Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 108

உலகக் கோப்பை: மோடி தோல்வி; முகமது ஷமிகள் வெற்றி!

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி இந்தியா VS ஆஸ்திரேலியா அணிகளுக்கு மத்தியில் நேற்று(19.11.23) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், அசாம், மேகாலயா உள்ளிட்ட 8 மாநில முதலமைச்சர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், கார்ப்பரேட் முதலாளிகள் உள்ளிட்டோர் போட்டியை காண்பதற்காக வருகைப் புரிந்தனர். மேலும், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்தது. இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் போட்டியை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் திரைசீலைகள் வைக்கப்பட்டன. ஹாட்ஸ்டார் நேரலையில், 5.5 கோடி பேர் பார்த்தனர், மேலும் இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இப்போட்டியை கண்டனர்.

படிக்க : உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: பி.ஜே.பி – ஆர். எஸ். எஸ் சங்கி கும்பலுக்கான மற்றுமொரு களம்

ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் (Pat Cummins), “நாளைய போட்டியில் ரசிகர்கள் கூட்டம் ஒரு சார்புடையதாக இருக்கும். மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை அமைதியாக்குவதை விட விளையாட்டில் வேறு எதுவும் மன நிறைவைத் தராது. அதைச் செய்வதே எங்களின் இலக்கு” என்று கூறினார். அதேபோன்று கூட்டத்தை அமைதியில் ஆழ்த்தினார். இந்த அமைதி எதோ இந்திய ரசிகர்களுக்கான அமைதி அல்ல; தேசவெறியூட்ட முயற்சித்த பிஜேபி சங்கப் பரிவார கும்பலுக்கு கொடுத்த அமைதி!

லீக் சுற்றுகளில் இந்தியாவின் தொடர் வெற்றி மோடியின் மேக்கின் இந்தியா திட்டத்தின் மற்றொரு சாதனையே என்று சங்கிகள் கூக்குரல்யிட்டு வந்தன. லீக் சுற்றில் நடந்த இந்தியா VS பாகிஸ்தான் ஆட்டத்தை பயன்படுத்தி மதக் கலவரத்தை நடத்த முயன்றது காவிக் கும்பல். தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிசக் கும்பல் இந்தியாவின் வெற்றியை குதுகலித்து கொண்டாடி வருகின்றனர். ஒருவேளை இறுதி சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் சரிந்துவரும் மோடியின் பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்கும்.

1925-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் பாசிச அமைப்பு தொடங்கியதிலிருந்து இந்தியாவை ஒரு ‘தூய்மையான’ இந்துராஷ்டமாக உருவாக்க வேண்டும் என்பதே காவிகளின் இலக்கு. 1992-ல் பாபர் மசூதி இடிப்பு, 2002-ல் குஜராத் இனப்படுகொலை, 2014-ல் பிஜேபி ஆட்சி அரியணையில் அமர்ந்ததை அடுத்து, சிறுபான்மை மக்கள் மீதான பாசிச கொலைவெறி தாக்குதல்கள் அனுதினமும் அதிகரித்து வருகின்றன. லவ் ஜிகாத், நில ஜிகாத், மசூதியில் பாங்கு ஓதத்தடை, இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் CAA – NRC – NPR சட்டங்கள், கர்நாடகாவில் திருவிழாக்களில் முஸ்லீம் வியாபாரிகள் கடை வைப்பதற்கு தடை, பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை என இஸ்லாமிய மக்கள் தொடர்ச்சியாக பாசிசக் கும்பலால் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர்.

இந்திய அணி இந்த உலக கோப்பை போட்டிகளில் ஒருமுறை கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதற்கு இந்திய அணியின் கூட்டுழைப்பு காரணமாக இருந்தாலும் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர் –ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவாரக் கும்பல்களின் பார்வைபடி  ‘இஸ்லாமியர்’ ‘துலுக்க பையன்’ ‘பயங்கரவாதி’- ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்த முகமது சமி, வேகப் பந்துவீச்சாளர்.

போட்டியின் தொடக்கத்தில் புறக்கணிக்கப்பட்டு வந்த இவர், ஹர்டிக் பாண்டியா காயப்பட்டதனால் அவருக்கு மாற்றாக முகமது சமி ஆட்டத்திற்குள் வந்தார். இவரின் முதல் ஆட்டத்திலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். தொடர்ந்து இவரின் அசாதாரணமான பந்துவீச்சில் இந்திய அணி தொடர் வெற்றிகளை சாதித்தது. நியூசிலாந்து அணி உடனான அரை இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை இறுதி போட்டிக்கு கைப்பிடித்து அழைத்துச் சென்றவர் ‘இஸ்லாமியரான’ முகமது சமிதான். இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் முகமது சமி என்பது குறிப்பிடத்தக்கது.

முகமது சாமியின் உழைப்பின்றி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்றிருக்குமா என்பது கேள்விக்குறியே? இது உலகம் அறிந்த உண்மை. ஆகையால் இந்திய அணியின் தொடர் வெற்றியையும், ஏன் நேற்றைய தோல்விக்கு ஆறுதல் கூருவதற்கு கூட மோடிக்கும், சங்கி கூட்டத்துக்கும் அருகதையில்லை…

நேற்று(19.11.23) இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. ஒரு கால் இந்திய அணி இறுதிப் போட்டியில் வென்று இருந்தால் அதனை தனது அரசியல் துருப்புச்சீட்டாக பயன்படுத்திக் கொண்டு 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு நெம்புகோளாக பயன்படுத்தி இருக்கும் பாசிச கும்பல். அதற்கான முன்னோட்டத்தை தான் இதற்கு முன்பு அகமதாபாத் மைதானத்தில் நடந்த பாகிஸ்தான் அணி உடனான போட்டியின் போது ஜெய் ஸ்ரீ ராம் என்று வெறி கூச்சல் முழங்கத் தொடங்கினார்கள்.

படிக்க : உலகக் கோப்பை: “வேண்டாம் பிஜேபி” என்று முழங்குவதே தேசபக்தி!

