Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 801

பா.ஜ.கவின் தியாகச் செம்மல் ஜனார்த்தன ரெட்டி கைது!

6
பா.ஜ.கவின் தியாகச் செம்மல் ஜனார்த்தன ரெட்டி கைது!
ஜனார்தன ரெட்டி

புண்ணிய வர்ஷமாம் பாரத திருநாட்டின் தெற்கிலே முதல் இந்துத்தவ அரசின் பிதாமகனும், கர்நாடக பா.ஜ.கவின் ஆள், பணம், அடியாள் புரவலர்களாக பட்டையைக் கிளப்பும் ரெட்டி சகோதரர்களின் மூத்த தலயான ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ அதிகாரிகள் 5.9.2011 அன்று காலை முகூர்த்த நேரத்தில் கைது செய்திருக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் எடியூரப்பா இவரோடு டேக்கா கொடுத்த போது ஆட்சியையே கவிழ்க்க முயன்று மேலிடத்திற்கு பாடம் புகட்டிய ரெட்டி பிரதர்சின் மேல் அத்வானிக்கே கொஞ்சம் பயமுண்டு. மேலும் முன்பு சுஷ்மா ஸ்வராஜ் பெல்லாரி தொகுதியில் போட்டியிடும் போது ரெட்டி பிரதர்ஸ் கவனிப்பில் திக்கு முக்காடிப் போனார்.  மேலும் ரெட்டி பிரதர்சின் பிசினசோடும் அவருக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அந்த வகையிலும் பா.ஜ.க மேலிடம் இவர்கள் மீது பெருங்கருணை வைத்திருக்கிறது.

இதனாலேயே பா.ஜ.க அமைச்சரவையில் யார் அமைச்சர்கள் என்று முடிவு செய்யும் வீட்டோ அதிகாரம் இவர்களிடமே இருந்தது. இவர்களோடு மோதி எடியூரப்பாவே மூக்குடைபட்டுள்ளார். அவரது ஆட்சியைக் கவிழ்க்க ரெட்டிகாருகள் நடத்திய பாரதப் போரை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் மாநில லோக்அயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான சுரங்கம் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதனால் அரசுக்கு பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. சுரங்கத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட் பணித்திருந்தது. சுரங்கத்தில் இருந்து கனிமத்தை வெட்டி எடுக்கவும் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 10 பேர் கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள் குழுவினர் பெல்லாரியில் உள்ள மாஜி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தினர். தொடர்ந்து ரெட்டியை கைது செய்து ஐதராபாத் அழைத்து சென்றனர். ரெட்டியின் உறவினரும் ஒபலாபுரம் சுரங்க நிறுவனத்தின் மானேனஜிங் டைரக்டருமான சீனிவாச ரெட்டியையும் கைது செய்துள்ளனர். இருவரும் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

ரெய்டுக்கு போன சி.பி.ஐ அதிகாரிகளால் ரெட்டி வீட்டிலிருந்து நாலரைக் கோடி ரூபாயும் முப்பது கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. கூடவே இரண்டு ஹெலிகாப்டர்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ரெட்டிகளின் கைச்செலவுக்கான விசயங்களை. இதையே ஏன் பூதகரமான செய்தியாக காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை உண்மையான பிரம்மாண்டமான சுருட்டல்களை மறைப்பதற்கான தந்திரமோ தெரியவில்லை.  ரெட்டியின் 7 நட்சத்திர வாழ்க்கையோடு ஒப்பிடும் போது துபாய் ஷேக்கெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். ரெட்டியின் ஆடம்பர வாழ்க்கை குறித்த பதிவு விரைவில் வெளியிடுகிறோம்.

மேலதிகமாக சட்டவிரோத சுரங்கத் தொழில் செய்து இரும்புத் தாதுவை இவர்கள் எந்த நாட்டிற்கு அனுப்பி பலநூறு கோடிகளைச் சம்பாதித்தார்கள்? சீனா என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆம். ஆர்.எஸ்.எஸ்இன் ஜன்ம விரோதியான சீனத்திற்கு ஏற்றுமதி செய்துதான் இந்த ஆர்.எஸ்.எஸ் அம்பி பிரம்மாண்டமான சொத்துக்களை சம்பாதித்தார்.

ரெட்டி சகோதரர்கள் மோசடி செய்து, அரசின் உதவியோடு, அரசின் ஆசிர்வாதத்தோடு அரசையே ஏமாற்றி சுரங்கத் தொழில் செய்து சில ஆயிரம் கோடிகளையாவது சுருட்டியிருப்பார்கள். இந்த ஊழல் வெளிவந்து இத்தனை மாதங்கள் ஆகியும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இத்தனை காலம் இவர்களை விட்டு வைத்திருந்ததே தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்து கொள்வதற்காகத்தான் போலும்.

அதனால்தான் பா.ஜ.க மேலிடம் இத்தனை நடந்தும், ரெட்டி ஒரு புண்ணியவான் என்று மெச்சுவதோடு அவர் சட்டப்படி தன்மீதான குற்றச்சாட்டுகளை தகர்ப்பார் என்று தெம்பாக சொல்கிறார்கள். ஆனாலும் தற்போது ரெட்டி கைது சூடாக கர்நாடக அரசியலை மையம் கொண்டிருப்பதனால் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் முப்பது பேர் ராஜினாமா செய்வார்களா என்றொரு தகவல் பெங்களூரூவில் வலுவாக வலம் வருகிறது. அது நடந்தால் எடியூரப்பாவின் பினாமி சதானந்தா சமாளிப்பது கடினம். ஆகவே கர்நாடகாவின் முதல் இந்துத்வ அரசை காப்பாற்ற வேண்டுமென்றால் ரெட்டிகாருக்களை காப்பாற்றுவது பா.ஜ.கவிற்கு அவசியம்.

லோக்அயுக்தா அறிக்கையின் படி எடியூரப்பா மற்றும் ரெட்டி பிரதர்ஸ் முன்னிலை வகிக்கும் இந்த சுரங்க ஊழலில் மட்டும் 16,000 கோடி ரூபாய்க்கும் மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய கேடிகளை காப்பாற்றும் கட்சிதான் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் முன்னிலை வகித்தது. பதிலுக்கு அந்த மேளாக் கும்பலும் எடியூரப்பா, ரெட்டி பிரதர்ஸ் கொள்ளை கேங் குறித்து ஒன்றும் சொல்லவில்லை. எல்லாம் பரஸ்பர புரிந்துணர்வுதான்.

4.9.211 அன்று நடந்த விஜய் டி.வியின் நீயா நானா நிகழ்ச்சியில் அண்ணா ஹசாரே ஊழல் மேளா குறித்து விவாதம் நடத்தினார்கள். அதில் ஆர்.எஸ்.எஸ் அம்பி அரவிந்தன் ( முன்னாள் காலச்சுவடு ஆசிரியர், முன்னாள் இந்தியா டுடே, ) என்பவர் ரொம்பவும் ஜனநாயகமாக அண்ணாவுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தார். இவர்களைப் போன்ற கொள்கைச் சிங்கங்கள் முதலில் எடியூரப்பா, ரெட்டி பிரதர்சு கேங் பற்றி கருத்துச் சொல்லட்டும். அவர்களை கண்டித்து களமிறங்கட்டும். பிறகு நம்மைப் போன்ற பாமரர்களுக்கு ஊழல் ஒழிப்பு பற்றி வகுப்பெடுக்கட்டும்.

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

உயர்நீதிமன்றத்தில் “தினமலர்” எரிப்பு போராட்டம்! படங்கள்!!

75
உயர்நீதிமன்றத்தில் தினமலர் எரிப்பு போராட்டம் புகைப்படங்கள்

5.09.2011 பதிப்பில் “ராஜீவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்”  (தினமலர் அந்த செய்தியை இணையத்தளத்திலிருந்து நீக்கிவிட்டதால் வேறொரு சுட்டி இணைக்கப்பட்டுள்ளது – வினவு) என்ற தலைப்பில் தினமலர் நாளேடு பார்ப்பன வன்மத்துடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. மூவரையும் தூக்கிலேற்ற வேண்டும் என்ற வெறியுடன் எழுதியிருந்த தினமலர் அதில் “காதல் தோல்வியால் தீக்குளிக்கும் செங்கொடிகள்” என்று அயோக்கியத்தனமாக எழுதியிருந்தது. மூவர் தூக்கை நிறுத்த வேண்டுமென்று தன்னை எரித்துக் கொண்ட அந்த இளம்பெண்ணை கொச்சைப்படுத்தி இதே தினமலர் ஏற்கனவேயும் எழுதியிருந்தது. தற்போது அந்த அவதூறு காதல் தோல்வி என்று தூற்றுமளவு வெறுப்புடன் ஆடுகிறது. இதைக்கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அரசியல் அக்கறையுள்ள வழக்குரைஞர்கள் குறிப்பிட்ட தினமலர் நாளேட்டை எரித்து தங்களது எதிர்ப்பை காண்பித்தார்கள். அந்த போராட்டத்தின் புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

பார்ப்பன தினமலரின் சதியை வேரறுப்போம்!

மங்காத்தா: அண்ணா ஹசாரேவை ‘என்கவுண்டர்’ செய்த தல!

106
மங்காத்தா வினவு

மங்காத்தா வினவு

“மனதினை மாற்றடா ஒகே
மகிழ்ச்சியை ஏற்றடா ஒகே
குறைகளை நீக்கடா ஹேஹே
தடைகளை தூக்கிப்போட்டு போடா
உடலுக்குள் நெருப்படா ஹொஹொ
உணர்வுகள் கொதிப்படா ஹஹ
புதுவிதி எழுதடா ஹேஹே
புரட்சியை செய்து காட்ட வாடா…”

– மங்காத்தா பாடல் வரிகள்….

கண்ணில் தெரியும் காட்சிகளை எல்லாம் தனித்தனியாக இரசிப்பதே நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கும் பழக்கம். அந்தக் காட்சிகளினிடையே ஊடாடியும், ஊடுறுவியும், வேர்விட்டும் நிற்கும் அந்த மாய இழையை கண்டுபிடிக்கும் போது மட்டுமே, தனித்தனிக் காட்சிகள் இணைந்து எழுப்பும் விரிந்த அந்த பிரம்மாண்டமான ஓவியத்தின் முப்பரிமாணத்தை தொட்டுணர்ந்து உள்ளிழுக்க முடியும். ‘ஆன்மீக’ மொழியில் வருணித்தால் அதுதான் தன்னையே பரப்பிரம்மமென உணரும் தெவிட்டாத பரவச தருணம். எங்கள் மொழியில் சொன்னால் அதுதான்……………? அது என்ன என்று சொல்லிவிட்டால் ஒரு ஆக்சன் த்ரில்லர் பட விமரிசனத்திற்கு செய்யப்படும் அநீதியாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தின்படி இது ஒன்றும் அநீதியல்ல. ஆனாலும்……

நாத்திகத் தமிழினவாதிகள் கோபித்துக் கொண்டாலும் கூட எந்த கட்டுரையும், விசயமும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதுதான் தமிழ் மரபு. இந்து மரபும் கூட. ஆகவே…………

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், விநாயகர் சதுர்த்தி – ஸ்பெசல் டின் பாக்ஸ், நெய் அப்பம், இனிப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, திரட்டி பால், முள்ளு முறுக்கு, கடலை உருண்டை, லட்டு, மனோகரம், தேன் குழல்……. விலை ரூ.279 மட்டுமே. அன்புப் பரிசாக விநாயகர் சிலை, விநாயகர் சி.டி இலவசம்.

ரம்ஜான் தினத்தன்று தினமலரில் வந்த விளம்பரம். அப்துல் காதரும் அம்மாவாசையும் போல் மங்காத்தாவுக்கும் கொழுக்கட்டைக்கும் என்ன தொடர்பு?

ஒரு தேசத்தின் ஊடக விளம்பரங்களை காட்டுங்கள், அந்த தேசத்தின் சமூகத் தரத்தைக் கூறுகிறோம்.…எனும் பொன்மொழிக்கேற்ப….

கவனியுங்கள், கொழுக்கட்டையின் விலை ரூ.279, கொழுக்கட்டையுடன் கூட விநாயகர் சிலை இலவசம். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பிடிக்கும். அதனால் அவரது நைவேத்தியத்தில் தொந்தி, தும்பிக்கையருகே தரையில் இருக்கும் கொழுக்கட்டை பிரதானம். ஆனால் கிருஷ்ணா ஸ்வீட்சைப் பொறுத்தவரை கொழுக்கட்டை கடவுளாகவும், கடவுள் இனாமாகவும் மாறிய விந்தையின் பொருள் என்ன? நைவேத்தியத்திற்கு விலை, அந்த நைவேத்தியம் படைக்கப்படும் ஆண்டவன் இலவசம் என்றால் உண்மையான ஆண்டவன் யார்?

தின்று செரித்து மலமாகப் போகும் ஒரு கொழுக்கட்டையின் மதிப்பு கூட அதை விரும்பி முழுங்கும் இறைவனுக்கு இல்லை எனில்? ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பாக்சை விலை கொடுத்து வாங்கிச் செல்லும் பார்ப்பன மேட்டுக்குடி பக்தர்களின் தரம் இதுதான் என்றால்?

இங்கே பக்தி ஒரு முகாந்திரம் மட்டுமே. அந்த பக்தியின் பின்னிருந்து இயக்கி முக்தியளிக்கும் கடவுள் பணம், பணம் மட்டுமே. இதைத்தான் மங்காத்தா படத்தில் விநாயக் என்ற பெயரில் வரும் அஜித் ஆங்காங்கே உணர்ச்சிப் பாவத்துடன் கூவுகிறார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பான்சராக நடத்தும் காலச்சுவடு கூட்டமாகட்டும், கர்நாடக கச்சேரியாகட்டும்……எல்லாம் அந்த நிறுவனத்தின் இனிப்பு கார வகைகளை காசு கொடுத்து வாங்கிச் செல்லும் பக்தர்களின் ‘பண்பாட்டு’ தூண்டில். பெப்சி அருந்திக் கொண்டே டோனி அடிக்கும் சிக்சரை சோனி எல்.சிடியில் பார்ப்பதும், கிருஷ்ணா ஸ்வீட்சின் கொழுக்கட்டையை விழுங்கியவாறே விநாயகனை துதிப்பதும் வேறு வேறா என்ன?

மதமோ, விளையாட்டோ எதுவும் வர்த்தகக் கடவுளின் தயவினால் மட்டும் நடக்கும் சமாச்சாரங்கள். சற்று குறிப்பாக பாருங்கள், பெப்சி விற்பதற்காக கிரிக்கெட்டில் தேவைப்படும் சிக்சர், கொழுக்கட்டை விற்பதற்காக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி. பெப்சி அருந்தினால் மட்டுமே சிக்சரின் மதிப்பு புரியும். கொழுக்கட்டையை வாங்கினால் மட்டுமே பக்தியின் மதிப்பு அளவிடப்படும்.

விநாயகர் சதுர்த்தி நாளில், விநாயக் என்ற பெயரில் அஜித் நடிக்க, விநாயகர் ஊர்வலங்களுக்கு பிரபலமான மும்பையில் நடக்கும் மங்காத்தாவின் கதை என்ன? பணம், பணம், பணம். காதல், நட்பு, பாசம், குடும்பம் எல்லாவற்றையும் விட பணம். எந்த வழியிலாவது, என்ன செய்தாவது, எப்படியாவது பணம். ஏன்?

ஆனால் மங்காத்தாவின் பலம் அது மட்டுமல்ல. அது சமகாலத்தின் பணம் குறித்த உணர்ச்சியை, உண்மையை, அரசியலை, பண்பாட்டை, புனிதங்களை வெள்ளேந்தியாக விறுவிறுப்பான காட்சிகளால் உணர வைக்கிறது. அல்லது போட்டுடைக்கிறது. எனினும் நுனிச்சீட்டில் இழுக்கும் வலுவான திரைக்கதை அளிக்கும் பேரின்ப வெள்ளத்தில் திளைக்கும் ரசிக பக்தர்கள் அதை உணர முடியாது என்பது ஒரு யதார்த்தம். ஆனால் பழகிப்போன சமரசங்களும், மரத்துப்போன நீதிகளும், இற்றுப்போன மதிப்பீடுகளும் கொண்ட சூழலை விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஒரு இரசிகன் அதை தனித்துப் பிரித்து உணர வேண்டிய அவசியமில்லையே?

கால ஓட்டத்தில் நமது விருப்பம், தெரிவு, இரசனை, கொள்கை அனைத்தும் மாறித்தான் போகிறது. ஆனால் அந்த கால ஓட்டத்தை நெறிப்படுத்துவது எது?

மூவர் தூக்கிற்காக தமிழகம் துடித்தெழுந்த போது இந்தியாவில் அதன் மாநகரங்களில் படித்த நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கம் அண்ணா ஹசாரேவின் தலைமையில் ஊழலை எதிர்த்து முழங்கிக் கொண்டிருந்தது. இங்கும் நமது தமிழக நகரங்களில், தலை நகராம் சென்னையில் மேன்மக்கள் கொதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஐ.டி துறையினர், பன்னாட்டு நிறுவனங்களில் பசையான சம்பளத்தை வாங்குவோர், செலிபிரிட்டிகள், திரைத்துறையினர் என்று பலரும் உண்டு.

இந்த மெழுகுவர்த்தி கனவான்களின் அடுத்த சென்சேஷன் எது? ஐ.டி துறை நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அது மங்காத்தா என்றார்கள். அதிலும் பல நிறுவனங்களில் உள்ள H.R.களே ஏற்பாடு செய்து அலுவகம் அலுவலகமாக கூட்டம் கூட்டமாக மங்காத்தா முதல் காட்சிக்கு சென்றிருக்கிறார்கள் என்பதைக் கேட்ட உடன் ஆவல் பிறந்தது.  படம் பார்த்த நண்பர்களிடம் கதை கேட்டால், “எல்லாம் பணம்” என்றார்கள். ஊழல் ஒழிப்பிற்கு மெழுகுவர்த்தி ஏந்திய கையோடு எல்லாம் பணம்தான் என்றால் எங்கோ இடிக்கிறதே?

_______________________________________

” இன்னும் எத்தனை நாள் நான் நல்லவனாக நடிப்பது “
– மங்காத்தாவில் வினாயக்

நல்லவனாக இருப்பது ஒரு நோக்கம் மட்டுமே. நிறைவேற்றவோ, அதை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கவோ முடியாத போது நடிக்க மட்டும்தான் முடியும். ஆனாலும் நடிப்பது சிரமமில்லையா? நல்லவனாக இருப்பது வேடிக்கையான கேலிப்பொருளான நிலையில் அஜித்தின் வசனத்திற்கு திரையரங்கு ஆர்ப்பரிக்கிறது. அது இயல்பாக தன்னையே கேலி செய்யும் சுய எள்ளல் என்பதை உறுதி செய்ய நீங்கள் மங்காத்தாவை பார்த்திருக்க வேண்டும். இந்த விமரிசனத்திற்கு மங்காத்தாவின் கதை தெரிந்திருப்பது அவசியமா?

எனினும் உங்களுக்காக கதைச் சுருக்கம்……

இந்தியாவின் கிரிக்கெட் சூதாட்டத்தில் கட்டப்படும் பணமெல்லாம் மும்பைக்கு டாலராக 500 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது. சூதாடிகள் அந்த சூதாட்டப் பணத்தை ஐ.பி.எல் பைனலுக்கு பின்னர் முறையாக பிரிப்பதற்கு முன் அதை ஒரு செட்டியாரிடம் பாதுகாக்குமாறு அனுப்புகிறார்கள். கிளப் சூதாட்டத்தை தொழிலாக நடத்தும் செட்டியார் அதன் பொருட்டு ஒரு திரையரங்கையும் நடத்துகிறார். இடையில் செட்டியாரிடம் வேலை செய்யும் ஒருவனோடு இன்னும் மூவர் சேர்ந்து அந்த சூதாட்டப் பணம் 500 கோடியை திருட  திட்டமிடுகிறார்கள்.

தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியான அஜித் அந்த நால்வர் கும்பலின் முயற்சியை கண்டறிந்து தானும் சேர்ந்து கொள்கிறார். அவரது திறமையால் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனாலும் பின்னர் அந்த நால்வர் கும்பலுக்குள் ஏற்படும் துரோகம் காரணமாக சண்டை. இடையில் குடியரசுத்தலைவருக்கு மட்டும் பதில் சொல்லும் அதிகாரம் படைத்த ஒரு போலீசு குழு அர்ஜூன் தலைமையில் இந்தியாவெங்கும் கிரிக்கெட் சூதாட்டப் பணத்தை கைப்பற்றி, சூதாடிகளை கைது செய்கிறது. அவர்களும் இந்த 500 கோடி கொள்ளையை துரத்துகிறார்கள்.

இறுதியில் அர்ஜூனும், அஜித்தும் சந்திக்கிறார்கள். சண்டையில் அஜித் சாவது போல தோன்றினாலும் பின்னர் அவர் கொள்ளைப் பணத்தோடு தாய்லாந்தில் வாழ்வது தெரிகிறது. மேலும் அவரோடு அர்ஜூனும் சேர்ந்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் தெரிகிறது. அஜித் கொள்ளையர்களோடும், அர்ஜூன் போலீசோடு இணைந்தும் பணிபுரிகிறார்கள். பணத்தை பங்கு போடும் போட்டியில் அந்த நால்வர் அணியினர் கொல்லப்படுகிறார்கள். சூதாட்ட மையமான செட்டியாரை நெருங்குவதற்குகாவே அஜித் அவரது மகள் த்ரிஷாவை காதலிக்கிறார். காரியம் கை கூடியவுடன் காதலை தூக்கி எறிகிறார். கதை போதுமா?

____________________________________________

” இது அம்பானி பரம்பரை, அஞ்சாறு தலைமுறை, ஆனந்தம் வளர்பிறை….
ஆடாம ஜெயிச்சோமடா, ஓடாம ரன்னெடுத்தோம், சும்மா உக்காந்து வின்னெடுத்தோம்….

– மங்காத்தா பாடல் ஒன்றிலிருந்து….

மங்காத்தா குறித்த பதிவுலக விமரிசனங்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. விறுவிறுப்பான படம், முன்பாதி கொஞ்சம் நீளம், பின்பாதி நறுக், ஐம்பாதாவது படம் வெற்றிப்படமாக அமைவது பலருக்கு நடக்கவில்லை, தல ஜெயித்திருக்கிறார், இளந்தொந்தி, நரை முடி, நாற்பது வயதை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்,…………இவைதான் அவற்றின் சாரம். இமேஜைப் பற்றி கவலைப்படாமல் நடித்திருக்கும் அஜித்திற்கு பாராட்டு மழைகள் குவிகின்றன. இதில் இமேஜை தியாகம் புரிந்திருப்பது எங்கே வருகிறது?

திரைக்குள்ளே பிடரியில் வழியும் முடி, பீடி, பன்ச் டயலாக் என புகழடைந்த ரஜினி திரைக்கு வெளியே வழுக்கை, நரை, தாடியுடன்தான் நடமாடுகிறார். 60 வயது பிறந்த நாட்களை கொண்டாடியபடிதான் இன்றும் சினிமாவில் நடிக்கிறார். இவையெல்லாம் ரஜினியின் மாகமித்யங்கள் என்று சொல்லுவதை விட ஆண்மையின் அடையாளம் என்று சொல்லுவதே பொருத்தம். ஆனால் இத்தகைய வாய்ப்புகள் ஒரு நடிகைக்கு இல்லவே இல்லை. அஜித்தின் ஜோடி த்ரிஷா இது போல தனக்கு 35 வயது என்று ஒரு பேச்சுக்கு அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்?

நடிகைகள் திருமணம் புரிந்தாலே அவர்களது சந்தையும், நடிப்பும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஆனால் நடிகர்களோ அவர்கள் திருமணம் புரிந்தாலும், பிள்ளைகள் பெற்றுக் கொண்டாலும், நடுத்தர வயதில் டீன் வயது நாயகிகளோடு டூயட் பாடுவதும், கல்லூரிக்கு போவதும் சாதாரணம். வேறு வார்த்தையில் சொன்னால் ஒரு ஆண் எந்த வயதிலும் பெண்டாளுவதற்கு தயாராக இருக்கிறான். அப்படி இருப்பதுதான் அவனது அடையாளம் எனும் ஆணாதிக்க சமூக மனோபாவத்தில்தான் அஜித்தின் நாற்பது வயது பிரகடனம் மாபெரும் தியாகமாக போற்றப்படுகிறது. சரி, அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் 2வது சுதந்திரப் போராட்டமாக போற்றப்படும் போது அஜித்தின் தியாகத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?

