Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 467

ஓட்டுனரை தற்கொலைக்குத் தள்ளிய சான் அகாடமி பள்ளி !

சென்னை பள்ளிக்கரணை, நாராயணபுரம் பகுதியில் இயங்கிவரும் சான் அகாடமி  பள்ளியில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்தவர் அன்பு. கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதியன்று பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பொதுவில் இதுபோன்று பணியிடங்களில் தற்கொலைகள் நடக்கும் பொழுது, தற்கொலைக்கான காரணத்தை போலீசுதான் விசாரிக்கும், நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

ஆனால், இங்கே தலைகீழாக போலீசு வேலையை பள்ளி நிர்வாகமே மேற்கொண்டது. புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தில் அவரைச் சேரச்சொல்லி வற்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று குற்றஞ் சுமத்தியது.

பள்ளி முதல்வரும், போக்குவரத்து நிர்வாகியும், மற்ற ஒட்டுநர்கள் மற்றும் பணியாளர்களையும் கூட்டிவைத்து “சங்கத்தில் சேர வற்புறுத்தப்பட்டதன் காரணமாகத்தான் அன்பு தற்கொலை செய்துகொண்டதாகவும், இந்த சம்பவத்தை பற்றி யாரும் வெளியில் பேசக்கூடாது. குறிப்பாக அந்த சங்கத்தினரோடு யாரும் பேசக்கூடாது, தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது”, என்று கட்டளையிட்டு பத்து நிமிடத்தில் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பள்ளியை விட்டு வெளியேறுமாறு மிரட்டப்பட்டனர்.

அதற்கு முன்னதாக, அத்தொழிலாளர்களிடம் “யாரிடமும் சொல்லமாட்டோம்” என்று சத்தியம் வேறு வாங்கியிருக்கிறார்கள். “சத்தியத்தை மீறினால், வேலை போய்விடும்” என்றும் எச்சரித்திருக்கின்றனர்.

இதே பள்ளியின், வேளச்சேரி கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றும் தெய்வீகன் மற்றும் வெங்கட்ராமன் ஆகிய இரண்டு தொழிலாளிகளை அழைத்து “அன்புவின் சாவுக்கு நீங்கள்தான் காரணம், உங்களது சங்கத்தில் சேரச்சொல்லி அவரை மிரட்டியதால்தான் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார், எனவே, நீங்களாகவே விலகல் கடிதம் கொடுத்துவிட்டு கிளம்புங்கள்” என்று மிரட்டினார், பள்ளியின் நிர்வாக அதிகாரி அர்ச்சனா.

இந்த விசாரணை மிரட்டல்கள் எல்லாம், அன்பு இறந்துவிட்டதாக தகவல் தெரிந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக நடந்து முடிந்திருக்கிறது, என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.

ஜேப்பியாரின் அடாவடித்தனத்தை அம்பலப்படுத்தும் பு.ஜ.தொ.மு. வின் சுவரொட்டி. (கோப்புப் படம்)

கொத்தடிமைகளுக்கும் கீழான நிலையில் நடத்தப்பட்ட தொழிலாளர்களை சங்கமாக அணிதிரட்டி, பள்ளி நிர்வாகத்தின் ஆண்டைத்தனத்திற்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியானப் போராட்டங்களை முன்னெடுத்து வந்திருக்கிறது, புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம்.

சங்கத்தில் செயல்படும் முன்னணியாளர்களை மிரட்டிப் பணியவைப்பது; தொழிலாளர்கள் மத்தியில் கருங்காலிகளை உருவாக்குவது; சங்கத்தை விட்டு வெளியேறினால் சலுகைகள் உண்டு என ஆசை காட்டுவது; உறுதியுடன் நிர்வாகத்தை எதிர்க்கும் தொழிலாளர்களை பணியிடமாற்றம் செய்வது, போலீசு உதவியுடன் பொய்வழக்குப் போட்டு அலைக்கழிப்பது என பல்வேறு வகைகளில் பழிவாங்கும் போக்கை கடைபிடித்து வந்தது, பள்ளி நிர்வாகம். தற்போது, அன்புவின் தற்கொலையைம் தனது பழிவாங்கும் நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொண்டது.

தமக்கு தொடர்ந்து ‘சங்கம், உரிமை’ என்று குடைச்சல் கொடுத்துவரும் வாகன ஓட்டுநர் சங்கத்தின் நடவடிக்கையை முடக்க வேண்டும் என்ற நோக்கில், தொழிலாளர்களுள் சிலரை கருங்காலிகளாக உருவாக்க திட்டமிட்டது நிர்வாகம்.

அத்திட்டத்தையொட்டிதான், அன்புவிடமும் நிர்வாகம் பேசியிருக்கிறது. சங்கத்திற்கு எதிராக புகார் கொடுக்குமாறும் மிரட்டியிருக்கிறது. மேலும், கியூ பிரிவு போலீசை கூட்டி வந்தும் அன்புவிடம் விசாரித்திருக்கின்றனர். சங்க நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்டிருக்கின்றனர். தாம் அச்சங்கத்தை விட்டு ஓராண்டுக்கு முன்னரே விலகி வந்துவிட்டதாகப் பலமுறை சொல்லியும் மீண்டும் மீண்டும் விசாரணை என்ற பெயரில் அவரை மன உளைச்சலுக்குள்ளாக்கியிருக்கின்றனர். நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, கடந்த ஒரு மாதமாகவே, அவர் பணிக்கு வரும்பொழுதே குடித்துவிட்டுதான் வந்தார் என்றும் இதனை உறுதிபடுத்துகின்றனர், சக தொழிலாளர்கள். இந்தப் பின்னணியில்தான் அன்பு தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்.

‘’ சங்கத்தில் இருப்பது தெரிந்தால் வேலையை விட்டு விரட்டிவிடுவோம் என்ற பள்ளி நிர்வாகத்தின் மிரட்டலுக்கு பயந்து சங்கத்திலிருந்து ஓராண்டுக்கு முன்னரே விலகியும் விட்டார். அவரை நேரில் பார்த்து ஒரு வருடங்களுக்குமேல் ஆகிறது; அவரோடு தொலைபேசியில் பேசி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது.’’ என்று அவ்விரு தொழிலாளர்களும் விளக்கமளித்த போதிலும் அதனை காதில் கூட வாங்கிக்கொள்ளாமல், கொலைக்குற்றவாளிகளை போலீசு கையாள்வதைப் போல கதவை அடைத்து வைத்துக்கொண்டு அவர்களை விசாரித்தது, பள்ளி நிர்வாகம்.

இதன் நோக்கம், உளவியல் ரீதியாக அவர்களை பலவீனமடையச் செய்ய வேண்டுமென்பதுதான். ”நிர்வாகம் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல்தான் அன்பு தற்கொலை செய்து கொண்டார்” என்ற உண்மையை சங்கம் அம்பலப்படுத்திவிட்டால், பள்ளியின் பெயர் அடிபட்டு கல்லா கட்டமுடியாமல் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், நயவஞ்சகமான முறையில் சங்கத்தின் மீதே பழியை போட்டது, பள்ளி நிர்வாகம்.

இதற்கிடையில், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமாரை கைக்குள் போட்டுக்கொண்ட பள்ளிநிர்வாகம்,  போலீசை வைத்தே அன்புவின் மனைவியிடம் பேரம் பேசியது. ”பணம் வாங்கித் தருகிறேன், ஏதாவது வேலை வாங்கித் தருகிறேன், இப்போதைக்கு பிரச்சினை இல்லாமல் ஊருக்கு எடுத்து சென்று அடக்கம் செய்துவிடுங்கள்” என்று நைச்சியமாக பேசி அவசரம் அவசரமாக அன்புவின் உடலை அவரது மனைவியிடம் ஒப்படைத்து அவரது ஊருக்கு அனுப்பிவைத்தது, போலீசு.

அன்புவின் இறுதிச் சடங்கில் தொழிலாளர்கள் யாரும் பங்கேற்கக்கூடாதென்று விடுமுறை வழங்கவும் மறுத்துவிட்டது பள்ளி நிர்வாகம். சற்றுநேரம் வரையில் தன்னோடு சேர்ந்து பணியாற்றிய அன்புவை இழந்துவிட்ட துயரத்தில் அவரது முகத்தையாவது பார்த்துவிடவேண்டுமென்ற ஆற்றாண்மையில் மருத்துவமணையில் குவிந்தனர் சக தொழிலாளர்கள்.

பிணவறையில் கிடத்தப்பட்டிருந்த அன்புவின் சடலத்தைக்கூட சக தொழிலாளர்கள் பார்க்கவிடாமல் விரட்டியடித்தது, போலீசு. “உன் மீதுதான் சந்தேகமாக இருக்கிறது”, ”உன் அட்ரசைக் கொடு”, ”உன் செல்போனைக் கொடு”  என  அவர்களைப் பயமுறுத்தி விரட்டியது. பள்ளி நிர்வாகத்தின் அப்பட்டமான அடியாளாகவே செயல்பட்டது, பள்ளிக்கரணை போலீசு. அக்கம்பக்கமாக வசித்து வரும் அவரது உறவினர்களுக்குக் கூடத் தெரியாத வகையில் பள்ளி நிர்வாகம் ஏவிய வேலையை கச்சிதமாக முடித்தும் கொடுத்தார் போலீசு இன்ஸ்பெக்டர் சிவக்குமார்.

வேளச்சேரி பள்ளிக் கிளையின் முதல்வரும் போக்குவரத்து நிர்வாகியும், ஓட்டுனர்கள் தெய்வீகன் மற்றும் வெங்கட்ராமன் ஆகிய இருவரையும் மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். விசாரணை என்ற பெயரில் அழைத்து, ”பிரச்சினை வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்றும் இல்லையென்றால் சிறைக்குத்தான் செல்லவேண்டியதுவரும்” என்றும் கூறி மிரட்டியுள்ளனர். ”குற்றத்தை ஒப்புக்கொண்டு தாமாக பணியிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதி தரும்வரையில் வெளியில் விடப்போவதில்லை” என்று கூறி அறையின் கதவை மூடினர். இயற்கை உபாதைகளுக்காகக்கூட அவர்கள் வெளியே செல்ல முடியாதவாறு, காவல் காத்தனர்.

பள்ளிநிர்வாகத்தால் சட்டவிரோதமான முறையில் தாம் சிறைவைக்கப்பட்டிருக்கும் தகவலை  குறுஞ்செய்தியாக தமது குடும்பத்தினருக்கும், சங்க முன்னணியாளர்களுக்கும் அனுப்பியுள்ளனர்.

வாகன ஓட்டுநர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அப்போதே எதிர்த்திருக்கிறது, சங்கம். (கோப்புப் படம்)

இதனைத்தொடர்ந்து, ”பள்ளி நிர்வாகம் கடத்தி சென்ற தனது கணவரை மீட்டுத் தருமாறு” வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார் தெய்வீகனின் மனைவி வெண்ணிலா. புகாரைத் தொடர்ந்து வெண்ணிலாவுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றது, வேளச்சேரி போலீசு.

அன்பு தற்கொலை செய்துகொண்டது பள்ளிக்கரணை பள்ளிக் கிளையில். விசாரணை நடப்பது வேளச்சேரி கிளையில். பள்ளிக்கரணை போலீசு என்றால், பிரச்சினை இல்லை. இது வேளச்சேரி போலீசு. இதனை சற்றும் எதிர்பார்க்காத, அர்ச்சனாவும் பள்ளி முதல்வரும், அங்கிருந்த அனைத்து ஊழியர்களையும் பின்வாசல் வழியாக 5 நிமிடத்தில் அவசரமாக வெளியேற்றிவிட்டு, முன் கேட்டைப் பூட்டிவிட்டு போலீசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ‘தங்களது தொழிலாளர்களிடம் வெறுமனே விசாரித்துக் கொண்டிருப்பதாக’ தடாலடியாக கூசாமல் புளுகினார், பள்ளி நிர்வாகி அர்ச்சனா.

”நீங்கள் அடைத்து வைத்துள்ளதாக புகார் வந்துள்ளது. நீங்கள் 5 மணிக்கு இன்ஸ்பெக்டரை வந்து பாருங்கள். இவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறோம்.” என இருவரையும் அழைத்துச் சென்றது போலீசு. ஸ்டேஷனுக்கு வந்ததும் இருவரையும் தாங்கள் பத்திரமாக இருப்பதாக எழுதிக்கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்லுமாறு கூறியது.

நடந்த சம்பவத்தை பதிவு செய்யும்பொழுது, பள்ளி நிர்வாகத்தால் தெய்வீகன் மிரட்டப்பட்டார் என்றோ, சட்டவிரோதமான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் என்றோ பதிவு செய்ய மறுத்தது, வேளச்சேரி போலீசு.

‘’புருசனை காணோம் னு கம்ப்ளைன்ட் கொடுத்த, உன் புருசனை கூட்டி வந்திட்டோம்ல.. அப்புறமென்ன’’ என்று எகத்தாளமாக பதிலளித்தார் ஒரு போலீசு ஏட்டு. புகார் அளித்தவர் என்ற அடிப்படையில் தெய்வீகனின் மனைவியிடம் கணவரை மீட்டுக் கொடுத்துவிட்டதாகவும் கூறி அவர்களே எழுதிய கடிதமொன்றில் கையொப்பம் வாங்கியுள்ளனர். அக்கடிதத்தின் நகலைக் கேட்டதற்குக் கொடுக்கவுமில்லை. ”அய்யாகிட்ட பேசிக்கோ” என்றிருக்கிறார், அந்த ஏட்டு.

ஏட்டு சொன்ன ‘அய்யா’வான, வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலுவிடம் தொலைபேசியில் முறையிட்டபோது, ‘’நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்’’ என்று வசனம்தான் பேசினாரேயன்றி, விசயத்துக்கு வரவில்லை. “ஸ்டேஷனுக்கு வந்ததும் பேசுகிறேன்” என்றார்.

இதனைத்தொடர்ந்து, அன்று இரவு சங்கத்தின் ஆலோசகரும், பாதிக்கப்பட்ட தெய்வீகனும் ஸ்டேசனுக்கு சென்று அவரது மனைவியிடமிருந்து எழுதி வாங்கிய கடிதத்தின் நகலைக் கேட்டும், தம்மை சட்டவிரோதமாக கடத்தி மிரட்டிய பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இன்ஸ்பெக்டர் வேலுவிடம் முறையிட்டனர்.

ஸ்ட்ரிக்டு போலீசான இன்ஸ்.வேலு, ”உங்களை பூட்டியெல்லாம் வக்கலைன்னு ஸ்கூல்ல சொல்றாங்க… நீங்க பொய் சொல்றீங்க” என்று தெய்வீகனிடமே திருப்பினார். சங்க ஆலோசகர் உடனிருந்து, சம்பவத்தை விளக்க முற்பட்டபோது, ‘’ நீங்க இப்போ அங்கே வேலை செய்யலைல.. நீங்க வெளியில போங்க’’ என்று எகிறினார், இன்ஸ்.வேலு.

மேலும், ”ஒரு நிர்வாகத்தின் மேல் உங்கள் இஷ்டத்துக்குப் புகார் கொடுப்பீங்களா. அதுக்கு நாங்க அப்படியே வேலை செய்வோமா?” என ஆத்திரம் தலைக்கேற கத்தினார்.

சொந்தப் பிரச்சினைகளுக்காக மட்டுமல்ல; பொதுப்பிரச்சினைக்காகவும் வீதிக்கு வந்திருக்கிறது, சங்கம். (கோப்புப் படம்)

”கொடுத்தப் புகாருக்கு ஒப்புகைச் சீட்டும் கொடுக்க முடியாது; தெய்வீகன் மனைவியிடம் போலீசே எழுதி வாங்கிய கடிதத்தின் நகலையும் வழங்க முடியாது; முடிந்ததைப் பார்த்துக்கொள்” என்று பேட்டை ரவுடியைப் போல மிரட்டி அனுப்பியது வேளச்சேரி போலீசு.

திரில்லர் சினிமா ஒன்றின் திரைக்கதையைப் போல, திகிலும் திருப்பங்களும் நிறைந்திருக்கிறது, அன்புவின் தற்கொலைச் சம்பவம். பள்ளி நிர்வாகத்தோடு போலீசு கூட்டு சேர்ந்து கொண்டு நாடகமாடுகிறது என்பது அப்பட்டமாக அம்பலமாகியிருக்கிறது. எனினும், இதனைத் தாண்டியும் சில கேள்விகள் உள்ளன.

1) அன்பு ஏன் பள்ளிக்கூடத்தில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?

2) ஓராண்டுக்கு முன்னரே, சங்கத்திலிருந்து விலகிய ஒருவரிடம் சங்க நடவடிக்கைகள் குறித்து கியூ பிரிவு போலீசை வைத்து விசாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

3) யார் கொடுத்த புகாரின் பேரில் அல்லது யாருடைய தூண்டுதலில் பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர்  சிவக்குமாரும் கியூ பிரிவு போலிசும் அன்புவிடம் விசாரணை நடத்தினர்  ?

4) அன்பு தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாக செய்தியறிந்த அடுத்த அரை மணிநேரத்திற்குள் அனைத்துத் தொழிலாளர்களிடமும், ‘’இதை வெளியில் சொன்னால், வேலை கிடையாது’’ என்று ஏன் சத்தியம் வாங்க வேண்டும்?

5) சங்கத்தில் சேரச்சொல்லி அன்புவை மிரட்டியதால்தான் அவர் இறந்துவிட்டார் என்றால், அதனை வெளிப்படையாகவே அறிவித்திருக்கலாமே? அவ்வாறே, போலீசிடமும் புகார் கொடுத்திருக்கலாமே? மடியில் கனமில்லாத பள்ளி நிர்வாகம் தற்கொலை செய்தியையே மூடி மறைக்க மெனக்கெட்டது ஏன்?

6) பள்ளிக்கரணை போலீசும், வேளச்சேரி போலீசும் சொல்லி வைத்தாற் போல அப்பட்டமாக பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதற்குரிய பின்னணி என்ன?

7) அன்புவின் ஆறு மாத அலைபேசி தொடர்பு பட்டியலையும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் யார் யாரிடம் பேசியுள்ளார் என்ற ஆய்வும் ஏன் இதுவரை நடத்தப்படவில்லை?

8) பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி போலீசு இன்ஸ்பெக்டர்களும் மற்றும் கியூ பிரிவு போலீசும் தம் சொந்த வழக்காக எடுத்துக்கொண்டு இதில் இவ்வளவு அக்கறை காட்டுவது ஏன்?

என்பது போன்ற பல்வேறு கேள்விகளை சந்தேகமாக எழுப்புகின்றனர், சக தொழிலாளர்கள்.

சங்கத்தைப் பழிவாங்கும் நோக்கில், சங்க முன்னணியாளர்களை வேலையை விட்டு வெளியேற்றுவதற்காக நிர்வாகம் வகுத்த திட்டத்திற்கு அன்பு உடன்பட மறுத்ததாகவும், அவரைத் தொடர்ந்து டார்ச்சர் செய்ததாலேயே அவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக பகிரங்கமாக நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் சக தொழிலாளர்கள்.

சாராய ரவுடி – ‘கல்வி தந்தை’, ஜேப்பியார் !

இவற்றையெல்லாம், வாகன ஓட்டுநர் சங்கம் அம்பலப்படுத்திவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், போலீசை கைக்குள் போட்டுக்கொண்டு, சங்க முன்னணியாளர்கள் மீதே கொலைப் பழிசுமத்தி கூட்டு நாடகமாடுகிறது, பள்ளி நிர்வாகம். என்கின்றனர், இத்தொழிலாளர்கள்.

எம்.ஜி.ஆர். காலத்தில் அவரது இடது கரமாக வலம் வந்த முன்னாள் சாராய வியாபாரியும்  இந்நாள் கல்வி வியாபாரியுமான ஜேப்பியாரின் சத்யபாமா பல்கலை வளாகத்துக்குள்ளேயே, அவரை எதிர்த்து சங்கக்கொடி ஏற்றியவர்கள் இந்த சங்கத்துக்காரர்கள்.

கருங்காலிகளைக் கொண்டு கொலைவெறித்தாக்குதல் நடத்தியபோதும் அஞ்சாதவர்கள். வேலையை விட்டு துரத்தினாலும் அதற்கு அசராதவர்கள். தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டு விரக்தி கொள்ளாமல் மன உறுதியோடு தொடர்ந்து எதிர்த்து நிற்பவர்கள்.

வாகன ஓட்டுநர்கள் என்று பணியமர்த்திக் கொண்டு, தோட்ட பராமரிப்பு முதல் கக்கூசு கழுவுவது வரையில் எந்த வேலை சொன்னாலும் மறுக்காமல் செய்ய வேண்டுமென்று பழக்கப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் இன்று, தொழிலாளர் சட்டம், தொழிலாளர் உரிமை என்று பேசுவதை சகித்துக்கொள்ள முடியாமல் போனதன் வெளிப்பாடுகள் இவை.

பள்ளி நிர்வாகம் – போலீசின் மூர்க்கத்தனமான அடக்குமுறைக்கு இதைத்தாண்டி வேறு காரணம் இருக்க முடியுமா, என்ன?

– புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம், சென்னை.

ரஜினியை என்கவுண்டர் செய்யும் தமிழ் ஃபேஸ்புக் !

