ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம் ! – தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்
ரோம் நகரம் பற்றியெறியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததை ஒத்த செயலாக மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, அரசு நிர்வாகமே களத்தில் இறங்கி ஜெயலலிதா மூஞ்சியை ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருந்ததை நாடே காறித்துப்பியது.
சென்னை: இயற்கையை அழித்த குற்றத்தின் தண்டனை
செயற்கையாகவும் அராஜகமாகவும் உருவாக்கப்படும் நகர வளர்ச்சி எத்தகைய பேரழிவை ஏற்படுத்தும் என்பதை சென்னை உணர்த்தியிருக்கிறது.
சென்னையை ஆக்கிரமித்த முதலாளிகளைத் தண்டிப்போம் !
"எங்கள் வீடுகளைத் தாராளமாக இடி. ஆனால், அதற்கு முன்னால் மியாட், குளோபல் ஆஸ்பத்திரிகளை இடி. ஒரு கோடிக்கு ஒரு வீடு என ஆயிரம் வீடுகளைக் கட்டிய ஆக்கிரமிப்பாளன் வி.ஜி.என் ரியல் எஸ்டேட் கட்டிடங்களை இடி. அதன்பிறகு, எங்கள் வீடுகளை இடிக்க வா"
‘அம்மா’: தமிழகத்தின் பேரிடர்!
பேரழிவைப் பரிசாகத் தந்திருக்கும் ஒரு வளர்ச்சிப் பாதை, தோற்று நிலைகுலைந்துவிட்ட ஒரு அரசமைப்பு, இவற்றால் சீரழிக்கப்பட்ட மக்கள் மீது பிணந்தின்னிகளைப் போல மொய்க்கும் அ.தி.மு.க. கும்பல் - இதுதான் வெள்ளச் சேதத்தின் வழியே விளக்கம் பெறும் அரசியல்
ஏரிகளை ஆக்கிரமித்தது மக்களா முதலாளிகளா ?
1991-1996 காலகட்டத்தில் தமிழகத்தை மொட்டையடித்த புரட்சித்தலைவின் ஆட்சியின் கீழ் ஏரி குளங்கள் ஆக்கிரமித்து ப்ளாட்டுகள் போடும் ரியல் எஸ்டேட் கொள்ளை ஒரு தொழிலாக ஒழுங்கமைக்கப்பட்டது.
தூத்துக்குடி – கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள்
"வீட்டையும் கொழுத்திவிட்டு இந்தா ஒரு கொடம் தண்ணி நெருப்பை அணைச்சுக்க என்றால் என்ன செய்வீர்கள்?” என்றோம். “அப்பிடியே சப்பீர மாட்டோம்!” என்றனர் பெண்கள்.
இந்த சேதாரத்தை வழங்கியோர் அதிகார வர்க்கம் + ஜெயா அரசு
. கும்பினி ஆட்சிக் காலத்தில் ஜமீந்தார்களும், குறுநில மன்னர்களும் மக்களிடம் அடித்துப் பறித்து கும்பினிக்கு கப்பம் கட்டியதைப் போறே அமைச்சர்களும் போயஸ் தோட்டத்திற்கு கட்ட வேண்டிய கப்பத்தை வசூலிப்பதிலேயே குறியாக இருந்தனர்.
சென்னை மதுரவாயிலில் மாணவர்களின் நிவாரணப் பணி
மக்களுடன் சேற்றில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணோ கவுன்சிலரை பார்த்து ”வாங்க அக்கா, அப்போ நீங்க உள்ள வாங்க” என கூப்பிட்ட உடன் சேறும் சகதியுமாக இருந்த வீட்டை பார்த்த உடன் அலறி அடித்துக் கொண்டு ஓடிவிட்டார்.
கருத்துரிமையை பாதுகாக்க மதுரையில் கருத்தரங்கம்
12-ம் ஆண்டில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டம் கருத்தரங்கம் 19-12-2015 சனிகிழமை மாலை 5 மணி மீனாட்சி அரங்கம், மடீசியா, மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை
கடலூர் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் நிவாரணப் பணி
மக்கள் மறிப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதிமுக வினருக்காக காவல் துறை மறிப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றதுடன் சாலை மறியலுக்கு தயாரனதும் உடனே நமது லாரி விடப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் – பாசிச ஜெயா அரசின் குற்றம் !
அரசுக்கும், ஆளும் கட்சிக்கும் மக்களின் மேல் எந்தளவுக்கு வன்மம் இருந்தால் புழுப் பூச்சிகளைப் போல் தத்தளிக்க விட்டிருப்பார்கள். ஜெயலலிதா என்கிற மேக்கப்பின் பின் ஒளிந்து கொண்டிருந்த அழுகிப் போன உண்மையான மூஞ்சி மேலும் ஒரு முறை வெளிப்பட்டுள்ளது.
சென்னை மழை வெள்ளம் – புவியியல் குறிப்பு
இந்தாண்டு சென்னை மாநகராட்சியின் சார்பாக கால்வாய் தூர்வாறுவது சீரமைப்பது போன்ற வேலைகளைச் செய்யாமலேயே அ.தி.முக கவுன்சிலர்கள் போலியான பில்களை சமர்பித்து மேற்படி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையைக் கொள்ளையடித்துள்ளனர்.
அ.தி.மு.க ஆக்கிரமிப்பால் கடலூர் கெடிலம் ஆற்றில் சுனாமி
இந்த குடிசை வாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், பெரிய பெரிய மால்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள் கட்டியுள்ள பணமுதலைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஒரு மோசடி கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நிவாரணப் பணிகள்
கலெக்டர் அம்மா, ஊர் தலைவரிடம் "உங்களுக்கு தேவையான எல்லாம் அரசு கொடுக்கின்றது, அதை மக்களுக்கு கொடுக்க முடியவில்லை. ஆனால் சிகப்பு சட்டைக்காரர்கள் இவ்வளவு தண்ணியிருந்தும், வீடு, வீடாய் போய் கொடுக்கிறாங்க, உங்களால் ஏன் முடியவில்லை" என்றார்.
சென்னை மழை வெள்ளம் – ஐ.டி நிறுவனங்களின் இலாப வெறி !
ஐ.டி. துறை ஊழியர்களுக்கு வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைக் கண்டறிந்திட கள ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை இங்கே வெளியிட்டுள்ளோம்.























