Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 158

சேலம் ஆதிக்க சாதி வெறியனின் ஆபாச பேச்சு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

31.01.2023

தொடரும் ஆதிக்க சாதி வெறியர்களின் வெறியாட்டம்! சேலம் ஆதிக்க சாதி வெறியனின் ஆபாச பேச்சு மீண்டும் ஓர் உதாரணம்!

கண்டன அறிக்கை

சேலம் மாவட்டம், திருமலைகிரி ஊரில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. அது, இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 26.01.2023 அன்று மாலை பிரவீன்குமார் என்ற பட்டியலின சமூகத்தை (பறையர்) சேர்ந்த மாணவன் வழிபட கோவிலுக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வன்னியர் சாதியை  சேர்ந்தவர்கள் தடுத்துள்ளனர். அந்த மாணவனை எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

தி.மு.க-ஐ சேர்ந்த ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 27.01.2023 இவரது தலைமையில் கோவிலுக்கு அருகில் பெற்றோருடன் மாணவனை வரவழைத்துள்ளனர். ஆதிக்க சாதியை சேர்ந்த பொதுமக்கள் முன்னிலையில் மிகவும் கீழ்தரமாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளான் ஆதிக்க சாதிவெறி மாணிக்கம்.

எங்கள பகைச்சுக்கிட்டு ஊருக்குள்ள தொழில் பண்ண முடியாது, ஊருல இருக்கவே முடியாது. அருகிலிருந்த மற்றொருவர் சாதி வெறியுடன் “இவன் யாரோ சொல்லி கொடுத்துதான் கோவிலுக்கு உள்ளே வந்திருக்கான் யாரு சொன்னதுனு சொல்லு, நா பாத்துக்கிறேன்” என்று ஆதிக்க சாதி திமிரோடு பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டியுள்ளான்.

28.01.2023 அன்று காவல்துறை இரு தரப்பு மக்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்துவிட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில் தான் அப்பகுதி விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் வெளியிட்ட வீடியோ 30.01.2023 அன்று சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதப் பொருளானது. இந்த ஆதிக்க சாதி வெறியனை “உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்காவிட்டால் திராவிட மாடல் ஆட்சி என்பதை தீண்டாமை மாடல் ஆட்சி என பொதுவில் அம்பலப்படுத்துவோம்” என்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் மாவட்ட செயலாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதோடு அல்லாமல் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்ப்பவர்கள் இந்த சாதிவெறியனை மக்கள் மத்தியில் அம்பலபடுத்தி ஊரைவிட்டு அடித்து விரட்டியாக வேண்டும் என்று கொந்தளிக்க தொடங்கினர்.


படிக்க: இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்


இதன் விளைவே  தி.மு.க, ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை கட்சியை விட்டு இடைநீக்கம் செய்தது. அப்போதும் எதிர்ப்புகுரல்கள் அடங்கவில்லை. மக்கள் மத்தியிலும், கூட்டணி கட்சியினர், ஜனநாயக சக்திகள் மத்தியிலும் இருந்து நெருக்கடி வந்த பின்னரே கைது நடந்துள்ளது.

இந்த திராவிட மாடல் ஆட்சி சாதி ஆதிக்க வெறியர்களுக்கு எதிரானது அல்ல,  தகவல் தெரிந்த உடனே சாதிவெறியனை கட்சி உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறது. அந்த ஊரில் உள்ள அனைத்து மக்களும் சமத்துவமாக கோவிலுக்குள் சென்று வழிபடுவதை உறுதிபடுத்தி அதிகாரிகள் கண்கானிக்க வேண்டும்.

***

குறிப்பாக இந்த மாதத்தில் மட்டும் புதுகோட்டை வேங்கைவயல், மதுரை காயம்பட்டி, விருத்தாசலம் சாத்தக்கூடல், சேலம்  என ஆதிக்க சாதியினரின் வெறியாட்டம் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்டே வருகிறது. இது ஒவ்வொரு ஊரிலும் நடப்பது தான் என்று கடந்துசெல்லாமல், அரசின் கவனத்திற்கு வரும் இதுபோன்ற சாதிவெறி சம்பவங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுப்பது தான் சரியாக இருக்கும்.

கோவிலுக்குள் நுழைந்த மாணவன், சாதி இல்லாத சமூகமாக மாற வேண்டும் என்றுகூட கருதியிருக்கலாம். ஆனால் இந்த பார்ப்பனிய சித்தாந்தமும் வருணாசிரம கோட்பாடும் மீண்டும் அந்த சாதி என்னும் சாக்கடைக்குள்ளேயே பட்டியலின மக்களை தள்ளிவிடுகிறது.


படிக்க: சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்!


இன்று, பல கிராமங்களில் சாதி பிரிவினையை வளர்ப்பதும், கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுப்பதும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலே. பட்டியலின மக்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையே பிரச்சினையை வளர்க்கும் நபர்களை தீனிப்போட்டு வளர்த்து வருகிறது காவி கும்பல்.

இதுபோன்ற சாதிவெறியர்களையும், இவர்களை ஊக்குவிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் மக்களிடம் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி விரட்டியடிக்க வேண்டியுள்ளது.

ஆதிக்க சாதி வெறியர்களையும் அவர்களை ஊக்குவிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி விரட்டியடிப்போம்!

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202

Adani – The Bandit who robbed India! | People’s Power

30.01.2023

Adani – The Bandit who robbed India!

RSS – BJP; Modi fascist clique, which sacrificed India to benefit the
Ambani – Adani fascist clique, is the culprit!

Press Release

The Hindenburg Report revealed that Adani, who is India’s richest man and 5th richest in the world, is a fraudster, traitor and a bandit.

Adani manipulated the value of his shares by starting offshore shell entities to buy shares from his listed companies, and by intimidating the LIC to buy his shares with the help of fascist Modi – Amit Shah clique. He got loans from the SBI by quoting these manipulated share values and started new companies. This is how Adani became the richest Indian in just eight years of Modi rule.

Adani Group is levelling accusations against Hindenburg. It is trying to hide behind the national pride by projecting the report as a conspiracy to decimate Indian companies.


Also read: Conspiracy to reopen the murderous Sterlite! Let’s support the struggling Tuticorin people! | People’s power


Adani Group’s stocks continue to bleed. LIC, which invested in Adani Group, suffered losses in billions. In order to make up for Adani’s loss, LIC was forced to invest another  ₹3 billion in the Adani Group. This has turned the lives of millions of people who invested in the LIC into a big question mark.

For the sustenance of Adani and Ambani in the top of the world’s rich list, the prices of petrol, diesel and LPG in India were maintained at exorbitantly higher rates, though their global prices fell. Billions of rupees was taken from the RBI reserves. Ports, airports, Navratna Public Sector Enterprises, natural resources including water, land and sky are being destroyed for the sake of Ambani and Adani. Laws are being amended to favour them. The political parties are made to abide either willfully or through intimidation; the protesting people face State repression. Those who voice for the people are incarcerated by using draconian laws like UAPA.

The RSS – BJP fascists are gifting the entire country to the Ambani – Adani fascist clique. Hindurashtra is required for them to plunder the country. The fact that the wealth of the Ambani – Adani fascist clique has increased several hundredfold and the accumulation of hundreds of billions of election funds through electoral bonds to the BJP is an example to this.


Also read: The Supreme Court’s confirmed the desicion of 10% reservation! | People’s power Press release


The reason for the prevailing of unemployment – economic crisis – inflation – poverty –hunger is the RSS – BJP; Ambani – Adani fascist clique and the recolonizational policies of privatization – liberalization – globalization pursued by it.

People’s Power is declaring that the Ambani – Adani fascist clique which plunders the people and the country, and the RSS – BJP; Modi – Amit Shah fascist clique which is sacrificing the entire country to the corporate fascist clique as enemies of the people. People’s Power is appealing to the students, youngsters, workers, peasants, fishermen and women to smash the RSS – BJP; Ambani – Adani fascism, in order to get rid of their woes.

With Comradeship,
Comrade Vetrivel Chezhian,
State Secretary,
People’s Power,
Tamil Nadu – Puducherry.
Contact : 99623 66321

மோடியின் முகத்திரையை கிழிக்கும் பிபிசி ஆவணப்படம் | தோழர் அமிர்தா வீடியோ

மோடி அரசு ஏன் இந்த ஆவணப்படத்தை தடை செய்திருக்கிறது? 2002ல் நடந்த குஜராத் கலவரத்தைப் பற்றி எடுக்கப்பட்ட படம் ஏன் இப்பொழுது இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது? ஏனென்றால் அதில் கூறப்பட்டுள்ள அனைத்துமே உண்மையின் சாட்சியமாக அமைந்திருக்கிறது. இந்த ஆவணப்படம் குறித்து ஜே.என்.யூ மாணவர்கள், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள், கேரளா தமிழ்நாட்டு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது உண்மையின் சாட்சியமாக இருப்பதால் ஜனநாயக சக்திகள் இதை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். ஜே.என்.யூ மாணவர்கள் இந்த படத்தை விடுதியில் பார்க்க முயற்சித்த போது அங்கிருந்த ஜனநாயக சக்திகளான மாணவர்கள் மீது ஏபிவிபி மாணவர்கள் கல் எரிந்துள்ளனர்.

மோடி கும்பலை அம்பலப்படுத்தி வெளியாகியிருக்கும் இந்த பிபிசி ஆவணப்படத்தை நாம் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதே போல, இருக்கக்கூடிய தொழிற்சாலைகளிலும் ஒவ்வொரு வீதிகளிலும் கிராமப்புறங்களிலும் நகர்புறங்களிலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க முகத்திரையை கிழிப்பதற்கு இந்த ஆவணப்படத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!

0

னவரி 21 அன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் துருக்கிக்கு எதிராக நடந்த ஒரு போராட்டத்தில் இஸ்லாமிய மதத்தின் புனித நூலாகக் கருதப்படும் குர்ஆன்-ஐ அதிதீவிர வலதுசாரி கட்சியான ஸ்ட்ராம் குர்ஸின் (Stram Kurs) தலைவரான ராஸ்மஸ் பலுதன் (Rasmus Paludan) எரித்தார். இந்த சம்பவம் இஸ்லாமிய நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்வீடனை துருக்கி கடுமையாக கண்டித்துள்ளது. இது ஒரு “கேவலமான செயல்” என்றும் விமர்சித்துள்ளது.

மேலும் ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சரான பால் ஜான்சன், தான் மேற்கொள்ள இருந்த துருக்கி பயணத்தை இரத்து செய்துள்ளார். இந்த சுற்றுப்பயணம் அதன் முக்கியத்துவத்தையும் அர்த்தத்தையும் இழந்துவிட்டதாக துருக்கி அரசு கூறியுள்ளது. ஸ்வீடன் அரசை கண்டித்து துருக்கியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியதை தொடர்ந்து நேட்டோ ராணுவ கூட்டணியில் இணைவதற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஸ்வீடன் விண்ணப்பித்தது (ஃபின்லாந்தும் விண்ணப்பித்துள்ளது). நேட்டோ கூட்டணியில் உள்ள 30 உறுப்பு நாடுகளும் அங்கீகரித்தால் மட்டுமே புதிதாக ஒரு நாடு அதில் இணைய முடியும். ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து இணைவதை துருக்கி மற்றும் ஹங்கேரி நாட்டு நாடாளுமன்றங்கள் அங்கீகரிக்கவில்லை. ஹங்கேரி வருகின்ற பிப்ரவரி மாதம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபின்லாந்தை கனிவாக அணுகும் துருக்கி, ஸ்வீடன் இணைவதை மட்டும் கடுமையாக எதிர்த்து வருகிறது.

துருக்கியின் ஆட்சேபனையை எதிர்த்து ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வலதுசாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தீவிர வலதுசாரி கட்சியான ஸ்ட்ராம் குர்ஸின் தலைவரான ராஸ்மஸ் பலுதன் குர்ஆன் பிரதியை எரித்தார். இதற்கு முன்னதாக, ஒரு போராட்டத்தில் துருக்கிய அதிபர் ரிசெப் தையிப் எர்துவான்-இன் (Recep Tayyip Erdoğan) உருவபொம்மை தலைகீழாக கம்பத்தில் தொங்கவிடப்பட்டது.


படிக்க: துருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘


“கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லிம் விரோத செயல்களை அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பும் (Organisation of Islamic Cooperation), பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் குர்ஆன் எரிக்கப்பட்டதை கண்டித்துள்ளன.

துருக்கி அரசிற்கு எதிராக ஆயுதமேந்திய குர்திஷ் குழுக்கள் போராடி வருகின்றன. அதிலும் குறிப்பாக, 1984-ஆம் ஆண்டிலிருந்து ஆயுதமேந்தி போராடி வருகிறது குர்திஷ் தொழிலாளர் கட்சி (Kurdistan Workers Party PKK). பி.கே.கே ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, துருக்கி, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குர்திஷ் தொழிலாளர் கட்சியின் (பி.கே.கே) சில உறுப்பினர்களுக்கும், 2016-ஆம் ஆண்டில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட சிலருக்கும் ஸ்வீடன் புகலிடம் அளித்துள்ளதாகவும், அவர்களை துருக்கிக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் துருக்கி அரசு ஸ்வீடனிடம் கோரியுள்ளது; 120 பேரின் பெயர் பட்டியலை ஸ்வீடனிடம் கொடுத்திருக்கிறது துருக்கி.

