“மறைமுக பாட திட்டம்” என்கிற சொற்றொடர் 1960-களில் கல்வியாளர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த அறிவுஜீவியும், கலாச்சார விமர்சகருமான ஹென்றி கிரோக்ஸ் அதைப் பற்றிச் சொல்லும்போது “வெளிப்படையான பாடத் திட்டத்தில் இல்லாவிட்டாலும் நாம் பள்ளிகளில் கற்றுக் கொள்ளும் விசயங்களும்தான் அவை” என்கிறார்.
அதாவது, ஒரு கல்விக்கூடத்தின் நோக்கங்களாக வெளிப்படையாக சொல்லப்படாத விசயங்களை வெறுமனே பள்ளிக்குச் செல்லும் அனுபவத்தின் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்வதையே மறைமுக பாடத்திட்டம் என்கிறார்கள். மதிப்பீடுகள், அறம் சார்ந்த விசயங்கள், கண்ணோட்டங்கள் உள்ளிட்ட வெளிப்படையாக வகுப்பறையில் மாணவர்களுக்கு சொல்லித் தரப்படாத விசயங்களை அவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.
கல்விக் கூடங்களுக்கே மறைமுக பாடதிட்டம் இருக்கும்போது அரசாங்கங்களுக்கும் நிச்சயமாக அது இருக்கத்தான் செய்கிறது.
ஒரு அரசாங்கத்தின் மறைமுக பாடதிட்டம் என்பது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் இருந்து வேறுபட்டது. அது தன்னை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. அரசின் தலைவர்களுடைய நடவடிக்கைகளின் ஊடாகவும் மக்களுக்கு அவர்கள் தெரிவிக்கும் செய்திகளின் ஊடாகவும் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தலைவர்கள் எதைக் கண்டிக்கிறார்கள் – எதைக் கண்டிப்பதில்லை, எவற்றிற்காக மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுகிறார்கள் என்பதன் மூலமும், முக்கியமாக சமூகத்தின் வலுகுன்றிய பிரிவினரை எப்படி நடத்துகிறார்கள் என்பதன் ஊடாகவும் மறைமுகப் பாடத்திட்டம் தன்னை பிரகடனப்படுத்திக் கொள்கிறது.
ஒரு அரசாங்கத்தின் மறைமுக பாடத்திட்டம் நீண்ட நாட்களுக்கு மறைமுகமாகவே இருக்காது. ஆனால் அதை நீங்கள் புரிந்து கொள்ளும்போது அதுவே நாட்டின் நடைமுறை எதார்த்தமாக மாறியிருப்பதோடு, பெரும்பான்மை மக்களின் கண்ணோட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.
மறைமுகப் பாடத்திட்டம் என்பது பெரும்பாலும் உணர்வுத் தளத்தில், ஆழத்தில் (subconscious) செயல்படக் கூடியதாகும். எனவே நாம் எந்தளவுக்கு அதன் செல்வாக்குக்கு ஆட்பட்டிருக்கிறோம் என்பதை உணர்வதில்லை. எனவே பல சந்தர்பங்களில் “விசயங்களுக்கு பின்னால் இருக்கும் விசயங்களில்” நாம் எந்தளவுக்கு ஆழ்ந்து போயிருக்கிறோம் என்பதை உணர்வதற்கே நீண்ட காலம் பிடிக்கிறது. பழைய கதை ஒன்றில் சொல்வதைப் போல், காய்ச்சப்படும் தண்ணீர் பாத்திரத்தில் விடப்பட்ட தவளை தனக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் சமைக்கப்பட்டு விடுவதைப் போல் நாமும் மெல்ல மெல்ல மாற்றப்படுகிறோம்.
கடந்த ஐந்தாண்டுகளில் இந்த மறைமுக பாடத் திட்டம் நம்மை எவ்வாறு மாற்றியுள்ளது? நாம் நமக்குள் ஈர்த்துக் கொண்ட மிகப் பெரிய “பாடங்களும்” செய்திகளும் எவையெவை? ஒரு நீர்வீழ்ச்சியைப் போல் நம்மீது கொட்டப்படும் சமூக வலைத்தள கருத்துக்கள் மற்றும் முடிவற்ற பிரேக்கிங் நியூஸ்களையும் ஊடுருவிப் பார்க்கும் போது அவை நமக்கு சில செய்திகளைத் தெரிவித்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
என்ன மாதிரியான செய்திகள்?
ஒரு குறிப்பிட்ட மதம் பிற மதங்களை விட உயர்வானது; அந்த மதத்தைச் சேர்ந்த இந்தியர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக நடத்தப்பட வேண்டும். அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற தன்மையை கணக்கில் கொள்ளக் கூடாது என அதிகாரத்தில் உள்ளவர்களால் நமக்குச் சொல்லப்படுவதோடு, மதச் சிறுபான்மையினரை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்றும் சொல்லப்படுகிறோம்.
அதே போல் ஏழைகளை விட பணக்காரர்களுடன் தனக்குள்ள சார்பை அதிகாரம் மிகத் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. நாம் நல்லவர்கள் தண்டிக்கப்படுவதையும், அயோக்கியர்கள் தப்பிப்பதையும் பார்க்கிறோம். வல்லான்மையே சரியானது என நமக்குச் சொல்லப்படுகின்றது. நமக்குச் சொல்லப்படும் செய்திகள் அனைத்தின் அடியாழத்திலும் விசத்தன்மை கொண்ட நம்மீது மேலும் அழுத்தம் கொடுக்கும் செய்தி ஒன்றும் உள்ளது.
இந்தச் செய்திதான் மிகக் குறிப்பாக எதிர்க் கருத்துக்களை அடித்து நொறுக்குவதாய் உள்ளது. அதனை சாராம்சமாய் இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிடலாம் : “எதுவும் தவறில்லை”
யோசித்துப் பாருங்கள். கடந்த ஐந்தாண்டுகளில் எதையெல்லாம் முக்கியமானது என்று கருதினோமோ அதையெல்லாம் முக்கியமற்றது என திரும்பத் திரும்ப சொல்லி வந்ந்துள்ளனர். நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது என்ன?
“உண்மை ஒரு பொருட்டல்ல”
“சட்டம் ஒரு பொருட்டல்ல”
“ஏழைகள் ஒரு பொருட்டல்ல”
“ஒற்றுமை ஒரு பொருட்டல்ல”
“கல்வி ஒரு பொருட்டல்ல”
ஆச்சார்யா அடல்
உண்மை ஒரு பொருட்டல்ல : அப்படி இருந்திருந்தால் இந்தியாவின் மையநீரோட்ட ஊடகங்கள் அரசின் செயல்பாடுகளை தீவிரமாகவும், புறநிலை எதார்த்தங்களோடு பொருத்தியும் விமர்சித்திருக்கும். உண்மையை ஒரு பொருட்டாக கருதியிருந்தால், “கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்தும் தினமலர் – சன் குழுமம்” நடத்திய மறைபுலனாய்வில் இந்தியாவின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் சிக்கியிருக்க மாட்டார்கள்.
சட்டம் ஒரு பொருட்டல்ல : இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திலிருந்து சில முக்கியமான ஆவணங்கள் களவு போய் விட்டதாகச் சொல்கிறார். அதற்கு சில நாட்கள் கழித்து தான் அப்படிச் சொல்லவில்லை… ஒரு சில ஆவணங்களின் நகல் பிரதிகளே களவு போயின என்று மாற்றிப் பேசுகிறார். இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதன் ஊடாக இந்த நாட்டின் சட்டங்கள் மலிவானதொரு நகைச்சுவை என்பதாக ஒரு செய்தி சொல்லப்படுகின்றது.
செயல்பாட்டாளரும் அறிவுஜீவியுமான சுதா பரத்வாஜ் போன்றோர் தேசத்தின் எதிரிகளாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்; மறுபுறம் பாபு பஜ்ரங்கி சுதந்திரமாக நடமாடுகிறார் – இதன் மூலம் சட்டம் ஒரு பொருட்டே அல்ல என்று நம்மிடம் சொல்கிறார்கள்.
ஏழைகள் ஒரு பொருட்டல்ல : அப்படி ஏழைகளை ஒரு பொருட்டாக கருதியிருந்தால் அவர்கள் இதயமற்ற முறையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு ஆட்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள். ஒரு பேனாவின் கிறுக்கலில் அவர்களின் நிலமும், காடுகளும் அவர்களிடமிருந்து பிடுக்கப்பட்டிருக்காது; மாறாக ஒரு சிலைக்காக செலவிடப்பட்ட 3000 கோடி ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக செலவிடப்பட்டிருக்கும்
ஒற்றுமை ஒரு பொருட்டல்ல : ஏனெனில் தலைநகரை நோக்கி நடத்தப்பட்ட வரலாற்றில் மிகப் பெரிய விவசாயிகள் ஊர்வலம் குறித்த செய்திகள் மையநீரோட்ட ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டன. விவசாயிகளின் அந்த ஒற்றுமை ஒரு பொருட்டே அல்ல என்று இந்த ஊடகங்கள் கருதின. கால் நூற்றாண்டுகள் சந்தித்திராத வேலைவாய்ப்பின்மையால் ஏழைகள் வாடும்போது வங்கிகளுக்கு நாமம் போட்ட பணக்காரர்களோ சர்வ சுதந்திரமாக வெளிநாடுகளில் உலாவுகின்றனர். எனில், இந்த அரசாங்கம் யாருக்கானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
கல்வி ஒரு பொருட்டல்ல : கல்வியை அவர்கள் ஒரு பொருட்டாக கருதினார்கள் என்றால், ஏன் அரசு பல்கலைக்கழங்கள் மற்றும் அரம்பக் கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைக் குறைக்க வேண்டும்?
எதுவுமே ஒரு பொருட்டல்ல.
இப்போது அவர்களின் அக்கறைக்கு உரியதெல்லாம் அவர்களின் மாபெரும் தலைவர் தனது புனிதக் கடமையாக கருதும் தனது பிம்பத்தின் அடிப்படையிலேயே இந்த தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதுதான். இதை நிறைவேற்றுவதற்காக தேசத்தின் ஒவ்வொரு முடுக்குகளிலும், சுவர்களிலும், செய்தித் தாள்களின் முகப்புகளிலும், பதாகைகளிலும், தொலைக்காட்சி திரைகளிலும், திரை அரங்குகளிலும் அந்த தலைவரின் முகத்தை ஒட்டி வைக்கிறார்கள். ஏனெனில், மக்கள் எந்தத் திசையில் திரும்பினாலும், அவரைப் பார்க்க வேண்டும், அனைத்திலும் பார்க்க வேண்டும், அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் அவரே என்பதை மக்களிடம் பதிவு செய்ய வேண்டும்.
இந்த போக்குகள் நம் இளைஞர்களின் சிந்தனையில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன?
அவர்கள் வன்முறை பரவாயில்லை என்று கற்றுக் கொள்கின்றனர். ஏனெனில், வன்முறையாளர்கள் தண்டிக்கப்படுவதில்லை. வன்முறையாளர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் போது ஒரு மத்திய அமைச்சரே அவர்களுக்கு மலர் மாலையிட்டு வரவேற்கிறார். இளைஞர்கள் கற்பது ஆபத்தானது என்று கருதுகின்றனர்; ஏனெனில், விமர்சனப்பூர்வமாக சிந்திப்பது சிக்கலை ஏற்படுத்தி விடும் என அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஜே.என்.யூ பல்கலைக்கழகத்திற்கு என்ன நேர்ந்ததெனப் பாருங்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் பரிவுடனும், திறமையுடனும் இருக்கத் தேவையில்லை என்று இளைஞர்கள் கற்றுக் கொள்கின்றனர். தலைவர்கள் அறிவார்ந்தவர்களாக இருக்கத் தேவையில்லை. நீதி மறுக்கப்படுவது தவறில்லை; குரல்களையும் உரிமைகளையும் இழந்தவர்களைப் பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை. ஜோர்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலில் வரும் பெரியண்ணனின் அரசாங்கத்தைப் போன்ற குறியீடுகளை நாமும் போட்டுக் கொள்ளலாம்:
“போர் தான் அமைதி”
“அடிமைத்தனம் தான் விடுதலை”
“அறியாமையே வலிமை”
ஏனெனில், ஒரு ஜனநாயகத்தை உண்மையாகவே அழிக்க வேண்டுமென்றால் நிறுவனமயமான அராஜகவாதமும் (institutional anarchy), அறம் சார்ந்த அழிவுவாதமும் (moral nihilism) கட்டவிழ்த்து விடப்படுவது கட்டாயத் தேவைகள் ஆகும். இதுதான் இந்த நாடெங்கும் கடந்த ஐந்து வருடங்களாக நடந்து வருவதைப் பார்க்கிறோம். பழைய மரபுகளை அழித்தொழித்த பின்னர்தான் ஒரு கொடுங்கோலனால் அடக்குமுறைக்கான புத்தம் புதிய முறைகளை உருவாக்கி அதை “புதிய மரபுகளாக” பெயரிட முடியும். இந்த விசயத்தில் அதை “புதிய இந்தியா” என்றும் சொல்லலாம்.
உண்மையில் நாம் இதை விட அறிவார்ந்தவர்கள். ஜனநாயகம் என்பது சட்டத்தின் ஆட்சியின் கீழ்தான் செழிக்க முடியும் என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியும். மக்கள் கற்றுக் கொள்ளும் போதுதான் ஜனநாயகம் மலர முடியும். அதிகாரமற்றோருடன் ஒன்றுவதன் மூலம்தான் ஜனநாயகம் வளரும். எந்த நாட்டில் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றதோ அங்கேதான் ஜனநாயகம் முன்னேறும். ஜனநாயகத்திற்கு வலுவான நான்காம் தூண் தேவை; அங்கே பத்திரிகையாளர்களுக்கு கடினமான கேள்விகளைக் கேட்கும் உரிமை இருக்க வேண்டும்; அங்கே உண்மைகளும், தரவுகளும் மதிக்கப்பட வேண்டும். ஒரு உண்மையான ஜனநாயகம் என்பது அதன் நிறுவனங்கள் எந்தளவுக்கு வலுவாக உள்ளதோ அந்தளவுக்கு வலுவாக இருக்கும். உண்மையான ஜனநாயகம் என்பது ஒரு நாட்டின் குடிமக்களின் வீரம் மற்றும் பரிவின் ஒட்டுமொத்தமாக இருக்கும்.
எனவே தான் அனைத்தும் முக்கியத்துவமுடையதாகிறது.
“உண்மை முக்கியமானது”
“சட்டம் முக்கியமானது”
“ஏழைகள் முக்கியமானவர்கள்”
“ஒற்றுமை முக்கியமானது”
“கல்வி முக்கியமானது”
“சகல பிரிவு மக்களும் முக்கியமானவர்கள்”
எப்படி ஒரு கல்விக்கூடத்தின் மறைமுக பாடதிட்டத்தில் எல்லா மாணவர்களும் மயங்கி விடுவதில்லையோ, அதே போல் குடிமக்களில் அனைவருமே அரசாங்கத்தின் மறைமுக பாடதிட்டத்திற்கு ஆட்படுவதில்லை. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் இந்த மறைமுக பாடதிட்டத்திற்கு ஆட்பட்டவர்கள் எத்தனை பேர் ஆட்படாதவர்கள் எத்தனை பேர் என்பதை நமக்கு உணர்த்தும்.
கட்டுரையாளர் : ரோகித் குமார் தமிழாக்கம் : சாக்கியன் நன்றி : தி வயர்
“ஆனால், ஏன் அவர்கள் என்னை கட்டாயப்படுத்திபன்றி இறைச்சி உண்ணச் செய்தனர் ?”
இந்த வாரத்தின் தொடக்கத்தில் சமூக ஊடகங்களில் வைரலான அந்த வீடியோவில் சகதியில் மண்டியிட்டு, அடுத்து தனக்கு என்ன நேருமோ என மிரட்சி, பயத்துடன் காணப்பட்ட அந்த முதியவரின் முகம் பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்திருக்கும்.
ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் இந்தியா பெற்ற இழி பெருமைகளுல் ஒன்று இந்துத்துவ கும்பல் வன்முறை. பாஜக ஆளும் மாநிலங்களில் இரட்டை பலத்துடன் இந்துத்துவ கும்பல் கொலைவெறியை அரங்கேற்றி வருகிறது. தேர்தல் காலத்தில், இந்துத்துவ கும்பலின் தலைக்கு ஏறும் வெறி, அப்பாவி மக்களை கொன்று கொண்டிருக்கிறது.
சவுகத் அலி
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அசாமில் உள்ள சந்தையில் உணவகம் வைத்திருக்கும் சவுகத் அலியை இந்துத்துவ கும்பல் ஒன்று எருமை இறைச்சி வைத்திருந்ததாகக் கூறி அடித்து, அவமானப்படுத்தி துன்புறுத்தியிருக்கிறது. உச்சக்கட்டமாக, முசுலீம் மதத்தில் தடைசெய்யப்பட்ட ‘பன்றி இறைச்சி’யை கட்டாயப்படுத்து வாயில் திணித்து உண்ண வைத்திருக்கிறது.
அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள பிஸ்வநாத் சரியாலி பகுதியில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை கூடுவதுண்டு. இந்த சந்தையில் உணவகம் வைத்திருக்கிறார் சவுகத் அலி. எருமை இறைச்சி, கோழி இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளை கடந்த 40 ஆண்டுகளாக விற்றுக்கொண்டிருக்கிறார் அலி.
முன்னதாக, இந்தக் கடையில் விற்கப்படும் எருமை இறைச்சி தரமானதாக இல்லை என்று கூறி ஒரு நபர் தகராறு செய்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை நான்கு ஆட்களுடன் வந்த அந்த நபர், இனிமேல் எருமை இறைச்சியை அங்கே விற்கக்கூடாது என கூறியிருக்கிறார். அப்படியே வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்தாலும், கீழேதான் கொட்ட வேண்டும். விற்பனைக்கு வைக்கக்கூடாது என்றும் எச்சரித்திருக்கிறார்.
அப்போது, தான் கொண்டுவந்திருந்த எருமை இறைச்சியை மறைத்து வைத்திருக்கிறார் அலி. “அன்று பிராய்லர் இறைச்சியும் மீனையும் மட்டுமே பரிமாறினேன்” என்கிறார்.
அதே நாள் மாலை 3.30 மணியளவில் திரும்பவும் வந்த அந்த கும்பல், அந்தச் சிறிய கடையில் வைத்திருந்த கறியை கண்டுபிடித்துவிடுகின்றனர்.
அப்போது, “பங்களாதேசி, தே….பயலே, இதை என்ன பாகிஸ்தான் என்று நினைத்தாயா?” என்று கேட்டதாக சொல்கிறார் அலி.
பத்து பேருக்கும் மேல் இருந்த அந்த கும்பல், அதோடு விடவில்லை. கடையில் இருந்த அனைத்தையும் அடித்து நொறுக்கத் தொடங்கினார்கள். உணவு மேசையை உடைத்ததோடு, பாத்திரங்கள், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை அருகில் இருந்த சாக்கடையில் தள்ளியிருக்கிறார்கள்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அலி, அங்கிருந்த சந்தை பொறுப்பாளர்களிடம் உதவி கேட்டு ஓடியிருக்கிறார். அவர்களோ இங்கிருந்து வெளியேறுங்கள் என சொல்லிவிட்டனர். “எனவே, நான் அடிக்கப் போகிறார்கள் என்ற பயத்தில் ஓட ஆரம்பித்தேன்.”என்கிறார் அலி
“ஆனாலும், அவர்கள் விடவில்லை. சந்தை பொறுப்பாளர் ஒருவரே அலியை இந்துத்துவ கும்பலிடம் பிடித்து கொடுத்திருக்கிறார். “அவர்கள் என்னை கட்டையால் தாக்கினார்கள், என்னை சந்தையின் ஒரு பகுதியிலிருந்து இழுத்து வந்து அடித்தார்கள்” என கலங்குகிறார் அலி.
மீதியை வீடியோவில் உலகம் பார்த்தது, சகதியில் மண்டியிட்டு, மிரட்சியுடன் பார்க்கும் அலியிடம் அவர்கள், “நீ ஏன் மாட்டிறைச்சி விற்கிறாய்? மாட்டிறைச்சி விற்க உன்னிடம் அனுமதி உள்ளதா? நீ வங்காள தேசத்தை சேர்ந்தவனா? உன் பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உள்ளதா?” எனக் கேட்டிருகிறார்கள்.
‘உண்மையான’ இந்தியர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு தீவிரமாக உள்ள பாஜக அரசு குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணியை செய்து வருகிறது. அலியின் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரும் உள்ளது. ஆனால், அவருடைய பெயர் இல்லை. “என்னுடைய தாத்தாவுக்கு தாத்தா இங்கேதான், தாரங் மாவட்டத்தில் பிறந்தார்” என்கிறார் அலியின் சகோதரர் அப்துல் ரகுமான்.
இந்துத்துவ கும்பல் அலியின் மீது நிகழ்த்திய வன்முறை அதோடு முடியவில்லை. அந்த கும்பல் கட்டாயப்படுத்தி பன்றி இறைச்சியை அவருடைய வாயில் திணிக்கிறது. அவர் அதை மறுத்தபோது, அதை விழுங்கும்படி கும்பலின் ஒருவன் மிரட்டுகிறான்.
40 ஆண்டுகாலம் எந்த இடத்தில் மரியாதையான தொழிலைச் செய்தாரோ அதே இடத்தில் அவமானப்பட்டதோடு, உடலளவில் காயம்பட்டிருக்கும் அலி கேட்கிறார், “ஆனால், ஏன் அவர்கள் என்னை பன்றி இறைச்சி உண்ணக் கூறி கட்டாயப்படுத்தினார்கள்? நாங்கள் இந்துக்கள் உண்ணமாட்டார்கள் என எருமை இறைச்சியை மட்டும்தான் விற்கிறோம்”
அலியின் சகோதரர், “என் சகோதரர் தவறு செய்திருந்தால் அவர்கள் போலீசை அழைத்திருக்கலாம். ஆனால், ஏன் பன்றி இறைச்சியை உண்ண வைத்தார்கள்? எல்லோருக்கும் அவரவர்களுடைய ஏதோ ஒரு நம்பிக்கை உள்ளது.” என்கிறார்.
மற்ற பாஜக ஆளும் மாநிலங்களைப் போல் அல்லாமல், அசாமில் மாட்டை வெட்டுவது தடை செய்யப்படவில்லை. அதோடு, அசாமில் உள்ள சட்டம் பசு, காளை அல்லது எருமை ஆகியவற்றை வேறுபடுத்தியும் பார்க்கவில்லை. காசாப்புக்கு தகுதியானது என மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கிய கால்நடைகளை வெட்டலாம். பொதுவாக, அந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.