Deepa Lakshmi is feeling depressed.
தமிழகமே கொண்டாடும் சினிமா பிரபலம்
பெருஞ்செல்வமும் செல்வாக்கும்
உலகளாவிய புகழும்
காக்கிச் சட்டைக்கும் இந்த அரசு அதிகாரத்துக்கும் எதிராக உண்மையைப் பேச நடுங்குகிறதென்றால்…
என்ன …க்குச் சமம் உன் புகழ்?
போலிசுக்கு வக்காலத்து வாங்கிப் பேசும் போது…சீ
ரஜினி,
சிறுவயதில், உங்களுடைய‌ எத்தனை படங்களை ரசித்துப் பார்த்திருப்போம். அதில் நீங்கள் காட்டிய நாயக பிம்பம் எங்களையுமறியாமல் ஆளுமைகளில் கலந்திருக்கலாம். சினிமா கலாசாரத்தில் இயைந்தது தானே எங்கள் வாழ்க்கை.
இன்று அரசின் பக்கம், அதிகாரத்தின் பக்கம் நின்று கொண்டு நெஞ்சறியப் பொய் சொல்லும் உனைப் பார்க்கக் கண்கள் கூசுகின்றன. காலா என்ன, என்ன வண்ணம் பூசிக் கொண்டு நீ வந்தாலும், அதைத் தாண்டி உன் தோல் உரிக்கப் பட்டு விட்டது.
வீழ்ந்தாய் நீ ரஜினி.

Muralikrishnan Chinnadurai
ஏய் இரசினியை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். சமூக விரோதிகள் யாரென்று தனக்குத் தெரியும் என்று பத்திரிகையாளர் வினாவுக்கு பதிலளித்துள்ளார். ஆகவே ஏய் இரசினியை கைது செய்து விசாரிக்க வேண்டும் 13 உயிர்கள் சும்மா இல்லை!

Deepa Lakshmi
வேற கேள்வி இருக்கா?
ம்…உனக்கு வெக்கமே இல்லியா?
ஜெயலலிதாவைத் தைரியலெச்சுமின்னு சொன்ன வாய்க்கு ஸ்னோலின் பத்தி ஒரு வார்த்த சொல்ல முடியல?
அம்புலிமாமா படிச்சிட்டு ஒப்பிக்கிற மாதிரி ‘சமூகவிரோதி இருக்காங்க… புடிக்கிணும் காட்ணும்’ ங்கிறே?
#யார்நீங்க
#நாந்தான்பாரஜினிகாந்த்

_____

_____

Yuva Krishna
பத்திரிகையாளர்கள் மட்டும் வானத்தில் இருந்தா குதித்தார்கள்? அவர்கள் மத்தியிலும் தரை டிக்கெட்டு ரஜினி ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தை எட்டிய நிலையில், தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்காக தீர்மானம் நிறைவேற்றுகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தீர்மானம் நிறைவேற்றிய கையோடு அலங்காநல்லூருக்கு சென்றவருக்கு, ரஜினிக்கு தூத்துக்குடியில் கிடைத்ததைவிட கூடுதலான அவமரியாதை நடக்கிறது.

உடனடியாக சென்னைக்கு திரும்பியவர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கிறார்.

“உங்களை மிக கேவலமாக விமர்சிக்கிறார்களே?”

“அரசியலுக்கு வந்துவிட்டால் பாராட்டு மட்டுமல்ல, வசவும் சேர்த்து கிடைப்பதுதான் இயல்பு. இரண்டையுமே தலையில் ஏற்றிக் கொள்ளக்கூடாது” என்று ஃப்ரெண்ட்லியாக சொல்லிவிட்டு சிரித்தார் ஓ.பி.எஸ்.

அவர் அரசியல்வாதி. ரஜினி வெறும் நடிகர் மட்டுமே. ஒருவேளை ரஜினி அரசியலில் குதித்து, துரதிருஷ்டவசமாக ஆட்சியைப் பிடித்தாரேயானால், சட்டமன்றம் என்பது மேய்ச்சல் மைதானம் மாதிரி நடத்தப்படும்

Mathavaraj
ரஜினி மட்டும் அன்றைக்கு தூத்துக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரனாய் இருந்திருந்தால், போரடிய மக்களை என்னவெல்லாம் செய்திருப்பார் என்று தெரியவில்லை. அத்தனை கோபம், வன்மம், வெறுப்பு எல்லாம் போராடியவர்கள் மீதும், போராட்டங்கள் மீதும் மண்டிக் கிடப்பதை பார்த்து விட்டோம்.

கட்சி ஆரம்பிக்கவில்லை, ஆட்சி அதிகாரத்துக்கு வரவில்லை, அதற்கு முன்னரே இத்தனை உச்சபட்ச திமிரும், அகம்பாவமும் இருக்கிறதென்றால், அது பார்ப்பனியக் கொழுப்பு அன்றி வேறில்லை.

இந்துத்துவ பாசிசத்தின் இன்னொரு ஆபத்தான முகம்.

குறிஞ்சி நாதன்
தமிழின விரோதி ரஜினியின் காலா படத்தை தியேட்டரில் போய் பார்ப்பவன் #சமூக_விரோதிகளே

Thameem Tantra
ரஜினியை விஜயகாந்துடன் ஒப்பிடுவது அயோக்கியத்தனம்.

விஜயகாந்த் உடம்பு சரியில்லாமல் போனதால் மட்டுமே உளறினார். ரஜினிகாந்த் உளறியதால் மட்டுமே உடம்பு சரியில்லாமல் போனார்.

எளிமை பூனைக்குட்டி என்று அவர் புகழ்பாடி கொண்டு இருந்தவர்கள் இன்று அவரின் பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்து அதிர்ச்சியாகுகிறார்கள். நூறு நாள் அமைதியாக நடந்த போராட்டம் கடைசி கட்டத்தில் வன்முறைக்கு பலியானதை சமூக விரோதம் என்று ஆவேசபடும் ரஜினி, இன்று பத்திரிக்கையாளர்கள் வெறும் நான்கு கேள்விகள் கேட்டதற்கு, நாளாவது கேள்வியில் “யோவ் வேற கேள்வி கேளுய்யா” என்று கையை நீட்டி வாயால் அடிக்க வருகிறார்.

இன்னொரு விசயம், இன்று மக்களை சமூக விரோதி என்றும் போலீஸ்/அரசாங்க அராஜகத்தை நியாயப்படுத்திய ரஜினிக்கே தெரியும்.. இப்படி பேசினால் பொதுப்புத்தி அவருக்கு எதிராக திரும்பும் என்று…

அப்படி இருந்தும் ஏன் பேசினார் ?

ஏன் என்றால்.. ரஜினியின் அரசியல் வருகை நோக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இல்லை. மாறாக பல தொகுதிகளில் 1000-4000ரம் ஓட்டை பிரித்து எதிர்க்கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது மட்டுமே. இது சத்தியமாக பலன் தரும் உத்தி. ஜெயலலிதா இதை பலமுறை திமுகவிற்கு எதிராக வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்… அதையே ரஜினியை வைத்து பாஜக செய்கிறது… இது பாஜகவின் நேரடி ஆட்சியையோ அல்லது எடப்பாடி போன்ற ஆட்சியையோ உறுதிப்படுத்தும்.

திரும்பவும் சொல்கிறேன்…. எடப்பாடியை உதாசீனப்படுத்தினீர்கள்….நடுரோட்டில் அனைவரைரும் சுட்டு தள்ளி உங்களின் மடமை அம்பலப்படுத்தினர்.

இப்போது ரஜினியை குறைத்து எடைபோட்டால் என்ன நடக்கும் என்று …. அடுத்த தூத்துக்குடி படுகொலை சம்பவம் போல் ஒரு சம்பவத்தில் விரிவாக சொல்கிறேன் !

Anbalagan Veerappan

ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டின் முன்பு குவிக்கப்பட்ட போலீசார்!

காலாவுக்கு காவல்துறை பாதுகாப்பு… சத்திய சோதனை!
பாதுகாப்பு வளையத்துக்குள் நடிகர் ரஜினிகாந்த் வீடு
நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு டார்ஜிலிங் செல்கிறார். இரண்டு மாதம் படப்பிடிப்பாம்…

LR Jagadheesan
ரஞ்சித்துக்காக ரஜினிக்கு முட்டுக்கொடுக்கும் தலித்திய மேதாவிகள் யாரும் ஆ ராசாவுக்காக கருணாநிதிக்கு இப்படி முட்டுக்கொடுத்ததில்லையே ஏன்? ஆ ராசாவைவிட ரஞ்சித் மேதாவி என்பதாலா? அல்லது கருணாநிதியைவிட ரஜினி தலித்துகளுக்கு அதிக நன்மைகள் செய்ததாலா? தலித் அரசியல் என்கிற பெயரில் ரஞ்சித் முன்னுறுத்துவது ஆண்டபரம்பரை templateஐ அப்படியே பட்டி டிங்கரிங் பார்த்து உல்டாவாக்கி சுயஜாதி பெருமை பேசும் ஒற்றை ஜாதி heroism. திட்டமிட்ட திராவிட இயக்க நிராகரிப்பு மற்றும் இருட்டடிப்பு. அது உங்களின் சுயஜாதிபற்றுக்கு சொறிந்துகொடுக்கிறது. அதனால் ரஜினி மாதிரி ஒரு facist உடன் கைகோர்த்தாலும் ரஞ்சித் உங்களுக்கு தலித் icon. அப்படியான உங்களின் ஜாதி அரசியலுக்கு பயன்படாத ஆ ராசாவை நீங்கள் கண்டுகொள்ள மறுப்பீர்கள். ராசாவை கடைசிவரை பாதுகாத்து சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோது மாலைபோட்டு வரவேற்ற கருணாநிதிக்காக நீங்கள் ஒருநாளும் இப்படி களமாடியதில்லை. ஒட்டுமொத்த இந்திய கட்டமைப்புமே சேர்ந்து நின்று மூர்க்கமாக எதிர்த்தபோது அதை அவர்கள் வகுத்த ஆட்டக்களத்தில் அவர்கள் வரையறை செய்த விதிகளுக்கு உட்பட்டு ஆடி வென்று திரும்பிய ஆ ராசாவை நீங்கள் என்றாவது கொண்டாடியதுண்டா? அவரைப்போன்ற நிஜ உலக போராளிகள் பல்லாயிரம் பேரை உருவாக்கி பாதுகாத்த திமுகவை அதன் தாய் அமைப்பான திராவிடர் இயக்கத்தை ஆண்டைகளின் அமைப்பு சூத்திர இயக்கம் தலித் விரோதிகள் என்று முத்திரை குத்திய மூடர் கூடம் அட்டைக்கத்தி ரஞ்சித்துக்காக ரஜினிக்கு காவடி எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது. ஆண்டி முத்து ராசாக்களை உருவாக்கி பாதுகாக்கவல்ல ஒரு இயக்கத்துக்கு அசல் எது போலி எது என்றும் தெரியும். உண்மைப்போராளி யார் நிழலுலக அட்டைக்கத்தி எது என்றும் தெரியும். சினிமா ரசிக கும்பல் சினிமாக்காரர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதில் தவறில்லை. அது அவர்களின் உரிமை. அரசியலில் வந்து உங்கள் மொன்னையான அட்டைக்கத்திகளை சுழற்ற வேண்டாம். அதுவும் ரஜினிமாதிரி ஒரு காலிப்பயலுக்காக.

Saravana Kanth
சரிடா நாங்க சமூக விரோதியாவே இருந்துகிறோம். அடிமை காலத்தில் இருந்து உரிமைக்காக குரல் கொடுப்பவனுக்கு இதான் பெயர். ஆகையால் வருந்த ஏதுமில்லை…

ஆனால் ஆலயத்தில் கொலை செய்ய ஏவியவர்கள், ஆலயத்தில் குழந்தையை வன்புணர்வு செய்து கொண்டாடியவர்கள், விபத்தா சதியா என தெரியும் முன்னரே மாற்று மத சகோதரகளை கொன்றழித்த கொடூரர்கள், ஒரு மாநில அரசு மெஜாரிட்டி இழந்த பின்னரும் பொய்யான நீதி மூலம் காப்பாற்றி, அவர்களின் ஊழலில் மிரட்டி பங்கு பெறும் ஆட்சியாளர்கள் …. இவர்களுக்கு என்ன பெயர்… ?

ரஜினி ஒரு படத்தில் சொல்லுவது தான்… எச்சச்ச எச்சச்ச கெச்சச்ச கெச்சச்ச… புரியலையா… நானே யாருக்கோ சொம்பா இருக்கிறேன். எனக்கும் சொம்பா இருக்கீங்களேனு அர்த்தமாம்.

Abdul Hameed Sheik Mohamed

ரஞ்சித்திடமிருந்து ரஜினியை பிரிப்பது எப்படி?

ரஜினி நேற்று தூத்துக்குடி சென்று அளித்த மக்கள் விரோத பேட்டியை தொடர்ந்து காலாவை புறக்கணிக்க வேண்டும் என்று எழுதினேன். காலாவை தோற்கடிப்பதாக நினைத்து ரஞ்சிதை தோற்கடித்துவிடாதீர்கள் என்ற அழுகுரல்கள் ஒரு புறம். ரஜினியை தோற்கடித்து ரஞ்சித்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என்ற போர்தந்திர அறைகூவல் இன்னொரு புறம். தூத்துக்குடியில் மக்கள் செத்ததைவிட காலா தோற்றுவிடக்கூடாது என்ற பதட்டம் பலரிடமும் இருக்கிறது. தூத்துக்குடி பிரச்சினையில் காலாவை கொண்டுவரக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் காவிரிக்காக ஐ.பி.எல் லை துரத்தியதை ஆரவாரமாக ஆதரித்தவர்கள். ஐ.பி.எல் நடத்துகிறவர்களா காவிரியில் தண்ணீர்விடமாட்டேன் என்று சொன்னார்கள்? அது ஒரு போராட்டத்தின் மீதான கவன ஈர்ப்பு. ரஜினி ஒரு குடிமை சமூகத்தின் உணர்வுகளை மோசமாக அவமானப்படுத்தியிருக்கிறார். அவரை எப்படி எதிர்ப்பது? அவர் படத்தைதான் எதிர்க்க முடியும். ரஜினியினால் ரஞ்சித் ஆதாயம் அடைகிறார் எனில் ரஜினிக்கு ஏற்படும் இழப்புகளிலும் ரஞ்சித் பங்குபெறுவதுதான் நியாயமானது.

காலா ரஜினி படம் அல்ல , ரஞ்சித் படம் என்று சொல்பவர்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்களா அல்லது மற்றவர்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை. கபாலிக்கு முன்பும் ரஞ்சித் படம் எடுத்திருக்கிறார். அதில் அவர் எவ்வளவு போராடியிருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். கபாலி மற்றும் இப்போது காலாவிற்கு கிடைக்கும் இந்த அதீத முக்கியத்துவம் ரஜினியின் சந்தை மதிப்பிற்கேயன்றி ரஞ்சித் என்ற சிறந்த இயக்குனருக்கு அல்ல. ரஞ்சித் மட்டுமல்ல எந்த சிறந்த இயக்குனருமே தோற்கக்கூடாது என்று விரும்புகிறவன் நான். ஆனால் தமிழ்நாட்டில் இந்துத்துவா அரசியலை விதைக்கும் நாசகார சக்தியாக ரஜினி உருவெடுத்து வருகிறார். அவருடைய அகங்காரம் என்பது அவருடைய சினிமா வெற்றிகளிலிருந்தே பிறக்கிறது. அதைத்தான் பா.ஜ.க இப்போது தனது ஆயுதமாக பயன்படுத்துகிறது.

ரஜினியின் படத்தில் சில தலித்திய குறியீடுகளையும் வசனங்களையும் வைத்து வளர வேண்டிய அளவு தலித்தியம் பலவீனமானதா? கத்தி படத்தில் விஜய் பேசிய வசனத்தால் மார்க்சியம் வளர்ந்ததுபோலத்தான்.

ரஞ்சித் ரஜினியைவைத்து மெட்ராஸ்போன்ற ஒரு எதார்த்த சினிமாவை உருவாக்க முடியுமா? கபாலி போன்ற கேங்க்ஸ்டர் படங்களுக்கு எதற்கு இத்தனை தத்துவார்த்த அரசியல் முகமூடிகள்?

ரஜினியை பயன்படுத்தி ரஞ்சித் வளரலாம். அப்படி வளர்ந்தால் அது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் ரஜினி படங்கள் மூலமாக தலித்தியம் ஒரு போதும் வளராது. மாறாக ரஞ்சித் போன்றவர்கள் பா.ஜ.கவின் அடியாளான ரஜினியை ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒரு புரட்சிநாயகன் போல காட்டும் வரலாற்று தவறையே செய்கிறார்கள். ஒரு வேளை பல மாநிலங்களில் நடந்ததுபோல ஒரு இந்துத்துவா- தலித் கூட்டணிக்கு ரஞ்சித் பயன்படக்கூடும்.

ஜோடி குரூஸ் என்ற எழுத்தாளர் மோடியை ஆதரித்தற்காக அவரை கடுமையாக எதிர்த்தவர்கள்தான் நாம். ஆனால் இப்போது ரஜினியின் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க வேண்டும் என்றால் எப்படி? ஒரு ப்ராஜெக்டில் இருவர் வேலை செய்யும்போது ஒருவரை தோற்கடித்து ஒருவரை வெற்றிபெறச் செய்யும் உத்திதான் என்ன? பாதிப்படத்தில் எழுந்து வந்துவிடவேண்டுமா?

ரஞ்சித் ரஜினியை விமர்சிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ரஜினியை வைத்து படம் எடுப்பதற்காக நான் ரஞ்சித்தை விமர்சிக்கப்போவதும் இல்லை. அது அவரது தொழில். அவருக்கு கிடைத்த புதையல். ஆனால் ரஞ்சித் தலித்திய சிந்தனை உள்ளவர் என்பதற்காக ரஜினி என்ற இந்துத்துவா ஏஜெண்டிற்கு எதிராக யாரும் போராடக் கூடாது என்பது என்ன நியாயம்? ரஜினியை மன்னித்து ரஞ்சித்தை காப்பாற்ற வேண்டி அவசியம் ஒன்றுமில்லை.

ரஞ்சித்தை ஒரு அவதாரமாக கருதுபவர்கள் கோயில் கட்டி கும்பிடட்டும். என்னைப் பொறுத்தவரை அவர் தமிழில் உள்ள பல நல்ல இயக்குனர்களில் ஒரு நல்ல இயக்குனர். அவ்வளவுதான். இன்றைய காலகட்டத்த்தில் புரட்சிகர உணர்வுள்ள ஒரு இயக்குனர் ரஜினி போன்ற ஒரு அதிகாரவர்க்க- இந்துத்துவா ஏஜெண்டுடன் சேர்ந்து வேலை செய்கிறார் என்பது எனக்கு மிகுந்த வியப்பளிக்கிறது.

அம்பேத்கரைகூட விமர்சித்துவிடலாம். ரஞ்சித்தை தொட முடியாது போலும்.

சினிமா தமிழனின் அபின்

– மனுஷ்ய புத்திரன்

Vinoth Kumar
ஓர் இளைஞர், “யாரு நீங்க?” என்று கேட்கிறார்.

கடந்த அரைநூற்றாண்டில் ரஜினி எதிர்கொண்டிராத கேள்வி. நிலைகுலைந்துப் போய், “நான் ரஜினிகாந்த், சென்னையிலிருந்து வர்றேன்” என்று இருளடைந்த முகத்தோடு பிளாஸ்டிக் சிரிப்போடு ‘வணக்கம்’ வைக்கிறார்.

மார்பில் வாங்கிய தோட்டாவுக்கு நிகரானதுஅந்த ஒரு வார்த்தை…. ரஜினி மீள சில தினங்கள் ஆகும்

முதல் அடி தூத்துகுடி மக்களிடமிருந்து….

Mano Soundar Mano
மீத்தேன், அணு உலைக்கதிர்வீச்சு, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட்-தாமிரம் என ஒட்டுமொத்த விஷமும் கலந்த கலவைதான் ரஜினிகாந்த்!!!

Guna
நிழல் உலகில் நீலம் நிஜ உலகில் காவி – பரட்டை மக்கள் விரோதி.

வி.சி. வில்வம்
ஜெயலலிதா விஷக் கிருமிகளை அடக்கி வைத்திருந்தார் – ரஜினி
எனக்குத் தெரிந்து 2 விஷக் கிருமிகளை அவர் அடக்கி வைத்திருந்தார்.

1)ரஜினி
2) கமல்

Palanivel
சமூக விரோதிகளை ஜெயலலிதா அடக்கி வைத்திருந்தார்__ரசினி.
அவரு அதிமுக காரங்களை தான் சொல்றாரு.

Arun Bhagath
வேதாந்தா அனில் அகர்வாலுக்கும் , ரரஜினிகாந்துக்கும் சிந்தனையளவில் எந்த வேறுபாடும் இல்லை.
ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு செல்வது உயிர் நீத்த தியாகிகளுக்கு செய்யும் அவமரியாதை.

மனுஷ்ய புத்திரன்
ரஜினி அரசு எந்திரத்தின் அடியாள்
…….

