Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 184

ஒடிசா : ஜிண்டாலுக்கு எதிராகத் திரண்டெழும் கிராம மக்கள் !

ஒடிசா : ஜிண்டாலுக்கு எதிராகத் திரண்டெழும் கிராம மக்கள் !
அடக்கி ஒடுக்கத் துடிக்கும் ஒடிசா அரசு !
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்திலுள்ள திங்கியா மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் மீண்டுமொரு போராட்டக்களமாக மாறியுள்ளது. திங்கியா மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் குழந்தைகள் முதல் தள்ளாடும் வயதானவர்கள் வரை அனைவரும் இப்போராட்டத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.
ஜிண்டால் நிறுவனமும் மக்கள் போரட்டமும்
கனிமவளக் கொள்ளை நிறுவனமான ஜிண்டால் உத்கல் ஸ்டீல் (JUSL –JSW UTKAL STEEL LTD), கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 65,000 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த எஃகு  தொழிற்சாலையை நிறுவ அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஏற்கெனவே போஸ்கோ நிறுவனத்திற்காகக் கைப்பற்றப்பட்டு (மக்களின் கடும் போராட்டத்தால் போஸ்கோ விரட்டியடிக்கப்பட்டது) மக்களிடம் ஒப்படைக்காமல் வைத்திருந்த சுமார் 1000 ஏக்கர் நிலத்தை அப்படியே ஆலை அமைப்பதற்கு ஜிண்டாலுக்குக் கொடுத்தது அரசு. மேலும் தற்போது கூடுதலாக விவசாய நிலங்களையும் கையகப்படுத்தி வருகிறது அரசு. தங்களுடைய எதிரி முன்பைவிட சாதுரியமான முறையில் மேலும் பலமுடன் வருவதை சரியாகக் கணித்த மக்கள்  கிளர்ந்தெழுந்து போரடிவருகிறார்கள்.
திங்கியாவை சுற்றியுள்ள கிராமங்களைத் தங்களது இலாப வேட்டைக்காகப் பயன்படுத்த ஜிண்டால் நிறுவனம் மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளது. ஒரு வருடத்திற்கு சுமார் 13.2 மில்லியன் டன் மதிப்புள்ள எஃகை பிரித்தெடுக்க 900 மெகா வாட் மின்கலம் (power plant) அமைக்கவும், மேலும் ஒரு வருடத்திற்கு 10 டன் அளவு சிமெண்ட் தாயரிப்பதற்கான அரைத்தல் மற்றும் கலக்கும் தொழிற்சாலைகளை (mixing and grinding) உருவாக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இதன்படி ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் இரும்பு தாது எடுக்கப்படும். அந்த இரும்பு தாதானது நீர் மற்றும் பல கனிமங்களுடன் கலந்து கிடைக்கும் என்பதனால் அதைப் பிரித்தெடுப்பதற்காக டீ ஸ்மைலிங் ஆலையை (de-sliming plant) கியோஞ்சர் மாவட்டத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஒரு வருடத்திற்கு 52 டன் மதிப்புள்ள பொருள்களைக் கையாளுவதற்கு ஜெட்டீஸ் (jetties) எனப்படும் தரை ஜடாதாரி ஆற்றில் அமையவிருக்கிறது.
12000 ஏக்கருக்கும் அதிகமான விவாசய நிலங்களும், நீர்வள ஆதாரங்களான ஆறுகளையும், வனப்பகுதியையும் அரசின் உதவியுடன் ஆக்கிரமித்து வருகிறது நாசகர  ஜிண்டால். இவற்றுக்கெல்லாம் எதிராகப் போரடுவதனால் அக்கிராம மக்கள் அரசின் பலவிதமான துன்புறுத்தல்களைச் சந்தித்து வருகிறார்கள்.
ஜிண்டால் பிரதிரோத் சங்கராம் சமிதி
இதற்கு முன்னர் இப்பகுதி மக்கள், போஸ்கோவிற்கு எதிராகப் போரடியபோது போஸ்கோ பிரதிரோத் சங்கராம் சமிதி என்ற கூட்டமைப்பை உருவாக்கிப் போராடினர். அதனைத் தற்போது ஜிண்டால் பிரதிரோத் சங்கராம் சமிதி என பெயர் மாற்றம் செய்து ஜிண்டாலுக்கு எதிராகப் போராடிவருகிறார்கள் அக்கிராம மக்கள். இந்த அமைப்பிற்குத் தலைவராக தேபேந்திர ஸ்வைன் (debendra swain) இருந்து வருகிறார். கூட்டமைப்பின் தலைவரான ஸ்வைனை கைது செய்ய வருகிறபோது போரட்டம் தீவிரமடைந்தது. திசம்பர் 4, நள்ளிரவு நேரத்தில் போலீஸ்படை அராஜகமாக ஸ்வைனுடைய வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றது. அப்பொழுது ஸ்வைன் அங்கு இல்லாததனால் வீட்டிலிருந்த ஸ்வைனின் மாமா மற்றும் அவரது மகள் லில்லியைக் கைது செய்துள்ளனர்.

மேலும், ஸ்வைனிற்கு எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்துப் பஞ்சாயத்து உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்கியுள்ளது பஞ்சாயத்து துறை. போராடும் மக்களின் மீதும் போரட்டத்தை முன்னின்று நடத்துபவர்களின் மீதும் பல்வேறு ஒடுக்குமுறைகளை நிகழ்த்தியுள்ளன ஒடிசா அரசும் போலீசும். போராடும் மக்களின் ஒற்றுமையைச் சீர்க்குலைக்கவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் எவ்வித இடையூறும் வராமல் இருக்க ஒன்றிணைந்த கிராமத்தைத் தனித்தனியான மூன்று கிராமங்களாகப் பிரிக்கும் சூழ்ச்சியில் இறங்கியது ஒடிசா அரசு.
திங்கியா, மாகால, பாட்டன என்று மூன்று புதிய கிராமங்களை உருவாக்கியதற்கு எதிராகவும் அத்துமீறித் தங்களது தோட்டத்தைப் போலீஸ்படை அழிப்பதில் இருந்து தங்களையும் தமது இயற்கை ஆதாரங்களைத் தற்காத்துக் கொள்ளவும் சாலையை மறித்து மூங்கிலால் தடுப்புகளை உருவாக்கி, போலீஸ், அரசு அதிகாரிகள், ஜிண்டால் ஊழியர்கள் என எவரும் உள்ளே வர அனுமதிக்கவில்லை அக்கிராம மக்கள்.
ஜிண்டாலுடன் ஒப்பந்தம் போடப்பட்ட பின் சில மாதங்களாகவே அக்கிராமத்தைச் சுற்றிப் போலீஸ்படை குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திசம்பர் 10-ம் தேதி கூடுதலாக மூன்று படைப்பிரிவுகளை ஜகத்சிங்பூரின் எஸ்.பி அகிலேஸ்வர் சிங் தலைமையில் உருவாக்கியது.  இதைக்குறித்து எஸ்.பி சிங் கூறுவது, கடந்த திசம்பர் 4-ம் தேதி பாட்னாவில் வசிக்கும் பிரபாத் ராவுட் என்பவரது வீட்டில் 2 வெடிகுண்டுகள் போடப்பட்டதாகப் புகார் ஒன்றை அவர் எங்களுக்கு அளித்தார். இது குறித்து விசாரிக்கச் சென்றபோது போலீசாரை அந்த கிராம மக்கள் கற்களை எறிந்து அடித்துள்ளார்கள் என்றும் இதனால் எதிர்பாராத விபரீதங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ்படையானது அங்குக் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் குண்டு வெடித்ததற்கான எந்தவொரு தடயமும் அங்கு இருப்பதாக தெரியவில்லை. வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் கூட குண்டு வெடித்ததுபோல் எந்தவித சத்தமும் எங்களுக்குக் கேட்கவில்லை என்றே கூறுகிறார்கள். மேலும் குண்டு எறிந்தவர்களின் மீது எந்தவித கைது நடவடிக்கையும் இல்லாமல் அதைப்பற்றி துளிகூட பொருட்படுத்தாமலும் இருப்பது, போலீஸ்படை இந்தப் போலியான புகாரின் அடிப்படையில் கிராமத்தினுள் நுழைவதற்கும் அப்பாவி மக்களின் மீது பழிப்போட்டுப் போராட்டங்களை நசுக்க நடந்தேறும் சதியாகவே இவை இருப்பது கண்கூடு.
கடந்த 2 மாதத்தில் போலீஸ்துறை போராடுபவர்கள் மீது புதியதாக 11 வழக்குகளைப் போட்டுள்ளதாக சரிதா பார்பண்டா (sarita barpanda) என்ற சட்ட ஆர்வலர் குறிப்பிடுகிறார். மேலும் உச்சநீதிமன்றம் கடந்த வாரத்தில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் மீது போடப்பட்ட வழக்குகளில் 104 ஆண்களுக்கும், 20 பெண்களுக்கும் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. முன்பு போஸ்கோவிற்கு எதிராகப் போராடும் மக்களின் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளைப் போட்டுத் துன்புறுத்தியது ஒடிசா அரசு. அப்படிப் போடப்பட்ட வழக்குகளில் பல பிணையில்லாத வழக்குகளாக இன்றும் நிலவையிலுள்ளன.
இது மட்டுமல்லாமல் திங்கியா கிராமத்தில் உள்ள தங்களது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சஷ்மிதா மாலிக் மற்றும் அவரது 11 வயது மகளைச் சிறுமி என்றும் பாராமல் கைது செய்துள்ளது. திசம்பர் 20 அன்று, 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை மாகால என்ற பகுதியில் வெறித்தனமாக அடித்துத் தாக்கியுள்ளது போலீஸ் படை. மேலும் அங்கிருக்கும் வெற்றிலைத் தோட்டங்களையும் அழிக்க முற்பட்டுள்ளது.
ஜனவரி 14-ம் தேதி, பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது நிலங்களை அத்துமீறிக் கைப்பற்ற துடிக்கும் போலீசுக்கு எதிராக ஒன்றிணைந்தனர். போலீஸ்துறையோ இவர்களின் மீது கொடூரமான வன்முறையை நிகழ்த்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 8 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 11 பேரும் அடக்கம். காயமடைந்த குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரும் எந்தவித மருத்துவ உதவியுமில்லாமல் அவதிப்பட்டுள்ளனர்.
ஜிண்டால் நிறுவனத்திடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு போலீஸ் எங்களை நிலங்களைவிட்டு மிக மோசமாகவும் வலுக்கட்டாயமாகவும் அடித்து வெளியேற்றுகிறது என்று ஏழு வயது குழந்தையான சுபாஸ்மிதா சட்டபத்தி (subhasmita satapathy) இன் ஆற்றுபடுத்த முடியாத அழுகையைப் பார்த்த மக்கள்  பின்வாங்காமல் போராடி வருகிறார்கள். நாங்கள் ஒருபோதும் எங்கள் நிலங்களைத் தொழிற்சாலை அமைப்பதற்காக விட்டுக் கொடுக்கமாட்டோம். எங்களின் கண்முன்னே இக்காடும் கடலும் நாசமாகிவிடாமல் வருங்கால பிள்ளைகளுக்காக இவ்வளங்களை பாதுகாத்து வைக்கும் பொறுப்பு எங்களிடமுள்ளது என உணர்ச்சி ததும்ப பேசி வருகின்றனர் அம்மக்கள்.
படிக்க :
♦ ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!
♦ சட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு !
வெகுநாட்களாக வெற்றிலைத் தோட்டமாக உருவாக்கி வளர்த்த நிலங்களைக் காட்டுப்பகுதி எனக்கூறிப் பட்டா வழங்காத ஒடிசா அரசுதான் ஜிண்டால் என்ற கார்ப்பரேட்டுக்கு மட்டும் வனப்பகுதியை அப்படியே வாரிக் கொடுத்திருக்கிறது.
ஏற்கனவே ஜகத்சிங்பூரின் பிராதிப் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையால் சுற்றியுள்ள எங்கள் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் இங்கு அமைந்தால் அழிவு நிச்சயம் எனக் கூறி அக்கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தங்களது கிராமத்தையும் வயல்வெளிகளையும் காடுகளையும் கடலையும் நாசமாக்கவே கொண்டுவரப்பட்டுள்ள ஜிண்டால் உத்கல் ஸ்டீல் (JUSL – JSW UTKAL STEEL LTD) என்ற ஒருங்கிணைந்த எஃகு தொழிற்சாலை நிறுவனத்தை விரட்டியடிக்க, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் எதிர்த்துப் மிகப்பெரும் போரட்டத்தை அவர்கள் கையிலெடுத்துள்ளனர். அம்மக்களுக்கு இப்படிப்பட்ட போரட்டங்கள் ஒன்றும் புதியதல்ல.
போஸ்கோ நிறுவனமும் மக்கள் போராட்டமும்
2005-ம் ஆண்டு தென்கொரியா நாட்டைச் சேர்ந்த போஸ்கா என்ற நிறுவனம் 52,000 கோடி முதலீட்டில் பிரம்மாண்டமான இரும்பு ஆலை ஒன்றை நிறுவ ஒடிசா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டது. இந்த ஒப்பந்தம் தனியார்மயம், தாராளமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் மிகப் பெரிய வெற்றியாக ஒடிசா அரசு மற்றும் அந்நிறுவனத்தால் பீற்றிக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ரூ.52,000 கோடி முதலீடு, இரும்புச் சுரங்கம், எஃகு ஆலை, இரும்பு ஏற்றுமதிக்கான துறைமுகம், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு என ஒட்டுமொத்தமாக அம்மாநிலத்தின் ‘வளர்ச்சி’க்காகவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் பெருமையாகக் கூறப்பட்டது. அதன்படி ஆலை அமைப்பதற்கென 4004 ஏக்கர் நிலம், அடிக்கட்டுமான வசதி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் குடியிருப்புக்கான நகரத்தை உருவாக்க 2000 ஏக்கர் நிலம், இரும்பு சுரங்கம் அமைப்பதற்கு 6177 ஏக்கர் நிலமென மொத்தம் 12000 ஏக்கர் நிலம் ஜகத்சிங்பூரில் கையகப்படுத்த திட்டம் போடப்பட்டது.
போஸ்கோ ஆலை அமைவதற்காகப் பலிகொடுக்கப்படவிருந்த கிராமங்கள், ஜகத்சிங்பூர் மாவட்டக் கடலோரத்தை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் விவாசய நிலங்கள் குறிப்பாக திங்கியா, கோவிந்தபூர், கடகுஜங்கா, நுவாகாவ் போன்றவை ஆகும். இக்கிராமங்கள் விவசாயம் செய்வதற்கு ஏதுவாகப் பிரத்தியேகமான நில அமைப்பையும் அதற்கு ஏற்றாற்போல்  விவசாயமும் செழிப்புடன் நடைபெற்றுவரும் பகுதிகளாகும். முக்கியமாக இங்கு வெற்றிலை மற்றும் திராட்சை, முந்திரித் தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. அதோடு நெல் மற்றும் பல காய்கறி வகைகளும் பயிரிடப்பட்டு வருகிறன்றன. குறிப்பாக வெற்றிலை மற்றும் முந்திரி பயிரிடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு வர்த்தகமும் நடைபெற்று வருகிறது.
இப்பகுதியின் செழிப்பிற்கு அங்குள்ள நீர்வளம் முக்கியக் காரணமாக இருக்கிறது. இதற்கு ஆதாரமாக அங்குள்ள மாகநதி, கதாஜோடி, தேவி, ஜடாதாரி போன்ற ஆறுகள்  காணப்படுகின்றன. இவைமட்டுமல்லாமல் பத்துக்கும் மேற்பட்ட காட்டாறுகள், நீரோடைகள், அருவிகளுடன் இலட்சக்கணக்கான மரங்களைக் கொண்ட காட்டுப் பகுதிகளுடன் முற்றிலும் இயற்கை வளத்துடன் அமைந்துள்ள பகுதியாக இவை உள்ளன. இவ்வளவு செழிப்புடன் இருக்கும் கிராமங்களைத் தனது இலாப வெறிக்காக நாசமாக்கவுள்ளது இந்நிறுவனம்.
ஆலை அமையவிருந்த பகுதியில் ஏழு கிராமங்களைச் சேர்ந்த விவசாயத்தைச் சார்ந்துள்ள 22,000 குடும்பங்களும், ஆலையின் தேவைக்காக உருவாக்கப்பட இருக்கும் துறைமுகம் அமையவிருந்த சுந்தர்கர் மாவட்டம் கந்ததர் பகுதியில் வாழ்ந்துவரும் பழங்குடியினக் குடும்பங்களும் இதனால் பாதிக்கப்படும் ஆபாயங்கள் இருந்தன.
படிக்க :
சிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் !
ஜிண்டால் – நிலக்கரிக்கு லஞ்சம் இரும்புக்கு தடிக்கம்பா ?
அந்நிறுவனம் வன உரிமை சட்டத்தை மீறி அங்குள்ள காட்டுப்பகுதிகளைக் கையகப்படுத்தியதோடு அல்லாமல், ஆலைக்கு முறையான ஒப்புதல் பெறுவதற்கு முன்பே அங்குள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தியது. இத்தகைய சட்ட மீறல்களுக்குத் துணையாக நின்றது அம்மாநில அரசு.
இப்பகாசுர நிறுவனத்திடமிருந்து தங்களுடைய வாழ்வாதாரங்களான நிலத்தையும், வனப்பகுதிகளையும் காப்பாற்றுவதற்காக அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து, தீரமிக்கப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஒட்டுமொத்த கிராமமுமே பெரியவர்கள் சிறுவர்கள் என்று பாராமல் ஒன்றாக இணைந்து போரடினார்கள். போஸ்கோவுக்கு ஆதரவாக நின்று ஒடிசா அரசு தமது சொந்த மக்களின் மீது பல்வேறு கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவியது. பலரது இன்னுயிர்கள் இந்த அரசவேட்டையில் பலியாயின. இவற்றிற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து தங்கள் கிராமமும், இயற்கை வளங்களும் இக்கொடியவர்களிடம் சிக்கி நாசமாகிவிடக் கூடாதென்பதைத் தெளிவாக உணர்ந்த அம்மக்கள் போஸ்கோ பிரதிரோத் சங்க்ராம் சமிதி என்ற போஸ்கோ நிறுவனத்திற்கு எதிரான கூட்டமைப்பினை உருவாக்கித் தொடர்ந்து போராடியதன் விளைவாகச் சரியாகப் பத்து ஆண்டுகள் கழித்து 2015-ல் நாசகர போஸ்கோ நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைவிடப்பட்டது. இது பத்தாண்டுகளாக சளைக்காமல் நடந்த  மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி. ஒருமதயானையை சிற்றெறும்பு வீழ்த்திய மாபெரும் கதை.
பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்காக நாட்டின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்கும் இத்தகைய தேசவிரோத, மக்கள்விரோத செயலுக்குப் பெயர்தான் வளர்ச்சியாம். முன்னேற்றமாம்.
போஸ்கோ, ஜிண்டால் ஆலைகள் மட்டுமல்ல எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், அணு உலை, நியூட்ரினோ ஆய்வுக்கூடம் போன்ற தமிழகத்தையே நாசமாக்கத் துடிக்கும் திட்டங்களும் இதே வளர்ச்சி முன்னேற்றம் என்ற பெயரில்தான் கொண்டுவரப்படுகின்றன. ஒட்டுமொத்த நாட்டையும் சுடுகாடாக்கும் இந்த மறுகாலனியாகத் திட்டங்களை கார்ப்பரேட் பாசிசத்தின் தாக்குதல்கள் என்று ஒருங்கிணைந்த முறையில் புரிந்துகொண்டு முறியடிக்கக் களமிறங்க வேண்டும்.

மா.கார்க்கி
செய்தி ஆதாரங்கள் : Countercurrents, Indiatoday, The Wire,
Vinavu, Gaonconnection, Frontline

கும்பாபிஷேகத்துக்கு வராத கொரோனா – கறிக்கடைக்கு மட்டும் வருமா ?

சிவாச்சாரியர்களுக்கு ‘வராத’ கொரோனா தொற்று – கருத்துப்படம்

 

கருத்துப்படம் : மு. துரை

Hindu fanatic goons go berserk in Tripura ! Need An Anti-Fascist People’s Front and Protests!

In 2014, the BJP said it would create employment for 2 crore people a year. And with this rhetoric, it seized power. Similarly, in Tripura during the 2018 assembly elections, the BJP promised to create employment for 50,000 people a year and to implement the 7th Pay Commission’s recommendations. With these empty promises, it defeated the Communist Party of India (Marxist) by a small margin and seized power in the state.
Soon after winning the elections, the fascist Hindutva mob demolished the statue of Comrade Lenin in Belonia and proclaimed its arrogance. After assuming power, the BJP forgot its poll promises. As a result, dissidency increased against the BJP government and there are sporadic protests. The Hindutva fascist mob has been continuously attacking the CPM party cadres not only to divert the attention of the people from the government’s failure but also to eliminate the communists from the political arena, which is one of their main agenda.
The BJP held an event in Ambassa, Dhalai district, where the BJP Chief Minister Biplab spoke hysterically to his party cadres that the communists should be uprooted from Tripura by 2023. The aim of the Hindutva fascists is to seize power by strategically opposing China and Bangladesh, attacking minorities in the name of infiltration of Bangladeshi Muslims, hatred against Christians in the northeast and instilling jingoism and religious fanaticism among the people. A statement by a former RSS pracharak and Tripura election in-charge Sunil Deodhar proves this: “Northeastern states are an area of importance to the RSS to fulfill the dream of Hindurashtra”.
Read :
Sri Lanka reeling under debt : Western imperialists desperate to dominate by intensifying the crisis!
National Monetization Pipeline (NMP): An arrangement for re-colonization and plunder
In order to condemn the rampant unemployment and expose the BJP’s jumla of creating 50,000 jobs a year, the Democratic Youth Federation of India (DYFI) planned to organise a rally with the slogan ‘Where is my job?’ by obtaining proper permission. However, the police finally refused permission for the rally and BJP goons attacked those who tried to march against the ban.
In Tripura, 20 of the total 60 assembly seats are mostly populated by tribals. Because of the failure of the BJP to deliver on its poll promises, there has been discontent and hated among the people. This culminated in the defeat of the BJP and its allies in the Tripura Tribal Areas Autonomous District Council (TTAADC) elections held on April 2021.  As the party is alienated from the people, the hindu fanatic mob has decided that violence and terrorism are the only way to win the upcoming 2023 Assembly elections.
Since March 2018 to June 2021, 662 Leftist’s party offices, 204 offices of Leftist mass organisations, 3363 houses of CPI(M) members and supporters, 659 shops have either been gutted, ransacked or looted and 1500 livelihood centres such as fish ponds, rubber trees and so on have been destroyed by the Hindutva goons. On September 8 this year, the Sangh Parivar goons unleashed violence on CPM party cadres and set ablaze 42 CPI(M) party offices, 67 houses and shops of CPI(M) supporters and Desharkatha media house.
The RSS-BJP thugs has set fire not only to CPM party offices but also attacked offices of other political parties and the offices of various newspapers and electronic media. Vehicles have been set ablaze. Such atrocities have taken place not only in Agartala, but in many other cities also. The state police were just bystanders during such a violent rampage. According to the CPI(M) Central Committee’s statement, the CRPF guards, stationed at the State office in Agartala, were mysteriously withdrawn an hour before the mob attack.
These attacks are not going to stop there. This fascist mob, which holds power, will not stop until it exterminates all the left thinkers, rationalists and minorities as a whole. These hindu-fanatic fascist terrorist gangs can never be eradicated through elections.
The RSS is a semi-secret deadly fascist organisation that doesn’t believe in the electoral system. It is a movement that has been ideologically trained from grass-root level to the top and has been systematically mobilized with a number of trainings, including arms training. Therefore, brahmanical fascism can only be brought down by an organisation or a coalition of various organisations capable of defeating the hindu-fanatic fascist organisation outside the electoral politics.
But the CPM’s handling of the issue, with no plans to confront the saffron fascist thugs, exposes its inability. The CPM General Secretary Sitaram Yechury bluntly refers to these attacks as “an attack on opposition, an attack on democracy” and the party is holding token rallies in the state capital Agartala and symbolic protests in other states against this murderous attack.
The CPM didn’t mobilize the masses against the fascist forces and made no attempt to impede the growth of the Sangh Parivar organisations not only during these ongoing attacks, but also during the CPM’s four-year term before the 2018 Tripura Assembly elections, when the Modi regime assumed power (i.e., between 2014 and 2018).
The CPM is considering the saffron-fascist forces as just another electoral political party and handles them with a democratic approach. Because of this approach, the RSS started to take root fast even during CPM’s regime. After BJP’s loss in the 2013 Assembly elections, the RSS worked among a wide range of people through various organisations and the number of Shakhas rose from 60 in 2014 to 265 in 2018.
Read :
New Democracy || Puthiya Jananayagam in English || Magazine
Uttar Pradesh : No ‘viable alternative’ within Hindurashtra !
A good example in support of this fact is that in the 2018 elections, a large number of civil servants and their family members belonging to the CPM voted for the BJP. The CPM failed to create an understanding on the Hindutva fascist RSS-BJP not only among the people, but also among its own party members. A local RSS activist says “ordinary people do not know who Marx is, they have never studied Das Kapital”. This indicates CPM’s weakness.
Thus, the CPM had made the people helpless without a plan to defeat the fascist forces on the ground and the reason for this is the party’s treacherous revisionist parliamentary path. This is not the first time in history that we’re facing fascism. History has seen it before, when Hitler came to power in Germany. Hitler massacred the Communists before massacring the Jews and he was able to seize power through the treachery of the revisionist Communists there.
Therefore, the murderous attack on the CPM cadres must be seen from this background and dimension. We need to raise awareness among the people against Hindutva fascist terrorism and defeat these fascist thugs by actively and systematically fighting on the ground. For this, it is imperative for the revolutionary organisations, democratic forces and working class people in Tripura to come together to build an Anti-fascist People’s Front and fight!
Appu

மக்கள் அதிகாரம் – முதலாவது கடலூர் மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !

PP Letter head20.01.2022
பத்திரிக்கை செய்தி
முதலாவது கடலூர் மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
முதலாவது கடலூர் மண்டல மாநாடு 20.1.2022 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது. கடலூர் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் முறைப்படி தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி மண்டலக் குழுவிற்கான தேர்தல், தேர்தல் அலுவலர்களான தோழர்கள் அமிர்தா, கோபிநாத் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மண்டலத்திற்கு ஐந்துபேர் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கடலூர் மண்டலச் செயலாளராக தோழர் முருகாநந்தம், இணைச் செயலராக தோழர் அசோக்குமார், மண்டலப் பொருளாளராக தோழர் சக்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருதாச்சலம் கிளை செயலாளராக தோழர் அசோக்குமார், விஜயமாநகரம் கிளைச் செயலாளராக தோழர் தனசேகர், கடலூர் கிளைச் செயலாளராக தோழர் சக்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும்,
“காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!”
ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவோம் என உறுதியேற்றனர்.
தோழமையுடன்
தோழர் முருகாந்தம்
கடலூர் மண்டல செயலர்
மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு : 97912 86994

National Monetization Pipeline (NMP): An arrangement for re-colonization and plunder

