Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 103

மிக்ஜாம் புயல் பாதிப்பு: வியாசர்பாடி மக்கள் போராட்டம்

மிக்ஜாம் புயல் பாதிப்பு: வியாசர்பாடி மக்கள் போராட்டம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மின்கட்டண உயர்வை எதிர்த்து சிறு, குறு தொழில்முனைவோர் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தை ஆதரிப்போம்!

மிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் டிச 12 அன்று மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. கடந்த ஜூலை 1, 2023 அன்று தமிழக அரசு சிறு, குறு தொழில்துறை நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் படி மின் கட்டண உயர்வு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தபட்டு வருகிறது.

இதன்படி, வழக்கமான மின்கட்டண தொகை என்பது 50 % – 70% வரை உயர்ந்துள்ளது. மேலும், புதியதாக உச்ச பயன்பாட்டு நேர (Peak hours) மின்கட்டணம் என்கிற பெயரில் 15% வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதுபோக மாதாந்திர நிலைக்கட்டணம் 150% வரை உயர்த்தப்பட்டுள்ளது. சொந்தமாக சூரிய ஒளி மின்சார வசதி செய்துகொள்பவர்களிடமும் நெட்வொர்க் கட்டணம் என்கிற பெயரில் வசூலிக்கப்படுகிறது. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே கொரோனா நெருக்கடியாலும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையாலும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வரும் வேலையில் தி.மு.க அரசின் இந்த மின்கட்டண உயர்வு தொழில்முனைவோர்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது.

உதாரணமாக, இந்த மின்கட்டண உயர்வுக்கு முன்பு ஒரு தொழில் நிறுவனம் தோராயமாக 1720 யூனிட் பயன்படுத்தினால் செலுத்தி வந்த கட்டணம் ரூ. 16,148. மின் கட்டண உயர்வுக்கு பின், அதே அளவு பயன்பாட்டுக்கு தற்போது ரூ. 24,234 கட்ட வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில்  தொழிலை நடத்த முடியாத அவலநிலைக்கு தொழில்முனைவோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒன்றிய மோடி அரசு கொண்டுவந்துள்ள மின்சார ஒழுங்கு முறை சட்டம் 2022-இன் படி மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியங்களை ஒழித்துக்கட்டி ஒட்டுமொத்தமாக மின்துறையையே தனியாருக்கு தாரை வார்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. மின்துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தின் படியே இந்த மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது திராவிட மாடல் தி.மு.க அரசு.


படிக்க: மின்சார சட்டத் திருத்தம் 2022 : மின் துறையை மொத்தமாக விழுங்கவரும் கார்ப்பரேட் மலைப்பாம்பு!


தமிழ்நாடு மின்சார வாரியம் கடுமையான கடன் சுமையால் நட்டத்தில் இயங்குவதால் இந்த மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று தமிழ்நாடு அரசு கூறுகிறது. ஆனால், உதய் (UDAI) மின் திட்ட ஒப்பந்தத்தின் படி அதிக விலை கொடுத்து அதானி போன்ற கார்ப்பரேட் கும்பலிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதால் தான் மின்சார வாரியம் கடன் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது.

ஆளும் தி.மு.க அரசு இதுபோன்ற திட்டங்களை ரத்து செய்யவோ அல்லது ஒன்றிய அரசு திணித்துவரும் மின்துறை தனியார்மய திட்டங்களை எதிர்க்காமல் மக்களின் தலையில் கட்டண சுமையை ஏற்றுகிறது. உண்மையில் இந்த கட்டண உயர்வு என்பது கார்ப்பரேட் நிறுவனங்களை கொழுக்க வைப்பதற்கே உதவும். இவர்கள் சொல்லிவரும் கடன் நெருக்கடியை தீர்க்கவோ அல்லது மின் விநியோகத்தை தனியார்மயமாக்குவதை தடுக்கவோ போவதில்லை.

இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், மின்கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரியும் மூன்று கட்ட போராட்டங்களை சிறு, குறு தொழில்துறை கூட்டமைப்பினர்  நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 12 அன்று மனித சங்கிலி போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த மூன்று கட்ட போராட்டங்களில் வலியுறுத்தப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளில் ஒன்றான, 12KV கீழுள்ள மின் இணைப்புள்ளவர்களை 3B பிரிவிலிருந்து 3A1 பிரிவுக்கு மாற்றி கட்டணம் வசூலிக்கும் முறையினை மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளது தமிழ்நாடு அரசு. மற்ற நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்த உள்ளது தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு. இதனை அனைத்து ஜனநாயக சக்திகளும் இயக்கங்களும் ஆதரித்து அவர்களுடன் கைகோர்த்து களத்தில் நிற்க வேண்டியது நமது கடமையாகும்.

கோரிக்கைகள்:

  1. நிலைக்கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும்
  2. உச்சப்பயன்பாட்டு நேர  (Peak hours) மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்
  3. மேற்கூரை சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்திக்கு விதிக்கப்படும் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
  4. இரண்டு ஆண்டுகளுக்கு, இதற்குமேல் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்


மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது காங்கிரஸ் அல்ல, பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள்!

ந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க-வும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரசும், மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தேர்தல் வெற்றியை மோடி அலைக்கு கிடைத்த வெற்றியாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் கொண்டாடுகிறது. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பலதரப்பு கட்சி தலைவர்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் கூறி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் “சனாதனம்” குறித்த பேச்சுதான் காரணம் என காங்கிரஸ்காரர்களே பேசியுள்ளனர். இதனை, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலும் பெரும் விவாதமாக கிளப்பியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் “சனாதன ஒழிப்பு” பேச்சுக்கு எதிரான ஹேஷ்டேக்-களை சங்கிகள் உருவாக்கி டிரெண்ட் செய்தனர். ஆனால், இதையெல்லாம் மறுத்து ‘முற்போக்கு’ ஐ.டி விங்குகள் வாயைத் திறக்கவில்லை.

படிக்க : பெருமுதலாளிகளின் பேராசை! அரசின் அலட்சியம்! மிதக்கும் சென்னை | தோழர் மருது

மக்கள் பிரச்சினையை பேச துணிவில்லாமல் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் பின்னால் ஒளிந்துக்கொண்டு பாசிசத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதாக கூறுவது மக்களை பாசிசத்திற்கு பலி கொடுப்பதில்தான் முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.

சத்தீஸ்கரில் மாநில தேர்தல் பிரச்சாரத்திலும் கூட, பழங்குடியின மக்கள் மீது மோடி அரசு நடத்திய அரச பயங்கரவாதம், அதற்கெதிரான போராட்டங்கள் குறித்து காங்கிரஸ் கட்சி வாய்திறக்கவில்லை. இத்தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் இந்துத்துவ அரசியலுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் காங்கிரஸ் மிதவாத, மென்மையான இந்துத்துவ அரசியல் என்ற லாவனியில் இறங்கியிருந்தது.

காங்கிரஸ் தோல்விக் குறித்துப் பேசிய கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், “காங்கிரஸ் தலைவர் கமல்நாத் போன்றவர்கள் மதவாத செயல்களை எதிர்க்காமல், அதற்கு ஆதரவாக செயல்பட்டு பா.ஜ.க-வின் “பீ டீம்”-ஆக இருந்தனர். மென்மையான இந்துத்துவ நிலைப்பாடு தீவிர இந்துத்துவத்தை தோற்கடிக்க உதவும் என்று நினைப்பது ஒரு மாயை” என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ், இந்தியா கூட்டணி கட்சிகள் காவி வேசம் போடாமல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்குமா? அப்படியே தேர்தலில் பங்கேற்று இந்தியா கூட்டணி வெற்றிப் பெற்றாலும் காவிக்கு ஆதராவான நிலையெடுக்காமல் ஆட்சியை தக்க வைக்க முடியுமா? இந்த காவி வேசம் போட்டுத்தான் பாசிசத்தை வீழ்த்த போவதாக கூறுகிறீர்கள்.

ஓட்டுக்காக என்ன வேசம் வேண்டுமானாலும் போடலாம் என்பது தான் இந்த ஓட்டு கட்சிகளின் நிலைப்பாடு. அவையாவையும் எதிர்க்காமல் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதுதான் பாசிச எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடு. இதுதான் உங்களது நிலைப்பாடு என்றால், நீங்கள் மக்களுக்கு எதிராக நிற்கிறீர்கள் என்றே அர்த்தம்.

ம.ஜ.க. பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பேசும்போது, “இந்தி பேசும் வட மாநிலங்களில் வாழும் மக்களிடம் சிந்தனை மாற்றங்கள் ஏற்படாதவரை இந்திய அரசியலில் மாற்றம் ஏற்படாது” என்று கூறுகிறார். இன்னும் மேலே சென்று சிலர் வட மாநில மக்களை இழிவாக “அறிவில்லாதவர்கள்” என்று ஊடகங்களில் பேசுகின்றனர்.

மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருக்க ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. மதவெறி, சாதிவெறி, இனவெறி, மூட நம்பிக்கைகள் போன்ற கருத்துகளை மக்கள் மனதில் விதைக்கின்றன. அதனை ஓட்டுகளாக அறுவடையும் செய்து கொள்கின்றன. பாசிசக் கும்பலை எதிர்க்கும் இந்தியா கூட்டணியோ, பிற எதிர்கட்சிகளோ மக்களிடம் புதைந்துள்ள இந்துத்துவ கருத்துகளை உடைக்கும் விதமான போராட்டங்களில் ஈடுபட வேண்டும். ஆனால், காங்கிரஸ் மென்மையான இந்துத்துவத்தை கையிலெடுத்து பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலை வீழ்த்திவிடலாம் என கனவுக் காண்கிறது.

கடந்த ஒன்பதரை ஆண்டுகால பாசிச மோடி ஆட்சியில் உழைக்கும் மக்கள் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்து கொண்டும், அதற்கெதிரான பல்வேறு களப் போராட்டங்களை நடத்திக் கொண்டும் இருக்கின்றனர். இப்போராட்டங்களையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசக் கும்பலுக்கு எதிரானப் போராட்டமாக கட்டியமைக்கப் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும்.

மக்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் “பா.ஜ.க-வை வீழ்த்துவோம்”, “இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்”, “பாசிசத்தை வீழ்த்துவோம்” என்று சிந்திப்பது பாசிசக் கும்பலுக்கு சாதகமாகவே அமையும்.

“காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் இருக்காது, மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்கள் கட்டியமைத்து அழுத்தம் கொடுப்போம்” என்று பாசிச எதிர்ப்பில் சிலர் பேசி வருகின்றனர். இதைபோல் தான் 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் “மூச்சு விடுவதற்கான இடைவெளி கிடைக்கும்” என்று கூறினர்.

படிக்க : மிக்ஜாம் புயல் வெள்ளம்! ‘வளர்ச்சி’யின் கொடூரம்! அரசே குற்றவாளி! | தோழர் வெற்றிவேல்செழியன்

தற்போது தி.மு.க-வின் கார்ப்பரேட் சுரண்டல் திட்டங்கள், காவிக் கும்பலுடன் சமரசம் போன்றவற்றிற்கெதிரானப் போராட்டத்தைக் கட்டியமைக்காமல், “தி.மு.க-விற்கு எதிராக போராடினால் பாசிசம் வந்துவிடும்” என்று வாய்பொத்தி கொண்டு அமைதியாக இருக்கின்றனர். இதையே தான் இந்தியா கூட்டணி வெற்றிப் பெற்றாலும் செய்ய போகிறீர்கள்.

மக்கள் பிரச்சினையை பேசாமல் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசக் கும்பலை தேர்தலில் கூட வீழ்த்த முடியாது. இந்தியா கூட்டணியை ஆதரிப்பதாக சொல்லிக்கொள்ளும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள், மக்கள் பிரச்சினையில் தலையிட்டு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசக் கும்பலை களத்தில் விரட்டியடிக்க மக்கள் முழக்கங்களை எழுப்ப வேண்டும். அத்துடன் மாற்றை முன்வைத்து செயல்பட வேண்டும். ஆக, இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது காங்கிரஸ் அல்ல, பாசிச எதிர்ப்பாளர்கள்.

சிபி

மிக்ஜாம் புயல் வெள்ளம்! ‘வளர்ச்சி’யின் கொடூரம்! அரசே குற்றவாளி! | தோழர் வெற்றிவேல்செழியன்

மிக்ஜாம் புயல் வெள்ளம்! ‘வளர்ச்சி’யின் கொடூரம்! அரசே குற்றவாளி!
தோழர் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பெருமுதலாளிகளின் பேராசை! அரசின் அலட்சியம்! மிதக்கும் சென்னை | தோழர் மருது

பெருமுதலாளிகளின் பேராசை! அரசின் அலட்சியப்போக்கு!
நீரில் மிதக்கும் சென்னை | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நேற்று ராகுல் காந்தி! இன்று மஹுவா மொய்த்ரா! நாளை?

ன்று (டிசம்பர் 8) திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பதவி பறிக்கப்பட்டுள்ளது. பணம் பெற்றுக்கொண்டு அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படும் பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருடைய மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து பி.ஜே.பி எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தியது. அக்குழு தனது அறிக்கையை நவம்பர் 9 அன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமலேயே பதவி நீக்கம் செய்யப் பரிந்துரை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்வதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று அறிவித்தார்.

மோடி அரசின் இந்த பாசிச தாக்குதலின் பரிமாணத்தைப் புரிந்து கொள்வதற்காக புதிய ஜனநாயகம் டிசம்பர் மாத இதழில் வெளிவந்த கட்டுரையை வெளியிடுகிறோம். டிசம்பர் மாத இதழ், மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக பிரசுரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

***

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அவருடைய நெருங்கிய நண்பரான அதானியின் கூட்டுக் களவாணித்தனத்தை அம்பலப்படுத்தியதற்காக, சில மாதங்களுக்கு முன்பு மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதைப்போல, தற்போது அதானி குறித்து கேள்வி எழுப்பியதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான மஹுவா மொய்த்ராவையும் தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது, பா.ஜ.க. கும்பல்.

தேர்தல் பிரச்சார உரையில், “மோடி-சமூகத்தை இழிவுப்படுத்திவிட்டார்” என்று அவதூறு வழக்கின் மூலமாக ராகுல் காந்தியின் பதவியை பறித்தது போல, நாடாளுமன்றத்தில் அதானி நிறுவனத்திற்கு எதிரான கேள்விகளை எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியுள்ளார் என்று பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து மஹுவா மொய்த்ராவின் பதவியையும் பறிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மோடி அரசு.

நாடாளுமன்றத்தில் மோடி மற்றும் அதானியின் கள்ளக்கூட்டணி குறித்தும் அதானியின் ஊழல் முறைகேடுகளைப் பற்றியும் பல கேள்விகளை எழுப்பியவர், மஹுவா மொய்த்ரா. பல சமயங்களில் இவர் எழுப்பும் கேள்விகள் இந்தியா முழுவதும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகும்.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான போது, மோடிக்கும் அதானிக்கும் உள்ள உறவு குறித்து மஹுவா எழுப்பிய கேள்விகள் மோடி அரசை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தின. “மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்.. ஒரு தொழிலதிபர் உங்களோடு எல்லா இடங்களுக்கும் பறக்கிறார். பல நிகழ்ச்சிகளிலும் உங்களோடு பங்கேற்கிறார். சொல்லப்போனால் பிரதமர் மோடியை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக தானே இயக்குவதுபோல் உலகத்துக் காட்டிக்கொண்டிருக்கிறார். என்ன செய்யப் போகிறீர்கள்?” என்ற கேள்வியால் பா.ஜ.க. கும்பலை கதிகலங்க வைத்தார், மஹுவா.

இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, “கேள்வி கேட்காமல் இருப்பதற்காக பணம் கொடுக்க முன்வந்த அதானி, தற்போது பணத்தை வாங்கிக்கொண்டு தான் கேள்வி கேட்கிறேன் என்று போலியான குற்றச்சாட்டை உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதன் மூலம் எதற்காக காவிகளால் இத்தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்பதை மஹுவா மொய்த்ராவே அம்பலப்படுத்தியுள்ளார்.

சட்டப்பூர்வ பாசிசத் தாக்குதல்!

கடந்த அக்டோபர் மாதம், பா.ஜ.க-வை சேர்ந்த மக்களவை உறுப்பினரான நிஷாந்த் துபே மக்களவைத் தலைவரான ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ராவுக்கும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனிக்கும் இடையில் லஞ்சம் பரிமாற்றப்பட்டதற்கான மறுக்க முடியாத ஆதாரம் இருக்கிறது” என்றும் “2019 – 2023 ஆண்டுகளுக்கு இடையில் நாடாளுமன்றத்தில் மஹுவா எழுப்பிய 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமத்தைப் பற்றியவையே” என்றும் வழக்கறிஞர் ஒருவரின் ஆவணத்தை சுட்டிக்காட்டினார். இதனால், மஹுவாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தை விசாரிக்க குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

மேலும், மஹுவா மொய்த்ரா “தனது மக்களவை இணையதளத்தைப் பயன்படுத்தும் பயனர் அடையாள எண் மற்றும் கடவு சொல்லை (User Id and Password) ஹிராநந்தினி மற்றும் ஹிராநந்தினிக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு, தங்கள் சொந்த லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தாரா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்” என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருக்கு எழுதிய கடிதங்களில் வலியுறுத்தியிருக்கிறார்.

இதற்கு எதிர்வினையாக, “நிஷாந்த் துபே மீதான போலிச் சான்றிதழ் பற்றிய விசாரணைகளை முடித்துவிட்டு என் மீது விசாரணைக் குழுவை அமைக்கவும்” என்று ஓம் பிர்லாவை குறிப்பிட்டும், “அதானி நிலக்கரி ஊழலை விசாரித்துவிட்டு தன் வீட்டுப்படிக்கு வரவும்” என்று அமலாக்கத்துறையை குறிப்பிட்டும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மோடி அரசை எள்ளி நகையாடியிருக்கிறார், மஹுவா. மேலும், “அவர்களால் என் தலைமுடியைக் கூட தொட முடியாது” என்று உறுதியுடன் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இதற்கிடையே, மஹுவா மொய்த்ரா பதவியை குறுகிய காலத்திற்குள் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க. எம்.பி-க்களை பெரும்பான்மையாக கொண்ட “நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு” அமைத்து அவர் மீதான விசாரணையை விரைவுப்படுத்தியது, மோடி அரசு. வேக வேகமாக செயல்பட்டு 23 நாட்களிலேயே தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை கச்சிதமாக முடித்தது நெறிமுறைகள் குழு. மஹுவா லஞ்சம் வாங்கியுள்ளார் என்பதை நிரூபிக்காமலேயே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என இக்குழு பரிந்துரைத்தது.


படிக்க: ராகுல் தகுதி நீக்கம்: நாடாளுமன்றத்தை முடக்கினால், மக்கள் மன்றத்தில் முழங்குவோம்!


“மஹுவா மொய்த்ரா இனியும் மக்களவை உறுப்பினராக நீடிக்க அனுமதிக்கக் கூடாது. அவரது உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும். மஹுவா மொய்த்ரா, தர்ஷன் ஹிராநந்தினி ஆகியோருக்கு இடையேயான பணப்பரிவர்த்தனை குறித்து, இந்திய அரசு சட்ட ரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் விசாரணை நடத்த வேண்டும்” என்று நெறிமுறைகள் குழுவின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹுவா மொய்த்ரா நிஷாந்த் துபேவின் போலி பட்டச்சான்றிதழை அம்பலப்படுத்தியதால்தான், மஹுவாவை பழிவாங்குவதற்காக  நிஷாந்த் துபே மேற்கூறிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்று பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால், உண்மையில் மஹுவா மீதான துபேயின் புகார் சிறப்புரிமைகள் குழு அல்லது பிற சிறப்புக் குழுக்களுக்கு (Committee of Privileges or other Special Panels) அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் இந்த குற்றசாட்டுக்கும் நெறிமுறைகள் குழுவுக்கும் சம்மந்தமில்லை என்பதையும் மக்களவையின் முன்னாள் பொதுச்செயலாளரான பி.டி.தங்கப்பன் ஆச்சாரி, தெளிவுப்படுத்தியுள்ளார். எனவே இது திட்டமிடப்பட்ட பாசிசத் தாக்குதல் என்பதும் மஹுவா மொய்த்ரா பெண் என்பதால் அவரை இழிவுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்நெறிமுறைகள் குழு அமைக்கப்பட்டிருப்பதும் அம்பலமாகிறது.

ஆரம்பத்தில் இருந்தே மஹுவாவை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காவிக் கும்பல் செயல்பட்டு வந்தது. அந்த அடிப்படையிலேயே விசாரணையில் கேள்விகளும் கேட்கப்பட்டன. “எந்த ஹோட்டலில் தங்கியிருந்தீர்கள்?”, “யாருடன் தங்கியிருந்தீர்கள்?” என்பது போன்ற மிகவும் கீழ்த்தரமான கேள்விகளை குழுவின் தலைவர் வினோத் சோன்கர் கேட்டதாக குற்றம்சாட்டுகிறார், மஹுவா. அந்தக் கேள்விகள் “என்னுடைய உடைகளைப் பறிப்பதற்கு சற்றும் குறைவானவை அல்ல” என்று தன்னுடைய ஆதங்கத்தை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

விசாரணையில் பங்கெடுத்துக்கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதனை அம்பலப்படுத்தி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் எம்.பி-யான என்.உத்தம் குமார் ரெட்டி, “மஹுவாவிடம் மிகவும் அந்தரங்கமான கேள்விகளை நெறிமுறைகள் குழுவினர் கேட்டனர்” என்று குற்றம்சாட்டி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.


படிக்க: ராகுலின் எம்.பி பதவி பறிப்பு: நேற்று விவாத சுதந்திரம், இன்று பதவி, நாளை தேர்தல் !


ஆனால் இன்னொருபுறம், வருகின்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருந்தும் எதிர்க்கட்சிகள் மஹுவா மீதான தாக்குதலை கூட்டாக சேர்ந்தோ தனித்தனியாகவோ கூட எதிர்க்கவில்லை. ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்த கண்டனக் குரல்கள் கூட இந்நடவடிக்கைக்கு எழவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே அடக்கிதான் வாசிக்கிறது. இந்த விவகாரம் எழுந்து பல நாட்கள் வரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்தார், மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி.

“தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தானே எதிர்த்து போராடும் அளவுக்குத் திறமையானவர் மஹுவா மொய்த்ரா என்று நான் உணர்கிறேன். நான்கு வருடங்களாக அவர்கள் (பா.ஜ.க அரசு) என்னையும் பலிகடாவாக்கினார்கள். இது அவர்களின் வழக்கமான நடைமுறை” என்று கூறியுள்ளதன் மூலம் திரிணாமுல் கட்சி மஹுவாவை கைவிட்டுவிட்டதை வெளிப்படுத்தி இருக்கிறார், திரிணாமுல் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி.

புதிய இயல்புநிலை!

பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகிய விசாரணை அமைப்புகள் ஏவப்படுவதைப் போல, மக்களுக்காக போராடும் சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுத்துறையினர் மீது ஊபா போன்ற கொடுஞ்சட்டங்கள் பாய்ச்சப்படுவதைப் போல, சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது என்.ஐ.ஏ ஏவப்படுவதைப் போல, இதுவும் நாடாளுமன்றத்தில் மோடி-அதானி கும்பலை கேள்வி எழுப்புபவர்கள் மீது தொடுக்கப்படும் சட்டப்பூர்வ பாசிசத் தாக்குதலாகும். ராகுல் காந்தி, மஹுவா மொய்த்ரா மீதான தாக்குதல்கள் அதையே நமக்கு உணர்த்துகின்றன.

இதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசினால் மைக்கை அணைப்பது போன்ற பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த காவிக் கும்பல் இனி அதானி-அம்பானி குறித்து பேசுவோருக்கு நாடாளுமன்றத்திலேயே இடமில்லை என்று அறிவிக்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும் என்று மக்களவை குழு தலைவர் ஓம் பிர்லாவிற்கு நெறிமுறைகள் குழு பரிந்துரைத்துள்ளதன் மூலம் இனி அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசவே முடியாது என்ற புதிய இயல்பு நிலையை பாசிஸ்டுகள் உருவாக்கியுள்ளனர்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தூரிகைகள் சிவக்கட்டும் | பாலஸ்தீனம்

டந்த அக்டோபர் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் அரசு காசாவில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது. தற்போது வரை 17,177-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்துள்ளது.

முன்னதாக, வடக்கு காசாவை முற்றுகையிட்டு மக்களை தெற்கு காசா பகுதிகளுக்கு இடம்பெயரச் செய்தது. இடம்பெயர இயலாத மக்களையும் இடம்பெயர மறுத்தவர்களையும் படுகொலை செய்தது.

தற்போது, தெற்கு காசா பகுதியில், குறிப்பாக அங்குள்ள கான் யூனிஸ் நகரில், இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலையின் கொடூரத்தை உணர்த்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் வரைந்த ஓவியங்கள்.

***

***

***

***

 


சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மிக்ஜாம் புயலும் மக்களின் நிலையும் | கவிதை

திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீர்
தீவுபோல் மாறிய எங்கள் சென்னை;

உடைமைகள் எங்களிடம் இல்லை
உணவும் எங்களை தேடி வரவில்லை:
மருந்துப் பொருட்களும் வரவில்லை
மறுபடியும் அதிகாரிகள் வந்தால் கேட்போம்
யாரால் எங்களுக்கு இந்த நிலை?

