சீனப் புரட்சி இன்னும் தொடர்கிறதா?
பதில்: “இல்லை ” என்பதே.
ஒவ்வொரு புரட்சிக்கும் ஒரு எதிர்ப்புரட்சி உண்டு, அந்த நேரத்தில் அதனை இடதுசாரியிடமிருந்து வலதுசாரி கைப்பற்றுகிறது. புதிய கண்டுபிடிப்பாளர்கள், பழமைவாதிகளிடம் தோற்கிறார்கள், புரட்சி மறுநிர்மாணத்துக்கு வழி விடுகிறது. சீனாவில் எதிர்ப்புரட்சி 1978-ல் பதினோறாவது மத்தியக் குழுவின் மூன்றாவது கட்டத்தில் நிகழ்ந்தது. அதில் டெங் சியாவோ பிங்கும் லியூ கோஷ்டியில் தப்பித்த மற்றவர்களும் ஆதிக்கம் செலுத்திக் கொள்கைகளை மாற்றி “சீர்திருத்தத்தைத்” துவங்கினர். இது உழைக்கும் வர்க்க அதிகாரத்திலிருந்து முதலாளித்துவ அதிகாரத்துக்கும், உழைக்கும் வர்க்க அரசியலிலிருந்து முதலாளித்துவ அரசியலுக்கும், சோசலிசப் பாதையிலிருந்து முதலாளித்துவப் பாதைக்கும் மாறுவதை அடையாளப்படுத்தியது. அந்தக் கட்டத்தில் சீனா தனது வண்ணத்தை மாற்றிக் கொண்டது. அப்போதிலிருந்து புதிய தலைவர்கள் சீன மக்கள் முப்பது ஆண்டுகளாக கடும் முயற்சியால் கட்டிய சோசலிசக் கட்டுமானத்தையும், சோசலிசப் பொருளாதார அடிப்படையையும் கலைக்கத் துவங்கினார்கள்.
ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் அதிகாரத்தில்தானே இருந்ததென நீங்கள் கேட்கலாம்.
உண்மைதான். ஆனால் 1949-ல் சோசலிசத்தைக் கட்டுவதற்காக முன்வந்த அதே கட்சியல்ல அது. மேலும் குறிப்பாகக் கூறினால், 1949-ல் சோசலிசத்தைக் கட்ட முன்வந்த அதே தலைவர்களால் கட்சி தலைமை தாங்கப்படவில்லை.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஒரே தலைமையுடன் இருந்ததில்லை. ஜனநாயகப் புரட்சியானது அனைத்து முற்போக்கு சக்திகளையும் இணைத்தது – ஏராளமான விவசாயிகளையும், தொழிலாளர்களையும் இணைத்தது மட்டுமல்ல, பல தேசிய முதலாளிகள் (கோமின்டாங்கில் ஆதிக்கம் செலுத்திய அதிகாரிகளுடனோ, நிலப்பிரபுக்களுடனோ தொடர்பற்ற முதலாளிகள்) பெரும்பாலான அறிவுஜீவிகள், பூர்ஷ்வாக்கள் பக்கம் அதிகம் சாய்ந்தோரையும் கூட இணைத்தது. இந்தக் குழுக்களும், வர்க்கங்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக அணி திரண்டனர். அவர்களில் பலர் தனி நபர்கள் என்ற முறையில் கட்சியில் இணைந்தனர். தீவிரமான நிலையிலிருந்த தேசப்போரைத் தொடர்ந்த உள்நாட்டுப் போர்க் காலத்தில், சீனாவிலிருந்து ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டவும், கிராமப்புறத்தில் நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றவுமான கேள்விகளில் மாவோவால் ஒரு ஒத்தக் கருத்தை எட்ட முடிந்தது. ஆனால் பணிகள் வெற்றி பெற்றதும், ஒத்தக் கருத்தானது அந்த வெற்றி தகரும் வாய்ப்பை உருவாக்கியது.
எங்கு வழி தவறியது என்பதைப் புரிந்து கொள்ள சிறிது வரலாற்றைப் பார்க்க வேண்டியுள்ளது.
மாவோ சீனப் புரட்சியின் முதல் கட்டத்தை ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை ஒழித்து பல்வேறு தேசிய பூர்ஷ்வாக்களின் அதிகாரத்தைக் கொண்டு வந்த பழைய ஜனநாய்கப் புரட்சிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக புதிய ஜனநாயகம் என்றழைத்தார். இருபதாம் நூற்றாண்டில் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவின் குறைவான வளர்ச்சி பெற்ற நாடுகள் ஏகாதிபத்திய சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு ஜனநாயகமோ, சோசலிசமோ, முதலாளித்துவமோ, பாட்டாளி வர்க்கமோ, எந்தப் புரட்சியையும் சகித்துக் கொள்ளாததால் ‘புதிய’ என்பது தேவையென மாவோ கூறினார். சீனாவின் தேசிய முதலாளிகள் ஏகாதிபத்திய விரோதிகளாக இருந்தாலும், மிகவும் பலவீனமாகவும், ஊசலாட்டக்காரர்களாகவும், மக்கள் எழுச்சிமீது பயம் கொண்டவர்களாகவும் இருந்ததை வரலாறு காட்டுகிறது. அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் வலுவுடைய விவசாயிகளுக்கு ஆயுதமளிப்பதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், அது மக்களைத் திரட்டக்கூட பயந்தது.
எனவே, உள்ளீடாக புரட்சிகரத் தலைமை தவறுதலாக தானாகவே கம்யூனிஸ்ட் கட்சியிடம் எழுந்தது. சர்வதேச அளவில் அப்போது சோசலிசத்தைக் கட்ட முயன்ற சோவியத் யூனியன் மற்றும் உலகத் தொழிலாளர் இயக்கத்தின் இடதுசாரிப் பிரிவு ஆகியவற்றின் ஆதரவை மட்டுமே பெற்றது. இந்த இணைப்புடன், சீனாவில் ஏகாதிபத்தியத் தலையீட்டைத் தகர்த்தெறிவதும், உள்நாட்டு நிலப்பிரபுத்துவத்தைக் தூக்கியெறிவதும் முதலாளித்துவத்துக்கு வழிவகுக்கவே செய்யாது. வெற்றியுடன் பாட்டாளி வர்க்கம்தான் அதிகாரத்துக்கு வருமே தவிர முதலாளித்துவமல்ல. கம்யூனிஸ்ட் தலைமையின் கீழ் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் முற்போக்கு அறிவுஜீவிகளின் கூட்டுடன் சோசலிசத்தைத்தான் கட்டுவார்கள், முதலாளித்துவத்தையல்ல. மேலும் இத்தகைய ஒரு எதிர்காலம்தான் வெற்றிக்குத் தேவையான கோடிக்கணக்கானோரின் தியாகத்தை ஊக்குவிக்கும். ஒரு முதலாளிக்குப் பதில் இன்னொருவரையும், நிலப்பிரபுக்களுக்குப் பதில் முதலாளிகளையும் அமர்த்தும் நோக்கத்துடனான எந்த நீண்ட போராட்டத்திலும் சீன மக்கள் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள்.
நிகழ்ச்சிகள் நிகழத் துவங்கியதும், ஏறத்தாழ அனைத்து கம்யூனிஸ்டுகளும் இந்தக் கொள்கைக்கு உதட்டளவில் சேவை செய்தாலும், லியூ ஷாவோ -சியையும், டெங் சியாவோ பிங்கையும் சுற்றியிருந்த பெரிய மூத்த தலைவர்கள் பலரும் அதனுடன் உண்மையில் ஒத்துப் போகவில்லை. இந்தக் குழுவினர் நீண்டகால “புதிய ஜனநாயகக்” கலப்புப் பொருளாதாரத்தை ஆதரித்தனர். அப்போது அரசு, கூட்டுறவு, கூட்டு முயற்சிகளுடன் சேர்ந்து தனியார் முதலாளித்துவத்தின் வேகமான வளர்ச்சியை ஊக்கப்படுத்த அனைத்தும் செய்யப்படும். அதே சமயம் விவசாயிகள் தாம் புதிதாகப் பெற்ற தனியார் நிலத்தில் தமது கலப்பைகளுடன் தனி உழவர்களாக அமர்ந்து விடுவார்கள். ஒவ்வொருவருமே அவர்களது இலாபத்துக்கும், நஷ்டத்துக்கும் பொறுப்பாவர்.