On August 23, 2021, Nirmala Sitharaman, the union finance minister launched the National Monetization Pipeline (NMP) project on the recommendations of NITI-AYOG, an agency established to plan and implement the re-colonization process combining Liberalization-Privatization-Globalization (LPG) policies. The BJP government claimed that by way of selling away vital public assets at an amount of Rs Six Trillion (Rs Six lakh crore) will be mobilized and the same will be deployed to create the national infrastructure that will take India on the path of faster growth.
Accordingly, the BJP government plans to lease out 26,700 km long highways, 90 passenger trains, 400 railway stations, 741km long train tracks, 21 airports, 40 harbors, 160 coal mines, 3,930 km long pipelines of public sector units (PSU), stadiums in Delhi and Bangalore cities, 14,197 telecommunication towers of telecom PSUs companies, and food grain storage warehouses to corporate companies. The lease will be for a period of 25 years done in 4 phases and expects to mobilize around Rs Six Trillion.
The true value of these public assets is several times higher than the Modi Government’s estimates of Rs Six Trillion. P.Chidambaram, former minister of finance in the Manmohan Singh government claimed the government can earn this amount of Rs Six Trillion within 4 years i.e. Rs 1.5 Trillion per year from the highly-valued PSUs of the Navaratna alone. Thus anyone can understand the dubious nature of the Modi government’s projections to deliberately sell off the highly valued profitable PSUs to the selected corporates.
Read :
Sri Lanka reeling under debt : Western imperialists desperate to dominate by intensifying the crisis!
Uttar Pradesh : No ‘viable alternative’ within Hindurashtra !
These assets may probably be sold away at throw-away prices to corporates like Ambani and Adani. This is what lead Rahul Gandhi, the leader of the Congress party to claim Modi is selling away the assets created in 70 years of independence in 7 years just to benefit his friends. He also added that privatization took place during the Congress rule too, but Modi’s privatization is to sell off the public assets used by millions of people every day and that engages millions of workers. Rahul acknowledges the fact that Congress is not against privatization and what it did was minimal, but what Modi is involved in a maximalist privatization. At best Rahul Gandhi differs only in the quantum of privatization. Not only Rahul, but most of the opposition parties, the bourgeois media, and other political analysts also criticize the NMP only to this extent. But the NMP is no doubt an arrangement to push the country into an extreme re-colonization. It is a leap forward in the process of restructuring the entire nation to facilitate corporate plunder.
At the same time, new farm laws aim to drive the peasants out of their lands and hand it over to the corporates. Similarly, driving fishermen from the country’s coastline to hand over the coast to build harbors, parks, luxury hotels, sagarmala projects are planned through the newly enacted amended Marine Fishery Regulation Act (MFRA). In addition, Gas Authority of India Limited (GAIL) pipelines, methane gas exploration in delta regions of Tamil Nadu, eight-lane road projects named Bhartamala that expect to carry the minerals from one end to another region of the country are all designed to plunder the nation. The newly enacted labour laws that legitimize the slave labor contracts deprive the available meager rights of the labour. All these together, the NMP becomes an important milestone in the re-colonization process.
What is National Monetization Plan (NMP)?
The NMP is an integral part of the National Infrastructure Pipeline (NIP). Nirmala had already made it clear in the Union Budget of 2021-22 that both these plans are linked to each other. In order to understand these ‘pipelines,’ we may take the example of the human heart. The heart is divided into two halves as right and left, and together they perform different but essential functions. The right side absorbs the oxygen-depleted blood and sends it to the lungs where it gets loaded with oxygen. The left absorbs the oxygenated blood and sends it back to the body again. In the process, the two sides perform different jobs in the oxygenation process. Similarly to facilitate the corporate plunder both the NMP and NIP operate in unison to restructure a re-colonized country. The estimated Rs 111 Trillion mobilized by selling away these public assets through NMP will be spent on creating new infrastructure under the NIP. Accordingly, this Rs Six Trillion is just the beginning.
New milestone in looting by re-colonization
Where and how the Modi government is going to mobilize such a large sum is the moot question. They contemplate three sets of actions.
Firstly, they are creating a financial framework to accelerate the process of mobilizing infrastructure financing through a Development Finance Institution (DFI). In that regard, a new law came into force in March 2021 to promote a new bank in the name of the National Bank for Financing Infrastructure and Development (NBIFD). The government has announced that this bank will have a share capital of one Trillion.
Secondly, they want to create a momentum in the monetization of existing assets. This amounts to the subsequent sale of assets and projects in a continuation of the first monetization plan. In this way, they are planning to fund future infrastructure projects through the money thus mobilized. The question arises as to what other infrastructure they are going to spend on by selling away the existing ones created over the last seventy years and more. Sagarmala, Bharatmaala, smart city, GAIL, methane explorations, loans to corporates for starting new plants are some of the future infrastructure to be created in the name of “national development” facilitating corporate plunder. This is the ‘New India’ that Modi dreamed!
Thirdly, they want to increase the capital expenditure of the Union and the State governments through the budget. This means most of the budget funds will be earmarked to fund giant corporate companies to start their business. In that sense, the nature of the government budget will be changed in its entirety. The welfare schemes shall no longer remain with the government but funding the corporates through people’s money will take that place. This is the “AtmaNirbharta” budget for the new India!
This is a continuous process of re-colonization. When this trend is completed, the national resources such as the roads, public transports, electricity, agriculture, forests, mountains, sea coasts, etc., would come under the dominance of corporates. The government may only have the police and military under it’s control. This is what we call a milestone of re-colonization.
Corporate plunder lurking behind ‘growth’!
While indulging in this exercise of NMP, Modi clique repeats the same bogus claims of ‘national development’ and ‘employment generation’. The goods and services tax (GST) that was brought by the Modi government with similar claims has pushed the country to the brink of bankruptcy and increased unemployment. Modi continues to carry on with this fraudulent campaign in the goebbelsian style.
First of all, what have been the credentials of those who gets these infrastructure or public funds. Tycoons like Vijay Mallya, Nirav Modi, and industries such as Videocon and CAIRN and many corporate bosses have committed frauds, defrauded bank interests, taken away public properties with false claims and details, and finally cheated the government by colluding with bank officials. Aside from this, the Modi government announced in Mid-September that it would write off Rs Two Trillion bad debts that corporate bosses have borrowed from public sector banks. A new bank in the name of National Asset Reconstructing Company Limited (NARCL) will be formed to repay the debts of the corporates by the bank. Ever since the Modi government came into power, the bad debts of the corporate companies rose to Rs 18.28 Trillion. Of this, about Rs Six Trillion was written off by the Modi government. It is for sure that, through this dubious bank i.e. NARCL all the corporate bosses will escape without repaying. This is what the Modi clique portrays as national development.
Plunder by Enron, a model !
It is well known that, in 1992, the US corporation Enron proposed to establish a power project in Maharashtra with a capital of USD 3 Billion in the name of Dabol power corporation. Enron’s fraud is well known. It happened in the initial stages of the Liberalization-Privatization-Globalization era. The project cost was deliberately spiked up, lands were illegally occupied, water resources depleted, but the company and produced not even a single unit of electricity, but it used the police to attack the local people. Enron was a prelude to a corrupt and fascist rule that is to come. The Maharashtra State Electricity Board (MSEB) that was operating in profit until this time incurred a loss of Rs.16.81 Billion in 1999 and 2000. The government bought power from the company at a price that is several times higher. When Enron was declared bankrupt, the scandal got exposed that public money was used by the company, and the state government paid for electricity that it did not even produce. Enron is a model in the act of plundering through privatization. In the end, the result is an environmental catastrophe, the devastation of people’s livelihood, inflation, and an increase in repression. Most corporate companies follow the same route
Will the employment opportunities increase?
The argument by Modi clique that the employment opportunities will increase through the national monetization scheme is dubious and fraudulent. Modi government’s actions in the past and present have not realized in any such increase. Now, there are 225 public sectors units in the country. In 1960-61, around 7 million persons were employed directly and indirectly. In addition, millions of workers received employment on a contract basis through allied units. In 1997, there were 20 million persons engaged in PSUs and related units. As of 31 March 2017, the number has fallen to 11.3million, which is a reduction of 44% from the peak. Similarly, employment in the private sector has shrunk from 7.55 million in 1983, to 1.64 million between 1994 and 2000.
Recruitments in the public sector have been completely paralyzed, especially since the liberalization–globalization era. Further, public sector employment has plummeted due to losses in business, lay-offs, and privatization. On the other hand, the modern slavery system of contract employment that guarantees no job security has completely devastated the employees. Petty jobs created through casual labour engagement, contract labour, and even the gig workers such as Zomato and Swiggy are counted as employed in India. The data by the government is totally rigged and even with that, the unemployment has risen to 7% in September with approximately 270 Million people.
When the NIP comes in full-force the workers will be forced into modern slavery and thrown into an irreversible hell. On the other side, millions of people would be pushed into unemployment, hunger, and made to live in modern slums without basic amenities. The saffron-corporate fascist’s new Hindurashtra is to divide the country into two camps by taking the poor and unemployed people into slums and the highly paid into smart cities.
Read :
New Democracy || Puthiya Jananayagam in English || Magazine
Amma Tasmac Song – English Sub Title
There is no doubt that when the NMP and NIP become full-fledged, the people’s livelihood will be pushed to the bottom and over 70% of the population will be made useless, portrayed as enemies of development and an obstacle to national progress. When COVID-19 struck, a national tragedy of millions of workers were driven home by barefoot. Similarly, the peasants are fighting on the streets for more than 10 months to repeal the farm laws (Now the laws repealed by the Modi government). They have been shown as second-class citizens of the country. Despite skyrocketing prices of petrol, diesel and cooking gas the ordinary people are unable to resist this. Life becomes harder by the day for the vast majority. The aim of the saffron-corporate fascist Modi clique is to aggravate this pitiable situation.
Congress and BJP incorporate service
Sachin Pilot, a Congress leader taunted that any government exists to protect the property of the people but the Modi’s government is here to sell them. According to him, Congress dis-invested only the loss-making PSUs but the BJP sells away all the profit-making ones. He agrees that both Congress and BJP are here to sell away the public properties. PSUs became loss-making because both the Congress and the BJP are involved to conspire and cripple them. When he spoke during the thirtieth anniversary of liberalization in India, P.Chidambaram argued that the concessions to corporates are a necessity. At the same time, Congress pretends to oppose the plan and it is a comedy that they announced hoisting black flag protests to Modi government’s NMP and NIP plans.
The Brahminical media including the ‘Tamil-Hindu’ and ‘Dinamani’ that never fails to preach patriotism published this treasonous news about the announcement of NPI as a box news item. Other media had totally blacked out.
A great plunder is going on in front of our eyes. This is not only an economic project but also a political attack through oppressive statutes, and surveillance mechanisms by the saffron-corporate fascist regime. The immediate task before us today is to take these facts to the people and ignite the minds of the working class for their political power and economic welfare.
Velmurugan

மக்கள் அதிகாரம் – முதலாவது மதுரை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!

PP Letter head
பத்திரிகை செய்தி
முதலாவது மதுரை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
அன்பார்ந்த உழைக்கும் மக்களே !
முதலாவது மதுரை மண்டல மாநாடு 19.1.2022 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது. மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் முறைப்படி தேர்தல் நடைப்பெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி மண்டல குழுவிற்கான தேர்தல் , தேர்தல் அலுவலர்களான தோழர்கள் வெற்றிவேல் செழியன், சாந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மண்டலத்திற்கு ஐந்துபேர் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை மண்டலச் செயலாளராக தோழர் குருசாமி, மண்டலப் பொருளாளராக தோழர் பரமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
போடி கிளைச் செயலாளராக AT கணேசன், ராஜபாளையம் கிளைச் செயலாளராக தோழர் முருகன், திருமங்கலம் கிளைச் செயலாளராக தோழர் பரமன், உசிலை கருக்கட்டான்பட்டி கிளைச் செயலாளராக தோழர் ஆண்டவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும்
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் !
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம் !
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம் !
ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவோம் என உறுதியேற்றனர்.
தோழமையுடன்
தோழர் குருசாமி
மதுரை மண்டல செயலர்
மக்கள் அதிகாரம்
78268 47268

இந்து தேசியவாதம் : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு!

லக சமத்துவமின்மை அறிக்கை 2022 இந்தியாவில் அப்பட்டமாக வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆனால், தற்போதைய ஆட்சியின் கீழ், விதந்தோதப்படுகிற பொருள் குவிப்பு மற்றும் சமூக பிளவுகளை தீர்க்கத் தேவையான ஒரு விவாதத்தைக் கூட பயங்கரவாதச் செயல் போல நடத்த வேண்டிய நிலையே இருக்கிறது.
தேசம் என்பது “மக்கள் சமூகத்தைக் கொண்ட ஒரு கற்பிதம். அங்கு உண்மையில் ஏற்றத் தாழ்வும், சுரண்டலும் இருந்தாலும் கூட தேசம் என்பது ஆழ்ந்த, சமநிலையில் உள்ள தோழமையான மக்கட் சமூகம் என எப்போதும் கற்பித்துக் கொள்ளப்படுகிறது”. – பெனடிக்ட் ஆண்டர்சன்.
“காசியிலிருந்து கோவை வரை கடவுள் சிவன் எங்கெங்கும் உள்ளார்” – மோடி, பிப்ரவரி 24, 2017.
“உலகில் உள்ள மிகவும் ஏற்றத்தாழ்வான நாடுகளில் ஒன்றாக இன்றைய இந்தியா உள்ளது” – உலக சமத்துவமின்மை அறிக்கை 2022.
அறிஞர் பெனெடிக்ட் ஆண்டர்சனின் மிகவும் புகழ் பெற்ற கூற்றுப்படி அன்றைய ஐரோப்பா மொழி வழி தேசங்களாக உருவாகி, மதக் குழுக்களுக்கு பதிலாக ஒரு மதச்சார்பற்ற, அரசியல் சமூகமாக உருவானது. ஆனால், இன்றைய இந்தியாவோ திரும்பிச் செல்ல முடியாத வகையில் மதம் சார்ந்த ஒரு இனக்குழுவாக உருமாறிக் கொண்டுள்ளது.
படிக்க :
மோடியின் அடுத்த சாதனை : மிக அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா !
இந்திய குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் சாதிய பாகுபாடு !
ஆனால் இதில் கேலிக்கூத்தான முரண்பாடு என்னவென்றால் இந்த கற்பனையான மதம் சார்ந்த சமூகமானது மிக மிக மோசமான ஏற்றத்தாழ்வுடன், இதிலிருந்து மாறிவிடும் என்பதற்கான எந்த அறிகுறியுமற்று உள்ளது. உண்மையில், ஆன்மீக சமூகம் என சொல்லிக் கொள்ளப்படும் இது விளிம்பு நிலையிலும் மிக வறுமையிலும் உள்ள ஆகப் பெரும்பான்மையான மக்களைப் பற்றி கவலைப்படாதது மட்டுமின்றி, ஆடம்பர உல்லாச வாழ்க்கை வாழும் பரம்பரையினரின் ஊதாரி வாழ்க்கையை மூடி மறைக்கும் முகமூடியாகவும் உள்ளது.
மிக வறுமையில் அடித்தட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 50% பேரின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.53,610/- மட்டுமே. அதேநேரம் 10% உள்ள மேட்டுக்குடி பணக்காரர்களின் ஆண்டு வருமானமோ இதைவிட 22 மடங்கிற்கும் மேலாக உள்ளது. (இது உலகில் மிக மோசமான ஏற்றத்தாழ்வாகும்). இது சமீபத்தில் வெளியான உலக ஏற்றத் தாழ்வு அறிக்கை 2022-ல் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்.
மதச் சின்னங்களின் அடையாளத்துடனான ஆடைகள் அணிந்து, தலைமைப் பொறுப்பேற்று நாள் முழுதும் மதச் சடங்குகளில் பிரதமர் பங்கேற்பதை தேசிய தொலைக்காட்சி உடனுக்குடன் ஒளிபரப்புவது வழமையான ஒன்றாக நடக்கிறது. ஒரு கோயிலின் தலைவர் ஒரு அரசாங்கத்தின் தலைவராயிருப்பது, கோயில்களைப் புதுப்பிப்பது பற்றி நடுப்பக்க தலையங்கக் கட்டுரைகள் எழுதுவது, குடிமக்களுக்கு ஆன்மீக மதச் சடங்குகளுக்கு உதவுவது என்பதெல்லாம் எந்த ஒரு சிறு உறுத்தலுமின்றி நடந்து கொண்டுள்ளது.
இந்த விவரங்களுடன் கீழே குறிப்பிடுவதையும் இணைத்துப் பார்க்க வேண்டும்: உயர் பொறுப்புக்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், சிறுபான்மை மதத்தை கொடூரமான பேய்த்தனமிக்கதாகச் சித்தரித்து, ஈவிரக்கமற்ற முறையில் சிறுபான்மை மதத்தவர்களை அரசியல் பிரதிநிதித்துவத்திலிருந்து முற்றாக விலக்கி வைத்து, பெரும்பான்மை மதத்தை அரசுடன் முற்றிலுமாக ஒன்றிணைப்பது எனச் செய்து வருகின்றனர்.
இங்கே, தேசமும் மதமும் ஒன்றுக்கொன்று மாற்றீடு செய்யப்படுகிறது. தனிமைப்படுத்துகின்ற மற்றும் மத அடிப்படைவாதத்தைப் போன்றே, மிக வெளிப்படையாகவே கோபம், சீற்றம் போன்ற உணர்வுகளை ஊட்டியே இந்த தேசியவாதத்தை நோக்கி மக்கள் அணிதிரட்டப்படுகின்றனர். இப்படிப்பட்ட தேசியவாதம் தொடர்ந்து வெளிப்புற மற்றும் உள் எதிரிகளைத் தேடுகின்ற வெறித்தனமான மற்றும் மனப்பிறழ்வு நிலைமைக்கு மாறுவதோடு, இது தேசியத்திற்கு நேரும் அவமானங்களையும் எதிர்ப்பையும் கண்காணிக்கிறது.
ஜெனரல் பிபின் ராவத்துக்காக துக்கம் அனுசரிக்கப்பட்ட காலகட்டமானது, தேசியவாத உணர்வுகள் அசாதாரணமான முறையில் வெளிப்பட்டதைச் சந்தித்தது. அதில் மக்கள் இழிவான கருத்துக்களைக் கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். செய்தித்தாள்கள் தலைப்புச் செய்திகளில் ஜெனரலின் பெயரை கெளரவமின்றி குறிப்பிட்டதற்காக கோபத்தை எதிர்கொண்டன. ஆனால் இந்து தேசியவாத எம்.பி.க்கள் எந்த சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளாமல், நாதுராம் கோட்ஸேவை தேசபக்தர் என்று மீண்டும் மீண்டும் அழைத்த சூழ்நிலை தான் இன்று நிலவுகிறது.
இராணுவவாதமும் இராணுவத்தின் வீரமும் பெரும்பான்மை அதி-தேசியவாதத்தின் முக்கிய கூறுகளாக இருப்பதால் இது வியப்பளிக்கவில்லை. ஆனால் முரண்பாடாக, “அதன் சொந்த” இராணுவத்தினரைக் கூட விட்டு வைப்பதாக இல்லை. ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஒரு இராணுவ அதிகாரியின் மகள் கடும் துயரத்தில் இருக்கும் போதே, ஆளும் கட்சியான பெரும்பான்மையினருக்கு முரணான அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்ததற்காக கடுமையான மிரட்டலையும் கொடுமைப்படுத்தலையும் சமூக ஊடகத்தில் எதிர்கொண்டார். அன்பு, உரையாடல் மற்றும் இரக்கம் ஆகியவை நமக்கு அன்னியமாக்கப்பட்டு விட்டன. வட கொரிய அரசு அதன் முன்னாள் தலைவரின் நினைவு தினத்தை குறிக்கும் வகையில் சிரிப்பதை தடை செய்யும் தடையுத்தரவைப் (மேற்குலக பத்திரிகை தகவல்களின்படி) போல  இல்லாவிட்டாலும், இது கட்டளையிடுகிற தேசியவாதமே ஆகும்.
மதம் நிறைந்த அரசியல் துறையில், மக்கள் பக்தியைக் காட்டவும், பக்தர்களாக மாறவும் எதிர்பார்க்கப்படுகிறார்கள். அம்பேத்கர் நீண்ட காலத்திற்கு முன்பே, மதத்தில் பக்தி இரட்சிப்பை வழங்கலாம், அரசியலில் பக்தி என்பது “சீரழிவுக்கும் இறுதியில் சர்வாதிகாரத்திற்கும் ஒரு உறுதியான பாதை” என்று எச்சரித்தார். ஆனால் இப்போதோ, ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவதற்கான சேவையில் ஆளுமை வழிபாட்டு முறையை உருவாக்கியதாக கூறிக் கொண்டாலும், ஆன்மீக தெய்வத்திற்கும் தற்காலிக தெய்வத்திற்கும் இடையிலான கோடுகள் மிக மங்கலாக உள்ளன, மேலும் தேசிய அரசு ஒரு மதவாத கற்பனைதேசத்தையும் (உட்டோபியா) வழங்குகிறது.
இந்து தேசியம் என்கிற நஞ்சும் அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வும்
முக்கியமாக, மதம், அரசியல் மற்றும் தேசியவாதம் ஆகியவற்றின் ஒன்றிணைவு, அதன் விளைவாக வரும் தொல்லை என்னவென்றால் ஒருவர் தேசத்தை, ’விஸ்வ குரு’ என நம்புவதும், இதன் தொடர்ச்சியாக சமூகத்தில் உருவாகியுள்ள பிளவுகளைப் பார்க்க இயலாமல் மூடிமறைப்பதுமாக ஆகிறது
எடுத்துக்காட்டாக, உலக சமத்துவமின்மை அறிக்கை, இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் வருமானப் பங்கு மிக மோசமான நிலையில் 18%-மாக இருப்பதாக நமக்குச் சொல்கிறது.  இது உலகின் மிகக் குறைந்த பங்கான மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா (இங்கெல்லாம் பல நாடுகள் மத சர்வாதிகார ஆட்சியாளர்களால் ஆளப்படுகின்றன) நாடுகளில் உள்ளதை விட சற்றே அதிகம். இந்த புள்ளிவிவரம் சமூகத்தில் பெண்களின் அதிகாரத்தையும் நிலையையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்.
காலனிய ஆட்சியின் போது கூட இந்தியப் பணக்காரர்களில் முதல் 10% பேரின் வருமானப் பங்கு சுமார் 50% தான் இருந்தது, அதே நேரம் பிரிட்டிஷார் வெளியேறிய 75 ஆண்டுகள் கடந்து இன்றைக்கு அதே முதல் 10% பேரின் வருவாய் 57% ஆக உயர்ந்திருப்பது பற்றி “தேசியவாதி” அதிர்ச்சியடையவில்லை! தற்போதைய இந்துத்துவ தேசியவாத ஆட்சியின் போது மட்டும் இந்தியாவில் முதல் 1% பணக்காரர்களின் சராசரி சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. அதன் சராசரி சொத்து ரூ.3.24 கோடியாகும். அதே நேரம் அடித்தட்டில் உள்ள 50% பேரின் சராசரி சொத்து மதிப்பு வெறும் ரூ.66,000 ஆக உள்ளது.
ஜனநாயக நாட்டில் மாற்றுக் கருத்துக் கொண்டோரின் ஒவ்வொரு செயலிலும் தேசத் துரோக குற்றத்தைக் காணும் மத-தேசியவாதிகள், (அதிகாரப்பூர்வ எண்ணிக்கைக்கு அப்பால்) மில்லியன் கணக்கான அதிகப்படியான கோவிட்-19 இறப்புக்களால்  அதிர்ச்சியடையவில்லை.  இது அடிப்படை சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதில் கிட்டத்தட்ட முற்றிலும் அரசு தோல்வியால் நடந்த அரசின் படுகொலைகள். அல்லது உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியாவின் கவலைக்குரிய தரவரிசை: 116 நாடுகளில் 101-வது  இடம். இதில் இந்தியா அண்டை நாடுகளான பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தானுக்குப் பின்னால் இருப்பது பற்றியும் நமது மத தேசியவாதி கவலைப்படவில்லை. இந்தப் பெருந்தொற்று ஊரடங்கு காலத்தின் போது இந்தியாவின் கோடீசுவரர்கள் தங்கள் செல்வத்தை 35% அதிகரித்த அதே நேரம், பணக்கார இந்தியர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதித்ததாகவும், இதே கோவிட்-19 முடக்கத்தின் போது நாட்டின் மக்கள் தொகையில் 24% பேர் மாதத்திற்கு சராசரியாக ரூ.3,000 மட்டுமே சம்பாதித்தது பற்றிய புள்ளி விவரங்களைக் கண்டும் அவர் அதிர்ச்சியடையவில்லை.
நமது நாட்டில் இந்தப் பெருந்தொற்றைத் தொடர்ந்து வறுமையில் தள்ளப்பட்டோர் எண்ணிக்கை 15 – 20 கோடி அதிகரித்து விட்டதாக மதிப்பீடுகள் கூறுகின்றன. இது மொத்த ஏழைகளின் எண்ணிக்கையில் ஏறக்குறைய பாதி அளவாகும். சுதந்திரத்திற்குப் பின் நடந்த மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக இந்த வறுமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியைத் தொடங்கியதே பணமதிப்பழிப்பு என்ற பேரழிவான நடவடிக்கை தான். இது பக்தி அரசியலின் நேரடி விளைவாகும். இந்த பக்தி அரசியல் காரணமாக இங்கு மிக முக்கியமான முடிவுகள் கூட எந்தவித விவாதமும் பரிசீலனையும் இன்றி உயர் நிலை தலைவர்/கடவுளிடம் இருந்து நேரடியாக வருகிறது. இந்தியக் குடியரசுத் தலைவருக்குக் கூடத் தெரிவிக்கப்படாமல் தான் இந்த பணமதிப்பழிப்பு முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் இந்தப் பிரச்சினைகள் பற்றிப் பொது மக்களிடம் மயான அமைதி நிலவுகிறது. இதற்குக் காரணம், ஜனநாயகம், உரிமைகள், சமத்துவம், விவாதம் என்றிருந்த அரசியலின் இடத்தில் அடிப்படையிலேயே மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, அந்த இடங்களில் கடமை, தியாகம் (குறிப்பாக பணமதிப்பழிப்பின் போது பார்த்தது), மரியாதை (அதிகாரத்திற்கு), கீழ்ப்படிதல், இன்னபிறவாக மாற்றப்பட்டுவிட்டது.
இந்துத்துவ தேசியவாதமானது ’சமஜிக் சம்ரஸ்டா’ (சமத்துவ சமூகம்) எனப் பேசுகிறது, ஆனால் சாதியை அழித்தொழிப்பது பற்றிப் பேச மறுக்கும் அதே நேரம், ஆதிக்க சாதியினரின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறது. “மதச்சார்பற்ற” தேசியம் பேசிய சமத்துவ காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் அரசியல் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு, அந்த சமத்துவத்தையே கேள்வி எழுப்பிய காலத்தைத் தொடர்ந்து தான் தற்போது ஆதிக்க சாதியினரின் மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டு வருகிறது. வர்க்க ஏற்றத்தாழ்வுகள் இயல்பாகவே சாதியால் வடிவமைக்கப்படுவதால் இது மிகவும் முக்கியமானது. தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் ஆதிவாசிகள் அதிர்ச்சியூட்டும் அளவு உடைமை நீக்கம் மற்றும் பொருளாதார சரிவுகளின் சுமைகளை எதிர்கொள்கின்றனர். மற்றொரு ஆய்வில் (2015-17 க்கு இடையில்), 22% இந்து உயர் சாதியினர் மொத்த சொத்துக்களில் 41% வைத்திருந்தனர், அதே நேரத்தில் 24% இந்து தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் 11% மட்டுமே வைத்திருந்தனர்.
சமத்துவமின்மை என்பது ஒரு விசித்திரமான இந்தியப் பிரச்சினை அல்ல, மாறாக உலகளாவிய பிரச்சினை. இந்தியாவை விட மோசமான ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடுகள் (எ.கா., சிலி, பிரேசில், தென்னாப்பிரிக்கா) உள்ளன. சமத்துவமின்மையும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தோன்றவில்லை. 1980 வாக்கில் வருமானப் பங்கில் மிகக் குறைந்த சமத்துவமின்மையை அடைந்த பின்னர், 1991-ல் (தனியார்மயம்-தாராளமயம்-உலகமயத்தின் பெயரால்) சந்தைகள் விரியத் திறக்கப்பட்ட பின்னர், வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்ததோடு, அதிகரித்து வரும் சமத்துவமின்மையையும் இந்தியா காணத் தொடங்கியது என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆனால் ஒரு இந்துத்துவ தேசியத்தின் நச்சுச் சூழலின் கீழ், குறிப்பாக அதன் தலைவரின்  ‘தெய்வமாக்கப்படுதலுடன்’ இணையும் போது, மிகவும் அதிர்ச்சியூட்டும் பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை மூடிமறைக்கத் தேவையான, முற்றிலும் வேறுபட்ட ஒன்று அவசியமாகிறது. இதற்கேற்ற ஒரே பொருளாதாரவாதம் ஒரு இரக்கமுள்ள ராஜா, பரந்துபட்ட குடிமக்கள் உயிர் வாழ்வதற்கான குறைந்தளவு பரிசுகளை வழங்கும் போக்கு உள்ளது. இதன் மூலமே தமது எஜமானர்களான பெரும் கார்ப்பரேட் பகாசுரக் கொள்ளையர்களின் பொருளாதாரக் கட்டமைப்பை எந்த பாதிப்புமின்றிப் பாதுகாக்க முடியும்.
சிலி மற்றும் பிரேசில் போன்ற அநீதியான நாடுகளிலிருந்து எங்கு வேறுபடுகிறது என்றால், அங்கு சமூக-பொருளாதார படிநிலையில் தொடர்ச்சியான அரசியல் போட்டி நடந்து கொண்டிருந்தாலும், அது வலிமையானதாக இல்லை. சமத்துவமின்மை அறிக்கை நாட்டின் பெரும் பிரிவினரை ஒரு வருந்தத்தக்க பழைய நிலைமைக்குத் தள்ளிவிடாமல் பொருளாதார வளர்ச்சியை எப்படி சாத்தியமாக்கலாம் என்பதற்கு பல்வேறு உதாரணங்களைக் காட்டுகிறது.
படிக்க :
கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !
நூல் அறிமுகம் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு
கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா இந்து தேசியவாதத்தின் தார்மீக கூற்றுக்களின் வாய்ச்சவடால்களையும், மற்ற தேசியவாதங்களை விட மேன்மையானது என பீற்றிக் கொண்ட மோசடியையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த அறிக்கை அரசியலை ஒரு உலக விவகாரத்திலிருந்து ஒரு தெய்வீக நிறுவனமாக உயர்த்துவதில் இருந்து வெளிப்படும் மற்றொரு விசித்திரமான பிரச்சினையை அம்பலப்படுத்துகிறது: கடவுளர்கள் தோல்வியடைவதைக் காண முடியாது!
இவ்வாறாக, “தரவுகள் இல்லை” என்று ஆட்சி அறிவித்துள்ள சமூக-பொருளாதார வாழ்க்கையின் பரந்த பகுதிகளைப் போலவே: இறந்த விவசாயிகள், வீட்டு நுகர்வு செலவினங்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கோவிட்-19 இறப்புகள் வரை, “கடந்த மூன்று ஆண்டுகளில், அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சமத்துவமின்மை பற்றிய புள்ளிவிவரங்களின் தரம் கடுமையாக மோசமடைந்துள்ளது, இது சமீபத்திய சமத்துவமின்மை மாற்றங்களை மதிப்பிடுவதை குறிப்பாக கடினமாக்குகிறது” என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தற்போதைய இக்கட்டான நிலை, தேசத்தை மீண்டும் கற்பிதம் செய்ய வேண்டியதன் அவசியத்தை, ஒரு அவசர கட்டாயத்தை முன்வைக்கிறது. இது ஆழமான தார்மீக மற்றும் அரசியல் கேள்விகளை முன்வைக்கிறது: ஒரு தேசிய அரசுடன் மதத்தை இணைத்து மதவாத அரசாக்குவதனால், அந்த அரசால் சமத்துவமிக்க குடியுரிமையைப் பற்றியோ ஜனநாயகத்தைப் பற்றியோ சிந்தித்துப் பார்க்கக் கூட இயலாத பேராபத்து தான் நிலவுகிறது.

கட்டுரையாளர் : நிசிம் மன்னதுக்காரன்  – டல்கௌசி பல்கலைக் கழகம்
தமிழாக்கம் : நாகராசு
மூலக்கட்டுரை : த வயர்

மக்கள் அதிகாரம் – முதலாவது சென்னை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !

PP Letter head
19.01.2022
பத்திரிகை செய்தி
முதலாவது சென்னை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
முதலாவது சென்னை மண்டல மாநாடு 19.1.2022 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது. சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் முறைப்படி தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை மண்டலக் குழுவிற்கான தேர்தல் முறைப்படி நடைப்பெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மண்டலச் செயலாளராக தோழர் அமிர்தா, சென்னை மண்டல இணைச் செயலாளராக தோழர் புவனேஸ்வரன், சென்னை மண்டலப் பொருளாளராக தோழர் செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சேத்துபட்டு கிளைச் செயலாளராக தோழர் புவனேஸ்வரன், சைதாப்பேட்டை கிளைச் செயலாளராக தோழர் பூர்ணிமா, காஞ்சிபுரம் கிளைச் செயலாளராக தோழர் ஏழுமலையான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும்
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!
ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவோம் என உறுதியேற்றனர்.
தோழமையுடன்,
தோழர் அமிர்தா
சென்னை மண்டலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை
9176801656

Uttar Pradesh : No ‘viable alternative’ within Hindurashtra !

We proclaimed that the only way to smash the danger of Saffron (Hindutva) – Corporate fascism is to organise the vast working people and democratic forces under the political leadership of a revolutionary Communist Party. But, even if some people sense the danger of fascism, they say that the immediate ‘viable alternative’ is to bring down the BJP from power and install a electoral political party in power which opposes BJP. They think it is impossible to mobilise the masses under the political leadership of a revolutionary party; so they are campaigning for such a ‘viable alternative’ in order to gather ‘breathing space’ to mobilise the masses.
During the previous TN Assembly elections, these people who called themselves ‘Revolutionaries’, campaigned not only against the BJP alliance but also campaigned directly and indirectly to support and vote in favour of DMK. In order to harvest the anti-BJP sentiment of TN people, DMK projected itself as anti-BJP and shouted the slogans of social justice, state autonomy and linguistic rights. This rumbling of the DMK was convenient for these so called ‘Revolutionaries’.
In fact, the ground situation in Tamilnadu favour the base for DMK’s electoral campaign. But Uttar Pradesh, the laboratory of Hindutva, is opposite to Tamilnadu. The electoral farce in UP makes evident that the revolutionary party leadership is the ‘only alternative’ to the illusion of ‘viable alternative for the time being’ to fight fascism.
Uttar Pradesh, ruled by rowdy god man Yogi Adityanath, is preparing to go to the polls in a few months. UP is smelling saffron (what we mean here is that UP is full of Hindutva identities): Ram temple in Ayodhya – a symbol of Hindurashtra, separate ambulance service for “gomatha”s and hindutvaisation of the names of the towns.
Election predictions so far suggest that the BJP will win the next election, no matter how many atrocities the Yogi government has committed, such as targeting Muslims with Uttar Pradesh Prohibition of Unlawful Conversion of Religion Act 2021, caste-based attack on Dalits, corpses afloat on the banks of the Ganges during Corona pandemic crisis, using of draconian UAPA on the protesting people, Lakhimpur Kheri farmers massacre. Uttar Pradesh is a land nurtured by Hindutva politics for many years! So there is nothing to surprise.
Read :
New Democracy || Puthiya Jananayagam in English || Magazine
Press Conference by Dr. Anand Teltumbde | Makkal Athikaram
For the same reason, unlike the parties that are putting themselves forward against the BJP in Tamilnadu, none of the parties, including the Congress, which are putting forward themselves against the BJP in Uttar Pradesh, express nothing against its Hindutva policies.
It is an old rhetoric that the opposition parties are not opposing saffron politics; it is a new reality that is now maturing that those who stand up against the BJP are assimilating its ‘Hindu politics’. Yes, next year’s election campaigns are heating up. Congress, Bahujan Samaj, Samajwadi and Aam Aadmi Party are contesting against the BJP. The content of the campaigns is the BJP’s ‘Hindu’ politics vs the opposition’s anti-BJP Hindu politics. ‘No viable alternatives’ are visible as far we can see.
Priyanka’s tactics: Populism + ‘Hindu’ identity
Priyanka has targeted women’s vote by making attractive promises formulated by Prasanth Kishore such as 40% reservation for women, scooter, smartphones for girls, free travel for women in buses. However, Priyanka knows that it is not enough to win. She has also thrown away her pseudo-secularism and actively associated herself with ‘Hindu’ identity.
Priyanka worshiped Kashi Vishwanath and Durga in Modi’s Varanasi constituency last October and at a public meeting organised by her party in the name of ‘justice for farmers’ (Kisan Nyay), she appeared with vermillion (Sindoor) on her forehead and Rudraksha garland around her neck and posed like a Hindu Goddess. Not only Priyanka, but all the foreheads of the Congress big-heads sitting there on the dais were colourful that day.
As soon as the public meeting began, congress leaders including Priyanka and Chhattisgarh Chief Minister Bhupesh Baghel shouted ‘Har har Mahadev’. Before Priyanka started her speech, she said that she was on fast and chanted ‘Ya Devi Sarva Bhuteshu’ from Durga Saptashati and shouted ‘Jai Mata Di’. She also asked the crowd to chant. It was too difficult to identify whether it was a meeting of the Congress or the Sangh Parivar.
The congress made the issue of fraud in the purchase of land on behalf of the Ram temple trust a bigger topic of discussion than any other party. “Scams are happening by taking donations in the name of Lord Ram”, Congress Chief Spokesman Randeep Surjewala fumed. Last June, Uttar Pradesh Congress President Pramod Tiwari voiced for the ‘Hindus’ and asked that, if all other activities can take place during the Covid crisis, then why not the Amarnath Yatra. Why should faith be disappointed, Tiwari asked. Owing to the lockdown rules, the DMK government banned the opening of the temples. The Tamilnadu BJP held demonstrations for the opening of Hindu temples and tried to mobilize the ‘Hindus’ by being anti-DMK. Similarly, this was a rhetoric by the UP Congress for ‘Hindu’ mobilization by being anti-BJP.
Mayawati’s ‘Dalit – Brahmin Alliance 2.0’
The Bahujan Samaj Party, which in its initial stage embroiled in identity politics demagogued “Dalit issues can only be understood by dalits. The dalits should be lead only by dalits. Dear dalits, don’t join in other parties; we won’t include persons belonging to dominant upper castes in our party”. But after getting wisdom from the elections in the UP political field, it turned into an opportunistic brahmanical party.
If she wants to win the elections, only 23% of dalit votes are not enough. Mayawati calculated that if she gets the votes of the brahmins, who form 13% of the UP population, she could easily win the election. This calculation resulted in her new incarnation of ‘Dalit – Brahmin alliance’. After this change of tune, the BSP said that their party is not only a party for dalits, but also for poor brahmins. It gave away prominent positions to the brahmins and the dominant upper castes.
In 2007, Mayawati became the first ‘Dalit’ Chief Minister of Uttar Pradesh after reshaping her identity and acted with admiration of the brahmins. Mayawati has once again taken up the dalit-brahmin alliance campaign for the next assembly elections. The BSP had already began its campaign in July.
In the first phase, they planned to hold various conferences across the state in the name of ‘Brahmin Sammelan’ to woo the brahmins. Since the Allahabad High Court has banned political parties from holding public meetings in the name of caste, the name of the conference has been changed to ‘Seminar in honour of the enlightened class’. The chief guest of the first conference was Satish Chandra Mishra, the General Secretary of the BSP, a brahmin. He was late for hours to the meeting and said that he went to worship Ram Lalla at the Ram Janmabhoomi temple and to Hanumangarhi.
Later, while addressing this meeting, Mishra discussed about the ‘main issues’ of brahmins. “What is the account for the money collected for the last 30 years for Ram temple? A year has passed, but there is no sign of the construction of the temple. The question is whether the temple will be built or not”, he argues angrily. He also pointed to the encounter of Vikas Dubey (belonged to the Brahmin caste), who was a gangster in UP,  and said that several Brahmins had been killed in the last four years. He also accused the government of increasing atrocities against the brahmins. Therefore, he asked them to support the Bahujan Samaj Party as an alternative to the BJP. “If the 13% Brahmins in the state join the 23% Dalits, then the victory is certain”.
In India, as per the recent report by the National Crime Records Bureau, it was in Uttar Pradesh, that the highest number of casteist attacks on the oppressed people; massacres; sexual violence on women and girls occurred. The BSP, which is not fighting against the atrocities being perpetrated on the oppressed people, seeks justice for gangster Vikas Dubey to woo the Brahmin voters. While the Dalits are being killed for consuming beef, the party is regretting that the cows are not properly cared for in the cow sheds.
‘We too are Hindus’: Akhilesh Yadav joins the ‘Hindu Politics’ race
Samajwadi Party, the opposition in UP, has Yadavs and Muslims as their voter base. That’s why BJP is continuously attacking Samajwadi Party and Akhilesh Yadav. “Akhilesh Yadav would even convert to Islam in order to get muslim votes”, Yogi Adityanath ranted. Akhilesh feared that these continuous attack by BJP may result in losing Hindu Yadav votes. So he’s expressing that “We too are Hindus”.
“Lord Rama belongs to the Samajwadi Party. We are Ram Bhakts and Krishna Bhakts”, Akhilesh Yadav said. He started visiting Hindu pilgrimage centres like Ayodhya, Chitrakoot across Uttar Pradesh and meeting saints and seers almost on a regular basis and posts it on Twitter. He vowed to waive municipal taxes charged from temples to usher in real Ram Rajya if he storms to power.
The Samajwadi Party deals with caste politics along with hindu identity. When SP ruled, they declared Vishwakarma Jayanti as a holiday. Akhilesh Yadav slammed the present Yogi government for insulting the entire Vishwakarma community by withdrawing Vishwakarma Jayanti as a holiday and said that if they return to power, they would declare Vishwakarma Jayanti a holiday again and a massive temple would be built for Vishwakarma on the banks of the river Gomti. On April 14 this year, Ambedkar’s birthday was celebrated on behalf of the Samajwadi Party as ‘Dalit Diwali’.
Aam Aadmi Party: Stepney of the ruling classes, another political tool for the RSS!
If all the other parties started to merge with ‘hindu politics’ as a strategy to win the Uttar Pradesh elections, Kejriwal’s AAP, which came to power by talking about ‘eradication of corruption and grass-root democracy’, is consciously dissolving itself into hindutva politics and transforming itself into another political wing of hindutva. The AAP, which is contesting separately in Uttar Pradesh, Goa and Uttarakhand against the BJP, is using the double-edged weapon of communalism and nationalism in a new fashion, not only there but also in Delhi, where it rules.
Kejriwal visited the Ram temple being built in Ayodhya and announced that his government would now bear the pilgrimage cost of visiting Ayodhya. Kejriwal, who installed a temporary Ram temple in Delhi similar to the one being built in Ayodhya, worshipped Lord Rama during last Diwali. He indulged in a grand spiritual worship surrounded by his wife and ministers. It was a general rule that secularism must be practised as a party and as a government, at least nominally by law. This action of AAP presents itself as another BJP.
Ciricism arose about his sudden devotion to Lord Ram and his habit of visiting temples. AAP was criticised as adhering to ‘soft hindutva’. In reply, Kejriwal angrily said “I am a Hindu, I visit Ram temple, Hanuman temple.. why would anyone have problem with it?” Moreover, “I don’t know what is soft Hindutva. I want to unite 130 crore people of this country, unite one human being with another. This is Hindutva…Hindutva unites, Hindutva doesn’t break”, he said, resembling the tone of the RSS.
Kejriwal made public that he was mixing with the saffron stream by saying that “We are true hindutva”. And he did not spare the BJP’s “patriotic” formula. In order to promote ‘national consciousness’ for the students in Delhi, AAP government has introduced a separate curriculum in all government schools. In Uttarakhand, which is facing election next year, AAP has nominated Ajay Kothiyal, the retired Army Colonel, as their Chief Ministerial candidate. If elected to power, “Uttarakhand will be spiritual capital for Hindus of the world”, declared Kejriwal.
As a beginning of their election campaign in Uttar Pradesh, the AAP marched with the national flag in Ayodhya last September in the name of ‘Tiranga Yatra’. Prior to the Yatra, Delhi’s Deputy CM Manish Sisodia and AAP’s senior leader Sanjay Singh offered prayers at the Ram Janmabhoomi temple and the Hanuman Garhi Temple. They took a bath in Saryu river and recited Hanuman Chalisa.
Like BSP in UP, which conducted ‘Seminar in honour of the enlightened class’ to get the votes of 13% brahmins, AAP conducted ‘Chanakya Vichar Sammelan’.
In compilation, the hindutva politics by AAP is much closer to saffron fascism than any other party. In 2019, when terrorising fascist attacks were launched on those protesting against the Citizenship Amendment Act in Delhi, Kejriwal remained a silent observer. When a farmer asked Kejriwal, who attended a meeting with farmers in Punjab last October, “What do you think of Modi’s move to repeal Article 370 which granted Kashmir special status?”. Kejriwal replied “This is a ‘political question’, ask if there is anything else” and left the meeting. The liberals who criticize this attitude of Aam Aadmi, call it as BJP’s ‘B’ team.
It is more appropriate to call it as ‘B’ team of the ruling classes than calling it as BJP’s ‘B’ team. The working people, stirred up by the Modi government’s economic policies, have begun to show discontent and anger towards the BJP. But not on its ideology of hindutva or jingoism. In this context, if the BJP’s popularity declines, the ruling classes will adopt the AAP, which is transforming into a party that can attract the masses by speaking the same hindutva-jingoism. In short, the AAP will act as a ‘stepney’ for the ruling classes if the ‘tyre’ called BJP punctures.
Read :
GST : Bolo Bharath Mathaki Jai! PALA’s new song – English subtitle
ஐ.டி துறை ஆட்குறைப்புக்கு எதிராக புஜதொமு போராட்டம்
Moreover, the fascist army called RSS, doesn’t have to attain its goal of Hindurashtra by using the BJP the only way. BJP is just a political tool to the RSS. The RSS may also use another party. It has its roots in India for over a hundred years. Any party can be made to submit to its conception, says Comrade P.J. James of CPI (ML) Red Star (In his speech in English titled Neo-Liberalism and Neo-Fascism : A Leftist Perspective).
How to face the danger of Hindurashtra?
If the brahminical – hindutva fascism gets rooted further among the masses, also the ‘viable alternatives’ will disappear. One way is to accept the fascist dictatorship. Another way is to mobilize the working people under the leadership of the proletarian party and fight against the fascism. There is nothing such as interplay between the two or ‘breathing space’. This is the truth that the upcoming Uttar Pradesh elections teaches us.
Can those who have asked to support the DMK in Tamil Nadu against the BJP now say which party could be supported in Uttar Pradesh? If DMK in Tamilnadu is the ‘viable alternative’, then what is the ‘viable alternative’ at the Indian level? If they say it’s the Congress, should the CPM and Trinamool Congress be opposed in states like Kerala and West Bengal? But if you look at the situations in those states, the CPM and the Trinamool Congress seems to be the alternative. This is a distrustful and confusing argument that does not believe in mobilizing people.
Defeating Saffron – Corporate fascism or supporting the forces fighting for it is not the intend of Congress or DMK or any of the electoral political parties. Their aim is to seize power and exploit to get rich. They design their campaigns and policies just to get the popular support of the people. Tamilnadu’s anti-BJP sentiment gave the DMK ‘social justice’ as its tool. While the hindu-fanaticism of Uttar Pradesh has made the above parties converge with hindutva.
The decisive element in the anti-fascist struggle is who is politicising the people. The question is that whether we are going to mobilise the broad masses of working people under the proletarian revolutionary politics, or the enemy under hindutva politics. To prop up of the ruling class parties in the name of ‘viable alternative’ is out of syllabus.

Sevvanthi

நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை

ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்
ஏ. ஜி. நூரானி அவர்கள் எழுதிய – RSS : A Menace to India – என்ற ஆங்கில நூலினை தமிழில் “ஆர்.எஸ்.எஸ் – இந்தியாவிற்கு அச்சுறுத்தல்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது பாரதி புத்தகாலயம்.
ஆங்கிலத்தில் ஏ.ஜி.நூரணி எழுதிய இந்த நூலை பிரண்ட்லைன் ஆசிரியர், விஜய்சங்கர் அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார். காவி கார்ப்பரேட் பாசிசம் ஏறித் தாக்கி வரும் சூழலில், ஆர்.எஸ்.எஸ். – சங்கப் பரிவார பாசிசக் கும்பலை அடையாளம் காணவும், அக்கும்பலின் உண்மையான நோக்கத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும் அனைவரும் கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது.
வரலாற்றுரீதியான தரவுகளுடன், ஆர்.எஸ்.எஸ்.-இன் அபாயம் குறித்து புரிந்து கொள்ள இந்த நூலைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தற்போது முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த நூலை வாங்குவதற்கான முன் பதிவு நடந்து வருகிறது.
18-01-2022 தேதிக்குள் (இன்று) முன் பதிவு செய்பவர்களுக்கு ரூ. 625 + ரூ.50 (அஞ்சல்) என்ற விலையில் முன்பதிவு செய்யப்படுகிறது.
முன் பதிவுக்கு:
பாரதி புத்தகாலயம் : 044 – 24332424
முன் வெளியீட்டு விலை : ரூ.625 + ரூ.50(அஞ்சல்) (18.01.2022 வரை)
விலை : ரூ.890
G-Pay, Phone Pay, Paytm, Whastapp மூலம் பணம் செலுத்த : 94449 60935
0-0-0
ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை
நம்மில் ஒருவராக தம்மைக் காட்டிக் கொண்டே நம்முள் புகுந்து சாதிய சனாதனத்தின் அடிப்படையை நம்மை ஏற்கச் செய்து நம்மை அடிமைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். கும்பலை அம்பலப்படுத்தும் வகையில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதி வெளியிட்ட நூல் : ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை.
சுயமுன்னேற்றம் ஆன்மிகம், யோகா, விளையாட்டுப் பயிற்சி, கல்விப் பயிற்சி, ஒழுக்க வகுப்பு  என்று பல முகங்களாக காட்டிக்கொண்டு நம்முள் புகுந்து அதன் ஊடாகவே தமது நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தும் பணியைச் செய்துவருகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். இவ்வழியில் மக்கள் மத்தியில் நுழையும் சங்க பரிவாரத்தின் நூற்றுக்கணக்கான அமைப்புகள் தங்களை மறைத்துக் கொண்டு படிப்படியாக, நம் மத்தியில், தலித்திய வெறுப்பு, இசுலாமிய வெறுப்பு, கிறித்துவ வெறுப்பு ஆகியவற்றை வளர்க்கின்றன.
சாதியரீதியாக நம்மை இவ்வளவு காலமாக அடக்கிவைத்த கூட்டம் இன்று கலவரம் செய்வது முதல் அதற்கு ஆள்பிடிப்பதுவரை எப்படி செய்கிறது என்பதையும், அது எந்தெந்த வழியில் செயல்படுகிறது என்பதையும் இந்நூல் அம்பலப்படுத்துகிறது.
விவேகானந்தரை எப்படி தனக்குச் சாதகமான வழியில் பயன்படுத்தி, இளைஞர்களை மூளைச் சலவை செய்கிறது என்பதையும், இந்து ஒற்றுமை என்று கூறும் இந்த சங்க பரிவாரக் கும்பலின் அடித்தளம் எப்படி சனாதன தர்மத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பதையும் அம்பலப்படுத்துகிறது இந்நூல்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இந்தக் கும்பல், எப்படி காலத்திற்குத் தகுந்தாற்போல, பிற்படுத்தப் பட்டோருக்காக தாம் போராடியது போல வேடம் போட்டு ஏமாற்றுகிறது என்பதையும் இந்நூல் அம்பலப்படுத்துகிறது.
மேலும் டாலர் உண்டியல் எனும் தலைப்பில் ஒரு கட்டுரையில் எப்படி ஆர்,எஸ்,எஸ், அமைப்பு மேற்கத்திய நாடுகளின் நிதியை ஏழைகளை வாழ்விப்பதற்கான நிதியாகப் பெற்று அதனை மத முனைவாக்கத்திற்காக செலவிடுகிறது என்பதைஉயும் அம்பலப்படுத்துகிறது,. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாகப் பெற்று அதனை தனது இந்து ராஷ்டிரக் கனவுக்காக செயல்படுத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.
மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ். எனும் நச்சுப் பாம்பு எப்படி நம் கால்களைச் சுற்றி நம் தலையை விழுங்கும் நிலைக்கு வந்து நிற்கிறது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது இந்த நூல்.
வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்
ஆசிரியர் : கி. வீரமணி
விலை ரூ. 160

குழந்தைத் திருமண தடுப்பு மசோதா : காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின்னுள்ள நோக்கம்!

குழந்தைத் திருமண தடுப்பு (திருத்த) மசோதா 2021 :
காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின் ஒளிந்திருக்கும் பாசிச நோக்கம் !
பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து 21 வயதாக அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதாவை நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
“ஜனநாயக நாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வழங்குவதில் 75 ஆண்டுகள் தாமதித்துவிட்டோம். இந்த சட்டத்திருத்ததின் மூலம் சமத்துவ உரிமையை மனதில் கொண்டு ஆண்களும் பெண்களும் 21 வயதில் திருமணம் குறித்து முடிவெடுக்க முடியும். பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதால் அவர்களது பொருளாதார, சமூக, ஆரோக்கிய மேம்பாடு உறுதி செய்யப்படும். அது குடும்பம், சமூகம், குழந்தைகள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று இம்மசோதாவை அறிமுகப்படுத்தி பேசினார் அமைச்சர் ஸ்மிருதி இராணி.
படிக்க :
இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாகும் அசாம் !
இந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி!
பெண்களின் கல்வி, பொருளாதார நலன் ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு பாஜகவை ஆதரிக்காத சில பிரிவினரே இந்தச் சட்டத்தினை ஆதரித்துப் பேசிவருகின்றனர். வெறுமனே கல்வி பொருளாதாரம் என்று மட்டும் சுருக்கிப் பார்க்காமல் இங்கு நிலவும் சமூகப் பொருளாதார நிலைமைகள் மற்றும் பாசிஸ்ட்டுகளின் நீண்டகால நோக்கம் ஆகியவற்றையும் உள்ளடக்கியே இந்தச் சட்டத்தை பார்க்க முடியும். இந்தியப் பெண்களின் ஊட்டச்சத்துக் குறைபாடு, ஆரோக்கியம், பெண்ணுரிமை-சமத்துவம் பற்றியெல்லாம் தேனொழுகப் பேசும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் யோக்கியதை என்னவென்பதை அவர்களின் ஆட்சியில் பெண்களுக்காக மேற்கொண்ட திட்டங்களை ஆராய்ந்தால் விளங்கும்.
000
இந்திய ஒன்றிய அரசின் 2021-22-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு கடந்த ஆண்டை விட 18.6 சதவீதம் குறைவாகத்தான் இந்த நிதியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த ஆண்டு ஒதுக்கிய ரூ.30,007.1 கோடியிலிருந்து குறைத்து ரூ24,435 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரது ஊட்டத்துக் குறைபாட்டை ஒழிப்பதற்காக அங்கன்வாடிகள் மூலம் செயல்படுத்தப்படும் ‘போஷான் 2.0’ என்ற திட்டத்தை கடந்த 2021-22 ஆண்டு பட்ஜெட்டின் போது படாடோபமாக அறிவித்தார் நிர்மலா சீதாராமன். ஆனால், கடந்த ஆண்டு ஒதுக்கிய 3,700 கோடியைவிட 27% குறைவாகத்தான் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
2015-ல் பெண் குழந்தைகளின் கல்விக்காக மோடியால் கவர்ச்சிகரமாக அறிவிக்கப்பட்டது “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” எனும் திட்டம். 2016-19 ஆகிய மூன்றாண்டுகளில் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 80 சதவிகிதம் இத்திட்டம் பற்றிய ஊடக விளம்பரத்திற்கு மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது.
இம்மசோதாவைக் கொண்டுவரும் முன்பே, 2020 ஜூன் மாதத்தில் பெண்களின் திருமண வயதை உயர்த்துவதைக் குறித்து ஆராய்வதற்காக சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது பா.ஜ.க. அரசு. அக்குழுவிடம் 96 சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த கூட்டமைப்பினர் பதினைந்து மாநிலங்களைச் சேர்ந்த 2,500 இளைஞர்களிடம் கருத்து கேட்டு அக்குழுவிடம் மனுவாக சமர்ப்பித்தது.
அதில், “திருமண வயதை உயர்த்துவது பெண் குழந்தைகள் கல்வி பெறுவதை ஒருபோதும் மேம்படுத்தாது. எங்கள் குடியிருப்புக்கு அருகில் பாதுகாப்பான, தரமான இலவசக் கல்வி கிடைப்பதை அது உறுதிசெய்யாது. இது இளையோரின் மீது அழுத்தத்தையும் வன்முறையையும் அவர்களைக் குற்றவாளியாக்கும் போக்கையும் அதிகரிக்கச் செய்யும். பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை, அவர்கள் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகளை அது வழங்கப்போவதில்லை. இப்படி திருமண வயதை உயர்த்துவதைக் காட்டிலும் தரமான, சமமான, இலவசக் கல்வியை வழங்க வேண்டும். போதிய வருமானம் ஈட்டக் கூடிய பாதுகாப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இம்மனு உட்பட அக்குழு சேகரித்த, ஆய்வுசெய்த எந்த அறிக்கையும் பொதுவெளியில் வெளியிடாமல் இரகசியமாக அமுக்கிய மோடி அரசு, எந்தவிதமான அறிவியல்பூர்வமான வாதமும் இல்லாமல் இச்சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. எனவே, இந்தியப் பெண்களின் மீது மோடி அரசிற்கு திடீரென்று பொங்கி வழியும் இந்த அக்கறையின் பின்னே பாசிச பா.ஜ.க.விற்கு வேறு நோக்கம் இருக்கிறது.
000
இச்சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது, “இந்த சட்டம் மதசார்பற்றது. இந்து திருமணச் சட்டம் அல்லது முஸ்லீம் தனிநபர் சட்டத்தின்கீழ் வருகிற அனைத்து மதங்களைச் சேர்ந்த பெண்களும் திருமணம் செய்து கொள்வதில் சம உரிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது” என்று பேசிய அமைச்சர் ஸ்மிருதி இராணி, தன்னுடைய வாதத்திலேயே இச்சட்டத்தின் உண்மை நோக்கத்தை தெரிவித்திருக்கிறார்.
குழந்தை வதை திருமணங்கள்! வல்லரசாகிறது இந்தியா! - சந்தனமுல்லைநாட்டிலுள்ள அனைத்து மதத்தவருக்கும் வேறுபட்ட தனிநபர் சட்டங்கள் இருக்கக் கூடாது. ஒரே பொது சிவில் சட்டமாகக் கொண்டுவரவேண்டும் என்பது பா.ஜ.க. அரசின் நீண்ட நாளைய பிரச்சாரம். சிறுபான்மை மக்களின் மதரீதியான தனியுரிமையை ஒடுக்கவும் ‘ஒரே நாடு, ஒரே பண்பாடு’ என்ற தனது இந்துராஷ்டிர வரையறையை சட்டப் பூர்வமாக்கும் வழிமுறையாகவுமே இப்பிரச்சாரம் கட்டவிழ்த்து விட்டது பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பல். பொது சிவில் சட்டம், புரட்சிகர – ஜனநாயக சக்திகளால் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட்டது. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்” என்று தனது 2019 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் பா.ஜ.க. கூறியிருந்தது. தற்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிலைக்குழுவுக்கு அனுப்பட்டுள்ள ‘குழந்தை திருமணத் தடுப்பு (திருத்த) மசோதா 2021’ பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக பா.ஜ.க. எடுத்துவைத்துள்ள முதல் அடி தான். குறிப்பாக, முசுலீம் மக்களுக்கு எதிரான நோக்கத்துடனேயே இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு மதப் பிரிவைச் சேர்ந்தவர்களும் தங்கள் மத ஒழுக்கத்தை கடைபிடிப்பதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது. அவர்களுக்கென தனிநபர் சட்டங்கள் உள்ளன. சான்றாக, முசுலீம் மதத்தைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை ஒரு பெண் பூப்பெய்தும் வயதுதான் அவளது திருமண வயது. பொதுவாக பெண்ணின் வயது 18 என்ற விதி அவர்களை கட்டுப்படுத்தாது. தற்போது ஸ்மிருதி இராணி சொல்வது போல, அனைத்து மதப் பெண்களுக்குமாக கொண்டுவரப்பட்டுள்ள இம்மசோதாவின் படி, 21 வயதிற்கு கீழேயுள்ள ஒரு இசுலாமியப் பெண்ணை திருமணம் முடித்துக் கொடுத்தால் அது தண்டனைக்குரிய குற்றம்.
படிக்க :
குழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் !
லாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் !
“ஒரு முசுலீம் நான்கு மனைவியை வைத்துக் கொள்கிறான். நினைத்த நேரத்தில் ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்கிறான். வதவதவென பிள்ளைக்களை பெற்றெடுத்து தங்கள் மதத்தவரின் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்கிறான். இந்துக்கள் சிறுபான்மையாகிறார்கள். இந்துப் பெண்களை ஏமாற்றி லவ் ஜிகாத்தில் ஈடுபடுகிறார்கள். முசுலீம்கள் தேசத்திற்கு எதிரானவர்கள், தீவிரவாதிகள்” – என பெரும்பான்மை மக்களிடம் வெறுப்புணர்வை ஊட்டி முசுலீம்களுக்கு எதிரானதொரு ‘இந்து ஒற்றுமையை’ உருவாக்குவதன் மூலம் தங்கள் பாசிச ஆட்சிக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக்கொள்ள விரும்புகிறது ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல். இதைப் போன்ற பிரச்சாரங்களை முன்வைத்துதான் நாடு முழுக்க முசுலீம்களுக்கு எதிராக பல்வேறு மதக் கலவரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முத்தலாக் தடைச் சட்டம், சி.ஏ.ஏ – என்.ஆர்.சி, ஆகியவற்றின் வரிசையில் முசுலீம்களை குறிவைத்து ஒடுக்குவதற்காகவும் ‘ஒரே நாடு, ஒரே பண்பாடு’ என்ற அடிப்படையில் ஒரு பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்குமான முயற்சியே பாசிச பா.ஜ.க.வின் இச்சட்டத் திருத்த மசோதா என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களின் திட்டத்திற்கு எதிராக புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒருசேர எதிர்த்து நிற்க வேண்டும்.
வானதி

மாற்றுத் திறனாளி தலித் இளைஞரை கொலை செய்த போலீசு || மக்கள் அதிகாரம் கண்டனம்

PP Letter head16.01.2022

பத்திரிகை செய்தி

மாற்றுத் திறனாளி தலித் இளைஞரை கொலை செய்த போலீசு !

கொலைகார போலீஸ் ,சிறை அலுவலர், நடுவர் ஆகியோர் மீது வன்கொடுமை மற்றும் வழக்குப் பதிவு செய்!

சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, கருப்பூரில் வீட்டிலிருந்த மாற்றுத்திறனாளி ஏ. பிராபகரன் மற்றும் அவரது மனைவி திருமதி அம்சலா ஆகியோரை நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் 8.1.2022 அன்று, விசாரணை என்ற பெயரில் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.

நேரடியாக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல், காவல்துறை குடியிருப்பு ஒன்றில் சட்டவிரோதமாக வைத்து மூன்று நாட்கள் இருவரையும் அடித்து சித்திரவதை செய்து உள்ளனர். இதன் காரணமாக திரு. பிரபாகரனுடைய ஆணுறுப்பு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கேட்கும்போதே நெஞ்சமெல்லாம் பதறுகிறது.

பின்னர் இருவர் மீதும் குற்ற எண் 8/2022 U/S ன் கீழ் வழக்குப்பதிவு செய்து 457,380 IPC பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். கடுமையாக தாக்கப்பட்ட பிரபாகரனை 11.01.22 அன்று நாமக்கல் கிளை சிறையில் அடைத்துள்ளனர். உடல்நிலை மேலும் மோசமானதால் 12.01.22 அன்று சேலம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

போலீசின் இத்தகைய பச்சைப் படுகொலையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

மக்கள் தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக காவல்துறை உதவி ஆய்வாளர்கள் சந்திரன், பூங்கொடி, தலைமை காவலர் குழந்தைவேலு ஆகியோர் மட்டும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொலைகார போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யாமல், கைது செய்யாமல் இருப்பதிலிருந்து , இது ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் சேர்ந்து நடத்திய பச்சைப் படுகொலை இது என்பது நிரூபணமாகிறது.

லாக்கப் படுகொலைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக மக்கள் எவ்வளவுதான் போராடினாலும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

வருடங்கள் கடந்தாலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை, கொலை வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான் இந்த அரசின் யோக்கியதை .

இவ்வழக்கில் கூட அக்காவல் நிலையத்தைச் சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் .பிரபாகரன் சிறையில் அடைக்கப்பட தகுதியானவர் என்று சான்று அளித்த அரசு மருத்துவர், படுகாயமுற்ற நபரை சிறையில் அனுமதிக்க மறுக்காமல் சிறையில் அனுமதித்த சிறை அலுவலர் , படுகாயமுற்ற ஒருவரை சிறைக்கு அனுப்பிய நீதித்துறை நடுவர் அனைவருமே வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். பிரபாகரனின் குடும்பத்திற்கு 50 லட்சம் பணமும் அரசு வேலையும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறெல்லாம் செய்யாமல் கணவனை இழந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது பொய் வழக்குப் போட்ட இந்த அயோக்கியத்தனமான அரசு நிர்வாகத்தின் கள்ளக் கூட்டுக்கு எதிராகவும் எல்லாவற்றையும் மூடிமறைக்கும் திமுக அரசுக்கு எதிராகவும் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

இனி இன்னொரு லாக்கப் படுகொலை தமிழகத்தில் நடைபெறா வண்ணம் தமிழகம் இந்தப் படுகொலைக்கு எதிராக கிளர்ந்தெழுவதைத் தவிர வேறு வழியில்லை!

தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்.
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு -புதுவை
9962366321

நாகாலாந்து படுகொலை : இராணுவத்தால் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள்