50 படங்களை முடித்திருக்கும் அஜித் மங்காத்தாவைத் தவிர மீதி படங்களில் வழமையான நீதி பேசும் நாயகனாகவே நடித்திருக்கிறார். வாலி, பில்லா போன்ற படங்களில் அவர் இரட்டை வேடங்களில் ஒன்றில் மட்டும் வில்லனாக நடித்திருந்தாலும் அவைகளின் தீமையை நன்மை வேட அஜித் விஞ்சி விடுகிறார். ஆனால் மங்காத்தாவில் ஒரு முற்றிலும் வில்லத்தனமான பாத்திரத்தில் அவர் நடிக்கத் துணிந்திருப்பது முதலில் ஒரு பாரிய மாற்றம் என்று தோன்றினாலும்…..

சில விதிவிலக்குகளைத் தவிர தமிழ் ஹீரோக்கள் அனைவரும் தீமையினை வென்று நன்மையை நிலை நாட்டும் வீரர்களாகவே நடித்திருக்கிறார்கள். அப்படித்தான் இரசிகர்களும் போற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர், ரஜினி ஃபார்முலாவின் இலக்கணமே அப்படித்தான். ஆனால் மங்காத்தாவில் இந்த இலக்கணம் சுக்கு நூறாக உடைத்தெறியப்படுகிறது. இது நடிகர், இயக்குநரின் புரட்சி என்பதை விட வில்லத்தனமே இனி வாழ்வின் கொண்டாட்டங்களுக்கு அடிப்படை என்று தெளியும் நடுத்தர வர்க்கத்தின் சமூக உணர்ச்சிக்கு பொருத்தமான கதை என்று சொல்லலாமா? இந்த பண்பு மாற்றத்தினை விமரிசனம் எழுதிய பதிவர்கள் யாரும் கவனிக்கவில்லை என்பதை விட அப்படி கவனித்து பார்க்குமளவு இது ஒன்றும் அந்நியமானதல்ல என்றும் சொல்லலாமல்லவா?

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தாய்க்குலம் மீதான செண்டிமெண்ட்தான் தமிழ் சினிமாவை காலந்தோறும் தாங்கி வந்த அஸ்திவாரம். அதை காதல், பாசம், நட்பு, தேசபக்தி என்று கிளை விரித்துப் பார்த்தாலும் எல்லாவற்றிலும் தாய்க்குலத்தின் மேன்மை போற்றப்பட்டிருக்கும். திரையங்குகளில் தாய்மார்களின் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைப் பொறுத்து ஒரு படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படும் நிலை.

பார்க்காமலேயே காதல் என்று காதலுக்கு புதிய பரிமாணம் படைத்த காதல் கோட்டை, மிரட்டி காதலிக்க வைத்த அமர்க்களம் என்று பல்வேறு காதல் படங்களில் நடித்துப் புகழடைந்த அஜித் இங்கே காதலை இரசிகர்களின் பேராதரவுடன் கதறக் கதறக் ‘கற்பழிக்கிறார்’.

லட்சுமிராயுடன் படுத்துவிட்டு அவரை தந்திரமாக வெளியேற்றிவிட்டு, காதலி த்ரிஷாவை அப்பாவி போல வரவேற்கிறார். கண்மூடி முத்தமிடுகிற இடைவேளையில் த்ரிஷாவுக்குத் தெரியாமல் லட்சுமிராயின் பர்சை வெளியே நிற்கும் அவரிடம் கொடுத்து விட்டு “என்னாச்சு” என்று கேட்கும் த்ரிஷாவிடம் பல் விளக்கிவிட்டு வரவா என்று இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்பது போல் சொல்லும்போது இரசிகர்களின் நகைப்பு ஆரவாரத்துடன் மயிர் கூச்செரிகிறது. பணம் கொள்ளையடிக்கப்பட்டவுடன் இனி காதலுக்கு வேலையில்லை என்றவுடன் த்ரிஷாவின் முன்னே அவரது தந்தை செட்டியாரை ஓடும் காரிலிருந்து தள்ளிவிடுகிறார். அப்போது காட்டும் அஜித்தின் முகபாவம் ” போங்கடி நீங்களும் உங்கள் காதல் மசுரும்” என்பது போல அபிநயிக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

சேர முடியாமல் தவிக்கும் காதல் உணர்ச்சிப் படங்களுக்கு அடிமையாயிருந்த இரசிகர்கள் இங்கே படத்தின் துவக்கத்திலேயே காதலை செருப்பில் போட்டு மிதிக்கும் காட்சிகளில் மனதை பறி கொடுத்த மர்மம் என்ன? ஆம் நண்பர்களே அந்த தலைமுறை மாறிவிட்டது என்ற உண்மையினை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். அதனால்தான் சின்னத்தம்பியின் அந்த பாடிகார்டு காதல் சென்டிமெண்டை வைத்து பி.வாசு அரைத்திருக்கும் புலி வேஷம், புளித்துப் போய் தவளை வேடமாய் இரசிகர்களால் புறக்கணிக்கப்படும்போது மங்காத்தா சீறும் சிறுத்தை போல பட்டயைக் கிளப்புகிறது. இது பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என்ற வேறுபாட்டால் நடக்கவில்லை. எந்தக் கதை சமூகத்தின் உணர்ச்சியோடு பொருந்திப் போகிறது என்பதோடு தொடர்புடையது. எனில் அந்த உணர்ச்சி எது?

படத்தில் பல ஆண் நண்பர்களோடு பழக்கமுடைய காமக்கிழத்தியாக வரும் லட்சுமி ராய்தான் இரசிகர்களின் மனதை அள்ளுகிறார். அடக்க ஒடுக்கமாகவும், ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் கொஞ்சம் மதுவருந்தும் அல்ட்ரா மாடர்ன் காதலியாக த்ரிஷா இருந்தாலும், ராயின் இருப்பே இரசிகர்களுக்கு விருப்பமானதாக இருக்கிறது. இதை லக்கிலுக் போன்ற ஃபார்முலா விமரிசன பதிவர்கள் கவர்ச்சியின் அளவுகோலால் வரையறுக்கிறார்கள். ஆனால் உடல் தோற்றம் தரும் கவர்ச்சியை விட மனம் விரும்பி ஒட்டும் கருத்து உணர்ச்சிதான் இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவதற்கான அளவுகோல். அந்த நவீன உணர்ச்சிதான் என்ன?

காலம் முழுவதும், வாழ்க்கை முழுவதும் ஒரு பெண்ணை மட்டும் நினைத்து இராமன் போல ஏகபத்தினி விரதனாக இருப்பது ஒரு இலட்சியம் என்ற அளவில் கூட இன்று மதிப்பற்றது. முன்பு கூட அப்படி ஒரு யதார்த்தம் நிறைவேறக் கடினமானது என்றாலும் மதிப்பீடு என்ற அளவிலாவது அது நினைக்கப்பட்டு வந்தது. அதனால்தான் அத்தகைய காதல் படங்கள் கட்டற்று ஓடி திரையுலகை ஆக்கிரமித்து வந்தன. இனியும் கூட அத்தகைய படங்கள் வரும் என்றாலும் அது முந்தைய காதல் போன்று புனிதக் காதலாக இருக்க வாய்ப்பில்லை. சமூக வாழ்க்கை மாறுவதற்கேற்ப காதலும் கூட மாறித்தானே ஆக வேண்டும்?

செட்டியாரிடம் வேலை செய்து பின்னர் அவரது பணத்தை கொள்ளையடிக்க முனையும் வைபவ் தனது காதல் மனைவி அஞ்சலியுடன் அன்பாக அன்னியோன்யமாக வாழ்கிறார். அர்ஜூனும் தனது மனைவியை காதல் பாசத்துடன் பராமரிக்கிறார். ஆனால் கதையின் திருப்பங்களுக்குத் தேவை என்ற அளவில் வரும் இந்தக் காதல் காட்சியின் உணர்ச்சிகளை இரசிகர்கள் பொருட்படுத்தவில்லை. பின்னர் தனது மனைவியைக் காப்பாற்றுவதற்காக வைபவ் மற்றவர்களை காட்டிக் கொடுக்கத் துணியும் போது கூட அவர் மேல் இரசிகர்கள் அனுதாபம் கொள்ளவில்லை. அவரை ஒரு வில்லனாகவே பார்க்கிறார்கள். இந்த உலகின் நம்பர் ஒன் காதலியாக பணம் இருக்கும் போது இந்த மனிதப்பிண்டமான ஒருவருக்கு ஒருவர் எனும் காதல் தனது புனிதத்தை முன்வைப்பது பொருத்தமாக இல்லை என்பது வேறு விசயம். “பணம் இருந்தால் நமக்கு ஆயிரம் பெண்கள் கிடைப்பார்கள்” என்று அஜித் பேசும்போது இரசிகர்கள் கைதட்டி வரவேற்பதின் பொருள் அதுதானோ?

வேறு வழியின்றி ஒரு மனைவி, ஒரு காதலி, ஒரு கேர்ள் பிரண்டுடன் வாழ்பவர்களும் கூட தொட்டறியத்தக்க தவறுகளை செய்யாதவர்களாகவே இருந்தாலும், அவர்கள் மனது அப்படி வாய்ப்பிருக்கும்போது பலரை அனுபவிக்கவே நினைக்கிறது. வாழ்வின் இன்பச் சிகரங்களை எட்டுவதற்கு பணம்தான் ஏணி எனும் போது ஏற ஏற துய்க்க வேண்டிய இன்பங்களின் எண்ணிக்கை கூடி விடுகின்றன. காதலும் இல்லையில்லை காதல்களும் அதில் அடக்கம்தானே?

மேலதிக ஐந்திலக்கச் சம்பளத்தில் வாழப் பழகிவிட்ட இன்றைய படித்த தலைமுறையினர் காதலுக்காக முன்பு போல போராடுவதில்லை. “ஜாலிக்காக காதல், செட்டிலாவதற்காக திருமணம்” என்பதே அவர்களது சமூக முழக்கமாக இருக்கும் போது லட்சுமிராய் மட்டும் கிளுகிளுப்புடன் இரசிக்கப்படுவதில் வியப்பில்லை. ஆனால் பணத்தை எடுத்துக் கொண்டு நால்வர் கும்பலில் இருவர் மட்டும் போகும் போது லட்சுமிராயும் இணைந்து கொள்கிறார். அதில் ஒருவனை அவர் சுட்டுக் கொல்ல பணத்தின் பங்கு இருவருக்கு மட்டும் என்றாகிறது. அந்த நேரத்தில் அஜித் வரும்போது அவருடன் சேர்ந்து கொள்வதாக கூறி அவரைக் கொல்ல முனைகிறார். ஆனால் அஜித் அதை முன்னறிந்து லட்சுமி ராயை கொல்கிறார். கொல்லும் போது “தேவடியா முண்டை” என்று திட்டுவது சென்சாரில் மியூட் செய்யப்பட்டாலும் தெளிவாக புரிகிறது. இரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள், அந்த வசனத்திற்கு. அனுபவித்து விட்டு மட்டும் போக வேண்டிய ஒரு காமக்கிழத்தி வாழ்க்கையை அதாவது பணத்தை பங்கு கேட்டால்?

_________________________________________________________

“தி இஸ் மை Fucking மணி, தி இஸ் மை Fucking கேம்”
மங்காத்தாவில் வினாயக்கின் பஞ்ச் டயலாக்.

பஞ்ச் டயலாக் என்றால் எதுகை, மோனை, சந்தத்துடன் மட்டும் வருவது அல்ல. கல்லூரி மாணவர்கள் தலைமுறை தலைமுறையாக தங்களது கலாட்டாக்களுக்கேற்ற பழமொழிகளை புதுப்பிக்கிறார்கள். அவை அந்தந்த கால இளையோரது மன ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. பணம் குறித்த அஜித்தின் கர்ஜனை முழக்கம் வாக்கியமென்ற வகையில் சாதாரணமாக இருந்தாலும் வாழ்க்கை என்ற வகையில் முக்கியமான ஒன்று.

ஹாலிவுட்டில் கொள்ளை, திருட்டு குறித்து ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில மங்காத்தா எனும் மசாலாவை விட காத்திரமான முறையில் அழுத்தமாக வந்திருக்கின்றன. தமிழ் இயக்குநர்கள் சுட்டுப் படமெடுப்பது தினசரி குடிக்கும் சரக்கு போல சாதாரணம் என்றாலும் இயக்குநர் வெங்கட் காலத்துக்கேற்ற கதைக்களத்தினையும், உணர்ச்சியையும் மீட்டிருக்கிறார் என்பதே முக்கியமானது. அந்தக் காலம் எது?

அண்ணா ஹசாரே திகார் சிறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது டைம்ஸ் நௌ தனது பிரச்சாரத்தினை சூடு பறக்க ஆரம்பித்திருந்த நேரம். அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்படித்த செய்தி ஒன்று. ஹாங்காங்கில் இருக்கும் மார்கன் ஸ்டான்லி எனும் நிதி மூலதன ஆலோசனை நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் சேட்டு அம்பி ஒருவன் இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு மும்பை வந்து சேர்கிறான். இந்தியாவில் இருக்கும் போது வருமானவரியை ஏமாற்றியதையெல்லாம் ஹாங்காங்கில் தன்னால் நினைத்துப் பார்க்க முடியாது என்று கூறுபவன் அது போன்று இந்தியாவிலும் வரவேண்டுமென்று இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக கூறுகிறான்.

மார்கன் ஸ்டான்லி எனும் நிதி மூலதன ஆலோசனை நிறுவனம் பங்குச் சந்தை சூதாட்டங்களையே தொழிலாக கொண்டு நடத்தப்படும் நிறுவனம். தனியார் மயத்திற்காக பொதுத்துறைகளை விற்க வேண்டுமென்பதையே தொழில் முறை ஆலோசனைகளாக அமல்படுத்தும் நிறுவனம். இப்படி சூதாட்டத்தையே தொழிலாகக் கொண்டு வாழும் அந்த சேட்டுப்பையன் இங்கே ஊழலை எதிர்க்கிறான் என்பதை என்னவென்று சொல்வீர்கள்? இதுதான் இந்தக் காலத்தின் உணர்ச்சி என்றால் ஏற்பீர்களா?

ஹாலிவுட்டின் கொள்ளையடிக்கும் படங்கள் ராபின் ஹூட்டில் துவங்கி ஒரு நீண்ட மரபினைக் கொண்டிருக்கிறது. திருட்டின் மீது மக்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கக் காரணம் சொத்துடமையின் ஏற்றத்தாழ்வான சமூக யதார்த்தம்தான். நேர்மையாக வாழ்ந்து அரை வயிற்றுக் கஞ்சி குடிக்கும் எளியோரும் தாம் அதிகம் பணம் சம்பாதிப்பதை ஒரு கனவாகவோ, இல்லை சினிமாவாகவோ நினைத்துப் பார்த்து மகிழ்வதை நாம் புரிந்து கொள்வது கடினமல்ல. அநீதியான இந்த சமூக அமைப்பு தான் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஆயிரம் தடைகள் ஏற்படுத்தியிருக்கும் போது அந்த தடைகளை ஒரு கொள்ளையன் தகர்த்தெறிவதை மக்கள் விரும்பாமலில்லை.

ஆனால் இந்த விருப்பம், கனவு வர்க்க ரீதியாக மேலே செல்லச் செல்ல வேறு பரிமாணத்தை எடுக்கிறது. பசையான சம்பளத்துடன் வாழும் படித்த நடுத்தர வர்க்கம் இந்தக் கனவினை நனவாக்க பங்குச் சந்தை, சிட் பண்ட், தங்க முதலீடு, ரியல் எஸ்டேட் என்று தன்முன் விரிந்திருக்கும் ராஜபாட்டையில் வேகமாக ஒடுவதற்கு விரும்புகிறது. சொந்த வீடு, சில பல இலட்சங்களில் வாரிசுகளுக்கு இன்ஜினியர், மருத்தவர் சீட், தொடர்ந்து விலையேறும் நிலம் எல்லாம் அவர்களுக்கு இருந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தங்கள். தனது அலுவலகத்திற்கு வாங்க வேண்டிய ஸ்டேசனரி பொருட்களுக்காக கமிஷன் வாங்கும் தனியார் நிறுவன அதிகாரியோ, தனியார் நிறுவனங்களை கவனிப்பதற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரியோ இப்படித்தான் ஓடுகிறார்கள். ஊழலின் ஊற்று மூலம் முதலாளித்துவம் என்றாலும் ஊழலின் சமூக அடிப்படை இவர்களைக் கொண்டே தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. கூடவே இவர்கள்தான் ஊழல் ஒழிப்பிற்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். எனில் இது என்ன வகை முரண்?

படத்தில் அஜித்து புகை பிடிப்பதிலும், குடிப்பதிலும் அப்படியே கிழக்கு மகாபலிபுரம் சாலையின் வார இறுதிக் கொண்டாட்டத்தினை நினைவுபடுத்துகிறார். மகாபலிபுரம் செல்ல முடியாதவர்கள் டாஸ்மாக்கை மொய்க்கிறார்கள். அன்றாடம் அளவாகவோ, அளவு கடந்தோ, வார இறுதியில் அசுரத்தனமாகவோ குடிக்க வேண்டுமென்றால் வாழ்க்கையை இன்பமென பருகி நுகர பல்வேறு பொருட்களும், வசதிகளும், ஆடம்பரங்களும், சேவைகளும் வேண்டும். அவற்றை அடைய குறுக்கு வழியில் பணம். பணத்தை அடைந்தால் கொண்டாட மது.

மங்காத்தா படத்தை இரசிப்பவர்களெல்லாம் உடனே திருடி சம்பாதித்து கொண்டாடப் போகிறவர்கள் அல்லதான். ஆனால் அப்படி திருடாவிட்டாலும் ஏதாகிலும் குறுக்கு வழியில் பணம் வரவேண்டும் என்ற விருப்பமுடையவர்கள். இப்படி பொங்கி வழியும் நுகர்வுக் கலாச்சார மதத்தின் ஒரே கடவுளான பணத்தை அதை சம்பாதிப்பதை அல்லது கொள்ளையடிப்பதை ஒரு தேர்ந்த ரசனையுடன், திறமையுடன், வெறியுடன் செய்யும் அஜித்தின் காட்சிகளில் இரசிகர்களின் மனம் அவர்களையறியாமலேயே ஒன்றுகிறது. அந்த மாபெரும் பணம் என்ற உணர்ச்சிதான் காதலை கத்திரிக்காய் போல தூக்கி எறிவதை ஏற்றுக் கொள்கிறது. படித்த நடுத்தர வர்க்கத்தின் சமூக உணர்ச்சி இந்தப் பணத்தோடு தொடர்புடையது என்பதை யார் மறுக்க முடியும்? பணத்திற்காக வெறி கொண்டவனாக அஜித் கத்தும் முகபாவனைகளும், வீடியோ கேமில் வென்றே ஆக வேண்டுமென்று ஒரு மேட்டுக்குடி சிறுவன் காட்டும் வன்முறை முகபாவனைகளும் வேறு வேறு அல்ல.

அண்ணா ஹசாரேவுக்காக சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்திய படங்கள் வெளியாகியிருந்தன. படத்தில் ஐ.ஐ.டி கோல்டு மெடலிஸ்ட்டாக வரும் பிரேம்ஜி கொள்ளையடிப்பதற்கான சாப்ட்வேர் வேலைகளை திறமையுடன் செய்கிறார். 65.000 ரூபாய் சம்பளத்தில் பெங்களூரு போக வேண்டியவர் இங்கே நூறு கோடி சம்பாதிப்பதற்கு வாய்ப்பிருப்பதை ஒரு கேரியர் முன்னேற்றமாக எடுத்துக் கொள்கிறார், பேசுகிறார். நிஜத்தில் இந்தியாவில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்மில் படித்துவிட்டு நாசாவில் உலகநாடுகளை ஒழிப்பதற்கு வேலை செய்பவர்களும், கோல்டு மேன் சாசில் கள்ளக்கணக்கு எழுதுபவர்களும் சொல்லும் சலித்துப்போன விசயம் என்ன? “இந்தியாவில் தகுதி, திறமைகளுக்கு வாய்ப்பில்லை, எங்கள் திறமைகளுக்கு மதிப்பளிப்பது அமெரிக்காதான்”. ஆனால் இந்த பச்சையான தேச துரோகிகள் அமெரிக்காவிலும் அண்ணா ஹசாரேவுக்காக போராடாமல் இல்லை. இது முரணா, இல்லை முரணை மறைக்கும் மயக்கமா ?

ஐ.ஐ.டி மாணவர்களை இயக்குநர் வெங்கட் பிரபு இழிவுபடுத்தி விட்டதாக அவர்கள் யாரும் சண்டைக்கு வரப்போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இப்படி ‘சாகசங்கள்’ செய்து பணம் அள்ளுவது ஒரு தவறல்ல. ஆனால் ஒரு தலித் மாணவன் அங்கே நுழைந்தால் கோட்டா என்று கேலிசெய்வதும், இந்தியாவில் மெரிட்டுக்கு மதிப்பில்லை என்று போராடவும் செய்வார்கள். இவர்கள்தான் அண்ணா ஹசாரேவின் போர்ப்படைத் தளபதிகள் எனில் இந்தப் போர் யாரை எதிர்த்து?

அஜித், அர்ஜூன் இருவரும் ஆந்திர கேடரைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள். 500 கோடியைக் கொள்ளையடிக்க ஒருவர் போலீசு துறையின் உள்ளேயும், ஒருவர் வெளியேயும் வேலை செய்கிறார்கள். அதிலும் அர்ஜூன் குடியரசுத் தலைவரின் நேரடி அதிகாரம் பெற்ற சூப்பர் போலீசு. இதுவரை அர்ஜூன் எத்தனை தேசபக்திப்படங்களில் சூப்பர் காப்பாக நடித்திருக்கிறார், எத்தனை பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை கொன்றிருப்பார், தீவிரவாதிகளின் அபாயத்திலிருந்து எத்தனை முறை தேசத்தையும், பிரதமரையும் காப்பாற்றியிருப்பார்? அத்தகைய டிரிபிள் எக்ஸ்-எல் தேசபக்தி எக்ஸ்பர்ட் இங்கே ஒரு அல்ட்ரா மாடர்ன் கொள்ளையின் சூத்திரதாரி என்றால்?

எனில் அர்ஜூனும் தனது இமேஜைத் துறந்து விட்டார் என்று பொருளா? இல்லை. ஒருவேளை இந்தப்படத்தில் அவரை ஐ.எஸ்.ஐ உளவாளியாக நடிக்க கேட்டிருந்தால் நிச்சயம் மறுத்திருப்பார். ஏனெனில் பாக்கிஸ்தானை ஆதரிப்பதுதான் தேச துரோகமே அன்றி பணத்தை குறுக்கு வழியில் சம்பாதிப்பது அல்ல. இப்போது யாரும் திகார் சிறையில் ஊழல் வழக்களுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் அரசியல் வாதிகள், அதிகாரிகளை அப்படி கசாப் போன்று தேசவிரோதிகளாக கருதவில்லையே?

போலீசு அதிகாரிகளின் கடமை, நேர்மைகளைப் பற்றி விடாது பேசி பொளந்து கட்டும் நம்ம ஆக்ஷன் கிங்கை இப்படி பீரோ புல்லிங கொள்ளையன் போல இல்லாமல் கொஞ்சம் மாடர்னாக காட்டியிருந்தாலும் இதற்காகவே இயக்குநருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் சி.பி.ஐ டயரிக் குறிப்பு துவங்கி, விஐயகாந்த் வரை இவர்கள் போலீசுக்கு போற்றிப் பாடிய தூபங்களையெல்லாம் மங்காத்தா அடித்துக் காலி செய்திருக்கிறது. எனினும் XXXL  தேசபக்தி அர்ஜூன் இமேஜ் ஆத்மா சாந்தியடையும் வண்ணம் செட்டியாரின் அடியாளாக முசுலீம் அடையாளத்துடன் வரும் நடிகர் பின்னர் நால்வர் கும்பலைச் சேர்ந்த திருட்டு போலீஸ் இன்ஸ்பெக்டரால்  கொல்லப்படுவது படத்தில் இருக்கிறது.

ஆனாலும் பணத்தை காலம் அளிக்கும் தருணத்தில் கைப்பற்றும் வாய்ப்பை யாரும் இழக்கக் கூடாது என்பது ஒரு சமூக உணர்ச்சியாக கோலேச்சும் காலத்தில் இந்த நல்ல அதிகாரி இமேஜ் மாறியிருப்பது குறித்து இரசிகர்கள் அவ்வளவாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. திருட்டு வேறு, தீவிரவாதம் வேறு என்ற லாஜிக்படியும் அது அப்படித்தான் இருக்கிறது.

வார நாட்களில் கடுமையாக ‘உழைத்து, சிந்தித்து’ பணத்தை திருடி விட்டு வார இறுதியில் குடியும் கூத்துமாக கொண்டாடலாம் என்பதே மங்காத்தா நமக்குச் சொல்லும் நீதி. ஒரு மசாலா படத்துக்கு இவ்வளவு வலிந்து கட்டி விமரிசனமா என்று பலர் ஐயுறலாம். ஆனால் மங்காத்தாவின் கதை தற்செயலாக எடுக்கப்பட்டிருப்பினும் அது ஜஸ்ட் லைக் தட் கடந்து செல்லும் கதையாக இருப்பினும், அது ஆங்காங்கே இயல்பாக தெரிவிக்கும் வாழ்க்கை குறித்த யதார்த்தங்கள் நமக்கு முக்கியமானவை. அதை முற்றும் உணர வேண்டுமென்றால் சமகால இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக யதார்த்தத்தினை புரிந்திருக்க வேண்டும்.

