Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 802

சர்வாதிகார எதிர்ப்பில் அமெரிக்காவின் இரட்டை வேடம் !

மெரிக்கா, தனது மேலாதிக்க நோக்கங்களுக்குக் கட்டுப்பட்டு, தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் சர்வாதிகாரிகளை ஜனநாயகவாதிகளாகச் சித்தரித்துப் பாதுகாக்கும் என்பதற்கு இன்னுமொரு உதாரணமாகத் திகழுகிறது, மத்திய கினியா (Equatorial Guinea).

மத்திய கினியா மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சிறியதொரு நாடெனினும், புதிய குவைத் என அழைக்கப்படும் அளவிற்கு எண்ணெய் வளம் மிக்கது. ஆப்பிரிக்க கண்டத்தின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் உள்ள இந்நாட்டின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 15 இலட்சம் ருபாய்க்கும் அதிகமென்றும் தனிநபர் வருமானத்தில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்நாடு இருக்கிறதெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் அந்நாட்டிற்குக் கிடைக்கும் வருமானத்திற்கும், அந்நாட்டு மக்களின் வாழ்நிலைக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதையும், 1990களில் மத்திய கினியாவில் கச்சா எண்ணெய் வளம் கண்டெடுக்கப்பட்ட பின், அந்நாட்டின் பொருளாதாரம் எந்தளவிற்கு ‘வளர்ச்சி’ அடைந்ததோ, அந்தளவிற்கு அந்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் அதிகரித்திருப்பதையும் உலக வங்கியின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 177 நாடுகளின் மனிதவள மேம்பாட்டுத் தர வரிசையில் இந்நாடு 121ஆவது இடத்தில் உள்ளது. இந்நாட்டில் 70 சதவீதம் பேர் நாளொன்றுக்கு 50 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்து வருவதாக இன்னொரு புள்ளி விவரம் சொல்கிறது.

1968ஆம் ஆண்டு ஸ்பெயினின் காலனியாதிக்கத்திலிருந்து ‘விடுதலை’ அடைந்த மத்திய கினியா, 1979ஆம் ஆண்டு வரை பிரான்சிஸ்கோ மக்கியாஸ் என்ற சர்வாதிகாரியால் ஆளப்பட்டது. பின்னர் 1979இல் நடந்த அரண்மனை புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய, தற்போதைய அதிபர் தியோடொரோ ஓபியாங், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார்.

அதேசமயம், கினியாவில் தேர்தல்களும் நடத்தப்படும். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் 95 சதவீத வாக்குகளைப் பெற்று, மீண்டும் அதிபரானார் ஓபியாங். கினியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிதான் நடைபெறுகிறது எனக் காட்டுவதற்குத் தேர்தலைவிட, வேறு மாயமந்திரம் எதுவும் தேவையில்லையே!

1996ஆம் வருடம் இந்நாட்டில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நாட்டின் பொருளாதாரம் அதிவேகத்தில் வளர்ந்தது. பல எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டோடு தொடங்கப்பட்டன. அவையனைத்தும் அதிபர் ஓபியாங், அவரது குடும்பம் மற்றும் உயர் அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளன. இதைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டின் கச்சா எண்ணெய் வருமானத்தில் பெரும்பகுதியை இக்கும்பலே கொள்ளையடித்துவிடுகிறது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி காரணமாகத் தாராளமாகப் பணம் புழங்கும் அரசுத் துறையில் இலஞ்சமும், ஊழலும், பகற்கொள்ளையும் தலைவிரித்தாடுகிறது. ஆட்சியாளர்கள் எண்ணெய் உற்பத்தி  ஏற்றுமதியில் மட்டும் அக்கறை காட்டி வருவதால், பாரம்பரிய கொக்கோ, காபி விவசாயம் சீரழிந்து மக்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டனர்.

மற்றொரு பக்கம் மக்கள் மீதான ஒடுக்குமுறையும் கேள்விக்கிடமற்றதாக இருக்கிறது. சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்கள் போராடக் கூட வேண்டாம், ஆட்சிக்கு எதிராக முணுமுணுத்தாலே போலீசின் சிறப்பு கவனிப்புக்கு ஆளாக நேரிடும். கறுப்புக் கடற்கரைச் சிறைச்சாலையில் அடைக்கப்படும் அரசியல் கைதிகளின் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி சித்திரவதை செய்வது சர்வசாதாரணமானது. சித்திரவதைகளைக் கண்காணிக்கும் ஐ.நா. குழுவினர் இந்தச் சிறைச்சாலையைச் சோதனையிடச் சென்றபோது, போலீசார் சித்திரவதைக் கருவிகளை ஒளித்துக்கூட வைக்கவில்லை. உங்களால் செய்ய முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள் எனக் குழுவினரின் கண்களில் படும்படி அனைத்துக் கருவிகளையும் மேசை மீதே வைத்திருந்தனர்.

அரசியல் கைதிகளைச் சித்திரவதை செய்வதை அரசின் கொள்கையாகவே கொண்டுள்ளது, கினியா. எனினும், கினியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம், “கினியாவிற்கு நீதி குறித்துப் போதிப்பதைக் கைவிட வேண்டும்; மற்றவர்கள் குறிப்பிடும் அளவிற்கு அந்நாட்டில் இலஞ்சமோ, வறுமையோ தாண்டவம் ஆடவில்லைசு என அமெரிக்க அரசிற்கு கமுக்கச் செய்தி அனுப்பியதாக, விக்கி லீக்ஸ் இணைய தளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் சிறப்பு ஆலோசகராக இருந்த லானி ஜே. டேவிஸ், கினியாவின் சர்வாதிகாரி ஓபியாங் குறித்து உலக நாடுகள் மத்தியில் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஒரு பிரச்சார இயக்கத்தையே நடத்தினார். இதற்காக, ஓபியாங்கிடமிருந்து பல கோடி அமெரிக்க டாலர்களைச் சன்மானமாகப் பெற்றுக் கொண்டார், அவர்.

முன்னாள் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் இன் நெருங்கிய கூட்டாளியும் அமெரிக்க  ஐரோப்பிய கூட்டுப் படைகளின் கமாண்டராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பாண்ட்ஸ் எம். கிராட்டாக்குச் சொந்தமான எம்.பி.ஆர்.ஐ., என்ற தனியார் கூலிப்படை நிறுவனம்தான் மத்திய கினியாவின் இராணுவத்திற்கும், போலீசிற்கும் பயிற்சியளித்து வருகிறது. இத்தனியார் படை மத்திய கினியா போலீசாருக்குப் பயிற்சி கொடுப்பதை அமெரிக்க உள்துறை ரத்து செய்தாலும், அதிபர் புஷ் அப்பயிற்சிக்குப் பின்னர் ஒப்புதல் அளித்தார்.

செவ்ரான், மாராத்தான் ஆயில், நோபிள் எனர்ஜி ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில்தான் மத்திய கினியாவின் எண்ணெய் வளம் சிக்கிக் கொண்டுள்ளது. அதே சமயம், லிபியாவின் அதிபர் கடாஃபியோ, தனது நாட்டில் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த செவ்ரான், ஓக்ஸிடென்டல் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் உரிமத்தை சென்ற ஆண்டு அக்டோபரில் புதுப்பிக்க மறுத்தார். கினியாவில் ஓபியாங்கின் சர்வாதிகார ஆட்சிக்கு அமெரிக்கா பக்கபலமாக இருப்பதற்கும், லிபியாவில் அதிபர் கடாஃபியைத் தூக்கியெறியும் நோக்கத்தோடு அமெரிக்க  ஐரோப்பிய கூட்டுப் படை போர் தொடுத்திருப்பதற்கும் பின்னுள்ள காரணம் இதுதான்.

____________________________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

_____________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?

34

பூலோகத்தின் சொர்கத்தில் இன்றைய தேதியில் இரண்டரை கோடி பேர்களுக்கும் மேல் வேலையில்லாமல் அலைகிறார்கள். சுமார் ஒரு கோடி வீடுகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன. 14.3 % மக்கள் வறுமையில் வாடுவதாக அதிகாரப்பூர்வமான கணக்கீடுகளே தெரிவிக்கின்றன; அதாவது ஏழில் ஒருவர் வறுமையில் வாடுகிறார். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் 2,573 குழந்தைகள் சோற்றுக்கு வழியற்ற ஏழைக் குடும்பங்களில் பிறக்கின்றன. மாணவர்களின் கல்விக்கடன் 40 லட்சம் கோடிகள், நுகர்வோர் கடன் நூறு லட்சம் கோடிகள், கடன் அட்டை வைத்திருப்போரின் கடன் அளவு 800 பில்லியன் – ஆக மொத்தம் தமது அன்றாடத் தேவைகளைக் கூட கடன் வாங்கித் தான் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்கிற நிலையில் சுமார் 25 கோடி பேர் வாழ்கிறார்கள்.

இப்படி சகல பிரிவு மக்களும் ‘இன்பமயமான’ வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்த சொர்க்க பூமியில் பிரதி வருடம் சுமார் நாற்பது லட்சம் கோடிகள் மட்டும் தான் இராணுவத்திற்காக செலவிடப்படுகிறது. மொத்த மக்கள் தொகையில் 0.076 சதவீதம் பேரின் கையில் மட்டுமே ஆயிரத்து எண்ணூத்தி நாற்பது லட்சம் கோடியளவிலான செல்வம் குவிந்துள்ளது.

மேலே விவரிக்கப்பட்டுள்ள சொர்க்கத்தின் பெயர் – அமெரிக்கா.

டபிள் டிப் டிப்ரஷன் - திவால் ஆனது அமெரிக்கா மட்டும்தானா

ஒவ்வொரு தொழிற்சாலையாய் அக்கு அக்காய் பிரித்து சீனத்துக்குக் கப்பலில் அனுப்பிய நிலையில் இலட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்து நிற்கும் அதே நேரத்தில், பெரும் நிறுவனங்களின் சி.இ.ஓக்களின் சம்பளம் 30% அதிகரித்துள்ளது. 2011-ம் ஆண்டின் முதல் காலாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் 31 சதவீதத்தை லாப வளர்ச்சி விகிதமாகக் காட்டி அதே 31 சதவீத அளவுக்கு வரி விலக்குப் பெற்றுள்ளன. இன்றைய தேதியில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பை (14.34 Trillion) விட அதனுடைய கடனின் (14.6 Trillion) அளவு அதிகம். அமெரிக்கா செலவிடும் ஒவ்வொரு டாலரிலும் 40 சென்ட் கடன் தொகையாக இருக்கிறது.

டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?இன்று மொத்த நாடே கடன்காரனாய் உலக அரங்கில் நின்று கொண்டிருக்கிறது. இந்நிலையில்  அமெரிக்க அரசின் கடன் பெரும் தகுதியை (credit worthiness) S&P எனும் தரநிர்ணய நிறுவனம் குறைத்துள்ளது. அமெரிக்கா போண்டியாகி நிற்பது உலக முதலாளித்துவ கட்டமைவின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. உலகம் முழுவதுமுள்ள முதலாளித்துவ பத்திரிகைகள் அச்சத்தில் அலறுகின்றன. பல நாட்டுத் தலைவர்களும் தமது தூக்கத்தைத் தொலைத்து வால் ஸ்ட்ரீட்டை அவதானித்து வருகிறார்கள். அவர்களின் இதயத் துடிப்பு, டோவ் ஜோன்ஸின் குறியீடுகள் எழுந்தால் எழுகிறது – விழுந்தால் விழுகிறது.

இன்றைய இந்தப் பொருளாதார நிலை டபுள் டிப் ரெஷசன் – அதாவது இரண்டாம் பொருளாதார நெருக்கடி – என்று முதலாளித்துவ உலகத்தால் சொல்லப்பட்டாலும், இது 2008-ல் துவங்கிய சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சி தான். இன்னும் சொல்லப் போனால், மூன்றாண்டுகளுக்கு முன் உலகை ஆட்டிப்படைத்த சர்வதேச பொருளாதார நெருக்கடி இன்னும் முடிந்து விடவில்லை என்பதே எதார்த்த உண்மை. இன்றைய அமெரிக்க ஓட்டாண்டித்தனத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் 2008-லிருந்து உலகைப் பீடித்து ஆட்டி வரும் பொருளாதார நெருக்கடியையும், தவிர்க்கவியலாமல் அதனை உண்டாக்கிய முதலாளித்துவ கட்டமைப்பின் உள்முரண்பாடுகளையும் புரிந்து கொள்ளவது அவசியம்.

குதியற்றவர்களுக்கு வீட்டுக் கடன் கொடுத்தோம். அவர்கள் திரும்பச் செலுத்தவில்லை எனவே நாங்கள் திவாலாகி விட்டோம்’. ஃப்ரெடி மேக் மற்றும்  ஃபான்னி மே ஆகிய நிதிமூலதன வங்கிகள் மண்ணக் கவ்வியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஒவ்வொரு வங்கியாக திவாலாகத் துவங்கிய போது இவ்வாறு தான் சொன்னார்கள். ‘சந்தை தன்னைத் தானே சரி செய்து கொள்ளும்’ ( market will heal itself) எனவே அரசுகள் பொருளாதாரத்தில் தலையிடாமல் ஒதுங்கி நிற்கவேண்டும் என்று முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள் சொன்ன பொருளாதாரக் கோட்பாடுகளையெல்லாம் தூக்கி உடைப்பில் போட்டு விட்டு அரசுக்குக்கு கருணை மனு போட்டு வரிசையில் நின்றார்கள்.

அமெரிக்க நிதிமூலதன நிறுவனங்களை மீட்க பல்வேறு தவணைகளாக அவ்வரசு அழுத மொத்த தொகை மட்டும் சுமார் 8.5 ட்ரில்லியன் டாலர்கள் – 8500000000000$ அல்லது சுமார் 340 லட்சம் கோடி ரூபாய்கள். முதலாளித்துவத்தை படுகுழியில் இருந்து மீட்பதற்காக பாய்ச்சப்பட்ட இந்த பிரம்மாண்டமான தொகை எதார்த்தத்தில் சாதித்தது என்னவென்பதைப் பற்றியும், இன்று தனது கடன்பெறும் தகுதியை அமெரிக்கா இழந்து நிற்பதற்கான காரணங்களையும் பற்றி பார்க்கும் முன், பெருமந்தத்திற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் பற்றி சுருக்கமாகக் கவனிப்போம். விரிவான தகவல்கள் இந்தக் கட்டுரையில் உள்ளது.

என்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகள் துவக்கத்திலும் நாஃப்தா (NAFTA) ஒப்பந்தம் அமுலுக்கு வந்த போது மெக்சிகோவுக்கும், பின்னர் தொண்ணூறுகளின் இறுதியில் சீனத்துடன் பொருளாதார உறவுகள் சீரடைந்த போது சீனத்துக்கும், தொடர்ந்து சில லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கும் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை மாற்றிக் கொண்டன. அமெரிக்காவில் ப்ளூ காலர் வொர்க்கர்ஸ் என்று அழைக்கப்படும் ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் சம்பளம் மற்றும் இன்னபிற சலுகைகளை ஒப்பிடும் போது இந்த மூன்றாம் உலக நாடுகளின் உழைப்புச் சக்தி மிகவும் மலிவானது என்பதும் லாபம் அதிகம் என்பதும் இதற்கான முதன்மையான காரணங்களாக இருந்தன.

இப்படி, படிப்படியாக வெவ்வேறு துறைகளின் உற்பத்தி அலகுகள் மாற்றப்பட்டு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த இடத்தில் முதலாளித்துவ ஆதரவாளர்கள் இதை வேறு வகையில் நியாயப்படுத்தக்கூடும். அதாவது, ‘ இப்படிப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கப்பட்டதன் விளைவு தான் இந்தியாவில் பல்வேறு தொழிற்சாலைகள் ஏற்படவும் பலருக்கு வேலை கிடைக்கவும் காரணமாக இருந்துள்ளன’ என்பது அவர்களது வாதமாக இருக்கும். ஆனால் இது ஒரு பொய்த்தோற்றம்தான், உண்மையோ நேர்மாறானது.

புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கை உலகை ஒரு பெரும் சங்கிலியால் இணைத்துள்ளது. மூலதனம் தனது தேசிய அடையாளத்தை இழந்து தேச எல்லைகளைக் கடந்து பரவி நிற்கிறது. உலகம் முழுவதும் இணைக்கப்பட்டிருக்கும் இப்பொருளாதாரச் சங்கியிலியின் தலைக் கண்ணியாக இருக்கும் அமெரிக்காவின் பங்கு என்பது, பிற நாடுகளில் உற்பத்தி செய்வதை வெறுமனே நுகர்வது மட்டும் தான். அதாவது, உலகப் பொருளாதாரமே மெல்ல மெல்ல அமெரிக்க நுகர்வுக்கான ஏற்றுமதி சார் பொருளாதாரமாக மாற்றியமைக்கப்பட்டது. அதாவது, அமெரிக்க நுகர்வில் பங்கம் ஏற்பட்டால் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தியும், உழைப்புச் சக்திகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?அமெரிக்காவிலோ உள்நாட்டு வேலைகள் மெல்ல மெல்ல அருகி, ஒரு கட்டத்தில் பலரும் வேலையிழந்து தமது அன்றாடத் தேவைகளுக்குக் கூட கடன்களையே சார்ந்திருக்கச் செய்கிறது. இது ஒருபக்கம் இருக்க, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னிருந்தே நுகர்வுக் கலாச்சாரம் அமெரிக்க சமூகத்தில் மிக வலுவாகவும் கவனமாகவும் முதலாளித்துவத்தால் புகுத்தப்பட்டது. கடன் வாங்கியாவது பொருட்களை நுகரும் ஒரு சமுதாயமாக அமெரிக்கா மாற்றியமைக்கப்பட்டது.

2008-ல் பொருளாதார நெருக்கடியைத் துவக்கி வைத்த ரியல் எஸ்டேட் குமிழியின் வெடிப்புக்கான காரணமும் இதில் தான் ஒளிந்து கிடக்கிறது. நடுத்தர வர்க்கத்தை விடாமல் துரத்தி அவர்கள் தலையில் வீடுகளைத் திணித்தன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். இரண்டாயிரங்களின் துவக்கத்திலும் மத்தியிலும் அமெரிக்காவில் வீடுகள் வாங்கியோரில் பெரும் சதவீதத்தினர் வீடு வேண்டும் என்று வங்கிகளை அணுகியவர்கள் அல்ல. நமது ஊரில் கடன் அட்டைக்காக தொலைபேசியில் தொடர்ந்து நச்சரிப்பதைப் போல அங்கே வீடுகளை வாங்கச் சொல்லி பல்வேறு வகைகளில் ஆசை வார்த்தைகள் காட்டியுள்ளனர்.

இப்படி இவர்கள் தெரிந்தே தான் அனைவருக்கும் கடன் கொடுத்துள்ளனர். இந்தக் கடன்களின் மேல் இருக்கும் நம்பகமற்ற தன்மையை (Risk factor) தவிர்த்துக் கொள்ள அவர்கள் வால் ஸ்ட்ரீட்டை அணுகினர்.  உதாரணமாக, ஒரு வீட்டின் உண்மையான மதிப்பு ஒருலட்சம் என்றால், அதற்குக் கொடுக்கப்பட்ட கடன் பத்திரத்தை சர்வதேச பங்குச் சந்தையில் ஊக பேர சூதாட்டத்தில் சுற்றுக்கு விட்டனர். பல்வேறு கைகள் மாறி மாறி அப்பத்திரங்களின் மதிப்பு நம்ப முடியாத அளவுக்கு அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில், வீடுகளை வாங்கியவர்கள் கட்டமுடியாமல் திரும்ப ஒப்படைக்கிறார்கள். இவ்வாறு foreclosure செய்யப்பட்ட வீடுகளின் தவணைத் தொகையையும் கூட கந்து வட்டிக்காரன் போல் விடாமல் துரத்தி வசூலித்தன வங்கிகள். பலரும் திவால் நோட்டீஸ் கொடுக்கிறார்கள் – மேலும் ஒழுங்காக தவணை கட்டிக் கொண்டிருந்த பலரும் வருமானம் குறைந்து கட்டமுடியாத சூழலில் வீடுகளைத் திரும்ப ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டவுடன், இந்த மாயக் குமிழி மொத்தமும் வெடித்துச் சிதறுகிறது.

இதற்குள், இந்தச் சூதாட்டப் பணம் பல நாட்டு பங்குச் சந்தைகளிலும் பாய்ந்திருந்தது. தமது அஸ்திவாரம் ஆட்டம் கண்டதும் வெளியே சுழன்று கொண்டிருந்த பணத்தை ஒன்று பதுக்கினார்கள் அல்லது உள்ளிழுத்துக் கொண்டார்கள். இதனால் வால் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட நடுக்கம், உலகெங்கும் அதிர்வலைகளை அனுப்பியது. இந்தியா சீனா ஐரோப்பா ஜப்பான் என்று ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக அனைத்து பங்குச் சந்தைகளின் குறியீடுகளும் படுபாதாளத்தில் வீழ்ந்தன. ரியல் எஸ்டேட் மட்டுமல்லாது, கட்டுமானப் பொருட்கள், விவசாய இடுபொருட்கள், உணவுப் பொருட்கள் என்று பல்வேறு பொருட்களின் மேல் நடக்கும் சூதாட்டங்களின் விளைவாய் உலகெங்கும் உள்ள பங்குச் சந்தைகளில் புழங்கும் பணத்தில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் ஊகத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது. அதாவது இந்த வர்த்தக சூதாட்டம் உண்மைப் பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தில் நடைபெறவில்லை.

அமெரிக்காவின் உள்நாட்டுச் சந்தை கவிழ்ந்து கிடக்கும் நிலையில் அதற்கான ஏற்றுமதியை மட்டுமே நம்பியுள்ள மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்திப் பொருட்களின் தேக்கமும் அதைத் தொடர்ந்து இங்கே சம்பளக் குறைப்பு ஆட்குறைப்பு என்று ஒரு பக்கம் அடிவிழுகிறது என்றால், இன்னொரு பக்கம் பங்குச் சந்தையே பிரம்மாண்டமான சூதாட்டச் சந்தையாக மாற்றப்பட்டதால் ஊக பேர வணிகத்தில் பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களைக் கவ்வுகிறது.

இது வெறுமனே முதலாளித்துவ உலகின் ஒரு நெருக்கடியல்ல; இது முதலாளித்துவ கட்டமைவின் நெருக்கடி. முதலாளித்துவ உற்பத்தியின் மிக அடிப்படை நோக்கமே மூலதனத் திரட்சி தான். இந்த மூலதனத் திரட்சிக்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை. தொழிலாளிகளைச் சுரண்டுவது, கூலியைக் குறைப்பது என்பதெல்லாம் இந்த அடிப்படை நோக்கத்திலிருந்தே எழுகிறது. அதனால் தான், தமது ஆலைகளை மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றினர். ஆலைகள் செல்லும் நாடுகளில் உள்ள உழைப்புச் சுரண்டல் காரணமாகவும், உள்நாட்டில் ஆலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வேலையின்மையும் உற்பத்திப் பண்டங்களின் நுகர்வைத் தடுக்கிறது. அதாவது செல்வம் முதலாளித்து வர்க்கத்திடம் குவிய குவிய பிற மக்கள் தொடர்ந்து தங்களது வருமானத்தை இழந்து வருகிறார்கள். இது முதலாளித்துவ கட்டமைப்பின் ஒரு அடிப்படை முரண்பாடு.

இந்த அடிப்படையான முரண்பாட்டின் விளைவு தான், அமெரிக்கச் சந்தையின் சரிவு திருப்பூர் பனியன் தொழிலாளி வரையில் பாதிப்பை உண்டாக்குகிறது.

மூலதனத் திரட்சி என்பது ஒரு கட்டத்தில் உற்பத்தி – நுகர்வு என்கிற வட்டத்தின் சுழற்சியால் மட்டுமே நிகழ்வதில் சிக்கல்  ஏற்படும் போது முதலாளித்துவம் தவிர்க்கவியலாமல் ஊக பேர வர்த்தகத்தைச் சரணடைகிறது. ஒரு பண்டத்தின் உண்மையான மதிப்பை விட பல ஆயிரம் மடங்கு அதன் மதிப்பு மிகையாக ஊதிப் பெருக்க வைக்கப்பட்டு நடக்கும் அந்தச் சூதாட்டக் குமிழ் ஒரு கட்டத்தில் வெடித்தே ஆகவேண்டியுள்ளது. சப் ப்ரைம் நெருக்கடி என்று சொல்லப்பட்ட சர்வதேசப் பொருளாதார நெருக்கடி இதற்கான ஒரு துலக்கமான சான்றாக நம்முன் நிற்கிறது.

டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?தமது சூதாட்டத்தைத் தொடரமுடியாத நெருக்கடியில் சிக்கிக் கொண்டு நின்ற நிதிமூலதனச் சூதாடிகளைக் கைதூக்கி விட முதலில் 35 லட்சம் கோடிகளை அள்ளிக் கொடுத்தார் புஷ். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஒபாமா, பல்வேறு சந்தர்ப்பங்களில் வால் ஸ்ட்ரீட்டுக்குள் பாய்ச்சிய தொகையின் அளவு 8.5 ட்ரில்லியன் டாலர்கள். உழைக்கும் மக்களின் மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கூட அரசாங்கம் செய்து கொடுக்கக் கூடாது என்று கட்டளையிடும் முதலாளித்துவம் அரசிடம் இருந்து ‘நிவாரணம்’ பெற கூச்சமே படவில்லை.

தாம் பெற்ற இந்த பிரம்மாண்டத் தொகையைத் தமது போட்டி நிறுவனங்களை வளைப்பதற்கும் இணைப்பதற்குமே பெருமளவு பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு முறை பெரும் தொகை சந்தைக்குள் பாய்ச்சப்படும் போதும் அது காற்றில் கரைந்த கற்பூரமாய் கரைந்து காணாமல் போயுள்ளது.

அமெரிக்க அரசு இவர்களுக்கு அளித்த இந்த பெரும் தொகையில் கணிசமான அளவு மக்களின் வரிப்பணம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கான தொகையிலிருந்து வெட்டப்பட்டது என்றாலும், பெருமளவிலான தொகை அமெரிக்கப் பொதுக் கடன்பத்திரங்களை விற்பதன் மூலமும் திரட்டப்பட்டது. சந்தையைச் சரிவிலிருந்து காப்பாற்றுவதற்கான நிவாரணத் தொகையாகச் சொல்லப்படும் இந்த 8.5 ட்ரில்லியன் டாலரில் ஒரு கணிசமான பங்கு வங்கிகளிடமிருந்து கடன் வாங்கப்பட்ட தொகை. இதை, அமெரிக்க அரசு மக்கள் மேல் விதிக்கும் வரிவருவாயிலிருந்தோ அல்லது கடன் பத்திரங்களை விற்பதன் மூலமோ திரட்டி வங்கிகளுக்கு அடைக்க வேண்டும்.

கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? வங்கித் துறையின் சரிவைக் காக்க வங்கிகளிடமிருந்தே பணம் பெறப்பட்டு அதை அடைக்க மக்களின் தலைமேல் கை வைப்பதோடு மட்டுமே இந்த முதலாளித்துவ அராஜகங்கள் முடிவுறவில்லை.

அமெரிக்காவில் டாலரை அச்சிடும் பொறுப்பை 12 பெடரல் ரிசர்வ் வங்கிகள் தான் கட்டுப்படுத்துகின்றன. இந்தப் 12 பெடரல் ரிசர்வ் வங்கிகளும் தனியாருக்கே சொந்தமானது. இதில் பங்குதாரர்களாக இருக்கும் நிதிமூலதன கும்பல் தான் அமெரிக்காவின் பணக் கொள்கைகளைத் (Monetory policies) தீர்மானிக்கின்றனர். மேலும், கணிசமான அளவுக்குக்  கடன்பத்திரங்களைத் தாமே ரிசர்வில் வைத்திருக்கின்றனர். அவற்றை வெளிச்சந்தையில் விநியோகிப்பதும் இதே தனியார் நிதிமூலதன வங்கிகள் தான். எனவே, எதார்த்தத்தில் அமெரிக்க அரசு கடன்பத்திரங்கள் மூலம் திரட்டும் தொகையையும் தனியார் வங்கிகள் தான் தீர்மானிக்கின்றன.

இது ஒரு விசித்திரமான சுழற்சி. அதாவது, அமெரிக்கக் கருவூலத்திற்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றன; அப்படி வாங்கிய கடனைக் கொண்டு வங்கிகளுக்குக் கடன் கொடுத்து பெயில் அவுட் செய்யப்படுகின்றது. இதில் கடன் வாங்கியது யார் கொடுத்தது யார்?

இது ஒரு புறம் இருக்க, அமெரிக்க அரசு வெளியிடும் அரசுப் பொதுக்கடன் பத்திரங்களின் ‘கடன்பெறும் தகுதியை’ (credit worthiness) S&P, Moody’s, Fitch போன்ற தனியார் நிறுவனங்களின் மூலம் நிர்ணயம் செய்வதும்  இதே நிதிமூலதன வங்கிகள் தான்.

இது இவ்வாறு இருக்க, கடந்த வாரங்களில் சர்வதேச நாணய நிதியம் IMF தனது கடன் கொள்கைகளைத் திருத்தி அமைத்துள்ளதாகச் செய்தி வந்தது. அதன் படி, பொருளாதார சீர்குலைவுகளைச் சரிசெய்ய ஜி-20 நாடுகள் எனப்படும் வளர்முக நாடுகள் தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. உடனே, தனது தலையங்கத்தில் இதைக் குறிப்பிட்டு புளகாங்கிதம் அடைந்த தினமணி, அமெரிக்காவுக்கே கடன் கொடுக்கும் நிலைக்கு புனித பாரதம்  உயர்ந்து விட்டதாக சொறிந்து கொண்டது.

ஆனால், எதார்த்தம் என்னவென்பதை ஐ.எம்.எஃப் மிகத் தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. “சர்வதேசப் பொருளாதார கட்டமைப்பில் ஏற்படும் திடீர் குழப்பங்களைக் களைந்து கொள்ளும் முகமாகவும் சர்வதேசப் பொருளாதாரத்தின் சமன்பாட்டை நிலைநாட்டவும்” இந்நாடுகளிடம் இருந்து இப்போதைக்கு 500 பில்லியன் டாலர்  அளவுக்கு நிதி திரட்டும் திட்டம் இருப்பதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், எப்போதெல்லாம் சர்வதேச அளவில் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஆன்மாவாக இருக்கும் நிதிமூலதன சூதாட்ட கும்பல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறதோ அப்போதெல்லாம் இந்தியா போன்ற ஏழை நாடுகள் தண்டம் அழ வேண்டும் என்பதே.

ஏற்கனவே அமெரிக்கா தனது மக்களின் ஓய்வூதியம், சேமிப்பு என்று சகலத்தையும் வால் ஸ்ட்ரீட்டை நோக்கித் திருப்பி விட்டுள்ளது; அதுவும் போதாமல் தனது கடன்பத்திரங்களையும் விற்று படையல் வைத்துள்ளது. இப்போது, அமெரிக்காவின் கடன் பெறும் தகுதி தரம் இறக்கப்பட்டுள்ளதால், ‘சர்வதேச பொருளாதாரத்தை’ காக்கும் வேலை ஏழை நாடுகளின் தலைமேல் சுமத்தப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா ஒழுங்காக மாமூல் வந்து சேர்கிறதா என்று பார்த்துக் கொள்ளும் சண்டியர் வேலையை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும்.

ஆக, இப்போது தரமிறக்கப்பட்டுள்ளதும் கூட அமெரிக்காவுக்கு பல்வேறு வகைகளில் சாதகமானது தான்.  இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அன்னியச் செலாவணியாக தேங்கிக் கிடக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை சூதாட்டச் சந்தைக்கு இழுத்து வந்து சுழற்சிக்கு விடும் வேலையை ஐ.எம்.எஃப் கவனித்துக் கொள்ளும். முரண்டு பிடிக்கும் நாடுகள் என்று எதாவது இருந்தால் அதை அமெரிக்க இராணுவம் கவனித்துக் கொள்ளும்.

நிதி மூலதனம் என்பது ஏற்கனவே தேச எல்லைகளையும் அடையாளங்களையும் கடந்து உலகம் முழுவதும் விரவி நிற்கிறது. நவீன தொலைத் தொடர்பு, மற்றும் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட இவர்களின் வலைப் பின்னலின் இயக்கம் நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டதொன்று. ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் பெரும் மூலதனத்தை ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்குக் கடத்துவதும், ஒரு சூதாட்டத்திலிருந்து இன்னொன்றிற்கு மாற்றுவதும் தடையின்றி நடக்கிறது. முன்பொருமுறை சிதம்பரம் மும்பைப் பங்குச்சந்தையில் தங்குதடையின்றி இறங்கும் அந்நிய மூலதனத்தைக் கட்டுப்படுத்திக் கண்காணிப்பது குறித்து லேசாக முணுமுணுத்ததற்கே சென்செக்ஸ் குறியீட்டை ஐந்தாயிரம் புள்ளிகள் இறக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள். உடனே அவர் தனது கருத்தை அவசர அவசரமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?அமெரிக்காவின் கடன் இப்போது அதிகரித்து தான் உள்ளது. ஆனால், அமெரிக்காவின் கடனை அடைப்பது என்பது அவர்களிடம் இருக்கும் அச்சடிக்கும் இயந்திரம் எத்தனை வேகமாக டாலரை அச்சிடுகிறது என்பதைப் பொறுத்தே இருக்கும் என்கிற நிலையில், அந்த டாலரின் மதிப்பை நிலைநாட்டும் இராணுவ வலிமையும் அரசியல் வலிமையும் அதற்கு இன்னமும் இருக்கும் எதார்த்தமான் சூழ்நிலையில் S&Pஇன் அறிவிப்பிற்கான மெய்யான பொருள் வேறு.  இந்தச் சூதாட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பொத்தாம் பொதுவாக பொருளாதார நெருக்கடி என்று சொல்வதும், அதனைத் தீர்க்கும் பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது என்று சொல்லி நட்டத்தை நமது தலையில் கட்டுவதும் தான் இப்போது அமெரிக்காவின் ‘கடன் நெருக்கடி’ நாடகங்கள் அவர்களுக்குப் பயன்படுகிறது

அமெரிக்காவின் இரண்டாவது பொருளாதார நெருக்கடி சுட்டிக் காட்டும் விசயங்கள் இரண்டு. ஒன்று உலகாளவிய முதலாளித்துவ பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது என்பது தற்போது வேறு வழியில்லாமல் வெளியே வருகிறது. அதுவும் வெறும் செய்தியாக இல்லாமல் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைய பாதிக்கும் நடவடிக்கைகளோடு வருகிறது. இந்த நெருக்கடியின் ஊற்று மூலம் ஊக வணிகம் மூலம்தான் இலாபம் ஈட்ட முடியும் என்ற பகாசுர வெறி மற்றும் இழிவு நிலையில்தான் முதலாளித்துவம் வாழ முடியும் என்பது. இரண்டாவது இந்த நெருக்கடிக்கு காரணமாட முதலாளித்துவ நிறுவனங்களை தண்டிப்பதற்கு பதில் அந்த நெருக்கடியும் சுமையும் மூன்றாம் உலக நாடுகளின் மேல் தள்ளி விடப்படுகின்றன.

ஆகவே முதலாளித்துவத்திற்கு மரணக்குழி பறிக்காமல் உலக மக்கள் நிம்மதியான வாழ்வை வாழ முடியாது. அந்த வகையில் உலக முதலாளித்துவ கட்டமைப்பு தோற்றுவித்திருக்கும் இந்த அபாயத்தை உலக மக்கள் போராடுவதன் மூலமே வெல்ல முடியும். இன்று கிரீசிலும், இலண்டனிலும், இத்தாலியிலும், ஸ்பெயினிலும் தொடரும் அந்த போராட்டங்கள் சரியான அரசியல் தலைமைக்காக காத்திருக்கின்றன.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!

123
அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!
படம் – http://www.thehindu.com

ண்ணா ஹசாரேவுக்கு பெருகி வரும் ‘ஆதரவைப்’ பார்த்தால் பயமாக இருக்கிறது. பெயிட் நியூஸ் புகழ் டைம்ஸ் நௌ சேனலில் தொடங்கி என்.டி.டிவியின் தரகு வேலை புகழ் பர்க்கா தத், மாஃபியா உலகத் தொடர்பு மற்றும் கறுப்புப் பண புகழ் பாலிவுட் நடிகர்கள்,  கவர்ச்சிப் பத்திரிகை புகழ் ஷோபா டே, ஆயிரம் ஆ.ராசாக்களுக்கு இணையானவர் என்று தொடர் மின் அஞ்சல்களினால் புகழடைந்துள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், எடியூரப்பா புகழ் பாரதிய ஜனதா, வசூல்ராஜாவில் இளைஞர்களை போட்டுத் தாக்கிய சீனா தானா புகழ் ராக்கி சாவந்த், மற்றும் மலேசிய ஊழல் புகழ் டத்தோ சாமிவேலுவின் ஒரே இலக்கிய நண்பர் ஜெயமோகன் என்று நாட்டில் வாழும் உத்தமர்கள் எல்லாம் அண்ணா ஹசாரேவை ஆதரிக்கிறார்கள்.

ஊருக்கு உழைத்த உத்தமராம் அண்ணன் ஆட்டோ சங்கரை மட்டும் இந்தக் கேடு கெட்ட அரசு தூக்கில் போடாமல் இருந்திருந்தால் அவரும் கூட ஆதரித்திருப்பார். இன்னொரு உத்தமரான ஹர்ஷத் மேத்தா நெஞ்சு வெடித்துச் செத்துப் போனதால் அவருக்கும் வாய்ப்புக் கிடைக்காமலேயே வைகுண்டம் போனது ஒரு சோகம் தான். ஆக்கிரமிப்புப் புகழ் அமெரிக்காவே ஆதரித்திருப்பதால் அவ்விடத்தின் விசேடத் தயாரிப்பான பின்லேடனும் கூட ஆதரித்திருப்பார். துரதிருஷ்டவசமாக அன்னாரும் அல்லாவின் சொர்க்கத்தை அடைந்து விட நேர்ந்து விட்டதால் பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பைத் தவற விட்டுள்ளார்.

உச்ச கட்டமாக, கடந்த சில நாட்களாக கற்பழிப்புகளின் தலைநகரம் என்று போற்றப்படும் தில்லி மாநகரத்தில் எந்த கற்பழிப்புச் சம்பவங்களோ கொலை சம்பவங்களோ இடம் பெறவில்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தில்லி நகரத்தில் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் துவங்கிய பின் குற்றச்சம்பவங்கள் 35% அளவிற்குக் குறைந்துள்ளதாக போலீசு உயரதிகாரிகளே தெரிவித்ததாக அச்செய்திக் குறிப்பில் காணப்படுகிறது. ஏதோ நல்லது நடந்தால் சரி தான். ஆனால், இந்த ‘நல்லது’ இன்னும் கொஞ்சம் நாட்கள் தொடர வேண்டுமானால் மேற்படி காரியங்களில் ஈடுபடும் யோக்கியர்களை ராம்லீலா மைதானத்திலேயே இருக்கச் செய்வது அவசியம். அதற்கு அண்ணா இன்னும் கொஞ்சம் நாட்கள் உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டும். அதற்கு காங்கிரஸ் மனது வைக்க வேண்டும்.

இவ்வாறாக நாடும் நாட்டிலுள்ள நல்லவர்களும் அண்ணாவின் பின்னே திரண்டிருப்பதாகவும் மான ரோசமுள்ளவர்கள் அனைவரும் இதில் தமது பங்களிப்பைச் செலுத்தியே வேண்டும் என்று ஊடகங்கள் கொலைவெறியோடு கூத்தடித்துக் கொண்டிருந்த சூழலில் தான் நமது வினவு தளத்தின் சென்னைப் பகுதி செய்தியாளர்களுக்கு அப்படி ஒரு யோசனை தோன்றியது. பதிவுலக புகழ் குருஜி போன்ற அறிவு ஜீவிகளே மெய்யுலகில் அண்ணாவின் போராட்டத்திற்கு ஆதரவு அலைமோதுவதாக சத்தியமடிக்காத குறையாக தெரிவித்திருந்ததால், நாம் சென்னையில் அண்ணா ஹசாரேவுக்காக நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தைச் சென்று பார்த்து வந்தால் என்னவென்று யோசிக்க, 20ம் தேதி என்று அதற்கு நாங்கள் நாள் குறித்தோம். தமிழகத்தில் அண்ணாவுக்காக ஊழலை எதிர்த்து சண்டமாருதம் செய்யும் அந்த கனவான்கள் யாரென்று அறிந்து கொள்வதில் ஒரு த்ரில் இருந்தது.

________________________________________________________________

சென்னை அடையாறு பகுதியில் இருக்கும் எல்.பி ரோட்டையும் அதில் அண்ணாவின் தமிழக ஆதரவாளர்கள் குழுமியிருக்கும் கட்டிடத்தையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. நாங்கள் காலை பத்துமணிக்கே சென்று விட்டோம்.  முகப்பிலேயே “குழந்தைக்குத் தேவை தாய்ப்பால். மக்களுக்குத் தேவை ஜன்லோக்பால்” என்கிற அரசியல் முழக்கத்தை ப்ளக்ஸ் பேனரில் பிரம்மாண்டமாகக் கட்டி வைத்து பீதியூட்டியிருந்தனர். சாலையோரங்களில் பளபளப்பான ப்ளக்ஸ் பேனரில் ஆத்திரம் பொங்க முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அண்ணா ஹசாரே ‘இந்தியனே எழுந்து வா’ என்று மிரட்டிக் கொண்டிருந்தார்.

கட்டிடத்தின் முன்பக்கம், சாலையோரமாக ஐ.டி துறையில் பணிபுரியும் சில அண்ணா ஆர்வலர்கள் நின்று கொண்டு தேசியக் கொடியை தேசபக்தியுடன் ஆட்டிக் கொண்டிருந்தனர். சேப்பாக்கத்தில் இந்தியா பாக்கிஸ்தான் மேட்சைப் பார்க்க வரும் ரசிகர்களைப் போல முகத்திலும் மற்றும் வெளியே உடல் தெரிந்த பாகத்திலெல்லாம் தேசியக் கொடியை வரைந்து வைத்திருந்தனர். வருவோர் போவோரிடமெல்லாம் “சார் சார் கரப்ஷனுக்கு எகென்ஸ்ட்டா ஒரே ஒரு சைன் பண்ணிட்டுப் போங்க சார்” என்று அழைத்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர் “கரப்ஷன்.. டவுன் டவுன்” என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

சரியாக நாங்கள் நுழைந்த நேரமாகப் பார்த்து சாலையில் ட்ரைசைக்கிளில் காய்கறிகளை வைத்துக் கொண்டு சென்ற ஒரு வியாபாரியையும் கையெழுத்திட அழைத்தனர். சரியாகப் புரியாமல் குழம்பியவர், “இன்னாது இது” என்று விசாரித்தார். ‘சார் ஊழலை ஒழிக்க ஒரு கையெழுத்து…..” என்று ஒரு பெண் ஆர்வலர் இழுக்க, “அடப் போம்மே… வோட்டுப் போட்டே ஒழியல; கையெழுத்துப் போட்டா ஒழியப்போவுது” என்று விட்டு சைக்கிளை ஏறி மிதிக்க ஆரம்பித்தார். “இல்லிட்டரேட் மோரோன்” என்று அந்தப் பெண் ஆர்வலர் பக்கத்தில் நின்ற வட இந்திய ஆர்வலரிடம் முனகிக் கொண்டே முகத்தைச் சுளித்துக் கொண்டார்.

நாங்கள் கட்டிடத்தின் உள்ளே நுழைந்தோம். ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் தன்னார்வ இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பேஷன் பெரேடுக்கு வந்ததைப் போல் உடையணிந்து கொண்டு லேப்டாப்பும் ஐ.போனும் சகிதம் பரபரப்பாக குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களின் கழுத்திலும் இடையிலும் ஐ.டித் துறை ஊழியர்கள் அணிவது போல் புகைப்படத்துடன் கூடிய ஐ.டி கார்டுகள் தொங்கியது. அதில் ஒருவரை மடக்கி நிகழ்ச்சியைப் பற்றி விசாரித்தோம். “சார் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவா ஆறு நாளா இங்க உண்ணாவிரதம் இருந்திட்டு இருக்காங்க சார். லோக்கல் மீடியா கவரேஜ் கிடைக்கல சார். ஒன்லி நேஷனல் மீடியாஸ்” என்று விசனப்பட்டுக் கொண்டார். ஏற்பாடுகளைப் பற்றி கேட்டோம். “இங்கெ பண்ணிருக்க அரேன்ஞ்மென்ட்ஸ் எல்லாம் டொனேஷன் வந்ததிலேர்ந்து தான் பண்ணிருக்கோம். நீங்க உள்ளே போங்க அப்புறமா பேசுவோமே” என்று நகர்ந்தார்.

உள்ளே ஒரு பெரிய ஹால். அதில் ஒரு பக்கம் மேடை போல அமைத்திருந்தனர். அதில் சிலர் அமர்ந்திருந்தனர். அதில் இரண்டு காவியுடைச் சாமியார்களைக் காண முடிந்தது. மூன்று இருபத்தோரு இன்ச் எல்.சி.டி டீவிக்கள் பொருத்தியிருந்தனர். அதில் டைம்ஸ் நௌ செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. பக்கத்திலேயே கடந்த ஆறு நாட்களாக சோறு தண்ணீர் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கென்று தனியே கழிப்பறை அமைத்திருந்தனர்.

சில அய்யராத்து மாமிகள் தங்கள் குழந்தைகளுக்கு நேரு ட்ரெஸ் போட்டு கையில் கொடியோடு அழைத்து வந்திருந்தனர். அந்தக் குழந்தைகளை வரிசையாக மேடையில் நிற்க வைத்து போட்டோ பிடித்துக் கொண்டனர். இது இரண்டாம் சுதந்திரப் போராட்டமல்லவா? நாளைப் பின்னே ‘நானும் கச்சேரிக்குப் போனேன்’ என்று பொளந்து கட்ட இது போன்ற ஆவணங்கள் அவசியமாயிற்றே? இதில் யார் குழந்தையை முன்னே நிறுத்தி முழுமையாக கவர் செய்து கொள்வது என்பதில் சுதந்திரப் போராளிகளின் தாய்மார்களுக்கும் லேசாக முட்டிக் கொண்டது. நாகரீக மனிதர்களல்லவா அதனால் உண்டான உள்ளக்கடுப்பை நாசூக்கான மொழியில் ‘ஷிட்’ என்று வெளியேற்றிக் கொண்டார்கள்.

நாம் மேடையை நெருங்கினோம். ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஒருவர் காலாற நடக்க எண்ணி எங்களைக் கடந்து சென்றார். ஐந்து நாள் சாப்பிடாமல் படு உற்சாகமாக காணப்பட்ட அவரை அணுகி பேச்சுக் கொடுத்தோம். “சார்… மொத்தல்லே ‘ஜன்லோக்பால்’ அப்படின்னா ஒரு சமஸ்கிருத வார்த்தை. ஏற்கனவே இருக்கற லோக்பால் வேஸ்டு சார். இப்போ.. நாம ஒத்தர் மேல கம்பளெயின்ட் கொடுக்கறோம்னு வைங்க. ஒருவேள அது ருஜுவாகல்லேன்னா நம்பளயே பிடிச்சு உள்ள போட்ருவான் சார். ஆனா பாருங்க இந்த ஜன் லோக்பால்ல அப்படியெல்லாம் சிட்டிசன்சுக்கு ப்ராப்ளம் இல்லை” என்று துவங்கியவரை நாம் இடைவெட்டினோம் –

“சரிங்க.. இப்ப பாத்தீங்கன்னா, ஸ்பெக்ட்ரம் ஊழலையே எடுத்துக்கங்களேன். டாடா அம்பானியெல்லாம் தான் இதனாலே பலன் அடைஞ்சிருக்காங்க. அவங்க கிட்ட இருந்து இந்த ஊழலாலே ஏற்பட்ட நட்டத்தை எப்படி வசூலிப்பதுன்னு ஜன்லோக்பால் ஒன்னும் சொல்லலியே. அதுமட்டுமில்லாம, ரிலையன்ஸே அண்ணா ஹசாரேவை ப்ரமோட் பன்ற டைம்ஸ் நௌவுக்கு விளம்பரமும் கொடுக்கறாங்க. இதைப் பத்தி என்ன சொல்றீங்க” என்றோம்.

“அதாவது சார்.. ஜன்லோக்பால் வந்தா நாட்டுக்கு நல்லது சார். அப்படி இல்லாட்டா அண்ணா ஹசாரே இவ்வளவு தூரம் போராட மாட்டாரே? வயசானவரு  பாஸ் அவரு… புரிஞ்சுக்கங்க. ரிலையன்ஸைப் பொருத்தளவில இது அவங்களுக்கு பிஸினஸ் பாஸ். பொலிடீஷியன்ஸ் தான் இந்த மாதிரி டீலிங்ஸை பத்திரமா பாத்துக்கனும்.. ஏன்னா அதுக்குத் தானே அவங்களை எலக்ட் பண்ணிருக்கோம்? அப்படிச் செய்யாத போது ஜன்லோக்பால் அவங்களை தண்டிக்கும் பாஸ்”

“அது சரிங்க, ஆனா நீங்க சொல்றாப்ல பார்த்தா, ஆ. ராஜா வாங்கின லஞ்சத்தை மட்டும் ரெக்கவர் பண்ணித் தர்றது தான் ஜன்லோக்பாலோட வேலை. கூடவே அவருக்கு ஒரு அஞ்சு வருசமோ பத்து வருசமோ உள்ள வைப்பாங்க. ஆனா, அந்த ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடில வர்ற  மத்த அமௌன்டெல்லாம் பிஸினஸ் தானா?”

“ம்ம்ம்… அது வந்து.. எனக்கு சரியா சொல்லத் தெரியலை.. ஆனா, ஜன்லோக்பால் வந்தா பிரச்சினை தீர்ந்துடும் அவ்ளோதான். சரி நான் கொஞ்சம் பிஸி. நீங்க எங்க வாலண்டியர்ஸ் யார்ட்டயாவது பேசிப்பாருங்களேன்” என்றவாறே எஸ்கேப்பாகப் பார்த்தவரைத் தடுத்து,

“சரி.. ஒரே ஒரு கேள்வி. ஜன் லோக்பால் அமைப்பால் ஊழல் பணத்தை இரண்டே வருசத்தில் ரெக்கவர் செய்ய முடியும்னு சொல்றீங்களே, சாதாரணமா இந்த மாதிரி பணமெல்லாம் ஸ்விஸ் வங்கில தானே போட்டு வைக்கிறாங்க? அந்த நாட்டு சட்டப்படி நீங்க கேட்ட போதெல்லாம் பணத்தைத் திரும்பத் தரமாட்டானே அதுக்கு ஜன்லோக்பால் என்ன வழி சொல்லுது?” என்று கேட்டோம்.

“ம்ம்ம்… அது சார்… அதெல்லாம் எனக்குத் தெரியாது சார். நீங்க ஆர்க்கனைசர் கிட்ட கேளுங்களேன்” என்று விட்டு விறுவிறுவென நடையைக் கட்டினார். அவர் சுத்தமாகக் களைப்பே இல்லாமல் படு உற்சாகமாகவும் தெம்பாகவும் இருந்தார். ஐந்து நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருந்தும் கூட இப்படி ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் ‘உண்ணா’விரதம் பற்றி வியந்து கொண்டே முதலில் சந்தித்த போராட்ட அமைப்பாளரைத் தேடிப் பிடித்தோம்.

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதாக அறிமுகப்படுத்திக் கொண்டவரிடமிருந்தும் மேலே உள்ள கேள்விகளுக்கு அதே விதமான பதில் தான் வந்தது. நாட்டில் நிலவும் ஊழலுக்கான காரணம் என்னவென்று கேட்டோம்,

” பாஸ்… இந்த நாட்டை ஆள்றது  யார் தெரியுமா?”  என்று விட்டு எங்களை உற்றுப் பார்த்தவர் எங்களிடம் இருந்து எந்த மறுமொழியும் வராதது கண்டு திருப்தியுற்றவராகத் தொடர்ந்தார் ” ரோமன் கத்தோலிக் கும்பல் தான் சார் இந்த நாட்டையே ஆள்றாங்க. முதல்ல இந்த சோனியா காந்திய நாட்டை விட்டுத் துரத்தினாலே ஊழல் ஒழிஞ்சுடும் சார்… க்ரிஸ்டியன் மிஷனரிஸோட சதி தான் சார் இப்ப நம்ம நாட்ல இத்தன ஊழல் நடக்கறக்கே காரணம்” என்று சொல்லி விட்டு ஏதோ பெரிய சதியைக் கண்டுபிடித்து விட்டவர் போல் பெருமையாகப் பார்த்தார்.

“அப்ப கர்நாடகாவில் எடியூரப்பா செய்த ஊழலுக்கும் ரோமன் கத்தோலிக் தான் காரணமா?” என்று சிரிக்காமல் முகத்தை வைத்துக் கொண்டே கேட்டோம்.

“ஆங்.. அது வேற பாஸ். நீங்க மொத்தமா பார்க்கனும் பாஸ்.. இப்ப பாருங்களேன், படிச்ச நாம இப்படி கஷ்டப்படறோம்.. படிக்காத மக்களுக்கு எதுவுமே புரியலை பாத்தீங்களா… இங்க வந்திருக்கதில ஒத்தனாவது லோக்கல் ஆளு இருக்கானா சார்? இப்படி இருந்தா எப்படி சார் நாடு முன்னேறும்?” என்று நமது கேள்விக்கு பதில் அளிக்காமல் அடுத்த பிரச்சினைக்குள் தாவினார்.

” அப்படியா… ஆனா, ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு அடிப்படையாக அமைந்த சட்டங்களைப் போட்டதே பாரதிய ஜனதா ஆட்சியில தானே அதுக்கும் ரோமன் கத்தோலிக் தான் காரணமா?” என்று மீண்டும் அதே இடத்துக்கு வந்தோம்.

“சார்.. நீங்க கேட்டதையே கேட்கறீங்க.. முதல்ல ஒன்னு புரிஞ்சுக்கங்க. ஜன்லோக்பால் வந்தா பிரச்சினை தீரும். இப்ப அதை எதிர்க்கறது யாரு? காங்கிரஸ் தானே? சோனியா தானே? அப்ப இது ரோமன் கத்தோலிக் சதி தானே? ரிசர்வேஷன் கொண்டாந்ததிலேர்ந்து எல்லா பிரச்சினைக்கும் காங்கிரஸ் தானே காரணம்? பாருங்க சார்.. ஆ.ராசா மாதிரி ஒத்தரை மினிஸ்டர் ஆக்கினா ஊழல் நடக்கத்தானே செய்யும்? அமைச்சர் ஆக்கினது யாரு? சோனியா தானே? அதான் சொல்றோம்… பர்ஸ்ட்டு பேர்ப்பர்லாம் படிங்க சார். தோ.. நாங்க பாம்லெட்ஸ் கூட போட்ருக்கோம் படிச்சி பாருங்க” என்று பொங்கித் தள்ளியவரின் அரசியல் புரிதல் எமது தலைகளை 360 டிகிரிக்கு சுழற்றியடிக்கவே கேள்வியை மாற்றினோம்.

“சரிங்க லோக்கல் ஆளுங்க யாருமே பெரிசா வரலியே.. அதிகமா நார்த் இண்டியன் ஐ.டி வொர்க்கர்ஸா தெரியறாங்களே?” என்றோம்..

“ஏன்.. நான் கூட தமிழ் தான் சார்.. மொழியெல்லாம் பார்க்காதீங்க சார். இப்படிப் பாத்துப் பாத்து தான் தமிழ்காரன்னாலே நார்த்ல கேவலமா பாக்கறான். லோக்கல் சேனல்லெ பெரியளவில கவரேஜ் பண்ண மாட்றான்.. இதே சன் டி.வில ஒரு கவரேஜ் கிடச்சிருந்தா ஒரு பத்தாயிரம் பேராவது வந்திருப்பான்.. பட் அன்பார்சுனேட்லி கிடைக்கலே.. ஆனா இங்க வந்திருக்கவங்கெல்லாம் குவாலிட்டி பீபிள்.. தீஸ் பீபிள் கேன் மேக் சேஞ்சஸ்.. யு நோ? படிக்காதவன் வந்தா ஓக்கே.. வரலேன்னா அவனுக்கும் சேத்தே நாம தானே பார்த்துக்கனும்?” என்றார்..

“ஏன் டி.வி கவரேஜ் வேணும்? நேரா மக்களைப் பாத்து போராட்டத்துக்கு வரச் சொல்லி கூப்பிடலாமே?” என்று கேட்டோம்.

“நாங்க எல்லாமே வொர்க் பன்றவங்க. ஒன்லி சாட்டர்டே அன்ட் சன்டே லீவ். மோர் ஓவர், மத்த நாள்ல வேற பர்செனல் கமிட்மென்ட்ஸ் இருக்கும். சோ.. இதையே ஒரு வேலையா வச்சில்லாம் பண்ண முடியாதுங்க. நேரம் கிடைக்கும் போது பண்றோம். தட்ஸ் ஆல்.. சோ.. மக்கள் தான் டி.விலயோ நியூஸ்லயோ பாத்துட்டு வரணும்.. போய் சொல்லலாம் நேரம் கிடையாது. ஓக்கே?” என்றவாறே நகரப் பார்த்தவரிடம் அடுத்து ஒரு கேள்வியைப் போட்டோம்.

“ஜன்லோக்பால் மசோதாவையும் அண்ணா ஹசாரேவையும் ஆதரிக்கும் தேசியவாத காங்கிரஸில் இருந்து டைம்ஸ் நௌ சேனல், பர்க்கா தத், உள்ளிட்டு பலரின் மேலும் கூட முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளதே? பாரதிய ஜனதாவே பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட கட்சியாயிற்றே? இங்கும் கூட பல பாரதிய ஜனதா கட்சியினரையும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரையும் காண முடிகிறதே?”

“அதாவதுங்க… ஒரு நல்ல விஷயம் நடக்குது. அதுக்கு யார் சப்போர்ட் பண்ணா என்னா சார்? நல்லவனோ கெட்டவனோ ஒரு பொதுக்காரியம்னு வரும் போது சப்போர்ட் பண்ணா அதை ஏத்துக்கிடறது தானே புத்திசாலித்தனம்?” என்றார்.  எமக்கோ, ‘கோழி குருடா இருந்தா  என்ன.. கொழம்பு ருசியா இருக்கா பாரு’  என்கிற கவுண்டமணியின் வசனம் காதுகளுக்குள் ரீங்கரித்தது.

“அப்படின்னா… ஆ.ராசாவும் சுரேஷ் கல்மாடியும் கூட ஜன்லோக்பாலை ஆதரிச்சா அந்த ஆதரவை ஏத்துக்கிடுவீங்களா?” என்றோம்

“…” பதில் எதையும் அளிக்காமல் எங்களைக் கடந்து சென்று விட்டார் அவர்.

__________________________________________________________

பார்ப்பனர்கள், வட இந்தியர்கள், பார்ப்பனராக துடிக்கும் சில மாநிறத் தோல் வசதியான தமிழர்கள் என்ற கூட்டத்தில் கருப்புத் தமிழன் ஒருவர் கூட இல்லை. மொத்த கூட்டத்தில் சுண்டி இழுக்கும் வெள்ளை நிறம் கொண்டோர் சுமார் 80 சதவீதம் இருக்கும். அவ்வகையில் இங்கு சராசரி தமிழர்கள் யாரும் கண்ணில் தென்படவில்லை. நாங்கள் பேசிய அனைவருமே சமச்சீர் கல்வியை கடுமையாக எதிர்த்தார்கள். இட ஒதுக்கீட்டை இகழ்ச்சியுடன் எதிர்க்கும் மனநிலை பலருக்கும் இருந்தது. இதைத்தாண்டி, ஈழம், மூவர் தூக்கு, விலைவாசி உயர்வு என எந்த பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் அறிந்திருக்கவில்லை அல்லது கவலைப்படவில்லை. மேலும் ஜன் லோக்பாலின் என்றால் என்ன, அதன் விசேசம் என்ன என்று அநேகமாக யாருக்கும் தெரியவில்லை.

முகத்தில் தேசியக்கொடி பெயிண்ட் அடிக்க ரூ.20, பதிவுக் கட்டணம் ரூ.20, ஸ்டிக்கர் ரூ.10 என்று உள்ளே நுழைபவர்கள் கட்டாயமாக மொய் எழுதவேண்டும். இதைத்தாண்டி நன்கொடை தனி. நன்கொடைகூட பத்து இருபது எல்லாம் பர்சில் பதுங்கிக் கொண்டு நூற்றில் தொடங்கி விழுந்தவாறே இருந்தது. டைம்ஸ் நௌ நேரடி ஒளிபரப்பிற்காக அவ்வப்போது ஒருவர் இயக்குநர் போல ஷாட்டை ரெடி செய்தார். காமரா முன்னர் அழகானவர்களை நிற்க வைத்து, காமரா பின்னால் இருவரை முழக்கமிட வைத்து, காமரா மேன் காமராவை ஷேக் செய்து எடுப்பது மூலம் ஏதோ பெரிய கூட்டம் இருப்பதாக செட்டப் செய்து காண்பித்தார்கள். ரோமன் கத்தோலிக்க சதி என்ற இரகசியம் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தொடங்கி அக்ரஹார மாமிகள் வரை பேசும் பொருளாக இருந்தது. வட இந்தியர்களோடு கொஞ்சம் ஆந்திர ஐ.டி கும்பலும் இருந்தது.

இதற்கிடையே “பாரத் மாதா கீ ஜே” “வந்தே மாதரம்” என்கிற கூச்சல்கள் காதைக் கிழித்துக் கொண்டு கிளம்பவே அது வந்த திசையை நோக்கிச் சென்றோம். அங்கே அண்ணாவின் ஆதரவாளர்கள் சிலர் நகரை பைக்கில் வலம் வந்து கொண்டிருப்பதன் ஒரு அங்கமாக இந்நிகழ்வு நடக்கும் இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். முன்னே சில பைக்குள் கடந்து சென்றதைத் தொடர்ந்து சில கார்களும் அந்த பவனியில் தொடர்ந்து வந்தன.

அதிலொன்றின் பின் சீட்டில் டீ ஷர்ட்டும் ஷார்ட்சும் அணிந்து அமர்ந்திருந்த ஒரு இளைஞர் வலது கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டியிருந்தார். அதில் ஒரு தேசியக் கொடியைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தார் – இடது கையில் பாதி குடித்திருந்த நிலையில் ஒரு கிங் பிஷர் பாட்டில்! பீரும் தேசியக் கொடியும் செம காம்பினேஷன்! பதிலவுலக குருஜியின் மெய்யுலக அறிவை எண்ணியும் ஒரு ஆச்சரியம் அப்போது வராமலில்லை.

காரின் உள்ளே ஏர். ஆர். ரகுமான் உச்சஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தார் – “வண்ட்டேஏஏஏ ஏமாத்தரம்ம்ம்ம்ம்…”

_____________________________________________________________

– வினவு செய்தியாளர்கள்
______________________________________________________

இருக்கிறவனுக்கு முதலாளித்துவம், இல்லாதவனுக்கு கம்யூனிசமா?

5

நூல் அறிமுகம்: “நிலம் என்னும் நல்லாள்”

“இல்லாதவர்கள் ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசையில் பொதுவுடைமை பேசுகிறார்கள், இருப்பவர்கள் இழக்க நேரிடுமே என்று முதலாளித்துவம் பேசுகிறார்கள்”, என்றார் நண்பரொருவர். அவர் சொல்வது உண்மையாக இருந்தால் இல்லாதவர்கள் அனைவரும்  ஒன்றுபட்டு இந்நேரம் புரட்சி வெடித்து சோசலிசமல்லவா மலர்ந்திருக்கவேண்டும்?

ஒரு போதும் செல்வந்தர்களாகிவிட முடியாதென்று தெரிந்தாலும்  செல்வம் சேர்த்துவிடலாமமென கற்பனை செய்துக்கொண்டாவது வாழ்க்கையை தள்ளுகிறவர்களை  எல்லோருக்கும் எல்லாம் என்ற சோசலிசத்தை நோக்கி வருவதற்கு எது தடுக்கிறது?

கம்யூனிசம் என்றால் இப்போது இருக்கும் நிலையியிலிருந்து கீழேதான் வாழ வேண்டியிருக்கும் என்று  பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எல்லாருக்கும் எல்லாம் என்றால் தமக்கு எதுவும் கிடைக்காதென அவநம்பிக்கை கொள்கிறார்கள். (எனில், மற்றவர்களிடமிருந்து சுரண்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுதான் அது தன்னிடம் வருகிறது என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார்கள் எனபது ஒரு பக்கம்.) தமது வசதி வாய்ப்புகள் பறி போய்விடும், தற்போதைய சுகமான வாழ்க்கை கிடைக்காது என்று எண்ணிக்கொள்கிறார்கள்.

இதில், முதலாளித்துவத்தின் வதந்திகள் – “தமது பெண்களும் பொதுச் சொத்தாகி விடுவார்கள் அல்லது உனக்கென்று எந்த சொத்தும் இருக்காது, உன் வருங்கால சந்ததிக்கு எதுவும் சேர்த்து வைக்க முடியாது, இன்ஷ்யூரன்ஸ் எடுக்க முடியாது, கம்யூனிசமென்றால் எல்லோரும் சோம்பேறிகளாகி விடுவார்கள், யாருக்கும் பொறுப்பு இருக்காது அல்லது  கடினமாக உழைப்பவருக்கும் படுத்துறங்கி நாளைக் கழிப்பவருக்கும் வித்தியாசமில்லையா” முதலான அவதூறுகள் காரல் மார்க்ஸ் காலத்திலிருந்து இன்றளவும் பரப்பப்பட்டு உயிருடன் அலைந்து கொண்டிருக்கின்றன.

அதோடு, இல்லாதவர்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை கிடைக்க வழி செய்வதுதானே, அவர்களை மேலே முன்னேற வைப்பதுதானே என்று தமக்கிருப்பதை இழக்காமல் வாழ்வதையே சமத்துவமாகக் கருதிக்கொள்கிறார்கள்.

உண்மையில் கம்யூனிசம் மக்களுக்கு இதைத்தான் வழங்குகிறதா? புதிய சமுதாயத்தை, வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்திற்கு உறுதி அளிக்கும் கம்யூனிசம்,மக்களிடமிருந்து இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் பறித்துக்கொண்டு முன்பு வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையைவிட கீழே தள்ளிவிடப் பார்க்கிறதா?

சோவியத் ரஷ்யாவில் கம்யூனிசம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மனிதகுலம் காணாத சாதனைகளை குறுகிய காலத்தில் அம்மக்கள் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.

எனில், அது அவ்வளவு எளிதாகவா இருந்தது? முதலாளித்துவ நாடுகளில் சுரண்டல்களுக்கிடையிலே வாழும் நமக்கே இவ்வளவு சந்தேகங்கள் இருக்கும்போது குதிரைகள்,மாடுகள், கோழிகள், கொஞ்சம் நிலம் என்று விவசாயம் செய்த அம்மக்கள் எந்த பிரச்சினையுமின்றி சோசலிசத்தை ஏற்றுக்கொண்டனரா?

