பொறுக்கி கவர்னர் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன் !
குடியரசு தினத்தன்று மேகாலய சிவில் சமூக அமைப்புகள் ஆளுநர் மாளிகை முன்பு சண்முகநாதனை பதவி நீக்க கோரி போராட்டம் நடத்தியுள்ளார்கள். மேகாலயா தாய்வழி சமூகத்தை அடிப்படையாக கொண்டது என்றும் இம்மாநிலத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஜெயா பெண்ணரசியா ? இம்சை அரசியா ?
பெண் என்ற காரணத்தை முன்வைத்து, ஜெயாவின் ஆட்சிக் காலங்களில் நடந்த அனைத்துக் குற்றங்களில் இருந்தும் ஜெயாவை விடுவித்துவிட்டு, அவரை மதிப்பீடு செய்வது அறிவுடமையாகாது.
கலவரம் செய்த போலீசை கைது செய் ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
காளைக்காக திரண்டவர்கள், போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் திரள வேண்டும். போராட்டம் தான் நமக்கு நிரந்த பாதுகாப்பு போலீசு என்றைக்கும் பொது மக்களுக்கு ஆபத்தானது என்பதை மீண்டும் மீண்டும் போலிசே நிருபித்து வருகிறது.
ஜெயாவின் மறைவுக்கு அனுதாபம் கொள்ள எந்த நியாயமும் இல்லை !
தானே உருவாக்கி வைத்திருக்கும் சட்டம், மரபு ஆகியவற்றுக்கே எதிராகத் திரும்பித் தோல்வியடைந்து நிற்கிறது இந்திய அரசியலமைப்பு. இந்தத் தோல்வியின் எடுப்பான, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உதாரணமாக விளங்கியவர்தான் ஜெயா.
மெரினா : போலீசின் கொலைவெறித் தாக்குதல் – புதிய வீடியோ
காவலர்கள் மத்தியில் சிக்கியவர்களை வெறி கொண்ட ஓநாய்க் கூட்டம் வேட்டையாடுவதைப் போல சுற்றி நின்று தாக்கும் காட்சிகள் நெஞ்சை நடுங்க வைக்கின்றன. இந்த காட்சிகள் எந்த ஊடகங்களிலும் செய்தியாக வரவில்லை.
Exclusive நடுக்குப்பம் மீனவ மக்களை சூறையாடிய போலீசு – வீடியோ
காவலர்கள் குடிசைகளைப் பற்ற வைப்பதும், நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதும் அம்பலமான பின்னரும் அது மார்ஃபிங் எனக் கூறுகிறார் சென்னைக் கமிஷ்னர் ஜார்ஜ். ஆனால் காவல் துறையின் வெறியாட்டங்களுக்கு நேரடி சாட்சியாக உள்ளனர் இந்த மக்கள். இந்த வீடியோவை பாருங்கள் பகிருங்கள்.
புதிய ஜனநாயகம் – சனவரி 2017 மின்னிதழ்
பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்கு எதிரான பொதுமக்கள், புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகளின் போராட்டங்களை மோடியும் தனியார் ஊடகங்களும் கூட்டுச் சேர்ந்து இருட்டடிப்பு செய்து வருவது இந்திராவின் "நெருக்கடிநிலை" காலத்தை நினைவூட்டுகிறது.
போலீசு – ஊடகம் – ஹிப்ஹாப்களின் உண்மை முகம் – கேலிச்சித்திரங்கள்
மெரினா போராட்டம் யார் நம் எதிரிகள் என்பதை தெளிவாக காட்டிவிட்டது !
ஓச்சேரி இந்தியன் வங்கிக்கு பணத்தை வரவழைத்த மக்கள்
போலீசு ஆய்வாளரை அழைத்த வங்கி மேலாளர், வங்கியில் பணம் காலியாகி விட்டது போராடப்போகிறார்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் பணம் எடுத்து வந்து விடுகிறேன் பொறுமையாக இருக்க சொல்லுங்கள் என்று கூறினார்.
நேரலை : டெல்லிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது தமிழகம் – Live updates
ஆம். இந்த் ஜல்லிக்கட்டின் பெயர் டெல்லிக்கட்டு. தமிழகம் புதிய போராட்ட வரலாற்றில் நுழைந்துவிட்டது. முடிந்த வரை இந்த போராட்ட பெருங்கடலின் முத்துக்களை வினவு தேடி எடுத்து தர முயல்கிறது.
விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
ஏதாவது மாற்று விவசாயம் செய்ய வேண்டியதுதானே என்று கேட்டதற்கு “ஆந்திராவுல முறுக்கு போடுறதுதான் மாத்து விவசாயம். அதுக்கு மாட்டை வித்துட்டு போயிடலாமுன்னு பாக்குறேன். எவனும் வாங்க மாட்டேனுறான். தீவனத்துக்கே வழியில்லாத நேரத்துல எவன் வாங்குவான்” என்று நொந்துகொள்கிறார்.
டெல்லியின் கொம்பைப் பிடி : தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு !
பொங்கல் விடுமுறையை ரத்து செய்கிறது மோடி அரசு. “கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே” என்று கேலி பேசுகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி. “திராவிட இயக்கத்தை அழிப்போம்” என்கிறார் பொன். ராதாகிருஷ்ணன். அடக்க வேண்டியது யாரை? காளையையா, டில்லியையா?
விவசாயிகளுக்காக தூரிகைகளை ஆயுதமாக்கிய மாணவர்கள்
மாணவர்களில் ஒருவர் இரவு ஓவியம் வரைந்துகொண்டிருந்த போது (மீத்தேன் கழுகு ஓவியம்) விவசாயிகளின் நிலையை எண்ணி உணர்ச்சிவசப்பட்டு தனது கையை பிளேடால் கிழித்து அந்த ரத்தத்திலிருந்து ஓவியத்திற்கு வண்ணம் கொடுத்திருக்கிறார்.
மாவோயிஸ்டுகளுக்கு வழக்காடினால் கைதா ? ஆர்ப்பாட்டம் !
வழக்கறிஞர் முருகனை விடுதலை செய்! மாவோயிஸ்டுகளுக்கு சட்ட உதவி அளிப்பது குற்றமல்ல! என்ற முழக்கத்தின் கீழ் 12.01.2017 வியாழன் அன்று காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பணமில்லா வர்த்தகம் : மக்களை நச்சுக் கூண்டுக்குள் தள்ளிய மோடி !
முழுவதும் ரொக்கமற்ற பொருளாதார பரிவர்த்தனையே இந்தியா போன்ற ஏழை நாடுகளில் சாத்தியமில்லை என்பதை வளர்ந்த பணக்கார நாடுகளின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.
