நாகாலாந்தில் 15 தொழிலாளர்கள் படுகொலை :
இராணுவ ஒடுக்குமுறையில் நிலைநாட்டப்படும் ‘இந்திய ஒற்றுமை’ !
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தின் ஒடிங் கிராமத்தில், வாரத்தின் ஆறுநாட்கள் கடுமையான சுரங்க வேலையை முடித்துவிட்டு விடுமுறை நாளான சனிக்கிழமை (டிசம்பர் 4) வழக்கம்போல தங்கள் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதற்காக சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு பேரைக் கொன்றதோடு, இந்த படுகொலையை அறிந்து இராணுவ வாகனத்தை தடுத்து விசாரித்த பொதுமக்கள் மீதும் மீண்டும் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு என மொத்தம் 15 பேரை அநியாயமாக படுகொலை செய்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
சொந்த நாட்டு இராணுவமே தம் மக்களை கொடூரமாக கொலை செய்வது குறித்து விவாதங்களும் பல்வேறு தரப்பிலிருந்து கண்டணங்களும் வந்து கொண்டிருந்தன. இச்சூழலில்தான் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் இராவத் டிசம்பர் 8-ம் தேதி குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அனைத்து செய்தி ஊடகங்களும் தொலைக்காட்சி விவாதங்களும் மீண்டும் மீண்டும் அதையே ஒளிபரப்பி மக்களை ‘தேசபக்தி’ வெள்ளத்தில் மூழ்கடித்தன.
இந்த ‘தேசபக்த’ கோஷ்டி கானத்தில், நாகாலாந்து அப்பாவித் தொழிலாளர்கள் படுகொலைகளும் அவர்களுக்கு நீதிகேட்டு இன்றுவரை நாகாலாந்து மக்கள் போராடி வருவதும் மைய ஊடகங்களில் திட்டமிட்டு மறைக்கப்பட்டன; மறைக்கப்பட்டு வருகிறது.
நெஞ்சை உலுக்கும் படுகொலையின் பின்னணி
மாலை 4:30 மணி அளவில் பயங்கரமான துப்பாக்கிச்சூடு சத்தத்தைக் கேட்ட கிராம மக்கள், முதலில் அது பாதுகாப்பு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் நடக்கும் சண்டை என நினைத்துக் கொண்டனர். வாகனத்தில் (டிரக்) சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள்தான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதை முதலில் அவர்கள் அறியவில்லை. மாலை 3:30 மணிக்கு சுரங்கத்தைவிட்டு கிளம்பிய தொழிலாளர்கள் இரவு 8:00 மணி வரை வீடு திரும்பாததால் பொறுமை இழந்த கிராம மக்கள் அவர்களை தேடச் சென்றபோது, தொழிலாளர்கள் கிளம்பிய வாகனம் மட்டும் காலியாக ஒரு இடத்தில் நின்றுகொண்டிருந்தது.
படிக்க :
நாகாலாந்து : ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் தூக்கியெறியப் போராடுவோம்!
AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை
அந்த வாகனம் இரத்தக் கரைகள் படிந்தும் துப்பாக்கி குண்டுகள் துளைத்தவாறும் இருந்தது. இதனால் பீதியடைந்த மக்கள் அந்த வழியாக சென்று கொண்டிருந்த மூன்று இராணுவ டிரக்குகளை வழிமறித்து விசாரித்துள்ளனர். டிரக்கிற்குள்ளே தார்பாயை விரித்து அதன் மேல் அமர்ந்துகொண்டிருந்த இராணுவப் படையினர் முதலில் ‘தொழிலாளர்களைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது’ என கூறியுள்ளனர். ஆனால் தார்பாயை விலக்கி சோதித்தபோது அடியில் அரை உடையணிந்த ஆறு இளைஞர்களின் இறந்த உடல்கள் இருப்பதை கிராம மக்கள் பார்த்து அதிர்ந்துள்ளனர். அதன் மேல்தான் அப்படையினர் அமர்ந்திருந்தனர்.
அவர்களை கிளர்ச்சியாளர்களாக சித்தரிக்கும் நோக்கில் அவர்களுக்கு மாற்று உடை அணிவித்து அவர்கள் அருகில் ஆயுதங்களை செட்டப் செய்து வைத்திருந்துள்ளனர். இதைப்பார்த்து கொதித்துப்போன கிராம மக்கள் இராணுவப் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சீற்றமடைந்த கொலைகார இராணுவப் படை கூடியிருந்த கிராம மக்களை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளத் தொடங்கியது. இதில் மேலும் 7 பேர் கொல்லப்பட்டனர். அடுத்த நாள் இந்த படுகொலையை கண்டித்து இராணுப் படையின் தலைமையகம் முன்பு நடந்த போராட்டத்தில் மேலும் இருவர் கொல்லப்பட்டனர். எந்த காரணமும் இன்றி 15 பேரின் உயிரை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது இந்திய இராணுவப்படை.
இந்த படுகொலையைப் பற்றி மக்களவையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமித்ஷா “இந்த சம்பவத்திற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். தொழிலார்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை நிறுத்தமாறு சைகை காட்டப்பட்டது, ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றதால்தான் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது” என்றும் “அடுத்து நடந்த மற்ற இரண்டு துப்பாக்கிச் சூடுகளும் மக்கள் இராணுவத்தினரை தாக்கியதால் தற்காப்புக்காக மற்றும் கூட்டத்தை கலைக்க நடத்தப்பட்டது” என்றும் கூறியுள்ளார்.
ஆனால், அந்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பித்த ஒருவர் “இராணுவம் வண்டியை நிறுத்த சைகை செய்யவில்லை. எங்களைப் பார்த்ததும் சுடத் தொடங்கிவிட்டார்கள்” என்று உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் சம்பவ இடத்திற்குச் சென்ற பா.ஜ.க. உறுப்பினர் ஒருவர் “இராணுவத்தினரின் வண்டியில் நாங்கள் தொழிலாளர்களைப் பார்த்ததால்தான் எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது” என்று கூறியுள்ளார். அமித்ஷாவின் நியாயவாதங்கள் எவ்வளவு நெஞ்சழுத்தத்தோடு சொல்லப்பட்ட பொய்கள் என இவை எடுத்துக் காட்டுகின்றன.
000
இராணுவம் இதுபோன்று காரணமே இல்லாமல் அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொல்வது ஒன்றும் புதிதல்ல. இதேபோல ஒரு படுகொலை மார்ச் 5, 1995-இல் நாகாலாந்தில் நடைபெற்றுள்ளது. ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் இராணுவப் படை நாகாலாந்தின் கோஹிமா பகுதியை கடக்கும்போது, இராணுவத்தினர் சென்ற டிரக்கின் டயர் ஒன்று வெடித்துள்ளது. இதை வெடிகுண்டு சத்தம் என்று நினைத்துக் கொண்டு அங்கு இருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது இராணுவம். இந்தத் தாக்குதலில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்; 36 பேர் காயமடைந்தனர்.
இதுபோன்ற சம்பவங்களை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லையல்லவா! இதுதான் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களின் நிலை. அம்மாநிலங்கள் அனைத்தும் துப்பாக்கி முனை இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ்தான் நெடுங்காலமாக ஆளப்பட்டு வருகின்றன.
ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) : இராணுவ ஒடுக்குமுறையால் ஆளப்படும் தேசிய இனங்கள்
வடகிழக்கு இந்தியா எட்டு மாநிலங்களை உள்ளடக்கியது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம். இந்தியா ‘சுதந்திரம்’ அடைந்ததாக சொல்லப்பட்டதற்கு முன் சிக்கிம் தவிர மற்ற ஏழு மாநிலங்களும் ஒரே பகுதியாக (அசாமாக)தான் அடையாளம் காணப்பட்டது. அதனால்தான் இந்த மாநிலங்களை “ஏழு சகோதரிகள்” என்று அழைக்கிறார்கள். இந்த ஏழு மாநிலங்களிலும் பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கென தனி அரசியல் அமைப்புச் சட்டம், தனிக் கொடி, தனி ஆட்சி முறை என தனித்த தேசமாக செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களை தனது இராணுவப்படை மிரட்டலின் மூலமாக இந்தியாவுடன் இணைத்தனர் நேருவும் ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலும்.
இப்படி அடக்குமுறை மூலமாக இந்தியாவுடன் இணைந்ததை வடகிழக்கு மாநில மக்கள் ஒருபோதும் ஏற்கவில்லை. போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. இந்திய இராணுவத்திற்கு எதிராக அவர்களும் ஆயுதங்களை ஏந்த ஆரம்பித்தார்கள். 1977-ல் அசாம் விடுதலையை முன்னிறுத்தி அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front Of Asom – ULFA) என்ற அமைப்பின் தலைமையில் ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டது. 1980-களில் போடோ பழங்குடியினக் குழுக்கள் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். நாகாலாந்து பிரதிநிதிகள் அடங்கிய நாகா தேசிய கவுன்சிலும் (NNC – Naga National Council) போராட்டத்தை முன்னெடுத்தது. “சுதந்திர திரிபுராவைப் படைப்போம்” என்று முழங்கி திரிபுரா தேசிய விடுதலை முன்னணி (National Liberation Front Of Tripura – NLFT), அனைத்து திரிபுரா புலிகள் படை (All Tripura Tiger Force – ATTF) ஆகிய அமைப்புகளும் 1961-ம் ஆண்டு மிசோ தேசிய முன்னணி (Mizo National Front – MNF) உருவாகி சுதந்திர மிசோராமிற்காக ஆயுதம் தாங்கிப் போராடியது.
இந்த ஆயுதப் போராட்டங்கள் அனைத்தும் ஒடுக்குமுறையின் மூலம் உருவாக்கப்பட்ட ‘இந்திய தேசிய ஒற்றுமைக்கு’ வெடிவைத்து தகர்த்தது. இந்தியாவோடு பலவந்தமாக தாங்கள் இணைக்கப்பட்டதற்கு எதிராக தன்னுரிமைக்காக போராடிய மக்களை, அமைப்புகளை ஒடுக்குவதற்காகத்தான் 1958-இல் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை AFSPA (Armed Forces Special Powers Act) கொண்டு வந்தது இந்திய அரசு. அதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தோன்றின. இந்தக் கொடூரச் சட்டம் முதன்முதலில் நாகாலாந்தில்தான் கொண்டுவரப்பட்டது.
000
இரண்டாம் உலகப் போரின்போது, இந்திய விடுதலை இயக்கத்தை இராணுவ ரீதியாக ஒடுக்குவதற்காக ஆகஸ்ட் 15, 1942 அன்று ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் அளித்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். 1958-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வெள்ளையர்களின் ஒடுக்குமுறைச் சாதனமான ஆயுதப் படைகளின் இந்த சிறப்பு அதிகாரத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கி, அந்த கருப்புச் சட்டத்தை தொடர்ந்தது ‘சுதந்திர இந்தியா’. இவை முதலில் அஸ்ஸாம் மற்றும் மணிப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின் 1972-ம் ஆண்டு மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. 1983-இல் பஞ்சாபிலும் 1990 முதல் ஜம்மு – காஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டது.
  • AFSPA சட்டத்தின் 3-வது பிரிவின் படி, ஒரு பகுதி ‘தொந்தரவு பகுதி’ என பெயரிடப்பட்டால் அந்த பகுதியில் சிவில் அதிகாரத்துக்கு உதவியாக ஆயுதப்படைகள் பயன்படுத்தபட வேண்டும்.
  • AFSPA சட்டத்தின் 4-வது பிரிவு ஆயுதப் படைகளுக்கு வானளாவிய அதிகாரங்களை அளிக்கிறது. பாதுகாப்பு அதிகாரிகள் எதற்காக வேண்டுமானாலும் துப்பாக்கிச் சூடு நடத்தலாம், எந்த பிடியாணையும் இல்லாமல் மக்களைக் கைது செய்யலாம், எந்த இடத்திற்குள்ளும் நுழைந்து சோதனையிடலாம், அந்த இடத்தை சேதப்படுத்தலாம். இந்த செயல்களுக்கு எதிராக சட்டப்படி யாரும் வழங்குத் தொடர முடியாது.
  • AFSPA சட்டத்தின் 6-வது பிரிவின் படி, மத்திய அரசின் முன் அனுமதி இல்லாமல் ஆயுதப்படை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரவோ அல்லது பிற சட்ட நடவடிக்கைகளோ மேற்கொள்ள முடியாது.
இந்தச் சட்டத்தின் மூலமாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தேசிய இனங்களை இராணுவ ஒடுக்குமுறையின் மூலமாக ஆண்டுகொண்டிருக்கிறது இந்திய அரசு.
இராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டு மணிப்பூர் தாய்மார்கள் நடத்திய போராட்டம்.
AFSPA-விற்கு எதிராக 63 ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம்..
தற்போது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளும் அவற்றிற்கு எதிரான மக்கள் போராட்டமும் நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு புதியவையல்ல. சுமார் 63 ஆண்டுகளாக தொடரும் நீண்ட நெடிய போராட்ட மரபு இம்மாநிலங்களுக்கு உண்டு. இவற்றுள் சில போராட்டங்கள் உலகம் முழுக்க பேசுபொருளானவை.
2000-ம் ஆண்டில் மணிப்பூர் மாநிலம் மலோம் எனும் இடத்தில் பேருந்திற்காக காத்திருந்த சாதாரணப் பொதுமக்கள் மீது சிறப்பு அதிகாரப் படை கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பத்துபேர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து 28 வயதேயான இரோம் சானு ஷர்மிளா என்பவர் சுமார் 16 ஆண்டுகள் நடத்திய மிக நீண்ட பட்டினிப் போராட்டம் குறிப்பிடத்தகுந்தவற்றுள் ஒன்று.
ஜூலை 2004-ம் ஆண்டு அசாம் ரைபிள்ஸ் படையினரால் கைது செய்யப்பட்ட தங்ஜம் மனோரமா என்ற பெண் மறுநாள் காலை அவரது வீட்டின் அருகே பிணமாகக் கிடந்தார். அவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண்ணுறுப்பில் சுடப்பட்டுக் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தார். நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறும் இந்த கொடுமையை எதிர்த்து ஜூலை 15, 2004 அன்று மணிப்பூர் தாய்மார்கள் 17-வது அசாம் ரைபிள் படைப்பிரிவின் தலைமையகம் முன்பு தங்கள் ஆடைகளை களைந்து “இந்திய இராணுவமே எங்களை பாலியல் வல்லுறவு செய்” “எங்கள் இரத்தத்தை குடியுங்கள், எங்கள் சதையை உண்ணுங்கள், எங்கள் மகள்களை விட்டுவிடுங்கள்” என்று போராடினார்கள். போராடியவர்கள் மீதுதான் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இராணுவத்தினர் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த இரண்டு போராட்டங்களும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தன.
இன்னும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தற்போது ஓடிங் படுகொலையை எதிர்த்துப் போராடும் அனைவரின் கோரிக்கையாக முன்வைக்கப்படுவது AFSPA சட்டத்தை திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதே. டிசம்பர் 20-ம் தேதி மூன்றாவது முறையாக நாகாலாந்து சட்டமன்றம் AFSPA-ஐ ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
நவம்பர் 25 அன்று நடைபெற்ற இந்திய வர்த்தக சபையின் வருடாந்திர கூட்டத்தொடரில் பேசிய அமித்ஷா “வட கிழக்கில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இனி வடகிழக்கு மாநிலங்களை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் மோடி எப்படி அமைதியை நிலை நாட்டினார் என்பதற்கு அம்பலமான நாகா அமைதி ஒப்பந்தத்தில் (Frame work agreement) நடத்தப்பட்ட தில்லுமுல்லுகளே சான்றாகும்.
படிக்க :
காவி மயமாகும் வடகிழக்கு இந்தியா ! சிறப்புக் கட்டுரை
திரிபுராவில் இந்துவெறி குண்டர்களின் வெறியாட்டம் !
போராட்டங்கள் நடந்தால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது, இன்னொருபுறம் போராடும் அமைப்புகளின் தலைவர்களை கைது செய்வது, வெவ்வேறு பழங்குடி மக்களிடையே மோதல்களை உருவாக்கி இனவெறியை தூண்டுவது போன்ற நரித்தனமான வேலைகளை மேற்கொண்டு போராட்டங்களை நைச்சியமாக ஒடுக்கி வருகிறது மோடி – அமித்ஷா கும்பல்.
நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்களின் போராட்டத்தை ஆளும் வர்க்க ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. அதை பிற மாநில மக்களுக்கு அடையாளம் காட்டுவதும் அவர்களின் நீதிக்காக போராடுவதும் புரட்சிகர, ஜனநாயக இயங்கங்களின் கடமையாகும். வடகிழக்கு மாநிலங்களின் குரல்வலையை மிதித்துக் கொண்டிருக்கும் இராணுவ சர்வாதிகாரம் பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் எல்லைப் பாதுக்காப்பு படை (BSF) விரிவாக்கம் எனும் பெயரில் காலூன்றுகிறது. தமிழகத்தை இராணுவத் தளவாடப் பகுதியாக மாற்றும் திட்டம் ஏற்கெனவே காவிகளுக்கு இருக்கிறது. மேலும் இலங்கை வழியாக “சீன அபாயம்” எனும் பூச்சாண்டியைக் காட்டி எந்நேரம் வேண்டுமானால் இராணுவப் படையைக் குவிக்கலாம் என்ற நிலைதான் நீடிக்கிறது.
எனவே, இந்திய ஒன்றியத்தால் ஒடுக்கப்படும் பிற தேசிய இன உழைக்கும் மக்கள் நாகா மக்களுக்கு குரல்கொடுப்பது, அவர்களின் நியாயத்தை அங்கீகரிப்பதற்காக மட்டுமல்ல. தங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவதுமாகும்.

மதி

புதிய ஜனநாயகம் வெளியீடுகள் : கொரோனா || காவி கார்ப்பரேட் பாசிசம்

புதிய ஜனநாயகம் சார்பில் இரண்டு புதிய வெளியீடுகள் வெளி வரவிருக்கின்றன. கொரோனா உருவாக்கம் மற்றும் பரவலுக்கு பின்னணியில் உள்ள ஏகாதிபத்திய சுரண்டல் குறித்த ஒரு வெளியீடும், இந்த நாட்டை ஒரு இந்து ராஷ்டிரமாக  பாசிச சர்வாதிகார ஆட்சியதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கோடு செயல்படும் பாசிச ஆர்.எஸ்.எஸ். – பாஜக வின் நடைமுறைகளை அம்பலப்படுத்தி ஒரு வெளியீடும் கொண்டுவரப்ப்படவிருக்கின்றன.
ஏகாதிபத்தியச் சுரண்டலையும், நாட்டை கவ்வியிருக்கும் பாசிச அபாயத்தையும் எதிர்கொள்ள இந்த வெளியீடுகளை வாங்கி நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். வெளியீடுகள் தேவைப்படுவோர் முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ளவும் : 94446 32561; மின்னஞ்சல் முகவரி : puthiyajananayagam@gmail.com
***
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கோரத்தாண்டவமே கொரோனா
முதலாளித்துவத்தின் இலாப வெறிக்கு, பரந்துபட்ட அளவில் காடுகள் அழிக்கப்படுவது, சுற்றுச்சூழல் சீர்குலைக்கப்படுவது, பல்லுயிர் தன்மை சிதைக்கப்படுவதோடு, காலநிலை மாற்றமும் நிகழ்கின்றன. இதன் விளைவாக வன விலங்குகளுக்கும் வீட்டு விலங்குகளுக்குமிடையிலான இடைவெளி அழிக்கப்படுவது, பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களையும் விலங்குகளையும் ஒரே உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் பிணைப்பது நடந்தேறுகிறது. ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் கட்டமைப்பில் உலகம் முழுவதும் உற்பத்திச் சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலைமைகள் ஏற்படுத்தும் உயிரியல் மாற்றத்தை, முதலாளித்துவத்தின் இலாபவெறி  காரணமாக  கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஏகாதிபத்தியக் கட்டமைப்பு செயல்படுவதன் மூலம் புதிய நோய்க்கிருமிகளின் சுழற்சிக்கு வழிவகுத்துள்ளது. இதற்குக் மூலதனத்தின் உள்ளியல்பே காரணம் ஆகும்.

இது குறித்த அறிவியல்பூர்வமான, விரிவான ஒரு ஆய்வுக் கட்டுரையே இந்த சிறு வெளியீடு. வாங்கிப் படியுங்கள் !

விலை : ரூ.30.
***
காவி – கார்ப்பரேட் பாசிசம் எதிர்கொள்வது எப்படி?
ன்னாட்சி கொண்ட நிறுவனங்கள் என்று சொல்லப்பட்ட தேர்தல் கமிசன், ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ, உயர் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் முக்கியமான அதிகாரங்கள் பறிக்கப்படுவிட்டன. ஒன்றிய அரசு நினைத்தால் அந்த நேரத்திலும் ரிசர்வ் வங்கியின் நிதியை எடுத்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு இன்று நிலைமை மாறியுள்ளது. தேர்தல் கமிசனோ, மோடி அரசுக்கு ஐந்தாம் படையாகவே வேலை செய்கிறது. இவை மட்டுமின்றி, உயர்கல்வி நிறுவனங்கள், அரசின் கலாச்சார நிறுவனங்கள், தணிக்கை நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் விசுவாசிகள் திட்டமிட்டே நுழைக்கப்படுள்ளனர்.
மொத்தத்தில், பீற்றிக் கொள்ளப்பட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்து அங்கங்களும் வெட்டிச் சிதைக்கப்பட்டுவிட்டன. அதன் உச்சமாக நாடாளுமன்ற “விமர்சன சுதந்திரம்” அடைந்திருக்கும் பரிதாப நிலையைத் தான் இன்று நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

சொல்லிக் கொள்ளப்படும் குறைந்தபட்ச போலி ஜனநாயகத்தையும் தகர்த்து ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியை – இந்து ராஷ்டிரத்தை – அமைப்பதை நோக்கி ஆர்.எஸ்.எஸ். பாஜக தலைமையிலான பாசிசக் கும்பல் முன்னெடுத்துச் செல்வதையும் அதன் பின்னணியில் உள்ள கார்ப்பரேட் நலன்களையும் இந்த வெளியீடு அம்பலப்படுத்துகிறது. வாங்கிப் படியுங்கள் !

விலை : ரூ.50


புதிய ஜனநாயகம்

டெல்டாவில் துரிதப்படுத்தப்படும் சாதிய முனைவாக்கம்!

ந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாகை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான தோழர் சித்தமல்லி கோ. முருகையன் அவர்களின் நினைவுதினம், (படுகொலை செய்யப்பட்ட நாள் 06.01.1979) ஜனவரி 6. அன்றைய நாளில் பொதுவாக ஆண்டுதோறும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தோழர்களால், மக்களால், இதர முற்போக்கு அமைப்புகளால் நினைவுக்கூரப்பட்டு வருகிறது.
ஆனால் சில ஆண்டுகளாக இவரை அவர் பிறந்த சாதியுடன் அடையாளப்படுத்தி, ‘தங்களுடைய’ தலைவராக மாற்றும் முயற்சியை புற்றீசல் போல் கிளம்பிவரும் பல்வேறு இயக்கங்கள் செய்து வருகின்றன. இதைப்போன்றே வெண்மணி தியாகிகள் தினமான டிசம்பர் 25-ன் மீது சாதிய சாயம் பூசும் பணியும் சில ஆண்டுகளாக நடந்து வருவதை பார்க்க முடிகிறது.
தீபாவளி, பொங்கல் போன்ற ‘பண்டிகை’ தினங்களில் அதிகமான ‘சாதிய மோதல்கள்’ சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணமுள்ளன. இத்தகைய சாதிய மோதல்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களான “பள்ளர் – பறையர்” மக்களிடையே ஏற்படுவதுதான் புதிய நிலைமையாக உள்ளது. ஒரே கிராமம், ஒரே தெருவில் இருப்பவர்கள், குடும்ப உறவுகளை இயல்பாக பேணுபவர்கள் மத்தியில் தற்போது பல்வேறு பிரிவினைகள் வளர்ந்து வருகிறது.
படிக்க :
தத்தளிக்கும் டெல்டா : விவசாயிகளுக்கான இழப்பீட்டை குறைக்கும் தமிழக அரசு !
♦ தஞ்சை டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு !
தெருகளில் சாதிய அடையாளமிடுவது, மின்கம்பங்கள், பொதுச் சுவர்களில் சாதிய அடையாளங்கள் இடுவது, கைகளில் கயிறுகளை கட்டிக்கொள்வது, நெற்றியில் அத்தகைய வண்ணத்தில் திலகமிட்டுக்கொள்வது, சாதிய பெயர்களை இட்டுக்கொள்வது போன்றவை மிகத் துரிதமாக, குறிப்பாக இளைஞர் மாணவர் மத்தியில் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது.
காவி பாசிசம் இஸ்லாமிய எதிர்ப்பு, பழங்குடி, தாழ்த்தப்பட்ட மக்கள், கிறித்துவ மக்களுக்கு, பெரியாரின் திராவிடக் கொள்கை மற்றும் முற்போக்கு கம்யூனிச கொள்கைக்கு எதிராகதான் வளர்ந்து வருகிறது என்றுமட்டும் கருதுகிறோம் என்றால் பாசிசத்தைப் பற்றி மிகவும் குறைவாக புரிந்து வைத்துள்ளோம் என்பதாகும். ஜெர்மனியில், இத்தாலியில் அன்றைக்கு கம்யூனிச – சோசலிச கருத்துகள் மீது மக்களுக்கு ஈர்ப்பு இருந்ததால், “தங்களது லட்சியம் சோசலிசம்” என்ற முழக்கத்தில் பாசிசம் வளர்ந்தது. டெல்டாவின் சிறப்பு தன்மைக்கு ஏற்ப, “பொதுவுடைமை, வர்க்கப் போராட்டம், பாட்டாளி மக்கள் தோழன்” என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொண்டே, களப்பால் குப்பு, எஸ்.ஜி.முருகையன் போன்ற கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த மக்கள் தலைவர்களை, அவர்களின் சாதியின் அடிப்படையில் “தமதாக்கி” கொள்ளும் பணியை செய்து வருகின்றனர்.
இத்தகைய இயக்கங்களின் ‘திடீர்’ உருவாக்கம், “யாரோ” திட்டமிட்டு வளர்த்துவிடுகிறார்கள் என்று பொத்தம் பொதுவாக நாம் முத்திரை குத்த விரும்பவில்லை. (எனினும் பாஜகவின் அமித்ஷா சாதிய சங்கங்களை வளர்த்துவிடுவதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்) தன்னெழுச்சியாகக் கூட வளர்ந்து வரலாம். நாடு முழுக்க பிற்போக்கு அனைத்து மட்டங்களிலும் கை ஓங்கி இருக்கும் காலத்தில் பல்வேறு விதமான பிற்போக்குகளும், வீரியமாக வளர்ச்சியடைவே செய்யும்.
எனினும் இவ்வாறு சாதிரீதியாக அடையாளப்படுத்தப்படுவது, மக்களை திரட்டுவது, இயல்பிலேயே பார்ப்பனியத்திற்கு சேவை செய்வதாகவும், உழைக்கும் மக்கள் நலனுக்கு எதிராகவும், இவ்வளவு ஏன் இவர்கள் பிரதிநிதித்துவ படுத்துவதாக கருதிக்கொள்ளும் “பள்ளர்” அல்லது “தேவந்திர குல வேளாளர்” மக்களுக்கு எதிராகவும்தான் முடியும்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களை அடக்கியொடுக்கியதே பார்ப்பனிய இந்து மதம். இந்த மதத்தின் உயிரே அதன் வர்ணாஸ்ரம தர்மத்தில் உள்ளது. அத்தகைய சித்தாந்தமும், வர்க்க ரீதியான அடக்குமுறையும் பின்னிப்பிணைந்துதான் மக்களை இத்தனையாண்டு காலங்கள் அடக்கியொடுக்கி அடிமையாக வைத்திருந்தது. இதைத்தான் வெண்மணியில் கருகிய தியாகிகள் நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றனர்.
சமூகமே புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்ட பிறகுதான் சாதிய, வர்க்க ஒடுக்குமுறைகள் முற்றாக ஒழிக்கப்படும் என்றாலும், குறைந்தபட்சம் கம்யூனிச இயக்கங்கள், அவற்றின் தலைமையிலான போராட்டங்கள், பெரியார், திராவிட இயக்கத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டங்கள் மக்களை சாதிய அடக்குமுறைகளில் இருந்து சீர்திருத்த வகையிலாவது ஒருபடி முன்னேற்றி சென்றது. ஆனால் இன்று அத்தகைய முற்போக்கு விழுமியங்களை, மக்களின் ஐக்கியத்தை உடைத்து மக்களுக்கு இடையே மோதல்கள், பிரிவினைகளை ஏற்படுத்துவதாகவே தற்போது வளர்ந்துவரும் இயக்கங்கள் நமக்கு முன்னறிந்து கூறுகின்றன. அந்த வகையில் இத்தகைய முன்னெடுப்புகள் “பள்ளர்” மக்களுக்கு நேர் எதிராக, அவர்களை மேலும் மேலும் பார்பனியத்தின் அடிமைத்தனத்தில் அம்மக்களை தள்ளுவதில்தான் முடியும் என்பது திண்ணம்.
அதே சமயத்தில் காவி பாசிசம் வளர்ந்து மக்களை பிளவுபடுத்தி அடக்கியொடுக்குவதை நாம் எதிர்க்கும்போது, பாசிசத்தின் வர்க்கச்சார்பை கவனத்தில் எடுத்தக்கொள்ளாமல் இருப்போமேயானால் சரியான வகையில் எதிர்வினையாற்றாமல் ஊசலாட்டத்தில் விழுவதாகத்தான் முடியும். காவி பாசிசம் இயல்பிலேயே பிற்போக்குத்தனமான, குறிப்பாக பனியா – பார்சி – சிந்தி – மார்வாரி கார்ப்பரேட் கும்பல், மக்களையும் இயற்கையையும் சூறையாட திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
டெல்டாவில் அதானிக்கு பல இடங்களில் அரசு எண்ணெய் எடுக்க அனுமதி கொடுத்துள்ளது. டெல்டாவில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் வாயு எடுப்பு திட்டங்களை முழு வீச்சில் நிறைவேற்ற மக்கள் ஒற்றுமையாக போராடுவது தடையாக உள்ளது. அத்தகைய மக்களிள் தங்களுக்குள் சாதிரீதியாக, மத ரீதியாக பிரிந்து மோதிக்கொள்வது கார்ப்பரேட் திட்டங்கள் நடைமுறைப்படுத்த மிகவும் தேவையாக உள்ளது.
இத்தகைய சூழலில், தற்போதைய முன்னெடுப்புகளை ஒருவர் திட்டமிட்ட செய்கிறாரா அல்லது தன்னெழுச்சியாக புரியாமல் செய்கிறாரா என்பதல்ல பிரச்சினை. இயல்பாகவே இச்செயல்கள் கார்ப்பரேட் நலனுக்கு உகந்தது. தற்போது டெல்டாவில் விவசாயம் கிட்டதட்ட கார்ப்பரேட் நலனிற்கு ஏற்ப மாற்றப்படுவதன் விளைவாக, பல்வேறு வேலைவாய்ப்புகள் இழந்து திருப்பூர், சென்னை, கேரளா, வெளிநாடுகளுக்கு விசிறியடிக்கப்படும் நிலையில், அம்மண்ணை விட்டு மொத்தமாக விரட்டியடிக்கும் நிலைக்கு கார்ப்பரேட்டுகள் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
நாகப்பட்டிணம் அருகே இருக்கின்ற நரிமணம் என்ற இடத்தில் சி.பி.சி.எல். எண்ணைய் சுத்திகரிப்பு ஆலை இயங்கிகொண்டிருப்பது நாம் அறிந்ததே. தற்போது அவ்வாலையை விரிவாக்கம் செய்வதற்காக அருகில் உள்ள முட்டம், உத்தமசோழபுரம், கோபுராஜபுரம், நரிமணம், பனங்குடி ஆகிய கிராமங்களில் உள்ள மக்களையும், விளைநிலங்களையும் அப்புறப்படுத்துவதற்கு முயன்றது. மக்கள், விவசாய சங்கங்களின் போராட்டங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திடீரென ‘விழித்துக்கொண்ட’ தமிழக அரசும் “தமிழகத்தில் பெட்ரோல் கெமிக்கல் மண்டல திட்டத்தை வாபஸ்” பெறுவதாக அறிவித்தது.
தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட இத்திட்டம் கூடிய விரைவில் மக்கள் எதிர்பின்றி நிறைவேறுவதற்கு, மக்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களுக்குள் மோதிக்கொள்வது மிகவும் அவசியமானது. அத்தகைய திருப்பணியை இத்தகைய இயக்கங்கள் முன்னெடுக்கவே வாய்ப்பிருக்கிறது.
படிக்க :
நிவாரணம் இல்லை ! 100 நாள் வேலையும் இல்லை ! நுண்கடன் தொல்லை ! குமுறும் டெல்டா மக்கள்
டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு !
பாசிசத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்ட திமுக அரசு, தற்போது தமது பெயரளவிலான எதிர்ப்பையும் காற்றில் பறக்கவிட்டுவருகிறது. ஏதோ தம்மிடம் மாற்று பொருளாதாரத் திட்டம் இருப்பதாக காட்டிக்கொண்டது. பொருளாதார நிபுணர்கள் ஜெயரஞ்சன், ரகுராம் ராஜன் போன்றவர்களை தமது கொள்கை வகுப்பாளர்களாக, ஆலோசகர்களாக நியமித்துக்கோண்டது. எனினும் எதிர்பார்த்த அளவுக்கு வண்டி ‘செல்ப்’ எடுக்கவில்லை. ஆகவே கார்ப்பரேட் நலனையே துரிதப்படுத்தி வருகிறது. ஆகவே சாதிய, மத, இன விரோதங்களை மறைமுகமாகவே வளர்த்துவிடும் அல்லது வேடிக்கைப் பார்க்கும் என்பதுதான் எதார்த்தமாக உள்ளது.
ஓருபக்கம் பாசிச சக்திகளின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்ட போதும், இன்னொரு பக்கம் அதன் எதிர்வினையும் இருக்கவே செய்கின்றன. தஞ்சை டெல்டா கம்யூனிச வர்க்க உணர்வு பாரம்பரியத்தை உள்ளடக்கியது. தற்போது வரை கார்ப்பரேட் மீத்தேன் திட்டங்களை தடுத்தே வைத்துள்ளனர். டெல்டா இஸ்லாமியர்களும் நிறைந்துள்ள பகுதியாகும். CAA எதிர்ப்பு போராட்டங்கள் மிகவும் தீவிரமாக இம்மண்ணில் நடந்தது. அத்தகைய இஸ்லாமிய மக்கள் போராட்டங்களுக்கு இதர போராட்ட பாரம்பரியம் கொண்ட மக்கள் தங்களது ஆதரவை நல்கினர். இத்தகைய நேர்மறைக்கூறுகளும், தேசம் முழக்க அதிகரித்துவரும் “பணவீக்கம்”, அதிகமான வேலையிழப்புகள், ஆளும் வர்க்கங்கள் மேலும் மேலும் நெருக்கடியில் சிக்கிக்கொள்வது மிகவிரைவில் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே உணர முடிகிறது.
இத்தகைய சூழலை நாம் எத்தகைய சோர்வு, ஓய்வு உளைச்சல் இன்றி புரட்சியை நோக்கி வளர்த்தெடுக்கவே வேண்டும். முற்போக்கு, ஜனநாயக, கம்யூனிச சக்திகளான நம்மிடமிருக்கும் கத்துக்குட்டித்தனங்களை இனியும் காரணம் காட்டிக்கொண்டிருக்க முடியாது என்பதையே புறநிலை நமக்கு அறுதியிட்டுக் கூறுகிறது.
கந்தசாமி