அழையா விருந்தாளியாக பாம்புகளும் தேரைகளும்
வீட்டிற்குள் வந்து இடம் கேட்கின்றன;

வீடுகளை இழந்து வீதிகளில் நின்று கொண்டிருக்கிறோம்

நேற்று பெய்த மழையில்
எங்களின் குடிசைகளை காணோம்;
கரை ஒதுங்கிய மீன்களைப் போல்
கண்ணீருடன் காத்துக் கொண்டிருக்கிறோம் உதவிக்காக..

மிதந்து கொண்டிருக்கிறோம் மீன்களைப் போல
மீனவனைப் போல் படகினில் வந்து எங்களை பிடிக்கிறார்கள்;

இருளின் நடுநடுவே இடிமுழக்கம்
இருதயத்தின் ஓரத்தில் இனம் புரியாத அச்சம்;

பாலுக்காக அழுகிறது குழந்தை
பயத்தில் தாய் சொல்கிறாள் அழாதே!
இங்கே பார்த்தாயா நாம் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லுகிறாள் விளையாட்டாக குழந்தையின் அழுகையினை நிறுத்துவதற்கு;

புயல் கரையை கடந்தாலும் எங்களால் தண்ணீரை கடக்க முடியவில்லை;

அரசு அதிகாரிகளை நாங்கள் நம்பவில்லை
அர்ப்பணிப்புள்ள துப்புரவு பணியார்களையே நாங்கள் நம்புகிறோம்:

இறுதிவரை எங்களுக்காக எங்களோடு இருந்தார்கள் நன்பர்களைப் போல;

மாலை கதிரவனைப் போல் மறையும் வரை வேடிக்கை பார்க்காமல்
உடனடியாக உதவிகளை வழங்கிடு உரிய நேரத்தில்..


வாசுகி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஊடகங்களே அமீர் கான், விஷ்ணு விஷால், நமீதா, ரஜினி மட்டும்தான் மனிதர்களா? | இணைய போஸ்டர்

ஊடகங்களே அமீர் கான், விஷ்ணு விஷால்,
நமீதா, ரஜினி மட்டும்தான் மனிதர்களா?

வேளச்சேரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி
நான்கு நாட்களாகியும் மீட்கப்படாமல் இருக்கும்
தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?

தன் கணவனின் முகத்தையாவது பார்த்து விட மாட்டோமா,
என்று பள்ளத்தின் அருகேயே காத்திருக்கும் பெண்கள்
மனிதர்கள் இல்லையா?

இதுதான் ஊடக அறமா?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் டிசம்பர் – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்!

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.20 + தபால் செலவு ரூ.5: மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – ஆதிக்கச் சாதிவெறியாட்டங்கள் : தமிழ்நாட்டைச் சுற்றிவளைக்கும் ஆர்.எஸ்.எஸ்!
  • காங்கிரஸ் தோல்வி: பாசிஸ்டுகளின் வழியில் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலின் விளைவு!
  • இந்துத்துவ பாசிசத்தின் இருமுனைக் கத்தி: பலிகடாவாக்கப்படும் ‘தேவேந்திர குல வேளாளர்கள்’!
  • ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் தோல்வி முகமும்!
    எதிர்க்கட்சிகளின் கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும்!
  • பு.ஜ.உடன் ஓர் உரையாடல்..
  • விவசாயிகள் மீது குண்டாஸ் : தி.மு.க. அரசின் துரோக நடவடிக்கை!
  • நேற்று ராகுல் காந்தி!
    இன்று மஹுவா மொய்த்ரா! நாளை?
  • தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி!
  • வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வெல்லட்டும்!
  • விரட்டியடிக்கப்படும் அனகாப்புத்தூர் மக்கள்: தி.மு.க. அரசின் அராஜகம்!

அறிவிப்பு – இதழ் விலையேற்றம் தொடர்பாக

புதிய ஜனநாயகம் இதழ் கடனில்தான் தொடர்ந்து இயங்கி வருகிறது. 2021-இன் தொடக்கத்தில் நிறுத்தப்பட்ட புதிய ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவருகிறோம். பல முகவர்கள் சீர்குலைவுவாதிகள் பின்னால் சென்றுவிட்டதால், விற்பனை வட்டம் சுருங்கிவிட்டது. புதிய ஆசியர்கள்தான் இந்தப் பணியை மேற்கொண்டு செய்து வருகிறோம். இதனால், இதழ் அச்சாக்கச் செலவுகள் அதிகரிப்பு, விற்பனை படிகளின் எண்ணிக்கை குறைவு போன்றவை இதழின் செலவினங்கள் அதிகரிக்கக் காரணமாக இருக்கின்றன.

இதேகாலத்தில், விளம்பரங்களைப் போட்டு, பெருவீத அளவில் அச்சிடப்பட்டு வெளிவரும் நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற இதழ்கள்கூட ரூ.25 விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. காகித விலையேற்றம், போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு ஆகியன நீடித்துவரும் நிலையில், புதிய ஜனநாயகமோ நீண்ட காலமாக ரூ.20 என்ற விலையிலேயே கொடுத்து வருகிறோம்.

ஆகையால், இதழ் விலையை அதிகரிப்பது அவசியமானதாக உள்ளது. அந்த வகையில், 2024 ஜனவரி முதல் ரூ.30 விலையில் இதழைக் கொண்டுவருவது என முடிவு செய்துள்ளோம். இதன்படி, ஆண்டுச் சந்தா ரூ.360 ரூபாயாக இருக்கும். விற்பனைப் பிரதிகளுக்கான கழிவு, வழக்கம் போல ரூ.3-ஆக இருக்கும்.

கடன் நெருக்கடியில் இருந்து சற்று மீள்வதற்குத்தான் இந்த விலையேற்ற முயற்சியை மேற்கொள்கிறோம். இதழ் விலையுயர்வைக் காரணம் காட்டி வாசகர்கள் சந்தாக்களையும் விற்பனைப் படிகளையும் குறைத்துவிட்டால், இந்த விலையுயர்வு பலனளிக்காமல் போய்விடும். ஆகையால், தொடர்ந்து சந்தாக்களை அதிகப்படுத்துமாறும் இதழ் விற்பனையை விரிவுப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஆண்டின் மத்தியில், ஆண்டு சந்தா செலுத்திய வாசகர்களுக்கு 2023 டிசம்பர் வரையில் ரூ.20 என்ற விலையிலும், 2024 ஜனவரி முதல் ரூ.30 என்ற விலையிலும் இதழ் அனுப்பப்படும். அந்தவகையில், தற்போது செலுத்தியிருக்கும் சந்தா தொகையான ரூ.240-லிருந்து கணக்கிட்டு இதழ்வழங்கப்படும். ஆகையால், ஆண்டின் மத்தியில் சந்தா தொகை செலுத்தியவர்களுக்கு ஓரிரண்டு மாதங்கள் முன்னதாகவே சந்தா முடிவடைந்துவிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆண்டு சந்தா புதுப்பித்தல் தொடர்பாக:

இந்த மாதத்திலிருந்தே 2024-ஆம் ஆண்டுக்கான சந்தா சேகரிப்புப் பணியைத் தொடங்குகிறோம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் தாங்கள் செலுத்தும் ஓராண்டு சந்தா தொகையை ரூ.360 என செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதனை நேரடியாக புதிய ஜனநாயக அலுவலக எண்ணிற்குத் தொடர்பு கொண்டும், பகுதியில் தங்களைச் சந்திக்கவரும் முகவர்கள் மூலமாகவும் செலுத்தலாம்.

அஞ்சல் சந்தாக்களுக்கு இதழை முறையாக அனுப்பி வருகிறோம். சில பகுதிகளில் தொடர்ந்து இதழ் வந்து சேர்வதில்லை என்று புகார்கள் வருகின்றன. இதற்கு அந்தந்த பகுதியில் இருக்கும் அஞ்சல் நிலையங்களைத் தொடர்பு கொண்டு ஒருமுறை இத்தவறை சுட்டிக்காட்டினால், அதன் பின்னர் முறையாக இதழை வினியோகம் செய்துவிடுவார்கள்.

இவ்வாறு சிக்கல் இருக்கும் பகுதிகளில் வாசகர்கள் மேற்கண்ட வகையில் முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆகையால், சந்தா புதுப்பிப்பதை எக்காரணம் கொண்டும் நிறுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.


இவண்
புதிய ஜனநாயகம்,
நிர்வாகக் குழு.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மிக்ஜாம் புயல்: லைட் ஹவுஸ் அருகே மயிலாப்பூர் மக்கள் போராட்டம்!

யிலாப்பூர் தொகுதியைச் சேர்ந்த மக்கள், மூன்று நாட்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இன்றி தவித்து வருகின்றனர்.

இப்பகுதி எம்.எல்.ஏ. மக்களை நேரில் சந்திக்க வரவில்லை என்றும் “அவர் வந்து சந்திக்கவும் தேவையில்லை, மின்சாரம் வழங்கினால் நாங்களே சமைத்து சாப்பிட்டு கொள்வோம்“ என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மனு ஸ்மிருதியை பகிரங்கமாக எரித்தது ஏன்? | மீள்பதிவு

அம்பேத்கர் மற்றும் சங்க பரிவார்

(டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவார் அமைப்புகள் சரிகட்ட செய்த தொடர் முயற்சிகளின் முரண்பாடுகளும் மழுப்பல்களும்)

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் 1927 டிசம்பர் 25 அன்று மனு ஸ்மிருதியை பகிரங்கமாக எரித்தது ஏன்?

மனு ஸ்மிருதி எரிக்கப்பட்ட நாள் :

88 (இப்போது 89) ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 25, 1927 அன்று, தலித்துகளின் சுய மரியாதை இயக்கத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதியான கொங்கனில் உள்ள ஒரு சிறிய நகரம் / கிராமம், மஹாத் வரலாறு படைத்தது.

“மனு ஸ்மிருதி தஹான் தின்”. டாக்டர் அம்பேத்கர் மற்றும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்க நடத்தப்பட்ட இறுதிச்சடங்கில் சாதி இந்துக்களின் மேலாதிக்கத்தையும், தலித்துகள் மற்றும் மிலேச்சர்களுக்கு (பெண்களை உள்ளடக்கியது) எதிரான வெறுப்பு மற்றும் கொடுமை ஆகியவற்றின் எழுத்து மூலங்கள் (மனு ஸ்மிருதி) பகிரங்கமாக கொளுத்தப்பட்டது.

மகாத் (சாவதர்) பொதுக்குளத்தில் தலித்துகள் (தீண்டத்தகாதவர்கள்) நீர் அருந்தும் உரிமைக்காக மகாத் சத்தியாக்கிரகம் (அமைதியான கிளர்ச்சி மற்றும் எதிர்ப்பு) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் பொது குளத்தின் நீரை பயன்படுத்துவதை முந்தைய ஆட்சியரது ஆணை அங்கீகரித்தது. இருப்பினும், இந்த வசதியை ஒடுக்கப்பட்டவர்கள் அடைவதற்கான நிலைமைகளை சாதி மேலாதிக்கமும் ஒடுக்குமுறையும் தடுத்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, தீண்டத்தகாதவர்கள் பொதுக்குளத்திலிருந்து தண்ணீரை எடுப்பதை எதிர்த்து சாதி பார்ப்பனர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் தடையாணையைப் பெற்றிருந்தனர்!

எதிர்ப்பை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக சாதி இந்துக்களால் கற்பனைக்கெட்டாத ஒரு வகையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. திட்டமிட்ட அந்த கூட்டத்தை நடத்த ஒரு பொது இடத்தை பெறுவதை தடுப்பதும் இதில் அடங்கும். இறுதியாக, ஒரு நல்லுள்ளம் படைத்த உள்ளூர் முஸ்லீம் திரு. ஃபத்தேகன் இடத்தை வழங்கி போராட்டத்தை நடத்த உதவி செய்தார். கிராமத்தில் சாதி இந்துக்களின் எதிர்ப்பு இருப்பதால் உணவு, தண்ணீர் மற்றும் பிற பொருட்களுக்கான ஏற்பாடுகள் அமைப்பாளர்களால் மிக கவனத்துடன் செய்ய வேண்டியிருந்தது. போராட்டத்தில் பங்கேற்ற தன்னார்வலர்களால் எடுக்கப்பட்ட ஒரு உறுதிமொழி பின்வருவனவற்றை உறுதிப்படுத்தியது:

1. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சதுர்வர்ணாவை நான் நம்பவில்லை.
2. சாதி வேறுபாடுகளை நான் நம்பவில்லை.
3. தீண்டாமை என்பது இந்து மதத்திற்கு ஒரு களங்கம் என்று நான் நம்புகிறேன், அதை முற்றிலுமாக அழிக்க நான் நேர்மையாக முயற்சிப்பேன்.
4. உணவு மற்றும் குடிநீர் குறித்து யாரிடமும் குறைந்த அளவு எல்லா இந்துக்களிடையேயும் எந்த வேறுபாட்டையும் நான் பின்பற்ற மாட்டேன்.
5. கோயில்கள், நீர் நிலைகள், பள்ளிகள் மற்றும் பிற வசதிகளை பெறுவதற்கு தீண்டத்தகாதவர்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்
♦ ஆண்ட பரம்பரையே நீ ஆம்பிள்ளையா ? குருமூர்த்திக்கு என்ன பதில் !