மேலும், வருகின்ற மே மாதம் துருக்கியில் தேர்தல் நடைபெற உள்ளதால், ஸ்வீடனை எதிர்ப்பதன் மூலம் தேசவெறியை கிளப்பி வாக்குகளை அறுவடை செய்ய முயற்சி செய்கிறார் துருக்கி அதிபர் எர்துவான். ஸ்வீடன் நேட்டோவில் இணைவதை மத்திய ஆசியாவின் பிராந்திய வல்லரசான துருக்கி எதிர்ப்பதற்கு இவை மட்டும் காரணமல்ல.


படிக்க: துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !


2014-ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைனின் பகுதியான கிரிமியாவை (Crimea) இணைத்துக் கொண்ட பின்பு, உக்ரைன் தனது ஆயுதப் படைகளை நவீனப்படுத்திக் கொள்ள துருக்கி அதீத ஒத்துழைப்பு வழங்கிவருகிறது; நவீன ஆளில்லா விமானங்களை விற்பனை செய்யவும் உக்ரைனுடன் ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டது. அதேவேளையில், மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது விதித்தது போன்றதான பொருளாதாரத் தடைகளை விதிக்க நேட்டோ உறுப்பினரான துருக்கி மறுத்துவிட்டது.

ரஷ்யாவின் இயற்கை எரிவாயு உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. அதை மாற்றுப்பாதையில் துருக்கி வழியாகக் கொண்டு செல்லும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை (TurkStream pipeline project), உக்ரைன் மற்றும் மேற்குலக நாடுகளின் எதிர்ப்பையும் கடந்து, ரஷ்யாவுடன் துருக்கி மேற்கொண்டது. மேலும், கடந்த 2017-ஆம் ஆண்டில் அமெரிக்க எதிர்ப்பையும் கடந்து, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை வாங்குவதற்கே அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், நேட்டோ உறுப்பினரான துருக்கி ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை வாங்கியுள்ளது.

நேட்டோ உறுப்பினராக இருப்பதன் மூலம் மேற்குலக நாடுகளின் கூட்டாளியாக விளங்கும் அதே வேளையில் ரஷ்யாவுடனான தனது உறவையும் பேணிக் கொள்கிறது துருக்கி. தற்போது ஸ்வீடனின் நேட்டோ இணைவை எதிர்ப்பதன் மூலம் மேற்குலக நாடுகளிடம் பேரம்பேசி மேலும் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு மத்திய ஆசியா – கருங்கடல் பகுதியில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எத்தனிக்கிறது.

பொம்மி

நாட்டை சூறையாடிய கொள்ளைக்காரனே அதானி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

30.01.2023

நாட்டை சூறையாடிய கொள்ளைக்காரனே அதானி!

அம்பானி  – அதானி பாசிசக் கும்பலுக்கு நாட்டைக் காவு கொடுத்த
ஆர் .எஸ் .எஸ் – பாஜக ; மோடி பாசிசக் கும்பலே குற்றவாளிகள் !

பத்திரிகை செய்தி

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரனும் உலக அளவில்  பணக்காரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில்  இருந்த அதானி ஒரு மாபெரும் மோசடிக்காரன், தேசத் துரோகி , கொள்ளைக்காரன் என்பதை ஹிண்டன் பர்க் ஆய்வறிக்கை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

லெட்டர் பேடு கம்பெனி ஒன்றை ஆரம்பித்து,  அதனை மிகப்பெரிய கம்பெனி போல பில்டப் செய்து, அதன் பெரும்பான்மைப் பங்குகளை தானே வாங்கிக் கொண்டு , மீதமுள்ள பங்குகளை பாசிச மோடி- அமித்ஷா கும்பலின் உதவியால் எல் .ஐ .சி யை மிரட்டி   வாங்க வைத்து , பங்கு மதிப்புகளை செயற்கையாக எகிற வைத்து, அதனை அடமானம் வைத்து பல்லாயிரக்கணக்கான கோடிகளை எஸ்பிஐ வங்கிகளில் கடன் வாங்கி அடுத்த இன்னொரு கார்ப்பரேட் கம்பெனியை ஆரம்பிப்பது. இப்படிப்பட்ட மோசடித்தனமான பல்வேறு வேலைகளில் ஈடுபட்டதன் மூலம் மட்டுமே கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பணக்காரனாக மாறி இருக்கிறார் அதானி.

படிக்க : ஒரே நாடு, ஒரே தேர்தல் – ரிமோட் வாக்களிப்பு இந்து ராஷ்டிரத்துக்கான அடுத்த நகர்வில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள்!

அதானியின் இந்த மோசடிகளை அம்பலப்படுத்தி இருக்கின்ற ஹிண்டன் பார்க் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள அதானி நிறுவனம், இந்திய நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் சதி என்று இந்திய தேச பெருமையில் ஒளிந்து கொள்கிறது.

கடந்த மூன்று நாட்களில் அதானியின் பங்கு மதிப்பு பெரும் அளவில் சரிந்து இருக்கின்றன .அதில் முதலீடு செய்துள்ள எல். ஐ .சி மிகப்பெரிய அளவில் பல நூறு கோடிகளை இழந்திருக்கிறது.  தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி கட்ட வேண்டும் என்பதற்காக மேலும் 300 கோடி ரூபாய்  பங்குகளை எல்ஐசி, அதானி நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறது . இதனால் எல். ஐ. சி யில் முதலீடு செய்துள்ள இந்த நாட்டின் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வு என்னாகப் போகிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

அதானியும் அம்பானியும் இந்திய உலக பணக்கார வரிசைகளில் முதல் சில இடங்களில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக, உலக அளவில் கச்சா எண்ணை வெகுவாக குறைந்த போதும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியில் இருந்து பல்லாயிரக்கணக்கான கோடிகள் களவாடப் பட்டிருக்கின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள் , நவரத்தினங்கள் என்று சொல்லக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களும் நீர், நிலம், ஆகாயம் என அனைத்து இயற்கை வளங்களும்   அம்பானி அதானிகளுக்காக பலியிடப்படுகின்றன .அதற்கேற்றபடி சட்ட திட்டங்கள் திருத்தப்படுகின்றன. கட்சிகள் மிரட்டி உருட்டி வழிக்கு கொண்டு வரப்படுகின்றன .போராடுகின்ற மக்கள் மீது அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இந்த நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் எல்லாம்  ஊபா போன்ற கருப்பு சட்டங்களால் சிறை வைக்கப்படுகின்றார்கள் .

இந்த அம்பானி ,அதானி பாசிஸ்டுகளுக்கு இந்த நாட்டையே ஆர். எஸ். எஸ் – பாஜக பாசிஸ்டுகள் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டினை முழுவதுமாக ஒட்டச் சுரண்டுவதற்கு அவர்களுக்கு தேவைப்படுவது தான் இந்து ராஷ்டிரம் .  கடந்த எட்டு ஆண்டுகளில் அம்பானி, அதானி பாசிசக் கும்பலின் சொத்து மதிப்பு பல நூறு  மடங்குகள் உயர்ந்து இருப்பதும்  பாரதிய ஜனதா கட்சிக்கு பல்லாயிரம் கோடிகள் தேர்தல் நிதி பத்திரங்கள் சேர்ந்திருப்பதுமே இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

படிக்க : அதானியே நமோ நமஹா!

இதன் நாட்டில் உள்ள வேலையின்மை  – பொருளாதார நெருக்கடி – விலைவாசி – பசி- பஞ்சம்- பட்டினி அனைத்துக்குமே மூலக் காரணம் இந்த ஆர்எஸ்எஸ் – பாஜக ;அம்பானி- அதானி பாசிச கும்பலும்  அவர்கள் பின்பற்றும் தனியார்மயம்  – தாராளமயம் உலகமயம் என்ற மறு காலனியாக்கக் கொள்கைகளும் தான் .

இப்படி நாட்டையும் நாட்டு மக்களையும் கொள்ளையடித்த அம்பானி – அதானி பாசிசக் கும்பலும் அவர்களுக்கு நாட்டையே காவு கொடுத்த ஆர்எஸ்எஸ்  – பாஜக ; மோடி – அமித்ஷா பாசிச கும்பலும் இந்த நாட்டு மக்களின் எதிரிகள் மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது. இந்த நாட்டில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளிகள், விவசாயிகள், மீனவர்கள், பெண்கள் என அனைவருக்குமே  தங்கள் இன்னல் தீர   வேண்டுமென்றால் அதற்கு முதலாக ஆர். எஸ் .எஸ் –  பாஜக ;அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர்.சி .வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம் ,
தமிழ்நாடு புதுவை
9962366321

“இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்பட திரையிடலை வரவேற்போம்! | மக்கள் அதிகாரம்

30.01.2023

பல்கலைக்கழக மாணவர்களின் “BBC Documentary: The Modi Question”
ஆவணப்பட திரையிடலை வரவேற்போம்!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, மோடி – அமித்ஷா பாசிச கும்பலை மக்கள் மத்தியில்
அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவோம்!

டந்த 10 நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி “BBC Documentary: The Modi Question”. இதனை முதல் பாகம் ஜனவரி 17ம் தேதியும், இரண்டாவது பாகம் 24ம் தேதியும் பி.பி.சி வெளியிட்டது. ஆவணப்படத்தை இந்திய சமூக வலைதளங்களில் வெளியிட ஒன்றிய அரசு தடைசெய்துள்ளது.

இந்த ஆவணப்படம் குஜராத் இனப்டுகொலையை அம்பலப்படுத்தியிருக்கிறது என்பதே தடைசெய்ய காரணம். 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் இசுலாமிய மக்களுக்கு எதிரான இனபடுகொலை நடந்தேறியதில் அன்றைய குஜராத் முதலைமைச்சர் இன்றைய பிரதமர் மோடிக்கு தொடர்புள்ளது என்பதை விவரிக்கிறது. ஆவணப்படமானது குஜராத் கலவரத்தின் குற்றவாளி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, மோடி – அமித்ஷா கும்பல் தான் என்பதை மீண்டும் உலகறிய செய்திருக்கிறது.

டெல்லி ஜே.என்.யு மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள், புனேவில் உள்ள FTII(Film and Television Institute of India) மாணவர்கள், மும்பையில் TISS(Tata Institute of Social Sciences) மாணவர்கள், ஹிமாச்சல் பிரதேச பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஆவணப்படத்தை திரையிட்டுள்ளனர்.


படிக்க: “இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!

TISS மாணவர்கள் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்த வந்தபோதும் 200 மாணவர்கள் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு திரையிடல் செய்துள்ளனர். ஜே.என்.யூவில் திரையிடல் செய்தபோது கல்லூரி நிர்வாகம் மின் இணைப்பை துண்டித்துள்ளது. மேலும், ஏ.பி.வி.பி அமைப்பினர் திரையிட்ட மாணவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹைதராபாத் பல்கலைக்கழத்தில் ஆவணப்பட திரையிட்ட போது அதற்கு எதிராக ஏ.பி.வி.பி அமைப்பினர் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை திரையிட்டுள்ளனர். ஹிமாச்சல் பல்கலைக்கழக நிர்வாகம் படத்தை திரையிட கூடாது என மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொல்கத்தா பீம் ஆர்மி மாணவர் கூட்டமைப்பு திரையிட திட்டமிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி ஜே.என்.யு மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் 24 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.

சென்னையில் கவுன்சிலர் தலைமையில் திரையிட முயன்றபோது கவுன்சிலரை கைது செய்துள்ளது. கோவையில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக திரையிட இருந்தது, சென்னையில் கைது செய்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் திரையிட திட்டமிட்டத்திற்கே காவல்துறை அனுமதி தர மறுத்து திரையிட்டால் கைது செய்வோம் என்ற தோரணையில் காவல்துறை மிரட்டியுள்ளது.


படிக்க: தொடர்ந்து பாசிச அரசால் ஒடுக்கப்படும் ஜே.என்.யு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஷெக்லா ரஷித்!


எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு மாணவர்கள் திரையிட்டிருக்கிறார்கள் என்பதை வரவேற்றாக வேண்டும். மாணவர்கள் பாசிஸ்டுகளுக்கு ஒருபோதும் அஞ்சி நிற்க மாட்டார்கள் என மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. இதற்கு முன்கையெடுத்து பல்வேறு மாநிலங்களில் திரையிட்டுள்ள இந்திய மாணவர் சங்கம் மற்றும் இடதுசாரி அமைப்புகளை வரவேற்க வேண்டும்.

குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, மோடி – அமித்ஷா கும்பல் செய்த கொடூரங்களை முழுமையாக இந்த ஆவணப்படம் கூறாவிட்டாலும் மீண்டும் ஓர் விவாதப் பொருளாக்கியதை நாம் வரவேற்க வேண்டியிருக்கிறது. இந்துராஷ்டிர கனவோடு திரிந்து கொண்டிருக்கும் பாசிச கும்பலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டிய கடமை அனைத்து ஜனநாயக, முற்போக்கு அமைப்புகள், சக்திகள் செய்ய வேண்டியுள்ளது.

பொய்கள், பேச்சுரிமை மறுப்பு, அடக்குமுறைகள், வெறியூட்டல்கள் இவை பாசிசத்தின் ஆயுதங்கள். 2002 இனபடுகொலையை எத்தனை தடைகளாலும் மறைக்க முடியாது என்பதை பாசிஸ்டுகளுக்கு செவிட்டில் அடித்துக் கூறுவோம். இனப்படுகொலையாளர்களான ஹிட்லர் – முசோலினியை அந்நாட்டு மக்கள் பழிதீர்த்தது போல் இந்திய மக்களும் காவி பாசிஸ்டுகளை பழிதீர்ப்பார்கள்.

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202

மக்கள் அதிகாரம் இரண்டாவது பொதுக்குழு தீர்மானங்கள்!

29.01.2023

மக்கள் அதிகாரம் இரண்டாவது பொதுக்குழு தீர்மானங்கள்
மக்கள் அதிகாரம் மாநிலப் பொதுக்குழு 2023
“ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!”

பத்திரிகை செய்தி

ன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, உழைக்கும் மக்களே!
29.01.2023 ம் தேதி விருத்தாச்சலத்தில் மக்கள் அதிகாரம் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 2022 ம் ஆண்டு வேலையறிக்கை பரிசீலனையை மேற்கொண்டு 2023ம் ஆண்டுக்கான வேலைத்திட்டத்தையும் மாநிலப்பொதுக்குழு வகுத்தது. கடந்த ஆண்டு மக்கள் அதிகாரத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வேலைகலையும் அங்கீகரித்ததுடன் புதிய வேலைகளை மேற்கொள்ளவும் வழிகாட்டியது. மக்கள் அதிகாரத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் தலைமை ஏற்றார். கடந்த ஆண்டில் இறந்த மக்கள் அதிகாரத்தின் இராஜபாளையம் பகுதி செயலாளர் தோழர் சம்மனஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் மக்கள் அதிகாரம் பொதுக்குழு 17 தீர்மானங்களை தோழர் அமிர்தா வாசித்து பொதுக்குழு கரவொலி எழுப்பி நிறைவேற்றியது.
உணர்வுப்பூர்வமாகவும், உற்சாகமாகவும், மக்கள் அதிகாரம் கொள்கையை உயர்த்திப்பிடிக்க இப்பொதுக்குழு உறுதி பூண்டது. இறுதியில் கோவை மண்டல செயலாளர் நன்றியுரை தெரிவித்தார்.

தீர்மானங்கள்

  1. 2015-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நமது பெருமைக்கும் மதிப்புக்கும் உரிய அமைப்பான மக்கள் அதிகாரம் மூலமாக கட்டமைப்பு நெருக்கடி அரசியலை முன்வைத்தோம். “ஆளத் தகுதியிழந்தது அரசு கட்டமைப்பு, இதோ, ஆள வருகிறது மக்கள் அதிகாரம்” என்ற முழக்கங்களை தொடக்கத்தில் முன்வைத்தாலும், நடைமுறையில் இந்தக் கட்டமைப்பிற்குள்ளே தீர்வுகளை முன்வைத்து செயல்பட்டோம். தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நமது அமைப்பு விரிவடைந்திருந்தாலும். முறையான அமைப்பு முறைகளை வகுக்காமலும், கிளைகளைக் கட்டி செயல்படும் கண்ணோட்டம் இல்லாமலும். இயங்கினோம். இதனால், அமைப்பிற்குள் அரசியலற்ற, மக்களிடமிருந்து தனிமைப்பட்ட குட்டி முதலாளியக் கண்ணோட்டம் மேலோங்கியது. அதன் தொடர்ச்சியாக, அமைப்பு விரோத சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராஜு-காளியப்பன் கும்பலை 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமைப்பில் இருந்து வெளியேற்றினோம்.
    இச்சூழலில், அமைப்பின் அரசியல்-அமைப்பில் உள்ள குறைபாடுகள், தவறுகளைத் திருத்திக் கொண்டு செயல்படும் வகையில், அமைப்புக்கான முறையான கொள்கை அறிக்கை – அமைப்பு விதிகளை வகுத்து அமைப்பை முறைப்படுத்த முடிவெடுத்தோம். அதன் பொருட்டு, 2022 – ஜனவரி 28-ஆம் தேதி மக்கள் அதிகாரம் அமைப்பு மாநாட்டில் கொள்கை அறிக்கை, அமைப்பு விதிகளை வகுத்து நிறைவேற்றினோம்.நாட்டின் முன்பு, மக்களின் முன்பு இருக்கும் முதன்மையான கடமையான காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதுதான் என்றும், மக்கள் அதிகாரம் கம்யூனிசக் கொள்கையைக் கொண்ட அமைப்பு என்றும் இந்த மாநாடு உற்சாகத்துடன் முழங்கியது.
    நாம் சரியான திசையில் பயணிக்க தொடங்கி விட்டோம் என்ற புத்துணர்ச்சியையும், நம்பிக்கையையும் இந்த பொதுக்குழு விதைத்தது.
  2. பாசிச எதிர்ப்பு என்ற முழக்கத்தை ஃபேஷனாக முழங்கிக் கொண்டு தி.மு.க.விற்கு வாலாகப் போய் சீரழிந்த, புரட்சிகரமான வழியில் மக்களைத் திரட்டுவதில் நம்பிக்கையிழந்த ராஜு -காளியப்பன் கும்பல், நாம் அமைப்பு மாநாடு நடத்தியதைக் கண்டு எரிச்சலடைந்தது. எதையும் சொந்த முயற்சியில் செய்வதற்கு வக்கற்ற இந்த கும்பல், “போலச் செய்தல்” என்ற நோயினால் பீடிக்கப்பட்டு தானும் அமைப்பு மாநாடு நடத்துவதாக ஜம்பமடிக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டதானது, நமது முதலாவது அமைப்பு மாநாட்டின் வெற்றிகளில் ஒன்றாகும்.இதுமட்டுமல்ல, நாங்கள் தான் ‘ஒரிஜினல்’ மக்கள் அதிகாரம் என்று ராஜு -காளியப்பன் கும்பல் வெளியிட்ட அறிக்கையில் “நாங்கள் கம்யூனிச அமைப்பு அல்ல” என்று தங்களை தாங்களே அம்பலப்படுத்தி கொண்டதானது, மக்கள் அதிகாரம் அமைப்பில் இருந்து அக்கும்பலை வெளியேற்றிய நிகழ்வு சரியானது என்பதற்கு நிரூபணமாகும். மேலும், அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அமைப்பு முறை, தேர்தல் நடத்துவது – என அனைத்திலும் முறைகேடுகளைச் செய்து, தாங்கள் தான் ‘பெரும்பான்மை’ என்று இக்கும்பல் போங்காட்டம் செய்ததானது கேலிக்கூத்தாகும் என்று மக்கள் அதிகாரம் பொதுக்குழு அம்பலப்படுத்துகிறது.
  3. இதேவேளையில், 2022 ஜூன் மாதத்தில், எந்த அமைப்பு முறைக்கும் கட்டுப்படாத, அராஜகத்தையே வாழ்வுரிமையாகக் கொண்ட, அமைப்பு விரோத செயல்களையும் கட்டப் பஞ்சாயத்தையுமே நடைமுறையாகக் கொண்ட, கொள்கை-கோட்பாடுகளைப் பற்றிய வாசனைகூட அறியாத தருமபுரி முத்து-கோபி கும்பல், சதிவேலைகளில் ஈடுபட்டு அமைப்பை விட்டு ஓடிப்போனதைத் தொடர்ந்து அக்கும்பலை வெளியேற்றியதை மக்கள் அதிகாரம் பொதுக்குழு வரவேற்கிறது.காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடித்து பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைக்கும் நோக்கத்தை மக்கள் அதிகாரத்தின் முதலாவது மாநாட்டில் ஏற்றுக்கொண்ட இந்த கும்பல், ராஜு -காளியப்பன் கும்பல் வழியில், அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அமைப்பு முறை, தேர்தல் என அனைத்திலும் முறைகேடுகளைச் செய்து தாங்கள் தான் ‘பெரும்பான்மை’ என்று போங்காட்டம் செய்தது.
    தருமபுரி முத்து-கோபி கும்பல் ஒருபக்கம், மக்கள் அதிகாரத்தின் கொள்கையை ஏற்றுக்கொள்வதாகக் கூறிக்கொண்டே, காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான ‘வீச்சான’ இயக்கம் எடுக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே, அக்கொள்கைகளைக் கைவிட்டு, நமது அமைப்பின் தொடக்க காலத்தில் பின்பற்றப்பட்ட அரசியலற்ற, மக்களிடமிருந்து தனிமைப்பட்ட, குட்டி முதலாளிய, பிரபலம் தேடும் பிரச்சாரத்தை செய்வதன் மூலம் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது.இக்கும்பல் தற்போது, மோடி-அமித்ஷா பாசிச கும்பலின் இந்தி மொழித் திணிப்பை வெறும் மொழித்திணிப்பு என்று தமிழினவாத கண்ணோட்டத்தில் சுருக்கி பிரச்சார இயக்கம் எடுத்திருப்பதும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை மக்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வெறும் பொருளாதாரப் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்த்து, இயக்கம் எடுத்ததும் இதற்கு சிறந்த சான்றுகளாகும்; இவை, காவி-கார்ப்பரேட் பாசிசத் தாக்குதல்களின் கொடூரத்தை மறைக்கும் துரோக நடவடிக்கைகளாகும். பல கோஷ்டிகளாகவும் கட்டப் பஞ்சாயத்து வழிமுறைகளையே கொள்கையாகவும் கொண்டுள்ள தருமபுரி முத்து-கோபி கும்பல் ‘அரசியல்’ சக்தி போல வேடமணிந்து திரிவது அதன் இயல்புக்கு மாறானது, அந்த வேடம் விரைவில் கலைவது திண்ணம் என்பதையே மேற்கண்ட நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
  4. மக்கள் அதிகாரத்தின் கொள்கையைக் கைவிட்டு தி.மு.க.விடம் தஞ்சம் புகுந்துள்ள ராஜு –காளியப்பன் கும்பல், மக்கள் அதிகாரம் பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 2022 ஜூன் மாதம் நம்முடைய அமைப்பை எந்த கூட்டமைப்புகளிலும் சேர்க்கக்கூடாது என்று பிற அமைப்புகளைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கியது; அது எடுபடாத நிலையில் மூக்குடைபட்டுப் போயுள்ளது. சகோதர அமைப்புகளுடன் இணைந்து செப்டம்பர் 17-இல் நாம் நடத்திய “ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!” மாநாட்டை சீர்குலைக்கும் விதமாக, சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்தது. இதனையும் மீறி நாம் நடத்திய மாநாடு வெற்றியடைந்தது. மக்கள் அதிகாரத்தை சீர்குலைக்கும் இந்த கும்பலின் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால் இக்கும்பல் விரக்தியடைந்து, ஆத்திரத்தில் கையைப் பிசைந்து கொண்டுள்ளது.பிழைப்புவாதமெனினும், அது தற்போது ஏற்றுக்கொண்டுள்ள தி.மு.க. ஆதரவு அரசியல் அடிப்படையில் அரசியல் சக்தியாக செயல்பட்டால் குறைந்தபட்சம் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலிலாவது நீடிக்க முடியும். அதனை விடுத்து, மக்கள் அதிகாரத்தையும் புரட்சிகர அமைப்புகளையும் சீர்குலைக்கும், காட்டிக் கொடுக்கும் வேலைகளைத் தொடர்ந்து இக்கும்பல் செய்துவந்தால், இக்கும்பல் மேலும் நெருக்கடியில் சிக்கி, சிறுத்து, சிதறுண்டு போவதும், இதன் அணிகள் அரசியல் அனாதைகளாக்கப்படுவதும் திண்ணம் என இந்த மக்கள் அதிகாரம் பொதுக்குழு எச்சரிக்கிறது.
  5. டாஸ்மாக் பிரச்சினை முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளிலும் இக்கும்பல் ஆளும் திமுக-வின் ஒட்டுவாலாக செயல்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மக்கள் போராட்டத்தை சிறுமைப்படுத்தி, அது ஆர்.எஸ்.எஸ்.-ஆல் தூண்டிவிடப்பட்ட கலவரம் என்று கூறி மக்கள் மீதான தி.மு.க. அரசின் அடக்குமுறையை நியாயப்படுத்தி, தி.மு.க.வைக் காப்பாற்ற முயன்று தோற்றுப்போனது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் கூட தி.மு.க.விற்கு ஆதரவாகவே செயல்பட்டது. இவ்வாறு அரசியல் ரீதியாக தோல்வியடைந்த ராஜு –காளியப்பன் கும்பலுக்கு “மக்கள் அதிகாரம்” பெயரை பயன்படுத்த எவ்வித உரிமையும் இல்லை என்று மக்கள் அதிகாரம் பொதுக்குழு கண்டனம் தெரிவிக்கிறது.
  6. காவி-கார்ப்பரேட் பாசிசம் என்பதன் இன்றைய குறிப்பான வடிவம், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசமாகும். இந்தப் பாசிச கும்பல், இந்தியாவில் பாசிசத்தை நிலைநாட்டுவதற்கான இறுதிக் கட்ட வேலையில் இறங்கியுள்ளது. 1947-இல் கொண்டுவரப்பட்ட போலி ஜனநாயக நாடாளுமன்ற அரசமைப்பை முற்றாகத் தூக்கியெறிந்து அதிபர் ஆட்சி முறையை நிலைநாட்டவும், அதன் வழியே இந்து ராஷ்டிரத்தை அறிவிக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளது. இதற்காக, 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது “ஒரு நாடு, ஒரு தேர்தல்” என்ற ‘முடியாட்சி’ முறையை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து தயாரிப்புகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.தீர்க்கமுடியாத, மீளமுடியாத நெருக்கடியில் சிக்கியுள்ள ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்காகவும், இலாப வெறியுடன் நிதிமூலதன ஆதிக்கத்திற்காக அலைந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனிற்காகவும், மக்களை ஒட்டச் சுரண்டும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்த இந்த கும்பல், தீராத கார்ப்பரேட் வெறியுடன் செயல்படுகிறது. அவை, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மிகப்பெரும் அளவில் பறித்துவிட்டது. நாளும் அதிகரித்து வரும் விலையேற்றம், வேலையின்மை, தீராத வறுமை – இதனை நமக்கு பொட்டில் அறைந்தார்ப் போல உணர்த்துகின்றன. அண்மையில் வெளிவந்த ஆக்ஸ்ஃபாம் (oxfam International) அறிக்கையானது, இந்தியாவில் ஒரு சதவிகித பணக்காரர்களிடம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தில் 40.5 சதவிகிதம் குவிந்திருப்பதாக கூறுகிறது. உலகின் இரண்டாவது பணக்காரராக அதானி உயர்ந்ததற்குக் காரணம், கடந்த ஓராண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 46 சதவிகிதம் உயர்ந்ததுதான். நாட்டின் 50 சதவிகித மக்களிடம் 64 சதவிகித வரி விதிக்கப்படுவதும், கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகை, மானியங்கள், தொழில் கடன் மற்றும் கடன் தள்ளுபடி – என மக்கள் வரிப் பணத்தை வாரிக் கொடுப்பதும்தான் இதற்கு அடிப்படையாகும்.உலகம் முழுவதும் உற்பத்தித் தேக்கமும் பணவீக்கமும் இணைந்த தேக்க-வீக்கநிலை (Stag-flation) தாக்கிவருவதாக ஏகாதிபத்தியவாதிகள் அலறுகின்றனர். ஆனால், நமது நாட்டில் ஆளும் வர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை மறைத்து, நாடு முன்னேறி வருவதாக வெற்றுச் சவடால் அடித்து வந்த மோடி-நிர்மலா கும்பலே, தற்போது நமது நாட்டிலும் அத்தகைய சரிவுநிலை வரப் போகிறது என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது. இது, இக்கும்பல் நாட்டு மக்கள் மீது மேலும் கடுமையான தாக்குதலை தொடுப்பதற்கும், பாசிசத்தை அறிவிப்பதற்குமான அபாயகரமான சூழல் நெருங்கிவிட்டதை உணர்த்துகிறது. இதனை உணர்ந்து புரட்சிகர, ஜனநாயக, பாசிச எதிர்ப்பு சக்திகள் அனைவரும் இக்கும்பலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது, காலத்தின் கட்டாயமாகும் என்று மக்கள் அதிகாரம் பொதுக்குழு முடிவு செய்கிறது.
  7. ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிச கும்பலின் இந்த பாசிசப் போக்கைப் புரிந்து கொள்ளாமலும், புரிந்தாலும் தங்களது சந்தர்ப்பவாதக் கொள்கைகள் காரணமாக மறைத்துக் கொண்டும், எதிர்க்கட்சிகள் தேர்தல் கூட்டணிகளை அமைத்து 2024 தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. மற்றொருபுறம், தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை மோடி-அமித்ஷா கும்பல் பாணியிலேயே நடைமுறைப்படுத்தவும் செய்கின்றன; பாசிசம் அரங்கேறுவதற்கான ஊற்றுமூலமாகவும், முக்கிய காரணமாகவும் உள்ள இன்றைய போலி ஜனநாயக அரசியலமைப்பு முறையைக் கட்டிக்காத்து, அதனை பாசிச மோடி – அமித்ஷா கும்பலின் பிடியிலிருந்து மீட்கப் போவதாகவும் கூறுகின்றன.போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் வழியாகவும் மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாகவும்தான் இந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் வளர்ந்து, இன்று அரியணை ஏறும் நிலையை அடைந்துள்ளது. இச்சூழலில், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசத்தை எதிர்க்கும் கட்சிகள், அமைப்புகள் மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து நிறுத்தவும், கார்ப்பரேட் ஆதிக்கத்தை முறியடிக்கவும், உழைக்கும் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கும் “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை” அமைக்கும் நோக்கத்தில் தற்போதே ஒன்றிணைந்து போராடுவது மிக அவசியமாகும். உழைக்கும் மக்களின் பாசிச எதிர்ப்பு எழுச்சியில் உருவாகும் புதியதொரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசானது, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி, அதனைச் செயல்படுத்தும் அதிகாரத்தை மக்களுக்கே அளிப்பதன் மூலமாகத்தான் தற்போதைய ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிக்கவும் பாசிச கும்பல்கள் வேறு வடிவங்களில் மீண்டும் தலைதூக்காமல் தடுக்கவும் முடியும் என்பதை மக்கள் அதிகாரத்தின் இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.
  8. இந்த தெளிவான அரசியல் கண்ணோட்டத்தில், பாசிசம் அரங்கேறும் இச்சூழலில், பாசிசத்திற்கு எதிராக போராடுகின்ற அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில், நமது அமைப்பில் தலைவிரித்தாடிய பிரபலம் தேடும் பிரச்சார முறையில் இருந்து விடுபட்டு, அரசியல் திசைவழியில் ஊன்றி நின்று உழைக்கும் மக்களிடம் ஐக்கியப்படும் வகையில், இந்த ஓராண்டில் மக்கள் அதிகாரம் செயல்பட்டு அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் வளரத் தொடங்கியுள்ளது. மக்கள் தலைவர்களை உருவாக்கும் திசையில் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளது. மக்கள் அதிகாரம் முன்வைத்த அரசியல் நிலைப்பாடுகளின் தனித்துவம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் காரணமாகவும், அதன் புதிய அமைப்பு நடைமுறைகளாலும் இந்த முன்னேற்றத்தை சாதிக்க முடிந்துள்ளது.
  9. ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசத்திற்கு எதிராகவும் உழைக்கும் மக்கள் மீதான பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்த ஓராண்டில் மக்கள் அதிகாரம் தனது அமைப்பு பலத்திற்கேற்ப போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், இயக்கங்கள், கண்டன அறிக்கைகள், உரைகள் என பல்வேறு வகைகளில் ஊக்கமாக செயல்பட்டு வந்துள்ளது.முசுலீம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை, தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை – ஆகியவற்றை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டம், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியுடன் இணைந்து நடத்திய போராட்டம், ஆ.ராசாவுக்கு எதிராக சங்கிகளின் அவதூறுகளுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம், இந்தி மொழித்திணிப்புக்கு எதிராக ஜனவரி 25 நடத்திவரும் இயக்கம் – போன்றவற்றை இந்த பொதுக்குழு முன்னுதாரணமிக்க இயக்கங்களாக வரவேற்கிறது.கள்ளக்குறிச்சி மக்கள் போராட்டத்தை ஆதரித்து மக்கள் அதிகாரம் எடுத்த நிலைப்பாடும் அதற்காக தொடர்ந்து மேற்கொண்ட போராட்டங்களும் மிகச் சரியானதாகவும் மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரத்தின் மதிப்பு உயர்வதற்கு காரணமாகவும் அமைந்தது.மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு) உள்ளிட்ட சகோதர அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட “அமெரிக்க உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம்! இந்தியாவில் தீவிரமாகி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்!” என்ற தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட மே தின ஆர்ப்பாட்டங்கள், “ஆர்.எஸ்.எஸ்.-பாஜக; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் சகோதர அமைப்புகளுடன் இணைந்து நடத்திய செப்டம்பர் மாநாடு, “நவம்பர் 7- ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! டிசம்பர் 21 ஹிட்லர்-முசோலினியின் பாசிசத்தை வீழ்த்திய பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை நெஞ்சிலேந்துவோம்! சிறுதொழில்கள் நசிவு – வேலையின்மை விலையேற்றம் – பாசிச அடக்குமுறைகள்; ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க: அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இயக்கம் போன்றவற்றில் மக்கள் அதிகாரம் ஊக்கமாக செயல்பட்டுள்ளதை இந்த பொதுக்குழு வரவேற்கிறது.கார்ப்பரேட் ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை மக்கள் மீது திணிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக இனம், மொழி, மதம் கடந்து உருவான இலங்கை மக்கள் எழுச்சியை வரவேற்று, மக்கள் அதிகாரம் அமைப்பானது பிரச்சார வெளியீடு கொண்டுவந்து ஆதரவு தெரிவித்துள்ளது.சாத்தியமான இடங்களில் பாசிசத்தை எதிர்க்கும் அமைப்புகளை இணைத்துக் கொண்டு செயல்பட்டுள்ளதையும் இந்த பொதுக்குழு பெருமையுடன் அங்கீகரிக்கிறது.