தூத்துக்குடியில் ரஜினி சற்றுமுன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு அவர் ஒரு அரச பயங்கரவாதத்தின் கொள்கைப் பிரச்சாரகர் என்பதையும் மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் ஒரு சமூக விரோதி என்பதையும் மறுபடி நிரூபித்திருக்கிறார். காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதற்குப்பதில் ‘ காவல் துறை மேல் கல்லெறிந்தவர்களின் புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டு’ அந்த சமூக விரோதிகளை அடையாளம் காட்டவேண்டும் என்கிறார். போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவி விட்டார்கள் என்று எடப்பாடி- சங்கி கும்பல் எடுக்கும் வாந்தியை மறுபடி எடுக்கிறார். தமிழகத்தில் அதிகரித்துவிட்ட சமூகவிரோத சக்திகளை ஜெயலலிதாபோல இரும்புக்கரம்கொண்டு அடக்கவேண்டும் என்கிறார். துப்பாக்குச்சூட்டிற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகவேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கைப்பற்றிக் கேட்டால் ‘ எல்லாத்துக்கும் பதவி விலகச் சொன்னா என்ன அர்த்தம்? சும்மா அரசியல் பண்றாங்க’ என்கிறார். போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும்போது இனிமேல் அரசு ஸ்டரிக்டாக இருக்கவெண்டும் என்கிறார். இப்படியே போராடிக்கொண்டே இருந்தால் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கவலைப்படுகிறார்.

அரசு எந்திரத்தின் பச்சை ரத்தப்படுகொலையை நியாயப்படுத்தி அதற்கான பொறுப்பிலிருந்து ஆட்சியாளர்களை விடுவிப்பத்கற்காக அவர்களால் அனுப்பப்பட்ட அடியாள் ரஜினி. மக்களின் பிணங்ககளை தன்னுடையை பிரபல்யத்தினால் விற்றுக்கொண்டிருக்கிறார் ரஜினி. ரஜினியின் குரல் எடப்பாடியின் குரல். பா.ஜ.கவின் குரல். போலீசின் குரல்.

ரஜினி ஏன் முன்னிறுத்தப்படுகிறார் என்பதற்கு இனியும் பதில் தேடவேண்டியதில்லை. அடியாள்கள் உதவியின்றி அதிகாரம் சாத்தியமில்லை.

ரஜினி தமிழ்ச்சமூகத்தின் எதிர் அரசியலை சிதைக்க அனுப்பப்பட்டிருக்கும் நச்சுக்கிருமிகளில் தலையாய கிருமி.

Ra Sindhan
ரஜினியை யார் நீங்க என்று கேட்ட அந்த இளைஞர் ஒன்றை நமக்கு உணர்த்துகிறார். போராட்டக் களமே நமக்கு நாயகர்களை அறிமுகப்படுத்துகிறது. அப்போது நாம் பிம்பங்களை தூசாகத் தூக்கியெறிவோம்.

Manikandan Rajendiran
30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், கோடிகளில் சம்பளம் பெறுகிறோம், அதிக ரசிகர் மன்றங்களை கொண்டிருக்கிறோம், உலகம் முழுவதும் நமக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள், மீடியாக்கள் நம்மையே என்னேரமும் சுற்றி கொண்டிருக்கும், புதிய அரசியல் கட்சியை தொடங்க இருக்கிறோம், நமக்கு தான் 150 தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாக சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன என்ற ஆயிரமாயிரம் எண்ணங்களோடு ஒருவர் பாதிக்கபட்ட மக்கள் முன்னால் நின்றால்…

யார் நீங்க? என்ற ஒற்றை கேள்வியால் செருப்பால் அடித்து அவரின் எல்லா எண்ணங்களையும் கனவுகளையும் சிதைத்து அனுப்பி வைத்துள்ளனர்..
#WAT A MOMENT

Murugeswari Madurai
இனிமேல் ….
ரஜினிகாந்த் என்ற நடிகனின் மூலமாக சமூக புரட்சி , தலித்திய புரட்சி பேச நினைக்கும் சினிமா இயக்குனர் எவரானாலும் அவர்கள் இயக்கும் திரைப்படத்தை அறிவுள்ள மக்கள் புறக்கணிக்கட்டும் .

அதை ” காலா ” – வில் இருந்து தொடங்குவோம் .

வேற நடிகனே கிடைக்கலையா உன் சமூவப்புரட்சிக் கதையில் நடிக்க ?

காலா ரஜினியின் கடைசிப்படமாக இருக்க மானமுள்ள மக்கள் முன்வரவேண்டும் .

Prabhu Rajendiran
பாப்பானுக்கு பல்லுபடாம வேலைபாத்து விட்டா தேசபக்தன் !
மன்னின் மைந்தர்களாம் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைக்காக போராடினால் சமூகவிரோதி , தேசதுரோகி!
Proud to be தேசதுரோகி!

Samsu Deen Heera
ஒரு ஆர்.எஸ்.எஸ் பார்ப்பானுக்கு இருக்கக்கூடிய அதே அகம்பாவமும் திமிரும்

வெளிப்படுத்துகிற ரஜினியின் உடல்மொழி தான் யாரின் கையாள் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது…

மக்கள் போராடிக்கொண்டே இருந்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடுமாம்.

ஆமாம் ரஜினி அவர்களே… ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்துறந்து போராடிய சுதந்திரப்போரில், காட்டிக்கொடுத்தும் கூட்டிக்கொடுத்தும் வெள்ளையனின் காலைநக்கிக் குடித்த கும்பலின் அடிமையல்லவா நீங்கள். உங்களுக்கு போராட்டங்களின் மான்புகள் குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

R Muthu Kumar
சென்னை விமான நிலையத்தில் ரஜினி முகத்தில் வெடித்தது தூத்துக்குடியில் பற்ற வைக்கப்பட்ட ‘யார் நீங்க?’ ப்ராண்ட் பட்டாசுதானே தவிர வேறல்ல! #கற்றவைபற்றவை

Aazhi Senthil Nathan
“காலா, உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்”

எவ்வளவு திமிர் ரஜினிக்கு? தூத்துக்குடியிலிருந்து திரும்பிவந்தவரின் விமானநிலையப் பேட்டியைப் பார்த்தீர்களா? அவரது உடல்மொழி! செய்தியாளரை நோக்கி எப்படி ஒரு ஆணவம்!

போராடினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகுமா?

முட்டாளே, தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடுமோ என்கிற அச்சத்தால்தானே இங்கே போராடுகிறோம்.
உன்னை வாழவைத்தது தமிழ்நாடு. அதை சாகவைக்க வந்திருக்கிறாயா நன்றிகெட்டவனே?

இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது தமிழ்ச்சமூகத்தின் விரோதியான ரஜினிக்கு?
நாம் தான் கொடுத்தோம்.
கோடம்பாக்கம் கொடுத்தது, மக்களே, கோடம்பாக்கம் கொடுத்தது. எத்தனை வருசம் பாலாபிஷேகம் பண்ணீங்க. உங்களுக்கு ரத்த அபிஷேகம் செய்ய வந்துகிட்டிருக்காரு இந்த ஆளு.

இருபத்தைந்து ஆண்டு காலமாக ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா வருவாரா மாட்டாரா வருவாரா மாட்டாரா, எப்போ கட்சித் தொடங்குவார், எப்படித் தொடங்குவார் என்று ரன்னிங் கமென்டரி கொடுத்துக்கொண்டு அலம்பல் பண்ணிக்கொண்டிருந்த ஊடகங்களை நோக்கி பாயாமல் என்ன செய்வார்? எத்தனை நூறு கவர்ஸ்டோரிகள், எத்தனை ஆயிரம் மணி நேரம் விவாதங்கள்…

ஒளிவுமறைவற்ற பாசிஸ்ட்டான ரஜினி பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு. தமிழ்நாட்டில் மீண்டும் சர்வவியாபகமாகப் பரவிக்கொண்டிருக்கும் பார்ப்பனீயத்தின் முதல் தளபதி. தமிழ்நாட்டை காலனிநாடாக ஆக்கி இதை கருவறுக்க விரும்பும் மோடி கும்பலின் ரத்த ஏஜென்ட். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யத் தயங்காத தமிழர்களின் நெ.1 விரோதி.

ரஜினியை தலைதூக்கவிடாமல் அடிக்கவேண்டியது நம் அனைவரின் கடமை.

“காலா,
உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்,
என்றன் காலருகே வாடா,
சற்றே உனை மிதிக்கிறேன்”
என்கிற வார்த்தைகள் இந்த விஷக்கிருமிக்குத்தான் தகும்.

Suba.Veerapandian
“அவ்வண்ணமே கோரும் …….” – #ரஜினிகாந்த்!
————————————————————————

விஷக்கிருமி என்ற சொல் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பாவலாகப் பேசப்பட்ட ஒரு சொல். 1967 ஆம் ஆண்டு திமுக பதவிக்கு வந்ததும், முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலம், “தமிழ்நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டன” என்றார். அது குறித்த கடுமையான விமர்சனங்கள் பல அன்று வெளிவந்தன.

பிறகு பலரும் அந்தச் சொல்லை அல்லது அப்பொருள்படும் சொல்லை அடிக்கடி கையாண்டனர். அண்மையில் சல்லிக்கட்டுப் போராட்டத்திலும், இப்போது தூத்துக்குடியிலும் அந்தச் சொல் பயன்படுத்தப் பட்டது. இப்போது மீண்டும் தூத்துக்குடிப் போராட்டத்தில் விஷமிகள் பரவி விட்டனர் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி ஆகியோர் கூறினர். இப்போது அதே சொல்லையும், கருத்தையும் ஊடக நேர்காணலில் ரஜினி பயன்படுத்தியுள்ளார்,

கொதித்துக் கொந்தளித்து எழுந்த மக்களின் போராட்டத்தை விஷமிகள் நடத்திய போராட்டம் என்று சொல்வது மக்களைக் கொச்சைப்படுத்துவதாகாதா? 99 நாள்கள் அமைதியாக மக்கள் நடத்திய போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவே இல்லை என்கிறபோது, மக்களிடம் ஒரு கோபம் குடிகொள்ளாதா? அந்தக் கோபம் சற்றுச் சூடேறி வன்முறையில் போய் முடிந்திருக்கிறது. அந்த வன்முறையைப் பற்றி மட்டும் கவலைப்படும் புதிய தேசபக்தர் ரஜினி, அந்த வன்முறையைத் தூண்டிய வன்முறை பற்றி அறிவாரா? மக்களின் உடல்நலம், உயிர்ப்பாதுகாப்பு என எது குறித்தும் கவலை கொள்ளாமல், தனியார் ஆலைக்கு அரசுகள் அளித்த ஆதரவுக்கு என்ன பெயர்? அது வன்முறையில்லையா?

தன் திரைப்படங்களில் ‘வேங்கை மகன் ஒத்தையில நின்னு’ எத்தனை வன்முறைகளை அரங்கேற்றியிருக்கிறார்! அதுதான் வீரம் என்று எத்தனை படங்களில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அவையெல்லாம் வன்முறைக்கான தூண்டுதல்தானே! ஆனால் அவற்றையெல்லாம் நினைப்பில் வைத்தன்று, தங்கள் வாழ்வுக்காக, உயிருக்காகப் போராடிய மக்களிடையே விஷக்கிருமிகளை புகுந்துவிட்டனர் என்பதற்கு என்ன ஆதாரம்? அரசு சொல்வதை அப்படியே திரும்பிச் சொல்வதற்கு ஒருவர் தூத்துக்குடி வரை பயணம் செய்ய வேண்டியதில்லை.எடப்பாடியின் அறிக்கைக்கும், பொன். ராதாகிருஷ்ணன் நேர்காணலுக்கும் கீழே, “அவ்வண்ணமே கோரும்” என்று எழுதிக் கையெழுத்துப் போட்டிருக்கலாம் ரஜினி!

ஆலையை மீண்டும் திறக்க நீதிமன்றம் சென்றால், இனி அவர்கள் மனுஷங்களே இல்லை என்று கூறும் ரஜினிகாந்த்தான், எதுவாக இருந்தாலும் கோர்ட்டுக்குத்தான் போகணும் என்கிறார். என்ன முரண் இது! விஷமிகள் நடத்திய வன்முறை எதிர்ப்புப் போராட்டம்தானே, அதற்காக நாங்கள் ஏன் எங்கள் ஆலையை மூட வேண்டும் என்று அவர்கள் நீதிமன்றம் சென்று கேட்கமாட்டார்களா? மக்கள் போராட்டத்தை விஷமிகள் நடத்திய போராட்டம் என்று திரித்துச் சொல்வதை விட, ஆலை முதலாளிகளுக்கு வேறு எப்படி உதவ முடியும்?

கூட்டத்தை நோக்கிக் கூட இல்லை, குறிபார்த்துச் சுட்டிருக்கின்றனர் காவல்துறையினர். இனிவரும் காலங்களில் எவரும் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடாது என்னும் ஆகப் பெரிய மிரட்டல்தானே இது! அதனைக் கண்டித்து விட்டல்லவா காவல்துறையினரைத் தாக்கியவர்களைக் கண்டித்திருக்க வேண்டும்?

ஒரு நபர் ஆணையம் மீது நம்பிக்கையில்லை, உளவுத்துறையின் பிழைதான் இது என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு, ஒட்டுமொத்தமாய் மக்கள் போராட்டத்தை விஷமிகளின் வன்முறைப் போராட்டம் என்று சொல்லிவிட்டார் ரஜினிகாந்த்!

ஜெயலலிதாவின் இரும்புக்கரத்தைப் பாராட்டும் இவர் போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் இரும்புக்கரங்கள் மட்டும்தான் மிஞ்சும். மக்கள் மிஞ்ச மாட்டார்கள்! கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை போதாது என்பது போலல்லவா உள்ளது அவருடைய நேர்காணல்!

பூனைக்குட்டி வெளியில் வந்தது ஒருவிதத்தில் நல்லதுதான். ரஜினியின் அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்பே தோல்வியடைந்துள்ளது!

Arul Narayana
வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்னு சொல்லிட்டு…. (திரைப்படத்தில்)
100 நாள் போராட்டத்தை
துப்பாக்கி சூடு நடத்தி முடித்துவைத்து….
பொதுமக்கள்… அடிபட்டு…
மருத்துவமனையில் மருத்துவம் எடுக்க துவங்கி…
8 நாள் கழித்து எட்டிப்பார்க்கும்…
ரஜினி…
Just… another IMPOTENT politician…

செ. விக்னேசு
உங்களுக்கு என்ன தகுதி இருக்கிது ரஜினி……?
இயல்பிலே நடிகனான உங்களின் இந்த வசனமும் நிச்சயம் உங்களுடையது இல்லை, ஆடிட்டர் குருமூர்த்தியினுடையதாக தான் இருக்கும்.

போராட்டத்திற்க்கு தலைமை ஏற்றவர்களை சமூக விரோதி என்கிறீர்கள், காக்கி சட்டைகாரர்களை கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு சித்தரிக்குறீர்கள், ஜல்லிகட்டு போராட்டத்தை இணைத்து பேசுகிறீர்கள் (அப் போராட்டத்தில் யார் வன்முறையை தூண்டினார்கள், யார் தீவைத்தார்கள் என நாடறியும் ) தற்போதைய ஸ்டெர்லைட் போராட்டத்தில் யார் சமூக விரோதிகள் என்று மக்கள் அறிவர். 100 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள் அப்பொழுது வாய் திறக்கவில்லை, 13 பேரை காட்டுமிராண்டித்தனமாக சுட்டு படுகொலை செய்துள்ளார்கள் அப்போதெல்லாம் வாய்திறக்காத நீங்கள் இப்போது காலா பட விளம்பரத்திற்கு செல்வதை மறுத்துவிட்டு நான் தூத்துகுடிக்கு வருவேன் என வந்து பொய் பரப்புறை செய்து கொண்டு இருக்கிறீர்கள். காவிரி சிக்கல் பற்றி எறிந்த பொழுது நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்ல கூடாது என வாய் பூட்டு போட்டவரல்லவா நீங்கள். உங்கள் உபதேசம் எங்களுக்கு தேவை இல்லை, அதை சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை ரஜினி.

Arul Ezhilan
ரஜினியை விட ஆபத்தானவர் கமல். கமலை விட ஆபத்தானவர் ரஜினி. ஒருவர் தூத்துக்குடி செல்வதற்கு முன்பே “இப்படி எல்லாம் நடந்திடும்ணுதான் நான் போகல்ல” என்பார். ஒருவர் போய் விட்டு வந்து “போராடிட்டே இருந்தா தமிழ்நாடு சுடுகாடு ஆயிடாதாணு “ கேட்பார்….. இந்த இருவரிடமும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

Anbe selva
போராடும் மக்களை சமூக விரோதிகள்னு சொன்ன நாயே நீ யாருடா?..

மருது சகோதரர்களில் இருந்து சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை கட்டபொம்மன் வரைக்கும் போராடவில்லை என்றால் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை ஏதடா?..

காந்தி நேதாஜி போன்ற தலைவர்களை போராடவில்லை என்றால் இந்திய சுதந்திரம் ஏதடா நாயே ?..

8 நாடார் பெண்கள் போராடவில்லை என்றால் முலை வரிக்கும் திரைசீலை கொடுமைக்கும் விடிவு ஏதடா நாயே ?..

முக்குலத்து மக்கள் பெருங்காமநல்லூரில் போராடவில்லை என்றால் குற்றப்பரம்பரை சட்டத்தில் இருந்து விடிவு ஏதடா நாயே ?..

வன்னிய மக்கள் போராடவில்லை என்று சொன்னால் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு ஏதடா நாயே..

எண்ணற்ற பெருந்தலைவர்கள் கோவில் நுழைவுக்காக போராடவில்லை என்று சொன்னால் இன்றைக்கும் நீயும் நானும் தெருவிலடா நாயே?..

அம்பேதகர் போராடவில்லை என்று சொன்னால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவு ஏதடா நாயே?.

பெரியாரும் எண்ணற்ற பெரியோர்களும் இடஒதுக்கீட்டிற்காக போராடவில்லை என்று சொன்னால் இங்கே சமூக விடுதலை ஏதடா நாயே..

18ம் நூற்றாண்டில் அமெரிக்க சமூக விரோதிகள் போராடவில்லை என்று சொன்னால் இன்னைக்கும் 8 மணி நேர வேலை முடிந்து நீயும் நானும் வீட்டுக்கு போகமுடியாதடா நாயே..

போராட்டம்தான் உன்னையும் என்னையும் விடுவித்தது. வரலாற்றில் உனக்காகவும் எனக்காகவும் ரத்தம் சிந்திய போராளிகளின் தியாகத்தில் வயிறு வளர்த்திட்டு, வரலாறு முழுவதும் உன்னையும் என்னையும் ஒடுக்குபவனின் பக்கம் ஒதுங்கும் பொருக்கி நாயே.. புரிந்துகொள்ளடா..

நான்தாம்பா ரஜினிகாந்த்! | துரை.சண்முகம்

நான்தாம்பா ரஜினிகாந்த்!

 

குடும்ப வறுமையில்
போராடி
கொஞ்ச வயிறு சாப்பிட்டு
நிறைய மதிப்பெண் எடுத்தும்
நீட்டால்
அனிதா கொலையான போது
மவுனம்.. மவுனம்..
இமயம் தொடும் மவுனம்.

அரியலூர் நந்தினியும்
காஷ்மீர் ஆசிபாவும்
குதறப்பட்ட போது
சமூக விரோதிகளை நோக்கி
புடைக்கவில்லை நரம்பு!

தெருவுக்கு தெரு
டாஸ்மாக்கால்
தமிழினமே
ஆசீட் வீசி
அழிக்கப்படும் போது,

கடையை
மூடச்சொன்ன மக்களை
தடிகள் குதறிய போது
காது அறுபட
பெண்களின் கன்னம்
அறையப்பட்ட போது
பதறாமல்.. துடிக்காமல்
தடித்திருந்தது தோல்.

மாடு புனிதம் என்று
மனிதன் வெட்டப்பட்ட போது,
நீதிமன்றம் அணுகியும்
காவிரியை தடுத்தபோது
விவசாயம், சிறுதொழில்
சில்லறை வணிகம்
அனைத்தையும் அழித்து
நாட்டையே சுடுகாடாக்கும் போது,
வாய் எனும்
ஒரு உறுப்பே
வந்ததில்லை என் நினைவுக்கு.

துப்பாக்கி சூட்டை
நீங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும்
ஒரு கேள்வியின் சூட்டை கூட
என்னால் தாங்க முடியாது
செத்தால் கூட
வராத கோபம்
போராடினால் வருகிறது
இதை விட
நான் யார் என்பதை
எப்படிச் சொல்வது?
நான்தாம்பா ரஜினிகாந்த்!

  •  துரை. சண்முகம்

 

வேல்முருகன் கைது | வாழ்வுரிமைக்காகப் போராடுவது தேசத் துரோகமா ?

பத்திரிகைச் செய்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் மாதம் நெய்வேலியில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் பேசியதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் வேல்முருகன் தேசத் துரோகக் குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜனநாயக விரோதமான இந்தக் கைதை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அவர் மீதும் மற்றும் பலர் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று அவரை உடனே விடுதலை செய்யுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

நெய்வேலியில் நடந்த முற்றுகைப் போராட்டம் தமிழகத்தின் பறிக்கப்படும் காவிரி உரிமையை மீட்பதற்கான மாநில உரிமைப் போராட்டமாகும். இதில் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக உரிமையை அடகு வைக்கும் செயலாகும். வேல்முருகன் கைது செய்யப்பட்டிருப்பது, தனித்ததொரு நடவடிக்கையல்ல. தமிழகத்தில் வாழ்வுரிமைக்காகவும், மாநில உரிமைக்காகவும், இந்து மதவெறி பாசிசத்துக்கு எதிராகவும் நடக்கும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியேயாகும்.