சமூகத்தின் பிற பிரிவுகளிலிருந்து அனைத்து வகையான நாசவேலைகளையும் ஆர்ப்பாட்டம் நடந்த வந்த இடத்தில் டாக்டர் அம்பேத்கர் எதிர்கொள்ள நேர்ந்தது. அவர் பம்பாயிலிருந்து சாலை பயணத்திற்கு பதிலாக “பத்மாவதி” படகில் (நீண்ட தூரம் இருந்தபோதிலும்) தஸ்கான் துறைமுகம் வழியாக வந்தார். இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு உத்தி. ஏனென்றால், பேருந்து உரிமையாளர்கள் ஒருவேளை புறக்கணித்தால் மகாத்திற்கு வெறுமனே ஐந்து மைல் தூரம் தலைவர்கள் நடந்து செல்ல முடியும்.

டாக்டர் அம்பேத்கர், ஆன்மாவை உலுக்கக்கூடிய உரை நிகழ்த்திய பந்தலின் முன்னால் மனு ஸ்மிருதியை எரிப்பதற்காக வேள்வி (pyre) ஒன்று உருவாக்கப்பட்டது. அதை ஆறு பேர் இரண்டு நாட்களாக உருவாக்கினர். ஆறு அங்குல ஆழமும் ஒன்றரை அடி சதுரமும் குழி தோண்டப்பட்டு சந்தன மரக்கட்டை துண்டுகளால் நிரப்பப்பட்டது.

அதன் நான்கு மூலைகளிலும், மூன்று பக்கங்களிலும் கீழ்கண்ட சொற்களை கொண்ட பதாகைகளைத் தாங்கி கம்பங்கள் அமைக்கப்பட்டன.

1. “மனு ஸ்மிருதி சி தஹான் பூமி”, அதாவது மனு ஸ்மிருதிக்கான தகனம்.
2. தீண்டாமையை அழியுங்கள்.
3. பார்ப்பனியத்தை அடக்கம் செய்யுங்கள்.

டிசம்பர் 25, 1927 அன்று மாலை, மாநாட்டில் அம்பேத்கரின் பார்ப்பன நண்பரான கங்காதர் நீல்காந்த் சஹஸ்த்ரபுதே முதலாவதாகவும், பின்னர் தீண்டத்தகாதவர்களின் தலைவரான பி.என்.ராஜபோஜ் இரண்டாவதாகவும் மனு ஸ்மிருதியை எரிப்பதற்கான தீர்மானத்தை முன்னெடுத்தனர். அதன்பிறகு, மனு ஸ்மிருதி என்ற நூல் வேள்வியில் எரிக்கப்பட்டது. கங்காதர் மற்றும் ஐந்து- ஆறு தலித் சாதுக்கள் இதை செய்து முடித்தனர். பந்தலில் வைக்கப்பட்ட ஒரே புகைப்படம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியுடையது மட்டுமே. அதாவது டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட தலித் தலைவர்களுக்கு காந்தி மீதான மாயை இன்னும் தெளியவில்லை என்பதை இது காட்டுகிறது.

குடிநீர் அல்லது கோயில் நுழைவுக்கான உரிமையை பெறுவதோ அல்லது சம பந்திக்கான தடைகளை அகற்றுவதோ மட்டுமல்ல சமூகத்தில் சமத்துவமின்மையை ஆதரிக்கும் வர்ணாசிரம முறையை நொறுக்குவதே இயக்கத்தின் நோக்கம் என்று அம்பேத்கர் தன்னுடைய தலைமை உரையில் கூறினார். பின்னர் பிரெஞ்சுப் புரட்சி பற்றியும்; பிரெஞ்சு புரட்சிகர கவுன்சில் விவரித்த மனித உரிமைகள் சாசனத்தின் முதன்மையான அம்சங்களையும் கூட்டத்தாரிடம் அம்பேத்கர் விளக்கினார். ரோம் ஆளும் வர்க்கமான பாட்ரீசியன்களுக்கு எதிராக ரோம் குடிமக்களான பிளேபியர்களின் கிளர்ச்சி எவ்வாறு தோல்வியடைந்தது என்பதை குறிப்பிட்டு தற்காலிக மற்றும் அரைகுறையான தீர்வுகளைத் தேடுவதிலுள்ள ஆபத்தை அவர் சுட்டிக்காட்டினார். சமுதாயத்தை ஆளும் (பாட்ரீசியன்) மற்றும் ஆளப்படும் (பிளேபியன்) வர்க்கங்களாக பிரிக்கும் முறையை ஒழிப்பதற்கு பதிலாக தங்களது விருப்பப்படி ஒரு அதிகாரியை பெற மட்டுமே பிளேபியர்கள் முயன்றனர் என்பது தான் அவர்களில் தோல்விக்கு காரணம் என்று அம்பேத்கர் விளக்கினார்.

படிக்க :
♦ அட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா ? அம்பேத்கர்
♦ சாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா ?

சமூக சமத்துவம் என்ற கருத்தை தொலைதூரத்தில் கூட மனு ஸ்மிருதி ஆதரிக்கவில்லை என்பதை அதை படித்ததன் மூலம் உறுதியானது என்று பிப்ரவரி 3, 1928, பஹிஷ்கிருத் பாரதத்தின் (அவரது சொந்த செய்தித்தாள்) இதழில் அவர் விளக்கினார்.

சாதிகளுக்கு (வருணங்களுக்கு) இடையிலான திருமணங்களைத் தடை செய்வதில் தான் தீண்டாமையின் வேர் உள்ளது எனவே அதை நாம் முறிக்க வேண்டும் என்று அந்த வரலாற்று உரையில் அம்பேத்கர் கூறினார். இந்த “சமூகப் புரட்சி” அமைதியாக நடைபெறவும், சாஸ்திரங்களை நிராகரிக்கவும், நீதிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவும் உயர் வருணப் பிரிவினருக்கும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவரது தரப்பிலிருந்து சிக்கல் எதுவும் வராது என்றும் உறுதியளித்தார். நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சமத்துவ பிரகடனம் செய்யப்பட்டது. இதன் பின்னர், மனு ஸ்மிருதியின் நகல் எரிக்கப்பட்டது.

இயக்க குறிக்கோளின் திட்டவட்டமான விரிவாக்கத்தை இங்கே ஒருவர் காண்கிறார். சமத்துவத்தின் இறுதி குறிக்கோள் மற்றும் வருண அமைப்பை ஒழித்தல் ஆகியவற்றின் அடிப்படையில், மகாத் குளத்திலிருந்து உடனடி குடிநீர் வழங்கும் திட்டம் ஒரு அடையாள போராட்டமாகவும், சுயமரியாதைக்கான தொடர்ச்சியான போராட்டத்தின் தொடக்கத்தையும் முன்னிலைப்படுத்தியது.

டாக்டர் அம்பேத்கருடைய உரையின் மற்ற முதன்மையான அம்சங்கள்:

“… வருண அமைப்பு இருக்கும் வரை பார்ப்பனர்களின் ஆதிக்கம் உறுதி செய்யப்படுகிறது… ஜப்பானின் சாமுராய்கள் தங்கள் நாட்டின் மீது கொண்டிருந்த அதே பற்று பிராமணர்களுக்கு இல்லை. எனவே சமூக சமத்துவம் மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றின் நலனுக்காக ஜப்பானின் சாமுராய்கள் செய்ததைப் போல அவர்கள் தங்கள் சிறப்பு சமூக சலுகைகளை விட்டுக்கொடுப்பார்கள் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியாது.

பிராமணரல்லாத வர்க்கத்தினரிடமும் இதை எதிர்பார்க்க முடியாது. பிராமணரல்லாத மராட்டியர்கள் மற்றும் பிற வகுப்பினர் அதிகார பீடத்திலிருப்பவர்களுக்கும் அதிகாரமற்றவர்களுக்கும் இடையில் உள்ளனர். அதிகாரத்திலுள்ளவர்கள் எப்போதாவது தாராள மற்றும் தியாக சிந்தனை கொண்டவர்களாக இருக்கக்கூடும். அதே சமயத்தில் இலட்சியவாதமாகவும் கொள்கை ரீதியானவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் தங்கள் சொந்த நலனுக்காவது அவர்கள் ஒரு சமூகப் புரட்சியை நோக்கமாகக் கொள்ள வேண்டும். இடையில் உள்ள வர்க்கம் எந்த கொள்கைகளுக்கும் தாராளமாகவோ அல்லது உறுதியாகவோ இருக்க முடியாது.

எனவே அவர்கள் பார்ப்பனர்களுடன் சமத்துவத்தை அடைவதற்குப் பதிலாக தீண்டத்தகாதவர்களிடமிருந்து தங்களை விலக்கி கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த வர்க்கம் ஒரு சமூகப் புரட்சிக்கான அதன் விருப்பத்தில் பலவீனமாக உள்ளது… .. இந்த பெரிய சமூக நோக்கத்தை அடைய நாம் பிறந்தவர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருத வேண்டும். அதற்கான மதத்தகுதியைப் (religious merit) பெற முயற்சிப்போம். தவிர, இந்த வேலை (ஒரு சமூகப் புரட்சியைக் கொண்டுவருவது) நமது நலனுக்கானது எனவே நமது பாதையில் உள்ள தடைகளை நீக்குவதற்கு நம்மை ஈடுபடுத்திக்கொள்வது நமது கடமையாகும்.

உயர் சாதி நலன்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஊடகத்தின் ஒரு பிரிவில் கடுமையான எதிர்வினை இருந்தது. டாக்டர் அம்பேத்கரை ஒரு செய்தித்தாள் “பீமாசுரா” என்று அழைத்தது. சத்தியாக்கிரகத்திற்குப் பிறகு டாக்டர் அம்பேத்கர் எழுதிய பல்வேறு கட்டுரைகளில் மனு ஸ்மிருதியை எரித்ததற்கான நியாயத்தை எடுத்துரைத்தார். மனு ஸ்மிருதியைப் படித்ததன் மூலம் சமூக சமத்துவம் என்ற கருத்தை தொலைதூரத்தில் கூட அது ஆதரிக்கவில்லை என்பது எனக்கு உறுதியானது என்று பிப்ரவரி 3, 1928 பஹிஷ்கிருத் பாரதத்தின் (Bahishkrit Bharat – அவரது சொந்த செய்தித்தாள்) இதழில் விளக்கினார்.

ஒன்றை எரிப்பது அது குறிப்பிடுகின்ற கருத்தை எதிர்த்து பதிவு செய்வதாகும். இதன் மூலம், தன்னுடைய நடத்தையை மாற்றிக்கொள்ளாத நபர் வெட்கப்படுவார் என்று ஒருவர் எதிர்பார்ப்பார். மனு ஸ்மிருதியை மதிக்கும் எவரும் தீண்டத்தகாதவர்களின் நலனில் உண்மையான அக்கறை காட்ட முடியும் என்று எதிர்பார்ப்பது பயனற்றது என்று அவர் மேலும் கூறினார். மனு ஸ்மிருதியை எரிப்பதை காந்தி முன்மொழிந்த அந்நிய நாட்டு துணியை எரிப்பதுடன் ஒப்பிட்டார். உலகெங்கிலும் உள்ள ஆர்ப்பாட்டங்கள் ஒரு கட்டுரையை எரித்தே ஒடுக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை உணர்த்தின. மனு ஸ்மிருதி தகன் என்பதும் இதுதான்.

படிக்க :
♦ சாக்கடை தூர்வாரும் பணியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத அரசு !
♦ தினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!

திட்டமிட்ட பின்வாங்கல் :

இதற்கிடையில், பொதுக்குளத்திலிருந்து குடிநீர் பெறுவதற்காக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தை நிறுத்த வேண்டும் என நீதிமன்றம் கண்டிக்க, ஒருபுறம் அரசாங்கம் / பிரிட்டிஷ் கலெக்டர் மறுபுறம் உயர் சாதி நலன்களை எதிர்கொள்ளும் சங்கடத்தை டாக்டர் அம்பேத்கர் விளக்கினார்.