    கடந்த ஓராண்டில் மக்கள் அதிகாரத்தின் அரசியல் ரீதியிலான செயல்பாடுகள் காரணமாக, ஜனநாயக சக்திகள் நம்மிடம் ஐக்கியப்பட்டுள்ளனர். குறிப்பாக, எஸ்.கே.எம். போன்ற கூட்டமைப்பில் உள்ள அமைப்புகளுடன் தொடர்ந்து பயணித்துள்ளோம். தமிழ் தேச மக்கள் முன்னணி, தமிழ் புலிகள் கட்சி போன்ற அமைப்புகளுடன் தொடர்ந்து அரசியல் ரீதியில் விவாதித்துள்ளோம்; சில பிரச்சினைகளில் இணைந்து செயல்பட்டுள்ளோம். மக்கள் அதிகாரத்தின் சரியான அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக, இவ்வமைப்புகள் மத்தியில் மரியாதையும், நெருக்கமும் உருவாகியுள்ளது. இவற்றின் தொடர்ச்சியாக, நம்முடைய அரசியல் நிலைப்பாடுகளுடன் ஓரளவிற்கு ஒத்த நிலைப்பாடுகளைக் கொண்ட பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் இணைந்து கொள்ளுமாறு அக்கூட்டமைப்பில் இருக்கும் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மக்கள் அதிகாரம் அதில் நிபந்தனைக்குட்பட்டு இணைவதை இந்த பொதுக்குழு அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறது.