மங்காத்தா படத்தை அழகிரி மகன் தயாரித்திருந்தாலும் சில ‘பிரச்சினைகள்’ காரணமாக சில சுற்றுக்களுக்குப் பின்னர் சன்.டி.வியால் வெளியிடப்பட்டிருக்கிறது. மங்காத்தா படம் ஏன் இப்படி ஓடுகிறது என்ற காரணம் தெரியாத இயக்குநர் வெங்கட் பிரபு திருப்பதி சென்று மொட்டை அடித்திருக்கிறார். கருப்புப் பணத்தை காணிக்கையாக அள்ளும் கடவுளுக்கு அவர் பக்தராக இருப்பதும் பொருத்தமானதுதான். ஆனால் தான் ஒரு மொக்கை, தன் படமும் ஒரு மொக்கை என்பதில் அவருக்கு கருத்து வேறுபாடு இருக்காது. இருப்பினும் வரலாற்றின் சில காட்சிகளில் மொக்கைகள் கூட அறிந்தோ அறியாமலோ இப்படி ஒரு படத்தை தரலாம். இது அவர்களது அறிவு குறித்த பிரச்சினை அல்ல, அவர்களின் சமூக உணர்வு அல்லது ட்ரெண்ட் குறித்த எச்சரிக்கை உணர்வு என்றும் சொல்லலாம்.

படத்தில் கிரிக்கெட் சூதாடிகளை அர்ஜூன் குழுவினர் பிடிக்கும் செய்திகள் காட்டப்படும் போது அருகில் அண்ணா ஹசாரேவின் போராட்டச் செய்திகளும் காட்டப்படுகின்றன. ராமலீலா போராட்டத்திற்கு முன்னரேயே மங்காத்தா படம் எடுக்கப்பட்டிருப்பினும், போஸ்ட் புரடக்ஷனில் சென்சேஷன் கருதி படக்குழுவினர் இதை சேர்த்திருக்கிறார்கள். எனினும் இரண்டும் ஒன்றுதான் என்று இயக்குநர் காட்ட முனைந்திருப்பார் போலும். உண்மைதான். நாமும் அதைத்தான் சொல்கிறோம்.

அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் மெழுகுவர்த்தி பிடித்த கையோடு அடுத்த நாள் மங்காத்தாவை முதல் காட்சிக்கு சென்று இரசிக்க முடியுமென்றால் இரண்டில் எது உண்மை? முன்னது ஒரு தர்ம சேவை வீக் எண்ட் என்றால் பின்னது பொழுது போக்கு வீக் எண்ட் என்றும் சொல்லாம். முன்னது அவர்களின் அரசியல் பார்வை என்றால் பின்னது அவர்களின் கலைப்பார்வை என்றும் சொல்லலாம். அதனால்தான் அண்ணா ஹசாரேவின் அரசியலுக்கு பொருத்தமான கலை உணர்ச்சி மங்காத்தாவில்தான் வெளிப்படுகிறது என்பதை நாம் உறுதியாகச் சொல்கிறோம். ஊழல் எதிர்ப்பும் ஒரு ஃபேஷன், பணம் சம்பாதிப்பதும் ஒரு பேஷன். முன்னது நாட்டுக்காக, பின்னது தனக்காக.

இதற்கு மேலும் புரியாதவர்களுக்குத்தான் இந்தத் தலைப்பு:

அண்ணா ஹசாரேவை என்கவுண்டர் செய்த ‘தல’ யின் மங்காத்தா!

அல்லது

IF I AM ANNA, I AM MANKATHA TOO !

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

“ரிலையன்சோடு பாத்து நடந்துக்கங்க!” – பிரணாப் முகர்ஜி

14

ன் லோக்பால் வேண்டும் என்று கோரி அண்ணா ஹசாரே 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததை ஆங்கில ஊடகங்கள் ஆகஸ்ட் க்ராந்த்தி என்றன. சில தமிழ் ஊடகங்களில் கூட இப்போது கடந்த மாதம் நடந்த கூத்துகளை ஆகஸ்டு புரட்சி என்றே குறிப்பிடுகின்றனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும். மேற்படி ஆகஸ்டு புரட்சியின் போது நாளொரு நிலைப்பாடும் பொழுதொரு கொள்கையும்  எடுத்து குழப்புவதற்குப் பெயர்போன காங்கிரஸையே அண்ணா குழப்பியடித்தார்.

மூன்றே நாளில் மசோதா வேண்டும் என்றார். இந்த மாதத்துக்குள் மசோதா நிறைவேற வேண்டும் என்றார். பிரதமரை ஜன்லோக்பாலில் கொண்டு வர வேண்டுமென்றார். அதை அப்படியே விட்டு விட்டு அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவைத் திரும்பப் பெற்றே ஆக வேண்டும் என்றார். பிறகு அந்தக் கோரிக்கையை திராட்டிலில் விட்டு விட்டு எங்கள் லோக்பாலையும் சேர்த்து கொஞ்சம் கவனிங்க என்றார். கடைசியில் அத்தனை நாட்கள் கேட்டதையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு மூன்று கோரிக்கையில் வந்து நின்றார்.

அந்த மூன்று கோரிக்கையுமே மொக்கைக் கோரிக்கைகள் என்று தனியே சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறோம். இப்படி அண்ணா ஹசாரே மாறி மாறி பேசிக் கொண்டிருந்த சமயத்தில் இதில் இருக்கும் இடியாப்பச் சிக்கல்களை அவிழ்க்க களமிறக்கப்பட்டவர் தான் பிரணாப் முகர்ஜி. அந்த சமயத்தில் அரசியலில் போடப்படும்  முடிச்சுகளையெல்லாம் அவிழ்க்கும் தெள்ளியதோர் முடிச்சவிழ்க்கி என்று ஆங்கில ஊடகங்கள் அவரை போற்றிப் புகழ்ந்தன. அப்போது அண்ணாவுக்கும் பிரணாபுக்கும் இடையே தூதுப் புறாவாக செயல்பட்டவர் விலாஸ்ராவ் தேஷ்முக்.

கபில் சிபலும், சிதம்பரமும் பேட் பாய்ஸ் என்றும், விலாஸ் ராவ் தேஷ்முக்கும் பிரணாபுமே குட்பாய்ஸ் என்றும் அண்ணா கும்பல் இவ்விருவருக்கும் நற்சான்றிதழ் வழங்கியிருந்தது. விலாஸ்ராவ் தேஷ்முக் நமக்குப் புதியவரல்ல. முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் – தற்போது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான கேபினட் அமைச்சர். இவரை 2g ஸ்பெக்ட்ரம் ஊழலை விட பெரியது என்று சொல்லப்பட்ட ஆதர்ஷ் வீட்டு மனை ஊழல் மூலம் நாட்டு மக்கள் சிறப்பாக அறிவார்கள். ராம்லீலா மைதான மேடையில் அண்ணாவும் விலாஸ்ராவும் கட்டிப் பிடித்து போட்டோவுக்கு போஸ் கூட கொடுத்தார்கள். அதில் அண்ணா அம்சமாக சிரித்திருப்பார் – மராத்தி மானூஸ் சிரிப்பாய் சிரித்தது. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இன்னொரு ‘நல்லவரான’ பிரணாப் முகர்ஜி பற்றி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையில் கடந்த 30-ம் தேதி ஒரு செய்தி வந்துள்ளது.

பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் செபி அமைப்பின் சேர்மனாக இருந்த யு.கே சின்ஹா என்பவருக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அவரது ஆலோசகரான ஓமிதா பவுலும் சில பெரிய நிறுவனங்கள் தொடர்பான தாவாக்களைக் கையாள்வது தொடர்பாக சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளனர். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், அனில் அம்பானியின் அடாக், ராஜஸ்தான் வங்கி, சஹாரா குழுமம் உட்பட சில பெரிய கார்பப்ரேட் நிறுவனங்கள் தொடர்பான முறைகேடுகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ‘பார்த்து பக்குவமாக’ நடந்து கொள்ளுமாறு நிதியமைச்சர் பிரணாப் அழுத்தம் கொடுத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, மேற்படி நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களை கவனித்து வரும்  ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆபிரகாமிடம் நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் படி இந்நிறுவனங்கள் தொடர்பான விஷயங்களில் நீக்குப் போக்காக நடந்து கொள்ள வேண்டும் என்று யு.கே. சின்ஹா அறிவுறுத்தியுள்ளார். ஆபிரகாம் அதற்கு மறுக்கவே அவர் மேல் பல்வேறு பொய்யான புகார்களைக் கிளப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். ஆபிரகாம் தனது தொழிலாளர் வைப்பு நிதியில் இருந்து கடன் பெற்று வாங்கிய வீடு பற்றி குடைச்சல் கொடுத்துள்ளனர். பின்னர் தீவிர விசாரணைகளின் முடிவில் அவர் வீடு வாங்கியதில் முறைகேடுகள் ஏதும் இல்லை என்று தெளிவு படுத்தப்பட்டது.

அடுத்து, ஜூலை 20-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள ஆபிரகாமுக்கு மேலும் இரண்டாண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்ததை ரத்து செய்துள்ளனர். இப்படி பல்வேறு வகைகளில் அவர் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். இந்நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆபிரகாம், ஜூன் 1-ம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் நடந்த விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டு பிரதமர் அலுவலகத்திற்கும் மத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளார். நல்லவரான பிரதமர், புகாரின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதைக் கிளப்பிய அதிகாரியின் பெயரோடு சேர்த்து அந்தக் கடிதத்தை அப்படியே நிதியமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.

பெரிய நிறுவனங்களின் ஊழல் முறைகேடுகள் பற்றிய புகாரில் தனது பெயர் வெளிப்படையாக்கப் பட்டதால் தனது உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று அச்சமடைந்துள்ள ஆபிரகாம், தற்போது விஷயத்தை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். பத்திரிகைகளில் விவகாரம் நாற்றமடிக்கத் தொடங்கியதும் இது தொடர்பாக பேட்டியளித்துள்ள யு.கே.சின்ஹா, ஆபிரகாமுக்கு சமீப காலமாக மனநிலை சரியில்லை என்று திமிர்த் தனமாக கருத்துத் தெரிவித்திருக்கிறார். பிரணாப் முகர்ஜி இன்னமும் வாயைத் திறக்கவில்லை.

ஆக, இங்கே ஊழல் என்பதன் பிறப்பிடம் என்பது கார்ப்பெரேட் தரகு முதலாளிகள் தான் என்பது இந்த விவகாரத்திலும், இதற்கு முன் வெளியான அநேகமான ஊழல்களிலும் வெளிப்படையாகவே தெரிகிறது. எதார்த்தம் இவ்வாறு இருக்க, அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு கோஷங்கள் அனைத்திலும் இந்த பகல் கொள்ளை கும்பலை மிகுந்த கவனத்துடன் தவிர்க்கிறார். இந்த நன்றிக் கடனுக்காகத் தான் அண்ணாவின் தம்பிகள் கண்டுபிடித்துள்ள மிஸ்டுகால் புரட்சிக்கும் எஸ்.எம்.எஸ் புரட்சிக்கும் ரிலையன்ஸ் தயங்காமல் ஸ்பான்சர் செய்கிறது.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் லிபிய மக்கள் போர் வெல்லட்டும்!

12
ஒபாமா-கடாஃபி

மெரிக்காவின் கட்டுக்கடங்காத மனிதாபிமானமும் அன்பும் கருணையும் சமீப மாதங்களாக லிபியாவின் மேல் திரும்பியிருக்கிறது. லிபியாவை 42 ஆண்டுகளாக ஆண்டு வந்த முவாம்மர் கடாஃபியின் ஆட்சியிலிருந்து விடுவித்து ‘ஜனநாயகத்தின்’ கையில் ஒப்படைப்பதற்காக நேட்டோ படைகளுக்குத் தலைமையேற்று அமெரிக்கா நடத்திய ‘மனிதாபிமான போர்’ அவர்கள் கணக்குப்படி ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

அரபு உலகத்திலும், வட ஆப்பிரிக்க நாடுகளான துனீசியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் நடந்த வண்ணப் புரட்சிகளைத் தொடர்ந்து லிபியாவில் கடாஃபியின் கொடுங்கோன்மைக்கு ஒரு முடிவு கட்டப் போகிறோம் என்று அறிவித்துக் கொண்ட ஒரு கிளர்ச்சிப் படை, கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் பெங்காஸி, அல் பாய்டா, தார்னா மற்றும் பானி வாலித் போன்ற கிழக்கு லிபிய நகரங்களில் சிறிய அளவில் கிளர்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள். பிப்ரவரி 15 வாக்கில் ஒரு முறைப்படுத்தப்பட்ட கொரில்லா குழுவாக தம்மை அமைத்துக் கொள்கிறார்கள். தங்களை ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணி’ என்று அழைத்துக் கொண்ட கிளர்ச்சியாளர்களுக்கு எகிப்தின்  நவீன ஆயுதங்களும் போர்த் தளவாடங்களும் கிடைக்கிறது.

கிளர்ச்சியாளார்கள் கட்டுப்படுத்திய சிர்ட்டே வளைகுடா மற்றும் கிழக்குப் பகுதியை உடனடியாக அங்கீகரிக்கும் மேற்கு நாடுகள், உடனடியாக தமது இராணுவ ஆலோசகர்களையும், தூதரக அதிகாரிகளையும் இரகசியமாக அனுப்புகிறார்கள். லிபியாவின் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் – முவாம்மர் கடாஃபியை பதவி விலக்கம் செய்யவும், அமெரிக்கா எந்த விதமான உதவியையும் செய்யத் தயார் என்றும், லிபியப் புரட்சியாளர்களோடு அமெரிக்கா தொடர்பு கொண்டு வருகிறது என்று ஹிலாரி கிளிண்டன் பிப்ரவரி 27-ம் தேதி அறிவிக்கிறார். அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் லிபிய போரில் ஜனநாயகத்தைக் ‘காப்பதற்கும்’ ‘மனிதாபிமான அடிப்படையிலும்’  அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் பங்கேற்கின்றன.

சுமார் 8000 முறைகளுக்கு மேல் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான டன்கள் வெடி பொருட்களை லிபியர்கள் மேல் வீசியிருக்கிறார்கள். லிபியாவின் மேலான கூட்டுப்படைகளின் தாக்குதல்கள் பிப்ரவரி 17-ம் தேதி ஆரம்பித்தது. தாக்குதல் துவங்கிய இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ளாக B-52 ரக போர் விமானம் மூலம் 45 டன் வெடி குண்டுகளை வீசியுள்ளனர். மத்தியத் தரைக்கடலில் மிதந்த நாசகாரிக் கப்பல்களில் இருந்து சிறியரக அணு ஏவுகணைகளை (Uranium Depleted missiles) வீசியுள்ளனர்.

இப்படி வான், கடல், நிலம் என்று திரும்பிய பக்கமெல்லாம் லட்சக்கணக்கான லிபியர்கள் செத்து விழுந்தார்கள். கடந்த 23-ம் தேதி தரை மார்க்கமாக லிபிய தலைநகரம் திரிபோலியை நோக்கிய முன்னேறிய கூலிப்பட்டாளத்திற்கு வான் மார்க்கமாக விமானத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா உதவி புரிந்துள்ளது. அதே நேரம், பெங்காஸியில் இருந்து கடல் மார்க்கமாகவும் அழைத்து வரப்பட்ட  கூலிப்படைகள் திரிபோலி நகரைச் சுற்றி வளைக்கின்றன.  இதில் கடந்த 23-ம் தேதி, லிபிய அதிபர் முவாம்மர் கடாஃபி தலைமறைவாகி விட்டதாகவும், தலைநகர் திரிபோலியின் கட்டுப்பாடு தம்மிடம் இருப்பதாகவும் கூலிப்படையினர் அறிவித்துக் கொண்டனர்.

ஈராக் மற்றும் ஆப்கானில் காலை விட்டு மாட்டிக் கொண்டதைப் போல் அல்லாமல் உள்நாட்டிலேயே கூலிப்படையினரை உருவாக்கி லிபியாவை மறைமுகமாக ஆக்கிரமித்துள்ளது அமெரிக்கா. மேலும், ஈராக் ஆப்கான் போல் அல்லாமல், பிறருடைய பங்கேற்புடனும் செலவிலும் தனது போரை நடத்தியுள்ளது.

அதிகாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையிலேயே, நேட்டோ நாடுகளின் படைகள், போர்த் தளாவாடங்கள் மற்றும் படைத் தளங்களைத் தவிர்த்து ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட், சுவீடன், சவூதி போன்ற நாடுகளின் படைகளும் இந்தப் போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் போரில் பிரிட்டன் மட்டுமே குறைந்தபட்சம் 4 பில்லியன் யூரோக்களை செலவிட நேரிடும் என்று மால்கம் சாமர்ஸ் என்கிற பாதுகாப்புத் துறை வல்லுனர் குறிப்பிட்டுள்ளார்.

லிபியாவின் ‘விடுதலை’ என்பது உலக அளவில் உள்ள எண்ணை ரிசர்வில் 60% அமெரிக்காவின் கையில் கொண்டு வந்து சேர்ப்பதாகும். அது மட்டுமல்லாமல், சர்வதேச நாணய நிதியம்,  உலக வங்கி போன்ற அமெரிக்கக் கைத்தடிகளுக்கு லிபியா போன்ற ஒரு சில நாடுகள் தான் இன்னமும் அடிபணியாமல் உள்ளன. இந்தப் போரின் துவக்கத்திலேயே ‘இடைக்கட்ட அரசு’  ஒன்றை அமைத்த கிளர்ச்சியாளர்கள், தமது வங்கிகளைத் திறந்து விடுவது குறித்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

கிளர்ச்சியாளர்கள் பெங்காஸி பிராந்தியத்தை மட்டுமே கட்டுப்படுத்திக் கொண்டிருந்த ஆரம்ப வாரங்களிலேயே(மார்ச் 19ல்), பெங்காஸி மத்திய வங்கியை லிபியாவின் இடைக்கால மத்திய வங்கியாக அறிவித்தனர். தேசத்தின் பணக் கொள்கைகளை இவ்வங்கியே தீர்மானிக்கும் என்றும் அறிவித்தனர். மேலும், லிபியாவின் எண்ணைக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் லிபிய ஆயில் நிறுவனத்தையும் மார்ச் 19-ம் தேதியே ஆரம்பித்து அறிவித்துக் கொண்டனர்.

லிபியாவின் எண்ணை வர்த்தகத்தில் மேற்கு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுக் கம்பெனிகள் ஈடுபட்டிருந்தாலும் இதுவரையில் அது முழுமையாக தனியார்மயமாக்கப் படவில்லை. லிபிய நிறுவனங்களோடு கூட்டாக எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த மேற்குநாடுகள் அதன் லாபத்திலிருந்து 35 சதவீதத்தை லிபியாவிலேயே விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. மேலும், லிபியாவோடான எண்ணை வர்த்தகம் அமெரிக்க டாலரில் நடத்தப்படாமல் லிபிய தினாரிலேயே நடந்து வந்தது.

ஆக, ஏகாதிபத்தியத்தின் சர்வதேச நிதிமூலதன ஆதிக்கத்திற்கு ஆட்படாமல் அதற்கு வெளியே லிபியாவின் வங்கித்துறை தனித்துச் செயல்பட்டு வந்ததும், அதன் எண்ணை வளங்கள் முழுமையாகத் திறந்து விடப்படாததும் தான் இன்றைக்கு அமெரிக்கா லிபியாவில் மனிதாபிமான அடிப்படையில் தலையிடுவதற்கான அடிப்படையான முகாந்திரம்.

வங்கி மற்றும் எண்ணை வளம் மட்டுமல்லாமல், யுரேனியம், தங்கம் என்று அள்ள அள்ளக் குறையாத லிபியாவின் இயற்கை வளங்கள் ஏகாதிபத்தியங்களின் நாவில் எச்சிலூற வைத்துள்ளது. முவாம்மர் கடாபியின் லிபியா இன்று விழுந்து விட்டது. மேற்கத்திய ஊடகங்கள் மனிதாபிமானத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், லிபியர்களின் லிபியா இன்னமும் விழுந்து விடவில்லை.

தாலிபான்களுக்குப் பிந்தைய ஆப்கானையும், சதாமுக்குப் பிந்தைய ஈராக்கையும் கேட்பார் யாருமின்றி சுரண்டிக் கொழுக்கலாம் என்ற பேராசையில் அங்கே காலை விட்ட அமெரிக்காவிற்கு இன்று தான் கால் வைத்ததுள்ளது புதை குழி என்பதைக் ஆப்கானியர்களும் ஈராக்கியர்களும் உணர்த்தி வருகிறார்கள். இதோ இன்று லிபியர்களின் முன்னேயும் ஒரு பெரும் சவால் காத்துக் கிடக்கிறது. தமது இரத்தத்தில் இயல்பான அமெரிக்க எதிர்ப்பையும் அவ்வாறான ஒரு வரலாற்று மரபையும் கொண்டுள்ள அவர்கள் அமெரிக்காவுக்குக் கற்றுக் கொடுக்கப் போகும் பாடங்களை இனிமேல் தான் உலகம் காணப் போகிறது.

அடக்குமுறை என்றுமே வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அடக்கியாளும் மேலாதிக்க வெறி கொண்டவர்களெல்லாம் இன்று வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். அதே வரலாற்றின் குப்பைத் தொட்டி அமெரிக்காவின் வரவுக்காகக் காத்துக் கிடக்கிறது.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

50 எல் லஞ்சத்தின் பின்னே ஐ.ஏ.எஸ்-ஆடிட்டர்-முதலாளி-ஹவாலா..ஜெய்ஹிந்த்!

27

சென்னை பெருங்குடியில் “எவரான் எஜூகேஷனல் லிட்” என்ற ‘கல்வி’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவர்கள் கல்வி தொடர்பாக பல குறிப்பேடுகளை வெளியிட்டு வருவதோடு, இணையம் மூலமும் கல்விப் பயிற்சி அளித்து வருகிறார்கள். இவர்களது குறிப்பேடுகள் அதாவது கோனார் நோட்ஸ்கள் பல பள்ளி, கல்லூரிகளுக்கு விற்கப்படுகின்றது. மேலும் வெளிநாட்டில் இருந்து நிதியுதவி பெற்று பல்வேறு ‘நலத்திட்டங்களையும்’ செய்து வருகிறார்கள்.

இந்த கல்வி வள்ளல்களின் ஆண்டு வர்த்தகம் 500 கோடியாம். இவ்வளவு வர்த்தகம் இருந்தாலே அதுவும் கோனார் நோட்ஸ் போட்டே கொள்ளையடிக்க முடியும் என்றாலே வரி ஏய்ப்பும் இருக்கத்தானே செய்யும்? வருமான வரித்துறை அதிகாரிகள் இந்நிறுவனத்தை சோதனை செய்யும் போது சுமார் 116 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதை கண்டுபிடித்தார்கள். இதற்கு அபராதம் மட்டும் 40 கோடி ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசே முதலாளிகளுக்காக சில இலட்சம் கோடி வரிச் சலுகைகளை ஆண்டு தோறும் அளிக்கும் போது எந்த முதலாளி வரியோ இல்லை அபராதமோ கட்டுவான்? அந்தப்படிக்கு இந்நிறுவனத்தின் முதலாளி கிஷோர் என்பவர் வருமான வரித்துறையின் சிறப்பு கூடுதல் ஆணையர் அண்டாசு ரவீந்தர் என்பவரை அணுகி பேரம் பேசியுள்ளார். மேலும் கிஷோரின் எவரான் நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விவேக் ஹரி நாராயணன், விக்ரம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அரசு பணி ஓய்வு பெறுவதற்கு முன்னரே விருப்ப ஓய்வில் சென்றுள்ளனர். எவரான் நிறுவனத்தில் இவர்களது ஆண்டு சம்பளம் தலா ரூ. 50 இலட்சம் ஆகும். ஆக அதிகார வர்க்கத்தின் நட்பும் இந்த நிறுவனத்திற்கு இயல்பாக இருப்பதினால் பேரம் படிந்து லஞ்சத்தொகை முடிவானது.

மேலும் இந்த பேரத்தில் ஆடிட்டர் உத்தம்சந்த் போரா என்பவரும் கூட இருந்து புரோக்கர் வேலை பார்த்துள்ளார். சி.ஏ படித்து முடித்து பல்வேறு  கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஆடிட்டர்கள் பலரும் இத்தகைய வரி ஏய்ப்பு வேலைகளில் ஸ்பெஷலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்குத்தான் சந்தையில் பெரும் மரியாதை.மேலும் இந்த உத்தம்சந்த் போரா இது போன்ற லஞ்சப் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் ஹவாலா தரகராகவும் ‘சேவை’ புரிகிறார்.