சத்தியாக்கிரகம் பாதியில் ’ஏன் நின்றது’ என்ற தலைப்பில் 1928 பிப்ரவரி 3 ஆம் தேதி பஹிஷ்கிருத் பாரத் இதழில் அம்பேத்கர் எழுதினார்:

“சாதி இந்துக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தீண்டத்தகாதவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இரண்டில் ஒருவரை மட்டுமே அவர்கள் தாக்க முடியும். இருவரையும் ஒரே நேரத்தில் தாக்கும் வலிமை இன்று அவர்களுக்கு இல்லை என்பதை ஒப்புக்கொள்வதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. தீண்டத்தகாதவர்கள் மனிதர்கள் என்ற நியாயமான உரிமைகளை ஒப்புக்கொள்ள சாதி இந்துக்கள் மறுத்தபோது, தங்கள் சொந்த முயற்சியால், அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவது புத்திசாலித்தனம் என்று நாங்கள் நினைத்தோம்.

…… சாதி இந்துக்களால் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரகத்திற்கும் தீண்டத்தகாதவர்களால் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரகத்திற்கும் உலக அளவு வேறுபாடு இருக்கிறது. சாதி இந்துக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கும்போது அவர்களுக்கு சமூக ஆதரவு [சாதி இந்துக்களது] இருக்கிறது… தீண்டத்தகாதவர்கள் ஒரு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கும்போது அனைத்து சாதி இந்துக்களும் எங்களுக்கு எதிராக அணிவகுக்கப்படுகிறார்கள். ”

தீண்டத்தகாத மக்களின் கிளர்ச்சி மகாத் பொது குளத்தின் உரிமை தொடர்பானது மட்டும் இல்லை என்பதை அம்பேத்கர் மேலும் அவதானித்தார். தீண்டத்தகாதவர்கள் தங்களுக்கான பெரிய இலக்குகளை அடைவதற்காகவே இது தொடங்கப்பட்டது. இது நீடித்திருக்க முடியுமா என்பதற்கான பதில், சத்தியாகிரகத்தினால் ஏற்பட்ட இழப்பு மர்றும் காயத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க கிடைக்கக்கூடிய வழிமுறைகள் ஆகியவற்றில் அடங்கியுள்ளது. மஹாத்தில் ஒரு சத்தியாக்கிரகத்தால் ஏற்பட்ட இழப்பிலிருந்து மீள முடியாது என்பதை மக்கள் நினைத்திருந்தால் மீண்டும் ஒருபோதும் அவர்கள் மற்றொரு சத்தியாக்கிரகத்தில் சேர மாட்டார்கள். இந்த கேள்வியை எடைபோட வேண்டியிருந்தது.

இதில் தனித்து நிற்பது என்னவென்றால், வெளிப்படையான பகுத்தறிவு, போராட்டத்தின் திட்டமிட்ட துல்லியமான அணுகுமுறை மற்றும் அதை நடத்திக் காட்டுவதற்கான விருப்பம். அதை மழுங்கடிக்கவோ அல்லது குழப்பவோ யாராலும் முடியாது. சத்தியாக்கிரகத்தை திரும்ப பெறுவது தீண்டத்தகாத தலைவர்களை கேலி செய்வதற்கான வாய்ப்பை சாதி-இந்துக்களுக்கு அளித்து விடுமோ என்ற அச்சத்திற்கு வெறுமனே அவர்களின் பராட்டுக்களை பெறுவதற்காக சத்தியாக்கிரகத்தை தொடங்கவில்லை என்று அம்பேத்கர் பதிலளித்தார்,.

குறிப்புகள்:
The Social Context of an Ideology, Ambedkar’s Social and Political Thought, MS Gore, Sage Publications

முதன்முதலில் ஜனவரி 26, 2016 அன்று இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. (சமத்துவத்தை நோக்கி: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மனு ஸ்மிருதியை டிசம்பர் 25, 1927 அன்று பகிரங்கமாக எரித்தது ஏன்?) அதை மீண்டும் டிசம்பர் 24, 2017 அன்று சப்ரங் இந்தியா தளம் வெளியிட்ட கட்டுரையை இங்கு தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளோம்.


தமிழாக்கம் :
சுகுமார்
நன்றி : சப்ரங் இந்தியா. 

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாபர் மசூதி – ராம ஜென்மபூமி: பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்! | மீள்பதிவு

பாபர் மசூதி  ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல் !

பிரபல வரலாற்றாய்வாளர் டி.என்.ஜா பண்டைக்கால இந்திய சமூகத்தின் வெவ்வேறு பரிமாணங்களை ஆய்வு செய்தவர்.

வரலாற்றாய்வாளர் ஜா.

மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் பண்டைய இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் நிலவி வந்ததை ஆதாரங்களுடன் நிறுவும் பசுவின் புனிதம்” என்ற அவரது நூல் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகளின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்த போதிலும் அவற்றை அச்சமின்றி எதிர்கொண்டவர் டி.என்.ஜா.

பாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்று கூறும் தொல்லியல் ஆய்வின் ஆதாரங்களைப் பரிசீலித்து, அவற்றைப் பொய் என்று நிறுவிய சுயேச்சையான வரலாற்று ஆய்வாளர்களின் குழுவிலும் இடம் பெற்றிருந்தவர் ஜா.

உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு வெளிவருவதற்கு இருமாதங்களுக்கு முன் (9.9.2019) தி வயர் இணைய தளத்துக்கு அவர் அளித்த பேட்டியினை இங்கே சுருக்கித் தருகிறோம்.

  • ஆசிரியர் குழு.

♦ அயோத்தி தீர்ப்பு வரவிருக்கிறது. ஒரு வரலாற்றாய்வாளர் என்ற முறையில் இப்பிரச்சனையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையிலான மோதல். ஏனென்றால், அந்த 2.77 ஏக்கர் நிலப்பரப்புக்கு உள்ளேதான் ராமன் பிறந்தான் என்பதை நிரூபிக்கவியலாது. நம்பிக்கைகளின் அடிப்படையில் வரலாற்றை எழுதவியலாது. இப்பிரச்சனை பற்றி இதுவரை எழுதப்பட்டது, பேசப்பட்டது அனைத்துக்கும் அடிப்படை வெறும் கற்பனைதான்.

♦ ராம ஜென்மபூமி – பாபர் மசூதி: வரலாற்றாய்வாளர்கள் நாட்டுக்கு வெளியிடும் அறிக்கை என்பதை வெளியிட்ட ஆய்வாளர் குழுவில் நீங்களும் இருந்தீர்கள். நீங்கள் கண்டுபிடித்தது என்ன?

நானும், சூரஜ் பான், அதர் அலி, ஆர்.எஸ்.சர்மா ஆகியோரும்தான் அந்த ஆய்வை செய்தோம். இந்தப் பிரச்சனையில் சம்மந்தப்பட்ட இரு தரப்பினர் மட்டுமின்றி, அரசுடனும் எங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. நாங்கள் சுயேச்சையானவர்களாக இருந்த காரணத்தினாலேயே இவர்கள் யாருடைய ஆதரவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அனைத்து ஆவணங்களையும் தொல்லியல் சான்றுகளையும் ஆராய்ந்த பின்னர்தான் மசூதிக்கு அடியில் கோயில் ஏதும் இல்லை என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.

♦ இந்த மோதலைத் தூண்டிவிடுவதில் இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் பாத்திரம் என்ன? மசூதிக்கு அடியில் சில தூண்களின் அடிப்பாகத்தைக் கண்டுபிடித்ததாகவும், கீழே கோயில் இருந்ததற்கு அதுவே ஆதாரம் என்றும் அவர்களது அறிக்கை கூறுகிறது. உங்கள் கருத்தென்ன?

இந்தியத் தொல்லியல் துறை அயோத்தியில் நடத்திய அகழாய்வு.

அயோத்தியில் முதன் முதலில் ஆய்வு நடத்திய இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பி.பி.லால் தனது நிலைப்பாட்டை மாற்றிய வண்ணம் இருக்கிறார். அவருடைய முதல் அறிக்கையில் தூண்களின் அடிப்பாகம் பற்றி எதுவும் இல்லை. 1988 அவர் இந்திய வரலாற்றியல் ஆய்வுக் கழகத்தில் சமர்ப்பித்த அறிக்கையிலும் இது பற்றி ஏதும் இல்லை. இராமாயணத்தின் வரலாற்றுத் தன்மை குறித்து அவர் ஆற்றிய ஆய்வுரையிலும் இது பற்றி ஏதும் இல்லை. ஆனால், 1989 நவம்பரில் பாபர் மசூதிக்கு அருகே ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டவுடனே, அவர் தலைகீழாக மாறிவிட்டார். மசூதிக்கு அருகே கோயில் தூண்களின் அடிப்பாகத்தைத் தனது ஆய்வில் கண்டதாக அக்டோபர், 1990 அதாவது ஆய்வு நடந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையில் எழுதினார்.

இரண்டாவதாக, இஸ்லாம் சாராத உருவங்கள் பொறிக்கப்பட்டு, மசூதியின் நுழைவாயிலில் பதிக்கப்பட்டிருந்த 14 கருங்கல் தூண்கள் கட்டிடத்தைத் தாங்கி நிற்பவை அல்ல. அவை வெறும் அலங்காரத் தூண்கள். இதனை மேற்கொண்டு ஆய்வு செய்யும்பொருட்டு, அகழ்வாய்வுக் குறிப்புகளைக் கேட்டோம். தொல்லியல் ஆய்வு நிறுவனம் தர மறுத்துவிட்டது.

♦ அயோத்தி அகழ்வாய்வு அறிக்கை வரலாற்றாய்வாளர்களுக்கும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் தரப்பட்டதா? அவர்கள் அதனை மதிப்பீடு செய்தார்களா?

நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு அறிக்கையை நான் பார்க்கவில்லை. ஆனால், அதனைப் படித்த வரலாற்றாய்வாளர்களும் தொல்லியல் ஆய்வாளர்களும் அதனை வெறும் குப்பை என்று நிராகரித்து விட்டார்கள். முதலாவதாக, அந்த அகழ்வாய்வை நடத்தியவர்கள் அதற்குரிய அறிவியல்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை. இரண்டாவதாக, மசூதிக்கு அடியில் ஒரு கோயில் இருந்தது என்ற முன்முடிவுடன்தான் அவர்கள் ஆய்வை நடத்தினார்கள். மூன்றாவதாக, தடயங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. சான்றாக, மிருகங்களின் எலும்புகள், உருவங்கள் பொறித்த பானை ஓடுகள், பீங்கான் ஓடுகள் போன்றவை அகழ்வாய்வில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவை குறித்து அறிக்கையில் ஏதும் இல்லை.

♦ ராமனுக்கு கோயில்கள் இருந்ததற்கான ஆவண ஆதாரங்கள் இந்திய வரலாற்றில் உள்ளனவா?

அயோத்தி வட்டாரத்தில் ராமன் பிறந்த இடம் இருப்பதாக முதன் முதலாக குறிப்பிடும் சமஸ்கிருத நூல் ஸ்கந்த புராணம். ஒன்றல்ல, பல ஸ்கந்த புராணங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல, இவற்றில் இடைச்செருகல்கள் ஏராளம். ஸ்கந்த புராணத்தில் இடம்பெறும் அயோத்தி மகாத்மியம் என்பதே பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும் இது கி.பி. 1600 முந்தையதல்ல.

ஸ்கந்த புராணம் நூலின் முகப்பு.

அந்த நூலில் குறிப்பிடப்படும் 30 புனிதத் தலங்களில் ஒன்றுதான் இந்த ஜென்மபூமி. வேடிக்கை என்னவென்றால், ஸ்கந்த புராணத்தில் வெறும் எட்டு பாடல்கள்தான் ராமன் பிறந்த இடம் பற்றிப் பேசுகின்றன. 100 பாடல்கள் ராமன் எந்த இடத்திலிருந்து சொர்க்கத்துக்குப் போனான் என்பதைப் பேசுகின்றன. அதாவது, விசுவ இந்து பரிசத் போன்றவர்கள் ஆதாரமாகக் கூறுகின்ற இந்த ஸ்கந்த புராணம், ராமனின் பிறந்த இடத்தைவிட, இறந்த இடத்துக்கே அதிக முக்கியத்துவம் தருகிறது.

அந்தப் புராணத்தைத் தொகுத்தவர்களுக்கு ராமனின் பிறப்பைவிட இறப்புதான் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அந்தப் புராணம் குறிப்பிடும் சுவர்க்கத் துவாரம் என்ற ராமன் இறந்த இடம், பாபர் மசூதிக்கு வெகுதொலைவில், சரயு நதிக்கரையில் இருக்கிறது.

சுமார் 1765 முன் அயோத்தி சென்றிருந்த பிரெஞ்சு ஜெசூட் பாதிரி டிஃபென்தாலர், மசூதி கட்டுவதற்காகக் கோயில் இடிக்கப்பட்டதாக முதன்முறையாகக் குறிப்பிடுகிறார். ஆனால், நீண்ட நாட்களுக்குப் பின்னர்தான் இந்தக் கருத்து பிரபலமாகிறது.

♦ அயோத்தி எப்போதுமே ஒரு புனிதத் தலமாக கருதப்பட்டிருக்கிறதா? அதற்கு வரலாற்றில் ஆதாரம் இருக்கிறதா? துளசிதாசரின் ராமசரித மானஸ் அயோத்தியைப் பற்றி என்ன சொல்கிறது?

பண்டைக்காலத்தில் அயோத்தி இந்துக்களின் புனிதத்தலமாகக் கருதப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. 18 நூற்றாண்டில்கூட அயோத்தி ஒரு புனிதத் தலமாகக் கருதப்படவில்லை. துளசிதாசர் பிரயாகையைத்தான் (அலகாபாத்) முதன்மையான புனிதத்தலமாகக் குறிப்பிடுகிறாரேயன்றி, அயோத்தியை அல்ல.

♦ பவுத்தம், சமணம் போன்ற பிற மதங்களுக்கான மையமாகவும் அயோத்தி இருந்திருக்க வாய்ப்பு உள்ளதா?

மத்திய காலத்தின் முற்பகுதியில் அயோத்தி மிக முக்கியமான பவுத்த மையமாக இருந்திருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷவர்த்தனனின் ஆட்சிக் காலத்தில் இங்கு வந்திருந்த யுவான் சுவாங் என்ற சீன யாத்திரீகர், அயோத்தியில் பவுத்தர்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறார். அயோத்தியில் 100 புத்த மடாலயங்கள் இருந்ததாகக் குறிப்பிடும் யுவான் சுவாங், தேவர்களுக்கான (அதாவது பார்ப்பனக் கடவுளர்களுக்கான) கோயில்கள் வெறும் பத்து மட்டுமே இருந்தன என்கிறார்.

பவுத்த, சமண நூல்கள் அயோத்தியை சாகேத் என்று அழைக்கின்றன. 24 சமணத் தீர்த்தங்கரர்களில் முதலாமவரான ரிஷப நாதர் அயோத்தியில் பிறந்ததாகச் சமணர்கள் கூறுகிறார்கள். அக்பரின் வாழ்க்கை வரலாறான அக்பர் நாமாவை எழுதிய அபு பசல், யூத மதத்தைச் சேர்ந்த இரண்டு தீர்க்கதரிசிகள் அயோத்தியில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஆகவே, அயோத்தி பல மதத்தினர்க்குப் புனிதத் தலமாக இருந்திருக்கிறது.

♦ உங்களுடைய பார்வையில் அயோத்தி பிரச்சனை எப்போது எப்படி மத முரண்பாடாக மாறியது? பாபர் மட்டுமல்ல, அவுரங்கசீப் முதல் திப்பு வரையிலான பல இசுலாமிய மன்னர்கள் பல இந்துக்  கோயில்களை இடித்து விட்டதாக இந்துத்துவக் குழுக்கள் கூறுகின்றரே!

இந்துக் கோயில்களை முஸ்லிம் மன்னர்கள் இடித்தார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். கோயில்களையோ பிற வழிபாட்டுத் தலங்களையோ இடித்துத் தள்ளுவதில் முஸ்லிம் மன்னர்களைக் காட்டிலும் இந்து மன்னர்கள்தான் மிகவும் கொடூரமான குற்றவாளிகள். எண்ணற்ற பவுத்த, சமண வழிபாட்டு இடங்களையும் மடங்களையும் இவர்கள் இடித்துத் தள்ளியிருப்பதை நிரூபிக்க முடியும். எனவே, யார் யார் எத்தனை வழிபாட்டு இடங்களை இடித்தார்கள் என்பதை நிச்சயமாக ஆராயலாம்.

இந்தியத் தொல்லியல் துறை அயோத்தியில் நடத்திய அகழாய்வு.
1949 பாபர் மசூதிக்குள் ராமர் சிலையோடு சேர்த்து
வைக்கப்பட்ட இந்துக் கடவுளர் படங்கள். (கோப்புப் படம்)

மத்திய கால இந்தியாவில் மதரீதியான மோதல்கள் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. ஆனால், அயோத்தியில் 1855 இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மதரீதியான மோதல் நடைபெற்றது. அன்றைய அவத் சமஸ்தான நவாபின் அதிகாரிகள் அதனைத் தீர்த்து வைத்திருக்கிறார்கள். மசூதிக்கு வெளியே விக்கிரகங்களை வைத்துக் கொள்வதற்கு அனுமதியளித்து அந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறார்கள். இந்த இடத்தைத்தான் இன்று சீதா கி ரஸோய் (சீதையின் சமையலறை) என்று அழைக்கிறார்கள். இதற்கென ஒரு அறக்கட்டளையும் (வக்ஃப்) அன்று  உருவாக்கப்பட்டது.

1885 இந்த நிலப் பிரச்சனை இறுதியாகத் தீர்க்கப்பட்டது. மசூதி இருக்கும் இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தம் என்றும், சீதா கி ரஸோய் இந்துக்களுக்குச் சொந்தம் என்றும் பைசாபாத் சப் மற்றும் நீதித்துறை ஆணையர் ஆகியோர் தீர்த்து வைத்தனர். இதோடு இந்தப் பிரச்சனை முடிந்திருக்க வேண்டும். ஆனால், 1930 மதவெறி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து நிலைமை மாறத்தொடங்கியது.

1949 மசூதிக்குள் ராமர் சிலை கள்ளத்தனமாக வைக்கப்பட்டது இந்தப் பிரச்சனையின் முக்கியமான திருப்புமுனையாகும். பின்னர் விசுவ இந்து பரிசத் உருவாக்கப்பட்டவுடன், பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமன் கோயில் கட்டுவோம் என்ற முழக்கத்தை அது எழுப்பியது. இதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்பிரச்சினை மதவெறி அரசியலாக மாறியதற்குக் காரணமாகும்.

♦ மசூதி இடிக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட வழக்குகளில் வரலாற்றாய்வாளர்களையும் தொல்லியல்துறை ஆய்வாளர்களையும் நீதிமன்றங்கள் ஈடுபடுத்தியிருக்க வேண்டும் என்று  நீங்கள் கருதுகிறீர்களா?

விசுவ இந்து பரிசத் உருவாக்கி வைத்திருக்கும்
ராமர் கோயிலின் மாதிரி வடிவம்.

நிச்சயமாக. வரலாற்றாய்வாளர்களை நீதிமன்றங்கள் கலந்தாலோசித்திருக்க வேண்டும். என்னைக் கேட்டால், மசூதிக்கு அடியில் கோயில் இருந்ததா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யும் பொறுப்பைத் துறைசார் வல்லுநர்களைக் கொண்ட ஒரு சர்வதேசக் குழுவிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். நீதிமன்றம் மட்டுமே ஒரு வரலாற்று உண்மை குறித்து ஆராய்ந்து முடிவு செய்துவிட முடியாது. ஆனால், வரலாற்றாய்வாளர்களும் தொல்லியல் ஆய்வாளர்களும் ஆராய்ந்து அளித்திருக்கும் அறிக்கையை, அது சிலரின் கருத்து என்று அலட்சியமாக நிராகரிக்கும் நீதிமன்றத்திடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க இயலும்?

♦ உங்களது குழு இந்தப் பிரச்சனை குறித்த உங்கள் அறிக்கையை இந்திய அரசிடம் அளித்தீர்களே, அதற்கு என்ன பதில் கிடைத்தது?

பிரதமர் அலுவலகத்தில் உள்ள அயோத்தி பிரிவு (ayodya cell) பொறுப்பதிகாரி வி.கே. தால் என்பவரிடம் அளித்தோம். ஆனால், அதற்கு எந்தவிதப் பதிலும் இல்லை.

♦ வரலாறு பற்றிய இத்தகைய முரண்பட்ட கண்ணோட்டங்களிலிருந்து சாதாரண மனிதன் ஒரு புரிதலுக்கு வருவது எப்படி? மசூதிக்கு அடியில் கோயில் இல்லை என்று சொல்பவர்கள் எல்லாம் மார்க்சிய வரலாற்றாய்வாளர்கள் மட்டும்தான் என்று இந்துத்துவ சக்திகள் கூறுகிறார்களே!

சாதாரண மனிதனுக்குப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் இதனைப் புரிய வைக்க வேண்டும். இதைச் செய்வது மிகவும் கடினமான காரியம்தான். இதற்கு என்னிடம் எளிய பதில் எதுவும் இல்லை. ஆனால், மசூதிக்கு அடியில் கோயில் இல்லை என்பது மார்க்சியவாதிகளின் பிரச்சாரம் அல்ல. தங்கள் தரப்பை நிரூபிக்க முடியாத காரணத்தினால்தான் இந்துத்துவவாதிகள் மார்க்சியம் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

மொழியாக்கம் : தமிழ்

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு! | மீள்பதிவு

1949, டிசம்பர் 22 இரவு. அயோத்தி நகரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அபிராம் தாசு எனும் சந்நியாசியின் தலைமையில் ஒரு சிறு கும்பல் பாபர் மசூதியினுள் அத்துமீறி நுழைய முற்படுகிறது. அபிராம் தாசு ஒரு சிறு ராமர் சிலையை தன் மார்போடு அணைத்திருக்கிறார். பாபர் மசூதியின் தொழுகை அழைப்பாளரான முகமது இசுமாயில் விபரீதத்தை உணர்ந்து அவர்களைத் தடுக்க முனைகிறார். அவர்கள் வெறி கொண்டு தாக்குகிறார்கள், இசுமாயில் உயிருக்குப் பயந்து தப்பி ஓடுகிறார். தப்பி ஓடும் இசுமாயிலுக்கு ஒரு விடயம் உறுதியாகிறது, இனி வரும் காலம் மிகவும் மோசமானதாக இருக்க போகிறது, இனி பாபர் மசூதி முன்னெப்போதும் போல் இருக்கப் போவதில்லை.

அபிராம் தாசு
அபிராம் தாசு : திருட்டு ராமர் சிலை வழக்கில் முதல் குற்றவாளி !

இந்திய வரலாற்றில் கருப்புப் பக்கமாகவும், கசப்பான நிகழ்வாகவும் மாற்றப்பட்ட அயோத்தி பிரச்சினையின் முக்கிய விதை விதைக்கப்பட்டது அந்த இரவில் தான். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.-ன் துணைப் பிரிவான இந்து மகா சபையின் நேர்த்தியான திட்டத்தால் அந்த இரவும், அந்த சம்பவமும் கமுக்கமாக மறைக்கப்பட்டது.

சமீபத்தில் தில்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களான கிருஷ்ண ஜா மற்றும் திரேந்திர ஜா ஆகியோர் இணைந்து தொடர்ச்சியாக முயற்சி செய்து, அயோத்தியில் மசூதியை கைப்பற்ற முனைந்த அந்த இரவின் ரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர். பார்ப்பன இந்து மதவெறி அடிப்படையிலான செயல்திட்டம் கொண்ட இந்து மகா சபையின் திட்டம், அதற்கு உதவி புரிந்த காங்கிரசு வலதுசாரிகள், இந்து வெறி அதிகாரிகள், வாய்ச் சொல்லில் மட்டும் மதச்சார்பின்மையைப் பேசி வந்த இந்திய அரசின் கையாலாகாத்தனம் என அனைத்தையும் அம்பலப்படுத்தியிருக்கும் புத்தகம்தான் ‘அயோத்தியின் இருண்ட இரவு – பாபர் மசூதியில் ரகசியமாக ராமர் அவதரித்த வரலாறு‘ (Ayodhya : The Dark Night & The Secret history of RAMA’s appearance in babri Masjid).

புத்தகம் ஒரு வரலாற்று ஆவணத்துடன் தொடங்குகிறது – காலை 9.00 மணி, 23 டிசம்பர், 1949. உத்திர பிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தி நகர காவல் நிலையத்தில் பொறுப்பில் இருந்த பண்டிட் ராம் தியோ துபே என்பவர் அபிராம் தாசு, ராம் சகல் தாசு, சுதர்சன் தாசு மற்றும் அடையாளம் தெரியாத 60 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்  பிரிவு 147 (கலகம் செய்தல்) பிரிவு 448 (அத்துமீறி நுழைதல்), பிரிவு 295 (வழிபாட்டுத் தலத்தை அசுத்தமாக்குவது) ஆகியவற்றின் கீழ் முதல் தகவலறிக்கையை பதிவு செய்கிறார்.