நிச்சயமாக இல்லை.  சொத்துரிமைக்காக உடன்பிறந்தவராக இருந்தாலும்  ஜென்மப்பகை பாராட்டுவதை பைபிள் காலத்திலிருந்தே காணலாம். ஒரு சதுர அடி நிலம் உடன்பிறந்தவனுக்கு அதிகப்படியாகப் போய்விட்டது என்ற காரணத்துக்காக ரத்தம் சிந்தி ஜெயிலுக்கு செல்வதை நாம் கண்கூடாகவே கண்டிருப்போம். கையளவு நிலமாக இருந்தாலும் கூட அவ்வளவு எளிதில் யாரும் விட்டுக்கொடுத்து விடுவதில்லை. இணையத்தில் கூட யாரிடமாவது ஏதாவது பிரச்சினையென்றால் “அவருக்கும் எனக்கும் வாய்க்கா வரப்புத் தகராறா” என்ற கமெண்டை சர்வசாதாரணமாகக் காணலாம். எனில்,நிலத்தின் மீது மக்களுக்கிருக்கும் பிணைப்பை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமாக இருக்காது.

அப்படியிருக்கும்போது, நிலத்தை அனைவருக்கும் பொதுவாக்கிவிட்டு விவசாயம் செய்ய வேண்டுமென்பதை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டனர்? எல்லாம் ஒரு சொடுக்கில் வழுக்கும் வெண்ணெய் போல நடந்து விட்டதா? முதலாளித்துவம் பரப்பிவருவது போல உண்மையில் சர்வாதிகாரமாகத்தான் சோவியத் ஆட்சி நடைபெற்றதா? கூட்டுப்பண்ணைக்காக ருஷ்ய மக்கள் தங்களது சொத்துரிமையை இழந்தனரா?

இந்த கேள்விகளுக்கு மட்டுமல்ல,  கூட்டுப்பண்ணைக்காக, சோசலிசத்துக்காக தங்களை தயார்படுத்திக் கொண்ட க்ராமியாச்சி கிராம மக்களின் வாழ்க்கையை, அவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்களை, கலகங்களை, சந்தேகங்களை, துரோகங்களை நம் கண்முன் விரிக்கிறது  – மைக்கேல் ஷோலோக்கோவ் எழுதிய ”நிலம் என்னும் நல்லாள்” நாவல்.

_____________________________________________

க்ராமயாச்சி கிராமத்தில் கூட்டுப்பண்ணையை உருவாக்குவதற்காக மாவட்ட கமிட்டியால் அனுப்பப்படுகிறார் டாவிடேவ். அவர் வரும் போதே கிராமத்தில் நடுத்தர விவசாயிகளை, வழி தவறிச் செல்பவர்களையும் பற்றி அறிவுறுத்தப்பட்டே அனுப்பப்படுகிறார்.

கிராம சோவியத்துக்குச் சென்று செயலாளரையும், தலைவரையும் சந்திக்கிறார். அவர்கள் ஒரு கூட்டுச்சங்கம் இருப்பதாகவும் , டிராக்டர் இல்லாததால் மாடுகளை வைத்து உற்பத்தியை பெருக்குவதும், வாங்கிய கடன்களை அடைக்கமுடியததாலும் அது செத்ததாகவும் ஆகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்,செயலாளர் நாகுல்நாவும், தலைவரான ரஷ்மியட்நாவும்.

மேலும் கூட்டுச்சங்கத்தின் தலைவர் வியாபாரியாக மாறிவிட்டதாலும் சரியானபடி இல்லையென்று சொல்கிறார்கள். டாவிடேவ் ஏழை கொசாக்கியர்களையும் விவசாயிகளையும் அடுத்த நாளே கூட்டுப்பண்ணை சங்கம் தொடர்பாக சந்திக்கவும் கூட்டம் கூடவும் வேண்டுமென்கிறார்.

இதற்கிடையில் பழைய தளகர்த்தர்கள் போலீஸ்டீவும், யாக்கோவ் லூக்கீச்சும் இரவு முழுக்க கூடிப்பேசுகிறார்கள். அதில் போலீஸ்டீவ் கார்ல் மார்க்ஸின் கம்யூனிச அறிக்கையை வாசித்திருப்பதாகவும், கூட்டுப்பண்ணை அவர்களது சொத்துகளை முழுக்க அபகரித்துவிடுமென்று அறிந்திருப்பதாகவும் கூறுகிறான்.”கூட்டுப்பண்ணையில் ஆரம்பித்து கம்யூனில் கொண்டுபோய் கடைசியில் சொத்துரிமையையே அது ஒழித்துவிடும். மாடுகள், காளைகள் மட்டுமல்ல,குழந்தைகளைக் கூட அரசாங்கமே எடுத்துக்கொள்ளும், வாத்து சூப்பும், கோதுமைக் கஞ்சியும் சாப்பிட நமக்கு பிரியமாக இருந்தாலும் புளித்த பீரைத்தான் கொடுப்பார்கள், கொத்தடிமையாக கடைசிவரை நிலத்தோடு கட்டுண்டு கிடக்க வேண்டியதுதான்” என்று பேசி இருவரும் தங்களது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரையிலும் கம்யூனிஸ்டுகளுக்கும் போல்ஷிவிக்குகளுக்கும் எதிராக போரிடுவதாக கையொப்பம் இடுகிறார்கள்.

அடுத்தநாள் தீவிர தொழிலாளிகளும், கொசாக்கியருமாக 32 பேர் ஆண்களும் பெண்களுமாக கூடியிருக்க, டேவிடாப் கூட்டுப்பண்ணையை பற்றியும் அதன அவசியத்தைப் பற்றியும் பேசுகிறான். ரத்தத்தை உறிஞ்சும் நிலச்சுவான்தார்களை ஒழித்து ஆடுகள், மாடுகள், கருவிகளை சமூகச் சொத்தாக்கினால் மட்டுமே அனைவரும் நீடித்து வாழ முடியும். நிலச்சுவான்தார்களிடம் தானியம் இருந்தாலும் அவர்கள் கொடுக்க மனமில்லாமல் கீழே கொட்டுவதால்தான் வறுமையில் வாடுகிறீர்கள், உங்களிடம் கொடுக்க மனமிருந்தாலும் தானியங்கள் இல்லை. கூட்டுப்பண்ணை ஒன்றினால்தான் விவசாயி வறுமையிலிருந்து விடுதலை பெறமுடியும். இல்லையென்றால் இரக்கமற்ற நிலச்சுவான்தார்கள் இரத்தத்தை உறிஞ்சிவிடுவார்கள் என்று தோழர் லெனின் இறக்கும் போது கூட கூறியதாகவும் சொல்கிறான்.

கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுகிறது. உடனடியாக சேர பலர் முன்வருகிறார்கள். அவர்களது வர்க்க உணரச்சியை பாராட்டும் டாவிடேவ், இவர்களே சோவியத் ரஷ்யாவின் ஜீவநாடி என்றும் கூட்டுப்பண்ணையில் சேர தயங்கிக்கொண்டிருக்கும் நடுத்தர விவசாயிகளையும் அழைத்துவரவேண்டும் என்று கூறுகிறான்.

இதன் நடுவில் நாகுல்நாவ் உணர்ச்சி மேலிட்டவனாய், சொத்துரிமையால் தங்கள் குடும்பத்துக்கும் அண்டை வீட்டார் குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட சிறுபகை எப்படி அண்டைவீட்டுக்காரரின் மகனை காவு கொண்டது என்றும் அதற்காக தான் பல ஆண்டுகள் தன் குடும்பத்தை விட்டு விலகியதையும் கூறுகிறான். நகரத்தில் தொழிலாளியாக இருந்து தற்போது போல்ஷிவிக்காக திரும்பி வந்திருப்பதாகவும் நடப்பவற்றை பார்க்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் உலகபுரட்சி அண்மையில் நம்மை நாடி வந்துக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறான்.

அடுத்ததாக, நிலச்சுவான்தார்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு குழுக்கள் பிரிக்கப்படுகின்றன. தானியங்கள், கால்நடைகள், கருவிகள் அனைத்தும் பதிவேடுகளில் குறிக்கப்பட்டு பொதுச் சொத்தாக்கபடுகிறது. இதை ஏற்கெனவே ஊகித்த சில நிலச்சுவான்தார்கள் தங்களது செல்வத்தை,கால்நடைகளை விற்று தங்கமும் காசுகளுமாக்கி புதைத்து வைக்கின்றனர். அல்லது தெரிந்த நண்பர்களிடம் கொடுத்தனுப்பி விடுகின்றனர்.

நிலச்சுவான்தார்களின் வீட்டை நோக்கி போகும் குழுக்கள் அவர்களின் வீடுகளில் பெண்களையும் குழந்தைகளையுமே காண்கின்றனர். அவர்களும் பயத்தில் உறைந்து ஒளிந்து கொண்டிருக்கின்றனர். தட்டுமுட்டு சாமான்களை சாக்குகளில் கட்டியபடி இருக்கின்றனர். அல்லது காவல்நாய்களை அவிழ்த்துவிட்டு  கூட்டுச்சங்கத்தாரை கடிக்கவிடுகின்றனர்.

குழுக்கள், வீடுகளிலிருந்து ஆடைகளை, புது பூட்சுகளை, தங்கம் போன்ற தானியங்களை, தேனை  களஞ்சியத்துக்கு கொண்டு வருகின்றனர். கந்தல் துணிகளை தைத்து தைத்து வரிகள் விழுந்த ஆடைகளைக் கொண்டவர்களுக்கு புது ஆடைகள் வழங்கப்படுகிறது. ஒரே ஆடையை துவைத்து நிர்வாணமாக நின்று கணப்பு அடுப்பருகே உலர்த்திவிட்டு அதே ஆடையை அணிந்து கொள்ளும் மக்கள் அடுத்த குளிர்காலம் வரை இது வரும் என்ற மகிழ்ச்சியை புதிய ஆடைகள் தருகிறது.

குழுவில் ஒருபகுதியினர் நிலச்சுவான்தார்கள் ஓட்டிச் சென்ற குதிரை,கால்நடைகளை தேடி நிலச்சுவான்தார்களிடம் துப்பாக்கி இருந்தாலும் உயிருக்கு பயப்படாமல் பின் தொடர்ந்து சென்று அவர்களை திரும்ப அழைத்து வருகின்றனர். இதற்கு நடுவில் அக்குழுவில் ஒருவனான ஆன்றி தன்னால் நிலச்சுவான்தார்களிடமிருந்து பொருளை கைப்பற்ற முடியாதென்றும் தான் அதற்காக பயிற்றுவிக்கப்பட்டவன் அல்லவென்றும் நிலச்சுவான்தார்களை ஒழிப்பது பாவமென்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள்  மரண பயத்தில் மூழ்கி கிடக்கிறார்களென்று இரக்கமேற்படுவதாகவும் கூறி பின்வாங்குகிறான்.

ஆன்றியிடம், “நம் குழ்ந்தைகள் வடித்த கண்ணீருக்காக நம் விரோதிகள் என்றாவது அழுததுண்டா அல்லது தாங்கள் கொன்ற குழந்தைகளுக்காக கலங்கியது உண்டா?வேலை நிறுத்தம் நடந்தபோது எனது தாய்க்கு வேலை போய்விட்டது, நாலு பிள்ளைகள், அவள் எங்களுக்கு உணவு வழங்குவதற்காக நாள் முழுவதும் சுற்றி விருந்தினருடன் வருவாள். திரைக்கு அந்தப்புறம் நாங்கள் இருப்போம். சிறுபிள்ளைகள். சமயத்தில் குடிகாரர்கள் வருவார்கள். என் தங்கைகள் அழுதுவிடக்கூடாதென்று அவர்கள் வாயை பொத்துவேன். அப்படி சம்பாதித்த காசுதான் எங்களுக்கு ரொட்டி வாங்க பயன்பட்டது . இப்படிபட்டவர்கள் மீதா இரக்கப்படுகிறாய்  இத்தகைய குறைபாடுகள் அற்ற சமுதாயத்தைதான் உருவாக்க முயல்கிறோம். வருங்காலத்தில் மீண்டும் அது நிகழக்கூடாது. மிராசுதாரரின் பிள்ளை மிராசுதாரராக முடியாது அப்படி நினைத்தால் தொழிலாளி வர்க்கம் அவர்களுக்கு பாடம் கற்பிக்கும்” என்று சொல்லி ஆன்றியை சிந்திக்க வைக்கிறான்.

க்ராமயாச்சி கிராமத்தில் திரும்பவும் கூட்டுப்பண்ணை தொடர்பாக கூட்டம் நடக்கிறது. கிராமத்தினர் அனைவருக்கும் பல சந்தேகங்கள். கேள்விகள். கோழி முட்டையொத்த நிலத்தைக் கொண்டிருந்தாலும் அவர்களால் விரிந்த முறையில் கூட்டுப்பண்ணையை பார்க்க முடியவில்லை. இரு குடும்பங்கள் இருந்தால், அதில் முதலில் பெண்களுக்கிடையில் சண்டை வரும் அதனால் ஆண்கள் பேசிக்கொள்ளமாட்டார்கள். விரிசல் பெரிதாகி தனித்தனியாகிவிட வேண்டியதுதான். குடும்பங்களுக்கே இப்படி என்றால் கூட்டுப்பண்ணைகள் வெற்றி பெறுவது எப்படி என்றெல்லாம் சந்தேகங்களும் கேள்விகளும் வருகின்றன.

யாவுமே சமூகச் சொத்தாக்கப்படுமா?

வீடுகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

சொந்த நிலங்களைப் வைத்து வேலை செய்வோரின் நிலை என்னவாகும்?

அவர்களிடமிருந்து நிலம் எடுத்துக்கொள்ளப்படுமா?

எல்லாரும் ஒன்றாக சாப்பிடுவதா?

எல்லா கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளிக்கிறான் டேவிடாவ். தற்போது இருப்பதை விட நிலைமை மோசமாகிவிடாதென்றும், கம்யூனிசம் அவர்களை  புதிய சமுதாயத்தில் உந்தித் தள்ளுகிறது என்றும் பாலைக் குடிக்காவிட்டால் கன்றுக்குத்தான் நஷ்டமென்றும் உணர்ந்து கொண்ட விவசாயிகள் கூட்டுப்பண்ணையில் சேர விண்ணப்பிக்கின்றனர்.

இருநூற்று பதினேழு குடும்பங்களில் அறுபத்தி ஏழு பேர் மட்டும் சேர கையை உயர்த்தினர். ஆனால், யாரும் எதிர்க்கவில்லை. இத்தனை நாள்கள் எங்கள் பாட்டன் முப்பாட்டன் வாழவில்லையா என்று  நடுத்தர விவசாயிகள் பலரும் தயக்கத்துடன் இருக்கின்ற்னர்.

அடுத்தநாளே ஒரு கூட்டமாக குதிரைகளும்,ஆடுமாடுகளும் கிராம சோவியத்தின் முன்பு நின்றது. மக்கள் மனுக்களை கொடுத்து கூட்டுப்பண்ணையில் சேர்ந்தனர். கூட்டுப்பண்ணைக்கு “ஸ்டாலின்” என்று பெயர் வைத்தனர். நாகுல்நாவும் தச்சர்களும் சேர்ந்து மாட்டுக்கான கொழுவை அடித்தனர். க்ராமியாச் கிராமத்தில் சமூகத்துக்காக பொதுவாக செய்யப்பட்ட முதல்காரியமாக அது இருந்தது.

தங்களது சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த நிலச்சுவான்தார்கள் கொசாக்கியரை வஞ்சம் தீர்க்க  ஒன்றாக கூடி திட்டம் தீட்டுகிறார்கள். இதற்கு நடுவில் நிலச்சுவான்தார்களால் ஒரு கொசாக்கிய விவசாய தம்பதியினர் கொலையுண்டு போகிறார்கள். இதுவும் நிலச்சுவான்தார்களின் வேலை.

கூட்டுப்பண்ணையில் சேர்ந்த யாக்கோவ் லூக்கிச் இரட்டை வாழ்க்கை வாழத் துவங்கினான். பகலில் கூட்டுப்பண்ணையில் உடம்பு நோக வேலை செய்வான். இரவில், தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலச்சுவான்தார் போலஸ்டீவுக்கு உதவிக் கொண்டிருப்பான்.

பனி பெய்யும் பிப்ரவரி மாதம். சூரியன் உதயமாகி பனியை உருகியோடச்செய்யும். பனி உருகியதும் நிலம் காய்ந்து வெடிக்கும். யாக்கோவ் லூக்கிச் தனது ஆடுகளை வெட்ட ஆரம்பிக்கின்றான், லூக்கிச் புரட்சி ஏற்படு முன்னரே செல்வம் சேர்க்க ஆரம்பித்துவிட்டான். மகனை கர்னலுக்கு படிக்க வைக்க வேண்டும். சீமாட்டியை திருமணம் செய்விக்க வேண்டும். ஒரு ஆலையை கட்ட வேண்டும். தங்க சங்கிலியில் கடிகாரம் சேர்த்து அணிந்து கொள்ள வேண்டும். தனது மகனையும் சீமாட்டியை வரவேற்க ரயில்வே ஸ்டேஷனுக்கு காரில் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். ஆனால், புரட்சி அத்தனையிலும் மண்ணள்ளி போட்டுவிட்டது.

தனது சொத்தில் ஒன்று கூட செஞ்சேனைக்கு சென்று விடக்கூடாதென்று திட்டமிட்டிருந்தான். அதன்படி ஆடுகளை அடித்து களஞ்சியத்தில் தொங்கவிட்டார்கள். லூக்கிச்சின் தூண்டுதலின் பேரில் கிராமத்தில் இரவு தோறும் கால்நடைகள் வெட்டப்பட்டன. அனைவரும் தின்ன முடியாமல் கறியை வயிறு முட்ட தின்றனர். வயிற்றுவலியால் அங்குகிங்கு நகரவும் முடியாமல் அவதிப்பட்டனர்.

இப்படி கால்நடைகள் சம்காரம் செய்யப்படுவதை கேள்விப்பட்ட டேவிடாவ் கூட்டுச்சங்கத்தை கூட்டினான். கால்நடைகளை வெட்டுவோர் கூட்டுப்பண்ணையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஆனால், அப்படி வெளியேற்றினால் கூட்டுப்பண்ணையில் ஒருவர் கூட மிஞ்ச முடியாது. கூட்டம் முடியும் போது கிராமத்தார்கள் ஒருவரோடொருவர் பேசியபடி கலைந்து சென்றனர் – “அவள்தான் வெட்டு வெட்டு என்று என்னை தூண்டிவிட்டாள், வீட்டுக்குப் போய் கவனித்துக்கொள்கிறேன், அவளை நன்றாக”.

குதிரைகளுக்கு கொட்டகை கட்டப்பட்டது. எல்லா குதிரைகளும் கொண்டு வந்து விடப்பட்டன. குதிரைக்குச் சொந்தக்காரர்கள் தங்களது குதிரைக்கு அதிகம் வைக்கோல் போடுமாறு கவனித்துக்கொள்பவனை கேட்டுக்கொண்டனர். இரவுகளில் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு சென்றனர். அவர்களில் யாருக்கும் அவ்வளவு எளிதில் சொத்துமீது ஆசை போகவில்லை.  ஆனால் கூட்டுப்பண்ணை ஆரம்பமானதில் இருந்து கிராமத்தில் ஒரு புதுவித பரபரப்பு தோன்றியிருந்தது. கால்நடைகளைக் கொல்வதும் நின்றது.

அடுத்துக்கூடிய கட்சி கூட்டத்தில், ஸ்டாலின் கூட்டுப்பண்ணையின் அங்கத்தினர்களின் கால்நடைகளை மட்டுமில்லாமல், கோழி-வாத்து போன்றவற்றையும் சமூகமயமாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.  இதற்கு பெண்களிடமிருந்து மிகுந்த எதிர்ப்பு இருந்தது. மழைக்காலத்துக்குள்ளாக குஞ்சு பொரிக்கும் இயந்திரம் வாங்கிவிடலாமென்றும் அவை நூற்றுக்கணக்கில் பொரிக்க உதவுமென்றும் பிடிவாதமாக இருக்க வேண்டாமென்றும் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள், வருத்தப்பட்டார்கள், சிரித்தார்கள், பறவைகளையும் கோழிகளையும் பொதுக்கூண்டுக்குள் அடைத்தார்கள். கோழிகள் முட்டையிட்டன. அவையெல்லாம் பொதுவாக சேமிக்கப்பட்டன.

நடுவில், புது வதந்தி கிராமத்தை சுற்றியபடி இருந்தது. அதாவது, கூட்டுப்பண்ணையில் நீராவி இயந்திரம் இல்லாத காரணத்தால் முட்டை பொரிக்க வைக்க அறுபது வயதுக் கிழவிகளை அடைக்காக்க சொல்லப் போவதாக வந்த வதந்திதான் அது. இதைக்கேட்டு கிழவிகள் கோபமடைந்துவிட்டார்கள், சிறு சிறு நாற்காலிகள் செய்து அதனடியில் வைக்கோலைப் பரப்பி முட்டையை வைத்து கிழவிகளை அடைகாக்க சொல்ல்ப்போகிறார்கள், முடியாதென்று சொல்லும் கிழவிகளை நாற்காலியோடு கட்டுப்போட்டு விடுவார்கள் என்ற வதந்தியை ஒரு கன்னியாஸ்திரி மூலமாக பண்ணையார்கள் பரப்பிவிட்டார்கள் நல்லவேளையாக அந்த கன்னியாஸ்தீரி கூட்டுப்பண்ணையின் அங்கத்தினர்களிடம் அகப்படவில்லை.

டேவிடாவுக்கும், கூட்டுப்பண்ணையின் அங்கத்தினர்களுக்கும் ஒரு விவாதம் வந்தது. அதாவது, இந்த பறவைகள் விஷயம் சிறிதானதுதான். உண்மையில், செய்திருக்க வேண்டியது நூற்றுக்கு நூறு அங்கத்தினர்களை சேர்த்துவிட்டு விதைப்பில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், கூட்டுப்பண்ணையை கம்யூனாக்கிக்கொண்டிருக்கிறோம். இது இடதுசாரி வழுக்கல். ஒரு போல்ஷிவிக்குரிய  வீரத்தோடு குற்றத்தை ஒப்புக்கொண்டு கோழிக்குஞ்சுகளை உரியவர்களுக்கு திருப்பிக்கொடுத்துவிடலாமென்று முடிவுக்கு வருகிறார்கள்.

இடையில், இரட்டை வேடமிட்ட லூக்கிச் போலீஸ்டீவின் வார்த்தையைக் கேட்டுக்கொண்டு கூட்டுப்பண்ணையை உள்ளிருந்தே சிதைக்கும் வேலையை தொடங்கியிருந்தான். குதிரைகள், மாடுகள் இரவில் படுக்குமிடத்தில் வைக்கோலுக்கு பதிலாக மணலை கொட்டுவது, அதனால் கால்நடைகளின் தோல் பனியில் சிக்கி சீரழிவது என்று நடந்து கொண்டிருந்தது.

அதோடு, விதைப்புக்கும் பயிரிடப்பட வேண்டிய ஹெக்டேர்களும், தானியங்களும் தீர்மானிக்கப்பட்டது. விதை தானிய வசூல், உற்பத்தி, கருவிகளை செப்பனிடுவது, வேலைப்பிரிவினை, விஞ்ஞான  முறையில் பயிடுவது  போன்றவை விவாதிக்கப்பட்டன. கூட்டுப்பண்ணையைச் சேர்ந்தவர்கள் தானியவசூலை ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் கூட்டுப்பண்ணை விவசாயிகளும், தனி விவசாயிகளும் தானிய வசூலை எதிர்த்தனர்.

ஏனெனில், தானியம் வசூலிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அடுத்த விதைப்பே இருக்காது. எந்த நேரத்தில் போர் வரலாம் போன்ற காரணங்கள்தான்.

இந்த வதந்தி காட்டுத்தீ போல கிராமமெங்கு பரவியது. ஆனாலும் தானிய வசூல் வெற்றியடையவே இல்லை. கொசாக்கியர்கள் ஏதாவது காரணம் சொல்லி வீட்டை விட்டு வெளியேறிவிடுவர்.

இவை நடுவில்,  நிலச்சுவான்தார்கள் போல்ஷ்விக்குகளை தாக்க ஒரு படையை திரட்டியிருந்தனர். காலியாக இருந்த நிலச்சுவான்தாரின் வீட்டை தலைமையலுவலகமாக மாற்றியிருந்தனர். அவர்களது நடவடிக்கைகள் யாருமற்ற இரவு வேளைகளில் மிகவும் ரகசியமாக நடைபெற்றது. குதிரைகளை லாயத்திலிருந்து திருடிக்கொண்டு படைகளை  அழைக்க சென்றனர். லூக்கிச்சும் அவர்களுடன் சென்றிருந்தான். கொசாக்கியர்களைப் பார்த்து கோலாஸ்டீவ் தாக்குதலுக்கு தயாராகும்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் கூட்டத்திலிருந்த பெரியவர் எழுந்தார்.

“நீங்கள் வருவதற்கு சற்று முன்னர்தான் அந்த பத்திரிக்கையை படித்தோம். ஸ்டாலின் எழுதிய கடிதம். அதைப்படித்தபின் நீங்களும் நாங்களும் வேறு என்று புலனாகிவிட்டது. நாங்கள் ஊழலை மட்டும்தான் எதிர்க்கிறோம், எங்கள் சோவியத்தை அல்ல. நாங்கள் கையெழுத்திட்ட மகஜர்களை திருப்பிக்கொடுத்துவிடுங்கள். எங்கள் கிராமத் தலைவர்கள் செய்த முட்டாள்தனம்தான். உங்களுடன் சேர்ந்தால் வெளிநாட்டுப்படைகள் வரும். கம்யூனிஸ்டுகள் யார், நமது சகோதர்கள்தானே?” என்று அவர்களை துரத்தி விட்டார்கள்.

போலாஸ்டீவும், லூக்கிச்சிடம் முடிந்தவரை கூட்டுப்பண்ணைக்கு தீங்கு செய்துக்கொண்டிருக்கும்படி சொல்லிவிட்டு குதிரைகளை விட்டு ஓடிவிட்டான். லூக்கிச்சுக்கு அவன் கிளம்பினதும்தான் மனமகிழ்வும் நிம்மதியும் ஏற்பட்டது. எதிர்புரட்சிக்காரர்கள் கிராமத்தை விட்டோடினர். ஸ்டாலினின் அந்தக்கட்டுரை வெள்ளப்பெருக்கினால் மூன்று வாரங்கள் தாமதமாக பல கிராமங்களை சென்றடைந்தது.

இந்த நாவலில், கட்சி அங்கத்தினர்களான டேவிடாவ்,நாகுல்நாவ், ரஷ்மியட்நாவ், போலீஸ்டீவ், லூக்கிச் கதாபாத்திரங்கள் உண்மையானவையே. சம்பவங்களும், கிராம மக்களது உணர்ச்சிகளும் உண்மையானவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவையே.  இப்போது நாம் நாவலை வாசித்தாலும்  கூட்டுப்பண்ணையின் காலத்துக்கே சென்று வந்தது போலிருக்கிறது.

மக்களுக்கும் சொத்துக்குமான உறவைப் பற்றி சொல்வதில் ஷோலோக்கோவ் வெற்றி பெறுகிறார். சுயநலம், ஏமாற்றி பிழைத்தல்,மூடநம்பிக்கைகள், வதந்திகள் என்று பலவும் மக்களிடம் நிலவி வந்திருக்கிறது, இன்று போலவே. இழக்க ஒன்றுமில்லாதவர்கள், உழைக்கத் தயங்காதவர்கள் கூட்டுப்பண்ணையின் அவசியத்தை உணர்ந்து இணைய முன்வந்தாலும் நடுத்தர விவசாயிகளிடம் ஊசலாட்டம் இருந்திருக்கிறது.  மாலையில் தோன்றி மறையும் மின்மினி பூச்சிகளின் வாழ்க்கையையொத்த நடுத்தர வர்க்கத்தினரின் இக்குணத்தை எந்த போராட்டத்திலும் நாம் காணலாம்.

மிக சொற்பமான சொத்துகளே இருந்தாலும் எண்ணத்தில் செல்வந்தராகவும், அன்றாட வாழ்க்கையில் வறியோராகவும்  இருந்தாலும் என்றாவது சொத்து சேர்த்து செல்வந்தாராகிவிடலாம் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள். உழைக்கும் மக்களைபோல தம்மீதான சுரண்டலை அவர்கள் உணர்வதில்லை. ஆனால், இவர்களும் வர்க்க உணர்வு பெற்றால் சுரண்டலற்ற, சமத்துவமான,  ஒளிமிக்க எதிர்காலமான உலக புரட்சிக்கான நாள் வெகுதொலைவில் இல்லை.

இந்த நாவல் இரத்தமும் சதையுமான சோவியத் நாட்டின் கூட்டுப்பண்ணைகள் குறித்த அழுத்தமான அனுபவத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. சொத்துடமையின் வரலாற்று ரீதியான பண்பாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஊறியிருக்கும் மக்களை மாற்றுவது என்பது எவ்வளவு சிரமம் நிறைந்த ஒன்று என்பதை இந்நாவல் பாத்திரங்களினூடாக நாம் உணர முடியும். ஆனாலும் இத்தகைய தடைகளை தகர்த்தெறிந்து அதற்கான பொறுமையையும், போராட்டத்தையும் கைவிடாத அந்த எளிய தோழர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

கம்யூனிசம் என்பது எல்லா வசதிகளையும் செய்து தரும் சொர்க்க மல்ல. அது மக்களே தமது வாழ்க்கையை உழைத்து உருவாக்கும் ஒரு போராட்டம். அந்த போராட்டத் தருணங்களை நுகர விரும்புவர்கள் உடன் இந்த நாவலை படியுங்கள். கம்யூனிசம் குறித்து அறிய விரும்புவர்களுக்கு இந்த நாவல் கூட ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும்.

நாவல்: நிலம் என்னும் நல்லாள் (Virgin soil Upturned)

பக்கங்கள்: 490, விலை ரூ. 200.00

ஆசிரியர்: மைக்கேல் ஷோலோக்கோவ்

தமிழாக்கம்: தா.பாண்டியன்

வெளியீட்டாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

நூல் கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம்,10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002. தொலைபேசி: 044-2841 2367

_________________________________________________

வேல்விழி

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் !

30

லைப்பை பார்த்து விட்டு தினமணி அபிமானிகள் கோபிக்கக் கூடாது. “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்” என்று தினமணியின் நெற்றியில் பொறிக்கப்பட்டிருக்கிறது. எக்ஸ்ட்ராவாக ஆசிரியர் வைத்தியநாதனின் மூக்குக்கு கீழே ஒரு முரட்டு மீசையும் இருக்கிறது. அப்பேர்ப்பட்ட ஆசிரியரை இப்படியா கொச்சைப்படுத்துவது என்று தினமணி அபிமானிகள் கோபப்படலாம். நாம் என்ன செய்வது? போயஸ் தோட்டத்தின் வாசலை மொய்க்கும் ரத்தத்தின் ரத்தங்கள் ஆசிரியரின் நா வன்மை குறித்துத்தான் போவோர் வருவோரிடமெல்லாம் “சரடு” விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் அம்மா வெற்றி பெற்றது குறித்த செய்திகள் வந்து கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவமும் நடந்திருக்கிறது. இதொன்றும் தோட்டத்தில் நடக்காத அதிசயமில்லை. அம்மாவின் கருணையைப் பெற விரும்புவோர் எல்லோரும் செய்கின்ற காரியம்தான். எதிர்காலத்துக்கு வேண்டியதை செய்து வைத்துக் கொள்ளும் ஆசை எல்லோருக்கும் இருப்பதைப் போல வைத்தியநாதனுக்கும் இருந்திருக்கிறது. அவ்வளவுதான். உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது; பேசிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

வதந்தியை ஆதாரமாக கொண்டு இப்படி ஒரு செய்தி வெளியிடுவதும், “நக்கினார்” என்று அதற்குத் தலைப்பு போடுவதும் நியாயமா என்று யாரேனும் கேட்பார்களேயானால், ஆகஸ்டு 15 தினமணியின் 11 ஆம் பக்கத்தைப் படிக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். “மாசேதுங் ஜோசியம் பார்த்த புத்தர் மலை” என்று தலைப்பு போட்டு முக்கால் பக்க அளவில் ஒரு அண்டப்புளுகை வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர் வைத்தியநாதன்.

1949 இல் சீனாவில், வூதாய் மலையில் உள்ள புத்தர் கோயிலுக்கு வந்த மாவோ, அங்கே ஜோசியம் பார்த்தாராம். இதை நாங்கள் சொல்லவில்லை, அந்த ஊர் சுற்றுலா வழிகாட்டிகள் அங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடம் இப்படித்தான் “சரடு” விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகிறது தினமணி – இது முதல் வரி. அதாவது “நாங்கள் சொல்லவில்லை கைடுகள் சொல்கிறார்கள்” என்ற உத்தி இளித்தவாயர்களை ஏமாற்றுவதற்கு. ‘அந்த கைடுகள் விடுவது சரடல்ல உண்மைதான்’ என்று நக்கலாக தெரிவிப்பதற்காக சரடு என்ற சொல்லுக்கு தனியாக ஒரு மேற்கோள் குறி.

அதற்கு அடுத்த வரியில் “எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள எல்லோருக்கும் இருக்கும் ஆர்வம் மாவோவுக்கும் இருந்திருக்கிறது” என்று ரொம்பவும் பெருந்தன்மையாக மாவோவின் பலவீனத்தை அங்கீகரிப்பது போன்ற தோரணையில் எழுதி, அவர் ஜோசியம் பார்த்தது உண்மைதான் என்ற கருத்தை தந்திரமாக நிலைநிறுத்துகிறார் ஆசிரியர், தில்லானா மோகனாம்பாள் வைத்தி.

சீனத்தின் எதிர்காலத்தை சிவப்பாக்கும் புரட்சியை வழிநடத்திய மாவோ, தன்னுடைய சொந்த எதிர்காலத்தை தெரிந்து கொள்ள ஜோசியம் பார்த்தாராம். யாரிடம்? கம்யூனிச சீனத்தில் தங்களுடைய சொந்த எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையில் ஆழ்ந்திருந்த புத்த பிக்குகளிடம்!

நம்மூரில் நாடி ஜோசியம் போல அங்கே நம்பர் ஜோசியமாம். மாவோ ஒரு சீட்டை எடுத்தாராம். 8341 என்று நம்பர் போட்ட சீட்டு வந்ததாம். அந்த நம்பருக்குப் பலன் என்ன என்பதை மாவோவுக்கு சொல்ல மறுத்துவிட்டார்களாம் பிக்குகள்.

“83 வயது வரை வாழ்வார், 41 ஆண்டுகள் ஆள்வார்” என்பதுதான் அந்த சீட்டு தெரிவித்த இரகசியமாம். அன்று முதல் இன்று வரை உலகத்தில் யாருக்குமே தெரிந்திராத அந்த இரகசியம், அங்கிருக்கும் சுற்றுலா கைடுகளுக்கு மட்டும் தெரிந்திருக்கிறதாம். அவர்கள் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதை சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.

இந்த செய்திக்கு என்ன ஆதாரம்? யார் சாட்சி? யார் சொன்ன தகவல்? எந்த விவரமும் கிடையாது. ஆகஸ்டு 14ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸில்தான் இந்த செய்தி முதலில் வெளிவந்திருக்கிறது. “ஏஜென்சி செய்தியிலிருந்து” என்று போட்டு எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிடுகிறது. ஆனால் ராய்டர், பிடிஐ என்று எந்த செய்தி ஏஜென்சியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. அந்த ஏஜென்சிகள் யாரும் இப்படியொரு செய்தியை வெளியிடவில்லை. ஒரு வேளை தினமணி குரூப்புக்கு சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி (CIA) இந்த செய்தியை கொடுத்திருக்கலாம்.

ஏனென்றால் இச்செய்தியையும் வெளியிட்டுவிட்டு, “இந்தக் கதை உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியவில்லை, சுற்றுலா வழிகாட்டிகள் சொல்கிறார்கள்” என்று மாமாத்தனமாக எழுதியிருக்கிறது எக்ஸ்பிரஸ். அதைக்கூடச் சொல்லாமல், இந்த புளுகுமூட்டை உண்மைச்செய்தி போல வெளியிட்டிருக்கியிருக்கிறது தினமணி!

உண்மையில் 1948 ஏப்ரலில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த சூழலில் மாவோ அம்மலையைக் கடந்திருக்கிறார். ஒரு இரவு அங்கே தங்கியுமிருக்கிறார். அவர் தங்கியது குறித்த படமும் நினைவுக் குறிப்புகளும் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. அப்புறம் என்ன, இது போதாதா? ஜோசியம் பார்த்தார், ரேகை பார்த்தார் என்று அடித்து விடவேண்டியதுதானே. பாபர் மசூதிக்கு உள்ளே இராமன் பிறந்த இடத்தை மட்டுமின்றி, பக்கத்திலேயே சீதையின் சமையலறையையும் (சீதா கி ரசோய்) சமையல் பாத்திரங்களையும் “கண்டுபிடித்த” யோக்கியர்களால் மாவோ ஜோசியம் பார்த்ததையா “கண்டுபிடிக்க” இயலாது?

சென்னை நகரின் நடைபாதையில் அமர்ந்திருக்கும் ஜோசிட ரத்தினங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு கைரேகை பார்ப்பது போல தயாரித்து மாட்டிக்கொள்ளும் போட்டோவுக்கும், புத்த பிக்குகளிடம் மாவோ ஜோசியம் பார்த்த கதைக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? இவ்வளவு மட்டமான ஒரு கட்டுக்கதையை வரலாற்று உண்மை போல சித்தரித்து வெளியிடும் ஒரு நபர், புகழ் பெற்ற நடுநிலை நாளேட்டின் ஆசிரியராம். அவரை எல்.கே.ஜி ஆண்டுவிழா முதல் சிற்பி மணிவிழா வரையில் எல்லாவிதமான சுபகாரியங்களுக்கும் அழைக்கிறார்கள்.

அந்த விழாக்களில் திருவாளர் வைத்தியநாதன், சமுதாயத்தில் யார் யார் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஊர் நாயம் உரைக்கிறார். அந்த உரைகளை, ஸ்ரீமான் வைத்தியநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தினமணியில், பேச்சாளர் வைத்தியநாதனுடைய திருவுருவப் படத்துடன் எட்டு காலம் செய்தியாக எடிட்டர் வைத்தியநாதனே வெளியிடுகிறார்.

மாவோ ஜோசியம் பார்த்த கதையை வெளியிட்டிருக்கும் தினமணி ஆசிரியர், “நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி”யைக் கொண்டவர் என்பதை வாசகர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இவற்றை விவரித்தோமேயன்றி நமக்கு வேறு நோக்கம் ஏதுமில்லை.

இந்தப் பதிவைப் படித்துப் பார்த்த ஒரு நண்பர், “இதெல்லாம் ஒரு விசயம் என்று மதிப்பு கொடுத்து எழுதிக் கொண்டிருக்கிறீர்களே” என்றார். எக்ஸ்பிரஸில் வெளிவந்த செய்திக்கு இறக்கை முளைத்து அது இப்போது பவுத்த தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அது அப்படியே அமெரிக்கா போய், மீண்டும் வூ தாய் மலைக்கே திரும்பி, அங்கிருந்து திபெத், நேபாளம், சிக்கிம் போன்ற எந்த வழியில் வேண்டுமானாலும் தமிழகம் திரும்பலாம். அவ்வாறு திரும்புங்கால் தினமணியில் வெளியான அந்த முக்கால் பக்க புளுகு, 300 பக்க புளுகு மூட்டையாக உப்பி தமிழ் கூறும் நல்லுலகத்தின் தலையில் இறங்கக்கூடும்.

நக்சலைட் இயக்கத்தின் மீது பெருமதிப்பு கொண்டிருந்த ஜெயமோகன், ஒரு முறை ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தமக்குள் பேசிக் கொள்வதை ஒளிந்திருந்து கேட்டாராம். ஜெயமோகனின் மதிப்புக்குரிய அந்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் “நக்சலைட்டுகளுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாக” பேசிக் கொண்டார்களாம். கேட்டவுடன், ஜெயமோகனுக்கு காலடி நிலம் நழுவிவிட்டதாம். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் குறித்து அவரே தனது தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த அதிர்ச்சியின் தொடர்ச்சியாகத்தான் நாம் பி.தொ.நி.குரலை (பின் தொடரும் நிழலின் குரல் – ‘நாவல்’) சுமக்க நேர்ந்தது.

மாவோவின் மீதும், தினமணி வைத்தியநாதனின் மீதும் பெருமதிப்பு கொண்டவர்கள் பலர் தமிழகத்தில் இருக்கக்கூடும். அத்தகையோரில் ஒருவராக ஜெமோ வும் இருக்கக்கூடும் என்பதே நமது அச்சம். அந்த வகையில் இந்தப் பதிவு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அவ்வளவே.

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!

25

பெரியோர்களே தாய்மார்களே, தமிழ்ப் பெருங்குடி மக்களே,

அனைவரையும் டைம்ஸ் ஆப் இந்தியா இணைய தளத்தின் முதல் பக்கத்துக்கு உடனே வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இரண்டு உரிமைப் போர்களுக்கு அணிதிரளுமாறு டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு இன்று தனது வாசகர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

முதல் போராட்டம் “சரக்கடிக்கும் உரிமை” தொடர்பானது. “குடிப்பதற்கான வயது வரம்பு 25” என்று மகாராட்டிரா, டெல்லி அரசுகள் தீர்மானித்திருப்பதை எதிர்த்த தனது போராட்டத்தின் நியாயத்தை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது டைம்ஸ் ஆப் இந்தியா:

“இந்திய இளைஞர்களின் ஆற்றலை உலகமே வியந்து போற்றுவது நம் அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. மென்மேலும் அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு வரவும் அதன் மூலம் மக்களைத் துன்புறுத்தி லஞ்ச வசூலை அதிகரித்துக் கொள்வதற்கே கிழட்டு நரிகளான அரசியல்வாதிகள் திட்டமிடுகிறார்கள்.”

“மைக்கை பிடுங்கி அடித்து கெட்டவார்த்தைகளால் ஏசிக்கொள்கிற எம்.பி எம்.எல்.ஏக்களும், நாட்டைக் கொள்ளையடிக்கின்ற அமைச்சர்களும் ஒழுக்கம் பற்றி நமக்கு உபதேசம் செய்வதா? இது தண்ணியடிப்பது பற்றிய பிரச்சினை அல்ல. நம்முடைய சுயமரியாதை மற்றும் சுதந்திரம் பற்றிய பிரச்சினை. படித்த, நேர்மையான, பொறுப்பான, கடினமாக உழைக்கக்கூடிய இளைஞர்கள் அனைவரும் இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராக எழுந்து நின்றாக வேண்டும். இது என்னுடைய வாழ்க்கை. உன்னால் உதவ முடியாவிட்டால் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாதே என்று முழங்கவேண்டும்” என்று குமுறி வெடித்திருக்கிறது டைம்ஸ் .ஆப் .இந்தியா.

இரண்டாவது போராட்டம் ஊழல் எதிர்ப்பு, அண்ணா ஹசாரே ஆதரவு தொடர்பானது. சரக்கடிக்கும் உரிமையைப் போலன்றி, இது எல்லோருக்கும் தெரிந்த எளிமையான பிரச்சினை என்பதால் இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா அதிகம் விளக்கவில்லை.

சரக்கடிக்கும் உரிமை தொடர்பான டைம்ஸ் ஆப் இந்தியாவின் “அப்ரோச்” கவனிக்கத்தக்கது. “ITS MY LIFE இது என்னுடைய வாழ்க்கை. நான் குடிப்பேன், குளிப்பேன், குப்புற அடிச்சுப் படுப்பேன். நீ யார்றா கேக்குறதுக்கு – ITS NONE OF UR BUSINESS” என்று அரசாங்கத்துக்கு சவால் விடுகிறது அந்த முழக்கம்.

இல்லையா பின்னே? உண்ணாவிரதம் இருக்கணும்னா 22 கண்டிசன் போடறான். சரக்கடிக்கணும்னா 25 வயசுன்னு கண்டிசன் போடறான். என்ன சார் இது சர்வாதிகாரமா இருக்கு? சாப்பிடவும் கூடாதுங்குறான், சாப்பிடாம இருக்கவும் கூடாதுங்கிறான். சாப்பிட்டா நமக்கு ஜெயில். சாப்பிடலேன்னா ஹசாரேக்கு ஜெயில்.

ஊழல் கனிமொழிக்கு திகார் ஜெயில், ஹசாரேவுக்கும் அதே ஜெயிலான்னு கேட்டிருக்கார் கேப்டன். ஜெயில் மட்டுமா? ரெண்டு பேருக்கும் அதே போலீசு, அதே மாஜிஸ்டிரேட், அதே சி.ஆர்.பி.சி. என்ன சார் நியாயம்?

This is how you deal with a honest tax payer of this country? சரக்கடிச்சிட்டு ரோட்ல உருள்றவனுக்கும் பப்ல உக்காந்து டீசன்டா பியர் அடிக்கிறவனுக்கும் ஒரே சட்டம்னா where is the country heading towards?

அதுனாலதான் “ஐ ஆம் அன்னா ஹசாரே” ன்னு லட்சக்கணக்குல ‘சிட்டி’சன்ஸ் ரோட்டுக்கு வந்துட்டாங்க.

“அந்தப் பிரச்சினை வேற, இந்தப் பிரச்சினை வேற” ன்னு ஏமாத்த முடியாது சார். சாயங்காலம் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் டைம்ஸ் ஆப் இந்தியா.

ஐ ஆம் அன்னா ஹசாரே !

குறிப்பு:

ன்னா ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் ஒரு குறிப்பிட்ட அலைபேசி எண்ணில் தம் ஆதரவைத் தெரிவிக்கலாம். ரிலையன்ஸ் அம்பானி, டாடா, ஏர்டெல் மித்தல் ஆகிய முதலாளிகள் ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புப் போரை ஸ்பான்சர் செய்திருப்பதனால், மேற்படி கம்பேனிகளின் மொபைலிலிருந்து ஊழல் எதிர்ப்பு போராளிகள் இலவசமாக பேசலாம் பேசலாம் பேசிக்கிட்டே இருக்கலாம் என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கிறது.

“இட்ஸ் மை லைப்” என்று முழங்கும் சரக்குரிமை இயக்கத்திலிருந்து ஹசாரேயின் ஊரான “ராலேகான் சித்தி”க்கு மட்டும் டைம்ஸ் ஆப் இந்தியா விலக்களித்திருக்கிறது. அந்த ஊரில் மட்டும் சரக்கடிப்பவர்களின் வயது 25 க்கு கீழே இருந்தாலும், மேலே இருந்தாலும் அவர்கள் கட்டி வைத்து உரிக்கப்படுவார்கள்.

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

 

கருணையினால் அல்ல!

பேரறிவாளன்,சாந்தன்,முருகன்...கருணையினால் அல்ல ! ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் கருணை மனுவை, தமிழக அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்காமலேயே ஆளுநர் நிராகரித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இராஜீவ் கொலையையொட்டிக் ‘குற்றம்’ இழைக்காமலேயே தண்டனை பெற்ற – தமிழகம் முழுவதும் தாக்கப்பட்ட – தி.மு.க. தொண்டர்களின் தலைவர் கருணாநிதி இக்கருணை மனுவின் மீது கருத்துச் சொல்லியாக வேண்டும்.

இந்நால்வரின் தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டுமென்று நாம் கோருகிறோம். இராஜீவ் கொலை என்பது அடிப்படையில் ஒர் அரசியல் நடவடிக்கை. இந்திய ஆளும் வர்க்கத்தின் தெற்காசிய விரிவாக்க நோக்கத்திற்கு ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதை சீர்குலைத்தது இந்திய அரசு. ‘இந்திய இலங்கை ஒப்பந்தம்’ என்றொரு அரசியல் சதித்திட்டத்தை உருவாக்கி ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்தது. தன்னுரிமையை மறுக்கும் இந்த ஒப்பந்தத்தைப் புலிகளும் ஈழத்தமிழ் மக்களும் ஏற்க மறுத்தனர். இதையே ஒரு முகாந்திரமாகக் கொண்டு இந்திய இராணுவம் ஈழத்தின் மீது ஒர் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்ளும், புலிகளும் கொல்லப்பட்டனர்; பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து வெறியாட்டங்களையும் இந்திய இராணுவம் நடத்தியது; இறுதியில் தோல்வியுற்று திரும்பியது.

இந்த ஆக்கிரமிப்புப் போரின் எதிர் விளைவுதான் இராஜீவ் கொலை. எனவே அது போர்க்குற்றவாளிக்கெதிரானதொரு நடவடிக்கை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் புனித்ப்படுத்தப்பட்ட தமது ஆக்கிரமிப்பை ஓர் அரசியல் நடவடிக்கையாகச் சித்தரித்துக் கொள்ளும் இந்திய ஆளும் வர்க்கம், இந்த பதில் நடவடிக்கையை மட்டும் அரசியல் வகைப்படாத கிரிமனல் நடவடிக்கையாகச் சித்தரிப்பதும் அதன் அடிப்படையில் தண்டிப்பதும் மோசடியாகும். இராஜீவ் கொலையுண்ட போதும் நாம் இந்தக் கருத்தைத்தான் முன் வைத்தோம். இன்று இந்நால்வரின் தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்பதையும் அதே அடிப்படையில்தான் கோருகிறோம்.

அடுத்து இந்தத் தீர்ப்பும் தண்டனையும் சட்டவிரோதமானது என்கிறோம். ஏற்கனவே 26 பேருக்கு மரண தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பும் தற்போது நான்கு பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்றும், எனவே அச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது; தடா சட்டமும் காலாவதியாகி விட்டது. தற்போது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், தீர்ப்புக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட சாட்சியங்களும் வாக்கு மூலங்கும் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்டவைதான்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டோருக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களுக்கு விடை கூறாமலேயே கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். தீர்ப்பை மீளாய்வு செய்யக் கோரும் மனுவை பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்திருக்கிறது. தாங்களே புனிதம் என்று கூறும் சட்ட நடைமுறைகளை உச்சநீதிமன்றம் அலட்சியப்படுத்தியுள்ளது. எனவே சட்டரீதியாகச் செல்லத் தக்கதல்ல என்ற அடிப்படையிலும் இத்தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமெனக் கோருகிறோம்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் இந்நடவடிக்கையில் நேரடியாகப் பங்கேற்றவர்களல்ல என்ற போதிலும், சட்ட ரீதியாகவே கூட இது செல்லத்தக்கதல்ல என்ற போதிலும் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்குவதற்கும், ஆளுநர் பாத்திமா பீவி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது ஆளுநரின் அதிகாரம் குறித்துத் தானே வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, இப்போது கருணை மனுவை தன்னிச்சையாக நிராகரிப்பதற்கும் காரணம் இருக்கிறது.

“ஈழ விடுதலைக்கு இந்திய அரசு எவ்வளவோ உதவிய போதிலும், அவர்களது நன்மைக்காவே ஒரு ஒப்பந்தத்தை அரும்பாடுபட்டு இராஜீவ் உருவாக்கித் தந்த போதிலும் நன்றி கெட்டத்தனமாகப் புலிகள் அமைதிப்படைச் சிப்பாய்களைக் கொன்றனர்; தேர்தலில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய ஒப்பற்ற இளம் தலைவர் இராஜீவையும் கொன்றுவிட்டனர்” – என்ற பொய்ப் பிரச்சாரம் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து இங்கே நடத்தப்படுகிறது. ஈழத்தில் இந்திய அரசு நடத்திய சதிகள், ஒப்பந்தத்தின் மோசடித்தன்மை, ‘அமைதி’ப் படையின் அட்டூழியங்கள் என்பன முதல் அத்தேர்தலில் தோல்வியடையும் நிலையில்தான் இராஜீவ் இருந்தார் என்பது வரையிலான பல உண்மைகள் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. மரணதண்டனையை ஆதரிக்கும் சோ முதல் வாழப்பாடி ராமமூர்த்தி ஈறான அனைவரும் இப்பொய்களையே தம் தரப்பு வாதங்களாக முன்வைக்கின்றனர். எனவே, இப்பொய்ப்பிரச்சாரம் தோற்றுவித்த உணர்ச்சியின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பும், ஆளுநரின் நடவடிக்கையும் அமைந்திருக்கின்றன.

ந்நிலையில் இந்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோருவோரின் அணுகுமுறை எவ்வாறிருக்க வேண்டும் என்பதைப் பரிசீலிப்பதும் அவசியமாகிறது.

இன்று நால்வரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்குப் பெரிதும் முனைந்து வருபவர்கள் (அநேகமாக) அனைவருமே, அன்று இராஜீவ் கொலை செய்யப்பட்டபோது ‘கொலையாளி’களை வன்மையாகக் கண்டித்தார்கள்; இராஜீவுக்கு இரங்கல் தெரிவித்தார்கள்; இந்தக் கொலை சி.ஐ.ஏவின் சதி என்றார்கள்; இதற்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்றும் நீதிமன்றம் விசாரித்து யாரைக் குற்றவாளி என முடிவு செய்தாலும், அவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கட்டுமென்றும் முன்மொழிந்தார்கள்.

இத்தகைய போக்குகளை விமரிசித்து இராஜீவ் கொலைக்கான நியாயங்களை நாம் எழுதினோம். அதன் விளைவாக நாம் ‘மல்லிகையின்’ (சிறப்புப் புலனாய்வுப் படையின் அலுவலகம்) மணத்தை நுகர நேர்ந்ததுடன், ஏராளமான தோழர்கள் தடா, தே.பா.சட்டம், ராஜத் துரோகம் உள்ளிட்ட வழக்குகளில் சிறை செல்லவும் நேர்ந்தது. எனினும் ‘ஈழத்தமிழன்’ என்று சொன்னாலே வேட்டையாடப்பட்ட ஒரு காலத்தில், ஈழ ஆதரவு எனப் பேசினாலே கைது செய்யப்பட்ட காலத்தில் ‘புத்திசாலித்தனமாக’ மவுனம் சாதிப்பதை விட வெளிப்படையாக பேசுவது நம் அரசியல் கடமை என்ற அடிப்படையில் நாம் அவ்வாறு செய்தோம்.

அன்று அரசியல் பேசாமல் “நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்” என்று சட்டவாதத்தில் நுழைந்து தப்ப முயன்றவர்களது அணுகுமுறை தவறு என்று மீண்டும் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல் முன்முயற்சியை இழக்காமல் சட்டவாய்ப்புகளைப் பயன்படுத்துவது என்பது வேறு, சட்டவாதத்தையே அரசியலாக்கி கொள்வதென்பது வேறு.

சட்டவாதத்தையே அரசியலாக்கிக் கொள்பவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல், அதன் சட்டம், நிறுவனங்கள் இவற்றின் எல்லைக்குள் நின்று பேச முடியுமேயொழிய இவற்றைக் கேள்விக்குள்ளாக்க முடியாது. எனவேதான் “ஒரு ஆக்கிரமிப்பு போர் குற்றவாளியைக் கொன்றதற்குத் தூக்கு தண்டனையா’ என்ற கேள்வியை இன்றைக்கும் அவர்களால் முதன்மைப்படுத்த இயலவில்லை. நீதிமன்றத்தின் மீது தங்களது விசுவாசத்தைப் பிரகடனம் செய்தவர்கள் தீர்ப்பின் மோசடியை முதன்மைப்படுத்தியும் இயக்கம் எடுக்க முடியவில்லை. அதன்மீது அதிருப்தி தெரிவிக்க மட்டுமே முடிகிறது.

நான்கு பேரைத் தூக்கிலிடுவது அரசியல் ரீதியான அநீதி, சட்டரீதியாகவும் அநீதி என்று போராடுவதற்குப் பதிலாக, “இந்த நால்வருக்காகக் கேட்கவில்லை; மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் எனக் கோருகிறோம்” – என்று முதலாளித்துவ மனிதாபிமானத்தின் அடிப்படையில் கோரிக்கை எழுப்பப்படுகிறது. அப்படியானால் “ஆட்டோ சங்கருக்கு ஏன் கேட்கவில்லை?” என்று பார்ப்பனத் திமிருடன் சோ கேட்டால் “அப்போதே கேட்காதது தவறுதான்” என்று பதிலிளிக்கிறார் இரமாதாஸ். இதுமட்டுமல்ல, குறிப்பாக இந்த நால்வருக்காகப் பேசாமல் பொதுவாக மரணதண்டனை ஒழிப்பு பற்றிப் பேசும் கருணாநிதி, வைகோ, போன்றோரை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி நிர்ப்பந்தம் கொடுப்பதற்குப் பதில் அவர்களது புகழ் பாடப்படுகிறது. மரணதண்டனை விதிக்கப்பட வேண்டிய மதவெறிக் கொலைகாரன் தாக்கரே போன்றோரிடமும் ஆதரவு திரட்டப்படுகிறது.

இறுதியாக சோனியாவே ‘குற்றத்தை’ மன்னித்துவிட்டார். யாரையும் தூக்கிலிட வேண்டுமெனத் தானோ, தன் பிள்ளைகளோ விரும்பவில்லை எனக்கூறிவிட்டார். ‘மிகக் கொடிய கொலையை செய்த குற்றவாளிகளுக்கும்’ இரக்கம் காட்டிய தாயுள்ளத்துக்கு நன்றி தெரிவிக்க வார்த்தையில்லாமல் தடுமாறுவதாகக் கூறியுள்ளார் ராமதாஸ். மரண தண்டனை ரத்தாவதற்கு முன்னால் இராஜீவ் கொலையின் அரசியல் ரீதியான நியாயத்தையும், நால்வரும் நிரபராதிகள் என்ற சட்டபூர்வமான உண்மையையும் ஒரே வாக்கியத்தில் ரத்து செய்து விட்டார் ராமதாஸ்.

ஜெயின் கமிசன் அறிக்கையில் பொய்க்குற்றம் சாட்டப்பட்ட தி.மு.கவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி அதற்காக ஐக்கிய முன்னணி ஆட்சியைக் கவிழ்த காங்கிரசு – சோனியாவின் திடீர்க் கருணைக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

புலிகளின் விரோதம் தேவையில்லை என்பதில் தொடங்கி, இந்த அறிவிப்பு அளிக்கக்கூடிய ‘அனுதாப அரசியல்’ ஆதாயம் வரை, காரணம் எதுவாயுமிருக்கலாம். எனினும் சோனியாவின் மனிதாபிமானம் நால்வரையும் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கு முன்னால், அவரது கணவரை ஈழ ஆக்கிரமிப்புப் போர்க் குற்றத்திலிருந்து – வெகுசனக் கருத்திலும் – விடுதலை செய்துவிடும். “மரண தண்டனை ஒழிப்பு – மனிதாபிமான” முழக்கத்தின் சாதனை இது.

என்னதானிருந்தாலும் நான்குபேரைத் தூக்கு மேடையில் நிறுத்தி வைத்துக் கொண்டு அரசியல் பேசிக்கொண்டிருக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம். நான்கு பேரின் உருவத்தில் தூக்குமேடையில் நின்று கொண்டிருப்பது ஒரு அரசியல் நியாயம். மரண தண்டனை ஒழிப்பு எனும் பொதுவான முழக்கம் அவர்களைக் காப்பாற்றக் கூடும். ஆனால் அந்த அரசியல் நியாயத்தை அது தூக்கிலிட்டுவிடும்.

மரணதண்டனை என்பது குற்றவியல் சட்டம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; வர்க்க, சாதி, இன ஒடுக்குமுறை நிலவும் சமுதாயத்தில், அந்த ஒடுக்குமுறைகளின் விளைவாக எந்த நீதிமன்ற விசாரணையுமின்றி அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பலவடிவங்களில் பறிக்கப்படுகின்ற சமுதாயத்தில், அவற்றுகெதிராகப் போராடும் மக்கள் ‘ எதிர் வன்முறையைப் பயன்படுத்தும் உரிமை’யுடனும் நேரடியாகச் சம்பந்தப்பட்டது இந்தப் பிரச்சினை. இந்த உரிமையின் அடிப்படையில் நால்வரின் மரண தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருகிறோம் – கருணையினால் அல்ல.

_______________________________________________________________

புதிய கலாச்சாரம் தலையங்கம், டிசம்பர் – 1999

_______________________________________________________________

பின்குறிப்பு:

11 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் அரசியல் நியாயம் காலம் கடந்தும் சரியான பாதையை  காட்டுவதோடு இன்றும் அதன் தேவை இருக்கிறது என்பதை படிப்பவர்கள் உணர முடியும். எனினும் அன்றைய சூழலிலிருந்து இன்றைய சூழல் கொஞ்சம் மாறியிருக்கிறது.

கருணாநிதி அமைச்சரவை கூடி கருணை மனுவை நிராகரித்ததன் பேரில் கவர்னர் அதற்கு ஒப்புதல் அளிக்க, பின்னர் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு இத்தனை ஆண்டுகள் கழித்து காங்கிரசு அரசால் நிராகரிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நளினையை மட்டும் மரணதண்டனையிலிருந்து ரத்து செய்திருக்கிறார்கள். ‘தாயுள்ளம்’ கொண்ட சோனியாவின் உண்மை சொரூபத்தை இப்போது வேறு வழியின்றி உணரும் தமிழின ஆர்வலர்கள் அன்றைக்கு ஏன் அறியவில்லை என்பதை இந்தக் கட்டுரை மூலம் அறியலாம்.

முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது ராஜபக்ஷேவின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டுமென்று ஓரளவுக்கு குரல் எழும்பிய நிலையில் காங்கிரசு அரசு இதைச் செய்யக் காரணம்?

முதலில் பா.ஜ.கவின் வாயை அடைக்க வேண்டுமென்பதற்காக அப்பாவி அப்சல் குருவை தூக்கில் போடவேண்டுமென்று நினைத்த காங்கிரசு கும்பல் அதற்கு நிபந்தனையாக முன்வரிசையில் உள்ள நபர்களையும் தூக்கிலேற்ற வேண்டும் என்பதற்காக ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் தூக்கிலேற்ற துணிந்திருக்கிறது. அப்சல் குரு ஏன் அப்பாவி என்பதை அருந்தததி ராய் தொடங்கி பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் ஆதாரத்துடன் நிரூபித்திருக்கின்றனர். கூடிய விரைவில் அந்தக்கட்டுரைகளில் ஒன்றை வெளியிடுவோம்.

ராஜபக்ஷேவின் மீதான போர்க்குற்றங்களை விசாரிக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் இந்திய அரசு அதற்கு உதவும் விதத்தில் கூட இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

வரிசையாக ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் திணறும் காங்கிரசு அரசு தேசத்தின் நிகழ்ச்சி நிரலை மாற்றுவதற்காகவும் இதைச் செய்திருக்க முடியும் என்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அண்ணா ஹசாரேவை வைத்து ஆங்கில ஊடகங்கள் எழுப்பும் ஜனநாயகக் கூச்சலின் பின்னேதான் இத்தகைய நிரபராதிகள் மூன்று பேர் தூக்கிலேற காத்திருக்கின்றனர். இதுதான் இந்தியாவின் உண்மையான ‘ஜனநாயகம்’. அரசியல் நோக்கம் கருதியே அப்சல் குருவும், முருகன், சாந்தன், பேரறிவாளன் நால்வரும் தூக்கிலேற்றப்பட இருக்கின்றனர்.

ராஜீவ் கொலையை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதை புலிகள் தொடங்கி, தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் வரை விரும்பியதில்லை. ராஜீவ் காந்தி ஒரு போர்க்குற்றவாளி என்பதும், அவரது போர்க்குற்றத்தின் எதிர் நடவடிக்கைதான் அவரது கொலை என்பதும் நாம் இன்றும், இனியும் பேச வேண்டிய அரசியல் என்பதை இந்தக் கட்டுரை அரசியல் அறத்துடன் நிறுவுகிறது.

ஆகவே இவர்கள் மீதான தூக்குத் தண்டனை ரத்துச் செய்யப்படவேண்டும் என்று  நாம் கோருவது ஈழத்தின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு போரின் குற்றத்தை ரத்து செய்யாமல் இருக்க வேண்டும் என்பதோடு இணைந்தது. ஆனால் இதை பேசுவதற்கு தமிழன ஆர்வலர்கள் யாரும் தயாரில்லை. மேலும் இன்று அம்மாவின் பின்னே அணிதிரண்டு ஈழத்திற்காக குரல் கொடுக்கும் சீமான், அரசியல் அநாதை வைகோ முதல் பலரும் பாசிச ஜெயா 2007-ஆம் ஆண்டு கூட இம்மூவரையும் தூக்கிலேற்ற வேண்டும் என்று பேசியதை எப்படி முழுங்குவார்கள் என்பது தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் இதை காங்கிரசு அரசின் குற்றமாக மட்டும் பேசி சுயதிருப்தி அடைகிறார்கள். காங்கிரசு கும்பல் முதன்மைக் குற்றவாளி என்பதைக் கூட அவர்கள் ராஜீவ் காந்தி ஒரு போர்க் குற்றவாளி என்பதோடு சேர்த்துப் பேசுவதில்லை.

தூக்குமேடையில் நிற்பது மூன்று பேரின் உயிர்கள் மட்டுமல்ல, ஈழப் போராட்டத்தின் நியாயமும்தான். நாம் இரண்டையும் காப்பாற்ற வேண்டும். ஒன்றுக்கெதிராக ஒன்றை நிறுத்துவதன் மூலம் நாம் ஈழத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஏற்றுக் கொள்வதாக மாறிவிடும். அதனால்தான் நமது கோரிக்கை கருணையினால் அல்ல, அரசியல் நீதியால்.

– வினவு

_______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0

105

அண்ணா ஹசாரே

ங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்வி மேல் தோல்வி பெற்று இந்திய அணி சாதனை படைத்து வரும் வேளையில் இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்கள் அதாவது படித்த நடுத்தர வர்க்க கனவான்கள் இலண்டனில் நடந்த இளைஞர்களின் கலகத்தைக் கூட கண்டு கொள்ளாமல் இருந்த நேரம். இந்திய அணி தோல்வியால் டி.ஆர்.பி ரேட்டிங் சரிந்து தொலைக்காட்சிகளின்  விளம்பரங்களும் குறைந்து போன நிலை. கிரிக்கெட் பால் போனால் என்ன இருக்கவே இருக்கிறது லோக் பால் எனும் பந்து. வந்தார் அண்ணா ஹாசாரே. அவர் அடிக்காத சிக்சரை அடித்ததாக நம்ப வைக்க ஊடகங்களும்  அணிவகுத்தன. சின்னத்திரையில் கோக் குடித்தும், லேஸ் கடித்தும் காட்சிகளை மலிவான உணர்ச்சிகளாக உசுப்பேற்றிக் கொள்ளும் மேன்மக்களும் ஆட்டத்திற்கு தயாரானார்கள். இதோ ஆரம்பித்து விட்டது ஜோக்பால் வெர்ஷன் 2.0

அரசு கொண்டு வர இருக்கும் லோக்பாலுக்கு பல் இல்லை என்று அவர்கள்  உருவாக்கியிருக்கும் ஜன லோக்பாலை வலியுறுத்தி அண்ணா அணியினர் காலவறையற்ற உண்ணாவிரதத்தை அறிவித்தார்கள். வழக்கமாக இந்தியாவில் குறிப்பாக பெருநகரங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் சமீபத்திய ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. தாராளமயமாக்கம் சூடுபிடித்த இந்த ஆண்டுகளில் மக்களின் அரசியல் நடவடிக்கைகளை இல்லாமல் செய்ய வேண்டுமென்றே இந்த நிபந்தனைகளை அரசும், நீதிமன்றங்களும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுத்தி வந்தன.

