Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 382

அலெக்சாந்தர் படையெடுத்தார் – அரிஸ்டாட்டில் ஆய்வு செய்தார் | பொருளாதாரம் கற்போம் 5

1

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 5

வரலாற்றில் மனித சமூகத்தின் அறிவியலான சமூகவியலை நிறுவிய அறிஞர்களில் ஒருவர் அரிஸ்டாட்டில் என நூலின் ஆசிரியர் கூறுகிறார். நாடுகளை படையெடுத்து வென்று வந்த அலக்சாந்தரின் அவையில் இந்த அறிஞர் சமகால வாழ்வின் சமூகவியல் துறைகள் குறித்து ஆய்வு செய்கிறார். அந்த ஆய்வில் பருண்மையான விவரங்களை முன்வைத்து ஈடுபடுகிறார். அவர் காலத்திற்கு பிந்தைய தத்துவ உலகம் அரிஸ்டாட்டிலை மையமாகக் கொண்டே வாதிட்டு வந்தது. படியுங்கள். கட்டுரையின் இறுதியில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முயலுங்கள்!
-வினவு

முதல் தொடக்கம் : அரிஸ்டாட்டில்
அ.அனிக்கின்

கி. மு. 336-ம் வருடத்தில் மசிடோனியாவின் அரசர் ஃபிலீப் அவர் மகள் திருமணத்தின்போது வஞ்சகமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை யார் தூண்டினார்கள் என்பது கடைசிவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பாரசீகத்தை ஆட்சி செய்தவர்களே இந்தக் கொலையைத் தூண்டினார்கள் என்று சொல்வதுண்டு; அது உண்மையென்றால் அவர்கள் தங்களுக்கே இதைக் காட்டிலும் பெரிய தீமையைச் செய்திருக்க முடியாது. ஏனென்றால் ஃபிலீப்பின் இருபது வயது நிரம்பிய மகன் அலெக்ஸாந்தர் அரியணையில் அமர்ந்தார்; அவர் சில வருடங்களுக்குள்ளாகவே வலிமையான பாரசீகப் பேரரசை வெற்றி கொண்டார்.

Political-Economy-Aristotle-and-alexander
அரிஸ்டாட்டிலின் சீடராக அலெக்சாண்டர்

அலெக்ஸாந்தர் ஸ்டகீரா என்ற நகரத்தைச் சேர்ந்த அரிஸ்டாட்டில் என்ற தத்துவஞானியின் மாணவர். அலெக்ஸாந்தர் மசிடோனியாவின் சக்கரவர்த்தியான பொழுது அரிஸ்டாட்டிலுக்கு வயது நாற்பத்தெட்டு; அவருடைய புகழ் கிரேக்க உலகம் முழுவதிலும் விரிவாகப் பரவியிருந்தது. இதற்குச் சிறிது காலத்துக்குப் பிறகு அரிஸ்டாட்டில் மசிடோனியாவை விட்டு ஏத்தென்ஸ் நகரத்துக்குச் சென்றார். அதற்குக் காரணமென்னவென்று நமக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அலெக்ஸாந்தரோடு கருத்து வேறுபாடு அதற்குக் காரணம் அல்ல.

அவர்களிருவருக்கும் நல்ல உறவுகள் இருந்தன. அந்தத் திறமைமிக்க இளைஞர் பிற்காலத்தில் எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுகிற, நிலையில்லாது நடந்து கொள்கின்ற கொடுங்கோலனாக மாறிய பிறகுதான் அவர்களுக்கிடையே உறவுகள் சீர்கேடடைந்தன. பண்டைக்கால உலகத்தின் கலாச்சார மையமாக ஏத்தென்ஸ் நகரம் இருந்த காரணத்தால் அரிஸ்டாட்டில் அந்த நகரத்தின்பால் ஈர்க்கப்பட்டிருக்கலாம். அங்குதான் அவருடைய ஆசிரியரான பிளேட்டோ வாழ்ந்து மடிந்தார்; அரிஸ்டாட்டிலும் தன்னுடைய இளமைப் பருவத்தை அங்கேதான் கழித்தார்.

காரணம் எதுவாக இருந்தபோதிலும், கி.மு. 335 அல்லது 334-ம் வருடத்தில் அரிஸ்டாட்டில் தன்னுடைய மனைவி, மகள், சுவீகார மகன் ஆகியோரோடு ஏத்தென்சுக்குப் போனார். அடுத்த பத்து அல்லது பன்னிரண்டு வருடங்களில் கிரேக்கர்களுக்குத் தெரிந்த எல்லா நாடுகளையும் அலெக்ஸாந்தர் பிடித்துக் கொண்டிருந்த காலத்தில், அரிஸ்டாட்டில் ஒரு மகத்தான விஞ்ஞான  மாளிகையை நிர்மாணித்தார்; தன்னுடைய வாழ்க்கைப் பணி முழுவதையும் குறிப்பிடத்தக்க வேகத்தோடு பொதுமைப்படுத்தி முழுமையாக்கினார். எனினும் அவர் தமது வாழ்க்கையின் கடைசிக் காலத்தை நண்பர்கள், மாணவர்கள் மத்தியில் அமைதியாகக் கழிக்க முடியாது போய்விட்டது.

பழைய ஏதென்ஸ் (ஏத்தென்ஸ்) நகரத்தின் எச்சங்கள்.

கி. மு. 323-ம் வருடத்தில் அலெக்ஸாந்தர் இறந்தார்; அப்பொழுது அவருக்கு முப்பத்து மூன்று வயது கூட முடியவில்லை. ஏத்தென்ஸ் நகரவாசிகள் மசிடோனிய ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்தார்கள்; அரிஸ்டாட்டிலை ஊரை விட்டுத் துரத்தினார்கள். இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு அவர் ஈபோயா என்ற தீவிலிருக்கும் சால்சிஸ் என்ற இடத்தில் மரணமடைந்தார்.

அரிஸ்டாட்டில் விஞ்ஞான வரலாற்றில் மிகச் சிறந்த அறிஞர்களில் ஒருவர். அன்றைக்கிருந்த அறிவின் எல்லாத் துறைகளையும் பற்றி அவர் புத்தகங்கள் எழுதியிருந்தார். அதிலும் மனித சமூகத்தின் விஞ்ஞானமாகிய சமூகவியலை நிறுவியவர்களில் அவரும் ஒருவர்; அந்த சமூகவியலின் சுற்றுவட்டத்துக்குள் அவர் பொருளாதாரப் பிரச்சினைகளையும் ஆராய்ந்தார். அவருடைய சமூகவியல் எழுத்துக்கள் ஏத்தென்சில் அவருடைய கடைசி வருடங்களில் எழுதப் பட்டவை. அவை – முதலாவதாகவும் முதன்மையாகவும் – நிக்கமாகஸிய அறவியல் (அவருக்குப் பின்னால் வந்தவர்கள் நிக்கமாகஸ் என்ற அவருடைய மகன் பெயரை இந்தப் புத்தகத்துக்குக் கொடுத்தார்கள்) என்ற புத்தகமும் அரசின் அமைப்பு பற்றிய ஆராய்ச்சி விரிவுரையான அரசியல் என்ற புத்தகமுமாகும்.

இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் ஆகிய இரண்டிலும் அரிஸ்டாட்டில் “புதிய ரகத்தைச்” சேர்ந்த விஞ்ஞானியாக இருந்தார். அவர் தம்முடைய கொள்கைகளையும் முடிவுகளையும் சூக்குமமான சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கவில்லை; எப்பொழுதுமே விவரங்களை கவனமாக ஆராய்ச்சி செய்த பிறகே அவற்றை உருவாக்கினார். ஏராளமான விலங்கியல் மாதிரிகளைச் சேகரித்து அதை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் விலங்கின வரலாற்றை எழுதினார். அதுபோலவே அரசியல் என்ற நூலுக்காக அவரும் அவருடைய மாணவர்களும் 158 கிரேக்க மற்றும் நாகரிகமற்ற அரசுகளுடைய அமைப்புச் சட்டங்களைச் சேகரித்து அவற்றை ஆராய்ந்தனர். பெரும்பாலும் அவை போலிஸ் (polis) என்ற நகர அரசின் வகையைச் சேர்ந்திருந்தன.

கடந்த பல நூற்றாண்டுகளாக அரிஸ்டாட்டில் என்றதும் மாணவர்களும் சீடர்களும் சூழ்ந்திருக்கின்ற அறிவு நிரம்பிய ஆசான் நம்முடைய நினைவுக்கு வருவார். அவர் ஏத்தென்சில் கழித்த கடைசி வருடங்களின்போது தமது ஐம்பதுக்களில் உற்சாகமும் துடிப்பும் கொண்டவராக இருந்தார் என்று அறிகிறோம். லைசியம் என்ற ஏத்தென்ஸ் நகரத் தோட்டத்தில் பெரிபகோஸ் என்ற பாதையில் மாணவர்கள், நண்பர்களோடு பேசியபடியே நடந்து செல்வதை அவர் விரும்பியதாகத் தெரிகிறது. அவருடைய தத்துவமரபுக்கு வரலாற்றில் பெரிபடேடிக்ஸ் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

படிக்க:
பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளியலின் மூன்று நூற்றாண்டுகள் !
♦ ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

அவருடைய அறவியலும் அரசியலும் உடனே பதிவு செய்யப்பட்ட உரையாடல்களின் அல்லது உரத்த சிந்தனைகளின் வடிவத்தில் இருக்கின்றன. ஒரு கருத்தை விளக்க முற்படும்பொழுது அரிஸ்டாட்டில் அதை வெவ்வேறு கோணங்களில் அணுகி திரும்பத் திரும்ப அந்தக் கருத்தை ஆராய்கிறார், தன்னைச் சூழ்ந்திருப்பவர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறுகிறார்.

அரிஸ்டாட்டில் தன் காலத்தின் குழந்தையாகவே இருந்தார். அவர் அடிமையைப் பேசுகின்ற கருவி என்றுதான் கருதினார்; அடிமை முறை இயற்கையானது, தர்க்க ரீதியானது என்று முடிவு செய்தார். இதைத் தவிர இன்னொரு வகையிலும் அவர் பழமைவாதியாகவே இருந்தார். தம் காலத்திய கிரீஸ் நாட்டில் வர்த்தகமும் பண உறவுகளும் வளர்ச்சியடைவதை அவர் விரும்பவில்லை. சிறு அளவில் இருக்கும் விவசாயப் பொருளாதாரமே (அங்கே எல்லா வேலைகளையும் அடிமைகள் செய்வார்கள் என்பதும் இயற்கையே) அவருடைய இலட்சியம். இந்தப் பொருளாதாரம் அநேகமாகத் தன்னுடைய எல்லா அடிப்படைத் தேவைகளையும் தானே பூர்த்தி செய்து கொள்ளும்; அப்படிச் செய்ய முடியாத சிலவற்றை பக்கத்திலிருப்பவர்களோடு “நியாயமான பரிவர்த்தனையில்” பெற்றுக் கொள்ள முடியும்.

அரிஸ்டாட்டிலின் தத்துவமரபுக்கு வரலாற்றில் பெரிபடேடிக்ஸ் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

பொருளியலாளர் என்ற முறையில் அரிஸ்டாட்டிலின் சிறப்பு, அரசியல் பொருளாதாரத்தினுடைய சில இனங்களை முதன் முதலாக நிறுவியதிலும் அவற்றினிடையே உள்ள இடைத் தொடர்பை எடுத்துக் காட்டியதிலும் அடங்கியிருக்கிறது.

சிதறிக் கிடக்கின்ற பல்வேறு துணுக்குகளிருந்து அரிஸ்டாட்டிலின் “பொருளாதார அமைப்பை” நாம் உருவாக்க முடியும். அதை ஆடம்ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தின் முதல் ஐந்து அத்தியாயங்களோடும் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தின் முதல் புத்தகத்தின் முதல் பகுதியோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் வியப்படைகின்ற அளவுக்கு சிந்தனையோட்டம் தொடர்ச்சியாக இருப்பதைக் காண முடியும். அது முந்தியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேலே வளர்ச்சியடைந்து புதிய கட்டத்தை அடைவதைக் காணலாம். விலைகள் உருவாவதையும் அவை மாற்றமடைவதையும் பற்றிய விதியைக் (அதாவது மதிப்பின் விதியைக்) கண்டுபிடிக்க வேண்டும்மென்ற உந்துதல் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தில், அரிஸ்டாட்டில் முதல் மார்க்ஸ் வரையிலும் காணப்படுகிறதென்று லெனின் எழுதினார்.

அரிஸ்டாட்டில் ஒரு பண்டத்தின் இரண்டு அம்சங்களை – அதன் பயன் மதிப்பையும் பரிவர்த்தனை மதிப்பையும் – நிறுவியதோடு பரிவர்த்தனைப் போக்கையும் ஆராய்ந்தார். பரிவர்த்தனையின் அல்லது பரிவர்த்தனை மதிப்புக்களின் அல்லது, கடைசியில், அவற்றின் பணவியல் வெளியீடான விலைகளின் இணை உறவுகளை நிர்ணயிப்பது எது என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

இது அரசியல் பொருளாதாரம் தொடர்ந்து அக்கறை எடுத்துக் கொண்ட பிரச்சினையாக மாறியது. அவருக்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரியவில்லை; அல்லது பதிலை அடைவதற்கு முன்பே அவர் தன்னுடைய ஆராய்ச்சியை நிறுத்திவிடுகிறார், தன் விருப்பத்துக்கு விரோதமாகவே அதைவிட்டுப் போய்விடுகிறார் என்று சொல்லலாம். எனினும் பணத்தின் தோற்றம், அதன் செயல்களைப் பற்றி அவர் புத்திசாலித்தனமான சில கருத்துக்களைச் சொல்கிறார்; பணம் மூலதனமாக – புதிய பணத்தை உற்பத்தி செய்கின்ற பணமாக – மாற்றமடைகிறது என்ற கருத்தை அவருக்கே உரிய பிரத்தியேகமான வழியில் எடுத்துச் சொல்லுகிறார்.

இந்த மாபெரும் கிரேக்க அறிஞர் கடந்து வந்த விஞ்ஞான ஆராய்ச்சிப் பாதை இது; ஆனால் இதில் தெளிவின்மையும் கூறியது கூறலும், எடுத்துக் கொண்ட பொருளைவிட்டு விலகிப்போவதும் அதிகமே.

அரிஸ்டாட்டிலின் விஞ்ஞானப் பாரம்பரியம் எப்பொழுதுமே மாறுபட்ட அபிப்பிராயங்களுக்கு இடமளித்திருக்கிறது. தத்துவம், இயற்கை விஞ்ஞானம் மற்றும் சமூகம் பற்றிய அவருடைய கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகக் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டிய கோட்பாடாக, மீற முடியாத மதச்சட்டமாக மாற்றப்பட்டது.

கிறிஸ்தவ திருச்சபை, போலியான விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் பிற்போக்காளர்கள் புதியனவற்றுக்கும் முற்போக்கானவற்றுக்கும் எதிரான போராட்டத்தில் அதைப் பயன்படுத்தினார்கள். மறுபக்கத்தில் விஞ்ஞானத்தைப் புரட்சிமயமாக்கிய மறுமலர்ச்சிக் காலத்து மக்கள் அரிஸ்டாட்டிலின் கருத்துக்களை வறட்டுத்தனமான கோட்பாடுகளிலிருந்து விடுவித்துக் கொண்டு பயன்படுத்தினார்கள். அரிஸ்டாட்டிலுக்கான போராட்டம் இன்று வரை தொடர்ந்து நடைபெறுகிறது. அது மற்றவைகளோடு சேர்ந்து அவருடைய பொருளாதாரக் கொள்கை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கிறது.

அந்த மாபெரும் கிரேக்கரின் பொருளாதாரக் கருத்துக்களைப் பற்றி மதிப்பிடுகின்ற இரண்டு மேற்கோள்கள் கீழே தரப்பட்டிருக்கின்றன. அவற்றை கவனமாகப் படியுங்கள். முதலாவது மேற்கோள் ஒரு மார்க்சிஸ்டும் சோவியத் பொருளாதார நிபுணருமான எஃப். பொலியான்ஸ்கி எழுதியது. இரண்டாவது மேற்கோள் அமெரிக்கப் பேராசிரியர் ஜே. பெல் என்பவர் எழுதிய பொருளாதாரச் சிந்தனை பற்றிய முதலாளித்துவ வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

பொலியான்ஸ்கி :

“அரிஸ்டாட்டில் மதிப்பைப் பற்றி அகவயமான கருத்துக் கொண்டவரல்ல; அதைப் பற்றி புறவயமான பொருள் விளக்கம் தருவதில் நாட்டம் கொண்டவர் எனலாம். இது எப்படி இருந்தபோதிலும் உற்பத்திச் செலவுகளை ஈடு செய்ய வேண்டிய சமூகத் தேவையை அவர் தெளிவாகப் பார்த்தார் என்றே தோன்றுகிறது. உற்பத்திச் செலவின் கலவையை அவர் ஆராயவில்லை; இந்தப் பிரச்சினையில் அவருக்கு அக்கறை இல்லை என்பது உண்மையே. எனினும் அந்தக் கலவையில் ஒருவேளை உழைப்புக்கு ஒரு முக்கியமான இடம் ஒதுக்கப்பட்டிருக்கலாம்.” (1)

பெல் :

”அரிஸ்டாட்டில் மதிப்பைத் தன்வயமானதாக ஆக்கினார்; அதைப் பண்டத்தின் உபயோகத்தைப் பொறுத்திருக்குமாறு செய்தார். பரிவர்த்தனை மனிதனின் தேவைகளைச் சார்ந்திருக்கிறது… ஒரு பரிவர்த்தனை நியாயமானதாக இருந்தால் அது தேவைகளின் சமத்துவத்தை ஆதாரமாகக் கொண்டது. உழைப்பின் செலவை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை.”(2)

இந்த இரண்டு மதிப்பீடுகளும் ஒன்றுக்கொன்று எதிரெதிரான வகையில் மாறுபட்டிருப்பதை சுலபமாகப் பார்க்க முடியும். இரண்டு மேற்கோள்களும் அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படை இனமான மதிப்பைப் பற்றி பேசுகின்றன. இதை நாம் அடிக்கடி சந்திக்கப் போகிறோம்.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : அரிஸ்டாட்டில் பகுதியின் தொடர்ச்சி

அடிக்குறிப்பு:
(1) பொருளாதாரச் சிந்தனை வரலாறு, முதல் பகுதி, மாஸ்கோ , 1961, பக்கம் 58 (ருஷ்ய மொழி).
(2) J. Bell, A History of Economic Thought, N.-Y., 1953, p. 41.

கேள்விகள்:

  1. அலெக்சாந்தர் – ஒரு சிறு குறிப்பு வரைக. அதில் அவர் வென்றெடுத்த நாடுகள், இந்திய வருகை ஆகியவற்றையும் குறிப்பிடுக.
  2. பண்டைக்கால உலகின் கலாச்சார மையமாக ஏத்தென்ஸ் நகரம் குறிப்பிடப்படுவது ஏன்?
  3. நிக்கமாகஸிய அறிவியல் புத்தகம் – சிறு குறிப்பு வரைக.
  4. அரிஸ்டாட்டில் செய்த ஆய்வுகளில் உள்ள அணுகுமுறைகள், சிறப்பு அம்சங்கள் எவை?
  5. பெரிபடேடிக்ஸ் தத்துவ மரபு – சிறு குறிப்பு தருக.
  6. அடிமை முறை பற்றி அரிஸ்டாட்டிலின் கருத்து என்ன?
  7. அரிஸ்டாட்டிலை தோழர் லெனின் பாராட்டுவது ஏன்?
  8. அரிஸ்டாட்டில் கருத்துக்களை கிறித்தவ திருச்சபை பிற்போக்கிற்காக பயன்படுத்தியதற்கு சான்று தருக! அதே போன்று அரிஸ்டாட்டில் கருத்துக்களை மறுமலர்ச்சி கால மக்கள் முற்போக்காய் பயன்படுத்தியமைக்கு சான்று தருக!

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

வாஜ்பாய் கால உளவுத்துறை தலைவர் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவரோடு புத்தகம் எழுதலாமா ?

பின்வருமாறு ஒரு செய்தி சங்கிகளில் வாட்ஸப் குழுக்களில் உலா வருகிறது.

“This photo was taken yesterday in Delhi. Now what is special about it?
It has been taken at a 5-star hotel in Delhi, where former Prime Minister Manmohan Singh & former Vice-President Hamid Ansari are releasing a book authored by Pakistan’ ISI’s former Chief Assad Durrani! The same ISI that is hardcore enemy of India and masterminds all attacks on and in India. The same ISI which engineered attack on our Parliament and attacks in Mumbai. Present Indian Government did not give visa to Asad Durrani to attend his book launch. So these patriotic people joined him in video conferencing for releasing the book! Sometimes we wonder if they ever had any feelings for this nation which gave them high positions and put them on pedestal. What a shame to us by these shameless renegades!”

Book Release - Spy Chronivles RAW ISI and the illusion of peaceஇதன் சுருக்கமான அர்த்தம்: “ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் மன்மோகன் சிங்கும் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியும் ஒரு புத்தகத்தை வெளியிடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. அந்தப் புத்தகத்தை எழுதியது பாகிஸ்தானின் அயலக உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் அஸ்ஸாத் துரானி. அதாவது இந்தியாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் எதிரியான ஐஎஸ்ஐ. இந்திய அரசு இந்த விழாவில் கலந்துகொள்ள அவருக்கு விசா அளிக்கவில்லை. அதனால், இந்த தேசபக்தர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரோடு கலந்துகொண்டு இந்த விழாவில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இவ்வளவு உயரிய இடத்தைக் கொடுத்த இந்த தேசத்தின் மீது ஏதாவது பற்று இருக்கிறதா என்பதே சந்தேகம்தான்”.

படிக்க:
♦ வாஜ்பாய் ( 1924 – 2018 ) : நரி பரியான கதை !
♦ பாக் தளபதியை அரவணைத்தால் என்ன தவறு ? சித்துவை ஆதரிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகள்

இவர்கள் குறிப்பிடும் இந்தப் புத்தகத்தின் பெயர் The Spy Chronicles: RAW, ISI and the illusions of Peace. ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் அஸ்ஸாத் துரானி, இந்திய அயலக உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத், மூத்த பத்திரிகையாளர் ஆதித்ய சின்ஹா ஆகிய மூவர் இடையிலான உரையாடல்தான் இந்தப் புத்தகம். பின் லேடன் சிறைப்பிடிக்கப்பட்டபோது என்ன நடந்தது, காஷ்மீரில் பதற்றத்தைத் தக்கவைக்க பாகிஸ்தான் என்னவெல்லாம் செய்கிறது போன்ற தகவல்களை இந்தப் புத்தகத்தில் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

Spy Chronivles RAW ISI and the illusion of peaceஇந்தப் புத்தகத்தை எழுதியதற்காக, அவரை பாகிஸ்தான் அரசு விசாரணைக்கு உட்படுத்தியதோடு, நாட்டை விட்டு வெளியேறவும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த புத்தக வெளியீட்டு விழா நடந்திருக்கிறது. விழா நடந்தது இந்த ஆண்டு மே மாதம். சங்கிகள் இப்போதுதான் விழித்துக்கொண்டு வாட்ஸப்பில் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். சங்கிகளுக்கு புத்தகம் என்றாலே சற்று அலர்ஜிதானே..

ஆனால், இந்த ஃபார்வர்ட் செய்தியில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ஐஎஸ்ஐ தலைவருடன் இணைந்து புத்தகத்திற்காக உரையாடிய ராவின் முன்னாள் தலைவர் ஏஎஸ் அதுலாத்தின் பெயரே கிடையாது.

இந்த அதுலாத் எப்போது ‘ரா’வின் தலைவராக இருந்தார்? 1999லிருந்து 2000 வரை. அதாவது கார்கில் யுத்தம் நடந்த காலகட்டத்தில் ராவின் தலைவராக இருந்தவர். அப்போது பிரதமர் பா.ஜ.கவைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாயி. 2000ல் ரா தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, வாஜ்பாயின் ஆட்சிக் காலம் முடியும்வரை, 2004 வரை காஷ்மீர் விவகாரங்களுக்கான ஆலோசகராக இருந்தவர்.

ஆக, வாஜ்பாயி அரசில் பாதுகாப்பு அமைப்பில் முக்கியப் பிரமுகராக இருந்தவர், ஐஎஸ்ஐ-யின் முன்னாள் தலைவரோடு சேர்ந்து ஏன் புத்தகம் எழுதினார்? பா.ஜ.கவுக்கு இதில் என்ன தொடர்பு? இந்தக் கேள்வியைத்தான் அவர்களைப் பார்த்து நாம் கேட்க வேண்டும்.

நன்றி: Muralidharan Kasi Viswanathan

தமிழ் அவமானம் அல்ல – அடையாளம் | ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள்

ஆட்டோ இலக்கியம் என்ற தலைப்பில் வினவு வாசகர்கள் அனுப்பி வைத்திருக்கும் இருசக்கர வாகன இலக்கியத் தொகுப்பு !

தமிழ் – பின்னிப் பிணைந்திருக்கிறது
சென்னை, படம்: தமிழன்பன்

வாழ்க வளமுடன் மக்கள் !
இடம் : திருச்சி. படம் : செழியன்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
இடம் : திருச்சி. படம் : செழியன்

அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு !
அவமானங்களால் மட்டுமே வாழ்க்கையில் அதிக தெளிவு கிடைக்கிறது…! சிலரை புரிந்து கொள்ளவும் முடிகிறது …
இடம் : தஞ்சை மற்றும் திருச்சி. படம் :தமிழினி மற்றும் செழியன்

வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும் ! வலிகள் இருந்தால் வாழ்க்கை இனிக்கும் !
விடியும் என்று விண்ணை நம்பு ! முடியும் என்று உன்னை நம்பு!
இடம் : தஞ்சை. படம் : தமிழினி

தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து தீமைகளை செய்யாதீர்கள்!
தமிழ் என்பது அவமானம் அல்ல! அது என் அடையாளம்!
இடம் : தஞ்சை. படம் : தமிழினி

திமிரு பிடித்தவன் தமிழன் இல்லை. அந்த திமிருக்கே பிடித்தவன் தமிழன்
நண்பர்கள் துணை
இடம் : தஞ்சை. படம் : தமிழினி

விவசாயம் காப்போம்
இது பெரியாரின் தமிழ்நாடு! (எழுதப்படாத கவிதை)
இடம் : தஞ்சை. படம் : தமிழினி

யாகவராயினும் நாகாக்க
பல மொழிகள் கற்று வையுங்கள் எப்போதும் தாய்மொழியில் பற்று வையுங்கள்
இடம் : தஞ்சை. படம் : தமிழினி

அடுத்த வாரத் தலைப்பு:
வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : உங்கள் விருப்பம் !

பணக்காரனுக்குச் சொர்க்கம் கூடப் பற்றாக்குறைதான்

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 44

மாக்சிம் கார்க்கி
ருணோதயப்பொழுதில், இலையுதிர்காலத்து மாரியால் அரித்துச் செல்லப்பட்ட பாதை வழியாகச் செல்லும் தபால் வண்டியில் தாய் ஆடியசைந்து சென்றுகொண்டிருந்தாள். ஈரம் படிந்த காற்று வீசியது. எங்கும் சேறு தெறித்துச் சிதறியது. வண்டிக்காரன் தனது பெட்டியடியிலிருந்து லேசாக முதுகைத் திருப்பி வளைத்துத் தாயைப் பார்த்து மூக்கில் பேசத்தொடங்கினான்:

“நான் என் சகோதரனிடம் சொன்னேன். தம்பி, நாம் பாகம் பிரித்துக் கொள்ளுவோம் என்றேன். ஆமாம். நாங்கள் பாகம் பிரிக்கப் போகிறோம்…”

திடீரென்று இடது பக்கத்துக் குதிரையைச் சாட்டையால் சுண்டியடித்துவிட்டு, அவன் கோபத்தோடு கூச்சலிட்டான்:

“இடக்கா பண்ணுகிறாய்? மாய்மாலப் பிறவியே!”

இலையுதிர் காலத்தின் கொழுத்த காக்கைகள் அறுவடையான வயல் வெளிக்குள் ஆர்வத்தோடு இறங்கின; அச்சமயம் எங்கு பார்த்தாலும் குளிர்காற்று ஊளையிட்டு வீசிற்று. காற்றின் தாக்குதலைச் சமாளிப்பதற்காக அந்தக் காக்கைகள் தம்மைச் சுதாரித்துக்கொண்டன. அந்தக் காற்றோ அவற்றின் இறக்கைகளை உலைத்து விரித்துப் பிரித்தது. எனவே அந்தப் பறவைகள் தமது இறக்கைகளையடித்துக் கொண்டு வேறொரு இடத்துக்கு மெதுவாய்ப் பறந்து சென்றன.

“ஆனால் என் தம்பியோ என் உயிரை எடுக்கிறான். என் சொத்து முழுவதையும் உறிஞ்சிப் பிடுங்கிவிட்டான். ஆகக்கூடி, இப்போது நான் அடையக்கூடிய சொத்துப் பத்துக்கள் எதுவுமே இல்லை…’’ என்று பேசிக்கொண்டே போனான் வண்டிக்காரன்.

அவனது பேச்சைக் கனவில் கேட்பது போலக் கேட்டுக் கொண்டிருந்தாள் தாய். அவளது நினைவு மண்டலத்தில், கடந்த சில வருஷ காலமாக நடந்தேறிய சம்பவங்கள் வழிந்தோடின; அந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் தானும் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொள்வதையும் அவள் கண்டாள். இதற்கு முன்பெல்லாம் வாழ்க்கை எங்கோ வெகுதொலைவில், யாருக்கும் காரண காரியம் தெரியாத எதற்காகவோ நிர்ணயிக்கப் பெறுவதாக இருந்தது. இப்போதோ வாழ்க்கையின் பெரும்பாகம் அவளது கண்முன்னாலேயே அவளது சம்பந்தத்துடனேயே உருவாக்கப்பட்டு வருவதை அவள் உணர்ந்தாள். இந்த எண்ணம் அவளது உள்ளத்தில் பல்வேறுவிதமான உணர்ச்சிக் கலவைகளை எழுப்பின. தன்னம்பிக்கையின்மை, தன்மீதே ஒரு திருப்தி. முடியாமை, அமைதியான சோகம்……

சுற்றுச் சூழ்நிலை கண்பார்வையை விட்டு லேசாக மாறிச் சுழன்று மறைந்து கொண்டிருந்தது. வானமண்டலத்தில் சாம்பல் நிறமான மேகக் கூட்டங்கள் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டு அடர்ந்து சென்றன. ரோட்டுக்கு இருமருங்கிலும் நிற்கும் நனைந்த மரங்கள் தங்களது மொட்டைக் கிளைகளை அசைத்துக்கொண்டிருந்தன. வயல்வெளிகளில் காலச் சிரமத்தில் கரைந்தோடும் சிறு சிறு மண் குன்றுகள் எழும்பியிருந்தன.

வண்டிக்காரனின் மூங்கைக்குரல். மணிகளின் கிண்கிணியோசை, ஊதைக் காற்றின் பரபரப்பு, அதன் ஊளைச் சத்தம் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து படபடக்கும் ஒரு நாத வெள்ளமாக, அந்த வயல்வெளிகளுக்கு மேலாக ஒரே சீராய் வழிந்தோடிக்கொண்டிருந்தது.

“பணக்காரனுக்குச் சொர்க்கம் கூடப் பற்றாக்குறைதான்” என்று தன்னிருப்பிடத்திலிருந்து ஆடிக்கொண்டே சொன்னான் வண்டிக்காரன். ”எனவே அவன் என் உயிரைப் பிழிந்து எடுக்கிறான். அதிகாரிகள் அனைவரும் அவனுக்குச் சினேகிதம்…”

ஊர் வந்து சேர்ந்ததும் அவன் குதிரைகளை அவிழ்த்துப் போட்டுவிட்டுத் தாயிடம் கெஞ்சும் குரலில் சொன்னான்:

“நீ எனக்குக் குடிக்கிறதுக்கு ஓர் அஞ்சு கோபெக் கொடேன்.”

அவள் காசைக் கொடுத்ததும் அவன் அதைத் தன் உள்ளங்ககையில் வைத்து நகத்தால் கீறிக்கொண்டு, அதே குரலில் பேசினான்:

”மூன்று காசுக்கு ஓட்கா, இரண்டு காசுக்கு ரொட்டி!”

மத்தியான வேளையில், தாய் நிகோல்ஸ்கி என்னும் அந்தச் சிறிய நகரத்துக்கு அலுத்துச் சலித்துக் களைப்போடு வந்துசேர்ந்தாள். அவள் கடைக்குச் சென்று ஒரு கோப்பைத் தேநீர் அருந்தப் போனாள். போன இடத்தில் ஜன்னலருகே உட்கார்ந்தாள். தனது கனத்த டிரங்குப் பெட்டியை ஒரு பெஞ்சுக்கடியில் தள்ளிவைத்துவிட்டு ஜன்னலின் வழியாகப் பார்த்தாள். ஜன்னலுக்கு அப்பால் நடந்து பழுத்துக் கருகிப்போன ஒரு சிறு சதுரப் புல்வெளியும் அதில் முன்புறம் கூரை இறங்கிய ஒரு சாம்பல் நிறக் கட்டிடமும் தெரிந்தன. அந்தக் கட்டிடம்தான் அந்தக் கிராமச் சாவடி. வழுக்கைத் தலையும் தாடியும் கொண்ட ஒரு முஜீக் தனது சட்டைக்கு மேல் கோட்டு எதுவும் அணியாமல் அந்தக் கட்டிடத்து முகப்பில் உட்கார்ந்து புகை பிடித்துக்கொண்டிருந்தான். அந்தப் புல்வெளிச் சதுக்கத்தில் ஒரு பன்றி மேய்ந்துகொண்டிருந்தது. தனது காதுகளைப் படபடவென்று குலுக்கியாட்டிவிட்டு அது தன் மூஞ்சியைத் தரையில் மோதி, தலையை அசைத்தாட்டியது.

”உண்மை விசுவாசிகளே! விவசாயிகளான நமது வாழ்க்கையின் உண்மையையெல்லாம் எடுத்துக்காட்டும் பிரசுரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சரி, அந்தப் புத்தகங்களுக்காகத்தான் நான் கைதானேன். அந்தப் புத்தகங்களை மக்களிடம் விநியோகித்தவர்களில் நானும் ஒருவன்.”

மேகக் கூட்டங்கள் ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கடுக்காய்ச் சேர்ந்து கறுத்த பெருந்திரளாகக் கூடி, பெருகின. எங்கும் அமைதியும், அசமந்தமும் ஆயாசமும் நிறைந்து, வாழ்க்கையே எதற்காகவோ காத்துக் கிடப்பதுபோலத் தோன்றியது.

திடீரென ஒரு குதிரைப் போலீஸ் ஸார்ஜெண்ட் அந்தப் புல்வெளி வழியாக கிராமச் சாவடியின் முகப்புக்கு வேகமாகக் குதிரையை ஒட்டிக்கொண்டு வந்து நின்றான். அவன் சாட்டையைக் காற்றில் வீசிச் சுழற்றியவாறே அந்த முஜீக்கை நோக்கிச் சத்தமிட்டான். அவனது கூச்சல் ஜன்னலில் மோதித் துடித்தது. எனினும் வார்த்தைகளைக் கேட்க முடியவில்லை. அந்த முஜீக் துள்ளியெழுந்து எங்கோ தூரத்தில் கையைச் சுட்டிக் காட்டினான். ஸார்ஜெண்ட் குதிரையைவிட்டுத் தாவிக் குதித்து, கடிவாள லகானை அந்த முஜீக்கின் கையில் ஒப்படைத்துவிட்டு, படிகளை நோக்கித் தடுமாறிச் சென்று அங்கிருந்த கம்பியைப் பற்றிப் பிடித்தவாறு, மிகுந்த சிரமத்துடன் மேலேறி உள்ளே சென்று மறைந்தான்.

மீண்டும் எங்கும் அமைதி நிலவியது. குதிரை தன் குளம்பால் தரையை இருமுறை உதைத்துக் கிளறியது. அறைக்குள் ஒரு யுவதி வந்தாள். அவள் தனது மஞ்சள் நிறமான கேசத்தைச் சிறு பின்னலாகப் போட்டிருந்தாள். அவளது உருண்ட முகத்தில் இங்கிதம் நிறைந்த கண்கள் பளிச்சிட்டன. உணவுப் பொருள்களைக் கொண்ட தட்டை எடுத்துச் செல்லும்போது, உதட்டைக் கடித்துத் தலையை ஆட்டினாள்.

“வணக்கம். கண்ணே!” என்றாள் தாய்.

”வணக்கம்!” அவள் அந்தத் திண்பண்டங்களையும், தேநீர்ச் சாமான்களையும் மேஜை மீது வைத்துவிட்டு, திடீரென்று பரபரக்கும் குரலில் சொன்னாள்:

“அவர்கள் இப்போதுதான் ஒரு கொள்ளைக்காரனைப் பிடித்தார்கள். அவனை இங்குக் கொண்டு வருகிறார்கள்.”

”யார் அந்தக் கொள்ளையன்?”

”எனக்குத் தெரியாது…”

”அவன் என்ன பண்ணினான்?”

“அதுவும் தெரியாது” என்றாள் அந்த யுவதி : “அவனைப் பிடித்துவிட்டார்கள் என்பதை மட்டும் நான் கேள்விப்பட்டேன். இந்தக் கிராமச் சாவடிக் காவலாளி போலீஸ் தலைவனை அழைக்கப் போயிருக்கிறான்.”

தாய் ஜன்னல் வழியாகப் பார்த்தாள். அந்தச் சதுக்கத்தில் முஜீக்குகள் குழுமிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் அமைதியாகவும் மெதுவாகவும் வந்தார்கள். சிலர் அவசர அவசரமாகத் தங்களது கம்பளிக் கோட்டின் பொத்தான்களை அரைகுறையாக மாட்டிக்கொண்டே ஓடி வந்தார்கள். அந்தச் சாவடி முகப்பில் கூடி நின்று இடதுபுறத்தில் எங்கோ ஒரு திசையை ஏறிட்டு நோக்கினார்கள்.

அந்தப் பெண்ணும் ஜன்னல் வழியாகப் பார்த்தாள். பிறகு கதவை பலமான சத்தத்துடன் மூடிவிட்டு அங்கிருந்து வெளியே ஓடிச் சென்றாள். அச்சத்தம் கேட்டு தாய் நடுங்கினாள். தனது டிரங்குப் பெட்டியை பெஞ்சுக்கடியில் இன்னும் உள்ளே தள்ளிவைத்தாள். பிறகு அவள் தலைமீது ஒரு துண்டை எடுத்துப் போட்டுக்கொண்டு ஓடிச் செல்ல வேண்டும் என்ற காரண காரியம் தெரியாத ஆவலை உள்ளடக்கிக்கொண்டு வாசல் பக்கமாக விரைந்து வந்தாள்.

அவள் அந்தக் கட்டிட முகப்புக்கு வந்தவுடன், அவளது கண்களும் மார்பும் குளிர்ந்து விறைத்துப் போயிருந்தன. அவளுக்கு மூச்சுவிடவே திணறியது. கால்கள் கல்லைப் போல் உயிரிழந்து நின்றன. அந்தச் சதுக்கத்தின் வழியாக ரீபின் வந்தான். அவனது கைகள் கட்டப்பட்டிருந்தன. அவனுக்கு இருபுறத்திலும் தங்கள் கைகளிலுள்ள தடிகளால் தரையில் தட்டிக் கொண்டு இரண்டு போலீஸ்காரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஜனக் கூட்டம் அமைதியோடு வாய் பேசாமல் அந்தக் கட்டிட முகப்பிலேயே காத்து நின்றது.

திக்பிரமை அடித்துத் திகைத்து நின்ற தாயால் தன் கண்களை அந்தக் காட்சியிலிருந்து அகற்றவே முடியவில்லை. ரீபின் ஏதோ சொல்லிக்கொண்டு வந்தான். அவனது குரலை அவள் கேட்டாள். என்றாலும் சூனிய இருள் படர்ந்த அவளது இதயத்தில் அந்த வார்த்தைகள் எந்த எதிரொலியையும் எழுப்பவில்லை.

அவள் ஆழ்ந்த பெருமூச்செடுத்துத் தன்னை சுதாரித்துக் கொண்டாள். நீலக் கண்களும் அகன்ற அழகிய தாடியும் கொண்ட ஒரு முஜீக் முகப்பு வாசலில் நின்றவாறே அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு நின்றான். அவள் இருமினாள். பயத்தால் பலமிழந்த கைகளால் தொண்டையைத் தடவிக் கொடுத்துக்கொண்டாள்.

“என்ன நடந்தது?” என்று அவனிடம் சிரமப்பட்டுக் கேட்டாள்.

“நீங்களே பாருங்கள்” என்று பதிலளித்துவிட்டு அவன் மறுபுறம் திரும்பிக்கொண்டான். மற்றொரு முஜீக் அங்கு வந்து அவளருகே நின்றான்.

ரீபினை அழைத்துக்கொண்டு வந்த போலீஸ்காரர்கள் ஜனக்கூட்டத்தின் முன் நின்றார்கள். ஜனங்கள் ஆரவாரமே இல்லாமல் நின்றாலும்கூட, வரவர ஜனக்கூட்டம் பெருகிக்கொண்டிருந்தது. திடீரென்று ரீபின் குரல் அவர்களது தலைக்கு மேலாக எழுந்து ஒளித்தது.

படிக்க:
ஒலி வடிவில் கேள்வி பதில் – சொல்லுங்கண்ணே உரையாடல் | டவுண்லோடு
புயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ! ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட்

”உண்மை விசுவாசிகளே! விவசாயிகளான நமது வாழ்க்கையின் உண்மையையெல்லாம் எடுத்துக்காட்டும் பிரசுரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சரி, அந்தப் புத்தகங்களுக்காகத்தான் நான் கைதானேன். அந்தப் புத்தகங்களை மக்களிடம் விநியோகித்தவர்களில் நானும் ஒருவன்.”

ஜனக்கூட்டம் ரீபினை நெருங்கிச் சுற்றிச் சூழ்ந்தது. அவனது குரல் அமைதியும் நிதானமும் பெற்று விளங்கியது. அதைக் கண்டு தாய் தைரியம் அடைந்தாள்.

“கேட்டீர்களா?” என்று இரண்டாவதாக வந்த முஜீக், அந்த நீலக் கண் முஜீக்கை லேசாக இடித்துக்கொண்டே சொன்னான். அவன் பதிலே கூறாமல் தன் தலையை மட்டும் உயர்த்தி தாயை மீண்டும் ஒருமுறை பார்த்தான். இரண்டாவது வந்தவனும் அவளைப் பார்த்தான். இரண்டாமவன் முதல் முஜீக்கைக் காட்டிலும் வயதில் சிறியவன்; புள்ளி விழுந்த ஒடுங்கிய முகமும், சுருட்டையான கரிய தாடியும் கொண்டவன். பிறகு அவர்கள் இருவரும் சாவடி முகப்பிலிருந்து ஒருபுறமாக ஒதுங்கினார்கள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

கேள்வி பதில் : அறிவியல் வளர்ச்சி மனித வாழ்விற்கு பலனளிப்பதா ? அழிப்பதா ?

கேள்வி: அறிவியலின் உச்சம் மனித வாழ்வை எளிமைப்படுத்துவதா? அல்லது
மனித இருப்பையே கேள்விக்குள்ளாக்குவதா?

– கலிமுல்லா முஸ்தாக்

ன்புள்ள கலிமுல்லா,

அறிவியல் மட்டுமல்ல ஆன்மீகம் சார்ந்த மதங்களும் கூட யாரின் பிடியில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அது மக்களுக்கானதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகிறது. ரோமானிய அடிமைகளை விடுவிக்க போராடினார் ஏசுநாதர். அவரது சீடர்கள் தோற்றுவித்து பின்னர் நிறுவனமயமாகிய கிறித்தவ மதம் இன்று ஏகாதிபத்திய நாட்டு அரசாங்களின் ஆன்மீகத் துறையாக செயல்படுகிறது.

முகமது நபிகள் அவர் காலத்திய அரேபிய நாடோடி பழங்குடி இன மக்களை நெறிப்படுத்தி சீர்படுத்தி வாழ வைப்பதற்கு முயன்றார். அவரது சீடர்களால் தோற்றுவிக்கப்பட்டு பின்னர் நிறுவனமயமான முஸ்லீம் மதம் இன்று அமெரிக்காவின் ஆசீர்வாதத்தோடு சவுதி ஷேக்குகளின் கையில் இருக்கிறது.

Religionமதம் என்ற முறையில் முன்னேறிய நாடுகளில் இருக்கும் கிறித்தவர்களும் மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் கிறித்தவர்களும் ஒன்றல்ல. இதே நாடுகளில் இருக்கும் ஏழை முஸ்லிம்களும் அரபுலகில் வசிக்கும் பில்லியனர் சவுதி ஷேக்குகளும் முஸ்லீம் என்பதால் ஒரே பிரிவினர் அல்ல. புத்த மதத்தை தீவிரமாக பின்பற்றும் ராஜபக்ஷேவையும் புத்தரையும் இன்று ஒப்பிட முடியுமா என்ன?

போலவே அறிவியலும் இன்று ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் சிக்கி இருக்கிறது. நவீன மருத்துவத்தில் கண்டுபிடிக்கப்படும் ஒரு மருந்தின் விலை வர்த்தக நோக்கிலேயே தீர்மானிக்கப்படுகிறது. சிப்ராபிளாக்சசின் எனும் டைபாய்டுக்கான மருந்து அறிமுகமான ஆரம்ப காலத்தில் அதன் உயர் விலையால் வாங்க முடியாமல் மரித்துப் போன ஒருவரின் கதையை மருத்துவர் சிவசுப்ரமணிய ஜெயசேகர் எழுதியிருந்தார்.

படிக்க:
கேள்வி பதில் : நவீன அறிவியல் யுகத்தில் புதிய மதங்கள் தோன்றுமா?
♦ ஆண்டவனை அச்சுறுத்தும் புதிய தனிமங்கள் – அறிவியல் கட்டுரை

மக்களுக்காக மலிவான முறையில் கொடுக்கப்படும் மருந்துகள் கூட காப்புரிமையின் பெயரால் தடை செய்யப்படுகின்றன. இந்தியாவிலிருந்து ஆப்ரிக்க நாடுகளுக்கு அப்படி மலிவாக ஏற்றுமதி செய்யப்பட்ட எய்ட்ஸ் மருந்துகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. துவக்கத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக எந்த அறிவியலாளரும் காப்புரிமை கோரவில்லை. அப்படி ஒரு சிந்தனை கூட அவர்களின் சூழலில் இல்லை. அறிவியல் கண்டுபிடிப்பு என்பதை முழு மனித வரலாற்றின் கூட்டுணர்ச்சி என்பதை அவர்கள் தமது வாழ்விலும், இலட்சியத்திலும் பற்றி நின்றார்கள். டார்வினோ, கலிலீயோவோ, கெப்ளரோ, புரூணோவோ அத்தகைய அறிவியலாளகர்கள். இன்றைய இணைய காலத்தில் கூட “ஓபன் சோர்ஸ்” எனும் கட்டற்ற மென்பொருள் துறையில் பல கணினி வல்லுனர்கள் காப்புரிமையை எதிர்த்து செயல்படுகிறார்கள்.

அதிநவீன ராணுவ தளவாடங்கள், அதிநவீன ரோபோ எந்திரங்களுக்கு செலவு செய்யப்படும் காசில் இந்தியா போன்ற ஒரு நாட்டின் ஆரம்பக் கல்வி முழுவதின் செலவையே ஏற்றுக் கொள்ள முடியும். அதிக சத்துள்ள கெட்டுப் போகும் தக்காளியை விட அதிக சத்தில்லாத கெட்டுப் போகாத தக்காளி அதிக இலாபம் தருமென்றால் நமது முதலாளிகள் சத்து தக்காளியை தடை செய்து விடுவார்கள்.

Science and Technologyஇன்றைய முதலாளித்துவ நெருக்கடி காரணமாக பொது மக்கள் மட்டுமல்ல, அறிவியாளர்கள் சிலரும் கூட கார்ப்பரேட் நிறுவனங்களின் காட்டு தர்பாரை எதிர்த்து வருகிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் நமக்கு சில பல அறிவியல் உண்மைகள் அறியக் கிடைக்கின்றன. இன்னொரு புறம் ஸ்டெர்லைட்டின் நன்மை என்ன அது எந்த சூழலியல் கேடுகளையும் தரவில்லை என்று பேசக்கூடிய அறிவியலாளர்களையும் இதே அறிவியல் உலகம் கொண்டிருக்கிறது.

அறிவியில் மட்டுமல்ல அதன் உடன் பிறப்பான கலைத்துறைக்கும் இதே விதி பொருந்தும். சினிமா என்றால் அது மிகப்பெரும் நிறுவனங்களின் கையிலும், இசை என்றால் அது மிகப்பெரும் கார்ப்பரேட்டுகளின் பிடியிலும், புத்தக வெளியீடு என்றால் அதுவும் பிரம்மாண்டமான வர்த்தகத்தைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் கையிலும் இருக்கின்றன. தமிழகத்தில் நல்ல கதை அம்சம் கொண்ட சிறு முதலீட்டுப் படங்கள் வரலாமேலேயே வந்தும் திரையரங்கு கிடைக்காமல் மக்களின் பார்வைக்கு வராமலேயே சென்றிருக்கின்றன. ஆக நம்மை உற்சாகப்படுத்தும் கலையும் கூட மக்கள் பிடியில் இல்லை.

இன்றைக்கு அறிவியல் ஆராய்ச்சிகள், அதன் பலன்கள் மிகப்பெரும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றன. அதில் ஈடுபடும் அறிவியலாளர்களின் அறிவியல் முனைப்பை நாம் மதிக்கின்றோம். அதே நேரம் அரசியல் ரீதியில் ஏகாதிபத்தியம் வீழ்த்தப்படும் போதுதான் அறிவியல் மக்களுக்கானதாக மாற்றப்படும். சோசலிசம் இருந்த காலத்தில் சோவியத் யூனியன் செய்த அறிவியல் சாதனைகளும், இன்றும் கூட கியூபாவின் மருத்துவ சாதனைகளும் முழு உலகால் பேசப்படுகின்றன. அறிவியல் இன்றி மனித வாழ்வின் முன்னேற்றம் ஒருபோதும் நிகழாது. அந்த அறிவியலை முதலாளித்துவ வர்த்தகத்தின் பிடியல் இருந்து மீட்க, அரசியல் அரங்கில் போராடுவது ஒன்றே வழி.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

உத்திரப் பிரதேசம் : கும்பமேளாவிற்கு வரும் இந்துக்களிடம் மதவெறியேற்ற ஆர்.எஸ்.எஸ். திட்டம்

0
அர்த் கும்பமேளா - ஹரித்துவார்

ந்தி பேசும் மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளதன் மூலம் சங்க பரிவாரம் பீதியடைந்துள்ளது. அதற்காக மத உணர்வை தூண்டிவிட்டு இந்துக்களின் வாக்குகளைத் திரட்டும் பணிகளில் இறங்கியுள்ளது. அடுத்த மாதம் உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்தில் நடக்கவுள்ள அர்த் – கும்பமேளாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்களை வசமாக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு வருகிறது.

நெருங்கி வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெல்ல, அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தை கைப்பற்றுவது சங்கபரிவாரத்துக்கு முக்கியம். அதனடிப்படையில் ஆறு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அர்த் கும்பமேளாவைப் பயன்படுத்தி இந்துக்களை காவி அரசியலின் பக்கம் திருப்ப தீவிரமாக திட்டமிட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

படம் : கும்பமேளா

ஜனவரி 14-ம் தேதி தொடங்கி, ஆறு வாரங்களுக்கு அர்த் கும்பமேளா நடக்க இருக்கிறது. இரண்டு கும்பமேளாக்களுக்கு இடையே வருவது அர்த் கும்பமேளா.  இதில் கலந்துகொள்ள வரும் லட்சக்கணக்கான பக்தர்களை வழிநடத்தவும் உதவிகளை செய்யவும் ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் சீருடை அணிந்து வரவிருப்பதாக ஆர்.எஸ்.எஸ்-ன் வாரணாசி வடக்கு பகுதி தலைவர் நந்தலால் தெரிவிக்கிறார்.  கும்பமேளாவில் நேரடியாக இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்றும் இவர் தெரிவிக்கிறார்.

உத்தரபிரதேசம் காவிகளின் மாநிலமாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். இங்கே தேர்தல் கட்சிகளையும் விடவும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. உ.பியை ஆறு பகுதிகளாக பிரித்து, அதில் ஒவ்வொன்றிலும் 25 வட்டார அமைப்புகளுடன் தனது விசக் கிளையை பரப்பியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.  ஒவ்வொரு வட்டார அமைப்புகளிலிருந்து ஆறிலிருந்து ஏழுநூறு பேர் கும்பமேளாவில் கலந்துகொள்வார் என்றும் அவர்கள் கும்பமேளாவில் நெரிசலை கட்டுப்படுத்துவது கூட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருவது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள் என்கிறார் நந்தலால்.  கும்பமேளாவில் வருகிறவர்களுக்கு கண் பரிசோதனை செய்து, ஒரு லட்சம் பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட இருப்பதாகவும் லால் தெரிவிக்கிறார். அதாவது, சேவையை லஞ்சமாகக் கொடுத்து வாக்குகளை பெற திட்டமிடுகிறது காவி கும்பல்.

படிக்க :
♦ கும்பமேளா: இந்தியாவின் புனிதமா, அழுக்காŸ?
♦ ஜெயேந்திரன் – நித்தியனாந்தா கும்பமேளா சந்திப்பு !

ஆர்.எஸ்.எஸ்-ன் வரலாற்றை சொல்லும் நாடகம் ஒன்றும் அரங்கேற இருக்கிறதாம். அதன் பெயர் ‘சங்கம் சரணம் கச்சாமி’ (‘சங்பரிவாருடன் அடைக்கலமாகிறேன்’). ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்ற பவுத்த பிரார்த்தனை வாக்கியத்தை மாற்றி இதை உருவாக்கியிருக்கிறார்கள். திருட்டு ஆர்.எஸ். எஸ். கும்பலால் ஒரு பிரார்த்தனை வாக்கியத்தைக் கூட உருவாக்க முடியவில்லை!

பாஜக ஆளும் உ.பி அரசின் உதவியோடு நடக்கும் மிகப் பெரிய விழாவில் இந்துத்துகளை மத ரீதியாக தூண்டி, அவர்களை வாக்குகளாக மாற்றும் உத்தியாகவே திட்டமிடப்பட்டிருக்கின்றன.  545 தொகுதிகள் கொண்ட மக்களவையில், உ.பி. மட்டும் 90 தொகுதிகளைக் கொண்டுள்ளது. 2014-ம் ஆண்டு இந்த மாநிலத்தில் 71 தொகுதிகளை வென்றது பாஜக. அந்தக் கட்சி வென்ற 282 தொகுதிகளில் நான்கில் ஒரு பங்கு தொகுதிகள் உ.பி.யில் வென்றவைதாம்.

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டபேரவை தேர்தலிலும் பாஜக வென்றது. ஆனால், அடுத்தடுத்து வந்த மூன்று மக்களவை தொகுதி இடைத்தேர்தலிலும் படு கேவலமாக தோற்றது. முதல்வர், துணை முதல்வர் வென்ற தொகுதிகளில்கூட வெற்றி பெற்ற முடியவில்லை. 1991-ம் ஆண்டு முதல் பாஜகவின் கோட்டையாக இருந்துவரும் கோரக்பூர் தொகுதியை இடைத்தேர்தலில் இழந்தது பாஜக. அடுத்து வந்த சட்டப்பேரவை தேர்தல்களில் இந்துத்துவ செல்வாக்கு மிக்க மூன்று மாநிலங்களை இழந்துள்ளது பாஜக.

படிக்க:
♦ சாதி அரசியலைத் தூண்டும் பாஜகவின் நரித்தனம் !
♦ கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?

இந்த நிலையில், இந்துக்களை மத ரீதியாக திரட்டினால் மட்டுமே தேர்தலில் வெற்றி காண முடியும் என ஆர்.எஸ். எஸ். – பாஜக கணக்கு போடுகிறது. அர்த் கும்பமேளா இதுநாள் வரை பெரிய அளவிலான முக்கியத்துடன் கொண்டாடப்படவில்லை. ஆனால், இம்முறை தேர்தல் வரவிருப்பதை ஒட்டி காவி கும்பல், மிகைப்படுத்தி மக்களை திரட்டப் பார்க்கிறது.

கடந்த டிசம்பர் 16-ம் தேதி கங்கைக்கு பூஜை செய்து, பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா உதவி மையத்தை தொடங்கி வைத்தார் மோடி. அதுபோல, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மாநிலத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் அதிக அளவிலான மக்களை திரட்டி கும்பமேளாவில் கலந்து கொள்ளும்படி கடிதம் எழுத இருக்கிறார்.

முன்பு விசுவ இந்து பரிசத் மூலம் இயக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளில் இப்போது ஆர்.எஸ்.எஸ். நேரடியாக களம் இறங்கியிருக்கிறது. மக்களவை தேர்தலில் தோற்றுவிடக்கூடும் என்கிற பயத்தின் காரணமாக ஆர். எஸ்.எஸ். இந்த முடிவு எடுத்திருப்பதாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர் தெரிவிக்கிறார்.

தரம் சன்சாத் – சாமியார்களின் கூட்டம்

1989-ம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த கும்பமேளா, காவி கும்பலை அணி திரட்ட உதவியது. ராம ஜென்மபூமி என்ற முழுக்கம் கிளம்ப அது அடித்தளம் இட்டுக்கொடுத்தது. அப்போது விசுவ இந்து பரிசத் இந்த காவி நாடகத்தை அரங்கேற்றியது. அது போன்றதொரு திட்டமிடலைச் செய்ய இப்போது நடக்கவிருக்கும் கும்பமேளாவை பயன்படுத்த பார்க்கிறது காவி கும்பல்.

முன்னாள் அலகாபாத் ஆன பிரயாக்ராஜில் நடைபெறவிருக்கும் அர்த் கும்பமேளாவில் வி.எச்.பி. சாமியார்களை ஒருங்கிணைத்து ‘தரம் சன்சாத்’ நிகழ்வை மீண்டும் நடத்த இருக்கிறது. சமீபத்தில் நடந்த இந்த நிகழ்வில் ‘ராமர் கோயிலை கட்டியே தீர வேண்டும்’ என முழங்கியது இந்த காவி கும்பல்.

நேரடியாக ஆர்.எஸ். எஸ். காவிகளின் கண்காணிப்பில் நடக்கவிருக்கும் கும்பமேளாவில் கலந்துகொள்ளும் ஒரு எளிய இந்து பக்தர், தனது பழைய குணங்களுடன் திரும்புவது சந்தேகமே என கவலை தெரிவிக்கிறது இந்த செய்தியை வெளியிட்டிருக்கும் கேரவன் இதழ்.

பாசிசத்தின் வாரிசுகள் அவ்வளவு எளிதாக தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பெரும்பான்மையுடன் அமைத்த ஆட்சியை விட்டுத்தரவும் மாட்டார்கள். மக்களை மத ரீதியாக திரட்ட கற்றுவைத்திருக்கும் வித்தைகளை பரிசோதனை செய்யவும் தயங்க மாட்டார்கள். மக்களே விழிப்போடு இருங்கள்!

அனிதா
செய்தி ஆதாரம் : கேரவன்

நவோதயா பள்ளிகள் : 5 ஆண்டுகளில் 49 மாணவர்கள் தற்கொலை !

3

குதி வாய்ந்த கிராமப்புற குழந்தைகளுக்காக மைய அரசு நடத்தும் உறைவிடப் பள்ளியான ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் (Jawahar Navodaya Vidyalayas) கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 49 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

தற்கொலை செய்த மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தலித் மற்றும் பழங்குடியினர் மேலும் அவர்களில் பெரும்பான்மையானோர் ஆண் குழந்தைகள் என்ற தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது. அவர்களில் எழுவரை தவிர அனைவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளதாகவும் அவர்களது உடல் சக மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களால் கண்டெடுக்கப்பட்டதாகவும் அது கூறுகிறது.

Navodaya vidyalaya school1985-86-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நவோதயா பள்ளிகள் பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் பெறும் அதிக மதிப்பெண்களுக்காக பெயர் பெற்றவை. இப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 10-ம் வகுப்பில் 99 விழுக்காடாகவும் 12-ம் வகுப்பில் 95 விழுக்காடாகவும் இருக்கிறது. மேலும் இத்தேர்ச்சி விகிதம் தனியார் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளை விட மிக அதிகம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறுகிறது.

நுழைவுத் தேர்வு அடிப்படையில் இயங்கும் இப்பள்ளிகள் ஆறாவது வகுப்பு முதல் தொடங்குகின்றன. அதில் 75 விழுக்காடு இடங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.  போட்டி அடிப்படையிலான சேர்க்கையில் தேர்வு எழுதும் மாணவர்களில் வெறும் 3% மாணவர்களுக்கே இடம் கிடைக்கும். மைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidyalaya Samiti), நாடு முழுவதும் கிட்டதட்ட 635 பள்ளிகளை நடத்தி வருகிறது.

படிக்க:
அனிதாக்களை 5 -ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடும் நவோதயா பள்ளிகள் !
♦ மையஅரசு மாதிரிப் பள்ளிகள் : கேள்விக்குறியாகும் தமிழ்வழிக் கல்வி

ஆனால் இப்பள்ளிகளில் உள்ள சூழ்நிலைகள் வெளியிலிருந்து பார்ப்பது போல அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்ந்த  46 பள்ளிகளில் 41 பள்ளிகளில் கடுமையான பிரச்சினைகளை மாணவர்கள் சந்தித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது. இப்பள்ளிகளில் நடந்த கொடூரமான தற்கொலை புள்ளிவிவரங்களில் இப்பிரச்சினைகள் எதிரொலிக்கின்றன:

“..இப்பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு இலட்சம் மாணவர்களில் கிட்டத்தட்ட ஆறு மாணவர்கள் 2017-ல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2015-ல் 6 முதல் 17 வயது வரம்பில் உள்ளோருக்கான தேசிய தற்கொலை விகிதமான ஒரு இலட்சத்திற்கு 3 தற்கொலைகள் என்பதை விட அதிகமானது”.

கடந்த ஐந்தாண்டுகளில் நவோதயா பள்ளிகளில் தற்கொலை செய்து கொண்ட 49  மாணவர்களில் 16 மாணவர்கள் அட்டவணைப்பிரிவை சேர்ந்தவர்கள். மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (25 பேர்கள்) தலித் மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள்.

தற்கொலை செய்தவர்களில் 70 விழுக்காட்டினருக்கும் அதிமானோர் ஆண் மாணவர்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது. 49  தற்கொலைகளில் 43  மாணவர்கள் 9-ம் வகுப்பையும் அதற்கடுத்த வகுப்புகளையும் சேர்ந்தவர்கள். ஒருதலைக்காதல், குடும்ப சிக்கல்கள், பள்ளிகளில் வழங்கப்பட்ட உடல்ரீதியிலான தண்டனைகள் அல்லது ஆசிரியர்களால் இழிவுப்படுத்தப்படுதல், கல்வி தொடர்பான அழுத்தம், மன சோர்வு மற்றும் நண்பர்களுடனான சண்டை ஆகியவையே தற்கொலைக்கு காரணங்களாக செய்தித்தாள்கள் கூறுகின்றன. கோடை விடுமுறைக்கு அடுத்த மூன்று மாதங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நவோதய வித்யாலயா சமிதி ஒரு அறிவிப்பை அதன் பள்ளிகளுக்கு அனுப்பியது. “எந்த அறிகுறியையும் காட்டாமல் எந்த ஒரு குழந்தையும் இது போன்ற தீவிர நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். இந்த அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிய வித்யாலயா நிர்வாகம் தவறிவிட்டது. ஏற்கனவே இந்த அறிகுறிகளை நிர்வாகம் அறிந்திருந்தாலும் மாணவர்களால் தெரிய வந்திருந்தாலும் எளிதாகவே நிர்வாகத்தால் அணுகப்பட்டிருக்கின்றன” என்று அனைத்து நவோதயா பள்ளிகளுக்கும், சமிதி சுற்றிக்கை அனுப்பியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறுகிறது.

நவோதயா பள்ளிகள் தமிழ்நாடு நீங்கலாக அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. 2018-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மைய அரசின் உதவியுடன் ஒரு நவோதயா பள்ளியை தொடங்க ஏதுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்படத்தக்கது.

ஆனால் கல்வி உரிமை சட்டத்தின் படி இந்தியாவில் அனைத்து மாணவருக்கும் நுழைவுத்தேர்வு இல்லாமல் கல்வியளிக்கப்பட வேண்டும். மாறாக நவோதயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் நுழைவுத்தேர்வு வைத்து வகுப்புக்கு வெறும் 80 மாணவர் மட்டுமே சேர்த்து கொள்ளப்படுவார்கள். இத்தகைய போட்டி மனப்பான்மை முதல் பிரச்சினை. அடுத்து ரோகித் வெமுலா முதல் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களிலேயே ஒடுக்கப்படும் சாதிகளைச்  சார்ந்த மாணவர்கள் சாதிரீதியிலான ஆதிக்கத்தை எதிர்கொள்கின்றனர். இன்னொரு புறம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக வின் இந்து ராஷ்டிர அரசியல்படியும் கல்வி நிறுவனங்களில் சாதி-மதத் துவேசம் காட்டப்படுகின்றது. ஜே என் யூ போன்ற உயர்கல்வி மாணவர்களே அவற்றை எதிர் கொள்ள முடியாத போது இந்த பள்ளி மாணவர்கள் என்ன செய்வார்கள்? ஒரு முன்மாதிரிப் பள்ளியிலேயே நமது மாணவர்கள் இப்படி தற்கொலை செய்வதை இந்த அரசு தடுக்க முடியவில்லை. இத்தகைய சூழலில் மாணவர்களுக்கு அரசியல் பிரச்சாரம் கொண்டு போவதை இடது சாரி முற்போக்கு அமைப்புகள் அதிகம் செய்ய வேண்டியது அவசியம்.

தமிழாக்கம் : சுகுமார்
நன்றி: த வயர்

 

 

மோடிக்கு ஜால்ரா போடும் தொலைக்காட்சிகளில் நம்பர் 1 எது ? கருத்துக் கணிப்பு

பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் காக்கைகளின் சத்தம் அதிகம் கேட்கிறது. மோடி பதவியேற்ற பிறகு தமிழக தொலைக்காட்சிகளின் விவாதங்கள், நேர்காணல்கள், அன்றாட செய்தி அறிக்கைகளின் காரணமாக பாஜக ‘மாபெரும்’ கட்சியாக ‘உருவெடுத்து’ விட்டது. கவுன்சிலர் தேர்தலில் கூட வெல்ல முடியாத கட்சி என தமிழக மீம்கள் அணியில் பெயரெடுத்த பாஜகவிற்கு தமிழக ஊடகங்கள் பெரும் பலம். இந்தக் காலத்தில் “என்ன நான் சொல்றது எச் ராஜா” தேசியக் கட்சியின் செயலாளர் என்று தமிழக ஊடகங்களால் பயந்து மதிக்கப்படும் ஆளாகி விட்டார்.

மறுபுறம் எச்ச, **** என்று யூடியூப் ஊடகங்களில் முன்னணி ரேட்டிங்கையும் அவர் பெறுகிறார். நடிகர் சிம்பு போன்றவர்கள் கூட என்ன ராசா என்று கேட்குமளவு யதார்த்தமிருந்தாலும், செய்தி சானல்களின் சித்தரிப்பு வேறு. இன்னும் தமிழிசை துவங்கி எஸ்.வி.சேகர் வரை மாபெரும் தலைவர்களாக மீடியாக உபயத்தால் மாற்றப்பட்டனர்.

இப்படியாக யதார்த்தத்தில் பாஜக தலைவர்கள் நடிகர் மயில்சாமி பேசினால் வரும் கூட்டத்தை விஞ்ச முடியாத நிலையிருக்கிறது. ஆனால் ஊடகங்களில் நேர் மாறான நிலை. தமிழக ஊடக முதலாளிகள் பார்ப்பனிய தாசர்கள் என்ற விதத்திலும், சிலர் ஊழல் முதலாளிகள் என்ற தகுதியிலும் பாஜகவின் புகழ் பாடுகிறார்கள். ஆகவே காக்கைகளின் இன்றைய ரேங்கிக் குறித்து நாம் அவ்வப்போது சர்வேக்கள் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பாஜக – மோடிக்கு பயப்படுவதில் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி எது ?

தந்தி டிவி
புதிய தலைமுறை
நியூஸ் 7 தமிழ்
நியூஸ் 18 தமிழ்நாடு
நியூஸ் ஜே
பாலிமர் நியூஸ்

(நிறைய பேரை தெரிவு செய்ய வேண்டிய குழப்பம் இருக்கிறதா? போனால் போகட்டும் இரண்டு பதில்களை தெரிவு செய்யலாம். சத்தியம், காவேரி போன்றவை அதிகம் பிரபலமில்லை என்பதாலும், கலைஞர், சன் டிவி, போன்றவை பாஜகவிற்கு எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதாலும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.)

 

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூபில் வக்களிக்க :

https://www.youtube.com/user/vinavu/community

இந்த மாதிரி ஜனங்களோடு வாழ்வதும் அவர்களது தோழர்களாயிருப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம்

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 43

மாக்சிம் கார்க்கி
ரு நாள் மதியம் அவள் சிறைச்சாலை ஆபீசில் பாவெலுக்கு எதிராக உட்கார்ந்து தாடி வளர்ந்து மண்டிய அவனது முகத்தை நீர்த்திரை மல்கிய கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னுடைய கைக்குள் கசங்கிச் சுருண்டு போயிருக்கும் அந்தச் சீட்டை அவன் கையில் ஒப்படைக்கும் சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தாள்.

“நான் செளக்கியம். எல்லோரும் அப்படித்தான்” என்று அமைதியாகச் சொன்னான். “நீ எப்படி இருக்கிறாய்?”

”நானும் சௌக்கியம். இகோர் இவானவிச் இறந்து போனான்” என்று யந்திரம் மாதிரி நிர்விசாரமாய்ச் சொன்னாள் அவள்.

“உண்மையாகவா?’ என்று வியந்து கேட்டான் பாவெல். அவன் மெதுவாகத் தன் தலையைத் தொங்கவிட்டான்.

“சவ அடக்கத்தின்போது போலீசார் ஒரு சண்டையைக் கிளப்பிவிட்டார்கள். ஒருவனைக் கைது செய்திருக்கிறார்கள்” என்று பரபரப்பின்றிச் சொன்னாள் அவள். சிறைச்சாலையின் உதவியதிகாரி நாக்கை மிக எரிச்சலோடு சப்புக் கொட்டிக்கொண்டே துள்ளியெழுந்தான்.

“இந்த மாதிரி விஷயங்களைப் பேசக்கூடாது என்று தெரியுமா, இல்லையா?” என்று முணுமுணுத்தான் அவன். “இங்கு அரசியலைப் பற்றிப் பேசக்கூடாது.”

தாயும் எழுந்து நின்று, தனது குரலில் குற்ற பாவத்தின் சாயை படரப் பேசினாள்.

”நான் ஒன்றும் அரசியலைப் பற்றிப் பேசவில்லை; ஒரு சண்டையைப் பற்றித்தான் பேசினேன். அவர்கள் சண்டை போட்டது உண்மை. ஒரு பையனுடைய தலையைக்கூட அவர்கள் நொறுக்கித் தள்ளிவிட்டார்கள்…..”

“எல்லாம் ஒன்றுதான். இனிமேல் பேசாமல்தான் இருக்க வேண்டும். உங்கள் சொந்த விஷயத்தைப் பற்றி, அதாவது பொதுவாக உங்கள் வீட்டு விஷயத்தையும் குடும்ப விஷயத்தையும் தவிர வேறு எதையுமே இங்கு பேசக்கூடாது.”

தனது பேச்சு குழம்பிக் குழறி ஒலிப்பதை அவன் கண்டுகொண்டான். அவன் மீண்டும் மேஜையருகே உட்கார்ந்து சில காகிதங்களைப் பரபரவென்று புரட்டத் தொடங்கினான்.

”இந்த மாதிரி நீ ஏதாவது பேசித் தொலைத்தால் அப்புறம் இதற்கு பதில் சொல்ல வேண்டியது நான்தான்” என்று சோர்ந்து போய்ச் சொன்னான் அவன்.

அவன்மீது பதிந்துநின்ற கண்களை அகற்றாமலே, தாய் தன் கையிலிருந்த துண்டுச் சீட்டை பாவெலின் கைக்குள் விறுட்டென்று திணித்தாள். அப்புறம் நிவர்த்தி நிறைந்த நிம்மதியுணர்ச்சியோடு பெருமூச்சு விட்டாள்.

”எதைப் பற்றித்தான் பேசுவது என்பதே எனக்குத் தெரியவில்லை…” என்றாள் தாய்.

“எனக்கும்தான் தெரியாது” என்று கூறிச் சிரித்தான் பாவெல்.

”அப்படியானால், இங்கு வருவதிலேயே அர்த்தமில்லை” என்று எரிச்சலோடு சொன்னான் அதிகாரி. “எதைப்பற்றிப் பேசுவது என்று தெரியாவிட்டால், இங்கு ஏன் வருகிறீர்கள்? வந்து, எங்கள் பிராணனை ஏன் வாங்குகிறீர்கள்?……..”

“விசாரணை சீக்கிரம் நடக்குமா?” என்று கேட்டாள் தாய்.

”பிராசிக்யூட்டர் சில நாட்களுக்கு முன் வந்திருந்தார். சீக்கிரமே நடக்குமென்று சொன்னார்…”

அவர்கள் இருவரும் அர்த்தமற்றுப் பேசிக்கொண்டிருந்தார்கள். அன்பும் பரிவும் நிறைந்த கண்களோடு பாவெல் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். அவன் முன்னிருந்ததைப்போல இப்போதும் மிகுந்த அமைதியும் நிதானமும் நிறைந்து விளங்குவதாக அவளுக்குத் தோன்றியது. அவனது தோற்றத்தில் அப்படியொன்றும் மாற்றமில்லை. கைகள் வெளுத்திருந்தன; தாடி வளர்ந்திருந்ததால், வயதில் அதிகமானவனாகத் தோன்றினான். அவ்வளவுதான். அவள் அவனிடம் இன்பகரமான விஷயம் எதையாவது சொல்ல விரும்பினாள். நிகலாயைப் பற்றித் தெரிவிக்க விரும்பினாள். எனவே சுவையற்ற தேவையற்ற விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த தொனியிலேயே அவள் பேசத் தொடங்கினாள்.

“உன்னுடைய ஸ்வீகார புத்திரனை அன்றைக்கு நான் பார்த்தேன்….”

பாவெல் விஷயம் புரியாமல் அவளது கண்களையே பார்த்தான். நிகலாய் வெஸோவ்ஷிகோவின் முகத்திலுள்ள அம்மைத் தழும்புகளை அடையாளம் சொல்வதற்காக, அவள் தன் கை விரல்களால் தன் கன்னத்தில் தட்டிக் கொட்டிக் காட்டினாள்.

“அவன் இப்போது சரியாயிருக்கிறான். அவனுக்குச் சீக்கிரமே ஒரு வேலை பார்த்துவைக்க வேண்டும்.”

பாவெல் புரிந்து கொண்டான். தலையை ஆட்டியபடி மகிழ்ச்சி நிறைந்த கண்களோடு பதிலிறுத்தான்.

“அப்படியா? ரொம்ப நல்லது” என்றான் அவன்.

“ஆமாம், இவ்வளவுதான் விஷயம்” என்று முடித்தாள் அவள். அவனது மகிழ்ச்சி அவளது இதயத்தைத் தொட்டது. அதன் காரணமாகத் தன்மீது திருப்தி கொண்டாள்.

அவளது கரத்தை இறுகப்பற்றி அவளுக்கு விடை கொடுத்தான்.

”நன்றி. அம்மா!’’

அவர்கள் இருவரது இதயங்களும் ஒன்றையொன்று நெருங்கிப் பழகிக் கொண்டதால் ஏற்பட்ட ஆனந்த வெறி அவளது தலைக்குள் காரமான மதுவெறியைப்போல் மேலோங்கிக் கிறங்கியது. அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவனது கையை மட்டும் பற்றிப் பிடித்தாள் அவள்.

வீட்டுக்கு வந்தவுடன் சாஷா தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். தாய் பாவெலைப் பார்த்துவிட்டு வரும் நாட்களிலெல்லாம் அவளும் வந்து செல்வது வழக்கம். அவள் பாவெலைப் பற்றி எதுவும் கேட்பதில்லை; தாயாகவே. அவனைப் பற்றி எதுவும் சொன்னால் கேட்பாள். இல்லாவிட்டால் தாயின் கண்களையே வெறித்து ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருப்பதோடு திருப்தியடைந்து விடுவாள். ஆனால், இந்தத் தடவையோ அவள் ஆர்வத்தோடு வாய்விட்டுக் கேட்டுவிட்டாள்.

“சரி. அவன் எப்படி இருக்கிறான்?”

“நன்றாயிருக்கிறான்.”

“அவனிடம் அந்தச் சீட்டைக் கொடுத்துவிட்டீர்களா?”

“ஆமாம். அதை அவன் கையில் மிகுந்த சாமர்த்தியத்தோடு கொடுத்துவிட்டேன்…….”

“அவன் அதைப் படித்தானா?”

“அங்கேயா? அது எப்படி முடியும்?”

“ஆமாம் நான் மறந்துவிட்டேன்” என்று மெதுவாகக் கூறினாள் அந்தப் பெண். ”நாம் இன்னும் ஒரு வார காலம் சரியாக ஒரு வாரகாலம் — முழுவதும் காத்திருக்க வேண்டும். இல்லையா? சரி.. அவன் ஒத்துக்கொள்வான் என்று நினைக்கிறீர்களா?

சாஷா முகத்தை நெரித்துச் சுழித்து, தாயையே கூர்ந்து நோக்கினாள்.

”நான் எப்படிச் சொல்ல முடியும்?” என்றாள் தாய். “இதில் ஒன்றும் ஆபத்தில்லையென்றால் அவன் ஏன் சம்மதிக்கக் கூடாது!”

சாஷா தன் தலையை உலுக்கிக் கொண்டாள்.

“சரி. இந்த நோயாளிக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? அவனுக்குப் பசியெடுத்துவிட்டது” என்றாள் அவள்.

“அவன் எதுவும் தின்னலாம். இரு, இதோ நான் போய்……”

அவள் சமையலறைக்குள் சென்றாள். சாஷாவும் மெதுவாக அவளைப் பின்தொடர்ந்து சென்றாள்.

“நானும் உதவட்டுமா?”

“வேண்டாம், வேண்டாம்.”

தாய் அடுப்பின் பக்கமாகக் குனிந்து ஒரு பாத்திரத்தை எடுத்தாள்.

”பொறுங்கள்…” என்று அமைதியாகச் சொன்னாள் அந்தப் பெண்.

அவளது முகம் வெளுத்து, கண்கள் வேதனையுடன் விரிந்தன. அதே சமயம் அவள் நடுங்கும் உதடுகளோடு அவசர அவசரமாக முணுமுணுத்துப் பேசினாள்:

”நான் உங்களிடம் ஒன்று கேட்க நினைத்தேன். அவன் சம்மதிக்க மாட்டான் என்பது மட்டும் எனக்கு நிச்சயம் தெரியும். நீங்கள் அவ்னிடம் அது விஷயமாய் மன்றாடிக் கேட்டுக்கொள்ள வேண்டும். அவனது தேவை இப்போது இங்கு மிகவும் அத்தியாவசியமானது. எடுத்துக்கொண்ட கொள்கையின் வெற்றிக்காக, அவன் இதற்குச் சம்மதிக்கத்தான் வேண்டும் என்று சொல்லுங்கள். அவனது உடல் நலத்தைப் பற்றி நான் மிகவும் பயந்துகொண்டிருப்பதாகச் சொல்லுங்கள். உங்களுக்கே தெரியும் — இன்னும் விசாரணைக்குரிய நாளைக்கூட நிர்ணயிக்கவில்லையே…….”

அவள் மிகுந்த சிரமத்தோடு பேசுகிறாள் என்பது நன்றாகத் தெரிந்தது. அவள் ஏதோ ஒரு மூலையைப் பார்த்தவாறே நிமிர்ந்து நின்றாள். குரல் மட்டும் தடுமாறியது. சோர்ந்து போய் தன் கண்ணிமைகளை மூடி, உதடுகளைக் கடித்துக்கொண்டாள். இறுகப் பிடித்து மடக்கிய அவளது கைவிரல்கள் சொடுக்கு விட்டுக் கொள்வது கூடத் தாய்க்குக் கேட்டது.

இந்த மாதிரியான கொந்தளிப்பைக் கண்டு, பெலகேயா மனம் புரிந்து கொண்டு அவளைத் துக்கத்தோடு தழுவியணைத்துக் கொண்டாள்.

”அடி, என் கண்ணே!’’ என்று அவள் மிருதுவாகச் சொன்னாள். அவன் தன்னைத் தவிர வேறு யார் பேச்சையுமே கேட்க மாட்டான் – எவர் பேச்சையும் கேட்க மாட்டான்”

அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் இறுகத் தழுவியவாறே மெளனமாக நின்றார்கள். பிறகு சாஷா தாயின் கரங்களைத் தன் தோள் மீதிருந்து மெதுவாக விலக்கிவிட்டு, நடுக்கத்துடன் சொன்னாள்:

“ஆமாம், நீங்கள் சொல்வது சரி. இதெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனம், என்னவோ உணர்ச்சியில்…………”

திடீரென அவள் அமைதி பெற்று சாவதானமாகச் சொன்னாள்:

”ரொம்ப சரி, வாருங்கள். நோயாளிக்கு உணவு கொடுக்கலாம்.”

அவள் இவானின் படுக்கையருகே சென்று அமர்ந்தபோது, அவனை நோக்கித் தலையை வலிக்கிறதா என்பதைப் பரிவோடு கேட்டுக்கொண்டாள்.

”அதிகம் இல்லை. எல்லாமே கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது. பலவீனமாய் இருக்கிறது’ என்று கூறிக்கொண்டே அவளது முன்னிலையில் ஏற்பட்ட உணர்ச்சிக் குழப்பத்தால் இன்னது செய்வதென்று தெரியாமல் போர்வையை மோவாய்க்குக் கீழாக இழுத்துவிட்டுக்கொண்டான் இவான். அமிதமான ஒளியைக் கண்டு கூசுவது மாதிரி கண்களைச் சுருக்கிக்கொண்டான். அவளது முன்னிலையில் சாப்பிடுவதற்கே அவனுக்கு வெட்கமாயிருக்கிறது என்பதை சாஷா உணர்ந்துகொண்டாள். எனவே அவள் எழுந்து வெளியே சென்றாள். இவான் எழுந்து உட்கார்ந்து அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

”அ…ழ… கி தான்” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

களிப்பு நிறைந்த நீலக்கண்களும் நெருக்கமாக வளர்ந்திருந்த சிறு பற்களும் ஆண்மை குடிபுகாத பாலியக் குரலும் பெற்றிருந்தான் அவன்.

”உனக்கு என்ன வயதாகிறது?’ என்று ஏதோ நினைத்தவாறே கேட்டாள் தாய்.

“பதினேழு.”

“உன் பெற்றோர்கள் எங்கே?”

“கிராமத்தில். பத்து வயதிலிருந்து நான் இங்குதான் இருக்கிறேன். பள்ளிக்கூடப் படிப்பை முடித்தவுடனேயே நான் நகருக்கு ஓடி வந்துவிட்டேன். உங்கள் பேரென்ன. தோழரே!”

படிக்க:
ஸ்டெர்லைட் போராட்டம் : கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இராஜு | காணொளி
மஞ்சள் சீருடை – புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி

இந்த வார்த்தையைச் சொல்லி அவளை அழைக்கும்போது அந்த வார்த்தை எப்போதும் அவள் உள்ளத்தைத் தொடும். அவள் குழப்பமடைவாள்.

”நீ ஏன் தெரிந்து கொள்ள விரும்புகிறாய்?” என்று புன்னகையோடு கேட்டாள் அவள்.

சிறிது நேரம் தத்தளித்துத் தயங்கிவிட்டு, அவன் விளக்கினான்.

“கேளுங்கள். எங்களோடு கல்விக் குழாத்தில் பங்கெடுத்து வந்த ஒரு மாணவன் – அதாவது எங்களுக்கு வகுப்பு நடத்திய ஒரு மாணவன் பாவெல் விலாசவின் தாயைப் பற்றி எங்களுக்கு எடுத்துக் கூறினான். மே தினக் கொண்டாட்டம் ஞாபகமிருக்கிறதா?”

தாய் தலையை அசைத்துக்கொண்டே தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கேட்டாள்.

அவன் தான் முதன்முதல் நமது கட்சியின் கொடியைப் பகிரங்கமாக ஏந்திப் பிடித்தவன் என்று அந்தப் பையன் பெருமையோடு கூறினான். அந்தப் பெருமையுணர்ச்சி தாயின் உள்ளத்திலும் எதிரொலி எழுப்பியது.

“நான் அப்போது இல்லை. அந்த மாதிரி நாங்களும் தனியாகக் கொண்டாட விரும்பினோம். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. நாங்கள் கொஞ்சம், பேர்தான் இருந்தோம். இருந்தாலும், வருகிற வருஷத்தில் நாங்கள் கட்டாயம் நடத்தித்தான் பார்க்கப் போகிறோம். பாருங்களேன்!”

எதிர்காலச் சம்பவங்களைக் கற்பனை செய்து பார்க்கும் உத்வேகத்தால் அவனுக்கு மூச்சுக்கூடத் திணறியது.

“சரி, நான் விலாசவின் தாயைப் பற்றித்தானே சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று கையிலிருந்த கரண்டியை ஆட்டிக்கொண்டே பேசத் தொடங்கினான் அவன்.” அவளும் அதன் பின்னர் கட்சியில் சேர்ந்துவிட்டாள். அது ஒரு பெரிய அதிசயம் என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்.”

தாய் வாய் திறந்து புன்னகை புரிந்தாள். அந்தப் பையனுடைய புகழுரையைக் கேட்பதில் அவளுக்கு ஆனந்தம் தோன்றியது. ஆனந்தத்துடன் கூச்சக் கலக்கமும் இருந்தது.

“நான்தான் விலாசவின் தாய் என்று அவள் அவனிடம் சொல்ல விரும்பினாள். என்றாலும் அந்த வார்த்தைகளை உள்ளடக்கிக்கொண்டு தனக்குத்தானே ஏளன பாவத்தோடு கூறிக்கொண்டாள்.

”நான் எவ்வளவு பெரிய முட்டாள்!”

திடீரென்று அவள் அவன் பக்கமாகக் குனிந்து உணர்ச்சிவசப்பட்டுப் பேசினாள்:

”இன்னும் கொஞ்சம் சாப்பிடு. நீ சீக்கிரமே குணமாகி எழுந்து நடமாட வேண்டும். நாம் எடுத்துக்கொண்ட கொள்கைப் போருக்காக!”

தெருக்கதவு திறந்தது. தெருவிலிருந்து குளிர்ந்த ஈரம் படிந்த இலையுதிர்காலக் காற்று உள்ளே வீசியது. செக்கச் சிவந்த கன்னத்தோடு சிரித்துக்கொண்டே சோபியா வாசலில் நின்று கொண்டிருப்பதை, தாய் கண்டாள்.

இந்த வேகத்தில் போனால் அவள் தன்னைத்தானே சீக்கிரம் முடித்துக்கொண்டுவிடுவாள். இதுதான் வீரம்! இந்த மாதிரி ஜனங்களோடு வாழ்வதும், அவர்களோடு உழைப்பதும் அவர்களது தோழர்களாயிருப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம், சாஷா!”

“நான் சொல்வதைக் கேள். துப்பறிபவர்கள் எல்லாம் என்னை மாப்பிள்ளை மாதிரி வட்டம் போட்டுத் திரிகிறார்கள். நான் சீக்கிரமே இங்கிருந்து போயாக வேண்டும்……. சரி. இவான், உனக்கு எப்படி இருக்கிறது? தேவலையா? நீலவ்னா, பாவெலிடமிருந்து ஏதாவது செய்தியுண்டா? சாஷா இங்கிருக்கிறாளா?”

சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டே ஏதேதோ கேள்விகள் கேட்டாள். அந்தக் கேள்விகளுக்கு அவள் பதிலை எதிர்நோக்கவில்லை. அவள் தாயையும் அந்தப் பையனையும் தனது சாம்பல் நிறக் கண்களால் பரிவோடு நோக்கித் தழுவினாள். தாய் அவளைக் கவனித்துப் பார்த்தவாறே தனக்குள்ளாக நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

“நானும் நல்லவர்களில் ஒருவனாகக் கருதப்படுகிறேன்”

மீண்டும் அவள் இவானின் பக்கமாக குனிந்து பார்த்துச் சொன்னாள்.

“சீக்கிரமே குணம் அடைந்து, எழுந்து நடமாடு, மகனே!

பிறகு அவள் சாப்பாட்டு அறைக்குள் சென்றாள். அங்கு சோபியா சாஷாவுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டாள்:

“அவள் இதற்குள்ளாகவே முன்னூறு பிரதிகள் எடுத்து முடித்துவிட்டாள். இந்த வேகத்தில் போனால் அவள் தன்னைத்தானே சீக்கிரம் முடித்துக்கொண்டுவிடுவாள். இதுதான் வீரம்! இந்த மாதிரி ஜனங்களோடு வாழ்வதும், அவர்களோடு உழைப்பதும் அவர்களது தோழர்களாயிருப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம், சாஷா!”

“ஆமாம்” என்று அந்தப் பெண் மெதுவாகச் சொன்னாள்.

அன்று மாலை அவர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது சோபியா தாயை நோக்கிப் பேசினாள்:

”நீங்கள் இன்னும் ஒருமுறை கிராமப்புறத்துக்குச் சென்று வரவேண்டும், நீலவ்னா.”

“ரொம்ப சரி. எப்பொழுது?’’

“மூன்று நாட்களுக்குள் உங்களுக்குப் புறப்பட்டுப் போகச் செளகரியப்படுமா?”

“நிச்சயமாக.”

“இந்தத் தடவை தபால் வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு வேறு மார்க்கமாக, நிகோல்ஸ்கி பிரதேசம் வழியாகப் போகவேண்டும்’’ என்று போதித்தான் நிகலாய். அவன் முகத்தைச் சுழித்து உம்மென்று இருந்தான். அந்த பாவம் அவனது வழக்கமாக அன்பு நிறைந்த அமைதி பாவத்தைக் கெடுத்துக்கொண்டிருந்தது.

“நிகோல்வஸ்கி வழியாகப் போவதென்றால் ரொம்ப தூரமாச்சே” என்றாள் தாய். ”அதிலும் எவ்வளவு தூரத்துக்குக் குதிரைகளை ஒட்டிச் செல்வதென்றால்……”

“உண்மையைச் சொல்வதென்றால், நான் இந்தப் பயணத்தை ஆதரிக்கவேயில்லை என்று பேசத் தொடங்கினான் நிகலாய். “அங்கு இப்போது நிலைமை சரியில்லை. பல பேரைக் கைது செய்திருக்கிறார்கள். யாரோ ஓர் உபாத்தியாயரைக் கூடக் கொண்டு போய்விட்டதாகத் தெரிகிறது. எனவே நாம் மிகுந்த ஜாக்கிரதையோடிருக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்தால்கூட நல்லதுதான்….”

“ஆனால் நாம் அவர்களுக்கு எந்தவிதத் தங்கு தடையுமின்றிப் பிரசுரங்களை அனுப்பியாக வேண்டுமே என்று மேஜை மீது விரலால் கொட்டிக்கொண்டே சொன்னாள் சோபியா. ”நீங்கள் போகப் பயப்படுகிறீர்களா, நீலவ்னா?” என்று அவள் திடீரெனக் கேட்டாள்.

அந்தச் செயல் தாயின் உள்ளத்தைச் சுட்டுவிட்டது. “நான் என்றாவது பயந்திருக்கிறேனா? முதல் தடவை போகும்போதே நான் பயப்படவில்லையே… இப்போது மட்டும், நீங்கள் இப்படித் திடீரென்று…” அவள் அந்த வாக்கியத்தை முடிக்காமலேயே தலையைக் குனிந்து கொண்டாள். நீ பயப்படுகிறாயா. உனக்குச் செளகரியமிருக்குமா. உன்னால் இந்தக் காரியத்தைச் செய்ய இயலுமா என்றெல்லாம் யாராவது அவளைக் கேட்கும்போது அவர்கள் அவளிடம் ஏதோ தயவு நாடிக் கேட்பதைப்போல் அவள் உணர்ந்தாள். மேலும் அந்தக் கேள்விகளாக அவர்கள் தம்முன் ஒருவரையொருவர் நடத்துகிற மாதிரி தன்னையும் நடத்தாமல் தன்னை ஒதுக்கி வைத்த மாதிரி வித்தியாசமாக நடத்துவதுபோலத் தாய்க்குத் தோன்றியது.

”நான் பயப்படுகிறேனா என்று ஏன் கேட்கிறீர்கள்?” என்று அடைத்துப்போன குரலில் கேட்டாள் அவள். “நீங்கள் மட்டும் ஒருவருக்கொருவர் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கக் காணோமே!”

நிகலாய் பதறிப் போய்த் தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றினாள். மீண்டும் போட்டுக்கொண்டு, தனது சகோதரியை ஆழ்ந்து நோக்கினான். அங்கு நிலவிய அமைதியைக் கண்டு தாய் குழம்பிப் போனாள். அவள் மேஜையை விட்டு எழுந்து நின்று குற்றம் செய்துவிட்டவளைப் போல் ஏதோ சொல்ல விரும்பினாள். ஆனால் அதற்குள் சோபியா அவளது கரத்தைப் பற்றிப் பிடித்து மெதுவாகக் கூறினாள்.

“என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் நான் இப்படி நடந்து கொள்ளமாட்டேன்”

இந்த வார்த்தையைக் கேட்டதும் தாயின் முகத்தில் புன்னகை அரும்பியது. சில நிமிஷ நேரங்களில் மீண்டும் அவர்கள் மூவரும் அந்தப் பயணத்தைப் பற்றி உற்சாகத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம் | வாஞ்சிநாதன் உரை

மிழகத்தில் செயல்பட்டுவரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் 15-ஆம் ஆண்டு விழா கடந்த டிசம்பர் 16 அன்று மதுரையில் நடைபெற்றது.

இந்திய ஜனநாயகத்திற்குப் பார்ப்பன இந்து மதவெறி பாசிச சக்திகளால் பேராபத்து ஏற்பட்டுள்ள இந்தச்சூழலில் அறிவுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மக்களின் வாழ்வுரிமை காக்க என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அமைந்திருந்தது இக்கருத்தரங்கம்.

படிக்க:
உலகில் முதல் பொருளாதார நிபுணர் யார் ? வீட்டுப் பாடங்களுடன் பொருளாதாரம் கற்போம் 4
எழுபது ஆண்டுகள் கழித்தும் தலித் மக்களுக்கு விவசாய நிலமில்லை

“தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம்” – மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை.

அவரது பேச்சின் முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

தொகுப்பு: வினவு களச் செய்தியாளர்கள்.

புயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ! ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட்

டந்த டிசம்பர் 17-ம்தேதி (2018) ஆந்திரா – காக்கிநாடாவை  பெய்ட்டி புயல் தாக்கியது. தமிழகத்தில் வந்த கஜாவின் அளவிற்கு இந்த புயல் பாதிப்போ, பரபரப்போ  ஏற்படுத்தவில்லை என்பதால் ஓரிரு நாட்கள் மட்டுமே செய்தியாக வந்து மறைந்து விட்டது.

இயற்கைப் பேரிடரில் புயலோ, மழையோ எதுவாகினும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் வறிய மக்கள்தான். இந்த விதிக்கு காக்கிநாடாவின் பர்லோபேட்டை மக்களும் தப்பவில்லை. புயல் ஓய்ந்து பத்து நாட்களுக்கு மேல் ஆனாலும் அவர்களின் துயரம் நீங்கிவிடவில்லை.

பர்லோபேட்டை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசிக்கின்றன. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மதவேறுபாடின்றி ஒன்றாய் வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்கள் அனைவரும் நகர்ப்புறத்தில் கூலிவேலை செய்பவர்கள். பட்டறை  தொழில்,  வீட்டு வேலைகள் செய்து வாழ்க்கையை நடத்தி வரக்கூடியவர்கள்.

பெரும்பாலானோர் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர்கள் என்பதால்  காக்கிநாடா ஒரு தொழிற்பேட்டை பகுதி என்றாலும்கூட ஒரு ஒப்பந்த தொழிலாளியாகக் கூட இவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதில்லை. இவர்களுக்கு சொந்த வீடு என்பது நிறைவேறாத பெருங்கனவுதான்.

இவர்கள் குடியிருக்கும் இந்தப்பகுதி இவர்களுக்கு சொந்தமானது இல்லை. காங்கிரசு அரசால் இரண்டு முறையும், சந்திரபாபு நாயுடுவின் அரசால் ஒரு முறையும் விரட்டியடிக்கப்பட்ட ஆந்திர வாழ் குடியுரிமை பெற்ற நாடோடிகள்.

தற்போது இவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்தார்கள். அந்த இடம் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம்.  முன்னதாக ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு “இந்த இடத்தில் குடிசை மாற்று வாரியம் வரப்போகிறது. இடத்தை காலி செய்யுங்கள். உங்களுக்கும் வீடு கொடுக்கிறோம்” என்று சொல்லி அவர்களை அருகிலேயே குடியமர்த்தினார்கள்.

முதல் குடியிருப்பு.

மாற்று குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஆளும் கட்சி மற்றும் அதிகாரிகளின் உறவினர்களுக்கு அதனை கொடுத்து விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை.  பிறகு சில ஆண்டுகள் கழித்து இந்த இடத்திலும் வீடு வருகிறது என்று சொல்லி அம்மக்களை விரட்டி விட்டார்கள்.

அந்தசமயம் ஆளும் வர்க்கத்தின் ஆசை வார்த்தையை நம்பி எப்படியும் இந்த முறை வீடு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் மூன்றாவதாக மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்தார்கள். அந்த குடியிருப்பு கட்டி முடியும் தருவாயில் இருக்கிறது. இன்னும் அவர்களுக்கு வீடு ஒதுக்குவது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

இரண்டாவது குடியிருப்பு.

இந்த சூழலில் மேலும் இடம் வேண்டும் என்று சொல்லி கிட்டதட்ட எட்டு ஆண்டுகளாக வாழ்ந்த இடத்தையும் காலி செய்ய சொல்லி விரட்டி விட்டார்கள். அப்படி விரட்டப்பட்டு நான்காவதாக இந்த இடத்திற்கு வந்து 6 மாதம் ஆகிறது. மூன்றாம் கட்ட விரிவாக்கத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் இம்மக்கள் எதிர்கொண்ட இயற்கை பேரிடர்களின் ஆபத்துகள் ஏராளம்.

சந்திரபாபு நாயுடுவின் அரசு அம்மக்களுக்கு எந்த  அடிப்படை வசதியும் ஏற்படுத்திக் கொடுக்காமல் வெறுமனே ஒரு இடத்தை மட்டும் ஒதுக்கி அதில் குடிசை போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டதோடு அவர்கள் கடமை முடிந்து விட்டது. அந்த மக்களில் பலர் குடிசை அமைத்து குடியேறி விட்டார்கள். சிலர் இப்பொழுதுதான் குடிசை போட்டு வருகிறார்கள். அதற்குள் இந்த பெய்ட்டி புயல் அனைத்தையும் காலி செய்து விட்டது என்று கதறும் மக்களுக்கு ஆதரவாக இதுவரை யாரும் இல்லை.

சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு 5 புயல்கள் – மழை, இரண்டு முறை  தீ விபத்தை சந்தித்து இருக்கிறார்கள். “ஒவ்வொரு முறையும் மொத்தமும் அழிஞ்சி போயிடும். அதுல மிஞ்சின பாத்திரம், துணிமணி… எது எடுத்து வச்சாலும் அடுத்த புயலுக்கு அதுவும் போயிடுது. அழிவுன்னு எத சொல்லுறது?” என்கிறார்கள் விரக்தியாக.

“எங்களைப் பொருத்த வரைக்கும் புயல் – மழை என்பது நாங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையில் கொஞ்சம் கூடுதல் அவ்வளவுதான்” என்கிறார்கள்.  சில ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தண்ணீர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். தற்போதுதான் அங்கு இருக்கக்கூடிய நியூ டெமாக்ரசி எனும் இடதுசாரி கட்சி அமைப்பின் உதவியோடு போராடி பெற்றிருக்கிறார்கள்.

தற்போதுதான் மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நாட்டின் குடிமக்கள் எனும் உரிமையை வழங்கும் ரேசன் கார்டு முதல் ஆதார் கார்டு வரை அனைத்தும் இருந்தும் இவர்கள் அகதியைவிட மிகமோசமான முறையில் நடத்தப்படுகிறார்கள்.

இந்த பகுதிக்கு செல்ல இருப்பதோ ஒரேயொரு மண் ரோடு. அந்த சாலையிலும் கட்டிடம் கட்ட தேவையான பொருட்களை கொண்டு வரும் லாரிகள் குறுக்கும் நெடுக்குமாக சென்று வருவதால் மழைக்காலத்தில் சேறும் சகதியுமாகவும், வெயிலில் புழுதிக் காடாகவும் ஆகி விடுகிறது.

இந்த தாய்மார்களின் அவலம் நம் காதுகளை வண்டாக குடைந்தெடுக்கிறது. “குடிசைக்கு அருகாமையில் பொட்டல் காடு இருப்பதால் நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். பாம்பு தொல்லை, காட்டு எலி, சிறு நரி என்று எப்பொழுதும் பயத்தோடு வாழ வேண்டி உள்ளது. இதை விட்டு ஒழியலாம்னா எங்க போறது?  அரசும் வீடு தரதில்ல. அப்படியே தருவதாக இருந்தால் ரூ 50,000 பணம் கேக்குது.  நாங்க இந்த நிலையில இருக்கும்போது எப்படி தர முடியும் சொல்லுங்க?

“ஆண்கள் வேலைக்கு போறதுன்னா பல கிலோ மீட்டர் போக வேண்டி இருக்கு. விடிய விடிய எழுந்து ஓடினாதான் உண்டு. பேருந்து வசதியும் இல்லை.  இந்த பகுதியில 2, 3 பேரிடம் பைக்கு இருந்தாலே பெரிய விஷயம்”

இங்க எங்கயும் பக்கத்துல ஆஸ்பித்திரி இல்ல. திடீர்னு உடம்பு முடியலனா, அரசு ஆஸ்பித்திரிக்கு போயிடுவோம். ரொம்ப அவசரம்னா தோள்ல தூக்கிட்டு போயி ஆட்டோ புடிச்சிப்போம். சாதாரண காய்ச்சல்னா மாத்திர வாங்கி போட்டுக்குவோம்.

எங்க பசங்கள அரசு பள்ளிகூடத்துல சேர்த்திருக்கோம். எல்லாரையும்போல பிள்ளைகள தனியார் பள்ளிகூடத்துல சேர்க்க எங்களுக்கும் ஆசதான்.. ஆனா சோத்துக்கே வழி இல்லாத போது எப்படி தனியார் பள்ளிகூடம் போக முடியும்? என்ற தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறார்கள்.

நரசிம்மசாமி (நடுவில் இருப்பவர்.)

இப்பகுதியில் வாழும் நரசிம்மசாமி  சொல்கிறார், “எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. கவர்மெண்ட் பள்ளி கூடத்துல படிக்கிறாங்க. நான் நாலாவது வரைக்கும் படிச்சிருக்கேன். மண் தோண்டுற கூலி வேலைக்கு போறேன்.  எனக்கு 500 ரூபா ஒரு நாள் கூலி. அதுல 50 ரூபா மேஸ்திரி புடிப்பாரு. 450 ரூபாதான். அதுல150 ரூபாய் சரக்கு அடிச்சிடுவேன். இல்லனா அடுத்த நாள் வேலைக்கு போக முடியாது.

என்னோட மனைவி வீட்டு வேலைக்கு போயிட்டு வாறாங்க.. ஒரு வீட்டுக்கு பத்து பாத்திரம் தேய்க்க மாசம் 300 ரூபா. ஒரு வீட்டுக்குத்தான் போவா. இன்னும் ஒரு சிலர் இரண்டு வீட்டுக்கு வேலைக்கு போறாங்க. அதுலதான் இங்க இருக்கவங்களோட வாழ்க்கையே  இருக்கு.

படிக்க:
வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : உங்கள் விருப்பம் !
கஜா புயல் நிவாரணத்திற்குப் போராடிய இனியவனை வேட்டையாடும் போலீசு !

இங்க வயசான பெண்கள் அதிகம். அவங்களுக்கு மாசம் 1000 ரூபா பென்சன் பணம் வருது. அதுவும் சரியா வரதில்லை. புதுப்பிக்கனும். அதுக்கு 50,100 ன்னு  செலவாகும். போறது தொலைவு, போனாலும் காத்து கிடக்கனும். அதெல்லாம் இந்த வயசான காலத்துல முடியுமா? வீட்டுலயே இருந்துடுறாங்க. அதை கேன்சல் பண்ணிடுறானுங்க.

இந்த நெலமையில வேற வாடகை வீட்டுக்கு போகலாம்னா இந்த வருமானத்த வச்சி என்ன பண்ண முடியும். அதான் எந்த புயல் மழை வெள்ளம் வந்தாலும் இங்கயே இருந்துக்கிறோம்.

நியூ டெமாக்ரசி கட்சியின் AIKMS -அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கொடியோடு பகுதி வாழ் மக்கள்!

இதுவரைக்கு எங்கள ஆண்ட காங்கிரசும், டி.எஸ்.ஆரும் எதுவும் பண்ணிடல. மோடி வந்த பிறகு மேல நல்லா இருக்கதா சொல்றாங்க. ஆனா எங்களுக்குத்தான் எதுவும் வந்த சேரல. எதுனாலும் போராட வேண்டி இருக்கு.

பக்கத்துலதான் இருக்கு காக்கிநாடா துறைமுகம்.  அதை தனியார்கிட்ட கொடுத்துட்டாங்க. அவனுங்களும் அடிக்கடி இங்க வந்து இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. நீங்க கெளம்புங்கன்னு சொல்லி மிரட்டுறான். நாங்க அதுக்கு எதிரா போராடுனதால இப்ப அமைதியா இருக்கானுங்க.

“ஒரு பக்கம் அரசு, இன்னொரு பக்கம் தனியார். கூடுதலா இயற்கைப் பேரிடர்னு எல்லாம் சேர்ந்து எங்கள விடாம துரத்தினா நாங்க எங்கதான் போறது?

படம், செய்தி: வினவு செய்தியாளர்கள்,
ஆந்திரா, காக்கிநாடாவில் இருந்து..

வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : உங்கள் விருப்பம் !

0

டிசம்பர் 2018-இல் துவங்கப்பட்ட வாசகர் புகைப்படம் பகுதியில் நண்பர்கள் பலரும் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். இதுவரை கொடுக்கப்பட்ட மூன்று தலைப்புகளில் – காத்திருப்பு, உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை, ஆட்டோ இலக்கியம் – சிறப்பாக தங்களது படைப்புகளை அனுப்பித் தந்த வாசகர்களுக்கு நன்றி! மற்ற நண்பர்களும் வாசகர் புகைப்படம் பகுதியில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களும் அதிகம் பங்கேற்பின் நல்லது.

இந்த மாதத்தில் மூன்று வாரங்களுக்கு நாங்கள் தந்த தலைப்பில் புகைப்படம் எடுத்த நண்பர்கள் இனி ஒவ்வொரு மாதத்திலும் கடைசி வாரத்தில் உங்களுக்கு விருப்பமுள்ள ஒரு தலைப்பில் புகைப்படங்களை எடுத்து அனுப்பலாம். அந்த தலைப்பு ஏதாவது ஒரு வகையில் சமூக அக்கறைக்குரியதாக இருக்க வேண்டும். அவ்வளவே.

இந்தவார வாசகர் புகைப்படம் பகுதியின் மற்றுமொரு சிறப்பு இது இந்த ஆண்டின் கடைசி வாசகர் புகைப்படம் பகுதியுமாகும். நீங்கள் எடுக்கும் புகைப்படத்தை அனுப்புகையில் அதற்கு கவிதை போன்றதொரு வரிகளையும் சேர்த்து அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

புகைப்படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 1-1-2019

vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது
வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள்.
கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!
தெரிவு செய்யப்படும் படங்கள் வரும் வார இறுதியில் வெளியிடப்படும்.
அடுத்த வாரம் இன்னொரு தலைப்பு!

காத்திருக்கிறோம். நன்றி!

நட்புடன்
வினவு


புகைப்படம் எடுப்பது தொடர்பான சில ஆலோசனைகள்:

♦ எந்த ஒரு இடம்/கருத்திற்காக புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் அதன் முழுப் பரிமாணத்தை உணர்த்தும் வகையில் wild ஆக புகைப்படம் ஒன்று எடுக்க முயற்சிக்க வேண்டும். (உ-ம்) மார்க்கெட் கடைவீதியை மையப்படுத்தி கதை சொல்லப்போகிறோம் என்றால், அதன் தெரு அமைப்பு, வாடிக்கையாளர்களின் அடர்த்தி ஆகியவற்றை பதிவு செய்வது.

♦ தனிநபரை புகைப்படம் எடுக்கும் பொழுது, அந்த நபரை மையமாக வைத்து புகைப்படம் எடுப்பதை விட, அந்த நபர் வலது / இடது ஓரத்தில் இருப்பது போல எடுக்க வேண்டும். இதன் மூலம் அப்படத்தில் நிறைய Details கொண்டு வர முடியும். (உ-ம்) வியாபாரியை படம் எடுக்கும்பொழுது, அவரது முகம் இடது வலது ஓரத்தில் இருந்தால் மீதமுள்ள இடத்தில் அவரது கடை மற்றும் வாடிக்கையாளர்களின் நடமாட்டம் பதிவாகும்.

♦ எந்த ஒரு இடத்திற்கு சென்றதும் எடுத்தவுடன் புகைப்படம் எடுத்துத் தள்ளிவிடக்கூடாது. முதலில் அந்த இடத்தை அவதானிக்க வேண்டும். கண்ணால் முதலில் காட்சிகளை வகைப்படுத்திக்கொண்டு எந்த Frame இல் எடுக்கப் போகிறோம் என்பதை கூடுமான வரையில் முன்னரே தீர்மானித்து விட்டு அதன்பின்னர் புகைப்படங்களை எடுக்கப் பழக வேண்டும்.

♦ ஏற்கெனவே பல முறை ஒரு இடத்தைப் பலரும் பல விதமாக புகைப்படம் எடுத்திருந்தாலும் அவ்விடத்தில் நாம் புதுமையாக சில படங்களை எடுக்க முடியும். அல்லது அங்கேயே இதுவரை யாரும் செல்லாத புதிய இடம், அல்லது புதிய கோணம் நமக்கு தெரிய வரும். இதற்கு நாம் தேடி அலைய வேண்டும். மெனக்கெட வேண்டும். (உ-ம்) ரெங்கநாதன் தெருவைப் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில், குறுக்கு நெடுக்காக சிலமுறை சென்று வந்தால் புதிய கோணம் கட்டாயம் கிடைக்கும்.

♦ புகைப்படம் எடுப்பதில் நேரம் மிக முக்கியமானது. காலை 6 – 9 மற்றும் மாலை 4 முதல் இருட்டும் வரையிலான நேரம் பொருத்தமானது. கண்ணில் காண்பதை அப்படியே காமிராவில் கொண்டு வர முடியும். குறிப்பான சில இடங்களுக்கு இந்த நேரம் மாறுபடலாம். (உ-ம்) தி.நகர் கடை வீதியின் பிரம்மாண்டத்தை அதன் பளபளப்பை காட்ட வேண்டுமென்றால் இரவு 7 மணிக்கு மேல் எடுப்பதே பொருத்தமானது.

♦ ஒரு கதைக்கருவைத் தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ற படங்களை எடுக்கும் பொழுது, அதன் ஒட்டுமொத்த கதையையும் ஒரே படத்தில் சொல்வதைப்போல First Photo அமைய வேண்டும். (உ-ம்) காசிமேடு மீன் சந்தையை படமாக்குவது நமது கதைக்கரு என்றால், கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் படகில் நின்று கொண்டு கடற்கரையில் காணும் மக்கள் அடர்த்தியைக் காட்சிப் படுத்துவது.

♦ எதையும் நேரடியாக சொல்ல வேண்டும் என்பதில்லை. இதே இடத்தை இதற்கு முன்னர் பலரும் பலவிதமாக எடுத்த புகைப்படங்களைப் போலவே நாமும் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை. புதிய கோணத்தில் முயற்சிக்க வேண்டும்.

♦ சில்லவுட் (உருவங்கள் மட்டுமே தெரிவது போன்று) படங்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். எல்லா படங்களும் கலராக இருக்க வேண்டுமென்பதில்லை. உள்ளடக்கத்தைப் பொருத்து கருப்பு வெள்ளைப் படங்களாக இருப்பது சிறப்பு.

♦ இணையத்தில் புகைப்படக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் புகைப்படங்களை பார்க்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்தையும் ரசித்து உள்வாங்க வேண்டும். இந்தப் பயிற்சிதான் புதிய இடத்தில் புதிய கோணத்தில் புகைப்படங்களை எடுக்க நமக்கு கை கொடுக்கும்.

♦ எங்கும் எப்பொழுதும் விதியை மீற வேண்டும் (Break The Rule) . கடை வீதி என்றால் சடங்குத்தனமாக இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. Frame களை மாற்றிப் போட்டு முயற்சித்துப் பார்க்க வேண்டும்.

♦ சில இடங்களில் staging set பண்ணி புகைப்படம் எடுக்கலாம். அங்கு இருக்கும் நபரை நாம் சொல்லும் விதமாக நிற்க வைத்தோ, நமது frame க்குள் வர வேண்டிய பொருட்களை மாற்றியமைத்தோ எடுக்கலாம். தவறில்லை.

♦ போராட்டக்களத்தில் புகைப்படம் எடுக்கும்பொழுது, இந்த விதியை எல்லாம் பயன்படுத்திப் பார்க்க போகிறேன் என்று குறுக்கும் நெடுக்குமாக அலையக் கூடாது. போலீசார் குறுக்கீடு செய்ய நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். ஆத்திரத்தில் காமிராவைத் தட்டிவிட்டாலோ, அல்லது புகைப்படம் எடுக்கக்கூடாதென்று தடுத்துவிட்டாலோ நமது நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற நேரங்களில் தூரத்தில் நின்று கொண்டே ஆவணப்படுத்தும் நோக்கில் ஒன்றிரண்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், அங்குள்ள நிலைமையை கணித்து பின்னர் தேவையான கோணத்தில் எடுக்கலாம். ஆனால், மிக முக்கியமாக மொபைலில் புகைப்படம் எடுக்கிறோம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். நமது உடல்மொழி அவற்றை படம்பிடிக்கிறோம் என்று காட்டிக்கொள்ளாத வகையில் சாமர்த்தியமாக புகைப்படம் எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

♦ சில இடங்களில், சிலரை புகைப்படம் எடுக்கும் பொழுது அவர்களது முன் அனுமதி பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும். நேர்காணலுக்காக செல்லும் பொழுது, எடுத்தவுடன் அவர்களை புகைப்படம் எடுத்துவிடக்கூடாது. முதலில் அவர்களுடன் நட்புமுறையில் பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டால் மறுப்பின்றி ஒப்புதல் தருவார்கள். நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும்.

♦ பாதிக்கப்பட்ட மக்களிடமோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையையொட்டி செல்லுமிடங்களிலும் மக்களிடம் மிகவும் அனுசரணையோடும் அமைதியாகவும் அணுக வேண்டும். நான் உங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தானே வந்திருக்கிறேன் என்ற ரீதியில் மிதப்பாக அணுகக் கூடாது. (உ-ம்: வெள்ளம் புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை அணுகுவது).


புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

உடம்ப வருத்தி உழைக்கிறவனுக்குத்தான் நல்ல மனசு இருக்கும் !

0

“ஒரு ஜூஸ் விலை இருபது ரூபா, நீங்க குடிக்காம பிள்ளைக்கி மட்டும் வாங்கி குடுக்குறதால விலை பத்துருவா… அம்மா அப்பா காசுல குடிக்கிற வரைக்கும் பிள்ளைங்க பாதி ஜூஸ்ச குடிக்கட்டும்… சம்பாரிக்க ஆரம்பிச்சதும் முழுசா வாங்கி குடிக்கட்டும்.” என்றார் ரோட்டோரம் தள்ளுவண்டியில் ஜூஸ்கடை நடத்தும் ராமச்சந்திரன்.

கையில காசு இருக்குண்ணே நீங்க முழுசாவே குடுங்க. எனக்கு ஜூஸ் ஒத்துக்காது அதான் வேண்டான்னு சொன்னேன்.

“ஜூஸ் விலைய கேக்கும் விதமே தெரிஞ்சுரும் யாருக்கு பாதி விலையில கொடுக்கனும் யாருக்கு முழு விலையில கொடுக்கனுமுன்னு… இத்தன வருச வியாபாரத்துல இதக்கூட கத்துக்கலன்னா எப்படி.

பெத்தவங்க.. கையில பணம் இருக்கா இல்லையான்னு தெரியாமெ பிள்ளைங்க கை நீட்டிட்டு நின்னுடும். சங்கடப்பட்டு பெத்தவங்க பைய துழாவிட்டு நிப்பாங்க.. விலைவாசி பத்தி குழந்தைக்கி தெரியுமா..? ஆசைபட்டதெல்லாம் சாப்பிட நெனைப்பாங்க. வெவரம் தெரிஞ்சா உலகம் புரிஞ்சிரும் அதுவரைக்கும் குழந்தைக்கி பாதிவிலை.”

ஹைதராபாத்தை பிறப்பிடமாகக் கொண்ட ராமச்சந்திரனுக்கு தென்மாவட்டத்து பரமக்குடிதான் சொந்த ஊரு. முப்பது வயசுல ஐதராபாத் வாழ்க்கைக்கு விடை கொடுத்தவர் அதன் பிறகு சென்னையில தள்ளுவண்டி கடை போட்டு பயணத்தை தொடங்கினார். இப்ப எழுவத்தஞ்சு வயசு கடந்தபின்னும் சோர்வடையா முகமலர்சியும் சுறுசுறுப்பும் நம்மை வெக்கப்படச் செய்யுங்கறதுல சந்தேகமில்ல.

“வாசமில்லா பூக்கடையுமில்ல.. ஈயில்லா ஜூஸ்கடையிமில்ல…” ன்னு யோசித்தேன். ஆனா இந்த ஜூஸ் கடையின் அடையாளமா தள்ளுவண்டி பக்கவாட்டுல கூட ஒரு ஈயக் காணோம்.

அவரும் அவர் தள்ளுவண்டி கடையும் எந்த பிசுபிசுப்பும் இல்லாமல் படு சுத்தமாக உழைப்பின் சாட்சியாக இருந்தது. கையிருப்பை புரிந்து கொண்டு மனிததன்மையோடு அவர் நடந்து கொண்ட விதம் கொஞ்ச நேரம் அவரிடம் பேசினால் இளைப்பாறுவதற்கு சமம் என தோன்றியது.

உங்க நல்ல மனசு வேற யாருக்கும் வாராதுண்ணே.

“அப்புடியெல்லாம் இல்லம்மா.. இரக்க குணம், நல்ல மனசெல்லாம் ஒடம்ப வருத்தி ஒழைக்கிற எல்லார்டையும் இருக்கு. அவங்களுக்கு தெரியும் பத்துரூவா சம்பாதிக்க எத்தன பாடுபடனுமுன்னு. இப்ப வியாபார ஒலகமா போச்சு… அதனால ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம் ரெண்டு இலவசம்னு சனங்க மத்தியில இருந்த நல்ல மனச வியாபாரமா ஆக்கிப்புட்டாங்க.”

அடுத்து நான் வாய் திறக்கும் நேரம் பாத்து வேரு ஒருவர் வந்துட்டார்… வந்தவர் நண்பர் போலிருக்கு அவருடன் நெருக்கமாக பேசினார். ஜூசை குடித்துக் கொண்டே நலம் விசாரிப்பில் தொடங்கி அரசியல் வரை நீண்டது அவர்கள் பேச்சு.

வந்தவர் “என்னண்ணே நல்லாருக்கிங்களா. எடம் தரமாட்டேன்னு சொன்ன ஒங்காளு மூக்கறுக்குற மாறி கலைஞருக்கு எப்படி மெரினாவுல எடம் வாங்குனம் பாத்திங்கலா?”

“எங்காளுன்னு சொல்லாதிங்க தம்பி. நானு அ.தி.மு.க காரன் கெடையாது ஏஞ்சின்னம் ரெட்டை இலை அவ்ளதான்… இத பல தடவ உங்களுக்கு சொல்லிட்டேன் நான் எம்.ஜி.ஆர் ரசிகன். அதனால அந்த சின்னத்துக்கு ஓட்டு போடுறேன். கட்சி கிட்சியெல்லாம் எதுவும் கிடையாது.”

நான் போனது ஆதார் அட்டைக்கான அவசர வேலையா. சும்மாவே வாய் பாக்குற பழக்கம் எனக்கு. பேச்சு சுவாரஸ்யமா இருக்கவும் அவசர வேலைய அடுத்த நாள் தள்ளி வச்சுட்டு அங்கேயே பட்டறைய போட்டுட்டேன்.

படிக்க:
♦ சென்னையில் மோர் விற்கும் ஒரிசாவின் அமர் பிரசாத்
♦ சாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் !

“தம்பி! உங்களப்போல நானும் கலைஞருக்கு மெரினால எடம் கெடைக்கனும்ன்னு ஆசப்பட்டேன். அதுக்காக அவரு இறந்து போயிட்டாருன்னு  ஒசத்தியா ஒத்துகிட்டேன்னு அர்தம் கெடையாது. கலைஞர் மேலையும் எனக்கு நெறையா கோபம் இருக்கு. “தேனு எடுக்குறவன் பொறங்கைய நக்காமெ இருக்க மாட்டான்”. அதுவும் அரசியல்ல வாய்ப்பு கெடைச்சா சொல்லவே வேண்டாம் மொழங்கை வரைக்கும் நக்குவாய்ங்க. இருந்தாலும் கலைஞர் அறிவும் அனுபவமும் வயசும் மக்களுக்கு கொஞ்சம் செஞ்சுருக்குன்னு ஒத்துக்கிட்டுதான் ஆகனும்.”

“எல்லாரையும் போல நீங்களும் அரசியல் ஒரு சாக்கடன்னு சொல்றீங்க அப்புடிதாணே?”

“அரசியல்வாதிங்களதான் சுத்தமில்லன்னு சொல்றேன் தம்பி. அரசியல்ல எது ஒழுங்கா நடக்குது. நான் போட்ட ‘முதல் ஓட்டே’ கள்ள ஓட்டுதான். அதுவும் அடுத்த மாநிலத்துல. இதுக்கு என்னா சொல்றீங்க.”

அடுத்து கேட்க விடாமல் அலைபேசி அவரை அழைத்தது…

“அண்ணே முக்கியமான காலு.. அப்பரம் பாக்கலாம் ”என சொல்லிட்டு வந்தவர் பொசுக்குன்னு கிளம்பிட்டார்.

டிவி விவாதத்துல கோர்வையா பேசும் போது மைக்க நிறுத்திட்டாப் போல ஆச்சு ஜூஸ் கடைக்காரருக்கு. அவங்க பேச்ச கேட்ட எனக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது போல ஆச்சு.

என்ன செய்ய! விட்ட எடத்துலேருந்து தொடங்குனேன்.

“அது எப்படிண்ணே கட்சி கொள்கை எதுவும் இல்லாமெ ரெட்டலைக்கி ஓட்டு போடும் நீங்க அடுத்த மாநிலத்துல எந்த அடிப்படையில ஓட்டு போட்டிங்க.”

“அங்கையும் எம்.ஜி.ஆர் வச்சுதான் ஓட்டு போட்டேன்.”

“வெளங்குறா மாறி சொல்லுங்கண்ணே.”

“ஹைதராபாத்துல என்.டி.ஆர்- தான் முதலமைச்சரா இருந்தாரு. என்.டி. ராமராவும் நம்ம எம்.ஜி.ஆர் –ரும் தோஸ்து. எம்.ஜி.ஆரு-க்கு தோஸ்துன்னா நமக்கும் தோஸ்த்து. உண்மைய சொல்லனுன்னா விசுவாசமான ரசிகனா இருந்தேன். இப்ப விசுவாசம் எங்க போயி நிக்குதுன்னா ரெட்டலை சின்னத்த எந்த நாயி வச்சுருந்தாலும் அதுக்கு ஓட்டு போட்டு தொலைவோன்னு வந்துருச்சு.”

“என்னண்ணே இப்படி பேசுறீங்க?”

“நீங்களே பாக்கிறிங்க.., அந்தம்மா செத்த பிறகு அ.தி.மு.க -காரன் எந்தன தினுசுல அடிச்சுக்கிறான்னு. இவனுங்களுக்கு கட்சி விசுவாசமெல்லாம் கெடையாது. நம்ம போல மக்களுக்குதான் கட்சி, விசுவாசம் எல்லாம் இருக்கு.

ரசிகர் கூட்டத்தாலதான் அ.தி.மு.க கட்சியே தமிழ் நாட்டுல காலு ஊனுச்சு. அத பாத்துட்டு அடுத்தடுத்து எல்லாரும் சினுமாவுல இருந்தே வர ஆரம்பிச்சுட்டானுங்க. கொள்கை அரசியல் பேசி ஓட்டு வாங்கறத விட சினிமாவுல ஆடிப்பாடி வசனம் போசி சேத்து வச்சுருக்கும் ரசிகர்கள்ட ஈசியா ஓட்டு வாங்கிடலாமுன்னு நெனைக்கிறானுங்க.”

“நீங்க சொல்றத பாத்தா எம்.ஜி.ஆர்., தொடங்கி ரஜினி கமலு வரைக்கும் மக்கள ஆடிப்பாடி மயக்கிறலாங்கற நெனப்புல வாராப் போல சொல்றீங்க.”

“சினிமாவும் அரசியலும் எப்புடி கலந்துருக்குன்னு நான் பொதுவா சொன்னேன். நீங்க பேரோட சொல்றீங்க அவ்வளவுதான். ஆனா இனிமே இப்படியான அரசியலெல்லாம் செல்லுபடி ஆகதுன்னுதான் நெனைக்கிறேன்.”

“அண்ணே நீங்க கோபமும் விரக்தியும் கலந்து பேசுறாப்போல இருக்கு.”

“பின்னே என்னம்மா இந்த ஜூஸ் கடைய வைக்க ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போட்றாங்க. தள்ளுவண்டி கடையின்னு மாநகராட்சியில பதிஞ்சுருக்கனும். கடை சாமானெல்லாம் சுத்தபத்தமா இருக்குன்னு தர சான்றிதழ் வாங்கியிருக்கனும். வரி கட்டனும். இதுக்கே இத்தன கட்டுப்பாடு இருக்கு அதுக்கு உட்பட்டு நடக்குறேன். இதப்பாருங்க தர சான்றிதழ் எல்லாம் வச்சுருக்கேன்.

ரோட்டு ஓரத்து தள்ளுவண்டி கடைக்காரன் நானு, எனக்கான விதிமுறைகள ஒழுங்கா கடைபிடிக்கிறேன் நேர்மையா நடந்துக்கிறேன். என்னப்போல பல லட்சம் மக்கள ஆளப்போற அவனுகளுக்கு நேர்மை இருக்கனுன்னு நெனைக்கிறது தப்பா.”

“சரிண்ணே இப்ப சொல்லுங்க யாரு வந்தா எல்லாம் சரியாருக்கும்னு நெனைக்கிறிங்க?”

“நீ வேறம்மா என் வாயப் புடுங்குற… வாதத்துக்காக நானு எதிர் பேச்சு பேசலம்மா. நீங்க மக்கள நெனச்சு பாருங்க இவங்க வந்தா நம்ம நெலம மாறிடாதா..? அவங்க வந்தா நம்ம நெலம மாறிடாதான்னு மாத்தி மாத்தி ஓட்ட போட்டு ஜெயிக்க வைக்கிறாங்க. வர்ரவங்க எல்லாருமே சனங்களுக்கு நம்பிக்க துரோகம் செய்றாங்க. இதுல யார நான் கைகாட்றது..?”


– சரசம்மா

போராடு நல்லதே நடக்கும் – ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள் | பாகம் 1

”ஆட்டோ இலக்கியம்” என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களின் தொகுப்பு .

வெள்ளை என்பது அழகல்ல ஒரு நிறம்! ஆங்கிலம் என்பது அறிவல்ல ஒரு மொழி!
தமிழ்நாடு – மனதால் இணைவோம்!!

இடம்: திருச்சி. படம் : செழியன்

போராடு ! நல்லதே நடக்கும்!!
இடம்: திருச்சி. படம் : செழியன்.

எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே!
விவசாயம் காப்போம்!!
இடம்: முனிசிபல் காலனி மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே, தஞ்சை. படங்கள் : தமிழினி

இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழித்துவிடும்!
இன்று முயன்றாலும் வென்று காட்டலாம்!
இடம்: திருச்சி. படம் : செழியன்

உன்னை கருவில் சுமந்தவளையும் உன் கருவை சுமப்பவளையும் கல்லறை செல்லும் வரை நேசி! (ஆட்டோவில் இடம்பெற்ற வாசகம்)
இடம்: மானோஜிபட்டி, தஞ்சை. படம் : தமிழினி

குடிகாரன் சவகாசம் குலநாசம்!
தாய் தந்தை துணை! உழைத்தால் மட்டுமே வெற்றி நிச்சயம்!!
இடம்: பாலாஜிநகர் மற்றும் அம்மாபேட்டை, தஞ்சை. படம் : தமிழினி

பேசினால் நல்லதையே பேசுங்கள் அல்லது மௌனமாக இருங்கள்!!
ஆட்டோவில் கேப்டன் பெயர் இருப்பது தற்செயலா, அவசியமா?
இடம்: விளமல், திருவாரூர். படம் : தமிழினி

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும். இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.
இடம்: ஈக்காட்டுத்தாங்கல் பேருந்து நிலையம், சென்னை.
படம் : தமிழன்பன்

வாய்ப்புக்காக காத்திருக்காதே! உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்!!
மாவீரன் பகத்சிங்!
இடம்: திருச்சி மற்றும் இரயிலடி, தஞ்சை.
படங்கள் : செழியன் மற்றும் தமிழினி

கனவைக் கூட காதலித்த கலாம், என் கனவிலும் உண்டு உனக்கு இடம்,
உன் கனவெல்லாம் நினைவாகும், வருங்காலத்தில் விதையெல்லாம் பயிராகும்!
(பள்ளி முதல் பாடம் வரை எங்கும் நிறைந்திருக்கும் கலாம், ஆட்டோவில் மட்டும் இடம் பெறாமல் போய் விடுவாரா என்ன?)
இடம்: திருச்சி. படம் : பால் ராப்சன்

டெல்டா விவசாயி! (விவசாயி போல எளிமையாக இருக்கிறது)
இடம்: திருவாரூர். படம் : தமிழினி

பங்காளி பாத்துவா… இவன நம்பிதான் என் குடும்பம்.
ஆட்டோவ போட்டோ எடுக்க எங்க வாசகர சேசிங் செய்ய வச்சிட்டியே… பங்கு.
இடம்: கோயம்பேடு, சென்னை. புகைப்படம் : சாக்ரடீஸ்.
(இனிமேல் சேசிங் செய்யாமல் சேஃபா எடுங்கள்)

மூளைக்குள் சுற்றுலா…!
இடம்: சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதி தோட்டம், சென்னை. 
படம் : கடல்புறத்தான்

வரிகளே தேவையற்ற ஆட்டோ இலக்கியம்!
இடம்: சிந்தாதிரிப்பேட்டை கூவம் கரையோரம், சென்னை.
படம் : கடல்புறத்தான்

அடுத்த பாகத்தில் இரு சக்கர வாகன இலக்கியம் இடம்பெறும் !

உலகில் முதல் பொருளாதார நிபுணர் யார் ? வீட்டுப் பாடங்களுடன் பொருளாதாரம் கற்போம் 4

7

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 4

ரசியல் பொருளாதார வரலாற்றின் முக்கியமான மூன்று நூற்றாண்டுகளைப் பற்றிய அறிமுக உரையை முந்தைய பாகம் வரை பார்த்தோம். இனி நூலின் முதல் அத்தியாயம் எளிமையாக துவங்குகிறது. பண்டைய காலத்தில் பொருளாதாரத்தைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லையா ? மனிதன் முதல் கோடாரியையும், வில் ஆயுதங்களையும் உருவாக்கிய நாள் தொட்டே அங்கு பொருளாதாரம் (பரிவர்த்தனை) தொடங்கினாலும் இது இன்றைய பொருளாதாரப் புரிதலில் வருமா என்பதை ஆசிரியர் விளக்குகிறார். ஆதிகாலத்தில் பொருளாதாரம் பற்றிய கருத்தை கருவடிவில் பேசிய முதல் நிபுணர் யார் ? படியுங்கள்.

இந்தப் பகுதியில் இருந்து வாசகர்களுக்கு வீட்டுப் பாடத்திற்கான கேள்விகளைத் தருகிறோம். பதில்களை மறுமொழியில் குறிப்பிடுங்கள். தெரிந்தவர்கள் அந்த பதில்கள் சரியா என்று விவாதியுங்கள். நன்றி
-வினவு

*****

அத்தியாயம் ஒன்று – தோற்றுவாய்கள்
அ.அனிக்கின்

பூர்வீக மனிதன் முதல் கோடரியையும் வில்லையும் செய்தபொழுது அது பொருளாதாரம் அல்ல; அதைத் தொழில் நுணுக்கம் என்றே சொல்ல வேண்டும்.

பிறகு ஒரு வேடர் குழு சில கோடரிகளையும் வில் ஆயுதங்களையும் கொண்டு ஒரு மானைக் கொன்றது. மான் இறைச்சியை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்; அநேகமாக, சமமாகத்தான் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். சிலர் அதிகமாக எடுத்துக் கொண்டிருந்தால், மற்றவர்கள் உயிர் பிழைத்திருக்க முடியாது, உயிரோடிருந்திருக்க முடியாது. அந்தக் குழுமத்தின் வாழ்க்கை மேலும் பன்முகப்பட்டதாக வளர்ச்சியடைந்தது.

Political-economy-Stone-age-1ஒரு கைவினைஞன் தோன்றுகிறான்; அவன் வேடர்களுடைய உபயோகத்துக்கென்று நல்ல ஆயுதங்களைத் தயாரிக்கிறான். ஆனால் அவன் வேட்டையில் சேருவது கிடையாது. வேட்டையாடியவர்களும் மீன் பிடித்தவர்களும் இறைச்சி, மீன்களைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது தங்களோடு சேர்த்து அந்தக் கைவினைஞனுக்கும் ஒரு பாகத்தை ஒதுக்குகிறார்கள். பிறகு ஒரு கட்டத்தில் உழைப்பினால் ஏற்பட்ட பண்டங்களைக் குழுமங்களுக்கு இடையிலும் ஒரு குழுமத்துக்கு உள்ளேயும் பரிவர்த்தனை செய்வது ஆரம்பமானது.

இவை அனைத்தும் பூர்விகமாகவும் வளர்ச்சியில்லாமலும் இருந்த போதிலும் இவையே பொருளாதாரமாகும். ஏனென்றால் இவை பொருள்களோடு – வில், கோடரி அல்லது இறைச்சி – மக்கள் கொண்டிருந்த உறவுகள் சம்பந்தப்பட்டவை, மட்டுமல்ல; அவர்கள் சமூகத்தில் ஒருவரோடொருவர் கொண்டிருந்த உறவுகளுடனும் சம்பந்தப்பட்டிருந்தன. அதிலும் அவை பொதுவகையிலான உறவுகள் அல்ல; மக்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களின் உற்பத்தி, விநியோகத்தோடு சம்பந்தப்பட்ட பொருளாயத உறவுகள். மார்க்ஸ் இந்த உறவுகளை உற்பத்தி உறவுகள் என்று குறிப்பிட்டார்.

பொருள்வகைப் பண்டங்களின் சமூக உற்பத்தியும் பரிவர்த்தனையும், விநியோகமும், நுகர்வும், அந்த அடிப்படையில் ஏற்படுகின்ற உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தமுமே பொருளாதாரம் ஆகும். இந்தக் கருத்தின்படி பார்த்தால், பொருளாதாரம் மனித சமூகத்தைப் போலவே மிகப் பழமையானது.

பூர்விகக் குழுமத்தின் பொருளாதாரம் மிகவும் எளிமையாகவே இருந்தது. ஏனென்றால் மக்கள் உபயோகித்த கருவிகளும் மிகவும் எளிமையாக இருந்தன; அவர்களுடைய தொழில் திறனும் சுருங்கியதாகவே, குறைவானதாகவே இருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஒரு சமூகத்தின் உற்பத்தி உறவுகளையும் அதன் பொருளாதாரத்தையும் வாழ்க்கையின் மற்ற அம்சங்களையும் நிர்ணயிக்கின்ற உற்பத்தி சக்திகள் பற்றாக்குறையாகவே வளர்ச்சியடைந்திருந்தன.

முதல் பொருளாதார நிபுணர் யார் ?

நெருப்பு எரிவது ஏன், இடி இடிப்பது ஏன் என்று ஆச்சரியப்பட ஆரம்பித்த முதல் மனிதன் யார்? ஒருவேளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அது நடைபெற்றிருக்க வேண்டும். பூர்விக சமூகத்தின் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தவர்கள் யார்? அன்று அது அடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் சமூகமாக, முதல் வர்க்க சமூகமாகப் படிப்படியாக மாறிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தச் சிந்தனைகள் ஒரு விஞ்ஞானம் அல்ல – இயற்கையையும் சமூகத்தையும் பற்றி முறைப்படி தொகுக்கப்பட்ட மனித அறிவு அல்ல; அது விஞ்ஞானமாகவும் இருக்க முடியாது.

political-economy_Ancient_Civilizationsஅடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் முதிர்ந்த சமூகத்தின் காலம் ஏற்படும் வரை விஞ்ஞானம் தோன்றவில்லை. அந்த சமூகம் அதிகமான வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்திகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. நாலாயிரம் அல்லது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து ஆகிய பண்டைக்கால அரசுகளில் வாழ்ந்த மக்கள் கணிதம் அல்லது மருத்துவத் துறையில் கொண்டிருந்த அறிவு சில சமயங்களில் நம்மை வியப்பில் மூழ்க வைக்கின்றது. பண்டைக் கால அறிவின் எச்சங்களாக நமக்குக் கிடைத்திருக்கும் மிகச் சிறந்த மாதிரிகள் பண்டைக் கால கிரேக்க, ரோமானிய மக்களுக்குச் சொந்தமானவை.

பதினேழாம் நூற்றாண்டில் அரசியல் பொருளாதாரம் என்ற பெயரோடு விஞ்ஞானத்தில் ஒரு புதிய துறை ஏற்படுவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே பொருளாதார வாழ்க்கையின் அம்சங்களைப் பற்றி உய்த்துணர்வதற்குத் திட்டவட்டமான முயற்சி ஆரம்பமாயிற்று. இந்த விஞ்ஞானம் ஆராய்ச்சி செய்த பல பொருளாதார நிகழ்வுகள் முன்பே பண்டைக்கால எகிப்தியர்களுக்கு அல்லது கிரேக்கர் களுக்குத் தெரிந்தவையே. இவை பரிவர்த்தனை, பணம், விலை, வர்த்தகம், லாபம், வட்டி ஆகியவையாகும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் அந்தக் காலத்திலிருந்த உற்பத்தி உறவுகளின் முக்கியமான கூறுகளைப் பற்றி -அடிமை முறை பற்றி – சிந்திக்கத் தொடங்கினார்கள்.

முதலில் பொருளாதாரச் சிந்தனை என்பது சமூகத்தைப் பற்றிய சிந்தனையின் மற்ற வடிவங்களிலிருந்து தனியானதாக இருக்கவில்லை; எனவே அது முதலில் எப்பொழுது தோன்றியது என்று துல்லியமாகக் கூற முடியாது. பொருளாதார வரலாற்றுப் புத்தகங்களை எழுதியவர்கள் வெவ்வேறு முனைகளிலிருந்து எழுதத் தொடங்குவதும் ஆச்சரியமானதல்ல; சில வரலாறுகள் பண்டைக்கால கிரேக்கர்களிடமிருந்து தொடங்குகின்றன; மற்றவை பண்டைக்கால எகிப்திய கோரைப் புற்சுவடிகள், ஹாம்முராபியின் விதிகளின் ஆப்பு வடிவமுள்ள கல்லெழுத்துக்களிலிருந்து, இந்துக்களின் வேத நூல்களிலிருந்து தொடங்குகின்றன.

hammurabi
அரசர் ஹம்முராபி மற்றும் கல்மேல் எழுத்தாக அவரது காலத்தில் இயற்றப்பட்ட விதிகள்.

கிறிஸ்துவுக்கு முந்திய இரண்டாவது மற்றும் முதலாவது ஆயிரம் ஆண்டுகளில் பாலஸ்தீனத்திலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் வசித்த மக்களின் பொருளாதார வாழ்க்கையைப் பற்றிய கருத்துக்களும் பொருளாதார நுண்காட்சிகளும் பைபிள் நூலில் காணப்படுகின்றன.

அமெரிக்க வரலாற்றாசிரியரான பேராசிரியர் ஜே. பேல் தமது புத்தகத்தில் பைபிளுக்கு மட்டும் ஒரு பெரிய அத்தியாயம் எழுதியிருப்பதற்கும் அந்தக் காலத்தைப் பற்றிய மற்ற எல்லா ஆதாரங்களையும் புறக்கணித்திருப்பதற்கும் அறிவுத்துறை ஆராய்ச்சிக்குச் சம்பந்தமில்லாத வேறு சூழ்நிலைகளே காரணம் என்று அறிவது அவசியம். அதாவது பைபிள் கிறிஸ்தவ மதத்தின் புனிதமான நூல்; பெரும்பான்மையான அமெரிக்க மாணவர்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே அதைத் தெரிந்திருப்பார்கள். எனவே நவீன வாழ்க்கையின் இந்த அம்சத்துக்கு ஏற்றவாறு ஆராய்ச்சி வளைந்து கொடுக்கிறது.

ஹோமரின் கவிதைகளில் பண்டைக்கால கிரேக்க சமூகத்தின் – பூர்விக சமூகத்தின் தேய்வு முற்றிய நிலையிலும் அடிமை உடைமைச் சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையிலும் – மிகச் சிறப்பான இலக்கிய வர்ணனையைப் பார்க்கிறோம்.

படிக்க:
♦ எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
♦ பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ?

மனிதகுலப் பண்பாட்டின் இந்த நினைவுச் சின்னங்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏஜியன், அயோனியன் கடலோரங்களில் வசித்த மக்களின் வாழ்க்கை மற்றும் தத்துவஞானக் கலைக்களஞ்சியமாக இருக்கின்றன. டிராய் முற்றுகை, ஒடிசியஸின் பயணங்களைப் பற்றிய சுவை மிகுந்த கதையில் பலவிதமான பொருளாதார நுண்காட்சிகள் திறமையாகப் பின்னப்பட்டிருக்கின்றன. ஒடிசியஸ் பயணம் அடிமை உழைப்பின் குறைந்த உற்பத்தித் திறனுக்கு ஆதாரத்தைக் கொண்டிருக்கிறது:

ஆண்டை அகன்றால் அடிமை உழைப்பதில்லை
கலகம் நடந்தால் மானுடம் இருப்பதில்லை
ஜூபிடர் அன்றே விதித்தார்; என்றைக்கு
மனிதன் அடிமை ஆனானோ அன்றைக்கே
அவன் பலத்தில் பாதி மறைந்தது.(1)

ஹாம்முராபியின் விதிகள், பைபிள் மற்றும் ஹோமர் எழுதிய காவியத்தை பண்டைக்கால மக்களின் பொருளாதார வாழ்க்கையைப் பற்றிய செய்திகளைக் கூறும் ஆதார நூல்களாக வரலாற்றாசிரியரும் பொருளாதார நிபுணரும் கருதலாம். இரண்டாவதாகத்தான் அவற்றைப் பொருளாதாரச் சிந்தனையின் மாதிரிகளாகக் கருத முடியும். ஏனென்றால் பொருளாதாரச் சிந்தனை என்பது செய்முறை, தத்துவம், சூக்குமப்படுத்தல் ஆகியவற்றை பொதுவிதி வடிவத்துக்குக் கொண்டு வருவதை ஓரளவுக்கு முன்னூகிக்கிறது.

political-economy_Homer
பண்டைய கிரேக்கத்தின் சமூதாய நிலைமையை தன் கவியில் பிரதிபலித்த ஹோமர்.

பிரபலமான முதலாளித்துவ அறிஞரான ஜோஸப் ஏ. ஷும் பீட்டர்  (அவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்; தன் வாழ்க்கையின் இரண்டாவது பாதியை அமெரிக்காவில் கழித்தவர்) தன து புத்தகத்தைப் பொருளாதார ஆராய்ச்சியின் வரலாறு என்று குறிப்பிட்டார்; மூலச்சிறப்புடைய கிரேக்க சிந்தனையாளர்களிடமிருந்து அதைத் தொடங்கினார்.

செனபோன்ட், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோரது புத்தகங்கள் கிரேக்க சமுதாயத்தின் பொருளாதார அமைப்பைப் பற்றிய தத்துவ விளக்கத்துக்கான முதல் முயற்சிகளைக் கொண்டிருக்கின்றன என்பது உண்மையே. குறைவான எண்ணிக்கையிலிருந்த கிரேக்கர்களின் சிறப்பான நாகரிகத்தோடு நமது நவீன நாகரிகம் எவ்வளவு அதிகமான இழைகளினால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் சில சமயங்களில் மறந்துவிடுகிறோம். நமது விஞ்ஞானமும் கலையும் மொழியும் பண்டைக்கால கிரேக்க நாகரிகத்தின் கூறுகள் பலவற்றை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

கிரேக்கர்களின் பொருளாதாரச் சிந்தனையைப் பற்றி மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்: “கிரேக்கர்கள் எப்பொழுதாவதுதான் இந்தத் துறையினுள் நுழைந்தனர் என்றாலும் மற்ற எல்லாத் துறைகளிலும் காட்டிய அதே மேதாவிலாசத்தையும் தற்சிந்தனையையும் இந்தத் துறையிலும் காட்டினர். எனவே வரலாற்று ரீதியில் அவர்களுடைய கருத்துக்கள் நவீன விஞ்ஞானத்தின் கொள்கை ரீதியான தொடக்க நிலைகளாக இருக்கின்றன.” (2)

political-economy-Joseph A Schumpeter
முதலாளித்துவ அறிஞரான ஜோஸப் ஏ. ஷும் பீட்டர்

பொருளாதாரம் (வீடு, குடியிருப்பு என்பவற்றைக் குறிப்பிடுகின்ற வார்த்தையும் விதி, சட்டம் என்பவற்றைக் குறிக்கும் வார்த்தையும் சேர்ந்து பொருளாதாரத்தைக் குறிக்கும் வார்த்தை உருவாகியது) என்ற வார்த்தை செனபோன்ட் எழுதிய ஒரு சிறப்பான நூலின் தலைப்புப் பெயராகும். அதில் அவர் குடும்பம், பண்ணை ஆகியவற்றை நிர்வாகம் செய்யத் தேவையான புத்திசாலித்தனமான விதிகளை ஆராய்கிறார். அந்த வார்த்தை ‘குடும்ப நிர்வாகம் பற்றிய விஞ்ஞானம்’ என்ற பொருளைப் பல நூற்றாண்டுகள் வரை கொண்டிருந்தது.

குடும்ப நிர்வாகம் என்று சொல்லும் பொழுது நாம் தருகின்ற குறுகிய அர்த்தத்தை கிரேக்கர்கள் அதற்குக் கொடுக்கவில்லை என்பது உண்மையே. ஏனென்றால் ஒரு பணக்கார கிரேக்கரின் பண்ணை என்பது அடிமைகளை உடைமையாகக் கொண்ட மொத்தப் பொருளாதாரமாக, பண்டைக்கால உலகத்தின் நுண் மாதிரியாக இருந்தது.!

அரிஸ்டாட்டில் “பொருளாதாரம்” என்ற சொல்லை இதே பொருளில்தான் பயன்படுத்துகிறார். தம் காலத்திய சமூகத்தின் அடிப்படையான பொருளாதார நிகழ்வுகளையும் விதிகளையும் அவர்தான் முதன் முதலாக ஆராய்ந்தார். இந்த விஞ்ஞானத்தின் வரலாற்றில் முதல் பொருளாதார நிபுணர் என்று சொல்லப்படுகின்ற தகுதி அவருக்கே உண்டு.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : முதல் தொடக்கம்: அரிஸ்டாட்டில் 

அடிக்குறிப்பு:
(1) The Odyssey of Homer, London, 1806, p.256.
(2) பி.எங்கெல்ஸ், டூரிங்குக்குமறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1979, பக்கம் 394 (இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதியின் பத்தாம் அத்தியாய்த்தை மார்க்ஸ் எழுதினார்).

வாசகர்களுக்கான வீட்டுப் பாடங்கள் – கேள்விகள்:
(பதில்களை மறுமொழியில் தருக)

1. பண்டப் பரிவர்த்தனை என்றால் என்ன? பணப் பரிவர்த்தனைக்கும் பண்ட பரிவர்த்தனைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

2. மக்களிடையே உள்ள இரத்த உறவிற்கும் மார்க்ஸ் குறிப்பிடும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

3. பண்டங்களின் உற்பத்தி, பரிவர்த்தனை, விநியோகம், நுகர்வு – சான்றுடன் விளக்குக!

4. சிறு குறிப்பு வரைக: சுமேரிய நாகரீகம், பாபிலோனிய நாகரீகம், எகிப்து நாகரீகம்.

5. முதலில் பொருளாதாரச் சிந்தனை என்பது சமூகத்தின் மற்ற சிந்தனை வடிவங்களில் இருந்து தனியாக இருக்கவில்லை. என்?

6. வரலாற்றுக் குறிப்பு தருக: ஹாம்முராபியின் விதிகள், ஹோமர், டிராய் முற்றுகை, ஒடிசியஸ் பயணங்கள்

7. பைபிளில் காணப்படும் பொருளாதார வாழ்க்கை பற்றிய செய்திகள் – சான்று தருக!

8. அறிமுகக் குறிப்பு தருக: ஜோஸப் ஏ. ஷூம் பீட்டர், செனபோன்ட், பிளாட்டோ, அரிஸ்டாட்டில்

9. பொருளாதாரம் என்ற வார்த்தை எப்போது யாரால் என்னவென்று உருவாக்கப்பட்டது?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