கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள். சாதாரண நாட்களிலேயே போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள் கொரோனா தொற்று காலகட்டத்திலும் அதே நிலையில்தான் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இது குறித்து சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் சீனிவாசலுவிடம் தொலைபேசி வழியாக வினவு செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு சீரிய விளக்கமளித்தார்.
***
தமிழகத்திலேயே கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் சென்னையில், துப்புரவு பணியாளர்களின் நிலைமை எப்படி இருக்கிறது ?
கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர்.

சென்னையில் பதினைந்து மண்டலங்களில் மட்டும் 6,401 பேர் நிரந்தர தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிகின்றனர். இது போக ஒப்பந்தப் பணியாளர்கள், என்.யு.எல்.எம் தொழிலாளர்கள், டி.பி.சி மற்றும் ராம்கி ஒப்பந்த தொழிலாளர்கள், தற்காலிகமாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் என சுமார் 22,430 பேர் பணியாற்றுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் சந்திக்கும் அவலங்களை சென்னையின் சில உதாரணங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
தற்போது சென்னை முழுவதும் நோய் தொற்று பரவாலாக அதிகரித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தூய்மைப் பணி தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. அவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் அக்கறை கொள்வதில்லை.
தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிய வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும் என்கிறார்கள். ஆனால் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர், வாரத்திற்கு ஒரு மாஸ்க், சில இடங்களில் வாரத்திற்கு 2 மாஸ்க் மட்டுமே தருகின்றனர். இவர்களைப் பொருத்த வரையில் ஒரு மாஸ்க்கை ஆறு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது தூய்மை பணியாளர்களுக்கு மட்டும் பொருந்தாது. அதேபோல் அவர்களுக்கு சானிடைசர், சோப் என எதுவும் தரப்படவில்லை. தொழிலாளர்கள் பணி முடிந்து வந்தால் கூட வெறும் தண்ணீரில்தான் கையைக் கழுவுகின்றனர். இதனால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
படிக்க:
♦ நீடிகப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன ? வாஞ்சிநாதன் | காணொளி
♦ மே நாள் சூளுரை : நிதியை ஒதுக்க அரசு மறுத்தால் போராடுவோம் !
கொரோனா தொற்று இல்லாத காலங்களிலும் பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காமல் ஏமாற்றினார்கள். அப்போதே பலமுறை வலியுறுத்தி மனு கொடுத்தோம். அதனை கிடப்பில் போட்டார்கள். இவ்வசாதாரண அபாய காலத்திலாவது முறையாக கொடுக்க வேண்டாமா?
துப்புரவுப் பணியாளர்களின் வேலை நிலைமைகள் எவ்வாறு உள்ளது ?
கொரோனா தொற்று தடுப்புப் பணியில் தூய்மைப் பணியாளர்கள்தான் முதன்மையானவர்கள். அதிகாலை 5 மணிக்கு பணிகளை தொடங்க வேண்டும். எந்த பாதிப்பாக இருந்தாலும் முதலில் தூய்மை பணியாளர்தான் சந்திக்க நேரிடும். இது போன்ற பேரிடர் காலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களும் மனமுவந்து அவர்களும் பணியாற்றுவார்கள்.
அவர்களுக்கு அவ்வப்போது கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளோம்.

தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யாவிட்டால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தோம். தொற்று பரவியியுள்ள வீடுகளில் உள்ள குப்பையை அகற்றுவதற்குகூட போதிய பாதுகாப்பு உபகரணம் இல்லை. “தூய்மைப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது எங்கள் கடமை. எல்லோருக்கும் போதுமான அளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்துள்ளோம்” என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால், ஊழியர்களிடம் கேட்டால் தரவில்லை என்று கூறுகின்றனர்.
அப்படியானால் பாதுகாப்பு உபகரணங்கள் எங்கே சென்றன?
