள்ளம் தோண்டித் தான் இறங்க வேண்டும் என்ற நிலைக்கு கேஜ்ரிவாலைத் தள்ளிச் சென்ற மத்திய காங்கிரசு அரசு கடைசியில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பி வைத்தது – கேஜ்ரிவாலும் ‘வெற்றி வெற்றி’ என்று நாச்சியப்பன் பாத்திரக்கடையில் வாங்கிய அலுமினிய கோப்பையில் பொறித்து வைத்துக் கொண்டார்.
வடக்கில் இந்த கோமாளிக் கூத்துகள் நடந்து கொண்டிருக்கும் போதே தெற்கில் இடி இடிக்க ஆரம்பித்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியினர் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து நின்று அடித்துக் கொண்டனர். கரூரில் என்.ஜி.ஓ ஒன்றை நடத்தி வரும் கிறிஸ்டினா தமிழக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அக்கட்சியின் மாநில செயலாளராக பாலகிருஷ்ணன் என்பவர் இருந்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் தனித்தனியே ஒரு கோஷ்டியை உருவாக்கிக் கொண்டு தாங்கள் தான் உண்மையான தமிழக ஆம் ஆத்மி கட்சி என்று தங்களுக்குள் மோதிக் கொண்டதோடு ஒருவர் மேல் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி காவல்துறையில் புகார்களும் அளித்து வந்தனர்.
தமிழக ஆம் ஆத்மி கட்சியின் ‘செயல்பாடுகள்’ இப்படி புழுத்து நாறத் துவங்கியதும் கடந்த 19-ம் தேதியன்று சென்னை வந்தார் அக்கட்சியின் மத்திய தலைவர்களில் ஒருவரான பிரஷாந்த் பூஷன். வந்தவர் கட்சியை சீரமைக்கும் முயற்சியாக கிரிஸ்டினாவின் எதிர்கோஷ்டியைச் சேர்ந்தவர்களை அமைப்பு விரோத நடவடிக்கைகளுக்காக கட்சியை விட்டே நீக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர். கிரிஸ்டினா தலைமையிலான கோஷ்டியினரும் எதிர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை கட்டுக்கடங்கடங்காமல் செல்லவே பிரஷாந்த் பூஷன் மேடையின் பின்பக்கமாக வெளியேறித் தப்பித்துள்ளார்.
பின்பக்கமாக வெளியேறிய பிரஷாந்த் பூஷன்
மேலே சுருக்கமாக விவரிக்கப்பட்டவைகள் கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த சில சம்பவங்கள் மட்டுமே. இந்திய அரசியலைத் தூய்மைப்படுத்துவதற்காகவே அவதரித்துள்ளதாகவும் மற்ற அரசியல் கட்சிகள் போலன்றி ‘வித்தியாசமான’ கட்சி என்றும் முன்னிறுத்தப்படும் ஆம் ஆத்மி கட்சியில் நடக்கும் இந்தக் கோமாளித்தனங்களை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்வது?
இவையனைத்திற்குமான காரணம் அக்கட்சியின் மரபணுவிலேயே இருக்கிறது என்பது தான் சரியான விளக்கம். அதைப் புரிந்து கொள்ளும் முன் வாசகர்கள் காலச்சுவடில் வெளியான அக்கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவரான யோகேந்திர யாதவின் இந்த பேட்டியைப் படிக்க வேண்டியது அவசியம்
யோகேந்திர யாதவ் அளித்திருக்கும் பேட்டியிலிருந்து முக்கியமான ஒரு பகுதியை மட்டும் கீழே பார்க்கலாம்,
தண்ணீர், மின்சாரம், எரிவாயு போன்ற விஷயங்களில் நடந்துள்ள தனியார்மயமாக்கல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாறும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறதே?
கடந்த காலத்திய இருமைகள் பற்றிய பார்வையிலிருந்து எழும் பார்வை இது. சமூக இயக்கங்களும் புரட்சியாளர்களும் அவர்களது திட்டங்களுக்கு ஏற்ப நாம் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவதைப் போலவே இந்தப் பிரிவினையின் எதிர்ப்பக்கத்தில் இருப்பவர்களும் உலகை அதே பிரிவுகளின் அடிப்படையில்தான் பார்க்கிறார்கள். தங்களுக்கு வேண்டிய சிறு குழுவிற்காக இயங்கும் முதலாளித்துவத்தை நீங்கள் கேள்விக்குட்படுத்தினால், ரிலையன்ஸ் மற்றும் பிறர் செய்யும் ஊழல்களைக் கேள்விக்குட்படுத்தினால், அரசாங்கம், அதிகாரிகள், நிறுவனங்கள் ஆகியவர்களின் கூட்டைப் பற்றிப் பேசினால் சிவப்பு வருகிறது, சோசலிஸ்டுகள் வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. துரதிஷ்டவசமாக அவர்களது உலகில் இந்தப் பிரிவுகள் மட்டுமே இருக்கின்றன. இந்த விஷயத்தில் நாங்கள் உறுதியான நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறோம்: ஆதாரங்களைப் பார்க்கும் முன்னர் ஏன் நாம் முடிவெடுக்க வேண்டும், பிரச்சினையின் பிரத்யேகத் தன்மைகளை ஆராயும் முன்னர் ஏன் முடிவெடுக்க வேண்டும், பொதுத்துறைதான் எல்லாவற்றிற்கும் தீர்வு அல்லது தனியார்துறைதான் எல்லாவற்றிற்கும் தீர்வு என்று ஏன் முடிவெடுக்க வேண்டும்? 60களில், 70களில் நடந்த பொருளாதார விவாதங்களில் குறிக்கோள்கள் மற்றும் அவற்றை அடையும் வழிகள் பற்றிப் பெரும் குழப்பம் இருந்தது. இதில் தவறு இடதுசாரிகள் பக்கமே. குறிக்கோள்தான் முக்கியம். ஆனால் கடைக்கோடி மனிதனுக்கு நல்லது நடப்பது விஷயங்களை அரசாங்கம் தன் கையில் எடுத்துக்கொள்வதன் மூலமா அல்லது வேறு யாரையாவது செய்யச் சொல்லிக் கேட்டுக்கொள்வதன் மூலமா என்பதைப் பற்றிய முடிவை அவ்வப்போதைய சூழலுக்கு விட வேண்டும், அனுபவ அடிப்படையில் கிடைக்கும் அறிவிற்கு விட வேண்டும். அவ்வப்போது உருவாகும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளுக்கு நான் ஏன் கோட்பாட்டு, சித்தாந்த அடிப்படையிலான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்? நமது சொந்த வாழ்க்கையிலேயே மருந்துகள் விஷயத்தில் இத்தகைய நிலைப்பாட்டை நாம் எடுப்பதில்லை.
இந்த சிக்கலான தத்துவ விசாரத்தை சென்னை மொழியில் சுருக்கிச் சொல்வதாக இருந்தால் ‘ஊத்திகினும் கடிச்சிக்கலாம், கடிச்சிகினும் ஊத்திக்கலாம்’ என்பதாகவே முடியும் – எப்படியென்று பின்னர் பார்க்கலாம்.
அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு யோகேந்திர யாதவ் போன்ற அறிவுஜீவி அடையாளங்கள் ஏதுமில்லாததால் எந்தப் பூசிமொழுகலும் இல்லாமல் நேர்மையாக பதிலளித்துள்ளார் – “நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலாவதாக நாங்கள் எந்த சித்தாந்தத்துக்கும் தாலி கட்டிக் கொள்ளவில்லை. இரண்டாவதாக, தொழில்துறையில் அரசாங்கத்துக்கு வேலை இல்லை. கார்ப்பரேட் துறை நாட்டில் மிகப்பெரும் பாத்திரத்தை ஆற்ற வேண்டும். சில பேரைத் தவிர, பெரும்பாலான தொழிலதிபர்கள் ஊழலுக்குப் பலியானவர்கள்தான். அவர்கள் ஊழலை ஊக்குவிப்பவர்கள் அல்ல” என்று ஓபன் மேகசீன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, யோகேந்திர யாதவ் அளித்துள்ள பதிலில் அவர் தனியார்மயத்தை எதிர்த்து கருத்து தெரிவிக்கவில்லை என்பது ஆச்சர்யத்துக்குரியதல்ல – ஏனெனில், தனியார்மய தாராளமய உலகமய கொள்கைகளை எதிர்ப்பதன் வழியாக ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பை முன்னெடுக்கும் அருகதை இந்தியாவில் நக்சல்பாரிகளைத் தவிர வேறு எவருக்குமே இல்லை என்பது தான் எதார்த்தம். எனவே அதையெல்லாம் ஆம் ஆத்மி கட்சியிடம் எதிர்பார்த்து நாம் ஏமாறத் தேவையில்லை.
எனினும், யோகேந்திர யாதவ் இத்தனை கவனமாக தனது பதிலைப் பூசி மொழுக வேண்டிய தேவை என்ன? அவர் சொல்லவிழையும் கருத்தின் பொருள் என்ன?
இந்த பதில் மட்டுமின்றி யோகேந்திர யாதவ் அளித்துள்ள பேட்டி நெடுக அடிநாதமாக ஒலிக்கும் செய்தி இது தான் – “தத்துவம் கொள்கை கோட்பாடுகள் என்று முன்கூட்டியே திட்டங்களை வைத்துக் கொண்டு எதையும் அணுக கூடாது. அந்தந்த நேரத்தில் எது எப்படி வருகிறதோ அதை அப்படி எதிர்கொள்வது”
ஆம் ஆத்மி நம்மிடம் சொல்வது என்ன? தண்ணீர் வரவில்லையா, மின்சாரம் கிடைக்கவில்லையா, வேலையில்லையா, தொழில் முடக்கமா, பொருளாதார தேக்கமா, குடிப்பழக்கமா – இன்னும் சமூகத்தில் என்னென்ன சீர்கேடுகள் உள்ளனவோ அத்துனைக்குமான காரணம் – ஊழல்…! இந்த ஊழலை மட்டும் ஒழித்து விட்டால் எல்லா பிரச்சினைகளும் காணாமல் போய் விடும். ஊழல் ஒழிப்பு ஒன்றே அனைத்துக்குமான சர்வரோக நிவாரணி.
இதை எப்படிச் சாதிக்கலாம் என்பதற்கும் ஆம் ஆத்மியிடம் பதில் இருக்கிறது. லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஊழல் ஒழிந்து விடும். ஊழல் என்பதற்கு ஆம் ஆத்மி வைத்திருக்கும் விளக்கத்தின் படி அவர்கள் சொல்லும் பிரச்சினையின் ஆணி வேர் மட்டுமல்ல, அதன் சல்லி வேரைக் கூட தொடவில்லை. ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் கார்ப்பரேட் லாப வெறியாட்டம் குறித்து இது வரை அக்கட்சி மூச்சு விடவில்லை – மூச்சு விட மாட்டோம் என்று கேஜ்ரிவால் தெளிவாகவே சொல்லி விட்டார்.
ராம் மனோகர் லோகியா
இது ஆம் ஆத்மியின் சொந்தக் கண்டுபிடிப்பின் முடிவுகள் அல்ல – அது அக்கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்கத் தட்டுகளின் அபிலாஷைகள் மற்றும் அரசியல் கண்ணோட்டங்கள். ஐ.ஐ.டி. பட்டதாரிகள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களின் உயர் பதவி வகித்தவர்கள், ஐ.ஏ.எஸ். ஆக முயற்சிப்பவர்கள், பலவிதமான தன்னார்வக் குழுக்களை இயக்குபவர்கள் – இவர்கள் தான் இக்கட்சியின் முன்னணியாளர்கள். இவர்கள் அனைவரும் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தான் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவுத் தளம். இந்தக் குட்டையிலிருந்து தோன்றி வளர்ந்தது தான் ஆம் ஆத்மி கட்சி.
இந்த வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தம்மளவிலேயே தனித் தனித் தலைவர்கள். அமைப்புக் கட்டுப்பாடு, மத்தியத்துவம் போன்றவற்றுக்கு கொள்கையளவிலேயே விரோதமானவர்கள். ஆம் ஆத்மியில் இவர்கள் சங்கமித்தது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. ஆம் ஆத்மி கட்சியின் கொள்கையிலேயே இந்த தனியாவர்த்தன கோஷ்டிகளுக்கான அடிப்படைகள் உள்ளன.
ஆம் ஆத்மியின் முக்கியமான கொள்கை வகுப்பாளரான யோகேந்திர யாதவ், ராம்மனோகர் லோகியாவின் சீடரான கிஷன் பட்நாயக்கின் மாணவர். ராம் மனோகர் லோகியா என்கிற ஆலமரத்தின் பிற விழுதுகள் லாலுபிரசாத் யாதவ், பாஸ்வான், கான்ஷிராம், மாயாவதி போன்ற சமூக நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். கிஷன் பட்னாயக் தனது அரசியல் வாழ்வை ராம் மனோகர் லோகியாவின் சோஷலிஸ்ட் கட்சியில் துவங்குகிறார்.
கிஷன் பட்னாயக்கின் 27வது வயதில் சோஷலிஸ்ட் கட்சி சார்பில் பாராளு மன்றத்திற்கு தேர்த்தெடுக்கப்படுகிறார். பின்னர் அவரது 40வது வயதில் சோஷலிஸ்டு கட்சி சிதறி ஜனதா கட்சியில் ஐக்கியமாகிறது – பின்னர் ஜனதா கட்சியும் பல துண்டுகளாக சிதறிப் போகிறது. இதற்கிடையே ஜனதா கட்சியில் சேராமல் தனித்துச் செயல்படும் கிஷன் பட்னாயக் பல்வேறு மக்கள் இயக்கங்களைக் கட்ட 70-களில் இருந்தே முயற்சி செய்து வந்துள்ளார். யோகேந்திர யாதவின் வார்த்தைகளின் படி – “இனி இந்த நாட்டில் அரசியல் மாற்றங்களைக் கொண்டுவருவதில் அரசியல் கட்சிகளுக்கு எந்தப் பங்குமிருக்காது” என்பதை உறுதியாக, முழுமையாக நம்பினார்.
