நீட்: நுங்கம்பாக்கம் – கோவூர் – அரசுப் பள்ளி மாணவிகள் போராட்டம் !
“திங்கக் கிழமை பள்ளிக்கு எங்கள சேக்க மாட்டார்களாம் ரொம்ப நல்லது போராட்டம் நடத்த வசதியா இருக்கும். நாங்க இன்னைக்கு இல்லைன்னாலும் தொடர்ந்து போராடுவோம்.”
திருப்பூர் – விவசாயியைக் ’கொன்ற’ கோடக் மஹிந்திரா வங்கி – போலீசு – நீதிமன்றம்
’அவகாசம் கொடுக்க முடியாது’ எனப் பிடிவாதம் பிடித்திருக்கிறது கோடக் மஹிந்திரா வங்கி. மனமுடைந்த விவசாயி வெள்ளியங்கிரிநாதன் போலீசு நிலையத்திலேயே பூச்சி மருந்தைக் குடித்துத் தன் உயிரை விட்டுள்ளார்.
ஓசூர் – தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மெரினாவாக்குவோம் !
படுகொலை செய்யப்பட்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தில் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி - அடிமை அதிமுக - உச்சிக்குடுமி நீதிமன்றம் - இவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள்!
தோழர் சந்திரபோஸ் -க்கு சிவப்பஞ்சலி !
அமைப்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட வேறொரு வாழ்க்கைக்கோ, மகிழ்ச்சிக்கோ ஏங்காத ஒரு அரிய தோழர். எளிய உணவு, உடை, வீடு, அங்கீகாரத்துக்கு ஏங்காத உழைப்பு அதுதான் தோழர் சந்திரபோஸ்.
மோடிக்கு செருப்படி ! – கோவில்பட்டி மக்கள் அதிகாரம் சாலை மறியல் !
மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் எழுச்சிகரமாக முழங்கியதைக் கேட்ட பொதுமக்கள் திரண்டு நின்று கவனித்தனர். போராட்டத்தின் போது மோடியின் படத்தை செருப்பால் அடித்ததை பலரும் ஆதரித்தனர்.
திருச்சி காஜாபேட்டை : மக்களின் முற்றுகைப் போராட்ட அறிவிப்புக்கு அடிபணிந்தது மாநகராட்சி !
மேட்டுக்குடிகள் வசிக்கும் தில்லை நகரிலும், கே.கே நகரிலும் அனைத்து வசதிகளையும் செய்து தரும் அதிகாரிகள், அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை கூட நிறைவேற்றாமல் சாதாரணப் பிரச்சினை போல கடந்து செல்லும் விதத்தில் அதற்கு விளக்கமளித்தனர்.
நீட்டை ரத்து செய் – தமிழகம் முழுவதும் தொடரும் மாணவர் போராட்டங்கள் !
மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணமான மோடி மற்றும் எடப்பாடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடத்துவங்கியுள்ளனர். தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. தமிழகம் மீண்டும் ஒரு டெல்லிக்கட்டை நடத்திவருகிறது!
மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் அதிகாரம் – படங்கள்
மாணவி அனிதா படுகொலைக்கு நீதி வேண்டும், பாஜக-அதிமுக கொலைகார அரசுகள் நீடிக்க அனுமதிக்ககூடாது என முழக்கங்கள் வைத்து மக்கள் அதிகாரம் மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது.
அனிதா படுகொலையைக் கண்டித்து புமாஇமு போராட்டம் – படங்கள்
அரியலூர் மாணவி அனிதாவின் ’படுகொலைக்குக்’ காரணமான மோடி- எடப்பாடி கும்பலைக் கண்டித்தும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் !
மணல் குவாரியை மூடு ! வெள்ளாற்றில் விவசாயிகள் போர்க்கோலம் !!
“வெள்ளாறு எங்கள் ஆறு, மணல் கொள்ளையனே வெளியேறு” என மக்கள் கோசமிட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், மாணவர்கள், விவசாயிகள் என ஒவ்வொருவரும் தண்ணீர், பிஸ்கட் உணவு இவற்றை கையோடு எடுத்துக் கொண்டு போராட வந்தனர்.
அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் போராட்டம் வெல்லட்டும் !
தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புமிக்க வருங்கால வைப்பு நிதியைப் பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உரிமை அளிப்பது தான் அரசின் நோக்கம்.
கோரக்பூர் – குழந்தைகளைக் கொன்ற கொலைகார அரசு !
மருத்துவம் தனியார்மயமானதே இதற்குக் காரணம் ! தோற்றுப்போன இந்த அரசுக் கட்டமைப்பில் ஊழல்மயத்தை ஒழிக்க முடியாது ! குடிமக்களைப் பாதுகாக்க மக்கள் அதிகாரமே தீர்வு !
கிராமிய அஞ்சலக ஊழியர்களை துன்புறுத்தும் மோடி அரசு
நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் கொண்டு செல்லுமளவிற்கு ஊழியர்களின் உதிரம் சிந்திய உழைப்பு என்பது அளப்பரியது.
தமிழகத்தின் கலங்கரை விளக்காக மக்கள் அதிகாரம் – தோழர் ராஜு உரை
கந்துவட்டி முதல், மைக்ரோ பைனான்ஸ் வரை எல்லா கடன்களையும் கட்ட மறுப்போம். கடன்களை நாமே தள்ளுபடி செய்து கொள்ளுவோம். கட்ட முடியாது என்றால் என்ன செய்து விடுவான் என்று பார்ப்போம்.
சென்ற வார உலகம் – படங்கள் !
ஒருபுறம் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் உலகெங்கிலும் மக்கள் போராடுகின்றனர். மறுபுறம் எப்படியும் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்று அகதிகளாக மத்தியத்தரைக்கடலினுள் குதிக்கின்றனர்.
