  10. இவையன்றி, இந்த ஓராண்டில் சர்வதேசிய, தேசிய முக்கியமான நிகழ்வுகளை ஒட்டியும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை ஒட்டியும் உடனுக்குடன் மாநில தலைமைக் குழு சார்பாக வெளியிடப்பட்ட அனைத்து பத்திரிக்கை செய்திகளையும் இந்த பொதுக்குழு வரவேற்று ஏற்றுக் கொள்கிறது. புதுக்கோட்டை வேங்கைவயல் பிரச்சினையில் உடனடியாக பத்திரிக்கை செய்தி வெளியிடாதது தவறு என்ற மாநில தலைமைக் குழுவின் சுயவிமர்சனத்தை இந்த பொதுக்குழுவும் சுயவிமர்சனமாக உணர்ந்து ஏற்றுக்கொள்கிறது.
  11. தமிழ்நாட்டில் மக்கள் அதிகாரம் செயல்படும் பகுதிகளில் சாத்தியமான மக்கள் பிரச்சினைகளில் தலையிட்டு முன்முயற்சியுடன் செயல்பட்ட மக்கள் அதிகாரம் கிளைத் தோழர்களுக்கு இந்த பொதுக்குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மதுரை கப்பலூர் டோல்கேட் போராட்டம், தலித் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்காக தனியாகவும் கூட்டமைப்புகளுடனும் நடத்தப்பட்ட போராட்டங்கள், பகுதி மக்களின் அடிப்படை தேவைகள், வசதிகள், கோரிக்கைகளுக்காக மக்கள் அதிகாரம் தோழர்கள் நடத்திய போராட்டங்களால் மக்கள் அதிகாரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும் ஐக்கியமும் அதிகரித்துள்ளது; மக்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கையடைந்து, மக்கள் அதிகாரத்தின் கொள்கையையும் செயல்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு உழைக்கும் மக்கள் இணைந்து செயல்பட முன்வருகின்றனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த பொதுக்குழு தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது.அதேவேளையில், இன்னும் பல மக்கள் பிரச்சினைகளில் தலையிட்டு, மக்களுக்கு வழிகாட்டவும் முன்னணியாகவும் செயல்படும் வகையில் விரைவில் மக்கள் அதிகாரம் அமைப்பை மாற்று அரசியல் சக்தியாக வளர்த்தெடுக்க இந்த பொதுக்குழு உறுதியேற்கிறது.
  12. தனியார்மயம், தாராளமயம்-உலகமயக் கொள்கைகளை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் மோடி-அமித்ஷா பாசிசக் கும்பல் அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அம்பானி-அதானி கார்ப்பரேட்களுக்கு தாரைவார்ப்பதை மக்கள் அதிகாரம் பொதுக்குழு வன்மையாக எதிர்க்கிறது.நாட்டை மீண்டும் காலனியாக்கும் வகையில், ஏகாதிபத்திய நாடுகளின் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் இயங்குவதற்குத் தாராள அனுமதி அளித்துள்ளதையும், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா கட்டியுள்ள புதிய “குவாட்” இராணுவக் கூட்டணியையும் மக்கள் அதிகாரம் கடுமையாக எதிர்க்கிறது.நமது நாட்டின் சிறு தொழில்களை நாசமாக்கி, தடையற்ற அந்நிய இறக்குமதிக்கு தாராள அனுமதியளிக்கும் வகையில், ஜெர்மனி, பிரிட்டன், இஸ்ரேல், கனடா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளுடன் இந்தியா போட்டுக் கொண்டுள்ள இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) மற்றும் தடையற்ற அந்நிய முதலீடுகளையும் மக்கள் அதிகாரம் கடுமையாக எதிர்ப்பதுடன், இத்தகைய மறுகாலனியாக்க நடவடிக்கைகளுக்கு எதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டிப் போராடவும் உறுதியேற்கிறது.ஆர்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி – அதானி கார்ப்பரேட் பாசிசக் கும்பலே நாட்டின் முதன்மையான எதிரி என்றும், அனைத்து உழைக்கும் வர்க்க மக்களும் தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டுமென்றால், காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வேரறுக்க வேண்டும் என்றும், அதற்கு மக்கள் தங்களை பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
  13. பீமாகோரேகான் வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்ட போராளிகளின் கணினி, செல்போன் ஆகியவற்றில் திட்டமிட்டு வெளியே இருந்து பொய்த்தகவல்கள் புகுத்தப்பட்டது என்பது ஆய்வில் வெளியாகி உள்ளது. பாசிச மோடி – அமித்ஷா கும்பலுக்கு எதிராகச் செயல்படும், பேசிவரும் அறிவுத்துறையினரை ஒழித்துக்கட்டுவதற்காகவே இந்த பீமாகோரேகான் வழக்கு புனையப்பட்டது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பாசிச மோடி – அமித்ஷா கும்பலின் செயல்பாட்டை மக்கள் அதிகாரம் பொதுக்குழு எதிர்ப்பதுடன், கைது செய்யப்பட்ட அறிவுத்துறையினர் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கோருகிறது.
  14. தமிழ்நாடு அரசு, பரந்தூரில் விமான நிலையம் அமைப்பற்கான பணியை உடனே நிறுத்த வேண்டும், சுற்றுச்சூழலுக்கும் மீனவர்களுக்கும் எதிரான காட்டுப்பள்ளி துறைமுகப் பணிகளை நிறுத்த வேண்டும், அரசுத்துறைகளையும் சமூக நீதி என்ற பெயரில் கல்வித் துறைகளையும் கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும், அதானியின் விழிஞ்ஞம் துறைமுகத் திட்டத்தை கேரள மாநில அரசு நிறுத்த வேண்டும் என்றும் இத்திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும் என்றும் இப்பொதுக்குழு பிரகடனப்படுத்துகிறது.
  15. தமிழ்நாட்டு அரசு, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும், வேதாந்தா ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப்போராடி போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட தூத்துக்குடி தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளிகளான போலீசு உயரதிகாரிகள், போலீசுக்காரர்கள், அரசு அதிகாரிகள், கார்ப்பரேட் வேதாந்த அதிகாரிகள் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பொதுக்குழு அறிவிக்கிறது.
  16. நாகலாந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஆர்.என் ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக்கப்பட்டிருப்பதே தமிழ்நாட்டை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிஸ்டுகள் கைப்பற்றுவதற்காகத்தான். பாசிச உளவு வேலைக்கு அமர்த்தப்பட்ட ரவி, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு, ஆறு தமிழர் விடுதலை உள்ளிட்ட 22 மசோதாக்களுக்கு பதிலேதும் தெரிவிக்காமல் இருக்கிறார்; ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு பதிலேதும் அளிக்காமல், ஆன் லைன் ரம்மி முதலாளிகளைச் சந்தித்தும் இருக்கிறார். இந்தச் சங்கி ஆளுநரான ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை மிரட்டியும் துணைவேந்தர்களை மிரட்டியும் வருகிறார். சனாதனம் தமிழ்நாட்டில்தான் உருவாகியது என்பது போன்ற பொய்கருத்துகளை பரப்பியும் வருகிறார்.நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் பொருத்தமல்ல என்றும் பொங்கல் விழாவில் தமிழ்நாடு அரசின் இலட்சிணையையும் (emblem) தமிழ்நாடு என்ற பெயரையும் நீக்கினார்; சட்ட மன்றத்தில் தமிழ்நாட்டு அமைச்சரவை எழுதிக்கொடுத்த அறிக்கையைத் தனது விருப்பத்திற்கு ஏற்ப திருத்தியும், தமிழ்நாடு, பெண்ணுரிமை உள்ளிட்ட ஜனநாயகக் கூறுகளைப் படிக்காமலும் அவமானப்படுத்தினார். இந்த விசயத்தில், தி.மு.க. அரசு உடனுக்குடன் ஆளுநரின் உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்ததானது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வின் வெளிப்பாடாகும்.தற்போது ஆர்.என்.ரவி தமிழக மக்களின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கி இருந்தாலும், மீண்டும் தமிழ்நாட்டுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பார். தமிழ்ப் பண்பாட்டின் உயிர் நாடியான ஆரிய–பார்ப்பன–வேத எதிர்ப்பை திரிக்கும் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின், தமிழ் மக்களின் எதிரி. இந்த ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டும். ஆளுநர் பதவி போன்ற மக்கள் விரோத அமைப்புகள் இல்லாத பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்புதான் தீர்வு என்பதை உணரவேண்டிய தருணமிது என மக்கள் அதிகாரம் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
  17. ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்கு தமிழ்நாடு தொடர்ந்து ஒரு எதிர்ப்புக் களமாக அமைந்துள்ளது. இந்த ஓராண்டில் மட்டும், ஆ.ராசாவிற்கு எதிரான சங்கிகளின் போராட்டத்திற்கு பதிலடி கொடுத்தது; 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தி கலவரங்களைத் தூண்டுவதற்கான முயற்சிகளைத் தடுத்தது; ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பெயர் தொடர்பான விசயத்தில் பின்வாங்கவைத்தது; அற்ப விசயங்களுக்கெல்லாம் மதச் சாயங்களைப் பூசி மதவெறியூட்டி வந்த பா.ஜ.க.வையும் அண்ணாமலையையும் பின்வாங்க வைத்தது; கோவை கார் சிலிண்டர் வெடிப்பைப் பயன்படுத்தி பா.ஜ.க.வின் முசுலீம் தீவிரவாத பீதியூட்ட நினைத்ததை முறியடித்தது; அம்பேத்கருக்கு காவி துண்டு அணிவித்தது மட்டுமின்றி, அவருக்கு மாலை அணிவிக்க அர்ஜுன் சம்பத்துக்குக் காட்டப்பட்ட எதிர்ப்பு – என பல அரசியல் நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலைத் தமிழ்நாடு பின்வாங்க வைத்துள்ளது.ஆரிய-பார்ப்பன-வேத எதிர்ப்பு மரபைக் கொண்ட தமிழகம் தலைநிமிர்ந்து நின்றாலும், ஆர்.எஸ்.எஸ். அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊடுருவி வருகிறது. தமிழ்நாட்டை ‘விழுங்க’ வேண்டும் என அனைத்து சதி வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால், பாசித்தை எதிர்க்கும் மக்கள் சக்திளான விவசாயிகள்,தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள், பெண்கள் ஆகிய உழைக்கும் மக்களின் அடித்தளத்தில் ஊன்றி நின்று காவி- கார்ப்பரேட் பாசிஸ்டுகளை களத்தில் முறியடிக்கும் வகையிலான பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் இணைந்து போராட முன்வருமாறு மக்கள் அதிகாரம் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

தோழமையுடன்
மாநில பொதுக்குழு
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

ஆதிக்க சாதி வெறியர்களை சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும்! | தோழர் அமிர்தா வீடியோ

மீபகாலமாக தமிழகத்தில் ஆதிக்க சாதி வெறியர்களுடைய வெறியாட்டம் என்பது அதிகரித்திருக்கிறது. இதை கண்டிக்க வேண்டியதும் அதை கண்டித்து அதற்கு எதிரான செயல்களை செய்ய வேண்டிய அவசியமும் இன்று அதிகமாக ஏற்பட்டுள்ளது. சென்ற மாதம் 16ஆம் தேதி போல் புதுக்கோட்டை வேங்கைவையல் கிராமத்தை ஒட்டிய இறையூர் கிராமத்தில் அங்கு வசிக்கக்கூடிய பட்டியலின மக்கள் குடிக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில மலம் கலக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை அங்கு இருக்கக்கூடிய ஆதிக்க சாதி கும்பல் செய்து இருக்கிறது. இதை தொடர்ந்து சில நாட்களாக அந்த தண்ணீரை குடித்த அப்பகுதி தலித் மக்கள் தொடர் உடல் உபாதைகளுக்கு உள்ளார்கள். பக்கத்தில் இருக்கக்கூடிய புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை சார்ந்த மருத்துவர்கள் மக்களுக்கு தொடர்ந்து உடம்பு சரி இல்லாமல் போவதால், தண்ணீரில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னதன் விளைவாக அந்த தொட்டியை பார்க்க நேரிட்டது.‌ தண்ணீர் முழுவதுமே மஞ்சள் நிறமாக மாறியிருக்கிறது. திட்டமிட்டு ஒரு கும்பல் கூடை கூடையாக மலத்தை கொண்டு கொட்டி இருக்கிறது. இது ஒரு காட்டுமிராண்டித்தனமான மனித இனத்திற்கு எதிரான ஒரு செயல்.

இதன் பின்பு அங்கு இருக்கக்கூடிய மக்கள் உளவியல் ரீதியாக அதிகப்படியாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.‌ தண்ணீரையே குடிக்க முடியவில்லை என்று அம்மக்கள் கூறுகின்றனர். சாதாரண தினக் கூலிகளாக இருக்கக்கூடிய ஏழை எளிய தலித் மக்கள் மீது இத்தகைய ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மீண்டும் இந்தி: வெறும் மொழித் திணிப்பல்ல! | வீடியோ

மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுத்துவரும் பல்வேறு தாக்குதலில் ஒன்று, இன-மொழி அடிப்படையிலான தாக்குதலாகும். இவற்றில் முதன்மையானது இந்தி மொழித்திணிப்பாகும்.

இந்தித் திணிப்பின் அடிப்படை, அகண்ட பாரதம், பார்ப்பன வர்ணாசிரம ஆதிக்கம், சமஸ்கிருத மேலாதிக்கம் என்கிற அடிப்படையிலான ‘இந்து-இந்தி-இந்தியா’ என்ற கோட்பாடாகும்.

இந்த இந்தித் திணிப்பு என்பது தமிழகத்தின் மீது திணிக்கப்படுவதாகவும் அதனை எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும் என்றும் நம்மவர்கள் பேசி வருகின்றனர்; இது முழு உண்மையல்ல. இந்தித் திணிப்பு என்பது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இந்தித் திணிப்பை எதிர்த்தாலும், அதனை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்ட வரலாறு தமிழகத்திற்கு மட்டுமே உள்ளது.

மேலும்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

1965 இந்தி எதிர்ப்புப் போர்: நெஞ்சை உலுக்கிய உண்மை சம்பவம் | தோழர் மருது | வீடியோ

தமிழ்நாட்டின் பண்பாடான ஆரிய பார்ப்பன வேத எதிர்ப்பு மரபை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். திருவள்ளுவர், மருது சகோதரர்கள், இம்மானுவேல் சேகரன் உட்பட அனைவருக்கும் தற்போது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க உள்ளிட்ட சங் பரிவாரக் கும்பல் காவிசாயம் பூசுகிறது. அதை முறியடித்து இந்த நாட்டை காக்க, மண்ணைகாக்க யாரேல்லாம் போராடினார்களோ அவர்களுடைய வரலாற்றை ஒவ்வொரு குழந்தைகளுக்கும் சொல்லிகொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநருக்கு ஏற்பட்ட மானக்கெட்டின் விளைவாக கேரள ஆளுநர் அம்மாநில அரசு எழுதி கொடுத்த உரையை அவர்மீது உள்ள விமர்சனத்தையும் சேர்த்து வாசித்துவிட்டு கடந்து சென்றார். இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் தமிழ்நாட்டு மாணவர்கள் – இளைஞர்களின் பங்கு என்பது அளவிட முடியாதது. உணர்வுபூர்வமானது. தமிழ் மொழி, தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம் என அனைத்தையும் காப்பற்றுவதற்காக நூற்றுக்கணக்கானோர் உயிர்விட்ட வரலாறு, உலகில் எந்த தேசிய  இனத்திற்கும் இல்லை.

இப்போது வேறும் மொழிப்போராட்டம் மட்டும் பயனளிக்குமா என்றால் இல்லை என்பதுதான் எங்களுடைய கருத்து. ஏன் என்றால் இன்று இந்திமொழி ஆதிக்கத்தோடு ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே மதம் என்ற பாசிச ஆட்சியை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி நிறுவத் துடிக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த நாடு அம்பானி – அதானி கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது.

1968-ல் தமிழ்நாடு மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது கேரளா, ஆந்திரா, மேற்குவங்கம் என பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரனமாக திகழ்ந்தது. எங்கு நாடு பிளவுண்டு போய்விடுமோ என்ற அச்சத்தில்தான் அன்றைய மத்திய அரசு பின்வாங்கி கொண்டது. இன்று அதுபோன்ற போராட்டத்தின் தேவை அதிகரித்திருக்கிறது.

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் பற்றி பல்வேறு கருத்துக்களை தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மதுரை: காயாம்பட்டி ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் இளைஞர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

27.01.2023

காயாம்பட்டி ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் இளைஞர்
தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

பத்திரிகை செய்தி

னவரி 15, 2023 தேதியும், தை 1-ஆம் நாளான தமிழ் நாட்டு மக்களின் திருவிழாவான பொங்கல் தினத்தன்று, மதுரை மாவட்டம் ஒத்தக்கடை வட்டம் விவசாய கல்லூரி அருகில் உள்ள சிறு கிராமமான காயாம்பட்டியில், பட்டியல் (பறையர்) இனத்தைச் சார்ந்த கண்ணன் என்பவர், தனது தாய், தந்தையரை பார்க்க தனது மனைவி சரண்யா மற்றும் தன் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்பு அருகில் பூலாம்பட்டியில் உள்ள தனது உறவினர்களை பார்க்க இருசக்கர வாகனத்தில் கொட்டாங்குளம் கண்மாய் அருகே சென்று கொண்டிருந்த பொழுது ஆதிக்க சாதியை சார்ந்த ராமர் ,லட்சுமணன், சுதாகர்,மாரீஸ்வரன், பாக்யராஜ், தினேஷ், பிரதீஷா மற்றும் சில நபர்கள் ஏன் வேகமாகப் போகிறாய் என்றும் வேண்டுமென்றே வம்பிழுக்கும் நோக்கத்தில் இடை மறித்துள்ளார்கள். அதற்கு அவர் “நான் குடும்பத்துடன் பைக்கில் வந்து கொண்டு இருக்கிறேன்; நான் எவ்வாறு வேகமாக வர முடியும்” என்று கேட்டும் மேற்சொன்ன ஆதிக்க சாதி வெறியர்கள் அவரை சாதியைச் சொல்லி இழிவாக திட்டியும் கைலி அவிழ்த்து விட்டு நிர்வாணப்படுத்தியும் தரையில் போட்டு அடித்து, இழுத்து சட்டையை கிழித்தும், தடுக்கச் சென்ற மேற்படி நபரின் மனைவியை சேலையை அணிந்திருந்த தங்கச் செயினுடன் பிடித்து இழுத்து அடித்துள்ளனர்.

இவ்வாறு ஆதிக்க சாதி வெறி வன்மத்துடன் நடந்து கொண்ட மேற்படி நபர்கள் மீது ஒத்தக்கடை காவல் நிலையத்தில் அன்றே (15/01/2023) மாலை 5.00 மணியளவில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின கண்ணன் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் இரவு 10.30 மணிக்கு குற்ற வழக்கு எண்:17/2023 ஒத்தக்கடை காவல் சார்பு ஆய்வாளர் ஜெ.சூர்யா என்பவர் மேற்சொன்ன ஏழு நபர்களையும் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இன்னும் சிலர் கைது செய்யப்படவில்லை.


படிக்க: மதுரை காயாம்பட்டி சாதிய வன்முறை | களவீடியோ


இந்நிலையில் கைதுக்கு எதிராகவும் தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்தி பணிய வைக்கவும் புகாரை நீர்த்துப் போகச் செய்வதற்கு 16.01.2023 அன்று மதியம்1.00 மணி அளவில் மேற்படி ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் பிரதீபா க/பெ. ராஜீ என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒத்தக்கடை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெ. சூர்யா சாதிய வன்கொடுமைக்கு உள்ளான கண்ணன் மற்றும் 25 நபர்கள் மீது பொய் வழக்கு எண்:18/2023 பதிவு செய்து, கைது செய்யும் நோக்குடன் ஒத்தக்கடை காவல்துறை அவர்களைத் தேடி வருகிறது.

மேற்படி கிராமத்தில் அங்குள்ள அனைத்து பிரிவு மக்களும் தாய் – பிள்ளையாக ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு நீண்ட ஆண்டு காலமாக விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் வருடம-ஆம் ஆண்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி அன்று சில ஆதிக்க சாதி நபர்கள், பிரவீன் த/பெ.முருகன், ஆர்.எஸ்.எஸ் – பஜக கருத்து உடையவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஒடுக்குமுறை செலுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் 2022-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்றும் இதேபோன்று இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளவர் ஒருவரை ஏன் வேகமாக வந்தாய் என்று கேட்டு தாக்கியுள்ளார்கள். அதனால் அதை கேட்க சென்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அங்குள்ள ஆதிக்க சாதியினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு அடிதடி ஆகி அன்றும் SC/ST வன்கொடுமை வழக்கு பதிவு செய்தும்,ஆதிக்க சாதியினரை கைது ஏதும் செய்யாமல், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்தும், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை கைது செய்து சிறையில் அடைத்தது ஒத்தக்கடை காவல் துறை.

அதன் தொடர்ச்சியாகவே மேற்படி பிரச்சினையும் அதேபோன்று நடந்துள்ளது. இதற்கு முழுக்க முழுக்க இந்த அரசு நிர்வாகமும், காவல்துறையும் சாதி வெறியர்களால் நிரப்பப்பட்டுள்ளது தான் காரணம். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் ஏதுமின்றி அவர்களை மேலும் ஒடுக்கும் வண்ணமத்துடன் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவது என்ற அராஜக வேலைகளில் இந்த அரசும் அரசு எந்திரமும் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிராக அனைத்து உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரண்டு இந்த அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல உழைக்கும் மக்களும் ஏற்றத்தாழ்வு பாகுபாடு இன்றி கண்ணியத்துடன் வாழ வழி செய்வதற்கும், ஆதிக்க சாதி வெறி பிடித்த நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


படிக்க: குறிஞ்சாங்குளம் படுகொலை : சூத்திர – ஆதிக்க சாதிவெறியை பாதுகாக்கும் அரசமைப்பு !


மேற்படி பாதிக்கப்பட்ட, வன்கொடுமைக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சாதி மத வெறியர்களை சமூக புறக்கணிப்பு செய்வோம்! என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் தோழமை அமைப்புகள், ஜனநாயக சக்திகள் பங்கேற்று தங்கள் கண்டன உரையை பதிவு செய்ய உள்ளனர்.

இப்படிக்கு,
தி.வி.க, ம.க.இ.க, தோழமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள்
தொடர்புக்கு
97916 53200, 73055 38966

சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்! | வீடியோ

டலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள சாத்துக் கூடல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஆர்வமாகவும் உற்சாகத்துடனும் பொங்கள் விழாவினைக் கொண்டாடினர்! கடந்த 17ம் தேதி பொங்கள் விழா நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, விழாவிற்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக 4 இளைஞர்கள் இரவு சுமார் 7 மணி அளவில் இரு சக்கர வாகனங்களில் அருகிலுள்ள விருதாச்சலம் நகருக்கு சென்றுள்ளனர்.

சாத்துக் கூடல் இளைஞர்கள் வரும் போது, திட்டமிட்டே வழிமறித்துள்ளது கஞ்சா, சாராய கும்பல்! வேறு வழியின்றி இளைஞர்கள் வண்டியை நிறுத்தவே, எந்த ஊருடா என எந்த மட்டு மறியாதையுமின்றி கேட்டுள்ளது சாதி வெறியிலும் போதையிலுமிருந்த கும்பல்! சாத்துக் கூடல் என்றதும் காலனியா ஊரா எனக் கேட்டுள்ளனர்! இளைஞர்கள் காலனி எனக் கூறி முடிப்பதற்குள், சரமாரியாக போதை கும்பல் தாக்கத் தொடங்கியுள்ளது! தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் என்ன நடக்கிறது என புரிந்து கொள்வதற்கு முன்னே, ஒரு போதை ஆசாமி கனமான கட்டை ஒன்றால் ஒரு இளைஞனின் தலையிலும் உடலிலும் தாக்க, ரத்தம் கொட்டத் தொடங்கியுள்ளது. அப்போதும் தாக்குதலை நிறுத்தவில்லை அந்த போதை, சாதி வெறி கும்பல். அடிபட்டவருக்கு பத்திற்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டுள்ளது. மற்றொரு போதை, சாதி வெறி இளைஞன், இரும்புத் தடி கொண்டு இன்னொரு தலித் இளைஞரைத் தாக்க அவருக்கு கால் எலும்பு இரண்டாக முறிந்து போனது!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்!

26.01.2023

சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்!

ஆதிக்க சாதி வெறியர்களுக்கு துணை போகும் கருவேப்பிலங் குறிச்சி காவல் நிலையத்தின் ஆதிக்க சாதி வெறியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்!
உண்மைக் குற்றவாளிகளான ஆதிக்க சாதி வெறியர்களைக் கைது செய்!

பத்திரிகை செய்தி!

டலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள சாத்துக் கூடல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஆர்வமாகவும் உற்சாகத்துடனும் பொங்கள் விழாவினைக் கொண்டாடினர்! கடந்த 17ம் தேதி பொங்கள் விழா நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, விழாவிற்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக 4 இளைஞர்கள் இரவு சுமார் 7 மணி அளவில் இரு சக்கர வாகனங்களில் அருகிலுள்ள விருதாச்சலம் நகருக்கு சென்றுள்ளனர்.

சாத்துக் கூடல் கிராமத்திலிருந்து விருதாச்சலம் செல்வதாக இருந்தால் ஆலிச்சிகுடி கிராமம் வழியாகத்தான் செல்ல வேண்டும்! அது நகரப் பேருந்து செல்கின்ற சாலை. ஆனால் அன்று மதியத்திலிருந்தே ஆலிச்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி வெறி வன்னிய இளைஞர்கள் பத்துப் பன்னிரண்டு பேர் கஞ்சா, சாராய போதையில் சாலையில் நின்று கொண்டு போவோர் வருவோரையெல்லாம் கத்திக் கூச்சலிட்டு வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தனர்! இவர்களின் அத்து மீறலைக் கண்டித்தவர்களையெல்லாம் அடிக்க ஓடினார்கள்! பலரும் நமக்கெதற்கு வம்பு என நிற்காமல் சென்று கொண்டிருந்தனர்! இது ஆலிச்சிகுடி கிராமத்தினர் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்!

இரவு நேரம் ஆக ஆக இந்த கஞ்சா, சாராய கும்பலின் வன்னிய ஆதிக்க சாதி வெறி உச்சத்திற்குச் சென்று கொண்டிருந்தது! அந்த சமயத்தில்தான் சாத்துக் கூடல் கிராம இளைஞர்களும் அந்த வழியாக விருதாச்சலம் நகருக்கு சென்றனர். இவர்கள் கூச்சலிடவே, நமக்கெதற்கு வம்பு என நிற்காமல் அந்த இளைஞர்கள் சென்று விட்டனர். சாத்துக் கூடல் இளைஞர்கள் திரும்பி வரும் போது, திட்டமிட்டே வழிமறித்துள்ளது கஞ்சா, சாராய கும்பல்! வேறு வழியின்றி இளைஞர்கள் வண்டியை நிறுத்தவே, எந்த ஊருடா என எந்த மட்டு மறியாதையுமின்றி கேட்டுள்ளது சாதி வெறியிலும் போதையிலுமிருந்த கும்பல்! சாத்துக் கூடல் என்றதும் காலனியா ஊரா எனக் கேட்டுள்ளனர்! இளைஞர்கள் காலனி எனக் கூறி முடிப்பதற்குள், சரமாரியாக போதை கும்பல் தாக்கத் தொடங்கியுள்ளது! தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் என்ன நடக்கிறது என புரிந்து கொள்வதற்கு முன்னே, ஒரு போதை ஆசாமி கனமான கட்டை ஒன்றால் ஒரு இளைஞனின் தலையிலும் உடலிலும் தாக்க, ரத்தம் கொட்டத் தொடங்கியுள்ளது. அப்போதும் தாக்குதலை நிறுத்தவில்லை அந்த போதை, சாதி வெறி கும்பல். அடிபட்டவருக்கு பத்திற்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டுள்ளது. மற்றொரு போதை, சாதி வெறி இளைஞன், இரும்புத் தடி கொண்டு இன்னொரு தலித் இளைஞரைத் தாக்க அவருக்கு கால் எலும்பு இரண்டாக முறிந்து போனது! அவரை பரிசோதித்த விருதை அரசு மருத்துவர், மேற்கொண்டு சிகிச்சைக்காக சென்னை இராமச்சந்திரா மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது!

மற்ற இரு தலித் இளைஞர்கள் கீழே விழுந்து விடவே மற்ற எல்லோரும் சேர்ந்து காலாலேயே கண்மூடித்தனமாக மிதித்துள்ளனர். அதில் ஒரு இளைஞருக்கு நெஞ்சில் பலமாக அடி பட்டுள்ளது. ஸ்கேன் செய்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது! மற்றொரு இளைஞருக்கும் உடல் முழுவதும் வலி. சிக்கிச்சை முடிந்து அவர் மட்டும் வீடு திரும்பியுள்ளார்!


படிக்க: இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்


இந்த செய்தி கேள்விப்பட்டதுமே, தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசு, பாதிப்புக்குள்ளான தலித் இளைஞர்களை மருத்துவ மனைக்கு அனுப்பியதோடு, மேலும் காவலர்களை வரவழைத்து ஆலிச்சிகுடி போதை, சாதி வெறி கும்பலுக்கு பாதுகாப்பு வழங்கத் தொடங்கியுள்ளது. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த சாதி வெறி கும்பல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே.

செய்தி கேள்விப்பட்ட சாத்துக் கூடல் தாழ்த்தப்பட்ட மக்கள் கோபாவேசமாகி, கும்பலாகத் திரண்டு, நியாயம் கேட்க வந்தனர். அவர்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? அவர்களை நிறுத்தி, என்ன எனக் கேட்டு, வழக்குப் பதிய வேண்டிய போலீசோ, லத்தி சார்ஜ் செய்வோம் என மிரட்டியுள்ளது. சாத்துக் கூடல் ஊர் பெரியவர்கள், காவல் நிலையம் சென்று, புகார் தரவே நடவடிக்கை எடுப்பதாகக் கூறி இரண்டு நபர்களை கைது செய்து உள்ளோம் மீதி நபர்களை விசாரித்து கைது செய்வோம் உரிய குற்றவாளியை கண்டுபிடிப்போம் என்று சொல்லி அனுப்பி விட்டது கருவேப்பிலங் குறிச்சி போலீசு.

ஆனால் மறுநாள் காலை ஊர் பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள்; விடுதலை சிறுத்தை கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் முக்கிய குற்றவாளிகள் 12 பேரின் பெயர்களை குறித்துக் கொடுத்தும் காவல்துறை ஏழு பேர் மீது மட்டுமே வழக்குபதிவு செய்தது. முக்கிய குற்றவாளியை இன்று வரை கைது செய்யவில்லை; உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசிக, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளும், கட்சிகளும் இணைந்து அருகாமை கிராம மக்கள் உட்பட 500 பேருக்கும் மேலானவர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் பேரணியாக சென்றும் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு அமர்ந்தனர். மக்கள் முன்னிலையில் ஆர்.டி.ஓ அவர்கள் பேச வேண்டும் என்றனர். ஆர்.டி.ஓ அவர்கள் மக்களை சந்தித்து மனுவை பெற்றுக் கொண்டார். அன்று இரவு மூன்று நபர்களை கைது செய்தது போலீசு.


படிக்க: தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை! வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு ! | மக்கள் அதிகாரம்


முதல் நாள் கைது செய்யப்பட்ட நபர் சாராய போதையில் பைக் ஓட்டிச் சென்று கீழே விழுந்து அடிபட்டவர். அப்படித்தான் அவரது முதல் வாக்குமூலம் இருந்தது. ஆனால் பாமக கட்சி நிர்வாகி தலையிட்டு, அது சாத்துக் கூடல் தலித் இளைஞர்கள் தாக்கி ஏற்பட்ட காயம் என பொய் புகார் அளித்தனர். அதை ஏற்றுக் கொண்ட கருவேப்பிலங் குறிச்சி போலீசு, 14 தலித் இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிந்து தேடி வருகிறது. இது காவல் துறையா? அல்லது காவி வெறி, சாதி வெறி போலீசா? எனத் தெரியவில்லை. ஒரு அநீதியை தட்டிக் கேட்கப் போன மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டலச் செயலாளர் முருகானந்தம், ஆலிச்சிகுடி ஊராட்சி துணைத் தலைவர் கண்ணன் (முருகானந்தம் தாக்குதல் நடந்த போது ஊரிலேயே இல்லை. கண்ணனுக்கு காலையில்தான் செய்தியே தெரியும்) உட்பட 14 பேர் மீதான பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். கொலை வெறித் தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகளான வன்னிய ஆதிக்க சாதி வெறியர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் அதிகாரம் கோருகிறது!

எந்த ஊர் என கேட்டு, சொன்ன மாத்திரத்திலேயே கொலை வெறித் தாக்குதல் நடத்தும் சாதி வெறியர்களுக்கு கைது, சிறை மட்டும் போதாது; அவர்களின் சிவில் உரிமைகள் பறித்தெடுக்கப்பட வேண்டும்! அவர்களுக்கு துணை போகும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும்! டாஸ்மாக்கை மூடு என போலியாக கோசம் போட்டு, போதை ஆசாமிகளின் ஆதிக்க சாதி வெறியைத் தூண்டி மக்களின் ரத்தம் குடிக்கும் பாமக கட்சியை தடை செய்ய வேண்டும்!

தோழமையுடன்,
முருகானந்தம்,
மண்டல செயலாளர்
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.

இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மீண்டும் கிளர்ந்தெழுவோம்!

1947 அதிகார மாற்றத்திற்கு பிறகு வந்த எல்லா இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களும் இந்தியை திணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க.வினரின் இந்தியை திணிக்கும் முயற்சி “இந்து-இந்தி-இந்து ராஷ்டிரியம்” என்னும் பெரும் நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். 80 ஆண்டுகளாக தமிழ்நாடு இந்தி திணிப்பை சந்தித்து வந்திருக்கிறது. அதை போர்க்குணத்தோடு எதிர்த்து போராட்டியிருக்கிறது. ஆனால் இன்றைய அரசியல் சூழலில் இந்தி திணிப்பு என்பது என்ன பரிணாமத்தில் இருக்கிறது. அதை தமிழ்நாடு எப்படி எதிர்கொள்கிறது என்பதை நாம் பரிசீலனை செய்யவேண்டிய தேவையிருக்கிறது.

1965 ஜனவரி 26 ஆம் தேதி இந்த குடியரசின் 15 ஆண்டுகள் நிறைவு செய்யும் அதே தினத்தில் அரசியல் அமைப்புச் சட்டப்படி அலுவல் மொழியாக ஆங்கிலத்தின் காலம் முடிவடைதாகவும் அதற்கு பதிலாக இந்தியை கொண்டுவர வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது.

ஆனால் தமிழ்நாடு (அன்றைய மெட்ராஸ் மாகாணம்) போன்ற பெரிய அளவிலான தீவிரமான கிளர்ச்சிகள் மூலமாக இந்திய அரசாங்கத்தின் மொழிக் கொள்கை மீது ஆழ்ந்த அதிருப்தியை வேறு எந்த மாநிலமும் வெளிப்படுத்தவில்லை. அன்றைய மாணவர்களின் போராட்டத்தை கண்டு ஒன்றிய அரசு தொடை நடுங்கியது.

படிக்க : ஜனவரி 25: இந்தி திணிப்புக்கெதிரான மொழிப்போர் தியாகிகளது தீரத்தையும், தியாகத்தையும் நெஞ்சிலேந்துவோம்!

இந்தியை திணிக்கும் மொழிக் கொள்கையை எதிர்த்து குடியரசு தினத்தை “துக்க தினமாக” கடைபிடிக்கப்போவதாக தி.மு.க அறிவித்தது. ஆனால் அரசு அதற்கு தடை விதித்தது.

இதையடுத்து, ஜனவரி 24, 1965 அன்று, குடியரசு தினத்தன்று நடந்தப்பட இருந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அரசு விதித்துள்ள தடையை மீறப்போவதாக தி.மு.க அறிவித்தது. இதனால், ஜனவரி 26 அதிகாலையில், சி.என்.அண்ணாதுரை மற்றும் சுமார் நூற்றைம்பது தி.மு.க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் விளைவாக, கட்சி திட்டமிட்டிருந்த கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறவில்லை.

ஆனால் போராட்டத்தின் உண்மையான நாயகர்களான மாணவர்களின் பங்கு இப்போது இன்னும் தீவிரமாக இருந்தது. மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் தொடங்கியது. மதுரையில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது, போலீசார் தடியடி நடத்தினர். இதனால் காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் சிலர் காயமடைந்தனர்.

சென்னை கடற்கரையில் இந்தி புத்தகங்களை எரித்து மாணவர்கள் தங்களை எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் ஆங்கிலத்தின் நிலையைப் பாதுகாக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து பெரிய அளவிலான மாணவர்கள் தலைமைச் செயலகத்திற்கு பேரணியாகச் சென்றனர்.

மேலும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அட்டூழியம் செய்தனர். ஜனவரி 27 அன்று, அதிகாலையில், சென்னையிலுள்ள பல கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி மாணவர் தலைவர்களைக் கைது செய்தனர். மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். இது மாணவர்களின் மத்தியில் நிலைமையை கொதிப்படையச் செய்தது.

இந்த காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையால் போராட்டத்தை நசுக்கிவிட்டதாக நினைத்து பிப்ரவரி 8 ஆம் தேதி கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு ஏற்பாடு செய்தது. ஆனால், பெரும்பாலான மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இனியும் இது மாணவர்களாலும் தீவிர தி.மு.க ஆதரவாளர்களாலும் நடத்தப்படும் போராட்டமாக மட்டும் அல்ல; இது மக்கள் மத்தியில் பிரபலமான இயக்கமாக மாறியது.

கோயம்புத்தூரில் முழு அடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ரயில்கள் நிறுத்தப்பட்டன. பிப்ரவரி 10 அன்று போலீஸ் ஏழு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது, அதில் இருபத்தி நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருபத்தைந்து பேர் காயமடைந்தனர். பிப்ரவரி 11 ஆம் தேதி, மீண்டும் பல இடங்களில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இந்தி திணிப்பு இருக்காது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். மத்திய நிதியமைச்சரும், தமிழருமான டி.டி.கிருஷ்ணமாச்சாரி, தன்னைப் போன்ற தமிழக அமைச்சர்கள், C.சுப்பிரமணியம் (உணவுத் துறை அமைச்சர்) தென்னகத்தின் நலன்களைக் கவனித்துக்கொள்வதால்,  இந்தப் போராட்டம் தேவையற்றது என்றார். ஆனால் அவர் சொன்னதற்கு முரண்பாடாக, டில்லியில் சுப்பிரமணியம் மற்றும் சென்னையைச் சேர்ந்த அழகேசன் ஆகிய அமைச்சர்கள் ஆட்சியாளர்களின் மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமரிடம் ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.

பிப்ரவரி I2 அன்று சென்னை மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பதினொரு இடங்களில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். நிலைமை இப்போது வெளிப்படையாகக் கட்டுப்பாட்டை மீறியதால், மற்ற மாநிலங்களில் இருந்து போலீசுத்துறை மற்றும் துருப்புக்கள் அதிக அளவில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். பிப்ரவரி I3 அன்று பதினைந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், இந்த போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக மொத்தம் 66 பேர் என சொல்லப்பட்டது. ஆனால் போலீஸார் கொல்லப்பட்டும், இந்த போராட்டத்திற்காக தீக்குளித்தும், விஷம் குடித்தும் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டவர்களையும் சேர்த்து 200 பேர் இறந்திருப்பார்கள்.

இந்த போராட்டம் தி.மு.க.வால் தூண்டப்பட்டது என்று சென்னை மாகாண அரசு நினைத்தது தவறு என்பதை மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நிரூபித்தது. மாணவர்களின்‌ போராட்டம் பொது மக்களையும் போராட்டத்திற்கும் இழுத்து வந்தது.

ஜனவரியில் திருச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாடு மற்றும் தி.மு.க.வினரால் அறிவிக்கப்பட்ட “குடியரசு தினத்தை துக்க நாளாக கடைபிடிப்பது” ஆகிய போராட்டத்திற்கான ஆயத்த எதிரொலியை மாணவர்களிடையே எழுப்பியது. ஆனால் ஜனவரி 27 அன்றுதான் போராட்டத்தை வழிநடத்த ஒரு மாணவர் அமைப்பாக  “தமிழ்நாடு மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டக்குழு” (Tamilnad Students’ Anti-Hindi Agitation Council) அமைக்கப்பட்டது. அப்போது திமுகவின் முக்கிய தலைவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்தனர்.

இந்த மாணவர்கள் அமைப்பு மெட்ராஸ் நகரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், மாநிலத்தின் பெரும்பாலான கல்லூரிகளுடன் மிக விரைவாக தொடர்புகளை ஏற்படுத்தியது. பெரும்பாலான கல்லூரிகளில் நடவடிக்கைகளை எடுத்துச் செல்வதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த அமைப்புக் குழுக்களில் கணிசமான மாணவர் தலைவர்கள் தி.மு.க.வுடன் எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை, மேலும் தி.மு.க.வால் இந்த மாணவர்கள் அமைப்பில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்பதே உண்மை.

தி.மு.க.வின் உயர்மட்டத் தலைவர்கள் கேட்டுக் கொண்டபோதும் மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்ப மறுத்தனர். போராட்டத்தைக் கைவிடவும் மறுத்தனர் என்பதிலிருந்து தி.மு.க தலைமை இந்த மாணவர்களின் போராட்டத்தை வழி நடத்தவில்லை என்பது நிரூபணமாகிறது.

இந்தப் போராட்டத்திற்கான ஆரம்ப கால உத்வேகம் தி.மு.க தரப்பில் இருந்து வந்தது என்பதில் சந்தேகமில்லை. இதன் மூலமாக ஏற்கனவே மக்கள் மத்தியில் இருக்கும் மொழி சார்ந்த உணர்ச்சிகளைக் கைப்பற்றிக்கொள்வதற்கும், காங்கிரஸ் எதிர்ப்பு சக்திகளின் பரந்த கூட்டணியை உருவாக்குவதற்கும் தி.மு.க முயற்சித்தது. ஆனால் போராட்டம் விரைவில் தி.மு.க.வின் கட்டுப்பாட்டை மீறிச்சென்றது. இறுதியில் மாணவர்களின் தன்னெழுச்சியான போர்ட்டங்களைக் கண்டு தி.மு.க தலைவர்கள் திகைத்து நின்றனர் என்பதே உண்மை.

மாணவர்களின் போராட்டங்கள் “காங்கிரஸ் எதிர்ப்பு பெரும் பணக்காரர்களால் நிதியுதவி செய்யப்பட்டது” என்ற பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டது. மாணவர்களின் இந்த போராட்ட அமைப்பிற்குப் பின்னால் கணிசமான அளவு நிதி இல்லை. அதனால் ஒவ்வொரு போராட்ட யூனிட்டும் அதற்குத் தேவையான நிதியைத் தாங்களாகவே திரட்டிக்கொள்ள வேண்டிருந்திருந்தது.

தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் நோக்கம் நாடாளுமன்றத்திலும் இந்திய அரசாங்கத்திலும் செல்வாக்கு செலுத்துவதாக இருந்த இந்தி ஆதரவாளர்களையும் அவர்களின் இதுநாள் வரை அனுபவித்து வந்த சலுகைகளையும் பறிக்கும் வகையில் அமைந்தது.

படிக்க : வேலையில்லாத் திண்டாட்டம் – யார் காரணம்: வட மாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?

இப்படி மத்திய மாநில அரசுகளையும் பணிய வைக்கும் வகையில் போர்க்குணமாக மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்த மொழிப்போரில் தங்களது தியாகங்களால் உரிமைகளை பெற்றத் தந்தது மட்டுமல்ல மாணவர்கள் அமைப்பாக போராடுவதன் அவசியத்தையும் எதிர்கால தலைமுறையினருக்கு கற்றுத் தந்தனர்.

ஆனால், இன்று தமிழ்நாட்டின் நிலை என்ன? மத்தியில் பா.ஜ.க பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. மாநிலங்களான ஒவ்வொரு உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது. அதை எதிர்க்க வக்கற்று நிற்கின்றனர் தி.மு.க ஆட்சியாளர்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியைப் பயிற்றுவிப்பதற்கான ஊடகமாக பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யும் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்கும் முயற்சி என்று சம்பிர்தாயமாக எதிர்ப்பு தெரிவித்தது தி.மு.க. அதற்கு மேல் ஒன்றுமில்லை. இவர்களின் பாசாங்கான எதிர்ப்புகளால் பா.ஜ.க தனது நோக்கத்தை கைவிடப்போவதில்லை. உண்மையில் 1965 ஆம் ஆண்டு போராட்டத்தை போல் மாணவர்களும் மக்களும் அமைப்பாக திரண்டு போராடுவதன் மூலம்தான் நமது உரிமைகள் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

ராஜன்

வேலையில்லாத் திண்டாட்டம் – யார் காரணம்: வட மாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?

வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம்! காரணம் என்ன?
வட மாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?

ட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கில்லை. ஒன்றிய, மாநில அரசுத் துறைகளோ தனியார் துறையோ எங்கும் நிரந்தர வேலைக்கு ஆட்கள் எடுப்பது கிடையாது. கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் ஒப்பந்தம் (காண்ட்ராக்ட்) மூலம் நிறைவேற்றப்படுகிறது. குறிப்பிட்ட மாதங்கள், ஆண்டுகள் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி விட்டு தூக்கி எறிவது என்பதைத்தான் பெரு நிறுவனங்கள் செய்து வருகின்றன.

அதாவது பயிற்சித் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி, தற்காலிகத் தொழிலாளி, NEEM, NAPS, FTE என்று பல்வேறு பெயர்களில் தொழிலாளர்களை சுரண்டிக் கொழுக்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். குறிப்பிட்ட ஆண்டுகள் (அதிகபட்சம் 3 ஆண்டுகள்) வரை அவர்களை உறிஞ்சிவிட்டு தூக்கியெறிந்து விடுவதுதான் இந்த வேலைவாய்ப்பின் லட்சணம்.

கல்வியில் முன்னேறிய தமிழ்நாட்டில் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களைக் காட்டிலும் அதிகம். தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அரசுத் தேர்வின்போது சில ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் சில லட்சக்கணக்காக விண்ணப்பங்களே இதற்கான சான்று.

எனவே, இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு தங்களது படிப்பிற்கு தொடர்பில்லாத கிடைக்கின்ற வேலையை செய்வது என்ற சூழ்நிலைதான் பெரும்பாலும் உள்ளது. வாழ்க்கை நிர்ப்பந்தங்களின் காரணமாக வேறுவழியின்றி எந்தவித வேலை பாதுகாப்பும், உத்தரவாதமும் இல்லாத வேலைகளுக்காக வளைகுடா நாடுகளுக்கு செல்வதும், மும்பை, பெங்களூரு, கல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களை நோக்கி ஓடுவதும் இயல்பாக நடந்து வருகிறது. இதனால் இயல்பான வாழ்க்கை, சமூக சிந்தனை, புரிதல்கள் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

படிக்க : வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !

இந்த சூழலில்தான் தமிழ்நாட்டின் இளைஞர்கள் மத்தியில் வேறொரு நஞ்சு வேகமாக விதைக்கப்பட்டு வருகிறது. வட மாநிலத் தொழிலாளர்கள் வருவதால்தான் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே வடமாநிலத் தொழிலாளர்களை விரட்ட வேண்டும் என்ற மனநிலை சீமான், பெ.மணியரசன் போன்றவர்களால் தமிழினவெறியை கிளப்புகிறார்கள். மேலோட்டமாக இதைப் புரிந்து கொண்டு இளைஞர்கள் பலரும் இனவெறிக்கு பலியாகிறார்கள்.

ஒன்றிய அரசுப் பணிகளில் வட மாநிலத்தவரை சதித்தனமாக திணிப்பதையும், அன்றாட வாழ்க்கை வாழ்வதற்காக தமிழ்நாட்டுக்கு வந்து குறைவான கூலிக்கு உழைப்பவர்களையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும்.

ஒன்றிய அரசுப் பணிகளில் சதித்தனமாக வட மாநிலத்தவரை திணிப்பது நமது உரிமையைப் பறிப்பதாகும். வாழ்க்கை வாழ்வதற்காக வருவது என்பது நாம் ஒன்றிணைவதற்கான வர்க்கம் அவர்கள் என்பதாகும். நமது பிரச்சினையும், அவர்களது பிரச்சினையும் ஒன்று என்பதாகும்.

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு நாம் செல்வதற்கான காரணங்களுக்கு எந்த அளவுக்கு நியாயம் உள்ளதோ, அதே நியாயம் அன்றாட வாழ்க்கைக்காக இங்கு பிழைப்பு தேடிவரும் வட மாநிலத் தொழிலாளிக்கும் பொருந்தும்தானே. இதை நாம் சிந்திக்க வேண்டும்.

வடக்கு, வட கிழக்கு மாநிலங்களில் இருந்துதான் பெருமளவிலான தொழிலாளர்கள் இங்கு வருகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். அம்மாநிலங்களில் 75 ஆண்டுகளில் கல்வி, மருத்துவம், உற்பத்தி ஆகிய அடிப்படையான பிரச்சினைகள் கூட மிகவும் பாதிக்கப்பட்டுகிடக்கின்றன. இன்னொரு பக்கம் பார்ப்பன, பனியா, சிந்தி, மார்வாடி முதலாளிகளின் கேள்விக்கிடமற்ற சுரண்டலுக்கான எல்லா வாய்ப்புகளும்(கனிமவள-இயற்கைவள கொள்ளை, தனியார்மயக் கொள்கை) ஆட்சியாளர்களால் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.

தங்களது அரசியல், பொருளாதார உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலைமையில்தான் வடமாநில உழைக்கும் மக்கள் வைக்கப்பட்டிருக்கின்றனர். தாங்கள் யாரால் சுரண்டப்படுகிறோம் என்பதை உணராமல் இருப்பதற்காகத்தான் பார்ப்பன மதவெறி நஞ்சை ஊட்டிக் கொண்டே இருக்கின்றனர்.

சாதிய ஒடுக்குமுறையும், மதவெறியும், பிற்போக்குத்தனமும் கோலோச்சுகின்ற நிலையானது ஆட்சியாளர்களுக்கும், சுரண்டும் வர்க்கங்களுக்கும் இனிக்கத்தானே செய்யும்?

வறுமையின் பிடி தாளாமல் பிழைப்பு தேடிவரும் உழைக்கும் வர்க்கமாகிய அந்தத் வட மாநிலத் தொழிலாளர்கள் நமது உழைக்கும் வர்க்கத்தினர் என்பதை நாம் உணர வேண்டும். பெரும்பாலான வட மாநிலத் தொழிலாளர்கள் அங்கே இருந்து இங்கு வந்து சொர்க்க வாழ்க்கை வாழவில்லை. கடும் சுரண்டலிலும், உரிமைகளற்ற நிலையிலும்தான் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டிலும் இருப்புவேலை (வெல்டிங்), ஃபவுண்டரி, ரசாயண வேலை(கெமிக்கல்), பனியன், சாலைப்பணி, கட்டுமானம், உணவகம் போன்ற ஆபத்தான, பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற வேலை நிலைமைகளில் பெரும்பாலும் வட மாநிலத் தொழிலாளர்களே வேலை செய்கின்றனர். இந்த இடங்களில் எவ்வளவு சுரண்டினாலும், ஒடுக்கினாலும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. இப்படிப்பட்ட நிலைமைகளில் வாழும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுதானே மனிதாபிமானமுள்ள, ஜனநாயகமுள்ள (வர்க்கக்கோபம்) ஒருவரின் கடமையாக இருக்க முடியும்?

வடக்கன்ஸ் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ரிசர்வ் பெட்டியில் ஏறுகிறான் என கோபி-சுதாகர் என்பவர்கள் பரிதாபங்கள் வீடியோ பதிவுகளை போடுகின்றனர். இதை கிரிமினல் குற்றமாக சித்தரிக்கும் இவர்களை போன்றோர் மக்கள் வரிப்பணத்தில் கட்டியெழுப்பட்ட இரயில்வே துறையை தனியார்மயம், வளர்ச்சி என கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு தாரைவார்ப்பது குறித்து சிந்திப்பது கூட கிடையாது.

சொந்த மாநிலத்தில் வாழ முடியாமல் பசியோடு, நாடோடியாக, உள்நாட்டு அகதிகளாக 13 கோடி பேர் அலைவது குறித்தும் இதற்கு பின்னணியில் உள்ள ஐ.ஏ.எஸ் (IAS) போன்ற அதிகார வர்க்கத்தையும் நாட்டை விற்கும் நாடாளுமன்றத்தையும் அரசியல் கட்சிகளையும் தனியார்மயக் கொள்கையையும் இரட்டையாட்சி அரசமைப்பையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மூலம் வேலைவாய்ப்புள்ளது என்றும் அதில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 80 சதவீதம் வேலை தர வேண்டும் என்றும் பட்டியலிடுபவர்கள். அவை எத்தகைய வேலைவாய்ப்புகள் என்பதை பட்டியலிடத் தயாரா? பல லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் கூலியற்ற உழைப்பு(அப்ரண்டீஸ்), ஒப்பந்தமுறை(காண்ட்ராக்ட்), நீம் (NEEM), தற்காலிகம் என சட்டவிரோத சுரண்டப்படுகின்றனர்.

படிக்க : கிருஷ்ணகிரி மாவட்டம் KATERRA  நிறுவனம் – தொழிலாளிகள் மீதான  கொடூரச் சுரண்டல் – தொழிலாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்!

முதலாளித்துவ நிறுவனங்களின் இந்த கிரிமினல் நடவடிக்கையை கேள்வி கேட்காமல் புலம்பெயரும் தொழிலாளர்களை காட்டி வேலைவாய்ப்புகளை பறிப்பதாக கூச்சலிட்டு கார்ப்பரேட் கொள்ளையர்களை திட்டமிட்டு மறைக்கவும் மடைமாற்றி தமிழினவெறியை பற்றவைக்கவும் சீமான் போன்ற இனவெறியர்கள் போலிச் சமர் புரிய ஆளும்வர்க்கத்தால் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டின் இளந்தொழிலாளர்களே! சிந்தியுங்கள்! இனவெறி அரசியலுக்கு பலியாகி விடாதீர்கள்! அவ்வகையான அரசியல் மறைமுகமாக கார்ப்பரேட்டுகளை காப்பாற்றுவதற்கானது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!

நமது(தமிழ்நாட்டு தொழிலாளர்கள்) பிரச்சினையும், அவர்களது(வட மாநிலத்தொழிலாளர்கள்) பிரச்சினையும் வேறுவேறல்ல. கார்ப்பரேட் முதலாளிகளின் கொடூரமான சுரண்டலுக்கான தனியார்மயக் கொள்கைகளும், அதை தீவிரமாக அமல்படுத்தும் காவி-கார்ப்பரேட் பாசிசமும்தான் உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரி.

பொது எதிரிக்கெதிரான போராட்டத்தில் இனம், மதம், மொழி கடந்து ஒன்றிணைவது மட்டும்தான் நமக்கு முன் இருக்கும் ஒரே வழியாகும்!


தோழர். பரசுராமன்,
மாவட்ட செயலாளர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்,
தொடர்புக்கு : 97880 11784.