80-களில் இருந்து இரண்டாயிரங்களின் மத்தியில் இறக்கும் வரை கிஷன் பட்னாயக் பல அமைப்புகளைக் கட்ட முயன்று தோல்வியடைந்துள்ளார். சூழலியல், பெண்ணியம், அணைக்கட்டுகளுக்கு எதிராக என்று பல்வேறு பகுதிப் பிரச்சினைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் என்.ஜி.ஓக்களுக்கு இணைப்பாக விளங்கும் அமைப்பு ஒன்றைக் கட்ட முயன்று தோற்றுள்ளார் கிஷன் பட்னாயக். அவரது முயற்சிகளுக்கு உதவியாக மட்டுமின்றி 95-ல் அவர் ஏற்படுத்திய கட்சியின் கொள்கை ஆவணத்தை உருவாக்குவதிலும் யோகேந்திர யாதவ் துணை நின்றுள்ளார்.
யோகேந்திர யாதவின் குரு கிஷன் பட்னாயக்
பின்னர் 2004 மற்றும் 2009-ல் நீதிபதி ராஜேந்தர் சாச்சர், குல்தீப் நய்யார், சுவாமி அக்னிவேஷ், அருணா ராய் மற்றும் மேதா பட்கர் ஆகியோருடன் இணைந்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் இணைகிறார். தோல்வியில் முடியும் இந்த முயற்சியிலிருந்து மூன்று முக்கியமான பாடங்களைக் கற்றுக் கொண்டதாக யோகேந்திர யாதவ் சொல்கிறார். அதில் நமது கவனத்திற்குரிய பாடம் இதோ யோகேந்திர யாதவின் மொழியிலேயே –
”இவர்கள் தம் கைவசம் இருக்கும் முன்வரவுக்கு ஏற்ப வரலாறு ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களிடம் திட்டம் இருக்கிறது. தலைமையேற்க வேண்டியவர்கள் யார், இயக்கத்தின் வடிவமும் அளவும் எப்படி, எவ்வளவு இருக்க வேண்டும், அது எப்போது நடக்க வேண்டும் என எல்லாம் அதில் இருக்கிறது. இது மார்க்சீயத்தின் வழிவந்த கொடை என்று நினைக்கிறேன். அதன்படி செயலுக்கு முன்னரே அது குறித்த வரைபடம் உங்களிடமிருக்க வேண்டும். ஒரு வகையில், அந்த வரைபடத்தின் அடிப்படையில் நீங்கள் யதார்த்த வாழ்க்கையின் நிகழ்வுகளைத் திட்டமிட வேண்டும். அவை அந்த வரைபடத்திற்கு ஒத்து வரவில்லையென்றால் அது புரட்சிகரமானதில்லை. தங்களது முன்வரைவுக்கு ஒத்து வரவில்லை என்பதற்காக யதார்த்தத்தில் உருவான பல முற்போக்கான, புரட்சிகரமான இயக்கங்களுக்கு எதிராக அவர்கள் இருந்தார்கள்”
ஆக, எதைக் குறித்தும் பருண்மையான ஆய்வுகளோ, திட்டங்களோ தேவையில்லை என்பதே யோகேந்திர யாதவ் வந்தடைந்த முடிவு. பரந்துபட்ட மக்களைத் திரட்ட உணர்ச்சிகரமான முழக்கங்களும் எளிமையான காரணங்களுமே போதும் என்பது அவர் அடைந்த தீர்வு. இந்த தத்துவம் நடுத்தரவர்க்க அறிவுஜீவித்தனத்தை அத்துணை எளிமையாக கவர்ந்திழுப்பது ஆச்சர்யமளிக்கும் விசயமே அல்ல.
அடைய வேண்டிய லட்சியம் குறித்த தெளிவான அமைப்பு ரீதியிலான வழிகாட்டுதல், அர்ப்பணிப்புணர்வுடன் பற்றுறுதியுடன் எந்தச் சலிப்புமின்றி நீடித்து நிலைத்து நின்று செயலாற்றுவதன் அவசியம், அமைப்புக் கட்டுப்பாடு, மத்தியத்துவத்திற்கும் அதன் வழி அமைப்பின் பிற அங்கத்தினரின் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்க வேண்டிய தேவை – இவையெதுவும் ஆம் ஆத்மி கட்சியினருக்குத் தேவையில்லை.
