தமிழக போலீசைக் கண்டித்து திருச்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
மக்கள் போராட்டமாக மாறிய இப்போராட்டம் வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமில்லை ஒட்டுமொத்தமாக இது நாள்வரையில் தான் சகித்துவந்த காவிரி பிரச்சினை, சமஸ்கிருத திணிப்பும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் தாக்கத்தினால் வெகுண்டு எழுந்த போராட்டம்.
போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் – சென்னை ஆர்ப்பாட்டம் செய்தி – படங்கள் !
போலீசை கண்டு அஞ்சி போராட்டம் ஓயாது. அது நெருப்பை பொட்டலம் கட்டுவதைப் போல கொள்கைக்காக போராடுபவர்களை கூலிக்காக அடிப்பவர்களால் ஒடுக்க முடியாது.
மக்களை விடுதலை செய் – போலீசைக் கைது செய் ! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி !
அரசின் கொள்கை முடிவுகளில் அரசியல் நடவடிக்கைகளில் மக்களை பங்கேற்க விடாமல், இந்த அமைப்பு முறை முற்றிலும் புறக்கணித்து வெறும் பார்வையாளர்களாக, வாக்காளர்களாக மட்டுமே வைத்திருக்கிறது. மத்திய மாநில அரசுகள் சட்டரீதியாக மட்டுமல்ல, தார்மீக ரீதியில்கூட மக்களை கட்டுப்படுத்தும் அருகதையை இழந்து விட்டன.
மெரினாவில் மீண்டும் எழுவோம் ! மகஇக புதிய பாடல்
இன்று மெரினாவில் போராட்டத்தைக் கலைத்து விட்டதாக அரசு கருதலாம். ஆனால் மக்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டனர். அந்த மாணவர்கள் மீண்டும் வருவார்கள். மெரினா மீண்டும் உதயமாகும்.
விவசாயிகளை சாகவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசு – தோழர் காளியப்பன்
எந்த கிரிமினல் கும்பல் இந்த நீர்நிலைகளை அழிப்பதற்கு காரணமாக இருந்ததோ, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கொள்ளையடித்தோ அந்த கும்பலுடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அதிலிருந்து தான் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
உண்மையறியும் குழுவின் அறிக்கை 31.01.2017 இன்று வெளியீடு !
பல வழக்கறிஞர்கள் இணைந்து உண்மை அறியும் குழுவாக கடந்த வாரம் மக்களிடம் பாதிப்புகளை நேரிடையாக கேட்டறிந்து அறிக்கையாக தொகுத்து உள்ளனர். இந்த அறிக்கையை சேப்பாக்கம் பத்திரிக்கை மன்றத்தில் (CPC) இன்று (31/01/2017) மதியம் 1:00 மணியளவில் வெளியிட இருக்கிறார்கள்.
காவல்துறை அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி !
காவல்துறை அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டணமின்றி சட்ட உதவி செய்ய சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளனர். தங்கள் முகநூல் பக்கங்களிலும், வாட்ஸப் குழுக்களிலும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
போலீசு வன்முறையை கண்டித்து கடலூரில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையைக் கண்டித்து வருகின்ற 01.02.2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக !
கலவரம் செய்த போலீசை கைது செய் ! திருச்சி – சென்னையில் ஆர்ப்பாட்டம்
இந்த வன்முறையை சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், கோவை மாநகர காவல் ஆணையர் அமுல்ராஜ், மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், காவல் நுண்ணறிவுத்துறை இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர்களை கொண்டு காவல்துறையும் அரசும் நிறைவேற்றி இருக்கிறது.
மெரினா : போலீசு வன்முறையின் நோக்கம் என்ன ?
ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர் – இளைஞர்கள் – மக்கள் மீது தமிழகம் முழுவதும் போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறை குறித்து மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசுகிறார்.
போலீசின் கொலைவெறி : திருச்சி, மதுரை, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் !
போலிசு அரசாங்கத்தின் வளர்ப்பு நாய். அது அரசாங்கத்துக்கு தேவைப்படும் போது மக்களிடம் நண்பரைப்போல் வாலைக் குழைத்து ஆட்டும், பின்னர் அதுவே மக்களை பாரபட்சம் பார்க்காமல் கடித்துக் குதறும்.
ஜல்லிக்கட்டு போராட்டம் : துரோகிகளுக்கு செருப்படி – வீடியோ
நம் வாழ்நாளில் மெரினாவில் கண்ட மிகப் பெரும் மக்கள் எழுச்சியை நினைக்கும் போது கூடவே துரோகிகள் ஆர்.ஜே. பாலாஜி, ஆதியும், கமிஷ்னர் ஜார்ஜ்-ம் வருகிறார்கள்.
கோக் – பெப்சியை புறக்கணித்த வணிகர்களுக்கு வாழ்த்து மடல் !
பொருளாதாரத்தை இழப்போம், ஆனால் தன்மானத்தை இழக்கமாட்டோம் என்று கோக் - பெப்சி விற்பனையை தடை செய்துள்ள வணிகர்களுக்கு உழைக்கும் வர்க்கத்தின் சார்பில் வாழ்த்துவது எமது கடமை.
கலவரம் செய்த போலீசை கைது செய் ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
காளைக்காக திரண்டவர்கள், போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் திரள வேண்டும். போராட்டம் தான் நமக்கு நிரந்த பாதுகாப்பு போலீசு என்றைக்கும் பொது மக்களுக்கு ஆபத்தானது என்பதை மீண்டும் மீண்டும் போலிசே நிருபித்து வருகிறது.
புதிய உலகம் உன் கண்ணில் தெரியலையா – கோவன் பாடல்
நந்திகிராம் போராட்டம், நியாம்கிரி போராட்டம், கூடங்குளம் போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், அரபு மக்கள் போராட்டம், அமெரிக்காவில் வால் வீதி போராட்டம் அனைத்தும் இத்தகைய எழுச்சிகளின் அங்கம் என்பதை இசையால் இணைக்கிறது இந்தப் பாடல்.