படிக்க:
♦ பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்
♦ விடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் ! | படக்கட்டுரை
“எப்பொழுது ஒவ்வொரு விவசாயியிடமும் ஒரு கழுதை, ஒரு வண்டி, ஒரு கலப்பை இருக்குமோ அப்போதுதான் சோசலிசம் பற்றி பேசும் காலமாக இருக்கும்” என்று லியூ ஷாவோ-சி கூறினார்.
இவ்வாறாக கட்சி இரு கோஷ்டிகளாக, ஒவ்வொன்றும் தனது நிகழ்ச்சி நிரலுடன், உடைந்தது. நிகழ்வுப் போக்கில் எந்தக் கோஷ்டி, எந்த நிகழ்ச்சி நிரல் வெற்றி பெறுமென்பதை நிர்ணயிக்க நீண்ட போர் துவங்கியது. அனைத்து முனைகளிலும் சோசலிச மாற்றங்களை எதிர்கொண்ட முதலாளித்துவ சக்திகள் எதிர்த்தன, இழுத்தடித்தன, கொள்கையைத் திரித்தன, விஷயங்கள் நடப்பதைத் தாமதப்படுத்த முயற்சிகளை திசை திருப்பின. இது வேலை செய்யவில்லை என்றாலும், அவர்கள் கூட்டுமுறைகளையும், மக்கள் இயக்கங்களையும் வெறித்தனமான எல்லைகளுக்கு இட்டுச் சென்றனர். அவற்றை மிகவும் அவமதித்து பலவீனப்படுத்தி அவை உள்ளிருந்தே ஆபத்தை எதிர்நோக்குமாறு செய்தனர். ஒரு தொடர் வடிவமான வலதுசாரித் தடையுடன் மாறி மாறி வந்த இடது தீவிரவாதத் தகர்ப்பும் புதிய உற்பத்தி உறவுகளையோ, எந்தப் புதிய சமூக வடிவமைப்பையோ, அல்லது எந்தப் புதிய கோட்பாட்டையோ உறுதிப்படுத்த – சோசலிசத்தைக் கட்டுபவர்களுக்கு மிகவும் கஷ்டமான நிலையை உண்டாக்கியது. 1949க்குப் பிறகு முப்பதாண்டுகளுக்கு சோசலிசத்தை உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும், உறுதிப்படுத்தவும் முயன்றவர்கள் பெரும்பாலான சமயங்களில் அதனைத் தடுக்கவும், காட்டிக் கொடுக்கவும், தகர்க்கவும் முயன்ற முதலாளித்துவ மாற்றை முன் வைத்தவர்களின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.
இந்தக் காலம் முழுவதும் சோசலிசத்தைக் கட்டியவர்கள் செய்த பல தவறுகளை எதிர்ப்பாளர்கள் கையிலெடுத்துக் கொண்டு அவர்களை சங்கடப்படுத்தவும் வியப்பிலாழ்த்தவும் செய்தனர். இங்கு வலியுறுத்திக் கூறப்பட வேண்டியது என்னவென்றால், மாவோவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எந்த நேரத்திலும் எளிதாக முயற்சிகள் எடுக்கவும், அவற்றை ஆழப்படுத்தி உறுதிப்படுத்தவும், தவறுகளிலிருந்து கற்கவும், முன்னேறவும் சுதந்திரம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அடியிலும் அவர்கள் பழக்கவழக்கம், பாரம்பரியம் ஆகியவற்றின் தடையை மட்டுமல்ல, பெரிய, வலுவான கட்சிக் கோஷ்டியின் உறுதியான எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியிருந்தது. “வர்க்கப் போராட்டத்தை எப்போதும் மறக்காதீர்கள்” என்பது மாவோவின் வெற்றுக் கோஷமல்ல. அடிப்படைக் கொள்கை மீது சமூக வர்க்கங்களின் கடுமையான மோதல் இந்தக் காலகட்டம் முழுவதும் பரவியிருந்தது. இன்று வரை அந்தப் போராட்டம் தொடர்கிறது.
மாவோ உயிரோடு இருந்தவரை சோசலிச சக்திகளும், சோசலிச முயற்சியும்தான் பெரும்பாலான சமயங்களில் மேலோங்கியிருந்தன. மாவோவின் இறப்புக்குப் பிறகு ஊழிக்காலம் ஏற்பட்டது. சக்திகளின் சமன்பாடு எதிர்ப்பாளர்கள் பக்கம் சாய்ந்தது. டெங் ஒரு இராணுவக் கலகத்தை நிகழ்த்தி மாவோவின் வாரிசான ஹுவா குவாஃபெங்கைக் கவிழ்த்தார். பிறகு பெரும் பின்னேற்றத்துக்குத் தலைமை தாங்கினார். (பக்கம் : 161 – 165)
நூல் : சீனா: ஒரு முடிவுறாத போர்
ஆசிரியர் : வில்லியம் ஹின்டன்
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்
5/1எ. இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை – 600 089.
கைபேசி: 9841775112
பக்கங்கள்: 212
விலை: ரூ. 150.00
வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க





கட்சித் திட்டத்தை வெறுமனே ஏற்றுக் கொண்டு உண்மையான கட்சி உறுப்பினர்களால் சும்மா இருக்க முடியாது, ஆனால் அவர்கள் தாம் ஏற்றுக் கொண்ட திட்டத்தை அமல்படுத்தத் தவிர்க்காமல் தீவிர முயற்சியெடுக்க வேண்டும் என்றே நாங்கள் சொல்கிறோம். நீங்கள் மிகவும் கெடுபிடியானவர்களாக உள்ளீர்கள், ஏனெனில் ஒரு கட்சி உறுப்பினர் தான் ஏற்றுக் கொண்ட கட்சித் திட்டத்தை அமல்படுத்துவது ஒன்றும் அவசியமானதல்ல என்றும் அவர் கட்சிக்கு நிதி ஆதரவு வழங்க விருப்பமாக உள்ளதைப் போன்று ஏதோ ஒன்றை செய்கிறார் என்றும் மார்ட்டோவ் விடை அளிக்கிறார். மார்ட்டோவ் சில ‘சமூக-ஜனநாயகவாத’ காற்றடைத்தப் பைகளுக்குப் பரிவு காட்டி, கட்சியின் கதவுகளை அவர்களுக்காக மூட விரும்பாமல் உள்ளதாகக் தோன்றுகிறது.


இருந்தபோதிலும், நம்மால் சமீப காலம் வரை இவை அனைத்தையும் காண்பது கடினமானதாக இருந்தது. தனிப்பட்ட குழுக்கள் மட்டும், நாட்டின் பல பாகங்களிலும் உள்ள தனிப்பட்ட நகரங்களில் போராடியதால், நாம் இதுவரை போராட்ட அரங்கில் தனிப்பட்ட குழுக்களை மட்டும் சந்தித்தோம். எனவேதான் நம்மால் சமீப காலம் வரை இக்காரணத்தினால் இதைக் காண்பது கடினமாக உள்ளது. மேலும் வர்க்கங்களாகப் பாட்டாளிகளும் முதலாளிகளும் உள்ளதை அவ்வளவு எளிதாக உற்றுப்பார்த்து அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் தற்போதோ நகரங்களும் கிராமங்களும், பாட்டாளிகளின் பல்வேறு குழுக்களும் கைகோர்த்து உள்ளார்கள், கூட்டுப் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வேலை நிறுத்தங்களும் வெடித்து வெளிப்பட்டுள்ளதோடு – நமக்கு முன்பாக இரு ரசியாக்களின், – முதலாளித்துவ ரசியாவுக்கும் பாட்டாளிகளின் ரசியாவுக்கும் இடையிலான போராட்டத்தின் சிறப்பான காட்சி வெளிப்பட்டுள்ளது. போராட்ட அரங்கில் இரு பெரிய இராணுவங்களும் – முதலாளிகளின் இராணுவமும், பாட்டாளிகளின் இராணுவங்களும் – நுழைந்து இருக்கின்றன, நமது சமூக வாழ்வு முழுவதையும் இந்த இரு இராணுவங்களுக்கும் இடையிலான போராட்டம் தழுவியுள்ளது.
