டெல்லியின் கொம்பைப் பிடி : தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு !
பொங்கல் விடுமுறையை ரத்து செய்கிறது மோடி அரசு. “கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே” என்று கேலி பேசுகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி. “திராவிட இயக்கத்தை அழிப்போம்” என்கிறார் பொன். ராதாகிருஷ்ணன். அடக்க வேண்டியது யாரை? காளையையா, டில்லியையா?
மாவோயிஸ்டுகளுக்கு வழக்காடினால் கைதா ? ஆர்ப்பாட்டம் !
வழக்கறிஞர் முருகனை விடுதலை செய்! மாவோயிஸ்டுகளுக்கு சட்ட உதவி அளிப்பது குற்றமல்ல! என்ற முழக்கத்தின் கீழ் 12.01.2017 வியாழன் அன்று காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஊரே காஞ்சிருச்சி உயிர் மூச்சு ஓய்ஞ்சிருச்சு – மகஇக புதிய பாடல்
இலாபம், விளம்பரம் போன்ற முதலாளித்துவ கறையான்கள் இன்றி மக்களின் பங்களிப்புடன் நமது முயற்சிகள் வெற்றி பெறவும், நமது கருத்தை பரப்பவும் உங்களது ஆதரவு அவசியம். பாடலை பகிருங்கள், நிதியுதவி தாருங்கள்!
விவசாயிகள் மரணம் : வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் தமிழக அரசு !
விவசாயிகளை முழுமையாகக் காப்பாற்றும் வரை மக்கள் அதிகாரம் சார்பில் பல்வேறு விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து பிரச்சாரம், பொதுக்கூட்டம், போராட்டம் என டெல்டா மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம்.
தூத்துக்குடி விவசாயிகளின் துயரம் !
கடன்காரன் 10 பேர் மத்தியில காசு எங்கேன்னு கேட்டுட்டா அது அசிங்கமில்லே! கிராமத்துல வூட்டு வாசல்ல வெச்சு கேட்டுட்டாலே சொந்த பந்தத்துக்கு அது பரவீடும்! அதுனாலதான் வெறுத்துப்போய் மருந்தடிக்கிறாங்க!
பிள்ளை ஊனம்னு விட்டுட்டு போக முடியுமா ?
இதற்கு முன் கிராமத்திற்கு சென்றால் உணவுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் இப்போது எங்களுக்கே சாப்பாட்டுக்கு வழியில்லை என்று வெளிப்படையாகச் சொல்லுகிறார்கள். கையில் ஒரு பைசாகூட இல்லை என்கிறார்கள்.
திருவாரூர் ஆர்ப்பாட்டம் – குடும்பத்தோடு வாருங்கள் !
சோறு திங்கும் அனைவருக்கும் சொந்தமான துக்கம் இது ! உழவு இழவான நாட்டில் பொங்கல் ஒரு கேடா ? உழவருக்காக பொங்கி எழாவிட்டால் இது உயிருள்ள நாடா ?
டெல்டா மாவட்டங்களில் பிரம்மாண்டமான பிரச்சாரம் – உங்களையும் அழைக்கிறது மக்கள் அதிகாரம்
இந்த அரசை கழுத்தில் துண்டு போட்டு இழுத்து வருவோம் என நம்பிக்கை ஊட்ட டெல்டாவிற்கு குடும்பத்தோடு வாருங்கள். உரிமையோடு அழைக்கிறது மக்கள் அதிகாரம். மக்கள் அதிகாரம் திருவாரூர் நாகை தஞ்சை மாவட்டங்கள் தொடர்புக்கு – 99623 66321
நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி – திருவாரூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !
காவிரியை தடுத்த மோடியும் ஆற்று மணலைக் கொள்ளையடித்த அதிமுக-ரெட்டி-ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள். இவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல்செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !
எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது !
சாப்பாட்டு வேளையின் போது மற்றவர்களிடமிருந்து தொலைவாகவே நாங்கள் உட்கார அனுமதிக்கப்படுவோம். நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்? அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்” என்கிறார் திவ்யேஷ்.
சின்னம்மாவுக்கு அதிர்வேட்டு – விவசாயி வீட்டில் ஒப்பாரி – நேரடி ரிப்போர்ட்
“அக்கினிக்கு மருந்தடிச்சோம், வெள்ளெலியா பறக்குது - வெள்ளெலிக்கு மருந்தடிச்சோம் புளுடோனியா நெலியுது - என்னென்னவோ மருந்தடிச்சோம் எந்தப் புழுவும் சாவல - இந்தச் சர்க்காரச் சாகடிக்க மருந்திருந்தா தேவல”
கடுங்குளிரிலும் தளராத அமெரிக்க பூர்வகுடி மக்கள் போராட்டம் !
இந்த மக்கள் போராடும் போர்க்களத்தின் தன்மை தான் நம்மை மிகவும் நெகிழவைக்கிறது. உறைபனி மற்றும் பனிப்புயலுக்குப் பெயர் பெற்ற அந்த இடத்தில் சற்றும் தளராத மக்கள் உறைபனி பொழியும் அந்த வெட்டவெளியிலேயே தங்குமிடம் அமைத்துப் போராடி வருகின்றனர்.
DYFI மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் ! – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு கண்டனம் !
சட்ட விரோதமாக நடந்து கொண்ட போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போரடுவதுடன் உழைக்கும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.
அமெரிக்க நலனுக்காக வேலை நீக்கம் செய்யப்படும் வங்கதேச தொழிலாளிகள்
கூலி உயர்வு கேட்டு வங்கதேச ஆடைத்தொழிலாளர்கள் நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களால் அமெரிக்க - ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிற்துறை முடங்கியது.
நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி – கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய் !
காவிரியை தடுத்த மோடியும், ஆற்று மணலை கொள்ளையடித்த அதிமுக -ரெட்டி- ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள்! கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !























