நரவேட்டை மோடியை எதிர்த்து நிற்கும் சஞ்சீவ் பட்’டை ஆதரிப்போம்!
அரசியல் அதிகாரம், பார்ப்பனியமயமாக்கப்பட்ட அரசு இயந்திரத்தின் பக்கபலம் என்று சகல விதத்திலும் ஆயுதபாணியாக நிற்கும் ஒரு ரத்தவெறி கொண்ட மிருகத்தின் முன் சஞ்சீவ் பட் ஏந்தியிருப்பது உண்மை என்கிற ஆயுதம் மட்டுமே.
வறுமைக்கோடு நிர்ணயம்: வறுமையை ஒழிக்கவா?
பிரச்சினை என்பது வருமான அளவுகோலைத் தீர்மானிப்பதல்ல. ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு மானியம் உள்ளிட்ட பல்வேறு விதமான மானியங்களைக் கூடுமான வரை வெட்டிச் சுருக்கிவிட வேண்டும் என்ற நோக்கம்தான் மையமானது.
வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்!
போலீசு, அதிகாரிகளின் கைகள் கட்டப்படாமல், அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று அக்கிரகார அரசியல்வாதிகள் பேசுவது ஊடகங்களால் ஊதி முழக்கப்படுகிறது. போலீசும் அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட்டால் மக்களுக்கு என்ன நேரும் என்பதற்கு வாச்சாத்திகளே சாட்சியமாகியுள்ளன.
ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!
உணவு மானியத்தைக் குறைக்க வேண்டும் என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக் கொண்டு திரியும் கொள்கைக் குன்றான மன்மோகன் சிங் அரசு உணவுப் பாதுகாப்பிற்கெனத் தனியொரு சட்டத்தைக் கொண்டு வரப் போகிறதென்றால்...? எலி தேவையில்லாமல் அம்மணமாக ஓடாதே!
நோவார்ட்டிஸ் வழக்கு : மக்களின் உயிர் குடிக்கும் மருந்து கம்பெனிகள்!
புற்றுநோய், எய்ட்ஸ், காசநோய், மலேரியா முதலான பல நோய்களுக்கான மருந்துகளின் விலையைத் தற்போது உள்ளதைவிடப் பத்து, பதினைந்து மடங்கு அதிகமாக உயர்த்திக் கொள்ளையிட விரும்புகின்றன பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள். அத்தகையதொரு வழக்குதான் இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராக நோவார்ட்டிஸ் நிறுவனம் தொடுத்திருக்கும் வழக்கு.
கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
அணு மின் உற்பத்தியில் குதிக்க காத்திருக்கும் டாடா, அம்பானிகளின் இலாப வெறி, அணு மின்நிலையங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் இந்திய அணுசக்தி அதிகாரவர்க்கம், அணுசக்திக் கனவுடன் இணைந்த இந்தியாவின் வல்லரசுக் கனவு, அதற்குத் தேவைப்படும் அமெரிக்காவின் தயவு... போன்ற பல விசயங்கள் அணுவுக்குள் புதைந்திருக்கின்றன
இசுலாமிய “உணர்வு” பத்திரிகைக்கு ஒரு மறுப்பு!
புதிய கலாச்சாரத்தில் வந்த “இசுலாமியப் பெண்களை சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்’ என்ற கட்டுரைக்கு உணர்வு பத்திரிகை ஒரு மறுப்புக் கட்டுரையை உருவாக்கி வெளியிட்டிருந்தது. அந்த கட்டுரையின் அபத்தத்தை தோழர் சாகித் விளக்குகிறார்.
இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக வைத்திருப்பது ஒன்றுதான் அணுசக்தி ஒப்பந்தத்தின் இலக்கு என்பதை இந்த கட்டுரை விவரங்களோடும், வாதங்களோடும் நிறுவுகிறது.
ஓசூர்: ஹெச் ஆரை (HR) வீழ்த்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள்!
ஒசூர் கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் லிட் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் வேலைநீக்கத்திற்கு எதிராக உறுதியுடன் போராடி வெற்றிப்பெற்ற அனுபவத்தை இங்கே தருகிறோம்.
4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! ஒரு நெடிய போராட்டம்!!
4 வயது சிறுமிக்கு அவளது பெண் ஆசிரியர்கள் இழைத்த பாலியல் வன்கொடுமை! குற்றவாளிகளை பாதுகாக்கும் பள்ளி முதலாளி, போலிசு! இவர்களை எதிர்த்து மனித உரிமைப்பாதுகாப்பு மையம் நடத்திய நெடிய போராட்டம்!
அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!
டபிள் டிப் நெருக்கடி உலகிலேயே மிகப்பெரிய கடனாளி நாடு அமெரிக்காதான் என்பதை மட்டுமின்றி, வல்லரசு அமெரிக்கா மஞ்சக் கடுதாசி கொடுக்க வேண்டிய போண்டி அரசாக இருப்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.
நூல் அறிமுகம் – உன் அடிச்சுவட்டில் நானும்!
அவர் இப்போது பழைய குயென் அல்ல. தன் நாட்டுமக்களை நேசிக்கும் ஒரு போராளி. போலீசின் நைச்சியமான ஆசைகாட்டுதல்களுக்கும் அடிமைத்தனத்துக்கும் மயங்காத ஒரு போராளி. தன் கணவர் மரண தண்டனை அடைந்தாலும் அவரது அடிச்சுவட்டில் பயணம் செய்ய தயங்காத ஒரு போராளி.
ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்!
பசு புனிதமென்றால், மீன் விஷ்ணுவின் மச்சாவதாரம், கோழி முருகனின் அவதாரம், ஆடு கிருஷ்ணன் மேய்த்தது என அனைத்தையும் தடை செய்யலாமா? மாட்டுக்கறி தின்னக்கூடாது என்பவர்கள் கோமாதாவைக் கொன்று தோலை உரித்துச் செருப்பு போட்டு மிதிக்கலாமா?
சங்கரசுப்பு மகன் படுகொலை: கொலைகாரர்களை பாதுகாக்கும் போலீசு, சி.பி.ஐ!
வழக்குரைஞர் சங்கரசுப்புவிற்கு தேவை நம் அனுதாபம் அல்ல. அவரது நீதிக்கான போராட்டத்திற்கு நாம் உறுதுணையாக இருப்பதும், போராடுவதுமே தேவை. இல்லையேல் மக்கள் நலனுக்காக உறுதியுடனும், இழப்புக்களுடனும் போராடும் இத்தகைய வழக்கறிஞர்கள் இல்லாமல் போய்விடுவார்கள். அவர்களை பாதுகாப்பது நம் கடமை. ஆதரவு தாருங்கள்!
கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!
கூட்டிப் பெருக்கிப் பாத்தா சில்லறைங்களுக்கு உள்ளாட்சி! நோட்டுக்கு மத்த ஆட்சி ! கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு !











