சூனாசிஸ் (Zoonosis) எனும் உயிரியல் நிகழ்ச்சிப்போக்கு
கோவிட்-19 என்பது அதிதீவிர சுவாச பிரச்சினையை உண்டாக்கும் கொரோனா வைரஸ்-2 (Severe Acute Respiratory Syndrome Corono Virus 2, SARS-CoV-2) என்னும் வைரஸ் கிருமியால் உண்டாகும் நோயாகும். முதன்முதலில் கொரோனா வைரஸ் என்னும் வைரஸ் குடும்பம், 1960-களில் கண்டறியப்பட்டது. இது பல நோய்குறிகளை உண்டாக்கும்; சிலரிடம் சாதாரண சளி, காய்ச்சல் மட்டும் வெளிப்படும்; மற்ற சிலருக்கு தீவிரமான சுவாச பிரச்சினை, நுரையீரல் தொற்று போன்றவை உண்டாகி மரணம் வரை இட்டு செல்லலாம்.
கடந்த 2012-ம் ஆண்டு தோன்றிய மெர்ஸ்-கொரோனா வைரசும் (Middle East Respiratory Syndrome Coronovirus, MERS-CoV) தொற்று உறுதிசெய்யப்பட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தது. கோவிட்-19 மற்ற நோய்க்குறிகளுடன், காய்ச்சலையும் வறட்டு இருமலையும் தோற்றுவிக்கிறது. இது நிமோனியாவை உண்டாக்கி குறிப்பாக வயதானவர்களையும், ஏற்கனவே உடல்நலப் பிரச்சினை உள்ளவர்களையும் கொல்லும் ஆபத்தான வைரஸ் தொற்றாக இருக்கிறது. (இந்த நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் இறப்புவிகிதம் கிட்டதட்ட 2-4 சதவிகிதமாக இருக்கிறது. இதுவே பருவகால ஃபுளுக்காய்ச்சலின் இறப்புவிகிதமோ 0.1 சதவிகிதம் தான்.) இந்த கரோனாவைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இருமல், தும்மல் மூலம் வெளிவரும் துளிகள் மற்றும் நுண்துளிகள் (Respiratory droplets and aerosols) மூலமாக பரவுகிறது.
உயிரணுவியல்ரீதியாக பார்த்தால் இந்த கொரோனா வைரஸ் வேகமாக சடுதி–மாற்றமடையக்கூடிய (Mutation) – (Mutation – ஒரு உயிரினம் தன்னுடைய மரபணுவை பிரதியெடுக்கும்போது உண்டாகும் தவறுகளில் இருந்து இது ஏற்படுகிறது) – ஒற்றை இழை ஆர்.என்.ஏ (Single Strand RNA) வைரஸாகும்.
“மனிதயினத்தின் மரபணு ஒரு சதவீதம் பரிணாமமடைய 80 லட்சம் வருடங்கள் எடுத்துக்கொள்ளும். விலங்குகளுக்கு இருக்கும் பல ஆர்.என்.ஏ வைரஸ்கள் ஒரு சதவீதம் பரிணாம மாற்றமடைய சில நாட்களே எடுத்துக்கொள்கின்றன.”7மற்ற பல வைரஸ்களை போலவே, கொரோனா வைரஸுக்கும் விலங்கினங்கள்தான் வாழ்கலனாக (reservoirs) இருக்கின்றன. இந்த வைரஸ்கள் பரிணாம வளர்ச்சி (through antigenic shift) மூலம் விலங்கினத்திலிருந்து மனிதயினத்துக்கு பரவும் நிகழ்ச்சிப் போக்கு சூனாசிஸ் (Zoonosis) எனப்படுகிறது.
அப்படி மாற்றமடையும் வைரஸ், பிறகு மேலும் பரிணாம வளர்ச்சியடைந்து மனிதர்–மனிதர் தொற்றாகவும் உருவாகலாம். இப்படி நடக்கும் போதுதான் கொள்ளை நோய்களோ (Epidemics), உலகளாவிய கொள்ளை நோய்களோ (Pandemics) உண்டாகின்றன. பரிணாமமடைந்த இந்த வைரஸ்களுக்கு எதிராக, குறிப்பான நோயெதிர்ப்பு அணுக்கள் மனிதர்களுக்கு இருக்காது என்பதால், வேகமாக பரவி பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஃபுளு காய்ச்சல் (Influenza) ஒரு சிறந்த உதாரணம். கொரோனா வைரஸ் போலவே, ஃபுளு காய்ச்சல் வைரஸ்களும் ஒற்றை–இழை ஆர்.என்.ஏ வைரஸ்கள் தான். இந்த வைரஸ்களின் வாழ்கலனாக நீர்வாழ் பறவையினங்களான வாத்து, மணிவாத்து, போன்றவை இருக்கின்றன. இந்த பறவையினங்களில் ஃபுளு காய்ச்சல் வைரஸ்கள் சாதாரண நோய்குறிகளையே உண்டாக்குகின்றன.
உதாரணமாக, இவைகளிடம் செரிமான பிரச்சினை உண்டாகி வைரஸ் தொற்று உள்ள பறவைகளின் கழிவுகளில் இருந்து வைரஸ் வெளிவரும். இவற்றுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு ஏற்படும்போது, மனிதர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு மூச்சுக்குழாய் சுவாசப் பிரச்சினைகள் உண்டாகின்றன. இப்படி, ஃபுளு காய்ச்சல் வைரஸ்கள் பல சடுதி–மாற்றம் மூலம் பறவையினங்களின் எல்லையைத் தாண்டி மனிதர்களையும் வாழ்கலனாக கொண்டு வாழும் வகையில் வைரஸ்கள் பரிணாம மாற்றமடைகின்றன8 . இது அரிதாகவே நடக்கின்றது எனினும், இப்படியும் நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
பொதுவாக, மனிதர்களை வாழ்கலனாக கொள்ளும் வகையில் வைரஸ்கள் சடுதி–மாற்றமடைவது இன்னொரு இடைப்பட்ட (intermediate host) விலங்கினம் மூலமாகவே நடக்கின்றது. பன்றிகள் மூலமாக பல்வேறு சமயங்களில் நடக்கின்றன. ஏனெனில், பன்றிகளின் உயிரணுக்கள் பறவைகளை தொற்றும் வைரஸ்கள் மற்றும் மனிதர்களை தொற்றும் வைரஸ்கள் ஆகிய இரண்டினாலும் பாதிப்படையும் வகையில் உள்ளன9.
ஆக, இந்த இரண்டு உயிரினங்களையும் கடந்து வருவதன் மூலமாக அது மனிதர்களைத் தொற்றும் புதிய வைரஸ்களாக வடிவம் எடுக்கின்றன. கறாராக சொன்னால், இப்படிப்பட்ட சடுதி–மாற்றம் மூலம் சூனாசிஸ் தாவல் நடப்பதற்கு அந்த வைரஸ் பல முறை பறவை – இடைப்பட்ட விலங்கினம் (பன்றி) – மனிதன் என்கிற சுழற்சியில் மீண்டும் மீண்டும் இவ்வுடல்களுக்குள் போய் வருவதன் மூலமே ஏற்பட முடியும்.
அதாவது, இந்த சுழற்சியில் பல சடுதி–மாற்றங்கள் மூலமாக பரிணாமம் அடைந்து மனிதர்களை வாழ்கலனாக கொள்ளும் வைரஸ்களாக இவை தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன (மாறிக் கொள்கின்றன). இப்படி நடைபெறும் நிகழ்ச்சிப்போக்கைதான் மேலே கூறியுள்ளபடி சூனாசிஸ் (Zoonosis) என்று பரிணாம உயிரியல் குறிப்பிடுகிறது.
பருவகால ஃபுளுக்காய்ச்சல் (Seasonal Influenza) கிட்டதட்ட 5 லட்சம் மக்களை வருடந்தோறும் கொல்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், மேற்கூறியவாறு வடிவமெடுக்கும் புதிய வைரஸ்கள் உலகளாவிய கொள்ளை நோயை (Pandemic Influenza) உண்டாக்க வல்லவை. கொரோனா வைரஸ்கள் பறவையினங்களிலும் இருக்கின்றன. குறிப்பாக, மனிதர்களுக்கு பரவும் கொரோனா வைரஸ் வௌவாலை வாழ்கலனாகக் கொண்டது. வௌவாலிடம் இருந்து மற்ற விலங்கினங்களான பன்றி, புனுகுப் பூனை, ஒட்டகம் ஆகியவற்றுக்கு தாவுவதன் மூலமாக மனிதர்களுக்கு பரவும் தன்மையை இந்த கொரோனா வைரஸ்கள் பெறுகின்றன.
எடின்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த தொற்றுநோய்கள் பற்றிய வல்லுனரான மார்க் உல்ஹவுஸ் அவர்கள், 2005-ல் நடத்திய ஆய்வில் சூனாடிக் தாவல் மூலம் உருவாகும் நோய்களின் முக்கியத்துவத்தை பற்றி கூறுவதாவது : “மனிதர்களை பாதிக்கும் 1407 நோய்களில் 58 சதவீதம் விலங்குகளிடம் இருந்து சூனாடிக் தாவல் மூலம் வருவதாகவும் தொற்றுநோய்களை உருவாக்கும் ஒட்டுண்ணிகளில் 73 சதவீதம் மனிதர்களுக்கும் விலங்களுக்கும் நோய் ஏற்படுத்தும் தன்மையுள்ளவை என்றும்கால்நடை வளர்ப்பு துறையின் மூலம் இது பரவுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார்10.மலேசியாவில் 1999-ல் நிப்பா வைரஸ் முதன்முதலில் கண்டுபிக்கப்பட்டது. இதற்கு முன்பு மனிதர்களுக்கு இந்த வைரஸ் இருந்ததில்லை என்பதையும் நிப்பாவின் தோற்றம் பழம்திண்ணி வௌவால்களிடம் இருந்து உருவாகியது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது11. மலேசியாவின் மாம்பழத் தோட்டங்களில் இந்த வௌவால்கள் வாழ்வதையும், அது சாப்பிட்ட மீத மாம்பழங்களை பன்றிகள் சாப்பிட்டதன் மூலம் தொற்றுக்கு உள்ளாகி பிறகு மனிதர்களுக்கு பரவியதாகவும் தசாக் கூறுகிறார்12
சூனாசிஸ் என்னும் வைரஸ் – உயிரியல் நிகழ்ச்சிபோக்கு கொரோனா வைரஸ் போன்ற ஃபுளு கொள்ளைநோய்களை உண்டாக்கும் வைரஸ்களின் தோற்றத்தை புரிந்துகொள்ள அறிவியல் – ரீதியாக முக்கிய பங்காற்றுகிறது.
அடுத்ததாக, இந்த சூனாடிக் தாவல் மூலம் புதிய வைரஸ்கள் உருவாவதற்கான சாத்தியத்தை, தற்கால – இலாபவெறியை மட்டுமே மையமாகக் கொண்ட – முதலாளித்துவ உற்பத்திமுறை எப்படி உண்டாக்குகிறது என்பது குறித்து – அதாவது பல தற்செயலான சடுதிமாற்றங்களின் மூலம் உண்டாகும் சூனாடிக் தாவல்களை இலாபவெறி கொண்ட முதலாளித்துவ உற்பத்திமுறை எப்படி தவிர்க்கமுடியாமல் உண்டாக்குகிறது என்பது குறித்து – விரிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
7 – Morens, David M, Peter Dazak and Jeffery K Taubenberger, 2020, “Escaping Pandora’s Box-Another Novel Coronavirus”, New England Medical Journal (26 Feburary). 8 – Dehner, George, 2012, Global Flu and You: A History of Influenza 9 – Dehner, George, 2012, Global Flu and You: A History of Influenza 10 – Woolhouse MEJ, Gowtage-Sequeria S. Host range and emerging and reemerging pathogens. Emerg Infect Dis 11(12):1842–1847 (2005) 11 – Chua KB, et al. Isolation of Nipah virus from Malaysian Island flying-foxes. Microbes Infect 4(2):145–151 (2002). 12 – Daszak P, et al. Interdisciplinary approaches to understanding disease emergence: the past, present, and future drivers of Nipah virus emergence. Proc Natl Acad Sci USA 110(suppl 1):3681–3688 (2012)
டேவிட் அலெக்சான்ட்ரோவிச் டஷ்மான் (David Aleksandrovich Dushman) 1.4.1923 – 4.6.2021
“நாங்கள் அங்கே சென்றபோது முகாமை சுற்றி போடப்பட்டு இருந்த மின்சார வேலியை எங்கள் டாங்குகளை ஏற்றி உடைத்து முன்னேறினோம். பின்னர்தான் அந்த ஜீவன்களை கண்டோம். தடுமாறியபடியே அந்த மனித எலும்புக்கூடுகள் வெளியே வந்தன. ஏற்கனவே செத்து மடிந்தவர்கள் மீது அந்த எலும்புக்கூடுகள் உட்கார்ந்தும் சாய்ந்தும் கிடந்தன.
எல்லோரும் சீருடை அணிந்து இருந்தார்கள். அவர்களிடம் நாங்கள் பார்த்தது எல்லாம் வெறும் கண்கள், கண்கள், ஒடுங்கிய கண்கள் மட்டுமே. கொடூரம், மிகக் கொடூரம். எங்களிடம் இருந்த உணவு டப்பாக்களை அந்த மனிதர்களை நோக்கி எறிந்தோம். அடுத்த கணம் ஃபாசிஸ்ட்டுகளை வேட்டையாட முன்னேறினோம். அப்போது வரையிலும் ஆஸ்விட்ஸ் Auschwitz என்ற நாஜி சித்ரவதை முகாம் என்ற ஒன்று இருப்பதே எங்களுக்கு தெரியாது”.
“என்னால் நடக்க முடியாது, ஏனெனில் என்னால் மூச்சுவிட முடியாது. எனது ஒருநாள் உடற்பயிற்சி என்பது ஒரே ஒரு நிமிடம் மட்டுமே என்றுதான் இருந்தது. மிக மிக மெதுவாக, மிக மிக மிதமாக எனது உடற்பயிற்சியை தொடர்ந்து செய்தேன். ஒரு கட்டத்தில் நான் ரஷ்யாவின் வாள்வீச்சு சாம்பியன் ஆனேன் (1951இல்)”.
000
போலந்தில் நாஜி ஹிட்லரால் கட்டப்பட்டு இருந்த கொலைக்கூடமான ஆஸ்விட்ஸ் வதைமுகாமை 1945 ஜனவரி 27 அன்று சோவியத் செம்படை வீரர்கள் முற்றுகை இட்டு அழித்தனர். சோவியத் டாங்கு படையில் அப்போது முன்னணியில் இருந்த டேவிட் டஷ்மான் ஜெர்மனியின் மியூனிக் நகரில் 4.6.2021 அன்று தான் 98-ஆவது வயதில் காலமானார். அவர் கூறியதுதான் மேலே உள்ளவை.
உண்மையில் அவரே காலத்தின் அடையாளம்தான். இந்த 98 ஆண்டுகளில் உலகத்தின் எத்தனை எத்தனை அரசியல் நகர்வுகளையும் போர்களையும் பார்த்திருப்பார்!
டேவிட் அலெக்சான்ட்ரோவிச் டஷ்மான்
செஞ்சேனை விடுதலை செய்த ஐரோப்பா ஒரு காலத்தில் சோசலிச உலகமாக இருந்தது, அதை பார்த்திருப்பார், 1990-களுக்கு பிறகு சோவியத்தின் சிதைவையும் அதன் விளைவாக நிகழ்ந்த ஐரோப்பிய சோசலிச முகாமின் தகர்வையும் பார்த்திருப்பார். சோவியத்தின் சிதைவு எண்ணற்ற ஐரோப்பிய நாடுகளின் தத்துவார்த்த தழுவல்களையும் ஆட்டிப்படைத்தது எனில், 1945 தொடங்கி 1990 வரை ஒரு 45 வருட காலத்திய அரசியல் அமைப்பு பலமான அஸ்திவாரத்தில் கட்டப்பட்டு இருந்ததா, வெறும் ஊதிப்பெருக்கப்பட்ட உள்ளீடு அற்ற போலி கட்டமைப்பாகவே இருந்ததா, பொலபொலவென உதிர்ந்து போகும் அளவுக்கு, என்பது விவாதத்துக்கு உரியது.
ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் ஹிட்லரின் படைகளால் கடத்தப்பட்டும், பிடிக்கப்பட்டும் இருந்த பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் Auschwitz- Birkenau வதை முகாமில் அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் யூத இன மக்கள். பிறர் ஹிட்லரால் போரில் பிடிக்கப்பட்ட சோவியத் படை வீரர்கள், சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள், குழந்தைகள், பெண்கள், நாடோடிகள், ஓரின சேர்க்கையாளர்கள். 1940 முதல் 1945 வரை இங்கு நடந்த வதைகள், படுகொலைகள் கற்பனைக்கு எட்டாதவை.
சோவியத்தின் டாங்கு படை முகாமின் சுற்றுசுவரை தகர்க்க, சோவியத்தின் 322-ஆவது துப்பாக்கி படை பிரிவு முகாமின் உள்ளே நுழைந்தது. அங்கு அவர்கள் நுழைந்த பின்னர்தான் அது ஒரு சித்ரவதை முகாம் என்பதே அவர்களுக்கு தெரிந்தது, பின்னர் உலகத்துக்கும் தெரிந்தது.
செஞ்சேனையின் ஒரு வீரராக ஜெர்மனிக்கு வரும் முன்னர், டஷ்மான் இரண்டாம் உலகப்போரின் கொடூரமான போர்க்களங்கள் பலவற்றில் பங்கு பெற்றார். புகழ்பெற்ற ஸ்டாலின்கிராட் முற்றுகைப்போர், Kursk போர்க்களம் ஆகியவை முக்கியமானவை. போரின்போக்கில் மூன்றுமுறை மிக மோசமான காயங்களுக்கு உள்ளானார். அவரது நுரையீரலின் ஒரு பகுதி அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. 12,000 போர் வீரர்கள் கொண்ட அவரது டாங்கு படைப்பிரிவில் போர் முடியும்போது உயிருடன் இருந்தவர்கள் 69 வீரர்கள் மட்டுமே, அவரும் ஒருவர்.
20 கோடி சோவியத் மக்களில் 2 கோடி மக்கள் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தார்கள் என்பது வெறும் உயிரிழப்பு மட்டுமே அல்ல, ஃபாசிச சக்திகளிடம் இருந்து உலகை காக்க அவர்கள் செய்த உயிர்த்தியாகம் என்றுதான் நாம் அதை புரிந்துகொள்ள வேண்டும்.
000
போரின் பிறகு வாள்வீச்சுக்கலையை கற்றுக்கொண்டார். நுரையீரலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சையில் இழந்த அவர் இயல்பு வாழ்க்கையை அவ்வளவு எளிதில் மீட்டுவிடவில்லை. ஒரே ஒரு நிமிடம் கூட என்னால் உடற்பயிற்சி செய்ய முடியாது என்று சொன்னவர்தான் தன் மனஉறுதியை மட்டுமே துணையாக கொண்டு மிக மிக மெதுவாக முன்னேறுகின்றார். 1951-இல் ரஷ்யாவின் வாள்வீச்சு சாம்பியன் பட்டத்தை வெல்கின்றார்!
பின்னர் 1952 முதல் 1988 வரை சோவியத் யூனியன் பெண்கள் வாள்வீச்சு அணிக்கு பயிற்சியாளர் ஆக இருந்தார்! 1976 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம், 1980 ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை Valentina Sidrova உள்ளிட்ட பல புகழ்பெற்ற வீரர்களுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார். 90 வயதுக்குப் பிறகும் பயிற்சி அளிப்பதை தொடர்ந்துள்ளார்!
1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டியின்போது இஸ்ரேலிய விளையாட்டு அணியின் மீது பாலஸ்தீன போராளிகள் நிகழ்த்திய தாக்குதலின்போது மிக அருகில் இருந்து உயிர் தப்பினார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான Thomas Bach தன் இரங்கற்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “தலைசிறந்த வாள்வீச்சு பயிற்சியாளர் அவர். ஆஸ்விட்ஸ் வதை முகாமை விடுவித்த வீரர்களில் நம்மிடையே வாழ்ந்த கடைசி வீரர் அவர்”. 1970-இல் மேற்கு ஜெர்மனிக்காகதான் போட்டியில் பங்கு பெற்றபோது டஷ்மான் தனக்கு நட்புரீதியில் ஆலோசனைகள் அளித்ததை நினைவுகூர்கின்றார்.
“டஷ்மான் யூத வம்சத்தை சேர்ந்தவர் என்பதும் இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்றவர், ஆஸ்விட்ஸ் முகாமை நேரில் கண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றாலும் அவர் அனைத்தையும் புறந்தள்ளி மிகப்பெரிய மனிதாபிமானமிக்க மனிதராக நடந்து கொண்டார், என்னால் அவரது இந்த உயரிய குணத்தை ஒருபோதும் மறக்க முடியாது” என்றும் கூறுகின்றார்.
“வரலாற்றின் சாட்சியங்களாக இருப்போரின் ஒவ்வொருவரின் மறைவும் நமக்கு இழப்புத்தான். அதிலும் டேவிட் டஷ்மானின் இழப்பு என்பது தனிப்பட்ட வேதனையை ஏற்படுத்துகின்றது. நாஜிகளின் மரண ஆட்சியை நேருக்கு நேர் நின்று அழித்தவர்களில் அவர் முன்னணியில் இருந்தார். இரண்டாம் உலகப்போரில் தாங்கள் நேரில் கண்டவற்றை நமக்கு சொல்லிக்கொடுத்தவர்களில் எஞ்சி இருந்தவர்களில் அவரும் ஒருவர்” என ஜெர்மனியின் யூத சமூகத்தவரின் மத்திய கவுன்சிலின் முன்னாள் தலைவரான Charlotte Knobloch தன் இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
000
பால்டிக் கடலோரம் வடக்கு போலந்தில் உள்ள Danzig என்ற நகரில் பிறந்தவர் அவர். போருக்குப்பிறகு சோவியத் ஒன்றியத்தின் நாற்பதுக்கும் மேற்பட்ட வீரப் பதக்கங்கள், பாராட்டு சான்றுகளை பெற்றவர். ஜெர்மன்-சோவியத் போரில் ஈடுபட்டோருக்கு அளிக்கப்படும் உயரிய The Order of The Patriotic War விருதைப் பெற்றவர். 60 லட்சம் மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் ஹோலோகாஸ்ட் எனப்படும் பெரும் இன அழிப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைப்பது, தனது பெருமைக்குரிய பதக்கங்களை அணிந்து கூட்டங்கள், கலந்துரையாடல்களில் பங்கேற்பது என சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தார்.
ஆஸ்திரியாவில் சில ஆண்டுகள் வாழ்ந்த பின், 1996 முதல் 4.6.2021 வரை ஜெர்மனியின் மியூனிக் நகரில் வாழ்ந்தார். அவர் மனைவி Zoja பல வருடங்களுக்கு முன் மறைந்தார்.
ஜெர்மனி சரண் அடைந்த 1945 மே 9ஆம் நாள் வெற்றித்திருநாள் Victory Day என சோவியத் அரசு அறிவித்து கொண்டாடியது, இப்போதும் தொடர்கின்றது. அந்த நாளில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தனை அழைத்து வாழ்த்துவதை வழக்கமாக கொண்டு இருந்தார் என டஷ்மான் சொல்வார்.
டேவிட் டஷ்மான்! அவர் காலமானார் என்பது சம்பிரதாயமான அஞ்சலி அல்ல, அவர் மானிட குல விடுதலை வரலாற்றின் செதுக்கப்பட்ட பக்கங்களில் ஒன்றென நிரந்தரமாக வாழ்வார்.
கொரோனா இரண்டாம் அலையில் இந்திய மக்கள் படுமோசமாக பாதிப்படைந்துள்ளனர். மோடி அரசு மக்களை கொரோனா பெருந்தொற்றில் இருந்து காப்பாற்றும் எந்த நடவடிக்கையையும் துரிதமாக எடுக்கவில்லை.
கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் தடுப்பூசியின் மீதான கட்டுப்பாட்டை தங்கள் கைகளில் எடுத்துள்ளன. ஆனால் இந்தியாவில் மோடி அரசு தடுப்பூசிகளை இரண்டு தனியார் நிறுனவங்களின் கட்டுப்பாட்டில் கொடுத்தது மட்டுமல்லாமல், பேரழிவு காலச் சூழலிலும் அந்நிறுவனங்களின் இலாபத்தை உறுதி செய்து கொடுத்திருக்கிறது. மக்களுக்கு சுகாதார வசதியையும் வாழ்வாதாரத்தையும் வழங்க பணம் செலவழிக்காத சூழலிலும், கார்ப்பரேட்டுகளின் கல்லாவில் பணம் குறைந்துவிடக் கூடாது என்பதில் பெரும் அக்கறை செலுத்துகிறது மோடி அரசு.
கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் மோடி அரசின் செயல்பாடுகளைப் பற்றி தோழர் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன் இன்று (09-06-2021) மாலை 6.30 மணியளவில் இணையவழி உரையாற்றுகிறார். மக்கள் அதிகாரம் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் அவரது உரையை தவறாமல் பார்க்கவும் !!
♦ தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை ! தொடரும் கார்ப்பரேட் கொள்ளை !
நாள் : 09.06.2021, புதன்கிழமை நேரம் : மாலை 6.30 மணிக்கு
இலாப வெறியை நோக்கமாகக் கொண்ட ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின்
கோரத்தாண்டவமே கொரோனா ! – பகுதி 1
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கொரோனா கொள்ளை நோயிலிருந்து மீள மனித சமூகம் முயன்று வருகிறது. 2019-ம் ஆண்டின் கடைசி மாதங்களில் பரவ ஆரம்பித்த சார்ஸ்–கொரோனா வைரஸ்-2ல் இருந்து வேறுபட்ட, 9 வகையான உருத் திரிந்த (Virus Variants) சார்ஸ்–கொரோனா வைரஸ்-2 வைரஸ்கள் உருவாகியுள்ளது.
இந்தியாவிலும் B.1.617, B.1.617.1, B.1.617.2, B.1.617.3, போன்ற உருத் திரிந்த (Virus Variants) சார்ஸ்–கொரோனா வைரஸ்கள் உருவாகி பரவி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகளில் கோவிட்-19 கொள்ளை நோயின் இரண்டாம், மூன்றாம் அலைகள் உருவாகியுள்ளன. இதுவரை உலகளவில் 17 கோடி மக்கள் இக்கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவிலும் கிட்டதட்ட 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 லட்சம் பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் பார்வைக்கு, இப்படிப்பட்ட கொள்ளைநோய்கள் ஊகிக்க முடியாததாகவும், மனித இனத்திற்கு இயற்கையால் வழங்கப்பட்ட தண்டனை போலவும் இருப்பதாக பலர் கருதலாம். தற்போது பரவிவரும் கோவிட்-19 கொள்ளைநோயும் அப்படிப்பட்ட இயற்கை பேரிடர் என்று கருதலாம். ஆனால், கொள்ளைநோய்களை உண்டாக்கும் கிருமிகளின் தோற்றம் மற்றும் அதன் வேகமான உருத் திரிபு மாற்றம் ஆகியவற்றிற்கு பொருத்தமான சமூக, பொருளாதார நிலைமைகளும் இருக்கும்போதுதான் இத்தகைய பெருந்தொற்று கொள்ளைநோயாக அவை உருவாகின்றன, என்பது இன்னும் சற்றும் ஆழமாக ஆய்வு செய்தால் நமக்குத் தெரியவரும்.
தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 என்னும் உலகளாவிய கொள்ளைநோய் மற்றும் இதற்கு முன்னால் உருவாகிய ஆந்த்ராக்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களின் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணத்தை சற்று ஆழமாக ஆய்வு செய்தால், அதன் அடித்தளத்தை தற்காலத்திய முதலாளித்துவ உற்பத்திமுறையிலும், உலக முதலாளித்துவ நெருக்கடியிலும் கண்டுகொள்ள முடியும்.
இன்றைய சூழலில், உலக முதலாளித்துவம் சிக்கியுள்ள கட்டமைப்பு நெருக்கடியை கோவிட்-19 மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த கோவிட்-19 நோயின் பரவலை தடுக்க’ உலகின் பல அரசுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன. ஏற்கெனவே, நெருக்கடியின் விளிம்பை தொட்டுவிட்ட பொருளாதாரம் இதனால் இருண்ட ஆழமான சுழலில் விழும் என்று முதலாளித்துவ அறிவுஜீவிகள் கூறுகின்றனர்.
ஆனால், இவர்கள் அனைவருமே தீர்வே காணமுடியாத பொருளாதார நெருக்கடிக்கு மட்டுமல்ல, இக்கொள்ளைநோய் உருவானதற்கும் முதலாளித்துவ இலாப வெறிதான் காரணம் என்பதை வசதியாக பேச மறுக்கின்றனர். பொதுவாக, இப்படிப்பட்ட கொள்ளைநோய்கள் உருவாகுவது முதலாளித்துவ உற்பத்தி முறையின் இலாபவெறி கொண்ட இயக்கத்தில் எப்படி உள்ளார்ந்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள இக்கட்டுரை பயன்படும் என்று கருதுகிறோம். வாசகர்களின் வசதி கருதி இந்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக பிரித்து வெளியிடுகிறோம்.
கொள்ளைநோய்கள் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு :
கொள்ளை நோய்கள் உருவாகுவதும், அதனால் மனித சமூகம் பாதிப்படைவதும் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. இருந்தபோதிலும், கொள்ளைநோய்களில் ஒருவகையான கோவிட்-19 போன்ற ஃபுளு கொள்ளைநோய்களை (Pandemic flu) உருவாக்கும் வைரஸ்களின் தோற்றத்தை தற்காலத்திய இலாபவெறி கொண்ட முதலாளித்துவ உற்பத்திமுறை அதிகளவில் சாத்தியப்படுத்துகிறது. இதை பார்ப்பதற்கு முன்பு, மனித சமூகம் இதுவரை சந்தித்துள்ள கொள்ளைநோய்களைப் பற்றி ஒரு வரைக்கோட்டு சித்திரத்தை பார்த்துவிடுவோம்.
ஆரம்ப கால மனித சமூகம் வேட்டை மற்றும் உணவு தேடும் சிறு குழுக்களாக இருந்தது. அப்போது சில சமயங்களில் விலங்கு மற்றும் சுற்றுசூழலில் இருந்து அச்சமூக குழுக்கள் தொற்று நோய்களை எதிர்கொண்டன. ஆனால், அச்சிறு குழுக்களில் இருந்து மற்ற குழுக்களுக்கு அந்நோய்கள் பரவ மிக குறைவான வாய்ப்புகளே இருந்தது. சில காலத்தில், அந்நோய் தொற்றுக்கு உட்பட்ட சமூக குழுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுக்கொண்டன. இந்த நிலைமை, கிட்டதட்ட 10,000 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட புதிய கற்கால புரட்சிக்கு பிறகு மாற்றமடைந்தது.
18-ம் நூற்றாண்டு, தொழிலாளர்களின் குடியிருப்பு
புதிய கற்கால புரட்சி நிலையான இருப்பிடத்தைக் கொண்ட விவசாய சமூகத்தை படைத்தது. மக்கள்தொகை பெருகியது; அவ்விருப்பிடங்களில் மனிதக் கழிவுகளும் பெருகின; காட்டு விலங்குகள் வளர்ப்புப் பிராணிகளாக மாற்றப்பட்டு, மனிதன் கால்நடை வளர்ப்பில் ஈடுபடத் துவங்கிய பிறகு மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. இந்நிலைமைகள் வைரஸ் கிருமிகளும் மற்ற நோய் ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளும் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கும், மனிதனிடமிருந்து விலங்குகளுக்கும் பரவ அதிகமான வாய்ப்புகள் ஏற்பட்டன. மேலும், வாணிபத்தின் வளர்ச்சி, போர் மற்றும் இடப்பெயர்வு மூலமாக மற்ற மக்கள் சமூகத்திற்கும் பரவ வாய்ப்புகள் ஏற்பட்டன.
இங்ஙனம் பரவிய நோய்களை “நாகரிக நோய்கள்” என்கிறார் வில்லியம் மக்நில். ஏதாவது புதிய வாணிப தொடர்புகளோ போர்களோ இம்மக்கள் சமூகத்திற்கு ஏற்பட்டால் புதிய நோய்கள் பரவும் வாய்ப்புகளும் ஏற்பட்டன. உதாரணமாக, கி.பி. 165-ம் ஆண்டில் ரோமப் பேரரசின் ஒரு படைப் பிரிவு மெசப்பொட்டாமியாவில் முகாமிட்டபோது ஒரு கொள்ளை நோய் (பெரியம்மையாக இருக்கலாம் என்கிறார் மக்நீல்) பரவியது1.இது கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு நீடித்து அப்பகுதியில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையை அழித்தது.
மெடிட்டெரியன் பகுதியில் கி.பி. 541-767 வரை மீண்டும் மீண்டும் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றான புபானிக் பிளேக் நோய் எலிகளை கொண்டு வந்த வணிக கப்பல்கள் மூலம் பரவ வாய்ப்பு ஏற்பட்டது2.இது சில கோடி மக்களை பலி வாங்கியது. 13-ம் நூற்றாண்டில் மங்கோலிய பேரரசு கண்டடைந்த வணிக வழித்தடங்கள் மூலமாக ஸ்டெப்பி பகுதிகளுக்கு புபானிக் பிளேக் நோய் பரவியது. பிறகு, கேரவன் வணிக வழித்தடம் மூலமாக கிரிமியாவை 1346-ம் ஆண்டு அதே பிளேக் நோய் தாக்கி ஐரோப்பா முழுவதும் பரவியது. இதைத்தான் ஐரோப்பிய வரலாற்றில் கருப்புச் சாவு (பிளாக் டெத் – Black Death) என்று கூறப்படுகிறது. இது 1346-50 ஆண்டுகளில் மட்டும் ஐரோப்பிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களின் இறப்புக்கு காரணமாகியது.
மக்கள் தொகை அடர்த்தியின் வளர்ச்சி, மற்றும் குப்பைகள், கழிவுகள் குவிவது, மக்கள் வாழும் தெருக்களில் எலிகளின் பெருக்கம் ஆகியவை நோய் தொற்று வேகமாக பரவுவதை உறுதிபடுத்தின. ஐரோப்பாவில் 1670-ம் ஆண்டுவரை இந்த பிளேக் நோய் தொடர்ச்சியாக வெடித்தெழுந்து கொண்டிருந்தது.
பிறகு, காலனியாதிக்க காலக்கட்டத்தில் இக்கொள்ளை நோய்கள் இன்னும் தீவிரமான முகமெடுத்தன. பெரியம்மை, பொன்னுக்குவீங்கி, தட்டம்மை ஆகிய கொள்ளை நோய்கள் காலனியாதிக்க கொடுமைகளுடன் சேர்ந்துகொண்டன. கி.பி.1568-ம் ஆண்டிலிருந்து கிட்டதட்ட அரைநூற்றாண்டில் மத்திய மெக்சிகோ மக்கள் தொகையில் 90 சதவீதத்தினரை கொள்ளைநோய்கள் துடைத்தெறிந்தன. அமெரிக்க கண்டம் முழுவதும் இதே நிலைமைதான் இருந்தது. இதனால், பெரு நாட்டின் பூர்வகுடி மக்களின் எண்ணிக்கை 70 லட்சத்திலிருந்து 5 லட்சமாக குறைந்தது.
18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் (குறிப்பாக இங்கிலாந்தில்) தோன்றிய தொழில்துறை முதலாளித்துவம் நகரமயமாக்கலை புதிய வேகத்தில் துரிதப்படுத்தியது. மோசமான, சுகாதாரமற்ற சேரிகளில் அதிக எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களைக் கொண்ட நகரங்கள் பரவலாக தோன்றின. வறுமை, மன அழுத்தம் மற்றும் கூட்டநெரிசலான வாழ்விடங்கள் ஆகியவை தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தியது. ஒரு முறை தொற்றுநோய் உண்டானால் அது வேகமாகப் பரவியது. மேலும், இந்த பெருநகரங்களுக்கு ஒரு முறை தொற்றுநோய் வந்துவிட்டால் அந்நகரங்களுடன் தொடர்புடைய வணிக வலைபின்னல்கள் அனைத்திலும் அத்தொற்றுநோய் பரவியது.
19-ம் நூற்றாண்டில், நகரமயமாக்கல், வறுமை மற்றும் காலனியாதிக்கம் எல்லாம் சேர்ந்து புது அச்சுறுத்தல்களை உருவாக்கின. காலரா நோய் இந்தியாவில்தான் பல நூற்றாண்டுகளாக இருந்தது. 1817-ம் ஆண்டு இந்தியாவில் உருவான இக்கொள்ளை நோய் ரஷ்யாவையும் சீனாவையும் தாக்கியது. மூன்று வருடங்களுக்கு பிறகு, பிரிட்டிஷ் படைகள் கிழக்கு மெடிட்டேரியன் பகுதிக்கு இந்நோயை கொண்டு சென்றன. 1832, 1848 மற்றும் 1866 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் ஆரம்பித்த கொள்ளை நோய்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரவியது. பிரிட்டிஷ் பேரரசுடன் இந்தியா இணைக்கப்பட்ட பிறகு, மக்கள் மற்றும் உற்பத்தி பண்டங்களின் போக்குவரத்துடன் காலராவும் பரவியது. இது பாதிக்கப்பட்டவர்களில் கிட்டதட்ட பாதி பேரை கொன்றது. காலரா பாக்டீரியா தண்ணீரில் பரவும் என்பதால், இந்நோய் ஏழைகள் வாழும் பகுதிகளையே வெகுவாக பாதித்தது.
19-ம் நூற்றாண்டு மான்செஸ்டரில் கொள்ளைநோய்கள் பரவிய நிலைமையை ஏங்கெல்ஸ் விரிவாக பதிவு செய்துள்ளார்:
“கொள்ளை நோய் எதிர்வரும் போது, நகர முதலாளிகளை ஒர் அனைத்தும் தழுவிய பயம் பற்றிக்கொள்கிறது. ஏழைகள் வாழும் அழுக்கான குடிசைகளை அவர்கள் ஞாபகப்படுத்தி கொள்கிறனர். உறுதியாக, இந்த சேரிகள் கொள்ளைநோய்க்கான மையாக உருவாகும் என்பதையும், அந்த கோரம் எல்லா திசைகளிலும் பரவி சொத்துடைத்த வர்க்கங்களின் வீடுகளையும் வந்தடையும் என்பதையும் கண்டு நடுக்கமுறுகின்றனர்.
6,951 மான்செஸ்டர் நகர வீடுகளில் நடத்தப்பட்ட ஒர் ஆய்வு தெரிவிப்பது குறித்து மேலும் சொல்கிறார், “2,565 வீடுகளுக்கு உடனடியாக வெள்ளையடிக்க வேண்டுயுள்ளது… 960 வீடுகள் சிதலமடைந்துவிட்டன, 939 வீடுகளில் போதுமான வடிகால் வசதி இல்லை, 1,435 வீடுகள் பூஞ்சை பிடித்துள்ளன, 452 வீடுகளில் காற்றோட்ட சூழல் இல்லை, 2,221 வீடுகளில் கழிப்பறை இல்லை” 3.
1872ல் மீண்டும் இதே கொள்ளை நோய் பிரச்சினையை தனது குடியிருப்புப் பிரச்சினை பற்றிய கட்டுரையில் எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். முதலாளிகள் தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினையில் ஏன் அக்கறை கொண்டுள்ளனர் என்பதை விளக்கும்போது,
“தொழிலாளர்கள் பெருந்திரளாக நெருக்கமாக வசிக்கின்ற “ஏழ்மையான வட்டாரங்கள்” என்று கூறப்படுகின்ற பகுதிகள் நம்முடைய நகரங்களில் அடிக்கடி ஏற்படுகின்ற எல்லாவிதமான கொள்ளை நோய்களும் உற்பத்தியாகின்ற இடங்களாக இருக்கின்றன என்று நவீன இயற்கை விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. காலரா, டைபஸ், நச்சுக்காய்ச்சல், அம்மை மற்றும் இதர ஆபத்தான நோய்களின் கிருமிகள் இந்த தொழிலாளிவர்க்கக் குடியிருப்புக்களின் நச்சுக் காற்றிலும் அசுத்தமான தண்ணீரிலும் பரவுகின்றன. இங்கே இக்கிருமிகள் அநேகமாக முற்றிலும் அழிவதில்லை. சாதகமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட உடன், அவை கொள்ளை நோய்களாக வளர்ந்து உற்பத்தியான இடங்களுக்கு அப்பால், நகரத்தில் முதலாளிகள் வசிக்கின்ற அதிக காற்றோட்டமான, ஆரோக்கியமான பகுதிகளுக்குப் பரவுகின்றன.
பலரைப் பலிகொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சல்
தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் கொள்ளை நோய்கள் உற்பத்தியாவதை முதலாளித்துவ வர்க்கம் ஆபத்தில்லாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதன் விளைவுகளினால் அதற்கு ஆபத்தேற்படுகிறது. மரண தேவன் தொழிலாளர்களின் அணிகளைத் தாக்குவதைப் போலவே ஈவிரக்கமின்றி அதன் அணிகளையும் தாக்குகிறது. இந்த உண்மை விஞ்ஞானரீதியாக நிறுவப்பட்ட உடன் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில் போட்டியிடுகின்ற மேன்மையான உணர்ச்சி பரோபகார முதலாளிகளைத் தூண்டியது… எனினும் முதலாளித்துவ சமூக அமைப்பு அகற்றப்படவேண்டிய தீமைகளை மீண்டும் மீண்டும் மறு உற்பத்திச் செய்கிறது; அதிலும் தடுக்கமுடியாத அவசியத்துடன் அதைச் செய்வதால் – இங்கிலாந்தில் கூட – அவற்றை அகற்றுதல் ஒரு காலடி அளவுகூட முன்னேற்றமடையவில்லை.”4.
பல நாடுகளில், எங்கெல்ஸ் குறிப்பிடும் நிலைமைகள் இன்னும் கடந்த காலத்திற்கு உரியனவாகவில்லை. உதாரணமாக, 2018-ல் ஏமனில் போரும் பஞ்சமும் ஏற்பட்ட போது காலரா பரவி கொள்ளை நோயாக உருவெடுத்தது. தமிழகத்தில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் சமீப ஆண்டுகளில் தலையெடுத்தன. இந்தியாவில் காசநோயின் காரணமாக தினமும் கிட்டதட்ட 1000 பேர் இறக்கின்றனர் 5.
பொதுமைபடுத்தி பார்த்தால், துரிதமாக்கப்பட்ட நகரமயமாக்கல், அதனுடன் சேர்ந்து உருவாகும் தொழிலாளர் சேரிகள் ஆகிய பொது நிலைமைகள் ஆரம்ப கால தொழில்துறை கட்டத்தில் கொள்ளை நோய்கள் உருவாக காரணமாக இருந்தன. தீவிரமான கொள்ளைநோய்கள், நாட்பட்ட நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, இவற்றுடன் பொது மருத்துவத்திற்கான நிதிகள் ஒதுக்காமை மற்றும் சுகாதாரமின்மை ஆகியவை எல்லாம் நவீன உலகத்தில் அகற்றப்பட முடியாமல் நீடிப்பவைதான்.
இப்படிப்பட்ட கொள்ளை நோய்கள் உருவாக காரணமாக இருக்கும் நிலைமைகள் சற்று மேம்பட்ட போதிலும் (வளர்ந்த நாடுகளில் இது நடந்துள்ளது, பின்தங்கிய நாடுகளில் அந்த அளவு கூட நிறைவேறவில்லை), புதிய அச்சுறுத்தல், ஃபுளு கொள்ளை நோய் (Pandemic flu) முன்னுக்கு வந்துள்ளது. ஃபுளு காய்ச்சலால் ஏற்படும் கொள்ளைநோய்கள் வரலாற்றில் ஏற்கெனவே ஏற்பட்டுள்ளன என்றாலும், இப்போது புது ஆற்றலுடன் அவை முன்னுக்கு வந்துள்ளன.
முதலாம் உலக போர் முடிவுற இருந்த சமயத்தில் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃபுளுவை (Spanish Flu) பார்த்தாலே போதும். 1918-ம் ஆண்டு வசந்த காலத்தில் ஏற்பட்ட இக்கொள்ளைநோயின் முதல் அலையில் எண்ணிக்கையில் குறைவான இறப்புகளே ஏற்பட்டன. ஆனால், போரின் தாக்கத்தில் அது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. இரண்டாவது அலையில், அவ்வைரஸ் மேலும் சடுதி–மாற்றமடைந்து, பெரிய இழப்புகளை ஏற்படுத்தியது. உலக போர் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் போக்குவரத்தை அத்தியாவசியப்படுத்தியது.
பல கோடிக்கணக்கான மக்கள் கூட்டமாக மோசமான நிலைமைகளில் வாழத் தள்ளப்பட்டனர். இந்நிலைமைகள் கொள்ளைநோய் உருவாவதற்கான அடிப்படையை உருவாக்கி கொடுத்தது. ஸ்பானிஷ் ஃபுளு மூன்றாவது அலையாகவும் 1919-ல் பரவியது. இந்த மூன்று அலைகளிலும் கிட்டதட்ட 5 முதல் 10 கோடி மக்கள் இறந்ததாக இப்போது கணிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை, போரில் இறந்தவர்களைவிட அதிகம். எல்லா நிலைமைகளிலும் நேரடியாக ஸ்பானிஷ் ஃபுளு வைரஸால் மக்கள் இறக்கவில்லை. அது ஏற்படுத்திய உடல்நலக் குறைவு பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுத்து, நிமோனியா ஏற்பட்டும் இறந்தனர்.
இக்கொள்ளை நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டது ஏழை மக்களும், காலனிய நாடுகளும்தான். இந்தியாவில் மட்டும் 1.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். பசி, சுகாதாரமற்ற வீடுகள், பிரிட்டன் அரசு அதன் படைகளுக்கு உணவளிக்க உணவு தானியங்களை பறித்துச் சென்றதால் ஏற்பட்ட பஞ்சத்தில் மக்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தது என எல்லா சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளும் இக்கொள்ளை நோயுடன் கைக்கோர்த்ததால்தான் அவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டது.
பிறகு, பல பத்தாண்டுகள் அறிவியலாளர்கள் ஃபுளு காய்ச்சலின் தன்மையையும் அது ஏன் பெரிய இழப்புகளை ஏற்படுத்துகிறது என்பதையும் ஆராய உலகளாவிய ஃபுளு கண்காணிப்பு திட்டம் (Global Influenza Surveillance Programme) ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டம் உலக சுகாதார நிறுவனம் அமைக்கப்பட்ட பிறகு அதன் பகுதியானது. 1957-ல் ஆசிய ஃபுளு கொள்ளை நோய் ஏற்பட்டது; இதில் 20 லட்சம் மக்கள் இறந்தனர். 1968-ல் ஹாங்காங் ஃபுளு கொள்ளை நோய் ஏற்பட்டது; இதில் 10 லட்சம் மக்கள் இறந்தனர்.
குறிப்பாக, கொள்ளைநோய்களில் ஒரு வகையான ஃபுளு கொள்ளைநோய்கள் சமீப ஆண்டுகளில் அடிக்கடி தோன்றி மனித சமூகத்தை தாக்கிவருகிறது; சார்ஸ்-1, மெர்ஸ், பன்றிக் காய்ச்சல் போன்றவை இதற்கு உதாரணங்கள். கடந்த 50 ஆண்டுகளாக உயிர்வேதியியல், வைரஸ்–உயிரியல், மூலக்கூறு–உயிரியல், நுண்ணுயிரியல் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் காரணமாக ஃபுளுக்காய்ச்சல் வைரஸ்கள் பற்றி மேலும் பருண்மையான, நுட்பமான ஆய்வுகள் செய்ய வழி ஏற்பட்டிருக்கிறது.
இத்துறைகளின் துணைக்கொண்டு நுண்ணுயிர்கள் அடையும் பலவிதமான சடுதி–மாற்றங்கள் (சீரோடைப், ஜீனொடைப், கீனோடைப், பீனோடைப் மாற்றங்கள்) பற்றியும், அதன்மூலம் ஏற்படும் சூனாசிஸ் தாவல் குறித்தும் பல ஆய்வுகள் கடந்த 25 ஆண்டுகளாக செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பொதுவாக மனிதர்களை தாக்கும் புதிய கொள்ளைநோய்கள், குறிப்பாக இந்த ஃபுளு கொள்ளைநோய்களை உருவாக்கும் வைரஸ்கள்/கிருமிகள் சூனாடிக் தாவல் என்னும் வைரஸ்–உயிரியல் நிகழ்ச்சிபோக்கு மூலம் தோற்றமெடுப்பதை நவீன அறிவியல் ஆதாரத்துடன் நிறுவியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள, கோவிட்-19 கொள்ளைநோயும் இப்படிதான் (அதாவது, சூனாடிக் தாவல் மூலம்தான்) மனிதர்களை தாக்கும் வைரஸ்களாக உருவாகியிருக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர் 6.
1. McNeill, William H, 1976, Plagues and People 2. McNeill, William H, 1976, Plagues and People 3. Engels, Friedrich, 1975 [1845], The Condition of the Working Class in England, in Karl Marx and Frederick Engels, Collected Works, volume 4. 4. மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பன்னிரண்டு பகுதிகளில், தொகுதி 8, பக். 62-64; அழுத்தம் நம்முடையது. 5. Global TB Report, WHO, 2019. 2018-ல் மட்டும் 4,49,000 பேர் காசநோயால் இந்தியாவில் இறந்துள்ளனர். 6. கோவிட்-19 கொள்ளைநோயை ஏற்படுத்தியுள்ள சார்ஸ்–கொரோனா வைரஸ்-2வின் தோற்றத்தை அறிவியல் சமூகம் இன்னும் உறுதியாக நிறுவவில்லை. இதை ஆராய உலக சுகாதார நிறுவனம் ஒரு குழுவை நியமித்தது; அந்த குழுவின் முதல்நிலை அறிக்கையும் 2020ம் ஆண்டின் இறுதியில் வெளிவந்தது. அதில், சூனாடிக் தாவல் மூலம் இந்த வைரஸ் உருவாகியிருக்க (likely to very likely) அதிக வாய்ப்பிருப்பதாகவும்; வூகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு தவறுதலாக வெளிவந்து பரவியிருக்க (extremely unlikely) சாத்தியமில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. (பார்க்க: WHO, “WHO-convened global study of the origins of SARS-CoV-2” (2020); www.who.int/publications/m/item/ who-convened-global-study-of-the-origins-of-sars-cov-2.) 2003ல் சார்ஸ்-1 பரவிய போது அது சூனாடிக் தாவல் மூலம் பரிணாமமடைந்து மனிதர்களுக்கு பரவியது என்று நான்கு மாதங்களிலேயே ஆதாரபூர்வமாக கண்டுப்பிடிக்கப்பட்டது. மெர்ஸ் கொள்ளை நோயின் போதும் ஒன்பது மாதங்களில், ஒட்டகத்தை இடைப்பட்ட விலங்கினமாக கொண்டு மனிதர்களை தொற்றும் வகையில் அவ்வைரஸ் பரிணாமமடைந்ததை அறிவியல் உலகம் நிறுவியது. ஆனால், தற்போதைய கொள்ளைநோயிலோ அது இன்னும் நிறுவப்படவில்லை என்பதால் அதன் தோற்றம் நிறுவப்படும் வரை, அது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது எனும் கருதுகோளையும் கணக்கில் கொண்டே பரிசீலிக்க வேண்டும் என்று சில அறிவியலாளர்கள் கோருகின்றனர். (பார்க்க: Investigate the origins of COVID-19, Science, May 14, 2021) இந்த சாத்தியப்பாட்டையும் உள்ளடக்கி இந்த கட்டுரை எழுதப்படவில்லை. அதை இன்னொரு கட்டுரையில் பூர்த்தி செய்ய முயல்கிறோம்.
சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதினை நிழல் இராணுவங்கள் நூலுக்கு தமுஎகச வழங்கியிருக்கிறது. இந்த விருது எனக்கு மிகமிக முக்கியமான விருது. ஏனெனில், இதற்கு முன்பு எழுதியதற்காக எந்தவொரு விருதையும் நான் வாங்கியதில்லை. ஒரு வெங்கலக்கிண்ணம் கூட பரிசாகப் பெற்றதில்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்தில் கூட, பேச்சுப்போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், கட்டுரை எழுதும் போட்டிகள் எதிலுமே கலந்துகொண்டதாக நினைவு இல்லை.
அதற்கு மிக முக்கியமான ஒரே காரணம் என்னவென்றால், என்னுடைய கையெழுத்து மிக மோசமாக இருக்கும். கட்டுரை எழுதும் போட்டியில் பெயர் கொடுக்கலாமா என்று பலநேரம் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால், கையெழுத்து நன்றாக இல்லாத காரணத்தாலேயே அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறேன்.
அதனால், வெறுமனே பேச்சுப் போட்டியில் மட்டுமே கலந்துகொண்டிருந்தேன். ஒருமுறை வடசென்னை தமுஎ(க)ச நடத்திய பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ள எங்கள் பள்ளியில் இருந்து அனுப்பினார்கள். பேச்சுப் போட்டியில் எனக்குக் கொடுத்த தலைப்பு “பாரதி பேசிய பெண் விடுதலை” என்பது. பேசி முடிக்கையில் இறுதியாக, “பெண்விடுதலை என்கிற தலைப்பைக் கொடுத்த இந்த போட்டியை நடத்துபவர்களிலும் இந்த மேடையிலும் ஒருவர் கூட பெண் இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்று பேசிவிட்டு முடித்தேன். பரிசு கிடைக்காது என்று நினைத்தால், எனக்கு முதல் பரிசு கொடுத்தார்கள். விமர்சனம் செய்தால் கூட பரிசு தருகிறார்களே என்று நினைத்துக் கொண்டேன். தமுஎ(க)சவுடன் அன்று துவங்கிய உறவு இன்று வரை தொடர்கிறது.
அதன்பிறகு மாணவர் இயக்க காலத்திலும் பின்னர் இடதுசாரி அரசியல் காலத்திலும் கூட எழுதுவதை பெரிதாகச் செய்ததே இல்லை. ஐரோப்பாவிற்கு வேலை நிமித்தமாக வந்தபோதுதான், பேசுவதற்கு வாய்ப்பில்லாமல்போனது. அந்த இடத்தை எழுத்து தான் நிரப்ப முடியும் என்று உணர்ந்து, முதலில் வலைத்தளத்திலும், பின்னர் பேஸ்புக்கிலும் எழுதினேன். அங்கு உடனுக்குடன் கிடைத்த கருத்துகளும், விமர்சனங்களும், ஏச்சுக்களும் பேச்சுக்களுமே என்னுடைய எழுத்தை செழுமைப்படுத்தின.
சர்வதேச இயக்கங்களுடன் நட்பு கிடைத்தது. ஐரோப்பா முழுவதும் அலைந்து திரிந்தேன். இடதுசாரி இயக்கம் ஒன்றில் இணைத்துக் கொண்டேன். அதன் பிரதிநிதியாக சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ள தென்னமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டேன். எனக்குப் புதிது புதிதாக இருந்த சர்வதேச அரசியல் பார்வைகளை தொடர்ந்து எழுதியே ஆகனும் என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்தேன். அதற்குள் மாற்று என்கிற இணையதளம் துவங்கப்பட்டவும் அதில் எழுதத் துவங்கினேன்.
அதுதான் எனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. எழுதிப் பழகும் ஒரு தளமாக அது இருந்தது. எதை எழுதினாலும் ஒரு குறைந்தபட்ச வரையறைக்குட்பட்டு அந்த இணையதளத்தில் வெளியாகும் என்கிற நம்பிக்கையும் உருவானது. ஒவ்வொரு கட்டுரையும் அச்சில் வெளியாக வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தால், பலவும் எழுத வாய்ப்பு கிடைத்திருக்குமா என்று தெரியாது.
அதன்பின்னர்தான், சர்வதேச அரசியல் பார்வைகளை எழுதத் துவங்கினேன்.
2012-ல் ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் மிகமோசமாக நடந்து கொண்டிருந்தது. உடனே அதனை ஐரோப்பிய ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டுபோய் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த தோழர் சிசோனின் தலைமையில் “ஆஃப்கானிஸ்தான் ஆதரவு இயக்கம்” என்கிற பெயரில் ஒரு இயக்கத்தைத் துவங்கினோம்.
அந்த இயக்கத்தின் செயல்பாடுகளும் கூட எனக்கு சர்வதேச அரசியல் குறித்த ஒரு பரந்துபட்ட புரிதலை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் குறித்து நிறைய எழுதவும் அது உதவியது. அதே பாணியில் பின்னர் போர்ட்டோரிகோ, ஹோண்டுரஸ், ஈக்வடார், வெனிசுவேலா, ஈரான் என பல நாடுகளின் அரசியலையும் எழுத அந்தந்த நாடுகளின் பிரச்சனைகள் தொடர்பான களப் போராட்டங்கள்தான் எனக்கு உதவி செய்தன.
அந்த காலகட்டத்தில்தான் மிகமுக்கியமான ஒரு தோழரை தற்செயலாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பெயர் முகமது ஹசன். அவர் எத்தியோப்பியாவில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எதுகுறித்தும் கவலைப்படாமலும் பொறுப்பில்லாமலும் கல்லூரியில் அனைத்துவித அடாவடித்தனங்களையும் செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த கல்லூரிக்கு இந்தியாவின் கேரளாவில் இருந்து ஒரு புதிய பேராசிரியர் வந்திருக்கிறார்.
“வெளியில் கொஞ்சம் எட்டிப்பார். உன்னுடைய நாடும், உன் மக்களும் இந்த ஆட்சியாளர்களால் மிகமோசமாக நடத்தப்படுகிறார்கள். உன்னிடம் மிகப்பெரிய எனர்ஜி இருக்கிறது. அதனை சரியான வழியில் திசைதிருப்பினால், பெரியாளாக வரலாம். உன் மக்களுக்கும் அது பெரியளவுக்குப் பயன்படும்” என்று கூறி பல மார்ச்கிய நூல்களைக் கொடுத்து படிக்கச் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் அதிக ஆர்வமில்லாமல் இருந்தாலும், கேரளப் பேசாரியரியரின் தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாக மார்க்சியத்தைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார். அது அவரது வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது.
ஒரு சோசலிலப் புரட்சி எத்தியோப்பியாவில் நடப்பதற்குக் காரணமாக இருந்தவர்களில் அவரும் ஒருவராக மாறினார். அப்படி மாறியவர் தான் எத்தியோப்பியாவின் முகமது ஹசன். சோசலிச ஆட்சியில் எத்தியோப்பியாவிற்காக அரசு தூதராக பல நாடுகளில் பணிபுரிந்திருக்கிறார். உலகின் எங்கோ ஒரு மூலையான கேரளாவில் பிறந்த ஒருவர் பேராசிரியாக எத்தியோப்பியாவில் இருந்த முகமது ஹசனை ஒரு போராளியாக மாற்றி, அந்த தேசத்தின் தலையெழுத்தையே மாற்ற முடிந்திருக்கிறது என்பது என்னைப் பெரியளவுக்கு ஈர்த்தது.
முகமது ஹசனால்தான் எனக்கு மத்திய கிழக்கு நாடுகளின் வரலாறு, அரசியல் குறித்த புரிதல் ஓரளவுக்கு மேம்பட்டது. அந்த காலகட்டத்தில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய ஒரு தாக்குதலும், அது தொடர்பான விவாதங்களும் போராட்டங்களுமே, பாலஸ்தீன ஆதரவு இயக்கத்தை உருவாக்கி செயல்பட உதவியது. அந்த இயக்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் பாலஸ்தீன திரைப்பட விழா நடத்தினோம்.
பாலஸ்தீனத்திற்கு ஐரோப்பியர்களை அழைத்துச் சென்று நேரடியாகவே பாலஸ்தீனப் பிரச்சனைகளைக் காட்டி விளக்கும் பணியையும் செய்தோம். நூற்றுக்கணக்கான பாலஸ்தீன அகதிகளிடம் பேசி, அவர்களின் கதைகளைக் கேட்கும் வாய்ப்பையும் அது ஏற்படுத்திக் கொடுத்தது. இதையெல்லாம் ஒருமுறை சிராஜ் தோழரிடம் (Mohammed Sirajudeen) சொல்லிக் கொண்டிருந்தேன். அதனை நூலாக எழுதத் தூண்டியவரும் அவர்தான். அதுதான் பின்னர் பாலஸ்தீன வரலாறும் சினிமாவும் நூலாக வெளிவந்தது.
இப்படியான காலகட்டத்தில் தான் பாஜகவின் வளர்ச்சி பெரும் அச்சத்தைக் கொடுத்தது. பாஜக ஒரு மதவாதக் கட்சி என்றும் அது எதிர்க்கப்பட வேண்டும் என்கிற அளவில் மட்டும்தான் என்னுடைய புரிதல் இருந்தது.
தற்செயலாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்காக ஐரோப்பாவில் வேலை பார்த்த ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. என்னுடைய அடையாளத்தை மறைத்து அவருடன் தொடர்ந்து பேசியதில், எனக்குக் கிடைத்த தகவல்களெல்லாம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஷாகா வகுப்புகளில் ஒவ்வொரு குழந்தையின் தனித்திறமை என்ன என்பதையெல்லாம் கூர்ந்து கவனித்து, அது தொடர்பான துறைகளிலேயே அவர்களை வளர்த்து, அந்தந்த துறைகளில் அவர்களை வேலைக்குப்போகும் அளவிற்கு வழிநடத்துகிறார்கள்.
ஆக, நாடு முழுவதிலும் இப்படியாக ஆர்.எஸ்.எஸ்-ஆல் வளர்த்துவிடப்பட்டவர்கள் எல்லா துறைகளிலும் அமைதியாக ஆர்.எஸ்.எஸ்-க்காக வேலை செய்கிறார்கள். நான் பழகியவரும் அப்படியாக ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் பயிற்சி பெற்று, ஐ.ஐ.டி-யில் படித்து, ஐரோப்பாவில் ஐ.டி துறையில் பணிபுரிந்துகொண்டே, ஆர்.எஸ்.எஸ்-க்குத் தேவையான தகவல்களைத் திரட்டி அனுப்புகிறார் என்று கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. உலகெங்கிலும் இந்த நெட்வர்க்கை மிகத்திறமையாக அவர்கள் கையாள்வது புரிந்தது.
இன்றைக்கு ஒருவர் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ இருந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்காக வேலை செய்கிறார் என்றால், கிட்டத்தட்ட 20-30 ஆண்டுகளுக்கு முன்னரே அவரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்கத் துவங்கியிருக்கிறது என்று பொருள். அதாவது 2014-ஆம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால், கிட்டத்தட்ட மிக மிக விரிவான ஒரு திட்டத்தை அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைத்து செயல்படுத்தத் துவங்கி இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.
பல முற்போக்குக் கட்சிகளுக்கு இன்னமும் அடுத்த 3 ஆண்டுகள் கழித்து வரப்போகிற தேர்தலுக்கே கூட எவ்விதத் திட்டமோ இலக்கோ இல்லாமல் இருப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
அதனால், இந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் எப்படி செயல்படுகின்றனர், மக்களிடம் எப்படி ஒரு பொதுப்புத்தியை உருவாக்குகின்றனர் என்பதெல்லாம் விரிவாகக் கற்றுக்கொள்ள முடிவு செய்தேன். அதனால், அது தொடர்பான நூல்களை சேகரித்துப் படிக்க ஆரம்பித்தேன். கோல்வால்கர் எழுதிய ஞானகங்கை துவங்கி இன்று எழுதப்படும் நூல்கள் வரையிலும் 100-க்கும் மேற்பட்ட நூல்கள் வரையிலும் படிக்கிறபோதுதான், இந்த Shadow Armies நூல் என்னை பெரியளவுக்கு அதிர்ச்சி கொள்ள வைத்தது.
“இதை யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும் தோழர்” என்று வழக்கம் போல சிராஜ் தோழரிடம் கூறினேன். “நீங்களே மொழிபெயர்த்தால் நல்லது” என்றார் அவர். அதுவரையிலும் மொழிபெயர்க்கும் எண்ணமெல்லாம் எனக்கு இருந்ததே இல்லை. சரியென்று முயற்சி செய்தேன்.
மொழிபெயர்த்து முடித்தவுடன் கூட எனக்கு நம்பிக்கை இல்லை. என்னுடைய மிக நெருங்கிய தோழியும் இணையருமான தீபாவிடம் கொடுத்து படிக்க சொன்னேன். அவர் சில திருத்தங்களை சொன்னார். அதை சரிசெய்தேன். மேலும், 10 தோழர்களிடம் கொடுத்தேன். அவர்களும் ஆளாளுக்கு படித்துப் பார்த்து சில திருத்தங்களை சொன்னார்கள். அவற்றையும் சரிசெய்தேன்.
தோழர் மதுசூதன் (Madusudan Rajkamal) மற்றும் எதிர் வெளியீட்டின் அனுஷ் (Anush) ஆகியோரின் உதவியோடும் இது நூலாக அச்சில் வெளிவந்தது. நூல் வெளியாகும் வரைதான் என்னுடைய நூல் என்கிற பயமும் பதட்டமும் பொறுப்பும் இருந்தது. ஆனால், நூல் வெளிவந்த பின்னர், இந்த நூலை தமுஎகச-வின் பல தோழர்கள் இதனைத் தங்களுடைய நூலாகவே கையில் எடுத்துக் கொண்டனர். கருப்பு கருணா தோழரெல்லாம் ஒவ்வொருவருக்கும் அவரே அலைபேசியில் அழைத்து, இந்நூலை வாசிக்கச் சொல்லி பேசியிருக்கிறார்.
எக்காலத்திலும் அரசியலற்ற எதையும் எழுதுவதில்லை என்பதில் மட்டும் இந்த பயணத்தில் உறுதியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இனியும் அப்படியே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இந்த விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தாலும், சிறுவயது முதல் இன்று வரையிலும் அதற்காக உதவிய ஏராளமான மனிதர்களுக்கும் இந்த விருதில் பங்கு இருக்கிறது.
எனக்கான அரசியல் பாதையைக் காட்டிய எனது அப்பாவிற்கும் (Packiam Packiam), சரியான பாதையில்தான் பயணிக்கிறேன் என்று நம்பிய அம்மாவுக்கும், எழுத்துப்பணியில் துணையாக இருக்கிற இணையர் தீபாவிற்கும் (Deepa Chinthan), எதை எழுதுவதற்கு முன்னரும் என் மகளுக்குப் புரிகிறதா என்று சொல்லிப் பார்த்துக் கொண்டு எளிமையாக எழுதுவதற்கு உதவிகரமாக இருக்கிற என்னுடைய மகள் யாநிலாவுக்கும் என்னுடைய நன்றியை சொல்லியே ஆகவேண்டும்.
அரசும் ஆளும் வர்க்கங்களும் நெருக்கடிகளில் சிக்கி, மக்களிடம் அம்பலப்பட்டு அதிருப்திக்கு ஆளாகும் போதெல்லாம் அவர்கள் பின்பற்றும் முக்கியமான தந்திரம் முதன்மையான விசயங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வேலைகளைச் செய்வதுதான். பொய் செய்திகளை பரப்புவது, தேசியவெறி – போர்வெறி ஊட்டுவது போன்ற நடவடிக்கைகள் மூலம், ஊடகங்களின் துணை கொண்டு ஆளும்வர்க்கம் திசைதிருப்புகிறது.
இத்தகைய ஆளும் வர்க்கச் சேவையில், நாங்கள்தான் “தமிழில் நம்பர் 01 நாளிதழ்” என்று பறைசாற்றுகிறது 04.06.2021 தேதி தினகரனில் வெளிவந்துள்ள “ராஜதந்திரம் தேவை” என்ற தலையங்கம்.
“கொரோனா வைரஸ் இயற்கையாகத் தோன்றிய வைரஸ் இல்லை. சீனாவால் திட்டமிட்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது” என்ற அமெரிக்காவின் நிரூபிக்கப்படாத சீன எதிர்ப்பு பிரச்சாரத்தை உண்மை போல சொல்லும் வேலையைச் செய்திருக்கிறது தினகரன்.
“கொரோனா வைரஸ் இயற்கையாகத் தோன்றியதா அல்லது சீனா ஆய்வகத்தில் உருவானதா என்ற கேள்வி தொடர்ந்த வண்ணம் உள்ளது. உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியாது.” என்று எழுதி, கொரோனா குறித்து நிலவும் சந்தேகத்தில், கொரோனா இயற்கையான உருமாற்றத்தினால் வந்ததுதான் என்று தற்போதுவரை அங்கீகரிக்கப்பட்ட கூற்றை பொய் என்றே கூறிவிட்டது. அதாவது உண்மை மறைக்கப்பட்டிருக்கிறதாம். அது விரைவில் வெளி வந்துவிடுமாம்.
கொரோனா என்பது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது அல்ல. அது இயற்கையாகத் தோன்றியதுதான் என்று சீனாவில் ஆய்வு மேற்க்கொண்ட உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு விளக்கம் கொடுத்துவிட்டது. ஆனாலும், தற்போது வரை சீன எதிர்ப்பு பிரச்சாரம் தொடர்கிறது.
அதற்கு காரணம், தனது அரசியல்-பொருளாதார மேலாதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்து வரும் சீனாவை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்துவதற்காகவும் கொரோனா பெருந்தொற்றை கையாளும் விசயத்தில் அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை திசை திருப்பவும் அமெரிக்காவிற்கு அது தேவைப்படுகிறது. இத்தகைய சீன வெறுப்புப் பிரச்சாரத்தில் டிரம்ப், பைடன் இருவரது நிர்வாகத்துக்கும் கொள்கை வேறுபாடில்லை.
சீனாவின் ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாகியது என்ற கூற்றிலேயே இருபிரிவினர் இருக்கின்றன. சீனாவின் ஆய்வகத்தில், சீனா நடத்திய உயிரி ஆயுத பரிசோதனையில் இருந்து வெளியானதுதான் இந்தக் கொரோனா வைரஸ் என்று ஒரு தரப்பு கூறுகிறது. மற்றொரு தரப்பினர், பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பாக நிதி வழங்கப்பட்டு, சீனாவின் ஆய்வகத்தில் அவுட்சோர்சிங் முறையில் அமெரிக்கக் குழுவினரால் நடத்தப்பட்ட உயிரி ஆயுத பரிசோதனையில் தான் இந்த வைரஸ் உருவானது என்று கூறப்படுகிறது. இவை எதுவும் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்படாத சூழலில், சீனா தான் இந்த கொரோனா வைரஸை உருவாக்கி பரப்பியது என்று தீர்ப்பெழுதியிருக்கிறது தினகரன் நாளிதழ்.
அமெரிக்காவின் பரம விசுவாசியான மோடி அரசோ, கடந்த ஆண்டு ஊரடங்கை தீடீரென்று அறிவித்து புலம்பெயர் தொழிலாளர்களை பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடக்கவைத்து அவர்களை பட்டினியில் கொன்றது. ஊரடங்கு காலத்தில் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், ஊரடங்கைக் கொண்டு மக்கள் மீது அடக்குமுறைகளை செலுத்தியது. கொரோனா ‘நிவாரணத் தொகுப்பு’ என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் கல்லா பெட்டியை நிரப்பியது.
இதுபோன்ற தனது மக்கள் விரோத – கார்ப்பரேட் ஆதரவு நடவக்கைகளின் விளைவாக வெடித்தெழும் மக்களின் கோபத்தைத் தடுப்பதற்காக “எல்லாவற்றுக்கும் சீனாதான் காரணம், அதுதான் கொரோனாவை பரப்பியது” என்று சங்க பரிவார கும்பல்களைக் கொண்டு பிரச்சாரம் செய்தது. அதற்குத் துணையாக பல ஆளும் வர்க்க செய்தி ஊடகங்களும் இருந்தன.
அதேபோலத்தான் தற்போது இரண்டாம் அலையிலும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மற்றும் தடுப்பூசி ஏற்றுமதியை அதிகரித்து கார்ப்பரேட்டுகளுக்குச் சேவகம் செய்ததன் காரணமாக உள்நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
தடுப்பூசியிலும் பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் என்ற இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்களை ஏகபோகமாக வளரச் செய்வதற்கு தகுந்தாற் போல் தடுப்புசிக் கொள்கையை வடிவமைத்தது; ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை மாநில அரசுகளிடம் தள்ளிவிட்டுவிட்டு தான் தப்பித்துக் கொண்டது போன்ற மோடி அரசின் நடவடிக்கைகளால் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் எண்ணற்றோர் பலியாகியிருக்கிறார்கள்.
இரண்டாம் அலையில் மாநில அரசாக உள்ள திமுக அரசு, முந்தைய அதிமுக அரசை ஒப்பிடுகையில் பல்வேறு முயற்சிகள் எடுத்துக் கட்டுப்படுத்தி வரும் நிலையிலும், மாநிலம் முழுவதும் பல்வேறு சிகிச்சைக் குளறுபடிகள் தொடர்கின்றன. அரசு மருத்துவமனைகளில் நிலவும் விட்டேத்திப் போக்குகள் முதல் தனியார் மருத்துவமனைகளில் நிலவும் கட்டணக் கொள்ளை வரை, அன்றாடம் நிகழும் நிகழ்வுகளாகிவிட்டிருகின்றன.
நோயாலும், பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்ததாலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசின் மீது நிலவும் எதார்த்தமான கோபத்தை மடைமாற்றும் வேலையைச் செய்ய போர் வெறியையும் தூண்டத் தயாராக இருக்கிறது தினகரன்.
“தனியாக நின்று சீனாவை எதிர்க்க முடியாது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து செயல்பட்டால் சீனாவுக்கு நிச்சயம் கடிவாளம் போட முடியும்” “சீனாவை எதிர்க்கவும் அடாவடியை தடுக்கவும் இதுவே சிறந்த தருணம்” என்று அமெரிக்க ஆளும் வர்க்கங்களுக்கு ஆலோசனை கூறும் தினகரன் கடைசியாக மோடி அரசிடம் வைக்கும் வேண்டுகோள்தான் முக்கியமானது.
“இந்தியாவுக்கு சீனா எக்காலத்திலும் நண்பனாக இருக்க வாய்ப்பில்லை. எனவே சீனாவுக்கு எதிராக சர்வதேச அரங்கில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும். இவ்விஷயத்தில் ராஜதந்திர முறையில் செயல்பட வேண்டியது பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது” என்று சொல்லி தனது தலையங்கத்தை நிறைவு செய்கிறது.
கொரோனா சிகிச்சை மற்றும் மருத்துவக் கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகளிலிருந்தும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளிலிருந்தும் மக்களுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மீது ஏற்படும் அதிருப்தியை தேசிய வெறி மூலம் மட்டுப்படுத்தும் வேலையைச் செய்வதில், சங்க பரிவார ஊடகங்களோடு இணைந்து பயணிக்கிறது தினகரன்.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் கோரக்நாத் கோயிலுக்கு பாதுகாப்பு வழங்க கோயிலைச் சுற்றி போலீஸ் படைகளை நிறுத்த உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கோரக்பூரைச் சுற்றியுள்ள முஸ்லிம் மக்கள் பெருமளவில் தங்கியிருக்கும் குடியிருப்பு வீடுகளை அகற்றும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது உ.பி யோகி அரசு.
இந்த திட்டம் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. இதில் யாரும் வற்புறுத்தப்படவில்லை. அனைத்து குடும்பங்களும் தானாகவே முன்வந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்கிறது மாவட்ட நிர்வாக தரப்பு.
ஆனால், யோகி ஆதித்யநாத்தின் இத்தகைய நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகளின் அழுத்தத்தினால்தான் தங்களது வீடு மற்றும் நிலத்தை விற்கும் ஒப்பந்த படிவத்தில் கையெழுத்திட்டோம். இது குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்கிறார்கள்.
வீடு மற்றும் நிலத்தை கையகப்படுத்துவது குறித்து வருவாய்துறை அதிகாரிகள் கூறினாலும், எழுத்துப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன்தான் இது குறித்த விரிவான தகவல்களை கொடுக்க முடியும் என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார்கள். “திடீரென ஒரு நாள் கணக்காளர் மற்றும் மாவட்ட தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் வீட்டுக்குள் நுழைந்து எங்கள் நிலத்தை அளந்தனர். அதன் பிறகு புரிந்துணர்வு ஒப்பந்த படிவத்தில் கையெழுத்திட நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம்” என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ‘தி வயர்’ இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார்கள்.
கோரக்நாத் கோயிலைச் சுற்றியுள்ள வீடுகள்.
ஒப்பந்த படிவத்தில் கையெழுத்திட்ட குடும்பங்கள் பீதியிலும் துயரத்திலும் பீடிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் தங்களது தொலைபேசி அழைப்புகளை எடுக்கக் கூட அஞ்சி அதனை ஆஃப் (Off) செய்துவிட்டார்கள்.
மே 28 அன்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்த கடிதத்தின் நகல் சமூக வலைத்தளத்தில் பரவத் தொடங்கிய போதுதான் இந்த விஷயம் வெளியுலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அந்த கடிதத்தில், “கோரக்நாத் கோயிலுக்கு பாதுகாப்பிற்கு போலீஸ் படையை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு ஏற்ப, பழைய கோரக்பூர் தப்பா, கஸ்பா பர்கானா ஹவேலி, தெஹ்ஸில் சதர் ஜன்பாத், கோரக்பூர், கோரக்நாத் கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள எங்கள் நிலங்களையும் வீடுகளையும் அரசுக்கு வழங்க நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். இந்த விஷயம் குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எங்கள் ஒப்புதல் குறித்த கையொப்பங்களை கீழே காணுங்கள்” என்று குறிபிடப்பட்டிருக்கிறது.
இந்த படிவ ஆவணம் 11 குடும்பத்தைச் சேர்ந்த 19 குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது தொலைபேசி எண்களைக் கொண்டுள்ளது. அந்த படிவத்தின் கடைசி வரிசையில், கையொப்பத்தின்கீழ், எப்போது கையெழுத்திடப்பட்டதோ அன்றைய தேதியும் குறிபிடப்பட்டிருக்கும். ஆனால், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேருடைய கையொப்பங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் இடம்பெறவில்லை. அந்த ஆவணத்தில் எந்த அதிகாரியின் பெயரும் கையொப்பமும் ஏன் முத்திரை உள்ளிட்ட எதுவும் இல்லை.
டெல்லியை சேர்ந்த ‘தி குயிண்ட்’ மற்றும் ‘இந்தியா டுமாரோ’ ஆகிய இணையதளங்கள் இதுகுறித்தான செய்தியினை வெளியிட்டன. ‘இந்தியா டுமாரோ’ இணையதளத்தைச் சேர்ந்த மசிஹுஸ்ஸாமா அன்சாரி, முஸ்லிம் குடியிருப்பை அகற்றும் அறிவிப்பைப் பற்றி மாவட்ட ஆட்சியர் விஜயேந்திர பாண்டியனிடம் கேட்டபோது, அன்சாரிக்கு எதிராக தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்படும் என்று விஜயேந்திர பாண்டியன் மிரட்டல் விடுத்துள்ளார்.
“கோரக்பூரில் கோரக்நாத் கோயிலை ஒட்டியுள்ள முஸ்லிம் குடும்பங்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறுமாறு வழங்கப்பட்ட நோட்டீஸ் குறித்து நான் ஆட்சியரிடம் பேச முயன்றபோது, வதந்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு, என்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் தொடுக்கப்படும் என்று அச்சுறுத்தப்பட்டேன். இதுகுறித்து நான் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகாரும் அளித்துள்ளேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அன்சாரி.
காங்கிரசின் மாநில தலைவர் ஷானவாஸ் அலம், ஊடகவியலாளர் அன்சாரிக்கும் கோரக்பூர் மாவட்ட ஆட்சியருக்கும் இடையிலான உரையாடலின் ஆடியோவை ஜீன் 3 அன்று வெளியிட்டார். அவர் தனது அறிக்கையில், “கோரக்நாத்தைச் சுற்றியுள்ள முஸ்லிம் குடும்பங்கள் சுமார் 125 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தங்களது நிலத்தைவிட்டு வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து செய்தி தரவுகள் பல உள்ளன.
கோரக்நாத் கோயிலுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகம்
ஆனால், மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் விஜயேந்திர பாண்டியன் ஒப்பந்த கடிதத்தில் கையெழுத்திட மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்பதை மறுப்பது மட்டுமல்லாமல், இந்த பிரச்சினை குறித்து விவரங்களைத் திரட்டும் ஊடகவியலாளர்கள் மீது NSA ஏவப்படும் என்று மிரட்டியும் உள்ளார்” என்ற ஷானவாஸ், மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் மற்றும் இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையின்போது, மே 27 அன்று சதர் தெஹ்ஸில் பகுதியைச் சேர்ந்த கணக்காளர் மற்றும் பிற ஊழியர்கள் போலீசின் துணையோடு, கோரக்நாத் கோயிலின் பிரதான வாயிலுக்கு அருகில் அமைந்துள்ள வீடுகளை அளவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அங்கு குடியிருக்கும் மக்களிடம் பேசியபோது, கோயிலின் பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் போலீஸ் படைகளை அமைக்கப்போவதாகவும் இதற்காக தங்கள் வீடுகள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் பின்னர், ஒரு காகிதத்தில் கையெழுத்திடுமாறு கேட்டார்கள் என்கிறார்கள் உள்ளூர் பகுதி மக்கள். கோயிலுக்கு பின்னால் அமைந்துள்ள மேலும் மூன்று வீடுகளில் வசிப்பவர்களை சந்தித்து அதிகாரிகள் பேசியுள்ளார்கள். ஆனால், அவர்களிடம் கையெழுத்து எதுவும் இதுவரை கேட்கப்படவில்லை.
புரிந்துணர்வு ஒப்பந்தப் படிவம் என்று ஒரு காகிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் 70 வயதான நெசவாளர் முஷீர் அகமது – 150 வருட பழமையான வீட்டில் தனது இரண்டு சகோதரர்களுடன் வாழ்ந்து வருகிறார். (கோரக்நாத் கோயிலைச் சுற்றியுள்ள பல இடங்களில் – நவ்ரங்காபாத், ஜாஹிதாபாத், புராணா கோரக்பூர், ஹுமாயுன்பூர் மற்றும் ரசூல்பூர் பகுதி மக்களின் முக்கிய தொழில் நெசவு. இது மக்கள் தொகையில் சுமார் ஒரு லட்சமாகும். 1990 வரை கோரக்பூரில் 17,000-க்கும் மேற்பட்ட கைத்தறிகள் இருந்தன. ஆனால், இப்போதோ 150-க்கும் கீழே குறைந்து விட்டன)
“மே 27 அன்று அதிகாரிகள் சிலர் போலீசுடன் வந்து எனது வீட்டையும் எனது பக்கத்து வீட்டையும் அளவெடுத்தார்கள். அடுத்தநாள் அதே நபர்கள் வந்து ஒரு காகிதத்தில் கையெழுத்திடுமாறு கேட்டனர். நானும் கையெழுத்திட்டேன். ஆனால், அதன்பிறகுதான் எனது வீடு கையகப்படுத்தப்படும் என்று தெரிந்தது. ” என்கிறார் முஷீர் அகமது.
இந்த வீட்டை தவிர்த்து முஷீர் அகமதுவிற்கு வேறெந்த சொத்தும் நிலமும் கிடையாது. “வீட்டில் நான்கு பழைய நெசவுத்தறி உள்ளது. ஆனால், இதிலிருந்து சம்பாதியம் என்று எதுவும் இல்லை. இவற்றின் மூலம் வருடத்திற்கு ரூ.100 முதல் ரூ.150 வரை மட்டுமே ஈட்டமுடியும். ஒரு மகன் புத்தகக்கடை வைத்துள்ளான். இன்னொருவன் மாவுமில் வைத்துள்ளான். இவர்களை நம்பிதான் எனது குடும்பம் உள்ளது. இந்த வீட்டை தவிர எங்களுக்கு வேறு நிலமோ அல்லது சொத்தோ இல்லை. இந்த வீடு எங்கள் வாழ்வாதாரம். இதை நாங்கள் எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? மீறி இந்த அரசாங்கம் எனது வீட்டை கைப்பற்ற முயற்சித்தால் அது நான் செத்தால் மட்டுமே முடியும்” என்கிறார்.
கோரக்நாத் கோயில் வளாகத்திற்கு பின்னால் ஃப்ரோஸ் அகமது மற்றும் இந்தெசர் உசேன் வீடு உள்ளது. மே 28 அன்று மதிய வேளையில் தெஹ்ஸில் பகுதி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தனது வீட்டிற்கு வந்ததாக கூறுகிறார் ஆசிரியரான உசேன். பாதுகாப்பு நோக்கங்களுக்காக அவரது வீடு கையகப்படுத்தப்படுவதாக அவர்கள் உசேனிடம் கூறி வீட்டை காலி செய்ய சொல்லியுள்ளார்கள். இதற்கு நட்ட ஈடாக அவருக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்கள். இதற்கு உசேன், “இதனை எழுத்துப் பூர்வமாக கொடுங்கள், அப்போதுதான் பதிலளிக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.
கோரக்நாத் கோயிலைச் சுற்றியுள்ள வீடுகள்.
மீண்டும் ஜூன் 2 தேதி வந்த அதிகாரிகளிடமும் இதே பதிலை கொடுத்துள்ளார் உசேன். “ஜூன் 2 மாலை 4 மணிக்கு தெஹ்ஸில் சென்று மூத்த அதிகாரிகளை சந்திக்கும்படி என்னிடம் கூறினார்கள். ஆனால், நான் இதுவரை அங்கு செல்லவில்லை. எனது அக்கம் பக்கத்து வீட்டையும் அதிகாரிகள் அளவெடுத்தார்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. எங்களது வீட்டு அருகிலேயே ஒரு மயானம் உள்ளது. அந்த இடமும் கையகப்படுத்தப்படலாம்” என்கிறார் உசேன்.
“கோரக்நாத் கோயிலின் தென்கிழக்கு பக்கத்தில் உள்ள 11 வீடுகள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படுகின்றன என்பதை நான் அறிந்ததும், அரசாங்கம் எங்களது நிலத்தையும் வீட்டையும் கைப்பற்ற ஏன் துடிக்கிறது? என்று தெரிந்துகொள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க சென்றேன். ஆனால், சரியான பதில் ஏதும் கிடைக்கவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெரியாமல் கையெழுத்திட்டவர்கள் இப்போது வீடு பறிபோகும் என்ற வருத்தத்தில் உள்ளனர்” என்கிறார் ஆசிரியரான உசேன்.
“கோயிலைச் சுற்றி பாதுகாப்பு படையை அமைப்பதாக நிர்வாகம் தரப்பில் கூறப்படுகின்ற காரணம். ஆனால், கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் இரண்டு போலீஸ் பூத்துகள் ஏற்கனவே இருக்கின்றன. எனவே, இப்போது அமைக்கப்போவதாக சொல்வது தேவையில்லாத ஒன்று. ஆகையால், எந்த காரணமும் இல்லாமல் நாங்கள் வெளியேற்றப்படுகிறோம்” என்கிறார் 71 வயதான ஜாவேத் அக்தர்.
உத்திரப்பிரதேசத்தில் தொடர்ந்து காவி வெறியாட்டத்தை நடத்தி வருகிறது, யோகி ஆதித்யநாத் அரசு. மாட்டுக்கறி பிரச்சினை, தலித் மக்கள் மீதான தாக்குதல், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், கருத்து சுதந்திரம் பறிப்பு, பத்திரிகையாளர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை என உத்திரப்பிரதேசம் முழுவதும் தனது காவி பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது கோரக்நாத் கோயிலில் பாதுகாப்பு காரணமாக கோவிலைச் சுற்றி இருக்கும் முஸ்லீம் குடியிருப்புகளை திட்டமிட்டே அகற்றப்பார்க்கிறது ரவுடி யோகி அரசு.
இது உத்தரப் பிரதேசத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வல்ல. நாம் அமைதியாக இருந்தால், தமிழகத்திலும் நாளை நடக்கவிருக்கும் நிகழ்வுதான். அங்கு முசுலீம்கள் அகற்றப்பட்டார்கள், இங்கு பார்ப்பனரல்லாதோர் அகற்றப்படலாம். அதில் நாமும் ஒருவராக இருக்கலாம்.
இந்திய சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் கொடுமைகளில் முக்கியமானது “சாதிய பிரிவினை”, அதிலும் மிகக் கொடுமையானது தீண்டாமைக் கொடுமை. அந்த வகையில், சில சாதியைச் சேர்ந்த மக்களை ஒடுக்கி அவர்களது சமூக வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்திற்குள் முடக்கி வைக்கிறபோக்கு இன்றளவும் இந்தியாவில் நிலவி வருகிறது.
சாதி ஆதிக்கத்தால் அதிகம் நசுக்கப்படுபவர்கள் பழங்குடி மக்களும், ஒடுக்கப்பட்ட இனத்தவர்களுமே ஆவர். இவர்களில் குறிப்பாக சாக்கடைக் குழிகள் மற்றும் மலக் குழுகளோடு காலங்காலமாக, பரம்பரை பரம்பரையாக வாழ நிர்பந்தப்படுத்தப்பட்டு கிடக்கின்ற ஒரு சமூகம் “துப்புரவுத் தொழிலாளர்” பணி செய்கின்ற சமூகத்தினர். இவர்களை பற்றி பேசுகிற நாவலே இந்த “கழிசடை”.
தமிழில் கழிசடை என்றால் “மிகக் கேவலமான” அல்லது “கீழ்த்தரமான” என்று பொருள்படும். அப்படி சமூகத்தால் கீழ்த்தரமாக பார்க்கப்படும், அனுமந்தையா என்ற துப்புரவுத் தொழிலாளியின் வாழ்க்கைதான் இந்த கதை.
அவன் மனைவி கொண்டம்மா, வெட்டியான் சுடலை, முனிசிபல் அலுவலகத்தின் ஒட்டுண்ணிகளான ஆய்வாளர் தியாகராஜன், ராகவலு மற்றும் மொய்தீன் மேஸ்திரிகள், வட்டிக்கடை மாணிக்கம், சாராயக்கடை ஜோசப்பு மற்றும் அனுமந்தையாவின் சக துப்புரவுத் தொழிலாளிகளான இயேசு ரத்தினம், சுப்பையா, நாகையா , அந்தோணி, யாகூப், ஐசக் போன்றவர்களின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் அறிவழகன்.
நாள் முழுவதும் மலக்குழிகளிலும், சாக்கடையிலும் புழங்கும் அனுமந்தையா சாராயத்திற்கு அடிமையாகிப்போவதும், அதனால், உடல்நலம் கெட்டு பல நாட்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் சம்பளத்தை இழப்பதும், அவனது ஐந்து குழந்தைகளுக்கு உணவளிக்க வட்டிக்கடை மாணிக்கத்திடம் பணம் வாங்குகிறான் அனுமந்தையா.
வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் போய்விட, மாணிக்கத்தைச் சரிக்கட்ட அனுமந்தையாவின் மனைவி கொண்டம்மா தன்னையே அவனுக்குத் தாரை வார்ப்பது போன்ற கதை ஓட்டம், சமூகத்தில் வட்டிக்கு காசு கொடுத்து பிழைப்பு நடத்தும் கிரிமினல்களின் இழிவாழ்க்கையையும் சுட்டிக் காட்டுகிறது.
தன்னை விரும்பி திருமணம் செய்து கொண்ட மனைவி கொண்டம்மா, மாணிக்கத்துடன் உறவு வைத்திருப்பதை பார்த்ததும் வேதனையுடன் குடித்துவிட்டு வந்து அவளை கடுமையாக அடித்து நொறுக்குகிறான். அடியை வாங்கிக் கொண்ட கொண்டம்மா, ஏனய்யா! “அவன்கிட்ட ஆசைப்பட்டா படுத்தேன்”, அவனுக்கு வட்டிப்பணம் கொடுக்க முடியாததால் அவன் உன்னை கஷடப்படுத்துவதை தடுக்க எனக்கு வேறு வழி இல்லாமல் தானே இப்படி நடக்க வேண்டியிருக்கிறது என்று கூறும்போது, அவளின் பரிசுத்தமான அன்பையும் அரவணைப்பையும் நினைத்துப் அனுமந்தையா புலம்புகிறான்.
தினமும் பசியோடும், நோயோடும் மற்றும் (வேலை போய்விடும் என்ற) பயத்தோடும் வாழும் அனுமந்தையாவின் வாழ்க்கை அவனுக்கு மனப்போராட்டத்தையே கொடுக்கிறது. அவன் மலக்குழியை சுத்தம் செய்துவிட்டு அவ்வழியாக செல்லும் சாக்கடை நீரிலே முகத்தையும் கழுவி விட்டு, பசியைப்போக்க “அம்மா” சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று கேட்பது, இன்றும் இந்த நிலைதான் துப்புரவுப் பணியாளர்களின் நிலையாக உள்ளது என்னும் அவலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய மறுக்க முடியாத உண்மை.
கோப்புப் படம்
தனது மகன் சீனய்யாவை தான் செய்யும் வேலைக்கு அனுப்பக்கூடாது வேண்டும் ஆசைப்படும் அனுமந்தையா, மகன் அதே வேலையைச் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போது வேதனையால் குமைவதும், மனம் கலங்குவதும் ஒரு நல்ல தந்தைக்குரிய பண்பை அடையாளம் காட்டுகிறது. தன்னைக் குடிக்க வேண்டாம் என்று தடுக்கும் மனைவி கொண்டம்மா, மகன் மலக்குழிக்குள் வேலை செய்கிறான் என்று தெரிந்து கொண்டு, அந்தச் சுழலுக்குப் பழகிக் கொள்ள “சாராயம்” வாங்கி வந்து கொடுக்கும் போது, வேண்டாம் என்று தடுக்க நினைக்கும் அனுமந்தையாவால், அது முடியாமல் போய்விடும்போது பரிதாபமாக இருக்கிறது.
அனுமந்தையாவின் மனைவி கொண்டம்மா, இந்த நாவலின் அற்புதமான பாத்திரப்படைப்பு. வெட்டியான் சுடலையை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டு அனுமந்தையாவை திருமணம் செய்து கொள்வதும், தன் குடும்பத்திற்காக தன்னையே சிதைத்துக் கொள்வதும், தள்ளாத வறுமை நிலையிலும் குப்பைத் தொட்டியில் கிடந்த அனாதைக் குழந்தை லட்சுமியை தனது முத்த மகளாக எடுத்து வளர்ப்பதும், பரிசுத்தமான அன்பு, உழைக்கும் வர்க்கத்திடம் தான் அதிகம் இருக்கிறது என்பதை பறை முழங்குகிறது.
அதேபோல், வெட்டியானாக வரும் சுடலையும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறான். தொழிலின் மீதான அவனது நேர்த்தி, அர்ப்பணிப்பு, பிணம் எரிக்க வருபவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் உதவுவது என மனிதத்துவத்தை அற்புதமாக வெளிக்கொணருகிறான்.
சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வேலைக்கு கூட பினாமிகள் இருப்பதும், அவர்களுக்கும் சுடலை பங்கு கொடுக்க வேண்டியதிருப்பதும், வெட்டியான் வேலையில் கூட ஊழல் மலிந்திருப்பதை அறிவழகன் மிகவும் நுட்பமாக பதிவு செய்திருக்கிறார்.
கொண்டம்மா தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதால் பைத்தியமாகிப்போன சுடலை, பின்னர் நலமடைந்து தொழிலுக்கு திரும்பி, கிடைத்த வாழ்க்கையை திருப்தியாக வாழ்வதும், அனுமந்தையாவை தன்னை வென்ற ஒரு போட்டியாளனாக கருதாமல் அவனுடன் இயல்பாக பழகும் விதமும் அற்புதமானது. உழைக்கும் மக்களிடம் இருக்கும் வஞ்சனையற்ற மனதை, இக்கதாபாத்திரங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் அறிவழகன்.ஒரு வெட்டியானின் வாழ்க்கையை இதைவிட யாரும் அழகாக கூறவில்லை என்றே கருதுகிறேன்.
அனுமந்தையாவின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வரும் உயர்அதிகாரி குமாரசாமி, தனது பால்ய நண்பன் ராசப்பன்தான் அனுமந்தையா என்று தெரிந்து கொண்டு, அவன் மீது அதே நட்பை வெளிப்படுத்தி அரவணைக்கிறார் குமரசாமி.
அனுமந்தையா தனது நண்பரிடம் மகன் சீனய்யாவிற்கு தோட்டி வேலை கொடுக்கும் படி கோரிக்கை வைக்கிறான். அவரும் அந்த வேலையைக் கொடுக்கிறார்; ஆனால், அதுவே சீனய்யாவின் மரணத்திற்கும் காரணமாகி விடுகிறது. ஒரு மலக்குழியையை சுத்தம் செய்யும்போது சீனய்யா விஷவாயுவினால் தீ விபத்து ஏற்பட்டு இறக்கிறான். இறுதியில், அனுமந்தையாவின் வாழ்க்கையில் சோகமே மிஞ்சுகிறது.
அறிவழகன் இந்த நாவலின் மூலம் மிக அற்புதமான மனிதர்களை அடையாளம் காட்டுகிறார். அதுமட்டுமல்லாமல், அந்தோணி, ஐசக் என்று கிறித்துவனாக மாறினாலும், யாகூப் என்று இஸ்லாமியனாக மதம் மாறினாலும் அவர்களை இந்த சமூகம் தோட்டியாகவே பார்க்கும் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறார்.
அவர் இந்த நூலின் முன்னுரையில், “தங்களைப் பற்றியே உணராமல் இச்சமுதாயத்திற்காக சேவை செய்யும் இவர்களது வாழ்க்கை யாரையும் பிரமிக்க வைப்பது. உடலால் தூய்மையற்றவர்களாகயினும் உள்ளத்தால் கள்ளங் கபடமற்ற தூய்மையானவர்கள். இழி நோக்கம் அறியாதவர்கள். குடும்பத்தினர்களுக்குள்ளேயும் குரோதம் பாராட்டத் தெரியாதவர்கள். இச்சமுதாயத்திற்காக செருப்பினும் இழிவாய் சேவை செய்யக் கடமைப் பட்டவர்கள் எனும் மனோநிலையில் இயல்பாகவே தங்களைத் தியாகித்துக் கொண்டவர்கள். சாதி, சமய, இணைப் பாகுபாடின்றி அனைவருக்காகவும் தங்களை அர்பணித்துக் கொண்டவர்களாததால் மற்ற சாதியினரினும் உயர்ந்தவர்கள்” என்று மிக அருமையாக குறிப்பிட்டுள்ளார்.
நான் இந்த “கழிசடை”யை தமிழில் வெளிவந்த நூறு சிறந்த நாவலுக்குள் ஒன்றாக கருதுகிறேன். ஆனாலும், துப்பரவுத் தொழிலாளிகள் சுரண்டப்படுவதையும், ஒடுக்கப்படுவதையும் பற்றித்தான் இந்த நாவல் பேசுகிறதேயொழிய, அடக்குமுறைக்கு எதிரான அவர்களின் எழுச்சியையும், தேவையையும் முன்னிறுத்தவில்லை என்ற குறைபாட்டையும் காண்கிறேன். அந்த குறைபாட்டை தகழியின் “தோட்டியின் மகன்” என்ற மலையாள நாவல் நிறைவு செய்கிறது.
இந்த நாவலை வாசித்து முடிக்கும் வரை அனுமந்தையாவுடன் நானும் வாழ்ந்தேன் என்பதையும், அவன் இறங்கிய மலக்குழிகள் மற்றும் சாக்கடைக்குள் நானும் நுழைந்து வேலை செய்து வெளியேறிய உணர்வும் எனக்கு ஏற்பட்டது என்பதை மறக்காமல் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். “கழிசடை” ஒரு அற்புதமான படைப்பு.
நூல் : கழிசடை ஆசிரியர்: அறிவழகன் பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம் பக்கங்கள் : 248 விலை : ரூ .160
ஓ.டி.டி. தளங்கள், சமூக ஊடகங்கள், மற்றும் மின்னணு செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் “இடையீட்டாளர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியாக்களுக்கான நெறிமுறைகள் விதிமுறைகள் 2021” (Guidelines for Intermediaries and Digital Media Ethics Code 2021) என்ற புதிய விதியை கொண்டுவந்துள்ளது மோடி அரசு.
மேற்கண்ட இந்த விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதியே அறிமுகப்படுத்தியிருந்தது. அனைத்து சமூக ஊடகங்கள், டிஜிட்டல் தளங்களின் நிறுவனங்களும் இவ்விதிமுறைளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதற்காக மே மாதம் 25-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது. அந்த அவகாசம் முடிவடைந்ததால், தற்போது அனைத்து நிறுவனங்களும் அவ்விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டாக வேண்டிய சூழல் எழுந்துள்ளது. கூகுல், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் மோடி அரசின் புதிய விதிகளுக்கு கட்டுப்படுவதாக அறிவித்துவிட்டனர்.
இந்நிலையில் இந்த புதிய விதிகள் என்ன சொல்கிறது? இதுவரை சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு இதுபோன்ற எந்த விதிகளும் இல்லாத போது, தற்போது புதிதாக இத்தகைய விதிமுறைகளைக் கொண்டு வருவதற்கான காரணம் என்ன? இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? போன்ற கேள்விகளுக்கான விடைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஏன் இந்தப் புதிய விதிமுறைகள், மோடி அரசு சொல்லும் காரணங்கள் என்ன?
இந்த புதிய விதிமுறைகளை டெல்லியில் அறிமுகப்படுத்திப் பேசிய, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர், “இந்தியாவில் சமூக ஊடக நிறுவனங்கள் வரவேற்புக்குரிய ஒன்று என்றாலும், அவற்றில் பகிரப்படும் சில தகவல்கள், வெறுப்புணர்வைத் தூண்டக் கூடியதாக உள்ளன என்று மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் பல ஆண்டுகளாகவே வந்து கொண்டிருக்கின்றன. போலிச் செய்திகளின் பிரச்சனையும் இதில் அடங்கும்”
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர்
“மேலும் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, வெளிநாடுகளுடனான உறவுகள், பாலியல் வல்லுறவு, பாலியல் உணர்வைத் தூண்டும் உள்ளடக்கங்கள் உள்ளிட்டவை தொடர்பாக புகார்கள் வந்தாலோ, ஆட்சேபகர தகவல்கள் பகிர்வதாக தெரிய வந்தாலோ, இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி அரசுத்துறை நடவடிக்கை எடுக்கும்” என்று புதிய விதிமுறைகளை கொண்டு வருவதற்கான காரணங்களை சொல்லியுள்ளார்.
புதிய விதிகள் என்ன சொல்கின்றன?
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள்; நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓ.டி.டி. தளங்களின் நிறுவனங்கள், தங்கள் பயனர்களின் புகார்களை விசாரித்து தீர்ப்பதற்காக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் இந்தியாவில் இருப்பவராக இருக்க வேண்டும்.
மேலும், இணைச்செயலாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ள ஒரு அதிகாரியை “அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாக” அரசு நியமிக்கும். இவர் நினைத்தால் குறிப்பிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் உள்ளடக்கத்தைத் தடைவிதிக்க உத்தரவிட முடியும்.
சமூக ஊடகங்களில் ‘சட்டவிரோதமான’, ‘வெறுப்பைத் தூண்டும்’, ‘தேசத்தின் ஒற்றுமைக்கு அல்லது இறையாண்மைக்கு எதிரான’, இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பற்றிய ‘தவறான கருத்துகள்’, சிறுவர் ஆபாச படங்கள், பாலியல் வக்கிரங்கள் தொடர்பான உள்ளடக்கங்களை “முதலில் பதிவிட்ட நபரைப்” பற்றிய விவரங்களை அரசிற்குத் தரவேண்டும். அதனை வைத்துக் கொண்டு அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். இந்த உள்ளடக்கங்களைப் பகிர்வோருக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்கிறது.
மேற்கண்டவை தொடர்பாக புகார்கள் வந்தால் அந்த குறிப்பிட்ட உள்ளடக்கத்தை 36 மணி நேரத்திற்குள் நீக்க அல்லது அந்த கணக்கை முடக்க வேண்டும்.
மேலும், இந்த நிறுவனங்களைக் கண்காணிக்கும் “மேற்பார்வைக் குழு அல்லது கண்காணிப்புக் குழு” ஒன்று அமைக்கப்படும்.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, பாதுகாப்பு, சட்டம், உள்துறை, வெளிவிவகாரங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ஆகிய அமைச்சகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அதில் அங்கம் வகிப்பார்கள். மேற்கண்ட ‘நெறிமுறைகளை’ மீறுவதாக புகார் வந்தால் அதனை “தானே முன்வந்து விசாரிக்கும் அதிகாரம்” இந்த மேற்பார்வைக் குழுவுக்கு இருக்கும்.
ஓ.டி.டி. தளங்கள் தாங்கள் வெளியிடும் திரைப்படங்கள், தொடர்கள் போன்றவற்றை U, U/A7+, U/A13+, U/A16+, மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் A என்று வகைப்படுத்தி, குறிப்பிட்ட வயது வரம்புக்குள் இருப்பவர்கள் மற்றவற்றைப் பார்க்காத வண்ணம் தடுக்க வேண்டும்.
இதுபோன்று பல விதிமுறைகளைப் பற்றி சொல்கிறது.
இந்த விதிமுறைகளின் உண்மையான நோக்கம் !
சிறுவர் ஆபாசப் படங்கள், பாலியல் வக்கிரங்கள் தொடர்பான பதிவுகள் போன்றவற்றை தடுப்பது என்பதையும் இந்த விதிமுறைகள் தனது நோக்கமாக காட்டினாலும் உண்மை அதுவல்ல.
இந்து முன்னணி காலிகளால் பெண் உறுப்பு சிதைத்துக் கொல்லப்பட்ட அரியலூர் நந்தினி முதல் காஷ்மீரில் கருவறையிலேயே வைத்து சிதைக்கப்பட்ட அசீபா, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி நாக்கு துண்டிக்கப்பட்டு முதுகெலும்பு முறித்து போடப்பட்ட உத்தரப் பிரதேசத்தின் மனிஷா வரை பாதிக்கப்பட்டது யாரால்? இந்த கொடூரங்களை செய்தவர்களும் அவர்களை ஆதரித்தவர்களும் யார்? இவர்கள் தான் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளைத் தடுக்கப் போகிறார்களா? இது ஒரு சகிக்க முடியாத பொய்.
உண்மையில் “தேச விரோதக் கருத்துக்கள் அல்லது தேசத்தின் இறையாண்மைக்கு ஆபத்தான கருத்துக்கள், வெறுப்பைத் தூண்டும் பதிவுகள், போலிச் செய்திகள்” என்று கூறி தங்களையும் தங்களது இந்துத்துவ அரசியலையும் சமூக ஊடகங்களில் விமர்சிப்பவர்கள், அது தொடர்பாக எழுதும் மின்னணு செய்தி ஊடகங்கள் மற்றும் இந்துத்துவத்தை விமர்சிக்கும் வகையில் வரும் சில ஓ.டி.டி. திரைத்தொடர்கள் (உதாரணமாக ‘லைலா’ (LEILA) போன்ற இணையத் தொடர்கள்) ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டது தான் இந்த விதிமுறிகளை மோடி அரசு அறிவித்திருப்பதற்கான காரணமாகும்.
000
நாள் தோறும் கோடிக்கணக்கான மக்கள் – ஜனநாயக சக்திகள் மோடி அரசின் காவி-கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளைக் கண்டு கொதித்துப் போயுள்ளார்கள். அவர்கள் இந்தப் பாசிச அரசிற்கு எதிரான கோபத்தைப் போராட்டங்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் வெளிக்கொண்டு வருகிறார்கள்.
அதில் ஒன்றாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதுபோன்ற உள்ளடக்கங்கள் நாடு முழுக்க வைரலாவதும் மோடி அரசின் யோக்கியதை அம்பலமாவதும் நடக்கிறது. தமிழகத்தின் கோ பேக் மோடி (GO BACK MODI) ஹாஷ்டேக் முதல் “டெல்லிச் சலோ” விவசாயிகள் போராட்டம் உலக அளவில் டிரெண்டானது வரை இந்த பார்வையில் தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை தங்களுக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்ளத் துணிவற்றவர்கள் மட்டுமல்ல, அதை அடக்கி ஒடுக்கி இல்லாமல் செய்வதற்கும் முயல்பவர்களும் ஆவர்.
ஏனெனில், தங்களது பாசிச ஆட்சியை நிறுவுவதற்கு கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற ஜனநாயக உரிமைகளை இல்லாமல் செய்வது அவர்களுக்கு முன்தேவையாக உள்ளது. அந்த வகையில் அதற்கான ஏற்பாடாகத் தான் சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்கள், ஓ.டி.டி. தளங்களுக்கான இந்த புதிய விதிமுறைகளும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட விதிகளைப் பார்ப்போம், இந்தியாவை தளமாகக் கொண்ட ஒருவரை புகார் அதிகாரியாக நியமிப்பது, அரசு அதிகாரப்பூர்வமாக நியமிக்கும் பிரதிநிதியிடம் (சங்கிகளை தான் நியமிப்பார்கள் என்பதை சொல்லாமலே புரிந்துகொள்ள முடியும்) எந்தவொரு உள்ளடக்கத்தையும் தடைவிதிக்கும் அதிகாரம் கொடுக்கப்படுவது.
மேலும், இதற்கெல்லாம் மேல், மோடி அரசின் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்தவர்கள் ‘கண்காணிக்கும் குழு’ என்ற பெயரில் அனைத்து சமூக ஊடக, மின்னணு செய்தி ஊடக, ஓ.டி.டி. தளங்களின் நிறுவனங்களையும் விசாரணை செய்யும் அதிகாரத்தில் அமர்ந்து கொள்வது என்பது அனைத்தும் முற்று முழுதாக இந்த தளங்களை பார்ப்பன பாசிஸ்டுகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும் அதன் மூலம் தங்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிடுபவர்கள், அதை பரப்புபவர்களைக் கண்டறிந்து அவர்களை தண்டிக்கவுமே ஆகும்.
அதற்கு தான் ‘சட்டவிரோத’, ‘தேச விரோதக் கருத்துக்களை’ முதலில் பதவிடுபவர்களை கண்டறிவதும் அதை பரப்புபவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பது போன்றவற்றை தங்களது புதிய விதிமுறைகளில் சேர்த்திருக்கிறார்கள்.
இந்த விதிமுறைகள் அமுலுக்கு வரும்பட்சத்தில் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களுக்கு எதிரான கருத்துக்களே இல்லாத இந்தியாவை நாம் பார்க்கலாம் ! ஏனெனில் அதன் பின் அத்தகைய மாற்றுக் கருத்துக்களை பேசத்துணியும் குரல்வலைகள் அறுத்து வீசப்பட்டிருக்கும்.
பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஹத்ராஸ் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐந்தாம் தேதி, செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன் உட்பட அவருடன் வந்த சக ஊடகவியலார்கள் மீது உத்திரப்பிரதேசத்தில் ஒரு சதியை அரங்கேற்ற வந்ததாக கூறி அவர்களை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (ஊபா) கைது செய்தது உ.பி அரசு.
மேலும் கொரோனா இரண்டாம் அலையால் காவி கும்பல் ஆளும் உத்திரப்பிரதேசம் மருத்துவ நெருக்கடிக்கு உள்ளானபோது “உத்திரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, போதிய படுக்கை வசதிகள் இல்லை என்று யாராவது சமூக ஊடகங்களில் பொய் செய்தியைப் பரப்பினால் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாயும்” என்று யோகி ஆதித்யநாத் அரசு மிரட்டியது.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, கொரோனா உயிர் பலிகளை மறைத்தல் என கொரோனா இரண்டாவது அலையை மோடி அரசு கையாளும் கொடூரத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதற்கு எதிராக, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஒருவர் “அரசிற்கு எதிராக சர்வதேச ரீதியில் கருத்துருவாக்கம் செய்வதற்காக காங்கிரஸ்காரர்கள் தாயாரித்த டூல்கிட்” என்று போலியான ஒன்றை பகிர்ந்திருந்தார். காங்கிரஸ்காரர்கள் புகாருக்கு பிறகு அந்த டூல்கிட் போலியானது என்பதை உறுதிபடுத்திய ட்விட்டர் நிறுவனம் பா.ஜ.க-வினரின் பதிவை “சித்தரிக்கப்பட்டது” என வகைப்படுத்திக் காட்டியது.
மூக்கு உடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத பாசிச பா.ஜ.க டூல்கிட் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மீதி வழக்கு தொடுத்தது மட்டுமின்றி ட்விட்டர் நிறுவனத்திற்குள் அதிரடியாக டெல்லி போலிசை அனுப்பி ‘விசாரித்திருக்கிறது’ (மிரட்டியிருக்கிறது என்று சொல்வது தான் பொருந்தும்).
நாடே அறிந்த உண்மையாகினும் தன்னை எதிர்த்து எந்தக் கருத்தும் வரக்கூடாது. அப்படி வந்தால் அது எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதற்கு இவை சிறு உதாரணங்கள். தற்போது இந்த புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்ததன் மூலம் நமது கருத்துரிமைக்கு எதிரான பார்பன பாசிச தாக்குதல் சட்டப்பூர்வாகியிருக்கிறது.
இந்தப் பாசிச அடக்குமுறைகளை எதிர்த்து களத்தில் போராடாமல் இனி கருத்து சுதந்திரத்தைப் பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
ஒருவேளை, வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் உள்ள தனது ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தான் வாக்குறுதியளித்தபடி நாளொன்றுக்கு 1,050 டன் மருத்துவ ஆக்சிஜனை வழங்கியிருந்தால், தமிழகத்தின் ஒருநாள் தேவையான 650 டன்னையும் அது பூர்த்தி செய்திருப்பதோடு, கேரளா மற்றும் புதுச்சேரிக்காக சிறிதளவு மிச்சப்படுத்தியிருக்க முடியும்.
எனினும், தி வயர் சயின்ஸ் (the wire science) பத்திரிக்கையாளார்கள் சந்தித்த வல்லுநர்கள், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திலிருந்து, மருத்துவ நோக்கங்களுக்காக நாளொன்றுக்கு 1,050 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஒரு வருடகாலம் ஆகவில்லையென்றாலும் சில மாதங்களேனும் ஆகும். அதுவரை, ஸ்டெர்லைட் வளாகத்திற்குள் இருக்கும் ஆலைகளை முறைப்படுத்தினால் படிப்படியாக 60 முதல் 100 டிபிடி (tonnes per day) வரை திரவ ஆக்சிஜனைத்தான் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.
மேலும், வேதாந்தாவின் ஆக்சிஜன், மிகவும் செலவு செய்யக் கூடியதாகவும், வீணாகக் கூடியதாகவும் இருக்கும் என்றனர். அதே பணத்தைக் கொண்டு, குறைந்த விலை மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில், குழாய் வழியாக தொலைதூர இடங்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டு சேர்க்கும் நீண்ட காலப் பயன்பாடுடைய உள்கட்டமைப்பை அமைக்க முடியும்போது எதற்காக இவ்வளவு செலவு செய்து (ஸ்டெர்லைட்டில்) ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேண்டும்?
மே 25 காலை வரை, தான் வாக்குறுதியளித்த 1,050 டன்னுக்கு மாறாக, நாளொன்றுக்கு 21 டன்னும், ஒரு வார இறுதியில் மொத்தம் 150 டன்னும் மட்டுமே வழங்கியுள்ளது அந்நிறுவனம். உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு டன் திரவ ஆக்சிஜனுக்கும் (Liquid Oxygen), வேதாந்தா 10 டன் வாயு ஆக்சிஜனை உற்பத்தி செய்து வீணடிக்கிறது. இந்த ஏழு நாட்களில், கிட்டத்தட்ட 1,500 டன் வாயு ஆக்சிஜனை (Gaseous Oxygen) வளிமண்டலத்தில் செலுத்தி வீணடித்துள்ளது.
வேதாந்தா தற்போது இயக்கி வரும் ஆக்சிஜன் ஆலையானது ஒரு பெரிய காப்பர் உருக்கும் வளாகத்தில் உள்ள பல ஆலைகளில் ஒன்றாகும். ஆக்சிஜன் ஆலையிலிருந்து வரும் முழு ஆக்சிஜனும் வாயு வடிவத்தில் தொடர்ச்சியாக ஸ்மெல்ட்டரின் உலைக்கு செல்லும். தற்போது அந்த ஸ்மெல்டர் ஆலை சீல் வைக்கப்பட்டுள்ளதால், அவை வளிமண்டலத்தில் கலந்து வீணாகிறது.
மேலும், பொதுவாக ஒரு ஆக்சிஜன் ஆலை, தனது மொத்த உற்பத்தித் திறனில் 5% முதல் 10% வரை திரவ ஆக்சிஜனை (Liquid Oxygen) இருப்பு வைப்பது வழக்கம். ஒருவேளை ஆலை மூடப்பட்டால், திரவ நிலை ஆக்சிஜனை ஆவியாக்கி, உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்காக அது சேமித்து வைக்கப்படுகிறது.
“திரவ நிலை ஆக்சிஜனின் உற்பத்தி அளவு, ஆலையை வடிவமைக்கும் தொடக்க கட்டத்தில் தீர்மானிக்கப்படவேண்டிய ஒன்று” என்கிறார் ஐ.ஐ.டி கிரையோஜெனிக் பொறியியல் பேராசிரியரான காஞ்சன் சவுத்ரி.
கோப்புப்படம்
பெரும்பாலும் திரவ நிலை ஆக்சிஜனின் நிலையான அளவு ஆலையின் தொடக்க நிலை வடிவமைப்பின்போதே தீர்மானிக்கப்படும் என்பதால், தற்போதுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் வடிவமைப்பை மாற்றியமைத்தாலும், அதன் உற்பத்தியை சிறிதளவே அதிகரிக்க முடியும். தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள 10:90 விகிதத்திலிருந்து திரவ-வாயு ஆக்சிஜனின் விகிதத்தை கணிசமாக மாற்ற, ஆலை முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும் – காற்றழுத்திகள் (Compressors) மற்றும் விசையாழிகள் (Turbines) போன்ற கூடுதல் உபகரணங்களை நிறுவ வேண்டியிருக்கும். புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை நிறுவுவதற்கு அதிக காலமும் பணமும் தேவைப்படும்.
ஸ்டெர்லைட் ஆலையின் கட்டமைப்போ, வாயுவாக 90 சதவீதமும், திரவ நிலையில் வெறும் 10 சதவீதமும் மட்டுமே ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திரவ ஆக்சிஜனை மட்டும் தான் மொத்தமாக கண்டெய்னர்களில் அடைத்து எடுத்துச் செல்ல முடியும். வாயு ஆக்சிஜனும் மருத்துவப் பயன்பாட்டுக்குத் தேவைதான் என்றாலும், அதை கண்டெய்னர்களில் அடைத்து எடுத்துச் செல்ல முடியாது. ஒருவேளை குறைந்த தூரமாக இருந்தால், வாயு ஆக்சிஜனை தயாரிக்கும் இடத்திலிருந்து பயன்படுத்தும் இடத்திற்கு குழாய்கள் மூலம் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அதை டி-வகை (7மீ³ கொள்ளளவு கொண்ட சிலிண்டர்) சிலிண்டர்களில் நிரப்ப முடிந்தாலும் ஒரு மாவட்டத்திற்குள் மட்டுமே கொண்டுசெல்ல முடியும். அதற்கும் அதிக செலவும், நேரமும் ஆகும்.
மே 23 அன்று, 29.06 டன் திரவ ஆக்சிஜனையும், 299 டன் வாயு ஆக்சிஜனையும் ஸ்டெர்லைட் உற்பத்தி செய்தது. முழு வாயு ஆக்சிஜனும் வளிமண்டலத்தில் வெளியேற்றப்பட்டு வீணடிக்கப்பட்டது. இப்படி வீணடிக்கப்பட்ட 299 டன் வாயு ஆக்சிஜனையும் சிலிண்டர்களில் நிரப்ப வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு 30,000 சிலிண்டர்கள் தேவைப்படும். இது தற்போது உள்ள புள்ளிவிவரப்படி, மொத்த சென்னையின் தினசரி சிலிண்டர் தேவையை விட இரு மடங்கு அதிகம் ஆகும். சென்னை ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேதியியல் மற்றும் பொறியியல் பேராசிரியர் டி.சுவாமிநாதன் மற்றும் காஞ்சன் சவுத்ரி ஆகிய இருவரும் ஸ்டெர்லைட் ஆலையில் நடந்து வரும் ஆக்சிஜன் உற்பத்தியைப் பற்றி கருத்து தெரிவித்த போது, இந்தச் செயல்முறைக்கு அதிகப்படியான நிதி தேவைப்படும் என்பதால், நடைமுறையில் இது சாத்தியமற்றது என்றனர்.
வேதாந்தாவிடம் பெரும் பணம் இருந்தாலும், அது எப்போதும் அதனை செலவிடுவதில்லை. பொது நலனுக்கென்று அது செலவு செய்வது இருக்கட்டும், சட்டப்பூர்வமாக அந்நிறுவனம் செய்ய வேண்டியதைக் கூட கடந்த காலங்களில் செய்ததில்லை.
கோப்புப்படம்
உதாரணமாக, மார்ச் 21, 2017 அன்று, ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்த 31 வயதான கார்த்தீபன், கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தன் இடது கையை இழந்தார். தனது ஒரு வயது குழந்தையை பராமரிக்கவும் தன்னுடைய வாழ்க்கையை நடத்துவும் முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். வேதாந்தா நினைத்திருந்தால் அப்போதே அத்தொழிலாளிக்கு இழப்பீடு வழங்கியிருக்கலாம் – ஆனால் அதற்குக் கூட 18 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது, அவர் வாழ்வதற்கான பணத்தைப் பெற ஆலை வாயிலுக்கு வெளியே போராட வேண்டியிருந்தது.
பொது சுகாதாரத்தில் இந்நிறுவனத்தின் விருப்பமின்மையை அம்பலப்படுத்தும் மற்றொரு உதாரணமும் உள்ளது. 2005-ம் ஆண்டில், உள்நோயாளிகள், புறநோயாளிகள் வசதியுடன் கூடிய ஒரு இலவச மருத்துவமனையை அமைக்குமாறு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் கூறியது. இதைச் சட்டப்படி கட்டாயமாகச் செய்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை மருத்துவமனை கட்டப்படவில்லை.
அதிகப்படியான மின்சாரப் பயன்பாடு
ஆக்சிஜனை காற்றிலிருந்து பிரிப்பது அதிக மின்சாரம் செலவாகும் ஒரு செயல்முறையாகும். அதை திரவமாக மாற்றுவும் அதிக மின்சாரம் தேவைப்படும். 1 மீ³ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு குறைந்தபட்சம் 0.9-1.0 கிலோவாட் (யூனிட்) மின்சாரம் தேவைப்படும் என்று மதிப்பிடுகிறார் சவுத்ரி. இப்படி தயாரிக்கப்படுவதில் 10 சதவீதம் திரவ ஆக்சிஜனாகவும் 90 சதவீதம் வாயு ஆக்சிஜனாகவும் இருக்கும். ஸ்மெல்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் ஸ்டெர்லைட்டுக்கு வாயு ஆக்சிஜனுக்கான தேவை இல்லை – எனவே ஆலை 10 யூனிட் மின்சாரத்தை கொண்டு 1மீ³ திரவ ஆக்சிஜனை பெற 10மீ³ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேண்டும். மீதமுள்ள 9 மீ³ வாயு ஆக்சிஜனை வீணாக்க வேண்டும். ஒரு டி-வகை சிலிண்டரை நிரப்ப, ஆலை குறைந்தபட்சம் 70 யூனிட் மின்சாரத்தை நுகரும்.
ஒரு டன் வாயுவை உற்பத்தி செய்ய (100 கிலோ திரவத்துடன் உற்பத்தி செய்ய) குறைந்தபட்சம் 700 யூனிட் மின்சாரம் தேவைப்படும். இது ஒரு குறைந்தளவிலான மதிப்பீடே.
மே 25, 2021 அன்று காலை 6 மணி நிலவரப்படி, வேதாந்தா 1,653.64 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்ததாகக் கூறியது. இதில் 1,491 டன் வாயு ஆக்சிஜன் வீணாடிக்கப்பட்டுள்ளது. இன்றுவரை கொள்கலனில் மருத்துவப் பயன்பாட்டிற்காக அனுப்பப்பட்ட அளவு 150.58 டன் மட்டுமே, இது வீணான அளவில் பத்தில் ஒரு பங்கு ஆகும். ஸ்டெர்லைட் ஆலையின் இந்த உற்பத்தி நடவடிக்கை, ஒரு அறையை குளிர்விக்க ஒரு முழு கட்டிடத்திற்கும் குளிரூட்டுவதைப் போன்றதாகும்.
கோப்புப்படம்
150.58 டன் ஆக்சிஜன் உற்பத்திக்கான மின்சார செலவு சுமார் ரூபாய் 80 லட்சம் ஆகும். திரவ நிலை ஆக்சிஜனின் உற்பத்தியை மேம்படுத்த இரண்டாவதாக ஒரு ஆலையை இயக்கப்போவதாக வேதாந்தா தெரிவித்துள்ளது. இரண்டு ஆலைகளும் முழு கொள்ளளவோடு இயங்கினால், ஆக்சிஜனைப் பிரிப்பதற்கான மின்சார செலவு, 100 டன் உற்பத்திக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 50 லட்சம் வரை ஆகும்.
இது ஒருபுறமிருக்க, ஆலையில் இருந்து ஆக்சிஜனை இலவசமாக வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், செலவுகளோ அதிகமாக உள்ளன. மேலும் மருத்துவமனைக்கு நெருக்கமாக அமைந்துள்ள வேறு சில சிறிய ஆலைகளின் மூலம் இதைவிட இன்னும் சிறப்பாகவும் விலைகுறைவாகவும் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்பதே உண்மை. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளான அதிகப்படியான மின்சாரப் பயன்பாடு, உயிர் காக்கும் வாயுவான ஆக்சிஜனை வீணடிப்பது போன்றவை கிட்டத்தட்ட குற்றத்திற்கு நிகரானதாகும்.
இது ஒரு கேள்வியை எழுப்புகிறது : வேதாந்தா ஏன் விருப்பத்துடன் இவ்வளவு பெரிய செலவைச் செய்கின்றது?
காற்றை நச்சுப்படுத்தியதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்களை மூச்சுத் திணறச் செய்ததற்காகவும் நிறுத்தப்பட்ட ஒரு நிறுவனத்தை அழைப்பதிலும், ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முனைவதிலும் உள்ள முரணைக் கண்டு வேதாந்தாவின் தாராள நன்கொடையின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெருந்தொற்று நோய் காலகட்டத்தின் போது ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முன்வந்த ஒரு நிறுவனத்தை கேள்வி கேட்பது அற்பமானதோ அல்லது இழிந்தததோ அல்ல:
வேதாந்தாவின் சலுகை (1050 tonne per day) ஒரு வெற்று வாக்குறுதியாக உள்ளது. இதனை ஆலையை மீண்டும் இயக்குவது என்ற அதன் நோக்கத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாது. ஒரு பெருந்தொற்றுச் சூழலில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முன்வரும் ஆலையின் மீது கேள்வி எழுப்ப வேண்டாம் என நாம் நினைத்தால் நம்முடைய உணர்ச்சி, அறிவை மறைக்கிறது என்று பொருள்.
அதியன்
மூலக் கட்டுரை : The Wire கட்டுரையாளர் : நித்தியானந்த் ஜெயராமன்
பத்ம சேஷாத்திரி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததற்கான பின்புலமும், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பதற்கான காரணமும் !
கடந்த சில நாட்களாக பத்ம சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு கொடுத்த பாலியல் சீண்டல் பிரச்சினை தமிழகம் முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆனால், இதற்கு முன்பும் பள்ளி, கல்லூரிகளில் இது போன்ற பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. எனினும் இப்பள்ளி பிரச்சினை மட்டும் ஏன் இவ்வளவு பெரிதாக மாறியது. அதற்கு பின்புலம் என்ன?
முதல் காரணமாக பார்க்கையில், தர்மத்தைக் காக்க வந்ததாக சொல்லிக் கொண்ட இப்பள்ளி, இப்படிப்பட்ட பாலியல் கொடுமையைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு, பார்ப்பனத் திமிரெடுத்து பேசியது பலரது வெறுப்பையும் தூண்டிவிட்டது
தங்களை ஆகச் சிறந்த தர்மத்தைக் காக்க அந்த பள்ளியின் விளம்பரங்களே அதற்கு சாட்சியாக உள்ளன. காயத்திரி மந்திரம் சொல்லிக் கொடுக்கிறோம், வேதங்கள் – இந்து புராணங்கள் சொல்லிக் கொடுக்கிறோம், சமஸ்கிருதம் கற்றுத் தருகிறோம் என்றெல்லாம் பில்டப் செய்துக் கொண்டனர்.
அப்பள்ளி விளம்பரம் ஒன்றில் “பகவான் ராமர் ராவணனை வதம் செய்து தர்மத்தை காக்க அவதாரம் எடுத்தாரே, அதேபோல் கல்வி சாம்ராஜ்ஜியத்தில் தர்மத்தை முன்னிறுத்தி ராமராஜ்ஜியத்தை பரிபாலனம் செய்தார் Dr.YGP” என்று அவர்களே தங்களை ‘யார்’ என்று முத்திரைகுத்திக் கொண்டனர்.
அப்படிப்பட்ட ‘யோக்கியர்கள்’, தங்கள் பள்ளியில் படித்த மாணவிக்கு இளைக்கப்பட்ட அநீதிக்காக பொங்கி எழாமல், கிரிமினல் ஆசிரியரையும் பள்ளிப் பெயரையும் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலரது எரிச்சலையும் ஈர்த்தன.
இரண்டாவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் உயர்நடுத்தர வர்க்க மற்றும் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்தவர்களாக உள்ளனர். பல்வேறு பிரபலங்களும் இப்பிரச்சனையில் தலையிட்டு கண்டிக்கவும் செய்கின்றனர். ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தர அல்லது ஏழ்மையான குடும்பங்களை சார்ந்தவர்களாக இருந்திருந்தால் இவ்வளவு பெரிதாக பேசப்பட்டிருக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.
YG மதுவந்தி
மூன்றாவதாக, YG மகேந்திரனும் அவரது மகளான மதுவந்தி நடந்துக் கொண்ட முறை அருவருப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது. மதுவந்தி பாஜக-வில் இணைந்த பிறகு, தான் பிரபலமடைவதற்கு சில உத்திகளை பயன்படுத்தினார். தமிழிசை சௌந்தராஜன் பின்பற்றிய அதே உத்தி.
அபத்தமான கருத்துக்களை பார்ப்பனத் திமிரோடு, முட்டாள்தனமாக உளறுவது, அதை சமூக வலைத்தளங்களில் அது கேலி கிண்டலாக்கப்பட்டாலும், அக்கருத்துக்கள் எவ்வளவு இழிவானவையாக இருந்தாலும், அதற்கு ஆதரவாக திமிராகப் பேசுவது என தன்னை ‘பிரபலப்படுத்திக்’ கொண்டார். “பிராமணர்களுக்கு மூளை வலிமை ஜாஸ்தி… ரொம்பவே ஜாஸ்தி” என்றெல்லாம் இவர் பேசியது எடுத்துக்காட்டு.
தற்போது இப்பிரச்சனை வெடித்தப் பிறகும் இதை சாதிரீதியாக எடுத்துச் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்ட முயற்சித்ததே இவர்கள் தான். பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனவாசன் “மதுவந்தியால் ஒட்டுமொத்த பிராமண சமுதாயத்திற்கே தலைகுனிவு” என்று சொல்லியது நினைவிருக்கலாம். பிராமணர்களை தாக்குவதற்காகவே ராஜகோபாலன் செய்த தவறை வைத்து PSBB பள்ளியை திராவிடர்கள் தாக்குகிறார்கள் எனக் கூறிவந்தார்.
எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்துவிட்டு தற்போது இவர்களும், கமலஹாசன், சுப்பிரமணியசாமி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றோர், சாதி ரீதியாக இப்பிரச்சனையை பார்க்கக் கூடாது என்று மற்றவர்களுக்கு பாடம் எடுக்கின்றனர். எல்லாவற்றையும் அவர்களே செய்துவிட்டு, தற்போது பழியை மற்றவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள பார்க்கிறார்கள்.
“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது போல் இவர்களே மற்றவர்களை இழிவுபடுத்தி தங்களை உயர்வாக காட்டிக்கொண்டார்கள், தற்போது வசமாக சிக்கிக் கொண்ட பிறகு அவர்களது வெட்டி ஜம்பமே எமனாக மாறி நிற்கிறது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மீது அத்துமீறல்கள் நடந்ததற்கான பின்புலம் என்ன?
கடந்த 4 ஆண்டுகளில் குறிப்பாக அ.தி.மு.க. மூலம் மறைமுகமாக பா.ஜ.க. தமிழகத்தை தன் பிடியில் வைத்திருந்தபோது மறைந்திருந்த அல்லது அடங்கி கிடந்த ராஜகோபாலன்கள் சுதந்திரமாக, துணிச்சலுடன் எல்லாவித குற்றங்களையும் செய்யத் தொடங்கினர்.
சில உதாரணங்களைப் பார்க்கலாம். 2017-ல் அரியலூரை சேர்ந்த நந்தினி என்ற பெண் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டு நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதை முன்னின்று நடத்தியது இந்து முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள்.
2018-ம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக ‘பேராசிரியர்’ நிர்மலா தேவி பிரச்சினை பெரிதாக வெடித்தது. தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. நிர்மலா தேவியில் தொடங்கிய அப்பிரச்சனை கவர்னரை விசாரிக்க வேண்டும் என்றளவுக்கு சென்று அப்படியே மூடி மறைக்கப்பட்டது.
2019-ம் ஆண்டு தமிழகத்தையே அதிரவைத்த பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி பாலியல் கொடூரம், பொள்ளாச்சி ஜெயராமன் மகன் வரை சென்று அதற்கு பிறகு ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டது. இன்று வரை அதற்கான நியாயம் கிடைக்கவில்லை.
2020-ம் ஆண்டில் இதேபோன்று நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவன் பல பெண்கள் புகார் அளித்ததற்குப் பிறகு குண்டாசில் கைதானான்.
இவையெல்லாம் சில உதாரணங்கள், “Tip of the Iceberg” போன்றவை மட்டும் தான். இத்தகைய பிரச்சனைகள் வெளிவந்ததும் பல்வேறு தடைகள், இடையூறுகளை தாண்டித்தான். அப்படியென்றால் ‘iceberg’ன் முழு பரிமாணத்தையும் தொகுத்துப் பார்த்தால் எவ்வளவு இருக்கும்? பத்ம சேஷாத்திரி பள்ளி மட்டுமல்லாமல் தற்போது பல பள்ளிகளில் நடந்த பிரச்சனைகளும் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.
நெல்லையில் சட்ட கல்லூரியின் உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி ஒரு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்துக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய செய்தி சில நாட்கள் முன் வெளிவந்தது, இன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் பல வெளிவர தொடங்கியுள்ளன.
ஏற்கெனவே பெண்களை தங்களுக்கு கீழாக, போகப் பொருளாக, தனது இச்சைக்கு பயன்படுத்தும் ஒரு இயந்திரமாக பாவிக்கும் இந்தியா போன்ற நிலப்பிரபுத்துவ பண்புகள் எஞ்சியிருக்கும் சமூகத்தில், ஆபாச நுகர்வுவெறி கலாச்சாரமும் இணைந்து, பெண்கள் மீது பாய்ந்து குதறிவிட நினைப்பவர்களுக்கு அதிகாரமும், குற்றமிழைப்பதற்கு பாதுகாப்பும் கிடைத்தால் என்ன ஆகும்?
இப்படிப்பட்ட கிரிமினல்தனங்களில் ஈடுபடுபவர்கள் வலதுசாரிகளாகவும், பிற்போக்குவாதிகளாகவும், சமூக விரோதிகளாகவும் குறிப்பாக பணபலம், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாகவே பார்க்க முடிகிறது. பா.ஜ.க போன்ற கட்சிகளும் வலதுசாரி, பிற்போக்கு, பாசிச சித்தாந்தத்தை கொண்டவை.
பா.ஜ.க பாசிசத்தின் எழுச்சியும், சாதி, மதவெறி போன்ற பிற்போக்குவாதிகளும் இணையும் புள்ளிதான் இந்த வலதுசாரி சித்தாந்தம். ரவுடிகள் பலர் பா.ஜ.க-வில் இணைந்த செய்திகள் பலவற்றை நாம் பார்த்து வருகிறோம். இந்த பிரச்சனைகளில் எல்லாம் இந்த பிற்போக்கு பாசிச கும்பல் அணுகிய விதங்களே அவர்களின் சித்தாந்தங்களை தோலுரித்து காட்டுகிறது.
பத்ம சேஷாத்திரி பள்ளி பிரச்சனையில் பாஜக பிரமுகர் ஒருவர் “அவசரப்பட்டு ராஜகோபாலனை தண்டிக்கக் கூடாது, இன்று மாணவிகள் நெட்பிளிக்ஸில் அடல்ட் மூவி பார்க்கின்றனர். அவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல” என சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கிறார். இதுதான் இப்பள்ளி மற்றும் ராஜகோபாலனை ஆதரிப்பவர்களின் எண்ணம். பொள்ளாச்சி பிரச்சனையில் எடுத்துக் கொண்டாலும், “இவளுங்க எதுக்கு அவனோடு போனாளுங்க” என்றதையும், ராமதாஸ் கும்பல், “டீ சர்ட், குளிங்கிளாஸ், ஜீன்ஸ் போட்டு வந்தால் பெண்கள் மயங்கி விடுவார்கள்” என்கிற விதங்களில் அணுகியதையும் பார்க்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் மீது, பெண்கள் மீதே பழி சுமத்துவதுதான் இவர்களின் சித்தாந்தம்.
பா.ஜ.க அதிகாரத்திற்கு வந்த பிறகு நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதை பார்க்கிறோம். அவ்வாறு இருக்கும்போது ஒடுக்கப்பட்ட பாலினமான பெண்களின் நிலையும் அவ்வாறு தானே இருக்கும்? பாசிஸ்டுகளின் அதிகாரம் வளரும்போது இயல்பாகவே வலதுசாரிகள், பிற்போக்குவாதிகள், சாதி – மத வெறியர்கள் துணச்சலுடன் கிரமினல் தனங்களை செய்ய தொடங்குகின்றனர்.
இவைதான் இதுபோன்ற குற்றங்களுக்கு பின்புலமாக அமைகின்றன. பா.ஜ.க மறைமுகமாக தமிழகத்தை கட்டுப்படுத்தியபோதே இப்படியென்றால் இன்னும் பா.ஜ.க தமிழகத்தை ஆண்டால் என்ன ஆகும் என்பதற்கு இவையெல்லாம் “ஒரு சோறு பதம்”.
பார்ப்பனர்களுக்கே எதிரானது பார்ப்பன பாசிசம் :
சங்கரராமன் என்ற பார்ப்பனர் சங்கராச்சாரி ஜெயேந்திரனின் ஊழல், பாலியல் லீலைகளை கேள்விக் கேட்டார் என்பதற்காக படுகொலை செய்யப்பட்டார். இவ்விருவரில் பாசிஸ்டுகள் யார் பக்கம் நின்றார்கள்?
பத்ம சேஷாத்திரி பள்ளி பிரச்சனையில் பாதிக்கப்பட்ட மாணவிகளில் பெரும்பான்மையோர் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்த மாணவிகள். ஆனால், பாசிஸ்டுகள் ராஜகோபாலன் மற்றும் பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை பாதுகாக்கவே வரிந்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்குகின்றனர்.
ஜனநாயக, முற்போக்கு, கம்யூனிச இயக்கத்தை சார்ந்தவர்கள் தான் பாதிக்கப்பட்ட பார்ப்பனர்களுக்காக குரல் கொடுக்கின்றனர். பார்ப்பன பாசிஸ்டுகள் அரசியல் செல்வாக்கு, பணபலம், அதிகாரமுள்ள பக்கம்தான் சேரந்துக் கொள்கின்றனர்.
ஒருவரோ, ஒரு பள்ளி நிர்வாகமோ குற்றம் இழைத்ததற்காக அனைத்து பார்ப்பனர்களையும் குற்றம் சொல்ல முடியுமா என்று அம்பிகள் பொங்கி எழுகின்றனர். அன்று மதுவந்தி போன்ற கழுசடைகள் “பிராமணர்களுக்கு மூளை வலிமை ஜாஸ்தி” என்று உளறும்போது அதை கண்டித்திருந்தால், இன்று “எல்லாரையும் குற்றம் சொல்ல முடியுமா?” என்று பேசவேண்டிய அவசியம் இருந்திருக்காது.
இனியாவது உழைக்கும் வர்க்கமாக இருக்கும் பார்ப்பனர்கள், தங்களை ‘உயர்ந்தவர்கள்’ என்று வெட்டி ஜம்பமடிக்காமல் இதர உழைக்கும் மக்களுடன் இணைந்து பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து போராடினால்தான், அவர்கள் மீதுள்ள பார்வை மாறும்.
சுப்பிரமணியசாமி எனும் கோமாளி :
சுப்பிரமணியசாமி
பத்ம சேஷாத்திரி-க்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தி.மு.க ஆட்சியை கலைத்து விடுவேன் என்று பா.ஜ.க-வின் என்று சு.சாமி மிரட்டல் விடுக்கிறார். தி.மு.க-வே பெரும்பாலான சமயங்களில் பார்ப்பன பாசிசத்தை பகிரங்கமாக எதிர்த்து நிற்காமல் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. மக்கள்தான் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தங்களின் எதிர்வினைகளை ஆற்றி வருகிறார்கள். சு.சாமி-யின் மிரட்டலுக்கு பிறகு இன்னும் பலர் எதிர்வினை ஆற்றுகிறார்கள்.
பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக தமிழர்களின் உணர்வுகளை மேலும் தட்டியெழுப்பியது தான் நடந்துள்ளது. இவ்வாறெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் தமிழக பி.ஜே.பி அடக்கி வாசிக்கிறது. தனது பார்ப்பனத் திமிரை வெளிப்படையாகக் காட்டவே டிவிட்டரில் ‘வாண்டடாக வந்து வண்டியில் ஏறுகிறார்’ சு.சாமி.
“விசாகா” கமிட்டி அமைத்திருந்தால் தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா?
தண்டனையை கடுமையாக்க வேண்டும், விசாகா கமிட்டி அமைத்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று பல்வேறு அறிவுஜீவிகளும் அறிவுரை சொல்கின்றனர். ஒரு சமூக பிரச்சனையை மிகக் குறுகிய கண்ணோட்டத்தில் தனிநபர்கள் சார்ந்த பிரச்சனையாக பார்ப்பதன் விளைவே இவ்வாறெல்லாம் வெளிப்படுகிறது.
விசாகா கமிட்டியை ஒவ்வொரு நிர்வாகத்திலும் ஏற்படுத்தியிருந்தால் இதுபோன்ற குற்றங்களை தடுத்திருக்க முடியுமா? இன்று கூட மகளிர் போலீசு நிலையங்கள் உள்ளன, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் அங்குபோய் தைரியமாக புகார் கொடுக்க முடிகிறதா? போலீசுத்துறையே அதிகார, பணபலம், அரசியல் செல்வாக்கிற்கு தான் துணைபோகும் என்பதை மக்கள் தங்களது சொந்த அனுபவங்களால் அறிந்து வைத்துள்ளனர்.
அதேபோன்று தான் விசாகா கமிட்டியும். இப்பள்ளியில் கூட பாலியல் ரீதியான புகார்களை விசாரிக்கும் கமிட்டியில் ராஜகோபாலனே உள்ளார். இது தான் யதார்த்தம். விசாகா கமிட்டி அமைக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, சட்டமாக்கினாலும் எங்கும் நடைமுறைப்படுத்தவில்லை, ஒருவேளை இதுபோன்ற கமிட்டிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்தாலும் நடைமுறையில் செயல்பட போவதுமில்லை.
நிர்மலா தேவி
நிர்மலா தேவி பிரச்சினையில் இருந்து பத்ம சேஷாத்திரி பிரச்சனை வரை பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நடந்த அத்துமீறல்களை தங்களை தாங்களே தற்காத்துக் கொண்டேதான் அம்பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலமாகதான் வெளிப்படுத்தியுள்ளனர். இல்லையேல் எதாவது ஒரு வகையில் அதிகாரவர்க்கத்தால் இவர்கள் நசுக்கப்பட்டிருப்பார்கள், பொதுவெளியில் வெளிவந்து பலரது கண்டனங்கள், எதிர்ப்புகள், போராட்டங்களுக்குப் பிறகுதான் விசாரணை, கைது என்று பெயரளவிலான நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றன.
ஆகவே பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சினையை தைரியமாக வெளிப்படுத்துவதற்கான “களம்” வேண்டும் என்பது உடனடி அவசியம் என்று கருதுகிறோம்.
“ME TOO” இயக்கம் போல் தமிழகம் முழுக்க கடந்த ஆண்டுகளில் நடந்த பாலியல் அத்துமீறல்களை வெளிக் கொண்டு வருவதற்கு முற்போக்கு பெண்கள் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள், பெண் வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், இயக்கங்கள் போன்றோர் உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிப்பதற்கான வாய்ப்பை இந்த சமூகமும், அரசும் முன்னின்று செய்ய வேண்டும். எனினும் இது தற்காலிக தீர்வுதான்.
அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழங்களில் உள்ள மாணவ – மாணவிகள் ஜனநாயக ரீதியான மாணவர்கள் சங்கங்களை தொடங்க வேண்டும். தங்களுடைய பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடும் பண்பை வளர்த்தெடுக்க வேண்டும். மதிப்பெண்களை பெறுவதற்கான இயந்திரமாக மட்டுமல்லாமல், சமூக, அரசியல் பிரச்சனைகளில் ஈடுபடுவதன் மூலமாகத்தான் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் மாணவச் சங்களை கட்டியெழுப்புவதும், ஆணாதிக்க, ஆபாச நுகர்வுவெறி, சாதி – மதவெறி போன்ற பிற்போக்குகளின் கூடாரமாக இருக்கும் இந்த சமூகத்தை தலைகீழாக, புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்காக வேலைகளை முன்னெடுப்பதே முழுத் தீர்வாக அமையும் !
பத்ம சேஷாத்திரி பள்ளியின் பாலியல் வன்கொடுமை அம்பலமானதைத் தொடர்ந்து பார்ப்பனிய கும்பல் இந்துக்களின் மீதான தாக்குதல் என்று கூச்சலிடுகிறது. இலாபவெறியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும், பாலியல் சுரண்டல்கள் நடப்பதும் அவை கண்டுகொள்ளாமல் விடப்படுவதும் நடைபெறுகின்றன.
மாணவர்கள் நலனில் அக்கறையின்றி தமது கல்லூரியின் பெயரைக் காப்பாற்ற மட்டுமே முயற்சிக்கும் இத்தகைய தனியார் இலாப வெறிகொண்ட கல்வி நிறுவனங்களை தடை செய்து அரசே ஏற்று நடத்தவேண்டும்.
பாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை
ரத்து செய்! அரசுடைமையாக்கு!
மோடி அரசாங்கத்திற்கும், பெரிய தொழில்நுட்ப தளங்களுக்கும், முக்கியமாக ‘டிவிட்டர், பேஸ்புக்’ ஆகியவற்றுக்குமிடையே சமீபத்தில் போய்கொண்டிருக்கும் போராட்டத்தில் பெருமளவிலான பாசாங்குத்தனம் இருக்கிறது. சமூக ஊடகங்களின், மதிப்புயர்ந்த சக்தியை தனது உயர்வுக்கும், மோடியின் பிம்பத்தை ஊதி பெருக்கி காட்டவும் பயன்படுத்திக் கொள்வதில், மிகப்பெரிய வெற்றியை பெற்ற அரசியல்குழு ஆளும் பாஜக அரசுதான்.
தனது வெற்றிக்கான அரசியல் பிரச்சாரத்திற்கு மட்டுமல்ல, சிறுபான்மை மக்கள் மீது, அறிவுத்துறையினர் மற்றும் அரசியல்ரீதியான எதிர்கட்சிகள் மீதும் அவதூறுகளை பொழியவும், அவர்களுக்கெதிராக பொய்களை விளம்பரப்படுத்தி விரிவாக கொண்டு செல்வதற்கும், பாஜக-வின் தகவல் தொழில்நுட்பப்பிரிவு இந்த தளங்களில் தான் செயல்படுகிறது என்பதையும் மறக்க வேண்டாம்.
கடந்த ஆண்டு மோடியின் அரசு இயந்திரம் வெற்றிகரமாக செயல்பட்டது பற்றி குறிப்பாக, முகநூலிலிருந்து விவரங்கள் அளிக்கப்பட்டன. முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக கடுமையான வெறுப்பை கக்கும் பேச்சை கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் இந்தியாவின் ‘பொது கொள்கை தலைமை அலுவலகங்கள்’ வழியாக அந்த தளங்களுக்கு, பாஜக மோடியை பகைத்துக் கொள்ள வேணடாமெனவும், அந்த கட்சியின் அடியொற்றி அதன் பின்னால் செல்லுமாறும் வற்புறுத்தப்பட்டன.
அந்த தளங்களின் பதிவுகளில் எல்லை மீறி போகுமளவு வெறுப்பை தூண்டும் உள்ளடக்கத்தை சுட்டிக்காட்டி, முகநூலின் சொல்லிக் கொள்ளப்படும் ‘சமூக தரத்தின்’ முழுமையான மீறல்கள் குறித்து புகார்கள் இருந்தன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது டிவிட்டர், முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்பின் ‘என்க்ரிப்ஷன்’ (encrypted) வடிவத்திலான செய்தி பரிமாறுதல்கள், அவற்றுக்கு எதிராக மோடி அரசின் சமீபத்திய அறிக்கைகள் நியாயமாகவே, “இதெல்லாம் ஏன்?” என்ற கேள்வியை எழுப்புகிறது.
கொஞ்ச காலத்திற்கு முன்பாக, சமூக வலைத்தளங்கள் நமது ஒவ்வொருவரின் தரவுகளை ‘gazillion bytes’ அளவிற்கு சேகரித்து வைத்துக் கொண்டு, நமது பழக்க வழக்கங்கள் மற்றும் தேர்வு செய்யும் வழிமுறைகளை பணமாக்கினர். இதற்காக பெரிய தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்கு முயன்றனர்
தனது சொந்த நாட்டு குடிமக்களைக் கண்காணிக்கும் முயற்சிகள், அரசுக்கு எதிரான கருத்துகளை ஒடுக்குவது, அரசியல் எதிர்ப்பை அச்சுறுத்துவது மற்றும் ஒன்றும் அறியாத அப்பாவி பொதுமக்கள் மீது, கட்டுப்பாடற்ற செல்வாக்குப் போர்களை நடத்துவது, போன்றவற்றை எந்த மனவுறுத்தலும் இல்லாமல் தான் நரேந்திர மோடியின் கீழ் உள்ள இந்திய அரசாங்கம் அமல்படுத்துகிறது.
“புதிய டிஜிட்டல் ஊடக விதிகள் அமலாக்கம்” என்ற பேரில் இந்திய அரசின் ஒரு கட்சிக்கு ஆதரவான செயல்பாடுகளை உணர்ந்து அதனால் தூண்டப்பட்ட சமூக ஊடக தளங்கள் இப்போது மோடி அரசின் மீது குறை சொல்ல ஆரம்பித்துள்ளன. பாஜக பிரச்சாரகரது, ‘காங்கிரசுக்கு ‘எதிரானது’ என்று சொல்லப்பட்ட’ டுவிட்டுகளை ‘புனையப்பட்ட பொய் தகவல்கள்’ என்ற முத்திரை குத்தியதினால் எரிச்சலூட்டப்பட்ட மோடி அரசு பதில் நடவடிக்கையாக டுவிட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
வாட்ஸ்-அப் “புதிய விதிகள் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, தனிமனித பயன்பாட்டாளர் உரிமையை அவமதிப்பது” என்ற முறையீடுகளை முன்வைத்து நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது..
இந்த புதிய விதிகள் “ஒரு உள்ளூர் அதிகாரியை குறைதீர்க்கும் நடைமுறைகளை மேற்பார்வையிட பணிக்கு அமர்த்த வேண்டும். சட்டப்படியான ஆணை கிடைத்தவுடன் 36 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட உள்ளடகத்தை நீக்கி விட வேண்டும்” என்றெல்லாம் வற்புறுத்துகின்றன. அதோடு “இதற்கெல்லாம் ஒத்துவராத ‘இடைநிலை செயற்பாட்டாளர்கள்’ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற மிரட்டலும் சேர்ந்துள்ளது. இதனுடைய அர்த்தம, அவர்களின் தளத்தில் பயனாளிகளால் பதியப்படும் பொய்யான, வெறுப்பூட்டும் கருத்துகளுக்கு சட்டரீதியாகவே பொறுப்பேற்க வேண்டும், அவர்கள் அடையாளம் காணப்பட்டாலும் அல்லது அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செய்தாலும்.
உள்ளே மற்றும் தன்னளவில், பெருகிவரும் ஆட்சேபிக்கதக்க உள்ளடக்கத்திற்கான குற்றத்தின் ஒரு பகுதியை கொண்டு செல்ல ஒரு மேடை தேவைப்படுவது சர்ச்சைக்குரியதல்ல. தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் அரசியலின் அனைத்து பகுதிகளையும், அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் கல்வியாளர்களும் மற்றும் பயிற்சியாளர்களும், பல ஆண்டுகளாக ஒரு மேம்படுத்தப்பட்ட கண்டறிதல் வழிமுறைகளுக்காக வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மனித உள்ளடக்க மதிப்பீட்டாளர்கள் மற்றும் மிக வலுவான செயற்கை நுண்ணறிவு / யந்திரவகை கண்டறிதல் திறன்கள் கற்றலின் அதிகரிப்பு ஆகியவை, ஆட்சேபிக்கதக்க உள்ளடக்கம் அதிகமானவுடன் அவற்றை எடுத்து போட்டுவிடும் மற்றும் யார் அவற்றை பதிகிறார்களோ அவர்களை நிறுத்திவிடும்.
இந்த உரையாடல் வேறுபட்ட ஒன்று.
தவறான காலம் :
அரசின் ஆக்கிரமிக்கும் குணம் வந்த நேரம் மோசமானதாக இருக்க முடியாது. நமக்கு ஞாபகமிருக்கும், கடந்த ஜனவரி 6 அன்று, அதிபர் பைடன் தேர்தல் வெற்றியை ஆட்சேபித்து, அமெரிக்க தலைநகரை முற்றுகையிட்டு, கலகம் செய்ததற்காக, முன்னால் அமெரிக்க அதிபர் டொனாலட் டரம்ப் கணக்கை, தனது தளத்திலிருந்து நீக்கம் செய்தது, இதே டுவிட்டர்தான். சி.பி.ஐ மற்றும் டெல்லி போலீசு காலியான இருட்டாக இருந்த டெல்லி அலுவலகங்களில் திடீர் தாக்குதலாக போய் இறங்கியதன் மூலம் டுவிட்டரை எதிர்கொள்ள இந்திய அரசு முடிவு எடுத்த போதுதான் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தடுப்பூசிகளுக்காக பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டனை அடைந்திருந்தார். அதேசமயம், கோவிடால் பாதிக்கப்பட்ட இந்திய மக்கள், பைடனின் அமெரிக்காவில், தேவையில்லாத தலைப்பு செய்திகளை கொண்டு வந்தார்கள்.
கலந்துரையாடலின் ஒருபகுதியாக இந்தியாவில் அதிகரித்து வரும் “மதவெறி வன்முறை மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு கவலையளிப்பதாக இருப்பது பற்றிய” கேள்விகளை அமைச்சர் கேட்க வேண்டியிருந்தது.
”ஐரோப்பிய யூனியனின் உலகளாவிய தரவுகள் பாதுகாப்பு பகுதி”-யின் பால்நின்று கொண்டு எல்லா முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களும் -தனிப்பட்ட பயனாளர்களின் ஏராளமான தரவுகளை தொகுத்து வைத்திருந்தாலும் -உள்ளூர இருக்கும் ஆபத்துகளை எதிர்கொண்டு பயனாளர்களின் ரகசிய உரிமையை பாதுகாப்பதில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.-நிதி சம்பந்தமான தரவுகள் கசிவது குழந்தை கடத்தல் மற்றும் அரசின் கண்காணிப்பு ஆகியவை அவற்றில் அதிகம்.
டுவிட்டர் தனது அலுவலகங்களில் நடத்தப்பட்ட தேடுதல் சம்பந்தமாக “கருத்தை வெளிப்படுத்தும் உரிமைக்கு, உள்ளூர இருக்கும் பயமுறுத்தல் பற்றிய தனது கவலையை வெளிப்படுத்தியதன் மூலமும், தேவைக்கேற்றப்படி “புனையப்பட்ட பொதுத்தகவல்” “சரிபார்க்கப்படாத” அல்லது “அபாயகரமான உள்ளடக்கம்” ஆகியவற்றை எடுத்து விடுவதற்கான உறுதிமொழி மூலமும்” பதிலளித்ததில் வியப்பொன்றுமில்லை.
இந்த நாடகம் தன்னை வெளிபடுத்திக் கொண்ட போது, ‘நமது எல்லா தரவுகளையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும்’ கூகுளின் தலைவர் சுந்தர் பிச்சை ஒவ்வொருவரையும் காப்பாற்றும் பொருட்டு வந்தார். இண்டர்நெட் சுதந்திரம் ‘நிறுவப்பட்டதன்’ தன்மையை, அடிகோடிட்டு, அவர் சொன்னது” கூகுள் எப்போதும் போல ‘உறுதியாக ஆக்கப்பூர்வமாக’ அரசுடன் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளது” என்றார். ஆனால், ‘நிறுவனம் வெளிப்படைத் தன்மையின் அவசியத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறினார்.
“மேலும், இதனுடைய வெளிப்படைத் தன்மையான அறிக்கைகளில், அரசின் வேண்டுதல்களோடு இது இணக்கமாக போகும், எந்த சந்தர்ப்பத்தையும் முன்னிலைபடுத்த, ஒரு தொழில்நுட்பதளம் இந்தியாவின் பல்வேறு வேண்டுதல்களை இப்படிப்பட்ட வெளிப்படையான அறிக்கைகளாக வெளியிட்டால், இந்திய அரசு, உலகளாவிய அளவில் எப்படி பார்க்கபடும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் !” என்றார்.
ஒருவேளை உலகளவில் மறைந்திருக்கும், மிக மோசமான பத்திரிக்கைகளின் முகத்தில், இந்த கேள்வி சொந்த நாட்டிலும் தாக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தகவல் தொழில்நுட்ப அமைச்சர், சமாதானமான தொனியை எடுத்துக் கொண்டார். “புதிய விதிகளுடன் இணக்கமில்லாமல் டுவிட்டர் நிறுவனம் இந்தியாவின் நீதித்துறையை குறைவாக மதிப்பிட்டுள்ளது” மற்றும் “பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக அது கூறியிருப்பது அடிப்படையில்லாதது தவறானது மற்றும் இந்தியாவை பற்றி அவதூறு செய்யும் முயற்சி” என்று தெரிவித்தார் அல்லது ‘நீதித்துறை வேண்டுதலின்படி பயனாளர்களின் தகவல்களை 36 மணி நேரத்துக்குள் தர வேண்டுமென அறிவுறுத்தலுக்கு வாட்ஸ்-அப் இணக்கமாகியது’ குறித்து வற்புறுத்திய போது பிரசாத் குரலில் நுணுக்கமான மாற்றத்தை கொண்டு வர வேண்டியிருந்தது அதாவது “தான் சாதாரண பயனாளர்களுக்கு என்க்ரிப்ஷன் (Encrypted) நீக்கச் சொல்லி அறிவுறுத்தவில்லை” என்று விளக்கம் கொடுத்து தனது வாதத்தை தானே மாற்றினார். (அது யாராக இருந்தாலும்)
தவறாகி போனது திட்டம்
அது எப்படி இருந்த போதும் அரசு தன்னை தானே ஒரு மூலையில் ஆதரிப்பதாக தெரிகிறது. ஆனால், தன் மீதான விமர்சனங்களை ஆன்லைனில் பொடிபொடியாக்க முயற்சிக்கும் போது ஒரு பெரிய நிறுவனத்தை எதிர்கொண்டது “பாஜக மெல்லுவதை விட அதிகமாக கடித்திருக்கலாம்”. பாஜக-வின் அரசியல் முத்திரை என்பது ஆன்லைன் இருப்பு மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்திக் கொள்வது மற்றும் துஷ்பிரயோகம் செய்வது ஆகியவற்றுடன் உள்ளார்ந்த முறையில் இயற்கையாக தொடர்புடையது. பிரதமர் நரேந்திர மோடி தனது பார்வையாளர்களான 70 மில்லியன் (ஏழு கோடி) பின்தொடர்பவர்களை இழக்க விரும்புவாரா? தனது சொந்த வாட்ஸ்-அப் பல்கலை வழியாக இவர்களின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ‘தவறான வழியில் செலுத்துவதற்காகவே‘ செய்திகளை எவ்வாறு பரப்பும்?
பிரதமர் மோடியின் செயல்முறை எப்போதுமே சமூக தளங்களை ‘திருப்பம் ஏற்படுத்தும் தனது விளக்கங்களை உருவமைக்க பயன்படுத்துவது’ என்பதுதான். ஆனால், சமீப-கடந்த காலங்களில் சில சந்தர்ப்பங்கள் இருந்தன. உதாரணத்திற்கு கடந்த ஆண்டு தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் இந்த ஆண்டு கோவிட்-19 இரண்டாவது அலையை எதிர்கொண்ட மோசமான தயாரிப்புகள் மற்றும் குளறுபடியான நிர்வாக குற்றங்கள். அதே சமூக தளங்கள் திரும்ப வந்து மோடி பாஜக அரசை மிகக் கடுமையாக கடித்து குதறின. பிரதமர் மோடி தனது தலைமைக்கான மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டிருந்த நேரத்தில் பெரிய தொழில்நுட்ப சமூக ஊடகங்கள் அதோடு ஆன்லைன் செய்தி ஊடகங்கள் ஆகியவற்றை கட்டுபடுத்தும் புதிய விதிகளை பற்றிய விவாதம் எல்லாம் ஒரு சேர வந்தன.
நமது பிரதமரின் இமேஜில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதும் அவரது தலைப்பு செய்தி மேலாளர்கள் எல்லாம் சுனாமி போன்று அடித்து வரும் வெளிநாட்டு மற்றும் இந்திய கெட்ட ஊடகங்களை சமாளிப்பதே பெரும் போராட்டமாகிவிட்டது என்பதும் ஊரறிந்த ரகசியமாகிவிட்டது. அதற்கான பதில் என்ற வகையில் மோடி அரசு தன்னை தாக்கியதில் மிக கடினமானதாகிய ‘பேச்சு சுதந்திரம்’ என்ற ஆயுதத்தின் பின்னால் சென்றது. சமூக ஊடகங்கள் மட்டுமல்ல சுயாதீன உள்நாட்டு டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் அந்த வரிசையில் இருந்தன.
அதனால் முக்கியமான அமெரிக்க சமூக ஊடக நிறுவனங்களுடன் குறைந்த அளவு வெடிபொருளுடன் சண்டையில் ஈடுபட்டாலும் “ஆன்லைன் செய்தி உள்ளடக்கத்தை அதன் வெளியீட்டாளரின் அனுமதியின்றி அகற்றக் கூடிய எல்லையற்ற அதிகாரத்தை அரசுக்கு தரும்” புதிய அத்துமீறும் ஊடக விதிகளுக்கு உள்நாட்டு டிஜிட்டல் செய்தி ஊடகங்களிடமிருந்து இணக்கத்தை எதிர்பார்ப்பதாக ‘யாரை பயமுறுத்தி பணிய செய்துவிட முடியும்’ என்று அது நினைத்ததோ அவர்களுக்கு இந்த வாரம் ஒரு பொது அறிவிப்பு வழங்கி தனது கோபத்தை அவர்கள் மீது திருப்பியது.
சட்ட வல்லுநர்கள் ஒரே குரலில் சொல்வதெல்லாம் இத்தகைய ஆன்லைன் டிஜிட்டல் ஊடக புதியவிதிகள் “இந்தியாவின் பேச்சு சுதந்திர சட்ட விஞ்ஞானத்தின் தலையில் குட்டு வைத்துள்ளது” என்பதைதான். “டிஜிட்டல் ஊடகங்களின் அமைப்பு” ‘இந்த விதிகள் அரசியலமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இரண்டையும் மீறுவதாக’ நீதிமன்றத்தில் சட்டரீதியாக ஆட்சேபித்து வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கெல்லாம் தாய் விதி இதுதான். இதன் கீழிருந்த இந்த விதிகள்தான் சமூக தளங்கள் OTTs மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்களுக்கென தனியாக கொண்டுவரப்பட்டன.
“டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்களின் சங்கம்” (இந்தியா டுடே மலையாளம் மனோரமா டைம்ஸ் ஆப் இந்தியா டைனிக் பாஸ்கர் மற்றும் NDTV ஆகியவற்றை உள்ளடக்கியது) தகவல் ஒளிபரப்பு அமைச்சருக்கு முறையீடு செய்துள்ளனர். “இப்போது இருக்கின்ற சட்டபூர்வமான மற்றும் சுயஒழுங்கமைப்பு அமைப்புகள் பிரஸ் கவுன்சில் தேசிய ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம் ஆகியவை இருக்கும் போது இத்தகைய புதிய விதிகள் தேவையில்லை” என சுட்டிக்காட்டியுள்ளனர். ‘டிஜிட்டல் செய்தி நிறுவனங்களால் தொடுக்கப்பட்ட இந்த நாட்டின் உயர்நீதிமன்றங்களில் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்க்க் கூடிய வழக்குகளையும்’ அமைச்சருக்கு நினைவுபடுத்தினர். புதிய விதிகளை அமல்படுத்த முயற்சிக்கும் முன் இந்த வழக்குகளின் முடிவுக்காக காத்திருக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
புதிய டிஜிட்டல் விதிகளை ஆட்சேபித்து ‘சட்ட மற்றும் அரசியலமைப்பு ரீதியான வழக்குகள்’ கேரளா மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. கேரள உயர்நீதிமன்றம் மனுதாரரை (லைவ் லா) குறிவைத்து நிர்ப்பந்தம் கொடுக்கக்கூடிய எந்தவித நடவடிக்கைக்கும் எதிராக எச்சரித்துள்ளது. தி க்யுன்ட் திவயர் மற்றும் நியூஸ் மினிட் (The Quint, The Wire and The News Minute) ஆகியவை இரண்டு தனிதனியான சட்ட ஆட்சேபங்களை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. இப்படிப்பட்ட தகவல்கள் மோடி அரசின் காதுகளுக்குள் நுழையாமல் போனதற்கு நமது மோடி அரசாங்கம் பெரிய தொழில்நுட்ப மற்றும் உள்நாட்டு செய்தி டிஜிட்டல் ஊடகங்களுடன் மோதல் பாதையை தேர்ந்தெடுத்திருப்பதையே காட்டுகிறது.
உண்மையில் மோடி அரசின் மௌனம் அதன் அகம்பாவத்தின் அடையாளம் தான். நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் சட்டமுறையீடுகளை குறித்த கடிதத்திற்கு அவர்கள் எந்த மறுமொழியும் கொடுக்காதது மட்டுமல்ல ‘அத்துமீறும் டிஜிட்டல் ஊடக விதிகளை பதினைந்து நாட்களுக்குள் அமல்படுத்த போவதாக’ குறிப்பிட்டு ஒரு அடி முன்னால் சென்றுள்ளது. “பயமுறுத்தி பணியவைப்பது கட்டாயப்படுத்துவது” போன்ற வழிமுறைகள் மோடி அரசின் இமேஜ் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைக்க உதவும் என்று அனுமானித்துள்ளதையே இது காட்டுகிறது.
இது பலன்கள் குறிப்பிடுவது. இந்த விதிகளினால் பாதிக்கப்படபோவோரிடம் குறைந்த பட்சம் ஆலோசனைக் கூட செய்யாமல் கடந்த காலத்தில் எந்த அரசும் இந்தளவு ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக தெரியவில்லை. அப்புறம் எப்படி இந்த அரசு பேச்சு சுதந்திரம் அல்லது ஜனநாயக ரீதியாக செயல்படுவது ஆகியவற்றின் உறுதிப்பாட்டிற்கு கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் உரிமை கொண்டாட முடியும்?. மிக நீண்ட வரிசையில் இருக்கும் கேள்விகள் புதிய டிஜிட்டல் விதிகளை கட்டாயமாக திணிக்க முயற்சிப்பதால் மோடி அரசால் பதிலளிக்க முடியாது இந்த ஒன்றுக்கு பதலளிக்க திறனில்லாதது தான் மிக அதிகமாக சொல்லிக் கொண்டிருக்கும்.
கட்டுரையாளர் : M.K.வேணு, மாயா மிர்ச்சந்தானி தமிழாக்கம் : மணிவேல்
செய்தி ஆதாரம் : The Wire
PSBB ராஜகோபாலன் வரிசையில் இன்னொரு பொறுக்கி,
நெல்லை அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி !
நீதிமான்களை உருவாக்குவதாக சொல்லிக் கொள்ளும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி பொறுக்கிகளை தான் உருவாக்குகிறதா? திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் தற்காலிக உதவி பேராசிரியராக ராஜேஷ் பாரதி என்னும் பாலியல் பொறுக்கியின் வரலாறு தற்போது அம்பலமாகியிருக்கிறது.
அக்கல்லூரியில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த ஒரு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு ‘தலைமறைவாக’ உள்ள குற்றவாளி ராஜேஷ் பாரதியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மாணவர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி நிறுவனங்களை பார்ப்பன மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில், அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின் கீழ் டாக்டர் சந்தோஷ் குமார் என்ற தீவிர இந்துத்துவ வலதுசாரி சிந்தனை கொண்ட நபர் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் இயக்குனராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்.
அவ்வாறு திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய பொழுது அங்கு ஒப்பந்த உதவி பேராசிரியராக சுரேஷ் மாணிக்கம் என்பவர் பணிபுரிந்தார். சுரேஷ் மாணிக்கம், ராஜேஷ் பாரதியின் உடன்பிறந்த அண்ணன். (இவர் பின்னாட்களில் ஒரு மாணவியிடம் தவறான பாலியல் தன்மை கொண்ட குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவரது மனைவியால் குற்றஞ்சாட்டப்பட்டு உதவி பேராசிரியர் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்)
சந்தோஷ் குமார் பல்கலைக்கழக இயக்குனராக பதவி உயர்வு பெற்ற பின் சுரேஷ் மாணிக்கத்தின் வேண்டுகோளின் பெயரில் ராஜேஷ் பாரதி ஒப்பந்த உதவிப் பேராசிரியராக பல்கலைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். பல்கலைக் கழகத்தின் ஒப்பந்த உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட அடிப்படைத் தகுதியாக நெட், ஸ்லெட் போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், ராஜேஷ் பாரதி மேற்படி எழுதிய தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாமல் இயக்குனர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் உதவியினால் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுகிறார். மேற்படி எவ்வித அடிப்படை தகுதிகளையும் பெறாமல் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சட்டக் கல்லூரியில் உதவி பேராசிரியராக ராஜேஷ் பாரதி செயல்பட்டு வருகிறார்.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பான முறையில் வழக்கறிஞராக செயல்பட்டு வரும் பல்வேறு திறமைமிக்க நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் உதவி பேராசிரியர்களாக செயல்பட்டு வந்தனர். ஆனால், அனைவரும் வயது முதிர்வு என்ற பொய்யான காரணத்தினை கூறி பணியிலிருந்து நிறுத்தப்பட்டனர். ஆனால், எவ்வித சிறப்பு திறமைகளுமற்ற ராஜேஷ் பாரதி தொடர்ந்து உதவிப் பேராசிரியராக இருந்து வருவது வியக்கத்தக்க விஷயம் ஆகும்.
சட்டம் கற்பிக்கும் பேராசிரியர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை திறன்களான அரசமைப்புச் சட்டம் பற்றிய அறிவு, குறிப்பிட்ட சட்டப்பிரிவை விளக்குதல் மற்றும் சட்டப்பிரிவு தொடர்பாக உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்கள் கொடுத்திருக்கும் பொருள் விளக்கங்களை மாணவர்களிடையே விளக்குதல், தொடர்ச்சியான சலிப்பற்ற வாசிப்பு ஆகியவை இன்றியமையாததாகும். இத்தகைய திறன்கள் எதையும் கொண்டிராத ராஜேஷ் பாரதி வகுப்புக்கு சினிமா நடிகர்கள் போல உடை அணிந்து புத்தகத்தை அப்படியே மாணவர்களிடம் வாசித்து விட்டு வருகின்ற பழக்கத்தை கொண்டு இருந்திருக்கிறார். மாணவர்கள் கேட்கும் எவ்வித கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் “நானும் ரவுடிதான்” என்று மிரட்டி வந்திருக்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் பாரதி தனது தலைமையில் கோனார், தேவர் சாதி மாணவர்களை ஒன்றிணைத்து அப்போதைய கல்லூரி முதல்வராக இருந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு வீரவாள் ஒன்றை பரிசளித்தார். அதுமட்டுமல்லாமல் மாணவர்களிடையே பாடம் கற்பிக்கும் போது தனது சாதி பெருமையை கூறி “நாங்கள் எல்லாம் சைவ உணவு சாப்பிடுபவர்கள், மாட்டுக்கறி போன்ற மாமிச உணவுகளை சாப்பிட மாட்டோம் ஒருவன் உண்மையான இந்தியன் என்றால் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது” என்றெல்லாம் பாசிச விஷமக் கருத்துக்களை மாணவர்களிடையே பரப்பி வந்திருக்கிறான்.
உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி
திருநெல்வேலி தமிழ்நாட்டில் சாதி ரீதியான மோதல்கள் அதிகமாக நடைபெறும் மாவட்டம். திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். சாதிய விழுமியங்களை தீவிரமாக கடைபிடித்து வரும் கிராமங்களில் இருந்து வரும் இத்தகைய மாணவர்கள் பெரும்பாலும் சாதிய சிந்தனை கொண்டவர்களாவர். சாதிய பிற்போக்கு சிந்தனையுடைய இம்மாணவர்கள் இடையே நவீன ஜனநாயக விழுமியங்களை கொண்ட கல்வியை புகுத்தி அவர்களை சமத்துவ சிந்தனை உடையவர்களாக மாற்றுவது சட்டக் கல்லூரி பேராசிரியர்களின் முக்கிய கடமையாகும்.
மாறாக இத்தகைய சிந்தனை கொண்ட மாணவர்களை அவர்களின் சாதியின் அடிப்படையில் குழுக்களாக பிரித்து, சாதிய உணர்வை புகுத்தி அவர்களை மற்ற சமூக மாணவர்களிடம் மோத விடுவது என்பதன் அடிப்படையில் ராஜேஷ் பாரதி தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார்.
ராஜேஷ் பாரதி யாதவ சமூகத்தைச் சேர்ந்தவன். முதலில் யாதவ சாதி மாணவர்களை மட்டுமே தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ராஜேஷ் பாரதி பின்னாட்களில் தேவர், நாடார் போன்ற ஆதிக்க சாதி மாணவர்களை தலித் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை மாணவர்களுக்கு எதிராக ஒருங்கிணைத்து வந்துள்ளான்.
ராஜேஷ் பாரதியின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கூறும்போது, “ராஜேஷ் பாரதி குறிப்பாக கோனார், தேவர் ஜாதி மாணவர்களிடம் உங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்து தருகிறேன் எஸ்.சி பசங்க கூட சேர்ந்து சுற்றாதீங்க, நம்ம பசங்களாக இருங்க” என்று கூறி அவரின் கட்டுப்பாட்டில் முதலில் கொண்டு வருவான். பின்னர் மாணவர்களை எப்பொழுதும் தனது அடியாட்கள் போல வைத்துக் கொண்டிருந்தான். அவனுடன் சுற்றித்திரியும் மாணவர்கள் அனைவரும் சாதிவெறி சிந்தனை கொண்டவர்கள்” எனக் குறிப்பிட்டார்.
ராஜேஷ் பாரதி தனது கருத்துக்களுக்கும் தனது செயல்பாடுகளுக்கும் எதிரான மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் பல்வேறு வழிகளில் தொந்தரவு செய்து வந்திருக்கின்றான். குறிப்பாக தலித் மாணவர்களை “இந்த எஸ்.சி பசங்களை இப்படித்தான் சார் எப்ப பார்த்தாலும் ஏதாவது பிரச்சனை பண்ணிட்டு தான் இருப்பாங்க” என்று கல்லூரி முதல்வரிடமும் சக ஆசிரியர்களிடமும் தொடர்ந்து சித்தரித்து வந்துள்ளான்.
கடந்த 2017-ஆம் ஆண்டு கல்லூரி நிர்வாகத்தால் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. மாணவிகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் எனும் பெயரில் மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் உதவிப் பேராசிரியர்கள் சுரேஷ் மாணிக்கம், காளிராஜ், மற்றும் ராஜேஷ் பாரதி ஆகியோர் ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற திரைப் படப் பாடலுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் முன்னிலையில் அருவருப்பான முறையில் குத்தாட்டம் போட்டுள்ளனர். இதனை அறிந்த மாணவர்கள், பேராசிரியர்கள் மது அருந்திவிட்டு இத்தகைய ஆபாச நடனம் ஆடியதை கண்டித்து நடன வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
அதுமட்டுமன்றி இறுதி ஆண்டு மாணவர்கள் நிகழ்ச்சி தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி முதல்வரிடம் முறையிட்டனர். மாணவர்களின் புகாரால் கோபமுற்ற ராஜேஷ் பாரதி உள்ளிட்ட ஆசிரியர்கள் புகார் அளிப்பதற்கு சென்ற குறிப்பிட்ட மாணவரை தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் பொழுது முறைகேடான முறையில் தேர்வு எழுதுவதாக கூறி அவரை வலுக்கட்டாயமாக தேர்வு அறையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். ராஜேஷ் பாரதியின் இத்தகைய அயோக்கியத்தனங்கள் குறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ராஜேஷ் பாரதியின் இத்தகைய அயோக்கியத்தனங்களை அங்கு பணிபுரிந்த சக ஆசிரியர்களான ஜெனிபர், காளிதாஸ், சுரேஷ் மாணிக்கம், சண்முகப்பிரியா, ஜீவரத்தினம், நாராயணி ஆகியோரின் உதவியுடன் செய்து வருகிறான் என்று மாணவர்கள் சொல்கின்றனர்.
கல்லூரியின் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, கல்லூரி நிர்வாகத்தின் கண்டுகொள்ளப்படாத தன்மை மற்றும் பல்கலைக்கழக இயக்குனர் வரை கொண்டிருந்த செல்வாக்கு காரணமாக இவன் மென்மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் தன்னை ஒரு ரவுடியாக நிலைநிறுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்தன.
அதேப்போல் ராஜேஷ் பாரதி தனது பிறந்தநாளை கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களின் முன்னிலையில் வாளால் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வானது மாணவர்களின் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்நிகழ்வு குறித்து பாளையங்கோட்டை போலீசு நிலையத்தில் மாணவர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி
சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கல்லூரி முதல்வர் திருமதி லதா அவர்களிடம் விசாரணை செய்தபோது, “ராஜேஷ் பாரதி மாணவர்களுக்கு வாள் வீச்சு பயிற்சி கொடுத்து வருகிறார். அவ்வாறு பயிற்சி அளிப்பதை சிலர் தவறாக சித்தரித்து புகார் அளித்துள்ளனர். அவர் ஒரு நல்ல ஆசிரியர்” என நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். இதர ஆசிரியர்களும் கல்லூரி ஊழியர்களும் ராஜேஷ் பாரதி வாள் வீச்சு பயிற்சியை மாணவர்களுக்கு கொடுத்து வருகிறார் என்று அப்பட்டமாக பொய் கூறினர். போலீசு துறையோ, கல்லூரி நிர்வாகமோ அவன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இச்சம்பவம் பற்றி மாணவர்களிடம் கருத்து கேட்டப்போது, ராஜேஷ் பாரதி சாதிரீதியாக அணித்திரட்டி வைத்துள்ள மாணவர்களை அழைத்து கல்லூரியின் வளாகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாதக்கணக்கில் கல்லூரிக்கு வராத முதல்வருக்கு எப்படி அவர் வாள்வீச்சு பயிற்சி கொடுத்தது தெரியும்? ஒட்டுமொத்த கல்லூரி நிர்வாகமும் அவருக்கு சப்போர்ட் செய்யும் பொழுது நாங்கள் என்ன செய்ய முடியும் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.
ராஜேஷ் பாரதி மாணவியிடம் செய்த பொறுக்கித்தனம் :
Covid-19 தொற்றுநோய் காரணமாக தினசரி வகுப்புகள் நடைபெறாத காரணத்தால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு ராஜேஷ் பாரதி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.
பின்னர் எப்படியோ அம்மாணவியின் செல்போன் எண்ணை தெரிந்துக் கொண்ட ராஜேஷ் பாரதி கடந்த 2020 மே மாதம் முதல் மாணவிக்கு போன் செய்து, “என்ன சந்தேகம் உதவி என்றாலும் நான் செய்து தருகிறேன்” எனத் தந்திரமாகப் பேசி இருக்கிறான். பின்னர் அடிக்கடி அம்மாணவிக்கு போன் செய்து நன்றாக படிக்குமாறும் கல்லூரியில் ஏதாவது உதவி வேண்டுமானாலும் தான் செய்து தருவதாகவும் கூறி வந்துள்ளான். அம்மாணவியும் ஆசிரியர் என்ற முறையில் இயல்பாகப் பேசியிருக்கிறார்.
இவ்வாறு இருக்கையில் கடந்த 2020 மே 31 அன்று அம்மாணவி தனது கல்லூரி சேர்க்கையை புதுப்பிப்பதற்காக கல்லூரிக்கு சென்றிருக்கிறார். கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கையை புதுப்பித்து விட்டு பேருந்து நிலையம் செல்ல பேருந்துக்காக நின்று இருக்கிறார். வக்கிரமான திட்டத்துடன் காரில் வந்த ராஜேஷ் பாரதி தான் மாணவியின் ஊருக்கு செல்வதாகவும் தன்னுடன் வருமாறும் வீட்டில் விட்டு விடுவதாகவும் கூறி காரில் அழைத்துச் சென்றிருக்கிறான்.
செல்லும் வழியில் இடையே காரை நிறுத்தி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து, அதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கிறான். மயக்கநிலை தெளிந்து தனக்கு ஏற்பட்ட வன்கொடுமை தொடர்பாக கதறி அழுத மாணவியிடம் “நடந்த சம்பவத்தை கல்லூரியில் சொன்னால் உன்னை டிஸ்மிஸ் செய்து விடுவார்கள். எனக்கு மேலிடம் வரை செல்வாக்கு இருக்கிறது” என்று கூறி மிரட்டியுள்ளான்.
This slideshow requires JavaScript.
பின்னர், தொடர்ந்து மாணவிக்கு அடிக்கடி போன் செய்து “தான் சொல்வதைக் கேட்காவிட்டால் உன்னுடன் எடுத்த வீடியோவை வெளியில் பரப்பி விடுவேன்” என மிரட்டி தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு கூறி கொடுமைப்படுத்தி வந்துள்ளான். இதனால், தற்கொலை செய்யுமளவுக்கு மனரீதியாக பாதிக்கப்பட்ட அம்மாணவி கடந்த 2021 மே 12 அன்று நெல்லை போலீசு ஆணையரை நேரடியாக சந்தித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் உத்தரவிட்டதன் அடிப்படையில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசு நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 376(2)f, 506(1) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் திட்டமிட்ட முறையில் கூடுதலாக தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67, 67A ஆகிய பிரிவுகளை சேர்த்து வழக்குப்பதிவு செய்யாமல் தவிர்த்து இருக்கின்றனர்.
ராஜேஷ் பாரதியின் தந்தை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் என்பதாலும் சாதிரீதியான செல்வாக்கு மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு ஆகிய காரணத்தினால் அவன் இன்று வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவில்லை. அவனை போலீசார் கைது செய்து அவனது செல்போன் லேப்டாப் போன்றவற்றை ஆய்வு செய்தால் மேலும் பல பாலியல் வன்முறை நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்பு உள்ளதாக மாணவர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
ராஜேஷ் பாரதி போன்ற பொறுக்கிகள் உருவாவதற்கான அடிப்படை எது?
கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், ஜனநாயக சிந்தனை கொண்ட, மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. டெல்லி JNU பல்கலைக்கழகத்தை சேர்ந்த கண்ணையா குமார், உமர் காலித், பட்டாச்சாரிய போன்ற முக்கியமான செயல்பாட்டாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிந்து கைது செய்தது.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவரான ரோஹித் வெமுலா எனும் தலித் சமூகத்தைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவர், பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, கல்வி உதவி தொகை உட்பட அனைத்து உதவிகளையும் நிறுத்தி, விடுதியை விட்டு விரட்டியடிக்கப்பட்டு படுகொலை செய்தது போன்ற நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன.
இது மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் துணைவேந்தர், இயக்குனர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி-யினர் தமது தத்துவ சார்புடையவர்கள் மற்றும் சாதிய மதவாத சிந்தனை கொண்டவர்களையும் பணியமர்த்தி வருகின்றனர். டெல்லி JNU பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் போன்ற முன்னணி மத்திய பல்கலைக் கழகங்களில் மட்டுமன்றி மாநில அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். இத்தகைய சதியை செய்து வருகிறது.
பல்கலைக் கழகங்களுக்கு உரிய அறிவார்ந்த சிந்தனை மரபை அழித்து அவ்விடத்தில் அதன் கட்டமைப்பு முழுவதையும் பார்ப்பனியமயமாக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றது. மாணவர்களை அச்சுறுத்தி முடக்குவதோடு, அவர்களை சாதிய ரீதியாக பிளவுறச் செய்யும் வேலையை செய்கிறது பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
மாணவர்களை சங்கமாகச் சேர விடாமல் தடுக்கும் பணியைச் செய்கிறது !!
சென்னை PSBB பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புகார்களை உடனடியாக விசாரித்து ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்தது போல போலீசுத்துறை ராஜேஷ் பாரதியையும் உடனடியாக கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவன் செய்த அத்தனை கிரிமினல்தனங்களுக்கும் பாதுகாப்பு கொடுத்த கல்லூரி நிர்வாகத்தை விசாரித்து தக்க நடவடிக்கை வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் ஆகும்.
மேலும், மாணவர்கள் சாதிரீதியாக குழுக்களாக பிரித்து மோதிக்கொள்ள வைப்பது, அதற்கு இத்தகைய பொறுக்கி பேராசிரியர்கள் தூபம் போட்டு தன்னுடைய அடியாட்படையாக வைத்துக் கொள்வதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மாற்றங்களை கொண்டுவர போராடுவது ஒவ்வொரு மாணவன், பேராசிரியர், சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.
ராஜேஷ் பாரதியால் பாதிக்கப்பட்ட பெண் “பார்ப்பன” சமூகமாக இருந்தாலும் அதிகார வர்க்கம், பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் ராஜேஷ் பாரதி போன்ற செல்வாக்கு படைத்த (PSBB நிர்வாகத்தைப் போன்ற), பணம், அதிகார திமிர்பிடித்தவர்கள் பக்கம் தான் நிற்பார்கள். ஆகவே, மாணவர்களே சாதி – மதவெறி, சமூக விரோத அமைப்புகளை விட்டு வெளியேறி, மாணவர்கள் வர்க்கமாக ஒருங்கிணைந்து, பாதிப்புக்குள்ளான சகமாணவிக்கு உறுதுணையாக நில்லுங்கள்.
அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் புரட்சிகர மாணவர் சங்கங்களை தொடங்குவதும், மாணவர்கள் வர்க்கமாக ஒருங்கிணைந்து போராடுவதுமே இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும்.
தகவல் சேகரிப்பு : புகழேந்தி, நெல்லை. (நெல்லை அரசு சட்டக் கல்லூரி மாணவர்களிடம் சேகரித்த தகவலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது)
இதுதொடர்பாக நியூஸ் 18 செய்தி சேனலில் வந்த காணொலி :
கொரோனா காலத்தில் இராணுவ அதிகாரிகள் மாஸ்க் அணியாமல் கொண்டாடினால், அதற்குப் பெயர் பூரிப்பாம் !! மக்கள் வாழ்வாதாரத் தேவைக்கு மாஸ்க் போட்டு மார்க்கெட் சென்றால் அது சுற்றித் திரிவதாம் !! இதுதான் தினகரன் பத்திரிகையின் ஊடக அறம் !!
அதிகார வர்க்கத்திற்கு ஒரு நீதி ! மக்களுக்கு ஒரு நீதி ! இதுதான் ஊடக அறம் !!