லாக்டவுன் அறிவித்த பிறகு, மார்ச் மாத அறிக்கையின்படி சுமார் 17,944 பேர் அதாவது 80 விழுக்காட்டினர் வேலைக்கு வந்துள்ளனர். இதுபோக மண்டலங்களில் உதிரியாக பணியாற்றுபவர்கள் 2,250 என மொத்தம் 20,194 பேருக்கு கணக்கீடு செய்து, ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ஆகும் செலவு ரூ.100 வீதம், 15 நாட்களுக்கு ரூபாய் மூன்று கோடியே மூன்று லட்சத்து இருபதாயிரம் தேவைப்படும் என்று (ரூ.303,20,000) 28.03.2020 அன்று ஒரு எஸ்டிமேட் கொடுக்கிறார்கள்.
இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை குறித்து கேட்கப்பட்ட போது 20.04.2020 அன்று ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். அதில் 15 மண்டலங்கள், 3 வட்டார அலுவலகம், எலட்ரிகல், மெக்கானிகல், திடக்கழிவு மேலாண்மை துறை, கட்டிட பராமரிப்பு, மற்றும் சுகாதாரம் என்று பெரிய பட்டியலே போட்டு 17 கோடியே 99 லட்சத்து 19 ஆயிரத்து 726 ரூபாய் செலவாகி இருப்பதாக சொன்னார்கள்.
இவற்றில் திடக்கழிவு மேலாண்மைத் துறைக்கு மட்டும் 10 கோடியே 33 லட்சத்து 13 ஆயிரத்து 732 ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். பில்டிங் பராமரிப்பு செலவு 76 லட்சத்து 34 ஆயிரம். ஆனால் 20,194 தூய்மைப் பணியாளர்களின் சுகாதாரத்திற்கு செய்த செலவு வெறும் 85 லட்சம்தான். ஒரு கட்டிடத்திற்கு கொடுக்கும் மதிப்பு கூட பணியாளர்களின் சுகாதாரத்திற்கு இல்லை. இவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
லாக்-டவுன் சமயத்தில் தொழிலாளர்களுக்கான போக்குவரத்து, உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றதா ?
ஊரடங்கு அமலில் உள்ளதால் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு வருவது சிரமம். 100 பேருந்து மட்டும் விட்டிருக்கிறார்கள். அதில்தான் பல தடங்களில் பயணிக்க வேண்டியுள்ளது. அங்கே சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான சூழலே இல்லை. பலர் குப்பை வண்டி, லாரிகளில் பணிக்கு வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளிகள்.
படிக்க:
♦ PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்
♦ உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !
தன்னார்வலர்கள் கொடுத்தது போக, மாநகரட்சியிலிருந்து காலை, மதியம் இரண்டு வேளை உணவு தருகிறார்கள். உண்மையில் சாப்பிட முடியவில்லை என்கிறார்கள் தொழிலாளர்கள். ஆனால், அதனை பெரிய குறையாக சொல்லவில்லை. இந்த சூழலில் பசிக்கு தருகிறார்களே… அதுபோதும் என்ற மன நிறைவு மட்டுமே பணியாளர்களிடம் உள்ளது. மக்களுக்கு தொற்று பரவாமல் இருக்க களத்தில் நமது பணி பிரதானமானது என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. அதற்காக எங்களுக்கு அச்சம் இல்லை என்பதல்ல. அதனைவிட, நாங்கள் முடங்கினால் பலரும் தொற்றுக்கு பலியாகி விடுவார்களே என்ற கவலை எங்களை களப்பணியை நோக்கி தள்ளுகிறது.
தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புப் பகுதிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா ? எத்தனை தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ?
எங்களில் எத்தனை பேருக்கு தொற்று உள்ளது என்பது கூட தெரியாது. எங்களிடமிருந்து மற்றவர்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் பரவி விடக்கூடாது என்பதாலேயே தொடர்ந்து சோதனை செய்ய வலியுறுத்தினோம்.

தூய்மைப் பணியாளர்கள் வாழும் பகுதிகள் மிகவும் அடர்த்தியானவை. சென்னையில் சுமார் 16 இடங்கள் தூய்மைப் பணியாளர்கள் அடர்த்தியாக வாழும் பகுதியாகும். பத்துக்கு பத்து குடிசையில் 4, 5 பேர் வசிக்கிறார்கள். இங்கெல்லாம் தொற்று பரவினால் மிக மோசமான சூழலை சந்திக்க நேரிடும் என்பதால் பாதுகாப்பை அதிகப்படுத்தக் கோரினோம். ஆனால் துப்புரவு பணியாளர்களுக்கோ, அவர்கள் வசிக்கும் இடங்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
சென்னை மாநகராட்சி நிர்வாகம் முறையான பாதுகாப்பு வசதியை செய்யாததன் விளைவாக தற்போது நான்கு தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு சுமார் 30 பேர் வரை பரவியிருக்கலாம் என்றும் தெரியவருகிறது. உடனடியாக அனைவருக்கும் சோதனையை தீவிரப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் மட்டுமே மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். ஆனால் சோதனை செய்வதில் அலட்சியம் செய்து வருகிறார்கள்.
இவர்களிடம் போதிய சோதனைக் கருவியும் இல்லை. தற்போது பாதிக்கப்பட்ட 4 பேரில் 3 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியில் உள்ளனர். நாங்கள் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷை சந்தித்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதியுதவி தர வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தோம். தொற்று இருப்பது தெரிய வந்தால் மருத்துவ செலவு மற்றும் நிவாரணத் தொகை வழங்க நேரிடும் என்பதால்தான் இவர்கள் சோதனை செய்ய மறுக்கிறார்களோ அல்லது உண்மையை சொல்ல தயங்குகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
தூய்மைப் பணியாளர்கள் பற்றிய பார்வை இந்த கொரோனா காலகட்டத்தில் மக்களிடையே மாறியிருக்கிறதா ?
சில இடங்களில் தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்றும் புனிதமானவர்கள் என்றும் கூறி வருகிறார்கள். பாத பூஜையும் கூட செய்கிறார்கள். இதெல்லாம் வெற்று ஜாலம். அதனால் எங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. இதே கொரோனா காலகட்டத்தில் தான் நாட்டின் பல இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் மீது தாக்குதல்களும் தொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனை யாரும் கண்டித்ததாக தெரியவில்லை.
சுனாமி, புயல், மழை வெள்ளம் என பல பேரிடர் காலங்களில் நாங்கள் பணியாற்றியுள்ளோம். அவற்றில் மக்களை காப்பதில் முதன்மையான பங்கு தூய்மைப் பணியாளர்களுக்கு இருந்தது. மோடி, எடப்பாடி உட்பட எல்லோரும் எங்களைப் போற்றலாம். மக்களும் எங்களைப் புகழலாம். பாத பூஜை செய்யலாம். அதனால் எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதுமில்லை.
எங்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தால் எங்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் எங்களோடு கைகோர்த்து நில்லுங்கள் !
– வினவு செய்தியாளர்





உதாரணத்திற்கு டெல்லி பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில், மார்ச் 2020 ஊதியத்தில் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு (PMNRF) வழங்குமாறு கோரி அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரின் ஒருநாள் ஊதியம் சேர்ந்து ரூ. 4 கோடி திரட்டப்பட்டது. ஆனால் PMNRF திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியை பல்கலைகழக துணைவேந்தர் PMCARES திட்டத்திற்கு திருப்பிவிட்டுள்ளார். இதற்கு டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
பிற அரசாங்க நிறுவனத்தின் மூலமோ, லாக்டவுன் சமயத்தில் தொண்டு செய்யும் வேறு ஒரு தன்னார்வ நிறுவனத்தின் மூலமோ கொடுக்க வழியிருக்கும் போது, PM-CARES-க்கு ஏன் நன்கொடை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு அலுவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த சுற்றறிக்கையில் நன்கொடையே அதிகாரத் தொனியில்தான் கேட்கப்பட்டிருப்பதாகவும், நன்கொடை தராதவர்களை மறைமுகமாக மிரட்டும் தொனியிலும் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
பெருமளவிலான தொகையை நன்கொடையாகப் பெறும் PM-CARES அறக்கட்டளையின் அறங்காவலர்களாக இருக்கும் மத்திய நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் யாரைக் கை காட்டுகிறார்களோ அவர்கள்தான் தணிக்கை செய்ய முடியும்.
இந்த நிச்சயமின்மை இதற்கு முன்பும் இருந்ததுதான். இப்போது அது திட்டவட்டமான ஆபத்தாக எழுந்து நிற்கிறது. முன்பு ஓர் ஊழியரை வேலைநீக்கம் செய்வதற்கு நிறுவனத்துக்கு, பெயரளவுக்கேனும் ஒரு காரணம் தேவைப்பட்டது. இப்போது கொரோனா வந்து, எதையும் செய்வதற்கான ‘பிளாங்க் செக்’-ஐ நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. ‘நஷ்டம்.. அதனால் வேலையில்லை’, ‘நஷ்டம்.. அதனால் சம்பளம் குறைப்பு..’.. அவ்வளவுதான். மேலதிகமாக எதுவும் தேவையில்லை. ஆகவே தொழிலாளர்களின் மனம் இயல்பாகவே, ‘சம்பளத்தையாச்சும் குறைச்சுக்க… வேலையை விட்டு தூக்கிராதே..’ என்று சிந்திக்கிறது.


கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ டிஜிட்டல் பைபர் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃப்ராடெல் பிரைவேட் லிமிடெட் (RJIPL) என இரு உட்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனங்களை உருவாக்கியது.
செபி (SEBI) வழிகாட்டுதல்களின்படி தனியார் உட்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் மூலம் செய்யப்படும் முதலீடுகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து நேரடி முதலீட்டாளர்களோ அல்லது பங்குதாரர்களோ தேவை. அந்த வகையில், ப்ரூக்ஃபீல்ட் நிறுவனம் கனடியன் பென்சன் ஃபண்ட், பிரிட்டிஷ் கொலம்பியா இன்வெஸ்ட்மெண்ட் மெனேஜ்மெண்ட் கார்ப்பரேசன், பப்ளிக் இன்வஸ்ட்மெண்ட் ஃபண்ட் ஆஃப் சவுதி அரேபியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜி.ஐ.சி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தனியார் உட்கட்டமைப்பு அறக்கட்டளையில் முதலீடு செய்துள்ளது.


குடும்பத்திற்கு உணவளிக்கவோ அல்லது வாடகை செலுத்தவோ வழியில்லாத நிலையில் தனது 5 வயது மகன் சிவத்தை தோள்களில் ஏற்றிக்கொண்டு 500 கி.மீ (300 மைல்) தொலைவில் உள்ள சொந்த கிராமத்திற்கு தாயாராம் நடக்க தொடங்கினார். வேலை செய்யும் போது இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பது மிகவும் கடினம் என்பதால் வயதான உறவினர்களுடன் கிராமத்தில் விட்டுச் செல்லப்பட்ட தனது மற்றொரு ஏழு வயது மகன் மங்கலைப் பற்றிய நினைவுடன் இருப்பதாக அவர் கூறினார். அவனுடன் இருப்பது தொற்றுநோய்க்கு நடுவில் குறைந்தபட்சம் ஒரு ஆறுதலை கொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ளா ஜுகாய் கிராமத்தில் தாயாராம் கோதுமையை அறுவடை செய்கிறார். அவரது வீட்டின் இருட்டான ஒரு அறையில் தானியங்கள் மற்றும் உடைகள் சாக்குகளால் நிரப்பப்பட்டிருக்கின்றன. ஒரு சட்டமில்லா சுவரொட்டி சுவரில் தொங்குகிறது. ஒரு ஏரியின் மீது சிவப்பு கூரை கொண்ட வீட்டை சித்தரிக்கின்ற அந்த படத்தில் பனி மூடிய மலைகளுக்கு பின்னால் சூரியன் மறைகிறது. ”சின்னஞ்சிறிய கிராமங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்ந்து கொண்டிருந்த காலத்திற்கு கடிகாரத்தைத் திருப்ப நான் விரும்புகிறேன்” என்று அது கூறுகிறது.