அந்தந்த சீசனுக்கு பொருத்தமான முழக்கங்களுடன் முளைக்கும் காளான்தனமான எழுச்சிகளே போதுமானது – இதைத் தான் அவர்கள் ’ஒட்டுமொத்த புரட்சி’ என்கிறார்கள். உலகமயமாக்கல் காலகட்டத்தில் தற்போது மேற்கில் துவங்கி இந்த பூமிப்பந்தையே கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பு நெருக்கட்டி மேலும் மேலும் மூன்றாம் உலக நாடுகளின் வளங்கள் சுரண்டப்படுவதைக் கோருகிறது. பொதுத்துறைகள் தனியாருக்குத் தாரைவார்ப்படுவது, இயற்கை வளங்கள் கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்வது என்று செயல்படுத்தப்படும் அசுர வேகத்தில் முறைகேடுகள் இயல்பாகவே அம்பலமாகி வருகிறது. ஆக, இது ஊழல் எதிர்ப்பு சீசன்..!
மேல்மட்டத்தில் மறுகாலனியாக்கத் தனியார்மயத்திற்கான நடவடிக்கைகளைத் தக்கவைத்துக் கொள்ளும் அதே நேரம், அதன் விளைவாக எதிர்பாராமல் மக்களிடம் கசிந்து விடும் ‘ஊழல்’ குற்றச்சாட்டுகளை சமாளிக்க கீழ்மட்டத்தில் ‘ஊழல்’ எதிர்ப்பு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. ஆம் ஆத்மி அவதரிக்க வேண்டியதன் தேவை இதில் தான் இருக்கிறது. அவர்களும் மக்கள் எதிர்ப்பை நிறுவனமயப்படுத்தி மழுங்கடிப்பதற்குப் பொருத்தமான ‘தத்துவங்களுடன்’ களமிறங்கியிருக்கிறார்கள்.
மேற்படி ‘தத்துவமானது’ அதன் சாராம்சத்திலேயே நடுத்தரவர்க்க கட்டுப்பாடின்மைக்கும் தான் தோன்றித்தனத்திற்கும், மக்களுக்கு மேலாக தங்களைத் தலைவர்களாக கருதிக் கொள்வதற்கும் போதுமான அளவுக்கு இடமளிக்கிறது. அதன் தவிர்க்கவியலாத விளைவுகளே தற்போது இது போன்ற கேலிக்கூத்துகளாக ஊடகங்களின் மூலம் சந்தி சிரிக்கத் துவங்கியுள்ளது.
ஆளும் வர்க்கத்தின் அயோக்கியத்தனங்களை மறைக்க ‘புரட்சி’ வேடம் போடும் ஆம் ஆத்மியை இதற்கு மேலும் விளக்க வேண்டுமா?
மக்களைத் துச்சமென எண்ணி அலட்சியமாகத் திட்டம் போட்ட அரசு நிர்வாகத்தை அசைத்த கிராம மக்களின் ஆர்ப்பாட்டம்!
சிவகங்கை நகரில் சுமார் 7 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வரும் பாதாளச்சாக்கடைத் திட்டத்தின் இறுதிப்பகுதியான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் திட்டத்தை சிவகங்கை – மதுரைச் சாலையிலுள்ள அரசனி எனும் கிராமப்பகுதியில் கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
தென்னந்தோப்புகள், மாட்டுப்பண்ணைகள், மேய்ச்சல்நிலங்கள், படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ நிலையம், மனவளர்ச்சி குன்றியோர்க்கான தனியார் பள்ளி, அரசு ஐ.டி.ஐ நிறுவனம், மற்றும் கிராம மக்களின் குடியிருப்புகள் என அமைந்திருக்கும் சூழல் கொண்ட இடத்தில் இப்படி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படவிருப்பதை மக்கள் எதிர்த்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். அரசனி இடத்திற்கு முன்பாகவே வனத்துறையால் சுமார் 650 ஏக்கர் நிலத்தில் காடுகள் வளர்க்கப்படும் பகுதியில் இந்நிலையத்தை அமைப்பதற்கு அனுமதி கொடுக்க மறுத்துள்ளது வனத்துறை. காட்டிற்குள் வனத்துறை மறுத்த நிலையத்துக்கு அரசனி வெட்டவெளிப் பொட்டலில் மட்டும் அனுமதி கொடுத்திருக்கிறது இதே வனத்துறையின் கீழுள்ள மாசுக்கட்டுப்பாட்டுவாரியம். ஏன்? எப்படி? யாருக்கும் தெரியவில்லை.
பிரச்சினைகள் இப்படியிருந்த நிலையில் அரசனியில் குறிப்பிட்ட இடத்தில் அரசு திட்டத்தை நிறைவேற்றும் விதமாக ஜேசிபி மூலம் இடத்தைச் சுத்தப்படுத்தும் வேலையைத் தொடங்கியது. அப்போதுதான் அப்பகுதியிலுள்ள மக்கள் சிலர் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினரை அணுகினர். அவர்கள் பகுதியிலுள்ள புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கவனத்திற்கு இப்பிரச்சினையைக் கொண்டு வந்தனர். பிரச்சினையினைக் கையிலெடுத்த புஜதொமு திட்டத்தை உடனே நிறுத்து என்று ஒரு சுவரொட்டிப் பிரச்சாரத்தை நடத்தியது.
“அரசே மக்களைப் பாதிக்கிற திட்டத்தைக் கொண்டு வருகிறதே என்னசெய்வது? இதை எப்படி எதிர்ப்பது ” எனக் குழம்பிப் போயிருந்த அப்பகுதி மக்களுக்கு இந்தச் சுவரொட்டி ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. உடனே கிராம மக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோர் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் புஜதொமுவின் சார்பாக ஒரு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. [அப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது]
அதன்பின்னர், ஆட்சியாளரிடம் போய் ஒரு முறையீட்டை கிராம முக்கியஸ்தர்கள் கொடுத்தனர். கலெக்டரோ, “பழைய கலெக்டர் அனுமதி கொடுத்துவிட்டார், நான் என்னசெய்வது?” எனக் கையை விரித்து விட்டார். “அப்படியானால் நாம் என்னதான் செய்யமுடியும்?” என அமைதியான மக்களிடம் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என ஆலோசனை தோழர்கள் ஆலோசனை கூறினர்.
சுமார் 15 கிராமங்களைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைக்க முடியுமா?, போராட மக்கள் வருவார்களா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் எனும் முடிவிற்கு வந்தனர்.
கிராம மக்கள் சார்பாக நடத்தப்படும் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கான அனுமதி, ஒலிபெருக்கி, பிரசுரம், சுவரொட்டி, பேனர், முழக்கம் ஆகியவைகளை புஜதொமு தயாரித்தது. 15 கிராம மக்களுக்கும் பிரசுரம் போனது. சுவரொட்டி ஒட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று முத்துப்பட்டி கிராமத்தில் முக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் குடும்பப் பிரச்சினை காரணமாக தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சில கிராமங்களில் பலர் கோயிலுக்கு மாலை போட்டிருந்ததால் மலைக்குச் சென்று விட்டனர்.
ஆனால், இவைகளையெல்லாம் தாண்டி சுமார் 400 பேர் ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் முட்டாள்தனமான திட்டத்திற்கு எதிராக தங்கள் கண்டனக்குரலை முழக்கமாக எழுப்பினர். நிகழ்ச்சிக்கு கீழக்குளம் கிராம முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் அ. அர்ச்சுனன் தலைமை தாங்கினார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அதன்பின்னர், ஓட்டக்குளத்தைச் சேர்ந்த திரு. சமையன், பேசினார்.
அதன்பிறகு சிவகங்கை-இராமநாதபுர மாவட்டங்களின் புஜதொமு அமைப்பாளர் தோழர் நாகராசன், அரசு திட்டங்கள், அதன் அலட்சியத்தன்மை, அதிகாரிகளின் போக்கு ஆகியவைகளை அம்பலப்படுத்தி சட்டீஸ்கர், நியமகிரி மக்களின் போராட்டங்களை நினைவூட்டி போராடுவதின் அவசியத்தை வலியுறுத்தினார். பிறகு முத்துப்பட்டி கிராமத்தின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் திரு.மாசானம், மகளிர் மன்றத் தலைவி திருமதி. சரஸ்வதி ஆகியோர் உரையாற்றினர்.
அதன்பிறகு தோழர் குருசாமி மயில்வாகனன் போராடுவதற்காக வந்திருக்கும் மக்களை வாழ்த்தி, நேரடியாகச் சென்று இத்திட்டத்தை நிறுத்துவதைத் தவிர மக்களுக்கு வேறு வழியேதும் இல்லை என்றதோடு மக்களின் போராட்டத்திற்கு புஜதொமு எப்போதும் துணைநிற்கும் என்றார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர் அய்யாக்காளை நன்றிகூற நிகழ்ச்சி நிறைவடைந்தது.
மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடத் தயாராக இருக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு நம்பிக்கையோடு சென்றார்கள் மக்கள். அந்த நம்பிக்கையின் ஆதாரம் புஜதொமு தான் என்பதை அம்மக்கள் கூட்டம் முடிந்ததும் நம்மிடம் வெளிப்படுத்தினார்கள்.
தலைமை திரு. அ. அர்ச்சுணன்
திரு. சமையன். ஒட்டக்குளம்
திரு.மாசாணம், முத்துப்பட்டி
தோழர் நாகராசன்
பெருந்திரளாக மக்கள்
முழக்கமிடும் பெண்கள்
முழக்கமிடும் மக்கள்
வழக்கறிஞர் சீனிவாசன்HRPC
தகவல் :
செய்தியாளர் – பு.ஜ.தொ.மு.
நோட்டிஸ்
சட்ட விதிகளை மீறி அமைக்கப்படும் அரசினி கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்தை உடனே நிறுத்து! வனத்துறையின் இடத்திற்குள்ளே அமை!
சிவகங்கை நகரிலிருந்து வெளியேறும் சாக்கடைக் கழிவுநீரைப் பாதாளச் சாக்கடை மூலமாக வெளியேற்றி அதை அரசினிக் கிராமப் பகுதியில் கொண்டுவந்து சுத்திகரிப்பு செய்ய முடிவு செய்த சிவகங்கை நகராட்சியானது இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஓபனிங்கெல்லாம் நல்லாத்தானிருக்கு………! . ஆனா………பினிஷிங்………?
அரசு தனது ஒவ்வொரு திட்டத்தை ஆரம்பிக்கும் போதும் ஏதோ மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு கவனமாக வேலை செய்வது போல அதிகாரிகள் ஃபிலிம் காட்டுவதையும் பிறகு சிறிது காலம் ஆனபிறகு பராமரிப்பு இல்லை; பணியாளர் இல்லை; நிதி இல்லை; அது இல்லை; இது இல்லை……..எனப் பல்வேறு காரணங்களைக் கூறி அதனால் அத் திட்டங்கள் பல்லை இளித்துக்கொண்டு நிற்பதையும் மக்கள் அனைவரும் நேரடியாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்றவைகளே இதற்கு போதுமான உதாரணங்கள்.
அனைத்து மக்களுக்கும் குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்குதல்; தெருவிளக்கு மற்றும் சாலைகள் பராமரிப்பது; குப்பைகளை அகற்றுவது; கொசுக்களை அழிப்பது; கழிவுநீரை வெளியேற்றுவது போன்ற எந்தப் பிரச்சினையையுமே இவர்கள் எங்குமே முழுமையாகத் தீர்த்ததாகச் சரித்திரமே கிடையாது. ஏன் ? தீர்த்துவிட்டால் அப்புறம் சம்பாதிக்க முடியாதே!.
காசு – பணம் – துட்டு – மனி – மனி.
ஊழல், அலட்சியம், மெத்தனம், ஆகியவற்றில் ஊறிப்போயிருக்கும் அதிகாரவர்க்கம் செய்வதெல்லாம், மக்களின் வரிப்பணத்தை பல்வேறு திட்டங்களுக்கான அரசு நிதியாக மடைமாற்றம் செய்வதும். பிறகு அதை காண்ட்ராக்டர்களுடன் சேர்ந்து பங்குபோட்டு சுவாஹ செய்வதும்தான். இந்தியாவிலேயே ஊழல் நடக்காத திட்டம், ஏதாவது இருக்கிறதா? அல்லது லஞ்சம் வாங்காத அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள்தான் இருக்கிறார்களா? எங்கும் ஊழல் எதிலும் ஊழல். காசு/பணம்/துட்டு/மனி/மனி. இதுதானே இவர்கள் தாரக மந்திரம்.
இந்தப் பாதாளச் சாக்கடைத் திட்டமும் கூட அப்படித்தான். முதலில் திட்டமே முழுமையானதாகவும் உறுதியானதாகவும் இல்லாமல் திட்டமிடப்பட்டது. பின்னர் அதை நிறைவேற்றுவதில் பல்வேறு வகையான குழப்பங்கள். இந்தத் திட்டத்தினால் கிடைக்கக் கூடிய கமிஷன் தொகையால் உண்டான பல சம்பவங்கள் குறித்து சிவகங்கை நகரில் உலவும் செய்திகளும் கூட அதிர்ச்சியானவைகள்தான். திட்டமும் தொடர்ச்சியாக நடைபெறாமல் நிறுத்தி, நிறுத்திதான் நடைபெற்றது. மொத்தத்தில் இந்த சிவகங்கைப் பாதாளச் சாக்கடைத் திட்டம் முழுவதுமே அவசரகதியிலும், ஏனாதானோவென்றுமே நடைபெற்று வருகின்றது.
