லைக்காவின் மோசடி பணத்தில் கொழிக்கும் கமல் – ரஜினி – காலாக்கள் !
லைக்கா நிறுவனம் ஐரோப்பாவிலுள்ள புலம்பெயர் அகதிகளை சுரண்டி மோசடி செய்த பணத்தில்தான் இங்கு தமிழ் படங்களை தயாரித்து வெளியிடுகிறது. லைக்காவின் மோசடி பணத்தில் பயன் பெறுபவர்கள் தான் கமல்- ரஜினி – ஷங்கர் - ஜெயமோகன் போன்றோர்.
மோடியின் இந்துத்துவ கிரிமினல்களால் அடித்துக் கொல்லப்பட்ட காசிம் !
” நீங்கள் நேசிக்கும் யாருக்காவது இப்படி நடந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அந்தக் காணொளியும் புகைப்படங்களும் நாடெங்கும் பரவிவிட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள். உங்களுக்கெல்லாம் அதைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது என கேட்க நினைக்கிறேன் ”
ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு ?
ஆப்பிள் ஐ-ஃபோன் நிறுவனம் தங்களுடைய ஐ-ஃபோன்கள் அனைத்தையும் சீனாவில் உற்பத்தி செய்வது என்ற முடிவை ஆப்பிளின் இலாபவேட்டை தான் தீர்மானிக்கிறது; சந்தைப் போட்டி அல்ல என்பதை இக்கட்டுரை தெளிவாக விளக்குகிறது. ஜி.டி.பி மாயை பாகம் 2.
மராட்டியம் : மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சிறார்களைக் கொன்ற போலீசு பெற்றோர்களை மிரட்டுகிறது !
கிராமத்திலிருந்து கிளம்பிய சிறுவர்கள் மாவோயிஸ்ட் கமாண்டர் சாய்நாத்தை சந்திக்கச் சென்றதாக பொய் ஆவணம் தயாரித்திருக்கும் போலீசு தற்போது அதில் கையெழுத்திடுமாறு பழங்குடி பெற்றோர்களை மிரட்டுகிறது!
முஸ்லீமை திருமணம் செய்தால் பாஸ்போர்ட் கிடையாது !
ஒருவரையொருவர் காதலித்து, அவரவர் தத்தமது மத நம்பிக்கைகளோடு வாழ்வதெனும் அடிப்படை ஜனநாயக உரிமையைத்தான் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார். இதையேதான் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘லவ் ஜிகாத்’ என்ற போலிச் சொல்லாடலை பயன்படுத்தி செய்துவருகிறது.
கருமுட்டை விற்பனை : இரத்தப் போக்கும் மரணமும்தான் பரிசு
குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ள ஏழைப் பெண்கள் கருமுட்டைக் கொடையாளிகளாக தமது உடலை அழிக்குமாறு ஆக்கப்படுகின்றனர். இது அவர்களின் கதை!
டைம்ஸ் ஆப் இந்தியா : பத்திரிகை அல்ல ! கார்ப்பரேட் + காவிகளின் விளம்பர நிறுவனம் !
பாசிசம் என்பது இனிமேல் ஆர்.எஸ்.எஸ். அல்லது அதன் துணை அமைப்புகளால் உண்டாகும் அச்சுறுத்தல் எனும் நிலையைக் கடந்து ‘ஜனநாயகத்தின் நான்காவது தூணும்’ அதற்கு உடந்தை என்கிற உண்மையை அம்பலப்படுத்துகிறது கோப்ராபோஸ்ட்.
சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை : வளர்ச்சியின் பெயரில் காட்டாட்சி !
இயற்கை வளங்களை - விவசாய நிலங்களை - மலைகளை - நீராதாரங்களை சிதைத்து, வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை ஒடுக்கி கொண்டுவரப்படும் இந்த அழிவுச் சாலை யாருக்கானது?
ஓசூர் வட்டார அரசுப் பள்ளியில் 100% தோல்வி : 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுத்த ‘சமூக விரோதிகள்’ !
ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் செயல்பட்டு வந்த ஓசூர் மாசிநாயக்கன்பள்ளி அரசுப் பள்ளியின் அவல நிலையும், மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி அதனை சீர் படுத்தியதையும் பதிவு செய்திருக்கிறார் பு.ஜ.. செய்தியாளர்
ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !
யார் வளர்ச்சியின் நாயகர்கள் என்பது குறித்து பாஜகவும் காங்கிரசும் நடத்தும் அக்கப்போர்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல் ஜிடிபி. இந்த ஜிடிபி வளர்ச்சி என்பது எப்படி ஒரு மாயை என்பதையும்,தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலம் லாபம் பெறப்படுவதை ஐஃபோன் உற்பத்தி மூலம் விளக்குகிறது இத்தொடர்.
சிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் – 27 ஆண்டுகள் சிறையில் !
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு 27 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த அநீதியின் வரலாற்றை தொகுத்துக் கூறும் கட்டுரை!
பாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் !
’உத்தமர்’ வாஜ்பாயி பிரதமராக இருந்த சமயத்தில்தான் ரூ. 5,000 கோடிக்கும் மேல் மதிப்புகொண்ட பொதுத்துறை நிறுவனமான பால்கோ ஆலை வெறும் ரூ. 551 கோடிக்கு அனில் அகர்வாலுக்கு விற்கப்பட்டது. பாஜக - ஸ்டெர்லைட் காதலுக்கு இது ஒரு சிறிய உதாரணம்.
மதுரை பல்கலை துணைவேந்தர் செல்லதுரை நியமனம் ரத்து | PRPC வழக்கில் தீர்ப்பு
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு சார்பில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரையின் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், செல்லதுரையின் துணைவேந்தர் பதவியை ரத்து செய்து உத்தரவிட்டது
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு : இதுதாண்டா ஜனநாயகம் !
மாறுபட்ட தீர்ப்பால் அ.தி.மு.க-வின் மகாபாராதப் போர் அடுத்த அக்கப்போர் கட்டத்திற்கு வந்து விட்டது. நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கை பரிந்துரைத்திருக்கின்றனர். ஆக ஜனநாயகத்தின் அழுகுணி ஆட்டத்திற்கு மற்றுமொரு நீட்டிப்பு!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா UAPA சட்டத்தில் கைதா ?
வட இந்தியாவில் கொரெகான் பீமா வன்முறையைக் காரணமாக்கி, அங்கு செயல்படும் சமூகச் செயற்பாட்டாளர்களை ஊபா சட்டத்தின் மூலமும் போலி கடிதங்கள் மூலமும் முடக்க முயற்சிக்கிறது மோடி அரசு!
























