கருத்துரிமையை நசுக்கும் ஊபா சட்டததை நீக்கு ! – மதுரையில் கருத்தரங்கம்
இயற்கை வளக் கொள்ளையை எதிர்த்துப் போராடும் மக்கள், மக்களை ஆதரிக்கும் அமைப்புகள், அறிவுத்துறையினர் ஆகியோரை குறிவைத்துப் பாய்கிறது ஊபா சட்டம். நேற்று பிநாயக் சென், இன்று சாய்பாபா எனத் தொடர்கிறது. பாசிசத்தின் கரங்கள்
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு : செத்த பாம்பை அடித்த வீரம் !
ஜெயா, சொத்துக் குவிப்பு வழக்கை 21 ஆண்டு காலம் இழுத்தடிப்பதற்கு உடந்தையாகவும், அவர் கர்நாடகா உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்படுவதற்கு புரோக்கராகவும் செயல்பட்ட உச்சநீதி மன்றம், அவர் இறந்த பிறகும் குழப்பத்துக்கு இடமளிக்கும் தீர்ப்பையே அளித்திருக்கிறது.
மக்கள் அதிகாரத்தை முடக்க நினைக்கும் திருச்சி மண்டல போலீசு !
காவல் துறை குறிப்பிட்ட அமைப்பு மற்றும் அதன் அரசியல் கொள்கைகள் குறித்து எதிர்ப்பிரச்சாரம் செய்வதும், பொய்யான கருத்தைக் கூறி அவதூறு செய்வதும் சட்ட விரோத நடவடிக்கையாகும்.
பொறுக்கி போலீசு சேதுமணி மாதவனுக்கு பத்தாண்டு சிறை !
சேதுமணியைக் காப்பாற்ற சாதிஅமைப்புகள், பிழைப்புவாதிகள் ஓரணியில் திரண்டு சேதுமணிக்கு ஆதரவாக பொதுமக்கள் என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டினர்.
ஊபா – ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா
கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 72.7% பேர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மாருதி தொழிலாளர்களுக்காக கோவையில் ஆர்ப்பாட்டம் !
மாருதி ஆலைத் தொழிலாளர்களுக்கு தரப்படும் தண்டனை இந்தியா தொழிலாளி வர்க்கத்தை மிரட்டும் என ஆளும் வர்க்கம் முடிவெடுத்துள்ளது. ஆனால் நாம் இதனை நல்வாய்ப்பாக பயன்படுத்தி ஒன்றிணைய வேண்டும்.
குற்றவாளி ஜெயலலிதா : குப்பைக்கு எதற்கு ஒளிவட்டம் ?
தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் பொதுச் சொத்துக்களை அபகரித்துக் கொள்ளும் கொள்ளைக்காரியாக, சதிகாரியாக, மேல்தட்டுப் பொறுக்கியாக, ரவுடியாகவே வாழ்ந்து மறைந்தவர்தான் ஜெயலலிதா. அவருக்கு எதற்கு ஒளிவட்டம் ?
மாருதி தொழிலாளிகளுக்காக புதுச்சேரியில் ஏன் போரடுகிறீர்கள் ?
தொழிலாளி யாரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லை. தங்களின் நியமான உரிமைகளுக்காக போராடுகிறார்கள். அவர்களின் கோரிக்கையை கேட்க கூட தயங்குகிறது இந்த அரசும், நீதித்துறையும்.
பாசில் அல்-அராஜ் : பாலஸ்தீனத்தின் வீரஞ்செறிந்த இளைஞர் கொல்லப்பட்டார் !
அரபு தேசீயம், தாய்நாடு மற்றும் விடுதலைக்கான வாழ்த்துக்கள்....எனக்கான விடைகளை நான் கண்டறிந்து விட்டதால் விதிக்கப்பட என்னுடைய சாவை நோக்கி மனநிறைவுடன் இப்போது நடந்து செல்கிறேன்.
ஓசூர் : மாருதி தொழிலாளர்களை விடுதலை செய் !
இந்த தீர்ப்பு வழங்கவிருந்த கடந்த 9-ம் தேதி முதல் குர்கான் மானேசர் தொழிற்பேட்டை முழுவதும் துணை இராணுவப்படை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சீர்காழி : ஓ.என்.ஜி.சி எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் போலீசு
சீர்காழி தாலுக்கா தாண்டவன்குளம் பகுதியில் இயற்கை எரிவாயு பேரழிவு கொள்கைக்கு எதிராக நடக்க இருந்த போராட்டம் போலீசின் பீதியூட்டலாலும், அச்சுறுத்தலாலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிவகாசி பட்டாசு ஆலையில் 5 பேர் பலி ! மக்களை சாகக் கொடுக்கும் அரசு !
கம்பெனிய எதுத்து கேள்வி கேட்டா அதோட சரி, வேலை கிடைக்காது! அடிமையா இருந்து சாகலாம் என்பதுதான் சிவகாசியில் நிலை! இந்த அரசும் ஓட்டுக்கட்சிகளும் நரபலி வாங்கும் கும்பலின் பின்னேதான் நிற்கின்றனர்.
அசீமானந்தா விடுதலை – இதுதாண்டா ஆர்.எஸ்.எஸ் ஆட்சி !
அசிமானந்தாவுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டிய ஆர்.எஸ்.எஸ்.-ன் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரை வெறும் விசாரணைக்கு மட்டும் அழைத்து விட்டு வழக்கிலிருந்து என்.ஐ.ஏ. விடுவித்துவிட்டது.
கேள்வி கேட்கக் கூடாத புனித ஆவி மோடி !
மடியில் கனமில்லாதவனுக்கு வழியில் பயமில்லை என்பார்கள். கடந்தகாலம், நிகழ்காலம் என முழுக்க முழுக்க அயோக்கியத்தனங்களையே வரலாறாகக் கொண்டுள்ள மோடிக்கு, இன்னும் நூறு அமித்ஷாக்களும், சதாசிவங்களும், மாத்தூர்களும் தேவை.
பிரிட்ஜோ கொலை : மீனவர்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் மோடி அரசு !
நெடுவாசலை அடுத்து தமிழக மீனவர்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவதற்கு இளைஞர்கள் மீனவர்களுக்கு அடுத்த போராட்டம் வந்து நிற்கிறது. களமிறங்குவோம் !
