இந்துத்துவ கும்பலின் வெறியாட்டம் சமூக ஊடகங்களில் வைரலான பின்பு, ஒரே ஒருவரை கைது செய்துள்ளது போலீசு. இது மத ரீதியான பிரச்சினை இல்லை எனவும் பூசி மழுப்புகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் இந்துத்துவ சக்திகளின் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதன் பின்னணியில் ஆட்சியையும் பிடித்துள்ளது பாஜக. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போதும், 2016-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலின் போதும், இந்துத்துவ கும்பல் மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறது.
தான் வளர்ந்த இடத்திலேயே தன்னுடைய மதத்தைக் காரணம் காட்டி தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை நினைத்து கலங்கி நிற்கிறார் அலி. “என்னுடைய அப்பா 40 ஆண்டு காலம் இந்த உணவகத்தை நடத்தினார். எல்லோருக்கும் தெரியும். ஆனால், யாரும் எதிர்க்கவில்லை. அவர் மக்களுக்கு உணவளித்து இறந்துபோனார்” என்கிறார்.
மீண்டும் அந்த உணவகத்தை நடத்த முடியுமா? “சந்தை பொறுப்பாளர்கள் நடத்தலாம் என்றார்கள். ஆனால், எருமை இறைச்சியை விற்க முடியாது. அது பரவாயில்லை. நான் பிராய்லரும் மீனும் விற்கிறேன்”.
ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் சமூகத்தில் ஆழமாக விதைத்திருக்கும் விச விதைக்கு தேர்தல் மட்டும் முடிவுகட்டுமா ? மீண்டும் ஒரு பாசிச ஆட்சிக்கு நாடு தாங்காது.
… … தேடுதலின் போது கைப்பற்றப்பட்ட அந்த அச்சுப் பிரதியில் ஒரு வருமான வரித்துறை அதிகாரி, இரண்டு சாட்சியங்கள் மற்றும் ஒரு சகாரா அலுவலர் ஆகியோர் கையொப்பமிட்டு உறுதி செய்திருந்தனர்.
இதே ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் சிறு சிறு மாற்றங்களோடு இன்னொரு கோப்பிலும் இருந்தன. முதல் ஆவணத்தில் “cash given at Ahmedabad, Modiji” (அகமதாபாதில் கொடுக்கப்பட்ட ரொக்கப் பணம், மோடிஜி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது, பிற ஆவணங்களில் “cash given to CM Gujarat” (குஜராத் சி.எம்-க்கு கொடுக்கப்பட்ட ரொக்கப்பணம்) என்று எழுதப்பட்டிருந்தது.
சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரத்தோ ராய்
“அகமதாபாதில் மோடிஜி”க்கு கொடுத்ததாக ரூ.40 கோடி, “மத்திய பிரதேச சி.எம்”-க்கு கொடுத்ததாக ரூ.10 கோடி, “சத்தீஸ்கர் சி.எம்.”-க்கு கொடுத்ததாக ரூ.4 கோடி, “டெல்லி சி.எம்”-க்கு கொடுத்ததாக ரூ.1 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தப் பணப் பட்டுவாடாக்கள் 2013-க்கும் 2014 மார்ச்சுக்கும் இடையில் நிகழ்ந்திருக்கின்றன. அப்போது குஜராத் முதலமைச்சர் பா.ஜ.க.வின் நரேந்திர மோடி, மத்திய பிரதேச முதல்வராக இருந்தவர் பா.ஜ.க.-வின் சிவ்ராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதலமைச்சர் பா.ஜ.க.-வின் ராமன் சிங், டெல்லி முதல்வராக இருந்தவர் காங்கிரசின் ஷீலா தீட்சித்.
சகாரா நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை, பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் நடந்திருக்கிறது. ஆனால், சகாரா ஆவணங்கள் மட்டுமின்றி முன்னர் குறிப்பிட்ட பிர்லா ஆவணங்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டன. பிர்லா ஆவணங்கள் மீது நடத்திய விசாரணை முடிவுகளின் அடிப்படையிலும் சகாராவில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலும் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி வருமான வரித்துறை சி.பி.ஐ.-க்கு பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால் விஷயம் அப்படியே இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. இப்படிஊழலை இருட்டடிப்பு செய்த வருமான வரித்துறை அதிகாரி கே.வி.சவுத்ரிக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? … ( “பிர்லா – சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது” – கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)
இதைப் போன்ற 29 கட்டுரைகள்… கீழ்கண்ட 9 தலைப்புகளின் கீழ்….
கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாட்படை
கொள்ளையிடப்படும் பொதுத்துறை வங்கிகள்
விவசாயிகளின் மீதான இரட்டைத் தாக்குதல்
கார்ப்பரேட் – காவிமயமாகும் கல்விப்புலம்
பார்ப்பனியத்தின் கோரத்தாண்டவம்
ஆர்.எஸ்.எஸ். : கிரிமினல்களின் கூடாரம்
ஆர்.எஸ்.எஸ்.–ம் அரசியல் சட்ட நிறுவனங்களும்
ஊழல் சட்டப்பூர்வமாகிறது
பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவது எப்படி?
மோடியின் ஐந்தாண்டு ஆட்சி லட்சணத்தை விவரிக்கும் நூல் தொகுப்பு – “கார்ப்பரேட் காவி பாசிசம்”. இது ஒரு “புதிய ஜனநாயகம்” வெளியீடு ! உடன் வாங்குங்கள்! கார்ப்பரேட் காவி பாசிசம்!
வெளியீடு :
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600024.
பக்கம்: 208
விலை : 100 முதல் பதிப்பு : மார்ச் 2019
Paypal மூலம்- உள்நாடு: 2$ (தபால் கட்டணம் சேர்த்து)
Paypal மூலம்-வெளிநாடு: 6$ (தபால் கட்டணம் சேர்த்து)
தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered printed post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டில் வாங்கப்படும் பிரதிகள் எத்தனையாக இருந்தாலும் தபால் செலவு ரூ. 20 மட்டுமே. மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.
வெளிநாட்டிற்கு Registered Airmail – பதிவு வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும். மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.
சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 8
காட்சி : 12 இடம் : தர்பார் உறுப்பினர்கள் : சிவாஜி, தளபதிகள்.
சிவாஜி : மராட்டிய மாவீரர்களே இந்த மண்டலத்தைக் காக்கும் தளபதிகளே நீங்கள் சிந்திய ரத்தம் வீண் போகவில்லை. வீரம் விழலுக்கிறைத்த நீராகவில்லை. நமது மனக்கண் முன் தோன்றித் தோன்றி நம்மை ஆவேசமுறச் செய்து மகாராஷ்டிரம் உதயமாகிவிட்டது. சாம்ராஜ்யம் உருவாகிறது. வீரர்காள்! உங்கள் சிருஷ்டி அந்த ராஜ்யம் மங்கிக் கிடந்த மண்டலம் சிங்கங்களாகிய உங்களால் மணிக்கொடியை இனி பறக்கவிடும். மலைக்கு மலை தாவிய நாம், கோட்டைக்குக் கோட்டை குத்து வெட்டு நடத்திவந்த நாம், பரத கண்டத்திலே ஒரு பரந்த ராஜ்யத்தை ஸ்தாபித்து விட்டோம். சாத்பூரா மலைச் சாரல் சச்சரவுக்கு உறைவிடம் என்பது மாறி, செளந்தர்யமான ஒரு சாம்ராஜ்யமாகிவிட்டது.
(வீரர்கள்)
மராட்டிய மண்டலாதிபதிக்கு ஜே!
மாவீரர் சிவாஜி மகாராஜாவுக்கு ஜே!
சாத்பூரா சாம்ராஜ்யாதிபதிக்கு ஜே!
சிவாஜி : ஆருயிர் தோழர்களே என் ஜெயம் உங்கள் உடைவாளின் விளைவு. என் கீர்த்தி உங்கள் தேகத்திலே உண்டான புண்களிலே பூத்தது . உங்கள் ரத்தமே, மகாராஷ்டிர பூமியைப் புனித பூமியாக்குகிறது. நீங்கள் வாழ அன்னை அருள் புரிவாள். பவானியின் பரிபூரண கடாக்ஷம் உமக்குக் கிடைக்கட்டும்.
தளபதி – 1 : மகராஜ்…
சிவாஜி : அன்பால் அர்சிக்கிறீர்கள், அந்த வார்த்தையை. ஆனால், அந்தப் பட்டத்தை நான் இன்னும் பெறவில்லை.
தளபதி – 1 : பட்டாபிஷேக காரியத்துக்குத் தங்கள் அனுமதியைத்தான் எதிர்ப்பார்க்கிறோம்.
தளபதி – 2 : நம் நாட்டுப் பொற்கொல்லர் சித்திர வேலைப்பாடுள்ள சொர்ண சிங்காதனம் தயாரித்துவிட்டார்.
தளபதி – 3 : அரண்மனைக்கு அலங்கார வேலைகள் இரவு பகலாக நடந்தேறி வருகிறது.
தளபதி – 4 : ஆரணங்குகள் வாழ்த்துக் கீதங்களைப் பாடியப்படி உள்ளனர் மகராஜ்.
தளபதி – 1 : கவிவாணர்கள் புதுப்புது கவிதைகளை இயற்றியப்படி உள்ளனர் காவலா.
தளபதி – 2 : சத்திரபதி சிவாஜிக்குப் பொன்னாடையும் நெய்தாகிவிட்டது.
தளபதி – 3 : பொற்குடங்களிலே புனித நீர் நிரப்பி யானைமீது கொண்டு வர ஏற்பாடாகி இருக்கிறது.
தளபதி – 4 : நகரெங்கும் விழாக் கொண்டாட மக்கள் துடிக்கிறார்கள்.
தளபதி – 1 : புகழ்மிக்க நமது படைகள் பூரிப்புடன் பவனிவர தயாராகியுள்ளது.
தளபதி – 2 : பட்டாபிஷேகம் நடைபெறுவது டில்லி பாதுஷாவுக்கும் தெரியும்.
தளபதி – 3 : பரதகண்டம் முழுவதுமே பெருமையடைகிறது. பாழடைந்த மாளிகை புதுப்பிக்கப்பட்டது கேட்டு, அணைந்து போக இருந்த சுதந்திர விளக்கு சுடர்விட்டெரிய தியாக நெய் ஊற்றி இருப்பது கேட்டு மராட்டிய மண்டலாதிபதிக்கு ஜே .
சிவாஜி : உன்மைத் தோழர்களே! ஊராரின் உள்ளத்தை நான் அறிவேன். உங்கள் உவகையும் தெரிந்ததே. உங்கள் ஆதரவை அரணாகக் கொண்டுதானே அரசபீடம் ஏறத் துணிந்திருக்கிறேன். போரிலே நான் உங்களில் பலரைக் கடிந்து உரைத்திருப்பேன். மனதில் குறையிருப்பின் பொறுத்திடுக.
தளபதி – 4: மன்னா ! இது என்ன பேச்சு? உமது ஏவலர் நாங்கள். உமது மொழியே எமது வாழ்க்கைக்கு வழி.
சிவாஜி : இந்த சாம்ராஜ்யத்தைக் காண மராட்டியர் காட்டி இருக்கும் வீரம், தியாகம், சேவை, அபாரம். சரித்திரத்திலே பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டியவை. உங்கள் சேவைக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
தளபதி – 1: மராட்டிய மன்னர் மன்னனாகி, முடி தரித்து, எம் கண்முன் நின்று, எங்கள் மனதை குளிரச் செய்யுங்கள், மகராஜ். அதுவே கைம்மாறு, வாழ்க்கையில் நாங்கள் எதிர் பார்க்கும் பேறு.
சிவாஜி : ஒளியாமல் பேசு. பட்டாபிஷேகம் சம்மந்தமாக ஏதேனும்…
சிட்னீஸ் : ஆமாம்; சிற்சில இடங்களிலே எதிர்ப்பு.
சிவாஜி : யாருடைய எதிர்ப்பு? முன்புதான் நாம் கீறின கோட்டைத் தாண்டாதிருக்க சர்தார்கள் சங்கநாதம் செய்தனர். இப்போது எதிர்ப்பவர் யார்?
சிட்னீஸ் : வாழ்த்திய பூசுரரெல்லாம் வாதாடுகிறார்கள். ஏடுகளைப் புரட்டி வைத்துக் கொண்டு பட்டாபிஷேகம் செய்துக் கொள்வதை சாஸ்திரம் அனுமதிக்காதாம். க்ஷத்திரிய குலமே இப்போது கிடையாதாம்.
சிவாஜி : அதனால் ..
சிட்னீஸ் : ஏதேதோ வகையான பேச்சு எல்லாம் அடிபடுகிறது!
சிவாஜி : யார் இந்த எதிர்ப்புக்கு முக்கியமாக முன்நின்று வேலை செய்பவர்?
சிட்னீஸ் : பல பேர் குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. ஆனால் …
சிவாஜி : எதையோ மறைக்கிறாய். வேண்டாம் சிட்னீஸ்! உண்மையைக் கூறு. என் உள்ளம் நோகுமோ என்று பயந்து படுகுழியை மறைக்காதே. யார் இந்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்குவது?
சிட்னீஸ் : நமது முதலமைச்சர் மோரோபந்த்.
சிவாஜி : மோரோபந்த்…! மோரோ அவரா எதிர்க்கிறார்? என்னிடம் எவ்வளவு அன்பு கொண்டவர்.
சிட்னீஸ் : உம்மிடம் அவருக்கு இப்போதும் வெறுப்பில்லை. சாஸ்திரம் கெடுகிறதாம். வீணான பயம் அவருக்குக் கூட. ஆனால், எல்லாவற்றிற்கும் புதிய ஏற்பாடு செய்திருக்கிறேன். எதிர்ப்பு, சந்தேகம், கோபம். எல்லாம் ஒழிந்துவிடும். எல்லா எதிர்ப்புகளும் அடங்கிவிடும். அவருடைய அனுமதி கிடைத்தால், இவர்கள் காட்டும் சாஸ்திரங்களை, சந்தேகங்களை, வாதங்களை அவர் தவிடு பொடியாக்கிவிடுவார். அவ்வளவு திறமைசாலி
சிவாஜி : யார் அந்தத் திறமைசாலி?
சிட்னீஸ் : காகப்பட்டர், காசிவாசி, வேத வேதாந்தத்தின் உபன்யாசகர். வியாக்யானத்திலே அவரை மிஞ்சுபவர் கிடையாது. இன்று இங்கு எதிர்ப்பு செய்பவர்கள் எல்லாம் அவர் வந்து விளக்கம் கூறினதும் வாயை மூடிக் கொள்வர். சந்தேகங்களை சம்ஹரிப்பார். எதிர்ப்புகளைத் துவம்ஸம் செய்வார். அப்படிப்பட்ட காகப்பட்டரையே இந்தப் பட்டாபிஷேகத்தை நடத்திக் கொடுக்க இங்கு வரும்படி தூது அனுப்பத் திட்டம் போட்டுள்ளேன்.
சிவாஜி : அவர் இருக்குமிடம்?
சிட்னீஸ் : காசி
சிவாஜி : காசி க்ஷேத்திரம். கங்கைக் கரை மராட்டிய மண்டலத்திலே இருக்கிறது. அவர் அங்கு இருக்கிறார்.
சிட்னீஸ் : இன்றே புறப்படுகிறார்கள்.
சிவாஜி : தூதுவர்களை, மூன்று பூசுரர்களை அனுப்புகிறேன். அவர்கள் இங்கு எதிர்ப்பு செய்தவர்கள்.
சிவாஜி : சம்மதித்தார்களோ போக?
சிட்னீஸ் : அவர்கள் காகப்பட்டரின் சம்மதம் கிடைத்து விட்டால் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறுகிறார்கள்.
மார்க்ஸ் பிறந்தார் – 27 (கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
“மூலதனத்தின்” தத்துவஞானம் – பாகம் 2
அறிதலைப் பற்றிய இயக்கவியல் முறையை மார்க்சுக்கு நெடுங்காலத்துக்கு முன்பே பல தத்துவஞானிகள் வளர்த்துக் கூறினார்கள். “இயக்கவியல்” என்ற சொல் இயற்கை, சமூகம் மற்றும் சிந்தனையின் உண்மையான நிகழ்வுப் போக்குகளின் முரண்பாடான தன்மையை, நெகிழ்வுத் தன்மையை, எதிர்நிலைகளின் ஒருமை மற்றும் மோதலின் மூலமாக எளிமையானவற்றிலிருந்து சிக்கலானவற்றுக்கு மாறிய வளர்ச்சியைக் குறிக்கிறது.
முதல் பண்டைக்கால கிரேக்கத் தத்துவஞானிகளான ஹெரக்லீடஸ், அனாக்ஸகோரஸ், பார்மெனீடஸ், ஸெனோன், டெமாக்கிரீடஸ், சாக்ரடீஸ் மற்றும் பிளாட்டோ திறமை மிக்க இயக்கவியல்வாதிகளாக இருந்தனர். அவர்கள்தான் இயக்கவியலை உணர்வு பூர்வமாகக் கையாளப்படுகின்ற சிந்தனை முறையாக, நம்மைச் சுற்றிலுமுள்ள உலகத்தை அறிவதற்குரிய முறையாக மாற்றினார்கள். அவர்களுடைய மதிநுட்பம் நிறைந்த தத்துவஞானக் கருத்துக்கள் தம்முடைய முக்கியத்துவத்தை, இக்காலத்துக்குத் தம்முடைய ஒட்டுறவை இழக்கவில்லை. பண்டைக்கால கிரேக்கத் தத்துவஞானிகள் மிக முக்கியமான, சர்வாம்சமான காரண காரிய உறவுகளை உள்ளுணர்ச்சியின் மூலம் புரிந்து கொண்டு பிரபஞ்சத்தைப் பற்றிய ஒருங்கிணைந்த சித்திரத்தைத் தந்தார்கள்.
சாக்ரடீஸ்
அவர்கள் விவரங்களின் உலகத்துக்குள் ஆழமாகப் போவதில்லை – இதில்தான் பண்டைக்கால கிரேக்கத் தத்துவஞானத்தின் குறை அடங்கியிருக்கிறது. இதன் காரணமாகவே அத்தத்துவ ஞானம் பிற்காலத்தில் மற்ற கண்ணோட்டங்களுக்கு இடமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் எங்கெல்ஸ் வலியுறுத்தியதைப் போல சில வரையறுக்கப்பட்ட கருத்தமைப்புகளுடன் இயற்கை விஞ்ஞானங்கள் இன்றளவிலும் கூட இவற்றை முழுமையாக அகற்றிவிடவில்லை – ஒப்பிடுகின்ற பொழுது அதன் உயர்வும் இதில் தான் அடங்கியிருக்கிறது.
பண்டைக்காலத் தத்துவஞானம் ஒரு வளர்ச்சியடைந்த, இயக்கவியல் ரீதியில் நெகிழ்ச்சியான கருத்தமைப்புகள் மற்றும் கருத்தினங்கள் என்ற அமைப்பை நமக்குத் தந்திருக்கிறது, உலகத்தை விளக்குவதற்கும் புரிந்து கொள்வதற்கும் இந்த அமைப்பு இன்றும் வெற்றிகரமாக உபயோகிக்கப்படுகிறது. அதன் பிரதிநிதிகள் பல துணிகரமான, மதிநுட்பமிக்க கருதுகோள்களைக் கூறினார்கள்; இவை பிற்காலத்தில் பரிசோதனையின் மூலம் விஞ்ஞான ரீதியாக நிறுவப்பட்டிருக்கின்றன.
பண்டைக்கால கிரேக்கத்துக்குப் பக்கத்தில் மார்க்சுக்கு முந்திய இயக்கவியலின் மற்றொரு வடிவத்தை, மூலச்சிறப்புடைய ஜெர்மன் தத்துவஞானத்தின் இயக்கவியலை – அது இயற்கை விஞ்ஞானத்துக்கு உபயோகமாக இருந்தது – எங்கெல்ஸ் சுட்டிக்காட்டினார். அந்த இயக்கவியல் ஹெகலின் தத்துவஞானத்தில் தன்னுடைய சிகரத்தை எட்டியது.
ஹெகல் ஒன்றிலிருந்து மற்றொன்று வளர்ச்சியடைகின்ற, ஒன்றோடொன்று மோதுகின்ற கருத்துக்களின் தற்சிந்தனையான அமைப்பை உருவாக்கினார். அவை இந்த வளர்ச்சியிலும் போராட்டத்திலும் இயற்கை, சமூகம் மற்றும் சிந்தனையின் எல்லா நிகழ்வுகளையும் தோற்றுவிக்கின்றன என்று அவர் கூறினார். அவர் யதார்த்தத்தைத் தலைகீழாகத் திருப்பியதைப் போலச் சிந்தித்தார். கருத்துக்கள், கருத்தமைப்புகள் மற்றும் தர்க்க ரீதியான கருத்தினங்கள் உலகத்தைப் பிரதிபலிக்கவில்லை, அவையே உலகத்தைப் படைக்கின்றன என்று கருதினார். இதன் விளைவாக ஹெகல் தன்னுடைய தத்துவஞானத்தை அநேகமாகப் படைப்பின் சிகரமாகவே கருதினார், ஏனென்றால் அது இறுதி நிலையான, தனிமுதலான உண்மையை எட்டுகிறது என்றார்.
ஹெகலியத் தத்துவஞானத்தின் கருத்துமுதல்வாதமும் வரையறைகளும் எப்படி இருந்தாலும் உலகத்தைப் பற்றிய விளக்கத்தில் அது முன்னே எடுத்து வைக்கப்பட்ட மாபெரும் காலடியாக இருந்தது.
ஹெகல் தத்துவஞானம், கலை, இயற்கை விஞ்ஞானத்தில் மனிதனுடைய சாதனைகள் அனைத்தையும் தொகுத்துரைப்பதற்குக் குறிப்பிடத்தக்க முயற்சி செய்தது அவருடைய மிகச் சிறப்பான அம்சமாகும். அவர் இயற்கை, வரலாற்று, ஆன்மிக உலகம் முழுவதையுமே தொடர்ச்சியான மாற்றம், மாற்றியமைக்கப்படுதல் மற்றும் வளர்ச்சி என்ற வடிவத்தில் பிரதிநிதித்துவம் செய்தார். இயற்கை, சமூகம் மற்றும் சிந்தனை அதே இயக்கவியல் கோட்பாடுகளில் உறைந்திருப்பது அறியப்பட்டது. மனிதகுலச் சிந்தனையின் வரலாற்றில் இத்தகைய கம்பீரமான, அனைத்தையும் தழுவிய அமைப்பு ஒருபோதும் படைக்கப்படவில்லை.
இருக்கின்ற அனைத்துமே எளிமையானவற்றிலிருந்து பல்தொகுதியானவைக்கு, பகுதியிலிருந்து முழுமைக்கு வளர்ச்சியடைந்த பாதையையும் அதன் பொறியமைவையும் வெளிப்படுத்தியது அவருடைய மாபெரும் சாதனையாகும். அவர் இதைச் சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றை நோக்கிய முன்னேற்றத்தின் முறை என்று கூறினார். அது அவருடைய இயக்கவியலின் எல்லா அம்சங்களையும் விதிகளையும் கூறுகளையும் கொண்டிருக்கிறது. சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்கு முன்னேறுகின்ற ஹெகலிய முறையின் உதவியினால் புறப்பொருள் என்பது இடைச்செயல் விளைவினைக் கொண்டது மட்டுமல்ல, அது வரலாற்று ரீதியில் வளர்ச்சியடைந்து, முன்னேற்றமடைந்து கொண்டிருப்பதென்று எடுத்துக்காட்டப்பட்டது.
ஹெகலின் “சுத்தமான” உய்த்துணர்தலில் கருத்தினங்கள் ஒன்றுக்குள்ளிருந்து மற்றொன்று வருவிக்கப்படுகின்றன, இது உலக வரலாற்றின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க அளவுக்கு இணையாகச் செல்கிறது. உண்மையான நிலைமை இறையியல் தன்மையுடன் தலைகீழாக்கப்பட்டது, அதன் விளைவாக முழுமையான சிந்தனை என்பது ஹெகலிடம் உண்மையான வரலாற்றைப் படைக்கின்ற செயலாக இருந்தபோதிலும் இந்தச் சிந்தனை முறை வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தின், சமூக நிகழ்வுப் போக்குகள், நிகழ்வுகள் மற்றும் அவற்றின் தத்துவ ரீதியான மாதிரிப்படிவத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்கு விஞ்ஞான ரீதியான அணுகுமுறையின் முன்நிபந்தனையைக் கொண்டிருந்தது.
இதற்குப் பிறகு என்ன நடைபெற்றது? ஒருவர் இந்த முறையை முழுமையாகக் கற்றுக் கொண்டு அதை உபயோகிக்கத் தெரிந்திருந்தால் போதும்; அவர் விஞ்ஞானத்தின் ஸ்தூலமான துறைகள் எல்லாவற்றிலுமுள்ள மிகச் சிக்கலான தத்துவ ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவி செய்யக் கூடிய அறிவின் வன்மையான ஆயுதத்தைக் கொண்டவராகிறார் என்று தோன்றியது, இல்லையா?
ஆனால் ஹெகலியத் தத்துவஞானத்தின் மாபெரும் சாதனையான இயக்கவியல் உபயோகிக்கப்படாமற் கிடந்தது விசித்திரமே. ஹெகலின் வாழ்நாளிலும் அவர் மரணமடைந்து நெடுங்காலம் வரையிலும் அது எவ்விதத்திலும் உபயோகிக்கப்படவில்லை. ஹெகலிய இயக்கவியல் முறையைக் கையாள்வதற்கு ஒருவர் கூட முயற்சி செய்யவில்லை. அது விமர்சனத்துக்கு உட்படுத்தப்படவில்லை, அதை அப்படியே மறந்து விட்டார்கள். ஹெகலிய “டயடோஹிகள்”(5) அலெக்சாந்தர் மாசிடோனின் வாரிசுகளைப் போலவே தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மகத்தான பாரம்பரியத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி அணுவளவு கூட ஒன்றும் தெரிந்திராமல் தமக்கிடையே அற்பமான சச்சரவு செய்து கொண்டார்கள்.
இதன் காரணம் என்ன? அதற்குப் பிரதானமான காரணம் அந்த முறையிலிருந்த குறைகள் எனத் தோன்றுகிறது. சந்ததியினருக்கு விட்டுச் செல்லப்பட்ட வடிவத்தில் அதைப் பயன்படுத்த முடியாது. அது இயக்கமறுப்பியல் சூக்குமக் கருத்தாக்கங்கள் என்ற செயற்கையான, போலியான சூழ்நிலையில் வளர்க்கப்பட்டிருந்தது. தனக்குள்ளாகவே தன்னுடைய வளர்ச்சியை முடித்துக் கொண்டிருந்த கருத்து முதல்வாதத் தத்துவஞான அமைப்பின் தேவைகளுக்கு மட்டுமே அது தகுதியாக இருந்தது.
ஹெகல் தன்னுடைய தத்துவஞானத்தில் உலகத்தைத் தலைகீழாகத் திருப்பிவைத்திருந்தார், அது அந்த ஆபத்தான நிலைமையிலேயே நின்று கொண்டிருந்தது, முன்னே போக முடியவில்லை. இப்படி ஆடிக்கொண்டிருக்கும் அடிப்படையின் மீது இயக்கவியல் முறை வளர்ச்சியடைய முடியவில்லை.
தத்துவஞானம் தனிமுதலான கருத்துமுதல்வாதம் என்ற ஹெகலிய அமைப்பை முன்வைத்த பொழுது அது செய்ய வேண்டிய அனைத்தையும் ஏற்கெனவே நிறைவேற்றிவிட்டது. அது அறியக் கூடிய அனைத்தையும் ஏற்கெனவே அறிந்துவிட்டது. அது சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டது. தனிமுதலான உண்மை அறியப்பட்டுவிட்டது.
பூமி சூரியனைச் சுற்றிச் சுழல்வதை நிறுத்திக் கொள்ளலாம். நட்சத்திரங்கள் பிரகாசிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். மனிதகுலம் யுத்தங்களையும் புரட்சிகளையும், ஆர்வங்களையும் அக்கறைகளையும் கைவிட்டு துணிகரமான ஜெர்மானியச் சிந்தனையின் சாதனைகளை நிரந்தரமாகப் போற்றிக் கொண்டு மெய்மறந்திருக்கலாம். இனிமேல் கண்டுபிடிப்பதற்கு ஒன்றுமில்லை. போவதற்கும் ஒரு இடமுமில்லை. இயற்கை, சமூகம் மற்றும் சிந்தனையின் மொத்த வரலாற்று இயக்கத்தின் மகுடமும் இலட்சியமும் ஹெகலியத் தத்துவஞானம்தான்.
இயக்கவியல் முறையை அறிவின் மற்ற துறைகளுக்குக் கையாள்வதைப் பற்றிய பிரச்சினையே பழமைவாத ஹெகலியவாதிகளுக்கு அபச்சாரமாகத் தோன்றியது.
கருத்துமுதல்வாத மேல் ஓட்டைக் கைவிடுகின்ற பிரச்சினை மட்டுமல்ல அது. இயக்கவியலுக்குக் கருத்துமுதல்வாதம் ஏதோ வெளியிலுள்ள ஒன்றல்ல. ஏனென்றால் அந்தக் கருத்து முதல்வாதத்தின் மடியில்தான் இயக்கவியல் வளர்ந்தது. அது தன்னுடைய மரண முத்திரையை இயக்கவியலிடம் விட்டுச் சென்றிருந்தது, அதன் நோய்கள், பலவீனங்களினால் இயக்கவியல் நலிவடைந்தது.
ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல, ஹெகலியத் தத்துவஞானம் தனிமுதலான, இறுதியான உண்மைக்கு உரிமை கொண்டாடிய பொழுது அது இயக்கவியலை முரட்டுத்தனமாக நிராகரித்தது. அதன் உரிமைகள் சிந்தனைத் துறைக்கு மட்டுமே குறுக்கப்பட்டிருந்தன. இயற்கை மற்றும் சமூகத்தைப் பொறுத்தமட்டில் மிக அதிகமான நிலையில் கூட இயக்கவியலின் சூசகம் மட்டுமே, அக்காலத்திலிருந்த தனிப்பட்ட இயற்கை விஞ்ஞானங்களின் சாதனைகளில் இயக்கவியல் தோற்றமளித்த அளவுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.
இது அதற்குரிய தர்க்கவியலைக் கொண்டிருந்தது. பருப்பொருள் அறிதலின் மறு வாழ்நிலை மட்டுமேயானால் (பருப்பொருளை அறிதல் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயக்கவியல் வரை முன்னேறவில்லை) பருப்பொருள் வளர்ச்சியடைந்த இயக்கவியலுக்கு அடிப்படையில் அந்நியப்படுகிறது என்று அர்த்தம், ஆகவே அதில் இயக்கவியலைத் தேடுவதில் பயனில்லை. எனவே மேலும் தத்துவ ரீதியில் தேடலுக்குரிய பாதை அநேகமாக மூடப்பட்டுவிட்டது, சிந்தனை சுய திருப்தியடைந்து ஓய்வெடுத்துக் கொண்டது. ஹெகலினுடைய தத்துவஞான அமைப்பின் எல்லைகளுக்கு அப்பால் இயக்கவியல் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை, அது தன்னுடைய சக்தி அனைத்தையும் இழந்துவிட்டது.
“தூய சிந்தனைத்” துறையில் கூட கருத்து முதல்வாதம் ஹெகலிய இயக்கவியல் முறையைப் பாதித்தது. அவருடைய கருத்தினங்களின் முக்காலிகள் பெரும்பாலும் தன்னிச்சையானவை என்பதால் அவை உண்மையான தர்க்கத்துக்கும் கருத்தமைப்புகளின் உள்ளடக்கத்துக்கும் பொருந்தவில்லை. முன்னரே தயாரிக்கப்பட்ட திட்டத்துக்குள் அடக்குவதற்காக ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்துக்கு வலிந்து பெறப்பட்ட மாற்றங்கள் ஏட்டுப்புலமை மற்றும் மாயாவாதத்தை மிகவும் நினைவுபடுத்துகின்ற சொற் பிரயோகங்கள் மற்றும் தந்திரங்களுடன் அதிகமாகக் காணப்பட்டன.
எனினும் ஹெகல் தூய சிந்தனைத் துறையில் மாபெரும் விஷயங்களைச் சாதித்தார் என்றால், முந்திய காலத்தின் தர்க்கம் மற்றும் இயக்க மறுப்பியல் முழுமைக்கும் அநேகமாக விளையாட்டாகவே முடிவு கட்டினார் என்றால், உலக வரலாற்றின் வளர்ச்சி மற்றும் உள் இணைப்புகளைக் (கருத்துமுதல்வாத வடிவத்தில் என்ற போதிலும்) காட்டினார் என்றால், அவர் தொட்ட அறிவின் எல்லாத் துறைகளிலும் ஒரு சகாப்தத்தைப் படைத்தார் என்றால் அவருடைய இயக்கவியல் முறையில் மிகவும் வளமான-ஆனால் உபயோகிக்கப்படாத – வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதே பொருளாகும்.
இயக்கவியல் என்ற வாளை அமைப்பு என்ற உறையிலிருந்து வெளியே எடுத்து அதன் மீதிருந்த கருத்துமுதல்வாதம் என்ற துருவைச் சுத்தப்படுத்தக் கூடிய, கருத்தமைப்புகள் என்ற உடலில்லாத நிழல்களை மட்டும் குத்துவதுடன் நின்றுவிடாமல் பொருளாயத யதார்த்தத்தை, மிகவும் பல்தொகுதியான சமூக மற்றும் இயற்கை நிகழ்வுப் போக்குகளை அறிவதற்கு ஆயுதமாக அதை மாற்றக் கூடிய ஒரு நபர் தேவைப்பட்டார் என்பது இதன் பொருள். அந்த நபர்தான் கார்ல் மார்க்ஸ்.
ஹெகலியவாதத்திலிருந்து மார்க்சியத்துக்கு முன்னேறிய எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதியது முற்றிலும் நியாயமே: “ஹெகலின் தர்க்கவியலிலிருந்து இந்தத் துறையில் ஹெகலின் உண்மையான கண்டுபிடிப்புகளைக் கொண்ட கருவைப் பிரித்தெடுப்பதற்கும் இயக்கவியல் முறையின் மீதுள்ள கருத்துமுதல்வாதப் போர்வைகளை நீக்கி அதன் எளிமையான வடிவமே கருத்தின் பரிணாமத்துக்கு ஒரே சரியான முறை என்பதை நிறுவுவதற்கும் மார்க்ஸ் ஒருவர் மட்டுமே இருந்தார், இன்னும் அவர் ஒருவர்தான் இருக்கிறார். அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய மார்க்சின் விமர்சனத்துக்கு ஆதாரமான இந்த முறையை உருவாக்கியது அடிப்படையான பொருள்முதல்வாதக் கருதுகோளுக்கு எந்த விதத்திலும் முக்கியத்துவத்தில் குறைந்ததல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.”(6)
ஸ்தூலமான விஞ்ஞான ஆராய்ச்சியில் இயக்கவியல் முறையைக் கையாளுதல் என்பதன் பொருள் என்ன? முன்னரே தயாரிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட இயக்கவியல் வடிவங்களை எடுத்துக் கொண்டு அவற்றினுள் தனிப்பட்ட விஞ்ஞானங்களின் பரிசோதனை உள்ளடக்கத்தைப் போடுவதா? ஹெகலின் சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்கு முன்னேற்றத்தின் எல்லா முடிச்சுக்களையும் திடீர் மாற்றங்களையும் தொடர்ந்து சென்று அதன் பிறகு பெளதிகம், இரசாயனம், உயிரியல் சமூகவியல் மற்றும் அரசியல் பொருளாதாரத்தை அதனுடன் கறாராகப் பொருந்துகின்ற முறையில் விளக்கிக் கூறுவதா? ஹெகல் எழுதிய தத்துவஞான விஞ்ஞானங்களின் கலைக்களஞ்சியம் என்ற நூலின் சிறப்புச் சொற்கள், கருத்தினங்கள் மற்றும் கருத்தமைப்புகளைச் சிறப்பான முறையில் கற்றுத் தேர்ந்து ஆராயப்படுகின்ற யதார்த்தத்தின் நிகழ்வுகளையும் விதிகளையும் இந்த மொழியைப் பேசுமாறு செய்வதற்கு முயற்சிப்பதா? இயக்கவியலின் விதிகளையும் கூறுகளையும் கற்று இயற்கை விஞ்ஞானங்களின் துறையில் அவற்றுக்கு மென்மேலும் புதிய எடுத்துக்காட்டுகளையும் நிரூபணங்களையும் தேடுவதா? ஒரு விஞ்ஞானி இயக்கவியலைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிப்பதே போதும், விஞ்ஞானத்தின் ஸ்தூலமான துறைகளில் மேதா விலாசமான கண்டுபிடிப்புகளைச் செய்வதற்கு அவை உத்வேகமளிக்கும் என்ற வெகுளித்தனமான நம்பிக்கை இன்றும் கூட உள்ளதே, அதன் ஆதாரம் இதுதானா?
பொருளாதார ஆராய்ச்சியில் இயக்கவியல் முறையை உபயோகப்படுத்துகின்ற பிரச்சினையை மார்க்ஸ் முற்றிலும் வேறுவிதமாக அணுகினார். அவர் யதார்த்தத்தின் மீது இயக்கவியல் வடிவங்களைத் திணிப்பதற்கு மறுத்தார். ஹெகல் செய்ததைப் போல முன்னரே தயாரிக்கப்பட்ட இயக்கவியல் அமைப்புகளுக்குள் யதார்த்தத்தைப் பொறுத்துவதற்கு அவர் முயற்சி செய்யவில்லை, ஆனால் பொருளாதார நிகழ்வுகள் தோன்றுவதையும் முன்னேற்றமடைவதையும், அவற்றின் போக்குகளையும், ஒரு பொருளாதார அமைப்பு முரண்பாடுகளின் வளர்ச்சியின் மூலமாக முன்னேற்றமடைவதின் உள் தர்க்கத்தையும், அந்த முரண்பாடுகள் தமது சொந்த எதிரிடையாக மாறுவதையும், அதாவது உண்மையில் ஆராயப்படுகின்ற பொருளின் இயக்கவியலே அவர் விருப்புவெறுப்பற்ற முறையில் ஆராய்ச்சி செய்தார்; தன்னுடைய முறை ஹெகலின் முறைக்கு முற்றிலும் எதிரானது என்று மார்க்ஸ் கூறியதற்குக் காரணம் இதுவே.
முதலாளித்துவச் சமூகத்தின் முன்னேற்றத்தின் பொருளாதார விதியைக் கண்டுபிடிப்பது என்னுடைய இறுதியான நோக்கம் என்று மார்க்ஸ் கூறினார். ஆனால் மூலதனத்தில் எந்த ஸ்தூலமான சமூகம் சித்திரிக்கப்படுகிறது? அது ஜெர்மனியல்ல, பிரான்ஸ் அல்ல, (மார்க்ஸ் மற்ற நாடுகளைக் காட்டிலும் இங்கிலாந்தைக் குறிப்பிட்ட போதிலும்) இங்கிலாந்தும் அல்ல. அவர் முதலாளித்துவத்தை அதன் கலப்பற்ற வடிவத்தில் சித்திரிக்கிறார். அது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தத்துவ ரீதியான மாதிரிப்படிவம், அங்கே அது செத்துப் போன, மாற்றமடையாத ஒன்றாகத் தோன்றவில்லை; ஆனால் “மாற்றமடையக் கூடிய, தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கின்ற அமைப்பாகத்”(7) தோன்றுகிறது.
இந்த அமைப்பைக் கருத்துக்களில் பிரதிநிதித்துவம் செய்வது எப்படி? அதன் அசாதாரணமான சிக்கல் மற்றும் பல் அடுக்கை சிந்தனையில் எடுத்துக் கூறுவது எப்படி? அதன் அம்சங்களின் உள் காரணகாரியத் தன்மையை, அதாவது கட்டமைப்பைச் செயல்படுகின்ற நிகழ்வுப் போக்கில் மட்டுமல்லாமல் அதன் வரலாற்று ரீதியான வளர்ச்சியில் புரிந்து கொள்வது எப்படி? முதலாளித்துவ உறவுகளின் மேல்மட்டத்தில் எல்லோரும் பார்க்கின்ற விதத்தில் தோன்றுவதற்கும் அவற்றின் மறைக்கப்பட்ட சாராம்சத்துக்கும் உள்ள தொடர்பை நிறுவுவது எப்படி? முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மொத்த மனப்போக்கான கட்டுமானத்தைக் கருத்தினங்களின் அமைப்பில் பிரதிபலிப்பது எப்படி?
ஹெகல்
இது மிகக் கடினமான வேலை; குக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்கு முன்னேறுகின்ற இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையின் உதவியுடன் மார்க்ஸ் இதை நிறைவேற்றினார். இம்முறை ஹெகலிய முறையிலிருந்து நேரடியாகத் தோன்றியபோதிலும், மனிதனில் முடிவடைகின்ற உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் இயற்கை-வரலாற்று நிகழ்வுப் போக்கு கேதேயின் ஃபாவுஸ்டு நாடகத்தில் சித்திரிக்கப்படுகின்ற கண்ணாடி வடிகலத்தில் ஹோமுன்குலஸ் படைக்கப்படுகின்ற மாயாவாத, இரசவாதப் படைப்பிலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறதோ அவ்வளவுக்கு இதுவும் வேறுபட்டிருக்கிறது.
முன்பிருந்த ஹெகலைப் போலவே, முதலாளித்துவப் பொருளாதார அமைப்பைத் தத்துவ ரீதியில் மறுபதிப்புச் செய்வதை எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வி மார்க்சை எதிரிட்டது. இதற்குச் சரியான பதிலளிக்க நம்பகமாக ஏராளமானவை இருந்தன. ஏனென்றால் தவறான முதற் கருதுகோள் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும், ஆடிக் கொண்டிருக்கும் அடிப்படையின் மீது உறுதியான தத்துவ மாளிகையை நிறுவ முடியாது.
அரசியல் பொருளாதாரத்தை மெய்யான, ஸ்தூலமான, உதாரணமாக மக்கள்தொகை, நாடு, அரசு ஆகிய ஏதாவதொன்றிலிருந்து தொடங்குவது மிகவும் இயற்கையானதாகத் தோன்றும். 18ம் நூற்றாண்டுப் பொருளியலாளர்கள் இதைத்தான் செய்தார்கள்.
ஆனால் அரசு என்பது மிகவும் சிக்கலான கருத்தமைப்பு. அரசுப் பொறியமைவு என்பது என்ன, அது எப்படி இயங்குகிறது, அதன் நடவடிக்கையை நிர்ணயிக்கின்ற அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகள் எவை என்பவற்றைத் தெரிந்து கொள்ளாமல் அரசைப் புரிந்து கொள்ள முடியாது.
அரசிலிருந்து, மக்கள்தொகையிலிருந்து தொடங்குவதென்றால் அது மிகத் தெளிவில்லாத, குழப்பமான மொத்த சித்திரத்தைக் கொடுக்கும்; இன்னும் நுணுக்கமான வரையறுப்புக்களின் மூலமாகவே இக்கருத்தமைப்புகளின் பல்வேறு தனிப்பட்ட அம்சங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். ஆகவே அதே பாதையில் மறுபடியும் திரும்பிச் சென்று மக்கள் தொகைக்கு, அரசுக்குப் போக வேண்டியிருக்கும். ஆனால் இந்தத் தடவை அது குழப்பமான சித்திரமாக இருக்காது, எண்ணற்ற வரையறுப்புக்கள் மற்றும் உறவுகளின் வளமான கூட்டுத் தொகையாக அது இருக்கும்.
ஆகவே ஒருவர் தனிப்பட்ட, தொடக்க நிலையான, சூக்குமமான கருத்தமைப்பிலிருந்து தொடங்க வேண்டும். எந்தக் கருத்தமைப்பிலிருந்து? முதலாளித்துவ உற்பத்தி என்ற ஒருங்கிணைந்த முழு அமைப்பும் இயற்கையாக வளர்ச்சியடைகின்ற முதல் உயிரணு, கரு எது?