தயாராம் தன்னுடைய விதியைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார். அவரது திருமணம், புதுடெல்லிக்கு அவர் சென்றது, வீட்டிற்கு திரும்பிச் செல்வது – எதுவும் விட முடியாத கட்டாயத்தேவைகள். தயாராமின் அத்தை அவருடைய திருமணத்தை நடத்தி வைத்தார். அவரும் கியான்வதியும் தொன்றுத்தொட்டு இந்திய சமூக ஏணிப்படியில் கீழ்மட்டத்திலிருக்கும் பாரம்பரியமாக உழவுத்தொழிலில் ஈடுபட்ட குஷ்வாஹா சாதியைச் சேர்ந்தவர்கள். தங்கள் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் முதன்முதலாக சந்தித்தனர். ”அவர் பொருத்தமாக தான் இருந்தார்” என்று தாயாராம் தனது மனைவியுடனான சந்திப்பை நினைவு கூர்ந்த போது அவரது முகத்தை ஒரு புன்னகை சுருக்கமாக கடந்தது. ”ஆனால் என் தலைவிதியில் நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் சரிதான்” என்று கூறினார்.
தயாராம் குஷ்வா மற்றும் கியான்வதியின் இரண்டு அறைகள் கொண்ட கான்கிரீட் வீடு. நான்கு நாட்கள் தொடர்ச்சியான நடைப்பயணம் மற்றும் சரக்குந்துகள் பயணத்திற்கு பிறகு 2,000 மக்கள் வாழும் விவசாய கிராமமான ஜுகாயில் (Jugyai) உள்ள தங்கள் வீட்டை அவர்கள் சென்றடைந்தனர்.
புதுதில்லியில் இருந்து வீடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளி பிரமோத் குஷ்வாஹா மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தன்னுடைய சுராரி (Churari) கிராமத்தில் உள்ளார்.
நாடு தழுவிய ஊரடங்கின் போது வெறிச்சோடிய ஜுகாய் கிராமத்தின் தெரு வழியாக பெண்கள் நடந்து செல்கின்றனர். இந்த ஊரடங்கு தனது குழந்தைகளின் கல்விக்கான எல்லா நம்பிக்கையையும் குழி தோண்டி புதைத்துவிடும் என்று தயாராம் கவலைப்படுகிறார். ”எந்த பெற்றோரும் தங்கள் குழந்தை ஒரு வேலையாளாக பணிப்புரிய விரும்புவதில்லை. ஆனால் வேறு வழியில்லை. நான் செய்வதை தான் அவர்கள் செய்ய வேண்டியிருக்கும்” என்று அவர் கவலையுடன் கூறினார்.
தயாராமின் பெற்றோர்கள்: இடப்புறத்தில் கேஸ்ரா மற்றும் வலப்புறத்தில் தாகூர் தாஸ். இருவரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். வழக்கமாக வீட்டில் இருப்பவர்களின் செலவிற்கு அனுப்பிய பணத்திற்கு பதிலாக வெறுங்கையுடன் தனது கிராமத்திற்கு வந்தவுடன் என்ன நடக்கும் என்பது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று முயற்ச்சி செய்ததாக அவர் கூறினார். குறைந்தது அவருக்கு ஒரு வீடாவது இருக்கிறது என்றார் அவர்.

சீனாவின் வெண்ட்போ நிறுவனத்தின் இந்திய இறக்குமதி நிறுவனமான மேட்ரிக்ஸ் லேப் ஒரு கிட் ரூ 245/- என்ற விலையில்(போக்குவரத்து உட்பட) இறக்குமதி செய்து ரூ 145/- லாபம் வைத்து ரூ 400/- என்ற விலையில் ரேர் மெட்டாபாலிக் நிறுவனத்திற்கு விற்றது. இதன் மீது ரூ 200/- லாபம் வைத்து ஒரு கிட் ரூ 600/- என்ற விலையில் அய்.எம்.சி.ஆருக்கு ரேர் மெட்டபாலிக் நிறுவனம் விற்றுள்ளது. அதாவது ரூ 245/- க்கு வாங்கப்பட்ட கிட் இரண்டு இடைத்தரகர்கள் கை மாறி ரூ 600/-க்கு மக்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு என்ன பங்கு என்பது யாருக்கும் தெரியாது. பங்கு இல்லாமல் இருக்காது என்பது மட்டும் உறுதியாகத் தெரியும். சந்தடிசாக்கில் எடப்பாடி அரசு ஷான் பயோடேக் என்ற நிருவனம் மூலம் இறக்குமதியாளர் மேட்ரிஸ் லேப் இடம் நேரடியாக வாங்கி கணிசமாக சுருட்டியுள்ளது.
ஊரடங்கில் உள்ள மகக்ளுக்கு உரிய நிவாரணமும் வழங்கவில்லை. இந்திய உணவுக்கிடங்கில் 8 கோடி டன் உணவுப் பொருட்கள் நிரம்பி வழிந்த போதும், மத்திய மாநில அரசுகளோ 20 கிலோ அரிசி, ஒரு கிலோ எண்ணெய், பருப்பு, 1000 ரூபாய் நிவாரணம் என உழைக்கும் மக்களை பிச்சைக்காரர்களைப் போல் நடத்துகின்றன. பெருவாரியான உழைக்கும் மக்கள் நோய் அச்சத்தாலும், உணவின்றியும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடைப்பிணமாக வாழ்கிறார்கள்.
நம் நாடு மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வல்லரசுகளே கொரானாவை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்டங்கண்டு போயுள்ளன. அமெரிக்காவில் கொரானா மரணங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டது. இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி போன்ற முதலாளித்துவ நாடுகளில் நடக்கும் மரணங்களை கண்டு அந்நாட்டு அரசுகளெல்லாம் அலறுகின்றன. “எங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் இருக்கிறோம்’’ என்று இத்தாலி பிரதமர் வெளிப்படையாக சொல்லி கண்ணீர் விட்டு அழுது கொண்டே பேட்டி அளிக்கிறார். காரணம், இத்தாலியில் மருத்துவத்துறையில் 85 சதவீதம் தனியார் கையில் உள்ளது. அங்கு மட்டுமல்ல, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் இதுதான் நிலை.
இன்னொரு பக்கம், தனிவுடைமை எனும் முதலாளித்துவக் கொள்கையை சொர்க்கம் என பீற்றி வந்த ஸ்பெயினும், அயர்லாந்தும் இப்போது தனியார் மருத்துவமனைகளை அரசுடைமையாக்கியுள்ளன. 1990 களின் தொடக்கத்தில் புதிய தாராளவாத உலகத்தை முன்னறிவித்த மார்க்கரெட் தாட்சரின் பிரிட்டனில் தனிமையில் வாடும் 15 லட்சம் முதியவர்களைப் பராமரிக்க 5 லட்சம் இளைஞர்கள் தன்னார்வலர்களாக முன் வந்திருக்கிறார்கள். தேசிய மருத்துவ சேவையில் தொண்டர்களாகப் பணியாற்ற 7.5 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்திருக்கின்றனர். மக்களின் தேவைகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் பொருட்டு 4300 வட்டார உதவிக்குழுக்களை அந்நாட்டு மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள். முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் தோல்விக்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்?




சம்பவ தினமாம் 27-ம் தேதி அன்று சென்னையைச் சேர்ந்த மொக்கை ஜோக் நடிகர் எஸ்.வீ சேகர் 13 பாக்கெட் ஆவின் பால் வாங்கியுள்ளார். ஒரு குடும்பத்திற்கு 13 பாக்கெட் பாலா?? என்று வாயைப் பிளக்க வேண்டாம். அன்னாரின் வீட்டில் வயதான பிள்ளைகளும், இனிமேல் வயதாகப் போகும் பிள்ளைகளும் உள்ளனர் என்பதை அவரே கூறியுள்ளார். மேலும் ‘அரிய வகை ஏழைகள்’ என்பதால் இந்த 13 பாக்கெட் பாலே கூட குறைவு தான்.