சென்னையில் கூட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்திய இடங்களில் எல்லாம் இப்போது நடத்தக் முடியாது. சுவர் எழுத்து எழுத தடை, சுவரொட்டி ஒட்ட தடை, முக்கிய சாலைகளில் கூட்டம் நடத்த, ஊர்வலம் நடத்தத் தடை என்பதெல்லாம் அரசியல் கட்சிகளில் இருக்கும் அனைவரும் அறிந்த விசயம். இந்தகைய அடக்குமுறைகளை ஒழுங்கு என்ற பெயரில் கொண்டு வந்த போதும், அப்படி கொண்டு வரவேண்டுமென்று குத்தாட்டம் போட்ட மேட்டுக்குடி வர்க்கம்தான் இப்போது அண்ணா போராட்டத்திற்கு தடை என்றதும் சீறி எழுகிறது.

டிராபிக் ராமசாமி முதல் இப்போது அண்ணாவின் போராட்டத்தில் மெழுகுவர்த்தியை ஏந்தும் முன்னாள் ஐ.ஏ.எஸ் பெரிசுகள் வரை இந்தகைய ‘ஒழுங்கைக்’ கொண்டு வரவேண்டுமென்று நீதிமன்றங்களில் வழக்கும் தொடுத்திருக்கிறார்கள். இந்து பத்திரிகையில் வாசகர் கடிதம் எழுதியும் பொங்கியிருக்கிறார்கள். அத்தகைய பெரிசு அம்பிகள்தான் இப்போது மீண்டும் எமர்ஜென்சி வந்து விட்டது என்று துள்ளுகிறார்கள்.

சமச்சீர் கல்விக்காக எமது தோழர்கள் தமிழகமெங்கும் போராட்டம் நடத்திய போது பல இடங்களில் போலிஸ் தடியடி, சிறை, வழக்குகளை சந்தித்துதான் நடத்தியிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறையில் சில, பல நாட்கள் இருந்திருக்கிறார்கள். அதில் பதினைந்து வயது மாணவனும் உண்டு. இது இந்தியாவெங்கும் அன்றாடம் நடக்கும் நிகழ்வு. எந்தப் போராட்டமும் இத்தகைய அடக்குமுறைகளை சந்தித்தே நடைபெறுகிறது. அப்போதெல்லாம் ஜனநாயகம் காக்கப்படுவதாக ராகம் பாடும் அம்பிகள் இப்போது மட்டும் அதுவும் செல்லமாக அண்ணா போராட்டம் சீண்டப்படும் போது துள்ளுவது காணச்சகிக்க வில்லையே?

அண்ணாவின் வீரகாவியமாக சித்தரிக்கப்படும் அந்த காலவறையற்ற உண்ணாவிரதம் நடத்துவதற்கு டெல்லி காவல்துறை விதித்த 22 நிபந்தனைகளில் வெறும் ஆறு மட்டும் அண்ணா அணியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 5000 பேர்களுக்கு மேல் கூடக்கூடாது, மூன்று நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தக்கூடாது என்ற அந்த நிபந்தனைகளை டெல்லி போலீசு புதிதாக ஒன்றும் உருவாக்கவில்லை. இவையெல்லாம் தில்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உருவாக்கியிருக்கும் வழிகாட்டுதல்கள்தான். அதன் படிதான் நிபந்தனைகளை விதித்திருப்பதாக டெல்லி போலீசு சத்தியமடிக்காத குறையாக தெரிவித்திருக்கிறது.

இத்தகைய நிபந்தனைகள் மட்டுமல்ல இன்னும் பல்வேறு நிபந்தனைகளெல்லாம் இந்தியாவெங்கும் அன்றாடம் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. காஷ்மீர், வடகிழக்கு போன்ற போராட்ட மாநிலங்களில் இது இன்னும் காட்டு தர்பாராக இருக்கும். எனில் இத்தகைய நீதிமன்ற, அரசு நிபந்தனைகள், மக்களின் போராடும் உரிமையை ரத்து செய்கிறது, இவற்றை இந்தியாவெங்கும் ரத்து செய்ய வேண்டும் என்று அண்ணா அம்பிகள் அணி கோரவில்லை. சொல்லப்போனால் அத்தகைய நிபந்தனைகள் இன்னும் அதிகம் வேண்டுமென்பதுதான் அண்ணாவின் பின் இருக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தின் நிலை.

அண்ணாவிற்காக சென்னையில் சீன் போடும் அருணா சாய்ராம், அனிதா ராம், சுவர்ணமால்யா போன்ற கருநாடக, பரதநாட்டிய தாரகைகளிடம் அண்ணா சாலையில் தொழிலார்களின் ஊர்வலங்களை தடை செய்யலாமா என்று கேட்டுப் பாருங்கள்; கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் என்று ஒரே ஸ்வரத்தில் பாடுவார்கள், ஆடுவார்கள்! ஆனால் அவர்களது கோரிக்கைதான் ஏற்கனவே அமலில் இருக்கிறது என்பதால் இது ஒன்றும் பிரச்சினை அல்ல.

ஐரோம் ஷர்மிளா காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்கும் போது போலீசு வலுக்கட்டாயமாக அவரை தூக்கிச் சென்று மருத்துவ மனையில் வைத்து உணவையும், மருந்தையும் வலுக்கட்டாயமாக புகட்டிவிடும். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் அண்ணாவின் போராட்டத்திற்கு மட்டும் போலிசு பவ்யமாக நிபந்தனைகளை விதிக்கிறது. தாள் பணிந்து பேசுகிறது. அதை அண்ணா ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்ன போது பவ்யமாக கைது செய்கிறது. மாஜிஸ்ரேட் கூட அண்ணாவின் இடத்திற்கு வந்து பவ்யமாக விசாரிக்கிறார். பின்னர் நீதிமன்றக் காவல் என்றதும் சிறையில் உண்ணாவிரதத்தை நடத்துகிறார். இரவே விடுதலை என்றதும் சிறையை விட்டு அகல மறுக்கிறார்.

இதுவே மற்றவர்களென்றால் இப்படி எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. போராட்டங்களுக்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்படும் எவரும் அன்றிரவே விடுதலை செய்யப்பட்டதாக சரித்திரம் இல்லை. அப்படி விடுதலை செய்யப்பட்டாலும் யாரும் சிறையிலேயே தங்குவேன் என்று அடம்பிடிக்க முடியாது. குண்டு கட்டாக இழுத்து வந்து வெளியே தூக்கி எறிவார்கள். ஆக அண்ணா ஹசாரேவுக்காக போலீசு, நீதிமன்றம், சிறை எல்லாம் அடிபணிந்து சேவகம் செய்கிறது. இந்த இலட்சணத்தில் இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று அண்ணா அறிவித்திருப்பதை என்ன சொல்ல? முருகா, முருகா என்று வயிற்றிலும் வாயிலும் அடித்து அழவேண்டியதுதான்.

அரசு கொண்டு வர இருக்கும் லோக்பால் மசோதா தற்போது  பாராளுமன்ற நிலைக்குழு முன் இருக்கிறது. இத்தகைய முறைகளில் பாராளுமன்றம்தான் இதை நிறைவேற்ற வேண்டும், மாறாக பாராளுமன்றத்திற்கு வெளியே சிலர் டெண்டு அடித்து போராட்டம் நடத்தி கொண்டு வருவது பாராளுமன்ற ஜனநாயகத்தை மறுப்பதாகும் என்று பிரதமர் மன்மோகன் உட்பட பல காங் அரசு ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

பாராளுமன்றத்திற்கு தெரியாமல் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கைநாட்டு இட்டது முதலான இட்டதுகளில் இருந்தே பாராளுமன்றத்திற்கு இறையாண்மையோ, புனிதமோ, உரிமையோ ஒரு எழவும் கிடையாது என்பது ஊரறிந்த விசயம். ஆனால் இதையெல்லாம் அண்ண அணி கூறவில்லை. நாங்கள்தான் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். ஆக பாராளுமன்றத்தின் பல் எப்போதோ பிடுங்கப்பட்டு விட்டது என்பதும், இந்திய அரசும் இப்போது அமெரிக்காவின் அடிமையாகி விட்ட நிலையில் அது குறித்தெல்லாம் அண்ணா ஹசாரே அணி கவலைப்படவில்லை. அவர்கள் கவலை எல்லாம் அந்த லோக்பாலை தூக்கிவிட்டு இவர்களது ஜன லோக்பாலை கொண்டு வரவேண்டும் என்பதுதான்.

அமைப்பு முறை என்ற முறையில் இந்திய அரசு அமல்படுத்தி வரும் தனியார் மயம்தான் ஊழலின் ஊற்று மூலம் என்பதை மறுத்து அந்த தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஊழலை மட்டும் ஒழிக்க வேண்டுமென்று பொத்தாம் பொதுவான முழக்கத்தோடு அண்ணா அணி நடத்துவது ஒரு பச்சையான நாடகமே.

மேலும் அண்ணா ஹசாரே அணி உருவாக்கியிருக்கும் ஜன் லோக்பாலை காங்கிரசு மட்டுமல்ல, பா.ஜ.க, கம்யூனிஸ்டுகள் உட்பட எந்தக் கட்சியும் இதுவரை ஆதரிக்கவில்லை. எனில் எல்லா கட்சிகளையும் எதிர்த்து அண்ணா அணி போராடியிருக்க வேண்டும். அப்படி போராடமல் இருப்பதற்கு என்ன காரணம்? “நீ போராடுற மாதிரி ஆடு, நான் ஆதரிக்கிற மாறி நடிக்கிறேன்” என்று எதிர்க்கட்சிகளும் இந்த நாடகத்தை தெரிந்தே நடத்துகின்றன. அண்ணாவின் ஜன் லோக்பாலை பா.ஜ.க கட்சி ஏற்காத நிலையில் அதன் உறுப்பினர் வருண் காந்தி அதை தனிநபர் மசோதாவாக பாரளுமன்றத்தில் எழுப்புவேன் என்று கூறியிருக்கிறார். இது நாடகம் என்பதற்கு இது ஒன்றே போதும்.

அடுத்து சமீபத்திய பெரும் ஊழலான 2 ஜியை எடுத்துக் கொள்வோம். குற்றவாளி ராசா எடுத்து வைத்த வாதப்படியும், உண்மைகளின் படியும் பிரதமர் மன்மோகன் சிங்கையே இப்போது கைது செய்திருக்க வேண்டும். அவரையும், ப.சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர்களையும், முன்னர் ஆட்சியில் இருந்த பா.ஜ.கவின் அமைச்சர்களையும் கைது செய்ய வலுவான முகாந்திரம் உள்ள நிலையில் இப்படி எந்தக் கோரிக்கையையும் எழுப்பாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் எதிர்ப்பு என்று பேசுவது யாரை ஏமாற்ற?

காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் என்று ஊழலின் குறிப்பான விசயங்களைப் பற்றி எதுவும் பேசாமல், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தை கலைக்கவே அண்ணாவின் காமடி நாடகம் பயன்படுகிறது. அது தெரிந்தே காங் அரசும் அண்ணாவை எதிர்ப்பது போல எதிர்த்து அணைப்பது போல அணைத்து இந்த ஆட்டத்தை தொடர்கிறது.

ஆனால் இந்த ஆட்டத்தில் தனது தராதரத்தை மறந்து அண்ணா கோஷ்டி அதிகம் ஹீரோயிசம் போட நினைப்பதுதான் காங்கிரசு அரசின் பிரச்சினை. இந்த ஆட்டத்தின் மூல நோக்கத்தில் இருவருக்கும் உடன்பாடு இருந்தாலும் உடனடி நற்பெயர் யாருக்கு என்பதில்தான் தற்போதைய காமடி சண்டை எழுந்திருக்கிறது.

ஊடகங்கள் அனைத்தும் ஒற்றுமையாக இந்த நாடகத்தை மாபெரும் வீரக்காவியமாக சித்தரிக்கின்றன. இந்தியா முழுவதும் 20 நகரங்களில் மக்கள் எழுச்சி என்றெல்லாம் தொடர்ந்து உசுப்பேற்றுகிறார்கள். எங்கும் காமராவின் எல்லைகளைத் தாண்டி கூட்டம் இல்லை. இருக்கும் கூட்டமும் அரசியல் என்றால் என்ன என்று அ-னா, ஆவன்னா கூட தெரியாத கனவான்கள் கூட்டம். அதிலும் டெல்லி திகார் சிறைக்கு கார்களில் வரும் மேன்மக்கள் ஒரு கி.மீட்டர் தொலைவில் காரை நிறுத்தி விட்டு நடந்து வந்து சிறை முன்பு கூடுகிறார்களாம். இத்தகைய மாபெரும் தியாகங்களை வைத்துத்தான் இதை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று தொடர்ந்து ஓதி நம்மை துன்புறுத்துகிறார்கள்.

42 வருடங்களுக்கு முன்னர் சி.என் அண்ணாதுரை காலமான பிறகு தமிழகம் தற்போது இரண்டாவது அண்ணாவை கண்டெடுத்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா குதூகலிக்கிறது. சில நூறு சேட்டுபையன்கள் தோற்றத்தில் இருக்கும் அம்பிகளின் கூச்சலை வைத்து திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்துவது அதன் நோக்கம். அதனால்தான் எந்த இந்தி மொழியை எதிர்த்து தமிழகம் போராடியதோ அந்த இந்தி மொழி பேசும் ஒரு தலைவரை தமிழகம் ஏற்றிருப்பதாகவும் அந்த நாளிதழ் விசமத்தனமாக பொய்யுரைக்கிறது.

அண்ணா ஹசாரேவின் காந்திய வேடங்களை பலர் தோலுரித்திருக்கிறார்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்டது, இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட் நிதியில் கையாடல் செய்தது, அதை நீதிபதி பி.பி.சாவந்த் உறுதி செய்தது, அண்ணா ஹசாரேவின் கிராமமான ராலேகாவ் சித்தியில் நாட்டாமையாக ஆட்டம் போட்டது, குடித்தவரை தூணில் கட்டி அடிப்பது, அசைவ உணவை கிராமத்தில் தடை செய்தது, கேபிள் டி.வியை முடக்கியிருப்பது வரை பல வண்டவாளங்கள் அண்ணா ஒரு நிலபிரபுத்துவ நாட்டாமை என்பதை தெரிவிக்கின்றன.

ஊடகங்களின் கவரேஜ்ஜுக்கு பொருத்தமாக தனது உண்ணா விரதத்தின் தேதியையெல்லாம் தள்ளிவைக்கும் இந்த விளம்பர மோகியின் பலவீனத்தை புரிந்து கொண்டு ஊடகங்களும் அவரை மாபெரும் போராளியாக சித்தரிக்கின்றன. குறைந்தபட்சம் நமது தங்கபாலு அளவுக்கு கூட அறிவில்லாத இந்த காமடியனை ஊடகங்கள் ஜாக்கி வைத்து தூக்க தூக்க அவரும் தன்னை ஒரு 70 எம்.எம் ஹீரோவாக கருதிக் கொள்ள நாட்டு மக்கள் இந்த நாடகத்தை பார்த்து தொலைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை.

புரட்சிகரமான முழக்கங்களின் மூலம் மக்களை திரட்டி அவர்களது அரசியலை காயடிப்பதை குறிக்கோளாக வைத்து இயங்கும் ஏகாதிபத்தியங்களின் ஆசி பெற்ற தன்னார்வக் குழுக்கள் அண்ணாவின் நாடகத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. இவர்கள்தான் ‘இந்தியா’வெங்கும் மேன்மக்களை திரட்டி ஏதோ இந்தியாவே போராடுவது போன்ற சித்திரத்தை உருவாக்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற இந்துத்வ இயக்கங்களும் அண்ணாவின் மூலம் கல்லா கட்டலாம் என்று மனப்பால் குடிக்கின்றன. ராம்தேவ், டபுள் ஸ்ரீ ரவி சங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும் தங்களது சாம்ராஜ்ஜியத்தின் நலன் கருதி இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரமாற்ற விழைகிறார்கள். இந்த வகையில் ஏராளமான உள்குத்துகள் நடந்தாலும் அது நமது கவனத்திற்கு வராது.

ராசா, கல்மாடி இருக்கும் திகார் சிறையில் அண்ணா அடைக்கப்பட்டதையே ஒரு மாபெரும் அநீதியாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. திருடர்களுடன் சிலுவையில் அறையப்பட்ட இயேசு நாதர் கூட இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்ததில்லை. கைது என்றால் சிறையில்தான் அடைப்பார்கள். சிறை என்றால் குற்றவாளிகள், மற்றும் குற்றம் சுமத்தப் பட்டோர்தான் இருப்பார்கள். சிறையிலும் கூட தீண்டாமையுடன் கூடிய 5 நட்சத்திர தரத்தை எதிர்பார்க்கும் இவர்கள்தான் ஊழலை எதிர்க்க போகிறார்கள் என்றால் எருமை மாடு கூட வெட்கப்படும்.

பேரறிவாளன் 9வால்ட் பேட்டரியை வாங்கிக் கொடுத்தார் என்று சொல்லி அதுவும் ஒரு பொய்க்குற்றச்சாட்டு என்றாலும் அதற்கே தூக்குத் தண்டனை என்று தீர்ப்பளித்த  நாட்டில்தான் நோகாமல் மீடியா டார்லிங்காக இருக்கும் அண்ணாவிற்காக அரசு செய்யும் காமடிகளை மாபெரும் அடக்குமுறை என்று சித்தரிக்கிறார்கள். அந்த வகையில் அண்ணாவுக்கு கிடைக்கும் மலிவான கவரேஜ் அனைத்தும் இந்த நாட்டின் மக்கள் உரிமைகளை காவு கேட்பதற்கு பயன்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

2ஜி ஊழலில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள், அரசு அனைவரும் குற்றவாளிகளாக தெரியவரும் நேரத்தில் அதை மறைப்பதற்கே அண்ணாவின் நாடகம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில் அண்ணாவின் உண்ணவிரத நாடகம் அரசின் மறைமுக ஆதரவோடு இன்னும் கொஞ்ச நாட்கள் நடைபெறும். கார்ப்பரேட் ஊடகங்களும் அதை வைத்து வரும் நாட்களில் ஊதிப்பெருக்கும். ஓய்வு நேர அரசியலுக்கு வாகாக இருக்கும் இந்த மெழுகுவர்த்தி பேஷன் ஷோவில் கலந்து கொள்வதால் எந்தப் பிரச்சினையும் வராது என்பதை உறுதி செய்து கொண்டு வரும் படித்த நடுத்தர வர்க்கம் மேலும் பாசிசமயமாவதற்குத்தான் இந்த நாடகம் உதவி செய்யும்.

அந்த வகையில் அண்ணாவின் வீரகாவிய காமடி நாடகம் ஆளும் வர்க்கத்திற்கு தற்செயலாக கிடைத்த பொக்கிஷம். இந்த பொக்கிஷத்தை பாதுகாக்க அண்ணா ஹசாரேவே மறந்தாலும் ஆளும் வர்க்கம் மறக்காது. ஊழலின் ஊற்று மூலமான இந்த அரசு அமைப்பு முறையை மாற்ற வேண்டும் என்று சிந்திப்பவர்கள் இந்த காமடி நாடகத்திற்கு அழ முடியாது. மீறி அழுபவர்களை யாரும் காப்பாற்றவும் இயலாது.

_______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

சினிமா விமரிசனம் – தோகி : என் பாடல் துயரமிக்கது !

Doghi (1995) - என் பாடல் துயரமிக்கது!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளர் சாய்நாத் இந்திய விவசாய வர்க்கம் நொறுங்கிச் சிதறுவதை உயிருள்ள சாட்சிகளாக தமது ஆங்கிலக் கட்டுரைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பன்னாட்டு உரக் கம்பெனிகள், விதைக் கம்பெனிகளின் படையெடுப்பின் விளைவாகவும், அவர்களது காலை நக்கி விவசாயிகளின் கழுத்தறுக்க துணை நின்ற அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளின் துரோகத்தின் விளைவாகவும், மென்னி முறிக்கும் கந்துவட்டிக் கொடுமையின் விளைவாகவும் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அவ்விவசாயிகளின் வாழ்க்கையை ஆதாரபூர்வமாக அக்கட்டுரைகளில் நாம் காண முடியும்.

கடன் வாங்கிய பணத்தில் மகளின் கல்யாணம், அதே நாளில் மருந்தைக் குடித்துச் செத்த தகப்பனின் கருமாதி, ஊரைவிட்டு வெளியேறி பெயர் தெரியாத ஊரில் அநாதைகளாக மருந்தைக் குடித்துச் செத்துப் போன குடும்பங்கள், தங்கள் உடல்களைக் கூட தங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டாமென கடிதம் எழுதி வைத்துவிட்டு செத்துப் போன விவசாயிகள்…. எத்தனைக் காட்சிகள்?

சிந்தித்துப் பாருங்கள். ஷில்பா ஷெட்டியின் விளம்பர அதிகாரிகளைப் போல அவ்விவசாயிகளுக்கு யாருமில்லை. அதனால் புள்ளி விவரங்களாய் மட்டும் செய்தி ஊடகங்களைக் கடந்து, மறைந்து போய்விட்டனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்கள் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருப்பார்கள்? குடும்பத்தின் தலைவன் போன பின்னால், அரசின் பிச்சைத் தொகை அவர்களுடைய வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது? அவர்களது வாழ்க்கை தலைகீழாக ஏன் மாறியது என்றாவது அவர்களுக்குத் தெரியுமா? அவர்களை விளிம்பிற்கு நெட்டித் தள்ளும் வாழ்க்கையில் அதிர்ச்சியோ, மனப்போராட்டமோ, கண்ணீரோ, கதையோ இல்லையா? பின்னர் ஏன் இந்த நாட்டின் சிறுகதைகளில், நாவல்களில், செய்திக் கட்டுரைகளில், திரைப்படங்களில் அவர்கள் இல்லை?

பொறுக்கி வீரர்களின் பொறுக்கித்தனங்களிலும், மல்லாக் கொட்டைகளிலும் மாய்ந்தெழுந்து, கிராமப்புறங்களின் “யதார்த்த’ வாழ்வைச் சொல்லும் சினிமாக்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கும் படைப்புலக பிரம்மாக்களின் கலை உணர்ச்சி, இந்த யதார்த்தமான, கவர்ச்சியற்ற, தேய்ந்தழியும் உண்மையான கிராம வாழ்க்கையை ஏன் கதைக் கருவாக ஏற்க மறுக்கிறது? அவர்களுக்கு, இயல்பான சோகம் “போர்’ அடிக்கிறது.

அத்தகைய “போர்’ அடிக்கும் திரைப்படமொன்றை நான் சமீபத்தில் பார்த்தேன். 1995இல் சுமித்ரா பாவே என்பவரால் உருவாக்கப்பட்ட தோகீ (இரு பெண்கள்) எனும் அந்த மராத்தியத் திரைப்படம், 1996இல் சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த திரைப்படமாக தேசிய விருது கொடுத்து முடக்கப்பட்டு விட்டது. “அவார்டு’ படம் என்றான பின்னால் அது மக்கள் பார்க்கத்தகாதது என்பது இந்தியச் சினிமாவின் அடிப்படை விதிகளில் ஒன்று. உண்மையில் இத்திரைப்படம் வழக்கமான “அவார்டு’ படங்களுக்கு நேர் எதிரான முறையில் உரக்கப் பேசும் கதாபாத்திரங்கள், பாடல்களுடைய படமே.

_________________________________________________

Doghi (1995) - என் பாடல் துயரமிக்கது!ஒரு வறிய மகாராஷ்டிர கிராமப்புறத்தில் வாழும் கௌரி, கிருஷ்னே என்ற இளம் சகோதரிகளின் வாழ்க்கைதான் இப்படத்தில் மையக்கரு. மூத்தவளான கௌரியின் திருமணத்திற்கு முந்தைய இரு நாட்களிலிருந்து படம் துவங்குகிறது. உறவினர்கள் சூழ திருமண மகிழ்ச்சியில் குடும்பமே திளைக்கிறது. அதனைக் குலையறுக்கும் விதமாக மணமகன் வீட்டார் மொத்தமும் வரும் வழியில் விபத்தில் இறந்து விட்ட செய்தி வந்திறங்குகிறது. அதிர்ச்சியில் தகப்பனுக்கு வாதம் வந்து விடுகிறது. குடும்பம் இடிந்து போகிறது.

அதிர்ஷ்டம் கெட்ட சனியனாக கௌரி ஊரால் பழிக்கப்படுகிறாள். வாதத்தினால் படுக்கையில் கிடக்கும் கணவனையும், இரு மகள்களையும், சிறுவனான மகனையும், மூழ்கடிக்கும் கடன்களையும் சுமக்க வழியின்றி கௌரியின் தாய் திணறுகிறாள். நிலங்களையும், மாடுகளையும், எஞ்சியிருக்கும் நகைகளையும் விற்று உயிர் வாழப் போராடுகிறாள். கடன்காரர்கள் சுற்றி நெருக்குகிறார்கள். நாட்பட நாட்பட கௌரி பித்துப் பிடித்தவள் போல நிலை வெறித்துக் கிடக்கிறாள். ஊர் அவளை சூனியக்காரி என ஏசுகிறது.

செய்வதறியாமல் விசும்பும் தாய், பம்பாயில் மில்லில் வேலை செய்யும் தனது தம்பிக்குக் கடிதம் எழுதி வரவழைக்கிறாள். கௌரி இங்கே ஊராரிடம் வதைபடுவதிலிருந்தும், அவளால் அவளது தங்கை, தம்பி வாழ்க்கையும் பாதிக்கப்படுவதிலிருந்தும், சோத்துக்கே வழியற்றுக் கிடக்கும் நிலையிலிருந்தும் விடுபட, அவளை பம்பாய்க்கு அழைத்துச் சென்று ஏதேனும் வேலைக்குச் சேர்த்து விடும்படிக் கூறுகிறாள். சிந்திக்கும் தம்பி “சரி அழைத்துச் செல்கிறேன், ஆனால் என்ன வேலை எனக் கேட்கக் கூடாது, மணியார்டர் மட்டும் மாதாமாதம் வந்து விடும்’ என்கிறான். அதிர்ந்து போகிறாள் தாய். வேதனையில் குமுறியவாறு, இறந்து போன மாப்பிள்ளை வீட்டாரோடு மகள் திரும்பிப் போகும்பொழுது இறந்ததாகக் கருதிக் கொள்ள வேண்டியதுதான் என்கிறாள்.

இரவு முழுவதும் தூங்காமலிருக்கும் தாய், அதிகாலையில் தம்பியை எழுப்பி கௌரியை அழைத்துச் செல்லும்படி கூறுகிறாள். இவையெதுவும் அறியாத கௌரி, ஏதோ வேலைக்குச் செல்வதாகக் கருதி மாமனோடு ஊரிலிருந்து மௌனமாக வெளியேறுகிறாள். பரிதவிப்போடு கிருஷ்னேயும், அவளது தம்பியும் அவளைப் பின்தொடர்ந்து சென்று வழியனுப்பி வைக்கிறார்கள்.

மாதா மாதம் மணியார்டர் வருகிறது. மணியார்டர் பணத்தை வாங்கும் நாளில் தாய்க்கும் கிருஷ்னேக்கும் இடையே ஒரு இறுக்கமான மௌனம் நிலவுகிறது. தன்னுடைய அக்காள் எங்கேயோ உடல் வருந்த உழைத்து பணம் அனுப்புகிறாள் என வருந்தும் கிருஷ்னே, மணியார்டர் துண்டுக் காகிதத்தைக் கூட சேர்த்து வைக்கிறாள். ஒரு கனத்த மௌனத்தினூடாகக் காலம் உருண்டோடுகிறது.

பம்பாயிலிருந்து மாமன் வீட்டிற்கு வருகிறான். இரவில் தாய் அவனிடம் கௌரி குறித்து வினவுகிறாள். அவன் தான் அங்கே போவதில்லை என்கிறான். தானும் முன்பெல்லாம் அங்கே சென்று கொண்டிருந்ததாகவும், இப்பொழுது அங்கே செல்ல மனம் வரவில்லை எனவும் கூறுகிறான். தான் ஒரு பெரும் பாவம் செய்து விட்டதாகவும், உணவும், உறக்கமும் கூட அற்றுப் போய் விட்டதாகவும் வருந்துகிறான்.

கிருஷ்னேக்கு மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் ஒரு இளைஞனோடு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. மாதா மாதம் வரும் மணியார்டரோடு இம்முறை முதல் முறையாக கௌரியிடமிருந்து கடிதம் வருகிறது. திருமணம் குறித்து அறிந்து கொண்டதாகவும், புடவைகள், பட்சணங்களோடு தான் வருவதாகவும் அக்கா கூறுகிறாள். வெம்மை படர ஊரை விட்டுச் சென்ற கௌரி, ஒரு அதிகாலைப் பொழுதில் வந்து சேர்கிறாள்.

அக்காவினுடைய பகட்டான சேலையையும், முகத்தில் தோன்றும் அந்நியப்பட்ட தன்மையையும் கண்டு கிருஷ்னே துணுக்குறுகிறாள். தனது கல்யாணத்தோடு அவளும் கல்யாணம் செய்து கொண்டாலென்ன எனக் கேட்கிறாள். தனக்கு நிறையவே கல்யாணங்கள் நடந்து முடிந்து விட்டதாகவும், இனி தனக்குக் கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லையெனவும் கௌரி கூறுகிறாள். புரியாத கிருஷ்னே, “நீ ரொம்பவும் மாறிப் போய்விட்டாய் அக்கா’ என்கிறாள். குளித்துக் கொண்டிருக்கும் கௌரிக்கு நீரூற்றச் செல்லும் தாய், அவளது முதுகிலுள்ள தீக்காயத்தைக் கண்டு ஸ்தம்பித்து நிற்கிறாள்.

உறவினர்கள் வருகின்றனர். திருமணத்திற்கு முதல் நாள் சடங்குகள் நடக்கின்றன. பெண்களோடு இணைந்து இனிப்புகள் பரிமாறத் தட்டெடுக்கும் கௌரியை, தாய் முறைக்கிறாள். நீ ஏன் குறுக்கே வருகிறாய் எனக் கடிந்து கொள்கிறாள். கௌரி மௌனமாக வெளியேற, ஆத்திரம் கொள்ளும் கிருஷ்னே, “”கௌரி வேண்டாம், ஆனால் கௌரி கொடுக்கும் காசு மட்டும் உனக்கு வேண்டுமா?” என வாதிடுகிறாள். பதில் பேச முடியாமல் தாய் அறையை விட்டு வெளியேறுகிறாள். கௌரியைப் பின் தொடரும் கிருஷ்னே, வேண்டுதல் துணி முடியும் மரத்தினடியில் அவளைக் காண்கிறாள். அவளருகில் மௌனமாகச் சென்றமர்கிறாள்.

அந்தப் பக்கமாய், மாப்பிள்ளையும், அவனது நண்பர்களும் உலவ வருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும் குமுறியெழும் கிருஷ்னே, அவர்களை நோக்கிக் கத்துகிறாள். “”இங்கே பாருங்கள், இவள்தான் என்னுடைய அக்கா, இவள் என்னை விட நன்றாகப் பாடுவாள். என்னை விட்டு விடுங்கள். இவளைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். சமூக மாற்றத்திற்காகப் போராடுகிறீர்களே, இதோ என்னுடைய அக்காக எங்களுக்காக உழைத்து உழைத்து தேய்ந்து நிற்கிறாள். இவளுக்கு வாழ்க்கை கொடுங்கள்!” எனக் கதறும் கிருஷ்னேயை, கௌரி இழுத்துச் செல்கிறாள். மாப்பிள்ளையும், நண்பர்களும் புரியாமல் நிற்கின்றனர்.

திருமணம் நடக்கிறது. ஒதுங்கி நிற்கும் அக்காவை நொடிக்கொரு முறை கிருஷ்னே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொள்கிறாள். அவள் பார்வையின் திசை வழியே எல்லோரும் கௌரியைப் பார்த்து சங்கடமான மௌனத்தில் ஆழ்கிறார்கள். கௌரி மெல்ல விலகி மறைகிறாள். தாலி கட்டும் நேரத்தில் எழுந்து வெளியேறும் கிருஷ்னே, அக்காவைத் தேடியோடுகிறாள். அனைவரும் அதிர்ச்சியுறுகின்றனர். ஊரை விட்டு வெளியேற நடந்து செல்லும் கௌரியை, கிருஷ்னே வந்து பிடித்துக் கொள்கிறாள். அவள் பம்பாய்க்குப் போக வேண்டாமென்றும், எப்படியாவது இங்கேயே கஷ்டப்பட்டு தலை நிமிர்த்தி முன்னேறுவோம், அவமானமும், சார்ந்திருக்கும் அவலமும் வேண்டாம் எனக் கூறுகிறாள்.

மாமனும் வந்து சேர்கிறான். கௌரி ஊரை விட்டுப் போக வேண்டாமென்றும், தாங்கள் அனைவரும் செய்து விட்ட பாவத்தை மன்னிக்கும்படியும் வேண்டுகிறான். கௌரியை திருமண வீட்டிற்குத் திரும்ப அழைத்து வரும் கிருஷ்னே, காத்திருக்கும் எல்லோருக்கும் முன்பாக அம்மாவிடம் கௌரி திரும்ப வந்திருப்பதைக் கூறுகிறாள். கௌரியை கட்டித் தழுவிக் கொள்ளும் தாய், இனி அவள் பம்பாய் போக வேண்டாமென்றும் பட்டினி கிடந்து செத்தாலும் சரி, இங்கேயே இருக்குமாறும் வேண்டியழுகிறாள். படம் முடிவடைகிறது.

