Saturday, July 20, 2024
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி!

காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி!

-

காஷ்மீர்-இந்திய-அரசின்-கொலைவெறிகாஷ்மீர் மாநிலம்  பாரமுல்லா மாவட்டத்திலுள்ள போனியார் என்ற நகர்ப்புறத்தில் கடந்த ஜனவரி மாதம் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அல்டாஃப் அகமது ஸூத் என்ற 25 வயது இளைஞர் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து போனார்; 70 வயதான அப்துல் மஜித் கான் என்ற முதியவரும், பர்வாயிஸ் அகமது கான் என்ற மற்றொரு இளைஞரும் காயமடைந்தனர்.  இத்துப்பாக்கிச் சூடு துணை இராணுவப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலோ அல்லது காஷ்மீரின் விடுதலையைக் கோரும் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையோ அல்ல.  “தங்கள் பகுதிக்குத் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும்” என்ற சாதாரணமான, அதேசமயம் அடிப்படைத் தேவைக்கான கோரிக்கையை முன்வைத்து ஊரி மின்சார நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலாகும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த பொதுமக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐநூறுதான் எனப் பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.  அதேசமயம், அம்மின்சார நிலையத்தைப் பாதுகாத்து வந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களின் எண்ணிக்கையோ ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காகத் திரண்டிருந்த பொதுமக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்ததையும் அச்சிப்பாய்கள் நிராயுதபாணியாக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த மக்கள் மீது துப்பாக்கியால் பல ரவுண்டுகள் சுட்டுத் தள்ளியதையும் அப்படையின் தலைமை அதிகாரி என்.ஆர். தாஸ் பத்திரிக்கையாளர்களிடம் எவ்விதக் குற்ற உணர்வுமின்றி அகங்காரத்தோடு விவரித்திருக்கிறார்.   “ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” என்ற கொலைவெறியோடுதான் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.

காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீரைச் சேர்ந்த முசுலீம் மக்களை எந்த அளவிற்குப் புழுபூச்சிகளைவிடக் கீழாக மதிக்கிறார்கள் என்பதற்கு இந்தத் துப்பாக்கிச் சூடு மற்றொரு உதாரணமாகும்.  துணை இராணுவப் படையால் இந்த ஆர்ப்பாட்டத்தை மூடிமறைக்க முடிந்திருந்தால், சுட்டுக் கொல்லப்பட்ட அல்டாஃப் அகமதுவும் காயம்பட்ட இருவரும் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள்.

இப்படுகொலை தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஐந்து சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, கொல்லப்பட்ட அல்டாப் அகமதுவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் சொன்ன கையோடு, “இந்த ஐந்து பேருக்கும் தக்க தண்டனை வாங்கிக் கொடுப்பேன்” எனச் சவால்விட்டுள்ளார்.

ஆனால், இந்தக் கைதும், காஷ்மீர் முதல்வரின் சவடாலும் ஊரை ஏய்க்கும் நாடகம் என்பது காஷ்மீர் மக்களுக்குத் தெரியாத விசயமல்ல.  காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவமும் துணை இராணுவப் படைகளும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், கலவரப் பகுதிச் சட்டம், மத்திய ரிசர்வ் படைச் சட்டம் ஆகிய கருப்புச் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன.  இச்சட்டங்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, கொட்டடிச் சித்திரவதை, ஆள் கடத்தல், சட்டவிரோத துப்பாக்கிச் சூடு என அனைத்துவிதமான மனித உரிமை மீறல்கள், அட்டூழியங்களை காஷ்மீர் மக்களின் மீது ஏவிவிடும் அதிகாரத்தையும், ஆணவத்தையும் இந்திய இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் வழங்கியுள்ளன.  மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவ, துணை இராணுவப் படை சிப்பாய்கள், அதிகாரிகளின் மீது காஷ்மீர் மாநில அரசு வழக்குத் தொடுக்க வேண்டுமென்றால்கூட,  அதற்கு மைய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிபந்தனை ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திலும் மத்திய ரிசர்வ் போலீசு சட்டத்தின் 17ஆவது பிரிவிலும் உள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டுமென்றால் தமக்கு இப்படிபட்ட அதிகாரமும் பாதுகாப்பும் வேண்டுமென இராணுவம் கூறி வருகிறது.  இச்சட்டத்தில் சில்லறை சீர்திருத்தங்களைச் செய்வதற்குக்கூட காங்கிரசும், பா.ஜ.க.வும், இராணுவமும் சம்மதிப்பதில்லை.  ஏதோ தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காகத்தான் இராணுவத்திற்கு இந்த அதிகாரமும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதைப் போல நம்மை நம்பவைக்க ஆளும் கும்பல் முயன்று வருகிறது.  ஆனால், இது அப்பட்டமான பொய்; அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் காஷ்மீரிகளை மட்டுமல்ல, தெருவில் நடந்துபோவோரைக்கூடச் சுட்டுக் கொல்வதற்கும் இராணுவம் இச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது என்பது பல நூறு முறை அம்பலமாகியிருக்கிறது.

காஷ்மீர்-இந்திய-அரசின்-கொலைவெறிகிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிவந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக், 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்களை இச்சட்டத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசுப் படைகள் சுட்டுக் கொன்றுள்ளன.  காஷ்மீரின் பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டு, இரகசியமாகப் புதைக்கப்பட்ட 2,730 சடலங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இந்த இரகசியக் கல்லறைகள் குறித்து காஷ்மீர் மாநில அரசின் மனித உரிமை ஆணையம் நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டுப் புதைக்கப்பட்ட இவர்களுள் 574 பேர் உள்ளூர்வாசிகள் என்பது தெரியவந்துள்ளது.  இப்படி அப்பட்டமாக அம்பலமான மனித உரிமை மீறல் வழக்குகளில்கூட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவதை இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தடுத்து வருகிறது, மைய அரசு.

காஷ்மீர் மாநில அரசு இந்திய இராணுவ, துணை இராணுவப் படைகள் மீது 50 மனித உரிமை மீறல் கிரிமினல் வழக்குகளைத் தொடுத்து, அவற்றில் தொடர்புடைய சிப்பாய்கள்/அதிகாரிகளை விசாரிப்பதற்கான அனுமதி வழங்கக் கோரி மைய அரசிடம் விண்ணப்பித்திருந்தது.  இந்த 50 வழக்குகளில் 31 வழக்குகள் பாலியல் வன்முறை மற்றும் கொலை தொடர்புடையவை;  11 வழக்குகள் சட்டவிரோதக் கைது, சித்திரவதை தொடர்பானவை.  இவ்வழக்குகள் குறித்து காஷ்மீர் மாநில போலீசு விசாரணை நடத்தி, அதில் உண்மை இருப்பதைக் கண்டுபிடித்து ஏற்றுக்கொண்டு, அதன்பிறகுதான் மைய அரசிடம் குற்றமிழைத்த இராணுவத்தினரை விசாரிப்பதற்கு அனுமதி கோரியது.

இதில் ஒரு கொலை வழக்கு 1991 ஆம் ஆண்டு நடந்ததாகும்.  பட்வாரா என்ற ஊரைச் சேர்ந்த முகம்மது ஆயுப் பட் என்ற அப்பாவியை இந்திய இராணுவம் கொலை செய்து, அவரது சடலத்தை தால் ஏரியில் வீசியெறிந்தது.  இப்படுகொலையை அப்பொழுது சிறீநகர் பகுதியில் பணியாற்றிவந்த பிரிகேடியர் குல்ஷன் ராவ்தான் செய்தார் என்பது காஷ்மீர் மாநில போலீசு நடத்திய விசாரணையில் அம்பலமானது.  கொலை நடந்து பதினெட்டு ஆண்டுகள் கழித்து, மார்ச் 3, 2009 அன்று அந்த அதிகாரியை விசாரிக்க அனுமதிக்க முடியாது என அறிவித்தது மைய அரசு.

பீர்வாஹ் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை மேஜர் பதவியிலிருந்த இராணுவ அதிகாரி பாலியல் பலாத்காரப்படுத்த முயன்ற சம்பவம் 1997ஆம் ஆண்டு நடந்தது.  நான்கு ஆண்டுகள் கழித்து, 2001இல்தான் குற்றவாளியை அடையாளம் காண முடிந்தது.  இதற்குப் பின் பத்து ஆண்டுகள் கழித்து, குற்றவாளியான அந்த இராணுவ மேஜரை விசாரிக்க அனுமதிக்க முடியாதென செப்.12, 2011இல் அறிவித்தது, மைய அரசு.  பல ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்த இந்த 50 வழக்குகளில் 42 வழக்குகளைக் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் ஒவ்வொன்றாக எடுத்து, “ஆதாரம் இல்லை’’, “விசாரணை மேலோட்டமாக நடத்தப்பட்டுள்ளது’’, “இராணுவத்தின் மரியாதையைக் கெடுக்கும் வண்ணம் புனையப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு” என்ற மொன்னையான காரணங்களைக் கூறி, அந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட இராணுவ, துணை இராணுவத்தினரை விசாரிக்க அனுமதிதர மறுத்துவிட்டது,மைய அரசு.

அப்பாவிகளை எல்லைப்புறத்திற்குக் கடத்திக் கொண்டு போய் போலி மோதலில் சுட்டுக் கொல்வது மட்டுமல்ல, மோதல் நடந்திருப்பதாகப் பொய்க் கணக்குக் காட்டி பரிசுப் பணத்தைச் சுருட்டிக் கொள்வது, பதவி உயர்வுகளைப் பெறுவது என இராணுவமும் துணை இராணுவமும் காஷ்மீரில் நடத்தியிருக்கும் கிரிமினல் குற்றங்களுக்கும் மோசடிகளுக்கும் அளவே கிடையாது.  1990ஆம் ஆண்டு தொடங்கி 2007ஆம் ஆண்டு முடியவுள்ள பதினேழு ஆண்டுகளில் காஷ்மீரில் ஏறத்தாழ 70,000 பேர் துப்பாக்கிச் சூடு, போலி மோதல், கொட்டடிக் கொலைகள் ஆகிய அரசு பயங்கரவாத அட்டூழியங்களுக்குப் பலியாகியுள்ளனர்.  அரசுப் படைகளால் விசாரணைக்கு இழுத்துச் செல்லப்பட்ட 8,000 பேர் காணாமல் போயிருப்பதாக மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  காஷ்மீரிலிருந்து இராணுவத்தை விலக்கவும், ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கவும் கோரி கடந்த 2010ஆம் ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  காஷ்மீரில் அரசுப் படைகள் நடத்தியிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து அம்மாநில மனித உரிமை ஆணையத்திடம் மட்டும் கடந்த 14 ஆண்டுகளில் 5,699 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

உண்மை இவ்வாறிருக்க, கடந்த இருபது ஆண்டுகளில் வெறும் 50 வழக்குகளில் மட்டுமே குற்றமிழைத்த இராணுவத்தினரை விசாரிக்க மைய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.  இந்த 50 வழக்குகளில் தற்பொழுது 42 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.  தப்பித்தவறி மீதமுள்ள எட்டு வழக்குகளில் அனுமதி வழங்கப்பட்டாலும், வழக்கு விசாரணையை சிவில் நீதிமன்றங்களில் நடத்த மைய அரசு சம்மதிக்காது.  உண்மையும் நீதியும் இராணுவ நீதிமன்றங்களில் புதைக்கப்படும்.  இந்த அநீதியைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் காஷ்மீரிகள் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்?

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_____________________________________________________________