மார்க்ஸ் பண்டத்தின் மீது தன்னுடைய கவனத்தைக் குவிக்கிறார். அவர் மூலதனத்தின் முதல் பாராவில் பின்வருமாறு எழுதுகிறார்: “முதலாளித்துவ உற்பத்தி முறை நிலவுகின்ற சமூகங்களின் செல்வம் ‘பண்டங்களின் மாபெரும் திரட்டாகத் தோன்றுகிறது. அதன் அலகு ஒரு தனிப் பண்டமாகும். ஆகவே நம்முடைய ஆராய்ச்சி பண்டத்தைப் பற்றிய பகுப்பாய்விலிருந்து தொடங்க வேண்டும்.”(8)
மார்க்ஸ் மூலதனத்தைப் பொருளாதாரத்தின் ஆரம்ப வாழ்க்கையிலிருந்து, பண்டம், பண்டப் பரிவர்த்தனையிலிருந்து தொடங்குகிறார். இது கற்பனையில் தோன்றவில்லை, அது புலன்களால் அறியப்பட்ட ஒன்று, பொருளாயதமானது. ஒவ்வொருவரும் நாள்தோறும் அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார், முழுப் பொருளாதார அமைப்பின் எல்லாப் பகுதிகளிலும் இடுக்குகளிலும் அது ஊடுருவியிருக்கிறது, வரலாற்று ரீதியில் அதன் தொடக்க நிலையாக இருக்கிறது.
அதே சமயத்தில் பண்டப் பரிவர்த்தனை முதலாளித்துவ (பண்ட) சமூகத்தின் மிகவும் எளிமையான, மிகச் சாதாரணமான… உறவு, இந்த உறவை நாம் பல கோடித் தடவைகள் சந்திக்கிறோம்.”(9) அது சூக்குமக் கருத்தாக்கம், ஆனால் முதலாளித்துவம் தோன்றிய காலத்திலும் வளர்ச்சியடைந்த காலத்திலும் அதன் மிகப் பொருளாயதமான வாழ்க்கையில் வளர்க்கப்பட்ட சூக்குமக் கருத்தாக்கம். ஹெகலின் சூக்குமக் கருத்தாக்கங்களைப் போல அது வெறும் சிந்தனை நடவடிக்கையின் விளைவு அல்ல. பொருளாயத ரீதியில் இருக்கின்ற அமைப்பின் ஒரு பகுதி என்ற முறையில் அது பொருளாயத ரீதியில் தரப்படுகிறது, ஆகவே இந்த அமைப்பின் தத்துவ ரீதியான மாதிரிப்படிவத்தில் அதற்குரிய இடத்தை அது பெற முடியும், பெற வேண்டும்.
பண்டப் பரிவர்த்தனை என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது? பயன் மதிப்புக்கும் பரிவர்த்தனை மதிப்புக்கும் உள்ள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்த எதிரிடைகளின் போராட்டத்தையும் அதன் விளைவாக சூக்கும உழைப்புக்கும் ஸ்தூலமான உழைப்புக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாட்டையும் மார்க்ஸ் ஆராய்கிறார், இன்னும் அதிகச் சிக்கலான கருத்தாகிய மதிப்பின் எக்காலத்துக்கும் உரிய வடிவத்துக்கு, அதிலிருந்து பணவியல் வடிவத்துக்கு வந்து சேருகிறார். அவருடைய சிந்தனை முன்னரே முடிவு செய்யப்பட்ட விதிகளின் அடிப்படையில் முன்னே செல்லவில்லை, ஆராயப்படுகின்ற பொருளின் தர்க்கம், இயக்கவியலின் அடிப்படையில் முன்னேறுகிறது. அது பயனுள்ள முடிவுகளை அடைவதற்குத் துல்லியமான காரணம் இதுவே.
மூலதனத்தில் மார்க்சின் முறையை எங்கெல்ஸ் பின்வருமாறு வர்ணிக்கிறார்: ”ஜெர்மானிய இயக்கவியல் முறையை அதன் இன்றைய வளர்ச்சிக் கட்டத்தில் பழைய, மேலெழுந்தவாரியான, வெறும் சொல்லோட்டமுள்ள இயக்கமறுப்பியல் முறையோடு ஒப்பிடும் பொழுது மத்திய காலப் போக்குவரத்துச் சாதனத்தோடு ஒப்பிடுகையில் ரயில்வேயைப் போன்று முன்னது உயர்வானது. இந்த உண்மைக்கு யாரேனும் குறிப்பிட்ட எடுத்துக்காட்டைப் பார்க்க விரும்பினால் அவர் ஆடம் ஸ்மித் அல்லது வேறு அதிகாரபூர்வமான, புகழ் பெற்ற பொருளியலாளர் எவராவது எழுதிய புத்தகத்தை எடுத்துப் படிக்கட்டும், பரிவர்த்தனை மதிப்பும் பயன் மதிப்பும் இந்தக் கனவான்களுக்கு எவ்வளவு துன்பத்தைக் கொடுத்தன; இந்த இரண்டையும் சரியான முறையில் வேறுபடுத்துவதிலும் அவை ஒவ்வொன்றுக்கும் உரித்தான வரையறுக்கப்பட்ட வடிவத்தை எடுத்துரைப்பதிலும் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதைப் பார்க்கட்டும். பிறகு மார்க்ஸ் எழுதிய தெளிவான, எளிமையான விளக்கத்தை அவற்றோடு ஒப்பிடட்டும்.”(10)
முதலாளித்துவ உற்பத்தியின் கட்டமைப்புக்கு முற்றிலும் பொருந்தக் கூடிய விதத்தில் ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்துக்கு, ஒரு கருத்தினத்திலிருந்து மற்றொரு கருத்தினத்துக்கு முன்னேறிச் சென்று மார்க்சின் ஒருங்கிணைந்த தத்துவ மாளிகை நிர்மாணிக்கப்படுகிறது. அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு கருத்தினமும் முந்திய கருத்தினத்திலிருந்து அவசியமாகப் பெறப்படுகிறது, அது புதிய உள்ளடக்கத்தைப் பெற்றுச் செழுமையடைந்து நிகழ்வுகளின் பரந்த வட்டத்தை மென்மேலும் அதிகமாக உள்ளடக்குகிறது, அதாவது ஸ்தூலமடைகிறது. பண்டப் பரிவர்த்தனையில் உள்ளுறையாக இருக்கும் ஆரம்ப முரண்பாட்டைப் பற்றிய பகுப்பாய்வு முதலாளித்துவச் சமூகத்தின் வளர்ச்சியடைந்த முரண்பாடுகளை-அவற்றின் ஸ்தூலமான வெளிப்பாட்டில்-சுட்டிக்காட்டுவதற்கு இட்டுச் செல்கிறது, ஆகவே இந்தச் சமூகம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற புரட்சிகரமான முடிவுக்கு இட்டுச் செல்கிறது.
முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது. சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்குச் செல்கின்ற இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையைப் பெற்று விஞ்ஞானம் வளமடைகிறது.
விஞ்ஞான அறிதலில் தன்னால் செய்யக் கூடியதை இயக்கவியல் முறை இன்னும் எடுத்துக் காட்ட வேண்டியிருக்கிறது. இயற்கை விஞ்ஞானங்கள் திரட்டப்பட்ட விவரங்களைப் பொது மைப்படுத்துவதற்கு, ஒழுங்குபடுத்துவதற்கு, அவற்றை இயக்கவியல் ரீதியில் பரிசீலிப்பதற்கு, ஒரு புதிய கருத்தியல் மற்றும் முறையியல் அமைப்பின் உதவியுடன் வெவ்வேறு துறைகளில் விஞ்ஞானங்களின் உதிரியான சாதனைகளை ஒருங்கிணைப்பதற்கு நிர்ப்பந்தமான அவசியத்தை உணர்கின்றன.
தத்துவச் சிந்தனையின் உயர்மட்டத் துறைகளுக்குள் இயற்கை விஞ்ஞானம் இங்கு தான் நுழைகிறது. சாதிக்கப்பட்ட முடிவுகள் அனைத்தையும் திட்டவட்டமான அமைப்பில் ஒழுங்குபடுத்துகின்ற, ஒற்றைத் தத்துவத்தின் சுற்றுவட்டத்துக்குள் அவற்றை விளக்கிக் கூறுகின்ற கடமை தவிர்க்க முடியாதபடி அதை எதிர்நோக்குகிறது. நவீன பெளதிகம், உயிரியல், மற்றும் புறச்சூழல் துறைகளில் இந்தக் கடமை அவசரமாகிவிட்டது என்பது ஏற்கெனவே நாம் அறிந்ததே. சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்கு முன்னேறுகின்ற இந்த முறையைத் தவிர இதை நிறைவேற்றுவதற்கு வேறு வழி இல்லை.
ஆராய்ச்சியாளருக்கு இயக்கவியல்-பொருள்முதல்வாத முறை ஒரு வலிமையான ஆயுதமாகும். அவர் சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு, இசையளவுகளை இழந்து விடாமலிருப்பதற்கு, வழி தவறி முட்டுச் சந்துக்குள் போய்விடாமலிருப்பதற்கு அது உதவி புரிகிறது. பரிசோதனையும் கணித ஆராய்ச்சியும் பிரச்சினையைக் கண்டுபிடிக்காமல் இருக்கின்ற இடங்களில் அதைக் கண்டுபிடிப்பதற்கு அது உதவுகிறது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் ஆராய்ச்சியாளர் தத்துவஞானக் கோட்பாடுகளை அறிந்திருப்பது மட்டும் போதாது, அவர் இந்த முறையில் முழுத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனையாகும்.
பொதுமைப்படுத்தல்களின் மிக உயர்ந்த மட்டங்களில் உள்ள படைக்கின்ற, தேடுகின்ற, சம்பிரதாயமற்ற சிந்தனை முறைகளை விரித்துரைப்பதற்கு மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் அவசியம். தத்துவச் சிந்தனையின் முன்னேற்றத்திற்குப் புதிய சாதனங்களை, பிரபஞ்சத்தின் சாராம்ச, சர்வாம்ச உறவுகளை மென்மேலும் ஆழமான முறையில் ஊடுருவுவதுடன் பொருந்துகின்ற புதிய சிந்தனை முறைகளை அது கண்டுபிடிக்க வேண்டும். மார்க்சியம் முழுவதையும் போலப் பொருள்முதல்வாத இயக்கவியலும் “உயிரில்லாத வறட்டுக் கோட்பாடல்ல… அது நடவடிக்கைக்கு ஜீவனுள்ள வழிகாட்டி” (லெனின்).
*****
மூலதனத்தின் தத்துவஞானத்தைப் பற்றி மேலே எழுதப்பட்டிருப்பவை அனைத்தும் உருவரை மட்டும்தான் என்பது உண்மையே. அறிவார்ந்த நடவடிக்கைக்கு மிகவும் கிளர்ச்சியூட்டுகின்ற, சுவாரசியமான துறை இங்கே இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதுதான் என்னுடைய நோக்கம். இது ஆழம் காண முடியாதது, அதில் ஒருவர் குதிப்பது பயனுள்ளதே. நாம் எவ்வளவு ஆழமாகக் குதிக்கின்றோமோ, அவ்வளவு ஆன்மிக வளத்தை நாம் அடைய முடியும்.
குறிப்புகள்:
(5)“டயடோஹிகள்”(“Diodochi”) – ஹெகலிய மரபின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகளாக ஜெர்மன் பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய பேராசிரியர்களை எங்கெல்ஸ் கிண்டலாக இப்படிக் குறிப்பிடுகிறார். (6) கார்ல் மார்க்ஸ், அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1982, பக்கம் 344. (7) Karl marx, capital, vol. 1, p. 21. (8) Karl marx, capital, vol. 1, p. 43. (9) V.I.Lenin, collected works, Vol. 38, p. 358. (10) கார்ல் மார்க்ஸ், அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1982, பக்கங்கள் 347-48.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார் நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ் தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ. வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986-ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் கடையின் புதிய முகவரி கீழே) 1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்) பேச – (தற்காலிகமாக) : 99623 90277
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.
காங்கிரஸ் அரசின் ஊழல் முறைகேடுகளால் மக்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையை அறுவடை செய்து, மோடி தலைமையிலான பாஜக அரசு 2014-ம் ஆண்டு பதவி ஏறியது.
ஆனால், காங்கிரஸைக் காட்டிலும் பெரு நிறுவனங்களுக்கு நாட்டின் வளங்களை கூறுபோடுவதிலும், மக்கள் பணத்தை வாரித் தருவதிலும் மோடி அரசு, புதிய சாதனை செய்திருக்கிறது என்றே சொல்லலாம்.
மோடி அரசு, கார்ப்பரேட்டுகளுக்காகச் செய்த ஊழல்கள், முறைகேடுகள் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்…
♦ சாராய அதிபர் விஜய் மல்லையா, கிங் ஃபிஷர் விமான நிறுவனத்துக்கு வாங்கிய ரூ. 9000 கோடி வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாமல் மார்ச் 2, 2016-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பி ஓடினார். ஓடும் முன், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசிவிட்டு சென்றதாக இந்த வங்கி மோசடியாளரே தெரிவிக்கிறார். தற்போது லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்.
♦ கடன் தகவல் முகமை (சிபில்) அளித்த தகவலின்படி, வேண்டுமென்றே கடனை திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 5,275. அவர்கள் வாங்கிய கடன் ரூ. 56, 521 கோடி.
♦ 2011-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு வரை இந்தோனேஷிய சுரங்கத்திலிருந்து நிலக்கரி மற்றும் மின்சார உபகரணங்கள் இறக்குமதி செய்ததில் விலை முறைகேடு செய்ததாக அதானி குழுமம், ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம், எஸ்ஸார் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிறுவனங்கள் அதிகப்படியான பணத்தை வெளிநாட்டு போலி நிறுவனங்களில் பதுக்கியதாகவும் சொல்லப்பட்டது. இந்த முறைகேட்டில் 40 நிறுவனங்கள் ஈடுபட்டதாகவும் முறைகேடு செய்த தொகை ரூ. 290 பில்லியன் எனவும் செய்தி வெளியானது.
♦ சத்தீஸ்கரில் ஆட்சியில் இருந்த ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசு, வரி ஏய்ப்பு சொர்க்கமான பிரிட்டீஷ் வெர்ஜீனியா தீவுகளில் ஒரு நிறுவனத்துக்கு அகஸ்டா வெஸ்ட்லெண்ட் ஹெலிகாப்டர்கள் வாங்க 1.57 மில்லியன் டாலரை ‘கமிஷன்’ தந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த சர்ச்சையில் முதலமைச்சரின் மகன் அபிஷேக் சிங்கும் பேசப்பட்டார். 6.3 மில்லியன் டாலர் மதிப்பிலான ஹெலிகாப்டரை வாங்கிய பிறகு, இவர் ஒரு போலி நிறுவனத்தை தொடங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
♦ அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 114 பில்லியன் மோசடி செய்தது, இந்திய வங்கி வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசடியாக இது கருதப்படுகிறது. இந்த முறைகேடு பிரபல நகை வடிவமைப்பாளர் நீரவ் மோடிக்கு தொடர்புடையதாக வெளியே வந்தது. டிசம்பர் 2017-ம் ஆண்டின் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன் மொத்த கடனில் 12.11 சதவீதமாக இருந்தது. இந்த நீரவ் மோடி, பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருந்தவர். இந்தியாவிலிருந்து தப்பியோடி இவரும் தற்போது லண்டன் சொகுசு வாழ்க்கையில் சுபிட்சமாக இருக்கிறார்.
♦ வின்சம் டைமண்ட்ஸ் நிறுவனம் 2011-ம் ஆண்டு 14 வெவ்வேறு வங்கிகளில் ரூ. 3,420 கோடியை கடனாக பெற்றது. 2013-ம் ஆண்டின் மத்தியில் இந்த நிறுவனம் மோசடி செய்யத் தொடங்கியது. அந்த ஆண்டு அக்டோபர் மாதம், வங்கிகள் இந்த நிறுவனத்தை வேண்டுமென்றே கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் என அறிவித்தன.
2014-ம் ஆண்டின் தொடக்கத்தில் சிபிஐ-யும் பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவும் அந்த நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தை சோதனை இட்டன. அந்த புள்ளியிலேயே புலனாய்வு நிறுத்தப்பட்டது, மத்தியில் அரசும் மாறியது. வின்சம் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ஜதின் மேத்தா, கவுதம் அதானியின் நெருங்கிய உறவினர். கவுதம் அதானி மோடிக்கு நெருக்கமானவர் என உலகறியும். வின்சம் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் கடன் தொகை தற்போது ரூ. 7000 கோடியைக் கடந்துள்ளது.
♦ நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன், ஜெய் ஷாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் வருவாய் 16,000 மடங்கு உயர்ந்தது. நிறுவனங்களின் பதிவேட்டில் அளித்த தகவலில் இந்த விவரம் தெரியவந்தது.
ஜெய் ஷாவுக்கு சொந்தமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனம், 2012-2013ம் நிதியாண்டுக்கான கணக்கு அறிக்கையில் ரூ.6230 நட்டம் என்றும், 2013-2014-ம் நிதியாண்டுக்கான கணக்கு அறிக்கையில் ரூ.1724 நட்டம் என்றும் கணக்குக் காட்டி இருந்தது. மோடி ஆட்சி அமைத்த 2014 – 2015-ம் ஆண்டுக்கான நிதி அறிக்கையில் மொத்த வருமானம் ரூ.50,000 என்றும் அதில் இலாபம் ரூ.18,728 என்றும் கணக்குக் காட்டி இருந்தது. அதிலும் கடந்த 2015- 2016-ம் நிதியாண்டுக்கான கணக்கு அறிக்கையில் அந்நிறுவனத்தின் மொத்த வருமானம் திடீரென ரூ.80.5 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் அவரது நிறுவனத்தின் வருமானம் 16,000 மடங்கு உயர்ந்திருக்கிறது.
டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை, விவசாய விளைபொருட்கள் விற்பனை நிறுவனமாகப் பதிவு செய்துள்ளார் ஜெய் ஷா. கடந்த 2015- 2106-ம் நிதியாண்டில் இந்நிறுவனம் கே.ஐ.எஃப்.எஸ். என்ற வங்கியல்லாத நிதி நிறுவனத்திடமிருந்து ரூ.15.78 கோடி கடன் பெற்றிருக்கிறது. இந்த நிதி நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் உள்ள ராஜேஷ் கந்த்வாலா நடத்திவருகிறார். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார். ஜெய் ஷா, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம், டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ரூ.1.4 கோடி நட்டம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி இந்நிறுவனத்தின் அனைத்து வியாபார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கிறார்.
♦ ஏப்ரல் 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, பிரஞ்சு விமான கட்டுமான நிறுவனமான டஸால்ட் நிறுவனத்திலிருந்து இந்தியா தயார் நிலையில் 36 ராபேல் போர் விமானங்களை வாங்கும் என அறிவித்தார். அசலான திட்டம் என்னவெனில், 18 தயார் நிலையில் இருக்கும் விமானங்களையும் 108 விமானங்களை உதிரி பாகங்களாக வாங்கி இந்திய நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனத்தில் பொருத்துவது என்பதாகும்.
ஆனால், நவம்பர் 2016-ம் ஆண்டு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் பிரெஞ்சு நிறுவனத்தின் இந்தியக் கூட்டாளியாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. பாரீசில் பிரதமர் அறிவிப்பு சில வாரங்கள் முன்புதான், அதாவது மார்ச் 2015-ம் ஆண்டுதான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. ரிலையன்ஸ் ஏவியேஷன் ஏப்ரல் 24, 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
126 விமானங்களுக்குப் பதிலாக 13 விரிவாக்க வசதிகள் செய்யப்பட்ட 36 விமானங்கள், ஒவ்வொரு விமானத்தின் விலையும் 41.42% உயர்வுடன் வாங்கப்படும்.
பாதுகாப்பு துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் இடம்பெற்றிருந்த பேரம் பேசும் குழு விரிவாக்கப்பட்ட வசதிகளின் காரணமாக உயர்த்தப்பட்ட அதிக விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவர்கள் பேரத்தில் ஈடுபட்டிருந்தபோதே, பிரதமர் அலுவலகமும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் பேரத்தில் ஈடுபட்டதை இந்தக் குழு கடுமையாக எதிர்த்தன.
ரபேல் ஒப்பந்தத்தில் ஊழலை தடுக்கும் விதிகளும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் விதிகளும் மீறப்பட்டதோடு, ஒரு கடிதம் இருந்தால் போதும் என்பதோடு நிறுத்திக்கொள்ளப்பட்டன.
இந்த ஒப்பந்த பண பரிமாற்றத்தை கண்காணிக்கும் வகையில் பிரெஞ்சு அரசு காப்போலை கணக்கு எதையும் தொடங்கவில்லை.
பேரம் பேசும் குழுவில் இருந்த பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள், ஐ.மு.கூ அரசின் 126 ஜெட் விமாங்களை வாங்கும் ஒப்பந்தத்தைவிட, நரேந்திர மோடி அரசின் 36 ஜெட் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் சிறப்பானதல்ல என்ற முடிவை தெரிவித்தனர். அதோடு, 36 விமானங்களில் முன்னதாக 18 விமானங்கள் தயாரித்து அனுப்பும் காலமும் முந்தைய ஒப்பந்தத்தை விட அதிகமானது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனத்தை வளர்த்தெடுக்கும் வகையில் விமானங்களை வாங்கும்போது தொழிற்நுட்பங்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தமும் கைவிடப்பட்டது. பாதுகாப்புத் துறையில் இந்தியாவை வலுப்படுத்தும் வாய்ப்பை தவற விட்ட நிலையில் ‘மேக் இன் இந்தியா’ என்பது வெற்று முழக்கமாகிவிட்டது.
♦ IL&FS Ltd என்ற நிறுவனம் கட்டுமானம், நிதி மற்றும் சமூக, சுற்றுச்சூழல் சேவைகளை முதலீடுகளை அளித்துவரும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் ரூ. 91,000 கோடி கடனில் தத்தளிக்கிறது. அரசு துறை வங்கிகளிடம் ரூ. 57,000 கோடியை கடனாகப் பெற்றுள்ளது இந்நிறுவனம். செபி, ரிசர்வ் வங்கி, அரசு போன்றவை இந்த பிரச்சினையை தீர்க்க முடியாமல் தள்ளாடுகின்றன. பரஸ்பர நிதியில் முதலீடு செய்தவர்களும், பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களும் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளனர்.
♦ பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவிக்கும் சில நாட்களுக்கு முன்னர் பாஜக மிகப் பெரும் தொகை மதிப்பிலான நிலத்தை பதிவு செய்துள்ளது. பீகாரின் பாஜக தலைவர்களால் இதுபோன்ற 10 பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் சில பதிவுகள் பாஜக தலைவர் அமித் ஷாவின் பெயரில் நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகளின்படி, அவசர கதியில் நிலங்களை வாங்க பாஜக முயன்றிருப்பது தெரியவந்துள்ளது. ரு. 8 லட்சத்திலிருந்து ரூ. 1.16 கோடி மதிப்பிலான நிலம் வரை முறைகேடாக வாங்கப்பட்டுள்ளது.