தமிழகத்தில் பல்வேறு மக்கள் விரோத நாசகாரத் திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து திணித்து வருகிறது. அவற்றை ஆளும் அ.தி.மு.க. அரசு முழுவதும் அடிபணிந்து நடைமுறைப்படுத்துகிறது. காவிரி, மீத்தேன் திட்டம், ஸ்டெர்லைட் விரிவாக்கம் என ஏராளமான மக்கள் போராட்டங்கள் எழுந்து வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்காக தமிழகத்தையே சுடுகாடாக்கும் இத்தகைய திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் ஒன்றிணையாமல் தடுப்பதற்கும் போராட்டங்களில் முன்னின்று ஆதரித்து வழிநடத்துகின்ற இயக்கங்களையும் முன்னணியாளர்களையும் மிரட்டி, முடக்க முயலும் மோடி அரசின் பாசிச அடக்குமுறை நடவடிக்கைகள்தான் இத்தகைய கைதுகள்.

எனவே தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக இயக்கங்களும் ஒருங்கிணைந்து மத்திய, மாநில அரசுகளின் பாசிச ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட அறைகூவி அழைக்கிறோம்.

தங்கள்
வழக்கறிஞர்.சி.ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்.

ரஜினி : எச்ச ராஜாவின் வெர்சன் 2 | துளைத்தெடுக்கிறது டிவிட்டர் !

Manogaran‏ @Manogar06618265
ஏண்டா ரஜினி பொறுக்கி ______ கலவரத்துக்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்றால் ஏண்டா அவங்களை போய் பார்க்க போன . இறந்த காவலர்களையும் காயம் அடைந்த காவலர்கலையும் போய் பார்த்துட்டு நிவாரண நிதிய கொடுக்க வேண்டியது தானே வேங்கை ____ மவனே #BAN காலா திரைப்படம்…….

கோபு‏ @SirkaliGobu
Packiarajan Sethuramalingam போராட்டத்தை வெறுக்கிற ஒருவன் முதலாளித்துவ அடிவருடியாகவும், சுரண்டி தின்று வயிறுவளர்ப்பவனாகவும், யாரோ ஒருவரை ஏமாற்றி வருமானத்திற்கு அதிகமாக பணம் பண்ணுபவனாகவும், சுயநல கிருமியாகவும் தான் இருந்திடல் வேண்டும். ரஜினி இதில் எல்லாவற்றிலும் பொருந்துகிறார்!

kadupethurarmylord‏ @kmlofficialt
முதல் முறையாக ரஜினி ரசிகர்களை பாராட்டுகிறேன் தூத்துக்குடி மக்களை சமூகவிரோதிகள் என்று கொச்சைப்படுத்திய நடிகர் ரஜினிக்காந்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு. காலா, 2.0 படங்களை புறக்கணிக்க தூத்துக்குடி மாவட்ட ரஜினி ரசிகர்கள் முடிவு

இராவணன்‏ @iRaavanaa
89க்கு முன்னால ஜெயலலிதா ஒரு பாஸிசப்பேய்னு சொன்னா நம்ப முடியுமா நம்மளால? ரஜினி வெள்ளந்தியெல்லாம் கிடையாது. காரியக்கிறுக்கன். வெறும் சினிமா புகழ் மட்டுமே மீடியாவை மயிர் மாத்திரமாக மதித்து ஏய் வேற கேள்வி இருக்கானு கேக்க வெக்குது அவன. அதிகாரம் கிடைச்சா?

Lakshmanan.P‏ @laksh_kgm
ரஜினி சொல்லித்தான் துப்பாக்கிச் சூட்டின் நியாய அநியாயத்தையும், கள நிலவரத்தையும், அரசியலையும் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் மக்கள் இல்லை.

Veera‏ @Veera_Vetri00
2 நிமிஷம் நின்னு கேள்விக்கு பதில் சொல்ல பொறுமையும் இல்லை அதற்கான அறிவும் இல்லை.. கேள்விக்கு பதில் இல்லைனா எச் ராஜா நிருபர்களை பார்த்து Anti Indian னு சொல்லுவாரு கேள்விக்கு பதில் இல்லைனா ரஜினிகாந்த் மக்களை பார்த்து Anti Social னு சொல்லுவாரு.. ரஜினி பிஜேபி Voice…

டெங்கு கொசு 💘 💗‏ @thalafantaqic
போராட்டங்கள் தொடர்ந்தால்…! தமிழகம் சுடுகாடாகிவிடும்..? -ரஜினி I feel there’s a strong msg in his statement. துப்பாக்கிகள் தொடர்ந்து வெடிக்கும் என்கிறாரோ…!

RAJA‏ @franccruzer
முதல்ல eps ops யும் இப்டிதா பிஜேபி சப்போர்ட் இல்லை னு சொன்னாங்க…அப்புறம் கேட்டா மாநில மக்களின் நலனுக்காக மத்திய அரசை ஆதரிக்கிறேன்னு சொன்னாங்க…இப்போ மொத்தமா அடிமையாட்டாங்க…ரஜினி யோட பேட்டி இன்னைக்கு பாக்கும்போது பிஜேபி தெரியுது…ரஜினி யோட உண்மை முகம் சீக்கிரம் வெளி வரும்…

நாகசோதி நாகமணி‏ @nagajothin
இது ரஜினி படம் அல்ல இயக்குனர் ரஞ்சித் படம் என்று நாளை முதல் இங்கே காலாவுக்கு வியாபார தந்திரங்கள் ஓடும்~ #நான்தான்பாரஜினிகாந்த்

Gold Pandiyan‏ @pandiyan_gold
@rajinikanth திருப்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்றானே போலீஸ் அப்போ எங்கே போயிருந்தீர்கள் ரஜினி?

🍃 🍁 Rajesh 🍁 🍃‏ @kaadhale_aadhal
Frustrated #Rajini expressed his anger in front of the Media. Look at the slang and attitude of @rajinikanth . This shows how immature behaviour & He will be not a good politician for sure. பதட்டமடைந்த ரஜினி மீடியா முன்று கோபத்தை வெளிப்படுத்துகிறார். அப்போது அவர் வெளிப்படுத்திய அணுகுமுறை, பேசும் முறையை பாருங்கள்! இதுவே அவருக்கு பொதுவெளியில் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ளத் தெரியவில்லை என்பதையும், அவர் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருக்க முடியாது என்பதையும் நிச்சயமாக காட்டுகிறது. #ஆமாநீங்கயாரு #ஆமாயார்நீங்க #நான்தான்பாரஜினிகாந்த்

MUGILAN CHANDRAKUMAR
.@rajinikanth sir, it’s ok to shut up even when someone thrusts the Mike on your face. How dare you insult an agitation of the people merely because you had to say something ரஜினி சார், யாராவது உங்களை மைக்குடன் புண்படுத்தும் கேள்வி கேட்டால் அமைதியாக இருக்கலாம். ஆனால் ஏதாவது சொல்லி சமாளிக்கவேண்டும் என்பதற்காக போராடும் மக்களை அவமதிப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.

Rajesh Narayanan‏ @Rajesh_Joker
ரஜினி திரையில் மட்டும் 2.0 வாக நடிக்கவில்லை நிஜ வாழ்விலும் எச்ச ராஜாவின் 2.0 வாக நடித்து கொண்டு இருக்கிறார்…

வேதா பிரபாகர்‏ @vedaprabahar
ரஜினி: எப்போதும் போராட்டம் போராட்டம்னு போனா தமிழ்நாடு உருப்படாது…. தமிழன்:தமிழ்நாட்டை நாங்க பாத்துக்குறோம் சார்… நீங்க முடிஞ்சா காலாவை ஹிட் ஆக்குங்க #நான்தான்பாரஜினிகாந்த்

Rajesh Narayanan‏ @Rajesh_Joker
பல வருடங்களுக்கு முன் ரஜினி சப்பாணி கிட்ட வாங்குன அரைக்கு அப்புறம் இப்போ தான் அதே போல ஒரு அரை வாங்கியிருக்கார்…

சத்தியமேவெல்லும்.போஸ்செல்வா.BBA.BA.LLB‏ @BoseSelva8
1990களில் சில குண்டு வெடித்தற்க்கே தமிழ்நாட்டில் வெடிக்குண்டு கலாச்சாரம் பெருகி விட்டதுனு பேசி அம்மாவிடம் அடிவாங்கிய ரஜினி, அதற்கு பிறகு நாடு முழுவதும் கலவரத்தை உண்டுபண்ணின பிஜேபியை பற்றி ஒரு வார்த்தை பேசல தமிழ்நாட்டை எப்போதுமே கேவலப்படுத்த முயலும் விஷம் #நான்தான்பாரஜினிகாந்த்

Nanthivarman 🌞‏ @Nanthivarman16
”You all are anti-Indians” – எச். ராஜா “all you elis and porukkis” – சு.சுவாமி “தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள்” – பொன்னார் “தூத்துக்குடி வன்முறையில் சமூக விரோதிகள்” – ரஜினி மாவு அதே தான். இட்லியா, ”தோசையா”, ஊத்தப்பமா, இல்லை உப்புமாவா மாத்தறதாங்கறது

Shrîrâm‏ @shriRaM015
சமூகவிரோதிகள் புகுந்துவிட்ட்டார்கள் -ரஜினி !! ஒங்களுக்கு எப்படி தெரியும் ? அப்படித்தான்யா எழுதிருக்கு ! #நான்தான்பாரஜினிகாந்த்

Abdul Halik‏ @nahalik88
ரஜினி சார் வேகமா எங்க போறிங்க? என்னைய ஒருத்தன் யார்னு கேட்டுட்டான்… மேக்கப் போட்டு வந்து நான் தான் ரஜினினு காட்ட போறேன். #நான்தான்பாரஜினிகாந்த்

Kishore Ravi‏ @kishore59664745
#நான்தான்பாரஜினிகாந்த் விஜயகாந்த் அரசியலுக்கு வந்து பின் எடுத்த காமெடியன் என்ற பெயரை ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே எடுத்துக் கொண்டிருக்கிறார்!!!

நான் தமிழன், திராவிடன் இல்லை.‏ @TamilNaduMan
ரஜினி தொண்டர்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கு, வாழ வேண்டிய வயதில் ரஜினி லூசை நம்பி cutout பால் அபிஷேகம் என்று வாழ்க்கையை இழந்தீர்கள், இனி அரசியலில் இவன் கேவலமாக தோற்கும் போது, ரசிகனாய் இருந்த போது இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பையும் இழந்து,வாழ்க்கை வெறுத்து சீரழிய போகிறீர்கள்.

மீனம்மா‏ @meenammakayal
ஏ வேற ஏதாவது கேள்வி இருக்கா?..ன்னு ரஜினி கேக்கற தொணி.. இதுவரை உங்க கேள்விக்கு எல்லாம் பயங்கரமா பதில் சொல்லி உங்க வாய அடைச்சுட்டேன்டான்ற மாதிரியே இருக்குது.. யோவ் இதெல்லாம் நீ தெரிஞ்சுதான் பண்றியா.. 🙁

M.தாமோதரன்‏ @thamms777
யார் நீ என கேட்டதால் முகம் வெளிறிய ரஜினி பதட்டத்தில் பத்திரிகையாளர்களை ஏய் என விளித்த ரஜினி கூட்டத்தில் இப்படி கேள்வி கேட்டதுக்கே உங்களுக்கு இவளோ கோவம் வருதுன்னா எம் மக்கள் 13பேர் கொல்லப்பட்டார்களே அப்ப அவங்களுக்கு எப்படி கோவம் வரும் #நான்தான்பாரஜினிகாந்த்

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : வினவு செய்தியாளரின் நேரடி அனுபவம் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்:
வினவு செய்தியாளர்களின் நேரடி அனுபவங்கள் !

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ஆம் தேதி நடந்த போராட்டம் காலை எட்டு மணிக்கு முத்து நகரில் உள்ள பனிமாதா ஆலயத்தில் தொடங்கியது. அதே நேரத்தில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலவகத்தை நோக்கி மக்கள் அணிதிரள ஆரம்பித்தனர். கிராமங்களில் இருந்து நிறைய பேர் வருவார்கள் என அவர்களை அங்கேயே முடக்கும் வேலையை போலீசு செய்ய ஆரம்பித்திருந்தது.

பனியமாதா ஆலயத்தில் உள்ள திடலில், ஆரம்பத்தில் சுமார் இருநூறு பேர் மட்டுமே கூடியிருந்த நிலையில் சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரள ஆரம்பித்தனர்.  மாதா கோவில் எதிரில் இருந்த சாலையில் மக்கள் கூட்டம் கூடியதால் போராட்டத்தின் முன்னணியாளர்கள், மக்களை ஒழுங்கமைத்து வாகன ஓட்டிகளுக்கு வழிவிட்டுக் கொண்டிருந்தனர். கூட்டம் கூடியதும் அங்கேயே மத்திய மாநில அரசுக்கு எதிராக தங்களது கண்டன முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். அப்பொழுதே அங்கு இருந்த போலீசின் ஒருபிரிவினர் வரிசையாக வெளியேறத் துவங்கினார்கள்.

மக்கள் நான்கு திசைகளிலிருந்தும் மாதாகோவில் திடலுக்கு வந்து கொண்டிருந்தனர். அடுத்த சில மணித்துளிகளில் பேரணி துவங்கியது. கிட்டத்தட்ட ஐநூறு மீட்டர் தூரம் பேரணி சென்ற நிலையில் அந்த பேரணியை முடக்கும் நோக்கில் போலீசின் வாகனங்களைக் கொண்டு பேரணி சென்ற தெருக்களில் மறித்து நிறுத்தினார்கள். அதனையும் பொருட்படுத்தாமல் பேரணியை மக்கள் தொடர்ந்தனர். ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் போலீசு இருந்தது. பேரணியின் கடைசியில் இரண்டே இரண்டு ஜீப்புகளில் போலீசு வந்தது.

பேரணி சென்ற தேவர்புரம், ஆசிரியர் காலனி, வ.உ.சி. கல்லூரி ஆகிய தெருக்கள் எங்கும் வீடுகள் பூட்டிக் கிடந்தன. கடைவீதிகள் வெறிச்சோடி போயிருந்தன. ஒட்டு மொத்த தூத்துக்குடியும் ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது. மண்டையை பிளக்கும் உச்சி வெயிலில் பேரணி சென்றதால் தண்ணீர் கேட்டு குடிக்கக்கூட வீடுகள் இல்லை. கடையும் இல்லை. வெயிலின் தாக்கத்தில் தங்களது சக்தியை பேரணியின் பாதியிலேயே மக்கள் இழந்த நிலையில் போலீசு சொல்வது போல, இந்த மக்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பே இல்லை. உடல்ரீதியான சக்தியை இழந்த பிறகும், அம்மக்களின் போராட்ட உணர்வே அவர்களை மாவட்ட ஆட்சியர் அலவலகம் வரை உந்தித் தள்ளியது என்றால் அது மிகையில்லை.

பேரணி, அம்பேத்கர் சிலையை தாண்டியதும் ஒரு சில போலீசார் பேரணிக்குள் ஊடுருவினர். அவர்களை மக்கள் அப்புறப்படுத்தினர். சிலர் ஆவேசத்தில் போலீசை  எதிர்க்க ஒடினாலும் அவர்களை தடுத்து நிறுத்தி அது நம் நோக்கமல்ல என்று விளக்கி புரிய வைத்தனர் மக்கள். சிறிது நேரம் கழித்து பேரணிக்குள் மாட்டை அவிழ்த்து விட்டது போலீசு. அந்த எதிர்பாராத நிகழ்வில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனை எல்லாம் சகித்துக் கொண்டு மூணாம் மைல் பாலம் அருகே சென்ற மக்கள் மீது திடீரென்று கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியது போலீசு. அதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீசை விரட்டினார்கள். அநேகமாக இந்த காட்சியை மட்டும்தான் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் காட்டினார்கள். அமைதியாக போய்க் கொண்டிருந்த பேரணி மீது போலீசார் திடீரென்று கண்ணீர்ப் புகை குண்டு வீசியதே அந்த அமைதி குலைந்து போனதற்குக் காரணம். அதன் பிறகே மக்கள் பாலத்தின் கீழ் இருந்த போலீசு தடுப்பரண்கள் மற்றும் சில வாகனங்களைக் கொளுத்தினர்.

அதற்குள் நிறையப் பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்று விட்டார்கள். மீதி பேர் மூணாம் மைல் பாலம் அருகே புகை மண்டலமாக மாறிப்போன அந்த இடத்தை கடக்க முடியால் பின்தங்கினர். கலவரம் செய்ய நினைத்திருந்தால் அங்கேயே மக்கள் கலைந்து சென்று செல்லுமிடங்களில் எல்லாம் தீ வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களது நோக்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சென்று அமர்ந்து போராட்டம் நடத்துவதுதான். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நுழையும் போதே அங்கே போலீசார் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். முன்னே சென்ற மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது போலீசு. ஆத்திரமடைந்த மக்கள் அங்கு நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இவையெல்லாம் தற்காப்பின் பொருட்டும், அமைதியான பேரணியின் மீது போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் நடந்தவை.

இதன் பிறகே போலீசு கும்பல், காக்கைக் குருவிகளை சுடுவதைப் போன்று மக்களை சுட்டுத் தள்ளிய அந்த படுகொலை நிகழ்ந்தது.  சம்பவ இடத்திலேயே மூன்று பேர் இறந்தனர். மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடுவதுமாக இருந்தனர். துப்பாக்கி சூட்டில் பலியான, காயமடைந்தவர்களை மீட்பதா? இல்லை, துப்பாக்கி சூட்டில் இருந்து தங்களை காத்துக் கொள்வதா?  எனப் புரியாமல் மக்கள் கதறுகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளே இருந்த மக்கள் வேறு வழியின்றி தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தென்பட்ட கட்டிடங்களில் நுழைந்தனர். வெளியில் இருந்தவர்கள் சாலையில் அமர்ந்து கதறிக் கொண்டிருந்தனர். அடுத்து என்ன நடக்கும், யார் மீது துப்பாக்கித் தோட்டாக்கள் துளைக்கும் என்று யாருக்கும் தெரியாது. இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் கூட்டம் கலையாமல் உறுதியாக இருந்தனர். அப்போதும் போலீசுப் படை வெறி கொண்டவாறு கண்ணில் மாட்டியவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டவர்கள் மருத்துவனைக்கு அழைத்து செல்லப்படவில்லை. மக்கள்தான் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அரைமணி நேரம் கழித்துத்தான் ஆம்புலன்ஸ் உள்ளே வருகிறது. அதிலும் சிலரை ஏற்றி அனுப்புகிறார்கள். இதனை எல்லாம் மக்கள்தான் செய்து கொள்கிறார்கள். போலீசுப் படையோ தடியடி நடத்துவது, சுட்டுத்தள்ளுவது, கொளுத்துவது என்ற இந்த வெறிச்செயல்களில் மட்டும் குறியாய் இருந்தது. போலீசின் நோக்கம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்பதோ, பொதுச்சொத்தை பாதுகாக்க வேண்டுமென்பதோ அல்ல.

இனி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யாரும் போராடக்கூடாது என்ற மரண பயத்தை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். அதனால்தான் பேரணி வந்த சாலையில் மக்கள் எங்கு நின்றிருந்தாலும் அவர்களை காட்டுமிராண்டித்தனமாக விரட்டி விரட்டி அடித்து துரத்தியது. ஒருவரையும் அந்த சாலையில் விட்டு வைக்கவில்லை. அந்த அடிகளும் ஏதோ மிரட்டி கூட்டத்தை கலைக்கும் எச்சரிக்கை அடிகள் அல்ல. உடலுக்கு படுகாயத்தை ஏற்படுத்தி, உள்ளத்தில் ஒரு மரணபயத்தை ஏற்படுத்தும் வண்ணம் கொடூரமானவை. ஒருவர் சிக்கினார் என்றால் அவரை சுற்றி வளைத்து நாயை அடிப்பது போல பத்து பதினைந்து நிமிடம் அடிப்பார்கள். இத்தகைய காட்சிகள் எல்லாம் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் கூட பார்ப்பதற்கோ, ஏற்பதற்கோ, பதிவு செய்வதற்கோ சாத்தியமல்ல. கண்முன்னே இப்படி அப்பாவி இளைஞர்களை அடிக்கும் காட்சிகள் எங்களை இப்போதும்கூட நிலைகுலைய வைக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டிற்கு பயந்து ஓடிய மக்களை விடாமல் துரத்தி வந்து FCI குடோன் அருகே கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள், வெறி பிடித்த போலீசார். இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை கீழே இறக்கி சாவியை பிடுங்கி தூக்கி எறிந்து விட்டு, அந்த வாகனத்தையும் தூக்கி வீசி எறிந்தது போலீசு. அந்தநாள் முழுவதும் தூத்துக்குடி மக்களை தனது வெறியாட்டத்திற்கு பலியாக்கியது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய கையோடு திரேஸ்புரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தி தனது வெறியை தீர்த்துகொண்டது போலீசு கும்பல். ஒன்றும் அறியாத ஜான்சி என்ற தாயின் தலையில் சுட்டதில், அவருடைய மூளையே சிதறி கொட்டிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் இருக்கிறார்கள். அடுத்த நாள் காலை அப்பகுதி மக்களை சந்திக்கச் சென்றபோது கையில் ஆயுதம் வைத்திருப்பவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவது போல் எங்களைக் கண்டும் ஓடி ஒளிகிறார்கள் திரேஸ்புரம் பகுதி மக்கள். இவர்கள்தான் போலீசுக்கு எதிராக கலவரம் செய்தார்கள் என்று ஊடகங்கள் வாந்தி எடுக்கின்றன.