முதலாளித்துவ அமைப்புமுறை நிலவும் வரை, தவிர்க்க முடியாதவாறு மக்களிடம் வறுமையும், பின்தங்கிய நிலையும் நிலைபெற்று, பாட்டாளிவர்க்கம் முழுதும் தேவைப்படும் அளவிற்கு வர்க்க உணர்வு பெற முடியாது என்பது எமது கருத்தாகும். எனவே இதன் விளைவாக வர்க்க உணர்வு பெற்ற தலைவர்களின் குழு பாட்டாளி வர்க்கப் படைக்கு சோசலிச உணர்ச்சிப் பெறுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தெட்டத்தெளிவாக விளங்கும் என்பதால் இதற்கு சான்று தேவையில்லை என்பது எமது கருத்தாகும். போராடும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு தலைமையளிக்க புறப்பட்டுள்ள ஒரு கட்சியானது தனி நபர்களின் கதம்பக்கூட்டாக இல்லாமல், மத்தியத்துவப்பட்ட அமைப்பாக கட்டுக்கோப்பாக இருப்பதன் வாயிலாக அதன் செயல்பாடுகள் ஒரு தனித் திட்டத்திற்கேற்ப இருக்க முடியும் என்பது தெளிவாகும். இவையே நமது கட்சியின் பொதுவான தோற்றம் குறித்த விளக்கமாகும்.
ஒரு கட்சி உறுப்பினர் கட்சியின் கொள்கைகளை அமல்படுத்துவது என்பதன் பொருள் என்ன? கட்சியின் கொள்கைகளை அவர் எப்போது அமல்படுத்த முடியும்? அவர் ஒட்டுமொத்த கட்சியுடன் அணிவகுத்துச் செல்லும்போது, பாட்டாளி வர்க்கப் படையின் தலைமையில் அவர் போரிடும் போது மட்டுமே அமல்படுத்த முடியும். தனிமையில் உள்ள சிதறுண்ட தனிநபர்களைக்கொண்டு இப்போராட்டத்தை நடத்த முடியுமா? நிச்சயமாக முடியாது! மாறாக, மக்கள் முதலில் ஒன்றுபட்ட அமைப்பான பின்பே களத்திற்குச் செல்கிறார்கள். ஒருவேளை இவ்வாறு நடைபெறாவிடில் அனைத்துப் போராட்டமும் பயனற்றதாகும். ஒரு கட்டுக்கோப்பான அமைப்பில் கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபடும்போது மட்டுமே அவர்களால் போரிடமுடியும், கட்சியின் கொள்கைகளை அமல்படுத்த முடியும் என்பது தெளிவாகிறது. கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபடும் அமைப்பானது எந்தளவிற்குக் கட்டுக்கோப்பாக உள்ளதோ, அந்தளவிற்கு அவர்களால் சிறப்பாகப் போரிடமுடியும், மற்றும் இதன் விளைவாக அவர்களால் கட்சியின் திட்டம், செயலுத்திகள் அமைப்புக் கொள்கைகளை மேலும் அதிகமாக அமல்படுத்த முடியும். தனிநபர்களின் கதம்பத் திரள் அல்ல அது ஒரு தலைவர்களின் அமைப்பு என்று நமது கட்சியை எந்தக் காரணமுமின்றி சாதாரணமாக சொல்லப் படவில்லை. மேலும், கட்சியானது தலைவர்களின் அமைப்பாக இருப்பதால் இவ்வமைப்பில் செயல்படுபவர்கள்தான் இக்கட்சியின், இவ்வமைப்பின் உறுப்பினர்களாகக் கருதப்பட முடியும் என்பதோடு இவர்கள் விருப்பங்களைக் கட்சியின் விருப்பங்களோடு இணைப்பதைத் தமது கடமையாகக் கருதவேண்டும் என்பது ஐயத்துக்கிடமில்லாததாகும். மேலும், கட்சி உறுப்பினர்களாகக் கருதப்படுபவர் கட்சியுடன் இசைவாகச் செயல்படவேண்டும் என்பதும் ஐயத்துக்கிடமற்ற உண்மையாகும்.



போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினரை எதிர்கொள்ளும் போராட்டக்காரர்கள் !
ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்து 190 பேர் மரணமடைந்து, 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடற்றவர்களானதற்குக் காரணமான பெய்ரட் துறைமுக வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரோனின் லெபனான் வருகையும் இந்தப் போராட்டங்களோடு தற்செயலாக ஒரே சமயத்தில் நிகழ்ந்துள்ளது.
பெய்ரட் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் வீசப்பட்ட கண்ணீர்ப் புகை குண்டுகளை பாட்மிட்டன் மட்டையால் திருப்பியடிக்கும் போராட்டக்காரர்.
ஒரு போராட்டக்காரர் கலவர தடுப்புப் போலீசின் மீது கற்களை வீசுகிறார்
கூட்டத்தை சமாளிக்க ஒரு இராணுவ வாகனம் வரவழைக்கப்பட்டது.

இருள் அடர்ந்த, அழுக்குப் பிடித்த ஆலை நகரங்கள் தோன்ற ஆரம்பித்தன : மான்செஸ்டர், பர்மிங்காம், கிளாஸ்கோ…. பருத்தித் தொழில் இந்தத் தொழில் துறைப் புரட்சியின் முக்கியமான மையமாயிற்று. அந்தத் தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களையும் எரிபொருள்களையும் உற்பத்தி செய்கின்ற துணைத் தொழில்கள் வளர்ச்சி அடைந்தன. நிலக்கரி, இரும்பு ஆகியவற்றின்யுகம் ஆரம்பமாயிற்று. நீராவி உந்து சக்தி பிரதான தோற்றுவாயாயிற்று. 1822ம் வருடத்தில் ரிக் கார்டோ நீராவிப் படகில் ஐரோப்பாவுக்குப் பிரயாணம் செய்தார்; அவர் மரணமடைந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு நீராவியைப் பயன்படுத்தும் முதல் ரயில் வண்டி ஏற்பட்டது.
இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய சமூக விளைவுகளைப் பற்றி முதல் தடவையாகக் கருத்துச் செறிவோடு ஆராய்ந்து எழுதியவர் அவரே. 1819ம் வருடத்தில் பீட்டர் ஸ்பீல்டில் நடைபெற்ற மான்செஸ்டர் தொழிலாளர்களின் பிரம்மாண்டமான ஆர்ப் பாட்டத்தின் போது அவர்கள் மீது துருப்புகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தன. சமகாலத்தவர்கள் இந்தப் படு கொலையைப் பற்றி (வாட்டர்லோ வெற்றியைக் கேலி செய்து) ”பீட்டர்லோ வெற்றி” என்று வேடிக்கையாகக் கூறினார்கள்.



இருபது ஆண்டுகளாக உருக்காக வார்க்கப்பட்ட நம் கட்சியில் குறுங்குழு வாதம் ஆதிக்கம் செலுத்துவது என்பது இனிமேல் இல்லை . கட்சியின் உள் மற்றும் வெளி உறவுகளில் குறுங்குழு வாதத்தின் மிச்ச சொச்சங்கள் இன்றும் காணக்கிடக்கின்றன. கட்சியின் உள்ளே நிலவும் குறுங்குழுவாதப் போக்குகளானவை கட்சித் தோழர்களை விலக்கி வைத்து ஒற்றுமைக்கும் இணைவுக்கும் தடையாக உள்ளது. கட்சியின் வெளி உறவில் நிலவும் குறுங்குழுவாதப் போக்குகளானவை, கட்சியை வெகுமக்களோடு இணைக்கும் – கட்சியின் வேலைக்குத் தடையாக உள்ளது. இதனை வேரறுப்பதன் மூலம்தான், நமது கட்சித் தோழர்களிடையே இணைப்பை ஏற்படுத்துவது, மக்களை ஒன்றுபடுத்துவது என்ற தன் மாபெரும் கடமையில் தடையற்ற முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.
“முதலில் “சுதந்திர” நிலையை வலியுறுத்துவது. சில தோழர்கள் முழுமையைப் புறக்கணித்து, பகுதி நலனைக் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் எப்போதுமே தங்கள் பொறுப்பில் உள்ள வேலைகளுக்குத் தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தமது சொந்தப் பகுதிநலன்களுக்கு, முழு நலன்களையும் எப்போதும் அடிபணிய வைக்கின்றனர். அவர்கள் கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜன நாயகம் மட்டுமல்ல, அதைக்காட்டிலும் மத்தியத்துவம் அவசியமென்பதை அறிந்து கொள்ளவில்லை. சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கும் , கீழ்மட்டம் மேல்மட்டத்திற்கும், பகுதி முழுமைக்கும், அனைத்து ஊழியர்கள் மத்தியக் குழுவுக்கும் கட்டுப்பட்டு நடக்கும் ஜனநாயக மத்தியத்துவ அமைப்பை மறந்து விட்டார்கள். காங்-குவாட்டா மையக்குழுவில் தனது “சுதந்திர” நிலையை வலியுறுத்துவதன் மூலம் கட்சிக்குத் தனது துரோகத்தனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு கோமிங்டாங் ஏஜண்டாக மாறினர். இப்போது நாம் விவாதித்து வரும் குறுங்குழுவாதம் அபாயகரமான ஒன்றாக இல்லாதபோதும், இதற்கு எதிராகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். முழுமையின் நலன்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கட்சித் தோழர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கட்சி ஊழியரும், ஒவ்வொரு அறிவிப்பும், ஒவ்வொரு நடவடிக்கையும் கட்சியின் முழு நலன் என்ற நோக்கில் இருந்து தொடர வேண்டும். இந்தக் கொள்கையை மீறுவது என்பது முற்றிலும் அனுமதிக்க முடியாத ஒன்று.
“நேர்மையான நபர்கள் யார்? மார்க்ஸ், ஏங்கெல்ஸ், இலெனின், ஸ்டாலின் ஆகியோர் நேர்மையானவர்கள். அறிவியலாளர்கள் நேர்மையானவர்கள். நேர்மையற்ற நபர்கள் யார்? ட்ராட்ஸ்கி, புகாரின், சென் டீயு-சீ, சாங் கோ-டா இவர்கள் முழுக்க முழுக்க நேர்மையற்ற நபர்கள். குழு அல்லது தனிநபர் அடிப்படையில் “சுதந்திர” நிலையை வலியுறுத்துபவர்கள் கூட நேர்மையற்ற நபர்கள்தான். தந்திரமான நபர்களும் தங்களை மதிப்பு மிக்கவர்களாக, புத்திசாலிகளாக அலங்காரப்படுத்திக் கொண்டு தங்கள் வேலைகளில் அறிவியல் அணுகுமுறை கொண்டிராத அனைத்து நபர்களும், உண்மையில் ரொம்பவும் அயோக்கியர்கள். அவர்கள் எந்த நன்மைக்கும் உதவுவதில்லை . நமது கட்சிப் பள்ளியில் உள்ள மாணவர்கள் இந்தச் சிக்கலில் கவனம் செலுத்த வேண்டும். நாம் ஒரு மையப்படுத்தப்பட்ட ஒற்றுமையான கட்சியைக் கட்டியமைத்து, கொள்கையற்ற குழுச் சண்டைகள் அனைத்தையும் முழுமையாகத் துடைத்தெறிய வேண்டும். தனிநபர்வாதத்தையும், சந்தர்ப்பவாதத்தையும் எதிர்ப்பதன் மூலம் நமது கட்சி முழுவதையும் ஒரு பொது இலட்சியத்திற்காக நடைபோட, போரிடத் தயார்படுத்த வேண்டும். 

முதல்சுற்று கைதுகள் கடந்த ஜூலை 2018-ம் ஆண்டில் துவங்கியது. அந்த சமயத்தில் மும்பையைச் சேர்ந்த தலித் செயற்பாட்டாளர் சுதிர் தவாலே, நாக்பூரைச் சேர்ந்த ஊபா சட்ட நிபுணரும் வழக்கறிஞருமான சுரேந்திரா காட்லிங், இடப்பெயர்வு பிரச்சினைகளுக்காக போராடும் செயற்பாட்டாளரான மஹேஷ் ரவுத், நாக்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோமா சென், சிறைக் கைதிகள் உரிமைச் செயற்பாட்டாளரான ரோனா வில்சன் ஆகியோரைக் கைது செய்தது புனே போலீசு.


திருத்தல்வாதம் சோசலிச லட்சியங்களைக் கைவிட்டு “பாட்டாளி வர்க்க அடிப்படை நலன்களை கற்பனையான அல்லது நிஜமான பொருளாதார நலன்களுக்காக தியாகம் செய்துவிடும்” அளவுக்கு சரிந்தது.


“பொருளாதாரவாதிகள்” என அழைக்கப்பட்டவர்கள் கட்சிக்குள் “விமரிசன சுதந்திரத்தை”க் கோரியும், லெனினுடையவை “குறுகிய அரசியல் பார்வை” எனத் தாக்கியும், தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். லெனின், அவர்கள் கோருகின்ற “விமரிசன சுதந்திரம்” உண்மையில் மார்க்சியத்திற்கு பதில் முதலாளித்துவக் கருத்துக்களைத் தழுவுவதற்கு வேண்டும் சுதந்திரம் என்பதையும், முதலாளித்துவ வாதிகளுடன் சமரசத்திற்கான பாதையைத் திறந்துவிடும் என்பதையும் காட்டுகிறார். 