♦ 2015 மற்றும் 2016 காலக்கட்டத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவின் ராஸ்நெப்ட் என்ற எண்ணெய் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்கியுள்ளன. ராஸ்நெப்ட் நிறுவனம் குஜராத்தில் உள்ள எஸ்ஸார் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை வாங்கியுள்ளது. எஸ்ஸார் எண்ணெய் நிறுவனம் கடனில் மூழ்குவதை காப்பாற்றும் பொருட்டு இந்த முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
♦ திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பொரேஷன் லிமிடெட் (DHFL) நிறுவனம், மக்களின் பணமான ரூ. 31,000 கோடியை அமைப்பாக்கப்பட்ட முறைகேட்டின் மூலம் அபகரித்துக்கொண்டது. இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ. 8,795 கோடி மட்டுமே. ஆனால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் ரூ. 96,880 கோடியை கடனாக பெற்றது இந்நிறுவனம். 32 அரசு வங்கிகளிடமும் ஒரு தனியார் மற்றும் ஐந்து வெளிநாட்டு வங்கிகளில் இந்த நிறுவனம் கடன் பெற்றுள்ளது.
இதில் குறிப்பிடத்தகுந்த விசயம் என்னவெனில், தனது முறைகேட்டை மறைக்க பாஜகவுக்கு இந்த நிறுவனம் ரூ. 19.5 கோடியை நிதியாகக் கொடுத்துள்ளது. இதில் பெரும் இழப்புகளை சந்தித்தது அரசு வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவும், பாங்க் ஆஃப் பரோடாவுமே. முறையே ரூ. 11,000 கோடி, ரூ. 4,000 கோடியை இந்த வங்கிகள் கடனாக கொடுத்துள்ளன.
♦ ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இருந்து 380 கி.மீ. தள்ளியிருக்கிறது மாலி கிராமம். அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி பவர் லிமிடெட் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்துக்கான கட்டுமான பணிகளை 2000 ஏக்கரில் தொடங்க நினைத்தது. அதில் மாலி உள்ளிட்ட ஒன்பது கிராமங்களும் தனியார் மற்றும் அரசு சொந்தமான நிலங்களும் அடங்கும்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியைக் கொண்டு கட்டாவில் 1600 மெகா வாட் மின் திறன் கொண்ட மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது. திட்டம் நிறைவேற்றப்படும்போது, இங்கு தயாரிக்கப்படும் மின்சாரத்தை உயர் அழுத்த கம்பிகள் மூலம் வங்காள தேசத்துக்கு அதானி குழுமம் விற்கும்.
இதற்காக ஜார்க்கண்ட் அரசு தனது மின்சார கொள்கையை அக்டோபர் 2016-ம் ஆண்டு மாற்றியமைத்து, அதானியிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டது. அந்த அரசின் தணிக்கையாளர்களாலேயே இது ‘முன்னுரிமை அளித்தல்’ என குறிக்கப்பட்டு, இந்த திட்டத்தால் ரூ. 7,410 கோடி அதானி குழுமம் ஆதாயம் அடையும் என்றனர்.
நரேந்திரமோடி வங்காள தேசத்துக்கு ஆகஸ்ட் 2015-ம் ஆண்டு பயணம் சென்று திரும்பியவுடன், இந்த திட்டம் முன்மொழிவு செய்யப்பட்டது. மின்சாரத்தை விற்பனை செய்யும் அஜெண்டாவுடன் மோடியுடன் பயணித்த தொழிலதிபர்களுள் அதானியும் ஒருவர்.
கார்ப்பரேட்டுகளின் ‘காவலனாக’ மோடி தனது ஐந்தாண்டுகளில் ஆற்றிய கடமைகள் ஒருசிலவற்றை மட்டுமே மேலே தொகுத்திருக்கிறோம். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் நாட்டின் பெரும்பகுதியான மக்கள் சார்ந்திருந்த சிறு, குறு தொழில்களை அழித்த மோடி அரசு, பெரு நிறுவனங்களுக்கு நாட்டையே பட்டா போட்டு கொடுத்திருக்கிறது. இது காவல்கார அரசு அல்ல, கொள்ளையடிக்கும் அரசு.
தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வருகிறோம்.
இதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை / அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை நம் உடல் சூடாகுதல். இதை Hyperthermia என்கிறோம். ஆகவே, உடல் சூடாவதை தடுப்பதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகள் முதல் இடம் பிடிக்கின்றன.
உடல் சூடாவதை தடுப்பது எப்படி?
தண்ணீர் பஞ்சம் இல்லாத ஊர்களில், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.
தண்ணீர் பஞ்சம் நிலவும் ஊர்களில், ஒரு வேளை குளிர்ந்த நீர் குளியல் மற்றும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கை, கால், முகம் போன்றவற்றை கழுவலாம். இது உடலின் உஷ்ணத்தை தணிக்க உதவும்.
வெப்பத்தை உள்ளயே தக்க வைக்கும் உடைகளான கம்பளி / லினன் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். ஜீன்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது. பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. வெப்பத்தை தக்க வைக்கும் கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது சிறந்தது.
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குடை / தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும். முடிந்த வரை , வெயில் நம் உடல் மீது நேராக படாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது.
வெயில் தனல் அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்க்கலாம். வெளியே சென்று விளையாடுவதை காலை நேரம் மற்றும் மாலை நேரத்திற்கு தள்ளி வைக்கலாம்.
அடுத்த நடவடிக்கை, இதை மீறியும் சூடான நம் உடலை எப்படி குளிர் படுத்துவது என்பது. நாம் வீட்டிற்கு உள்ளேயே இருந்தாலும். வெப்ப சலனம் நம்மை கட்டாயம் பிரச்சனைக்குள்ளாக்கும் காரணம்.. சூரியனின் வெப்பமானது மூன்று முறைகளில் நம் மீது தாக்கலாம்;
ஒன்று – conduction
இரண்டாவது – convection
மூன்றாவது – radiation
இதில் முதலாவதாக இருக்கும் conduction-க்கு நாம் ஏற்கனவே சூடான ஒரு பொருளோடு தொடர்பில் இருந்தால் நடப்பது. அதாவது, வெயிலில் நின்ற ஒரு பைக் மீது நாம் ஏறி உட்கார முற்படும் போது, அதன் வெப்பம் நமக்கும் பரவும். இதை தவிர்க்க முடிந்த வரை நிழலில் வண்டியை நிறுத்தலாம் அல்லது சீட்டில் உட்காரும் முன் நல்ல கடினமான துணியை விரித்து உட்காரலாம்.
இரண்டாவது வகை convection அதாவது காற்றை சூடாக்கி விட்டால் போதும். அதனுடன் தொடர்பில் இருக்கும் நமக்கும் வெப்பம் கடத்தப்படும். இது நாம் வீட்டினுள் இருந்தாலும் சரி, நம்மை தாக்கியே தீரும். பொதுவாக அடைக்கப்பட்டு நிறுத்தப்பட்ட கார் போன்ற வாகனங்களுக்குள் சென்ற உடன் தாக்கும் வெப்பம் இந்த வகை.
நமது வீட்டின் ஜன்னல்களில் தண்ணீரில் முக்கிய துண்டுகளை காயப்போடலாம். இதன் மூலம் வீட்டினுள் வரும் காற்று சிறிது ஈரப்பதம் கலந்து வரும்.
நாம் போடும் மின்விசிறி. வெளியே இருக்கும் வெப்பக்காற்றையும் மேலே சூடான தளத்தின் காற்றையும் நம் மீது தள்ளும். அதனால் தான் என்ன வேகமாக ஃபேன் சுழன்றாலும் வெப்பம் தணியாமல் இருக்கும். கார் உபயோகிப்பவர்கள்
கார் கண்ணாடிகளை உடனே நன்றாக திறந்து விட வேண்டும். ஏசியை உடனே போடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் அந்த ஏசி மெசினும் 100 டிகிரிக்கு மேல் சூடாகி இருக்கும். அதில் இருந்தும் வெப்பக் காற்றே வரும்.
மூன்றாவது Radiation இதற்கு காற்று போன்ற எந்த கடத்தியும் தேவையில்லை. மின் காந்த அலைகளான இந்த வெப்பம் நம்மை நேரடியாக தாக்கி நம் உடலை சூடாக்கும்.
நம் வீட்டில் கிச்சனில் உபயோகப்படுத்தும் மைக்ரோ வேவ் அவன் இந்த முறையில் தான் இயங்குகிறது.
இந்த முறையில் சூடாகும் நம் உடல் எப்படி இந்த சூட்டை தானாக தணித்துக்கொள்கிறது ?
அதற்கு காரணம் “Evapouration” எனும் தற்காப்பு முறை அதிகமாக உடல் சூடானால், நமது உடலில் வேர்வை அதிகமாக சுரக்கும். அந்த வேர்வை உடலை குளிர்விக்க முயற்சிக்கும். (sweating) மேலும் உடலுக்குள் உள்ள உஷ்ணத்தை நமது நுரையீரல் வெளியிடும் மூச்சுக்காற்று வழி அனுப்ப முயலும் (expiration) இப்படி நம் உடல் அதிக நீர்ச்சத்தை உபயோகித்து குளிர்விப்பதால் ஏற்படும் பிரச்சனை
Dehydration – நீர் சத்து குறைதல்..
இதை எப்படி அறியலாம்?
நாக்கு வறண்டு போதல்.
சிறுநீர் அடர் மஞ்சளாக செல்லுதல்.
தசைப்பிடிப்பு.
தலை சுற்றல்.
கை கால் தளர்வு.
போன்ற அறிகுறிகளால் அறியலாம், இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?
எளிதான வழி – தண்ணீரைப் பருகுவது.
நமது சிறுநீரகங்கள் சரியாக இயங்க குறைந்தபட்சம் ஒருவரின் எடைக்கு கிலோ ஒன்றிற்கு முப்பது மில்லி லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு பருகி ஆக வேண்டும்.
உதாரணம்: 60 கிலோ எடை உள்ள ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்தாலும் சரி. வெயில் காலமோ குளிர்காலமோ அவர் 60 ( கிலோ) × 30( மில்லி) = 1800 மில்லி லிட்டர் தண்ணீர் குறைந்த பட்சம் பருக வேண்டும்.
இந்த தண்ணீரின் உட்கொள்தல் அளவு அவர் செய்யும் வேலைகள் பொறுத்து அதிகமாகும். இன்னும் வெப்ப சலனம் நிலவும் காலங்களில் 30 மில்லி லிட்டர் என்பது 60 மில்லி லிட்டர் அளவு குறைந்தபட்ச தேவையாக மாறும்.
உங்கள் பள்ளி செல்லும் குழந்தையின் எடை 20 கிலோ என்றால்
இந்த வெப்ப சலனத்தில் அவர்களின் குறைந்த பட்ச தேவை ஒரு கிலோவுக்கு 60 மில்லி லிட்டர் என்று கொண்டால்;
20 (கிலோ) * 60 ( மில்லி லிட்டர் ) = 1200 மில்லி லிட்டர். அதாவது 1.2 லிட்டர் கட்டாயம் பருக வேண்டும்
வளர்ந்த ஆணும் பெண்ணும் பொதுவாக , 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுவது சிறந்தது.
இந்த தண்ணீரை இளநீராக, மோராக, லஸ்ஸியாக , பழச்சாறாக எப்படி வேண்டுமானாலும் பருகலாம். செயற்கை குளிர்பானங்கள், ரசாயன கலர் பொடிகள் கலந்த கலவைகளை தவிர்ப்பது நல்லது.
குளிர் நீர் பருகுவது சிறந்தது. அதிலும் ஃப்ரிட்ஜில் வைத்து கால் மணி நேரம் முதல் அரை மணி நேரத்தில் எடுத்து பருகினால் சரியான குளிர்ச்சி இருக்கும். ஆற்று மணல் பரப்பி அதில் நீர் ஊற்றி அதன் மீது வைத்த மண்பானையில் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை ஊற்றி குளிர்வித்து குடிப்பது சிறந்தது. மிக அதிகமான குளிர்ச்சி தரும் நீரை பருகுவது தொண்டைக்கு கேடு விளைவிக்கும்.
சரி.. இப்போது வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்டவரை உடனே நல்ல குளிர்ச்சியான இடத்துக்கு அல்லது நிழலான பகுதிக்கு மாற்ற வேண்டும்.
அவரது மேலாடைகளை கழற்றி விட வேண்டும். நன்றாக உடலில் காற்று பட வேண்டும்.
அவரை காலை நீட்டி படுக்க வைக்க வேண்டும்.
காற்றாடி / மின்விசிறியை இயக்கி குளிர்விக்க வேண்டும்.
சுற்றி ஆட்கள் நின்று கொண்டு காற்று அவருக்கு செல்வதை தடுக்கக்கூடாது.
தண்ணீரில் நனைத்த துணியைக்கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
கால்களை சிறிது உயரத்தூக்கி வைக்க வேண்டும்.
சிறிது நினைவு திரும்பியதும் அமர வைத்து.. தண்ணீரை வழங்க வேண்டும்.
911 / 108 -க்கு அழைத்து உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதிக்க வேண்டும்.
இதுவே வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய முதல் உதவி.
ஹை அலர்ட் தேவைப்படும் வகுப்பினர் பின்வருமாறு ;
1. குழந்தைகள்.
2. முதியோர்கள்.
3. நீரிழிவு / ரத்த கொதிப்பு நோயாளிகள்.
4. கர்ப்பிணிகள்.
5. வெயிலில் நின்று வேலை செய்யும் தொழிலாளிகள்.
6. அதிகமாக பயணம் செய்பவர்கள்.
முடிந்த வரை வெப்ப சலனத்தில் இருந்து நம்மையும் நம்மை சார்ந்தோரையும் பாதுகாப்போம்! நிழல் தரும் மரங்களை நம்மால் இயன்ற அளவு வளர்த்து, பின்வரும் சந்ததியினர் இதுபோன்ற வெப்ப சலனங்களில் நிழல் தேடி அலையாதவாறு காப்போம்.
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
அ.அனிக்கின்டேனியல் டிஃபோ என்ற ஆங்கில நாவலாசிரியர் படைத்த இராபின்சன் குரூசோ என்ற இளைஞன் வீட்டிலிருந்து வெளியேறி கடலுக்கு ஓடினான். அப்பொழுது ஆரம்பித்த அவனுடைய வீர சாகசச் செயல்கள் வாசகர்களை இரண்டரை நூற்றாண்டுகளாகக் கவர்ந்து வந்திருக்கின்றன.
தென் இங்கிலாந்தில் ரோம்ஸி என்ற இடத்திலிருந்த அந்தோனி பெட்டி என்பவர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவர் குடும்பத்தில் இதைப் போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. அவருடைய பதினான்கு வயதான மகன் வில்லியம் குடும்பத் தொழிலைச் செய்ய மறுத்தான்; சவுத்தாம்ப்டன் என்ற துறைமுக நகரத்துக்குப் போய் ஒரு கப்பலில் வேலைக்குச் சேர்ந்தான்.
இங்கிலாந்தில் 17, 18-ம் நூற்றாண்டுகளில் இளைஞர்கள் தமது சலிப்பான, உப்பு சப்பில்லாத வாழ்க்கைக்கு எதிர்ப்புக் காட்டுவதற்காகக் கடலுக்கு ஓடினார்கள்; கப்பல்களில் வேலைக்குச் சேர்ந்தார்கள். அது அவர்களுடைய எதிர்ப்பின் வழக்கமான வடிவம். இது முதலாளித்துவ வாழ்க்கை முறைக்கு எதிரான கலகம் அல்ல; அதற்கு மாறாக இந்த இளைஞர்களின் உள்ளங்களில் வீர சாகசங்களைக் கொண்ட வாழ்க்கைக்கான ஏக்கம், தாங்கள் பணக்காரர்களாக வேண்டும், புதிய முதலாளித்துவ உலகத்தில் தங்களுடைய சக்தியைக் காட்ட வேண்டும் என்ற ஆசையோடு அநேகமாக உணர்வுப்பூர்வமாகவே இணைக்கப்பட்டிருந்தது. இளைஞனான பெட்டியிடமும் இந்த அம்சம் தனிச்சிறப்பான வகையில் இருந்தது.
டேனியல் டிஃபோ எழுதிய புதினத்தின் தமிழாக்க நூலின் முகப்பு அட்டை.
இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு கப்பலில் அவருடைய கால் ஒடிந்து விட்டது. அந்தக் காலத்திலிருந்த குரூரமான வழக்கத்தின்படி பெட்டியை அருகிலிருந்த கடலோரத்தில் இறக்கி விட்டார்கள். அது பிரான்சின் வட பகுதியிலிருக்கும் நார்மண்டி கடற்கரை. பெட்டியின் திறமையும், செய்முறை இயல்பும், அதிர்ஷ்டமும் அவரைக் காப்பாற்றியது.
இராபின்சன் குரூசோவைப் போலவே பெட்டியும் தன்னுடைய சுயசரிதத்தில், கடற்கரையில் தன்னிடம் எவ்வளவு குறைந்த பணத்தைக் கொடுத்துவிட்டுப் போனார்கள், அதை அவர் எப்படிப் பயன்படுத்தினார், பலவிதமான சிறு சாமான்களை வாங்கி, அவற்றை அதிக விலைக்கு விற்று எப்படிப் பணத்தைப் பெருக்கினார் என்பதை மிகுந்த கவனத்தோடு எழுதியிருக்கிறார். அவர் தன்னுடைய உபயோகத்துக்காக இரண்டு முட்டுக் கட்டைகளையும் வாங்கியிருக்கிறார். ஆனால் சீக்கிரத்தில் அவற்றை எறிந்துவிட்டார்.
சில குழந்தைகள் “கருவிலே திருவுடையவை” என்று சொல்வதுண்டு. பெட்டியும் அப்படிப்பட்ட மேதை என்றுதான் சொல்ல வேண்டும். ரோம்ஸியில் அவர் படித்த பள்ளிக்கூடத்தில் குறைவாகத்தான் சொல்லிக் கொடுத்தார்கள் என்ற போதிலும் அவர் லத்தீன் மொழியில் நல்ல தேர்ச்சியைப் பெற்றிருந்தார். ஏசு சபையைச் சேர்ந்த பாதிரிமார்கள் கான் என்ற இடத்தில் நடத்தி வந்த கல்லூரியில் சேர்வதற்கு அவர் எழுதிய விண்ணப்பத்தை முழுவதும் லத்தீன மொழியில் கவிதையாகவே எழுதியிருந்தார்.
அவர்கள் அந்த இளைஞனின் திறமையைக் கண்டு ஆச்சரியமடைந்தார்களோ அல்லது கத்தோலிக்கத் திருச்சபையில் ஒரு திறமைசாலியைச் சேர்த்துக்கொள்ள விரும்பினார்களோ, என்னவோ தெரியாது. அவரைக் கல்லூரியில் சேர்த்துக் கொண்டார்கள்; உபகாரச் சம்பளம் கொடுத்துப் படிக்க வைத்தார்கள். பெட்டி அங்கே இரண்டு வருடங்கள் படித்தார். “அங்கே லத்தீன், கிரேக்க, பிரெஞ்சு மொழிகளைக் கற்றேன். சாதாரண கணிதம், கடற்பயணத்துக்குத் தேவையான செய்முறை வடிவ கணிதம், வானவியல் ஆகியவற்றைப் படித்தேன்…,”(1) என்று அவர் எழுதுகிறார். பெட்டியின் கணித அறிவு அபாரமானது. அவர்தம் வாழ்க்கை முழுவதும் சிறந்த கணித அறிஞராக இருந்தார். 1640-ம் வருடத்தில் அவர் லண்டனில் கடல் பரப்பு பற்றிய விவரப்படங்களை வரைந்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். பிறகு அவர் மூன்றாண்டுக் காலம் கடற்படையில் சேவை செய்தார்; கப்பலோட்டுவதிலும், நிலப்படங்கள் வரைவதிலும் அவரிடமிருந்த திறமை அங்கே மிகவும் பயன்பட்டது.
நாட்டிலேற்பட்ட புரட்சி, அரசியல் மற்றும் சித்தாந்தப் போராட்டம் இந்த சமயத்தில் உச்ச கட்டத்தை அடைந்தது. உள்நாட்டுப் போர் வெடித்தது. இருபது வயது நிரம்பிய பெட்டி முதலாளித்துவப் புரட்சி, பரிசுத்தவாதத் தரப்பிலேதான் இருந்தார். ஆனால் இந்தப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுவதற்கு அவர் சிறிதும் விரும்பவில்லை. விஞ்ஞானம் அவரை ஈர்த்தது. அவர் ஹாலந்துக்கும் பிரான்சுக்கும் சென்று மருத்துவ இயலைப் படித்தார்.
இவ்விதமான பலதுறைப் புலமை பெட்டியின் சொந்தத் திறமைக்கு உதாரணம்; மேலும் 17-ம் நூற்றாண்டில் அப்பொழுதுதான் விஞ்ஞானத்தைத் தனித் தனியான பிரிவுகளாகப் பகுப்பதைத் தொடங்கியிருந்தார்கள். எனவே அறிவின் பல துறைகளிலும் புலமை பெற்றிருப்பது அன்று அபூர்வமாக இருக்கவில்லை.
அதன் பிறகு மூன்று ஆண்டுகள் பெட்டி பல நாடுகளையும் சுற்றிப் பார்த்தார். சுறுசுறுப்பாகச் செயலாற்றினார்; தீவிரமாக அறிவைச் சேகரித்தார். ஆம்ஸ்டர்டாமில் ஒரு பொற்கொல்லருடைய கடையில் – அவர் மூக்குக் கண்ணாடிகளும் செய்து கொடுப்பார் – அவர் வேலை செய்தார். இங்கிலாந்தை விட்டுவந்து பாரிசில் தங்கியிருந்த தத்துவஞானி ஹாப்சுக்கு செயலாளராகப் பணியாற்றினார். இருபத்து நான்கு வயதிலேயே – அவர் முழுவளர்ச்சியடைந்த மனிதராக, விரிவான அறிவும் அதிகமான சுறுசுறுப்பும், இன்ப நுகர்ச்சியும் தனிப்பட்ட கவர்ச்சியும் கொண்டவராக விளங்கினார்.
அவர் இங்கிலாந்துக்குத் திரும்பி ஆக்ஸ்போர்டில் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்தார். அதே சமயத்தில் லண்டனில் வேலை பார்த்துக் கொண்டுமிருந்தார். இரண்டு நகரங்களிலுமே அவர் இளம் விஞ்ஞானிகளடங்கிய குழுவில் முக்கியமான உறுப்பினராக இருந்தார். இந்த விஞ்ஞானிகள் தங்களைப் பற்றி “கண்ணுக்குத் தென்படாத கல்லூரி” என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டார்கள்; மறுவருகைக்குப் பிறகு அவர்கள் “இராயல் சொஸைட்டி” என்ற பெயர் கொண்ட புது யுகத்தின் முதல் விஞ்ஞானப் பேரவையை ஏற்படுத்தினார்கள்.
பெட்டி 1650-ம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெளதிகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பிறகு அங்கேயே உடற்கூறு இயல் பேராசிரியராகவும் ஒரு கல்லூரியின் துணை முதல்வராகவும் பணியாற்றினார். அவர் குடியிருந்த வீட்டில் ”கண்ணுக்குத் தெரியாத கல்லூரியின் ” கூட்டங்கள் நடைபெற்றன.
இந்த விஞ்ஞானிகளின் கருத்துக்கள் – பெட்டி உள்பட – குறிப்பிடக்கூடிய வகையில் புரட்சிகரமானவை அல்ல. ஆனால் அப்பொழுது புரட்சி வெற்றியடைந்து குடியரசு அறிவிக்கப்பட்டிருந்தது (மே, 1649). அந்தப் புரட்சி தனது முத்திரையை அவர்களுடைய நடவடிக்கைகளிலும் பொறித்தது. அவர்கள் சமய மரபு முறைகளுக்கு விரோதமாக, விஞ்ஞான ஆராய்ச்சியில் பரிசோதனை முறைகளை ஆதரித்தார்கள். பெட்டி தன்னுடைய வாழ்க்கை முழுவதும் தம் காலத்திய புரட்சியின் வேகத்தையும் ஜனநாயக உணர்ச்சியையும் கைக்கொண்டிருந்தார்; பிற்காலத்தில் அதிகச் செல்வமுள்ள நிலவுடைமையாளராகவும் கனவானாகவும் மாறிய பிறகும்கூட இந்த உணர்ச்சி அவரிடம் அவ்வப்பொழுது வெடித்தது; அதனால் அரண்மனையில் அவருடைய முன்னேற்றம் தடைப்பட்டதும் உண்டு.
பெட்டி நல்ல மருத்துவராகவும் உடற்கூறு இயல் நிபுணராகவும் இருந்திருக்க வேண்டும். அந்த இளம் பேராசிரியர் மருத்துவத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகளிலிருந்தும், ஆக்ஸ்போர்டில் அவருக்குக் கிடைத்த வெற்றிகளிலிருந்தும் அதன் பிறகு அவர் வகித்த உயர்ந்த பதவியிலிருந்தும் இது தெரிகிறது. இந்த சமயத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் அவரைப் பற்றி ஏராளமானவர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியது.
1650 -ம் வருட டிசம்பர் மாதத்தில் ஆக்ஸ்போர்டில், அந்தக் காலத்தின் காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள், பழக்க வழக்கங்களின்படி ஆன் கிரீன் என்ற ஒரு ஏழை விவசாயப் பெண் தூக்கிலிடப்பட்டாள். ஒரு இளம் கனவானால் கற்பழிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் தனக்குப் பிறந்த குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தாள். (அந்தக் குழந்தை உரிய காலத்துக்கு முன்பே பிறந்து இயற்கையான காரணங்களினால் செத்துவிட்டது. அந்தப் பெண் மீது எந்தக் குற்றமும் கிடையாது.) அவள் தூக்கிலிடப்பட்டு உயிர் போய்விட்டது என்று உறுதி செய்யப்பட்ட பிறகு அவளுடைய உடலைச் சவப்பெட்டியில் வைத்தனர்.
உடற்கூறு ஆராய்ச்சிகளுக்காகப் பிரேதத்தை எடுத்துக்கொண்டுபோக டாக்டர் பெட்டியும் அவருடைய உதவியாளரும் அங்கே வந்தனர். அந்தப் பெண்ணின் உடலில் சிறிதளவு உயிர் இருப்பதைக் கண்டு அவர்கள் திகைப்படைந்தனர். அவர்கள் உடனே மிகவும் பாடுபட்டு அவளுக்குப் புத்துயிர் கொடுத்தனர். இதன் பிறகு நடைபெற்ற சம்பவங்களும் அவற்றில் பெட்டியின் பங்கும் சுவாரசியமானவை; இவை அவருடைய இயல்புகளை நன்கு விளக்குகின்றன.
முதலாவதாக, அந்த அபூர்வமான நோயாளியின் உடலமைப்பு, உளவியல் பற்றி அவர் பல சோதனைகளைச் செய்து அவற்றைத் துல்லியமாகக் குறித்துக் கொண்டார்.
இரண்டாவதாக, அவர் மருத்துவத் திறமையோடு மனிதாபிமானத்தையும் காட்டினார். அந்தப் பெண்ணுக்கு நீதிமன்றத்திலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தது மட்டும்மல்லாமல் அவளுக்கு உதவியாக நிதி வசூலித்துக் கொடுத்தார்.
மூன்றாவதாக, இந்த சம்பவத்தை அவருக்கே உரிய திறமையோடு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதிகமான விளம்பரத்தை அடைந்தார்.
1651-ம் வருடத்தில் டாக்டர் பெட்டி தன்னுடைய பதவியை விட்டு திடீரென்று விலகினார். அயர்லாந்தில் இருந்த ஆங்கிலப் படைகளின் பிரதம தளகர்த்தரிடம் மருத்துவர் வேலையில் சேர்ந்தார். 1652 செப்டம்பர் மாதத்தில் முதன் முறையாக அயர்லாந்தில் காலடி வைத்தார். இந்த திடீர் மாற்றத்துக்குக் காரணம் என்ன? அவரைப் போன்று துணிகரமான வாழ்க்கையை நாடிய சுறுசுறுப்பான இளைஞருக்கு ஆக்ஸ்போர்டில் பேராசிரியர் பதவி மிகவும் அமைதியானதாக, எதிர்கால முன்னேற்றத்துக்கு உதவி செய்ய முடியாததாக இருந்திருக்க வேண்டும்.
அயர்லாந்தில் ஏற்பட்ட கலகம் தோல்வியடைந்து, பத்து வருட கால யுத்தம், பசி, பட்டினிக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் அந்த நாட்டை மறுபடியும் பிடித்திருந்தார்கள். பெட்டி இந்த சமயத்தில் அயர்லாந்துக்கு வந்தார். இங்கிலாந்துக்கு எதிராகக் கலகம் செய்த ஐரிஷ் கத்தோலிக்கர்களின் பண்ணைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த யுத்தத்துக்குப் பணம் கொடுத்த லண்டனைச் சேர்ந்த பணக்காரர்களுக்கும், வெற்றியடைந்த படையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் படைவீரர்களுக்கும் பணம் கொடுக்க பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்துவதென்று கிராம்வெல் முடிவு செய்திருந்தார்.
அவற்றைப் பிரித்துக் கொடுப்பதற்கு முன்பாக பல கோடி ஏக்கர்களையும் அளந்து வரைபடத்தில் குறிக்க வேண்டியிருந்தது. (இதை உடனடியாகச் செய்ய வேண்டியிருந்தது; ஏனென்றால் இராணுவத்தினர் அமைதி குலைந்து, வெகுமதிகள் எங்கே என்று கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.) 17-ம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இது பிரம்மாண்டமான கஷ்டங்கள் நிறைந்த வேலையாக இருந்தது. தேசப்படங்கள் இல்லை, கருவிகள் இல்லை; அனுபவமுள்ள நபர்களோ போக்குவரத்துச் சாதனங்களோ இல்லை. நிலங்களை அளக்கப் போனவர்களை விவசாயிகள் தாக்கிக் கொண்டிருந்தார்கள்…
இந்த நெருக்கடியான நிலைமையில், உடனடியாகப் பணம் சம்பாதிக்கவும் முன்னேற்றமடையவும் ஒரு அபூர்வமான வாய்ப்பு தோன்றியிருப்பதாகப் பெட்டி முடிவு செய்தார். அவர் இந்தப் பணியை மேற்கொண்டார். வரைபடம் தயாரிப்பதிலும் பூமியின் பரப்பைக் கணிப்பதிலும் அவர் பெற்றிருந்த அனுபவம் உதவி செய்தது. ஆனால் அதைத் தவிர, சுறுசுறுப்பும் வேகமும் சூழ்ச்சியும் அவசியமாக இருந்தன.
பெட்டி அரசாங்கத்தோடும் இராணுவத்தோடும் ”இராணுவ நிலங்களை அளந்து கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். நிலத்துக்கு விலையாகப் படைவீரர் களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் லண்டனிலிருந்து ஏராளமான கருவிகளை வரவழைத்தார்; ஆயிரம் நில அளவையாளர்களை அயர்லாந்துக்குக் கொண்டுவந்து பயிற்சி கொடுத்தார்; அயர்லாந்தின் நிலப்படங்களைத் தயாரித்தார். அயர்லாந்து நீதிமன்றங்களில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நிலத் தகராறுகளைப் பற்றி முடிவு செய்வதற்கு இந்தப் படங்களே உதவி செய்தன. இவ்வளவையும் அவர் ஒரு வருடத்துக்குச் சிறிது கூடுதலான காலத்தில் செய்து முடித்தார். அவர் எந்தக் காரியத்தையும் சிறப்பாக நிறைவேற்றக் கூடியவர்.
பெட்டிக்கு இப்பொழுது முப்பது வயதாகியிருந்தது. “இராணுவ நிலங்களை அளந்து கொடுப்பது”அவருக்குத் தங்கச் சுரங்கமாக மாறியிருந்தது. ஒரு அடக்கமான மருத்துவராக அயர்லாந்துக்கு வந்தவர் சில வருடங்களில் நாட்டிலேயே அதிகமான செல்வமும் செல்வாக்கும் கொண்டவராக மாறிவிட்டார்.
அவருடைய பிரமிக்கத்தக்க வளர்ச்சியில் சட்டரீதியானது எது? சட்டவிரோதமானது எது? பெட்டியின் வாழ்நாளில் இதைப் பற்றி மிகத் தீவிரமாக பலர் வாதிட்டார்கள். இது பற்றிய முடிவு ஓரளவுக்கு அவரவர்களுடைய கருத்து நிலையைப் பொறுத்ததாகும். அயர்லாந்தைக் கொள்ளையடித்தது சட்ட விரோதமானது. பெட்டி இந்த அடிப்படையில்தான் பாடுபட்டார்; ஆனால் அவர் தன்னைப் பொறுத்தவரை எழுத்தளவில் சட்டத்தின் ஒழுங்குமுறைகளை மீறவில்லை. அவர் கொள்ளையடிக்கவில்லை, கொள்ளையடித்த அரசாங்கத்திடமிருந்து அதிகமாகவே எடுத்துக்கொண்டார். அவர் திருடவில்லை; ஒவ்வொன்றையும் விலைக்குத்தான் வாங்கினார். அவர் ஆயுதங்களைப் பயன்படுத்தி நிலங்களிலிருந்து மக்களை விரட்டவில்லை; நீதிமன்ற உத்தரவைக் கொண்டுதான் அவர்களை வெளியேற்றினார். இதில் லஞ்சம், ஊழல் சிறிது கூட இல்லை என்று சொல்லிவிட முடியாது; ஆனால் இதுதானே அன்று இயற்கையாகக் கருதப்பட்டது.
பெட்டியின் பேராற்றல் மிக்க சுறுசுறுப்பு, தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும் என்ற துடிதுடிப்பு, வீர சாகசம்… இவை சீக்கிரமாகப் பெருஞ்செல்வத்தைத் திரட்ட வேண்டும் என்ற ஆசையில் வெளிப்பட்டன. நிலஅளவு செய்வதைப் பற்றிய ஒப்பந்தத்தை நிறைவேற்றியதில் அவருக்கு 9,000 பவுன் லாபம் கிடைத்ததாக அவரே சொல்லியிருக்கிறார். இராணுவத்திலிருந்த அதிகாரிகள், படைவீரர்கள் பலர் நிலம் ஒதுக்கப்படுகிற வரை காத்திருக்க விரும்பவில்லை; இன்னும் பலர் ஒதுக்கப்பட்ட நிலத்தில் உழைக்க விரும்பவில்லை. பெட்டி தமக்குக் கிடைத்த லாபப் பணத்தில் இவர்களுடைய நிலங்களை வாங்கினார். இதைத் தவிர, அரசாங்கமும் கொடுக்க வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை அவருக்கு நிலமாகக் கொடுத்தது.
மருத்துவர் பெட்டி எந்த முறைகளைக் கையாண்டு தம் சொத்துக்களைப் பெருக்கினார் என்பது நமக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் யாரும் நினைக்க முடியாத அளவுக்கு அவர் செல்வத்தைத் திரட்டினார்; அயர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் இருந்தன. பிற்காலத்தில் அவை இன்னும் அதிகரித்தன. அதே சமயத்தில் அவர் அயர்லாந்தின் ஆளுநர் பதவியை வகித்த ஹென்ரி கிராம்வெல்லின் நம்பிக்கையான உதவியாளராகவும் காரியதரிசியாகவும் இருந்தார். ஹென்ரி கிராம்வெல் இங்கிலாந்தை ஆட்சி செய்த ஓலிவெர் கிராம்வெல்லின் இளைய மகன் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பெட்டியின் விரோதிகளும் அவரை விரும்பாதவர்களும் பலவிதமான சூழ்ச்சிகளைச் செய்த போதிலும் இரண்டு அல்லது மூன்று வருட காலம் பெட்டிக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஆனால் 1658 -ம் வருடத்தில் ஓலிவெர் கிராம்வெல் மரணமடைந்தார். அவர் மகனுடைய நிலை மென்மேலும் ஆபத்தானதாயிற்று. இந்தச் சூழ்நிலையில் அவருக்கு விருப்பமில்லா விட்டாலும் கூட நிர்ப்பந்தத்தின் காரணமாக பெட்டியின் நடவடிக்கைகளைப் பற்றி ஆராய்வதற்கு ஒரு விசேஷ விசாரணைக் குழுவை நியமித்தார். அந்த விசாரணைக் குழுவில் பெட்டியின் நண்பர்கள் பலர் இடம் பெற்றிருந்தது உண்மையே.
பெட்டி தன்னுடைய கருத்துக்களுக்காகப் போராடும் பொழுது காட்டிய சுறுசுறுப்பு, நுணுக்கமான திறமை, மேதாவிலாசம் ஆகியவற்றில் சிறிது கூடக் குறையாமல் தன்னுடைய செல்வத்தையும் நற்பெயரையும் காப்பாற்றிக் கொள்வதற்குப் போராடினார். அவர் தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை விசாரணைக் குழுவுக்கு முன்பாக மட்டுமல்லாமல் லண்டனிலுள்ள நாடாளுமன்றத்திலும் (அவர் அதன் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்) நிரூபித்தார்.
அவர் இந்தப் போராட்டத்திலிருந்து முழு வெற்றியோடு வெளியே வரவில்லை என்றாலும், இழப்புகள் ஏதுமில்லாமல் வெளியே வந்தார். 1660-ம் வருடத்தில் மறுவருகைக்கு முந்திய சில மாதங்களின் போது நிலவிய அரசியல் – குழப்பம் பெட்டி விவகாரத்தை மிகவும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. அது அவருக்கும் மிகச் சாதகமாக இருந்தது.
மறுவருகைக்குச் சற்று முந்திய காலத்தில் ஹென்ரி கிராம்வெல்லும் அவருடைய அந்தரங்க உதவியாளரும் அரச பரம்பரையின் முக்கியமான ஆதரவாளர்களில் சிலருக்கு அரிய சேவைகளைச் செய்தார்கள். இரண்டாம் சார்ல்ஸ் இங்கிலாந்துக்குத் திரும்பிய பொழுது இந்த நபர்கள் அதிகாரத்தைப் பெற்றார்கள். ஹென்ரி கிராம்வெல் கெளரவமாகத் தனி வாழ்க்கையில் ஈடுபடுவதற்கும் பெட்டி அரண்மனை வட்டாரத்துக்குள் நுழைவதற்கும் அவர்கள் உதவி செய்தார்கள். 1661-ம் வருடத்தில் துணி நெசவாளியின் மகனான பெட்டிக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது; அவர் சர் வில்லியம் பெட்டி ஆனார். இது அவருடைய வெற்றிகளின் உச்சகட்டம். அவருக்கு அரசருடைய ஆதரவு இருந்தது; அவருடைய எதிரிகள் அவமானமடைந்து விட்டார்கள்; அவரிடம் பணமும், செல்வாக்கும் சுதந்திரமும் இருந்தது…
ஹென்ரி கிராம்வெல்
அரசர் சார்ல்ஸ் இரண்டு சந்தர்ப்பங்களில் அவரைப் பிரபுவாக்க விரும்பினார் என்று அரசாங்க ஆவணங்களிலிருந்தும் பெட்டியின் கடிதங்களிலிருந்தும் தெரிந்து கொள்கிறோம். பெட்டி இந்த சமயத்தில் தன்னுடைய துணிச்சலான பொருளாதாரத் திட்டங்களை அமுலாக்கக் கூடிய வகையில் தனக்கு மெய்யான அதிகாரமுள்ள அரசாங்கப் பதவி கொடுக்க வேண்டுமென்று அரசரையும் அரண்மனை வட்டாரங்களையும் நச்சரித்துக் கொண்டிருந்தார். எனவே தன்னுடைய வேண்டுகோளைப் புறக்கணிக்கும் நோக்கத்தில்தான் தன்னைப் பிரபுவாக்க உத்தேசிக்கிறார்கள் என்று கருதினார். அதுவும் நியாயமான எண்ணம்தான். அரசர் மனமுவந்து தரவிரும்பிய பிரபு பட்டத்தை பெட்டி ஏன் மறுத்தார் என்பதைப் பற்றி அவர் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த விளக்கம் பெட்டியின் ஆளுமையையும் அவருடைய இயல்பையும் நன்கு எடுத்துக்காட்டுகிறது. ”நான் குறைவான ஆனால் உண்மையான மதிப்புடைய செப்புக் காசாக இருப்பேனே தவிர அரைக் கிரவுன் நாணயமாக இருக்க மாட்டேன். என்ன தான் தங்கமுலாம் பூசினாலும் அது பித்தளைக் காசுதானே…”(2) அரண்மனையின் பல அடுக்கு ஏற்றவரிசையில் பெட்டி மிகவும் கீழான அந்தஸ்தையே வகித்தார்.
சர் வில்லியம் பெட்டி மரணமடைந்து ஒரு வருட காலத்துக்குப் பிறகு அவருடைய மூத்த மகன் சார்ல்சுக்கு ஷெல் பர்ன் பிரபு என்ற பட்டம் வழங்கப்பட்டது. எனினும் அது அயர்லாந்தின் பிரபுப் பட்டமாதலால் லண்டனிலிருக்கும் பிரபுக்கள் சபையில் உறுப்பினராக முடியாது. கடைசியில் பெட்டியின் கொள்ளுப் பேரனுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. அவர் லான் ஸ்டௌன் பிரபு என்ற பட்டத்தைப் பெற்று பிரபுக்கள் சபையின் உறுப்பினரானார்; முக்கியமான அரசியல்வாதியாகவும் விக் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
நிற்க. இருபதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆளும் வர்க்கத்தினருக்கு அரிய சேவைகளைச் செய்த பிரபலமான பொருளாதார நிபுணர்களுக்கு, அவர்களுடைய விஞ்ஞானப் பணிகளுக்காக பிரபுப் பட்டம் கொடுக்கப்படுகிறது. அவ்வாறு கெய்ன்சுக்கு பிரபுப் பட்டம் கொடுக்கப்பட்டது. ” அரசியல் பொருளாதாரத்தின் மேற்குடியினரில் ” அவர் முதல்வர்.
(தொடரும்…)
அடிக்குறிப்பு: (1) E. Strauss, Sir William Petty. Portrait of a Genius, London, 1954, p. 24. (2) Dictionary of National Biography, ed. by L. Stephen and S. Lee, Vol. 45, p. 116.
தெய்வநம்பிக்கை போலத்தான்
தேர்தல் நம்பிக்கையும்.
அதற்கு சக்தி உண்டா?
என்பதல்ல விசயம்,
சந்தேகப்படாமல்
அதை நம்ப வேண்டும்
என்பதே நிர்பந்தம்!
உன் தாத்தா நம்பினார்..
பாட்டி நம்பினார்
உன் அப்பா நம்பினார்
உன் அம்மா நம்பினார்..
ஆகவே நீயும் நம்பு
வாயில் அலகு குத்தி
வயிற்றில் ஊசி குத்தி
விரதமிருந்து
தீ மிதித்து..
எவ்வளவுக்கு எவ்வளவு
வருத்திக் கொள்கிறாயோ
அவ்வளவுக்கு அவ்வளவு
நல்லது நடக்கும்..
இந்த நம்பிக்கை
தெய்வத்திடமும் வேண்டும்
தேர்தலிடமும் வேண்டும்
அதுதான் முக்கியம்.
தெய்வத்தையும்
நீ கண்டுபிடிக்கவில்லை
தேர்தலையும்
நீ கண்டுபிடிக்கவில்லை
வந்தால் பார்த்துக்கொள்!
தந்தால் வாங்கிக்கொள்!
ஆஹா.. என்ன ஒரு தெய்வம்…
என்ன ஒரு தேர்தல்…
என்று உருகுவதைத் தவிர
உனக்கு வேறு உரிமையும் இல்லை.
தெய்வ குத்தமாகிவிடும்!
யாரும் வாக்கை விற்றுவிடாதிர்கள்!
தேசத்தையே விற்பதற்காகத்தான்
தேர்தலே நடக்கிறது!
தனித்தனியாக தேவையில்லை,
மொத்தமாக
சாமி பெயருக்கே அர்ச்சனை
ஓட்டுப் பெட்டியில் தட்சணை!
தலைக்குள் இருந்து
எதையும் தீர்மானிக்கும்
சிந்தனை அவசியத்திற்கு
இங்கு இடமில்லை,
தலையெழுத்தையே
தீர்மானிக்கும்
தேர்தல் தெய்வங்களைப் பாருங்கள்
அதோ.. வீதி உலா வருகின்றன,
மோடி குதிக்கிறார்..
ராகுல் நடக்கிறார்..
பன்னீர் சிரிக்கிறார்..
எடப்பாடி முறைக்கிறார்..
ஸ்டாலின் தெறிக்கிறார்..
அடடா.. எத்தனை பாவங்கள்
எத்தனை பரவசங்கள்..
இதைவிட வேறென்ன வேண்டும்?
தீபாராதனையைப் பார்த்து
கன்னத்தில் போட்டுக் கொள்ளுங்கள் !
தேர்தலைப் பார்த்து
சின்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள் !
இனி எந்தக் கவலையும்
இல்லை
ஏனெனில்
தேர்தலுக்கு பிறகு கவலைப்பட
ஆளே இருக்கப் போவதில்லை
தெய்வங்கள் விட்டுவைத்தால்தானே!
துரை. சண்முகம்
இதையும் பாருங்க:
நவம்பர் புரட்சி … உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளி | காணொளிகள் மீள்பதிவு
அண்ணாமலை பல்கலைக்கழக விடுதிக் கட்டணத்தை திடீரென உயர்த்தியது நிர்வாகம். இதனைத் தொடர்ந்து மாணவர்கள், கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மானவர்களின் கோரிக்கையை தொடர்ச்சியாக அலட்சியப்படுத்தியது நிர்வாகம்.
இதனைத் தொடர்ந்து, தங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காத நிர்வாகத்தை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினர் மாணவர்கள். இரவு பகல் பாராது போராட்டம் தொடர்ந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து சில பேராசிரியர்கள் பிஸ்கட், தண்ணீர் கேன் என வாங்கித் தந்து போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்தனர்.
முதலில் போராட்டத்தை அலட்சியப்படுத்திய நிர்வாகம் போராட்டத்தின் உறுதித் தன்மையை அறிந்து, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. அதற்கான உத்தரவை விடுதி அறிவிப்பு பலகையில் ஒட்டி விடுகிறோம் என்று துணைவேந்தர் முருகேசன் உறுதியளித்தார்.
1 of 6
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இதனை தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு சார்பாக இந்த போராட்டத்தின் வெற்றிச் செய்தி அறிவிக்கப்பட்டது. மேலும் “நமது இன்றைய கோரிக்கை நிறைவேறி உள்ளது. ஆனால் நமக்குள் கனன்று கொண்டிருக்கும் போராட்டத் தீ என்றும் நிலைத்திருக்க வேண்டும். அது மக்களின் பொது பிரச்சினை என வரும் போது பற்றிப் பரவவேண்டும்” என்று மாணவர்களிடம் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த வகையில் இப்போராட்டத்தின் இறுதியில் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து, மாணவர்களின் சார்பாக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110.
ஆப்பிரிக்க கொம்பு நாடுகள் கிழக்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள தீபகற்ப நாடுகளை உள்ளடக்கிய பகுதிகளாகும். சோமாலியா, எரித்திரியா, சிபூட்டி மற்றும் எத்தியோப்பா ஆகிய நாடுகள் ஆப்பிரிக்க கொம்பு நாடுகள் என்றழைக்கப்படுகின்றன.
பருவநிலை மாறுபாட்டால் பசுமையாக இருந்த நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி 80 சதவீதம் விவசாயத்தையே நம்பி வாழ்ந்த மக்கள் இன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் இலட்சக்கணக்கான மக்கள், கடந்த பல வருடங்களாக கடுமையான தொடர்வறட்சி நிலவிவருவதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் இப்போது இன்னொரு இடியை இந்த மக்களின் மேல் இறக்கியுள்ளது.
உயிர்காக்க உதவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் நாடுகளுக்கு அனுப்பி வருகிறது அமெரிக்கா. இதற்கென ஆண்டு பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். டிரம்ப் தலைமையிலான கார்ப்பரேட் அரசு, அப்படி ஒதுக்க இருக்கும் நிதியிலிருந்து 24% சதவீத நிதியை 2020-ம் ஆண்டு பட்ஜெட்டிலிருந்து இரத்து செய்வதற்கான திட்டம் ஒன்றை நாடாளுமன்ற ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.
காய்ந்து கிடக்கும் நதிப் படுகையில் தங்களது ஆட்டு மந்தைகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்செல்லும் எத்தியோப்பிய பெண்கள்
கொம்பு நாடுகள் வரவிருக்கும் சில மாதங்களில் முன்னெப்போதும் கண்டிராத பசிக்கொடுமை, பஞ்சத்தை எதிர் நோக்கியிருக்கிறதென்றும், ஏற்கெனவே விவசாயம் பொய்த்துப் போயிருந்த நிலையில், கூடுதலாக 30% இழப்புக்களும் ஏற்படும் என அண்மையில் வெளிவந்துள்ள வறட்சிகளை முன்னெச்சரிக்கும் அமைப்புக்களின் விவரங்கள் தெரிவிக்கின்றன.
இப்பகுதி மக்களின் வாழ்க்கை மேலும் மேலும் நலிவடைந்து, விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் குடும்பங்கள் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறி வருவதாகக் கூறுகிறார் கத்தோலிக்க நிவாரண சேவை மையத்தின் கிழக்கு ஆப்பிரிக்க பகுதிக்கான மண்டல இயக்குனர் மாட் டேவிஸ். இந்த நிலையில் இம்மக்கள் அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைத்தான் பெரிதும் நம்பியுள்ளனர்.
அமெரிக்க டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல இலட்சக்கணக்கான மக்களைப் புறக்கணித்து வாழ்வின் விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடும் என அஞ்சுவதாகக் கூறுகிறார் மாட் டேவிஸ். ஏற்கெனவே உலகத்தின் மிகவும் வறுமையான நாடுகளாக ஆப்பிரிக்க கொம்பு நாடுகள் அறியப்பட்டுள்ளன. தொடர் வறட்சி, நிலைமையை இன்னும் மோசமாக்கி வருகிறது.
1990-களிலிருந்தே பாரிய அளவிலான பருவ நிலை மாற்றங்களுக்குள்ளாகி வருகின்றன இந்நாடுகள். சுட்டெரிக்கும் வெயில் அல்லது தொடர் மழை வெள்ளம் அல்லது பஞ்சம் என்ற நிலைதான் மாறி மாறி வந்துகொண்டிருக்கிறது.
நான்கு குழந்தைகளின் தாயான பிர்ஹான், எத்தியோப்பிய நாட்டில், டைக்ரே மாகாணம் ஹாவ்சென் மாவட்டத்தில் வசித்து வருகிறார். பருவநிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவேயில்லை, எனவே விவசாயம் தொடர்ந்து பொய்த்து வருகிறது. ஒருவேளை பயிர்கள் வளரும் பட்சத்தில் வெள்ளம் வந்து அவற்றை அழித்துவிடுகிறது.
அமெரிக்க நிதியின் மூலம் உணவு கிடைக்கப்பெறும் 15 இலட்சம் மக்களில் பிர்ஹானும் ஒருவர். அமெரிக்க உதவிகள் கிடைக்காதபட்சத்தில் மற்ற நாடுகளில் தஞ்சம் புகுவதுதான் ஒரே வழி, ஆனால் எங்கு போவதென்றே தெரியவில்லை என்கிறார் பிர்ஹான்.
2018-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை கிடைத்திருக்க வேண்டிய பருவ மழையில், 55 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. இதன் தாக்கம் வரவிருக்கும் மாதங்களில் தெரியவரும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுக்கும் டிரம்ப் அரசு, உலகம் முழுவதும் தனது ஏகாதிபத்திய செல்வாக்கை நிலைநிறுத்தி, குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க ஏழை நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டியதோடன்றி, அந்நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கெடுத்து, இப்போது அவர்களை சவக்குழிக்கு அனுப்பவும் தயாராகி விட்டது.
நான்கு குழந்தைகளின் தாயான பிர்ஹான், நிவாரணப் பொருட்கள் வாங்கச் செல்வதற்கு தயாராக இருக்கிறார். அமெரிக்க நிதி உதவி பெறும் பல இலட்சக்கணக்கானோரில் பிர்ஹானும் ஒருவர்
என்னுடைய விவசாய நிலங்கள் வறட்சியால் பொய்த்துப் போனதால், நிவாரணம் கிடைக்கிறது. இங்குள்ள எல்லோருமே என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள்தான் – பிர்ஹான்
நிவாரணம் கிடைக்காத பட்சத்தில் குடிப்பெயர்ச்சி அல்லது மற்ற நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுவதைத் தவிர வேறுவழியில்லை. அப்படி இடம்மாறும் போது பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் – பிர்டுக்கான் ஜெடிஃபா – பசிக்கு உணவு என்ற சேவை நிறுவனத்தின் ஊழியர்
உலக சுகாதார நிறுவனத்தின்படி, தொடர் பஞ்சம் நிலவும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில், அதிக பாதிப்புக்குள்ளாவது பெண்கள் மற்றும் குழந்தைகள்தான். சுகாதாரமான குடிநீர் கிடைக்காதது மற்றும் உணவு பற்றாக்குறை நிலவுவதுதான் இதற்கு பிரதான காரணமாகிறது
வறட்சியினால் பாதிக்கப்பட்ட சுமார் 15 இலட்சம் எத்தியோப்பிய மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் வறட்சி நிவாரணம் வழங்கப்படுகிறது. நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்காகப் பதிவு செய்யும் எத்தியோப்பிய மக்கள்.
2016-ம் ஆண்டு முதல் அதிநவீன மின்னணு சாதனங்களின் உதவியோடு 99% உணவுப்பொருட்கள் சரியான நபர்களுக்கு வழங்கப்படுகின்றன.
உணவுப் பங்கீட்டு மையமொன்றில், அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய கோதுமை மூட்டைகளை அவிழ்க்கிறார் ஒரு பெண். தங்கள் உணவுத்தேவைகளை தங்கள் நிலங்களிலிருந்தே பெற்றுக்கொள்ளும் சக்திபடைத்த எத்தியோப்பிய மக்கள், பருவநிலையில் ஏற்படும் மாற்றத்தால், அந்நிய நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் – மாட் டேவிஸ்
நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு பட்டாணி, கோதுமை, சமையல் எண்ணெய் வழங்கப்படுகின்றன.
நிவாரணப் பொருட்களை, தன்னுடைய கழுதையின் முதுகில் சுமத்திச் செல்கிறார் ஒரு பெண். வறட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அழிவிலிருந்து காப்பது இந்த நிவாரணப் பொருட்கள். அமெரிக்கா இதற்கான நிதியை இரத்து செய்தால் நிலைமை என்னவாகுமோ?
அடிப்படை உணவுத்தேவைகள் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், பொருளாதாரத் தேவைகள் வெகுவாக நிவர்த்தி செய்யப்பட்டு, தன்னுடைய குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராகிறார் பிர்ஹான்
என்னுடைய மூத்த மகளுக்கு சவுதியில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பது விருப்பம். ஆனால் நான் அதை விரும்பவில்லை. ஒருவேளை இந்த முறையும் விவசாயம் பொய்த்து விட்டால், குடிபெயருவதைத் தவிர வேறு வழியேயில்லை – ஃபெபெடு மெஹாரி
ரேஷனில் கிடைக்கப்பட்ட கோதுமை மூட்டைகளை ஒட்டகத்தின் முதுகிலேற்றி, தனது கிராம மக்களுக்குப் பகிர்ந்தளிக்கச் சென்று கொண்டிருக்கும் இளைஞர். கடந்த வருடம் பெய்திருக்க வேண்டிய மழையில் 55% சதவீதம் குறைந்து போனது இவர்களின் வாழ்க்கையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது
எத்தியோப்பாவின் பெரும்பாலான மக்கள், பஞ்சகாலங்களில் தங்களின் கால்நடைகளையே பெருமளவில் நம்பியிருக்கின்றனர். தொடர் வறட்சியால், ஒன்று இவைகள் அழிகின்றன அல்லது இவர்களுக்கு உணவாகின்றன
கட்டுரையாளர் : Will Baxter தமிழாக்கம்: வரதன் நன்றி: aljazeera
“கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் ! ” திருச்சி மாநாட்டில் தோழர் கோவன் பாடிய ”உலகத்திலே பெரிய சிலை பட்டேலு…” பாடல் முறையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, காணொளியாக தற்போது வெளியிடப்படுகிறது.
“கோழிய வெட்டித் தின்னா அது சிக்கன் பார்ட்டி..
ஆட்ட வெட்டித் தின்னா அது மட்டன் பார்ட்டி..
கேக்க வெட்டித் தின்னா அது பர்த்டே பார்ட்டி..
நாட்டையே வெட்டித் தின்னா அது பாரதிய ஜனதா பார்ட்டி..
உலகத்திலே பெரிய சிலை பட்டேலு…
அதுக்குள்ளே போயி ஒழியப் பாக்குது ரஃபேலு…
இது பக்கா லோக்கலு… வரப் போகுது தேர்தலு… (முழுப் பாடலையும் காண)
மோடியை முன்னிறுத்தி பாஜக வெளியிட்ட 2014-ம் ஆண்டின் ’பளபள’ தேர்தல் அறிக்கை, வெற்று காகிதமாகிவிட்ட நிலையில், ‘ராமர் கோயில் கட்டுவோம்’ என்ற முழக்கத்துடன் 2019 மக்களவை தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது பாஜக. இதுகுறித்த கருத்துக்களை இங்கே தொகுத்திருக்கிறோம். பாஜக தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே, டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் #sanghifesto என்ற பெயரில் பாஜக கும்பலின் போட்டோஷாப் பாணியில் கிண்டல் பதிவுகள் வைரலாக பரவின.
சந்திரமோகன்
பாஜகவின் தேர்தல் அறிக்கை படிக்கவில்லை எனக் கவலைப்படுபவர்கள் கவனத்திற்கு !கவலைப்பட வேண்டாம்! நான் முழுக்க படித்துவிட்டேன் !
உங்கள் நேரத்தை வீண் செய்ய வேண்டாம்!
முதல் படத்தில் ” சங்கல்ப் பத்ரா ” என்ற பெயரில் இருப்பது தேர்தல் அறிக்கை!
இரண்டாம் படத்தில் இருப்பது தான், அறிக்கையின் மொத்த சரக்கும்!
மோடியின் லாலிபாப் குச்சி மிட்டாய் தேர்தல் அறிக்கை!
வினோத். எஸ்
பாஜக தேர்தல் அறிக்கை ஒரு பார்வை…
2014 :
எல்லோருக்கும் கழிப்பறை.
எல்லோருக்கும் வீடு.
எல்லோருக்கும் மின்சாரம்.
எல்லோருக்கும் கேஸ் இணைப்பு.
ராமர் கோயில் கட்டுவோம்.
2019
எல்லோருக்கும் கழிப்பறை.
எல்லோருக்கும் வீடு.
எல்லோருக்கும் மின்சாரம்.
எல்லோருக்கும் கேஸ் இணைப்பு.
ராமர் கோயில் கட்டுவோம்.
2024
எல்லோருக்கும் கழிப்பறை.
எல்லோருக்கும் வீடு.
எல்லோருக்கும் மின்சாரம்.
எல்லோருக்கும் கேஸ் இணைப்பு.
ராமர் கோயில் கட்டுவோம்.
2224
எல்லோருக்கும் கழிப்பறை.
எல்லோருக்கும் வீடு.
எல்லோருக்கும் மின்சாரம்.
எல்லோருக்கும் கேஸ் இணைப்பு.
ராமர் கோயில் கட்டிட்டே இருக்கிறோம்.
நரேன் ராஜகோபாலன்
பாஜக தேர்தல் அறிக்கையில் மூன்று அம்சங்கள் கவலை அளிக்கின்றன.
1 ) ஆர்ட்டிக்கிள் 370 கஷ்மீரிலிருந்து நீக்கப்படும் என்றொரு வாக்குறுதி. இதை கஷ்மீரின் இரண்டு முக்கிய கட்சிகளும் எதிர்க்கின்றன. மெஹபூபா முப்தி ஒரு படி மேலே போய், ஆர்டிக்கிள் 370 நீக்கப்பட்டால், கஷ்மீர் இந்திய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் என்று சொல்லி இருக்கிறார். இது ஒரு தெளிவான கேம் ப்ளான். படித்த வடக்கத்திய முட்டாள்களே, கஷ்மீருக்கு மட்டுமென்ன சிறப்பு சலுகை என்று திட்டிக் கொண்டிருப்பதை revalidate செய்யும் திட்டம். இது ஒரு complex subject. சுருக்கமாய் இந்து பெரும்பான்மை இருக்கும் நாட்டில், மாநிலங்களில், இஸ்லாமிய பெரும்பான்மை இருக்கும் ஒரே மாநிலம் ஜம்மு & கஷ்மீர் தான். அதனால் தான் அரசியல் அமைப்பு சட்டம் அந்த சிறப்பு சலுகையினை வழங்கி இருக்கிறது. அந்த அடிப்படைகள் ஒரு நாளும் இந்துத்துவ அடிப்படைவாத கும்பலுக்கு மண்டையில் ஏறாததால் தான் இந்த அறிவிப்பு. ஆக பெரும்பான்மையான இஸ்லாமிய வாக்கு இப்போதே கஷ்மீரில் காலி.
2 ) உள்நாட்டு கட்டமைப்புக்கு 100 இலட்சம் கோடிகள் செலவிடப்படும் என்று சொல்லப் பட்டு இருக்கிறது. ஏற்கனவே IL&FS சிக்கலில் முக்கால்வாசி திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. PPP (Public Private Partnership) மாடல் குழப்பத்தில் இருக்கிறது. இதில் எங்கிருந்து 100 இலட்சம் கோடிகள் வரும் என்று தெளிவான பார்வைகள் இல்லை. பாஜக அரசின் ஒரு சில உருப்படியான அமைச்சகத்தில் முக்கியமானது நிதின் கட்கரி கையாண்ட உள்கட்டமைப்பு அமைச்சகம். ஒழுங்காய் வேலை பார்த்து இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். ஆனால் ஆண்டு கணக்கில் 20,000 கோடிகளை கடந்த ஐந்தாண்டில் தாண்டவில்லை. 20,000 கோடியிலிருந்து அடுத்த ஐந்தாண்டுகளில் 100 இலட்சம் கோடிகள் செலவு என்பது exponential jump. காங்கிரசின் NYAYக்கான செலவு வருடத்துக்கு 3.6 இலட்சம் கோடிகள். இதுவே எங்கிருந்து வருமென்பது தான் சங்கீ பொருளாதார நிபுணர்களின் கேள்வி. 3.6 இலட்சமே வராது என்றால், 100 இலட்சம் கோடிகள் எங்கிருந்து வரும்?
3 ) 2022-ல் விவசாய வருவாய் இரடிப்பாகும். 2014-லிலும் இந்த வாக்குறுதி இருந்தது. ஐந்தாண்டுகளில் விவசாயத்திற்கு என்ன செய்தார்கள் என்பதை பொறுத்து தான் 2019-24க்குள் இது நிறைவேற்றப்படுமா என்று சொல்ல முடியும். ஐந்தாண்டு விவசாய ட்ராக் ரெக்கார்டு பாஜக-விற்கு படு கேவலமாக இருக்கிறது. மேற்கில் மூன்று மாநில தோல்விக்கான மிக முக்கியமான காரணம் – விவசாயத்தின் சீர்குலைவுதான். அடிப்படை விலை உச்சபட்ச உயர்வு 150% தரப்படும் என்று சொன்னதே கேள்விக்குறியாகி, விவசாயிகளை கட்டாயமாக காப்பீடு எடுக்கச் சொல்லி, அதிலும் தனியார், அரசு காப்பீடு நிறுவனங்கள் சம்பாதித்ததுதான் மோடியின் ட்ராக் ரெக்கார்டு. ஐந்தாண்டுகளில் இந்தியாவில் விவசாயம் சீரழிந்து இருக்கிறது. ஒருவேளை, சீரழிந்த (அ) சீரழிக்கப்பட்டு கீழே விழுந்திருக்கும் விவசாய வருமானத்தினை தான் மோடி 2022க்குள் இரடிப்பாக்குவேன் என்று சொல்லி இருப்பார் என்றால், அது சாத்தியம் தான். 100ரூ சம்பாதித்து கொண்டு இருந்த ஆளை, 25 ரூபாய்க்கு தள்ளி விட்டு, மூன்றாண்டுகளில் 50ரூ வருமென்று சொல்வதில் சிக்கல் என்ன இருக்கிறது?
மற்றபடி ராமர் கோவில் கட்டுவதில் ஆரம்பித்து, ஒரே மக்கள், ஒரே தேசம் வரை பலவும் ‘ரீபிரிண்ட்’ மட்டுமே. 2014-ல் மோடி ஒரு challenger. 2019-ல் மோடி ஒரு incumbent. இரண்டையும் மக்கள் பார்க்கும் பார்வைக்கு ஏகப்பட்ட வித்தியாசமிருக்கிறது. மக்களுக்கு எது நடந்தது, எது நடக்குமென்று தெரியும். மக்கள் முட்டாள்கள் அல்ல.
பாரதி செல்வா
ராமருக்கு சிலை வைக்கப்படும்..🤔🙄
சதீஸ் செல்லதுரை
ராமர் சிலைக்கு பின் வயிறு வலிக்க சிரிக்க வைத்த பாஜகவின் வாக்குறுதி பரிதாபங்களில் டாப்பு இது.
ரவி நாயர்
பாஜக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். உள்ளே இருப்பது இதுதான்…நமோ, நமோ, நமோ, நமோ, நமோ, நமோ……
கோயிலுக்கும் காஷ்மீரிருக்கும் திரும்பியிருக்கிறது பாஜக, உள் எதிரி, வெளி எதிரியா? பாஜகவின் தேர்தல் அறிக்கை அக்கட்சி பயத்துடன் தேர்தலை சந்திக்க இருப்பதைக் காட்டுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டத்தைக்கூட, அது மீண்டும் நீட்டிக்கவில்லை? பாஜகவை தேர்ந்தெடுத்தால், நீங்கள் கவலை, பயம், இரக்கமற்ற தேசியவாதத்தை தேர்ந்தெடுப்பதாகவே பொருள்.
Back to Mandir and Kashmir? Internal enemy, external enemy? Manifesto shows BJP’s confusion &nervousness abt going into the elections. Don’t they have a single scheme in 5 yrs they wanted to carry forward? If you choose BJP,you are choosing anxiety,fear and resentful nationalism.
♦ அரசியல் படுகொலைகள்.
♦ இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளை களையெடுத்தல்.
♦ ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்.
♦ ஏக பிரதிநிதி உரிமை கோரல்.
♦ தேசியவாத கொள்கை உடன்பாடு கொண்ட பிற இயக்கங்கள் மீதான தடை.
♦ ஏக பிரதிநிதியை ஏற்றுக் கொள்ளாத மாற்று இயக்கத்தவர் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கை.
இவை இருபதுகளில், முப்பதுகளில் ஜெர்மன் வரலாற்றில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்கள் அல்லது சம்பவங்கள். ஜெர்மனியில் அன்றைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் இன்றைய உலக நடப்புகளை நினைவுபடுத்துகின்றன. இந்தத் தகவல்கள் வெளியுலகில் அதிகமாக அறியப்படவில்லை.
முதலாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மனி தனது ஜென்ம விரோதியான பிரான்சிடம் தோல்வியடைந்தது. போரில் வென்ற பிரான்ஸ், நட்பு நாடுகளுடன் சேர்ந்து சமாதான ஒப்பந்தம் செய்வதற்கு ஜெர்மனியை அழைத்தது. பிரான்சில் வெர்சேய் எனும் இடத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு சென்ற ஜெர்மன் அரசுப் பிரதிநிதிகள், புகையிரதம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் போகும் வழியில் இருந்த பிரெஞ்சுக் கிராமங்களில் ஜெர்மன் படைகள் நடத்திய பேரழிவுகளை பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
சமாதான ஒப்பந்தம் கூட வெற்றி பெற்ற நாடுகளின் உத்தரவுகளுக்கு அடிபணிவதாகத்தான் எழுதப்பட்டிருந்தது. உதாரணத்திற்கு சில: ஜெர்மனி பில்லியன் டாலர் கணக்கான பணத்தை வெற்றி பெற்ற நாடுகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும். ஜெர்மனி தனக்கென இராணுவம், விமானப்படை எதுவும் வைத்திருக்க முடியாது. அல்சாஸ், லொரேன் ஆகிய மாகாணங்களை பிரான்ஸிற்கு கொடுக்க வேண்டும். அதைவிட ஜெர்மனிக்கு பெருமளவு ஏற்றுமதி வருமானம் ஈட்டித்தந்த நிலக்கரி சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் பிரெஞ்சுப் படைகள் நிறுத்தப்படும். ஜெர்மனிக்கு சொந்தமான ஆப்பிரிக்க காலனிகளை பிரிட்டனுக்கும், பிரான்சிற்கும் விட்டுக் கொடுக்க வேண்டும்.
மேற்படி சமாதான ஒப்பந்தம் அந்நியருக்கு தேசத்தை அடமானம் வைக்கும்செயல் என்பது தெரிந்த போதிலும், ஜெர்மன் அரசுக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒப்பந்தம் கையெழுத்திட மறுத்தால் மீண்டும் போர் மூண்டு ஜெர்மனி முழுவதும் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் இருந்தது. அதற்கு மாறாக, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால், தேசத்தை மறுசீரமைப்பதற்கு சிறிது கால அவகாசம் கிடைக்கும். இதனால் ஜெர்மன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டது.
தற்போது ஜெர்மன் அரசுக்கு புதிய நெருக்கடிகள் உருவாகின. அதுவரை காலமும் அரசுக்கு விசுவாசமாக போரிட்டு வந்த தேசியவாத இராணுவ அதிகாரிகள் இதை மிகப் பெரிய துரோகமாகப் பார்த்தனர். “அந்நியருக்கு நாட்டை அடகு வைத்த ஜெர்மன் இனத் துரோகிகள்” மீதான வெறுப்புணர்வு அன்று சமூகத்தின் பல மட்டங்களிலும் பரவி இருந்தது. இத்தகைய பின்னணியில், தீவிர வலதுசாரி தேசியவாதிகளின் பயங்கரவாத அமைப்புகள் தோன்றி இருந்தன. முதல் கட்டமாக, “இனத் துரோகிகளை களையெடுப்பது” அந்த தீவிரவாத இயக்கங்களின் நோக்கமாக இருந்தது.
நாஜிகளின் SA இயக்கம் மட்டுமல்லாது, Stahlhelm, Jungdo என்று பல தீவிர தேசியவாத இயக்கங்கள் இரகசியமாக இயங்கி வந்தன. அவற்றின் உறுப்பினர்கள் ஆயுதங்களை கையாளும் பயிற்சி பெற்றிருந்தனர். பல இடங்களில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பவாரியா மாநிலத்தின் பொலிஸ் மா அதிபர், வலதுசாரி தீவிரவாதக் குழுக்களை ஆதரித்த படியால், அங்கிருந்துதான் பல அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன.
Freikorps எனும் கூலிப்படை.
முதலாம் உலகப்போரின் முடிவில் ரஷ்யா மாதிரி, ஜெர்மனியிலும் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெடித்தது. ஆனால், ஜெர்மன் அரசு Freikorps எனும் கூலிப்படையை அனுப்பி புரட்சியை நசுக்கியது. அதன் பிறகு, கம்யூனிஸ்டுகள் நீண்டதொரு ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தபடியால் அரசுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கவில்லை. அதற்கு பதிலாக, தீவிர வலதுசாரி – தேசியவாதிகள் மத்தியில் இருந்து அரசுக்கு அச்சுறுத்தல் வந்தது.
ஒரு காலத்தில் அரசின் கூலிப்படையாக செயற்பட்ட Freikorps படையினர், திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று தோற்றுப் போயினர். அதன் விளைவாக, Freikorps தடைசெய்யப்பட்ட படியால், OC என்றொரு இரகசிய இயக்கம் உருவாக்கப்பட்டது. சுருக்கமாக OC என்று அழைக்கப்பட்ட இயக்கத்தின் பெயர் “அமைப்புக் குழு”. தேசப்பற்று, வெர்சேய் ஒப்பந்த எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்பு, இனவுணர்வு போன்றவற்றை கொள்கைகளாக கொண்டிருந்த OC இயக்கம், அரசியல் படுகொலைகள் மூலம் தனது இலக்கை அடைய எண்ணியது.
அவர்கள் ஜெர்மன் இனத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், துரோகிகளை களையெடுப்பது அவசியம் என்று கருதினார்கள். பண்டைய ஜெர்மன் சொல்லான பெமே (Feme) என்ற சொல்லின் மூலம் தமது செயல்களை நியாயப்படுத்தினார்கள். பண்டைய ஜெர்மன் சமுதாயத்தில் காணப்பட்ட பெமே நீதிமன்றம், நம்மூர் பஞ்சாயத்து போன்றது. அங்கு வரும் வழக்குகளுக்கு உடனுக்குடன் தீர்ப்பு வழங்கப்படும். அவை சிலநேரம் கொடூரமான தண்டனைகளாகவும் இருக்கலாம். அது மாதிரி, “துரோகிகளுக்கு மரணதண்டனை” என்பதுதான் OC அமைப்பினரின் கோஷமாக இருந்தது.
1921 – 1922 ஆகிய இரண்டு வருடங்களுக்குள், ஜெர்மனியில் 350-க்கும் மேற்பட்ட “எதிரிகள்” அல்லது “துரோகிகள்” OC இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள், காட்டிக் கொடுத்தவர்கள், இயக்கத்தை விட்டு ஓடியவர்கள் என்று பலர் OC வன்முறைக்கு பலியானார்கள். அவர்களில் சிலர் மிக முக்கியமான அரசியல் தலைவர்கள். சில வருடங்களுக்கு முன்னர் நடந்த கம்யூனிசப் புரட்சியில் பங்கெடுத்த USPD தலைவர்கள் இருவர் தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். USPD என்பது, அன்று ஆளும் கட்சியாக இருந்த சமூக ஜனநாயகவாத SPD இலிருந்து பிரிந்த மார்க்சியவாத குழுவினர் ஆவர்.
மாதியாஸ் ஏர்ஸ்பேர்கர்.
அதைவிட சில வலதுசாரி அரசியல்வாதிகளும், வலதுசாரி பயங்கரவாதத்திற்கு பலியானார்கள்! அவர்களில் ஒருவர் மாதியாஸ் ஏர்ஸ்பேர்கர் (Mathias Erzberger). கத்தோலிக்க மதப்பற்றாளர். (வலதுசாரி) மத்திய கட்சியின் தலைவர். அவர் போருக்கு எதிராக குரல் கொடுத்த படியாலும், சமாதான தீர்வுத் திட்டத்தை ஆதரித்தபடியாலும், தீவிர ஜெர்மன் தேசியவாதிகளால் ஒரு துரோகியாகக் கருதப்பட்டார். அவர் தனது நண்பருடன், மலைப் பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம் இரண்டு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த இரண்டு கொலையாளிகளும் வேறு பெயரில் போலி பாஸ்போர்ட் செய்து ஹங்கேரிக்கு சென்று பதுங்கி இருந்தனர்.
இருப்பினும், OC வலதுசாரி பயங்கரவாதத்திற்கு பலியான இன்னொரு வலதுசாரி அரசியல்வாதியின் படுகொலை அதுவரை காலமும் நடந்து கொண்டிருந்த அரசியல் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பிரபல தொழிலதிபராகவும் அமைச்சராகவும் இருந்த வால்டர் ராதேனவ் (Walther Rathenau) வெர்சேய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமைக்காக தீர்த்துக் கட்டப்பட்ட “துரோகிகளில்” முக்கியமானவர். அத்துடன் அவர் ஒரு பணக்கார யூதராகவும் இருந்த படியால் மேலதிக வெறுப்புக்கு ஆளாகி இருந்தார்.
ராதேனவ் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக பெரும் பணம் சம்பாதித்து இருந்தாலும், அவரது அரசியல் இடதுசாரித்தன்மை கொண்டதாக இருந்தது. தானும் ஒரு முதலாளி என்ற மமதை இன்றி, நலன்புரி அரசை உருவாக்கி அடித்தட்டு மக்களையும் முன்னேற்றும் வகையில் செல்வத்தை பங்கிட விரும்பியவர். இதற்காக பணக்காரர்கள் மீது அதிகளவு வரி விதிக்கும் திட்டத்தையும் முன்மொழிந்தார். ஐரோப்பிய சந்தைகளை ஒன்று சேர்க்கும் பொருளாதார ஒன்றியம் பற்றிய சிந்தனை கூட அவரிடம் இருந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியது. அத்தகையதொரு அரசியல்வாதி அன்றைய ஜெர்மன் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததில் வியப்பில்லை.
ஒரு நாள், பெர்லின் நகரில் சன நடமாட்டம் அதிகமாக உள்ள தெருவொன்றில், காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் ராதேனவ் சுட்டுக் கொல்லப்பட்டார். பட்டப் பகலில் இன்னொரு காரில் இருந்தபடியே பிஸ்டலால் சுட்டுக் கொன்ற கொலையாளிகள், சம்பவத்தை கண்டு அங்கு கூடிய மக்கள் வெள்ளத்திற்குள் கலந்து தப்பிச் சென்று விட்டனர். ராதேனவ் கொலை செய்யப்பட செய்தி நாடு முழுவதும் எதிரொலித்தது. பெர்லின் நகர மத்தியில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜெர்மன் மக்களின் எதிர்ப்புணர்வு தங்களுக்கு எதிராக திரும்பி இருப்பதை கண்டுகொண்ட கொலையாளிகள் வெளிநாட்டுக்குத் தப்பியோட முயற்சித்தார்கள். அது நிறைவேறாத படியால், தீவிர வலதுசாரி நண்பர்களின் வீடுகளில் அடைக்கலம் கோரினார்கள். ஆனால், யாருமே அவர்களுக்கு உதவவில்லை. அவர்களை கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு இலட்சக்கணக்கான பணம் சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதனால் ஊருக்குள் செல்லப் பயந்து காடுகளுக்குள் சுற்றித் திரிந்தார்கள்.
பெமே நீதிமன்றம்.
இறுதியில் ராதேனவ் கொலையாளிகள் ஹல்லே நகருக்கு அருகில் இருந்த பாழடைந்த கோட்டை ஒன்றுக்குள் ஒளிந்திருந்தனர். அந்த இடத்தில் வெளிச்சத்தை கண்ட ஊர் மக்கள் போலீசிற்கு அறிவித்து விட்டனர். அதையடுத்து பெரும் போலீஸ் படை வந்து கோட்டையை முற்றுகையிட்டது. தாம் இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொண்ட கொலையாளிகள் துப்பாக்கியுடன் வெளியே வந்து, அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் அரசியல் கோஷங்களை எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து போலீசாருடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். ஒருவன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானான். மற்றவன் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான்.
இந்தச் சம்பவம் நடந்து பதினொரு வருடங்களுக்குப் பிறகு, ஜெர்மனியில் நாஜிகள் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தனர். நாஜிகள் அந்த இரண்டு கொலையாளிகளையும் “தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள்” என்று கௌரவித்தனர். அவர்கள் கொல்லப்பட்ட கோட்டையில், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட நினைவுகூரும் வைபவம் நடைபெற்றது. ஹிட்லரின் அரசில் அமைச்சராக இருந்த ஹிம்லர், “மாவீரர்களின்” சமாதியில் மலர் வளையம் வைத்து விட்டு உரையாற்றினார். “தாயகத்திற்காக தம்முயிர் ஈந்த மாவீரர்களின் தியாகம் வீண்போகவில்லை என்றும், தற்போதைய ஜெர்மன் தேசிய இராணுவத்தினர் அவர்களது ஆன்மாவை கொண்டிருப்பதாகவும்” புகழாரம் சூட்டினார்.
முப்பதுகளின் தொடக்கத்தில், அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவுகள் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஜெர்மனியையும் பாதித்தது. முதலாம் உலகப்போர் நடந்த காலத்தில் கூட எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாத ஜெர்மன் பணக்கார வர்க்கத்தினர், நிதி நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பலரது செல்வம் ஒரே நாளில் மறைந்து ஏழைகள் ஆனார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஜெர்மனியில் பல்வேறு ஆயுதபாணி இயக்கங்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காக போராடின.
ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகளின் இடதுசாரி சிவப்பு முன்னணிப் படையினர் மீண்டும் தெருக்களில் நடமாடினார்கள். ஹிட்லரின் கீழ் இயங்கிய SA, மற்றும் பல வலதுசாரி ஆயுதக் குழுக்கள், ஒரு பக்கம் சிவப்பு முன்னணிக்கு எதிராகவும், மறுபக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் போராடிக் கொண்டிருந்தனர். இந்தத் தருணத்தில் தேர்தலில் பல இலட்சம் வாக்குகளை பெற்ற நாஜிக் கட்சியை அரசமைக்க வருமாறு ஜெர்மன் ஜனாதிபதி அழைத்தார்.
ஹிட்லர் தேர்தல் ஜனநாயகப் பாதையில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் பிற கட்சிகள் அனைத்தையும் தடை செய்தார். அதே நேரம் நாஜிக் கட்சிக்குள்ளேயும் முரண்பாடுகள் நிலவின. நீண்ட காலமாக தனித்து இயங்கி வந்த பல்வேறு வலதுசாரி தீவிரவாத அமைப்புகள் நாஜிக் கட்சியுடன் பொது உடன்பாட்டைக் கொண்டிருந்தாலும் ஒரே கட்சியாக கலந்து விடவில்லை. குறிப்பாக, பழைய Freikorps உறுப்பினர்கள் ஹிட்லரின் தலைமையை ஏற்க மறுத்தனர்.
அதுவரை காலமும் ஜெர்மனியில் இருந்து வந்த ஜனநாயக அமைப்புகள், தேர்தல்கள் எல்லாவற்றையும் நாஜிகள் தடைசெய்து விட்டனர். ஜனாதிபதி, பிரதமர் முறைமை ஒழிக்கப் பட்டு, ஹிட்லர் தேசியத் தலைவர் (Führer) ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டார். நாஜிகள் மட்டுமே ஜெர்மன் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும், ஹிட்லர் மட்டுமே ஜெர்மனியரின் தேசியத் தலைவர் என்பதையும், ஏனைய தேசியவாத அமைப்புகள் ஏற்றுக் கொள்ள மறுத்தன.
“நீளமான கத்திகளின் இரவு” (Nacht der langen Messer, 30 June – 2 July 1934) என்று அழைக்கப்படும் நாட்களில் ஹிட்லரின் தலைமைத்துவத்திற்கு சவாலாக விளங்கிய மாற்று இயக்கத்தினர் களையெடுக்கப்பட்டனர். அவர்கள் சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டது. மாற்று இயக்கத் தலைவர்கள், முக்கிய உறுப்பினர்கள், ஹிட்லரின் கையாட்களால் வீடு வீடாக தேடிச் சென்று தீர்த்துக் கட்டப்பட்டனர். குறைந்தது நூறு பேராவது அன்று நடந்த களையெடுப்பில் கொல்லப் பட்டனர்.
ஜெர்மன் தேசியவாதம் ஹிட்லருடன் தொடங்கவில்லை. ஹிட்லர் யாரென்று தெரியாத காலத்திலேயே ஜெர்மனியில் பல்வேறு தேசியவாதக் குழுக்கள் இயங்கி வந்தன. தேசாபிமானம், இனவுணர்வு போன்ற கொள்கை அடிப்படையில் அரசியல் செயற்பாடுகளை கொண்டிருந்தன. தேர்தல் அரசியலில் மட்டுமல்லாது, ஆயுத வன்முறைகளிலும் ஈடுபட்டன. அரசியல் படுகொலைகளை புரிந்தன.
நாஜிகள் அல்லாத ஏனைய வலதுசாரி – தேசியவாத அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களின் ஆயுதப் போராட்டம் தனிநபர் பயங்கரவாதம் என்ற அளவில்தான் இருந்தது. அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. ஜெர்மன் தேசியத்தின் பேரில் போராடிய பல நூறு இளைஞர்களின் தியாகங்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் ஹிட்லர் மட்டும்தான். SA, OC போன்ற வலதுசாரி தீவிரவாதக் குழுக்களின் போராட்டங்களின் விளைவாகத்தான் ஹிட்லர் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்.
அந்தக் காலகட்டத்தில் ஹிட்லரை தமது மீட்பராகக் கண்ட பல்வேறு வலதுசாரி தீவிரவாதக் குழுக்கள், ஹிட்லரின் நாஜிக் கட்சியுடன் சேர்ந்து இயங்குவதற்கு ஆர்வம் காட்டின. அவற்றிற்கு இடையில் ஐக்கிய முன்னணி கூட ஏற்பட்டிருந்தது. ஆனால், ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனைத்து ஜெர்மன் மக்களுக்கும் தானே தேசியத் தலைவர், தனது நாஜி கட்சியே ஏக பிரதிநிதிகள் என்றும் அறிவித்துக் கொண்டார். அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களை துரோகிகளாக்கி தீர்த்துக் கட்டினார். காலப்போக்கில் அதையெல்லாம் மறந்து விட்ட ஜெர்மன் மக்கள், ஹிட்லரை தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டனர்.
இது ஒரு ஜெர்மன் கதை.
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி கொடூரத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்குள், கோவை துடியலூரில் ஒரு சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கிறாள். என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது தமிழகம்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடரும் இத்தகைய பாலியல் வன்முறைக்கு யார் காரணம் ? கடந்த 2018-ம் ஆண்டின் இறுதியில் சில மாதங்களாக நடந்த மீ டூ இயக்கத்தை எடுத்துக் கொள்வோம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று மதிக்கப்படும் ஊடகங்களில்தான், மிகவும் அதிகமான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். அவர்கள்தான் முதலில் இவ்விசயத்தை துணிந்து பேசினார்கள். அதைத் தொடர்ந்து சினிமா உள்ளிட்டு பல்வேறு துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை அம்பலப்படுத்தினர்.
ஆனால், இத்தகைய படிப்பறிவும், சமூகத் தகுதியும் இல்லாத லட்சக்கணக்கான பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் எங்கேயும் பதியப்படுவதில்லை. ஏனெனில், நடைமுறையில், ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்புமே குற்றவாளிகளைப் பாதுகாத்து நிற்கிறது. பொள்ளாச்சி கொடூரத்தை எடுத்துக் கொண்டால், எஸ்.பி முதல் ஆய்வாளர் வரை அனைவரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக களமாடுகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக நடந்த இந்தப் பாலியல் கொடூரத்தில், அதிமுக தலைவர்கள் முதல் அதிகார வர்க்கம் வரை அனைவருக்கும் பங்கிருக்கிறது.
இந்தக் குற்றக்கும்பலைக் காப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டும் விதமாக புகாரளித்த பெண்ணின் அடையாளத்தை போலீசே வெளியிட்டது. அதன் பின் தமிழக உள்துறை செயலர் அப்பெண்ணின் அடையாளத்தை அரசாணையில் வெளியிடுகிறார். இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், வெறும் அபராதத்தோடு தனது கடமையை முடித்துக் கொண்டது நீதிமன்றம்.
நீதிபதி கங்குலியாக இருக்கட்டும், துறவி என்ற பெயரில் களியாட்டம் போடும் நித்தியானந்தாவாக இருக்கட்டும், இவர்கள் அனைவரும் தம்மை கேட்பார் இல்லை என்றே கருதுகிறார்கள். சரியாகச் சொல்வதானால், அத்தகைய அதிகாரமும், சட்ட பூர்வ நிறுவனங்களின் பாதுகாப்பும் கொண்டோரே இத்தகைய கயமைத்தனத்தைத் துணிந்து செய்கிறார்கள்.
ஆதிக்க சாதிக் கட்சிகளும் மதவெறி அமைப்புகளும் கூட இத்தகைய பாலியல் வன்முறையின் போது தமது சமூகப் பெண்களுக்கு ஆதரவாகப் பேசுவதில்லை. பல சமயங்களில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே துணிந்து குரல் கொடுக்கின்றன. அதை முன்னர் கதுவாவில் பார்த்திருக்கிறோம். இப்போது பொள்ளாச்சியிலும் கண்கூடாகப் பார்க்கிறோம்…
பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து பல்வேறு பரிமாணங்களை இத்தொகுப்பு அலசுகிறது. அதற்கு தீர்வாக சில கருத்துக்களையும் முன்வைக்கிறது.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
***
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் – புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2019 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 20) எமது வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
” பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
நூல் விமர்சனம்: சூனியப் புள்ளியில் பெண்
பாலுறவை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறோமா நாம் ?
#MeToo: இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல, வதைக்கப்பட்ட கதை !
ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?
பாலியல் குற்றங்கள்: பள்ளி மாணவர்கள் நிலை என்ன ?
படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு: கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: குற்றவாளிகளே ஆட்சியாளர்களாக…!
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: மாணவர்கள் எதிர்க்கிறார்கள் செளகிதார்கள் பாதுகாக்கிறார்கள்!
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: புதிய சட்டங்கள் குற்றங்களைக் குறைக்குமா ?
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சாதிச் சங்கங்கள்!
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: நுகர்ந்தபின் வீசியெறியும் பண்டங்களா பெண்கள் ?
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: பிரச்சினை ஃபேஸ்புக்கிலா சமூகத்திலா?
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.
வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி:
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்:
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.