அந்த முதல் தகவலறிக்கையின் சுருக்கம் – காலை 7 மணியளவில் நான் (ராம் தியோ துபே) ஜன்ம பூமியை அடைந்தபோது, அங்கிருந்த மாதா பிரசாத் (காவலர் எண் 7) மூலம் தெரிந்து கொண்டது என்னவெனில், சுமார் 50 முதல் 60 பேர் வரை கொண்ட ஒரு கும்பல் பாபர் மசூதியினுள் பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்து ஒரு ராமர் சிலையை வைத்துள்ளனர். அதோடு மசூதியின் சுவற்றில் காவி மற்றும் மஞ்சள் நிறத்தில் ராமர், சீதை, அனுமான் படங்களை வரைந்துள்ளனர். அப்பொழுது அங்கு காவலுக்கிருந்த ஹன்ஸ் ராஜ் எனும் காவலர் தடுத்தும் யாரும் அவரைப் பொருட்படுத்தவில்லை.

இந்த குற்றத்தைச் செய்தவர்கள் அபிராம் தாசு, ராம் சகல் தாசு, சுதர்சன தாசு இன்னும் அடையாளம் தெரியாத 50 முதல் 60 பேர். இவர்கள் மசூதியினுள் அத்துமீறி நுழைந்து, அங்கு ராமர் சிலையை வைத்து கலகம் செய்துள்ளனர். அங்கு பொறுப்பில் இருந்த அதிகாரிகளும், பொதுமக்களும் இதை நேரில் கண்டுள்ளனர். அவர்கள் உதவியுடன் இவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு, உறுதி செய்யபட்டுள்ளது.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முன்பிருந்தே இரண்டு பொய்களை பா.ஜ.க தொடர்ந்து சொல்லி வருகிறது. ஒன்று, பாபர் மசூதியில் எப்போதுமே தொழுகை ஏதும் நடைபெற்றதில்லை; இரண்டாவது, மசூதியினுள் ராமர் சிலை தன் பிறப்பிடத்தில் சுயம்புவாக தோன்றியது.

இந்த இரண்டு பொய்களும் எப்படி திட்டமிட்டு இந்து மகா சபையினரால் உருவாக்கப்பட்டன என்பதையும், அவை எப்படி சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரச்சாரமாக மாற்றப்பட்டன என்பதையும் புத்தகம் தெளிவாகவும், ஆதாரங்களுடனும் விவரிக்கிறது.

1947-ம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து பெரிய அளவில் கலவரங்கள் நாடு முழுவதும் வெடித்தன. மத வெறியர்களால் இந்துக்களும், முசுலீம்களும் பெருமளவில் கொன்று குவிக்கப்பட்டனர். இந்து ராஷ்டிரத்தை தம் கனவாகவும், இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரை அடிமைகளாக்கும் பாசிச திட்டத்துடனும் செயல்படத் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபை போன்ற அமைப்புகள் இந்தக் கலவரங்களை பயன்படுத்திக் கொள்ள முனைந்தன. இதன் ஒரு பகுதியாக அவர்கள் காந்தியை கொலை செய்துவிட்டு, பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்.

காந்தி கொலையானது பெரும்பான்மை இந்துக்களிடமிருந்தே ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபையை தனிமைப்படுத்தியது. கூடவே இந்திய அரசு இவர்களை தடை செய்தது; இந்து மகா சபையோ அரசியல் திட்டத்தை கைவிட்டதாக சொல்லிக் கொண்டு தன்னை இந்துக்களின் கலாச்சார அமைப்பாக வெளியில் காட்டிக் கொண்டது. இவர்களின் ஞானகுரு சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். எனினும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் சாவர்க்கர் விடுதலை அடையவே, ஆர்.எஸ்.எஸ் மீதான தடை 1949-ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. காங்கிரசில் இருந்த பல வலதுசாரிகள் இந்து மகா சபையில் முக்கிய பொறுப்புகள் வகித்தனர்.

கிருஷ்ண ஜா-ன் புத்தகம்
அயோத்தியின் இருண்ட இரவுகள் பற்றிய கிருஷ்ண ஜா மற்றும் திரேந்திர ஜாவின் புத்தகம்

1947-ம் ஆண்டு பல்ராம்பூர் அரசர் ஒரு யாகம் நடத்தினார். அதற்கு தன் உற்ற நண்பர்களான பைசாபாத் மாவட்ட நீதிபதி நாயர், இந்து மகா சபையின் உத்திர பிரதேச தலைவரான திக் விஜய்நாத் ஆகியோரை அழைத்திருந்தார். அப்பொழுது நாயரிடமும், மன்னரிடமும் சாவர்க்கரின் திட்டம் ஒன்றை திக் விஜயநாத் விவரித்தார். இந்தியாவில் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து கோவில்களை மீட்பது; இதன் மூலம் மக்கள் மத்தியில் தாங்கள் வளருவது; அயோத்தியில் ராமர் கோவில், வாரணாசியில் காசி விசுவநாதர் கோவில், மதுராவில் கிருஷ்ணர் கோவில் கட்டுவது ஆகிய திட்டங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக விளக்கினார் திக் விஜய்நாத். இந்தத் திட்டம் நிறைவேற, தான் எந்தவிதமான தியாகமும் செய்யத் தயாராக இருப்பதாக நாயர் வாக்குக் கொடுத்தார்.

காந்தி கொலை வழக்கில் விடுதலையான பிறகு, 1949 மே மாதம் இயக்கத்தின் வளர்ச்சிக்கு உடனடியாக செய்ய வேண்டியவற்றைப் பற்றி சாவர்க்கரும், இந்து மகா சபையினரும் சேர்ந்து  திட்டமிடத் தொடங்கினர். அயோத்தியின் ராமர் கோவில் அவர்களுக்கு ஒரு பெரும் புதையலாக காட்சியளித்தது. அயோத்தியை மையமாகக் கொண்ட ராமாயண மகா சபை உருவாக்கப்பட்டது. அதற்கு பொறுப்பாளராக மகா சபையின் நகர தலைவர் ராமச்சந்திர தாசு பரமஹம்சு என்பவர் நியமிக்கப்பட்டார்.

பரமஹம்சு இந்தத் திட்டத்திற்கு இரண்டு பேரை தன் கூட்டாளிகளாக இருந்தவர்களில் தேர்ந்தெடுத்தார், ஒருவர் சந்நியாசி அபிராம் தாசு, மற்றொருவர் அச்சக உரிமையாளரும், பைசாபாத் மாவட்ட செயலாளருமான கோபால்சிங் விஷ்ராத். இன்னொரு புறம் பைசாபாத் மாவட்ட நீதிபதி நாயருடன் அயோத்தி நகர நீதிபதியும், நாயரின் சீடருமான இந்து மகா சபையின் ஆதரவாளர் குரு தத் சிங் என்பவரும் இந்தத் திட்டத்தில் மறைமுகமாக பங்கெடுத்தனர்.

அபிராம் தாசு ஒரு சந்நியாசி, அவரின் உண்மையான பெயர் அபிநந்தன் மிஸ்ரா. பீகாரில் உள்ள ரஹரி கிராமத்தை சேர்ந்த பார்ப்பனர். குடும்ப ஏழ்மை அபிநந்தனை நாடோடியாக்கியது. அவரின் குடும்பத் தொழிலான அர்ச்சகர் பணி சில இடங்களில் அவருக்கு உணவளித்தாலும், ப்ளேக் நோய் பரவல் அவரை பரதேசியாக அயோத்திக்கு அழைத்து வந்தது. அங்கு அனுமான் கர்ஹியைச் (அனுமான் கோவில்) சேர்ந்த துறவி சராயு தாசின் சீடரானார். சராயு தாசு மறைவுக்குப் பிறகு அனுமான் கர்ஹிக்கு அபிநந்தன் மிஸ்ரா பொறுப்பாளாரானார். சந்நியாசியாகி விட்ட பின் தன் பூர்வீகப் பெயரை துறந்தார்; அபிநந்தன் மிஸ்ரா அபிராம் தாசானார். ஆனால் துறவிக்கான நடைமுறைகளை மீறி, தன் உறவினர்களை அயோத்திக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பல உதவிகள் புரிந்தார். அவர்களுடனான குடும்ப உறவுகளை தொடர்ச்சியாக பேணி வந்தார்.

அபிராம் தாசுக்கு அரசியல் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. அது தனது மடத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் கவசம் என்பதும் அவருக்கு புரிந்திருந்தது. கூடவே இசுலாமியர்கள் மீது நஞ்சு கக்குமளவு அவருக்கு இந்து மகா சபையுடன் நெருக்கம் வளர்ந்தது. அதன் ஒரு பகுதியாக பாபர் மசூதியை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்றார்.

பாபர் மசூதி அருகில் சுமார் 50 அடி தொலைவில் ஒரு ராமர் கோவில் இருந்தது. பாபர் மசூதியில் தொழுகை அழைப்பாளராக இருந்த முகமது இசுமாயிலும், ராமர் கோவில் அர்ச்சகர்களும் பரஸ்பரம் நல்லுறவையே பேணி வந்தனர்.

18-ம் நூற்றாண்டில் அயோத்தியில் இருந்த துறவிகளிடையே சில பிரிவுகள் இருந்தன. அவற்றில் முக்கியமான வகைகள் நிர்மோகி அகோரி, நிர்வாண அகோரி. அபிராம் தாசு நிர்வாண அகோரி பிரிவை சேர்ந்தவர். நிர்வாண அகோரிகள் இயல்பில் ஒரு ரவுடிகளைப் போன்ற துறவிகள் குழு. இவர்கள் அயோத்தியில் பலமாக இருந்த சைவ துறவிகளை அடித்து துரத்திவிட்டு  ஆஞ்சநேயர் கோவிலைக் (அனுமான் கர்ஹி) கைப்பற்றி, அதன் நிலங்களையும், உண்டியல், காணிக்கை பணத்தையும் அனுபவிக்கத் துவங்கினர்.  இன்னொரு பிரிவினர் நிர்மோகி அகோரி, இவர்கள் பாபர் மசூதி அருகில் இருந்த ராமர் கோவிலை நிர்வகித்து வருவதுடன் அதன் காணிக்கைகளையும் அனுபவித்து வந்தனர்.

அபிராம் தாசு பாபர் மசூதியை கைப்பற்றும் இந்தத் திட்டத்தில் ஆர்வமாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, பாபர் மசூதியைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் அருகில் உள்ள ராமர் கோவிலை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, நிர்மோகி அகோரிகளை  ஒன்றுமில்லாதவர்களாக்குவது; இரண்டாவது, ராமஜன்ம பூமியின் காவலர் என்ற புகழைப் பெறுவது. இப்படி சாமியார் குழுக்களுக்கிடையே இருந்த சொத்துச் சண்டைகளும், கட்டைப் பஞ்சாயத்தும் பாபர் மசூதி பிரச்சினைக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்து மகாசபையும், ராமாயண மகா சபையும் அயோத்தியில் பல நிகழ்வுகள், திருவிழாக்கள், பூஜைகள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக நடத்தினர். பாரம்பரியமாக அயோத்தியின் துறவிகள் ராமர் பிறந்த தினமான ராம நவமியை கொண்டாடுவார்கள், ராமர் திருமணத்தை கண்டு கொள்ள மாட்டார்கள். சீதை பெண் என்பதனால் ஆண் துறவிகள் அவளை வணங்க கூடாது என்ற ஆணாதிக்க சிந்தனை உடையவர்கள் அவர்கள். ஆனால் 1949-ம் ஆண்டு ராமரது திருமண நாள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் அயோத்தியில் வலிந்து நடத்தப்பட்டன.

மசூதியைக் கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னதாக மசூதிக்கு போகும் வழிகளில் வசித்த இசுலாமியர்கள் வம்படியாக சண்டைக்கு இழுக்கப்பட்டனர். மசூதி அருகில் இருந்த இசுலாமியர்களின் மயானம் கைப்பற்றப்பட்டு அது தோண்டி சுத்தம் செய்யப்பட்டது. இசுலாமியர்களின் பிணங்களை அங்கு புதைக்க விடாமல் தடுத்து, பக்கத்து கிராமங்களுக்கு எடுத்துச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இதுபற்றி நகர நீதிபதிக்கும், மாவட்ட நீதிபதிக்கும் புகார்கள் தரப்பட்டன. இந்து மகா சபையின் தீவிர ஆதரவாளர்களான நீதிபதிகள் இருவரும் புகார்களை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தார்கள். இதனால் பாபர் மசூதியை காப்பாற்றும் இசுலாமியர்களின் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகின.

அப்போதைய உத்திர பிரதேச முதல்வராக இருந்த கோவிந்த வல்லப பந்த் தீவிர வலதுசாரி, குறிப்பாக இந்து மதவெறியின் ஆதரவாளர். அயோத்தியில் அப்போது மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த சோசலிஸ்டு ஆச்சார்யா நரேந்திர தேவ்-ஐ வீழ்த்த, ‘நரேந்திர தேவ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்‘ எனப் பிரச்சாரம் செய்து இந்துக்களின் ஓட்டைக் கைப்பற்ற முனைந்தார் பந்த். அதோடு காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினரான பாபா ராகவ் தாசும் இந்து மகா சபைக்கு தனது ஆதரவை அளித்தார்.