_____________________________________________________________

_____________________________________________________________

_____________________________________________________________

 1. சட்ட விரோதப் படுகொலைகளை நிறுத்துக– இந்தியாவுக்கு ஐ நா சபை அறிவுறுத்தல்
  ஞாயிறு, 01 ஏப்ரல் 2012 09:03
  டெல்லி:”காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும்’ என இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
  மனித உரிமை மீறல்கள் தொடர்பான குறச்சாட்டுகள் வரும் நாடுகளுக்குச் சென்று, உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து அறிக்கை தருவதற்காக ஐ நாடுகள் சபைப் பொதுச் செயலரால் ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவார்.
  அவர் குற்றச்சாட்டுக்குள்ளான நாட்டிற்குச் சென்று, அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளனவா எனக் க்கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்தால்,தக்க நடவடிக்கை எடுக்கும்படி ஐ.நா., சார்பில் சம்பந்தப்பட்ட நாடு கடிதம் மூலம் கேட்டுக் கொள்ளப்படும்.
  அந்த முறையில், காஷ்மீரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்திய ஐ.நா., பிரதிநிதி ஹெய்னஸ் தம் விசாரணை பற்றிக் கூறினார்.
  காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுவோரைச் சுட்டுக் கொல்ல ராணுவத்திற்குச் சிறப்பு அதிகாரம் தரப்பட்டுள்ளது.
  ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற சட்டம் இதற்காக அமலில் உள்ளது. இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாடுகளில் இதுபோன்ற சட்டங்களுக்கு இடமில்லை.
  அந்தச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்.
  நான் காஷ்மீரில் விசாரணை நடத்தியபோது, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் கொடுமையானது, வெறுக்கத்தக்கது என்றே மக்கள் கருத்துத் தெரிவித்தனர்..
  இப்படிப்பட்ட ஒரு கடுமையான சட்டம் அமலில் இருப்பது சர்வதேசச் சட்ட விதிகளுக்கு முரணானது.
  அரசியல் சட்ட ரீதியான உத்தரவாதங்கள் இருந்த போதும் வலுவான மனித உரிமைச் சட்டங்கள் அமலில் இருக்கும்போது, இந்தியாவில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன..
  இது கவலை தரும் விஷயம் என்று ஹெய்னஸ் கூறியுள்ளார்.
  ஆயுதப் படை சிறப்பு அதிகாரத்தை, ரத்து செய்ய வேண்டும் எனக் காஷ்மீர் முதலமைச்சர் உட்படப் பலரும் கோரி வரும் நிலையில் ஐ.நா.சபை இவ்வாறு கூறியுள்ளது அதிக முக்கியத்துவம் பெறுகிறது..

  source: சட்ட விரோதப் படுகொலைகளை நிறுத்துக– இந்தியாவுக்கு ஐ நா சபை அறிவுறுத்தல் [4074] | இந்திய செய்திகள் | செய்திகள் at
  http://www.inneram.com

 2. சரிய்யா…இதுக்கு என்னா இப்ப?? முதல்ல தீவீரவாதிக்கும், பாக்கிஸ்தானிக்கும் ஒத்து ஊதரத அந்த ஊர்க்காரன் நிறூத்தட்டும், அப்புறம் பாக்கலாம்…இவனுங்கள என்ன பண்ரதுன்னு…

  • So its OK to kill people if they do not agree to ur views.. Is this you are trying to say ??

   U say they are supporting terrorists if the ARMY itself acts like terrorists what will they do ???

   //இவனுங்கள என்ன பண்ரதுன்னு…//

   Also U nor ME nor even the INDIAN GOVT(super power in 4040) do not have any rights on deciding the destiny of the people of Kashmir it will be decided only by the PEOPLE of KASHMIR alone ..

   • முதல்ல தீவீரவாதிக்கும், பாக்கிஸ்தானிக்கும் ஒத்து ஊதரத அந்த ஊர்க்காரன் நிறூத்த வேண்டுமா வேண்டாமா??

 3. சின்ன சின்ன சந்தேகங்கள் 1) இந்தியா வல்லரசு ஆகிடும் ஆனா ஆயுதங்கள் மட்டும் தனியார் நிறுவனத்தில் வாங்கும், தயாரிக்க முடியாது ஏன்?2)உடனடியாக போர் நடந்தால் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் இல்லை நிஜமா? 3)காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானதல்ல என்று தோழர்.அருந்ததி ராய் சொன்னபோது அவரை தேசதுரோக வழக்கில் கைது செய்வதாக ஒரு பில்டப் கொடுத்து பிறகு பம்முனது ஏன்?

 4. முஸ்லீம்களை உசிப்பிவிட்டு அவர்களை நாட்டு துரோகிகலாக்கிவருகிரீர்கள்! இது போல் முன்பு “பிரபாகரனை” உசிப்பிவிட்டு அவரை கொடுமையாக கொல்லப்ப்படும்வரை அவரை ஆதரித்தீர்கள். காஷ்மீரில் முஸ்லீம்களின் அட்டகாசம் பாகிஸ்தான் ஆதரவுடன் கொடுமையாக உள்ளது. இதனை ஆதரிப்பது தேசத்துரோகம். உங்களுக்கு தேசத்துரோகம் செய்வது அல்வா சாப்பிட்டது போல். “உதயகுமாரை” உசிப்பி விட்டு அவர் இப்போது எங்கு உள்ளார் என்றே தெரியவில்லை. எங்கும் கலவரத்தை உருவாக்கி அதில் குளிர் காய நினைக்கிறீர்கள்!!!

  • அட விடுங்க பாஸ். இதெல்லாம் இவங்களுக்கு சகஜம் தானே! ஒன்னு இவங்களுக்கு கலகம் வேண்டும். இருந்தால் உபயோகப்படுத்திக் கொள்வார்கள். இல்லை என்றால் உருவாக்கிக்கொள்வார்கள்.

   • கலவரம் வரட்டும் னு பாக்கிஸ்தான் கொடிய தாசில்தார் ஆபிஸ்ல பறக்க உட்டது யாரு

    • இந்தியா பக்கிஸ்த்தான் கிரிக்கெட் போட்டியில, பக்கிஸ்த்தான் ஜெயிச்சா பட்டாசு வெடிக்கிற அதே பக்கிகள் தான்…

     • பையா,

      பறக்கவிட்ட பக்கிங்க யாருன்னு தெரிஞ்சிருந்தும் பொய் சொல்ற பாரு அதுனாலதன் பார்ப்பான்னு கட்டம் கட்ட வேண்டியிருக்கு.

      • எதோ ஒன்னு ரெண்டு பேரு தான் அவாள்கள் இங்கே கமெண்டு போடுறாங்க… இப்படி வாங்கு வாங்குனு வாங்கினா அவாளும் ஓடிசப் போறா…. 🙂 🙂

       • பொன்ராசு பதட்டத்தில ஒளரப்படாது, பேசுரத தெளிவாப் பேசனும் சரியா…

        அது என்ன, விவாதம் பண்ணத்தெரியாட்டி, பிராமின், பார்ப்பன்னுன்னு திட்டீட்டு அப்பீட்டாகப்படாது…

        • //பொன்ராசு பதட்டத்தில ஒளரப்படாது, பேசுரத தெளிவாப் பேசனும் சரியா…//
         🙂 🙂

          • பதில் தெரிந்தால் தான அவர் சொல்வார், பதில் தெரியாட்டி பார்ப்பன் என்பார், திட்டுவார், பீப் சாப்பிட சொல்வான், சிரிப்பு சமிக்கைகள் இடுவான்….ரெண்டு மூண் பேர் சேர்ந்து கேள்வி கேட்டாலோ, பதில் சொல்லத்தெரியாவிட்டாலோ அப்பீட்டு….அப்பீட்டு….

   • அதுலயும் கலகத்த உண்டாக்கிவிடுவதில் வினவிற்க்கு ஒரு அலாதிப்பிரியம், கூடங்குளம் விசயம் முடிந்தவுடன் இப்ப திருப்பவும் இந்து முஸ்லீம் கலவரக் கட்டுரைகள்…

      • அப்படியே நம்ம பையாவுக்கு, ஒரு பிளேட் அக்மார்க் கோவில் பசு பீப் பிரை வைங்க….!!!

       • திருப்பித்திருப்பி அய்யரு, பீப் பிரைன்னு உள்றாதே…னான் உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் ….//அது என்ன, விவாதம் பண்ணத்தெரியாட்டி, பிராமின், பார்ப்பன்னுன்னு திட்டீட்டு அப்பீட்டாகப்படாது…//

        • மேலே நடந்தது விவாதமா? நல்லா காமெடி பண்றேள் போங்கோ….

 5. We should first analyze whether this is true… If true and if you still say our military is right…. (பக்கத்து நாட்டுல நடந்தா தான் குரல் கொடுக்க முடியாது…நம்ம நாட்டுல நடக்குது.. இதுக்கும் குரல் கொடுக்க கஷ்டம்னா… கொய்ய்யால எதுக்கு நமக்கு எல்லாம் ட்ரெஸ்… அவுத்துட்டு திரியலாம்…)

 6. கச்சத்தீவை கொடுத்த மாதிரி, ஜஸ்ட் லைக் தட் காஷ்மீரையும் கொடுத்திட வேண்டியது தானே? எதுக்கு இந்தியா முரண்டு பிடிக்குது? காஷ்மீர் ஒன்னும் இந்தியாவோட பகுதி கிடையாதே? தன்னுடைய பகுதியாக இல்லாத ஒரு இடத்தை எதுக்கு இவ்ளோ முட்டுகொடுத்து,கொடுமை செய்து இந்தியா பேணி(?) பாதுகாக்கணும்?

   • //அப்படிக்கொடுத்தா, ப்ரீயா உன்னையும் கொடுத்துடுவோம்…//

    என்னையும், என் மண்ணையும் பிரியா கொடுக்க நீங்க யாருடா?

    • உன் மண்ணா அப்படி என்ரால் என்ன?

     பாக்கிச்தான் மேல இவ்லொ பாசம் இருந்தல் சுகமா பொக வென்டியது தானெ

    • கோபப்படாத பொன்ராசு, உன்ன ப்ரீயா தருகிறோம் என்றவுடனே கோபம் வருகிறதல்லவா…எனது நாட்டை நீ ஒரு தீவிரவாத நாட்டிற்கு பிரியா கொடுக்க பொன்ராசன்னே யாருங்கோ..

     னீ சொன்னது ..//{காஷ்மீர் ஒன்னும் இந்தியாவோட பகுதி கிடையாதே? தன்னுடைய பகுதியாக இல்லாத ஒரு இடத்தை எதுக்கு இவ்ளோ முட்டுகொடுத்து,கொடுமை செய்து இந்தியா பேணி(?) பாதுகாக்கணும்?}///

     இதுவும்நீதான் சொன்னது…//என்னையும், என் மண்ணையும் பிரியா கொடுக்க நீங்க யாருடா?///

     காஸ்மீர் இந்தியாவின் பகுதி கிடையாது என்கிறாய், திடீர்ன்னு உன்னுடைய மண் என்கிறாய்…சற்று ஓய்வு எடு……

    • அம்பிகளா, பொன்ராஜ் என்னையும் என் மண்ணையும் னு சொல்றதுக்கு அர்த்தம் புரியலையா.தமிழன்,தமிழ் நாடு ங்கிறதுதா அதன் பொருள்.காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமில்லேன்னு சொல்றவரு அதனை எப்படி என் மண் என சொல்வார்.இது கூட புரியாத உங்கள என்ன சொல்றது.

     • i understood that.but these days such emotional values have no place,i think only the land that belongs to you really belongs,rest belongs to the government.

        • I thought you missed the word ‘people’ in the definition of government. I agree with you about ‘land grabbing’ policy of government. But my question, will india grab a piece of land from China,Pakishtan? As you said both are very near to India right? Why you stopped grabbing land from Kashmir? Why not from china and pakishtan?

     • என்ன அன்பு, பொன்னுக்கு ஆதரவா பேசுங்க, ஆனா அவர் பேசுனது சரீன்னு மட்டும் சொல்லாதீர்கள், அவரது கருத்துக்கள் முரண்பாடானது, அவருக்குச் சற்று ஓய்வு தேவை..

      • காஷ்மீரோட வரலாறு தெரியாமல் கொங்ஜ்சம் கூட வெக்கமே இல்லாம அதே பல்லவியை பாடும் பையா மட்டுமே ரொம்ப ரொம்ப விவரமா பேசுறாராம்….!!! எனக்கு ஒன்னு மட்டும் புரியல… காஷ்மீர் பத்தி கமெண்டு போடவே இப்படி டாவு நோவுதே, வினவு போன்ற தளங்கள் எப்படி தான் சலிக்காம மீண்டும் மீண்டும் உண்மை கட்டுரைகளை எழுதுதோ தெரியலை…. வினவுக்கே இது தான் கதி…நான்,அன்பு போன்றவர்களெல்லாம் பையா கோஷ்டிக்கு முன்னாடி எம்மாத்திரம்? என்ன அடுத்த ரவுண்டா பையா…. ஆரம்பிங்க…. “காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி”….!!!

 7. பையா அரிக்குமார் மற்றும் காஷ்மீர் என்னோட நாடுன்னு இங்கே சவுண்டு கொடுக்கிற பாரத மாதா புத்திரர்களே,
  காஷ்மீர் எப்படி இந்தியாவோட ”இணைந்தது” ங்கிற விவரத்த கொஞ்சம் சொல்றீங்களா.அத நீ சொல்லேன்னு புத்திசாலித்தனமா பதில் சொல்லாம உங்க விஷய ஞானத்த காட்டுற மாதிரி ஒரு நாலு வரி எழுதுங்க.எப்படி காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமில்லைன்னு நாங்க சொல்றோம்.

 8. In 1947 generally hindu majority provinces joined India and Muslim majority provinces joined Pakistan apart from the assigned regions as of today.

  But the rulers had a choice to let their states join either of the unions.

  1. Hyderabad Nizam who wanted to join pakistan and did everything to make it happen but was defeated and had to join india as his province was also hindu majority.

  2. Junagadh’s ruler tried to do the same but again there wa sno way for Pakistan to rule Junagadh as it was surrounded by India on all sides and thus had join and his province had 80% hindus.

  3. Kashmir,the king was Dogra,something like a punjabi origin people and majority of the people were muslim but there was no decision taken neither by the king nor by the people and they wanted to be independent.

  when this happened pakistan sent tribal warriors from north west frontier province and attacked kashmir and occupied a part of it and raped,killed,looted,burnt as they marched forward.The king escaped to Jammu and then India told him,if he wanted their help they should choose to join India and he signed it.

  Then India intervened and chased the tribal warriors out of the kashmir valley and they ended keeping a part of the land which is pakistan occupied kashmir today.

  Until now Kashmiri people hadn’t explicitly told that they want to join Pakistan and their chosen leader Sheikh Abdullah also wished to stay with India.

  so what is the problem now?

  • 1947-ல் காஷ்மீர் இந்தியாவுடன் ”இணைந்த” நாள் முதல் 1957-வரை பாரத மாதாவின் யோக்கிய புத்திரர்கள் ஒருமுறை கூட காஷ்மீர் இந்தியாவோட ஒருங்கினைந்த பகுதின்னு சொன்னதில்ல தெரியுமா.காரணம் என்னன்னு தெரிஞ்சுக்க கொஞ்சம் வரலாற்ற புரட்டி பார்க்கணும்.

   1846 -ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கும் ஜம்மு பகுதியின் மன்னர் ராஜா குலாப் சிங்குக்கும் ஏற்பட்ட அமிர்தசரசு ஒப்பந்தப்படி கசுமீரை அதன் மக்களோடு சேர்த்து ஆங்கிலேயர்கள் அந்த மன்னருக்கு விற்றனர்.(கசுமீர் என்ன கடைச்சரக்கா அல்லது ஆங்கிலேயனின் அப்பன் வீட்டு சொத்தா விற்பதற்கும் வாங்குவதற்கும்.கசுமீர் மக்கள் என்ன ஆடு மாடுகளா அடைத்து வைத்த பட்டியோடு சேர்த்து விற்பதற்கு)ஆகவே டோங்கிரியா பரம்பரை காசுமீரின் ஆட்சி உரிமையை பெற்றதே மோசடியானது.

   டோங்கிரியா மன்னர்கள் கசுமீரில் கொடுங்கோல் ஆட்சியே நடத்தி வந்தனர்.மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருந்த கசுமீர் முசுலிம்கள் அரசுப்பணி,காவல்துறை,ராணுவம் என்று எதிலுமே இடம் பெற விடாமல் வகுப்புவாத வெறி கொண்டு ஆட்சி நடத்தினர்.அவர்களது ஆட்சியின் கீழ் பசு மாட்டை தோலுக்காகவோ,இறைச்சிக்காகவோ அறுப்பது சாவுத்தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது.ஒரு மனித உயிரும் ஒரு மாட்டின் உயிரும் ஒன்றா என யாரும் கேள்வி கேட்க முடியாது.(2002 -ல் அரியானா மாநிலம் லச்சார் நகரத்தில் ஒரு பசு மாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித் இளைஞர்கள் (காந்தியாரின் கடவுளின் குழந்தைகள் தத்துவப்படி அவர்களும் இந்துக்கள்தான்) சங் பரிவார் காலிகளால் காவல்நிலையம் எதிரிலேயே அடித்தே கொல்லப்பட்ட நிகழ்வு உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.அந்த காலிகளுக்கும் டோங்கிரியா மன்னர்களுக்கும் ஏதேனும் வேறுபாடு இருக்க முடியுமா.
   டோங்கிரியா மன்னர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக கசுமீர் மக்கள் போராடி வந்த நிலையில் 1947 ஆட்சி மாற்றம் நிகழ்கிறது.

   ஆட்சி மாற்றம் தவிர்க்கவியலாமல் இந்தியா,பாகிசுதான் என்ற இரண்டு தனிநாடுகளை கொண்டுவந்தது.முசுலிம்கள் கூடுதலாக வாழும் பகுதிகள் பாகிசுதான் என்ற நாடாகவும் ஏனைய பகுதிகள் இந்தியா என்ற நாடாகவும் உருப்பெற்றன.அப்போது இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பில் 500-க்கும் மேற்பட்ட மன்னராட்சி பகுதிகள் இருந்தன.அவை இந்தியாவுடனோ அல்லது பாகிசுதானுடனோ இணைந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.ஆட்சியாளர்கள் விருப்பமே முதன்மையான பங்கு வகித்தாலும் புவியியல் காரணங்களும் மக்களின் விருப்பமும் தவிர்க்க முடியாத பங்காற்றின.அவ்வாறே முசுலிம்கள் பெரும்பான்மை கொண்ட மன்னராட்சி பகுதிகள் பாகிசுதானோடு இணைந்தன.இந்துக்கள் பெரும்பான்மை கொண்ட மன்னராட்சி பகுதிகள் இந்தியாவோடும் இணைந்தன.மன்னரின் விருப்பமும் மக்களின் விருப்பமும் முரண்படுமாயின் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி எந்த நாட்டுடன் இணைவது என்று முடிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.அதை இந்தியாவும் பாகிசுத்தானும் ஏற்றுகொண்டன.இதன்படிதான் ஹரிகுமார் copy paste செய்துள்ள செய்தியில் வரும் ஜுனாகட் இந்தியாவுடன் இணைந்தது.மன்னர் முஸ்லிம்.மக்கள் இந்துக்கள்.வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் விருப்பப்படி இந்தியாவுடன் சேர்ந்தது.

   அப்போது கசுமீர் டோங்கிரியா பரம்பரையின் கடைசி மன்னர் மகாராஜா அரிசிங்கின் ஆட்சியின் கீழ் இருந்தது.கசுமீர் முசுலிம்கள் பெருவாரியாக வாழும் பகுதி என்பதால் தன்னோடு இணைய வேண்டும் என்று பாகிசுதான் வலியுறுத்தி வந்தது. பெரும்பான்மையான கசுமீர் மக்கள் கசுமீர் மன்னராட்சியிலிருந்து விடுபட்டு தனி நாடாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர் . ஆட்சியிலிருந்த இந்து மன்னரான அரிசிங் எந்த நாட்டுடனும் இணையாமல் காலம் கடத்தி வந்தார். இந்தியா கசுமீர் தன்னோடு இணைய வேண்டுமென உள்ளூர விரும்பியது.அதற்கான திரைமறைவு வேலைகளையும் செய்து வந்தது.இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு அரிசிங் தொடர்ந்து ஆட்சியில் ஒட்டிக்கொண்டு இருப்பதற்கான எத்தணிப்புகளை செய்து வந்தார்.

   இந்த நிலையில் பாகிசுதான் தனது வடமேற்கு பகுதியில் வாழும் பழங்குடியினருக்கு ஆயுதங்கள் அளித்து கசுமீரை ஆக்ரமிக்க ஏவிவிட்டது.அவர்களோடு பாகிசுதான் ராணுவத்தினரும் ஆக்கிரமிப்பு போரில் ஈடுபடுத்தப்பட்டனர்.வலு குறைந்த படையே கொண்டிருந்த அரிசிங் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்கொள்ள முடியாமல் இந்தியாவிடம் ராணுவ உதவி கோரினார்.அரிசிங்கின் இக்கட்டான நிலையை பயன்படுத்திக் கொண்ட இந்தியா அவர் இந்தியாவுடன் கசுமீரை இணைப்பதாக ஒப்பந்தம் போட்டால் மட்டுமே படைகளை அனுப்பமுடியும் என்று அழுத்தம் கொடுத்தது.வேறு வழி ஏதுமின்றி அரிசிங் இணைப்பு ஒப்பந்தத்தில் 26 -10-1947-ல் கையெழுத்திட்டார்.இந்தியப்படைகள் கசுமீரில் போய் இறங்கின.முதல் இந்தியா-பாகிசுதான் போர் வெடித்தது.

   இப்படித்தான் கசுமீர் இந்தியாவுடன் இணைந்தது.தெற்காசியாவின் புற்று நோயான கசுமீர் பிரச்னை வேர்விட்டது.

   போர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நிலையில் போரை நிறுத்தி கசுமீர் பிரச்னையை தீர்க்க உதவுமாறு இந்தியா 01 -01 -1948 அன்று ஐக்கிய நாடுகள் அவையில் முறையிட்டது. ஐ.நா.வின் சமாதான முயற்சியின் பலனாக 01 -01 -1949 அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.ஐ.நா.வின் சமாதான ஏற்பாடு பின்வரும் அம்சங்களை கொண்டிருந்தது.

   1. கசுமீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு.

   2. போரை நிறுத்திக்கொண்டு இந்தியாவும் பாகிசுதானும் கசுமீரிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளவேண்டும்.

   3.போரை நிறுத்தும்போது இந்திய,பாக்.படைகள் நிலைகொண்டிருந்த பகுதிகள் அந்தந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

   4.படைகள் விலக்கப்பட்டு அமைதி திரும்பியபின் கசுமீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கசுமீர் இந்தியாவுடன் இணைவதா,பாகிசுதானுடன் இணைவதா,இந்த இரண்டுமின்றி கசுமீர் ஒரு தனிநாடாக இருப்பதா என்பது தீர்மானிக்கப் படவேண்டும்.

   இந்த அம்சங்கள் அனைத்தையும் இந்தியாவும் பாகிசுதானும் ஏற்று கொண்டு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.போர் நிறுத்த ஏற்பாட்டை ஏற்றுக்கொண்ட அன்றே காஷ்மீர் மன்னர் இந்தியாவுடன் செய்து கொண்ட இணைப்பு ஒப்பந்தம் ரத்து ஆகி விடுகிறது என்பதுதானே பொருள்.ஆனால் இன்று வரை இந்தியாவும் பாக்-கும் வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் கசுமீர் மக்களுக்கு துரோகம் செய்து கசுமீரை தங்கள் ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க தகிடுதத்தங்களை செய்து வருகின்றன.

   பாக்.தனது கட்டுப்பாட்டில் உள்ள கசுமீர் பகுதியை ”ஆசாத் கசுமீர்”(விடுதலை பெற்ற கசுமீர்)என அறிவித்துள்ளது.பாக்.ன் அரசியல் சட்டப்படி கசுமீர் அதன் மாநிலங்களில் ஒன்றல்ல என்றாலும் தனது படைகளை விலக்கிக்கொள்ளாமல் ஆக்கிரமிப்பை தொடர்கிறது.அதன் மூலம் பொது வாக்கெடுப்புக்கு தடையாக இருக்கிறது.

   போர் முடிவுற்றபின் சிறிது காலம் வாக்கெடுப்புக்கு அணியமாக இருப்பது போலும் வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யபோவது போலும் பம்மாத்து காட்டிவந்த இந்தியா நாளடைவில் கசுமீரை தன்னுடன் வைத்திருப்பதற்கான மோசடிகளை செய்யத்துவங்கியது.தனது அரசியல் சட்டம் 370-வது பிரிவின் மூலம் காசுமீருக்கு சிறப்பு நிலை வழங்கியுள்ளது.அதன்படி

   1.கசுமீர் தனியொரு நாடு போன்று தனித்த அரசியல் அமைப்பு சட்டம் ஒன்றை கொண்டு இயங்கும்.

   2.அந்த அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்ற அரசியல் அமைப்பு அவை தேர்ந்தெடுக்கப்படும்.

   3.காசுமீரின் முதல் அமைச்சர் பிரதமர் என்றே அழைக்கப்படுவார்.

   4.கசுமீர் தனித்த அரசியல் சட்டம் கொண்டது என்பதால் அது பிற இந்திய மாநிலங்களை போன்றதல்ல.எனவே கசுமீரில் அந்நாட்டை சேராத இந்தியர்கள் யாரும் சொத்து வாங்க முடியாது.

   5.வெளியுறவு,பாதுகாப்பு.நாணயம் ஆகிய துறைகள் இந்திய அரசு வசம் இருக்கும்.நாட்டு நிர்வாகம்,நீதி பரிபாலனம் என அரசு நிர்வாகம் முழுவதும் கசுமீர் அரசு வசம் இருக்கும்.

   பொது வாக்கெடுப்பு உள்ளிட்டு அனைத்து வாக்குறுதிகளையும் (பிற மாநிலத்தவர்கள் சொத்து வாங்க முடியாது என்பதை தவிர) இந்தியா காற்றில் பறக்க விட்டு விட்டது. இந்தியா கசுமீரில் துப்பாக்கியின் நிழலில் நடத்தும் தேர்தல்களை பொது வாக்கெடுப்புக்கு இணையானது என மாய்மாலம் செய்து வருகிறது.கசுமீருக்கான தனித்த அரசியல் சட்டம் வகுக்கப்படவில்லை.அதற்கான அவையும் அமைக்கப்படவில்லை.1953- ல் இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் ஆளுகை எல்லைக்குள் (jurisdiction limit)கசுமீரும் அடங்கும் என அறிவித்ததின் மூலம் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றுதான் கசுமீர் என மறைமுகமாக அறிவித்தது.இந்த துரோகங்களின் தொடர்ச்சியாகத்தான் 1957-முதல் கசுமீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்திய ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவும் அடாவடியாகவும் கூறுகின்றனர்.

   ஆகவே மனசாட்சியுள்ள மனிதர்கள் யார் பக்கம் நிற்க வேண்டும்.இந்திய பாகிஸ்தான் ஆளும் வர்க்கங்களால் ஏமாற்றப்பட்டு நாட்டை இழந்து உரிமைகளை இழந்து நிற்கின்ற, நாட்டை மீட்க இன்னுயிரை பணயம் வைத்து போராடுகின்ற காஷ்மீர் மக்களின் பக்கமா. அநியாய ஆக்கிரமிப்பாளர்கள் பக்கமா.

 9. Hi anbu, most of the points are correct but Kashmir is a place which had intense historical mass conversions and slaughtering of the hindus.

  There always was an issue between hindus and muslims there. Many of the converted hindus until today carry their surnames also like Butt which is a version of Bhatt.

  So,under Islamic rule,one has to convert and under hindu one has to give up beef,so which is easier? to give up your religion or your faith?

  And there is not much difference between the kashmiris and people of India/Pakistan on both sides?

  Even if Kashmir exists as an independent country,they cant do much as they ll be landlocked between India and Pakistan and will have to depend upon the two countries for pretty much everything.

  This independence is a tactic that is used by the kashmiris to get funds from both countries.They enjoy a lot of reservation and benefits across universities in India and they do a lot of businesses,it is not that they are starving or anything.

  They get bad advice from the hurriyat conference which keeps making money off the status quo.

  Moreover, Pakistan has been very aggressive in Kashmir as they have tried in 1965 war and the 1999 Kargil war to take control of Kashmir by force and all that is because Kashmir is the source of all the rivers of Pakistan and that lies in India.

  There is no way Kashmir is going to be independent and i think the kashmiris also know that very well.

  There is nothing wrong in occupying Kashmir.Those guys who talk about Kashmir belonging to Kashmiris tried to mass slaughter the pandit families,who are the same thing as the others and many are related too and drive them away.

  I think after all this,they do deserve what they got.

  • \\most of the points are correct but Kashmir is a place which had intense historical mass conversions and slaughtering of the hindus.//

   ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் நல்லாவே பயிற்சி எடுத்துருக்கீங்க.முதல்ல எதிராளி சொல்றது சரிதான்னு சொல்லி அவன கூல் பண்ணிட்டு நைசா உங்க நச்சுக்கருத்துக்களை அவன் மண்டையில ஏத்துறது.நாம இப்ப காஸ்மீர் இந்தியாவுக்கு உரிமையான பகுதியா இல்லையான்னு விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கோம்.இல்லன்னு அழுத்தம் திருத்தமா வாதங்களை சொல்லி இருக்கிறேன்.அதுக்கு பதில் சொல்ல முடியாம mass conversions and slaughtering of the hindus.ன்னு வாதத்த திசை திருப்புவது யோக்கியமான செயல் இல்லை.

   \\Even if Kashmir exists as an independent country,they cant do much as they ll be landlocked between India and Pakistan and will have to depend upon the two countries for pretty much everything.//

   அது அவனோட கவலை.தனியா போறேன்னு சொல்றவன் வாழ தெரியாமயா தனி நாடு கேட்கிறான்.உங்களுக்கு ஏன் அந்த கவலை.land locked நாடுகள்ள வாழ்றவனுக்கெல்லாம் வாழ்க்கை ஒன்னும் air lock ஆயிடாது.

   \\This independence is a tactic that is used by the kashmiris to get funds from both countries.They enjoy a lot of reservation and benefits across universities in India and they do a lot of businesses,it is not that they are starving or anything.//

   உங்க துட்ட நீங்களே வச்சுகய்யா.அவன் ஒன்னும் உங்க துட்டையும் உதவியையும் வேண்டி நிக்கல.அவன் நாட்ட அவன் கிட்ட கொடுங்க.அவன் பிழைத்துக் கொள்வான்.

   \\There is no way Kashmir is going to be independent and i think the kashmiris also know that very well.//

   இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.ஆமா,இந்திய துணைக்கண்டத்தை காலனியாக்கி அடக்கி ஆண்ட வெள்ளையர்களும் இப்படித்தான் ஊளையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

   \\I think after all this,they do deserve what they got.//

   ஜெனரல் டயரும் இப்படித்தான் சொல்லியிருப்பான்.அப்புறம் அவனும் அவனுக்கு ”உரியதை” பெற்றுக் கொண்டான்.

   அப்புறம் ஒரு வேண்டுகோள்.இது மாதிரி இங்கிலிபிஸ்சுல பின்னூட்டம் போடுறவுங்க தமிழ்ல எழுதுங்க.இது தமிழ் இணைய தளம்.ஆங்கிலம் தெரியாத அன்பர்களும் இதை படிப்பார்கள்தானே. உங்க கருத்துக்களை அவர்களும் தெரிந்து கொள்வார்கள்.

 10. Ok Anbu,

  i dont think anything of the RSS and all.I have no political intentions.

  Like you say,give the land to him,let him do whatever he wants,we cant do things like that.real world is not some dreamland for us to mention ideality and all,history has a lot to do with what is happening today and anger of yesterday translates to reality today.

  His land lies right next to him and the rivers flowing into my land start in his territory and i suspect that he ll join with pakistan and cause harm to my rivers,
  it is okay if i am living in mars and he is living in jupiter but thats not the case.

  we all live in the same land sharing the same resources and i ll occupy the land which i can and fight who i can to keep the status quo.

  Thats reality and thats how it always was,no amount of dreaming and living in lalalala karl marx’s land ll change that reality.

  sorry anbu,if i sound offensive but pragmatism is the beginning and end of everything,i sleep well without dreaming and i wish the same for my brethren.

  • அரிக்குமார் NASA வுல அல்லது அமெரிக்க வெளியுறவு துறையில வேல செய்ய தகுதியான ஆளு.ஆக்கிரமிப்புக்கு புது புது காரணமா கண்டு புடுச்சு சொல்றாரே.

   தன்னோட நாட்டுல ஓடுற நதியின் நதிமூலம் ஆக்ரமிக்கப் பட வேண்டியது.

   we all live in the same land sharing the same resources and i ll occupy the land which i can and fight who i can to keep the status quo.

   எவ்வளவு அருமையான காரணங்கள்.

   ஆனா ஒரு விசயத்த ஒத்துக்கிட்டாரு,காஷ்மீர இந்தியா ”occupy” பன்னிருக்குங்கிரத.அதுக்கு நன்றி.
   ஒரு விசயத்த மறந்துட்டாரு.சத்யமேவ ஜெயதே.வரலாற்றில் அநீதி நிரந்தரமா வென்றது கிடையாது.

   • என்னத்தை சொல்லி, என்ன ஆக போகுது அன்பு…. கங்கா ஸ்நாணம் பண்ணிட்டு திரும்ப வேற எதாவது கட்டுரையில் இதே கேள்விகளை தான் பையா கோஷ்டி வைக்க போகுது…. 🙂

  • அதென்னப்பா காஷ்மீருக்கு ஒரு நியாயம், கச்ச தீவுக்கு ஒரு நியாயம் பேசுறீங்க?

   • I dont understand Ponraaj.I personally dont want Katchatheevu to be with SriLanka,
    why KatchaTheevu,i would even want Yaazhpaanam or Northern Province to be conencted to Tamilnadu as a part of India.

    Same logic for katchatheevu and kashmir.

    • ஏன் இவ்வளவு சுத்தி வளைக்கனும்.சுருக்கமா அகண்ட பாரதம் தான் ஆசைன்னு சொல்ல வேண்டியதுதான.என்னதான் முயற்சி பண்ணாலும் கொண்டைய மறைக்க மறந்துட்டீங்க. தூக்குல போட கூட்டிட்டு போறப்ப பயத்தில் கால்கள் துவண்டு தடுமாற அதை மறைக்க கோட்சே அகண்ட பாரத் அமர் ரஹே ன்னு போட்ட கோஷம்தானே.

     அப்புறம் ஏன் இலங்கையின் வடபகுதியின் மீது மட்டும் ஆசை.எப்பவுமே தமிழன் உடமையைத்தான் ஆட்டைய போடணுமா.

     • Boss,

      I dont know how to answer this.Do you want me to defend things here,you assume so many things.well,assume whatever you want.

      My views are simple as to why Yaazhpanam should have been with India because Sinhalese want to be separate let them be,Yaazhpanam being a part of India ll be very helpful for them more than Indians.

      • ஒன்னு தெரிஞிசிக்கிங்க அரிகுமார். இலங்கை தமிழரை பொருத்தமட்டில் இந்தியாவின் பார்வை என்பது முழுக்க முழுக்க பொருளாதார நலன் மட்டுமே சம்பந்தபட்டது. அவர்கள் மீது பாசமோ,பரிவோ சுத்தமா கிடையாது. கடலில் இந்திய மீனவன் சுடப்படும்போது காக்க மறந்த இந்தியாவா, யாழ்ப்பாணத்தை தூக்கி கொடுத்தவுடன் தமிழனை ஒரே தாங்கா தாங்க போகுது? இது மாதிரி ஆயிரம் உதாரணம் சொல்லலாம். அதனால் கொஞ்சம் நிதானித்து பேசுங்களேன் !.

    • இது உங்களுடைய கருத்தாக இருக்கலாம் அரிகுமார் அண்ணே. ஆனால் உம்மாளோட கருத்து அது தானா என்பது தான் கேள்வி. அதற்கு சரியான உதாரணம் நம்ம பையா சார். காஷ்மீர் என்றதும் பொங்கும் இந்துத்துவ கோஷ்டிகள் கச்சதீவு பற்றி வாயை திறந்ததாக நீங்கள் கேள்விப பட்டதுண்டா? அட ராமர் பாலம் வரைக்கும் கூட போயாச்சு. ஆனால் அந்தாண்ட ‘க்ச்சதீவு’ பத்தி ஊகூம்……!!!

     • Ponraaj sir,

      I am not a brahmin,we are Nairs settled in Madras since 1890.I full feel Tamil only and there is no connection left in Kerala.I am just giving my point of view here,i have friends here across all communities,i dont know anyone who says katchatheevu should have been given to SL.

      You can say Subramanian Swamy says this but he need not be a representative of all the brahmins.

      Just my view.

      • //உம்மாளோட//
       மன்னிக்கவும். இதன் அர்த்தம் உங்களை பிராமின் என்றி விளிப்பது அல்ல. உம்மை போன்ற ஒத்த கருத்துடையவர்கள் என்று பொருள்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

      • //i dont know anyone who says katchatheevu should have been given to SL.//

       It is INDIA’s decision and stand. Even BJP government do not bother about it.

       • personally i feel,there are some high level inetrnational things associated with this srilanka politics.nobody knows who is involved and who is not.

        i mean you tell me honestly,whats the harm in keeping the island or what was the logic in giving the island away?

        This is one of the reasons i said yaazhpanam should be with us because if that was so,then it becomes an internal issue between rameswaram fishermen and yaazhpanam fishermen,whats the problem?

 11. காணமல் போனோர் பற்றிய அறிவிப்பு:
  பெயர்: பையா
  வயது: இசுகூல் பையன் வயது
  நிறம்: நாலு வர்ணத்தில் எதோ ஒன்னு.
  நேரம்: அன்பு அவர்களுடன் காஷ்மீர் பற்றி பேசிகொண்டிருக்கும் போது.

  காணாமல் போன அன்று அரைக்கால் டவுசரும், (டவுசரை யாரும் உருவிடாமல் இருக்க) குறுக்கே வெள்ளை நிறத்தில் பெல்ட்டும் அணிந்திருந்தார். கண்டு பிடித்து தருவோருக்கு (அடங்)கோ தானம் தரப்படும். அனுக வேண்டிய முகவரி: அன்பு இல்லம், வினவு நகர், ஐயனாவரம், மொன்னை – 600 420.

  • நண்பர் பொன்ராசு. பையாரை பிடித்து வினவு பக்கம் கூட்டியாருங்கள். பையாவை பார்க்காமல் ஏக்கமாக உள்ளது.

 12. அடிக்கடி நாலு அப்பாவிய போட்டுத்தள்ளினாதான்பா நாம வல்லரசுன்னு பீத்திக்கலாம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க