ஆனால் அதற்கு  இந்திய ரசிகர்களும் பாகிஸ்தான் ரசிகர்களும் சம்பட்டி அடி கொடுத்துள்ளனர். போட்டி முடிந்தவுடன் பாகிஸ்தான் கேப்டன் பவர் அசாமுக்கு விராட் கோலி தனது ஜெஸ்ஸியை கையெழுத்திட்டு கொடுத்துள்ளதை இரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடினார்கள். குஜராத் மைதானத்தில் பாக்கிஸ்தான் கேப்டன் ஆட்டமிழந்து வெளியேறும் போது சங்கிகள் ஜெய் ஶ்ரீராம் என்று கூச்சலிட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், தென்னிந்திய இரசிகர்கள் காறி துப்பினார்கள். பின்பு 12 வருடங்களுக்கு பிறகு சென்னை மைதானத்தில் பாகிஸ்தான் அணி விளையாடு வந்த பொழுது ரசிகர்கள் அனைவரும் பாகிஸ்தான் மற்றும் இந்திய ஜெசிகளை அணிந்து தனது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.

ஒரு பாக்கிஸ்தான் இரசிகை தனது முகத்தில் இந்தியா மட்டும் பாகிஸ்தான் கொடியை வரைந்து கொண்டு, செய்தியாளரிடம் தனக்கு கோலியை மிகவும் பிடிக்கும் என்று கூறியது, சமூக வலைதளத்தில் கிரிக்கெட் இரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடினார்கள். நேற்றைய ஆட்டத்திலும் மோடி மைதானத்திற்கு வந்ததும், மோடி பெயர் கொண்ட மைதானத்தில் போட்டி நடந்ததும் தான் தோல்விக்கு காரணம் என்று மோடியை தரித்திரம் என்று திட்டி தீர்க்கிரார்கள். லாஜிக் இல்லை இங்கு விவாதம், இந்த இந்திய இரசிகர்களின் எதிர்வினை மதவெறி அரசுக்கு எதிரான எதிர்வினை.மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் வெறுப்பில் இருந்து வெளிப்பட்ட எதிர்வினை. இந்திய இரசிகர்களுக்கு தேச வெறியூட்ட கிளம்பிய பாசிச கும்பலுக்கு செருப்படிதான் மிச்சம். ஆகவே தோற்றது மோடிதான். வென்றது  இந்திய இரசிகர்கள்.

எங்கள் நிலத்தை விடு ! | கவிதை

எங்கள் நிலத்தை விடு ! | கவிதை

ர் பிடிச்ச கையில் ரேகை இல்லை
உலகின் பசி போக்கும் அவனுக்கு
தன் குடும்பத்தின்
பசிபோக்க தெரியவில்லை
அரசாங்கம் AC அறையிலே
உழவன் அதே ஓட்டை கூரையிலே
விலைமதிப்பற்ற விவசாயிக்கு
விலையை தீர்மானிக்க உரிமையில்லை
எல்லாம் விலை உயர்ந்து போனது
இவன் வலுவிழந்து போனான்

யாரைக் கேட்டு நிலத்தில்
கை வைத்தாய் ?
யாருக்கு விற்க
விலை பேசினாய் ?

தூத்துக்குடியில் துச்சமென
சுட்டவன்
நாட்டுக்குள்ளே
கொள்ளையடித்தவன்
வீட்டுக்குள்ளே
சுரண்டி பிழைப்பவன்
சுக வாழ்விலே
கார்ப்பரேட் கைக்கூலி அதிகாரத்திலே
ஏனோ ?

மண்ணுக்கு போராடுபவன் ஜெயிலுக்குள்ளே
உரிமையை கேட்பவன் கூண்டுக்குள்ளே

குண்டர் சட்டம் குறிவைக்கிறது
குடிசைகளை மட்டும்

விவசாய நிலத்தை
யாருக்கு விலை பேச போகிறாய் ?
விடியும் என நம்பி ஓட்டு போட்டவர்களை
ஏன் வீதியிலே நிறுத்துகிறாய்

திருப்பிக் கொடு !
எங்கள் நிலத்தை விடு !

மக்கள் சக்திக்கு முன்னே
மலையும் தவிடாகும்
மறந்து விடாதே .‌ . .

அறிவு

உலகக் கோப்பை: “வேண்டாம் பிஜேபி” என்று முழங்குவதே தேசபக்தி!

டந்த ஒரு மாத காலமாக இந்தியாவில் கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெற்று வருகின்றது. லீக் ஆட்டங்களில் இந்தியா தொடர்ந்து பத்து ஆட்டங்கள் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு சென்றது. அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் வெற்றி பெற்று உலகக் கோப்பை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி இந்தியா VS ஆஸ்திரேலியா அணிகளுக்கு மத்தியில் இன்று(19.11.23) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பெரும் ஆரவாரத்துடன் நடைபெற்றது.

இறுதிப் போட்டியை காண்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், அசாம், மேகாலயா உள்ளிட்ட 8 மாநில முதலமைச்சர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பல கார்ப்பரேட் முதலாளிகள் உள்ளிட்டோர் போட்டியை காண்பதற்காக வருகைப் புரிந்தனர். இது ஏதோ தேசபக்திக்காக நடக்கும் போர் போன்று ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி பாசிசக் கும்பல் தேச வெறியை ஊட்ட முயல்கிறது.

படிக்க : உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: பி.ஜே.பி – ஆர். எஸ். எஸ் சங்கி கும்பலுக்கான மற்றுமொரு களம்

எனினும் இந்த தேசபக்தி வியாபரத்தில் முதலில் பலிகடாவாகபோவது இந்திய ரசிகர்கள்தான். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள மொத்த இருக்கைகள் ஒரு லட்சத்து 30 ஆயிரம். அதில், அதிகபட்ச டிக்கெட்டின் விலை ரூ.1.87 லட்சம். குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.32,000. இவ்வளவு செலவு செய்துதான் தேச வெறியூட்டும் இப்போட்டியை காண செல்கின்றனர் ரசிகர்கள்.

இதுவன்றி ஹாட் ஸ்டார் நேரலையில் 5.5 கோடி பேர் இறுதி போட்டியை பார்க்கின்றனர். மேலும், BCCI முன்னெடுப்பின் மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள பெரு நகரங்கள் மற்றும் அதைச் சுற்றி உள்ள நகர மைய இடங்களில் பெரிய திரையிட்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியை திரையிட்டனர். இன்று காலை முதலே அகமதாபாத் முழுவதும் நீல கடலின் நாள் சூழ்ந்துள்ளது என நெட்டிசன்கள் புகழாரம் சூட்டுகின்றன. மைதானம் முழுவதும் இந்தியா.. இந்தியா.. இந்தியா… என வெறிக் கூச்சலை இடுகின்றன.

மைதானத்திற்குள் 127 டெசிபெல்(Decibel) அளவு ஒலி வேகத்துற்கு வெறி கூச்சல் ஒலிக்கின்றன. நேரலையிலும் திரையிடல் மூலமாகவும் கோடிக்கணக்கான பேர் காண்கின்றனர். பணி (dew factor) காரணமாகவோ அல்லது மழை காரணமாகவோ போட்டி தடைப்பட்டால் அத்தனை கோடி பேர் மனதிலும் மழை எப்பொழுது முடியும் என்று என்ன ஓட்டங்கள் ஓட தொடங்கும். ”இந்த நேரத்துல தானா மழை சனியன் வந்து தொலையனும்” என்ற வசைச் சொற்களும் ஒலிக்கும்.

சற்று இந்தப் ‘தேசபக்தி’ ஒளியை ஒதுக்கி வைத்துவிட்டு எதார்த்தத்தை பார்த்தோமானால் காசா மீது யூத இனவெறி பிடித்த இஸ்ரேல், குண்டு மழை பொழிகின்றது. பிள்ளைக்கரி தேடி இன்றுவரை சுற்றி திரிந்து கொண்டிருக்கின்றது. கடந்த மே மாதம் பற்றி எரிய தொடங்கிய மணிபூர் இன்று வரை எரிந்து கொண்டு இருக்கின்றது. பிஜேபி பாலியல் பொறுக்கி பிரிஜ் பூஷனால் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கு இன்றுவரை நியாயம் கிடைக்கவில்லை. காஷ்மீர் இன்றுவரை திறந்தவெளி சிறைச்சாலையாக உள்ளது. மேலும், இந்தியாவின் மூளை முடுக்கெங்கும் இந்திய உழைக்கும் மக்கள் சொல்லோனா துயரத்துக்கு ஆட்பட்டு வருகின்றனர்.

படிக்க : உலகக்கோப்பை கால்பந்து: “அர்ஜென்டினா வென்றால் நாட்டின் அவலம் மறைக்கப்படும்!” – மெஸ்ஸி-ன் மருத்துவர்!

காசா மீதானே இனஅழிப்பு போரை கண்டித்த துனிஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஆன்ஸ் ஜபேர்(Ons Jabeur) கடைசியாக விளையாடியப் போட்டியில் வெற்றி பெற்ற மொத்த தொகையையும் பாலஸ்தீன மக்களுக்கு அளித்தார். அவர் கண்ணீர் மல்க அளித்த பேட்டியில், “நான் போட்டியில் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், மகிழ்ச்சியாக இருப்பதற்கான தருணம் இதுவல்ல. உண்மையாகவே இந்த உலக சூழ்நிலை மகிழ்ச்சி அடையும் அளவுக்கு இல்லை. பாலஸ்தீன குழந்தைகள் தினந்தோறும் கொன்று குவிக்கப்படுகின்றனர். என் இதயமே நொறுங்குகிறது” என்று தனது வலியை பதிவு செய்தார்.

நடந்து முடிந்த கால்பந்து உலகக் கோப்பை, போட்டியில் அர்ஜென்டினா அணி தோற்க வேண்டும் என்று நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி-இன் மருத்துவரான டியாகோ ஸ்வார்ஸ்டைய்ன் (Diego Schwarzstein) கூறியுள்ளார். “அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றால், இந்த இழிவான ஜனரஞ்சக அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்க அவ்வெற்றியைப் பயன்படுத்திக் கொள்ளும். அனைவரும் கால்பந்து போட்டியின் மீது கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கும்போது, நாணயத்தின் மதிப்பைக் கூட குறைத்து விடுவார்கள்”. மேலே குறிப்பிட்ட வீராங்கனை மற்றும் மருத்துவர் மனதில் உள்ள ஈரமோ நமது இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இல்லை.

“பாகிஸ்தான் மற்றும் முஸ்லீம்களை எதிரிகளாக சித்தரித்து, மோடியின் இந்து-தேசியவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கு போட்டியை ஒரு தொடக்கப் பாதையாகப் பயன்படுத்துகிறது” என்று வரலாற்றாசிரியர், முகுல் கேசவன் கூறினார். மேலும் அவர், “உலகக் கோப்பை ஒரு கிரிக்கெட் G20 ஆகும்” என்றார்.

அரசியல் அரங்கில், ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் தோல்வி முகத்தில் சென்று கொண்டு இருக்கும் தருணத்தில், ஜி 20 மாநாடு தொடங்கி, சந்திராயன் – 3 ஏவுகணை நிலவின் தென் தூரத்தில் இறங்கியது, 33% பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா போன்ற வரிசையில் தற்போது உலகக்கோப்பை கிரிக்கேட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் தேசவெறியூட்டி சரிந்துவரும் பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்காக பாசிச கும்பலின் துருப்புச் சீட்டே ஆகும்.

படிக்க : உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் போட்டியும் திட்டமிட்ட தேசவெறியும்

தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிப்பதாகும். தேசபக்தி என்பது அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே. தேசபக்தியோடு தொடர்புடையவை. மணிப்பூர் மக்கள் மீது தொடுக்கப்படும் இன அழிப்பு, காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, இந்தியா முழுவதும் முசுலீம் மக்கள் நரவேட்டை ஆடப்படுவது, தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவது, விவசாயிகள் தற்கொலை இவற்றிற்கெதிராக குரல்கொடுப்பதும் போராடுவதுமே தேசபக்தி.

இன்று அகமதாபாத் மைதானத்தில் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது ஆஸ்திரேலிய இளைஞன் ஜான் சுதந்திர பாலஸ்தீனம் “Free Palestine” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்து கிரிக்கெட் மைதானத்திற்குள் விராட் கோலியிடம் ஓடி சென்று கைகுலுக்கினார். அதே மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் 127 டெசிபெல்(Decibel) அளவு “Free Palestine” என்றோ இந்திய மக்கள் மீது ஏவப்படும் பாசிச தாக்குதலுக்கு எதிராக “NO BJP” என்றோ போர்க் குரல் உயர்த்தியிருந்தால் நாம் தேசபக்தி மிக்க இந்தியர்கள் என்று கூறலாம். அதை விட்டு, விராட் கோலி அடிக்கும் கவர் ட்ரைவ்-கும் (cover drive) பும்ரா போடும் யார்க்கர் பந்துக்கும் பாப்கான் (popcorn) தின்றுக் கொண்டே சிலாகித்தால் அது தேசபக்தியா? இல்லை இது தேசத்துரோகம்!

இருள்மதி

செய்யாறு: சிப்காட் எதிர்ப்பு போராட்டமும் தி.மு.க. அரசின் ஒடுக்குமுறையும்

டந்த 17 ஆம் தேதி, செய்யாறு மாவட்டத்தில் மேல்மா, தேத்துறை உள்ளிட்ட 8 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. இதனை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கினை பதிவு செய்து சிறையில் அடைத்ததோடு, அவர்களில் ஏழு பேர் மீது குண்டர் சட்டம் ஏவியுள்ளது திமுக அரசு.

விவசாய நிலங்களை பாதுகாப்பதற்காக போராடிய விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு இருப்பதற்கு எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நடவடிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகும்.

ஆனால், சிப்காட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ள கிராமங்களை சேர்ந்த ஆறு விவசாயிகள் மீதுதான் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதே தவிர, போராட்டத்தில் முன்னணியில் இருந்த அருள் என்பவர் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்படவில்லை. அதேபோல், 15 நாள்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்து விடுதலை செய்வதைப்பற்றியும் எந்த கருத்தையும் திமுக அரசு கூறவில்லை. சிப்காட்டுக்கு எதிராக போராடும் மக்களை அச்சுறுத்தி ஒடுக்கவே தி.மு.க. அரசு தீவிரமாக வேலை செய்துக் கொண்டிருக்கிறது.

படிக்க : செய்யாறு: சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கும் திமுக அரசு!

கடந்த நான்காம் தேதி, நள்ளிரவு இரண்டு மணியளவில் வீடுகளில் புகுந்தும் போராட்டக் கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களையும் போலீசு பலவந்தமாக இழுத்து சென்று கைது கைது செய்ததாக பயத்துடன் விகடன் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கின்றனர், கிராம மக்கள்.  “நைட்டு 2 மணிக்கு வீட்டுக் கதவை ஒடைச்சிக்கிட்டுவந்து என்னை ரூமில பிடிச்சி தள்ளிவிட்டு என் வீட்டுக்காரரை தரதரவென இழுத்துட்டு போயிட்டாங்க” என்று கூறுகிறார் எழிலரசி.

மேலும், “திரும்பவும் 5 போலீசு வந்து உங்க வீட்டுக்காரங்க வேலூர் ஜெயில்லதான் இருக்காங்க. நாங்க அவங்கள ரிலீஸ் பண்றோம்மா; நீ கையெழுத்து போடுமா-ன்னு சொன்னாங்க. நான் கையெழுத்து போடமாட்டேன்னு சொன்னேன். அதுக்கு நீ கையெழுத்து போட்டீனாதான் உங்க வீட்டுக்காரரை ரிலீஸ் பண்ணுவோம்; இல்லைனா உங்க வீட்டை ஜப்தி பண்ணுவோம்; உன்மேலையும் கேசு போட்டு தூக்கிட்டு போவோம்ன்னு சொன்னாங்க” என்கிறார் வேதனையுடன்.

“என் வீட்டுக்காரர் மீது சாராயம் வித்தான்; விபச்சாரம் பண்ணுனானு ஏழு கேசு போட்டுருக்காங்க” என்று குமுறுகிறார் ரேணுகா.

விவசாயிகள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாத பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விவசாயிகளின் போராட்டமே தூண்டுதலின் பேராலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடாது என்பதற்காகவும்தான் நடத்தப்படுவதாக அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார்.

“தூண்டுதலின் பேரில் திட்டமிட்டு இந்த அரசு எந்தப் பணிகளையும் செய்துவிடக் கூடாது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வரக் கூடாது. பட்டதாரிகள் வேலைக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக விவசாய நிலங்களைப் பறிப்பதாக செய்யப்படும் திட்டமிட்ட ஒரு பிரச்சாரம்தான் இந்தப் போராட்டங்கள். விவசாயிகளை வஞ்சிப்பதோ, விவசாய நிலங்களை அபகரிப்பதோ இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார், வேலு.

மேலும், “வானத்தில், கடலில் தொழிற்சாலைகளை கட்ட முடியாது. மண்ணில்தான் கட்ட முடியும்” என்று திமிரித்தனமாகவும் பேசியுள்ளார். இதற்கு முன்னரும் விவசாயிகளின் போராட்டத்தை மிகவும் கொச்சையாகவும் இழிவுபடுத்தியும் பேசியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், காஞ்சிபுரம் செங்கல்பட்டு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எ.வ.வேலு, “போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டால் நிலம் இல்லாதவர்கள் கூட பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு போராட்டத்திற்கு வந்துவிடுகிறார்கள்” என பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க : உ.பி: கின்னஸ் சாதனையும் வறுமையும்!

விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றுபவராக அருள் இருப்பதால்தான், அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை மட்டும் ரத்து செய்யவில்லை. இதன்மூலம், அரசின் அச்சுறுத்தலுக்கு அடிபணியவில்லை என்றால் இதுதான் நிலை என்று எடுத்துக்காட்ட நினைக்கிறது திமுக அரசு. இவ்வாறு பாதிக்கப்படுகின்ற மக்களுடன் களத்தில் இணைந்து போராடும் ஜனநாயக சக்திகளை ஒடுக்கி வருகிறது தி.மு.க. அரசு. மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதில் அ.தி.மு.க.விற்கு சளைத்தது அல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

செய்யாறில் மட்டுமல்ல, ‘வளர்ச்சித் திட்டம்’ என்ற பெயரில் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் விளைநிலங்களையும் அழித்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கார்ப்பரேட் நலத் திட்டங்களை அமல்படுத்தத் துடிக்கிறது தி.மு.க. அரசு. கார்ப்பரேட் சேவையாற்றுவதில் பா.ஜ.க.வுடன் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது தி.மு.க என்பதுதான் யதார்தம்.

கதிர்

தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்! | தோழர் ரவி

தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்! | தோழர் ரவி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

திமுகவுக்கு பாடம் எடுக்க மருதையனுக்கு தகுதி உள்ளதா? | பாகம் 2 | தோழர் மருது

திமுகவுக்கு பாடம் எடுக்க மருதையனுக்கு தகுதி உள்ளதா? | பாகம் 2 | தோழர் மருது

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

காசாவை இன அழிப்பு செய்யும் இஸ்ரேல்!

0

தெற்கு காசா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை அப்பகுதி முழுவதும் இஸ்ரேலிய படைகள் வான்வழியாக வீசியுள்ளன. இஸ்ரேல் தனது இனப்படுகொலையை தீவிரப்படுத்தப் போகிறது என்பதற்கான அறிவிப்புதான் இது.

நவம்பர் 16 அன்று இஸ்ரேலிய இராணுவ விமானங்கள் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை தெற்கு காசாவின் மிகப்பெரிய நகரமான கிழக்கு கான் யூனிஸில் உள்ள குசா (Khuzaa), அபாசான் (Abassan), பானி சுஹைலா (Bani Suhaila) மற்றும் அல் கராரா (Al Qarara) ஆகிய பகுதிகளில் வீசியதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

படிக்க : காசாவில் தொடரும் மரண ஓலங்கள்! | புகைப்படக் கட்டுரை

“உங்கள் பாதுகாப்பு கருதி, நீங்கள் வசிக்கும் இடங்களை உடனடியாக காலி செய்து, அறியப்பட்ட தங்குமிடங்களுக்குச் செல்ல வேண்டும். பயங்கரவாதிகளுக்கு அருகிலுள்ள எவரும் தங்கள் உயிரைப் பணயம் வைப்பவராவர். பயங்கரவாதிகள் பயன்படுத்தும் ஒவ்வொரு வீடும் குறிவைக்கப்படும்” என்று துண்டுப்பிரசுரங்களில் கூறப்பட்டுள்ளது.

அறியப்பட்ட தங்குமிடமா? அப்படி ஒன்று எங்கே இருக்கிறது? முற்றுகையிடப்பட்ட காசாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்கள் எங்கே செல்வார்கள்?

முன்னதாக, அக்டோபர் 21 அன்று இஸ்ரேல், காசாவின் வடக்குப் பகுதியில் வசித்து வந்த மக்களை 24 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தது. தற்போது செய்ததைப் போலவே துண்டுப் பிரசுரங்களை வீசியது. வெளியேற மறுப்பவர்கள் பயங்கரவாதிகளாக கருதப்படுவர் என்றும் அச்சுறுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து, வடக்கு காசாவில் இஸ்ரேல் தனது தரைவழி படையெடுப்பை தீவிரப்படுத்தியது. அதன் காரணமாக, முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தெற்கு காசாவிற்கு என்று தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், பயங்கரவாத இஸ்ரேல் அரசோ தற்போது தெற்கு காசாவில் உள்ள மக்களையும் வெளியேறுமாறு அச்சுறுத்துகிறது.

இதுகுறித்து நவம்பர் 16 அன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் (Volker Turk), “தற்போதைய சூழலில், காசாவின் எந்தப் பகுதியையும் நாங்கள் பாதுகாப்பானதாக கருதவில்லை. இதில் நாங்கள் முற்றிலும் தெளிவாக இருக்கிறோம்” என்று கூறினார்.

காசாவின் நிலைமைகள் தொற்று நோய் மற்றும் தீவிர பசிக் கொடுமைகளைத் தவிர்க்க முடியாததாக ஆக்குகின்றன என்று துர்க் மேலும் கூறினார்.

காசாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தரைவழித் தாக்குதலைத் தொடர்வதாலும், இஸ்ரேலின் குண்டுவீச்சு மற்றும் முற்றுகையாலும், உணவு, தண்ணீர், எரிபொருள், மின்சாரம் வழங்கப்படுவது கடுமையாகக் கட்டுப்படுத்துவதாலும், அடர்த்தியான தெற்கு காசாவில் ஒரு மனிதாபிமான பேரழிவு (humanitarian catastrophe) ஏற்படவுள்ளது என்று காசாவில் பணிபுரியும் உதவி அமைப்புகள் எச்சரித்துள்ளன.

ஐ.நா.வின் கூற்றுப்படி, போரினால் இடம்பெயர்ந்த காசாவின் மக்கள்தொகையில் சுமார் 70 சதவிகிதத்தினர் தாங்கள் வீடு திரும்ப வாய்ப்பில்லை என்று கவலைப்படுகின்றனர். காசாவில் சுமார் 16 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாகியுள்ளனர் என்பதுதான் இதன் பொருள்.

ஹமாஸ் அமைப்பை துடைத்தெறிவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் இஸ்ரேல், இதுவரை 11,470-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைப் படுகொலை செய்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் குழந்தைகள்.

இஸ்ரேல், இந்த இனப்படுகொலையை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி ஏகாதிபத்தியங்களின் துணையோடுதான் நடத்திவருகிறது. ஜோ பைடன் அரசாங்கம் இஸ்ரேலின் இந்த இனப்படுகொலையை ஆரம்பம் முதலே முற்றும் முழுதாக ஆதரித்து வருகிறது.

படிக்க : இன அழிப்புப் போர்… | காசா | கவிதை

நவம்பர் 9 அன்று, காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கு வாய்ப்பில்லை என்று ஜோ பைடன் தெரிவித்தார். காசாவின் பள்ளிகள், மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள் என ஒவ்வொன்றின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசிய போதெல்லாம், பைடன் அரசு “இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளது” என்று கூறி இஸ்ரேலுக்கு துணையாக நின்றுள்ளது.

யூத மதவெறி இஸ்ரேலும் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் தங்களின் நலன்களுக்காக எத்தனை பாலஸ்தீன மக்களை வேண்டுமானாலும் படுகொலை செய்யும் என்பதே நிதர்சனமான உண்மை.

பொம்மி

தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப்போகிறோம்? | சிறுநூல்

சென்ற ஆகஸ்டு மாதம், நெல்லை நாங்குநேரியில் சின்னதுரை என்ற தலித் மாணவனை வீடுபுகுந்து மறவர் சாதியைச் சேர்ந்த மூன்று மாணவர்கல் சரமாரியாக வெட்டிப்பொட்ட சம்பவம், தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆனால், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தலித் மக்கள் மீது நடந்துவரும் தாக்குதல்களில் இது ஒரு சம்பவம் மட்டுமே. பள்ளர், பறையர், அருந்ததி மக்கள் மீது நாள்தோறும் தாக்குதல்கள் நடந்தேறி வருகின்றன. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கணக்கில் கொண்டு பார்க்கும் போது, ஆதிக்கச் சாதியினரின் தாக்குதல் இலக்கில் தலித் மக்கள் இருக்கின்றனர் என்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது.

கடந்த சில மாதங்களாக, தமிழ்நாட்டில், குறிப்பாக தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதிவெறியர்களால் தலித் மக்கள் மீது ஏவப்படும் வன்முறைகளின் பல்வேறு பரிமாணங்கள், அவற்றிற்கான காரணங்கள், தலித் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கான வழிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இச்சிறு பிரசுரம் சுருக்கமாக முன்வைக்கிறது.

வெளியீடு: தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப்போகிறோம்?
விலை: ரூ.10/-
வெளியிடுவோர்: புதிய ஜனநாயகம்
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
கைபேசி: 9444632561

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்குவது எப்படி? | தோழர் வெற்றிவேல்செழியன்

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்குவது எப்படி? | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கருத்துச் சுதந்திரத்திற்கு கல்லறை கட்டிவரும் பாசிச மோடி அரசு!

வம்பர் 16 அன்று தேசிய பத்திரிகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், அதற்கு நேரெதிர் திசையில் நம் நாட்டில் கருத்து சுதந்திரம் முற்று முழுதாக நசுக்கப்பட்டு வருகிறது. இதைப் புள்ளி விவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

கடந்தாண்டில் உலகளவில் 86 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில், இந்திய பத்திரிகையாளர்கள் 22 பேர். உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 2016-ஆம் ஆண்டில் 133-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 180 நாடுகள் கொண்ட பட்டியலில் 161-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மோடி அரசின் பாசிச அடக்குமுறைகளையும், கார்ப்பரேட் செயல்பாடுகளையும் விமர்சிக்கும், அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள், நிறுவனங்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. அதன் சமீபத்திய உதாரணம் நியூஸ் கிளிக் மற்றும் அதன் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மீதான ஊபா சட்ட ஒடுக்குமுறை.

படிக்க : உத்தரகாண்ட்: சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்கள் – பேரழிவு அபாயங்களை புறந்தள்ளும் பிஜேபி அரசு!

மோடி அரசு மூன்று வழிகளில் ஊடகங்களை திட்டமிட்டு ஒடுக்கி வருகிறது. ஒன்று, அரசு மற்றும் சங்க பரிவார் கும்பலை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, அடுத்து, ஊடக நிறுவனத்தையே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது (இதற்கு உதாரணம் என்.டி.டிவி-யின் பெரும்பான்மை பங்குகளை அதானி குழுமம் கைப்பற்றியது), மூன்றாவது, விமர்சனங்களை முன்வைக்க இடமளிக்கும் சமூக வலைத்தளங்களை 2021-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் புதிய விதிகளின் கீழ் ஒடுக்குவது. இதன் ஒரு பகுதியாகவே தி வயர், ஆல்ட் நியூஸ், நியூஸ் கிளிக், நியூஸ் லாண்ட்ரி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறை.

“ஊடகங்களுக்கு நியாயமற்ற விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதிப்பதன் மூலம், தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு மக்களைச் சிந்திக்க வைக்க அரசு முயல்கிறது. அரசின் கொள்கைகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் ஊடகங்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள், அரசமைப்புக்கு விரோதமானதல்ல” என்று மீடியா ஒன் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதற்கெல்லாம் பாசிச மோடி அரசு பின்வாங்கப்போவதில்லை. பெயரளவிலான ஜனநாயக உரிமைகளையும் கூட காலில் போட்டு மிதித்துவிட்டு காவி – கார்ப்பரேட் பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

படிக்க : செய்யாறு: சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கும் திமுக அரசு!

பெரும்பாலான ஊடகங்கள் பாசிஸ்டுகளின் ஊதுகுழல்களாக மாறிவிட்டன. மோடி அரசின் நிலைப்பாட்டைத் தங்களது நிலைப்பாடாக மேற்கொள்ளும் அளவிற்குப் பக்குவப்பட்டுள்ளன. மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு சில சமூக ஊடகங்களே எதிர்த்துப் பேசுகின்றன. அவற்றையும் இல்லாது ஒழிப்பதன் மூலம் எதிர்ப்பே இல்லையென்ற சூழலை உருவாக்குவதுதான் பாசிச மோடி கும்பலின் நோக்கம்.

பாசிச ஒடுக்குமுறைகளுக்கெதிரான தொடர்ச்சியான, விடாப்பிடியான போராட்ட உணர்வை வரித்துக் கொண்டு, மக்கள் நலனில் ஊன்றி நின்று செயல்படுவதே நம் அனைவரின் கடமை.

அய்யனார்

உத்தரகாண்ட்: சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்கள் – பேரழிவு அபாயங்களை புறந்தள்ளும் பிஜேபி அரசு!

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து:
பேரழிவு அபாயங்களை புறந்தள்ளும் பாசிச பிஜேபி அரசு!

த்தரகாண்டில் சார்தாம் நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தரகாசி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதர்நாத் போன்ற ஆன்மீக வழிபாட்டுத்தளங்களை இணைக்கும் வகையில், சில்க்யாரா வளைவு – பர்காட் இடையே 4.5 கி.மீ தொலைவுக்கு சுரங்கப்பாதை கட்டும்பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 12-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப்பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப்பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தற்போது ஏழாவது நாளாக தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகள் அகற்றப்பட்ட பகுதிகளில் தளர்வான மண் மற்றும் பாறைகள் விழுந்துகொண்டே இருப்பதால், செயல்பாடு தடைபடுகிறது எனவும், தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுவதால் மீட்புப்பணி தாமதமாகலாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

படிக்க : செய்யாறு: சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கும் திமுக அரசு!

இந்நிலையில், நேற்று(17.11.2023) மீட்பு பணி நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென விரிசல் சத்தம் கேட்டதாலும் இரண்டாவது துளையிடும் இயந்திரம் சேதமானதாலும் மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு முன்பாக இதேபோன்ற சத்தம் கேட்டிருக்கிறது. மேலும் அங்கே மீண்டும் நிலம் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது” குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகங்கள் முழுவதும் கிரிக்கெட்டை வைத்து தேசவெறியூட்டிக்கொண்டிருக்கும் வேளையில் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டுள்ள தொழிலாளர்கள் நிலை பற்றி எந்த விவாதமும் இல்லை.

ஆன்மிக சுற்றுலாவும் நிலப்புதைவு நகரங்களும்

ஒன்றிய பிஜேபி அரசின் ‘லட்சியத் திட்டம்’ என்று அறிவிக்கப்பட்டுத்தான் சார்தாம் நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள இந்துக் கோயில்களுக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று கூறியும், தேசியப் பாதுகாப்புக்கானத் திட்டம் என்று கூறியும் இந்த திட்டத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது மோடி அரசு. தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக் கழகம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அனுமதியளிக்கப்பட்டு சுரங்கப்பாதை திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனது இந்துத்துவ அரசியல் நோக்கங்களை கணக்கில் கொண்டு சார்தாம் நெடுஞ்சாலைத் திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் மோடி அரசானது, திட்டம் நிறைவேற்றப்படும் பகுதியின் சுற்றுச் சூழல், புவியியல் பலவீனங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகளில் சாலைகள், சுரங்கப்பாதைகள், நீர்மின் திட்டங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது இயற்கை பேரழிவுகளுக்கு வழிவகுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இமயமலை போன்ற நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள உள்கட்டமைப்புகள், நிலநடுக்க அபாயத்துக்கு உட்பட்டவையாக உள்ளன. ஏற்கனவே மேகவெடிப்பு, பெருவெள்ளம், நிலச்சரிவு என தொடர் பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது உத்தரகாண்ட். கடந்த ஜனவரி மாதம் ஜோசிமத் நகரமே, நிலப்புதைவு நகரமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பலவீனமான உத்தரகாண்ட் மலைப்பகுதியில் உள்ள பாறைகள் நடந்து செல்லும்போதே பல இடங்களில் உடைந்து உதிரும் தன்மை கொண்டவை என்று கூறப்படுகிறது. இதுபோன்ற பகுதிகளில் வாகனங்கள் செல்வதே ஆபத்தானது எனும்போது சுரங்கப்பாதை திட்டம் எவ்வளவு அபாயகரமானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

படிக்க : ஜோஷிமத் நகர நிலச்சரிவு: வெறும் இயற்கை பேரிடரா?

உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்கள் தொகை 1 கோடி. ஆனால், அதை விட 3 மடங்கு பேர் (3 கோடி பேர்) ஆன்மீக சுற்றுலாவுக்காக அங்கு செல்கின்றனர். அங்கு ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையில் 140 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என கடந்த காலத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியென்றால், சுற்றுச்சூழல், புவியியல் அபாயங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்த அளவிற்கு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகளில் அபாயகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது எனத் தெரிந்தும் தனது கார்ப்பரேட் சுரண்டலை உள்ளடக்கிய இந்துராஷ்டிர அரசியல் நோக்கங்களுக்காக மக்களை மிகப்பெரும் இயற்கைப் பேரழிவு அபாயத்துக்குள் தள்ளிவிடுகிறது பாசிச பிஜேபி அரசு. அதற்கான ஒரு உதாரணம்தான் உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து.

இனியன்

செய்யாறு: சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கும் திமுக அரசு!

0

திருவண்ணாமலை சிப்காட்:
கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை ஒடுக்கும் திமுக அரசு!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. மொத்தம் 2,937 ஏக்கர் பரப்பளவிலான இந்த தொழிற்பூங்காவில் இரு அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மூன்றாவது அலகை அமைப்பதற்கு 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

அதில், 361 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் தவிர மீதமுள்ள 2700 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் விவசாயிகளுக்குச் சொந்தமான வளமான வேளாண் விளைநிலங்கள் ஆகும். விவசாய நிலங்களை ‘தரிசு நிலம்’ என்று கூறி மேல்மா, தேத்துறை, நர்மாபள்ளம், குரும்பூர், வட ஆளப்பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, அய்யவாடி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்களை முற்றிலுமாக தமிழ்நாடு அரசு கையகப்படுத்த உள்ளது.

படிக்க : உ.பி: கின்னஸ் சாதனையும் வறுமையும்!

இதை எதிர்த்து, மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில், கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல், 125 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இப்போராட்டத்திற்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது.

போராட்டத்தின் 125-ஆம் நாளான நவம்பர் 2 அன்று விவசாயிகள் அனைவரும் தங்களின் ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை செய்யாறு கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் நோக்குடன், டிராக்டரில் பேரணியாக செல்ல முயன்ற 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்தி கைது செய்தது போலீசு.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணி சென்றது, போலீசு வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என 11 பொய் வழக்குகள் போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட போராட்டம் நடைபெறும் பந்தலில் தங்கியிருந்த 22 பேர் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். கடந்த நவம்பர் 15-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட 22 பேரில், போராட்டத்தின் முன்னணியாளர்கள் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மேல்மா சிப்காட்டை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் மீது திமுக அரசு வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், வெளியூரில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு ஆதரவாக பேச வைத்தது. அதை எதிர்த்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால், நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

படிக்க : காசாவில் தொடரும் மரண ஓலங்கள்! | புகைப்படக் கட்டுரை

கார்ப்பரேட் நலனுக்காக விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை ஏவி, சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கி வருவதன்மூலம் கார்ப்பரேட் விசுவாசத்தை காட்டிவருகிறது திமுக அரசு.

ஏற்கெனவே, மாங்கால் சிப்காட்டிற்கு எடுத்த நிலத்தில் பாதிக்கும் மேல் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் பல இடங்களில் சிப்காட்டிற்காக எடுக்கப்பட்ட நிலங்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கும் சூழ்நிலையில் இப்படி விவசாயம் செய்யும் விளைநிலங்களை ‘தரிசு’ என்று பொய்க்கணக்கு காட்டி விவசாயிகளிடம் இருந்து நிலங்களைப் பறித்து கார்ப்பரேட்களுக்கு வழங்க சிவப்புக் கம்பளம் விரித்து காத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

பதிவிடுவதற்கு முன்: திமுக அரசின் இந்நடவடிக்கைக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்ததால், ஏழு விவசாயிகளில் அருள் ஆறுமுகம் என்பவரைத் தவிர்த்து மற்ற ஆறு பேரின் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 17) உத்தரவிட்டுள்ளார். ஆனால், சிப்காட் திட்டத்திலிருந்து பின்வாங்குவதற்கான எந்தச் சுவடும் இல்லை

பொம்மி

திமுகவுக்கு பாடம் எடுக்க மருதையனுக்கு தகுதி உள்ளதா? | தோழர் மருது

திமுகவுக்கு பாடம் எடுக்க மருதையனுக்கு தகுதி உள்ளதா? | தோழர் மருது

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

காசாவில் தொடரும் மரண ஓலங்கள்! | புகைப்படக் கட்டுரை

டந்த மாதம் 7-ஆம் தேதி காசா மீது தொடுக்கப்பட்ட, இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்கள் 41 நாட்கள் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இத்தாக்குதல்களில் இதுவரை 11,100 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்போது, 500 மருத்துவ ஊழியர்களும், 5,000 பாலஸ்தீன அகதிகளும் தஞ்சம் புகுந்திருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையை கடந்த நான்கு நாட்களாக சூழ்ந்திருக்கிறது இஸ்ரேல் கொலை படை.

அல் ஷிபா மருத்துவமனையை ஹமாஸ் படையினர் தலைமையகமாக கொண்டிருப்பதாகவும், அங்கு ரைஃபில், கிரைனைட்ஸ், ஹமாஸ் சீருடை உள்ளிடவைக் கொண்ட பை ஒன்று கிடைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது இஸ்ரேல் இராணுவம்.

ஆனால், பாலஸ்தீன தேசிய நிறுவன முன்னெடுப்பின் (Palestiane national initiative) பொது செயலர் முஸ்தபா பர்கௌதி, “ஹமாஸ் அமைப்பினரின் உடைமைகளை இஸ்ரேல் இராணுவமே வைத்துவிட்டு மருத்துவமனையில் கிடைத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டு நாடகமாடுகிறது” என்கிறார்.

படிக்க : கிடாரிபட்டி ஆதிக்க சாதி வெறியாட்டம்! சாதி வெறியர்களை வாழ்நாள் சிறையில் அடை! | தோழர் ரவி

அதேபோல், “மருத்துவமனைக்குள்ளிருந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாக இஸ்ரேல் படையினர் கூறுவதும் பொய்” என்கிறார் அல் ஷிபா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ ஊழியர் முகமது அபு சல்மியா. மேலும் அவர், “இஸ்ரேல் படையினர் மருத்துவமனைக்கு வரக்கூடிய தண்ணீர் குழாயை குண்டு போட்டு தகர்த்துவிட்டனர். இதனால் போதிய தண்ணீரும் உணவுமின்றி நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளை வைத்து பராமரிக்கும் இன்குபேட்டர்களுக்கும் (மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்) பழுதானதால் பச்சிளங் குழந்தைகள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றனர்.

அல் ஷிபா மருத்துவமனையிலுள்ள தீக் காயப் பிரிவு, பிரசவ வார்ட் பிரிவு உள்ளிட்ட முக்கிய சிகிச்சை வார்டுகளின் நுழைவாயில்களிலும் இஸ்ரேல் இராணுவம் ரோந்து வந்த வண்ணமுள்ளது. கண்ணில் படும் பாலஸ்தீனியர்கள் -அவர்கள் நோயாளிகள் என்றும் பாராமல்- மீது கொடூர தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இதுவன்றி தனது இராணுவ டாங்கிகளை மருத்துவமனைக்குள் கொண்டுவரவும் முயன்று வருகிறது. மருத்துவமனை முழுவதும் டிரோன்களை பறக்கவிட்டு பீதியை உண்டாகியுள்ளது இஸ்ரேல் இராணுவம்.

இராணுவம் சூழ்ந்து வந்தாலும் மற்றவர்களுடன் சேர்ந்து உயிரை விடுவோமே தவிர, ஒருபோது நோயாளிகளை தனியே தவிக்கவிட்டு செல்லமாட்டோம்” என்று மனிதநேயத்துடன் கூறுகிறார் மருத்துவர் ஒருவர்.

இராணுவம் நடத்திய தாக்குதல்களில் குத்துயிரும் குலையுருமாக உயிருக்கு போராடிவரும் நோயாளிகளையும் விட்டுவைக்கவில்லை இஸ்ரேலின் இனவெறி.

தெற்கு காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் உடல் முழுவதும் வழியும் குருதியுடன், தாக்குதலால் பயத்தில் உறைந்துபோயிருக்கும் தனது குழந்தையை கட்டி ஆசுவாதப்படுத்த முயல்கிறார் பாலஸ்தீன தாய்.
இராணுவ படையினரால் கொல்லப்பட்ட தங்களது உறவினர்களுக்கு பிரியா விடைக் கொடுக்கும் பாலஸ்தீனியர்கள்
காசாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சொல்லப்படுவதைவிட அதிகமாக இருக்கலாம் என்கிறார் அமெரிக்க வெளியுறவு இணை செயலர் பார்பரா லீஃப
இஸ்ரேல் தாக்குதலால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறார்கள்.
எரிபொருள் பற்றாக்குறை, தொடர் தாக்குதல் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 22 மருத்துவமனைகள் செயல்படாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உருகுலைந்து போயிருக்கும் தெற்கு காசாவின் ஒரு பகுதி
நவம்பர் 15, 2023 அன்று எடுக்கப்பட்ட புகைப்பம் இது. அல் ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் அங்கு தஞ்சம் புகுந்த பாலஸ்தீனிய அகதிகள்மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியது.
அல் ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்திருக்கும் இஸ்ரேல் படையினர்.
இஸ்ரேலின் தாக்குதலால் வடக்கு காசாவில் இருந்து தப்பியோடி வந்த பாலஸ்தீன அகதிகளுக்கு கான் யூனிஸ் என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கூடாரங்கள்.
இராணுவ தாக்குதல் குறைவாக இருக்கும் தெற்க்கு காசாவில் கூட தண்ணீர், உணவு கிடைக்கப்பெறாமல் அவதிக்குள்ளாகிவரும் பாலஸ்தீனிய மக்கள்
போர் தொடங்கிய பிறகு எகிப்தின் எல்லை வழியாக காசாவிற்குள் முதன்முறையாக வந்திருக்கும் எரிபொருள் விநியோகம். ஆனால் இது போதுமானதல்ல என்கிறது ஐ.நா.
எகிப்தின் ரஃபா எல்லை வழியாக உயிர் தப்பியோடும் பாலஸ்தீனியர்கள்.

ஆதினி
செய்தி ஆதாரம் : அல்ஜசீரா

பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்! | ஆசிரியர் உமா மகேஸ்வரி

பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்! | ஆசிரியர் உமா மகேஸ்வரி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!