அதன்படி எவரான் முதலாளி பணத்தை எடுத்துக் கொண்டு அதிகாரியின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவியிடம் பணத்தை தருகிறார். அங்கே அதிகாரியின் ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் ஹவாலா ஏஜெண்ட் கம் ஆடிட்டர் உத்தம்சந்த் சிங், அதிகாரியின் மனைவியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். இந்த விசயம் சி.பி.ஐக்கு எப்படியோ தெரிந்து அவர்கள் வெளியே காத்திருந்து மூவரையும் கைது செய்திருக்கிறார்கள்.

இந்த விசயம் சி.பி.ஐக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்? வழக்கமாக இத்தகைய லஞ்ச பேரங்களெல்லாம் குறிப்பிட்ட அதிகாரியின் நடவடிக்கைகளால் தமக்கு பங்கு வரவில்லை என்று குமுறும் போட்டி அதிகாரிகளின் மூலம்தான் புகாராக போகும். மற்றபடி வருமானவரித்துறை அலுவலமே லஞ்சத்தாயிற்கு கோவில் கட்டி கும்பிடக்கூடிய பக்தர்கள் நிரம்பியதுதான்.

இப்போது இந்த கதையில் வரும் ஹவாலா ஏஜெண்டை கொஞ்சம் பார்ப்போம். சென்னையின் சேரிகள் மற்றும் அடித்தட்டு மக்களிடம் துண்டு துக்காணி நகைகளை வைத்து அடகுத் தொழில் செய்யும் சேட்டுக்களை விட சவுகார் பேட்டை சேட்டுகள் வேறுபட்டவர்கள். சிறு அளவில் அடகுத்தொழில் செய்யும் மார்வாடி சேட்டுகள் தமது தொகைகளையும், நகைகளையும் சவுகார்பேட்டை பெரிய சேட்டுகளிடம்தான் முதலீடு செய்வார்கள். பெரிய சேட்டுகளின் வர்த்தகம் தினமும் பல கோடி ரூபாயில் இருக்கும். சினிமாத் துறையினருக்கு கடன் கொடுக்கும் பெரிய வங்கிகள் இவர்கள்தான். இது போக அதிகாரவர்க்கம், மற்றும் முதலாளிகளின் கருப்புப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி முதலீடாக்கும் வேலைகளையும் இவர்களே செய்கிறார்கள். சவுகார் பேட்டையில் கொண்டாடப்படும் ஹோலிப்பண்டிகையின் கலர் பொடிகளின் பின்னே இந்த கருப்புதான் தொழிலாதாரமான வண்ணம். சென்னையின் ஹவாலா மையமும் இந்த பேட்டைதான்.

சேட்டு உத்தம்சிங்கின் வீட்டில் நடத்திய சோதனையில் மட்டும் 48 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது. ‘ரன்னிங் கேப்பிட்டலே’ இந்த அளவு என்றால் ஒரிஜினல் கேப்பிட்டல் எவ்வளவு இருக்கும்? இதே மாதிரி சில நூறு சேட்டுகளின் கேப்பிட்டலை கூட்டினால் அது தமிழகத்தின் வரவு செலவு திட்டத்திற்கு போட்டியாக இருக்குமோ?

வழக்கமாக இந்த உத்தம்சிங் போன்ற ஹவாலா தரகர்கள் ஒரு அதிகாரி வீட்டில் இருந்து வெளியே வந்தால் அவர்கள் லஞ்சப் பணத்துடன் செல்வதாக பொருளாம். மேலும் இந்தத் தொகையை ஒரு மணிநேரத்தில் வெளிநாடுகளில் முதலீடு செய்து விடுவார்களாம். அதன்படி நமது சி.பி.ஐ ஒரு மணிநேரம் தாமதமாக போயிருந்தால் இந்தப் பணம் கிடைத்திருக்காது. மேலும் இந்த ஆடிட்டர் கம் ஹவாலா தரகர் பல்வேறு நிறுவனங்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் ஆடிட்டராக இருக்கிறார். இவரது கஸ்டமர்களாக இருக்கும் பல திரைப்புள்ளிகள் அண்ணா ஹசாரேவை ஆதரித்து நடந்த சினிமா ஸ்டார் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில பத்திரிகை செய்திகளின் படி இந்த ஆடிட்டரும், ஹவலா தரகரும் ஒன்று என்றும் வேறு வேறு நபர் என்றும் வந்துள்ளன. நம்மைப்பொறுத்த வரை இரண்டும் பிரிந்திருந்தால் என்ன சேர்ந்திருந்தால் என்ன இரண்டிற்க்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று எழுதுகிறோம்.

பிறகு அதிகாரி ரவீந்தரின் வீட்டில் சோதனை செய்த போது ஏராளமான பணம், நகைகள் கிடைத்தன. அவரது வங்கி லாக்கரில் மட்டும் ஒன்றே முக்கால் கிலோ தங்கம், வைர நகைகள் கிடைத்தன. ரவீந்தர் வீட்டில் 52 வெளிநாட்டு மது பாட்டில்களும் இருந்தன. இதில் 22 பாட்டில்கள் காலியாம். இதற்கு தனி வழக்காம். இது போக இந்த அதிகாரி சில நாட்களுக்கு முன்னர்தான் குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்று ஒரு மாதம் தங்கி வந்தாராம்.

___________________________________________________

நாளிதழ்களில் அன்றாடம் வந்து போகும் மற்றொமொரு ஊழல் செய்தி என்றாலும் அண்ணா ஹசாரே குழு மூலமாக ஊடகங்கள் பேசிவரும் ஊழல் எதிர்ப்பு மூடு காரணமாக நாம் இதில் பரிசீலிப்பதற்கு சில விசயங்கள் இருக்கின்றன. ஊழலின் ஊற்று மூலம் அரசும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்தான், அவர்களை இப்போதுள்ள சட்டப்படி தண்டிக்க முடியவில்லை, அதற்காகத்தான் வலுவான லோக்பால் வேண்டுமென்று அண்ணா ஹசாரே அபிமானிகள் கூறுகிறார்கள்.

குறிப்பிட்ட இந்த வழக்கில் கூட அதைத்தான் கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரியும், பதிவுலகின் இலக்கிய குருஜியும் கூறுகிறார்கள். குருஜியின் கருத்துப்படி இங்கே லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு துறை சார்ந்த விசாரணை, பாதி சம்பளத்துடன் கூடிய சஸ்பெண்ட், பிறகு இடமாற்றம் முதலியவைதான் இருக்கும். இது போதாது என்பதால்தான் லோக்பால் சட்டம் தேவை என்கிறார் அவர்.

பத்ரி இன்னும் கொஞ்சம் ‘ஆழமாக’ பரிசீலிக்கிறார், என்ன இருந்தாலும் ஒரு துடிப்பான முதலாளியல்லவா? அவரது கருத்துப்படி இப்போதுள்ள சட்டங்களின் படியே முதலாளிகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் தண்டிக்க முடியுமாம். ஆனால் இப்போதுள்ள சட்டங்களின்படி அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தண்டிக்க முடியாதாம். மேலும் ஊழலின் ஊற்று மூலம் அரசுதான் என்றும், அரசுடனான உறவில்தான் பலரும் லஞ்சம் கொடுக்க நேர்கிறது எனவும் கூறுகிறார்.

இந்த வழக்கில் கூட வருமானவரித்துறை அதிகாரியின் சொத்துக்களை பறிமுதல் செய்து கடுமையான தண்டனை கொடுப்பது நடப்பில் சாத்தியமில்லை என்றும், ஆனால் முதலாளி கிஷோர் இனி கட்டத்தவறிய வரியை கட்டுவதோடு, சிறைக்கும் செல்வார் என்று பத்ரி கூறுகிறார். ஹசாரே குழுவினரை எதிர்ப்பவர்கள் ஜன் லோக்பாலில் கார்ப்பரேட் நிறுவனங்களையும், என்.ஜி.ஓக்களையும், ஊடகங்களையும் ஏன் சேர்க்கவில்லை என்று பேசுவது அபத்தம் என்கிறார். அவர்களை இப்போதே தண்டிக்க முடியுமென்றும் கூறுகிறார்.

மேலும் நிறுவனங்கள் தமது நோக்கத்தை ஒட்டியே அரசிடம் லாபியிங் செய்கின்றன. இது வெளிப்படையாக இருந்தால் பிரச்சினை இல்லையாம். சிலருக்கு இலாபம், பலருக்கு நட்டம் என்று ஏற்றத்தாழ்வு இருந்தால் மட்டுமே இந்த லாபியிங்கில் ஊழல் புகுந்து விடுகிறது என்கிறார் அவர். அமெரிக்கா போல லாபியிங்கை வெளிப்படையாக சட்டப்பூர்வமாக அறிவித்துவிட்டால் என்ன பிரச்சினை என்பதும் அவரது கருத்தாக இருக்கும்.

குறிப்பிட்ட இந்த வழக்கில் பத்ரி முன்வைக்கும் கருத்துக்களிலேயே அவரது பக்கச்சார்பு தெளிவாக பல்லிளிக்கிறது. அதாவது லஞ்சம் வாங்கிய அதிகாரியின் சொத்துக்களை பறிமுதல் செய்வது, அவருக்கு கடுமையான தண்டனை தருவது இப்போது சாத்தியமில்லை என்று கூறும் பத்ரி, அந்த நீதியை முதலாளி கிஷோருக்கு மட்டும் அளிக்க முன்வரவில்லை. அதாவது 116 கோடி வருமானத்திற்கு வரி கட்டாமல் வெறும் அறுபது கோடிக்கு மட்டும் வரி கட்டுமாறு அவர் முனைந்ததும், அதற்கு அவர் அளித்த 50 இலட்ச ரூபாய் ஊழலுக்கு என்ன தண்டனை?

பத்ரியைப் பொறுத்த வரை முறையாக வரியை வாங்கிக் கொண்டு கிஷோர் சில நாட்கள் சிறையில் இருந்தால் மட்டுமே போதுமானது என்கிறார். இது தவறு என்கிறோம். ஏனெனில் தனது வருமானத்தை குறைத்து வரி கட்டவில்லை என்பதும், அதற்காக லஞ்சம் கொடுக்க முன்வந்தார் என்பதும் பாரிய குற்றங்கள். இது அரசுக்கு வரியாக வர வேண்டிய மக்கள்பணத்தை கொள்ளையடித்தோடு அரசு அதிகாரியை விலை பேசி அரசையே அதாவது அரசாட்சியையே கவிழ்க்க முயன்றிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். அந்த வகையில் இது அரசை தகர்க்க நினைக்கும் பயங்கரவாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன்படி கிஷோரின் நிறுவனம் இனி தடை செய்யப்பட்டு, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவருக்கு பத்தாண்டுகள் தண்டனை தருவதுதான் சரியான நீதியாக இருக்கும். அதே போல வருமானவரித்துறை அதிகாரியின் சொத்துக்களை அனைத்தும் பறிமுதல் செய்யப்ப்ட்டு, அவருக்கும் இதே காலம் தண்டனை அளிக்கப்படவேண்டும். இதை பத்ரி ஏற்றுக் கொள்வாரா?

வரி ஏய்ப்பு செய்தாலோ, இல்லை அதற்காக லஞ்சம் கொடுத்தாலோ இனி சம்பந்தப்பட்ட முதலாளிகள் தொழில் செய்ய முடியாது, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், ஆயுள் தண்டனை என்று சட்டம் கொண்டு வந்தால் எந்த முதலாளியும், எந்த நிறுவனமும் கனவில் கூட லஞ்சம் கொடுக்க முன்வரமாட்டார்களே? ரவீந்திரன் போன்ற ஊழல் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு தயாராக இருந்தாலும் எந்த முதலாளியும் லஞ்சம் கொடுக்க முன் வரமாட்டானே? அப்படியும் கூட ஊழலை ஒழிக்க முடியுமே?

முதலாளி கிஷோர் வரி கட்டாமல் லஞ்சம் கொடுக்க முன்வந்திருக்கிறார் என்றால் அவரை வரியையும் அபராதத்தையும் கட்ட வைத்து விட்டு சில நாட்கள் சிறையில் இருந்தால் மட்டும் போதுமானது என்பதை ஏற்கும் பத்ரி அதே போல லஞ்சம் வாங்கிய அதிகாரி ரவீந்திரா லஞ்சப்பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, துறை சார்ந்த நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்?

முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வரி ஏய்ப்பு என்பது வங்கிக் கொள்ளை, வழிப்பறி போன்ற ஒரு கொள்ளை நடவடிக்கை. அத்தகைய கொள்ளையர்களை சட்டப்படி காப்பாற்றுவதான் லஞ்சம் வாங்கும் வருமானவரித்துறை அதிகாரியின் நடவடிக்கை. ஆக முதன்மைக் குற்றம் கொள்ளையடிப்பதுதான். இதனால் அதிகாரிகளுக்கு நாம் வக்காலத்து வாங்கவில்லை. அவர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றுதான் சொல்கிறோம். ஆனால் அப்படி இரு தரப்பினரையம் இப்போது உள்ள சட்டப்படியும், ஊழல் எதிர்ப்பு ஆசான் அண்ணா ஹசாரே கொண்டு வரும் ஜன்லோக்பால் சட்டப்படியும் தண்டிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

அதிபர் பத்ரியைப் பொறுத்த வரை சில முதலாளிகளின் சட்டவிரோதமான லாபியிங் வேலைகளுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை மட்டும் தண்டித்துவிட்டால் போதுமானது என்று நினைக்கிறார். இது ஒரு அசட்டுத்தனமான ஆனால் காரியவாதமான லாஜிக். அதாவது முதலாளிகள் மோசடி செய்தவற்கு வாய்ப்புகள் இருப்பதினால்தானே ஊழல் வளர்வதற்கு இடமளிக்கிறது. அதை விடுத்துவிட்டு லஞ்சம் வாங்குபவனை மட்டும் தண்டிப்பதில் என்ன பயன்? மேலும் லஞ்சம், ஊழல் என்பதை வெறுமனே ஒரு பண ரீதியான ஆதாயம் என்று மட்டும் பார்ப்பது பிழை. அது இந்த அமைப்புமுறையை, சட்ட முறையை ஏற்றுக் கொள்ளாமல் தொழில் நடத்துவேன் என்று நடப்பதோடு சம்பந்தப்பட்டது.

அதனால்தான் லாபியிங் வேலைகளை வெளிப்படையாக செய்யலாம் என்பது பத்ரியின் கருத்து. அவர் வியந்தோதும் அமெரிக்காவிலேயே இப்படி சட்டப்பூர்வமான லாபியிங் செய்து  பல தொழிலாளி அமெரிக்கர்களை தெருவுக்கு அனுப்பிய நிர்வாக நடவடிக்கைகள் ஏராளம். இங்கே பதிப்பக தொழிலையை எடுத்துக் கொள்வோம். அ.தி.மு.க, தி.மு.கவிற்கு ஆதரவாக இருக்கும் பதிப்பக உரிமையாளர்கள் மட்டும் நன்கு சம்பாதிக்கிறார்கள். இனி லாபியிங் தொழிலை சட்டப்பூர்வமாக்கினால் என்ன நடக்கும்? மேற்கு பதிப்பகத்தின் உரிமையாளர் சட்டப்படி ஒரு லாபியிங் நிறுவனத்திற்கு பணம் கொடுக்கிறார். அந்த லாபியிங் நிறுவனம் சட்டப்படியே அ.தி.மு.கவின் விழுப்புரம் நகர அலுவலகத்தை அல்ட்ரா மாடர்னாக கட்டிக் கொடுக்கிறது. அதனால் சட்டப்படியே மேற்கு பதிப்பகத்தின் நூல்கள் அ.தி.மு.க ஆட்சியில் வாங்க்ப்படுகின்றன. அதன்படி மேற்குபதிப்பகம் சட்டப்படியே நன்கு தொழில் செய்து வளர்கிறது. இதில் எதுவும் சத்தியமாக ஊழல் இல்லை. நம்புங்கள்!

ஆனால் பத்ரி கவலைப்படும் அளவுக்கு இங்கே லாபியிங் வேலைகள் சட்டப்படியே நடப்பதற்குத் தேவையில்லாத நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. சான்றாக வரி கட்டவில்லையா,வரிச் சலுகை, கருப்புப்பணமா, அதற்கும் வரிச் சலுகை,  கருப்புப் பணம் வெளிநாடு போகிறதா, இனி வெளிநாடுகளிலிருந்து வரும் பணத்தின் ரிஷி மூலத்தை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்யாது…. இப்படி இருக்கும் போது பத்ரி ஏன் கவலைப்பட வேண்டும்?

அடுத்து இந்த வழக்கில் ஜ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற படித்த அதிகாரிகள்தான் மோசடி செய்திருக்கின்றனர். இவர்களில் பலர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் ‘மேல்’ சாதியினர் என்பது சொல்லாமலே விளங்கும். சமூகரீதியாகவும் சரி, அதிகாரிகள் என்ற வகையில் சட்டப்படியும் சரி இவர்களிடம்தான் எல்லா அதிகாரமும் நிலவுகிறது. இவர்கள் யாரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்லர். அதனாலேயே இவர்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்ற நிலைமை இருக்கிறது.

இந்தியாவில் அரசியல்வாதிகளின் ஊழலை விட இத்தகைய படித்த மேட்டுக்குடி அதிகாரிகள் செய்யும் ஊழலின் மடங்கு மிக மிக அதிகம். இத்தகைய அதிகார வர்க்கத்தின் பல்லை பிடுங்க வேண்டுமென்றால் முதலில் நியமன முறைகள் ஒழிக்க்கப் படவேண்டும். அனைத்து அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவும், திருப்பி அழைக்கப்படவும் உரிமை வேண்டும். மேலும் இன்று அரசில் இருக்கும் அதிகாரிகள் பலர் விருப்ப ஓய்வு பெற்று தனியார் நிறுவனங்களிடம் பல மடங்கு சம்பளத்தில் வேலை செய்கின்றனர். பொதுத்துறை சொத்தை நாசமாக்கும் பணி இவர்கள் மூலம்தான் நடக்கிறது.

ஊழலை ‘ஒழித்த’ கையோடு அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதோடு, திருப்பி அழைக்கவும் உரிமை வேண்டும் என்று அண்ணா குழு தற்போது பேச ஆரம்பித்திருக்கிறது. அதையே ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமல்படுத்துமாறு அண்ணா குழு ஏன் கேட்கவில்லை? அப்படிக் கேட்டால் ஒரு பயலும் மெழுகுவர்த்தி பிடிக்கக் கூட வரமாட்டான். அரசு அதிகாரிகள் எவரும் ஒய்வு பெறும்போது தனியார் நிறுவனங்களிடம் வேலைக்கு செல்லக்கூடாது, அரசு அதிகாரிகள் வாங்கும் தங்கம், பிற பொருட்கள், வீடு முதலான சொத்துக்கள் முதலானவை அனைத்தும் கண்காணிப்பிற்குள் கொண்டு வரவேண்டும். அதாவது அவர்களது மாத வருமானமும், செலவும் அரசிடம் காட்ட வேண்டும் என்ற நிலை வரவேண்டும்.

அரசு அதிகாரிகள் போதிய வருமான சான்றிதழ்களை அளித்தால்தான் அவர்களுக்கு சொத்துக்களையோ, தங்கத்தையோ வாங்க முடியும், அவர்கள் அமெரிக்க சுற்றுலா கூட இந்த விதிப்படிதான் நடக்க முடியும் என்ற நிலை வந்தால் இதை ரியல் எஸ்டேட், சுற்றுலா, தங்க முதலாளிகளே எதிர்ப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் அரசு அதிகார அமைப்பு மக்களின் பங்கேற்போடு மக்களுக்கு கட்டுப்பட்டதாக இருக்கும்போதுதான் இவையெல்லாம் நடக்கமுடியும். அதைத்தான் நாங்கள் புரட்சி என்கிறோம்.

அதுவரை முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழல் கொள்ளை தொடரத்தான் செய்யும். அதில் முதலாளிகளின் பங்கை மறைப்பதற்கே அண்ணா ஹசாரேவின் அலட்டல்கள் பயன்படும். அந்த வகையில் பத்ரியும், குருஜியும் தங்களது ஊழலை ஒழிக்கும் உலக மகா கண்டுபிடிப்புகளை எடுத்து விடலாம். நாமும் வேறுவழியின்றி இந்த கண்டுபிடிப்புகளை படிக்க வேண்டிய துர்பாக்கியத்தில் இருக்கிறோம். வேறு வழி?

ஆனாலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த லஞ்ச வழக்கில் உள்ளது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த அதிகாரி, வட இந்தியாவைச் சேர்ந்த ஆடிட்டர், எவரானில் வேலை செய்யும் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று ஒரு விதமான இந்திய ஒற்றுமை இருப்பதைக் காணலாம். அந்த வகையில் இந்த தேசிய ஒற்றுமைக்கு ஒரு ராயல் சல்யூட்.

வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜெய், ஜெய் ஹிந்த்!

_________________________________________________

 வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

சோ, சு.சாமி, இராமகோபாலன், தினமலர்…பார்ப்பன பாசிஸ்டுகளை வேரறுப்போம்!

133

மூவர் தூக்கை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போர்க்குணமிக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் சாலை மறியல், ரயில் மறியல், மத்திய அரசு அலுவலக முற்றுகை என்று தங்கள் உணர்வுகளை வீரஞ்செறிந்த முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த போராட்டச் செய்திகள் ஆங்கில ஊடகங்கள் மற்றும் தமிழக பார்பன ஊடகங்களில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.

இந்தப் போராட்டங்களெல்லாம் மக்களிடம் அரசியல் ஆதரவற்ற 2% பெயர்ப்பலகை அமைப்புகள் நடத்தி வருவதாக துக்ளக் சோ ஊளையிடுகிறார். மற்றபடி மூவர் தூக்கு பேஷாக நடைபெறும், முழு தமிழகமும் அமைதியாக அதை ஆதரிக்கின்றது என்பது போல அவர் பேசுகிறார். இந்து முன்னணி இராம கோபாலன் மூவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கூடாது என்று பகிரங்கமாக பேசி வருகிறார்.

சுப்ரமணிய சாமியோ இத்தனை ஆண்டுகளாக கருணை மனு மீதான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்காக ஆகஸ்டு 15-ஆம் தேதி நீதிமன்றம் செல்ல இருந்ததாகவும், அதைக் கண்டு பயந்து மத்திய அரசு கருணை மனுவை நிராகரித்திருப்பதாக திமிரோடு பேசுகிறார். மேலும் இவாள்களின் முதல்வரான பாசிச ஜெயலலிதா தூக்குத் தண்டனையை ரத்து செய்ய தனக்கு அதிகாரமில்லை என்று கூறியிருப்பது சரிதான் என்று மெச்சுகிறார் இந்த மாமா சாமி. எனவே இனி யாரும் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய முடியாது, செப்டம்பர் 9 அன்று தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் என்றும் யாரெல்லாம் இதை எதிர்க்கிறார்களோ அவர்களெல்லாம் தேசத்துரோகிகள் என்று நரித்தனமாக, பார்ப்பன வெறியுடன் ஊளையிடுகிறார்.

மூவர் தூக்கை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் எங்கும் நடக்கும் போராட்டங்கள் குறித்து தினத்தந்தி, தினகரன் முதலான நாளேடுகள் விரிவாக செய்திகள் வெளியிடும் போது பார்ப்பன தினமலரோ அப்படி ஒரு செய்தியைக்கூட வெளியிடவில்லை. மாறாக வேலூரில் எப்படி தூக்கு போடுவார்கள், தூக்கு போடுபவர்கள் யார், அவர்கள் ஆந்திராவிலிருந்து வருகிறார்கள், அவர்களுக்கு ஒரு தூக்கிற்கு நூறு ரூபாய் சம்பளம், வேலூர் சிறையைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு, தமிகத்தில் உள்ள அகதி முகாம்களை உளவுத் துறையினர் கண்காணிக்கிறார்கள் என்று நீரோ மன்னனை போல பார்ப்பன பிடில் வாசித்து மகிழ்கிறது இந்த பார்ப்பன நரி.

காஞ்சிபுரத்தில் தீக்குளித்த செங்கொடியின் தியாகத்தை கொச்சைப்படுத்தியும் செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர். அவர் தீக்குளித்த போது யாருமே அங்கில்லையாம், ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் செங்கொடிக்கு எழுதப் படிக்கத் தெரியாதாம், அதனால் அவர் எழுதிய அந்தக் கடிதம் போலியானது என்றும் இதை போலீசாரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் விசத்தை கொண்டாட்டத்துடன் கக்குகிறது பார்ப்பன தினமலர்.

போராட்டச் செய்திகளை அதிகம் வெளியிட்டால் பத்திரிகை அதிகம் விற்கும் என்ற சந்தை இலாபத்தை விட பார்ப்பன மேலாதிக்கத்தை முன்வைத்தே தினமலர் எழுதுகிறது. காலணாவுக்கு தேறாத அண்ணா ஹசாரே போங்காட்டங்களை பக்கத்திற்கு பக்கம் பீத்தும் இந்த் தினமலர் செங்கொடியின் தியாகத்தை எள்ளி நகையாட வேண்டுமென்றால் எத்தனை வன்மம் வேண்டும்?

இதற்கு மேல் தங்கபாலு, இளங்கோவன் போன்ற பீஸ் போன பல்புகளும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்று அவ்வப்போது கத்தி வருகின்றன. அண்ணா ஹசாரேவின் இத்துப் போன் போராட்டங்களையே மாபெரும் சுதந்திரப் போராட்டமாக சித்தரித்து உருவாக்கிய ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் தமிழக மக்களின் போராட்டங்களை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கின்றன. இது குறித்து இவர்கள் எப்போதாவது செய்தி ஒளிபரப்பினால் அதற்கு தமிழகம் சார்பில் பேசுபவர்களாக சு.சாமியும், சோவுமே விகாரமாகத் தோன்றுகிறார்கள்.

பா.ஜ.க கும்பலும் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்றுதான் எப்போதும் வலியுறுத்தி வருகிறார்கள். அதில் மூவர் தூக்கை விட அப்சல் குரு என்ற காஷ்மீரத்து அப்பாவியை தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம்.

ஆக ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பார்ப்பனக் கூட்டம் தனது முகத்தை ஒளித்து வைக்காமல் பச்சையாகவே இந்தப் பிரச்சினையில் காட்டிக் கொள்கிறது. தனக்கு அதிகாரமில்லை என்று ஜெயா கூறிவிட, அதற்குப் பின்பாட்டு பாடும் இந்தப் பார்ப்பனக் கூட்டம் கூடவே இனி யாரும் மரண தண்டனையை தடுத்து நிறுத்த முடியாது என்று கொக்கரிக்கிறது.

தற்போது மூவர் தூக்கு உயர்நீதிமன்றத்தால் எட்டு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கூட இந்தக்கூட்டத்திற்கு தாங்க முடியாததாக இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் இப்படி ஒரு இடைக்காலத்தடை கொடுத்திருப்பது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று சோ கூறுகிறார். கூடவே ஜெயா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் கூட தீர்ப்பை மாற்றும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்று மகிழ்கிறார். எப்படியும் தூக்கு நிறைவேற்றப்படும் என்பதுதான் இவர் மட்டுமல்ல, காங்கிரசு, பா.ஜ.க, சு.சாமி, தினமலர் கூட்டத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகார, அரசு, ஊடக, முதலாளிகளது பலத்தில் காலத்தை ஓட்டும் இந்த பார்ப்பன பாசிஸ்டுக் கூட்டம் அந்த தைரியத்தில்தான் இப்படி பேச முடிகிறது. ஆனாலும் போராடும் தமிழக மக்கள் இந்தக் கூட்டத்தின் எண்ணத்திற்குக்கு வேட்டு வைக்கும் வண்ணம் தமது கோரிக்கையில் வெற்றி பெறுவார்கள். கூடவே இந்த பார்ப்பன பாசிஸ்டுகளுக்கும் ஆப்பு வைப்பார்கள்.

மூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது!

28

மூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது! -

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அநீதியாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் வழக்கில் ஆஜராக வந்திருந்தனர். மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் வந்திருந்தனர். மற்றும் வைகோ, பேரறிவாளன் பெற்றோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அரசியல் ஆர்வலர்களும், தோழர்களும் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இடைக்காலத் தடை உத்திரவு வந்ததும் நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் உற்சாகத்தை முழக்கங்களால் வெளிப்படுத்தினர்.

இதுவே இறுதி வெற்றியல்ல என்றாலும் முக்கியமான வெற்றிதான். ஏனெனில் நீதிமன்றங்களும், நீதிபதிகளும் எப்போதும் சட்டப்படி மட்டும் தீர்ப்புகள் வழங்குவதில்லை. சட்டங்களுக்கான விளக்கங்களே ஆளும் வர்க்கங்களுக்கேற்ப மாற்றி மாற்றி அளிக்கப்படும். இந்த வழக்கில் கூட இது ஒரு முக்கியமான அரசியல் ரீதியான வழக்கு, இந்திய இறையாண்மைக்கு சவால் விட்டிருக்கும் வழக்கு என்று கூட சொல்லி இந்த விசாரணை மனுக்களை நிராகரித்திருக்கலம். அப்படி செய்திருந்தால் அதுவும் சட்டப்படி சரிதான் என்று நீதிபதிகள் பொழிப்புரை அளித்து நியாயப்படுத்தலாம்.

எனில் இப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏன் இத்தகைய தீர்ப்பை வழங்க வேண்டும்? இதற்கு ஒரே நியாயமான பதில் தமிழக மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்கள்தான். அந்தப் போராட்டங்கள் உருவாக்கிய அரசியல் மேலாண்மைதான் இத்தகைய இடைக்கால உத்திரவு வந்ததற்கு காரணம் என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ளலாம். ஆகவே இறுதி வெற்றி நமக்கு கிடைக்க வேண்டுமென்றாலும் நாம் இந்த போராட்டங்களை தொடர்வது அவசியம். பெரிய அரசியல் கட்சிகளெல்லாம் கை விரித்து விட்ட நிலையில் மாணவர்கள், இளைஞர்கள், வழக்குறைஞர்கள், பெண்கள் என தமிழக மக்கள் அனைவரும் அவர்களில் கட்சி சார்பு உள்ளவர், இல்லாதவர் அனைவரும் போராடியிருக்கின்றனர்.

ஆயினும் இந்த அரசியல் ரீதியாக திரட்டப்படாத தன்னெழுச்சியான போராட்டங்கள் திசை திரும்புவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த வகையில் சிலர் அரசியலே வேண்டாம் என்று இந்தப் போராட்டங்களை பார்க்கிறார்கள். அநேகமான தமிழின ஆர்வலர்கள் கூட இந்தப் போராட்டங்கள் எதுவும் தீவிரமாக நடக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்தனர். ஆனால் அந்த சமரசத்தை அவர்களது அணிகளே ஏற்கவில்லை. கோவையில் நடந்த ரயில் மறியல், மத்திய அரசு அலுவலங்கள் முற்றுகை என்று போர்க்குணமிக்க முறையில் நடந்த போராட்டத்தை அதற்கு சான்றாக கூறலாம்.

இந்தப் போராட்டத்தின் வீச்சால்தான் இன்று சட்டசபையில் ஜெயலலிதா சிறப்புத் தீர்மானம் ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறார். நேற்று வரை எனக்கு அதிகாரமில்லை என்று துண்டித்துக் கொண்டு பட்டும்படாமலும் பேசியவர் இன்று மாற்றி பேசுவது ஏன்? அதிலும் கூட ஜெயலலிதா உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதன்படி தமிழக மக்களின் உணர்வை கருத்தில் கொண்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைப்பதாக கூறியிருக்கிறார். இதன்படி இந்த முடிவு அவரது விருப்பத்தின்பாற்பட்டதல்ல. தமிழக மக்கள் ஏற்படுத்தியிருக்கும் நிர்ப்பந்தம். அதுவும் மக்கள் போராட்டங்களை தடுத்து நிறுத்த முடியாத போலீசு அதிகாரிகளின் கருத்தாகக் கூட இருக்கலாம். பாசிச ஜெயாவின் ஆட்சி என்பது அதிகார வர்க்கம், போலீசின் ஆட்சிதானே?

ஏற்கனவே ஈழத்தாய், கருணைத் தாய், சமூக நீதிகாத்த வீராங்கனை என்ற பட்டங்களோடு இனி மூவரைக் காத்த தாய் என்ற அருவருப்பான பட்டமும் கூட கிடைக்கலாம். ஆனால் ஜெயலிலிதா அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதால் எந்தப் பலனும் இல்லை என்று சோ, சு.சுவாமி, பா.ஜ.க , காங்கிரசு கும்பல்கள் கூறியிருக்கின்றது. அதாவது குடியரசுத் தலைவரின் முடிவை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள். தற்போது உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்காலத் தடையைக் கூட இவர்கள் கசப்பாக விழுங்க முடியாமல் திணறுகிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்றம் இப்படி ஒரு தடை கொடுக்கும் என்பதை நான் நம்பவில்லை, ஆச்சிரியமாக இருக்கிறது என்கிறார் சோ. அவரும் கூட சட்டங்களை கரைத்துக் குடித்தவர்தானே. அவருக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றால் அது சட்டம், வழக்கறிஞர்களின் திறமை மட்டுமல்ல. ஏற்கனவே கூறியது போல இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. நீதிமன்றத்திற்கே கூட ஒரு அரசியல் அழுத்தத்தை கொடுத்ததற்காக கிடைத்த வெற்றி.

எனினும் பார்ப்பனக் கும்பல், காங்கிரசு கும்பல், பா.ஜ.க கும்பல் மூன்றுமே இத்தீர்ப்பை ஏற்கவில்லை என்பதோடு இறுதியில் மூவரும் தூக்கில்போடப்படுவார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள். இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு கொண்ட இரு கட்சி தலைவர்களும் இப்படித்தான் கூறியிருக்கிறார்கள்.

மறுபுறம் பாசிச ஜெயாவின் மீதான பிரமைகளை வளர்த்துக் கொண்டு தமிழினி ஆர்வலர்கள் சட்ட வாதத்தையும், சமரசத்தையுமே முன்வைத்து பேசுவார்கள். ஆனால் இவை நமது இறுதி வெற்றிக்கு பயன்தராது.

ஆகவே இறுதி வெற்றி பெறவேண்டுமானால் மக்கள் அரங்கிலும், அரசியல் அரங்கிலும் போராட்டங்கள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற வேண்டும். அதை எள்ளி நகையாடும் அரசியல் அற்ற கோமான்களின் கையில் இந்தப் போராட்டம் சிக்கிவிடக்கூடாது. தற்போதைய நிலைமை அத்தகைய அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம். தற்போது தமிழக அளவில் நிர்ப்பந்தம் ஏற்படுத்தியிருக்கும் இந்தப் போராட்டங்கள் இனி மத்திய அரசை நிர்ப்ந்திக்கும் வண்ணம் வளர வேண்டும்.

எனவே இந்த இடைக்கால வெற்றிகளின்பால் நாம் அதிகம் மகிழாமல் இறுதி வெற்றி கிடைக்கும் வரை போர்க்குணமிக்க போராட்டங்களை தொடருவோம். மூவர் மீதான தூக்கை ரத்து செய்வோம்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

மூவர் தூக்கை ரத்து செய்! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்!!

பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஈழம் மீதான போர்க்குற்றம் புரிந்த காங்கிரசு அரசை மக்களிடம் அம்பலப்படுத்தியும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகள் தமிழகம் முழுவதும் மக்களிடையே பிரச்சாரம் செய்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் போராடி வருகின்றன. அவற்றின் சில போராட்டக் காட்சிகளை இங்கே பதிவு செய்கிறோம்.

 

விழுப்புரம்:

விழுப்புரத்தில் வி.வி.மு, பு.மா.இ.மு சார்பாக 150 பேருக்கும் மேற்பட்டோர் நடத்திய ஆர்ப்பாட்டம் நகர மக்களிடம் இப்பிரச்சாரத்தை வீச்சாகக் கொண்டு சென்றது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இதை ஒட்டி மூன்று நாட்களாக தஞ்சை வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

விருத்தாசலம்:

விருத்தாசலம் திரு. டி.காளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லரியில் மாணவர்களை திரட்டி சாலை மறியல் போராட்டமும் ஊர்வலமும் மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தால் நடத்தப்பட்டது. முதல் நாள் விடுதியில் சென்று பகத் சிங் பற்றி விளக்கி பேசப்பட்டது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் தூக்கில் தொங்காமல் இருக்க வேண்டுமென்றால் அது மாணவர்களால்தான் முடியுமென்று பேசியதை புரிந்து  கொண்ட மாணவர்கள் முழுமனதுடன் போராடினார்கள்.

ஓசூர்:

21- ஆண்டுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகியோர் சிறைதண்டனையும் சொல்லமுடியாத கொடுமைகளையும் அனுபவித்துள்ளனர். இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கிய பின்னரும் மரண தண்டனை என்பது என்னவகை நீதி?  என்ற  கேள்வியின் அடிப்படையில் ஓசூரில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியுடன் இணைந்து, மாவட்டத் தலைநகரமான கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில், மாலை 5.30 மணியளவில் செங்கொடிப் பதாகையுடன், குழந்தைகள், பெண்கள், பெரியவர்களுமாக ஒன்று திரண்டு விண்ணதிரும் முழக்கங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.  இவ்வார்ப்பாட்டத்திற்கு  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமைத்தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர் தோழர் பரசுராமனும், விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர்  சரவணனும்  எழுச்சிகர கண்டன உரையாற்றினர். இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினார். திரளான மக்கள் ஆதரவளித்தனர்.

மதுரை:

மதுரை, 27 ஆகஸ்ட் தலைமை தபால் நிலையம் முன்பு  காலையில்  ம.க.இ.க., பு.ஜ.தொ.மு, வி.வி.மு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது தோழர் மருது தலைமை தாங்கினார். உசிலை விவிமு தோழர்,குருசாமி, மகஇக மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் ஆகியோர் உரையாற்றினர்.

திருச்சி:

இந்திய அரசே! பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்! அனைவரையும் விடுதலை செய்! என்ற தலைப்பில் 27.8.2011 இன்று காலை திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பிரசுரம் நூற்றுக்கணக்கான சுவரொட்டி என தயாரித்து விரிவாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

கருணை அடிப்படையில் தூக்கு தண்டனனையை ரத்து செய்ய கோரும் தமிழின ஆர்வலர்கள் மத்தியில், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை என்பதே சட்ட விரோதம் என்றும் அடித்து துன்புறுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்டு, 21 ஆண்டுகள் சிறையில் தள்ளி அதன் பின் தூக்கு தண்டனை அறிவித்து இருப்பது அயோக்கியத்தனமானது என்பதை விளக்கியும் ராஜீவை கொன்ற கொலையாளிகள் என காங்கிரசு பேடிகள் கூக்குரல் இடுவதை ஒரு வாததிற்கு உண்மையென்றே எடுத்துக் கொண்டாலும் அது காங்கிரசு, ராஜீவ் கும்பலின் குற்ற செயலுக்கான எதிர்வினையே என்பதை விளக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் ம.க.இ.க.தோழர்கள், பு.மா.இ.மு.அமைப்பை சேர்ந்த மாணவ-மாணவிகள்,பெண்கள் விடுதலை முன்னணியினர், பு.ஜ.தொ.மு.வை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள், தரைக்கடை வியாபாரிகள், பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் தோழர்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

உடுமலை:

உடுமலை பகுதியில் தூக்கு தண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு சார்பில் தோழர் காஞ்சனா தலைமையில் ஆர்பாட்டம்  நடைபெற்ற்து. இதை ஒட்டி பகுதி முழுவதும் வீச்சான பிரச்சாரம் நடத்தப்பட்டது.

கோவை:

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து  செய் அனைவரையும் விடுதலை செய் என்ற முழக்கத்துடன்  கோவை  தமிழ்நாடு  உணவகம் முன்பு ம.க.இ.க,  மற்றும் பு.ஜ.தொ.மு சார்பில் ஆர்ப்பாட்டம் 27 -8 -2011 அன்று  நடந்தது. தோழர் விளவை ராமசாமி தலைமை வகிக்க தோழர் மணிவண்ணன் உரையாற்றினார் .  ஆர்ப்பாட்டத்தில்  தடா எனும் கொடிய சட்டத்தின் கீழ் சித்திரவதை செய்து பேற்ற வாக்குமூலத்தை வைத்து தூக்கு தண்டனை அளித்து 21 ஆண்டுகள் சிறை தண்டனை அதுவும் போதாதென்று மரண தண்டனையா ?   அமைதிப்படை முதல் முள்ளிவாய்க்கால் வரை பல்லாயிரம் ஈழ தமிழர்களை  படுகொலை செய்த காங்கிரஸ் போர்க்குற்றவளிகளுக்கு என்ன தண்டனை என்று எழுப்பப்பட்ட வினாக்கள் மக்கள் மத்தியல் நல்ல வரவேற்ப்பை தந்தது.

கோவை ம.உ.பா.மை:

ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி. ராஜீவ் கொலைவழக்கின் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு நகல் எரிப்புப்போராட்டம். கோவை காந்திபுரம் நகரப்பேருந்து நிலைய வாயில் முன்பு 29 8 2011 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தால் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் கோவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் T வெங்கடேசன் மாவட்ட தலைவர் தோழர் ராஜன், பொருளாளர் தோழர் அபுதாகிர் மற்றும் செயற்குழு உறுப்பினர் தோழர் ஹைதர் கலந்து கொண்டு கைதாகினர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் அனைத்து சாதி அர்ச்சக மாணவர் சங்கம், மற்றும் மனித உரிமைப்பாதுகாப்பு மையம் சார்பில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை:

சென்னையில் பனகல் மாளிகை அருகே ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விண்ணதிரும் முழக்கங்களுடனும் செங்கொடிகள், பதாகைகள், முழக்கத்தட்டிகளுடனும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் கணிசமான அளவில் பெண்களும், குழந்தைகளும் உண்டு.

வீடியோ:

ம.க.இ.க மாநில இணைச் செயலாளார் தோழர் காளியப்பன் மதுரையில் நடந்த புதிய கலாச்சாரம் இதழ் வாசகர் வட்டத்தின் கூட்டத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் மீதான தூக்குத்தண்டனையை எதிர்த்து பேசிய பேச்சின் ஒரு பகுதி

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

கருணாநிதி அவர்களே, நீங்கள் வாய் திறக்கவில்லை என்று யார் அழுதார்?

24

கருணாநிதி அவர்களே, நீங்கள் வாய் திறக்கவில்லை என்று யார் அழுதார்?

மூவர் மீதான தூக்குத்தண்டனையை ரத்து செய்யுமாறு போர்க்குணமிக்க போராட்டங்களை தமிழக மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால் இந்த போராட்ட உணர்விற்கு பொருத்தமில்லாத கோழைகளாக, துரோகிகளாக, காட்டிக் கொடுப்பவர்களாகத்தான் பெரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இருக்கின்றனர்.

சட்டமன்றத்தில் தூக்குதண்டனையை ரத்து செய்வதற்கு தனக்கு அதிகாரமில்லை என்று பாசிச ஜெயா கூறியிருப்பதும், அதில் கருணாநிதி இரட்டை வேடம் ஆடுவதாக சொல்லியிருப்பதும் நீங்கள் அறிந்ததே. உள்ளூர தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஆசை கொண்டிருக்கும் ஜெயலலிதா ஒரு புறம் என்றால் மறுபுறம் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் அரசியல் நியாயத்தை தூக்கிலேற்றுகிறார் கருணாநிதி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“மனித உரிமைக்கும், மனிதாபிமானத்துக்கும் எதிரான தூக்கு தண்டனை தேவையில்லை. அதனை ரத்து செய்துவிடலாம் என சொல்லாத நாடுகளே இல்லை என கூறிவிடலாம்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கைதி தமது வாழ்நாள் முழுவதும் அந்த குற்றத்தை எண்ணி வருந்துவதைவிட தூக்கு தண்டனையால் பெரிய பயன் விளைந்துவிடப் போவதில்லை. நம் உள்ளத்தை உருக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள, மூன்று தமிழ் வாலிபர்களின் உயிர் ஊசலாடுவதை தடுத்து நிறுத்தி உதவிடும் பணி நம் கண் முன் பேருரு எடுத்திருக்கிறது.

ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தால் கூட அவர்களை மன்னித்திருப்பார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரையும் மரணத்தில் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

தூக்கு மேடையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அதன் பிறகு எத்தகைய தூய வாழ்க்கையை தொடருகிறார்கள் என்பதை அறிந்தவன் நான். தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.”

கருணாநிதி அறிக்கையின் பின்னே பல மறைபொருள் விசமத்தனங்கள் மறைந்திருக்கின்றன.

முதலில் அவர் ஆட்சியில் இருந்த போது 2000ஆம் ஆண்டு கருணை மனுவை நிராகரிக்குமாறு ஆளுநருக்கு ஆலோசனை கூறியது அவர்தான். அப்போது இந்த அறிக்கை வாசகங்கள் அவருக்கு நினைவில் வரவில்லை போலும். அப்போது கருணாநிதி ஏன் அப்படிச் செய்தார்? உண்மையிலேயே அவருக்குத் தமிழுணவர்வு இல்லையா? அப்படி இல்லை என்று அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள்.

ஜெயலலிதா, சோ, சுப்ரமணிய சாமி, தினமலர், இந்து முதலான பார்ப்பனக் கும்பலுக்கு பயந்து கொண்டுதான் கருணாநிதி அப்படிச் செய்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஏற்கனவே இந்தக்கும்பலின் சதியால் ஆட்சியிழந்த அனுபவம் அவருக்குண்டு. அதுவும் கூட அவர் அக்கும்பலை எதிர்த்து நடந்ததல்ல. என்றுமே கருணாநிதியை பார்ப்பனக் கும்பல் ஏற்றுக் கொண்டவதில்லை. ஆனால் கருணாநிதிக்கு அத்தகைய ஜென்ம பகை அந்தக் கும்பலோடு கிடையாது. தன்னை ஏன் அவர்கள் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி அவருக்கு இப்போதும் உண்டு.

கொள்கையை விட தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதுதான் முக்கியம் என்ற வகையிலும் கருணாநிதி அப்படி ஒரு முடிவை எடுத்து கருணை மனு நிராகரிக்க காரணமாக இருந்திருக்கிறார். இது திராவிட இயக்கத்தின் பிழைப்புவாதப் பாரம்பரியம் தந்திருக்கும் மரபுச் சொத்து.

சரி, இப்போது ஆட்சியில் இல்லையே, தற்போதாவது கொள்கையை வெளிப்படையாக சொல்லி மரண தண்டனையை ரத்து செய்யக் கோரலாமே? யார் தடுத்தது? அதிலும் பிரச்சினை இருக்கிறது. காங்கிரசு கூட்டணி அரசின் அமைச்சரவையில் பங்கேற்றிருக்கும் கருணாநிதி, 2ஜி ஊழலில் செருப்படி பட்ட பிறகும், கனிமொழி, ராஜா சிறையில் நீடித்திருந்தாலும் காங்கிரசு அரசை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஜெயா அரசின் கைது நடவடிக்கைகளால் கட்சியே கலகலத்துப் போயிருக்கும் நிலையில் காங்கிரசின் தயவு என்பது கொள்கையை விட மதிப்பு வாய்ந்த விசயம்.

ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தாலும் அவர் தூக்குத் தண்டனையை விரும்பியிருக்க மாட்டார் என்று சோனியா மனக் குளிர உளற வேண்டிய அவசியம் என்ன? இதே கருணாநிதிதானே கொலைகார அமைதிப்படையை வரவேற்க செல்லமாட்டேன் என்று செய்து காட்டியவர்? அந்த அமைதிப்படையை அனுப்பி கொலைக்கணக்கை ஆரம்பித்தவர் அந்த ராஜீவ்தானே? அந்த வகையில் போர்க்குற்றவாளி என்றாலும், போர்க்குற்றத்திற்கு தண்டனை என்ற முறையிலும் தண்டிக்கப்பட வேண்டியவர் ராஜீவ் காந்திதானே?

சரி நேரடியாக ராஜீவ் காந்தி பெயரைச் சொல்லாமலே அவரது  கொலை என்பது அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கான எதிர்வினை என்றாவது சொல்லலாமே? அதுவும் கடினம் என்றால் இருதரப்பிலும் தவறுகள் நடந்திருக்கின்றன, அதை மறப்போம் என்றாவது சொல்லலாமே? இத்தனை சந்து பொந்து இருந்தும் அதையெல்லாம் விடுத்து இப்படி அப்பட்டமாக தூக்கு தண்டனை பெற்றிருக்கும் அப்பாவிகளை ஏன் இழிவு படுத்த வேண்டும்?

பாசிச ஜெயாவை எதிர்ப்பதற்குத்தான் துப்பில்லை என்றால், செத்துப் போன ராஜிவ் காந்தி ஆவிக்காக இப்படியா பயப்பட வேண்டும்? ஈழத்தின் வில்லி ஜெயாவிடமே தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோருவதுதான் தமிழினித் தலைவரின் இத்தனை ஆண்டு அரசியல் சாதனையா? அதனால்தான் கருணாநிதியின் பித்தலாட்டம் என்று பாசிச ஜெயா பிட்டு பிட்டு வைக்கிறார். அதற்கெல்லாம் கருணாநிதி பதில் சொல்ல முடியுமா என்ன?

கருணாநிதி அவர்களே, நீங்கள் மூவர் தூக்கை ரத்து செய்ய வேண்டுமென்றால் சற்று அமைதியாக இருங்கள். நான் வடிப்பது முதலைக் கண்ணீர்தான் என்று அந்த அரசியல் நியாயத்தை இழிவுபடுத்தாமலாவது இருங்கள். அதுவே நீங்கள் தமிழ் சமூகத்திற்கு செய்யும் மகத்தான தொண்டாக இருக்கட்டும். மேலும் உங்கள் வாரிசுகள் சிலர் சிறையில் இருக்க, அவர்கள் ‘சம்பாதித்த’ சொத்துக்களை காப்பாற்றும் அவஸ்தையில் சிறை செல்லாத வாரிசுகள் இருக்க, நீங்கள் வாரிசுகளை காப்பாற்றும் அரசியலை மட்டும் கவனியுங்கள். தூக்குத் தண்டனை ரத்து குறித்து தமிழக மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

மூவர் தூக்கு ரத்து: பாசிச ஜெயா மறுப்பு!

13

மூவர் தூக்கு ரத்து: பாசிச ஜெயா மறுப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம்சாட்டி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் தூக்கிலடக்கூடாது என்று தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சீமான், வைகோ, பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம் முதலான தமிழின ஆர்வலர்கள் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்காக ஜெயவிடம் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள்.

கோயம்பேட்டில் நடக்கும் வழக்கறிஞர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வருகை தரும் தலைவர்களும், திரைத்துறையினரும் கூட இப்படித்தான் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்து பேசி வருகிறார்கள். மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் மூவர் தூக்கை ரத்து செய்ய போராடுவதற்கு பதில் இப்படி ஜெயலலிதாவிடம் விசேடமாக கோரிக்கை வைப்பது சரியா? கேட்டால் இது மூவரது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை, இதில் நமது மான அவமானத்தை பார்க்க்க் கூடாது என்றும் நியாயப்படுத்துகிறார்கள்.

மூவரையும் தூக்கில் போடவேண்டுமென்று எப்போதும் பேசி வரும் ஜெயாவிடம் எதை எதிர்பார்த்து இந்தக் கோரிக்கை? “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று திமிராக பேசிய இந்த நரி எப்படி தீடீரென்று பரியாக முடியும்?

தற்போது இந்தப் பிரச்சினை தொடர்பாக ஜெயாவே தனது முகம் இதுதான் என்று காட்டியிருக்கிறார். தமிழின ஆர்வலர்கள் வெட்கப்படாமல் அதை பார்ப்பார்களா?

மூவர் தூக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் பாசிச ஜெயா வெளியிட்ட அறிவிப்பு: (நன்றி: தினமணி)

“1991 ஆம் ஆண்டு, மே மாதம் 21 ஆம் நாள், முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது படுகொலை செய்யப்பட்டார் என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.  இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  அதனை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று மேல் முறையீடு செய்ததில், உச்ச நீதிமன்றம் நளினி, ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு, ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.  மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. எஞ்சிய 19 பேரை விடுதலை செய்தது.  உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். இதனை 8.10.1999 அன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.

17.10.1999 அன்று மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள்.  27.10.1999 அன்று மேதகு தமிழக ஆளுநர் இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்து ஆணையிட்டார்.

தூக்கு தண்டனை கைதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை  உயர்  நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த மேதகு ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது.

இந்தப் பொருள் குறித்து 19.4.2000 அன்று அன்றைய முதலமைச்சர்  கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:

தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகி விடும் என்று முதலமைச்சர் அவர்கள் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் அவர்கள் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார்.  அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.  இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட கடிதத்தின்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.  இதன் மீது மத்திய அரசின் உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்து, இதனை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தெரிவித்து உள்ளது. இந்தக் கடிதத்தின் விவரம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தூக்கு தண்டனை விதிக்கப் பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எனக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. மேலும் பேரறிவாளனின் தாய் திருமதி அற்புதம் அம்மாள், எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது மகனை விடுவிக்குமாறு வேண்டி உள்ளார்.  தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பேரறிவாளன் உள்ளிட்ட  மூன்று நபர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய என்னிடம் கோருவதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றி உள்ளதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் திரு பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார். மேலும் சிலர் இது பற்றி கடிதங்கள் எழுதி உள்ளனர்.

இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரை மரண தண்டனையிலிருந்து முதல்வராகிய நான் காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.  ஆனால் 2000-ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த இதே கருணாநிதி தனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்களையும் நிராகரிக்கலாம் என்றும், மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.  அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் இந்தப் பரிந்துரையை அன்றைய ஆளுநரும் ஏற்றுக் கொண்டார்.

இவ்வாறு பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து விட்டு, செய்வதையெல்லாம் செய்து விட்டு, இன்று  ஒன்றும் தெரியாதது போல், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார் என்றால், இது இரட்டை வேடம் அல்லாமல், பித்தலாட்டம் அல்லாமல், கபட நாடகம் அல்லாமல், வேறு என்ன என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா?  அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதலமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.

எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை எனக் கருதுகிறேன்.

உச்ச  நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநரோ ஃஅல்லது குடியரசுத் தலைவரோ தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மன்னிப்பு அளிக்க முடியும்.  இவர்களுக்கு ஆளுநர் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கருதப்பட்டிருந்தால் 2000-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தான் அதற்கான முடிவு எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும்.   அமைச்சரவையின் அறிவுரைப் படி ஆளுநர் அவர்களால் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவர் அவர்களாலும் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ள இந்த நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ எந்த வித அதிகாரமும் தமிழக முதலமைச்சராகிய எனக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  குடியரசுத் தலைவர் அவர்களால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு கோர முடியாது என  1991 ஆம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் பொருத்தமான தன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலித்த மத்திய அரசு, மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)-ன்படி கட்டளையிடுகிறது.

இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்கு தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்த நடவடிக்கையை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார்.

எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்.  இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரசாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

குடியரசுத்  தலைவர் அவர்களால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.  உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.”

இதுதான் ஈழத்தாயின் கருணை கொப்பளிக்கும் அறிக்கை!

தனக்கு அதிகாரமில்லை என்பதை சட்டபூர்வமாக மெனக்கெட்டு சொல்லியிருக்கிறார். அதிலும் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்ட நிலையில், புதிய சூழ்நிலை, ஆதாரங்கள் இருப்பின் அதை மறு ஆய்வுக்குட்படுத்துமாறு சம்பந்தப்ட்டவர்களோ, வேறு யாரோ குடியரசுத்தலைவரிடம் கோரலாம் என்பதையும் கூறியிருக்கிறார். அந்த வேறு யாரோவில் ஏன் புரட்சித் தலைவி இல்லை? ஏன் தமிழக அரசு இல்லை?

கருணாநிதி அமைச்சரவை கருணை மனைவை நிராகரிக்குமாறு ஆளுநருக்கு ஆலோசனை கூறியது நிஜம்தான். அதனால் இன்று தூக்குத் தண்டனையை நிறுத்துமாறு கருணாநிதி கோருவது பித்தலாட்டம் என்பதையும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் ஈழப்பிரச்சினையில் கருணாநிதியின் துரோகத்தை ‘புரிந்து’ கொண்டு அவரை எதிர்த்தவர்கள்தானே வைகோவும், சீமானும், பெரியார் தி.கவும்? அதனால்தானே ஈழத்தின் எதிரி ஜெயாவை அவர்கள் தேர்தலில் ஆதரிக்கவும் செய்தார்கள். அந்த அடிப்படையில்தானே ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கிறார்கள்? அதை ஏற்பதில் என்ன பிரச்சினை?

இந்த நெடிய அறிக்கையில் முதலமைச்சரான தனக்கு அதிகாரம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் ஜெயலலிதா. ஆனால் குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்து விட்ட நிலையிலும் தூக்குத் தண்டனையை ரத்து செய்யலாம் என்பதை சிலர் கூறுகிறார்கள். அதற்கு நம்பூதிரிபாடு, சி.என்.அண்ணாத்துரை போன்றோர் முதலமைச்சராக இருந்த போது நடந்த வரலாற்றினையும் கூறுகிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.

தனக்கு அதிகாரமில்லை என்பதை இப்படி மாய்ந்து மாய்ந்து சொல்லும் பாசிச ஜெயலலிதா மூவர் தூக்கிலடப்படுவதும் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூட ஏன் சொல்லவில்லை? தனக்கு அதிகாரமில்லை என்றாலும் மூவர் தூக்கு ரத்து செய்யப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஏன் கூறவில்லை?

இல்லை குடியரசுத் தலைவருக்கு தமிழக போராட்ட நிலைவரங்களை அறிக்கை மூலம் தெரிவித்து அவரது முடிவை மறு ஆய்வு செய்யுமாறு ஏன் கோரவில்லை? இதற்கு கூட அதிகாரமில்லையா, இல்லை மனமில்லையா? காவிரிப் பிரச்சினையில் கூட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை இன்று வரை கருநாடக அரசு அமல்படுத்த மறுக்கிறது. இதினாலொன்றும் அரசியல் சட்டப்பிரச்சினைகள் வந்துவிடவில்லை. அதே போல மூவரை தூக்கில் போட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியாது என்றும் அதனால் மூவர் தூக்கை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கலாமே?

கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காகவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ததும், அதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து உச்சநீதிமன்றத்தில் பிரபலமான வழக்கறிஞர்களை வைத்து வாதடியதாகட்டும் அந்த ஈடுபாடு இந்த மூவர் மீதான உயிர் குறித்து ஏன் இல்லை? புதிய சட்டசபை அலுவலகத்தை மருத்துவமனையாக்க போகிறேன் என்று மக்கள் பணத்தோடு விளையாடும் ஜெயலலிதா மூன்று பேரின் உயிர் குறித்தும் அதேமாதிரிதான் விளையாடுகிறார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

மேலும் மூவர் தூக்கை ரத்து செய்யுமாறு வந்த கோரிக்கைகளை அவர் பத்திரிகைகள் மூலம்தான் அறிந்து கொண்டாராம். அன்றாடம் பல்வேறு ஊர்களில், கல்லூரிகளில் நடக்கும் போராட்டங்களும், ரயில் மறியலும் குறித்து உளவுத் துறை போலீசு அவருக்கு சேதி சொல்லவில்லையா?

மூவரையும் தூக்கில் போட வேண்டுமென்று முந்தாநாள் வரை நரம்பு புடைக்க பேசியவரிடம் ஏன்தான் இந்த தமிழின ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள் என்று தெரியவில்லை? 2000-ஆம் ஆண்டு  கருணாநிதி கூட கருணை மனுவை நிராகரிக்குமாறு சொல்தவற்கு பாசிச ஜெயாவின் மீதான பயம்தான் முதன்மைக் காரணம். அதுவே பின்னர் சீமானைக் கைது செய்வதற்கும் காரணமாக இருந்தது. பாசிச ஜெயா தலைமையிலான பார்ப்பனக் கூட்டத்திற்கு பயந்து கொண்டுதான் கருணாநிதி ஈழம் தொடர்பான விவகாரங்களில் நடந்து கொண்டார் என்பது ஊரறிந்த விசயம்.

ஆக பாசிச ஜெயா ஒரு போதும் ஈழத்திற்காகவோ, மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்காகவோ குரல் கொடுக்க மாட்டார். இனியாவது தமிழின ஆர்வலர்கள் தமது கோரிக்கைகளை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் வைத்து போராடட்டும். சொல்லப் போனால் இந்த மூவரையும் எப்படியாவது தூக்கில் போட வேண்டும் என்று குறியாக இருப்பவர்தான் இந்த பாசிச ஜெயா. நம்மைக் கொல்ல வரும் கொலைகாரனிடமே நம்மைக் கொல்ல வேண்டாமென்று மன்றாடுவது என்ன வகை அரசியல்?

இன்னும் ஆதாரம் வேண்டுமா?

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜெயலலிதா பேசியதைப் பாருங்கள்:

“ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி பொய் பார்க்கலாமா? அது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. எது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாக தேச விரோத கருத்துக்களை பேச ஆரம்பித்துவிட்டனர். POTA இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.”

– புரட்டுத் தலைவி ஜெ. ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர் 23.10.2008)

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

85

”எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம். இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?”

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
தோழர் செங்கொடி

கேட்ட செங்கொடியை உற்றுப் பார்த்தார் சந்திரசேகரன். சுருக்கமாக சேகர். செங்கொடிக்கு சித்தப்பா. குழந்தை முதல் அவர்தான் செங்கொடியை பார்த்துப் பார்த்து வளர்த்தார். 10 வயதில் தன் அப்பாவை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்து அவருக்கு சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்த அந்த விநாடி முதல், இதோ 21 வயது இளம் பெண்ணாக வளர்ந்திருக்கும் இந்த நொடி வரை, செங்கொடிக்கு எல்லாமும் சித்தப்பாதான். சகலமும் ‘மக்கள் மன்றம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்தான். செங்கொடியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் சேகருக்கு முழுமையாகத் தெரியும். அதனாலேயே செங்கொடி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார். காரணம், இதே கேள்விக்கான விடையைத் தேடிதான் அவரும் பல ஆண்டுகளாக மனதளவில் போராடிக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் கை கோர்த்த படி கலந்து கொண்டனர். இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து மூவரும் செப்டம்பர் 9-ம் தேதி அன்று தூக்கில் இடப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.

இதனை எதிர்த்துதான் அந்த மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில்தான் இருவரும் கலந்துக் கொண்டிருந்தார்கள். செங்கொடி கேட்ட கேள்விக்கு ஒருவேளை சற்றுத் தள்ளி கைகோர்த்தபடி நின்றிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி விடையளிக்கலாம் என்ற ஆர்வத்தில் சேகர் எட்டிப் பார்த்தார். முழக்கங்கள் எழுப்புவதில் மும்முரமாக இருந்த வைகோ, இவர்களை கவனிக்கவில்லை. சரி என்று சேகரும் அமைதியாகிவிட்டார்.

தோழர் செங்கொடியின் இறுதி கடிதம்
தோழர் செங்கொடியின் இறுதி கடிதம்

ஆனால், செங்கொடி அமைதியடையவில்லை என்பதும், அவருக்குள் எழுந்த கேள்விக்கான பதிலை அடுத்த இரண்டு நாட்களில் அவரே கண்டடைவார் என்பதும், தனக்கு சரியென்று பட்ட அந்த விடையை தன் உயிரைப் பணயம் வைத்து உலகுக்கு தெரிவிப்பார் என்பதும், சித்தப்பா சேகர் அறிந்திருக்கவில்லை.

சரியாக ஆகஸ்ட் 28-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்னால் செங்கொடி தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டார். துடி துடித்து இறக்கும் கடைசி நொடி வரை, ‘மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் அப்பாவிகள்… அவர்களை விடுதலை செய்…’ என்று முழக்கமிட்டபடியே உயிர் துறந்தார்.

தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.

இப்படிக்கு

தோழர் செங்கொடி

என்று அவரால் எழுதப்பட்ட கடிதம் அனைவரையும் படிக்கச் சொல்லி படபடத்துக் கொண்டிருந்தது.

ஜன் லோக்பால் மசோதா கோரி 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரே, தனது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அன்று காலை 10 மணியளவில்தான் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டிருந்தார். அதே தினத்தின் மாலையில்தான், தமிழக மக்களின் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளாத அரசை கண்டித்து செங்கொடி தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.

______________________________________

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!”இப்படி அவ செய்வானு நாங்க நினைச்சே பார்க்கலீங்க…” காஞ்சிபுர மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் கட்டடத்தை வெறித்துப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தார் சேகர். நள்ளிரவின் அடையாளம் அந்த மருத்துவமனைக்கு நூறடி தள்ளித்தான் தெரிந்ததே தவிர, பிரேத பரிசோதனை கிடங்கின் வாசல் முழுக்க உக்கிரத்தின் வெளிச்சம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

”பதினொரு வருஷங்களுக்கு முன்னாடி, இதோ இந்த ஆஸ்பத்திரி வாசல்லதான் சரஸ்வதி அழுதுகிட்டு நின்னா. தப்புத் தப்பு செங்கொடினு கூப்பிட்டாதான் அவளுக்கு பிடிக்கும். சரஸ்வதிங்கிற தன் பேரையே அவ மறந்துட்டா. காரணம், அந்தப் பேரை வைச்சது அவ அப்பா.

ஓரிக்கை கிராமத்த சேர்ந்தவங்க நாங்க. எங்கண்ணன் பேரு பரசுராமன். செங்கொடிக்கு தங்கச்சியும், தம்பியும் பொறந்ததும் அவங்கம்மா இறந்துட்டாங்க. உடனே எங்கண்ணன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டாரு. ஆனா, சும்மா சொல்லக் கூடாது, வந்த மகராசி செங்கொடியையும் அவ தம்பி, தங்கச்சியையும் தன் கொழந்தைங்க போலவே பார்த்துகிட்டா. அதனாலயே செங்கொடி அந்த மகராசியை ‘சித்தி’னு கூப்பிட மாட்டா. ‘அம்மா’னுதான் வாய் நிறைய கூப்பிடுவா.

எங்கண்ணன் கூலித் தொழிலாளிங்க. நாடாறு மாசம், காடாறு மாசம்னு கிடைச்ச வேலைய செய்துட்டு இருப்பாரு. பல நேரம் வேலையே இல்லாம சும்மாவும் இருப்பாரு. சுபாவத்துல நல்லவரு. ஆனா, அதிகம் குடிப்பாரு. அதனாலயே அப்பப்ப அவருக்கு கிறுக்கு பிடிச்சுக்கும். தன் ரெண்டாவது பொண்டாட்டிய, செங்கொடிய, அவ தம்பி, தங்கச்சிய அது மாதிரி நேரத்துல அடிப்பாரு. தன்னை அடிக்கிறத கூட அந்த மகராசி தாங்கிட்டா. ஆனா, தன்னோட கொழந்தைங்களா நினைக்கிற மூத்தா தாரத்து பசங்களை எங்கண்ணன் அடிக்கிறதை அவங்களால தாங்கிக்க முடியலை.

ஒருநாள் இத தட்டிக் கேட்டாங்க. உடனே எங்கண்ணன், அந்த மகராசி மேல கெரசின் ஊத்தி கொளுத்திட்டாரு. அதிர்ந்து போய் செங்கொடியும், அவ தங்கச்சியும் இத பார்த்துட்டு நின்னாங்க. செங்கொடி சுதாகரிக்கறதுக்குள்ள அவ தங்கச்சி, ‘அம்மா’னு கத்திகிட்டே போய் அந்த மகராசிய கட்டிப் பிடிச்சிகிட்டா. இதைப் பார்த்த செங்கொடி அழுது கூச்சல் போட்டா. அக்கம் பக்கத்துல இருந்தவங்க ஓடி வந்து நெருப்பை அணைச்சு ரெண்டு பேரையும் இதோ, இதே ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிட்டு வந்தாங்க.

கடைசில செங்கொடியோட தங்கச்சியதான் காப்பாத்த முடிஞ்சுது. ‘அம்மா’னு அவ பாசமா கூப்பிட்ட அந்த மகராசிய காப்பாத்த முடியலை. சொன்னா நம்ப மாட்டீங்க. 10 வயசு பொண்ணா, தைரியமா, செங்கொடி அவ அப்பாவ போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!‘மக்கள் மன்றம்’ அமைப்போட நான் ஆரம்பத்துலேந்தே தொடர்புல இருக்கேன். என் மூலமா செங்கொடிக்கும் அந்த மன்றத்தோட பழக்கம் உண்டு. அதனால நேரா அவ மன்றத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. நாலு வருஷம் எங்கண்ணன் வேலூர் ஜெயில்ல இருந்துட்டு திரும்பி வந்தாரு. ஆனா, செங்கொடி அவரை மன்னிக்கவும் இல்ல… ஏத்துக்கவும் இல்ல. இந்த 11 வருஷங்களா தன் அப்பாகிட்ட ஒரு வார்த்த கூட அவ பேசலைனா பார்த்துக்குங்க…

அவள நினைச்சு நான் ரொம்ப பெருமை படுவேன். ஆனா, அவ ‘அம்மா’வ நெருப்புக்கு பறிகொடுத்துட்டு எந்த இடத்துல நின்னு அழுதாளோ… அதே இடத்துல அதே மாதிரி எரிஞ்சு கரிக்கட்டையான அவள பார்த்து நான் அழுவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைங்க…” கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமாக தத்தளித்தபடி அழுத சேகர், சட்டென்று  மேற்கொண்டு பேச முடியாமல் கதற ஆரம்பித்தார்.

காவல்துறையின் சைரன் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று ஒலி எழுப்பியபடி யாராவது பிரச்னை செய்கிறார்களா என்று பார்த்துவிட்டு நகர்ந்தது. ஆங்காங்கே சிதறியிருந்த நான்கைந்து காவலர்கள் அந்த இருட்டிலும் கண்ணாடி மூடப்பட்ட வாகனத்தை பார்த்து விறைப்பாக சல்யூட் அடித்தார்கள்.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
ஆற்றாமையில் காஞ்சி மக்கள் மன்றத்தினர்

__________________________________

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
தோழர் மகேஷ்

”இருளர் சமுதாயத்துக்கு எப்படியாவது கல்வி அறிவு கொடுத்து அவங்களை முன்னேற்றணும்ங்கிறதுனுதாங்க என்னோட லட்சியம். அதுக்காகத்தான் கீழ்கதிர்பூர் கிராமத்துல ‘மக்கள் மன்ற’த்தை நடத்திகிட்டு இருக்கேன்…” நடந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகாததால், மகேஷின் (மக்கள் மன்றத்தின் அமைப்பாளர், பெண்) குரல் கம்மியிருந்தது.

”காஞ்சிபுரம் மாவட்டத்துல இருளர் இன மக்கள் அதிகம். அதுல பெரும்பாலானவங்க அவங்க குழந்தைங்களோட செங்கல் சூளைல கொத்தடிமையா இருந்தாங்க. நாங்கதான் பெரிய அளவுல போராட்டம் நடத்தி அவங்கள எல்லாம் மீட்டோம். இதுக்காக சுத்து வட்டாரத்துல இருக்கிற கிராமங்களுக்கு போய் தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம்.

அப்படித்தான் ஓரிக்கை கிராமத்துக்கு நாங்க போயிருந்தப்ப செங்கொடி எங்களுக்கு அறிமுகமானா. அப்ப அவ 5வது படிச்சுட்டு இருந்தா. ரொம்ப சூட்டிகையான பொண்ணு. அதே நேரத்துல நிறைய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பா. எல்லாமே அறிவியல் தொடர்பா இருக்கும். இந்தப் பொண்ணை நல்லா வளர்த்து ஆளாக்கணும்னு நாங்க மன்றத்துல பேசுவோம்.

இந்த நேரத்துலதான் செங்கொடியோட சித்தி இறந்து போனாங்க. அதுக்கு காரணம் அவ அப்பாங்கிறதால திரும்ப அவ தன்னோட கிராமத்துக்கு போக விரும்பலை. நேரா இங்க வந்துட்டா. எங்க அமைப்பை சேர்ந்தவங்கதான் அவள எங்க பொண்ணு மாதிரி வளர்த்தோம்.

ரொம்ப சாப்ட் டைப். அதே சமயத்துல ரிசர்வ்ட் டைப்பும் கூட. அவளுக்கு எழுத, படிக்கத் தெரியுங்கறதால எங்க கிட்ட வந்ததும் நாங்க வைச்சிருக்கிற புத்தகங்களை எடுத்து, புரியுதோ, புரியலையோ படிப்பா. சந்தேகத்தை கேப்பா. அவள தொடர்ந்து ஸ்கூலுக்கு அனுப்ப நாங்க முடிவு செஞ்சோம். ஆனா, தீர்மானமா பள்ளிக்கு போகறதை மறுத்துட்டா. இங்கேந்தே படிக்கிறேன்னு சொல்லிட்டா. வற்புறுத்தி பார்த்த நாங்க, அவ போக்குலயே விட்டுட்டோம். ஆனா, பிரைவேட்டா அவள படிக்க வைக்கிறதை மட்டும் நாங்க நிறுத்தலை.

எங்க கூடவே நாங்க கிராமங்கள்ல பிரச்சாரம் பண்ண போறப்ப வருவா. ‘நம்ம சமுதாயம் முன்னேறணும்னா நாம எல்லாம் படிக்கணும்’னு தன்னை விட வயசு குறைஞ்சவங்ககிட்ட பக்குவமா எடுத்து சொல்லுவா. வார இறுதில படிக்கிற பசங்களுக்கு நாங்க டியூஷன் மாதிரி எடுப்போம். அப்ப சொல்லிக் கொடுக்கறதுல முதல் ஆளா செங்கொடிதான் வந்து நிப்பா.

அவளுக்கு இசையில ஆர்வம் அதிகம். பறைய எடுத்து அடிக்க ஆரம்பிச்சானா, இன்னிக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்கும். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பா. எங்களுக்கே அதை பார்க்க ஆச்சரியமா இருக்கும்.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!இப்படி கலை மூலமா பிரச்சாரம் செய்யறது அவளுக்கு பிடிக்கும். அதனால மனமுவந்து அவ இதை செய்வா. ‘சென்னை சங்கமம்’ல அவளோட நிகழ்ச்சி நடந்திருக்கு. எந்நேரமும் புத்தகமும் கையுமா இருப்பா. ‘இவர்தான் லெனின்’ நூல் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். குறைஞ்சது முப்பது முறையாவது அந்த நூலை படிச்சிருப்பா. அதை மனப்பாடமா ஒப்பிப்பா. ஆனா, அர்த்தம் புரிஞ்சுதான் அவ அப்படி செய்வா.

சேகுவேரா, நெல்சன் மண்டேலா, தந்தை பெரியார், பகத்சிங் நூல்கள்னா அவளுக்கு அவ்வளவு விருப்பம். இவங்களோட புகழ்பெற்ற வாசகங்களை அப்படியே அந்தந்த நேரத்துக்கு எது சரியா இருக்குமோ அப்ப சொல்லுவா.

‘உலகத்தின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும், அந்த அநீதியை எதிர்த்து எவர் ஒருவர் போராடுகிறாரோ, அவரும் சே-வும் தோழரே…’ங்கிற சேகுவேராவோட வாசகம் செங்கொடிக்கு அவ்வளவு பிடிக்கும்.

ஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டறியே… பேசாம தபால்ல டிகிரி படி’னு சொன்னாரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’

இப்படிதான் செங்கொடி, இருந்தா… வாழ்ந்தா. இதுக்காகவே நாங்க நடத்தற அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டங்கள்லயும் கலந்துகிட்டா. பத்து நாட்கள், இருபது நாட்கள், ஏன் 60 நாட்கள் கூட இதுக்காக சிறைல எங்களோட இருந்திருக்கா. புழல், வேலூர்னு செங்கொடி பார்க்காத சிறை இல்ல.

பாரதிதாசன் பாடல்கள அவ்வளவு அழகா, உணர்வோட பாடுவா. 2009- மேக்கு பிறகு அவ அதிகம் பாடி ஆடினது, ‘களத்திலிருக்கும் அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறேன்…’, ‘இமயத்தின் சிகரத்திலே எங்கள் விடுதலையின் முழக்கங்கள்…’

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
மக்கள் மன்ற குழந்தைகளுடன்

பொதுவா நாங்க இணையத்துல வினவு, கீற்று போன்ற தளங்கள்ள சமூக நிலமைகள் சார்ந்து எழுதப்படற கட்டுரைகளோட பிரிண்ட் அவுட் எடுத்து அதை படிச்சுட்டு விவாதிப்போம். அந்த விவாதங்கள் எல்லாத்துலயும் செங்கொடி பங்கேற்பா. தவறாம தன்னோட கருத்து, விமர்சனத்தை முன் வைப்பா. ஆனா, எந்தச் சூழ்நிலைலயும் நாங்க, தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ ஆதரிச்சதில்ல. அவ்வளவு ஏன், செங்கொடி கூட தன்னோட கருத்தை முன்வைக்கும்போது இதைப் பத்தி பேசினதும் இல்ல. ஆதரிச்சதும் இல்ல.

முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு பிறகு அவ ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா. அதுக்கு பிறகு தொடர்ச்சியா ஈழம் தொடர்பா படிக்கறது, காணொளிகளை பார்க்கறதுனு இருந்தா. ராஜீவ்காந்தி கொலை வழக்குல குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தனோட கருணை மனுக்கள் ஜனாதிபதியால நிராகரிக்கப்பட்டதும் நிலை கொள்ளாம தவிச்சா. அவங்க மூணு பேரையும் எப்படியாவது காப்பாத்தணும்னு சொல்லிகிட்டே இருந்தா. அவங்களுக்காக நடந்த அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டத்துலயும் கலந்துகிட்டா.

பைக் ரேலி வேலூருக்கு போனப்ப செங்கொடியும் வந்தா. ஆனா, இயக்கம் சார்பா ஒருத்தர்தான் சிறைக்குள்ள போய் அவங்க மூணுபேரையும் பார்க்க முடியும்னு நிலை இருந்ததால என்னை உள்ள அனுப்பிட்டு அவ வேலூர் சிறைக்கு வெளிலயே காத்திருந்தா. நான் திரும்பி வந்ததும் ‘அவங்க மூணு பேரும் எப்படி இருக்காங்க… மன உறுதி எப்படி இருக்கு’னு துருவித் துருவி கேட்டா.

சென்னை கோயம்பேடுல வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருக்கறதை கேள்விப்பட்டதும் அங்க போகணும்னு துடிச்சா. ஆனா, படிக்கற பசங்களுக்கு பாடம் சொல்லித் தர வேலை இருந்ததால அவள நாளைக்கி (ஆகஸ்ட் 29, திங்கள்கிழமை) கூட்டிட்டு போறதா சொல்லியிருந்தோம்…”

அதற்கு மேல் பேச முடியாமல் பல நிமிடங்களுக்கு அழுத மகேஷ், சற்றே நிதானப்பட்டதும் தொடர்ந்தார்.

”சனிக்கிழமை அன்னிக்கி நளினி – முருகனோட மக, அரித்ராவோட குரலை டிவில கேட்டா. அதுக்கு அப்புறம் அவ தன்னோட வசத்துலயே இல்ல. ’21 வருஷங்கள்ல ஒரேயொருமுறைதான் தன் அப்பா – அம்மாவ அரித்ரா பார்த்திருக்காளா?’னு திரும்பத் திரும்ப கேட்டா.

முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தப்ப முத்துக்குமார் தன்னைத்தானே எரிச்சுகிட்டது செங்கொடி மனசுல ஆழமான தழும்பா பதிஞ்சு போச்சு. முத்துக்குமாரோட இறுதி ஊர்வலத்துல கூட எங்களோட கலந்துகிட்டா. அரித்ராவோட குரல், அவளோட தழும்பை கீறி விட்டா மாதிரி இருந்திருக்கணும். ஒரு மாதிரி மவுனமாவே இருந்தா. நாங்க அவளுக்கு உடம்புதான் சரியில்லை போலனு கோயம்பேடு உண்ணாவிரதத்துக்கு இன்னிக்கி (ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28) காலைல கிளம்பி போனோம்.

மாலை 5 மணி போல திரும்பி வந்த எங்களுக்கு செங்கோடிய காணாதது முதல்ல பெரிசா தெரியலை. ஏன்னா, அவ பக்கத்துல இருக்கிற முந்திரிதோப்புக்கு அடிக்கடி போய் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பா. அதுமாதிரி போயிருக்கா போலனு நினைச்சோம்.

ஆனா, டிவிஎஸ் 50 எக்ஸ்எல் வண்டி, வழக்கமா நிக்கிற இடத்துல இல்ல. அலுவலகத்துல இருந்த பிள்ளைகளும் செங்கொடி அக்காவ ரொம்ப நேரமா காணும்னு சொன்னாங்க. அப்படியே உடம்பெல்லாம் பதறிடுச்சு. முந்திரிதோப்புக்கு வண்டில போக மாட்டா. அதனால நாங்க எல்லாரும் நாலா பக்கமும் சிதறி செங்கொடிய தேடினோம்.

அப்பத்தான்…”

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
தோழர் செங்கொடி சடலமாக

வார்த்தைகள் தடைப்பட, குரல் மேலும் உள்ளிரங்க வெடித்து அழுதார் மகேஷ்.

அவர் விட்ட இடத்திலிருந்து சில நிமிடங்களுக்கு பிறகு மேகலா தொடர்ந்தார். ”அப்பதான் தாலுகா ஆபீஸ்ல ஒரு பொண்ணு தன்னைத்தானே எரிச்சுகிட்டதா ஃபோன் வந்தது. பதறிப் போய் ஜி.எச்.சுக்கு ஓடினோம். அது செங்கொடிதான்னு அடையாளம் தெரிஞ்சதும் அப்படியே நாங்க நொறுங்கிட்டோம்.

தாலுகா ஆபீஸ் இருக்கிற வளாகத்துலயேதான் தீயணைப்பு நிலையமும் இருக்கு. ஆனா, எங்க தன்னோட போராட்டத்தை அணைச்சுடப் போறாங்களோனு மண்ணெண்ணெய்க்கு பதிலா பெட்ரோலை செங்கொடி பயன்படுத்தியிருக்கா. இதுக்காக தாலுகா ஆபீஸ் பக்கத்துல இருக்கிற ‘வினாயகா பெட்ரோல் பங்க்’ல பாட்டில்ல வாங்கியிருக்கா.

மக்கள்கிட்டேந்துதான் பாடம் படிக்கணும்னு சொல்லிகிட்டு இருந்தவ எதனால இப்படியொரு முடிவு எடுத்தானு தெரியல…” மேகலாவாலும் அதன் பிறகு பேச முடியவில்லை. திருமாவளவன், வைகோ, கொளத்தூர் மணி… என அடுத்தடுத்து தலைவர்கள் மகேஷை பார்ப்பதற்காக வந்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த களேபரத்தில் இன்று காலை 7 மணி அளவில் கலைந்த உடைகளுடன் வந்து சேர்ந்த ஒரு பெரியவர், மருத்துவமனையின் வாசலிலேயே அமர்ந்துவிட்டதை யாரும் கவனிக்கவில்லை.

செங்கொடியின் கடிதத்தை நகலெடுத்து அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டிருந்தவர்கள், அந்தப் பெரியவரின் கரங்களிலும் ஒரு நகலை திணித்துவிட்டு சென்றார்கள். அதில் எழுதப்பட்ட வாசகங்களையே உற்றுப் பார்த்த அந்தப் பெரியவர் அழுத்தம் திருத்தமாக சொன்னார்:

”உணர்ச்சிவசப்பட்டு எதுக்காக இளைஞர்கள் இப்படியொரு காரியத்தை செய்யறாங்க? இதனால யாருக்கு லாபம்? போராடறதுக்கு இதுவா வழி? எனக்கு வயசாகிடுச்சு. இல்லைனா மக்களை திரட்டி கைல துப்பாக்கிய எடுத்திருப்பேன்…”

‘அடையாளப் போராட்டத்துக்கு பதிலா வேறு போராட்ட வழிமுறையே இல்லையா…’ என்று தன் சித்தப்பாவிடம் கேள்வி கேட்ட செங்கொடி, இந்தப் பெரியவர் சொன்ன பதிலை குறித்தும் யோசிக்க வழியின்றி சாம்பலாகிவிட்டார்.

எந்த முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை தட்டி எழுப்பியதை போல் தன் உடலும் மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படட்டும் என்று நம்பிக்கையுடன் செங்கொடியை அழுத்தம்திருத்தமாக எழுத வைத்ததோ -அந்த முத்துக்குமாரின் அப்பாதான் அந்தப் பெரியவர் என்பதை சூழ்ந்திருக்கும் தலைவர்களை கடந்து யாரால் செங்கொடியிடம் இப்போது சொல்ல முடியும்?

அரசியலற்ற அமைதியிலும், விரக்தியிலும், நம்பிக்கையின்மையிலும் மூழகடிக்கப்பட்டிருந்த தமிழகத்தை தனது தீக்குளிப்பினால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தட்டி எழுப்பினார் முத்துக்குமார். இன்றும் அதே நிலமையைக் காண்கிறோம். மூவர் தூக்கை நிறுத்தமளவு நம்பிக்கையூட்டும் போராட்டங்களும், அரசியல் முழக்கங்களும் தமிழகத்தை பற்றியிருந்தால் செங்கொடி தீக்குளிக்க நேர்ந்திருக்காது. அந்த வகையில் செங்கொடி தன் மீது ஊற்றிய பெட்ரோலுடன் இன்னும் விழித்தெழாத தமிழகத்தின் அரசியலற்ற கோழைத்தனமும் சேர்ந்திருக்கிறது.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!செங்கொடியின் உடலை வேண்டுமானால் பெட்ரோல் எரித்திருக்கலாம். ஆனால் அந்த இளம்பெண்ணின் உள்ளத்தை மொன்னையான தமிழக அரசியல் சூழல்தான் எரித்திருக்கிறது. ஆகவே இது வெறுமனே தீக்குளிப்பினால் நடந்த தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும்.

மூவர் தூக்கிற்கு காரணமான பாசிச காங்கிரசு அரசு, பாசிச ஜெயா, அநீதியான நீதிமன்றங்கள் மீதான நமது போராட்டம் மக்கள் அரங்கில் தொடரட்டும். செங்கொடி எனும் அந்த இளம்பெண்ணின் உயிரை இனி மீட்க முடியாது. ஆனால் அந்தப் பிஞ்சு உள்ளம் கவலைப்பட்ட சூழ்நிலையையாவது மாற்றுவோம்.

தோழர் செங்கொடி சென்று வாருங்கள், உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள் பலர் இங்கிருக்கிறார்கள், உயிரைக் கொடுத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற போராடுவார்கள். உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின் மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!

____________________________________________________________________

– வினவு செய்தியாளர்கள், காஞ்சிபுரத்திலிருந்து
____________________________________________________________

 வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

30
டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

தொலைக்காட்சிகளில் நாம் பார்ப்பதுதான் புரட்சி என்றால், அதுதான் சமீபத்தில் நடந்தவற்றிலேயே தர்மசங்கடமான, தெளிவற்ற புரட்சியாக இருக்க முடியும். ஜன் லோக்பால் மசோதா குறித்த எப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்குள் இப்போது எழுந்தாலும், அதற்கான விடைகள், இப்படியாகத்தான் கிடைக்கும். பெட்டிக்கு நேராக டிக் செய்து கொள்ளுங்கள், அ) வந்தே மாதரம். ஆ) பாரத் மாதாகீ ஜெய். இ) அண்ணாதான் இந்தியா, இந்தியாதான் அண்ணா. ஈ) ஜெய் ஹிந்த்.

முழுக்க முழுக்க வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு வழிமுறைகளில் போராடி வரும் மாவோயிஸ்ட்டுகளுக்கும், ஜன் லோக்பால் மசோதாவுக்கும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது – அது, இந்திய அரசியல் அமைப்பை தூக்கி எறிவது. இதற்காக ஒருதரப்பினர் கீழிருந்து மேலாக, இழப்பதற்கு ஏதுமற்ற வறியவர்களிலும் வறியவர்களான ஆதிவாசி மக்களை இராணுவமயப்டுத்தி ஆயுதமேந்தி போராடுகிறார்கள். மறுதரப்பினர் மேலிருந்து கீழாக, ரத்தம் சிந்தாத காந்திய வழியில், புதிதாக வார்தெடுத்த புனிதரின் தலைமையில், நகர்புற – முக்கியமாக மேட்டுக்குடியினரில் பெரும்பாலானவர்களை உள்ளடக்கிய படையைக் கொண்டு  போராடுகிறார்கள். (இந்த விஷயத்தில் அரசாங்கம்மும் தன்னை தூக்கியெறிவதற்கு இயன்ற அனைத்தையும் செய்து துணை நிற்கிறது)

ஏப்ரல் 2011ல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அண்ணா ஹசாரே முதல்முறையாக ஆரம்பித்த காலகட்டத்தில், அடுத்தடுத்து வெளியாகிவந்த மிகப்பெரிய ஊழல் செய்திகளால் தனது நம்பகத்தன்மை ஆட்டம் கண்டு வந்ததை உணர்ந்திருந்த இந்திய அரசாங்கம், மக்களின் அதிருப்தியை திசை திருப்ப, அண்ணாவின் குழுவை (டீம் அண்ணா) – இந்த ‘சிவில் சமூக’ குழுவால் தேர்வு செய்யப்பட்ட வணிகச் சின்னம் இது – ஊழலுக்கு எதிரான புதுச்சட்டத்தின் வரைவுக்குழுவில் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது. ஆனால், சில மாதங்களிலேயே இந்த கூட்டு வரைவுக் குழுவை கைவிட்டுவிட்டு, எவ்வகையிலும் பயனில்லாத,  ஓட்டைகள் நிரம்பிய தனது சொந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

பிறகு, ஆகஸ்ட் 16ம் தேதி காலையில், அண்ணா ஹசாரே இரண்டாவது முறையாக தனது காலவறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே, சட்டத்துக்கு புறம்பான எந்த நடவடிக்கையிலும் அவர் ஈடுபடுவதற்கு முன்னரே, கைது செய்து சிறையில் அடைத்தது. இதனையடுத்து ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்கான போராட்டம் என்பது, போராடுவதற்கான உரிமை தொடர்பான போராட்டமாகவும், ஜனநாயகத்துக்கான போராட்டமாகவும் உருமாறியது. இந்த ‘இரண்டாவது சுதந்திர போராட்டம்’ தொடங்கிய சில மணித்துளிகளில் அண்ணா விடுதலை செய்யப்பட்டார். ஆனால், தந்திரமாக சிறையை விட்டு செல்ல மறுத்த அவர், திகார் சிறைச்சாலையின் மரியாதைக்குரிய விருந்தினராக தங்கி, உண்ணாவிரதத்தை ஆரம்பித்து, பொது இடங்களில் உண்ணாவிரதம் இருப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தார். மூன்று நாட்களுக்கு மக்கள் கூட்டமும், தொலைக்காட்சிகளின் வாகனங்களும் சிறைக்கு வெளியே குழுமியிருக்க, அனைத்து தேசிய தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்புவதற்காக ஹசாரேவின் வீடியோ செய்திகளை ஏந்தியபடி அண்ணாவின் குழுவினர் உயர் பாதுகாப்பு வசதி கொண்ட அச்சிறைக்கு உள்ளும் வெளியிலுமாக மின்னலென பறந்துக் கொண்டிருந்தனர். (வேறு யாருக்கேனும் இந்த பேரின்ப வாழ்வு கிடைக்குமா?)

இதற்கிடையில், தில்லி மாநகராட்சி ஆணையத்தை சேர்ந்த 250 தொழிலாளர்களும், 15 லாரிகளும் (டிரக்குகள்), 6 கனரக மண் சீராக்கும் வாகனங்களும் கடிகாரத்துக்கு ஓய்வு தராமல் வாரயிறுதியில் நடைபெறவிருக்கும் கண்கவர் காட்சிக்காக ராம்லீலா மைதானத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தன.

இப்போது உள்ளங்கையும், உள்ளங்காலும் பரபரக்க, பக்தி முற்றிய நிலையில் அண்ணாவின் பெயரை உச்சரிக்கும் கூட்டம் குழுமியிருக்க, வானுயர்ந்த கேமராக்கள் கண்சிமிட்டியபடி படம் பிடிக்க, இந்தியாவின் விலைமதிப்பில்லாத மருத்துவர்கள் பராமரிக்க, மூன்றாவது முறையாக அண்ணா ஹசாரேவின் காலவறையற்ற உண்ணாவிரதம் தொடங்கியது. ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றே’  தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் நமக்கு சொல்கிறார்கள்.

அண்ணா ஹசாரேவின் போராட்ட வழிமுறைகள் காந்திய வழியாக இருக்கலாம், ஆனால், அவரது கோரிக்கைகள் நிச்சயம் அப்படியானதல்ல. அதிகாரத்தை ஒன்றுகுவிக்காமல் பகிர்ந்தளிக்கச் சொல்லும் காந்தியின் கருத்துகளுக்கு முரணாக ஜன் லோக்பால் மசோதா அரக்கத்தனமான, எதேச்சதிகார, ஒருமுகப்படுத்தப்பட்ட அதிகார மையத்தை கோரும் ஊழல் தடுப்பு மசோதாவாக இருக்கிறது. இதில், கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பூதாகரமான ஜனநாயகத்தை நிர்வகிக்க, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிய, காவல்துறையின் அதிகாரத்துடன் பிரதமர் முதல் நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள், அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரை குறித்தும் துப்பு துலக்கி விசாரிக்கவும், கண்காணிக்கவும், தண்டிக்கவும் அதிகாரம் உள்ளது. இதற்கென்று சொந்தமாக சிறைச்சாலைகள்தான் இருக்காது. மற்றபடி சுதந்திர நிர்வாக அமைப்பாக இயங்கி ஏற்கனவே வரைமுறையில்லாமல் ஊதிப் பெருகி, மக்களுக்கு பதில் சொல்லும் கடமையற்று இருக்கும் இப்போதைய ஊழல் அமைப்பை எதிர் கொள்ளும் இன்னொரு நிர்வாக அமைப்பாக செயல்படும். அதாவது கட்டுப்படுத்த முடியாத ஒரு விலங்காக இதுநாள்வரை இருந்த ஜனநாயகமற்ற அமைப்பு, இனி இரண்டாக பெருகியிருக்கும்.

இந்த ஜன் லோக்பால் மசோதா மூலம் ஊழல் ஒழியுமா இல்லையா என்பது ஊழலை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்தது. ஊழல் என்பது வெறும் சட்ட ரீதியான நிதி ஒழுங்கின்மை – லஞ்சம் சார்ந்ததா அல்லது வெளிப்படையாக பளிச்சென்று தெரியும் ஏற்றத் தாழ்வுமிக்க சமூகத்தில் நடைபெறும் பணப் பரிமாற்றம் வழியாக அதிகாரமானது தொடர்ந்து சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருப்பவர்களின் கரங்களில் குவிந்து வருவதை குறிக்கிறதா?

உதாரணமாக வணிக வளாகங்கள் நிரம்பிய நகரத்தில் தெருவில் கூவிக் கூவி விற்பது தடை செய்யப்பட்டுள்ளதாக கற்பனை செய்து கொள்வோம். தெருவில் கூவி விற்பவர்களின் வாடிக்கையாளர்கள் வணிக வளாகங்களில் விற்கப்படும் பொருட்களை வாங்கும் அளவுக்கு ‘தகுதி’ படைத்தவர்கள் அல்லர். எனவே அவர்களுக்கு தேவையான பொருட்களை தெருவில் விற்பவர்களிடமிருந்து அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். இந்த ‘சட்டப்புறம்பான’ வியாபாரத்துக்காக தெருவில் கூவிக் கூவி விற்பவர், நடைபாதை காவலருக்கும் நகராட்சியை சேர்ந்தவருக்கும் ஒரு தொகையை லஞ்சமாக கொடுப்பார். இது அவ்வளவு பெரிய கொடுமையா? எதிர்காலத்தில் ஜன் லோக்பாலின் பிரதிநிதிக்கும் சேர்த்து அவர் ஒரு தொகையை கொடுக்க வேண்டியிருக்குமா? அடித்தட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வுகள், அமைப்பு ரீதியாகவே உறைந்துள்ள ஏற்றத்தாழ்வுகளை களைவதில் அடங்கியிருக்கிறதா அல்லது ஏற்றத்தாழ்வுகளுக்கு கட்டுப்பட்டு இணங்கிப் போகச் செய்யும் இன்னொரு அதிகார அமைப்பை உருவாக்குவதில் இருக்கிறதா?

அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் இடம் பிடித்திருக்கும் முழக்கங்கள், சைகைகள், நடன அமைப்புகள், தேசிய வெறி, காற்றில் அழகாக அசைந்தாடும் தேசியக்கொடிகள் ஆகியவை அனைத்தும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்கள், உலககோப்பை வெற்றி ஊர்வலம், மற்றும் அணுகுண்டு சோதனை வெற்றிக் கொண்டாட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்டவை; அவற்றை நினைவுபடுத்துபவை. இவையெல்லாம் அண்ணாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கவில்லையென்றால் நாம் உண்மையான இந்தியர்கள் இல்லையென்று நம்மை நோக்கி எச்சரிக்கின்றன. நாட்டில் இதைத்தவிர வேறு எதுவும் உருப்படியான செய்தி இல்லை என்பதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன போலும்.

‘இந்த உண்ணாவிரதம்’ சர்வநிச்சயமாக மணிப்பூரில் ஒருவரை சந்தேகப்பட்டாலே இராணுவத்துக்கு அவரை கொல்ல அனுமதியளிக்கும் AFSPA   என்ற அடக்குமுறைச் சட்டத்தை திரும்ப்ப் பெற வலியுறுத்தி 10 வருடங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஜரோம் சர்மிளாவின் போராட்டத்தைப் போன்றதல்ல. (இன்றும் ஐரோம் சர்மிளாவுக்கு பலவந்தமாக உணவு செலுத்தப்படுகிறது). கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பத்தாயிரக்கணக்கில் கிராம மக்கள் தொடர்ந்து வரிசையாக நடத்தி வரும் உண்ணாவிரதம் போன்றதும் அல்ல.

(ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஆதரித்து ராம்லீலா மைதானத்தில் குழுமியிருக்கும்) ‘மக்கள்’, ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் மணிப்பூர் மக்களின் உணர்வுகளை கொண்டவர்களல்ல. ஜெகத்சிங்பூர் அல்லது கலிங்காநகர் அல்லது நியாம்கிரி அல்லது பாஸ்டர் அல்லது ஜெய்தாபூரில் ஆயுதமேந்திய காவலர்களையும், சுரங்கக் கொள்ளையர்களையும் அன்றாடம் எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் போன்றவர்களுமல்ல. போபால் விஷவாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களோ அல்லது நர்மதா அணையினால் இடம்பெயர்ந்த மக்களோ கூட அல்ல. அல்லது நொய்டாவின் விவசாயிகள் போலவோ அல்லது பூனா/அரியானா அல்லது நாட்டின் எந்தபகுதியிலாவது தங்கள் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி வரும் விவசாய மக்களும் அல்ல.