_________________________________________

இக்கதை விவசாயிகளின் பிரச்சினையை, அவர்களது வாழ்க்கையைப் புரட்டிப் போடும் உண்மையான சக்திகளை நேரடியாகச் சொல்லவில்லை. வாதத்தில் விழுந்த கௌரியின் தந்தை வாதத்தில் விழுந்த விவசாயத்தின் உருவகம் என்றும் கொள்ளலாம். ஒருவேளை மணமகனின் குடும்பம் விபத்தில் சாகாமல் இருந்திருந்தால், விவசாயி வாதத்தில் விழாமல் இருந்திருந்தால், என்ன நிகழ்ந்திருக்கும்?

மான்சாண்டோ விதைகளைப் பயிரிட்டு மகசூலுக்காகக் காத்திருந்து, பின்னர் பொய்த்துப் போன பருத்திப் பயிர்களைக் கண்டு மனமொடிந்து செத்த விவசாயிகளைப் போல, அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார். குடும்பமே தற்கொலை செய்து கொள்ளலாமென முடிவு செய்யாத பட்சத்தில், கதையில் நிகழ்ந்ததைப் போலவே கௌரி மும்பைக்கு ரயிலேறியிருப்பாள். உடலால் தற்கொலை செய்து கொள்வது அல்லது உள்ளத்தால் தற்கொலை செய்து கொள்வது இரண்டிலொன்றை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு சமூகம் அவர்களைத் தள்ளுவதை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

ஒரு விவசாயியைப் பொறுத்தவரை தான் கொண்டிருக்கும் அறம் சார்ந்த விழுமியங்களிலிருந்து வழுவுவதென்பது ஒரு வகை மரணம்தான். உண்மையான மரணத்தை எதிர்கொள்வதற்கு அதிகம் தடுமாற்றம் காட்டாத தாய், மகளை பம்பாய்க்கு அனுப்பும் முடிவில் லேசாகத் தடுமாறுகிறாள். பம்பாயில் என்ன வேலை என்று மாமன் உடைத்துச் சொல்லவில்லை. சொல்லாத போதிலும் விளங்கிக் கொள்கிறாள் தாய். பசி அறத்தைத் தின்னுகிறது.

இப்படித்தான் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதிகளின் வீதிகளில் ஒவ்வொரு நாளும் கெளிரிகள் வந்திறங்குகிறார்கள். கௌரிகளுடைய நிலங்களையும், வயல்களையும், பன்னாட்டுக் கம்பெனிகள் துகிலுரிய வழிவகுத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதல் போலீசுக்காரன், பொறுக்கி வரை அனைவரும் அவர்களைத் துகிலுரிகிறார்கள்.

இன்று சிங்கூரிலிருந்தும், நந்திகிராமத்திலிருந்தும் விரட்டியடிக்கப்படும் விவசாயிகள் நாளை கல்கத்தாவில் அத்துக் கூலிகளாய் வந்து வீழ்வார்கள். ரத்தன் டாடாவும், மார்க்சிஸ்டுகளும் கோடிகளையும், நிலங்களையும் பண்டம் மாற்றிக் கொண்டு படுத்துறங்கும் வேளையில் கௌரிகளும், கிருஷ்னேகளும் சோனாகஞ்சியில் துகிலுரியப்படுவார்கள்… வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தப் புண்ணிய தேசத்தின், இந்த வளர்ந்து வரும் வல்லரசின் சாதனைகளில் ஒன்று என்ன?

மொழி, இன, சாதி எல்லைகளைக் கடந்து உ.பி.யிலிருந்தும், பீகாரிலிருந்தும், மகாராட்டிரத்திலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் “நூறு ரூபாய்க்கு கூட பெறுமானமில்லாத’ மூஞ்சிகளைப் பெற்ற (உபயம்: பருத்திவீரன்) விவசாய வர்க்கப் பெண்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் காமாட்டிப்புராவில், சோனாகாஞ்சியில் கைகாட்டி நிற்கிறார்கள். நேபாளப் பெண்கள் மும்பை விபச்சார சந்தையில் 3,4 ஆண்டுகள் தம்மை விற்று தமது திருமணத்திற்கான தொகையைச் சேமித்துக் கொண்டு சென்று, திருமணம் செய்து கொள்கிறார்கள். மாதாமாதம் வீட்டுக்கு மணியார்டர் போகிறது.

இப்படத்தில் வரும் கௌரியின் மாமன் மன உறுத்தலால் விபச்சார விடுதிக்குப் போவதையே விட்டு விடுகிறான். கன்னட பிரசாத் எனும் விபச்சாரத் தரகனைப் பற்றி செய்தியெழுதும் போர்வையில் அவனது ஆல்பத்திலுள்ள நடிகைகளின் பெயர்களை மயிர் பிளக்கத் துப்பு துலக்கி, பின்னடித்த புத்தகங்களை மிஞ்சும் வகையில் சர்வ அவசியத் தகவல்களோடு, வாசகனின் சபலத்தைத் தூண்டும் மஞ்சள் பத்திரிக்கைகளின் புரோக்கர் கண்ணோட்டத்தையும், அதனையே ஒரு விவசாயியின் கண்ணோட்டத்தில் சொல்லும் இத்திரைப்படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

விவசாயிகளுடைய வாழ்க்கைச் சித்திரத்தின் மையக் கோடுகளைத் தொட்டு விரிந்து, விமரிசனப் பார்வையோடு இப்படம் மிளிரவில்லை என்பது உண்மைதான். ஆனால், உலகமயமாக்கம் வழங்கும் கோலாகலமான, செயற்கை உலகத்தில், விமரிசனமில்லாத இந்த யதார்த்தம் கூட மதிக்கத்தக்க மாற்றாகத்தான் இருக்கிறது.

பெண் பார்க்கும் நிகழ்வில் பாடச் சொல்லும் பொழுது, தொலைதூரத்தில் வருந்த உழைக்கும் தனது அக்காளின் நினைவாகவே வாழும் கிருஷ்னே அத்தருணத்தில் கூடத் தங்களது கையறு நிலையை மறக்கவியலாது பாடுகிறாள்.

“”நிலம் பாளங்களாக
வெடித்துக் கிடக்கிறது.
துளிநீர் கூட கண்ணில்
தட்டுப்படவில்லை.
என் பாடல் துயரம் மிக்கது,
என் பாடல் துயரம் மிக்கது.

__________________________
· பால்ராஜ்
__________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!

இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!

மான ஈனமற்ற அமெரிக்க அடிமைத்தனத்திற்குப் புதிய இலக்கணம் படைத்து வருகிறது, மன்மோகன் சிங் அரசு. மறுகாலனியாக்கக் கொள்கைகளை விசுவாசமாகவும் வெறியோடும் நடைமுறைப்படுத்தி வருவதோடு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டத்தில் இந்தியாவை இறுகப் பிணைக்கும் நடவடிக்கைகளில் அப்பட்டமாக ஈடுபட்டு, இந்தியாவை அமெரிக்காவின் விசுவாச அடியாளாக வளர்த்தெடுப்பதிலும் புதிய ‘சாதனை’யைப் படைத்து வருகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு வந்து இந்தியஅமெரிக்க போர்த் தந்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தையைத் தொடங்கி வைத்தார். இப்போது அதன் தொடர்ச்சியாக, ஆண்டுக் கூட்டப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க உயரதிகாரிகளுடன் கடந்த ஜூலை 19ஆம் தேதி டெல்லிக்கு வந்தார், அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான ஹிலாரி கிளிண்டன். அவரது வருகையையொட்டி, கோடிக்கணக்கான சிறு வியாபாரிகளின்உதிரித் தொழிலாளர்களின் வாழ்வைப் பறிக்கும் வகையில், சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்கலாம் என்று மைய அரசின் செயலர் குழு பரிந்துரைத்துள்ளது. இது தவிர வங்கி, காப்பீடு ஆகியவற்றிலும் பன்னாட்டு மூலதனத்தை அனுமதிக்கவும், இறக்குமதி தீர்வையைக் குறைத்து சந்தையைத் திறந்துவிட்டு இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!

அமைச்சர்கள், அரசுச் செயலர்கள், அதிகாரிகள் மட்டத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அமெரிக்காவும் இந்தியாவும் விடுத்துள்ள கூட்டறிக்கையில், அமெரிக்காவின் உலகு தழுவிய போர்த் தந்திரத் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தியா மாறியுள்ளதை உறுதி செய்துள்ளதோடு, இக்கூட்டணியை விரிவாகவும் ஆழமாகவும் முன்னெடுத்துச் செல்ல கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கான் விவகாரத்தில் பரஸ்பரம் இரு நாடுகளும் ஆலோசனை நடத்துவது, ஒத்துழைப்பது, உளவுத்துறை தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, ஒருங்கிணைந்து செயல்படுவது என்பதை இப்பேச்சுவார்த்தைகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இரானின் எல்லையையொட்டி அமைந்திருப்பதாலும் மத்திய ஆசியப் பகுதியில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை அரபிக்கடல் பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கான தரைவழியாகவும் இருப்பதால் ஆப்கானைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. ஒபாமா அறிவித்துள்ள படைவிலக்கம் பெயரளவில் நடக்கும் அதேசமயம், ஆப்கானில் தனது அடியாளான இந்தியப் படைகளை அதிகரித்துக் கொண்டு மேலாதிக்கம் செய்யவே அமெரிக்கா விரும்புகிறது. அதற்காகவே மத்திய ஆசியா குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

இது மட்டுமின்றி, ஆப்பிரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பும் ஜூன் 2011இல் மத்திய ஆசியா குறித்து டெல்லியிலும், ஜூலை 2011இல் மேற்காசியா குறித்து வாஷிங்டனிலும், தென் அமெரிக்கக் கண்டத்து நாடுகள் மற்றும் கிழக்காசியா குறித்து செப்டம்பரிலும் பேச்சுவார்தைகள் நடத்தவுள்ளன. இனி ஆண்டுதோறும் இந்தியஅமெரிக்க போர்த்தந்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும், அடுத்த பேச்சுவார்த்தைகள் வருமாண்டில் வாஷிங்டனில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் இந்திய இராணுவம், அமெரிக்காவின் அடியாளாக உலகெங்கும் போர்த் தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்திய அரசு உருவாக்கியுள்ள அணு விபத்து இழப்பீடு சட்டத்தை, அமெரிக்கவின் துணை இழப்பீடு உடன்படிக்கையின்படி (CSC) மாற்றியமைத்துக் கொள்ளுமாறும், இதற்காக சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேசி ஏற்பாடு செய்யுமாறும் இந்திய அரசை ஹிலாரி கேட்டுக் கொண்டுள்ளார். அணுஉலை விபத்து தொடர்பாக அமெரிக்கா உருவாக்கியுள்ள துணை இழப்பீடு உடன்படிக்கையானது, அணு விபத்து ஏற்பட்டால், அணுஉலைகளை விற்பனை  செய்த முதலாளிகளை விபத்துக்குப் பொறுப்பாக்குவதில்லை. அதிகபட்சம் ரூ.2000 கோடிக்கு மேல் நட்டஈடு கோருவதையும் தடைசெய்கிறது. இந்தியச் சட்டம்  வழங்கியுள்ள  அற்ப பாதுகாப்பையும் ஒழித்துக்கட்டி, அமெரிக்கா உருவாக்கியுள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு நிர்பந்திக்கவே ஹிலாரி இங்கு வந்துள்ளார். தீராத கடன் சுமையாலும் பொருளாதார நெருக்கடியாலும் அமெரிக்கா தத்தளிக்கும் நிலையில், காலாவதியான,பேரழிவை விளைவிக்கக் கூடிய அணுஉலைகளை வாங்கி,  அமெரிக்க அணுசக்தி முதலாளிகளுக்குச் சேவைசெய்ய காங்கிரசு அரசு துடிக்கிறது. ஜப்பானில் புகுஷிமா அணுஉலை விபத்து நடந்து பேரழிவு ஏற்பட்ட பின்னரும், தான் நிறைவேற்றியுள்ள சட்டத்தின் விதிகளை நாடாளுமன்றத்தில் இன்னமும் சமர்ப்பிக்காமல் மன்மோகன் அரசு இதற்காகவே இழுத்தடித்து வருகிறது.

இதுதவிர, உயர் கல்வித்துறையில் இரு நாடுகளும் பரஸ்பரம் கூட்டுறவு பெறும் வகையில் வரும் அக்டோபரில் உச்சி மாநாடு நடைபெறும் என்றும், பள்ளிக் கல்விக்கு அடுத்துள்ள உயர்கல்வி அனைத்திலும் இது மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்நிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை இந்தியாவில் தாராளமாக அனுமதித்து, அவை இலாபம் சம்பாதிக்கும் கூடாரங்களாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடக்கின்றன.

இவ்வாறு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த் தந்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தவும், தனது விசுவாச அடிமை நாடான இந்தியாவில் அதற்கான பணிகளை மேற்பார்வையிடவும்தான் அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கு வந்தார். இப்போர்த்தந்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தைகளின் ஓர் அங்கமாக சென்னையில் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நிதிச் சந்தைக்கான மையமாக சென்னைசோழிங்கநல்லூரில் உருவாக்கப்படும் புதிய நிதி நகரத்தின் ஏற்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளவும், அப்படியே ஒரு சுற்றுலா போல சென்னையைப் பார்க்கவும்தான் அவர் வருகை தந்தார்.

இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!ஆனால், இந்த உண்மைகளை மூடிமறைத்துவிட்டு ஹிலாரி சென்னைக்கு வந்ததற்கு முக்கியத்துவம் இருப்பதாகவும், அவர் ஜெயலிலிதாவைக் கோட்டையில் சந்தித்ததைப் பற்றியும், பின்னர் மாணவர்களுடன் உரையாடியதையும் அடிமை விசுவாசத்தோடு தமிழக கிசுகிசு பத்திரிகைகள் ஏற்றிப் போற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள், உலகின் இதர ஏழை நாடுகளில் முக்கியத்துவமற்ற துறைகளில் தமது சந்தையை விரிவுபடுத்தி ஆதாயமடைய அமெரிக்காவின் போர்த்தந்திரத் திட்டம் சாதகமாக இருப்பதால், அமெரிக்க விசுவாசத்தோடு இதனை வரவேற்று ஆதரிக்கின்றனர். தரகுப் பெருமுதலாளிகளின் நலன் இங்கே தேசிய நலனாகச் சித்தரிக்கப்பட்டு நாடும் மக்களும் அமெரிக்க அடிமைகளாக்கப்படுகின்றனர். அப்பட்டமாகவும் மூர்க்கமாகவும் நடந்துவரும் இத்தாக்குதலை எதிர்த்துப் போராட எந்த ஓட்டுக்கட்சியும் முன்வரவில்லை.

அன்று, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்டுவதற்கு வங்காளத்தின் தளபதி மீர்ஜாபர், ராபர்ட் கிளைவுக்கு விசுவாசமாச் சேவை செய்ததைப் போல, இன்று அமெரிக்காவின் மேலாதிக்கத்தை இந்தியாவில் திணிப்பதற்கு மன்மோகன்சோனியா கும்பல் விசுவாச அடியாளாகி நிற்கிறது. நாட்டு விரோத, மக்கள் விரோத, அபாயகரமான இந்தத் துரோகக் கும்பலை வீழ்த்தாவிட்டால், அமெரிக்காவின் போர்த் தேரின் பின்னே இழுத்துச் செல்லப்பட்டு நாடே பேரழிவுக்குள் தள்ளப்பட்டுவிடும்.

____________________________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

_____________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

புதிய கலாச்சாரம் ஜூலை 2011 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

புதிய கலாச்சாரம் ஜூலை 2011 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய கலாச்சாரம் ஜூலை 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1.       சரசம் சாடிசம் சாரு நிவேதிதா

2.      கல்வியை கார்பரேட்மயமாக்கும் சதி

3.       ஆன்மீக வல்லரசு – ஏழை இந்தியாவில் வாழும் பணக்காரக் கடவுள்கள்

4.       தலித் மாணவர்களை கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்

5.       திரை விமரிசனம் – தி ரெஸ்ட்லர் : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை

6.       நடுத்தர வர்க்கத்தை திருப்திப்படுத்த ஊழல் எதிர்ப்பு காமெடிகள்

7.       சிறுகதை – கடைசி பிளாட்பாரம்

8.       கவிதை – எக்ஸ்கியூஸ் மீ !

9.      மூக்குக் கடலை

10.   தொலைக்காட்சி : பார்வையை தீர்மானிக்கும் கார்பரேட் ஆதிக்கம்

11.   இசுலாமியப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்

12.   பாலியல் வன்முறையை எதிர்த்துப் போராடிய வீரப்பெண் தேவி !

புதிய கலாச்சாரம் ஜூலை 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள்! போராளிகளாக மாணவர்கள்!!

போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள் ! போராளிகளாக மாணவர்கள் !!    ரிசாவில் போஸ்கோ நிறுவனத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தில் சிறுவர்கள் முன்னணியில் நிற்பதை ஒரிசா மாநில அரசு மட்டுமின்றி, பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அறிவுஜீவிகளும் கண்டித்து வருகின்றனர்.  அம்மாநிலத்தில் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ள நவீன் பட்நாயக் அரசு, போராடும் சிறுவர்களின் படிப்பு பாழாவதாகப் புலம்புவது நகைப்புக்குரிய முரண்.

சிறுவர்கள் ‘தவறான’ பாதைக்கு அழைத்துச் செல்லப்படுவது குறித்து ஆராய குழந்தை உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிசன் போராட்டங்கள் நடந்துவரும் பகுதிக்கு தனது அதிகாரிகளை அனுப்பி வைத்தது.  அந்த அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம், “குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வையுங்கள்சு என அறிவுறுத்தியபொழுது, “நாங்கள் எங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம்; அதற்கு முன்னால் பள்ளிக்கூடங்களிலிருந்து போலீசாரை வெளியேற்றுங்கள்சு எனப் பதிலளித்து, போராட்டக்காரர்கள் அதிகாரிகளுக்கு நிலைமையைப் புரிய வைத்தார்கள்.

போஸ்கோவிற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்துவரும் திங்கியா, கோவிந்தபூர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் இன்று போலீசு பாசறைகளாக மாற்றப்பட்டுள்ளன.  “எங்கள் பள்ளிக்கூடத்திலுள்ள ஆறு வகுப்பறைகளில் நான்கை போலீசு ஆக்கிரமித்திருக்கும்பொழுது, எங்களால் எப்படி பள்ளிக்கூடத்தை நடத்த முடியும்? எனக் கேட்கிறார், பாலியா நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்.

“அவர்கள் எங்களது பெற்றோரை நோக்கித் துப்பாக்கியைத் திருப்பும் அதேசமயம், நாங்கள் வகுப்பறைகளில் உட்கார்ந்திருக்க விரும்புகிறார்கள் என ஒரிசா அரசின் குரூர புத்தியை நையாண்டி செய்கிறான், ஒரு மாணவன்.

ஆங்கிலேய காலனிய ஆட்சியில் போலீசார் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தேடிவந்த பொழுது, பாஜி ரௌத் என்ற 13 வயது படகோட்டும் சிறுவன், அப்போலீசாரை படகில் ஏற்றிச் செல்ல மறுத்ததற்காகச் சுட்டுக் கொல்லப்பட்டு தியாகியானான்.  “ஒரிசாவின் தேசிய வீரனாகக் கொண்டாடப்படும் பாஜி ரௌத்தின் கதையை எங்களுக்குக் கூறி, அச்சிறுவனைப் போல நாட்டைக் காக்க வேண்டும் எனப் போதிக்கிறார்கள்; அதேசமயம், நாங்கள் எங்களது கிராமங்களை போஸ்கோவிடமிருந்து காப்பாற்ற போராடத் துணிந்தால், எங்களை மோசமாக நடத்துகிறார்கள் என அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறான், 10 வயதான ராகேஷ் பர்தன்.

“நாங்கள் எங்கள் வயல்களையும் கிராமத்தையும் இழந்துவிட்டால், இங்கே பள்ளிக்கூடமே இருக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்சு என 14 வயது சிறுவனான பீஷ்வாம்பர் மோகந்தி பதில் அளிக்கிறான்.

பள்ளிக்கூட மாணவர்கள் இப்போராட்டத்தில் முன்னணியில் நிற்பது பற்றி ஆசிரியர்கள் என்ன கருதுகிறார்கள்?  “அவர்கள் தமது பெற்றோர்கள் மீது போலீசார் ரப்பர் குண்டுகளைக் கொண்டு தாக்குவதைப் பார்க்கிறார்கள்; அவர்கள் தமது வெற்லை கொடிக்கால் வயல்களும் வீடுகளும் போலீசாரால் நாசப்படுத்தப்படுவதைப் பார்க்கிறார்கள்; இவையெல்லாம் ஒரிசாவின் வளர்ச்சிக்காகச் செய்யப்படும் நல்ல காரியங்களென அரசாங்கம் கூறுகிறது.  இதன் பிறகு அவர்களால் போராடாமல் வேறெப்படி இருக்கமுடியும்?ச எனச் சிறுவர்கள் பக்கமிருக்கும் நியாயத்தை எடுத்துக் கூறுகிறார், ஒரு ஆசிரியர்.

பள்ளிக்கூடங்கள் போலீசு பாசறைகளாக மாற்றப்படும்பொழுது, மாணவர்கள் போராளிகளாக மாறுவது தவிர்க்க முடியாதது.  அறிவுக்கண்ணைத் திறப்பதுதான் கல்வியின் நோக்கமெனில், இப்பழங்குடியினச் சிறுவர்கள் வெறும் ஏட்டுக் கல்வியை மட்டுமல்ல, வர்க்கப் போராட்டக் கல்வியையும் கற்றுத் தேறியிருக்கிறார்கள் என்பதை அவர்களின் பதில்களே நமக்கு உணர்த்திவிடுகின்றன.

______________________________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

இஸ்லாமியப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்!

13 வயது  ஜன்னத் உறங்கிக் கொண்டிருக்கிறாள். தன் மேலிருந்த போர்வை உருவப்படுவதை உணர்ந்து கண் விழிக்கிறாள். சில நொடிகளில் என்ன நடக்கிறதென்று  உணர்வதற்குள்ளேயே, அவளது நெஞ்சும், முகமும் தாங்க முடியாத அளவுக்கு வலியும், எரிச்சலுமடைகிறது. அவளுக்கருகில் உறங்கிக் கொண்டிருந்த அவளது தம்பிக்கும் முதுகில் வலி.  ஜன்னல் வழியாக வீசப்பட்ட பாட்டரி ஆசிட் தாக்குதல்தான் இச்சிறுமியின், அவளது தம்பியின் வலிக்கும் எரிச்சலுக்கும் காரணம்.

ஜன்னத் மீது ஆசிட் வீசியவர் அவளது வீட்டுக்கருகில் வசிக்கும் 20 வயது இளைஞர். ஜன்னத்தின் முகத்தை ஆசிட் வீசி சிதைக்கக் காரணம்,  அவள் அவ்விளைஞரின் திருமண ஆசைக்குச் சம்மதிக்காததுதான். பெண்களின் மீதான ஆசிட் தாக்குதலைப் பற்றி அதுவரை கேள்விப்பட்டிருக்க மட்டுமே செய்திருந்த ஜன்னத்தின் குடும்பத்தினருக்கு அன்றுதான் அதன் உண்மையான வலியும், வேதனையும், சூழ்நிலையின் பதைபதைப்பும் புரிந்தது. சில நூறு கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் தலைநகர் டாக்காவிற்கு ஜன்னத்தை உடனடியாக அழைத்துச் சென்றார்கள்.  ஆனாலும் மருத்துவமனையில் இடம் இல்லாத காரணத்தால் ஆசிட் காயத்துடனே காத்திருந்த ஜன்னத் க்கு மறுநாள்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரூபாலிக்கு திருமண வாழ்வைப் பற்றி ஒரு அழகான கனவு இருந்தது. ஆனால், அந்தக் கனவு திருமணமான ஆறு மாதங்களிலேயே ஆட்டம் கண்டது.  வரதட்சணையாக ஒரு மோட்டார் பைக்கை வழங்கியிருந்தார் ரூபாலியின் தந்தை. ஆனாலும் இன்னும் பணத்தை வாங்கி வருமாறு அவளது கணவனும், மாமியாரும் வற்புறுத்தினர்.  ரூபாலியைக் கடுமையாக நடத்தியதோடு, நாள் முழுவதும் ஓய்வில்லாத வீட்டு வேலைகளைச் செய்யுமாறும் கட்டாயப்படுத்தினர்.

முடிவில் ரூபாலி தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்று கூறியபோது, அவரது கணவனும் மாமியாரும்  அவருடன் வாக்குவாதம் செய்து சண்டையிட்டனர். அதைத் தொடர்ந்து அடிக்கவும் முற்பட்டனர். திடீரென்று அவள் எதிர்பாராத தருணத்தில்,  ரூபாலியின் மாமியார்  அவரைப் பின்னாலிருந்து பிடித்துக்கொள்ள  கணவன் அவரது வாயில் ஆசிட்டை ஊற்றினான்.

அக்கம்பக்கத்து வீட்டினர் ரூபாலியைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும், மருத்துவர்களால் முதலுதவி அளிக்க முடியவில்லை.  டாக்காவிற்கு அழைத்துச் சென்றாலும் ரூபாலிக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. ரூபாலியின் பெற்றோரால் மருந்துகளை விலை கொடுத்து வாங்க முடியாததே அதற்குக் காரணம்.

இந்த ஆசிட் வீச்சு ஜன்னத்துக்கோ அல்லது ரூபாலிக்கோ மட்டும் நடந்ததல்ல. பங்களாதேஷில்  ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 300 பெண்கள் ஜன்னத்தைப் போலவும், ரூபாலியைப் போலவும் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கின்றது. பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பேர்  18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

78 சதவீத ஆசிட் வீச்சுகளுக்குக் காரணம்  காதலை ஏற்க மறுத்தது மற்றும் திருமணத்துக்கு சம்மதம் அளிக்காதது அல்லது உடலுறவுக்குச் சம்மதிக்காதது போன்றவையே.  வரதட்சணை, குடும்பச் சண்டைகள், சொத்துப் பிரச்சினைகள்  முதல்  சமையல் செய்வதில் ஏற்படும் சிறு தாமதம் கூட இந்த ஆசிட் வீச்சுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. தாக்குதலுக்கு உள்ளாகுவோரின் மருத்துவச் செலவுகளுக்காகப் பெற்றவர்கள் நிலத்தை விற்க வேண்டிவரும் என்பதற்காகவே  நிலத் தகராறுகளுக்காகவும் ஆசிட் தாக்குதல்கள் நடக்கின்றன.

இந்த ஆசிட் வீச்சுகள் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் நடக்கின்றன. அல்லது மிக அவசியமான வேலைகளுக்காகப் பெண்கள் வெளியே செல்லும் சமயங்களில் இந்த ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அருகிலிருப்பவர்களும் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்படுவதால், சுதாரித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்வதும் தாமதமாகின்றது.

ஆசிட் எனும் கொடூரமான ஆயுதம் ஏன் எனில்  கார் பாட்டரியின் ஆசிட் கிடைப்பது எளிது, அதே சமயத்தில் விலை மலிவான ஆயுதமும் கூட.   ஒரு சில நாணயங்களில் ஒரு முழுக் கிண்ணம் அளவுக்கு ஆசிட் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். இந்த ஆசிட் வீச்சுகள் எல்லாம், முக்கியமாக முகத்தை நோக்கிக் குறிவைத்து வீசப்படுகின்றன.  பாதிக்கப்பட்டவரின் முகம் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகிறது. ஒருவரது சொந்த அடையாளத்தையே சிதைப்பது குரூரத்தின் உச்சநிலையாக இருக்கிறது! அவர்களது வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடுகின்றது. பல்லாண்டு காலம் பெண்கள் முகத்தை மூடியிருந்த ஹிஜாப்,  பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்டு அவர்கள்  தங்கள் சுய முகத்துடன், அடையாளத்துடன் வெளிவருகிற நேரத்தில் பங்களாதேஷ் தனது பெண்களை ஆசிட் வீசி பர்தாவுக்குள் ஒரேயடியாகத் தள்ளுகிறது.

பெண்கள் உடல் ரீதியாக, மன ரீதியாக, பொருளாதார  ரீதியாக பல தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். அதில் பெரும்பான்மை குடும்ப வன்முறையாகத்தான் இருக்கிறது.  உலகம் முழுவதிலும்  பெண்கள்  குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர் என்றாலும், மூன்றாம் உலக நாடுகளில் மதத்தின் பெயரால்  பெண்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர், சுரண்டப்படுகின்றனர், உதாசீனப்படுத்தப்படுகின்றனர். இந்த வகையான ஆசிட் வீச்சுகள் பாதிக்கப்பட்டவரை முற்றிலுமாக நிலைகுலையச் செய்து விடுகின்றன.   இந்தத் தாக்குதலால் அவர் உயிரிழப்பதில்லையே தவிர உறுப்புகள் மிகுந்த பாதிப்படைகின்றன. சில சமயங்களில் மேல் தோல் மட்டுமன்றி எலும்புகளும் சிதைந்து விடுவதுண்டு.  இந்த ஆசிட் வீச்சால் ஏதாவது  ஒரு உறுப்பை அல்லது சில உறுப்புகளை இழக்க வேண்டியதாகிறது. பெரும்பாலானோர் கண்களை இழக்கின்றனர் அல்லது கேட்கும் திறனை இழந்து விடுகின்றனர்.

இந்தத் தாக்குதல்கள் அப்பெண்களுககு நிரந்தப் பாதிப்பு என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களது தன்னம்பிக்கையையும் குலைத்துப் போடுகின்றது.  ஒவ்வொரு நாளும் சமூகத்தோடு செத்து மடிய வேண்டியிருக்கிறது.  அன்றாட வாழ்வுக்கே போராட வேண்டியிருக்கிறது.  இந்தப் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது அந்தக் குடும்பங்களுமே அனுபவிக்கின்றன.  ஒவ்வொரு நாளும் செத்து செத்து உயிர் வாழ்வதற்குப் பதிலாக  ஒரேயடியாக இறந்து போனால் முற்றிலும் விடுதலையடைந்ததாக இருக்கும் என்று கூடப் பலர் கருதுகிறார்கள்.  எப்படியோ  மீண்டு வந்து விட்டாலும், மனப்போராட்டங்கள் அவர்களைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், தங்களைப் பார்ப்பவர்கள் உடனடியாக வெளிப்படுத்தும் அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டுதான் வாழ வேண்டியிருக்கிறது.

அவர்களால் தொடர்ந்து சமூகத்தில் முன்போல உலவ முடிவதில்லை. கல்லூரிக்குச் செல்லவோ அல்லது வேலைக்குச்  செல்லவோ  முடிவதில்லை. தனிமையையே நாடுகிறார்கள். இது அவர்களது சமூக மற்றும் பொருளாதார ரீதியான வாழ்வை நிலைகுலையச் செய்து விடுகிறது. சமயங்களில் அவர்களது சொந்தக் குடும்பங்களாலேயே கைவிடப்படுகின்றனர். மறுமணம் நடப்பதும் மிகவும் அபூர்வம்.  பாதிக்கப்பட்ட இந்த அப்பாவிப் பெண்கள்  மன உளைச்சல்  காரணமாகத் தற்கொலை செய்தும் கொள்கிறார்கள்.

அதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்ட கால மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இது பங்களாதேஷ் போன்ற நாடுகளில் மிகவும் கடினம். அதோடு மருத்துவச் செலவும் மிகவும் அதிகம். ஒரு மணி நேர அறுவைச்சிகிச்சைக்கே பல நூறு அமெரிக்க டாலர்கள் வரை தேவையாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட வேண்டியிருக்கும். பாதிக்கப்பட்ட பெண்களின் ஏழ்மை நிலைமை இதற்கு இடம் கொடுப்பதில்லை.

டோலி அக்தர் என்ற 16 வயதுப் பெண், காதலை மறுத்த காரணத்துக்காக ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானாள். அவளது தந்தையிடமிருந்த முழுச்சொத்தும் அவளது மருத்துவத்துக்கே செலவானதால், படிப்பை நிறுத்தி விட்டு தற்போது துணிகளைத் தைத்துக் கொண்டிருக்கிறாள். சிறு வயதில் அவளது வாழ்க்கை அவளது மற்ற நண்பர்களைக் காட்டிலும் முற்றிலும் மோசமானதாக மாறியிருக்கிறது.

பீனா என்ற மற்றொரு சிறுமி, அவளது  உறவினரான மற்றொரு சிறுமியை முகமூடி அணிந்த நபரிடமிருந்து காப்பாற்றும்போது ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானாள். இந்தத் தாக்குதல் அவளுக்கு இரவில் நடந்தது. இருவருமே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பீனா, ஒரு தடகள வீராங்கனை. உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக உற்சாகமாகக் காத்திருந்தாள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு  அவளது கனவுகள் சுக்குநூறாகிப் போய் விட்டன.

பங்களாதேஷில் முன்பை விடப் பெண்கள் பொதுவில் அதிகமாக வெளிவரத் துவங்கியிருக்கிறார்கள்.  ஏழைப் பெண்கள் கல்விக்காகவும், வேலைக்காகவும் தமது கிராமங்களை விட்டு நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள்.  இதனாலெல்லாம் பெண்களை புர்க்காவுக்குள் அடக்கி வைக்கும் ஆண் சமூகத்தின் கண்ணோட்டம் மாறி விடவில்லை. வீட்டுக்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும் பாதுகாப்பு இல்லாத இந்தப் பெண்கள் மிகவும் எளிதாக இந்த வக்கிரமான பாலியல் வன்முறைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

பெண்கள் மீதான  ஆசிட் வீச்சுகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பெருமளவு நடக்கிறது என்றாலும், பங்களாதேஷ் தான் அதில் முன்னணியில் இருக்கிறது.  இருபது முப்பது ஆண்டுகளாகவே பெண்கள் மீதான  ஆசிட் வீச்சுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதற்கு முக்கியக் காரணங்கள் பழைமை வாதமும், ஆணாதிக்க சமூகமும், அதில் ஊறிப்போன நீதித்துறையுமே.  பெண்களை இரண்டாந்தரமாக நடத்துவது  மூன்றாம் உலக நாடுகளில் மிகவும் சகஜமாக இருக்கிறது.  பெண்கள் தங்களது உடைமை  என்ற  பிற்போக்குக் கண்ணோட்டமும் ஒரு காரணம்.

ஆசிட் வீச்சுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும், சட்டங்களையும் இயற்றி இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், குற்றவாளிகளில் ஒன்றிரண்டு பேரைத் தவிர பெரும்பாலோனோர் தண்டிக்கப்படுவதேயில்லை. அவர்கள் சட்டங்களின் துணை கொண்டே வெளியில் வந்து வழக்கம் போல் நடமாடுகின்றனர். சகஜமான  வாழ்க்கையை வாழ்கின்றனர். அவர்களுக்கு எவ்விதக் குற்றவுணர்வும் ஏற்படுவதில்லை.

***

ஏனெனில் பெண்களை அடிமைப்படுத்துவது என்பது மத ரீதியாக வளர்த்தெடுக்கப்படுகிறது. பிற்போக்குத்தனத்தில் ஊறிப்போன மதங்களுக்கு இசுலாமும் விதிவிலக்கல்ல. பிற்போக்குத்தனத்தில் கட்டுண்ட மதங்கள் அனைத்தும் ஒன்றுபடுவது ஒரு விசயத்தில்தான் – பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும். இதனைச் சுட்டிக்காட்டினால், இசுலாம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாகக் கூறுகிறார்கள் இசுலாம் மதத்தலைவர்கள். உண்மையில்,  பெண்களுக்குச் சில உரிமைகளை இசுலாம் வழங்குவதாகவும், ஒரு சில  இனத்தவரின் பழக்க வழக்கங்களும்,  பெண்ணடிமைத்தனமும்தான் இந்நிலைமைக்குக் காரணம் என்றும் கூறுகின்றனர். முகமது  நபி சில உரிமைகளைப் பெண்களுக்கு வழங்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, பிறந்த பெண் குழந்தைகளை  வேண்டாத குழந்தையென்று மண்ணில் புதைக்கும் வழக்கத்தை அவர்தான் தடை செய்ததாகவும் கூறுகிறார்கள். அதோடு, குரான் அடிப்படையில்  பெண்களுக்கு சொத்துரிமையும், பாலியல் ரீதியான சுதந்திரமும்  இருப்பதாகக் கூறுகிறார்கள். பெண்களுக்குச் சொத்துரிமை வழங்காத, சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை பாரம்பரியம் என்று சொல்லிக்கொள்ளும் இந்து மதத்தோடு ஒப்பிடுகையில் இசுலாம் பெண்களுக்கு இவ்வுரிமைகளை வழங்கியிருப்பது உண்மைதான்.

ஆனாலும் இவ்வுரிமைகளினால் பெண்களுக்கு சம உரிமையோ, குரான் படி பெண்களின் பெண்ணடிமைத்தனம் முற்றிலும் களையப்படவோ இல்லையென்றுதான் கூற வேண்டும். இசுலாமைப் பொறுத்தவரைக்கும் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் மற்றும் முசுலீம் அல்லாத பிற சமய மக்கள். இதில் பெண்கள் என்பவர்கள் ஒரு முசுலீம் ஆணில் பாதிக்குச் சமம். ஒரு பெண்,  ஆணுக்குக் கொடுக்கப்படும் சொத்துரிமையில் பாதியைத்தான் பெறுவாள்  என்பதே இதற்குச் சான்று. ஒரு பெண் கீழ்படியவில்லை அல்லது கண்ணியமற்ற முறையில் நடந்துக்கொள்வதாக தெரிந்தால், ஆண் அவளை அதட்டிக் கேட்கலாம்; உடலுறவுக்கு மறுத்தால் அடிக்கலாம் என்றும் குரான் கூறுகிறது.

குரானின் (சுரா 4:34) படி, ஆணின் கையிலேதான் பெண்ணைக் குறித்த முழு அதிகாரமும் இருக்கிறது. பெண்ணைப் பராமரிப்பதிலேயே ஆண் தனது செல்வத்தைச் செலவழிப்பதால் பெண்ணை விட ஆணை உயர்ந்தவராக கடவுள் படைத்திருப்பதாகக் கூறுகிறது. நல்லபடியாக (!) நடந்துக்கொள்ளும் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சரிநிகராக உரிமைகள் இருந்தாலும், ஆணே எப்போதும் பெண்ணை விட உயர்ந்தவராகக் கருதப்படுவார் என்றும் குரான் கூறுகிறது.

இசுலாமிய ஷரியத் சட்டப்படி, ஒரு ஆணுக்கு நான்கு மனைவிகள் இருக்கலாம்.  தலாக் என்று மூன்று முறை கூறுவதன் மூலம்  தனது மனைவியை அல்லது மனைவிகளை மணவிலக்குச் செய்யலாம். ஆனால், ஒரு பெண் விவாகரத்து பெறுவது என்பது நடைமுறையில் மிகச்சிக்கலானது. இசுலாமியச் சட்டப்படி பெண்களும் விவாகரத்து கோரலாம் என்றும், தாய் என்ற இடத்தில் பெண்கள் வணக்குரியவர்களாகவும், மதிப்பிற்குரியவர்களாகவும் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், விவாகரத்தின்போது குழந்தைகளை  உரிய வயது வரும் வரையில் வைத்துப் பராமரிக்கும் உரிமை தந்தைக்கே கிடைக்கிறது.  தங்களது குழந்தைகளை இழந்து விடுவோமோ என்ற பயத்தினாலேயே  பெண்கள் தங்கள் கணவன் பலதார மணம் புரிந்தாலும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும் பெண்களுக்கு தாய் என்ற மதிப்பிற்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாகக் கூறும் இசுலாம்தான், குழந்தைகள் தந்தையின் உரிமை என்றும் கூறுகிறது.

அதன்படி தாய் என்பவள் ஒரு பராமரிப்பு வேலைகளைச் செய்பவர் என்றுதான் ஆகிறது. எனில், குரான்படி பெண்களுக்கு சம உரிமைகளோ, சுதந்திரமோ இருக்கிறதென்று எப்படிக் கூற முடியும்?

இசுலாமிய ஷரியத் படி, ஒரு பெண்ணைக் கொலை செய்தால் அதற்குத் தண்டனையாக ஒரு ஆணைக் கொலை செய்ததற்கு அபராதமாகச் செலுத்தப்படுவதில் பாதியைச் செலுத்தினால் போதும். நீதிமன்றத்தில் ஒரு பெண்ணின் சாட்சியானது ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக மதிக்கப்படும். ஆண், பெண்ணை பராமரிப்பதால் பெண் மீது ஆணுக்கு அதிகாரம் உண்டு. இதிலிருந்து, இசுலாம் பெண்களை சுமையாகத்தான் கருதுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இத்தனைக்கும்,  குழந்தைகளைப் பராமரிப்பதிலிருந்து வீட்டு வேலைகளை செய்வதிலிருந்து குடும்பத்துக்குத் தேவையான  அனைத்து உழைப்பும் பெண்களிடமிருந்தே சுரண்டப்படுகிறது. ஒன்பது வயதுச் சிறுமிகள், தங்கள் தந்தையராலேயே மணம் முடித்துக் கொடுத்துவிடப் படுகின்றனர். தாய் மறுத்தாலும் அதைக் கணக்கில் கொள்வதில்லை.  பெரும்பாலான சமயங்களில் அந்த ஆண்களுக்கு அது இரண்டாவது அல்லது  மூன்றாவது திருமணமாக இருக்கும். தீவிர நம்பிக்கைக்குரிய மதத் தலைவர்கள், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதைக்கூட உயர்த்தத் தயாரில்லை. முகமதுவின் மனைவியருள் ஒருவரான ஆயிஷா திருமணம் நிச்சயிக்கப்படும்போது ஏழு வயதாக இருந்தார். திருமணத்தின்போது  அவருக்கு  ஒன்பது வயதுதான். முகம்மது நபிக்கோ கிட்டதட்ட ஐம்பது வயதிருக்கும். அதோடு அவருக்குப் பல மனைவிகள் இருந்ததாகவும் தெரிய வருகிறது.

பெண்கள்  உரிமைகளுக்கான சட்டங்கள் எதுவும் அரசாங்கத்தால் முன் எடுக்கப்பட்டால் அது மதவாதிகளின் தீவிர எதிர்ப்புக்குள்ளாகும். குரானை எவ்விதத்திலும் மாற்றத்துக்கு உள்ளாக்காமல் கடைபிடிக்க வேண்டுமென்று கண்மூடித்தனமாக அச்சட்டத்தை எதிர்ப்பார்கள். ஈரானியப் பெண் சக்கீனாவை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்திருக்க முடியாது. தகாத உறவுள்ளவராக குற்றஞ்சாட்டி அவரைக் கல்லாலேயே அடித்துக்கொல்ல வேண்டுமென்று தண்டனையும் விதித்தது, அரசு. அவருக்கு 99 கசையடிகளும் கொடுக்கப்பட்டது. சுரா (24:1) இல் தகாத உறவு கொண்டவராக இருந்தால் 100 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டுமென்று சொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.  முகம்மது நபி கல்லால் அடித்துக்கொல்லப்படுவதை கண்டித்திருந்தாலும், ஒரு இடத்தில் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும்  கல்லால் அடித்துக் கொல்லுமாறு கூறுகிறார்.

இன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதனை  பெண்களுக்கு மட்டுமே உரிய தண்டனையாக மாற்றி விட்டார்கள். ஏனெனில் ஆண்களுக்கு நான்கு மனைவிகள் வரை வைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. பல முசுலீம் நாடுகளில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்லும்  தண்டனை இன்றும்  நடைமுறையில் உள்ளது.  ஒருபெண் முதலிரவில் கன்னித்தன்மை இல்லாதவளாகக் கருதப்பட்டால் அவளது உறவினர்களாலேயே கொல்லப்பட்டு விடுவாள்.

இவ்வகையான கவுரவக் கொலைகள் இசுலாமிய நாடுகளில் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இந்த கவுரவக் கொலைகளுக்குப் பிஞ்சுக் குழந்தைகளும் தப்புவதில்லை. ஜோர்தானில்  எட்டு வயதுச் சிறுமி  தந்தையிடம் சொல்லாமல் நண்பர்களைப் பார்க்கச் சென்றதற்காக அடித்தே கொல்லப்பட்டாள்.  பெண்கள் உயிர் வாழ்வதும், உயிர் பறிக்கப்படுவதும் ஆண்களின் கையில்தான் இருக்கிறது. இப்படி உயிரைப் பறிக்கும் ஆண்கள் அவர்களது நண்பர்களாலும், உறவினர்களாலும் ஒரு ஹீரோவைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள். இந்தியாவிலும் இந்தக் கவுரவக் கொலைகள், சாதி மற்றும் கோத்திரத்தின் பெயரால் நடைபெறுவதைக் கவனித்திருக்கலாம்.

இப்படி பெண்களின் நடத்தை, கண்ணியம் எல்லாமே ஆண்களின் மேற்பார்வையிலிருப்பதால் பெண்களும் தங்களைப் போல சம உரிமை பெற்ற மனித உயிர் என்று கருத அவர்கள் மறுக்கிறார்கள். சொல்லப்போனால், அப்படிச் சமமாக நடத்துவதை மதமே அல்லவா தடுத்து நிறுத்துகிறது?

மதத்தின் பெயரால், பெண்களின் கழுத்தின் மீதுதான் ஆண்களின் கால்கள் ஊன்றி நிற்கின்றன என்பதை மறுக்க முடியாது. இசுலாமிய சமூகத்தில் மதமே வாழ்வின் எல்லாவற்றிலும் கோலோச்சுகிறது – அவர்களுக்கென்று தனிப்பட்ட சட்டதிட்டங்கள், பழக்க வழக்கங்கள் என்று சகலமும் மதத்தையே முதுகெலும்பாகக் கொண்டிருக்கின்றன – இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல என்றாலும்.

***

இந்தப் பின்னணியில்தான் நாம்  ஆசிட் தாக்குதல்களையும் நோக்க வேண்டியிருக்கிறது. எண்ணெயைப் பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்று மேற்குலகின் செல்வச்  செழிப்போடும், நவ நாகரிகத்தோடும் பின்னிப் பிணைந்து வாழும் அரபு முதலாளிகள் தங்கள் இனப் பெண்களை பர்தாவுக்குள் அடைக்கின்றனர். ஒழுக்கம், கண்ணியம், கற்பு என்று வரும்போது மட்டும் குரானுக்குள் ஒளிந்துகொண்டு  பெண்களைப் பலிகடாவாக்குகின்றனர். இந்த இரட்டை வேடத்தில் இந்துமதப் பயங்கரவாதிகளுக்கு சற்றும் குறைந்தவர்களில்லை, இசுலாமிய மதவாதிகள்.

சாதி மாறிக் காதலித்தால், ஒரே கோத்திரத்தில்  திருமணம் செய்து கொண்டால் பெண்ணை கண்டந்துண்டமாக்குவது பார்ப்பனிய இந்துமதம். சாதிக்குள்ளும்,  கோத்திரத்துக்குள்ளும் பெண்ணை அடைத்து வைத்திருக்கிறது இந்துமதம். பர்தாவுக்குள் அடைத்து வைத்திருக்கிறது இசுலாமிய அடிப்படைவாதம்.

ஒரு பெண்ணுக்கு மணமகன் கொடை அளித்துத்தான் திருமணம் செய்ய வேண்டுமென்பதாகக் கூறினாலும் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. பங்களாதேஷின் பெரும்பாலான ஆசிட் தாக்குதல்கள் ஏழை மக்களிடையே வரதட்சணைக்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு பெண் தனது காதலை நிராகரித்தால் அல்லது தனது ஆசைகளை நிறைவேற்ற மறுத்தால் தாங்கிக்கொள்ள முடியாத ஆணின் ஈகோ வக்கிரமாக அந்தப்பெண்ணைப் பழிவாங்கத் துடிகிறது. அதற்கு மதமும் துணை போகிறது.

இதுவே ஒரு பெண் ஆணின் மீது ஆசிட் தாக்குதலை நடத்த முடியாதா? கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல் என்பதுபோல ஆசிட் அதே விளைவுகளைத்தான் ஆண் மீதும் ஏற்படுத்தும் என்றாலும், ஒரு பெண் அவ்வாறு செய்வாளென்று யாரும்  எதிர்ப்பார்ப்பதில்லை. நினைத்துக்கூட பார்ப்பதில்லை. அடங்கி நடக்க வேண்டியவளாகத்தான் எதிர்ப்பார்க்கப்படுகிறாள்.

ஆப்கானிஸ்தான் ரஷ்யாவின் கீழ் இருந்தவரை பெண்களுக்கான சம உரிமைகள் சட்டங்கள் மூலமாகத்தான் நிலைநாட்டப்பட்டன, மதத்தின் மூலமாக அல்ல. பங்களாதேஷில் பல பெண்கள் பொதுவாழ்வில் வெற்றிகரமாக ஈடுபட்டு வந்தாலும் சாமானிய மக்கள் வாழ்க்கையில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லாததற்கு இந்த மதரீதியான அடக்குமுறையே காரணம்.

ஷேக் ஹசீனா, காலிதா ஜியா மற்றும் சயீதா சஜீதா சவுத்ரி போன்றவர்கள் முக்கியமான  அரசியல் பதவிகளை வகிக்கின்றனர்.  2008 ஆம் ஆண்டின் கணக்குப்படி பொதுத்துறையில் உள்ள 4419 பேரில் பெண்கள் 673 பேர்தான். பெண்கள் முன்னுக்கு வருவதற்கு ஏகப்பட்ட மசோதாக்களும், சட்டங்களும், வளர்ச்சித்திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இருந்தாலும், பெண்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே தீட்டப்படும் திட்டங்கள் வெறும் ஏட்டளவில்தான் இருக்க முடியும். 2000 ஆம் ஆண்டும், 2002 ஆம் ஆண்டும் சில கடுமையான சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன. சட்டத்துக்குப் புறம்பான வகையில் ஆசிட் கையாளப்பட்டது தெரியவந்தால் 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உண்டு. ஆசிட் தாக்குதல் நடத்தும் குற்றவாளிக்கு மரண தண்டனையும் உண்டு.  இதனாலெல்லாம் இந்தத் தாக்குதல்களைப் பெருமளவு நிறுத்திவிட முடியவில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம். எளிதில் குற்றவாளி வெளியில் வந்துவிட முடிகின்ற சட்டத்துறையும், ஊழல் மலிந்த காவல்துறையும் ஒரு காரணம். அதோடு குற்றவாளி பணக்காரராக இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.

நீதிமன்றத்துக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களை தொடுத்த வழக்கினைத் திரும்பப் பெறுமாறு மிரட்டுவார்கள். இல்லையென்றால், குடும்பத்தினரைத் தாக்கப் போவதாகவும் சொல்வார்கள்.  தன் சகோதரிக்காக வழக்குத் தொடுத்திருந்த ஒரு பெண் குற்றவாளியின் குடும்பத்தினரால் மிகக் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டாள். வழக்குத் தொடுப்பவர்கள் மற்றும்  பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த வறுமை நிலையிலிருப்பதால் அதிகாரத்தை எதிர்த்து நிற்க முடிவதில்லை. பெரும்பாலும் தன்னார்வக் குழுக்களின் இல்லங்களிலேயே இப்பெண்கள் காலம் கழிக்க நேரிடுகிறது.

பல தன்னார்வக் குழுக்கள் ஆசிட் வீச்சினால் பாதிப்படைந்தவர்களுக்கு ஆதரவளிக்கின்றன. அதோடு மருத்துவ உதவிகளை இயன்ற அளவுக்குச் செய்கின்றன. இருந்தாலும் பாதிப்படைந்தவர்களுக்கு உதவுவதாக எண்ணி அவர்களைத் தனிமைப்படுத்தி விடுகின்றன. கல்வியும், வேலையும் தருவதாகக் கூறிக்கொண்டு அவர்களைச் சமூக வாழ்க்கையிலிருந்து பிரித்தெடுத்து விடுகின்றன. வக்கிரமாகப் பாதிக்கப்பட்ட இப்பெண்கள், மேலும் இரக்கமற்ற வாழ்க்கைக்கே உந்தப்படுகிறார்கள்.

உதவும் நோக்கு என்று சொல்லிக் கொண்டாலும் இந்தத் தன்னார்வ குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றுமொரு தண்டனையாகவே அமைந்து விடுகின்றன.  எந்த உடல்நலக் குறைபாடோ, நோயோ இது போன்ற விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.  ஒருபோதும்  தங்களது பழைய உருவத்தை, அடையாளத்தைப் பெற முடியாது என்பது அவர்களது முகத்திலறையும் உண்மையாக இருக்கிறது. இதனை ஏற்றுக்கொண்டு வாழவேண்டிய  கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். பங்களாதேஷ் கிராமங்களில் அவர்கள் ஒருபோதும் தமது பழைய அங்கீகாரத்தைப் பெறுவதில்லை.

வாழ்வாதாரத்துக்காகச் செய்யும் வேலையும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. ஒன்றிரண்டு வேலைகளையே செய்து பிழைக்க முடியுமென்ற நிலைதான் மீந்திருக்கிறது. அதுவும் அவர்களது பொருளாதார நிலைமையை மிகவும் பாதிக்கிறது.

இதற்குத் தீர்வென்பது, ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான  சட்ட உரிமைகளாலும் மற்றும் நீதியாலுமே முடியும். சமூகத்தின் ஒட்டுமொத்தக் கண்ணோட்டமே மாற வேண்டியிருக்கிறது. சீர்திருத்தங்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேண்டுமானால் ஓரிரு நபர்களுக்கு மட்டும் தீர்வு கிட்டலாமே ஒழிய அது தற்காலிமானதுதான்.

இந்த ஆசிட் தாக்குதல்கள் இந்தியாவிலும் சாதாரணமானதொன்றுதான்.  கடந்த ஜனவரி 9 ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணின் மீது உள்ளூர் பாஜக தலைவர் பிஜூ என்பவரின் அடியாட்கள் ஆசிட் வீசியிருக்கின்றனர்.  அஞ்சலிக்கு அந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பிஜூவின் ஆட்கள் அஞ்சலியின் வீட்டுக்கு ஃபோன் செய்து கூரியர் வந்திருக்கிறதென்றும், வீடு அடையாளம் தெரியாததால் வெளியில் வந்து நிற்குமாறும் கூறியிருக்கின்றனர். வீட்டுக்கு வெளியில் வந்து  நின்ற அஞ்சலி முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளனர். தற்போது இதற்கான வழக்கு நடந்து வருகிறது.  இதுவும் இந்துத்துவா காட்டும் பயங்கரவாதத்தின் மற்றொரு கோர முகம்தான்.

இந்தக் கோரமுகம்தான் நாடு முழுக்க கலாச்சாரக் காவலர் வேடமேற்கிறது. மதங்கள் வெவ்வேறானாலும் அதன் தூய்மை பெண்ணை எரிப்பதில்தான் இருக்கிறதென்று நிரூபிக்கின்றன இந்தச் சம்பவங்கள். சாதியையும், பெண்ணடிமைத்தனத்தையும் தனது கைகளாகக் கொண்டு மக்களை நசுக்கும் பார்ப்பனியம்தான் தற்போது அஞ்சலியின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் காதலை மறுத்த  இரண்டு மாணவிகள் மீது இளைஞர்கள் ஆசிட் வீசியதால் அப்பெண்கள் பலியான சம்பவத்தை செய்தியில் பார்த்திருப்போம். காதலித்த பெண்ணின் மீது ஆசிட் ஊற்றுவது என்ன வகையான நேசம் என்பது புரியவில்லை.

பெண்ணை நுகர்பொருளாக, உடமையாகக் கற்றுக்கொடுக்கும் ஊடகங்களும், சினிமாவும் அவளை அடைந்தே தீரவேண்டிய பொருளாகவே பார்க்கிறது. இந்தக் காதலை வியாபாரமாக்கிக் கொள்ளும் முதலாளித்துவமோ இன்றைய இளைஞர்களிடம் காதலைக் கூவிக் கூவி விற்றுக் காசாக்கிக் கொள்கிறது.  காதலை ஏற்க மறுக்கும் உரிமை  பெண்ணுக்கும் உண்டு என்பதை ஆணாதிக்கம்  உணர மறுக்கிறது. ரஜினி கமல் முதல் இன்றைய தனுஷ் வரை பெண்ணைத் தன் காலடியில் விழ  வைப்பதே ஆண்மைக்கழகு என்று  சவால் விட்டு அதனை நிரூபிக்கவும் செய்கிறார்கள். தனக்குக் கிடைக்காத பொருள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று ரசிகனுக்கும் கற்பிக்கிறார்கள்.

இந்த வழியில் இன்றைய இளைஞர்களும் அமிலத்தால் பெண்ணைத் துடிக்க துடிக்க அழிக்கிறார்கள். மதம் எதுவாக இருந்தாலும் அதன் ஒழுக்கம், அன்பு, அமைதி என்ற எல்லாவற்றையும் பிரித்துவிட்டுப் பார்த்தால்  மையமாக இருப்பது பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும்தான். வாழ்நிலைமைகளையும்,  செல்வத்தை விநியோகிக்கும் சமுதாய நிலைமைகளையும் முதலாளித்துவம் மாற்றியிருக்கிறது. ஆனால் அதன் இலாப நோக்குகளுக்காக நிலப்பிரப்புத்துவத்தின் பிற்போக்குத்தனங்களை அப்படியே நிலவ விட்டு ஆதாயமடைகிறது.  அல்லது பெண்களை அரைகுறையாக சீயர் லீடர்ஸ் என்ற பெயரில் கவர்ச்சிக்கு உபயோகப்படுத்துகிறது.

இந்த நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனங்களையும், முதலாளித்துவ பாலியல் சுரண்டல்களையும் எதிர்த்து மக்கள் அனைவரும் சேர்ந்து போராடுவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். தனிப்பட்ட ஓரிருவர் போராடுவது  எந்தப் பலனையும் தராது. ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டு, கலாச்சார நிறுவனங்களைத் தகர்க்கும் சக்தி ஒடுக்கப்படும் மக்கள் கையில்தான் இருக்கிறது. அப்படி சமூக நலனுக்காகப்  போராட புறப்படும் மக்கள் கையில்தான் விடுதலைக்கான திறவுகோல் இருக்கிறது.

___________________________________________________________

– வேல்விழி, புதிய கலாச்சாரம், ஜூலை – 2011

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!

தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
டாக்டர் ஜஸ்ப்ரீத் சிங்

டாக்டர் ஜஸ்ப்ரீத் சிங், ஒரு தலித் மாணவன். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இவர் நன்றாகப் படிக்கும் மாணவர். பள்ளியில் அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார். மருத்துவர் ஆக வேண்டும் என்பது மட்டுமே அவரது இலட்சியம், கனவு. ஆனால் அந்தக் கனவு நிறைவேற இந்த சமூகம் அனுமதிக்கவில்லை.

ஜஸ்ப்ரீத் சிங் வறுமையால் வாடும் சாதாரண தலித் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். வீட்டின் மூத்த பிள்ளையான இவரோடு, மற்ற மூன்று இளைய சகோதரிகளையும் உள்ளடக்கியது அவரது குடும்பம். தந்தை வேலைக்குப் போகிறார். தாய் வீட்டு வேலைகளையும் கவனித்தபடியே தூங்கும் நேரம் தவிர எப்போதுமே தையல் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார்.

படிப்பில் திறமையுடன் விளங்கிய ஜஸ்ப்ரீத்தின் படிப்புக்காக மொத்தக் குடும்பமுமே ரத்தத்தை வியர்வையாக்கி, உழைத்துத் தியாகம் செய்தது. மகனை ஒரு ஊர் போற்றும் மருத்துவனாகப் பார்க்க அந்தத் தாயும் ஆசைப்பட்டாள். மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வரதட்சிணைக்கு பொருள் சேர்க்க வேண்டிய நமது இந்தியச் சூழலில் தனது மகனது கனவுப் படிப்புக்காகவும் அந்தத் தாய் ஓய்வறியாமல் வேலை செய்து வந்தார்.

சண்டீகர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜஸ்ப்ரீத் சிங் தனது மருத்துவப் படிப்புக்காக சேர்ந்தார். முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டீகரில் தனது மேற்படிப்பான எம்.டி படிப்பை படிக்க வேண்டும் என்பதுதான் ஜஸ்ப்ரீத் இன் திட்டம். இத்திட்டத்தின்படி நான்கு ஆண்டுகள் இளநிலை மருத்துவப்படிப்பில் பெரிய பிரச்சினைகள் இல்லாமல்தான் கழிந்த்து.

அதன் பிறகுதான் அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சியடைந்த ஜஸ்ப்ரீத் இன் வாழ்வில் சூறாவளி வீசத் துவங்கியது. இறுதியாண்டு படிக்கும்போதுதான் பேரா. என்.கே. கோயல் என்பவரது மூலம் தொல்லை ஆரம்பமானது. சாதி வெறியனான என்.கே. கோயல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜஸ்ப்ரீத் சிங்கை சாதியின் பெயரால் அவமானப்படுத்தினான்.

“தலித் என்பதால்தான் உனக்கு இங்கே படிக்க அனுமதி கிடைத்துள்ளது. எப்படியோ மருத்துவப் படிப்பில் இடம் பிடித்து விட்டாய். ஆனால் உன்னை தேர்ச்சியடைய விட மாட்டேன். உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள். நான் உன்னை மீண்டும் முதலிலிருந்து மருத்துவப் படிப்பை மேற்கொள்ளச் செய்யாமல் விட மாட்டேன்” என்றெல்லாம் சவால் விட்டுள்ளான்.

இதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பில் முக்கியப் பாடங்களில் ஒன்றான கம்யூனிட்டி மெடிசின் பாடத்தில் வேண்டுமென்றே ஜஸ்ப்ரீத் சிங்கை தோல்வியடையச் செய்தான். இந்த அநீதியைத் தனது சக மாணவர்களிடமும், பிற பேராசிரியர்களிடமும் எடுத்துரைக்க முற்பட்டார் ஜஸ்ப்ரீத். மீண்டும் தேர்வு எழுதியும் ஒரு மதிப்பெண் குறைவாகப் போட்டு அவரை தேர்வில் தோல்விடைய வைத்தான் சாதி வெறி பிடித்த கோயல்.

மனம் கலங்கிய மாணவர் ஜஸ்ப்ரீத் இதனைத் தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். தாயும் மகனைத் தேற்றி வரும் தேர்வில் நன்றாக எழுத ஊக்கம் கொடுத்துள்ளார். ஆனால் சாதிவெறி என்ற எதார்த்தத்தில் தனது கனவு நனவாகப் போவதில்லை என்பதைப் புரிந்துகொண்ட ஜஸ்ப்ரீத் ஜனவரி 27, 2008 அன்று தனது 22 வது வயதில் கல்லூரி நூலகத்தின் ஐந்தாவது மாடியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது சட்டைப் பையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், அநீதி இழைத்த கோயலையும் குறிப்பாக எழுதி வைத்துவிட்டு மறைந்து விட்டார் ஜஸ்ப்ரீத் சிங்.

தன்னுடைய ஒரே மகனை இழந்த பெற்றோருக்கு கிடைத்த அந்தத் துருப்புச் சீட்டைக் கொண்டே காவல் நிலையத்தில் புகார் செய்தனர் அந்தப் பெற்றோர். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. உடனே அங்கிருந்த காவல்துறைக் கண்காணிப்பாளரை வேறு இடத்திற்கு மாற்றல் செய்தது அரசும், ஆளும் வர்க்கமும். இந்த வழக்கில் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த ஏழைத் தந்தையின் தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தின் பிறகே தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கினைப் பதிவு செய்தனர்.

அதன் பிறகு சில உண்மைகள் வெளி வந்தன. முதலாவதாக தற்கொலைக் குறிப்பு ஜஸ்ப்ரீத் எழுதியதுதான் என நிரூபணமானது. அடுத்ததாக, அவர் தேர்ச்சியடையவில்லை என கோயலால் நிராகரிக்கப்பட்ட ஜஸ்ப்ரீத் இன் கம்யூனிட்டி மெடிசின் தேர்வுத்தாள் அனைத்தும் மூன்று வெவ்வேறு பேராசிரியர்களால் மறு மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் ஜஸ்ப்ரீத் தேர்ச்சி பெற்றிருப்பது தெரிய வந்தது. ஆனால் இந்தச் செய்தியைக் கேட்க அதனை எழுதிய ஜஸ்ப்ரீத் உயிரோடு இல்லை.

இவ்வளவு ஆதாரப்பூர்வ தகவல்கள் இருந்தும் என்.கே. கோயல் ஒருநாள் கூட சிறையில் இருக்கவில்லை. பேராசிரியராக, துறைத்தலைவராக இன்றும் தொடருகிறான். என்ன நடக்கும் என இலக்குத் தெரியாமலேயே இந்த வழக்கைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது அந்தக் குடும்பம். மறு ஆண்டு சகோதரத்துவத்துக்காக கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தன்று தனது இயலாமை, பிரிவுத்துயருடன் கோபத்தை அடக்க முடியாத ஜஸ்ப்ரீத் சிங் இன் இளைய சகோதரி நீதி வேண்டி தனது உயிரையே மாய்த்துக் கொண்டாள்.

சாதிவெறி ஆட்டத்தால், கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம்வயதினர் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர். இதனை ஒரு பொருட்டாகவே மதிக்காது, நீதி வழங்குவதை தவிர்த்து ஒரு தலித் வாழ்வின் மதிப்பு இவ்வளவுதான் என உறுதிசெய்யும் அரசின் கொட்டத்தை நேரில் அனுபவித்திருந்தாலும்  தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் சரி, நீதி கிடைக்காமல் ஓய மாட்டோம் எனத் தொடர்ந்து போராடி வருகிறார்கள் ஜஸ்ப்ரீத் சிங்கின் குடும்பத்தார்.

டாக்டர் ஜஸ்பிரீத் சிங் கொலை – ஆவணப்படம்

தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
டாக்டர். பால் முகுந்த்

தொடர்ச்சியாக தலித் மாணவர்கள் மீதான தாக்குதல் பல கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு மேலும் ஒரு உதாரணம் மருத்துவர் பால்முகுந்த் பார்தி என்ற தலித் மாணவனின் கதை. மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணதேஸ்வர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இவர். ஒடுக்கப்பட்ட  சாம்பர் இனத்தைச் சேர்ந்த இவர் நன்றாகப் படிக்கக் கூடியவர். மேல்நிலை வகுப்பில் 78 சதவீத மதிப்பெண்களைப் பெற்று அதற்காகக் குடியரசுத் தலைவர் விருதையும், ஐஐடி நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் 8 வது இடத்தையும் பெற்றுள்ளார். கால்நடை மருத்துவப் படிப்பில் முதலில் சேர்ந்த அவருக்கு ஆறு மாதம் கழித்து AIIMSஇல் இருந்து அழைப்பு வந்தது. மருத்துவத் துறையில் ஆர்வம் இருந்த காரணத்தால் அங்கிருந்து வந்த அழைப்பை ஏற்று மருத்தவப் படிப்பில் சேர்ந்துள்ளார். CMBT தேர்வில் கூட வெற்றி பெற்றுள்ளார். மேலும் இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வுக்கும் தன்னைத் தயார் செய்து வந்தார். கல்விப்புலத்தில் மிகச்சிறந்த நபராகத்தான் இருந்து வந்தார் பால் முகந்த்.

அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான சூழலில் இருந்தது. இரண்டு மகன், ஒரு மகள் என்ற அந்தக் குடும்பத்தில் தந்தை மட்டுமே வேலைக்குப் போகிறார். தாய் வீட்டைக் கவனித்துக் கொள்கிறாள். படிப்பில் சிறந்து விளங்கியதால் மொத்தக் குடும்பமுமே பால் முகுந்தை மருத்துவராக்க தன்னாலியன்ற வரை முயற்சி செய்துள்ளது. வங்கியில் மாத்திரமன்றி வெளியிலும் கடன் வாங்கித்தான் அவரை படிக்க வைத்துள்ளனர். அவரது தந்தைக்குக் கூலி சில சமயங்களில் மூன்று மாதமாகக் கூட கைக்கு வந்து சேராமல் இருக்கும். அதுபோன்ற தருணங்களில் திருமணமான சகோதரி கூட தலா 2500 ரூபாய் வரை மாதந்தோறும் கொடுத்து உதவியுள்ளார்.

இது வெறும் குடும்பப் பாசம் மட்டுமல்ல, அந்த சமூகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் ஒருவர் கூட கண்டறியாத கனவு மருத்துவராவது. இவர் மூலமாக அச்சமூகத்தின் பிற இளைஞர்களும் உந்தப்பட்டு உயர்வடைவார்கள் என அக்குடும்பத்தினர் கருதினர். ஆனால் அவர்களது இந்த கனவுக்கோட்டையை சாதி என்னும் கருங்கல் வந்து சுக்குநூறாக நொறுக்கியது.

டாக்டர் பால் முகுந்த் இன் சாதி இன்னது என அறிந்த AIIMS பேராசிரியர்கள் அவரை முதல் நாளில் இருந்தே அவமானப்படுத்தத் தொடங்கி விட்டனர். படிப்பில் சிறந்து விளங்கிய அவரை, வெறும் சாதி அடிப்படையில் மட்டுமே தகுதிபெற்று மருத்துவம் படிக்க வந்தவர் என்று கேலி செய்தனர். முதலாமாண்டு துவங்கிய இந்த அவமானப்படுத்தல்கள் அவர் தற்கொலை செய்து கொண்ட இறுதி ஆண்டு வரை தொடர்ந்தது. இப்படிச் செய்தவர்களில் ஐவர் பேராசிரியர்கள். இது தவிர்த்து கல்லூரி முதல்வரும் “தலித் ஆகிய நீங்கள் எல்லாம் மருத்துவராக முடியாது” என்று அவரிடம் சவால் விட்டுள்ளார். பிரச்சினையைப் பெரிதுபடுத்தினால் தனது எதிர்காலம் பாதிக்கப்படுமே என்று கருதி, அதனைப் பொருட்படுத்தாமல் படிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தார் பால் முகுந்த்.

பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரிடம் தான் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளையும், அதனால் ஏற்படும் மனவருத்தத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். தங்களை சாதியைச் சொல்லியே பேராசிரியர்கள் அழைப்பதையும், தங்களைப் பார்க்க மற்றும் பேச அவர்கள் மறுப்பதையும் மிகுந்த மனவேதனையுடன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தலித் மாணவர்கள் வகுப்பில் கேட்கும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்குப் பேராசிரியர்கள் பதிலளிக்க மறுப்பதை எடுத்துச்சொல்லி புலம்பியுள்ளார். செய்முறைத் தேர்வுகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களைத் தேர்ச்சியடைய விடாமல் தடுப்பதுதான் இந்தப் பேராசிரியர்களின் தலையாய பணியாக இருந்திருக்கிறது.

இதனையெல்லாம் பார்த்த பால் முகுந்த் படிப்பு முடிந்தவுடன் இந்தியாவை விட்டுச் சென்றுவிட வேண்டும் என்று தனது வீட்டாரிடம் கூறியுள்ளார். தன்னுடைய குடும்பப் பெயரையும், சாதியையும் மாற்ற முடியுமா என்றெல்லாம் முயற்சி செய்துள்ளார். ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்தச் சாதிக்கொடுமையைச் சகித்துக் கொண்டிருக்க முடியாமல், அதே நேரத்தில் தனது எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் நிலையை உணர்ந்த பால் முகுந்த் இறுதியாண்டு படிக்கும்போது மார்ச் 3, 2010 அன்று தற்கொலை செய்து கொண்டார். அதற்கு இரு நாட்களுக்கு முன்னர்தான் அவரது தற்கொலை முயற்சி ஒன்று அவரது நண்பனால் தடுக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தை அப்படியே விட்டுவிடுமாறு AIIMSஇன் டீன் ராணி குமார், பால் முகுந்த் இன் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டாராம். அதற்கு அவர்கள் மறுக்கவே “எங்கு சென்றாலும் நீங்கள் ஜெயிக்க முடியாது” என்று சவால் விட்டு, மன உளைச்சல் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி வழக்கை முடிக்கப் பார்க்கிறது கல்லூரி நிர்வாகம். பால் முகுந்த் இன் மன உளைச்சலுக்கு யார் அல்லது எது காரணம் என்று பெற்றோர் கேட்கும் கேள்விக்கு நிர்வாகம் பதில் அளிக்க மறுக்கிறது.

என்ன நடந்தாலும் சரி, நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறது பால் முகுந்த் இன் குடும்பம். “எங்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. எனவே இந்திய அரசிடம் நீதி கேட்டு இறுதிவரை போராடுவோம். நீதி கிடைக்காதபட்சத்தில் நாங்களும் தற்கொலை செய்து கொள்வோம்“ என்று கூறிவிட்டு அழத் துவங்குகிறார் பால் முகுந்த இன் தந்தை. மகனை இழந்த தாயோ “புத்திசாலியான என் மகனைக் கொன்று விட்டார்களே. என் மகனே ! என்னை விட்டு எங்கு சென்று விட்டாய்” என்று ஒப்பாரியுடன் அழது கொண்டே இருக்கிறாள்.

டாக்டர் பால் முகுந்த் கொலை – ஆவணப்படம் பாகம் 1 – பாகம் 2

டாக்டர் ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் டாக்டர் பால் முகுந்த் பார்த்தி ஆகியோரின் தற்கொலை பற்றி ஒரு செய்திப் படம் எடுக்கப்பட்டுள்ளது. டெத் ஆஃப் மெரிட் என்ற அந்த ஆவணப் படத்தில் சம்பவங்களுடன் இளைஞர்களின் குமுறல்களும் இடம்பெற்றுள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் இவ்வாறு மேற்படிப்புக்குப் போய் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட தலித் மாணவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை ஐஐடி இல் பி.டெக் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த 2007 புத்தாண்டுப் பிறப்பன்று இக்கணக்கைத் துவக்கி வைத்தார். ஐஐஎஸ்சி இன் ஆய்வு மாணவர் அஜய் எஸ்.சந்திரா, ஹைதராபாத் பல்கலை இயற்பியல் ஆய்வு மாணவர் செந்தில்குமார், கான்பூர் ஐஐடி இன் பி.டெக் மாணவர் பிரசாந்த் குரீத், எம்.டெக் மாணவன் ஜி.சுமன், அங்கித வெக்தா என்ற அகமதாபாத் நர்சிங் மாணவி, ஷியாம் குமார் என்ற பிடெக் மாணவர், அமராவதி என்ற ஆந்திரப் பிரதேச குத்துச்சண்டை வீராங்கனை, அவ்வூரைச் சேர்ந்த பி.காம் மாணவி பாந்தி அனுஷா, புஷ்பாஞ்சலி பூர்தி என்ற பெங்களூரு எம்பிஏ மாணவி, லக்னோ மருத்துவக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் சுசீல்குமார் சவுத்ரி,பெங்களூரில் விவசாய விஞ்ஞானம் படித்த ரமேஷ், கான்பூர் ஐஐடி இல் பிடெக் படித்த மாதுரி செல், ஹைதராபாத் இல் பிடெக் மாணவியான வீ. வரலட்சுமி,ரூர்கி இன் பிடெக் மாணவன் மணீஷ் குமார், லினேஷ் மோகன் காவ்லே என்ற டெல்லி பிராந்திய பொறியில் கல்லூரி ஆராய்ச்சி மாணவன் என அப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!

புதிதாக இப்பட்டியலைப் பார்ப்பவர்களுக்கு இத்தனை சாதிக் கொடுமைகள் நம் நாட்டிலா ? என்று ஆச்சரியமாக இருக்கலாம். இவை அனைத்தும் கணக்கில் வந்தவை. ஆகவே இவை விதிவிலக்கானவைதான். எல்லாவற்றையும் தொகுத்தால் பட்டியல் தாங்காது. இந்தத் தற்கொலைகள் கோழைத்தனமானவையா? இல்லை, நிச்சயம் இல்லை. இவை ஆதிக்க சாதி வெறி நடத்தியிருக்கும் படுகொலைகள்.  வல்லரசாகப் போகும் இந்தியாவின் சாதனைகள் இந்தக் கொலைகள்.  தாங்கள் நாகரீக உலகைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரையும் கூனிக்குறுக வைக்கின்றன இந்தக் கொலைகள்.

இவை பார்ப்பனியத்தின் சாதி ரீதியான அடக்குமுறை என்று மாட்டும் பார்க்க கூடாது. அடித்தட்டு வர்க்கங்களிலிருந்து மருத்துவர்கள் வந்தால் அவர்கள் எப்படி மக்களது சிரமங்களைப் புரிந்துகொண்டு மக்கள் மருத்துவராகப் பணியாற்றுவார்கள் என்பதறிவோம். அந்த வகையில் இந்த நாட்டின் ஏழைகளுக்கான மருத்துவர்களை வரவிடாமல் செய்யும் நாசகாரச் செயலாகத்தான் இந்தக் கொலைகளைக் கருது முடியும். ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்கும் உரிமையை பல நூற்றாண்டுகளாக மறுத்து வரும் பார்ப்பனியத்தை என்றைக்குக் கல்லறைக்கு அனுப்புகிறோமோ அன்றுதான் நம் நாட்டு மக்களுக்கு சமூக விடுதலை கிடைக்கும்.

அதுவரை இன்னும் எத்தனை இளைஞர்களை இழக்கப் போகிறோம்?

_______________________________________________________________

– ஜென்னி, புதிய கலாச்சாரம், ஜூலை – 2011

________________________________________________________________

படிக்க

ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்!

லைக்கற்றை ஊழல் என்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஊழல் மட்டுல்ல; இது தனியார்மயதாராளமயக் கொள்கைகளின் கீழ் நடைபெறும் கார்ப்பரேட் பகற்கொள்ளை. தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் இத்தகைய பகற்கொள்ளைகள் சட்டபூர்வமாகவே அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் இதில் நாம் கவனம் செலுத்த வேண்டிய மையமான பிரச்சினை; இலஞ்சஊழல் மோசடிகளைக் காட்டிலும் முதன்மையானதும், அவற்றில் பலவற்றுக்கு அடிப்படையானதும் இதுதான் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

எனினும், 2ஜி அலைக்கற்றைகளை ஏலம் மூலம் விற்பனை செய்யாத காரணத்தினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அதிகபட்ச வருவாய் இழப்பு என்று கணக்குத் தணிக்கையாளர் குழு அளித்த மதிப்பீடான ரூ.1.76 இலட்சம் கோடி என்ற தொகை முழுவதையும் ஊடகங்கள் ‘ஊழல்’ என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கியதன் தொடர்ச்சியாக, இம்மாபெரும் கார்ப்பரேட் பகற்கொள்ளையின் பின்புலமாக அமைந்திருக்கும் மறுகாலனியாக்கம் என்னும் மையமான பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஊழல்தான் நாட்டின் மையமான பிரச்சினை என்று சித்தரிப்பதற்கும், இன்னும் ஒரு படி மேலே போய் தனியார்மயதாரளமயக் கொள்கைகள் மூலம் நாடு அடையக்கூடிய முன்னேற்றத்தைத் தடுப்பதே ஊழல்தான் என்று சித்தரிப்பதற்கும் இது பயன்பட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் :  ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள் !‘அலைக்கற்றை ஊழல்’ விவகாரத்திலிருந்து ‘உத்தமர்’ மன்மோகன் சிங்கும் டாடா, அம்பானி, மித்தல், ரூயா, ராடியா, பவார், சிதம்பரம், மாறன், ஷோரி, பிரமோத் மகாஜன் உள்ளிட்டு இந்த விவகாரத்தில் நேரடித் தொடர்புள்ள பலரும் விலக்கப்பட்டு, அலைக்கற்றை ஊழலின் இலக்கு திட்டமிட்டே குறுக்கப்பட்டது. தி.மு.க.ராஜாகனிமொழி என்று இந்த இலக்கை குறுக்கியதன் மூலம் கார்ப்பரேட் ஊடகங்கள், சுப்பிரமணிய சாமிசோஜெயலலிதா உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், பாரதிய ஜனதா, காங்கிரசு கட்சிகள் என ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் நோக்கத்தில் ஆதாயம் பெற்றனர். இந்த மாபெரும் கொள்ளையின் முழுப்பரிமாணமும் வெளிவருவதை யாரும் விரும்பவில்லை என்பதனாலும், இதில் தி.மு.க.வை மட்டும் தனிமைப்படுத்திக் காவு கொடுப்பதில் இவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்பதனாலும் இந்த நாடகம் இதுவரை இடையூறின்றித் தொடர்ந்துள்ளது.

இப்போது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள முதல் குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நிலையில் (Framing of Charges) தன் மீது பல்வேறு கிரிமினல் குற்றப்பிரிவுகளின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துத் தனது வாதங்களை ராஜா முன்வைத்திருக்கிறார். குற்றத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு அவர் முன்வைத்துள்ள இந்த வாதங்கள் எந்த அளவிற்கு அவருக்குப் பயன்படும் என்பது குற்றவியல் வழக்கு விசாரணை சார்ந்த விசயம். ஆனால், இப்பிரச்சினையில் இதுகாறும் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணர்வதற்கும் இந்தப் பகற்கொள்ளையின் அரசியல் பின்புலத்தை அம்பலமாக்குவதற்கும் அவரது வாதங்கள் நமக்குப் பயன்படுகின்றன.

“1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற கணக்குத் தணிக்கையாளரின் மதிப்பீடு அபத்தமானது, அடிப்படையற்றது. சி.பி.ஐ.யின் கணக்கின்படியே இழப்பு என்பது 30,984.55 கோடி தான்சு என்கிறார் ராசா. உண்மைதான். ஆனால், 1.76 இலட்சம் கோடி ஊழல் என்று கூக்குரலிட்ட சு.சாமி, ஜெயா, பா.ஜ.க. முதல் ஊடகங்கள் வரை யாரும், “இழப்புத் தொகையை சி.பி.ஐ. குறைத்துக் காட்டியுள்ளது ஏன்?சு என்ற கேள்வியை எழுப்பவில்லை.

“இழப்பு இத்தனை கோடி ரூபாய் என்று மதிப்பிடுவதற்கு சி.பி.ஐ. யார்? அது அரசாங்கத்தின் வேலை. இழப்பு எவ்வளவு என்பதை அரசு சொல்லட்டும்சு என்பது ராசாவின் அடுத்த வாதம்.

அரசு என்ன சொல்கிறது? முதலில் வருபவர்க்கு முதலில் என்பதுதான் அலைக்கற்றை உரிமங்கள் வழங்குவதற்குப் பின்பற்றப்பட்ட கொள்கை என்றும், அந்தக் கொள்கையை மாற்றி டெண்டர் விட வேண்டும் என்று அரசு முடிவு செய்யாதபோது, டெண்டர் விட்டிருந்தால் இவ்வளவு கிடைத்திருக்கும் என்று ஊகித்து, அதன் அடிப்படையில் இத்தனை கோடி ரூபாய் இழந்து விட்டோம் என்று பேசுவது அபத்தம் என்றும் கபில் சிபல் ஏற்கெனவே கூறியிருக்கிறார். இதை மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திலேயே கூறியிருக்கும் போது, என் மீது எதற்காகக் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதே ராசாவின் கேள்வி. ராசா நீதிமன்றத்தில் இந்த வாதத்தை வைத்த அன்றைக்கு இரவு என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில்கூட, “இழப்பு இல்லைசு என்ற கருத்தையே கபில் சிபல் வலியுறுத்தினார். அதாவது, சி.பி.ஐ. யின் குற்றச்சாட்டை ராசா மட்டும் மறுக்கவில்லை, இந்த அரசே அதனை மறுக்கிறது என்பதுதான் வேடிக்கை!

“டெண்டர் விடாமல் முதலில் வந்தவர்க்கு முதலில் என்ற அடிப்படையில் அலைக்கற்றை உரிமங்களை வழங்கியது குற்றம் என்றால், மாறனும் அருண் ஷோரியும் என்னுடன் சிறையில் இருக்க வேண்டும்சு என்பது ராசாவின் அடுத்த வாதம்.

“2001இல் தீர்மானிக்கப்பட்ட விலையில்தான் அலைக்கற்றை வழங்கப்படவேண்டும் என்பதில் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் உறுதியாக இருந்தது. நிதி அமைச்சகம் டெண்டர் விடவேண்டும் என்று கூறியதுசு என்று கூறினார் சிதம்பரம் (பிசினெஸ் லைன், ஜூலை 26, 2011). இரு அமைச்சகங்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவும்போது கொள்கை மாற்றம் குறித்து முடிவு செய்ய வேண்டியவர் பிரதமர். இப்பிரச்சினையை அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்பி முடிவு செய்யாததுதான் குற்றம் என்றால், அந்தச் சதிக் குற்றத்துக்குப் பதிலளிக்க வேண்டியவர் பிரதமர். அமைச்சர்கள் குழுவைக் கூட்டும் அதிகாரம் அவருடையதுதான் என்பதே ராசா முன்வைக்கும் வாதத்தின் சாரம்.

அலைக்கற்றை விவகாரத்தில் பிரதமருக்குத் தெரியாமலும் பிரதமரை ஏமாற்றியும் ராசா பயங்கரமான ஊழலைச் செய்துவிட்டதைப் போன்ற ஒரு பொய்த்தோற்றத்தை சு.சாமி, ஜெயலலிதா, சோ மற்றும் பார்ப்பன ஊடகங்கள் அடங்கிய கூட்டணி துவக்க முதலே உருவாக்கியிருக்கிறது. இது ஒரு இமாலயப் பொய் என்ற போதிலும், மன்மோகன் சிங் என்ற நபருடைய பிம்பம் நொறுங்கினால், அது தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் மீதே விழுந்த கறையாகிவிடும் என்பதனாலும், மன்மோகன் அமெரிக்காவின் பங்களா நாய் என்பதனாலும், ஊடகங்கள், ஓட்டுக்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் மன்மோகன் சிங்கின் இந்தப் புனித வேடத்தை சேதமின்றிப் பாதுகாக்கின்றனர்.

ஆனால், விசயங்களுக்குள் ஆழமாகச் செல்லாமல் மேம்புல் மேய்பவர்களை மட்டுமே இவ்வாறு ஏமாற்ற இயலும். இந்த ஊழல் விவகாரத்தில் ராசா கைது செய்யப்படுவதற்கு முதல்நாள், ராசாவிற்கும் மன்மோகனுக்கும் இடையிலான கடிதப் பரிவர்த்தனை இந்து நாளேட்டில் ஒரு முழுப்பக்க அளவிற்கு வெளியானது. அரசாங்க இரகசியம் என்று கருதப்படும் இக்கடிதங்களை ராசாதான் கொடுத்து வெளியிடச் செய்திருக்க வேண்டும். மன்மோகன் சிங் இருட்டிலிருந்தார் என்ற கூற்றை அக்கடிதங்கள் பொய்ப்பிக்கின்றன. அதன் பின்னர் பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி வெளியிட்ட அறிக்கை இப்பிரச்சினையில் மன்மோகன் சிங்கிற்கு உள்ள தொடர்பை வெளிக்கொணர்ந்ததுடன், மன்மோகன் சிங்கின் நாடாளுமன்ற உரைகளிலிருந்தே அவரது தொடர்பை நிரூபித்துக் காட்டியது. ஜோஷியின் அறிக்கைக்கு எதிராக காங்கிரசு கலகம் செய்வதற்கும் இதுவே காரணமாக அமைந்தது.

யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலையில் அலைக்கற்றையை வாங்கின. அதன் பின்னர் தமது நிறுவனப் பங்குகளின் ஒரு பகுதியைப் பன்மடங்கு அதிக விலைக்கு அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்றனர். இவ்வாறு அலைக்கற்றை உரிமத்தை வாங்கிய நிறுவனங்கள், தமது பங்குகளை உடனே அதிக விலைக்கு விற்றிருக்கின்றன. இவ்வாறு இவர்கள் ஈட்டிய தொகை மட்டும் 22,000 கோடி ரூபாய் என்கிறது சி.பி.ஐ. இவர்களது பங்குகளின் விலை திடீரென்று அதிகரித்ததற்குக் காரணம், இவர்கள் கைக்கு வந்திருந்த அலைக்கற்றை உரிமங்கள்தான் என்பதால், மேற்கூறிய 22,000 கோடியும் அலைக்கற்றை விற்பனையின் மூலம் அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டிய தொகை என்பது சி.பி.ஐ. இன் குற்றச்சாட்டு.

“இந்தியாவில் போடப்படும் எல்லா வெளிநாட்டு முதலீடுகளும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்புக் குழுமத்தின் ஒப்புதலைப் பெறுகின்றன எனும்போது, அமைச்சரவை இந்த முதலீடுகளையெல்லாம் அங்கீகரித்திருக்கும்போது, இதில் நான் எந்த சட்டத்தை மீறியிருக்கிறேன்? இவற்றுக்கு பிரதமரின் முன்னிலையில் நிதி அமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார். பிரதமரை மறுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்சு என்று கூறியிருக்கிறார் ராசா.ஸ்பெக்ட்ரம் ஊழல் : ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள் !

“ஆ, பிரதமரையே இழுக்கிறார்!சு என்று சில ஊடகங்கள் குதிக்கின்றன. உண்மையை சொன்னால், இவ்விசயம் குறித்து மன்மோகன் சிங் ஏற்கெனவே தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவரைப் பொருத்தவரை ஒரு நிறுவனம் தன்னிடம் உள்ள பங்குகளை விற்பதும், தனது பங்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுவதும் (dilution of equity) நியாயமான வணிக நடவடிக்கைகள். ஸ்வான், யூனிடெக் விவகாரங்களில் நடந்திருப்பதும் அதுதான் என்பதே அவரது கருத்து. “விற்கப்பட்டவை பங்குகள்தானே தவிர, அலைக்கற்றைகளை அவர்கள் யாருக்கும் விற்கவில்லை. எனவே, அந்தப் பரிவர்த்தனைகள் சட்டபூர்வமானவையேசு (ஜூலை 26, பிசினெஸ் லைன்) என்று ராசாவின் கூற்றை மீண்டும் ஒருமுறை வழிமொழிந்திருக்கிறார் சிதம்பரம். “அலைக்கற்றை உரிமத்தை அரசிடம் விலைக்கு வாங்கும் நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு அந்த உரிமத்தை வேறொருவருக்கு விற்கக்கூடாது என்ற விதியை ரத்து செய்து, வாங்கிய மறுகணமே விற்கலாம் என்று 2003ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா அரசு அனுமதி வழங்கி விட்டதுசு என்று குட்டை உடைத்திருக்கிறார் கபில் சிபல் (ஜூலை 27, தி இந்து). இதன்படி பார்த்தால், அவர்கள் அலைக்கற்றையையே கைமாற்றி அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்றிருந்தாலும் அது குற்றமில்லை என்றாகிறது.

மொத்த இழப்பான ரூ.30,984 கோடியில் அலைக்கற்றையை மலிவு விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்ற குற்றநடவடிக்கையில் ஏற்பட்ட மொத்த இழப்பு மட்டும் ரூ.22,000 கோடி என்பது சி.பி.ஐ. இன் குற்றச்சாட்டு. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் தனது 27% பங்குகளை விற்று ரூ.13,973 கோடி ஈட்டியிருக்கிறது. 67% பங்குகளை விற்று ரூ.6120 கோடி ஈட்டிய யூனிடெக் நிறுவனத்தின் முதலாளி சஞ்சய் சந்திரா சிறையில் இருக்கிறார். ஆனால், ரூ.13,973 கோடியைச் சுருட்டிய டாடா மீது கை வைக்க சி.பி.ஐ. க்குத் துணிவிருக்கிறதா என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ராசா.

ராசா நீதிமன்றத்தில் கிளறாத இரகசியங்களும் எழுப்பாத கேள்விகளும் இவ்வழக்கில் நூற்றுக்கணக்கில் புதைந்து கிடக்கின்றன. இந்தக் கொள்ளையில் பங்கு பெற்றிருக்கும் பெரும் தரகு முதலாளிகள் யாரையும் சி.பி.ஐ. இதுவரை நெருங்கவே இல்லை. ஒரு உரிமத்தை வைத்துக் கொண்டு, ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. ஆகிய இரு தொழில்நுட்பங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் காரணமாக 8448.95 கோடி ரூபாய் இழப்பு எற்பட்டுள்ளதாக சி.பி.ஐ இன் குற்றப்பத்திரிகை கூறுகிறது. இதில் ரூ.4930 கோடியை டாடா டெலிசர்வீசஸ் சுருட்டியிருக்கிறது. ஆனால், டாடாவின் மீது குற்றப்பத்திரிகையும் இல்லை, கைதும் இல்லை.

டாடா மட்டுமல்ல, ஐடியா செல்லுலார் (ஆதித்ய பிர்லா குழுமம்), ஏர்டெல் (சுனில் பாரதி மிட்டல்), டேடா காம் சொல்யூஷன்ஸ் (ராஜ் குமார் தூத், ராஜ்யசபா எம்.பி, வீடியோகான் முதலாளி), ஏர்செல், எஸ் டெல், வோடஃபோன் (எஸ்ஸார், ரூயா) ஆகிய அனைவரும் வெவ்வேறு விதங்களில் அலைக்கற்றை கொள்ளையில் பங்கு பெற்றிருக்கின்றனர்.

ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்தை தனக்குப் பினாமியாக அனில் அம்பானி பயன்படுத்தியதைப் போலவே, லூப் டெலிகாம் என்ற நிறுவனத்தை எஸ்ஸார் பினாமியாகப் பயன்படுத்தியிருக்கிறது. இந்த விவரங்களை மறைப்பதற்கு அமைச்சர் முரளி தியோரா உதவியிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. அதேபோல, மொரீசியஸில் போடப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் பற்றி சி.பி.ஐ. விசாரிப்பதை அறிந்த ரூயா குழுமத்தை சேர்ந்த பிரசாந்த் ரூயா, ஐ.பி.கேய்தான் ஆகிய தரகு முதலாளிகள், சி.பி.ஐ. விசாரணை குறித்த விவரங்களைத் தருமாறு மொரீசியஸில் உள்ள இந்திய ஹை கமிசனர் மதுசூதன் கணபதியிடம் பேரம் பேசியிருக்கின்றனர். இது குறித்து எழுத்துபூர்வமான புகாரை அவர் அரசுக்கு கொடுத்த பின்னரும், இவர்கள் மீது சி.பி.ஐ. எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை.

இது மட்டுமல்ல; கலைஞர் தொலைக்காட்சியின் 25% பங்குதாரர், அதன் நிர்வாகத்தில் பங்காற்றியவர் என்ற காரணத்தினால் இந்த சதி வழக்கில் கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது. இந்த அளவுகோல் அனில் அம்பானி விசயத்தில் பின்பற்றப்படவில்லை. ஸ்வான் டெலிகாம் என்ற பினாமி நிறுவனத்தின் பெயரில் அலைக்கற்றை உரிமங்களைப் பெற்றதற்காக அனில் அம்பானி குரூப்பின் அதிகாரிகள்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ரூ.1000 கோடி மதிப்புள்ள அனில் அம்பானி நிறுவனத்தின் பங்குகள் ஸ்வான் டெலிகாமுக்கு மாற்றப்பட்டுள்ளன. ரூ.10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள தொகை எதையும் அனில் அம்பானி அல்லது அவரது மனைவியின் ஒப்புதலின்றி கொடுக்கக் கூடாது என்பது வங்கிகளுக்கு அம்பானி நிறுவனம் கொடுத்திருக்கும் வழிகாட்டுதல். ஸ்வான் டெலிகாமின் 50% பங்குகளை உரிமையாக வைத்திருக்கும் அனில் அம்பானியும் அவரது மனைவியும்தான், இந்த மோசடியின் முழுப்பயனையும் அடைந்திருக்கின்றனர். இருப்பினும், அம்பானி நிறுவனத்தின் அதிகாரிகள்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்களேயன்றி, அனில் அம்பானியை சி.பி.ஐ கைது செய்யவில்லை.

அதேபோல, கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி ரூபாய் கொடுத்த டி.பி.ரியால்டீஸ் நிறுவனத்தின் முதலாளி ஷாகித் பல்வா கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், ராசாத்தி அம்மாளின் பினாமிக்கு 250 கோடி ரூபாய் நிலத்தை 25 கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனம் கொடுத்ததற்கு ஆதாரம் இருந்தும், அமைச்சர் ராசாவைப் பாராட்டி டாடா தன் கைப்பட கலைஞருக்கு எழுதிய கடிதமே ஒரு ஆதாரமாக இருந்தும், பெரம்பலூர் மருத்துவமனைக்கு டாடா அறக்கட்டளையிலிருந்து ரூ.20 கோடி ரூபாய் ஒதுக்குவது தொடர்பான உரையாடல்கள் ஆதாரமாக இருந்தும் டாடா கைது செய்யப்படவில்லை.

“டி.பி ரியால்டீஸ் நிறுவனம் சரத் பவார் குடும்பத்துக்கு சொந்தமானது என்பது மும்பையில் ஊரறிந்த இரகசியம்சு என்று கூறினார் நீரா ராடியா. புனேவைச் சேர்ந்த பர்ஹாதே என்பவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு டி.பி.ரியால்டிஸ் நிறுவனத்தில் உள்ள தொடர்புகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று 2005 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டிருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் : ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள் !  ராசாவும் தொடர்ந்து கனிமொழியும் கைது செய்யப்பட்டவுடனேயே, அத்வானியை சந்தித்த பவார், தனது அரசியல் நண்பர்களான மம்தா, சவுதாலா, முலாயம், ஜெயலலிதா ஆகியோரின் ஆதரவுடன் மாற்று ஆட்சியை அமைக்கும் வாய்ப்பைப் பற்றியும், அதற்கு பாரதிய ஜனதாவின் ஆதரவை வெளியிலிருந்து பெறுவதற்கான வாய்ப்பைப் பற்றியும் ஆலோசித்தார் என்று கடந்த மே மாதத்தில் இந்தியா டுடே செய்தி வெளியிட்டது. எத்தனை தரவுகள் இருந்தாலென்ன, கருணாநிதியைப் போல பவாரை மிரட்டிப் பணியவைக்க இயலாது என்பது காங்கிரசுக்குத் தெரியாததல்ல. டில்லி ஆட்சியாளர்களின் வளர்ப்பு நாய்தான் சி.பி.ஐ. என்பதும் பவாருக்குத் தெரியாததல்ல.

குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ராசா, தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளும் முயற்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகள் ஆகியோர் மீது தவிர்க்கவியலாமல் குற்றம் சுமத்துகிறார். அவரது வாதங்கள் இந்த கிரிமினல் வழக்கு தொடர்பான வாதங்களாக மட்டும் இல்லாமல், இந்தக் கிரிமினல் அரசமைப்பு முழுவதையும் குறித்த ஒரு சித்திரத்தை நமக்கு வழங்குகின்றன. “டாடாவை ஏன் கைது செய்யவில்லை?சு என்று அவர் எழுப்பியிருக்கும் கேள்வி ஊடகங்களின் தலைப்பு செய்திக்குரிய தகுதியுள்ள கேள்வி என்ற போதிலும், அது பின்னுக்குத் தள்ளப்படுகிறது. கட்சிகளையும், அதிகார வர்க்கத்தையும், தனியார்மயக் கொள்கைகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் ராசாவின் வாதங்கள் ஒரு எல்லைக்கு மேல் அம்பலப்படுத்துமாயின், அவை ஊடகங்களால் ஒதுக்கி ஓரங்கட்டப்படும்; அல்லது இருட்டடிப்பு செய்யப்படும்.

தனியார்மயம்தாராளமயம் என்ற பெயரில் சுரங்கங்கள், காடுகள், நிலங்கள், நகர்ப்புற மனைகள், துறைமுகங்கள் ஆகிய எல்லாத் துறைகளிலும் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் நடந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் பகற்கொள்ளை. தொலைபேசித் துறையில் நடைபெற்ற ஒரு கொள்ளை மட்டும், சீப்பில் சிக்கிய முடியைப்போல சிக்கிக் கொண்டிருக்கிறது. ஊழல், ஊழல் என்று அரசியல் பரபரப்புக்கு மட்டும் அதைப் பற்றிப் பேசிவிட்டு, அதன் பின்புலத்தை சாத்தியமான அளவுக்கு மூடிமறைக்கவே முயற்சிக்கின்றன ஆளும் வர்க்கங்கள். அந்த முயற்சியை முறியடிப்பதே நமது பணியாக இருக்கவேண்டும்.

______________________________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

________________________________________________________________________________

படிக்க