முதலில் மேலவாணியங்குடியில் ஒரு இடத்தை அரசு புறம்போக்கு நிலமென்று மாவட்ட ஆட்சியர் வழங்கி, அதில் வேலைகளும் தொடங்கப்பட்டு ஒரு மாதம் நடத்தி, காசை வீணாக்கி விட்டு அதன் பின்னர் அது தனியார் இடமென்று நீதிமன்றத்தடை வந்ததால் நிறுத்தினார்கள். புறம்போக்கு நிலம் எது? தனியார் நிலம் எது? என்றுகூடத் தெரியாமல் 25 கோடிக்கு ஒரு திட்டம் தொடங்கப்படுகிறதென்றால் அதை நம்ப முடியுமா? எவ்வளவு பணம் அதில் வீணாகியது? அதற்கு யார் பொறுப்பு? எந்தக் கேள்விகேப்பாடும் கிடையாது. அதன்பிறகு அரசனியில் இடம் தேர்ந்தெடுத்தார்கள். அதுவும் அரைகுறையானதாகவே இருக்கிறது. இதுதான் இவர்கள் திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றும் லட்சணம்.
இந்தத் திட்டம் நமக்குச் சில கேள்விகளை எழுப்புகிறது?
1) சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்ற 390 ஏக்கர் இடம் தேவை என தமிழ்நாடு அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரிய விதி உள்ளபோது அரசனியிலுள்ள 85.84 ஏக்கரிலேயே கழிவுநீரை வெளியேற்ற நகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்தது ஏன்?
2) நகராட்சியின் முந்தைய இந்தத் திட்டத்திற்கு வனத்துறை உரிய அனுமதி வழங்காததற்கான காரணம் என்ன? அதை வழங்கினால் வனத்துறைக்கு என்ன நட்டம்?
3) தனது காட்டுப் பகுதிக்குள் கழிவுநீரை வெளியேற்றுவதற்கு உரிய அனுமதி கொடுக்காத வனத்துறை தனது கீழுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக மக்கள் நடமாடும் அரசனி இடத்திற்கு மட்டும் அனுமதி கொடுத்தது ஏன்?
4) விவசாய நிலங்கள், கட்டி முடித்த வீடுகள், கட்டப் போகும் வீட்டு மனைகள், சித்த மருத்துவ மனை, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளி, அரசின் தொழிற் பயிற்சிப் பள்ளி ஆகியவைகளைக் கொண்ட வளர்ச்சிப் பகுதியான ஒரு இடத்தைக் கழிவுநீர் வெளியேற்றும் திட்டத்திற்கான பகுதியாகத் தேர்வு செய்தது அறிவுள்ளவர் செய்யும் வேலையா?
5) கழிவுநீரை வைத்துக் கட்டுப்படியாகாத விவசாயம் செய்கிற உருப்படாத ஒரு திட்டத்திற்கு வெறுமனே காடு வளர்த்துக் கொண்டிருக்கின்ற மாவட்ட வனத்துறையின் 690 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்தாமல் போதுமான இடமில்லாத, பொது மக்கள் புழங்குகிற ஒரு வளர்ச்சியடையும் பகுதியைத் தேர்வு செய்தது முட்டாள் தனமில்லையா?
உழைக்கும் மக்களே!
கழிவுநீர் நிலையத்தை மாற்றக் கோருவதென்பது சிவகங்கைப் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கு எதிரானதல்ல. மக்களுக்குக்குப் பாதிப்பில்லாத வகையில் அரசின் வனத்துறைக்குச் சொந்தமான காட்டினுள் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கவேண்டும் என்பதுதான், அரசினி, முத்துப்பட்டி, பொன்னாகுளம், ஆத்தூர், துக்கால், நைனாங்குளம், நென்மேனி, கீழக்குளம், வீரவலசை ஆகிய கிராம மக்களின் கோரிக்கை. இது சரியானது, சாத்தியமானது. ஆனால், அரசு நிர்வாகம் இதைத் தானாகச் செய்யாது. அலட்சியமாகவே இருக்கும்.மேலும் போராட்டத்தைத் தடுப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்யும். ஈ.ஐ.டி. பாரி பிரச்சினையிலும் கூட இப்படித்தான் நடக்கிறது. மக்கள் ஒன்றிணைந்து போராடாமல் இத்திட்டத்தை மாற்றி அமைக்க முடியாது. எனவே, போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி-தமிழ்நாடு . சிவகங்கை – முகவை
9443175256/9487407648/9585679637