மணிப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர்சந்திரா வாங்கெம் கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நவம்பர் 27 முதல் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு எதிராக அவர் செயற்படாதவாறு தடுப்பதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கைது ஆணையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையை ஸ்க்ரோல் பத்திரிகை பார்த்ததாக குறிப்பிட்டிருக்கிறது. மேற்கு இம்பாலின் மாவட்ட ஆட்சியரால் இந்த கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் கிஷோர்சந்திரா வாங்கெம்.
தேசிய பாதுகாப்பிற்கு ஏதேனும் ஊறு விளைவிக்கக் கூடும் என்று ஒருவரை சந்தேகித்தாலே போதும் அவரை கைது செய்யும் அதிகாரத்தை கடுமையான இந்த தேசிய பாதுகாப்பு சட்டம் ஆட்சியாளர்களுக்கு வழங்குகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தின் முன்னால் தனது வாதத்தை வைப்பதற்கும், வக்கீல் வைத்துக் கொள்வதற்குமான உரிமையையும் இச்சட்டம் மறுக்கிறது.
சிறையில் அடைக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக நவம்பர் 21-ம் தேதி பிரதமர் மோடியையும் முதலமைச்சர் என்.பிரேன் சிங்கையும் விமர்சித்து ஒரு காணொளியை பேஸ்புக்கில் பதிவிட்டதற்காக மணிப்பூர் போலீசால் வாங்கம் கைது செய்யப்பட்டார்.
பேஸ்புக் பதிவு:
மணிப்பூரில் நவம்பர் 19-ம் தேதி ஜான்சிராணி இலக்குமி பாயின் பிறந்த நாள் விழாவை நடத்தியதற்காக முதல்வர் பிரேன்சிங்கை, “மோடி மற்றும் இந்துத்துவாவின் கைப்பாவை” என்று அந்தக் காணொளியில் வாங்கிம் கடுமையாக கண்டித்துள்ளார். “ஜான்சி இராணிக்கும் மணிப்பூருக்கும் ஒரு தொடர்பும் இல்லை” என்றும் “மணிப்பூரின் தேசியத்தைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் அறிவு இருக்கிறதா?” என்றும் அந்த காணொளியில் அவர் கேட்டிருந்தார். “உங்களுக்கு அதைப்பற்றி தெரியவில்லை என்றால் உளறாதீர்கள்” என்றும் கூறினார். மேலும், காணொளியில் பல இடங்களில் மோடியையும் சிங்கையும் கடுமையாக விமரிசித்தும் பேசியிருக்கிறார் . “வந்து என்னை கைது செய்யுங்கள்” என்றும் கூறியுள்ளார்.
அவதூறு பரப்பியதாகவும் வெறுப்பைத் தூண்டியதாகவும் கூறி தேச துரோக குற்றச்சாட்டில் போலீசு அவரைக் கைது செய்திருந்தது. ஆனால் நவம்பர் 25 -ம் தேதி அவர் மீது தொடுக்கப்பட்ட தேச துரோக வழக்கை நீக்கியும் மற்ற வழக்குகளுக்கு பிணை கொடுத்தும் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் நடத்தைக் குறைவாக பேசியிருக்கிறார் தான் ஆனால் அது தேச துரோகமாகாது” என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும் குடிமக்களின் விமர்சன கருத்துக்கள் கடுமையாகவோ அல்லது நளினமாகவோ எதுவானாலும் அதற்காக பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் உறுப்புகள் அதன் மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு உணர்ச்சி வசப்படத் தேவையில்லை என்று மேலும் கூறியிருக்கிறது.
மாற்று தடுப்பு நடவடிக்கை
எனினும் வாங்கிம் ‘ஒரு வாடிக்கையான குற்றவாளி என்பதால் அவரை பிணையில் விட்டால் நாட்டின் பாதுகாப்பிற்கும் பொது அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபடக்கூடும்’ என்று மாவட்ட ஆணையரின் ஆணை கூறுகிறது. எனவே, அதைத் தடுப்பதற்கு ‘மாற்று தடுப்பு நடவடிக்கை’ தேவைப்படுவதாகவும் கூறியிருக்கிறது. அதுதான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழான கைது நடவடிக்கை.
கைது செய்யப்பட பத்திரிக்கியாளர் கிஷோரேசந்திரா வாங்கெமின் மனைவி ரஞ்சிதா எல்நன்பம்.
பா.ஜ.க-வை விமர்சித்து பேஸ்புக்கில் எழுதியதற்காக இதற்கு முன்னதாக ஆகஸ்டில் வாங்கெம் கைது செய்யப்பட்டார். தன்னுடைய பதிவு ஒன்றில் பா.ஜ.க.விற்கு ’புத்து’ ஜோக்கர் கட்சி (Budhu Joker Party) என்று விளக்கம் கொடுத்திருந்தார். ’புத்து’ என்ற இந்தி சொல்லுக்கு முட்டாள் என்று பொருள்.
வாங்கெம் மீதான சமீபத்திய கைது நடவடிக்கை குறித்து கூடுதலாக தகவல் எதுவும் தர மாவட்ட ஆணையர் மறுத்துவிட்டார்.” தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி ஐந்து நாட்களுக்குள் கைதுக்கான காரணங்களை முன் வைக்க வேண்டும். தற்போது அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். மேற்கொண்டு எதுவும் கூற முடியாது.” என்று மாவட்ட ஆணையர் கூறினார்.
கைது நடவடிக்கையின் தற்போதைய நிலைமை குறித்து எதுவும் தெரியாது என்று மாநிலத்தின் தலைமை செயலாளர் ஜே.சுரேஷ் பாபு கூறினார். இம்பாலின் காவல்துறை ஆணையர் ஜோகேஷ்சந்திரா ஹௌபிஜாம் இது குறித்து கருத்துரைக்க மறுத்து விட்டார்.
பத்திரிகையாளர்களின் மவுனம்
வாங்கிமின் விடுதலையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இம்பாலில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. எனினும் மாநிலத்தின் ஊடகவியலாளர் சமூகம் இதிலிருந்து பெரும்பாலும் விலகியே இருந்தது. சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் அறிவுபூர்வமற்ற சொந்த கருத்துக்களுக்காக பத்திரிக்கையாளரோ அல்லது வேறு நபர்களோ கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்று சமீபத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டதாக அனைத்து மணிப்பூர் பத்திரிகையாளர் (All Manipur Working Journalists) சங்கத்தின் தலைவர் புரோசெந்திரா நிங்கோம்பா கூறினார். நிங்கோம்பா ஆசிரியராக பணியாற்றி வந்த ISTV தொலைக்காட்சியில் சமீப காலம் வரை வாங்கெம் துணை ஆசிரியராகவும், நிகழ்ச்சி நடத்துபவராகவும் பணியாற்றி வந்தார். பேஸ்புக்கில் காணொளி வெளியிடப்படும் முன்பாகவே பணியிலிருந்து நின்று விட்டார்.
இம்பாலின் ஊடகங்களில் ஒரு பெரும்பகுதியும் இப்பிரச்சினையை வெளியிடுவதிலிருந்து ஒதுங்கி கொண்டது. “எப்படியோ ஒட்டுமொத்த ஊடக சகோதரத்துவத்தையும் “இந்த அரசாங்கம் திறமையாக கையாண்டு இருக்கிறது. உள்ளூர் ஊடகங்களும் இதுப்பற்றி எதுவும் கூறவில்லை” என்று இசையமைப்பாளரும் செயற்பாட்டாளரும் மற்றும் போராட்டத்தில் பங்கு பெற்றவருமான ஆகு சிங்கங்பம் கூறினார். மேலும் “ இப்படித்தான் மொத்த நகரத்தையும் அவர்களது கட்டுப்பாட்டினில் வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் கிஷோர்சந்திரா வாங்கெமை விடுதலை செய்ய சொல்லி போராட்டக்காரர்கள் வலியுறுத்துகிறார்கள்.
”இம்பால் ஃப்ரீ ப்ரெஸ்” (Imphal Free Press) மட்டுமே இக்கைது நடவடிக்கையை பற்றி எழுதிய ஒரே பத்திரிக்கை. வாங்கெமிற்கு மணிப்பூர் பத்திரிக்கையாளர்களிடம் ஆதரவு இல்லை என்று அதன் ஆசிரியரான பிரதிப் பஞ்சாபின் கூறினார். “ஏறக்குறைய ஒருவர் கூட இந்த பிரச்சினையை குறித்து எதுவும் பேசவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது” என்று அவர் கூறினார்.
அனைவரது வாயையும் மூடுவதற்கு பா.ஜ.க. அரசு முயல்கிறது என்று காங்கிரசு கட்சியின் குமுக்சம் ஜாய்கிசன் (Khumukcham Joykisan) குற்றம் சாட்டினார். பத்திரிக்கையாளர்களும் கூட எதையும் பேசுவதற்கு அஞ்சுகிறார்கள் என்று அவர் கூறினார்.
“ஒரு ஜனநாயக நாட்டில் எங்களுக்கு கருத்துக் கூற கூட உரிமையில்லையா?” என்று வாங்கெமின் மனைவி ரஞ்சிதா எல்நன்பம் கேட்கிறார். “இந்த அரசுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை போல தெரிகிறது அதனால்தான் எங்களது வாயை மூட முயற்சி செய்கிறது” என்று கூறினார்.
மாக்சிம் கார்க்கிசில தினங்கள் கழிந்தபின், ஒரு நாள் தாயும் சோபியாவும் ஏழை நாடோடிப் பெண்களைப்போல் உடை தரித்தவாறு நிகலாயின் முன்னால் வந்து நின்றார்கள். அவர்கள் இருவரும் நைந்துபோன கவுன்களும் ரவிக்கைகளும் அணிந்திருந்தார்கள். முதுகில் ஆளுக்கொரு சாக்குப் பையைத் தொங்கவிட்டுக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் கம்பு இருந்தது. அந்த உடையலங்காரம் சோபியாவை ஓரளவு குள்ளமாக எடுத்துக்காட்டியது. அவளது வெளுத்த முகத்தை மேலும் கடுமையாகக் காட்டியது.
நிகலாய் தனது சகோதரிக்கு விடை கொடுக்கும்போது அவளது கரத்தை ஆர்வத்தோடு குலுக்கினான். அவர்களிருவருக்குமிடையே நிலவிய அமைதியான எளிமையான ஒட்டுறவைத் தாய் மீண்டும் ஒருமுறை உணர்ந்தாள். அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடவில்லை; அன்பு ததும்ப அழைக்கவில்லை. என்றாலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆழ்ந்த பரிவோடும் ஆர்வத்தோடும் தம் உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொண்டார்கள். அவள் குடிவாழ்ந்த இடத்தில் ஜனங்கள் முத்தமிடவும் செய்தார்கள், அன்போடு அழைக்கவும் செய்தார்கள். ஆனால் ஒருவரையொருவர் பசி வெறி கொண்ட பட்டி நாய்களைப்போல் கடித்துக் குதறவும் செய்தார்கள்.
பெண்கள் மௌனமாய் நகரத்தின் வீதிகளின் வழியே, வயற்புறங்களின் வழியே நடந்து சென்றார்கள். இருபுறத்திலும் பெரிய பெரிய பிர்ச் மரங்கள் வளர்ந்தோங்கி நிற்க, சமதளமற்று மேடுபள்ளமாயிருக்கும் அகன்ற பாதையின் வழியாக, தோளோடு தோள் உரச, ஒருவர் பக்கம் ஒருவராக நடந்து சென்றார்கள்.
”உங்களுக்கு களைப்பே தோன்றவில்லையா” என்று சோபியாவைப் பார்த்துக் கேட்டாள் தாய்.
“எனக்கு அதிகமாக நடந்து பழக்கமிராது என்று நினைக்கிறீர்களா? இதெல்லாம் எனக்குப் பழகிப்போன விவகாரம்.”
சோபியா உற்சாகத்தோடு தனது பிள்ளைப் பிராயத்தின் செல்ல விளையாட்டுக்களை நினைவு கூர்வதைப்போல, தனது புரட்சி நடவடிக்கைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினாள். அவள் பொய்யான தஸ்தாவேஜுகளோடு எத்தனை எத்தனையோ பெயர்களில் வாழ்ந்திருக்கிறாள். அவள் மாறுவேடம் பூண்டு, உளவாளிகளிடமிருந்து தப்பியிருக்கிறாள். விரோதமான புத்தகங்களை கட்டுக்கட்டாக வண்டிகளில் ஏற்றிக்கொண்டு ஊர் ஊராய்ச் சென்றிருக்கிறாள். நாடு கடத்தப்பட்டவர்களைத் தப்பித்து ஓடச் செய்வதிலும் ஒத்துழைத்திருக்கிறாள். அவர்களோடு வெளி நாடுகளுக்கு துணையாகவும் சென்று சேர்த்திருக்கிறாள். ஒரு தடவை அவள் தான் குடியிருந்த வீட்டுக்குள்ளேயே ஒரு இரகசிய அச்சகத்தை வைத்திருந்தாள்; போலீஸ்காரர்கள் அதைக் கண்டுபிடித்து. வீட்டைச் சோதனையிட வந்தபோது, அவள் தன்னை ஒரு வேலைக்காரி மாதிரி வேடமிட்டு மறைந்து கொண்டு தன் வீட்டு வாசலில் வந்து நின்ற போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயே தன்னை இனங்காட்டாமல் ஓடி மறைந்து தப்பிவிட்டாள். அன்றைய தினம் ஒரே குளிர். அவளோ மெல்லிய ஆடைகளைத்தான் அணிந்திருந்தாள். தலைமீது ஒரு சவுக்கத்தைப் போட்டவாறு, அவள் அந்தப் பெரிய நகரத்தின் எல்லை வரைக்கும் நடந்து சென்றாள். கையில் ஒரு டப்பாவைத் தூக்கிக்கொண்டு மண்ணெண்ணெய் வாங்கச் செல்கிறவள்போல் சென்று நழுவித் தப்பிவிட்டாள்.
இன்னொரு தடவை அவள் சில தோழர்களைச் சந்திப்பதற்காக, ஒரு நகரத்துக்குள் வந்து சேர்ந்தாள். அவர்கள் தங்கியிருந்த மாடிக்குச் செல்லும் சமயத்தில், படியில் ஏறிக்கொண்டிருக்கும்போதே, மாடியில் சோதனை நடக்கிறது என்பதைக் கண்டு கொண்டாள். திரும்பவும் கீழே இறங்கித் தப்பித்துச் செல்வதற்கு அவளுக்கு நேரமில்லை. எனவே அவள் ஒரு மாடியின் கீழே இருந்த வீட்டுக் கதவைத் துணிந்து தட்டினாள், உள்ளிருந்தவர்கள் கதவைத் திறந்தவுடன் அவள் விறுவிறு என்று தனது மூட்டை முடிச்சுகளுடன் அந்த இனந்தெரியாத ஜனங்களின் வீட்டுக்குள் நுழைந்துவிட்டாள். பிறகு அவர்களிடம் பட்டவர்த்தனமாகத் தன் நிலைமையைச் சொன்னாள்.
”நீங்கள் விரும்பினால், என்னைப் போலீசாரிடம் பிடித்துக் கொடுக்கலாம். ஆனால் நீங்கள் அந்த மாதிரி செய்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை” என்றாள்.
அந்த வீட்டிலுள்ளவர்களோ ரொம்பவும் பயந்து போய்விட்டார்கள். அன்றிரவு முழுவதும் அவர்கள் கண்ணையே இமைக்கவில்லை. எந்த நேரத்திலும் போலீஸ்காரர்கள் தம் வீட்டுக் கதவைத் தட்டக்கூடும் என்று எதிர்பார்த்தார்கள். இருந்தாலும் அவளை அவர்கள் வெளியே விரட்டவில்லை. மறுநாள் காலையில் அவர்கள் அனைவரும் தங்களது தீரமிக்க செயலை எண்ணிக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்.
மற்றொரு முறை அவள் ஒரு கன்னியாஸ்திரி மாதிரி வேடமிட்டுக்கொண்டு, அவளைத் தொடர்ந்து திரியும் ஒரு உளவாளி சென்ற அதே ரயிலில், அவனுக்குப் பக்கத்துச் சீட்டிலேயே பிரயாணம் செய்தாள். தான் மோப்பம் பிடித்து வரும் பெண்ணை எவ்வளவு கெட்டிக்காரத்தனமாகப் பின் தொடர்ந்து வருகிறான் என்பதை அவளிடமே அவன் பெருமையோடு பீற்றிக்கொண்டான். அந்த உளவாளி அவள் அதே ரயிலில் இரண்டாவது வகுப்பில் பிரயாணம் செய்து வருவதாக அவளிடமே தெரிவித்தான். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் அவன் கீழே இறங்கிச் சென்று அவள் இருக்கின்ற பெட்டியை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பி வந்து அந்தக் கன்னியாஸ்திரியிடம் சொன்னான்:
“அவளை இப்போது காணவில்லை. ஒருவேளை படுத்துத் தூங்கியிருப்பாள். அவளுக்கு ஒரே களைப்பாயிருந்திருக்கும். நமது வாழ்க்கையையெல்லாம்விட, அவளுடைய வாழ்க்கை சிரமமானதுதானே!”
சோபியாவை அன்பு ததும்பப் பார்த்தவாறே அந்தக் கதைகளைக் கேட்டு, தாய் தனக்குள் சிரித்துக்கொண்டாள். நெட்டையாகவும் ஒல்லியாகவுமிருந்த சோபியா தனது அழகிய கால்களை லாவகமாக எட்டி வீசி நடந்தாள். அவளது பேச்சிலும் நடையின் வீச்சிலும், அவளது உற்சாகம் நிறைந்த கம்மலான குரலிலும், அவளது நிமிர்ந்த தோற்றம் முழுவதிலுமே ஒரு துணிவும் முழுமையான ஆரோக்கியமும் நிறைந்திருப்பதாகத் தோன்றியது. அவள் எதையுமே ஒரு வாலிபமிடுக்கோடுதான் நோக்கினாள். எங்கெங்கு நோக்கினும், அவள் தன் இதயத்துக்கு மகிழ்வூட்டும் எதையோதான் கண்டாள்.
“எவ்வளவு அழகான பைன் மரம்” என்று ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டியவாறு கூவினாள் சோபியா. தாய் உடனே நின்று அந்த மரத்தைப் பார்த்தாள் – அந்தப் பைன் மரமும் மற்ற மரங்களைப்போலத்தான் அவளுக்குத் தோன்றியது. அவளுக்கு அதில் எந்தவித அழகோ புதுமையோ தோன்றவில்லை.
“ஆமாம், அது ஒரு அழகான மரம்தான்” என்று கூறிக்கொண்டே அவள் சிரித்துக்கொண்டாள். சோபியாவின் காதருகே உள்ள நரை முடிகளில் காற்று எப்படி ஊசலாடித் திரிகிறது என்பதைப் பார்த்தாள்.
”அதோ ஒரு வானம்பாடி!” என்றாள் சோபியா. சோபியாவின் சாம்பல் நிறக் கண்கள் அன்பு ததும்பி ஒளிபெற்று விளங்கின. அவளது உடல் முழுவதுமே நிர்மலமான வான மண்டலத்தில் எங்கேயோயிருந்து கேட்கும் ஏதோ ஒரு அரூபியான கீதத்தைக் கேட்க எண்ணித் துடித்தது. சமயங்களில் அவளது அழகிய உடல், ஒரு காட்டு மலரைக் கொய்வதற்காகக் குனிந்து வளையும்; வாய்க்குள்ளாக ஏதோ ஒரு இசையை முணுமுணுத்துக்கொண்டே அவள் அந்த மலரைத் தனது மெல்லிய விரல்களால் விருட்டென்று பறித்தெடுப்பாள். நடுங்கும் அந்தப் பூவின் இதழ்களை இனிமையாய்த் தடவுவாள்.
இவையெல்லாம் சாம்பல் நிற கண்களையுடைய சோபியாவின் மீது தாய்க்கு ஒரு ஈடுபாட்டை உண்டாக்கியது; எனவே அவளோடு சேர்ந்து நடப்பதற்காக, தாய் அவளுக்கு மிகவும் அருகில் நெருங்கியவாறு நடந்து சென்றாள். சில சமயங்களில் சோபியா கடுமையாகவும் பேசினாள். தாய்க்கு அப்படிப் பேசுவது பிடிக்காது, எனவே அப்போது அவள் தனக்குத்தானே நினைத்துக்கொள்வாள்.
“மிகயீலுக்கு இவளைப் பிடிக்காது.”
ஆனால் மறுகணமே சோபியா மீண்டும் அன்போடும் எளிமையோடும் பேசுவாள்; தாயும் அவளை ஒரு புன்னகையோடு பார்த்துக்கொள்வாள்.
“நீங்கள் இன்னும் எவ்வளவு இளமையோடிருக்கிறீர்கள்?” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.
”நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்; ஏனெனில், நாங்கள் தொழிலாளி மக்களோடு ஒன்றுசேர்ந்து நிற்கிறோம்” என்று உறுதியாகவும், உரத்தும் கூறினாள் சோபியா. “அவர்களிடம் ஒரு மகா சக்தி மறைந்து கிடக்கிறது, அவர்களால் எதையும் சாதிக்க முடியும்.
“நான் அதைச் சொல்லவில்லை. முகத்தைப் பார்த்தால், உங்கள் வயது நீங்கள் சொன்னதைவிடவும் அதிகமாகத்தான் தெரிகிறது. ஆனால், உங்கள் பேச்சைக் கேட்டால், கண்களைப் பார்த்தால் எனக்கு ஒரே வியப்பாயிருக்கிறது. நீங்கள் ஒரு சின்னஞ்சிறு பெண் போலவே இருக்கிறீர்கள். எவ்வளவோ கஷ்டமும் அபாயமும் நிறைந்த வாழ்க்கையை அனுபவித்திருக்கிறீர்கள். இருந்தாலும் இதயம் மட்டும் எப்போதும் சிரித்தவண்ணமாகவே இருக்கிறது.”
”எனக்கு என்னுடைய கஷ்டங்கள் எப்போதுமே தெரிவதில்லை. என்னுடைய வாழ்க்கையைவிட, ருசிகரமும் சிறப்பும் மிக்க வாழ்க்கை வேறு ஒன்றிருக்க முடியும் என்றே எனக்குத் தோன்றுவதில்லை. நான் உங்களை உங்கள் தந்தைவழிப் பெயரால் – நீலவ்னா என்றே அழைக்கிறேனே! பெலகேயா என்ற பெயர் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.”
“நீங்கள் என்னை எப்படி அழைத்தாலும் எனக்குச் சம்மதம்தான்” என்று ஏதோ யோசித்தவாறே சொன்னாள் தாய். “உங்கள் இஷ்டம் போலவே வைத்துக் கொள்ளுங்கள். நான் உங்களையே பார்க்கிறேன் உங்கள் பேச்சையே கேட்கிறேன். உங்களைப் பற்றியே சிந்திக்கிறேன், நீங்கள் மனித இதயத்துக்குள் புகும் வழியை அறிந்தவர் என்பதைக் காணும்போது எனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. தன் மனத்திலுள்ள அந்தரங்கத்தையெல்லாம் உங்களிடம் எவனும் மறைக்காது சொல்லிவிடுவான். அவன் தானாகவே தன் இதயத்தை உங்களிடம் திறந்து காட்டிவிடுவான். என் மனதில் ஒரு எண்ணம் உண்டாகிறது. உங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வாழ்வின் துன்பத்தையெல்லாம் ஒருநாள் வெற்றி கண்டே தீருவார்கள். அது மட்டும் நிச்சயம்!”
”நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்; ஏனெனில், நாங்கள் தொழிலாளி மக்களோடு ஒன்றுசேர்ந்து நிற்கிறோம்” என்று உறுதியாகவும், உரத்தும் கூறினாள் சோபியா. “அவர்களிடம் ஒரு மகா சக்தி மறைந்து கிடக்கிறது, அவர்களால் எதையும் சாதிக்க முடியும். அவர்களது மதிப்பையும் சக்தியையும் அவர்களை உணரச் செய்ய வேண்டியதே முக்கியம். அதை உணர்ந்துவிட்டால் அவர்கள் உடனே சுதந்திரமாகத் தாமே வளர்ச்சி பெறத் தொடங்குவார்கள்.”
அவளது பேச்சு தாயின் இதயத்திலே பற்பல உணர்ச்சிக் கலவைகளை உண்டாக்கியது. ஏதோ ஒரு காரணத்தால், அவள் சோபியாவுக்காக நட்புரிமையோடும், மனத்தாங்கலில்லாத ஒரு அனுதாபத்தோடும் வருத்தப்பட்டாள்; இம்மாதிரியே அவள் எளிய வார்த்தைகளை, புரியும் வர்த்தைகளையே மேன்மேலும் பேச வேண்டுமெனத் தாய் விரும்பினாள்.
”உங்களது சிரமங்களுக்கெல்லாம் பலனளிக்கப் போவது யார்?” என்று அமைதியுடனும் வருத்தத்துடனும் கேட்டாள் தாய்.
“நமக்கு ஏற்கெனவே விருது கிடைத்துவிட்டது” என்றாள் சோபியா. அந்த வார்த்தைகள் பெருமிதத்தோடு ஒலிப்பதாய்த் தாய்க்குத் தோன்றியது. “நாங்கள் ஒரு புதிய வாழ்க்கைப் பாதையைக் கண்டுபிடித்திருக்கிறோம்; அதுவே எங்களுக்குத் திருப்தி அளிக்கிறது. நமது இதயங்களின் பரிபூரண சக்திகளோடு நாம் வாழ்கிறோம். வாழ்க்கையில் நாம் இதைவிட வேறு என்னதான் எதிர்பார்ப்பது?”
தாய் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, கண்களைத் தாழ்த்திக்கொண்டு மீண்டும் சிந்தித்தாள்.
“மிகயீலுக்கு இவளைப் பிடிக்காது.”
அந்த இனிய காற்றை நெஞ்சு நிறையச் சுவாசித்தவாறு அவர்கள் விரைவாக ஆனால் அவசரமின்றிச் சென்றார்கள். தான் ஏதோ ஒரு புண்ணிய யாத்திரை செல்வது போலத் தாய்க்குத் தோன்றியது. தூரத்தொலைவிலுள்ள ஒரு தேவாலயத்துக்கு, அந்த தேவாலயத்திலுள்ள அற்புதச் சித்திவாய்ந்த தெய்வத்துக்கு ஒரு விடுமுறைப் பிரார்த்தனைக்காக குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சி பொங்கச் சென்று வந்த நினைவைத் தாய் ஞாபகப்படுத்திப் பார்த்தாள்.
சமயங்களில் சோபியா வானத்தைப் பற்றியோ காதலைப் பற்றியோ இனிமையான குரலில் ஏதாவதொரு புதிய பாட்டைப் பாடுவாள். அல்லது வயல் வெளிகளைப் பற்றியும் பாடியுள்ள பாடல்களை ஒப்புவிப்பாள். தாய் அதையெல்லாம் கேட்டு, புன்னகை புரிவாள்; தன்னை மறந்து அந்தப் பாடல்களின் இனிமையில் மனம் இழந்து அதன் தாள லயத்துக்குத் தக்கவாறு தலையை ஆட்டிக்கொள்வாள்.
அவளது இதயத்துக்குள்ளே வேனிற்கால இரவில் கம கமவென்று மணம் வீசும் ஒரு சிறு அழகிய நந்தவனத்தில் இருப்பதைப்போல், அமைதியும் தன்மையும் சிந்தனையும் நிரம்பி இருந்தது.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
நான் புதிதாக இராணுவத்தில் இணைந்து உள்ளேன், இங்கே அனைவரும் communication (தொடர்பு கொள்ள) செய்ய ஹிந்தி கட்டாயம், ஹிந்தி தெரியாமல் தமிழர்கள் நாங்கள் படும் வேதனைகள் , அவமானங்கள் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, ஹிந்தி மட்டும் தெரிந்து இருந்தால் நாங்கள் தான் இங்கே ராஜா, ஹிந்தி தெரியாததால் ஏதே அடிமைகள் போல கேவலமாக இருந்து வருகிறோம், திராவிடன் , தமிழன் என கம்பு சுத்துறவன் எல்லாம் தமிழ் நாட்டை விட்டு வெளியே வந்து பாருங்கடா, கூடுதலாக மொழி (ஹிந்தி) படிப்பதால் நம் அறிவும், வேலைவாய்பும் உயர தான் செய்யும், ஆனால் ஹிந்தி கற்க விடாமல் எங்களை முட்டாள் ஆக்கியதே திராவிட கட்சிகள் அவர்கள் இலாபத்திற்காக செய்த சாதனை, எங்களின் வேதனைகள் / உதயகுமார்/ இராணுவ வீரர் “
நான் புதிதாக இராணுவத்தில் இணைந்து உள்ளேன், இங்கே அனைவரும் communication செய்ய ஹிந்தி கட்டாயம், ஹிந்தி தெரியாமல் தமிழர்கள் நாங்கள் படும் வேதனைகள் , அவமானங்கள் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, ஹிந்தி மட்டும் தெரிந்து இருந்தால் நாங்கள் தான் இங்கே ராஜா, ஹிந்தி தெரியாததால் ஏதே அடிமைகள்
இப்படி ஒரு ட்விட்டைப் பார்த்தால் ஒரு தேசபக்தி கொண்டவர் எப்படி எதிர்வினையாற்றுவார்? கொதித்துப் போவார். என்ன அநியாயம், ஹிந்தி படிக்க விடாமல் தனது மக்களை துன்பப்படுத்தி அவர்கள் வெளி மாநிலங்களுக்கு (அதுவும் இராணுவத்தில்) பணி செய்யும்போது அவமானம் அடைய வைத்த திராவிட திம்மிகள் விளங்குவார்களா? என்று கொதித்திருக்க வேண்டும்.
ஆனால், நடந்தது நேரெதிர். மேற்படி ட்விட்டைப் போட்டவர் ஒரு சங்கி. சமீப காலமாக எப்படியாவது செயற்கை மழையையாவது வரவழைத்து தாமரையை தமிழகத்தில் மலரச் செய்தே தீருவது என்று சங்கிகள் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள். தமிழர்களோ, அப்படி மலர்ந்த தாமரையை கூலிக்கு ஆள் விட்டாவது பிடுங்கி எரிந்தே தீருவோம் என எதிர் கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருக்கின்றனர்.
”செயற்கை மழை”யின் ஒரு வகைமாதிரி தான் மேற்படி ட்வீட். இதற்கு மக்கள் ஆற்றியுள்ள எதிர்வினைகளை தொகுத்திருக்கிறோம்.
ராணுவம், தேசம், தேசபக்தி, ஜெய்ஹிந்த் போன்றவற்றை எல்லாம் தமிழர்கள் கிள்ளுக்கீரையாக நினைக்கும் அளவுக்கு ஈரோட்டுக் கிழவன் சோலியைப் பார்த்து விட்டுப் போயிருக்கான்.. பிளடி ஆண்டி இந்தியன்ஸ் என்று ஹெச்.ராஜா கொதிப்பதாக கேள்வி.
அடுத்து வருவது ஒரு ஸ்பெசல் அயிட்டம்…
”நான் புதிதாக பானிபூரி விற்க தமிழ்நாடு வந்துள்ளேன்,இங்கே communication செய்ய தமிழ் கட்டாயம்,தமிழ் தெரியாமல் ஹிந்தியர்கள் படும் வேதனைகள் , அவமானங்கள் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, தமிழ் மட்டும் தெரிந்து இருந்தால் நாங்கள் தான் இங்கே ராஜா,தமிழ் தெரியாததால் ஏதே அடிமைகளாக இருக்கிறோம்” சொல்பவர் பிரியா
நான் புதிதாக பாணிபூரி விற்க தமிழ்நாடு வந்துள்ளேன்,இங்கே communication செய்ய தமிழ் கட்டாயம்,தமிழ் தெரியாமல் ஹிந்தியர்கள் படும் வேதனைகள் , அவமானங்கள் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, தமிழ் மட்டும் தெரிந்து இருந்தால் நாங்கள் தான் இங்கே ராஜா,தமிழ் தெரியாததால் ஏதே அடிமைகளாக இருக்கிறோம்
உடனே இதற்கும் ஒரு 100 வாட்ஸ் பல்பை வாங்கி பரிசளித்து விட்டார் சுந்தர் என்பவர்.
//அப்பரம் என்ன இங்க என்ன செய்யுரீர் அதான் இந்தி எழுத படிக்க தெரிஞ்சிருச்சில்ல சட்டுபுட்டனு டெல்லிக்கு போய் செங்கோட்டையை பிடிக்க வேணடியது தான அது ஓவர்னா அட்லீஸ்டு அம்பானி ரேஞ்சுகாவது வாங்க!!! //
அப்பரம் என்ன இங்க என்ன செய்யுரீர் அதான் இந்தி எழுத படிக்க தெரிஞ்சிருச்சில்ல சட்டுபுட்டனு டெல்லிக்கு போய் செங்கோட்டையை பிடிக்க வேண டியது தான அது ஓவர்னா அட்லீஸ்டு அம்பானி ரேஞ்சுகாவது வாங்க!!!
அடுத்து ஒரு தமிழ் உணர்வாளர்…. /நான் மட்டும் உன் நிலையில் இருந்திருந்தால்… என் தாயை பழித்தவனைப்போல துடித்து… உன் வேலையாச்சி …கூந்தலாச்சினு வந்திருப்பேன் …காரணம் தமிழனா பொறந்தா மானம்தான் பெருசு..பணத்துக்காக மானத்தை விக்க கூடிய ஒரு நிலையில் , கேவலத்தில் மனுஷன் வாழக்கூடாது.// ()
நான் மட்டும் உன் நிலையில் இருந்திருந்தால்… என் தாயை பழித்தவனைப்போல துடித்து… உன் வேலையாச்சி …கூந்தலாச்சினு வந்திருப்பேன் …காரணம் தமிழனா பொறந்தா மானம் தான் பெருசு..பணத்துக்காக மானத்தை விக்க கூடிய ஒரு நிலையில் , கேவலத்தில் மனுஷன் வாழக்கூடாது.
இதில் முக்கியமான ஒரு விசயம் என்னவென்றால், மேற்படி ட்வீட்டுக்கு பதிலளித்தவர்கள் யாரும் அவர் சங்கி என்பதை ஊகிக்கவில்லை. உண்மையிலேயே இராணுவத்தில் பணிபுரியும் ஒரு தமிழ் இளைஞனின் குமுறல் என்றே நம்பி பதிலளித்தனர். இந்த ட்வீட் பல்வேறு ரீட்வீட்டுகள் சென்ற பின்னரே சம்பந்தப்பட்டவரின் வரலாறு பூகோளம் என தோண்டித் துருவி அவரது நதிமூலம் நாக்பூர் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர். அதன் பிறகு செயற்கை மழையில் மலர்ந்த தாமரை பட்ட பாட்டை நீங்களும் கொஞ்சம் பாருங்கள்.
”நான் புதிதாக அண்டார்ட்டிக்காவிற்குக் குடிபெயர்ந்துள்ளேன். இங்கே communication செய்ய பென்குயின்களின் மொழி கட்டாயம். அம்மொழி தெரியாமல் நான் படும் வேதனைகளும் அவமானங்களும் கொஞ்சநஞ்சம் இல்லை. அம்மொழி மட்டும் தெரிந்திருந்தால் நான்தான் இங்கே ராஜா. அம்மொழி தெரியாததால் நானிங்கே ஒரு அடிமை.”
நான் புதிதாக அண்டார்ட்டிக்காவிற்குக் குடிபெயர்ந்துள்ளேன். இங்கே communication செய்ய பென்குயின்களின் மொழி கட்டாயம். அம்மொழி தெரியாமல் நான் படும் வேதனைகளும் அவமானங்களும் கொஞ்சநஞ்சம் இல்லை. அம்மொழி மட்டும் தெரிந்திருந்தால் நான்தான் இங்கே ராஜா. அம்மொழி தெரியாததால் நானிங்கே ஒரு அடிமை.
”நான் புதிதாக MNCல் இணைந்து உள்ளேன், இங்கே அனைவரும் பிகர் உசார் செய்வது கட்டாயம், இது தெரியாமல் சிங்கிள்கள் நாங்கள் படும் வேதனைகள் , அவமானங்கள் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் இல்லை,இது மட்டும் தெரிந்து இருந்தால் நாங்கள் தான் இங்கே ராஜா,அது தெரியாததால் மொரட்டு சிங்கிளாக காலம் தள்ளுகிறோம்”
நான் புதிதாக MNCல் இணைந்து உள்ளேன், இங்கே அனைவரும் பிகர் உசார் செய்வது கட்டாயம், இது தெரியாமல் சிங்கிள்கள் நாங்கள் படும் வேதனைகள் , அவமானங்கள் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் இல்லை,இது மட்டும் தெரிந்து இருந்தால் நாங்கள் தான் இங்கே ராஜா,அது தெரியாததால் மொரட்டு சிங்கிளாக காலம் தள்ளுகிறோம்
நான் புதிதாக செவ்வாய் கிரகத்துக்கு குடிபெயர்ந்துள்ளேன். இங்கே communication செய்ய பூந்தி மொழி கட்டாயம். அம்மொழி தெரியாமல் நான் படும் வேதனைகளும் அவமானங்களும் கொஞ்சநஞ்சம் இல்லை. அம்மொழி மட்டும் தெரிந்திருந்தால் நான்தான் இங்கே ராஜா. அம்மொழி தெரியாததால் நானிங்கே ஒரு அடிமை.
நான் புதிதாக செவ்வாய் கிரகத்துக்கு குடிபெயர்ந்துள்ளேன். இங்கே communication செய்ய பூந்தி மொழி கட்டாயம். அம்மொழி தெரியாமல் நான் படும் வேதனைகளும் அவமானங்களும் கொஞ்சநஞ்சம் இல்லை. அம்மொழி மட்டும் தெரிந்திருந்தால் நான்தான் இங்கே ராஜா. அம்மொழி தெரியாததால் நானிங்கே ஒரு அடிமை.
நான் புதிதாக விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்துள்ளேன். இங்கே அனைவரும் communication செய்ய வடை சுடுதல் கட்டாயம். வடை சுட தெரியாமல் பால்வாடிகள் நாங்கள் படும் வேதனைகள் அவமானங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. அது மட்டும் தெரிந்தால் நாங்க தான் இங்கே ராஜா.அது தெரியாததால் ஏதோ அடிமைகள் போல் உள்ளோம்.
நான் புதிதாக விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்துள்ளேன். இங்கே அனைவரும் communication செய்ய வடை சுடுதல் கட்டாயம். வடை சுட தெரியாமல் பால்வாடிகள் நாங்கள் படும் வேதனைகள் அவமானங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. அது மட்டும் தெரிந்தால் நாங்க தான் இங்கே ராஜா.அது தெரியாததால் ஏதோ அடிமைகள் போல் உள்ளோம். https://t.co/NPxBBCYhjB
நான் புதிதாக ஒரு ஐடி கம்பெனியில் சேர்ந்துள்ளேன், ஜாவா லாங்குவேஜ் தெரியுமானு கேட்கும் போது தமிழ் தெரியும்னு சொன்னேன் துப்பில மூஞ்சிட்டானுங்க. ஆகவே… அனைவரும் ஜாவாவில் பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நான் புதிதாக ஒரு ஐடி கம்பெனியில் சேர்ந்துள்ளேன், ஜாவா லாங்குவேஜ் தெரியுமானு கேட்கும் போது தமிழ் தெரியும்னு சொன்னேன் துப்பில மூஞ்சிட்டானுங்க. ஆகவே… அனைவரும் ஜாவாவில் பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு வழியாக தேசபக்தியை சல்லி சல்லியாக நொறுக்கித் தள்ளிவிட்டார்கள் தமிழ் கீச்சர்கள். தமிழ்நாட்டில் சங்கிகள் பிடிக்கும் பிள்ளையாரெல்லாம் மங்கிகளாகவே மாறும் மாயம் என்னவென்பது புரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டிக்கிறார்கள் மயிலாப்பூர் அம்பிகள். அந்த இரகசியத்தைப் புரிந்து கொண்ட ஒருவர் பெரியார் திடலின் கல்லறைக்குள் புரண்டு படுத்து சிரித்துக் கொண்டிருக்கிறார்.
வில்லவன்சென்ற மாதத்தில் ஒரு ஞாயிறன்று குடிநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் அதற்கு அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் (இலவச) சிகிச்சை குறித்து மரு.அரவிந்தன் சிவகுமார் மற்றும் மரு.சிறீராம் ஆகியோர் பங்கேற்கும் கலந்துரையாடல் ஒன்றின் விளம்பரத்தை முகநூலில் காண நேர்ந்தது. சும்மா கேட்டு வைப்போம் எனும் முடிவோடுதான் அங்கே பயணித்தேன். விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இடத்தை கண்டறிய அரைமணி நேரமானது. இதில் வினோதம் என்னவென்றால் நிகழ்வு நடக்குமிடத்திற்கு அருகேயும் தேடிக் கொண்டிருந்தேன். கண்டுபிடிக்க இயலாமைக்குக் காரணம், ஒரு குடிசைப் பகுதியின் வாயிலில் இரண்டு பிரபல மனநல மருத்துவர்கள் கலந்துரையாடுவார்கள் என்பதை என் மனம் எதிர்பார்த்திருக்கவில்லை. இதுநாள்வரை கலந்து கொண்ட எந்த உளவியல் / மனநலம் சார்ந்த கூட்டமும் மக்களின் வாழிடங்களில் நிகழ்ந்ததில்லை.
அதிலும் வறுமைக்கோட்டுக்கு கீழிருக்கும் மக்களை அவர்கள் வாழுமிடத்திலேயே சந்திக்கும் ஒரு மனநல நிகழ்ச்சியை நானறிந்த எந்த உளவியலாளரும் தன் வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டார்கள். லயோலா மற்றும் ஸ்டெல்லா மேரீஸ் போன்ற சில கல்லூரிகளில் உள்ள சமூகவியல் / சமூகப் பணி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலாம். மற்றபடி இத்தகைய நிகழ்வுகள் யாவும் மூடப்பட்ட குளிரூட்டப்பட்ட அறைகளில் பவர் பாயிண்ட் படைப்புகளோடு மட்டுமே காணக்கிடைக்கும்.
அதிகபட்சம் 20 பேர் கூடிய அந்த கலந்துரையாடல் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது?
ஒரு மனநலத்துறை நிபுணருக்கு (மருத்துவர் மட்டுமல்ல) வார இறுதி என்பது இன்னொரு முரட்டு வருவாய் ஆதாரம். அப்போது நடக்கும் பயிற்சி வகுப்புகளுக்கு ஆயிரங்களில் அவர்கள் பணம் வாங்கலாம். எனக்குத் தெரிந்த ஒரு மனநல மருத்துவர் நடத்திய இரண்டு நாள் பயிற்சி வகுப்புக்கு கட்டணம் தலைக்கு இருபதாயிரம். காதல் தோல்வியை கையாள்வது எப்படி என்பது அந்த வகுப்பின் தலைப்பு. கார்ப்பரேட் உலகை இலக்கு வைத்து நீங்கள் மனநலத் துறையில் முதலீடு செய்தால் வார இறுதி என்பது ஒரு பொன் முட்டையிடும் வாத்து. மனநல சிகிச்சை மையம் ஒன்றின் நிர்வாகப் பதவிக்காக ஒரு பிரபல உளவியலாளருக்கு பேசப்பட்ட சம்பளம் மாதம் 5 இலட்சம்.
இத்தனை வருவாய் வாய்ப்புள்ள ஒரு சூழலில், இரண்டு உளநல மருத்துவர்கள் தமது ஞாயிறு விடுமுறையை சுகாதாரப் பணியாளர்கள் வசிக்கும் பகுதியில் செலவிட முன்வந்தது ஒரு மகத்தான முன்னெடுப்பு. மரு.அரவிந்தனிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு போதைக்கு அடிமையான பெண், வட்டிக்கு கடன் வாங்கி தனியார் ரீஹாப் மையம் ஒன்றில் சிகிச்சை பெற்ற சம்பவத்தை கேட்ட மறுவாரம் அவர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார் (அந்த வறிய நோயாளரின் குடும்பத்துக்கு அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை இலவசமாக கிடைக்கிறது எனும் செய்தி தெரிந்திருக்கவில்லை).
(மாதிரிப் படம்)
வறுமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, பிற மக்கள் காட்டும் அசூயை, அடிப்படை வசதியற்ற வாழிடம் (அவர்கள் வீடுகள் சிலவற்றுக்கு கதவுகளே இல்லை, சுவராக இருப்பவை பழைய ஃபிளக்ஸ் பேனர்கள், வீடுகளில் விறகடுப்புகள்தான் எரிகின்றன) ஆகியவை மனிதர்களை மனரீதியாக கடுமையாக காயப்படுத்தும். ஆகவே அவை பல மனநல பாதிப்புக்களை இழுத்து வரும். மனநலத்துறை எங்கே அதிகம் பணியாற்ற வேண்டுமோ அதுதான் அத்துறையால் அதிகம் புறக்கணிக்கப்படும் இடமாக இருக்கிறது.
கலந்துரையாடல் துவங்கிற்று. தங்களைப் பற்றிய எளிய அறிமுகத்துக்குப் பிறகு “உங்க தெருவுல எவ்வளவு பேரு டெய்லி குடிக்கிறாங்க” என கேட்கிறார் மருத்துவர். அதற்கு நாப்பது பேரு இருப்பாங்க என பதில் வருகிறது.
(இது அங்கு நடந்த உரையாடலின் ஒரு சிறு பகுதி)
கேள்வி : அதில் எத்தனை பேர் காலையிலையே குடிக்கிறாங்க?
அந்த 40 பேருமே காலையில குடிக்கிறவங்கதான், சாயாங்கலாம் குடிக்கிறவங்கன்னா கணக்கு இன்னும் அதிகமாவும் (இதனை அங்கிருந்த இரு பதின்வயது இளைஞர்கள் சொல்கிறார்கள்)
அங்கே அமர்ந்திருந்த பல ஆண்கள் தாங்கள் குடிப்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
கேள்வி : எதுனால குடிக்கிறீங்க / குடிக்கிறாங்க?
குடும்ப கஷ்டம்.
குடும்ப பிரச்சினை, வீட்டுக்கு வந்தாலே நிம்மதியில்லை.
(மாதிரிப் படம்)
வேலை அப்படி சார், நாய் செத்து நாத்தமெடுக்கும். கிட்ட போகவே முடியாது. வெரல் தண்டிக்கு (ஆள்காட்டி விரலை காட்டுகிறார்) புழு இருக்குற குப்பய வாரச்சொல்லுவாங்க. குவாட்டர் அடிச்சாத்தான் அதையெல்லாம் தைரியமா அள்ள முடியும்.
குப்பை வண்டி இழுக்குறேன், உடம்பு வலிக்கு குடிச்சாத்தான் தூங்க முடியும். நான் குடிச்சுட்டு வேலை பார்க்க மாட்டேன். ஒருவேளை காலைலயே குடிச்சிட்டேன்னா வேலைக்குப் போக மாட்டேன்.
இங்க இருக்குற பொம்பளைங்க என்ன வேலை செய்யுறாங்க?
குப்பை அள்ளுற வேலைதான்.
அவங்களும் அதே வேலையைத்தானே செய்யுறாங்க. அவங்க ஏன் குடிக்கிறதில்லை?
சிலருக்கு பதில் தெரியவில்லை, ஒரே ஒருவர் மட்டும் அவங்கள்ள சில பேரும் குடிக்கிறாங்க சார் என்றார்.
அங்கிருந்த பெண் ஒருவர் “13 வயசுலேருந்து இந்த வேலையை பார்க்குறேன். பதினேழு வருசமாச்சு. குடிக்காம இருக்கலாம் சார், எல்லாம் மனசுதான் காரணம்” என்கிறார்.
சரி, குடிக்கிறதுனால உங்களுக்கு என்னென்ன பிரச்சினை வருது?
வூட்டுல சண்டை.
புள்ளைங்களுக்கு நல்லதா எதையும் செய்ய முடியல.
நெறைய பணம் செலவாகுது. வீட்டு செலவுக்கு கொடுக்க முடியல.
கோவம் வருது, இதுவரை மூனு டிவியை ஒடைச்சுட்டேன்.
(இன்னொருவர்) “நான் ரெண்டு பீரோவை ஒடைச்சுட்டேன்”
அதில் ஒருவர் சொன்னது மிக முக்கியமான வார்த்தைகள் “ போதை தெளிஞ்ச பிறகு யோசிக்கையில நான் ஒரு சாத்தானைப் போல தெரியுறேன். மத்தவங்களை பார்க்க, பேச கூச்சமா இருக்கு. நம்மள யாரும் சேர்த்துக்க மாட்டாங்கன்னு தோணுது. சின்ன புள்ளையா இருக்குறப்போ விளையாட்டா கத்துக்கிட்டது, இப்போ விட முடியல. இன்னைக்கு அதைவிட சின்ன வயசுப் பசங்க குடிக்கிறதை பார்க்குறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு”
ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகுது குடிக்க?
(மாதிரிப் படம்)
முன்னயெல்லாம் ஒரு கோட்டர் அடிச்சாலே போதுமா இருந்தது. இப்போ ரெண்டு கோட்டர் அடிச்சுட்டு உங்களாண்ட பேசிக்கிட்டிருக்கேன். ஒன்னுமே ஏறலை. தினமும் நானூறுலேருந்து ஐந்நூறு ரூபாய் ஆயிரும்”
சரியா தெரியல, சம்பளத்துல பெரிய செலவு இதுதான்.
உத்தேசமாக எல்லோரும் நானூறு ரூபாய்க்கேனும் குடிக்கிறார்கள். அதில் ஒருவர் காசில்லன்னா கிடைக்கிற இரும்பு, பாட்டிலை பொறுக்கிகிட்டு போய் எடைக்குப் போட்டாவது குடிச்சிடுறேன் என்றார்.
பிறகு நடந்த ஒரு உத்தேச கணக்கீட்டில் குடிக்கும் ஒவ்வொருவரும் ஆண்டொன்றுக்கு இரண்டில் இருந்து நான்கு இலட்சம் ரூபாய் வரை செலவிடுவது தெரிந்தது. இந்த செலவு கணக்கு குடியால் அவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள், அவர்கள் எடுக்கும் விடுப்பு மற்றும் அவர்கள் சிகிச்சைக்கான செலவு ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
இந்த பணம் மிச்சமானால் நீங்க என்னவெல்லாம் செய்யலாம்?
வீட்டுல நல்ல சாப்பாடு சாப்பிடலாம்.
புள்ளைங்கள நல்ல எடத்துல படிக்க வைக்கலாம்.
வீட்டுல சண்டை இல்லாம பார்த்துக்கலாம்.
அவசரத்துக்கு தண்டல் வாங்க வேண்டாம்.
சரி நாம மட்டும்தான் குடிக்கிறோமா? இல்ல பணக்காரங்களும் குடிக்கிறாங்களா?