அரசு அதிகாரிகளும் ஆதரவாக செயல்பட்டதால் இந்து மகா சபைக்கு தன் காரியத்தை முடிப்பது எளிதாக இருந்தது. இசுலாமியர்களோ அரசும், அதிகாரிகளும் கைவிட்ட நிலையில் பீதியில் உறைந்து போய் இருந்தனர். இந்து மகா சபை இன்னும் வேகமாக வேலை பார்த்தது. பாபர் மசூதியே ஒரு ஆக்கிரமிப்புக் கட்டிடம் என பிரச்சாரங்கள், துண்டறிக்கைகள், கூட்டங்கள் அயோத்தி முழுவதும் நடத்தப்பட்டன. அச்சக உரிமையாளாரான விஷ்ராத், பரமஹம்சின் கூட்டாளியானதால் பிரசுரங்கள்  அயோத்தியெங்கும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டன.

டிசம்பர் 22-ம் தேதி அபிராம் தாசு ராமர் சிலையை மசூதியினுள் வைத்து விட்டார். மறுநாள் இந்து மகாசபை ஆதரவு பத்திரிகைகள், அயோத்தியில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளதாகவும், அங்கு தன் பிறப்பிடத்தில் (மசூதியினுள்) ராமரது சிலை ஒன்று சுயம்புவாகவே தோன்றியுள்ளது என்றும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. இந்து மகாசபையால் திரட்டப்பட்ட மக்கள் மசூதியை நோக்கி படையெடுக்கவே,  பூசைகள், பாடல்கள் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சிலையை அகற்றாமல் பிரச்சினையை தள்ளிப் போட்டார் மாவட்ட நீதிபதியான நாயர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தவறான தகவல்களை அறிக்கைகளாக கொடுத்ததுடன்,  கலவரங்கள் வராமல் தான் தடுப்பதாகவும் ஒரு பிம்பத்தை நாயர் ஏற்படுத்தினார். அதிகாரிகளோ மாவட்ட இணை ஆணையாளரும், நீதிபதியுமான நாயரின் அனுமதிக்காக காத்திருந்தனர். சிலையை அப்புறப்படுத்தலாம் என அவர்கள் யோசனை தெரிவித்தாலும் அதனால் பெரும் கலவரங்கள் வரும் என பயம் காட்டி தள்ளிப்போட்டார் நாயர். நாயரின் இந்த கடும் உழைப்பிற்கு சன்மானமாக 1967-ல் ஜன சங்கத்தின் சார்பில் பஹ்ரைச் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

காவல்துறையினர் இதை வெறும் குற்றவியல் வழக்காகவே பதிவு செய்தனர். நேருவின் தலைமையிலான மத்திய அரசு இந்தப் பிரச்சினை பற்றிய விபரங்களை தொடர்ந்து கேட்டு வந்தது. ஆனால் மாநில அரசோ அயோத்தி முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாக திரும்ப திரும்ப சொல்லி வந்தது. ராமர் சிலை அங்கிருந்து அகற்றப்படவேயில்லை. பல காங்கிரசுக்காரர்கள் மசூதி ஆக்கிரமிப்பை தாம் ஒரு இந்து என்கிற முறையில் வரவேற்கவே செய்தனர். மறுபுறம் சோசலிசம், மதச்சார்பின்மை என்று சொல்லிக் கொண்ட காங்கிரசின் சிறு பிரிவினர், இதனை மென்மையாகக் கையாண்டதன் மூலம் மறைமுகமாக உதவி புரிந்தனர்.

அக்ஷ்ய் பிரம்மச்சாரி
பாபர் மசூதி ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்த காங்கிரசின் அக்ஷ்ய் பிரம்மச்சாரி

காங்கிரசின் பைசாபாத் மாவட்ட செயலாளரும், காந்தியவாதியுமான அக்ஷய் பிரம்மச்சாரி இசுலாமியர்களுக்கு ஆதரவாக, குறிப்பாக அவர்களின் பயத்தைப் போக்க தொடர்ந்து போராடினார். ஆரம்ப கட்டத்தில் மாவட்ட நீதிபதி மூலம் பிரச்சினையைத் தீர்க்கலாம் எனக் கருதி பல புகார்களை அவரிடம் கொண்டு சென்ற அக்ஷய் பிரம்மச்சாரி மெல்ல நாயரை பற்றி புரிந்து கொண்டார். பின்பு அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். ஆனால் இந்து மகாசபையின் ரவுடிகள் அவரை ஊரை விட்டே அடித்துத் துரத்தினர்.

ஆனாலும், அக்ஷய் பிரம்மச்சாரி இந்தப் பிரச்சினையை மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்லவும், பிரதமரிடமே எடுத்துச் செல்வதிலும் உறுதி காட்டினார். நேரு அவரை லால் பகதூர் சாஸ்திரியைப் பார்க்கச் சொன்னார். உத்திர பிரதேச உள்துறை மந்திரியாக இருந்த சாஸ்திரியோ அயோத்தியில் ஒரு பிரச்சினையும் இல்லை என சட்டசபையில் அறிக்கை வாசிக்கவே விரும்பினார். அக்ஷய் பிரம்மச்சாரி இறுதி மூச்சு வரை இசுலாமியர்களுக்காக போராடினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்த மோசமான காலகட்டத்தில் எண்ணற்ற அயோத்தி இசுலாமியர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு தப்பியோட முனைந்தனர். தங்கள் சொத்துக்கள், வீடுகளை இழந்து அகதிகளாக கிழக்கு பாகிஸ்தானுக்கு ஓடினார்கள்.

அன்று முதல் இந்த மோசடி நிகழ்வின் அரசியல் ஆதாயங்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்துத்துவா அமைப்புகள்  தொடர்ந்து அறுவடை செய்து வருகின்றன. மசூதியைக் கைப்பற்றிய பின் அது ராமர் கோவிலாகி விட்டது என்று சொல்கின்றனர். தூண் பூசை, கர சேவை,மசூதி இடிப்பு,செங்கல் பூசை என்று 1949-ல் விதைத்த விதைக்கான பலனை அறுவடை செய்யும் பணியில் சங்க பரிவார அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

இசுலாமியர்களுக்கு சொந்தமான மசூதியில் திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்து, அடுத்தடுத்து சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் அந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயலும் இந்துத்துவா கும்பல்களை எதிர்த்து நின்று, அந்த இடத்தை அதன் உரிமையாளர்களான இசுலாமியர்களிடம் ஒப்படைப்பது தான் நியாயமானதாக இருக்க முடியும். ஆனால் அந்த நியாயத்தை செய்யும் வண்ணம் இங்கே எந்த ஓட்டுக் கட்சியும் உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றவில்லை. முதன்மையாக மதச்சார்பின்மை பேசும் காங்கிரசுதான் 1949-ல் மட்டுமல்ல, பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்ட 1992-ம் ஆண்டிலும் அதிகாரத்தில் இருந்தது.

இந்து மதவெறியின் செல்வாக்கினால் இந்துக்களின் வாக்குகள் கிடைக்கும் என்பதால் காங்கிரசு கட்சி, பா.ஜ.க.-க்கு போட்டியாக இத்தகைய சதி வேலைகளுக்கு மறைமுகமாக ஆதரவாகவே இருந்தது. எனவே பாபர் மசூதி இடிப்பையும், ராமர் சிலை திணிப்பையும் ஏதோ இந்துமத வெறியர்களின் செயலாக மட்டும் நாம் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு துணையாக ஊடகங்கள், நீதிமன்றங்கள், அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம் என அனைத்தும் இருக்கின்றன என்பதே இந்துமத வெறியர்களின் பலம்.

இந்த பலத்தை தகர்த்து, உழைக்கும் மக்களுக்கு உண்மையினை உணர்த்தாத வரையிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பது வரலாற்றில் கருப்பு தினமாகவே தொடரும்.

ஆதவன்
__________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
__________________________________________

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மிக்ஜாம் புயல் பாதிப்பு: நொச்சிக்குப்பம் மக்கள் போராட்டம்!

சென்னையை ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டுள்ளது மிக்ஜாம் புயல். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் கிடைக்காமல் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியை அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் (ஹவுசிங்போர்டு) தங்கியுள்ள மக்கள் கடந்த மூன்று நாட்களாக மின்சாரமின்றி, குடிநீர் இன்றியும் உண்ண உணவின்றியும் தவித்து வருகின்றனர். கழிவறைகளில் தண்ணீர் வசதியின்றி பெண்கள் உட்பட அனைவரும் அவதியுற்று வருகின்றனர். பலர் தங்கள் குழந்தைகளுக்கு பால் கூட வாங்கமுடியாமல் மூன்று நாட்களாக  தவித்து வருகின்றனர்.

இன்று(5.12.23) காலை வரை இப்பகுதிக்குள் எந்தவித அடிப்படை வசதிகளும் கொண்டு செல்லப்படவில்லை. தன்னார்வலர்களும் இளைஞர்களும் அப்பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கி வருகின்றனர். அவை அனைத்து மக்களுக்கும் போதுமானதாக இல்லை.

மீனவ மக்கள் குவிந்து வாழும் இந்த நொச்சிக்குப்பம் பகுதியிலிருந்துதான் சென்னை முழுக்க மீட்பு பணிக்கு படகுகள் எடுத்துசெல்லப்படுகிறது. மாநகராட்சியின் உத்தரவின் பேரில் மீட்பு பணிகளுக்கு அப்படகுகளை எடுத்துசெல்ல இப்பகுதி முழுவதும் லாரிகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. ஆனால், இம்மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர  ஆளும் தி.மு.க. அரசுக்கு நேரமில்லை.

இதனையடுத்து, இப்பகுதி மக்கள் இரவு 7 மணியளவில் உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேசுகையில், “புயல் மசூலிப்பட்டினம் (ஆந்திரா) சென்றுவிட்டது. ஆனால், இங்கு குடிக்க தண்ணீர் இல்லை. கழிவறைக்கு தண்ணீர் இல்லை. பிள்ளைகள் காய்ச்சலால் அவதிபடுகிறார்கள். அவர்களுக்கு டீ வாங்கித்தர கூட வழியில்லை” என்று கதறுகின்றனர்.

இந்நிலையில், மக்கள் போராட்டம் நடத்திய ஒரு மணி நேரத்தில் போராட்டம் நடைபெற்ற சாலையில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும், மீதமுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.

போராட்டம் நடத்திய ஒரு மணி நேரத்திற்குள் மின்சாரம் வழங்க முடிகின்றது என்றால் அதற்கு முன் ஏன் அதை செய்யவில்லை?

புயல் காரணமாக, நேற்று முந்தைய நாள்(3.12.23) இரவு துண்டிக்கப்பட்ட மின்சாரம், இன்று(5.12.23) காலையே குரோம்பேட்டை, எழும்பூர், திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் மேட்டுக்குடி மக்கள் வாழும் பகுதிகளில் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளிலோ இன்னும் மீட்புப்பணி கூட முழுமையாக நிறைவடையவில்லை. பல இடங்களுக்கு இன்னும் அரசின் மீட்புக்குழுவே செல்லவில்லை. பலர் இன்னமும் உணவு, தண்ணீர், மின்சாரம் இன்றியும் வெள்ளம் சூழ்ந்து வெளியே வரமுடியாமலும் தவித்து வருகின்றனர்.

நொச்சிக்குப்பம் மட்டுமின்றி, மேற்கு தாம்பரம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் முழுமையாக நீர் வடியவில்லை. நொச்சிக்குப்பத்திலேயே மூன்று நாட்கள் பெய்த மழையில் வீடுகளின் சுவர்கள் தண்ணீரில் ஊறி வீடுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. நேற்று(4.12.23) இரவு இப்பகுதியில் பாரதி என்ற 55 வயது நபர் வீடு இடிந்து விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

மழைநீர் வடிகால் பணிக்கு ரூ.4,000 கோடி செலவு செய்ததாக சுயத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது தி.மு.க. அரசு. சமூக வலைத்தளங்கள் – திமுக ஆதரவு ஊடகங்கள் அனைத்தும் வெள்ளம் வடிந்த இடங்களை காட்டி விட்டு, அவதிபடும் மக்களை பற்றிய செய்தி கூட போடுவதில்லை. இந்த வக்கிரத்தை நாம் என்னவென்று சொல்வது!

“உடனே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடு!”

“வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் மக்களை உடனே மீட்க நடவடிக்கை எடு!”

என்பதே சென்னை உழைக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.


வினவு களச்செய்தியாளர்கள

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube