அரிசியை டவுண்லோடு செய்ய முடியாது – ஐ.டி. ஊழியர்கள் விசாயிகளுக்காக போராட்டம்
பல லட்சம் கோடி கடன் தொகை கார்பரேட் நலன்களுக்காக தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் கடன்களை கட்டாயமாக வசூலிக்க வேண்டும் என்கிறது அரசு.
சேவைக் கட்டணம் = மக்களுக்கு கட்டணம் தனியாருக்கு சேவை !
சம்பள உயர்வை ஈடுகட்ட, பொதுமக்களிடமிருந்து கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என இன்று உத்தரவிடும் மைய அரசு, நாளை அனைத்துச் சேவைகளுக்கும் அதற்குரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனக் கூறத் தயங்காது.
இனி தங்கம், வெள்ளி போல தினசரி பெட்ரோல் விலை நிலவரம் !
இனிமேல் தங்க வெள்ளி விலை நிலவரங்களைப் போல் அன்றன்றைக்கான சர்வதேச விலை அன்றன்றைக்கே உள்ளூர் சில்லறை மையங்களில் அமல்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான பலன்கள் கிட்டவுள்ளதாக பத்திரிகைகள் வியாக்கியானங்கள் எழுதி வருகின்றன.
ஐ.டி ஊழியர்களை சதி செய்து வெளியேற்றும் காக்னிசண்ட் நிறுவனம் !
இன்று “திறமையற்றவர்களாக” காட்டப்படும் சக ஊழியருக்காக குரல் கொடுக்க நீங்கள் தயங்கினால், நீங்களும் உங்கள் நிறுவனத்தால் ‘திறமையற்றவராக’ காட்டப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.
மாருதி தீர்ப்பை கண்டித்தும் விவசாயிகளை ஆதரித்தும் BHEL PPPU தொழிற்சங்கம் போராட்டம் !
பருவமழை பொய்த்ததாலும் வழக்கம் போல் காவிரி நீர் திறக்க கர்நாடகம் மறுத்தாலும் தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதை எல்லாம் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
மனித மணற்கடிகாரம் – கேலிச்சித்திரங்கள்
உலகம் இரண்டு பகுதிகளாக இருப்பது போல் தெரிகிறது.முதல் பகுதியில் எதையும் விருப்பம் போல் வாங்கலாம், இரண்டாம் பகுதியில் மக்கள் வறுமையில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். மூன்றாம் உலகின் கேலிச்சித்திரங்கள்!
டாஸ்மாக்கை மூடுவோம் – விவசாயிகளை ஆதரிப்போம் ! சென்னை ஐ.ஐ.டி மாணவர் போராட்டம்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகளை மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய அடுத்த நாளே சாராய முதலாளிகளை சந்திக்கும் மோடி முப்பது நாட்களுக்கும் மேலாக போராடிவரும் விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார்.
தனியார் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உரிமைகள் வழங்கு !
தனியார் கல்வி நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்களில் பேருந்து ஒட்டும் தொழிலாளிகள் பேருந்துகளிலேயே வாழ்க்கை நடத்தும் கொத்தடிமை முறை நீக்கப்பட்டு முறைப்படுத்திய பணி தொழிலாளர் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.
திருச்சியில் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் !
இயற்கை வளங்கள் அனைத்தையும் சூறையாடப்படுகின்றது. இதனை வளர்ச்சி என சொல்கின்றார்கள். இதனை எதிர்ப்பவர்களை போலீசை வைத்து நசுக்குகின்றார்கள். இந்த போலீசு - நீதி மன்றம் - அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளார்களோடு ஒன்றிணைவோம்
கோக் பெப்சி விற்க மறுப்பது ஜனநாயக விரோதமா ? வீடியோ
பெப்சி கோக் விற்கமாட்டோம் என தமிழக வணிகர் சங்கங்கள் அறிவித்திருப்பது சுதந்திர சந்தையின் விழுமியங்களுக்கு எதிரானது என்று முதாலாளித்துவ ஊடகங்களும், அறிஞர்களும், என்ஜிவோ நிறுவனங்களும் வாதிடுவதை அம்பலப்படுத்தும் வீடியோ செய்தித் தொகுப்பு!
BEML : தேசத்தின் சொத்தை விற்கும் மோடி அரசு !
பிராசிஞ்சித் போஸ் என்கிற பொருளியலாளர், "ஒருமுறை வருகின்ற வருமானத்திற்காக எல்லா வகையிலும் லாபம் தரும் பிஇஎம்எல் பங்குகளை விற்பது பொருளாதார ரீதியில் அர்த்தமற்ற செயல்" என்கிறார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக வேலூரில் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்ட பு.ஜ.தொ.மு வினர் விவசாயகளின் போராட்டத்தை ஆதரித்தும் இந்த பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்வது என்கிற வகையில், 07/04/17 காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உலக தண்ணீர் தினத்தில் காலிக் குடங்களின் இந்தியா – படங்கள்
உலகெங்கும் தண்ணீரை தனியாருக்கு அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து விட்ட நிலையில் இந்த தினம் எதைச் சாதிக்கப் போகிறது?
மக்கள் போராட்டம் ஒன்றிணைய வேண்டும் – திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம்
அமைதி வழியில், அறவழியில் அனைத்து வடிவங்களிலும் போராடி பார்த்துவிட்டோம். நம்மை நாமே வருத்தி கொள்ளும் போராட்டங்களுக்கு ஆளும் உணர்ச்சியற்ற பிண்டங்கள் அசைந்து கொடுக்கவில்லை.

