எல்லாரும்தான் குடிக்கிறாங்க.
நமக்கு குடியால வர்ற எல்லா பிரச்சினையும் அவங்களுக்கும் வருதா?
அது தெரியலையே.
அவங்க குடிக்கிற சரக்கு நல்ல சரக்கா இருக்கும்.
அவங்களுக்கு நமக்கு வருமளவுக்கு பிரச்சினைகள் வர்றதில்லை. ஏன்னா நீங்கசொல்ற மாதிரி அவங்க குடிக்கிறது நமக்கு கிடைக்கிறதைவிட நல்ல சாராயம்தான். அதுமட்டுமில்லை. அவங்க சத்தான சாப்பாட்டுக்காக செலவு பண்ண முடியும். உடம்புக்கு சின்னதா பிரச்சினை வரும்போதே வைத்தியம் பண்ணிக்கிறாங்க. அதனால அவங்க உடம்புக்கு பெரிய பிரச்சினையெல்லாம் சீக்கிரம் வர்றது இல்ல. ஆட்டோவோ, காரோ பிடிச்சு வீட்டுக்கு போகலாம். அதனால குடிச்சிட்டு வண்டி ஓட்டி ஆக்சிடெண்ட் ஆகவும் வாய்ப்பில்லை. அதனால குடியினால உருவாகுற பிரச்சினைகள் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்குறதில்லை.
சரி, குடியை நாமளே நிறுத்த முடியுமா?
முடியும்னுதான் நினைக்கிறேன்.
கண்டிப்பா முடியும்.
எப்படி சொல்றீங்க?
நான் மாலை போட்டா குடிக்க மாட்டேன். அப்படீன்னா நம்மால முடியும்தானே..
சரி, அதையே ஏன் வருசம் முழுக்க செஞ்சுடலாமே.. ஏன் அது முடியறதில்லை?
(சிரிக்கிறார்கள்)
குடி முதல்ல ஒரு விளையாட்டு போல ஆரம்பித்து பிறகு ஒரு பழக்கமாகி கடைசியில் ஒரு நோயாக மாறுது. காலையிலயே குடிக்கிறது, குடிக்காம இருக்க முடியாதுங்குற நிலை, எவ்வளவு குடிச்சாலும் போதை ஏறலங்குற நிலை மற்றும் அதனால வர்ற உடல் பிரச்சினைகள் (அது குறித்து ஒரு சிறு விளக்கம் தரப்பட்டது) இது எல்லாமே குடி ஒரு நோயாக மாறிவிட்டது என்பதற்கான அறிகுறி. ஒரு நோய்க்கு சிகிச்சை எடுத்துக்குறதுதான் நல்லது. மனசுதான் காரணம்னு சொன்னாலும் அது பலருக்கும் சாத்தியப்படுறதில்லை. குடியை மறக்க சிகிச்சைகள் இருக்கும்போது அதை எடுத்துக்கலாமே, எல்லாருக்கும் குடியை நிறுத்தனும்னு மனசு சொல்லுது. ஆனா அது செய்ய கஷ்டமானதா இருக்கு. அப்படீன்னா சுலபமா கிடைக்குற சிகிச்சையை எடுத்துக்கலாம் இல்லையா?
மனநல மருத்துவர் சிறீராம்.
அரசாங்க மருத்துவமனையில் குடி மீட்பு சிகிச்சைகள் இலவசமா கிடைக்குது. அது தெரியாம பலபேரு ஆயிரக்கணக்குல கடன் வாங்கி தனியார் ரீஹாப் மையங்களுக்கு போறாங்க. அரசு மருத்துவமனைகள்ல குடியை நிறுத்துற வழிகளை சொல்லிக்கொடுத்து அதை நிறுத்தும்போது வரும் உடல் பிரச்சினைகளை சரி செய்ய மருத்துகள் கொடுப்பாங்க. அதை முறையா பின்பற்றினா குடியை நிறுத்த முடியும். அந்த சிகிச்சையை எடுத்துக்க யாராவது தயாரா இருக்கீங்களா?
மூன்று பேர் உடனடியாக் ஒப்புக்கொள்கிறார்கள். இன்னொருவர் வந்து பார்த்துட்டு முடிவு பண்றேன் என அரை மனதோடு ஒப்புக்கொள்கிறார்.
தமிழகத்தில் இருக்கும் குடிநோயாளிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் இந்த நான்கு எனும் எண்ணிக்கை மிக அற்பமானது. அந்த நால்வரையும்கூட சிகிச்சை வரை அழைத்துவர முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். ஆனாலும் இத்தகைய உரையாடல்கள் குடியால் கடுமையாக பாதிக்கப்படும் இடங்களில் நிகழ்வது அதி அத்தியாவசியமான முன்முயற்சி. அவர்களிடம் இருந்து உழைப்பை பறித்துக்கொண்டு ஒதுங்கிச்செல்லும் மனிதர்களாவே நாம் இருக்கிறோம். மனநலத்துறை எப்போதும் எளிய மக்களை நாடிசெல்வதில்லை. பெரும்பாலான மனநல பிரச்சினைகளுக்கு சமூக பொருளாதார காரணிகளே அடிப்படையாக இருக்கின்றன.
அரசியல், சமூகத் தளத்தில் இருந்து அவர்களுக்கு பணியாற்ற வேண்டியது எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு உளவியல் துறையில் இருந்தும் பணியாளர்கள் அவசியம். மனநல பிரச்சினைகள் முதலில் ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்வில் ஒரு இடையூறாக துவங்கி இயலாமையாக மாறி இறுதியில் மனரீதியிலான ஊனமாக மாறக்கூடும். மனநலத்துறை தொடர்ந்து சாமானிய மக்களிடம் செயல்படும்போது மக்களிடம் மனநல இடையூறுகள் உருவாகும்போதே சரிசெய்ய வாய்ப்பு கிடைக்கும்.
தற்கொலைகள், குடிநோய், மன அழுத்தம், தீவிர சைக்கோசிஸ் நோய்கள் ஆகியவை ஆரம்ப கட்டத்தில் சற்றே எளிதாக சரிசெய்யக்கூடியவை. தீவிரமான பிறகு அதற்கான செலவுகள் மலைக்க வைக்கும். குடிநோய் மீட்பு மையங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாயை சாதாரணமாக வசூலிக்கின்றன. அதுவும் மாதக்கணக்கில் சிகிச்சை தேவைப்படும். மருத்துவமனைக்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல்தான் மனநல சிகிச்சையை சிக்கலானதாக மாற்றுகிறது. ஏனைய உடல்நல பிரச்சினைகளைப்போல பெரும்பாலான மனநல பிரச்சினைகளையும் முன்கூட்டியே தடுக்க முடியும். ஆனால் அதற்குரிய நடைமுறைக்கு உகந்த பாடங்கள், பயிற்சிகள் மற்றும் களச்செயல்பாடுகள் நம்மிடையே கிட்டத்தட்ட இல்லை.
மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார்.
மனநலத்தை தனிப்பட்ட நபர்களின் பிரச்சினையாக கருதி தனிப்பட்ட தீர்வுகளை மட்டுமே நம்பியிருப்பதால் பல தருணங்களில் சிகிச்சைகள் தோல்வியடைகின்றன. அந்த இயலாமை மனநலத்துறை ஆட்களைக்கூட ஜக்கி போன்ற சாமியார்களிடம் சரணடைய வைக்கிறது. இதனால்தான் ஆரா எனர்ஜி, குட் ஸ்பிரிட், பாசிடிவ் எனர்ஜி / வைபிரேஷன், பிரானிக் ஹீலிங் போன்ற அறிவியலுக்கு ஒவ்வாத குப்பைகளை ஆராதிக்கும் பல உளவியல் “நிபுணர்கள்” உலவுகிறார்கள். உளவியல் பிரச்சினைகளை உருவாக்குகிற மற்றும் அதனை தீவிரமாக்கவல்ல காரணிகள் நோயாளி வாழும் சமூக சூழலில் இருக்கின்றன. பிணியாளர்களோடு உடனிருப்போரது துயரங்கள் என்பது கண்டுகொள்ள ஆளில்லாமல் நிற்கும் இன்னுமொரு அனாதை. இவை குறித்த செயல்பாடின்மை மனநலத்துறையின் பெரும் சாபம்.
நோய்க்கிருமியை கட்டுப்படுத்தத் தெரியாமல், ஒரு மருத்துவர் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு நிகரான நிலை இது. அது கொடுக்கும் விரக்தியும், குற்ற உணர்வும்கூட மனநலத் துறையில் இருக்கும் பலரை போலி அறிவியலை நோக்கி தள்ளக்கூடும். அது இன்னொரு வகையான மனநோய் போன்றதே (யோகா, ஆரா, பிரானிக் ஹீலிங் ஆகியவற்றைப்பற்றி எதிர்மறையாக பேசினால் பாய்ந்து பிராண்டிவிடும் அளவுக்குப் போகிற உளவியல் வல்லுனர்களை சந்தித்திருக்கிறேன்). பெரிய உயரங்களைத் தொடுவார் என எதிர்பார்த்த ஒரு உளவியல் முனைவர் இப்போது ஏதோ பாத சிகிச்சை நடத்துவதாக அனுப்பிய செய்தியின் திகைப்பு எனக்கு இன்னமும் குறையவில்லை.
மக்களைக் காப்பதெல்லாம் பிறகு, முதலில் உளவியல் / மனநலத்துறை ஆட்கள் தம்மை போலி சிகிச்சை மற்றும் போலி நம்பிக்கைகளில் இருந்து காத்துக்கொள்ளவேனும் மக்களை நோக்கி சென்றாக வேண்டும். வல்லுனர்கள் தயாராக இல்லை என நினைப்பதும் மக்கள் ஒத்துழைக்க மாட்டார்கள் என நினைப்பதும் தவறான நம்பிக்கைகள் என்பதை உணர மேலே விவரித்த நிகழ்வு ஒன்றே போதுமானது. மூடப்பட்ட அறைகளில் இருந்து மனநலத்துறை வெளியே வரட்டும், அதன் வழியே தமக்கான மனநலத்தை பெற்றுக்கொண்டு பிறரது மனநலத்தையும் பேணட்டும்.
பின்குறிப்பு :குடிநோயின் அரசியல் காரணங்களை விவரிப்பது கட்டுரையின் நோக்கம் அல்ல. இது மனநலத்துறை எளிய மக்களை சென்றடைய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்ட எழுதப்பட்டது. ஆகவே இந்த பதிவில் அதுகுறித்த உரையாடல்கள் சேர்க்கப்படவில்லை.
வில்லவன்
அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்”எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.
லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின் | பாகம் – 1
வி.இ.லெனின்லியோ டால்ஸ்டாய் மறைந்து விட்டார். ஒரு கலைஞர் என்ற முறையில் அவரது உலகளாவிய முக்கியத்துவமும், ஒரு சிந்தனையாளர், பிரச்சாரகர் என்ற முறையில் அவரது உலகப் புகழும் தமக்கே உரிய வழியில் ரஷியப் புரட்சியின் உலக முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன.
நாட்டின் அடிமை முறை ஆதிக்கம் செலுத்தி வந்தபொழுது எல்.என்.டால்ஸ்டாய் ஒரு மகத்தான கலைஞராகத் தோன்றினார். தமது இலக்கியச் செயல்பாட்டில் அரை நூற்றாண்டிற்கும் அதிகமான காலத்தில் அவர் படைத்தளித்த பல மாபெரும் நூல்களில் 1861-க்குப் பிறகும் அரை அடிமைத்தன அரசாக இருந்த பழைய புரட்சிக்கு முந்திய ரஷ்யாவை – நிலப்பிரபுவும் விவசாயியும் வாழ்ந்த கிராமிய ரஷ்யாவை – அவர் பிரதானமாயும் சித்தரித்தார்.
ரஷ்ய வரலாற்றின் இந்தக் காலகட்டத்தினைச் சித்தரிப்பதில் டால்ஸ்டாய் மிகப்பல பெரும் பிரச்சினைகளை எழுப்புவதில் வெற்றி கண்டார். கலை ஆற்றலில் மிகவும் உயர் சிகரத்தை எட்டுவதில் வெற்றி கண்டார். இதன் விளைவாக அவரது நூல்கள் உலக இலக்கியத்தில் மிகச் சிறந்தவற்றிடையே அணி செய்கின்றன. அடிமை எஜமான்களின் காலடியில் கிடந்த நாடு ஒன்றில் புரட்சிக்குத் தயாரிப்புகள் செய்யும் சகாப்தம் எழுந்ததானது, டால்ஸ்டாய் கொடுத்த அற்புதமான ஒளியின் காரணமாக, மனிதகுலம் முழுவதன் கலைச்சிறப்பின் வளர்ச்சியில் ஒரு முன்னேற்றப் படியாகியது.
டால்ஸ்டாய் ஒரு கலைஞர் என்ற முறையில் ரஷ்யாவிலுங்கூட மிக மிகச் சிறு பகுதியினரால் மட்டுமே அறியப்பட்டிருந்தார். அவரது படைப்புக்களை உண்மையிலயே அனைவரின் சொத்தாக ஆக்க வேண்டுமானால், கோடானு கோடி மக்களை அறியாமையிலும் சலிப்பூட்டும் வேலையிலும், வறுமையிலும் ஆழ்த்திவிடும் சமூக அமைப்பினை எதிர்த்துப் போராட்டம் துவக்கப்பட வேண்டும். ஒரு சோஷலிசப் புரட்சி சாதனையாக்கப்பட வேண்டும்.
வெகு ஜனங்கள், நிலப்பிரபுக்கள், முதலாளிகள் ஆதிக்கத்தைத் தூக்கி எறிந்து தமக்கே உரிய வாழ்வுக்கான மனித நிலைமைகளை உருவாக்கிக் கொண்ட பிறகு, படித்துப் பாராட்டுவதற்கான கலைச்சிறப்புடைய நூல்களை மட்டும் டால்ஸ்டாய் படைக்கவில்லை. இன்றைய அமைப்பினால் ஒடுக்கப்பட்டுவரும் பெரும்பாலான வெகு ஜனங்களின் மனோநிலையினை அற்புதமான ஆற்றலுடன் விளக்குவதிலும், அவர்களது நிலைமையைச் சித்தரித்து, அவர்களிடை தானே எழும் கண்டன ஆக்குரோஷ உணர்வுகளை வெளியிடுவதிலும் அவர் வெற்றி கண்டார்.
பிரதானமாயும் 1861 – 1904 யுகத்தினைச் சேர்ந்தவராக இருந்த டால்ஸ்டாய் அவரது நூல்களில் ஒரு கலைஞர், ஒரு சிந்தனையாளர், போதகர் என்ற வகையிலும் – முதல் ரஷ்யப் புரட்சி முழுவதன் அதன் வலிமை, பலவீனம் இவற்றோடு கூடிய அதன் விசேஷ வரலாற்று அம்சங்களை அற்புதமான தெளிவுடன் உருவகப்படுத்திக் காட்டினார்.
நமது புரட்சியின் பிரதான தனி அம்சங்களில் ஒன்று அது உலக முற்றிலும் முன்னேற்றமான முதலாளித்துவ வளர்ச்சியும், ரஷ்யாவில் ஓரளவுக்கு முன்னேற்றமான வளர்ச்சியும் உடைய யுகத்தில் நடைபெற்ற விவசாயி பூர்ஷ்வா (பூர்ஷ்வா – முதலாளிகள்) புரட்சி. இது பூர்ஷவா புரட்சி, காரணம் அதன் உடனடி நோக்கம் ஜாரின் எதேச்சாதிகாரத்தை ஜாரிச மன்னராட்சியையும் தூக்கி எறிவது, நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பது, ஆனால் பூர்ஷ்வா ஆதிக்கத்தை ஒழிப்பதல்ல.
குறிப்பாக விவசாயிகளுக்கு இந்தப் பிந்திய நோக்கம் தெரியாது. அவர்கள் இந்த நோக்கத்திற்கும் போராட்டத்தின் நெருக்கமான உடனடியான கோரிக்கைகளுக்கு இடையிலான வித்தியாசத்தைத் தெரிந்திருக்கவில்லை. அது ஒரு விவசாயிகளின் பூர்ஷுவா புரட்சியாக இருந்தது . காரணம் எதார்த்த நிலைமைகள் விவசாயிகளின் வாழ்வின் அடிப்படை நிலைமைகளை மாற்றுவது, நிலவுடமையின் பழைய மத்திய கால அமைப்பினை உடைப்பது, முதலாளித்துவத்திற்கான “தளத்தைத் தயாரிப்பது” என்ற பிரச்சினையை முன்னணியில் வைத்தன. இந்த எதார்த்த நிலைமைகள் விவசாயப் பொதுமக்கள் ஏறத்தாழ சுதந்திரமான வரலாற்றுப் போராட்ட அரங்கில் தோற்றமளிப்பதற்குப் பொறுப்பாக இருந்தன.
டால்ஸ்டாயின் நூல்கள் குறிப்பாகவும் விவசாயிகள் வெகுஜன இயக்கத்தின் வலிமை, பலவீனம், ஆற்றல், குறைகள் இவற்றை வெளிப்படுத்துகின்றன.
டால்ஸ்டாயின் நூல்கள் குறிப்பாகவும் விவசாயிகள் வெகுஜன இயக்கத்தின் வலிமை, பலவீனம், ஆற்றல், குறைகள் இவற்றை வெளிப்படுத்துகின்றன. போலீசுடன் சேர்ந்து நின்ற அரசு அதிகாரபூர்வமான சமய குரு பீடத்தை எதிர்த்து அவரது காரசாரமான உணர்ச்சி பொங்கும் தாட்சண்யமற்ற கடும் கண்டனம், பழமையான விவசாயிகளிடையிலான ஜனநாயக வெகுஜனப் பகுதிகளின் உணர்ச்சிகளை வெளியிட்டன. அவர்களிடை பல நூற்றாண்டுகால அடிமைத்தனம், ஆட்சிக் கொடுங்கோல், கொள்ளை, மதபீடக் குருக்கள் ஆதிக்கம், ஏமாற்று உருட்டுப் புரட்டுகள் இவற்றின் விளைவாகக் கோபாவேசமும், பகைமையும் மலைபோல் குவிந்திருந்தன. நிலத்தில் தனியுடமையினை அவர் வளைந்து கொடாது எதிர்த்ததானது இந்த வரலாற்றுக் காலகட்டத்தில் விவசாய வெகுஜனங்களின் மனோதத்துவத்தினை எடுத்துக் காட்டியது.
அந்தக் கட்டத்தில் பழைய மத்தியக் காலம் நிலவுடைமை, எஸ்டேட்டுகள் வடிவிலும் அரசாங்க “ஒதுக்கீடுகள்” வடிவிலும் நாட்டின் வளர்ச்சிக்கு நிச்சயமாயும் சகிக்க முடியாது தடைக்கல்லாக இருந்தது. இந்தப் பழைய நிலவுடைமை முறை மிகவும் உடனடியாகவும் தாட்சண்யமின்றியும் தவிர்க்க முடியாத வகையில் அழிக்கப்படும் என்பது நிச்சயம். முதலாளித்துவத்தை எதிர்த்த அவரை இடைவிடாத குற்றச்சாட்டுக்கள் மிகவும் ஆழ்ந்த உணர்ச்சியோடும் மிகவும் ஆர்வம்நிறை ஆக்குரோஷத்துடனும் பரிணமித்த குற்றச்சாட்டுகள், நகரங்களிலிருந்தும் வெளிநாட்டின் எங்கிருந்தோ வந்த புரியாத கண்ணுக்குத் தெரியாத புதிய விரோதியின் வருகையால் தந்தைவழி மரபு விவசாயிகள் அடைந்த பயங்கரம் அனைத்தையும் எடுத்துக் கூறின.
அந்த விரோதி கிராமிய வாழ்க்கையின் தூண்கள் எல்லாவற்றையும் அழித்து, தன்னுடன் முன் என்றும் கண்டிரா வகையில் நாசம், வறுமை, பட்டனி, காட்டுமிராண்டித்தனம், வேசத்தனம், மேகநோய் போன்ற “ஆதிகால சேகரிப்பு சகாப்தத்தின்” தொடர்ந்த எல்லாத் தீம்புகளையும் கொண்டு வந்தன. சர்வ வல்லமை பெற்ற கனவான் கூப்பனின்48 விரித்துரைக்கப்பட்ட மிகவும் நவீனமான கொள்ளை முறைகள் ரஷ்ய மண்ணில் நடவு செய்யப்பட்டதால் இவை நூறுமடங்கு உக்ரமடைந்தன.
ஆனால் இந்த ஆவேசமான கண்டனக்காரர், உணர்ச்சிமிகு குற்றச் சாட்டாளர், மாபெரும் விமர்சகர்; அதே பொழுதில் தமது நூல்களில் ரஷ்யாவை அச்சுறுத்தி வரும் நெருக்கடியின் காரணங்களையும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் புரிந்து கொள்ளத் தவறி விட்டார். இது தந்தைவழி மரபு அப்பாவி விவசாயியின் தனி இயல்பாக இருக்கலாம். ஐரோப்பியக் கல்வி பெற்ற ஓர் எழுத்தாளருக்கு உரியதன்று.
நிலப்பிரபுத்துவப் போலீஸ் ஆட்சியை எதிர்த்தும், மன்னராட்சியினை எதிர்த்தும் அவர் நடத்திய போராட்டம், அரசியலையே மறுப்பதாக மாறியது, “தீமையை எதிர்க்காதே” என்ற சித்தாந்தத்திற்கு அழைத்துச் சென்றது; 1905-07-லான மக்களின் புரட்சிகரப் போராட்டத்திலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தியது. அதிகார பூர்வமான சமய குருபீடத்திற்கு எதிரான போராட்டம் ஒரு புதிய சுத்தப்படுத்தப் பெற்ற சமய போதனையுடன் சேர்ந்து நடைபெற்றது. அதாவது ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கு ஒரு புதிய சுத்திகரிக்கப்பட்ட நயமான விஷமாக இருந்தது.
நிலத்திலான தனியுடைமைபாலான எதிர்ப்பு, உண்மை விரோதியான -நிலப்பிரபுத்துவம், அதன் அதிகாரத்தின் அரசியல் கருவியான அதாவது மன்னராட்சிக்கு எதிரான போராட்டமாக ஒருமுகப்படுத்தப்படவில்லை. மாறாகக் கனவு போன்ற, கலைவுற்ற, ஆண்மையற்ற ஒப்பாரிகளாகக் காட்சியளித்தன. முதலாளித்துவத்தையும் அது வெகுஜனங்கள் மீது விளைக்கும் தீம்புகளையும் அம்பலப்படுத்துவதானது, சர்வதேச சோஷலிசத் தொழிலாளி வர்க்கம் நடத்தி வரும் உலகு தழுவிய விடுதலைப் போராட்டத்தின்பாலான ஒரு முற்றிலும் உறக்க மனப்பான்மையுடன் இணைந்திருந்தது.
டால்ஸ்டாயின் கருத்துகளிலான முரண்பாடுகள் அவரது சொந்தக் கருத்துகளில் உள்ளார்ந்து கிடக்கும் முரண்பாடுகள் மட்டுமல்ல, மாறாகச் சீர்த்திருத்தத்திற்குப் பிந்திய ஆனால் புரட்சிக்கு முந்தியதான ரஷ்ய சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்கள், பல்வேறு பகுதிகளின் மனோதத்துவத்தை நிர்ணயித்த மிக மிகச் சிக்கலான, முரண்பாடான நிலைமைகள் சமுதாயச் செல்வாக்குகள், வரலாற்று மரபுகள் இவற்றின் பிரதிபலிப்பேயாகும்.
இதனால்தான் தனது அரசியல் பாத்திரத்தால் இந்த முரண்பாடுகளின் முதல் இறுதி விளக்கமானது புரட்சி சமயத்தில், மக்களின் விடுதலைக்கும் சுரண்டலிருந்து பொதுமக்களை விடுதலை செய்யவுமான போராட்டத்தில் தலைவனாக விளங்கும் வாய்ப்பினைப் பெற்ற வர்க்கத்தின் கருத்தோட்டத்திலிருந்து மட்டுமே டால்ஸ்டாய் பற்றிய சரியான மதிப்பீடு செய்தல் முடியும். இந்த வர்க்கம் ஜனநாயக லட்சியத்திற்குத் தன்னலமின்றித் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. (விவசாயி உள்ளிட்ட) பூர்ஷூவா ஜனநாயகத்தின் குறைகளையும் முரண்பாடுகளையும் எதிர்த்துப் போராடும் ஆற்றலையும் நிரூபித்துள்ளது. அத்தகைய மதிப்பீடு சமூக – ஜனநாயகத் தொழிலாளி வர்க்கத்திடமிருந்தே சாத்தியமாகும்.
அரசாங்கச் செய்திப் பத்திரிகைகள் டால்ஸ்டாய் பற்றிச் செய்துள்ள மதிப்பீட்டைப் பாருங்கள். இந்த “மாபெரும் எழுத்தாளருக்கு தமது மரியாதையைக் காட்டுவதாகப் பாவனை செய்தபடியே “புனித” சமய பீடத்தினையும்49 ஆதரித்து முதலைக் கண்ணீர் படிக்கின்றன. இவை புனித பாதிரிகளைப் பொருத்தவரை அவர்கள் குறிப்பாகவும் ஒரு கொடிய தீம்பை இழைத்துள்ளனர். மரணத் தருவாயிலிருந்த கிழவரிடம் புரோகிதர்களை அனுப்பி மக்களை ஏமாற்றி டால்ஸ்டாய் “குற்ற மன்னிப்புக்” கோரியதாகக் கூறுகிறார்கள். புனிதத் திருச்சபை டால்ஸ்டாயைப் பிரஷ்டம் செய்தது. அதுவரையில் நல்லதே; கிருஸ்துவிலுள்ள இந்த வஞ்சகக் கடுமுறைமையாளர் ஜாரின் கருப்பு நூற்றுவர்50 கும்பலின் யூத எதிர்ப்பு, கொலைச்செயல்களையும் இதர சாதனைகளையும் ஆதரித்து அங்கி தரித்த இந்த அதிகாரிகளுடன் மக்கள் கணக்குத் தீர்க்கும் நேரம் வரும்போது இந்த வெற்றிச் சாகசம் பற்றி நினைவு கூரப்படும்.
மிதவாதப் பத்திரிகைகள் டால்ஸ்டாய் பற்றிச் செய்துள்ள மதிப்பீடுகளைப் பார்ப்போம். பூர்ஷ்வா விஞ்ஞானத்தை டால்ஸ்டாய் கண்டித்துள்ள, நியாயமாகவே கண்டித்திருக்கிற “நாகரிக மனிதகுலத்தின் குரல்” “உலகின் ஒருமுகமான பிரதிபலிப்பு” “உண்மை நன்மைக் கருத்துகள்” போன்ற ஆழமற்ற அதிகாரபூர்வ – மிதவாத பழமைப்பட்ட ஆசிரிய பாணி சொற்றொடர்கள் அளவில் நின்று விடுகின்றன.
அரசு, சமய அமைப்பு, நிலத்தில் தனியுடைமை, முதலாளித்துவம் பற்றிய டால்ஸ்டாயின் கருத்துகள் பற்றித் தமது கருத்துகளை சாதாரணமாயும் தெளிவாகவும் அவர்களால் வெளியிட முடியாது. தணிக்கை அவர்களைத் தடை செய்வதாலன்று. மாறாகத் தணிக்கைமுறை அவர்களைச் சங்கடமான நிலையிலிருந்து தப்ப உதவுகிறது! – இதற்குக் காரணம் டால்ஸ்டாயின் விமரிசனத்தின் ஒவ்வொரு வாத முகமும் பூர்ஷூவா மிதவாதத்தின் முகத்தில் அடித்த அடியாகும்.
டால்ஸ்டாய் நமது காலத்தின் ஆறாத புண்ணாகிவிட்ட, மிகவும் சிக்கலான பிரச்சினைகளை அச்சமின்றி அப்பட்டமாயும் தாட்சாண்யமின்றியும் முன்வைப்பது நமது மிதவாதிகளின் (மிதவாத நரோத்னிக்களின்) மாமூல் சொற்றொடர்கள், பழகிப்போன சிலேடைகள் தப்பிலித்தனமான “நாகரிகப்” பொய்கள் இவற்றுக்கு உரிய பதிலடியாகும். மிதவாதிகள் அனைவரும் டால்ஸ்டாயை ஆதரிக்கிறார்கள். எல்லோரும் திருச்சபைக்கு எதிராக உள்ளனர். – ஆனால் அதே சமயம் அவர்கள் வெகிஸ்டுகளை51 ஆதரிக்கிறார்கள். அவர்களுடன் “மாறுபடுவது சாத்தியம்.” ஆனால் ஒரே காட்சியில் இசைவுடன் வாழ வேண்டுவது “அவசியம்”, இலக்கியம் அரசியல் இவற்றில் சேர்ந்து வேலை செய்ய வேண்டுவது “அவசியம்” எனக் கருதுகிறார்கள். எனினும் வெகிஸ்டுகளை முத்தமீந்து வரவேற்கிறார் வோல்ஹினியா பிஷப் அந்தோனி.
டால்ஸ்டாய் ஒரு “மாபெரும் மனச்சாட்சி” என்று மிதவாதிகள் முன்னணியில் வைத்தார்கள். நொவோயி விரேமியா52வாலும் இதுபோன்ற செய்தித் தாள்கள் அனைத்தாலும் ஓராயிரம் விதமாகத் திரும்பத் திரும்பக் கூறப்படுகிற ஆழமற்ற சொற்றொடர் அல்லவா இது? டால்ஸ்டாய் முன்வைத்த ஜனநாயகம், சோஷலிசம் இவற்றின் ஸ்தூலமான பிரச்சினைகளிலிருந்து தப்புவதல்லவா ? டால்ஸ்டாயின் அறிவு தீட்சண்யத்தை விட்டு அவரது வெறுப்புகளையும் எதிர்கால அம்சத்தை விட்டுப் பழம்பகுதியையும், அனைத்து வர்க்க ஆதிக்கத்தையும் எதிர்த்து அவரது கடும் கண்டனத்தை விட்டு விட்டு அவர் அரசியலை மறுத்ததையும் தார்மீகச் சுய அனுபூதி பற்றிய போதனையையும் வெளிப்படுத்தும் அம்சத்தை முன்னணியில் வைப்பதல்லவா இது ?
டால்ஸ்டாய் மரணமடைந்தார். அவரது தத்துவத்தின் வெளியீடாகி இந்த மாபெரும் கலைஞரால் தமது நூல்களில் சித்தரிக்கப்பட்டதான பலவீனமான ஆண்மையற்ற, புரட்சிக்கு முந்தியதான, ரஷ்யா இறந்த காலமாகிவிட்டது. ஆனால் அவர் விட்டுச் சென்றுள்ள பிதுராஜ்யத்தில் பழமையாகிவிட்ட கூறுகளின்றி எதிர்காலத்திற்குரியவையும் உட்படும். இந்தப் பிதுராஜ்யத்தை ஏற்று அதன் மீது பணியாற்றுகிறது ரஷ்யத் தொழிலாளி வர்க்கம்.
உழைப்பாளி வெகுஜனங்களுக்கும் சுரண்டப்பட்டவர்களுக்கும் அரசு, சமய பீடம், நிலத்தில் தனியுடைமை பற்றிய டால்ஸ்டாயின் விமர்சனத்தின் பொருளை விளக்கிக் கூறும். எதற்காக? பொது மக்கள் சுய பூர்ணத்துவம், தெய்வீக வாழ்வில் ஆர்வம் இவற்றுடன் நிறுத்திக் கொள்வதற்காக அல்ல. மாறாக அவர்கள் எழுச்சியுற்று 1905-இல் சற்றே அழிவடைந்து முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஜாரிச மன்னராட்சியும், நிலப்பிரபுத்துவ அமைப்பையும் எதிர்த்துப் புதிய தாக்குதல் தொடுக்குமாறு கோரும், ரஷ்யத் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவம் பற்றிய டால்ஸ்டாயின் விமர்சனத்தைப் பொது மக்களுக்கு, விளக்கிக் கூறும்.
எதற்காக? முதலாளித்துவத்திற்கும் பண ஆட்சிக்கும் எதிராக பழித்துரைகளை வீசுவதற்கு மட்டுமல்ல. மாறாகத் தமது வாழ்க்கையின் தமது போராட்டத்தின் ஒவ்வொரு படியிலும் முதலாளித்துவத்தின் தொழில்நுட்ப சமூக சாதனைகளைப் பயன்படுத்த அறிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவத்தை வீழ்த்தி மக்கள் வறுமைக்கு இரையாகாத, மனிதனை மனிதன் சுரண்டாத, ஒரு புதிய சமூகத்தைப் படைப் பதற்கான லட்சோப லட்சம் சோஷலிசப் போராட்ட வீரர்களின் படையாகத் தம்மைத் தாமே இணைத்துக் கொள்ளத் தெரிந்து கொள்ள வேண்டும்.
– லெனின்
அடிக்குறிப்புகள்:
48: எம்.கூபன்- பத்தொன்பதாம் நூற்றாண்டின் எண்பதாம், தொண்ணாறாம் ஆண்டுகளின் இலக்கியத்தில் மூலதனத்திற்கு அல்லது முதலாளிகளுக்கு இடப்பட்ட ஓர் உருவகப் பெயர். இது ரஷ்ய எழுத்தாளர் கிளேப் உஸ்பென்ஸ்கியினால் “பயங்கரமான பாவங்கள்” என்னும் அவரது குறிப்புகளில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது.
49: சினட் – ரஷ்ய வைதீக குருபீடத்தின் உயர் நிர்வாக அமைப்பு இது.
50: கருப்பு நூற்றுவர்: புரட்சிகர இயக்கத்தை எதிர்ப்பதற்காக ஜார் போலீசால் உருவாக்கப்பட்ட முடியாட்சிக் கும்பல். இவர்கள் புரட்சிவாதிகளைப் படுகொலை செய்தனர். முற்போக்கு அறிவுத் துறையினரைத் தாக்கினர். யூத எதிர்ப்பு கலகங்களைத் தூண்டினர்.
51: வெக்கி (சிறப்புக் கட்டங்கள்) -பல எதிர்ப்புரட்சி மிதவாத – பூர்ஷ்வாக்களின் பிரதிநிதிகளின் ஒரு கேடட் கட்டுரைகள் தொகுப்பு. இது 1909 வசந்த காலத்தில் மாஸ்கோவில் வெளியிடப் பெற்றது. பெலின்ஸ்கி, செர்னிஷெவிஸ்கி உட்பட ரஷ்ய மக்களின் புரட்சிகர ஜனநாயக மரபுகளின் மிகச் சிறந்த பிரதிநிகளை ரஷ்ய அறிவுத் துறையினர் பற்றிய கட்டுரைகளில் இந்த எழுத்தாளர்கள் இழிவுபடுத்த முயன்றனர்; 1905 புரட்சிகர இயக்கத்தை அவதூறு செய்தனர்; “தனது துப்பாக்கிச் சனியன்கள், சிறைகள் மூலமாக “பொதுமக்களின் கோபாவேசத்திலிருந்து” பூர்ஷாவாக்களைக் காப்பாற்றியதற்காக ஜார் சர்க்காருக்கு நன்றி தெரிவித்தனர். எதேச்சதிகாரத்தின் நலன்களுக்கு மேலும் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
52: நோவயே விரெம்யா (நியூடைம்ஸ்) – 1868-லிருந்து 1917 அக்டோபர் வரை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து வெளிவந்த ஒரு செய்திப் பத்திரிகை. முதலில் இது ஓரளவு மிதவாதப் பத்திரிகையாக இருந்தது. ஆனால் 1876-லிருந்து மேட்டுக் குடியினர், அதிகார வர்க்கத்தினரிடையேயான பிற்போக்கு வட்டாரங்களின் பத்திரிகையாக மாறிற்று.
சோஷியல்-டொமாகிராட் எண். 18 நவம்பர் 18 (29) 1910 (லெனின் தொகுப்பு நூல்கள் பக்கம் 16, பக் 323-27)
நூல்: கலை, இலக்கியம் பற்றி – வி.இ.லெனின் தமிழாக்கம்: கே.ராமநாதன் ஆங்கில மூல நூல் – முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ 1974-ம் ஆண்டு – தமிழாக்க நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.
பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு கேட் ( GATE – Graduate Aptitude Test in Engineering ) எனப்படும் திறனறித் தேர்வை நடத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE). ”இந்த முடிவு பல இலட்சம் பொறியியல் படித்த மாணவர்களின் எதிர்காலத்தைப் பறித்துவிடும் அபாயம் உள்ளது” என்கிறார், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்.
தோழர் த.கணேசன்.
இதுகுறித்து, மேலும் அவர் பேசும்பொழுது, ‘’ஏற்கெனவே மருத்துவப் படிப்பில் ஏழை – தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நுழைய முடியாதவாறு நீட்தேர்வை கொண்டு வந்து அவர்களின் மருத்துவக் கனவை பறித்துவிட்டார்கள். அவ்வாறு இன்னல்களை எதிர்கொண்டு மருத்துவம் படித்துவிட்டு வெளியேறிவிடலாம் என்றால், அதற்கும் ஒரு திறனறித் தேர்வை நடத்தி, மருத்துவராகும் தகுதியைப் பறித்துவிடுகிறார்கள். சட்டக்கல்வி பயிலும் மாணவர்களும் திறனறித் தேர்வை எதிர்கொண்டால்தான் வழக்கறிஞராகப் பதிவு செய்ய முடியும். அதேபோலதான், தற்போது பொறியியல் பயிலும் மாணவர்கள் இறுதியாண்டில், கேட் தேர்வை எழுதி அதில் தேர்ச்சிப் பெற்றால்தான் அவர் பொறியாளராக வெளியில் பணியாற்ற முடியும் என்ற சூழலை கொண்டுவந்துள்ளது.
இந்தியா முழுவதும் 3000 பொறியியல் கல்லூரிகள், தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றது. ஆண்டுக்கு 7 இலட்சம் மாணவர்கள் படித்து வெளியே வருகிறார்கள். அவர்களுடைய எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக் குறியாகிவிடும்.
நான்காண்டுகளில் அந்த மாணவனின் திறமையை சோதித்தறிய முடியாதவர்கள், அந்த ஒரு தேர்வில் அவனது திறமையை சோதித்துவிடப் போகிறார்களா?
இதெல்லாம் பொய். ஏமாற்று. உண்மையான காரணம், படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் திரிகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் நாடுமுழுதும் பெருகியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்னேகால் கோடி பேர் வேலையின்றி இருக்கிறார்கள். இதில் கணிசமானோர் பொறியியல் பட்டதாரி மாணவர்கள்.
கடந்த 15 ஆண்டுகளில் பொறியியல் படிப்பின் மீது ஒரு கவர்ச்சியை உருவாக்கி, பல தனியார் பொறியியல் கல்லூரிகளை உருவாக்கி, பல இலட்சம் மாணவர்களிடம் பல கோடி ரூபாய் கொள்ளையடித்து, கல்வியை வியாபாரமாக்கி இவர்கள் சம்பாதித்துவிட்டார்கள்.
ஆனால், பொறியியல் படித்து வெளியில் வந்த மாணவர்கள் வேலையின்றி தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஐந்தாண்டுகளில் நாட்டை வல்லரசாக்கிவிடுகிறேன் என்று சொன்னவர்கள் இன்று அனைத்திலும் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள். இளைஞர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் கேட் தேர்வு கொண்டுவரப்படுகிறது.’’ என்கிறார்.
இதன் பின்னுள்ள அரசியல் உண்மைகளை உணர்ந்து, கேடான நோக்கத்தோடு கொண்டுவரப்படும் இத்தகைய திறனறித்தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் இளைஞர்கள் போராட முன்வரவேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறார், தோழர் த.கணேசன்.
நாம் உண்ணும் உணவில் 50-55% மாவுச்சத்தும், 25-30% கொழுப்புச் சத்தும், 20% புரதச் சத்தும் இருக்க வேண்டும். இதுதான் சரிவிகித உணவு. யோசித்து பாருங்கள், நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் அல்லது நேற்று இரவு சாப்பிட்ட உணவில் எந்த அளவிற்கு கொழுப்பும், புரதமும் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? முடியாது. பிரச்சனையே இங்குதான். நாம் எடுத்துக் கொள்வது முழுக்க முழுக்க கார்போ ஹைட்ரேட்தான் (மாவுச் சத்து).
காலை முதல் இரவு வரை மாவுப் பொருட்கள்தான். காலை இட்லி, மதியம் சாதம், இரவு சப்பாத்தி என்று உண்ணும் உணவில் மாற்றம் இருக்குமே ஒழிய உள்ளே இருப்பது எல்லாமே சர்க்கரைதான். 50% சாப்பிட வேண்டிய சர்க்கரையை 80-85% சாப்பிட்டால் அந்தக் கூடுதல் சர்க்கரை உடம்புக்குள் போய் என்னவாகும்? அது இரத்தத்தில் சர்க்கரையாக ஏறுகிறது.
இதனை சரி செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அந்த சர்க்கரையை நீங்கள் உபயோகித்துக் கொள்ள வேண்டும். அதாவது, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடக்க வேண்டும், ஓட வேண்டும், தினமும் உழைப்பில் ஈடுபட வேண்டும். அப்படி செய்தால் அந்த சர்க்கரை உடலால் உபயோகப்படுத்தப்படும். இல்லை என்றால் அன்ன ஆகும்? அந்த சர்க்கரையை நமது உடலால் அப்படியே சர்க்கரையாக சேமித்து வைக்க முடியாது.
நம்ம உடம்புல இன்சுலின் என்று ஒரு ஹார்மோன் உள்ளது. அது யாருக்கெல்லாம் நன்றாக சுரக்கிறதோ அவர்களுக்கெல்லாம், அது அந்த சர்க்கரையை கொழுப்பாக சேமித்து விடும். அது சுரக்காதவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை தேங்கி விடும். அவர்களுக்கு சர்க்கரை நோய் உண்டாகும். உடல் பருமனுக்கும் மாவுப் பொருட்கள்தான் காரணம். இரண்டிற்கும் இது காரணமாகிவிடுகிறது. சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு அது கட்டுக்குள் இல்லாமல் போவதற்கும் காரணம் மாவுப்பொருட்கள்தான்.
நாம் அனைவரும் என்ன நினைக்கிறோம் ? குண்டாக இருப்பவர்கள் எண்ணெய் உணவு அதிகம் சாப்பிடுவதாக நினைக்கிறோம். ஆனால், அவர்களிடம் கேட்டால் அப்படி அதிகம் சாப்பிடுவதில்லை, வாரத்துக்கு ஒருமுறைதான் ’நான்வெஜ்’ சாப்பிடுகிறேன் என்பார்கள். அது உண்மைதான். அந்த உடல் பருமனுக்கும் உடலில் சேருகின்ற மாவுப் பொருட்கள்தான் காரணம்.
நம் உணவை எப்படி சரிவிகிதத்திற்கு கொண்டு வருவது? மாவுப் பொருட்களான அரிசி, கோதுமை போன்றவற்றை குறைத்துக்கொண்டு முட்டை, பால், பழம், நவதானியங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் இரண்டு முட்டை, பால், மதியம் கீரை, காய்கறி, தயிர், இரவு, சுண்டல், மொச்சை, பச்சை பட்டானி என்று மாற்றி மாற்றி எடுத்துக் கொண்டால் சரிவிகிதத்தை அடைந்து விடலாம்.
“தட்டைத் திருப்புங்கள்” என்று நோயாளிகளுக்கு எல்லாம் சொல்வேன். இரண்டு முட்டையை வைத்துக்கொண்டு அதிக பிரியாணி சாப்பிடுவார்கள். வேண்டாம் இரண்டு அல்லது மூன்று முட்டையை வைத்துக் கொண்டு கொஞ்சமாக சோறு சாப்பிட வேண்டும். காய்கறிகளின் அளவைக் கூட்டிக்கொண்டு சாதத்தை குறைத்து விட வேண்டும். இப்படி மாற்றி சாப்பிட்டால் நாம் சரிவிகித உணவுக்கு வரலாம்.
இப்ப சரிவிகித உணவுக்கு வரவேண்டிய முதல்படி என்ன? மாவுப்பொருட்களை குறைக்க வேண்டும். இட்லி, தோசை, சப்பாத்தி இல்லாமல் போனால் அந்த இடம் வெற்றிடமாக இருக்கும். அதனை எதை வைத்து நிரப்புவது? எதைக்கொண்டு வேண்டுமானாலும் நிரப்பிகொள்ளலாம். அது ‘சைவம்’ அல்லது ‘அசைவம்’ எதுவாகினும் இருக்கலாம்.
நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தானியங்களுக்கு (அரிசி, கோதுமை, திணை வகைகள் கேழ்வரகு, கம்பு, சாமை, வரகு போன்றவை) பதிலாக நவதானியங்களை (பயறு வகைகள் – பட்டாணி, கொண்டக்கடலை, பருப்பு வகைகள், இதர பயிறு வகைகள்) அதிகமாக சேர்க்கலாம். அப்படி செய்தால் மாவுப்பொருள் குறைந்து விடும். வேண்டிய கொழுப்பும், புரதமும் கிடைக்கும். இப்பொழுது நாம் பண்ண வேண்டியதெல்லாம் கொழுப்பின் மீது இருக்கும் பயத்தை தூக்கி சர்க்கரையின் மேல் வைக்க வேண்டும். சாதாரணமாக ஒரு உணவைப் பார்த்தோமெனில், “அய்யோ இதில் கொழுப்பு இருக்கே” என நினைப்பதற்குப் பதில், “இதில் மாவுப்பொருள் இருக்கே” என்று நினைத்தால் நீங்கள் சாதாரண நிலைக்கு வந்து விடலாம்.
இடையில் பசித்தால் வெள்ளரிப் பிஞ்சு, கேரட், தேங்காய் போன்றவை சாப்பிட்டுக் கொள்ளலாம். இந்த சரிவிகித உணவின் மூலம் நிறைய நன்மைகள் இருக்கிறது. சர்க்கரை மற்றும் உடல் பருமனைக் குறைப்பதற்கு உதவும்.
மற்றொரு நன்மை என்னவென்றால், இதற்கு மாறினால் 10 – 15 நாட்களில் வாயு பிரச்சினை தீர்ந்து விடும். அசிடிட்டி, அஜீரணம் போன்றவற்றிற்கு முக்கியக் காரணமே கார்போஹைட்ரேட்தான். பெண்களுக்கு கர்ப்பப்பையில் வரும் கட்டியை பி.சி.ஒ.டி என்று சொல்வார்கள். அதற்குமே இது நல்ல தீர்வாக அமையும். இந்த பி.சி.ஒ.டி-க்கான சிகிச்சையாக, சர்க்கரை நோயாளிக்கு கொடுக்கப்படும் மெட் பார்மின் மாத்திரைதான் கொடுக்கப்படுகிறது. இந்தப் பிரச்சனைக்கும் காரணம் அளவுக்கதிகமான மாவுப் பொருட்கள்தான். ஆக ஒழுங்காக இதனை சாப்பிட ஆரம்பித்துவிட்டால் எல்லா நன்மைகளும் நம்மை வந்தடையும்.
சரி, பேலியோ டயட் என்கிறார்களே அப்படி என்றால் என்ன?
நாம் ஏற்கனவே சொன்னது போல சரிவிகித உணவில் 50-55% கார்போஹைட்ரேட். 25% கொழுப்பு, மீதி புரதம். இப்போது கார்போஹைட்ரேட்டை 80%-லிருந்து 30-25% அளவை குறைத்து விட்டோம். இப்போது நாம் உணவில் குறைத்த பகுதியை எதனால் நிரப்புவது ? முக்கியமாக நாம் கொழுப்பும் புரதமும் சாப்பிட வேண்டியது வரும்.
பேலியோ உணவில் பருப்பு, நவதானியங்கள் (பயறு வகைகள்) கிடையாது. நிறைய பழங்கள் கிடையாது. கொஞ்சமாக பால் எடுத்துக் கொள்ள வேண்டும். (பேலியோவில் பாலுக்கு பதில் நெய், வெண்ணெய் எடுக்கிறார்கள்) முழுக்க முழுக்க முட்டை, இறைச்சி, உலர்ந்த கொட்டைகள் (மற்றும் கிழங்குகள் தவிர்த்த கீரை, காலிஃபிளவர் போன்ற காய் வகைகள்)அந்த மாதிரிதான் சாப்பிட வேண்டியது வரும். இதற்கு பெயர்தான் பேலியோ டயட்.
இந்த பேலியோ டயட் யாருக்கெல்லாம் கொடுக்கலாமென்றால், சர்க்கரை நோயாளிகள், மாத்திரை, உடற்பயிற்சி, சரிவிகித உணவு இதனை சரியாக பின்பற்றியும் சர்க்கரை கட்டுக்குள் வரவில்லை என்றால் அவர்கள் இந்த பேலியோ டயட்டை முயற்சி செய்யலாம். அதேமாதிரி குண்டாக இருப்பவர்கள் பல வழிகளில் உடல் பருமனைக் குறைக்க முடியவில்லை என்றால் இந்த முறைக்கு மாறிக் கொள்ளலாம். தப்பில்லை. இதனை 6 – 12 மாதங்கள் வரை பின்பற்றி வேண்டிய அளவிற்கு சர்க்கரை, பருமன் கட்டுக்குள் வந்து விட்டால் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து விட்டு பிறகு சரிவிகித உணவிற்கு மாறிக் கொள்ளலாம். குறுகிய காலத்திற்கு பேலியோவை பின்பற்றுவதால் தவறு இல்லை. அதனால் நன்மை இருக்கிறது. ஆனால் இதையே வாழ்க்கை முழுவதும் பின்பற்ற முடியுமா? என்பதுதான் கேள்வி. தற்போது உள்ள அறிவியல் சொல்வது என்னவென்றால் ரொம்ப நாளைக்கு மாவுப் பொருட்களை தவிர்ப்பது பிரச்சினை என்கிறது. அதனால் அதனை பரிந்துரைக்கக் கூடாது என்று அறிவியல் சொல்கிறது.
பேலியோ டயட், சரிவிகித உணவைப் பற்றி பார்த்துவிட்டோம். இப்ப சாப்பிட்டுக்கொண்டு இருப்பது போன்று யாரெல்லாம் மாவுப்பொருட்களை சாப்பிடலாம் என்றால், உடலுழைப்பில் அதிகம் ஈடுபடுபவர்கள், ரிக்ஷா ஓட்டுனர்கள், விவசாயிகள் போன்றவர்கள் தொடரலாம். இதனையே சாப்பிட்டு தொப்பை, உடல் பருமன் இல்லாதவர்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ குறைவாக சாப்பிட்டுக் கொள்கிறீர்கள். அல்லது உங்கள் உடம்பு ஓரளவு மெட்டாபாலிஸ் (வளர்சிதை மாற்றம்) செய்கிறது. தொப்பை, உடல் பருமன், உடலுழைப்பு குறைவாக இருப்பவர்கள் கண்டிப்பாக மாறியாக வேண்டும். மாறினால் உடம்பில் நோய் வராமல் தடுக்கலாம். அதன்மூலம் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
கஜா புயலால் பாதிப்பிற்குள்ளான காவிரி டெல்டா மாவட்டங்களில் புணரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளிலிருந்து வந்துள்ள தோழர்கள் இடிந்த குடிசை வீடுகளை தற்காலிகமாக சீர்செய்வது மக்களின் தேவையறிந்து அதற்கேற்ப நிவாரணப் பொருட்களை சேகரித்து வீடு தோறும் விநியோகித்து வருகின்றனர்.
1 of 2
குடிசைகளில் குடியிருந்து வந்த மக்கள், மொத்தக்குடிசையுமே இழந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ள இந்தச் சூழலில் தற்காலிக ஏற்பாடாகவாவது குடிசைகளை சீரமைப்பது அவசரப் பணியாகிறது.
நிவாரணப் பொருட்களை சேகரிப்பதில் உள்ள பொருளாதார ரீதியான தடைகள் மற்றும் பாதிக்கப்பட்ட கிராமங்களிலேயே சில வாரங்கள் தங்கி புணரமைப்புப் பணிகளை செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் அனைத்தையும் எதிர்கொண்டு, இப்பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர், மக்கள் அதிகாரம் தோழர்கள். இவர்களோடு, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர்களும் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
1 of 2
தஞ்சை மாவட்டம், பட்டுக் கோட்டை தாலுகா, தம்பிக் கோட்டை வடகாடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு பாடப் பொருள்கள் வழங்கப்பட்டது.
அதிராம்பட்டினம்
1 of 9
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, அதிராம்பட்டினம் பகுதி.
நொச்சியூர்
1 of 7
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, நொச்சியூர் கிராமம்.
1 of 3
வேதாரண்யம், அவுரிகாடு பகுதி.
1 of 3
வேதாரண்யம், வாட்டாக்குடி இரணியன் நகர்.
திருவாரூர் மாவட்டம் தாய்மண் பாரம்பரிய வேளாண்சார் நிறுவனம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை மக்கள் அதிகார தோழர்களிடம் வழங்கினர்.
மாக்சிம் கார்க்கிநிகலாய் மாலையில் திரும்பி வந்தான். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, சோபியா சிரித்துக்கொண்டே அவள் எப்படி தேசாந்திர சிட்சையிலிருந்து தப்பியோடி வந்த மனிதனைச் சந்தித்தாள், அவனை எப்படி மறைத்து வைத்தாள். அவள் எப்படி ஒற்றர்களுக்காக பயந்து நடுங்கினாள், வழியில் பார்க்கின்ற ஒவ்வொருவரையுமே ஒற்றர்கள் என்று அவள் எப்படிக் கருதினாள். ஓடிவந்த மனிதன் எப்படி நடந்துகொண்டான் என்பன போன்ற விவரங்களையெல்லாம் சுவாரசியத்தோடு விளக்கிச் சொன்னாள். அவளது குரலில் ஒரு பெருமைத்தொனி ஒலிப்பதாகத் தாய் கண்டறிந்தாள். ஒரு தொழிலாளி தான் ஒரு சிரம சாத்தியமான காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்ததைப் பற்றி அடையும் பெருமித உணர்ச்சி போலிருந்தது அது.
இப்போது அவள் ஒரு சாம்பல் நிற வேனிற்கால நீள் அங்கி அணிந்திருந்தாள். அந்தக் கவுன் அவளை மேலும் சிறிது நெடியவளாகக் காட்டியது. அவளது கண்கள் கருமை எய்தின போலவும் அவளது நடமாட்டங்கள் மிகுந்த அடக்கம் கொண்டன போலவும் தோன்றின.
“உனக்கு இன்னொரு வேலை காத்திருக்கிறது, சோபியா” என்று சாப்பிட்டு முடிந்தவுடன் கூறினான் நிகலாய். ”விவசாயிகளுக்காக நாம் பத்திரிகை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். சமீபத்தில் நடந்த கைதுகளால், அப்பத்திரிகையை வினியோகித்து வந்த மனிதனோடு நமக்கிருந்த தொடர்பு விட்டுப் போய்விட்டது. அவனைக் கண்டுபிடிப்பதில் பெலகேயா நீலவ்னா மட்டும்தான் நமக்கு உதவக் கூடியவள். நீ அவளைக் கிராமத்துக்கு ஒரு முறை உன்னோடு அழைத்துச் செல்லவேண்டும், கூடிய சீக்கிரம்.” ‘ரொம்ப சரி” என்று பதில் கூறிக்கொண்டே சிகரெட்டை ஒருமுறை இழுத்துக் கொண்டாள் சோபியா. ”சரி, நாம் போவோம். இல்லையா, பெலகேயா நீலவ்னா?”
“கட்டாயம்.”
“அதென்ன, ரொம்ப தூரமோ?”
“சுமார் 80 கிலோ மீட்டர் தூரம்தான்.”
”நல்லது சரி, இப்போது எனக்குக் கொஞ்சம் வாத்தியம் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது, பெலகேயா நீலவ்னா. நீங்கள் என் வாத்தியத்தைக் கொஞ்ச நேரமேனும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?”
”என்னைப் பற்றிக் கவலைப்படாதே, அம்மா. நான் ஒருத்தி இங்கே இல்லையென்றே நினைத்துக் கொள்ளேன்” என்று கூறிக்கொண்டே, சோபாவின் ஒரு மூலையில் போய்ச் சாய்ந்தாள் தாய். அக்காளும் தம்பியும் தாயை ஒரு சிறிதும் கவனிக்காதவர்கள் போலவே காட்டிக் கொண்டனர். எனினும் அவர்கள் அவளைச் சாதுர்யமாகப் பேச்சில் இழுத்துவிட முனைந்தார்கள்.”
“கேள், நிகலாய். இது கிரீக்கின் இசை. இன்று வரும்போது கையோடு கொண்டு வந்தேன். சரி, ஜன்னல் கதவுகளை அடை.”
அவள் வாத்தியத்தைத் திறந்து தனது இடது கையால் மெதுவாக வாசிக்கத் தொடங்கினாள். வாத்தியம் இனிமையான ஆழமான நாதத்தோடு இசைக்க ஆரம்பித்தது. ஒரு தாழ்ந்த பெருமூச்சோடு மற்றொரு ஸ்வரமும் முதல் ஸ்தாயிபோடு சேர்ந்து ஒலித்தது. அவளது வலது கைவிரல்களிலிருந்து ஸ்வரநாதம் பளிச்சிட்டுக் குபுகுபுவெனப் பொங்கிப் பிறந்தது. அந்த ஸ்வரங்கள் அந்தத் தாழ்ந்த ஸ்வரங்களின் இருண்ட சூழ்நிலையிலே பயந்தடித்துப் படபடத்துச் செல்லும் பறவைக் கூட்டம்போல் சிதறிப் பறந்தன.
முதலில் தாய் அந்தச் சங்கீதத்தால் கொஞ்சங்கூட நெகிழவில்லை. அந்தச் சங்கீதப் பிரவாகம் அவளுக்கு வெறும் குழம்பிப்போன சப்த பேதங்களாகவே தோன்றியது. பல்வேறு ஸ்வரங்களும் பின்னு முடைந்தெழும் இங்கித நாத சுகத்தை அவளது செவிகளால் உணர்ந்து அனுபவிக்க இயலவில்லை. அவள் சொக்கிப்போன கண்களோடு நிகலாயைப் பார்த்தாள். நிகலாய் அவள் உட்கார்ந்திருந்த சோபாவின் இன்னொரு மூலையில் கால்களை இழுத்து மடக்கி உட்கார்ந்தான். தங்கமயமான குழல் கற்றையால் விளிம்பு கட்டப்பெற்றுச் சிறந்து விளங்கும் சோபியாவின் பக்கவாட்டு உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சூரிய ஒளி சோபியாவின் தலை மீதும் தோள் மீதும் படிந்து ஒளிர்ந்தது. வாத்தியத்தின் ஸ்வரக் கட்டைகளின் மீது விளையாடும் அவளது விரல்களைத் தடவிக்கொடுப்பதற்காக நழுவி இறங்கியது. அந்த கீதம் விம்மிப் பெருகி அறை முழுதும் நிரம்பி ஒலித்தது. தாயின் உள்ளத்தைத் தன்னையறியாமல் தொட்டு ஒலிக்கத் தொடங்கியது.
என்ன காரணத்தினாலோ கடந்த காலத்தின் இருள் கிடங்கிலிருந்து ஒரு பெரும் வேதனை மறந்து மரத்துப்போன வேதனை மீண்டும் உயிர் பெற்றெழுந்து அவள் மனத்தில் புகுந்து உறுத்தி மிகுந்த கசப்பைக் கொடுத்தது.
அந்தக் காலத்தில் ஒருநாள் அவளது கணவன் இரவில் அகால வேளையில் நன்றாகக் குடித்துத் தீர்த்துவிட்டு வீட்டுக்கு வந்தான். அவளைத் தன் கரத்தால் இறுகப் பிடித்து, படுக்கையினின்றும் இழுத்துக் கீழே தரையில் தள்ளி ஒரு உதை கொடுத்துவிட்டுப் பேசினான்:
”இங்கிருந்து போய்விடு. நாயே! உன்னைக் கண்டாலே எனக்கு எரிச்சலாய் வருகிறது.”
அவனது அடிகளிலிருந்து தப்பிப்பதற்காக, அவள் தனது இரண்டு வயதான மகனைப் பற்றியெடுத்து, முழுங்காலிட்டிருந்த தன் உடம்புக்கு முன்னால் அவனை ஒரு கேடயம் மாதிரி நிறுத்திக்கொண்டாள். அந்தக் குழந்தை, பயந்து போயிருந்த அந்த அம்மணமான குழந்தை, அலறிக் கூச்சலிட்டது. அவள் கைக்குள் அடங்காமல் திமிறியது,
“போ வெளியே!” என்று கர்ஜித்தான் மிகயீல்.
அவள் துள்ளியெழுந்து சமையல் கட்டுக்குள் ஓடி ரவிக்கையைத் தோள் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு குழந்தையையும் ஒரு துணியில் சுற்றியெடுத்துக்கொண்டு, வாய் பேசாது முனங்காது படுக்கப்போவதற்கு முன் போட்டிருந்த ஆடையுடனேயே தெருவுக்கு வந்தாள். அப்போது மே மாதம், அன்றிரவு குளிர் மிகவும் விறைத்து நடுக்கியது. தெருப்புழுதி அவளது பாதங்களில் அப்பிக்கொண்டு குளிர்ந்து விறைத்தது, பெருவிரல்களில் ஒட்டிக் கொண்டது. குழந்தை அலறித்துடித்துக் கொண்டிருந்தது. அவள் குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு பயமடித்துப் போய் தெரு வழியே விறுவிறுவென நடந்தாள். போகும்போதே குழந்தையைச் செல்லமாகக் கொஞ்சி அதன் அழுகையை நிறுத்த முயன்றாள்.
“அடடா, கண்ணு அடடா …”
பொழுது விடிய ஆரம்பித்ததும் அவள் நாணிக் கூசினாள். தன்னை அந்த அரை நிர்வாணக் கோலத்தில் யாரேனும் தெருவில் பார்த்துவிடக் கூடாதே என அஞ்சினாள். எனவே அவள் ஊர்ப்புறத்திலுள்ள சதுப்புப் பிரதேசத்துக்குச் சென்று, அங்கிருந்த அஸ்பென் மரத்தடியில் உட்கார்ந்தாள். அங்கேயே வெகுநேரம் உட்கார்ந்து, அகன்று விரிந்த கண்களோடு இருளையே வெறித்துப் பார்த்தாள். தூங்கி வழிந்து கொண்டிருக்கும் குழந்தையை உறங்கப் பண்ணுவதற்காகவும் தனது இதய வேதனையைச் சாந்தப்படுத்துவதற்காகவும் அவள் ஒரு தாலாட்டுப் பாட்டை முணுமுணுத்தாள்.
“அடடா, கண்ணு! அடடா…!”
அவள் அங்கிருந்தபோது, ஒரு கரிய பறவை அரவமின்றி அவள் பக்கமாகப் பறந்து சென்றது. அந்தப் பறவையின் சிறகு வீச்சு அவளைச் சோக அமைதியினின்றும் திடுக்கிட்டு எழுந்திருக்கச் செய்தது. குளிரால் நடுநடுங்கிக்கொண்டே வீட்டை நோக்கி, மீண்டும் அந்த வழக்கமான கொடுமையையும் உதைகளையும், ஏச்சுப் பேச்சுக்களையும் நோக்கித் திரும்பி நடந்தாள்……
கடைசி ஸ்வர ஸ்தாயி ஆழ்ந்து முனகியது. உள்ளடங்கி விறைத்துப்போன ஒரு பெருமூச்சுடன் அந்தக் கீதம் மடிந்து மறைந்து போயிற்று.
சோபியா தன் சகோதரனிடம் திரும்பினாள். ”உனக்கு இது பிடித்திருந்ததா?” என்று அமைதியாகக் கேட்டாள்.
“ரொம்ப ரொம்ப!” என்று ஏதோ தூக்கத்திலிருந்து விழிப்புற்றவன் மாதிரி சொன்னான் அவன், “மிகவும்…”
பாரேன் – அமைதியாகவும், நட்புரிமையோடும் ஒன்றாக வாழ்கிற ஜனங்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் சண்டை போடுவதில்லை, குடிப்பதில்லை. அந்த இருண்ட வாழ்விலே உள்ள மனிதர்களைப்போல் இவர்கள் ஒரு துண்டு ரொட்டிக்காக ஒருவருக்கொருவர் சண்டை பிடிப்பதில்லை…
தனது நினைவின் எதிரொலி தாயின் உள்ளத்துக்குள்ளே நடுங்கிப் பாடியது; அதே சமயம் அவள் மனத்தின் ஏதோ ஒரு மூலையில் வேறொரு எண்ணமும் எழுந்தது.
”பாரேன் – அமைதியாகவும், நட்புரிமையோடும் ஒன்றாக வாழ்கிற ஜனங்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் சண்டை போடுவதில்லை, குடிப்பதில்லை. அந்த இருண்ட வாழ்விலே உள்ள மனிதர்களைப்போல் இவர்கள் ஒரு துண்டு ரொட்டிக்காக ஒருவருக்கொருவர் சண்டை பிடிப்பதில்லை…”
சோபியா ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தாள். அவள் இடைவிடாது ஒரேயடியாய்ப் புகைபிடித்தாள்.
“இது காலஞ்சென்ற சோஸ்த்யாவுக்கு ரொம்பப் பிடித்த இசை” என்றாள் அவள். அவள் நெடுக புகைத்து மூச்சு வாங்கினாள். பிறகு மீண்டும் வாத்தியத்தின் கட்டைகளைத் தடவி, ஒரு சோக நாதத்தை எழுப்பினாள். “அவரிடம் நான் எவ்வளவு ஆசையோடு இதை வாசித்துக் காட்டுவேன், அவர் எவ்வளவு உணர்ச்சி வசத்தோடு, தம் இதயமே விம்மிப் புடைத்துப் புளகாங்கிதம் அடையும்படி இந்தச் சங்கீதத்தைக் கேட்பார்!”
“அவள் தன் கணவனைப் பற்றி நினைத்துக் கொள்கிறாள் போலிருக்கிறது” என்று முனகிக்கொண்டாள் தாய்; அவள் புன்னகைகூட செய்கிறாளே….”
”அவர் என்னை எப்படி மகிழ்வித்தார்!” என்று மீண்டும் சோபியா மெதுவாகச் சொன்னாள். அவளது சிந்தனைகளோடு வாத்தியத்தின் மெல்லிய இசையையும் இணைத்து வெளியிட்டாள், “எப்படி வாழ வேண்டும் என்பதை அவர் எவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்!”
“ஆமாம்” என்று தன் தாடியை வருடிக்கொண்டே சொன்னான் நிகலாய்: “அவன் ஒரு இனிய மனிதன்.”
சோபியா அப்போது தான் பற்றவைத்த சிகரெட்டைத் தூர எறிந்துவிட்டு தாயிடம் திரும்பினாள்.
தாயால் தனது உணர்ச்சிக் குழப்பத்தை மறைக்க முடியவில்லை.
“என்னை ஒன்றும் கவனிக்காதீர்கள். எனக்கு ஒன்றுமே புரியாது. நான் பாட்டுக்கு இங்கே உட்கார்ந்து கேட்கிறேன். ஏதேதோ நினைக்கிறேன்.”
”ஆனால், நீங்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றாள் சோபியா “ஒரு பெண் அவசியம் சங்கீதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் அவள் துக்கமயமாயிருக்கும்போது…”
அவள் ஸ்வரக் கட்டைகளை அழுத்தி வாசித்தாள். உடனே அந்தப் பியானோ வாத்தியம், பயங்கரச் செய்தியைக் கேள்விப்பட்டவர்களின் பயபீதியின் ஓலத்தைப்போல் ஒலித்து விம்மியது. இந்தத் திகைப்பூட்டும் ஓலநாதம், அவர் இதயத்தையே உலுக்கிவிட்டது. அதற்கு எதிரொலி செய்வதுபோல் பயபீதி நிறைந்த இளங்குரல்கள் துள்ளி வந்து, ஓடி மறைந்தன. மீண்டும் ஒரு உரத்த உக்கிரமான கூச்சல் நாதம் எழுந்து, மற்ற குரல்களையெல்லாம் மூழ்கடித்து ஒலித்தது. இதன் பின்னர், ஏதோ ஒரு பெருந்துயர் ஒலி விம்மியது. எனினும் அந்தத் துயர் ஒலி அனுதாபத்தைவிட ஆத்திரத்தைத்தான் அதிகம் கிளப்பியது. பிறகு ஒரு வலிமைமிக்க இனிய நாதம் ஒலித்துப் பெருகியது. அந்த ஒலியில் கவர்ச்சியும் பிடிப்பும் இருந்தன.
அவர்களிடம் இனிய வார்த்தைகள் புகல வேண்டும் என்ற ஆசை தாயின் உள்ளத்தில் நிரம்பித் ததும்பியது. அந்தச் சங்கீதத்தால் அவள் கிறுகிறுத்துப் போயிருந்தாள். அந்தச் சகோதர சகோதரி இருவருக்கும் தன்னால் உதவ முடியும் என்ற எண்ணம் தோன்றவே அவள் லேசாகப் புன்னகை செய்து கொண்டாள்.
அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள் – அவளால் என்னதான் செய்ய முடியும்? அவள் அமைதியாக எழுந்து சமையலறைக்குள்ளே சென்று தேநீர்ப் பாத்திரத்தைக் கொதிக்க வைத்தாள்.
ஆனால் இந்த ஒரு செய்கை மட்டும் அவளுக்கு அவர்கள் மீதிருந்த ஆர்வத்தைத் திருப்திப்படுத்திவிடவில்லை. அவள் தேநீரைக் கோப்பைகளில் ஊற்றும்போதே ஏதோ கசந்துபோய் சிரித்துக்கொண்டே சொன்னாள். அவர்களை ஆசுவாசப்படுத்துவதற்கென்றும், அதேபோலத் தன் இதயத்துக்குச் சமாதானம் சொல்வது போலவும் அவ்வார்த்தைகளை அவள் சொன்னாள்:
“நாமெல்லாம் – அந்த இருண்ட வாழ்விலிருந்து வந்த நாமெல்லாம், எல்லாவற்றையும் உணரத்தான் செய்கிறோம். ஆனால், நமது உணர்ச்சிகளை நம்மால் வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை. நமக்கு வெட்க உணர்ச்சி தோன்றுகிறது. ஏனெனில் நமக்குப் புரிந்த விஷயத்தையே நம்மால் சொல்ல முடியவில்லையே அடிக்கடி – நமது வெட்க உணர்ச்சியால் – நாம் நமது சொந்த எண்ணங்களின் மீதே எரிந்து விழுகிறோம். வாழ்க்கை நம்மைச் சகல கோணங்களிலிருந்தும் தாக்குகிறது. நாமோ ஓய்ந்திருக்க எண்ணுகிறோம். நமது சிந்தனைகளோ நம்மை அப்படியிருக்க விடுவதில்லை.”
நிகலாய் தன் மூக்குக் கண்ணாடியைத் துடைத்து விட்டுக்கொண்டே அவள் கூறியதைக் கேட்டான்; சோபியா தனது அகன்ற கண்களைத் திறந்தபடியே புகை பிடிக்கவும் மறந்துபோய் இருந்தாள். சிகரெட் கூட அணைந்துவிடும் போலிருந்தது. அவள் இன்னும் அந்தப் பியானோ வாத்தியத்தின் முன்புதான் இருந்தாள். தன் சகோதரனை நோக்கிச் சிறிது திரும்பியிருந்தாள். எனினும் தனது வலது கையால் பியானோவின் கட்டைகளை சமயங்களில் தட்டிக் கொடுத்துக்கொண்டாள். தாய் தனது உணர்ச்சியை உருவாக்கி வெளியிடும் மனங்கனிந்த வார்த்தைகளோடு, அந்த ஸ்வரநாதங்களும் ஒன்றிக் கலந்து மிருதுவாக ஒலித்தன.
உங்கள் துர்ப்பாக்கியமோ அன்றாடச் சித்திரவதை; ஆண்டாண்டுதோறும் நிரந்தரமாக நிலைத்திருந்த சித்திரவதை. அந்த மாதிரியான சித்திரவதையை தாங்குவதற்கு உங்களைப் போன்றவர்கள் எங்கிருந்துதான் சக்தி பெறுகிறார்களோ?”
”இப்போது என்னால் என்னைப் பற்றியும், பொதுவாக மக்களைப் பற்றியும் சொல்ல முடியும். ஏனெனில் இப்போது வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவும்; ஒப்பிட்டுப் பார்க்கவும் என்னால் முடிகிறது. இதற்கு முன்பெல்லாம் ஒப்புநோக்கிப் பார்ப்பதற்கே ஒரு விஷயமும் இருந்தது இல்லை. எல்லோருமே ஒரே மாதிரியாக வாழ்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றியது. இப்போதோ மற்ற ஜனங்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் நான் எப்படி வாழ்ந்தேன் என்பதையும் என்னால் அறிய முடிகிறது. இதுவும் ஒரு கஷ்டம்தான்!”
அவள் தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு மேலும் பேசினாள்;
”நான் சொல்லுவது தவறாக இருக்கலாம். சொல்லவே தேவையில்லாமல் இருக்கலாம். ஏனென்றால் உங்களுக்கே அதெல்லாம் நன்கு தெரியும்…”
அவளது குரலில் கண்ணீரின் அடையாளம் தென்பட்டது. எனினும் அவர்களைப் பார்த்தபோது அவள் கண்களில் ஒரு குதூகலம் பிறந்தது. அவள் சொன்னாள்:
”ஆனால் நான் என் இதயத்தை உங்களிடம் திறந்து காட்ட விரும்புகிறேன். உங்களது நலத்தில் நான் எவ்வளவு தூரம் அக்கறை கொண்டிருக்கிறேன் என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.”
“நாங்கள்தான் கண்ணாரப் பார்க்கிறோமே” என்று மெதுவாகச் சொன்னான் நிகலாய்.
என்றாலும், தனது ஆவலைத் தான் பூர்த்தி செய்து கொள்ள இயலாதது போலத் தோன்றியது அவளுக்கு. எனவே அவள் தனக்குப் புதியனவாகவும், அளவற்ற முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தோன்றிய எதையெதையோ பற்றி மீண்டும் பேசத் தொடங்கினாள். பொறுமையும் கசப்புணர்ச்சியும் நிறைந்த தனது வாழ்வைப் பற்றி அவர்களிடம் சொல்லத் தொடங்கினாள். ஆனால் அந்தப் பேச்சில் உக்கிரம் இல்லை; ஏதோ ஒரு இரக்கமான போலி பாவம்தான் தொனித்தது. தனது கடந்தகால வாழ்க்கையை உருவாக்கிய இருண்ட நாட்களைப் பற்றிய சிந்தனைகளைச் சொன்னாள். தனது கணவனிடம் தான் பெற்ற அடி உதைகளைப் பற்றிக் கூறினாள். அந்த அடி உதைகளுக்குரிய காரண காரியமற்ற நிலைமையையும் அவற்றைத் தடுக்க முடியாதிருந்த தன் ஏலாத் தனத்தையும் எண்ணி அவளே வியந்து கொண்டாள்……
அவள் சொல்வதை அவர்கள் அமைதியுடன் கேட்டார்கள். மிருகத்தைப் போல் மதிக்கப்பட்டு நடத்தப்பட்ட அவளது வாழ்க்கையில், தனக்கு நேர்ந்த துயரங்களையும் கொடுமைகளையும் பொறுமையோடு சகித்துத் தாங்கிய அவளது வாழ்வில் படாடோபமோ அலங்காரமோ அற்ற அவளது எளிய வாழ்க்கையின் பின்னணியிலே மறைந்துள்ள யதார்த்தமான அர்த்த பாவத்தை அவர்கள் உணர்ந்து உணர்ச்சி வசப்பட்டார்கள். அவள் மூலம் ஆயிரக்கணக்கான ஜீவன்கள் பேசுவது போலிருந்தது. அவள் வாழ்ந்ததெல்லாம் எளிய வாழ்வு, சர்வ சாதாரண வாழ்வு. இந்த உலகிலுள்ள எண்ணிறந்த பெரும்பான்மை மக்களது வாழ்வைப் போன்ற சாதாரண வாழ்வு. அவளது வாழ்க்கைக் கதை அந்த வாழ்வுக்கு ஒரு உதாரணம்; ஒரு அறிகுறி. நிகலாய் தனது முழங்கைகளை மேஜை மீது ஊன்றி, மோவாயைக் கைகளில் தாங்கியவாறு கண்களைச் சுருக்கி, கண்ணாடி வழியாக அவளைக் கூர்ந்து கவனித்தான். சோபியா நாற்காலியில் சாய்ந்து இடையிடையே நடுங்கிக்கொண்டாள், தலையையும் உலுப்பிக்கொண்டாள். அவளது முகம் மெலிந்து வெளுத்துப்போனது போலத் தோன்றியது. அவள் சிகரெட்டும் பிடிக்கவில்லை.
”ஒரு காலத்தில் நான் என்னையே துர்ப்பாக்கியசாலி என்று கருதினேன்” என்று கண்களைத் தாழ்த்திக்கொண்டு அமைதியாகச் சொன்னாள் சோபியா. “என்னுடைய வாழ்க்கையே ஒரு ஜன்னி மயக்கம் என்று எனக்குத் தோன்றியது. அது என்னை ஒரு சிறு நகரத்திற்கு கடத்தப்பட்டிருந்த காலம். அந்தச் சமயத்தில் என்னைப் பற்றி நினைப்பதைத் தவிர, எனக்கு வேண்டியதைக் கவனிப்பதைத் தவிர, வேறு சிந்தனையோ செயலோ கிடையாது. ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பால், நான் எனது துன்பங்களைக் கணக்கிட்டுப் பார்த்தேன். என்னை மிகவும் நேசித்த தந்தையோடு சண்டை பிடித்துக்கொண்டிருந்தேன். என்னைப் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றினார்கள்; என்னை ஒரு அவமானச் சின்னமாகக் கருதினார்கள். நான் சிறையிலும் தள்ளப்பட்டேன். எனது நெருங்கிய தோழன் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுத்தான். என் கணவர் கைதாகி, நான் சிறைக்குள் போய் மீண்டும் நாடு கடத்தப்பட்டேன். பிறகு கணவரின் மரணமும் சம்பவித்தது.
இந்த உலகிலேயே நான்தான் மிகவும் துர்ப்பாக்கியமானவள் என்று அப்போது எனக்குத் தோன்றியது. ஆனால், என்னுடைய சகல துர்பாக்கியங்களும் – அதைவிடப் பத்துமடங்கு அதிகமான துர்பாக்கியங்களும் கூட, உங்களுடைய ஒருமாத வாழ்க்கைக்குச் சமமாகாது, பெலகேயா நீலவ்னா! உங்கள் துர்ப்பாக்கியமோ அன்றாடச் சித்திரவதை; ஆண்டாண்டுதோறும் நிரந்தரமாக நிலைத்திருந்த சித்திரவதை. அந்த மாதிரியான சித்திரவதையை தாங்குவதற்கு உங்களைப் போன்றவர்கள் எங்கிருந்துதான் சக்தி பெறுகிறார்களோ?”
”எங்களுக்கு எல்லாம் பழகிப்போய்விடுகிறது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் பெலகேயா.
இந்த உலகிலேயே நான்தான் மிகவும் துர்ப்பாக்கியமானவள் என்று அப்போது எனக்குத் தோன்றியது. ஆனால், என்னுடைய சகல துர்பாக்கியங்களும் – அதைவிடப் பத்துமடங்கு அதிகமான துர்பாக்கியங்களும் கூட, உங்களுடைய ஒருமாத வாழ்க்கைக்குச் சமமாகாது
”நான் வாழ்க்கையை நன்றாகவே அறிந்திருக்கிறேன் என்றே தோன்றுகிறது” என்று சிந்தனை வயப்பட்டவனாகக் கூறினான் நிகலாய்; “என்றாலும் வாழ்க்கையைப் பற்றிப் புத்தகத்தின் மூலமாவது என்னுடைய பக்குவமடையாத அரைகுறை அபிப்பிராயங்கள் மூலமாவது தெரிந்துகொள்ளாமல், இந்தமாதிரி நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்போது, வாழ்க்கை பயங்கரமாய்த் தோற்றமளிக்கிறது. சின்னஞ்சிறு விஷயங்கள்தான் பயங்கரமாய்த் தோன்றுகின்றன. அந்தக் கவனிப்பற்ற சிறுசிறு பொழுதுகள்தான் ஆண்டுகளை உருவாக்குகின்றன……..”
அந்தப் பேச்சு இடைவிடாது விரிந்து பெருகியது. இருண்ட வாழ்க்கையின் சகல அம்சங்களையும் அந்தப் பேச்சு தொட்டு விரிந்தது. தாய் தனது நினைவின் ஆழத்திலேயே முங்கி, முழுகிவிட்டாள். தனது இளமைக்காலத்தில் பயங்கரத்தை உண்டாக்கிய அன்றாடத் துயரங்களையும், ஆறாத மனப் புண்களையும் அவள் சங்கிலித் தொடர்போல நினைவுக்குக் கொண்டு வந்து சிந்தித்துப் பார்த்தாள். கடைசியாக அவள் பேசினாள்:
“நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும் நேரமாகிவிட்டது. நான் பாட்டுக்குப் பேசிக்கொண்டே இருக்கிறேனே. சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி முடித்துவிட என்னால் முடியுமா? முடியாது.”
அக்காவும் தம்பியும் அவளிடமிருந்து மெளனமாகவே விடைபெற்றுச் சென்றனர். வழக்கத்துக்கு மாறாக, நிகலாய் தன் தலையை அதிகம் தாழ்த்தி வணங்கியது போலவும், தன் கரத்தை அதிக அன்போடு குலுக்கியது போலவும் தாய்க்குத் தோன்றியது. சோபியா தாயை அவளது அறை வரையிலும் சென்று வழியனுப்பிவிட்டு, திரும்ப முனையும்போது வாசல் நடையில் நின்றவாறே சொன்னாள். “நிம்மதியாகத் தூங்குங்கள், நல்லிரவு!”
அவளது குரலில் பரிபூரணமான பரிவு தொனித்தது. அவளது சாம்பல் நிறக் கண்கள் ஆர்வங் கலந்த அன்போடு தாயின் முகத்தைக் கனிந்து நோக்கின.
பெலகேயா சோபியாவின் கரத்தைத் தனது இரு கரத்தாலும் பற்றிப் பிசைந்துகொண்டே சொன்னாள்:
“மிகுந்த நன்றி.”
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம்தான் என்பதற்கு ஆதாரங்களை கண்டறிந்து நிறுவியவர் தொல்லியல்துறை அறிஞர் ஐராவதம் மகாதேவன், கடந்த 26-11-2018 அன்று காலமானார்.
ஐராவாதம் மகாதேவன்.
அக்டோபர் 2, 1930 அன்று பிறந்த ஐராவாதம் மகாதேவன், திருச்சியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் இரசாயனவியலில் தனது பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை முடித்துவிட்டு, இந்திய ஆட்சிப் பணிக்கு படித்து தேர்வாகி, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றினார்.
1962-ல் தொல்லியல் துறை அறிஞர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கே.வி. சுப்ரமணிய ஐயர் ஆகியோரின் பழக்கம் கிடைத்தது. அப்போதிருந்தே தொல்லியல் துறையில் ஆர்வம் காட்டிவந்த ஐராவதம் மகாதேவன், 1980-ல் விருப்ப ஓய்வு பெற்ற பின் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் செயல் இயக்குனராக செயல்பட்டார். 1987 முதல் 1991 வரையில் தினமணியின் ஆசிரியராகச் செயல்பட்டார்.
சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினையில் காணப்பட்ட மிருகத்தை குதிரை எனக் கூறி அது ஆரிய நாகரிகம்தான் என்ற கூற்றை முறியடித்து பல்வேறு ஒப்பீட்டு சான்றாதாரங்களின் மூலம் அது காளை என்பதை நிருபித்தார். அதன்மூலம் சிந்துச் சமவெளி நாகரிகம், திராவிட நாகரிகமே என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் ஐராவதம் மகாதேவன்.
கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசின் “பத்மஸ்ரீ” விருது பெற்றவர் ஐராவதம் மகாதேவன். திராவிட நாகரிக ஆய்விற்கு அவரது பங்களிப்பைப் பாராட்டி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் (2009-2010)-ம் ஆண்டுக்கான “தொல்காப்பியர் விருது” வழங்கப்பட்டது.
சென்னையில் கடந்த திங்கள்கிழமை (26-11-2018) அன்று தனது 88-வது வயதில் மரணமடைந்தார். அதிகாரவர்க்கப் பிரதிநிதி, பத்திரிகையாளர், தொல்லியல் துறை நிபுணர் என பல பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஐராவதம் மகாதேவனுக்கு துறைசார் வல்லுனர்கள் செலுத்திய அஞ்சலிகளுக்கான இணைப்பை இங்கே தந்திருக்கிறோம்.
♦♦♦
ஐராவதம் மகாதேவன்: தமிழின் தொன்மைக்குச் சான்றுகளை கொடுத்தவர்
…… தமிழின் தொன்மையைத் தனது கடும் உழைப்பால், ஆய்வுத் திறத்தால் உலக அரங்குக்கு எடுத்துச்சென்றவர் ஐராவதம் மகாதேவன். 38 ஆண்டு காலம் உழைத்து அவர் உருவாக்கிய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு நூல் (Early Tamil Epigraphy, Harward University press and CreA, 2003) இந்திய வரலாறு என்றாலே, அது வட இந்திய வரலாறுதான் என்றிருந்த நிலையை மாற்றுவதற்கு உதவியது. தமிழ் பிராமி என அவரால் அழைக்கப்படும் பழந்தமிழ் எழுத்துகளையும் ஆரம்ப கால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள முழுமையானதொரு வழிகாட்டியாக அது விளங்குகிறது.
…… சிந்துவெளி எழுத்துகளும் திராவிடமும்
ஐராவதம் மகாதேவன் கவனம் செலுத்திய இன்னொரு துறை சிந்துவெளி எழுத்துகள் குறித்தனவாகும். சிந்துவெளி நாகரிகத்தை ஆரியக் கலப்பில்லாத அதற்கு முற்பட்ட நாகரிகம் என நிறுவினார் ஐராவதம் மகாதேவன். “சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். ஆனால், ஆரியர்களுடைய நாகரிகமோ கிராமப்புறத்தைச் சார்ந்த மேய்ச்சல் நிலத்தோடு தொடர்புடைய நாகரிகமாகும். சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகள், முத்திரைகளில் பல்வேறுவிதமான விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதிலும் குதிரையின் உருவம் காணப்படவில்லை. குதிரை என்பது ஆரியர்களின் வருகைக்குப் பிறகே இந்தியாவில் அறிமுகமானது” என்று எடுத்துக்காட்டினார் ஐராவதம் மகாதேவன்.
சிந்துவெளிப் பண்பாடு ஒரு திராவிடப் பண்பாடுதான் என்று நீண்டகால ஆராய்ச்சியின் மூலம் நிரூபணம் செய்த அஸ்கோ பர்போலாவின் வாதத்தை வழிமொழிந்த ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிக் குறியீடுகளை அஸ்கோ பர்போலா படித்த முறையில் சில குறைபாடுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். பர்போலா ‘அணில்’ என்ற உருவத்தை ‘பிள்ளை’ எனப் பொருள் கொண்டதையும், ‘வளையல்’ போன்ற குறியீட்டுக்கு ‘முருகு’ என்று பொருள் கொண்டதையும் மொழியியல் அடிப்படையில் தவறென்று சுட்டிக்காட்டினார்.
சிந்துவெளிக் குறியீடுகளைப் படிப்பதற்கு ஐராவதம் மகாதேவன் கையாண்ட முறையே நம்பகமானதாக உள்ளது.
– ரவிக்குமார், எழுத்தாளர், வழக்கறிஞர். – ’தி இந்து தமிழ்’(மேலும் படிக்க)
♦♦♦
காலத்தின் கல்வெட்டு!
….. ‘‘40 ஆண்டுகளுக்கு முன் ஐராவதம் மகாதேவன் வெளியிட்ட ‘சிந்துவெளி எழுத்து, குறியீடுகளின் தொகுப்பும் அட்டவணைகளும்’, சிந்துவெளி ஆய்வில் ஒரு மறக்க முடியாத மைல் கல். சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிடக் கருதுகோளுக்கு வலுச்சேர்த்த ஆய்வறிஞர் அவர்.
சிந்துவெளிப் பண்பாட்டின் எச்சங்கள் இந்தியா முழுவதும் பரவியிருக்கும் என்பதால், அதன் தொடர்ச்சியை வேத இலக்கியங்கள் மற்றும் வட இந்திய மரபுகள் மூலமாகவும், பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் தமிழ்த் தொன்மங்கள் மூலமாகவும் இரு முனைகளில் இருந்தும் மீட்டுருவாக்கம் செய்யமுடியும் என்பதே ஐராவதம் மகாதேவனின் அணுகுமுறை.”
….. ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்கேல் விட்சல், அவர் அப்போது பதிப்பித்துக்கொண்டிருக்கும் ‘ஹார்வர்டு கீழை நூல்கள் வரிசை’யில் (Harvard Oriental Series) வெளியிட மகாதேவனிடம் இந்நூலைக் கேட்டார்.
ஹார்வர்டு கீழை நூல்கள் வரிசையில் ஒரு அறிஞரின் நூல் வெளியிடப்படுவது அறிவுலகில் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுவது. முழுமை அடையாத ஒரு கையெழுத்துப் பிரதியைப் பார்வையிடாமல்கூட ஹார்வர்டு தன்னுடைய புகழ்மிக்க கீழை நூல்கள் வரிசையில் வெளியிட முன்வந்தது, உலக அறிஞர்களிடையே மகாதேவனின் புலமைக்கு எவ்வளவு மதிப்பிருந்தது என்பதை நமக்குச் சொல்லிவிடக்கூடியது.
….. சிந்து சமவெளி ஆராய்ச்சி மற்றும் தொல்தமிழ் கல்வெட்டுகள் ஆகிய துறைகளில் ஐராவதம் மகாதேவனின் பங்களிப்பு அளப்பரியது என அவரோடு பயணித்த மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் கூறுகிறார்.
”ஆராய்ச்சிகள் நடத்தும்போது, அதன் தீர்வுகளை நேர்மையாக எதிர்கொள்ளவேண்டும் என்ற கருத்துப்படி வாழ்ந்தவர் மகாதேவன். கிடைத்த தரவுகளுக்கு உண்மையாக இருந்தவர். கணினி பயன்பாடு குறித்து பலரும் அறிந்திராத காலத்தில், 1977ல், சிந்துசமவெளி குறியீடுகளின் எழுத்துக்கள் மற்றும் பொறிப்புகளை அட்டவணைப்படுத்தியவர். வரலாற்று ஆராய்ச்சிகளில் மறக்கமுடியாத ஆளுமையாக இருப்பவர். அவரது கடைசி யோசனை கூட சிந்துவெளி பற்றியதாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை”என்று கூறுகிறார் பாலகிருஷ்ணன்”
…. பௌத்தர்களும் சமணர்களும் தமிழ்ச் சமூகத்துக்கும், இலக்கியத்துக்கும் ஆற்றியுள்ள சேவையை ஐராவதம் மகாதேவனும் அந்த நூலில் உறுதிப்படுத்தியுள்ளார். ஏறத்தாழ கிபி பதினாறாம் நூற்றாண்டு வரை அந்த சேவை நீடித்ததையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார் . தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களும்; சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, பெருந்தொகை போன்ற காப்பியங்களும்; திருக்குறள், நாலடியார் போன்ற அற நூல்களும்; திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி போன்ற அகராதி நூற்களும் சமணர்களால் இயற்றப்பட்டன என்பதைத் தனது நூலில் சுட்டிக்காட்டியிருக்கும் ஐராவதம் மகாதேவன் தமிழ் மொழிக்கு வரிவடிவம் கொடுத்தவர்கள் சமணர்களே என்று தமது ஆய்வு நிரூபணம் செய்கிறது என்றும் தெரிவித்திருந்தார். பிற்காலத்தில் சங்க இலக்கியம் செழிக்க அவர்கள் ஏற்படுத்தித் தந்த வரிவடிவமே உதவியது. மக்களிடம் கல்வி அறிவு பரவவும் அதுவே காரணமாயிற்று’ எனவும் ஐராவதம் மகாதேவன் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார் (பக்கம் 139).
துறைசார் அறிஞர்களுக்கு வெளியே ஒளிர்ந்த மேதை மகாதேவன்
…. சிந்து சமவெளியில் கிடைத்த ஒரு இலச்சினையை அடையாளம் காண்பதுதான் மிகப் பெரிய சவாலாகத் திகழ்ந்தது. அதற்கு மட்டுமே அவர் 50 ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறார். இந்தக் குறியீடுகள் இதைச் சொல்லலாம் அல்லது அதைச் சொல்லலாம் என்ற வகையில் அவர் எதையும் அணுகியதே கிடையாது. மொழியியல் இலக்கணங்களையும், ஆய்வுத்திறனையும் இணைத்தே பகுத்தாய்ந்து முடிவுக்கு வந்தார்.
எல்லா இலச்சினைகளையும் தொகுத்து அவற்றிலிருந்து பெறும் தகவல்களை அட்டவணைப்படுத்தினார். இதற்குச் சில ஆண்டுகள் பிடித்தன. அவைதான் கல்வெட்டு ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி, மானுடவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் இனி ஈடுபடுவோருக்கு மிகச் சிறந்த திறவுகோலாகப் பயன்படவிருக்கிறது. இந்தியத் தொல்லியல் துறை 1977-ல் அதை நூலாக வெளியிட்டது. (The Indus Script: Texts, Concordance and Tables.)
தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் இன்று காலமானார்
1977-ல் அவர் வெளியிட்ட ‘தி இண்டஸ் ஸ்கிரிப்ட்: டெக்ஸ்ட்ஸ் , கன்கார்டன்ஸ் அண்ட் டேபிள்ஸ் (The Indus Script : Texts, Concordance | and Tables (1977) ) என்ற நூல் சிந்து சமவெளி எழுத்துக்களைக் குறித்த ஆராய்ச்சிகளில் ஒரு மைல்கல். அந்த நூலில்தான் சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். சிந்து சமவெளி கலாச்சாரம் என்பது திராவிடக் கலாச்சாரமே என்று நிறுவுவதில் அவருடைய ஆய்வுகள் பேருதவி புரிந்து வருகின்றன.
முற்காலத் தமிழ்க் கல்வெட்டுகளை ஆராய்ந்து அவற்றைப் பற்றி விரிவாக எழுதி 2003-ல் அவர் வெளியிட்ட ‘ஏர்லி தமிழ் எபிகிராஃபி: ஃப்ரம் தி ஏர்லியஸ்ட் டூ த சிக்ஸ்த் சென்சுரி ஏ.டி.’ (Early Tamil Epigraphy, | from the Earliest Times to the Sixth century A.D (2003) என்கிற பெருநூல் மிகவும் முக்கியமானது. அவருடைய மகத்தான சாதனைகளுள் ஒன்றாக இந்த நூல் கருதப்படுகிறது. சிந்து சமவெளி எழுத்துக்களும் பிராமி எழுத்துக்களும் ஐராவதம் மகாதேவனின் நிபுணத்துவத்தில் பிரதானமான பகுதிகள்.
கடந்த நவம்பர் மாதத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆர்த்தர் பௌவார்ட், ஜூல்ஸ் கிரவ்தாட் ஆகிய இரண்டு பத்திரிகையாளர்கள் சென்னை வந்திருக்கின்றனர். அவர்கள் ”ஃபொர்பிடன் ஸ்டோரீஸ்” (Forbidden) என்ற பிரெஞ்சுப் பத்திரிகை சார்பாக தமிழகத்தில் சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்யும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிரட்டல்கள், கைது தாக்குதல் குறித்து ஆய்வு நடத்த வந்திருந்தனர்.
சென்னை வந்த அந்த பத்திரிகையாளர்கள், ஏற்கெனவே வைகுண்டராஜனின் சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்து அம்பலப்படுத்திய சந்தியா ரவிசங்கர் என்ற சென்னை பத்திரிகையாளரின் மூலம், டி. ஆனந்தகுமார் மற்றும் எம்.ஸ்ரீராம் ஆகியோருடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
பிரெஞ்சு பத்திரிகையாளர்கள்.
வைகுண்டராஜனின் சட்டவிரோத அரிய வகை மணல் கொள்ளை தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் பல பத்தாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள முறையற்ற சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து ஆய்வு நடத்த, ஆனந்தகுமார், ஸ்ரீராம் ஆகியோருடன் ஆர்தர் பௌவார்ட் மற்றும் ஜூல்ஸ் கிரவ்தாட் ஆகியோர் கன்னியாகுமரி சென்று அங்கு நடைபெறும் மணற்கொள்ளை குறித்து விசாரித்து வந்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஆர்தர் பௌவார்ட்டும், ஜூல்ஸ் கிரவ்தாட்டும், குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அரியவகை மணல் நிறுவனத்தின் (ஐ.ஆர்.இ.எல்) மேலாளரைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர். அவர்களை உள்ளே அனுமதித்த மேலாளர், அப்பத்திரிகையாளர்களை அவர்களது சந்திப்பின் இடையிலேயே வெளியேறுமாறு கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர்களும் வெளியேறியிருக்கின்றனர்.
அதனைத் தொடந்து மறுநாள் அவர்கள் இருவரும் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். தாது மணல் கொள்ளை குறித்து வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் விசாரிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட மணல் கொள்ளை கும்பல், உடனடியாக உள்ளூர் போலீசு கும்பலை முடுக்கி விட்டிருக்கிறது. உடனடியாக களத்தில் இறங்கிய போலீசு, பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் விசாரித்து அவர்களுடன் வந்த பத்திரிகையாளர்கள் ஆனந்தகுமார், ஸ்ரீராம் ஆகியோரை உடனடியாக விசாரணைக்கு வரவழைத்தது. கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் கடந்த 27-ம் தேதி அனந்தகுமாரையும், ஸ்ரீராமையும் தொடர்பு கொண்டு, நேரில் வந்து நடந்த விசயங்களை விளக்குமாறு கூறியிருக்கிறார்.
இதையடுத்து நவம்பர் 28-ம் தேதி கன்னியாகுமரியில் டி.எஸ்.பி. பாஸ்கரனை காலை 11 மணிக்கு அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். இருவரிடமும் சுமார் 6 மணிநேரத்திற்கும் மேல் போலீசு நிலையத்திலேயே விசாரணையை நடத்தியுள்ளது போலீசு. கூடுதலாக, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளது. அதன் பின்னர் மீண்டும் போலீசு நிலையத்திற்கு அழைத்துவந்து ஆனந்தகுமாரை சிறையிலடைத்தது. ஸ்ரீராமை மட்டும் ஹோட்டலுக்குச் செல்ல அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மூத்த பத்திரிகையாளர்கள் போலீசாரிடம் விசாரித்த பின்னர், அனந்தகுமாரை ஹோட்டலுக்குச் செல்ல அனுமதித்துள்ளது. கூடவே 4 போலீசை அவர்களது அறை வாசலில் காவல் வைத்தது.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்து என். ராம் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள்.
மறுநாள் மீண்டும் இருவரையும் போலீசு நிலையத்திற்கு அழைத்து விசாரணையைத் தொடர்ந்துள்ளது. உளவுப் பிரிவு, க்யூ பிரிவு உள்ளிட்ட ஆளும் வர்க்கத்தின் சேவக பிரிவுகள் அனைத்தும் வரிசையாக விசாரித்துள்ளன. இதனிடையே மூத்த வழக்கறிஞர் கீதாவின் தலையீட்டின் பேரிலேயே அவர்களை விடுவித்தது போலீசு.
இந்த விசாரணையின் போது பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் இருவரும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தங்களது பத்திரிகை அடையாள அட்டையைக் காட்டி தாங்கள் சட்டப்பூர்வமாக அனுமதி பெற்றே அங்கு வந்ததற்கும் ஆதாரம் காட்டியுள்ளனர். இந்த விசாரணையின் போது டி.எஸ்.பி. பாஸ்கரன் சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து எதுவும் பேசக் கூடாது என பத்திரிகையாளர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த விசாரணை குறித்து பத்திரிகையாளர் அனந்தகுமார், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு கூறுகையில், டி.எஸ்.பி. அலுவலகத்தில் நாங்கள் சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டது குறித்து மிகவும் அதிர்ச்சியடைந்தோம். மணிக்கணக்கில் எங்களிடம் கேள்வி கேட்டனர். எங்களை சில வாக்குமூலங்களில் கையெழுத்திடச் சொன்னார்கள். நாங்களும் கையெழுத்திட்டோம். ”சன் வேர்ல்ட்” தங்கும் விடுதிக்கு எங்களை அழைத்துச் சென்று அங்கு சுமார் 6 மணிநேரத்திற்கும் மேலாக அடைத்துவைத்தனர் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியுள்ளார் கன்னியாகுமரியின் எஸ்.பி. ஸ்ரீநாத். அவர்கள் இருவரும் ஐ.ஆர்.ஈ.எல் நிறுவனத்திற்குள் அனுமதியின்றி சென்றனர் என்றும் தடை செய்யப்பட்ட இடங்களை புகைப்படங்கள் எடுத்தனர் என்றும் பின்னர் புகைப்படங்கள் எதுவும் எடுக்கவில்லை என்றும் உளறிக் கொட்டியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத நடவடிக்கை ஆகட்டும் அல்லது வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளை ஆகட்டும், திருச்செந்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடக்கும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் புரோக்கர் வேலை செய்து வருகிறது பா.ஜ.க. கும்பல். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அப்பட்டமாக அனில் அகர்வாலுக்கு ஆதரவாக பா.ஜ.க. செயல்பட்டது.
தாதுமணல் கொள்ளை புகழ் வைகுண்டராஜன், சுப்ரமணியசாமி வழியாக தனது பாஜக லாபியை வைத்துள்ளார். ஏற்கனவே எஸ்.வி.சேகர் “அண்ணாச்சி”யிடம் பேசி நியூஸ் 7 தொலைக்காட்சியில் மதிமாறன் போன்றோரை அழைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டதை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். செத்துப் போன ஜெயாவின் தர்பாரில் அங்கம் வகித்த வைகுண்டராஜன் தற்போது நியூஸ் 7 தொலைக்காட்சி மூலம் பாஜக-வின் தமிழகத் திட்டத்திற்கு தீயாய் வேலை செய்கிறார். எனவே பா.ஜ.க. கும்பல், தமது கூட்டாளி வைகுண்டராஜனின் சட்டவிரோத மணற்கொள்ளை அம்பலப்பட்டால், சும்மா விட்டுவிடுமா என்ன ?
உடனடியாக களத்தில் இறக்கிவிட்டது பொன்.ராதாகிருஷ்ணனை. மத்திய அமைச்சராக இருந்து கொண்டு கூச்சமே இல்லாமல் பொய் சொல்லக் கூடிய உயிரினங்கள் பா.ஜ.க.வில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. அதற்கு ஒரு உதாரணம் பொன்.இராதாகிருஷ்ணன்.
அந்த இரண்டு பிரெஞ்சு ‘உளவாளிகளும்’ கள்ள பாஸ்போர்ட்டில், கள்ளத் தோணி வழியாக கன்னியாகுமரிக்குள் நுழைந்தனர் என எவ்வித ஆதாரவும் இல்லாமல் அடித்து விடுகிறார் பொன்னார். தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததாக கிளப்பி விட்டவர் வைகுண்டராஜனுக்காக அதிகமாக கூவுகுகிறார்.
சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம்.
கன்னியாகுமரியில் திடீர் திடீரென போஸ்டர்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. ”கன்னியாகுமரி மாவட்டத்தில் ஃப்ரான்ஸ் நாட்டு உளவாளிகள்.. பொதுமக்களே உஷார்!” என இரண்டு பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் புகைப்படத்தையும் போட்டு, அவர்களது பெயரை தப்பும் தவறுமாக எழுதி மொட்டையான போஸ்டர்கள் அடித்து வெளியிட்டுள்ளது ஒரு கும்பல். இதை பாஜக ஆதரவுடன் வைகுண்டராஜனின் ஆட்கள் செய்திருக்க வேண்டும். அல்லது பாஜக-வே வைகுண்டராஜன் ஆதரவுடன் செய்திருக்கும்.
எது எப்படி இருந்தாலும், இந்த விவகாரத்திலும் பத்திரிகையாளர்களை மிரட்டி, இனி யாரும் ஆய்வு செய்ய வரக்கூடாது என்பதில் வெற்றி பெற்றுவிட்டதாக வைகுண்டராஜன் கும்பல் நினைத்துக் கொண்டிருக்கலாம்.
இவ்விவகாரம் ஊடகங்களில் போலீசு செய்தியாகவே வெளிவந்து கொண்டிருந்ததை, இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் உடைத்துள்ளார். நேற்று 3.12.2018 அன்று ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் சார்பில் ஏற்பாடு செய்யபட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் என்.ராம், போலீசின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தி, வந்திருந்தவர்கள் ஃப்ரெஞ்சு நாட்டு பத்திரிகையாளர்கள் என்பதையும், அவர்கள் முறையான வழியில்தான் வந்திருக்கின்றனர் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
இருப்பினும் சங்க பரிவாரக் கும்பல், சட்டவிரோத கார்ப்பரேட்டுகளுக்கான தனது ’மாமா’ வேலையை சலியாமல் செய்து கொண்டுதான் இருக்கிறது. தமிழக பத்திரிகைகளும் இவ்விவகாரம் குறித்து எதுவும் வெளியாகாதவாறு அவற்றை அடக்கி வாசிக்கின்றன. நாளை (05-12-2018) அன்று இவ்விவகாரத்தைக் கண்டித்து பா.ஜ.க,, கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது. ’இந்து’ என்.ராம், வந்தவர்கள் பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் என ஒருபக்கம் கூறிக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் பா.ஜ.க.வின் போராட்டச் செய்தியை அப்படியே வெளியிட்டிருக்கிறது தமிழ் இந்து இணையதளம். அதில் மேற்படி பிரான்ஸ் உளவாளிகள் எனும் அவதூறை அச்சுபிசகாமல் வெளியிட்டிருக்கிறது.
பிரான்சில் இருந்து ரஃபேல் விமானத்தை வாங்குகிறது இந்திய அரசு. அந்த விமான பேரத்தில் ஊழல் வெளி வந்து நாறிக் கொண்டிருப்பது தனிக் கதை. ஆனால் பிரான்சில் இருந்து தனது விமானப்படைக்கு தேவையான போர் விமானங்களை வாங்கும் இந்தியாவிற்கு பிரான்ஸ் நாடு ஏன் உளவாளிகளை அனுப்ப வேண்டும்? ரஃபேல் விமான பேர ஊழலில் பிரான்சை காப்பாற்ற இந்தியாவும், மோடியைக் காப்பாற்ற பிரான்சும் முயற்சி செய்யும் போது இந்த உளவாளி கதைக்கு அடிப்படையே இல்லை.
ஒருவேளை பிரான்ஸ் இந்தியாவை வேவு பார்க்க நினைத்திருந்தால் ரஃபேல் விமானத்தில் ஒரு ‘கருவி’ யை பொருத்தி விட்டால் போயிற்று! புதியத 2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் கருவியை பதியும் போது ஹைடெக்கான ரஃபேல் விமானத்தில் ஒரு ஒட்டுக் கருவியை பொருத்த முடியாதா என்ன? மோடி அமைச்சர்களே பிரான்சின் தயவில் காலம் கழிக்கும் போது இவர்கள் ஏன் இரண்டு பத்திரிகையாளர்களை உளவாளிகளாக அனுப்ப வேண்டும்?
மோடி ஊர் ஊராக போய் இந்தியாவில் தொழில் நடத்த வெளிநாட்டு கம்பெனிகளை வருந்தி அழைக்கும் காலத்தில் யார் யாரை உளவு பார்க்கிறார்கள்?
உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் ! -மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி விடும் அறைகூவல்.
கடந்த 2000-ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் பிர்லா-அம்பானி தலைமையில் அமைக்கப்பட்ட குழு “உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூ.ஜி.சி. நிதி வழங்கக் கூடாது, கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவியோடு அந்தந்தப் பல்கலைக்கழகங்களே நிதி திரட்டிக்கொள்ள வேண்டும்” என்று யூ.ஜி.சி.யைக் கலைக்கத் தூபம் போட்டது.
மோடி ஆட்சிக்கு வந்தபின் 2015-இல் முன்னாள் யூ.ஜி.சி. தலைவர் அரிகவுதம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு யூ.ஜி.சி.யைக் கலைத்துவிட வேண்டும் எனக்கூறி, வெளிப்படையாகவே அறிக்கை கொடுத்தது. அதைத்தான் இப்போது மோடி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
கடந்த ஜூலை மாதம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்திய உயர்கல்வி ஆணையம் 2018 என்ற மசோதாவைப் பொதுமக்களின் கருத்துக் கேட்புக்காக வெளியிட்டது. தற்போது நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவைக் (UGC) கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் (HECI) என்ற எதேச்சதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்குவதுதான் இம்மசோதாவின் நோக்கம்.
ஆராய்ச்சி மாணவர்கலுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தி வைக்கும் முடிவைக் கைவிடக்கோரி மாணவர்கள் யூ.ஜி.சி வளாகத்தை முற்றுகையிட்டு நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
‘உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக’ இப்புதிய அமைப்பு தேவைப்படுவதாகக் கூறுகிறது மோடி அரசு. ஏற்கனவே, ‘தரமான மருத்துவக் கல்வி’ என்ற பெயரில் நீட் தேர்வைத் திணித்தார்களே’ என்னவானது? ஒருபுறம் தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிப்பதும், மறுபுறம் கிராமப்புறங்களைச் சார்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி வாய்ப்பு அடியோடு பறிபோவதும்தான் நடந்து வருகிறது. இதுதான் இவர்கள் சொல்லும் தரத்தின் யோக்கியதை.
கல்வியின் தரத்தைப் பற்றிக் கவலைப்படும் இவர்கள்தான், கல்வித்துறையில் உள்ள “இன்ஸ்பெக்டர் ராஜ்” என ஏசப்பட்ட கண்காணிக்கும் முறையை முடிவுக்குக் கொண்டு வருகிறார்கள். கல்வித்துறையின் மீதான அரசின் கட்டுப்பாடும், ஒழுங்குபடுத்தும் சட்டமுறைகளும் இருப்பதால்தான், குறைந்தபட்சமாவது கல்வித்தரம் உள்ளது. இன்ஸ்பெக்டர் ராஜ் முறையை ஒழிப்பதன் மூலம் அம்பானி, அனில் அகர்வால் போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கான சந்தையாகக் கல்வித்துறை மாற்றப்படுகிறது என்பதே உண்மை.
இந்திய உயர் கல்வி ஆணையத்தில் மொத்தம் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதில் மூன்று உறுப்பினர்கள் மத்திய அமைச்சகச் செயலாளர்கள்; (மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம்) கார்ப்பரேட் முதலாளிகளில் ஒருவர் உறுப்பினராக இருக்கலாம். உயர்கல்வி ஆணையத்தின் தலைவராக வெளிநாட்டில் வாழுகின்ற இந்தியர்களும் (NRI) தேர்ந்தெடுக்கப்படலாம் என மசோதா கூறுகிறது. மேலும், மத்திய இணைச் செயலாளர் பொறுப்புக்கு இணையான ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இவ்வாணையத்தில் இருப்பார். இரண்டு பேர் மட்டுமே பேராசிரியர்கள். மொத்தமாக அதிகாரிகளாலும் முதலாளிகளாலும் நிர்வகிக்கக் கூடிய அமைப்புதான் உயர்கல்வி ஆணையம்.
உயர் கல்வி பற்றிய அகில இந்தியக் கணக்கெடுப்பு 2018-இன் படி (All India Survey on higher education) மொத்தம் 40,000 ஆயிரம் கல்லூரிகளும் 856 பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் உள்ளன. இதில் 35% சதவிகிதக் கல்லூரிகள் அரசு கல்லூரிகள். இதில் மிகப் பெரும்பான்மையான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாநில அரசுகளின் நிதியுதவி மற்றும் கட்டுப்பாட்டில் உள்ளவை. ஆனால், இம்மசோதாவின் மூலம் கல்வித்துறையின் மீதான மாநில அரசுகளின் உரிமை வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுகிறது. இந்திய உயர் கல்வித்துறை நேரடியாக மைய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது.
அடுத்து, மிக முக்கியமாக, உயர்கல்வித்துறைக்கு மானியம் வழங்கும் முறையை மோடி அரசு ஒழித்துக்கட்டுகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) மிக முக்கியப் பணிகளில் ஒன்று மத்தியப் பல்கலைகழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் துறை மேம்பாட்டிற்காகப் பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதாகும். ஆனால், இப்போது அமைக்கப்படும் உயர்கல்வி ஆணையத்திற்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இல்லை. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளை நிர்ணயிப்பது மட்டுமே இதன் வேலையாகும்.
மத்திய அரசு நடத்துகின்ற கல்வி நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்காக உயர் கல்வி நிதி முகமை (HEFA – Higher Education Financial Agency) என்ற நிதி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு தேவைகளுக்காக இதன் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
மேலும் 2020-க்குள் 1 இலட்சம் கோடி வரை உயர் கல்வித் துறையில் Revitalizing Infrastructure System in Education (RISE) திட்டத்தின் மூலம் முதலீடு செய்யப்போவதாக கூறுகிறார் மோடி. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தோடு மத்தியப் பல்கலைக் கழகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் இதர தேவைகளுக்காக HEFA அல்லது RISE மூலம் கடன் வழங்கப்படும். இந்தக் கடனைத் திருப்பிக் கட்ட கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அச்சுற்றறிக்கை கூறுகிறது. இப்படி கல்வித்துறையை ஒட்டுமொத்தமாகத் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாகி வருகின்றன.
தரவரிசைப் பட்டியலில் (Graded autonomy institutions) முன்னணியில் உள்ள பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அனுமதிப்பது கட்டாயம். உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் இடம்பெற வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்ட மேன்மைதகு நிறுவனங்கள் என்ற திட்டத்தின் நோக்கமே, இந்திய உயர்கல்வி சந்தையை வெளிநாட்டுச் சந்தையோடு இணைத்து, அதனைச் சர்வதேசமயமாக்குவதுதான்.
இதன் மூலம் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ( 2020-இல் இந்தியக் கல்விச் சந்தையின் மொத்த மதிப்பு 9,36,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது) இந்திய உயர்கல்வி சந்தையில் வெளிநாட்டு நிதி மூலதனம் மற்றும் அதன் பல்கலைக்கழகங்கள் நேரடியாக ஆதிக்கம் செலுத்த வழிவகை செய்யப்படுகிறது.
இதனை அமல்படுத்துவதற்குச் சாதகமான அமைப்பாகத்தான் உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படுகிறது. இந்த பின்னணியிலிருந்தே பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப்படுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே சிவ்நாடார், டாடா, அசிம் பிரேம்ஜி, ஆசிஸ் தவான், பிர்லா போன்ற தரகுமுதலாளிகள் பல்கலைக்கழகங்களை நடத்தி வருகின்றனர். மிட்டல், அதானி, வேதாந்தா போன்றோர் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான தீவிர முயற்சியில் உள்ளனர். இவர்களை ஊக்குவிப்பதற்காகவே அம்பானியின் தொடங்கப்படாத ‘ஜியோ கல்வி நிறுவனத்திற்கு’ மேன்மை தகு தகுதியை மோடி அரசு வழங்கியுள்ளது.
நிதி ஆயோக் கடந்த 2017-இல் மத்திய அரசிற்கு வழங்கிய பரிந்துரையில் தர தன்னாட்சி பட்டியலில் முதலாம், இரண்டாம் நிலைகளில் வராத கல்லூரி / பல்கலைக்கழகங்களை மூடிவிட வேண்டும் எனக் கூறியுள்ளது. உயர் கல்வி ஆணையம் அமைந்துவிட்டால், அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நிச்சயம் மூடு விழா நடத்தப்பட்டுவிடும்.
தமிழகத்தில் அதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தெரிகின்றன. தொழில்நுட்பக் கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு அரசு இதுவரை வழங்கி வந்த கல்வி உதவித்தொகை (அரசாணை 92 அடிப்படையிலானது) நிறுத்தப்பட்டுவிட்டது. அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை குறைக்கப்படுகிறது. அதேசமயம், இன்னொருபுறத்தில் பல்கலைக்கழகங்கள், அதன் உறுப்புக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணத்தை இரண்டுமடங்காக உயர்த்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
நீட் தேர்வைத் திணித்து மருத்துவக்கல்வியை பறித்துக்கொண்டார்கள். பொறியியல் கல்வியும் இனி இல்லை என்றாகிவிட்டது. கலை-அறிவியல் படிப்பிலாவது ஒரு பட்டத்தை வாங்கி விடலாம் என நினைக்கும் ஏழை – நடுத்தர வர்க்கத்தினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினரான பெரும்பான்மை மாணவர்களின் எதிர்பார்ப்பையும் அடித்து நொறுக்குகிறார்கள்.
நாம் என்ன செய்யப்போகிறோம்?
எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் கடந்த ஜூலை 25- ஆம் தேதி முதல் தொடர்ச்சியான இயக்கம் நடத்தி வருகிறது.
உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்துப் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் சென்னையில் ஆகஸ்டு 21 அன்று நடைபெற்ற அரங்குக் கூட்டம்.
இவ்வியக்கத்தின் போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், பல்வேறு மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்களையும், கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது. உயர்கல்வியைக் காக்கும் போராட்டத்தில் கல்வியின் மீது அக்கறை கொண்ட அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.
கலை, அறிவியல், சட்டம், பொறியியல், மருத்துவக் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களும், பேராசிரியர்களும், பெற்றோர்களும் ஒன்றுசேர்வோம்!
உயர் கல்வி பாதுகாப்புக் குழுக்களைக் கட்டுவோம்!
உயர்கல்வி ஆணைய முன்வரைவு சட்ட மசோதாவைத் தகர்ப்போம்!
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. புதிய ஜனநாயகம், நவம்பர் 2018
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 31 (தொடர்ச்சி)
மாக்சிம் கார்க்கி“நமது குழந்தைகள் உலகினுள்ளே புகுந்து புறப்பட்டுவிட்டார்கள்!” என்று அவள் நினைத்தாள். அப்போது அவள் திறந்துகிடக்கும் ஜன்னலின் வழியே, இலைகளின் சலசலப்போடு கலந்து வரும் தனக்குப் பழக்கமற்ற பட்டணத்து இரைச்சலைக் காது கொடுத்துக் கேட்டாள். அந்தச் சப்தங்கள் எங்கோ தொலைவிலிருந்து மங்கித் தேய்ந்து களைத்துச் சோர்ந்து போய் வந்தன. அந்த அறைக்குள்ளே வரும்போது அந்தச் சப்த அலைகள் அநேகமாகச் செத்துத்தான் ஒலித்தன.
மறுநாள் காலையில் அவள் தேநீர்ப் பாத்திரத்தைத் தேய்த்துத் துலக்கி, தேநீருக்காக வெந்நீர் காயவைத்தாள். அரவமின்றி மேஜையைச் சரி செய்தாள். பிறகு நிகலாய் எழுந்து வருவதை எதிர்நோக்கிச் சமையலறையில் காத்திருந்தாள். அவன் இருமிக்கொண்டே கதவைத் திறந்தான். ஒரு கையால் தன் மூக்குக் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டும் மறுகையால் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டும் அவன் வந்தான். காலை வணக்கம் கூறிக்கொண்ட பிறகு, அவள் தேநீர்ப் பாத்திரத்தை அடுத்த அறைக்குள் கொண்டு போனாள். அதற்குள் அவன் தரையெல்லாம் தண்ணீரைக் கொட்டி முகம் கை கழுவினான். தனக்குத்தானே முனகிக்கொண்டு, தனது பல் விளக்கும் பிரஷையும் சோப்பையும் கீழே நழுவவிட்டான். சாப்பிடும்போது அவன் தாயைப் பார்த்துச் சொன்னான்:
”நான் விவசாய இலாகாவில் எனக்குப் பிடிக்காத வேலையொன்றைப் பார்த்து வருகிறேன். நம்முடைய விவசாயிகள் எப்படி நாசமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கிறதுதான் என் வேலை.”
”நான் விவசாய இலாகாவில் எனக்குப் பிடிக்காத வேலையொன்றைப் பார்த்து வருகிறேன். நம்முடைய விவசாயிகள் எப்படி நாசமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கிறதுதான் என் வேலை.”
ஒரு குற்றப் புன்னகையோடு அவன் மேலும் பேசினான்:
”பட்டினிதான் விவசாயிகளை அகாலத்திலேயே கல்லறைக்குள் தள்ளிச் செல்கிறது. அவர்களது குழந்தைகளும் பிறக்கும்போதே சோனியாகப் பிறந்து, இலையுதிர் காலத்தின் ஈசல் பூச்சிகளைப் போல் மாண்டு மடிகின்றன. எங்களுக்கும் இது தெரியும், இதற்குரிய காரணமும் எங்களுக்குத் தெரியும். இந்தக் காரணத்தின் வளர்ச்சியைப் படிப்படியாகக் கவனித்துக்கொண்டு இருப்பதற்கு எங்களுக்குச் சம்பளம் கூடக் கொடுக்கிறார்கள். ஆனால், இப்படியே இது போய்க் கொண்டிருந்தால்……”
“நீங்கள் ஒரு மாணவரா!” என்று கேட்டாள் தாய்.
“இல்லை. நான் ஆசிரியர். என் தந்தை வியாத்தியாவிலுள்ள ஒரு தொழிற்சாலையில் மானேஜர். ஆனால், நானோ ஆசிரியர் வேலைக்குத்தான் படித்தேன். கிராமத்திலே இருந்தபோது நான் முஜிக்குகளுக்குப் புத்தகங்களைக் கொடுத்து உதவினேன். அதன் காரணமாக, என்னைச் சிறையில் போட்டார்கள். தண்டனைக் காலம் முடிந்த பிறகு நான் ஒரு புத்தகக் கடையில் விற்பனைக்காரனாக வேலை பார்த்தேன். ஆனால் எனது ஜாக்கிரதைக் குறைவினால் மீண்டும் என்னைச் சிறையில் போட்டார்கள். கடைசியாக என்னை அர்ஹாங்கெல்சுக்கு நாடு கடத்திவிட்டார்கள். அங்கும் அங்கிருந்த கவர்னரின் வெறுப்புக்கு நான் ஆளானேன். அதன் காரணமாக மீண்டும் என்னை வெண்கடல் கரையிலுள்ள ஒரு சிறு கிராமத்துக்கு நாடு கடத்தினார்கள். அங்கு ஒரு ஐந்து வருஷ காலம் வாழ்ந்தேன்.”
சூரிய ஒளி நிறைந்த அந்த அறையில் அவனது குரல் மளமளவெனப் பொழிந்தோடியது. இதற்கு முன்பே இது மாதிரி எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறாள் தாய். எனினும் அந்தக் கதைகளைச் சொல்பவர்கள் ஏன் இத்தனை அமைதியோடு, ஏதோ தவிர்க்க முடியாததொன்றைப் பேசுவது போல், அவற்றைக் கூறுகிறார்கள் என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை.
“இன்று, என் சகோதரி வருகிறாள்.” என்றான் அவன்.
“அவளுக்குக் கல்யாணமாகிவிட்டதா?”
“அவள் ஒரு விதவை. அவளது கணவன் சைபீரியாவுக்கு கடத்தப்பட்டுச் சென்றான். ஆனால் அவன் அங்கிருந்து தப்பியோடி விட்டான். இரண்டு வருஷங்களுக்கு முன்னால், அவன் ஐரோப்பாவில் காசநோயால் செத்துப் போனான்.”
“அவள் உங்களைவிட இளையவளா?”
“ஆறு வருஷம் மூத்தவள். நான் அவளுக்கு மிகவும் கடமைப்பட்டவன். அவள் இங்கு வந்து சங்கீதம் வாசிப்பது வரை நீங்கள் பொறுத்திருங்கள். அது அவளுடைய பியானோவாத்தியம்தான். பொதுவாகச் சொன்னால், இங்குள்ள பொருள்களில் பெரும் பாகம் அவளுடையவைதாம். புத்தகங்கள் மட்டுமே என்னுடையவை.
“அவள் எங்கு வசிக்கிறாள்?”
“எங்கும்தான்” என்று சிறு புன்னகையோடு பதில் சொன்னாள் அவன். ”எங்கெல்லாம் ஒரு துணிச்சலான ஆசாமி தேவையோ அங்கெல்லாம் அவள் இருப்பாள்.”
“அவள் இந்த மாதிரி – இந்த மாதிரி வேலைக்குக் கூடச் செல்கிறாளா?’
”ஆமாம். நிச்சயமாய்!” என்றான் அவன்.
அவன் சீக்கிரமே போய்விட்டான்; தாய் “இந்த மாதிரி வேலையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினாள். அந்த வேலைக்காக ஒவ்வொரு நாளும் அமைதியோடும் விடா முயற்சியோடும் தங்களைத் தாமே தத்தம் செய்து கொள்ளும் மனிதர்களைப் பற்றி நினைக்கும்போது, ஏதோ ஒரு மலையின் முன்னே இரவு வேளையில் நிற்பதுபோல் அவளுக்குத் தோன்றும். மத்தியானத்துக்கு மேல், நெட்டையான அழகிய பெண் ஒருத்தி வந்தாள்.
அவள் கரியநிற உடையுடுத்தியிருந்தாள். தாய் கதவைத் திறந்தவுடன் அவள் தன் கையிலிருந்த மஞ்சள் நிறமான சிறு பையைக் கீழே நழுவ விட்டுவிட்டு தாயின் கையைப் பற்றிப் பிடித்தாள்.
“நீங்கள்தானே பாவெல் விகாய்லவிச்சின் தாய்!” என்று கேட்டாள்.
”ஆம்!’ என்று பதிலுரைத்தாள் தாய். எனினும் அந்தப் பெண்ணின் அழகிய கோலத்தைக் கண்டது முதல் அவளுக்கு என்னவோ போலிருந்தது.
”நீங்கள் எப்படி இருப்பீர்களென்று கற்பனை எண்ணியிருந்தேனோ, அப்படியே இருக்கிறீர்கள். நீங்கள் இங்கு வந்து வசிக்கப் போவதாக என் தம்பி எழுதியிருந்தான்” என்று அவள் கூறிக்கொண்டே, கண்ணாடியின் முன் நின்றுகொண்டு தொப்பியைக் கழற்றினாள். “நான் வெகு காலமாகப் பாவெல் மிகாய்லவிச்சோடு நட்புரிமை கொண்டவள். அவன் உங்களைப் பற்றிக் கூறியிருக்கிறான்.”
அவளது குரல் உள்ளடங்கியிருந்தது. மேலும் அவள் மெதுவாகத்தான் பேசினாள். அவளது நடமாட்டங்கள் மட்டும் விறுவிறுப்போடும் வேகத்தோடும் இருந்தன. அவள் தனது சாம்பல் நிறக் கண்களால் புன்னகை புரிந்தாள். அதில் வாலிப பாவமிருந்தது. அவளது கன்னப் பொறியில் சிறு சிறு சுருக்க ரேகைகள் விழுந்திருந்தன. அவளது சிறு காதோரங்களுக்கு மேல் இளம் நரை ரோமங்களும் மின்னிக் கொண்டிருந்தன.
“எனக்குப் பசிக்கிறது. கொஞ்சம் காப்பி குடித்தால் தேவலை” என்றாள் அவள்.
”அதற்கென்ன. தயார் செய்கிறேன்” என்று பதிலுரைத்தாள் தாய். பதில் கூறிவிட்டு அவள் அலமாரிக்குச் சென்று காப்பிச் சட்டியை எடுத்துக்கொண்டே கேட்டாள்..
”என்னைப் பற்றி பாவெல் சொன்னதாகவா சொன்னீர்கள்?”
”எவ்வளவோ சொல்லியிருக்கிறான், அந்த மாது தோல் சிகரெட் பெட்டியைத் திறந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தாள்.
“நீங்கள் அவனைப் பற்றி ரொம்பவும் பயந்து போயிருக்கிறீர்களா?” என்று கேட்டுக்கொண்டே அவள் அந்த அறைக்குள் உலவினாள்.
சாராய அடுப்பில், காப்பிச் சட்டிக்குக் கீழாக எரியும் நீல நிறத் தீ நாக்குகளைப் பார்த்துக்கொண்டே லேசாகப் புன்னகை புரிந்தாள் தாய். அந்தப் பெண்ணின் முன்னிலையில் ஏற்பட்ட சங்கட உணர்ச்சியை விழுங்கி உள்ளடக்கிய அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
“அப்படியென்றால், அவன் அவளிடம் என்னைப் பற்றிக் கூறியிருக்கிறான், நல்ல பிள்ளை!” என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு, பிறகு மெதுவாகச் சொன்னாள்.
”ஆமாம். அது ஒன்றும் சாமானியமான சிரமம் அல்ல. ஆனால், முன்புதான் அந்தச் சிரமம் எனக்குப் பெரிதாய் இருந்தது. இப்போது அவன் தன்னந்தனியாக இல்லை என்பதால் எனக்குக் கொஞ்சம் நிம்மதி”
அந்தப் பெண்ணின் முகத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டே தாய் அவளது பெயரைக் கேட்டாள்.
“சோபியா’ என்றாள் அந்தப் பெண்.
தாய் அந்தப் பெண்ணைக் கூர்ந்து பார்த்தாள். அந்தப் பெண்ணிடம் ஏதோ ஒரு பரபரப்பு – அதீதமான அவசரமும் துணிவும் கொண்ட பரபரப்புக் காணப்படுவதாகத் தோன்றியது.
“இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் அதிக நாள் சிறையில் இருக்கக்கூடாது என்பதுதான்” என்று தீர்மானமாகச் சொன்னாள் அந்தப் பெண். “அவர்களுக்கு மட்டும் விசாரணையைச் சீக்கிரமே நடத்தினால் அவர்களை நாடு கடத்திவிட்டவுடனேயே, பாவெல் மிகாய்வலிச் அங்கிருந்து தப்பியோடி வருவதற்கு நாம் உடனடியாக ஏற்பாடு செய்து தருவோம். அவன் இப்போது இங்கு அவசியம் இருந்தாக வேண்டும்.”
தாய் வியந்துபோய் சோபியாவைப் பார்த்தாள். சோபியா தனது சிகரெட் கட்டையை எங்கு போடுவது என்பதற்காக அங்குமிங்கும் இடம் பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியாக, அவள் அந்தச் சிகரெட் கட்டையை ஒரு பூத்தொட்டியிலிருந்த மண்ணில் புதைத்து அமுக்கினாள்.
“ஐயோ! அது பூக்களைக் கெடுத்து விடுமே!” என்று தன்னையறியாமல் கூறினாள் தாய்.
“மன்னிக்க வேண்டும்” என்றாள் சோபியா. ”நிகலாவும் இதே விஷயத்தைத்தான் எனக்கு எப்பொழுதும் சொல்லுவான்.”
அவள் அந்தச் சிகரெட் கட்டையை அதிலிருந்து எடுத்து, ஜன்னலுக்கு வெளியே எறிந்தாள்.
இதைக் கண்டவுடனே தாய் மீண்டும் ஒரு சங்கட உணர்ச்சியுடன் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே ஒரு குற்றவுணர்வுடன் சொன்னாள்:
”முன்பெல்லாம் ஒரு நபரிடம் நான் என் மனத்திலுள்ள விஷயத்தை வெளியிட்டுக் கூறத் துணிவதென்றால் அதற்கு எனக்கு அந்த நபரோடு ரொம்ப நாள் பழக்கம் வேண்டும். ஆனால், இப்போதோ என் இதயம் எப்போதும் திறந்து கிடக்கிறது. எனவே இதற்கு முன் நான் எண்ணிப் பார்த்திராத விஷயங்களைக்கூட, திடீரெனச் சொல்லித் தீர்த்துவிடுகிறேன்.”
“என்னை மன்னியுங்கள் நான் வேண்டுமென்று அப்படிச் சொல்லவில்லை. என்னையறியாமலே வாய் வந்துவிட்டது. உங்களுக்குப் போதிக்க நான் யார்?”
”நான் அசுத்தம் பண்ணினால் போதித்தால் என்னவாம்?” என்று தோளை உலுக்கிக் கொண்டே கேட்டாள் சோபியா. ”சரி, காப்பி தயாராய் விட்டதா? ரொம்ப நன்றி. ஒரே ஒரு கோப்பைதானா? உங்களுக்கு ஒன்றும் வேண்டாமா?”
திடீரென்று அவள் தாயின் தோளைப் பற்றிப்பிடித்து அவளைத் தன்னருகே இழுத்து அவளது கண்களை ஆழ்ந்து நோக்கிக்கொண்டே கேட்டாள்:
”நீங்கள் என்ன வெட்கப்படுகிறீர்களா?”
தாய் லேசாகப் புன்னகை புரிந்தாள்.
“இப்பொழுதுதான் சிகரெட் கட்டையைப் பற்றி உங்களிடம் சொன்னேன். அதற்காக நான் வெட்கப்படுகிறேனா என்று கேட்கிறீர்களா?” என்றாள் தாய். தனது வியப்புணர்ச்சியை மூடி மறைக்காமல் அவள் மீண்டும் ஏதோ கேட்கும் பாவனையில் பேசினாள்:
”நேற்றுத்தான் நான் இங்கு வந்தேன். அதற்குள்ளாக இதை என் சொந்த வீடு போலவே கருதி நடந்து வருகிறேன். எதற்கும் அஞ்சாமல், என்ன சொல்லுகிறோம் என்பதே தெரியாமல்….”
“அப்படித்தானிருக்க வேண்டும்” என்றாள் சோபியா.
”என் தலையே சுற்றுகிறது. நானே எனக்கு அன்னியமாய்ப் போய்விட்டதுபோல் தோன்றுகிறது” என்று மேலும் பேசத் தொடங்கினாள் தாய். ”முன்பெல்லாம் ஒரு நபரிடம் நான் என் மனத்திலுள்ள விஷயத்தை வெளியிட்டுக் கூறத் துணிவதென்றால் அதற்கு எனக்கு அந்த நபரோடு ரொம்ப நாள் பழக்கம் வேண்டும். ஆனால், இப்போதோ என் இதயம் எப்போதும் திறந்து கிடக்கிறது. எனவே இதற்கு முன் நான் எண்ணிப் பார்த்திராத விஷயங்களைக்கூட, திடீரெனச் சொல்லித் தீர்த்துவிடுகிறேன்.”
சோபியா மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டே தனது சாம்பல் நிறக் கண்களில் மிருதுவான ஒளி ததும்பத் தாயைப் பார்த்தாள்.
“அவன் தப்பிச் செல்வதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறுகிறீர்கள். ஆனால் அப்படி ஓடி வந்த பிறகு அவனால் எப்படி வாழ முடியும்?” என்று தன் மனத்துக்குள் அழுத்திக்கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டு, மனப் பாரத்தைக் குறைத்துக்கொண்டாள் தாய்.
“அது ஒன்றும் பிரமாதமில்லை” என்று கூறிக்கொண்டு இன்னொரு கோப்பை காப்பியை ஊற்றிக்கொண்டாள் சோபியா. ”இப்படி ஓடி வந்தவர்களில் எத்தனையோ பேர் எப்படி வாழ்கிறார்களோ, அப்படியே அவனும் வாழ்வான். நான் அப்படி ஒரு ஆசாமியைச் சந்தித்தேன். அவனை அவன் வசிக்க வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அவனும் நமக்கு இன்றியமையாத ஆசாமிதான். அவனை ஐந்து வருஷகாலத்திற்கு நாடு கடத்தினர். ஆனால் அவன் அங்கு மூன்றரை மாதம்தான் காலம் தள்ளினான்.”
தாய் அவளது முகத்தையே சிறிது நேரம் பார்த்தாள். பிறகு புன்னகை புரிந்தாள். அதன் பின் தலையை அசைத்துக்கொண்டே மெதுவாகச் சொன்னாள்.
“மே தினக் கொண்டாட்டம் என்னிடம் ஏதோ ஒரு மாறுதலை உண்டாக்கிவிட்டது போல் எனக்குத் தோன்றுகிறது. அது என்ன என்பதை என்னாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. நான் என்னவோ ஒரே சமயத்தில் இரண்டு பாதைகளில் சென்று கொண்டிருப்பதுபோல் ஒரு பிரமை. சமயங்களில் எல்லாமே எனக்குப் புரிந்துவிட்டது போல் தோன்றுகிறது. மறுகணம் ஒரே மங்கல்; கண்முன் இருள் மண்டிக் கவிகிறது. உதாரணமாக உங்களைப் பார்க்கிறேன். நீங்கள் ஒரு பெரிய இடத்துப் பெண். இந்த வேலைக்கு வருகிறீர்கள்…. பாவெலை தெரிந்திருக்கிறீர்கள். அவனைப் பற்றி நல்லபடியாய்ப் பேசுகிறீர்கள், அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும்.
“நன்றி பெறத் தகுதியுடையவர் நீங்கள்தான்” என்று கூறிச் சிரித்தாள் சோபியா.
”நான் என்ன செய்துவிட்டேன்? அவனுக்கு இதையெல்லாம் கற்றுக் கொடுத்தது நானில்லையே” என்று பெருமூச்செறிந்தாள் தாய்.
சோபியா சிகரெட்டை கோப்பைத் தட்டில் நசுக்கி அணைத்தாள். அவள் தலையை அசைத்த அசைப்பில் அவளது பொன்நிற முடி, உலைந்து நழுவி, அவளது இடை வரையிலும் வந்து விழுந்து கற்றை கற்றையாய் புரண்டது.
”சரி, இந்த அலங்காரத்தையெல்லாம் களைவதற்கு நேரமாகிவிட்டது” என்று கூறிக்கொண்டே அவள் எழுந்தாள், எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதியளித்திருப்பது நாம் அறிந்ததே. இவ்விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் புரிந்துள்ளதும், அரசியல் சட்ட விரோதமாக செயல்பட்டதும் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளிக்குமாறு, மத்திய அரசின் நீர்வளத்துறை, வனத்துறை ஆகியவற்றிடம் கடந்த 2018, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் செயல்திட்ட வரைவு அறிக்கை மற்றும் கோரிக்கை மனுவை அளித்தது கர்நாடக அரசு. இதில் மேக்கேதாட்டுவில், ரூ 5,912 கோடியில் அணையும் சுமார் 400 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையமும் அமைப்பதற்கான திட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் கொடுக்கப்பட்ட மேக்கேதாட்டு அணைக்கான செயல்திட்ட வரைவு அறிக்கையை அங்கீகரித்து கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை நேற்று (27-11-2018) கர்நாடக அரசிற்கு அனுப்பியது மோடி அரசு. மேலும் இது குறித்து விரிவான ஆய்வறிக்கை தயாரிக்குமாறும் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
இச்செய்தி வெளியானதும் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இச்சூழலில் டெல்லியில் 03.12.2018 அன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியது.
தில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் அதன் தலைவர் மசூத் ஹுசேன், தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலப் பிரதிநிதிகளும், மத்திய அரசின் நீர்வளத்துறை ஆணையத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் ஆர்.செந்தில்குமார், காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்ரமணியன், துணைத்தலைவர் கே.எஸ்.ராம்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக பிரதிநிதிகள் பேசும்போது, “உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல், காவிரி ஆற்றின் குறுக்கே எந்த புதிய அணையும் கட்ட முடியாது. இந்நிலையில், மத்திய அரசு கர்நாடகாவுக்கு மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளித்தது சட்டப்படி தவறு. இந்தத் திட்டம் நிறைவேறினால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அரசு இந்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தினர்.
மேலும் “பெங்களூரு குடிநீர் தேவைக்காக நெட்கல் நீர்த்தேக்கத்தில் இருந்து ஏற்கனவே கர்நாடகம் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, குடிநீருக்காக மேக்கேதாட்டுவில் அணை கட்ட அவசியம் ஏதும் இல்லை. அப்படி அணை கட்டப்பட்டால் கிருஷ்ணராஜசாகர், கபினி மற்றும் பில்லிகுண்டுலுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தற்போது தமிழ்நாட்டுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கிடைத்துக் கொண்டிருக்கும் நீர் தடுத்து நிறுத்தப்படும். இதனால் மிக முக்கியமான ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் தமிழ்நாட்டின் பாசனத்துக்கு நீர் கிடைக்காமல் போய் விடும்.” என்று கூறினர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹூசேன் கூறியதாவது:
“கூட்டம் சமூகமான முறையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவை இப்போது கூற முடியாது. அடுத்த கூட்டம் ஜனவரியில் நடைபெறும். மேக்கேதாட்டு பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. தமிழக அரசின் எதிர்ப்பை ஆணையம் கருத்தில் கொண்டுள்ளது. கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மேலாண்மை ஆணைய அனுமதி பெற்றே தாக்கல் செய்ய முடியும். இந்த திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு, மற்ற மாநிலங்கள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும்.”
இதனிடையே கர்நாட அரசின் நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், அணைக் கட்டுமான பகுதியை நிபுணர் குழுவுடன் 07.12.2018 அன்று பார்வையிடுவதாக கூறியிருக்கிறார்.
ஆக மத்திய அரசு முதற்கட்ட அறிக்கையை ஏற்று முழு விரிவான அறிக்கையை முன்வைக்குமாறு ஏன் கர்நாடக அரசிடம் கூறியது? இச்செய்தி வெளியானதும் இப்படி அறிக்கை முன்வைப்பது தவறு என காவிரி மேலாண்மை ஆணையம் ஏன் கூறவில்லை?
தமிழகத்திற்கு ஸ்வாகா! நிம்மதியாய் யோகா புரியும் மோடி.
அப்படி ஒரு முதற்கட்ட அறிக்கையை அனுமதிக்க கூடாது என மத்திய நீர்வளத்துறை ஆணையத்தை தடுக்க முடியாது என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் கூறுகிறார். ஆனால் இரண்டாம் கட்ட விரிவான அறிக்கைக்கு ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறுகிறார். ஏனிந்த முரண்பாடு? இதன்படி இந்த ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என தமிழகம் கூறியது உண்மை என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து விடுதலைச் சிறுத்தை கட்சியின் ரவிக்குமார் ’தி இந்து’வில் எழுதிய கட்டுரையில், “கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு நடந்தபோது, அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘மேகேதாட்டு நீர்த்தேக்கத் திட்டத்தை உபரி நீரைத் தேக்கி வைப்பதற்கான ஏற்பாடாக ஏன் கருதக் கூடாது?’’ என தமிழகத்துக்காக வாதாடிய வழக்கறிஞரிடம் கேட்டார். ‘கர்நாடகம் அல்லாத மூன்றாவது தரப்பின் கட்டுப்பாட்டில் அந்த நீர்த் தேக்கம் இருக்குமானால் அதை ஏற்றுக்கொள்கிறோம்’ என அவர் பதிலளித்தார். வழக்கறிஞர் கூறியது கர்நாடகத்துக்கு ஆதரவாக இருக்கிறது என அப்போதே அதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன.
மேக்கேதாட்டு திட்டத்தை எதிர்த்து இப்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உடனடியாக நியாயம் வழங்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. 2019 பொதுத்தேர்தலை மனதில் வைத்துதான் மத்தியில் ஆளும் பாஜக அரசு அப்பட்டமாக கர்நாடகத்துக்கு ஆதரவான நிலை எடுத்திருக்கிறது. அரசியல் நோக்கம் கொண்ட இந்த முடிவை அரசியல் களத்திலும் எதிர்கொண்டாக வேண்டும்.
எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒட்டுமொத்தத் தமிழகமும் ஓரணியில் இருக்கிறது எனக் காட்ட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி இதற்காகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.
இதன்படி மேக்கேதாட்டு அணையில் உபரிநீரைத் தேக்கி அதை மூன்றாவது தரப்பு நிர்வகித்தால் பிரச்சினை இல்லை என தமிழக அரசு கூறியிருப்பது தெரிகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக-வின் வெற்றிக்கு எப்படி இந்த மேக்கேதாட்டு அணை தேவைப்படுமோ, அதே போல எடப்பாடி அரசு தமிழகத்தில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்தே ஆக வேண்டிய அடிமைத்தன நிலையில் மேக்கேதாட்டு அணைப் பிரச்சினையை அடக்கி வாசிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது.
இனி வரும் காலத்தில் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்று எடப்பாடி அரசு சொல்லும். கர்நாடக அரசோ, மத்திய அரசின் ஆதரவுடன் அணை கட்டும் முயற்சியை செய்யும். இதை தடுக்க வக்கற்ற காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டங்களை மாதாமாதம் நடத்தும்.
ஆக மத்திய அரசு சட்டப்படியோ, நீதிமன்ற உத்தரவுப்படியோ, காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைப்படியோ நடக்கவில்லை. அப்பட்டமாக அனைத்து சட்டங்கள், தீர்ப்புக்களை மீறி கர்நாடக மாநிலத்தை ஆதரிக்கிறது. இந்தப் பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்படுவது மட்டுமின்றி, இந்தியாவில் அரசியல் சாசன சட்டத்தின்படி ஜனநாயகமோ அரசாட்சியோ இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடைபெற வேண்டுமென்றாலே மத்திய அரசின் துரோகம் தமிழக மக்களால் வீழ்த்தப்பட வேண்டும்.
தென் கொரியாவின் பழமையான குவாங்ஜங் சந்தையின் ஆளுமை மிக்க பெண்கள் !
சந்தடிமிக்க தெருக்களில் வாசனையை, ஒலியை நுகர்ந்தபடி விலை குறைவான பாரம்பரியமிக்க கொரிய உணவைத் தேடி நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.
குளிர்ந்த இலையுதிர் கால ஞாயிற்றுக்கிழமை, சூரியன் மறையத் தொடங்கும் வேளையில் தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ள மிகப் பழமையான குவாங்ஜங் சந்தை பரபரப்பாகிறது.
நூற்றாண்டு பழமையான இந்தச் சந்தை ஜோஸான் அரச வம்ச காலத்தில் உருவானது. 1910-1945 வரை கொரியாவை ஆக்கிரமித்திருந்த, ஜப்பானிய காலனி ஆட்சியில் தப்பிப் பிழைத்தது இந்தச் சந்தை. 1950-53 களில் நடந்த கொரிய போரின்போது சந்தையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டது.
ஆனால், இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் இந்த பரபரப்பான சந்தையில் பாரம்பரிய உடைகளையும் சாயம் ஏற்றப்பட்ட துணிகளையும் வாங்கலாம். அப்போது பிடித்த மீன்கள், உள்ளூர் இறைச்சி வகைகள், அரிசி கேக் (இட்லி போன்ற ஒருவகையான உணவு), பலவகையான கிம்சி (காய்கறி ஊறுகாய்) கடைகளைத் தெரு முழுக்க பார்க்க முடியும். இப்போது பலரை அதிகமாக ஈர்ப்பது உணவு கடைகள்தாம்.
துணிகள் விற்கும் அமைதியான பகுதியை கடந்து சென்றால், பரபரப்பான ஆவி பறக்கும், நெரிசல் மிக்க பாரம்பரிய தெரு உணவு கடைகள் வருகின்றன. பிண்டேடோக் (பச்சை பயறு கார தோசை), மயாக் கிம்பாப் (சாதத்தை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு கார பதார்த்தம்), கிளாஸ் நூடுல்ஸ், பன்றியின் கால்பாதம், குடல் பகுதிகளுடன் நூடுல்ஸ் சேர்த்து செய்யப்படும் சண்டே, மீன் சூப், சஷிமி, காரசாரமான வேகவைத்த அரிசி பலகாரங்கள் போன்றவற்றை இங்கே கிடைக்கும் பாரம்பரிய உணவுகளில் சில…
பரப்பான இந்தச் சூழலில் உணவுகளை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள் அஜுமாக்கள் (கொரியாவில் வயதான பெண்களை அஜுமா என்று அழைப்பர்). அவர்கள் வல்லமைமிக்க சக்தியாக, அரிசி வைன் மற்றும் பீருடன் வருகிற வாடிக்கையாளர்களின் பசியைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிற கடின உழைப்பாளிகளான இவர்கள், பழைய உள்ளூர்வாசிகள், இளைய மாணவர்கள், வெளிநாட்டவர்களுக்கு பற்கள் தெரிய புன்னகைத்து உணவு பரிமாறுகிறார்கள்.
திருமதி யூன், கடந்த இரண்டு வருடங்களாக இந்தச் சந்தையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். இவர் பணியாற்றும் கடை இருபதாண்டுகளாக உள்ளது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இவருடைய வேலை, நள்ளிரவு வரை நீடிக்கிறது.
கோழி கால்களுடன், காய்கறிகள் கலந்த சாதத்தை, பன்றி இறைச்சி மற்றும் சில துணை உணவுகளுடன் இவர் பரிமாறுகிறார். சில சமயம் வெளிநாட்டு வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்வது கடினமாக இருப்பதாக கூறுகிறார் இவர். ஆனால், ருசியான உணவு இதயங்களை இணைத்து விடுவதாக சொல்கிறார். இதனால் மீண்டும் மீண்டும் வாடிக்கையாளர்கள் தேடி வருகிறார்கள் என்கிறார்.
ஏராளமான கடைகள் ஒன்றுக்கொன்று போட்டியாக செயல்படுகின்றன. பெரும்பாலும் இவை பெண்களால் இயக்கப்படுகின்றன. இந்தப் பெண்கள் மாதம் ஒருமுறை ஒன்று சேர்ந்து சுற்றுலா செல்கிறார்கள். திருமதி யூன், போட்டியாக தன்னுடைய கடையை நடத்துவதைக் காட்டிலும், சந்தையில் கிடைக்கும் எல்லா உணவுமே ருசியானது என்கிறார்.
நாளுக்குநாள் சர்வதேச சுற்றுலா பயணிகளாலும் கார்டன் ராம்சே போன்ற பிரபல சமையல் கலைஞர்களாலும் கவர்ந்திழுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சந்தை, தன்னுடைய அசலான தன்மையை இழந்து விடாமல் தன்னை பாதுகாத்து வருகிறது.
கடந்த ஞாயிறு அன்று இந்தச் சந்தையை காண வந்திருந்த, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளான ஜூடி மற்றும் ராப் இங்கிருக்கும் அற்புதமான காட்சிகளை, ஒலிகளை, வாசனையை குறிப்பாக, உணவுக் கடைகளை நடத்தும் பலம் பொருந்திய பெண்களின் படையை சிறப்பாக குறிப்பிடுகிறார்.
ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகள் ஜூடியும் ராப்பும் சந்தையின் ஒலியையும் வாசனையையும் நுகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
“வயதானவர்களுக்கு இளையவர்களுக்கு இது உற்சாகமான, புன்னகையுடன் வாடிக்கையாளர்களை வரவேற்கும் இடம் இது. கொரிய உணவுகளை சமைத்து, பரிமாறுவதில் தனித்தன்மையுடன் இவர்கள் செயல்படுகிறார்கள்” என்கிறார் ஜூடி.
சியோலின் உள் நகரப் பகுதியில் இருக்கும் குவாங்ஜங் சந்தை, சுற்றுலா பயணிகளுடன் இருக்கிறோம் என்கிற உணர்வைக் கடந்து, கொரிய மக்களுக்கு பாரம்பரிய கொரிய உணவுகளை வழங்கும் மிகச்சிறந்த இடமாகும்.
உள்ளூர்வாசிகளுடன் அமர்வது, இருப்பதும் அவர்களால் வரவேற்கப்படுகிறது. அவர்களுடைய கலாச்சாரம், உணவு குறிப்பாக அரிசி வைன் தரும் தனித்தன்மையான அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். இவை அனைத்தும் குவாங்ஜங் சந்தையில் உள்ள பெண்கள் இல்லாவிட்டால் சாத்தியமாகாது.
♦♦♦
எண்ணெயில் வறுத்தெடுக்கும் பலகாரங்கள் இந்தச் சந்தையில் பிரபலமானவை. பச்சை பயறு, முளைகட்டிய தானியங்கள், காய்கறிகள் கொண்டு வார்க்கப்படும் சிறு சிறு தோசைகள் பலருக்கு பிடித்தமான உணவு.