‘இந்த மக்கள்’, ரசிகர் பட்டாள மக்கள். தனது ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக்கவில்லை என்றால் உண்ணாவிரதம் இருந்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று ஒரு 74 வயது முதியவர் மிரட்டுவதை கண்குளிர பார்க்கும் கண்களுடன் வந்திருக்கும் ‘மக்கள்’. இயேசு கிறிஸ்து, அப்பத்தையும் மீனையும் பன்மடங்கு பெருக்கி பசித்தவர்களுக்கு உணவளித்தது போல், பல ஆயிரக்கணக்கான மக்கள் நமது தொலைக்காட்சி ஊடகங்களால் பெருக்கி காட்டப்படுகிறார்கள். ‘லட்சக்கணக்கான குரல்கள் ஒலித்தன’ என்கிறார்கள் நம்மிடம். ‘அண்ணாதான் இந்தியா’வாம்.

மக்களின் குரல் என்றும் புதிதாக வார்த்தெடுத்த புனிதர் என்றும் சித்தரிக்கப்படும் இந்த மனிதர் உண்மையில் யார்? விசித்திரம் என்னவென்றால் இதுவரை இவர் இந்த நாட்டில் பற்றி எரியும் எந்தப் பிரச்னை குறித்தும் கருத்து சொல்லி நாம் கேட்டதில்லை. அவரது ஊருக்கு அருகாமையில் நிகழும் விவசாயிகளின்  தற்கொலைகளைப் பற்றியோ அல்லது சற்று தொலைவில் நடக்கும் பசுமை வேட்டைப் பற்றியோ இவர் எதுவும் பேசியதில்லை. சிங்கூரைப் பற்றியோ, நந்திகிராம், லால்கர் அல்லது போஸ்கோ விவசாயிகளைப் பற்றியோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்களால் எதிர்காலம் சூன்யமானவர்களைப் பற்றியோ இவர் முணுமுணுத்தது கூட இல்லை. மத்திய இந்தியாவின் வனப் பகுதிகளில் இராணுவத்தை பரவி நிறுத்த அரசு திட்டமிட்டிருந்த நேரத்தில், இந்திய அரசின் நோக்கம் குறித்தெல்லாம் அவர் எந்த கவலைகளும் வெளியிட்டதில்லை.

ஆனால், ராஜ் தாக்கரேவின் இனவெறிக் கொள்கையான ‘மராட்டியம் மராட்டியர்களுக்கே’ என்ற மாராத்திய பாசத்தை ஆதரிக்கிறார். குஜராத்தை ‘வளர்ச்சி மாநிலம்’ என்று வியந்தோதியவர், 2002ல் இஸ்லாமிய மக்கள் கொன்றொழிக்கப்பட்டது குறித்து எதுவும் சொல்லவில்லை. (இதையொட்டி சில கண்டனக் குரல்கள் எழுந்ததும் தனது வார்த்தைகளை அண்ணா திரும்பப் பெற்றுக் கொண்டாரே தவிர, உண்மையான தனது பாராட்டு மனநிலையை அல்ல)

இவ்வளவு இரைச்சல்களுக்கு இடையிலும் அறிவுத் தெளிவுடைய பத்திரிக்கையாளர்கள் தங்கள் கடமையை எப்படி உணர்ந்து செய்வார்களோ அப்படியே உண்மையான சில பத்திரிகையாளர்கள் பணியாற்றுகிறார்கள். அதனால்தான் ஆர்எஸ்எஸ் உடனான அண்ணாவின் பழைய பாசப்பிணைப்புக் கதையை நாம் அறிய முடிகிறது. அண்ணாவின் கிராம சமூகமான ‘ராலேகான் சித்தி’யில் கடந்த 25 வருடங்களாக கிராம பஞ்சாயத்துகளோ அல்லது கூட்டுறவு சங்க தேர்தல்களோ நடைபெற்றதேயில்லை என்று அக்கிராமத்தை ஆய்வு செய்த முகுல் ஷர்மா சொல்வதை கேட்க முடிகிறது. ‘ஹரிஜன்’களை குறித்து அண்ணாவின் மனபாவத்தை அறிய முடிகிறது: ‘ஒவ்வொரு கிராமமும் ஒரு சக்கிலியனை, கொல்லனை, குயவனைக் கொண்டிருக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் கனவு. அவர்கள் தத்தமது கடமையை செய்துகொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு கிராமம் தன்னிறைவு பெறும். இதைத்தான் ராலேகான் சித்தியில் நாங்கள் நடைமுறைபடுத்தியிருக்கிறோம்’.

‘அண்ணாவின் குழுவினர்’ (டீம் அண்ணா), இட ஒதுக்கீடு திட்டத்தை எதிர்ப்பவர்களான யூத் ஃபார் ஈக்வாலிட்டி என்ற அமைப்பினருடன் இணைந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? கோகோ – கோலாவினாலும் லேமான் பிரதர்சாலும் மிக தாராளமாக நிதியுதவி செய்யப்பட்ட பல தன்னார்வக் குழுவினர்தான் இந்த பிரச்சார போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார்கள். ‘அண்ணா குழு’வின்  புகழ் பெற்ற நபர்களான, அர்விந்த் கேஜ்ரிவால், மனீஷ் சிசோடியா-வால் நிர்வகிக்கப்படும் ‘கபீர்’ அமைப்புக்காக கடந்த மூன்று வருடங்களில் போர்டு பவுண்டேசனிடமிருந்து 400,000 டாலர்களை பெற்றிருக்கிறார்கள். ‘ஊழலுக்கெதிரான இந்தியா’ பிரச்சாரத்துக்கு நிதி வழங்கியவர்களின் பட்டியல் இன்னும் ஆச்சரியமான அதிர்ச்சியை தரக்கூடியது. சொந்தமாக அலுமினிய சுரங்கங்கள் வைத்திருக்கும் இந்திய நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை கையகப்படுத்தி இருப்பவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள், பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள் என்று அனைவரும் அடக்கம். இதில் பலர் மீது ஊழலுக்காகவும்  மற்றும் வேறு சில குற்றங்களுக்காகவும் விசாரணை இப்போதும் நடந்துக்கொண்டிருக்கிறது.

ஜன் லோக் பால் மசோதா சூடுபிடிக்கத் தொடங்கிய நேரத்தை நினைவுபடுத்தி பாருங்கள். உலக அரங்கில் விக்கிலீக்சின் மூலம் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்துக் கொண்டிருந்தது. இந்திய அளவில், முக்கியமான பன்னாட்டு நிறுவனங்கள், உயர் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் பலர், 2ஜி உள்ளிட்ட பிரமாண்டமான ஊழல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் அம்பலப்படுத்தியிருந்தன. அதோடு, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள், பொதுச்சொத்தின் ஆயிரக்கணக்கான கோடிகளை பல்வேறு வழிகளில் கபளீகரம் செய்ததும் வெளிச்சத்துக்கு வந்திருந்தன.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, தரகு வேலை செய்யும் பத்திரிகையாளர்களின் முகத்திரை கிழிந்ததுடன் கார்ப்பரேட் இந்தியாவின் முக்கிய தலைவர்களும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தருணம் நெருங்கி இருந்தது. ஊழலுக்கெதிரான போராட்டத்துக்கு இதைவிட சரியான நேரம் கிடைக்குமா என்ன?

அரசாங்கம் தனது கடமைகளிலிருந்து விலகிக்கொள்ள, கார்ப்பரேட்டுகளும் தன்னார்வக் குழுவினரும் அந்த இடங்களில் தங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் (தண்ணீர் வசதி, மின்சாரம், போக்குவரத்து, தொலைதொடர்பு, சுரங்கங்கள், மருத்துவம், கல்வி); தனியாருக்குச் சொந்தமான ஊடகங்கள் தங்களது முழு ஆற்றலையும் செலவழித்து பொது மக்களின் சிந்தனையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இந்த கார்ப்பரேட்டுகள், ஊடகங்கள், தன்னார்வ குழுவினர்கள் தாமாகவே ஜன் லோக் பாலின் வரம்புக்குள் வருவார்கள் போலிருக்கிறதே என்று நினைத்தோம். ஆனால், அவ்வாறு இல்லையாம். அவர்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கிறது ஜன் லோக்பால் மசோதா.

அரசின் ஊழலுக்கும், கறைபடிந்த அரசியல்வாதிகளுக்கும் ஆப்படிக்கும் போராட்டத்தில், குற்றவாளிகள், மற்ற எல்லோரையும் விட அதிகமாக குரலெழுப்புவதன் மூலம் தங்களை தாங்களே அதன் பிடியிலிருந்து சாதுர்யமாக விடுவித்துக்கொள்கின்றனர். அதைவிட மோசம் இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் பொது வட்டத்திலிருந்து அரசாங்கம் இன்னமும் பின்வாங்க வலியுறுத்தி அதன் மீது கணைகளை வீசுகிறார்கள். அது நடந்தால்தான் பொது நிறுவனங்கள் மேலும் தனியுடமை ஆகும். பொது கட்டமைப்புகளில் தனியார் இன்னமும் கை வைக்க முடியும். இந்தியாவின் இயற்கை வளங்களை கபளீகரம் செய்ய முடியும். அந்தக் கட்டம் வரும்போது, கார்ப்பரேட் ஊழல் நியாயப்படுத்தப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிடும். அதற்கு ‘தரகு கமிசன்’ என்றும் பெயர் வைக்கப்பட்டுவிடும்.

20 ரூபாயில் தங்கள் அன்றாட வாழ்க்கையை கடத்தும் 83 கோடி மக்களுக்கு, இந்த மசோதாவினால் உண்மையாகவே ஏதும் பயனிருக்கிறதா? இது அவர்களை மேலும் ஏழ்மைக்கும் வறுமைக்கும் போராட்டத்தை நோக்கியும் தள்ளுமே தவிர வேறு எந்த பயனுமில்லை.

மக்களின் சார்பாக கிரிமினல்களும் கோடீஸ்வர அரசியல்வாதிகளுமே நிரம்பியிருக்கும் பாராளுமன்றங்களின் முழுதோல்விதான் இந்த அருவெறுக்கத்தக்க நெருக்கடியை போலியாக உப்பிபெருக்குகிறது. சாதாரண மக்களால் இங்கு ஒரேயொரு ஜனநாயக அமைப்பைக் கூட நெருங்கமுடியாது.

தேசக்கொடி ஒயிலாக அசைவதைப் பார்த்து மனம் மயங்கிவிடாதீர்கள். நமது இறையாண்மையை கார்ப்பரேட்டுகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடத்தப் போகும் யுத்தத்துக்குள் நாம் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த யுத்தம் சொந்த நலனுக்காக ஆப்கானிஸ்தானில் யுத்தபிரபுக்கள் நிகழ்த்திய யுத்தம் போன்ற உக்கிரத்தை கொண்டதாக இருக்கும். இந்தியாவில் இதைதான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

_________________________________________________

நன்றி: அருந்ததி ராய், தி இந்து (21.8.2011)

தமிழாக்கம்: வேல்விழி, அறிவுச் செல்வன்

_________________________________________________

 வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்! ஆகஸ்டு 27 ஆர்ப்பாட்டம்!!

மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்! ஆர்ப்பாட்டம்!!

மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்! ஆர்ப்பாட்டம்!!

ஈழத்தின் மீதான போர் புரிந்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற போர்க்குற்றவாளி ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் மீதான தூக்குத்தண்டனையை ரத்து செய்யக் கோரியும், விடுதலை செய்யக்கோரியும் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் 27.8.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்ட விவரத்தை இங்கே தருகிறோம். அனைவரும் வருமாறு கோருகிறோம்.

இடம்: பனகல் மாளிகை, சைதாப்பேட்டை

நாள்: 27.8.2011

நேரம்: மாலை 4.30 மணி

தலைமை: வே. வெங்கடேசன், சென்னை ம.க.இ.க செயலாளர்

சிறப்புரை: மா.சி.சுதேஷ்குமார், மாநில இணைச்செயலாளர், பு.ஜ.தொ.மு

*       இராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை  விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்! இது அநீதி!! தன்மானமுள்ள, மனிதாபிமானமுள்ள எவரும் இதனை எதிர்த்து போராடவேண்டும்.

*       தடா என்ற கொடிய கருப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து, பல்வேறு சித்திரவதைகள் செய்யப்பட்டுத்தான் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டது. முதலில் இந்த கருப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தியதையும் அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதும் பச்சை பாசிசம்!

*       இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை பரிசீலிக்காமலே ஏற்கனவே, முடிவு செய்துவைத்த கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பைதான் உச்ச நீதிமன்றம் அன்று வழங்கியது. கருணை மனுப்போட்ட பின்னர், அவர்களது மரணத்துடன் விளையாடத் தொடங்கிய காங்கிரசு அரசு, தற்போது அவர்களை தூக்கிலிட அனுமதித்துள்ளது.

*       இந்தத் தீர்ப்பன் அடிப்படையில் 21- ஆண்டுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகியோர் சிறைதண்டனையும் சொல்லமுடியாத கொடுமைகளையும் அனுபவித்துள்ளனர். இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கிய பின்னரும் மரண தண்டனை என்பது என்னவகை நீதி?

*       ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தான் இராஜபக்சே, இராஜபக்சே இனப்படுகொலை செய்தவன், போர்க்குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் போராடிக் கொண்டு வருகின்றனர். இராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்குத் துணைபுரிந்த இந்திய அரசு, இராஜபக்சேவை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளைதான் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேரறிவாளன், சாந்தன், முருகனின் கருணை மனுக்களை நிராகரித்து தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டதன்மூலம் தனது நோக்கத்தை மீண்டும் தெளிவுப்படுத்தி உள்ளது.

*       ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்க இராஜபக்சேவுக்கு உதவுவதன் மூலம் தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள இந்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியே பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்குத்தண்டனை!

*       ஈழத் தமிழர்களின் சுயநிரணய உரிமைக்காகவும், இந்திய அரசின் தெற்காசிய மேலாதிக்கத்தை வீழ்த்தவும், இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்கவும், பேரறிவாளன்- சாந்தன்- முருகன் ஆகியோரின் விடுதலைக்காகவும் போராடுவோம்!

அனைவரும் வருக!

______________________________________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

அலைபேசி – (91) 97100 82506 (வினவு)
_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

நீதிபதிக்கு ரேட்வைத்த ஜெயேந்திரனை தூக்கில்போட ஜன்லோக்பால் அம்பிகள் தயாரா?

28

ங்கும், இங்கும், எங்கும், தூணிலும், துரும்பிலும், எப்.எம்மிலும், சானலிலும், தினசரியிலும், எஸ்.எம்.எஸ்சிலும், மீஸ்டு காலிலும் கூட எல்லாவற்றிலும் ஊழல் ஒழிப்பு போர் பொங்கி வழியும் நேரம். அந்த ‘போராட்ட நேரத்திற்கு’ பொருத்தமாக ஒரு ராகம் காஞ்சிபுரத்திலிருந்து ஊளையிடத் துவங்கியிருப்பது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?

நீதிபதிக்கு ரேட்வைத்த ஜெயேந்திரனை தூக்கில்போட ஊழல்ஒழிப்பு அம்பிகள் தயாரா?பண ஆதாயத்திற்காக நடக்கும் ஊழலை விட, கொலை செய்துவிட்டு நீதிபதியையே விலைக்கு வாங்கும் ஊழல் பஞ்சமா பாவங்களையும் விட மோசமில்லையா? அப்பேற்பட்ட விஸ்வரூப ஊழலை காஞ்சி மட ஜெயேந்திரன் செய்திருப்பது சமீப நாட்களாக ஊடகங்களில் யாரும் கவனிக்கப்படாமல் ஓரமாய் ஒதுங்கியிருக்கிறது. அதை ஊழல் எதிர்ப்பு போராளிகளின் கவன வெளிச்சத்திற்கு இழுத்துக் கொண்டு வருகிறோம்.

முதலில் சுருக்கமாக பிளாஷ் பேக்: காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் 3.9.2004 அன்று ‘ஆண்டவன்’ சன்னிதானமான அந்த கோவில் வளாகத்திலேயே கொல்லப்பட்டார். இந்த புண்ணிய ஷேத்திரத்தில் இப்படியான புண்ணிய செயலை செய்வர்  என்று சங்கர மட சங்கராசாரிகளான ஜெயேந்திரனும், விஜயேந்திரனும் கைது செய்யப்பட்டனர். மேலும் மட மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு, ரவி சுப்பிரமணியன், அப்பு என்று ரவுடிகள் முதல் அக்ரஹாரத்து பூணூல் மாஸ்டர்கள் வரை அனைவரும் கைது செய்யப்பட்டு மொத்தம் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதலில் இந்த வழக்கு செங்கல்பட்டு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜெயா மாமியோடு ஏதோ பிசினஸ் பிரச்சினையால் சண்டை மூண்டு சங்கர்சாரிஸ் டூ விட்ட நேரமாதலால் வழக்கு ஜரூராக நடந்து வந்தது. எனவே இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடந்து வந்தால் நீதி கிடைக்காது என்று நரித்தனமாய் பொங்கிய ஜெயேந்திரன் வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவாள் அதிகாரம் டெல்லி வரை கொடி கட்டிப் பறப்பதால் நீதிபதிகளும் வழக்கு விசாரணையை புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றி உத்திரவிட்டனர்.

அதன்படி 2006-ஆம் ஆண்டு முதல் புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதே ஆண்டில் கருணாநிதி அரசு தமிழகத்தில் பதவியேற்கிறது. அவாள்களின் உள்ளம் கவர்ந்த தளபதி ஜெயேந்திரனை காப்பாற்ற விரும்பிய தி.மு.க அரசு அதற்கு பக்க பலமாக துணை நின்றது. ஆரம்பத்தில் நீதிபதி சின்ன பாண்டியும், பின்னர் நீதிபதி கிருஷ்ணராஜூம் விசாரிக்க தற்போது நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இதுவரை 170 சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து முடிந்துள்ளது.

அவாள்களின் அதிகார ஆதரவோடும் தி.மு.கவின் உறுதுணையோடும் 92 பேர் பல்டி சாட்சிகளாக மாற்றப்பட்டார்கள். இதில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியம், சங்கரராமன் மனைவி பத்மா உட்பட பெருந்தலைகளே உண்டு. இந்நிலையில் வரும் 5-ம் தேதி வழக்கறிஞர் வாதம் நடப்பதாக இருந்தது. இந்த நேரம் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் இந்த வழக்கு விசாரணைக்கு  தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் நீதிபதி ராமசாமியுடன் ஜெயேந்திரன் மற்றும் சிலர் தொலைபேசியில் உரையாடும் ஆடியோ சி.டியை தாக்கல் செய்து அதில் மை லார்டுக்கு இந்த லார்டு லபக்தாஸ் ரேட் பேசும் விசயத்தை வெளியே கொண்டு வருகிறார். இதை விசாரிக்க வேண்டுமென்று இவரது வழக்குரைஞர் மணிகண்டன் வாதிட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுகுணா புதுச்சேரி கோர்ட்டில் நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார். இந்த மனு பற்றி 8 வாரத்தில் பதில் அளிக்கும்படி உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

அந்த ஆடியோ மேட்டரில் கௌரி எனும் பாப்பாத்தியம்மாள் பார்ப்பன மொழியில் பார்ப்பன மேலாண்மையோடு உரையாடலை ஒருங்கிணைக்க கான்பிரன்ஸ் காலில் ஜெயேந்திரன் ‘அருள்’வாக்கு ஓதுகிறார். எல்லாம் ஒரு பத்து நாட்களுக்குள் அனுப்பி விடுவதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். நீதிபதியோ நமஸ்காரத்தை சொல்லி, தனக்கு அவசர பணத் தேவை இருப்பதால்தான் இந்த அவசரம் என்று வழிய, ஜெயேந்திரன் அதெல்லாம் பிரச்சினை இல்லை கடன் வாங்கியாவது உடன் அனுப்புவதாக வலியுறுத்த, பின்னர் அந்த கௌரி பெரியவாளே சொல்லியாச்சு இனியாச்சும் நம்பி ஆகிற வேலையை பாருங்கோ என்பது போல முடித்து வைக்கிறார்.

இந்த உலகில் என்னன்ன நீதி, சாட்சியங்கள், சந்தர்ப்ப சூழ்நிலை என்று என்னென்ன இருக்கிறதோ அத்தனையின் படியும் ஜெயேந்திரன் ஒரு பச்சையான கொலைகாரன் என்பதை யாரும் மறுப்பே இன்றி ஏற்க முடியும். இருந்தும் அத்தனை வழிகள் மூலமும் இந்த வழக்கினை ஒன்றுமில்லாததாக்க ஜெயேந்திரன் முயன்று அதில் வெற்றியும் பெற்ற நிலையில்தான் இந்த கிளைமாக்ஸ் ஊழல். அந்த அளவு மோசடியில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் இந்த குற்றவாளி.

2ஜி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ராசா குற்றவாளி என்பதிலும், அவர் செய்த குற்றத்தை அங்கீகரித்து, ஆதரித்து, வழிகாட்டிய குற்றத்தினை மன்மோகன்சிங் முதல் ப.சிதம்பரம் வரை முழு அரசுமே காரணமென்பதெல்லாம் தற்போது ராசா, கனிமொழி தரப்பு வழக்கறிஞர்கள் ஆணித்தரமாக வைக்கும் வாதமென்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதிலும் மன்மோகன் சிங்கையே நீதிமன்றத்தில் வைத்து விசாரணை செய்தால் இதை கேசுவலாக நீருபிப்போம் என்று சவால் விட்டதெல்லாம் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் மூழ்கிவிட்ட துயரம். இருப்பினும் கடைசிக் குற்றவாளி ராசாவையே தூக்கில் போட வேண்டும் என்று கொக்கரித்தவர் ‘காந்தியவாதி’ அண்ணா ஹசாரே.

ராசாவாவது சில பல மில்லியன் கோடி ரூபாய் இழப்புக்கு காரணமானவர். அதுவும் அரசின் கொள்கையின் படி நடந்த கொள்ளை முடிவு என்றாலும் அதற்கே தூக்கு என்றால் ஜெயேந்திரனது குற்றம் அதைவிட பலமடங்கு கொடியது.

ஏனெனில் ஜெயேந்திரன் ஒரு அப்பாவியை கொன்றதோடு, அந்தக் கொலை குறித்து நடக்கும் வழக்கில் சாட்சிகளை விலைக்கு வாங்கியதோடு, இறுதியில் தீர்ப்பு தர இருக்கும் நீதிபதிக்கே விலை பேசியிருக்கிறார். ஆக இந்து மதத்தின் சர்வதேச தலைவரும், குற்றவாளிகளை விசாரித்து தண்டிக்க வேண்டிய ஒரு நீதிபதியும் இப்படி அப்பட்டமாக பிசினஸ் பேசுவது போல ரேட் பேசியிருப்பதை பார்த்து இந்த ஊழல் எதிர்ப்பு அம்பிகள் சும்மா இருப்பது ஏன்?

ஊழலுக்கு எதிரான உலகப் போரை துவங்கியிருப்பதாக பீற்றிக் கொள்ளும் இவர்கள் அம்பி அந்நியனாவதைப்போல, காந்தியவாதியாக இருந்து கொண்டே சத்ரபதி சிவாஜியாக மாறும் அண்ணா ஹசாரே வழியில்  பெரிய அம்பி ஜெயேந்திரனுக்கு ஒரு தூக்கோ, என்கவுண்டரோ ஏற்பாடு செய்வார்களா?

ஏனெனில் ஜனலோக்பால் வந்தால் கூட அதில் வரும் ஊழல் வழக்குகளை இத்தகைய நீதிபதிகள்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். அந்த நீதிபதி இனத்தை சேர்ந்தவரையே ஒரு சர்வதேச புகழ் சாமியார் விலைக்கு வாங்குவது என்றால் இது மாதிரி ஊழல் இதுவரை இந்தியாவே கண்டதில்லையே?

சும்மா ஆளே இல்லாத கடையில் ஊழல் ஊழல் என்று கூப்பாடு போடுவதை  விட்டு ஊழலுக்கு இலக்கணமே படைத்திருக்கும்  இந்த ஜெயேந்திரனை நரபலி கொடுத்தால் ஊழல் எதிர்ப்பு சாமிக்கு அளவில்லா ஆனந்தமாக இருக்குமே? செய்வார்களா?

கலெக்டர் ஆபீஸ் பியூனையும், கை வண்டியில் கத்திரிக்காய் விற்கும் பாமரனையும் ஊழலுக்காக தண்டிக்க வேண்டும் என்று சீன் மேல் சீன் போடும் இந்த மேட்டுக்குடி கனவான்கள், தங்களது இனத்தை சேர்ந்த ஆன்மீக தலைவரை மட்டும் கண்டு கொள்ளாத மர்மம் என்ன? இதுதான் இனப் பாசமோ?