தலித்துகள் – சிறுபான்மையினர் மீது பெருகிவரும் தாக்குதல்கள்: தீர்வு என்ன?
நாடெங்கும் சாதி - மதவெறியர்களால் நிகழ்த்தப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், தலித்துகள், முஸ்லிம்கள், இதர சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய அனைத்தும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. காவி பாசிஸ்டுகள் அமைக்க விரும்பும் இந்துராஷ்டிரத்தில் அன்றாடம் நிகழப்போகும் சம்பவங்களின் முன்னோட்டம்தான்.
பொது சிவில் சட்டம், அறிவிப்பு: இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமா? புஸ்வானமா?
பா.ஜ.க. கும்பல் தோல்விமுகம் அடைந்திருக்கும் இன்றைய அரசியல் சூழலில் பெரும்பான்மை மக்களிடம் ஆதரவு இல்லாத நிலையிலும் இஸ்லாமிய எதிர்ப்புப் பூச்சாண்டி ஒன்றுக்காகவே பொது சிவில் சட்டத்தை இப்போது விவாதப் பொருளுக்கு கொண்டுவந்திருக்கிறது பாசிசக் கும்பல்.
வனம், கனிமப் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள்: கார்ப்பரேட் கொள்ளையின் முகமூடி!
மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களை செயல்படுத்துவதற்கு காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி மக்கள் தடையாக இருப்பார்கள் என்று முன் அனுமானித்து, வன உரிமைச் சட்டம் 2006, பஞ்சாயத்து ராஜ் ஆகிய சட்டங்கள் பழங்குடி மக்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை இச்சட்டத் திருத்தம் மூலம் பறித்துள்ளது மோடி அரசு.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு: வெடிக்கக் காத்திருக்கும் பொருளாதார பயங்கரவாதத்தின் புகைச்சல்
2014-இல் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, மோடி-அமித்ஷா-நிர்மலா கும்பல் தீவிரமாகக் கடைப்பிடித்துவரும் மறுகாலனியாக்கக் கொள்கையின் அடிப்படையிலான ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்ற பொருளாதார பயங்கரவாதக் கொள்கைகள்தான் உணவுப் பொருள்களின் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகும்.
கவிழ்ந்து வரும் தாமரைக்கு சவக்குழி வெட்டுவோம்!
பா.ஜ.க.வின் காவி-கார்ப்பரேட் நடவடிக்கைகளும் மோடியின் பிம்பமும் மக்கள் போராட்டங்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, பா.ஜ.க. தோல்வி முகத்திற்கு சென்றுள்ள இந்த பின்னணியில்தான், காங்கிரஸ் தன்னை ஒரு மாற்றுத் தலைமையாக மீள்கட்டமைப்பு செய்துவருகிறது.
அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!
"நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள், அங்கே விவாதிப்போம்" என்பதெல்லாம், பழைய காலம். நாடாளுமன்றத்தை பஜனை மடமாக மாற்றுவதுதான் மோடி காலம். அதற்கேற்ப அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அங்கே மோடி மீதான பா.ஜ.க.வினரின் பஜனை கோசத்தைத் தாண்டி, எதிர்க்கட்சிகளின் கதறல்கள் எதுவும் ஒலிக்கப்போவதில்லை.
பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை! | புஜதொமு
கடந்த 9 நிதியாண்டுகளில், 2014-15 முதல் 2022-23 வரை, வங்கிகள் மொத்தம் ரூ.14.56 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக ஆகஸ்ட் 7 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை!
கடந்த 10 ஆண்டுகளில் ரூ.14.56 இலட்சம் கோடிக்கான வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!
ஏமாற்றும் உள்நோக்கம் கொண்ட கடனாளிகளது...
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2023 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2023 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - ஆகஸ்ட் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25
தெலுங்கானா: பாசிச எதிர்ப்பு அறிவுத்துறையினர் – செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் வேட்டை!
2022-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பி.ஆர்.எஸ். கட்சியின்மீது அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தீவிமடைவதை நாம் கவனிக்கலாம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்ட் மூலம் சந்திரசேகர் ராவ் அமித்ஷாவை ரகசியமாகச் சந்தித்து டீல் பேச முயற்சித்த தகவல் வெளியே கசியவந்து நாறிப்போனது.
ரஷ்யா: ஒரு நாளைக்குள் முடிந்த பிரிகோஜினின் ‘ஆட்சிக்கவிழ்ப்பு சதி’!
ரஷ்யா ராணுவ அதிகாரிகளுக்கும் பிரிகோஜினுக்கும் இடையிலான முரண்பாட்டின் காரணமாக, தனது எதிர்ப்பை ஒரு ராணுவக் கலகமாக வெளிப்படுத்தினான் பிரிகோஜின். இதை ஆட்சிக் கவிழ்ப்பு அளவிற்கு அகமகிழ்ந்து வரவேற்றன மேற்கத்திய-அமெரிக்க ஊடகங்கள்.
ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!
தண்டவாளப் பராமரிப்பு ஊழியர்கள் 4 லட்சத்திலிருந்து 2 இலட்சமாகக் குறைந்துள்ளார்கள். ரயில்வே துறையில் 3.12 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது; இவற்றுள் பெரும்பாலானவை பாதுகாப்பு தொடர்பான பணிகளாகும்.
கழன்றது முகமூடி | பகுதி 1
‘வளர்ச்சி’ முகமூடி கிழிந்து தொங்கும் நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று இந்துராஷ்டிரம் அமைப்பதை நோக்கி முன்னேற வேண்டுமானால் தேசவெறி, மதவெறி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு வேறுவழியில்லை.
துருக்கி தேர்தல் முடிவு: தேவை, பாசிசத்திற்கு எதிரான மாற்று ஜனநாயகத் திட்டம்!
எர்டோகன் பிற்போக்கு பாசிஸ்ட் எனில், கிலிடாரோக்லு மிதவாத போர்வையில் இருக்கும் அமெரிக்க ஆதரவு பாசிச ஆதரவாளர். எர்டோகனின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிசவாதிகள் கிலிடாரோக்லுவை ஆதரிக்கின்றனர்.
அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!
கடந்த ஜனவரி மாதத்தில் அமுல் நிறுவனத்தில் கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து அனுபவம் பெற்ற, பல ஆண்டுகளாக மேலாண்மை இயக்குனராக பணியாற்றிய ஆர்.எஸ்.சோதி தன் பதவியை ராஜினாமா செய்து அமுல் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்துள்ளார்.




