மக்களிடம் அப்படி ஒரு மரணபயத்தை ஏற்படுத்துவதுதான் போலீசின் நோக்கம். ஆனால் இந்த அநீதிகளைக் கண்டு ஆத்திரமும், கோபமும் கொண்ட இளைஞர்கள் நிறைய பேர் செய்வதறியாது ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களை அங்கே வழிநடத்த யாருமில்லை. அல்லது இத்தகைய தாக்குதல் காலத்தில் ஒரு தலைமையே அங்கிருந்தாலும் ஆயுதங்களோடு தாக்குதலை நடத்தி வரும் போலீசிடமிருந்து மக்களை காப்பது சிரமமே! அதனால்தான் தங்களது கோபத்தை ஒரு சில வாகனங்களை தீவைப்பதன் மூலம் அவர்கள் தீர்த்துக்கொண்டனர்.

அரசு மருத்துவமனை முழுவதையும் போலீசு கைப்பற்றியதால் குண்டடிபட்டவர்களைக் கூட சென்று பார்க்க முடியாமல் மக்கள் தவித்த தவிப்பு ஒருக்காலும் அவர்களால் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. எங்களாலும் மறக்க முடியாத ஒன்று.

அடுத்த நாள் 23-ம் தேதி விடியற்காலை தூத்துக்குடி முழுவதும் மயான அமைதி நிலவியது. ஒரு சிலர் மட்டும் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். சைக்கிளில் டீ விற்றுக் கொண்டிருந்த இடத்தில் மட்டும் சிறு கூட்டத்தை பார்க்க முடிந்தது. தூத்துக்குடி பேருந்து நிலையம், WGC கடை வீதி, திரேஸ்புரம் கடற்கரை, அண்ணாநகர் மார்கெட் மற்றும் கடைவீதி, என எங்கும் அமைதி. இன்று என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தனர் தூத்துக்குடி மக்கள். ஆனால் அரசுக்கெதிரான கோபம் தணியாமல் இருந்தது.

சுமார் ஒன்பது மணியளவில் தூத்துக்குடியின் பதற்றமான பகுதியான திரேஸ்புரம், அண்ணாநகர், விவிடி சிக்னல், மூணாம் மைல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் போலீசு குவிக்கப்பட்டு இருந்தது.

மக்கள் அரசு மருத்துவமனையில் கூடிவிட்டனர்.  அரசு மருத்துவமனை முழுவதும் போலீசின் கட்டுப்பாட்டில் இருந்தது. மருத்துவமனையின் முன்கதவை மூடிவிட்டு வெளியே போலீசு காவல் காத்தது. துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் கட்சித் தலைவர்கள் சென்று பார்ப்பதற்கு மட்டும் அனுமதித்தது போலீசு. அப்போது மருத்துவமனையை திறக்கக்கோரி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டனர். போலீசோ, பாடியை வாங்க சொல்லி மிரட்டியது. “மக்கள், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை பிணங்களை வாங்கப் போவதில்லை. அதற்காக கையெழுத்து போடவும் முடியாது” என்று தொடர்ந்து போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முக்கியமாக தமிழ் தெரியாத உயர்போலீசு அதிகாரி தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால், மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல், தங்கள் கோரிக்கைகளை சொல்லக்கூட முடியாமல் தவித்தனர்.

கமலஹாசன், டி.ராஜேந்தர் போன்ற சினிமா நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் முழக்கமிட்டனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத போலீசு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தத் துவங்கியது. சிறிது நேரத்தில் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்து கட்சித்தலைவர்கள் வந்து பார்ப்பதற்கு ஏதுவாக மருத்துவமனை வளாகத்தில் ‘அமைதியை’ நிலைநாட்டியது போலீசு. மருத்துவமனைக்கு வெளியே காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு மட்டுமில்லாமல் கண்ணீர் புகைக்குண்டும் வீசியது. வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு மக்களை அச்சுறுத்தியது போலீசு. மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்த நபர்கள் மிகவும் சொற்பமானவர்கள்தான். அதிலும் குறிப்பாக போலீசின் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள். அவர்களைக்கூட அனுமதிக்க மனமில்லாமல் அடித்து விரட்டியதுதான் அரசு பயங்கரவாதத்தின் உச்சகட்டம்.

அதேநேரம் திருச்சி ஐஜி வரதராஜு தலைமையில் சிறப்பு அதிரடிப்படை வந்திறங்கியது. கிட்டத்தட்ட எட்டு மாவட்ட போலீசுப்படை உதவியுடன் தூத்துக்குடியில் மக்கள் வெளியே வர முடியாதபடி அராஜகங்களை நிகழ்த்தியது போலீசு கும்பல்.

விவிடி சிக்னலில் இருந்து பிரையன்ட் நகர் பன்னிரெண்டாவது தெருவரை போலீசு நடத்திய அணிவகுப்பு தொடக்கத்திலேயே சந்தேகத்துக்குரியதாகவே இருந்தது. பிரையண்ட் நகரில் வசிக்கக் கூடியவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்க மக்கள். அங்கு இரண்டாவது தெருவில் இரண்டு பேருந்துகள் எரிகின்றன. ஒரு பேருந்து கொழுந்து விட்டு எரிகிறது. மற்றொரு பேருந்தை போலீசு அணைத்துக் கொண்டிருந்தது. கவனிக்கவும், பேருந்தை அணைத்துக் கொண்டிருந்தவர்கள் சீருடை அணியாத போலீசு. அந்த பன்னிரண்டு வீதியிலும் கல் வீச்சோ, மக்கள் கூட்டமாக நிற்பதோ எங்கும் இல்லை. அப்படி இருக்கும்போது அந்த பேருந்துகள் மட்டும் எப்படி எரிந்தன என்பதுதான் கேள்வி ? அணிவகுப்பு நடத்திய போலீசு அந்த தீயினை அணைக்கவோ, அல்லது பதட்டமோ இல்லாமல் பேருந்து எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மெரினா போராட்டத்தில் குடிசைக்கு போலீசு தீவைத்த சம்பவம்தான் தவிர்க்கவியலாமல் நம் நினைவுக்கு வந்தது.

அந்த நேரத்தில்தான், பிரையன்ட் நகருக்கு நேர் எதிரே அமைந்துள்ள அண்ணா நகரில் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தது. அதில் இருபத்து இரண்டே வயதான காளியப்பன் என்பவர் அந்த துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தார். மேலும் இரண்டு பேர் குண்டடி பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்கள்.அவர்களை அப்பகுதி மக்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்து கிடந்த காளியப்பனை காலால் உதைத்தும், கால்சட்டையை பிடித்து தரதரவென்று இழுத்தும் போட்டது போலீசு. இந்தியாவில் மக்களின் மதிப்பு என்ன என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

திரேஸ்புரம் பகுதியிலும் போலீசின் அராஜகம் தொடர அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள, போலீசு ஊருக்குள் வருவதை தடுப்பதற்கு வள்ளத்தினை (நாட்டுப்படகு) கொண்டுவந்து தெருவின் குறுக்கே போட்டிருந்தனர். அந்த  வள்ளத்தினை தீ வைத்துக் கொளுத்திய போலீசு அங்கேயும் துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களை கலைத்துள்ளது. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சொல்லி வைத்தாற்போல் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள்.

அண்ணாநகரைப் பொறுத்தவரையில் நாடார் சாதி மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி. இப்பகுதியில் போலீசு கும்பல் நிகழ்த்திய வன்முறை சொல்லி மாளாது. சாலைகளில் வருவோர் போவோர்களை எல்லாம் வழிமறித்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது போலீசு கும்பல். அழுக்கு சட்டையணிந்த ஒரு இளைஞர் அவ்வழியாக வந்த குற்றத்திற்காக அவர் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நிகழ்த்தியது போலீசு.  வந்தவரோ, “நான் டிரைவராக இருக்கிறேன். எனக்கும் இந்த போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை, என்று கூறி தனது ஓட்டுனர் உரிமத்தை எடுத்து காட்டுகிறார். அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாத போலீசு கும்பல் அவரை சராமாரியாகத் தாக்கியது.

அதேபோல், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை வழிமறித்து அவர்களிடம் எந்த விசாரணையும் செய்யாமல், அவர்கள் இளைஞர்கள் என்பதற்காகவே கொலைவெறியுடன் அடித்தது. அடி தாங்க முடியாமல் வண்டியின் பின்னால் உட்கார்ந்திருந்த ஒருவர் ஓடுகிறார். அவரை விடாமல் துரத்திச் சென்று பிடித்து வந்து அடிக்கிறார்கள். இந்த சம்பவங்களை எல்லாம் பத்திரிகையாளர்கள் படம் பிடிக்காமல் அமைதி காத்து போலீசு கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பது அருவெறுப்பின் உச்சம்.

அந்தக் கூட்டத்தில் இருந்த போலீசு ஒருவன், நாங்க அடிக்கிறதை எல்லாம் போட்டோ புடிக்கிறிங்களா? என்று மிரட்டும் தொனியில் பத்திரிகையாளர்களைப் பார்த்துக் கேட்க, அதற்கு கொஞ்சம் கூட சுரணையில்லாத சில பத்திரிகையாளர்கள், “நாங்கள் உங்கள் நண்பர்கள், இதனை எல்லாம் எடுக்க மாட்டோம்“ என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார்கள். இவர்கள் அனைவரும் தமிழகத்தின் முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றுபவர்கள்தான்.

அண்ணாநகர் ஏழாவது தெருவில் தடாலடியாக ஒரு வீட்டிற்குள் புகுந்த போலீசு கும்பல், ஒரு இளைஞரை வெளியே இழுத்து வந்து சராமரியாக தாக்கியது. அதேபோல் வயதான ஒருவரை ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே போலீசு அடித்து உதைத்த காட்சி இவர்கள் எவ்வளவு பெரிய காட்டுமிராண்டிகள் என்பதையும் உணர்த்துகிறது. இத்தகைய சம்பவங்கள் எவையும் பத்திரிகையாளர்களால் பதிவு செய்யப்படவில்லை. இவற்றில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் விதி என்பது போலீசின் தாக்குதல்களை யாரும் படம் பிடிக்கக்கூடாது என்பதே.

மக்கள் ஆவேசத்தில் எதிர்தாக்குதலாக, கல் எரிவதையும், பெட்ரோல் குண்டு வீசுவதை மட்டும் எடுத்து ஒளிபரப்புவதற்காகவும், மக்களை வன்முறையாளர்கள் என்று சித்தரிப்பதற்கும்தான் போலீசும், ஊடக முதலாளிகளும் திட்டமிட்டுள்ளார்கள் என்பதற்கு இது மறுக்க முடியாத ஒரு சான்று.

சில பத்திரிகை நிருபர்கள் போலீசுக்கு மக்களைத் தாக்குவதற்கான சில வழிகளையும், ஆலோசனைகளையும் சொல்லிக்கொண்டும், போலீசு கும்பலோடு சேர்ந்து போராடிய மக்களை ஏளனம் செய்து நகைச்சுவை பேசியதெல்லாம் சகிக்க முடியாதவை. இத்தகைய சூழலிலும் நாங்கள் உலவிக் கொண்டிருந்தது ”வேறு வழியில்லை, இவற்றை எப்படியாவது பதிவு செய்ய வேண்டும்” என்ற ஒரே காரணத்திற்கு மட்டுமே.

தூத்துக்குடியில் நடைபெற்ற பேரணியை போலீசால் கட்டுப்படுத்த முடியாத நிலையோ, மக்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்ற நிலையோ இல்லை. அமைதியான முறையில் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. உண்மையில் மக்களுக்கு கலவரம் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்திருந்தால், அவர்கள் பேரணியாக வந்த வழியில் பல அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், சேதாரம் ஏற்படுத்தக் கூடிய கட்டிடங்கள் எத்தனையோ இருந்தன. ஆனால் மக்களின் நோக்கம் அதுவல்ல.

பேரணியை தடுக்க வேண்டும் என்று போலீசு நினைத்திருந்தால் விவிடி சிக்னலோ, அல்லது மூணாம் மைல் பாலம் அருகிலோ கூட மக்களின் குறைகளை கேட்டிருக்கலாம். அங்கேயே பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம். இல்லை மாவட்ட அலுவலகம் அருகே அவர்களை அமர வைத்திருந்தாலும் வேறு பிரச்சினைகள் வந்து விடப் போவதில்லை. ஆனால் எந்த இடத்திலும் மக்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்கள் என்று கேட்பதற்கு போலீசு தயாராக இல்லை. போலீசின் நோக்கம் இனி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது, போராடக்கூடாது என்பது மட்டுமே. அதனால்தான் கொலை வெறியோடு இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளது. இது தற்செயலாக நடந்ததோ. கூட்டத்தை கலைக்க நடந்ததோ அல்ல. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட பச்சைப்படுகொலை. போலீசின் திட்டமிட்ட வன்முறை வெறியாட்டம்.

போலீசின் வெறியாட்டத்தைப் பார்க்கையில் வேதாந்தா ஸ்டெர்லைட்டின் நிதிக் கவனிப்பில் இவர்கள் வெகுவாக கவனிக்கப்பட்டிருக்க வேண்டும். ஈவு இரக்கமின்றி இவர்கள் அடிப்பதற்கு இந்தக் காரணத்தை தவிர வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை.

இவ்வளவு பெரிய கொலையும், அராஜகமும் நடந்தாலும் தூத்துக்குடி மக்கள் தமது போராட்ட உணர்விலும், ஸ்டெர்லைட்டை மூடுவதிலும் உறுதியாக இருக்கிறார்கள். அதனால்தான் எந்த அதிகாரி வந்தாலும், எந்த அமைச்சர் வந்தாலும் அவர்கள் அச்சமில்லாமல் கேள்வி கேட்கிறார்கள். இதுதான் அரசும் ஆளும் வர்க்கமும் இன்றளவும் பயப்படும் அம்சம்.

இன்றைக்கு எடப்பாடி அரசு ஸ்டெர்லைட்டை மூடுவதாக நாடகமாடியிருக்கிறது. இந்த நாடகத்தை தூத்துக்குடி மக்கள், கடந்த காலங்களிலேயே அறிந்திருக்கிறார்கள். மேலும் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே போராடும் மக்கள் மீது கைது, வழக்கு, சிறை என பல அடக்குமுறைகளை போலீசு ஏவியிருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை நடக்க விடாமல், போராட்டக் குழுவை உடைத்து விடலாம் என்ற போலீசின் சதித்திட்டங்கள் அனைத்தையும் மக்கள் முறியடித்தார்கள்.

இதுதான் போலீசும், அரசும் தூத்துக்குடி மக்கள் மீது நடத்திய படுகொலைக்கு பிரதான காரணம்!

  • வினவு செய்தியாளர்கள்.

இஸ்லாமோஃபோபியா- வெறும் வாய்ச்சொல் அல்ல ! அது முசுலீம் வெறுப்புணர்வின் அடையாளம் !

இசுலாமிய வெறுப்புணர்வு நோய் என்பது வெறுமனே வெறுப்பு என்பதைத் தாண்டி முசுலீம்கள் மீதான இன ஒடுக்குமுறையை குறிக்கும் பரந்துபட்ட பொருளை எதார்த்தத்தில் கொண்டிருக்கிறது.

”இசுலாமிய வெறுப்புணர்வு நோய் (Islamophobia) என்பது விவாதங்களை நிறுத்துவதற்கான புனைக் கதை” என்று தி டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் மெலனி பிலிப்ஸ் (Melanie Phillips) எனும் பத்திரிகையாளர் கண்டனம் செய்திருந்தார். அதற்கு முந்தைய வாரம், பி.பி.சியின் ஞாயிறு அரசியல் நிகழ்ச்சியில் அவரது புலம்பல் இரட்டிப்பாகியிருந்தது. அதில் முசுலீம் மக்கள் மீதான எந்த ஒரு  விமர்சனமும் இசுலாமிய வெறுப்பாக கருதப்படுவதாகக் கூறி அச்சொற்பதத்தையே நிராகரித்திருந்தார்.

மற்றவர்களும் கூட அச்சொற்பதத்தின் பயன்பாட்டை எதிர்த்திருக்கின்றனர். “நான் முசுலீம்களை பற்றிப் பேசவில்லை. நான் இசுலாத்தை பற்றிதான் பேசுகிறேன்” என்று தீவிர வலதுசாரியான டாமி ராபின்சன்(Tommy Robinson) முசுலீம்களுக்கு எதிரான தன்னுடைய சகிப்பின்மைக்கு முட்டுக் கொடுக்கிறார். விவாதத்தை முடக்குவது போன்ற போலியான வாதங்களை வைப்பதன் மூலம் “இசுலாமிய வெறுப்புணர்வு நோய்” என்ற பதம் மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்படுவதை நாம் இங்கே பார்க்கிறோம்.

இது போன்ற சொற்பொருள் விளையாட்டுகளால் ‘இசுலாமிய வெறுப்புணர்வு நோய்” எனும் பதத்தை மீண்டும் மீண்டும் நிராகரிப்பதன் மூலம் உண்மையான பிரச்சினைகளை இவர்கள் திசை திருப்புவது மலைப்பூட்டுகிறது. ஆனால் மெலனியின் கருத்துக்களுக்கு நெருக்கமானவர்களான ரோட் லிடில்(Rod Liddle) மற்றும் பிரெண்டன் ஒ’நெய்ல்(Brendan O’Neil) போன்றவர்கள் தங்களது இசுலாமிய வெறுப்பை வெளிப்படுத்துவதற்கான களத்தை மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் பி.பி.சி நிறுவனம் வழங்கியிருப்பதுதான் உண்மையில் கவலைக்குரியதாகும்.

மெலனியின் சகிப்புத்தன்மையற்ற வாதம் யூதர்கள் மற்றும் முசுலீம்களால் சரியாக விமர்சிக்கப்பட்டிருந்தாலும், ‘இசுலாமிய வெறுப்புணர்வு நோய்’ என்ற பதத்தின் சரியான பொருள் நோக்கம் என்ன என்று அதைப்பற்றி நன்கறிந்த தாராளவாதிகள் கூட கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர்.

இது போன்ற சொற்கள் தன்னளவில் முழுமைத்தன்மை பெற்றிருப்பது அரிது அல்லது அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் பல்வேறு வார்த்தைகள் எந்த ஒரு சராசரி வெறியுணர்வாளர்களிடமும்  சிறிய தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன.

“யூத – அரேபிய எதிர்ப்பு”(anti semitism) என்ற சொல்லை நாம் எடுத்துக் கொள்வோம். அகராதி விளக்கப்படியே மத்தியக் கிழக்கில் உள்ள அரேபியர்கள் மற்றும் யூதர்களுக்கு எதிரான சகிப்புத்தன்மையின்மையை இது குறிக்கிறது. ஆனால் இது பரவலாக யூத எதிர்ப்பு என்றுதான் புரிந்து கொள்ளப்படுகிறது. சமூகத்தில் யூத அரேபிய இன எதிர்ப்புகளும் சகிப்பின்மையும் பரவலாக இன்னும் இருக்கிறது என்று அது மேலும் கூறுகிறது. யூத – அரேபிய இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் ஒரு அரேபியருக்கு யூத எதிர்ப்புணர்வு இருக்காது என்று ஒருவர் கூறமுடியாது.

இதே போலதான் நல்லெண்ணம் கொண்ட பெரும்பாலான மக்கள் அகராதி விளக்கத்தைத் தாண்டி இசுலாமிய வெறுப்புணர்வு என்பதை ஒரு கருத்தாகவோ அல்லது சமூக நிகழ்வாகவோ புரிந்து கொண்டுள்ளனர்.

“இசுலாமிய வெறுப்புணர்வு நோய் – இஸ்லாம் ஃபோபியா” என்ற சொல்லை 1997-ம் ஆண்டு வெளியிட்ட தன்னுடைய அறிக்கையில் ரன்னிமேடே(Runnymede ) அறக்கட்டளை தான் முதன்முதலாக பிரபலப்படுத்தியது. முசுலீம்கள் மீதான வெறுப்பை குறிப்பதற்கு ஒரு சொற்பதம் தேவைப்பட்டதன் பின்னணியில் இது புழக்கத்தில் வந்தது. முதலில் “முசுலீம்களுக்கு எதிரான அடிப்படையற்ற வெறுப்பு, பின்னர் அதுவே அனைத்து முசுலீம்கள் மீது பயம் அல்லது வெறுப்பு” என்ற அடிப்படையில் ‘[அடிப்படையற்ற] அதீத பயம் அல்லது சமநிலை குலைந்த மனநோய்’ (“phobia” ) என்ற பின்னொட்டு சேர்க்கப்பட்டது.

“இசுலாமிய வெறுப்புணர்வு நோய்” என்ற சொற்பதம் இசுலாம் மீதான விமர்சனத்தையோ மாற்றுக் கருத்துக்களையோ கண்டனங்களையோ வெளிப்படுத்தக்கூடாது என்று கூறவில்லை என்று தெளிவாகவே ரன்னிமேடே அறிக்கை கூறியிருந்தது. இதை புரிந்து கொள்ளாமல் இருப்பது போல பாசாங்கு செய்வது மிகவும் முட்டாள்தனமானது.

எனினும் இந்த பதம் குறித்த விளக்கத்தின் மீது சந்தேகத்தை உருவாக்க, இப்பதத்தின் எதிர்ப்பாளர்கள், அதன் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் மீதான பரந்துபட்ட பகையுணர்ச்சியோடு, நம்பிக்கையின் மீதான விமர்சனத்தையும் இட்டுக்கட்ட முயற்சிக்கின்றனர்.

“குறைந்த இசுலாம்தான் தீவிரவாதத்திற்கான தீர்வு” என்ற கோட்பாட்டை முன்வைத்த டக்லஸ் முரே போன்ற சிலர் “இசுலாம் மீதான விமர்சனம்” என்ற போர்வையில் தங்களது எதிர்ப்புணர்வை சட்டபூர்வமாக்க முயல்கின்றனர். இங்கே இசுலாம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தியதன் அடி ஆழத்தில் பிரிட்டிஷ் கடற்கரைகள் பாதுகாப்பாக இருக்க முசுலிம்கள் குறைவாக இருக்க வேண்டும் என்ற பொருள் தேங்கியுள்ளது. முசுலிம்களை இன அழிப்பு செய்யாமலோ அல்லது ஒட்டுமொத்தமாக நாடு கடத்தாமலோ எப்படி இந்த குறிக்கோளை அடைய முடியும் என்பதை புரிந்து கொள்ள கடினமாக உள்ளது. இது கண்டிப்பாக இசுலாமின் மீதான விமர்சனம் அல்ல. மாறாக இது “இசுலாமிய வெறுப்புணர்வு நோய்”க்குள் கச்சிதமாக அடங்குகிறது.

மேலும் ”இசுலாமிய வெறுப்புணர்வு” என்ற சொற்பதத்தை சட்டபூர்வமாகவே காயடிப்பதற்கு முசுலீம் விரோத வெறுப்பு (anti-Muslim hatred) என்ற சொற்பதத்தை நைச்சியமாகப் பயன்படுத்துகிறார்கள். “இசுலாமிய வெறுப்புணர்வு நோய்” என்பது வெறும் வெறுப்பு என்பதைத் தாண்டி பரந்த பொருளை கொண்டுள்ளது. முசுலீம் விரோத வெறுப்பு என்ற சொற்பதம் பரவலான இன ரீதியான ஏற்றத் தாழ்வுகளை எதிரொலிக்கவில்லை.

முசுலீம்கள் இங்கிலாந்தைக் கைப்பற்றி விடுவார்கள் என்று 31% பிரிட்டிஷ் சிறுவர்கள் உண்மையில் கருதுகிறார்கள்; அதே போல முசுலீம்களின் எண்ணிக்கையை குறைக்கும் கட்சிக்கு 37% பிரிட்டிஷ் மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். எதார்த்தத்தில் சக வெள்ளை இன கிறுத்துவர்களை விட முசுலீம் மக்களுக்கு 76% குறைவாகவே வேலை கிடைக்கிறது. மேலும், இங்கிலாந்தின் மிகவும் பின்தங்கிய 10% பகுதிகளில் தான் 50% முசுலீம் மக்கள் வாழ்கின்றனர். இச்சூழ்நிலைகள் அனைத்தும் வெறுமனே வெறுப்பு என்ற வார்த்தைக்குள் அடங்காது. இவை இசுலாமிய வெறுப்புணர்வு என்ற பரந்துபட்ட பொருள் கொண்ட வார்த்தைக்குள்ளே கச்சிதமாக அடங்குகின்றன.

மேலும் ‘இசுலாமிய வெறுப்புணர்வு நோய்’ என்பது அதன் விரிந்த பொருளில் முசுலீம் இன வெறுப்புதான் என்பது தற்போது நன்கு நிறுவப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பிரிட்டிஷ் மக்கள், காவல் துறையினர், ஊடகங்கள் மற்றும் பிரிட்டிஷ் பிரதமரையும் தாண்டி உலகம் முழுதும் இதன் பயன்பாடு பரவியிருக்கிறது. மேலும் அனைவருக்கும் அந்த வார்த்தை என்ன சொல்ல வருகிறது என்றும் தெரிந்திருக்கிறது.

’இசுலாமிய வெறுப்புணர்வு நோய் ‘ இருப்பது உண்மை. அது நம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் அவற்றின் அனைத்து பரிமாணங்களோடும் வளர்ந்து வருகிறது. ’இசுலாமிய வெறுப்புணர்வை நோய்’ ஆட்கொண்டவர்களும் ’இசுலாமிய வெறுப்புணர்வு நோய்’ நிலவுவதை மறுப்பவர்களும், நமது தெரிவான  ‘இசுலாமிய வெறுப்புணர்வு’  எனும் பதத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து நகைப்பிற்குரியது. ஏனெனில் வெறும் வார்த்தை மாற்றம் அவர்களது வெறுப்புணர்வை ஒருபோதும் மாற்றப் போவது இல்லை.

வெறும் வார்த்தையைப் பிடித்து தொங்கி கொண்டிருப்பவர்கள் நடைமுறையில் முசுலீம்கள் மீதான விரோதப்போக்கு, வன்முறை மற்றும் இனவெறியை விட  அப்பதத்தின் சொற்பொருளைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறார்கள். அவர்களது ஆர்ப்பரிக்கும் மதவெறியை அவர்களது சொல் விளையாட்டுகள் மறைக்கும் என்றே கருதுகிறார்கள். ஆனால் அது அவர்களால் முடியாது. நாமும் பார்க்கத்தானே போகிறோம்.

-வினவுச் செய்திப் பிரிவு

கார்டியன் தளத்தில்  எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

பாரதக் குடிமக்கள் கொல்லப்படுதலும் வாய் திறவாத பாரதப் பிரதமரும் ! வினோத் துவா

ஸ்டெர்லைட் போராட்டம் : ஹிந்தியில் வினோத் துவா வீடியோ

உரையின் தமிழ் வடிவம்

நமஸ்கார்,

இன்னும் ஒரு தடவை, அவரது வழக்கப்படி, அவரது பாரம்பரியப்படி பாரத நாட்டின் பிரதான சேவகர் (மோடியை இந்தியில் பிரதான் மந்திரி என்று சொல்லாமல் பிரதான சேவகர் என்றே வினோத் துவா குறிப்பிடுகிறார்) எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறார்.

11 பாரத குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பாரத போலீசின் கையாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஒரு பாரத பிராந்தியத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த பிராந்தியத்தின் பெயர் தமிழ்நாடு. ஆனால், மோடி இது பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

இந்த நகரத்தை தமிழில் தூத்துக்குடி என்று அழைக்கிறார்கள். பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கம்பெனி அங்கு ஒரு தொழிற்சாலை அமைத்திருக்கிறது, அதன் முதலாளி அகர்வால் என்பவர், அனில் அகர்வால். அந்த கம்பெனியின் பெயர் வேதாந்தா.

அந்தப் பகுதிவாழ் மக்களுக்கு இது தொடர்பாக அவர்களது ஆரோக்கியத்தைப் பற்றியும், நிலத்தடி நீர் மாசுபடுதல் பற்றியும் தொடர்புடைய பல பிரச்சனைகள் உள்ளன. அவர்கள் இந்த தொழிற்சாலையை மூட வேண்டும் என்று பல நாட்களாக போராடி வருகிறார்கள். இந்தத் தொழிற்சாலையில் பெருமளவு தாது கலந்த மண்ணிலிருந்து தாமிரம் எடுத்து பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது.

வேதாந்தா அங்கு உருக்கு ஆலை அமைத்த பிறகு தண்ணீர் மாசுபடுதல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது, மக்களின் உடல்நிலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டன, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது, (உச்சநீதிமன்றத்தில்) தடை விலகிய பிறகு இவர்கள் என்ன செய்தார்கள்? இந்தத் தொழிற்சாலையை இன்னும் பெரிதாக்குவதற்கு திட்டமிட்டார்கள். இதை மக்கள் இன்னும் அதிகமாக எதிர்த்தார்கள். 100 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடத்தியது, துப்பாக்கிச் சூட்டில் 11 (தற்போது 13) பேர் கொல்லப்பட்டனர்.

போலீஸ் துப்பாக்கிச் சூடு என்பது கொல்வதற்காக நடத்தப்படுவதில்லை. இதற்கான முழுமையான ஒரு நெறிமுறை (ப்ரோட்டக்கால்) இருக்கிறது. போலீஸ் எப்படி இதில் செயல்பட வேண்டும் என்று, நான் உங்களுக்கு இந்த நெறிமுறை பற்றி சொல்கிறேன்.

இது போலீசுக்கான விதிமுறை.
  • முதலில் கூடியிருக்கும் மக்களை சட்டத்துக்குப் புறம்பான கூடுகை என்று அறிவிக்க வேண்டும். இங்கு 100-வது நாள்தான் 144 தடை உத்தரவு போடப்பட்டது, 99 நாட்கள் வரை எந்தத் தடையும் போடப்படவில்லை.
  • இரண்டாவதாக, கூடியிருக்கும் மக்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்த வேண்டும். (பாபா ராம்தேவ் ராம்லீலா மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது போலீஸ் கலைந்து போகும்படி சொன்னது. அப்போது அனைவரும் கலைந்து போய் விட்டார்கள். அப்போதுதான் ராம்தேவ் பெண்களுக்கான சல்வார் கமீஸ் அணிந்து கொண்டு தப்பி ஓடினார். உங்களுக்கு நினைவிருக்கும்). அது போல போலீஸ் “நீங்கள் தாமாகவே கலைந்து போய் விடுங்கள், திரும்பிப் போய் விடுங்கள்” என்று சொல்ல வேண்டும். அப்படி செய்தார்களா இல்லையா என்று நமக்குத் தெரியவில்லை.

அப்படி சொன்னதை அவர்கள் கேட்கவில்லை என்றால், அதன் பிறகு கூட்டத்தை கலைந்து போக வைக்க மாவட்ட ஆட்சியருக்குத்தான் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவிடும் அதிகாரம் உள்ளது.

  • முதல் கடுமையான நடவடிக்கை கண்ணீர் புகை பயன்படுத்துவது
  • இரண்டாவது நடவடிக்கை மெலிதான பேட்டன் தாக்குதல் அல்லது பிரம்பு தாக்குதல் நடத்த வேண்டும். தடியடி இல்லை. பிரம்பு தாக்குதல்தான், அதுவும் மெலிதான தாக்குதல் நடத்த வேண்டும்.
  • மூன்றாவது கடுமையான நடவடிக்கை தண்ணீரை பீய்ச்சியடிக்க வேண்டும். இதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.
இதற்குப் பிறகும் கூட்டம் கேட்கவில்லை என்றால், இந்த மூன்றும் பலனின்றி போய் விட்டால், அப்போதுதான் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்த முடியும்.
  • அதுவும் முதலில் எச்சரிக்கை விடுக்க வேண்டும். “நாங்கள் சுடப் போகிறோம்” – “வீ வில் ஓப்பன் ஃபயர்” என்று ஒலிபெருக்கி மூலம் சொல்ல வேண்டும். “இதனால் உயிரிழப்பு நேரிடக் கூடும்” என்று எச்சரிப்பதும் போலீசின் கடமை.
  • அதன் பிறகு ஒரு கலவர கொடி ஏற்ற வேண்டும், அதாவது துப்பாக்கிச் சூடு நடக்கப் போகிறது கலைந்து போய் விடுங்கள் என்று காட்டுவதற்கு ஒரு கொடியை ஏற்ற வேண்டும். இங்கு, அப்படி எதுவும் நடக்கவில்லை.
  • விதிமுறைகளின்படி இவ்வளவுக்கும் பிறகு போலீஸ் துப்பாக்கி சூடு ஆரம்பித்தால், முதலில் விண்ணை நோக்கி காற்றில் சுட வேண்டும்.
  • அதன் பிறகும் கூட்டம் கலைந்து போகவில்லை என்றால் இடுப்புக்குக் கீழ் சுட வேண்டும், காயப்படுத்தும் வகையில் சுட வேண்டும். கொல்லும் வகையில் சுடுவதற்கு போலீஸ் எப்போதும் சுடக் கூடாது.

இங்கு இன்சாஸ் ரைஃபிள் பயன்படுத்தப்படுவதை பார்க்கலாம். இதை ஸ்னைப்பர் துப்பாக்கி என்று நான் சொல்ல மாட்டேன். ஸ்னைப்பர் துப்பாக்கி வேறு வகையில் இருக்கும்.

இன்சாஸ் ரைஃபிள் ராணுவம், பி.எஸ்.எஃப், சி.ஆர்.பி.எஃப் பயன்படுத்தும் துப்பாக்கி. வழக்கமாக போலீஸ் கையில் பழைய 303 துப்பாக்கி இருக்கும். ஆனால், இங்கு இந்த இன்சாஸ் துப்பாக்கி பயன்படுத்தப்படுகிறது.

இந்த புகைப்படத்தில் தென்படுபவர்கள் குறி வைத்து சுடுகின்றனர். இது அனைத்தும் தெளிவாக உள்ளது.

வேதாந்தா மிகப்பெரிய கம்பெனி. இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது யாரும் கீழ்நிலை அதிகாரியால் முடியாத ஒன்று. ஏனென்றால், இந்த நிறுவனம் பெரிய அளவில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்திருக்கிறது.

இது போன்ற கம்பெனிகளுக்காகத்தான் பட்ஜெட்டில் FCRA சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. 1976 முதல் இப்போது வரை எந்தெந்த வெளிநாட்டு கம்பெனிகள் நமது நாட்டு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தனவோ, 1976 முதல் அதாவது, எமர்ஜென்சி அமலில் இருந்த போது, திருமதி இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. இப்போது பா.ஜ.க அரசு. அப்போது ஆரம்பித்து இப்போது வரைக்கும் எந்தெந்த வெளிநாட்டு கம்பெனி எல்லாம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தார்களோ காங்கிரசுக்கு, பா.ஜ.க-வுக்கு அதற்கு எந்த பரிசீலனையும் செய்யப்பட மாட்டாது.

இது நமது நிதி மந்திரி திரு அருண் ஜெட்லி பாரத வர்ஷத்துக்கு வழங்கிய கொடை. இதை நிதி மசோதாவில் ஒரு அடிக்குறிப்பின் வடிவில் சேர்த்து விட்டிருந்தார். இதன் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. ஏன்? ஏனென்றால் இரண்டு தரப்புக்கும் இதில் ஆதாயம் இருக்கிறது. காங்கிரசுக்கும் சரி, பா.ஜ.கவுக்கும் சரி, பிற கட்சிகளுக்கும் சரி.

11 பாரத குடிமக்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு கல் எறிந்தவர்கள் மீது மட்டுமோ, அல்லது அமைதியாக பேரணி நடத்துபவர்கள் மீது மட்டும் ஏன் நடக்கிறது? இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும், கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த தருணத்தில் வேதாந்தாவின் தொழிற்சாலை மூடப்பட்டிருக்கிறது, இந்த கம்பெனி குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

FCRA-ல் அடிக்குறிப்பின் வடிவில், 1976 முதல் இப்போது வரை வெளிநாட்டு கம்பெனிகள் கொடுத்த நன்கொடை தொடர்பாக எந்த பரிசீலனையும் கிடையாது என்பது நீக்கப்பட வேண்டும். அப்போதுதான் அரசு மக்களுக்கானது, கார்ப்பரேட்டுகளுக்கானது இல்லை என்று நிரூபிக்கப்படும்.

டிரிக்கிள் டவுன் உண்மையில் வேலை செய்கிறதா என்று நமக்குத் தெரியவில்லை. இந்த விஷயத்தைப் பொறுத்த வரை இந்த கம்பெனி மீது விசாரணை நடத்தப்பட வேண்டும், ஒடிசாவிலும் நடத்தப்பட வேண்டும், ஜாம்பியாவிலும் இந்த கம்பெனி மீது விசாரணை நடத்த வேண்டும்.

இந்த கம்பெனி வேதாந்தா, இந்திய வங்கிகளுக்கு சுமார் 22,000 கோடி கடன் பாக்கி வைத்திருக்கிறது.

நன்றி : new-democrats

க்யா ரே… சீட்டிங்கா ? காலா… போலீசுக்கு வாலா ?

24

க்யா ரே… சீட்டிங்கா ? காலா… போலீசுக்கு வாலா ?

போலீசைத் தாக்கிய சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமாம்.
இதுதான் போராடிய தூத்துக்குடி மக்களுக்கு  போலீஸ் ஏஜெண்ட் காலா வின் செய்தி.

மானமுள்ள தமிழ் மக்களே, “காலா” வை கடைசி படம் ஆக்குங்கள்!

__________________________________________________

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு வக்காலத்து 3 பேர்  எடப்பாடி, பாஜக, ரஜினி ஆன்மீக அரசியல் அணி தயார்!

நேற்று எடப்பாடி 40 பக்கத்தில் சொன்னதைத்தான் சூப்பர் ஸ்டார் நாலே வார்த்தையில் சொல்கிறார். தூத்துக்குடி மக்களே போலீஸ் வெறியாட்டத்தை ஆதரிக்கும் ரஜினியை புறக்கணியுங்கள்.

கருத்துப்படம்: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற ? | ராஜு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜுவிடம் நக்கீரன் இதழ் நடத்திய நேர்காணல் வீடியோ.

  • யார் சமூக விரோதி?
    பத்தாம் வகுப்பு மாணவியின் வாயில் சுட்டான் பாருங்க அவன்தான் சமூக விரோதி.
    இந்த போலீஸ்தான் சமூக விரோதி. 
  • எந்த அமைப்பைச் சார்ந்தவங்க, எந்த வேனுக்குத் தீவைச்சாங்க… காட்டு நீ…
    எந்த அமைப்பைச் சேர்ந்தவங்க கலெக்டர் ஆபீச அடிச்சி உடைச்சாங்க காட்டு நீ…
    ஆனா நீ செஞ்சதெல்லாம் வெளியில வந்துருக்குல்ல… 
  • எப்படி டி.ஜி.பி.யும் முதல்வரும் சுட்டது தெரியாது… நாங்க உத்தரவு கொடுக்கலனு எப்படி சொல்ல முடியும்?
    ஒரு டி.ஜி.பி.க்குத் தெரியாம தூத்துக்குடில 13 பேர சுட்ருவாங்களா? 
  • தூத்துக்குடி எஸ்.பி. மேல 13 கொலை வழக்கு போடனும்… சாதாரண ஜனங்க மேல ஒரு எப்.ஐ.ஆர். இருந்தா கூட வேலை தர மாட்டேங்கிரல்ல… வயித்துப் பொழப்புக்கு வெளிநாடு போயி பொழக்க முடியலைல்ல.. தூத்துக்குடி எஸ்.பி.யை வேலையை விட்டுத் தூக்கு… தற்காப்புக்குத்தான் சுட்டேனு கோர்ட்ல நிரூபிச்சுட்டு வரட்டும்… 
  • வானத்தப் பார்த்து சுடுறான்.. பூமியைப் பாத்து சுடறான்.. இதெல்லாம் என்ன பேச்சுங்க இது? சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற? சொந்த மாவட்ட மக்கள் அவன் கோரிக்கைகாகப் போராடுறான் இங்க துப்பாக்கிக்கு என்ன வேலை? 
  • மக்கள் இனி எந்தப் போராட்டத்துக்கும் முன்வரக்கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவே அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட படுகொலை இது. இது அரச பயங்கரவாதம்.

(நன்றி: நக்கீரன்)

நிபா வைரஸ் – இந்தச் சாவுகளைத் தவிர்க்க முடியாதா ?

0

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது சாலிஹ். 26 வயதான முகமது சாலிஹ், கடந்த 17ம் தேதி (2018, மே 17) கோழிக்கோட்டில் உள்ள பேபி நினைவு மருத்துவமனையில் (Baby Memorial Hospital) அனுமதிக்கப்படுகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தத்துடன் ஒருவிதமான குழப்பமான மனநிலையில் இருந்துள்ளார் சாலிஹ்.
சாலிஹ் அனுமதிக்கப்பட்டதற்கு சரியாக 12 நாட்கள் முன்பு 23 வயதே நிரம்பிய அவரது இளைய சகோதரர் இதே போன்ற அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கேட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தவரின் உடலை அடக்கம் செய்யும் மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள்.

முதலில் இவர்கள் ஏதோவொரு வகையான விசத்தை அருந்தியிருக்க வேண்டுமென மருத்துவர்கள் சந்தேகித்துள்ளனர். ஆனால், அதே குடும்பத்திற்கு உறவினரான மரியம் என்கிற பெண்ணும் மூசா என்கிற முதியவர் ஒருவரும் இதே போன்ற அறிகுறிகளோடு பாதிக்கப்பட்டு இறந்து போனதைக் கேள்விப்படும் மருத்துவர்கள், விரிவான பரிசோதனைகள் மேற்கொள்கின்றனர். எனினும், அனுமதிக்கப்பட்ட 24 நான்கு மணி நேரத்திற்குள் சாலிஹ் மாரடைப்பால் இறந்து போகிறார்.

இதற்கிடையே சாலிஹின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பெங்களூருவில் உள்ள மனிபால் மருத்துவமனையிலும், பூனேவில் உள்ள வைரஸ் பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்படுகிறது. சாலிஹ் இறந்து இரண்டு நாட்கள் கழித்து அவர் நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார் என்பது கண்டறியப்படுகிறது. அடுத்த பத்தே நாட்களில் கேரள மாநிலத்தில் மட்டும் 14 பேர் இந்த வைரஸ் தாக்கி மரணமடைந்துள்ளனர்.

*****

முதன்முதலில் மலேசியாவில் 1998-ல் கண்டறியப்பட்டது நிபா வைரஸ். பன்றிப் பண்ணைகள் நடத்திய விவசாயிகளிடையே பரவிய நிபா வைரஸ், சுமார் 300 பேரைத் தாக்கி 100-க்கும் அதிகமானவர்களை பலி வாங்கியது. இந்தியாவைப் பொருத்தவரை மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் முதல் முதலாக 2001-ம் ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. சுமார் அறுபத்தாறு பேர் நோய் பாதிப்புக்கு ஆளாகி 45 பேர் பலியானார்கள்.

மீண்டும் 2007-ம் ஆண்டு அதே சிலிகுரி மாவட்டத்தில் ஐந்து பேரை நிபா வைரஸ் தாக்கியது. இம்முறை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஐவரும் மாண்டனர்.
மலேசியாவைப் பொருத்தவரை 1999-க்குப் பின் நிபா வைரஸ் தாக்குதல் நிகழவில்லை. ஆனால், இந்தியா மற்றும் வங்கதேசத்தை சில வருட இடைவெளிக்கு ஒரு முறை தாக்கி வருகிறது.

ஐ.நா.-வின் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அபாயகரமான தொற்றுநோய்  பட்டியலில் ஜிகா மற்றும் எபோலா வைரஸ்களுடன் நிபா வைரசும் இடம் பிடித்துள்ளது. நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 70 சதவீதம் பேருக்கு மரணத்தை அளிக்கும் அளவுக்கு நிபா வைரஸ் வீரியம் மிக்கது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

நிபா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிபைன்ஸ் போன்ற நாடுகளில் பன்றிகள் மற்றும் குதிரைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியது நிபா வைரஸ். மலேசியாவில் இருந்து இந்தியத் துணைக்கண்டத்திற்கு வவ்வால்களின் மூலம் பரவியுள்ளது. பறக்கும் நரிகள் அல்ல்து டெரோபஸ் வவ்வால்கள் (Pteropus Bats) என்று அழைக்கப்படும் ஒரு வகையான பழந்தின்னி வவ்வால்களின் மூலம் இந்தியத் துணைக்கண்டத்தில் நிபா வைரஸ் பரவியுள்ளது.

கேரளாவில் சாலிஹ் குடும்பத்தினர் தமக்குச் சொந்தமான கினறு ஒன்றைத் தூர்வாரியதற்குப் பின்னரே அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்தக் கிணற்றினுள் வவ்வால்கள் வசித்து வந்துள்ளன.

நிபா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருவதை அடுத்து சமூக வலைத்தளங்களில் வவ்வால்களை மொத்தமாக ஒழித்து விட்டால் இந்நோயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது போன்ற சதிக்கோட்பாடுகள் பரவத் துவங்கியது.

இதற்கு பதிலளித்துள்ள விஞ்ஞானிகள் சிலர், பொதுவாக எபோலா, மார்பர்க், சார்ஸ் மற்றும் நிபா வைரஸ்கள் வவ்வால் மூலம் பரவுகின்றன என்றாலும், வவ்வால்கள் மட்டுமே வைரஸ் கடத்திகளாக இருப்பதில்லை. பன்றி, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் இதர பறவையினங்களின் மூலமும் வைரஸ்கள் பரவுகின்றன. இதற்காக ஒரு குறிப்பிட்ட மிருக இனத்தை மொத்தமாக அழித்து விடுவது தீர்வல்ல என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கேரள மாநிலம் கோழிக்கேட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தவரின் இறுதி சடங்கில் உறவினர்கள்.

குறிப்பாக வவ்வால்கள் மகரந்தச் சேர்க்கைக்கு துணைபுரிவதோடு இயற்கையின் பல்லுயிர்ச் சூழலில் (Biodiversity) ஒரு முக்கியமான இடத்தையும் வகிக்கின்றன. பொதுவாக கால்நடைகளைச் சரியாக பராமரிக்காமல் விடுவது மற்றும் விலங்கினங்களின் இயற்கையான வசிப்பிடங்கள் அருகி வருவதால் மனிதர்களின் வசிப்பிடங்களுக்குள் அவை அத்துமீறுவது போன்ற காரணங்களாலேயே விலங்குகளிடமிருந்து வைரஸ்கள் தொற்றுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

கேரளத்திலும் கூட, சாலிஹ் குடும்பத்திற்கு சொந்தமான கிணற்றில் டெரோபஸ் வவ்வால்கள் வசித்தது விதிவிலக்கானது எனக் குறிப்பிடுகின்றனர். பொதுவாக மரங்களிலேயே வாழும் இந்த இனத்தைச் சேர்ந்த வவ்வால்கள் கிணற்றில் வசிப்பது மிக அரிதானது என்கின்றனர்.

*****

பாரமைக்சியோவைரிடே (Paramyxoviridae)என்கிற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நிபா வைரஸ், பொதுவாக விலங்குகளைக் கடத்தியாக (Carrier) பயன்படுத்த வல்லது. ஆனால், இதே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற வைரஸ்களை விட அதிகளவிலான விலங்குகளைக் கடத்தியாக பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு இதன் மரபணு சமீப காலங்களில் மேம்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

ஆடு, மாடு, பன்றி, குதிரை உள்ளிட்ட கால்நடைகளில் இருந்து நாய்கள், பூனைகள் போன்ற வளர்ப்புப் பிராணிகள் வரை நிபா வைரசின் கடத்தியாகச் செயல்படும். பொதுவாக நிபா வைரஸ் தனக்கு கடத்தியாகச் செயல்படும் விலங்குகளைப் பெரிதும் பாதிப்பதில்லை.

பல லட்சம் வருடங்களாக இருந்து வரும் நிபா வைரஸ், சமீபத்திய ஆண்டுகளில் நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தாக்குப்பிடித்துப் பரவும் திறனைப் பெற்றுள்ளது; அதன் மரபணுக் கட்டுமானத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு முதலில் காய்ச்சல் தோன்றும்; அதைத் தொடர்ந்து அதிகளவு தலைவலியும் ஒருவிதமான குழம்பிய மனநிலையும் உருவாகும். உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் சரியாக ஒரே வாரத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மனித உடலில் புகுந்த உடன் வெகுவிரைவில் தனது எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ளும் நிபா வைரஸ், இரத்த நாளங்களில் அழற்சியை உண்டாக்கும்.

அடுத்து நரம்பு மண்டலத்தில் படர்ந்துள்ள எஃப்ரின் – பி2 மற்றும் எஃப்ரின் – பி3 என்கிற புரோட்டீன் திரவங்களை பாதிப்படையச் செய்வதன் மூலம் நோயாளியின் மூளை, நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகங்களைப் பாதித்து மரணத்தை விளைவிக்கும். மலேசியாவில் முதன்முதலாக மனிதர்களைத் தாக்கிய நிபா வைரஸ், 30 சதவீத மரணங்களை உண்டாக்கியது. அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்தியத் துணைக்கண்டத்தில் பரவிய போது 70 சதவீதம் அளவுக்கு மரணம் ஏற்படுத்தும் ஆற்றலை நிபா வைரஸ் அடைந்திருந்தது.

இந்த வைரசுக்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் செயல்பட்டு வரும் தொற்றுநோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சிகளுக்கான கூட்டமைப்பு (Coalition for Epidemic Preparedness Innovations (CEPI)) என்கிற ஆராய்ச்சி நிறுவனம் நிபா வைரசுக்குத் தடுப்பு மருந்துளைக் கண்டுபிடிக்க அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு மருந்துக் கம்பெனிகளுக்கு 25 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

எனினும், இந்நோய் மேற்குலத்திற்கு இதுவரை பெரும் அச்சுறுத்தலாக வளராத காரணத்தாலும், பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகள் இல்லாததால் சந்தை வாய்ப்புகள் குறைவு என்பதாலும் ஆராய்ச்சிப் பணிகள் மந்தகதியிலேயே நடந்து வருகின்றன.

உலகில் பரவும் ஆட்கொல்லி வைரஸ் கிருமிகளில் நான்கில் மூன்று பங்கு எண்ணிக்கையிலானவை விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக் கூடியவைகளாகவே உள்ளன. இரண்டாயிரங்களின் துவக்கத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகள் கொண்ட குழு ஒன்று, ஆட்கொல்லித் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க “ஒருங்கிணைந்த சுகாதார” (One Health) நடவடிக்கை ஒன்றைப் பரிந்துரை செய்துள்ளனர்.

இதன்படி மனிதர்கள் மற்றும் விலங்குகளின் சுகாதாரமும், விவசாயம் மற்றும் சூழலியல் சுகாதாரமும் முறையாகப் பேணப்பட வேண்டும் என்பதை முன்வைத்துள்ளனர். தற்போது மேற்குலக அரசாங்கங்கள் இந்த அணுகுமுறையை மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர்.

எனினும், இந்தியா போன்ற நாடுகளில் ஆட்கொல்லி நோய்கள் பரவிய பின்னரே அரசு நடவடிக்கையில் இறங்குகின்றது. நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்துவது, நோய் எதிர்ப்பு மற்றும் முன்னெச்சரிகைத் தடுப்பு மருந்துகள் கொடுப்பது என்கிற வழமையான பாணியே பின்பற்றப்படுகின்றது.

அரசே முன்னின்று நோய்கள் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாத சூழலில் தனிப்பட்ட முறையிலான சுகாதாரத்தைப் பேணுவது, வவ்வால் அல்லது பறவைகள் கடித்த பழங்களைத் தின்னாமல் தவிர்ப்பது போன்ற தனித்தீர்வுகள் மட்டுமே இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.

தூய்மை இந்தியா போன்ற ஓட்டை வாளிகளைக் கொண்டு கடல் நீரை வாரி இறைக்கும் முட்டாள்தனமான திட்டங்களுக்கு அரசு கோடிகளை வாரியிறைக்கும் வரை நமது மக்கள் ஆட்கொல்லி நோய்களுக்கு பலியாவதைத் தவிர்க்க முடியாது.

சாக்கியன்.

மேலும் :

வேதாந்தா முதலாளிக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் | ஆழி.செந்தில்நாதன் | ஆதவன் தீட்சண்யா | நவீன் | ஓவியா

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து 26.05.2018 அன்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தங்களது உள்ளக்குமுறலை, கண்டனத்தை பகிர்ந்து கொண்டனர்.

பகுதி – 4

சமூக செயற்பாட்டாளர் ஆழி.செந்தில்நாதன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, திரைப்பட இயக்குநர் நவீன், சமூக செயற்பாட்டாளர் ஓவியா ஆகியோரின் கண்டனப் பதிவுகள்.

தூத்துக்குடி படுகொலை : கண்டிக்காமல் இருப்பது பெருங்குற்றம் | அதிஷா | ஆடம்தாசன் | சல்மா | சுந்தர்ராஜன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து 26.05.2018 அன்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தங்களது உள்ளக்குமுறலை, கண்டனத்தை பகிர்ந்து கொண்டனர்.

பகுதி – 3

பத்திரிகையாளர் அதிஷா, திரைப்பட இயக்குநர் ஆடம்தாசன், கவிஞர் சல்மா, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், பத்திரிகையாளர் பரிசல் கிருஷ்ணா ஆகியோரின் கண்டனப் பதிவுகள்.

உயிருக்கு பயந்த தயிரு சாதமெல்லாம் ஒதுங்கு ! இது கபடிடா !

சென்னை போரூர் அருகில் உள்ள கெருகம்பாக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு புறநகர். அங்கே ஆளுயர மைக் செட்டுகள், மைதானம் முழுக்க பல வண்ணங்களில் கபடி விளையாட்டு எற்பாடு அறிவிப்புகள், நிகழ்ச்சி மேடையில் அலங்கார தோரணங்களுக்கு பதிலாக கட்டி தொங்கவிடப்பட்ட பரிசுப் பொருட்கள்; சில்வர் தவளை, மின்விசிறிகள் போன்றவை புதிதாக பார்ப்போருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

கபடி விளையாட்டுப் போட்டியில் அங்கே இருந்த இளைஞர்களின் கொண்டாட்டம், ஆடுகளத்தையே அதகளப்படுத்தியது. ஐ.பி.எல் இறுதி போட்டி நாளன்று (27.05.2018 – ஞாயிறு) இப்படி ஒரு காட்சியா? விளையாட்டு வீரர்களின் பரவசம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

அருகில் சென்று விளையாட்டு வீரர்களிடம் பேசினோம். அவர்கள் அடுத்தடுத்த போட்டிக்கான தயாரிப்பில் சுறுசுறுப்பாக இருந்தனர். கிடைத்த நேரத்தில் பேசுவதற்கு “அவசரம்… அவசரம்… சீக்கிரம் கேளுங்கள்” என்று உடல்மொழியில் பேச்சை தவிர்த்தனர்.

கிடைத்த நேரத்தில் சாலையோரங்களிலேயே துரித உடற்பயிற்சியை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பேசிய பேச்சும், சொன்ன தகவல்களும் கபடி விளையாட்டில் தங்கள் வாழ்க்கையை எப்படி கரைத்துக் கொண்டுள்ளனர் என்று மிரள வைத்தனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து 70-க்கும் மேற்பட்ட கபடி விளையாட்டு அணிகள் போட்டியில் கலந்துள்ளனர். ஒவ்வொரு அணியிலும் விளையாட்டு வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இதில் டாப் 10 அணிகளுக்குள் தாங்களும் நிற்க வேண்டும், அதை தவறவிடக் கூடாது என்று குழு உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் எச்சரிக்கின்றனர். தற்போது இருக்கும் வரிசையில் இன்னும் எப்படி முன்னேறுவது என்று தங்கள் பலம் – பலவீனங்களை அலசுகின்றனர்.

அரகம்தென், பாலவேடு, விருகை, கெருகை, அனகை, தண்டலம், மலையம்பாக்கம், சின்ன போரூர் அணிகள் மற்ற வீரர்கள் மத்தியில் மதிப்போடு வலம் வருகின்றனர். டாப் 10 வரிசையில் அவர்கள்தான் “கெத்து” என்றனர்.

களத்தில் இறங்கும் ஒவ்வொரு அணியும் திறமையானவர்கள் 7 பேரை போட்டியில் அனுமதிக்கின்றன. களத்தில் இறங்கும் வீரர்கள் ஒவ்வொருவரும் பொதுவில் கபடி விளையாட்டில் சிறந்தவர்கள் மட்டுமல்ல, களத்தில் எதிரியை வீழ்த்துவதற்கு 7 நிலைகளில் இருந்து தாக்கக்கூடிய தனிச்சிறப்பு பெற்றவர்கள்.

வலது மூலையிலிருந்து தாக்கும் வீரர், இடது மூலையிலிருந்து தாக்கும் வீரர், இவர்களுக்கு துணையாக உள்ளிருந்து உதவும் வீரர்கள் இருவர், அவர்களுக்கு பின்னால் “ஆல்டர் இன்” என்று சொல்லக்கூடிய எதிரியின் கடைசி தப்பித்தலுக்கு முட்டுக்கட்டை போடும் ஒருவர் – என்று கபடி விளையாட்டை ஒரு யுத்தக்களம் போலவே வியூகம் வகுத்து விளையாடுகின்றனர்.

பாடிவரும் எதிரணி வீரரை எல்லைக்குள் உள்ளிழுத்து, அதே நேரத்தில் கோட்டைத் தொடவிடாமல் போக்குக் காட்டி, திடீரென அவரை முடக்கி நிலைகுலைய வைப்பது, வென்று அடக்குவது ஒரு கலை.

ஒவ்வொரு மணித்துளியும் திடீர் திடீரென புதிய வியூகங்கள் வகுப்பதும், அதை தன்னுடைய உடல்மொழியின் மூலம் சக வீரர்களுக்குப் புரியவைப்பதும், ஏழு வீரர்களும் ஒரே மூளையாக மாறி அடக்குவதும், மின்னலடிக்கும் நேரத்தில் நடக்கும் அற்புதம் – ஒரு குழு சாகசம்.

தனிநபர் திறமைகள் இங்கு குழுவின் துரித உதவியின்றி முழுமை அடையாது. ஒரு நூல் பிசகினாலும் பார்வையாளர்களின் விமர்சனங்கள் எதிரொலிக்கும்.

பொருளாதார ரீதியிலும் சமூகரீதியிலும் அடித்தட்டில் உள்ளவர்களே  கபடி விளையாட்டில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

*****

“உயிருக்கு பயந்த தயிறு கும்பல் (பார்ப்பனர்கள்)தான் கபடி விளையாட்டை தீண்டத்தகாத விளையாட்டாக ஒதுக்கியது. அது மலையேறிவிட்டது. இனி கபடியும் ஐ.பி.எல் மாதிரி உலகம் முழுக்க ரசிக்கப்படும். அதன் ஆரம்பம்தான் “புரோ கபடி”. தமிழக வீரர்கள் பிரதாப் பிரபஞ்சன், திவாகர், அருண், ஜீவ குமார், சுரேஷ்குமார், வினோத் ஆகியோர் ஜெய்ப்பூர், மும்பை, உ.பி., ஹைதராபாத், டில்லி அணிகளில் விளையாடுகின்றனர்” என்றார் ஒரு கபடி வீரர்.

சென்னையைச் சுற்றிய மாவட்டங்களில் மட்டும் 350-க்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட விளையாட்டு அணிகள் இருக்கின்றன. இவர்கள் தங்களுக்குள் இணைந்து ஆண்டு முழுவதும் கபடி போட்டிகள் நடத்துகின்றனர். சுற்று முறையில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுகளில் போட்டிகளை மாறி மாறி நடத்துகின்றனர். ஆண்டு முழுக்க வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கும், தனித் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கும் இப்போட்டிகள் உதவுகின்றன.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு என்ற தர வரிசைப்படி நான்கு அணிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. வெற்றிபெறும் அணிகளுக்கு ரூ.25,000 முதல் 10,000 வரை பணமும் கேடயமும் வழங்கப்படுகின்றன. இந்தப் பரிசுப் பொருட்களை ஊரில் உள்ள வசதிபடைத்த பிரமுகர்களிடம் நன்கொடையாகப் பெறுகின்றனர்.

“ஹோம் கிளப்” என்ற உள்ளூர் அணி, “செட்டிங்க் கிளப்” என்ற வெளியூர் அணி என இருபெரும் பிரிவாக போட்டிகளை நடத்துகின்றனர். இதற்கென்று தனித்தனி விதிமுறைகளை வகுத்துக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக உள்ளூர் அணிதான் பகுதிவாழ் இளைஞர்களின் தேர்வாக இருக்கிறது. இவ்வணியின் வீரர்கள் வட்டார அளவில் வெற்றிப்பெற்று புகழ் பெற்றவுடன், தனியார் கல்லூரிகள், பெயரும் புகழும் சம்பாதிக்க அவ்வீரர்களுக்கு பல சலுகைகளைக் கொடுத்து தங்கள் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள போட்டிபோடுகின்றன. வறுமையில் வாடும் இவ்விளைஞர்களும் அதை ஒரு வரப்பிரசாதமாகக் கருதுகின்றனர்.

தங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி, மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றிபெற்று போலீசு வேலையிலும், தனியார், பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலைக்குச் செல்லலாம் என்ற கனவோடு இருக்கின்றனர். இதையே தங்கள் பெற்றேர்களிடம் சொல்லி அவர்களது எதிர்ப்பை சமாளிக்கிறோம் என்கின்றனர்.

“எனக்கு படிக்கவே தெரியாது. இருந்தாலும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேர்த்துக் கொண்டார்கள்” என்று வெடித்துச் சிரிக்கிறார், கபடி வீரர் சிவா.

விழா ஏற்பாட்டாளர்கள், வேதனையுடன் “எங்கள் ஊரில் பிழைக்கவந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், பொதுத் திடலில் போட்டிகள் நடத்தினால்கூட போலீசுக்கு புகார் கொடுக்கிறார்கள். விழாக்கூட்டமும், சத்தமும் தொந்தரவாக இருக்கிறது என்று எங்கள் மீது வழக்கும் தொடுக்கிறார்கள். போலீசாரும் இதையே காரணம் காட்டி விழாவையே முடக்க நினைக்கிறது. அவர்களை சமாளிக்க போலீசாரை விழாக்களுக்கு அழைத்து உபசரித்து அனுப்புகிறோம்” என்கின்றனர். அடுக்கு மாடி குடியிருப்பில் அடைந்து கிடைக்கும் நடுத்தர வர்க்கம் சின்னத்திரையில் பெருஞ்சத்தத்துடன் ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்கும். அவர்களின் வாரிசுகளோ வீடியோ கேம்களில் மூழ்கி இருக்கும். அவர்களது உலகில் கபடியும் கபடிப் போட்டியும் இழிவான தொந்தரவான ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

*****

சென்னை போரூர் அருகே இருக்கும் புறநகர் பகுதி கெருகம்பாக்கம். ஒரு மாநகரத்தின் பகுதி போன்று அல்லாமல் கிராம சாயலுடனேயே இருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் மட்டுமே அதன் அடையாளத்துடன் ஒட்டாமல் தனித்து நிற்கிறது. மண்ணின் மைந்தர்களும், அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளும் தண்ணீரில் எண்ணெயாக வாழ்வதாகவும் சொல்லலாம். இரண்டு நாள் தொடர் கபடி போட்டியின் இரண்டாம் நாள்தான் மே 27.

ராஜலிங்கம் (வெள்ளை சட்டை), கெருகை கபடி அணியின் முன்னாள் கேப்டன்.

நான்காவது தலைமுறையினர் இப்போது களத்தில் விளையாடுகின்றனர். இளைஞர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்துவதுதான் எங்கள் விருப்பம். இரண்டு மாதங்கள் இதற்கான தயாரிப்பு வேலைகளை செய்வோம்.

பணம் சேகரிப்பதும், 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு குழுக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி, சம்மதம் பெறுவதும் அவர்களை வரவேற்று உபசரித்து வழியனுப்பி வைப்பது மிகப்பெரும் வேலை.

எந்த அசம்பாவிதமும் இல்லாமல் இதை செய்ய வேண்டும் என்ற கவலை கடைசிவரை எங்களை வாட்டும். வீரர்கள் அந்தந்த அணி சார்பாக வரும் அணி நிர்வாகிகள், ரசிகர்கள், பார்வையாளர்கள், பகுதி மக்கள், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், போலீசு என ஒவ்வொருவரையும் சமாளிக்க வேண்டும்.

சதீஷ், கபடி வீரர், கெருகை

நான் 10-வதுதான் படிச்சிருக்கேன். எங்க ஊரு சீனியர்களைப் பாத்து எனக்கு சின்ன வயசிலேயே கபடி மேல ஆசை. பல போட்டிகளுக்கு பத்துக்கும் மேற்பட்ட ஊர்களுக்கு போய் வெளையாடியிருக்கேன். பலமுறை உடம்புல காயம், ரணமாயிடும். அதுக்காக வெளையாடுறத நிறுத்தமாட்டோம். அந்த நேரம் வெளையாட முடியலேன்னுதான் வருத்தமாயிருக்கும்.

பாடிக்கின்னு ரெய்டு போவும்போது ஆப்போனன்ட் (எதிர் அணி வீரர்) புடிச்சான். அவனுக்கு மேலே டைவ் அடிச்சி கோட்ட தொட்டேன். அவ்ளோதான் எழுந்திருக்க முடியல. இடது கை மணிக்கட்டு உடைஞ்சி தொங்குது. ஜி.எச்-ல ஒரு மாசம் வைத்தியம், 2 வருஷம் வேலையே செய்ய முடியல. திரும்பவும் வெளையாட வந்துட்டேன்.

ராஜ்கமல், கபடி வீரர்

நானும் பத்தாவதுதான் படிச்சேன். அதுக்கு மேல படிப்பு வரல. விளையாட்டே கதின்னு இருந்துட்டேன். எனக்கு எத்தனையோ தடவ விளையாடும்போது செம அடி. பாடிக்கினே ரெய்டு போவும்போது ஆப்பனட் (எதிரணி வீரர்) நம்ம மேலே பச்சாதபமே பாக்க மாட்டான். அவனுக்கு தேவை பாயிண்ட். நம்ம மேல பாசம் காட்டுற நேரமா அது?

அவன் கண்ணுக்கு நாம பாயிண்ட். கொலைவெறியோட லாக் பண்ணுவான். கண்ணு தெறக்குற நேரத்தில எல்லாம் முடிஞ்சிடும். எழுந்திருக்க முடியாது. சோல்டர் இறங்கும். நாலு பேர் மேல வுழும்போது பாதுகாப்பாவா வுழுவான். கழுத்து நரம்பு ஜிவ்வுனு இழுக்கும். அது கொஞ்ச நாளுக்குதான், திரும்பவும் கபடி ஆட ஓடியாந்துருவோம்.

மூவேந்தன், கபடி வீரர்

“படிப்ப பத்தி கேக்காதீங்க. எல்லாரும் படிச்ச படிப்புதான். 10-வது. அப்ப… கரெக்டா சொல்ட்டனா?

எங்களுக்கு போலீசு ஆவுறதுதான் லட்சியம். மத்த வேலை எல்லாம் எங்களுக்கு கிடைக்காது. சின்ன பையனிலிருந்து இந்த வெளையாட்டுதான். மூக்க தொட்டு பாருங்க கொளகொளன்னு இருக்கும். மூக்கு தண்டு உடைஞ்சே போச்சு. எதிரியை லாக் பண்ணும் போது கட்டுமேனிக்கு உதைப்பான். பாயிண்ட் அவனுக்கா, நமக்கா? இதுதான் அங்க.

ஆளெல்லாம் அப்ப கண்ணுக்கு தெரியாது. முட்டிமேல உதைச்சா, முட்டியே கழண்டிடும். தொடை ஜவ்வு அறுந்துறும். எதுவும் நடக்கும். அடுத்தது எப்படி ஜெயிக்கிறதுன்னுதான் அப்பவும் யோசிப்போம். அடிபத்தி பெருசா அலட்டிக்க மாட்டோம்.”

சுரேஷ், தனுஷ், சுபாஷ் – முறையே 7-வது, 10-வது, 8-வது படிக்கும் மாணவர்கள்.

“நாங்க எல்லாம் சி செட் பிளேயர்ஸ். சீனியர் எங்களுக்கு சொல்லி தருவாங்க. நாங்க பக்கத்தில, மாந்தோப்பு, கொளப்பாக்கம், அனகாபுத்தூர் போய் வெளையாடுவோம். எங்களுக்கு ஆப்பனட் தண்டலம், போரூர், மணிமேடு பசங்கதான். நல்லா வெளையாடுனா காலேஜ்ல சீட் கெடைக்குமுன்னு அண்ணங்க சொன்னாங்க.”

அப்பு, ப்ளஸ் 2 படிக்கும் மாணவர்

“இது வீர வெளையாட்டுன்னா, சாம்பார், தயிர் சோறு துன்றவன்லாம் இத கடைசி பெஞ்சு வெளையாட்டுன்னு சொல்வாங்க. உயிருக்கு பயந்தவனுங்க. நாங்க கயிறு போட்ட பசங்களயெல்லாம் இப்படித்தான் கலாய்ப்போம். அவனுங்க கோச்சுக்கினுவாங்க, ஆனா நாங்க விடமாட்டோம். திரும்பவும் அவனுங்கள ஃபிரண்ட் ஆக்கிப்போம்.”

கபடி போட்டி நடுவர்

“கபடி வெளையாட்டுல பல லெவல் இருக்கு. ஒரு டீம்ல மொத்தம் 12 பேர். 7 பேர் களத்துல, 5 பேர் சப்ஸ்டியூட்.

வீரர்கள் களத்துல இறங்கும்போது மது, போதைப் பொருட்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது. விதியை மீறும் வீரர்களுக்கு முதலில் பச்சை கார்டு காண்பித்து எச்சரிப்போம். திரும்பவும் தவறு செய்தால், மஞ்சள் கார்டு காட்டுவோம்.

குறிப்பிட்ட வீரர் தகாத முறையில் எதிரணி வீரர்களுக்கு உடல் ஊறு விளைவித்தால் சிவப்பு கார்ட் காட்டி வெளியேற்றுவோம். அந்த நபர் விழாவின் எந்த விளையாட்டிலும் கலந்துகொள்ள முடியாது. உயிருக்கு ஆபத்து ஏற்படும்படி நடந்துகொண்டால் அவரை விளையாட்டிலிருந்து விளக்கும்படி மாவட்டத் தலைமைக்கு சிபாரிசு செய்வோம்.”

சாம்ராஜ், விஸ்காம் மாணவர்

கபடி விளையாட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் மாதிரி ஊடகமோ, அரசோ கண்டுகொள்ளவில்லையே, ஏன் என்று கேட்டோம்.
சட்டென, “மோடி இருக்குற வரைக்கும் கண்டுக்காத இருக்குறதே நல்லதுன்னு நினைங்க. இல்லன்னா விலைவாசி, பெட்ரோல், செல்லாத ரூபா நோட்டு, ஜி.எஸ்.டி மாதிரி கபடியும் கைக்கெட்டாத விளையாட்டா மாறிடும்.

மணிகண்டன், 7வது படித்து முடித்துவிட்டு கொத்தனார் வேலை.

மணிகண்டன்

தங்கள் படிப்பை சொல்லும்போது ஒவ்வொருவரும் வெட்கப்படுகின்றனர். அதேசமயம், அடுத்தவரின் படிப்பு, மார்க், வேலையைச் சொல்லி கிண்டலடித்து, அப்பாவிக் குழந்தைகளாய் நம்மிடம் ஒட்டிக்கொள்கிறார்கள்.

“நாங்க தோத்துட்டோம் அண்ணே, நாங்க நல்லா விளையாடினோமா?” உண்மையில் இவர்கள் அசாதரணமான கபடி வீரர்கள்.

குறைந்த உணவு, அதிக உற்சாகம். கடும் குடும்பச்சூழல், அவற்றின் நடுவே நட்சத்திரங்களாய் ஜொலிக்கிறார்கள்.

கில்லி படத்தில் விஜய் கபடி விளையாடுவது போல் உங்களால் முடியுமா? என்ற கேள்விக்கு வெடித்து சிரிக்கிறார்கள்.

“அது கில்லி இல்லண்ணா, பல்லி” என்று கிண்டலடிக்கிறார்கள். 7 பேர அவுட்டாக்குவாரா…? இங்க வரச்சொல்லுன்னா அவர…”,என்று சிரிக்கிறார்கள்.

சதீஷ், முருகன், விஜய், சமீர் – பெருங்குடி பகுதி கபடி அணியினர்.

கில்லி படத்தில் நடிகர் விஜய் கபடி ஆடும் காட்சிகளை கலாய்க்கும் நிஜ வீரர்கள்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

மக்கள் அதிகாரம் மீதான அவதூறுகள் | பத்திரிகை செய்தி

தேதி; 29.05.2018

பத்திரிக்கைச் செய்தி!

அரசாணை என்பது கபட நாடகம் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடாது!
போராடும் மக்களை பயபீதியில் உறைய வைத்து
போராட்டத்தை கைவிடச் செய்யவே துப்பாக்கிச் சூடு – படுகொலை!

தூத்துக்குடியில் கடந்த 22-05-2018 அன்று கொலைகார ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக போராடி துப்பாக்கிச்சூட்டில் உயிர் நீர்த்த 13 போராளிகளுக்கு மக்கள் அதிகாரம் சார்பில் வீர வணக்கத்தை செலுத்துகிறோம். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினரின் துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எல்லாக் கட்சி ஆட்சிகளிடமும் முறையிட்டுள்ளோம். மாவட்ட கலெக்டர்கள், போலீசு அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் நூற்றுக்கணக்கில் மனுக்கொடுத்தாகிவிட்டது. ஒன்றும் நடக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் நச்சுகளால் இன்று மூச்சுக்காற்றும் நஞ்சாகிவிட்டது, குழந்தைகள் பிறக்கும் போதே ஊனமாக பிறக்கிறார்கள், புற்றுநோயால் சாகிறோம், இன்னும் பல நோய்களால் தாக்கப்பட்டு வருகிறோம்.  கொஞ்சம் கொஞ்சமாக ஏன் சாக வேண்டும்?.

இந்த போராட்டம் மட்டுமல்ல, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, சாகர்மாலா, சரக்குப்பெட்டக இணையம் எதிர்ப்பு போராட்டங்கள் இனி தமிழகத்தில் நடக்க கூடாது, மீறினால் சுட்டுத்தள்ளி விடுவோம் என்ற பயபீதியை போராடும் மக்களிடம் ஏற்படுத்தி பணியவைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் திட்டமிட்ட படுகொலை, போலீசு வெறியாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆலையை முடு என அமைதி வழியில் தொடர்ந்து போராடிய தூத்துக்குடி மக்கள் அதே வழியில் நூறாவது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முடிவு தெரியாமல் வீடு திரும்ப மாட்டோம் என முடிவு எடுத்தனர்.  22 ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் மக்களை அமைதி வழியில் போராட அனுமதித்திருந்தால் எதுவும் நடந்திருக்காது. அல்லது தற்போது அரசாணை போட்ட அரசு பத்து நாட்களுக்கு முன்பு செய்திருந்தால் இந்த கொடூரமான அரசு படுகொலை நடந்திருக்காது.

போராட்டத்தை பிளவுபடுத்தி சீர்குலைத்து ஒடுக்க முயன்றது, 144 தடை உத்திரவு போட்டது, அலை அலையாக காட்டாற்று வெள்ளமாக வந்த மக்களை தடுத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கி மண்டையை உடைத்தது, கலெக்டர் போன்ற வருவாய் துறை அதிகாரிகள் இல்லாமல் ஆயுதங்களோடு போலீசாரே முழுமையாக மக்களை மூர்க்கத்தனமாக எதிர்கொண்டது, இவைகள்தான் மக்கள் ஆத்திரப்படுவதற்கு காரணம்.

பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இப்படி போராட்டத்தை வெளியூர்காரன், உள்ளுர்காரன் என பிரித்து பேசவில்லை. ஸ்டெர்லைட் முதலாளி, கலெக்டர், போலீசு எஸ்.பி. இவர்களெல்லாம் உள்ளுரா?.

தீ வைப்பு சம்பவங்கள், வன்முறை போன்றவற்றில் போலீசாரின் திட்டமிட்ட பங்கு எவ்வளவு என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதிநாளில் போலீசு நடந்துகொண்டதை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். ஸ்டெர்லைட் ஆலையின் முதலாளி, முதலமைச்சர், டி.ஜி.பி. அளவில் திட்டமிடப்பட்டு முழுமையாக ஒரு கொடூரமான கொலைவெறித் தாக்குதலை போராடிய மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. அருகில் இருந்தும், குறிவைத்தும் நேருக்கு நேராக போராடிய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போராடும் முன்னணியாளர்களை இயக்க நிர்வாகிகளை குறிபார்த்து சுட்டு கொலை செய்திருக்கிறார்கள். எத்தனை பேர் பலியானார்கள் என்பதை அரசு திட்டமிட்டு மூடி மறைத்து வருகிறது.

இந்த போராட்டம் மட்டுமல்ல, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, சாகர்மாலா, சரக்குப்பெட்டக இணையம் எதிர்ப்பு போராட்டங்கள் இனி தமிழகத்தில் நடக்க கூடாது, மீறினால் சுட்டுத்தள்ளி விடுவோம் என்ற பயபீதியை போராடும் மக்களிடம் ஏற்படுத்தி பணியவைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் திட்டமிட்ட படுகொலை, போலீசு வெறியாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம், மக்களாட்சி, போலீசு மக்களின் காவலர்கள் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பித்தலாட்டம் என்பதை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

தூத்துக்குடி கிராம – நகர பொது மக்கள் அடங்கிய ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்புதான் போராட்டத்தை வழி நடத்தி வந்தது. அதன் வழிகாட்டுதலை அனைத்து பிரிவு மக்களும் ஆதரித்து பங்கேற்று வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்புகள் அதை மூடியேத் தீர வேண்டும் என அறிவுப்பூர்வமாக நன்கு அறிந்து கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு ஒற்றுமையாக போராடி வருகின்றனர். அம்மக்களை போராடுவதற்கு வெளியில் இருந்து தூண்டுகிறார்கள் என அனில் அகர்வாலும் சொல்கிறார். போலீசும் சொல்கிறது. இது போராடும் மக்களை முட்டாளாக கருதி கொச்சைப்படுத்துவதாகும். ஐ.ஏ.எஸ். அல்லது அமைச்சர்கள் யாரானாலும் தூத்துக்குடி பெண்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? முடியாது.

பல ஆயிரம் கோடி மூலதனத்தில் இயங்கும் பன்னாட்டு காரப்பரேட் முதலாளியை எதிர்த்து ஒரு மாவட்ட மக்கள் மட்டும் எப்படி போராடி வெல்ல முடியும். மக்கள் போராட்டத்தை ஆதரித்து அதில் பங்கேற்பவர்களை விசமிகள், வன்முறையாளர்கள் என்பது முற்றிலும் தவறானது கண்டிக்கத்தக்கது.

நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்பவர்கள் யாரும் அந்த மக்களின் போராட்டத்தில் கலந்து கொள்வதில் தவறு இல்லை. போராடி வரும் பல ஆயிரக்கணக்கான மக்களில் பலர் பல்வேறு அமைப்பு, கட்சிகளை சார்ந்தவர்கள் தான். பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இப்படி போராட்டத்தை வெளியூர்காரன், உள்ளுர்காரன் என பிரித்து பேசவில்லை. ஸ்டெர்லைட் முதலாளி, கலெக்டர், போலீசு எஸ்.பி. இவர்களெல்லாம் உள்ளுரா?. பல ஆயிரம் கோடி மூலதனத்தில் இயங்கும் பன்னாட்டு காரப்பரேட் முதலாளியை எதிர்த்து ஒரு மாவட்ட மக்கள் மட்டும் எப்படி போராடி வெல்ல முடியும். மக்கள் போராட்டத்தை ஆதரித்து அதில் பங்கேற்பவர்களை விசமிகள், வன்முறையாளர்கள் என்பது முற்றிலும் தவறானது கண்டிக்கத்தக்கது.

மக்கள் அதிகாரம் வன்முறை அமைப்பு அல்ல. டாஸ்மாக்கை மூடும் போராட்டம், விவசாயிகள் தற்கொலை, போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம், பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். மத வெறி பாசிசம்,  பணமதிப்பு நீக்கம், ஒக்கிப்புயல், மீனவர்கள் படுகொலை, வெள்ளப்பேரழிவு இப்படி எண்ணற்ற பிரச்சினைகளில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம், ஆர்ப்பாட்ம், பொதுக்கூட்டம், மாநாடு என நடத்தி தேசநலன், மக்கள் நலன் சார்ந்து கொள்கைப் பூர்வமாக தமிழக மக்களின் மதிப்பை, நம்பிக்கையை பெற்றுள்ளது. போராட்டத்தை வைத்து பிழைப்புவாதம் செய்யாமல் தியாகப்பூர்வமாக போராடுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

போராட்ட உணர்வுகள், போராட்ட ஒற்றுமைகளை மழுங்கடிக்கச் செய்ய அவர்களுக்கு சிலகாலம் தேவை. அது முடிந்தவுடன் மீண்டும் கோர்ட் உத்திரவுப்படி ஆலையை இயக்குவார்கள்.

தேர்தல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இது ஆட்சியாளர்களுக்கும் போலீசுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடத்திய போராட்டத்தில் திட்டமிட்டு போலீசு நடத்திய துப்பாக்கிச்சூடு வன்முறை வெறியாட்டத்திற்கு காரணம் விஷமிகள், சமூக விரோதிகள், என சித்தரித்து மக்கள் அதிகாரம் அமைப்பை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் நோக்கத்தில் போலீசும் ஆட்சியாளர்களும் செயல்படுகின்றனர். இதற்கு  சில பத்திரிக்கை – ஊடகங்கள் பலியாகி மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது அவதூறு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை, அதன் அடிவருடியான போலீசின் இந்த பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்பத்தயாராக இல்லை. போலீசு எப்போதும் போராடும் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, அனைத்துப் பிரிவு மக்களுக்கும் எதிரான வன்முறை கருவிதான்.

தமிழக அரசு தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட போடப்பட்டுள்ளது தமிழக அரசின் அரசாணை அல்ல, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு அதிகாரி மூலம் போடப்பட்ட உத்திரவுதான். இது வெற்றுக்காதிகம், வலுவற்றது. இதற்கு நீதிமன்றத்தில் உடனே தடை வாங்கிவிட முடியும். இதை வெற்றி என கருதி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது. போராட்ட உணர்வுகள், போராட்ட ஒற்றுமைகளை மழுங்கடிக்கச் செய்ய அவர்களுக்கு சிலகாலம் தேவை. அது முடிந்தவுடன் மீண்டும் கோர்ட் உத்திரவுப்படி ஆலையை இயக்குவார்கள். எனவே தமிழக அரசு கொள்கை முடிவாக தமிழகத்தில் இனி காப்பர் ஆலையை இயக்க அனுமதிக்க மாட்டோம் என முடிவு செய்து அதை சட்டமாக இயற்ற வேண்டும். அதுமட்டுமல்ல ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்கடி மக்கள் எந்த காலத்திலும் இயக்க அனுமதிக்க மாட்டார்கள் என்ற போராட்ட உறுதிதான் வேதாந்தா முதலாளி நாங்கள் தமிழகத்தலிருந்து ஸ்டெர்லைட் ஆலையை காலி செய்து எடுத்து கொண்டு போகிறோம் என்று அறிவிக்க வைக்கும். அதுதான் நிரந்தரமான இறுதியான வெற்றி. 

♦ இரத்தத்தை உறைய வைக்கும் படு பயங்கரமான இந்த துப்பாக்கிச் சூடு படுகொலைக்கு காரணமான  முதல்வர், போலீசு அதிகாரிகள் கொலை வழக்கில் தண்டிக்கப்பட வேண்டும்.

♦ சுட்டுக் கொன்றுவிட்டு இழப்பீடு தந்தால் போதும் என கருதுவது துப்பாக்கிச்சூட்டைவிட கொடூரமானது வக்கிரமானது. இந்த துப்பாகிச் சூடு குறித்து உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

♦ கொலைகாரர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கவே ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை பயன்படும். டி.ஜி.பி. தூத்துக்குடி எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி., மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

 

இவண்
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்.

கலந்து கொண்டோர்:
வழக்குரைஞர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
தோழர் காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்.
தோழர் வெற்றிவேல் செழியன், மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

____